ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 4-திருநாமங்கள்–101– -200- வரை –

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:–101-வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

——————

12. வஸுர் வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶ கர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

  1. வஸு:, 105.வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
  2. அமோக:, 111.புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

————–

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர் விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர் வராரோஹோ மஹா தபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:

  1. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
  2. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

————–

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

123-ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |127-வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

———–

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

  1. லோகாத்யக்ஷ:, 134.ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
  2. சதுராத்மா, 138.சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||

—————

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

  1. ப்ராஜிஷ்ணு:, 142.போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
  2. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

—————

17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |

அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||

இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:

  1. உபேந்த்ர:, 152.வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
  2. அதீந்த்ர:, 158.ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||

————–

  1. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|

அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

  1. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது:|
  1. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல:||

————

  1. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |

அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

  1. மஹாபுத்தி:, 174.மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
  2. அநிர்தேஶ்யவபு:, 178.ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

————–

  1. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
  2. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

———–

  1. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
    1. மரீசி:, 190.தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
    2. ஹிரண்யநாப:, 195.ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

    ———–

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205.துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

————-

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:–101-வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

101.ஓம் வ்ருஶாகபயே நம:

வர்ஶணாத் மழைப் போன்று

ஸர்வகாமானாம் அனைத்து ஆசைகளையும் நமக்கு அள்ளித் தருவதால்

தர்மோ தர்மத்தை

வ்ருஶ: ‘வ்ருஶ’ என்று குறிக்கின்றனர்.

காத் தோயாத் ‘கா’ என்றால் தண்ணீரைக் குறிக்கும்

பூமிமபாதிதி அந்த கடல் நீருக்குள் அகப்பட்டுக் கிடந்த பூமியை இடர்ந்து எடுத்து வந்ததால்

கபிர்வராஹ: வராஹப் பெருமானை ‘கபி’ என்று அழைக்கின்றனர்.

வ்ருஶரூபத்வாத் இவ்வாறு, (அனைத்து ஆசைகளையும் வாரி வழங்கும்) தர்மத்தின் உருவமாகவும்,

கபிரூபத்வாத் பூமியை நீரினின்று இடர்ந்து எடுத்து வந்த வராஹ ரூபமாயும் (இரண்டும் சேர்ந்து இருப்பதால்)

வ்ருஶாகபி: பகவான் ‘வ்ருஶாகபி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பன்றியின் உருவெடுத்து கடலுக்குள் ஆழ்ந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்தார். அந்த வராஹப் பெருமானே, தர்மத்தின் உருவமாய் இருந்து நமது ஆசைகளையும் நிறைவேற்றுகிறார். இவ்வாறு, தர்மத்தின் உருவமாயும், வராஹமாயும் இருப்பதால் பகவான் ‘வ்ருஶாகபி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶ  தர்மம்;  – தண்ணீர்; கபி  அந்த தண்ணீரிலிருந்து பூமியை இடர்ந்து எடுத்த வராஹப் பெருமான். வ்ருஶாகபி  தர்மமே உருவாயுள்ள வராஹப் பெருமான்.

கபிர்வராஹ: ஶ்ரேஶ்டஸ்ச தர்மஸ்ச வ்ருஶ உச்யதே |

தஸ்மாத்வ்ருஶாகபி ப்ராஹ காஶ்யபோ மாம் ப்ரஜாபதி: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.89)

‘கபி’ என்றால் பன்றியை (வராஹத்தை) அல்லது உத்தமமான ஒன்றைக் குறிக்கும் (மிகச்சிறந்த உத்தமமான வராஹம் என்றும் கொள்ளலாம்). தர்மத்தை ‘வ்ருஶ’ என்ற சொல் குறிக்கும். எனவே, கஶ்யபப் ப்ரஜாபதி என்னை ‘வ்ருஶாகபி’ என்ற திருநாமத்தால் அழைத்தார்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

102.ஓம் அமேயாத்மனே நம:

இயானிதி இப்படிப்பட்டதென்று

மாதும் பரிச்சேதும் ‘மா’ என்றால் தீர்மானித்தல்

ந ஶக்யத இயலாது

ஆத்மா யஸ்யேதி எவருடைய தன்மையை

அமேயாத்மா பகவான் ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மா என்றால் தீர்மானித்தல், அனுமானித்தல். பகவானுடைய தன்மையை எவராலும் இன்னதென்று அறிந்துகொள்ள இயலாது. எனவே, பகவான் ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமேயாத்மா =  – இயலாது + மா – இன்னதென்று அறிந்துகொள்ள + ஆத்மா – பகவானின் தன்மை.

———

103.ஓம் ஸர்வ யோக விநி:ஸ்ருதாய நம:

ஸர்வஸம்பந்தவினிர்கத: பகவான் எவருடனும் எந்த வித சம்பந்தமும், தொடர்புமின்றி இருப்பதால்

ஸர்வயோகவிநி:ஸ்ருத: அவர் ‘ஸர்வயோகவிநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் அனைத்துமாய் இருந்தாலும் எதனுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவர் ‘ஸர்வயோகவிநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஸங்கோ ஹ்யயம் புருஶ:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.15)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-அந்த புருஶன் (பகவான்) எதனுடனும் தொடர்பின்றியே இருக்கிறார்.

(நானா ஶாஸ்த்ரோக்தாத் யோகாதபகதத்வாத் வா) 

நானாஶாஸ்த்ரஅல்லது, பல்வேறு சாஸ்திரங்களால்

உக்தாத் விளக்கப்பட்டுள்ள

யோக யோக சாதனங்களால்

அதபகதத்வாத் வா அவர் அறியப்படுவதால், பகவான் ‘ஸர்வ யோக விநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பல்வேறு சாஸ்திரங்களால் விளக்கப்பட்டுள்ள (பக்தி, கர்ம, ஞானம் போன்ற) யோக சாதனங்களால் அவர் அறியப் படுவதால், பகவான் ‘ஸர்வ யோக விநி:ஸ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

12. வஸுர் வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶ கர்மா வ்ருஶாக்ருதி: ||

இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :

  1. வஸு:, 105.வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
  2. அமோக:, 111.புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||

104. ஓம் வஸவே நம:

வஸந்தி ஸர்வ பூதான் யத்ர எவருக்குள் அனைத்து ஜீவ ராசிகளும் வசிக்கின்றனவோ (வாழ்கின்றனவோ),

தேஶ்வயமபி வஸதீதி வா எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் (அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக) வசிக்கின்றாரோ

வஸு: அந்த பகவான் ‘வஸு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் (இந்தப் ப்ரபஞ்சம் உட்பட) பகவானுக்குள் வசிக்கின்றன. அனைத்து ஜீவ ராசிகளுக்குள்ளும் பகவான் அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) வசிக்கின்றார். இவ் விரண்டு காரணங்களுக்காகவும், பகவான் ‘வஸு:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

‘வஸூனாம் பாவகஸ்சாஸ்மி’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.23)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

வஸுக்களில் நான் தீ.

இத்யுக்தோ வா இங்கு (ஸ்ரீமத் பகவத்கீதையில்) குறிப்பிட்டுள்ளபடி

வஸு: அக்னியின் (தீயின்) வடிவாய் இருப்பதால் பகவான் ‘வஸு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஸ்ரீமத் பகவத் கீதை விபூதி யோகம் என்னும் 10-வது அத்யாயத்தில் பகவான் கூறியுள்ளபடி) அனைத்துமாய் இருக்கும் பரம் பொருள், எட்டு வஸுக்களுள் அக்னியின் வடிவாக இருக்கிறார். எனவே, பகவான் ‘வஸு:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

——-

105.ஓம் வஸு மனஸே நம:

வஸுஶப்தேன ‘வஸு’ என்றால்

தன வாசினா செல்வம் (தனம்) என்று பொருள்

ப்ராஶஸ்த்யம் லக்ஷ்யதே (எனவே, வஸு என்ற சொல்) அனைத்திலும் சிறந்தவற்றைக் குறிக்கும்.

ப்ரஶஸ்தம் மனோ ‘மிகச்சிறந்த மனதை’ உடையவராதலால்

யஸ்ய  வஸு மனா: பகவான் ‘வஸுமனா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ராக விருப்பு

த்வேஶாதிபி வெறுப்புக்கள்

க்லேஶைர் போன்ற துன்பங்களாலும்

மதாதிபிர் கர்வம் போன்ற

உபக்லேஶைர் துன்பங்களாலும்

யதோ ந கலுஶிதம் விகாரமடையாத

சித்தம் மனமுடையவராதலால்

ததஸ்தன்மன: ப்ரஶஸ்தம் அவரது மனம் ‘மிகச் சிறந்ததாகும்’.

‘வஸு’ என்ற சொல் செல்வம் (தனம்) என்ற பொருளின் மூலம், சிறந்த பொருட்கள் அனைத்தையும் குறிக்கிறது. விருப்பு, வெறுப்புக்கள், கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை உடையவராதலால், பகவான் ‘மிகச் சிறந்த மனமுடையவர்’ என்ற பொருளில் ‘வஸுமனா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———

106.ஓம் ஸத்யாய நம:

அவிததரூபத்வாத் உண்மையே வடிவாக இருப்பதால்

பரமாத்மா ஸத்ய: பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

அவிதத என்றால் ‘பொய்யல்லாத ஒன்று’ அதாவது உண்மை என்று பொருள்.

உண்மையே வடிவாக இருப்பதால் பரமாத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணு ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம’ (தைத்ரீய உபநிஶத் 2.1.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ப்ரஹ்மமானது என்றுமுள்ள ஸ்வரூபமானது (ஸத்யம்), அறிவு ஸ்வரூபமானது (ஞானம்), வரையறுக்கப் படாத ஸ்வரூபமானது (அனந்தம்).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

மூர்த்த புலன்களால் அறியப்படும் ஸ்தூல உருவங்களாகவும்

அமூர்த்தாத்மகத் வாத் வா புலன்களால் அறியப்படமுடியாத ஸூக்ஷ்ம உருவங்களாகவும் இருப்பதால்

ஸத்ய: (அனைத்துமாகவும் இருப்பதால்) பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் ஸ்தூல வடிவாயும், ஸூக்ஷ்ம வடிவாயும் இருப்பதால் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸச்ச த்யச்சாபவத்’ (தைத்ரீய உபநிஶத் 2.6.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த ப்ரஹ்மம்) ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் ஆனார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத் இதி ப்ராணா: ‘ஸ’ என்ற சொல் ப்ராணனைக் குறிக்கும்,

தி இதி அன்னம் ‘த்’ என்ற சொல் அன்னத்தைக் குறிக்கும்,

யம் இதி திவாகரஸ்தேன ‘ய’ என்ற சொல் சூரியனைக் குறிக்கும்

ப்ராணான்னாதித்யரூபாத்வா ஸத்ய: ப்ராணன் (மூச்சுக்காற்று), அன்னம் (உணவு) மற்றும் சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்) பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘ஸ’ என்ற ப்ராணன் (மூச்சுக்காற்று), ‘த்’ என்ற அன்னம் (உணவு) மற்றும் ‘ய’ என்ற சூரியன் ஆகிய அனைத்துமாக இருப்பதால் (அல்லது, இவை அனைத்துமாய் இருந்து நமக்கு ஊட்டமளிப்பதால்), அவர் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸதிதி ப்ராணாஸ்தீத்யன்னம் யமித்யஸாவாதித்ய:’ (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.5.6)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: ‘ஸ’ என்றால் ப்ராணன், ‘த்’ என்றால் அன்னம், ‘ய’ என்றால் சூரியன்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்ஸு ஸத்புருஷர்களுக்கு (ஸாதுக்களுக்கு)

ஸாதுத்வா நன்மையே (ஸாது) வடிவானவராய் காட்சி அளிப்பதால்

ஸத்ய: பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றவர்களுக்கு என்றும் நன்மையையே விழையும் ஸாதுக்களுக்கு பகவானும் நன்மையே வடிவானவராய்க் காட்சி அளிப்பதால், அவர் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

107.ஓம் ஸமாத்மனே நம:

ஸம ஆத்மா அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்

யஸ்ய அவரது மனம்

ராக விருப்பு

த்வேஶாதிபிர் வெறுப்பு போன்றவைகளால்

அதூஶித களங்கப்படாது இருப்பதால்

: ஸமாத்மா பகவான் ‘ஸமாத்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸர்வபூதேஶு அனைத்து ஜீவராசிகளையும்

ஸம ஏக ஒன்றாகவே சமமாக எண்ணும்

ஆத்மா வா ஆத்மா பகவான் என்பது இதன் பொருளாகும்.

பகவானின் மனம் விருப்பு, வெறுப்புக்கள் என்ற களங்கங்கள் அற்றது. எனவே, அவர் அனைத்து ஜீவராசிகளையும் (விருப்பு வெறுப்புகளற்று) ஒன்றாகவே பார்க்கிறார். எனவே, பகவான் ‘ஸமாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸம ஆத்மேதி வித்யாத்’

அந்த ஆத்மன் ஸமமானவர் என்று அறிவாயாக.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

108.ஓம் ஸம்மிதாய நம: /ஓம் அஸம்மிதாய நம:

ஸர்வைர் அனைத்து

அப்யர்தஜாதை: பதார்த்தங்களிலும்

பரிச்சின்ன: (நீக்கமற நிறைந்திருப்பதால்) பகவானை அறியமுடியுமாதலால்

ஸம்மித: பகவான் ‘ஸம்மித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸம்மித: என்றால் அளவிடமுடிந்தவர் என்று பொருள்.

பகவான் அனைத்துப் பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். எனவே (அப்பதார்த்தங்களைக் கொண்டு) அவரை அளவிடமுடியும், அறியமுடியுமாதலால் அவர் ‘ஸம்மித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வைர் அனைத்து

அபரிச்சின்னோSமித (அனைத்திலும் நிறைந்திருந்தாலும் இவை மட்டும்தான் என்று) பகவானை அளவிடமுடியாததால்

இதி அஸம்மித: பகவான் ‘அஸம்மித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவர் எவற்றுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே, அவரை எதைக் கொண்டும் அடக்கிவிடமுடியாது, அளவிடமுடியாது. எனவே, பகவான் ‘அஸம்மித:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஸம்மித: என்றால் அளவிடமுடியாதவர் என்று பொருள். ஸமாத்மாஸம்மித ஸம: என்று இந்த ஸ்லோகத்தில் வருகிறது. இதை ஸமாத்மா + ஸம்மித: என்றும் பிரிக்கலாம், ஸமாத்மா + அஸம்மித: என்றும் பிரிக்கலாம். எனவே, ஆசார்யாள் இதற்கு இரண்டு விளக்கங்களையும் அளித்துள்ளார். ஆனால், பொதுவாக ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் ஸஹஸ்ரநாமத்தை நாமாவளியாக உரைக்கும்பொழுது, ‘அஸம்மித:’ (பகவான் அளவிடமுடியாதவர்) என்ற திருநாமத்தை உரைப்பதே வழக்கத்தில் உள்ளது.

———

109.ஓம் ஸமாய நம:

ஸர்வகாலேஶு அனைத்து காலங்களிலும்

ஸர்வவிகார எவ்வித மாறுபாடுகளும்

ரஹிதத்வாத் அற்றிருப்பதால்

ஸம: பகவான் ‘ஸம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எக்காலத்திலும் எவ்வித மாறுபாடுகளுக்கும் உட்படுவதில்லை. எனவே, அவர் ‘ஸம:’ (எப்பொழுதும் மாறாதவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ‘ஸம’ என்பதற்கு எக்காலத்திலும் அவர் மாற்றமின்றி சமமாகவே இருக்கிறார் என்று பொருள்

மயா ‘ம’ என்றால்

லக்ஷ்ம்யா மஹாலக்ஷ்மியைக் குறிக்கும்

ஸஹ வர்தத இதி வா (மஹாலக்ஷ்மியுடன்) எப்பொழுதும் கூடியிருப்பதால்

ஸம: பகவான் ‘ஸம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ம என்று அழைக்கப்படும் மஹாலக்ஷ்மியுடன் என்றும் கூடியிருப்பதால் பகவான் ‘ஸம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ  உடன் + ம  மஹாலக்ஷ்மி = ஸம:

———–

110.ஓம் அமோகாய நம:

பூஜித: (தன்னை) வழிபட்டாலோ

ஸ்துத: துதித்தாலோ

ஸம்ஸ்ம்ருதோ வா (மனதார) நினைத்தாலோ

ஸர்வஃபலம் அனைத்துப் பலன்களையும்

ததாதி வா வாரி வழங்குவதால்

ந வ்ருதா கரோதீதி அவற்றை வீணாக்காது

அமோக: பகவான் ‘ அமோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு செய்யப்படும் வழிபாடு, துதி மற்றும் அவரை மனதாற நினைத்தல் ஆகிய நற்செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை (பகவான் அவற்றை வீணாக விடுவதில்லை). அவற்றிற்குண்டான நற்பலன்களை அவர் வாரி வழங்குகிறார். எனவே, பகவான் ‘அமோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவிதத உண்மையான, என்றுமே நிறைவேறக்கூடிய​

ஸங்கல்பாத் வா எண்ணம் (அல்லது விருப்பம்) உடையவராதலால்

அமோக: பகவான் ‘ அமோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், விருப்பங்களும் எப்பொழுதும் ஈடேறுகின்றன. எனவே, பகவான் ‘அமோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமோக என்ற சொல்லிற்கு, பலன்கள் மற்றும் வெற்றி என்று இரு பொருள்கள் உண்டு. முதல் அர்த்தம் ‘பலன்கள்’ (பலனளிப்பவர்) என்ற பொருளிலும் இரண்டாவது அர்த்தம் ‘வெற்றி பெருபவர்’ (தன் எண்ணங்கள் ஈடேறுவதில் தோல்வியைக் காணாதவர்) என்ற பொருளிலும் விளக்கப்பட்டிருக்கிறது.

‘ஸத்யஸங்கல்ப:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மத்தின்) அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெருகின்றன

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

111.ஓம் புண்டரீகாஷாய நம:

ஹ்ருதயஸ்தம் (ஒவ்வொருவருடைய இதயத்தினுள்ளும்)

புண்டரீகம் (உள்ள) தாமரையில்

அஶ்னுதே வ்யாப்னோதி நிறைந்து

தத்ரோபலக்ஷித (அந்த இதயத் தாமரையில்) காட்சி அளிப்பதால்

இதி புண்டரீகாக்ஷ: பகவான் ‘புண்டரீகாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னை த்யானிப்பவரின் இதயத் தாமரையில் நிறைந்து காட்சி அளிப்பதால் அவர் ‘புண்டரீகாக்ஷன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புண்டரீக  இதயத்தாமரை + அஶ்னுதே – காட்சி அளிக்கிறார் = புண்டரீகாக்ஷ:

”யத்புண்டரீகம் புரமத்யஸக்ஸ்தம்’

(அந்தப் பரப்ரஹ்மம்) இதயத் தாமரையின் நடுவில் வீற்றிருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

புண்டரீகாகாரே தாமரை இதழ்களை ஒத்த

உபே இரண்டு

அக்ஷிணீ திருக்கண்களை

அஸ்யேதி வா உடையவராதலால்

புண்டரீகாக்ஷ: பகவான் ‘புண்டரீகாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இரண்டு திருக்கண்களும் தாமரை இதழ்களைப் போன்று அழகாக உள்ளதால், அவர் ‘புண்டரீகாக்ஷன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புண்டரீக – தாமரை (இதழ்கள்) + அக்ஷிணீ – இரண்டு திருக்கண்கள் = புண்டரீகாக்ஷ:

———–

112.ஓம் வ்ருஶகர்மணே நம:

தர்மலக்ஷணம் தர்மத்தின் உருவமாக (தர்மத்திற்கு விளக்கமாக)

கர்மாஸ்யேதி அவருடைய செயல்கள் இருப்பதால்

வ்ருஶகர்மா பகவான் ‘வ்ருஶகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் செயல்கள் அனைத்தும் தர்மமே வடிவானவை. எனவே, அவர் ‘வ்ருஶகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶ – தர்மம் கர்மா – செயல்கள் = வ்ருஶகர்மா

———–

113.ஓம் வ்ருஶாக்ருதயே நம:

தர்மார்த்தம் தர்மத்திற்காக (தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டு)

ஆக்ருதி: ஶரீரம் உடலை (‘ஆக்ருதி’ என்றால் உடல் என்று பொருள்)

யஸ்யேதி  அவர் தரிப்பதால் (எவர் தரிக்கிறாரோ அந்த பகவான்)

வ்ருஶாக்ருதி: பகவான்          ‘வ்ருஷாக்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்மத்திற்காகவும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பகவான் ஒரு உடலை தரிக்கிறார் (அவதாரம் எடுக்கிறார்). எனவே, அவர் ‘வ்ருஶாக்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶ – தர்மம் ஆக்ருதி – உடல் = வ்ருஶாக்ருதி:

‘தர்மம் ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)

ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

——–

13. ருத்ரோ பஹுஶிரா பப்ருர் விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: |

அம்ருத: ஶாஶ்வதஸ்தாணுர் வராரோஹோ மஹா தபா: ||

இந்த பதின்மூன்றாம் ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன:

  1. ருத்ர:, 115. பஹுஶிரா:, 116. பப்ரு:, 117. விஶ்வயோனி:, 118. ஶுசிஶ்ரவா: |
  2. அம்ருத:, 120. ஶாஶ்வதஸ்தாணு:, 121. வராரோஹ:, 122. மஹாதபா: ||

114.ஓம் ருத்ராய நம:

ஸம்ஹாரகாலே இந்தப் ப்ரபஞ்சம் அழியும் ப்ரளய காலத்தில்

ப்ரஜா: அனைத்து ஜீவராசிகளையும்

ஸம்ஹரன் அவர்களை அழித்து

ரோதயதீதி (அவ்வாறு அழிக்கும் காலத்தில் அவர்களை) அழவைப்பதால்

ருத்ர: பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோதயதி என்றால் அழவைத்தல். ப்ரளய காலத்தில் (ப்ரஹ்மாவின் ஆயுள்காலத்தின் முடிவில்) அனைத்து ஜீவராசிகளையும் அழிக்கும்பொழுது பகவான் அவர்களை அழவைக்கிறார். எனவே, அவர் ‘ருத்ரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருதம் வாக்கு அல்லது ஒலி

ராதி ததாதீதி வா ‘ராதி’ என்றால் தருபவர்

ருத்ர: பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் வாக்கை (அல்லது ஒலியை) வழங்குவதால் பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருதம் – வாக்கு + ராதி – தருபவர் = ருத்ர

ருர்துக்கம் “ரு” என்றால் துக்கம் மற்றும் துன்பத்தைக் குறிக்கும்

துக்ககாரணம் வா (அனைவரின் துன்பங்களையும் அவற்றை உருவாக்கும் அஞ்ஞானம், மோஹம் போன்ற) காரணங்களையும் த்ராவயதி வா (அவற்றை அழித்துத்) துரத்திவிடுவதால்

ருத்ர: பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் (அனைத்துத்) துன்பங்களையும், அஞ்ஞானம், மோஹம் போன்ற அவற்றின் காரணங்களையும் அழித்து விரட்டி விடுவதால் பகவான் ‘ருத்ரன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரு – துக்கம், துன்பம் + த்ராவயதி – ஓட்டிவிடுபவர் = ருத்ர

ரோதனாத் அழவைப்பதாலும்

த்ராவணாத்வாபி தூர விரட்டுவதாலும்

ருத்ர இதயுச்யதே பகவான் ‘ருத்ரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

அழவைப்பதாலும், தூர விரட்டுவதாலும் பகவான் ‘ருத்ரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆதிசங்கரர் எவரை அழவைப்பவர், எதை ஓட்டுபவர் என்று கூறவில்லை. எனவே, இதை மேற்சொன்ன துக்க காரணங்களை அழவைத்தும், ஒட்டியும் விடுகிறார் என்று சேர்த்து பொருள் கொள்ளலாம். ஏனெனில், அடுத்து அவர் அந்த காரணத்தை விளக்கும் சிவபுராண ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

‘ருர்துக்கம் துக்கஹேதும் வா தத் த்ராவயதி ய: ப்ரபு: |

ருத்ர இதயுச்யதே தஸ்மாச்சிவ: பரமகாரணம்’ || (ஸம்ஹிதா 6 அத்யாயம் 9.14)

‘ரு’ என்றால் துன்பங்களும், அதன் மூலகாரணங்களுமாகும். அவற்றை தூர ஓட்டுவதால் அனைத்திற்கும் காரணமான பகவான் சிவன் ‘ருத்ரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶிவபுராணவசனாத் இவ்வாறு ஶிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபடி அத்வைதத்தில் சிவ-விஶ்ணு பேதங்கள் இல்லை. அனைத்தும் பரப்ரஹ்மமே. ஆதிசங்கரர் இதை முன்பே பூர்வ பாகத்தில் பல மேற்கோள்களைக் காட்டி ஸ்தாபித்துள்ளார். எனவே, சிவனைக் குறிக்கும் அனைத்தும் நாராயணனையேக் குறிக்கும்.

————

115.ஓம் பஹுஶிரஸே நம:

பஹுனி எண்ணிலடங்கா

ஶிராம்ஸி தலைகள்

யஸ்யேதி உடையவராதலால்

பஹுஶிரா: பகவான் ‘பஹுஶிரா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸஹஸ்ரஶீர்ஶா புருஶ:’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:

(பரப்ரஹ்மமான புருஶருக்கு) பல்லாயிரக்கணக்கானத் தலைகள் உள்ளன.

இதி மந்த்ரவர்ணாத்  இந்த (புருஶ ஸூக்த மந்திரத்தில்) கூறியுள்ளபடி.

(புருஶ ஸூக்த மந்திரத்தில் கூறியுள்ளபடி) எண்ணிலடங்கா தலைகள் கொண்டவராதலால் பகவான் ‘ பஹுஶிரா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்துமாக இருப்பதால் அனைத்துமே பகவானின் தலைகளாகும். எனவே, அவருக்கு எண்ணிலடங்கா தலைகள் உள்ளன.

———-

116.ஓம் பப்ரவே நம:

பிபர்த்தி தாங்குகிறார்

லோகானிதி அனைத்து உலகங்களையும் (இந்தப் ப்ரபஞ்சத்தையும்) 

பப்ரு: பகவான் ‘பப்ரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உலகங்களையும், இந்தப் ப்ரபஞ்சத்தையும் தாங்குவதால் பகவான் ‘பப்ரு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

117.ஓம் விஶ்வயோனயே நம:

விஶ்வஸ்ய இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும்

காரணத்வாத் மூலகாரணமாக இருப்பதால் 

விஶ்வயோனி: பகவான் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதால் பகவான் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு ‘ஓம் விஶ்வரேதஸே நம:’ என்ற 88வது திருநாமத்திற்கும் ஆச்சார்யாள் இதே உரையை எழுதியுள்ளார் (விஶ்வஸ்ய காரணத்வாத்). அங்கு ‘ரேதஸ்’ (தந்தையின் வீர்யம்), இங்கு ‘யோனி’ (தாயின் கரு). மற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் இவை இரண்டும் வெவ்வேறாக இருக்கும். ப்ரபஞ்சம் பகவானிடமிருந்து நேரடியாகத் தோன்றுவதால், ப்ரபஞ்சத்திற்கு (ரேதஸ், யோனி ஆகிய) இந்த இரண்டுமே பகவான்தான். எனவே, இரண்டு திருநாமங்களுக்கும் ஒரே உரை தான். ஆனால், நாமம் வெவ்வேறாக இருப்பதால் புனருக்தி தோஷம் கிடையாது.

—————–

118.ஓம் ஶுசிஶ்ரவஸே நம:

ஶுசீனி தூய்மையானவை (தூய்மைபடுத்த வல்லவை)

ஶ்ரவாம்ஸி கேட்பது

நாமானி அவரது திருநாமங்கள்

ஶ்ரவணீயான்யஸ்யேதி கேட்கத் தகுந்தவை (கேட்பதற்கு உகந்தவை)

ஶுசிஶ்ரவா: (எனவே) பகவான் ‘ஶுசிஶ்ரவா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானைப் பற்றி கேட்பது தூய்மையானது. அவரது திருநாமங்கள் கேட்பதற்கு உகந்தவை. எனவே, பகவான் ‘ஶுசிஶ்ரவா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶுசி  தூய்மையானது + ஶ்ரவா  அவரைப் பற்றிக் கேட்பது = ஶுசிஶ்ரவா:

———–

119.ஓம் அம்ருதாய நம:

ந வித்யதே அடைவதில்லை

ம்ருதம் மரணம் ‘ம்ருதம்’ என்றால் மரணம்

அஸ்யேதி எனவே

அம்ருத: பகவான் ‘அம்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு மரணம் என்பதே கிடையாது. எனவே, அவர் ‘அம்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஜரோSமர:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.25)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மமான பகவான்) மூப்பற்றவர், இறவாதவர்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————

120.ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:

ஶாஶ்வதஸ்சாஸௌ நிரந்தரமானவர்

ஸ்தாணுஸ்சேதி நிலையானவர்

ஶாஶ்வதஸ்தாணு: (எனவே) பகவான் ‘ஶாஶ்வதஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் உள்ளார், என்றைக்கும் தன்னிலை மாறாது நிலையாகவும் உள்ளார். எனவே, அவர் ‘ஶாஶ்வதஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

121.ஓம் வராரோஹாய நம:

வர அழகிய 

ஆரோஹோSஅங்கோSஸ்யேதி இடையை (மடியை) உடையவராதலால் 

வராரோஹ: பகவான் ‘வராரோஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் இடைப்பகுதி மிக அழகானது. எனவே, அவர் ‘வராரோஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆரோஹ என்றால் இடைப்பகுதி (அல்லது மடி)

வரம் மிகச்சிறந்த

ஆரோஹணம் ஏற்றம் (ஏற்றமான இடம்)

யஸ்மின்னிதி வா எவருடையதோ

ஆரூடனாம் எங்கு சென்றால்

புனராவ்ருத்யஸம்பவாத் (இந்த ஸம்ஸாரத்தினுள்) திரும்பி வருதல் இல்லையோ

வராரோஹ: பகவான் ‘வராரோஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை அடைந்தவர் இந்த ஸம்ஸாரத்தினுள் மீண்டும் பிறப்பதில்லை. அத்தகைய ஏற்றமான இடத்தை உடையவராதலால் அவர் அவர் ‘வராரோஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வரம் – மிகச்சிறந்த + ஆரோஹணம் – ஏறுதல் = வராரோஹ:

புனராவ்ருத்தி + அஸம்பவாத் = புனராவ்ருத்யஸம்பவாத்

‘ந ச புனராவர்த்ததே’ (சாந்தோக்ய உபநிஶத் 8.15.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த உத்தமமான இடத்தை அடைந்தவன்மீண்டும் இங்கு வருவதில்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யத் கத்வா ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.6)

ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எதனை எய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————

122.ஓம் மஹாதபஸே நம:

மஹத் மிகச்சிறந்த

ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும்

தபோ ‘தப’ என்றால்

ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால்

மஹாதபா: பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யஸ்ய ஞானமயம் தப:’ (முண்டக உபநிஶத் 1.1.9)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப் படைக்கும் அறிவே தவமாகிறதோ

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஐஸ்வர்யம் அவரது செல்வத்தின்

ப்ரதாபோ வா வீரத்தின்

தபோ காந்தி (ஒளி)

மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும்

மஹாதபா: எனவே, பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முதல் விளக்கத்தில் ‘தப’ என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் ‘தப’ என்றால் ஒளி அல்லது காந்தி என்று பொருள்.

————–

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

123-ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |127-வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

—————-

123.ஓம் ஸர்வகாய நம:

ஸர்வத்ர எங்கும்

கச்சதீதி செல்வதால்

ஸர்வக: பகவான் ‘ஸர்வக’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய்

வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார்

ஸர்வத்ர எங்கும், எதிலும்.

அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் ‘ஸர்வக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

124.ஓம் ஸர்வவித்பானவே நம:

ஸர்வம் அனைத்தையும்

வேத்தி அறிவதனாலும்

விந்ததீதி வா அடைவதனாலும்

ஸர்வவித் பகவான் ‘ஸர்வவித்’ என்று அழைக்கப்படுகிறார்.

பாதீதி பானு: ஒளி வீசுவதால் ‘பானு’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்’ (கதோபநிஷத் 2.2.15)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

ஸ்வயமாக விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும் விளங்குகின்றன.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,

ஸர்வவிச்சாஸௌ அனைத்தையும் அறிவதனாலும்

பானுஸ்சேதி (இயற்கையாக) ஒளி வீசுவதாலும்

ஸர்வவித்பானு: பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

125.ஓம் விஶ்வக்ஸேனாய நம:

விஶ்வக் அவ்யயம் ‘விஶ்வ’ என்ற சொல்லிற்கு

ஸர்வேத்யர்த்தே அனைத்தும், எங்கும் என்று பொருள் |

விஶ்வ எங்கும்

கச்சதி ஓட வைக்கிறார் பலாயதே தோற்று

தைத்யஸேனா அஸுரப் படைகளை

யஸ்ய எவர்

ரணோத்யோகமாத்ரேணேதி போர்க்களத்தில் அவருடைய வீரத்தால்

விஶ்வக்ஸேன: (எனவே) பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வ’ என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான், போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

—————-

126.ஓம் ஜனார்தனாய நம:

ஜனான் துர்ஜனான் ‘ஜன’ என்றால் இங்கு துர்ஜனங்களைக் (தீயவர்களைக்) குறிக்கும்

அர்தயதி ஹினஸ்தி அவர்களை ‘அர்தனம்’ செய்கிறார், அதாவது தண்டனை அளிக்கிறார்

நரகாதீன் கமயதீதி வா அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளுகிறார்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: மனிதர்கள் புருஶார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை

அப்யுதய (தமது கர்மங்களின்) பலனாக

நி:ஶ்ரேயஸ லக்ஷணம் மிகச்சிறந்த

யாச்யதே இதி (பகவானிடம்) வேண்டுவதால்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

127.ஓம் வேதாய நம:

வேதரூபத்வாத் வேதமே வடிவாக இருப்பதால்

வேத: பகவான் ‘வேத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேதமே வடிவாக இருப்பதால் அவர் ‘வேத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதயதீதி வா அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால்

வேத: பகவான் ‘வேத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தை) வழங்குவதால் பகவான் ‘வேத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தேஶாமேவானுகம்பார்த்தமஹமஞானஜம் தம: |

நாஶயாம்யாத்மபாவஸ்தோ ஞானதீபேன பாஸ்வதா’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.11)

ஸ்ரீ பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———

128.ஓம் வேதவிதே நம:

யதாவத் உள்ளவாறு

வேதம் வேதங்களையும்

வேதார்த்தம்  அந்த வேதங்களின் உட்பொருளையும்

வேத்தீதி அறிவதால்

வேதவித் பகவான் ‘வேதவித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மட்டுமே அனைத்து வேதங்களையும், அதன் உட்பொருளையும் உள்ளதை உள்ளவாறு அறிகிறார். எனவே, பகவான் ‘வேதவித்’ (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.15)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேதமுணர்ந்தோன் யானே.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஸர்வே வேதா: ஸர்வேவேத்யா: ஸஶாஸ்த்ரா:

ஸர்வே யஞ்யா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண: |

விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ்தத்வதோ

யே தேஶாம் ஸர்வயஞ்யா: ஸமாப்தா: || (மஹாபாரதம்)

அனைத்து ஸாஸ்திரங்கள், வேதங்கள், அறியக்கூடிய (அறிய வேண்டிய) அனைத்தும், அனைத்து யாகங்களும், பூஜிக்கப்படும் அனைத்தும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனே ஆவார். ஓ அரசனே!!! பகவான் ஸ்ரீக்ருஷ்ணரை உள்ளபடி உணர்ந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், அனைத்து யாகங்களையும் நிறைவேற்றியவர் ஆவர் (அனைத்து யாகங்களையும் நிறைவேற்றியதற்கு இணையான பலனை அவர்கள் அடைகின்றனர்).

இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

————–

129.ஓம் அவ்யங்காய நம:

அவ்யங்க: பகவான் ‘அவ்யங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஞானாதிபி: (ஏனெனில்) ஞானம் முதலிய குணங்கள்

பரிபூர்ணோS(அ)விகல எவ்வித குறைபாடுமின்றி முழுமையாக உள்ளதால்

த்யுச்யதே பகவான் இவ்வாறு (அவ்யங்க: என்று) அழைக்கப்படுகிறார்.

அவரிடம், ஞானம் முதலிய குணங்கள் எவ்வித குறைவுமின்றி முழுமையாக உள்ளதால், பகவான் ‘அவ்யங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யங்கம் என்றால் குறைபாடு; அவ்யங்க: என்றால் குறைபாடுகள் இல்லாதவர். அவிகல = முழுமையாக

வ்யங்கோ வ்யக்திர் உருவம் (அறிதல்)

ந வித்யத அவர் அடைவதில்லை

இதி அவ்யங்கோ வா எனவே, பகவான் ‘அவ்யங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு நமது பார்வையாலோ, மற்ற புலன்களாலோ அறிந்துகொள்ளக் கூடிய உருவம் இல்லை (அவரை அவ்வாறு அறிய இயலாது). எனவே, பகவான் ‘அவ்யங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அவ்யக்தோSயம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 2.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: தெளிதற்கரியான்

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———–

130.ஓம் வேதாங்காய நம:

வேதா வேதங்கள்

அங்கபூதா யஸ்ய அவரது அங்கங்களாக இருப்பதால்

ஸ வேதாங்க: பகவான் ‘வேதாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதங்களை தனக்கு அங்கங்களாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘வேதாங்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

131.ஓம் வேதவிதே நம:

வேதான் வேதங்களை

வின்தே விசாரயதி ஆராய்கிறார்

இதி வேதவித் எனவே, பகவான் ‘வேதவித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதங்களை ஆராய்கிறார். எனவே, பகவான் ‘வேதவித்’ (வேதங்களை அறிபவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

128வது திருநாமத்தில் வேத – வேதங்களை + வித் – அறிகிறார் = வேதவித். இந்தத் திருநாமத்தில் வேத – வேதங்களை + வின் (விசாரயதி) = வேதவித்.

———

132.ஓம் கவயே நம:

க்ராந்ததர்ஶீ ஊடுருவிப் பார்க்கிறார்

கவி: எனவே, பகவான் ‘கவி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸர்வத்ருக் அனைத்தையும் காண்கிறார்.

பகவான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறார். எனவே, அவர் ‘கவி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நான்யோSதோSஸ்தி த்ரஶ்டா’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ப்ரஹ்மத்தைத் தவிர) இங்கு காண்பவர் வேறு இல்லை.

இத்யாதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘கவிர்மனீஶி’ (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ப்ரஹ்மம்) அனைத்தையும் அறிபவன், மனதை ஆள்பவன்.

இத்யாதி மந்த்ரவர்ணாத் | இவ்வாறு மந்திரங்களும் கூறுகின்றன.

————–

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

  1. லோகாத்யக்ஷ:, 134.ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
  2. சதுராத்மா, 138.சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||

133.ஓம் லோகாத்யஷாய நம:

லோகான் அனைத்து உலகங்களுக்கும் (அதிலுள்ள ஜீவராசிகளுக்கும்)

அத்யக்ஷயதீதி தலைவரான படியால்

லோகாத்யக்ஷ: பகவான் ‘லோகாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸர்வேஶாம் அனைத்து

லோகானாம் உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்)

ப்ராதான்யேனோபத்ருஶ்டா முதன்மையான ஸ்தானத்திலிருந்து மேற்பார்வையிடுகிறார்.

பகவான் அனைத்து உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்) மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக ‘லோகாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

134.ஓம் ஸுராத்யக்ஷாய நம:

லோகபாலாதி இந்த உலகிற்கு (மழை, வெயில் முதலிய) தேவையானவற்றை அளிக்கும் பொறுப்பில் உள்ள

ஸுராணாம் (இந்திரன், வருணன், அக்னி, சூர்யன் முதலான) தேவர்களை

அத்யக்ஷ: மேற்பார்வையிடுகிறார்

ஸுராத்யக்ஷ: எனவே, பகவான் ‘ஸுராத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றி, இந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதை) மேற்பார்வையிடுகிறார். எனவே, பகவான் ‘ஸுராத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

135.ஓம் தர்மாத்யக்ஷாய நம:

தர்மா(அ)தர்மோ (அனைவரும் செய்யும்) அறச்செயல்களையும், அறமல்லாத செயல்களையும்

ஸாக்ஷாத் ஈக்ஷதே சரிவர நோக்குகிறார் (பார்க்கிறார்)

அனுரூபம் அவற்றிற்கு (அந்தந்த செயல்களுக்கு) ஏற்ற

ஃபலம் பலன்களை

தாதும் வழங்குவதற்காக

தஸ்மாத் எனவே

தர்மாத்யக்ஷ: பகவான் ‘தர்மாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரும் புரியும் அறம் மற்றும் அறமல்லாத செயல்கள் அனைத்தையும், அவற்றிற்கு ஏற்ற பலன்களை வழங்குவதற்காக, சரிவர நோக்குகிறார். எனவே, அவர் ‘தர்மாத்யக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்னிரண்டு திருநாமங்களில் அத்யக்ஷ என்ற சொல் மேற்பார்வையிடுதல் என்ற பொருளில் வருகிறது. இந்தத் திருநாமத்தில் ‘பார்த்தல்’ என்ற பொருளில் வருகிறது.

தர்ம: + அதர்ம: = தர்மோதர்ம:

———–

136.ஓம் க்ருதாக்ருதாய நம:

க்ருதஸ்ச பகவான் அனைத்து செயல்களையும் செய்கிறார்

கார்யரூபேண காரிய ரூபமான ப்ரஹ்மத்தின் வடிவில்

அக்ருதஸ்ச பகவான் எந்த செயல்களும் புரிவதில்லை

காரணரூபேணேதி காரண ரூபமான ப்ரஹ்மத்தின் வடிவில்

க்ருதாக்ருத: எனவே அவர் ‘க்ருதாக்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து செயல்களையும் புரிகிறார். ஆனால், அவர் செயல்களற்று இருக்கிறார். அனைத்தும் அவரே (காரியம்). எனவே, அனைத்து செயல்களையும் அவரே புரிவதாகக் கொள்ளலாம். ஆனாலும், பரப்ரஹ்மம் ஒன்றிலும் தொடர்பின்றி இருப்பதால் (காரணம்) அவர் எந்த செயல்களையும் தனக்காகப் புரிவதில்லை. எனவே, அவர் செயல்களற்றும் இருக்கிறார். எனவே, பகவான் ‘க்ருதாக்ருத:’ (செயல் புரிபவர் அதே சமயம் செயல்கற்றும் இருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தத் திருநாமம் புரிந்துகொள்ள சற்று கடினமானது. இரண்டு நேரெதிர் சொற்களை சேர்த்து ஒரே திருநாமமாக பீஷ்மாச்சார்யார் தந்துள்ளார். ஆதிசங்கர பகவத்பாதரும் இதற்கு, உபநிஶத்துக்கள் பரப்ரஹ்மமான பகவானை எவ்வாறு வர்ணிக்கின்றனவோ, அவ்வாறே விளக்கம் அளித்துள்ளார். இதைப் புரிந்து கொள்ள (மேலும் அத்வைத சாரத்தையும் அறிந்து கொள்ள) உபநிஶத்துக்களையும் அதன் விளக்கங்களையும் நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

————

137.ஓம் சதுராத்மானே நம:

ஸர்காதிஶு படைத்தல் முதலான காரியங்களுக்காக

ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர நான்கு வெவ்வேறு

ஆத்மானோ மூர்த்தயோ உருவங்கள்

யஸ்ய ஸ: எவர் எடுக்கிறாரோ, அந்த பகவான்

சதுராத்மா ‘சதுராத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘சதுராத்மா’ (நான்கு வடிவினர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா தக்ஷாதய: காலஸ்ததைவாகிலஜந்தவ: |

விபூதயோ ஹரேரேதா ஜகத: ஸ்ருஶ்டிஹேதவ: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.31)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ப்ரஹ்மா, தக்ஷன் முதலிய ப்ரஜாபதிகள், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் படைக்கும் காலத்தில் பகவான் ஹரியின் தோற்றங்களாகும்.

விஶ்ணோர்மன்வாதய: கால: ஸர்வபூதானி ச த்விஜ: |

ஸ்திதேர்நிமித்தபூதஸ்ய விஶ்ணோரேதா விபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.32)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

விஶ்ணு, மனு முதலானோர், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் காக்கும் காலத்தில் பகவான் விஶ்ணுவின் தோற்றங்களாகும்.

ருத்ர: காலோSந்தகாத்யாஸ்ச ஸமஸ்தாஸ்சைவ ஜந்தவ: |

சதுர்தா ப்ரளயாயைதா ஜனார்தனவிபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.33)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ருத்ரன், காலம், யமன் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் அழிக்கும் ப்ரளய காலத்தில் பகவான் ஜனார்தனரின் தோற்றங்களாகும்.

இதி வைஶ்ணவபுராணே – இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———

138.ஓம் சதுர்வ்யூஹாய நம:

வ்யூஹ்யாத்மானம் சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |

ஸ்ருஶ்ட்யாதீன் ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||

பகவான் ஜனார்தனர் (வேதங்களிலும், மற்ற ஶ்ருதிகளிலும்) மிகவும் புகழப்பெற்ற தனது வடிவத்தை வாஸுதேவர் முதலிய நான்கு வடிவங்களாக வகுத்துக் கொண்டு படைப்பு முதலிய செயல்களைப் புரிகிறார்.

இதி வ்யாஸவசனாத் ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி

சதுர்வ்யூஹ: பகவான் ‘சதுர்வ்யூஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார். எனவே, அவர் ‘சதுர்வ்யூஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யூஹ என்றால் வகுத்தல், அல்லது பிரித்துக் கொள்ளுதல் என்று பொருள்.

——–

139.ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:

தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ நான்கு தெற்றிப் பற்களை

யஸ்யேதி எவரிடம் உள்ளதோ

சதுர்தம்ஶ்ட்ர: (அந்த பகவான்) ‘சதுர்தம்ஷ்ட்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ந்ருஸிம்ஹவிக்ரஹ: ஸ்ரீநரஸிம்ஹ மூர்த்தி.

பகவான் ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார். எனவே, அவர் ‘சதுர்தம்ஶ்ட்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது

ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தோற்ற ஒப்புமையால் கொம்புகளை

தம்ஶ்ட்ரேத்யுச்யதே பற்கள் (தம்ஶ்ட்ர) என்றும் கூறுவார்கள்

சதுர்தம்ஶ்ட்ர: பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால் அவர் ‘சதுர்தம்ஷ்ட்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சத்வாரி ஶ்ருங்கா:’ (ரிக்வேதே)

ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது:

(அவருக்கு) நான்கு கொம்புகள் உள்ளது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

140.ஓம் சதுர்புஜாய நம:

சத்வாரோ நான்கு

புஜா திருத்தோள்களை

அஸ்யேதி உடையவராதலால்

சதுர்புஜ: பகவான் ‘சதுர்புஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்கு திருத்தோள்களை உடையவராதலால் பகவான் ‘சதுர்புஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்த நான்குத் திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தி இருக்கும் பகவானின் திருஉருவம் மிகவும் பிரபலாமானது.

————

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

  1. ப்ராஜிஷ்ணு:, 142.போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
  2. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

141.ஓம் ப்ராஜிஶ்ணவே நம:

ப்ரகாஶ ஒளிவடிவானவர்

ஏகரஸத்வாத் மாற்றமில்லாதவர்

ப்ராஜிஶ்ணு: எனவே, பகவான் ‘ப்ராஜிஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மாற்றமில்லாத, ஒளிவடிவானவராக இருப்பதால் பகவான் ‘ப்ராஜிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

142.ஓம் போஜனாய நம:

போஜ்யரூபாதயா அனுபவிக்க வேண்டிய பொருளாக

ப்ரக்ருதிர் மாயா ‘ப்ரக்ருதி’ என்று அழைக்கப்படும் இந்த மாயை

போஜனம் (அந்த மாயையின் வடிவாக இருப்பதால்) பகவான் ‘போஜனம்’ என்ற திருநாமத்தால்

இத்யுச்யதே அழைக்கப்படுகிறார்.

ப்ரக்ருதி என்றழைக்கப்படும் மாயையே இந்த ப்ரபஞ்சம் அனைத்திலும் எல்லாவித அனுபவிக்காத தகுந்த பொருட்களாகவும் உள்ளது. எனவே, ப்ரக்ருதி ‘போஜனம்’ (அனுபவிக்கப்படும் பொருள்) என்றழைக்கப்படுகிறது. பகவானே ப்ரக்ருதியின் உருவத்தில் அனைத்துப் பொருளாயும் இருப்பதால், அவர் ‘போஜனம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

143.ஓம் போக்த்ரே நம:

புருஶ ரூபேண புருஷனின் வடிவில்

தாம் புங்க்தே பகவான் (அந்த ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் பொருள்களை) அனுபவிக்கிறார்

இதி போக்தா எனவே அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் புருஶனின் வடிவத்தில் அனுபவிப்பவரும் பகவானே. எனவே, அவரே ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த இரண்டு திருநாமங்களை ஆதிசங்கரர் ப்ரக்ருதி-புருஶ தத்துவத்தைக் கொண்டு விளக்குகிறார். அனைத்தும் பரம்பொருளே. ப்ரக்ருதியின் வடிவில் அனைத்து அனுபவங்களாயும் இருப்பவரும் பகவானே. அவரே, புருஶனின் (அதாவது ஆத்மாவின் வடிவில்) அனைத்தையும் அனுபவிக்கிறார்.

பொது வழக்கில் போஜனம் என்றால் உண்ணும் உணவைக் குறிக்கும், போக்தா என்றால் உண்பவரைக் குறிக்கும். ஆனால், உண்மையில் நாம் அனைத்துப் புலன்களாலும் அனுபவிக்கும் எல்லா பொருட்களுக்குமே ‘போஜனம்’ என்றுதான் பெயர்.

—————-

144.ஓம் ஸஹிஶ்ணவே நம:

ஹிரண்யாக்ஷாதீன் ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை)

ஸஹதே வெற்றி கொள்கிறார்

அபிபவதீதி அடக்குகிறார்

ஸஹிஶ்ணு: எனவே பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் ‘ஸஹிஶ்ணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஹதே என்றால் வெல்பவர்; அபபவதி என்றால் அடக்குபவர்.

———————-

145.ஓம் ஜகதாதிஜாய நம:

ஹிரண்யகர்பரூபேண ‘ஹிரண்யகர்பரின்’ வடிவில்

ஜகதாதாவுத்பத்யதே இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் உதித்தார்

ஸ்வயமிதி தாமே வந்து

ஜகதாதிஜ: எனவே, பகவான் ‘ஜகதாதிஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தானே, இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் ‘ஜகதாதிஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

146.ஓம் அனகாய நம:

அகம் பாபங்கள்

ந வித்யதேSஸ்யேதி அவரைத் தீண்டுவதில்லை

அனக: எனவே, பகவான் ‘அனக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரக்ருதியின் வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்; அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை அனுபவிக்கிறார். ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார். இவ்வாறு, அனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல், இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்) அவரை எந்த பாபமும் தீண்டுவதில்லை. எனவே, பகவான் ‘அனக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக – பாபங்கள்; அனக – பாபங்களற்றவர்

‘அபஹதபாப்மா’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) பாவங்களற்றவர்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

147.ஓம் விஜயாய நம:

விஜயதே வெற்றிகொள்கிறார்

ஞானவைராக்யைஶ்வர்யாதிபிர்குணைர் (ஞான வைராக்ய ஐஶ்வர்யாதிபிர் குணைர்) ஞானம், வைராக்யம், செல்வம் போன்ற குணங்களால்

விஶ்வமிதி இந்த உலகனைத்தையும்

விஜய: எனவே, அவர் ‘விஜய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான, அபரிமிதமான ஞானம், வைராக்யம், செல்வம் குணங்களால் அனைவரையும் வெல்கிறார். எனவே, அவர் ‘விஜய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

148.ஓம் ஜேத்ரே நம:

யதோ ஜயத்யதிஶேதே விஞ்சி நிற்கிறார்

ஸர்வபூதானி அனைத்து ஜீவராசிகளையும்

ஸ்வபாவதோSதோ தன்னுடைய இயற்கையான தன்மையால்

ஜேதா அவர் (அந்த பகவான்) ‘ஜேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் மேன்மை பெற்று விஞ்சி இருக்கிறார். எனவே, அவர் ‘ஜேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முந்தைய திருநாமத்தில் குணங்களால் மேன்மை. இங்கு, அவரது இயற்கையான தன்மையாலேயே மேன்மை.

—————–

149.ஓம் விஶ்வயோனயே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சமே

யோனிர்யஸ்ய எவருடைய கர்ப்பப்பையாக (அனைத்தையும் தோற்றுவிக்கும் இடமாக) உள்ளதோ

விஶ்வஸ்சாஸௌ இந்தப் ப்ரபஞ்சமாயும்

யோனிஸ்சேதி வா அதன் தோற்றுவாயாகவும் (காரணமாயும்) இருப்பதால்

விஶ்வயோனி: பகவான் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு இந்தப் ப்ரபஞ்சம் ஒரு கர்ப்பப்பைப் போன்று உள்ளது. அதினின்றே அவர் அனைத்தையும் தோற்றுவிக்கிறார். எனவே, அவர் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் இந்தப் ப்ரபஞ்சமாகவும், அது தோன்றுவதற்குக் காரணமாகவும் இருப்பதால் ‘விஶ்வயோனி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 117-வது திருநாமத்தில், ‘விஶ்வயோனி:’ என்பதற்கு “ப்ரபஞ்சத்தின் காரணம்” என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார். இங்கு, ப்ரபஞ்சமே அவரது யோனியாய்க் கொண்டுள்ளார் (கொண்டு, மற்ற உயிர்களைப் படைக்கிறார்) என்று புனருக்தி தோஶம் வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.

——————

150.ஓம் புனர்வஸவே நம:

புன: புன: மீண்டும் மீண்டும்

ஶரீரேஶு உடல்களுக்குள்

வஸதி வசிக்கிறார்

க்ஷேத்ரஞ்யரூபேணேதி (இந்த உடலை அறியும்) க்ஷேத்ரக்ஞரின் வடிவில்

புனர்வஸு: எனவே, பகவான் ‘புனர்வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே, அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் க்ஷேத்ரக்ஞராய் மறைந்துள்ளார். எனவே, அவர் மீண்டும், மீண்டும் வெவ்வேறு ஜீவராசிகளின் உடல்களுக்குள் வசிக்கிறார். எனவே, அவர் ‘புனர்வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தில் எண்ணிறந்த ஜீவராசிகள் உள்ளன. தினந்தோறும் மென்மேலும் பிறக்கின்றன. பகவான் அந்த ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறார்.

————————-

17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |

அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||

இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:

  1. உபேந்த்ர:, 152.வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:, 156. ஊர்ஜித: |
  2. அதீந்த்ர:, 158.ஸங்க்ரஹ:, 159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||

151.ஓம் உபேந்த்ராய நம:

இந்த்ரம் இந்திரனுக்கு

உபகதோSநுஜத்வேனேதி தம்பியாக அவதரித்தார் (இந்திரனுக்குத் தம்பி ஒருவர் கிடைத்தார்)

உபேந்த்ர: எனவே, பகவான் ‘உபேந்த்ரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்திரனுக்குத் தம்பியாக அவதரித்ததால் பகவான் ‘உபேந்திரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்திரன் அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் பிறந்தவன். அவனது ஸ்வர்கலோகம் மஹாபலியால் அபகரிக்கப் பட்டது. அதிதியின் வேண்டுதலின்படி பகவான் அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் மகனாக, வாமனனாகத் தோன்றினார். எனவே, அவர் இந்திரனின் தம்பியாவார்.

உபகதோSநுஜத்வேனேதி = உபகத: (தோன்றினார்) + அனுஜத்வேனேதி (தம்பியாக)

யத்வா அல்லது

உபரி உயர்ந்தவர் (மேம்பட்டவர்)

இந்த்ரஇந்திரனைக் காட்டிலும்

உபேந்த்ர: எனவே, பகவான் ‘உபேந்த்ரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்திரனைக் காட்டிலும் உயர்ந்தவராக (மேம்பட்டவராக) இருப்பதால், பகவான் ‘உபேந்திரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மமோபரி யதேந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபிரீஶ்வர: |

உபேந்த்ர இதி க்ருஷ்ண த்வாம் காஸ்யந்தி புவி தேவதா: || (ஹரிவம்ஶம் 2.19.46)

இந்த ஆநிரைகள் (பசுக்கள்) தங்களை எனக்கு மேலே, எனக்கும் தலைவராக ஆக்கியுள்ளன. எனவே, தேவர்கள் இனி தங்களை உபேந்திரன் என்ற திருநாமத்தால் உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள்.

இதி ஹரிவம்ஶே – இவ்வாறு ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

152.ஓம் வாமனாய நம:

பலிம் மஹாபலியிடமிருந்து

வாமனரூபேண வாமனராக

யாசிதவான் (மூன்றடி மண்) தானமாக யாசித்ததால்

இதி வாமன: பகவான் ‘வாமனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், குள்ள வடிவம் கொண்டவராய் (வாமனராய்) அவதரித்து மஹாபலியிடமிருந்து மூன்றடி மண் யாசித்ததால், அவர் ‘வாமனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹாபலி ப்ரஹ்லாதனின் பேரன். அவன் வேள்விகள் மூலம் பெற்ற ஆயுதங்களினாலும், தனது தான தர்மத்தின் நற்பலன்களினாலும் அனைவரையும் வென்றான். தேவேந்திரனையும் தோற்கடித்து ஸ்வர்கலோகத்தையும் கைப்பற்றினான். தேவர்களின் தாயான அதிதியின் வேண்டுதலை ஏற்ற பகவான், அதிதிக்கும், காஸ்யப முனிவருக்கும் மகனாக, வாமனர் என்ற பெயருடன், குள்ள வடிவினராகத் தோன்றினார். நரஸிம்ஹ அவதாரத்தில் தான் ப்ரஹ்லாதனுக்கு அவனது வம்சத்தில் எவரையும் இனி கொல்ல மாட்டேன் வாக்களித்திருந்தபடியால், மஹாபலியிடம் மூன்றடி மண் யாசித்து, ஏழுலகங்களையும் அளந்து தனதாக்கினார். ஸ்வர்கத்தை மீண்டும் இந்திரனுக்கு அளித்தார். வந்திருப்பது பகவான் என்று தெரிந்தும், இல்லை என்று சொல்லாமல் தானம் அளித்த மஹாபலியை பாதாள உலகிற்கு அரசனாக நியமித்து, அவனுக்குக் காவலாக தானே இருந்தும் வருகிறார். மேலும், மஹாபலியே அடுத்த மன்வந்தரத்தில் இந்திரனாக நியமிக்கப்படுவான் என்ற வரத்தையும் அளித்தார். இந்த சரித்திரம் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் (எட்டாவது ஸ்கந்தம்) விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஸம்பஜனீய நன்றாகப் போற்றத்தகுந்தவர்

இதி வா வாமன: எனவே, பகவான் ‘வாமனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து போற்றுதலுக்கும் உரியவர். அவ்வாறு, நன்கு போற்றத் தகுந்தவராதலால் பகவான் ‘வாமனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மத்யே வாமனமாஸீனம் விஶ்வேதேவா உபாஸதே | (கதோபநிஶத் 2.2.3)

கதோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

விஶ்வேதேவர்கள் (இந்த்ரியங்கள்) ஹ்ருதயத்தில் இருக்கின்ற வணங்கத்தக்கவரை (பரப்ரஹ்மத்தை, ஆத்மாவை) வழிபடுகின்றன. 

இதி மந்த்ரவர்ணாத் – இந்த உபநிஷத மந்திரத்தின் படி (வாமனர் என்றால் வணங்கத்தக்கவர், போற்றத்தக்கவர் என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது).

——–

153ஓம் ப்ராம்ஶவே நம:
ஸ ஏவ அவரே (வாமனனாய்க் அவதரித்த அவரே
ஜகத்ரயம் மூவுலகையும் க்ரமமாணதாவி அளந்தபொழுது 
ப்ராம்ஶுரபூத் இதி மிக உயர்ந்ததால் (அளவில் உயரமாக வளர்ந்ததால்
ப்ராம்ஶு: பகவான் ப்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வாமனனாய் அவதரித்துமூவுலகையும் தாவி அளக்கும் பொழுது த்ரிவிக்ரமனாய் உயர்ந்து வளர்ந்ததால் பகவான் ப்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வாமனன் (முந்தைய திருநாமம்என்றால் குள்ளமானவர் என்று பொருள்ப்ராம்ஶு என்றால் உயரமானவர் என்று பொருள்வாமனனாய் குள்ளமாக இருந்த பகவான் த்ரிவிக்ரமனாய் உயர்ந்தார்.
ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில்முன்பேநாம் க்ருதாக்ருத:’ என்று நேரெதிர் பொருள் கொண்ட இரண்டு சொற்கள் ஒரே திருநாமமாய் பீஷ்மாச்சார்யாரால் உரைக்கப்பட்டதைக் கண்டோம்இங்கும் (வாமன:, ப்ராம்ஶு🙂 என்று இரண்டு நேரெதிர் பொருள் கொண்ட திருநாமங்கள் அடுத்தடுத்து வருகின்றனஇவ்வாறேமேலும் பல இடங்களில் இவ்வாறு நேரெதிர் பொருள் கொண்ட திருநாமங்கள் அடுத்தடுத்து வருவதைக் காணலாம் (உதாரணமாக பயக்ருத் – பயநாஶன:, காமஹாகாமக்ருத்க்ரோதஹாக்ரோதக்ருத் …).
தோயே து பதிதே ஹஸ்தே வாமனோSபூதவாமன: |
ஸர்வதேவமயம் ரூபம் தர்ஶயாமாஸ வை ப்ரபு: ||
பூபாதௌ த்யௌஶிரஸஸ்சாஸ்ய 
சந்திராதித்யௌ ச சக்ஷுஶீ | (ஹரிவம்ம் 3.71.43-44)
ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:-(மஹாபலி மூன்றடி மண் வழங்குவேன் என்று தாரை வார்த்தநீர் வாமனரின் கையில் விழுந்த உடனேயேஅவர் அவாமனர்‘ (குள்ளமாய் இருந்த அவர் வளர்ந்து விட்டார்ஆகினார்அப்பொழுது பகவான் தன்னுடைய (அனைத்து தேவதைகளையும் தன்னுள்ளே அடக்கியவிஶ்வரூபத்தைக் காட்டினார். (அந்த விஶ்வரூபத்தில்பூமியே அவரது பாதங்கள்ஆகாயமே அவரது தலைகதிரவனும்வெண்மதியுமே அவரது திருக்கண்களாய் இருந்தன.
இத்யாதிவிஶ்வரூபம் தர்ஶயித்வா இவ்வாறு பகவானின் விஶ்வரூபம் (ஹரிவம்ஸத்தில்வர்ணிக்கப்பட்டுள்ளது.
தஸ்ய விக்ரமதோ பூமிம் சந்த்ராதித்யௌ ஸ்தானாந்தரே |
நபப்ரக்ரமமாணஸ்ய நாப்யாம் தௌ ஸமவஸ்திதௌ ||
திவமாக்ரமமாணஸ்ய ஜானுமூலே வ்யவஸ்திதௌ | (ஹரிவம்ம் 3.72.29)
 ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:-பகவான் த்ரிவிக்ரமனாய் பூமியை அளக்கும் பொழுது கதிரவனும்வெண்மதியும் அவரது மார்புக்கு அருகில் இருந்தனர்வானத்தை அளக்கும் பொழுது அவரது தொப்புள் (வயிற்றுப்பகுதியிலும்ஸ்வர்கத்தை அளக்கும் பொழுது அவரது முட்டிக்கு அருகிலும் இருந்தனர் (பகவான் அவ்வாறு வளர்ந்தார்).
இதி ப்ராம்ஶுத்வம் தர்ஶயதி ஹரிவம்ஶே இவ்வாறு பகவான் (த்ரிவிக்ரமனாய்உயரஉயர வளர்ந்தது ஹரிவம்ஸத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
—————

155.ஓம் ஶுசயே நம:

ஸ்மரதாம் அவரை நினைப்பது

ஸ்துவதாம் துதிப்பது

அர்ச்சயதாம் ச வழிபடுவது

பாவனத்வாத் (இவை அனைத்தும் நம்மிடையே உள்ள பாவங்களையும், மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி) நம்மை தூய்மையாக்குகின்றன

ஶுசி: எனவே, பகவான் ‘ஶுசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை நினைத்தலும், துதித்தலும் மற்றும் வழிபடுதலும் நம்மிடையே உள்ள பாவங்களையும், மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி நம்மை தூய்மையாக்குகின்றன. எனவே, பகவான் ‘ஶுசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶுசி என்றால் தூய்மை.

ஆதிசங்கரரின் இந்த உரைக்கு நேரடியான தமிழாக்கம் போல உள்ளது திருப்பாவையின் இந்த வரிகள்: “தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!!!”

——–

156.ஓம் ஊர்ஜிதாய நம:

பலப்ரகர்ஶஶாத்வாத் எண்ணற்கரிய பலமுடையவராதலால்

ஊர்ஜித: பகவான் ‘ஊர்ஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நினைத்தற்கரிய பலம் பொருந்தியவர். எனவே, அவர் ‘ஊர்ஜித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

157.ஓம் அதீந்த்ராய நம:

அதீத்யேந்த்ரம் இந்த்ரனுக்கும் மேலான

ஸ்திதோ நிலையில் இருப்பவர்

ஞானைஸ்வர்யாதிபிஞானம், செல்வம் முதலிய குணங்களால்

ஸ்வபாவஸித்தைரிதி தன்னுடைய இயல்பான

அதீந்த்ரிய: பகவான் ‘அதீந்த்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய இயற்கையான ஞானம், செல்வம் முதலிய குணங்களால் இந்த்ரனுக்கு மேம்பட்டவர். எனவே, அவர் ‘அதீந்த்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

158.ஓம் ஸங்க்ரஹாய நம:

ஸர்வேஶாம் அனைத்து ஜீவராசிகளையும்

ப்ரதிஸம்ஹாராத் (ப்ரளய காலத்தில்) அழிப்பதால்

ஸங்க்ரஹ: பகவான் ‘ஸங்க்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ஸங்க்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

159.ஓம் ஸர்காய நம:

ஸ்ருஜ்யரூபதயா படைக்கப்பட்டுள்ள அனைத்தின்  வடிவாகவும்

ஸர்கஹேதுத்வாத்வா படைப்பின் காரணமாய் இருப்பதாலும்

ஸர்க: பகவான் ‘ஸர்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைப்பின் காரணமாயும், (படைக்கப்பட்டுள்ள) ஸ்ருஷ்டியின் வடிவாகவும் தானே இருப்பதால், பகவான் ‘ஸர்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

160.ஓம் த்ருதாத்மனே நம:

ஏகரூபேண ஒரே வடிவாய்

ஜன்மாதிரஹிததயா பிறப்பொன்றுமின்றி

த்ருத ஆத்மா யேன ஸ (ஆத்மாவைக்) கொண்டுள்ளபடியால்

த்ருதாத்மா பகவான் ‘த்ருதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பொன்றுமின்றி, என்றும் மாறாத ஒரே வடிவத்தைக் உடையவராதலால், பகவான் ‘த்ருதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்ருத என்றால் தரித்தல்; ஆத்மா – அவ்வாறு தரித்தவரைக் குறிக்கும். பகவான் என்றும் மாறாத வடிவை தரித்திருக்கிறார் என்பது இந்தத் திருநாமத்தின் பொருளாகும்.

—————-
161.ஓம் நியமாய நம:

ஸ்வேஶு அவரவரை

ஸ்வேஶ்வதிகாரேஶு அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்)

ப்ரஜா அனைவரையும்

நியமயதீதி நியமிக்கிறார்

நியம: எனவே, பகவான் ‘நியம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொருவரையும், அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்) நியமிப்பதால், பகவான் ‘நியம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–
162.ஓம் யமாய நம:

அந்தர்யச்சதீதி அனைவருக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால்

யம: எனவே, பகவான் ‘யம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால், பகவான் ‘யம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நியம: – வெளியிலிருந்து அவரவரை தத்தம் பதவியில் நியமிப்பதன் மூலம் ஆள்கிறார். யம: – அந்தர்யாமியாய் இருந்து அவர்களை உள்ளிருந்தும் ஆள்கிறார்.

————–

  1. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|

அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||

இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:

  1. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது:|
  1. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல:||

163.ஓம் வேத்யாய நம:

நி:ஶ்ரேயஸார்த்திபிர் மிகச்சிறந்த பலனான (மோக்ஷத்தை) விரும்புவர்களால்

வேதனார்ஹத்வாத் அறியப்படுபவர்

வேத்ய: எனவே, பகவான் ‘வேத்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த பலனான மோக்ஷத்தை விரும்புவர்களால் பகவான் அறியப்படுகிறார்.எனவே, அவர் ‘வேத்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நி:ஶ்ரேயஸ் – உயர்ந்த பலன்; ஆர்த்தி – விழைபவர்கள்; வேதனார் – அறியப்படுபவர்

———-

164.ஓம் வைத்யாய நம:

ஸர்வவித்யானாம் அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்)

வேதித்ருத்வாத் அறிபவராதலால்

வைத்ய: பகவான் ‘வைத்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்) அறிபவராதலால் பகவான் ‘வைத்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீக்ருஷ்ண அவதாரத்தில் ஸாந்தீபனி முனிவரிடத்தில் அறுபத்து நான்கே நாட்களுள் ஆயக்கலைகள் அனைத்தையும் பயின்றார் என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது.

————

165.ஓம் ஸதாயோகினே நம:

ஸதா எப்பொழுதும்

அவிர்பூத (தன் ஞானத்தால்) ப்ரகாசிக்கும்

ஸ்வரூபத்வாத் உருவமுடையவர்

ஸதாயோகி பகவான் ‘ஸதாயோகி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் ஞானத்தால் ப்ரகாசிக்கும் உருவமுடையவராதலால் பகவான் ‘ஸதாயோகி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. 166.ஓம் வீரக்னே நம:

தர்மத்ராணாய தர்மத்தைக் காப்பதற்காக

வீரான் அஸுரான் அஸுர வீரர்களை

ஹந்தீதி கொல்கிறார்

வீரஹா பகவான் ‘வீரஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்மத்தை காப்பதற்காக (தர்மத்தைக் குலைக்கும்) அஸுர வீரர்களை கொல்வதால் பகவான் ‘ வீரஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினாஶாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய (ஸ்ரீமத் பகவத்கீதை)

——–

167.ஓம் மாதவாய நம:

மாயா ‘மா’ என்றால்

வித்யாயாஅனைத்து வித்தைகளும் (கல்வியும்)

பதி(அனைத்து வித்தைகளின்) தலைவராதலால்

மாதவ: பகவான் ‘மாதவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மா’ என்ற அனைத்து வித்தைகளின் (கல்வி, கேள்விகளின்) தலைவராதலால் பகவான் ‘மாதவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 72-வது திருநாமத்தில் ‘மாதவ:’ என்பதற்கு “மஹாலக்ஷ்மியின் கணவர்”, “மது வித்யையின் மூலம் அறியப்படுபவர்”, “மௌனத்தாலும், த்யானத்தாலும், யோகத்தாலும் அறியப்படுபவர்” என்று மூன்று விளக்கங்களை அளித்திருந்தார் ஆச்சார்யர்.

மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈஶோ யதோ பவான் |

தஸ்மான்மாதவநாமாஸி தவ: ஸ்வாமீதி ஶப்தித: || (ஹரிவம்ஶம் 3.88.49)

ஹரிவம்த்தில் கூறப்பட்டுள்ளது:

பகவான் ஹரியை அறியும் வித்தைக்கு ‘மா’ என்று பெயர். தாங்கள் அதன் ஸ்வாமி; “தவ” என்ற சொல் ஸ்வாமியை (தலைவனைக்) குறிக்கும். எனவே, தாங்கள் மாதவ: என்ற திருநாமத்தால் அறியப்படுகிறீர்கள்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது.

——–

168.ஓம் மதவே நம:

யதா மது எவ்வாறு தேனானது

பராம் ப்ரீதிம் (தன் சுவையின் மூலம் அதை சுவைப்பவர்களுக்கு) சிறந்த இன்பத்தை

உத்பாதயதி தருகிறதோ

அயமபி ததேதி அவ்வாறே பகவானும் (தன் பக்தர்களுக்கு) இன்பமளிக்கிறார்

மது: எனவே, அவர் ‘மது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன் பக்தர்களுக்கு தேன் போன்று சுவையாய் இருப்பவர், இன்பமளிப்பவர். எனவே, அவர் ‘மது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

169ஓம் அதீந்த்ரியாய நம:
ஶப்தாதிரஹிதத்வாத் ஶப்தம் முதலிய (கேட்டல்தொடுதல்பார்த்தல்சுவைத்தல்முகர்தல் ஆகிய
இந்த்ரியானாம் ஐம்புலன்களுக்கும் 
அவிஶய இதி விஶயம் ஆகாதவர் (அவற்றிற்கு எட்டாதவர்
அதீந்த்ரிய: பகவான் அதீந்த்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான்ஶப்த (கேட்டல்), ஸ்பரிஸ (தொடுதல்), ரூப (உருவத்தைப் பார்த்தல்), ரஸ (சுவைத்தல்), கந்தம் (முகர்தல்ஆகிய ஐம்புலன்களுக்கும் (இந்த்ரியங்களுக்கும்எட்டாதவர்எனவேஅவர் அதீந்த்ரிய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
157-வது திருநாமம் அதீந்த்ர:’ (அதி இந்த்ரன்); இந்தத் திருநாமம் அதீந்த்ரிய: (அதி இந்த்ரியம்)
—————
170ஓம் மஹாமாயாய நம:
மாயாவினாமபி மாயாவிகளுக்குக் கூட 
மாயாகாரித்வாத் மாயையை விளைவிப்பவர் 
மஹாமாய: எனவேபகவான் மஹாமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மாயாவிகளுக்கெல்லாம் மேலான மாயாவிசாதாரண மனிதர்களிடையே மாயையை ஏற்படுத்தவல்ல மாயாவிகளாலும் பகவானின் மாயையை அறியவோமீறவோ இயலாதுஎனவேபகவான் மஹாமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மம மாயா துரத்யயா (ஸ்ரீமத் பகவத்கீதை 7.14)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: எனது தேவமாயை கடத்தற்கரியது.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
————–
171ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை 
உத்பத்தி படைத்து 
ஸ்திதி காத்து 
லயார்த்தம் அழிப்பது (ஆகிய முத்தொழில்களை
உத்யுக்தத்வாத் மிகுந்த உற்சாகத்துடன் செய்வதால் 
மஹோத்ஸாஹ: பகவான் மஹோத்ஸாஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல்காத்தல்அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறார்எனவேஅவர் மஹோத்ஸாஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————-
172ஓம் மஹாபலாய நம:
பலினாமபி பலசாலிகளைக் காட்டிலும் 
பலவத்வாத் மிக்க பலம் பொருந்தியவராதலால் 
மஹாபல: பகவான் மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
  1. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |

அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

  1. மஹாபுத்தி:, 174.மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
  2. அநிர்தேஶ்யவபு:, 178.ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

173.ஓம் மஹாபுத்தயே நம:

புத்திமதாமபி அனைத்து அறிவாளிகளைக் காட்டிலும்

புத்திமத்வாத் அறிவிற் சிறந்தவராக இருப்பதால்

மஹாபுத்தி: பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

174.ஓம் மஹாவீர்யாய நம:

மஹத் இந்த ஸம்ஸாரம் (நமது பிறப்பு)

உத்பத்திகாரணம் உருவாவதற்கு காரணமான

அவித்யாலக்ஷணம் அஞ்ஞானம்

வீர்யமஸ்யேதி அவரது சக்தி வடிவான ‘வீர்யம்’ ஆதலால்

மஹாவீர்ய: பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும். எனவே, பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, மஹத் (மூன்றாவது த) என்ற சொல்லிற்கு ஸம்ஸாரத்தில் நமக்கு ஏற்படும் பிறப்பு என்ற பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————-

175.ஓம் மஹாஶக்தயே நம:

மஹதி சிறந்த

ஶக்திஸாமர்த்யம் ‘ஶக்தி’ அல்லது திறமை உடையவர்

அஸ்யேதி எனவே

மஹாஶக்தி: பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் திறமைசாலியானவர். எனவே, பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு மஹத் என்ற சொல்லிற்கு சிறந்த என்ற பொருளும், ‘ஶக்தி’ என்ற சொல்லிற்கு ஸாமர்த்யம் (திறமை) என்று பொருளும் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————

176.ஓம் மஹாத்யுதயே நம:

மஹதி மிகச்சிறந்த

த்யுதிர் ஒளி

பாஹ்யாப்யந்தரா அகமும் புறமும்

ச அஸ்யேதி உடையவராதலால்

மஹாத்யுதி: பகவான் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்) ஒளிபொருந்தியவர். எனவே, அவர் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ஜ்யோதி: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.9)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா) தானே ஒளி வீசுவது

ஜ்யோதிஶாம் ஜ்யோதி:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா சூரியன், சந்திரன் போன்று) ஒளி வீசும் அனைத்திற்கும் ஒளியாய் இருப்பது.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

177.ஓம் அநிர்தேஶ்யவபுஶே நம:

இதம் ததிதி இவ்வாறானது, இத்தகையது

நிர்தேஶ்டும் தீர்மானிக்க

யன் ந ஶக்யதே இயலாத

பரஸ்மை மிக உயர்ந்த

ஸ்வஸம்வேத்யத்வாத் அறிந்து கொள்ள முடியாத

அநிர்தேஶ்யம் ‘அநிர்தேஶ்யம்’ என்று அழைப்பர்

வபுரஸ்யேதி (அத்தகைய) திருமேனியைக் கொண்டவராதலால்

அநிர்தேஶ்யவபு: பகவான் ‘அநிர்தேஶ்யவபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இத்தகையது என்று தீர்மானிக்க இயலாத, நம்மால் அறிந்துகொள்ள முடியாது உயர்ந்த வஸ்துவிற்கு ‘அநிர்தேஶ்யம்’ என்று பெயர். அத்தகைய, (நம்மால் அறிந்துகொள்ள இயலாத) திருமேனியைக் கொண்டவராதலால் பகவான் ‘அநிர்தேஶ்யவபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வபு: என்றால் திருமேனி (உடல்) என்று பொருள்.  உதாரணமாக, இரணியன் தனக்கு எவ்வாறெல்லாம் மரணம் வரக்கூடாது என்று சிந்தித்து பல வரங்களை கேட்டுப் பெற்றான். ஆயினும், அந்த வரங்களுக்கு பங்கம் வராதவண்ணம், நரம் கலந்த சிங்க உருவாக பகவான் அவதரித்து அவனை வதைத்தார். அவரது உருவம் (அதற்கு முன்பு வரை) சாதாரண புலன்களால் உணர்ந்து அறியாத ஒன்றாக இருந்தது.

———

178.ஓம் ஸ்ரீமதே நம:

ஐஸ்வர்யலக்ஷணா செல்வங்களின் வடிவான

ஸமக்ரா அனைத்து

ஸ்ரீர் திருமகள்

யஸ்ய எவரிடம் (வசிக்கிறாளோ)

அவர் (பகவான்)

ஸ்ரீமான் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள், பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள். எனவே, பகவான் ‘ஸ்ரீமான்’ (திருவுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 22வது திருநாமத்தில் மஹாலக்ஷ்மி பகவானின் வக்ஷஸ்தலத்தில் இருப்பதால் அவர் ‘ஸ்ரீமான்’ என்று விளக்கியிருந்தார் ஆச்சார்யர். இங்கு, அனைத்து செல்வங்களுடன் திருமகள் அவருடன் இருப்பதால் ‘ஸ்ரீமான்’. அங்கு வக்ஷஸ்தலத்தில் (திருமார்பில்) குடியிருத்தல் பிரதானமாய் கூறப்பட்டது. இங்கோ, செல்வங்களுடன் உறைதல் பிரதானமாய் கூறப்பட்டுள்ளது.

————

179.ஓம் அமேயாத்மனே நம:

ஸர்வைஅனைத்து

ப்ராணிபிர் ஜீவராசிகளாலும்

அமேயா அளவிடமுடியாத

புத்திராத்மா ஞானம் (புத்தி), மற்றும் தன்மை (ஆத்மா)

யஸ்ய ஸ எவரிடம் உள்ளதோ (பகவானிடம் உள்ளதால்)

அமேயாத்மா அவர் (பகவான்) ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஞானத்தையும், தன்மையையும் யாராலும் அளவிட முடியாது. எனவே, அவர் ‘அமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானின் ஞானமும் தன்மையும் அனைத்து ஜீவராசிகளைக்காட்டிலும் உயர்ந்ததாக, அளவிட முடியாததாக இருப்பதாலும் அவர் ‘அமேயாத்மா’.

———–

180.ஓம் மஹாத்ரித்ருஶே நம:

மஹாந்தம் மிகப் பெரிய அத்ரிம் கிரிம் மலைகளை (‘அத்ரி’ என்றால் மலை என்று பொருள்) மந்தரம் மந்தர மலை கோவர்த்தனம் ச கோவர்த்தன மலை அம்ருதமதனே பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுதும் கோரக்ஷணே ச ஆநிரைகளைக் காத்த பொழுதும் த்ருத்வான் இதி தாங்கிய படியால் மஹாத்ரித்ருக் பகவான் ‘மஹாத்ரித்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் ஶாந்தோயம் இங்கு ‘மஹாத்ருத்ருஶ்’ என்ற சொல் ‘மஹாத்ரித்ருக்’ என்று மருவியுள்ளது. பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுது மந்தர மலை, ஆநிரைகளைக் காத்த பொழுது கோவர்தனம் ஆகிய மிகப்பெரிய மலைகளைத் தாங்கியவரானதால் பகவான் ‘மஹாத்ரித்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மந்தர மலையைத் தாங்கியது: துர்வாசரின் சாபத்தால் முதுமையை அடைந்த தேவர்கள், பகவானின் ஆணைப்படி அஸுரர்களுடன் சேர்ந்து, மந்தர மலையை தூணாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது, மந்தர மலை பாற்கடலுக்குள் அழுந்தியது. தேவர்களின் வேண்டுதலை ஏற்ற பகவான் லக்ஷம் யோஜனை ஓடுள்ள ஒரு கூர்மமாக (ஆமையாக) அவதரித்து மந்தர மலையைத் தாங்கினார். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம் 8-வது ஸ்கந்தம் 7வது அத்யாயத்திலும், ஸ்ரீவிஶ்ணு புராணம் 1வது அம்சம் 9வது அத்யாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆநிரைக் காத்தது: பகவான், இந்திரனின் அகந்தையை அடக்க, ஆயர்கள் அவனுக்கு செய்யும் வேள்வியைத் தடுத்து நிறுத்தினார். கோபம் கொண்ட இந்திரன் ப்ருந்தாவனத்தின் மீது 7 நாட்கள் விடாமல் மழை பொழிந்தான். இதனால் துன்பமடைந்த ஆயர்களையும், ஆநிரைகளையும் காக்க பகவான் கோவர்தன மலையை தன் சுண்டு விரலால் 7 நாட்கள் தாங்கினார். தன் கர்வம் தொலைந்த இந்திரன் பகவானைப் பணிந்து, அவரால் மன்னிக்கப்பட்டு மீண்டும் ஸ்வர்கத்தை அடைந்தான். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம் 10-வது ஸ்கந்தம் 24 மற்றும் 25வது அத்யாயத்திலும், ஸ்ரீவிஶ்ணு புராணம் 5வது அம்சம் 11, 12வது அத்யாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

————–

  1. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|

அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி:

இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. மஹேஶ்வாஸ:, 182. மஹீபர்த்தா, 183. ஸ்ரீநிவாஸ:, 184. ஸதாம்கதி: |
  2. அநிருத்த:, 186. ஸுரானந்த:, 187. கோவிந்த:, 188. கோவிதாம்பதி:  ||

—–

  1. ஓம் மஹேஶ்வாஸாய நம:

மஹான் மிகச்சிறந்த இஶ்வாஸ வில்லை இஶுக்ஷேபோ அம்புகளை எய்யக்கூடிய யஸ்ய ஸ உள்ளவர் (ஆதலால்) மஹேஶ்வாஸ: பகவான் ‘மஹேஶ்வாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மழைநீர்ப் போல அம்புகளை வர்ஶிக்கக்கூடிய ‘ஸார்ங்கம்’ என்னும் மிகச்சிறந்த வில்லை உடையவராதலால் அவர் ‘மஹேஶ்வாஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் மஹீபர்த்ரே நம:

ஏகார்ணவ ப்ரளய ஜலத்தில் (ஸமுத்ரத்தினுள்) ஆப்லுதாம் அழுந்தி வருந்தியிருந்த தேவீம் மஹீம் ச பூமாதேவியை பபாரேதி (அந்த ஸமுத்ர ஜலத்திலிருந்து) வெளிக்கொணர்ந்து, தாங்கியபடியால் மஹீபர்த்தா பகவான் ‘மஹீபர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் ஸமுத்ர ஜலத்தினுள் அழுந்தி, வருந்திக்கொண்டிருந்த பூமாதேவியை அதனின்று வெளிக்கொணர்ந்து, தாங்கிய படியால் பகவான் ‘மஹீபர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூமாதேவியைக் காத்த வரலாறு: ஹிரண்யாக்ஷன் என்னும் அஸுரன் பகவானிடம் பகை கொண்டு, அவரது மனைவியான பூமாதேவியை ப்ரளய ஜலத்தினுள் வைத்தான். வராஹ அவதாரம் எடுத்த பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொன்று, பூமாதேவியை ப்ரளய கால ஸமுத்ர ஜலத்திலிருந்து மீட்டார். திருவிடந்தை போன்ற தலங்களில், பூமாதேவியை தனது மடியில் தாங்கிய வராஹ ஸ்வாமியை நாம் தரிசிக்கலாம்.

நாச்சியார் திருமொழி: பாசிதூர்ந்து கிடந்த பார்மகளை பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர்…

———-

183. ஸ்ரீநிவாஸ

யஸ்ய எவருடைய

வக்ஷஸ்ய திருமார்பில்

அநபாயினி அவரைவிட்டு என்றும் அகலாது

ஸ்ரீர்வஸதி மஹாலக்ஷ்மி வசிக்கிறாளோ

ஸ்ரீநிவாஸ: (அவர்) பகவான் ‘ஸ்ரீநிவாசன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நித்யைவேஶா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினி (ஸ்ரீவிஶ்ணு புராணம்)மஹாலக்ஷ்மித் தாயார் பகவானின் மார்பை விட்டு என்றும் அகலாது வசிக்கின்றபடியால்அவர் ஸ்ரீநிவாசன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறை மார்பா (திருவாய்மொழி)

———–

184.ஓம் ஸதாம்கதயே நம:

ஸதாம் வைதிகானாம் ‘ஸத்துக்கள்’ – வேதத்தையும், அதில் கூறியுள்ள தர்மங்களையும் பின்பற்றுபவர்கள்

ஸாதூனாம் அத்தகைய ஸாதுக்களின்

புருஶார்த்தசாதன (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நால்வகை நலன்களையும்

ஹேதுவழங்குபவராய் இருப்பதால்

ஸதாம்கதி: பகவான் ‘ஸதாம்கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேதத்தில் நம்பிக்கைக் கொண்டு, அதன் வழிநடக்கும் ஸாதுக்களின் அனைத்து வகை நலன்களையும் வழங்குபவராய் இருப்பதால் பகவான் ‘ஸதாம்கதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹேது என்றால் காரணம், உதவி செய்பவர் என்று பொருள். சாதுக்களுக்கு அவரே கதி. எனவே, அவர்களுக்கு அனைத்தையும் பகவானே வழங்குகிறார்.

———-

185.ஓம் அநிருத்தாய நம:

ந கேனாபி ஒருபொழுதும் இயலாது

ப்ராதுர்பாவேஶு (அவர்) தோன்றுமிடத்து

நிருத்த இதி தடுத்தல்

அநிருத்த: எனவே, பகவான் ‘அநிருத்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தோன்றுமிடத்து அவரை தடுக்க யாராலும் இயலாது. எனவே, அவர் ‘அநிருத்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை மட்டுமல்ல, அவரது ஸங்கல்பத்தையும் எவராலும் தடுக்க இயலாது.

————

186.ஓம் ஸுரானந்தாய நம:

ஸுர தேவர்களுக்கு

ஆனந்தயதீதி ஆனந்தத்தை அளிப்பதால்

ஸுரானந்த: பகவான் ‘ஸுரானந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதால் பகவான் ‘ஸுரானந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது அனைத்து அவதாரங்களுமே தேவர்களின் துயர் துடைக்க, அவர்களது வேண்டுதலின்படியே நிகழ்கின்றன.

———– 

187.ஓம் கோவிந்தாய நம:

நஶ்டாம்வை தரணீம் பூர்வமவிந்தத்யத்குஹாகதாம் |

கோவிந்த இதி தேனாஹம் தேவைர்வாக்பிரபிஶ்டுத:’ || 

(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.70)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: நான் முற்காலத்தில் பாதாளத்தில் அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை மீட்டு வந்தேன். எனவே, தேவர்கள் தங்கள் வாக்கால் என்னை ‘கோவிந்தா’ என்றழைத்து துதித்தனர்.

இதி மோக்ஷதர்மவசனாத் இந்த (மஹாபாரத) மோக்ஷ தர்மக் கூற்றின்படி

கோவிந்த: பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 ப்ரளய காலத்தில் பாதாளத்தில் அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை அதனின்று மீட்டுத் தூக்கி எடுத்து வந்ததால் பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ‘கோ’ என்ற சொல்லிற்கு பூமி என்று பொருள்.

 அஹம் கிலேந்திரோ தேவானாம் த்வம் க்வாமிந்த்ரதாம் கத: |

கோவிந்த இதி லோகாஸ்த்வாம் ஸ்தோஶ்யந்தி புவி ஶாஶ்வதம்’ || (ஹரிவம்ஶம் 2.19.45)

ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:

நான் தேவர்களின் இந்திரன். தாங்கள் பசுக்களுக்கு  இந்திரனாக உள்ளீர்கள். எனவே, பூமியில் அனைவரும் தங்களை ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் தங்களைத் துதிப்பார்கள்.

இதி இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி

கோவிந்த: பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 எவ்வாறு, இந்திரன் தேவர்களின் தலைவனோ, அவ்வாறே பகவான் (தனது க்ருஷ்ணாவதாரத்தில்) ஆநிரைகளுக்குத் தலைவராவார். எனவே, பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ‘கோ’ என்ற சொல்லிற்கு ஆநிரை என்று பொருள்.

கௌரேஶா து யதோ வாணி தாம் ச விந்தயதே பவான் |

கோவிந்தஸ்து ததோ தேவ முனிபிகத்யதே பவான்’ || (ஹரிவம்ஶம் 3.88.50)

ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது:

‘கௌ’ என்ற சொல் வாக்கைக் (வாணி) குறிக்கும். தாங்கள் அதில் வன்மை பொருந்தியவர். எனவே, ஓ பகவானே!!! முனிவர்கள் தங்களை ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

இதி ச ஹரிவம்ஶே இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி

கோவிந்த: பகவான் ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் சிறந்த வாக்குவன்மை பொருந்தியவர். எனவே, முனிவர்கள் அவரை ‘கோவிந்தன்’ என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

இங்கு, ‘கோ’ என்ற சொல்லிற்கு வாக்கு, ஒலி ஆகிய பொருள்.

———-

188.ஓம் கோவிதாம் பதயே நம:

கௌர்வாணி ‘கௌ’ என்றால் சொல் (இங்கு வேதம் என்று பொருள்)

தாம் விந்ததீதி கோவிதவேதத்தை நன்கு கற்றறிந்தவர்களை ‘கோவித:’ என்று அழைப்பர்

தேஶாம் அவர்களின்

பதிர்விஶேஶேணேதி (வேதமறிந்தோரை வழி நடத்தும்) தலைவரானபடியால்

கோவிதாம்பதி: பகவான் ‘கோவிதாம்பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 வேதமறிந்தோரை ‘கோவித:’ என்று கூறுவர். அத்தகையோரை வழிநடத்தும் தலைவராக இருப்பதால், பகவான் ‘கோவிதாம்பதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, ‘கோ’ என்ற சொல்லிற்கு வாக்கு, ஒலி, ஆகிய பொருள். அதிலும், குறிப்பாக (மிகச் சிறந்த வாக்கான) வேதங்கள் என்ற பொருளில் உரை அளித்துள்ளார்.

———–

    1. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
      1. மரீசி:, 190.தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
      2. ஹிரண்யநாப:, 195.ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

       

      1. தேஜஸ்வினாமபி தேஜஸ்வாத் மரீசி: அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் ‘மரீசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

       

      தேஜஸ்வினாமபி ஒளிபொருந்தியவற்றுள்

      தேஜஸ்வாத் (அதனுள் இருக்கும்) ஒளியாய் இருப்பதால்

      மரீசி: பகவான் ‘மரீசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

      அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் ‘மரீசி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

      சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை பகவானிடமிருந்து ஒளியைப் பெற்று, தாங்கள் ஒளிவிடுகின்றன. பகவான் ஒருவரே, ஸ்வயம் ப்ரகாசமாய், இயற்கையான ஒளியோடு இருக்கிறார். 

      ‘தேஜஸ்தேஜஸ்வினாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.36)

      ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

      இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

      ————-189.ஓம் மரீசயே நம:

    2. -190.ஓம் தமனாய நம:
    3. ஸ்வாதிகாராத் தங்களுடைய அதிகாரத்தினால்ப்ரமாத்யதி விளைந்த செருக்கினால்ப்ரஜா திரியும் மக்களை

      தமயிதும் அழிப்பதை

      ஶீலமஸ்ய தன்னுடைய இயற்கையாகக் கொண்டிருப்பதால்

      வைவஸ்வதாதிரூபேணேதி (விவஸ்வான் என்னும் சூரியனின் புத்திரனான) யமன் முதலிய வடிவத்தில்

      தமன: பகவான் ‘தமன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

      தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘தமன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

      எப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்தவராய் இருப்பினும் பகவானின் காலம் (காலன்) என்னும் சக்தியிடமிருந்து தப்ப இயலாது.

      189.ஓம் மரீசயே நம:

    1. 191.ஓம் ஹம்ஸாய நம:
  1. அஹம் ஸ இதி ‘நானே அவர்’ (நானே ப்ரஹ்மம்) என்று

    தாதாத்ம்யபாவினதன்னுடைய ஆத்ம பாவனையில் இருப்பவரின்

    ஸம்ஸாரபயம் ஹந்தீதி பிறவி பயத்தை போக்குவதால்

    ஹம்ஸ: பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (அஹம்ஸ: என்னும் இடத்தில்) ஹம்ஸ: என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

    ஹந்தி கச்சதி ‘ஹந்தி’ என்றால் செல்வது என்று பொருள்

    ஸர்வஶரீரேஶ்விதி வா அனைத்து உடல்களுக்குள்ளும்

    ஹம்ஸ: பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஹம் ஸஶுசிஶத் (கடோபநிஷத் 2.5.2)

    கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: ஆகாயத்தில் சூரியனாக இருக்கிறது

    இதி மந்த்ரவர்ணாத் | இந்த கடோபநிஷத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.

    ——————-

    ————–192.ஓம் ஸுபர்ணாய நம:

    ஶோபன அழகிய

    தர்மாதர்ம ரூப தர்மம், அதர்மம் வடிவான

    பர்ணத்வாத் இறக்கைகளை உடையவர்

    ஸுபர்ண: பகவான் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

     பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

     த்வா ஸுபர்ணா (முண்டகோபநித் 3.1.1)

    முண்டகோபநித்தில் கூறப்பட்டுள்ளது: இரண்டு பறவைகள் (ஆத்மா, பரமாத்மா ஆகிய இந்த இரண்டு பறவைகளும் இந்த உடல் என்னும் மரத்தினுள் இருக்கின்றன).

    இதி மந்த்ரவர்ணாத் | இந்த முண்டகோபநிஶத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.

    ஶோபனம் அழகிய

    பர்ணம் இறக்கைகள்

    யஸ்யேதி வா உடையவர் எவரோ அவர்

    ஸுபர்ண: ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    இங்கு பொதுவாக அழகிய இறக்கைகளை உடையவர் என்று கூறியிருந்தாலும், ஆதிசங்கரர் தனது ஸ்ரீமத்பகவத்கீதையின் மேற்கோளினால், பகவான் பறவைகளும் கருடனாய் இருப்பதைக் குறிக்கிறார்.

    ஸூபர்ணபததாமஸ்மி‘ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

    ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பறவைகளில் கருடன்

    இதி ஈஶ்வரவசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

—————

  1. ம்.புஜேன தோள்களினால் (கைகளினால்)கச்சதாம் செல்லும் ப்ராணிகளில் (அதாவது ஊர்ந்து செல்லும் ப்ராணியான பாம்புகளில்)உத்தமோ சிறந்தவராக இருப்பதால்

    புஜகோத்தம: பகவான் ‘புஜகோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஊர்ந்து செல்லும் ப்ராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேஷன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘புஜகோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பாம்புகள் கால்களின்றி தமது உடலால் ஊர்ந்து செல்வதால் அவை ‘புஜகம்’ என்று அழைக்கப்படுகின்றன. ஸ்ரீமத் பகவத்கீதை 10-வது அத்யாயத்தில் பகவான் கூறியுள்ளபடி பகவான் ஒருதலை பாம்புகளில் வாஸுகியாகவும், பலதலைகள் கொண்ட பாம்புகளில் (நாகர்களில்) அநந்தன் என்றழைக்கப்படும் ஆதிசேஷனாகவும் உள்ளார்.

    1. 194.ஓம் ஹிரண்யநாபாய நம:

    ஹிரண்யமிவ பொன்னைப்போன்று

    கல்யாணி அழகிய

    நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால்

    ஹிரண்யநாப: பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஹிதரமணீய நன்மையளிக்கவல்லதும் (ஹிதம்), அழகியதுமான (ரமணீய)

    நாபித்வாத்வா தொப்புளை உடையவராதலால்

    ஹிரண்யநாப: பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அல்லது, பகவானின் தொப்புள் அழகாக இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    அந்த தொப்புளிலிருந்தே நான்முகக் கடவுளான ப்ரஹ்மா தோன்றுகிறார். அதிலிருந்தே, அனைத்து படைப்பும் உருவாகிறது. படைப்பில்லையேல் நாம் நற்கதி அடைய இயலாது. எனவே, பகவானின் தொப்புள், நமக்கு மிகப்பெரிய நன்மையை செய்கிறது.

    1. 195.ஓம் ஸுதபஸே நம:

    வதரிகாஶ்ரமே பத்ரிகாச்ரமத்தில்

    நரநாராயணரூபேண நரன் மற்றும் நாராயணன் வடிவத்தில்

    ஶோபனம் அழகிய, மங்களகரமான

    தபஸ்சரதீதி தவம் புரிவதால்

    ஸுதபா: பகவான் ‘ஸுதபா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான் பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் ‘ஸுதபா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பத்ரிகாஸ்ரமத்தில் இன்று நாம் காணும் மூர்த்தி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாளால் ஸ்தாபிக்கபட்டதாகும். இன்றும், அங்கு கேரள நம்பூதிரி வகுப்பினரே தலைமை அர்ச்சகராக உள்ளனர்.

    மனஸஸ்சேந்த்ரியாணாம் ச ஹ்யைகாக்ரயம் பரமம் தப:’

    மனம் மற்றும் புலன்களின் அடக்கமே சிறந்த தவமாகும்.

    இதி ஸ்ம்ருதேஇவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது.

     

    ——————-

    196.ஓம் பத்மநாபாய நம:

    பத்மமிவ தாமரையைப் போன்று

    ஸுவர்துலா அழகிய வட்டவடிவமான

    நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால்

    பத்மநாப: பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

    ஹ்ருத்பத்மஸ்ய ஒவ்வொருவருடைய இதய கமலத்தின்

    நாபௌ மத்யே நாபியில், அதாவது அந்தத் தாமரையின் நடுவில்

    ப்ரகாஶனத்வா பகவான் ஒளியோடு வீற்றிருப்பதால் பத்மநாப: பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

    ————–197.ஓம் ப்ரஜாபதயே நம:

    ப்ராஜானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும்

    பதிபிதா பதியாக, அதாவது தந்தையாக இருப்பதால்

    ப்ரஜாபதி: பகவான் ‘ப்ரஜாபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் ‘ப்ரஜாபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    இந்த உலகைப் படைப்பவர் நான்முகக்கடவுளான ப்ரஹ்மா. அவரே, அனைவருக்கும் தந்தை. பகவானோ, அந்த நான்முகனுக்கும் தந்தை. முன்பு 69-வது திருநாமத்தில், அவர் அரசன், நாம் அனைவரும் அவரது ப்ரஜைகள் என்று ஆச்சார்யர் உரை தந்திருந்தார்.

  2. 21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

    ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||

    இந்த இருபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

    1. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
    2. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

    இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக).

    1. 190.ஓம் தமனாய நம:

    ஸ்வாதிகாராத் ப்ரமாத்யதி ப்ரஜா தமயிதும் ஶீலமஸ்ய வைவஸ்வதாதிரூபேணேதி தமன: 

    தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘தமன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 191.ஓம் ஹம்ஸாய நம:

    அஹம் ஸ இதி தாதாத்ம்யபாவினஸம்ஸாரபயம் ஹந்தீதி ஹம்ஸ: 

    நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஹந்தி கச்சதி ஸர்வஶரீரேஶ்விதி வா ஹம்ஸ:

    அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் ‘ஹம்ஸ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 192.ஓம் ஸுபர்ணாய நம:

    ஶோபன தர்மாதர்ம ரூப பர்ணத்வாத் ஸுபர்ண:

    பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஶோபனம் பர்ணம் யஸ்யேதி வா ஸுபர்ண:

    அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் ‘ஸுபர்ண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 193.ஓம் புஜகோத்தமாய நம:

    புஜேன கச்சதாம் உத்தமோ புஜகோத்தம:

    ஊர்ந்து செல்லும் பிராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேடன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘புஜகோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 194.ஓம் ஹிரண்யநாபாய நம:

    ஹிரண்யமிவ கல்யாணி நாபிரஸ்யேதி ஹிரண்யநாப:

    பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    ஹிதரமணீய நாபித்வாத்வா ஹிரண்யநாப:

    அல்லது, பகவானின் தொப்புள் அழகாக இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் ‘ஹிரண்யநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 195.ஓம் ஸுதபஸே நம:

    வதரிகாஶ்ரமே நரநாராயணரூபேண ஶோபனம் தபஸ்சரதீதி ஸுதபா:

    நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான் பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் ‘ஸுதபா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 196.ஓம் பத்மநாபாய நம:

    பத்மமிவ ஸுவர்துலா நாபிரஸ்யேதி பத்மநாப: 

    தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

    ஹ்ருத்பத்மஸ்ய நாபௌ மத்யே ப்ரகாஶனத்வா பத்மநாப: 

    பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    1. 197.ஓம் ப்ரஜாபதயே நம:

    ப்ராஜானாம் பதிபிதா ப்ரஜாபதி:

    பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் ‘ப்ரஜாபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  3. ——-

 

22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205.துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||

 

  1. 198.ஓம் அம்ருத்யவே நம:

ம்ருத்யுர் ‘ம்ருத்யு’ என்றால்

வினாஶஸ் மரணம், அல்லது அழிவு

தத்தேதுர் வாஸ்ய (தத் ஹேதுர் வாஸ்ய) அந்த மரணம் அல்லது அழிவின் காரணமும் கூட

ந வித்யதே பகவானைத் தீண்டுவதில்லை

இதி அம்ருத்யு: எனவே, பகவான் ‘அம்ருத்யு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மரணம் மட்டுமல்ல, அதன் காரணம் கூட பகவானைத் தீண்டுவது இல்லை. எனவே, அவர் ‘அம்ருத்யு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. 199.ஓம் ஸர்வத்ருஶே நம:

ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகள்

க்ருதாக்ருதம் செய்பவை, மற்றும் செய்யாதவை

ஸர்வம் ஆகிய அனைத்தையும்

பஶ்யதி உணர்கிறார் (அறிகிறார்)

ஸ்வாபாவிகேன தனது இயற்கையான

போதேனேதி ஞானத்தால்

ஸர்வத்ருக் எனவே, பகவான் ‘ஸர்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகள் செய்பவை, செய்யாதவை ஆகிய அனைத்தையும் தன் இயற்கையான ஞானத்தால் அறிகிறார். எனவே, அவர் ‘ஸர்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செய்பவை – செய்யத் தகுந்ததை செய்தோமா, செய்யத் தகாததைச் செய்தோமா

செய்யாதவை – செய்யத் தகுந்ததை மறந்தோமா, செய்யத் தகாததை செய்யாதிருந்தோமா

——————-

200.ஓம் ஸிம்ஹாய நம:

ஹின்ஸதீதி அழிப்பதால்

ஸிம்ஹ: பகவான் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், அனைத்தையும் தக்க காலத்தில், குறிப்பாக பாவிகளையும், அதர்மிகளையும் அழிக்கிறார். எனவே, அவர் ‘ஸிம்ஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹிம்ஸ: என்னும் இடத்தில்) ஸிம்ஹ: என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் (ப்ருஷோராதி சூத்திரம்) மூலம் கிடைக்கிறது.

இதி நாம்னாம் த்விதீயம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஸிம்ஹ: என்னும் இந்த திருநாமம் வரையில்) இருநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

One Response to “ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 4-திருநாமங்கள்–101– -200- வரை –”

  1. ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –22– | Thiruvonum's Weblog Says:

    […] பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் (ப்ருஷோதராதி சூத்திரம்) மூலம் […]

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading