ஸ்ரீ புருஷ ஸூக்த வ்யாக்யானம்‌-ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்–

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌, துருவன்‌ பரந்தாமனை ஸ்தோத்திரம்‌ செய்‌யும்‌ ப்ரகரணத்தில்‌, புருஷ ஸூக்த மந்த்ரங்களை அனுஸரித்து ஸ்தோத்‌ரம்‌ செய்வதாகக்‌ காணப்படுகிறது. அவ்விடத்தில்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரும்‌, “எங்களாழ்வான்‌ *” என்று கீர்த்தி பெற்றவருமான ஸ்ரீவிஷ்ணுசித்தாசாரியர்‌. விசேஷமாக வியாக்யானம்‌ செய்திருக்கிறார்‌.
அதை அனுஸரித்து செய்தருளிய வியாக்யானம்‌ –

“யோநூசாந த்‌,விஜம்‌ க,த்வா ஹதவாந்‌ அர்.த்த,லோப,த: | ஸ படேத்‌ பெளருஷம்‌ ஸூக்தம்‌ ஜலஸ்த்த,: சிந்தயங்‌ ஹரிம்‌ |”-எவனொருவன்‌ ஸாங்கமாக வேதாத்யனம்‌ செய்த ப்ராஹ்மணனை அடைந்து, பணப் பேயாட்பட்டு. அவனைக்‌ கொன்றானோ, அவன்‌ ஜலத்தில்‌ நின்றுகொண்டு ஹரியை நினைத்துக் கொண்டு புருஷஸு9க்தத்தைப்‌ படிக்கக் கடவன்‌.] என்றும்‌,
“ஜப்த்வாத, பெளருஷம்‌ ஸூக்தம்‌ முச்யதே கு,ருதல்பக_:’”[குரு பத்தியுடன்‌ சேர்ந்தவன்‌ புருஷ ஸூக்தத்தை ஜபித்து, அந்த மஹா பாபத்தினின்றும்‌ விடுபடுகிறான்‌.] என்றும்‌,
“ப்‌, ரஹ்ம யஜ்ஜஞே த்‌,விஐ: ஸூக்தம்‌ பெளருஷம்‌ சிந்தயந்‌ ஹரிம்‌ |
ஸ ஸர்வாந்‌ ஜபதே வேதாந்‌ ஸாங்க உபாங்காந்‌ த்‌;விஜோத்தம: lI”

[தினந் தோறும்‌ செய்ய வேண்டிய பஞ்ச மஹா யஜ்ஞத்தில்‌ ஒன்றான
ப்ரஹ்ம யஜ்ஞத்தில்‌ ஹரியை நினைத்துக் கொண்டு புருஷ ஸூக்தத்‌தைப்‌ படிக்கும்‌ பிராம்மணன்‌ ஸாங்கோபாங்கமான எல்லா வேதங்‌களையும்‌ ஐபித்தவனாகிறான்‌.] என்றும்‌ பெரியோர்கள்‌ இதன்‌ பெருமையைப்‌ பேசி யிருக்கிறார்கள்‌. – செளநக பகவானும்‌ புருஷ
ஸூுக்தத்தின்‌ ருக்குகளினால்‌ ஸ்ரீமன் நாராயணனை ஆராதனம்‌ பண்ண வேண்டுமென்று உபதேசித்து,“ அர்ச்சிதம்‌ ஸ்யாத்‌ ஜக,தி;தம்‌’”என்று அதனால்‌ ஸகல லோகங்களையும்‌ ஆராதனம்‌ செய்யப் பட்டதாகிறது என்றும்‌ வெளியிட்டிருக்கிறார்‌.-மேலும்‌, “புருஷ ஸூக்தத்தின்‌ ருக்குகளைக் கொண்டு நெய்யினால்‌ அக்னியில்‌ ஹோமம்‌ செய்பவன்‌
ஸம்ஸாரத்துக்குக்‌ காரணமான பாபங்களை விட்டு மோக்ஷத்தை அடைவான்‌”’ என்றும்‌, ஜகத் காரணனாய்‌, திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்‌, ஸகல கல்யாண குண பூர்ணனாய்‌, தேவாதி தேவனாயிருக்கிற ஸ்ரீமந் நாராயணனை, புருஷ ஸுூ9க்தத்தினால்‌ : தியானம்‌ செய்பவன்‌ மோக்ஷத்தை யடைந்து, “ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌
ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா””
[முக்தி யடைந்தவன்‌, ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ கூட அவனுடைய ஸகல கல்யாண குணங்களையும்‌ அனுபவிக்கிறான்‌] என்றபடி ப்ரம்மாநந்தத்தை அடைகிறான்‌ என்றும்‌ இதன்‌ மஹிமை விஸ்தாரமாக வெளியிடப் பட்டிருக்கிறது.

——————–

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-

புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி-2-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–3-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி..| -4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.-7-

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:–11-

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே-12-

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–16-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே–4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-

———

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-
[புருஷனென்று சொல்லப்படும்‌ நாராயணன்‌ அநந்தமான தலைகளையும்‌, எண்ண முடியாத கண்களையும்‌, அநேகம்‌ கால்களையும்‌ உடையவர்‌. அவர்‌ பூமியை நான்கு புறத்திலும்‌ வியாபித்து அநந்த யோஜன ப்ரமாணமான ப்ரம்ஹாண்டத்தை ஆக்ரமித்தார்‌.
“ஸஹஸ்ர சீர்ஷா இத்யத்ர ஸஹஸ்ர அநந்த வாசக:-அநந்த யோஜநம்‌ ப்ராஹத,சாங்குலவசஸ்‌ ததா தஸ்ய ப்ரதமயா விஷ்ணோர்‌ தே சதோ வ்யாப்திருஸ்யதே”
[“ஸஹஸ்ர சீர்ஷா””
என்னுமிடத்தில்‌ ஸஹஸ்ர சப்தம்‌ அநந்தம்‌ என்னும்‌ அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது. தசாங்குல பதம்‌ அநந்த யோஜனையைச்‌ சொல்லுகிறது. புருஷ ஸூக்தத்தின்‌ முதல்‌ மந்திரத்‌தினால்‌ விஷ்ணுவினுடைய ஸர்வ தேச வ்யாப்தி சொல்லப்படுகிறது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த முதல்‌ மந்திரத்தின்‌ அர்த்தம்‌ சொல்லப்பட்டது.
(ஸஹஸ்ரசீர்ஷா)கணக்கற்ற தலைகளை உடையவன்‌, இங்கு தலை என்பது எல்லா அங்கங்களையும்‌ காட்டுகிறது. மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி என்னும்‌ ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்தையும்‌ உடைத்தாயிருப்பதால்‌ தலை முதலில்‌ எடுக்கப்படுகிறது. இங்கு சீர்ஷ சப்தம்‌ ஜ்ஞானேந்த்ரியங்களால்‌ உண்டாகும்‌ ஜ்ஞானத்தைக்‌ குறிக்கிறது.
ப்ராம்ஹணத்தில்‌ போத,ந மநந ஸ்ரவண ஸ்பர்சந தரர்சந ரஸந க்ராண ஜ்ஞாநாநி ஸ்ருதாநி ப,வந்தீத்யத: சிரஸ் ‘” .[அறிதல்‌, நினைத்‌தல்‌,கேட்பது, ஸ்பர்சம்‌, பார்ப்பது, ரசிப்பது, முகர்வது என்னும்‌ ஞானங்கள்‌ இதனால்‌ அறியப்படுவதால்‌ இது சிரஸ்‌ என்று சொல்லப்‌ படுகிறது] என்று “சிரஸ்‌’ என்னும்‌ சப்தத்தின்‌ பொருள்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறதன்றோ. இதனால்‌ அபரிமிதமான ‘அறிவை யுடையவன்‌ அநந்தன்‌ என்று அறிவிக்கப்பட்டதாயிற்று. இதையே (ஸஹஸ்‌ராக்ஷ:) என்று விவரித்திருக்கிறது வேதம்‌. ‘“ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயதம்‌ ப்ரதாதம்‌’” என்பதினால்‌ கண்‌ எடுக்கப்பட்டது. இவ்விடக்‌ தில்‌ கண்‌” என்னும்‌ பதம்‌ ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களையும் காட்டி புருஷோத்தமன்‌ அநந்தமான ஜ்ஞானத்தை யுடையவன்‌ என்று விளக்குகிறது. (ஸஹஸ்ரபாத்‌) அளவற்ற திருவடிகளை உடையவன்‌. இங்கு ‘பாத்‌’ என்னும்‌ சப்தம்‌ ஐந்து கர்மேந்த்ரியங்களையும்‌ காட்டுவதன் மூலம்‌ அளவற்ற சக்தியை யுடையவன்‌ என்று அச்யுதன்‌ அறிவிக்கிறது. இவ் விரண்டு பதங்களாலும்‌ அளவற்ற ஞான சக்திகளை யுடையவன்‌ பகவான்‌ என்று உரைக்கப்பட்டது.

பராஸ்ய சக்திர்‌ விவிதை,வ ஸ்ரூயதே ‘ஸ்வாபவிகீ ஜ்ஞாந ப,ல க்ரியா ச -ஸர்வேஸ்வரேஸ்வரனுடைய சக்தியும்‌, ஜ்ஞானமும்‌, பலமும்‌, செய்கைகளும்‌, ஸ்வாபாவிகமானதாகவும்‌, பலபடிப் பட்டதாகவும்‌, மேலானதாகவும்‌
‘சொல்லப் படுகிறது.] என்றல்லவோ உபனிஷத்‌ உத்கோஷித்தது.
(ஸஹஸ்ரசீர்ஷா): இதற்கு வேறு வகையாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸகல ப்ராணிகளடங்கிய ப்ரம்மாண்ட்ம்‌ – நாராயணனுக்கு சரீரமானதினால்‌ இதற்குள்‌ளடங்கிய பிராணிகளுடைய தலை,கண்‌, கால்‌ முதலியவை இவனுடையவையே என்னத்‌ தட்டில்லை.
இவ் விடத்தில்‌ வித்யாரண்ய பாஷ்யத்திலும்‌ ஸர்வ ப்ராணிகளும்‌ இவருடைய சரீரத்தில்‌ அடங்கினபடியால்‌ அந்த அவயவங்களெல்‌லாம்‌ இவருடைய அவயவங்களாகும்‌ என்று காணப்படுகிறது ஸகல ப்ராணிகளுடைய அவயவங்களையும்‌ தனக்கு சேஷமாக உடையவன்‌ பகவான்‌ எனப்படுகிறது. அதனாலேயே அவன்‌ ஹ்ருஷீகேசன்‌
(இந்த்ரியங்களை நியமிப்பவன்‌) எனப்படுகிறான்‌. தலையால்‌ வணங்‌கப் படவேண்டியவன்‌ அவனே. வாயினால்‌ பேசத் தக்கவனும்‌ அவனே. புத்தியினால்‌ அறியப்பட வேண்‌டியவன்‌ ஹரியே: .கண்‌ களால்‌ பார்க்கத் தக்கவனும்‌ அவனே. செவிகளால்‌ கேட்க வேண்டியது அவனுடைய கீர்த்திகளையே. (ஸஹஸ்ரபாத்‌) என்று நம்முடைய கர்மேந்த்ரியங்களும்‌ அவனுடைய கைங்கர்யம்‌ செய்ய ஏற்பட்டவைகள்‌ என்று உணர்த்தப்படுகிறது. இவ்விடத்தில்‌,
வாய்‌ அவனை யல்லது வாழ்த்தாது கை உலகம்‌
தாயவனை யல்லது தாம்‌ தொழா–பேய்முலை நஞ்சு
ஊணாக உண்டான்‌ உருவோடு பேரல்லால்‌
காணா கண்‌ கேளா செவி,-
என்ற பாசுரம்‌ அனுஸந்திக்கத்தக்கது. (ஸஹஸ்ரசீர்ஷா) முதலிய
பதங்கள்‌ அர்ஜுனனுக்கு விஸ்வரூப தர்ஸசனத்தின் போது காட்டப்‌ பட்டது போன்ற அஸாதாரணமான விக்ரஹத்தை வர்ணிக்கின்றனஎன்றும்‌ கொள்ளலாம்‌. ஆழ்வாரும்‌ இதையே, “தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌!” என்று வர்ணித்தாரன்றோ.

(புருஷ:) இதில்‌ சொல்லப்படும்‌ புருஷன்‌ யார்‌? இது எந்த தெய்வத்தையும்‌ குறிக்கலாமே. புருஷ: என்பது ஸாமாந்ய சப்தமல்லவா? என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌.
“ப,கவாநிதி சப்தோயம்‌ ததா புருஷ இத்யபி | நிருபாதீ, ச வர்த்தேதே வாஸு தே,வே ஸ. நாதநே ||
ஸ ஏவ வாஸு தே,வோஸெள ஸாக்ஷாத்‌ புருஷ உச்யதே | ஸ்த்ரீ ப்ராயமிதரத்‌ ஸர்வம்‌ ஐகத்‌ ப்‌,ரஹ்ம புரஸ் ஸரரம்‌ |

[பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இத்த இரு சப்தங்களும்‌ இயற்கையாகவே ஸநாதனனான வாஸுதேவனைக்‌ குறிக்கின்றன. அந்த வாஸு தேவனே ஸாக்ஷாத்‌ புருஷனாகச்‌ சொல்லப் படுகிறான்‌. பிரம்‌மாவை முன்னிட்ட மற்ற ஸகல ப்ராணிகளும்‌ ஸ்த்ரி ப்ராயர்களே.] என்று பாத்ம புராணத்தில்‌ பேசப் பட்டிருக்கிறது. பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இவ்விரு பதங்களும்‌ முக்யமாக நாராயணனையே குறிக்கும்‌. அவன்‌ ஓருவனே புருஷன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்‌களே. ஸ்த்ரீ புருஷனை விட்டால்‌ ஜார ஸ்த்ரீயாவது போல்‌ இதர தெய்வங்களைத்‌ தொழும்‌ ஜீவனும்‌ அப்படியே கருதப் படுகிறான்‌.-புருஷன்‌ என்றால்‌ ஸகல சேதந அசேதநங்களிலும்‌ வியாபித்து நிறைந்து நிற்பவன்‌ என்று பொருள்‌. இது நாராயணனுக்கே அஸாதாரணமான குணம்‌. ஸுபாலோபநிஷத்தில்‌ “ஸஹஸ்ர சீர்ஷா…” என்னும்‌ மந்த்ரத்தைப்‌ பரம புருஷனைக்‌ குறித்து ப்ரயோகம்‌ செய்து அவனே ஸர்வ பூதாந்தராத்மாவான நாராயணன்‌ என்று நிர்ணயம்‌ செய்திருப்பதால்‌ இந்தப்‌ புருஷ சப்தம்‌ நாராயணனையே குறிக்கிறது என்பது ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி ஸித்திக்கிறது. கீதாசார்யனும்‌,
“யஸ்மாத்‌ க்ஷரமதீதோஹம்‌ அக்ஷராத,பி சோத்தம: |
தஸ்மாத்‌ வேதே; ச லோகே ச ப்ரதி,த: புருஷோத்தம: ||’”

[ஞானத்தில்‌ ஏற்றத் தாழ்வுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதி க்ரமித்தவனாகவும்‌, ஜ்ஞானத்தில்‌ ஸங்கோச விகாஸமற்றவனான முக்‌தனைக் காட்டிலும்‌ மேலானவனாகவும்‌ நான்‌ இருப்பதால்‌ லோகத்‌திலும்‌, வேதத்திலும்‌ புருஷோத்தமன்‌ என்று பிரஸித்தி பெற்றிருக்‌கிறேன்‌] என்று கீதையில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.

(ஸ:) இப்படி வேதத்தில்‌ ப்ரஸித்தி பெற்றவரான அந்த நாராயணன்‌.
(பூமிம்‌) “பூ,மிர்‌ பூ,ம்நா * என்று பூஸூக்தத்தில்‌ சொல்லியபடி பரப்பை உடைத்தாயிருப்பதால்‌ பூமி எனப்படுகிறது. இங்கு பூமி என்பதினால்‌ பதினாலு புவனங்களும்‌ சொல்லப்படுகின்றன. (விஸ்வதோ வ்ருத்வா…) இப்படிப்பட்ட கீழேழு மேலேழு லோகங்‌களையும்‌ நான்கு புறமும்‌ வியாபித்து, அவருடைய அங்குலத்தில்‌ பத்து அங்குலம்‌ ப்ரமாணமுள்ள ப்ரஹ்மாண்டத்தை ஆக்ரமித்தார்‌. இந்த ப்ரஹ்மாண்டம்‌ அவருடைய ஸ்வரூபத்தில்‌ ஒரு மூலையில்‌ அடங்கி விட்டது என்று பொருள்‌. (தசாங்குலம்‌) என்பதற்கு விஷ்ணு சித்தாசாரியர்‌ தசகுணம்‌” என்று பொருள் கூறி மஹா ப்ரமாணமான இந்த அண்டம்‌ என்று விளக்கி யிருக்கிறார்‌. புருஷ ஸம்ஹிதையிலும்‌ இந்த அர்த்தமே ஆதரிக்கப்பட்டது. மாத்வர்‌ பிரஹ்மா முதலிய ஜீவர்‌களுடைய பத்தங்குலம்‌ அளவுடைய ஹ்ருதய கமலத்தில்‌ அந்தர்‌யாமி யாயிருக்கிறார்‌ என்று அர்த்தம்‌ செய்தார்‌. நாபிக்கு மேல்‌ பத்தங்‌குலத்திற்கு மேற்பட்டிருக்கிற ஹ்ருதயத்தில்‌ வஸிக்கிறார்‌ என்றார்‌ மஹீ தரர்‌. வித்யாரண்யர்‌ பத்து என்பதற்கு அநேகம்‌ என்று பொருள் கொண்டு அண்டத்திற்கு வெளியிலும்‌ வியாபித்திருந்தார்‌ என்று சொல்லி யிருக்கிறார்‌.

இதனால்‌ பரம புருஷனுக்கு தேச பரிச்சேதம்‌ (தேசத்தினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று சொல்லப்பட்டது. அங்கும்‌ இங்கும்‌ எங்கும்‌ பரந்துளான்‌ புருஷோத்தமன்‌. இங்கு ஸர்வ வ்யாபகத்‌வத்தைக் கொண்டு இவன்‌ விஷ்ணுவே என்று காட்டப்பட்டது. ““விசதீதி விஷ்ணு:’” என்று எங்கும்‌ நுழைந்திருப்பதால்‌ விஷ்ணு எனப்படுகிறானன்றோ. இவ் விடத்தில்‌ பகவான்‌ ஜ்ஞானம்‌, சக்தி முதலிய கல்யாண குணங்களை உடையவனென்றும்‌, ஸகல லோகங்‌களையும்‌ வியாபித்து அவைகளை சரீரமாகக் கொண்டிருக்கிறான்‌
என்றும்‌, அஸாதாரணமான அப்ராக்ருத சரீரத்தை உடையவனென்‌ றும்‌ தெளிவாகச்‌ சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, பூமி பொய்‌” என்‌றும்‌, **குணமில்லை ரூபமில்லை’” என்றும்‌ சொல்லும்‌ அத்வைத வாதங்‌கள்‌ அடியோடு அகற்றப் பட்டன.

———-

2-புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி,[எந்த ஐகத்தானது முன்‌ கல்பத்திலிருந்ததோ, எந்த ஜகத்தானது பின் வரும்‌ கல்பத்தில்‌ உண்டாகப் போகிறதோ, எது இந்தக்‌ கல்பத்‌திலிருக்கிறதோ, எந்த ஜகத்தானது அந்நத்தினால்‌ மறையாமலிருக்‌கிறதோ இந்த ஸமஸ்தமான ஜகத்தும்‌ புருஷனாகிற நாராயணனே. மேலும்‌, மோஷாத்துக்கு ப்ரபுவும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே.]“தீவிதீயயா சாஸ்ய விஷ்ணோ: கால தோ வ்யாப்தி ருஸ்யதே”” –[இரண்டாவது மந்த்ரத்தினால்‌ இந்த விஷ்ணுவுக்கு ஸர்வ காலத்‌திலும்‌ வ்யாப்தி சொல்லப்பட்டது. | என்று இந்த ருக்கின்‌ அர்த்தம்‌ புருஷ ஸம்ஹிதையில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது.

(புருஷ…… ) ‘போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌” எனப்படும்‌ மூன்று காலங்களிலும்‌: இருக்கும்‌ வஸ்துக்களெல்லாம்‌ புருஷனே என்று சொல்லப் படுகிறது. :முன்‌ மந்த்ரத்‌தில்‌ பரம புருஷன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான் என்று சொல்லப்‌பட்டது. ஆகாசம் போல்‌ வியாபித்திருப்பது மட்டுமல்ல; எல்லா வற்றையும்‌ சரீரமாகவும்‌ கொண்டிருக்கிறான்‌ பரமாத்மா என்பதை இது காட்டுகிறது.” என்று விஷ்ணுசித்தர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.
“இதம்‌ ஸர்வம்‌” என்றதினால்‌ புருஷோத்தமனுக்கு வஸ்து பரிச்சேதம்‌ (வஸ்துவினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று காட்டப்பட்டது. அவனில்லாத வஸ்துவே இல்லை யன்றோ. “யத்‌.பூ,தம்‌…ப,வ்யம்‌’” என்‌பதினால்‌ கால பரிச்சேதமில்லாதவன கேசவன்‌ என்று காட்டப்பட்டது.-ஆதி மத்‌,யாந்த ரஹிதனன்றோ அநந்தன்‌. “முன்‌ காலத்திலிருந்தான்‌; இப்பொழுதில்லை.” முதலிய குறைகள்‌ அவனைப் பற்றிச்‌ சொல்ல முடியாது. எல்லாம்‌ அவன்‌’ என்பதினால்‌ ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” என்று தெரிவிக்கப் படுகிறது.-அதனால்‌ மற்றவைகளில்லை என்று ஏற்படாது. மற்றவைகள்‌ அவனுக்கு சரீரமென்றும்‌, அவைகளுக்கு அவன்‌ அந்தர்யாமி என்றுமே ஏற்படும்‌. சரீரத்திற்குப்‌ பெயரான கிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ முதலியவைகள்‌ ஆத்மாவையும்‌ குறிக்கின்றன. அம் மாதிரியே இவ் வுலகத்தை யெல்லாம்‌ சரீரமாகக்‌ கொண்ட புருஷனை ‘எல்லாம்‌ அவனே” என்று சொல்வது பொருந்‌ தும்‌. *இந்தக்‌ குடம்‌ கருப்பு” ‘என்று சொன்னால்‌ :குடம்‌” என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ “கருப்பு என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ ஓன்றாகி விடுமோ? கருப்பு நிறமானது பிரிக்க முடியாதபடி குடத்‌தில்‌ ஒன்றி நிற்கிறது என்றே ஏற்படும்‌. அம் மாதிரியே *புருஷனே இவ் வுலகம்‌” என்று சொன்னால்‌ இவ் வுலகமானது பரமாத்மாவை விட்டுப்‌ பிரிக்க முடியாதபடி ‘ அவனுடன்‌ ஒடுங்கி நிற்கிறது என்றே பொருள்படும்‌. இவ் விஷயத்தை ::அந்பச்ச ராஜந்‌ ஸ பர: ததராந்ய:பஞ்ச விம்சக: தத்ஸ்த,த்வாதநு பஸ்யந்தி ஹ்யேக்‌ ஏவேதி . ஸாத,வ[ராஜனே! பரமாத்மா வேறானவன்‌. இருபத்தைந்தாவது தத்வமான ஜீவன்‌ வேறானவன்‌. அவனுக்குள்‌ அந்தர்யாமியாக இருப்பதால்‌,
ஸாதுக்கள்‌ ஓருவனென்றே நினைக்கிறார்கள்‌-] என்று வ்யாஸரால்‌ மோஷ தர்மத்தில்‌ சொல்லப்பட்டது. கீதையில்‌ அர்‌ ஜுனனும்‌ “ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:”” [நீ எல்லாவற்றினுள்ளும்‌ நிறைந்திருப்பதால்‌ எல்லாமாக இருக்கிறாய்‌-] என்று கண்ணனைத்‌ துதித்தான்‌. இங்கும்‌ புருஷோத்தமன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான்‌என்று சொன்ன பின்பல்லவோ புருஷனே எல்லாம்‌” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆழ்வாரும்‌ :’அவனே மற்றெல்லாமும்‌ அறிந்தனமே’‘ என்றும்‌, “வருங்காலம்‌ நிகழ் காலம்‌ கழி காலமாய்‌ உலகை ஒருங்காக அளிப்பாய்‌” என்றும்‌ பாடி யிருக்கிறார்‌.
(யத்‌ அந்நேந .அதி ரோஹதி) எந்த உலஃமானது அந்நத்தினால்‌ நசிக்காம லிருக்கிறதோ” என்று அர்த்தம்‌.-உலகத்திற்கு ஆஹாரத்தை அளித்து அவைகளை அழியாமல்‌ காக்கும்‌ இயல்வினன்‌ கண்ண பெருமான்‌‘. இங்கு அந்நம்‌’ என்பது . இந்திரியங்களால்‌ அனுபவிக்கப்படும்‌ விஷயங்களைக்‌ குறிக்கும்‌. தர்மார்த்த காமங்களாகிற இஹ லோக புருஷார்த்தங்களாக்‌ கொடுப்பவன்‌ பகவான்‌ என்று சொல்லப்படுகிறது. (உதாம்ருதத்வஸ்ய ஈசாந:) மோக்ஷ புரு ஷார்த்தத்தையும்‌ கொடுப்பவன்‌ பகவானே என்று சொல்லப்படுகிறது. இது பகவானுடைய அஸாதாரணமான லக்ஷணம்‌. இதர புருஷார்த்தங்களைக்‌ கொடுப்பதற்குப்‌ பல தேவதைகளை நாட்டி வைத்‌திருக்கிறான்‌ நாராயணன்‌. ஆனால்‌ மோக்ஷத்தையும்‌ கொடுப்பவன்‌ முகுந்தனே. “அம்ருதத்வம்‌ அஸ்நுதே‘ என்று வேதங்களில்‌ கோஷிக்கப்‌ பட்ட மோக்ஷத்திற்கு ப்ரபு நாராயணனே. வித்யாரண்யர்‌ ‘முக்காலங்‌களிலும்‌ உள்ள ஜகத்‌ எல்லாம்‌ விராட் புருஷனே. . எல்லாக் காலங்‌களிலுமுள்ள ஸஃல ப்ராணிகளுடைய தேஹங்களும்‌ விராட் புருஷனுடைய அவயவங்களே. ப்ரஹ்மா, இந்திரன்‌ முதலியவர்களும்‌ அவரை ஆஸ்ரயித்தே தங்களுடைய ஸ்தானங்களை யடைகிறார்கள்‌”*
என்று அர்த்தம்‌ செய்தார்‌. மேலும்‌, “தங்கக் கட்டி, குண்டலம்‌ முத லியஆபரணமாக ஆனாலும்‌, அந்தக்‌ குண்டலம்‌ முதலியவை உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப் பின்னும்‌ காணாப் படாமையால்‌ வாஸ்தவமாகாது. தங்கம்‌ எப்போதும்‌ காணப் படுவதால்‌ உண்மையானதாகக்‌ கொள்கிறோம்‌. அதுபோல்‌ இந்த உலகமும்‌ முன்‌ இல்லாமலிருந்து இப்போது தோன்றி சில நாளைக்குப் பின்‌ அழித்து போகிற படியால்‌ உண்மை யல்ல. விராட் புருஷனுடைய (ஸ்வரூபம்‌ எப்போதுமிருப்பதால்‌ உண்மையானது. அவரே, ஜீவாத்மாக்களுடைய புண்ய பாபங்களுக்குத்‌ தகுந்தபடி அவர்களுக்குப்‌ பலன்‌ கொடுப்பதற்காகத்‌ தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை ‘விட்டு இந்த ஜகத் ரூபமாய்‌ ஆகி யிருக்கிறார்‌.” என்றும்‌ சொல்லி இருக்கிறார்‌. இது சரியன்று. உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப்‌ பின்னும்‌காணப் படாததால்‌ உலகம்‌” மாறுபாட்டை யுடையது என்றும்‌,அநித்யமானது (நிலை யற்றது) என்றும்‌ ஏற்படுமே யொழியப்‌ பொய்யானது என்று ஏற்படாது. இந்த ருக்கில்‌ இதம்‌” என்று சேதனாசேதனங்களடங்கிய ஜகத்தைக் காட்டுகிறது. புருஷனென்று
பரமாத்மா சொல்லப்படுகிறான்‌. ஜகத்‌ பொய்யான வஸ்துவானால்‌ பொய்யான வஸ்துவைப்‌ புருஷன்‌ என்று சொல்லுவது அர்த்தமற்ற பேச்சு. *இதம்‌’ என்றும்‌, ‘புருஷ:” என்றும்‌ தனித் தனியாக எடுக்கப்‌ பட்ட இரண்டும்‌ ஸத்யமானது என்றே ஏற்படும்‌. யத்‌ பூதம்‌…… ்‌என்று மூன்று காலங்களும்‌ குறிக்கப்படுவதால்‌ காலம்‌ என்னும்‌ தத்வமும்‌ உண்மை யானது என்று உணர்த்தப் படுகிறது. அம்ரு தத்வமென்றும்‌ அதற்கு ஈசனனென்றும்‌ இரண்டு சொல்லப்படு கின்றன. அம்ருதத்வம்‌ (மோக்ஷம்‌) என்று ஒன்றிருந்தால்‌ அதை அடைகிற வஸ்துவும்‌ இருந்தேயாக வேண்டும்‌. ஜகத்‌ பொய்யானால்‌“அது அந்நத்தினால்‌ நாசமடையாம லிருக்கிறது” என்பது அஸம்பாவிதம்‌. ஆகையால்‌ இங்கு அத்வைத வாதத்திற்கு அணு வளவும்‌ அவகாசமில்லை- இந்த மந்த்ரத்தின்‌ அர்த்தம்‌
புருஷோ நாராயண: பூ,தம்‌ ப,வ்யம்‌ ப,விஷ்யச்ச ஆஸீத்‌
ஸ ஏஷ ஸர்வேஷாம்‌ மோக்ஷத,ச்ச ஆஸீத்‌”?

[புருஷனாகிற நாராயணன்‌ சென்றவைகளும்‌, வருமவைகளும்‌, இருப்பவைகளுமாக ஆனார்‌. அவர்‌ எல்லோருக்கும்‌ மோக்ஷத்தைக்‌ கொடுப்பவராகவும்‌. ஆனார்‌.] என்று முத்‌கலோபனிஷத்தில்‌ சொல்லப் பட்டது.

———-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–
3-
[இந்தப்‌ புருஷனுடைய பெருமை இப் பேர்ப்பட்டது. ஆகையால்‌ புருஷோத்தமன்‌ மேலானவன்‌. எல்லா பூதங்களும்‌ இவனுடைய ஒரு பாகம்‌. போக்யமாயிருப்பதான மூன்று பாகம்‌ இவனுடைய பரம பதத்திலிருக்கிறது.]
ஏதாவாநிதி மந்த்ரேண வைப,வம்‌ கதி,தம்‌ ஹரே:’” [ஏதாவாந்‌……..” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ ஹரியினுடைய பெருமை பேசப்பட்டது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-

(ஏதாவாந்‌……) இந்தப்‌ புருஷோத்தமன்‌ தேசத்தினாலும்‌,காலத்தினாலும்‌, வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதவன்‌. போக மோக்ஷங்களைத்‌ தருபவன்‌ முகுந்தன்‌. இப்படிப்பட்டது அவனுடைய மஹிமை. ஆகையால்‌ அவனே மேலானவன்‌. (ஏதாவாந்‌ அஸ்ய
மஹிமா?…
) என்று வைத்துக் கொண்டு““இவ்வளவு தானே அவன்‌ மஹிமை? இதைக் காட்டிலும்‌ மேலானவனன்றோ புருஷன்‌”” என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. “ஸோ அங்க; வேத; யதி;வா ந வேத ” [தன்‌ பெருமையை, அவனே அறிவனோ? அறியானோ?] என்றது வேதம்‌.“தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை”:- நம்மாழ்வார்‌.
**யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவன்‌ பரமாத்மாவை அளவிட்டு அறிய முடியாத வனென்று நினைக்கிருனோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்று மறைகள்‌ முறை யிட்டன. ஆயிரம்‌ நாவு படைத்த ஆதி சேஷனாலும்‌, ‘ஸஹஸ்ர சீர்ஷா’ வான எம்பெருமானாலும்‌ அப்‌ பெருமையைப்‌ பேச முடியாது. எவ்வளவு வர்ணித்தாலும்‌ அதற்கும்‌ மேலானவனாகவே இருப்பான்‌ அநந்தன்‌.
(பாதோஸ்ய…… ) இவ் வுலகிலிருப்பவை களெல்லாம்‌ இவனுடைய ஏக தேசத்தில்‌ அடங்கி விடுகின்‌றன.*“யஸ்யா யுதாயுதாம்சாம்சே விஸ்வ சக்திரியம்‌ ஸ்திதா’ (எந்தப்‌ பரமாத்மாவினுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ இந்த லீலா விபூதியானது அடங்கி விடுகிறதோ………] என்று பராசரர்‌ விஷ்ணு புராணத்தில்‌ விளக்கினார்‌… (த்ரிபாத்‌) அளவற்றதான இந்த லீலா விபூதியைக் காட்டிலும்‌ பன்‌ மடங்கு அளவற்றது நித்ய விபூதி.-இங்கு “மூன்று என்பது “அநந்தம்‌” என்பதைக்‌ குறிக்கும்‌.-இதனாலேயே பரம பதத்தை “த்ரிபாத் விபூதி” என்கிறோம்‌. (அம்ருதம்‌) அழியாதது. ::நச புநராவர்த்ததே’” [மோக்ஷமடைந்தவன்‌ மறுபடி திரும்பி வருவதில்லை.]என்று வேதம்‌ கோஷித்தது.-புணைக்‌ கொடுக்‌கிலும்‌ போக லொட்டான்‌” என்றார்‌ ஆழ்வார்‌. ஏற விட்டு ஏணி வாங்குபவனன்றோ எம்பெருமான்‌. இந்தப்‌ பரம பதத்திற்கும்‌ அதி லுள்ளார்க்கும்‌ அழிவு கிடையாது.-‘இனிமையானது”என்றும் பொருள்‌ கொள்ளலாம்‌. கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை அமுதை” எனப்படும்‌ ஆராவமுதாகிய அச்யுதனை அனுபவிக்கும்‌ ப்ரதேசமாகையால்‌ “:அம்ருதம்‌’” எனப்படுகிறது. “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்‌’” என்கிறபடி பகவத் குணங்களை அனுபவித்து “ப்ரஹ்மானந்தமடையும்‌ இடமன்றோ அது. (திவி) ப்ரகாசிக்கும்படியான பரம பதத்தில்‌ இருக்கிறது.

அத்யர்காநல தீப்தம்‌ தத்‌ ஸ்தராநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந :”[மஹாத்மாவான விஷ்ணுவினுடைய ஸ்தாநமானது ஸூர்யன்‌, அக்னி முதலியவர்களின்‌ ஓளியை அதிக்ரமித்த தேஜஸ்ஸை உடை யது.] என்றல்லவோ பாரதத்தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-வித்யாரண்யர்‌ இதற்கு பாஷ்யம்‌ செய்யும் போது மஹிமை என்றால்‌ ஸாமர்த்யம்‌ என்றும்‌ ஆகையால்‌ இது வாஸ்தவமன்று என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. அப்படி யென்றால்‌ இது இந்த்ரஜாலமென்றே ஏற்படும்‌. இது ஸாஹஸமே யொழிய வேறல்ல. “மஹிமை” என்பது பெருமையைக்‌ காட்டுகிறது. ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்‌ருச்யதே”” என்கிறபடி ஓப்பாரும்‌ மிக்காரு மற்றவன்‌ மாதவன்‌ என்றே பொருள்படும்‌..அவனை விடத்‌ தாழ்ந்த வஸ்துக்களில்லா விடில்‌ பெருமையே ஏற்படாது. பெருமை யென்று சொன்னாலும்‌ கேலிக்‌கூத்தாகும்‌. பெருமையும்‌ சிறுமையும்‌ ஒன்றை யொன்று அபேக்ஷித்‌திருக்கும்‌ வார்த்தைகளன்றோ. மேலும்‌, பகவான்‌ உபய விபூதி நாயகன்‌ என்று சொல்லப் பட்டபடியால்‌ அத்வைத வாதத்திற்குச்‌ சிறிதும்‌ இங்கு இடமில்லை.
ஸச ஸர்வஸ்மாந் மஹிம்நோ ஜ்யாயாந்‌, தஸ்மாந் ந கோபி ஜ்யாயாந்‌”
[அவன்‌ எல்லா மஹிமைகளைக் காட்டிலும்‌ உயர்ந்தவன்‌. அவனைக்‌ காட்டிலும்‌ உயர்‌ந்தவனில்லை.] என்று முத்கலோபநிஷத்தில் இந்த மந்திரத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது.

————-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி
..| -4-பரம பதத்திலிருக்கும்‌ பரம புருஷன்‌ மூன்று அவதாரத்தை உடையவனாகி ஸங்கல்பித்தார்‌. இவருடைய ஒரு அவதாரமான (அநிருத்தன்‌) இவ் வுலகத்தில்‌ அவதரித்தார்‌. அதற்குப் பின்‌ எல்லாப் பக்கத்திலும்‌
ஜீவன்‌ ஜடம்‌ இவர்களைக்‌ குறித்து (அவதாரம்‌ செய்வதன்‌ மூலம்‌)வியாபித்தார்‌.]
த்ரிபாதி,த்யநயா ப்ரோக்தம்‌ அநிருத்‌தஸ்ய வைப,வம்‌”[“த்ரிபாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தில்‌ அநிருத்த நாராயணனுடைய வைபவம்‌ விளக்கப் படுகிறது.] என்று புருஷ ஸம்ஹிதை சொல்லிற்று.

(த்ரிபாத்‌……) பரம பதத்திலிருக்கும்‌ பர வாஸுதேவன்‌ ஸங்கர்‌ஷணன்‌, அநிருத்தன்‌, ப்ரத்யும்நன்‌ என்னும்‌ மூன்று வ்யூஹங்களை உடையவரா யிருக்கிறார்‌. இந்த வ்யூஹங்களைப் பற்றிப்‌ பாஞ்சராத்‌ரத்தில்‌ அஹிர் புத்ந்ய ஸம்ஹிதையில்‌ விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
(உதைத்‌) “இவ் வுலகை யெல்லாம்‌ ரக்ஷிக்கக் கடவேன்‌” என்று ஸங்கல்பித்தார்‌.
(அஸ்ய பாத:) இவருடைய ஒரு அவதாரமான அநிருத்தன்‌.
(இஹ அபவாத்புந:) மறுபடியும்‌ இங்கு விஷ்ணுவாகத்‌ திருப் பாற்கடலில்‌ அவதரித்தார்‌.
(ததோ…வ்யக்ராமத்‌) அதன்‌ பிறகு அயோத்தி த்வாரகை முதலிய திவ்ய நகரங்களில்‌ ராமக்ருஷ்‌ணாதிகளாக அவதரித்தார்‌. அவைகளுக்கும்‌ பிற்பாடரானவர்களை உய்விப்பதற்காகத்‌ திருவரங்கம்‌, திருப்பதி முதலிய திவ்ய தேசங்‌ களிலும்‌, கிராமங்கள் தோறும்‌, பக்தர்களுடைய கிருஹங்கள் தோறும்‌ அர்ச்சா மூர்த்தியாக அவதரித்தார்‌. ‘விஷ்வக்‌’ என்றதால்‌ எண்ணிறந்த இடங்களில்‌ அவதாரம்‌ செய்திருப்பது தோற்றுகிறது–ஸ்வரூபவ்யாப்தி முதல்‌ மந்த்ரத்திலேயே சொல்லப்பட்டதால்‌ இங்கு “வ்யக்ராமத்‌” என்பதற்கு அவதாரம் செய்து வியாபித்தார்‌ என்றே பொருள் கொள்ளவேண்டும்‌. இவர்‌ எதற்காக இப்படி அவதாரம்‌ செய்ய வேண்டும்‌ எனில்‌: (ஸாசநாநசநே அபி) உணவருந்துபவர்‌களான தேவர்‌, மனுஷ்யர்‌ முதலியவர்களையும்‌, உணவருந்தாமல்‌ பாறை முதலியவையாய்க் கிடக்கும்‌ சேதனர்களையும்‌ உய்விப்ப்தற்கே–இப்படிப்‌ படாதன படுகிறான்‌ பரமபுருஷன்‌ என்று சொல்லப்படு கிறது. “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌! இமை யோர்‌ தலைவா!” என்றார்‌ ஆழ்வார்‌. “*அஜாயமாநோ பஹுதா விஜாயதே”” [பிறப்பிவியான பகவான்‌ பல தடவை பிறக்கிறான்‌] என்றது வேதம் -புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஓன்றின்றியே்‌ நல்ல கதிக்கு அழைத்துச்‌ செல்ல வன்றோ அவதாரம்‌ செய்கிறான்‌ அச்யுதன்‌.-சேதநாசேதநங்களெல்லாம்‌ அவனுடைய உடைமைகளாயிற்றே.-உடைமையைப் பற்றிய கவலை உடையவனுக் கல்லவோ உண்டு.-விபவாவதாரங்களைப் பற்றி ராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌ முதலியவைகளில்‌ விஸ்தாரமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. அர்ச்சாவ தாரமாஹாத்ம்யங்கள்‌ பாஞ்சராத்ர வைகானஸ’ ஸம்ஹிதைகளிலும்‌,-வாராஹம்‌, ப்ரஹ்மாண்டம்‌ முதலிய புராணங்களிலும்‌ கீர்த்திக்கப்‌ பட்டிருக்கின்றன. ஆழ்வார்கள்‌ அருளிச் செயல்களிலும்‌ அனுபவிக்கிறோம்‌-இப்படி அவதாரம்‌ செய்தது ஸ்ரீமந்‌ நாராயணனே. வேறு தெய்வங்களல்ல,. பரித்ராணாய ஸாதூநாம்‌’”’ என்கிறபடி லோக ஸம் ரக்ஷணத்திற்காகப்‌ பல பிறப்புகளெடுத் திருக்கிறான்‌ பரந்தாமன்‌. உலகத்தைக்‌ காப்பதற்காக மற்ற தெய்வங்கள்‌ அவதாரம்‌ செய்ததில்லை. அவர்கள்‌ அவதாரம்‌ செய்ததாகச்‌ சொல்லுவதும்‌ அல்ப காரியங்களுக்கே. தாயில்லாப் பெண்‌ ப்ரசவ வேதனைப்படும் போது தாயும்‌ ஆகி ‘தாயுமானவர்‌’ என்று பெயர்‌ பெற்றதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. இப்படிச்‌ சில விருத்தாந்தங்கள்‌ சொல்லப்படுகின்றன–அவதாரங்கள்‌ செய்து மஹத்தான கீர்த்திய டைந்தவன்‌ மாதவனே.-வியூஹங்கள்‌ தேவர்களுக்குக்‌ கூப்பீடு கேட்குமிடங்கள்‌. நம்மால்‌ அணுக முடியாதவை.-விபவாவதாரங்களோ அக்காலத்திலிருந்த பாக்யவான்களுக்கே. ‘புல்லாய்ச்‌ சிலையாய்க்‌ கிடந்திலமே கழல்‌ தீண்டுகைக்கே”” என்றே நாம்‌ நினைக்க வேண்டி யிருக்கிறது. அவைகளைப் பற்றி இதிஹாஸ புராணங்களில்‌ கேட்டே ஆநந்தமடைகிறோம்‌. அவை ஒரு காலத்திலோடும்‌ பெருக்காறு போன்றவை.-அவற்றில்‌ தேங்கின மடுப் போலே சொல்லப்பட்ட அர்ச்சாவதாரமும்‌ வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது. அவைகட்கு யாதொரு தீங்‌கும்‌ ஏற்படாதென்று மநோ ரதித்திருந்தோம்‌. அவைகளும்‌ ஸமாப்தி யடைந்தனவோ என்றேங்கும்படி இருக்கிறது இப்போதிருக்கும்‌ நிலைமை. கூரத்தாழ்வாணையும்‌ பட்டரையும் போல்‌, கல்கி அவதாரத்தை இப்போதே எடுத்துச்‌ சீர்திருத்தும்படி பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை,

————

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:
–5-
[அந்த விஷ்ணுவிடமிருந்து ப்ரஹ்மாண்டம்‌ உண்டாயிற்று. ப்ரஹ்‌மாண்டத்தில்‌ பிரமன்‌ உண்டானான்‌. அத்த நான்முகன்‌ பூமியைப்‌ பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ ஆக்ரமித்தனன்‌.]
தஸ்மாத்‌, விராடி,த்யநயா பாத.நாராயணாத்‌ ஹரே:
ப்ரக்ருதே: புருஷஸ்யாபி ஸமுத்பத்தி : ப்ரதர்‌சிதா”
[(“தஸ்மாத்‌ விராட்‌…
” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ நாராயணனுடைய ஓர்‌ அவதாரமான ஹரியினிடமிருந்து ப்ரக்ருதியினுடையவும்‌, பிரமனுடையவும்‌ உத்பத்தியானது காட்டப்பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதையில்‌ இதன்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது. (தஸ்மாத்‌…) இப்‌படிப்‌ பலவிதமான அவதாரங்களைச்‌ செய்‌த மஹா விஷ்ணுவிடமிருந்து முட்டை வடிவமான ஒரு அண்டம்‌ உண்டாயிற்று.

அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌-(விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதிபுருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌” “அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌. (விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ “அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதி புருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌”செயலற்று இருந்தன. பிறகு பிரமன்‌ மாதவனிடம்‌ முறையிட்டதாகவும்‌, அவன்‌ ஸர்வேந்த்ரியங்களிலும்‌ வியாபித்து அவைகளுக்குக்‌ கார்யம்‌ செய்ய சக்தி கொடுத்ததாகவும்‌ அறிகிறோம்‌-முற் கூறிய பல உபனிஷத்துக்களலும்‌ சொல்லப்பட்ட நாராயணனே இப்படி ஸர்வ விதத்திலும்‌ ஸ்ருஷ்டி செய்கிறான்‌ என்று ஏற்படுகிறது.(ஸ ஜாதோ…) அந்தப்‌ பிரமன்‌ பூமியை, நான்கு பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ வியாபித்ததாகச்‌ சொல்லப் படுகிறது.-*பச்சாத்‌” என்‌றதனால்‌ எல்லா த்வீபங்களிலும்‌, “அத; என்பதால்‌ பாதாளத்திலும்‌, புர: என்பதினால்‌ ஸ்வர்க்கம்‌ முதலியவைகளிலும்‌ வியாபித்தான்‌ என்று ஏற்படுகிறது.-பிரமனுடைய ஸ்வரூபம்‌ அணுவான படியால்‌ ஸ்வரூபத்தினால் இவைகளை வியாபிக்க. மூடியாது. ஆகையால்‌ ஞானம்‌, சக்தி முதலிய குணங்களால்‌ வியாபித்ததாகவே கொள்ள வேண்டும்‌. தன்னுடைய ஞானத்தினால்‌ பதினாலு உலகங்களிலும்‌ நடக்க வேண்டியவைகளை அறிந்து, சக்தியினால்‌ ஸ்ருஷ்டி செய்வதால்‌ இவ் வண்டத்திலுள்ள உலகங்களிலும்‌ ஞானத்தினாலும்‌ சக்தியினாலும் வியாபித்தான் என்றே கொள்ள வேண்டும்‌.-ஸ்ரீவிஷ்ணுசித்தர்‌ “தன்னுடைய பிரஜைகள்‌ மூலமாக வியாபித்தான்‌” என்றும்‌ பொருள் கொண்டார்‌. பெரிய சரீரத்தினால்‌ வியாபித்ததாகவும்‌ சொல்லலாம்‌.“ஸ ச பாத,நாராயண: ஐகத்‌ ஸ்ரஷ்டும்‌ ப்ரக்ருதிம்‌ அஜாயத்‌”[ நாராயணனின்‌ அவதாரமாகிய அந்த விஷ்ணு உலகை ஸ்ருஷ்டிப்‌பதற்காகப்‌ பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌.] என்று இத்த மந்திரத்தின்‌ பொருள்‌ முத்கலோபனிஷத்தில்‌ உரைக்கப்பட்டது. இங்கு “ப்ரக்ருதி”சப்தம்‌ ப்ரஜைகளுக்குக்‌ காரண பூதனான: பிரமனைக்‌ குறிக்கிறது.

——————

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-
[தேவர்கள்‌ (நித்ய ஸூரிகள்‌) சதுர்முகனாகிற ஹவிஸ்ஸினால்‌ ஸ்ருஷ்டியைக் குறித்துச்‌ செய்த (தியான ரூபமான ) யாகத்திற்கு வஸந்த ருது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்தாகவும்‌, சரத் ருது புரோடாசமென்னும்‌ ஹவிஸ்ஸாகவும்‌ ஆயிற்று.]
“யத்‌ புருஷேணேத்யநயா ஸ்ருஷ்டி யஜ்ஞ்ஸ்‌ ஸமீரித:”
[யத்‌ புருஷேண’ என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட யஜ்ஞம்‌ சொல்லப் பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதை சொல்லிற்று-இந்த மந்த்ரத்திலிருந்து ஸ்ருஷ்டியைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்யப்‌பட்ட விஷயம்‌ விவரிக்கப்படுகிறது. பிரமனுக்குப்‌ பிறந்த போதே ஸ்ருஷ்டி சக்தி யில்லை என்பது இதிலிருந்து ஏற்படுகிறது. நான்‌ முகனுக்குப்‌ படைக்கும்‌ சக்தி உண்டாவதற்காக எம்பெருமானணைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்தார்கள்‌ என்றும்‌ ஏற்படுகிறது. (யத்‌ புருஷேண…) இந்தப்‌ பிரமனாகிற புருஷனை அந்த யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவாகக்‌ (ஹவிஸ்ஸாக) கல்பித்தனர்‌ என்று ஏற்படு கிறது. யார்‌ கல்பித்தார்கள்‌? (தேவா?) தேவர்கள்‌. யார்‌ அந்த தேவதைகள்‌? என்னும்‌ விசாரணை உண்டாகிறது.-இந்த்ராதி தேவர்‌ களோவெனில்‌ ஸ்ருஷ்டி சக்தியை அடைந்த பின்பு பிரமனால்‌ படைக்‌கப்பட்ட கச்யப ப்ரஜாபதிக்கு அதிதியிடம்‌ பிறந்த புத்திரர்கள்‌. ஆகையால்‌ இங்கு சொல்லப்பட்ட தேவர்கள்‌ அவர்களாக இருக்க முடியாது.-ஆகையால்‌ பிரகாசிக்கும்படி யானதும்‌ பரமாகாசமென்று புகழ்‌ பெற்‌றதுமான ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும்‌ நித்ய ஸூரிகளே இங்கு சொல்‌லப்படும்‌ தேவர்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. (யத்‌ யஜ்ஞம்‌ அதந்வத அஸ்ய) பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு எந்த தியான ரூபமான
யஜ்ஞத்தைச்‌ செய்தார்களோ அந்த யஜ்ஞத்திற்கு. (வஸந்த: ஆஜ்‌யம்‌ ஆஸீத்‌…) வஸந்த ருதுவானது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்‌தாகவும்‌, சரத் ருது புரோடாசம்‌ எனப்படும்‌ ஹவிஸ்ஸாகவும்‌. ஆயிற்று.
இந்த யஜ்ஞம்‌ பரம புருஷனைக்‌ குறித்து ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட தியான ரூபமான யஜ்ஞமாகும்‌. ஸ்ருஷ்டிக்குக்‌ காலம்‌ அவசியமாக வேண்டியபடியால்‌ அது இம் மாதிரி உபகரணங்களாகச்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது. ‘புருஷேணா ஹவிஷா” என்கிற இடத்தில்‌ பிரமன்‌ யாக பசுவாகிற ஹவிஸ்‌ ஆகிறான்‌ என்று சொல்லப்பட்டது. “சரத்‌ஹவி:’ என்ற இடத்தில்‌ சரத்காலம்‌ புரோடாசம்‌. எனப்படும்‌ ஹவிஸ்‌ ஆகிறது என்று சொல்லப்படுகிறது. அரிசியின்‌ மாவினால்‌ செய்யப்‌ பட்டு ஹோமம்‌ பண்ணப்படுகிற அடை புரோடாசம்‌ எனப்படும்‌.-நித்ய ஸரிகள்‌ பிரஹ்மாவை ஸ்ருஷ்டிக்கு. முக்யமான உபகரணமாகவும்‌ காலத்தை ஸஹ காரியாகவும் கொண்டு ப்ரஜா ஸ்ருஷ்டிக்காக பகவானை தியானித்தார்கள்‌ என்று இதன்‌ பொருள்‌. அப்படி அவர்‌கள்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ பகவந் நியமனமே என்று நாம்‌ ஊஹிக்க வேண்டியிருக்கிறது-இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி “பஹுஸ்யாம்‌ ப்ரஜாயேய”[நான்‌ பலவாக ஆகக் கடவேன்‌.] என்ற ஸங்கல்பத்துடன்‌ நிமித்தோபாதான காரணமான நாராயணனால்‌ செய்யப்படும்‌ ஸமஷ்டி ஸ்ருஷ்டி யல்ல. இது வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌ ப்ரஜா ஸ்ருஷ்டியே. இம் மாதிரியான சக்தி நித்யர்களுக்கு உண்டென்பதற்குப்‌ பல ஆதாரங்களிருக்கின்‌றன. விஷ்வக்ஸேனருடைய மந்த்ரத்தில்‌ “விஸ்வ ஸ்ருஜே ” | உலகத்தை ஸ்ருஷ்டிப்பவருக்கு]’ என்‌று சொல்லப்பட்‌டிருக்கிறது. நாரதீயமென்று ப்ரஸித்தமான ஹரி பக்தி ஸுதோதயத்‌தில்‌ ஐந்தாவது அத்யாயத்தில்‌’தே ஹி குர்யுர்‌ யதீச்சந்தி ஐகத் ஸர்க்க லயெள ஸ்வயம்‌”” [நித்ய ஸூரிகள்‌ விரும்பினார்களாகில்‌ ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைத்‌ தாமே செய்வார்கள்‌.] என்று சொல்லப்பட்டிருக்‌ கிறது. ஆளவந்தார்‌ “த்வயா நிஸ்ருஷ்டாத்மப,ரேண”’| உன்னால்‌ வைக்கப்‌பட்ட உபய விபூதி நிர்வாஹ பாரத்தை யுடைய (விஷ்வக்ஸேனரால்‌)]
என்று பகவானை ஸ்தோத்ரம்‌ செய்திருக்கிறார்‌. ஸ்ரீராமாநுஜர்‌,
ஸ்வ ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஐகஜ் ஜென்ம ஸ்திதி த்‌வம்ஸா திகே
ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்‌ தாத்மைஸ்வர்யம்‌”[தன்னுடைய ஸங்கல்பத்தால்‌ கொடுக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை யுடைய ஸ்ரீவிஷ்வக்ஸேனரிடம்‌ – வைக்கப்பட்ட தன்‌னுடைய எல்லா ஐஸ்வர்யங்களையும்‌ உடையவனை] என்று ஸ்ரீவைகுண்ட கத்யத்தில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.-பிரமனாகிற ஜீவனுக்கு இச் சக்தி யிருக்கும் போது அவரைக் காட்டிலும்‌ பல்லாயிரம்‌ மடங்கு பெரியவர்களான நித்யர்களுக்கு இச் சக்தி யிருப்பது அதிசயமல்ல. இந்த யாகத்தினால்‌ பிரமனுக்கு ஸ்ருஷ்டி செய்யும்‌ சக்தி
கிடைக்கிறதென்றும்‌, அந்தப் பிரமனை நிமித்த மாத்ரமாகக் கொண்டு அவர்‌ மூலமாக நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி செய்விக்கிறார்களென்றும்‌ ஏற்படுகிறது. முத்கலோபனிஷத்தில்‌ இதன்‌ பொருள்‌ வேறுவகையாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ ஸம்ருத்‌த,காயஸ்‌ ஸந் ஸ்ருஷ்டி கர்ம ந ஜஜ்ஞிவாந்‌,ஸ: அநிருத்‌த,
நாராயண: தஸ்மை ஸ்ருஷ்டிம்‌ உபாதி;சத்‌:-*ப்‌ரஹ்மந்‌ தவ இந்த்‌ரியாணி
யாஜகாநி த்‌,யாத்வா கோச பூ,தம்‌ த்‌ருட க்‌ரந்திரம்‌ கலேவரம்‌ ஹவிர்‌ த்‌யாத்வாமாம்‌ ஹவிர் புஐம்‌ த்‌யாத்வா வஸந்த காலம்‌ ஆஜ்யம்‌ த்‌யாத்வா க்‌ரீஷ்மம்‌ இத்‌ஃமம்‌ த்‌,யாத்வா சரத்‌,ருதும்‌ ரஸம்‌ த்‌,யாத்வா ஏவம்‌ அக்‌;கெள ஹுத்வா அங்கஃ ஸ்பர்சாத்‌ கலேவர: வஜ்ரம்‌ ஹீஷ்யதே, தத: ஸ்வ கார்யாந் ஸர்வ ப்ராணி ஜீவாந்‌ ஸ்ருஷ்ட்வா பச்வாத்‌யா: ப்ரா துர்ப,விஷ்‌பந்தி, தத:
ஸ்தாவர ஜங்க மாத்மகம்‌ ஜகத்‌ ப,விஷ்‌பதி””
[பெரிய தேகத்தை உடையவரான அப் பிரமன்‌ ஸ்ருஷ்டியை அறியவில்லை. அந்த அநிருத்த நாராயணன்‌ அவருக்கு ஸ்ருஷ்டியை உபதேசித்தார்‌:– *பிரமனே! உன்னுடைய இந்திரியங்களை யாகம்‌ செய்பவர்களாகவும்‌, சரீரத்தை ஹவிஸ்ஸாகவும்‌, என்னை அந்த
ஹவிஸ்ஸை உண்பவனாகவும்‌, வஸந்த காலத்தை நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருதுவை ஸமித்தாகவும்‌, சரத் ருதுவை(ஹோமம்‌ செய்யப்படும்‌)ஷட்ரஸமாகவும்‌ தியானித்து, இம் மாதிரியாக அக்னியில்‌ ஹோமம்‌ செய்து, அதன்‌ ஸ்பர்சத்தினால்‌ (உன்னுடைய) சரீரம்‌ வஜ்ரம் போல்‌(ஸ்ருஷ்டி செய்ய ஸமர்த்தமானதாக) ஆகி விடும்‌. பிறகு தங்களிடமிருந்து உண்டாகும்‌ ஸா்வ ப்ராணிகளையும்‌ உண்டாக்கிக் கொண்டு பசு முதலியவை. உண்டாகப் போகின்றன. அதன்‌ பிறகு ஸ்தாவர ஜங்கமங்களடங்கிய ஜகத்‌ உண்டாகும்‌’”]=இதிலிருந்து பிரமன்‌ ஸ்ருஷ்டி செய்ய ஞானமும்‌, சக்தியுமில்லாமல்‌ திகைத்ததாகவும்‌
பகவான்‌ ஸ்ருஷ்டி செய்ய வழியை உபதேசித்ததாகவும்‌ அறிகிறோம்‌.
“*மஹாதே,வஸ்‌ ஸர்வமேதே, மஹாத்மா ஹுத்வாத்மாநம்‌ தேவதேவோ
பபூவ” [மஹாத்மாவான மஹா தேவர்‌ (சிவன்‌) ஸா்‌வமேத யாகத்தில்‌தன்னை ஹோமம்‌ செய்து தேவர்களுக்கெல்லாம்‌ தேவரானார்‌.]என்பது போல்‌ பிரமனும்‌ பகவானைக் குறித்து ஆத்ம ஸமர்ப்பணமாகிற யாகத்‌தைச்‌ செய்து ஸ்ருஷ்டி சக்தியை அடைந்தார்‌ என்று ஏற்படுகிறது.

————

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.
இந்த யஜ்ஞத்துக்கு ஏழு வஸ்துக்கள்‌ பரிதிகளாக ஆயின. இருபத்‌தொரு வஸ்துக்கள்‌ ஸமித்துக்களாகச்‌ செய்யப்பட்டன. யஜ்ஞத்தைச்‌ செய்யும்‌ தேவர்கள்‌ நான்முகனாகிற. புருஷ (ஹோமம்‌ செய்யப்‌ படும்‌) பசுவாகக்‌ கட்டினார்கள்‌. யாகம்‌ செய்யும்‌ போது அக்னிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளிலும்‌, உத்தர வேதிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளலும்‌ ஆறுதண்டங்‌கள்‌ (பலாசம்‌ முதலிய மரங்களின்‌ கொம்புகள்‌) வைக்கப்படுகின்றன. கிழக்கு திக்கில்‌ ஸூர்யனைச்‌ சேர்த்து ஏழு பரிதிகளாகக்‌ கணக்கிடப்‌படுகின்றன. இந்த ஸ்ருஷ்டி யஜ்ஞத்திலும்‌ ஏழு பரிதிகள்‌ ஏற்பட்டன என்று சொல்லப்படுகிறது. அவையாவன:.ப்ருதிவீ, ஜலம்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனப்படும்‌ ஐந்து பூதங்களும்‌, அஹங்காரமும்‌ மஹானும்‌. (த்ரிஸ்‌…க்ருதா🙂 இங்கு இருபத்தொரு ஸமித்துக்கள்‌
அக்னியில்‌ ஹோமம்‌. செய்வதற்காகக்‌ கல்பிக்கப்பட்டன. அவையாவன–ப்ருதிவீ முதலிய ஐந்து பூதங்கள்‌; இவைகளுக்கு முறையே காரணமான கந்த தன்மாத்ரை, ரஸ தன்மாத்ரை, ரூப தன்மாத்ரை, ஸ்பர்ஸ தன்மாத்ரை, சப்த தன்மாத்ரை எனப்படும்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌; கண்‌, காது, நாக்கு, மூக்கு, தோல்‌ எனப்படும்‌ ஐந்து ஞானேந்‌திரியங்கள்‌. வாய்‌, கால்‌, கை, ஆண்‌ பெண்‌ குறிகள்‌, ஆஸனவாய்‌ எனப்படும்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌; மனஸ்‌. ஆக இந்த இருபத்‌தொரு தத்வங்களும்‌ ஸமித்துக்களாகக்‌ கல்பிக்கப்பட்டன. ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதற்கு இவைகள்‌ உபகரணங்களாகையால்‌ ஸ்ருஷ்டி யஜ்ஞத்திற்கு ஸாம க்ரிகளாகச்‌. சொல்லப்படுகின்றன. (தேவா… பசும்‌) “இப்படி யஜ்ஞம்‌ செய்பவர்களான நித்ய ஸூரிகள்‌ யஜ்ஞத்‌தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவான பிரமனை ப்ரக்ருதியாகியயூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌. அடுத்த மந்தர த்தில்‌ “படர்ஹிஷி :பஜ்ஞம்‌ ப்ரெளக்ஷந்‌” [மூல ப்ரக்ருதியிலுள்ள பிர மனை ப்ரோக்ஷித்தார்கள்‌ ] என்று வருவதால்‌ இங்கு மூல ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌ என்றே கொள்ள வேண்டும்‌.

————

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-
[முதலில்‌ உண்டானவனும்‌ யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌. செய்யப் படுபவனும்‌,மூல ப்ரக்ருதியில்‌ உட்ப்பட்டவனுமான பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. ஸாத்யர்களென்று சொல்லப்படும்‌ நித்யஸூரிகளும்‌, ரிஷிகளும்‌ (முக்தர்களும்‌) அப்பசுவைக் கொண்டு யஜ்ஞம்‌ செய்‌தனர்‌.] (தம்‌ யஜ்ஞம்‌) யஜ்ஞநத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படுபவனான அப்‌
பிரமனை. (பர்ஹிஷி) ‘பர்ஹி:‘ என்னும்‌ பெயரை யுடைய மூல ப்ரக்ருதியில்‌ முன் சொன்னபடி கட்டி. (ப்ரெளக்ஷந்‌) ப்ரோக்ஷணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ செய்தார்கள்‌. (புருஷம்‌ ஜாதம்‌ அக்ரத:) முன்னால்‌ பிறந்தவனான அந்தப்‌ பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. “ப்‌, ரஹ்மா: தேஃவாநாம்‌ ப்ரதமஸ்‌ ஸம்பஃபூ,வ”” [பிரமன்‌ தேவர்களுள்‌ முதலில்‌ உண்டானான்‌] என்று முண்டக உபனிஷத்தில்‌ சொல் லியிருக்‌கிறபடியால்‌ இங்கு சொல்லப்படும்‌ ‘புருஷன்‌’ பிரமனே என்று நிச்ச யிக்கப்படுகிறது. (தேந அயஜந்த) அப் பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு யாகம்‌ செய்தார்கள்‌. ஒரு த்ரவ்யத்தை ஓரு தேவதையை உத்தேசித்‌துக்‌ கொடுப்பது யாகமெனப்படுகிறது. இங்கு நான்முகனாகிய
ஹவிஸ்ஸை அநிருத்த நாராயணனகிய அக்நியில்‌ ஹோமம் செய்வதாகிய யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌ என்று தாத்பர்யம்‌. எவர்‌ இம்‌ மாதிரி யாகம்‌ செய்தார்களெனில்‌: (ஸாத்யா தேவா;) ஸாத்யர்களென்று ப்ரஸித்தரான நித்யஸூரிகளே இப்படி யாகம்‌ செய்தவர்‌
என்று சொல்லப்படுகிறது. இப்புருஷஸூக்தத்தின்‌ பூர்வானுவாகத்தில்‌ கடைசி மந்திரத்தில்‌ “யத்ர. பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்திதேஃவா:”” [எந்தப்‌ பரமபதத்தில்‌ பழைமையானவர்களும்‌ ஸாத்யர்கள்‌என்று சொல்லப்படுபவர்களுமான தேவர்கள்‌ இருக்கிறார்களோ… ]என்று சொல்லப்பட்டதால்‌ இங்கு சொல்லப்படும்‌ தேவர்கள்‌ பிறப்‌பற்றவர்களான நித்ய ஸூரிகளே என்று நிஸ் ஸந்தேஹமாக நிர்ணயிக்கப்படுகிறது. (ருஷயச்சயே) முக்தர்களும்‌ இந்த யஜ்ஞத்தில்‌ கலந்து கொண்டார்கள்‌ என்று சொல்லப்படுகிறது. பிரமனுக்கு ஸ்ருஷ்டி சக்தி கிடைத்த பின்பு ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களான அத்ரி, பிருகு, வஸிஷ்டர்‌ முதலிய ரிஷிகள்‌ இங்கு சொல்லப்படும்‌ ரிஷிகளாக ஆக முடியாது. ஆகையால்‌ முக்தர்களே இங்கு சொல்லப்படுபவர்‌கள்‌. புஷோத்தமனை த்யானம்‌ பண்ணுவதையே தங்களுக்கு உண்‌ணும்‌ சோறும்‌, பருகும்‌ நீரும்‌, தின்னும்‌ வெற்றிலையுமாகக்‌ கொண்‌டிருக்கும்‌ முக்தர்களை ரிஷிகள்‌ என்று சொல்லத் தட்டில்லை.

———–

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-
[ எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து, தயிருடன்‌ கூடிய நெய்‌ (ஜகத் காரண பூதமான வீர்யம்‌) உண்டாயிற்று. அந்த நான்முகன்‌ வாயு மார்க்கத்தில்‌ ஸஞ்சரிக்கும்‌ பக்ஷி களையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ ம்ருகங்களையும்‌, கிராமத்திலிருக்கிற
மிருகங்களையும்‌ படைத்தனன்‌.] “தஸ்மாதி,தி ச மந்த்ரேண ஜகத் ஸ்ருஷ்டிஸ்‌ ஸமீரிதா”'[*தஸ்மாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஜகத் ஸ்ருஷ்டியானது சொல்‌லப்பட்டது.|] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப்பட்டது. “ச’காரத்தினால்‌ இது முதல்‌ ஏழு மந்த்ரங்களில்‌ ஜகத் ஸ்ருஷ்டி சொல்‌லப் படுகிறதென்று அறியப்படுகிறது. (ஸர்வஹுத: தஸ்மாத் யஜ்‌ஞாத்‌) தன்னை யுள்ளிட்ட எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்விக்கப்‌பட்ட அப் பிரமனிடமிருந்து. நித்ய ஸூரிகளால்‌ பகவானிடம்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ செய்விக்கப்பட்ட அந்த நான்முகனிடமிருந்து.(ப்ருஷதாஜ்யம்‌ ஸ்ம்ப்‌ருதம்‌) தயிருடன்‌ கூடிய நெய்‌ உண்டாயிற்று.-இங்கு ‘ப்ருஷதாஜ்யம்‌’ என்று ஜகத்‌ ஸ்ருஷ்டிக்குக்‌ காரணமான
வீர்யம்‌ சொல்லப்படுகிறது, (பரூம்ஸ்தாந்‌…) வாயு ஸஞ்சரிக்கும்‌படியான ஆகாசத்தில்‌ பறக்கும்‌ பக்ஷிகளையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ புலி, கரடி முதலிய ப்ராணிகளையும்‌, கிராமங்களில்‌ திரியும்‌ பூனை முதலிய ப்ராணிகளையும்‌ அந்த நான்முகன்‌ ஸ்ருஷ்டித்தார்‌.

————

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-
[எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து ருக் வேதங்களும்‌, ஸாம வேதங்களும்‌ உண்டாயின. அந்த நான்முகனிடமிருந்து சந்தஸ்ஸுக்கள்‌ உண்டாயின; யஜுர் வேதமும்‌ அவனிடமிருந்து உண்டாயிற்று.] ்‌
பிரமனுடமிருந்து ருக் யஜுஸ் ஸாம வேதங்களும்‌, க௱யத்ரி முதலிய சந்தஸ்ஸுக்களும்‌ உண்டாயின வென்று சொல்லப்படுகிறது.
யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ச்ச ப்‌ரஹிணோதி தஸ்மை”[எந்தப்‌ பரமாத்மாவானவர்‌ ஸ்ருஷ்டி காலத்தில்‌ பிரமனைப்‌ படைத்துஅவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறாரோ…] என்று சொல்லப்‌ பட்டிருக்கிறபடியால்‌ பரம புருஷனிடமிருந்து உபதேதசம் பெற்று வேதங்களை வேதன்‌ (பிரமன்‌) வெளிப்படுத்தினா்‌ என்றே கொள்ள வேண்டும்‌. “தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூ,தஸ்ய நிச்வஸிதம்‌ ஏதத்‌, ருக்‌, வேதோ யஜுர்வேதஸ்‌ ஸாமவேதே…”” (ருக்‌ யஜுஸ்‌ ஸாமம்‌ முதலிய வேதங்களெல்லாம்‌ பரமாத்மாவினுடைய மூச்சுக் காற்றுகள்‌.] என்று மஹா புருஷனுடைய மூச்சுக் காற்றாகச்‌ சொல்லப்பட்ட அபெளருஷேயமான வேதங்களைப்‌ பிரமன்‌ பிரகாசப் படுத்தினான்‌ என்று ஏற்படுகிறது.

———–

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:--11-
[அந்த நான்முகனிடமிருந்து குதிரைகளும்‌, ஒரு பக்கத்தில்‌ பற்களையுடைய எருமை முதலிய ப்ராணிகளும்‌. இரண்டு பக்கத்தில்‌ பற்களை யுடைய கழுதை முதலியவைகளும்‌ உண்டாயின.-அவரிடமிருந்து பசுக்களும்‌ உண்டாயீன.] (காவோ ஹ…) ஒரு பக்கத்தில்‌ பற்களை யுடைய ம்ருகங்களில்‌ பசுக்களும்‌ அடங்கின போதிலும்‌ அவைகளின்‌ மேன்மையை முன்‌னிட்டு அவை தனியாகச்‌ சொல்லப்படுகின்றன என்று விஷ்ணு
சித்தாசாரியர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌. புருஷோத்தமனுடைய ‘ ஆராதனமாகிய யஜ்ஞத்திற்கு உபயோகப்படும்‌ பால்‌, தயிர்‌, நெப்‌ முதலியவை பசுக்களிடமிருந் தல்லவோ கிடைக்கிறது.

—————

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே.[பிரமனாகிய புருஷனைப்‌ (பசுவாகச்‌) செய்த போது, எவ்வளவு விதமாகக்‌ கல்பித்தார்கள்‌? இந்த ப்ரஹ்மாவினுடைய முகம்‌ எதுவாக ஆயிற்று? கைகள்‌ எவர்களாக ஆயின?துடைகளும்‌ திருவடிகளும்‌
எவர்களாகச்‌ சொல்லப்படுகின்‌றன?] யஜ்ஞத்தைச்‌ செய்பவர்களான ப்ராஹ்மணர்‌ முதலியவர்களின்‌ ஸ்ருஷ்டியை இம் மந்த்ரமும்‌ அடுத்த மந்த்ரமும்‌ சொல்லுகின்‌றன. இந்த ருக்‌ கேள்வியாகவும்‌ அடுத்த ருக்‌- பதிலாகவும்‌ இருக்கின்றன. நித்ய ஸூரிகள்‌ பிரமளைப்‌ பசுவாகக்‌ கல்பித்த போது அவருடைய அவயவங்கள்‌ எத்தனை விதமாகக்‌ கல்பிக்கப்பட்டன வென்றும்‌ எத்‌ தெந்த அவயவங்களினின்றும்‌ எந்தெந்தப்‌ பதார்த்தங்கள்‌ படைக்கப்‌பட்டன வென்றும்‌ கேட்கப் படுகிறது. விசேஷமாக முகம்‌, கைகள்‌, துடைகள்‌, பாதங்கள்‌ இவைகளிலிருந்து எவர்‌ உண்டானார்கள்‌ என்றும்‌ கேட்கப் படுகிறது.

————

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-ப்ராஹ்மணான்‌ இவருடைய முகமானான்‌. கைகள்‌ க்ஷத்ரியனாகச்‌ செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள்‌ வைச்யனாக ஆயின. திருவடிகளிலிருந்து சூத்ரன்‌’ உண்டானான்‌. முகம்‌ ப்ராஹ்மணனாக ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. பாதங்களிலிருந்து சூத்ரன்‌ உண்டானான்‌” என்று கடைசியில்‌ சொல்லப்படுகிறபடியால்‌ இங்கும்‌ முகத்திலிருந்து ப்ராஹ்மணன்‌ உண்டானான்‌ என்றே தாத்பர்யம்‌. ப்ராஹ்மணன்‌ அதிகமான ஞானத்‌தை உடையவனாதலால்‌ ஞானேந்த்ரியங்க ளெல்லாவற்றையும்‌ உடையதான முகத்தினின்றும்‌ அவனைப்‌ படைத்‌ தார் . (பாஹூ…க்ருத:) கைகளிலிருந்து க்ஷத்ரியன்‌ உண்டானான்‌.-யுத்தம்‌ செய்வதைத்‌ தொழிலாக உடைய க்ஷத்ரியனுக்குத்‌ தோள்‌ வலிமையும்‌ கை வன்மையும்‌ அவச்யமாதலால்‌ -ப்ரஹ்ம தேவன்‌ அவனைத்‌ தன்‌ கைகளிலிருந்து ஸ்ருஷ்டித்தார்‌. -(ஊரூ…வைச்ய) உழுதலையும்‌ வியாபாரத்தையும்‌ தொழிலாக வுடைய வைச்யனுக்குத்‌ துடை பலம்‌ முக்யமாதலால்‌ நான்முகன்‌ அவளைத்‌ தன்‌ துடைகளிலிருந்து படைத்தார்‌.-(பத்ப்யாம்‌.. ) பாதங்களினின்றும்‌ நான்காவது வர்ணத்தைச்‌ சேர்ந்த சூத்ரன்‌ உண்டானான்‌. முதல்‌ மூன்று வர்‌ணத்தவர்களுடைய ஏவல்களைச்‌ செய்வதே ஸ்வ தர்மமாக வுடைய சூத்ரனுக்குக்‌ கால் வன்மை அவச்யமாதலால்‌ பிர்மன்‌ தன் கால்களிலிருந்து அவனைப்‌ படைத்தார்‌. இதிஹாஸ புராணங்களில்‌ பலவிடங்களில்‌ நாராயணனுடைய முகம்‌, கைகள்‌, துடை, திருவடி முதலியவைகளிலிருந்து நான்கு வர்ணத்தவர்களும்‌ உண்டானதாகச்‌ சொல்லப்பட்டிருக்க – இங்கு நான்முகனின்‌ அவயவங்களிலிருந்து அவர்கள்‌ உண்டானதாகச்‌ சொல்லுவது எப்படிப்‌ பொருந்தும்‌? என்ற ஸந்தேஹம்‌ ஏற்படுகிறது.-பிரமனை சரீரமாகக் கொண்ட புருஷோத்தமனே இப்படிப்‌ படைப்ப தாலும்‌, நான்முகனுடைய அவயவங்கள்‌ நாராயுணனுடைய அவ யவங்களே யாகையாலும்‌ இதில்‌ ஒரு’ விரோதமுமில்லை.-இந்தப்‌ புருஷ ஸூக்தம்‌ முழுவதும்‌, தைத்திரீய ஆரண்யகத்தில் மூன்றாவது ப்ரச்நத்தில்‌ படிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ நான்கு ஜாதிகளும்‌ ஸ்ருஷ்டி காலத்திலேயே தனித் தனியாகப்‌ படைக்கப்பட்‌டனவென்று வேதத்திலிருந்தே அறிகிறோம்‌. நவீன காலத்தில்‌ சிலர்‌ வேதங்களில்‌ ஜாதி சொல்லப் படவில்லை யென்றும்‌,. புராணாங்களிலேயே ஜாதிப் பிரிவினை சொல்லப் பட்டிருக்கிறதென்றும்‌ கட்டுரைகள்‌ எழுதுவது இதனால்‌ நிராகரிக்கப்பட்ட.து. கீதையிலும்‌ பகவான்‌, “சாதுர் வர்ண்யம்‌ மயா ஸ்ருஷ்டம்‌ குண கர்ம விபாக,ச:’ [குணம்‌, தொழில்‌ முதலியவைகளில்‌ பேதங்களுடன்‌ கூடிய நான்கு வர்ணங்களும்‌ என்னால்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்டன.] என்று அருளிச்‌ செய்திருக்கிறார்‌.-ஜன ஸமூஹத்தினுடைய முக ஸ்தானமாயிருக்கும்‌ ப்ராஹ்மண ஜாதி பிரமனுடைய முகத்தினின்றும்‌ உண்டாயிற்று. முகத்தில்‌ ஞானேந்த்ரியங்களான கண்‌, மூக்கு, நாக்கு, செவி, மெய்‌ (தோல்‌) என்னும்‌ ஐந்தும்‌ இருக்கின்றன. ‘ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயநம்‌ ப்ரதாநம்‌” என்று எல்லா இந்த்ரியங்களிலும்‌ முக்கியமானதாகச்‌ சொல்‌லப்படும்‌ கண்ணினாலேயே படைக்கப்பட்ட எல்லாப்‌ பொருள்களையும்‌ பார்க்கிறோம்‌.-கண்ணால்‌ பார்க்கப்பட்டதே ப்ரத்யக்ஷ ப்ரமாணமாகிறது, படைக்கப்பட்ட பொருள்‌களைப்‌ பார்ப்பதிலிருந்து அவைகளை நியமிக்கும்‌ ஜீவனையும்‌, படைப்பவனான ஈஸ்வரளையும்‌ அறி கிறோம்‌. அம் மாதிரியே ப்ராஹ்மணார்களும்‌ திர்க்க தர்சிகளாகவும்‌,ஜீவாத்ம பரமாத்ம தத்வ ஜ்ஞானிகளாகவும உலகத்திற்குக்‌ கண்‌
போன்றும்‌ விளங்குகிருர்கள்‌. கண்ணிற்கு அடுத்த படியான மேன்மை வாய்ந்தது காது. சப்த ராசியான வேதமும்‌ கர்ண பரம்பரையாகவே வந்தது. ‘பஹுநா ஸ்ருதேந ” என்கிறபடி பலரிடம்‌ கேட்டுப்‌ பரமாத்ம ஜ்ஞானத்தை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது இது.-ரஸனேந்திரியம்‌ ருசிப்பதாகிற ஞானத்தை அறிகிறது. ஞானத்திற்கு ஆதாரமான தேஹத்தைப்‌ போஷிப்பதற்கும்‌ ரஸனேந்திரியம்‌ அவச்‌ யம்‌.. “ஸ்வ தேஹம்‌ ஆத்ஃயம்‌ க,லு தர்ம ஸாதநம்‌”” [ தன்னுடைய தேஹ மல்லவோ தர்மத்திற்கு முதன்மையான ஸாதனம்‌. |என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அச்யுதனுக்கு அளிக்கப்பட்ட ப்ரஸாதங்களை ருசிப்‌பதற்கே ஏற்பட்டது நாக்கு. க்ராணேந்திரியம்‌ (மூக்கு) புருஷோத்தமனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட புஷ்பம்‌, சந்தனம்‌ முதலியவைகளை முகர்வதற்கு ஸாதனமானது. ஸ்வாஸம்‌ விடுவதற்கும்‌ மூக்கு உபயோகமாயிருக்கிறது. தொடுவதினால்‌ ஏற்படும்‌ உணர்ச்சியை அறிவிப்பது த்வக்‌ (தோல்‌) என்னும்‌ இந்த்ரியம்‌,-““உடுத்துக் களைந்த நின்‌ பீதக வாடை உடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக்‌ களைந்தன சூடும்‌ இத் தொண்டர்களோம்‌’என்பது போல்‌ தம்முடைய ஞானேந்த்ரியங்களையெல்லாம்‌ புரு ஷோத்தமன்‌ விஷயத்தில்‌ ஈடுபடுத்துபவர் களாகையால்‌ ப்ராஹ்‌மணர்கள்‌ முகத்தினின்றும்‌ உண்டானார்கள்‌. கர்மேந்த்ரியங்களில்‌ ப்ரதானமான வாயும்‌ முகத்திலிருக்கிறது. இது ப்ராம்ஹணர்களின்‌ வாக்கு வன்மையையும்‌ சாபானுக்ரஹ ஸாமர்த்யத்தையும்‌ காட்டுகிறது. வாயினால்‌ “கடல்‌ சூழ்ந்த மண்ணுலகம்‌ வாழ”’ என்றும்‌, “ஸர்வே ஜநா: ஸுகிநோ ப,வந்து’” என்றும்‌ அச்யுதனால்‌ படைக்கப்பட்ட அவனியிலுள்ளோர்‌ எல்லோரும்‌ ஸுகமாயிருக்க வேண்டுமென்று வாழ்த்துவது ப்ராஹ்மணானுடைய தொழில்‌ என்று உணர்த்தப்படுகிறது.-வேதாத்யயனத்திற்கும்‌ வேதத்தை ஓதுவிப்பதற்கும்‌ யஜ்ஞம்‌ முதலியவைகளைப்‌ பண்ணி வைப்பதற்கும்‌, வாய்‌ உபயோகப்படுவ தாகையால்‌ இவைகள்‌ அவனுடைய தொழில்கள்‌ என்றும்‌ தெரிவிக்‌ கப்படுகின்றன. முகம்‌ புத்தி (மூளை)யையும்‌ தேஜஸ்ஸையும்‌ உடைய தாதலால்‌ ப்ராஹ்மணான்‌ புத்திமானாகவும்‌, ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையவனாஃவும்‌ இருப்பான்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரஹ்ம ஜ்ஞானியாகையால்‌ ப்ராஹ்மணான்‌ எனப்படுகிறான்‌. ராஜாக்‌களுக்கு மந்தரியாகவும்‌ ஆசார்யனாகவும்‌ இருந்து புத்திமதியும்‌ உபதேசமும்‌ செய்பவன்‌ ப்ராஹ்மணன்‌. இவ்வளவு கார்யங்களையும்‌ செய்வதற்கேற்பட்ட ப்ராஹ்மணன்‌ பிரமனின்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. ப்ராஹ்மணர்களுடைய தேஹ குடும்ப ஸம்ரக்ஷணங்‌கள்‌ ராஜாக்களால்‌ நன்கு கவனிக்கப்பட்டு வந்ததால்‌ முன் காலத்தில்‌ அவர்கள்‌ தங்கள்‌ தொழிலை சரியாகச் செய்துவந்தார்கள்‌. ஆசார்‌யர்கள்‌ காலத்தில்‌, ராஜாங்கம்‌ பரதேசிகள்‌ கையில்‌ அகப்பட்ட போதிலும்‌, ப்ராஹ்மணார்கள்‌ உஞ்ச வ்ருத்தி செய்தாவது தங்கள்‌ தொழிலைச்‌ செய்து வந்தார்கள்‌. கவியின்‌ கோலாஹலத்தினாலும்‌, பலவித அஸெளகர்யங்களாலும்‌, இப்போது ப்ராஹ்மணார்கள்‌ தங்கள்‌ தொழிலை விட்டுப்‌ பல தொழில்களிலும்‌ புகும்படி தேரிட்டிருக்கிறது.-சில பாக்யவான்கள்‌ இக் காலத்திலும்‌ வைதிக மார்க்கத்திலிருந்துகொண்டு பணப் பேயாட்படாமல்‌ முறை தவராமல்‌ இருந்து கொண்டு வருகிறார்கள்‌-கர்மேந்த்ரியங்களுள்‌ வலிமை வாய்ந்ததான கையிலிருந்து தோளாண்மை யுடைய க்ஷத்ரியன்‌ பிறந்தான்‌. தேஹம்‌ கையினுடைய பலத்தினாலேயே ரக்ஷிக்கப்படுவது போல்‌ ஜன ஸமூஹமும்‌ க்ஷத்ரியனுடைய தோள்வலியினால்‌ ரஷிக்கப் படுகிறது. ராஜாக்களில்லாவிடில்‌உலகம்‌ அராஜமாகி அழிந்துவிடும்‌. அதனாலேயே அரசனுக்குத்‌ திருமாலின்‌ அம்சம்‌ உள்ளதாகக்‌ கூறப்படுகிறது.எல்லாரும்‌ உண்டு ஜிவிப்பதற்கு அவச்யமான உணவுப்‌ பொருள்களை உண்டாக்குவதையும்‌ பலருக்கு வினியோகிப்பதையும்‌ தொழிலாக வுடைய வைச்யன்‌ துடையிலிருந்து உண்டாக்கப்பட்‌டான்‌. வைஸ்யனுடைய தாளாண்மையினாலேயே வேளாண்மை நடக்கிறதன்றோ. எல்லாருடைய தேஹத்தையும்‌ போஷிப்பது வைஸ்யனுடைய தொழில்‌. இம் மூவர்ணத்தார்க்கும்‌ வேண்டிய உபகரணங்களை ஸம்‌பாதித்துக்‌ கொடுப்பதற்காக ஆடி ஓடித்‌ திரிந்து நடந்து கார்யம்‌ செய்பவனாகையால்‌ சூத்ரன்‌ காலிலிருந்து படைக்கப்பட்டான்‌. கால்‌கள்‌ சரீரத்தைத்‌ தாங்குவது போல்‌ அவன்‌ இம் மூவர்ணத்தாரையும்‌ தாங்குகிறான்‌. காலிலிருத்து உண்டானதால்‌ ஒருவிதமான தாழ்வும்‌ கிடையாது. எம்பெருமானுடைய திருவடிகளே எல்லோருக்கும்‌ வணங்கும்‌ துறையாகும்‌. மற்ற வர்ணத்தார்க்குள்ள நியம நிஷ்டை கள்‌, ஆசார வ்யவஹாரங்கள்‌ முதலிய கஷ்டங்கள்‌ இவர்களுக்குக்‌ கிடையாது. சொன்னதைச்‌ செய்வதில்‌ பாபமும்‌ கிடையாது; பொறுப்‌பும்‌ கிடையாது. அவர்களுக்கு நற்கதியடைவது மிகவும்‌ ஸுலபமாகும்‌, பிறப்பினலேயே அவர்களுக்கு நைச்யமும்‌, அஹங்கார மமகாரமில்லாமையும்‌ ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யர்களும்‌ உயர்ந்த வர்ணத்தார்க்குப்‌ பிறப்பினாலேற்படும்‌ அஹங்கார மமகாரங்கள்‌ அழிய வேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்கள்‌. “தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌” என்று அவர்களிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்வதிலும்‌, அவர்களுக்கு ஞானத்தைக்‌ கொடுப்பதிலும்‌ தடையில்லை என்று தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ அருளி யிருக்கிறார்‌. போதனம்‌, ரக்ஷணம்‌, போஷணம்‌, ஸேவகம்‌ என்பவை முறையே நான்கு வர்ணத்தாருக்கும்‌ தொழிலாகும்‌. ஓவ்‌வொருவரும்‌ மற்ற வர்ணத்தார்க்காக உழைக்கிறார்கள்‌. நால்வரும்‌ பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள்‌ ஏற்றத் தாழ்வு கிடையாது. அவர்கள்‌ ஓருவர்க்கொருவர்‌ சண்டையிடுவது சரீரத்தின்‌ அவயவங்கள்‌ ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை யொக்கும்‌, வயிறுடன்‌ மத்த அவயவங்கள்‌ சண்டையிட்ட கதை எல்லோரும் அறிந்ததே -நமது ஸநாதன வைதிக தர்மமாகிற மண்டபத்தைத்‌ தாங்கும்‌ தூண்கள்‌ ஐந்து. நடுத்தூண்‌ ஸ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்கள்‌ மூதலியவையும்‌ அவைகளில்‌ சொல்லப்பட்டிருக்கும்‌ தெய்வங்களின்‌ கோவில்களுமேயாகும்‌. ஜாதி, ஸ்த்ரீகள்‌, சொத்து, சுதந்திரம்‌ ஆகிய நான்கும்‌ மற்ற தூண்களாகும்‌. இவைகளைக்‌ காப்பாற்றுவதே அரசர்களின்‌ கடமை யென்று பாரதத்தில்‌ ராஜ தர்மத்தில்‌ பரக்கப்‌ பேசப் பட்டிருக்கிறது. ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ இவைகளைப் பற்றி ஏற்‌ பட்டிருக்கும்‌ சட்ட திட்டங்களை மாற்ற அரசனுக்காவது, அவனுடைய மந்த்ரிகளுக்காவது, ஜன ப்ரதிநிதி ஸபைக்காவது அதிகாரம்‌ கிடையாதென்பது ஸர்வ ஸித்தமாக ஏற்பட்டிருந்தது. இதை மாற்ற ப்ரயத்னம் செய்த வேன மஹாராஜன்‌ அடைந்த கதியை ஹரி வம்சம்‌ முதலியவைகளில்‌ நன்கு காணலாம்‌. இக்காலத்தில்‌ அந்த நியமத்திற்கு ஏட்டிக்குப்‌ போட்டியாக” மாற்ற முடியாதது ஓன்றும்‌ கிடையாது என்ற கொள்கையைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.-முன்பு நியமிக்கப்பட்டதெல்லாம்‌ பிசகென்று கொண்டு அவைகளுக்கு தேர்‌ மாறாக ஆக்க வேண்டுமென்று சட்டம்‌ செய்கிறார்கள்‌. கோயில்களேற்பட்ட தத்வத்திற்கு விரோதமாகச்‌ சட்டங்களேற்படுத்தி தெய்வ ஸாந்தநித்யத்தைச்‌ சிதைத்தது தேசமெங்குமறிந்ததே. பிறப்பையும்‌ புத்தியிருப்பதையுமே குற்றமாகக் கொண்டு உத்யோகங்களுக்கு உள்ளே விடாமலும்‌, பாடசாலைகளில்‌ படிக்கவிடாமலும்‌ ப்ராஹ்‌மணர்களை த்வேஷிப்பது எல்லோரும்‌ அறிந்ததே. ப்ராஹ்மணர்‌கள்‌ க்ருஷ்ணணையே கதியாகக்‌ கொண்டவர்கள்‌. க்ருஷ்ணனும்‌ ப்‌ராஹ்மணோ மம தே;வதா””[ப்ராஹ்மணன்‌ என்னுடைய தேவதை]என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ப்ராஹ்மண த்வேஷமானது தெய்வ த்வேஷத்திலேயே முடியுமென்று எல்லோரும்‌ பயந்துகொண்டிருந்தோம்‌. அம்மாதிரியே ப்ராஹ்மண த்வேஷத்தில்‌ ஆரம்பித்த ஒரு சாரார்‌ தெய்வ த்வேஷத்திற்குக்‌ கொடி கட்டிக் கொண்டு கதறுகிறார்கள்‌. ஜாதியென்பது அவரவர்‌ கர்மானுகுணமாக பகவந்‌ நியமனப்படி ஏற்பட்டது. சொத்து அவரவர்‌ பண்ணிய புண்யபாபத்தின்‌ பலனேயாகும்‌. :மேலைத் தவத்தளவே யாகுமாம்‌ தான்பெற்ற செல்வம்‌ குலத்தளவே யாகும்‌ குணம்‌’” என்றல்லவோ சொல்லப்பட்‌டிருக்கிறது. ஆங்கிலேயர்களும்‌ பணத்தினாலும்‌ அந்தஸ்தினாலும்‌ பேதம்‌ ஏற்படுத்தி யிருக்கிறார்கள்‌. சமதர்மக் கொள்கை பேசும்‌ ருஷ்ய தேசத்திலும்‌ அதிகாரப் பதவியினால்‌ வித்தியாசங்களிருக்கின்றன. அம்மாதிரியான . வித்தியாசங்கள்‌ இங்கு கிடையா. பேதமென்பது இயற்கையின்‌ சட்டமாகும்‌. அதை ஓழிப்பதென்பது மனிதனால்‌ முடியாத முயற்சியே. ஒரு விதமாக ஓழிக்கப் பார்த்தால்‌. மற்றொரு விதமாக முளைக்கும்‌. பழைய -பேதத்திற்குப்‌ பழகி யிருக்கிறோம்‌.
‘அபேதம்‌” என்பதினாலேற்படும்‌ புது பேதங்கள்‌ படு விஷத்தைக்‌ கக்குமே யொழிய வேறொரு குணமும்‌ காணக் கிடைக்காது. ஸ்த்ரீகள்‌ மனுஷ்ய வர்க்கத்திற்கே தாயாயிருக்கும்‌ தனிப் பெருமையுடையவர்கள்‌; அவர்கள்‌ அதற்காகவே பிறப்பிக்கப்பட்டவர்கள்‌. அதற்கனுகுணமாகவே அவர்களுடைய கல்வியோ, குணமோ, செயலோ இருக்க வேண்டும்‌. அவைகளை அழிக்க முயன்றால்‌ மானிட ஸமூஹமே
முறை கெட்டு நிலை கலங்கி அழிந்து விடும்‌. குடும்பமென்பது இடும்பையாய் விடும்‌, கிருஹமென்பது குட்டிச் சுவராய் விடும்‌. கற்பு நிலையென்பது அழிந்து, கல்யாணமென்பது ஓழிந்து உயிர்வாழ்வகுற்கோர்‌ நோக்கமுமில்லாமல்‌ உலகம்‌ சுடுகாடாய் விடும்‌, ஆண்‌ வார்சு க்ரமம்‌ மாறிப்‌ பெண்மலையாளமாகிவிடும்‌.-சொத்து விஷயத்தைப் பற்றிச்‌ சில உண்மைகள்‌ உரைக்க வேண்டி யிருக்கிறது.உழைப்பின்‌ கூலியில்‌ செலவழித்தது போக மிகுந்ததைச்‌ சேர்த்து வைத்ததே சொத்தாகும்‌. அதை அழிக்க முயற்சித்தார்களாகில்‌
உழைப்பதற்குத்‌ தூண்டுகோலே இல்லாமல்‌ போய்விடும்‌. எல்லோரும்‌ சோம்பேறிகளாகத்‌ திரிவார்கள்‌. சொத்தை அபஹரிக்கச்‌ சட்டம்‌ செய்வது பகல் கொள்ளைக்கு ஸமானமாகும்‌. ஏழைகளுக்கு என்னகதி? என்று நினைக்கலாம்‌. அவர்களுக்கு உழைக்க வேலையும்‌, உண்ண உணவும்‌, உடுக்க. ஆடையும்‌ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது முற்காலத்திலும்‌ ராஜ தர்மமாகச்‌ சொல்லப்பட்டிருக்‌கிறது. செய்வதற்கு. வழிகளும்‌ சொல்லப்பட்டிருக்கின்‌றன. சொத்து என்னும்‌ தத்வமழிந்தால்‌, கணவன்‌, மனைவி என்னும்‌ ஸம்பந்தமும்‌, தாய்‌, தகப்பன்‌, பின்ளை, பெண்‌ என்னும்‌ ஸம்பந்தமும்‌ அழிந்துவிடும்‌. குடும்பமென்பது உடும்பு பிடித்தவன்‌ கைபோலாகி விடும்‌.-இவைகளெல்லாம்‌. போனால்‌ சுதந்திரமும்‌ பெரும்பாலும்‌ தானாகவே போய்விடும்‌. பேச்சு சுதந்திரம்‌, கார்ய சுதந்திரம்‌, முன்னோர்‌ மொழிந்த முறைப்படி வாழும்‌ சுதந்திரம்‌, மத சுதந்திரம்‌ முதவியவைகளை இழப்போமாகில்‌ நாம்‌ நடை பிணமாகவே கருதப் படுவோம்‌.-உயிர்‌ வாழ்வதற்கு ஓர்‌ நோக்கமும பலனும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.-ஆகையினால்‌ சீர்திருத்தக்காரர்கள்‌ முன்‌ இருப்பதை மாற்றுவதற்கு முன்‌ பின்‌ வரும்‌ கெடுதல்களைப் பற்றி தீர்க்காலோசனை செய்ய வேண்டும்‌.

————-

சந்த்‌ரமா மநஸோ ஜாத:, சக்ஷாஸ்‌. ஸர்யோ அஜாயத
முகாதிந்த்‌ரச்‌ சாக்‌,நிச்ச, ப்ராணாத்‌, வாயுர ஜாயத–14-
[மனத்தில்‌ நின்றும்‌ சந்திரன்‌ ‘உண்டானான்‌. கண்ணிலிருந்து ஸூர்யன்‌ உண்டானான்‌. முகத்திலிருந்து இந்த்ரனும்‌, அக்னியும்‌ ஜனித்தார்கள்‌. ‘ ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌.]-இந்த மந்த்ரத்தில்‌ ஸர்வ லோகோபகாரகமான ஸ்ருஷ்டியைச்‌ சொல்லுகிறது. (சந்த்ரமா…ஜாத:) சந்திரன்‌ மனத்திலிருந்து உண்‌ டானான்‌. ஏன்‌ மனஸ்ஸிலிருந்து சந்திரன்‌ உண்டாக வேணும்‌? மற்ற அங்கங்களிலிருந்து ஏன்‌ உண்டாகக் கூடாது? பிரமனை சரீரமாகக்‌ கொண்ட பகவானுடைய மனஸ்ஸிற்கும்‌, சந்திரனுக்கும்‌ எவ்விதமான ஓற்றுமை இருக்கிறது? உலகிலிருப்பவர்களுடைய மனஸ்ஸிற்கு- ஸந்தோஷத்தைத்‌ தருபவனாதலால்‌ சந்திரன்‌ மனஸ்ஸிலிருந்து படைக்கப்பட்டான்‌. அவன்‌ உலகத்திலுள்ள உயிர்களுக்கும்‌, பயிர்‌களுக்கும்‌ குளிர்ச்சியையும்‌ ஸந்தோஷத்தையும்‌ உண்டாக்குபவன்‌-அவனுடைய கிரணங்களே பயிர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்‌திரனில்லா விடில்‌ உலகம்‌ காய்ந்து தீய்ந்து விடும்‌. கேசவனும்‌ குளிர்ந்த சுபமான மனத்தை யுடையவன்‌.-அப்படிப்பட்ட மனத்தினால்‌ எல்லோரும்‌ வாழ்வதற்கு ஸங்கல்பித்து, அத்வேஷத்தை உண்‌டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்த்து ஞானப் பயிரை விருத்தி செய்கிறான்‌.-மேலும்‌ சந்திரன்‌ மனத்திற்கு அதி தேவதையாகவும்‌ இருக்கிறான்‌.-இக் காரணங்களால்‌ சந்திரன்‌ புருஷோத்தமனுடைய மனத்திலிருந்து உண்டானான்‌. (சக்ஷோஸ்‌…)உலகத்திற்குக்‌ கண்ணாயிருப்பவனும்‌, வெளி யிருளை விரட்டுபவனுமான ஸுர்யன்‌ அஞ்ஞானமாகிய இருளைப் போக்குகிற, மண்ணுக்கும்‌ விண்ணுக்கும்‌ கண்ணாகிய கண்ணனுடைய கண்ணிலிருந்து உண்டானான்‌. உலகத்தைப்‌ பார்க்‌கும்படி செய்வது கண்‌. ஸுூர்யனும்‌ பார்ப்பதற்கு ஸாதனமாயிருக்‌கிறான்‌., ஸூர்யன்‌ கண்ணுக்கு அதி தேவதை. கண்ணின்‌ ரோகங்‌கள்‌ ஸூர்ய நமஸ்காரம்‌ செய்வதினால்‌ போக்கப்படுவதாகச்‌ சொல்‌லப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரம்‌ வேதத்திலும்‌ உரைக்கப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரத்திலும்‌ ‘த்‌,யேயஸ் ஸதா ஸவித்ரு மண்‌டல மத்‌,யவர்த்தீ நாராயண:”” என்று சொல்லப்பட்ட, தாமரைக் கண்ணனான நாராயணனே நமஸ்கரிக்கப்படுபவன்‌. ஸூர்யன்‌ தன்‌ கிரணங்‌களால்‌ பாஹ்யாந்தகாரத்தைப்‌ போக்கடித்து, ப்ராணிகளுக்கு உஷ்ணத்தைக் கொடுத்து ஜீவிக்கும்படி செய்கிறான்‌. கேசவனுடைய கண்ணிலிருந்து உண்டாகும்‌ கடாஷத்தினால்‌, ஜிவர்கள்‌ அஜ்ஞானம்‌ நசிக்கப் பெற்று ஞான மடைந்து மோக்ஷம்‌ பெறுகிறார்கள்‌. ஆதித்‌யன்‌ தேஜோ மயமானவன்‌. அச்யுதனும்‌ தேஜோ மயமான தாமரை போன்ற கண்ணை யுடையவன்‌. ”தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட,ரீகமேவ மக்ஷிணீ” [அந்தப்‌ பரமபுருஷனுக்கு ஸூர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்ற இரு கண்களிருக்கின்றன.] என்றல்லவோ பர ப்ரஹ்ம லக்ஷணம்‌ சொல்லப் பட்டிருக்கிறது. இக் காரணங்களால்‌ பரந் தாமனுடைய கண்களிலிருந்து பாஸ்கரன்‌ உண்டானான்‌.-(முகாத்‌…)முகம்‌ ஆதிபத்யத்தையும்‌ தேஜஸ்ஸையும்‌ காட்டுகிறது. ஆகையால்‌ தேவர்களுக்கு அதிபதியானவனும்‌, தேஜோவானுமாயிருக்கும்‌ இந்‌திரன்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. .-தேஜோ மயமான அக்னியும்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. “அக்‌நி முகா வை தேஃவதா:”” [தேவதைகள்‌ அக்னியை முகமாக உடையவர்கள்‌.] என்கிறபடி தேவர்களுக்கு முகமாயிருக்கும்‌ அக்னி முகத்திலிருந்து உண்டாவது நியாயமே. (ப்ராணாத்‌ வாயுரஜாயத) ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌. ப்ராணன்‌ ஒரு வாயு விசேஷமே. அதிலிருந்து வாயு உண்டாயிற்று.-எல்லோருக்கும்‌ ப்ராணனாயிருக்கும்‌ வாயு ப்ராணனிலிருந்து உண்‌டாவது பொருத்த முடையது. வாயுவில்லாவிடில்‌ ஜீவிக்க முடியாது.-அனுமான்‌ வஜ்ராயுதத்தினால்‌ அடிபட்டபோது வாயு ஸ்தம்பித்ததும்‌ உலகமெல்லாம்‌ திண்டாடினது எல்லோரும்‌ அறிந்ததே. இம்மாதிரியாக உலகத்திற்கு உபகாரகமான வஸ்துக்கள்‌ உண்டாக்கப்பட்டன.

———-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-
15-
[நாபியிலிருந்து ௮ந்‌தரிக்ஷம்‌ உண்டாயிற்று. தலையிலிருந்து ஸ்வர்க்கம்‌ உண்டாயிற்று. பாதங்களினின்றும்‌ பூமி உண்டாயிற்று. திக்குகள்‌ காதிலிருந்து உண்டாயின. அப்படியே லோகங்களை யெல்லாம்‌ பிரமன்‌ படைத்தான்‌.] இதில்‌ உலகங்களுடைய ஸ்ரூஷ்டி சொல்லப்படுகிறது) தேஹத்தின்‌ நடுவிலிருக்கும்‌ நாபியிலிருந்து பூமிக்கும்‌ மேலுலகங்களுக்கும்‌ நடுவிலிருக்கும்‌ அந்தரிக்ஷம்‌ உண்டாயிற்று.(சீர்ஷ்ணோ…) மேலேயிருக்கும்‌ தலையிலிருந்து மேலேழுலோகங்‌களும்‌ உண்டாயின. இங்கு “த்‌யெள:” என்னும் பதம்‌ மேலேழு உலகங்களையும்‌ உணர்த்துகிறது. (பத்ப்யாம்‌ பூமி🙂 பாதங்களி லிருந்து பூமி உண்டாயிற்று. திருவடிகளிலிருந்து: பிறந்ததா லன்றோ ‘பொருவில்‌ சீர்ப்பூமி” என்று ஆழ்வாரும்‌ புகழ்‌ந்திருக்கிறார்‌. தேஹத்தைத்‌ தாங்குவது திருவடி. எல்லோரையும்‌ தாங்குவதால்‌ தரணியென்று பெயர் பெற்றது பூமி. கேசவ நம்பியைக்‌ கால் பிடிக்‌கும்‌ பேற்றுக்குப் பிறந்தவள்‌ பூமி தேவி.“இடந்திருந்து நின்றனந்து கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌ தன்னுள்‌ கரக்கும்‌ உமிழும்‌ தடம்‌ பெரும்‌ தோளாரத்தழுவும்‌ பாரென்னும்‌ மால்‌ செய்கின்ற மால்‌ ஆர்‌ காண்பாரே”[கேழல்‌-வராஹம்‌. இடந்திடும்‌-கு த்தி எடுக்கும்‌. தன்னுள்‌ கரக்கும்‌- ‘தன்‌ வயிற்றினுள்ளே மறைத்து வைக்கும்‌. பார்‌-பூமி. மால்‌-திருமால்‌-அன்பு.] என்று நம்மாழ்வாரும்‌,“அரவாகிச்‌ சுமத்தியால்‌ அயிலெயிற்றின்‌ ஏந்துதியால்‌ ஒரு வாயின்‌ விழுங்குதியால்‌ ஓரடியால்‌ ஒளித்தியால்‌ திருவான நிலமகளை”?என்று கம்ப நாட்டாழ்வாரும்‌ அருளிச் செய்தபடி பகவானுடைய ஸர்வாவயவங்களாலும்‌, விசேஷமாகத்‌ திருவடியினாலும்‌ தீண்டப் பெற்ற வளன்றோ தரணி. இக் காரணங்களாலும்‌, மண்ணுலகில்‌ மாந்தர்கள்‌ உய்வதற்கு உபாயம்‌ நாராயணனுடைய திருவடிகளே என்று காட்டுவதற்கும்‌ பூமி திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டது. இங்கு பூமி கீழிருக்கும்‌ ஏழுலோகங்களையும்‌ காட்டும்‌. கீழேழுலோகங்களும்‌ திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டன என்று கொள்ள வேண்டும்‌-(திசச்‌ ச்ரோத்ராத்‌) காதுகளினின்றும்‌ திக்குகள்‌ படைக்கப்பட்டன. சப்தத்திற்கு ஆதாரமான திக்குகள்‌ சப்தத்தைக்‌ கேட்கும்‌ இந்த்ரியமான காதிலிருந்து படைக்கப்பட்டன. (தத…) அப்படியே இவ்‌ வண்டத்திலுள்ள மற்ற உலகங்களையும்‌ பரந்தாமனை அந்தர்யாமியாகக் கொண்ட பிரமன்‌ படைத்தான்‌.” அகல்பயந்‌ என்று பன்மை யாகச்‌ சொல்லியிருப்பது சாந்தஸம்‌ என்று கொள்ள வேண்டும்‌; அல்லது பிரமணை உபகரணமாகக் கொண்ட நித்ய ஸூரிகள் படைத்தனர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.

———–

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–
16-
[எல்லா சரீரங்களையும்‌ உண்டு பண்ணி, பெயர்களைக்‌ கொடுத்து அவைகளை உச்சரிததுக்‌ கொண்டிருப்பவரும்‌, ‘விகாரமற்றவரும்‌, ஸூர்யன் போன்‌ற வர்ணத்தை யுடையவரும்‌,ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவரும்‌, (எல்லா விதத்திலும்‌) பெரியவருமான இந்தப்‌ புருஷ, (வேத புருஷனாகிய) நான்‌ அறிகிறேன்‌.
வேத ஹமிதி மந்த்ராப்‌,யாம்‌ வைப,வம்‌ கதிதம்‌ ஹரே:” [“வேதாஹம்‌…” என்னும்‌ இரண்டு மந்த்ரங்களாலும்‌ ஹரியினுடைய வைபவம்‌ வெளியிடப்பட்டது.] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த மந்த்ரமும்‌, அடுத்த ருக்கும்‌, ஹரியின்‌ வைபவத்தைச்‌ சொல்லு
கின்றனவென்று உரைக்கப்பட்டது. வேத புருஷன்‌ மஹா புருஷனின்‌
மஹிமையை மகிழ்ந்துரைக்கும்‌ பாசுரங்களிவை. இந்த மந்திரத்தின்‌ முதலடி ஸ்ரீராமாயணத்தில்‌ **அஹம்வேத்‌மி மஹாத்மாநம்‌ ராமம்‌ ஸத்ய பராக்ரமம்‌” [நான்‌ உண்மையான பராக்ரமத்தை யுடையவனும்‌, மஹாத்மாவுமான ராமனை அறிவேன்‌.] என்ற விச்வாமித்ர வாக்யத்‌தினால்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டது என்‌று பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்‌. பரமகாருணிகரான பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்யானத்தை அனுசரித்து நாம்‌ இங்கு விவரிக்‌கிறோம்‌. ராமாயணத்தில்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டதால்‌ இந்த ஸ்ருதி ராமனாய்‌ அவதாரம் செய்த நாராயணனையே குறிக்கிறது என்‌பது தெளிவாகிறது. இந்த மந்த்ரத்தின்‌ முற்பாதி ஸ்வேதாஸ்வதரத்தி லும்‌ சிறிது வித்தியாசத்துடன்‌ படிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி, ஸ்வேதாஸ்வதரத்தில்‌ சொல்லப்படுபவனும்‌, இங்கு சொல்லப்படுபவனும்‌ ஸ்ரீமந்நாராயணனே என்று ஸித்திக்கிறது. அங்கு வியாக்யானம்‌ செய்த ரங்கராமாநுஜ முனியும்‌,“ப்ரக்ருதே: பரஸ்தாத்‌ ஜ்யோதி: மஹா புருஷம்‌ தமேவ நாராயணம்‌ விதி,த்வா ம்ருத்யு சப்‌,தி,தம்‌ ஸம்ஸாரம்‌ அதிக்ராமதி”‘[ப்ரக்ருதிக்கு மேற்பட்டவனும்‌, ஜ்யோதிர் மயமானவனும்‌, மஹா புருஷனுமான நாராயணனையே அறிந்து “ம்ருத்யு என்று சொல்லப்படும்‌ ஸம்ஸாரத்தைத்‌ தாண்டுகிறான்‌.] என்று பொருளுரைத்திருக்கிறார்‌.(அஹம்‌ வேத) நான்‌ அறிகிறேன்‌. இங்கு நான்‌” என்று சொல்லுபவன்‌ வேதபுருஷன்‌. பரமாத்மாவை அறிவதினாலும்‌, பிறரை அறியச் செய்வதினாலும்‌ வேதமென்றே பெயரும்‌ புகழும்‌ பெற்ற நான்‌ அறிகிறேன்‌. நித்யனான நான்‌ அறிகிறேன்‌. அபெளருஷேயனான நான்‌ அறிகிறேன்‌. ப்ரமம்‌ (தவறாக நினைத்தல்‌), விப்ரலம்பம்‌ (வஞ்‌சனை) முதலிய குறைகளில்லாத நான்‌ அறிகிறேன்‌. *வேதநம்‌”- உபா ஸநம்‌” என்னும்‌ சப்தங்களால்‌ சொல்லப்படுவதும்‌,தைல தாரயைப் போல்‌ இடைவிடாததும்‌ பார்ப்பதற்கு ஸமானமானதுமான பக்தி ரூபமான ஞானமே இங்கு *வேத;” என்று சொல்லப்படுகிறது. வாக்‌யத்தினல்‌ ஏற்படும்‌ அர்த ஜ்ஞானம்‌ மட்டுமல்ல. (வேத) அறிகிறேன்‌. . **ந சஷுஷா க்ருஹ்யதே‘” [பரமாத்மா கண்ணால்‌ காணப்‌படாதவன்‌.] என்றும்‌, **மநஸா து விசுத்‌தேந ”” [சுத்தமான மனத்தாலேயே அறியத் தக்கவன்‌)] என்றும்‌, “என்றேனும்‌ கட் கண்ணால்‌ காணாத அவ் வுருவை நெஞ்சென்னும்‌ உட் கண்ணால்‌ காணும்‌ உணர்ந்து”” என்றும்‌ சொல்லுகிறபடி வேத புருஷன்‌ தன்னுடைய ஞானக் கண்‌ணால்‌ கண்டு சொல்லுகிறான்‌. “நேதி நேதி ”[பரமாத்மா இப்படிப்‌பட்டவன்‌ அல்லன்‌; இப்படிப்பட்டவன்‌ ஓருவனுமில்லை.] என்றும்‌,““க இத்தா வேத; யத்ர ஸ:”” [பரமாத்மா இப்படிப் பட்டவன்‌ என்று யார்‌ அறிவார்‌?] என்றும்‌ ப்ரமாண பூதமான வேதத்திலும்‌ பரம புருஷன்‌ அறிய முடியாதவன்‌ என்று கீர்த்திக்கப் பட்டிருக்கிறது.“ப்‌ரஹ்ம ருத்‌,ரேந்த்‌ர பூதா நாம்‌ மநஸா மப்ய கோசரம்‌”[ப்ரஹ்மா, ருத்ரன்‌, இந்திரன்‌, என்னும்‌ இவர்களுடைய மனத்திற்‌கும்‌ எட்டாதவன்‌ ] என்றும்‌, “நான்முகன்‌ செஞ்சடையான்‌ என்றிவர்கள்‌ எம்பெருமான்‌ தன்மையை யாரறிகிற்பார்‌?”” என்றும்‌ ப்ரமாதாக்களான (அறிவுடையவர்களான) ப்ரஹ்ம ருத்ராதிகளாலும்‌ அச்யுதனை அறிய முடியாதென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ஸோ அங்க; வேத; யதி,வா ந வேத”: [(தன்‌ பெருமையை) அவனே அறிவனோ?அறியானோ?]என்றும்‌, “தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை’” என்றும்‌ புருஷோத்தமன்‌ தானும்‌ தன்‌ பெருமையை அறிய மாட்டான்‌ என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அளவுபட்ட ஞானத்தை யுடைய ப்ரஹ்ம ருத்ராதிகள்‌ அறியாதது நியாயமே. *யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌’” “ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச ‘” என்னும்‌ ப்ரமாணங்களை நம்பி ஸார்ஜ்ஞ்யம்‌ கொண்டாடி ஒரு ஆசாரியன் பக்கல்‌ அடி பணிந்து அறியாமையால்‌ அவனும்‌ அறியான்‌. வேதம்‌ அறிந்தபடி எப்படி என்னில்‌: (மஹாந்தம்‌) அளவிட முடியாதவனென்றே அறிந்தது. “அறிந்தன வேதவரும்‌பொருள்‌ நூல்கள்‌ அறிந்தன கொள்க அரும் பொருளாதல்‌’” என்றும்‌, “யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவனுக்கு பரமபுருஷனை (அளவிட்டு) அறிய முடியவில்லையோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்றும்‌ சொல்லியபடி அளவிட முடியாதவன்‌ என்று அறிகையே உள்ளபடி அறிவது. “வேதாஹம்‌’”’ என்பதை ராமாயணத்தில்‌ *அஹம்‌ வேத்மி”என்பது விவரிக்கிறது.-இங்கு ‘வேத’ என்பது அங்கு *வேத்மி‘ என்றும்‌,இங்கு “அஹம்‌’ என்பது அங்கு “அஹம்‌” என்றும்‌ சொல்லப்படுகிறது,(ஏதம்‌ வேத;) இப்படி ப்ரஸித்தமானவனை -அறிகிறேன்‌. ஸர்வ காரண புருஷனாயிருந்தும்‌, மனிசர்க்காகப்‌ படாதன பட்டு என் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்த இவனை அறிகிறேன்‌- அவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டுவது இந்த ஏதச் சப்தம்‌. இங்கு “ஏதம்‌” என்பதை அங்கு :ராமம்‌” என்று அவதார நிர்தேசம்‌: செய்கிறது. (புருஷம்‌)அவன்‌ ஓருவனே புருஷன்‌ எனத் தகுந்தவன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்களே. ஸகல கல்யாண குணங்களாலும்‌ பூர்ணமானவன்‌ புருஷன்‌. இங்கு சொல்லப்படும்‌ செளர்ய வீர்யாதி குணங்கள்‌ ராமாயணத்தில்‌ “ஸத்ய பராக்ரமம்‌” என்று பேசப்படுகின்றன. புரி சேதே”என்ற வ்யுத்பத்தியின்படி வைகுண்டத்தில்‌ ஆதிசேஷன் மேல்‌ பள்ளி கொண்ட புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-(ஏதம்‌ புருஷம்‌)-அங்குஷ்ட்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம்‌ ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:’” [கட்டை விரல்‌ பரிமாணாமுள்ளவனும்‌, அந்தர்யாமியுமான புருஷன்‌ ஜனங்களுடைய ஹ்ருதயத்தில்‌ எப்பொழுதும்‌ இருக்கிறான்‌. ]என்று சொல்லுகிறபடி எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய புரத்திலும்‌ வசிப்பவன்‌ புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. தேசாந்தரத்‌தில்‌ எட்டியிராமல்‌ அருகில்‌ அந்தர்யாமியாயிருப்பதால்‌ “இந்தப்‌ புருஷன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌. அவன்‌ பரவஸ்து வாயிற்றே யென்று நாம்‌ பயப்படவேண்டியதில்லை.-அருவருக்கும்படியான தோஷங்களுக்கு இவர்கள்‌ ஓரு கொள்கலமாயிற்றே என்று அவன்‌ அகல நிற்க மாட்டான்‌. அவனிடம்‌ நாம்‌ முறையிடும்போது முன் வருவதற்காக அருகிலேயே அமர்ந்திருப்பவன்‌.-(மஹாந்தம்‌) இதை அனுஸரித்து ஸ்ரீராமாயணத்தில்‌ ‘மஹாத்மானம்‌‘ எனப்படுகிறது.-மிகவும்‌ பெரியவனென்று அறிவேன்‌. *“ஸ உ ச்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந ”” [அந்தப்‌ புருஷோத்தமன்‌ பிறந்த பின்பே பெரியவனாகிறான்‌.] என்று தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காகப்‌ பல அவதாரங்‌கள்‌ செய்த பின்பு அவனைப்‌ பெரியவனென்று அறிகிறேன்‌. எல்லா விதத்திலும்‌ பெரியவன்‌ பரம புருஷன்‌.-(மஹாந்தம்‌) ஸ்வரூபத்தில்‌ பெரியவன்‌ இவன்‌ ஓருவனே. எங்கும்‌ பரந்துளன்‌. (மஹாந்தம்‌) குணங்களில்‌ பெரியவன்‌. கணக்கற்ற கல்யாண குணங்களை யுடையவன்‌. ஓவ்வொரு குணமும்‌ அளவிட முடியாதது. ஆனந்த குணம்‌ ஓன்றை மட்டும்‌ அளவிடப் பார்த்த வேதம்‌ யதோ வாசோ நிவர்த்‌தந்தே” என்று கை விட்டுத்‌ திரும்‌பி வந்ததல்லவோ? எல்லையில்‌ ஞானத்தன்‌’ என்று-ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடி அளவற்ற ஞானத்தை யுடையவன்‌; பலத்தில்‌ பெரியவன்‌; ஐஸ்வர்யத்தில்‌ பெரியவன்‌: வீர்யத்தில்‌ விஞ்சியன்‌; சக்தியில்‌ சிறந்தவன்‌; தேஜஸ்ஸில்‌ மிக்கவன்‌: பிறருடைய துக்கத்தைக் கண்டு ஐயோ வென்று இரங்கும்‌ தயையை யுடையவன்‌. அடியார்களின்‌ தோஷத்தை அறியாதவன்‌-தன்னடியார்களின்‌ தோஷங்களை குணங்களாகக்‌. கொள்ளும்படியான வாத்ஸல்யத்தையுடையவன்‌. “செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்றும் அல்லவோ அவன் வார்த்தை-அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோத,நாம்யே தத்‌ வ்ரதம்‌ மம” [(என்னை சரணமடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிடமிருந்தும்‌ அபயமளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய” விரதம்‌.]என்று சொல்லி ஆபத்தில்‌ அகப்பட்டவர்களை ௮ஞ்சலென்று அளிக்கும்‌ அரிய பெரிய ஸ்வபாவத்தை யுடையவன்‌. பெரிய விரோதிகளையும்‌ புழுப் பூச்சிகளை நசுக்குவது போல்‌ நசுக்க வல்ல பராக்ரமத்தை யுடையவர் ஜயிப்பரோ? தோற்பரோ?” என்னும்‌ ஸந்தேஹம்‌ இவருடைய பராக்ரம விஷயத்தில்‌ கிடையாது. “நாவிஜித்ய நிவர்த்ததே’ என்றும்‌ “சென்று கொன்று வென்றி கொண்ட”” என்றும்‌ சொல்லுகிற படி புறப்பட்டால்‌ ப்ரபல விரோதிகளையும்‌ பராஜயப் படுத்தித்‌ தலையறுத்தல்லது மீளார்‌. (மஹாந்தம்‌) பெருமை யுள்ள சரீரத்தை யுடையவன்‌. “மாசூணாச்‌ சடருடம்பாய்‌’* என்றும்‌, “ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி: மாம்ஸமே தோஸ்தி,ஸம்பவா”” அந்த மஹா புருஷனுக்கு மாம்‌ஸங்களாலும்‌, கொழுப்பினாலும்‌, எலும்புகளாலுமான ப்ராக்ருத சரீரம்‌ கிடையாது. என்றும்‌, “*நித்யம்‌ நித்யாக்ருதிதரம்‌”” [ நித்யமானவனும்‌,நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனும்‌] என்றும்‌ சொல்‌லப்பட்ட நித்ய நிரவத்ய நிரதிசய ஓளஜ்வல்யமுடைய (என்றும்‌”குற்றமற்றதும்‌ ஓப்பற்ற ஓளியை யுடையதுமான) சரீரத்தையுடையவன்‌. எல்லா அண்டங்களிலுமுள்ள ஸகல சேதனாசேதனங்களையும்‌ சரீரமாக உடையவனாதலால்‌ பெரிய சரீரத்தை யுடையவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (மஹாந்தம்‌) பரமாத்மாவாயிருப்பவன்‌. *யஸ்‌மாத்‌ பரம்‌ நாபரமஸ்தி கிஞ்சித்‌‘ [எவனைக் காட்டிலும்‌ பெரிய வஸ்து வேறொன்றும்‌ கிடையாதோ.] என்றும்‌, “ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்ருஸ்யதே” | அவனுக்கு ஸமானமானவனும்‌, மேலானவனும்‌ காணப்‌ படவில்லை.] என்றும்‌, தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வரம்‌, தம்‌ தேவதா நாம்‌ பரமம்‌ ச தைவதம்‌’” [ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான ஈஸ்வரனும்‌, தேவதைகளுக்கும்‌ மேலான தேவதையுமான அவனை] என்றும்‌, “ஒத்தார்‌ மிக்காரை இலையாப மாமாயா!’ என்றும்‌ சொல்லுகிறபடி தேவாதி தேவனாய்‌, ஆதி மூலமாய்‌, அந்தர்யாமி யாயிருப்பவன்‌.(ஆதித்யவர்ணம்‌) ஸூர்யனைப் போன்ற ஓளியை யுடையவன்‌.-கோடி ஸூர்ய ப்ரகாசத்தையுடைய பரஞ் சோதிக்கு அல்ப ப்ரகாசத்தை யுடைய ஆதித்யனை உபமானமாகச்‌ சொல்லலாமோ? எனில்‌: நாம்‌ கண்ணால்‌ காணும்‌ ஜ்யோதிஸ் ஸுகளுக்குள்‌ ஸூர்யனே மிகுந்த ஓளி யுடையவனாகக்‌ காணப்படுவதால்‌ அவனே உபமானமாகச்‌ சொல்லப் பட்டான்‌. ‘ய ஏஷ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ:’” [ஸூர்யனுக்கு நடுவில்‌ ஸுவர்ணம்‌ போன்ற ஓளியை யுடையபுருஷன்‌ ] என்று பரம புருஷன்‌ வர்ணிக்கப்பட்டானன்றோ.-இந்த மஹா புருஷணையே “ஸவிதுர்‌ வரேண்யம்‌’” என்று காயத்ரியில்‌ அனு சந்திக்கிறோம்‌. :மலர் கதிரின்‌ சுடருடம்பாய்‌’” என்று ஆழ்வாரும்‌ அருளினார்‌. வேதங்களும்‌, வைதிக புருஷர்களும்‌ இவனைப் பேசப்‌ புக்கால்‌ ஸூர்யனுக்கு ஓப்பான ஒனியை யுடையவன்‌ என்றே பாசுரமிடுகிறார்கள்‌. (தமஸஸ்து பாரே) தமஸுக்கு அக்கரை யிலிருப்பவன்‌-தமஸ;: பரமோ தாதா சங்க,சக்ர கதா தர’”’ என்று மண்டோதரியால்‌ சொல்லப்பட்ட சக்ர பாணியே இவன்‌. *தம:” என்பது மூலப்ரக்ருதியைக்‌ குறிக்கிறது. ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவன்‌ என்று பொருள்‌. *தம:’ என்பது அஜ்ஞானத்தையும்‌ ஸம்ஸாரத்‌ தையும்‌ குறிக்கும்‌. “ஸோத்‌,வந: பாரமாப்நோதி தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” [அவன்‌ ஸம்ஸாரத்திற்கு அக் கரையை அடைகிறான்‌. அதுவே விஷ்ணுவினுடைய பரம பதம்‌] என்று கடோபனிஷத்தில்‌ சொல்லப்‌ பட்டிருப்பதிலிருந்து இங்கு சொல்லப்பட்டதும்‌ விஷ்ணுவினுடைய பரமபதமே என்று நிஸ் ஸந்தேஹமாக நிச்சயிக்கப்படுகிறது.(ஸர்வாணி…) சேதனர்கள்‌ “லூந பக்ஷ இவாண்ட ஐ:’* என்று சிறகொடிந்த பக்ஷி போல்‌ அசித் ஸமராய்‌, கரண களேபரமற்று போக மோக்ஷ சூந்யராய்‌ இருக்கும்படியான எளிவரவைக் கண்டு தயையுடைய மனஸ்ஸை யுடையவனாய்‌ அவர்கள்‌ தன்னை அடைவதற்காக சரீரங்களைக்‌ கொடுத்து நாம ரூபங்களை ஏற்படுத்தினான்‌. (ஸர்வாணி ரூபாணி விசித்ய) தேவர்‌, மனுஷ்யர்‌, திர்யக்‌ (ஊர்வன) ஸ்தாவரம்‌ எனப்படும்‌ நான்கு விதமான சரீரங்களையும்‌ ஏற்படுத்தி. (நாமாநி க்ருத்வா…) அவர்களுக்கு நாமங்களைக் கொடுத்து அவற்றை உச்சரித்துக் கொண்டு எந்தப் பரமாத்மா இருக்கிறாரோ அவரை அறிவேன்‌. “*அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி””[இவற்றைவியாபித்து நாம ரூபங்களைக்‌ கொடுக்கக் கடவேன்‌] என்று பரமபுருஷன்‌ ஸங்கல்பிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறதன்றோ. (தீர)இம் மாதிரியாக இவற்றை வியாபித்து இவற்றுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்த போதிலும்‌ அவற்றின்‌ விகாரங்கள்‌ தன் மேல்‌ படாதபடி இருப்பதால்‌ புருஷோத்தமன்‌ தீர-என்று சொல்லப்படுகிறான்‌.-புத்தியை ரமிக்கச் செய்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.-யத்‌” என்கிற விடத்தில்‌ நபும்ஸகலிங்கம்‌ சாந்தஸம்‌.-இதிலிருந்து உண்மையான தத்வமான வேதம்‌ ஒன்றிருக்கிற தென்று அறிகிறோம்‌. “புருஷம்‌” என்பதிலிருந்து ‘ ப்ரமாத்மாவுக்கு குணங்களிருக்கின்‌றனவென்று. ஏற்படுகிறது. *மஹாந்தம்‌’ என்பதிலிருந்து அவனுக்குக்‌ கீழ்ப்பட்டவர்கள்‌ உளர்‌ என்று உணர்த்தப்‌படுகிறது. “ஆதித்ய வர்ணம்‌” என்பதிலிருந்து அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகிறது. ‘*தமஸஸ்து பாரே”” என்று அப்ராக்ருதமான திவ்ய தேசத்தில்‌ திகழ்கின்றான்‌ தாமோதரன்‌ என்றும்‌ ஏற்படுகிறது.” அநேக சேதனர்கள்‌ உண்மையாக இருக்கின்றனரென்றும்‌-அவர்களுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்தான்‌ என்பதும்‌ அறியப்படுகிறது.-இவைகளை ஓப்புக் கொண்டால்‌ அத்வைதம்‌ அழிந்து விடும்‌ என்னும்‌ பயத்தினால்‌ வேதம்‌ வாஸ்தவமல்ல வென்றும்‌, புருஷோத்தமனுக்கு ரூபமில்லை, குணமில்லை, ஸ்தானமில்லை என்றும்‌ சேதனாசேதநங்கள்‌ உண்மையல்ல வென்றும்‌, மாயையினால்‌ ஏற்படும்‌ தோற்றமே யென்றும்‌ சொல்லும்‌ மாயா வாதிகளின்‌ மதம்‌ முழுவதும்‌ இங்கு மறுக்கப்பட்டது.

————-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-
[எவரை முன்‌ பிரம தேவர்‌ தியானித்தாரோ, பரமாத்ம ஜ்ஞானியான இந்திரன்‌ எவரை உபாஸித்தானோ, எட்டு திக் பாலகர்களும்‌ (ருஷிகளும்‌) எவரை தியானம்‌ செய்தனரோ அந்தப் பரம புருஷனை இம் மாதிரியாக அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே முக்தி யடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை.] வேத புருஷன்‌ தன்னைத் தவிர மற்றும்‌ சிலரும்‌ இந்த மஹா புருஷனை அறிந்துள்ளார்களென்று வெளியிட்டு அவனை இம் மாதிரி அறிவதே மோக்ஷோபாயம்‌ என்று நிர்ணயிக்கிறான்‌. (ததா…) முதலில்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமன்‌ மஹா புருஷனை தியானித்தார்‌ என்று சொல்லப்படுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்‌ ஸ்ருஷ்டி செய்ய வழி தெரியாத நான்முகன்‌ பகவானை நோக்கி தியானம்‌ செய்தாரென்று இதிலிருந்து ஏற்படுகிறது.
“யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்‌ய பத்‌ம பூ , புநஸ்‌ த்ரைலோக்ய தாத்ருத்வம்‌ ப்ராப்தவாநிதி சுச்ரும:”[பிரமன்‌ ஆயிரங் கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து, அடுத்த கல்பத்திலும்‌ ப்ரஹ்ம பட்டத்தை அடைந்தான்‌ என்று கேள்விப் படுகிறோம்‌.] என்று சொல்லப்பட்டபடி தன்‌ பதவிக்காகச்‌ சென்ற கல்பத்தில்‌ பிரமன்‌ புருஷோத்தமனைத்‌ தியானித்தார்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (சக்ர:…) நூறு அச்வமேத யாகங்கள்‌ செய்து பகவானை ஆராதித்து இந்திரப் பதவியை அடைந்தான்‌ இந்திரன்‌-அடுத்த மன்வந்தரத்தில்‌ இந்திரப் பதவியை அடையப் போகும்‌ மஹா பலியும்‌ அம்மாதிரியே பகவானை உபாஸித்திருக்கிறார்‌. (ப்ரதிச:…) ‘சதஸ்ர:’ என்று கிழக்கு முதலிய நான்கு திக்குகளும்‌ ப்ர திச:என்று தென் கிழக்கு முதலிய விதிக்குகளும்‌ சொல்லப்படுகின்‌றன. இந்த எட்டுத்‌ திக்குகளுக்கும்‌ பாலகர்களும்‌, இந்த திக்குகளிலுள்‌ள ரிஷிகளும்‌ இப் பதங்களால்‌ உணர்த்தப்படுகின்றனர்‌.-அவர்களும்‌ புருஷோத்தமனை உபாஸிக்கிறார்களென்று ஏற்படுகிறது. ஈசான்ய திக்கிற்கு அதிபதியும்‌ அங்கு வாஸம்‌ செய்பவருமான சிவனும்‌ இந்தப்‌ பரம புருஷணையே உபாஸனை செய்கிறார்‌ என்றும்‌ ஏற்படுகிறது.

நம்மாழ்வாரும்‌ இதையே, “கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்து ஏத்துவரே”-[வெள்ளேறன்‌–வெளுத்த காளையை வாஹனமாகவுடைய சிவன்‌.-புள்ளூர்தி–கருட வாஹனன்‌.] என்று அருளிச் செய்தார்‌. அத்ரி, ப்ருகு, காச்யபர்‌, கர்தமர்‌, தக்ஷர்‌, வஸிஷ்டர்‌, நாரதர்‌, வால்மீகி, பராசரர்‌, வியாஸர்‌, சுகர்‌, செளநகர்‌, யாஜ்ஞவல்க்யர்‌ முதலிய ரிஷிகளும்‌ இந்த இருடீகேசனையே ஏத்துகிறார்கள்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. (தம்‌) இப்படிப்பட்ட ப்ரஸித்தமான பரமாத்மாவான நாராயணனை. (ஏவம்‌ வித்வாந்‌) இம் மாதிரியாக அறிபவன்‌. ஸர்வ காரண பூத னென்றும்‌, ஸர்வ ரக்ஷகனென்றும்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகனென்றும்‌, ஸ்ரீவைகுண்ட வாஸனென்றும்‌, அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹ முடையவனென்றும்‌, சேதனர்களுக்கு நாம ரூபங்‌களையும்‌, கரண களேபரங்களையும்‌ கொடுப்பவனென்றும்‌, பிரமன்‌, ருத்ரன்‌, இந்திரன்‌, முதலியவர்களால்‌ பூஜிக்கப் படுபவனென்றும்‌ அறிபவன்‌. இங்கு ‘அறிவு’ என்பது தியான ரூபமான அறிவையே காட்டுகிறது. (அம்ருத…) * இந்த ஜன்மத்திலேயே பிறப்பிறப்பாகிற ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறான்‌. இந்த உலகத்திலேயே முக்தனுக்கு ஸமானமாக ஆகிறான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (ப்ராரப்த கர்மம்‌ எந்த ஜன்மத்தில்‌ முடிகிறதோ, அந்த ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌. என்பது சாஸ்திரார்த்தமாயிருக்க, “இந்த ஜன்மத்திலேயே’ என்ற்து. எப்படியெனில்‌: ‘ஏதம்‌ புருஷம்‌* என்று அவதாரத்தைக் காட்டுகையால்‌, அவதார ரஹஸ்ய ஜ்ஞாநத்தோடு கூடிய பக்தியாலே இந்த : ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌ என்பது “புநர் ஜந்ம நைதி’” [கீதை] முதலான ப்ரமாணங்களில்‌. உணர்த்தப் பட்டதாகையாலே விரோதமில்லை.)

நம்‌மாழ்வாரும்‌, “பிடித்தேன்‌ பிறவி கெடுத்தேன்‌ பிணி சாரேன்‌”” என்று
பரந்தாமனின்‌ பாதங்களைப்‌ பிடித்தவுடன்‌ பிறப்பு இறப்பு முதலிய ஸகல துக்கங்களும்‌ நீங்குகின்றன என்றல்லவோ அருளினார்‌. நாராயணனை அடி பணிந்து, பல்லாண்டு பாடி, ஆனந்த ஸாகரத்தில்‌ அமிழ்ந்து “அச் சுவை பெறினும்‌ வேண்டேன்‌” என்று சொல்லுபவர்‌களை முக்தர்கள்‌ என்று சொல்லத்‌ தட்டில்லை.-அவர்கள்‌ கலி தன்னைக்‌ கடக்கப்‌ பாய்ந்தவர்களே. (நாந்ய:..) மோக்ஷமடைவதற்கு வேறொரு மார்க்கமும்‌ கிடையாது. “அயநாய* என்றவிடத்தில்‌ பரம பதமடைவதற்கு’ என்று ஸ்வேதாஸ்வதரோபதிஷத் பாஷ்யத்தில்‌ சங்கரர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.-இவ் விடத்தில்‌,“நாயமாத்மா ப்ரவசநேஈ லப்‌ய: ந மேதயா ந ப,ஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தே லப்‌,ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌”[| இந்தப்‌ பரமாத்மா (பக்தி யில்லா) ஸ்ரவண மனன தியானங்களால்‌ அடையத் தக்கவனல்லன்‌: எவனை இப் பரம புருஷன்‌ வரிக்கிறானோ அவனுக்கே தன்‌ ஸ்வரூபத்தைக்‌ காட்டுகிறான்‌.]“ந கர்மணா ந ப்ரஜயா த,நேந த்யாகே,ந ஏகேந அம்ருதத்வ மாநசு:’?[கர்மத்தினாலும்‌, ப்ரஜையினாலும்‌, தனத்தினாலும்‌, மோக்ஷமடைய முடியாது. நீயாஸ வித்யை (சரணாகதி) யினாலேயே (பலர்‌) மோக்ஷ
மடை ந்தனர்‌] என்னும்‌ ஸ்ருதி வாக்யங்கள்‌ அனுஸந்திக்கத் தக்கன. கீதாசார்யனும்‌,
நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
சக்ய ஏவம் விதே த்‌ரஷ்டும்‌ த்‌ருஷ்டவாநஸி மாம்‌ யதா
ப,க்த்யா த்வத் அந்யயா சக்ய: அஹமேவம்‌ விதோர்‌ஜுந”[அர்ஜுனா! (என்னிடத்தில்‌ பக்தி யற்ற) வேதாத்யயனத்தாலும்‌, தபஸ்ஸுகளாலும்‌, தானத்தினாலும்‌, யாகத்தினாலும்‌, நீ என்னைக்‌கண்டது போல்‌, நான்‌ (எவராலும்‌) காணத் தக்கவனல்லன்‌. அனன்ய ப்ரயோஜனமான பக்தியினாலேயே காணத் தக்கவன்‌.] என்று அருளிச் செய்தாரன்றோ. இந்த மந்த்ரத்தில்‌, பிரமன்‌, இந்திரன்‌ முதலிய பலர்‌ பரமாத்‌மாவை உபாஸிப்பதாகச்‌ சொல்லப் படுவதிலிருந்து ஜீவாத்மாக்கள்‌ பலருண்டென்பது ஸித்திக்கிறது. *தம்‌ ஏவம்‌ வித்‌வாந்‌ என்பதிலிருந்து அறியப் படுபவன்‌, அறிவு, அறிகிறவன்‌ என்னும்‌ மூன்றும்‌ உண்டென்று உணர்த்தப்படுகிறது. “ஏவம்‌” என்பதிலிருந்து மேலே சொன்னபடி ஸமஸ்த கல்யாண குண ஸம்பன்னனென்றும்‌, விக்ரஹ விபூதி விசிஷ்டனென்றும்‌ அறிய வேண்டும்‌ என்று அறிவிக்கப்படுகிறது. ‘விக்ரஹமில்லை; விபூதியில்லை: குணமில்லை’ என்பவருடைய பிடரியைப்‌ பிடித்துப்‌ புறக்கணிக்கிறது இவ்வாக்கியம்‌. “ஏவம்‌ வித்‌வாந் -என்பதை கீதாசார்யன்‌ *ஏவம் விதோ த்ரஷ்டும்‌* [இம் மாதிரி காண்பதற்கு] என்றும்‌, ‘பக்த்யா” என்றும்‌ விவரித்த படியால்‌ இங்கு சொல்லப்படும்‌ அறிவு காண்பதற்கு ஸமானமான பக்தியே என்று ஏற்படுகிறது. ஆகையால்‌ வாக்யார்த்த ஜ்ஞானத்தினால்‌ மோக்ஷமடைய முடியாதென்றும்‌ ஸித்திக்கிறது. “அம்ருதோ பவதி‘ என்பதிலிருந்து ஸம்ஸாரி, முக்தன்‌ என்னும்‌ பேதமுண்டென்றும்‌ தெரிவிக்கப்படுகிறது.

—————–

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18- [நித்ய ஸூரிகள்‌ பிரமனை உபகரணமாகக் கொண்டு ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌. அந்த யஜ்ஞம்‌ முதலிய்‌ தர்மங்‌கள்‌ முக்யங்களாக ஆயின.-இவ் விதமாக அறிபவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ பழைமை யானவர்களான நித்ய ஸூ9ரிகள்‌ வாஸம்‌ செய்யும்‌ பரம பதத்தை அடைகிறார்கள்‌.] இந்த மந்த்ரத்தின்‌ பூர்வார்த்தத்தில்‌ இந்த அனுவாகத்தில்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி ப்ரகாரமும்‌ பின்‌ பாதியில்‌ *வேதாஹம்‌”
என்னும்‌ இரண்டு மந்த்ரங்களினால்‌ சொல்லப்பட்ட பகவதுபாஸனமும்‌ அதின்‌ பலமும்‌ சொல்லப் படுகின்‌றன வென்று வித்யாரண்யர்‌.“நாராயணம்‌” என்று ப்ரஸித்தமான புருஷ ஸூக்தத்தின்‌ பூர்வானுவாகம்‌ இந்த ருக்குடன்‌ முடிவடைகிறது. (யஜ்ஜஞேந ..) யஜ்ஞத்‌திற்கு முக்ய ஸாதனமான பிரமனைக் கொண்டு நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தனர்‌. (தாநி…) அது முதல்‌ அந்த யஜ்ஞம்‌ தானம்‌ முதலிய தர்மங்கள்‌ முக்யமானவையாக ஆயின-தர்மார்த்த காம மோக்ஷம்‌ எனப்படும்‌ நான்கு புருஷார்த்‌தங்களுக்கும்‌ ஸாதனமாயிருக்கின்றன. கீதையில்‌,
ஸஹ யஜ்ஷஞை: ப்ரஜாஸ்‌ ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்‌வம்‌ ஏஷ வோஸ் த்விஷ்ட காம துக்‌”(யஜ்ஞங்களுடன்‌ கூட, ப்ரஜைகளை முன்‌ ஸ்ருஷ்டித்து, பகவான்‌ பின் வருமாறு சொன்னார்‌:–இந்த யஜ்ஞத்தைக் கொண்டு வ்ருத்தி யடையுங்கள்‌. இது நீங்கள்‌ விரும்பியதை யெல்லாம்‌ கொடுக்கக்‌ கடவது.] என்று சொல்லப்பட்டது இங்கு அனுஸந்திக்கத்தக்கது.(தேஹ…) இந்த ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தை அறிந்து அர்தத்‌துடன்‌ அனுஸந்திப்பவர்கள்‌, ஸனாதனிகரான ஸாத்யர்களென்னும்‌ பெயரை யுடைய நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ ஸ்ரீ வைகுண்டத்தை மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌. (நாகம்‌) *நாகஸ்ய ப்ருஷ்டே,” என்று நாராயண வல்லியில்‌ சொல்லப்பட்ட ஸ்ரீ வைகுண்டமே இங்கு சொல்லப்படுகிறது. (மஹிமான….) ஜ்ஞான ஸங்கோச மில்லாதவர்‌களாக அனந்த கருட விஷ்வக்ஸேனாதி களிருக்கும்‌ பரமபதத்தை அடைகிறார்கள்‌.
ஒளிக் கொண்ட சோதியமாய்‌ உடன்‌ கூடுவதென்று கொலோ..? அளிக்கின்ற மாயப் பிரான்‌ அடியார்கள்‌ குழாங்களையே” என்று ஆழ்வாரால்‌ பிரார்த்திக்கப்பட்ட பலத்தைப்‌ பெறுவார்கள்‌. இதிலிருந்து ஸாத்ய தேவர்களென்று சிலர்‌ இருக்கிறார்களென்றும்‌ அவர்கள் இருக்குமிடத்தை யடைவதே மோக்ஷ மென்றும்‌ ஏற்படுகிறது. ஸாத்யர்‌-ப்ராப்யா்‌.

————-

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.[உலகம்‌ ஐலத்தினின்றும்‌ உண்டாயிற்று. பூமியிலுள்ள அன்ன ரஸத்தினால்‌ விருத்தி யடைந்தது. பரம புருஷனிடத்திலிருந்து உண்‌டாயிற்று. புருஷோத்தமன்‌ அதை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. ஆகையால்‌ இவ் வுலகமெல்லாம்‌ மஹா புருஷனுக்கு சேஷமாயிருப்பது என்று முன்னமே அறிந்தேன்‌.]-(அத்ப்யஸ்‌ ஸம்பூத:) உலகம்‌ நீரிலிருந்து உண்டாயிற்று என்று சொல்லப்படுகிறது. மஹோபனிஷத்தில்‌,
அத; புநரேவ நாராயணஸ்‌ ஸோந்யம்‌ காமம்‌ மநஸா த்‌யாயீத
தஸ்ய த்‌யாநாந்தஸ் தஸ்ய லலாடாத்‌ ஸ்வேதோபதத்‌ தா இமாஆப: தத்‌ ஹிரண்மய மண்டம பவத்‌”[பிறகு, நாராயணன்‌ மற்றொரு ஸங்கல்பத்தை மனத்தினால்‌ செய்தார்‌:ஸங்கல்பம்‌ செய்தவுடன்‌ அவருடைய நெற்றியிலிருந்து வேர்வை விழுந்தது. அதுவே இங்கு காணப்படும்‌ தண்ணீர்‌. அதில்‌ ஹிரண்‌ மயமான அண்டம்‌ உண்டாயிற்று.] என்று சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப்படுகிறது. இதுவே அப ஏவ ஸஸர்ஜாதெள…ததண்ட,மபவத்‌ ஹைமம்‌’ [நாராயணன்‌ தண்ணீரை முதலில்‌ படைத்தான்‌. அதில்‌ பொன்மயமான அண்ட முண்டாயிற்று.] என்று மனு ஸ்ம்ருதியிலும்‌ உரைக்கப்பட்டது. ஆழ்வாரும்‌ ‘“தானோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி’” என்று அருளிச் செய்தார்‌. (ப்ருதிவ்யை ரஸாச்ச ஸம்பூத:) பூமியிலிருந்து உண்டான அன்ன ரஸங்களினால்‌ வ்ருத்தி யடைந்தது.(விஸ்வ கர்மண:…) பரமாத்மாவினிடமிருந்து இவை உண்டாயின.ஜலத்திலிருந்தும்‌ பூமியிலிருந்தும்‌ தானாகவே உண்டாக வில்லை என்று உணர்த்துவதற்காக உலகத்தை உண்டாக்கிய உத்தமனால்‌ கர்மானுகுணமாக உயர்வு தாழ்வுகளுடன்‌ உண்டாக்கப்பட்டன வென்று உரைக்கப்படுகிறது. மஹோபனிஷத்தை அனுஸரித்து, இங்கு சொல்லப்படும்‌ ‘விஸ்வகர்மா’ முதலிய சப்தங்கள்‌ நாராயணனையே குறிக்கின்றன வென்று அறிகிறோம்‌. (தஸ்ய…) ஸர்வேஸ்வரன்‌ அந்த உலகத்தை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. தாதா நாராயண:’ என்றல்லவோ ஸுபாலோபனிஷத்தில்‌ இம் மஹாபுருஷன்‌ கீர்த்திக்கப் பட்டான்‌. (தத் புருஷஸ்ய விச்வம்‌) ஆகையினால்‌ இவ்வுலகம்‌ புருஷனுடையதே. உலகம்‌ உடமை. உடையவன்‌ புருஷோத்‌தமன்‌. ‘க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம்‌ விஸ்வம்‌ சராசரம்‌” [சராசரமான ஜீவராசிகளெல்லாம்‌ க்ருஷ்ணனுடையதன்றோ?] என்னும்‌ ஸ்ம்ருதி வசனம்‌ இந்த ஸ்ருதியை விவரிக்கிறது. (ஆஜாநம்‌ அக்ரே) “பகவானுக்கு சேஷ பூதமானது இவ் வுலகம்‌ என்பதை நான்‌ முன்‌னமே அறிந்தேன்‌’ என்று வேத புருஷன்‌ வெளியிடுகிறான்‌. பகவான்‌ உலகத்தை உண்டாக்கி, தரித்து, வியாபிப்பதாகச்‌ சொல்லுகிற படியாலும்‌ உலகத்தை உடையவன்‌ என்று உரைக்கிறபடியாலும்‌ விசிஷ்டாத்வைத வேதாந்தமே வேதத்தின்‌ உட்பொருள்‌ என்பது நன்கு விளங்குகிறது.

——–

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-
“அண்டக்குலத்துக்கதிபதியாகி, அண்டத்திற்கு அப் புறத்திலுள்ள சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்தில்‌ கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன்‌ எழுந்தருளி யிருக்கும்‌ இந்த மஹாபுருஷனை நான்‌ அறிகிறேன்‌? அவனே உபாயமும்‌, உபேயமும்‌ என்று அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு மார்க்கமில்லை’ என்னும்‌ இந்த ரஹஸ்யார்த்தத்தை வேதம்‌ ஆதராதி சயத்தினால்‌ மறுபடியும்‌ உத்கோஷிக்கிறது. இதன்‌ பொருள்‌ பூர்வானுவாகத்தில்‌ விசேஷமாக விவரிக்கப்பட்டது. பூர்வானுவாகத்தில்‌
16-வது மந்த்ரத்தின்‌ முற்பாதியும்‌, 17-வது மந்த்ரத்தின்‌ பிற்‌பாதியும்‌ காண்க.

———-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-(பரம புருஷன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாய்‌ ஸஞ்சரிக்கிறான்‌. உத்‌பத்தி யில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.அவனுடைய அவதாரங்களை தீரர்களே அறிகிறார்கள்‌. (அவர்கள்‌) பரம புருஷன்‌ வாழும்‌ நித்ய ஸூரிகளின்‌ நாட்டை விரும்புகிறார்கள்‌.]**ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி,” என்று பூர்‌வானுவாகத்தில்‌ சொல்லப்பட்ட அவதார வைபவம்‌ இங்கு அனுபவிக்கப் படுகிறது.-“விஷயஸ்‌-பாதி பூமித்வாத்‌ ஜ்ஞாந தெ,ஃளஷ்கர்ய சங்கிநாம்‌ அவதாரேண ஸெளலப்யம்‌ த்ரிஷ்டு போக்தம்‌ த்ருதீயயா”[ பகவத் ஸ்வரூபமானது அறிவிற் கெட்டாத படியால்‌, அவளை அறிய முடியாது என்று ஸந்தேஹிப்பவர்களுக்கு, மூன்றாவது மந்திரத்தில்‌ அவ்தார ஸெளலப்யம்‌ சொல்லப்பட்டது.] என்று மணவாள மா முனிகளின்‌ ப்ரமாணத்திரட்டில்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌ “நாராயண முனி”
என்பவரின்‌ வியாக்யானத்தில்‌ இந்த மந்த்ரார்த்தம்‌ ஸங்க்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறது. முத்தின மந்த்ரத்தில்‌ ப்ரஹ்மத்தை அறிவதினலேயே மோக்ஷம்‌ என்று சொல்லப்பட்டது. இங்கு அவதாரங்கள்‌ பல செய்திருக்கும்‌ ௮ச்யுதனை அறிவது எளிது என்று காட்டப்படுகிறது.(ப்ரஜாபதி:…௮ந்த:) ப்ரஜைகளைக்‌ காப்பாற்றுபவனுன ஸர்வேஸ்வரன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாக ஸஞ்சரிக்கிறான்‌. இந்த வாக்யம்‌ நாராயணவல்லியிலும்‌ காணப் படுகிறது. அதனால்‌ நாராயணனே இங்கு ப்ரஜாபதி சப்தத்தினால்‌ சொல்லப் படுகிறான்‌ என்று நிர்ணயிக்கிறோம்‌. மேலும்‌, ஸர்வ ஜீவர்களையும்‌ காப்பது விஷ்ணுவுக்கே அஸாதாரணமானது. பதிம்‌ விச்வஸ்ய என்று சொல்லப்பட்ட அவனே உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமியாவான்‌.-ஆத்மாவிற்கு நிலைநின்ற புருஷார்த்தமாகிற மோக்ஷத்தை மற்றவர்களால்‌ கொடுக்க இயலாது. நசிக்கக் கூடிய சிற்றின்பப்‌ பலன்களாகிய, அர்த்த காமங்‌களையும்‌, பகவானிடமிருந்து வரம் பெற்றே கொடுக்கிறார்கள்‌-மஹாபாரதத்தில்‌,
ராஜாதி,ராஜஸ்‌ ஸர்வேஷாம்‌ விஷ்ணுர்‌ ப்‌,ரஹ்ம மயோ மஹாஙந்‌ ஈஸ்வரம்‌ தம்‌ விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி:”'[எல்லா அரசர்களுக்கும்‌ மேலான அரசராயிருப்பவரும்‌, பெரியவரும்‌, ப்ரஹ்ம ஸ்வரூபியுமானவர்‌ விஷ்ணு. அவரை ஈஸ்வரரென்று அறிகிறோம்‌. அவரே (எல்லோருக்கும்‌) தந்‌தை . அவரே ப்ரஜாபதி.]என்று சொல்லப் பட்டபடியால்‌ ப்ரஜாபதி சப்தத்தினால்‌ குறிக்கப்‌ படுபவன்‌ கேசவனே.-:அஸத்‌(இல்லாதவை)திலிருந்து வேறுபட்ட எல்லா வஸ்துக்களுக்கும்‌ ஸ்வாமியாகவும்‌, ரக்ஷகராகவும்‌ இருப்பவர்‌ ப்ரஜாபதி” என்று நாராயணயதி வியாக்யானம்‌ செய்தார்‌. (கர்ப்பே அந்த:சரதி) ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமி யாயிருக்கிறான்‌. இப்படி அந்தர்யாமி யாயிருப்பதற்குக்‌ காரண மென்ன?ப்ரயோஜனமென்ன? துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனங்கள்‌ காரணமல்ல. இவனுக்குத்‌ தன்னிடம்‌ அத்வேஷத்தை உண்டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்ப்ப,தற்காக அந்தர்யாமி யாமிருக்கிறான்‌ அநந்தன்‌. யோக ஸாக்ஷாத்‌ காரம்‌ கை வந்தவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில்‌ ஸேவை ஸாதிக்கிறான்‌. தினந்தோறும்‌ உறங்கும் போது ஜீவர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு ஸகல ஸ்ரமங்களையும்‌ போக்குகிறான்‌. ஜன்மம்‌ கழியும்போது மரணாவஸ்தையின்‌ ஸ்ரமத்தைக்‌ குறைக்கிறான்‌. மோக்ஷமடைபவர்‌களான ஜீவாத்மாக்களுக்கு ஸுஷும்னா நாடியைத்‌ தெரியும்படி செய்து அதன் வழியே ப்ரஹ்ம ரந்த்ரத்தை பேதித்துக் கொண்டு போக அனுக்ரஹம்‌ செய்கிறான்‌.-அந்தர்யாமியை அறிவது மிகவும்‌ கடினம்‌. பூகத (பூமிக்குள்‌ இருக்கும்‌) ஜலத்திற்கு ஸமானமானது அந்தர்யாம்யவஸ்தை என்று ஆசாரியர்கள்‌ அருளி யிருக்கிறார்கள்‌. மண்ணைத்‌ தோண்டி யெடுத்து அவசியமானால்‌ பாறையையும்‌ உடைத்து பூமியிலிருக்கும்‌ ஐலத்தைத்‌ தேடிக்‌ கண்டுபிடிக்குமாப் போலே மாம்ஸ சரீரமாகிற மண்ணினால்‌ மறைக்கப்பட்டதும்‌, நெஞ்சாகிற பாறையினால்‌ மூடப்பட்டதுமான அந்தர்யாமியை அறிய முடியாதென்றே பூகத ஜலத்தை உவமை யிட்டார்கள்‌. அம்மாதிரியான அருமை யில்லாமல்‌, எல்லாருடைய
ஊனக் கண்ணுக்கும்‌ இலக்காகும்படியான அவதாரங்களை அடுத்த
படியாக அறிவிக்கிறது. அப்படி அவதாரம்‌ செய்வதற்குக்‌ கர்மம்‌ காரணமன்று. அனுக்ரஹமே காரணம்‌. கிணற்றில்‌ விழுந்த குழந்தையை எடுப்பதற்குத்‌ தாயும்‌ கூடக் குதிக்குமாப் போல்‌ ஸம்‌ஸார ஸாகரத்தில்‌ அமிழ்ந்து அவஸ்தைப்படும்‌ சேதனர்களை அக்‌ கடலினின்றும்‌ கறை யேற்றுவதற்காக நாட்டில்‌ பிறந்து மனிசர்க்‌காகப்‌ படாதனபடுகிறான்‌ நாராயணன்‌.-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்‌ செய்வதற்காகப்‌ பிறக்கிறான்‌ பர வாஸுதேவன்‌, இந்திரியங்களுக்கு எட்டாத தன்னை ஸம்ஸாரிகள்‌ கண்ணுக்குத்‌ தோன்றும்‌ படி செய்கிறான்‌. வேண்டினவற்றை யெல்லாம்‌ தன்னடியார்களுக்குத்‌ தருகிறான்‌. குளிரக் கடாக்ஷிப்பது, பேசுவது, கேட்பது, சிரிப்பது. ஆலிங்கனம் செய்வது, இப்படிப்‌ பலவிதமாக அவர்‌களை ஆட்‌ கொள்ளுகிறான்‌. “*ஹஸிதம்‌ பாஷிதம்‌ சைவ” [சிரிப்பதையும்‌, பேசுவதையும்‌] என்றார்‌ வால்மீகி. ராமனுடைய ஆலிங்கனத்தை அனுமானும்‌ ““பாவோ நாந்யத்ர கச்சதி”” [என்‌ நினைவு வேறெங்கும்‌ செல்லாது.] என்றார்‌. ‘“ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ப ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ்வஜே’”[க்ருஷ்ணன்‌ அக்ரூரனைத் தொட்டு, இழுத்து, ப்ரீதியுடன்‌ நன்கு தழுவிக் கொண்டார்‌.] என்றதும்‌ இங்கு நினைக்கத் தக்கது. விபவாவதார காலங்களில்லாமல்‌ இழந்தவர்க்கும்‌ அவ் விழவு தீருவதற்காக எடுக்கப்படும்‌ அர்ச்சாவதாரமும்‌ இங்கு சொல்லப்‌ படுவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒரு காலத்திலோடும்‌ க௱ட்டாறு போன்றது விபவாவதாரம்‌. அதில்‌ தேங்கின மடுப் போன்றது அர்ச்சாவதாரம்‌. பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களில்‌ சொன்ன படி ஸுதை, சிலை முதலியவைகளால்‌ செய்யப்பட்ட ரூபங்களில்‌ ஆவாஹனம்‌ செய்யப்பட்டு சாஸ்த்ர வஸ்யனாயும்‌ அர்ச்சக பராதினனாயும்‌ இருக்கிறான்‌ இருடீகேசன்‌. எல்லா ஜனங்களுடைய ஊனக்‌ கண்ணுக்கும்‌ தன்னை விஷயமாக்கிக் கொண்டு ஸ்ர்வாபேக்ஷிதங்‌களையும்‌ கொடுக்கிறான்‌.

(அஜாயமாநோ பஹுதா விஜயாதே) *பிறப்பில்லாதவனாயிருந்‌தும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌” என்கிற து வேதம்‌. ** அஜோபி ஸந்‌-ஸம்பவாமி’” [பிறப்பற்றவனாயிருந்தும்‌ பிறக்கிறேன்‌.] என்று க்ருஷ்ண பகவான்‌ கீதையில்‌ அருளினான்‌. “பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமான்‌” என்றார்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌. (அஜாயமாந:) “ஜநிஜராதி; ஸகலதுரித தூ;ர:” [பாப பலமான ஜன்மம்‌, கிழத்தனம்‌ முதலியவைகள ற்றவன்‌.] என்று வியாக்யானம்‌ செய்தார்‌ நாராயணயதி. இங்கு “பிறப்பு என்பது, கிழத்தனம்‌, இறப்பு முதலிய ஆறு விகாரங்களையும்‌ காட்டுகிறது. (பஹுதா விஜாயதே)எந்நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தான்‌. “ப;ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி””[எனக்குப்‌ பல பிறப்புகள்‌ கடந்து விட்டன.] என்று தன்‌ ஜன்மத்‌தைத்‌ தானே சொன்ன அவனும்‌ தெஞ்சு உளுக்கியிறே இருப்பது.-ஆழ்வாரும்‌ “சன்மம்‌ பலபல செய்து” என்றார்‌. (பஹுதா) தேவர்‌, திர்யக்‌, மனுஷ்யர்‌, ஸ்தாவரம்‌ என்று சொல்லப்படும்‌ எல்லா யோனிகளிலும்‌ பிறந்தான்‌. வ்யூஹம்‌, விபவம்‌, அர்ச்சை எனப்படும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. பிறக்கைக்கு ஹேதுவான கர்மம்‌ இல்லாமலிருந்தும்‌ கர்ம வஸ்யரும்‌ பிறவாத ஜன்மங்களிலும்‌ பிறந்தான்‌. கர்ம வஸ்யன்‌ பிறவிக்கு எல்லை காண்கிறோம்‌. அகர்ம வஸ்யன்‌ (கர்மத்திற்கு வசப்‌ படாதவன்‌) பிறவிக்கு எல்லை காணவில்லை. கர்மத்திற்கு எல்லையுண்டு. அனுக்ரஹத்துக்கு எல்லை யில்லை. (விஜாயதே) “பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌’ என்றும்‌, ‘விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. “தேவர்‌ முதலிய ஓவ்வொரு ஜாதியிலும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌ என்று நாராயண முனி. (விசேஷேண ஜாயதே) விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப்‌ பிறக்கிறான்‌. “சங்கொடு சக்கரம்‌ வில்‌ ஓண்மையுடைய உலக்கை ஓள் வாள்‌ தண்டு கொண்டு” பிறக்கிறான்‌. தன்‌ ஐஸ்வர்ய சக்திகளில்‌ ஓன்றும்‌ குறையாமல்‌ பிறக்கிறான்‌. அவதார ரஹஸ்யத்தை அறிந்து அனுஸந்தித்தவர்கள்‌ ஜன்மம்‌ அறும்படி பிறக்கிறான்‌. பிறந்த பின்பே மேன்மை யடைகிறான்‌. வேதத்திலும்‌-யுவா ஸுவாஸா: பரிவீத ஆகத்‌ ஸ உ ஸ்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந: தம்‌ தீராஸ: கவய உந்நயந்தி’” [யெளவனத்தை யுடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌, நித்ய ஸூரிகளால்‌ சூழப்பட்டவனாகவும்‌ புருஷோத்தமன்‌ பிறக்கிறான்‌. அவன்‌ பிறந்த பின்பே மேன்மை யுடையவனாகிறான்‌. அவளை தீரர்களான கவிகள்‌ தியானிக்‌கிறார்கள்‌] என்றல்லவோ சொல்லப்பட்டது.(விஜாயதே) கர்ம வஸ்யர்களைப் போன்ற சரீரத்துடன்‌ பிறக்கிறான்‌. அவர்கள்‌ பத்து மாதம்‌ வயிற்றிலிருந்து பிறந்தால்‌ இவன்‌ பன்னிரண்டு மாதம்‌ கர்ப்ப வாஸம்‌ செய்து பிறக்கிறான்‌. “ததச்ச த்‌வாதசே மாஸே” [பன்னிரண்டாவது மாதத்தில்‌] என்றும்‌, ‘பன்னிரு திங்கள்‌ வயிற்றிற்‌ கொண்ட” என்றுமல்லவோ சொல்லப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆபத்தேற்படும்‌ காலத்தையே தனக்குப்‌ பிறக்கைக்குக்‌ காலமாகக்‌ கொண்டு பிறக்கிறான்‌. அவர்களுடைய ஸம் ரக்ஷணத்தையே. ப்ரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான்‌. ஆவிர்பூ,தம்‌ மஹாத்மநா:”[மஹாத்மாவான நாராயணன்‌ ஆவிர்பவித்தான்‌.] என்ற வால்மீகி மஹரிஷி அவதரித்ததினால்‌ தோஷமில்லை என்பதைக்‌ காட்டுவதற்காக
*ஆவிர்ப்பவித்தான்‌” என்று உரைத்தார்‌. ஆஸ்ரிதர்க்காக கர்ப்ப வாஸம்‌ பண்ணின மஹா குணத்தை இழக்கலாகாது என்று வேதம்‌“பிறந்தான்‌” .என்கிறது. ஆழ்வாரும்‌ *தோன்றினவாறும்‌* என்று சொல்லாதே *பிறந்தவாறும்‌” என்ற்ல்லவோ பாடினர்‌. ஸம்ஸாரிகளுக்குப்‌ பிறக்கப்‌ பிறக்க ஞானம்‌ மழுங்கும்‌.. ரத்னத்தைத்‌ தேய்க்கத்‌ தேய்க்க ஒளி அதிகமாமாப் போலே அவதாரம்‌ செய்யச்‌செய்ய இவனுடைய மஹா குணங்கள்‌ பிரகாசிக்கும்‌. ராமாவதாரத்‌தைக்‌ காட்டிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌, பாண்டவ தூதனாயும்‌,பார்த்த ஸாரதியாயு மிருந்து தன்‌ பெருங் குணங்களை வெளியிட்டானன்றோ? தானே சொல்லும்போதும்‌ “ஜென்ம கர்ம ச மே திவ்யம்‌”[என்னுடைய ஜன்மங்களும்‌, சேஷ்டிதங்களும்‌ அப்ராக்ருதமானவை] என்று மதிப்புடனன்றோ சொன்னான்‌.

(தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌) அவனுடைய அவதார ரஹஸ்யத்தை தீரர்களே அறிகிறார்கள்‌. (தீரா:)புத்திமான்கள்‌. “தீரர்களான கவிகள்‌” என்று மற்றொரு ஸ்ருதியில்‌ சொல்லப்பட்ட வர்கள்‌. – பராங்குச பட்டநாத பரகாலாதிகளே இவன்‌ பிறப்பின்‌ பெருமையை அறிவார்கள்‌. (தீரா:) கலங்காதவர்கள்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. ஸ்ருதிகளை அறியாதவர்கள்‌ புருஷோத்தமனுடைய அவதார மஹிமையை அறியாமல்‌, “பர ப்ரஹ்மத்திற்கு ஜன்மமுண்டோ’ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டு இவன்‌ மனுஷ்‌யனோ?” என்று கலங்குவார்கள்‌.-அம் மாதிரியான கலக்கமில்லாதவர்கள்‌. “பிதா புத்ரேண பித்ருமாந்‌ யோநி யோநவ் நாவேத,விந் மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌’ [ஒவ்வொரு அவதாரத்திலும்‌ ஸர்வலோக பிதாவான நாராயணன்‌ தன்னால்‌ உண்டாக்கப்பட்ட ஒருவனைத்‌ தனக்குத்‌ தகப்பனாகக் கொண்டு பிறக்கிறான்‌. வேதத்தை அறியாதவன்‌ அவனே ‘பரமாத்மா வென்று அறிய மாட்டான்‌. ] என்றல்லவோ மறைகள்‌ முறையிட்டன. (தஸ்ய யோநிம்‌ பரிஜாநந்தி) அவனுடைய:அவதாரத்தை நன்கு அறிகிறார்கள்‌. (பரிஜாநந்தி). திரும்பத் திரும்ப அறிகிறார்கள்‌.-ஸகல சேஷ்டிதங்களையும்‌ அறிகிறார்கள்‌. அதை விட்டுப்‌ பரத்வத்‌திலும்‌ மனம்‌ செலுத்தமாட்டார்கள்‌. *பாவோ: நாந்யத்ர கச்சதி”-என்பார்கள்‌. *அச்சுவை பெறினும்‌ வேண்டேன்‌”” என்று இருப்பார்கள்‌. நம்மாழ்வார்‌; ஸர்வேச்வரன்‌ யசோதையால்‌ உரலில்‌ கட்டுண்டு ஏங்கிய எளிவை அனுஸந்தித்தவுடன்‌ எத்திறம்‌!’” என்று ஆறு மாதம்‌: மோஹித்துக்‌ கிடந்தாரன்றோ. மறுபடியும்‌ ‘”பிறந்தவாறும்‌’என்று பரம புருஷனுடைய பிறப்பை அனுஸந்தித்து ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்‌ என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌கள்‌. அவனுடைய பிறப்பின்‌ பெருமையை அநிந்தவர்களை தீரர்‌கள்‌” என்றது வேதம்‌; அறியாதவர்களை :மூடர்கள்‌” என்றான்‌ கண்ணன்‌. *யோநிம்‌” என்றது ஸ்ருதி; *மாநுஷீம்‌ தநும்‌ ஆஸ்ரிதம்‌” என்‌றான்‌ மாதவன்‌. . அறிந்தவர்களை “பரிஜாநந்தி’ என்றது மறை; அறியாதவர்களை *அவஜாநந்தி’ என்றான்‌ அச்யுதன்‌.

எதற்காக இந்த அவதார ரஹஸ்யத்தை அறிகிறார்கள்‌? எனில்‌:(மரீசீநாம்‌ பதமிச்சந்தி வேதஸ:) சோதி மயமான நித்ய ஸூரிகளுடைய பரம பதத்தை அடைவதற்காக என்று சொல்லப்படுகிறது.(மாரீசீநாம்பதம்‌… வேதஸ:)’ நித்ய ஸூரிகளின்‌ நாடு: என்று சொன்ன
பின்‌ அப்ரதானமாக. ,புரம புருஷனுடைய தேசம்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.-நம்மாழ்வாரும்‌ “வானவர்‌ நாடு” என்றல்லவோ அருளிச் செய்தார்‌. , அவர்களிட்ட வழக்காயிருப்பதால்‌” அவர்‌களுடைய பரம பதம்‌ என்று உரைக்கப்படுகிறது. * வானவர்‌ நாட்டையும்‌” என்னுமிடத்தில்‌ வியாக்யானத்தில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ “குடியிருப்பாரோ பாதியாயிற்று பரம பதத்தில்‌ ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு(இருப்பு). ப்ராப்தி தேசம்‌ நித்ய ஸூரிகள்‌ இட்ட வழக்காயிருக்கும்‌.”‘என்று அருளிச் செய்தது இங்கு அனுஸந்திக்கத் தக்கது. அவதார
ரஹஸ்யத்தை அறிவதால் மோஷம் அடைவார்கள் என்பதை “ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌ யோ வேத்தி. தத்த்வத; த்யக்த்வா தேஹம்‌ புநர்‌ ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூநா ”[அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான ஜன்மத்தையும்‌ ‘சேஷ்டிதங்களையும்‌ இம் மாதிரியாக எவன்‌ உண்மையாக அறிகிறானோ அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மத்தை யடைவதில்லை.-என்னையே-அடைகிறான்‌.] என்று கீதாசார்யனால்‌.சொல்லப் பட்டது;-இம்மாதிரியான அவதார வைபவம்‌ மற்ற தேவதைகளுக்குக்‌ கிடையாது-

———–

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே
–4-
[எந்தப் பரம புருஷன்‌ நித்ய ஸூரிகளுக்காகப்‌’ பிரகாசிக்கிராரோ. எவர்‌ நித்ய ஸூரிகளுக்கு அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுப்‌பவரோ, எவர்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ முதல்‌வரா யிருக்கிறாரோ. பிரகாசிப்பவரும்‌, பர ப்ரம்ஹ ஸ்வரூபியுமான அவருக்கு நமஸ்காரம்‌.]இந்த மந்திரத்தில்‌ புருஷோத்தமன்‌ நித்ய ஸூரி நிர்வாஹகன்‌ என்னும்‌ விஷயம்‌ சொல்லப்படுகிறது.-இதையே வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌,
வானவராதியென்கோ? வானவர்‌ தெய்வமென்கோ?
வானவர்‌ போகமென்கோ? வானவர்‌ முற்றுமென்கோ?
‘” என்று திருவாய்மொழியில்‌ ‘ திருவாய் மலர்‌ந்தருளினார்‌.
(யோ தேவேப்ய ஆதபதி) எந்தப்‌ பரம புருஷன்‌ நித்ய ஸூரி களுக்காக ஆதியஞ்சோதி யுருவுடனும்‌, ஸமஸ்த கல்யாண குணங்களுடனும்‌ பிரகாசிக்கிறாரோ என்று சொல்லப்படுகிறது. ஜிதந்தே ஸ்தோத்ரத்திலும்‌, ‘பக்தாநாம்‌ த்வம்‌ ப்ரகாசஸே”” [பக்தர்களுக்காகவே நீ பிரகாசிக்கிறாய்‌] என்றல்லவோ சொல்லப் பட்டது. நம்மாழ்வார்‌-இதை வானவர்‌ தெய்வமென்கோ?” என்றார்‌. (யோ தேவாநாம்‌ புரோஹித:). எந்தப்‌ பரமாத்மா நித்ய ஸூரிகளுக்காக அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுக்கிறாரோ-அவர்களுக்கு உண்ணும்‌ சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமான பகவத் கைங்கர்யத்தைக்‌ கொடுக்கிறார்‌ என்று தாத்பர்யம்‌- “தத்‌; விப்ராஸோ விபந்யவோ” என்று சொல்லுகிறபடி பகவானைச்‌ சூழ்‌ந்திருந்தேத்துவதாகிற ப்ரஹ்‌மானந்தத்தை அவர்கள்‌ அநாதி காலமாக அனுபவிக்கிறார்கள்‌ -கைங்‌கர்யமே உண்மையான ஹிதம்‌; “இவ்வுலகிலுள்ள ஐஸ்வர்யங்களும்‌ ஹிதமல்ல. கைவல்ய நிஷ்டர்களுடைய ஆத்மாநுபவமும்‌ உண்மையான ஹிதமல்ல.. ப்ரகாரத்தளவில்‌ நிற்கும்‌ ஆத்மானுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்லும்‌ பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷமே ஹிதமெனத் தகுந்தது, சடகோபன்‌ இதை “வானவர்‌,போக மென்கோா? வானவர்‌ முற்றுமென்கோ?” என்று அருளினார்‌. (பூர்வோ…ஜாத:). எவர்‌ . நித்ய ஸூரிகளுக்கு முதல்வரா யிருக்‌கின்றாரோ. ‘வானவராதியென்கோ?” என்றார்‌ நம்மாழ்வார்‌. நித்ய ஸூரிகளுக்கு. நிர்வாஹகன்‌-அவர்களுடைய ஸத்தைக்கு (இருப்‌புக்கு) காரணமாயிருப்பவன்‌-அவர்கள்‌ நித்யராயிருக்கும் போது ஸத்தா ஹேதுவென்று எப்படிச்‌ சொல்லமுடியும்‌? அவர்‌களுடைய நித்யத்வம்‌ அவனுடைய நித்யேச்சையாலே இருக்கிற படியால்‌ அவர்களுக்கு ஸத்தா ஹேது வென்று சொல்லலாம்‌. இந்த இச்சை அழிந்தால்‌ நித்யத்வமும்‌ மாள வேண்டிவருமன்றோ?-(ருசாய) திவ்ய மங்கள விக்ரஹத்துடன்‌ ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படியான பரம புருஷ்னுக்கு. “ ஒளி மணி வண்ணன்‌ என்று சொல்லப்பட்ட அவனுடைய சோதி வடிவு இங்கு உணர்த்தப்படுகிறது.(ப்ராஹ்மயே நம🙂 பர ப்ரஹ்மமா யிருக்கும்‌ ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்‌.-நாராயணாய நம:‘ என்று த்‌வயத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப் படுகிறது. ப்ராஹ்மயே’ என்னுமிடத்தில்‌ நான்காம்‌ வேற்றுமையால்‌ கைங்கர்யம்‌ பிரார்த்திக்கப் படுகிறதென்றும்‌, “நம:
என்று “அந்தக்‌ கைங்கர்யத்தினால்‌ வரும்‌ ஆனந்தமும்‌ என்னுடையதல்ல; பகவானுடையதே’ என்று சொல்லப் படுகிறதென்றும்‌ கொள்ள வேண்டும்‌
. இந்த மந்திரத்திலுள்ள தேவ சப்தங்களை ப்ரஹ்மாதி தேவ பரமாகவும்‌ ஆசாரியர்கள்‌ பொருள் கொண்டுள்ளனர்‌-

———–

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

[பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ நித்ய ஸூரிகள்‌ புருஷோத்தமனுக்கெதிரில்‌ நம.” என்னும்‌ அச் சொல்லை உரைத்தனர்‌-ப்ரஹ்ம ஜ்ஞானியான ஓருவன்‌ உம்மை இப்படி அறிந்தானாகில்‌, அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருப்பார்கள்‌.](ருசம்‌ ப்ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா…) புருஷோத்தமனுடைய
ப்ரீதியை உண்டு பண்ணும்‌ தேவர்களான நித்ய ஸூரிகள்‌, அவ னுக்கு எதிரில்‌ “நம:* என்னும்‌ சொல்லைக்‌ கூறுகின்றனர்‌. இதிலிருந்து பகவானுடைய முகோல்லாஸத்திற்காகக்‌ கைங்கர்யம்‌ செய்‌யப்படுகிறதே யொழிய, நம்முடைய ஆனந்தத்திற்காக வல்ல என்று உணர்த்தப் படுகிறது. அவனுகக்கிறான் என்பதற்காக நாமுகந்து செய்ய வேண்டுமே யொழிய நம்‌ உகப்புக்காகக்‌ கைங்கர்யம்‌ செய்யலாகாது, நம:’ என்னும்‌ பதம்‌ “அஹமபி நமம பகவத ஏவாஹமஸ்மி””-[நானும்‌ எனக்குரியேனல்லேன்‌. பகவானுக்கே நான்‌ உரியவன்‌.] என்னும்‌ பொருளை யுடையதன்றோ. :நம இத்யேவ ‘வாதி,ந:”* [நம:”என்றே சொல்லுபவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌.] என்றல்லவோ சொல்லப்‌ பட்டிருக்கிறது. “பூயிஷ்டராம்‌ தே நம உக்திம்‌”” என்கிறபடி “நம:என்னும்‌ சொல்லை மிகப் பெரிதாக வன்றோ நினைத்து உகக்கிறான்‌ மாதவன்‌.-(யஸ்த்வைவம்‌…) எவன்‌ இம் மாதிரி பகவத் கைங்கர்யமே பரம புருஷார்‌த்தமென்‌ றிருக்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருக்கிறார்கள்‌. ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌,-“ஸ்வ பருஷமபி,வீக்ஷய பாச ஹஸ்தம்‌ வததி பம: கில’தஸ்ய கர்ண மூலே -பரிஹர மதுஸூதந ப்ரபந்நாரந் ப்ரபு,ரஹமந்‌ய ந்ருணாம்‌ ந வைஷ்ணவாநாம்‌””[யமன்‌ பாசத்தைக்‌ கையில் கொண்ட தன்‌ தூதனைப் பார்த்து, அவன்‌ காதினுள்‌ பின் வருமாறு சொல்லுகிறான் :-‘மதுஸூதனனை சரணமடைந்தவர்களை அணுகாதே. நான்‌ மற்றவர்களுக்கே பிரபு: வைஷ்ணவர்களுக்கல்ல.] என்றல்லவோ யமன்‌ கூறியதாகச்‌ சொல்லப்பட்டது.-திருமழிசையாழ்வாரும்‌,
திறம்‌ பேன்மின்‌ கண்டீர்‌ திருவடி தன்‌ நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌–இறைஞ்சியும்‌ சாதுவராய்ப்‌ போதுமின்களென்றான்‌ நமனும்‌ தன்‌ தூதுவரைக்‌ கூவிச்‌ செவிக்கு.-என்று இதையே அருளிச் செய்தார்‌.-தொண்டரடிப்பொடியாழ்வார்‌
“*நாவலிட்டுழி தருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று அருளிச்‌ செய்தார்‌. ‘-திருமங்கை யாழ்வாரும்‌ “வள்ளலே! உன்‌ தமர்க்‌ கென்றும்‌ நமன்‌ தமர்‌ கள்ளர் போல்‌” என்று அருளினார்‌. “என்‌ தமர்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்படார் காண்‌”” என்றும்‌, **நமன்‌ தமர்‌ என்‌ தமரை வினவப்‌. பெறுவாரலர்‌” என்றும்‌ அபயமளித்தான்‌ அச்யுதன்‌. பகவானைப்‌ பற்றினவுடன்‌ எத் தேவர்‌ வாலாட்டும்‌ ஓழியும்‌. “பிஞ்ஞகன்‌ தன்னோடும்‌ எதிர்‌வன்‌ அவன்‌ எனக்கு நேரான்‌’” [பிஞ்ஞகன்‌-சிவன்‌]என்றல்லவோ திருமழிசைப் பிரான்‌ அருளிச் செய்தார்‌.

————–

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-[உனக்கு பூமி தேவியும்‌, ஸ்ரீ தேவியும்‌ பத்நிகள்‌. பகலுமிரவும்‌ பக்கத்திலிருக்கிறார்கள்‌. உன்‌ உருவம்‌ -நக்ஷத்திரங்கள் போல்‌(ஒளியுள்ள தாய்‌) இருக்கிறது. அச்விநீ தேவர்கள் போல்‌(உம்முடைய திரு முகம்‌) அழகாயிருக்கிறது. இஷ்டத்தைக் கொடுக்கும்‌. இந்தக்‌ கைங்கர்யத்தைக்‌ கொடுக்கும்‌. எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.]முன்‌ இரண்டு மந்த்ரங்களிதும்‌ சொல்லப்பட்ட கைங்கர்யம்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமான சேர்த்தியிலேயே செய்யப்பட வேண்டும்‌ என்று கோஷிக்கிறது இந்த ருக்‌. இது வரையில்‌, விக்ரஹத்தாலும்‌, குணங்களாலும்‌, பரிகரங்களாலும்‌ பரம புருஷன்‌ நிர்ணயிக்கப் பட்டான்‌. புருஷ ஸூக்தத்தின்‌ கடைசி மந்த்ரமான இதில்‌ அவனுக்கே அஸாதாரணமான பிராட்டிகளைக் கொண்டு நிச்சயிக்கப்‌ படுகிறான்‌. பட்டரும்‌,“வேதாந்தா: தத்வ சிந்தாம்‌ முரபிதுராஸி யத் பாத,சிந்ஹைஸ் தரந்தி””[வேதாந்தங்கள்‌, முராரியின்‌ மார்பில்‌ எந்தப்‌ பிராட்டியின்‌ திருவடி யடையாளத்தைக் கொண்டே, பர தத்வ விசாரத்தை முடிக்கின்றனவோ] என்று இவ் விஷயத்தை அழகாக அருளிச்‌ செய்தார்‌-மேலும்‌,“ஈஷ்டே கச்சித்‌ ஜகத இதிய: பெளருஷே ஸுூக்த உக்த:தம்‌ ச த்‌வத்கம்‌ பதிமதி ஜகாவுத் தரச்சாநுவாக:’”[புருஷ ஸூக்தத்தில்‌ உலகத்திற்கெல்லாம்‌ நாயகனாகச்‌ சொல்லப்‌ பட்டவனை, உன்னுடைய (லக்ஷ்மியினுடைய) பதி யென்று உத்தரானுவாகம்‌ உத்கோஷித்தது.] என்றும்‌ அருளிச் செய்தார்‌. திருவின்‌ நாயகன்‌, நிலமகள்‌ நண்பன்‌, ஆயர் மடமகள்‌அன்பன்‌, அச்யுதனே இங்கு அறிவிக்கப் படுகிறான்‌, நமக்கு உபாயோபேயங்கள்‌ ஸ்ரீய:பதியே ஓழிய. ப்ரஹ்மசாரி நாராயணனல்ல என்னும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம்‌ இங்கு வெளியிடப்படுகிறது-(தே): உமக்கு.-

  1. தலைகளாயிரம்‌, கண்களாயிரம்‌, தாளன்களாயிரமுடைய உமக்கு.
  2. ஸகல சராசரங்களையும்‌ வியாபித்திருக்கும்‌ உமக்கு.
  3. “ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” எனப்படும்‌ உமக்கு.
  4. தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத உமக்கு.
  5. மோக்ஷத்திற்கு ப்ரபுவான உமக்கு.
  6. ஸ்ரீவைகுண்ட வாஸியான உமக்கு.
  7. அண்‌டத்தை உண்டாக்கின உமக்கு.
  8. நான்முகனைப்‌ படைத்த நாராயணனான உமக்கு.
  9. ப்ரக்ருதி மண்டலத்திற் கப்பால்‌ சோதி யுருவா யிருக்கும்‌ உமக்கு.
  10. நாம ரூபங்களைக்‌ கொடுத்தருளிய உமக்கு.
  11. ப்ரஹ்ம ருத்ரேந்த்ர்களால்‌ தியானிக்கப்படும்‌ உமக்கு.
  12. “உம்மை உபாஸிப்பதைத் தவிர வேறு மோக்ஷோபாயமில்லை” என்னும்‌ கீர்த்தி பெற்ற உமக்கு.
  13. பாற் கடலில்‌ பள்ளி கொண்ட பரமனாய்‌ அந்தர்யாமி யாயிருக்கு முமக்கு.
    14. பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமானா யிருக்கு முமக்கு.
  14. அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர்‌களால்‌ அடையப்படும்‌ உமக்கு. 16. ‘நித்ய ஸூரிகளுக்கு: நாதனாயும்‌,அவர்களால்‌ வணங்கப் படுபவனாயு மிருக்கும்‌ உமக்கு-இங்‌கு சொன்ன ஏற்றங்களுக்கெல்லாம்‌ மேலான ஏற்றத்தை அடுத்தபடியாகச்‌ சொல்லுகிறது. (ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச பத்ந்யெள) பூ தேவியும்‌,ஸ்ரீ தேவியும்‌ உமக்குப்‌ பத்னிகள்‌.-இரண்டாவது ‘சகார”த்தினால்‌ நீளா தேவியும்‌ உணர்த்தப் படுகிறாள்‌. ஆழ்வாரும்‌ ‘குழற் கோவலர்‌ மடப் பாவையும்‌ மண் மகளும்‌ திருவும்‌” என்று அருளினார்‌. ஆஸ்ரிதர்‌ குற்றத்தைப்‌ பொறுப்பிக்கும்‌ பிராட்டி; “குற்றம்‌ காண்பானென்‌? பொறுப்பானென்‌?” என்றிருக்கும்‌ ஸ்ரீ பூமிப் பிராட்டி; நப்பின்னைப்‌ பிராட்டி க்ஷ்மை தான்‌ ஒரு வடிவாயிருக்கும்‌-பெரிய பிராட்டியார்‌ இவனுக்கு ஸம்பத்தாயிருக்கும்‌; அது விளையும்‌ தரை (பூமி); அதனை அனுபவிக்கும்‌ போக்தாவாயிருக்கும்‌ நப்பின்னை;’? என்ற பெரிய வாச்சான் பிள்ளையின்‌ ஸ்ரீஸூக்தி இங்கு அனுஸந்திக்கத் தக்கது. :நகச்சிந்‌ நாபராத்‌,யதி’* [குற்றம்‌ செய்யாதவர்கள்‌ ‘ஒருவருமில்லையே. ]என்பாள்‌ ஸ்ரீதேவி. *குற்றமே இல்லையே’ என்று காணாக் கண்ணிட்‌டிருப்பாள்‌ பூமி தேவி. ‘“க்ஷமயா ப்ருதிவீ ஸம:’” [(ஸ்ரீராமன்‌) பொறுமையில்‌ பூமிக்கு ஸமானமானவன்‌.] என்றல்லவோ சொல்லப் பட்டது.-பூமிப் பிராட்டிக்கு நாம்‌ செய்யும்‌ குற்றங்களுக்கோர்‌ கணக்கில்லை.-அவள்‌ நமக்குச்‌ செய்யும்‌ நன்மைகளுக்கோ எல்லையில்லை. ‘ நாம்‌ உண்டாவதற்கு உதவுகிறாள்‌. நாம்‌ நடக்கும் போதும்‌ கிடக்கும்‌ போதும்‌ நம்மைத்‌ தாங்குகிறாள்‌. தாம்‌ உயிருடனிருப்பதற்கு வேண்டியவைகளைக்‌ கொடுத்துக்‌ காப்பாற்றுகிறாள்‌. நாம்‌ அதற்குப்‌ பதில்‌ அவளை வெட்டுகிறோம்‌; கூரிய ஆயுதங்களினால்‌ குத்திக்‌ கீறிக்‌ கிழிக்‌கிறோம்‌; மல ஜலாதிகளை விட்டு அசுத்தம்‌ செய்கிறோம்‌. பூமியின்‌ புத்ரர்களான நாம்‌ ஒருவர்க்கொருவர்‌ த்வேஷிப்பதன்‌ மூலமும்‌, தூஷிப்பதன்‌ மூலமும்‌ முக் கரணங்களாலும்‌ முடிவில்லாத துன்பங்கள்‌ செய்வதன்‌ மூலமும்‌ நம்‌ தாயாகிய பூமியைத்‌ துன்புறுத்துகிறோம்‌.-பொறுமையாகிய பாலை நமக்கு ஊட்டின தாயின்‌ வழி நாம்‌ நடக்க வேண்டாமா? பொறையின்‌ மக்கள்‌ குறை கூறலாமோ? பொறுமையில்‌ மிக்கவளாகையாலும்‌, பூமியில்‌ பிறந்து வளர்ந்த நமக்கு இஹ பர புருஷார்த்தங்களை அடையச்‌ செய்பவள்‌ இவளே யாகையாலும்‌ முதலில்‌ “ஹ்ரீ:’ என்று பூமி தேவி சொல்லப் பட்டாள்‌. தேச பக்தி யென்‌பது தாயிடம்‌ அன்பே. ஆனால்‌ அந்த மாதவியோ மாதவனுடையவள்‌-அவளிடம்‌ பத்தி யென்று பெயர் பூண்டு அவனியாள்‌ நாதனின்‌ ஆஜ்ஞைகளை மீறுகிறார்கள்‌ சிலர்‌. பூமி தேவி அவர்களைப்‌ பொறுக்‌காமல்‌ பாரமாகவே கருதுவாள்‌. புருஷோத்தமனிடமிருந்து பூமியைப்‌ பிரிப்பவர்கள்‌ தகப்பனை விட்டுத் தாயைப்‌ பிரிப்பவர்களாகக்‌ கருதப்‌ படுவார்கள்‌. பிராட்டியை பகவானை விட்டுப்‌ பிரித்த ராவணன்‌ தலை யறுப்புண்டான்‌; பிரிக்கப் பார்த்த : சூர்ப்பணகை மூக்கறுப்புண்‌டாள்‌” என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்திக்கத் தக்கது.

(லக்ஷ்மீ:) திவ்ய லக்ஷணங்கள்‌ பொருந்தியவளாதலால்‌ :லக்ஷ்மி” என்று கீர்த்தி பெற்றிருக்கிறார்‌ பெரிய பிராட்டியார்‌- தேவர்‌,” மனுஷ்‌யர்‌ முதலிய எல்லாராலும்‌ பிரார்த்திக்கப் படுபவளாதலால்‌ ‘லக்ஷ்மி’ என்றுரைக்கப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.-பகவானுக்கு ஜ்ஞானனந்தாதி குணங்களைப் போல்‌ ஸவரூப நிரூபக பூதையா யிருப்பவள்‌.-மற்ற எல்லா மஹிஷிகளுக்கும்‌ தலைவியா யிருப்பவள்‌. ஜீவர்களுககெல்லாம்‌ புருஷகாரமா யிருப்பவள்‌. உலகிலுள்ள ஐஸ்வர்யங்களை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீதேவி. ஐஸ்வர்யங்கள்‌ எட்டு வகைப்‌ படும்‌:- 1-தங்கம்‌, வெள்ளி முதலியவைகள்‌ (தன லக்ஷ்மி). 2. தான்‌யங்கள்‌ (தான்ய லக்ஷ்மி). 3-புத்ர பெளத்ராதிகள்‌(ஸந்தான லக்ஷ்மி),4, ரத கஜ துரக பதாதிகளை யுடைய ராஜ்ய லக்ஷ்மி-5-வீர்ய (பராக்ரம) லக்ஷ்மி, 6. விஜய லக்ஷ்மி. 7. துஷ்டி, புஷ்டி முதலியவற்றைத் தரும்‌ ஸெளபாக்ய லக்ஷ்மி. 8, மோக்ஷ லக்ஷ்மி. இவற்றை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீ தேவி.

(ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச) ஸம்பத்தாயிருப்பவள்‌ ஸ்ரீதேவி; ஸர்வ ஸம்பத்துகளுக்கும்‌ விளை நிலமாயிருப்பவள்‌ நிலமகள்‌. பெருமை யுடையவள்‌ பூமகள்‌; பொறுமை யுடையவள்‌ பூ தேவி. குணமுடையவள்‌ ஸ்ரீதேவி;மணமுடையவள்‌ மண்‌ மடந்தை. கோஷிப்பிப்பவள்‌ ஸ்ரீதேவி; போஷிப்பவள்‌ பூமி தேவி. அழகுடையாள்‌ இலக்குமி; புகழமுடையாள்‌ பூ தேவி. ஆதரமுடையவள்‌ அலர் மேல் மங்கை; ஆதாரமானவள்‌ அவனியாள்‌.

(பத்ந்யெள) இப்படிப்பட்ட கீர்த்தியை யுடைய இவர்கள்‌ .பரம புருஷனுக்குப்‌ பத்னிகள்‌ என்று உரைக்கப்படுகிறது. “பதிம் நயதி “என்னும்‌ வ்யுத்பத்தியின்படி ஸர்வேஸ்வரனைக்‌ கண் காட்டிய இடத்‌தில்‌ காரியம்‌ செய்யச் செய்பவள்‌ என்று பொருள் கொள்ளலாம்‌.
**யஸ்யாவீக்ஷ்ய முகம்‌ ததிங்கித பராதீநோ விதத்தேகி,லம்‌” [எந்தப்‌ பிராட்டியின்‌ முகத்தைப்‌ பார்த்து அவளுடைய முக பாவத்திற்கு வசப்‌பட்டு ஸர்வேஸ்வரன்‌ எல்லாவற்றையும்‌ செய்கிறானோ…]என்றல்‌லவோ ஆழ்வான்‌ அருளினார்‌. ‘ப்ரஜைகளை பகவானிடத்தில்‌ அழைத்‌துச்‌ செல்லுபவள்‌’ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌-இதனால்‌ இவ்‌விருவரும்‌ புருஷகாரமா யிருக்கிறார்களென்று அறிவிக்கப் படுகிறது.

“லஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி,ஷ்டா பரமர்ஷிபி,:’”? [லக்ஷ்மி புருஷகாரம்‌ (சிபார்சு) செய்பவள்‌ என்று பரம ரிஷிகளால்‌ நிர்ண யிக்கப்பட்டிருக்கிறாள்‌.] என்ற பாஞ்சராத்ர வசனம்‌ இங்கு அனு ஸந்திக்கத் தக்கது; பூதேவியும்‌ புருஷகாரத்வத்தை உடையவளென்‌பது * விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா…தயா ஹதேந பாபேந கச்சாமி பரமாம்‌ கதிம்‌” [விஷ்ணுவினால்‌ (திரிவிக்ரமாவதாரத்தில்‌) அளக்கப்‌ பட்ட பூமியே… அவளால்‌ பாபம்‌ நீங்கினவனாகி பரம பதத்தை அடைகிறேன்‌.] என்று வேதத்தில்‌ சொல்லப்பட்டது. “*பத்யுர்‌ நோ யஜ்ஞ ஸம்யோகே” என்கிற பாணினி ஸூத்ரத்தின்படி ஆஸ்ரிதர்களை
ரக்ஷிப்பதாகிற யஜ்ஞத்தில்‌ ஸஹ தர்ம சாரிணியா யிருப்பவள்‌ என்றும்‌ பத்னீ சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஹ்ரீ:” என்‌ று லஜ்ஜைக்கு அபிமானி தேவதை; :லக்ஷ்மீ:” என்று ஐஸ்வர்யத்துக்கு அபிமானி தேவதை’” என்றார்‌ வித்யாரண்யர்‌.

எவ்வுலகத்திலி ருப்பவரும்‌, எம்மதத்திலி ருப்பவரும்‌ விரும்பும்‌ இஹ புருஷார்த்தங்கள்‌ தனம்‌, தான்யம்‌, ஸெளக்யம்‌ என்பவையே யாம்‌. இவைகளைக்‌ கொடுப்பவர்கள்‌ ஸ்ரீபூமி நீளா தேவிகளே. இவர்கள்‌ மூவருக்கே :ஸ்ரீஸூக்தம்‌” *பூஸூக்தம்‌” ‘நீளா ஸூக்தம் ’ என்று மூன்று ஸூக்தங்கள்‌ வேதத்தில்‌ படிக்கப் பட்டிருக்கின்‌றன. இவைகள்‌ நாராயண ஸூக்தத்திற்குப்‌ பின்‌ விவரிக்கப்படும்‌, ஸ்ரீஸூக்தம்‌ லக்ஷ்மியைச்‌ சொல்லுவதென்பதை சைவர்களுட்பட எல்லோரும்‌ ஓப்புக் கொள்ளுகிறுர்கள்‌. ஸ்ரீதேவியினால்‌ கொடுக்கப்‌ படும்‌ ஐஸ்வர்யங்களும்‌, பூமியில்‌ விளையும்‌ நவதான்யங்களும்‌, காய்‌ கனிகளும்‌, அதிலிருக்கும்‌ மண்‌, நீர்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனும்‌ பஞ்ச பூதங்களுமில்லாமல்‌ மனிதர்களோ மற்ற பிராணிகளோ உயிருடனிருக்க முடியுமோ? இஹ லோக ஸுக ஸாதனங்களான நெய்‌, பால்‌, தயிர்‌, உண்ணும்‌ சோறு, பருகுநீர்‌, தின்னும்‌ வெற்றிலை முதலிய பதார்த்தங்களை விரும்பாதார்‌ யாவரே இவ் வுலகிலுள்ளார்‌?இந்த ஸ்ரீஸூக்த, பூஸூக்த, நீளா ஸூக்தங்களைப்‌ படிப்பதனால்‌ இஹ லோக புருஷார்த்தங்களெல்லாவற்றையும்‌ அடையலாம்‌. இவற்றைத்‌ தருவதுடன்‌ நில்லாமல்‌ பரம புருஷார்த்தமாகிய பகவத்‌ கைங்கர்யத்தையும்‌ பரந்தாமனுடைய பத்னிகள்‌ கொடுக்கிறார்கள்‌-புருஷோத்தமன்‌ தன்‌ பத்னிகள்‌ மூலமாக இவற்றைத்‌ தருகிறான்‌.

(அஹோராத்ரே பார்ஸ்வே) ‘பகலுமிரவும்‌ பரந்தாமன்‌ பக்கத்‌தில்‌ இப் பத்னிகளிருக்கிறார்கள்‌. அகலகில்லேன்‌ இறையும்‌ என்றிருக்‌கிறார்கள்‌. நம்மாழ்வாரும்‌, உடனமர்‌ காதல்‌ மகளிர்‌ திருமகள்‌ மண்‌மகள்‌ ஆயர்‌ மடமகள்‌ என்றிவர்‌ மூவர்‌‘” என்றும்‌, “நிழல்‌ போல்வனர்‌”‘ என்றும்‌ அருளிச்செய்தார்‌. எதற்காக இப்படி இருக்கிறார்களென்றுல்‌:
“சஞ்சலம்‌ ஹி மந:’* [மனது சஞ்சலமானது.] என்றும்‌, “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும்‌ சொல்லுகிறபடியே சேதனர்கள்‌ மிகவும்‌ நிலை யற்ற நெஞ்சை யுடையவர்களாதலால்‌, அவர்களுக்கு பகவத்‌ விஷயத்தில்‌ ருசி ஏற்பட்டவுடன்‌ அவர்களை பகவானிடம்‌ சேர்த்து
விட வேண்டும்‌ என்றே அச்யுதனின்‌ அருகிலிருக்கிறார்கள்‌. மேலும்‌, இருவருமான சேர்த்தியே உத்தேச்யம்‌. *தேவிமாராவர்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட் செய்வார்‌’” என்று நித்யஸூரிகளும்‌ இவர்களுடைய சேர்த்தியில்‌ ஏவினதை எடுத்துக்‌ கை நீட்டுபவர்களென்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அவர்கள்‌ ஏவலைக் கேட்பதே பரமானந்தமாகும்‌.-சேஷனான இளைய பெருமாள்‌ :க்ரியதாமிதி மாம்‌ வத;’”[செய்யப்படட்டும்‌ என்று என்னை ஆஜ்ஞாபிப்பாயாக.] என்று இதையே விரும்பினர்‌.““ரமமாணா வநே த்ரய:‘”[மூவரும்‌ வனத்தில்‌ ரமித்தார்கள்‌,] என்று சொல்லப்பட்டபடி ஜீவன்‌, எம்பெருமான்‌, பிராட்டி என்னும்‌ மூவர்‌களுடைய சேர்த்தியே பரஸ்பரம்‌ ஆனந்தத்தைத்‌ தருவதாகும்‌.-ஸீதா ராமர்களுக்குப்‌ பரஸ்பர ஸம்ஸ்லேஷத்தினா லேற்படும்‌ ஸந்‌ தோஷம்‌, இளைய பெருமாளுக்கு (லக்ஷ்மணனுக்கு) இருவருமான சேர்த்தியை ஸேவிப்பதனால்‌ ஏற்பட்டதன்றோ. இங்கு பிராட்டிகளும்‌ பகவானும்‌ வெவ்வேறு தத்வங்கள்‌ என்பதும்‌ காட்டப்படுகிறது.

“ராமஸ்ய தக்ஷிணே பார்ஸ்வே பத்‌மா ஸ்ரீஸ்ஸம வஸ்த்திதா- ஸவ்யே து ஹ்ரீர்‌ விசாலாக்ஷ”[ராமனுடைய வலது புறத்தில்‌ தாமரையாளாகிற ஸ்ரீதேவி இருந்‌
தாள்‌; இடது புறத்தில்‌ விசாலமான கண்களை யுடைய பூதேவி இருந்தாள்‌.] என்னும்‌ ஸ்ரீராமாயண வசனத்தாலும்‌“தரணீ தேவீ தஷிணேதரகா ததா [பூமிதேவி இடது புறத்திலிருப்பவள்‌.| என்‌னும்‌ பாத்ம புராண வசனத்தினாலும்‌ இந்த மந்திரம்‌ . விவரிக்கப்‌ பட்டது. இத்தால்‌ ‘திருவில்லாத்‌ தேவரைத்‌ தேறேன்மின்தேவு”” என்று திருமழிசை யாழ்வாரால்‌ சொல்லப்பட்டபடி, மற்ற தெய்வங்களிற்‌ காட்டிலும்‌, மாதவனின்‌ மேன்மை உரைக்கப்பட்டது. மற்றிருந்தீர்‌ கட்கறியலாகா மாதவனென்பதோர்‌ அன்பனாகிய அச்யுதனுக்கு “தே,வ்யா காருண்ய ரூபயா”” என்று ப்ரஸித்தமடைந்த வேரி(வாஸனை) மாறாத பூமேலிருப்பவளான ஸ்ரீதேவியும்‌, மாதவியாகிய பூதேவியும்‌ பத்னிகளாயிருந்து கொண்டு சேதனர்களை ஸ்ருஷ்டிக்கும்படியும்‌,மோக்ஷத்தை அடையும்படியும்‌ செய்கிறார்கள்‌. இம் மூவரும்‌ சேர்ந்து கொண்டு ஒருவர்க்கொருவர்‌ சேதனரிடம்‌ அன்பு காட்டுவதில்‌ போட்டி போடுகிறார்கள்‌, “தன்னடியார்‌ திறத்தகத்துத்‌ தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌ என்னடியார்‌ அதுசெய்‌யார்‌ செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ என்பர் போலும்‌
என்று அருளிச் செய்தார்‌ பெரியாழ்வாரும் -இம் மாதிரியாக பரனுக்கே ஸ்ரீ, பூமி, நீளா என்று மூன்று பத்னிகள்‌ பரத்வாவஸ்தையிலும்‌ இருப்பதாகச்‌ சொல்லப்பட்டது.-அவர்‌ புத்ரனான பிரமனுக்கும்‌ ஸரஸ்வதி, காயத்ரி, ஸாவித்ரி என்று மூன்று பத்னிகளிருப்பதாக அறிகிறோம்‌. அவருடைய பேரனாகிய ஸுப்ரஹ்மண்யனுக்கும்‌ வள்ளி, தேவ ஸேனை என்று இரு பத்னிகளிருப்பதாகப்‌ புராணங்களில்‌ பேசப்பட்டிருக்கிறது.-புருஷோத்தமனுடைய விபவாவதாரங்களிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌ அஷ்ட மஹிஷி களுடனிருந்தது எல்லோரும்‌ அறிந்ததே.-யாஜ்ஞ வல்க்யர்‌ இரண்டு பத்னிகளை யுடைவரென்பது வேத ப்ரஸித்தம்‌. வைஷ்ணவ ஆசார்ய ஸ்ரேஷ்‌டர்களான பட்டர்‌, நஞ்சியர்‌, நம்பிள்ளை என்னும்‌ இம் மூவரும்‌ இரண்டு பத்னிகளை உடையவர்களென்று படித்திருக்கிறோம்‌.இப்படி புண்ய பூமியாகிய பாரத தேசத்தில்‌ நாம்‌ வணங்கும்‌ தெய்வமும்‌; ரிஷிகளும்‌, ஆசார்யர்களும்‌ அனேக பத்னிகளை உடையவர்களாக இருந்திருக்‌கிறார்கள்‌. ஸ்ம்ருதிகளிலும்‌ பல தாரங்களை மணம்‌ செய்து கொள்ளப்‌ புருஷர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பல கோடிக்‌ கணக்‌
கான வருஷங்களாக இருந்து வரும்‌ இவ் வழக்கத்தை கிறிஸ்தவ மதக்‌ கொள்கையைக்‌ காரணமாகக் கொண்ட ஐரோப்பியரின்‌ அனுஷ்‌டானத்தைக் கொண்டு மாற்ற சட்டம்‌ ஏற்படுத்தப்‌ பார்க்கிறார்கள்‌-அப்படிச்‌ செய்வது நமது நாட்டுக்கும்‌ அதன்‌ மக்களுக்கும்‌ அதில்‌ வழங்கி வரும்‌ மதங்களுக்கும்‌ பெருத்த தீங்காகும்‌.

(நக்ஷத்ராணி ரூபம்‌) உம்முடைய .. திரு வுருவம்‌ நக்ஷத்ரங்கள்‌ போல்‌ அழகா யிருக்கிறது. ஆதித்யனைப் போன்ற ஒளியை யுடையவன்‌ என்று முன்‌ சொன்னதில்‌ த்ருப்தி யில்லாமல்‌ கணக்கற்ற நக்ஷத்‌ரங்களைப் போல்‌ அழகியதா யிருக்கிறது உன்‌ சோதி யுருவம்‌ என்று சொல்லப்படுகிறது. சங்க சக்ரங்கள்‌, திவ்யாபரணங்கள்‌, ஹிரண்யவர்ணையான பிராட்டி பீதாம்‌பரம்‌ முதலியவைகளுடன்‌- கூடிய திவ்ய மங்கள விக்ரஹம்‌ நக்ஷத்ரங்களுடன்‌ கூடிய நீல மேகம் போல்‌ விளங்குகிறதன்றோ-“தாரா ரூபாணி த்‌ருஸ்யந்தே யாந்யேதாநி நபஸ் ஸ்தலே மம ரூபாணி தாந்யேவ”[ஆகாயத்தில்‌ காணப்படும்‌ நக்ஷத்ர ரூபங்களெல்லாம்‌ என்னுடைய உருவங்களே.] என்று மஹா பாரதத்தில்‌, ஆரண்ய பர்வத்தில்‌ பகவான்‌ மார்க்கண்டேயரைக்‌ குறித்துச்‌ சொன்ன வசனத்தை அனுஸரித்து நக்ஷத்ரங்கள்‌ பகவானுடைய சரீரங்களே என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (அச்விநெள வ்யாத்தம்‌) அழகில்‌ மிக்க உம்முடைய திருமுக மண்டலம்‌ அச்வினீ தேவர்கள் போல்‌ விளங்குகிறது. “அழகனே! காப்பிட வாராய்‌”” என்றார்‌ பெரியாழ்வார்‌. கண்டவர்‌ தம்‌ மனம்‌ வழங்கும்‌ அழகுடையவனன்றோ இவன்‌. அச்வினீ தேவர்‌களைக் காட்டிலும்‌ அழகிய உருவமுடையவர்‌ லீலா விபூதியில்‌ இல்‌லாமையால்‌ இவர்கள்‌ உபமானமாகச்‌ சொல்லப் பட்டனர்‌. இவர்‌களும்‌ பகவானுடைய திருமுக மண்டலத்திற்கு ஓப்பாகார்கள்‌.

பட்டரும்‌-ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில்‌ ““விஹரது மயி ரங்கிரணச் சூலிகா ப்‌ரமரக திலகோர்த்‌வ புண்ட்‌ரோஜ்ஜ்வலம்‌ முகம ம்ருத தடாக சந்த்‌ராம்பு,ஜஸ்மர ஹரசுசி முக்‌த,மந்த;ஸ்மிதம்‌’”-[திருமுடி, திரு நெற்றியில்‌ அலையும்‌ திருக் குழல்‌, திலகம்‌, திருமண்‌காப்பு, இவற்றால்‌ பிரகாசிப்பதும்‌, அம்ருத தடாகம்‌, சந்திரன்‌,தாமரைப் பூ, இவற்றின்‌ கர்வத்தைப்‌ போக்கடிப்பதும்‌, வெண்மையான, அழகிய புன் முறுவலை உடையதுமான ஸ்ரீரங்கநாதனுடைய முகம்‌ என்னிடம்‌ விஹாரம்‌ செய்யக் கடவது என்று பகவானுடைய திரு முகத்தை ஓப்பற்றதாக வன்றோ பேசினார் -இதற்கு மேல்‌ வேத புருஷன்‌, இப் புருஷ ஸூக்தத்தை அனுஸந்‌தித்தவர்களுக்கு இஹ லோக புருஷார்த்தங்களையும்‌, பகவத் கைங்கா்‌யத்தையும்‌ கொடுக்கும்படி புருஷோத்தமனைப்‌ பிரார்த்திக்கிறான்‌.-இங்கு கைங்கர்ய ப்ரார்த்தனை செய்யப் படுகிறதென்பது கருணைக் கடலான பெரியவாச்சான் பிள்ளையால்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ அருளிச் செய்‌யப்பட்டது. (இஷ்டம்‌ மநிஷாண) இவர்கள்‌ விரும்பின எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ கொடும்‌. இதனால்‌ ப்ரயோஜனாந்தர பரராக மாட்டார்களோ என்ற ஸந்தேஹம்‌ எழுகிறது. புருஷோத்தமனிடம்‌ மற்ற பலன்களை நமக்காக விரும்பினால்‌ ப்ரயோஜனாந்தர பரராவோம்‌. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இவ் வுலகிலுள்ள எல்லா ஸம்ருத்திகளும்‌ உண்டாக வேண்டும்‌ என்று பிரார்த்திப்பது தோஷ மன்று. ஆழ்வார்‌களும்‌ ‘நன் மக்களைப்‌ பெற்று மகிழ்வரே” என்றும்‌, “நல்ல பதத்தால்‌ மனை வாழ்வர்‌ கொண்ட பெண்டிர்‌ மக்களே’” என்றும்‌, “விடுமால்‌ வினை வேண்டிடில்‌ மேலுலகும்‌ எளிதாயிடும்‌ அன்றி இலங்கொளி சேர்‌ கொடு மா கடல்‌ வையகம்‌ ஆண்டு மதிக்குடை மன்னவராய்‌ அடி கூடுவரே'” என்றும்‌ அருளிச் செய்தனரன்றோ.(அமும்‌ மநிஷாண) முன்‌ மந்திரங்களில்‌ சொல்லப்பட்ட கைங்‌கர்யம்‌ ‘அமும்‌’ என்று காட்டப்படுகிறது. நித்யஸூரிகள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌ கொடும்‌; பரம புருஷார்த்தமாகிற பகவதநுபவத்தைக்‌ கொடுப்பீராக. பிராட்டியும்‌ நீருமாயிருக்கிற சேர்த்தியில்‌ அடிமையை அருளுவீராக. (ஸர்வம்‌ மநிஷாண) எல்லாவற்றையும்‌ கொடும்‌. வேண்டிற்றெல்லாம்‌ தருபவனன்றோ தாமோதரன்‌-“சாய் கொண்ட இம்மையும்‌ சாதித்து வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்ளென்று வீடும்‌ தரும்‌ நின்று நின்றே”என்றார்‌ நம்மாழ்வார்‌.

இந்த ருக்கில்‌ அச்யுதனுடைய அன்பெனும்‌ அவியா விளக்கை ஸ்ரீ பூமிகள்‌ தூண்டுகிறார்களென்றும்‌, புருஷோத்தமன்‌ அன்பு மயமானவனென்றும்‌, சோதி வடிவானவனென்றும்‌; அழகமா் சூழொளிய னென்றும்‌ சொல்லப் பட்டது-“ஸர்வம்‌ ஐகந் மம பவேதிதி ஸஞ் சிந்தயந்‌ முநி: த்‌யாயேத்‌ புருஷ ஸூக்தேந ப்ரதி பாத்‌,ய ஜநார்த்தநம்‌ விஷ்ணு: புருஷ ஸூக்தார்த்த, இதீயம்‌ வைதிகீ ஸ்ருதி: புருஷஸ்ய ஹரேஸ்‌ ஸூக்தம்‌ ஸர்‌வ பாப ப்ரணாசநம்‌”[“இவ் வுலகெல்லாம்‌ எனக்காகட்டும்‌” என்று நினைத்துக் கொண்டு, முனியானவன்‌, புருஷ ஸூக்தத்தினால்‌ ஜனார்த்தனனைச்‌ சொல்லி, தியானிக்கக் கடவன்‌.-விஷ்ணுவே புருஷ ஸுூக்தத்தினால்‌ சொல்லப்‌ படுபவனென்று வேதத்தில்‌ உரைக்கப் பட்டது. ஹரியாகிற புருஷ, னுடைய ஸூக்தம்‌ எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிப்பது.] என்று கார்க்க செளநக மஹ ரிஷிகளால்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனைச்‌ சொல்லுவதென்று உரைக்கப் பட்டது. போதாயனரும்‌,““அதைநம்‌ ருக்‌,யஜுஸ் ஸாமபி,ஸ்‌ ஸ்துவந்தி த்‌ருவ ஸூக்தம்‌ ஜபித்வா புருஷ ஸூத்தம்‌ ச அந்யாம்ச்ச வைஷ்ணவாந் மந்த்ராந்‌”*(இத்த நாராயணனை, த்ருவ ஸூக்தத்தையும்‌, புருஷ ஸூக்தத்தையும்‌ மற்ற வைஷ்ணவ மந்திரங்களையும்‌ ஜபித்து, ருக் யஜுஸ் ஸாம வேதங்‌களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்கிறார்கள்‌.] என்று விஷ்ணுவினுடைய ஆராதனத்தில்‌ புருஷ ஸூக்த ஜபம்‌ செய்ய விதித்திருக்கிறார்‌.“ஏஷா வைஷ்ணவீ நாம ஸம்ஹிதா, ஏதாம்‌ ப்ரயுஞ்ஜந்‌ விஷ்ணும்‌ ப்ரீணாதி”[இது விஷ்ணுவினுடைய நாம ஸம்ஹிதை; இதை ப்ரயோகிப்பவன்‌
விஷ்ணுவை ப்ரீதி யடையச்‌ செய்கிறான்‌.] என்று ஸாம விதி ப்ராஹ்மணத்தில்‌ சொல்லப் பட்டது. ஆதர்வணத்திலும்‌, கோ பத ப்ராஹமணத்தில்‌, ‘“வைஷ்ணவ்யா புருஷ ஸூக்தம்‌’” என்று உரைக்கப்பட்டது.

புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம்‌ ஸ்வர்க்‌யம்‌ தந்யம்‌ யசஸ்கரம்‌…ஸ்ருதிஷு ப்ரப,லா மந்த்ராஸ்‌ தேஷ்வப்யத்‌,யாத்ம வாதி: தத்ராபி பெளருஷம்‌ ஸூக்தம்‌ ந தஸ்மாத்‌, வித்‌யதே பரம்‌”[புருஷனாகிய ஹரியின்‌ ஸூக்தம்‌ ஸ்வர்க்கத்தைத்‌ தருவது; மேலானது; கீர்த்தியைக்‌ கொடுப்பது. வேதங்களில்‌ மந்த்ரங்கள்‌ மேலானவை? அவைகளிலும்‌ பரமாத்மாவைச்‌ சொல்லுபவை சிறந்‌தவை. அவற்நிலும்‌ புருஷ ஸூக்தம்‌ பெருமை வாய்ந்தது. அதைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை.] என்று செளநக ஸ்ம்ருதியில்‌ புருஷ ஸூக்தத்தின்‌ பெருமை பேசப்பட்டது. வியாஸ ஸ்ம்ருதியிலும்‌,“ந விஷ்ண்வாராத நாத்‌ புண்யம்‌ வித்‌யதே கர்ம வைதிகம்‌ . தஸ்மாத,நாதி, மத்‌,யாந்தம்‌ நித்யமாராத,யேத்‌ ஹரிம்‌ தத்‌; விஷ்ணோரிதி மந்த்ரேண ஸுக்தேந பெளருஷேண ச நைதஸ்ய ஸத்‌,ருசோ மந்த்ர: வேதே,ஷூக்தச்‌ சதுர்ஷ்வபி”[விஷ்ணுவை ஆராதிப்பதைக் காட்டிலும்‌ புண்யமான வைதிக கர்மம்‌
கிடையாது. ஆகையால்‌ :*தத்‌; விஷ்ணோ: பரமம்‌ பத;ம்‌’” என்னும்‌ மந்‌திரத்தாலும்‌, புருஷஸூக்தத்தாலும்‌, ஆதி மத்யாந்தமில்லாத ஹரியை தினந்தோறும்‌ ஆராதிக்கக் கடவன்‌. இதற்கு ஸமானமான மந்திரம்‌ நான்கு வேதங்களிலும்‌ சொல்லப் படவில்லை.] என்று உத்கோஷிக்‌ கப்பட்டது. விஷ்ணு ஸ்ம்ருதியிலும்‌, “வாஸுதேவம்‌ ஸமர்ச்சயேத்‌::…[வாஸு தேவனை அர்ச்சனை செய்ய வேண்டியது. ] என்று ஆரம்பித்து“ஏவமப்‌யர்ச்ய து ஜபேத்‌ ஸூக்தம்‌ வை பெள்ருஷம்‌ தத:””[இம்மாதிரி ஆராதித்து புருஷ் ஸூக்தத்தை ஜபிக்க வேண்டியது.] என்று சொல்‌லப்பட்டது. வாதூல ஸூூத்ரத்தில்‌. “யத்ர யத்ர கர்ம ப்ரேஷோ ஜாயதே தத்ர தத்ர புருஷம்‌ த்‌யாயந் புருஷ ஸூக்தம்‌ ஜபே தர்ச்சயேத்‌ பூர்ணத்வாத்‌ புருஷ:”” [கர்ம ப்ரம்சம்‌ உண்டாகும் போது, புருஷனை தியானித்து,புருஷ் ஸூக்தத்தை ஜபித்து ஆராதிக்க வேண்டியது; . பூர்ணானாகை’யால்‌ புருஷனெனப்படுகிறான்‌.] என்று.புருஷ ஸூக்தத்தின்‌ சிறப்பு சொல்லப் பட்டது. இம் மாதிரியாகப்‌ பல்லாயிரக்கணக்கான இடங்‌ களில்‌ புருஷ ஸூக்தத்தில்‌ ப்ரதிபாதிக்கப் படுமவன்‌ நாராயணனே என்று சொல்லப் பட்டிருக்கிறது.

இதிஹாஸ புராணங்களிலும்‌ பல பல விடங்களில்‌. இது பகவத் பரமென்று பேசப் பட்டிருக்கிறது.’ ஸாரமான சிலவற்றை எடுத்துக்‌ காட்டுவோம்‌. : மஹாபாரதத்தில்‌,மோக்ஷதா்மத்தில்‌,“ப;ஹவ: புருஷா ராஜந்‌ உதாஹோ ஏக ஏவது।கோஹ் யத்ர புருஷ: ச்ரேஷ்ட்ட,: கோ வா யோநிரிஹோச்யதே॥”[ப்ராஹ்மணரே! புருஷர்கள்‌ பலரா? அல்லது ஒருவனா?(பலரானால்‌)இவர்களுள்‌ எந்தப்‌ புருஷன்‌ மேலானவன்‌? எவன்‌ மற்றவர்களுக்கு காரணமாயிருப்பவன்‌?] என்று ஜனமேஜயர்‌ வைசம்பாயனரை வினவினார்‌.-வைசம்பாயனரும்‌ தாம்‌ சொல்லப் போகும்‌ விஷயம்‌ அதி ரஹஸ்யமானதாகையால்‌ தன்‌ குருவான வியாஸரை நமஸ்கரித்து,“ப,ஹவ: புருஷா ராஜ்‌ ஸாங்க்‌,ய யோக,விசாரிணாம்‌.। நைத திச்ச,ந்தி புருஷம்‌ ஏகம்‌ குரு குலோத்‌,வஹ।’ பாஹுநாம் புருஷாணாஞ்ச யதை,கோ யோ நிருச்யதே |ததா தம்‌ புருஷ வ்யாக்‌,ரம்‌ வ்யாக்‌,யாஸ்யாமி கு.ணாதி,கம்‌ ॥ இத,ம்‌ புருஷ ஸுக்தம்‌ ஹி ஸர்வ வேதே,ஷு பார்த்திவ | ருதம்‌ ஸத்யம்‌ ச விக்‌,யாதம்‌ ருஷி ஸிம்ஹேந சிந்திதம்‌ |”-(குருகுல ச்ரேஷ்ட்டனான அரசனே! ஞானிகளும்‌. யோகிகளும்‌ புருஷர்‌கள்‌ பலரென்ற நிர்ணயித்திருக்கிறார்கள்‌. ஒரு புருஷன்‌ என்பதை அவர்கள்‌ அங்கீகரிக்க மாட்டார்கள்‌. பல புருஷா்களுக்கும்‌ காரண மானவனும்‌, குணங்களில்‌ சிறந்தவனுமான புருஷ ச்ரேஷ்டனைச்‌ சொல்லுகிறேன்‌. ரிஷி ச்ரேஷ்ட்டரால்‌ ஸாஷாத் கரிக்கப்பட்ட இந்தப்‌ புருஷஸூக்தம்‌ எல்லா வேதங்களாலும்‌ உண்மையை உணர்த்துவது என்று கீர்த்தி பெற்றிருக்கிறது- என்று அத்வைத நிரஸனம்‌ செய்து புருஷ் ஸூக்தமே காரண புருஷனைக்‌ கூறுகிறது என்று உரைத்து,புருஷோத்தமன்‌ யாரென்பதை நிர்ணயம்‌ செய்ய ப்ரஹ்மாவுக்கும்‌ ருத்ரனுக்கும்‌ நடந்ததான பின் வரும்‌ ஸம்பாஷணையைச்‌ சொன்னார்‌:-

முன்‌ ஒரு காலத்தில்‌, பாற்கடலின்‌ நடுவிலுள்ள வைஜயந்த மென்னும்‌ பர்வதத்தில்‌ பிரமன்‌ தவம்‌ செய்து கொண்டிருக்கும்‌ போது, சிவபிரான்‌, ‘தன்‌ தகப்பனான பிரமனை அடி பணிந்து பல புருஷர்களை ஸ்ருஷ்டி செய்யும்‌ நீர்‌ எந்தப் புருஷனை தியானிக்கிறீர்‌? என்று கேட்டார்‌. அதற்கு பிரமன்‌’ஸ்ருணு புத்ர யதரா ஹ்யேஷ புருஷ: சாஸ்வதோவ்யய:…ந ஸ ஸக்யஸ்‌ த்வயா த்‌,ரஷ்டும்‌ மயாந்யைர் வாபி ஸத்தம…மமாந்தராத்மா தவ ச யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஜிதா:…விஸ்வ மூர்த்த, விஸ்வ பு,ஜ: விஸ்வ பாதாஷி நாஸிக:…மஹா புருஷ சப்‌தம்‌ ஸ பிபர்த்யேகஸ்‌ ஸநாதந:…ஸஹி நாராயணோ ஜ்ஜேய: ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ.””[குழத்தாய்‌! நித்யனானவனும்‌, அழிவற்றவனுமான புருஷனைப் பற்றிக்‌ , கேட்பாயாக.-அவனை உன்னாலும்‌, என்னாலும்‌, எவராலும்‌ காண முடியாது. அவன்‌ உனக்கும்‌ எனக்கும்‌, எல்லோருக்கும்‌ அந்தர்‌யாமி, அவன்‌ முடிகளாயிரம்‌, அடிகளாயிரம்‌, கைகளாயிரம்‌, கண்‌களாயிரமுடையவன்‌. பழைமையான அவனே மஹா புருஷ சப்தத்தை வஹிக்கிறான்‌. அவனை நாராயணனென்று அறிவாயாக;-ஸர்வாந்தர்‌யாமியான அவனன்றோ புருஷன்‌.] என்று புருஷ ஸூக்தத்தால்‌ சொல்லப் படுபவன்‌ பரமாத்மாவான நாராயணனே என்று தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. விஷ்ணு புராணத்தில்‌ துருவன்‌ இவ் விஷயத்தை விளக்கினான்‌. மேலும்‌, ஹரி வம்சத்தில்‌ கைலாஸ யாத்ரையின் போது ருத்ரன்‌, உமையுடன்‌ கூடி யிருந்து கை கூப்பி, பகவானைக் குறித்து,-ஸஹஸ்ர சீர்ஷா புருஷஸ்‌ ஸஹஸ்ராக்ஷஸ்‌ ஸஹஸ்ர பாத்‌ ஸஹஸ்ரோதர பாஹுச்ச ஸஹஸ்ராத்மா திவஸ்பதி:….”முதலிய ஸ்லோகங்களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்ததாலும்‌ புருஷ ஸூக்தம்‌ பேச நின்ற சிவனுக்கு நாயகனான நாராயணனையே சொல்லுகிறதென்று ஸித்திக்கிறது. மோக்ஷதர்மத்தில்‌ முப்பத்து மூன்றாவது’ அத்யாயத்தில்‌ பீஷ்மரை யுதிஷ்டிரன்‌ .-நாராயணம்‌ ஹ்ருஷீகேசம்‌ கோவிந்தம் அபராஜிதம்‌ தத்‌வேந பரத ஸ்ரேஷ்ட்ட, ஸ்ரோதுமிச்ச,ரமி கேஸவம்‌”[பரத குலத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரே! ஐயிக்கப்படாதவனும்‌, கோவிந்தன்‌, ஹ்ருஷீகேசன்‌, கேசவன்‌ என்னும்‌ பெயர்களை யுடையவனுமான நாராயணனை உண்மையாக அறிய விரும்புகிறேன்‌-என்று கேட்க,கேசவோ பரத ஸ்ரேஷ்ட்ட, பகவாநீஸ்வர: ப்ரபு: புருஷஸ்‌ ஸர்வமித்யேவ ஸ்ரூயதே பஹுதா விபு : ப்‌ராஹ்மணாநாம்‌ சதம்‌ ஜ்யேஷ்ட,ம்‌ முகாதஸ்யாஸ்‌ ருஜத் ப்ரபு,:”[பரத ஸ்ரேஷ்ட்டனே! ப்ரபுவும்‌, பகவானுமான கேசவனே ஸர்வேசஸ்வரன்‌, ஸர்வ வ்யாபியான அந்தப்‌ புருஷனே எல்லாமென்று பலவிதமாகச்‌ சொல்லப் படுகிறான்‌. ப்ரபுவான இவனே முகத்திலிருந்து உயர்ந்தவர்களான நூறு ப்ராஹ்மணார்களை ஸ்ருஷ்டித்தான்‌.] முதலிய ஸ்லோகங்களாலும்‌ இவ் விஷயம்‌ நன்கு விளக்கப்பட்டது.-ராமாயணத்திலும்‌, பாகவதத்திலும்‌, கீதையிலும்‌, மற்ற புராணங்‌களிலும்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனையே பரமாத்மா வென்று உத்‌கோஷிக்கிற தென்பது சொல்லப்பட்டது. இதைப்‌ பன்னியுரைக்குங்‌கால்‌ பாரதமாம்‌. ஆதலால்‌ இத்துடன்‌ நிறுத்திக் கொள்கிறோம்‌.

கூரத்தாழ்வான்‌ ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்‌-*யம்‌ பூத பவ்ய பவதீ சமநீ சமாஹு: அந்தஸ் ஸமுத்‌ர நிலயம்‌ யமநந்தரூபம்‌ யஸ்ய த்ரிலோக ஜநநீ மஹிஷீ ச லக்ஷ்மீ: ஸாக்ஷாத்‌ ஸ ஏவ புருஷோஸி ஸஹஸ்ர மூர்த்தா ஸர்வ ஸ்ருதிஷ்வநுக;தம்‌ ஸ்திரம ப்ரகம்ப்பம்‌ நாராயணாஹ் வயத,ரம்‌ த்‌வமிவாந வத்‌யம்‌ ஸூக்தம்‌ து பெளருஷ மசேஷ ஜகத் பவித்ரம்‌ த்வாமுத்தமம்‌ புருஷமீச முதாஜஹார”[முக் காலங்களிலுள்ள வற்றிற்கு ஈசனென்றும்‌, தனக்கொரு ஈசன் இல்லாதவனென்றும்‌, பாற் கடலில்‌ பள்ளி கொண்டவனென்றும்‌,அபரிமிதமான அவதார ரூபங்களை யுடையவனென்றும்‌, மூவுலகிற்கும்‌ தாயாகிய லக்ஷ்மியைப்‌ பத்னியாக வுடையவனென்றும்‌ சொல்லப்‌ பட்ட நீயே ஆயிரம்‌ தலையை யுடைய புருஷனாகிறாய்‌. உன்னைப்‌ போல்‌, எல்லா ஸ்ருதிகளிலும்‌ உத்கோஷிக்கப் பட்டதும்‌, நிலையானதும்‌, அசைக்க முடியாததும்‌, ‘நாராயணம்‌’ என்ற பெயரை யுடையதும்‌, குற்றமற்றதும்‌, உலகை யெல்லாம்‌ புனிதமடையச் செய்வதுமான புருஷ ஸூக்தம்‌, உன்னையே மேலான புருஷனாகவும்‌, ஈஸ்வரனாகவும்‌ சொல்லிற்று.] எனறு புருஷ ஸூக்தத்தின்‌ பெருமையையயும்‌, பொருளையும்‌ ஸங்க்ரஹித்தார்‌.-பெரியவாச்சான்பிள்ளையும்‌ திருவாய்‌ மொழி வியாக்யானத்தின்‌ கடைசியில்‌ ”ஸ்ரீமானான நாராயணானே ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ என்று இவர்க்குப்‌ பஷமென்னுமிடம்‌ தோற்றிற்று. இவ்வர்த்தம்‌ உபநிஷத்‌ ப்ரஸித்தமும்‌;-அநந்ய பரமான நாராயண அநுவாகத்திலே, நாராயண சப்தத்தாலே ஸர்வாதிகனைச் சொல்லி, ‘ஹ்ரீச்ச தே லக்ஷமீச்ச பத்ந்யெள’*? என்று உத்தர நாராயணத்தே சொல்லிற்று” என்று அருளிச் செய்தார்‌.

இந்தப்‌ புருஷ ஸூக்தத்தில்‌, ஸ்ரீ பூமி நாதனான நாராயணனே பராத் பரனென்றும்‌, அவனே நான்முகளைப்‌ படைத்தானென்றும்‌,அவனே ஸர்வ காரண பூதனென்றும்‌, ஸர்வாந்தர்யாமி யென்றும்‌, லோக ஸம்ரக்ஷணார்த்தம்‌ பல அவதாரங்களைச்‌ செய்தானென்றும்‌, நித்ய விபூதி நாயகனென்றும்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. புருஷ ஸூக்தம்‌ என்னும்‌ பெயரிலிருந்தே ஸ்தோதாவாகிய ஜிவாத்மா உண்டென்றும்‌, ஸ்தவ ப்ரியனாகிய மஹா புருஷன்‌ உண்டென்றும்‌, ஸ்தோத்ரமும்‌ உண்‌மை யென்றும்‌ உணர்த்தப்படுகிறது. ஜ்ஞாதா,
ஜ்ஜேயம்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ மூன்று இல்லை என்று சொல்லும்‌ அத்வைத வாதம்‌ இங்கு ஓப்புக் கொள்ளப் படவில்லை. உலகம்‌ பொய்‌ யென்கிற ப்ரம வாதத்திற்கு, இங்கு விவரமாகச்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தில்‌ இடமுண்டோ? பரம புருஷனுக்கு ஆயிரம்‌ கண்‌கள்‌, ஆயிரம்‌ தலைகள்‌ என்றும்‌, ஆதித்ய வர்ணமானவனென்றும்‌, நக்ஷத்ரங்கள் போல்‌ உருவமுடையவனென்றும்‌, அச்வினீ தேவர்கள்‌ போல்‌ அழகானவனென்றும்‌ சொல்லப்பட்டதால்‌ ரூபமில்லை என்னும்‌ வாதம்‌ வீண் வாதமென்று விளங்குகிறது. “சேதனர்கள்‌, நித்யர்‌,முக்தர்‌, பத்தர்‌ என்று மூன்று விதமானவர்களென்றும்‌, மோக்ஷத்தைக்‌ கொடுப்பவன்‌ முகுந்தவனே என்றும்‌ காட்டப்படுகிறது. காலமும்‌ வருங்காலம்‌, நிகழ்காலம்‌, கழிகாலம்‌ என்னும்‌ மூன்று பேதத்தை உடையதென்று தெரிகிறது. புருஷோத்தமனுடைய மஹிமை வாக்குக்‌கும்‌ மனத்திற்கும்‌ எட்டாததென்று அறிவிக்கப்படுகிறது. புருஷோத்தமன்‌ ஸமஸ்த கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனென்றும்‌, ஹேய குணம்‌ சிறிதும்‌ இல்லாதவனென்றும்‌, ஸுலபமாக ஆராதிக்கத்‌ தக்கவனென்றும்‌ உத்கோஷிக்கப்பட்ட திலிருந்து குண மில்லை என்‌னும்‌ கட்சிக்குக்‌ கொஞ்சமும்‌ இடமில்லை. ப்ரக்ருதிக்கு அப்பாற்‌ பட்டதும்‌, “விஷ்ணோர்‌ யத்‌ பரமம்‌ பதம்‌” என்றும் சொல்லப்பட்டதுமான ஸ்தான விசேஷம்‌ இருக்கிறதென்றும்‌, அதை அடைவதே மோக்ஷமென்றும்‌ விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. பகவத்‌ கைங்கர்‌யமே பரம புருஷார்த்தமென்றும்‌ அதுவும்‌ இருவருமான சேர்த்தியில்‌ செய்யப் படவேண்டும்‌ என்றும்‌ சொல்லும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்‌தம்‌ ஓப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. விசிஷ்டாத்வைதமே, வேதாந்‌தத்தின்‌ விழுப்பொருள்‌ என்னும்‌ ஸித்தாந்தம்‌ ஸ்தாபிக்கப்பட்டது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading