கீழே -வருந்தாது இரு -என்று பல காலும் சொன்னார் –
பரமபதம் நமக்கு உத்தேச்யமானாலும் அவனே அத்தை விட்டு இங்கே விரும்பி நித்ய வாஸம் செய்து அருளின பின்பு
நமக்கும் இவ்விடமே பிராப்யம் அன்றோ -இதை ப்ராபித்த பின்பும் வருந்த வேண்டுமோ -என்று
அத் திருப்பதி தன்னையே அனுபவிக்கிறார்
குற்று எழுத்துக்கள் நிரம்பப் பெற்ற சித்ர கவி எனப்படும்
உடை -விடை -வரை -நெட்டு எழுத்தான ஐ காரம் வரக் கண்டாலும் ஒலி வடிவில் குற்று எழுத்தே போலும் –
பாட்டுத் தோறும் ஈற்று அடியின் முடிவில் ஏகாரம் வருதலும்
நான்காம் பாட்டில் நான்கு அடிகளிலும் முதல் எழுத்து நெட்டு எழுத்தாய் இருத்தலும் குறையாகாது என்க-
—————————————-
வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே –8-7-1-
வியமுடை விடையினம் உடைதர மட மகள்-வலிமை பொருந்திய வ்ருஷபங்களின் கூட்டமானது
அழிந்த அளவிலே மடமைக் குணமுடைய நப்பின்னை பிராட்டி யுடைய
குயம் இடை தடவரை அகலமது உடையவர் -திரு முலைகள் நெருங்கி அணையப் பெற்ற
பெரிய மலை போன்ற திரு மார்பை யுடையரான
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில் -அழகிய நடையை யுடைய அன்னப் பறவைகள்
இளைய பெண்களினுடைய நடையை அப்யசிக்கப் பெற்றதும்
கயம் மிடை கணபுரம் அடிகள் தம் இடமே -தடாகங்கள் நெருங்கி இருக்கப் பெற்றதுமான
திருக் கண்ணபுரமானது ஸ்வாமி யினுடைய திவ்ய தேசம் –
வியம் -வலிமை -வேறுபாடு -என்றுமாம் -ஏவல் -கம்சனால்
உடை தர -உடைய-துணைவினை -உடைதல் -அழிதல்
குயமுடை தடவரை -பாட பேதம் —
குயமுடைத் தடவரை இருக்க வேண்டும் -ஓசை இன்பத்தால் தகர ஒற்று இல்லாமல் விகாரம் –
அன்னம் -அனம் என்று திரிந்து –
——————————-
இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்
மண மலி விழவினொடடிய வரளவிய
கண மலி கண புர மடிகள் தமிடமே –8-7-2-
இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து-
இணை மலி மருது இற எருதினோடு இகல் செய்து -இகல் -பகையும் யுத்தமும்-
சேர்த்தி பொருந்திய இரட்டை மருத மரங்களை இற்று முறிந்து விழும் படி செய்தவனும்
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்-சேர்த்தி அழகு வாய்ந்த முலைகளை யுடைய நப்பின்னை பிராட்டியின்
திரு மணத்தால் யுண்டாகக் கூடிய மிகுந்த சம்ஸ்லேஷத்தை உட்கொண்ட
மண மலி விழவினொடடிய வரளவிய-
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய –
மகிழ்ச்சி மிகுந்த திரு விழாக்களில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெருங்கப் பெற்ற
கண மலி கண புர மடிகள் தமிடமே -திரள் நிறைந்து உள்ள திருக் கண்ணபுரம் ஸ்வாமி யினுடைய திவ்ய தேசமாம் –
எருதுகள் உடன் பொருத ஸ்ரமம் தீர இங்கே நித்ய வாஸம்
நித்யோத்ஸவ பஷோஸ்த்வ மாசோஸ்தவ சம்வஸ்த்ர உத்சவங்கள் நிறைந்த
—————————————–
புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை
மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல்
கயல் துளு கண புர மடிகள் தமிடமே –8-7-3-
புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை-பெரும் காற்றோடு கூடின -வரை மழை -கல் மழை –
பொழியும் அளவில் அழகிய பசுக்கள்
மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்-கலங்கி நிற்க அப்போது கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த மகா புருஷனான
முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல்-முயற்சி செய்கிற களைக் கொட்டுகளை யுடைய சிறு தூறுகளில்
நின்றும் முயல்களானவை துள்ளவும் –
வளம் விளை வயல் -செழிப்பாக விளைகின்ற வயல்களிலே
கயல் துளு கண புர மடிகள் தமிடமே -கயல் மீன்கள் துள்ளப் பெற்ற –
திருக் கண்ணபுரமானது நம்முடைய ஸ்வாமி யினுடைய திவ்ய தேசம்-
குறிஞ்சி நிலமும் மருத நிலமும் கலந்தால் போலே காணும் இருப்பது –
மணி நிரை–மணி-என்று அழகாய்–அதாகிறது–அவனும் ரஷிக்க-
தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே–அவனே ரஷகனாம்படி இருக்கை-
நெடியவர் -ஆபத் ரஷணத்தில் தமக்கு மேல் பட்டவர் இல்லாதவர் –
——————-
ஏதலர் நகை செய விளைய வரளை வெணெ
போது செய்தமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மது கரம் குலவிய மலர் மகள்
காதல் செய் கண புர மடிகள் தமிடமே -8-7-4-
ஏதலர் நகை செய விளைய வரளை வெணெபோது செய்து –
பகைவரான சிசுபாலாதிகள் -சிரிக்கும் படியாக -இள மகளிர் கடைந்து வைத்த வெண்ணெயை திருப்த்தியாக அமுது செய்து
அமரிய புனிதர் -சந்தோஷித்த -பவித்ரரான
நல் விரை மலர்-கோதிய -நல்ல பரிமளத்தை யுடைய பூக்களை கொத்தி அவை அசாரம் என்று விட்டு வந்த –
மது கரம் குலவிய மலர் மகள்-வண்டுகள் சூழ்ந்து பரவப் பெற்ற தாமரை மலரில் அவதரித்த பெரிய பிராட்டியார் –
காதல் செய் கண புர மடிகள் தமிடமே -விரும்பப் பெற்ற திருக் கண்ண புரமானது ஸ்வாமி யினுடைய திவ்ய தேசமாம்-
விரை மலர் கோதிய மது கரம் குலவிய-என்கிற விசேஷணம் மலருக்கும் ஆகலாம் -கணபுரத்துக்கும் ஆகலாம்
விரை மலர் கோதிய மதுகரம் குலவியதும் -மலர்மகள் காதல் செய்வதுமான திருக் கண்ணபுரம் –
ஏதலர் நகை செய -பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாரும் சிரிப்ப-பெரியாழ்வார் -2-7-1-
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி யுரலிடை யாப்பும் யுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -நாச்சியார் -12-8-
அளை வெணெய் -வினைத் தொகை -அன்றிக்கே அளை -தயிர் ஆகவுமாம்
போது செய்தல் -திருப்தியாக வுண்ணுதல்
நவநீத சோர சேஷ்டிதங்களை நாம் அனுசந்தித்த அளவிலே நமது பாபங்களை விலக்கி புண்ணியம் தர வல்ல புனிதர்-
——————————-
தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே –8-7-5-
எம்பெருமானுக்கே எல்லா விசேஷனங்கள் இதில் -திருக் கண்ண புரத்துக்கு இல்லை-
—————————
மழு வியல் படை யுடையவனிடம் மழை முகில்
தழுவிய வுருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கண புர மடிகள் தமிடமே -8-7-6-
மழு வியல் படை யுடையவனிடம் -மழுவை விதேயமான ஆயுதமாக யுடைய பெருமானது இருப்பிடம் –
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை -மிகவும் செழுமை தங்கிய தாமரைப் பூவில் அவகாஹித்த –
வண்டுகள் ஆகிய பறவைகளின் யுடைய
பண் எழுவிய -இசைப் பாட்டுக்கள் எங்கும் வ்யாபிக்கப் பெற்ற-
இடம் -முதல் அடியிலும் கடைசி அடியில் உண்டே இப்பாசுரத்தில் -ஆழ்வார் திரு உள்ளமே இதற்கு நியாமகம்
திரு மகள் மருவிய -மலருக்கும் கணபுரத்துக்கும் விசேஷணம்
மலருக்கு ஆகில் -பத்மவ நாலயாம்-கத்ய த்ரயம் போலே -தாமரை மலர் தோறும் பிராட்டி உறைகின்றமை உணர்த்தப் படும்
—————————————-
பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம்
எரிதி யொடென வினவியல் வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறை சொலு மடியவர்
கருதிய கண புர மடிகள் தமிடமே —8-7-7-
பரிதி யொடணிமதி -பரிதியோடு அணி மதி
பனிவரை -இமய மலை போன்ற குல பர்வதங்கள்
திசை நிலம்-திக்குகள் என்ன -பூ மண்டலங்கள் என்ன
எரிதி யொடென – எரி தீ -அக்னி என -என்று சொல்லப் படுகிற -தீ தி குறுகி நிற்பது செய்யுள் விகாரம்
வின -இப்படிப்பட்ட பொருள்களை எல்லாம்
வினவியல் -இவற்றை நடத்திக் கொண்டு போருகிறவருமான
சுருதியொ டருமறை முறை சொலு மடியவர்-
ஸ்வரத்தொடே கூடின அருமையான வேதங்களை முறைப்படியே ஓதுகின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கருதிய-நமக்கு இவ்விடமே பிராப்யம் என்று அனுசந்திக்கப் பெற்ற
கண புர மடிகள் தமிடமே –
—————————————
படி புல்கு மடி யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே —8-7-8-
கொடி புல்கு தட வரை யகலமது டையவர் முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்-நாற்று முடிகள் உடன் கூடி
இருக்கும் விசாலமான கழனிகளிலே கலப்பைகளை செலுத்தும் பொழுது அடிபட்ட தாமரை முதலிய பூக்கள் ஆனவை
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே -பரிமளத்தைப் புறப்பட விடப் பெற்ற திருக்கண்ண புரம் –
படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயலாலி மணாளா -11-8-6-
படி புல்கும் அடியிணை பலர் தொழ – உலகு அளந்த திருவடிகளை எல்லாரும் காணும் படியாக
இங்கே சேவை சாதித்து அருளும்
மலர் வைகு கொடி-பெரிய பிராட்டியார் -ஸ்திரீ ஜாதிக்கு உவமை ஆகு பெயர்
அகலகில்லேன் இறையும் என்று உறை மார்பன் இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
——————————-
புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய
நில மகளென வின மகிளர் களிவரொடும்
வலமனு படை யுடை மணி வணர் நிதி குவை
கல மனு கண புர மடிகள் தமிடமே –8-7-9-
புல மனு மலர் மிசை மலர் மகள் புணரியநில மகளென வின மகிளர் களிவரொடும்-
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ நிற்கும் பெருமான் உறைவிடம் –
கண் முதலிய இந்த்ரியங்களை ஆகர்ஷித்து தன்னிடம் நிலை நிற்கச் செய்ய வல்ல அழகிய மலர்
புல மன்னு மலர்மிசை மகள் -என்னும் அளவே போதுமே இருக்க -மீண்டும் மலர் மகள் -என்றது சம்ஜ்ஞையாகக் கொள்ளத் தக்கது
வலமனு படை யுடை மணி வணர் -படை இங்கே ஆழிப் படை சிறப்புப் பொருளில் வந்தது
நிதி குவைகல மனு கண புர மடிகள் தமிடமே -த்வீபாந்தரங்களில் இருந்து பொற் குவியல்களை யுடைய
மரக் கலங்கள் பொருந்தி யுள்ள திவ்ய தேசம்
புலங்கொள் நிதிக் குவையோடு புழைக் கைம்மா களிற்று இனமும்
நலங்கொள் நவ மணிக் குவியும் சுமந்து எங்கும் நன்று ஒசிந்து கலங்கள் இயங்கும் மல்லை -போலே –
நிதி -பொன் பொருளில் -இங்கே –
பொற் குவை மாறாத மரக் கலங்களை உடைய திருக் கண்ண புரம்-
கடல் ஒரு புறமாய் இருக்கும் போலே காணும் -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்-
————————————
மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை
வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு
ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே–8-7-10-
மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை-அங்கே சௌசீல்யாதி குணங்களை காட்ட முடியாமல் பகல் விளக்காய் இருக்குமே
வலி கெழு மதிளயல் –வயலணி–இவை இரண்டும் திரு மங்கைக்கு விசேஷணங்கள்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே
இத் திரு மொழியை இசை குன்றாமல் ஒதுமவர்கள் முக்தி பெறுவார்கள் –
அனுபவித்தே தீர வேண்டிய பாப பலன்களையும் அனுபவிக்க வேண்டாம் –
இத் திருமொழி உடைய இசை பரம போக்கியம் என்பதால் விழுமிய இசையினோடு -என்கிறார்-
————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply