ஸ்ரீ மனு தர்ம சாஸ்திரம்(மூலமும் உரையும் )- அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா அவர்கள்-முதல் மூன்று அத்யாயங்கள்–

உரையாசிரியர் :பிரம்ம பீடம்) இளைய பீடாதிபதி அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா

தர்ம சாஸ்த்ரங்களுக்கு ஸ்ம்ருதியென்று பெயர். ” கலெள பாராசரம் ஸ்ம்ருதம்”-என்கிறபடியே கலியுகத்தில் பராசரஸ்மிருதிக்குச் சிறப்பு சொல்லப்பட்டிருந்தாலும்
வேதத்தில் (2-2) யத் வை கிஞ்ச மநுரவதத் தத்பேஜஷம் என்று மநுசொன்னதெல்லாம் மருந்தென்று புகழப்பட்டிருப்பதாலும், வேதே பௌருஷம் ஸூக்தம் புராணேஷச வைஷ்ணவம், பாரதே பகவத்கீதா தர்மசாஸ்த்ரேஷு மாநவம் என்று தர்ம சாஸ்த்ரங்களுக்குள்ளே மநுஸ்மிருதி சிறந்ததென்று கூறப்பட்டிருப்பதாலும்
மநுஸ்மிருதியின் ப்ராசஸ்த்யம் ஸர்வஸம்மதமானது . மேலே உதாஹரித்த யத்
வை கிஞ்ச மநுரவதத்
என்கிற ச்ருதியில் மநும் என்பதற்கு மநுமஹர்ஷி அர்த்தமன்றென்று சிலர் சொல்லுவதுண்டாகிலும் (2-1-1 .) *ஸ்ம்ருத்யதிகரண ஸ்ரீ பாஷ்யத்தில்
மநு மகர்ஷிபரமான அர்த்தமேயுள்ளது.
முந்தின பாஷ்யத்திலும் அப்படியேதானுள்ளது. சத தூஷணியிலும் (64ல்) உள்ளது. ஆக, மநுஸ்ம்ருதியின் ஏற்றம் வேதமேறினது-

அத்தியாயம் – 1

மனுமேகாக்ர மாஸீநமபிகம்ய மஹர்ஷய: |
ப்ரதிபூஜ்ய யதாந்யாய மிதம் வசநமப்ருவந்
-1-

ஏகாக்ர சித்தத்தோடு அமர்ந்திருந்த மனுவை அணுகிய மஹரிஷிகள் அவரை முறைப்படி வணங்கி இவ்வாறாகச் சொன்னார்கள்.-மஹரிஷிகள் நேராகப் போனோம், கேட்டோம் என்றிராமல், மனுவானவர் நிச்சலனமாக அமர்ந்திருக்கும் தருணத் துக்காகக் காத்திருந்து, தக்க தருணம் வாய்த்ததும் அவரை அணுகி வணங்கி, தங்கள் சந்தேகங்களைக் கேட்கத்தொடங்கினார்கள்.

பகவந் ஸர்வ வர்ணாநாம் யதாவதநுபூர்வஷ: |
அந்தரப்ரபவாணாம் ச தர்மாந் நோ வத்துமர்ஹஸி 2

பகவானே, நான்கு வர்ணத்தவரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப் பற்றியும் இவர்களுக்குள் கலப்பு சம்பந்தங்களால் ஏற்பட்ட வர்ணத்தாருடைய தர்மங்களைப் பற்றியும் எமக்கு எடுத்துரைப்பீராக.-உலகியல் வாழ்வின் முதல் தேவைகளுக்காக சூத்திரர்களும், அடுத்த தேவைக்காக வைசியர்களும், இவர்களின் தேவைக்காக க்ஷத்ரியர்களும், இவர்களோடு உலக மாந்தர் அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக பிராம்மணர்களும் படைக்கபட்டனர்.-இந்த நான்கு வகையானவர்களே நான்கு வர்ணத்தார் என்று கூறப்படுகிறார்கள். இந்த அடிப்படையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த நான்கு வர்ணத்தாருமே இறந்த பிறகு மேலான உலகங்களை அடைய முடியும். இதில் எந்தப் பாகுபாடும் கிடையாது. அவரவர் தங்களுக்குரிய தொழில்களைச் செய்தபடி அவரவர்க்கு விதிக்கப்பட்ட தர்மங்களைத் தெரிந்து கொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், அப்படி வாழ்ந்தவன் பிராம்மணனாயினும் க்ஷத்ரியனாயினும் வைசியனாயினும்
சூத்திரனாயினும் நல்லுலகத்தை அடைவான்.-இகத்துக்கும் பரத்துக்கும் அவசியமான இந்த
தர்மங்களைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும் என்று இந்த லோகத்தில் மகரிஷிகள் மனுவிடம் கேட்கிறார்கள். இந்த நான்கு வகையினரின் தர்மங்கனைப் பற்றியும், இந்த நான்கு வகையினரும் கலப்புத் திருமணங்கள் செய்து கொண்டதால் ஏற்பட்ட பலப்பல
வகையினரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப்பற்றியும் எடுத்துரைக்க வேண்டுகிறார்கள்.

த்வமேகோ ஹ்யஸ்ய சர்வஸ்ய விதானஸ்ய ஸ்வயம் புவ:
அசிந்த்யஸ்யா அப்ரமேயஸ்ய கார்யதத்வார்த்தவித் ப்ரபோ 3

பிரபுவே, வேதங்களில் கூறப்பட்ட அனைத்தையும், பிரம்ம சொரூபத்தையும், தத்துவங்களையும் அறிந்தவர் தாங்கள் ஒருவரே. தாங்களே நாங்கள் கேட்ட விஷயத்தை தெளிவுபடுத்தக் கூடியவர்.

ஸ தை: ப்ருஷ்டஸ் ததா ஸம்யகமிதெளஜா மஹாத்ம பி: | ப்ரத்யுவாசா ஆர்ச்ய தாந் சர்வாந் மஹர்ஹிந்ஸ்ரூயதாமிதி || 4
மஹான்களான மஹரிஷிகள் இவ்வாறு வினவ, அளப்பரிய ஞானம் கொண்டவரான மனுபகவான் அந்த மகரிஷிகளைத் தக்கபடி உபசரித்து, “அவ்வாறே ஆகட்டும், கூறுகிறேன், கேளுங்கள்” என்றருளினார்.

ஆஸீதிதம் தமோயூதமப்ரஞ்ஞாதமலக்ஷணம் | அப்ரதர்க்ய மவிஞேயம் ப்ரசுப்தமிவ ஸர்வத: || 5
இவ்வுலகம் இருட்டாகவும், பார்வைக்குப் புலப்படாததாகவும், ஊகிக்க முடியாததாகவும், உருவமற்றதாகவும்,ஒலியற்றதாகவும்தூங்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது.

ததஸ் ஸ்வயம்பூர் பகவாளவ்யக்தோ வ்யஞ்ஜயந் நிதம் | மஹாபூதாதிவ்ருத்தௌஜா: ப்ராதுராஸீத் தமோநுத: I-6-

ஐஸ்வர்யங்களோடு கூடியவரும், யோகாப்யாசத்தால் அறியக் கூடியவரும், இடையூறு ஏதுமின்றி சிருஷ்டிக்கக் கூடியவருமான பரமாத்மா பஞ்சபூதங்களைப் பிரகாசிக்கச் செய்தபடி தாமாக வெளிப்பட்டார்.

யோ அஸாவதீந்த்ரியக்ராஹ்ய: சூமோ அவ்யக்த சநாதன: 11
ஸர்வபூதமயோ அசிந்த்ய: ஸ ஏவ ஸ்வயமுத்பபெள || 7

வெளிப்புலன்களால் அறிய முடியாதவரும், பரிசுத்தமான மனத்தினால் அறியத் தக்கவரும், அருவமானவரும், நித்யமானவரும், சகல பூதங்களிலும் இருப்பவரும், இவர் இப்படிப்பட்டவர் என்று ஊகிக்க முடியாதவருமான பரமாத்மா தாமாகவே சிருஷ்டி புரிவதற்காக வெளிப்பட்டார்.

ஸோ அபித்யாய ஷரீராத் ஸ்வாத் சிஸ்ருசுர் விவிதா: ப்ரஜா: |
அப ஏவ ஸஸர்ஜாஆதெள தாசு பீஜமவாஅஸ்ருஜத் |8

அப்படி வெளிப்பட்ட அவர், சிருஷ்டி செய்ய மனங் கொண்டவராக, முதலில் தண்ணீரை சிருஷ்டி செய்தார். அந்த நீரில் தம் சக்தியின் ரூபமான ஒரு விதையை வைத்தார்.

ததண்டமபவத்தைமம் சஹஸ்ராம்சுஸமப்ரம்
தஸ்மிந் ஐஞ்ஜேஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வலோக பிதாமஹ:1-9

அந்த விதை சூரிய ஒளிக்கு நிகரான ஒளியோடும், தங்கமென தகதகத்த நிறத்தோடும் ஒரு அண்டமாக அதாவது ஒரு முட்டை வடிவமாக ஆனது. அந்த அண்டத்தில் பரமாத்மாவானவர் தாமே பிரம்மாவாக ஜன்மமெடுத்தார்.

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரசூநவ: I தாயதஸ்யாஅய நம் பூர்வம் தேந நாராயண: ஸ்ம்ருத: 10

தண்ணீருக்கு நாரம் என்றும் பெயருண்டு.ஒரு செயலில் ஈடுபட்டு, தண்ணீரில் இயங்கத் தொடங்கியதால் பரமாத்மாவான அவர் நாராயணன் என்ற நாமம் பெற்றார்.

யத்தத்காரணமவ்யக்தம் நித்யம் சதசதாத்மகம் |
தத்விஸ்ருஷ்ட: ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே ||–11-

சிருஷ்டிக்கப்பட்டவற்றுக் கெல்லாம் காரணமாய், வெளிப்புலன் களுக்கு எட்டாதபடியாக, தோற்றமும் அழிவும் அற்று, நித்தியமான, அநித்தியமான பொருட்களின் உருவமாய் எந்த பரமாத்மா உள்ளாரோ, அந்த பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப்பட்ட அந்த புருஷன்உலகத்தில் ‘பிரம்மா’ என்றழைக்கப்பட்டார்.

தஸ்மிந் அண்டே ஸ பகவான் உஷித்வா பரிவத்ஸரம் |
ஸ்வயமேவ ஆத்மநோ த்யாநாத் ததண்ட மகரோத் த்விதா ||| 12

அந்த அண்டத்தில் பிரம்மா ஒரு வருடம் முழுமையும் தவமியற்றிய பிறகு, இந்த அண்டம் இரண்டாகப் பிளக்கட்டும் ‘ என்று நினைத்த அளவில் அண்டம் இரண்டானது.((பிரம்மா தவமியற்றிய ஒரு வருட காலம் என்பது நாம் இப்போது கூறும் வருடம் மாதம் நாள் கணக்கைச் சேர்ந்ததல்ல. நாம் கணக்கிடும் வருடம் என்பது மானிடர்களான நமக்கானது. தேவர்களுக்கு வேறு காலக்கணக்கு. இது பின்னால் வரும் ஸ்லோகங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.)

தாப்யாம் ஸ ஷகலாப்யாம் ச திவம் பூமிம் ச நிர்மமே| மத்யே வ்யோ சஸ் சாஅஷ்டாவபாம் ஸ்தாநம் ச சாஸ்வதம்|| 13
பிரம்மா, பிளவுண்ட அண்டத்தின் மேல் பாதியில் ஆகாயத்தையும், கீழுள்ள பாதியில் பூமியையும், நடுவில் வெளியையும் (அண்ட வெளியையும்), எட்டு திசைகளையும்,
கடலையும் படைத்தார்.

உத்பபர்ஹாஆத்மநஸ்சைவ மநஸ்ஸத்அஸதாத்மகம் |
மனஸஸ்சாபி அஹங்காரம் அபிமந்தாரமீஷ்வரம்|I-14-

பிரம்மா பரமாத்மாவிடமிருந்து சத், அசத் ரூபமான மனத்தைப் பெற்றார். அந்த மனத்திலிருந்து தன் செயலை நிறைவேற்றிக் கொள்ளத் தக்கதான அஹங்காரத்தைப் பெற்றார்.

மஹாந்தமேவ சாஆத்மானம் ஸர்வாணி த்ரிகுணாநி ச1
விஷயாணாம் க்ரஹீத்ரூணி ஷனை : பஞ்சேந்த்ரியாணி ச 15

‘மஹத்’ என்னும் தத்வத்தையும், ஆத்மாவுக்கு உதவியாக இருப்பதான சத்வ குணத்தையும், ரஜஸ், தமஸ் என்னும் குணங்களையும், விஷயங்களைக் கிரகிக்கும் சக்தி கொண்ட பஞ்சேந்திரியங்களையும் முறையாகப் படைத்தார்.

தேஷாம் த்வவயவாந் சூஷ்மார் ஷண்ணாமபி அமிதௌஜஸாம் | 1
ஸந்நிவேஸ்யா ஆத்மமாத்ராசு ஸர்வபூதாநி நிர்மமே || 16

அகங்காரத்தையும், அதன் தன்மாத்திரைகளையும், சூட்சும அவயவங்களையும், ஆறு விகாரங்களையும் சேர்த்து சகல பூதங் களையும் படைத்தார்.

யந்மூர்த்யவயவா : சூமாஸ்தஸ்யே மாந்யாஷ்ரயந்திஷட்
தஸ்மாத்ஸரீர மித்யாஹூஸ் தஸ்ய மூர்த்திம் மநீஷிண:II 17

அஹங்கார தன்மாத்திரை வடிவங்களான சூட்சும அவயவங்கள் ஆறும்,பூதேந்திரியங்களும் காரிய ரூபமாக பிரம்மாவிடம் சேருவதால் பிரம்மாவை அவற்றின் சேர்க்கை கொண்டவர் என்று பொருள்படும் விதமாக, ‘சரீரம்’ என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

த்தாவிஷந்தி பூதாநி மஹாந்தி சஹ கர்மபி: 1
மநஸ்சாஅவயவை : சூ மை : ஸர்வ பூதக்ருத வயயம்|| 18

பஞ்ச மகா பூதங்களும் தங்கள் காரியங்களுடன் கூடியும், மனம் வெளியில் புலப்படாத சூட்சுமமான அவயவங்களோடு கூடியும் சரீரத்தில் பிரவேசிக்கின்றன.

தேஷாமிதம் து ஸப்தாநாம் புருஷாணாம் மஹௌஜஸாம் |
சூக்ஷ்மாப்யோ மூர்த்திமாத்ராப்ய: ஸம்பவ த்யவ்யயாத் வ்யயம்|| 19

பஞ்ச பூதங்கள், ‘மஹத்,’ ‘தத்துவம்,’ அஹங்காரம் என்னும்இரண்டு, ஆக ஏழின்காரணமாக உலகம் தோன்றுகிறது.

ஆத்யாஆத்யஸ்ய குணம் த்வேஷாம் அவாப்நோதி பர: பர: 1
யோயோ யாவதி தாைம் ஸ ஸ தாவத் குண: ஸ்ம்ருத: II 20

ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், மண் என்னும் பஞ்ச பூதங்களில்முதலில் உள்ளதன் குணம் அடுத்ததன் குணத்தோடு சேர்ந்திருக்கும்.இவற்றின் குணங்கள் இவற்றுக்கு அடுத்ததாக உள்ளதோடு சேர்ந்திருக்கும்.(முதலில் ஆகாயம். இதற்கு ஓசை என்ற தன்மை இருக்கிறது.அடுத்தது வாயு. இதற்கு ஆகாயத்தின் தன்மையான ஓசையோடு ஸ்பரிசம் என்ற தன்மையும் (தொடு உணர்ச்சி) உண்டு. காற்று மேலே பட்டால் தொடு உணர்ச்சியால் உணர முடியும்.-அடுத்து தேஜஸ். அதாவது நெருப்பு. நெருப்புக்கு ஒளி என்னும் தன்மையோடு ஆகாயத்துக்கும் வாயுவுக்கும் இருக்கும் தன்மைகளும் சேர்ந்து ஒளி ஓசை, ஸ்பரிசம் என்னும் மூன்று தன்மைகள் இருக்கின்றன.-அடுத்தது ஜலம். அதாவது தண்ணீர். தண்ணீருக்கு சுவை என்னும் தன்மையோடு ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் தன்மைகளுமாக மொத்தம் நான்கு தன்மைகள் உள்ளன.-இவ்வாறே பிருத்விக்கு அதாவது மண்ணுக்கு வாசனை என்ற தன்மையோடு ஒளி, ஓசை, ஸ்பரிசம், சுவை என்ற நான்குதன்மைகளும் சேர்ந்து மொத்தம் ஐந்து தன்மைகள் உள்ளன.-பஞ்ச மகா பூதங்களின் தன்மைகள் இவை. இந்தத் தன்மைகளையே தன்மாத்திரைகள் என்பார்கள்.-இவ்வாறே அகங்காரத்துக்குத் தன்மைகள் அதாவது தன்மாத்திரைகள் ஆறு .காமம்,குரோதம், லோபம், மதம்,
மாத்ஸரியம், மோகம் என்பவை.மஹத் என்னும் பெரும் தத்துவத்தோடு பஞ்சபூதங்களும்
தங்கள் தன்மைகளோடும், அகங்காரம் தன் தன்மைகளோடும்
சேர்ந்து இவ்வுலகம் உண்டாகிறது.

ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்|
வேதஷப்தேப்ய ஏவா ஆதெள ப்ரீதக் ஸம்ஸ்தாஷ் ச நிர்மமே i 21

பிரம்மா தன்னால் படைக்கப்பட்ட அனைத்துக்கும் வேதத் திலுள்ளபடி பெயர்களைச் சூட்டினார். அவைகளுக்கான வெவ்வேறு விதமான காரியங்களையும் வேதங்கள் கூறியபடியே ஏற்படுத்தினார்.

கர்மாத்மநாம் ச தேவாநாம் ஸோ அஸ்ருஜத் ப்ராணிநாம் ப்ரபு: |
சாத்யாநாம் ச கணம் சூக்ஷ்மம் யக்ஞம் சைவ ஸநாதநம் 11 22

பிரம்மா, கர்மாத்மாக்களான தேவர்களையும், பிராணிகளையும், சாத்யர்களையும், யக்ஞங்களையும் படைத்தார்.

அக்நி வாயு ரவிப்யஸ்து த்ரயம் ப்ரஹ்ம சநாதனம் | துதோஹ யக்ஞஸித்யர்த்தம் ருக் ய : சாம லக்ஷணம் ||
யக்ஞங்கள் வேதங்களைக் கொண்டே நிறைவேற்றக் கூடியவை என்பதால், யக்ஞங்களுக்காக வேண்டி, ருக், யஜுர், சாமம் என்னும் வேதங்களை, அக்நி, வாயு, சூரியர்களிடமிருந்து கிரகித்தார்.

காலம் காலவிபக்தீஷ்ச நக்ஷத்ராணி க்ராஹாம்ஸ்ததா | சரிதஸ்ஸாகரான் சைலான் சமாநி விஷமாணி ச || 24
பிரம்மா, காலத்தையும், மாதங்கள், ருதுக்கள், வருடங்கள் முதலான கால அளவுகளையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும், நதிகளையும், கடல்களையும், மலைகளையும் படைத்தார்.

தபோ வாசம் ரதிம் சைவ காமம் ச க்ரோதமேவ ச | ச்ருஷ்டிம் சசர்ஜ சைவேமாம் ஸ்ரஷ்டுமிச்ச நி மா: ப்ரஜா: || 25
அவ்வாறே சமவெளியையும், மேடுபள்ளங்களையும், தவம், வாக்கு, சிரத்தை, காமம், கோபம் முதலானவற்றையும் படைத்தார்.

கர்மணாம் ச விவேகார்த்தம் தர்மாதர்மெள வ்யவேசயத் த்வந்த்வைரயோஜச்சேமா: சுகதுக்காதிபி: ப்ரஜா!! 26
செய்யத்தக்கது இது, தகாதது இது என்னும் அறிவைப் பெறுவதற்காக தர்மங்களையும் அதர்மங்களையும் வேறுபடுத்தினார். மேலும் மக்களை சுகம், துக்கம் என்னும் இரட்டைகளோடும், விருப்பு, வெறுப்பு என்னும் இரட்டைகளோடும் இணைத்தார்.

அன்வயோமாத்ரா விநாசிந்யோ தசார்த்தாநாம் து யா: ஸ்ம்ருதா: | தாபிஸ்ஸார்த்தமிதம் சர்வம் சம்பவத்யநுபூர்வஷ: I-27

பஞ்ச பூதங்களின் சொரூபங்களோடு, இனி சொல்லப் போகின்ற அனைத்தையும் படைத்தார்.

யம்து கர்மணி யஸ்மிந் ஸயயுங்த ப்ரதமம் ப்ரபு: 11
ஸ ததேவ ஸ்வயம் பேஜே ஸ்ருஜ்யமாந: புந: புந: 1-28

பிரம்மா, முதன் முதலில், ஆதியில் சிருஷ்டித்தபோது எந்தெந்த காரியங்களைச் செய்வதற்காக எந்தெந்த வர்ணங்களைப் படைத் தாரோ, அந்தந்த வர்ணங்கள் மீண்டும் படைக்கப்படும் போதும் பழையபடியே ஒழுகுகின்றன.

ஹிம்ஸ்ரா ஹிம்ஸ்ரே ம்ருதுக்ரூரே தர்மாதர்மாவரு தாஅந்ருதே |
யத்யஸ்ய ஸோ அததாத்ஸர்கே தத்தஸ்ய ஸ்வயமாவிஷத் !| 29

சிருஷ்டியின்போது பிரம்மா ஹிம்சிக்கும் குணம், அஹிம்சை, மிருதுவான குணம், குரூர குணம், தர்மம், அதர்மம், பொய். உண்மை முதலானவைகளை எவை எவைகளுக்கு எவை என்று நியமித்தாரோ, அதேபோன்றே அவையவை மீண்டும் படைக்கப் படும்போதும் அதே குணங்களோடு ஒழுகுகின்றன.

யதர்த்துலிங்காந்ய்ருதவ : ஸ்வயமேவர்து பர்யயே |
ஸ்வாநி ஸ்வாந்யபிபத்யந்தே ததா கர்மாணி தேஹிந: !! 30

எவ்வாறு ருதுக்கள் தாமே தத்தமது குணங்களை அடைகின்றனவோ, அவ்வாறே பிராணிகளும் தத்தமது குணங்களை அடைகின்றன.

லோகாநாம் து விவ்ருத்யர்த்தம் முகபாஹுருபாதத: |
ப்ராஹ்மணம் க்ஷத்ரியம் வைஷ்யம் சூத்ரம் ச நிரவர்தயத் !-31

உலகைப் படைத்த பிரம்மா அது பல்கிப் பெருகும் பொருட்டு – உலகம் உய்யும் பொருட்டு நான்கு வகையினரை -நான்கு வருணத்தாரைப் படைத்தார்.

த்விதா க்ருத்வா ஆத்மநோ தேஹ மர்தேந புருஷோ அபவத் |
அர்தேந நாரீ தஸ்யாம் ஸ விராஜமஸ்ருஜத் ப்ரபு: !-32

பரம்பொருளானவர், தம் தேகத்தைஇரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பாகம் ஆணாகவும், மற்றொரு பாகம் பெண்ணாகவும் மாறினார். அந்த ஆண், அந்தப் பெண்ணிடம் ‘விராட்’ புருஷனை சிருஷ்டித்தார்.(அகில உலகங்களையும் தம் சரீரமாகக் கொண்ட விஸ்வரூபிக்கு
விராட் புருஷன் என்று பெயர்.)

தபஸ்தப்த்வா ஸ்ருஜத்யம் து ஸ ஸ்வயம் புருஷோ விராட் |
தம் மாம் வித்தாஸ்ய ஸர்வஸ்ய ஸ்ரஷ்டாரம் த்விஜஸத்த மா: || 33

அஹம் ப்ரஜா: சிச்ருக்ஷத்து தபஸ்தப்த்வா அதுஷ்கரம்
பதீந்ப்ரஜாநாமஸ்ருஜம் மஹர்ஷீநாதிதோ தஷ || 34

மரீசி மத்ர்யங்கிர ஸௌ புலஸ்த்யம் புலஹம் க்ரதும்
ப்ரசே தசம் வசிஷ்டம் ச ப்ருகும் நாரதமேவ ச || 35

இப்போது மனுபகவான், பிரம்மதேவர் தம் கூற்றாக மனுவுக்கு எப்படி உரைத்தாரோ, அதை அவ்வாறே இப்போது எடுத்துரைக்கிறார்.
“நானே விராட் புருஷனின் தவத்தால் தோன்றிய பிரம்மா. உலக சிருஷ்டியை செய்வதற்காக விராட் புருஷனால் படைக்கப்பட்டவன்.
நான் பிரஜைகளை சிருஷ்டிப்பதற்கான அளப்பரிய சக்தியை அடைவதற்காக கடும் தவமியற்றினேன். முதலில் பத்து பிரஜாபதிகளை சிருஷ்டித்தேன். (பிரஜாபதி என்பவர்கள், உலகில்சிருஷ்டியை செய்வதற்காக பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள்)
மரீசி, அத்ரி, அங்கிரஸ்,புலஸ்தியன், புலஹன், க்ரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன் என்னும் பத்துப் பேர்களே முதலில் நான் படைத்த பிரஜாபதிகள்.” – இவ்வாறு பிரம்மதேவர் கூறினார்.

ஏதே ம நூம்ஸ் து ஸப்தாஅந்யாநஸ்ருஐந் பூரிதேஜஸ: |
தேவாந் தேவநிகாயாம்ஸ்ச மஹர்ஷீம்சாமி தௌஜஸ்: 36

தேஜஸ் மிகுந்த அவர்கள், தங்களைப் போல் தேஜஸ் கொண்ட ஏழு மனுக்களையும், தேவர்களையும், தேவ உலகங்களையும், மிகுந்த தேஜஸ் கொண்ட மகரிஷிகளையும் சிருஷ்டித்தனர்.

யக்ஷரக்ஷ : பிசாசாம்ஸ்ச கந்தர்வாப்சரஸோ அசுராந் |
நாகாந் ஸர்பாந் சுபர்ணாம்ஸ்ச பித்ரூணாம்ச ப்ருதக்கணாந் II 37

யக்ஷர்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், அசுரர்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கருடன் முதலான பறவைகள் முதலாக பித்ருக்களுடைய பல்வேறு கணங்களையும் படைத்தனர்.

வித்யுதோ அஷநிமேகாம்ஸ்ச ரோஹிதேந்த்ர தனூம்ஷி ச |
உல்கா நிர்காத கேதூம்ஸ்ச ஜ்யோதீம்ஷ்யுச்சாவ சாநி ச|| 38

மின்னல்கள், இடிகள், மேகங்கள், ரோஹிதம் எனப்படும் நீண்ட நட்சத்திரம், வானவிற்கள், வால்நட்சத்திரங்கள், உற்பாதங்கள், எரி நட்சத்திரங்கள் முதலான பலவித நட்சத்திரங்களையும் படைத்தனர்.

கின்னராக் வானராந் மத்ஸ்யாந் விவிதாம்ஸ் ச விஹங்கமாந் | பசூந் ம்ருகாந் மனுஷ்யாம்ஸ்ச வ்யாளாம்ஸ் சோபய தோதித: |39
கின்னரர்கள், வானரர்கள், மீன்கள், விதவிதமான பறவைகள், பசுக்கள், மான்கள், மனிதர்கள், கொடிய மிருகங்கள் முதலானவற்றை படைத்தனர்.

க்ருமிகீட பதங்காம்ஸ்ச யூக மகமத்குணம் |
ஸர்வம் ச தம்ஷமஷகம் ஸ்தாவரம் ச ப்ருதக்விதம் 40

கிருமிகள், புழுபூச்சிகள், வண்டுகள், விட்டில்பூச்சிகள், பேன்கள், ஈக்கள், கொசுக்கள் முதலானவற்றையும் மரங்களையும்,மலைகளையும்கூட படைத்தனர்.

ஏவமேதைரிதம் ஸர்வம் மந்நியோகாந் மஹாத்மபி: 11 யதாகர்ம தபோயோகாத் ஸ்ருஷ்டம் ஸ்தாவரஜங்கமம் || 41
மஹரிஷிகள் தவம்புரிந்து என் ஆணைப்படி இங்கே தென்படுகின்ற தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் ரூபமான உலகமுழுதையும், அதனதன் வினைப்படி படைத்தனர்.

ஏஷாம்து யாத்ருஷம் கர் பூதாநாமி ஹ கீர்த்திதம் |
தத்ததா வோ அபிதாஸ்யாமி க்ரமயோகம் ச ஜன்மநி || 42

இனி எந்தெந்த பூதங்களுக்கு அதாவது எந்தெந்த உயிரினங்களுக்கு எந்தெந்த கர்மாக்கள் சொல்லப்படுகின்றனவோ அந்தந்த பூதங்களுடைய கர்மாக்களையும் ஜன்மாவினுடைய கிரமயோகத்தையும் உங்களுக்கு உரைக்கிறேன்.

பசவஸ்ச ம் ருகாஸ்சை வ்யாளாச்சோபயதோதத: 1 ரட்சாம்ஸி ச பிசாசாஸ்ச மனுஷ்யாஸ்ச ஜராயுஜா: |-43

பசுக்கள், மான்கள், கொடிய மிருகங்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், மனிதர்கள் முதலானோர் கர்ப்பத்தினின்று பிறந்தவர்கள்.

அண்டஜா: பட்சிணஸ்சர்ப் பாநக் ராமத்ஸ்யாஸ்ச கச்சபா: 1
யாநி சைவம் ப்ரகாராணி ஸ்தலஜாத்யௌதகாநி ச || 44

பறவைகள், சர்ப்பங்கள், மீன்கள், ஆமைகள் போன்றவை முட்டையினின்று தோன்றுவன. இவற்றில் சிலநீரில் வாழ்வன; சில நிலத்தில்வாழ்வன.

ஸ்வேதஜம் தம்ஷமஷகம் யூகாமக்ஷிக மத்குணம்|
ஊஷ்மணஸ் சஉபஜாயந்தே யச்சாந்யத்கிஞ்சி த்ருஷம் 45

காட்டு ஈக்கள், கொசுக்கள், பேன்கள், ஈக்கள், மூட்டைப்பூச்சிகள், மேலும் இவற்றைப் போன்று எவையெல்லாம் வெப்பத்தினால் (புழுக்கத் திலிருந்து) பிறக்கின்றனவோ, அவை யனைத்தும் ஸ்வேதஜங்கள் எனப்படும்.

உத்பிஞ்ஞாஸ்தாவராஸ்ஸர்வே பீஜகாண்ட ப்ரரோஹிண: 1
ஓஷத்ய : பலபாகாந்தா பஹுபுஷ்ப பலோபகா: |-46

மரங்களனைத்தும் விதைகளைப் பிளந்து கொண்டு, பூமியையும் பிளந்து கொண்டு பிறப்பன. விதைகளினின்று பிறப்பவை போக, சில கிளைகளை பூமியில் ஊன்றுவதால், மரங்களாகின்றன. நெல்போன்ற தானியங்களும், இன்னும் சில தாவரங்களும், பயிர் வளர்ந்து பலன் தந்தவுடனே அழிகின்றன.

அபுஷ்பா: பலவந்தோ யே தே வனஸ்பதய: ஸ்ம்ருதா: |
புஷ்பிண: பலினஸ்சைவ வருட்சாஸ்தூ பயத: ஸ்ம்ருதா: || 47

மலர்கள் இல்லாமலே பழங்களைத் தரும் மரங்களுக்கு வனஸ்பதிகள் என்று பெயர். பூத்துப் பலன் தரும் மரங்களுக்கு விருட்சங்கள் என்று பெயர்.

குச்சகுல்மம் து விவிதம் ததைவ த்ருண ஜாதய: 1
பீஜகாண்ட ருஹாண்யேவ ப்ரதாநா வல்ய ஏவச !-48

கொத்துக் கொத்தாகப் பூப்பவை குச்சம்’ என்று சொல்லப்படும். புதராக மண்டி வளர்பவை ‘குல்மம்’ என்று சொல்லப்படும். சில புல்வகைகளும், படரும் தாவரங்களும், கொடிவகைகளும் விதைகளினின்றும் பிறந்தவை. மேலும் சில கிளைகளை பூமியில்
ஊன்றுவதால் வளர்பவை.

தமஸா பஹுரூபேண வேஷ்டிதா: கர்மஹேது நா |
அந்தஸ்ஸம்ஞா பவந்த்யேதே சுகதுக்க சமன்விதா: ||| 49

இந்தத் தாவரங்கள் அனைத்துமே, கர்மஹேதுவான தமோ குணத்துடன் கூடியதாக, உணர்வுகளுடன் கூடிய மனமும் பெற்றிருப்பதால் சுகதுக்கங்களை அனுபவிப்பவையாக உள்ளன.

ஏததந்தாஸ்து கதயோ ப்ரஹ்மாத்யா: சமுதாஹ்ருதா: |
கோரே அஸ்மிந் பூதசம்சாரே நித்யம் சத்தயாயி நி 50

பயங்கரமானதாகவும், எப்போதும் அழிவுக்கு ஆட்படுவதாகவும் உள்ள இந்த பூத சம்சாரத்தில் பிரம்மா முதல் தாவரங்கள் ஈறாக உள்ள சகல ஜீவசிருஷ்டிகளும் கூறப்பட்டன.

ஏவம் ஸர்வம் ஸ ஸ்ருஷ்ட்வேதம் மாம் சாஅசிந்த்ய பராக்ரம்: |
ஆத்மந் யந்தர்ததே பூய: காலம் காலேந பீடயந் |-51

இவ்வாறு என்னையும் சர்வத்தையும் படைத்த,அளவற்ற பராக்ரமம் பொருந்திய பிரம்மா, காலத்தை காலத்தோடு சேர்த்து, அதாவது சிருஷ்டி காலத்தை பிரளயகாலத்தோடு சேர்த்து, தன்னுள் தான் கலப்பார்.

யதா ஸ தேவோ ஜாகர்த்திதம்ததம் ம்சஷ்டதே ஜகத் |
யதா ஸ்வபிதி சாந்தாத்மா ததா ஸர்வம் நிமீலதி || 52

எப்போது அவர் விழிப்புறுவரோ, அப்போது இந்த உலகம் இயங்கத் தொடங்கும். எப்போது அவர் சாந்தமாக உறங்கத் தொடங்குகிறாரோ, அப்போது அனைத்தும் ஒடுங்கும்.

தஸ்மிந் ஸ்வபதி சுஸ்தே து கர்மாத்மான: சரீரிண:1 ஸ்வகர்மப்யோ நிவர்த்தந்தே மனஸ்ச க்ளா ம்ருச்சதி | 53
எப்போது அவர் உறங்கிக் கொண்டிருக்கிறாரோ, அப்போது கர்மாவின் உருவங்களான ஜீவன்களனைத்தும் காரியங்கள் ஏதுமற்று இருக்கும். அனைத்து இந்திரியங்களோடு மனமும் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

யுகபத் து ப்ரலீயந்தே யதா தஸ்மிந் மஹாத்ம | ததாயம் ஸர்வபூதாத்மா சுகம் ஸ்வபித நிர்வ்ருத: | 54
எப்போது ஜீவன்களெல்லாம் ஒரே தருணத்தில் அந்த மஹாத்மாவிடம் கலக்கின்றனவோ, அப்போது அவர் அனைத்து இயக்கங்களையும் விட்டு சுகமாக உறங்குகிறார்.

தமோஅயம் து ஸமாஸ்ரித்ய சிரம் திஷ்டதி சேந்த்ரிய: 1
நச ஸ்வம் குருதே கர்ம ததோத்க்ராமதி மூத்தித: II 55

எப்போது இந்த ஜீவன் இந்திரியங்களுடன் ஞானமற்றுப் போய், மூச்சுவிடும் செயலைச் செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இந்த ஜீவன் உடலிலிருந்து விலகுகிறது.

யதா அணுமாத்ரிகோ பூத்வா பீஜம்ஸ்தாஸ்நு சரிஷ்ணு ச | சமாவிஷதி ஸம்ஸ்ருஷ்டஸ்ததா மூர்த்திம் விமுஞ்சதி || 56
எப்போது ஜீவன் இந்திரியங்களுடன் கூடியதாகிறதோ, அப்போது விதையை அடைந்து தாவரமாகவோ அல்லது மனித தேகத்தை அடைந்து மனிதனாகவோ பிறப்பெடுக்கிறது.

ஏவம் ஸ ஜாக்ரத் ஸ்வப்நாப்யாம் இதம் ஸர்வம் சராசரம் |
சஞ்ஜீவயதிசாஅஜஸ்ரம் ப்ரமாபயதி சாஅவ்யய: [ 57
இவ்வாறாக பிரம்மா, விழிப்பு, உறக்க நிலைகளை மேற்கொண்டு, இந்த உலகத்தைப் படைக்கவும் செய்கிறார், அழிக்கவும் செய்கிறார்.

இதம் சாஸ்த்ரம் து க்ருத்வா அசௌ மாமேவ ஸ்வயமாதித: | விதிவத்க்ராஹயாமாச மரீச்யா தீம்ஸ் த்வஹம் முநீந் | 58
இந்த தர்மசாஸ்திரத்தைமுதலில் உருவாக்கியவர் பிரம்மா. அவரே எனக்கு இந்த சாஸ்திரத்தை விதிமுறைப்படி உபதேசித்தார்.-நான் இதை மரீசி முதலான முனிவர்களுக்கு உரைத்தேன்.

ஏதத்வோஅயம் ப்ருகு:சாஸ்த்ரம் ஸ்ராவயிஷ்யத்ய சேஷத: 1
ஏதத்தி மத்தோஅதிஜகே ஸர்வமேஷோஅகிலம் முநி: |-59

இந்த ப்ருகுமுனி இந்த சாஸ்திரம் முழுவதையும் என்னிடம் பயின்றிருப்பதால், இவர் உங்களுக்கு இதை உரைக்கத் தக்கவர்.

ததஸ்ததா ஸ தேநோக்தோ மஹர்ஷிர்மநுநா ப்ருகு: 1
தாநப்ரவீத் ருஷீந் ஸர்வாந் ப்ரீதாத்மா ஷ்ரூயதாமிதி |-60

இவ்வாறு மனு கூறவும், எவ்வளவோ முனிவர்கள் இருக்கும்போது தன் குருவான மனு இந்த சாஸ்திரத்தை எடுத்தியம்ப, தன்னை நியமித்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமுற்று,
கேட்கக் காத்திருக்கும் அம்முனிவர்களைப் பார்த்து கேளுங்கள்’ என்றார்.
(இதிலிருந்து தொடர்வது ப்ருகு முனிவர் வாயிலாக வெளிப்பட்டவை.)

ஸ்வாயம்புவஸ்யாஸ் ய மநோ: ஷட்வம்ஷ்யாமந வோ அபரே |
ஸ்ருஷ்டவந்த: ப்ரஜா: ஸ்வா: ஸ்வா மஹாத்மாநோ மஹௌஜ : 61

மஹாத்மாக்களும், தேஜஸ்மிக்கவ்ர்களுமான, ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தவர்களான ஆறுபேர்சிருஷ்டித்தொழிலில் ஈடுபட்டு தத்தம் பிரஜைகளை உருவாக்கினார்கள்.

ஸ்வாரோசிஷஸ்ச உத்தமஸ்ச்ய தாஸோ ரைவதஸ் ததா |
சா சஸ்ச மஹாதேஜா விவஸ்வத்சுத ஏவ ச || 62

ஸ்வரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாட்சுசன், மஹாதேஜஸ் கொண்ட வைவஸ்வதன் இவர்களே அந்த ஆறு பேர்கள்.

ஸ்வாயம்புவாத்யா: ஸப்தைதே மநவோ பூரிதேஜஸ: |
ஸ்வே ஸ்வே அந்தரே ஸர்வமிதம் உத்பாத்யா அபுஸ் சராசரம்|| 63

மிக்க சக்தி படைத்தவர்களான, ஸ்வாயம்புவ மனு முதலான இந்த ஏழுபேரும் தங்கள் தங்கள் அந்தரங்களில் (காலங்களில்) உயிர்களைப் படைத்து, காத்து ஆட்சி நடத்தினர்.

நிமேஷா தஷா சாஷ்டௌ ச காஷ்டா த்ரிஷத்து தா: கலா |
த்ரிம்ஷத் கலா முகூர்த்த: ஸ்யாத் ஹோராத்ரம் து தாதவ: || 64

இமை கொட்டும் நேரம் பதினெட்டு கொண்டது ஒரு காஷ்டை எனப்படும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை எனப்படும்.-முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்.-முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு இரவும் பகலும் ஆகும்.

அஹோராத்ரே விபஜதே சூர்யோ மானுஷ தைவிகே|
ராத்ரிஸ்வப்நாய பூதாநாம் சேஷ்டாயை கர்மணாமஹ: !! 65

சூரியன் இரவு பகல்களை தேவர்களுக்கென்றும் மானிடர்களுக்கென்றும் ஏற்படுத்தினார். இரவு என்பது உறக்கத்துக்காகவும, பகல் காரியமாற்றுவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டன.

பித்ர்யே ராத்ர்யஹ நீ மாஸ: ப்ரவிபாகஸ்து பட்சயோ: |
கர்மசேஷ்டாஸ்வஹ: க்ருஷ்ண: சுக்ல: வப்நாய சர்வரீ || 66

மானிடர்களுடைய ஒரு மாதம் என்பது பித்ருக்களுடையஇரவும் பகலுமான ஒரு நாள் எனப்படும். அதில் தேய்பிறைகர்மானுஷ்டானங்களுக்கும், வளர்பிறை உறக்கத்துக்கும் ஏற்பட்டடவை.(அதாவது தேய்பிறை பித்ருக்களுடைய ஒரு பகல் பொழுது.வளர்பிறை பித்ருக்களுடைய ஒரு இரவுப்பொழுது.)

தைவே ராத்ர்யஹநி வர்ஷம் ப்ரவிபாகஸ்தயோ: புந: |
அஹஸ் தத்ரோதகயநம் ராத்ரி:ஸ்யாத் தட்சிணாயனம் || 67

மனிதர்களுடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு இரவும்பகலுமான ஒரு நாள். இதில் உத்தராயனம் என்னும் ஆறுமாதங்கள்தேவர்களின் ஒரு பகல் பொழுது. தட்சிணாயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு இரவுப் பொழுது.

ப்ராஹ்மஸ்யது க்ஷபாஹஸ்ய யத்ப்ரமாணம் சமாசத: 1
ஏகைகஷோ யுகாநாம் து க்ரமஷஸ்தந்நிபோ தத |-68

பிரம்ம தேவருடைய இரவு பகலுக்கான காலக் கணக்கையும், யுகங்களின் காலக் கணக்கையும் கூறுகிறேன், கேளுங்கள்.

சத்வார்கயாஹு: ஸஹஸ்ராணி வர்ஷாணாம் தத் க்ருதம் யுகம் |
தஸ்ய தாவச்சதீ ஸந்தயா ஸந்த் யாம் ஷஷ்சததாவித: | 69

நாலாயிரம் தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்.-மேலும் காலையில் சந்த்யாகாலம் என்று நானூறு வருடங்களும், மாலையில் சந்த்யா காலம் என்று நானூறு வருடங்களும் சேரும். மொத்தத்தில் நாலாயிரத்து எண்ணூறு தேவ வருடங்கள் கொண்டது
கிருதயுகம்.

இதரேஷு சசந்த்யே ஸஸந்த் யாம்ஷேசு சத்ரிசு ||
ஏகாபாயேந வர்த்தந்தே சஹஸ்ராணி சதாநி ச |70

மற்ற யுகங்களில் சந்தியைகளுக்கும் யுகத்துக்கும் நூறும் ஆயிரமுமாக குறைத்துக் கொண்டே வர வேண்டும். அப்படி யென்றால், திரேதா யுகத்துக்கு மூவாயிரம் தேவ வருடங்கள். அதில் இரண்டு சந்தியைகளுக்குமாக முந்நூறு, முந்நூறுதேவ வருடங்கள். ஆக மூவாயிரத்து அறு நூறு தேவ வருடங்கள் கொண்டது திரேதா யுகம்.-இவ்வாறாகப் பார்க்கும் போது, துவாபர யுகம் இரண்டாயிரத்து நானூறு தேவ வருடங்கள் கொண்டது.
கலியுகம் ஆயிரத்து இருநூறு தேவ வருடங்கள் கொண்டது.

யதேதத்பரிசங்க் யாதமாதாவேவ சதுர்யுகம் 11 ஏதத் துவாதச சாஹஸ்ரம் தேவாநாம் யுகமுச்யதே |-71
மானிட யுகங்கள் நான்கும் சேர்ந்தால் மொத்தம் பன்னிரண்டாயிரம் தேவ வருடங்கள். இது தேவர்களின் ஒரு யுகம்.

தைவிகாநாம் யுகா நாம்து சஹஸ்ரம் பரிசங்க்யயா ப்ராஹ்மமேக மஹர்ஞேயம் தாவதீம் ராத்ரிரேவ ச 72

இப்படிப்பட்ட தேவ யுகங்கள் ஆயிரம் கொண்டது பிரம்மாவின் ஒரு பகல். அவ்வாறே ஆயிரம் தேவ யுகங்கள் கொண்டது ஒரு இரவு. எனவே இரண்டாயிரம் தேவ யுகங்கள் கொண்டது பிரம்மாவின் ஒரு நாள்.

தத்வை யுக சஹஸ்ராந்தம் ப்ராஹ்மம் புண்ய மஹர்விது: 1 ராத்ரிந்ச தாவதீமேவ தே அஹோராத்ரவிதோ ஐநா: I-73
இவ்வாறான தேவ யுகங்கள் ஆயிரம் கொண்ட பிரம்மாவின் பகல் பொழுதை ‘புண்ணிய தினம்’ என்பார்கள். அவ்வாறே அதே அளவுள்ள பிரம்மாவின் இரவுப் பொழுதை ‘புண்ணிய இரவு என்பார்கள். இவ்வாறான பிரம்மாவின் இரவு பகல் கணக்கை அறிந்தவர்களை ‘அஹோராத்ரி யறிந்தவர்கள்’ என்பார்கள்.

தஸ்ய ஸோ அஹர்நிஷஸ்யாந்தே ப்ரசுப்த: ப்ரதிபுத்ய தே | ப்ரதிபுத்தஸ்ச ஸ்ருஜதி மன: ஸத் அஸத் ஆத்மகம்|| 74
பிரம்மா தன்னுடைய இரவு நேரத்தில் உறங்குவார். இரவு) நேரம் முடியும் தறுவாயில் எழுந்திருப்பார். அப்படி எழுந்திருப்பவர் சத் அசத் ரூபமான சிருஷ்டியைச் செய்யத் தொடங்குவார்.

மன: ஸ்ருஷ்டிம் விகுருதே சோத்யமாநம் சிஸ்ருக்ஷயா | ஆகாஷம் ஜாயதே தஸ்மாத் தஸ்ய ஷப்தம் குணம் விது: H 75
பிரம்மாவால் மனம் மஹத் சிருஷ்டியில் ஏவப்பட்டு மஹத் சிருஷ்யிலிருந்து ஆகாயம் தோன்றியது. ஆகாயத்துக்கு ‘சப்தம்’ குணமாய் அமைந்தது.

ஆகாஷாத்து விகுர்வாணாத் ஸர்வ கந்தவ ஹ சுசி: | பலவாந் ஜாயதே வாயு: ஸவை ஸ்பர்குணோ மத: |-76
ஆகாயத்திலிருந்து இனிய வாசனைகளையும், துர்வாசனை களையும் கொண்டு செல்வதும், பவித்ரமானதும், மிகுந்த பலம் கொண்டதுமான வாயு தோன்றியது. வாயு ‘ஸ்பரிசம்’ என்னும் குணம் கொண்டதாகக் கூறுகிறார்கள்.

வாயோரபி விகுர்வாணாத்விரோசிஷ்ணு தமோநுதம்
ஜ்யோதிருத்பத்யதே பாஸ்வத்தத்ரூப குணமுச்யதே|| 77

வாயுவிலிருந்து மிக்க பிரகாசம் கொண்டதும், இருட்டைப் போக்கடிப்பதுமான ஜோதி (நெருப்பு) தோன்றியது. அந்த ஜோதி உருவம்’ என்னும் குணம் கொண்டது என்று கூறுகிறார்கள்.

ஜ்யோதிஷஸ் ச விகுர்வாணாதாபோ ரஸகுணா: ஸ்ம்ருதா:
அத்ப்யோகந்தகுணா பூமிரித்யேஷா ஸ்ருஷ்டிராதித:I-78

நெருப்பிலிருந்து தண்ணீர் தோன்றியது. தண்ணீர் ‘ரஸம்’ என்னும் குணம் கொண்டது. தண்ணீரிலிருந்து பூமி தோன்றியது. பூமி ‘வாசனை’ என்னும் குணம் கொண்டது.-இப்படித் தோன்றியதே ஆதி சிருஷ்டி.

யத் ப்ராக்த்வாதஷ சாஹஸ்ரமுதிதம் தைவிகம் யுகம்
ததேகஸப்ததி குணம் மந்வந்தர மிஹோச்யதே |-79

பன்னிரண்டாயிரம் வருடங்கள் எண்ணிக்கையில் மனிதர்களின் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு ‘தேவ யுகம்’ என்று முன்னர் கூறப்பட்டது. அப்படிப்பட்ட தேவ யுகங்கள் எழுபத்தொன்று நிறைந்தால், அது ஒரு மன்வந்தரம் எனப்படும்.

மந்வந்தராண்ய சங்க்யாரி ஸர்க : ஸம்ஹார ஏவ ச 1
க்ரீடந்நிவைதத் குருதே பரமேஷ் டீ புந : புந: 80

சிருஷ்டியும், சம்ஹாரமும் எண்ணற்றவையாதலின், மன்வந்தரங்களும் எண்ணற்றவையே.
சிருஷ்டியை, பிரம்மா விளையாட்டாகவே மீண்டும் மீண்டும் செய்கிறார்.

சதுஸ்பாத் ஸகலோ தர்ம : ஸ்த்யம் சைவ க்ருதே யுகே |
நாதர் மேணாகம : கஸ்சித் மநுஷ்யாந் ப்ரதி வர்ததே || 81

கிருதயுகத்தில் தர்மம் நான்கு பாதங்கள் கொண்டதாக இருக்கும். எங்கும் சத்யமே நிறைந்திருக்கும்.(தர்ம தேவதையை ஒரு பசுவாக உருவகப்படுத்தினால், அதற்கு நான்கு பாதங்கள் இருக்குமல்லவா? இவ்வாறு இந்த ஸ்லோகத்தின் பொருளைப் பார்க்க வேண்டும். ஒரு பசு நான்கு கால்களுடன் இருக்கும்போது அது நலமாக இருப்பதாகக் கொள்ளலாம்.ஒவ்வொரு காலாக ஒடிந்தால் நடக்க முடியாமல் நிலை தடுமாறி வீழ்ந்து விடுமல்லவா? நான்கு யுகங்களில் முதல் யுகம் கிருதயுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும் தத்தமக்குரிய தர்மங்களை பூரணமாகக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு இருக்கும்.அடுத்த யுகமான திரேதா யுகத்தில் மனிதர்களுக்கு கொஞ்சம் தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில் பசு ரூபமான தர்மதேவதை தன் ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் சிரமப்படும். அதாவது தர்மம் உலகில் முழுமையாக இல்லாது அங்கங்கே குறைந்து காணப்படும்.அடுத்தது துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும்குறையும். மனிதர்களில் துர்குணங்கள் கொண்டவர்கள் மிகுதியாகஇருப்பார்கள். தர்மத்தின் கால்களில் இன்னொன்று குறையும் இரண்டு கால்களோடு ஒரு பசு எவ்வளவு சிரமப்படும் என்று யோசித்துப் பாருங்கள். அவ்வளவு சிரமம் துவாபர யுகத்தில் தர்மத்துக்கு ஏற்படும்.இப்போது நடப்பது நான்காவதான கலியுகம். இதில் தர்மம் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் திண்டாடும். அதாவது உலகில் அதர்மம் முக்கால் பங்கு ஓங்கி இருக்கும். அங்கங்கே தர்மம்திண்டாடிக்திணறிக் கொண்டிருக்கும்.இப்போது கலியுகம் தொடங்கி ஐயாயிரத்து நூறு வருடங்கள்ஆகின்றன. இப்போதே தர்மத்தின் திண்டாட்டத்தை நன்கு உணர முடிகிறது. இன்னும் கலியுகத்தில் ஆண்டுகள் மிச்சமிருக்கின்றன.இனி போகப் போக தர்மத்தின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைக் காண முடியும். ஆனால் இந்தக் கலியுகத்தில் தர்மத்தின்மீது பற்றுதல் கொண்டு, மற்றப் பற்றுக்களை விட்டவன் மிக எளிதில் மோட்ச் சாம்ராஜ்ஜியத்தை அடைய முடியும்.)

இதரேஷ்வாகமாத்தர்ம : பாதஷஸ்வவரோ பித: |
சௌரிகாஅந்ருதமாயா பிர்தர்மஸ்சாபைதி பாதஷ: | 82

மற்ற யுகங்களில் தர்மம் ஒவ்வொரு பாதமாக குறைந்து கொண்டே வரும். திருட்டு, பொய், வஞ்சனை இவற்றால் தர்மம் குறைந்து கொண்டேபோகும்.

அரோகா ஸர்வஸித்தார்த்தாஷ் சதுர்வர்ஷஷதாயுஷ:
க்ருதேத்ரேதாதிசுஹ்யேஷா மாயுர்ஹ்ரஸதி பாதஷ: I 83

கிருதயுகத்தில் மனிதர்கள் நோயற்றவர்களாகவும், எல்லாவித விருப்பங்களும் நிறைவேறியவர்களாயும், நானூறு வருடங்கள் ஆயுள் கொண்டவர்களாகவும் இருந்தனர். திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் மனிதர்களின் ஆயுள் ஒவ்வொரு பாதமாக
குறைவுபடும்.(முதல் யுகம் கிருதயுகம். அதில் மனிதர்கள் நானூறு வயது வரை
ஆயுள் கொண்டவர்கள். இரண்டாவது யுகமான திரேதா யுகத்தில் மனிதர்கள் முந்நூறு வயது வரை ஆயுள் கொண்டவர்கள். மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில் மனிதர்களின் ஆயுள் இருநூறு. கலியுகத்தில் நூறு.-முதல் யுகத்தில் ஆயுள் நானூறு ஆண்டுகள் என்றாலும். அப்போது வாழ்ந்த மனிதர்களுடைய தவத்தாலும் தர்மானுஷ்
டானங்களாலும் அளவற்ற ஆயுள் பெற்றிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான வருடங்கள் உயிர் வாழ்ந்தார்கள். இப்படியே இரண்டாவதான திரேதா யுகத்திலும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.-மூன்றாவதான துவாபரயுகத்தில் தவமில்லாது போய்விட்டது. தர்மமும் பாதிக்கும் மேல் வீணித்து விட்டது. எனவே, குறிப்பிட்டபடி இரு நூறு வயது அல்லது அதற்கும் குறைவாகவே வாழ்ந்தார்கள். இது கலியுகம். இந்த யுகத்தில் மனிதனின் ஆயுள்-நூறு. அதர்மத்தின் காரணமாக இந்த நூறு வயது வரை வாழ்வதுகூட குறைந்து விட்டது. தவமும் சீலமும் ஒருவரது ஆயுளை வளர்த்துக் கொண்டேபோகும். அவை இல்லாதபோது குறிப்பிட்ட அளவு ஆயுளும் குறைந்து போகும்.

வேதோதமா யுர்மர்த்யா நாமாஷிசஸ் சைவ கர்மணாம்| பலந்த் யநுயுகம் லோகே ப்ரபாவஸ்ச ஷரீரிணாம் |84
வேதங்களில் கூறப்பட்ட ஆயுளும், காம்ய கர்மாக்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களும், சாபங்களும், வரங்களும், பிரபாவங் களும், மனிதர்களுக்கு அந்தந்த யுகத்துக்கு தக்கபடி பலன் கொடுக்கும்.

அந்யே க்ருதயுகே தர்மாஸ் த்ரேதாயாம் த்வாபரே அபரே.
அந்யே கலியுகே ந்ருணாம் யுகஹ்ராஸாநு ரூபத: || 85

கிருத யுக தர்மங்கள் வேறு. திரேதா யுக தர்மங்கள் கிருத யுக தர்மங்களைவிடக் குறைவானவை. அவற்றைவிட குறைவானவை-துவாபர யுக தர்மங்கள். கலி யுக தர்மங்களோ இவற்றிலிருந்தும் குறைந்து இருக்கும். இவ்வாறாக யுகங்களைப் பொறுத்து தர்மங்கள் வேறுபட்டவையாக இருக்கும்.

தப: பரம் க்ருதயுகே த்ரேதாயாம் ஞானமுச்யதே 11 த்வாபரே யக்ஞமேவாஹுர் தானமேகம் கலௌ யுகே 86
கிருதயுகத்தில் தவம் செய்வதே மேலான தர்மம். திரேதா யுகத்தில் தவம் குறைந்து, ஆத்ம ஞானம் மேலான தர்மமாக இருக்கும். துவாபர யுகத்தில் அதுவும் குறைந்து யக்ஞம் செய்தல் மேலான தர்மம் என்றாகும். கலி யுகத்தில் தானம் செய்தலே சிறந்த தர்மமாக கூறப்படும்.

ஸர்வஸ்யாஸ்ய து ஸர்கஸ்ய குப்த்யர்தம் ஸ மஹாத்யுதி: |
முக பாஹுரு பஜ்ஜாநாம் ப்ருதக் கர்மாண்ய கல்பயத் || 87

மிக்க தேஜஸ் பொருந்தியவரான பிரம்மா அனைத்து உயிர்களையும் காப்பதற்காக தன்னிலிருந்து நான்கு வருணத்தாரைத் தோற்றுவித்தார். அவரவர்க்குரிய தர்மங்களையும் ஏற்படுத்தினார்.

அத்யாபநமசாத்யயநம் யஜநம் யாஜநம் ததா |
தானம் ப்ரதிக்ரஹம் சைவ ப்ராஹ்மணாநாமகல்பயத் || 88

வேதங்களை ஓதுவதும், கற்பித்தலும், யக்ஞங்கள் செய்தலும், செய்வித்தலும், தானம் கொடுத்தலும், வாங்குதலும் என்னும் ஆறையும் பிராம்மணனுக்குரிய தர்மங்களாக ஏற்படுத்தினார்.

ப்ரஜாநாம் ரக்ஷணம் தான மிஜ்யாத்யயன மேவ ச
விஷயேஷ்வப்ரசக்திஸ் ச க்ஷத்ரியஸ்ய ஸமாஸத: 11 89

மக்களைக் காத்தல், தானமளித்தல், யாகம் செய்தல், வேதமோதுதல், விஷயசுகங்களில் மூழ்காமலிருத்தல் முதலானவைகளை க்ஷத்ரியர்களுடைய தர்மங்களாக ஏற்படுத்தினார்.

பசூணாம் ரக்ஷணம் தான மிஜ்யாத்யய நமேவ ச
வணிக்பதம் குளிதம் ச வைஷ்யஸ்ய க்ருஷிமேவ ச-90

பசுக்களைக் காத்தல், யாகங்கள் செய்தல், வேதபாராயணம்செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்குப் பணம் கொடுத்து ஜீவித்தல், விவசாயம் செய்தல் இவைகள் வைசியர்களின் தர்மங்கள்.

ஏகமேவ து சூத்ரஸ்ய ப்ரபு : கர்ம ஸமாதிஷத் |
ஏதேஷாமேவ வர்ணாநாம் சுஸ்ரூஷா மநசூயயா|| 91

பிரம்ம தேவர், சூத்ரர்களுக்கு விதித்த தர்மமோ ஒன்றே ஒன்றுதான். அது, அசூயையின்றி முதலில் கூறப்பட்ட மூன்று வர்ணத்தாருக்கும் பணிவிடை புரிதல்.

ஊர்த்வம் நாபேர்மேத்யதர: புருஷ: பரிகீர்தித: | தஸ்மாந்மேத்ய தமம்த்வஸ்ய முகமுக்தம் ஸ்வம்புவா 92
நாபிக்கு கீழுள்ளபாகங்களைவிட மேலுள்ள பாகங்கள் பரிசுத்தமானவை என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானது என்பது பிரம்மாவின் கூற்று.

உத்தமாங்கோத்பவாஜ் ஜ்யையுட்யாத் பிரஹ்மணஸ்சைவ தாரணாத் 11
ஸர்வஸ்யைவாஸ்ய சர்கஸ்ய தர்மதோ ப்ராஹ்மண: ப்ரபு: |-93-

வேதங்களை உணர்ந்துள்ளதால் படைக்கப்பட்டவர்களுள் பிராம்மணன் மேலானவன்.

தம் ஹி ஸ்வயம்பூ: ஸ்வாதாஸ் யாத்தபஸ் தப்த்வாதிதோ அஸ்ருஜத் !
ஹவ்ய கவ்யா அபி வாஹ்யாய ஸர்வஸ்யாஸ்ய ச குப்தயே |-94

ஹவ்ய கவ்யங்களை அளிப்பதற்காகவும் உலகம் காக்கப்படுவதற்காகவும், பிரம்மா பிராம்மணனைப் படைத்தார்.(ஹோமம் செய்து மந்திரங்களால் தெய்வங்களை அழைத்து
அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு ஹவிஸ் எனப்படும். இதையே ஹவ்யம் என்பர். இது ஹோமத்தில் இடப்படும். ஹோமத் தீயில் வார்க்கப்படும் நெய் பிரதானமான ஹவிஸ். பால்,நெய் சேர்த்த சாதமும் ஹவிஸாகும். தேவர்களுக்கான உணவு ஹவ்யம். இதே
போன்றுபித்ருக்களுக்கு அளிக்கும் உணவும் கவ்யம் எனப்படும்.)

யஸ்யாஆஸ்யேந ஸதாஅஷ்நந்தி ஹவ்யாநி த்ரிதிவௌக : I
கவ்யாநி சைவ பிதர: கிம் பூதமதிகம் தத: 95

யாருடைய வாயினின்றும் வெளிப்படும் மந்திரங்களால் தேவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ஹவ்யத்தை உண்பார்களோ, பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப்படும் கவ்யத்தை உண்பார்களோ, அதைவிட உயர்ந்தது யாதுளது?

பூதாநாம் ப்ராணிந: ஷ்ரேஷ்டா: ப்ராணிநாம் புத்தி ஜீவிந:
புத்திமத்சு நரா: ஷ்ரேஷ்டா: நரேஷு ப்ராஹ்மணா: ஸ்ம்ருதா: || 96

பஞ்ச பூதங்களால் உருவாக்ளகப்பட்டவற்றுள் பிராணிகள் உயர்ந்தவை. பிராணிகளில் புத்தியால் ஜீவனம் செய்பவை உயர்ந்தவை. புத்தியுடையவற்றில் மனிதர்கள் உயர்ந்தவர்கள்.

ப்ராஹ்மணேஷு ச வித்வாம்ஸோ வித்வத்சு க்ருதபுத்தய: 1
க்ருத புத்திஷு கர்தார : கர்த்ருஷு ப்ரஹ்மவேதி : || 97

பிராம்மணர்களிலேயும் வித்வான்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் தங்கள் அனுஷ்டானங்களில் புத்தியைச் செலுத்துபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் அத்தகு கர்மானுஷ்டானங்களை நன்கு இயற்றுபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களைவிட் பிரம்மஞானிகள் உயர்ந்தவர்கள்.

உத்பத்திரேவ விப்ரஸ்ய மூர்த்திர் தர்மஸ்ய சாஸ்வதி |
ஸ ஹி தர்மார்த்தமுத்பந்நோ ப்ரஹ்மபூயாய கல்பதே 98

பிராம்மணனுடைய உற்பத்தியே தர்மத்துக்கு சாஸ்வதமானசரீரம். பிராம்மணன் தர்மத்தை கடைப்பிடிப்பதற்காகவே படைக்கப்பட்டவன். அத்தகு தர்மத்தை கடைப்பிடிப்பதனால்
பிரம்மபதத்தை அடைவான்.

ப்ராஹ்மணோ ஜாயமாநோ ஹி ப்ருதிவ்யா மதி ஜாயதே 1
ஈஷ்வர: ஸர்வபூதாநாம் தர்மகோஷஸ்ய குப்தயே|| 99

எல்லா உயிர்களுக்கும் உரிய தர்மமனைத்தையும் காக்கும் தலைவன் பிராம்மணன்.

ஸர்வம் ஸ்வம் ப்ராஹ்மணஸ்யேதம் யத்கிஞ்சித் ஜகதீகதம் | ஷ்ரையே நா பிஜநேநேதம் ஸர்வம் வை ப்ராஹ்மணோ அர்ஹதி|| 100
பூமியிலுள்ள அனைத்தும் பிராம்மணனுடையது. எனவே பிராம்மணன் எல்லா செல்வங்களுக்கும் உடைமையாளன்.

ஸ்மேவ ப்ராஹ்ணோபுங்க்தேஸ்வம் வஸ்தே ஸ்வம் ததாதி ச | ஆந்ருஷம்ஸ்யாத் ப்ராஹ்மணஸ்ய புஞ்ஜதே ஹீதரே ஜநா: II 101

பிராம்மணன் தன்னுடைய செல்வத்தையே தான் அனுபவிக் கிறான். தன்னுடைய ஆடைகளையேதான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறர்க்கு அளிக்கின்றான்.

தஸ்ய கர்ம விவேகார்த்தம் சேஷாணாமநு பூர்வஷ: ஸ்வாயம்புவோ மநுர்தீமா நிதம் சாஸ்த்ரமகல்பயத் ||| 102
ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராம்மணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார்.

விதுஷா ப்ராஹ்மணேநேதயேதவ்யம் ப்ரயத்நத: | சிஷ்யேப்யஸ் ச ப்ரவக்தவ்யம் ஸம்யக்நாந்யேந கேனசித் 103
இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராம்மணன் இந்த தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

இதம் சாஸ்த்ரமதியாநோ ப்ராஹ்மணஷ்ஷம்ஸிதவ்ரத: | மநோவாக் தேஹஜைர் நித்ய கர்ம தோஷைர் நலிப்யதே 104
இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராம்மணனுக்கு மனத்தாலும் வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது. அதாவது இதைப் படித்து அறிந்த பிறகு பாபமே செய்ய மாட்டான்.

புநாதி பங்தித் வம்ஷ்யாம்ஷ் ச ஸப்தஸப்த பராவராந் |
ப்ருதிவீமபி சைவேமாம் க்ருத்ஸ்நாமே கோ அபி ஸோ அர்ஹதி || 105

இந்த சாஸ்திரத்தை படித்து ஒதுபவன் தன்னுடைய முன்னோர்களில் ஏழு தலைமுறை யினரையும், தனக்குப் பின் ஏழு தலைமுறை யினரையும் புனிதமாக்குகிறான். இந்தப் பூமண்டலம் முழுவதையும் தானம் பெறுவதற்கும் அருகதையுடைவனாகிறான்.

இதம் ஸவஸ்த்யயநம் ஷ்ரேஷ்டமிதம் புத்திவிவர்த்தநம் |
இதம் யஷஸ்யமாயுஷ்யமிதம் நி: ஷ்ரேயஸம் பரம்|| 106

இந்த தர்ம சாஸ்திர அத்யயனம், மநோரதங்களை பூர்த்தியாக்கும். இந்த தர்ம சாஸ்திரம் மிகவும் சிரேஷ்டமானது. ஞானத்தை பெருக்குவது, புகழைத் தருவது, தீர்காயுளைத் தருவது. மோட்ச மடைய மேலான சாதனமானது.

அஸ்மிந் தர்மோ அகிலேநோக் தோ குணதோஷெள ச கர்மணாம் |
சதுர்ணாமபி வர்ணாநாமாசாரஷ்சைவ ஷாஷ்வத: |-107

இந்த தர்மசாஸ்திரத்தில் அனைத்து தர்மங்களும் கூறப்பட்டுள்ளன. செய்யத் தக்கவைகளும், தகாதவைகளுமான தர்மவிஷயங்களும், அதர்ம விஷயங்களும், அவற்றின் பலன்களும்கூறப்பட்டுள்ளன. மேலும் நான்கு வர்ணத்தார் நித்தியமாக
கடைப்பிடிக்க வேண்டிய ஆசார விஷயங்களும் கூறப்பட்டுள்ளன.

ஆசார: பரமோ தர்ம: ஸ்ருத்யுக்த: ஸ்மார்த்தயேவ ச
தஸ்மாதஸ்மிந் ஸதா யுக்தோ நித்யம் ஸ்யாதாத் மவாந்த த்விஜ: || 108

வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்ட ஆசாரங்களே மேலான தர்மங்கள். எனவே, மக்களின் நலம் கோரும் துவிஜன் ஆசார விஷயங்களில் எப்போதும் முயற்சியுடன் ஈடுபட்டவனாக இருக்க வேண்டும். (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன் என்னும்
மூவர்ணத்தாரும் துவிஜர்கள்.)

ஆசாராத் விச்யுதோ விப்ரோந வேதபலமஷ்நுதே 11
ஆசாரேண து ஸம்யுக்த : ஸம்பூர்ண பலபாக் பவேத் || 109

ஆசாரத்திலிருந்து விலகிய பிராம்மணனுக்கு, வேதாத்ய யனத்தால் பலன் கிட்டாது. ஆசாரமானவனே ஸம்பூர்ணமான பலனைப் பெறுவான். ஆசாரம் என்பது தூய்மை. தூய்மையானஅனுஷ்டானங்களை,பூஜைகளை தினமும் செய்பவனே ஆசார சீலன்.

ஏவமாசாரதோ த்ருஷ்ட்வா தர்மஸ்ய முநயோ கதிம்
ஸர்வஸ்ய தபஸோ மூலமாசாரம் ஜக்ருஹு: பரம் |-110

இவ்வாறாக ஆசாரத்தை ஆதாரமாகக் கொண்டு தர்மம் இருப்பதை உணர்ந்து, எல்லா தவங்களுக்கும் ஆசாரமே முதல் முக்கியமானது என்று முனிவர்கள் தெரிவித்தார்கள்.

ஜகதஷ் ச ஸமுத்பத்திம் ஸம்ஸ்கார விதிமேவ ச|
வ்ரதசர்யோபசாரம் ச ஸ்நாநஸ்ய ச பரம் விதிம் || 111

உலக உற்பத்தியும், ஸம்கார முறைகளும், விரத முறைகளும், பிரம்மசரிய விரத முறைகளும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.

தாராதிகமநம் சைவ விவாஹாநாம் ச லக்ஷணம்| மஹாயக்ஞவிதாநம் ச ஷ்ராத்த கல்பம் ச ஷாஷ்வதம் 11 112
விவாஹ முறைகளையும், விவாஹத்துக்கான லக்ஷணங்களையும், யக்ஞங்களின் லக்ஷணங்களையும், சிராத்த விஷயங்களையும் இந்த தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

வ்ருத்தீநாம் லக்ஷணம் சைவ ஸ்நாதகஸ்ய வ்ரதாநி ச 1
பஷ்யாஅபக்ஷ்யம் ச ஷௌசம் ச த்ரவ்யாணாம் ஷுத்திமேவச|| 113

ஜீவனம் நடத்துவதற்கான தொழில்களின் லக்ஷணங்களையும்,இல்லறத்தானின் நியமங்களையும், சாப்பிடத்தக்கவை எவை,தகாதவை எவை என்ற விஷயங்களைப் பற்றியும், மரணகாலங்களில்ஏற்படும் தீட்டுகளைப் பற்றிய விவரங்களையும் பொருட்களுக்குதண்ணீர் முதலியவற்றால் கிடைக்கும் சுத்தி முறைகளைப் பற்றியும்
இந்த தர்மசாஸ்திரம் விளக்குகிறது.

ஸ்த்ரீ தர்மயோகம் தாபஸ்யம் மோக்ஷம் ஸந்யாஸமேவ ச |
ராக்ஸ்ச தர்மமகிலம் கார்யாணாம் ச விநிர்ணயம்|11 114

பெண்களுக்குரிய தர்மவிஷயங்களும், வானபிரஸ்தர்களுக்குரிய தர்ம விஷயங்களும், சந்யாஸ தர்ம விஷயங்களும், மன்னனுக்குரிய தர்ம விஷயங்களும், மோக்ஷ்க்ஷத்துக்குரிய விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன.

ஸாக்ஷிப்ரஷ்ந விதாம் ச தர்மம் ஸ்த்ரீபும்ஸயோரபி |
விபாக தர்மம் த்யூதம் ச கண்டகா நாம் ச ஷோதநம் || 115

சாட்சிகளை விசாரிக்கும் முறைகள், பெண்களும் ஆண்களும் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பாகப் பிரிவினை, சூதாட்டம், குற்றவாளிகளைத் தண்டித்தல் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

வைஷ்ய சூத்ரோபசாரம் ச ஸங்கீர்ணாநாம் ச ஸம்பவம் ஆபத்தர்மம் ச வர்ணாநாம் ப்ராயஷ்சித்த விதிம் ததா || 116
வைசியர்கள் சூத்திரர்கள் முதலானோரின் தர்ம அனுஷ்டான முறைகள், கலப்பு திருமணங்கள், ஆபத்துக்காலங்களில் கடைப் பிடிக்க வேண்டிய விதிமுறைகள், பிராயச்சித்த முறைகள் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.

ஸம்ஸாரகமநம்சைவ த்ரிவிதம் கர்மஸம்பவம் நிஷ்ரேயசம் கர்மணாம் ச குணதோஷ பரீக்ஷணம்|| 117
தேகத்தை விடுதல், மூன்று வகையான கர்ம வினைகள் ஏற்படுதல், சாஸ்திரத்தில் செய்யச் சொன்ன, செய்யக் கூடாது என்று சொன்ன விஷயங்களின் பலாபலன்கள் முதலானவையும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

தேஷதர்மாந் ஜாதிதர்மாந் குலதர்மாந்ஷ்ச ஷாஷ்வதாந் |
பாஷண்ட கண தர்மாம்ஷ்ச சாஸ்த்ரே அஸ்மிந் உக்தவாந் மநு 1 118

தேச தர்மங்கள், ஜாதி தர்மங்கள், குல தர்மங்கள், வேதத்துக்கு விரோதமானவர்களின் தர்மாதர்மங்கள் முதலானவற்றையும் இந்த தர்ம சாஸ்திரத்தில் எடுத்துரைத்துள்ளார்.

யதேகமுக்தவாந் ஷாஸ்த்ரம் புரா ப்ருஷ்டோ மநுர்மயா | ததேதம் யூயமப்யத்ய மத்ஸகாஷாந்நி போதத || 119
முனிவர்களே, நான் வினாவியபோது, மனுவானவர் எனக்கு இந்த தர்ம சாஸ்திரத்தை எவ்வாறு உபதேசித்தாரோ அவ்வாறே அதை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன், கேளுங்கள்:
(முதல் அத்தியாயம் முற்றிற்று.)

———–

அத்தியாயம் – 2

வித்வத்பிஸ்ஸேவிதம் ஸத்பிர்நத்யம த்வேஷராகிபி: 1
ஹ்ருதயேநாப்யநுக்ஞா தோ யோ தர்மஸ்தம் நிபோ தத ||–1-

வேதம் முழுவதையும் நன்கு அறிந்தவர்களாகவும், விருப்பு வெறுப்பு அற்றவர்களாகவும் சாதுக்களாகவும் உள்ள மஹான்கள் எப்போதும் அனுஷ்டிக்கின்ற தர்மம் எதுவோ அதை
எடுத்தியம்புகிறேன், கேளுங்கள்:

காமாத்மதா ந ப்ரஷஸ்தா நசை வேஹாஸ்த்ய காமதா |
காம்யோ ஹி வேதாதிகம: கர்மயோகஷ்ச வைதிக: I-2-

விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக காரியங்களைச் செய்தல் என்பது போற்றுதலுக்குரிய விஷயமன்று. எனினும் இவ்வுலகில் பலனை எதிர்நோக்காமல் காரியம் செய்வது என்பது அரிதான விஷயம். வேதங்களை நன்கு படித்தல், வேதங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்களில் ஆழ்ந்து ஈடுபாடு கொண்டிருத்தல் என்பதும் பலனைக் கொடுக்கக் கூடியதேயாகும்.

ஸங்கல்ப மூல: காமோ வை யக்ஞா: ஸங்கல்ப ஸம்பவா:
வ்ரதாநி யமதர்மாஷ்ச ஸர்வே ஸங்கல்பஜா: ஸ்ம்ருதா: || 3

இவை இவை எனக்குத் தேவை என்று கோருவதற்கு ‘சங்கல்பம் என்று பெயர். சங்கல்பத்துக்கு மூலகாரணமாக இருப்பது ஆசை ஆசையாலேயே சங்கல்பம் தோன்றுகிறது. யக்ஞங்கள் செய்வதில் விருப்பம் சங்கல்பத்தாலேயே ஏற்படுகிறது. விரதங்கள், நியமங்கள் போன்றவை அனைத்துமே சங்கல்பத்தாலேயே ஏற்படுகின்றன.

அகாமஸ்ய க்ரியா காசித் த்ருஷ்யதே நேஹ கர்ஹிசித்
யத்யத்தி குருதே கிஞ்சித் தத்தத் காமஸ்ய சேஷ்டிதம் !|-4

ஆசையற்றவனுக்கு எந்தச் செயலும் இல்லை. மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆசையின் காரணமாகவே செய்யப் படுகிறது.

தேஷு ஸம்யக்வர்த்தமாநோ கச்சதிஅமர லோகதாம் |
யதா ஸங்கல்பிதாம் சேஹ ஸர்வாகாமாந் ஸமஷ்தே 5

முறையாக நல்லபடி காரியங்களைச் செய்பவன் அமரனாகிறான்.இவ்வுலகிலும் அவனுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

வேதோ அகிலோ தர்மமூலம் ஸ்ம்ருதி லே ச தத்விதாம் |
ஆசாரஷ்சைவ ஸாதூநாமாத்மநஸ்துஸ்டிரேவ ச || 6

வேதமே உலகில் தர்மத்துக்கு மூலம். வேதமறிந்தவர்களால்இயற்றப்பட்ட ஸ்ம்ருதிகளும், அவர்களது ஒழுக்கமுமேபிரமாணங்கள். சாதுக்கள் கடைப்பிடிக்கும் ஆசாரங்களும், அவர்களதுஆத்மானந்தமும் பிரமாணங்கள்.

ய: கஸ்சித்கஸ்யசித் தர்மோ மநுநா பரிகீர்தித: |
ஸ ஸர்வோ அபிஹிதோ வேதே ஸர்வஞானமயோ ஹிஸ: ||| 7

எவருக்கு எந்தெந்த தர்மங்கள் மனுவினால் சொல்லப்பட்டுள்ளதோ, அவை அனைத்தும் வேதத்தில் சொல்லப் பட்டுள்ளவையே. சர்வஞான சொரூபன் மனு பகவான். அவர் கூறியஅனைத்தும் வேதம் கூறியதே.

ஸர்வம் து ஸமவேஷ்யேதம் நிகிலம் ஞான சக்ஷஷா|
ஷ்ருதிப்ராமாந்யதோ வித்வாந்ஸ்வதர்மே நிவிஷேத வை 8

இந்த தர்ம சாஸ்திரம் முழுவதும் ஞானக்கண்ணால் கண்டது என்பதையும், வேதம் கூறியது என்பதையும் அறிந்து விவேகமுள்ளவன் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

ஷ்ருதிஸ்ம்ருத்யுதிதம் தர்மமநுதிஷ்டந் ஹி மாநவ: 1
இஹ கீர்த்திமவாப்நோதி ப்ரேத்ய சாநுத்தமம் சுகம் || 9

மனிதன், வேதங்களிலும், தர்ம சாஸ்திரங்களிலும் கூறப் பட்டுள்ள தர்மத்தை அனுஷ்டித்தால், இவ்வுலகில் கீர்த்தியையும், மேலுலகத்தில் மோட்சத்தையும் அடைவான்.

ஷ்ருதிஸ்து வேதோ விஞேயோ தர்ம சாஸ்த்ரம் து வை ஸ்ம்ருதி: |
தே ஸர்வார்த்தேஷ்வமீமாம்ஸ்யே தாப்யாம் தர்மோ ஹி நிர்பபௌ | 10

வேதங்கள் ‘ஸ்ருதிகள்’ எனப்படும்.தர்ம சாஸ்திரங்கள்’ஸ்மிருதிகள்’ எனப்படும். இவைகளைக் குறித்து எதிர்மறையான தர்க்கங்களைச் செய்தல் கூடாது. இவை இரண்டினாலுமே தர்மம் பிரகாசிக்கிறது.

யோ அவமந்யேத தே மூலே ஹேது ஷாஸ்த்ராஷ்ரயாத் த்விஜ:
ஸ ஸாதுபிர் பஹிஷ்கார்யோ நாஸ்திகோ வேதநிந்தக: | 11

பிரமாணங்களான ஸ்ருதிகளையும், ஸ்ம்ருதிகளையும் எந்த பிராமணனோ,க்ஷத்ரியனோ, வைசியனோ அவமதித்து தூஷிக்கின்றானோ, அப்படிப்பட்ட நாஸ்திகனை நல்லவர்கள் பகிஷ்காரம் பண்ண வேண்டும்.

வேத: ஸ்ம்ருதி: ஸதாசார: ஸ்வஸ்ய ச ப்ரியமாத்மந: |
ஏதத் சதுர்விதம் ப்ராஹு: சாட்சாத் தர்மஸ்ய லக்ஷணம் 12

வேதம், ஸ்ம்ருதி, நல்ல ஆசாரம், சுய ஆனந்தம் இந்த நான்கும் தர்மத்தின் சொரூபம் என்று கூறுவார்கள் பெரியோர்.

அர்த்த காமேஷ்வஸக்தாநாம் கர்மஞானம் விதீயதே | தர்மம் ஜிக்ஞாஸமாநாநாம் ப்ரமாணம் பரமம் ஷ்ருதி: 13
அர்த்தம் காமம் இவைகளில் விருப்பம் இல்லாதவனுக்கே தர்மஞானம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மத்தை அறிய விரும்பு பவனுக்கு முக்கியமான பிரமாணம் வேதமே ஆகும்.

ஷ்ருதித்வைதம் து யத்ர ஸ்யாத் தத்ர தர்மாவுபௌ ஸ்ம்ருதௌ |
உபாவபி ஹிதௌ தர்மௌ ஸம்யக்உக்தௌ மனீஷிபி: || 14

எங்கே தர்மசாஸ்திரங்களுக்குள் ஒன்றுக்கொன்று வேறுபாடு காணப்படுகின்றதோ, அங்கே இரண்டு விதமாக தர்மங்கள் கூறப்பட்டிருக்கும். வித்வான்கள் இவ்விரண்டு தர்மங்களையும் கடைப்பிடிக்கலாம்.

உதிதேஅநுதிதே சைவ ஸமயாத்யுஷிதே ததா |
ஸர்வதா வர்த்ததே யக்ஞஇதீயம் வைதிகீ ஷ்ருதி: || 15

சூரியோதயம் ஆன பிறகு ஹோமம் செய்ய வேண்டும். இது ஒரு வேத வாக்கியம். உதிப்பதற்கு முன்பேநட்சத்திரங்கள் தெரியும் அருணோதய காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.-இது ஒரு வேத வாக்கியம். ஒன்றுக்கொன்று முரணானவை இவை. இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடு தென்படும்போது இரண்டு விதங்களில் எந்த விதமாகவும் செய்யலாம்.

நிஷேகாதிஷ்மஷாநாந்தோ மந்த்ரைர்யஸ்யோதிதோ விதி: | தஸ்ய ஷாஸ்த்ரே அதிகாரோ அஸ்மிஞ் ஞேயோ நாந்யஸ்ய கஸ்யசித்|| 16
கர்ப்பாதானம் முதலான அனுஷ்டானங்கள் எவனுக்கு விதிக்கப்பட்டுள்ளதோ அவனுக்கே இந்த மனுதர்மத்தைப் படிக்கும் அதிகாரம் உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை.

ஸரஸ்வதீத்ரு ஷத்வத்யோர் தேவ நத்யோர்ய தந்தரம் |
தம் தேவநிர்மிதம் தேஷம் ப்ரஹ்மாவர்த்தம் ப்ரசக்ஷதே | 17

ஸரஸ்வதீ நதிக்கும் திருஷத்வதீ என்னும் நதிக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை ‘தேவநிர்மிதம்’ என்றும் ‘பிரம்மா வர்த்தம்’ என்றும் கூறுவார்கள்.

தஸ்மிந்தேஷேய ஆசார: பாரம்பர்ய க்ரமாகத: 11
வர்ணாநாம்ஸாந்தராளாநாம் ஸ ஸதாசார உச்யதே || 18

அந்த தேசத்தில் நால்வர்ணத்தாருக்கும், கலப்பு வர்ணத்தாருக்கும் பாரம்பரியமாக வரும் ஆசாரமே ‘சதாசாரம்’ எனப்படும்.

குருக்ஷேத்ரம் ச மத்ஸ்யாஷ்ச பாஞ்சாலாஷ் ரஸேநகா:
ஏஷ ப்ரஹ்மர்ஷி தேஷோ வை ப்ரஹ்மா வர்தாதநந் தர: || 19

குருக்ஷேத்திரம், மத்ஸ்ய தேசம், பாஞ்சாலம், சூரசேநகம் என்னும் தேசங்களுக்கு பிரம்மரிஷி தேசம்’ என்று பெயர். இது பிரம்மாவர்த்த தேசத்துக்கு அடுத்தது.

ஏதத் தேஷ ப்ரஸுதஸ்ய ஸகாஷா தக்ரஜந்மந: |
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் ஷிக்ஷேரந் ப்ருதிவ்யாம் ஸர்வ மாநவா: |-20

இந்தத் தேசத்தில் பிறந்த பிராம்மணர்கள் மூலமாக உலகமாந்தர் தத்தமக்குரிய ஆசாரங்கள் எவை எவை என்று அறிய வேண்டும்.

ஹிமவத் விந்த்ய யோர்மத்யம் யத்வ்ராக்விநஸநாதபி |
ப்ரத்யகேவ ப்ரயாகாச்ச மத்ய தேஷ: ப்ரகீர்தித: || 21

இமயமலைக்கும் விந்திய மலைக்கும் இடையில், சரஸ்வதி மறைந்த தேசத்துக்கும், பிரயாகைக்கும் இடைப்பட்ட தேசத்துக்கு ‘மத்திய தேசம்’ என்று பெயர்.

ஆ ஸமுத்ராத்து வை பூர்வாதா ஸமுத்ராத்து பஷ்சிமாத் தயோரேவாந்தரம் கிர்யோரார்யாவர்தம் விதுர்புதா: |22
கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடையிலுள்ள பிரதேசத்துக்கு ‘ஆர்யா வர்த்தம்’ என்று பெயர்.

க்ருஷ்ணஸாரஸ்து சரதி ம்ருகோ யத்ரஸ்வபாவத: |
ஸ ஞேயோ யக்ஞயோ தேஷோ ம்லேச்ச தேசஸ்த்வத: பர: 23

கறுப்புக் கோடுகள் கொண்ட மான் பிறந்து தன்னிச்சையாக சஞ்சரிக்கின்ற பிரதேசமே யக்ஞங்கள் செய்வதற்கு உகந்த இடமாகும். மற்றைய இடங்கள் மிலேச்ச தேசம் எனப்படும். மிலேச்ச தேசம் யக்ஞம் செய்வதற்கு அருகதையற்ற இடமாகும்.

ஏதாந் த்விஜாதயோ தேஷாந் ஸம்ஸ்ரயேரந் ப்ரயத்நத: 1 சூத்ராஸ்து யஸ்மிந் கஸ்மிந்வா நிவஸேத் வருத்திகர்ஷித: 24
பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர் என்னும் த்துவிஜர்களாகிய மூவர்ணத்தாரும் முயற்சி செய்து, யக்ஞபூமிகளான இந்த தேசங்களை அடைய வேண்டும். சூத்திரர்கள் தங்கள் ஜீவனமான தொழில் நிமித்தமாக எந்தத் தேசத்திலும் வசிக்கலாம்.

ஏஷா தர்மஸ்ய வோயோநி: ஸமாஸேந ப்ரகீர்திதா|
ஸம்பவஷ்சாஸ்ய ஸர்வஸ்ய வர்ணதர்மாந் நிபோதத 11 25

இதுவரை இந்த தர்ம சாஸ்திரத்தின் தோற்றம் முழுவதுமாகக் கூறப்பட்டது. இவ்வுலகம் தோன்றிய விஷயமும் கூறப்பட்டது. இனி வர்ணதர்மங்களையும், ஆசிரம தர்மங்களையும் கூறுகிறேன், கேளுங்கள்:

வைதிகை: கர்மபி: புண்யைாநஷேகாதிர் த்விஜன்மநாம் 11
கார்யஷ்ஷரீரஸம்ஸ்கார: பாவந: ப்ரேத்ய சேஹ ச|| 26

பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், வைசியர்களும் கர்ப்பாதானம் முதலான வைதிகக் கிரியைகளைச் செய்ய வேண்டும்.-இவையே ஒருவனை பரிசுத்தமாக்குகின்றன. பரலோக வாழ்வையும் பெற்றுத் தருகின்றன.

கார்ப்பைர்ஹோமைர் ஜாதகர்ம சௌட மௌஞ்ஜீநிபந்தநை: |
பைஜிகம் கார்பிகம் சைநோ த்விஜாநாம பம்ருஜ்யதே || 27

கர்ப்பாதானம் முதலான ஹோம சடங்குகளாலும், ஜாதகர்மா, சவுலம், மெளஞ்சீபந்தனம், உபநயனம் முதலான சடங்குகளாலும், பெற்றோரால் ஏற்பட்ட பீஜதோஷம், கர்ப்பவாச தோஷம் முதலானவற்றால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், வைசியர்களும் பரிசுத்தமாகிறார்கள்.

ஸ்வாத்யாயேந வரதைர்ஹோமைஸ்த்ரை வித்யேநேஜ்யயா சுதை: |
மஹாயக்ஞைஷ்ச யக்ஞைஷ்சப்ராஹ்மீயம் க்ரியதே தது: II 28

வேதமோதுவதாலும், விரத நியமங்களாலும், ஹோமங்களாலும், காலை மாலை செய்யும் ஒளபாசனம் முதலான கிரியைகளாலும், மூன்று வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெறுவதாலும், புத்ரோத்பத்தியாலும், தர்ப்பணங்களாலும், பஞ்சமஹா யக்ஞங்களாலும், பெரிய யாகங்களாலும் இவ்வுடலானது பிரம்மபதத்தை அடைவதற்கு ஏற்றதாக ஆகிறது.

ப்ராங்நா பிவர்தநாத்பும்ஸோ ஜாதகர்ம விதீயதே |
மந்த்ரவத் ப்ராஷனம் சாஸ்ய ஹிரண்ய மது ஸர்பிஷாம் 29

தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்பே ஜாதகர்மா என்னும் சடங்கு செய்ய வேண்டும். தங்கம், நெய், தேன் இவைகளை மந்திரபூர்வமாக நாவில் தடவ வேண்டும்.(ஒரு குழந்தை பிறந்தவுடன் முதலில் ஜாதக மா செய்ய வேண்டும். பிறந்ததும் செய்யும் சடங்கு இது. குழந்தை பிறந்த அன்று-பித்ருக்கள் அவ்விடம் வருகிறார்கள். குழந்தையின் தந்தை குழந்தை பிறந்தவுடன், அது நடு இரவானாலும்கூட ஸ்நானம் செய்ய வேண்டும். நாந்தி சிராத்தம், தானம் முதலியவைகளைச் செய்யவேண்டும். தொப்புள்கொடி அறுப்பதற்குள் இதைச் செய்ய வேண்டும். இதற்கு ஜாதகர்மா என்று பெயர்.(இந்த ஜாதகர்மா குழந்தைக்கு ஏற்படக்கூடிய சகல தோஷங்களையும் நீக்குகிறது.பாலாரிஷ்டம் ஏற்படாது. துஷ்டகிரகங்கள் குழந்தையின் அருகே வரா. தொப்புள்கொடி அறுப்பதற்கு முன்பு தீட்டு இல்லை என்பதால், அதற்கு முன்பே இதைச் செய்யவேண்டும்.)

நாமதேயம் தஷம்யாம் து த்வாதஷ்யாம் வாஸ்ய காரயேத்
புண்யே திதெள முஹுர்தேவா நக்ஷத்ரேவா குணாந்விதே |-30

பத்தாவது நாள் கடந்த பிறகு, பதினோராவது நாள் அல்லது பன்னிரண்டாவது நாள் அல்லது வேறு ஏதாவது சிறந்த நன்னாளில், நல்ல முகூர்த்தத்தில், நல்ல நட்சத்திரத்தில் பிராம்மணனுக்கும், க்ஷத்திரியனுக்கும், வைசியனுக்கும் நாமகரணம் செய்ய வேண்டும்.

மங்கல்யம் ப்ராஹ்மணஸ்யஸ்யாத் க்ஷத்ரியஸ்ய பலாந்விதம் வைஷ்யஸ்ய தநஸம்யுக்தம் ஷூத்ரஸ்ய து ஜுகுப்ஸிதம் || 31
பிராம்மண குழந்தைக்கு வைக்கும்பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்கு பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும்.

ஷர்மவத் ப்ராஹ்மணஸ்ய ஸ்யாத் ராக்ஞோ ரக்ஷா ஸமந்விதம், 1 வைஷ்யஸ்ய புஷ்டிஸம்யுக்தம் த்ரஸ்யப்ரைஷ்ய ஸம்யுக்தம் || 32

பிராம்மணனுடைய பெயர் சர்மா என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். வைசியனுக்கு செல்வத்தோடு கூடியதாக இருக்க
வேண்டும். சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்கவேண்டும்.
(பிராம்மணனுக்கு நாராயணசர்மா, சிவசர்மா என்று தெய்வப் பெயர்களாக அமைய வேண்டும். பிராம்மணன் வீட்டில் எப்போதும் வேத சப்தமும், ஹோமப்புகையும் இருக்கும். அங்கே குழந்தைகளையோ பெரியவர்களையோ கூப்பிடும் குரல்கூட புண்ணியத்தைத் தருவதாக அமைய வேண்டும்.(க்ஷத்திரியனுக்கு வர்மா என்ற பதம் சேர்க்கப்பட வேண்டும்.விக்ரமாதித்தன், ராஜராஜன், வீரபாண்டியன் என்பது போன்று பெயரிலேயே கம்பீரமும் ‘இவன் காக்கப் பிறந்தவன்’ என்ற தொனியும் தெரிய வேண்டும்.(வைசியன் செல்வத்தைப் பெருக்குபவன். அதை உண்ர்த்தும் வண்ணம் தனகுப்தன் என்பது போன்று பெயர் அமைய வேண்டும்.வைசியனுக்கு குப்தா என்ற பதம் அல்லது பாலன் என்ற பதம் பெயரோடு சேர்க்கப்பட வேண்டும்-(சூத்திரன் பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்குப் பணிபுரிபவன் என்பதால் இவன் பெயரோடு தாசன் என்ற பதம் சேர்க்கப்பட வேண்டும்.)

ஸ்த்ரீணாம் சுகோத்யமக்ரூரம் விஸ்பஷ்டார்த்தம் மநோஹரம்
மங்கள்யம் தீர்க்கவர்ணாந்த மாஷீர் வாதா பிதா நவத் || 33

பெண்களுக்கு இடும் பெயர்கள் சுகமாக உச்சரிக்கக் கூடியதாகவும்,குரூரமான அர்த்தம் கொடுக்கும் சொல்லாக இல்லாமலும், பொருளற்றதாக இல்லாமலும், மனத்துக்கு
ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியதாகவும், மங்களமான சொல்லாகவும் நெடில் எழுத்து ஈற்றாக இருப்பதாகவும், அதாவது நீட்டி தீர்க்கமாகச் சொல்லும் அட்சரத்தோடு முடிவதாகவும் (உதாரணமாக ரமா, உமா என்றபெயர்களைக் கூறலாம் ) ஆசிகளைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். (காயத்ரீ தேவி, லக்ஷ்மீ தேவி முதலான பெயர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்)

சதுர்த்தேமாஸி கர்த்தவ்யம் ஷிமோர்நிஷ்க்ரமணம் க்ருஹாத் ஷஷ்டே அன்னப்ரா ஷநம் மாஸி யத்வேஷ்டம் மங்களம் குலே || 34
நான்காம் மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று சூரியனை தரிசிக்கச் செய்ய வேண்டும். ஆறாவது மாதம் அன்னம் ஊட்டும் சடங்கைச் செய்ய வேண்டும். அல்லது அவரவர் குல வழக்கப்படி அந்தந்த சடங்குகளைச் சுபதினங்களில்செய்ய வேண்டும்.(இந்தச் சடங்குக்கு அன்னபிராசனம் என்று பெயர். விக்னேஸ்வர பூஜை செய்து, புண்யாஹ வாசன தீர்த்தத்தால்குழந்தையையும், அன்னத்தையும் ப்ரோக்ஷிக்க வேண்டும். அதாவது தீர்த்தத்தை குழந்தையின் மீதும், அன்னத்தின் மீதும் தெளித்து மந்திரபூர்வமாக சுத்தமாக்குகிறோம்.
பிரதிசரம் என்ற கங்கணம் கட்ட வேண்டும். பிரதிசரம் என்பது கயிறு. ஒன்பது இழைகளால் ஆனது.-இதை மந்திரபூர்வமாக குழந்தையின் கையில் கட்ட வேண்டும்.இதை கங்கண தாரணம் என்றும் சொல்வார்கள். ஆண் குழந்தைக்குவலது கையிலும், பெண் குழந்தைக்கு இடது கையிலும் கட்ட வேண்டும். பிறகு தங்கப் பாத்திரத்தில் அன்னம் வைத்து, அதனோடு சிறிதுதயிர், தேன், நெய்மூன்றையும் சேர்த்துக் கலந்து, குழந்தைக்குஊட்ட வேண்டும்.
இதனால் குழந்தைக்கு ஒளஷதி தேவதைகளின் அனுக்ரஹமும்,-ஜல தேவதைகளின் அனுக்ரஹமும் ஏற்படும்.)

சூடாகர்ம த்விஜாதீநாம் ஸர்வேஷாமேவ தர்மத: ப்ரதமே அப்தே த்ருதீயே வா கர்த்தவ்யம் ஷ்ருதி சோதநாத்||| 35
‘சூடாகர்மா’ என்னும் குடுமி வைக்கும் சடங்கானது பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்கு முதலாம் ஆண்டு அல்லது மூன்றாம்ஆண்டில் செய்யப்பட வேண்டியது. அல்லது அவரவர் வழக்கப்படி செய்ய வேண்டியது.

கர்ப்பாஷ்டமே அப்தேகுர்வீத ப்ராஹ்மணஸ் யோபநயநம் |
கர்ப்பாதேகாதஷே ராக்ஞோ கர்ப்பாத்து த்வாதஷே விஷ: || 36

பிராம்மணனுக்கு ஏழு வயதிலும், க்ஷத்ரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் உபநயனம் செய்ய வேண்டும். இது பொது விதி. அனைத்து பிராம்மணர்களுக்கும், அனைத்து க்ஷத்ரியர்களுக்கும், அனைத்து வைசியர்களுக்குமான பொது விதி. விசேஷமான விதி அடுத்துச் சொல்லப்படுகிறது.(உபநயனம் என்பது முக்கியமான சடங்கு. ஒரு மனிதனின் வாழ்வில் மிகமிக முக்கியமான அங்கம் வகிக்கும் சடங்கு இது. இந்தச் சடங்கில் பூணூல் அணிவிக்கப்படுகிறது. இந்தச்சிறுவன் இது முதல் சிஷ்யனாகிறான். பிரம்மசாரியாகிறான். உபநயனம் என்றால் சிஷ்யனை குருவிடம் அழைத்துச் செல்வது என்று பொருள் பாலனாக, சிறுவனாக இருக்கும் வரை அவனுக்கு எந்த நியமமும் கிடையாது. ஆனால் உபநயனம் ஆனதும் அவனுக்குக் கட்டுப்பாடுகள் ஏற்படும்.(உபநயனம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது ஆகும்.முதலில் பிறந்தது ஒரு பிறவி. இப்போது மீண்டும் இன்னொரு பிறவி எடுக்கிறான். அதனால்தான் உபநயனம் என்ற சடங்கு முடித்தவர்களுக்கு த்விஜன் என்ற பெயர் ஏற்பட்டது. இதற்கு இரண்டு பிறவிகள் கொண்டவன் என்று பொருள்.(தற்காலத்தில் த்விஜன் என்ற சொல் பிராம்மணனை மட்டும் குறிப்பதாக நினைக்கிறார்கள். அது தவறு. த்விஜன் என்ற சொல் பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன் மூவரையுமே குறிக்கும்.ஏனெனில் மூவருக்குமே உபநயனச் சடங்கு உண்டு. த்விஜன் என்பதையே தமிழில் இரு பிறப்பாளன் என்று சொல்கிறார்கள்.(இந்த உபநயனச் சடங்கை பிராம்மணனுக்கு ஏழு வயதிலும்,க்ஷத்திரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் செய்ய வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.இது பொது விதி. விசேஷ விதியும் உண்டு.(க்ஷத்திரியர்களிலேயே அரசன், சேனாபதி போன்றோரும் பிராம்மணர்களில் பிரதான புரோகிதர் போன்றோரும்,வைசியர்களிலும் மிக்க பெரும் செல்வந்தர்களும் தங்களைப் போன்றே தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பும்ோது எந்த வயதில் உபநயனம் செய்ய வேண்டும் என்பதை அடுத்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.)

ப்ரஹ்மவர்ச்சஸகாமஸ்ய கார்யம் விப்ரஸ்ய பஞ்சமே|1 ராக்ஞோ பலார்த்திநஷ்ஷஷ்டே வைஷ்யஸ்யேஹார்த்திநோ அஷ்டமே|| 37 பிரம்மதேஜஸை விரும்பும் பிராம்மணனுக்கு ஐந்தாவது வயதிலும், பலத்தைக் கோரும் க்ஷத்ரியனுக்கு ஆறாவது வயதிலும்,
வாணிபம் கோரும் வைசியனுக்கு எட்டாவது வயதிலும் உபநயனம் செய்து வைக்க வேண்டும்.

ஆ ஷோடஷாத் ப்ராஹ்மணஸ்ய ஸாவித்ரீ நாதிவர்த்ததே | ஆத்வாவிம்ஷாத் க்ஷத்ரபந்தோரா சதுர்விம்ஷதேர்விஷ: || 38
பிராம்மணனுக்கு பதினாறாவது வயது வரையும், க்ஷத்ரியனுக்கு இருபத்திரண்டாவது வயது வரையும், வைசியனுக்கு இருபத்து நான்காவது வயது வரையும் காயத்ரி அழியாமலிருக்கும். அதாவது அந்த வயதுக்குள்ளாவது காயத்ரி உபதேசம் நடைபெற வேண்டும்.
(இப்படிக் கூறியிருப்பது தவிர்க்க முடியாத காரணத்தால் குறிப்பிட்ட வயதில் செய்ய முடியாமல் போய், அதற்குப் பிறகும் காலம் கடந்து கொண்டே போனவர்களுக்காக சொல்லப்பட்டது. இந்த வயதுகள் உபநயனத்துக்கான வயதுகள் அல்ல. ஆனால் தவிர்க்க
முடியாமல் தள்ளிப் போனாலும் இந்த இந்த வயதுக்குள் செய்ய வேண்டும்,செய்யலாம் என்பதற்காகக் கூறப்பட்டது.)

அதஊர்த்வம் த்ரயோ அப்யேதே யதாகாலமஸம் ஸ்க்ருதா: | ஸாவித்ரீ பதிதா வ்ராத்யா பவந்த்யார்ய விகர்ஹிதா: || 39
அதுவரையிலும் உபநயனம் செய்யாதவர்கள் காயத்ரீ உபதேசம் பெறும் அருகதையை இழந்தவர்களாவர். இவர்கள் சான்றோர்களால் நிந்திக்கப்படுவார்கள். வைதீகச் சடங்குகளுக்கு இவர்களைச் சேர்க்க மாட்டார்கள்.

நைதைரபூதைர் விதிவதாபத்யபி ஹி கர்ஹிசித் | ப்ராஹ்மர்ந் யௌநாம்ஷ்ச ஸம்பந்தாநாசரேத்ப்ராஹ் மணஸ்ஸஹ||40

இவ்வாறு தூய்மை இழந்து விதிப்படி பிராயச்சித்தம் செய்து கொள்ளாதவனோடு பிராம்மணன், யாகம், கன்யாதானம் முதலான எந்தச் சம்பந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது.

கார்ஷ்ண ரௌரவ பாஸ்தாநி சர்மாணி ப்ரஹ்மசாரிண: |
வஸீரந்நாநுபூர்வ்யேண ஷான ெமாவிகாநிச || 41

பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி ருரு மிருகத்தின் தோலால் ஆன மேலாடையையும், வைசிய பிரம்மசாரி ஆட்டுத் தோலால் ஆன மேலாடையையும் அணிய வேண்டும்.-பிராம்மணன் நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும். க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.
வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும்.

மௌஞ்ஜீ த்ரிவ்ருத்ஸமா ஷ்ௗஷ்ணா கார்யா விப்ரஸ்ய மேகலா |
க்ஷத்ரியஸ்ய து மௌர்வீஜ்யா வைஷ்யஸ்ய ஷணதாந்தவீ|| 42

பிராம்மண பிரம்மசாரி, முஞ்சிபுல்லால் திரிக்கப்பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.-அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப்பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரைஞாணை அணிய
வேண்டும்.-வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப்பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரைஞாணை அணிய வேண்டும்.

முஞ்ஜாலாபே து கர்த்தவ்யா: குஷாஷ்மந்தகபல்பஜை: |
த்ரிவ்ருதா கரந்திநைகேந த்ரிபி பஞ்சபிரேவ வா |-43

முஞ்சிப்புல் முதலானவை கிடைக்காதபோது, தர்ப்பை, நாணல், கோரை முதலானவற்றை முப்புரிகளாகத் திரித்து அதை ஒரு முடிச்சோடு பிராம்மண பிரம்மசாரியும், மூன்று முடிச்சுகள் போட்டு க்ஷத்ரிய பிரம்மசாரியும், ஐந்து முடிச்சுகள் போட்டு வைசிய பிரம்மசாரியும் அணிய வேண்டும்.

கார்ப்பாஸ முபவீதம் ஸ்யாத் விப்ரஸ் யோர்த்வ வ்ருதம் த்ரிவ்ருத் ஷணஸுத்ரமயம் ராக்ஞோ வைஷ்யஸ்யாவிக ஸௌத்ரிகம் || 44
வலதுபுறமாக சுற்றிய ஒன்பது இழைகள் கொண்டதாக பூணூல்இருக்க வேண்டும். பிராம்மண பிரம்மசாரிகளின் பூணூல் பஞ்சினால் ஆனதாகவும், க்ஷத்ரிய பிரம்மசாரிகளின் பூணூல் சணலாலானதாகவும், வைசிய பிரம்மசாரிகளின் பூணூல் வெள்ளாட்டு முடியினா
லானதாகவும் இருக்க வேண்டும்.

ப்ராஹ்மணோ பைல்வபாலாஷௌ க்ஷத்ரியோ வாடகாதிரௌ |
பைல வெளதும்பரௌ வைஷ்யோ தண்டாநர்ஹந்தி தர்மத: 11 45

பிராம்மண பிரம்மசாரி வில்வம், புரசு இவையிரண்டில்ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.-க்ஷத்ரிய பிரம்மசாரி ஆல், கருங்காலி இவையிரண்டில் ஏதேனும்ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும். வைசிய பிரம்மசாரி அத்தி, பைலம் இவ்விரண்டில் ஏதேனும்ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.

கேஷாந்திகோ ப்ராஹ்மணஸ்ய தண்ட: கார்ய: ப்ரமாணத: |
லலாடஸம்மிதோ ராக்ஞ: ஸ்யாத்து நாஸாந்திகோ விஷ: II 46

பிராம்மணன் ஏந்தும் தண்டம் தலை வரை உயரமுடையதாக இருக்க வேண்டும். க்ஷத்ரியன் ஏந்தும் தண்டம் நெற்றி வரை இருக்கவேண்டும். வைசியன் ஏந்தும் தண்டம் மூக்கு வரை இருக்கவேண்டும்.

ருஜவஸ்தேது ஸர்வேஸ்யுரவ்ரணா: ஸௌம்யதர்ஷநா: |
அநுத்வேககரா ந்ருணாம் ஸத்வசோ நாக்நிதூஷிதா: || 47

அந்த தண்டங்கள் கோணலாக இருக்கக் கூடாது. வெட்டுப்பட்ட வடுக்கள் அற்றவையாக இருக்க வேண்டும். பார்க்க அழகாக இருக்க வேண்டும். பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும்
வண்ணம் இருக்கக் கூடாது.மேல் பட்டையோடு இருக்க வேண்டும். நெருப்புப் பட்டதாக இருக்கக் கூடாது.

ப்ரதிக்ருஹ்யேப்ஸிதம் தண்டமுபஸ்தாய ச பாஸ்கரம் |
ப்ரதக்ஷணம் பரீத்யாக்நிம் சரேத்பைக்ஷ்யம் யதாவிதி || 48

ஒவ்வொரு நாளும் தண்டத்தைக் கையில் ஏந்தி, சூரிய நமஸ்காரம் செய்து, தீயை வலம் புரிந்து, பிறகு முறைப்படி பிக்ஷை ஏற்கச் செல்ல வேண்டும்.

பவத்பூர்வம் சரேத்பைஷ்யமுப தோ த்விஜோத்தம: |
பவந்மத்யம் து ராஜந்யோ வைஷ்யஸ்து பவதுத்தரம் || 49

பிராம்மண பிரம்மச்சாரி ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று கூறி பிக்ஷை கேட்க வேண்டும்.
க்ஷத்ரிய பிரம்மச்சாரி ‘பிக்ஷாம் பவதி தேஹி’ என்று கூறி பிக்ஷை கேட்க வேண்டும்.
வைசிய பிரம்மச்சாரி ‘பிக்ஷாம் தேஹி பவதி’ என்று கூறி பிக்ஷை கேட்க வேண்டும்.

மாதரம் வா ஸ்வஸாரம் வா மாதுர்வா பகிநீம் நிஜாம் |
பிக்ஷேத பிக்ஷாம் ப்ரதமம் யா சைநம் நாவமாநயேத் || 50

முதலில் தாயிடம். அல்லது சகோதரியிடம், அல்லது தாயின் சகோதரியிடம், அல்லது யார் இவனை அவமானப்படுத்த மாட்டார்களோ, அந்தப் பெண்ணிடம் பிட்க்ஷை ஏற்க வேண்டும்.

ஸமாசஹ்ருத்ய து தத்பைக்ஷம் யாவதர்த்தமமாயயா |
நிவேத்ய குரவே அஷ்ரீயாதாசம்ய ப்ராஜ்முகஷ்சுசி: |-51

இவ்வாறாக பிக்ஷான்னத்தைக் கொண்டு, குருவுக்குக் கொடுத்து, அவரது அனுமதியின் பேரில் அவர் கொடுத்த மிகுதி அன்னத்தை, ஆசமனம் செய்து, கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

ஆயுஷ்யம் ப்ராங்முகோ புங்க்தே யஷஸ்யம் தக்ஷிணாமுக: I
ஷ்ரியம் ப்ரத்யங்முகோ புங்க்தே றுதம் புங்க்தே ஹ்யுதங்முக: II 52

தீர்க்காயுளை வேண்டுபவன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.
கீர்த்தியை விரும்புபவன் தெற்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.
செல்வத்தை விரும்புபவன் மேற்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.
மோசத்தைவிரும்புபவன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

உபஸ்ப்ருஷ்ய த்விஜோ நித்யமந்நமத்யாத்ஸமாஹித: | புக்த்வா சோபஸ்ப்ருஷேத்ஸம் யகத்பி: காநி சஸம்ஸ்ப்ருஷேத்|| 53
பிரம்மச்சாரி தினமும் ஆசமனம் செய்து, கிழக்கு நோக்கி அமர்ந்து வேறு நினைப்பின்றி உண்ண வேண்டும். உண்ட பிறகு கை கால்களை அலம்பிக்கொள்ள வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, நீரினால் இந்திரியங்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜயேதஷநம் நித்ய மத்யாச்சை ததகுத்ஸயந் 1 த்ருஷ்ட்வா ஹ்ருஷ்யேத் ரப்ரஸ்தேச்ச ப்ரதிநந் தேச்ச ஸர்வ : || 54
எப்போதும் அன்னத்தை பூஜிக்க வேண்டும். அன்னத்தை நிந்திக்காமல் சாப்பிட வேண்டும். மனத்திலுள்ள கலக்கங்களை யெல்லாம் விட்டுவிட்டு சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது நிர்மலமான மனத்தோடு சாப்பிட வேண்டும். ‘இந்த அன்னம் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்? என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

பூஜிதம் ஹ்யஷநம் நித்யம் பலமூர்ஜம் ச யச்சதி 1
அபூஜிதம் து யத்புக்த்தமுபயம் நாஷயேதிதம் || 55

இவ்வாறாக தினமும் துதிக்கப்பட்டு உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அளிக்கும். மாறாக, துதிக்கப்படாமல் உட்கொண்ட உணவு பலத்தையும் வீரியத்தையும் அழிக்கும்.

நோச்சிஷ்டம் கஸ்ய சித்தத்யாந் நாத்யாச்சைவ ததாந்தரா | நசைவாத்யஷநம் குர்யாந் நசோச்சிஷ்ட: க்வசித் ரஜேத் || 56
எச்சிலான உணவை யாருக்கும் கொடுக்கக் கூடாது.-மத்தியானமும் இரவும் உணவுண்ண வேண்டும். அது தவிர நடுநடுவே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாகாது. மத்தியானமும் இரவும் சாப்பிடும் போதுகூட அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. எச்சில் கையோடு எங்கும் போகக் கூடாது.

அநாரோக்ய மநாயுஷ் யமஸ்வர்க்யம் சாதிபோஜநம்
அபுண்யம் லோகவித்விஷ்டம் தஸ்மாத் தத் பரிவர்ஜயேத் || 57

மிகுந்தபடியாக, அளவுக்கதிகமாக சாப்பிடுவதால், ஆரோக்கியம் கெடும். ஆயுள் குறையும். சுவர்க்கம் முதலான புண்ணிய உலகங்களை அடைவதற்கு இது எதிரி. அதாவது அதிக அளவில் சாப்பிடுவது புண்ணியலோக பிராப்திக்கு தடையாகி விடும். அவ்வாறே நற்காரியங்களைச் செய்வதற்கும் இது தடையாகும். மேலும் உலகத்தாரின் தூற்றுதலுக்கும் ஆளாக நேரிடும். எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.

ப்ராஹ்மேண விப்ரஸ்தீர்த்தேந நித்யகாலமுப ஸ்ப்ருஷேத் | காயத்ரைதஷிகாப்யாம் வா ந பித்ர்யேண கதாசந|| 58
பிராம்மாணர் முதலானோர் பிரம்ம தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்ய வேண்டும். அன்றேல், காய தீர்த்தத்தாலோ தேவதீர்த்தத்தாலோ ஆசமனம் செய்யலாம். அதன்றி பித்ரு தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யலாகாது.

அங்குஷ்ட மூலஸ்ய தலே ப்ராஹ்மம் தீர்த்தம் ப்ரசக்ஷதே| காயமங்குலிமூலே அக்ரேதைவம் பித்ர்யம் தயோரத: || 59
பெருவிரலின் முதல்பாகத்தில் பிரம்ம தீர்த்தம் உள்ளதாகவும், சுண்டு விரலின் முதல் பாகத்தில் காய தீர்த்தம் உள்ளதாகவும், விரல் நுனிகளில் தேவ தீர்த்தம் உள்ளதாகவும், பெருவிரல் சுட்டுவிரல்களுக் கிடையே பித்ரு தீர்த்தம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

த்ரிராசாமேதப: பூர்வம் த்வி: ப்ரம்ருஜ்யாத்ததோ முகம் | காநி சைவ ஸ்ப்ருஷேதத் பிராத்மாநம் ஷிர ஏவ ச || 60
பிரம்ம தீர்த்தம் முதலானவைகளால் மூன்று முறைகள் ஆசமனம் செய்ய வேண்டும். உதடுகளை மூடிக் கொண்டு நீரினால் வாயைத் துடைக்க வேண்டும். பிறகு இடது கரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு தலையில் இருக்கின்ற இந்திரியங்களான கண்கள், காதுகள், மூக்கு முதலியவைகளையும், மார்பையும் தலையையும் துடைக்க வேண்டும்.

அனுஷ்ணா பிரபே நாபிரத்பிஸ்தீர்த்தேந தர்மவித் | ஷௌசேப்ஸுஸ்ஸர்வதா அசாமேதேகாந்தே ப்ராகுதஸ்முக: 61
தூய்மையை விரும்பும் தர்மமறிந்த பிராம்மணன் ஏகாந்தமான இடத்தில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து, காய்ச்சாததும் நுரையற்றதுமான தண்ணீரினால் ஆசமனம் செய்ய வேண்டும்.

ஹ்ருத்காபி: பூயதே விப்ர: கண்டகாபிஸ்துபூமிப: | வைஷ்யோஅத்பி: ப்ராஷிதாபிஸ்து ஷுத்ர: ஸ்ப்ருஷ்டாபிரந் தத: | 62
ஆசமனம் செய்யும் நீர், உட்கொள்ளும்போது பிராம்மணனுக்கு இருதயம் வரை செல்லும் அளவில் இருக்க வேண்டும். க்ஷத்ரியனுக்கு கழுத்து வரையில் நனைக்க வேண்டும். வைசியனுக்கு வாய்க்குள் போகுமளவுக்கு இருக்க வேண்டும். இந்த அளவுகளில் இவர்கள்
ஆசமனம் செய்வதாலேயே பரிசுத்தி பெறுகிறார்கள்.

உத்ருதே தக்ஷிணே பாணாவுபவீத்யுச்யதே த்விஜ: |
ஸவ்யே ப்ராசீந ஆவீதி நிவீதி கண்டஸஜ்ஜநே || 63

பூணூலானது வலது தோளின் மீது இருக்கும்போது ‘உபவீதி’ எனப்படும். இடது தோளின் மீது போட்டுக் கொண்டிருக்கும் போது ‘ப்ராசீனாவீதி’ எனப்படும். கழுத்தில் மாலையாக போட்டுக் கொண்டால் நிவீதி’ எனப்படும்.

மேகலாமஜிநம் தண்டமுபவீதம் கமண்டலும்
அப்ஸு ப்ராஸ்ய விநஷ்டாநி க்ருஹ்ணீதாந்யாநி மந்த்ரவத் || 64

அரைஞாண், மான் தோல், பூணூல், கமண்டலம் முதலானவை சேதமடைந்தால் தண்ணீரிலே போட்டுவிட்டு, புதியவற்றை மந்திரப் பூர்வமாக ஏற்க வேண்டும்.

கேஷாந்த: ஷோடஷே வர்ஷேப்ராஹ்மணஸ்ய விதீயதே || ராஜந்யபந்தோர்த் வாவிம்ஷே வைஷ்யஸ்ய த்வயதிகே தத: II 65
முடியெடுக்கும் கிரியையானது பிராமணனுக்கு கர்ப்பகாலம் தொடங்கி பதினாறாவது வருடத்திலும், க்ஷத்ரியனுக்கு கர்ப்பகாலம் தொடங்கி இருபத்திரண்டாவது வருடத்திலும் செய்ய வேண்டும். வைசியனுக்கு கர்ப்பகாலம் தொடங்கி இருபத்து நான்காவது வருடத்தில் செய்ய வேண்டும்.

அமந்த்ரிகா து கார்யேயம் ஸ்த்ரீணாமாவ்ருதஷேஷத: |
ஸம்ஸ்காரார்த்தம் ஷரீரஸ்ய யதாகாலம் யதாக்ரமம் || 66

சரீர பரிசுத்திக்காக, பெண்களுக்கு எல்லாக் கிரியைகளும் குறிப்பிட்ட காலத்தில் சாஸ்திர முறைப்படி, ஆனால் மந்திரங்கள் இல்லாமல் செய்ய வேண்டும்.

வைவாஹிகோ விதி: ஸ்த்ரீணாம் ஸம்ஸ்காரோ வைதிகஸ்ம்ருத: |
பதிஸேவா குரௌ வாஸோ க்ருஹார்த்தோ அக்நிபரிக்ரியா |-67

பெண்களுக்குத் திருமணமே, உபநயன கிரியை என்று சொல்லப்படுகிறது. பதிக்கு செய்யும் பணிவிடையே குருகுலவாசம், வீட்டு வேலைகளை நிர்வகிப்பதே அக்னிஹோத்ரம் என்னும் கிரியை யாகும்.

ஏஷ ப்ரோக்தோ த்விஜாதீநாமௌப நாயநிகோ விதி: |
உத்பத்தி வ்யஞ்ஜக: புண்யகர்ம யோகம் நிபோதத || 68

இருபிறப்பாளருக்கு, இரண்டாவது பிறப்பை ஏற்படுத்துவதும் புண்ணியமானதுமான உபநயன் சம்பந்தமானவை அனைத்தும் கூறப்பட்டது . இனி அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கூறுகிறேன்.

உபநீய குரு சிஷ்யம் ஷிச்சயேச்சௌசமாதித: |
ஆசாரமக்னி கார்யம் ச ஸந்த்யோ பாஸநமேவ ச!-69

குருவானவர் உபநயனம் செய்து வைத்து முதலில் ஆசாரம் முதலானவைகளையும் காலை, மாலை செய்யும் அக்னி ஹோத்ரம், சந்த்யோபாசனம் முதலியவைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அத்யேஷ்யமாணஸ்த்வாசாந்தோ யதாசாஸ்த்ரமுதங்முக: 1
ப்ரஹ்மாஞ்சலி க்ருதோ அத்யாப்யோ லகுவாஸா ஜிதேந்த்ரிய: |-70

அத்யயனம் செய்யப் போகும் சிஷ்யன் பரிசுத்தமான ஆடைகளை அணிந்து விதிமுறைப்படி ஆசமனம் செய்து, இந்திரியங்களை அடக்கியவனாக பிரம்மாஞ்சலி செய்த பிறகு,குருவானவர் அந்த சிஷ்யனை உட்கார வைத்து, அவனை வேத அத்யயனம் செய்ய வைக்க வேண்டும்.

ப்ரஹ்மாரம்பே அவஸாநே ச பாதௌ க்ராஹ்யௌ குரோஸ்ஸதா |
ஸம்ஹத்ய ஹஸ்தாவத்யேயம் ஸ ஹி ப்ரஹ்மாஞ்சலி: ஸ்ம்ருத: /-71

வேத அத்யயனம் ஆரம்பிக்கும் போதும், முடித்த பிறகும், எப்போதும் குருவின் பாதங்களை சேர்த்துப் பற்றிக் கொண்டு வணங்க வேண்டும். கைகளைக் கட்டிக் கொண்டு அத்யயனம் செய்ய வேண்டும். இது பிரம்மாஞ்சலி எனப்படும்.

வ்யத்ய ஸ்தபாணிநா கார்யமுபஸங்க்ரஹணம் குரோ: |
ஸவ்யேந ஸவ்ய: ஸ்ப்ருஷ்டவ்யோ தட்சிணேந ச தட்சிண: | 72

வலது கரத்தால் குருவின் வலது பாதத்தையும், இடது கரத்தால் குருவின் இடது பாதத்தையும் பற்றிக் கொள்ள வேண்டும்.

அத்யேஷ்யாமாணம் து குருர் நித்ய காலமதந்த்ரித: |
அதீஷ்வ போ இதி ப்ரூயாத் விராமோ அஸ்த்விதி சாரமேத் ॥ 73

சோம்பலின்றி வேதாத்யயனம் செய்யப் போகும் சிஷ்யனிடம்’ஆரம்பி’ என்று சொல்லி ஆரம்பித்து வைக்க வேண்டும். முடிக்கும்போது ‘நிறுத்து’ என்று சொல்லி நிறுத்த வேண்டும்.

ப்ரஹ்மண: ப்ரணவம் குர்யாதாதாவந்தே ச ஸர்வதா |
ஸ்ரவத்ய நோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விஷீர்யதே 74

வேதாத்யயனம் ஆரம்பிக்கும் போது, முதலிலும் முடிவிலும் எப்போதும் ஓங்காரத்தை உச்சரிக்க வேண்டும். வேதம் ஆரம்பிக்கும்போது ஓங்காரம் உச்சரிக்காவிடில் படித்தது
முழுவதும் சிறிது சிறிதாக மறந்து போகும். முடிக்கும்போது ஓங்காரம் உச்சரிக்காவிடில் படித்தது எதுவும் மனத்தில் தங்காது.

ப்ராக்கூலாந் பர்யுபா ந: பவித்ரைஸ்சைவ பாவித: |
ப்ராணாயாமைஸ்த்ரிபி; பூதஸ்தத ஓங்காரமர்ஹதி ||75

கிழக்கு முகமாக நுனிகள் கொண்ட தர்ப்பைகளின் மீது அமர்ந்து, இரண்டு கரங்களிலும் தர்ப்பைகளை வைத்துக் கொள்வதனால் பரிசுத்தமானவனாகி, மும்முறை பிராணாயாமம்
செய்து, பிறகு ஓங்காரத்தை உச்சரித்து, அதன் பிறகு வேத அத்யயனத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அகாரம் சாப்யுகாரம் ச மகாரம் ச ப்ரஜாபதி: 1
வேதத்யாந்நி ரதுஹத்பூர் புவஸ்வரிதீதி ச || 76

பிரம்மதேவர்,ரிக்,ய ர், ஸாமம் என்னும் மூன்று வேதங்களிலிருந்தும் அகாரம், உகாரம், மகாரங்களையும், பூ: புவ: ஸ்வ: என்னும் மூன்றினையும் முறையே கிரஹித்தார்.

த்ரிப்ய ஏவது வேதேப்ய: பாதம்பாதமதூது ஹத் * ததித்ர்யுசோ அஸ்யாஸ்ஸாவித்ர்யா: பரமேஷ்டீ ப்ரஜாபதி: || 77
பிரம்மதேவர் மூன்று வேதங்களினின்றும் ‘தத்ஸவிது:’ என்னும் ‘ரிக்’கினுடைய ஒவ்வொரு பாதத்தையும் கிரஹித்தார்.

ஏததக்ஷரமேதாம் ச ஜபந் வ்யாஹ்ருதி பூர்விகாம் |
ஸ்ந்த்யயோர் வேதவித்விப்ரோ வேதபுண்யேந யுஜ்யதே 78

இரண்டு சந்தியா காலங்களிலும் ஓங்காரத்துடன்கூட இந்த ‘ரிக்’கை ஜபிக்கும் வேதமறிந்தவனான பிராம்மணன் புண்ணியத்தை அடைகிறான்.

ஸஹஸ்ரக் த்வஸ்த்வப்யஸ்ய பஹிரேதத்ரிகம் த்விஜ: |
மஹதோ அப்யேநஸோ மாஸாத்வசே வாஹிர்விமுச் யதே |-79

பிராம்மண, க்ஷத்ரிய, வைசியர்கள் சந்தியா காலத்திலும் மற்ற சமயங்களிலும் கிராமத்துக்கு வெளியே, ஓங்காரத்துடன் கூடிய மூன்று வியாஹ்ருதிகளைக் கொண்ட காயத்ரி மந்திரத்தை, ஒவ்வொரு நாளும் ஆயிரம் முறை ஜபித்தால், ஒரு மாத காலத்தில்,
பாம்பு தன் சட்டையை விட்டு விடுவது போன்று, மகா பாவங்களிலிருந்தும் விடுபடுவான்.

ஏதயர்ச்சா விஸம்யுக்த: காலே ச க்ரியயா ஸ்வயா |
ப்ரஹ்ம க்ஷத்ரியவிட்யோ நிர்கர்ஹணாம் யாதி ஸாதுஷு 80

சந்த்யா காலத்திலும், மற்றப் போதிலும் இந்த ‘ரிக்’கை ஜபிக்காமல், காலை, மாலை செய்ய வேண்டிய ஹோமங்களைச் செய்யாமல் இருக்கும் பிராம்மண க்ஷத்ரிய வைசியர்கள்
சான்றோரால் நிந்திக்கப் படுவார்கள்.

ஓங்காரபூர் விகாஸ்திஸ்ரோ மஹாவ்யாஹ்ருதயோ அவ்யயா:
த்ரிபதா சைவ ஸாவித்ரீ விக்ஞேயம் ப்ரஹ்மணோ முகம் || 81

ஓங்காரத்தை முதலாகக் கொண்டதும், அழிவற்றவைகளுமான-‘பூர்புவஸ்சுவ’ என்னும் மஹா வியாஹ்ருதிகளும், மூன்று பதங்களாக உள்ள சாவித்ரியும் வேதத்துக்கு முகமாக இருப்பவை என்று அறிய வேண்டும்.

யோஅதீதே அஹந்யஹந்யேதாம் த்ரீணி வர்ஷாண்யதந்த்ரித: |
ஸப்ரஹ்மப மப்யேதி வாயுபூத கமூர்த்திமாந் || 82

சோம்பலின்றி இவைகளை மூன்று வருட காலம் ஒவ்வொரு நாளும் விடாது ஜபிப்பவன் வாயுவைப் போன்று எங்கும் செல்லக்கூடிய சக்தியை அடைவான். இறந்த பிறகு பிரம்ம
லோகத்தையும் அடைவான்.

ஏகாக்ஷரம் பரம்ப்ரஹ்ம ப்ராணாயாமா: பரம் தப: 1 ஸாவித்ரியாஸ்து பரம் நாஸ்தி மௌநாத்ஸத்யம் விஷிஸ்யதே|| 83

ஓம் என்னும் ஏகாக்ஷரமேபிரம்மம் ; பிராணாயாமங்களே மேலான தவம்; காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை. மௌனத்தை விட சத்தியம் பேசுதல் மேலானது.

க்ஷரந்தி ஸர்வாவைதிக்யோஜூஹோதி யஜதிக்ரியா: |
அக்ஷரம் த்வக்ஷரம் ஞேயம் ப்ரஹ்ம சைவ ப்ரஜாபதி: || 84

வேதங்களில் வகுத்துள்ள சகல ஹோம யாகங்களாகிய கிரியைகள் அனைத்தும் நசிக்கின்றன. பிரம்ம சொரூபமான ஏகாக்ஷரம் மட்டும் அழியாமல் இருக்கும்.

விதியக்ஞாத்ஜபயக்ஞோ விசிஷ்டோ தஷபிர்குணை: |
உபாம்சு: ஸ்யாத்சதகுண: ஸாஹஸ்ரோ மானஸ: ஸ்ம்ருத: || 85

யாகங்கள், ஹோமங்களைவிட ஓம்காரம், மஹா வ்யாஹ்ருதிகளை ஜபம் செய்வது பத்து மடங்கு மேலானது. அந்த ஜபத்தையும் அருகில் இருப்பவருக்குக் கேட்காமல் ஐபிப்பது நூறு
மடங்கு மேலானது. மானசிகமாக ஜபிப்பது ஆயிரம் மடங்கு மேலானது.

யே பாக யக்ஞாஷ்சத்வாரோ விதியக்குஸமந்விதா:
ஸர்வே தே ஜபயக்ஞஸ்ய கலாம் நார்ஹந்தி ஷோடஷீம் 86

வைஸ்துதேவம், பலிகர்மா, நித்திய சிராத்தம், அதிதி போஜனம் மற்றும் பஞ்சமகா யக்ஞங்களில் பிரம்ம யக்ஞம் தவிர்த்து மீதியுள்ளவற்றிற்கு ‘பாக யக்ஞம்’ என்று பெயர். பெளர்ணமி, அமாவாசைகள் விதி யக்ஞங்கள். இந்த பாக யக்ஞங்களும் விதி யக்ஞங்களும் காயத்ரி முதலான ஜப யக்ஞத்தின் பதினாறில் ஒரு பாகத்துக்கு ஈடாகாது.

ஜப்யேநைவது ஸம்ஸித்யேத் பிராஹ்மணோ நாதிர ஸம்ஸய: |
குர்யாதந் யந்நவா குர்யாந்மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே |-87

பிராம்மணன் ஜபத்தினாலேயே மோட்சத்தை அடைவான். இதில் சந்தேகமில்லை. மற்ற யாகம் முதலானவற்றை செய்தாலும் சரி, செய்யாமல் போனாலும் சரி, ஜபத்தினால் மோட்சத்தை ஐயமின்றி அடைவான். பிராம்மணன் சகல உயிர்களுக்கும் மித்திரனாவான்.

இந்த்ரியாணாம் விசரதாம் விஷயேஷ்வப ஹாரி |
ஸம்யமே யத்நமாதிஷ்டேத் வித்வாந் யந்தேவ வாஜிநாம் 88 “

நற்குணங்கள் அனைத்துக்கும் பகையாக, விஷய சுகங்களில் ஈடுபட வைக்கும் இந்திரியங்களை, தேரோட்டியானவன் குதிரைகளை அடக்கியாள்வதைப் போன்று வித்வானானவன் அடக்கியாள வேண்டும்.

ஏகாதஷேந்த்ரியாண் யாஹுர்யாநி பூர்வே மநீஷிண: 1
தாநி ஸம்யக்ப்ரவக்ஷ்யாமி யதாவதநு பூர்வ : ! 89

முன்னர் மூத்தோர் எந்தப் பதினொரு இந்திரியங்களைப் பற்றி கூறியுள்ளனரோ, அவற்றை அவர்கள் கூறியபடியே கூறுகிறேன்.

ஷ்ரோத்ரம் த்வக்க்ஷ ஷீ ஜிஹ்வா நாஸிகா சைவ பஞ்சமீ |
பாயூபஸ்தம் ஹஸ்தபாதம் வாக்சைவ தஷமீ ஸ்ம்ருதா || 90

செவிகள், தோல், கண்கள், நாக்கு, மூக்கு என்பவை ஐந்து இந்திரியங்கள். ஆசனம், ஆண்- பெண் குறி, கால்கள், கைகள், வாக்கு இவை ஐந்து இந்திரியங்கள். மொத்தம் பத்து இந்திரியங்கள்.

புத்தீந்த்ரியாணி பஞ்சைஷாம் ஷ்ரோத்ராதீந்யநு பூர்வ : |
கர்மேந்த்ரியாணி பஞ்சைஷாம் பாய்வாதீநி ப்ரசக்ஷதே||| 91

இந்தப் பத்து இந்திரியங்களில் செவிகள் முதலான ஐந்து இந்திரியங்கள் ஞானேந்திரியங்கள். ஆசனம் முதலான ஐந்து இந்திரியங்கள் கர்மேந்திரியங்கள்.

ஏகாதஷம் மனோஞேயம் ஸ்வகுணேநோ பயாத்மகம் | யஸ்மிந் ஜிதே ஜிதாவேதெள பவத: பஞ்சகௌ கணௌ-92
பதினொன்றாவது இந்திரியம் மனம். இது தன் குணத்தினால் ஞானேந்திரியமாகவும் இருக்கும்; கர்மேந்திரியமாகவும் இருக்கும். இந்த மனத்தை வென்றவன், ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங் களையும் வென்றவனாவான்.

இந்த்ரியாணாம் ப்ரஸங்கேந தோஷம்ருச்சத்ய ஸம்ஸயம் | ஸந்நியம்யது தாந்யேவ ததஸ்ஸித்திம் நியச்சதி || 93
இந்திரியங்கள் விஷய சுகங்களோடு சேர்வதனால், மனிதன் இவ்வுலகில் துன்பத்தையும், மேலுலகில் பாவத்தையும் சந்தேக மின்றி அடைகிறான். இந்திரியங்களை கட்டுப்படுத்தினால்தான் மோட்ச சித்திகிடைக்கும். எனவே இந்திரியங்களை வென்று அடக்க வேண்டும்.

ந ஜாதுகாம: காமாநாமுபபோகேந ஷாம்யதி
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ பூய ஏவ அபிவர்த்ததே 1-94

ஆசையானது, ஆசைப்பட்டதை அனுபவிப்பதினால் அடங்குவதில்லை. தீயில் நெருப்பை விடுவதினால் மேலும் மேலும் தீ ஓங்கி வளர்வதைப் போன்று, ஆசையும் அனுபவிப்பதனால் மேலும் மேலும் ஓங்கி வளரும்.

யஷ்சைதாந் ப்ராப்நுயாத் ஸர்வாந் யஷசைதாந கேவலாம்ஸ்த்யஜேத்|
ப்ராபணாத் ஸர்வகாமாநாம் பரித்யாகோ விஷிஷ்யதே || 95

எவன் கோரிய சகலத்தையும் அனுபவிக்கின்றானோ, எவன் கோரிக்கைகளையே வெறுத்துத் துறக்கிறானோ; இந்த இருவரில் கோரிக்கைகளை (ஆசைகளை) துறக்கிறவனே மேலானவன்.

ந ததைதாநி ஷக்யந்தே ஸ்ந்நியந்து மஸேவயா |
விஷயேஷு ப்ரஜுஷ்டாநி யதா ஞானேந நித்யஷ: ||96

விஷய சுகங்களில் ஈடுபட்டிருக்கும் இந்திரியங்களைத் திருப்புவது இயலாத காரியம். எனவே விஷய சுகங்களை விட வேண்டும் என்னும் ஞானத்தைப் பெற வேண்டும்.

வேதாஸ்த்யாகஷ்ச யக்ஞாஷ்ச நியமாஷ்சதபாம்ஸிச
ந விப்ரதுஷ்ட பாவஷ்ச ஸித்திம் கச்சந்தி கர்ஹிசித் || 97

இந்திரியங்களை அடக்காத துஷ்ட மனம் உடையவன் செய்யும் வேதாத்யயனம், தானம், யக்ஞங்கள், நியமங்கள், தவங்கள் முதலானவை பலன்களைக் கொடா.

ஷ்ருத்வா ஸ்ப்ருஷ்ட்வா ச த்ருஷ்ட்வா ச புக்த்தவா க்ராத்வா சயோநர: |
ந ஹ்ருஷ்யதி க்ளாயதி வா ஸ விக்ஞேயோ ஜிதேந்த்ரிய: || 98

எவனொருவன் கேட்டும், ஸ்பரிசித்தும்,பார்த்தும், உண்டும், முகர்ந்தும், இன்பத்தையோ துன்பத்தையோ அடைவதில்லையோ அவனே ஜிதேந்த்ரியன்.

இந்த்ரியாணாம் து ஸர்வேஷாம் யத்யேகம் க்ஷரதீந்த்ரியம் |
தேநாஸ்ய கூரதி ப்ரக்ஞா த்ருதே: பாதாதி வோதகம் || 99

இந்திரியங்கள் அனைத்தின் நடுவே, ஒரு இந்திரியம் விஷய சுகத்தில் ஆட்பட்டிருந்தாலும், அத்தகையவனுடைய ஞானம், ஓட்டை விழுந்த தோல் பாத்திரத்தில் வைத்த தண்ணீரைப் போன்று வீணாகி விடும்.

வஷே க்ருத்வேந்தரியக்ராமம் ஸம்யம்ய ச மநஸ்தததா |
ஸர்வாந் ஸம்ஸாதயேத ர்த்தாந ண்வந் யோகதஸ்தநும்|| 100

எனவே புலன்களை வென்று, மனதைக் கட்டுப்படுத்தி, தனது உடலை பீடிக்காமல் சகலத்தையும் சாதிக்க வேண்டும். அவ்வாறு சாதித்த பிறகு முறையாக தன் உடலை விட வேண்டும்.

பூர்வாம் ஸந்த்யாம் ஐபம்ஸ்திஷ்டேத்ஸாவித்ரீ மார்க்கதர்ஷநாத் |
பஷ்சிமாம்து ஸமாஸீந: ஸம்யக்ருக்ஷ விபாவநாத்|-101

உதய காலத்தில் சூரியன் உதிக்கும் வரை நின்றபடி காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மாலையில் நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தென்படும் வரை அமர்ந்தபடி காயத்ரி மந்திரத்தை, ஜபிக்க வேண்டும்.

பூர்வாம் ஸந்த்யாம் ஜபம்திஷ்டந்நைஷமேநோ வ்யபோஹதி
பஷ்சிமாம்து ஸமா நோ மலம் ஹந்தி திவாக்ருதம் || 102

உதயகாலத்தில் நின்றபடி காலை சந்தியா காயத்ரி ஜபத்தை செய்து முதல் நாள் இரவு செய்த பாபத்தை போக்கிக் கொள்கிறான். மாலையில் அமர்ந்தபடி காயத்ரி ஜபத்தை செய்து அன்று பகலில் தான் செய்த பாபத்தை போக்கிக் கொள்கிறான்.

ந திஷ்டதிதுய: பூர்வாம் நோபாஸ்தே யஷ்ச பஷ்சிமாம் |
ஸ த்ரவத்பஹிஷ்கார்ய: ஸர்வஸ் மாத்தவிஜ கர்மண: || 103

காலை சந்தியை அனுஷ்டிக்காதவனையும்,மாலை சந்தியை அனுஷ்டிக்காதவனையும், சூத்திரனை ஒதுக்கி வைப்பது போன்று, எல்லா த்விஜ கர்மாக்களிலிருந்தும் ஒதுக்கி வைக்க வேண்டும்.

அபாம் ஸமீபே நியதோ நைத்யகம் விதிமாஸ்தித: 1
ஸாவித்ரீமப்யதீயீத கத்வாரண்யம் ஸமாஹித: || 104

ஆரண்யத்தில் அல்லது நதிக்கரையில் ஒருமுகப்பட்ட மனத்தோடு, இந்திரியங்களை அடக்கி, நித்ய கர்மாக்களை அனுஷ்டித்த பிறகு காயத்ரியை ஜபிக்கத் தொடங்க வேண்டும்.

வேதோபகரணே சைவ ஸ்வாத்யாயே சைவ நைத்யகே 1
நாநுரோதோ அஸ்த்யநத்யாயே ஹோம மந்த்ரேஷு சைவஹி|| 105
வேத அங்கங்களான சிக்ஷை முதலானவற்றுக்கும் தினமும்அனுஷ்டிக்கும் பிரம்மயக்கு ரூபமான வேதமோதுவதற்கும், ஹோம மந்திரங்களுக்கும் அத்யயனம் பண்ணத் தகாத நாட்கள் என்றுஇல்லை. அதாவது படிக்கத் தகாத நாட்கள் என்று எதுவும் இல்லை.

நைத்யகே நாஸ்த்ய நத்யாயோ ப்ரஹ்மஸத்ரம் ஹி தத்ஸ்ம்ருதம் |
ப்ரஹ்மாஹுதிஹுதம் புண்யமத்யாய வஷட்க்ருதம்|-106

நித்தியமான வேத அத்யயனத்தில், அநத்யயன தோஷம் என்பதுஇல்லை. இத்தகைய நித்திய அத்யயனம் பிரம்ம சத்ரம்’ என்றுசொல்லப்படுகிறது. அத்தகைய வேதம் என்னும் ஆகுதியால்செய்யப்படும் இந்த வேள்விக்கு அநத்யாயனத்தில் செய்யப்பட்டாலும் புண்ணியத்தைத் தருமேயன்றி அநத்யயன தோஷம்ஏற்படாது.

யஸ்வாத்யாயமதீதே அப்தம் விதிநா நியதஸ்சுசி: |
தஸ்ய நித்யம் க்ஷரத்யேஷ பயோ ததி க்ருதம் மது I 107

எவன் புலன்களை வென்றவனாக, ஒரு வருட காலம் நியமமாக வேத அத்யயனம் செய்வானோ, அவனுக்கு, இந்த நித்ய அத்யயனம்பால், தயிர், நெய், தேன் முதலானவற்றை அளிக்கும்.

அக்நீந்தநம் பைக்ஷசர்யாம தஷ்ஷய்யாம் குரோர்ஹிதம் |
ஆஸமாவர்த்தநாத் குர்யாத் க்குதோபநயநோ த்விஜ: |-108

உபநயனமான த்விஜன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்)அக்னி ஹோத்ரம், பிட்சாடனம், உயரமான படுக்கையில்படுக்காதிருத்தல், குருவுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்தல் முதலியவற்றை சமாவர்த்தனம் வரை செய்து கொண்டிருக்கவேண்டும்.(சமாவர்த்தனம் என்றால் குருகுலத்தில் இருந்து திரும்பி வருதல்
என்று பொருள். இதற்கு ஸ்நான கிரியை என்றும் பெயர் உண்டு.-குருவுக்குத் தட்சிணை கொடுத்து அவரிடமிருந்து விடை பெற்றுச் சென்று, விவாகம் செய்து கொள்ள வேண்டும். விவாகத்துக்கு முதல்நாளோ, விவாக தினத்தன்றோ சமவர்த்தனம் செய்து கொள்ள
வேண்டும்.-இது முதல்தான் பஞ்சகச்சம் அணிய வேண்டும். இரண்டு பூணூல் தரிக்க வேண்டும்.-இந்த ஸமாவர்த்தனம் என்னும் ஸ்நானக் கிரியைக்குப் பிறகுதான் ஒருவனுக்கு ஸ்நானதகன் என்று பெயர் ஏற்படும்.)

ஆசார்ய புத்ரஸ்சுஸ்ரூசுர்ஞாநதோ தார்மிகஸ்சுசி: |
ஆப்தஸ்ஷக்தோ அர்த்ததஸ்ஸாதுஸ்ஸ் வோத்யாப்யா தஷ தர்மத: || 109

ஆசார்யருடைய புத்திரன், பணிவிடை புரிபவன், வேறு ஒரு வித்யையை சொல்லித் தருபவன், பரிசுத்தமானவன், உறவினன்.சொல்வதை கிரஹிக்கும் திறனும் ஞாபக சக்தியும் மிகுதியாகஇருப்பவன், பொருளை அளிக்கக்கூடியவன்,நன்மையைவிரும்புபவன், பங்காளி முதலான பத்துப் பேருக்கும் தட்சிணை பெற்றுக் கொள்ளாமல் வித்யையைக் கற்றுத் தர வேண்டும்.

நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாந்த சாந்யாயேந ப்ருச்சத: |
ஜாநந்நபி ஹி மேதாவீ ஜடவல்லோக ஆசரேத் ||| 110

தன்னைக் கேளாதவனுக்கு எதையும் கூறலாகாது. சிரத்தையும்பக்தியும் இல்லாமல் விதண்டாவாதமாக கேட்பவனுக்கும் எதையும்கூறலாகாது. புத்திமானாக இருப்பவன், தான் அறிந்தவனாகஇருந்தாலும், ஊமையைப் போன்று உலகத்தில் வாழ வேண்டும்.

அதர்மேண ச ய: ப்ராஹ யஷ் சாதர்மேண ப்ருச்சதி |
தயோரந்யதர: ப்ரைதி வித்வேஷம் வாதிகச்சதி || 111

அதர்மமாக எவன் பதில் கூறுகிறானோ, எவன் அதர்மமாகக்கேட்கிறானோ, அவர்களில் ஒருவன் மரணமடைவான். அல்லதுஅவனோடு விரோதத்தை அடைவான்.

தர்மார்த்தெள யத்ர நஸ்யாதாம் சுஷ்ரூஷா வாபி தத்விதா |
தத்ர வித்யா நவப்தவ்யா சுபம் பீஜமிவோஷரே|| 112

எவனிடம் தர்மம், அர்த்தம் இரண்டும் இல்லையோ, பணிவிடையும் (பணிவிடை புரியும் குணமும்) இல்லையோ, அத்தகையவனுக்கு வித்யையை சொல்லித் தரக்கூடாது.
அத்தகையவனுக்கு சொல்லிக் கொடுத்த வித்யை களர் நிலத்தில் விதைத்த விதையைப் போன்று வீணாகும்.

வித்யயைவ ஸமம் காமம் மர்த்தவ்யம் ப்ரஹ்மவாதிநா |
ஆபத்யபி ஹி கோராயாம் நத்வேநாமிரிணே வபேத் || 113

தக்க தகுதி கொண்ட சிஷ்யன் கிடைக்காதபோது வேத வித்தானவன், தன் வித்யையோடு தானும் இறப்பதேகூட பரவாயில்லை. எத்தகைய கோரமான ஆபத்து வந்தாலும் வித்யையை களர் நிலத்தில் விதைக்கக் கூடாது. (அதாவது வித்யையை தகுதி யற்றவனுக்கு கற்றுக் கொடுக்கக் கூடாது.)

வித்யா ப்ராஹ்மண மேத்யாஹ ஷேவதிஸ்தே அஸ்மி ரக்ஷ மாம் |
அஸுயகாய மாம் மாதாஸ்ததா ஸ்யாம் வீர்யவத்தமா || 114

வித்யைக்குரிய தேவதை வித்வானான ப்ராஹ்மணனிடம், “நான் உனக்கு நிதியாகக் கிடைத்துள்ளேன்; என்னைக் காப்பாற்று; பொறாமை முதலான துர்குணங்கள் கொண்டவனிடம் என்னை அளிக்காதே. அப்படிச் செய்வாயானால் நான் வீர்யத்தோடு இருப்பேன்” என்று கூறும்.

யமேவ து சுசிம் வித்யாந்நியதம் ப்ரஹ்மசாரிணம் |
தஸ்மை மாம் ப்ரூஹி விப்ராய நிதிபாயாப்ரமாதிநே|| 115

பரிசுத்தனாகவும், புலன்களை வென்றவனாகவும், பிரம்ம சாரியாகவும், வித்யா நிதியை காப்பாற்றக் கூடியவனாகவும் இருக்கும் சிஷ்யன் எவனோ அவனிடம் என்னைக் கூறுவாய்.(அதாவது வித்யையாகிய என்னைக் கற்றுக் கொடுப்பாய் என்று பொருள்.)

ப்ரஹ்ம யஸ்த்வநநுஞா தமதியாநா தவாப்நுயாத் |
ஸ ப்ரஹ்மஸ்தேய ஸம்யுக்தோ நரகம் ப்ரதிபத்யதே || 116

எவன் குருவுக்குத் தெரியாமல் அவரது அனுமதியின்றிஅவரிடமிருந்து வித்யையைப் பெறுகிறானோ, அவன் வேதத்தைத்திருடியவன் அடையும் பாவத்தை அடைந்து நரகத்தில் வீழ்வான்.

லௌகிகம் வைதிகம் வாபி ததாத்யாத்மிகமேவ ச
ஆததீத யதோ ஞானம் தம் பூர்வமபிவாதயேத் || 117

உலகியல் சாஸ்திரம், வேதார்த்த ஞானம், பிரம்ம ஞானம். இவற்றை எவரிடமிருந்து கற்கிறானோ, அவரை (அவரைவிட அதிகம்கௌரவம் கொடுக்கத் தக்கவர்களிடையே அவர் இருக்கும்போதும்)முதலில் வணங்க வேண்டும். இம்மூன்று சாஸ்திரங்களைக் கற்பித்தமூவரும் இருக்கும்போது லௌகிக சாஸ்திரம் கற்பித்தவருக்கு முன்பு வேதஞானம் கற்பித்தவரையும், அவருக்கும் முன்பு பிரம்ம ஞானத்தை அளித்தவரையும் வணங்க வேண்டும்.

ஸாவித்ரீ மாத்ரஸாரோ அபிவரம் விப்ரஸ்சுயந்த்ரித: | நாயந்த்ரிதஸ்த்ரி வேதோ அபி ஸர்வாஷீ ஸர்வவிக்ரயீ|| 118
கட்டுப்பாடு இன்றி, விலக்கப்பட்ட உணவுகளை உண்பவனும், விலக்கப்பட்டவற்றை விற்பவனுமான, வித்வானான பிராம்மணன்,மூன்று வேதங்களையும் அத்யயனம் செய்தவனாயினும்,அவனைவிட கட்டுப்பாடுடன் இருக்கின்ற பிராம்மணன் காயத்ரியை மட்டும் அறிந்தவனாக இருப்பினும்கூட, அவனே உயர்ந்தவன்.(உண்ணும் உணவும், வாழும் வழியும் தர்மத்தை மீறாததாகஇருக்க வேண்டும். ஒழுக்கம்தான் முதலில் முக்கியம்.படிப்பு அதற்குஅடுத்தபடியானதுதான்.)

சய்யாஸநே அத்யாசரிதே ஷ்ரேயஸா ந ஸமாவிஷேத் |
சய்யாஸநஸ்தஷ் சைவைநம் ப்ரத்யுத்தாயா பிவாதயேத் 119

தான் மஞ்சத்திலும் ஆசனத்திலும் வீற்றிருக்கும் போது, தன்னை விட உயர்ந்தவர் வந்தால், எழுந்து அவரை வரவேற்று வணங்கள் வேண்டும்.

ஊர்த்வம் ப்ராணா ஹ்யுத்காரமந்தி யூந: ஸ்தவிர ஆயதி 1
ப்ரத்யுத்தாநாபி வாதாப்யாம் புநஸ்தார் ப்ரதிபத்யதே || 120

ஞானத்தாலும் வயதாலும் பெரியோராக இருப்பவர் வந்தால், சிறியோனின் பிராணன்கள் மேலெழும்பும். எனவே சிறியோர். பெரியோரைக் கண்டதும் எழுந்து வணங்கி, பிராணன்களைப் போகாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அபிவாதனஷீலஸ்ய நித்யம் வ்ருத்தோபஸேவிந: | சத்வாரி தஸ்ய வர்தந்தே ஆயுர்வித்யா யஷோ பலம்|-121
பெரியோர் வந்தபோது எழுந்து அவரை வரவேற்று வணங்குபவனுக்கு ஆயுள், வித்யை, புகழ், பலம் என்னும் நான்கும் விருத்தி யடையும்.

அபிவாதாத்பரம் விப்ரோ ஜ்யாயாம்ஸமபிவாதயந் |
அஸௌ நாமாஹமஸ்மீதி ஸ்வம் நாம பரிகீர்த்தயேத் 122

வித்வானான பிராம்மணன் தன்னைவிட பெரியோனுக்கு அபிவாதனம் செய்து தன் பெயர், குலம், கோத்ரங்களைக் கூறி வணங்க வேண்டும்.

நாமதேயஸ்ய யேகேசித வாதம் ந ஜாநதே|
தாப்ராக்ஞோ அஹமிதி ப்ரூயாத் ஸ்த்ரிய: ஸர்வாஸ்ததைவ ||ச 123

எவருக்கு அபிவாதனத்தின் பொருள் தெரியாதோ, அத்தகையோருக்கு தன்னுடைய பெயரை மாத்திரம் கூறி வணங்க வேண்டும்.-பெண்களையும் அவ்வாறே வணங்க வேண்டும்.

போ சப்தம் கீர்த்தயேதந்தே ஸ்வஸ்ய நாம்நோ அபிவாதநே |
நாம்நாம் ஸ்வரூபபாவோ ஹி போ பாவ ருஷிபி: ஸ்ம்ருத: II 124

ஒருவன் வணங்கி அபிவாதனம் செய்யும்போது தன் பெயருக்குப் பின்னால் ‘போ!’ என்று சேர்த்துக் கூற வேண்டும். அப்படி ‘போ:’ என்று கூறுவதே பெயர்களின் சொரூபம் என்று
முனிவர்களால் கூறப்பட்டது.

ஆயுஷ்மான் பவ சௌம்யேதி வாச்யோ விப்ரோ அபிவாதநே |
அகாரஷ்சாஸ்ய நாம்நோ அந்தே வாச்ய: பூர்வாக்ஷர: ப்ளுத: ||-125-

அபிவாதனம் செய்யும் வித்வானான பிராம்மணனுக்கு’ஆயுஷ்மான் பவ சௌம்ய’ என்று ஆசி கூற வேண்டும்.-அவன் பெயர் அகாராந்தத்தில் முடிவதாக இருந்தால் நீட்டிக்கூற வேண்டும்.-க்ஷத்ரிய வைசியர்களுக்கு நீட்டியும் கூறலாம். நீட்டாமலும் ஆசி
கூறலாம்.-சூத்ரனுக்கு நீட்டிக் கூற வேண்டியதில்லை.

யோ ந வேத்ய பிவாதஸ்ய விப்ர: ப்ரத்யபிவாதநம்
நாபிவாத்யஸ்ய விதுஷா யதா சூத்ரஸ்ததைவ ஸ: |-126

எந்த விப்ரன் அபிவாதனம் செய்தவனுக்குப் பதில் செய்யஅறியாதவனோ, அத்தகையவன் சூத்திரனுக்கு சமமானவன். அவனுக்கு அபிவாதனம் செய்யலாகாது.

ப்ராஹ்மணம் குஷலம் ப்ருச்சேத் க்ஷத்ர பந்துமநாமயம் |
வைஸ்யம் க்ஷேமம் ஸமாகம்ய சூத்ரமாரோக்யமேவ ச || 127

தன்னிடம் வந்து அபிவாதனம் செய்தவன், சிறியவனாக இருந்தாலும் சரி,பெரியவனாக இருந்தாலும் சரி, பிராம்மணனாக இருந்தால் ‘குசலமா’ என்றும், க்ஷத்ரியனாக இருந்தால் அநாமயமா’ என்றும், வைசியனாக இருந்தால் ‘க்ஷேமமா’ என்றும், சூத்திரனாக இருந்தால் ‘ஆரோக்கியமா’ என்றும் நலன் விசாரிக்க வேண்டும்.

அவாச்யோ தீக்ஷிதோ நாம்நா யவீயாநபி யோ பவேத் |
போ பவத் பூர்வகம் த்வேநமபிபாஷேத தர்மவித் || 128

யாக தீட்சைஏற்றிருப்பவன் தன்னைவிட சிறியவனாக இருந்தாலும்,தர்மம் அறிந்தவன் அவனைப் பெயர் சொல்லி விளிக்கலாகாது. போ:, பவான் முதலான பதங்களால் அழைத்துப் பேச வேண்டும்.

பரபத்நீ து யா ஸ்த்ரீ ஸ்யாதஸம்பந்தா சயோநித: |
தாம் ப்ரூயாத் பவதீத்யேவம் சுபகே பகிநீதி ச | 129

பிறன் மனைவியையும், சகோதரி போன்ற உறவு முறைகளற்ற மற்றப் பெண்களையும் சுபகே, பகினீ என்ற சொற்களால் விளிக்க வேண்டும். (அதாவது, பெண்ணே என்றோ, சகோதரியே என்றோ விளிக்க வேண்டும்)

மாதுலாம் ச பித்ருவ்யாம்ஷ்ச ஷ்வசுராந்ருத்விஜோ குரூந் |
அஸாவஹமிதி ப்ரூயாத் ப்ரத்யுத்தாய யவீயஸ: 1-130

தாய்மாமன்மார், சிறிய தந்தைமார், பெண் கொடுத்த மாமனார்கள், யாகம் புரியும் புரோஹிதர்கள், குருமார்கள் முதலானோர் வந்தால் அவர்கள் தன்னைவிட சிறியோராயின்,
அவர்களை வரவேற்று தன் பெயரை மாத்திரம் கூற வேண்டும். அபிவாதனம் செய்யலாகாது.

மாத்ருஸ்வஸா மாதுலாநீ ஷ்வஷ்ரூரத பித்ருஷ்வஸா |
ஸம்பூஜ்யா குருபத்வத் ஸமாஸ்தா குருபார்யயா ||-131-

தாயுடன் பிறந்தோர், தாய்மாமன் மனைவி, மாமியார், தந்தையுடன் பிறந்த சகோதரி முதலானோர் குருபத்னிக்கு சமமானவர்கள். எனவே இவர்களை குருபத்னியைப் போல எதிர்கொண்டழைத்து அபிவாதனம் செய்ய வேண்டும்.(பெண்களை அபிவாதனம் செய்யாமல் வணங்கினால் மட்டும் போதும் என்று முதலில் சொல்லப்பட்டது. இப்போது இப்படி கூறப்பட்டிருக்கிறது. ஆக, குருபத்னியை அபிவாதனத்தோடு வணங்க வேண்டும் என்று இதனால் சொல்லப்பட்டது.)

ப்ராதுர்பார்யோபஸங்க்ராஹ்யா ஸவர்ணா அஹந்யஹந் யபி | விப்ரோஷ்ய தூபஸங்க்ராஹ்யா ஞாதிஸம்பந்தி யோஷித: || 132
தன் வர்ணத்திலேயே மணம் புரிந்து கொண்டவளான அண்ணன் மனைவிக்கு தினமும் பாதவந்தனம் செய்ய வேண்டும். சிறிய தந்தையர், தாய்மாமன்மார், மாமனார், மற்றும் இவர்களது மனைவிமார்களை, அவர்கள் வெளியூர்களிலிருந்து வந்தபோது மட்டும் வணங்க வேண்டும்.

பிதுர்பகின்யாம் மாதுஷ்ச ஜ்யாயஸ்யாம் ச ஸ்வஸர்யபி மாத்ருவத்வ்ருத்தி மாதிஷ்டேந்மாதா தாப்யோ கரீயஸ் | 133
தந்தையுடன் பிறந்தவளிடமும், பெரிய தாயிடமும், தமக்கையிடமும்,தாயிடம் காட்டுவது போன்ற கௌரவத்தைக் காட்ட வேண்டும். இவர்கள் அனைவரையும்விட தாய் பூஜிக்கத்
தக்கவள்.

தஷாப்தாக்யம் பௌரசக்யம் பஞ்சாப்தாக்யம் கலாப்ருதாம் | த்ரயப்தபூர்வம் ஷ்ரோத்ரியாணாம் ஸ்வல்பேநாபி ஸ்வயோநி || 134

ஒரே ஊர்வாசிகளாக இருந்தால், தன்னைவிட பத்து வயது மூத்தவரோடு நட்பு பூணவேண்டும். கலைகள் கற்றவராக இருப்போர்தன்னைவிட ஐந்து வயது மூத்தவராக இருந்தால் நட்பு பூணவேண்டும். வேதம் படித்தவர் தன்னைவிட மூன்று வயது மூத்தவராக இருந்தால் நட்பு பூணவேண்டும். பங்காளிகள் சிறிது பெரியவராக இருந்தாலும் நட்பு பூணவேண்டும்.

ப்ராஹ்மணம் தஷ வர்ஷம்து ஷதவர்ஷம்து பூமிபம் |
பிதாபுத்ரெள விஜாநீயாத் ப்ராஹ்மணஸ்து தயோ: பிதா 135

பத்து வயது பிராம்மணன், நூறு வயது க்ஷத்ரியன் இவர்களை முறையே தந்தையாகவும், மகனாகவும் கொள்ள வேண்டும். இவர்களில் பத்து வயது பிராம்மணனே தந்தையாக கொள்ளப் படுவான்.

வித்தம் பந்துர்வய: கர்ம வித்யா பவதி பஞ்சமீ |
ஏதாநி மாந்யஸ்தாநாநி கரீயோயத்ய துத்தரம் || 136

செல்வம், பந்துமுறை, வயது, அனுஷ்டானம், கல்வி இவை போற்றத்தக்கவை. இவற்றில் ஒன்றைவிட ஒன்றை உயர்ந்ததாக எண்ண வேண்டும். அதாவது செல்வத்தைவிட உறவு முக்கியம். உறவினன் என்பதைவிட மூத்த வயதினால் ஒருவனை மேன்மையானவனாக எண்ண வேண்டும். அனுஷ்டானங்கள் விடாது செய்பவன் அவனைவிட உயர்ந்தவன். கல்விமான் அவனைவிட உயர்ந்தவன்.

பஞ்சாநாம் த்ரிஷுவர்ணேஷ் பூயாம்ஸி குணவந்தி ச |
யத்ர ஸ்யுஸ்ஸோஅத்ர மாநார்ஹ: ஆத்ரோஅபி தஷமீம் கத: || 137

மூன்று வர்ணத்தாரில் முதலில் கூறிய ஐந்து குணங்களில் அதிக குணங்கள் கொண்டவன் உயர்ந்தவன்.சூத்ரர்களில் வயது முதிர்ந்தவன் உயர்ந்தவன்.

சக்ரினோ தஷமீஸ்தஸ்ய ரோகிணோ பாரிண: ஸ்த்ரியா: |
ஸ்நாதகஸ்ய ச ராக்ஷ்ச பந்தா தேயோ வரஸ்ய ச|| 138

வண்டியில் ஏறியவனுக்கும், தொண்ணூறு வயது முதியவனுக்கும் நோயாளிக்கும் சுமை தூக்கி வருபவனுக்கும் ஸ்நாதகனுக்கும், மன்னனுக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கும் வழி
விட வேண்டும்.

தேஷாம் து ஸமவேதாநாம் மாந்யௌ ஸ்நாதக பார்த்திவெள |
ராஜஸ்நாதக யோஷ்சைவ ஸ்நாதகோ ந்ருபமாந பாக் || 139

இவர்கள் அனைவரும் ஓரிடத்தில் இருந்தால் மன்னனுக்கும் ஸ்நாதகனுக்கும் முதல் கௌரவம் கொடுக்க வேண்டும். இவர்கள் இருவர் மட்டுமே இருக்கும்போது ஸ்நாதகனுக்கே முதல் கௌரவம் கொடுக்க வேண்டும்.

உபநீயது யஷ்ஷிஷ்யம் வேதமத்யாவயேத்திவிஜ: |
ஸகல்பம் ஸரஹஸ்யம் ச தமாசார்யம் ப்ரசக்ஷதே || 140

உபநயனம் செய்து வைத்து வேதங்களை கல்பசூத்திரங்களோடும் உபநிஷத்துக்களோடும் அத்யயனம் செய்து வைத்தவன்’ஆசாரியன்’ எனப்படுவான்.

ஏகதேஷம் து வேதஸ்ய தோங்யாநபி வாபுந: 11
யோ அத்யாபயதி வ்ருத்யர்த்தமுபாத்யஸ்ஸ உச்யதே |141

வேதங்களில் சிறிது பாகத்தை அல்லது வேதாந்தங்களில் சிறிது பாகத்தை ஜீவனத்துக்காகச் சொல்லிக் கொடுப்பவன் ‘உபாத்யாயன்’ எனப்படுவான்.

நிஷேகா நி கர்மாணி ய: கரோதி யதாவிதி |
ஸம்பாவயதி சாந்நேந ஸ விப்ரோ குருருச்யதே|| 142

எவர் கர்ப்பாதானம் முதலான சம்ஸ்காரங்களைச் செய்து வைத்து, உணவு கொடுத்து போஷிப்பாரோ அவர் குரு எனப் படுவார்.

அக்ந்யாதேயம் பாகயக்ஞாநக்னிஷ்டோமாதிகாந் மகாந்
ய: கரோதி வ்ருதோ யஸ்ய ஸதஸ்யர்த்விகிஹோச்யதே ॥ 143

அக்னியாதேயம் முதலான பாக யக்ஞங்களையும், அக்னிஷ்டோமம் முதலான யக்ஞங்களையும் எவன், எவனால் வரிக்கப்பட்டு செய்து வைக்கிறானோ, அவன் அவனுக்கு ‘ரித்விக்’ எனப்படுவான்.

ய ஆவ்ருணோத்யவிததம் ப்ரஹ்மணா ஷ்ரவணாவுபௌ |
ஸ மாதா ஸ பிதா ஞேயஸ்தம் நத்ருஹ்யேத் கதாசந |-144

எவன் இரு செவிகளையும் சாத்தியரூபமான வேதத்தால் நிரப்புகிறானோ, அவனே தந்தையும் தாயுமாவான். அவனுக்கு எப்போதும் துரோகம் செய்யக் கூடாது.

உபாத்யாயாந் தஷாசார்ய ஆசார்யாணாம் ஷதம் பிதா
ஸஹஸ்ரம்து பித்ரூநாத்மா கௌரவேணாதி ரிச்யதே |-145

உபாத்யாயனைவிட ஆசாரியன் பத்து மடங்கு உயர்ந்தவன். ஆசாரியனைவிட உபநயனம் முதலான சடங்குகளைச் செய்து வைத்த தந்தை நூறு மடங்கு உயர்ந்தவன். தந்தையை விட தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள்.

உத்பாதக ப்ரஹ்மதாத்ரோர்கரீயாந் ப்ரஹ்மத: பிதா ப்ரஹ்ம ஜன்ம ஹி விப்ரஸ்ய ப்ரேத்ய சேஹ ச ஷாஷ்வதம் || 146
த்விஜன்மம் என்னும் இரண்டாவது பிறப்பைக் கொடுப்பது உபநயனம். இந்த உபநயனத்தை செய்து வைக்கும் ஆசாரியர் தந்தையைவிட உயர்ந்தவர். இரண்டாவது பிறப்பு இகத்துக்கும்
பரத்துக்கும் சாஸ்வதமான பிரம்ம பதத்தைத் தரும்.

காமாந் மாதாபிதா சைநம் யதுத்பாதயதோ மித: | ஸம்பூதிம் தஸ்யதாம் வித்யாத்யத்யோ நாவ பிஜாய தே-147
பெற்றோர் காமத்தால் குழந்தையை உருவாக்குகிறார்கள். விலங்குகள் தங்கள் அவயவங்களைக் கொடுப்பது போல், பெற்றோரும் குழந்தைக்கு அவயவங்களைக் கொடுக்கிறார்கள்.

ஆசார்யஸ்த்வஸ்ய யாம் ஜாதிம் விதிவத் வேதபாரக: உத்பாதயதி ஸாவித்ர்யா ஸா ஸத்யா ஸா அஜரா அமரா 148
ஆசார்யர்,தன் சிஷ்யனுக்கு காயத்ரியால் எந்த ஜன்மாவைக் கொடுக்கிறாரோ அதுவே பிரம்ம பதத்தை அடையக்கூடிய ஜன்மம். அழிவற்ற, மூப்பும் மரணமுமற்ற ஜன்மம். மோட்சத்தை அளிக்கக் கூடிய ஜன்மாவை அளிப்பதால் ஆசாரியரே சிரேஷ்டமானவர்.

அல்பம் வா பஹுவா யஸ்ய ஷ்ருதஸ்யோபகரோதி ய: | தமபீஹ குரும் வித்யாச்ருதோபக்ரியயா தயா|| 149
கொஞ்சமோ, அதிகமோ, எவர் வேத உபதேசம் செய்கிறாரோஅவர், வேதஉபகாரமான காரியத்தைச் செய்ததினால் அவரே குரு என்று அறிய வேண்டும்.

ப்ராஹ்மஸ்ய ஜன்மந: கர்த்தா ஸ்வதர்மஸ்ய ச ஷாஸிதா|
பாலோ அபி விப்ரோ வ்ருத்தஸ்ய பிதா பவதி தர்மத: || 150

உபநயனம் செய்து வைத்தவரும், வேதார்த்தங்களைச் சொல்லிக் கொடுத்தவரும் தன்னைவிடச் சிறியவராக இருந்தாலும் தர்மப்படி அவர் தந்தையின் ஸ்தானத்துக்குரியவர்.

அத்யாபயா மாஸ பித்ரூந் ஷுராங்கிரஸ: கவி: |
புத்ரகா இதி ஹோவாச ஞானேந பரிக்ருஹ்ய தாந் || 151

அங்கிரஸன் என்ற வித்வான் தன் சிறிய தந்தை முதலானோருக்கு வேதம் கற்பிக்கும்போது, அவர்கள் வயதில் பெரியோராயினும் தனது ஞானத்தினால் தனக்கு சீடர்களே என்றறிந்தான். எனவே பிள்ளைகளே’ என்று விளித்தான்.

தே தமர்த்தமப்ருச்சந்த தேவாநாகத மந்யவ: 1
தேவாஷ்சைதாந் ஸமேத்யோ சுர்ந்யாயம் வஷ்ஷிஷுருக்தவாந் || 152

இதனால் கோபம் கொண்ட அவனது பித்ருக்கள் இது விஷயமாக தேவர்களிடம் முறையிட்டார்கள். தேவர்கள் அங்கிரஸன் ‘பிள்ளைகளே’ என்று அழைத்த முறை சரியே என்று கூறினார்கள்.

அஞ்ஞோ பவதிவை பால: பிதா பவதி மந்த்ரத: |
அஞ்ஞம் ஹி பாலமித்யாஹு பிதேத்யேவ து மந்த்ரதம்| 153

ஞானமறியாதவன் சிறுவனேயாவான். மந்திரமும் வேதமும் அறிந்தவனே தந்தையாவான். வேதமறியாதவனை வயதில் மூத்தோனாயினும் சிறியோன் என்றே கூற வேண்டும்.
வேதாத்யயனம் செய்பவனை தந்தை என்று கூறுவார்கள்.

ந ஹாயநைர்ந பலிதைர்ந வித்தேந நபந்துபி: |
ருஷயஷ்சக்ரிரே தர்மம் யோஅநூ சாநஸ்ஸ நோ மஹாந்|| 154

வயதில் பெரியவன் என்பதாலோ, முடி நரைத்திருப்பதாலோ, பணக்காரன் என்பதாலோ, உறவினன் என்பதாலோ ஒருவன் உயர்ந்தவன் என்பது இல்லை. வேதம் முற்றும் அறிந்தவனே உயர்ந்தவன் என்று ரிஷிகள் விதித்துள்ளனர்.

விப்ராணாம் ஞானதோ ஜ்யைட்யம் க்ஷத்ரியாணாம் து வீர்யத: |
வைஷ்யாநாம் தான்யதனதஷ்த்ராணாமேவ ஐந்மத: 155

பிராம்மணர்களுக்கு ஞானத்தால் உயர்வு ஏற்படும். க்ஷத்ரியர்களுக்கு வீர்யத்தால் உயர்வு ஏற்படும். வைசியர்களுக்கு தனதானியங்களின் பெருக்கால் உயர்வு ஏற்படும். சூத்திரர்களுக்கு வயது முதிர்ச்சியினால் உயர்வு ஏற்படும்.

நதேந வ்ருத்தோ பவதி யேநாஸ்ய பலிதம் ஷிர:
யோவை யுவா அப்யதீயாநஸ்தம் தேவாஸ்த்ஸவிரம் விது: || 156

தலை நரைத்ததால் பிராம்மணன் வயதானவன் எனப்பட மாட்டான். சிறிய வயதினனாக இருந்தாலும் வேதாத்யயனம் செய்தவன் எவனோ அவனையே வயது முதிர்ந்தவனாகக் கொள்ள வேண்டும் என்று தேவர்கள் கூறினார்கள்.

யதா காஷ்டமயோ ஹஸ்தீ யதா சர்மமயோ ம்ருக: |
யஷ்ச விப்ரோ அநதீயாநஸ்த்ராஸ்தே நாம பிப்ரதி |-157

மரத்தாலான யானையும், தோலாலான மானும், அத்யயனம் செய்யாத பிராம்மணனும் பெயரளவுக்கு யானை, மான், பிராம்மணன் என்று கூறிக் கொள்ளலாமே அன்றி, பெயருக்குத் தக்கபடியான காரியங்கள் செய்யப் போவதில்லை.

யதா ஷண்டோ அபல: ஸ்த்ரீஷு யதா கெளர்கவி சாபலா |
யதா சாஞ்ஞே அபலம் தானம் ததா விப்ரோ அந்ருசோ அபல: |-158

நபும்சகன் பெண்கள் விஷயத்தில் எவ்வாறு பயனற்றவனோ,-பசுவிடம் பசு எவ்வாறு பயனற்றதோ, யோக்கியனல்லாதவனுக்குகொடுத்த தானம் எவ்வாறு பயனற்றதோ, அவ்வாறே அத்யயனம் செய்யாத பிராம்மணனும் பயனற்றவனேயாவான்.

அஹிம்ஸயைவ பூதாநாம் கார்யம் ஷ்ரேயோ அநுஷாஸநம் |
வாக்சைவ மதுரா ஷ்நஷ்ணா ப்ரயோஜ்யா தர்மமிச்சதா|| 159

தர்மமறிந்த ஆசாரியன் சிஷ்யர்களுக்கு கொடிய தண்டனை விதிக்காமல், கருணையோடு உயர்ந்த விஷயங்களைப் போதிக்கவேண்டும். இனிமையோடு பேச வேண்டும்.

யஸ்ய வாக்மநஸீஷுத்தே ஸம்யகுப்தே ச ஸர்வதா |
ஸ வை ஸர்வமவாப்நோதி வேதாந்தோபகதம் பலம் || 160

பொய்கூறாதவனாக, நிர்மலமான மனத்தோடு இருப்பவன் வேதத்தில் கூறப்பட்ட பலன்கள் அனைத்தையும் அடைவான்.

நாருந்து தஸ் ஸ்யாத்ஆர்த்தோ அபி நபரத்ரோ ஹகர்ம தீ: |
யயாஸ்யோத்விஜதே வாசா நாலோக்யாம் தாமுதீரயேத் |-161

தான் துயருற்றபோதும் பிறர் மனம் நோகப் பேசலாகாது. பிறருக்குத் துரோகம் விளைவிக்கக்கூடிய காரியத்தை எண்ணலாகாது. எந்த வார்த்தையைக் கூறுவதால் மற்றவர்களுக்கு மனத்தில் பயம் தோன்றுமோ, அத்தகைய வார்த்தையைக் கூறலாகாது.

ஸம்மாநாத் ப்ராஹ்மணோ நித்யமுத்விஜேத விஷாதிவ
அம்ருதஸ்யேவ சாகாங்க்ஷேதவமாநஸ்ய ஸர்வதா|| 162

பிறர் தன்னைப் போற்றுவதை பிராம்மணன் விஷமாக எண்ணி ஒதுக்க வேண்டும். பிறர் தன்னை அவமானப்படுத்தினால் அதை அமிர்தம் போல் எண்ணி சகித்துக் கொள்ள வேண்டும்.

ஸுகம் ஹ்யவமத்ஸ்ஷேதே ஸுகம் ச ப்ரதிபுத்யதே |
ஸுகம் சரதி லோகே அஸ்மிந்நவமந்தா விநஷ்யதி || 163

பிறர் தன்னை அவமானப்படுத்தினாலும், அதைப் பொறுத்துக் கொண்டு பகை பாராட்டாமலிருப்பவன் சுகமாக உறங்குவான்;| சுகமாக விழித்தெழுவான்; சுகமாக சஞ்சரிப்பான். அவமானப் படுத்தியவனோ, அந்தப் பாபத்தால் நாசத்தையடைவான்.

அநேந க்ரமயோகேந ஸம்ஸ்க்ருதாத்மாத்விஜஷ்ஷனை: |
குரெள வஸஸந்சிநுயாத் ப்ரஹ்மாதி கமிகம் தப: |-164

த்விஜன், இதுவரைசொல்லப்பட்டதை யெல்லாம், மனத்தில் பதிய வைத்துக் கொண்டவனாக, குருவிடம் வசித்தபடி இதுவரை கூறியதும், இனி கூறப் போவதுமான நியமங்களை கடைப்பிடித்தபடி வேதங்களைப் படிக்க வேண்டும்.

தபோ விஷேசைர் விவிதைர் வருத்தைஷ்ச விதிசோதிதை: |
வேத: க்ருத்ஸ்நோ அதிகந்தவ்யஸ்ஸரஹஸ்யோ த்விஜந்மநா || 165

திவிஜன் முழுமையான நியமங்களோடு, கூறப்பட்ட விரதங்களைக் கடைப்பிடிப்பவனாக, வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கற்க வேண்டும்.

வேதமேவ ஸதாப்யஸ்யேத்தபஸ்தப்ஸ்யந் த்விஜோத்தம: |
வேதாப்யாஸோ ஹி விப்ரஸ்ய தப: பரமிஹோச்யதே || 166
தவம் செய்ய எண்ணும் உத்தமனான திவிஜன் வேதத்தை எப்போதும் அத்யயனம் செய வேண்டும். பிராம்மணனுக்கு வேதமோதுதலே இவ்வுலகில் முக்கியத்துவம் என்று முனிவர்கள் கூறியுள்ளனர்.

ஆஹைவ ஸ நகாக்ரேப்ய: பரமம் தப்யதே தப: |
ய: ஸ்ரக்வ்யபி த்விஜோ அதீதே ஸ்வாத்யாயம் ஷக்திதோ அந்வஹம் || 167

பிரம்மசரிய விரதத்தை முடித்த பிறகும், தினமும் வேதமோதுபவன் தலை முதல் கால் நகங்கள் வரையும் தவம் செய்தவனாகிறான்.

யோஅநதீத்ய த்விஜோ வேதமந்யத்ர குருதே ஷ்ரமம் |
ஸ ஜீவந்நேவ த்ரத்வமாஷு கச்சதி ஸாந்வய: | 168

வேதமோதாமல், மற்றசாஸ்திரங்களைப் படித்துக் கொண்டிருப்பவன், தான் வாழும்போதே சூத்ரனாகி விடுகிறான். மேலும் தன் வம்சத்தாரையும் சூத்ரர்களாக்குகிறான்.

மாதுரக்ரேஅதி ஐநநம் த்விதீயம் மௌஞ்ஜிபந்தனே |
த்ருதீயம் யக்ஞதீக்ஷாயாம் த்விஜஸ்ய ஷ்ருதிசோத நாத் 169

திவிஜனுக்கு மூன்று பிறப்புகள். தாயிடமிருந்து பிறப்பது முதல் பிறப்பு. உபநயனத்தால் இரண்டாவது பிறப்பு ஏற்படுகிறது. யக்ஞத்தால் மூன்றாவது பிறப்பு ஏற்படுகிறது.

தத்ர யத்ப்ரஹ்மஜன்மாஸ்ய மௌஞ்ஜீபந்தந சிஹ்நிதம்|
தத்ராஸ்ய மாதா ஸாவித்ரீ பிதாது ஆசார்ய உச்யதே || 170

இவற்றில் பிரஹ்ம பதமடைவதற்கான பிறப்புக்கு மவுஞ்பந்தனமே அடையாளம். அதாவது பூணூலும், முஞ்சிப்புல்லாலான அரைஞாணும், தண்டமும் அடையாளங்களாகின்றன. இந்த
திவிஜனுக்கு சாவித்ரீ தேவியே தாயாகிறாள். ஆசார்யனே தந்தை யாகிறான்.

வேத ப்ரதாநாதாசார்யம் பிதரம் பரிசக்ஷதே
நஹ்யஸ்மிந் யுஜ்யதே கர்ம கிஞ்சிதா மௌஞ்ஜிபந்தநாத் || 171

வேதத்தை அளிப்பதனால் ஆசார்யனே தந்தை என்று கூறுகிறார்கள். மௌஞ்ஜீ பந்தனத்துக்கு முன்பு எந்த சாஸ்த்ர சடங்குகளைச் செய்வதற்கும் அதிகாரமில்லை.

நாபிவ்யாஹாரயேத் ப்ரஹ்ம ஸ்வதா நிநயநாத்ருதே
ஷுத்ரேணஹி ஸமஸ்தாவத்யாவத் வேதேந ஜாயதே!-172

உபநயனமாவதற்கு முன்பு சிராத்த காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்களைக் கூறலாம். மற்றப்படி எந்த மந்திரமும் கூறக்கூடாது.உபநயனமாகும் வரை பிராம்மணன் சூத்ரனுக்கு சமமானவனே.

க்ருதோபநய நஸ்யாஸ்ய வரதாதேஷ நமிஷ்யதே |
ப்ரஹ்மணோ க்ரஹணம் சைவ க்ரமேண விதிபூர்வகம் || 173

உபநயனம் ஆனபிறகே சாஸ்த்ரோக்தமான விரதங்களைமேற்கொள்ள வேண்டும். வேதங்களைக் கற்க வேண்டும்.

யத்யஸ்ய விஹிதம் கர்ம யத் த்ரம் யா ச மேகலா |
யோ தண்டோ யச்ச வஸநம் தத்ததஸ்ய வரதேஷ்வபி || 174

மேலாடை, அரைஞாண், பூணூல், தண்டம், வஸ்திரம் முதலானவைகளை தன்னுடைய வர்ண முறைப்படி உபநயன காலத்தில் பிரம்மசாரி அணிய வேண்டும். அதே போன்று கோதானம் முதலான விரத காலங்களிலும் அவற்றை புதியனவாக அணிய வேண்டும்.

ஸேவேதேமாம்ஸ்து நியமாந் ப்ரம்மசாரீ குரௌ வஸந் ஸந்நியம்யேந்த்ரி யக்ராமம் தபோவ்ருத் யர்த்தமாத்மந: || 175
பிரம்மசாரி, குருகுலத்தில் வசித்தபடி, இந்திரியங்களை நன்குஅடக்கியவனாக தன்னுடைய தவவிருத்திக்காக இந்த நியமங்களைக்கடைப்பிடிக்க வேண்டும்.

நித்யம் ஸ்நாத்வா ஷுசி: குர்யாத் தேவர்ஷிபித்ரு தர்பணம்1 தேவதாப்யர்சநம் சைவ ஸமிதாதாநமேவச || 176
பிரம்மச்சாரி தினமும் நீராடி தூய்மையானவனாகி தேவரிஷி.பித்ரு தர்ப்பணங்களைக் கொடுக்க வேண்டும். பிறகு தெய்வபூஜையை செய்ய வேண்டும். சமிதா தானம் செய்ய வேண்டும்.

வர்ஜயேந்மதுமாம்ஸம் ச கந்தம் மால்யம் ரஸாந் ஸ்த்ரிய: 11
ஷுக்தாநி யாநி ஸர்வாணி ப்ராணிநாம் சைவ ஹிம்ஸநம் || 177
-பிரம்மச்சாரி, தேன் மாமிசம் முதலானவைகளை உண்ணலாகாது. சந்தனம் முதலான வாசனை திரவியங்களைப் பூசிக்கொள்ளலாகாது. மலர்மாலைகளை அணியலாகாது. பெண்களுடன்தொடர்பு கூடாது. புளிக்க வைக்கப்பட்டவைகளை, ரசங்களை இவ்வாறான எவற்றையும் சாப்பிடக் கூடாது. உயிர்களைக் கொல்லக்கூடாது.

அப்யங்கமஞ்சனம் சாஹ்ணோரு பாநச் சத்ரதாரணம் |
காமம் க்ரோதம்ச லோபம் ச நர்தநம் கீதவாதநம் || 178

எண்ணெய் தேய்த்துக் குளித்தல், கண்ணுக்கு மையிடுதல், காலணிகள் அணிதல், குடை பிடித்துக் கொள்ளல், காமம், குரோதம், லோபம், நடனம், பாட்டு, வாத்தியம் வாசித்தல் – இவையனைத்தும் விட வேண்டியவை.

த்யூதம் ச ஐநவாதம் ச பரிவாதம் ததாந்ருதம் |
ஸ்த்ரீணாம் ச ப்ரேக்ஷணாலம் பமுபகாதம் பரஸ்யச | 179
சூதாட்டம், பிறருடன் தேவையின்றி வாதம் புரிந்து கொண்டிருத்தல், வம்புப் பேச்சு, பிறரை நிந்தித்தல், பொய் பேசுதல், பெண்களை ஆசையோடு பார்ப்பது, அணைப்பது, பிறர்க்குத் தீங்கிழைப்பது – இவையனைத்தும் செய்யக் கூடாதவை.

ஏகஷ்ஷயீத ஸர்வத்ர நரேத: ஸ்கந்தயேத் க்வசித் | காமாத்தி ஸ்கந்தயந் ரேதோ ஹிநஸ்தி வ்ரதமாத்மந: || 180
எங்கும் தனியாகவே படுக்க வேண்டும். காமத்தால் ரேதஸை விடுபவன் பிரம்மசரிய விரதத்தை இழந்தவனாகிறான். இவ்வாறு பிரம்மசரிய விரதத்தை இழந்தவன் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்வப்நே ஸிக்த்வா ப்ரஹ்மசாரீ த்விஜஷ் க்ரமகாமத: | ஸ்நாத்வா அர்க்கமர்ச்சயித்வா த்ரி: புநர்மா மித்ய்ருசம் ஐபேத் || 181
காம எண்ணம் இல்லாமல் கனவின் மூலமாக ரேதஸ் ஸ்கலிதம் நேருமாயின், மறுநாள் காலையில் நீராடி, சூரிய பகவானைப் பூஜித்து, ‘புனர்மா’ என்னும் ரிக்கை மூன்று முறை ஜபிக்க வேண்டும்.

உதகும்பம் சுமநஸோ கோஷக்ருந் ம்ருத்திகா குஷாந் |
ஆஹரேத்யாவதர்த்தாநி பைக்ஷ்யம் சாஹரஹஷ்சரேத் |-182

தண்ணீர்,பூஜைக்குத் தேவையான மலர்கள், கோமயம், மண், தர்ப்பை முதலானவைகளையும் குருவுக்குத் தேவையானவைகளையும் கொண்டு வர வேண்டும். தினமும் பிட்சைக்குச் செல்ல வேண்டும்.

தேவயக்ஞை ரஹீநாநாம் ப்ரஷஸ்தாநாம் ஸ்வகர்ம |
ப்ரஹ்ம சர்யாஹரேத் பைக்ஷம் க்ருஹேப்ய: ப்ரயதோ அந்வஹம்| 183

நீராடி பரிசுத்தனாகி பிட்சைக்குக் கிளம்ப வேண்டும். வேதாத் யயனம், பஞ்ச மகா யக்ஞங்கள் முதலானவற்றை செய்பவர்களான இல்லறத்தாரின் இல்லங்களிலிருந்து பிட்சையைப் பெற்று வர வேண்டும்.

குரோ: குலே ந பிக்ஷேத ந ஞாதிகுலபந்து 1 அலாபேத்வந்யகேஹாநாம் பூர்வம் பூர்வம் விஸர்ஜயேத் Π 184
குருகுலத்திலும், குருவின் தாய பாகத்தார் உறவினர் இல்லங்களிலும் பிட்சைக்குச் செல்லலாகாது. வேறு வழியில்லாத போது குருவின் உறவினர் இல்லத்தில் பிட்சை ஏற்கச் செல்லலாம்.-அதற்கும் வழி இல்லாதபோது குருவின் தாயபாகத்தார் (பங்காளிகள்)
இல்லங்களுக்குச் செல்லலாம். அதற்கும் வழி இல்லாதபோது குருகுலத்திலேயே பிட்சாடனம் செய்யலாம்.

ஸர்வம் வாபி சரேத் க்ராமம் பூர்வோக்தா நாமஸம்பவே
நியம்ய ப்ரயதோ வாசபிஷஸ்தாம்ஸ்து வர்ஜயேத் I-185

முன்னர் கூறியவாறு நல்ல ஆசார ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோர் இல்லங்கள் இல்லாதபோது, பரிசுத்தனாகவும், இந்திரியங்களை அடக்கியவனாகவும் கிராமத்துக்குச் சென்று மெளனமாக பிட்சாடனம் செய்ய வேண்டும். அங்கும் மிகுந்த பாபிகளின் இல்லங்களுக்கு பிட்சை ஏற்கச் செல்லலாகாது.

தூராதாஹ்ருத்ய ஸமித: ஸந்நிதத்யா த்விஹாயஸி |
ஸாயம் ப்ராதஷ்ச ஜூஹுயாத் தாபிரக்நி மதந்த்ரித: ||-186

வனத்திலிருந்து சமித்துக்களையும் தர்ப்பைகளையும் கொண்டு வர வேண்டும். அவற்றினை வெற்று நிலத்தில் போடாமல் எதன் மீதாவது வைத்து நன்கு உலர்த்த வேண்டும். அவற்றைக் கொண்டு காலையும் மாலையும் சமிதா தானம் செய்ய வேண்டும்.
(சமிதா தானம் என்பது அக்னியை உபாசிக்கின்ற சிறிய கிரியை.-இதை உபநயனமானவுடன் ஆரம்பிக்க வேண்டும். திருமணம் நடக்கும் வரை தினமும் விடாது செய்ய வேண்டும். சமிதா தானம் ஒரு நாள் செய்யாவிடில், அவனது ஆயுளில் ஒரு நாள் குறையும்.-எத்தனை நாட்கள் செய்யவில்லையோ அத்தனை நாட்களும் ஆயுள்
குறையும்.(நித்தியம் விடாது சமிதாதானம் செய்தவனுக்கு ஆயுள்,ஆரோக்கியம், புகழ், புத்தி, தனம், நற்சந்ததி முதலான அனைத்தும் கிட்டும்.)

அக்ருத்வா பைக்ஷசரண மஸமித்ய ச பாவகம் |
அநாதுரஸ்ஸப்த ராத்ரமவகீர்ணி வரதம் சரேத் || 187

தேக அசௌகர்யத்தால் பிட்சான்னம் சாப்பிடாமல், காலை மாலை சமிதா தானம் செய்யாமல் ஏழு இரவுகள் கழித்தவன் அவகீர்ண பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

பைக்ஷேண வர்தயேந்நித்யம் நைகாந்நாதீ பவேத்வரதீ |
பைக்ஷேண வ்ரதிநோ வருத்தி ருபவாஸஸமா ஸ்ம்ருதா || 188

பிரம்மசாரி, தினமும் ஒரே இல்லத்தில் பிச்சை யெடுத்து வந்து உண்ணலாகாது. வேறு வேறு இல்லங்களுக்குச் செல்ல வேண்டும்.-இவ்வாறு பிட்சான்னம் சாப்பிட்டு பிரம்மசாரி இருப்பதை, உபவாசத்துக்கு நிகரானதாக சான்றோர் கூறுவர்.

வ்ரதவத் தேவ தைவத்யே பித்ர்யே கர்மண் யதர்ஷிவத் காமமப்யர்திதோ அஷ்நீயாத்வரதமஸ்ய நலுப்யதே !-189
வேள்வியின் போதும், சிராத்தத்தின் போதும் அழைக்கப்படும் பிரம்மசாரி, தனது விரதத்துக்கு பங்கம் ஏற்படாமல், தான் சாப்பிடக்கூடாதவற்றைத் தவிர்த்து மற்றபடி உண்ணலாம். இதனால் விரதபங்கம் ஏற்படாது.

ப்ராஹ்மணஸ்த்யைவ கர்மைததுபதிஷ்டம் மநீஷிபி: 1 ராஜந்ய வைஷ்யயோ ஸ்த்வேவம் நைதத்கர்ம விதீயதே 190
ஒரே இல்லத்தில் பிட்சாடனம் ஏற்று உண்பது கூடாது என்பது பிராம்மண பிரம்மசாரிக்கே கண்டிப்பாக விதிக்கப்பட்ட விதி. மற்றபடி க்ஷத்ரிய வைசிய பிரம்மசாரிகளுக்கு அல்ல என்று சான்றோர் கூறுவர்.

சோதிதோ குருணா நித்யமப்ரசோதித ஏவ வா குர்யாதத்யயநே யத்நமாசார்யஸ்ய ஹி தேஷு ச |-191
குரு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தினமும் வேதாத்யயனம் செய்ய வேண்டும். குருவுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்ய வேண்டும்.

ஷரீரம் சைவ வாசம் ச புத்தீந்த்ரிய மநாம்ஸி ச | நியம்ய ப்ரஞ்ஜலிஸ்திஷ்டே த்வீஹ மாணோ குரோர் முகம் || 192
உடல், புத்தி, இந்திரியங்கள், மனம் இவைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தவனாக, குரு எந்த நேரம் எது கூறுவாரோ என்று அவரது முகத்தையே பார்த்தபடி நிற்க வேண்டும்.

நித்யமுத் த்ருத பாணிஸ்யாத் ஸாத்வாசாரஸ் ஸம்யத: ||
ஆஸ்யதாமிதி சோக்தஸ்ஸந்நா ஸீதாபி முகம் குரோ: || 193

வஸ்திரத்தால் உடலை மறைத்து, தனது வலது தோள் வெளியே தெரியும் படியாக மேலாடை போர்த்துக் கொண்டு தூய்மை யானவனாக, குரு உட்காரச் சொன்ன பிறகு அவரெதிரே அமர வேண்டும்.

ஹீநாந்ந வஸ்த்ரவேஷஸ் ஸ்யாத்ஸர்வதா குருஸந்நிதௌ |
உத்திஷ்டேத்ப்ரதமம் சாஸ்ய சரமம் சைவ ஸம்விஷேத்|-194

குறைவான சாப்பாடு.சாதாரண ஆடை அலங்காரங்களுடன் இருக்க வேண்டும். குருவுக்கு முன்பாகத் துயிலெழ வேண்டும். அவர் உறங்கியபின், தான் உறங்கச் செல்ல வேண்டும்.

ப்ரதிஷ்ரவணநஸம்பாஷே ஷயாநோ நஸமாசரேத் |
நா நோ ந ச புஞ்ஜாநோ ந திஷ்டந்ந பராங்முக: I195

படுத்தபடியோ, உட்கார்ந்து கொண்டோ, சாப்பிட்டுக் கொண்டோ, பாரா முகமாகவோ குருவின் சொல்லுக்குப் பதிலளிக்கக் கூடாது.

ஆஸீநஸ்ய ஸ்தித: குர்யாதபிகச்ச ம்ஸ்து திஷ்டத: |
ப்ரத்யுத்கம்ய த்வாவ்ரஜத: பஷ்சாத் தாவம்ஸ்து தாவத:|| 196

குரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டு கட்டளையிட்டால் சிஷ்யன் நின்று கொண்டும், நின்றபடி கட்டளையிட்டால் எதிரே சென்றும், நடந்து வந்தபடியே கட்டளையிட்டால் எதிர்கொண்டு சென்றும், விரைந்தபடியே கட்டளையிட்டால் தான் ஓடிச் சென்று
அவரைப் பின்பற்றியபடியும், அவர் கட்டளைப்படி செய்வதோ, பதிலளிப்பதோ வேண்டும்.

பராங்முகஸ்யாபிமுகோ தூரஸ்தஸ்தைத்ய சாந்திகம் |
ப்ரணம்ய து ஷயாநஸ்ய நிதேஷே சைவ திஷ்டத: || 197

குரு எங்கோ கவனமாக இருக்கும்போது தான் எதிரே சென்றும்,தூரத்தில் இருக்கும்போது அருகில் சென்றும், படுத்துக் கொண்டிருக்கும் போது அவரை வணங்கியபடியும், நின்று
கொண்டிருக்கும்போது, தானும் சற்றுத் தள்ளி நின்று கொண்டும் குருவின் கட்டளையை நிறைவேற்றவோ, பதிலளிக்கவோ வேண்டும்.

நீசம்ஷய்யாஸநம் சாஸ்ய ஸர்வதா குரு சந்நிதௌ |
குரோஸ்து சக்ஷர்விஷயே ந யதேஷ்டாஸநோ பவேத் 198

குருவின் படுக்கை, ஆசனம் இவற்றைவிட சிஷ்யனுடையவைதாழ்ந்திருக்க வேண்டும். குருவின் கண்ணெதிரில் தன் இஷ்டப்படி அமரக் கூடாது.

நோதாஹரேதஸ்ய நாம பரோக்ஷமபி கேவலம் | நசைவாஸ்யாநுகுர்வீத கதிபாஷித சேஷ்டிதம் || 199
குரு எதிரில் இல்லாத போதும் அவர் பெயரைக் கூறக்கூடாது. குருநாதர், உபாத்யாயர் என்று மரியாதையோடு கூற வேண்டும். குரு இல்லாதபோது அவரைப் போன்று நடந்தும், பேசியும், அவர் செய்வதைப் போன்று செய்தும் பரிகசிக்கக் கூடாது.

குரோர்யத்ர பரீவாதோ நிந்தா வாபி ப்ரவர்த்ததே |
கர்ணௌ தத்ர பிதாதவ் யெள கந்தவ்யம் வா ததோஅந்தயத: 200 ||

தன் குருவைப் பிறர் தூற்றுவது, அபவாதம் பேசுவது போன்றவற்றைக் கேட்க நேர்ந்தால், உடனே தன்காதுகளை மூடிக் கொள்ள வேண்டும். அல்லது அங்கிருந்து நகர்ந்து வேறோர் இடத்துக்குப்போய் விட வேண்டும்.

பரீவாதாத்கரோ பவதி ஷ்வாவை பவதி நிந்தக: |
பரிபோக்தா க்ரிமிர்பவதி கீடோ பவதி மத்ஸ்ரீ || 201

சிஷ்யன் குருவின் மீது அபவாதம் சுமத்தினால், அந்தப் பாபத்தினால் அடுத்துக் கழுதையாகப் பிறப்பான். குருவை நிந்தை செய்தால் நாயாகப் பிறப்பான். அவரது செல்வத்தை எடுத்துக் கொண்டு அனுபவிப்பவன் கிருமியாகப் பிறப்பான். குருவைத்
துவேஷிப்பவன் புழுவாகப் பிறப்பான்.

தூரஸ்தோ நார்சயே தேநம் நக்ருத்தோ நந்திகே ஸ்த்ரியா
யாநா ஸநஸ்தஷ்சைவைந மவருஹ்யாபி வாதயேத் || 202

சிஷ்யாவன் நோயுற்றிருக்கும்போது தவிர்த்து மற்றப் பொழுதில் பிறரைக் கொண்டு குருவுக்குப் பணிவிடை செய்து வைத்தல் கூடாது. தான் கோபத்தோடிருக்கும்போதும், குரு தன் மனைவியோடு இருக்கும்போதும் அவரை வணங்கலாகாது.

ப்ரதிவாதே அநுவாதேச நாஸீத குருணா ஸஹ | அஸம்ஷ்ரவேசைவ குரோர்ந கிஞ்சிதபி கீர்தயேத் |-203
எதிர்காற்று வீசும்படியோ, பின்னிருந்து காற்று வீசும்படியோ குருவின் எதிரில் அமரலாகாது. குரு கேளாதபோது எதையும் உரைத்தலாகாது.

கோ அஷ்வோஷ்ட்ரயாந ப்ராஸாத ப்ரஸ்தரேஷு கடேஷுச |
ஆஸீத குருணா ஸார்த்தம் ஷிலாபலகநௌஷு ச -204

மாட்டு வண்டி, குதிரை வண்டி, ஒட்டகம் பூட்டிய வண்டி, மேடை, பாறை, பாய், கல், பலகை, படகு இவைகளின் மீது மட்டும் குருவுக்குச் சமமாக உட்காரலாம்.

குரோர்குரௌ ஸந்நிஹிதே குருவத்வ்ருத்திமாசரேத் |
ந சா நிஸ்ருஷ்டோ குருணாஸ்வாந் குரூநபி வாதயேத்II 205

குருவினுடைய குரு வந்தால், தன் குருவுக்குச் செய்வதைப் போன்று அபிவாதனம் செய்ய வேண்டும். தான் குருகுலத்தில் இருக்கும்போது, தன்னுடைய தாய் தந்தையர் வந்தால், குருவின் அனுமதியின்றி அவர்களுக்கு அபிவாதனம் செய்யலாகாது.

வித்யாகுருஷ்வேததேவ நித்யா வ்ருத்தி: ஸ்வயோநி !
ப்ரதி ஷேதத்சு சாதர் மாத்திதம் சோபதி ஷத்ஸ்வபி || 206

தன் குருவைத் தவிர்த்த மற்ற உபாத்யாயர்கள், தன் பெரிய தந்தை, சிறிய தந்தை முதலானோர், பாவத்தினின்றும் தன்னைத் தடுத்தவர், ஹிதத்தைப் போதிப்பவர் முதலானோரிடத்தும் இதே முறையில் அபிவாதனம் செய்ய வேண்டும்.

ஷ்ரேயஸ்சு குருவத் வ்ருத்திம் நித்யமேவ ஸமாசரேத் 1
குருபுத்ரேஷு சார்யேஷு குரோஷ்சைவ ஸ்வபந்து 207

தவம், வித்யை இவைகளால் உயர்ந்தோரிடத்தும், தன்னைவிட வயதில் மூத்த குருபுத்திரர்களிடத்தும்,குருவின் சுற்றத்தாரிடத்தும், இவ்வாறே தன் சுற்றத்தாரிடத்தும், குருவிடம் மரியாதையுடன்நடந்து கொள்வதைப்போன்றே நடந்து கொள்ள வேண்டும்.

பாலஸ்ஸமாநஜந்மா வா ஷிஷ்யோ வா யக்ஞகர்மணி |
அத்யாபயந் குருசுதோ குருவத்மாரு மர்ஹதி || 208

தன்னைவிட சிறியவனாக இருந்தாலும், அல்லது தன் வயதை ஒத்தவனாக இருந்தாலும், தன் சிஷ்யனாகவே இருந்தாலும், குருவின்புத்திரன் யக்ஞத்துக்கு வந்திருந்தால், குருவைப் போன்று கௌரவிக்க வேண்டும்.

உத்ஸாதநம் ச காத்ராணாம் ஸ்நாபநோச்சிஷ்ட போஜநே||
ந குர்யாத் குருபுத்ரஸ்ய பாதயோஷ்சாவ நேஜநம் || 209

ஆனாலும், குரு புத்திரனுக்கு சந்தனம் பூசுதல், நீராட்டிவைத்தல், குரு புத்திரன் சாப்பிட்ட மீதியைச் சாப்பிடல், பாதங்களைக் கழுவுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

குருவத்ப்ரதிபூஜ்யா: ஸ்யுஸ்ஸவர்ணா குருயோஷித: |
அஸவர்ணாஸ்து ஸம்பூஜ்யா: ப்ரத்யுத்தாநாபிவாதநை: || 210

தன் வர்ணத்தைச் சேர்ந்தகுருபத்தினிகளை குருவைப்போன்று பூஜிக்க வேண்டும். மாற்று வர்ணமாக இருந்தால், எதிர்கொண்டழைத்தல், அபிவாதனம் செய்தல் இவற்றை மட்டும் செய்ய வேண்டும்.

அப்யஞ்ஜநம் ஸ்நாபநம் சகாத்ரோத்ஸாதநமேவ ச |
குருபத்ந்யா ந கார்யாணி கேஷாநாம் ச ப்ரஸாதநம் || 211

குருபத்தினிக்கும்கூட, தலைக்கு எண்ணெய் தேய்த்துவிடல், நீராட்டுதல், சந்தனம் பூசுதல், தலை சீவுதல் முதலானவற்றைச் செய்யக் கூடாது.

குரு பத்நீது யுவதிர் நாபிவாத்யேஹ பாதயோ: |
பூர்ணவிம்ஷதிவர்ஷேண குணதோஷௌ விஜாநதா 212

குருபத்தினி இளம் பெண்ணாக இருந்தால், இருபது வயதைக் கடந்த,குணதோஷங்களை அறிந்த சிஷ்யன், அந்த இளம் வயது குருபத்தினிக்கு அபிவாதனம் செய்யும் போது, அவள் கால்களைத் தொட்டுச் செய்யக் கூடாது.

ஸ்வபாவ ஏஷ நாரீணாம் நராணாமிஹ தூஷணம் |
அதோ அர்த்தாந்ந ப்ரமாத்யந்தி ப்ரமதாசு விபஷ்சித: 213

ஆண்களை நிலை தடுமாறச் செய்யும் தன்மை பெண்களுக்கு உண்டு. எனவே அறிந்தவர்கள் பெண்கள் விஷயத்தில் நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும்.

அவித்வாந்ஸமலம் லோகே வித்வாந்ஸமபிவா புந: 1 ப்ரமதாஹ்யுத்பதம் நேதும் காமக்ரோத வஷாநுகம் || 214

வித்வானாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி, அவர்களைக் காமத்துக்கும் குரோதத்துக்கும் ஆளாக்கி தங்களுக்கு வசப்படுத்தும் சக்தி பெண்களுக்கு உண்டு.

மாத்ரா ஸ்வஸ்ரா துஹித்ரா வா ந விநிக்தாஸநோ பவேத் | பலவாநிந்த்ரிய க்ராமோ வித்வாம்ஸமபி கர்ஷதி|| 215
இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுடையது.-விவேகம் நிறைந்தவனையும் தவறான வழியில் இழுக்கும். எனவே, தாய், சகோதரி, மகள் இவர்களுடன்கூட தனித்திருக்கக் கூடாது.

காமம் து குருபத்நீநாம் யுவதிநாம் யுவா புவி |
விதிவத் வந்தனம் குர்யாத் அஸாவஹமிதி ப்ருவந் || 216

வாலிப வயதில் இருக்கும் சிஷ்யன் தன் குருவின் இளம் வயது மனைவியருக்கு, கால்களைத் தொடாமல்பூமியில் விழுந்து அபிவாதனம் செய்யவேண்டும். அதாவது வணங்க வேண்டும்.

விப்ரோஷ்ய பாதக்ரஹண மந்வஹம் சாபிவாதநம் |
குருதாரேஷு குர்வீத ஸதாம் தர்மமநுஸ்மரந் |-217

எப்போதும், வயது முதிர்ந்த குருவின் பத்தினியரை அவர் தம் பாதங்களைத் தொட்டு அபிவாதனம் செய்ய வேண்டும்.

யதா கநந் கநித்ரேண நரோ வார்யதிகச்சதி
ததா குருகதாம் வித்யாம் சுஷ்ருஷுரதிகச்சதி || 218

மண்வெட்டியால் பூமியைத் தோண்டியவன் தண்ணீரைப் பெறுவதைப் போன்று,குருவுக்குப் பணிவிடை செய்யும் சிஷ்யன் வித்யையை அடைவான்.

முண்டோ வா ஐடிலோ வா ஸ்யாதத வாஸ்யாச்சி காஜட: 1
நைநம் க்ராமே அபி நிம்ளேச்சேத் சூர்யோ நாப்யுதியாத் கவசித்| 219

பிரம்மசாரி முண்டிதனாக இருக்கலாம் (தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கலாம். ) அல்லது குடுமி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிறிது முடியை வைத்துக் கொண்டு சடை
பின்னலிட்டு,மற்ற இடத்தை மொட்டையடித்துக் கொண்டும் இருக்கலாம்.-இத்தகைய பிரம்மசாரி எந்தக் கிராமத்தில் வசித்தாலும் சரி,-இவனுக்குத் தெரியாமல் சூரியன் அஸ்தமிக்கவும் கூடாது. உதய மாகவும் கூடாது.-அதாவது சூரியோதய அஸ்தமனக் காலங்களில் உறங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்று பொருள்.

தம் சேதப்யுதியாத் சூர்ய: ஷயாநம் காமசாரத: 11 நிம்ளேசேத் வாப் ய விக்ஞாஞாஜ் ஜபந்நுபதேத்திநம் 220
தன்னை மறந்து சூரியோதய நேரத்தில் உறங்கினானேயானால், பகல் முழுவதும் உபவாசமிருந்து காயத்ரியை ஜபிக்க வேண்டும்.சூரிய அஸ்தமன நேரத்தில் உறங்கினால் மறுநாள் உபவாசமிருந்து காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும்.

சூர்யேணஹ்யபிநிர் முக்த: ஷயாநோ அப்யுதிதஷ்ச ய: |
ப்ராயஷ்சித்தமகுர்வாணோ யுக்த: யயாந்மஹ தைநஸா || 221

சூரிய உதய சமயத்திலோ, அஸ்தமன சமயத்திலோ உறங்கிய பிரம்மசாரி பெரும் பாதகத்தைச் செய்தவனாகிறான். பாவம் போவதற்குப் பிராயச்சித்தம் செய்யாதவன் மகாபாபி.

ஆசம்ய ப்ரயதோ நித்யமுபே ஸந்த்யே ஸமாஹித: 11
சௌ தேஷே ஜபந் ஜப்யமுபாஸீத யதாவிதி || 222

சூரிய உதய அஸ்தமனம் என்னும் இரண்டு சந்தியா காலங்களிலும் ஆசமனம் செய்து பரிசுத்தனாகி தூய்மையான இடத்தில் அமர்ந்து மனத்தில் வேறு சிந்தனையற்றவனாகி முறையாக காயத்ரி மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

யதி ஸ்த்ரீ யுத்யவரஜ்: ஷ்ரேய: கிஞ்சித்ஸமாசரேத் |
தத்ஸர்வமாசரேத்யுக்தோ யத்ர சாஸ்ய ர மேந்மந: || 223

பெண்ணாக இருந்தாலும், சூத்திரனாக இருந்தாலும் அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வார்களாயின், அவற்றைப் பற்றி நன்கு ஆராய்ந்து, அவை தன் மனத்துக் கிசைந்ததாகவும், சாஸ்திரத் துக்கு விரோதமில்லாததாகவும் இருந்தால் அவற்றைத்தானும்
செய்யலாம்.

தர்மார்த்தௌ உச்யதே ஷ்ரேய: காமார்த்தெள தர்ம ஏவச 1
அர்த்தயேவேஹ வா ஷ்ரேயஸ்த்ரிவர்க இதிது ஸ்திதி: || 224

அறம், பொருள், இன்பம் இவற்றில் அறமும் இன்பமுமே சிறந்தவை என்று சிலர் கூறுவார்கள்.-பொருளும் இன்பமுமே சிறந்தவை என்று சிலர் கூறுவார்கள்.
அறமே சிறந்தது என்று சிலர் கூறுவார்கள்.-மூன்றுமே சிறந்தவை என்பது என் அபிப்ராயம்.

ஆசார்யோ ப்ரஹ்மணோ மூர்த்தி: பிதா மூர்த்தி: ப்ரஜாபதே; |
மாதா ப்ருதிவ்யா மூர்த்திஸ்து ப்ராதா ஸ்வோ மூர்த்திராத்மந: || 225

ஆசார்யன் இறைவனின் சொரூபம்.-தந்தை பிரம்ம சொரூபம்.-தாய்பூமி பிராட்டியின் சொரூபம்.-தமையன் தன்னுடைய ஆத்மாவின் சொரூபம் என்று கொள்ள வேண்டும்.

ஆசார்யஷ்ச பிதா சைவ மாதா ப்ராதா ச பூர்வஜ: | நார்த்தேவாப் யவமந்தவ்யா ப்ராஹ்மணேந விசேஷத: 226
ஆசார்யன், தாய் தந்தையர், தமையன் இவர்களை தான் கஷ்ட தசையில் இருக்கும் போதும் அவமானப்படுத்தக் கூடாது. அதிலும் முக்கியமாக பிரம்மணன் செய்யக் கூடாது.

யம் மாதாபிதரௌ க்ளேஷம் ஸஹேதே ஸம்பவே ந்ருணாம் |
ஸதஸ்ய நிஷ்க்ருதிஷ்ஷக்யா கர்தும் வர்ஷஷதை ரபி || 227

தாய் தந்தையர், பிள்ளையைப் பெற்று வளர்த்து கல்வி கற்பிக்கும் வரை படும் பாடுகளுக்கு பிள்ளை எத்தனை பிறவிகள் எடுத்தும் நன்றிக் கடனைத் தீர்க்க முடியாது.

தயோர்நித்யம் ப்ரியம் குர்யாதாசார்யஸ்ய ச ஸர்வதா |
தேஷ்வேவ த்ரிஷு துஷ்டே தபஸ்ஸர்வம் ஸமாப்பதே || 228

இத்தகைய தாய் தந்தையருக்கும், குருவுக்கும் பிரீதி ஏற்படுமாறு எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மூவரும் பிரீதியடைந்தால்தான் இவனது சகல தவமும் பூர்த்தியாகும்.

தேஷாம் த்ரயாணாம் அஷ்ரூஷா பரமம் தபஉச்யதே |
நதை ரநப் யநுஞாதோ தர்மமந்யம் ஸமாசரேத் || 229

அம்மூவருக்கும் செய்யும் பணிவிடையே மேலான தவமாகும். அவர்கள் அனுமதியின்றி எந்தப் புண்ணிய கர்மாவும் செய்ய லாகாது.

தஏவ ஹி த்ரயோ லோகாஸ்த ஏவ த்ரய ஆஸ்ரமா: |
தரவ ஹி த்ரயோ வேதாஸ்த ஏவோக்தாஸ்த்ரயோ அக்நய: | 230

அவர்கள் மூவருமே மூன்று உலகங்கள்; அவர்கள் மூவருமே மூன்று (பிரம்மசர்யாஸ்ரமம், கிருஹஸ்தாஸ்ரமம், வானபிரஸ்தாஸ்ரமம்) ஆஸ்ரமங்கள்; அவர்கள் மூவருமே மூன்று வேதங்கள்.அவர்கள் மூவருமே திரேதாக்னிகள்.

பிதாவை கார்ஹபத் யோ அக்னிர்மாதாக் நிர்தக்ஷிண: ஸ்ம்ருத: குருராஹவநீயஸ்து ஸாக்நித்ரேதா கரீயஸ் || 231
பிதா கார்ஹபத்யம் என்னும் அக்னி, மாதா தக்ஷிணாக்னி, குரு ஆஹவநீய அக்னி. இவ்வாறு அக்னிசொரூபமான மூவரும் மிகவும் சிரேஷ்டமானவர்கள்.

த்ரிஷ்வப்ரமாத்யந்நேதேஷுத்ரீர் லோகாந் விஜயேத் க்ருஹீ | தீப்யமாந: ஸ்வவபுஷா தேவவத்திவி மோததே || 232
இம்மூவரிடமும் பக்தியுடன் வாழ்பவன், மூவுலகங்களிலும் உயர்ந்தவனாவான். திவ்ய சரீரத்தைப் பெற்று, சூரியன் முதலான தேவர்களைப் போல விண்ணுலகில் ஒளிர்வான்.

இமம் லோகம் மாத்ருபக்த்யா பித்ரு பக்த்யா து மத்யமம் |
குரு சுஷ்ரூஷயாத்வேவம் ப்ரஹ்மலோகம் ஸமஷ்நுதே || 233

தாயிடம் கொண்ட பக்தியால் இவ்வுலகத்தையும், தந்தையிடம் கொண்ட பக்தியால் தேவ உலகத்தையும், குருவுக்குச் செய்யும் பணிவிடையால் பிரம்மலோகத்தையும் அடைவான்.

ஸர்வே தஸ்யாத்ருதா தர்மாயஸ்த்யைதே த்ரய ஆத்ருதா: | அநாத்ருதாஸ்து யஸ்த்யைதே ஸர்வாஸ்ஸ்யாபலா: க்ரியா: | 234
தாய், தந்தை, குரு மூவரையும் ஆதரிப்பவனுக்கு அவன் செய்யும் சகல தர்ம, சாஸ்திர காரியங்களும் நற்பலனை நல்கும். அம்மூவரையும் ஆதரிக்காதவனுக்கு அவன் செய்யும் சகல தர்ம, சாஸ்திர காரியங்களும் நற்பலனை நல்கா.

யாவத் த்ரயஸ்தே ஜீவேயு ஸ்தாவந்நாந்யம் ஸமாசரேத் |
தேவேவ நித்யம் சுஷ்ரூஷாம் குர்யாத் ப்ரியஹிதே ரத: || 235

இம்மூவரும் ஜீவித்திருக்கும் காலம் வரை, அவர்கள் அனுமதியின்றி தர்ம காரியம் எதையும் செய்யலாகாது. தினமும் பிரீதியான, ஹிதத்தைத் தருவதான செயல்களைச் செய்தபடி
அவர்களுக்குப் பணிவிடை புரிய வேண்டும்.

தேஷாமநுபரோதேந பாரத்ரயம் யத்யதாசரேத் |
தத்தந்நி வேதயேத்தேப்யோ மநோவசன கர்மபி: |-236

அவர்களுக்குச் செய்யும் பணிவிடைகளுக்கு குந்தகம் ஏற்படாமல், தான் நல்லுலகைப் பெறுவதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும். அவற்றை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

த்ரிஷ்வே தேஷ்விதி க்ருத்யம் ஹி புருஷஸ்ய ஸமாப்யதே |
ஏஷ தர்ம: பரஸ்ஸாக்ஷாதுப தர்மோ அந்ய உச்யதே|| 237

இம்மூவருக்கும் பணிவிடை புரிதலே முக்கியமான தர்மம். மற்ற தர்மங்கள் இதற்கு அடுத்தாற் போன்றதே.

ஷ்ரத்ததா நஷ்பாம் வித்யாமாததீதா வராதபி | அந்த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி |-238
சிரத்தை இருப்பவன் தன்னைவிட கீழானவனிடமிருந்துகூட மேன்மையான வித்யையைப் பெறலாம்.-மோட்சம் தரும் மேலான தர்மத்தை சண்டாளனிடமிருந்தும் பெறலாம்.
தாழ்ந்த குலத்திலிருந்தும் நல்ல பெண்ணை ஏற்கலாம். (பெண் குலத்துக்கே ரத்தினமாக விளங்கும் பெண்ணையும், மோட்சத்தையே தரக்கூடிய தர்ம வழியையும், உயர்ந்த வித்யையையும் தாழ்ந்த குலம் என்று பாராமல் ஏற்க வேண்டும் என்பது பொருள்.)

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யம் பாலாதபி சுபாஷிதம் |
அமித்ராதபிசத்வருத்தம மேத்யா தபி காஞ்சநம்|||239

விஷத்திலிருந்து அமிர்தம் கிடைக்குமாயின், அதைப் பெறலாம். சிறுவனாக இருந்தாலும் அவன் சொல்வது நீதியாக இருந்தால் அதை ஏற்கலாம். சத்குருவிடமிருந்து நல்லொழுக்கத்தை ஏற்கலாம். தூய்மையற்றதனிடமிருந்தும் தங்கத்தை எடுக்கலாம்.

ஸ்த்ரியோ ரத்னாந்யதோ வித்யா தர்மஷ்ஷௌசம் சுபாஷிதம் |
விவிதாநி ச ஷில்பாநி ஸமாதேயாநி ஸர்வத: 11 240

பெண்கள், ரத்தினங்கள், வித்யை, தர்மம், ஒழுக்கம், நீதிகள்,பலவிதமான கலைகள் – இவைகள் எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்கவேண்டும்.

அப்ராஹ்மணாதத்யய நமாபத்காலே விதீயதே |
அநுவ்ரஜ்யா ச சுஷ்ரூஷாயாவதத்யயநம் குரோ: 241

பிராம்மணன் இல்லாத இடத்தில், க்ஷத்ரியனிடமிருந்தும், வைசியனிடமிருந்தும் வேதம் கற்கலாம். கற்கின்ற வரையில் அந்தக் குருவுக்கு பணிவிடைகள் புரியவேண்டும்.

நாப்ராஹ்மணே குரௌ சிஷ்யோ வாஸ மாத்யந்திகம் வஸேத் |
ப்ராஹ்மணே சாநநூசாநே காங்க்ஷந் கதிமநுத்தமாம் || 242

மோட்சம் என்னும் உத்தம பதத்தை அடைய விரும்பும்பிரம்மசாரி. பிராம்மணன் அல்லாத மற்றக் குருவினிடத்தும்,பிராம்மணனாக இருந்தாலும் முழுமையான வேதாத்யயன அனுஷ்டானமில்லாத குருவினிடத்தும், ஜீவித்திருக்கும் காலம் வரைபணிவிடைகள் புரிந்தபடி உடன் வசித்தல் கூடாது.

யதி த்வா த்யந்திகம் வாஸம் ரோசயேத குரோ:குலே |
யுக்த: பரிசரேதேந மா ஷரீரவிமோக்ஷணாத் ||-243

நைஷ்டிக பிரம்மசாரியாக இறுதி வரை வாழ நினைக்கும் பிரம்மசாரி, குருகுலத்தில் வசித்தபடி, புலன்களை வென்று, இறுதி வரை குருவுக்குப் பணிவிடைகளைப் புரிய வேண்டும்.

ஆ ஸமாப்தேஷ்ஷரீரஸ்ய யஸ்து சுஷ்ரூஷதே குரும் |
ஸ கச்சத்யஞ்சஸா விப்ரோ ப்ரஹ்மணஸ் ஸத்ம ஷாஷ்வதம் 244

உடல் நசிக்கும் வரை குரு பணிவிடை புரிபவன், நிரந்தரமான பிரம்ம லோகத்தை அடைகிறான்.

ந பூர்வம் குரவே கிஞ்சிதுப குர்வீத தர்மவித் 11
ஸ்நாஸ்யம்ஸ்து குருணா அங்கப் தஷ்ஷக்த்யா குர்வர்த்தமாஹரேத் | 245

வேத அத்யாயனம் செய்வதற்கு முன்பு சிஷ்யன் சிறிதளவும்கூட குருவுக்குத் தட்சிணை கொடுக்கலாகாது. வேத அத்யயனம் செய்து முடித்த பிறகு, பிரம்மசரியத்தை விட்டு இல்லற தர்மத்தை ஏற்க விரும்பி, குருவிடம் அனுமதி கோரும்போது குரு கோரும் தட்சிணையைக் கொடுக்க வேண்டும்.

சேஷத்ரம் ஹிரண்யம் காமஷ்வம் சத்ரோ பாநஹமாஸநம் |
தான்யம் ஷாகம் ச வாஸாம்ஸி குரவே ப்ரீதிமாவஹேத் 246

பூமி, தங்கம், பசுக்கள், குதிரைகள், குடை, பாதுகைகள், ஆசனம்,தானியங்கள், காய்கனிகள், ஆடைகள் முதலானவற்றை வழங்கினால் குருவுக்கு சந்தோஷம் ஏற்படும்.

ஆசார்யே து கலு ப்ரேதே குருபுத்ரே குணாந்விதே |
குருதாரே ஸபிண்டே வா குருவத் வ்ருத்திமாசரேத்|| 247

நைஷ்டிக பிரம்மசாரி, தன் குரு மரணமடைந்த பிறகு, குருவைப் போன்றே நற்குணங்கள் நிறைந்த அவர் மகனுடனோ, குரு பத்தினியுடனோ, அவரது தாயத்தாரிடமோ ( பங்காளியிடமோ) வசித்தபடி, தன் உயிர் உள்ள வரை அவருக்குப் பணிவிடை
புரியலாம்.

ஏதேஷ்வ வித்யமாநேஷு ஸ்நாநாஸந விஹாரவாந் |
ப்ரயுஞ்ஜாநோ அக்நி சுஷ்ஷாம் ஸாதயேத் தேஹமாத்மந: || 248

இவர்கள் யாரும் இல்லாதபோது, குரு ஹோமம் செய்து கொண்டிருந்த அக்னி குண்டத்தருகில், ஆசனத்தில் அமர்ந்து தினமும் அந்த அக்னி குண்டத்தில் தீ வளர்த்து ஹோமம் செய்தபடி தன் வாழ்நாளைக் கழிக்க வேண்டும்.

ஏவம் சரதி யோ விப்ரோ ப்ரஹ்மசர்யமவிப்ளுத: 1
ஸ கச்சத்யுத்தமம் ஸ்தானம் ந சேஹாஜாயதே புந: 249

இதுவரை கூறிய முறையில் நைஷ்டிக பிரம்மசரிய விரதத்தை சரியாகக் கடைப்பிடிக்கும் பிரம்மசாரி உத்தம லோகத்தை அடைவான். அவனுக்கு மறுபிறவி என்பது இல்லை.
(இரண்டாம் அத்தியாயம் முற்றிற்று.)

———-

அத்தியாயம் – 3

ஷட் த்ரிம்ஷதாப்திகம் சர்யம் குரெள த்ரைவேதிகம் வரதம் |
ததர்திகம் பாதிகம் வா க்ரஹணாந்திகமேவ வா || 1

பிரம்மச்சாரி மூன்று வேதங்களையும் முழுமையாக பயில்வதற்காக குருகுலத்தில் முப்பத்தாறு வருடங்கள் இருக்க வேண்டும்.-அல்லது அதில் பாதியான பதினெட்டு வருடங்கள் இருக்க வேண்டும். அல்லது அதிலும் பாதியான ஒன்பது வருடங்கள் இருக்க
வேண்டும். அதுவும் இல்லையெனில் நன்கு கற்றுக்கொள்ளும் வரையிலாவது இருக்க வேண்டும்.

வேதாநதீத்ய வேதெள வா வேதம் வாபி யதாக்ரமம் |
அவிப்ளுத ப்ரஹ்மசர்யோ க்ருஹஸ்தாஷ்ரமமாவ ஸேத் 2

பிரம்மச்சாரி. மூன்று வேதங்களை அல்லது இரண்டு வேதங்களை அல்லது ஒரு வேதத்தையாவது பயின்ற பிறகு கிருஹஸ் தாஸ்ரமத்தினை மேற்கொள்ள வேண்டும்.

தம் ப்ரதீதம் ஸ்வதர்மேண ப்ரஹ்மதாய ஹரம் பிது: |
ஸ்ரக்விணம் தல்ப ஆ ந மர்ஹயேத்ப்ரத மம்கவா || 3

தந்தையிடமோ, ஆசார்யனிடமோமுறைப்படி வேதம் கற்று முடித்தவனை, தந்தையோ அல்லது ஆசார்யனோ அவனை மலர்களால் அலங்கரித்து உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி கோதான விரதத்தைச் செய்ய வைத்து மதுபர்கம் அளித்து (தேன், தயிர், பழம் சேர்ந்தது மதுபர்கம்) உபசரிக்க வேண்டும்.

குருணாதுமத: ஸ்நாத்வா ஸமாவ்ருத்தோ யதாவிதி|
உத்வஹேத த்விஜோ பார்யாம் ஸவர்ணாம் தக்ஷணாந்விதாம் | 4

குருவின் அனுமதி பெற்றுச் சென்று, ஸ்நானம்,சமாவர்தனம் முதலானவைகளைச் செய்ய வேண்டும். பிறகு தன் வர்ணத்தில் பிறந்தவளான, லட்சணமான பெண்ணை மணக்க வேண்டும்.

அஸபிண்டா சயா மாதுரஸகோத்ரா ச யா பிது: |
ஸா ப்ரஷஸ்தா த்விஜாதீநாம் தாரகர்மணி மைதுநே || 5

தாயின் ரத்த பந்தத்தைச் சேர்ந்தவளாக இல்லாதவளும், தந்தையின் கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இல்லாதவளுமான பெண், த்விஜர்களுக்கு வேள்வி, தானம் முதலானவற்றைச் செய்வதற்கும் சந்ததியை அடைவதற்கும் தக்கவள்.

மஹாந்த்யபி ஸம்ருத்தாநி கோ அஜாவிதந்தான்யத:
ஸ்த்ரீஸம்பந்தே தஷைதாநி குலாநி பரிவர்ஜயேத் ||| 6

பசுக்கள்,ஆடுகள், தனதானியங்கள் என்று செழிப்பாக இருந்தாலும் பின்வரும் பத்துக் குலங்களைச் சேர்ந்தவர்களிடம் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது.

ஹீநக்ரியம் நிஷ்பருஷம் நிஷ்சந்தோ ரோமஷார்ஷஸம்
க்ஷய்யாமயாவ்ய பஸ்மாரிவித்ரி குஷ்டிகுலாநி ச || 7

ஜாதகர்மா முதலான கிரியைகளை அனுஷ்டிக்காத குலம், நீண்ட ரோமங்கள் கொண்டவள், மூலரோகிகள் உள்ள குலம், க்ஷயரோகிகள் உள்ள குலம், வயிற்றுவலிக்காரர்கள் குலம், பைத்தியம் பிடித்தோர் உள்ள குலம், குஷ்டரோகியர் குலம், யானைக்கால் வியாதி உள்ளோர் குலம் இவைகளில் சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது.

நோத்வஹேத்கபிலாம் கந்யாம் நாதிகாங்கீம் ஸரோகிணீம் |
நாலோமிகாம் நாதிலோமாம் ந வாசாடாம் ந பிங்கலாம் || 8

கபில நிற கேசங்கள் கொண்டவள், மிகவும் உயரமானவள், தீராத வியாதி கொண்டவள், அதிக ரோமங்கள் கொண்டவள், ரோமங்களே அற்றவள், அதிகம் கடுஞ்சொல்பேசுபவள், பச்சை நிறக் கண்களைக் கொண்டவள் – இப்படியான பெண்ணை மணம் புரியலாகாது.

நக்ஷத்ர வ்ருக்ஷ நதீநாம்நீம் நாந்த்ய பர்வத நாமிகாம் |
நபக்ஷ்யஹி ப்ரேஷ்ய நாம்நீம் நச பீஷண நாமிகாம் || 9

நட்சத்திரங்கள், மரங்கள், நதிகள் முதலானவைகளின் பெயர்களைக் கொண்ட பெண்ணையும், இழிவான பெயர், மலைகளின் பெயர்களைக் கொண்ட பெண்களையும், பறவைகள், பாம்புகள், அடிமைகள் இவ்வகையான பெயர்களைக் கொண்ட பெண்ணையும், பயங்கரமான பெயர் கொண்டவளையும் மணம் புரியக்கூடாது.

அவ்யங்காங்கீம் சௌம்யநாம்நீம் ஹம்ஸவாரண காமிநீம்|
தநுலோமகேஷ தஷநாம் ம்ருவங்கீமுத்வஹேத் ஸ்த்ரியம்|| 10

அழகிய அங்கங்கள் கொண்டவள், வசீகரமான பெயர் கொண்டவள், அன்னத்தைப் போன்றும், யானையைப் போன்றும் அழகாக நடப்பவள், அழகிய முடி, பற்கள் கொண்டவள்,
மென்மையான தேகம் கொண்டவள் – இப்படியான பெண்ணை மணக்க வேண்டும்.

யஸ்யாஸ்து ந பவேத்ப்ராதா நவிஞாயேத வா பிதா|
நோபயச்சேத தாம் ப்ராக்கு: புத்ரிகா தர்மஷங்கயா|| 11

கூடப் பிறந்த சகோதரனில்லாத பெண்ணை மணக்கக்கூடாது.-தந்தை யாரென்று தெரியாத பெண்ணையும் மணக்கக்கூடாது.

ஸவர்ணா அக்ரேத்விஜாதீநாம் ப்ரஷஸ்தா தாரகர்மணி |
காமதஸ்து ப்ரவருத்தா நாமிமாஸ்யு: க்ரமஷோ வரா: ||| 12

பிராம்மண, க்ஷத்ரிய, வைசியர் என்னும் த்விஜாதியினருக்கு முதல் விவாகத்தின்போது அவரவர் வருணத்தைச் சேர்ந்த பெண்ணை மணப்பதே சிரேஷ்டம்.விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்பவர் களுக்கு எந்தெந்த திருமணம் சிரேஷ்டம் என்று இனி பார்ப்போம்.

சூத்ரைவ பார்யா சூத்ரஸ்ய ஸாச ஸ்வாச விஷ: ஸ்ம்ருதே |
தேச ஸ்வா சைவ ராக்ஞஷ்ச தாஷ்ச ஸ்வா சாக்ர ஜன்மந: ||-13-

சூத்திரன், சூத்திரப் பெண்ணை மணப்பதே சிறந்தது.-வைசியன், சூத்திரப் பெண்ணையும், வைசியப் பெண்ணையும் மணக்கலாம். க்ஷத்ரியன், சூத்திரப் பெண்ணையும், வைசியப் பெண்ணையும், க்ஷத்ரியப் பெண்ணையும் மணக்கலாம். பிராம்மணன், சூத்திரப் பெண்ணையும்,வைசியப் பெண்ணையும்,க்ஷத்ரியப் பெண்ணையும், பிராம்மணப் பெண்ணையும் மணக்கலாம்.

ந ப்ராஹ்மண க்ஷத்ரியயோராபத்யபி ஹி திஷ்டதோ: | கஸ்மிந்சிதபி வருத்தாந்தே சூத்ரா பார்யோபதிஷ்யதே |-14
ஆயினும் கிருகஸ்த ஆஸ்ரமத்தை ஏற்க எண்ணும் பிராம்மண க்ஷத்ரியர்கள், ஆபத்துக் காலங்களிலும்கூட சூத்திரப் பெண்ணை மணந்ததாக சரித்திரம் இல்லை.

ஹீநஜாதிஸ்த்ரியம் மோஹாதுத்வஹந்தோத்விஜாதய: |
குலாந்யேவ நயந்த்யா ஸஸந்தாநாநி த்ரதாம் || 15

மோகத்துக்கு ஆட்பட்டு சூத்திரப் பெண்ணை மணக்கும் பிராம்மண, த்ரிய, வைசியர்கள் தங்கள் குலத்தை சூத்திர குலமாக்குகிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் சந்ததிகள் சூத்திரர் களேயாவர்.

சூத்ராவேதீ பததியதிரேருதத்ய தநயஸ்ய ச |
ஷௌனகஸ்ய சுதோத்பத்யா ததபத்ய தயா ப்ருகோ: || 16

சூத்திரப் பெண்ணை மணந்தவன் பதிதன் என்று அத்ரி மஹரிஷியும், கௌதம மஹரிஷியும் கூறியுள்ளனர்.-சூத்திரப் பெண்ணிடம் புத்திரனைப் பெற்றால் அவன் பதிதன்
என்று சௌனக மஹரிஷி கூறியுள்ளார்.-சூத்திரப் பெண்ணிடம் பிறந்தவன் பதிதன் என்று பிருகு மஹரிஷி கூறியுள்ளார்.

சூத்ராம் ஷயநமாரோப்ய ப்ராஹ்மணோ யாத்யதோ கதிம் |
ஐநயித்வா சுதம் தஸ்யாம் ப்ராஹ்மண்யா தேவஹீயதே |-17

சூத்திரப் பெண்ணை தன் மஞ்சத்தில் ஏற்றிக் கொண்ட பிராம்மணன் அதோ கதியை அடைவான். அந்த சூத்திரப் பெண்ணிடம் சந்ததியையும் ஏற்படுத்தினானேயானால் பிராம்மணத் தன்மையை இழப்பான்.

தைவ பித்ர்யாதிதேயாநி ததப்ரதாநாநி யஸ்யது |
நாஷ்நந்தி பித்ருதேவாஸ்தந்ந ச ஸ்வர்கம் ச கச்சதி 18

பிராம்மணன், தான் செய்யும் ஹோமம் முதலான தெய்விக கிரியைகளிலும், சிராத்தம் முதலான பித்ரு காரியங்களிலும், அதிதி பூஜையிலும், சூத்திர ஜாதிப் பெண்ணைக் கொண்டு செய்வானேயானால், அந்த ஹவ்யகவயங்களை தேவர்களும் பித்ருக்களும்
ஏற்கமாட்டார்கள். அத்தகைய பிராம்மணனுக்கு சொர்க்கமும் கிட்டாது.

வ்ருஷலிபே நபீதஸ்ய நிஷ்வாஸோப ஹதஸ்ய ச |
தஸ்யாம் சைவ ப்ரசூதஸ்ய நிஷ்க்ருதிர் ந வீதீயதே 19

சூத்திரப் பெண்ணிடம் அதரபானம் செய்தவனுக்கும், அவளது நீண்ட மூச்சுக் காற்றுப்பட இருந்தவனுக்கும், அவளிடம் சந்ததியை உண்டு பண்ணியவனுக்கும் பிராயச்சித்தமே கிடையாது.

சதுர்ணாமபி வர்ணாநாம் ப்ரேத்ய சேஹ ஹிதாஹிதாந் |
அஷ்டாவிமாந் ஸமாஸேந ஸ்த்ரீவிவாஹாந்நி போதத || 20

நான்கு வர்ணத்தாருக்கும், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கக்கூடியவை, பயக்காதவை என்று இருக்கும் எட்டு வகையான திருமணங்களை முழுமையாகக் கூறுகிறேன், கேளுங்கள்.

ப்ராஹ்மோ தைவஸ்ததைவார்ஷ: ப்ராஜாபத்யஸ்ததாசுர: 1 காந்தர்வோ ராக்ஷஸஷ்சைவ பைஷா சஷ்சாஷ்டமௌ அதம: |21
பிராம்மம், தெய்வம், ஆர்ஷம், பிராஜாபத்யம், ஆசுரம், காந்தர்வம், ராட்சசம், அதமமான பைசாசம் என்று திருமணங்கள் எட்டு விதமானவை.

யோ யஸ்ய தர்ம்யோ வர்ணஸ்ய குணதோஷௌச யஸ்யயௌ |
தத் வஸ்ஸர்வம் ப்ரவக்ஷ்யாமி ப்ரஸவே ச குணாகுணாந்|| 22

எந்த வர்ணத்தாருக்கு எது சாஸ்திர சம்மதமானதோ, எவருக்கு எந்த திருமணத்தால் குண தோஷமோ, அந்த திருமணத்தால் பிறந்த பிள்ளைகளுக்கு குணாகுணங்கள் எவையோ, அவையனைத்தையும் உங்களுக்குக் கூறுகிறேன்.

ஷடாநுபூர்வ்யா விப்ரஸ்ய க்ஷத்ரஸ்ய சதுரோ அவராந்|
விட்சூத்ரயோஸ்து தாநேவ வித்யா தர்மாந்ந ராக்ஷஸாந் || 23

படித்த பிராம்மணனுக்கு முதல் ஆறு திருமண வகைகளும் சாஸ்திர சம்மதமானவை. க்ஷத்திரியனுக்கு அதற்கடுத்த நான்கு திருமண வகைகளும், வைசியனுக்கு ராட்சசம் தவிர்த்த மற்ற திருமண வகைகளும் சாஸ்திர சம்மதமானவை.

சதுரோ ப்ராஹ்மண ஸ்யாத்யாந் ப்ரஷஸ்தாந் கவயோ விது: 1
ராட்சசம் க்ஷத்ரியஸ்த்யைகமாசுரம் வைஷ்ய சூத்ரயோ: |24

முதல் நான்கு திருமண வகைகள் பிராம்மணனுக்கு உயர்வானவை என்றும், க்ஷத்ரியனுக்கு ராட்சசமும், வைசியனுக்கும் சூத்திரனுக்கும் ஆசுரம் ஒன்றே உயர்வானது என்றும் பெரியோர் கூறுவர்.

பஞ்சாநாம் து த்ரயோ தர்ம்யாத்வாவதர்ம்யௌ ஸ்ம்ருதாவிஹ
பைஷா சஷ்சாசுரஷ்சைவ ந கர்த்தவ்யௌ கதாசந || 25

பிராம்மம், தெய்வம், பிராஜாபத்யம் மூன்றும் தர்ம சாஸ்திர சம்மதமானவை. ஆர்ஷமும், ஆசுரமும் சாஸ்திர சம்மதமானவையல்ல.

ப்ருதக் ப்ருதக்வா மிஷ்ரௌ வா விவாஹௌ பூர்வசோதிதெள |
காந்தர்வோ ராட்சஸஷ்சைவ தர்ம்யௌ கூக்ஷத்ரஸ்ய தெள ஸ்ம்ருதௌ 26

முதலில் கூறப்பட்டபடி, ராட்சச விவாகமும், காந்தர்வ விவாகமும் க்ஷத்ரியர்களுக்கு சாஸ்திர சம்மதமானவை. இரண்டையும் இணைத்தும் செய்து கொள்ளலாம். தனித்தனியான
முறையிலும் செய்து கொள்ளலாம்.

ஆச்சாத்ய சார்சயித்வாச ஷ்ருதிஷீலவதே ஸ்வயம் |
ஆஹூய தாநம் கந்யாயா ப்ராஹ்மௌ தர்ம: ப்ரகீர்தித: |-27

வேதம் படித்த, ஆசாரமான பிரம்மச்சாரியை, தானே அழைத்துவந்து, வஸ்திரங்கள் கொடுத்து,மரியாதைகள் செய்து, நன்கு அலங்கரித்த பெண்ணை தானம் கொடுப்பது பிராம்ம விவாகம் எனப்படும்.

யக்ஞேது விததே ஸம்யக்ருத்விஜே கர்ம குர்வதே | அலங்க்ருத்ய சுதாதானம் தைவம் தர்ம்யம்ப்ரசக்ஷதே || 28
யக்ஞங்கள் செய்து வைக்கும் ரித்விக்கான பிராம்மணனுக்கு அலங்கரிக்கப்பட்ட தன் பெண்ணை வழங்குவது தெய்வ விவாகம் எனப்படும்.

ஏகம் கோமிதுநம் த்வே வா வராதாதாய தர்மத:
கன்யா ப்ரதாநம் விதிவத் ஆர்ஷோ தர்மஸ்ஸ உச்யதே|| 29

யாகத்துக்கு உதவும் வண்ணம் தர்ம நிமித்தமாக ஒரு பசுவையும் காளையையுமோ அல்லது இரண்டையும் சேர்த்தோ வரனிடமிருந்து பெற்றுக்கொண்டு, விதிமுறைப்படி வரனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதற்கு ஆர்ஷ விவாகம் என்று பெயர்.

ஸஹோபௌ சரதாம் தர்மமிதி வாசாநு பாஷ்ய ச 1
கன்யா ப்ரதாநமப்யர்ச்ய ப்ராஜாபத்யோ விதி: ஸ்ம்ருத: || 30

நீங்கள் இருவரும் சேர்ந்து தர்மத்தைக் கடைப்பிடியுங்கள் என்று கூறி, பெற்றோர் வரனைப் பூஜித்து தம் பெண்ணைக் கொடுப்பது பிராஜபத்ய விவாகம் எனப்படும்.

ஞாதிப்யோ த்ரவிணம் தத்வா கன்யாயை சைவ ஷக்தித: | கன்யாப்ரதாநம் ஸ்வாச்சந்த்யாதாசுரோ தர்ம உச்யதே| 31
பெண்ணின் பெற்றோருக்கு வேண்டிய அளவு பணத்தைக் கொடுத்துவிட்டு, பெண்ணை தன் விருப்பப்படி மணப்பது ஆசுர விவாகம் எனப்படும்.

இச்சயா அந்யோந்யஸம்யோக: கன்யாயாஷ்ச வரஸ்யச |
காந்தர்வஸ்ஸது விஞேயோமைதுந்ய: காமஸம்பவ: [ 32

ஆண், பெண் இருவரும் விரும்பி இணைவது காந்தர்வ விவாகம் எனப்படும். இது காமசம்பவமாகவும், மைதுனத்துக்காக ஏற்பட்ட தாகவும் இருக்கிறது.

ஹித்வா சித்வா சபித்வா ச க்ரோஷந்தீம் ருததீம் க்ருஹாத் |
ப்ரஸஹ்ய கன்யாஹரணம் ராக்ஷஸோ விதிருச்யதே 33

திருமணத்துக்கு பெண்ணின் உறவினர்கள் சம்மதியாதபோது, அவர்களை ஹிம்சித்து பெண்ணை பலவந்தமாக தூக்கிக்கொண்டு வருவது ராட்சச விவாகம் எனப்படும்.

சுப்தாம் மத்தாம் ப்ரமத்தாம் வா ரஹோ யத்ரோபகச்சதி |
ஸபாபிஷ்டோ விவாஹாநாம் பைஷாசஷ்சாஷ்டமோ அதம: “34

தூங்கிக் கொண்டிருப்பவளையாவது, போதையில் இருப்பவளை யாவது,ஏமாந்த நிலையில் அகப்பட்டவளாக இருப்பவளையாவது பலாத்காரம் செய்வது பைசாசம் எனப்படும். இது எட்டாவது விவாக முறை. இது மிக மிக அதமமானது.

அத்பிரேவத்விஜா க்ரியாணாம் கந்யாதாநம் விஷிஷ்யதே
இதரேஷாம்து வர்ணாநாமிதரே தரகாம்யயா |35

நீர் வார்த்து கன்யாதானம் செய்வது பிராம்மணர்களுக்கு உத்தமமான திருமண முறை. மற்றவர்களுக்கு நீர் வார்த்து கன்யாதானம் செய்யும் முறையில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்னும் நியமம் இல்லை.

யோ யஸ்யைஷாம் விவாஹாநாம் மநுநா கீர்திதோ குண: |
ஸர்வம் ஸ்ருணுத தம் விப்ரா: ஸர்வம் கீர்தயதோ மம || 36

முனிவர்களே, எந்த எந்த விவாகத்துக்கு எந்த எந்த குணம் உண்டோ அதை மனுபகவான் கூறியபடியே உங்களுக்குக் கூறுகிறேன், கேளுங்கள்.

தஷபூர்வாந் பராந் வம்ஷ்யாநாத்மாநம் சைக விம்ஷகம் |
ப்ராஹ்மீ புத்ரஸ்ஸுக்ருதக்ருத் மோசயேதேந ஸ: பித்ரூந்-37

பிராம்ம விவாகத்தால் பிறந்த புத்திரன் புண்ணியாத்மா அவன் தன் முன் பத்து தலைமுறையினரையும், பின் பத்து தலைமுறை யினரையும், தன் தலைமுறையைச் சேர்ந்தவரையும் என மொத்தம் இருபத்தொரு தலைமுறையினரையும் பாபங்களினின்றும் விலக்கி கரையேற்றுகிறான்.

தைவோடாஜஸ் சுதஷ்சைவ ஸப்த ஸப்த பராவராந்
ஆர்ஷோடா ஜஸ் அதஸ்த்ரீம்ஸ்த்ரீந் ஷட் ஷட் காயோட ஐஸ் அத: |38

தெய்வ விவாகத்தால் பிறந்த புத்திரன், தன் முன்னேழுதலைமுறையினரையும், பின்னேழு தலைமுறையினரையும், தன் தலைமுறையினரையும் சேர்த்து மொத்தம் பதினைந்து தலை
முறையினரை பாபங்களினின்றும் விலக்கி கடைத்தேற்றுகிறான்.அவ்வாறே பிராஜாபத்ய விவாகத்தால் பிறந்த புத்திரன் முன் ஆறு தலைமுறையினரையும் பின் ஆறு தலைமுறையினரையும் தன் தலைமுறையினரையும் கடைத்தேற்றுகிறான்.
ஆர்ஷ விவாகத்தால் பிறந்த புத்திரன், முன் மூன்று தலைமுறையினரையும் பின் மூன்று தலைமுறையினரையும், தன் தலைமுறையினரையும் கடைத்தேற்றுகிறான்.

ப்ராஹ்மாதிஷு விவாஹேவு சதுர்ஷ்வே வாநுபூர்வ : ப்ரஹ்ம வர்சஸிந: புத்ரா ஜாயந்தே ஷிஷ்டஸம்மதா: || 39
பிராம்ம விவாகம், தெய்வ விவாகம், ஆர்ஷ விவாகம். பிராஜாபத்ய விவாகம் – இந்த நான்கு விவாகங்கள் மூலம் பிறந்த புத்திரர்கள் பிரம்மதேஜஸுடன் கூடியவர்களாகவும், சான்றோர்
விரும்புகிறவர்களாகவும் இருப்பர்.

ரூபஸத்வ குணோபேதா தநவந்தோ யஷஸ்விந: |
பர்யாப்தபோகா தர்மிஷ்டா ஜீவந்தி ச ஷதம் ஸமா: |-40

மேலும் அவர்கள் அழகு, பலம், நற்குணங்கள் கூடியவர்களாகவும், தனவான்களாகவும், புகழோடு எல்லா போக பாக்கியங்களும் நிறைந்தவர்களாகவும், தர்மிஷ்டர்களாகவும் நூறாண்டு வாழ்வர்.

இதரேஷு து சிஷ்டேஷு ந்ருஷம்ஸாந்ருத வாதிந: |
ஜாயந்தே துர்விவாஹேஷ ப்ரஹ்ம தர்ம த்விஷஸ்சுதா: 41

மற்றபடி, ஆசுரம், காந்தர்வம், ராட்சசம், பைசாசம் என்னும் விவாகங்களால் பிறந்த புத்திரர்கள் குரூரர்களாகவும், பொய் பேசுபவர்களாகவும், தர்ம காரியங்களையும், வேதத்தையும் வெறுப்பவர்களாகவும் இருப்பர்.

அநிந்திதை: ஸ்த்ரீ விவாஹைரநிந்த்யா பவதிப்ரஜா |
நிந்திதைர் நிந்திதா ருணாம் தஸ்மாந்நிந்த்யாந் விவர்ஐயேத் || 42

உயர்வாகக் கூறப்படும் விவாகங்களால் உயர்வான சந்ததிகள் பிறப்பார்கள். நிந்திக்கத்தக்க விவாகங்களால் நிந்தனைக்குரிய சந்ததிகள் பிறப்பார்கள்.

பாணிக்ரஹண ஸம்ஸ்கார: ஸவர்ணாசூபதிஷ்யதே |
அஸவர்ணாஸ்வயம் ஞேயோ விதிருத்வாஹ கர்மணி |-43

தன் வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணை பாணிகிரஹண முறையில் மணக்க வேண்டும். மற்ற வர்ணத்து பெண்களை இனி கூறப்போகும் முறைகளில் மணக்கலாம்.

ஷர: க்ஷத்ரியயா க்ராஹ்ய: ப்ரதோதோ வைஷ்யகந்யயா |
வஸநஸ்ய தஷா க்ராஹ்யா சூத்ரயோத்க்ருஷ்டவே தநே || 44

க்ஷத்ரியப் பெண் பிராம்மணனை மணக்கும்போது, பிராம்மணன் கரத்தில் பிடித்துள்ள ஒரு அம்பின் நுனியை பற்றிக்கொள்ள வேண்டும்.-வைசியப் பெண், பிராம்மணனையோ, க்ஷத்ரியனையோ மணக்கும்போது மணமகன் கரத்திலுள்ள சாட்டையின் நுனியைப் பற்றிக்கொள்ள வேண்டும்.-சூத்திரப் பெண் பிராம்மணனையோ, க்ஷத்ரியனையோ, வைசியனையோ மணக்கும்போது மணமகனின் மேலாடை நுனியை பற்றிக்கொள்ள வேண்டும்.

ருதுகாலாபிகாமீ ஸ்யாத்ஸ்வதார நிரதஸ்ஸதா |
பர்வவர்ஜம் வ்ரஜேச்சைநாம் தத்வரதோ ரதிகாம்யயா || 45

மனைவியை சந்தோஷப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். அந்நியப் பெண்களை நினைக்கக் கூடாது. பெளர்ணமி, அமாவாசை மற்றும் தவிர்க்கச் சொல்லும் நாட்களை விட்டுவிட்டு மற்ற நாட்களில் மனைவியுடன் ரமிக்க வேண்டும்.

தாஸாமாத் யாஷ்சதஸ்ரஸ்து நிந்திதைகாதஷீ சயா| திரயோதஷீ சஷேஷாஸ்து ப்ரஷஸ்தா தஷ ராத்ரய: || 47
அந்த ருதுகாலத்துக்கான தினங்களில் முதல் நான்கு தினங்களும் பதினொன்றாவது இரவும், பதிமூன்றாவது இரவும் தகாதவைகள். மற்ற பத்து இரவுகளும் சேரத் தகுந்தவை.

யுக்மாஅ புத்ரா ஜாயந்தே ஸ்த்ரியோ அயுக்மாசு ராத்ரிஷு |
தஸ்மாத் யுக்மாசு புத்ரார்த்தீ ஸ்ம்விஷேதார்த்தவே ஸ்த்ரியம் 48

கூறிய இந்த பத்து இரவுகளில், ஆறாவது, எட்டாவது இரவுகளில் புத்திரர்கள் பிறப்பார்கள். மற்ற இரவுகளில் புத்திரிகள் பிறப்பார்கள். புத்திரனை விரும்புபவன் அதற்குரிய இரவுகளிலும், புத்ரியை விரும்புபவன் அதற்குரிய இரவுகளிலும் மனைவியுடன் சேர வேண்டும்.

புமாந்பும்ஸோ அதிகே க்ளே ஸ்த்ரீபவத்யதிகே ஸ்த்ரியா: 1
ஸமே அபுமான் பும்ஸ்த்ரியௌ வா னே அல்பேச விபர்யய: [1 49

ஆணின் சுக்லம் மிகுதியானால் ஆண் குழந்தையும், பெண்ணின் ஸ்ரோணிதம் மிகுதியானால் பெண் குழந்தையும் பிறக்கும். இரண்டும் சமமாக சுரந்தால் நம்சகனான குழந்தையோ, ஆண் பெண்என இரட்டைக் குழந்தைகளோ பிறக்கும். சுக்ல சோணிதங்கள் இல்லாமல் போனாலோ, குறைவானாலோ கர்ப்பம் ஏற்படாது.

நிந்த்யாஸ்வஷ்டாசு சாந்யாசு ஸ்த்ரியோ ராத்ரிஷு வர்ஜயந் |
ப்ரஹ்மசார்யேவ பவதி யத்ரதத்ராஷ்ரமே வஸந் || 50

முதலில் கூறிய தவிர்க்கப்பட வேண்டிய நான்கு தினங்களையும், பதினொன்றாவது, பதிமூன்றாவது தினங்களையும், அமாவாசை பெளர்ணமி தினங்களையும் விட்டுவிட்டு, மற்ற இரவுகளில் மனைவியுடன் கூடுபவன், கிருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருந்தாலும், பிரம்ம
சரியத்தை கடைப்பிடிப்பவனாகவே கூறுகின்றனர்.

நகன்யாயா: பிதா வித்வாந் க்ருஹ்ணீயாச்சுல்கமண்வபி |
க்ருஹ்ணஞ்சுல்கம் ஹிலோபேந ஸ்யாந்நரோ அபத்ய விக்ரயீ|| 51

அறிவாளியான பெண்ணைப் பெற்ற தந்தை, சிறிதளவும் வரனிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளக்கூடாது. லோப குணத்தோடு பெற்றுக்கொள்பவன், தன் பெண்ணை விலைக்கு
விற்றவனாவான்.

ஸ்த்ரீதநாநி துயே மோஹாதுபஜீவந்தி பாந்தவா: |
நாரீயாநாநி வஸ்த்ரம் வா தே பாபாயாந்தி யதோகதிம்–52

ஒரு பெண்ணுக்கு, திருமண சமயத்தில் வழங்கப்பட்ட தனம் அவளுடையது. அந்த தனத்தையோ, வாகனங்களையோ, வஸ்திரங்களையோ சுற்றத்தார் யாரேனும் அபகரித்துக் கொண்டால், அவர்கள் பெரும் பாவத்துக்கு ஆளானவர்களாய் அதோகதியை அடைவார்கள்.

ஆர்ஷே கோமிதுநம் ஷூல்கம் கேசிதாஹுர்ம்ருஷைவ தத் |
அல்போ அப்யேவம் மஹாந்வாபி விக்ரயஸ்தாவதேவ ஸ: 53

ஆர்ஷ விவாகத்தில் ஒரு காளை, ஒரு பசு இவைகளை சுல்கமாகப் பெற்றுக்கொள்ளலாம் என சிலர் கூறியிருந்தாலும் அது சரியல்ல. சுல்கத்தை கொஞ்சமாகப் பெற்றுக் கொண்டாலும், அது பெண்ணை விற்றதற்கே சமம்.

யாஸாம் நாதததே ல்கம் ஞாதயோ நஸ விக்ரய: 1 அர்ஹணம் தத்குமாரீணாமா ந்ருஷம்ஸ்யம் ச கேவலம் 54
பெண்ணின் விவாக சமயத்தில் அவள் உறவினர் சுல்கம் பெற்றுக்கொள்ளாவிடில், பெண்ணை விற்றதாகாது.-மேலும் விவாக சமயத்தில் வரன் பெண்ணுக்குக் கொடுத்ததனத்தை, அவளுக்காகவே உபயோகப்படுத்த வேண்டும்.

பித்ருபிர் ப்ராது பிஷ்சைதா: பதிபிர்தேவரைஸ் ததா |
பூஜ்யா பூஷயிதவ்யாஷ்ச பஹுகல்யாண மீப்சுபி: |-55

விவாக சமயத்தில் வரன் கொடுத்த தனத்தை பெண்ணுக்கேகொடுப்பதோடு, தங்கள் நலனை விரும்பும் தந்தைமார்களும்,சகோதரர்களும், கணவன்மார்களும், பெண்களுக்கு விருந்தளித்து,உபசரித்து, வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் வழங்க வேண்டும்.

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: |
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ராபலா: க்ரியா: |-56

எங்கு பெண்கள் போற்றப்படுகிறார்களோ, அங்கு தேவர்கள் சந்தோஷத்தோடு இருப்பார்கள். எங்கு பெண்கள் போற்றப்படுவ தில்லையோ, அங்கு செய்யும் கிரியைகள் எல்லாம் பலன் தராது போகும்.

ஷோசந்தி ஜாமயோ யத்ர விநஷ்யத்யா தத்குலம்
நஷோசந்தி து யத்ரைதா வர்ததே தத்தி ஸர்வதா|| 57

உடன் பிறந்த சகோதரிகள், மனைவியர், மருமகள்கள், ஒரே தாயபாகத்துக்குரிய பெண்கள் – இவர்கள் எந்தக் குலத்தில் போற்றப் படவில்லையோ, அந்த குலம் விரைவில் நாசமடையும். எந்தக் குலத்தில் இவர்கள் போற்றப்படுகிறார்களோ, அந்தக் குலம்விருத்தியை அடைந்த வண்ணமாகவே இருக்கும்.

ஜாமயோ யாநி கேஹாநி ஷபந்த்ய ப்ரதிபூஜிதா: |
தாநி க்ருத்யாஹதாரீவ விநஷ்யந்தி ஸமந்தத: || 58

சகோதரிகள் முதலான பெண்கள், தங்களை நன்கு போற்றாத காரணத்தால் எந்தக் குலத்தைச் சபிக்கிறார்களோ, அந்தக் குலம் நாசமடையும்.

தஸ்மாதேதாஸ்ஸதா பூஜ்யா பூஷணாச்சாத நாஷநை: |
பூதிகாமைர் நரைந்நித்யம் ஸத்காரே த்ஸவே ச || 59

ஐஸ்வர்யத்தை விரும்புவோர் உத்ஸவ காலங்களிலும், விவாகங்கள் முதலான காலங்களிலும், உடன் பிறந்த சகோதரிகளுக்கு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் கொடுத்து சந்தோஷப்படுத்த வேண்டும்.

ஸந்துஷ்டோ பார்யயா பர்தா பர்த்ரா பார்யா ததைவ ச 1
யஸ்மிந்நேவ குலே நித்யம் கல்யாணம் தத்ர வைத்ருவம் || 60

மனைவியால் கணவனும், கணவனால் மனைவியும் சந்தோஷமடைந்தவர்களாக இருக்கும் குலத்தில் எப்போதும் மங்கலம் நிறைந்திருக்கும்.

யதி ஹி ஸ்த்ரீ நரோசேத புமாம்ஸம் ந ப்ரமோதயாத்
அப்ரமோ தாத்புந: பும்ஸ்: ப்ரஜநம் ந ப்ரவர்ததே|| 61

எந்தப் பெண், வஸ்திரங்களும் ஆபரணங்களும் பெற்றுசந்தோஷமாக இல்லையோ, அந்தப் பெண் தன் கணவனை சந்தோஷப்படுத்த மாட்டாள். எனவே அந்தக் கணவனுக்குகுழந்தைப் பாக்கியம் கிட்டாது.

ஸ்த்ரியாந்து ரோசமாநாயாம் ஸர்வம் தத்ரோசதே குலம் |
தஸ்யாம் த்வரோசமாநாயாம் ஸர்வமேவ நரோசதே |-62

பெண்கள் எங்கு சந்தோஷத்தோடு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அந்தக் குலம் பிரகாசிக்கும். பெண்கள் சந்தோஷமற்று ஒளி குன்றியவர்களாக இருந்தால்,அவர்கள் கணவனை சந்தோஷப்படுத்த மாட்டார்கள். அந்நிய ஆடவனுடன் சேர்க்கை ஏற்பட்டு அந்தக் குலம்நசிக்கும்.

குவிவாஹை: க்ரியாலோபை ர்வேதாத்ய யநேநச |
குலாந்ய குலதாம் யாந்தி ப்ராஹ்ம ணாதிக்ர மேண ச 63

தகாத விவாகங்களாலும், ஜாதகர்மா முதலான கிரியைகள்நடத்தப் பெறாமையாலும், வேதங்களை அத்யாயனம் செய்யாததாலும், பிராம்மணர்களை கெளரவிக்காததாலும் நற்குலமும் ஷீணத்தை அடையும்

ஷில்பேந வ்யவஹாரணே த்ராபத்யைஷ்ய கேவலை:
கோபிஷ்வைஷ்ய யானைஷ்ச க்ருஷ்யா ராஜோபஸேவய 64

ஓவியம் முதலான கலைகளில் ஈடுபடுவதாலும், வழக்குகளாலும், சூத்திர குலத்துப் பெண்ணை மணந்து சந்ததி ஏற்படுத்துவதாலும், பசுக்கள் குதிரைகள் வண்டிகள் இவைகளை வாங்கவும் விற்கவுமான வியாபாரம் செய்வதாலும், ராஜசேவையில் ஈடுபடுவதாலும், மேன்மையான குலம் ஷீணமடையும்.

அயாஜ்யயாஜனநஷ்சைவ நாஸ்திக்யேந ச கர்மணாம் |
குலாந்யாஷு விநஷ்யந்தி யாநிஹீநாநி மந்த்ரத: || 65

யக்ஞங்கள் செய்ய அருகதையற்றவர்களைக் கொண்டு யக்ஞங்கள் செய்வதாலும், கிரியைகளில் நம்பிக்கையற்ற நாஸ்திகத் தன்மையாலும், வேதாத்யயனத்தை விடுவதாலும், நற்குலம் நாசமடையும்.

மந்த்ரதஸ்து ஸம்ருத்தாநி குலாந்ய ல்பதநாந்யபி | 1
குலஸங்க்யாம் ச கச்சந்தி கர்ஷந்தி ச மஹத்யஷ:I-66

மந்திர அனுஷ்டானங்களோடு, ஞானத்தோடு வாழும் குலங்கள், செல்வத்தோடு விளங்காவிடினும், இக்குலங்கள் எண்ணிக்கைகளால் விரிவடைந்து, மிக்க புகழோடு விளங்கும்.

வைவாஹிகே அக்நௌ குர்வீத க்ருஹ்யம் கர்ம யதாவிதி |
பஞ்சயக்ஞவிதாநம் ச பங்திம் சாந்வாஹிகீம் க்ருஹீ 67

கிருகஸ்தன், விவாக அக்நியில் காலையும் மாலையும் ஒளபாசனம் செய்ய வேண்டும்.
வைஷ்யதேவம் முதலான பஞ்ச யக்ஞங்களையும் செய்ய வேண்டும். வந்த விருந்தினரைப் போற்றி உணவளிக்க வேண்டும்..

பஞ்ச நூநா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷண்யவஸ்கர: 11
கண்டநீ சோதகும்பஷ்ச பத்யதே யாஸ்து வாஹயந் |-68

முறம், உரல், உலக்கை, துடைப்பம், தண்ணீர்க் குடம் இவற்றை உபயோகப்படுத்துவதால் கிருஹஸ்தர்கள் கொலைப் பாபங்களை அடைகின்றனர்.

தாஸாம் க்ரமேண ஸர்வாஸாம் நிஷ்க்ருத்யர்த்தம் மஹர்ஷிபி: 1
பஞ்சக்ளுப்தா மஹாயக்ஞா: ப்ரத்யஹம் க்ருஹமேதி நாம் || 69

கிருஹஸ்தர்களின் அந்த மஹா பாபங்கள் போவதற்காகமஹரிஷிகள் முறையே ஐந்து மஹா யக்ஞங்களை விதித்துள்ளனர்.

அத்யாபநம் ப்ரஹ்மயக்கு: பித்ருயக்ஞஸ்து தர்பணம் |
ஹோமோ தைவோ பலிர்பூதோ ந்ருயக்ஞோ அதிதிபூஜநம் ||-70-

வேதமோதுதல் – பிரம்ம யக்ஞம்.-பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தல் – பித்ரு யக்ஞம்.
ஹோமங்கள் செய்வது – தேவ யக்ஞம். வைஷ்வ தேவம், பூதபலி – பூத யக்கும்.
விருந்தோம்பல் – மநுஷ்ய யக்ஞம்.

பஞ்சைதாந் யோ மஹாயக்ஞாந் ந ஹாபயதி ஷக்தித: |
ஸ க்ருஹே அபி வஸந்நித்யம் சூநாதோஷைர் நலிப்யதே
-71
இந்தப் பஞ்சமஹா யக்ஞங்களையும் தன் சக்திக்கேற்ப நடத்திக்கொண்டிருக்கும் கிருஹஸ்தனுக்கு, பஞ்சமஹா பாபங்களும் நீங்கிப்போகும்.

தேவதாதிதி ப்ருத்யாநாம் பித்ரூணாமாத்ம நஷ்சய: |
நநிர்வபதி பஞ்சாநா மு வஸந்ந ஸ ஜீவதி || 72

தெய்வங்களுக்கும், பூதங்களுக்கும், விருந்தினருக்கும், பித்ருக்களுக்கும் உரியபடி உணவளிக்காதவன், தன்னையும் சரிவரக் காத்துக்கொள்ளாதவன், உயிரோடிருந்தாலும் இறந்தவனுக்குச் சமம்.

அஹுதம் ச ஹுதம் சைவ ததா ப்ரஹுதமேவ ச |
ப்ராஹ்ம்யம் ஹுதம் ப்ராஷிதம் ச பஞ்ச யக்ஞாந் ப்ராசக்ஷதே|-73

அஹதம், ஹுதம், பிரஹுதம், பிராம்யஹுதம், பிராஷிதம் என்று ஐந்து மஹாயக்ஞங்கள் கூறப்படுகின்றன.

ஐபோ அஹுதோஹுதோஹோம: ப்ரஹுதோபௌதிகோ பலி: |
ப்ராஹ்ம்யம் ஹுதம் த்விஜாக்ர்யார்சா ப்ராஷிதம் பித்ருதர்பணம் | 74

அஹுதம் என்றால் ஜபம்.-ஹுதம் என்றால் அக்னி ஹோத்ரத்தில் செய்யப்படும் ஹோமம்.
பிரஹுதம் என்றால் பூதங்களுக்கு அளிக்கப்படும் பலி.-பிராம்யஹுதம் என்றால் உத்தம பிராம்மணர்களை பூஜிப்பது.-பிராஷிதம் என்றால் பித்ருதர்பணம்.

ஸ்வாத்யாயே நித்யுயுக்தஸ்ஸ்யாத் தைவே சைவேஹ கர்மணி
தைவே கர்மணி யுக்தோ ஹி பிபர்தம் சராசரம்||175

வறுமையினால் தினமும் விருந்தோம்பல் என்னும் அதிதி பூஜை செய்ய இயலாதவன், வேதாத்யயனம் செய்வதில் எப்போதும் ஊக்கத்தோடிருக்க வேண்டும். அக்னி ஹோத்ரம் முதலான வற்றையும், தெய்வ பூஜையையும் சிரத்தையோடு செய்பவன் சராசரரூபமான இவ்வுலகை போஷித்தவனாகிறான்.

அக்நௌ ப்ராஸ்தாஹுதிஸ்ஸம் யகாதித்ய முபதிஷ்டதே | ஆதித்யாஜ்ஜாயதே வ்ருஷ்டிர்வ்ருஷ்டேரந்நம் தத: ப்ரஜா:1| 76
அக்னியில் நன்கு செய்யப்படும் ஹோமம் சூரியனைச் சென்றடையும்; அந்தச் சூரியனிடமிருந்து மழை பொழியும்; அந்த மழையினால் அன்னம் விளையும்; அந்த அன்னத்தால் மாந்தர்கள் பிறப்பார்கள்.

யதா வாயும் ஸமாஸ்ரித்ய ஸர்வே ஜீவந்தி ஐந்தவ: |
ததா க்ருஹஸ்தமாஷ்ரித்ய வர்த்தந்தே ஸர்வ ஆஷ்ரமா: [| 77
காற்றினாலேயே சகல உயிர்களும் உயிர் வாழ்வதைப் போல், ; கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ளவனை ஆச்ரயித்தே மற்ற மூன்று ஆஸ்ரமவாசிகளும் வாழ்வார்கள்.

யஸ்மாத் த்ரயோ அப்யாஷ்ரமிணோ ஞாநேநாந்நேந சாந்வஹம்1- க்ருஹஸ் தேநைவ தார்யந்தே தஸ்மாத் ஜ்யேஷ்டாஷ்ரயோ க்ருஹீ| 78 கிருஹஸ்தன் மற்ற ஆஸ்ரமவாசிகளை வேதாத்யயனம் செய்ய வைப்பவனாகவும், அவர்களுக்கு அன்னபானங்களைக் கொடுத்து தினமும் போஷிப்பவனாகவும் இருப்பதால், அவனே, மற்ற ஆஸ்ரம வாசிகளைக் காட்டிலும் உயர்ந்தவன்.

ஸஸந்தார்ய: ப்ரயத்நேந ஸ்வர்கமக்ஷய மிச்சதா |
சுகம் சேஹேச்சதா நித்யம் யோ அதார்யோ துர்பலேந்த் ரியை: || 79
இம்மையிலும் மறுமையிலும் சுகத்தை வேண்டும் கிருஹஸ்தன், இல்லற தர்மத்தை நன்கு கடைப்பிடிக்க வேண்டும். இந்திரியங்களை அடக்கி வாழாதவனால் இல்லற தர்மத்தை நன்கு கடைப்பிடிக்க இயலாது.

ருஷய: பிதரோ தேவா: பூதாந்யதிதயஸ்ததா |
ஆஷாஸதே குடும்பிப்யஸ்தேப்ய: கார்யம் விஜாநதா ||80

ரிஷிகள், பித்ருக்கள், பூதங்கள், அதிதிகள் இவர்கள் தமக்கு வேண்டியவைகளை கிருஹஸ்தனிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். அதனால் கிருஹஸ்தன் அவர்களுக்குத் தேவையானதையறிந்து அளிக்க வேண்டும்.

ஸ்வாத்யாயேநார்சயேதர்வீந் ஹோமைர் தேவாந் யதாவிதி |
பித்ரூந் ஷ்ராத்தைஷ்ச ந்ருநந்நைர்பூதாநி பலிகர்மணா 11 81

வேதாத்யயனம் செய்வதால் ரிஷிகள் பூஜிக்கப்பட்டவர்களாகின்றனர்.
ஹோமங்கள் செய்வதால் தேவர்கள் பூஜிக்கப்பட்டவர் களாகின்றனர்.
சிரார்த்த கருமங்கள் செய்வதால் பித்ருக்கள் பூஜிக்கப்பட்டவர்களாகின்றனர்.
அன்னமளிப்பதால் அதிதிகள் பூஜிக்கப்பட்டவர்களாகின்றனர்.
பலி கொடுப்பதால் பூதங்கள் பூஜிக்கப்பட்டவர்களாகின்றனர்.
(பலி என்பது உயிர்வதை அல்ல. உணவு கொடுப்பதே யாகும்.)

குர்யாதஹரஹ: ஷ்ராத்தமந்நாத்யே நோதகேந வா |
பயோ மூல பலை வாபி பித்ருப்ய: ப்ரீதி மாவஹேந் 182

பித்ரு தேவர்களின் பிரீதிக்காக தினமும் அன்னத்தாலோ தண்ணீராலோ, பால், கிழங்குகள், பழங்கள் முதலியவற்றாலோ சிரார்த்தம் செய்ய வேண்டும்.

ஏகமப்யாஷயே த்விப்ரம் பித்ரர்தே பாஞ்சயஞகே
நசைவபத்ராஷயேத்கஞ்சித் வைஷ்வதேவம் ப்ரதி த்விஜம் ||83-

பஞ்ச யக்ஞங்களில் ஒன்றான பித்ரு யக்ஞத்தில் ஒரு பிராம்மணனுக்காவது தினமும் அன்னமளிக்க வேண்டும். வைஷ்வதேவம் என்னும் பூதயகஞத்தில் அன்னமிடாமல் போனாலும்பலியை மட்டும் போட வேண்டும்.

வைஷ்வதேவஸ்ய வித்தஸ்ய க்ருஹ்யே அக்நெள விதிபூர்வகம் |
ஆப்ய: குர்யாத் தேவதாப்யோ ப்ராஹ்மணோ ஹோமமந்வஹம் ||| 84

வைஷ்வ தேவத்துக்காக சமைத்த அன்னத்தை கிருஹ அக்னியில் தேவர்களுக்காகத் தினமும் ஹோமம் செய்ய வேண்டும்.

அக்நேஸ்ஸோமஸ்ய சைவாதெள தயோஷ்சைவ ஸமஸ்தயோ: I
விஷ்வேப்யஷ்சைவ தேவேப்யோ தந்வந்தரய ஏவ ச|| 85

ஹோமம் செய்யும் அக்னியில் முதலில் அக்னிக்கும், பிறகு சோமனுக்கும், அடுத்து அக்னி, சோமன் இருவருக்கும் சேர்த்தும், அடுத்து விஷ்வே தேவர்களுக்கும், அடுத்து தன்வந்திரிக்கும் ஹோமம் செய்ய வேண்டும்.

குஹ்வை சைவாநுமத்யை ச ப்ரஜாபதய ஏவ ச |
ஸஹத்யா வா ப்ருதிவ்யோஷ்ச ததா ஸ்விஷ்டக் ருதேஅந்தத: I| 86

அடுத்து குஹு, அனுமதி, பிரஜாபதி, த்யு, பிருத்வி, அக்னி இவர்களுக்கு ஹோமம் செய்ய வேண்டும்.

ஏவம் ஸம்யக்கவிர்ஹுத்வா ஸர்பதி ப்ரதக்ஷிணம் |
இந்த்ரா ந்தகாப்பதீந்துப்ய: சாநுகேப்யோ பலிம் ஹரேத் |-87

இவ்வாறு நன்கு ஹோமம் செய்து, இந்திரன் முதல் திக்பாலர்களுக்கு பிரதட்சிணமாக அவரவர் திக்கில் பலியிட வேண்டும்.

மருத்ப்ய இதிது த்வாரி க்ஷிபேதப்ஸ்வத்ப்ய இத்யபி |
வநஸ்பதிப்ய இத்யேவம் முஸலோலூகலே ஹரேத் ||-88

வாயிலருகில் மருத்ப்ய: ஸ்வாஹா’ என்று மருத்துகளுக்கும், நீர்நிலையில் ‘அத்ப்ய: ஸ்வாஹா’ என்று ஜலதேவதைகளுக்கும், உரல், உலக்கையில் ‘வனஸ்பதிப்ய: ஸ்வாஹா’ என்று வனதெய்வங்களுக்கும் பலி வைக்க வேண்டும்.

உச்சீர்ஷகே ஷ்ரியை குர்யாத்பத்ரகாள்யை ச பாதத: 1
ப்ரஹ்ம வாஸ்தோஷ்பதிப்யாம் து வாஸ்து மத்யே பலிம் ஹரேத் |-89

வீட்டின் வடகிழக்கு மூலை அல்லது படுக்கையின் தலைமாட்டில் லட்சுமிக்கும், தென்மேற்கு மூலை அல்லது படுக்கையின் கால்மாட்டில் பத்ரகாளிக்கும், வீட்டு நடுப் பகுதியில்
பிரம்ம தேவருக்கும், வாஸ்து புருஷனுக்கும் பலியளிக்க வேண்டும்.

விவேப்யஷ்சைவ தேவேப்யோ பலிமாகாஷ உக்ஷிபேத் |
திவாசரேப்யோ பூதேப்யோ நக்தம்சாரிப்ய ஏவ ச || 90

பகலில் சஞ்சரிக்கும் பூதங்களுக்கும், இரவில் சஞ்சரிக்கும் பிராணிகளுக்கும் வீட்டுக்கு வெளியில் பலி வைக்க வேண்டும்.

ப்ருஷ்டவாஸ்துநி குர்வீத் பலிம் ஸ்ர்வாத்ம பூதயே |
பித்ருப்யோ பலிசேஷம் து ஸர்வம் தக்ஷிணதோ ஹரேத் 1| 91

வீட்டில் மேற்பகுதியில் சர்வாத்ம பூதயே ஸ்வாஹா’ என்று பரம்பொருளுக்கு பலி வைக்க வேண்டும்.-மிகுந்த பலியன்னத்தைக் கொண்டு வீட்டின் தெற்கில் பித்ருக்களுக்கு பலி வைக்க வேண்டும்.

ஷுநாம் ச பதிதாநாம் ச ஷ்வபசாம் பாபரோகிணாம் | வாயஸாநாம் க்ருமீணாம் ச ஷநனகர்நிர்வபேத் புவி || 92

நாய்களுக்கும், பதிதர்களுக்கும், சண்டாளருக்கும், கொடிய நோய் பீடித்தவர்களுக்கும், காக்கைகளுக்கும், கிருமிகளுக்கும் தூசியில்லாத இடத்தில் பலி போட வேண்டும்.

ஏவம் யஸ்ஸர்வபூதாநி ப்ராஹ்மணோ நித்யமர்சதி 1
ஸ கச்சதி பரம் ஸ்தாநம் தேஜோமூர்தி: பதர்ஜுநா || 93

இவ்வாறு பிராம்மணன் சகல பூதங்களுக்கும் பலி கொடுத்தலைச் செய்து, பிரம்ம தேஜஸைப் பெற்று, பிரம்ம பதத்தை அடைவான்.

க்ருத்வைதத்பலி கர்மைவ மதிதிம் பூர்வமாஷயேத் |
பிக்ஷாம் ச பிக்ஷவே தத்யாத்விதிவத் ப்ரஹ்ம சாரிணே 94

இவ்வாறாக கிருஹஸ்தன் பலி கர்மாவை முடித்த பிறகு முதலில் தன் இல்லத்துக்கு வந்திருக்கும் அதிதிக்கு உணவளிக்க வேண்டும். பிறகு சந்யாசிக்கும் பிரமமசாரிக்கும் பிட்சையிட வேண்டும்.

யத் புண்யபலமாப்நோதி காம்தத்வா விதிவத் குரோ: 1 தத் புண்யபலமாப்நோதி பிக்ஷாம் தத்யாத் த்விஜோ க்ருஹீ 95
கிருஹஸ்தன் சாஸ்திர முறைப்படி தன் குருவுக்கு கோதானம் செய்வதால் எந்த புண்ணியத்தை அடைவானோ, அந்தப் புண்ணியத்தை பிட்சையளிப்பதால் அடைவான்.

பிக்ஷாம்ப்யுத பாத்ரம் வா ஸத்க்ருத்ய விதிபூர்வகம் |1 வேத தத்வார்த்த விதுஷே ப்ராஹ்மணோ ஸோப பாதயேத் Il 96
வேத தத்துவங்களை உணர்ந்த சான்றோனுக்கு பிட்சையிட சக்தி இல்லாதபோது, சாஸ்திர விதிப்படி பூஜித்து சக்திக்கேற்ற பிட்சையையோ, காய்கறிகளையோ, பாத்திரத்தில் நீரையோ அளிக்க வேண்டும்.

நஷ்யந்தி ஹவ்யகவ்யாநி நராணாமவி ஜாநதாம்|
பஸ்மீ பூதேஷூ விப்ரேஷு மோஹாத்தத்தாநி தாத்ருபி: | 97

வேதமறியாத ஞானமற்றவருக்குக் கொடுக்கும் ஹவ்ய கவ்யங்கள் சாம்பலில் இட்ட ஆஹுதி போல் வீணாகும்.

வித்யா தபஸ்ஸம்ருத்தே ஹுதம் விப்ரமுகதக்நிஷு |
நிஸ்தாரயதி துர்காச்ச மஹதஷ்சைவ கில்பிஷாத் || 98

வித்யை, தவம், பிரம்மதேஜசுடன் கூடின பிராம்மணனுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும். சத்ரு பயத்தைப் போக்கும். மன்னனால் ஏற்படக்கூடிய உபத்திரவத்தை நீக்கும். மகா பாபங்களினின்றும் விடுவிக்கும்.

ஸம்ப்ராஸ்தாய த்வதிதயே ப்ரதத்யாதாஸநோ தகே|
அன்னம் சைவ யதா ஷக்தி ஸத்க்ருத்ய விதிபூர்வகம் 99

வந்த அதிதிக்கு ஆசனமளித்து, பாதத்தை அலம்ப தண்ணீர் கொடுத்து, சாஸ்திர முறைப்படி பூஜித்து, நல்ல விருந்தை அளிக்க வேண்டும்.

ஷிலாநப்யுஞ்சதோ நித்யம் பஞ்சாக்னீநபி ஜூஹ்வத: 1
ஸர்வம் சுக்ருதமாதத்தே ப்ராஹ்மணோ அநர்சிதோ வஸந் 100

வயலில் சிந்தியிருக்கும் தானியங்களைக் கொணர்ந்து, அதைக் கொண்டு ஜீவனம் நடத்துபவனாக இருப்பவன் அடையும் புண்ணியத்தையும், பஞ்சாக்னி நடுவிலிருந்து தவம் செய்பவன் அடையும் புண்ணியத்தையும்,அதிதியை நன்கு பூஜித்து விருந் தளித்தவன் அடைவான்.

த்ருணாநி பூமிருதகம் வாக் சதுர்தீ ச சூந்ருதா| ஏதாந்யபி ஸதாம் கேஹே நோச்சித்யந்தே கதாசந-101
அதிதிக்கு போஜனமளிக்க முடியாத போதிலும், படுப்பதற்கு இடம் கொடுத்து, பாய் கொடுத்து, அருந்த நீர் கொடுத்து, இனிய சொற்களால் உபசரிப்பது என்பது நல்லோர் இல்லங்களில் குறைவறக் கிடைக்கும். எனவே இவைகளை அளிக்க வேண்டும்.

ஏகராத்ரம் து நிவஸந்நதிதிர்ப்ராஹ்மண: ஸ்ம்ருத: 1 அநித்யம் ஹி ஸ்திதோ யஸ்மாத்தஸ்மாத்ததி திருச்யதே 102
ஒருவரில்லத்தில் ஓரிரவு மட்டுமே தங்கும் பிராம்மணனுக்கு அதிதி என்று பெயர்.
ஒரு நாளேனும் ஓரிடத்தில் நிலைத்து இருக்காததால் அவன் அதிதி எனப்படுகிறான்.

நைகக்ராமீணமதிதிம் விப்ரம் ஸாங்கதிகம் ததா| உபஸ்திதம் க்ருஹே வித்யாத்பார்யா யத்ராக்நயோ அபிவா || 103
தன் கிராமத்திலேயே வசிப்பவனை, வாய் ஜாலம் பேசுபவனை, தன் மனைவி, அக்னி ஹோத்ரங்களோடு வசியாமல் இருப்பவனை அதிதியாக எண்ணக்கூடாது.

உபாஸதே யே க்ருஹஸ்தா: பரபாகமபுத்தய: 1 தேந தே ப்ரேத்ய ப தாம் வ்ரஜந்த்யந்நாதி தாயிநாம் || 104
அறிவிலிகளாக, எப்போதும் பிறர் சாப்பாட்டை உண்பவர்கள், இறந்த பிறகு ஜன்மாந்தரங்களில் அன்னத்தையளித்தவன் வீட்டில் மிருகங்களாய் பிறப்பார்கள்.

அப்ரணோத்யோ அதிதிஸ்ஸாயம் சூர்யோடோ க்ருஹமேதி நா |
காலே ப்ராப்தஸ்த்வகாலே வா நாஸ்யாநஷ்நந் க்ருஹே வசேத்|| 105

சூரியன் அஸ்தமித்த பிறகு வந்த அதிதியையும் கிருஹஸ்தன் அலட்சியப் படுத்தக்கூடாது.சாப்பாட்டு நேரத்துக்கு வந்தாலும், சாப்பாட்டு நேரம் கடந்து வந்தாலும் கண்டிப்பாக அதிதிக்கு அன்னமிட வேண்டும். அவ்வாறு தன்னை கௌரவிக்காத இல்லத்தில் அதிதி இருக்கலாகாது..

நவை ஸ்வயம் ததஷ்ரீயாததிதிம் யஸ்ந போஜயேத்
தன்யம் யஷஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சாதிதிபூஜநம் Π 106

அதிதிக்கு இடாமல் தான் போஜனம் செய்யக்கூடாது. அதிதி பூஜை தனத்தைக் கொடுக்கும்; புகழைக் கொடுக்கும்; ஆயுளை வளர்க்கும்; சொர்க்கத்தைப் பெற்றுத் தரும். எனவே கண்டிப்பாக அதிதியை கௌரவிக்க வேண்டும்.

ஆஸநாவ தௌ ஷய்யா மநுவ்ரஜ்யாமுபாஸநம் |
உத்தமேஷு உத்தமம் குர்யாத்தீநே ஹீநம்ஸமே ஸமம் }| 107

ஆசனம், இருக்க இடம், படுக்கை, பின்தொடர்ந்து சென்று வழியனுப்புதல், பணிவிடை புரிதல் – இவைகளை அதிதிகளின் தகுதிக்கேற்ப, உயர்ந்தவனுக்கு உயர்வாகவும், தகுதி குறைந்தவனுக்குக் குறைவாகவும், சமமானவர்களுக்குச் சமமாகவும் செய்ய வேண்டும் .

வைஷ்வதேவே து நிர்வ்ருத்தே யதந்யோ அதிதிராவ் ரஜேத் |
தஸ்யாப்யந்நம் யதாஷக்தி ப்ரதத்யாந்ந பலிம் ஹரேத் || 108

வைஷ்வதேவம் செய்து அதிதிக்கு உணவளித்த பிறகு வேறொரு அதிதி வந்தால், பலியன்னம் வைக்காமல், அந்த அதிதிக்கும் தன் சக்திக்கேற்ற அன்னத்தையளிக்க வேண்டும்.

ந போஜநார்த்தம் ஸ்வே விப்ர: குலகோத்ரே நிவேதயேத் 1 போஜநார்த்தம் ஹி தே ஷம்ஸந் வாந்தாவீத்யுச்யதே புதை: || 109
அதிதியாக வந்த பிராம்மணன் போஜனத்துக்காக தன் குலகோத்திரங்களைத் தெரியப்படுத்தக்கூடாது. போஜனம் சாப்பிட வேண்டும் என்பதற்காக, தன் குல கோத்திரங்களைக் கூறுபவன், வாந்தியெடுத்த அன்னத்தை சாப்பிடுபவனுக்கு நிகர் என்று சான்றோர் கூறுகின்றனர்.

ந ப்ராஹ்மணஸ்ய த்வதிதிர் க்ருஹே ராஜந்ய உச்யதே |
வைஷ்ய சூத்ரெள ஸகா சைவ ஞாதயோ குரூரேவ ச || 110

பிராம்மணனுடைய இல்லத்தில், க்ஷத்ரியனும் வைசியனும் அதிதிகளாக மாட்டார்கள்.
நண்பர்களும், உறவினர்களும் அதிதிகளாக மாட்டார்கள். குருவுக்கு செய்யும் பூஜை அதிதி பூஜையாகமாட்டாது.

யதித்வதிதி தர்மேண க்ஷத்ரியோ க்ருஹமாவ்ரஜேத் | புக்தவத்சு ச விப்ரேஷு காமம்தமபிபோஜயேத்||| 111
அதிதி தர்மத்தோடு க்ஷத்ரியன் வந்தால், பிராம்மணர்கள் சாப்பிட்ட பிறகு க்ஷத்ரியனுக்கு உணவளிக்க வேண்டும்.

வைஷ்ய க்ஷத்ராவபி ப்ராப்தெள குடும்பே அதிதி தர்மி ணௌ| போஜயேத்ஸஹ ப்ருத்யைஸ்தாவாந்ரு ஷம்ஸ்யம் ப்ரயோஜ யந் || 112
வைசிய சூத்திரர்கள் அதிதி தர்மத்தோடு வந்தால், அவர்களுக்குத் தனது வேலையாட்களுடன் அமர்த்தி உணவளிக்க வேண்டும்.

இதராநபி ஸக்யாதீந் ஸம்ப்ரீத்யா க்ருஹமாகதாந் |
ஸத்க்ருத்யாந்நம் யதாஷக்தி போஐயேத் ஸஹபார்யபா| 113

நண்பர்கள் இல்லத்துக்கு வந்தால், கிருஹஸ்தனின் மனைவி, அவர்களுக்கு மரியாதையோடு போஜன சமயத்தில் போஜனமளிக்க வேண்டும்.

சுவாஸி : குமாரீஷ்ச ரோகிணோ கர்பிணீ: ஸ்த்ரிய: 1
அதிதிப்யோ அக்ர ஏவைதாந் போஜயேதவிசாரயந் || 114

சுமங்கலிகள், சிறுமிகள், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் இவர்களுக்கு, அதிதிகளுக்கும் முன்பாகவே, சந்தேகமின்றி போஜன மளிக்கலாம்.

அதத்வா து ய ஏதேப்ய: பூர்வம் புங்தே அவிசக்ஷண: |
ஸ புஞ்ஜாநோ நஜாநாதி ஷ்வக்ருத்ரைர்ஜக்தி மாத்மந: || 115

அதிதிகள் முதல் வேலையாட்கள்வரை போஜனமளித்த பிறகே கிருஹஸ்தன் உண்ண வேண்டும். அவ்வாறன்றி முதலில் தான் சாப்பிடுவானேயாகில், அவன் இறந்த பின்னர் அவன் உடலை நாய்கள், நரிகள், கழுகுகள் சாப்பிடும் என்பதை அவன் அறியான்.

புக்தவத்ஸ்வத விப்ரேஷு ஸ்வேஷு ப்ருத்யேஷு சைவ ஹி |
புஞ்ஜீயாதாம் தத: பஷ்சாதவஷிஷ்டம் து தம்பதீ|-116

பிராம்மணர்களும், அதிதிகளும், வேலையாட்களும் உண்ட பிறகு கணவனும் மனைவியும் மிகுந்த உணவை உண்ண வேண்டும்.

தேவாந்ருஷீந் மநுஷ்யாஷ்ச பித்ரூந் க்ருஹ்யாஷ்ச தேவதா: |
பூஜயித்வா தத: பஷ்சாத் க்ருஹஸ்தஷ்ஷேஷபுக் பவேத்|| 117

தேவர்களையும், ரிஷிகளையும், மனிதர்களையும், பித்ருக்களையும், கிருஹதெய்வங்களையும், நைவேத்தியம், பலி, அன்னமிடுதலால் பூஜித்தபிறகு, மிகுந்த அன்னத்தை கிருஹஸ்தன் சாப்பிட வேண்டும்.

அகம்ஸ கேவலம் புங்தே ய: பசத்யாத்ம காரணாத் |
யக்கு ஷிஷ்டாஷநம் ஹ்யேதத்ஸதாமன்னம் விதீயதே|| 118

எவன், தனக்காக மட்டுமே சமைத்துச் சாப்பிடுகிறானோ, அவன் பாபத்தை சாப்பிடுபவனாகிறான். பஞ்ச யக்ஞத்தில் மிகுந்த அன்னத்தை உண்பதே சிரேஷ்டமானது என்று பெரியோர்களால் விதிக்கப்பட்டிருக்கிறது.

ராஜர்த்விக்ஸ்நாதககுரூந் ப்ரியஷ்வ ர மாதுலாந் |
அர்ஹயேந்மதுபர்கேண பரி ஸம்வத்ஸராத்புந: |-119

அரசன், ரித்விக், இல்லறத்தில் நுழையவிருக்கும் ஸ்நாதகன், நண்பர்கள், மாமனார், தாய்மாமன்முதலானோர் ஓராண்டு கழித்துவருவராயின், பழம், தயிர், தேன் முதலானவைகளுடன் உபசரிக்க வேண்டும்.

ராஜா ச ஷ்ரோத்ரியஷசைவ யக்ஞகர்மண்யு பஸ்தி தெள 11
மதுபர்கேண ஸம்பூஜ்யௌ ந த்வயக்ஞ இதி ஸ்திதி: || 120

ராஜா, இல்லறத்தில் நுழையவிருப்பவன் முதலானோர் வந்துசென்று, ஓராண்டு முடிவதற்குள் மீண்டும் வருவரேல், பழம்,தயிர்,தேன் கொண்டு உபசரிக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் யக்ஞத்துக்கோ, விவாகத்துக்கோ வந்திருந்தால் பழம், தயிர், தேன் முதலியவற்றால் உபசரித்து கௌரவிக்க வேண்டும்.

ஸாயம் த்வந்நஸ்ய ஸித்தஸ்ய பந்த்யமந்த்ரம் பலிம் ஹரேத் |
வைஷ்வதேவம் ஹி நாமைதத்ஸரயம் ப்ராதர் விதீயதே|| 121

சாயந்திரகாலத்தில் சமைத்த அன்னத்தை இல்லத்தரசி பலியாக வைக்க வேண்டும். இது மந்திரமில்லாமல் செய்வது. இதுவும் வைஷ்வதேவம் எனப்படும். பகலில் கணவன் செய்யும் வைஷ்வதேவ பலிகர்மா மந்திரத்தோடு செய்வது.

பித்ருயக்ஞம் து நிர்வர்த்ய விப்ரஷ்சேந்துக்ஷயே அக்நிமாந் |
பிண்டாந்வாஹார்யகம் ஷ்ராத்தம் குர்யாத்மாஸாநு மாஸிகம் 122

பிராம்மணன் பித்ரு யக்ஞத்தை அமாவாசையன்று செய்ய வேண்டும். பிறகு மாதந்தோறும் செய்ய வேண்டிய பிண்டம் கொடுக்கும் சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

பித்ரூணாம் மாஸிகம் ஷ்ராத்தமந்வாஹார்யம் விதுர்புதா: |
தச்சாமிஷேண கர்தவ்யம் ப்ரஷஸ்தேந ப்ரயத்னத: |-123-
பித்ருக்களுக்கு மாதாமாதம் செய்யும் மாசிக சிராத்தத்துக்கு அந்வாஹார்யம் என்று பெயர். இதைச் செய்யும்போது நல்ல மாமிசத்தை சம்பாதித்து, அதைக் கொண்டு முயற்சியோடு சிராத்தம் செய்யவேண்டும்.

தத்ர யே போஜநீயாஸ் ஸ்யுர்யே ச வர்ஜ்யா த்விஜோத்தமா: | யாவந்தஷ்சைவ யைஷ்சாந்நைஸ்தாந் ப்ரவக்ஷ்யாம்யசேஷத: II 124
இந்த சிராத்தத்தில் உண்ணத்தக்கவர்கள், தகாதவர்கள், எத்தனைபேர்சாப்பிடலாம், சாப்பிடத் தகாதவைகள் எவையெவை இவை யனைத்தையும் கூறுகிறேன், கேளுங்கள்.

த்வெள தைவே பித்ருகார்யே த்ரீநேகைக முபயத்ர வா
போஜயேத்சுச மருத்தோஅபி ந ப்ரவர்தேத விஸ்தரே|| 125

தேவஸ்தானத்துக்கு இரண்டு பிராம்மணர்களையும், பித்ரு ஸ்தானத்துக்கு மூன்று பிராம்மணர்களையும் நியமிக்க வேண்டும்.-எவ்வளவு தனிகனாக இருந்தாலும் இந்த எண்ணிக்கைக்கு மேல் அதிகமானவர்களை நியமிக்கக்கூடாது.

ஸத்க்ரியாம் தேஷகாலௌ ச ஷௌசம் ப்ராஹ்மண ஸம்பத: |
பஞ்சைதாந் விஸ்தரோ ஹந்தி தஸ்மாக்நேஹேத விஸ்தரம் || 126

வரிக்கப்பட்ட பிராம்மணர்களை நன்கு உபசரிப்பது, தேவையான இடம், குறித்தபடி அபர காலத்தில் செய்து முடிப்பது, ஆசாரம், தகுதியான பிராம்மணர்கள் என்னும் ஐந்தும், அதிக
அளவில் பிராம்மணர்களை அழைத்துச் செய்யும்போது கெடும்.

ப்ரதிதா ப்ரேதக்ருத்யைஷா பித்ர்யம் நாம விதுக்ஷயே |
தஸ்மிந் யுக்தஸ்த் யைதி நித்யம் ப்ரேதக்ருத்யைவ லௌகி || 127

அமாவாசையன்று பித்ருக்களுக்காக செய்யும் சிராத்தம் பிரசித்தமானது. இதைச் சிரத்தையோடு செய்பவன் நல்ல பிள்ளைகள், தன தானியங்கள் பெற்று சிறப்போடு வாழ்வான்.

ஷ்ரோத்ரியாயைவ தேயாநி ஹவ்யகவ்யாகி தாத்ருபி: |
அர்ஹத்தமாய விப்ராய தஸ்மைதத்தம் மஹாபலம் || 128

வேதாத்யயனம் செய்தவனுக்கே ஹவ்ய கவ்யங்களை வழங்க வேண்டும்.
வேதமோதியவனுக்கு வழங்கும் ஹவ்ய கவ்யங்கள், வழங்கியவனுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கும்.

ஏகைகமபி வித்வாம்ஸம் தைவே பித்ர்யேச போஜயேத் 1
புஷ்கலம் பலமாப்நோதி நாமந்த்ரக்ஞாந் பஹுநபி |-129

தேவ கிரியைகளின் போதும், பித்ரு கிரியைகளின் போதும்,வேதமோதிய பிராம்மணன் ஒருவனுக்காவது அன்னமளிக்கவேண்டும். இதனால் பூரணமான பலனைப் பெறமுடியும்.
அவ்வாறன்றி, வேதமறியாத பல பிராம்மணர்களுக்கு அன்னமளித்தாலும் அதனால் சிறிதும் பலனில்லை.

தூராதேவ பரீக்ஷேத ப்ராஹ்மணம் வேதபாரகம் |
தீர்தம் தத்தவ்யகவ்யாநாம் ப்ரதாநே ஸோ அதிதி: ஸ்ம்ருத: || 130

தோத்யயனம் செய்த பிராம்மணனை நன்கு பரீட்சித்து அறிஞர்தான் என்று அறிந்த பிறகு, அவரை நியமிக்க வேண்டும். இப்படிப்பட்டவர் ‘அதிதி’ எனப்படுவார்.

ஸஹஸ்ரம் ஹி ஸஹஸ்ரா காமந்ருசாம் யத்ர பூஞ்ஜதே
ஏகஸ்தாந் மந்த்ரவித் ப்ரீத: ஸர்வாநர்ஹதி தர்மத: [-131

கிரியைகளின் போது, வேதமறியாத ஆயிரக்கணக்கானவர் உண்டால் கிடைக்கும் பலன், வேதமறிந்த ஒருவர் சாப்பிடுவதால் கிடைக்கும்.

ஞாநோத்க்ருஷ்டாய தேயாநி கவ்யாநி ச ஹவீம்ஷி ச|
நஹி ஹஸ்தா வஸ்ருக் திக்தெள ருதிரேணைவ த்யத: “-132

ஞானத்தால் உயர்ந்தோருக்கே ஹவ்ய கவ்யங்களைக் கொடுக்க வேண்டும்.
ரத்தம் தோய்ந்த கரங்களை ரத்தத்தால் சுத்தப்படுத்த முடியாது.

யாவதோ க்ரஸதே க்ராஸாந் ஹவ்யகவ்யே ஷ்வமந்த்ர வித் தாவதோ க்ரஸதேப்ரேத்ய தீப லர்ஷ்ட் யயோகுடாந் || 133
வேத மந்திரங்களை அறியாதவனை நியமித்து, அவனுக்கு உணவளித்தவன், உண்டவன் எத்தனை கவளங்களை உண்டானோ,-அத்தனை நெருப்பில் சுட்ட இரும்புக் கோளங்களை நரகத்தில் உண்பான்.

ஞானநிஷ்டா: த்விஜா: கேசித்தபோ நிஷ்டா ஸ்ததாபரே
தபஸ்வாத்யாய நிஷ்டாஷ்ச கர்மநிஷ்டாஸ் ததாபரே|| 134

சில திவிஜர்கள் ஆத்ம ஞானிகளாக இருப்பார்கள்; சிலர்தபஸ்விகளாக இருப்பார்கள். வேதாத்யயனத்திலும், தவத்திலும்சிறந்தவர்களாக சிலர் இருப்பார்கள்.
யாகங்கள் முதலான கிரியைகள் புரிவதில் சிறந்தவர்களாக சிலர்இருப்பார்கள்.

ஞானநிஷ்டேஷு கவ்யாநி ப்ரதிஷ்டாப்யாநி யத்நத:
ஹவ்யாநி து யதாநியாயம் ஸர்வேஷ்வேவ சதுர் வபி || 135

பித்ருக்களுக்கு செய்யும் கிரியைகளின்போது முயற்சி செய்துதேடி, ஆத்ம ஞானிகளையே நியமிக்க வேண்டும். வேத கிரியைகளின்போது நால்வகையினரையும் நியமிக்கலாம்.

அஷ்ரோத்ரிய: பிதா யஸ்ய புத்ர: ஸ்யாத் வேத பாரக: |
அஷ்ரோத்ரியோ வா புத்ரஸ்ஸ்யாத்பிதா ஸ்யாத் வேத பாரக: II 136

வேதம் படித்த தந்தைக்கு வேதம் படிக்காத மகன் இருப்பான்.வேதம் படிக்காத தந்தைக்கு வேதம் படித்த மகன் இருப்பான்.

ஜ்யாயாம்ஸமநயோர் வித்யாத்யஸ்ய ஸ்வாச்சோத்ரிய: பிதா
மந்த்ரஸம்பூஜ நார்த்தம் து ஸத்காரமிதரோ அர்ஹதி || 137

இவர்களில், வேதம் படித்த மகனைவிட, வேதம் படித்த தந்தையின் மகனே சிறந்தவன்.
தந்தை வேதாதியயனம் செய்யாமல் மகன் செய்திருப்பானேயாகில், அவன் படித்த வேதத்துக்காக அவனை கெளரவிக்க வேண்டும்.

ந ஷ்ராத்தே போஜயேந் மித்ரம் தநை: கார்யோ அஸ்ய ஸங்க்ரஹ: |
நாரிம் ந மித்ரம் யம் வித்யாத்தம் ஷ்ராத்தே போஜயேத் த்விஜம் || 138

சிராத்தத்தில் நண்பனை நியமிக்கக்கூடாது. அவனுக்கு வேறு வகைகளால் தனங்களைக் கொடுக்கலாம். தனக்கு சத்ருவாகவோ, நண்பனாகவோ நினைக்காதவனை சிராத்தத்தில் நியமிக்க வேண்டும்.

யஸ்ய மித்ர ப்ரதாநாநி ஷ்ராத்தாநி ச ஹவீம்ஷி ச
தஸ்ய ப்ரேத்ய பலம் நாஸ்தி ஷ்ராத்தே ச ஹவிஷ்சு| ச 139

தேவ பித்ரு கிரியைகளில் எவன்,தன் நண்பர்களை நியமிக்கின்றானோ, அவனுக்கு, அவன் செய்த அக்கிரியைகளால் பலன் கிட்டாது.

யஸ்ஸங்கதாநி குருதே மோஹாத் ச்ராத்தேந மாநவ: |
ஸஸ்வர் காச்ச்யவதே லோகாச்சிராத்த மித்ரோ த்விஜாதம: Π-140

சிராத்தத்தில் நண்பர்களை நியமிப்பவன் ஸ்வர்கத்தினின்றும் விலக்கப்பட்டவனாக கீழே விழுவான்.

ஸம்போஐநீ ஸாஅபிஹிதா பைஷாசீ தக்ஷிணா த்விஜை: |
இஹைவாஸ்தே து ஸா லோகே கௌரம் தேவைக வேஷ்மநி 141

நண்பர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக, அவர்களை சிராத்தத்தில் நியமித்து தட்சிணைகளைக் கொடுத்தால், அதற்கு பிசாசதட்சிணை என்று பெயர். இது, வீட்டிலேயே திரியும் குருட்டு மாட்டைப் போல பலன் தராது.

யதேரிணே பீஜமுப்த்வாந வப்தா லபதே பலம் |
ததா அந்ருசே ஹவிர்தத்வா நதாதா லபதே பலம் || 142

களர் நிலத்தில் விதையைப் போட்டவனுக்கு பலன் கிட்டாது.-தகாதவரை சிராத்தத்தில் நியமிப்பவனுக்கும் எந்தப் பலனும் கிட்டாது.

தாத்ரூந் ப்ரதிக்ரஹீத்ரூம்ஷ்ச குருதே பலபாகிந: |
விதுஷே தக்ஷிணா தத்தா விதிவத் ப்ரேத்ய சேஹ ச 143

தக்கவரை நியமித்து விதிப்படி பூஜித்து தட்சிணைகள் அளிப்பதால், அளித்தவனுக்கும், அதை ஏற்றவனுக்கும் நற்பலன்கள் ஏற்படும்.

காமம் ஷ்ராத்தே அர்சயேந்மித்ரம் நாபிரூபமபி த்வரிம் |
த்விஷதா ஹி ஹவிர்புக்தம் பவதி ப்ரேத்ய நிஷ்பலம் || 144

ஞானவான்களான தக்கவர்கள் கிடைக்காதபோது, நல்லவனான நண்பனை சிராத்தத்தில் நியமிக்கலாம். நல்லவனாக இருந்தாலும் பகைவனை நியமிக்கக் கூடாது. அவ்வாறு பகைவனை நியமித்து செய்த சிராத்தம் பலன் தராது.

யத்நேந போஜயேத் ராத்தே பஹ்வருசம் வேதபாரகம் |
ஷாகாந்தகமதாத்வர்யும் சந்தோகம் து ஸமர்ப்திகம்| 145

ரிக் வேதி, யஜுர் வேதி, ஸாம வேதி இவர்களை முயற்சி செய்து சிராத்தத்தில் வரித்து, உணவளிக்க வேண்டும்.

ஏஷாமந்யதமோ யஸ்ய பூஞ்ஜீத ஷ்ராத்தமர்சித: | பித்ரூணாம் தஸ்ய த்ருப்தி: ஸ்யாத் ஷாஷ்வதீ ஸாப்தபௌருஷீ|| 146
இப்போது கூறியவர்களில் ஒருவராவது சிராத்தத்தில் நியமிக்கப் பட்டால், அந்த சிராத்தம் செய்தவனது முன் ஏழு தலைமுறை யினருக்கு திருப்தி கிட்டும்.

ஏஷ வை ப்ரதம: கல்ப: ப்ரதாநே ஹவ்யகவ்யயோ: |
அநுகல்பஸ்த்வயம் ஞேய: ஸதா ஸத்பிரதுஷ்டித: || 147

இதுவரை கூறப்பட்டவைகள் பிரதானமானவை. இனி உரைக்கப் போவது சாதாரணமானவை. இவற்றையே பெரியோர்கள் கடைப்பிடித் தார்கள்.

மாதாமஹம் மாதுலம் ச ஸ்வஸ்ரீயம் ஷ்வ ரம் குரும் |
தௌஹித்ரம் விட்பதிம் பந்தும்ருத்விக் யாஜ்யௌ ச போஜயேத்|| 148

இக் கிரியைகளின் போது தக்க ஞானியர் கிடைக்காவிடில், தந்தையை, தாய் மாமனை, மருகனை, மாமனாரை, குருவை, தன் பெண்ணின் மகனை,மாப்பிள்ளையை, சிறிய தாயின் பிள்ளைகளை, யக்ஞங்கள் செய்து வைத்த ரித்விக்கை, சிஷ்யனை நியமிக்கலாம்.

நப்ராஹ்மணம் பரீக்ஷேததைவே கர்மணி தர்மவித்
பித்ர்யே கர்மணி து ப்ராப்தே பரீக்ஷேத ப்ரயத்னத: I-149

தர்ம சாஸ்திரத்தை அறிந்தவன் தேவ சிரியையில், பிராம்மணனின் குலம், கோத்ரம், தகுதிகளை பரீட்சிக்க வேண்டியதில்லை. ஆனால் சிராத்த கிரியையில் பரீட்சிக்க வேண்டும்.

யே ஸ்தேநபதிதக்ளீபா யே ச நாஸ்திக்ய வருத்தய: |
தாந் ஹவ்யகவ்யயோர்விப்ராநநர்ஹாந் மநுரப்ரவீத் |-150

திருடன், பதிதன், நபும்சகன், நாஸ்திகன் இத்தகைய பிராம்மணர்கள், சிராத்த காரியத்திலும், தேவ காரியத்திலும் நியமிக்க யோக்கியதை யற்றவர்கள் என்று மநு கூறியுள்ளார்.

ஐடிலம் சாநதீயாநம் துர்பலம் கிதவம் ததா |
யாஜயந்தி சயே பூகாம்ஸ்தாம்ஸ்ச ஷ்ராத்தே ந போஜயேத் 11 151

ஜடை தரித்தவன், வேதமோதாதவன், வழுக்கைத் தலையன், யாகம் செய்து கொண்டிருப்பவன் இவர்களை சிராத்தத்தில் வரித்து உணவளிக்கக்கூடாது.

சிகித்ஸகாந் தேவலகா மாம்ஸ விக்ரயிணஸ்ததா |
விபணேந ச ஜீவந்தோ வர்ஜ்யா: ஸ்யுர்ஹவ்யகவ்யயோ|| 152

வைத்தியன், பூஜாரி, மாமிசம் விற்பவன், வர்த்தகன் இவர்களையும் ஹவ்ய கவ்யங்கள் அளிக்கும் விஷயத்தில் சேர்க்கக் கூடாது.

ப்ரேஷ்யோ க்ராமஸ்ய ராக்ஞஷ்ச கு கீ ஷ்யாவதந்தக: |
ப்ரதிரோத்தா குரோஷ்சைவ த்யக்தாக் நிர்வார்துஷிஸ் ததா|| 153

அரசனுக்கும் ஊராருக்கும் கூலிக்காக உழைப்பவன், சொத்தை நகங்களுள்ளவன், கறுப்புப் பற்களையுடையவன், குருவுக்கு விரோதமாக நடப்பவன், அக்னி ஹோத்ரம் செய்யாதவன், வட்டியால் ஜீவிப்பவன் இவர்களையும் இக்கிரியைகளில் சேர்க்கக் கூடாது.

யக்ஷ்மீ ச ப பாலஷ்ச பரிவேத்தா நிராக்ருதி: 11 ப்ரஹ்மத்விட் பரிவித்திஷ்ச கணாப்யந்தர ஏவ ச || 154
க்ஷயரோகியும், ஜீவனத்துக்காக ஆடு மாடுகளை மேய்ப்பவனும், அண்ணனுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவனும்,-பஞ்சயக்ஞங்கள் செய்யாதவனும், பிராம்மண துவேஷியும், தம்பிக்குத் திருமணமான பிறகும்தான் மணம் புரியாதிருப்பவனும்,
உறவினர் பணத்தில் வாழ்பவனும், தேவ பித்ரு கிரியைகளில் சேர்க்கத் தகாதவர்கள்.

குஷீலவோ அவகீர்ணீ ச வருஷலீ பதிரேவ ச || பௌனர்பவஷ்சகாணஷ்ச யஸ்ய சோப பதிர்க்ருஹே || 155

கூத்தன், பெண்ணாசையால் தன் பிரம்மசரியத்தை இழந்தவன், தன் இனத்துப் பெண்ணை மணக்காமல்தாழ்ந்த இனத்தவளை மணந்தவன், விதவையை மறுமணம் புரிந்து அதனால் பிறந்த பிள்ளை, ஒற்றைக் கண்ணன், சோர புருஷன் முதலானவர்களும் தேவ பித்ரு கிரியைகளில் சேர்க்கத் தகாதவர்கள்.

ப்ருதகாத்யாபகோ யஷ்ச ப்ருதகாத்யா பிதஸ் ததா|
சூத்ரஷிஷ்யோ குருஷ்சைவ வாக்துஷ்ட: குண்டகோள கௌ || 156

கூலிக்கு வேதமோதுபவன், கூலி கொடுத்து வேதம் படித்தவன், சூத்திரனுடைய சிஷ்யன், சூத்திரனுடைய குரு, கடுஞ்சொல் பேசுபவன், சோரம் போன பெண்பெற்ற பிள்ளை முதலானவர்களும் சேர்க்கத் தகாதவர்கள்.

அகாரண பரித்யக்தா மாதாபித்ரோர் குரோஸ்ததா |
ப்ராஹ்மை யோநைஷ்ச ஸம்பக்தைஸ்ஸம் யோகம் பதிதைர் கத: | 157

காரணமின்றி பெற்றோரையும் குருவையும் விட்டவன், பதிதனுடன் சேர்ந்து வேதமோதியவன், பதிதனுடன் விவாக சம்பந்தம் வைத்துக் கொண்டவன் இவர்களும் இக்கிரியைகளில் சேர்க்கத் தகாதவர்கள்.

அகாரதாஹீ கரத: குண்டாஷீ ஸோம விக்ரயீ |
ஸமுத்ர யாயீபந்தீ ச தைலிக: கூடகாரக: || 158

வீட்டுக்கு நெருப்பு வைத்தவன், விஷம் வைத்தவன், விபசாரியின் அன்னம் உண்பவன், கள் விற்பவன், சமுத்திரம் கடந்து சென்றவன், துதி பாடுபவன், எண்ணெய் ஆட்டுபவன், பொய்சாட்சி கூறியவன் இவர்களும் விலக்கத் தக்கவர்கள்.

பித்ரா விவதமாநஷ்ச கிதவோ மத்யபஸ்ததா|
பாபரோக்யபி ஷஸ்தஷ்ச தாம்பிகோ ரஸவிக்ரயீ || 159

தந்தையுடன் வாதிடுபவன், சூதாடிகளுக்குப் பணம் கொடுத்து தனக்காக ஆடச் சொல்பவன், போதையளிக்கும் கள் முதலானவைகளைக் குடிப்பவன், பாவத்தால் ரோகியானவன், குற்றம் சுமத்தப்பட்டவன், டம்பத்துக்காக தர்மம் புரிவோன், ரசங்களை விற்பவன்
முதலானவர்களும் விலக்கப்பட வேண்டியவர்கள்.

தநுஷ்ஷராணாம் கர்தா ச யஷ்சாக்ரேதிதிஷுபதி: | மித்ரத்ருத்யூத வ்ருத்திஷ்ச புத்ராசார்யஸ்ததைவ ச || 160
வில், பாணங்கள் போன்றவற்றைச் செய்பவன், மூத்தவள் மணமாகாமல் இருக்கும்போது இளையவளை மணந்தவன், நண்பனுக்குத் துரோகம் செய்தவன், சூதாடி ஜீவிப்பவன், மகனிடம் வேதம் படித்தவன் முதலானோரும் விலக்கப்பட வேண்டியவர்கள்.

ப்ராமரீ கண்டமாலீ ச வித்ர்யதோ பி நஸ்ததா | உன்மத்தோ அந்தஷ்ச வர்ஜ்யா: ஸ்யுர்வேதநிந்தக ஏவ ச|| 161
உன்மத்தன், கண்டமாலை நோய் கொண்டவன், வெண் குஷ்டன், கோள் சொல்கிறவன், பைத்தியம் பிடித்தவன், குருடன், வேதத்தை நிந்திப்பவன் முதலானவர்களும் விலக்கப்பட வேண்டியவர்கள்.

ஹஸ்தி கோஷ்வோஷ்ட்ரதமகோ நக்ஷத்ரையஷ்ச ஜீவதி | பக்ஷிணாம் போஷகோ யஷ்ச யுத்தாசார்ய ஸ்ததைவ ச|| 162
யானைகள், பசுக்கள், ஒட்டகங்கள், குதிரைகள் முதலான வற்றைப் பழக்குபவனும், ஜோதிஷத்தால் ஜீவிக்கிறவனும், பறவைகளை வளர்ப்ப வனும், வில்வித்தை கற்றுத் தருபவனும் விலக்கப்பட வேண்டியவர்கள்.

ஸ்ரோதஸாம் பேதகோ யஷ்ச தேஷாம் சாவரணே ரத: | க்ருஹஸம்வேஷகோ தூதோ வ்ருக்ஷாரோபக ஏவ ச|| 163

தண்ணீர்க் கரையை வெட்டுபவன், ஓடும் நீருக்குள் குறுக்கே அணைகட்டித் தேக்குபவன், வாஸ்து சாஸ்திரத்தைக் கொண்டு ஜீவிப்பவன், தூதன், கூலிக்கு மரம் செடிகளை வளர்ப்பவன் முதலானோரும் விலக்கத்தக்கவர்கள்.

ஷ்வக்ரீபி ஷ்யேநஜீவீச கந்யாதூஷக ஏவ ச |
ஹிம்ஸ்ரோ வ்ருஷலவ்ருத்திஷ்ச சைவ 164 கணாநாம் யாஜக: ||

நாயுடன் விளையாடுபவன், குருவிகளைப் பிடித்து விற்பவன், கன்னிப் பெண்ணை அடைய நினைப்பவன், தூஷிக்கத்தக்கவன், பிறரை இம்சிப்பவன், கீழான தொழில்களைச் செய்பவன், கணங்கள் முதலான சிறு தெய்வங்களுக்கு யக்ஞம் செய்விப்பவன் முதலானவர்களும் விலக்கத் தக்கவர்கள்.

ஆசாரஹீந: க்லீபஷ்ச நித்யம் யாசநக ஸ்ததா | க்ருஷிஜீவீ ஷ்லீப ச ஸத்பிர்நிந்தித ஏவ ச|
165

ஆசாரமற்றவன், நபும்சகன், யாசகத்தால் ஜீவிப்பவன், தானே விவசாயம் செய்து ஜீவிப்பவன், யானைக்கால் வியாதியஸ்தன், பெரியோரால் நிந்திக்கப்பட்டவன் போன்றோரும் விலக்கத் தக்கவர்கள்.

ஔரப்ரிகோ மாஹிஷிக: பரபூர்வாபதிஸ் ததா | ப்ரேத நிர்யாதகஷ்சைவ வர்ஜநீயா ப்ரயத்த: 1166
ஆடுகளை விற்றுப் பிழைப்பவன், எருமைகளால் ஜீவிப்பவன், விதவையை மணந்தவன், கூலிக்கு சவங்களை சுமப்பவன் இவர்களையும் கவனத்தோடு விலக்க வேண்டும்.

ஏதாந்விகர்ஹிதா சாராநபாக்தேயாந் த்விஜாதமாந் |
த்விஜாதி ப்ரவரோ வித்வாநுபயத்ர விவர்ஐயேத் 1-167

இவ்வாறான நிந்திக்கத்தக்கவர்களையும், நல்லோருடன் சமபந்தியில் அமர்ந்துண்ண அருகதையற்ற பிராம்மண அதமர்களையும் முயற்சி யோடு விலக்க வேண்டும்.

ப்ராஹ்மணஸ்த்வ நதீ யாநஸ்த்ருணாக்நிரிவ ஷாம்யதி
தஸமை ஹவ்யம் நதாதவ்யம் நஹி பஸ்மநி ஹுயதே || 168

எரிந்த புல்லின் சாம்பலில் ஹவிஸை சொரிந்தால் எப்படி பயனற்றதோ, அவ்வாறு வேதமோதாத பிராம்மணனுக்கு கொடுத்த ஹவ்ய கவ்யங்கள் பலனற்றதே.

அபாங்கததாநே யோ தாதுர்பவ த்யூர்த்வம் பலோதய: 1
தைவே ஹவிஷி பித்ர்யே வா தத் ப்ரவ யாம்ய ஷேஷத: || 169

பந்தியில் அமர அருகதையற்ற இவ்வாறானவர்களுக்கு தேவ கிரியைகளிலும், பித்ரு கிரியைகளிலும் ஹவ்ய கவ்யங்கள் கொடுப்பவனுக்கு எந்த பலன்கள் கிடைக்கும் என்பதை முழுமையாகக் கூறுகிறேன், கேளுங்கள்.

அவரதைர் யத்த்விஜைர் புக்தம் பரிவேத்ராதி பிஸ்ததா | அபாங்தேயைர் யதந்யைஷ்ச தத்வை ரக்ஷாம்ஸி பூஞ்ஜதே || 170
விரதானுஷ்டானமில்லாதவர்களாலும், பரிவேத்தர்களாலும் பந்தியில் அமர அருகதையற்றவர்களாலும் உண்ணப்பட்ட அன்னத்தை ராட்சசர்கள் உண்பார்கள்.

தாராக்நிஹோத்ர ஸம்யோகம் குருதேயோ அக்ரஜேஸ்திதே | பரிவேத்தா ஸ விக்ஞேய: பரிவிதிஸ்து பூர்வஜ: || 171
தமையனுக்கு முன் திருமணமும், அக்னி காரியங்களும் செய்யும் தம்பி ‘பரிவேத்தன்’ எனப்படுவான். அந்த தமையன் ‘பரிவித்தி’ எனப்படுவான்.

பரிவித்தி: பரிவேத்தா யயா ச பரிவித்யதே |
ஸர்வே தே நரகம் யாந்தி தாத்ரு யாஜகபஞ்சமா: I] 172

பரிவித்தி, பரிவேத்தன், அவனை மணந்து கொண்ட பெண்,-அப்பெண்ணை கன்யாதானம் செய்தவன், அந்தத் திருமணத்தை ஹோமம் செய்து நடத்தி வைத்தவன் – இந்த ஐவரும் நரகத்தை அடைவார்கள்.

ப்ராதுர் ம்ருதஸ்ய பார்யாயாம் யோஅநுரஜ்யேத காமத: |
தர்மேணாபி நியுக்தாயாம் ஸ ஞேயோ திதி பதி: |-173

இறந்து போன அண்ணன் மனைவியை முறைப்படி மணந்தவனாக இருந்தாலும், அவளோடு காமத்தோடிருப்பவன்’அக்தேதிரிசன்’ எனப்படுவான்.

பரதாரேஷு ஜாயேதே த்வெள சுதௌ குண்டகோளகௌ |
பத்யௌ ஜீவதி குண்ட: ஸ்யாநம்ருதே பர்தரி கோளக: || 174

கணவன் இருக்கும்போதே இன்னொருவன் தொடர்பால் பிறந்தவன் குண்டன். கணவன் இறந்த பிறகு இன்னொருவன் தொடர்பால் பிறந்தவன் கோளகன்.

தௌ து ஜாதெள பரக்ஷேத்ரே ப்ராணிநௌ ப்ரேத்ய சேஹச |
தத்தாநி ஹவ்யகவ்யாநி நாஷயேதே ப்ரதாயிநாம் |1 175

இவ்வாறுவேறு இடத்தில் பிறந்த குண்டனுக்கும் கோளகனுக்கும் ஹவ்யக யங்கள் அளித்தால், அதற்குரிய பலன் கிட்டாது.-மேலும் அளித்தவனுடைய இம்மை மறுமை இன்பங்களும் நாசமடையும்.

அபாங்க்த்யோயாவத: ப்ராக்ஞாந் பூஞ்ஜாநாநநு பஷ்யதி |
தாவதாம் ந பலம் தத்ர தாதா ப்ராப்நோதி பாலிஷ: | 176

பந்தியில் அமரத் தகாதவன் பந்தியில் அமர்ந்து, அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, எத்தனை பெரியோர் சாப்பிடுகிறார்களோ, அப்பெரியோர் சாப்பிடுவதால் அன்னமளித்தவனுக்கு எவ்வளவு பலன் கிடைக்க வேண்டுமோ, அவ்வளவு பலனும் கிட்டாது
போகும். எனவே பெரியோருக்கு அன்னமிடும்போது, தகாதவர் பார்வை படாதவண்ணம் அன்னமிட வேண்டும். இல்லையேல், அந்த அருகதையற்றவன் அவ்வளவு பலனையும் அழித்து விடுவான்.

வீஷ்யாந்தோ நவதே: காண: ஷஷ்டே: ஷ்வித்ரீ ஷதஸ்யது |
பாபரோகீ ஸஹஸ்ரஸ்ய தாதுர் நாஷயதே பலம் || 177

குருடன் தன் பந்தியில் தொண்ணூறு பேர் சாப்பிட்ட பலனை, அன்னதாதாவுக்குக் கிட்டால் அழிப்பான். ஒரு கண் குருடானவன் அறுபது பேர் சாப்பிட்ட பலனையும்,
வெண்குஷ்டன் நூறு பேர் சாப்பிட்ட பலனையும், ராஜபிளவை வியாதிக்காரன் ஆயிரம் பேர் சாப்பிட்ட பலனையும் அழிப்பர்.

யாவதஸ்ஸம்ஸ்ப்ரு ஷேதம்கைர் ப்ராஹ்மணாந் சூத்ரயாஜக: | தாவதாம் ந பவேத் தாது பலம் தானஸ்ய பௌர்திகம் || 178
சூத்திரர்களுக்கு புரோகிதம் செய்பவன், தன் பந்தியில்அமர்ந்திருக்கும் எத்தனை பேரைத் தொடுகிறானோ, அத்தனை பேர் சாப்பிட்ட பலனை அன்னதாதாவுக்குக் கிட்டாதபடி அழிப்பான்.

வேதவிச்சாபி விப்ரோ அஸ்ய லோபாத்க்ருத்வா ப்ரதிக்ரஹம் | விநாஷம் வ்ரஐதி ப்ரமாமபாத் ரமிவாம்பஸி || 179
வேத வித்தான பிராம்மணன் ஆசையினால், சூத்திரர்க்குபுரோஹிதம் செய்யும் பிராம்மணனிடமிருந்து தானம் பெறுவானேயாகில், சுடாத மண்பானை நீரில் விழுந்தால் கரைந்து போவது போன்று நாசமடைவான்.

ஸோம விக்ரயிணே விஷ்டா பிஷஜே பூயஷோணிதம் | நஷ்டம் தேவலகே தத்தம ப்ரதிஷ்டம் து வார்துஷௌ|| 180

கள் விற்பவனுக்கு தானம் கொடுத்தவன் ஜன்மாந்தரத்தில் மலம் உண்ணும் பன்றியாய் பிறப்பான். வைத்தியனுக்கு தானம் கொடுத்தவன் சீழையும் ரத்தத்தையும் உண்ணும் புழுவாகப் பிறப்பான்.-பூஜாரிக்கும், வட்டியால் ஜீவிப்பவனுக்கும் தானம்
கொடுப்பவன், தானத்துக்குரிய பலனை அடைய மாட்டான்.

யத்து வாணிஜகேதத்தம் நேஹ நாமுத்ர தத்பவேத்
பஸ்மநீவ ஹுதம் ஹவ்யம் ததா பெளணர்பவே தவிஜே||| 181

வணிகனுக்கும், மறுமணம் புரிந்து கொண்டவள் பெற்ற பிள்ளைக்கும் சிராத்தத்தில் போஜனமளித்தால், சாம்பலில் இட்ட ஆஹுதிபோல், அந்த போஜன பலன் கிட்டாது.

இதரேசுத்வபாங்தை யதோத்திஷ்டேஷ்வஸாதுசு |
மேதோ அஸ்ருக்மாம்ஸ் மஜ்ஜாஸ்தி வதந்த்யந்நம் மநீஷிண: I182

மற்றும் விலக்கப்பட்டவர்களாகக் கூறப்பட்ட திருடன் முதலான எவருக்கும் அன்னமளித்தவன், ஜன்மாந்தரத்தில் கொழுப்பு, ரத்தம், மாமிசம், எலும்புகள் முதலானவற்றை சாப்பிடும் ஜாதிகளில் பிறப்பார்கள்.

அபாங்த்யோபஹதா பங்தி: பாவ்யதே யைர்த்விஜோத் தமை: 11
தாந்நிபோதத கார்ஸ்ந்யே நத்விஜாக்ர்யாந் பங்தி பாவநாந் || 183

பந்தியில் அமரத்தகாதவர்களால் பரிசுத்தமிழந்த, பிராம்மணர்களுடைய பந்தியை பரிசுத்தப்படுத்தக் கூடியவர்களான பிராம்மண உத்தமர்கள் யாரென்பதைக் கூறுகிறேன், கேளுங்கள்.

அக்ர்யாஸ்ஸர்வே வேதே ஸர்வ ப்ரவசனேஷு ச 1
ஷ்ரோத்ரி யாந்வயஜாஷ்சைவ விக்ஞேயா: பங்திபாவனா: 184

வேதங்களை முழுமையாக அத்யயவனம் செய்தவர்களும், அதன் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்களும், வேதவித்துக்களின் வம்சத்தில்பிறந்தவர்களும் பந்தியை தூய்மை யாக்குபவர்கள்.

த்ரிணாசிகேத: பஞ்சாக்னிஸ் ஸ்த்ரிசுபர்ணஷ்ஷடங்கவித்
ப்ரஹ்மதேயாத்ம ஸந்தாநோ ஜ்யேஷ்டஸாமக ஏவ ச || 185

யஜுர் வேதபாகமாகிய திரிணாசிகேதத்தையும், அந்த விரதத்தையும் நன்கு அறிந்தவனும், பஞ்சாக்னி ஹோத்ரனும், ரிக்வேத பாகமாகிய திரிசுவர்ணத்தையும் அந்த விரதத்தையும் நன்கு அறிந்தவனும், ஷ்டங்கங்களை உபதேசிக்கக்கூடியவனும் பிராம்ம விவாகம் செய்து கொண்ட பெண் பெற்ற மகனும், ஸாமகானம் செய்பவனும், பந்தியை தூய்மை யாக்குபவர்கள்.

வேதார்த்த வித்ப்ரவக்தா ச ப்ரஹ்மசாரீ சஹஸ்ரத: ஷதாயுஷ்சைவ விக்ஞேயா ப்ராஹ்மணா: பங்தி பாவநா: || 186
வேதார்த்தத்தை நன்கு அறிந்தவனும், வேத அர்த்தத்தைஎடுத்துரைப்பவனும், பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிப்பவனும், ஆயிரக்கணக்காய் பசுக்களை வழங்கியவனும், வேதம் முற்றும் அறிந்தவனுமான பிராம்மணர்கள் பந்தியை தூய்மையாக்குபவர்கள்.

பூர்வேத்யுரபரேத்யுர்வா ஷ்ராத்தகர்மண்யு பஸ்திதே 11 நிமந்த்ரயேத த்ர்யவராத் ஸம்யக்விப்ராந் யதோதிதாந் 187
சிராத்தத்துக்கு இரண்டு நாட்கள் முன்பாகவோ அல்லதுமுன்தினமோ இதுவரை கூறியபடியான பிராம்மண உத்தமர்களைமூவருக்குக் குறையாமல் நியமிக்க வேண்டும்.

நிமந்த்ரிதோ த்விஜ: பித்ர்யே நியதாத்மா பவேத்ஸதா |
நசசந்தாம்ஸ்யதீயீத யஸ்ய ஷ்ராத்தம் ச தத் பவேத்|| 188

சிராத்தத்தில் நியமிக்கப்பட்ட திவிஜனும், சிராத்தத்தைச் செய்பவரும் சிராத்த தினத்தில் இந்திரியங்களை அடக்கி இருக்க வேண்டும். காயத்ரீபோன்ற அன்றாட ஜபங்களை செய்யலாம் மற்றபடி வேதபாகங்களை அத்யயனம் செய்வது முதலானவற்றை செய்யக்கூடாது.

நிமந்த்ரிதாந் ஹி பிதர உபதிஷ்டந்தி தாந் த்விஜாந் |
வாயுவச்சாது கச்சந்தி ததாஸீநா நுபாஸதே|| 189

நியமிக்கப்பட்ட அவர்களிடம் பித்ருக்கள் சமீபித்து இருப்பார்கள். வாயுவைப் போன்று அவர்களைப் பின் தொடர்வார்கள். அவர்கள் அமரும்போது தாமும் அமர்வார்கள்.

கேதிதஸ்து யதாந்யாயம் ஹவ்யகவ்யே த்விஜோத்தம:
கதஞ்சி தப் யதிக்ராமந்பாபஸ்கரதாம் வ்ரஜேத் ||190

ஹவ்யகவ்யங்களில் நியமிக்கப்பட்ட பிராம்மணன், எந்த காரணத்தாலோ வராமல் போனால், பன்றியாய்ப் பிறப்பெடுப்பான்.

ஆமந்த்ரிதஸ்து ய: ஷ்ராத்தே வ்ருஷல்யா ஸஹ மோததே |
தாதுர்யத்துஷ்க்ருதம் கிஞ்சித்தத்ஸர்வம் ப்ரதிபத்யதே 191

நியமிக்கப்பட்ட பிராம்மணன் தாழ்குலத்துப் பெண்ணுடன் கூடினால், தன்னை நியமித்த கர்த்தாவின் பாபம் மொத்தத்தையும் தான் அடைகிறான்.

அக்ரோதநாஷ்சௌசபராஸ்ஸததம் ப்ரஹ்மசாரிண: 11 ந்யஸ்தஷஸ்த்ரா மஹாபாகா: பிதர: பூர்வதேவதா: || 192
பித்ரு தேவர்கள் குரோதமற்றவர்களாயும், ஆசார சீலர்களாயும், பிரம்மசாரிகளாகவும். விரோதமற்றவர்களாகவும், மஹாபாகர் களாகவும், தொன்மையான தேவர்களாகவும் இருப்பவர்கள்.

யஸ்மாதுத்பத்திரேதேஷாம் ஸர்வேஷாமப்யசேஷத: 1
யே ச யைரூப சர்யாஸ்ஸ்யுர்நியமைஸ் தாந் நிபோதத || 193

எவரால் இந்த பித்ரு தேவர்கள் தோன்றினார்களோ, எந்த பித்ரு தேவர்கள் எவருக்கு எப்படிப்பட்ட நியமங்களோடு பூஜிக்கத்தக்கவர்களோ, அவையனைத்தையும் எடுத்துக் கூறுகிறேன், கேளுங்கள்.

மநோர்ஹிரண்யகர்பஸ்ய யே மரீச்யாதய: சுதா: |
தேஷாம்ருஷீணாம் ஸர்வேஷாம் புத்ரா: பித்ருகணா: ஸ்ம்ருதா:-194 –

பிரம்ம தேவரின் மகன் மறு. மநுவின் புத்திரர்களான மரீசி முதலான புத்திரர்களின் புத்திரரனைவரும் பித்ரு கணங்கள் எனப்படுவர்.

விராட் சுதாஸ் ஸோமஸத: ஸாத்யாநாம் பிதர: ஸ்ம்ருதா: 11 அக்னிஷ்வாத்தாஷ்ச தேவாநாம் மாரீசா லோக விஷ்ருதா: || 195
விராட் புத்திரர்களான சோமசதர்கள் சாத்யர்களின் பித்ருக்கள். அக்னிஷ்வாத் என்னும் மரீசி புத்திரர்கள் தேவர்களின் பித்ருக்கள்.

தைத்யதானவ யக்ஷாணாம் கந்தர்வோரக ரக்ஷஸாம் |
சுவர்ண கிந்நராணாம் ச ஸ்ம்ருதா பர்ஹிஷதோ அத்ரிஜா: || 196

தைத்யர்கள், தானவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், உரகர்கள், ராட்சதர்கள், கருடர்கள், கின்னரர்கள் முதலானோருக்கு அத்ரிபுத்திரர்களான பர்ஹிஷதர்கள் பித்ரு தேவர்கள்.

ஸோமபா நாம விப்ராணாம் க்ஷத்ரியாணாம் ஹவிர்புஜ: |
வைஷ்யாநாமாஜ்யபா நாம க்ஷத்ராணாம் து சுகாலிந: || 197

பிராம்மணர்களுக்கு சோமபர்கள் என்போர் பித்ரு தேவர்கள். க்ஷத்ரியர்களுக்கு ஹவிர்புஜர்கள் என்போர் பித்ரு தேவர்கள். வைசியர்களுக்கு ஆஜ்யபர்கள் என்போர் பித்ரு தேவர்கள்.சூத்திரர்களுக்கு சுகாலர்கள் என்போர் பித்ரு தேவர்கள்.

ஸோமபாஸ்து கவே: புத்ரா: ஹவிஷ்மந்தோ அங்கிரஸ் சுதா: |
புலஸ்த்யஸ்யாஜ்யபா: புத்ரா: வஸிஸ்டஸ்ய சுகாலிந: ||198

சோமர்கள் சுக்ரரின் புத்திரர்கள்.-அங்கிரசின் புத்திரர்கள் ஹவிர்புஜர்கள் அல்லது ஹவிஸ்
மந்தர்கள். புலஸ்தியரின் புத்திரர்கள் ஆஜ்யபர்கள். வசிஷ்டரின் புத்திரர்கள் சுகாலர்கள்.

அக்நிதக்தா நக்நிதக்தாந் காவ்யாந் பர்ஹிஷதஸ் ததா |
அக்நிஷ்வாத்தாம் ச சௌம்யாம்ஷ்ச விப்ராணாமேவ நிர்திஷேஜ் || 199

அக்நி தக்தர்கள், அனக்நி தக்தர்கள், கா யர்கள், பர்ஹிஷன்தர்கள், அக்நிஷ் வாத்தர்கள், செளம்யர்கள் முதலானோர் பிராம்மணர்களின் பித்ருக்கள்.

ய ஏதே து கணா: முக்யா: பித்ரூணாம் பரிகீர்திதா: | தேஷாமபீஹ விக்ஞேயம் புத்ரபௌத்ர மனந்தகம் |I 200
இந்த பித்ரு கணங்களில் முக்கியமானவர்கள் என்று கூறப்படுகின்றவர்களுக்கு, இவ்வுலகில் இருப்பவர்கள் புத்திரபௌத்திரர் களாகின்றனர்.

ருஷிப்ய: பிதரோ ஜாதா: பித்ருப்யோதேவதாநவா: |
தேவேப்யஸ்து ஐகத்ஸர்வம் சரம் ஸ்தாண்வநு பூர்வ : 201

ரிஷிகளிடமிருந்து பித்ருக்கள் தோன்றினார்கள். பித்ருக்களினால்தேவ தானவர்கள் தோன்றினார்கள். தேவர்களால் சராசரங்கள்தோன்றின.

ராஜதைர்பாஜலிநரேஷா மதோ வா ராஜதாந்விதை: |
வார்யபி ஷ்ரத்தயா தத்தம யாயோப கல்பதே || 202

வெள்ளிப் பாத்திரத்தில் அல்லது வெள்ளி கலந்த பாத்திரத்தில்வைத்துக் கொடுத்தது, தண்ணீராக இருந்தாலும்கூட பித்ருக்களுக்குஅட்சயமாகத் திருப்தியைக் கொடுக்கும்.

தேவகார்யாத்த்விஜாதீநாம் பித்ருகார்யம் விசிஷ்யதே |
தைவம் ஹி பித்ருகார்யஸ்ய பூர்வமாப்யாயநம் ஸ்ம்ருதம்|| 203

த்விஜருக்கு தேவ காரியத்தைவிட பித்ரு காரியம் முக்கியமானதுபித்ரு காரியத்தில் தேவ பூசையை முதலில் செய்ய வேண்டும்.

தேஷாமாரக்ஷபூதம் து பூர்வம் தைவம் நியோஜயேத் | ரக்ஷாம்ஸி ஹி விலும்பந்தி ஷ்ராத்தமாரக்ஷ வர்ஜிதம்|| 204
சிராத்தத்தைக் கெடுக்க ராட்சதர்கள் முனைவார்கள். எனவே முதலில் பித்ருக்களுக்கு காப்பாக விஸ்வேதேவரை ஒரு பிராம்மணரிடம் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

தைவாத்யந்தம் ததீஹேத பித்ராத்யந்தம் நதத்ப வேத் | பித்ராத்யந்தம் த்வீஹமாந: க்ஷக்ஷிப்ரம் நஸ்யதி ஸாந்வய: [1 205
சிராத்தத்தின் போது முன்னும் பின்னும் தேவர்கள் இருக்கவேண்டும். சிராத்தம் இதனால் ரட்சிக்கப்படும். பித்ருக்களை ஆவாஹனம் செய்வதற்கு முன்பு ஒரு பிராம்மணனிடம் விஷ்வேதேவரைஆவாஹனம் செய்ய வேண்டும். பிறகு பித்ருக்கள், பிறகு விஷ்ணுஇப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும். இப்படி யின்றி பித்ருக்களை முதலிலோ அல்லது இறுதியிலோ ஆவாஹனம் செய்து சிராத்தம் செய்பவன் வம்சத்தோடு விரைவில் அழிவான்.

சுசிம் தேவம் விவிக்தம் ச கோமயே நோபலேபயேத்
தக்ஷிணாப்ரவணம் சைவ ப்ரயத்நேநோ பபாதயேத் | 206

சிராத்தம் செய்யும் இடத்தை கோமயத்தால் மெழுகி சுத்தமாக வைக்க வேண்டும். யாரும் நடமாடக்கூடாது. தெற்குப்புறத்துக்கு வசதியாக அந்த இடம் இருக்க வேண்டும்.

அவகாசேஷு சோக்ஷே நதீதீரேஷு சைவஹி |
விவிக்தேஷு ச துஷ்யந்தி தத்தேந பிதரஸ்ஸதா|| 207

வனத்திலும், ஏகாந்தமான இடத்திலும், நதிக்கரையிலும் செய்யப்பட்ட சிராத்தத்தால் பித்ருக்கள் எப்போதும் திருப்தி யடைவார்கள்.

ஆஸநேஷு பக்லுப்தேஷு பர்ஹிஷ்மத்சு ப்ருதக்ருதக் உபஸ்ப்ருஷ்டோதகாந் ஸம்யக்விப்ரா ந்ஸ்தா பவேஷயத் 208
தூய்மை செய்த இடத்தினைப் பிரித்துக் கொண்டு, தேவதா ஸ்தானத்தில் கிழக்கு நோக்கி நுனி இருக்குமாறு இரண்டு தர்ப்பைகளையும், பித்ரு ஸ்தானங்களில் தெற்கு நோக்கி நுனி
இருக்குமாறு மூன்று தர்ப்பைகளையும் கீழே பரப்பி ஆசனங்களிட்டு, நியமிக்கப்பட்ட பிராம்மணர்கள் நீராடி வந்ததும் அவற்றில் அமர வைக்க வேண்டும்.

உபவேஷ்ய து தாந் விப்ராநாஸநேஷ்வ குப்ஸிதாந் |
கந்த மூல்யைஸ்ஸுரபி பிரர்சயேத் தேவ பூர்வகம்|| 209

இவ்வாறு பரிசுத்தமான ஆசனங்களிலமர்ந்த பிராம்மணர்களை, வாசனையுடன் கூடிய புஷ்பங்களால் தேவபூர்வமாக அர்ச்சிக்க வேண்டும்.

தேஷாமுதகமாரீய ஸபவித்ரா ந்ஸ்திலாநபி |
அக்நௌ குர்யாதநுஞாதோ ப்ராஹ்மணோ ப்ராஹ்மணைஸ் ஸஹ|1 210

சிராத்தம் நடத்தும் கர்த்தா, அவர்களுக்கு பவித்ரம் எள்ளுடன் நீர்வார்த்து, அவர்கள் அனுமதி பெற்று அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும்.

அக்நேஸ் ஸோமயமாப்யாம் ஸ க்ருத்வா அப்யா யநமாதித: 1
ஹவிர்தாநேந விதிவத்பஷ்சாத் ஸந்தர்பயேத் பித்ரூந் || 211

முதலில் அக்னிக்கும் சோமனுக்கும் யமனுக்கும் ஹோமம் செய்து, பிறகு பித்ரு தேவர்களுக்குஹோமம் செய்ய வேண்டும்.

அக்ந்யபாவே து விப்ரஸ்ய பாணாவேவோ பபாதயேத் |
யோஹ்யக்நிஸ்ஸ த்விஜோ விப்ரைமந்த்ர தர்ஷிபிருச் யதே || 212

பிரம்மசாரி, மனைவியில்லாதவன் இவர்களுக்கு அக்னி ஹோத்ரம்கிடையாது . இவர்கள் சிராத்தம் செய்தால், அமர்ந்திருக்கும்பிராம்மணனின் வலது கரத்தில், ஆஹு திகளை இட வேண்டும். பிராம்மணனே அக்னி வடிவினன் என்று சான்றோர் கூறுவர்.

அக்ரோதநாந் சுப்ரஸாதாந் வதந்த்யேதாந் புராதநாந் |
லோகஸ் யாப்யாயநே யுக்தாந் ஷ்ராத்ததேவாந் த்விஜோத்தமாந் || 213

நியமிக்கப்பட்ட பிராம்மணர்களிடம் எழுந்தருளியுள்ளபித்ருதேவர்கள் கோபமற்றவராயும், மிகுந்த தயையுடன் கூடியவர்களாயும், தொன்மையானவர்களாயும், உலகங்களுக்கு நன்மையை அளிக்க வேண்டும் என்னும் எண்ணங் கொண்டவர்களாயும் இருப்பவர்கள். எனவே அவர்கள் எழுந்தருளியுள்ள பிராம்மணர் கரத்தில் செய்யும் ஹோமம் அக்னியில் செய்தது போன்றே புண்ணிய பலனைக் கொடுக்கும்.

அபஸவ்மக்நௌ க்ருத்வா ஸர்வமாவ்ருத்ய விக்ரமம் அபஸவ்யேந ஹஸ்தேந நிர்வபேதுதகம் புவி |214
ஹோமத் தீயின் தெற்குப் பகுதியில் பித்ருக்களுக்கு ஹோமம் செய்ய வேண்டும்.
பிண்டம் அளிக்கும் இடத்தில், மூன்று இடங்களில் நுனி தெற்கு நோக்கி வைத்த தர்ப்பைகளின் மீது, கைமறித்து எள்ளும் நீரும் இடவேண்டும்.

த்ரீம்ஸ்து தஸ்மாத்தவிஷேஷாத் பிண்டாந் க்ருத்வா ஸமாஹித: |
ஒளதகே நைவ விதிநா நிர்வபேத்தக்ஷிணா முக: || 215

பிறகு ஹோமம் செய்து மிகுந்த அன்னத்தை மூன்று உருண்டை களாகப் பிடித்து, தெற்குப் புறமாக அமர்ந்து கொண்டு முன்பு எள்ளும் நீரும் இறைத்த இடத்தில் அந்த உருண்டைகளை
கைமறித்து வைக்க வேண்டும். பிறகு மீண்டும் அவற்றின் மீது எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.

நுப்ய பிண்டாந்ஸ்ததஸ்தாம்ஸ்து ப்ரயதோ விதிபூர்வகம்|
தே தர்பே தம் ஹஸ்தம் விம்ரு ஜ்யால்லேப பாகிநாம் | 216

இவ்வாறாக விதிமுறைப்படி சிரத்தையோடு பிண்டங்களை வைத்த பிறகு ஒட்டிக் கொண்டிருக்கும் பருக்கைகளை எடுத்து முந்தைய மூன்று தலைமுறையினருக்காக போட வேண்டும்.

ஆசம்யோதக் பராவ்ருத்ய த்ரிரா யம்ய ஷநைரகந் | ஷட்ருதூம்ஷ்ச நமஸ்குர்யாத் பித்ரூநேவ ச மந்த்ரவித் !| 217

பிறகு ஆசமனம் செய்து, மும்முறை பிராணாயாமம் செய்து,ஆறு ருதுக்களையும், உரிய மந்திரங்களைக் கூறி நமஸ்கரித்து, பிறகுபித்ரு தேவர்களுக்கும் உரிய மந்திரங்களைக் கூறி நமஸ்கரிக்க வேண்டும்.

உதகம் நிநயேச்சேஷம் ஷமை பிண்டாந்திகே புந:
அவஜிக்ரேச்ச தாந் பிண்டாக் யதா ந்யுப்தாந் ஸமாஹித: 218

பிண்டதானம் செய்த பிறகு மிகுந்திருக்கும் தண்ணீரை ஒரு தொன்னையில் ஊற்றிக்கொண்டு, மூன்று பிண்டங்களையும் சுற்றிபூமியில் விழுமாறு, கைமறித்து அந்த நீரை விடவேண்டும். பிறகு மூன்று பிண்டங்களிலிருந்தும் சிறிது சிறிது எடுத்து முகர்ந்து பார்க்க வேண்டும். பிறகு அந்தப் பருக்கைகளை கீழே எறிய வேண்டும்.

பிண்டேப்யஸ்த்வல்பிகாம் மாத்ராம் ஸமாதாயாநு பூர்வஷ: |
தாநேவ விப்ராநா நாந் விதிவத் பூர்வமாஷயேத்|| 219

அந்தந்த பிண்டங்களிலிருந்து சிறிது சிறிது எடுத்து நியமிக்கப்பட்ட பிராம்மணர்கள் சாப்பிட அமர்ந்திருக்கும் பாத்திரத்தில் வைக்க வேண்டும். யாராக எந்தப் பிராம்மணர்
ஆவாஹனம் செய்யப்பட்டாரோ, அந்தப் பிண்டான்னத்தை அவர் சாப்பிட வேண்டும்.

த்ரியமாநே து பிதரி பூர்வேஷாமேவ நிர்வபேத் | விப்ரவத்வாபிதம் ஷ்ராத்தே ஸ்வகம் பிதரமாஷயேத் 1–220
தகப்பன் இருக்கும்போது தாய்க்கு சிராத்தம் செய்ய நேரிட்டால், பாட்டன், முப்பாட்டன், முப்பாட்டனின் தந்தை என்னும் மூவருக்கும் பிண்டதானம் அளிக்க வேண்டும்

பிதா யஸ்ய து வ்ருத்தஸ்யாஜ்ஜீ வேச்சாபி பிதாமஹ: 1
பி ஸ்ஸ நாம ஸங்கீர்த்ய கீர்த்தயேத் ப்ரபிதாமஹம்|| 221

பாட்டன் இருக்கும்போது தந்தை இறந்து சிராத்தம் செய்ய நேர்ந்தால், அப்போது தந்தை,முப்பாட்டன்,முப்பாட்டனின் பாட்டன் ஆகியோருக்கு பிண்டதானம் அளிக்க வேண்டும்.

பிதாமஹோ வா தத்ச்ராத்தம் பூஞ்ஜீதேத்ய ப்ரவீந் ம :
காமம் வா ஸமநுஞாத:ஸ்வயமேவ ஸமாசரேத் |-222

அல்லது பாட்டன் அனுமதி கொடுத்தால், பாட்டன் ஸ்தானத்தில் அவரையே அமர வைத்து, மற்ற ஸ்தானங்களுக்கு வேறு பிராம்மணர்களை அமர்த்தலாம்.

தேஷாம் தத்வாது ஹஸ்தேசு ஸபவித்ரம் திலோதகம் |
தத்பிண்டாக்ரம் ப்ரயச்சேத ஸ்வதைஷாமஸ்த்விதி ப்ருவந் || 223

அவர்களுக்கு பிண்டசேஷத்தை பரிமாறும்போது, அவர்கள் கையில் தர்ப்பையை வைத்து அதன் மீது எள்ளும் நீரும் விட்டு பிறகு பிண்டத்திலிருந்து எடுத்த சிறுபாகத்தை வைத்து, திருப்தி யுண்டாகட்டும் என்று கூறும் மந்திரத்தைக் கூற வேண்டும்.

பாணிப்யாம் து உபஸம்க்ருஹ்ய ஸ்வயமந்நஸ்ய வர்திதம்
விப்ராந்திகே பித்ரூந் த்யாயந் ஷநகைருபநிக்ஷி பேத்I-224

கர்த்தா, அன்னம் முதலானவை வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தை இரண்டு கைகளாலும் கொண்டு வந்து, பித்ருக்களை தியானித்து, அந்த பிராம்மணர்கள் முன் வைக்க வேண்டும்.

உபயோர் ஹஸ்தயோர்முக்தம் யதந்நமுபரீயதே |
தத்விப்ரலும்பந்த்ய சுராஸ்ஸஹஸா துஷ்ட சேதஸ: I1 225

சிராத்த அன்னமுள்ள பாத்திரத்தை ஒரு கையால் ஏந்தி, மற்றொரு கையால் அதை மூடிக்கொண்டு எடுத்து வரவேண்டும்.அவ்வாறின்றி அதை மூடாமல் கொண்டு வந்தால், அந்த அன்னத்தை துஷ்டர்களான ராட்சதர்கள் அபகரிப்பர்.

குணாம்ஷ்ச சூபஷாகாத்யாந் பயோ ததிக்ருதம் மது 11 விந்யஸேத் ப்ரயத பூர்வம் பூமாவேவ ஸமாஹித:226
நல்ல கறியமுதுகள், பருப்பு முதலானவற்றையும், பால், தயிர், நெய், தேன் முதலானவற்றையும் பாத்திரங்களோடு கொண்டு வந்து வைக்க வேண்டும். இவைகளை அன்னம் கொண்டு வருவதற்கு முன்பே கொண்டு வந்து வைக்க வேண்டும்.

பஷ்யம் போஜ்யம் ச விவிதம் மூலாநி ச பலாநி ச 1 ஹ்ருத்யாநி சைவ மாம்ஸாநி பாநாநி சுரபீணி ச |-227
வடைகள், அப்பங்கள், பாயசம், பழங்கள், மாமிசம்,பானங்கள் முதலானவற்றையும் கொண்டு வந்து வைக்க வேண்டும்.

உபநீய து தத்ஸர்வம் ஷநகைஸ்ஸுஸமா ஹித: | பரிவேஷயேத் ப்ரயதோ குணாந் ஸர்வாந் ப்ரசோதயந் 228
இவ்வாறாக அவையனைத்தையும் வைத்துக்கொண்டு, அந்தந்த பதார்த்தங்களைப் பற்றி எடுத்தியம்பிய வண்ணம் பரிமாற வேண்டும்.

நா ஸ்ரமாபாதயேத்ஜாது நகுப்யேந்நாந்ருதம் வதேத்
ந பாதேந ஸ்ப்ருஷேதந்நம் ந சைததவதூநயேத் |-229

உணவைப் பரிமாறும் போது, இறந்தவர்களை எண்ணி அழக்கூடாது; எதற்காகவும் கோபப்படக் கூடாது; பொய் பேசக்கூடாது; சிந்திய அன்னத்தை காலால் மிதித்து விடக் கூடாது.-அன்னம் சிந்துமாறு பரிமாறக்கூடாது.

அஸ்ரம் கமயதிப்ரேதாந் கோபோ அரீநந்ருதம் ந: 11 பாதஸ்ப்ரஷ்ஸ்து ரக்ஷாம்ஸி துஷ்க்ருதீ நவதூநநம் || 230

கண்ணீர் விட்டால் சிராத்த அன்னத்தை பிரேதங்கள் உண்ணும்.-கோபவசப்பட்டால் பகைவருக்காகும்.-பொய் கூறினால் சிராத்த அன்னம் நாய்களைச் சேரும்.
காலில் மிதிபட்டால் ராட்சதர்களைச் சேரும்.-பரிமாறும்போது அன்னம் சிதறினால் பாபாத்மாக்களை சென்றடையும்.

யத்யத் ரோசேத விப்ரேப்யஸ் தத்தத்யாத மத்ஸர: | ப்ரஹ்மோத்யாஷ் ச கதா: குர்யாத் பித் ரூணாமேத தீப்ஸிதம் || 231
பிராம்மணர்கள் விரும்பும் உணவு வகைகளை, பொறாமையின்றி பரிமாற வேண்டும். பிரம்ம ஞானமளிக்கும் கதைகளைக் கூறவேண்டும். பித்ருக்களுக்கு இத்தகைய கதைகள் விருப்பமானவை.

ஸ்வாத்யாயம் ஷ்ராவயேத் பித்ர்யே தர்ம சாஸ்த்ராணி சைவஹி |
ஆக்யாநாநீதிஹாஸாம்ஷ்ச புராணிநி கிலாநி ச |-232

உண்ணும்போது தர்ம சாஸ்திரங்களையும், வேதங்களையும், இதிஹாஸ புராணங்களையும், சூக்கங்களையும் செவிமடுக்கச் செய்யலாம்.

ஹர்ஷயேத் ப்ராஹ்மணாம்ஸ்துஷ்டோ போஜயேச்ச ஷனை: ஷனை: |
அந்யாத்யேநாஸக்ருச்சைதாந் குணைஷ்ச பரிசோதயேத்|-233

அவர்கள் உண்ண உண்ண சிறிது சிறிதாகப் ப மாறி, இது நன்றாக இருக்கும், இன்னும் சிறிது சாப்பிடுங்கள்’ என்று சந்தோஷமாகக் கூறியபடி, அவர்கள் சந்தோஷமாகச் சாப்பிடும்படி செய்ய வேண்டும் .

வரதஸ்தமபி தௌஹித்ரம் ஷ்ராத்தே யத்நேந போஜயேத்
குதபம் சாஸநே தத்யாத்திலைஷ்ச விகிரேந் மஹீம்|| 234

பிரம்மசாரியாக இருந்தாலும் பெண் வயிற்றுப் பேரனை சிராத்தத்தில் நன்கு உபசரித்து உண்ணச் செய்ய வேண்டும். எள்ளை இறைத்து, ஆசனமாக கம்பளத்தைப் பரப்ப வேண்டும்

த்ரீணிஷ்ராத்தே பவித்ராணி தௌஹித்ர: குதபஸ்திலா: |
த்ரீணி சாத்ர ப்ரஷம்ஸந்தி ஷௌசமக்ரோதமத் வராம் || 235

பெண்வயிற்றுப் பேரன், பிற்பகல், எள் இம்மூன்றும் பரிசுத்த மானவை. சுத்தம், கோபமின்மை, அவசரமின்றி சாவகாசமாய் செய்தல் இம்மூன்றையும் பித்ருக்கள் போற்றுவார்கள்.

அத்யுஷ்ணம் ஸர்வமந்நம் ஸ்யாத் பூஞ்ஜீரம்ஸ்தே ச வாக்யதா: |
நச த்விஜாதயோ ப்ரூயுர்தாத்ரா ப்ருஷ்டா ஹவிர் குணாந் ||| 236

உணவு வகைகள் நல்ல சூடாக இருக்க வேண்டும். சாப்பிடும் பிராம்மணர்கள் மௌனமாக சாப்பிட வேண்டும். கர்த்தா, எப்படி யிருக்கிறது என்று கேட்கும்போது குறைகளைக் கூறக்கூடாது.

யாவதுஷ்ணம் பவத்யந்நம் யாவதஷ்நந்தி வாக்யதா: | பிதரஸ்தாவதஷ்நந்தி யாவந்நோக்தா ஹவிர்குணா: ||| 237
உணவு வகைகள் எவ்வளவு சூடாக இருக்குமோ, உண்பவர்கள் எவ்வளவு மெளனமாக உண்கிறார்களோ, எவ்வளவுக்கு உணவு வகைகளைக் குறைகூறாமல் இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு பித்ருக்கள் அந்த உணவை ஏற்பார்கள்.

யத்வேஷ்டிதஷிரா புங்தே யத்புங்தே தக்ஷிணாமுக: 1
ஸோபாநத்கஷ்ச யுத்புங்தே தத்வை ரக்ஷாம்ஸி பூஞ்ஜதே 238

உண்பவர்கள், தலைக்குத் துணியைப் போட்டுக் கொண்டும்(தலைப்பாகை போன்றவை), காலில் பாதுகைகள் அணிந்து கொண்டும், தெற்கு நோக்கியும் உண்டால், அவற்றை ராட்சதர்கள் சாப்பிடுவார்களேயன்றி பித்ரு தேவர்கள் சாப்பிட மாட்டார்கள்.

சாண்டாலஷ்ச வராஹஸ்ச குக்குடஷ்வா ததைவச |
ரஜஸ்வலா ச ஷண்டஷ்ச நேக்ஷே ரந்நஷ்நதோ த்விஜாந் 239

சண்டாளன்,நபும்சன், தூரஸ்த்ரீ இவர்களின் பார்வையும், பன்றி, கோழி, நாய் முதலானவற்றின் பார்வையும், திவிஜர்கள் சிராத்த போஜனம் சாப்பிடும்போது படக்கூடாது.

ஹோமே ப்ரதாநே போஜ்யே ச யதேபிரபிவீஷ்யதே |
தைவே ஹவிஷி பித்ர்யே வா தத்கச்சத்ய தாததம் || 240

ஹோமம், தானம், பிராம்மண போஜனம், சிராத்தம், தெய்வ பூஜை முதலியவற்றின் போது இப்போது கூறிய சண்டாளன் முதலான பார்வை பட்டால் அந்தக் காரியம் எந்தப் பலனை
உத்தேசித்துச் செய்யப்படுகிறதோ, அந்தப் பலனைத் தராது.

க்ராணேந ஆகரோ ஹந்தி பக்ஷவாதேந குக்குட: 11
ஷ்வாது த்ருஷ்டிநிபாதேந ஸ்பர் ஷேநாவரவர்ணஜ: |-241

பன்றியானது வாசனையை முகர்வதாலும், கோழி இறகுகளைப் படபடவென்அடிக்கும்போது ஏற்படும் காற்று படுவதாலும், நாயின் பார்வை படுவதாலும், ஈனஜாதியினர் தீண்டுவதாலும், உணவுப் பதார்த்தங்கள் அசுத்தமடையும்.

கஞ்ஜோவா யதிவா காணோ தாது: ப்ரேஷ்யோ அபி வா பவேத்|
ஹீநாதிரிக்த காத்ரோ வா தமப்யபநயேத்பூந: || 242

குருடன், ஒற்றைக் கண்ணன், அங்கக் குறைபாடுடையவன் போன்றோர் சிராத்தம் செய்யும் கர்த்தாவின் வீட்டில் வேலையாட்களாக இருந்தால், சிராத்த தினத்தன்று அவர்களை வெளி
யேற்றிவிட வேண்டும்

ப்ராஹ்மணம் பிக்ஷகம் வாபி போஜநார்த்தமுபஸ்திதம் |
ப்ராஹ்மணைரப்யநுஞாத: ஷக்தித: ப்ரதிபூஜயேத் ||243

சிராத்த காலத்தில் வரும் அதிதிக்கும், சன்யாசிக்கும், போஜனத்துக்காக வந்த பிராம்மணருக்கும், சிராத்தத்துக்கு நியமிக்கப்பட்ட பிராம்மணர்களின் அனுமதி பெற்று, தன் சக்திக்கேற்ப உணவளித்து உபசரிக்க வேண்டும்.

ஸார்வவர்ணிக மந்நாத்யம் ஸந்நீயாப்ளாவ்ய வாரிணா |
சமுத்ஸ்ரு ஜேத்புக்தவதாமக்ரதோ விகிரந் புவி|| 244

சிராத்த பிராம்மணர்கள் சாப்பிட்ட பிறகு மிகுந்ததனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு ஒரு பிண்டமாக்கி, அதை சிராத்த பிராம்மணர்கள் எதிரில் தர்ப்பைகள் பரப்பிய நிலத்தில் விகர பிண்டமாக வைக்க வேண்டும்.

அஸம்ஸ்க்ருத ப்ரமீதாநாம் த்யாகிநாம் குலயோஷிதாம் | உச்சிஷ்டம் பாகதேயம் ஸ்யாத் தர்பே விகிரஷ்சய: || 245
அக்னி சம்ஸ்காரத்துக்கு அருகதையற்ற சிறுவர்களுக்கும், குலப் பெண்களுக்கும், அனைவரையும் விட்டு தனித்திருந்தவர்க்கும் இந்த விகர பிண்டதானம் திருப்தியைக் கொடுக்கும்.

உச்சேஷணம் பூமிகதமஜி ஹ்மாஷ்யாஷடஸ்ய ச
தாஸவர்கஸ்ய தத்பித்ர்யே பாகதேயம் ப்ரசக்ஷதே|| 246

இவ்வாறு பூமியில் வைத்த மிகுதியன்னத்தை, கபடமின்றி, சோம்பலின்றி, தன் பணியாட்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

.ஆசபிண்ட க்ரியா கர்ம த்விஜாதே ஸ்ஸம்ஸ்திதஸ்ய து |
அதைவம் போஜயேச்ச்ராத்தம் பிண்டமேகம் ச நிர்வபேத் || 247

இறந்து போனதும் செய்யும் கிரியைகளில் சபிண்டீ கரணம் வரையில் தேவ ஸ்தானத்தில் யாரையும் நியமிக்காமல் ஒரு பிராம்மணனை மட்டும் நியமித்து, சிறந்த போஜனம் செய்விக்க வேண்டும். ஒரு பிண்டம்தான் போட வேண்டும்.

ஸஹபிண்டக்ரியாயாம் து க்ருதாயாமஸ்ய தர்மத: 1
அஸயைவாவ்ருதா கார்யம் பிண்ட நிர்வபணம் சுதை: || 248

சபிண்டீகரணம் ஆன பிறகு அமாவாசை முதலானவைகளில் பிள்ளைகள் சிராத்தம் செய்யும்போது தேவதா ஸ்தானங்களுடன் மூன்று பிண்டங்கள் போட வேண்டும்.

ஷ்ராத்தம் புக்த்வா ய உச்சிஷ்டம் வ்ருஷலாய ப்ரயச்சதி |
ஸ மூடோ நரகம் யாதி காலசூத்ரமவாக்சிரா: || 249

சிராத்தத்தில் மிகுந்த அன்னத்தை, சூத்திரனுக்குக் கொடுத்தால், கொடுத்தவனான அந்த சிராத்த கர்த்தாவான மூடன் தலைகீழாக காலசூத்ரம் என்னும் நரகத்தில் விழுவான்.

ஷ்ராத்த புக் வ்ருஷலீதல்பம் ததஹர்யோ அதிகச்சதி |
தஸ்யா: புரிஷே தந்மாஸம் பிதரஸ்தஸ்ய ஷேரதே |-250

சிராத்தத்தில் சாப்பிட்ட பிராம்மணன், மனைவி தானாக விரும்பி வந்தாலும்கூட, அன்று அவளுடன் கூடினால், அவன் பித்ருக்கள் அவள் மலத்தில் ஒரு மாதம் வரை விழுந்து கிடப்பார்கள்.

ப்ரூஷ்ட்வாஸ்வதிதமித்யேவம் த்ருப்தாநாசாம யேத்தத: |
ஆசாம் தாம்ஷ்சாநு ஜாநீயா தபிபோ ரம்யதா மிதி|| 251

திருப்தியாக அவர்கள் சாப்பிட்ட பிறகு, ‘திருப்தியாகச் சாப்பிட்டீர்களா? என்று வினவ வேண்டும். சாப்பிட்டுக் கையலம்பிய அவர்கள் ஆசமனம் செய்த பிறகு ‘அமர்ந்து கொள்ளுங்கள்’ என்று சௌகரியமான இடத்தில் அமரச் செய்ய வேண்டும்.

ஸ்வதாஸ்த் வித்யேவதம் ப்ரூயுர் ப்ராஹ்மணா ஸ்ததநந்தரம் ||
ஸ்வதாகார: பராஹ்யாஷ்: ஸர்வேசு பித்ருகர்மசு I| 252

அதன் பிறகு, பிராம்மணர்கள் சிராத்த கர்த்தாவைப் பார்த்து அஸ்துஸ்வதா’ என்று ஆசீர்வாதம் கூற வேண்டும். பித்ரு கர்மாக்களில் இவ்வாறு கூறுவதே உயர்ந்த ஆசீர்வாதம்.

ததோ புக்தவதாம் தேஷாமந்ந சேஷம் நிவேதயேத் |
யதா ப்ரூயுஸ்ததா குர்யாதது ஞாதஸ்ததோ த்விஜை: || 253

ஆசீர்வாதம் பெற்ற பிறகு சிராத்த கர்த்தா மிகுந்து போன அன்னத்தை அப்பிராம்மணர்கள் அனுமதி பெற்று அவர்கள் கட்டளைப்படி விநியோகிக்க வேண்டும்.

பித்ர்யே ஸவதிதமித்யேவ வாசியம் கோஷ்டே து சுஷ்ருதம் |
ஸம்பந்ந மித்யப் யுதயேதைவே ருசிதமித்யபி || 254

பித்ரு சிராத்தத்தின் போது ‘ஸ்வதிகம்’ என்றும், கோஷ்டிசிராத்தத்தில் ‘சுஸ்ருத’ என்றும், விருத்தி ச்ராத்தத்தில் ‘சம்பந்நஎன்றும், தேவதைகளை உத்தேசித்த சிராத்தத்தில் ‘ருசித’ என்றும்வினாவ வேண்டும்.

அபராஹ்னஸ்ததா தர்பாசநம் துஸம்பாதநம் திலா: | 255 ஸ்டிர்ம்ருஷ்டிர்த்வி ஜாஷ்சார்யா: ஷ்ராத்தகர்மசு ஸம்பத: ||255
பிற்பகல் நேரம், தர்ப்பைகள், எள், சிராத்தம் நடத்த தக்கஇடம். யாசிக்காமல் சிராத்தத்துக்குத் தேவையான பொருட்களைத் திரட்டுதல், பந்தியைப் பரிசுத்தமாக்கும் பிராம்மணர்களைத் தேடிக்கண்டுபிடித்து நியமித்தல் முதலானவை சிராத்த கிரியைகளுக்குசம்பத்துகளாகும்.

தர்பா: பவித்ரம் பூர்வாஹ்ணோ ஹவிஷ்யாணி ச ஸர்வஷ: |
பவித்ரம் யச்ச பூர்வோத்தம் விக்ஞேயா ஹஸ்ய சம்பத: -256

தர்ப்பைகள், மந்திரங்கள், பூர்வான்னம், ஹவிஸ் முதலானவை, மேலும் இதற்கு முன் கூறியவைகளனைத்தும் தெய்வ கிரியைகளுக்கு வேண்டிய சம்பத்துகள்.

முந்யந்நாநி பயஸ்ஸோமோ மாம்ஸம் யச்சா நுபஸ்க்ருதம் |
அக்ஷாரலவணம் சைவ ப்ரக்ருத்யா ஹவிருச்யதே|| 257

சாதம், பால், சோமரஸம், நல்ல மாமிசம், இயற்கையில் புளிப்பும் உப்பும் இல்லாத பொருட்கள் இவற்றை ஹவிஸ் என்பார்கள்.

விஸ்ரூஜ்ய ப்ராஹ்மணாம் ஸ்தாம் ஸ்து நியதோ வாக்யதஷ்ஷுசி: I
தக்ஷிணாம் திஷமாகாக்ஷந் யாசேதேமாந் வராந் பித்ரூந் I 258

பிராம்மணர்கள் கிளம்பியதும், மெளனமாய் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்று, பிறகு தெற்கு முகமாய் நின்று மனத்தைஒருமுகப்படுத்தி இவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்.

தாதாரோநோ அபிவர்த்தந்தாம் வேதாஸ்ஸந்ததிரேவச |
ஷ்ரத்தா ச நோ மாவ்யகமத் பஹு தேயம் ச நோ அஸ்த்விதி || 259

“எங்கள் குலம் கொடைவள்ளல்களான புத்திரர்களால் அபிவிருத்தி யடையட்டும். வேதாத்யயனம் செய்வதும், அதன் பொருளை எடுத்துரைப்பதும், யாகங்கள் செய்வதுமாயிருப்பவர்களால் அபிவிருத்தி யடையட்டும். புத்திர பௌத்திர சம்பத்தும்
அபிவிருத்தியடையட்டும். எங்களுக்கு வேதார்த்தங்களில் சிரத்தை நீங்காத்திருக்கட்டும். மற்றவர்களுக்குத் தாராளமாக வழங்கத் தக்கப்படி செல்வம் எங்களுக்குக் கிட்டட்டும்.”

ஏவம் நிர்வபணம் க்ருத்வா பிண்டாந்ஸ்தா மஸ்ததநந்தரம்
காம் விப்ரமஜமக்னிம் வா ப்ராஷயேதப்சு வா க்ஷிபேத்||–260

இவ்வாறு அந்த பிராம்மணர்களை பிரார்த்தித்த பிறகுபிராம்மணர்களிடம் ஆவாஹநம் செய்துள்ள பித்ருக்களை விசர்ஜநம்செய்ய வேண்டும். பிண்டங்களைப் பசுவுக்குக் கொடுக்க வேண்டும். அல்லது பிராம்மணனுக்கும் சாப்பிடக் கொடுக்கலாம். அல்லதுநெருப்பிலோ நீரிலோ போடலாம்.

பிண்ட நிர்வபணம் கேசித் புரஸ்தாதேவ குர்வதே |
வயோபி: காதயந்த் யந்யே ப்ரக்ஷிபந்த்யந லேஅல்சு வா |-261

சிலர், பிராம்மணர் போஜனம் செய்த பிறகு பிண்ட பிரதானம்செய்வார்கள். மேலும் நீரிலும் நெருப்பிலும் போடுவது போன்றேபறவைகளுக்கும் சிலர் போடுவார்கள்.

பவித்ரதா தர்மபத்னீ பித்ருபூஐந தத்பரா|
மத்யமம் து தத: பிண்ட மத்யாத்ஸம்யக் சுதார்திநீ|| 262

பதிவிரதையாகவும், தர்மபத்தினியாகவும், பித்ரு பூஜைகளில்சிரத்தை கொண்டவளாயும், புத்திரரைக் கோருபவளாயும்இருக்கின்ற மூத்த மனைவி, அந்தப் பிண்டங்களில் நடுப்பிண்டமாகஇருக்கின்ற பிதாமஹ பிண்டத்தை சாப்பிட வேண்டும்.

ஆயுஷ்மந்தம் சுதம் சூதே யஷோ மேதாஸமந்விதம் |
தநவந்தம் ப்ரஜாவந்தம் ஸாத்விகம் தார்மிகம் ததா || 263

அதனைச்சாப்பிடுவதால்,தீர்க்க ஆயுள், புத்தி,செல்வம்.நன்மக்கள், பலம், தர்மம் இவற்றோடு கூடிய புத்திரன் பிறப்பான்.

ப்ரக்ஷால்ய ஹஸ்தாவாசம்ய ஞாதிப்ராயம் ப்ரகல்பயேத் |
ஞாதிப்யஸ்ஸத் க்ருதம் தத்வா பாந்தவாநபி போஜயேத் 264

சிராத்தகர்த்தா கைகால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்துகொண்ட பிறகு, பங்காளிகள் அனைவருக்கும் நன்கு உபசரித்துச் சாப்பிடச் செய்யவேண்டும். மற்ற பந்துக்களையும் அவ்வாறே சாப்பிடச் செய்ய வேண்டும்.

உச்சேஷணம் து தத்திஷ்டேத்யாவத் விப்ரா: விஸர்ஜிதா: |
ததோக்ருஹபலிம் குர்யாதிதி தர்மோ வ்யவஸ்தித: 1-265

உணவருந்திய சிராத்த பிராம்மணர்கள் விடைபெற்றுச் செல்லும்வரை அவர்கள் சாப்பிட்ட எச்சிலை எடுக்கக்கூடாது.-அவர்கள் சென்ற பிறகு அந்த இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.-பிறகு வைஷ்வதேவம், பலிஹோமம்.நித்யசிராத்தம், அதிதி போஜனம் முதலானவற்றைச் செய்ய வேண்டும்.

ஹவிர் யச்சிரராத்ராய யச்சாநந்த்யாய கல்பதே
பித்ருப்யோ விதிவத் தத் ப்ரவக்ஷ்யாம்ய சேஷத: || 266

நெடுங்காலம் பித்ருக்களுக்கு திருப்தி தரக்கூடியதையும், எந்த முறையில் நடத்தினால் எவ்வளவு காலம் அவர்களுக்குத் திருப்தி தரும் என்பதையும் முழுமையாகக் கூறுகிறேன்.

திலைர்வ்ரீஹி யவைர் மாஷைர் அத்பிர்மூலபலேந வா |
தத்தேந மாஸம் த்ரூப்யந்தி விதிவத் பிதரோ ந்ருணாம் || 267

எள், தானியம், யவை, உளுந்து, தண்ணீர், கிழங்கு வகைகள், கனி வகைகள் முதலானவற்றை சாஸ்திரப்படி அளித்தால், பித்ருக்கள் ஒரு மாதம் திருப்தியடைவார்கள்.

த்வெள மாஸௌ மத்ஸ்யமாம்சேந த்ரீந் மாஸாந் ஹாரிநேண து |
ஔரப்ரேணாத சதுர: ஷாகுநேநாத பஞ்ச வை|-268

மீன் மாமிசத்தால் இரு மாதங்களும், மான் மாமிசத்தால் மூன்று மாதங்களும், செம்மறியாட்டு மாமிசத்தால் நான்கு மாதங்களும்,பறவை மாமிசத்தால் ஐந்து மாதங்களும் பித்ருக்கள் திருப்தியடைவார்கள்.

ஷண்மாஸாம் ஷ்சாகமாம்ஸேந பார்ஷதேந ச ஸப்தவை|
அஷ்டாவேணஸ்ய மாம்ஸேந நௌரவேண நவைவது |-269

வெள்ளாட்டின் மாமிசத்தால் ஆறு மாதங்களும், புள்ளிமான் மாமிசத்தால் ஏழு மாதங்களும், கலைமான் மாமிசத்தால் ஒன்பது மாதங்களும் பித்ருக்கள் திருப்தியடைவார்கள்.

தஷமாஸாம்ஸ்து தருப்யந்தி வராஹ மஹிஷாமிஷை |
ஷஷகூர்மயோஸ்து மாம்ஸேந மாஸாநேகாதஷைவ து 11 270

முள்ளம்பன்றி, காட்டெருமை மாமிசங்களால் பத்துமாதங்களும், முயல், ஆமை மாமிசங்களால் பதினொரு மாதங்களும் பித்ருக்கள் திருப்தியடைவார்கள்.

ஸம்வத்ஸரம் து கவ்யேந பயஸா பாயஸேந ச |
வார்த்ரீணஸஸ்ய மாம்ஸேந த்ருப்திர்த்வாதஷ வார்ஷிகீ || 271

பசும்பால்,தயிர்,நெய், இவற்றால் ஒரு வருட காலமும், வார்தீநம் (இரண்டு காதுகளும் நீரில்பட மூழ்கி நீரருந்தும் ஆடு)என்னும் ஆட்டின் மாமிசத்தால் பன்னிரண்டு ஆண்டுகளும்பித்ருக்கள் திருப்தி யடைவார்கள்.

காலஷாகம் மஹாஷல்கா: கட்கலோஹாமிஷம் மது | ஆநந்த்யாயைவ கல்ப்யந்தே முந்யந்நாநி ச ஸர்வஷ: || 272
அந்தக் காலத்தில் விளைகின்ற காய்கறிகள், முட்கள் உள்ள மீன்மாமிசம்.கட்கமிருக மாமிசம். சிவப்பு ஆட்டு மாமிசம், காட்டுசெந்நெல், தேன் இவற்றால் எல்லையற்ற காலம் பித்ருக்கள் திருப்தியடைவார்கள்.

யத்கிஞ்சித் மதுநா மிஷ்ரம் பிரதத்யாத்து த்ரயோதஷீம் |
ததப்யக்ஷயமேவ ஸ்யாத்வார்ஷாநு ச மகாஅச |-273

மழைக்காலமான புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்ச திரயோதசியும், மக நட்சத்திரமும் கூடிய நாளில் தேன் கலந்து செய்த (பட்சணம் அல்லது பாயசம்) பொருளால் பித்ருக்கள் அட்சயமாய் திருப்தியடைவார்கள்.

அபிநஸ்ஸ குலே ஜாயாத்யோ நோ தத்யாத் த்ரயோதஷீம்|
பாயஸம் மதுஸர்பிர்ப்யாம் ப்ராக்சாசயே குஞ்ஜரஸ்ய ச !| 274

இவ்வாறு புரட்டாசி கிருஷ்ணபட்ச திரயோதசியில் பாயஸத் தாலும், நெய்யால் செய்த அப்பங்களாலும், அதிரசங்களாலும் சிராத்தம் செய்பவன் நம் குலத்தில் பிறப்பானா, என்று பித்ருக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

யத்யத்ததாதி விதிவத்ஸம்யக் ஷ்ரத்தா ஸமந்வித: |
தத்தத் பித்ரூணாம் பவதி பரத்ராநந்தமக்ஷயம் ||-275

எதையெதை சிரத்தையோடும் சாஸ்திர முறைப்படியும் பித்ருக் களுக்கு அளிக்கிறார்களோ, அவையவை அந்த பித்ருக்களுக்கு மேலான திருப்தியை அட்சயமாக அளிக்கின்றன.

க்ருஷ்ணபக்ஷே தஷம்யாதௌ வர்ஜயித்வா சதுர்தஷீம்
ஷ்ராத்தே ப்ரஹஸ்தாஸ்திதயோ யதைதா ந ததேதரா: || 276

கிருஷ்ணபட்சத்தில் சதுர்த்தசி நீங்கலாக தசமி முதல் அமாவாசை வரையுள்ள திதிகள் சிராத்தத்துக்கு மிகமிக உகந்த திதிகள். மற்ற திதிகள் அப்படியல்ல.

யுக்ஷு குர்வந் தினநக்ஷத்ரேஷு ஸர்வாந் காமாந் ஸமஷ்நுதே |
அயுக்ஷது பித்ரூந் ஸர்வாந் ப்ரஜாம் ப்ராப்நோதி புஷ்கலாம் || 277

இரட்டையாக வரும் திதிகளிலும், இரட்டையாக வரும் பரணி ரோஹிணி முதலான நட்சத்திரங்களிலும் சிராத்தம் செய்பவன் மனோவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பிரதமை முதலான ஒற்றை திதிகளிலும்,அஸ்வினி கிருத்திகை முதலான ஒற்றை
நட்சத்திரங்களிலும் சிராத்தம் செய்பவன் பெருஞ்செல்வமும், கல்வியும் கொண்ட சந்ததியை அடைவான்.

யதாசைவாபர: பக்ஷ: பூர்வபக்ஷாத் விசிஷ்யதே |
ததா ஷ்ராத்தஸ்ய பூர்வாஹ்ணாதபரா ஹ்ணோ விசிஷ்யதே || 278

பித்ரு கிரியைகளில் எவ்வாறு சுக்ல பட்சத்தைவிட கிருஷ்ண பட்சம் சிறந்ததோ அவ்வாறே முற்பகலைவிட பிற்பகல் சிறந்தது.

ப்ராசீநாசவீதிநா ஸம்யகபஸவ்ய மதந்த்ரிணா | பித்ர்யமாநிதநாத்கார்யம் விதிவத் தர்பபாணிநா || 279
பூணூலை இடது தோளில் போட்டுக்கொண்டு, தர்ப்பைகளை கையில் கொண்டு, கைமறித்து தீர்த்தமிடும் சிராத்தத்தை நன்கு சிரத்தையோடு செய்ய வேண்டும்.

ராத்ரௌ ஷ்ராத்தம் ந குர்வீத ராக்ஷஸீ கீர்திதா ஹி ஸா ஸந்த்ய யோருபயோஷ்சைவ சூர்யே சைவா சிரோதிதே|| 280
ராத்திரியை ராட்சசி என்று கூறுவார்கள். எனவே இரவு நேரத்தில் சிராத்தம் செய்யக்கூடாது.
காலை, மாலை, சந்தி காலங்களிலும் செய்யக்கூடாது.
சூரியோதயமான உடனேயும் செய்யக்கூடாது.

அநேந விதிநா ஷ்ராத்தம் த்ரிரப்தஸ்யேஹ நிர்வபேத் | ஹேமந்த் க்ரீஷ்ம வர்ஷாசு பாஞ்சயஞ கமந்வஹம் ||281
இவ்வாறாக வருடத்துக்கு மூன்று முறைகளேனும், பனிக்காலம் இலையுதிர் காலம், மழைக்காலங்களில் சிராத்தம் செய்ய வேண்டும். பஞ்ச யக்ஞங்களையும் நடத்த வேண்டும்.

ந பைத்ரு யக்ஞயோ ஹோமோ லௌசிகே அக்நௌ விதீயதே |
ந தர்ஷேந விநா ஷ்ராத்தமாஹி தாக்நேர் த்விஜன்ம :-282

பித்ரு சிராத்தத்தில் செய்யும் ஹோமத்தைவீட்டு நெருப்பில் செய்யக்கூடாது. பிராம்மணனுடைய கரத்தில் செய்ய வேண்டும். மாத சிராத்தத்தை அமாவாசையில்செய்ய வேண்டும். இறந்த திதியில் செய்யும் வருட சிராத்தத்துக்கு மட்டும் இது விலக்கு.

யதேவ தர்பயத்யத்பி: பித்ரூந் ஸ்நாத்வா த்விஜோத்தம: |
தேநைவ க்ருத்ஸ்நமாப்நோதி பித்ருயக் க்ரியா பலம்!! 283

எங்கே த்விஜோத்தமன் நீராடியதும் தண்ணீரினால் தர்ப்பணம் செய்கிறானோ, அதனால் அவன் பித்ருக்கள் அனைவரும் திருப்தியடைவார்கள். செய்பவனும் பித்ருயக்ஞம் செய்த பலனை அடைவான்.

வசூந் வதந்தி பித்ரூந் ருத்ராம்ஷ்சைவ பிதாமஹாந் |
ப்ரபிதாமஹாம்ஸ் ததாதித்யாந் ஷ்ருதிரேஷா ஸநாதநீ || 284

பித்ருக்களை வசுக்களின் சொரூபம் என்று பழமையான வேதம் கூறுகிறது.
பாட்டனை ருத்திர தேவரின் ரூபமாகவும், முப்பாட்டனை ஆதித்ய தேவரின் ரூபமாகவும் கூறுகிறது.

விகசாஷீ பவேந்நித்யம் நித்யம்வர அம்ருதபோஜந: |
விகஸோ புக்தசேஷம் து யக்ஞசேஷம் ததாஅம்ருதம் 285

எப்போதும் விகசத்தை உண்பவனாகவும், அம்ருதத்தை| உண்பவனாகவும் இருக்க வேண்டும். விகசம் என்றால் அதிதி சாப்பிட்ட பிறகு மிகுந்தது. அம்ருதம் என்றால் யக்ஞத்தில் மிகுந்தது.

ஏதத்வோ அபிஹிதம் ஸர்வம் விதாநம் பாஞ்ஜயக்ஞகம் |
த்விஜாதி முக்ய வருத்தீநாம் விதாநம் ஷ்ரூயதாமிதி|| 286

பஞ்சயக்ஞ சம்பந்தமான முறைகளை எடுத்துரைத்தேன். இனி த்விஜாதிகளில் முக்கியமானவனான பிராம்மணனைப் பற்றிய விதானங்களைக் கூறுகிறேன், கேளுங்கள்.
(மூன்றாம் அத்தியாயம் முற்றிற்று.)


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மநு பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading