ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –28–

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நச்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28-

ரிஷிகள் சாத்திய திரு நாமங்கள் –
பீஷ்மர் நான் அறிந்த உயர்ந்த பரமமானது திரு நாம சங்கீர்த்தனம்
வ்யாஸர் கோத்த திரு நாம மாலை-

இந்த இருபத்தி எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

257-வ்ருஶாஹீ, 258. வ்ருஶப:, 259. விஶ்ணு:, 260. வ்ருஶபர்வா, 261. வ்ருஶோதர: |

262-வர்த்தன:, 263. வர்த்தமான:, 264. விவிக்த:, 265. ஶ்ருதிஸாகர: ||

வ்ருஷாஹீ – அவரை அடையும் தினமே அனைத்து மங்களங்களுக்கும் வித்தாக விளங்க தர்மமே பகலாக ஒளிர்பவர் ஆகையாலே வ்ருஷாஹீ
வ்ருஷப: – ஸம்ஸாரமென்னும் தீயினால் வெந்த ஜீவர்களுக்கு புத்துயிரூட்டும் அமுதமாய் அருள் பொழிபவர் ஆகையாலே வ்ருஷப:
விஷ்ணு: – பல விதமாக அருள் செய்தும் தாம் பக்தர்களை என்றும் பிரியாமல் கூடவே இருப்பவர் ஆகையால் விஷ்ணு:
வ்ருஷபர்வா – தர்மத்தையே தம்மை அடையும் படிக்கட்டாக உடையவர் ஆகையாலே வ்ருஷபர்வா
வ்ருஷோதர: – அனைத்து உலகங்களையும் தர்மம் என்னும் தம் வயிற்றினுள் வைத்துக் காப்பவர் ஆகையாலே வ்ருஷோதர:
வர்தந: – தம்மைச் சரணடைந்தோரைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் ஆகையாலே வர்தந:
வர்த்தமாந: – உயிர்களைக் கருணையினால் வளர்ப்பதில் தாம் பெரும் மகிழ்வு கொண்டு வளர்பவர் ஆகையாலே வர்த்தமாந:
விவிக்த: – அனைத்திலும் விலக்ஷணமான சிறந்த சரித்திரங்களை உடையவர் ஆகையாலே விவிக்த:
ச்ருதிஸாகர: – தம்முடைய குணங்களையும் அற்புத சரித்திரங்களையும் கூறும் வேதங்கள் கணக்கற்றவை கொண்டவர் ஆகையாலே ச்ருதிஸாகர:

புனிதநாட்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் (அல்லது, தன் சிறந்த குணங்களால் இந்திரனையே மறைப்பவன்) {வ்ருஷாஹீ},
விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்குப் பொழிபவன் {வ்ருஷபன்},
அண்டம் முழுவதும் நடப்பவன் {விஷ்ணு},
(உயர்ந்த இடத்திற்கு ஏற விரும்புகிறவர்களுக்கு) அறத்தால் அமைந்த சிறந்த படிக்கட்டுகளை அளிப்பவன் {வ்ருஷபர்வா},
வயிற்றில் அறத்தைக் கொண்டவன் (அல்லது, கருவரையில் பிள்ளையைப் பாதுகாக்கம் தாயைப் போல இந்திரனைப் பாதுகாப்பவன்) {வ்ருஷோதரன்},
(தன்னை வழிபடுபவர்களைப்) பெருக்குபவன் {வர்த்தநன்},
பெரும் அண்டமாகப் பரவத் தன்னைப் பரப்பிக் கொள்பவன் {வர்த்தமாநன்},
அனைத்திலிருந்தும் (அவற்றில் ஊடுருவாமல்) தனித்து இருப்பவன் {விவிக்தன்},
ஸ்ருதிகளெனும் பெருங்கடலின் கொள்ளிடமாக இருப்பவன் {ஸ்ருதிஸாகரன்};(41)

யானே நீ என்னுடைமையும் நீயே 

257-வ்ருஷாஹீ -அவனை அடையும் நாளே நன்னாளான தர்மமாக இருப்பவர் –
258-வ்ருஷப – சம்சார தீயால் சுடப் பட்டவர்களுக்கு அருள் என்னும் அமுதைப் பொழிபவர் –
259-விஷ்ணு -அருள் மழையாலேயே எங்கும் இருப்பவர் –
260-வ்ருஷபர்வா -தன்னை அடைவதற்கு தர்மங்களைப் படிக்கட்டாக உடையவர் –

261- வ்ருஷோதர -தன் வயிறே தர்மமானவர் -அடியார்கள் அளிக்கும் நைவேத்யத்தால் வயிறு நிறைபவர் –
262-வர்தன -தாய் போலே தன் வயிற்றிலே வைத்து அடியார்களை வளர்ப்பவர் –
263-வர்த்தமான –அடியார்கள் வளரும் போது தானும் மகிழ்ந்து வளர்பவர் –
264-விவிக்த -மேற்கண்ட செயல்களால் தன்னிகர் அற்றவர் –
265-ஸ்ருதி சாகர -நதிகளுக்கு கடல் போலே -வேதங்களுக்கு இருப்பிடமானவர் –

———

257-வ்ருஷாஹீ
அடையும் நாள் நன்னாளாய் இருப்பவன்-வ்ருஷ -தர்மம் அஹஸ் -நாள் –அஹீ-உடையவன்

நிகி₂ ல மங்க₃ ல அங்க்ருரார்பண தி₃நத்வாத் வ்ருஷ ரூபம் த₄ர்ம ரூபம் அஹரஸ்ய ப்ரத₂ம அபி₄க₃மந
தி₃வஸம்
வ்ருஷாஹீ꞉ ।

அஷ்டாத்யாயீ –ராஜ அஹஸ் சஹிப் யஷ் டச் —ராஜன் -அஹன் -சகின் -டச் என்பதை சேர்த்துக் கொள்ளும்

அத்யமே சபலம் ஜன்ம ஸூப்ரபாதா ச மே நிசா -விஷ்ணு புராணம் -5-17-3-
இன்று என் வாழ்வின் பயன் அடைந்தேன் -எனது வாழ்வின்-நிசா- இரவு நீங்கியது-உன்னித்ர அத்ர பத்ராக்ஷம் -தாமரைக்கண்ணனை சேவிக்கப் போகிறேன்

தாஸ் நிசாஸ் தே ச திவஸா–விஷ்ணு புராணம்
நான் என்று எல்லாம் கிருஷ்ணனைக் காணவில்லையே அன்று அனைத்துமே இரவே
இனி அவன் உடன் உள்ள நாட்கள் மட்டுமே பகல் பொழுதாகும்-பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்

எதாஹி ஏவ ஏஷ –அதச அபயம் கதோ பவதி–தைத்ரியம்
எப்போது உபாசகன் காண இயலாத அவனைக் குறித்த நினைவிலேயே உள்ளானோ அப்போதே அவன் ஸம்ஸார பயம் நீங்கப் பெறுகிறான் –

அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே -5-8-3-ஆகிஞ்சன்யம் முன்னிட்டு வான மா மலையில் அநந்ய கதித்வம் முன்னிட்டு திருக்குடந்தையில்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –இன்று யாம் வந்தோம் இரங்கு -மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்

அக்ரூரர் பாரித்த படியே-

தம்மை முதன் முதலில் அடையும் தினமே எல்லா மங்களங்களுக்கும் வித்திடும் நாள் போலே இருப்பதால் அந்த ஆரம்ப தினம் தர்ம ரூபமாகவே சிறப்பாக இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகல் போலே பிரகாசிக்கும் தர்மங்களை உடையவர் -த்வாதசாஹம் முதலிய யஜ்ஞ விசேஷமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் மூலமாகப் பரவி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————


ஓம் வ்ருஶாஹிணே நம:

வ்ருஶோ தர்ம: புண்யம் ‘வ்ருஶ’ என்றால் தர்மம் (அறம்) அல்லது நற்கருமம் (புண்யம்) என்று பொருள்

ததேவாஹ: அவரே (இந்த அறம், மற்றும் நற்கரும வடிவான பகவானே) ‘அஹ’ என்றழைக்கப்படும் பகலாக இருக்கிறார்

ப்ரகாஶஸாதர்ம்யாத் ஒளி வடிவானவராய் இருப்பதால் (பகவான் பகலுக்கு ஸமமானவர்)

வ்ருஶாஹீ எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பகவான் அறம் மற்றும் நற்கரும (வ்ருஶ) வடிவினராய் இருக்கிறார். ஒளிபடைத்தவராய் இருப்பதால் அவரே பகலாகவும் இருக்கிறார் (அஹி). எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ (வ்ருஶ + அஹி) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வாதஶாஹப்ரப்ருதிர்வ்ருஶாஹ: பன்னிரு வேள்விகள் ‘வ்ருஶாஹ’ என்று அழைக்கப்படுகின்றன

ஸோSஸ்யாஸ்தீதி அவை (அந்த பன்னிரு வேள்விகள்) பகவானிடமே நிலைபெற்றிருக்கின்றன

வ்ருஶாஹீ எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பன்னிரு வேள்விகள் ‘வ்ருஶாஹ:’ என்று அழைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் பகவானிடமே நிலைப்பெற்றிருக்கின்றன. எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ராஜாஹ: ஸகிப்யஶ்டச்’ (பாணினி சூத்ரம் 5.4.91)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

ராஜா, அஹி, ஸகி முதலிய சொற்கள் ஒரு ‘தத்புருஶ’ சொற்றொடரின் பின் வரும்பொழுது அதனுடன் ‘டச்’ என்ற விகுதி சேர்க்கப்படுகிறது. 

இதி டச் ப்ரத்யய: ஸமாஸாந்த: |

பாணினி ஸூத்ரத்தின் படி ‘வ்ருஶாஹ’ என்ற சொல்லின் இறுதியில் ‘டச்’ விகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

——

  1. விருஷாஹீ – அவர் தர்மம்

இந்த பெயர் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது விருஷா அதாவது தர்மம் அல்லது நீதியான நடத்தை மற்றும் ஆஹா என்றால் நாள்.

ஸ்ரீஆதிசங்கரர் இந்தப் பெயருக்கு இருவிதமான விளக்கம் தருகிறார். முதலாவது ‘விருஷோ தர்மா புண்யம் ததேவ அஹ ப்ரகாஷ சாதர்ம்யாத் – தர்மத்தின் கருத்துகளை பட்டப்பகலில் கொண்டு வந்து அனைவருக்கும் வெளிப்படுத்துவதால் அவர் விருஷாஹீ ஆவார். இரண்டாவதாக, ‘த்வாதஷாஹ ப்ரபிரிதிஹ் விருஷாஹ ஸஹ் அஸ்ய அஸ்தி இதி விருஷாஹீ – விருஷா’ எனப்படும் 12 நாள் யாகத்தை அவர் அனுபவிக்கிறார் அல்லது தலைமை தாங்குகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் அவருடைய தர்மத்தின் காரணமாக அவர் பகலைப் போல பிரகாசிக்கிறார் என்று கூறுகிறார். அல்லது தர்மத்தை கடைபிடிப்பவர்களை பகல் போல் பிரகாசிக்கச் செய்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டரின் விளக்கம் என்னவென்றால், ஒரு பக்தன் இறைவனை அணுகும் நாள் மங்களகரமான நாள் அல்லது தர்மத்தின் நாள் என்பதால் அவர் விருஷாஹீ ஆவார்.

விருஷா அக்னி சமித்யதே (ரிக் வேதம் 3.27.14) அடிப்படையில் விருஷா என்ற சொல்லுக்கு ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் “நெருப்பு” அல்லது “அக்னி” என்று பொருள் தருகிறார், மேலும் ஆஹா என்ற சொல்லுக்கு பிரகாசம் அல்லது பிரகாசம் என்று பொருள் கொடுக்கிறது. அதனால் விருஷாஹீ என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் இதைப் பொதுமைப்படுத்தி, சூரியன் போன்ற பிரகாசமாக இருக்கும் எதனுடைய பிரகாசத்தைக் கொண்டிருக்கிறாரோ, அல்லது வேறுவிதமாகக் கூறினால், அவற்றின் பிரகாசம் அவனால் தான் என்று உண்மையில் வ்ரிஷாஹீ குறிப்பிடுகிறார். ஞானத்தால் விளையும் பிரகாசம், ஜீவாத்மா போன்றவற்றால் அவனிடமிருந்து பிரகாசத்தைப் பெறுவதால் வாழ்க்கையின் பிரகாசம். அவர் ஒருவரே சுயப்பிரகாசம் அல்லது ஸ்வயம் பிரகாசம் உடையவர்.


258-வ்ருஷப –
அனுக்ரஹத்தை பொழிபவன்

ஏவம் அபி₄க₃ச்ச₂தோ பக₄வத₃க்₃தா₄ன் வர்ஷதீதி
வ்ருஷப ₄꞉(அருள் மழை சம்சார அக்னியில் பொழிந்து தாபத்ரயங்களைப் போக்கி )
ருஷி வ்ருஷிப்₄யாம் க்ரித் இதி வ்ருஷேரேப₄ச் ப்ரத்யய ꞉ கித்₃வத்₃பா₄வஶ்ச ॥

உணாதி ஸூத்ரம் -ருஷிஸ் வ்ருஷிப்யாம் கித்–ருஷி
வ்ருஷி என்பதால் பின்னால் அப் என்ற ப்ரத்யயமும் கித் என்ற ப்ரத்யயமும் சேர்கிறது
வ்ருஷ் +அபச் +அ –வ்ருஷப

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

சம்சார மருகாந்தார துர்வ்யாதி வயாக்ரா பீஷனே
விஷய ஷூத்ர குல்மாட்யே த்ருஷாபாத பசாலி நி–ஸ்ரீ தேவ ராஜ அஷ்டகம் –4-

சம்சாரம் ஆகிய கொடிய காட்டிலே கொடிய நோய்கள் ஆகிற புலிகளினால் பயங்கரமாயும்
ஆசையாகிற மரங்கள் அடர்ந்ததாயும்
சப்தாதி விஷயங்கள் ஆகிய ஆகிய சிறு புதர்கள் நிறைந்ததாயும்

புத்ர தார க்ருஹ ஷேத்ர மிருக த்ருஷ்ணாம்பு புஷ்கலே
க்ருத்யாக்ருத்ய விவேகாந்தம் பர்ப்ராந்த மிதஸ் தத–5-

மக்கள் மனைவியர் வீடு நிலம் ஆகிய கானல் நிரம்பியனதுமான
இன்னது செய்யத் தக்கது இன்னது செய்யத் தகாதது என்கிற விவேகம் இன்றிக்கே
இங்கும் அங்கும் சுழன்று உழலுபவனாய்

அஜஸ்ரம் ஜாதத் த்ருஷ்ணார்த்தம் அவசன் நாங்க மஷமம்
ஷீண சக்தி பலாரோக்யம் கேவலம் கிலேச சம்ஸ்ரயம்–6-

எப்போதும் விடாய்த்தவனாய் உடல் இளைத்தவனாய் அசமர்த்தனாய்
சக்தி பலம் ஆரோக்கியம் இவை ஒன்றும் இல்லாதவனாய்
கிலேசங்கள் மிக இருக்கப் பெற்றவனாய்

சம்தப்தம் விவிதைர் துக்கை துர்வ சைரவ மாதிபி
தேவராஜ தயா ஸிந்தோ தேவதே ஜகத் பத்தி —7-

சொல்ல முடியாத இப்படிப் பட்ட பலவகை துன்பங்களினால்
தாபம் உற்றவனாய் இருக்கிற அடியேனை
கருணைக் கடலான தேவராஜனே தேவாதி தேவனே உலக்குக்கொர் முத்தைத் தந்தையே

த்வ தீஷண ஸூதா சிந்து வீசி விஷே பச்கரை
காருண்ய மாருதா நீதை சீதலைரபி ஷிஞ்சமாம் -8-

காருண்யம் ஆகிற காற்றினால் கொண்டு தள்ளப் பட்டவையும் குளிர்ந்தவையுமான
உன்னுடைய கடாஷ அம்ருத நதி பிரவாஹத் திவலைகளினால் நனைத்து அருள வேண்டும் என்கிறார்

சம்சாரத் தீயினால் தகிக்கப் பட்டுத் தம்மை வந்து அடைந்தவர் மீது அமுதமன்ன அருளைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை வர்ஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அருளைப் பொழிபவர் -தர்மத்தால் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——

  1. ஓம் வ்ருஶபாய நம:

வர்ஶத்யேஶ மழைப்போல பொழிகிறார்

பக்தேப்ய: பக்தர்களின்

காமானிதி விருப்பங்களை

வ்ருஶப: எனவே பகவான் ‘வ்ருஶப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பக்தர்களுக்கு, அவர்கள் விரும்புவதை மழை போன்று பொழிகிறார். எனவே, அவர் ‘வ்ருஶப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——

விருஷபா – அவர் தனது பக்தர்களின் மீது தனது அருளைப் பொழிந்து, அவர்கள் விரும்பியதை அவர்களுக்கு வழங்குகிறார்.

இங்கு விருஷா என்பது மழை அல்லது மழையைக் குறிக்கிறது. ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த நாமத்தை ‘வர்ஷதி ஏவ பக்தேப்யஹ காமான் இதி விருஷபஹ் – அவர் தனது பக்தர்களுக்கு அவர்கள் விரும்புவதைப் பொழிகிறார்’ என்று விளக்குகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ‘வர்ஷாத்மனா பாதி – தர்மம் அல்லது சரியான நடத்தை வடிவத்தில் திகைப்பூட்டுபவர்’ என்று விளக்கம் தருகிறார்.

தர்ம சக்கரத்தில் எழுதுபவர், மனிதர்கள் எதை விரும்புகிறாரோ, அதை அவரவர் முயற்சிக்கு ஏற்ப பகவான் தருகிறார் என்று கூறுகிறார். இவற்றில், அவரை உணருவதே உண்மையான விருப்பமாக இருக்க வேண்டும். மற்ற அனைத்து விருப்பங்களும், அவற்றைத் தேடுபவர்களுக்கு அவரால் நிறைவேற்றப்பட்டாலும், தற்காலிக இன்பம் முடிந்தபின் துக்கத்தையே விளைவிக்கும். பக்தி அல்லது பக்தியின் செயல்முறையை அனுபவிப்பதே ஆசையாக இருக்க வேண்டும், விரைவான உலக இன்பங்களில் அல்ல.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனது திருமாலையில் (882) இந்த புகழ்பெற்ற பாசுரத்தின் மூலம் தனது ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறார்:

 

பச்சை மாமலை பொல் மேனி, பாவலா வை, கமலா செங்கஎன்,

அச்யுதா அமரர் ஏரே,  ஆயர்தம் கொழுந்தே என்னும்,

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆலும்

அச்சுவைபேரினும் வேண்டேன் அரங்கமா நகரானே!

பவள உதடுகளையும் தாமரை சிவந்த கண்களையும் உடைய பெரிய பச்சை மலையின் சாயலையுடைய, அரங்க நகரின் ஆண்டவரே, அச்யுதா! நித்திய ஆண்டவரே, ஓ மாடு மேய்ப்பவரே”, இந்திரனின் ராஜ்யத்தை ஆளும் மகிழ்ச்சியும் கூட, உன்னைப் புகழ்வதில் அனுபவிக்கும் பேரின்பத்துடன் ஒப்பிடுகையில் மங்குகிறது. நீ கொடுத்தாலும் எனக்கு அத்தகைய ராஜ்யம் வேண்டாம்.


259-விஷ்ணு
எங்கும் பரந்து கருணை மழை பொழிபவன்-

ஏவம் வர்ஷன் வேவேஷ்டீதி
விஷ்ணு꞉ ।(இப்படியாக வர்ஷித்துக் கொண்டு எங்கும் வியாபிக்கிறார் -வியாபித்து வர்ஷிக்கும் வரை கால விளம்பம் பொறுக்காதே )
விஷல் வ்யாப்தௌ
* விஷே ꞉ கிச்ச இதி ணு꞉ ।
தைஸ்தைர் உப காரைர் அதி₄கேந ப₄க₃வதா ந்யூநாநாம் ஸ்வ வ்யதிரக்தாநாம் அவிநா பா ₄வஸ்
தார்கிக ப்ரஸித்₃தோ ₄(அ)த்ர வ்யாப்திர் அபி₄மதா ।

வியாப்யம் வியாபகம் – நெருப்பு புகை-புகையை விட்டுப் பிரிந்த நெருப்பு உண்டே -அதே போல் பரமாத்மா ஜீவாத்மா –
ஜீவாத்மா இருக்கும் இடம் எல்லாம் பரமாத்மா உண்டு
பரமாத்மா இருக்கும் இடம் எல்லாம் ஜீவாத்மா இருக்க வேண்டும் என்று இல்லையே
ஜீவாத்மாவை தவிரவும் பரமாத்மா உடைய வியாப்தி உண்டே-அருள் மழை எங்கும் உண்டே -வாங்கிக் கொள்பவர் குறைய இருக்கும்

எங்கும் தானாய நங்கள் நாதனே -1-9-9-எங்கும் தானான் -நாங்கள் நாதன் ஆவதற்காகவே -ஸத் பாவத்துக்காக வியாப்தி
2–பார்த்தோம் (விஸ்வம் குணங்களால் பூர்ணமாக விஷ்ணு வியாபித்தவர் அங்கு)-663 மீண்டும் வரும்

உணாதி ஸூத்ரம் –விஷே -கித் ச இதி ணு –-வியாபித்த படி இருத்தல் என்னும் பொருளில் -விஷல் என்பதுடன் ணு மற்றும் இத் சேர்கின்றன

ந தத் அஸ்தி விநா யத் ஸ்யாத் மயா பூதம் சராசரம் –கீதை -10-39-
இந்த உலகத்தில் எந்த வஸ்து என்னைப் பிரிந்து உள்ளதோ அப்படியான வஸ்து ஏதும் இல்லை
நான் இல்லாத பொருள் இல்லை -நான் எங்கும் உள்ளேன்
நெருப்புக்கு புகைக்கும் பிரியாத தொடர்பு போல் நானும் மற்ற ஸமஸ்த பொருள்களும் –

யச் சாபி ஸர்வ பூதாநாம் பீஜம் ததஹ மர்ஜுந.–
ந ததஸ்தி விநா யத் ஸ்யாந் மயா பூதம் சராசரம் ––৷৷10.39৷৷

அர்ஜுனா எல்லாப் பொருள்களுக்கும் ஆங்கு ஆங்கு யாது ஓன்று உபாதான காரணமாக உள்ளதோ அதுவும் நான்
அசைவனவும் அசையாதவனவுமான பொருள்களுள் அந்தர்யாமியான என்னை விட்டுப் பிரிந்து ஓன்று
இருக்குமோ என்று பார்த்தால் அத்தகையப் பொருள் ஒன்றும் இல்லை

அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

த்ரிவிக்ரம அவதாரம் மூலம் உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

  1. ஓம் விஶ்ணவே நம:

விஶ்ணு: பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்ணுர்விக்ரமனாத்’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.13)

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் (எங்கும் வ்யாபித்துள்ளதால்) அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸோக்தே: ஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி (பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் (எங்கும் வ்யாபித்துள்ளதால்) அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார் என்ற ஸ்ரீவ்யாஸரின் கூற்றின்படி பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. விஷ்ணு – அனைத்தையும் வியாபித்திருப்பவர்

இந்த நாமம் இரண்டாவது நாமமாக இருந்தது, மீண்டும் நம 663 என்று நிகழும்.

விஷ்ணு விக்ரமனாத் – எங்கும் நிறைந்திருப்பதால் அல்லது எங்கும் இருப்பதாலேயே விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார்.

பகவானின் எங்கும் நிறைந்திருப்பது பல்வேறு நிலைகளில் உள்ளது. அவர் ‘சர்வ வியாபி’ மற்றும் ‘சர்வ அந்தர்யாமி’. முந்தையது அவரது ஊடுருவலை மேக்ரோஸ்கோபிக் அல்லது அண்ட மட்டத்திலும், பிந்தையது நுண்ணிய அல்லது அணு மட்டத்திலும் குறிக்கிறது. நாம் கடந்து கொண்டிருக்கும் விழிப்பு நிலை, தூக்கம் அல்லது கனவு நிலை என எல்லாவற்றிலும் அவர் மனதளத்தில் வியாபித்திருக்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் இந்தப் பரவலானது நெருப்புக்கும் புகைக்கும் இடையே உள்ள சங்கம் என்ற பொருளில் உள்ளது என்று பொருள் தருகிறார். அதுபோலவே, பகவான் தனது பக்தர்களுடன் எப்போதும் இணைந்து இருக்கிறார், எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தனது பக்தர்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்கிறார்.


260-வ்ருஷ பர்வா -தர்மம் படிகளால் அடையப்படுபவன் வர்ணாஸ்ரம கர்ம யோகம்

வ்ருஷா꞉-வர்ணாஶ்ரம த₄ர்மா꞉, தே தத் ஆரோஹண ஸோபாந பர்வாணீதி
வ்ருஷ பர்வா ॥

வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் தவிர வேறே உபாயம் இல்லையே

தம்மை அடைவதற்கு வர்ணாஸ்ரம தர்மங்களைப் படிகளாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம ரூபமான படிகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

புண்ய சாதனங்களான அமாவாஸ்யை முதலிய பர்வ தினங்களுக்கு யஜமானர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————

  1. ஓம் வ்ருஶபர்வணே நம:

வ்ருஶரூபாணி அறமே வடிவானதாய்

ஸோபானபர்வான்யாஹு: படிக்கட்டுகள் (பர்வா என்றால் படிக்கட்டு) கூறப்பட்டுள்ளன

பரம் தாம பரமபதமான பகவானின் இருப்பிடத்தை

ஆருருக்ஷோர் ஏறிச் செல்வதற்கு

இத்யதோ வ்ருஶபர்வா எனவே, பகவான் ‘வ்ருஶபர்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் பரமபதமான இருப்பிடத்தை அடைய அறமே வடிவான படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன (வேதங்கள் ‘வர்ணாஸ்ரம தர்மமான’ இந்தப் படிக்கட்டுக்களைப் பற்றி விளக்குகின்றன). எனவே, பகவான் ‘வ்ருஶபர்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. விருஷ பர்வா – அவரை அடைய தர்மத்தின் படிகளை வழங்குபவர்

விருஷா என்றால் நாம் முன்பு பார்த்தது போல் தர்மம். மேலும் பர்வா என்றால் படிக்கட்டு அல்லது படிக்கட்டு என்று பொருள்.

ஸ்ரீஆதிசங்கரர் இவற்றை ஒருங்கிணைத்து, ‘விருஷரூபனி சோபான பர்வாணி ஆஹுஹ் பரம் தாம ஆருருக்ஷோ இதி அதஹ் விருஷபர்வா – முக்திக்கான பாதையில் செல்வதற்கு தர்மத்தின் படிகளை வழங்குவதால் அவர் விருஷபர்வா’ என்று நாமத்தின் அர்த்தத்தை விளக்குகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் வர்ணாஷ்ரம தர்மத்தின் படிகளை வெளிப்படுத்தியதால், அவர் விருஷபர்வா ஆவார் என்பது ஸ்ரீ பராசர பட்டரின் விளக்கம். பிற உரையாசிரியர்கள் ஞான, பக்தி முதலிய பல்வேறு படிகளை அவர் நிறுவிய படிகளாகச் சேர்த்துள்ளனர்.

பகவத் கீதை அத்தியாயம் 18 வது சுலோகம் 55 இல், பகவான் கூறுகிறார்:  

“பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஸ் சாஸ்மி

தத்த்வதஹ  ததோ மாம் தத்வதோ ஜ்ஞாத்வா விஷதே தத்-அனந்தரம்

பக்தியினால் அவர் என்னை உண்மையாக அறிகிறார், நான் என்ன, யார்; மேலும் என்னை உண்மையாக அறிந்து, அவர் உடனே பரமபிராணத்தில் பிரவேசிக்கிறார்.

பக்தியின் ஒன்பது வடிவங்கள் அவரை அடையும் வழிகளைக் காட்டுகின்றன:

  1. ஷ்ரவணம் – இறைவனின் நாமங்களையும் மகிமைகளையும் கேட்பது
  2. கீர்த்தனம் – அவரது பெருமைகளைப் பாடுதல்
  3. ஸ்மரணம் – இறைவனை நினைவு செய்தல்
  4. பாத செவனம் – அவரது தாமரை பாதங்களை சேவித்தல்
  5. அர்ச்சனை – இறைவனை வழிபடுதல்
  6. வந்தனம் – இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல்
  7. தாஸ்யம் – இறைவனை அவனுடைய அடியாராகச் சேவித்தல்
  8. சக்யம் – இறைவனுடன் நட்பை வளர்ப்பது
  9. ஆத்ம நிவேதனம் – இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல்

இறைவன் தன்னை மிகவும் மகிழ்விக்கும் உண்மையான பக்தியின் ஆழத்தை அத்தியாயம் 9 வசனம் 26ல் எடுத்துக்காட்டி இவ்வாறு கூறுகிறார்:

“பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி

தத் அஹம் பக்தி-உபஹৃதம் அஸ்நாமி ப்ரயதாத்மநஹ

யார் எனக்கு பக்தியுடனும் தூய்மையான மனதுடனும் (இதயம்), ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது சிறிதளவு தண்ணீர் வழங்குகிறார்களோ – இதை நான் பக்தியாக ஏற்றுக் கொள்கிறேன்.

———

261-வ்ருஷோதர –
தர்மமே உருவான திரு வயிற்றை உடையவன் –வ்ருஷ உதரம்

1-ஆராத₄காநாம் யதா₂ லப்₃த₄ ஹவிராதி₃பி₄ஸ் ஸுபூரத்வேந வ்ருஷோத₃ர꞉ ॥- 2-ஸர்வ ஆர்த ஆஸ் பத₃த்வேந தா₄ர்மிகோ த₃ரத்வாத்₃
வ்ருஷோத₃ர꞉ ॥

தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய-2-7-12
ஆராத்ய ஸூலபன்

பத்ரம் பலம் தோயம் புஷ்பம் அஸ்நாமி-சாப்பிடுகிறேன் -ஏற்றுக் கொள்கிறேன் -அனுபவிக்கிறேன் – -திருப்தி அடைகிறேன் –
தர்ம சிந்தனை பக்தியால் –யதா₂ லப்₃த-சமர்ப்பித்தால் வயிறு நிரம்பும் படி

1-அடியவர் இடும் எளிய உணவையும் ஏற்பதனாலும்-2-பிரளயத்தில் துன்புற்றவர்களை வைத்துக் காப்பதனாலும்
தரும மயமான வயிறு யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளை வர்ஷிக்கும் -சிருஷ்டிக்கும் -வயிறு யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி விக்ரமாவதாரத்தில் கங்கை நீரை பிரம்மாண்டத்தில் உள்ளவர்களுக்குத் தந்தவர் –
புண்ணிய தீர்த்ததால் மகிழ்பவர்-அருளைப் பொழிபவர் –
மற்றும் தோஷங்களுக்குத் தொலைவில் இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

  1. ஓம் வ்ருஶோதராய நம:

ப்ரஜா (ப்ரஜைகளான) அனைத்துயிர்களையும்

வர்ஶதீவ மழை பொழியுமா போல பிறப்பிக்கிறார்

உதரமஸ்யேதி தனது வயிற்றிலிருந்து

வ்ருஶோதர: எனவே, பகவான் ‘வ்ருஶோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது வயிற்றிலிருந்து அனைத்து உயிர்களையும் மழையானது நீரைப் பொழிவது போல உருவாக்குகிறார் (பிறப்பிக்கிறார்). எனவே, அவர் ‘வ்ருஶோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. விருஷோதர – தர்மத்தை நடுப்பகுதியாக அல்லது வயிற்றாகக் கொண்டவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் ‘பிரஜா வர்ஷதி இவ உதாரம் அஸ்ய இதி – பிரளயத்திற்குப் பிறகு அவரது வயிறு மக்களை மழையாகப் பொழிவது போல் தோன்றுகிறது’ என்று விளக்குகிறார். பிரளய காலத்தில் எல்லா உயிர்களையும் தன் வயிற்றில் வைத்து, மறுஉருவாக்கம் செய்யும் போது அவற்றை மீண்டும் ஊற்றுகிறார்.

இந்தப் பெயருக்கு வேறு விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று, யாகங்கள் (யக்ஞங்கள்) முதலியவற்றின் மூலம் அனைத்து பிரசாதங்களையும் பெறுபவர், எனவே அவர் தர்மத்தின் அனைத்து பிரசாதங்களையும் பெறும் உதாரம் அல்லது வயிறு கொண்டவர்.

பிரம்மா போன்ற தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களின் படைப்புகள் அவருடைய வயிற்றில் இருந்து உருவாகின்றன என்பது மற்றொரு விளக்கம்.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், “விரிஷா” என்ற சொல்லுக்கு “அக்னி” அல்லது நெருப்பைப் பயன்படுத்தி முந்தைய அனைத்து நாமங்களையும் தற்போதைய நாமங்களையும் தொடர்ந்து விளக்குகிறார். இதனால், வயிற்றில் அக்னியை உடையவர் அவர். நம் உணவை ஜீரணிக்கும் “அக்னி” (அமிலம்) நம்மிடம் உள்ளது என்பது மனிதர்களுக்கு கூட தெரியும்; பூமியின் மையத்திலும், சூரியனின் மையத்திலும், பெருங்கடல்களிலும் அக்னி உள்ளது.

———–

262-வர்த்தந
வ்ருத்தி செய்பவன்

மாத்ருவத் தாநுத₃ரே க்ருத்வா வர்த₄ய தீதி
வர்த₄ந ꞉ ॥

வளர்ப்பவர் -முதலில் சொல்லி அடுத்து தான் வளருபவர் –
தான் வளர்ந்தவராக இருந்தாலும் -பிறரை வளர்த்தினால் தான் திருப்தி அடைபவன்

தானே தாரக போஷக போக்யம் –வர்த்தமாந-
வெறிதே அருள் செய்பவன் -(வர்தன) சிறியேன் உடைய சிந்தையுள் -மூ வுலகும் நெறியால் வயிற்றில் கொண்டு-(வ்ருஷ உதர) நின்று ஒழிந்தான் –

அவர்களைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் விருத்தி செய்பவர் -வளர்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைச் சார்ந்தவரை வளரச் செய்பவர் -உயர்ந்த செல்வத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————

  1. ஓம் வர்த்தனாய நம:

வர்த்தயதீதி (அனைவரையும், அனைத்து உயிரினங்களையும்) ஊட்டமளித்து வளர்க்கிறார்

வர்த்தன: எனவே, பகவான் ‘வர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து உயிரினங்களையும் (அனைவரையும்) ஊட்டமளித்து வளர்க்கிறார். எனவே அவர் ‘வர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. வர்தன –  போஷிப்பவன்

இந்த நாமம் ‘விருத்’ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது யாரையாவது வளர்க்க அல்லது வளர்க்க.

ஆதி சங்கரர் சொல்வது போல், ‘வர்தயதி இதி வர்தனஹ் – அவர் ஊட்டமளிக்கிறார், அதிகரிக்கிறார் அல்லது பெருக்குகிறார்’. அவர் தனது பக்தர்களை அனைத்து அம்சங்களிலும் வளரச் செய்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் இந்த நாமத்தை தாயைப் போல் தன் வயிற்றில் வைத்து போஷிப்பவர் என்று விளக்குகிறார்.

ஸ்ரீஅண்ணகராச்சாரியார் ஸ்வாமிகள் தம்மை மேலும் மேலும் (ஆன்மிகப் பாதையை நோக்கி) நாடியவர்களை ‘வளர்ப்பதால்’ அவர் வர்த்தனா என்று பொருள் தருகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஒரு கைப்பிடி அளவு ‘அவல் அல்லது அரிசி துகள்களை’ வழங்குவதை எடுத்துக்காட்டுகிறார் – அவரது நண்பர் குசேலன் (சுதாமா), அதற்குப் பதிலாக குசேலன் குபேரனை விட பணக்காரரானார்.


263-வர்த்தமாந-

தான் வர்த₄யன் ஸ்வயமபி வர்த₄த இதி வா , ஏவம் ப்ராயைர் அபர்யவஸ் யத் ஸம் ருத்₃தி₄ரிதி வா
வர்த₄மாந ꞉ ॥

வளர்ச்சி அடைபவன் -ஆஸ்ரிதர்களுக்கு உதவியதால் வந்த புகர்
திகழும் தன் திருவருள் செய்து என்னுள் திகழும் மணிக்குன்றம் என்றே ஒத்து நின்றான் -8-7-5-

தளிர் புரையும் திருவடிகள் அன்றோ -தாவி அன்று உலகம் –சிக்கென செங்கண் மாலே –
அறிவித்ததும் அவனுக்கு சிவந்து மலர்ந்த திருக்கண்கள்
அந்தாம அன்பு செய்து –ஆவி உடன் சேர்ந்த அம்மானுக்கு -இப்பொழுது தான் திவ்ய ஆயுதங்கள் உள்ளனவாயின

அவர்களை வளர்ப்பதனாலேயே தாமும் வளர்பவர் –இப்படி எல்லாருக்கும் எல்லாவற்றையும் அளித்தும் தமது பெருமையில் சற்றும் குறையாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாடோறும் விருத்தி ஆக்குபவர் – அல்லது இவ்வாறு அளவிட முடியாத சம்ருத்தியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

  1. ஓம் வர்த்தமானாய நம:

ப்ரபஞ்ச ரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்

வர்தத இதி (அனைத்து திசைகளிலும், அனைத்து பரிமாணங்களிலும்) வளர்கிறார்

வர்த்தமான: எனவே, பகவான் ‘வர்த்தமான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் அனைத்து திசைகளிலும், அனைத்துப் பரிமாணங்களிலும் முடிவின்றி வளர்கிறார். எனவே, அவர் ‘வர்த்தமான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. வர்தமானாச்ச – வளர்பவர்

இது முந்தைய நாமாவிலிருந்து மேலும் வளர்ச்சியாகும். மற்றவர்களை வளரச் செய்யும் அதே வேளையில் அவரே எல்லா நேரங்களிலும் பிரபஞ்சமாக தனது வெளிப்பாடாக வளர்ந்து வருகிறார்.

ஸ்ரீ சங்கரர் சொல்வது போல், ‘பிரபஞ்ச ரூபேண வர்ததே இதி வர்தமானா – அவர் பிரபஞ்சத்தின் வடிவத்தில் வளர்வதால் அவர் வர்த்தமானார்’. இவ்வாறு ஸ்ரீ சங்கரர் ‘விரிவடையும் பிரபஞ்சம்’ என்ற அறிவியல் கோட்பாட்டிற்கு நம்பகத்தன்மையை அளிக்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் வர்த்தமாவை தனது பக்தர்கள் பெருகுவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைப்பவர் என்று விளக்குகிறார். எவரும் கேட்கும் அனைத்தையும் அவர் அருளினாலும் அவர் வளர்ந்து கொண்டே இருக்கிறார்.

ஸ்வாமி சின்மயாஆனந்தா, இந்த நாமம் வாமன அவதாரத்தை குறிக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார், அதில் அவர் தொடர்ந்து மூன்று உலகங்களையும் மூடினார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி, பிரபஞ்சம் எந்த வேகத்தில் வளர்கிறதோ அதே வேகத்தில் வர்த்தமானாவின் கடைசியில் ‘சா’ வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். ‘சா’ அடிப்படையில் ஒத்திசைவைக் குறிக்கிறது.


264-விவிக்த –தனிச் சிறப்பு உற்றவன் -அதி மானுஷ சீல வ்ருத்த -படி எடுத்து உரைத்துக் காட்டும் படி அன்றே

ஏவம் ஸர்வ லோகோத்தரஸ் காந்த வ்ருத்தாந்தத்வாத்₃
விவிக்த꞉ ॥

அத்விதீயன் -நிகரில் புகழாய் தன் ஒப்பார் இல் அப்பன் -6-3-9-

தமக்கே உரிய சிறந்த சரித்ரங்களை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக இருந்தாலும் தனித்து நிற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

  1. ஓம் விவிக்தாய நம:

இத்தம் வர்த்தமானோSபி பகவான் இவ்வாறு (ப்ரபஞ்சமாய்) வளர்ந்தாலும்

ப்ருதகேவ திஶ்டதீதி தான் எதனுடனும் கலவாது தனித்தே இருக்கிறார்

விவிக்த: எனவே, அவர் ‘விவிக்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் படைத்து, அனைத்துமாய் வ்யாபித்து, இந்தப் ப்ரபஞ்சமாகவே விரிந்து வளர்ந்தாலும், தான் எதனுடனும் கலவாது தனித்து இருக்கிறார். எனவே, அவர் ‘விவிக்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விவிக்த: என்றால் தனித்திருப்பவர் என்று பொருள்.

———–

  1. விவிக்தா – தனித் தன்மை வாய்ந்தவர்

அடிப்படையில் இது தனிப்பட்ட மற்றும் எல்லோரிடமிருந்தும் தனித்து நிற்கும் ஒருவரைக் குறிக்கிறது.

ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘இத்தம் வர்த்தமநோபி ப்ரோதக் ஏவ திஷ்ததி – முந்தைய நாமத்தில் விளக்கியபடி பிரபஞ்சமாகத் தோன்றி வளர்ந்தாலும் அதிலிருந்து தனித் தனியாகவே நிற்கிறார்’ என்று விளக்குகிறார். அவர் பிரபஞ்சத்தை வியாபித்திருக்கிறார், இன்னும் அவர் தனித்து நிற்கிறார். பகவான் எல்லா உயிரினங்களையும் உருவாக்கி, அவற்றை வடிவத்திலும் செயலிலும் வைத்திருக்கிறார், ஆனால் அவற்றிலிருந்து தனித்துவமானவர் மற்றும் தனித் தனியாக இருக்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் பகவான் பல வழிகளில் தனித்துவம் மிக்கவர் என்று குறிப்பிடுகிறார். அவனுடைய படைப்புகளைப் போலல்லாமல் (நிர்லிப்தா) செயலின் விளைவுகளால் அவன் தீண்டப்படாதவன். அவர் தனித்துவமானவர், ஏனெனில் அவரது செயல்பாடுகள் அசாதாரணமானவை மற்றும் உலகில் உள்ள மற்றவர்களை விட உயர்ந்தவை.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் பகவான் தனித்துவமானவர் என்று கூறுகிறார், ஏனெனில் அவரை அங்கீகரிப்பது நமது திறமை அல்லது அறிவுக்கு அப்பாற்பட்டது. நமது அறிவுத்திறனும் தர்க்கரீதியான பகுப்பாய்வும் இந்த நோக்கத்திற்காக போதுமானதாக இல்லை.

தரம் சக்ரம் எழுத்தாளர், நமது சுற்றுப்புறங்களுக்கு வெளியே இருப்பதும், பாதிக்கப்படாததுமான இந்த குணம், வாழ்க்கையில் நமது பணியை நிறைவேற்றுவதற்கான உண்மையான அடிப்படையாகும். பரமாத்மாவை உணர்ந்து.

————–

265-ஸ்ருதி சாகர
ஸ்ருதிகளுக்கு கொள்கலம் –குணங்களை ஆசையுடன் பாடும் வேதமாகிய ஸரித் நதிகள் அடையும் கடல் இவனே –

ஏவம் ப்ரகார கு₃ண ப்ரவணாநாம் ஶ்ருதீநாம் ஸாக₃ர இவ ஸரித் ஓகா₄நாம் பரமா
பர்யவஸாந பூ₄மிரிதி –
ஶ்ருதி ஸாக₃ர꞉ । 

நாராயண பரா வேதா -ஸ்ரீ மத் பாகவதம் -2-5-25–வேதங்கள் நாராயணனையே பேசுகின்றன

வேதைச்ச சர்வை அஹமேவ வேத்ய–கீதை -15-15- அனைத்து வேதங்களாலுமே அறியப்படும் பொருளே நானே ஆவேன்

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை -பெரிய திருமொழி -2-3-2-
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் -பெரிய திரு மொழி -9-4-9-
நாரணன் வேதமயன் -2-7-2-

நதிகளுக்கு கடல் போலே இக் குணங்களை உரைக்கும் ஸ்ருதிகளுக்கு முடிவான இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களுக்குக் கடல் போலே இருப்பிடமானவர் -எல்லா வேதங்களும் அவரையே சொல்லுகின்றன –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைக் கொடுப்பவர் -வேதங்களைத் தம்மிடம் வைத்துக் கொள்பவர் -வேதங்கள் ஆகிற கடலை வெளியிட்டவர் -வேதக்கடல்
மற்றும் கோவர்த்தன மலை முதலியன மூலம் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

————

  1. ஓம் ஶ்ருதிஸாகராய நம:

ஶ்ருதய: ஶ்ருதிகள் (வேதங்கள்)

ஸாகர கடலுக்குள்ளே

இவாத்ர நிதீயந்தே எவ்வாறு செல்வக்குவியல்கள் (முத்துக்களும், பவளங்களும்) நிறைந்திருக்குமோ

இதி (அவ்வாறு வேதங்கள் பகவான் என்னும் கடலுக்குள் இருக்கின்றன) எனவே,

ஶ்ருதிஸாகர: பகவான் ‘ஶ்ருதிஸாகர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடலுக்குள் முத்துக்கள், பவளங்கள் போன்ற செல்வக்குவியல்கள் நிறைந்துள்ளன. அதுபோன்றே, பகவான் என்னும் கடலுக்குள் வேதங்கள் என்னும் செல்வக்குவியல் நிறைந்துள்ளது. எனவே, பகவான் ‘ஶ்ருதிஸாகர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஷ்ருதி சாகரா – எல்லா வேதங்களும் நம்மை அழைத்துச் செல்லும் ஞானக் கடல்

ஷ்ருதி என்பது வேதங்களையும், சாகாரம் சமுத்திரத்தையும் குறிக்கிறது. ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படி, ‘ஷ்ருதாயா சாகார இவ அத்ர நிதீயந்தே இதி ஷ்ருதிசாகராஹ் – எல்லா நீர்களும் இறுதியில் ஓடி, சமுத்திரத்தில் வசிப்பது போல, எல்லா வேதங்களும் இறுதியில் அவரை நோக்கி ஓடி அவனில் வசிக்கின்றன’.

ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீமத் பாகவதத்தை (2.5.15) குறிப்பிடுகிறார், இது ‘நாராயண பரா வேதாஹ் – எல்லா வேதங்களும் பகவான் நாராயணனின் மேன்மையை மட்டுமே பேசுகின்றன’ என்று கூறுகிறது. அவர் பகவத் கீதையை (15.15) குறிப்பிடுகிறார், இது ‘வேதைச்ச சர்வை ரஹம் ஏவ வேத்யஹ் – நான் அனைத்து வேதங்களாலும் பகுப்பாய்வு செய்யப்பட்டு விளக்கப்பட வேண்டியவன்’ என்று கூறுகிறது.


257-வ்ருஷாஹீ –
தம்மை முதன் முதலில் அடையும்  தினமே எல்லா மங்களங்களுக்கும் வித்திடும் நாள் போலே இருப்பதால் அந்த ஆரம்ப தினம்
சிறப்பாக இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகல் போலே பிரகாசிக்கும் தர்மங்களை உடையவர் -த்வாதசாஹம் முதலிய யஜ்ஞ  விசேஷமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் மூலமாகப் பரவி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————

258-வ்ருஷப-
சம்சாரத் தீயினால் தகிக்கப் பட்டுத் தம்மை  வந்து அடைந்தவர் மீது அமுதமன்ன அருளைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை வர்ஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அருளைப் போல்பவர் -தர்மத்தால் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

259-விஷ்ணு –
அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

260-வ்ருஷ பர்வா –
தம்மை அடைவதற்கு வர்ணாஸ்ரம தர்மங்களைப் படிகளாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தர்ம ரூபமான படிகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
புண்ய சாதனங்களான அமாவாஸ்யை முதலிய பர்வ தினங்களுக்கு  யஜமானர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

261-வ்ருஷோதர –
அடியவர் இடும் எளிய உணவையும் ஏற்பதனாலும்-பிரளயத்தில் துன்புற்றவர்களை வைத்துக் காப்பதனாலும்
தரும மயமான வயிறு யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளை வர்ஷிக்கும் -சிருஷ்டிக்கும் -வயிறு யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி விக்ரமாவதாரத்தில் கங்கை  நீரை பிரம்மாண்டத்தில் உள்ளவர்களுக்குத் தந்தவர் -புண்ணிய  தீர்த்ததால் மகிழ்பவர்-அருளைப் பொழிபவர் –
மற்றும் தோஷங்களுக்குத் தொலைவில் இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————-

262-வர்த்தந-
அவர்களைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் விருத்தி செய்பவர் -வளர்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைச் சார்ந்தவரை வளரச் செய்பவர் -உயர்ந்த செல்வத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

263-வர்த்தமாந-
அவர்களை வளர்ப்பதனாலேயே தாமும் வளர்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாடோறும் விருத்தி ஆக்குபவர் – அல்லது இவ்வாறு அளவிட முடியாத சம்ருத்தியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————

264-விவிக்த –
தமக்கே உரிய சிறந்த சரித்ரங்களை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகவடிவாக இருந்தாலும் தனித்து நிற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

265-ஸ்ருதி சாகர –
நதிகளுக்கு கடல் போலே இக்குணங்களை உரைக்கும் ஸ்ருதிகளுக்கு முடிவான இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களுக்குக்   கடல் போலே இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைக் கொடுப்பவர் -வேதங்களைத் தம்மிடம் வைத்துக் கொள்பவர் -வேதங்கள் ஆகிற கடலை வெளியிட்டவர் -வேதக்கடல்
மற்றும் கோவர்த்தன மலை முதலியன மூலம் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

———–

அஹ:’ என்றால் நாள் என்று பொருள். ‘வ்ருஷ:’ என்ற பெயரடைக்கு நல்ல என்று பொருள்.
அடியார்களின் நாளை (அஹ:), நன்னாளாகத் (வ்ருஷ:) திருமால் ஆக்குவதால்,
அவர் ‘வ்ருஷாஹீ’ (அடியார்களின் நாளை நன்னாளாக்குபவர்) என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 257-வது திருநாமம்.
“வ்ருஷாஹிணே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்நாளில் அனைத்து நாட்களும்
பொன் நாட்களாக அமையும் படித் திருமால் அருள்புரிவார்.

‘வ்ருஷப:’ என்றால் பொழிபவர் என்று பொருள்.
கருணை மழையை அடியார்கள் மேல் பொழிந்து குளிர்விப்பதால் திருமால் ‘வ்ருஷப:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 258-வது திருநாமம்.
“வ்ருஷபாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மேல் திருமால்
தனது கருணை மழையைப் பொழிந்து அவர்களைக் குளிர்வித்தருள்வார்.

‘விஸ்’ என்றால் உள்ளே நுழைதல் என்று பொருள். அனைவருக்குள்ளேயும் அந்தர்யாமியாக நுழைந்திருந்து,
அவர்கள் மேல் கருணை மழையைப் பொழிந்து நன்மையை ஊட்டுவதால், திருமால் ‘விஷ்ணு:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 259-வது திருநாமம்.
(ஸஹஸ்ரநாமத்தின் 2-வது திருநாமமான ‘விஷ்ணு:’-க்கு எங்கும் நிறைந்தவர் என்றும்,
259-வது திருநாமமான ‘விஷ்ணு:’-க்கு எல்லோருக்கும் உள்ளே இருந்தபடி கருணை மழையைப் பொழிபவர் என்றும்
வேறுபடுத்திப் பொருளுரைத்துள்ளார் உரையாசிரியரான பராசர பட்டர்.)
“விஷ்ணவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைத்து நன்மைகளையும் திருமால் ஊட்டி அருள்வார்.

நாம் அனைவரும் அறிவதற்காக ஒன்பது படிகள் கொண்ட
கருவறையில் குடந்தையில் சார்ங்கபாணிப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.
கருவறைக்கு உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உண்டு.
இரண்டு வாசல்களிலுமே சரியாக ஒன்பது படிகள் இருக்கும்.
அந்த ஒன்பது படிகளும் விவேகம், நிர்வேதம், விரக்தி, பீதி, ப்ரஸாத ஹேது, உத்க்ரமணம், அர்ச்சிராதி,
ப்ரக்ருதி அதிக்ராந்த பத அதிரோஹணம், பராப்தி ஆகிய ஒன்பது தர்மங்களைக் குறிக்கின்றன.
அந்த ஒன்பது படிகளைக் கடந்தால், சார்ங்கபாணியாகிய இறைவனை அடையலாம் என்பதை அவை உணர்த்துகின்றன.

‘பர்வ’ என்றால் படி என்று பொருள். தர்மத்துக்கு ‘வ்ருஷ’ என்று பெயர்.
தர்மங்களாகிய படிகளை ஏறி அடையத்தக்கவராகத் திருமால் இருப்பதால்,
அல்லது, தர்மங்களையே தன்னை அடைவிக்கும் படிகளாகத் திருமால் கொண்டிருப்பதால்,
‘வ்ருஷபர்வா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 260-வது திருநாமம்.
“வ்ருஷபர்வணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் முன்னேறி
உயர்ந்த நிலைகளை அடையத் திருமால் அருள் புரிவார்

தன் அடியார்கள் ஆசையோடு எதைச் சமர்ப்பித்தாலும் அதை வயிறார உண்டு மகிழ்ந்து
அருள் புரிபவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘வ்ருஷோதர:’ (வ்ருஷ + உதர: = வ்ருஷோதர:) என்றழைக்கப்படுகிறார்.
‘வ்ருஷ’ என்பது தர்மத்துக்கு உட்பட்டு அடியார்கள் நிவேதனம் செய்யும் பொருட்களைக் குறிக்கும்.
‘உதரம்’ என்றால் வயிறு என்று பொருள்.
அடியார்கள் நிவேதனம் செய்யும் பொருட்களால் நிறைந்த வயிற்றை உடையவர் ‘வ்ருஷோதர:’.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 261-வது திருநாமம்.
“வ்ருஷோதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சமர்ப்பிக்கும்
காணிக்கைகளைத் திருமால் ஆனந்தமாக ஏற்றருள்வார்.

இவ்வாறு ஒரு தாய் தன் குழந்தையைப் பாலூட்டி வளர்ப்பது போல், பராசர பட்டர் போன்ற அடியார்களுக்குத்
திருமால் ஞானப்பால் ஊட்டி, ஆளோடு அறிவும் வளரும்படி அருள்புரிந்து, அவர்களை மிகச்சிறந்த
பண்டிதர்களாக ஆக்குவதால், திருமால் ‘வர்தன:’ என்றழைக்கப்படுகிறார்.
‘வர்தன:’ என்றால் ஊட்டி வளர்ப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 262-வது திருநாமம்.
“வர்தனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்கள் அனைவருக்கும் நல்ல ஞானத்தைத் திருமால் ஊட்டியருள்வார்.

‘வர்தமான:’ என்றால் தான் வளர்வதோடு மட்டுமின்றித் தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்ப்பவர் என்று பொருள்.
திருமால் தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் தன்னோடு சேர்ந்து வளரச் செய்வதால் ‘வர்தமான:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 263-வது திருநாமம்.
“வர்தமானாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில்
மேன்மேலும் வளர்ச்சிகளை அடையும்படித் திருமால் அருள் புரிவார்.

விவிக்த:’ என்றால் வேறுபட்ட என்று பொருள்.
மனிதர்களின் செயல்பாடுகளை விடவும் வேறுபட்டதான, ஒப்புயர்வற்றதான செயல்களை உடையவராய்த்
திகழும் திருமால் ‘விவிக்த:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 264-வது திருநாமம்.
“விவிக்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் புரியும் செயல்கள் சிறப்பானவையாக
அமையும்படித் திருமால் அருள் புரிவார்.

வேதங்களாகிய நதிகள் சென்று சேரும் கடலாகத் திருமால் திகழ்வதால் ‘ச்ருதி ஸாகர:’ என்று அவர் போற்றப்படுகிறார்.
‘ச்ருதி:’ என்றால் வேதம், ‘ஸாகர:’ என்றால் கடல்.
‘ச்ருதிஸாகர:’ என்றால் வேதங்களாகிய நதிகள் சேரும் கடல் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 265-வது திருநாமம்.
“ச்ருதி ஸாகராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வேத ஞானம் நன்கு நிறையும்படித் திருமால் அருள் புரிவார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply