ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ வேதங்களும் –ஸ்ரீ அருளிச் செயல்களில் வேத பத பிரயோகங்கள் —

“ஸஹஸ்ரசீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ராபாத்” என்று எம்பெருமானைப் பற்றி புருஷஸுக்தமானது (தைத்ரியோ உபநிஷத்) தெரிவிக்கிறது

ஆழ்வார் தானும் எம்பெருமானைத் “தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களாயிரத்தாய் தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய் தமியனேன் பெரியவப்பனே” (8.1.10) என்று பாடியுள்ளார்.

——

பலவிதமாக எம்பெருமானை நிரூபணம் செய்த உபநிஷத்து பகவான் ரஸஸ்வரூபம் என்றும் நிரூபிக்கிறது.  (ரஸோ வை ஸ:) இந்தக் கருத்தை விளக்கும் காலத்தில் ரஸத்தை அடைந்து அநுபவித்தால் தான் ஆனந்தம் உண்டாகிறது என்றும் உபநிஷத்து கூறுகின்றது.  (ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தீ பவதி) ரஸஸ்வரூபமாக எம்பெருமானைச் சொல்வது எம்பெருமானுடைய போக்யத்வத்தை வெளியிடுகிறது.

எம்பெருமானை அனுபவிப்பதால் ஏற்படும் ஆனந்தம் நித்தியமானது நிரதிசயமானது.  அருங்கரும்பினை கனியை, அமுதப் பொதியின் சுவையும் (பெரிய திருமொழி 7-10-1), பாலும் தேனும் கன்னலும் அமுதுமாகி (திருவாய்மொழி 4-3-10) என்றும் எம்பெருமானை அனுபவிக்கிறார்கள். அம்ருதமாக எம்பெருமானை அனுபவிக்கும் ஆழ்வார்கள் வேத சம்பந்தத்தோடு அந்த அமிருதத்தை அனுபவிக்கிறார்கள்.  வேதியர் முழுவேதத் தமிர்தத்தை (நம்மாழ்வார் 2-5-4), அந்தணர்தம் அமிர்தத்தினை (பெரியாழ்வார் 5-4-11), நால்வேதக் கடல் அமுதத்தை (பெரியாழ்வார் 4-3-11) என்று வேத சம்பந்தத்தோடு எம்பெருமானை அமிருதமாக அனுபவிக்கின்றனர்.  அமிருதம் கடலைக் கடைந்து எடுக்கப் பட்டது.  அவ்விதமே வேதமாகிற கடலிலிருந்து எம்பெருமானாகிய அமிருதம் கடைந்து எடுக்கப் பட்டது என்று கூறுகிறார்.

———–

அன்னப்பக்ஷி உருவத்திலும் ஹயக்ரீவ உருவத்திலும் பகவான் உபதேசம் பண்ணுகிறான் என்று புராணங்கள் கூறுகின்றன.  ஆழ்வார்களும் அதைப் பின்பற்றியே பேசுகிறார்கள்.

(அன்னமாய் அங்கு அன்று அருமறை பயந்தான் [பெரியதிருமொழி 5-7-3] அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை [112-1-107])

                   அவ்விதமே ஹயக்ரீவ அவதாரம் பண்ணி உபதேசம் செய்ததையும் ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றார்கள்.  பரம்பின கலைகளை உடைத்தான நால்வகைப் பட்டுள்ள வேதங்களுடைய அர்த்தத்தையெல்லாம் ஹயக்ரீவ மூர்த்தியாய் அருளிச் செய்தான் என்று திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார்.  (“பன்னு கலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாய் அருளிய எம்பெருமான் காண்மின்” 7-8-2.)

மக்களில் பெரும்பாலோர் நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவார்களேயொழிய தமக்கு ஆன்மீக ஞானம் இல்லையே என்று குறைபடுவதில்லை.

அதனாலேயே கண்ணபிரான் உலகமெல்லாம் அறியும்படி அர்ச்சுனனை வ்யாஜமாக்க்கொண்டு पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् என்று பார்த்தனுக்குமட்டுமல்லாமல், அறிவினால் தமக்கு குறைவு இருக்கிறது என்ற ஞானமும் இல்லாத உலக மக்களுக்கு நெறியெல்லாம் சொல்லி பகவத் கீதையை அவர்கள் உஜ்ஜீவிக்க உபதேசித்தான். அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.– திருவாய்மொழி 4.8.6

————-

read over good books in vacation– vibgyor — -violet indigo blue green yellow orange red –infra red ultraa violet-கீழும் மேலும் பார்க்கும் சக்தி கண்ணுக்கு இல்லை
20-20000 hz -கீழும் மேலும் கேட்க முடியாதே
பார்ப்பான் –அனைத்தும் பார்க்கும் தன்மை உள்ளவன் பஸ்யகன் காஸ்யபோ பவதி -மாற்றி பெயர் வைத்தாராம்-முதல் seer -ஜீயர் காஸ்யப முனிவர்
ரிஷிகள் தெய்வீக கண்ணால் பார்த்து கேட்டு வேதங்களை வெளியிட்டார்கள்–மந்த்ர த்ரஷ்டா ரிஷிகள் -மனனம் பண்ணி முனி -வெளியிட்டு கவி -நம்மாழ்வாரே ரிஷி முனி கவி
ஸாஸ்த்ர யோனித்வாத் -ஸநாதன தர்மம் -அறம் பொருள் இன்பம் வீடு நான்கு புருஷார்த்தங்களுக்கும் வழிகள் சொல்லும் வேதம்-அநாதி அபவ்ருஷேயம்

வேதம் கொண்டே ஸ்ருஷ்ட்டி -வேத ஒலி -ப்ரவாஹ நித்யத்வம் –அத்யயனம் பண்ணி வேதம் படித்தவரை ரக்ஷிப்பதே வேத ரக்ஷணம்
பிரமனுக்கு மீண்டும் நாராயணன் உபதேசித்து -முன் போலவே அதே வரிசையில் சொல்லும்படி
பழமை வேதம் -இளமை யும் வேதம் -கிருத யுகம் போல் கலியுகத்திலும் ஓதுகிறோம்-

யதா யதா ஹி –தர்ம ஸம் ஸ்தாபன அர்த்தமாக தானும் அவதரித்து -ரிஷிகள் ஆழ்வார்களும் அவதரிப்பிக்கிறான்

ஸநாதன தர்மம் -அனைத்து ஜீவர்களும் வாழ வைக்க வந்தது -கோழிகளுக்கும் காலையில் கூவ
இது ஒன்றுமே எங்கும் நிறைந்து இருந்ததால் தனியாக பெயர் வைக்க வேண்டாம்
கிமு 1300-egypt மித்ரா வருணன் சாக்ஷியாக agreement
mexio -விநாயகர் சிலை australiya நெற்றிக் கண் தரித்து சிவா நாட்டியம் பழங்குடி மக்கள்
thaaland திருப்பாவை திருவெம்பாவை மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்
மரம் இரண்டு பறவை -ஜீவன் சரீரம் பரமாத்மா -adam eve -தத்வம் இல்லாமல் கதையை மட்டும் எடுத்து
வேற மதங்கள் ஸ்தாபித்த பின்பு ஸநாதன தர்மத்தை ஹிந்து பெயர் அப்புறம் வந்தது –சிந்து நதி -கடந்து உள்ளோர் வந்து வைத்த பெயர் -moon போல் ஸாத்விகம் என்பர்

பால காண்டம் 25-17- ராஜ்ய ஏஷ தர்மம் சதானதன் -அரசன் பிரஜைகளை குழந்தைகளைப் போல் ரக்ஷிப்பதே தர்மம்
அயோத்யா காண்டம் 21-48-பிதுர் அப்பா சொல்படி நடப்பது சனாதன தர்மம்
4-138 மனு ஸ்ம்ருதி சத்யம் பிரியம் பேசுவது சனாதன தர்மம்
விஷ்ணு தர்மம் -ஷமா சத்யம் தமம் தூய்மை தானம் இந்திரிய நிக்ரஹம் அஹிம்சா குரு சிஷ்ருஷா தீர்த்த யாத்திரை தயா ஆர்ஜவம்
லோப சூன்யத்வம் தேவ பூஜை பொறாமை படாமல் வாழ்வது உயர்ந்த தர்மம்
ஞான தானமே உயர்ந்த தானம் -மனு-அனைவருக்கும் எப்பொழுதும் பொருந்தும்

——–

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் எம்பெருமானுடைய அபிநவ தசாவதாரமாகப் போற்றப் படுகிறார்கள்.
எம்பெருமானிடம் அடங்காக் காதல் கொண்டு, பல படிகளில் அவனை அனுபவித்து தங்கள் பாசுரங்களில் அவர்கள் பேசுகிறார்கள்.
தன்னையே தான் பாடும் நோக்கத்தோடு எம்பெருமான் ஆழ்வார்களாக அவதாரம் செய்துள்ளான்.
அவனுடைய பெருமையை அவனால் தான் வெளியிட முடியும்.
எம்பெருமானின் ஸ்வரூப, ரூப, குண, விபூதி, ஐச்வர்ய லீலைகளை அனுபவிக்கப் புகுந்த ஆழ்வார்கள்
இவ்வித அனுபவத்தை தாரக, போஷக, போக்யங்களாக கொண்டுள்ளார்கள்.
அதனால் அவர்களுடைய ஜன்ம விருத்தாந்தங்கள் தனிச் சிறப்போடு விளங்குகின்றன.
அவர்களுடைய பகவதனுபவம் தான் தோன்றியாக அமையவில்லை.
வேதம் போன வழியிலேயே அவர்களுடைய அனுபவம் செல்வது அவர்களின் அருளிச் செயல்களுக்கு தனிச் சிறப்பைத் தருகிறது.

நம்மாழ்வாருடைய அருளிச் செயல்களை ஆழ்ந்து அவகாஹித்துப் பேசும் மதுரகவியாழ்வார்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்,
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்……என் நெஞ்சுள் நிறுத்தினான் (கண்ணினுண் சிறுத்தாம்பு 8-9) என்றருளிச் செய்கிறார்.
இங்கு அருமை வாய்ந்த மறையின் பொருளை அருள் கொண்டு இன் தமிழால் பாடினான் என்று அருளிச் செய்வது
வேத பிராமாண்யத்தில் ஆழ்வாருக்கு உள்ள பிராவண்யத்தைத் தெரிவிக்கின்றது.
வேதத்தின் உட்பொருள்களை “நெஞ்சுள் நிறுத்தினான்” என்பதும் வேதத்தில் உள்ள ஈடுபாட்டைத் தெரிவிக்கின்றது

சுத்தமான வைதிக மார்கத்தை அவர்கள் பின்பற்றினார்கள்.
“மிக்க வேதியர்” “நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்” (மதுரகவியாழ்வார்)
“ மிக்கார் வேத விமலர்” (திருவாய்மொழி 2-9-8) என்ற சொற்றொடர்கள் அழகான கருத்தை வெளியிடுகின்றன.

“வேதநூல் ஓதுகின்றது உண்மை அல்லதில்லை மற்று உரைக்கின்றேன் “ என்று திருமழிசைப்பிரான் (72) ஸ்பஷ்டமாக இதை அருளிச் செய்கிறார்.
இவ்விதம் வேதப் பிரமாண்யத்திலும், வேத மார்கத்திலும் நிஷ்டர்களாக இருந்து ஆழ்வார்கள் பேசுவது
வேதத்தின் பெருமையை பல வழிகளிலும் உணர்ந்து இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
இதைத் திரு வுள்ளத்தில் கொண்டு பெரிய ஜீயரும் ஆத்யஸ்யந: குலபதே; என்ற ஸ்ரீஸூக்திக்கு “வைதிக ஸந்தான கூடஸ்தர்” என்று பொருள் சொல்லுகிறார்.
நம்மாழ்வாரை வைதிக ஸந்தான கூடஸ்தராக அனுபவிப்பதில் தனி ஆனந்தத்தைக் காண்கிறார்.

எம்பெருமானைத் தங்களுடைய சிந்தனையில் கற்பிக்கப்பட்டவனாகக் கொள்ளாமல்
வேதியர் முழு வேதத்தின் அமிர்தமாக அநுபவிப்பது வேதியர் வேதம் இவர்கள் இடத்திலுள்ள ஆதராதிசயத்தை தெரிவிக்கிறது.
மறையோர் மறையோர் செஞ்சொல் (பெரிய திருமொழி) லின் கருத்து மறைகளுக்குள்ள பெருமையை வெளியாக்குகிறது.

(யதோ வாசோ நிவர்தந்தே) ஆழ்வார்களும் இந்த வழியில் நின்றே இறைநிலை உணர்வரிது என்று கூறுகிறார்கள்.
வேதங்களும் எம்பெருமானைப் பூரணமாகச் சொல்ல முடியாது என்ற கருத்தை மனதில் கொண்டு
திருமங்கை ஆழ்வாரும் நான்மறையும் தொடராத பாலகனாய் என்றும் (4-1-8)
நான்மறைகளும் தேடிக் காணமாட்டாச் செல்வன் (4-8-7) என்று குறிப்பிடுகிறார்

வேதம் தானாக விளங்குவது அதற்குள்ள தனிச் சிறப்பு.  இந்தப் பெருமையை அனுபவிக்கும் நம்மாழ்வார் “சுடர்மிகு சுருதி” என்று குறிப்பிடுகிறார்,
பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்றி உத்தரோத்தர உச்சார்யமாணத்வத்தை அடிப்படையாகக் கொண்டு சுருதி என்று சொல்லப் படுகிறது.
சுடர் என்ற சொல் பிரகாசம் என்ற பொருளைக் கொண்டிருப்பதால் ஸம்சய விபரியயங்களறக்
கருத்துக்களை வேதங்கள் வெளியிடுவது குறிப்பிடப் படுகிறது.
சுருதியின் ஒளி மங்கா ஒளி.-எம்பெருமான் வேத விளக்கு–வேதம் ஸ்வத: ப்ரமாணமானது.

மறையாய் விரிந்த விளக்கை (8-9-4)
வேத நல்விளக்கை (4-3-8) (திருமங்கை மன்னன் )–
வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (பெரியாழ்வார் 4-3-11)
நந்தா விளக்கு என்ற சொற்றொடர் வேதத்தைக் குறிப்பிடுவதாக பெரிய ஜீயர் உள்ளிட ஆசார்யர்கள்
திருவுள்ளம் பற்றுவதற்கு எம்பெருமான் வேத விளக்காக விளங்குவதே காரணம்.

பகவான் போல் அநாதி யானது வேதம்.  பிரளய காலத்தில் வேதம் மறைந்து விடுகிறது.
மறுபடியும் ஸ்ருஷ்டிக்கும் காலத்தில் பகவான் ப்ருஹ்மாவிற்கு அதை உபதேசம் பண்ணுகிறான் என்று இதிஹாஸ புராணங்கள் கூறுகின்றன.
அன்னப் பக்ஷி உருவத்திலும் ஹயக்ரீவ உருவத்திலும் பகவான் உபதேசம் பண்ணுகிறான் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆழ்வார்களும் அதைப் பின்பற்றியே பேசுகிறார்கள்.

(அன்னமாய் அங்கு அன்று அருமறை பயந்தான் [பெரியதிருமொழி 5-7-3]
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை [112-1-107])

அவ்விதமே ஹயக்ரீவ அவதாரம் பண்ணி உபதேசம் செய்ததையும் ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றார்கள்.
பரம்பின கலைகளை உடைத்தான நால்வகைப் பட்டுள்ள வேதங்களுடைய அர்த்தத்தையெல்லாம்
ஹயக்ரீவ மூர்த்தியாய் அருளிச் செய்தான் என்று திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார்.
(“பன்னு கலை நால் வேதப் பொருளை யெல்லாம் பரி முகமாய் அருளிய எம்பெருமான் காண்மின்” 7-8-2.)

மறையில் கூறப்படும் பொருள்களாக பகவான் ஆகிறான்.

பகவான் வேதத்தைப் பார்த்துத் தான் அந்தந்த பதார்த்தங்களைப் படைக்கிறான்.
ஸத் ரூபமாயும் அஸத் ரூபமாயும் உள்ள பதார்த்தங்கள் நிறைந்த உலகத்தை வேதத்தைக் கொண்டு தான் படைத்தான் என்று வேதமே கூறுகிறது.
மனுவும் இந்த வழியிலேயே நின்று பேசுகிறார்.-வேதசப்தேப்ய ஏவாதௌ ப்ருதக் ஸம்ஸ்தாஞ்ச நிர்மமே
ஆக உலகப் பொருள்களெல்லாம் வேதத்தில் சொல்லப் பட்டவைகள் தான்

(பன்னு நான்மறை பலப் பொருளாகிய 3-1-2,
எழில் வேதப் பொருள்களுமாய் 4-1-2) என்று திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார்.
ஒவ்வொரு பொருளிலும் அந்தர்யாமியாக பகவான் இருந்து வருவதால் எல்லாப் பொருள்களும் பகவானாகவே ஆகின்றன.
இதையும் வேத சம்பந்தத்தோடு ஆழ்வார்கள் அநுபவிக்கிறார்கள்.

வேதப் பிரதிபாத்யத்துவம் எம்பெருமானுக்கு தனி யேற்றத்தைக் கொடுக்கிறது.
நித்யமாயும் நிர் தோஷமாயும் உள்ள வேதத்தின் பெருமையை உணர்ந்த ஆழ்வார்கள்
எம்பெருமானுக்குள்ள வேத பிரதி பாத்யத்துவத்தைப் பெருமையுடன் பேசுகிறார்கள்.
எம்பெருமான் மறையின் பெரும் பொருள் என்று பேசுகிறார்கள்.

ஏலு மறைப் பொருளே (பெரியாழ்வார் 1-9
வேதப் பொருளே 2-9)
நான் மறையின் பொருளாய் (நாச்சியார் திருமொழி 1-4-10),
சாம வேத கீதன் சக்கரபாணி (14) வேத கீதன் (117) (திருமழிசைப்பிரான்),
நங்கோது நால் வேதத்திலுள்ளான் (மூன்றாம் திருவந்தாதி11)
நால் வேதத்திலுள்ளான்(31)
மறைப் பெரும் பொருளை (திருமங்கை ஆழ்வார் 4-3-2)
அங்கமாறு வேத நான்குமாகி நின்று அவற்றுளே தங்குகின்ற தன்மையாக (15 திருச்சந்த விருத்தம்)
மறையாய நால் வேதத்திலுள்ள மலர் சுடரே (திருவாய்மொழி 3-1-10).
இவ்விதம் எம்பெருமானை வேதப் பிரதிபாத்யனாகச் சொல்லி ஆழ்வார்கள் அநுபவிப்பதைப் பார்க்கிறோம்.

வேத முதல்வன்:
வேதங்களில் பல பொருள்கள் சொல்லப் படுகின்றன. இவையெல்லாம் உருவமுள்ளவை.
ஸ்ருஷ்டி காலத்திலேயே இவை உருவைப் பெறுகின்றன.  எம்பெருமான் ஒரு உருவத்தை எடுத்துக்கொண்டு முதலில் ஸ்ருஷ்டிப்பதால்
அவன் படைப்பின் ஆரம்ப காலத்தில் முதல்வனாக நிற்கிறான் என்று வேதமே கூறுகிறது. (ப்ரதமஜா ருதஸ்ய)
இதையும் ஆழ்வார்கள் மனதிற்கொண்டு வேத முதல்வன் என்று எம்பெருமானை அநுபவிக்கிறார்கள்.
வேத முதல்வனை (திருவாய்மொழி 3-5-5)
வேத முதல்வர் (நாச்சியார் திருமொழி 1-10-2).
வேத சம்பந்தத்தோடு எம்பெருமானை அநுபவிப்பதில் இதுவும் ஒரு வழி.

(ரஸோ வை ஸ🙂 இந்தக் கருத்தை விளக்கும் காலத்தில் ரஸத்தை அடைந்து அநுபவித்தால் தான் ஆனந்தம் உண்டாகிறது என்றும் உபநிஷத்து கூறுகின்றது.
(ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தீ பவதி) ரஸ ஸ்வரூபமாக எம்பெருமானைச் சொல்வது எம்பெருமானுடைய போக்யத்வத்தை வெளியிடுகிறது.
ஞான நிஷ்டையில் நின்று எம்பெருமானை சிலர் அறிந்து கொண்டால் போதுமென்று நினைக்கிறார்கள்.
எம்பெருமானை அனுபவிக்க சிலர் விரும்புகிறார்கள்.  ஆழ்வார்கள் எம்பெருமானை அனுபவிக்க முற்பட்டு நிற்கின்றனர்.
பலவழிகளில் எம்பெருமானுடைய போக்யத்வத்தை வெளியிடுகிறார்கள்.
எம்பெருமான் சத்திய, ஞான, அனந்த, ஆனந்த, அமல, ஸ்வரூபனாக இருப்பது போல் ரஸ ஸ்வரூபமாக இருப்பது
அவனுடைய அனுபவத்தில் ஈடுபடச் செய்கிறது.  இந்த வழியில் இறங்கிய பக்தர்கள் எந்தெந்த வஸ்துக்கள்
போக்கியமாக உலகத்தில் காணப்படுகின்றனவோ அந்தந்த வஸ்துக்களாக எம்பெருமானை அனுபவித்துப் பேசுகிறார்கள்.
உலக வஸ்துக்களை அனுபவித்தால் ஏற்படும் ஆனந்தம் அநித்தியமானது, குறைவுள்ளது.
ஆனால் எம்பெருமானை அனுபவிப்பதால் ஏற்படும் ஆனந்தம் நித்தியமானது நிரதிசயமானது.

அருங்கரும்பினை கனியை, அமுதப் பொதியின் சுவையும் (பெரிய திருமொழி 7-10-1),
பாலும் தேனும் கன்னலும் அமுதுமாகி (திருவாய்மொழி 4-3-10) என்றும் எம்பெருமானை அனுபவிக்கிறார்கள்.
அம்ருதமாக எம்பெருமானை அனுபவிக்கும் ஆழ்வார்கள் வேத சம்பந்தத்தோடு அந்த அமிருதத்தை அனுபவிக்கிறார்கள்.

வேதியர் முழுவேதத் தமிர்தத்தை (நம்மாழ்வார் 2-5-4),
அந்தணர் தம் அமிர்தத்தினை (பெரியாழ்வார் 5-4-11),
நால் வேதக் கடல் அமுதத்தை (பெரியாழ்வார் 4-3-11) என்று
வேத சம்பந்தத்தோடு எம்பெருமானை அமிருதமாக அனுபவிக்கின்றனர்.

வேதம் ரிக், யஜுர், ஸாம, அதர்வண ரூபமாக நான்கு வகையாக நிற்கின்றது.
அவ்விதமே மந்திரம் பிராம்மணம், கர்ம பாகம், ஞான பாகம் என்று பலவிதமாகப் பிரிந்து நிற்கிறது.
மந்திர பாகம் பகவானுடைய ஸ்வரூபாதிகளை வெளியிட்டுப் புகழ்ந்து பேசி பிரார்த்தனையை வெளியிடும் இடம்.
பிராஹ்மண பாகம் பகவதாராதனாத்மகமான கர்ம ஸ்வரூபத்தை வெளியிடுவது.
இவைகளில் ஞான பாகம் சித், அசித், ஈச்வரன் என்ற தத்துவத்திரயங்களைக் நிரூபித்து பகவானை அடையும் உபாயங்களைக் கூறுவது.
இவ்விதம் ஒரே வேதம் பல நோக்கத்தோடு பல வழிகளில் பிரிந்திருப்பதால் சில பாகங்களுக்கு எம்பெருமானோடு
சம்பந்தம் இருக்குமோ இல்லையோ என்ற சந்தேகம் வர அதற்கு இடமில்லாமல் செய்ய எல்லா வேத பாகமும்
ஏதாவதொரு வழியில் எம்பெருமானைத்தான் பிரதிபாதனம் பண்ணுகிறது.
வேதம் முழுவதும் எம்பெருமானைச் சொல்லுவது தான் என்பதைக் காண்பிக்க முழு வேதத் தமுதத்தை என்று பேசுகின்றனர்.
வேதங்களின் மந்திரங்கள் ரிக், யஜுர், ஸாம, அதர்வணாத்மகமாக இருந்தாலும் எல்லா வேதங்களும் முடிவில்
எம்பெருமானைத்தான் கூறுகின்றன என்பதைக் காண்பிக்க நால் வேதக் கடல் அமுதத்தை என்று கூறப்படுகின்றது.

(வேதமாகி, வேள்வியாகி, [திருச்சந்தவிருத்தம்] வேதம் ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களில் தனி இடத்தைப் பெற்று விட்டது.
வேதம் போன வழியே ஆழ்வார்களுடைய அனுபவம் இருந்து வருகிறது.

லோக ரக்ஷண வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பகவானுக்கு பலவிதமான அவதாரங்கள் செய்வது அவசியமாகிறது.
வேதமாக அவதாரம் பண்ணுவதும் இவைகளுள் ஒன்று.
உலகத்திலுள்ள பதார்த்தங்களில் அனுப்பிரவேசம் பண்ணி அந்தந்த பதார்த்த ரூபமாக பகவான் ஆகிறான்.
வேதமாகிற அவதாரம் அவ்விதமே இல்லை.  தனி நோக்கம் கொண்டது.  ஜீவாம்சத்தை அதிஷ்டிக்காது.  நேரில் செய்யப்பட்ட அவதாரம்.
விஷ்ணு புராணத்தில் பகவான் வேதமாகவும் வேள்வியாகவும் அவதாரம் செய்கிறான் என்று பராசர பகவான் ஸ்பஷ்டமாக கூறுகிறார்.  [
வேத யஜ்ஞமயம், ரூபம் அசேஷ ஸ்திதௌ ஜகத:]

இதைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும் பகவானை வேதமாகி நிற்கிறான் என்று அருளிச் செய்கிறார்கள்.
நான்மறையாய் வேள்வியாய்” (பெரியாழ்வார் திருமொழி 4-9-5)
மறையானான்” (பெருமாள் திருமொழி 1-4-8),
வேத நான்குமாகி” (திருமழிசைப்பிரான் 15),
வேதமாகி வேள்வியாகி (34),
இருக்கலந்த வேத நீதியாகி நின்ற நிர்மலா” (103),
வேதத்தை” ( திருமங்கை மன்னன் 2-3-2)
அருமறையும் அவையுமானாய் (4-6-9),
நான்மறையானவனே (6-1-6),
ஓதல் செய் நான்மறை ஆகியும்” (6-1-9),
வேதமும் வேள்வியும் ஆனான் “ (9-4-9),
வேத நான்காய்” (திரு நெடுந் தாண்டகம்) மன்னு மறையும் நான்குமானானை

தனக்கென்று தனியாக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் உலகத்தோடு ஒன்றாகி உலகத்தினுடைய யோக க்ஷேமத்தை கவனிக்க பிராஹ்மணம் ஏற்பட்டது.
பிராமணன் என்ற சொல் வேதத்தோடு பிரிக்க முடியாதபடி இணைந்து நிற்பது.
பிரஹ்ம என்ற சொல்லால் வேதம் சொல்லப்படுகிறது.  அன என்ற சொல் மூச்சு விடுவதைக் குறிப்பிடுகிறது.
வேதத்தை ஜீவக்களையாக உடையவன் பிராமணன்.
வேதத்தை அத்யயநம் பண்ணி, பிறருக்கு உபதேசம் செய்யும் அதிகாரத்தையும் பிராமணனிடத்தில் வேதம் கொடுத்து விட்டதால்
பிராமணனை நம்பியே வேதம் நிற்கிறது என்று ஓதப்படுகிறது.
வேதத்தைப் பாதுகாப்பவன் என்ற முறையிலும் வேத வேள்விகளை செய்பவன் என்ற முறையிலும் அவன் தனி இடத்தில் இருந்து வருகிறான்.
பகவான் பிரம்மண்ய தேவன்.  “பிராம்மணர்களுக்கு ஹிதம் செய்வதற்காக ஏற்பட்டுள்ளான்” என்று குறிப்பிடப் படுகிறது.
அதுமட்டுமல்ல, பிராஹ்மணனே பகவான்தான் என்றும், இதுவும் ஒரு அவதார விசேஷம் என்றும் வேதம் கூறுகிறது.
இதைப் பின்பற்றியே ஆழ்வார்களும் வேதியன் பகவானுடைய அவதாரமே என்று பல இடங்களில் பேசுகின்றனர்.
வேதம் பூமியிலுள்ள பிரத்யக்ஷமான பிருஹ்மமானது ஒன்றும், பிரத்யக்ஷமான தேவர்கள் என்றும் கூறுகிறது.
[பிரும்ம பிராஹ்மண ஆத்மநா ஏதேவை தேவா: ப்ரத்யக்ஷம்
ஆழ்வார்களும் “நிலத்தேவர்” என்று குறிப்பிடுவார்கள்.

சிறுமறையோன் (குலசேகரர் 1-10-9),
வேங்கட வேதியனை (திருமங்கை மன்னன் 1-9-10),
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை (9-9-9),
வெண் புரி நூலனை (திருவிருத்தம் 79),
தாமரைக் கண்ணும் வைதிகரே (திருவிருத்தம் 94),
வெறி கொண்ட தண்டுழாய் வேதியனை (திருவிருத்தம் 95),
மெய்ஞான வேதியனை (திருவாய்மொழி 3-1-11),
மறைவாணனை (திருவாய்மொழி 4-6-10),
வினயேனுடை வேதியனே (திருவாய்மொழி 7-1-2)
என்பது போன்ற இடங்களில் ஆழ்வார்கள் பகவானைவேதியனாகவே அனுபவிக்கிறார்கள்.

வேதியர்கள் பகவானிடம் பக்தியுள்ளவர்களே . தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு பக்தி இல்லை
அருள் வேண்டும் என்று யாசிக்கும் காலத்தில் நைச்யாநு ஸந்தானம் பண்ணுகிறார்.
அப்பொழுது “குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொளந்தணமை தன்னை ஒளித்திட்டேன் “ (திருமாலை 25)
என்று அருளிச் செய்வது மறைமுகமாக ப்ராஹ்மண்யத்தின் பெருமையை விளக்குகிறது.

வேத மந்திரங்கள் பெரிய உருவில் அமைந்து எம்பெருமானின் சொரூபங்களை இதர நிரபேக்ஷமாக
பெரிய அளவில் பிரதிபாதனம் பண்ணுவதால் பெரிய அளவில் சுலபமாக வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ண முடிகிறது.
இந்தக் கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டு பெரியாழ்வார் “கண்ணா நான்முகனைப் படைத்தானே” (5-1-6) என்ற பாசுரத்தில்
ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
ருக், யஜுர்,சாம வேத நான்மலர் கொண்டு உன்பாதம் நண்ணா நாளும்”  என்று தனித்தனியாகப் பிரித்துப் பேசுகிறார்.
இந்தப் பாசுரத்தில் கண்ணா நான்முகனைப் படைத்தவனே, கரியாய் அடியேனுக்கு உண்ணா நாளில் பசியொன்று என்பதும் இல்லை
மாறாதே நமோ நாராயணா என்று எண்ணா நாளுமே ருக்,யஜுர், சாம வேத நான்மலர் கொண்டு உன்னை
நண்ணா நாளும் கூடுமாகில் அதுதான் எனக்கு உபவாச தினம் என்று அருளிச் செய்கிறார்.

கண்ணா! நான்முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை ஓவாதே ‘நமோநாரணா!’ என்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நான்மலர் கொண்டுன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்றெ னக்கவை பட்டினி நாளே. (5-1-6)

“திருமந்திரம் சங்க்ரஹமும் வேதம் விவரணமாயிறே இருப்பது” என்று அருளிச் செய்கிறார். அதுமட்டுமல்ல,
“நமோ நாரண என்றது போராமே பெரும் திருப்பாவாடையிலே மண்டுகிறார்” என்று அருளிச் செய்வதும் கவனிக்கத் தக்கது.
அரும்பதக்காரர் திருநாமம் சிறிய திருப்பாவாடை வேதம் பெரிய திருப்பாவாடை என்று வர்ணிக்கிறார்.
உலகத்தில் பசிக்குத் தகுந்தாற்போல் உணவை உட்கொள்வதைப் பார்க்கிறோம்.
சிறிய அளவில் பசி உள்ளவன் சிறிய திருப்பாவாடையில் உள்ள உணவை உட்கொண்டு திருப்தியடைகிறான்.
பெரிய பசி உள்ளவன் பெரிய திருப்பாவாடையில் உள்ள உணவை உட்கொண்டு திருப்தியடைகிறான்.
பெரிய ஆசை உள்ளவன் பெரிய திருப்பாவாடையில் உள்ளதை அனுபவித்து உத்ஸாஹத்துடன்
ஈடுபடுகிறான் என்பதைக் கண்டார்கள் மண்டுகிறார் என்று கூறப் படுகிறது.
இதனால் சிறிய அளவில் பகவதனுபவம் பண்ண நினைப்பவர்களுக்கு திருநாமம் போதுமானதென்றும்
பெரிய அளவில் பகவதனுபவம் பண்ண வேதங்களையே நாட வேண்டும் என்றும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றுவது வெளியாகிறது.

திருநாமங்களைக் காட்டிலும் வேத மந்திரங்களுக்குள்ள ஏற்றம் தெளிவாக வெளியாகிறது.
ஸ்ரீ நம்மாழ்வார் “இருக்கார் மொழியால்” திருவிருத்தப் பாசுரத்தில் இந்த அபிப்பிராயத்தை நன்கு வெளியிட்டுள்ளார்.

“பூஸுரர்களான ப்ராம்ஹணர்கள் ரிக்குகளால் பூர்ணமான மந்திரங்களால் பகவதாராதன ரூபமான பரம தர்மத்தைச்
செய்து உலகளந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்குகின்றனர்.
அவ்வித வேத மந்திரங்களாகிற ஸாதனம் இல்லாமலிருக்கும்  நானும் பகவானும் சேரவொட்டாமல் செய்கிற பாபத்தோடும்,
அதை அனுஷ்டித்த என்னோடும் நொந்து பழமில்லாமையாலே பசுங்காயைக் கடிப்பாரைப் போல்
திருநாமச் சொல் கற்றனம்.” ( இருக்கார் மொழியால் நெறி இழக்காமை உலகளந்த திருத்தாளிணை நிலத்தேவர் வணங்குவர்.
யாமும் அவா உருக்கா வினையோடும் எம்மோடும் நொந்து கனியின்மையில் கருக்காய் கடிப்பார் போல்
திருநாமச் சொல் கற்றனமே” (திருவிருத்தம் 64) என்றருளிச் செய்கிறார்.

மிகச் சிறியதாக அமைந்துள்ள திருநாமத்தில் உள்ள எழுத்துக்களுக்கு அர்த்தம் கூறுவது கஷ்டமானது.
பல ப்ரமாணங்களுடைய ஸாஹஸ்யம் இங்கு அபேக்ஷிதமாக உள்ளது.
தாமதித்து ரஸானுபவத்தை உண்டு பண்ணுவது வேதங்களைக் கொண்டு அநுபவிக்கும் காலத்தில் இவ்வித பரிச்ரமத்திற்கு ஆவச்யகதை கிடையாது.

எம்பெருமானுடைய ஸ்வரூபம் குணம் விபூதி ப்ரதிபாதக பதங்களும் வாக்கியங்களுமிருப்பதால்
இதர ப்ரமாணங்களின் அபேக்ஷை இல்லாமலே விளம்பமில்லாமல் பகவதனுபவ முண்டாகிறது.
வேதத்தைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுபவர்களுக்கு இது மிகவும் லகுவான மார்கம்.

இங்கு ஆழ்வார் ரிகாதி வேதமந்திரங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுவதை பழத்தை புஜிப்பதோடும்
திருநாமம் கற்று பகவதனுபவம் பண்ணுவதை கருக்காய் கடிப்பதோடும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
ஸ்வத:ப்ரமாணமாயும்,  எம்பெருமானின் ஸ்வரூபாதிகளை நேரிலேயே காட்டித் தரவல்ல விலக்ஷண ப்ரமாணமாயும் வேதம் இருப்பதால்
வேத மந்திரங்களைக் கொண்டு பகவதநுபவம் பண்ணுவது பழத்தைப் புஜிப்பது போலாகிறது.
திருநாமம் பகவத் வாசகமானாலும் ஸர்வவர்ண ஸாதாரணமான அது வேத வாக்யமாக ஆக முடியாததால்
வேதம்போல் திருநாமம் நேருக்கு நேராக பகவதநுபவத்தை உண்டு பண்ண முடியாது.
அதனால் அது காலக்ரமத்தில் பழுத்து ரஸானுபவத்தை உண்டு பண்ண வேண்டிய கருக்காய் ஸ்தானத்தில் இருந்து வருகிறது.
மேலும் இங்கு ஆழ்வார் பூஸுரர்களான ப்ராமணர்கள் வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணும் பாக்கியம் பெற்றுள்ளார்கள் என்றும்
தன்னுடைய பாபம் காரணமாக தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
தனக்குக் கிடைத்துள்ள திருநாமமும் வேதம் போல் பூர்ணமாக உடனே ரஸானுபவத்தை உண்டு பண்ணவில்லை என்றும் திருவுள்ளம் பற்றுகிறார்.
இதனால் வேதங்களைக் கொண்டு பகவதநுபவம் பண்ணுவதற்கு விரோதியான பாபமில்லாதவர்கள் பழம் போலுள்ள வேதங்களைக் கொண்டே
பகவதநுபவம் செய்ய வேண்டுமென்றும் வேதங்களைக் கொண்டு பகவதநுபவம் பண்ணமுடியாத பாபமுள்ளவர்கள் திருநாமத்தைக் கொண்டு
பகவதநுபவம் பண்ண வேண்டுமென்றும் ஏற்படுகிறது.

எப்பொழுதும் வேதத்தை செவ்வையாய் அத்யயனம் செய்து ஞானமாகிற பூட்டை தொடுத்து ஐவகையான இந்திரியங்களைத் தொடுத்து
தமக்குள் அடக்குகையாகிற வலிய கதவை அடைத்து நன்றாய் பகவானை அறிய வல்லவர்கள் அழகிய கடல் நிறத்தனான
ஸர்வேச்வரன் வகையை பிரதி தினமும் அறிவார்கள்”

அறிவென்றும் தாள் கொளுவியைம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண்கதவம் செம்மி மறை என்றும்
நன்கோதி நன்குணர்வார்கள் காண்பரே நாடோறும்
பைங்கோதவண்ணன்படி” (மூன்றாம் திருவந்தாதி 12)

இங்கு ஞானிகளாக உள்ள பெரியோர்களுக்கு வேதமாகிற ஸாமக்ரியும் கூட இருந்தால் அவர்கள் எப்பொழுதுமே
பகவதநுபவம் பண்ணலாமென்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுவது நன்கு வெளியாகுகிறது.

பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி பிரதிபாதகமாய் எம்பெருமானுடைய வடிவழகையும் வெளியிடக் கூடியது மாயுள்ள
பரம பாவனமான  வேத ருக்குகளைக் கொண்டு ஞானவிதி  தப்பாதபடி புஷ்பத்தோடு கூடின தூபதீபம் சந்தனம் நீர் இவைகளை
பூர்ணமாக உடையதாய்க் கொண்டு அச்சுதனை அநந்யப் ப்ரயோஜனனாய் ஆச்ரயிக்கும் அடியாரும்
அவனுடைய ஞான சக்த்யாதி குணானு ஸந்தானத்தால் வித்தரான முனிகளும் உலகில் நிறைந்துள்ளார்கள்.அவர்களைக் கிட்டித் தொழுது நீங்கள் உஜ்ஜீவியுங்கள்.

(“மேவித் தொழுதுய்ம்மினீர்கள் வேதப் புனித விருக்கை
நாவில் கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழு மடியாரும் பகவரும் மிக்கதுலகே” திருவாய்மொழி 5-2-9)

இங்கு ஆழ்வார் நாம் உஜ்ஜீவிப்பதற்கு ஆச்ரயிக்க வேண்டிய பெரியோர்களைக் குறிப்பிடுகின்றார்.
அங்கு பகவதாராதனம் செய்யும் அடியார் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் வேத மந்திரங்களால் பகவதாராதனம் செய்யும் அடியார் என்று குறிப்பிடுகிறார்.
இதனால் நாம் ஆச்ரயிக்க வேண்டிய பெரியோர்கள் வேதங்களைக் கொண்டு பகவதாராதனம் செய்பவர்களாக
இருக்க வேண்டுமென்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுவது வெளியாகுகிறது.
அவ்விதப் பெரியார்கள் கிடைப்பார்களோ கிடைக்க மாட்டார்களோ என்ற ஸந்தேஹம் வேண்டாம்.
அவர்கள் உலகில் மிக்க இருக்கிறார்கள் என்றும் ஆழ்வார் கூறுகிறார்

வைதிகரே அஞ்சனத்தின் ஸ்வபாவமுடைய உன் திருமேனியையும், உன் செந்தாமரைக் கண்களையும் ஸேவித்து
உன் திருவடியை உள்ளபடியே சூடும் ஸ்வபாவமுள்ளவர்கள்.
ஊருக்கு வெளியில் மேய்ந்து திரும்பும் காலத்தில் மாட்டு மந்தையிலுள்ள கண்ணுள்ள பசுக்கள் ஊரைக் கண்டதும்
கனைக்க அதைக் கேட்டு குருட்டுப் பசுவும் எப்படி கனைக்குமோ, அப்படியே யானும் சொன்னேன்.
அடியேன் மற்று எதைச் சொல்லுவேன்”

(“ மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
மைப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்
எப்படி யூராமிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்றும்
அப்படி யானும் சொன்னேன், அடியேன் மற்று யாதென்பனே 94 “)

வைதிக ஸமூக அமைப்பில் பிராம்மணன் தலைமை ஸ்தானத்திலிருப்பதையே வேதங்களும் ஸ்ம்ருதிகளும் அறுதியிட்டுச் சொல்லுகின்றன.
தலைமையான ஸ்தானத்தை பிராம்மணன் வஹிப்பதற்கு வேதம் அவனிடமிருப்பதே காரணம். வேதாத்யயனத்தால்
நிர்மலமாயுள்ள அவனுடைய அந்தக்கரணத்தில் தோன்றுபவை அடங்கலும் வைதிகமென்று வேதமே கூறுகிறது.
இதனால் வைதிக ஸமூஹம் அவர்கள் காட்டிய வழியிலேயே செல்லுகிறது.
இந்த உண்மையைப் பின்பற்றி ஆழ்வாரும் இங்கு பிராம்மணர்களான வைதிகர்கள் போகும் வழியிலேயே தானும் போவதாகத் தெரிவிக்கிறார்.
தன்னைக் குருட்டுப் பசுவாகப் பேசும் ஆழ்வாருக்கு வைதிகர்களிடத்திலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆழ்ந்த பக்தியும் நன்கு வெளியாகுகிறது.

நால்வகை வேதங்களை அத்யயனம் பண்ணி ஐந்து வேள்விகளையும் அனுஷ்டித்து ஆறு அங்கங்களையும் அதிகரித்து
மேலுலகத்தின் தேவதைகளைக் காட்டிலும் அதிசயித்தவர்களாய் ஸ்ருஷ்டி காலம் துடங்கி கழனிகளையுடைய
திருப்பேர் செங்கண் மாலோடு வாழ்பவர்களாயும் ஸௌசீல்யம் முதலிய ஆத்ம குணங்களோடு சிலாக்யமான தவத்தையுமுடைய
பிராம்மணர்களுடைய ஹிருதயத்தை வாஸஸ்தானமாக கொண்டு ஆளுபவன் என் ஹிருதயத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறான்.

“நால்வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவர் மிக்க வேதியராதிகாலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலோடும் வாழ்வார்
சீல மாதவத்தர் சிந்தையாளி என் சிந்தையானே! திருமொழி 5-9-9–என்றருளிச் செய்கிறார்.

அவ்விதமே கானங்களில் சிராவ்யமான சொல்லை உடைத்தான வீணைகளின் தந்திகளில் உண்டான “பாலை” என்னும் ராகம் போல்
மிக இனியனாய்க்கொண்டு என் நெஞ்சில் வந்து புகுந்து என் மனஸ்ஸையும் வாக்கையும் இருப்பிடமாக அங்கீகரித்தான்.
இப்படி அங்கீகரித்த பிறகு பிராம்மணர்களுடைய மனஸ்ஸை வாஸஸ்தானமாக உடையவனாய் நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
எனக்கு நிர்வாஹகனாய், விருத்தி அடைந்துள்ள ஜலத்தை உடைய மீன்கள் விளையாடும் ஸமுத்ரம் போல் வர்ணத்தை உடையவனாய்
நீலமணியின் ஸ்வபாவத்தை உடையவனாய் எனக்கு ஸ்வாமியாயுமுள்ள எம்பெருமானுடைய வர்ணத்தை ஒழிய வேறு ஒன்றையும் என் வாக்குச் சொல்லாது.
(பண்ணி நின் மொழியாய் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயுமிடங் கொண்டான் கொண்டபின்
மறையோர் மனந் தன்னுள் விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும்
கடல் வண்ணன் மாமணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாயுரையாதே) திருமொழி 7-3-7 என்றுமருளிச் செய்கிறார்.

இங்கு எம்பெருமானுடைய ஏற்றத்தை பல வழிகளில் பேசும் ஆழ்வார் பிராம்மணர்களுடைய ஹிருதயத்தில் வஸிப்பதையும் குறிப்பிடுகிறார்.
இதனால் எம்பெருமானுக்கு ஓர் ஏற்றமேற்படுவதை ஆழ்வார் அனுபவித்துப் பேசுவதாகவே ஆகிறது.

பிராம்மணர்களின் ஆனுகூல்ய விருத்தியைப் பெற திருக்குடந்தையில் எம்பெருமான் கண் வளருகின்றான்

மேலும் பிராம்மணர்களிடம் உள்ள பக்தி காரணமாக (திருமங்கையாழ்வார் திருவெழுகூற்றிருக்கையில்) பிராம்மணர்கள் வணங்கும் பகவானைக் கண்டு களிப்பது

பிராம்மணோத்தமர்கள் வணங்கும் எம்பெருமானையே தான் கண்டு களித்ததாக கீழ்க்கண்ட பாட்டில் திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார்.

ஸர்வாதிகனாயும், இந்திரன், பிரமன், ருத்திரன் இவர்கள் அறிவதற்குக்கூட துர்லபனாயும் திருவழுந்தூர் பிராம்மணர்களால்
ஸேவிக்கப் பட்டவனாயும் நீல வர்ணத்தை உடையவனுமான எம்பெருமானை அடியேன் கண்டு களித்தேன்.
(பெரியானை யமரர் தலைவர்க்கும், பிரமனுக்கும்,
உரியானை உகந்தானவனுக்கும் உணர்வதனுக்
கரியானை அழுத்தூர் மறையோர்களடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே  திருமொழி 7-6-6)
இங்கு தான் கண்டு களித்த எம்பெருமானுடைய ஏற்றத்தைப் பலவாறாகப் பேசும் பொழுது
அழுந்தூர் மறையோர்கள் அடிபணிவதையும் குறிப்பிடுவதால் இதனாலும் எம்பெருமானுக்கு ஏற்றம் ஏற்படுவதைக் குறிப்பிடுகிறார்.

வேத நாவர் வணங்கும் பத்மநாபன்

அவ்விதமே திருமழிசைப்பிரான் வேதோச்சாரணத்தினால் பரிசுத்தர்களான பிராம்மணர்கள் எம்பெருமானை ஆச்ரயிக்கிறார்கள்
என்று பிராம்மணர்கள் வணங்குவதால் எம்பெருமானுக்கு ஓர் ஏற்றத்தை திருச்சந்தவிருத்தத்தில் வெளியிடுகிறார்.

வெளுத்த நிறத்தை உடைய ஓர் ஸிம்ஹமாய், வளர நின்றுள்ள ஒளியை உடைய பற்களை உடையவனாய்
ஹிரண்யனுடைய சரீரத்தின் மர்மத்தில் நகங்களுடைய பிரதேசத்தை அழுத்தினவனே! ஸர்வலோக பிரஸித்தமான பிராம்மண்யத்தை உடைத்தாய்,
உதாத்தானுதாத்தஸ்வரித ப்ரசய ரூபமான நாலு வகைப்பட்ட ஸ்வரத்தை உடைய வேதத்தை நாவிலே உடையவர்கள்
நல்ல உபாயத்தினால் ஆச்ரயியாநிற்கிற பால்நிறக் கடலில் கிடந்த பத்மநாபனல்லயோ

வானி றத்தோர் சீயமாய் வளர்ந்த வாளை யிற்றவன்
ஊனிறந்து உகிர்த்தல மழுத்தினாயுலாய சீர்
நால் நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிறக்கடல் கிடந்த பத்மநாபனல்லயோ  –23-என்றருளிச் செய்கிறார்.

இங்கு பிராம்மணர்கள் எம்பெருமானை வணங்குவதைக் குறிப்பிடுவதால் அதனால் எம்பெருமானுக்கு
ஒரு ஏற்றம் உண்டாகிறதென்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றியது வெளியாகுகிறது.
தத்துவ ஹித புருஷார்த்தங்களை அனுமானாதிகளால் நிர்ணயிக்காமல் வேதங்களைக் கொண்டே பிராம்மணர்கள் நிர்ணயிக்கிறார்கள்.
வேதங்கள் பகவானுக்கு பரமாந்தரங்கமானவை. இதனால் பிராம்மணர்களுக்கு ஏற்றம் ஏற்படுகிறது.

வேதத்தினிடத்திலும், வேதங்காரணமாக பிராம்மணர்களிடத்திலும் உள்ள பிரதிபத்தி காரணமாக
ஸ்ரீ திருமங்கை மன்னன் திருவெழுகூற்றிருக்கையில் எம்பெருமான் பிராம்மணர்களுடைய வேத கானத்தைக் கேட்டு கண் வளர்ந்து அருளுகிறான் என்று கூறுகிறார்.
நிரவதிக ஸம்பத்தையும் யோக்யதையையுமுடைய திருக்குடந்தையில் பிராம்மணர்கள் மந்திர மொழியுடன் வணங்க
விகஸிதமான பணாமண்டலங்களையுடைய திருவனந்தாழ்வான் படுக்கையில் ஜகத்ரக்ஷணத்தில் ஈடுபட்டவனாய்க் கொண்டு
எம்பெருமான் கண் வளர்ந்து அருளுகிறான்.
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடரவமளியில் அரிதுயில் அமர்ந்த பரம –திருவெழுகூற்றிருக்கை
இங்கு திருக்குடந்தை எம்பெருமான் ஜகத் ரக்ஷணத்தில் அவஹிதனாய்க் கொண்டு திருக்கண் வளருவதற்கு
அங்குள்ள பிராம்மணர்கள் வேத மந்திர மொழிகளால் அவனை வணங்குவதே காரணம் என்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுகிறார்.
பிராம்மணர்கள் மந்திர மொழியால் வணங்குவதால் எம்பெருமானுக்கு மிகவும் உயர்ந்த ஏற்றம் ஏற்பட்டிருப்பதை பரம என்ற விசேஷணத்தால் குறிப்பிடுகிறார்

மஹா பிராம்மணர்களுக்கு மணிவண்ணன் அருளாலே மோக்ஷத்தைக் கொடுக்கிறான்.
பிராம்மணர்களுக்கு அருளால் எம்பெருமான் மோக்ஷம் கொடுப்பதை கீழ்க்கண்ட இடத்தில் பூதத்தாழ்வார் குறிப்பிடுகிறார்.

புருஷார்த்தமென்ற புத்தியால் தேவலோகம் ப்ரவேஸிப்பதற்கு யத்தனிக்கக் கூடாது.-எம்பெருமான் அருளாலே மோக்ஷத்தைக் கொடுப்பான்.
மஹா ப்ராம்மணர்களுக்கு அருளாலே மோக்ஷத்தைக் கொடுத்தவனும் மணிவண்ணனுமான எம்பெருமான்
திருவடிகளை நெஞ்சே நீ மறவேல். அவற்றையே நினைப்பாயாக.
(பொருளால் அமருலகம் புக்கியலாகாது, அருளாலரமருளுமன்றோ நீ மறவேல் நெஞ்சே நினை — இரண்டாம் திருவந்தாதி 4)
இங்கு எம்பெருமான் திருவடிகளை மறக்காமல் தியானம் பண்ணு என்று நெஞ்சைப் பார்த்து ஆழ்வார் சொல்லுகிறார்.

எம்பெருமான் அருளாலே மோக்ஷத்தைக் கொடுப்பான் என்று அறுதியிட்டுப் பேசி பிராம்மணர்களுக்கு அவன் அருளாலேயே மோக்ஷம் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார்.

எம்பெருமான் பிராம்மணர்கள் ஆச்ரயிக்கத் தகுந்தவன்

பிராம்மணர்கள் ஆச்ரயிப்பதால் எம்பெருமானுக்கு ஏற்றம் ஏற்படுவதை திருவெழுகூற்றிருக்கையில் திருமங்கை மன்னன் பின்வருமாறு அநுஸந்திக்கிறார்.

உன்னுடைய திருவடிகளில் சரணம் புகுந்தேன், அனுபவிக்கைக்கு விரோதியை போக்கி அருள வேண்டும்
என்று பிரார்த்திக்கையில் எம்பெருமானைப் பலவிதமாக அனுபவித்துப் பேசுகிறார்.

அங்கு நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்து அக்னி ஹோத்ராதி ஸகல கர்மாக்களுக்கும் அபேக்ஷிதங்களான
ஆஹவனீயம், கார்ஹபத்தியம், தக்ஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளையும் ஆதானமூலம் பெற்று
பஞ்சமஹா யக்ஞங்களையும் அனுஷ்டித்து யஜனம் முதலிய ஆறு கர்மாக்களில் எப்பொழுதுமே ஈடுபட்டுள்ள
பிராம்மணர்களுக்கு ஆச்ரயிக்கத் தகுந்தவனாக எம்பெருமான் இருப்பதை
(முத்தி நான்மறை ஐவகைவேள்வி அறுதொழிலந்தணர் வணங்கும் தன்மையை) அனுபவிக்கிறார்.
இதனால் நான்கு வர்ணங்களிலும் உத்கிருஷ்ட வர்ணமாய் நல்ல வழியே போகக் கடவதாயுமிருக்கும் பிராம்மண ஜாதிகளுடைய
ஆச்ரயணீயினாயிருப்பது எம்பெருமானுக்கு மிகுந்த ஏற்றத்தை கொடுக்கிறதென்பது வெளியாகுகிறது

———————————–

ஸ்ரீ அருளிச் செயல்களில் வேத பத பிரயோகங்கள் 

வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை - நாலாயி:201/3

வேத பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே - நாலாயி:207/4

எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் - நாலாயி:438/3

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார் - நாலாயி:443/3

வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் - நாலாயி:523/3

மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையில் - நாலாயி:598/2

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் - நாலாயி:737/1

வேத_வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார் - நாலாயி:760/3

சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே - நாலாயி:765/4

நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு - நாலாயி:774/3

விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார் - நாலாயி:807/3

மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல் - நாலாயி:823/3

கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின் - நாலாயி:838/3

இரு கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா - நாலாயி:854/2

நச்சு நாகனை கிடந்த நாதன் வேத கீதனே - நாலாயி:868/4

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் - நாலாயி:874/1

நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு - நாலாயி:1196/3

யாவருமாய் யாவையுமாய் எழில் வேத பொருள்களுமாய் - நாலாயி:1249/1

மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை - நாலாயி:1275/2

இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1369/2

வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி - நாலாயி:1425/1

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாட செங்கண்மாலை - நாலாயி:1507/1

பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் - நாலாயி:1619/2

வேத முதல்வன் விளங்கு புரி நூலன் - நாலாயி:1679/1

செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் - நாலாயி:1986/2

விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேத  பண்ணகத்தாய் நீ கிடந்த பால் - நாலாயி:2149/3,4

மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு - நாலாயி:2394/3

ஆவனவும் நால் வேத மா தவமும் நாரணனே - நாலாயி:2453/3

பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும் - நாலாயி:2819/2

பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று - நாலாயி:2848/1

கொண்ட நல் வேத கொழும் தண்டம் ஏந்தி குவலயத்தே - நாலாயி:2854/3

முது வேத முதலவனுக்கு - நாலாயி:2955/2

வேத நீரனே - நாலாயி:2985/4

நாரணன் முழு ஏழ்_உலகுக்கும் நாதன் வேத மயன் - நாலாயி:3076/1

மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் - நாலாயி:3106/3

பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ சமய நீதி - நாலாயி:3159/1

வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார் - நாலாயி:3169/3

பா இயல் வேத நல் மாலை பல கொண்டு - நாலாயி:3244/1

மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை என் - நாலாயி:3306/3

மேவி தொழுது உய்ம்-மின் நீர்கள் வேத புனித இருக்கை - நாலாயி:3360/1

தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் - நாலாயி:3410/3

செந்தொழிலவர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் - நாலாயி:3413/3

பாடும் நல் வேத ஒலி பரவை திரை போல் முழங்க - நாலாயி:3431/2

வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் - நாலாயி:3452/2

விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் - நாலாயி:3454/2

வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் - நாலாயி:3583/3

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் - நாலாயி:3805/1

வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து - நாலாயி:3888/3

வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே - நாலாயி:3983/4
---------

வேத_வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார் - நாலாயி:760/3
----------

பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் - நாலாயி:1096/3

பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் - நாலாயி:2845/3
---------

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் - நாலாயி:2226/3

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் - நாலாயி:2295/3  
-------
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் - நாலாயி:945/1

வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் - நாலாயி:1069/1

ஓதிய வேதத்தின் உட்பொருளாய் அதன் உச்சி மிக்க - நாலாயி:2875/1

 
நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும் - நாலாயி:2292/1

நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான் - நாலாயி:2312/3

வேதியர் முழு வேதத்து அமுதத்தை - நாலாயி:3147/3

எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த - நாலாயி:3586/3
------

மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே - நாலாயி:3130/1
--------

வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் - நாலாயி:1069/1
-----

தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் - நாலாயி:360/2

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே - நாலாயி:766/1

புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும் - நாலாயி:770/1

வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய் - நாலாயி:785/3

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி - நாலாயி:914/1

முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த - நாலாயி:1065/1

வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் - நாலாயி:1119/1

வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து - நாலாயி:1121/3

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை - நாலாயி:1125/1

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த - நாலாயி:1159/3

நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு - நாலாயி:1244/3

நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறு அங்கம் - நாலாயி:1259/3

நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார் - நாலாயி:1436/1

படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் - நாலாயி:1514/3

எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை - நாலாயி:1618/3

தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்  கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1738/3,4

அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் - நாலாயி:1748/3

மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் தோழீ - நாலாயி:1758/2

திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் - நாலாயி:1813/3

என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய - நாலாயி:1989/2

மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் - நாலாயி:2052/1

காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல் - நாலாயி:2844/2

வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் - நாலாயி:3119/2

வணங்கீர்கள் மாய பிரான் தமர் வேதம் வல்லாரையே - நாலாயி:3292/4

வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் - நாலாயி:3293/1

பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு - நாலாயி:3510/1

----------
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொல் பொருள் தானும் மற்றை - நாலாயி:1122/1

விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் - நாலாயி:1478/3

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் - நாலாயி:1786/1

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து - நாலாயி:3502/1

---------
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் - நாலாயி:1221/3

-----------------------------

அத் திருப்பாவை `வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ என்று கொண்டாடப்படுகிறது.
வித்தாவது விதை. வேதத்திற்கு திருப்பாவை விதை என்பது இதன் பொருள்.
விதையிலிருந்து மரம் உண்டாவது போல திருப்பாவையிலிருந்து வேதம் உண்டானதாக அன்றோ பொருள் படுகிறது?
வேதமோ அநாதியானது. இன்ன காலத்தில்தான் உண்டானது என்றில்லாமல் எப்போதும் உள்ளது.
ஆனால் திருப்பாவையோ, பூமிப்பிராட்டி ஆண்டாளாக அவதரித்த காலத்தில் அருளிச்செய்தது.
ஒரு காலத்தில் அவதரித்த திருப்பாவை எப்படி எல்லாக் காலத்திலுமுள்ள வேதத்திற்கு வித்தாக முடியும் என்ற கேள்வி எழலாம்.
இங்கு ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்.

விதையிலிருந்துதான் மரம் உண்டாகின்றது என்பது உண்மை தான்.
அதே சமயம் மரத்திலிருந்தும் விதை உண்டாகிறது.
அந்த விதையை விதைத்தால் மறுபடியும் மற்றொரு மரம் உண்டாகிறது.
இந்த விதத்தில் பார்க்கும் போது `வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ என்பது நன்றாகவே பொருந்துகிறது.
அதாவது வேதமாகிற மரத்திலிருந்து உண்டான விதை தான் திருப்பாவை.
மரம் மிகப் பெரியதாக இருந்தாலும் அதிலிருந்து உண்டாகும் விதை மிகச் சிறியதாக இருப்பது போல,
`அநந்தா வை வேதா:’ என்றபடி மிகப் பெரியதான வேதங்களிலிருந்து உண்டான
சிறிய விதை தான் முப்பதே பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை.
விதையை பூமியில் நட்டு, தண்ணீர் பாய்ச்சி, எருவிட்டால் அது மரமாக முளைக்கிறது.
முளைக்கின்ற மரத்தின் அத்தனை உறுப்புக்களும் அந்தச் சிறிய விதையில் சிறுவடிவில் (ஸூக்ஷ்மமாக) இருக்கிறது.
அதேபோல் திருப்பாவையிலும் வேதார்த்தங்கள் அனைத்தும் உள்ளே பொதிந்துள்ளன.
ஊன்றி நோக்கி ஆசார்யர்கள் விளக்கியருளும்போது அதில் ஸூக்ஷ்மமாகப் பொதிந்துள்ள
வேதார்த்தங்கள் அனைத்தும் வெளிப்படுகின்றன.-திருப்பாவை வேதம் அனைத்துக்கும் வித்து என்று கொண்டாடப்படுகிறது. அதாவது, வேதத்தின் ஸாரமான விஷயங்களை நாம் திருப்பாவையிலே கண்டுவிடலாம்
திராவிட வேதமான திவ்யப்ரபந்தம் உட்பட அனைத்து வேதங்களிலும் உள்ள அர்த்தங்களும்
திருப்பாவையில் பொதிந்துள்ள படியால்தான் `வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ எனப்பட்டது.

கோதை என்ற சொல்லுக்கு மாலை என்பது பொருள்.
பெரியாழ்வார் மாலை கட்டுவதற்காக நந்தவனத்திற்குச் சென்றபோது கிடைத்த குழந்தை ஆகையால் கோதை என்றே பெயரிட்டார்.
கோதை அருளிய சங்கத் தமிழ் மாலை என்பதனை `மாலை கட்டிய மாலை’ என்று
விளக்குகிறார் உரையாசிரியர் அழகியமணவாளப் பெருமாள் நாயனார்.
அதுவே `மாலைக் (திருமாலைக்) கட்டிய மாலை’ என்றும் விளக்குகிறார்.

பாவை’ என்னும் சொல்லுக்குப் பொருள் பொம்பை.
பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளமகளிர் விளையாடுதல் பண்டைய வழக்கம்.
உவமையாகு பெயராய்ப் பெண்ணைக் குறிப்பதும் உண்டு.
‘இது என்பாவை, பாவை இது என’ எனவரும் ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில்
‘பாவை’ என்பது பெண்ணையும், பொம்மையையும் முறையே சுட்டுதல் அறியத் தகும்.

பாவை பாடிய பாவை என்றும்
மாலைக் கட்டிய மாலை என்றும்
புகழப்படும் ஸ்ரீ கோதா தேவி

திருப்பாவை –
மேன்மை பொருந்திய பாவையால் சொல்லப்பட்டது
பாவைக்காக -நோன்புக்காகச் சொல்லப்பட்டது
பாவையின் பொருட்டு -தோழியின் பொருட்டு சொல்லப்பட்டது
பாவையை -பெண்களை அழைத்துச் சொல்லப்பட்டது
பாவையை அடைய புருஷகாரம் பெற சொல்லப்பட்டது
பாவை மூலம் -நீளா தேவி மூலம் பகவானை அடையச் சொல்லப்பட்டது
பாவை -வழி -சரணாகதியை விளக்க ஏற்பட்டது
பாவையை அடைய -பேற்றை அடையச் சொல்லப்பட்டது

திருமால் மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசுப் பாம்பினை கயிறாகத் திரித்து, மத்தாக நாட்டி,, வாசுகிப் பாம்பினை கயிறாகத் திரித்து,
மத்தைத் தாங்கும் பாத்திரமாக, கூர்மாவதாரமும் எடுத்து, தமது முதுகில் மத்தைத் தாங்கி அதாவது மந்தரமலையை தாங்கி,
பாற்கடலை கடைந்து, லக்ஷ்மிதேவியை அடைந்து, பூரிப்படைந்தது போல்,
தமது அடியார்களான தொண்டர்களின் ஜீவன் புகுந்துள்ள சரீரத்துக்கு ஒரு நெகிழ்வும் வராதபடி, சம்சாரமாகிய இந்தக் கடலை,
தனது சங்கல்பமாகிய மந்தரமலையை நாட்டி, அருள் எனும் பக்திக் கயிற்றால் சுற்றி, காத்து ரட்சிக்கும் தன் கைகளால், கடைந்து
பிராட்டியைப் பெற்றது போல், நம்மைக் காப்பாற்றி மகிழ்ச்சி அடைந்து அருள்புரிவார் என்பது உட்பொருள்!

வேதம் இறைவனை வழிபடும் முறைகளைத் தெரிவிக்கிறது/. யாகம், தவம் மூலமாக இறை வழிபாட்டைப் பேசுகிறது வேதம்..
ஆனால் திருப்பாவை, தூயோமாய் வந்து நாம், தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க,
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம், மெல்ல எழுந்து அரியென்று என்றும் கேசவனைப் பாடவும் என்றும்!
சென்று நாம் சேவித்து மனத்துக்கினியானைப் பாட, கள்ளந்தவிர்த்து கலந்து என்றும்,
போற்றியாம் வந்தோம், அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, வேல் போற்றி என்றெல்லாம்
கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தை பிரதானமாக்கிக் கொண்டு (கலெள நாம சங்கீர்த்தனம்) மற்றை நாமங்களை மாற்றச் சொல்லி,
இறைவா, நீ தாராய் பறை என வேண்டி, கூடியிருந்து குளிர்ந்து எங்கும் திருவருள் பெற்று, உய்ய வழியாக அமைகிறது.

வேள்வி, யாகம், தவம் இல்லாத சாதாரண எளிய வழிபாட்டு முறையை விளக்குகிறது.
இவ்வாறு இறைவழிபாட்டை எளிமையாக, இலகுவாக, நளினமாக உரைத்ததால், திருப்பாவை… வேதத்துக்கு வித்தாக அமைகிறது.
எனவேதான் கோதைத் தமிழ் வேதத்துக்கே வித்து என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேத மனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்

ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு–என்பது ஆன்றோர் வாக்கு!

ஐயைந்தும் ஐந்தும் அதாவது திருப்பாவை முப்பது பாடல்களையும் தெரியாத (கற்றுணராத, தினந்தோறும் பாடாத,
அதன்படி அவன் அடிபணியாத மனிதர்களை) பூமாதா சுமப்பது வீண் எனக் கூறுகிறார்கள்!

எனவே, நாமும் தூயோமாய் வந்து, தூமலர்த் தூவி, தொழுது, வாயினால் திருப்பாவையைப் பாடி,
மனதினால் அவனுடைய திருவடியை நினைத்து, நமது பாவங்கள் அனைத்தும் தீயினில் இட்ட தூசாக,
இருந்த இடம் தெரியாமல் போய் மிகவும் பரிசுத்தமாகி (திரிகரண சுத்தி – மனம், வாக்கு, காயம்) அவனுடைய சரணத்தில்,
அடைக்கலம் புகுந்து இம்மையிலும் மறுமையிலும் அவனின் பேரருளைப் பெற்று வாழ்வோம்!

வேதம் தமிழ் செய்த ஆழ்வார்கள்

சர்வம் விஷ்ணு மயம் ஜகத்”

சங்க காலச் சான்றோர்கள் வழி வந்த ஆழ்வார்கள் தம் திவ்யப்ரபந்தங்களில் திருமாலேயே பரம்பொருளாகவும், ஸர்வந்தர்மியாகவும் கூறும் விசிஷ்டாத்வைத ஸ்ரீ வைஷ்ணவ மதமே வைதிக மதம் என்று நிலைநாட்டினர்

1. நாராயணனே உலகனைத் தையும் படைத்து அளித்து அழிக்கும் ஜகத்காரணன்.

“நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் த்வாதஸாதித்யா ருத்ரா வஸவ:”
[நாராயணோபநிஷத்]

[நாராயணனிடமிருந்து பிரமன் உண்டாகிறான்(பிரமனுக்கு அந்தர் யாமியான) நாராயணனிடமிருந்து உருத்திரன் உண்டாகிறான். (கஸ்யபருக்கு அந்தர்யாமியான) நாராயணனிடமிருந்தே இந்திரன் உண்டாகிறான்….நாராயணனிடமி ருந்து(இவ்வண்ணமாக) பன்னிரு ஆதித்யர்களும், பதினொரு உருத் திரர்களும் எட்டு வஸுக்களும் தோன்றினார்கள்]

“ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந” [மஹோபநிஷத்]

[நாராயணன் ஒருவனே(ப்ரளய காலத்தில்) இருந்தான். பிரமனுமில்லை சிவனுமில்லை.]

“மா அயோயே மாஅயோயே! மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!…
விதியின்மக்களும் மாசுஇல் எண்மரும் பதினொரு கபிலரும் தாமாஇருவரும் தருமனும் மடங்கலும் மூ ஏழுலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதரவலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரை ப்பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின்”[பரிபாடல் -3]

“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்” [நான்..திருவ-1]

“போதுதங்கு நான்முகன் மகன் அவன் மகன்சொலில் மாதுதங்கு கூறன் ஏறதூர்தி என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”
[திருச்சந்தவிருத்தம்-72]

“கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று வவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளுர்தி கழல்பணிந்து ஏத்துவரே”
[திருவாய்மொழி-2-2-10]

2. நாராயணனே அனைத்துலகையும் வியாபிக்கும் அந்தர்யாமியாகவும் , அதனாலேயே அனைத்துமாகச் சொல்லத்தக்கவனாகவும் இருப்பவன்.

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:|
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர: ||
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா |
அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:||
[தைத்திரீய நாராயணவல்லி]

[நாராயணனே பரப்ரஹ்மம், நாராயணனே பரதத்வம், நாராயணனே பரஞ்சோதி, நாராயணனே பரமாத்மா, இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவுமாக எந்தெந்தப் பொருள்கள் உள்ளனவோ, அவையனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து விளங்குபவன் நாராயணனே]

“ப்ரஹ்மா நாராயண: ஸிவஸ்ச நாராயண:…நாராயண ஏவேதம் ஸர்வம்” [நாராயணோப நிஷத்]

[பிரமனும் நாராயணனே. சிவனும் நாராயணனே. நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்]

“ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ….
பூவனும் நாற்றமும் நீ” [பரிபாடல்-1]

“இனைத்து என எண்வரம்பு அறியா யாக்கையை”
“அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்”
[பரிபாடல்-3]
“கெடுஇல் கேள்வியில் நடு ஆகுதலும்”              [பரிபாடல்-2]

“ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய்” [திருவாய்-4-7-6]

“நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்” திருவாய் -6-9-1]

1. நாராயணனே எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞனாகவும் எல்லாம்வல்ல ஸர்வசக்தனாக வும் இருப்பவன்.

“அத புருஷோ ஹவை நாராயணோகாமயத- ப்ரஜாஸ்ருஜேயேதி | நாராயணாத் ப்ராணோ ஜாயதே மந: ஸர்வேந்த்ரியாணி ச | கம் வாயு: ஜ்யோதிராப: ப்ருதிவீ விஸ்வஸ்ய தாரிணி || [நாராயணோபநிஷத்து]

[புருஷன் எனப்படும் நாராயணன்
‘அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டிக்கக் கடவேன்’ என்று ஸங் கல்பித்தான். நாராயணனிடமிருந் தே ப்ராணன் உண்டாகிறது; மனமும் எல்லா இந்திரியங்களும், ஆகாயமும், வாயுவும், அக்னியும், நீரும், அனைத்தையும் தரிக்கும் பூமியும் உண்டாகின்றன.]

“யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:” [முண்டக..-1-1-10]

[எந்தப் பரமாத்மா அனைத்தையும் அறிகிறானோ, அனைத்தையும் அடைந்திருக்கிறானோ அவனுடைய ஜகத் ஸ்ருஷ்டியாகிற தவம் ஸங்கல்பமயமாயிருக்கிறது.]

“பராஸ்ய ஸக்தி: விவிதைவ ஸ்ருயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச” [ஸ்வேத..6-7]

[இந்தப் பரமாத்மாவினுடைய சக்தியும் ஜ்ஞானமும் செயலும் மேலானதாகவும், பலவிதமாகவும், இயல்வானதாகவும் உள்ளன.]

“நூறு ஆயி ம் கை ஆறுஅறி கடவுள் நின்னைப் புரைநினைப்பின் நீஅலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ!”

“நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் வலியினு மனத்தினும் உணர்வினும் எல்லாம் வனப்பு வரம்பு அறியா மரபிணோயே!”
“இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை” [பரிபாடல் 3]

“எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதேகொண்டு  எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன்” [திருவாய் -3-10-8]

4. நாராயணனே தலைசிறந்த மோக்ஷத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளிப்பவன்.

“உதாம்ருதத்வஸ்யேஸந: ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ— இஷ்டம் மநிஷாண”[புருஷஸூக்தம்]

[மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே; லக்ஷ்மிதேவியும், பூமி தேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள் உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தையும் பெறக் கடவோம்.]

“தத்விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய:”
[ரிக் வேதம் மண்டலம் -5-22-5]

[விஷ்ணுவினுடைய அந்த மேலான பரமபதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் கண்டு கொண்டிருக்கிறார்கள்.]

“மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!”         [பரிபாடல்-3]

“நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம் அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதில் பெறல் உரிமை”                   [பரிபாடல் -15]

“வீடு முதலாம்”        [திருவாய்-2-8-1]

“சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று வீடு தரும் நின்று நின்றே”     [திருவாய்-3-9-9]

“இவ்வுடல் நீங்கிப்போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்”[திருவாய்-10-10-11]

5. நாராயணனே எல்லாக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாய், தாழ்ந்த குணங்கள் எதுவும் இல்லாதவ னாய் இருப்பவன்.

“நிஷ்கலங்கோ நிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸுத்தோ தேவ ஏகோ நாராயண: ந த்விதீயோஸ்தி கஸ்சித்||”
[நாராயணோபநிஷத்]

[ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய்,சுத்தனா ய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.]

“தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண:|.. உத்பவ: ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:||”
[ஸுபாலோபநிஷத்]

[அனைத்தையும் தரிப்பவனும், அனைத்தையும் விதிப்பவனும், செய்பவனும், சிறந்த விகாரங்க ளையுடையவனும், பரமபதத்திலிரு க்கும் தேவனான நாராயணன் ஒருவனே; பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே.]

“நின் ஒக்கும் புகழ் நிழலவை…. எண்ணிறந்த புகழவை”[பரிபாடல்1]

“வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மைநாடின் இருநிலம்”                 [பரிபாடல்-2]

“நின் புகழ் உருவின கை”
[பரிபாடல்-3]
“சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ ஏவல்இன் முதுமொழி கூறும் நற்புகழவை”             [பரிபாடல்-13]

“அன்பது மேஎய் இருங்குன்றத்தான்”[பரிபாடல்-15]

“நல்லவை எல்லாம் இயைதரும் தொல்சீர் குளவாய் அமர்ந்தான் நகர்”                 [பரிபாடல் திரட்டு]

“தாவா விழுப்புகழ் மாயோன்”
[தொல்காப்பியம் பூவைநிலை]

“தேயா விழுப்புகழ் தெய்வம்”
[முல்லைக்கலி-3]

“புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை”    [புறநானூறு-56]

“வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன”[புறநாநூறு-57]

“ஈறில வண்புகழ் நாரணன்”
[திருவாய்-1-2-10]

“உயர்வற வுயர்நல முடையவன்யவனவன்”
[திருவாய்-1-1-1]
“வல்வினையேனை ஈர்கின்ற குணங்களையுடையாய்”
[திருவாய்-8-1-8]
“தோற்றக்கேடவை இல்லவன்”
[திருவாய்-3-6-6]

6. நாராயணனே தேவர்களுக் கெல்லாம் முதல்வனான தேவாதிதேவன்.

“அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:”[யஜூஸ்ஸம்ஹிதா-5-5]

[தேவதைகளுக்குள் அக்கினியான வன் கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவர் இல்லாத மேல் நிலையில் இருப்பவன்]

“தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்”             [ஸ்வேதாஸ்வர]

[தேவதைகளுக்குள் மேலான தேவதையாயிருப்பவன் அந்தப் பரமாத்மாவே]

“அமரர்க்கு முதல்வன் நீ”
[பரிபாடல்]

“மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவாவோ”
[திருவாய்-8-1-3]

“தேவாதிதேவனை” [திருப்பாவை8]

7. நாராயணனே எவராலும் அளத்தற்கரியவன்.

“ந ஸந்தருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்சநைநம்”
[தைத்திரீய நா..1-10]

[அந்தப் பரமாத்மாவின் உருவம் எவனுடைய கண்ணுக்கும் புலனா காது; எவனும் அவனைக் கண்ணால் பார்த்ததில்லை.]

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”
[தை-ஆந-9]

[எந்தப் பரமாத்மாவிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அவனை அறிய முடியாமல் திரும்பி வருகின்றனவோ.]

“அன்னமரபின் அனையோய்! நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?”
[பரிபாடல்-1]

“நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ”
[பரிபாடல்-4]
“அளப்பரியவை”    [பரிபாடல்-4]

“இலனது உடையனிது என நினவரியவன்”    [திருவாய்-1-1-3]

“யானுமேத்தி ஏழுலகும் முற்றும் ஏத்திப் பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்”    [திருவாய்-4-3-10]

8. நாராயணனே அனைத்துயிர்களுக்கும் எல்லா உறவுமாய் இருக்கும் உறவினன்.

“மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:|”              [ஸுபால உப]

[தாய், தந்தை ஸகோதரன் முதலான எல்லா உறவாகவும், புகலிடமாகவும், உபாயமாகவும், நண்பனாகவும், ப்ராப்யமாகவும் இருப்பவன் நாராயணனே]

“அன்னை என நினைஇ நின் அடிதொழுதனெம்”  [பரிபாடல்-18]

“எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மண்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பதுமோய் இருங்குன்றத்தான்”
[பரிபாடல்-15]

“பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையாராவாரும் நீ பேசில்”               [பெரிய திருவ-5]

“தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய் அவை அல்லனாய்”
[திருவாய்-3-6-9]

9. நாராயணனே வேதங்களின் முழுமுதல்வனாக முழங்கப்படுபவன்.

“த்வே வித்யே வேதிதவ்யே…பரா சைவாபரா ச | தத்ராபரா ரிக்வேதோ யஜூர்வேத: ஸாமவேத: அதர்வவேத:||
[முண்டக 1-1-4-5]

[பரமாத்மாவைக் காட்டும் இரண்டு வித்யைகளை ஜீவன் அறிய வேண்டும். பக்தியானது மேலான வித்யை. வேதங்கள் இரண்டாவதான வித்யை. அந்த வேதங்கள் ரிக், யஜூர், ஸாமம், அதர்வணம் என்று நாலு வகைப் படுகின்றன.]

“வாய்மொழிப் புலவ”
“நலம்முழுது அளைஇய புகர் அருகாட்சிப் புலமும் நீ”

“நாவல் அந்தணர் அருமறைப் பொருளே நின் ஏவல் உழந்தமை கூறும்”                       [பரிபாடல்-1]

“வடுஇல் கொடுகையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுஇல் கேள்வியின் நடு ஆகுதலும்”
“என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே”

“கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் நின்உருபு”  [பரிபாடல்-2]

“மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து  வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“ஏஎ இன கிளத்தலின் இனமை நற்கு அறிந்தனம்”

“பதினாயிரம் கை முதுமொழி முதல்வ”

“முன்னைமரபின் முதுமொழி முதல்வ”

“தொல் இயல் புலவ”

“வேதத்து மறை நீ”   [பரிபாடல்-3]

“அவை நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை”

“பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவல்இன் முதுமொழி கூறும்”
[பரிபாடல்-13]

“நலம்புரீஇ அம்சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின்”           [பரிபாடல்-15]

“உளன் சுடர் மிகு சுருதியுள்”
[திருவாய்-1-1-7]

“மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே”        [திருவாய்-3-1-10]

“நம்முடைய நாயகனே! நான்மறையின் பொருளே”
[பெரியாழ்திரு 1-5-3]

“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே”[பெரியாழ்திரு4-3-11

“அரன் நாரணன் நாமம் உரை நூல்மறை”     [முதல் திருவ 5]

“போதில் மங்கை பூதலக்கிழத்திதேவி … என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”  [திருச்சந்த -72]

——–

நம்மாழ்வாரின் பிறபெயர்கள்

  1. சடகோபன்
  2. மாறன்
  3. காரிமாறன்
  4. பராங்குசன்
  5. வகுளாபரணன்
  6. குருகைப்பிரான்
  7. குருகூர் நம்பி
  8. திருவாய்மொழி பெருமாள்
  9. பெருநல்துறைவன்
  10. குமரி துறைவன்
  11. பவரோக பண்டிதன்
  12. முனி வேந்து
  13. பரப்ரம்ம யோகி
  14. நாவலன் பெருமாள்
  15. ஞான தேசிகன்
  16. ஞான பிரான்
  17. தொண்டர் பிரான்
  18. நாவீரர்
  19. திருநாவீறு உடையபிரான்
  20. உதய பாஸ்கரர்
  21. வகுள பூஷண பாஸ்கரர்
  22. ஞானத் தமிழுக்கு அரசு
  23. ஞானத் தமிழ் கடல்
  24. மெய் ஞானக் கவி
  25. தெய்வ ஞானக் கவி
  26. தெய்வ ஞான செம்மல்
  27. நாவலர் பெருமாள்
  28. பாவலர் தம்பிரான்
  29. வினவாது உணர்ந்த விரகர்
  30. குழந்தை முனி
  31. ஸ்ரீவைணவக் குலபதி
  32. பிரபன்ன ஜன கூடஸ்தர்
  33. மணிவல்லி
  34. பெரியன்

நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்

1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை, 11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம், 31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்

ஆழ்வார்களுள் அவயவி எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.
மற்ற ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால்
மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.
இதில்,
பூதத்தாழ்வாரை தலையாகவும்,
பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும்,
பெரியாழ்வாரை முகமாகவும்,
திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும்,
குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும்,
தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும்,
திருமங்கையாழ்வாரை வயிறாகவும்,
மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு இருக்கிறார்.
”சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம் துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ? உளவோ பெருமான் உனக்கு“.
ஸ்ரீ மணவாளமாமுனிகளும், நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து, “உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள், உண்டோ சடகோபர்க் கொப்பொருவர் ? உண்டோ,திருவாய்மொழிக்கொப்பு ? தென்குருகைக்குண்டோ ஒருபார் தனிலொக்குமூர்?” என்று நம்மாழ்வார் பிறந்த நட்சத்திர தினமான வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும், அவர் கொடுத்த திருவாய்மொழியையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார்.
-------------------------------

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading