Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-9-கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை-

April 2, 2015

திருக் கண்ணபுரத்து அம்மானுக்கு அன்றி அடியேன் வேறு ஒருவர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார் இத் திரு மொழியில் –

கைம்மான மத யானை யிடர்  தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள்  மரகதத்தை
எம்மானை யெம்பிரானை  ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே-8-9-1-

கைம்மானம் -கையில் பெருமை யுடையது -முன்கை மிடுக்கு உடைமையாலே அஞ்சாமல்
மேல் விளைவது அறியாதே பொய்கையிலே இழிந்து ஆபத்துக்கு ஆளாயிற்று
யானை இடர் தீர்த்த -நாஹம் களபரஸ் யாச்ய த்ரணார்த்தம் மது ஸூதன -கரச்த கமலான் ஏவ பாதயோர் அர்ப்பிதம் ஹரே –
இடர் தீர்த்த கரு முகிலை -அடியார் துயர் தீர்த்த ஹர்ஷம் -திரு மேனியில் புகர்
அபி ஷிச்ய ச லங்கா யாம் ராஷசேந்த்ரம்  விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பரமு மோத ஹ
கைம்மா மணி -ரத்னத்துக்கும் எம்பெருமானுக்கும் பல படிகளால் சாம்யம்
1-ஸ்வயம் போக்யம்-உபாயமாக்கி வேறு புருஷார்த்தம் பெறலாம்
2-செம்படவன் -வியாபாரி -அரசன்
3-இழந்தவன் கதறி அழுவான்
4- பெற்றவன் மார்பு நெறிப்பான்
5-உள்ளவனை உலகம் எல்லாம் அனுவர்த்திக்கும்
6-இடையில் புருஷனைக் கொண்டே ரத்னம் வாங்கப் படும் -வேதம் வல்லார்களை —
7-சில ஆஸ்ரயங்களில் மதிப்பு யுண்டே
8 ஒளியை விட்டு இராது
9-ஒளியால் மகிமை
10-ஸ்வ தந்த்ரத்துக்கு மகிமை உண்டே
11-கடல் மலையில் உள்ளன -திருப் பாற் கடல் திரு மலை
12 -தலைப்பில் முடிந்து ஆளலாம் -சௌலப்யம்
13-இரவும் பகலும் கண் உறங்க மாட்டார்கள்
இப்படி பல ஒற்றுமைகள் உண்டே
அணி கொள் மரகதத்தை -காள மேகத் திரு உருவம் -மரகதப் பச்சை -பச்சை மா மலை போல் மேனி
காணப் புக்கவர்கள் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து சம்சார தாபங்களை போக்குவிப்பான் –

————————-

தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –8-9-2-

தருமான மழை முகிலைப்-தருவை -கல்ப வ்ருஷம் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
அதில் மட்டும் திருப்தி பெறாமல் காள மேகத்தை -என்கிறார்
உயிர்  அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்நீர்கள் சுமந்து -திரு விருத்தம்-32
நீரைச் சுமந்து நாடு எங்கும் சென்று வர்ஷிக்கும்
விண் மீது இருப்பாய் -கடல் சேர்ப்பாய் -மண் மீது உழல்வாய் -திருவாய் -6-9-5-பொருத்தமான உவமை –

தன் அடியார் அவமானம் தவிர்ப்பான் -இவன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை தானே
அம்பரீஷன் -துர்வாசர் –

————————————–

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

திருமந்த்ரார்த்த அனன்யார்ஹ சேஷத்வத்தை வெளியிட்டு அருளுகிறார் –
விலங்கல் உற படையால் ஆழி தட்ட பிரான் -திரிகூட பர்வதத்தில் சென்று சேரும் படி
வானர சேனைகளைக் கொண்டு சமுத்ரத்தை அடைத்தவன்-
ஆழி விலங்கல் உற -படையால் தட்ட -சூர்யன் அஸ்தமன பர்வதத்தில் சேர சக்கரப் படையால் மறைத்த -என்றுமாம்
கண்ணபுரம் யுடையானுக்கு -என்னாமல் -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு -என்றது
இவனுக்கு வாசஸ் ஸ்தானம் பல இருந்தாலும் இது அத்விதீயம் என்று காட்டி அருளுகிறார்
திருமந்த்ரார்த்தம் இங்கே தானே அருளினான் –

———————————————-

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே  –8-9-4-

மிக்கான் -சர்வ ஸ்மாத் பரன்
மறையாய் விரிந்த விளக்கை- வேறு ஒன்றால் காண வேண்டாதே தனக்குத் தானே பிரகாசகமாய் இருப்பது –
பிரமாணங்களால் அறியப் பார்க்கும் அன்று அவற்றாலே பிரகாசிக்கிற மேன்மைக்கு எல்லை அன்றிக்கே இருப்பது –
ஆசார்ய ஹிருதயம் -மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் –
மறையால் விரிந்த விளக்கு -என்று அகாரத்தைச் சொல்லுகிறது -அகாரம் தானே மறைகளாய் பரம்பிற்று
வாச்ய வாசக பாவ சம்பந்தத்தால் அவனையே குறிக்கும் –
பொலிகின்ற பொன்மலையை  -கணபுரத்து பொன் மலை போல் நின்றவன் -பெரிய திருமடல்
தக்கான் –அக்காராகக் கனி – இவை திருக்கடிகைப் பதி எம்பெருமான் திரு நாமங்கள்  -பரம தயாளு –
வெல்லக் கட்டி போலேயும் கனி போலேயும் இனிமையானவன்
அக்காரத்தை கொம்பு ஸ்தானத்தில் -அதில் உண்டான கனி -விலஷணமான கனி
சௌரி பெருமாளையே -கரு முகில் வண்ணனை கண்ணபுரத்தானை -என்று -நிகமப் பாசுரத்தில், அருளுவதால் –
தக்கான் ஆகவும் -அக்காரக் கனி ஆகவும் -திருக் குடந்தை ஆராவமுதன் -ஆகவும் வயலாலி மைந்தனாகவும் பேசி அனுபவிக்கிறார் –
கீழே ஏழாம் பத்தில் திரு நறையூர் பதிகங்கள் -கறவா மட நாகு -சினவில் செங்கண்-திருமொழி களும் இத்தகையதே-

——————————————-

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை   என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5-

தாம் பெற்ற பேற்றை வாயாரப் பேசி மகிழ்கிறார் –
என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் போயறியாய்
தன்னுடைய ஆனந்தம் விளங்க -எந்தாய் என் மனத்தே வந்தாய் –நீ வந்து புகுந்த பின்னைப் போயறியாய் -என்று
தனித் தனி வாக்யமாக நீட்டி நீட்டி அருளிச் செய்கின்றார்
வந்தாய் -பரமபதம் -திருப் பாற் கடல் போன்ற ஸ்தலங்களை விட்டு வந்தாயே
என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை -வந்த இடத்திலும் யோகிகள் மனம் போலே இன்றி
அடி நாயேன் மனத்தைத் தேடித் பிடிந்து வந்து புகுந்தாய்
போய் அறியாய் -அழுக்கு உடம்பு என்று வெறுக்காதே உகந்து இதுவே சிறந்த வாசஸ் ஸ்தானம் என்று
ஸ்திரப் ப்ரதிஷ்டையாக இருக்கின்றாய் -என்று விரித்து உரைக்கலாம்
நீர் உம்முடைய பேறாக என் நெஞ்சிலே வந்து புகுந்தாலும் பாவியேன் மறந்து ஒழியலாமே-
அப்படி மறந்து ஒழிகை அன்றிக்கே -எந்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றால் போலே
நன்றி பாராட்டப் பெற்றேனே -நீர் வந்து புகுந்த பேற்றுக்கு மேற்பட்ட பேறு அன்றோ -இது -என்றவாறு –

——————————————————–

எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6-

எம்பெருமான் செய்து அருளின பேற்றுக்கு மறவாமை ஈடல்லவே -உபகாரத்தின் பெருமையையும் தம்முடைய நினைவையும்
ஒப்பிட்டு பார்த்து தம்முடைய மறவாமை அசத் கல்பமாகத் தோற்றிற்றுப் போலும்
வெந்நரகம்-சம்சாரம்
நடுங்குகின்றேற்கு அடியேனை —இங்கே -நடுங்குகின்றேற்கு என்றது நடுங்குகின்ற எனக்கு பொருள் இல்லை
-நடுங்குகின்ற விசேஷணம் மாத்ரமே
திருமாலை -மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் -பாசுரத்தில் -உழைக்கின்றேற்கு என்னை -போலே பிரயோகம்
இருத்தி -முன்னிலை ஒருமை நிகழ கால வினை முற்று
கண்டாய் -முன்னிலை அசை-

———————————————

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே -8-9-7-

மாதா பிதாக்கள் சரீர  பிண்டத்தை மாத்ரம் உத்பத்தி பண்ணி பெற்றுப் போட்டு போய் விட்டார்கள்
எல்லா உறவு முறையுமாய் நீ இருந்து ஞான பக்த்யாதிகளை வளர்த்து என்னுள் மன்னி நின்றாய்
என்ன காரணத்தால் உன்னை மறக்க முடியும்
உற்றானாய் வளர்த்தி -பிதா ச ரஷகச் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி –ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –
திரு மந்த்ரத்தில் காட்டி அருளும் ஒன்பது உறவு முறைகளும்
பாலசந்த்ரன் ஷயம் தீர்த்து அருளி -தன்னுடைய ரஷகத்வத்தைக் காட்டி என்னை ஆட்கொண்டு அருளிய பின்பு
எங்கனம் உன்னை மறப்பேன் -எத்தால் நான் மறக்கேன் –

————————————————–

கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே -4-8-8-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே இன்று இவை  ஒழியக் கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டலே –
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் –
சம்சாரம் நேராத பேறு பெற்றேன்
திருவாலிப் பதிக்கு வயல் சூழ் விசேஷணம்
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே
ஒரு நாளும் நீர் மாறாத வயல் சூழ்ந்த திருவாலியிலே நிற்கிற சர்வேஸ்வரனைப் பெற்றேன் பெற்றதுவும்
அந்த பெற்ற பேறு தானும் – பிறவாமை பெற்றேன் – இப் பேற்றுக்கு விச்சேதத்தை பண்ணக் கடவ
ஜன்மம் மறுவல் இடாதபடி   பெற்றேன் -என்னுதல் –
அன்றிக்கே
இப் பேற்றுக்கு அடியாக என் பக்கல் ஒரு நன்மை பிறவாது இருக்கச் செய்தே பெற்றேன் -என்னுதல்
அங்கன் இன்றிக்கே
பெற்றேன் என்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாத படி பெற்றேன் -என்னுதல்
உபகார் ஸ்ம்ருதி அனுவர்த்தித்த அன்று பிரத்யுபகாரம் தேடிநெஞ்சாறல் பட வேண்டும்படி இருக்கும் இறே
அது வேண்டாத படி பிராப்தம் இது என்று இருக்கும் படி உபகரித்தான் ஆயிற்று –

பிறவி இல்லாமை பெற்றேன் -முதல் அர்த்தம்
நிர்ஹேதுகமாக பிறவாமை பேறு பெற்றேன் -இரண்டாம் அர்த்தம்
நன்றி அறிவும் பிறவாமலே இப்பேறு பெற்றேன் -மூன்றாவது அர்த்தம் -என்றவாறு –

—————————————–

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை   விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ –8-9-9-

கண்ணார் கண்ணபுரம் -வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கும் படியான அழகு
அன்றிக்கே விசாலமான -கண் -இடம் –
தலைச் சங்க மேல் திசையுள் விண்ணோர் நாண் மதியை –
நாண் மதியப் பெருமாள் -தலைச் சங்க நாண் மதியம் -திருப்பதி
தலைச் சங்காடு -தலைச் சங்க நாடு -மருவி
கைப்பால் அலைச் சங்கம் ஏந்தும் அணி யரங்கத்து அம்மான் தலைச் சங்க நாண் மதியத்தான் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை -பெரிய திரு மடல் -இரண்டு மங்களா சாசன பாசுரங்கள் இத் திவ்ய தேசத்துக்கு
நாண் மதியை   விரிகின்ற வெஞ்சுடரை-கதிர் மதியம் போல் முகத்தான் -என்றும்
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் கொண்டு -என்றும் –
உதய பருப்பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே -என்றும் -போலே –

————————————————

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே -8-9-10-

இத் திரு மொழியில்
திருவாலி
திருக் குடந்தை
திருக் கடிகை
திருச் சங்க நாண் மதியம்
முதலிய பல திருப் பதிகளை அனுசந்தித்து இருந்தாலும் இவர் கவி பாடுகிறது திருக் கண்ணபுரத்தையே -என்கிறார்
பகவத் பக்தி மிகுந்து தொண்டர்கள் என்று பெயர் பெற்றவர்களை விளித்து இத் திரு மொழியை பாடி ஆடுமின் –
உலகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும்
வரு நீர் வையம் -கடல் சூழ்ந்த பூமியிலே -உய்ய -இவை பாடி ஆடுமின் –

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-8-வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்-

April 1, 2015

திருக் கண்ணபுரத் தெம்பெருமான் பல திரு வவதார சேஷ்டிதங்களை அடைவே ஆழ்வாருக்கு
ப்ரத்யஷ சாமாநாகாரமாக ஆக்குவிக்க  -அவற்றை எல்லாம் பேசி இனியர் ஆகிறார் இத் திரு மொழியில் –
மத்ஸ்ய கூர்ம வராஹ நரசிம்ஹ வாமன பரசுராம தசரதராம பலராம
ஸ்ரீ கிருஷ்ணாவதாரங்களை-பாட்டடைவே  அனுபவிக்கிறார்-

———————-

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே-8-8-1-

ஆனா வுருவிலானா யவனை -விகாரம் அற்ற உருவை -சதைக ரூப ரூபாய -அவிகாராய சுத்தாய -என்னும்படி
யுடைய ஸ்ரீ கிருஷ்ணனனே  மத்ஸ்ய திருவவதாரம் செய்து -அருளிய பெருமான் -கிருபை அடியாக –
லஷம் யோஜனை   நீளமும் -பதினாயிரம் யோஜனை பருமனும் –
ஒற்றைக் கொம்பும் -ஸ்வர்ண வர்ணமும் -சர்வ லோக மநோ ஹாரியான ரூபமும் –
வலியுருவின் மீனாய் வந்து -கடல் வெள்ளத்தை அடைய தன்னுடைய ஒரு  செலுவிலே
அடக்க வல்ல மிடுக்கை உடைய மத்ச்யமாய் வந்து-

————————

மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-8-8-2-

மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக -உள்ளுக் கிடக்கிற மீன் சாதிகள் தடுமாறும் படியாக பெரிய வெள்ளம் குழம்பும் படியாக
மலங்கு மீன்களில் ஒரு ஜாதி
அங்கோர் வரை நட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்-
மந்திர பர்வதத்தை நாட்டி -தேஜஸ் யுடைய அமிர்தம் தோன்றும் அளவும் -ஒரு அத்விதீயமான கூர்ம ரூபியாய் –
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை-
அந்த மந்திர பர்வதம் நால் புறமும் திரிந்து வரும்படியாக பெரிய அக்கடலிலே
அம்மலையைத் தாங்கிக் கொண்டு இருந்த ஆச்சர்ய பூதனான பெருமானை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேன்  -கடலை  அணித்தாக யுடைய இங்கே கண்டு கொண்டேன்
மன்னு வடமலையை மத்தாக மாசுணத்தால் மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து -பெரிய திரு மடல் அனுசந்தேயம் –

———————————

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-3-

ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முன் உள்ள பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீ வராஹ திருவவதாரம் -அவனே இவன் –
வயல் வளம் -பொழில் வளம் -மிக்க திவ்ய தேசம்-

கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக்
கூரார் குருகு-நாரைகள் -ஆரல் மீன்களை -ஆஹாரமாக கொள்ள நினைத்து பாய
கயல் இரியும் -கயல் மீன்கள் அஞ்சியோடும்
காரார் புறவில் கண்ண புரத்து–மேகங்கள் படிந்த சோலைகள் உள்ள தேசம்

————————-

உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப  வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-8-8-4-

திருத் துழாய் நறு மணத்தோடு அங்குரிக்குமா போலே பகவத் பக்தியோடு பிறந்த ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்-
சிதா ஷீரான் யான்யேன சங்க மிதாங் சம்  -ஸ்ரீ ரெங்க ராஜ உத்தர சதகம்
சக்கரையும் பாலும் கலந்தால் போலே நர உருவும் சிங்க உருவும் பொருந்திற்று -உடனே ஒன்றுவித்து -என்கிறார்
வளைந்த சீற்றம் விண் வெதும்ப -ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதாய மம-
கோபம் ஆஹாரயத் தீவரம் -சமுத்திர ராஜன் இடம் –
ததோ ராமோ மகா தேஜா  ராவணணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபச்ய வசமே யிவான் –
களம் -இருள் -நெற்கதிர்கள் செழிப்பாக முற்றி எங்கும் இருண்டு கிடக்கிற படி
களம் -நெற்களம் -என்றுமாம் –

—————————–

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-8-8-5-

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்-
கண்டார் அடங்கலும் தொழும் படியாவதையே இயற்கையாக யுடையதாம் எம்பெருமானுடைய திரு உருவம்
மணி விடம்பி நி தஸ்ய மநோ ஹரே வபுஷி மகன்மநா  முநீ மண்டலீ –
ஜபம் உஞ்சத ஹோமம் உஞ்சத வ்ரதம் உஞ்சத வேதம் உஞ்சத –
யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவசா பிரதிபேதிரே-
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப்
பெரிதுடைச் துச்சோதனன் -பெரியாழ்வார்
பரவசமாகவே தொழ நேரிடும் -தொழு நீர் வடிவின் –
முழு நீர் வையம் முன் கொண்ட-
தாரை வார்த்து கொடுத்தது மூவடி யாகிலும் -எம்பெருமான் திரு உள்ளத்தால் மூவடியும் மூ உலகம்
ஆதலால் முழு நீர் வையம் கொண்டான்
மூவா வுருவின் அம்மானை-
இளகி வரும் உருவத்தை யுடையவன்
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும் கழு நீர் மலரும் –
பொன் போன்ற நெற்கதிர்கள்  விளைவு
கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-

—————–

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-6-

விரோதிகளை களைந்து ஒழிந்த உபகாரத்துக்குத் தோற்று -துதிப்பது மாதரம் உண்டு -உபாசனைக்கு இல்லை
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் –
வண்டுகள் உண்ணுமாறு மலர்கள் மதுவைப் பெருக்குகின்றன என்றும்
வண்டுகள் எதேஷ்டமாக உண்ட பின்பும் மலர்கள் மதுவை மேலே மேலே பெருக்கிக் கொண்டே இருக்கின்றன –
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் –
பசல்களோடும் குட்டிகளோடும் வண்டுகள் வந்து புஜிக்க-
பின்னையும் தர்ச நீயமான  நீலமானது மதுவை பிரவஹியா நிற்கும் –
கடலிலே ஒரு சிறாங்கையை  புஜிக்கும் காட்டில் கடல் வற்றாது இறே-

——————–

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-8-8-7-

த்விதா பஜ்யேய மப்யேவம்  ந நமேயம் து கஸ்யசித் -என்பனை குடும்பத்தோடு களைந்து ஒழிந்தமை-

——————–

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-8-

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி-
ஒரு காதில் தொங்குகிற திருக் குண்டலமும்
ஒரு பக்கத்தில் கலப்பையும் விளங்க பலராமனாய்த் திரு வவதரித்து –
நம்பி மூத்த பிரான் -ஹலாயுதன் –
கண்ணபிரானுக்கு துணையாக இருந்ததாலும் கம்சன் தம்பி ஸூநாமா முதலியோரை தானே கொன்றிட்டது பற்றியும்
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து செற்ற கொற்றத் தொழிலானைச்-என்றது
நித்ய அக்னி ஹோத்ரிகளாயும் வித்வான்களாயும் ஞான அனுஷ்டான சம்பன்னர்களும் திரண்ட திவ்ய தேசம் –

—————————

துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-9–

துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்-பூமிக்கு அதிஷ்டான தேவதை பூமிப் பிராட்டி
பூ பாரம் தொலைக்க அவதரித்து அருளினான்
இவரித் தரசர் தடுமாற -இவரித்தல் -எதிர்த்தல்
இருள் நாள் பிறந்த வம்மானை-கிருஷ்ண பஷத்து நடு நிசி திருவவதாரம்
-கடல் அலைகள் முத்துக்கள் கொழித்து தள்ள
செந்நெற் பயிர்கள் கதிர்களை வணக்கி சாமரம் வீச அழகு மிக்க திருக் கண்ணபுரம்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம் -திருவாய் -9-10-1-
முற்காலத்தில் கடல் அணித்தாய் இருந்து இருக்கலாம் —

——————————

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே -8-8-10-

வடதிசை கண் உள்ள சம்பளக் கிராமத்தில் வாசம் செய்யும் விஷ்ணுயசஸ் மனைவி ஸூமதி கர்ப்பத்துள் புகுந்து
பன்னிரண்டு ஆண்டு உறைந்-ஸ்ரீ கல்கி திருவவதாரம் ஆகும்
பரசுராமன் இடம்
விஸ்வஜித் அஸ்வமேதம் யாகம் செய்வாராம்
முன்னம் பௌத்தர்கள்  ராஜ்யம் படை எடுத்து முடிப்பாராம்
பின்பு யௌனர்கள் ராஜ்யம் – மிலேச்சர்கள் -வெட்டி தன்னை அனுவர்த்தித்தாரை பட்டாபிஷேகம் செய்வித்து
பின்பு கலி புருஷனை ஓட விரட்டி
கலி புருஷன் நண்பர்களான கோகன் விகோகன் இருவரையும் ஒரே சமயத்தில் அழித்து
அதர்மத்தை வேர் அறுத்து கிருதயுகத்தை ப்ரவர்த்திப்பித்து
அவதார பிரயோஜனம் தலைக் கட்டினவாறே ஸ்ரீ பத்ரிகாச்ரமம்  எழுந்து  அருளி
அப்ராக்ருத திவ்ய ஸ்வரூபத்தை ஆவிஷ்கரித்து
தன்னடிச் சோதிக்கு எழுந்து அருளுவார்
தானாய் -ஸ்ரீ ராமாவதார ஏற்றம் சொல்லும்
இத் திரு மொழியை கற்பார் நித்ய நிஷ் கல்மஷர் ஆவார் -என்று பயன் உரைத்து தலைக் கட்டுகிறார் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-7-வியமுடை விடையின முடைதர மட மகள்-

April 1, 2015

கீழே -வருந்தாது இரு -என்று பல காலும் சொன்னார் –
பரமபதம் நமக்கு உத்தேச்யமானாலும்  அவனே அத்தை விட்டு இங்கே விரும்பி நித்ய வாஸம் செய்து அருளின பின்பு
நமக்கும் இவ்விடமே பிராப்யம் அன்றோ -இதை ப்ராபித்த பின்பும்  வருந்த வேண்டுமோ -என்று
அத் திருப்பதி தன்னையே அனுபவிக்கிறார்
குற்று எழுத்துக்கள் நிரம்பப் பெற்ற சித்ர கவி எனப்படும்
உடை -விடை -வரை -நெட்டு எழுத்தான ஐ காரம் வரக் கண்டாலும் ஒலி வடிவில் குற்று எழுத்தே போலும் –
பாட்டுத் தோறும் ஈற்று அடியின் முடிவில் ஏகாரம் வருதலும்
நான்காம் பாட்டில் நான்கு அடிகளிலும் முதல் எழுத்து நெட்டு எழுத்தாய் இருத்தலும் குறையாகாது என்க-

—————————————-

வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே –8-7-1-

வியமுடை விடையினம்  உடைதர மட மகள்-வலிமை பொருந்திய  வ்ருஷபங்களின் கூட்டமானது
அழிந்த அளவிலே மடமைக் குணமுடைய நப்பின்னை பிராட்டி யுடைய
குயம் இடை  தடவரை அகலமது உடையவர் -திரு முலைகள் நெருங்கி அணையப் பெற்ற
பெரிய மலை போன்ற திரு மார்பை யுடையரான
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில்  -அழகிய நடையை யுடைய அன்னப் பறவைகள்
இளைய பெண்களினுடைய நடையை அப்யசிக்கப் பெற்றதும்
கயம் மிடை கணபுரம் அடிகள் தம் இடமே -தடாகங்கள் நெருங்கி இருக்கப் பெற்றதுமான
திருக் கண்ணபுரமானது ஸ்வாமி யினுடைய திவ்ய தேசம் –

வியம் -வலிமை -வேறுபாடு -என்றுமாம் -ஏவல் -கம்சனால்
உடை தர -உடைய-துணைவினை -உடைதல் -அழிதல்
குயமுடை தடவரை -பாட பேதம் —
குயமுடைத் தடவரை இருக்க வேண்டும் -ஓசை இன்பத்தால் தகர ஒற்று இல்லாமல் விகாரம் –
அன்னம் -அனம் என்று திரிந்து –

——————————-

இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்
மண மலி  விழவினொடடிய வரளவிய
கண மலி  கண புர மடிகள் தமிடமே –8-7-2-

இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து-
இணை மலி மருது இற எருதினோடு இகல் செய்து -இகல் -பகையும் யுத்தமும்-
சேர்த்தி பொருந்திய இரட்டை மருத மரங்களை இற்று முறிந்து விழும் படி செய்தவனும்
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்-சேர்த்தி அழகு வாய்ந்த முலைகளை யுடைய நப்பின்னை பிராட்டியின்
திரு மணத்தால் யுண்டாகக் கூடிய மிகுந்த சம்ஸ்லேஷத்தை உட்கொண்ட
மண மலி    விழவினொடடிய வரளவிய-
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய –
மகிழ்ச்சி மிகுந்த திரு விழாக்களில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெருங்கப் பெற்ற
கண மலி  கண புர மடிகள் தமிடமே -திரள் நிறைந்து உள்ள திருக் கண்ணபுரம் ஸ்வாமி யினுடைய திவ்ய தேசமாம் –

எருதுகள் உடன் பொருத ஸ்ரமம் தீர இங்கே நித்ய வாஸம்
நித்யோத்ஸவ பஷோஸ்த்வ மாசோஸ்தவ சம்வஸ்த்ர  உத்சவங்கள் நிறைந்த

—————————————–

புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை
மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல்
கயல் துளு கண புர மடிகள் தமிடமே –8-7-3-

புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை-பெரும் காற்றோடு கூடின -வரை மழை -கல் மழை –
பொழியும் அளவில் அழகிய பசுக்கள்
மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்-கலங்கி நிற்க அப்போது கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த மகா புருஷனான
முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல்-முயற்சி செய்கிற களைக் கொட்டுகளை யுடைய சிறு தூறுகளில்
நின்றும் முயல்களானவை துள்ளவும் –
வளம் விளை வயல் -செழிப்பாக விளைகின்ற வயல்களிலே
கயல் துளு கண புர மடிகள் தமிடமே  -கயல் மீன்கள் துள்ளப் பெற்ற –
திருக் கண்ணபுரமானது நம்முடைய ஸ்வாமி யினுடைய திவ்ய தேசம்-

குறிஞ்சி நிலமும் மருத நிலமும் கலந்தால் போலே காணும் இருப்பது –
மணி நிரை–மணி-என்று அழகாய்–அதாகிறது–அவனும் ரஷிக்க-
தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே–அவனே ரஷகனாம்படி இருக்கை-
நெடியவர் -ஆபத் ரஷணத்தில் தமக்கு மேல் பட்டவர் இல்லாதவர் –

——————-

ஏதலர் நகை செய விளைய வரளை வெணெ
போது செய்தமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மது கரம் குலவிய மலர் மகள்
காதல் செய் கண புர மடிகள் தமிடமே -8-7-4-

ஏதலர் நகை செய விளைய வரளை வெணெபோது செய்து –
பகைவரான சிசுபாலாதிகள் -சிரிக்கும் படியாக -இள மகளிர் கடைந்து வைத்த வெண்ணெயை திருப்த்தியாக அமுது செய்து
அமரிய புனிதர் -சந்தோஷித்த -பவித்ரரான
நல் விரை மலர்-கோதிய -நல்ல பரிமளத்தை யுடைய பூக்களை கொத்தி அவை அசாரம் என்று விட்டு வந்த –
மது கரம் குலவிய மலர் மகள்-வண்டுகள் சூழ்ந்து பரவப் பெற்ற தாமரை மலரில் அவதரித்த பெரிய பிராட்டியார் –
காதல் செய் கண புர மடிகள் தமிடமே -விரும்பப் பெற்ற திருக் கண்ண புரமானது ஸ்வாமி யினுடைய திவ்ய தேசமாம்-

விரை மலர் கோதிய மது கரம் குலவிய-என்கிற விசேஷணம் மலருக்கும் ஆகலாம் -கணபுரத்துக்கும் ஆகலாம்
விரை மலர் கோதிய மதுகரம் குலவியதும் -மலர்மகள் காதல் செய்வதுமான திருக் கண்ணபுரம் –
ஏதலர் நகை செய -பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாரும் சிரிப்ப-பெரியாழ்வார் -2-7-1-
கற்றினம்  மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்  காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி யுரலிடை யாப்பும் யுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -நாச்சியார் -12-8-
அளை வெணெய் -வினைத் தொகை -அன்றிக்கே அளை -தயிர் ஆகவுமாம்
போது செய்தல் -திருப்தியாக வுண்ணுதல்
நவநீத சோர சேஷ்டிதங்களை நாம் அனுசந்தித்த அளவிலே நமது பாபங்களை விலக்கி புண்ணியம் தர வல்ல புனிதர்-

——————————-

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த  வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி  யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே –8-7-5-

எம்பெருமானுக்கே எல்லா விசேஷனங்கள் இதில் -திருக் கண்ண புரத்துக்கு இல்லை-

—————————

மழு வியல் படை யுடையவனிடம் மழை முகில்
தழுவிய வுருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை  பண்
எழுவிய கண புர மடிகள் தமிடமே -8-7-6-

மழு வியல் படை யுடையவனிடம் -மழுவை  விதேயமான ஆயுதமாக யுடைய பெருமானது இருப்பிடம் –
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை -மிகவும் செழுமை தங்கிய தாமரைப் பூவில் அவகாஹித்த –
வண்டுகள் ஆகிய பறவைகளின் யுடைய
பண் எழுவிய -இசைப் பாட்டுக்கள் எங்கும் வ்யாபிக்கப் பெற்ற-
இடம் -முதல் அடியிலும் கடைசி அடியில் உண்டே இப்பாசுரத்தில் -ஆழ்வார் திரு உள்ளமே இதற்கு நியாமகம்
திரு மகள் மருவிய -மலருக்கும் கணபுரத்துக்கும் விசேஷணம்
மலருக்கு ஆகில் -பத்மவ நாலயாம்-கத்ய த்ரயம் போலே -தாமரை மலர் தோறும் பிராட்டி உறைகின்றமை உணர்த்தப் படும்

—————————————-

பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம்
எரிதி யொடென வினவியல் வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறை சொலு மடியவர்
கருதிய கண புர மடிகள் தமிடமே —8-7-7-

பரிதி யொடணிமதி -பரிதியோடு அணி மதி
பனிவரை -இமய மலை போன்ற குல பர்வதங்கள்
திசை நிலம்-திக்குகள் என்ன -பூ மண்டலங்கள் என்ன
எரிதி யொடென – எரி தீ -அக்னி என -என்று  சொல்லப் படுகிற  -தீ தி குறுகி நிற்பது செய்யுள்  விகாரம்
வின -இப்படிப்பட்ட பொருள்களை எல்லாம்
வினவியல் -இவற்றை நடத்திக் கொண்டு போருகிறவருமான
சுருதியொ டருமறை முறை சொலு மடியவர்-
ஸ்வரத்தொடே  கூடின அருமையான வேதங்களை முறைப்படியே ஓதுகின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கருதிய-நமக்கு இவ்விடமே  பிராப்யம் என்று அனுசந்திக்கப் பெற்ற
கண புர மடிகள் தமிடமே   –

—————————————

படி புல்கு மடி  யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு  தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே —8-7-8-

கொடி புல்கு  தட வரை யகலமது டையவர் முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்-நாற்று முடிகள் உடன் கூடி
இருக்கும் விசாலமான கழனிகளிலே கலப்பைகளை செலுத்தும் பொழுது அடிபட்ட தாமரை முதலிய பூக்கள் ஆனவை
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே -பரிமளத்தைப் புறப்பட விடப் பெற்ற திருக்கண்ண புரம் –
படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயலாலி மணாளா -11-8-6-
படி புல்கும் அடியிணை பலர் தொழ –  உலகு அளந்த திருவடிகளை எல்லாரும் காணும் படியாக
இங்கே சேவை சாதித்து அருளும்
மலர் வைகு கொடி-பெரிய பிராட்டியார் -ஸ்திரீ ஜாதிக்கு உவமை ஆகு பெயர்
அகலகில்லேன் இறையும் என்று உறை மார்பன் இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்

——————————-

புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய
நில மகளென வின மகிளர் களிவரொடும்
வலமனு படை யுடை மணி வணர் நிதி குவை
கல மனு கண புர மடிகள் தமிடமே –8-7-9-

புல மனு மலர் மிசை மலர் மகள் புணரியநில மகளென வின மகிளர் களிவரொடும்-
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ நிற்கும் பெருமான் உறைவிடம் –
கண் முதலிய இந்த்ரியங்களை ஆகர்ஷித்து தன்னிடம் நிலை நிற்கச் செய்ய வல்ல அழகிய மலர்
புல மன்னு மலர்மிசை மகள் -என்னும் அளவே போதுமே இருக்க -மீண்டும் மலர் மகள் -என்றது சம்ஜ்ஞையாகக் கொள்ளத் தக்கது
வலமனு படை யுடை மணி வணர் -படை இங்கே ஆழிப் படை சிறப்புப் பொருளில் வந்தது
நிதி குவைகல மனு கண புர மடிகள் தமிடமே -த்வீபாந்தரங்களில் இருந்து பொற் குவியல்களை  யுடைய
மரக் கலங்கள் பொருந்தி  யுள்ள  திவ்ய தேசம்
புலங்கொள் நிதிக் குவையோடு புழைக் கைம்மா களிற்று இனமும்
நலங்கொள் நவ மணிக் குவியும் சுமந்து எங்கும் நன்று ஒசிந்து கலங்கள் இயங்கும் மல்லை -போலே –
நிதி -பொன் பொருளில் -இங்கே –
பொற் குவை மாறாத மரக் கலங்களை உடைய திருக் கண்ண புரம்-
கடல் ஒரு புறமாய் இருக்கும் போலே காணும் -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்-

————————————

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை
வலி கெழு மதிளயல்  வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு
ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே–8-7-10-

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை-அங்கே சௌசீல்யாதி குணங்களை காட்ட முடியாமல் பகல் விளக்காய் இருக்குமே
வலி கெழு மதிளயல்  –வயலணி–இவை இரண்டும் திரு  மங்கைக்கு விசேஷணங்கள்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே
இத் திரு மொழியை இசை குன்றாமல் ஒதுமவர்கள் முக்தி பெறுவார்கள் –
அனுபவித்தே தீர வேண்டிய பாப பலன்களையும் அனுபவிக்க வேண்டாம் –
இத் திருமொழி உடைய இசை பரம போக்கியம் என்பதால் விழுமிய இசையினோடு -என்கிறார்-

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-6-தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்-

April 1, 2015

இத் திரு மொழி தொடக்கமாக மேல் ஐந்து திரு மொழிகளும் தானான தன்மையில் அருளிச் செய்கிறார் –
ஆழ்வீர் நீர் இங்கனே  பரிதபிப்பான் என் -விபவம் போலே அடியார்களை ரஷிக்கைக்காக அன்றோ
இங்கே நித்ய சந்நிதி செய்து அருளுகின்றேன்
உமக்கு ஒரு குறை உண்டோ-என்று தேற்ற – -ஆழ்வார் தேறி அருளிச் செய்கிறார்-

அநுகூல வர்க்கத்தைப் பார்த்து -சர்வேஸ்வரன் நம்முடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு
திருக் கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனான் –
நாமும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்- போருங்கோள் என்கிறார்   –

—————————-

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல்  மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-1-

தொண்டீர் உய்யும் வகை  கண்டேன் –கண்ண புரம் நாம் தொழுதுமே – தொடங்கி
தம்முடைய உகப்பை வெளியிடுகிறார் –
கீழே பட்ட அலமாப்பு எல்லாம் பகலவனைக் கண்ட பனி போலே அகன்று ஒழிந்தமை தோன்றுமே
தொண்டு பூண்டு அமுது உண்ண பாரித்து இருக்கும் அன்பர்களே சத்தை பெற விரகு கண்டேன் –
திருக் கண்ணபுரம் தொழுவோம் வம்மின் -என்கிறார்-

துளங்குதல் -வருத்தப் படுத்தல் -அச்சப் படுத்தல் -கலங்குதல்
சிறிதே முனிந்த -பஞ்சவடியில் -பிராட்டியைப் பிரிந்து அளவு கடந்த கலக்கத்தால் -ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் –
முற்ற முனிந்தால் ஜகத்துக்கே உப சம்ஹாரம் –
இங்கே இலங்கையில் உள்ள ராஷசர் அளவிலே மட்டும் என்பதால் சிறிதே முனிந்த –
திரு மார்பன் -வீர ஸ்ரீக்கு குடி இருப்பான மார்வு படைத்தவன்
மிதுனத்திலே கைங்கர்யமே ஸ்வரூப பிராப்தம் –
வண்டார் கூந்தல் மலர் ம்ங்கை -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் இச் சேதனக்கும் நமக்கும் உண்டே
நம் வலையில் அகப்படுவார் யார் என்று நாம் திரியா நிற்க -போன்ற உபதேசம் பலியாத பொழுது
கண்ணைப் புரட்டி -கச்சை நெகிழ்த்து கூந்தல் முதலிய அழகைக் காட்டி
அவனை பிச்சேறும்படி பண்ணி அங்கீ கரிக்க பண்ணுமவள்-என்பதால்
வண்டார் கூந்தல் மலர் மங்கை -வடிக்கண் மடந்தை மா நோக்கும் கண்டான் கண்டுகொண்டுகந்த-என்கிறார்
உபதேசத்தால்  மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் -ஸ்ரீ வசன பூஷணம் –

——————-

பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக்
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-2-

ஸூகேசன் என்னும் அரக்கனுக்கு மாலியவான் -மாலி -ஸூமாலி மூன்று பிள்ளைகள்
மாலியைக் கொன்ற வரலாறு
ஸூமாலி மகள் கைகஸிக்கு இராவணன் போன்றவர்கள் பிள்ளைகள்
விரோதி நிரசனம் பண்ணி அருளியவன் இன்றும் நம்முடைய விரோதிகளை களைந்து அருள
இங்கே நித்ய சந்நிதி கொண்டு அருளுகிறான் –

——————————–

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கை யார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான்
வல்லாளரக்கர் குலப்பாவை   வாட முனி தன வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-3-

ஸ்ரீ  ராமாவதாரம் பின்னாட்டிய படி –
வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் -நீ இளைத்த சமயத்தில் உன்னை அழிக்கை போராது காண் –
ஆஸ்வாச்ய-இவன் இளைத்தால் தன் பரிகரத்தில் உள்ளாரை ஆஸ்வசிப்பிக்குமா போலே –
நீ போய் ஆஸ்வசித்து வா -என்றான் இ றே –
வாட -உபசார வழக்கு -மாண்டு போக என்றபடி
கல்விச்சிலையால்  காத்தான் -பயிற்சிக்குப் பிடித்த தொரு வில்லைக் கொண்டு  முனி தன் வேள்வியைக் காத்தானூர் -என்றபடி-

—————————–

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக்   கொடியோன்  இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-4-

மலை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலைகால் வளைவித்து
அத்தாலே கடலரசன் பணிய
விலங்கு பணி செய்ய –கல்லால்  கடலை அடைத்தவன்
பணைகளில் பாவித் திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் செய்யக் கடவ கைங்கர்யத்தை இடக்கை வலக்கை அறியாத திர்யக்குகள் செய்ய –
கொல்லை-மரங்கள் அடர்ந்த சோலை
துவலை நிமிர்ந்து -சரியான பாடம் -மோனை இன்பத்துக்கு இணங்கும் -திவலை என்றே பொருள்-

——————————–

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும்  கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே–8-6-5-

திருவவதாரங்கள் பல செய்து அருளி விரோதிகளை தொலைத்து அடியார்களை ரஷித்து தர்மங்களை நிலை நிறுத்தி அருளி –
காமனைப் பயந்த காளை-இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
ஓமம் -ஹோமம் -இலஷணையால் ஹவிஸ்ஸைக் குறிக்கும்
உவரி சூழ்ந்த நெடும் புணரி -சரியான பாடம்
உலகு சூலந் நெடும் புணரி -பாடாந்தரம்
புணரி -அலைக்கும் கடலுக்கும் பெயர்
நெடும் புணரி உவரி சூழ்ந்த செம மதில் சூழ் இலங்கை -என்று அந்வயம்-

——————————–

வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள்  வாரா   முன்
திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள்
பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன்
கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே–8-6-6-

கரு தாள் களிறு -வலிமை யுடைய கால்களை யுடைய குவலயா பீடம்
திருக் கண்ணபுரம் தொழப் பெற்றோம் அன்றோ இன்று நாம் -அதனாலே வருந்தாது இரு மட நெஞ்சே –
நம் மேல் வினைகள் வாரா –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து விரோதிகளை நிரசித்து அருளியவனே இவன்-

———————

இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலைநீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலைமாச் சிலையால் எய்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-7-

ஸ்ரீ கஜேந்த்ரனை ரஷித்து அருளிய அவனே பஞ்ச இந்த்ரியங்களால்  பீடித்த நம்மையும் ரஷித்து அருள
இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் கைக் கொண்டது போலே நமக்கும் கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து அருளுவான்
மாரீச மாய மானை அம்பு கொண்டு முடித்ததால் போலே நம்முடைய மாயங்களையும் முடிக்க வல்லவன் இவன்-

———————-

மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
காலார் மறுத்தும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-8-

தமது நெஞ்சை தேற்றுகிறார் இதிலும் மேல் பாட்டைப் போலே -சம்சாரத்தில் வீணாக மயங்கி வருந்துதலை விட்டிடு
விரோதி நிரசனமே தொழிலாக கொண்டவன் இவன்
கிருஷ்ணன் போலே நம்முடைய விரோதி சமூகங்கள் அனைத்தையும் கிழங்கு எடுப்பதற்கு வந்து நிற்கிறான் –
கழுது -பிசாசு – பேய்ச்சியாகிய பூதனையைச் சொன்னபடி
தேனுகாசுரன் கழுதை வடிவு கொண்டு -பணை மரத்தின் மேல் கால்களை பிடித்து எறிந்து அழித்தான் கண்ணபிரான்-

——————————-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-9-

ஸ்ரீ கிருஷ்ணனாய் செய்த பல சேஷ்டிதங்களை அனுசந்தித்து அவனே இவன் நம்முடைய விரோதிகளை களைந்து
நித்ய அனுபவம் அளிக்க இங்கே சந்நிதி பண்ணி அருளுகிறான் என்கிறார்-

——————————

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி  வள நாடன்
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச  வாழ்வாரே -8-6-10-

இங்கே குறைவின்று எல்லா ஆட்சிகளையும் அனுபவித்து
விருப்பம் யுண்டாகில் ஸ்வர்க்க லோக அனுபவங்களையும் அனுபவித்து
பரம பதத்து ஏறப் புகுந்து
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -பேற்றைப் பெறுவார்கள்
திரு மகளால் அருள் மாரி –
பெரிய பிராட்டியார்  முழு நோக்கு -பூர்ண கடாஷம் -பெற்ற படியால் -அருள் மாரி என்றது
தன்னையே திரு நாமமாக யுடையார் யாயிற்று –
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் –
என்றும் ஒக்க உண்டாய்
குறைவற வர்ஷிப்பதான புயல் உண்டாகில் ஆயிற்று
இவர் கைக்கு ஒப்புச் சொல்லல் ஆவது –
என்றும் ஒக்க குறைவறக் கொடுக்கிறவர்க்கு
காதாசித்கதமாக தோற்றி ப்ராதேசிகமாக வர்ஷிக்கிறது ஒப்பாக மாட்டாதே –

இருமா நிலத்துக்கு அரசாகி -பூமிக்கும் ஸ்வர்க்கத்துக்கும் –
இருமை -பெருமை -பெரிதான இம்மா நிலத்துக்கு அரசாகி -என்றுமாம் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-5-தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-

April 1, 2015

தும்பிகள் தங்கள் ஜீவனம் தேடித் போக -அவனும் வந்திலன் -ஹிம்சிக்கும் பொருள்கள் மிகைத்தன
கண்ட இடம் எங்கும் இருள் மூடிப் போக -திருவாய்ப்பாடியிலே  கிருஷ்ணனைப் பிரிந்த பெண்கள் எல்லாரும்
சேர்ந்து பட்ட  பாட்டை -ஒரு சந்த்யையில்-இவள் ஒருவளே பட்டு கூப்பிடுகிறாள் இதில் –
இதில் நிகமப் பாசுரத்தில் –
வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த-என்றபடி
அவர்கள் புலம்பிய புலம்பலை அனுவாதம் பண்ணியதாக அருளிச் செய்யப் பட்டு இருந்தாலும்
அவ்வளவே அன்று விஷயம் –
அவ்வாய்ச்சிகளின் அவஸ்தை தமக்குப் பிறந்து அவர்களைப் போலே ஆற்றாமை கரை புரண்டு பேசுகிறார்
அவ்வஸ்தை பிறந்து கூப்பிட்ட -என்பர் பெரிய வாச்சான் பிள்ளையும்-

———————————————-

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு  இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1-

தனிக்கிடை கிடந்தது வருந்துகின்ற நெஞ்சு கண்ணபிரானைப் பின்பற்றி சென்று ஒழிந்தது
அருள் கிடையாதது மட்டும் அன்றிக்கே நிலா தென்றல் என் திறத்தில் விபரீதங்களாக இருக்க வேண்டுமோ அந்தோ –
மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய்
தந்தை தாய் விலங்கை பரிஹரித்தவன் காதலியின் விலங்கை பரிஹரிக்க வில்லையே
அவன் தான் பரிஹரிக்க வில்லை யாகிலும் அவன் விபூதியில் உள்ளாரையும் நித்யமித்து நலிய வைக்க வேண்டுமோ  –
தமியேன் -தனியேன் இரண்டும் ஒக்கும்
இருந்தேனை -இருக்கின்ற என்னை என்றபடி -நிகழ் காலப் பொருளில் வந்த இறந்த காலம்
அந்தி காவலன் -இலக்கணையால் அந்தி இரவைச் சொல்கிறது-

————————————–

மாரி மாக்கடல்  வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை   காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு வரங்கரை வணங்கியே திருத் துழாய்
தாரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வாரிருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி
யுன் புறமுயங்கி என்னையும் மறந்து யுன்னையும் மறந்ததே –
உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தோர் உடன்  கூடன்
உசாத் துணை இல்லையே -காலமும் துயர் நெடுகும் படியான இராக்காலம் –

மாரி மாக்கடல் -மாரி போலேயும் மாக்கடல் போலேயும் -யுள்ளவன்
அன்றிக்கே
மாரி -முகங்கள் படிகின்ற –மாக்கடல் -பெரிய கடலில் யுண்டான -வளை-சங்கு போன்ற -வண்ணற்கு -நிறத்தை யுடைய பலராமனுக்கு
ஆதிசேஷன் வம்சம் ஆகையால் வளை வண்ணன் எனப்பட்டான் நம்பி மூத்த பிரான்
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோடி -பெரியாழ்வார் -1-7-5-
பலராமன் ஆயர் பெண்கள் இடம் இன் சொற்களை சொல்லி கிருஷ்ணன் செய்த தீங்கை மறப்பித்து
அவர்கள் சீற்றத்தை ஆற விட்ட உபகார ச்ம்ருதியால் – -வளை வண்ணற்கு இளையவன் –

ஊரும் துஞ்சிற்று உலகமும்  துயின்றது –
ஆசார்ய ஹிருதயம் ஸ்வாபதேசம் -ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்யகாம ஸ்வ தந்த்ரர்
பொன்னாச்சி நாச்சியார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருள –
பிரிவாற்றாமை பாசுரங்கள் அனுசந்தித்து இப்பாசுரம்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே -என்னவே
பொன்னாச்சியின் பிராணனும் தன்னடையே விட்டு நீங்கிப் போயிற்று – ஐதிஹ்யம்-

——————————————–

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா
பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு  இரங்குமோ
தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை  யிணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்  அஞ்சல் என்பார்  இல்லையே–8-5-3-

பெண்ணான பூதனை உயிரை உண்டு முடித்தவன் -பெண்ணாய் பிறந்த நம்முடைய உயிருக்கு இரங்க மாட்டான் –
பூர்ண சந்திரனையும் தஹிக்கச் செய்பவன் –
வேய்ங்குழல் ஓசையும் நெஞ்சை வலியக் கவர்ந்து கொண்டு போகின்றது –
இங்கே அஞ்சேல் என்று சொல்லவும் யாரும் இல்லை
ஆபத்தை நீக்கி அபயம் அளிக்க வல்ல அவன் தானே ஆபத்தை விளைவித்து அச்சத்தை யுண்டாக்கும் பொழுது
அஞ்சேல் என்று சொல்ல வல்லார் யார் உளர் -அஞ்சல் என்பார் இல்லையே -ஓசைக்கு மிகச் சேர்ந்த பாட பேதம்-

—————————————–

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –8-5-4-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்று கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் –
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய திருப் பவளத்திலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வைத்து ஊதி பஷ பாதத்தை காட்டி அருளினவன்
என் விஷயத்தில்  அருளவில்லையே -திரௌபதிக்கு ஆகிய ஒரு பெண்ணுக்கு எல்லாம் செய்த அவனை எனக்கு
அவ்வளவும் செய்ய வேண்டாவே -ஒரு கால் இங்கே வந்தாலே போதுமே
அவனுக்கு அஞ்சி நடக்கும் காற்றும் -எல்லாரையும் குளிர வைக்கும் மந்த மாருதமும் -கூட -என் ஆவியைக் கொள்ளை கொள்கின்றதே
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் -என்றது யானைகள் மாவட்டியால் குத்தப்பட்டு விரணம் கொண்டு
சீயும் ரத்தமும் அறாக் காயம் -அறாக் கயம் வற்றாத குளம் -என்னவுமாம் —
கயம் கொள் புண் தலை  -யானைக்கு விசேஷணம்
அப்படிப்பட்ட யானைகளை சேனைத் தொகையாக நடத்திக் கொண்டு வந்த மன்னர்கள் என்றும்
அப்படிப் பட்ட யானைகளையும் கையாலே நெரித்து தள்ள வல்ல பெரு மிடுக்கர் -என்னவுமாம் –

———————————————–

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே -8-5-5-

சுக்ரீவ மகாராஜரை விஸ்வசிப்பிக்க அரும் பெரும் கார்யம் செய்து அருளினவன்
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை ஆப்புண்டு தாமுற்ற பொது எல்லாம் -செய்து அருளினவன் –
ஆழியான் -கைகேயி யுடைய வாரத்தில் அகப்படாதது அறுகாழி  ஒன்றுமே போலும் –
அப்படி எனக்காக ஏதாவது பாடு பட வேணும் என்று இருக்கிறேனோ
அருளொடும் பகல் எல்லை கழிகின்றது -அருளும் கழிந்தது -பகல் பொழுதும் கழிந்தது -என்றபடி
தோழி நாம் இதற்கு என் செய்தும் -தன்மை பன்மை வினை முற்று-

————————————————–

முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண்  துயிலா
கரிய நாழிகை  ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே -8-5-6-

முது கயம் -சமுத்ரமானது -சமுத்ரம்  சோஷ்யாமி என்று பெருமாள் ஆக்நேய அஸ்தரம் தொடுத்த வரலாறு
சர்வ லோக சரண்யன் தன்னிடம் சரணம்   புகுந்தான் என்ற செருக்கால்
கீழ் மண் கொண்டு மேல் மண் வீசி அலை எறிந்த -முரியும் வெண்டிரை முதுகயம் –
சீதாப் பிராட்டி யுடன் கலக்க அப்படி சீறி சிவந்தாய் -என்னுடன் கலக்க அப்படி இடையூறு இல்லையாகவும் இருக்க உதாசீனராக இருக்கிறாரே –
நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால் -திருவாய் -5-7-8-
கரிய நாழிகை -இரவின் கறுமை நாழிகையிலும் ஏற்றி -கொடிதான நாழிகை என்றபடி –

——————————————-

கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன்
விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே-8-5-7-

விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே -பெரிய திரு -6-1-2–கடலை கடைந்து
சீதாப் பிராட்டிக்காக அக்கடலை அடைத்து அம்பு மலை எதிரிகள் மேல் பொழிந்தான் –
எல்லாம் ஸ்திரீ வ்யதிரேகத்தில் ஸ்திரீயைப் பெறுவதற்காக  –
நான் எளிதாக கிடைப்பதால் உதாசீனனாய் உள்ளான் போலும்
அதற்கு மேலே சந்திர கிரணங்களை நலிய ஏவி விடுகின்றான்
மாட்டுக் கழுத்து மணி யோசை  யுண்டாக்கி நலிய வைக்கிறான்
தானே வேய்ங்குழல் ஓசை மூலம் நலிகிறான்
மாலை வாய்த் தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் இன்னிசை யோசையும் வந்து என் செவி தனக்கே
கொன்னவிலும் எக்கில் கொடிதாய் நெடிதாகும் -பெரிய திருமடல் –
விலங்கள் வேய் -மலையில் விளையும்  மூங்கிலால் செய்யப் பட்ட குழல் -ஆகு பெயர் –

————————————————

முழுது இவ்வையகம்   முறை கெட மறைதலும்  முனிவனும் முனிவெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய  பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே -8-5-8-

முறை கெட மறைதலும் -மரியாதை குலைந்து போனதனால்
பரசு -கோடாலிப் படை
அநீதி பண்ணுவர்களை முடிக்க திருவவதாரம் செய்த தானே அநீதி செய்கிறானே
பிரதி பஷரான ஷத்ரியர் உயிரை வாங்கிய பிரான் அன்புடைய அனுகூல்யையான என்னுடைய உயிரையும் வாங்குகின்றானே
பறவை இனங்களும் இரவில் குளிருக்கு  அஞ்சி பேடைகள் உடன் இருக்க நாயகனைப் பிரிந்து பரிதவிக்கும் பாவி ஆனேன்-

——————————–

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக  வெள்கி என் வளை நெக விருந்தேனை
சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை    என் சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலினிரி குரல்  பாவியேன் ஆவியை யடுகின்றதே–8-5-9-

ஒருவகையாக தேற்ற மானஸ அனுபவம் தந்து அருளினான்
தரித்திரன் கனவில் பெரும் செல்வனாக கண்டு கண் விழிக்க மிக்க துயரம் அடைவது போலே தளர்ந்து இருக்க
விடை மணி ஓசையும் அன்றில் பறவை -க்ரௌஞ்சம் -கூக்குரலும் செவிப்பட்டு நலிகின்றன-

—————————

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  -8-5-10-

திரு ஆய்ப்பாடி ஆய்ச்சிமார் யுடைய அவஸ்தை பிறந்து புலம்பிய புலம்பலே இத் திருமொழி
இதை ஓத வல்லவர்கள் இவரைப் போலே பிரிந்து வருந்த வேண்டாதே
ஒழிவில் காலம் எல்லாம் உடனே இருந்து வழு விலா அடிமை செய்யப் பெறுவார் –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-4-விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்-

March 31, 2015

இத் திருமொழியும் பிராட்டி அவஸ்தையாய் செல்லுகிறது –
தலையிலே பூ வாடி -மதுவும் சுவறிப் போய் இருந்தாலும் வண்டுகள் பழைய வாசனையால் வர
உனக்கு என்ன யுணவு யுண்டு இங்கு -பழையபடி பூவும் மதுவும் யுண்டாகும் படி செய்யப் பாராய்
திருக்கண்ண புரத்து எம்பெருமான் திரு அபிஷேகத்தின் மேல் சாத்திக் கொண்டு இருக்கிற திருத் துழாயிலே  படிந்து
அங்கு உள்ள பரிமளத்தை இங்கே கொண்டு வந்து ஊது –
பிறகு இங்கு உனக்கு உண்ணக் கிடைக்கும் என்கிறாள் பரகால நாயகி –
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துவளின் வாசமே
வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் – 11-1-9- மேலே அருளிச் செய்வர்
அவன் சம்ச்லேஷம் கிடைக்கப் பெறா விடிலும் அவனுடைய சம்பந்தம் உடைய வஸ்து ஏதேனும் கிடைக்கப் பெற்றாலும் தரிப்புண்டாகுமே
மாணிக்க வாசகர் இத் திரு மொழி ஒற்றி -திருக் கோத்தும்பி -பதிகம் 20 பாடல்கள் கொண்டது பாடி இருக்கிறார்
அங்கு கோத்தூம்பீ -முடிவுடன் உள்ளது -இங்கே கோற்றும்பீ-என்று உள்ளது –

ஸ்வாபதேசம்
சப்தாதி விஷய நிஸ் சாரத்தையும் —பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும்–சிஷ்யருக்கு அறிவிக்கிறார்

———————————————————————————————-

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம்   வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய்  கோற்றும்பீ –8-4-1-

கோல் தும்பீ-கொம்புகளில் திரிகின்ற தும்பியே –
தும்பி-வண்டுகளில் ஒரு சாதி -மரக் கொம்புகளிலே மதுவுக்காகத் திரியும்
மது உண்ண விருப்பம் யுண்டாகில் எனக்கு சத்தையை யுண்டாக்கப் பார்
நித்ய சூரிகள் நிர்வாஹகன் -அணுக முடியுமா என்று கூசாதே -திரு மார்வன் –
புருஷகார பூதை அருகில் இருக்க கூசாதே சென்று புகுரலாம்
பரத்வ நிலைய விட்டு இங்கே சந்நிஹிதன் ஆனான் -அனைவரும் அணுகி அருள் பெறவே –
தெய்வத் தண் அம் துழாய் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும்
நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -திருவிருத்தம் -52-
எவ்வகையாலும் தரிப்பும் உவப்பும் யுண்டாகுமே
வண்ண நறுந்துழாய் வந்தூதாய்  –
செவ்வி மாறாதே பரிமளத்தை உடைத்தாய் இருக்கிற திருத் துழாயிலே  படிந்து அங்குத்தை
பரிமளத்தை கொடுவந்து இங்கே ஊது –

———————————

வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ -8-4-2-

கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண் அம்  துழாய் கொண்டு என்னெறி மென் குழல் மேல் சூட்டீரே -நாச்சியார் -13-2-
தலையிலே சூட்ட அபேஷித்தாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி
இப்பரகால நாயகி அங்கன் அன்றிக்கே துழாயில் படிந்து வந்து ஊதினால் போதும் என்கிறாள்  –

————————-

விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ -8-4-3-

திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து திரியுமாவை போலே விண்ட மலர்கள் தோறும்
ஊதித் திரிவதனால் என்ன பேறு பெறப் போகிறாய்
நித்ய சூரிகளும் வந்து வணங்கும் திருக் கண்ணபுரத்தில் சந்நிதி பண்ணி அருளும் பெருமான் திருத் துழாய் மாலையிலே
தங்கி இருந்து அங்கு உள்ள பரிமளத்தை இங்கு கொணர்ந்து ஊதுவாயாகில் ஸ்த்ரிமாயும் அநல்பமாயும் உள்ள மதுவைப் பருகலாமே-

வண்ணந்திரிவும் மனங்குழையும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண் அம்  துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் -நாச்சியார் -12-7–என்று
சூட்டினால் தான் நோய்கள் தீரும் என்றால் சூடிக் கொடுத்த பிராட்டி
இங்கு அங்கன் அன்றிக்கே துழாயில் படிந்து வந்து ஊதினால் போதும் என்கிறாள் காண்மின்
அண்ட முதல்வன் -அண்டங்கட்கு முதல்வன் –
அண்டம் எனப்படும் பரம பதத்துக்கு முதல்வன் என்றுமாம் –

———————–

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வுயந்துய்யக் கொண்ட
தண் தாமரைக் கண்ணன் -விரஹப் பெரும் கடலில் வீழ்த்தி வருத்துகின்றான்
ஆமையாய் இருந்து மந்தர மலையைத் தாங்கி தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் எனக்கு
சோதி வாயமுதம் தராது வஞ்சனை செய்கின்றான்
நரசிம்ஹ மூர்த்தியாய் பேரருள் செய்த பிரான் எனக்கு சிறிதும் அருள் செய்கின்றிலன்
நான் உடம்பு வெளுத்து வருந்திக் கிடக்க காள மேகத்தில் காட்டிலும் பொலிந்து தோன்றுகின்றான்
இங்கே எளியனாய் சேவை சாதித்து அருளியும் பாவியேனான  என் திறத்தில் அந்த எளிமையை காட்டு கிறிலன்
என்னை துடிக்க விட்டு சர்வ ரஷகன் என்று தோற்றுமாறு தனித் திருத் துழாய் மாலை சாத்தி உள்ளான்
அதிலே படிந்து பரிமளத்தை முகர்ந்து ஊதுவாய் ஆகில் உய்ய விரகு யுண்டு-

—————————-

ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ -8-4-5-

தேவர்கட்கு இரங்கி கூர்மாவதாரம் செய்து அருளி அவர்களுடைய ஜீவனத்தை நிர்வஹித்து அருளினவன்
அத் தேவர்களைப் போலே பிரயோஜநாந்தரத்தை நெஞ்சாலும் நினையாதே
அவனைப் பரம பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என்னுடைய ஜீவனத்தை நிர்வஹியாது இருக்கின்றான் -இருக்கட்டும்
அவன் இங்கே இருக்கும் இருப்பிலே அணிந்து இருக்கும் மாலையில் உள்ள திருத் துழாயில் நீ சென்று படிந்து
அதன் பரிமளத்தை கொணர்ந்து ஊது
உய்யப் பெறுவேன்  -நீயும் வாழப் பெறுவாய்
ஏரார் மலர் எல்லாம் -கண்ட மலர்கள் -வெறும் நிறம் கண்டு பிரமிக்காமல் என்றபடி-

——————————–

மார்வில் திருவன்  வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-6-

புகுவதற்கு அதிகாரியோ என்று மயங்காதே
பெரிய பிராட்டி நித்ய வாசம் செய்து சேர்ப்பாள்
பிராப்தி பிரதிபந்தகங்கள் இருந்தாலும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
மகா வராஹமாகி பூமியை கோட்டால் குத்திக் கொணர்ந்த வீறுடையவன்
உதவுவதே ஸ்வரூபம்
உதவாதே இருந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்
அவனுடைய ஆதி ராஜ்ய ப்ரகாசகமான திரு அபிஷேகத்தின் மேல் உள்ள செவ்வித் துழாயிலே படிந்து ஊது என்கிறாள்-

——————————–

வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-7-

தன் உடைமையைப் பெற தானே யாசகனாய் சென்றவன்
விரோதிகளை கிழங்கு எடுக்க சங்கல்பித்துக் கொண்டவன்
கல்கி அவதாரம் செய்து மண்ணின் பாரம் நீக்கப் போகிறவன்
மது கைடபர் அசுரர்களை மாய்த்தவன்
இக் குணங்களுக்கு  அடி ஸ்ரீ யபதியாகையாலே
ரஷிதா ஜீவலோகச்ய ஸ்வ ஜனச்ய ச ரஷிதா -ரஷணத்துக்கு தனி மாலை சூடி இருப்பவன்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதார முகத்தாலும் ரஷகத்வத்தை வெளியிட்டு அருளி இங்கே
நித்ய சந்நிதி செய்து அருளி சர்வ ரஷகனாய் இருக்குமவன்
இப்பொழுது என்னுடைய ரஷணத்தில் சோர்வு அடைந்து உள்ளான் -இருக்கட்டும்
அவன் மாலையில் திருத் துழாயில் படிந்து ஊது
தாமம் -மாலை

——————————-

நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே  வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –8-4-8-

ராஷச குலத்துக்கு மிருத்யுவாய் திருவவதரித்து இலங்கை பாழாளாக படை பொருது அந்த வீரப்பாடு தோன்ற
நித்ய சந்நிதி பண்ணி இருப்பவனுடைய
திரு அபிஷேகத்தின் மேல் உண்டான திருத் துழாயிலே அவஹாகித்து வந்து ஊதாய்-

—————————-

நந்தன் மதலை நிலமங்கை நற் துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ்  காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ -8-4-9-

நந்தகோபன் திருக்குமாரன் -மண்ணின் பாரம் நீக்கி அருளி
துஷ்ட ஜனங்களை நிரசித்து
இனியாகிலும் பிறந்து நம்மை அடைவார்களோ என்னும் நப்பாசையால் மீண்டும் மீண்டும் சிருஷ்டித்து அருளி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியுமானவன்
சர்வ கந்த -நித்ய ஸூகந்த வாசிதன் -காயாம்பூ நிறம் யுடையவன்
அவன் கதிர் முடி மேல் கொந்து நறுந்துழாய் கொண்டு ஊது
கொந்து -கொத்து
கந்தம் கமழுதம்-காயாவுக்கு இட்ட விசேஷணம் அன்று -காயா வண்ணனுக்கு இட்டது-

—————————

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய்   கோற்றும்பீ -8-4-10-

தொண்டர்களுக்கு இத் திருமொழியைப் பாடுதலே ஸ்வயம்  பிரயோஜனம்
ஆழ்வார் தமது குறை தீரப் பெற்றால் தொண்டர்கள் எல்லாரும் தம் குறை தீரப் பெற்றதாக நினைப்பார்கள்
ஆதலால் அந்த மகிழ்ச்சியினால் இத் திரு மொழியை உவந்து பாடுவார்கள்
அப்படி  செய்விக்க வேணும் என்று தும்பி போலாரான பாகவதர்களை வேண்டுகிறபடி –
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-3-கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்-

March 31, 2015

கீழே இரண்டு  திரு மொழிகள் திருத் தாயார் பாசுரமாக சென்றது –
இத் திருமொழி மகள் பாசுரமாக செல்கிறது -கை வளை கொள்வது தக்கதே -என்று தாயார் சொல்லக் கேட்டு
உணர்ந்து தனது கையிலே வளைகளை  காணாமல் வளை இழந்தனே என்று
ஒரு கால் சொன்னது போலே ஒன்பதின் கால் சொல்லி கதறுகின்றாள் –

கீழ் பிறந்த  மோஹமானது போய் அல்பம் அறிவு பிறந்து-அது தான் ஆஸ்வாசத்துக்கு உடலாகி தவிர்ந்து
தான் படுகிற வ்யசனத்தை அனுபாஷிக்கைக்கு உடலாக அத்தாலே இரவல் வாயாலே -தன் இழவைச் சொல்லுகை அன்றிக்கே
தானே தன் இழவுகளைச் சொல்லி கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –
சம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பெறாமையால் பிரிவாற்றாமைக்கு   பரக்கப் பாசுரம் இடுகிற  படி –

————————————————–

கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த  துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-1-

கரை எடுத்த சுரி சங்கும் -கோஷத்தை யுடைத்தாய் வளைந்த சங்குகளையும் –
காவேரி நன் நதி பாயும் கணபுரம் -சங்குகளையும் பவளக் கொடியையும் திரட்டிக் கொண்டு வருகின்றதாம்
பசுக்களை ரஷித்த கோபாலன் நம்மை கை விட மாட்டான் என்று அவன் பக்கல் ஆசை வைத்ததற்கு பலன் வளைகளை இழந்தது  தான்-

—————————————————-

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளை –8-3-2-

அரி விரவும் முகில் கணத்தால்-கறுப்பானது கலந்து பரவப் பெற்ற மேகக் கூட்டங்களாலும்
சிறு தறு கண்  கரி -சிறுத்து வட்டணித்த கண்களை யுடைய குவலயா பீடம் –
வடிவிலே பெருமைக்கு ஈடாக பெருத்து இருக்கை அன்றிக்கே ஜாதி உசிதமாம் படி சிறுத்து
க்ரௌர்யம் எல்லாம் தோற்றும்படியாய் பார்க்கிற கண்களை உடைத்தாய் இருந்துள்ள குவலயா பீடம் -என்றவாறு
தறுகண்மை -அஞ்சாமைக்கு என்று கொண்ட ஒரு சொல்லாய் -செறு-என்று பாடம் கொள்ள வேண்டும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
குவலயா பீடம் மருப்பு ஒசித்த அந்த  மிடுக்கு இன்றைக்கும் விளங்கும் படி நித்ய சந்நிதி
பண்ணி அருளுபவன் அன்றோ என்று ஆசை வைத்தேன் -நன்றாக வளைகள் இழக்கும் பலன் பெற்றேனே-

——————————————————

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும்
பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த
செங்கண் மால் யம்மானுக்கு   இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

ரிஷபங்கள் ஏழையும் அடக்கி நப்பின்னை
சந்த்ரனுடைய ஷயரோகம் தீர்த்து அருளியவனும் இவனே
இன்னும் இது போன்ற அனுக்ரஹம் செய்து அருள இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளும்
இவன் இடம் ஆசை கொண்டதுக்கே நான் பெற்ற பலன் -வளையல்களை இழந்ததே-

————————————————————–

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும்
மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப்  போய் உரலோடும்
புணர் மருதம் இற   நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே –8-3-4-

கட்டுண்டு  அசக்தனாய் இருந்து சௌலப்யம் காட்டி அருளினவன்
அப்படி கட்டுண்டு தளர் நடை இடும் பருவத்திலும் சகடாசுரர்களை-பொய் மாய மருதமான அசுரரை -என்றபடி  முடித்த வலிமை என்னே
என்று ஈடுபட்டு இருந்ததே காரணமாக வளையல்களை இழந்தேனே
மணமருவு  தோளாய்ச்சி -சர்வ கந்த வஸ்து அநவரதம் தோளைக் கட்டிக் கொண்டு கிடப்பான் இறே-

—————————————————————

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-5-

தயிர் களவு கண்டு மறைக்கத் தெரியாமல் முகத்திலும் உடம்பிலும் தடவிக் கொண்ட மௌக்யத்துக்க்கு தோற்று வளை இழந்தேன்
உண்ட சுவட்டை நாவினால் நக்கி மறைத்துக் கொள்ளலாம்படி இருக்க களவு நன்கு வெளிப்படும் படி
தடவிக் கொண்டது பேதமையின் கார்யம் அன்றோ
என்று இக் குணத்தில் ஈடுபட்டு உள் குழைந்து வளை இழந்தாள் பரகால நாயகி –

—————————————

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே–8-3-6-

ஆஸ்ரிதர்களைப் பரிந்து காத்து அருளுபவன் அன்றோ -இதற்காக அன்றோ இங்கே சந்நிதி பண்ணி அருளுவது
இவன் மேல் ஈடுபட்டு  ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போலே கிருபைக்கு ஆளாகாமல் வளை இழந்தேன் காண்மின் –
பவளங்கள் மேட்டு நிலங்களில் மூடப் படர்ந்து நெருப்பு போலே ஜ்வலிக்கின்றதாம் திருக் கண்ணபுரத்தில்-

————————————–

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -8-3-7-

சகல பதார்த்தங்களையும் பிரளயம் கொள்ளாத படி திரு வயிற்றிலே வைத்து காத்து அருளினவன் இவன் அன்றோ
இப்படி ஆபத்துக்கு உதவுபவன் என்று நம்பி ஆசை வைத்து வளையல்கள் இழந்து நிற்கிறேன்
எழு கடலும் –என்ற பாடமே முந்துறக் கொள்ளப் பட்டது
எழு சுடரும் -பாடாந்தரம் -இதுவே எங்கும் வழங்கி வருகிறது-
எழு கடலும்-எழு வகைப் பட்ட கடல்களையும்
எழு சுடரும் -என்ற பாடமான போது எழா நிற்கிற ஆதித்யாதிகளையும் நினைத்தது ஆகிறது –

———————————————————

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

ஆர்த்தருடைய கூக்குரல் கேட்டு கடுக வந்து ரஷிக்க ஷீராப்தி நாதனாக  கண் வளர்ந்து அருளுபவன் இவனே
திரு நாபி கமலம் கொண்டு சிருஷ்டித்து காத்து அருளும் பெருமான் நம்மைக் கை விடான் என்று
நம்பி ஆசை வைத்து பலனாக வளையல்கள் இழந்தேன்-

————————–

வாராளும்  இளங் கொங்கை  நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –8-3-9-

பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யப் பெற்ற ஸ்ரீ நிறைந்த மார்பன்
இங்கே வந்து சந்நிஹிதன் ஆனதால் ஸூலபன் ஆனவன்
சஹாச்ர நாமங்களால் ப்ரதிபாதிக்கப் பட்ட திவ்ய  குண சேஷ்டிதங்கள் யுடையவன்
நித்ய அனுபவ ஹர்ஷத்தால் ஆயிரம் வாய்களாகப் பணைக்கப் பட்ட திரு அநந்த ஆழ்வான் மீது சயனித்து அருளுபவன்
பெருமை யுடையார் என்ற பெயர் பெற்ற எல்லாரிலும் பெருமை பெற்றவன்
பெண்ணீர்மை  யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே -நாச்சியார் -8-1-என்றதை கணிசியாமல்
தனது பெருமைகளுக்கு பொருந்தாத படி என் வளைகளை கவர்ந்தான் என்கிறாள்
பெய் வளை-அணிந்து கொண்டு இருந்தவளை
பேராளர் பெருமான் -பேராளர் -மகான்கள் -அவர்களுக்கும் மஹான் இவன் என்றபடி –

————————–

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே -8-3-10-

ஸ்ரீ வாமநாவதார சௌலப்ய  சௌசீல்ய சௌந்தர்யாதிகளை  பிரகாசிப்பித்துக் கொண்டு
இங்கே நித்ய வாஸம் செய்து அருளி இருக்கும்
ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் விஷயமாக அருளிச் செய்த இத் திரு மொழியை
ஓதி யுணருமவர்கள்-சர்வ பாப விநிர்முக்தர் ஆவார்-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-2-தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்-

March 31, 2015

இத் திரு மொழியும் திருத் தாயார் பாசுரம் –
திருக் கண்னபுரத் தம்மானை நேராக பார்த்து தனது பரிதபாத்தை பேசி -சில பாசுரங்கள் தன்னில் 
தான் நொந்து கொண்டு பேசுவதாக செல்லும் –

ஆழ்வார் யுடைய அளவுகடந்த அபி நிவேசமும் -அவனைப் பிரிந்து மேனி மெலிந்த படியும் அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார்-

—————————————–

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

ஸ்ரீ சௌரிப் பெருமாளை மடி பிடித்து கேட்கிறாள் திருத் தாயார்
தெள்ளியீர் -மகா விவேஹியாய் இருந்து -சர்வஜ்ஞ்ஞராய் இருந்து -அஜ்ஞ்ஞாநியான நான் உணர்த்த வேண்டி உள்ளதே
தேவர்க்கும் தேவா -உமது மேன்மைக்கு தகுமோ
திருத் தக்கீர் -ஒரு பெண்ணை விடாமல் மார்பில் கொண்டு இவள் கை வளையை கொள்ள வேண்டுமோ
வெள்ளியீர்-என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல -பரம பவித்ரர் அன்றோ
யோர்த்தே சுசிஸ் சஹி சுசிர் ந ம்ருத்வாரி சுசிச் சுசி -பிறர் பொருளைக் கவராதவனே பரி சுத்தன்
மண்ணையும் நீரையும் கொண்டு பலகால் தேஹத்தை சுத்தி பண்ணுபவன் இல்லையே
வெய்ய -விரும்பத் தக்க -விழு -சிறந்த -வண்ணர் -தன்மை யுடையவர் அன்றோ
ஆசைப் பட்டார் அணைக்க அன்றோ உம்முடைய் திரு மேனி
நிதி அனைவருக்கும் சேம வைப்பு அன்றோ நீர்
தேவரீர் பிறர் உடைமையாய் இருக்க பிறர் உடைமையைக் கைக் கொள்ளலாமோ-ந தே நு ரூபா -ஸ்தோத்ர ரத்னம்

இவள் கள்வியோ -இல்லை இல்லை நீரே-

———————————————————

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

ஆசார்ய  ஹிருதயம் -நிலா முற்றம் பிரஜ்ஞ்ஞா பிரசாதம் என்னும் எல்லை நிலம் –
மா முனிகள் வியாக்யானம் -நிலா முற்றம் ஆகிறது -உத்துங்கமாக நின்று சர்வத்தையும் தர்சிப்பைக்கு உறுப்பாக சொல்லப் படுவதாய்
அதிலே நின்ற தர்சித்த அளவிலே காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் என்கையாலே
ததீய விஷயமே பரம பிராப்யம் என்று பிறருக்கும் பிரகாசிக்கும்படி சரம அவதியான புருஷார்த்த ஜ்ஞானம் என்கை-
அவனைக் காட்டாமல் அவன் இருந்த தேசத்தைக் காட்டினதால் ததீய விஷயம் -என்றதாயிற்று
இதோ பாருமின் கை எடுத்து கும்பிடுமின் என்று பன்னி உரைக்க மாட்டாமல்
காணுமோ கண்ணபுரம் என்று மட்டும் சொல்லி மற்றதை ஹஸ்த முத்ரையால் பூரிக்கின்றாள்
காணும் ஒ -இது அன்றி கண் படைத்த பயன் இத்தையும் விலக்குவார் உண்டாவதே-

பாணன் -பாடுமவன்-பிரணய ரோஷம் தவிர்த்து சேர்ப்பிக்கும் ஆச்சார்யன்
நன்று நன்று நறையூர்க்கே-மீட்கப் பார்க்கும் நாம் தோற்றோம் -முதலிலே தனது வலையிலே அகப்படுத்திக் கொண்ட
நறையூர் நம்பி கார்யமே வென்றது-

———————————————-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

திரு மலை திரு நீர்மலை திரு மெய்யம் திருக் கண்ணபுரம் என்றே வாய் வெருவிக் கொண்டே இருக்கின்றாள்
பேசினவாறே நீர்ப்பண்டமாய் உருகுகின்றாள்
நெஞ்சு தளர்கின்றாள்
இப்படி இவள் ஆவதற்கு என் பாபமே தவிர வேறு என்ன ஹேது  என்கிறாள் –

—————————————————-

உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லைப்
பெண்மையும் சால நிறைந்திலள்  பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ -8-2-4-

பேதைப் பருவத்திலே உண்ணுவதும் உறங்குவதும் இல்லை
உறக்கமும் தான் இல்லை -என்றது உண்ணாமல் இருந்தாலும் உறங்காமல் இருப்பது அரிது என்பதால்
அஞ்சலி செய்வதே காயிக வியாபாரம்
திருமேநியைச் சிந்திப்பதே மானச வியாபாரம்-

————————————————

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே –8-2-5-

பெண்மை என் தன்னுடை -பாடமே வ்யாக்யானத்துக்கு சேரும்
பெண்மையும் தன்னுடை -பாடம் சேராது
பெண்மை -ஸ்த்ரீத்வம்
அதாகிறது ஏதேனும் ஓர் அவஸ்தை பிறந்தாலும்
உயிர் தோழிக்கும் கூட மறைக்கும் படி இறே இருப்பது –
அவளும் இவளுடைய வ்யாபாரங்களைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிற தசை இதுவாகாதே -என்று அறியும் இத்தனை இறே
ஆயிருக்கப் பெற்ற தாயான எனக்கும் வாய் விடா நின்றாள்
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –
இவள் உண்மை உரைக்கின்றாள் பெண்மை என் -என்று அந்வயம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடம் கொள்வது யாம் என்று பேசினாள் – என்று மேல் பாட்டில் சொல்லுகையாலே –
வெறுப்புக்கு சொல்லிய வார்த்தைகள் எரு போலே ஆனதே
இத்தனை சௌசீல்ய சௌப்லய குணங்களா நன்றாகத்தான் ஆசைப் பட்டோம்
அவனுடன் சம்ஸ்லேஷம் கிடைக்கட்டும் இல்லாமல் போகட்டும் ஆசைப் பட்டதே பாக்கியம் என்று இருக்கிறாள் –
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியனாகப் பெற்றோமே -என்ற
வ்யபதானங்களைக் கேட்ட மாத்ரத்திலே
அவ் உடம்போடு அணைந்தால் பிறக்கும் ஆஸ்வாசங்கள் அடைய பிறந்து சந்துஷ்டை யானாள் –
அவாப்த சமஸ்த காமனானவன்
ஒருத்தி உடைமையை ஆசைப் படுவதாம்
சர்வ சக்தனானவன் களவிலே இழிவதாம்
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியன் ஆவதாம்
இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறாள் –

கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் —பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ –
திவ்ய கீர்த்தி செவிப்பட்ட மாத்ரத்திலே கலவி பெற்றாலே போலே உகக்கிறாள்-

—————————————————–

வடவரை நின்றும் வந்தின்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே -8-2-6-

அனுகாரத்தாலே அருளும் பாசுரம்
இவருக்கு இதுவும் அர்ச்சையிலே நடக்குமே
வடக்குத் திருமலையில் இருந்து கீழை வீடுக்கு வந்து நித்ய சந்நிதி பண்ணிய சௌரி ராஜ பெருமாள்  நானே
மிக சிறுமி -அழகி -இவளை இவன் இப்பாடு படுத்துவது தகுமோ -திருத் தாயார் அநு பாஷித்து பின் அருளுகிறாள்

————————————————-

தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே –8-2-7-

தரங்க நீர் பேசினும் -கடல் கோஷித்தாலும்
தண் மதி காயினும் -நிலா காய்தலும்
விரஹிகளுக்கு இளைப்பை யுண்டாக்குமாயினும் இவள் இளைக்க கில்லள்-எத்தனை நாள் உருண்டது எள்கினாள்
மடவரல் மாதர் என் பேதை என்றாலும் -பல பல ஊழிகள்  ஆயிடும் -ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -போலே –
அன்றிக்கே
இரங்குமோ -இரங்கும் -ஒ -அந்தோ எத்தனை நாள் இருந்து கடல் கோஷத்தாலும் மதி சுடுவதாலும் கஷ்டப் படுகிறாள் என்றுமாம் –
திருவரங்கத்தை வாய் வெருவிக் கொண்டே இருப்பதே இவள் ஆசை -என்கிறாள் திருத் தாயார்-

——————————————-

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -8-2-8-

அப்ராப்த ஸ்தலத்திலே செங்கோல் நடாத்தும் அவன் அன்றோ
கார்க் கடல் வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது  என் கொலோ -என்கையாலே இவள் சிந்தை அவன் பக்கம் என்றும்
கண்ணபுரம் என்று பேசினாள்  உருகினாள் -என்கையாலே பேச்சும் அவன் திறத்திலே-என்றும்
கண்ணபுரம் தொழும் -என்கையாலே காயிக வியாபாரமும்
ஆக -சிந்தையாலும்  சொல்லாலும் செய்கையாலும் அவரையே விஷயீ கரித்து இருக்கின்றாள்
நான்கு வகை அதிகாரிகளும் உபாசித்து பேறு பெற்றதை கண்ட இவள் தானும் தகுதியாக தொழுது உய்யலாம் என்று கண்ணபுரம் தொழுகிறாள்
வண்டுலாம் கோதை என் பேதை -மதுவின் நசையால் வண்டுகள் மலர் சூடிய இவள் கூந்தலில் மொய்க்க அஞ்சும் பருவம் -பேதை
மணி நிறம் கொண்டு தான் -தன்னையே வணங்குவாருக்கு தன்னையே ஒக்க அருள் செய்ய வேண்டி இருக்க இவளது மணி நிறம் கொள்வது தக்கதோ
கோயின்மை செய்வது தக்கதோ -அரசர்களே வழி பறிப்பார்களா
கோயின்மை -கேட்பார் அற்ற அநீதிச் செயல்-

—————————————————-

முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-

தாய்க்கு அன்பு மிகுதியால் இளமையாகவே தோற்றுகிறாள்
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள்  அல்லள்-பெரியாழ்வார் -3-7-1-
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்று இலள்–மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே -பெரியாழ்வார் -3-7-2-
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில -பெரியாழ்வார் -3-7-3-
முலையோ முழு முற்றும் போந்தில மொய்ப் பூங்குழல் குறிய கலையோ அரையில்லை நாவோ  குழறும்  -திருவிருத்தம் -60
என் செய்கேன் -நியமிப்பேனோ-அனுவர்த்திப்பேனோ-விண்ணுளாரிலும் சீரியள் -என்று கை கோப்பி வணங்குவேனோ
நியமிக்காமல் அனுவர்த்திப்பதே -கை தொழுவதே என்கிறாள்
விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில் வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே -திரு நெடும் தாண்டகம்
கூழை -தலை மயிர்
தெள்ளியள்  -தெளிந்து வார்த்தை சொல்ல வல்லவள்
எண்ணப் பெறுவரே -நெஞ்சாலே நினைத்தாலும் பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டும் -என்றவாறு-

—————————————-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே  -8-2-10-

நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே   –
கடல் சூழ்ந்த பூமியிலே சிரகாலம் வாழப் பெறுவார்கள்  –
இது கற்றார்க்கு பலம் சம்சாரத்தில் இருக்கையோ -என்ன
பரம பதத்தில் தெள்ளியீர் இல்லையே தெள்ளியீர் உள்ளது இங்கேயே அன்றோ
பாவோ  நான்யத்ர கச்சதி -என்று திருவடி ராம குணங்களைக் கேட்டு அத்தாலே பூர்ணனாய் –
அத்தேசத்தே இருந்தால் போலே தெள்ளியீரை இங்கே பாடக் கேட்டு பூரணராய் இருக்கப் பெறுவர்கள் –

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-1-சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்-

March 31, 2015

கீழே இனிய பாசுரங்களால் அவனை அனுபவித்தார்

நினைத்த படியே -பாஹ்ய சம்ச்லேஷம் கிடைக்கப் பெறாமையாலே தளர்ந்து -திருத் தாயார் பாசுரமாக இத் திரு மொழி செல்லுகிறது –
திருக்கண்ண புரத்தானைக் கண்டு அதன்  அடியாக விளைந்து இருக்க வேண்டும் என்று வினவ வந்தார் இடம் சொல்கிறாள்-

திருக் கண்ணபுரத்தம்மான் யுடைய வைலஷண்யமும் -அது அடியாக ஆழ்வாருக்கு பிறந்த வைலஷண்யமும் காட்டும் இத் திருமொழி –

———————————————————–

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

திவ்ய பூஷணங்கள் போலே திவ்ய ஆயுதங்கள் தோற்ற -நாயகி சொன்னதை தாயார் மீண்டும் சொல்கிறாள் –
அவன் மேல் அன்பு யுண்டான பின்பு பசலை நிறம் யுண்டாகவும் ஆகுமே
கலை இலங்கு மொழியாளர் -சாஸ்திரம் இவர்கள் பேச்சிலே விளங்கும்-

——————————————————

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ  –8-1-2-

ஆசறுத்த -சீக்கிரமாக தொலைத்த –
சம்ஸ்லேஷத்துக்கு பிரதி பந்தகங்களை தொலைக்க பரிகரங்கள் கொண்டு இருந்தும் விஸ்லேஷப் படவோ –
அரையர் ஐதிகம்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பிலா என்னப்பா என்கின்றாள் –
மின்னப் பொன் மதிள் சூழ் இரு விண்ணகர் சேர்ந்த வப்பன் தன் ஒப்பாரில்லா அப்பன் -திருவாய் மொழி
தாமரை போல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை -என்றும்
கணபுரத்து பொன் மலை போல் நின்றவன் -என்றும் பெரிய திரு மடல் -பொன் மலையாக இருவரையும் பேசிய நயம் –

———————————————————-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

சேஷித்வ ஸூசகமான திருத் துழாய் மாலை அணிந்துள்ளான்
திரு முக மண்டல ஸோபைக்கு கை விளக்கு -மணி மகர குண்டலங்கள்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
சேமித்து வைத்த வஸ்துவை இவள் ஒருத்தியுமே அறிந்து கொண்டாள் போலே இருந்தது –
உள்ளிருக்கிற வஸ்துவின் சீர்மைக்குத் தக்கபடி அரணாகப் போரும்படி இருப்பதாய்
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத   படியான பெருமையை உடைய மதிளாலே
சூழப் பட்ட திருக் கண்ண புரததிலே வந்து சந்நிஹிதனானவனைக் கண்டாள் போலே இருந்தது –

—————————————————————–

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-

ஹிதம் சொல்லி விலக்கப் பார்க்கும் நீங்கள் அவனுடைய அழகிய பவளம் போன்ற திரு அதரத்தை
ஒரு கால் சேவித்த பின் சொல்மின்
அது கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ
நான் புரள வேண்டிய திரு மார்பிலே வண்டுகள் புரளுகின்றனவே –
அவற்றுன் பாக்கியம் என்னே  -என்னுடைய பாபம் என்னே –

————————————————-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-

தாமரைப் பூக்கள் அவயவங்கள் -திரு அபிஷேகமும் அதில் சாத்தின திரு ஆபரணங்களும்
நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளனவே
புருஷகார பூதை நித்ய வாஸம் பண்ணி இருக்கவும் நான் இழக்கவோ
பிராட்டி மேல் விழுந்து நித்ய அனுபவம் பண்ணும் படியான பரம ரசிகன் அன்றோ
அவனையோ நான் இழப்பது –

—————————————————–

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-

என் ஒருத்தியைக் கை விட்டு பெரியோம் என்ற திரு நாமம் இழக்கப் போகிறானே
அவனது வடிவு அழகு நம்மை மறந்து பிழைக்க விட வில்லையே
வெறும் புறத்திலே  ஆலத்தி வழிக்க வேண்டும்படியான திரு மேனி நீர் கொண்டு எழுந்த காள மேகமோ பச்சை மலையோ –

————————————————————————————————

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-

தாமரையே திரு அவயவங்கள் என்று மீண்டும் சொல்லி
திரு மேனி விஷயத்தில் சங்கை -மை வளர்க்கும் மணி யுருவம் மரகதமோ மழை முகிலோ –
அவனது உடை வாய்ப்பிலே தோற்று வாய் வெருவுகிறாள்
இங்கு உள்ளார் நித்ய அக்னி ஹோத்ரிகள் –

———————————————–

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே  வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி எனது தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர் -நம் ஆழ்வாருக்கு –
இங்கே இவருக்கு திரு வீதியூடே கருடவாஹன   சேவை சாதித்து அருளுகிறான்
தாஹித்தவர்கள் இருந்த இடத்திலே சாய்கரம் கொண்டு சாய்ப்பாரைப் போலே வீதியூடே வந்து சேவை சாதிக்கிறான்
வெற்றிப் போர் -வெறும் போர் பாட பேதங்கள்
இந்திரர்க்கும்  இந்த்ரன் ஒக்கும்-வ்ருத்தாசுர வதம் பின்பு மகேந்தரன் பேர் பெற்றானே
பெண்ணாய் பிறந்தவர்கள் அணைந்து வாழ அன்றோ அவனுக்கு திரு மார்பு-

—————————————————

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-

பாவனா முதிர்ச்சியால் பண்டு இவரை எங்கேயோ பார்த்தது போலே உள்ளதே எங்கே என்கிறாள் –
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-
முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக
முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   – எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –
சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – யென்னும்படியாய் இருக்கும் –
நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி
சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே – எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமான விஷயம் என்பதால்
கண்டவர் தமது மனத்தை தாமே வழங்கும்படி ஆகர்ஷகத்வம் யுடையவன்-

—————————————————————-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

திரு நாட்டை ஆள வல்லார்  ஆவார் -பயன் சொல்லி நிகமிக்கிறார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே  –
உபரிதன லோகங்களுக்கு அடைய
கற்பகத்தை சிறப்பாகச் சொல்லக் கடவர்கள் –
பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருக்கு உள்ளார் அடங்கலும் சாத்த்யர் ஆவார்கள் –
பொன்னுலகில் மன்னராகி -வான் இளவரசு வைகுண்ட குட்டன் வாசுதேவன் என்றபடியே
நித்ய முக்தர்களை தலைவராக்கி தான் இளவராசாய் இருப்பான்-

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-10-பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை-

March 30, 2015

திருக் கண்ண மங்கை திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –

கீழ் திரு மொழியிலே -அருளாய் -அருள் புரியே -என்று பிரார்த்தித்த ஆழ்வாருக்கு
தன் படிகளை விசதமாகக் காட்டிக் கொடுத்து அருளி
ஆழ்வீர் திருக் கண்ண மங்கையிலே வாட்டும் பூர்ண அனுபவம் பண்ணலாம் -என்று நியமிக்க
அப்படியே அங்கே போந்து பரம ஆனந்தம் பொலிய பேசுகிறார் –

ஆருரோஹ ரதம்  ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ  –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-
அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் —
இத் திருமொழியின் போக்யத்வம் அனுபவ ரசிகர்களுக்கே அனுபவ போக்யமாகும்  –

————————-

பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

பெண்ணை -ஸ்திரீயைப் போலே பாரதந்த்ர்யமே வடிவாய் இருப்பவன்
பெரும் புறக் கடல் புறம் -இடம் -எல்லை இல்லா இடத்தை யுடைய –
அனைத்துக்கும் உறைவிடமாய் இருந்து கம்பீரமாய் –
புறம் -வெளிப்பட்டது என்று கொண்டு பூமியில் வெளிப்பட்ட கடல்களில் விலஷணமாய்-
கடல் போன்றவன் என்னாத கடலாகாவே சொன்னது உவமை ஆகுபெயர்
பெண்ணை ஆணை -அரசன் அந்தபுரத்தில் மனைவிக்கு விதேயனாய் இருந்தாலும்
சீரிய சிங்காசனத்தில் ஆண் புலியாய் இருப்பானே
ஆண் அல்லன் பெண் அல்லன் -என்றது  -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மை நிலை –
இங்குச் சொல்வது குணத்தைப் பற்றி
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை -முனிவருக்கு தன்னை சிந்திப்பார்க்கு என்றபடி
பத்தர் ஆவியை -பக்தர்களுக்கு தன்னை விட்டு ஜீவிக்க ஒண்ணாதபடி
திரு நின்ற ஊர் பெருமாள் திரு நாமமும் திருக் கண்ண மங்கை பெருமாள் திரு நாமமும் பத்தராவி பெருமாள் –
அரும்பினை யலரை –
இரண்டு அவஸ்தையும் ஒரு காலே சூழ்த்துக் கொடுக்கலாம்படி இருக்கிறவனை –
யுவா குமார –
திருவாய் மொழி -3-1-8- மலராது குவியாது -ஈடு வியாக்யானம் –
அரும்பினை அலறி என்னலாம் படியாய் இருக்கும் -யுவா குமார -என்கிறபடியே ஏக காலத்திலே
இரண்டு அவஸ்தையும் சொல்லலாய் இருக்கை
யௌவனமும் கௌமாரமும் -என்பர் -அது இல்லை –
யுவா அகுமாரா -கௌமாரம் இன்றியே யௌவன மாத்ரமெயாய் யுள்ளவனை
கௌமாரம் கழியத் தக்கதாய் -யௌவனம் வந்து குடி புகத் தக்க தான நடுப்பருவம் என்றபடி
அடியேன் மனத்தாசையை -நித்ய அனுபவமாய் இருந்தாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா வமுதம் –
ஆசைப் பெருக்குக்கு விஷயமாய் இருப்பவன்
அமுதம் பொதி இன் சுவைக் கரும்பினை -அமுதமே நீராகப் பாய்ச்சி சுவை மிக்க கரும்பு போலே இனியன்
கனியை -அப்போதே நுகரலாம்படி பக்குவ பலமாய் இருப்பவன் –

—————————————-

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே –7-10-2-

மெய்ந்நலத் தவத்தை-விலஷண பக்தி யோகத்தை பிறப்பித்தவன் –
பக்தி யோகத்துக்கு விஷயமாகக் கூடியவன்
திவத்தைத் தரும் மெய்யை-பரமபதத்தை தரவல்ல பிரபத்தி யோகத்தை பிறவிப்பித்தவன் –
அதற்கு இலக்காமவன்
பொய்யினைக் -பக்தி பிரபத்தி இல்லாதார்க்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் அறிய ஒண்ணாது இருக்குமவன்
கையிலோர் சங்குடைமைந்நிறக் கடலை கடல் வண்ணனை-பக்தி பிரபத்தி நிஷ்டர்களுக்கு காட்சி கொடுப்பவன் 
கடல் போலே காம்பீரம் உள்ளவன்
மாலை-சர்வ ஸ்மாத் பரன்
ஆலிலைப் பள்ளிகொள் மாயனை-அகடிகட நா சமர்த்தன் –
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்-
முக்காலங்களிலும் போக்யதை குன்றாதே  -காலப் பகுதிகளுக்கும் நிர்வாஹகன்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் -இனிமை தானே வடிவு எடுத்தவன்
கண்ண   மங்கையுள்   கண்டு கொண்டேனே –

——————————-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று   நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-

ஈஸ்வர அபிமானியான ருத்ரனை திருமேனி ஒரு புறம் தனது பேறாக வைத்து அருளும் சீலவான்
வேறு புகல் அற்ற அடியார் திறத்தில் நிர்ஹேதுக கிருபை பண்ணி அருள்பவன்
சூர்ய சந்த்ரர்களுக்கும்  நியாமகன் -காலப் பகுதிகளுக்கும் நிர்வாஹகன்
திருவேங்கட திருமலையை இருப்பிடமாக கொண்டவன்-

———————————————–

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-

அந்தர்யாமியாய் இருந்தும் தோஷங்கள் தட்டாமல் உஜ்ஜ்வலனாய் இருப்பவன்
இப்படிப்பட்ட தன்மையைக் காட்டி என்னை ஆட்கொண்டவன்-

தெள்ளியார் -தெளிவான அறிவு பெற்றவர்கள்

————————————————

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினைக் நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-5-

திருப் பிரிதியில் எழுந்து அருளி இருக்கும்  ஸ்வாமியும் இவனே
காளை போலே மேணானித்து இருப்பவன்
குருமா மணி -ஸ்ரீ கௌஸ்துபம் -குருமா மணிப்பூண் குலாவித் திகழும் திரு மார்வு -பெரியாழ்வார்
காற்றினை புனலை -பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமி-

காற்றினைப் -ஸ்வ ஸ்பர்சத்தால் வரும்ஸூகமாய் இருக்கிறவனை —புனலைச் -தாரகம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————-

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

துரங்கம் -குதிரை வடிவாய் வந்த அசுரன் -கேசி
துப்பன் -நினைத்த படி செய்ய வல்ல சமர்த்தன் -சத்ய சங்கல்பன் என்றபடி
செப்பினை -அணி கலன்கள்  வைக்கும் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு  பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும்   தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்  -அணிகலன்கள் சீர்மை பெரும் இடம்
சுடர் வான் காலன் -பிராட்டியைச் சொல்லிற்றாக வுமாம் -விவரணம் -திரு மங்கை மணாளன்
தேவனை-பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே உண்டான ஒத்து மஞ்சளும் செம்பஞ்சிக் குழம்பும்
மாளிகை சாந்தின் நாற்றமுமாயக் கொண்டு திரு மேனியிலே புகர் தோன்ற நின்ற நிலை –

அந்தணர் கற்பினை -கற்பு -நீது நெறிக்கும் கல்விக்கும் பெயர்-

————————————————–

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-7-

திருத்தன்  -பூர்ண திருப்தி யுள்ளவன் -அவாப்த சமஸ்த காமன்
திசைமுகன் –நான் முகன் –என்னாமல் திசை நான்முகன் தமிழ் வழக்கு
அப்பில் ஆர் அழலாய் நின்ற -தண்ணீரில் -படபாக்னி

———————————————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்   கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-8-

ஆஸ்ரித விரோதிகள் திறத்தில் வெஞ்சினக் களிறு
இராவணன் போல்வாருக்கு விஷம் விபீஷணன் போல்வாருக்கு அமிர்தம்
விரும்பும் அன்பர்க்கு சென்னிக்கு மலர்ந்த பூ -நச்சுவார் உச்சி மேல்
என்னுடை சூழல் உளானே -என் அருகில் இலானே -என் ஒக்கலையானே-என் நெஞ்சினுளானே
என்னுடைத் தோள் இணையானே-என்னுடை நாவினுளானே -என் கண்ணினுளானே-என் நெற்றி உளானே –
என் உச்சி உளானே -திருவாய் -1-9-
தோன்றல் -சிறு பிள்ளையும் -பெரு வீரனும்

—————————————–

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-

பசு வேத்தி சிசுர் வேத்தி வேத்தி கான ரசம் பணி -பசுக்களும் குழந்தைகளும் பாம்பும் கூட அறியும் பண் -ஸ்ப்ருஹணீயம்
பாலுள் நெய்யினை -கரந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து உளன் –
மாலுருவாய் நின்ற விண்ணினை  -பரமபதம் -த்ரிபாத் விபூதி -நித்ய விபூதி நிர்வாஹகன் –
இந்த பரப்பைத் தெரிவிவிக்கும் விசேஷணம்
மண்ணினை -சர்வம் சஹா-செய்த குற்றங்களைப் பொறுப்பவன்
அலை நீரினை -குஹப் பெருமாள் விதுரர் மாலா காரர் போவார் இடம் பாயும் தண்ணீர் போன்றவன் –
மா மதியை -ததாமி புத்தி யோகம் தம் ஏனமாம் உபயாந்திதே
மறையோர் தங்கள் கண்ணினை -வேறு எங்கும் பட்டி புகாமல் தன்னையே இலக்காக கொண்டு
இருக்கும் படி கண்ணை விட்டுப் பிரியாதவன் –

—————————————————————————————–

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

விண்ணுலகத்தில் தேவர்களே விளங்கி மகிழ்வார்கள்
சொல்லின்பமும் பொருள் இன்பமும் எம்பெருமானையே வணங்கப் பண்ணுமே
கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
நீ கற்கலாம் -என்றும் பாடபேதம்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-