ஒஜஸ் தேஜோ த்யுதிதர பிரகாசாத்மா பிரதாபன
ரித்தஸ் ஸபஷ்டாஷரோ மந்த்ரஸ் ந்த்ராம்ஸூர் பாஸ்கரத்யுதி–30-
இந்த முப்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
276-ஒஜஸ்தேஜோத்யுதிதர:, 277. ப்ரகாஶாத்மா, 278. ப்ரதாபன: |
279-ருத்த:, 280. ஸ்பஶ்டாக்ஷர:, 281. மந்த்ர:, 282. சந்த்ராம்ஶு:, 283. பாஸ்கரத்யுதி: ||
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் விச்வரூபத்தைப் பற்றிய திருநாமங்கள் தொடர்கின்றன.
பொருட்களை விளங்கச் செய்வது ஒளி என்று சாத்திரங்கள் கூறும். புறப்பொருட்களையும்,
மனத்தில் இருக்கும் பொருட்களையும் அவ்வவ்வொளிகள் விளக்கும்.
அனைத்து ஒளிகளாகவும் திகழ்வதோ நாராயண: பரோ ஜ்யோதி: என்னும் ஸ்ரீமந்நாராயணனே என்று
காட்ட வேண்டி பீஷ்மாசாரியார் ஒளியின் திகழ்ச்சிகளைக் கூறுகிறார்.
ஓஜஸ்தேஜோத்யுதிதர: – ஒளியின் திகழ்ச்சிக்கு அடிப்படை ஒன்று தன் சொந்த இயல்பில் பொருந்தி நிற்பது. அவ்வாறு சுயநிலை நிற்கும் ஆற்றல் ஓஜஸ்;
சுயநிலையினின்றும் பிறழச் செய்யும் வேகங்களைத் தடுத்து விலக்கல் தேஜ:
தன்னிலையில் நின்று தன்னியல்பில் ஒளிர்தல் த்யுதி. த்யுதியை தரித்து நிற்பவர் த்யுதிதர:
இத்தகைய முத்திறன்கள் விளங்கும் இடமெல்லாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சாந்நித்யம் ஆகும்.
எனவே அவருக்கு ஓஜஸ்தேஜோத்யுதிதர: என்றே திருநாமம்.
ப்ரகாசாத்மா – அனைவருக்கும் பொதுவாக விளக்கம் தரும் பேரொளியாவது ஆத்ம ஒளி. எனவே ப்ரகாசாத்மா.
ப்ரதாபந: – பிரகாசத்தை விரும்பாமல் வெறுக்கும் அவற்றைத் தபித்து வற்றச் செய்யும் காரணத்தால் ப்ரதாபந:
ருத்த: – அனைத்து கல்யாண குணங்களும் கடல் போன்று நிரம்பி நிறைவாக இருப்பவர் ஆதலால் ருத்த:
ஸ்பஷ்டாக்ஷர: – எழுத்தும் சொல்லும் பத சக்தியினால் விளக்கம் தரும் ஒளிகளாம். சொற்களில் மிக்குயர்ந்த சொல்லான வேதங்கள் பரம்பொருளை விளக்கும் ஆகையாலே ஸ்பஷ்டாக்ஷர:
மந்த்ர: – தம்மை விளக்கும் மந்த்ரங்களை தியானிப்போருக்கு காப்பாக இருப்பவர் ஆகையாலே மந்த்ர:
சந்த்ராம்சு: – தியானத்தில் ஜீவனுக்குக் குளிர்த்தியைத் தரும் நிலவொளியாய் இருப்பவர் ஆகையாலே சந்த்ராம்சு:
பாஸ்கரத்யுதி: – பக்தியால் துய்ப்போருக்கு நிலவொளியாய் மகிழ்விக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஞானத்தால் உணருங்கால் பகலொளியாய், ஞாயிறாக நின்று அறிவுப் பகல் செய்பவர் ஆகையாலே பாஸ்கரத்யுதி:
பெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன் {ஓஜஸ்தேஜோத்யுதிதரன்},
தன்னை வழிபடுபவர்களுக்குக் காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் {ப்ரகாசாத்மா},
எரியும் சக்தியால் அறமற்றவர்களை எரிப்பவன் {ப்ரதாபநன்},
(வளம் முதலிய) ஆறு வகைக் குணங்களின் வளம் கொண்டவன் {ருத்தன்},
பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன் {ஸ்பஷ்டாக்ஷரன்},
சாம, ரிக் மற்றும் யஜூஸ் (வேதங்களின்) வடிவில் இருப்பவன் {மந்த்ரன்},
உலகின் உயிரினங்கள் அனைத்தையும் குளுமைப்படுத்தும் சந்திரனின் கதிர்களைப் போல உலகத் துன்பங்களில்
எரிந்து கொண்டிருக்கும் தன் வழிபாட்டாளர்களுக்கு ஆறுதலளிப்பவன் {சந்த்ராம்சு},
சூரியனைப்போன்ற சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடியவன் {பாஸ்கரத்யுதி};(43)
பெருமைகளை வெளிப்படுத்தும் விஸ்வரூபம் –
276-ஓஜஸ் தேஜோத் யுதிதர -வலிமை சக்தி ஒளி ஆகியவற்றை உடையவர் –
277-பிரகாசாத்மா -அறிவு இழந்தவர்களுக்கும் தனித்தன்மையோடு புலப்படும் தன்மை உடையவர் –
278-பிரதாபன -பகைவர்களுக்கு வெப்பத்தை உண்டாக்குபவர் –
279-ருத்த -பௌர்ணமிக் கடல் போலே எப்போதும் நிறைந்து இருப்பவர் –
280-ஸ்பஷ்டாஷ-தன் பெருமையை வெளிப்படுத்தும் வேதச் சொற்களை உடையவர் –
281-மந்திர -தன்னை நினைப்பவரைக் காப்பவர் –
282-சந்த்ராம்சூ -த்யானிப்பவரின் களைப்பை ஒழிக்கும் நிலவின் குளிர்ந்த ஒலியை உடையவர் –
283-பாஸ்கரத்யுதி–பகைவர்களை ஓட்டும் சூர்யனைப் போன்ற ஒளி படைத்தவர் –
3-12-விஸ்வ ரூபம் -திரு நாமங்கள் 272-300
276-ஓஜஸ் தேஜோ த்யுதி தர
பலம் பராக்கிரமம் தேஜஸ் -எல்லாம் ஓஜஸ் -பலம் தேஜஸ் தேசு த்யதி பிரகாசம் ஒளி
ஓஜ꞉—ப₃ல ம், தேஜ꞉ பராபி₄ப₄வந ஸாமர்த்₂யம் -(சென்று -இலங்கை செற்ற திறல் என்றும் )கீர்திர்வா (திக்கு எட்டும் பரவிய ஒளி-கீர்த்திமை பாடிப்போய் ), த்₃யுதி꞉- ஔஜ்ஜ்வல்யம், தாநி-த₄ர தீதி தர–
ஓஜஸ் தேஜோ த்₃யுதித₄ர꞉
ஸ ஏவ । ஏகம் நாம | * யதா₂
ஓஜஸ் தேஜஸ் த்யுதிர –பலம் வெல்லும் திறன் கீர்த்தி காந்தி இவற்றைத் தரிப்பவன்
யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பாதங்கா விசாந்தி நாசாய சஸ்ருத வேகா -11-29-
நெருப்பைக் கண்டவுடன் விட்டில் பூச்சிகள் வேகமாக ஓடி வந்து விழுவது போல் எனது வாயில் வந்து விழுகிறார்கள்
யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா–விஸந்தி நாஸாய ஸம்ருத்த வேகா—.
ததைவ நாஸாய விஸந்தி லோகாஸ் தவாபி வக்த்ராணி ஸம்ருத்த வேகா—৷৷11.29৷৷
பலவாய் இருக்கும் ஆறுகளின் நீர்ப் பெருக்குகள் கடலையே நோக்கியவைகளாக எப்படி ஓடுகின்றனவோ –
அப்படியே இந்த ராஜ ஸமூஹ வீரர்கள் உனது பிரகாசிக்கும் வாய்க்கு உள்ளே நுழைகிறார்கள் –
வளரும் வேகத்தை உடையவைகளான விட்டில்கள் எரியும் நெருப்பிலே எப்படி தம் அழிவின் பொருட்டு நுழைகின்றனவோ
அப்படியே வளரும் வேகத்தை உடைய ராஜ லோக வீரர்களும் உன்னுடைய எரியும் வாய்க்குள்ளே
தம் அழிவின் பொருட்டு நுழைகிறார்கள்
ஸ்தானே ஹ்ருஷீகேச தவ ப்ரகீர்த்தயா -11-36-
ஹ்ருஷீ கேசனே இந்த உலகம் உனது மேன்மையைக்கண்டு உன்னிடம் இழுக்கப் படுவது பொருத்தமே
அர்ஜுந உவாச–
ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா–ஜகத் ப்ரஹ்ருஷ்யத் யநுரஜ்யதே ச.–
ரக்ஷாம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி–ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்த ஸங்கா—৷৷11.36৷৷
அர்ஜுனன் கூறுகிறான் -இந்திரியங்களை நியமிக்கும் தலைவனே -உன்னுடைய புகழைக் கண்டு இப் போரைக் காண
வந்து இருக்கும் தேவர் கந்தர்வர் முதலிய உலகு அனைத்தும் உன்னை மிகவும் உகக்கின்றது -ஈடுபடவும் செய்கின்றது –
அரக்கர்கள் பயந்தவர்களாய் எல்லாத் திக்குகளிலும் ஓடுகிறார்கள் –
சித்தர் கூட்டங்கள் அனைவரும் வணங்கவும் செய்கின்றார்கள் -இவை அனைத்தும் பொருத்தமே
திவி ஸூர்ய சஹஸ்த்ரஸ்ய பவேத் யுகபத் யுதிதா-11-12-
ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தாள் ஒரு வேலை அவை கிருஷ்ணனின் ஒளிக்குச் சற்று ஈடாகலாம் -சஞ்சயன் வச்சொல்கிறான்
தாஂ விஷிநஷ்டி —திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா—
யதி பாஸ் ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மந—৷৷11.12৷৷
ஆயிரம் ஸூர்யர்கள் ஒளி ஆகாசத்தில் ஒரே சமயத்தில் தோன்றிற்று ஆகில் அந்த ஒளி
அந்த மஹா புருஷனுடைய ஒளிக்கு ஒத்ததாக இருக்கும்
ஆயிரம் ஸூ ர்யர்கள் –ஒரே காலத்தில் உதயமானால் –நிகழாதே -ஒரு வேளை நடந்தால் -இந்த விஸ்வரூபம் காட்டும்
தேஜஸ் ஸூக்கு ஒப்பாகுமோ என்ற சங்கை கொள்ளலாம் -அபூத உவமை –சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளிக்கு ஒவ்வாதே
குன்றம் ஓன்று ஏந்தியதும் நிகரில் மல்லரை செற்றதும் நிரை மேய்த்தத்வும்
நீள் நெடும் கை சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதிப் பிரான் செய்கை -6-4-3
அசாதாரண சாமர்த்தியம்-பலம் பராக்கிரமம் கீர்த்தி ஒளி ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பலம் பராக்கிரமம் ஒளி ஆகியவற்றை யுடையவர் -ஓஜ-தேஜ இரண்டு திருநாமங்களாக கொண்டு ஞானத்தின்
அடையாளமான ஒளியைத் தரிப்பவர் -ஆதலால் த்யுதி தரர் –ஸ்ரீ சங்கரர் –
பராக்கிரமம் பிரதாபம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
———
ஓம் ஒஜஸ்தேஜோத்யுதிதராய நம:
ஓஜ: ப்ராணபலம் ‘ஓஜஸ்’ என்றால் ப்ராணன் மற்றும் பலத்தைக் குறிக்கும்
தேஜ: ஶௌர்யாதயோ குணா: ‘தேஜஸ்’ என்றால் சூரத்தனம் முதலிய குணங்களைக் குறிக்கும்
த்யுதிர்தீப்தி: ‘த்யுதி’ என்றால் ஒளியைக் குறிக்கும்
தா: தாரயதீதி இவை அனைத்தையும் தன்னுள் கொண்டிருப்பதால்
ஒஜஸ்தேஜோத்யுதிதர: பகவான் ‘ஒஜஸ்தேஜோத்யுதிதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்னுள் ‘ஓஜஸ்’ என்றழைக்கப்படும் ப்ராண சக்தி, பலம், ‘தேஜஸ்’ என்றழைக்கப்படும் சூரத்தனம் முதலிய குணங்கள் ‘த்யுதி’ என்றழைக்கப்படும் ஒளி ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டுள்ளார். எனவே, அவர் ‘ஒஜஸ்தேஜோத்யுதிதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அதவா, அல்லது
ஒஜஸ்தேஜ இதி நாமத்வயம் ‘ஒஜஸ்’ மற்றும் ‘தேஜஸ்’ என்று இரண்டு நாமங்களாய்ப் பிரித்தால்,
‘பலம் பலவதா சாஹம்’ (ஸ்ரீ பகவத்கீதை 7.11)
ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந்தீர்ந்த வலிமை நான்.
‘தேஜஸ்தேஜஸ்வினாமஹம்’ (ஸ்ரீ பகவத்கீதை 7.10)
ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.
இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளபடி அவர் பலவான்களுக்குள் பலமாகவும், ஒளிபொருந்தியோருள் ஒளியாகவும் இருக்கிறார் (எனவே, ‘ஓஜஸ்தேஜ:’ என்று அழைக்கப்படுகிறார்).
த்யுதிம் ஞானலக்ஷணாம் தீப்திம் ‘த்யுதி’ என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும்
தாரயதீதி அந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்)
த்யுதிதர: பகவான் ‘த்யுதிதர:’ திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘த்யுதி’ என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும் அந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்), பகவான் ‘த்யுதிதர:’ திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த திருநாமத்தை பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும், ஆதிசங்கரர் தனது முதல் விளக்கமான ‘ஓஜஸ்தேஜோத்யுதிதர:’ என்பதையே பிரதானமான விளக்கமாகக் கொண்டுள்ளார். ஆயிரம் திருநாமக் கணக்கில், இது ஒரே திருநாமமாகத்தான் கணக்கிடப்பட்டுள்ளது.
———–
- ஓஜஸ்-தேஜோ-த்யுதிதர – வலிமை, வீரியம் மற்றும் புத்திசாலித்தனம் கொண்டவர்
நாம் இப்போது இறைவனின் விஸ்வரூபத்தை விவரிக்கும் நமஸ்காரம் மூலம் செல்கிறோம். ஸ்ரீ ஆதி சங்கரர் பஹகவத் கீதையில் இருந்து மேற்கோள் கொடுக்கிறார் – தேஜஸ்-தேஜஸ்வினம் அஹம் (7-10), மற்றும் பலம் பலவதம் சிஅஹம் (7-11).
இது ஓஜா, தேஜா, த்யுதி மற்றும் தாரா ஆகிய நான்கு வார்த்தைகளின் கலவையாகும். ஓஜா என்றால் வலிமை அல்லது உள்ளார்ந்த உயிர், தேஜா என்றால் நற்பெயர் அல்லது எதிரிகளை வெல்லும் ஆற்றல், தியுதி என்றால் ஒளி அல்லது பிரகாசம். தாரஹ் என்றால் இந்த குணங்களை சுமப்பவன். பகவானுக்கு மட்டுமே இந்த குணங்கள் அனைத்தும் இருப்பதால், அவர் ஓஜஸ்-தேஜோ-த்யுதிதாரா ஆவார்.
ஸ்ரீ ஆதிசங்கரரின் வார்த்தைகளில், ‘ஓஜா ப்ராணபலம், தேஜா சௌர்யாதயோ குணா, த்யுதிஹ் தீப்திஹ், தாஹ தாரயதி இதி ஓஜஸ்-தேஜோ-த்யுதிதரஹ் – அவர் ஓஜஸ்-தேஜோ-த்யுதிதரஹ், ஏனென்றால் அவர் வலிமை, வெல்ல முடியாத தன்மை மற்றும் புத்திசாலித்தனம் போன்ற குணங்களைக் கொண்டவர்.
ஸ்ரீ சங்கரர் பகவத் கீதையில் ‘பலம் பலவதாம் சாஹம்‘ (அத்தியாயம் 7 வசனம் 11) மற்றும் ‘தேஜஸ் தேஜஸ்விநாமஹம்‘ (அத்தியாயம் 7 வசனம் 10) ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளபடி ஓஜஸ்தேஜாவை இரட்டைப் பெயராக (நாமத்வயம்) எடுத்துக் கொள்ளும் மாற்று விளக்கத்தை வழங்குகிறார். ஓஜஸ்தேஜா என்பது வலிமையானவர்களின் கூட்டு பலம் மற்றும் வீரத்தின் கூட்டு வீரம் மற்றும் பகவான் இந்த இரட்டை குணங்களின் சாரத்தை எடுத்துச் செல்கிறார். எனவே அவர் ‘ஓஜஸ்-தேஜோ-த்யுதிதரஹ்’.
277-பிரகாசாத்மா
ஒளி படைத்தவன் –ஒளி மணி வண்ணன் -3-4-8-
அனைத்து உலகும் வாழப்பிறந்த எதிராசன் –மூர்கே₂ரபி–தாழ்ந்தவர்களுக்கும் தன்னைக் காட்டி உயர்த்துபவன்-ஆசை உடையார்க்கு எல்லாம் –
மூர்கே₂ரபி ஸம் ப்ரதிபந்ந பர ப்ரபாவ
ப்ரகாஸாத்மா । யதா₂
த்வமேவ புண்டரீகாக்ஷ ஸர்வஸ்ய ஜகத் பிரபு தஸ்மாத் மே யாதவ ஸ்ரேஷ்ட பிரசாதம் கர்த்தும் அர்ஹஸி -த்ருதராஷ்ட்ரன்
தாமரைக் கண்ணனே -நீயே அனைத்து உலகங்களுக்கும் பிரபுவாக உள்ளாய்
யாதவர்களுள் சிறந்தவனே உன்னை நான் வணங்குகிறேன் -எனக்கு அருள் புரிவாயாக
மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து நன் தெய்வ நிலை யுலகில் புக உய்க்கும் அம்மான் -3-10-6-
மூடர்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும் சிறந்த பிரபாவம் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பிரகாசமான ஸ்வரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
நன்றாக சுகத்தை அனுபவிக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————
ஓம் ப்ரகாஶாத்மனே நம:
ப்ரகாஶஸ்வரூப ஒளிமயமான
ஆத்மா யஸ்ய ஸ: ஆத்மாவைக் (திருமேனியைக்)கொண்டவர் எவரோ
ப்ரகாஶாத்மா (அந்த பகவான்) ‘ப்ரகாஶாத்மா’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஒளிமயமான ஆத்மாவை (திருமேனியை) உடையவராதலால் அவர் ‘ப்ரகாஶாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——————
- பிரகாதாத்மா – பிரகாசமாக இருக்கும் ஒரு வடிவம்
ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படி, ‘பிரகாச ஸ்வரூப ஆத்மா யஸ்ய ச பிரகாஷ்ஆத்மா – பிரகாசமும் பிரகாசமும் கொண்டவர். பகவத் கீதையில் (அத்தியாயம் 11 வசனம் 12) ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபத் உத்திதா – ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியன்கள் வானத்தில் இறங்குவது போல் அவர் பிரகாசமாக இருக்கிறார்’.
தர்ம சக்கரத்தில் எழுத்தாளர் சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வரும் பிரகாசம் அல்லது ஒளி வெளிப்புற பொருட்களை வெளிப்படுத்த முடியும், ஆனால் இவை எதுவும் முழுமையான உண்மையை வெளிப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டுகிறார். முழு உண்மையையும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
பிரகாஷாவின் மற்றொரு விளக்கம் நன்கு அறியப்பட்ட அல்லது பிரபலமான பொருளில் உள்ளது. ஆக, பிரகாத்மா என்றால் யாருடைய மகத்துவம் எல்லோருக்கும் நன்கு தெரியும்.
திருதராஷ்டிரர் வெளியில் மட்டுமல்ல மனதிலும் குருடராக இருந்தார். பகவான் தன்னை அவருக்கும் தெரியப்படுத்தினார். மகாபாரதத்தில் – உத்யோக பர்வத்தில், திருதராஷ்டிரர் கூறுகிறார் –
த்வமேவ புண்டரிகக்ஷா! ஸர்வஸ்ய ஜகதஹ் ப்ரபுஹ் |
தஸ்மாத் தே யாதவ-ஸ்ரேஷ்தா! ப்ரஸாதம் கர்துமர்ஹஸி ||
“ஓ தாமரை கண்களை உடையவனே! நீங்கள் அனைத்து உலகங்களையும் காப்பவர். எனவே, யாதவர்களில் முதன்மையானவனே! நீங்கள் என் மீது இரக்கம் கொள்ள வேண்டும்” என்றார்.
278-பிரதாபந
தபிக்கச் செய்பவன் -பகைவர்களை-
* பா₄ஸஸ்த வோக்₃ரா꞉ ப்ரதபந்தி இதி
ப்ரதாபந ꞉ ॥
தானே எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத் திரு சுடருமாய இறை -மூன்றாம் திரு -39-
பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு ஆரா வெழுந்தான் அரி உருவாய் -சிறிய திரு மடல்
எல்லாவற்றையும் தபிக்கும்படி செய்பவர் -பகைவர்களுக்குத் துன்பத்தை உண்டு பண்ணுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஸூரியன் முதலியவற்றால் தகிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –
நன்கு பரவி இருப்பவர் -ஜலத்தைத் தூண்டுபவர் -சூரியன் முதலானோரில் நின்று நன்கு தஹிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————
ஓம் ப்ரதாபனாய நம:
ஸவித்ராதி கதிரவன் முதலான விபூதிபி: உருவங்களைத் தரித்து
விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்திற்கு
ப்ரதாபயதீதி வெப்பமளிப்பதால்
ப்ரதாபன: பகவான், ‘ப்ரதாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் கதிரவன் முதலிய உருவங்களை தரித்து, இந்தப் ப்ரபஞ்சத்திற்கு வெப்பத்தை அளிக்கிறார் (அல்லது இந்தப் ப்ரபஞ்சத்தினை வெம்மையினால் சுட்டெரிப்பதால்). எனவே, அவர் ‘ப்ரதாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
- பிரதாபனா – சூரியனின் வடிவில் உலகை வெப்பப்படுத்துபவர்
இது ‘தட்டி’ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘எரிப்பது’ அல்லது ‘எரிப்பது’. ஸ்ரீஆதிசங்கரர் இதற்கு விளக்கம் தருகிறார், ‘ஸவித்ராதிபிஹ் விபூதிபிஹ் விஷ்வம் ப்ரதாபயதி இதி பிரதாபனஹ் – சூரியன் போன்ற தனது கதிர்வீச்சு வெளிப்பாடுகளின் வடிவத்தில் அவர் உலகத்தை எரிக்கிறார்.
ஸ்ரீ பராசர பட்டர் இந்த நாமத்தை பகவத் கீதையின் பின்னணியில் விளக்குகிறார், அங்கு அர்ஜுனன் ‘தேஜோபிராபூர்ய ஜகத் ஸமாக்ரம் பாஸஸ்தவோக்ரஹ் பிரதாபந்தி விஷ்ணோ (பகவத் கீதை அத்தியாயம் 11 சுலோகம் 30) - பிரம்மாண்டமான விஸ்வரூப தரிசனத்தின் போது தன்னால் நிற்க முடியாது என்று கூறுகிறார். எல்லா உயிரினங்களும் இறுதியாக இறைவனின் அக்கினி வாயில் விழுந்து தங்கள் இறுதிவரை எரிக்கப்படுகின்றன என்பதை கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள், இது பிரளய காலத்தையும் குறிக்கலாம், இறைவன் பூமியை தனது அனைத்தையும் எரிக்கும் நெருப்பால் எரிக்கிறார்.
279-ருத்த
சம்பத்தால் பூரணன்-
ஏவம் கூல முத்₃வஹத் ப்ரார் வணார்ணவ இவ
ருத்₃த₄꞉ ।
யதோ₂த்₃யோகே ₃
தத ச புருஷ வ்யாக்ர சம் ஜகாத புந ஸ்வயம் தாம் திவ்யம் அப்துதா சித்ராம் ருத்த மத்தாம் அரிந்தம –உத்யோக பர்வம்
அடுத்து புருஷோத்தமன் மீண்டும் தனது திவ்யமான திருவாய் மலர்ந்து அருளினான்
அந்த திருவாய் மொழிகள் திவ்யமாக -வியப்பு அளிக்க வல்ல -விசித்திரமாக –ருத்த மத்தாம்-பூர்ணமாக இருந்ததே அவன் திருவாய் மொழிகள்
தத் ஆயத்த ருத்தி -அவள் இடம் பெற்ற செல்வம் -குணரத்ன கோசம் -ந குண்ட ஸ்வா தந்தர்யம் -திருவுக்கும் திருவாகிய செல்வன்
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் நாச் திரு -10-10-
பருவ காலங்களில் கரை புரளும் கடல் போல எப்போதும் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தர்மம் ஞானம் வைராக்யம் முதலிய குணங்கள் நிரம்பியவர் –ஸ்ரீ சங்கரர் –
இயற்கையாக முழுமையானவர் –
ருத்தஸ் பஷ்டாஷர-என்ற பாடத்தில் ஓம் நமோ நாராயணாய -எட்டு அக்ஷரங்களை உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-
————
ஓம் ருத்தாய நம:
தர்மஞானவைராக்யாதிபிரூபேத்வாத் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால்
ருத்த: பகவான் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானிடம் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால் அவர் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ருத்த: என்றால் செல்வசெழிப்பு (செல்வசெழிப்புள்ளவர்) என்று பொருள். தர்மம் (அறம்), ஞானம் (அறிவு) மற்றும் வைராக்யம் (பற்றின்மை) ஆகியவையே உண்மையான செல்வங்களாகும். இவை அனைத்தும் நிறைந்திருப்பதால் பகவான் ‘ருத்த:’ என்று அழைக்கப்படுகிறார்.
———–
- ரித்தா – எல்லா வகையிலும் நிறைந்தவர்
இந்த வார்த்தையின் வேர் ரித், அதாவது செழிப்பு, அதிகரிப்பு. இதை ஸ்ரீ ஆதிசங்கரர், ‘தர்ம ஞான வைராக்யாதிபிர் உபதேத்வாத் ரித்தஹ் – தர்மம், ஞானம், வைராக்யம் ஆகிய சன்மார்க்கத்தால் நிரம்பியிருப்பதால் ரித்தர்’ என்று விளக்குகிறார்.
பகவான் கூறுகிறார் (பகவத் கீதை அத்தியாயம் 10 வசனம் 40) ‘நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீனாம் பரந்தப – எனது தெய்வீக மகிமைகளுக்கு முடிவே இல்லை’. அவர் எல்லாவற்றிலும் சிறந்தவர், எல்லாவற்றிலும் சிறந்தவர். சுருக்கமாகச் சொன்னால் அவர் ரித்தா.
280-ஸ்பஷ்டாஷர –
ஸ்பஷ்டமான அஷரங்கள்-வேத அஷர ராசி -சுடர் மிகு ஸ்ருதி-அவனையே சொல்வதால் வேதம் ஸ்பஷ்ட அக்ஷரங்களைக் கொண்டதாகிறது
அந யத்₃த₄ர்யா ப்ரதிபாத்₃யயா ஸ்பஷ்டீ க்ருத வேதா₃க்ஷர இதி
ஸ்பஷ்டாக்ஷர꞉ ||
தமது பெருமையைத் தெளிவாகக் கூறும் வேத அஷரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
உதாத்த ஸ்வரமுள்ள ஓங்காரம் என்னும் அஷரத்தினால் வெளிப்படும் மகிமை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்பஷ்டமான வேத சாஸ்திர எழுத்துக்களால் அறியப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
———
ஓம் ஸ்பஶ்டாக்ஷராய நம:
ஸ்பஶ்டம் உதாத்தம் ‘ஸ்பஶ்டம்’ என்றால் மிகத் தெளிவாக (உரக்க) என்று பொருள்
ஓம்காரலக்ஷணம் ஓம்காரமென்னும்
அக்ஷரமஸ்யேதி சொல்லால் உரைக்கப்படுகிறார் (உணர்த்தப்படுகிறார்)
ஸ்பஶ்டாக்ஷர: எனவே, பகவான் ‘ஸ்பஶ்டாக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஓம்காரத்தால் (உரத்து) தெளிவாக உணர்த்தப்படுகிறார். எனவே, அவர் ‘ஸ்பஶ்டாக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
- ஸ்பஷ்டாக்ஷரஹ் – அவர் ஓம்காரத்தின் கூட்டு மற்றும் பொருள், இது ஸ்பஷ்டம்
ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘ஸ்பஷ்டம் உதாத்தம் ஓம்கார லக்ஷணம் அக்ஷரம் அஸ்ய இதி ஸ்பஷ்டாகஷரஹ் – அவர் ‘ஓம்’ அல்லது பிரணவத்தின் உச்ச ஒலியின் கூட்டு மற்றும் பொருளாகும்.
இந்த விளக்கத்திற்கு ஆதரவாக ஸ்ரீ சின்மயானந்தா பகவத் கீதையின் (அத்தியாயம் 8 வசனம் 13) குறிப்பைக் கொடுக்கிறார்:
ஓமித்யேகாஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாம் அனுஸ்மரன் |
யஹ ப்ரயாதி த்யஜன் தேஹாம் ச யாதி பரமாம் கதிம் ||
“என்னுடைய பெயரை (ஓம் அல்லது பிரணவம் என்ற எழுத்தை) ஜபித்து, மரணத்தின் போது என்னை நினைவு செய்து உடலை விட்டு வெளியேறுகிறாரோ, அவர் உச்ச நிலையை அடைவார்”.
வேத எழுத்துக்கள் மூலம் தன்னை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியதால் அவர் ஸ்பஷ்டாக்ஷரர் என்பது ஸ்ரீ பட்டரின் விளக்கம். இங்கு குறிப்பிடப்படுவது வேதங்களின் உரை.
ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் மிகவும் வித்தியாசமான விளக்கத்தைத் தருகிறார். அவர் ஸ்பாஸ் பந்தனே என்ற ரூட்டைப் பயன்படுத்துகிறார் – ஒன்றாகக் கட்டவும், மற்றும் அக்ஷரா என்பது மறைந்து போகாத விஷயங்களைக் குறிக்கவும், ஆனால் பிரளயத்திற்குப் பிறகும் மீண்டும் மீண்டும் தோன்றும் – (அவர் ஹிந்தியில் அப்ரலய ஸ்தாயி நக்ஷத்ராதி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ஆகவே, இந்தப் பெயரின் அர்த்தத்தை, பரலோக உடல்கள் கொண்ட இந்த பிரபஞ்சத்தை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் மகாவிஷ்ணுவைக் குறிப்பிடுவதாக அவர் விளக்குகிறார்.
281-மந்திர –
தன் மந்தாரம் த்ராயத இதி மந்திர–நிருக்தம் தன்னைத் த்யானம் செய்பவர்களைக் காப்பாற்றுவது மந்த்ரம்
பிராண ப்ரயாணே க ஸ்மர்த்தம் சக்த ஸ்யாத் மது ஸூதந –ப்ரஹ்ம புராணம்
மது என்ற அரக்கனை அழித்தவனே இந்த உடலை விட்டுப் பிரியும் நேரத்தில்
உன்னையே நினைக்கும் திறன் கொண்டவர் யார் என்பது நாரதர் கேள்வி-
த்ருஷ்ணா தோய சமாகீர்னாத் கோராத் சம்சார சாகராத் அபராத் பாரம் ஆப்னோதி யோமாம் ஸ்மரதி நித்யச -என்று
பேராசை நிரம்பி கரை காண இயலாத–பயங்கர ஆழமான சம்சார கடல்
என்னையே த்யானம் செய்து இருப்பவன் ஒருவன் அதனைத் தாண்டுகிறான்-சம்சார சாகரம் கோரம் -ஜிதந்தே
ஸ்திதே மனசே ஸூஸ் வஸ்தே கோராத் சம்சார சாகராத் தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தோ விஸ்வரூபம் ச மாம் அஜ
ததஸ்தம் ப்ரியமாணம் து காஷ்டா பாஷாண ஸந்நிபம் அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
தனது உடலும் மனமும் ஸ்திரமாக உள்ள போது என்னை ஒருவன் நினைத்தபடி இருக்கட்டும்
அதன் பின்னர் அவன் இறந்த போது கட்டை போன்றும் கல் போன்றும் அசையாமல் உள்ள போது என்னை அவன் நினைக்க வேண்டிய அவஸ்யம் இல்லை
அவனுக்குத் துணையாக நானே நின்று வழி நடத்துகிறேன்
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடு -4-
அவனே மந்த்ரம் -அவனை நினைக்கவே ரஷிப்பான் -அவனைச் சொல்லுவதும் மந்த்ரம்
அந்தணர் மாடு -ஸ்பஷ்டாக்ஷரம் –
அந்தி வைத்த மந்திரத்தை-இந்த திரு நாமம் – மந்திரத்தால்-அடுத்த திரு நாமம் –
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்
நினைத்தால் சம்சாரம் போகும் -நினைக்க விடாமல் கர்மனம் உள்ளதே -நினைப்பதற்கு அருள் நல்லருள்
நினைமின் நெடியானை -ஒரு தரம் நினைக்க தான் மறவாமல் திரு உள்ளத்தில் கொள்பவன் அன்றோ-அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் தேவப்பெருமாள் வார்த்தை
தம்மை த்யானம் செய்பவர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ருக் யஜூஸ் சாம வேத மந்த்ர ரூபமாய் இருப்பவர் -மந்தரத்தால் தெரிவிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –
அறிவைத் தந்து காப்பவர் -தம்மை மனநம் செய்யும்படி செய்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———
ஓம் மந்த்ராய நம:
ரிக்யஜு:ஸாமலக்ஷணோ ரிக், யஜுர், ஸாம வேதங்களின் (அவ்வேதங்களிலுள்ள மந்திரங்களின்) வடிவில் இருப்பதால்
மந்த்ர: பகவான் ‘மந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ரிக், யஜுர், ஸாம வேதங்களின் வடிவில் (அந்த வேதங்களில் உள்ள மந்திரங்களின் வடிவில்) இருப்பதால் அவர் ‘மந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
- மந்திரம் – மந்திரங்கள் அல்லது வேதங்கள் மூலம் அறியப்பட்டவர்
2 சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. மந்திரம் என்பது ரிக் வேதம், யஜுர் வேதம் மற்றும் சாமவேதம் ஆகியவற்றில் உள்ள மந்திரங்கள் அல்லது பாடல்களைக் குறிக்கிறது மற்றும் பகவான் இந்த மந்திரங்களின் உருவகமாக இருக்கிறார். ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் ‘ரிக் யஜுஸ் சாம லக்ஷண மந்திரம் – அவர் 3 வேதங்களின் துதிகளை அடையாளப்படுத்துகிறார், எனவே அவர் மந்திரம் என்று அழைக்கப்படுகிறார்.
மற்ற பொருள் ‘மந்த்ரபோத்யாத்வாத் மந்திரம் – அனைத்து மந்திரங்களும் அவரைக் கண்டுபிடிக்க முயல்கின்றன, எனவே அவர் மந்திரம்’.
தன்-மந்தாரம் த்ராயதே இதி மந்த்ரா, அல்லது மனநாத் த்ராயதே இதி மந்திரம் என்றால் மந்திரம் என்பது தியானிப்பவர்களைக் காக்கும்.
பிரம்ம புராணத்தில், பகவான் கூறுகிறார் –
த்ரிஷ்ணா தோய சம்அகிர்நாத் கோரத் சம்ஸார சாகர்அத் |
அபராத் பரம் ஆப்நோதி யோ மாம் ஸ்மர்த்தி நித்யஸ
“என்னை எப்போதும் நினைப்பவன், பேராசை மற்றும் பேராசை நிறைந்த சம்சாரம் என்ற இந்த பரந்த மற்றும் பயங்கரமான கடலைக் கடப்பான்.”
ஸ்ரீ பராசர பட்டர் வராஹ புராணத்தில் இருந்து வராஹ சரம ஸ்லோகங்களைப் பற்றிய குறிப்பையும் தருகிறார்.
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே ஸரீ ஸதி யோ நரா |
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபம் ஸ மாம் அஜம் ||
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்தா பாஷான சன்னிபம் |
அஹம் ஸ்மரமி மத்-பக்தம் நயாமி பரமம் கதிம் ||
“மனிதன் தன் மனம் இயல்பான நிலையில் இருக்கும்போதும், உடல் சிதறாமல் இருக்கும்போதும், தன் உடலின் அடிப்படைக் கூறுகள் (தாதுக்கள்) சரியான சமநிலையில் இருக்கும்போதும், உலகத்தை என் உடலாகக் கொண்ட என்னையே தியானிக்கிறான். நான் கர்மாவினால் பிறவிகளுக்கு உட்பட்டவன் அல்ல – அந்த மனிதன் இறக்கும் தருணத்தில் மரக்கட்டை போலவோ, கல் துண்டு போலவோ கிடக்கும்போது, என்னுடைய இந்த பக்தனை நினைத்து, அவனை/அவளை பரம ஸ்தானத்தை அடையச் செய்கிறேன்”.
நமது வாழ்க்கைத் திட்டத்தில் மந்திரங்களின் முக்கியத்துவம் பற்றிய கண்ணோட்டத்தை தர்ம சக்கரத்தில் எழுதுபவர் கொடுக்கிறார். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வெளியில் குளிப்பது போல், மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள மந்திரங்கள் உதவுகின்றன. இதைத் தொடர்ந்து மந்திரங்கள் (ஜபம்), ஆழ்ந்த மற்றும் நிலையான சிந்தனை (தியானம்), இசைப் பாடல்கள் (பஜன்கள்) போன்றவற்றின் மூலம் செய்யலாம். திருமங்கை ஆழ்வார் கூறுகிறார் – ‘ நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ – பெரிய திருமொழி1- 1-9.
282-சந்த்ராம்ஶு
குளிர்ந்த தேஜஸ்
தேஷாம் மந்த்ரூணாம் (மனனம் பண்ணுபவர்களின் )க்லம ஹர ஆஹ்லாத₃ந தேஜஸ்த்வாத்
சந்த்₃ராம்ஶு꞉ ॥
சதி₃ ஆஹ்லாத₃நே ।
* ஸ்பா₂யிதஞ்சி இத்யாதி₃நாரன், சந்த்₃ர꞉ । யதா₂
உணாதி ஸூத்ரம் –சதி ஆஹ்லாதநே –மகிழ்ச்சி அளிக்க வல்ல சதி என்பதில் இருந்து சந்திரன் பதம் உண்டாகிறது
தே சம் சோமம் இவ உத்யந்தம் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண–ஆரண்ய காண்டம்
இருளை போக்க உதிக்கும் சந்திரன் போன்று அங்கிருந்த முனிவர்கள் ராமனைக் கண்டனர் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்–சந்த்ராம்ஶு பாஸ்கர த்யுதி-
த்யானிப்பவர்களுக்கு- க்லம ஹர- களைப்பை நீக்கி –ஆஹ்லாத₃ந தேஜஸ்-செழிப்பை யுண்டாக்குவதால் சந்தரன் போன்ற ஒளி யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சம்சார தாபத்தினால் வருந்தியவர்க்கு சந்திர கிரணம் போல் மகிழ்ச்சி அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
சந்த்ரனுக்கு ஒளியை அளிப்பவர் -சந்திர கிரணம் போலே குளிர்ச்சி தருபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————-
ஓம் சந்த்ராம்ஶவே நம:
ஸம்ஸாரதாபதிக்மாம்ஶு இந்தப் பிறவியென்னும் கதிரவனின்
தாபதாபித வெப்பத்தினால் தாக்கப்பட்டு தவிக்கும்
சேதஸாம் மனிதர்களுக்கு
சந்த்ராம்ஶுரிவ வெண்மதியின் கிரணங்கள் எவ்வாறு மக்களை குளிர்விக்குமோ அவ்வாறே அனைவரையும் குளிர்வித்து
ஆஹ்லாதகரத்வாத் மகிழ்விப்பதால்
சந்த்ராம்ஶு பகவான் ‘சந்த்ராம்ஶு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கதிரவனின் கதிர்களால் துன்புறுவோரை வெண்மதியானது எவ்வாறு தன் கிரணங்களால் குளிர்விக்குமோ, அவ்வாறே, இந்தப் பிறவியென்னும் கதிரவனின் வெப்பத்தால் தாக்கப்பட்டுத் துன்புறுவோரை பகவான் குளிர்வித்து மகிழ்ச்சியூட்டுகிறார். எனவே, அவர் ‘சந்த்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
திக்ம என்றால் வெப்பம். இங்கு கதிரவனைக் குறிக்கும்.
———
- சந்திராம்ஷு – சம்சாரத்தின் உஷ்ணத்திலிருந்து நிவாரணம் தருபவர்
சந்திரன் சந்திரன் மற்றும் அம்சு அதிலிருந்து வெளிப்படும் குளிர் ஒளி. ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுவது போல், ‘சம்சார தபதிக்மான்ஷு தாபதாபிதா சேதாஸாம் சந்த்ராம்ஷுரிவ ஆஹ்லாதாகாரத்வாத் சந்த்ராம்ஷு: சம்சாரத்தின் பயங்கர வெப்பத்தால் அல்லது இந்த உலகில் உள்ள வாழ்க்கை சுழற்சியால் வாடுபவர்களுக்கு அவர் குளிர்ச்சியைத் தருகிறார், எனவே அவர் சந்திராம்சு‘ என்று அழைக்கப்படுகிறார்.
சந்திரா என்ற சொல் ‘காடி அஹ்லாடே திப்டௌ கா’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது மகிழ்ச்சி, பிரகாசித்தல். சம்சாரத்தின் உஷ்ணத்தால் வாடுபவர்களின் மனதில் மகிழ்ச்சியைத் தருகிறார். ‘புஷ்ணாமி சௌஷதீஹ் ஸர்வாஸ் ஸோமோ பூத்வா ரஸாத்மகஹ்‘- பகவத் கீதை அத்தியாயம் 15 வசனம் 13. சந்திரனின் குளிர்ச்சியான கதிர்கள் இனிமையானவை மற்றும் ஊட்டமளிக்கின்றன என்பது அனுபவத்தில் அறியப்படுகிறது. பகவான் தனது பக்தர்களுக்கு சந்திரனின் கதிர்களைப் போன்றவர்.
283-பாஸ்கர த்யுதி-
ஸூர்யன் போன்ற தேஜஸ்
பரேஷாம் பரிபா₄வுக ப்ரபா₄வத்வாத்₃
பா₄ஸ்கரத்₃யுதி꞉ । யதா
ரஷாம்சி பீதாநி திசோ த்ரவந்தி -கீதை -11-36-
உன்னைக் காண பயந்தவர்களாக அரசர்கள் அனைத்து திசைகளிலும் ஓடுகிறார்கள்
சர ஜால அம்சுமான் ஸூர கபே ராம திவாகர சத்ரு ரஷோ மயம் தாயம் உப சோஷம் நயிஷ்யதி–ஸூந்தர காண்டம்
அனுமனே ராமன் எனப்படும் ஸூர்யன் மிகவும் திறன் கொண்ட ஸூரன் ஆவான்
கிரணங்கள் கொண்ட ஸூர்யன் தண்ணீரை வற்ற வைப்பது போன்று தனது கிரணங்கள் போன்ற
கூர்மையான அம்புகளால் ராமன் அரக்கர்களை இருந்த சுவடு இல்லாமல் அழிக்கிறான்
கீழ் ராம சந்திரன் -இதில் ராம திவாகரன்-அச்யுத பானு–பிறவிக் கடல் வற்றி -உள்ளிருள் நீங்கி வளர்ந்தது -போதில் கமலம் விகசிக்க வகுள பூஷண பாஸ்கரம்
ஏவம் ஏஷ அஸூராணாம் ச ஸூராணாம் ச ஏவ ஸர்வஸ பயா பயகர கிருஷ்ண சர்வ லோகேஸ்வர பிரபு –சபா பர்வம்
ஈஸ்வரனாகவும் சக்தியுடன் கூடிய பிரபுவாகவும் உள்ள கிருஷ்ணன் துன்பம் அளிக்கின்ற அஸூரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறான்
தன்னிடம் அன்பு கொண்ட தேவர்களுக்கு அருள் புரிந்து அபயம் அளிக்கிறான்
கதிர் மதியம் போல் முகத்தான்
சீரார் சுடர்கள் இரண்டாய் -6-9-1-
பரஞ்சோதி உருவாய்-
ஸூர்யனைக் கண்ட இருள் போல -பகைவரை பறந்து ஓடும் படி விரட்டும் பெருமை யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸூரியனது ஒளியைப் போலே ஒளி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸூரியனுக்கு ஒளியை அளிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———–
ஓம் பாஸ்கரத்யுதயே நம:
பாஸ்கரத்யுதி கதிரவனின் ஒளியை
ஸாதர்ம்யாத் ஒத்தவராய் (ஒத்த ஒளியை உடையவராய்) இருப்பதால்
பாஸ்கரத்யுதி பகவான் ‘பாஸ்கரத்யுதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கதிரவனை ஒத்த ஒளி படைத்தவராய் இருப்பதால் பகவான் ‘பாஸ்கரத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
பாஸ்கரத்யுதி – சூரியனின் பிரகாசத்தை உடையவர்
ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படி, இந்த நாமத்தின் அர்த்தம் ‘பாஸ்கர த்யுதி சாதர்ம்யாத் பாஸ்கரத்யுதிஹ் – அவருடைய பிரகாசம் சூரியனின் பிரகாசத்தின் தன்மையில் உள்ளது. எனவே அவர் பாஸ்கரத்யுதி‘ என்று அழைக்கப்படுகிறார்.
டாக்டர் வி.வி. ராமானுஜன் தனது விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் சந்திராம்சு மற்றும் பாஸ்கரத்யுதி ஆகிய இரண்டு பெயர்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார். சந்திரனின் சுகமான குளிர்ச்சியையும், சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்தையும் பகவான் ஒரே நேரத்தில் கொண்டிருப்பது தனிச் சிறப்பு ஆகும் – அவர் தனது பக்தர்களை அமைதிப்படுத்துகிறார் மற்றும் அவரது எதிரிகளை எரிக்கிறார்.
பாஸ்கரன் அல்லது சூரியனின் த்யுதி அல்லது பிரகாசம் அல்லது அந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவரின் பிரகாசத்திற்கும் காரணகர்த்தாவாக இருப்பதால் அவர் பாஸ்கர-த்யுதி. சூரியனின் பிரகாசத்தை நம்மால் பார்க்க முடியும் ஆனால் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பிரகாசத்தை நம்மால் பார்க்க முடியாது.
இந்த பிரகாசம் அவரது எதிரிகளை எல்லா திசைகளிலும் உடைத்து எறிந்துவிடும். ராமர் ராம-திவாகரர் என்று குறிப்பிடுவதை நினைவுபடுத்துங்கள்.
சாரா ஜல்அம்சும்அன்சூரா கபே! ராம-திவாகரர் |
சத்ரு-ரக்ஷோமயம் தோயம் உஆப்சோஷம் நயிஷ்யதி || (சுந்தர காண்டம் 37-18)
“ஓ குரங்கு (ஹனுமான்)! சூரியனைப் போன்ற வீரமும், கதிர் போன்ற அம்புக் குவியல்களைக் கொண்டவருமான இராமன், பகை ராக்ஷஸர்களின் தண்ணீரை நிச்சயமாக வற்றச் செய்வான்.”
ஆண்டாளின் திருப்வை (கதிர் மதியம் போல் முகத்தான்) பற்றிய குறிப்பும் இந்தச் சூழலில் பொருத்தமானது.
விஸ்வரூபத்தின் விளக்கம் தொடர்கிறது, அர்ஜுனனின் விளக்கத்திலிருந்து, இறைவனின் தேஜஸ் எரியும் மற்றும் பயமுறுத்துகிறது என்பதை நாம் அறிவோம். அவரது தேஜஸின் குளிர்ச்சி மற்றும் எரியும் குணங்களின் ஒரே நேரத்தில் இருப்பதற்கான ஒரு உதாரணம் நரசிம்ம அவதாரம், அங்கு அவரது வடிவம் ஹிரண்யகசிபுவை பயமுறுத்தியது, அதே நேரத்தில் அவர் பிரஹலாதனுக்கு தெய்வீகமாக இருந்தார்.
அவரது பிரகாசம் பகவத் கீதையில் சஞ்சயனால் விளக்கப்பட்டுள்ளது –திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா—
யதி பாஸ் ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மந—৷৷11.12৷৷–“ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சூரியன்கள் பிரகாசமாக பிரகாசமாக வானத்தில் தோன்றினால், அவற்றின் தேஜஸ் அல்லது பிரகாசம் இறைவனின் ஒரு பகுதியே”.
——————–
276-ஓஜஸ் தேஜோத் யுதிதர –
பலம் பராக்கிரமம் கீர்த்தி ஒளி ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பலம் பராக்கிரமம் ஒளி ஆகியவற்றை யுடையவர் -ஓஜ-தேஜ இரண்டு திருநாமங்களாக கொண்டு ஞானத்தின்
அடையாளமான ஒளியைத் தரிப்பவர் -ஆதலால் த்யுதி தரர் –ஸ்ரீ சங்கரர் –
பராக்கிரமம் பிரதாபம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————–
277-பிரகாசாத்மா –
மூடர்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும் சிறந்த பிரபாவம் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பிரகாசமான ஸ்வரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
நன்றாக சுகத்தை அனுபவிக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————
278-பிரதாபந-
எல்லாவற்றையும் தபிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சூரியன் முதலியவற்றால் தகிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –
நன்கு பரவி இருப்பவர் -ஜலத்தைத் தூண்டுபவர் -சூரியன் முதலானோரில் நின்று நன்கு தஹிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————
279-ருத்த –
பருவ காலங்களில் கரை புரளும் கடல் போல எப்போதும் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தர்மம் ஞானம் வைராக்யம் முதலிய குணங்கள் நிரம்பியவர் –ஸ்ரீ சங்கரர் –
இயற்கையாக முழுமையானவர் –
ருத்தஸ் பஷ்டாஷர-என்ற பாடத்தில் ஓம் நமோ நாராயணாய -எட்டு அக்ஷரங்களை உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————
280-ஸ்பஷ்டாஷர-
தமது பெருமையைத் தெளிவாகக் கூறும் வேத அஷரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஓங்காரம் என்னும் அஷரத்தினால் வெளிப்படும் மகிமை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்பஷ்டமான வேத சாஸ்திர எழுத்துக்களால் அறியப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————-
281-மந்த்ர-
தம்மை த்யானம் செய்பவர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ருக் யஜூஸ் சாம வேத மந்த்ர ரூபமாய் இருப்பவர் -மந்தரத்தால் தெரிவிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –
அறிவைத் தந்து காப்பவர் -தம்மை மனநம் செய்யும்படி செய்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————————
282-சந்த்ராம் ஸூ –
த்யானிப்பவர்களுக்கு களைப்பை நீக்கி செழிப்பை யுண்டாக்குவதால் சந்தரன் போன்ற ஒளி யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சம்சார தாபத்தினால் வருந்தியவர்க்கு சந்திர கிரணம் போல் மகிழ்ச்சி அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
சந்த்ரனுக்கு ஒளியை அளிப்பவர் -சந்திர கிரணம் போலே குளிர்ச்சி தருபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————————–
283-பாஸ்கரத் யுதி-
பகைவரை விரட்டும் பெருமை யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சூரியனது ஒளியைப் போலே ஒளி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –
சூரியனுக்கு ஒளியை அளிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
————–
வடமொழியில் ‘ஓஜஸ்’ என்றால் வலிமை, ‘தேஜஸ்’ என்றால் புகழ்,
‘த்யுதி:’ என்றால் பொலிவு. ‘தர:’ என்றால் உடையவர்.
உலகைத் தாங்கவல்ல வலிமை, உலகின் தலைவனுக்குரிய புகழ், உலகைக் காப்பதால் உண்டான பொலிவு
ஆகிய மூன்றும் விஸ்வரூபத்தில் நன்கு வெளிப்படுவதால்,
விஸ்வரூபத்தில் திருமால் ‘ஓஜஸ்தேஜோத்யுதிதர:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 276-வது திருநாமம்.
“ஓஜஸ்தேஜோத்யுதிதராய நமஹ” என்று தினமும் சொல்லும் அன்பர்கள்,
திருமால் அருளால் வலிமை, புகழ், மற்றும் பொலிவோடு திகழ்வார்கள்.
ப்ரகாசம்’ என்றால் ஒளி. ‘ப்ரகாசாத்மா’என்றால் ஒளிமிக்கவர் என்று பொருள்.
திருதராஷ்டிரன் போன்ற மூடர்கள் கூட ஏற்றுக் கொண்டு, மனம் திருந்தி, துதி செய்யும் படியான பிரகாசம்
கொண்டவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ப்ரகாசாத்மா’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 277-வது திருநாமம்.
“ப்ரகாசாத்மனே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் ஞானக் கண்களுக்குத் திருமால் ஒளிதருவார்.
‘ப்ரதாபன:’ என்றால் சுட்டெரிப்பவர் என்று பொருள்.
விஸ்வரூப வடிவின் ஒளியால் தீய சக்திகளைத் திருமால் சுட்டெரிப்பதால், அவர் ‘ப்ரதாபன:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 278-வது திருநாமம்.
“ப்ரதாபனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பாபங்களைத் திருமாலின் திருமேனி ஒளி சுட்டெரிக்கும்.
பரிபூரணமாக நிறைந்திருப்பவரை வடமொழியில் ‘ரித்த:’ என்றழைப்பார்கள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 279-வது திருநாமம்.
“ரித்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்துச் செல்வங்களும்
பரிபூரணமாக நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
‘ஸ்பஷ்டாட்சரன்’ என்று திருமாலை இங்கே வியாசர் குறிப்பிட்டுள்ளார். வேதத்திலுள்ள எழுத்துகளுக்கு ‘அட்சரம்’ என்று பெயர்.
‘ஸ்பஷ்டம்’ என்றால் தெளிவு என்று பொருள். திருமாலின் திருவருளாலேயே ஜைமினி இத்தகைய விளக்கம் தந்துள்ளார்
என்பதை உணர்ந்த வியாசர்,
“ஸ்பஷ்டாட்சரன் (திருமால்) அட்சரங்களை (வேத எழுத்துகளை) ஸ்பஷ்டமாக்கி (தெளிவாக்கி) விட்டானோ?” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு வேத எழுத்துகளாகிய அட்சரங்களை அடியார்களுக்கு ஸ்பஷ்டமாக – தெளிவாக விளக்கிக் காட்டுவதால்,
திருமால் ‘ஸ்பஷ்டாட்சர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 280-வது திருநாமம்.
“ஸ்பஷ்டாக்ஷராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வேதங்களின் பொருள்
நன்கு விளங்கும்படி திருமால் அருள்புரிவார்.
மந்தா:’ என்றால் நினைப்பவர். ‘த்ராயதே’ என்றால் காப்பது. தன்னை நினைப்பவரை
(மந்தாவை), பிறவிப் பெருங்கடலில் இருந்து காப்பதால் (த்ராயதே), திருமால் மந்த்ர:
(மந்தாரம் + த்ராயதே = மந்த்ர:) என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 281-வது திருநாமம்.
“மந்த்ராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் நிச்சயம் காத்தருள்வார்.
‘அம்சு:’ என்றால் கிரணம். சந்திரனின் கிரணங்களைப் போல் குளிர்ச்சியும் ஆனந்தமும் தரவல்ல
திருமேனி ஒளியோடு திருமால் திகழ்வதால், ‘சந்த்ராம்சு:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 282-வது திருநாமம்.
“சந்த்ராம்சவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் குளிரக் கடாட்சிப்பார்.
‘பாஸ்கர:’ என்றால் சூரியன். ‘த்யுதி:’ என்றால் ஒளி.
சுட்டெரிக்கும் சூரியன் போன்ற தனது ஒளியால் தீய சக்திகளைச் சுட்டெரிப்பதால் திருமால் ‘பாஸ்கரத்யுதி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 283-வது திருநாமம்.
(இறைவனின் திருமேனி ஒளி என்பது ஒன்று தான். ஆனால் அதுவே நல்லோர்க்கு நிலவொளியாகவும்,
தீயவர்க்குச் சூரிய ஒளியாகவும் தெரிகிறது. நல்லோர்களுக்கு அது நிலவொளியாக இருப்பதை
இதற்கு முந்தைய திருநாமமான சந்த்ராம்சு: (282) காட்டுகிறது.
தீயவர்களுக்கு அது சூரிய ஒளியாக இருப்பதை இந்தத் திருநாமம் பாஸ்கரத்யுதி: (283) காட்டுகிறது.
“பாஸ்கரத்யுதயே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்குச் சூரியனைப் போன்ற பொலிவைத் திருமால் அருள்வார்.
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்