Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ ஸ்வாமி எம்பார் வைபவம்-ஸ்ரீ மதுரமங்கலம்-திரு அவதார ஸ்தலம்.-

January 29, 2026

விஶ்வாவஸூ ௵ தை ௴ புனர்பூசம் ஸ்ரீ எம்பார் ஆயிரமாவது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் –திரு அவதார ஸ்தலம் :  ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்

ஸ்ரீ ராமானுஜ பதாச்சாய கோவிந்தா ஆஹ்வான பாயிநீ
ததாயத்த ஸ்வரூபாஸா ஜீயான் மத் விஸ்மரஸ் தலீ

புஷ்யே புனர் வஸூ தினே ஜாதம் கோவிந்த தேஸிகம்
ராமானுஜ பதாம்புஜ ராஜ ஹம்ஸம் ஸமாஸ்ரயே

மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்

ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார்–குழந்தை பிறந்த உடனேயே ஆச்சார்யரான பட்டர் தொழும் எம்பார் -வாழித்திருநாமம் –பட்டரை எம்பெருமானாராகவே திரு உள்ளம் பற்றி இருக்கும் முதலிகள் -கூரத்தாழ்வானால் தனக்கும் பேறு -அர்வாஞ்சோ இத்யாதி போல் இருவரும் -இல்லை எனக்கு எதிர் -சாத்விக அஹங்காரம் -பட்டருக்கும் எம்பாருக்கும் இருக்குமே-

ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –சூரணை -275-இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல் நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –அதாவது – இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் – சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ – என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

பெரிய திருவடி அம்சம் இவர் என்பர் -எண்ணற்கரிய வைபவம் இவருக்கு –திருவடி பெருமாளுக்கு போல் எம்பெருமானாருக்கு எம்பார் -=கருடத்வஜன் -பார்த்த சாரதியை எம்பெருமானார் -அவர் கருடனான எம்பாரை சிந்திக்க -அவர் த்வய மந்த்ரம் சொல்லி குழந்தைகளைக் கூட்டி வர -த்வயம் பரிமளித்ததே -பெருமாளுக்கு திருவடி போல் கைங்கர்யம் செய்ய ஆசை கொண்டு பெரிய திருவடி எம்பராகி எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்தார் அன்றோ –

சிஷ்யன் ஆச்சார்யன் தேஹம் ரக்ஷணம் பண்ணக் கடவன் -ஆச்சார்யன் சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணக் கடவன் -எம்பார் எம்பெருமானை யாதவப்ரகாசரிடம் இருந்து ரஷித்த விருத்தாந்தமும் திருமலை நம்பி மூலம் எம்பாருடைய ஆத்ம ரஷணம் பண்ணி அருளியதும் பிரஸித்தம் அன்றோ –

திருமலை நம்பி இவருக்கு சமாஸ்ரயணம் பண்ணி இவருக்கு ஆச்சார்யராக இருக்க எம்பெருமானாரை ஆச்சார்யராக கொள்ளுவான் என் என்னில் -தாரை வளர்த்துக் கொடுத்த பின்பு-விற்ற மட்டுக்கு புல்லிடுவார் உண்டோ -என்றாரே –

ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா  நபாயிநீ |
ததாயத்தத் ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஸ்ரமஸ்தலீ 
||–ஸ்ரீ ராமானுஜரை எப்போதும் விட்டுப் பிரியாத அவர் திருவடி நிழலாகவும், அத்திருவடிகளாலே ஸ்வரூபம் நிறம் பெற்றிருப்ப வராகவும், ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் என்ற திருநாமம் உடையவராகவும், அடியேனுக்கு இளைப்பாறும் இடமாகவும் உள்ள எம்பார் விஜயத்துடன் விளங்க வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு.–எம்பார் நமக்கு நிழல் தருபவர் -எம் விஸ்ரமஸ்தலீ 

திருமழிசை ஆழ்வாரும் எம்பாரும் ஒரே சந்நிதியில் ஸ்ரீ ரெங்கத்தில் இன்று சேவிக்கலாம் -ஒரு பிறவியிலே இரு பிறவியானார்கள் -இருவரும் பல சம்ப்ரதாயம் இருந்து விட்டு வந்தவர்கள் –
எம்பாரின் திருநக்ஷத்ரமும் எம்பெருமானாரை திரு நக்ஷத்ரமும் அடுத்தடுத்து -குரு பரம்பரையிலும் அடுத்தடுத்து -உள்ளார்கள் -நமக்கு காக்கும் நிழலாக இருப்பவர்

சாயா -பல அர்த்தங்கள்-மதுரம்- தாப ஹரத்வம் -தொடர்ந்து வரும் நிழல்–சாயா க்ரஹம் –உருவாக்குவது ஸூர்யன்-ராமானுஜ திவாகரன் அன்றோ- -ராகு கேது -சாயா கிரஹங்கள் -ஸாத்ருஸ்யம் -பிரதிபிம்பம் -ஸன்யா தேவி ஸூர்யன் பத்னி -வைஸ்வந்த மனு -யமன் -யமி -மூவரும் பிறந்தார்கள் -வெப்பம் தங்கள் விஸ்வகர்மா தந்தையிடம் சென்று-பெண் குதிரையாகஇருக்க ஸூர்யன் ஆண் குதிரையாக இவர்களுக்கு அஸ்வினி குமாரர்கள் பிறந்தார்கள் -பிரதிபிம்பம் இங்கு வைத்துப் போனாள் -சனி பகவான் பிறந்தார் -மெதுவாக நகரம் -30 வர்ஷம் -குரு ஒரே வருஷம் –

அறிவோமாய் வல் வினை தீர்ப்பான் நிழலும் அடி தாறுமானோம்-பெரிய திருவந்தாதி -தொடர்ந்து சேஷப்பட்டு இருக்கும்-நிழல் அநந்யார்ஹ சேஷத்வம் –அடி தாறு-பாதுகையும் ரேகையும் -சாயாயிவ -பூமி தேவியும் நீளா தேவியும் பெரிய பிராட்டியாருக்கு நிழல் போல்வனர்-மரத்தின் நிழல் தஞ்சமாக இருக்கும் –வாஸூ தேவ தருச்சாயா-கற்பக வ்ருஷ வாஹனம் -பாஹுச்சாயா அவஷ்டாப்யாம் ஸீதா தேவி – -எம்பார் நிர்வாஹகங்கள் -வார்த்தா மாலை -கால ஷேபம் செய்து இளைப்பாறலாம் -ராகு கேது -மனம் வேறுபாடு -உள்ளங்கை நாயனார் -பரம விரக்தரானார் அன்றோ –பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -வைராக்ய நிதி -ஆகவே சாயா க்ரஹமும் பொருந்தும்-நிஜம் அல்ல நிழல் என்ற எண்ணம் -பெரிய நம்பி உடன் கூரத்தாழ்வான் சென்ற ஐதிக்யம் –பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை அப்பன் -எம்பெருமானாரை விட்டு தனித்து இல்லாமல் இருந்தார் அன்றோ-
சாத்ருஸ்யம் -இருவரும் இன்றும் அர்ச்சா திருமேனிகளில் சாத்ருஸ்யம் சேவிக்கிறோம் -அருளிச் செயலில் அனுபவத்திலும் சாத்ருஸ்யம் -காண்கிறோம் –

பெருமாள் ஆச்சார்ய சிஷ்ய ரக்ஷணம் மூன்றையும் செய்து அருளியவர் எம்பார்-தர்மம் ரக்ஷணம் -வேசி வ்ருத்தாந்தம்-எவ்வுலகத் எவ்வவையும் காக்கும் எம்பெருமானுக்கு மூன்று ஆபத்துக்கள் வந்து கழிந்தன என்று எம்பார் அருளிச்செய்வார்.பாஞ்சாலியும், கஜேந்திரனும், ப்ரஹ்லாதனும் எம்பெருமானை அழைத்த போது, எம்பெருமானுக்கு தான் ஆபத்து ஏற்பட்டது என்பது எம்பாரின் திருவுள்ளம்.ஆகவே எம்பெருமான் இவர்களுக்கு, இருக்குமிடங்களில் இவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கி, தனக்கு வந்த ஆபத்தையும் போக்கிக் கொண்டான் என்று எம்பார் அருளிச்செய்வார்.

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-எம்பார் அருளி செய்யும் வார்த்தை –ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்து வந்து கழிந்தது -என்று அருளிச் செய்வர் –
அதாவது-திரௌபதிக்கும்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கும் -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கும்
உதவிற்றிலன் ஆகில் -சம்சாரிகள் ஈச்வர தத்வம் இல்லை என்று எழுத்து இடுவர்கள் இறே-ஆழ்வாரும் –எங்கனம் தேறுவர் தமர் -என்று தம்முடைய இழவிலும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் அத்யாவசாயம் குலைகிறதோ -என்று இறே அஞ்சுகிறது – பிழைக்கின்றது அருள் (திருவாய்-9-4-3 )-என்று இறே அஞ்சுகிறது பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவன்-என்று தம்முடைய இழவுக்கு நோகை அன்றியிலே ஈஸ்வரன் அருளுக்கு இறே இவர் நோவுவது

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று-
பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பிப் போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-

முதல் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
இரண்டாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் யாளி வாஹனமும்
மூன்றாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
நான்காம் நாள் காலையில் ஸிம்ஹ வாஹனமும் மாலையில் ஹம்ஸ வாஹனமும்
ஐந்தாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் சந்திர பிரபை வாஹனமும்
ஆறாம் நாள் காலையில் குதிரை வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
ஏழாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் யானை வாஹனமும்
எட்டாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
ஒன்பதாம் நாள் திருத்தேரும்
திருவவதார திரு நக்ஷத்ரம் காலையில் சாற்று முறையும் மாலையில் மங்களகிரி வாஹனமும் இரவில் புஷ்ப பல்லக்கு வாஹனமும்
அடுத்த நாள் காலையில் சாற்று முறை தீர்த்த கோஷ்டியும் ஸ்கந்தப் பொடி உத்ஸவமும் நடைபெறும்

தை புஷ்ப பிரஸாதம் வருஷா வர்ஷம் எம்பெருமானார் எம்பாருக்கு அனுப்பி அருள்கிறார்

விஷ்ணு த்வீதீயர்-கருட பஞ்சாசத் தேசிகர் –ஏக -பார்த்தசாரதி எம்பெருமானாராக -த்வீதீயர் -எம்பார் -பெரிய திருவடி அம்சம் -குருபரம்பரையிலும் எம்பெருமானருக்கு அடுத்த ஸ்தானம் -இவருக்கே -இவர் திருவடி நிலையில் பட்டரையும் நாம் ஸேவிக்கலாம்

ஆச்சார்ய அபிமான துங்கனாக -எம்பார்
எம்பெருமானாரை ரஷித்துக் கூட்டி வந்ததால் தேவப்பெருமாளின் அபிமானம் பெற்றவர்
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே-பிராட்டியார் அபிமானம் ஸ்பஷ்டம்
பெரிய திருமலை நம்பி ராமானுஜர் அபிமானம் இவர் சரித்ரத்திலே ஸ்பஷ்டம் –

ஞானக்கை தா –முதலியாண்டான் -எம்பார் -இவரும் ஒரு முதலியாண்டான் சிஷ்யரை கைங்கர்யம் ஏற்றுக் கொள்ள-அபராத ஷாபனம் கொள்ள -கீழே விழுந்தவனை இருவரும் கைக்கொள்ள கரையேறுவது ஸூலபம் அன்றோ -என்றாராம்

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்-பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —கைவல்ய கோஷ்டியில் –மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்

கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார்
 அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே-சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே-சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-

அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே – அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம்
 என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே- அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –


வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க , அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி , எம்பார் திரு அடிகளில் சரணம் புக , ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய்  இருக்கச் செய்தே இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன
நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-

வைராக்யம் -ராஸிக்யம் -ஒவ்வொன்றிலும் ஸீமா பூமியாக இருந்தவர் என்பதை விளக்கும் ஐதிஹ்யங்கள் பலவுண்டு

நம்பனை நரஸிம்ஹனை — -பிரகலாதன் -கஜேந்திரன் -திரௌபதிக்கு ஆடை சுரந்தது -மூன்று பரீஷைகளிலும் தேறின தத்வம்-என்பாராம் எம்பார் ஸ்வாமிகள்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-

ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் 

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான்
-2-1 1- –

இவ் விடத்தை  ஸ்ரீ உய்ந்த பிள்ளை-ஸ்ரீ திரு வரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீ எம்பெருமானார்
காலத்தில் எழுந்து அருளி இருந்தார் ஒரு அரையர் – பாடா நிற்க –
திரு வோலக்கத்திலே
அத் தூதன் என்று -பெருமாளை காட்டுவது –
அப் பூச்சி என்று கண்ணை இறுத்து கொண்டு வருவதாக அபிநயிக்க –

ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார் –
திருக் கைகளை திருத் தோள்களோடு சேர்ந்து காட்ட –
அவரும் அப்படியே அபிநயித்து கொண்டு வர –
இதுக்கடி என் என்று விசாரித்து புரிந்து பார்த்து அருளி –
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார்-என்று பிரசித்தம் இறே –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
36–ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே
-38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

பத்து நிர்வாஹகங்கள் திருவாய்மொழியில் உண்டு -அர்த்தபஞ்சக பாரமாக ஒவ்வொன்றிலும் இரண்டு நிர்வாஹகங்கள்

மிக்க இறை நிலை பற்றிய இரண்டு நிர்வாஹகங்கள்–2-4-5-/4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே
 –2-4-5-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்-இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது-அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது – அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.- பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.

மெய்யா உயிர் நிலையும் –4-5-வீற்று இருந்து -4-6-தீர்ப்பாரை யாம் இனி–மோர் உள்ளதனையும் சோறோ -அசங்கதி ஏவ சங்கதி -என்பாராம் எம்பார்அசங்கதி ஏவஎம்பெருமான் சேராததால் வந்த துக்கம் தன்னடையே வந்தது என்றவாறு

மெய்யா உயிர் நிலையும்8-8-சரீர ஆத்ம பாவம் -ஆத்ம வஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக் கோடான தன்னைக் காட்டி பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர் -அன்றிக்கே-ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –
அன்றிக்கே – இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறியகலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –

தக்க நெறி–வீடுமின் முற்றவும் -அவதாரிகை –தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது-அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே- உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.

தக்க நெறி5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்–பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய, அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.– உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்-எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.

விரோதி ஸ்வரூபம்ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

விரோதி ஸ்வரூபம்மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே
 –3-2-8-சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப் பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.

வாழ்வு-தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே
.–3-2-10-இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.-‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.

இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.

வாழ்வு-4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ப்ரவேஸம்-உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு -சீட்டு-வேண்டுமாகில்
அதனைத் தந்தருள வேண்டும்,’ என்கிறார் இத் திருவாய் மொழியில். இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே – திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம் லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால் ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல் கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –

எம்பார்,-
உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
இதனைத் தவிர்த் தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச் செய்வர்

கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.-ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் – அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்-இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –

உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘
முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில், இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.-ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க, இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும். ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –

—-

என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
– 6-8-

ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு
அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி –
கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ –
அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று
கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
-5 -4-11 –

ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் –ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது – இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு –
இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று
பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –-கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம
–யுத்த -18-33-

ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு -சஹஸா ஆதேஸமாய் –சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
அதாகிறது -தன் அயோக்யதையைப் பார்த்து சடக்கென -இது ஆழ்வான் நிர்வாஹம் –
கீழ் அநாதி காலம் சம்சரித்துப் போந்தவன் மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும் அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்-ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
ஸக்ருதேவ -என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவ்ர்த்திக்கிறது –
தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
ஸக்ருதேவ ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் -அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு-

1-3-பத்துடை யடியவர்கு எளியவன்-ப்ரவேஸம்

இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;-அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?
–6-7-5-

ஆவி உள் குளிர – இவ் விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய்தாராய்,-அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை,
சீயா! எம்பார் அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச் செய்தார்.
கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.
-(சீயா-உயர்ச்சியாக நவில்கிறார் )


இவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்றும், மேலும் அவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரே தஞ்சம் என்று அடைந்து அவருக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர்-கோவிந்தப் பெருமாள் என்ற இயற்பெயர்  கொண்ட இவர் எம்பெருமானின் குணங்களில் உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருக்க,  இவருக்கு இராமானுசரே, எம்பார் என்னும் பெயரைச் சூட்டி, அவருக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலியவற்றை அருளினார்.-தையில் மகத்திற்கு” ஏற்றமளித்த திருமழிசை ஆழ்வாரும், தன் வாழ்க்கையில் முதல் 1000  ஆண்டுகள் (இவர் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவர்) பிற மதங்களில் புகுந்து, பின் சைவ மதத்தில் சேர்ந்து, சிவ வாக்கியர் என்னும் பெயருடன் சிவனைப் பாடியும் போற்றியும் வணங்கிவர, எம்பெருமான் பேயாழ்வாரைக் கொண்டு இவரைத் திருத்திப் பணிகொள்ள விருப்பப்பட்டு, பேயாழ்வாரும் எம்பெருமானின் குறிப்பறிந்து செயல்பட்டு, திருமழிசை ஆழ்வாரைத் திருத்திப் பணிகொள்ள, ஆழ்வாரும் எம்பெருமானே பரதெய்வம் என்பதை நன்கு உணர்ந்து, பின்னர் 3700 வருடங்கள் எம்பெருமானுக்கே தன்னை ஆட்படுத்திக் கொண்டு, திருக்குடந்தையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். இதைப்போல், கோவிந்தப் பெருமாளான எம்பாரும் சிவனைப் போற்றும் சைவராய் இருக்க, இவர் பின்னர் ஸ்ரீவைஷ்ணவர் ஆனார்

இராமானுச முனிக்கும் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷத்தால் விரோதிகள் கழிந்தன.  அதாவது, இவரது ஸ்ரீவைஷ்ணவத் தொண்டின்மீது பொறாமை கொண்ட பலர் இவரை கொன்று விடத் துணிய, ஆசாரியர்களின் அருளாலும், சீடர்களின் உதவியாலும்,  விரோதிகள் இவரை விட்டு விலக, இவர்  ஸ்ரீவைஷ்ணவத்துக்கே  விளக்காய் இருந்து, அது எங்கும் பரவி, உலகோர் அனைவருக்கும் எம்பெருமானே அடையப்பட வேண்டியவன் என்ற அறிவைப் பெற்று உய்யும்படி செய்தவர். இப்படி உலகோர் உய்ய உதவி செய்த இராமானுசர், தம் சகோதரரான கோவிந்தப் பெருமாள் சைவராய் இருப்பதைப் பொறுக்க மாடாமல்,தம் ஆசாரியரான ஆளவந்தாரைப் பிரார்த்தித்து, நமக்கு உசாத் துணை (உதவி) உண்டாக வேண்டுமே என்று மனதில் விசாரித்தார். ஏனென்றால்,  கோவிந்தப்பெருமாள் சாஸ்திரங்களைப் புரையறக் (குறைவின்றி) கற்றவர்; நமக்கு ஹிதம் (நன்மை) கோருபவர்; அவரை நம்மோடு சேர்ப்பார் யாரோ? இப்போது அவர் வேறு தெய்வ வழிபாடு உடையவராக இருக்கிறார். அவரைப் பாங்காக்குபவர்  (திருத்துபவர்)  யாரோ என்று புழுங்கினார்  பிறகு, இதைச் செய்யத் தக்கவர்,தன் தாய்மாமனான பெரிய திருமலை நம்பியே என்று தெரிந்து, அவர் பக்கலுக்கு (பக்கம்) ஒரு ஸ்ரீவைஷ்ணவரை நியமித்து, “வட்டமணி கோவிந்தரைத் திருத்தித் தேவரீர் திருவடிக்கு அடிமை கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பிக்கும்படி அவரிடம் விவரம் சொல்லி அனுப்பினார்.   கோவிந்தருக்கும் பெரிய திருமலை நம்பியே தாய்மாமன் ஆவார்.

இளையாழ்வாரின் ஆணையின்படியே அந்த ஸ்ரீவைஷ்ணவரும் திருமலைக்குச் சென்று பெரிய திருமலை நம்பிகளிடம் விவரத்தைச் சொல்ல, அவரும் “இது நம்முடைய கடமை என்றிருந்தோம்;ராமானுஜ முனியின் எண்ணமும் கலந்ததே” என உகந்து (மகிழ்ந்து) உடனே அவ்வைஷ்ணவரையும் தம்மைச் சேர்ந்தாரையும் அழைத்துக்கொண்டு காளஹஸ்திக்கு எழுந்தருளி, குளக்கரையில் அமர்ந்திருந்தார்.  அப்போது லிங்கம் உள்ளங்கை கொணர்ந்த நாயனாரான கோவிந்தப்பெருமாள் அங்கு நீர்கொண்டு செல்ல வந்தார். அச்சமயம் பெரிய திருமலை நம்பிகள், “கொன்றைச் சடையானைக் குளிர நீராட்டினால், உனக்குண்டாகும் பயனென்ன? என்று கூறினார். அதுகேட்டு முறுவலித்து, எதுவும் பதில் பேசாமல் போனார் கோவிந்தர். அதுகண்டு திருமலை நம்பிகள் இந்தி நம்மால் ஒன்றும் ஆகாது; இனிஅவனை ( கோவிந்தரை)  எம்பெருமான் தான் திருத்தி அருளவேண்டும் என்று பிரார்த்தித்து,  திருமலைக்குத் திரும்பினார் –

சிலநாள் கழித்துத் திருமலை நம்பிகள் மறுபடியும் காளஹஸ்திக்கு வந்து ஆளவந்தார் அருளிய “ஸ்தோத்ர ரத்னத்தில்” இளையாழ்வாரை (இராமானுசர்) வசீகரித்த  “நாராயணனே பிரமன், சிவன், இந்திரன் இவர்களிலும் மேலானவனாயும்,வினையின் நீங்கியவனாயுமுள்ள முக்தாத்மா ஆகிய இவர்களெல்லாரும் எந்த உன் பெருமைக் கடலில் துளிகள் ஆகின்றனரோ, அந்த உன்னிடத்தில் இயற்கையானதும், எல்லையற்ற பெருமையை உடையதுமான ஐஸ்வர்யத்தை எவன்தான் பெறாதவன் ஆவான்? என்கிற 11ஆவது ஸ்லோகத்தை ஒரோலையில் எழுதி, கோவிந்தர் வரும் வழியில் போட்டு வைத்தார் -எதிர்பார்த்தபடி கோவிந்தரும் அவ்வழியே வந்தவர், அவ்வோலையை எடுத்து வாசித்துப் பார்த்துவிட்டு,அதைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்.  மறுபடியும் நீர்கொண்டு திரும்பும்போது, அந்த ஒளியைத் தேடி எடுத்து மறுபடியும் வாசித்துப் பார்த்தார். அதன் பொருள் அவரை மாற்றியிருக்க வேண்டுமென அவர் தோற்றம் காட்டிற்று.  அவ்வோலையைக் கையில் கொண்டு, “உங்களிடமிருந்து நழுவிய பொருள் இதுவோ?”என்று நம்பிகளிடம் கேட்க, நம்பியும், “எங்கள் பொருள் நழுவுவதல்ல” (எங்கள் பொருளான எம்பெருமான் ஒழிக்க ஒழியா உறவு உடையவன் ஆகையாலே, நாங்கள் விட்டாலும் தான் விடான் ஆகையாலேயே, எங்களைவிட்டு நழுவாது) என்று இப்படிப் பலபடி பதிலுக்குப் பதிலாக அருளி, அவர் மனத்தில் மாற்றம் உண்டாக்கினார்.  கோவிந்தர் அதற்கும் பதில் கூறாமல் சென்றார் 

நம்பிகள் மறுபடியும் திருமலை சென்று பெருமாள் திருவடி தொழுது மீண்டும் காளஹஸ்திக்கு வந்து சோலையில் தம் சிஷ்ய கோடிகளோடு திருவாய்மொழிக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார்.  அப்போது கோவிந்தர் ஒருமாதிரி மரத்தினின்றும் பூப்பறித்துக் கொண்டிருந்தார்  அச்சமயம், பெரிய திருமலை நம்பிகள் “திண்ணன் வீடு” என்ற பதிகத்துக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார். இதை கோவிந்தரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்  நாலாம் பாட்டில், “தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன்” என்றவரை விஸ்தாரமாகப் பொருள் விரித்து, “தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனை ஆகுமே” என்று சொன்னதும் கோவிந்தர், முன்னுள்ள பாட்டுக்களின் பொருள் நெஞ்சில் உறுத்தி இருந்தமையால்,  சடக்கென மரத்தினின்றும் குதித்து, “தகாது தகாது என்று சொல்லிக் கொண்டே,  பூக்கூடையை வீசி எறிந்துவிட்டு, தான் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையையும் கழற்றி எறிந்துவிட்டு, நம்பிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் “அந்தோ! லோக நாயகன் என்று முடி சூடியவன் இருக்க, நாயகனை உபாசிக்கும் வேடமுடைய விரிசடையானை (பரமசிவனை) விரும்பினேனே! அழகான தாமரைக் கண்ணன் இருக்கத் தழல் (நெருப்பு) வீசும் பொறிக்கண்ணனை பூசித்தேனே! கல்லெடுத்துக் கல்மாரி காத்த கையன் இருக்க, கபாலம் ஏந்திய கையை வணங்கினேனே! திருவிருந்த மார்பன் இருக்க, திருவில்லாத் தேவனை நாடினேனே! என்று இப்படியெல்லாம் நொந்துகொண்டு, “இந்த ஆத்மாவை அடிமைகொண்டு வாழச் செய்யவேண்டும் என்று நம்பிகளின் திருவடிகளில் விழுந்து கிடந்தார் 

அவரை முடி பிடித்து எடுத்து, குளிர நோக்கித் தடவிக் கொடுத்தார் நம்பிகள். மேலும் நல் வார்த்தைகள் சொல்லி, “ஆளவந்தார் கிருபைக்குக் குறை ஏதும் இல்லை” என்று எண்ணி நெஞ்சு நெகிழ்ந்தார்.  இவ்விவரம் அறிந்த காளஹஸ்தி நாதனை உடையார் பலரும் ஓடிவந்து நம்பிகளைப் பார்த்து, “அம்மான் பொடித் தூவினீரோ?” என்றார்கள்.  அதற்கு நம்பிகள், “அவரையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.-அவர்களும் கோவிந்தரின் கையைப் பிடித்து, “வாரும் கோவிந்தரே”! என்றழைக்க, “என் கையை இனித் தொடவேண்டாம்; உங்களோடு எனக்கு இனி உறவில்லை” என்று கருவூலச் சாவி, இலச்சினை, மோதிரம் முதலியவற்றை அவர்களிடம் வீசிவிட்டு நம்பிகளின் பின் போனார். அவர்களும், “நேற்றே காளஹஸ்தி நாதன்” எங்கள் கனவில், தேவாம்சங்களான இவர் (கோவிந்தர்) முதலானவர்கள் பாஷண்ட, பௌத்த (பிற சமயங்கள்) நாஸ்திகங்களைப் போக்கித் திருமாலிடம் உறவை வளர்க்கத் தோன்றியவர்கள் என்று கூறியிருந்ததற்கு ஏற்ப நடந்தது” என்று சொல்லிப் போனார்கள்.

பெரிய திருமலை நம்பிகளும் கோவிந்தப் பெருமாளைத் திருமலைக்கு அழைத்துச் சென்று, பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஸ்ரயனம்) முதலிய செய்து அவரைத் திருத்தி,  அடிமை கொண்டு, திராவிட வேதங்களையும் (திவ்யப்ரபந்தங்கள்) மற்றும் சம்பிரதாய இரகசியங்களையும் தெளிவுற அருளிச் செய்து கொண்டிருந்தார்.  கோவிந்தப் பெருமாளும் அவர் திருவடியள்ளது வேறு அறியாதவராக வாழ்ந்திருந்தார்.

உடையவரின் தம்பியும் “எம்பார்” என்கின்ற மறுபெயரையும் உடைய கோவிந்தப் பெருமாள் தமக்குத் தாய் மாமனும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிக்கு எல்லாவித ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஆசார்யருக்குப் படுக்கை அமைத்து அதில் முதலில் தாம் படுத்து உறங்கி எழுவதை உடையவர் கண்டார். இதனை நம்பிகளிடம் விண்ணப்பஞ்செய்தார். நம்பிகள் கோவிந்தப்பெருமாளை, “இப்படிச் செய்யலாமோ! இதற்குப் பலன் என்ன தெரியுமோ?” எனக் கேட்டார். கோவிந்தப் பெருமாளும் “படுக்கையில் ஏதேனும் உரித்தல், ஊறுதல், கடித்தல் முதலானவற்றால் தேவரீரின் தூக்கத்துக்கு ஊறு (தீங்கு) விளையாமல் இருக்கவேண்டும் என்பதே அடியேனுடைய குறிக்கோள். அதனால் அடியேன் செய்த செயலுக்கு பலன் நரகம் தான் என்றாலும் அது அடியேனுக்கு விருப்பமே என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டு உடையவர் வியப்புக்கு உள்ளானார்.

மற்றொரு நாள் உடையவர் நந்தவனத்தில் குளிர நோக்கி வருகையில், கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு வாங்கித் தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். என்ன காரணம் என்று உடையவர் வினவ, “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்” என்று பதில் கூறினார். அது கேட்டு உடையவர், “என்னே இவரின் பூததயை (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உளங்கனிந்தார்.

ஸ்ரீ இராமாயண காலக்ஷேபம் முடிந்ததும் உடையவர் “திருவரங்கம் புறப்படுகிறேன்; விடை தரவேணும்” என்று திருமலை நம்பிகளிடம் வணங்கி வேண்டினார்.   நம்பிகள் “இத்தனை தூரம் வந்து செல்லும் உமக்கு நாம் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” என்று குறைபட்டார். உடனே உடையவர், “அப்படியானால், அடியேனுடைய எண்ணப்படியே திருத்திப் பணிகொண்ட கோவிந்தப்பெருமாளை தந்தருள வேணும்” என்று வேண்டினார். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, “நம்மைப் போலே இவரையும் நினைத்திருப்பீராக!” என்று நியமித்து, தாரை வார்த்து தத்தம் பண்ணி எம்பெருமானாரோடு அனுப்பி வைத்தார்.

உடையவரும் கோவிந்தப்பெருமாளை அழைத்துக் கொண்டு சோளசிங்கபுரம் (சோளிங்கூர் என்கிற திருக்கடிகையில் அக்காரக்கனி பெருமாளையும் திருப்புட்குழியில் போறேற்றம்பெருமானையும் திருவடி தொழுது காஞ்சிபுரம் வந்து சேர்ந்து திருக்கச்சி நம்பிகளை வணங்கியிருந்தார். அவ்வளவில், கோவிந்தப் பெருமாள் ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்த துயராலே உடல் மெலிந்து முகம் வெளுத்துப் போனார். இந்நிலையை அறிந்த உடையவர், “வாரீர்! கோவிந்தப் பெருமாளே! திருமலை சென்று பெரிய திருமலை நம்பியை சேவித்து வாரும்” என்று கூறி இரண்டு சிஷ்யர்களுடன் அவரை அனுப்பி வைத்தார். அவரும் பேராவலுடன் திருமலை சென்று நம்பிகளை வணங்கி நிற்க, நம்பிகள் முகம் கொடாமல், “-உடையவரின் கோஷ்டியில் கலந்து உடையவரின் எளிமை, நீர்மை முதலான குணங்களால் ஈர்க்கப்பட்டு கோவிந்தப்பெருமாள் உடையவரை விட்டகலாது தொண்டு பூண்டு, ஞான பக்தி வைராக்யங்கள் வெளித்தோன்ற வாழ்ந்து வந்தார். ஒருநாள் உடையவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகக் கூடியிருக்கையில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் சேர்ந்து கோவிந்தப்பெருமாளின் ஞானம், பக்தி, வைராக்யம், ஆசார்யனே தனக்கு எல்லாம் என்ற உயர் குணங்களைக் கொண்டாடினர். இப்படி தன் குணங்களைத் தானே கொண்டாடிக் கொள்வது ஆணவத்தைக் காட்டுமதாயிருக்கையாலே உடையவர் “எல்லாரும் உம்மைப் புகழ்ந்தால், நீர் உம்முடைய தாழ்மையை அன்றோ சொல்லிக்கொள்ள வேணும்; அதை விடுத்து நீரே உம்மை புகழ்ந்துக் கொண்டு தற்பெருமையைக் காட்டலாமா?” என்று கோவிந்தரைக் கேட்டார். அதற்கு அவர், “ஐயோ! இந்த குணங்களை எல்லாம் அடியேனிடம் தோற்றுவித்தது தேவரீர் ஆகையாலே இந்த புகழெல்லாம் தேவரீருக்கேயாம். அடியேனைக் கொண்டாட வேண்டுமென்றால் அடியேன் காலஹஸ்தியில் இருந்த நிலையை அல்லவோ சொல்லவேண்டும்?” என்று பதில் கூறினார். இது கேட்டு எல்லோரும் அவரது நிலையை வியந்து கொண்டாடினர். எம்பெருமானார், “நல்லீர்! இந்த உம்முடைய குணங்களெல்லாம் எமக்கும் உண்டாகும்படி உம்முடைய நன்நெஞ்சாலே அணைத்துக் கொள்ளீர்!” என்று வாரி அணைத்துக்கொண்டார்.உடன் வந்தவர்கள் நடந்த விவரங்களைச் சொல்ல,  எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியின் எல்லாம் உணர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்தார். பிறகு, கோவிந்தப்பெருமாளுடன் புறப்பட்டு திருவரங்கம் சென்றடைந்தார்.

முக்காலத்திலும் எம்பெருமானாரையே (இராமானுசர்) நோக்கி அவர் திருவடித் தாமரைகளே தஞ்சம் என்றிருந்த கோவிந்தப் பெருமாளை அவர் தாயார் அழைத்து, உம் மனைவி பக்குவமானாள்(பெரியவள் ஆனாள்);அவளோடு தனித்திருக்க வேண்டும் என்று கூற, இவர் தன் தாயிடம், இருட்டும் தனியாய் இருக்கும் போது சொல்லுங்கள் அப்போது வந்து அவளுடன் கூடுகிறேன்  என்றாராம். பலநாட்கள், இது நடக்காமல் போகவே, அவர் தாயார் எம்பெருமானாரிடம் சென்று, தன் மகன் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் என்று கூற, எம்பெருமானார் அவரை அழைத்து,”கோவிந்தரே! இது நம் ஆணை! ருது காலத்திலேயே உம் மனைவியோடு இருந்து வாரும் என்று சொல்லி அனுப்பிவைத்தார்-கோவிந்தரும், ஏகாந்தத்தில் அந்தர்யாமியையும் (எம்பெருமான் எங்கும் உறைபவன்) அவன் குணங்களையும் எடுத்துரைத்து, தன் மனைவியைத் திருப்பி அனுப்பிவைத்தார்.-இதுகண்ட அவர் தாய் இப்படிச்செய்வது சரியல்ல என்று கூற, அதற்கு அவர், இருள் அறையிலும் எம்பெருமான் அந்தர்யாமியாய் வியாபித்திருக்கிறான்;அப்படி இருக்கும் போது, அவன்முன்னே இந்தத் தவற்றைச் செய்தால் அது சரியாகுமோ என்று கேட்க, இவருடைய வைராக்யத்தைப் புரிந்து கொண்டு எம்பெருமானார், “இல்லறமில்லேன் துறவறம் இல்லை” (திருமழிசைப்பிரான், நான்முகன் திருவந்தாதி) என்றபடி கோவிந்தப் பெருமாளுக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலானவைகளைக் கொடுத்து, அவருடைய பெயரை “எம்பார்” என்று சுருக்கிவைத்து அவரைப் பெருமைப் படுத்தினார்

என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ

ஸ்வாமி எம்பாருக்கு ஒரு குறை இருந்ததாம்–ராமானுஜ-என்றழைத்து அத்திருநாமத்தின் அமுதச்சுவையை பருக தமக்கு ஒரு சிறுவன் இல்லையே என்று ஏங்கினாராம்-இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுவாமி எம்பாரை அழைத்து அழகான திருவாழி திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தமது உபபாத்ரத்தை அவருக்குத் தந்தருளி, “இத்தை நமது பெயரால் அழைப்பீராக” என்று நியமிக்க, எம்பாரும் அப்பாத்திரத்தை நிதியெனப் பெற்றுக்கொண்டு அதை  “ராமானுஜம்” என்று அழைத்து வந்தார். அது முதலாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தாம் கையாளும் உபபாத்ரத்தை  ராமானுஜம் என்றே அழைத்து வருகின்றனர்

ஆசார்ய கைங்கர்யமே பரம  பிரயோஜனமாக தம்மைப்  பேணாமையும், ஆசார்ய விஷயத்தில் விற்கவும் பெறும்படி பணிந்திருக்கையும், ஆசார்யன் திறத்தில் நிழல்போல பரதந்தரனாய் இருப்பும், ஆசார்யனைப் பிரிந்தறியாத அனுஷ்டானமும் எம்பாருக்கே அமைந்த சிறப்புகள்.

பிணியவிழ நறுநீல மலர்கிழியப் பெடையோடும் அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே மணிகெழு நீர் மருங்கலரும் வயலாளி மணவாளன் பணியறியேன் நீ சென்று என் பசலை நோய் உரையாயே!(“தூவிரிய”பதிகம், 3.6.2)–அறுகால சிறுவண்டே என்று ஆழ்வார் அழைத்து தூது அனுப்புகிறார். இந்த வண்டிற்கு உதாரணம் யார் என்று கருதிய உரையாசிரியர் எம்பாரை உதாரணமாகக் காட்டுகிறார்.. எம்பார் சிறிய திருமேனி உடையவர். ஆனால் பேராற்றலும் பேரறிவும் படைத்தவர். அதைப்போலவே வண்டு வடிவில் சிறியது. ஆனால் ஆழ்வாருக்காக எம்பெருமானிடமே தூது போகும் பெருங்காரியத்தை அல்லவா  செய்யப்போகிறது. வடிவில் சிறு உருவம். காரியத்தில் பெருமை. வண்டுக்கு எம்பாரைத் தவிர யாரை உதாரணம் காட்ட முடியும்

சங்கை கெடுத்தாண்ட தவராசா -பொங்குபுகழ் 
மங்கையர்க்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும் 
தங்குமனம் நீ எனக்குத் தா.  –பெரிய திருமொழித் தனியன் இட்டவர் இவர்.

பற்பமெனத் திகழ் பைங்குழலும் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
முப்புறி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலை யழகும்
கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!–வடிவழகுப் பாட்டு) இயற்றி, அவரைப் புகழ்ந்தவர் இவர்.

ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ச்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநு பவித்துள்ளமை காட்டுதும்.

வேதோத்தம்ஸ குஹாவிஹாரபடுநா ஸ்ரீசைல் ச்ருங்கோல்லஸந்
மாயா கேஸரி மாநிதேந கஹநந்யாயாட வீசாரினா
கம்பீரேண பராத்மபேதநமஹா நாதேந் நாதேந மே
குப்தோஹம் யதிஸார்வ பெளமஹரிணா வர்த்தே ப்ருசம் நிர்ப்பய .
-இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

[வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் வி ஹரிக்கும். தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதியிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்’‘ என்ற மஹாபாரத ச்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத ” என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச்சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

(ஸ்ரீசைல ச்ருங்கோல்லஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்லது ஸிம்ஹமேயாகும்.அப்படியே இந்த ராமாநுஜஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கடமுடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணாவவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலைமேய, கோணாகணையாய்’ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க. அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

(கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங்காட்டில் சஞ்சரிக்குமே யொழியச்சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹபக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்கவல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்றுவ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவபர பேதத்தை ஸாதிக்கவல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது. ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
என்று எம்பார் அருளிச் செய்வர் –நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை

நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு-‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;-ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’-

எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு
போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –
ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க –
இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக் க்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து – ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன – தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தை உடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –இரு நூற்று பத்தாம் வார்த்தை

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

எம்பார் சரம தசையிலே -கணியனூர் சிறியாச்சான் -சட்டம்பள்ளி ஜீயர் ஈச்சம் பாடி ஜீயர் போன்ற சிஷ்யர்களுக்கு உடையவர் சாதித்து அருளிய அர்த்தங்களை ஸாதித்தருளி அவர்களுக்கு பட்டர் திருவடியைக் காட்டிக் கொடுத்து உடையவருடைய திருவடித்தாமரைகளை தியானித்துக் கொண்டு அவர் திருவடி சேர்ந்தார்


எண்ணற்கரிய எம்பார் ! எம்பெருமானுடைய மற்றொரு திருவுருவமாகவே அத்விதீயரான கருடன் போற்றப்படுகிறார். வேதாந்தாசாரியர் கருட பஞ்சாஶத்தில் ஒரு ச்லோகத்தில் ஏக: என்று கருடனை அத்விதீயர் அதாவது ஒப்பற்றவர் என்றும்; விஷ்ணோ: த்விதீய: என்று பகவானுக்கு அடுத்தவர் என்றும் அவர் ( பகவான்) தாமே கொண்ட மற்றோர் வடிவம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார். கருடாம்ஶரான எம்பாரும் ஆசார்யர்களுக்குள்ளே ஒப்புயர்வற்றவர். அதனால் தான் அவரைப் பெறுதற்கு ஸகலவித முயற்சிகளையும் எம்பெருமானார் செய்தார். ( திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தராம் எம்பாரைத் திருத்திப் பணி கொண்டார்.. ஆசார்ய ப்ரஸாதமாக திருமலை நம்பிகளிடமிருந்து எம்பாரைப் பெற்று தம்முடன் அழைத்துக் கொண்டு வந்தார் ) ..

விஷ்ணுவிற்கு அடுத்தவர் கருடன் என்றதாலே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு பொருளும் இங்குள்ளது. விஷ்ணுவே; அதாவது ஸ்ரீபார்த்தஸாரதியே இராமானுசராகத் தோன்றினார் என்பது ஸம்ப்ரதாயம். கேஶவாசார்யர் ( இராமானுசரின் திருத்தகப்பனார் ) திருவல்லிக்கேணியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அவருக்குத் தானே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்குறுதி தந்தான் பார்த்தஸாரதி எம்பெருமான். அதன் படியே ‘ சித்திரையில் செய்ய திருவாதிரையில்’ ‘ சிறந்த பெரும்பூதூரில் சீமான் இளையாழ்வாராக’ வந்து தோன்றினான் இறைவன். ஆக விஷ்ணுவே; அதாவது கண்ணனே இராமானுசரென்ப. ‘ஸ்ரீபதிர் வா இதி ஸாத்த்விகை: விதர்க்க்யாய மஹா ப்ராஜ்ஞை: பாஷ்யகாராய மங்களம்’ என்றதும் காண்க. அறிவாளிகள் ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாகவே எம்பெருமானாரைக் குலாவுகின்றனர். ஶமிதோதய ஶங்கராதி கர்வ: என்கிற யதிராஜ ஸப்ததி ஶ்லோகத்தாலும் இராமானுசர் கண்ணனே என்பது விஶதம். கருடன் எப்படி விஷ்ணுவிற்கு அடுத்த ஸ்தானமோ; அவ்விதமே கருடாம்ஶரான எம்பாரும் விஷ்ணுவினுடைய அம்ஶ பூதரான எம்பெருமானாருக்கு அடுத்த ஸ்தானத்தை வஹிக்கிறார். ஆம் ஓராண்வழி குருபரம்பரையில் எம்பெருமானாருக்கு அடுத்தவர் எம்பாரே ! ஆக விஷ்ணோ: த்விதீய: என்பது எம்பாரையே நமக்கு உணர்த்தி நிற்கும் என்றவாறு.

இன்னமும் கேளீர்! எம்பெருமானார் மிகச் சிறந்த மந்திரவாதியாகத் திகழ்கிறார். விஷத்தை முறிப்பதற்குரிய மந்த்ரங்களிலே நல்ல தேர்ச்சி பெற்றவராய்; நிபுணராக அவர் போற்றப்படுகிறார். தேசிகன் சாதிக்கிறார்.. ஸந்மந்த்ரவித் க்ஷிபதி ஸம்யமிநாம் நரேந்த்³ர: ஸம்ஸார ஜிஹ்மக³ முகை²: ஸமுபஸ்த்தி²தம் ந: l விஶ்வக்ததம் விஷய லோப⁴ விஷம் நிஜாபி⁴: கா³டா³நுபா⁴வ கருட³ த்³வஜ பா⁴வநாபி⁴: உலகவின்பங்களிலே பற்றுதல் என்பது ஒரு கொடிய விஷம். அது எங்கிருந்து புறப்படுகிறதெனின்; ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின் வாயிலிருந்து புறப்பட்டு நாற்திசையிலும் அது பரவியிருக்கிறதாம். விஷத்தைத் தணிப்பதற்காக ‘க³ருட³ம் ஆத்மாநம் த்⁴யாயீத’ என்று மந்திர சாத்திரங்களிற் சொல்லியபடி தன்னை கருடனாக எண்ணிக் கொண்டு கருட த்வஜனான பகவானை எண்ணிடவே நமக்கு நன்மை உண்டாம். எம்பெருமானாராகிற கருடத்வஜர் ( கருளக் கொடி உடையவனான எம்பெருமான் ) எம்பாராகிற கருடனைச் சிந்தித்து; அவரையே கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான பராசர பட்டர் & வேத வியாஸ பட்டர் ஆகியோருக்கு (ஸம்ஸார ஸர்ப்பத்தின் கொடிய விஷம் துன்புறுத்தாமைக்காக) ஆசார்யனாக நியமித்தமை ப்ரஸித்தமிறே! ஆழ்வான் திருமாளிகைக்கு எம்பெருமானார் எழுந்தருளுகிறார். எம்பார் உள்ளே சென்று ஆழ்வான் திருக்குமாரர்களை ( குழந்தைகளை ) கைகளில் ஏந்தி வருகிறார்..உடையவர் எம்பாரிடம் குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கிறதே ! என் செய்தீர் என்று வினவவும்; குழந்தைகளுக்குக் காப்பாக ( ரட்சையாக) துவயத்தைச் சொல்லி குழவிகளைக் கொண்டு வந்தேன் என்றார் எம்பார். ஸத் மந்த்ர வித்- ஆகையால் குழந்தைகளிடமிருந்து புறப்பட்ட த்வயத்தின் பரிமளத்தை எளிதாகக் கண்டுபிடித்து விட்டார் உடையவர்.

இதிலே ஒரு ஸ்வாரஸ்யம் உண்டு. விஷத்தை முறிப்பவர்கள் தங்களை கருடனாக எண்ணிக் கொண்டு; கருடத்வஜனாம் விஷ்ணுவை த்யானிக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் மேற்சொன்ன ஐதிஹ்யத்தில் கருடத்வஜனாம் விஷ்ணுவின் அவதாரமான உடையவர் கருடனாகிற எம்பாரை த்யானித்து ( நினைத்து ) அவரைக் கொண்டு கூரேச புத்திரர்களை ஸம்ஸார ஸர்ப்பம் தீண்டாதவாறு ரக்ஷித்தார். இந்த முரணில் உள்ள ஸ்வாரஸ்யம் ரசிக்கத் தகுந்ததாம். மேலும் பிற மதங்களாகிற சேற்றில் அழுந்தி அல்லலுற்ற எம்பெருமானை ரக்ஷித்தவர் எம்பெருமானார். கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முநி: என்பர் தேசிகன். எம்பெருமானைக் காப்பாற்றுகிற எம்பெருமானாரையே விந்தியமலைத் தொடர் காடுகளிலிருந்து ரட்சித்தவர் எம்பார் !

இன்னொன்றும் கேளீர் ! வீர ஸுந்தரனால் தொந்தரவிற்காளான பெண்பிள்ளை ஒருத்திக்கு அபயம் கொடுத்து தம்முடைய மடத்திலே இடமளித்திருந்தார் எம்பார். இதனால் வீர ஸுந்தரனாலே நமக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றெண்ணிய உடையவர் அவளை மடத்திலிருந்து வெளியே அனுப்பச் சொல்லுகிறார். சரணம் என்று வந்தவளை ரட்சித்தால் அந்த தருமமே நம்மைக் காக்கும் என்று உறுதியாக அவளைக் காத்து நிற்கிறார் எம்பார். விந்திய மலைத் தொடரில் எம்பாரைப் பார்த்து உடையவர் சரணம் என்று சொல்லாமலிருக்கச் செய்தே அவரை ரட்சித்த பெருந்தகையாம் எம்பார் சரணம் என்று வந்தவளையா கை விடுவர் ! பாம்பின் வாயில் தைத்திருந்த முள்ளை அகற்றி அந்த ஜீவனுக்கு இரங்கியதாகட்டும்.. வைராக்கியத்திலாகட்டும்.. பகவத் குணாநுபவத்திலாகட்டும்..ஆசார்ய பக்தியிலாகட்டும்.. எம்பாருக்கு நிகர் எம்பாரே ! அவர் தம் திருநட்சத்திர நன்னாளான இன்று அன்னாரை வணங்கி மகிழ்வோமாக !


(மதுரமங்கலம்)எம்பார் ஸ்வாமிகளின்  (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர் ) அவதார ஸ்தலம்.

தூரம் : சென்னையில் (கிண்டியில்) இருந்து 57 KM-வழி : சென்னை – பெங்களூர் ஹைவேயில் சுங்குவார் சத்திரம் ( 49  KM )அடைந்தவுடன் வலது புறம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். சுமார் 8  KM தொலைவில் மதுரமங்கலம் உள்ளது. – மழலைமங்கலமாக இருந்த இவ்வூர் காலப்போக்கில் மதுர மங்கலமாக மருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. எம்பார் சுவாமிகள் திருவாராதனம் செய்த பெருமாள் இங்கு  உள்ள  ஸ்ரீ வைகுண்டப்  பெருமாள்.

மூலவர்         : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-உத்சவர்        : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-தாயார்           : கமலவல்லி-புஷ்கரணி    : கருட புஷ்கரணி

எம்பார் சுவாமிகள் பெரிய திருவடி கருடாழ்வாரின்  அவதாரமாகக் கருதப்படுகிறார்.  ஆகையாலே  இங்கு உள்ள புஷ்கரணி கருட புஷ்கரணி  என்றழைக்கப்படுகிறது.   இக் கோவில் சுமார் 1000  ஆண்டு பழமையானது என்றும்  தொண்டை மண்டல மன்னர் சுபர்ணா என்பவரால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.-சித்திரை மாதத்தில் ஸ்ரீ வைகுண்டப்  பெருமாளுக்குப் பிரமோத்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி

கூரத்தாழ்வானின் மனைவியாரான ஆண்டாள், பெரிய பெருமாள் கிருபையோடு அனுப்பிவைத்தபிரசாதத்தால் , இரண்டு திருக்குமாரர்களை ஈன்றெடுக்க , எம்பெருமானார் எம்பாரோடே  அக்குழந்தைகளின் நாம கரணத்திற்கு (பெயர் இடும் வைபவத்திற்கு) கூரேஶரின் திருமாளிகைக்கு வருகை தந்தார். எம்பெருமானார், குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரைப் பணிக்க , எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார். குழந்தைகளைக் கண்டவுடன், அவர்கள் எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள், என்று உணர்ந்த எம்பெருமானார் , எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும் படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராஶர பாட்டரும் வேத  வ்யாஶ   பட்டரும்  எம்பாரின் ஶிஷ்யர்கள் ஆனார்கள்.

பெரியாழ்வார் திருமொழின் இறுதிப் பாசுரத்தில் , “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்பதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்த்தம் ஸாதிக்கும்படி கேட்க , அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று ஸாதிக்கிறார். ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத்  தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் த்யானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இது “பாடவல்லார் – சாயை போல – தாமும் அணுக்கர்களே ” , அதாவது எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார், என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்றும் ஸாதித்தார்

கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு அபிநயம் காட்டுகையில் உய்ந்தபிள்ளை அரையர் , கண்ணன் தன்  திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து கோப குமார்களை (ஆயர் பிள்ளைகளை) அச்சுறுத்துகிறார் என்று காட்டுகிறார்.இதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் , திருவாழியாழ்வானையும் திருச்சங்காழ்வானையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதை கண்ட எம்பெருமானார் , எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் , ” கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ?”  என்று கேட்டார்.

கண்ணனிடத்தே நம்மாழ்வார் , திருவாய்மொழியில் “மின்னிடை மடவார்கள் ” (6.2) பதிகத்தில், அனுபவித்த விஶ்லேஷத்தை , ஒரு  ஸந்யாஸியாய் இருந்தும் எம்பாரால் உணர முடிந்தது . இப்பதிகத்திற்கு அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆச்சர்யித்து  உகக்கும் வண்ணம் எம்பார் விளக்கமும் ஸாதித்தார். இது “பரமாத்மநி ரக்த: அபரமாத்மநி  நிரக்த: ” என்னும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதாவது “எம்பெருமான் விஷயத்தில் பெருத்த ஈடுபாடோடே இருத்தல் , எம்பெருமானை தவிர்த்த விஷயங்களில் ஈடுபாடின்றி இருத்தல் 

திருவாய்மொழியின் 10.8.3 பாசுரத்தின் வ்யாக்யானத்தில் மிக ஆச்சர்யமான நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் எம்பெருமானார் திடீரென்று திரும்பி பார்க்கிறார் . இதைக்  கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் , இப்பாசுரத்தில் “மடித்தேன்” என்பதை பற்றி எம்பெருமானார் சிந்தித்து கொண்டிருக்கிறாரோ என்று கேட்க எம்பெருமானாரும் அதை ஆமோதித்தார் . எம்பெருமானாரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தை அறியக்கூடியவர் எம்பார் . 

தனது சரம தசையில் எம்பார் பட்டரை  அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தே இருந்து  நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து வரும்படியும்  உபதேஶிக்கிறார் . எம்பெருமானார் த்யானத்தில் ஆழ்ந்து தமது சரம திருமேனியைத் துறந்து, எம்பார், நித்ய விபூதியில் எம்பெருமானாரோடே இருக்கத் திருநாட்டுக்கு எழுந்தருளினார்

மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குனஸிந்தவே |-மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர்நித்ய மங்களம் ||

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
மா வளரும் புதூரான் மலர்பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலை நம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே
பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே

பாரத்வாஜே வதீர்ணாய புண்டரீகாசக்ஷ ஜன்மனே
அஸ்மத் குலஸ்ய நாதாய கோவிந்தார்யாய மங்களம்

ஸ்ரீ சைல பூர்ண குருணா ராமா வ்ரஜ யோகினே
தத்தாய உதக பூர்வம் ஸ்யாத் கோவிந்தார்யாய மங்களம்

பட்டார்யாய ஸ்வ சிஷ்யாய வேதாந்த த்வய தாயினே
ப்ரபத்திம் ஸோபதி ஸதே கோவிந்தார்யாய மங்களம்

ஆத்மா வ்ரஜ கோவிந்த தத் தனூஜம் குருகாதிபம்
ஸ்வ வம்ஸா க்ரியம் க்ருதவதே கோவிந்தார்யாய மங்களம்

ஸ்ரீ சைல பூர்ண வ்யாக்யாதி ஸூக்தம் ஸ்ம்ருத்வ சடத்விஜ
தம் குரும் ஸம்ஸ்ரிதாயாஸ்து கோவிந்தார்யாய மங்களம்

ஸடாரி ஸூக்தி ஸ்ரோதவ்யே ஸதா ஸந்துஷ்ட சேதஸே
வைராக்யம் ஸோபதிஸதே கோவிந்தார்யாய மங்களம்

ராமாநுஜார்யாத் வேதாந்த த்ரமிட உபநிஷத் கிராம்
ரஹஸ்யார்த்தாநர்த்த வதே கோவிந்தார்யாய மங்களம்

மங்களம் தேஸி கேந்த்ராய மங்களம் குண ஸிந்தவே
மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

மாதந்தோறும் வரும் ஏகாதசிகளின் பெயர்கள்–

December 5, 2025

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்’ என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம். பகவானும் பிரம்ம தேவர்களுக்குத் தரிசனமளித்து அவர்களைக் காத்தருளினாராம் இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்றும் துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும், அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

ஏகாதசி விரதம் ஆரம்பிப்பதும், முடிப்பதும் –
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை ஸூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் -ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை ஸூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்-அதே போல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டிகளில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தம் உட் கொண்டும், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியமாக செய்யப்பட்ட தானிய உணவை உட்கொள்வதுமாகும்-ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும்.

ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள்:

1. உற்பத்தி (ஏகாதசி) – மார்கழி – க்ருஷ்ண (பக்‌ஷம்) – சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச – மார்கழி – சுக்ல – வைகுண்டம் கிடைக்கும்

3. ஸபலா – தை – க்ருஷ்ண – பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

4. புத்ரதா – தை – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

5. ஷட்திலா – மாசி – க்ருஷ்ண – அன்ன தானத்திற்கு ஏற்றது

6. ஜயா – மாசி – சுக்ல – பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

7. விஜயா – பங்குனி – க்ருஷ்ண – ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

8. ஆமலதீ – பங்குனி – சுக்ல – கோதானம் செய்ய ஏற்றது

9. பாப மோசனிகா – சித்திரை – க்ருஷ்ண – பாபங்கள் அகலும்

10. காமதா – சித்திரை – சுக்ல – நினைத்த காரியம் நடக்கும்

11. வருதிந் – வைகாசி – க்ருஷ்ண – ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

12 மோஹினி – வைகாசி – சுக்ல – பாவம் நீங்கும்

13. அபார – ஆனி – க்ருஷ்ண – குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

14. நிர்ஜலா (பீம) – ஆனி – சுக்ல – எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது – பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

15. யோகினீ – ஆடி – க்ருஷ்ண – நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

16. சயிநீ – ஆடி – சுக்ல – தெய்வ சிந்தனை அதிகமாகும் – திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

17. சாமிகா – ஆவணி – க்ருஷ்ண – விருப்பங்கள் நிறைவேறும்

18. புத்ரஜா – ஆவணி – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும்

19. அஜா – புரட்டாசி – க்ருஷ்ண – இழந்ததைப் பெறலாம் – அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

20. பத்மநாபா – புரட்டாசி – சுக்ல – பஞ்சம் நீங்கும்

21. இந்திரா – ப்பசி – க்ருஷ்ண – பித்ருக்கள் நற்கதி பெறுவர்

22. பாபாங்குசா – ப்பசி – சுக்ல – கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

23. ரமா – கார்த்திகை – க்ருஷ்ண – உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

24. ப்ரபோதின் – கார்த்திகை – சுக்ல – பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

25 – கமலா – (சில வருடங்களில் மட்டும்) – மகாலட்சுமி அருள் கிடைக்கும்

மாதந்தோறும் வரும் ஏகாதசிகளின் பெயர்கள்

  • சித்திரை: காமதா, பாபமோசனிகா
  • வைகாசி: மோகிநீ, வருதிநீ
  • ஆனி: நிர்ஜலா, அபரா
  • ஆடி: சயிநீ, யோகிநீ
  • ஆவணி: புத்ரகா, காமிகா
  • புரட்டாசி: பத்மநாபா, அஜாரகா
  • ஐப்பசி: பாபங்குகா, இந்திரா
  • கார்த்திகை: பிரபோதினீ (கைசிக), ரமா
  • மார்கழி: மோட்ச (வைகுண்ட), உற்பத்தி
  • தை: புத்ரதா, சபலா
  • மாசி: ஜயா, ஷட்திலா
  • பங்குனி: ஆமலகீ, விஜயா 

மார்கழி

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். இதற்கு மோட்சதா என்று வேறு ஒரு பெயரும் உண்டு. இறைவன் அனுக்கிரகம் செய்து காட்டும் அத்யயனோத்ஸவம் இந்த நாளில் கொண்டாடப்படும்.

தை

தை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு சபலா என்று பெயர். இது பல மடங்கு பலன் தரவல்லது.

தை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரதா என்று பெயர். இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு பித்ருசாபம் விலகும். நல்ல குழந்தைகள் பிறக்கும்.

அன்றைய தினம் எள் கலந்த நீரில் நீராடித் தலையில் கொஞ்சம் எள்ளைப் போட்டுக் கொண்டு எள்ளால் ஹோமம் செய்து எள்ளையே ஆகாரமாகக் கொண்டு, எள்ளைத் தானம் செய்வது போன்ற காரியங்களை எள்ளினால் செய்வார்கள்.

மாசி

மாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு ஐயா என்று பெயர். இது எல்லாவிதமான பாவங்களையும் நீக்க வல்லது.

பங்குனி

பங்குனி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு விஜயா என்று பெயர். ஸ்ரீராமபிரான் கடலைக் கடக்க இந்த விரதம் அனுஷ்டித்ததாகப் பத்மபுராணம் கூறுகிறது.

பங்குனி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு குமலீக என்று பெயர்.

சித்திரை

சித்திரை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு காமதா என்று பெயர்.இது வேண்டுவோருக்கு வேண்டியதைக் கொடுக்க வல்லது.

வைகாசி

வைகாசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு வருதீனீ என்று பெயர்.

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு மோகினி என்று பெயர். இந்த வைகாசி தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் புண்ணியமும், பத்ரீதர்சன பலனும் கிடைக்கும்.

ஆனி

ஆனி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா என்று பெயர்.இதை அனுஷ்டிப்பவர்கள் யமலோகம் காணமாட்டார்கள்.

ஆடி

ஆடி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு யோகினி என்று பெயர். இது இலட்ச பிராம்மண போஜன பலனைத் தரவல்லது.

ஆடி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு தேவஜைனீ என்று பெயர். இன்றுதான் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது அரிதுயில் கொள்வதால் இதை “சயனம்” என்றும் சொல்வார்கள்.

ஆவணி

ஆவணி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரா என்று பெயர்.

புரட்டாசி

புரட்டாசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு அஜா என்று பெயர்.

புரட்டாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு பரிவர்தீனி என்று பெயர்.இதை வாமன ஜயந்தி ஏகாதசி என்றும் சொல்வர். இது சிரவண நட்சத்திரம் கூடியவர்களுக்கு ஏற்றமுடையது.

ஐப்பசி

ஐப்பசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு இந்திரா என்று பெயர்.

ஐப்பசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு பராங்குசா என்று பெயர்.

கார்த்திகை

கார்த்திகை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு பிரபோதீனி என்று பெயர். இதை உத்தான ஏகாதசி என்றும் சொல்வர். இதைக் கைசிக ஏகாதசி என்றும், துளசி கல்யாண வைபவத்தால் பிருந்தாவன ஏகாதசி என்றும் கூறுவர்.

பலன்கள்

ஏகாதசியன்று பட்டினி இருந்து வைகுண்டவாசனைத் தரிசித்து, விரதமிருப்பவர்களுக்கு இறப்பிற்குப் பின் வைகுண்டம் கிடைக்கும் என்பது வைணவ நம்பிக்கை.மாதமிரண்டு ஏகாதசி வீதம் 24 ஏகாதசிகள் உண்டு. 24 ஏகாதசிகளும் விரதமிருக்க முடியாதவர்கள் பரந்தாமனின் உதயகாலத்தில் வைகுண்ட வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது பட்டினி கிடந்து இரவு கண்விழித்து நாராயணனை பூஜிக்க வேண்டும். அப்படிச் செய்தால் 24 ஏகாதசிகளுக்கான பலன்களும் கிட்டும்.

பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் இந்த இருபத்தைந்துக்கும் தனித்தனிப் பெயர் சொல்லி, அதை அநுஷ்டிக்க வேண்டிய முறை, அதனால் பயனடைந்தவர்களின் கதை, ஆகியவற்றை விவரமாகச் சொல்லியிருக்கிறது.

தநுர்மாஸ (மார்கழி மாத) க்ருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ‘உத்பத்தி ஏகாதசி’ என்று பெயர். அடுத்ததுதான் அந்த மாஸ சுக்லபக்ஷத்தில் வரும் பிரஸித்தமான வைகுண்ட ஏகாதசி. ‘மோக்ஷ ஏகாதசி’ என்று இதற்குப் பாத்ம புராணத்தில் பேர் கொடுத்திருக்கிறது. அம்ருதம் கடைந்தெடுத்தது அன்றுதான். க்ருஷ்ண பரமாத்மா கீதோபதேசம் என்று உபநிஷத்துக்களைக் கடைந்தெடுத்து ஞானாம்ருதமாகக் கொடுத்ததும் அன்றுதான் என்பதாலேயே அன்றைக்கு ‘கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். மூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம்மாஸ சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’. இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’என்று எட்டு ஏகாதசிகள் வருகின்றன. பீமன் வருஷத்தில் ஒரே ஒரு தரம் சுத்தோபவாஸமிருந்தது ‘நிர்ஜலா’ என்ற இந்த ஆனி மாஸ சுக்லபக் ஏகாதசியன்றுதான். இதோடு பதினாலு ஏகாதசிகள் ஆகிவிட்டன. பதினைந்தாவதாக ஆடி க்ருஷ்ண பக்ஷத்தில், ‘யோகினி’ என்பது. அடுத்தது ஆடி சுக்ல பக்ஷத்தில் மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி*. அதற்கு ‘சாயினி’ என்று பெயர். அப்புறம் ஆவணி, புரட்டாசி. ஐப்பசி மாஸங்களில் வரும் ‘சாமிகா’ ‘புத்ரதா’ (முன்னையே தையில் ஒரு ‘புத்ரதா’வந்து விட்டது. இங்கே மறுபடியும் அதே பெயர்தான் போட்டிருக்கிறது) , ‘அஜா’, ‘பத்மநாபா’, ‘இந்திரா’, ‘பாபாங்குசா’ என்ற ஆறு ஏகாதசிகளின் போதும், கார்த்திகையில் க்ருஷ்ண பக்ஷத்திலே வரும் ‘ரமா’என்ற ஏகாதசியின் போதும் பகவான் நித்திரை பண்ணிக் கொண்டேயிருக்கிறார். இருபத்து நாலாவதாக வருகிற கார்த்திகை சுக்லபக் ஏகாதசியன்று அவர் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்தகு ‘ப்ரபோதினி’ என்றே பெயர் மறுநாளோடு சாதுர்மாஸ்யம் பூர்த்தி.

அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு ‘கமலா’ என்று பெயர்.

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நக்ஷத்ர ஸூக்தம்-

November 29, 2025

ஸ்ரீ நக்ஷத்ர ஸூக்தம் (னக்ஷத்ரேஷ்டி)-நக்ஷத்ர ஸூக்யம் -கார்த்திகை தொடங்கி -அக்னி தேவதை -லோக திவாகரம் அவதரித்து அருளினார் அன்றோ

தைத்திரீய ப்³ராஹ்மண – அஷ்டகம் 3, ப்ரஶ்ன: 1,
தைத்திரீய ஸம்ஹிதா – காண்ட³ 3, ப்ரபாட²க: 5, அனுவாகம் 1

நக்ஷத்ரம் – க்ருத்திகா, தே³வதா – அக்³னி:
ஓம் அ॒க்³னிர்ன:॑ பாது॒ க்ருத்தி॑கா: । நக்ஷ॑த்ரம் தே॒³வமி॑ந்த்³ரி॒யம் ।
இ॒த³மா॑ஸாம் விசக்ஷ॒ணம் । ஹ॒விரா॒ஸம் ஜு॑ஹோதன ।
யஸ்ய॒ பா⁴ந்தி॑ ர॒ஶ்மயோ॒ யஸ்ய॑ கே॒தவ:॑ । யஸ்யே॒மா விஶ்வா॒ பு⁴வ॑னானி॒ ஸர்வா᳚ ।
ஸ க்ருத்தி॑காபி⁴-ர॒பி⁴ஸம்॒வஸா॑ன: । அ॒க்³னிர்னோ॑ தே॒³வஸ்ஸு॑வி॒தே த॑³தா⁴து ॥ 1

நக்ஷத்ரம் – ரோஹிணீ, தே³வதா – ப்ரஜாபதி:
ப்ர॒ஜாப॑தே ரோஹி॒ணீவே॑து॒ பத்னீ᳚ । வி॒ஶ்வரூ॑பா ப்³ருஹ॒தீ சி॒த்ரபா॑⁴னு: ।
ஸா நோ॑ ய॒ஜ்ஞஸ்ய॑ ஸுவி॒தே த॑³தா⁴து । யதா॒² ஜீவே॑ம ஶ॒ரத॒³ஸ்ஸவீ॑ரா: ।
ரோ॒ஹி॒ணீ தே॒³வ்யுத॑³கா³த்பு॒ரஸ்தா᳚த் । விஶ்வா॑ ரூ॒பாணி॑ ப்ரதி॒மோத॑³மானா ।
ப்ர॒ஜாப॑திக்³ம் ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ । ப்ரி॒யா தே॒³வானா॒-முப॑யாது ய॒ஜ்ஞம் ॥ 2

நக்ஷத்ரம் – ம்ருக³ஶீர்​ஷ:, தே³வதா – ஸோம:
ஸோமோ॒ ராஜா॑ ம்ருக³ஶீ॒ர்॒ஷேண॒ ஆக³ன்ன்॑ । ஶி॒வம் நக்ஷ॑த்ரம் ப்ரி॒யம॑ஸ்ய॒ தா⁴ம॑ ।
ஆ॒ப்யாய॑மானோ ப³ஹு॒தா⁴ ஜனே॑ஷு । ரேத:॑ ப்ர॒ஜாம் யஜ॑மானே த³தா⁴து ।
யத்தே॒ நக்ஷ॑த்ரம் ம்ருக³ஶீ॒ர்॒ஷமஸ்தி॑ । ப்ரி॒யக்³ம் ரா॑ஜன் ப்ரி॒யத॑மம் ப்ரி॒யாணாம்᳚ ।
தஸ்மை॑ தே ஸோம ஹ॒விஷா॑ விதே⁴ம । ஶன்ன॑ ஏதி⁴ த்³வி॒பதே॒³ ஶஞ்சது॑ஷ்பதே³ ॥ 3

நக்ஷத்ரம் – ஆர்த்³ரா, தே³வதா – ருத்³ர:
ஆ॒ர்த்³ரயா॑ ரு॒த்³ர: ப்ரத॑²மா ந ஏதி । ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்॒ பதி॑ரக்⁴னி॒யானாம்᳚ ।
நக்ஷ॑த்ரமஸ்ய ஹ॒விஷா॑ விதே⁴ம । மா ந:॑ ப்ர॒ஜாக்³ம் ரீ॑ரிஷ॒ன்மோத வீ॒ரான் ।
ஹே॒தீ ரு॒த்³ரஸ்ய॒ பரி॑ணோ வ்ருணக்து । ஆ॒ர்த்³ரா நக்ஷ॑த்ரம் ஜுஷதாக்³ம் ஹ॒விர்ன:॑ ।
ப்ர॒மு॒ஞ்சமா॑னௌ து³ரி॒தானி॒ விஶ்வா᳚ । அபா॒க⁴ஶக்³ம்॑ ஸன்னு-த³தா॒மரா॑திம் ॥ 4

நக்ஷத்ரம் – புனர்வஸு, தே³வதா – அதி³தி:
புன॑ர்னோ தே॒³வ்யதி॑³தி-ஸ்ப்ருணோது । புன॑ர்வஸூ ந:॒ புன॒ரேதாம்᳚ ய॒ஜ்ஞம் ।
புன॑ர்னோ தே॒³வா அ॒பி⁴ய॑ந்து॒ ஸர்வே᳚ । புன:॑ புனர்வோ ஹ॒விஷா॑ யஜாம: ।
ஏ॒வா ந தே॒³வ்ய-தி॑³திரன॒ர்வா । விஶ்வ॑ஸ்ய ப॒⁴ர்த்ரீ ஜக॑³த: ப்ரதி॒ஷ்டா² ।
புன॑ர்வஸூ ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ । ப்ரி॒யம் தே॒³வானா॒-மப்யே॑து॒ பாத:॑² ॥ 5

நக்ஷத்ரம் – புஷ்ய:, தே³வதா – ப்³ருஹஸ்பதி:
ப்³ருஹ॒ஸ்பதி:॑ ப்ரத॒²மஞ்ஜாய॑மான: । தி॒ஷ்யம்॑ நக்ஷ॑த்ரம॒பி⁴ ஸம்ப॑³பூ⁴வ ।
ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்॒ ப்ருத॑னாஸு ஜி॒ஷ்ணு: । தி॒³ஶோனு॒ ஸர்வா॒ அப॑⁴யன்னோ அஸ்து ।
தி॒ஷ்ய:॑ பு॒ரஸ்தா॑து॒³த ம॑த்⁴ய॒தோ ந:॑ । ப்³ருஹ॒ஸ்பதி॑ர்ன:॒ பரி॑பாது ப॒ஶ்சாத் ।
பா³தே॑⁴ தா॒ந்த்³வேஷோ॒ அப॑⁴யம் க்ருணுதாம் । ஸு॒வீர்ய॑ஸ்ய॒ பத॑யஸ்யாம ॥ 6

நக்ஷத்ரம் -ஆஶ்ரேஷம், தே³வதா – ஸர்பா:
இ॒த³க்³ம் ஸ॒ர்பேப்⁴யோ॑ ஹ॒விர॑ஸ்து॒ ஜுஷ்டம்᳚ । ஆ॒ஶ்ரே॒ஷா யேஷா॑மனு॒யந்தி॒ சேத:॑ ।
யே அ॒ந்தரி॑க்ஷம் ப்ருதி॒²வீம்-க்ஷி॒யந்தி॑ । தேன॑ ஸ்ஸ॒ர்பாஸோ॒ ஹவ॒மாக॑³மிஷ்டா²: ।
யே ரோ॑ச॒னே ஸூர்ய॒ஸ்யாபி॑ ஸ॒ர்பா: । யே தி³வம்॑ தே॒³வீ-மனு॑ஸ॒ஞ்சர॑ந்தி ।
யேஷா॑மாஶ்ரே॒ஷா அ॑னு॒யந்தி॒ காமம்᳚ । தேப்⁴ய॑-ஸ்ஸ॒ர்பேப்⁴யோ॒ மது॑⁴-மஜ்ஜுஹோமி ॥ 7

நக்ஷத்ரம் – மகா⁴, தே³வதா – பிதர:
உப॑ஹூதா: பி॒தரோ॒ யே ம॒கா⁴ஸு॑ । மனோ॑ஜவஸ-ஸ்ஸு॒க்ருத॑-ஸ்ஸுக்ரு॒த்யா: ।
தே நோ॒ நக்ஷ॑த்ரே॒ ஹவ॒மாக॑³மிஷ்டா²: । ஸ்வ॒தா⁴பி॑⁴ர்ய॒ஜ்ஞம் ப்ரய॑தம் ஜுஷந்தாம் ।
யே அ॑க்³னித॒³க்³தா⁴ யேன॑க்³னி-த³க்³தா⁴: । யே॑முல்லோ॒கம் பி॒தர:॑, க்ஷி॒யந்தி॑ ।
யாக்³க்³​ஶ்ச॑ வி॒த்³மயாக்³ம் உ॑ ச॒ ந ப்ர॑வி॒த்³ம । ம॒கா⁴ஸு॑ ய॒ஜ்ஞக்³ம் ஸுக்ரு॑தம் ஜுஷந்தாம் ॥ 8

நக்ஷத்ரம் – பூர்வப²ல்கு³னீ, தே³வதா – அர்யமா
க³வாம்॒ பதி:॒ ப²ல்கு॑³னீ-னாமஸி॒ த்வம் । தத॑³ர்யமன்வருண மித்ர॒ சாரு॑ ।
தம் த்வா॑ வ॒யக்³ம் ஸ॑னி॒தாரக்³ம்॑ ஸனீ॒னாம் । ஜீ॒வா ஜீவ॑ந்த॒முப॒ ஸம்வி॑ஶேம ।
யேனே॒மா விஶ்வா॒ பு⁴வ॑னானி॒ ஸஞ்ஜி॑தா । யஸ்ய॑ தே॒³வா அ॑னுஸம்॒யந்தி॒ சேத:॑ ।
அ॒ர்ய॒மா ராஜா॒ஜர॒ஸ்து வி॑ஷ்மான் । ப²ல்கு॑³னீனா-ம்ருஷ॒போ⁴ ரோ॑ரவீதி ॥ 9

நக்ஷத்ரம் – உத்தர ப²ல்கு³னீ, தே³வதா – ப⁴க:³
ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்᳚ ப⁴க³வோ ப⁴கா³ஸி । தத்த்வா॑ விது॒³: ப²ல்கு॑³னீ॒-ஸ்தஸ்ய॑ வித்தாத் ।
அ॒ஸ்மப்⁴யம்॑-க்ஷ॒த்ரம॒ஜரக்³ம்॑ ஸு॒வீர்யம்᳚ । கோ³ம॒த³ஶ்வ॑-வ॒து³ப॒ஸன்னு॑-தே॒³ஹ ।
ப⁴கோ॑³ஹ தா॒³தா ப⁴க॒³ இத்ப்ர॑தா॒³தா । ப⁴கோ॑³ தே॒³வீ: ப²ல்கு॑³னீ॒-ராவி॑வேஶ ।
ப⁴க॒³ஸ்யேத்தம் ப்ர॑ஸ॒வம் க॑³மேம । யத்ர॑ தே॒³வை-ஸ்ஸ॑த॒⁴மாத³ம்॑ மதே³ம ॥ 1௦

நக்ஷத்ரம் – ஹஸ்த:, தே³வதா – ஸவிதா
ஆயா॑து தே॒³வ-ஸ்ஸ॑வி॒தோ ப॑யாது । ஹி॒ர॒ண்யயே॑ன ஸு॒வ்ருதா॒ ரதே॑²ன ।
வஹ॒ன॒, ஹஸ்தக்³ம்॑ ஸு॒ப⁴க³ம்॑ வித்³ம॒னாப॑ஸம் । ப்ர॒யச்ச॑²ந்தம்॒ பபு॑ரிம்॒ புண்ய॒மச்ச॑² ।
ஹஸ்த:॒ ப்ரய॑ச்ச² த்வ॒ம்ருதம்॒ வஸீ॑ய: । த³க்ஷி॑ணேன॒ ப்ரதி॑க்³ருப்⁴ணீம ஏனத் ।
தா॒³தார॑-ம॒த்³ய ஸ॑வி॒தா வி॑தே³ய । யோ நோ॒ ஹஸ்தா॑ய ப்ரஸு॒வாதி॑ ய॒ஜ்ஞம் ॥ 11

நக்ஷத்ரம் – சித்ரா, தே³வதா – த்வஷ்டா
த்வஷ்டா॒ நக்ஷ॑த்ர-ம॒ப்⁴யே॑தி சி॒த்ராம் । ஸு॒ப⁴க்³ம் ஸ॑ஸம்யுவ॒திக்³ம் ரோச॑மானாம் ।
நி॒வே॒ஶய॑-ன்ன॒ம்ருதா॒-ன்மர்த்யாக்³க்॑³ஶ்ச । ரூ॒பாணி॑ பி॒க்³ம்॒ஶன் பு⁴வ॑னானி॒ விஶ்வா᳚ ।
தன்ன॒ஸ்த்வஷ்டா॒ தது॑³ சி॒த்ரா விச॑ஷ்டாம் । தன்னக்ஷ॑த்ரம் பூ⁴ரி॒தா³ அ॑ஸ்து॒ மஹ்யம்᳚ ।
தன்ன:॑ ப்ர॒ஜாம் வீ॒ரவ॑தீக்³ம் ஸனோது । கோ³பி॑⁴ர்னோ॒ அஶ்வை॒-ஸ்ஸம॑னக்து ய॒ஜ்ஞம் ॥ 12

நக்ஷத்ரம் – ஸ்வாதீ, தே³வதா – வாயு:
வா॒யு-ர்னக்ஷ॑த்ர-ம॒ப்⁴யே॑தி॒ நிஷ்ட்யாம்᳚ । தி॒க்³மஶ்ரு॑ங்கோ³ வ்ருஷ॒போ⁴ ரோரு॑வாண: ।
ஸ॒மீ॒ரய॒ன் பு⁴வ॑னா மாத॒ரிஶ்வா᳚ । அப॒ த்³வேஷாக்³ம்॑ஸி நுத³தா॒மரா॑தீ: ।
தன்னோ॑ வா॒யஸ்தது॒³ நிஷ்ட்யா॑ ஶ்ருணோது । தன்னக்ஷ॑த்ரம் பூ⁴ரி॒தா³ அ॑ஸ்து॒ மஹ்யம்᳚ ।
தன்னோ॑ தே॒³வாஸோ॒ அனு॑ ஜானந்து॒ காமம்᳚ । யதா॒² தரே॑ம து³ரி॒தானி॒ விஶ்வா᳚ ॥ 13

நக்ஷத்ரம் – விஶாகா², தே³வதா – இந்த்³ராக்³னீ
தூ॒³ரம॒ஸ்மச்ச²த்ர॑வோ யந்து பீ॒⁴தா: । ததி॑³ந்த்³ரா॒க்³னீ க்ரு॑ணுதாம்॒ தத்³விஶா॑கே² ।
தன்னோ॑ தே॒³வா அனு॑மத³ந்து ய॒ஜ்ஞம் । ப॒ஶ்சாத் பு॒ரஸ்தா॒-த³ப॑⁴யன்னோ அஸ்து ।
நக்ஷ॑த்ராணா॒-மதி॑⁴பத்னீ॒ விஶா॑கே² । ஶ்ரேஷ்டா॑²-விந்த்³ரா॒க்³னீ பு⁴வ॑னஸ்ய கோ॒³பௌ ।
விஷூ॑ச॒-ஶ்ஶத்ரூ॑னப॒பா³த॑⁴மானௌ । அப॒க்ஷுத॑⁴-ன்னுத³தா॒மரா॑திம் ॥ 14

பௌர்ணமாஸி
பூ॒ர்ணா ப॒ஶ்சாது॒³த பூ॒ர்ணா பு॒ரஸ்தா᳚த் । உன்ம॑த்⁴ய॒த: பௌ᳚ர்ணமா॒ஸீ ஜி॑கா³ய ।
தஸ்யாம்᳚ தே॒³வா அதி॑⁴ ஸம்॒ வஸ॑ந்த: । உ॒த்த॒மே நாக॑ இ॒ஹ மா॑த³யந்தாம் ।
ப்ரு॒த்²வீ ஸு॒வர்சா॑ யுவ॒தி-ஸ்ஸ॒ஜோஷா:᳚ । பௌ॒ர்ண॒மா॒ஸ்யுத॑³கா॒³-ச்சோ²ப॑⁴மானா ।
ஆ॒ப்யா॒யய॑ந்தீ து³ரி॒தானி॒ விஶ்வா᳚ । உ॒ரும் து³ஹாம்॒ யஜ॑மானாய ய॒ஜ்ஞம் ॥ 15

நக்ஷத்ரம் – அனூராதா⁴, தே³வதா – மித்ர:
ரு॒த்³த்⁴யாஸ்ம॑ ஹ॒வ்யை-ர்னம॑ஸோப॒-ஸத்³ய॑ । மி॒த்ரம் தே॒³வம் மி॑த்ர॒தே⁴ய॑ன்னோ அஸ்து ।
அ॒னூ॒ரா॒தா⁴ன், ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்த: । ஶ॒தம் ஜீ॑வேம ஶ॒ரத॒³-ஸ்ஸவீ॑ரா: ।
சி॒த்ரம்-னக்ஷ॑த்ர॒-முத॑³கா³-த்பு॒ரஸ்தா᳚த் । அ॒னூ॒ரா॒தா⁴ ஸ॒ இதி॒ யத்³வத॑³ந்தி ।
தன்மி॒த்ர ஏ॑தி ப॒தி²பி॑⁴-ர்தே³வ॒யானை:᳚ । ஹி॒ர॒ண்யயை॒-ர்வித॑தை-ர॒ந்தரி॑க்ஷே ॥ 16

நக்ஷத்ரம் – ஜ்யேஷ்டா², தே³வதா – இந்த்³ர:
இந்த்³ரோ᳚ ஜ்யே॒ஷ்டா² மனு॒ நக்ஷ॑த்ரமேதி । யஸ்மி॑ன் வ்ரு॒த்ரம் வ்ரு॑த்ர॒ தூர்யே॑ த॒தார॑ ।
தஸ்மி॑ன்வ॒ய-ம॒ம்ருதம்॒ து³ஹா॑னா: । க்ஷுத॑⁴ந்தரேம॒ து³ரி॑திம்॒ து³ரி॑ஷ்டிம் ।
பு॒ர॒ந்த॒³ராய॑ வ்ருஷ॒பா⁴ய॑ த்⁴ரு॒ஷ்ணவே᳚ । அஷா॑டா⁴ய॒ ஸஹ॑மானாய மீ॒டு⁴ஷே᳚ ।
இந்த்³ரா॑ய ஜ்யே॒ஷ்டா² மது॑⁴ம॒த்³து³ஹா॑னா । உ॒ரும் க்ரு॑ணோது॒ யஜ॑மானாய லோ॒கம் ॥ 17

நக்ஷத்ரம் – மூலம், தே³வதா – ப்ரஜாபதி:
மூலம்॑ ப்ர॒ஜாம் வீ॒ரவ॑தீம் விதே³ய । பரா᳚ச்யேது॒ நிர்ரு॑தி: பரா॒சா ।
கோ³பி॒⁴-ர்னக்ஷ॑த்ரம் ப॒ஶுபி॒⁴-ஸ்ஸம॑க்தம் । அஹ॑-ர்பூ⁴யா॒-த்³யஜ॑மானாய॒ மஹ்யம்᳚ ।
அஹ॑ர்னோ அ॒த்³ய ஸு॑வி॒தே த॑³தா⁴து । மூலம்॒ நக்ஷ॑த்ர॒மிதி॒ யத்³வத॑³ந்தி ।
பரா॑சீம் வா॒சா நிர்ரு॑திம் நுதா³மி । ஶி॒வம் ப்ர॒ஜாயை॑ ஶி॒வம॑ஸ்து॒ மஹ்யம்᳚ ॥ 18

நக்ஷத்ரம் – பூர்வாஷாடா⁴, தே³வதா – ஆப:
யா தி॒³வ்யா ஆப:॒ பய॑ஸா ஸம்ப³பூ॒⁴வு: । யா அ॒ந்தரி॑க்ஷ உ॒த பார்தி॑²வீ॒ர்யா: ।
யாஸா॑மஷா॒டா⁴ அ॑னு॒யந்தி॒ காமம்᳚ । தா ந॒ ஆப:॒ ஶக்³க்³​ ஸ்யோ॒னா ப॑⁴வந்து ।
யாஶ்ச॒ கூப்யா॒ யாஶ்ச॑ நா॒த்³யா᳚-ஸ்ஸமு॒த்³ரியா:᳚ । யாஶ்ச॑ வைஶ॒ந்தீரு॒த ப்ரா॑ஸ॒சீர்யா: ।
யாஸா॑மஷா॒டா⁴ மது॑⁴ ப॒⁴க்ஷய॑ந்தி । தா ந॒ ஆப:॒ ஶக்³க்³​ ஸ்யோ॒னா ப॑⁴வந்து ॥ 19

நக்ஷத்ரம் – உத்தராஷாடா⁴, தே³வதா – விஶ்வேதே³வ:
தன்னோ॒ விஶ்வே॒ உப॑ ஶ்ருண்வந்து தே॒³வா: । தத॑³ஷா॒டா⁴ அ॒பி⁴ஸம்ய॑ந்து ய॒ஜ்ஞம் ।
தன்னக்ஷ॑த்ரம் ப்ரத²தாம் ப॒ஶுப்⁴ய:॑ । க்ரு॒ஷி-ர்வ்ரு॒ஷ்டி-ர்யஜ॑மானாய கல்பதாம் ।
ஶு॒ப்⁴ரா: க॒ன்யா॑ யுவ॒தய॑-ஸ்ஸு॒பேஶ॑ஸ: । க॒ர்ம॒க்ருத॑-ஸ்ஸு॒க்ருதோ॑ வீ॒ர்யா॑வதீ: ।
விஶ்வா᳚ன் தே॒³வான், ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ: ।
அ॒ஷா॒டா⁴: காம॒ முப॑யாந்து ய॒ஜ்ஞம் ॥ 2௦

நக்ஷத்ரம் – அபி⁴ஜித், தே³வதா – ப்³ரஹ்மா
யஸ்மி॒ன் ப்³ரஹ்மா॒ப்⁴யஜ॑ய॒த்² ஸர்வ॑மே॒தத் । அ॒முஞ்ச॑ லோ॒க மி॒த³மூ॑ச॒ ஸர்வம்᳚ ।
தன்னோ॒ நக்ஷ॑த்ர-மபி॒⁴ஜி-த்³வி॒ஜித்ய॑ । ஶ்ரியம்॑ த³தா॒⁴த்வ-ஹ்ரு॑ணீயமானம் ।
உ॒பௌ⁴ லோ॒கௌ ப்³ரஹ்ம॑ணா॒ ஸஞ்ஜி॑தே॒மௌ । தன்னோ॒ நக்ஷ॑த்ர-மபி॒⁴ஜி-த்³விச॑ஷ்டாம் ।
தஸ்மி॑ன் வ॒யம் ப்ருத॑னா॒ ஸ்ஸஞ்ஜ॑யேம । தன்னோ॑ தே॒³வாஸோ॒ அனு॑ஜானந்து॒ காமம்᳚ ॥ 21

நக்ஷத்ரம் – ஶ்ரவணம், தே³வதா – விஷ்ணு:
ஶ்ரு॒ண்வந்தி॑ ஶ்ரோ॒ணா-ம॒ம்ருத॑ஸ்ய கோ॒³பாம் । புண்யா॑மஸ்யா॒ உப॑ஶ்ருணோமி॒ வாசம்᳚ ।
ம॒ஹீம் தே॒³வீம் விஷ்ணு॑பத்னீ மஜூ॒ர்யாம் । ப்ர॒தீசீ॑ மேனாக்³ம் ஹ॒விஷா॑ யஜாம: ।
த்ரே॒தா⁴ விஷ்ணு॑-ருருகா॒³யோ விச॑க்ரமே । ம॒ஹீம் தி³வம்॑ ப்ருதி॒²வீ-ம॒ந்தரி॑க்ஷம் ।
தச்ச்²ரோ॒ணைதி॒ ஶ்ரவ॑-இ॒ச்ச²மா॑னா । புண்ய॒க்³க்॒³ ஶ்லோகம்॒ யஜ॑மானாய க்ருண்வ॒தீ ॥ 22

நக்ஷத்ரம் – ஶ்ரவிஷ்டா, தே³வதா – வஸவ:
அ॒ஷ்டௌ தே॒³வா வஸ॑வஸ்ஸோ॒ம்யாஸ:॑ । சத॑ஸ்ரோ தே॒³வீ ர॒ஜரா:॒ ஶ்ரவி॑ஷ்டா²: ।
தே ய॒ஜ்ஞம் பா᳚ந்து॒ ரஜ॑ஸ: ப॒ரஸ்தா᳚த் । ஸம்॒வ॒த்²ஸ॒ரீண॑-ம॒ம்ருதக்³க்॑³ ஸ்வ॒ஸ்தி ।
ய॒ஜ்ஞம் ந:॑ பாந்து॒ வஸ॑வ: பு॒ரஸ்தா᳚த் । த॒³க்ஷி॒ண॒தோ॑-பி⁴ய॑ந்து॒ ஶ்ரவி॑ஷ்டா²: ।
புண்ய॒ன்னக்ஷ॑த்ரம॒பி⁴ ஸம்வி॑ஶாம । மா நோ॒ அரா॑தி-ர॒க⁴ஶ॒க்³ம்॒ ஸாக³ன்ன்॑ ॥ 23

நக்ஷத்ரம் – ஶதபி⁴ஷக், தே³வதா – வருண:
க்ஷ॒த்ரஸ்ய॒ ராஜா॒ வரு॑ணோதி⁴ரா॒ஜ: । நக்ஷ॑த்ராணாக்³ம் ஶ॒தபி॑⁴ஷ॒க்³ வஸி॑ஷ்ட:² ।
தௌ தே॒³வேப்⁴ய:॑ க்ருணுதோ தீ॒³ர்க⁴மாய:॑ । ஶ॒தக்³ம் ஸ॒ஹஸ்ரா॑ பே⁴ஷ॒ஜானி॑ த⁴த்த: ।
ய॒ஜ்ஞன்னோ॒ ராஜா॒ வரு॑ண॒ உப॑யாது । தன்னோ॒ விஶ்வே॑ அ॒பி⁴ஸம்ய॑ந்து தே॒³வா: ।
தன்னோ॒ நக்ஷ॑த்ரக்³ம் ஶ॒தபி॑⁴ஷக்³ ஜுஷா॒ணம் । தீ॒³ர்க⁴மாயு:॒ ப்ரதி॑ர-த்³பே⁴ஷ॒ஜானி॑ ॥ 24

நக்ஷத்ரம் – பூர்வப்ரோஷ்ட²பதா³, தே³வதா – அஜயேகபாத:³
அ॒ஜ ஏக॑பா॒- து³த॑³கா³த் பு॒ரஸ்தா᳚த் । விஶ்வா॑ பூ॒⁴தானி॑ ப்ரதி॒ மோத॑³மான: ।
தஸ்ய॑ தே॒³வா: ப்ர॑ஸ॒வம் ய॑ந்தி॒ ஸர்வே᳚ । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॑ அ॒ம்ருத॑ஸ்ய கோ॒³பா: ।
வி॒ப்⁴ராஜ॑மான-ஸ்ஸமிதா॒⁴ன உ॒க்³ர: । ஆந்தரி॑க்ஷ-மருஹ॒த-³த்³க॒³ந்த்³யாம் ।
தக்³ம் ஸூர்யம்॑ தே॒³வ-ம॒ஜமேக॑பாத³ம் । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॒ அனு॑யந்தி॒ ஸர்வே᳚ ॥ 25

நக்ஷத்ரம் – உத்தரப்ரோஷ்ட²பதா³, தே³வதா – அஹிர்பு³த்³த்⁴னிய:
அஹி॑-ர்பு॒³த்³த்⁴னிய:॒ ப்ரத॑²மான ஏதி । ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானா॑மு॒த மானு॑ஷாணாம் ।
தம் ப்³ரா᳚ஹ்ம॒ணா-ஸ்ஸோ॑ம॒பா-ஸ்ஸோ॒ம்யாஸ:॑ । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॑ அ॒பி⁴ர॑க்ஷந்தி॒ ஸர்வே᳚ ।
ச॒த்வார॒ ஏக॑ம॒பி⁴ கர்ம॑ தே॒³வா: । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸ॒ இதி॒ யான், வத॑³ந்தி ।
தே பு॒³த்³த⁴னியம்॑ பரி॒ஷத்³யக்³க்॑³ ஸ்து॒வந்த:॑ । அஹிக்³ம்॑ ரக்ஷந்தி॒ நம॑ஸோப॒ ஸத்³ய॑ ॥ 26

நக்ஷத்ரம் – ரேவதீ, தே³வதா – பூஷா
பூ॒ஷா ரே॒வத்யன்வே॑தி॒ பந்தா²ம்᳚ । பு॒ஷ்டி॒பதீ॑ பஶு॒பா வாஜ॑ப³ஸ்த்யௌ ।
இ॒மானி॑ ஹ॒வ்யா ப்ரய॑தா ஜுஷா॒ணா । ஸு॒கை³ர்னோ॒ யானை॒ருப॑யாதாம் ய॒ஜ்ஞம் ।
க்ஷு॒த்³ரான் ப॒ஶூன் ர॑க்ஷது ரே॒வதீ॑ ந: । கா³வோ॑ நோ॒ அஶ்வா॒க்³ம்॒ அன்வே॑து பூ॒ஷா ।
அன்ன॒க்³ம்॒ ரக்ஷ॑ந்தௌ ப³ஹு॒தா⁴ விரூ॑பம் । வாஜக்³ம்॑ ஸனுதாம்॒ யஜ॑மானாய ய॒ஜ்ஞம் ॥ 27

நக்ஷத்ரம் – அஶ்வினீ, தே³வதா – அஶ்வினீ தே³வ
தத॒³ஶ்வினா॑-வஶ்வ॒யுஜோ-ப॑யாதாம் । ஶுப॒⁴ங்க³மி॑ஷ்டௌ² ஸு॒யமே॑பி॒⁴ரஶ்வை:᳚ ।
ஸ்வன்னக்ஷ॑த்ரக்³ம் ஹ॒விஷா॒ யஜ॑ந்தௌ । மத்³த்⁴வா॒-ஸம்ப்ரு॑க்தௌ॒ யஜு॑ஷா॒ ஸம॑க்தௌ ।
யௌ தே॒³வானாம்᳚ பி॒⁴ஷஜௌ॑ ஹவ்யவா॒ஹௌ । விஶ்வ॑ஸ்ய தூ॒³தா-வ॒ம்ருத॑ஸ்ய கோ॒³பௌ ।
தௌ நக்ஷ॑த்ரம்-ஜுஜுஷா॒ணோ-ப॑யாதாம் । நமோ॒ஶ்விப்⁴யாம்᳚ க்ருணுமோ-ஶ்வ॒க்³யுப்⁴யாம்᳚ ॥ 28

நக்ஷத்ரம் – அபப⁴ரணீ, தே³வதா – யம:
அப॑ பா॒ப்மானம்॒ ப⁴ர॑ணீ-ர்ப⁴ரந்து । தத்³ய॒மோ ராஜா॒ ப⁴க॑³வா॒ன்॒, விச॑ஷ்டாம் ।
லோ॒கஸ்ய॒ ராஜா॑ மஹ॒தோ ம॒ஹான், ஹி । ஸு॒க³ன்ன:॒ பந்தா॒²மப॑⁴யம் க்ருணோது ।
யஸ்மி॒-ன்னக்ஷ॑த்ரே ய॒ம ஏதி॒ ராஜா᳚ । யஸ்மி॑ன்னேன-ம॒ப்⁴யஷி॑ஞ்சந்த தே॒³வா: ।
தத॑³ஸ்ய சி॒த்ரக்³ம் ஹ॒விஷா॑ யஜாம । அப॑ பா॒ப்மானம்॒ ப⁴ர॑ணீ-ர்ப⁴ரந்து ॥ 29

அமாவாஸி
நி॒வேஶ॑னீ ஸ॒ங்க³ம॑னீ॒ வஸூ॑னாம்॒ விஶ்வா॑ ரூ॒பாணி॒ வஸூ᳚ன்யா-வே॒ஶய॑ந்தீ ।
ஸ॒ஹ॒ஸ்ர॒-போ॒ஷக்³ம் ஸு॒ப⁴கா॒³ ரரா॑ணா॒ ஸா ந॒ ஆக॒³ன் வர்ச॑ஸா ஸம்விதா॒³னா ।
யத்தே॑ தே॒³வா அத॑³து⁴-ர்பா⁴க॒³தே⁴ய॒-மமா॑வாஸ்யே ஸம்॒வஸ॑ந்தோ மஹி॒த்வா ।
ஸா நோ॑ ய॒ஜ்ஞம் பி॑ப்ருஹி விஶ்வவாரே ர॒யின்னோ॑ தே⁴ஹி ஸுப⁴கே³ ஸு॒வீரம்᳚ ॥ 3௦

ஓம் ஶாந்தி:॒ ஶாந்தி:॒ ஶாந்தி:॑ ॥

நட்சத்திர அதிதேவதைகள்.

1.அஸ்வினி –சரஸ்வதி.
2.பரணி –துர்க்கை.
3.கார்த்திகை–அக்னி.
4.ரோகிணி– பிரம்மா.
5.மிருகசீரிடம்– சந்திரன்.
6.திருவாதிரை–பரமசிவன்.
7.புணர்பூசம் –அதிதி.
8.பூசம் –ப்ரஹஸ்பதி.
9.ஆயில்யம்– ஆதிஷேசன்.
10.மகம் –சுக்கிரன்.
11.பூரம்– பார்வதி.
12.உத்திரம் –சூரியன்.
13.அஸ்தம் –ஐயப்பன்.
14.சித்திரை– விஷ்வகர்மா.
15.சுவாதி –வாயு.
16.விசாகம் –முருகன்.
17.அனுஷம் –லட்சுமி.
18.கேட்டை–இந்திரன்.
19.மூலம்– அசுரர்.
20.பூராடம் –வருணன்.
21.உத்திராடம் –கணபதி.
22.திருவோணம்–விஷ்ணு .
23.அவிட்டம் –வசுக்கள் .
24.சதயம் –யமன்.
25.பூரட்டாதி–குபேரன்.

  1. உத்திரட்டாதி –காமதேனு.
    27.ரேவதி– சனி பகவான்.

நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு.

நக்ஷத்திர காயத்ரி மந்திரம் :

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

வெற்றிக்கு ஆழ்வார் காட்டும் வழி – ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

November 22, 2025

அவதாரிகை – விநா வேங்கடேசம் ந நதோ நநாத: ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச . எம்பெருமானை பற்றி சொல்ல வந்த வேதங்கள் ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகள் அனைத்தும் எம்பெருமானின் அனுக்ரஹத்தால் நடைபெறுகின்றன. நம் தோஷத்தை நினைக்க நினைக்க பயம். எம்பெருமான் வைபவத்தை கேட்க கேட்க பயம் விலகும். பயக்ருத் பயநாசன: ஆழ்வார் தன் பாசுரங்கள் வாயிலாக வெற்றி அடைய வழிகளை வகுத்து இருக்கிறார். ஸ்ரீனிவாச பெருமாள் அலமேலுமங்கா தாயார் ஆழ்வார் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பாடி தொடர்வோம். சின்னப் பிள்ளைகளுக்கு பரீக்ஷையில் தேர்வு அடைந்தால் வெற்றி ஒரு சம்சாரிக்கு நல்ல வேலை கிட்டி நன்கு சம்பாதித்து வீடு கட்டி உறவினர்களிடம் நல்ல பெயரை எடுத்தால் வெற்றி ஆக வெற்றி என்பது அவரவர் வயதிற்கேற்ப அவரவர் தகுதிக்கேற்ப வெற்றி அடைவோம். ஒருவருக்கே காலத்திற்கேற்ப அவன் இலக்கு மாறிக் கொண்டே இருக்கும். வெற்றிக் கொள்ளும் போது அதை அடையும் வழி உபாயமும் மாறும். ஆத்மாவின் முயற்சி பரமாத்மாவின் அருள் இரண்டும் இருந்தால் தான் ஒரு காரியம் வெற்றிகரமாக முடியும். கடவுளிடம் செய்நன்றி மறக்காமல் இருக்க வேண்டும். இந்திரியங்களை அடக்க யோகம் வேண்டும். மனசு அடக்க த்யான பயிற்சி அவசியம். புலன்கள் அடக்க அனுஷ்டானம் முக்கியம். ப்ராணனை அடக்க ப்ராணாயாமம் செய்யனும். நரம்புகளை வசப்படுத்த பத்மாசனத்தில் அமர பழகிக் கொள்ளனும். நம் இஷ்டப்படி வாழ்வது வாழ்க்கையல்ல. சாந்தி சம-வெளி இந்திரியங்களான கண்காது மூக்கு நாக்கு . போன்றவையும் தமம் – உள் இந்திரியமான மனதை அடக்குவது இரண்டும் சரிவர இருக்கனும். ஆழ்வார் தன் பாசுரத்தில் கிளரொளியிளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோவில் வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை தளிர்விலராதில் சார்வது சதிரே. என இளமை இருக்கும் போதே திருமாலிருஞ்சோலை அழகரை ஆஸ்ரயிங்கள் என்கிறார். இளம் வயதில் உடம்பு ஒன்றை செய்ய ஒத்து வரும். ஆனால் மனசு ஒத்து வராது. வயதானபின் மனம் ஒத்து வரும். ஆனால் உடம்பு ஒத்துழைக்காது. நம்மாழ்வார் நமக்காக கருணையுடன் 7ம்பத்து 4ம் திருமொழி ஆழி எழ சங்கும் வில்லும் எழ எனத் துவங்கும்10 பா சுரங்கள் எம்பெருமானின் அவதாரங்களில் அவர் வெற்றி விஜயம் கண்டதையும் பின் 11வது பாசுரம் பலஸ்ருதியாய் இந்த 10 பாசுரங்கள் பக்தியுடன் கூறினால் வெற்றி நிச்சயம் என தெரிவித்ததையும் மேற்கோளிட்டார்.

பெருமான் கோவர்த்தன மலையை தூக்க ஒரு சக்தி வேண்டும். பூமா தேவியை வராஹராக இடர்ந்தெடுக்க வேறுவிதமான சத்தி வேண்டும். வில்லை முறித்து ராமன் ராவணனை கொல்ல அபாரசக்தி இருந்தது. திரௌபதி கூக்குரலுக்கு புடவையை மட்டும் கண்ணன் சுரந்தது வேற சக்தி எந்தெந்த நேரத்தில் எந்தந்த விதமான ஆற்றலை பயன்படுத்த வேண்டுமோ அதை பயன்படுத்த வேண்டும். உலகம் முழுக்க தாவி திரிவிக்ரம அவதாரம் எடுப்பதற்கு வேற சக்தி, எல்லாவிதமான ஆற்றலும் துளி துளியாவது நமக்கு வேண்டும். பெருமாளின் அவதார பெருமைகளை படிக்கவோ கேட்கவோ செய்யச் செய்ய நமக்கும் நம்மை அறியாமல் பலம் வந்து விடும். எப்போதும் என்னுடையது என்று ஒரு காரியம் செய்யும் போது பதட்டம் வருவது சகஜம். அகங்காரம் மமகாரம் விட்டு நாம் அதை செய்தால் அந்தக் காரியத்தில் வென்று விடுவோம். பகவானின் லீலைகள் மனதில் நிற்க நிற்க தானே அந்த செய்யும் திறனை அவரே நமக்கு கொடுப்பார். சாது பரித்ராணம் துஷ்ட நிரசனம் தர்ம சம்ஸ்தாபனம் தான் சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்திரியங்கள் மனசு ப்ராண வாயு எல்லாம் அடக்கி சம்சாரத்தை ஜெயித்து திரும்பி வராத மோக்ஷத்தை அடைவதே ஒவ்வொரு ஜீவாத்மாவின் இலக்கு ஆத்ம பரமாத்மா விஷயத்தில் மோக்ஷ இஷ்யாமி என்பதே பிரார்த்தனை . இதன் அடியாய் ஆழ்வார் 7ம்பத்து 4 ம்திருமொழியில் 10 பாசுரார்த்தங்களை சாதிக்கத் துவங்கினார். முதல் பாசுரமான ஆழி எழ சங்கும் வில்லும் எழ…. க்ருதயுகத்தில் நடந்த த்ரிவிக்ரம அவதாரத்தை பற்றியது. உலகத்தையே அளந்து தன் சொத்தாக (பூ, புவக, ஸூவக மூன்று லோகத்தையும் இந்திரனிடத்தில் பெருமான் கொடுத்து வைத்திருந்தார். அதை மஹாபலி பறித்து போக பெருமாள் ப்ரஹ்லாதனுக்கு அவன் வம்சத்தில் இனி யாரையும் கொல்வதில்லை என்ற வரத்தை கொடுத்ததால் வாமனனாய் 3 அடியில் போய் மஹா பலியிடம் யாசகம் கேட்டு பெற்ற பின் வானம் முட்டுமளவிற்கு வளர்ந்து ஒரு அடியால் கீழ் உலகத்தையும் மற்றொரு அடியால் மேல் உலகத்தையும் அளந்து 3வது அடியை எங்கு வைப்பது என்ற காலை தூக்கிய திரிவிக்ரம அவதாரத்தை திருக்கோவிலூரில் காணலாம் என்றார். ஜெய விஜயீ பவ என்றனர் தேவர்கள். சங்கு சக்ரம் பெருமானுக்கு முன்னால் மேலே போய் ஜெய விஜயீ பவ என்று மங்களாசாசனம் செய்தது. இங்கனம் மஹாபலியிடம் தன் சொத்தை சாமர்த்தியமாய் திரும்ப வாங்கி இந்திரனிடத்தில் ஒப்படைத்தார். இதன் அடியாய் ஹனுமன் சூடாமணியை சீதையிடம் கொடுத்து பின் ராவணனின் சேனைப்படை ஆயுதப்படை போன்ற அனைத்தையும் சேர்த்து பார்த்துக் கொண்டு வந்தார். ஒரு காரியம் செய்ய சாம- சமமாய் பேசி முடிப்பது அரக்கர்களிடம் இயலாத காரியம் என கைவிட்டார். தான- தானம் கொடுக்க அந்த நேரத்தில் ஹனுமனுக்கு சக்தியில்லை. பேதம் – அரக்கர்களிடம் பேதம் செய்ய முடியாது. ஆதலால் தண்டம் – அங்குள்ள கதையை எடுத்து அக்ஷய குமாரன் இந்திரஜித் போன்றோரை முடித்தார். ஆக எந்த வழியை கையாளனும் என்பது முக்கியம் என்பதை விளக்கினார். திரிவிக்ரம அவதாரத்தை விளக்கும் விதத்தில் திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந் தாண்டகத்தில் ஒண் மிதியிற் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமருசீர வுணனுள்ளத்து * என மதியும் கடந்து அண்ட மீது போகி இருவிசும்னூடு போயெழுந்து * மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிரவோடித் தாரகையின் புரம் தடவி அப்பால் மிக்கு* மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே. கின்னர்கள் தேவர்கள் பெருமாள் ஜெயித்தார் என கூக்குரலிட்டனர். அடுத்த பாசுரத்தில் அமிர்த மதனம் செய்த சரித்ரம். தேவர்கள் அசுரர்கள் விருப்பப்படி கடைவதற்கு வந்தவர்கள். அவர்களால் முடியவில்லை ஆயிரம் ஆயிரம் தோள்கள் ஆயிரம் ஆயிரம் தாள்கள் கொண்டு ஆரா அமுதம் கடைந்து பெரிய மந்திர மலையை மத்தாக நாட்டி கடைந்தார். அப்போது அஸ்வம் – குதிரை உச்சஸ்வரஸ் அப்சரஸ்கள், ஆலகால விஷம் வந்தது. அமிர்தத்தை எதிர் நோக்கி இருந்தனர். ஆரா அமுதனாய் பெருமான் கடைந்து கொண்டு இருக்கிறார்

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்றும் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று-தம்முடைய தோல்வி பிரஸ்துதம் ஆகையால் எதிர்தலையில் வெற்றியை அனுசந்தித்து-அத்தோடு சேர்ந்த இல்லாத விஜயங்களை பேசி அனுபவிக்கிறார்-தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
–7-4-11-இத் திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இது தானே வெற்றியைத் தரும்,-ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும்.-இன்ன வெற்றி விசேஷித்து இல்லாமையால் ஸமஸ்த வெற்றிசெல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை-கவனக்குறைவு அசுத்தி பேராசை போன்ற -வென்று கொடுக்கும்;-கேவலனுக்கு -வேறே ப்ரயோஜனமாகிய -விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;-பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;-பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்’;
‘பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும்
ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.
(முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)

உலக இன்பங்கள் காம்யார்த்தமாய் கிட்ட இந்திரன் சந்திரன் குபேரன் போன்ற தேவதாந்திரங்களை நியமித்து அவர்களை பிரார்த்தித் தால் நமக்கு வேண்டியது கிட்டும் என எம்பெருமான் வைத்திருக்கார். ஆனால் மோக்ஷத்திற்கு எம்பெருமானைத்தான் பிரார்த்திக்கனும். இன்னென்ன பாசுரங்கள் கூறினால் இன்னென்ன பலன்கள் கிடைக்கும் என பலத்தை எதிர்பார்த்து தான் லௌகீக வாழ்க்கையில் இருக்கோம். ஒரு காரியத்தை செய்ய நமக்கு சக்தியும் வேண்டும். ப்ராப்தியும் வேண்டும்

திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் ஆரா அமுதமாய் இருப்பது போல ஆரா அமுதம் கரையில் கடைய. ஆறுமலைக்கு எதிர்ந்தோடும் ஒலிகோமதி துவாரகாவில் கோமதி நதியில் காலையில் உப்பு இருக்காது. கடல் நீர் மட்டம் உயர்ந்து கோமதி நதிக்குள் புகுந்தால் நதி தீர்த்தம் சிறிது உப்பாகி விடும். அது போல் ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடுகிறது . அர ஊறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி – அரவு என்றால் பாம்பு. இது நன்றாக சொறிந்து விடுகிறது. கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி. அப்பன் ஊன்றி இடத்து எயிற்றில் கொண்ட நாளே. ப்ரயோஜனாந்தரம் என்றால் பெருமானை தவிர்த்து வேறு ப்ரயோஜனத்தை எதிர்பார்ப்பது. இந்த தேவர்களுக்கு தற்போது அமுதம் வேண்டும் என்பதற்காக ஆரா அமுதன் கடைந்தார். அநன்ய ப்ரஜோனம் என்றால் பெருமாளே எல்லாம் என்று இருக்கை. ஆக தேவர்களுக்காக அமுதம் கடைந்து கொடுத்தார். இங்கனம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு உதவி செய்து இருக்கார் பெருமாள். இந்திரன் தன்னிடத்தில் விருந்து வைக்க அங்கு கண்ணன் சத்யபாமாவை அழைக்க சத்யபாமா இந்திரன் தோட்டத்தில் இருக்கும் பாரிஜாத பூவின் செடியை தன்னிடத்தில் வைக்க விரும்பி கேட்க அதை உபகாரம் செய்த பெருமானுக்கே அவன் கொடுக்க மறுக்க பின் ஒரு கிளையை கருடன் மூலம் பூமிக்கு எடுத்துக் கொண்டு வந்தார். பெரிய மலை போன்று தோற்றமளிக்கும் வராஹரின் மேல் ஒட்டியிருக்கும் இரண்டு கோரப் பற்கள் தான் சந்திரன் போல் இருந்ததாம். பூமா தேவியை தன் மடியில் அமர்த்தி உபதேசம் செய்தார். ஸ்ரீ வராஹ சரமஸ்லோகமாய் ” ஸ்திதே மநஸீ ஸீஸ்வஸ்தே சரீரே ஸ்தியோதர: தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாம ஜம! ததஸ்து ப்ரியமாணத்து காஷ்ட பாஷான ஸன்னிபம். அஹம் ஸ்மராமி மத்பக்தம் நமாமி பரமாங்கதும்.!! நம் அனைவரையும் உலகத்தோடு தூக்கி தாங்குகிறார். நான்றிலே ஏழுமண்ணும் தானத்தவே. பூமியில் ஒரு சின்னதூசி கூட அசையாமல் பூமாதேவியின் திருமேனி அலுங்காமல் தூக்கி நிறுத்தினார். நான்றிலேலே ஏழ் மலைதானத்தவே பின்னும் நான்றிலே ஏழ் கடல் தானத்தவே . கடலில் இருக்கும் நீர்த் திவலைகள் கூட சிதறாமல் தூக்கி எயிற்றில் கொண்டார். ஈனச் சொல்லாயினுமாக எறிதிரை வையம் முற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் * இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லா வர்க்கும ஞானப்பிரானை யயல்லா வில்லை* நான் கண்ட நல்லதுவே* என திருவிருத்தம் பாசுரம். நாம் சிறு வயதில் இந்த வராஹ பெருமாளை சரணாகதி பண்ணி அதை மறந்தாலும் நம் ப்ராண ப்ராயணத்தின் போது நாம் மறந்தாலும் நினைவு தப்பினாலும் பெருமான் ஞாபகம் வைத்துக் கொண்டு அழைத்து போகிறேன் என்கிறார். முக்தியை கொடுப்பார். அடுத்து ப்ரளய காலத்தில் ஆபத்து வர தன் வயிற்றில் வைத்து உபகரித்து சின்ன ஆலிலையில் சயனித்து உலகத்தையே விழுங்கி அங்கனம் விழுங்கும் போது ஆலிலை மட்டும் வைத்தாரா எனில் அதுவே அவரின் அகடிதகடனா சாமர்த்தியம். அதாவது சேராததை சேர்த்து வைக்கும் சாமர்த்தியம். மார்க்கேண்டேய ரிஷி தன் தவத்தின் பலனால் இந்த கோலத்தை காண பின் மார்க்கண்டேயனும் கண்ணன் மூச்சு உள்ளே இழுக்கும் போது போக கண்ணன் வயிற்றில் இருந்து கொண்டு வெளியே இருக்கும் தன் ஆசிரமத்தை பார்க்க கண்ணன் மூச்சை வெளியே விடும்போது திரும்ப தன் ஆசிரமத்திற்கே வந்தடைந்தார் என்பது சரித்ரம். அந்த ஆலிலையில் பரம சுந்தரராய் சயளித்த ப்ரபாவம் அளப்பறியது. அந்த கண்ணன் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு. நாளுமெழ நில நீருமெழ* விண்ணும் கோளுமெழ எரிகாலுமெழ * மலை தாருமெழச் சுடர்தானுமெழ* விண்ணும் கோளும் எழ சுடர் தானும் சூரியன் சந்திரன் எல்லாம் மறைந்தார். முடிந்தார். ஜலம் ” என்று சப்தமிட ப்ரளய காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் கண்ணன் வாய்க்குள் போயிற்று .

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.
–7-4-1-

ஆழி எழச் -மஹா பலி பக்கல் அர்த்தியாய்ச் சென்று அபேக்ஷித்து கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளின போது -அவ்விடத்தில் என்ன தீங்கு வருகிறதோ -என்று ஓக்க கிளர்ந்த படி -ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐஞ் நூற்று காதம் சிறகடிக் கொள்ளும்-என்று பிள்ளை அருளிச் செய்வர்
சங்கும் வில்லும் எழத்-தூசியிலே திரு வாழி யாழ்வான் ஏறின வாறே -அநந்தரம் திவ்யாயுதங்கள் ஓக்க எழ -த்ரி விக்ரம க்ரமாக்ரந்தத்ர லோக்யஸ் ஸ்ப்புரதாயுத
திசை-வாழி எழத் -திவ்யாயுதங்கள் அவனுக்கு பரிந்து எழ -அவனுக்கும் இவற்றுக்கும் பரிந்து சர்வதோதிக்கமாக அனுகூலருடைய மங்களாசாச த்வனி எழ –சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ் த்தைஸ் ததா மனுஷ்யைர்க்கக நேச கேஸரை ஸ் துத-க்ரமான்ய ப்ரசஸார ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –ஏத்த ஏழ் உலகும் கொண்ட -இடக்கை வலம்புரி நின்று ஆர்ப்ப -என்கிறபடியே வலம் புரி முழங்க -திரு வாழி அழல் உமிழ
தண்டும் வாளும் எழ -புறப்பட்டோம் என்று மற்றும் இல்ல திவ்யாயுதங்களும் கிளர
அண்டம்-மோழை எழ -தரணி தல முழுதும் தாரகையின் இன்னுலகும் தடவிய தன் புறமும் விம்ம வளர்ந்தவன் -என்று தன்னுடைய வளர்த்திக்கு அண்டாந்தரம் இடம் போராமையாலே -அண்ட புத்தி பிளந்து -ஆவரண ஜலம் உள்ளே வந்து புகுர- மோழை-குமிழி
முடி பாதம் எழ -முடியும் பாதமும் ஓக்க எழ
அப்பன்-என் நாயகன் பண்ணின உபகாரமே-என்கிறார் –
ஊழி எழ -மஹா பலியால் உபத்திரவம் பட்ட காலம் போய் நல்ல காலம் வந்து தோற்றும் படியாகவும்
உலகங் கொண்ட வாறே.–உலகை அளந்து கொண்ட பிரகாரம் -தேவாஸ் ஸ்வ ஸ்த்தா நமா யாந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர-வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –
கடலை தாழியாகக் கொண்டு -மலையை மத்தாகக் கொண்டு -வா ஸூ கியைக் கயிறாகக் கொண்டு -ஆயிரம் தோளால்-என்கிறபடியே தோளும் தோள் மாலையுமாய் -ஒரு மஹா பாஹு கடை கிற போது -கடல் கொந்தளித்து ஸஹ்யங்களை நோக்கி ஆறு எதிரே ஓடு கிற ஓசையும் -வா ஸூ கியினுடைய உடம்பைச் சுற்றி மலையைத் தேய்கிற த்வனியும் -அரவு -வாஸூகி / ஊறு -உடம்பு / சுலாய் -சுற்றி / வாஸூகியினுடைய உடைலைச் சுற்றி கடைந்த போதை சர சர என்கிற த்வனியும் –
கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –மந்த்ரத்தை கொடு புக்கு நட்டுத் திரித்த போது -கீழ் கடல் மேல் கடலாய் கிடாய்ப்பாய்ச்சல் போலே திரையோடு திரை தாக்கி கிளறுகிற ஒலியும்
அப்பன்-உபகாரகன்
சாறு பட -கடலில் நீர் கோதாம் படி பிரயோஜனமாக அம்ருதம் உண்டாக –சாறு என்று உத்சவமாய் -தேவ ஜாதிக்கு உத்சவம் உண்டாம்படியாக என்னுதல் —சாறு பட -விழவு பட -என்றபடி -நீரிலே ரசமான பசை பட என்னுதல் -உத்சவமாம் படி என்னுதல்
அமுதம் கொண்ட நான்றே.–அம்ருத மதனம் பண்ணின காலத்தில் இவை எல்லாம் உண்டாயிற்று –

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.
–7-4-3-ஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் –

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
பூமி பிரளயம் கொள்ள மஹா வராஹமாய் பூமி உத்தரணம் பண்ணின போது –நான்றில-சலித்தது அல்லை / ஏழ் மண்ணும் -சப்த த்வீபமும் /தானத்தவே -ஸ்வ ஸ்தானஸ்த்தானங்கள் ஆயிற்றன -ஒரு வியாபாரத்தால் செய்ததாய் இருக்கை அன்றிக்கே ஸ்வ சங்கல்பத்தாலே செய்தால் போலே இருக்கை -/ பின்னும்-அதுக்கும் மேலே –
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்-
பூமிக்கு ஆதாரமான குல பர்வதங்களும் சலியாதே ஸ்தானஸ்த்தமாயிற்றன-இவை திண்ணியதாகையாலே இப்படி செய்யலாம்
நான்றில ஏழ்கடல் தானத்தவே -த்ரவத்ரயமான சமுத்திரமும் சலியாதே ஸ்தானஸ்த்தானமாயிற்றன
அப்பன்-நஷ்ட உத்தாரணம் பண்ணின உபகாரகன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–மாறுபாடு உருவக்குத்தி இடந்து எறட்டு-பந்தை எறட்டு செண்டிலே ஏற்றால் போலே இருந்தது திரு எயிற்றிலே ஏற்ற போது –

நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-
பிரளய காலத்தில் பூத பவ்திகங்களோடு கூடின ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்த படியை சொல்லுகிறார்  –

நாளும் எழ-கால வ்யவஸ்தை பேர -வியவச் சேதகரான ஆதித்யாதிகள் போனவாறே காலா காஷ்டாதி ரூபமான வியவச் சேதமும் போயிற்றது என்கை
நிலம் நீரும் எழ -காரணமான பூமியும் ஜலமும் போக
விண்ணும்-கோளும் எழ –ஆகாசமும் க்ரஹங்களும் போக
எரி காலும் எழ -அக்னியும் வாயுவும் போக
மலை-தாளும் எழச் -பூமிக்கு ஆதாரமான மலைகள் வேரோடு பறித்து விழ
சுடர் தானும் எழ -அனுக்தமான நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்கள் போக
அப்பன்-பிரளய ஆபத்சகன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–திரு வயிற்றிலே புகுரும் நெருக்கத்தால் வந்த ஆரவாரம் உண்டாம் படி
ஊளி -சப்தம் -உறிஞ்சின ஓசை என்னவுமாம் –எழ -என்றது தோற்ற என்றபடி -லோகத்தை உண்ட படி –

ஸ்ரீகிருஷ்ண அவதாரம். கிருஷ்ணன் மகன் ப்ரத்யும்னன். அவன் மகன் அநிருத்தன் . பாணாசுரன் பெண் உஷை தன் கனவில் அநிருத்தனை காண அவனையே திருமணம் புரிய விருப்பப்பட்டாள். உஷையின் தோழி சித்ரா தேவி கனவில் யார் எதை பார்த்தாலும் வரையும் கலை கொண்டவள். அவள் முதலில் கண்ணனின் படம் வரைய, பின் ப்ரத்யும்னன் படம் வரைய கிட்டத்தட்ட இப்படித்தான் இருப்பான் ஆனால் இவன் இல்லை என்று கூற கடைசியில் அநிருத்தன் படம் வரைய இவனே என்று நிச்சயித்தாள் உஷை. கண்ணனுக்கும் பாணாசுரனுக்கும் சண்டை நிகழ கண்ணன் பாணாசுரனின் 1௦௦௦ தோள்களில் 998 தோள்கள் வெட்ட 2 மட்டுமே அவன் பெண் கல்யாணத்திற்கு அவனும் இருக்கனும் என்று விட்டு வைத்தார். இந்த சண்டையில் நேர் சரிந்தான் …(8ம் பாசுரம்) கொடி கோழி கொண்டான் (சுப்ரமணியன்) நேர் சரிந்தான் எரியும் அனலோன் அக்கினியும் பறந்தது. அப்பன் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி – திரிநேத்ர சிவனார் சரிந்து விழ நேர் சரிந்தான் திண் தோள் பாணாசுரனின் 2 தோள்களை விட்டுவிட்டு பாக்கி தோள்களை கண்ணன் வெட்டினார். அன்று மண் நீரெரி கால் விண்மலை முதல் * அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் அன்று மழை உயிர்தேவும் மற்றும் * அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே . ப்ரளய காலம் முடிந்து வ்யஷ்தி சிருஷ்டி வரை பர ப்ரஹ்மம் படைத்து பின் நான்முக ப்ரஹ்மாவை படைத்து இதர சிருஷ்டி தொழிலை செய்யக் கூறுகிறார். தேவான் பாவயதி தேன அப்பன் அன்று முதல் உலகம் செய்தார். நாராயண பரோ ஜ்யோதி ஆத்ம நார யண பர: வருணன் இந்திராதிகளை படைத்து வருணன் பூஜையை கூறினார். பூவில் நான் முகனை படைத்த ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதி வரை தான் படைத்து பின்வரும் படைப்பு தொழிலை அவரவர் கர்மத்தின் அடிப்படையில் படைக்க கோர அதன்படி நான் முகனும் செய்தார் என்பது சரித்ரம். இன ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ மழைகாத்து குன்றமெடுத்தானே. கோவர்த்தன உத்தாரணம் சரித்ரம்.

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8
-பாண விஜயத்தை அனுசந்திக்கிறார் –

நேர் சரிந்தான்-தோற்றத்தில் கெட்டுப் போனான் என்னுதல் -முதுகிட்டுப் பிழைத்து போனான் என்னுதல் –
கொடிக் கோழி கொண்டான் -மயிலை த்வஜமாக யுடையவன் -இளமறியான தேவ சேனாபதி யாகையாலே ஸூ ப்ரஹ்மண்யன் தூசியிலே கெட்டுப் போனான் என்கை
பின்னும்-நேர் சரிந்தான் எரியும் அனலோன்-அவன் கெட்டுப் போன பின்பு ஜ்வலியா நின்றுள்ள அக்னி வந்து தோற்றி கேட்டு ஓடினான் –
பின்னும்-நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் -நாற்பத்து ஒன்பது அக்னியும் கேட்டு ஓடின பின்பு த்ரி நேத்ரனான ருத்ரன் முதுகிட்டான்-மகன் கொடியால் அகப்பட்டான் என்று கொடியை மறைத்த இடத்திலும் கண்ணை மறைக்க ஒண்ணாமையாலே அகப்பட்டு கெட்டு ஓடிப் போனான் -கண்ணை மறைக்க ஒண்ணாமை யாலே அகப்பட்டு கெட்டு ஓடிப் போனான் –தேவதாந்தரங்களை ரக்ஷகமாக பற்றினாரை-அவர்கள் எதிரி கையிலே காட்டிக் கொடுத்து தம் தாமைக் கொண்டு தப்பிப் போவார்கள் -என்கை
அப்பன்-நிருபாதிக ரக்ஷகன்
நேர் சரி வாணன் திண் தோள் -ரக்ஷகரானார் அளவு இது வானால் ரஷ்ய பூதன் ஆனவனுக்கு முதுகு காட்டிப் பிழைத்து போம் அது ஒழிய வேறு போக்கடி இல்லை இ றே -திண் தோள் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி என்று இருக்குமா போலே -தேவதாந்தரங்களைப் பற்றி தோள் வலி கொண்டாடி இருந்த படி –ருத்ரன் வர பலத்தால் திண்ணிதான தோள்
திண் தோள் கொண்ட அன்றே–உஷை பித்ரு ஹீனை யாகாமைக்காக தலை அறாதே தோளைத் துணித்து விட்டான்
கீழ் அசுரர்களை மார்விலே அம்பேற்று ஜெயித்த படி சொல்லிற்று -அவர்களுக்கு ஆபாஸ்ரயமாக வந்த தேவ ஜாதியையும் ஜெயித்த படி சொல்லிற்று இப்பாட்டில் –

ஊனுடை மல்லர் உதைந்த வொலி* மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கு மொலி * விண்ணுள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி * அபபன் கானுடைப் பாரதம் கையறை போழ்தே பெருமானே கடல். நம்மை ஆட்டி வைப்பார் சிறிய வயதில் மாடுகளை மேய்த்தார். பெரியவரானதற்கு குதிரைகளை மேய்த்தார். இது தான் வித்யாசம். குதிரையை போன்று நம் இந்திரியங்கள் தறிகெட்டு ஓடும். மனம் தான் கடிவாளம். புத்திதான் சாரதி . கையில் சின்ன கடிவாளம் வைத்துக் கொண்டு அர்ஜுனனுக்கு உப தேசம் . செய்தார். ஆயுதம் எடுக்காமலே தேரை முன்னும் பின்னும் நகர்த்தி சாரத்யம் பண்ணியே அசுரர்கள் போன்ற திமிங்கலம் போன்று கெளரவர்களை போரில் ஜெயித்தார். தீர்ப்பாரையாம் இனி எங்கனம் நாடுதும் ? அன்னை மீர்* ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோயிலு தேறினோம் போர்ப்பாகு தான் செய்து அன்றைவரை வெல்வித்த *மாயப் போர்த் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே என்பது பாசுரம். சரியான பாகு பதத்தில் நாம் இனிப்பு பண்டம் செய்வது போல போர்ப் பாகு . தேர்பாகு நன்றாக இருக்க பாகிலே பிடிபட்ட மா வாய் நம்மாழ்வார் போர்ப்பாடு செய்த மாயப் போர் கண்ணன் சாரத்யம் செய்தே எல்லோரையும் முடித்து பூ பாரத்தை ரக்ஷிப்பதற்கு அவதாரம் செய்தார். அசுரத்தன்மை உடைய துரியோதனாதிகள். ஆக போரை தொடுக்காமல் தன் சங்கல்பத்தாலே பாரதப் போரை முடித்து விட்டார். அடுத்து 6ம்பாசுரம். போழ்து மெலிந்த புன்செக்கரில் வான் திசை சூழுமெழுந்து உதிரப் புனலா* மலை கீழ்து பிளந்த சிங்க மொத்ததால் * அப்பன் ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே. நரசிம்ம அவதாரத்தின் பாசுரம். தேவர்கள் கொடுத்த வரத்தை மதித்து பெருமான் சிங்க முகத்துடன் மனித உடலுடன் நரஹரியாய் ப்ரஹ்லாதன் என்ற பக்தனுக்காக அவன் காட்டின தூணிலே உதித்து தன் . நகத்தையே சுதர்சனமாய் கொண்டு ப்ரஹ்லாதன் தந்தை ஹிரண்ய கசிபுவை 2 ஆக பிளந்தார். அப்போது பூமியே தடம்புரண்டு சொர்க்கம் கீழேயும் பூமி மேலேயும் போய் திசைகளே தெரியாமல் விழித்தனர். பக்தனிடத்தில் ஒரு பாகவதனிடத்தில் அபச்சாரம் செய்தது கண்டு பொறுக்காமல் எடுத்த அவதாரம்

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-
பாரத சமர வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார்-

ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி -பலகரமான த்ரவ்யங்களை மிகவும் புஜித்து மிடுக்கரான மல்லர் நெரித்து விழுகிற ஒலி
மன்னர்-ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி -ராஜாக்களுடைய ஆண் பிள்ளைத் தனத்தை உடைத்தான சேனை -என்னுதல் -பீஷ்மாதிகளை ரக்ஷகமாக உடைத்தான சேனை என்னுதல் –கிருஷ்ணன் பிரதிபக்ஷத்தில் ஆனான் என்று நடுங்கி அலமாக்கிற த்வனி
விண்ணள்-ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி -சுவர்க்கத்தில் மதிப்பராக எண்ணப்  பட்ட தேவர்கள் -தெரிவரிய சிவன் பிரமன் அமரர் கோன் என்கிறபடியே ப்ரோக்ஷபூதர் ஆனவர்கள் -கண்ணுக்கு விஷயமாய் ஸ்துதிக்கிற த்வனி -ஸ்ரீ வேத வியாச பகவான் த்ருதராஷ்ட்ரனை யுத்தம் கண்டு இருப்பாயா உனக்கு கண் தர என்ன -நான் பொறுக்க மாட்டேன் என்ன சஞ்சயனுக்கு கண் கொடுத்து கண்டு சொல் என்றான் –
அப்பன்-பூ பார நிரஹரணம் பண்ணின உபகாரகன் –
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–தர்ச நீயமான பாரதம் -அதாவது முட் கோலும் சிறு வாய்க் கயிறும் சேனா தூளியுமாய் சாரத்த்ய வேஷத்தோடே நின்ற நிலை –கையறை போழ்தே–கையும் அணியும் வகுத்து திரிகிற சமயம் தொடங்கின போது என்றுமாம் –

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே
.–7-4-6-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது வான ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அனுபவித்து  அருளிச் செய்கிறார் –

போழ்து மெலிந்த புன் செக்கரில்-ஸந்த்யா வேளையிலே நாள் முற்று சந்தையாய்ச் செவ்வானம் மறைவதற்கு முன்பே -அவன் கொண்ட வரத்தில் புகாத காலத்திலே –
வான் திசை-சூழும் எழுந்து உதிரப் புனலா-ஆகாசமும் திக்குகள் எங்கும் ரக்த ஜலமாக -ஸந்த்யா ராகத்தில் காட்டில் ரக்தமானது எல்லாவிடத்தையும் சிவப்பிக்க என்றுமாம்
மலை-கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் -மலையை கீழே இட்டு மேலே இருந்து அத்தை பிளக்கிற ஸிம்ஹம் போலே இருந்தது என்னுதல் -மலையை இரண்டு கூறாக கிழித்துப் பிளந்த ஸிம்ஹம் போலே என்னுதல் –கீழ்ந்து பிளந்த ஸிம்ஹம் –
அப்பன்-பிதா எதிராக வந்து உதவின உபகாரகன் –கீழில் பாட்டில் பந்துக்கள் பகையாக வந்து உதவின படி சொல்லிற்று -இதில் ரக்ஷகனான பிதா பகையாக வந்து உதவின்படி சொல்லுகிறது -பந்துக்கள் பகையாக வந்து உதவினவன் -ஜனகன் பகையாக வந்து உதவினவன் -ஆத்மை வரி புராத்மநா -என்று தனக்குத் தானே பாதகனான அவ்வளவிலும் வந்து உதவுமவன் -ஆனபின்பு சர்வரையும் விட்டு அவனையே யன்றோ பற்ற அடுத்து
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே-தன் சீற்றத்தைக் காட்டி மிகவும் துக்கத்தை விளைத்து அசூரனைக் கொன்ற படி -நரசிம்ஹத்தின் தோற்றத்தில் சவகல்பனானான் -பின்னை உடலைக் கிழித்து பொகட்டான் -அவன் வீயத் தோன்றிய –சிங்கப் பிரான் -என்ன கடவது இறே-

நரசிம்ம அவதாரத்தில் ப்ரஹ்லாத வரதனாய் லக்ஷ்மி நரசிம்மனாய் பெருமான் எழுந்தருளியிருக்கார் . அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓராளரியாய் * அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் * பைங்காணை கொம்பு கொண்டு பத்தி மையால் அடிக்கீழ் செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே. சிங்கவேள் குன்றம் என திருமங்கை ஆழ்வார் இட்ட பெயர். காட்டிற்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ராஜாதி ராஜனாய் பெருமான் விளங்குகிறார். 7வது பாசுரம் – மாறுநிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலைபோல் புரள கடல் ஆறு மடுத்து உதிரப்புனலா* அப்பன் நீறுபட இலங்கை சென்றநேரே மஹாபாரதப் போர் பகலில் மட்டும் தான் நடந்தது. ஆனால் ராம ராவண யுத்தம் இரவு பகல் பாராது விடியவிடிய சண்டை நடந்தது. ஏனெனில் இரவு பொழுது அசுரர்கள் பலம் பெறுவார்கள். சூரிய அஸ்தமனத்தில் தூங்கும் போது செரிமானம் நடக்கும். எந்தெந்த நேரத்தில் எந்தெந்த திசையில் சூரியன் உதிக்குமோ அதன்படி தான் செரிமானமும் இருக்கும். மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள். இலங்கை சென்ற நேரே நேர்மையின் வடிவமாய் ராமன் சண்டையிட்டார். எங்கிருந்து அம்பு வருகிறது என்று தெரியாமல் தப்பு தப்பாய் ராவணன் அம்பு விட்ட போதும் தான் நேர்மை தவறாமல் சண்டையிட்டார். ஒருவில் ஒரு சொல் ஒரு இல் என்ற கொள்கையை கடைபிடிக்கும் ராமன். மாறு ஒன்றுக் கொன்று சண்டையிட்டு அலை அலையாய் இரைச்சலுடன் சடலங்கள் வந்து விழ அதாவது ராமன் பாணத்திலிருந்து அம்பு போக போக சடலம் சரமாரியாய் வந்து விழுந்தது. இதன் அடியாய் அழகான சரித்ரம். இந்திராதி தேவர்கள் ராமன் வெற்றி பெற்றதற்கு ராமனை வேண்டுகிறார்கள். ராமன் இந்திரனிடம் கை கூப்பி எனக்கு ப்ரதி உபகாரமாய் ஏதாவது கொடுக்க நினைத்தால் அதை போரில் மடிந்த குரங்குகளை உயிர் பிச்சை கொடு என்று சொல்ல இந்திரனும் உயிர்பிச்சை கொடுத்தான், ராமன் வீபீஷணன் பக்கம் திரும்பி உங்கள் பக்கம் யாரையாவது பிழைக்க வைக்கனுமா என்று கேட்க விபீஷணன் இறந்த சடலங்களை ராவணன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் அசுரர்களுக்கு மலைப்பாய் இருக்கும் என கடலில் வீசி எறிந்து விட்டான் என்றான். சுற்றி இரத்த ஆறு ஓடிற்று. நீலக் கடல் இரத்தக் கடலாய் மாறியது. மொத்த பூமியும் கரை கண்டு ஆடும் அளவிற்கு இலங்கையை முடித்தார் ராமன். இந்திரியங்களை ராவணனின் 10 தலைக்கு உவமையாகக் கொண்டு இந்திரியம் சொல்வதை மனசு கேட்கும். விவேகம் என்ற உண்மையான பகுத்தறிவு ஆத்மா வேறு தேஹம் வேற என்ற அறிவு புரிதல் வேண்டும்

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-
ராவண வத வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்-சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நிற்கிற சர ஸமூஹத்தாலே -ஓர் அம்பை விட்டால் அதற்கு எதிராக மற்றை யம்பை விடுகையாலே திருச் சரங்கள் தன்னிலே முட்டி த்வநிக்கிற படி
நூறு பிணம் மலை போற் புரளக் -இனமான நூறு நூறாக பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க -அநேக பிணங்கள் என்றுமாம்
கடல்-ஆறு மடுத்து உதிரப் புனலா -அப்பன்-நீறு பட இலங்கை செற்ற நேரே-அபூர்ய மாணமசல ப்ரதிஷ்ட்டம்-என்கிறபடியே அவிக்ருதமான கடல் ரத்தத்தால் நிரம்பி ஆறுகளில் எதிரே மடுத்து ரக்த ஜலமாக -ரக்ஷகனானவன் லங்கை பஸ்மாமாம் படி அழித்த நேர்பாடு என்னுதல் -நேரே என்று ஐஸ்வர்யமான ப்ரபாவத்தாலே அன்றிக்கே செவ்வையான ஆண் பிள்ளைத் தனத்தால் என்னுதல் -க்ருதரிம யோதிகளான ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே நேர் போராக என்னுதல்-

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே
.–7-4-9-பாணனை தமித்த -ஜெயித்த -அன்று தொடங்கி ஜகத் உண்டாயிற்று என்கிறார் -ஆதி ஸ்ருஷ்ட்டி ஆகவுமாம் –

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்-பூத பஞ்சகங்கள் என்ன -பூமிக்கு ஆதாரமான மலை என்ன -இவை தொடக்கமாக –
அன்று சுடர் இரண்டும்-சந்த்ர ஸூ ரியர்களும் உண்டாயிற்று
பிறவும்-மற்றும் உண்டான நக்ஷத்ர க்ரஹாதி தேஜோ பதார்த்தங்களும்
பின்னும்-அன்று மழை உயிர் தேவும் மற்றும் -மேகத்தையும் -வர்ஷ ஜலத்தால் ஜீவிக்க கடவ பிராணிகளையும் -வருஷத்துக்கு உத்பாதகரான தேவர்களையும் -மற்றும் அனுக்தமான பதார்த்தங்களையும் அன்று உண்டாக்கினான் –
அப்பன்-சர்வ உத்பாதகன் ஆனவன் –
அன்று முதல் உலகம் செய்ததுமே.–அன்று முதல் ஜகத்தை உண்டாக்கிற்று -வாணனை தோற்பித்த அன்று முதல் என்னுதல் -ரூப நாமங்களை இழந்து சதேவ -என்கிற தசையில் பஹுஸ்யாம் -என்று சங்கல்பித்த அன்று முதல் என்றுமாம் –

ப்ரதி வருஷம் இந்திரனுக்கு படைத்த ஆயர்பாடி மக்கள் அடுத்த வருஷம் வரும் போது அதே மாதிரி இந்திரனுக்கு படைக்க வரும் போது கண்ணன் தடுத்து கோவர்த்தன மலைக்கு படைக்கும் படி கூறினார். கோவர்த்தன மலையால் தான் செடி கொடிகள் போன்ற உயிரினங்கள் வாழ்கிறது. பருவமழை பொழிகிறது. அதற்கே படைக்க கோர ஆயர்பாடிகுழந்தைகளும் செய்வதறியாது ஒத்துக் கொள்ள , வைத்த விதவிதமான அனைத்து தின் பண்டங்களையும் மலைக்கு திரையிட முடியாது நீங்கள் எல்லோரும கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று கூற அவர்களும் மூடிக்கொள்ள கண்ணன் துளி மிச்சம் வைக்காமல் அத்தனையும் உண்டான் என்பது சரித்ரம். மேலும் இந்திரன் படைப்பதை பார்ப்பானே தவிர அதை தொடக்கூட மாட்டான் அலட்சியமாய் இவர்கள் படைத்தது தானே என்று இருந்து விடுவான். ஆனால் தனக்கு படைக்காத கோபத்தில் வருணனை மழை பெய்ய கூறினான் இந்திரன். மழை விடாமல் பெய்ய கண்ணன் அந்த கோவர்த்தன மலையையே குடையாக பிடித்து ஆயர்பாடி மக்களையும் ஆநிரைகளையும் காக்க இந்திரன் மனம் திருந்தி கண்ணன் காலில் விழுந்து க்ஷமா கேட்டதாய் சரித்ரம், இந்த .பாசுரங்களின் பல ஸ்ருதியாய் இந்த 10 பாசுரங்களை அப்யஸிப்பவருக்கு அவர்கள் பிரார்த்தனை படி வெற்றி நிச்சயம் கிட்டும் என்று முடித்தார். ,

குன்றம்  எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .நிகமத்தில் எம்பெருமானுடைய விஜயங்களைத் தொடுத்த இத்திருவாய் மொழியை சஹ்ருதயமாக கற்பார்க்கு இது தானே விஜயங்களைக் கொடுக்கும் என்கிறார் –

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்-ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களிலே தம்மையும் அந்நிய தமராக நினைத்து இருந்த ஆழ்வார் அருளிச் செய்த இது -மலையை எடுத்த அன்று மலைக்கு கீழே ஒதுங்கினவர்களை போலே சம்சாரத்துக்கு அஞ்சி கிருஷ்ணன் திருவடிகளிலே ஒதுங்குமவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அச் செயலுக்கு தோற்று அடிமை புக்கவர் ஆயிற்று இவர்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை-வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே-
சர்வேஸ்வரன் விஜயங்களை சேராத தொடுத்த இவை பத்தும் -ஆதரித்து கற்பார்க்கு இதில் சொல்லுகிற விஜயத்தை கொடுக்கும் -இச் சேதனனுக்கு விஜயமாவது -சர்வேஸ்வர விஜயம் இ றே -அதுவே இ றே இவருக்கு புருஷார்த்தமும் -சம்சார விஜயத்தை கொடுக்கும் என்றுமாம் –
நன்றி புனைந்த– சர்வேஸ்வர விஜய ரூபமாய் ஆத்மாவுக்குப் புருஷார்த்தமுமாய் இருந்த இத்தை தொடுத்த என்றபடி-

அந்தரங்கத்தை விடவேண்டும் சரணாகதி !!! அந்த ரங்கத்தை தொடவேண்டும் சரணாகதி !!! முயலும் ஆமையும் பண்ணலாம் சரணாகதி !!! முயலாமையை உணர்ந்து பண்ணனும் சரணாகதி !!! குமரிகாண்டத்திலும் பண்ணலாம் சரணாகதி !!! அமெரிக்கா கண்டத்திலும் பண்ணலாம் சரணாகதி !!! மதி நிறைந்த நன்னாளிலும் பண்ணலாம் சரணாகதி !!! நிதி தொலைத்த எந்நாளிலும் பண்ணலாம் சரணாகதி !!! பெண்ணும் பேதையும் பண்ணலாம் சரணாகதி !!! கண்ணனும் கோதையும் பண்ணலாம் சரணாகதி !!! மீமாம்சை கற்றவனும் பண்ணலாம் சரணாகதி !!! மீன் மாம்சம் விற்பவனும் பண்ணலாம் சரணாகதி !!! பக்தியை கேட்டுப் பெறலாம் சரணாகதி !!! முக்தியை கேட்டும் பெறலாம் சரணாகதி !!! காமன் சோமனிடம் கூடாத சரணாகதி !!! ராமன் மனம் கூடும் சரணாகதி !!!

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

November 21, 2025

ஆத்திச்சூடி வெண்பா என்பது ஔவையாருடைய ஆத்திச்சூடியிலுள்ள “அறஞ்செய விரும்பு” முதலிய சூத்திரங்களை இறுதியாகக் கொண்டு வேண்பாயாப்பினாற் செய்யப்பட்ட காரணம்பற்றி வந்த பெயர். இது செய்தவர் இராமபாரதி என்பவர், பார்த்தசாரதி யென்பாருமுளர்

பாரோர் புகழிராம பாரதிசெம் பாகமதாய்ச்
சீராத்தி சூடிச் செழுந்தமிழைப்-பேராக
நாகரிகன் புன்னைவன நாதமகி பன்புனைந்தான்
வாகுவினிற் கீர்த்து வர்*-காப்பு..

அருளார் கபிலை யறமே செயமென
றிருளகல வேங்கைக் கியம்பும்-பெருமையினான்
மாவளரும் புன்னை வனநாத மெய்த்துணையா
மேவியறஞ் செய்ய விரும்பு. (1)

உத்தரபூமியிலே குடிதாங்கினான் என்னும் பெயருடைய இடையனாலே மேய்க்கப்பட்ட பசுக்களுள்ளே கபிலை என்னும் பசு ஒன்று தனியே மேயும்படி ஒரு நாள் ஒருகாட்டிற் போயிற்று. அதனை ஒரு புலி கண்டு தனக்கு நல்லுணவு கிடைத்ததென்று தடுத்துக் கொல்ல முயன்றது. அப்போது கபிலை அப்புலியை நோக்கிப் பல தருமங்களையும் போதித்து விலகிக்கொண்டது.

ஆதி நிமிசிவிகைக் காளாய்ச் சடபரதர்
தீது பொறுத்துச் சிறப்புற்றார்-சோதிப்
புயமா வளர்கின்ற புன்னை வனநாதா
செயமா றுவது சினம். (2)

பரதர் என்னும் அரசரானவர் உலகப்பற்றினை முற்றுத்துறந்து காட்டிற்பகுந்து தவஞ்செய்யும்போது ஸ்நாநஞ்செய்யும்பொருட்டுக் கண்*டகியாற்றங் கரைக்குப் போனார். அப்போது பூரணகர்ப்பமுடைய மானுமொன்று தண்ணீர் குடிக்க அங்கே வந்து ஒரு சிங்கத்தின் முழக்கங்கேட்டு அஞ்சி நடுநடுங்கித் தன்கர்ப்பத்தையும் விழவிடுத்து விரைந்தோடிற்று. கருப்பத்திலிருந்த குட்டியும் நீரிலே மிதந்து நீந்திற்று. அதுகண்ட பரதரும் அக்குட்டியின்மேலே பெரிதும் இரக்கம்வைத்து அதனை எடுத்துப் பேணி வளர்ப்பவர் தம்மைவிட யாருமில்லையென்று எண்ணினவராய் ஆதரவோடும் எடுத்துவந்து வளர்த்தார். அவர் சிந்தனையெல்லாம் அந்த மான்குட்டிமேலே இருந்தபடியால் அவருக்கு மரணகாலத்திலும் அச்சிந்தனையே மேலிட்டது. அச்சிந்தனைகாரணமாகப் பின்னர் அந்த மிருகயோனியிற் பிறந்து முன்னைச் சென்மவுணர்வு சிறிதுங் குறையாமல் அம்மிருக சென்மத்துக்குக் காரணமான கன்மநீக்கத்தை நினைத்துக்கொண்டு தம் சென்ம பூமியாகிய காலாஞ்சனம் என்னும் தேசத்தைவிட்டுச் சாளக்கிராமம் என்னும் இடத்தையடைந்தார். அங்கே மானின் சென்மம் நீங்கிவிடப் பின்னர் அங்கிராமுநிவர் மரபிற் பிறந்து யாதொரு தொழின் முயற்சியுமின்றிச் சடம்போலச் சுக துக்கமுமறியாதிருந்தமைபற்றிச் சடபரதர் எனப்பட்டுச் சுற்றத்தாரால் வயலுக்குக் காவற்காரராக நியமிக்கப்பட்டார்.

அப்போது ஒரு சூத்திரன் புத்திரப்பேற்றினைவிரும்பிக் காளிதேவிக்குப் பலிகொடுக்கும்படி ஒருவனை நியமித்துவைத்திருக்க அவனும் விதிவசத்தினாலே தப்பியோடிவிட்டான். அச்சூத்திரன் அவனைத்தேடிப் போகும்போது இப்பரதர் எதிர்ப்பட இவரையே பலியிடும்படி காளிக்குமுன்னே கொண்டுபோய் நிறுத்தினான். அப்போது காளிதேவி இப்பரதருடைய பிரமதேசசுவினாலே தகிக்கப்பட்டுக் கோரவடிவத்தோடுதோன்றி இவரைப் பலியிடத் துணிந்தோருடைய இரத்தங்களை குடித்து நடித்தாள். அக்காலத்திலே நிமி என்னும் அரசன் (இரகுகணன் என்பாருமுளர்) ஞானோபதேசம் பெறக்கருதிக் கபிலமுநிவருடைய ஆச்சிரமத்தை நோக்கிச் செல்லும்போது இப்பரதருடைய மேன்மையை அறியாது தன் சிவிகையைச் சுமக்கும்படி பிடிக்க அதற்கும் உடன்பட்டுத் தான்கொண்ட விரதமுந் தவறாது கோபமுங் கொள்ளாது மெல்லமெல்ல நடந்து ஓருயிர்க்கும் இறுதிவாராமற் காத்து அவ்வரசன் முதலிய பலரானுஞ் சீவன்முத்தா என நன்கு மதிக்கப்பட்டார்.

இந்துமதி விற்றுமலைந் தீனனுக்கா ளாயுமரிச்
சந்திரனோ தன்னிலைமை தப்பவில்லை – நத்தம்
மநுநெறிதேர் புன்னை வனகாதா பூமி
யினிய*ல வதுகர வேல். (3)

சூரியகுலத்துள்ள திரிசங்குமகாராசாவின் மகனாகிய அரிச்சந்திரன் தன் மனைவியாகிய இந்துமதியை விற்றும் புலையனுக்குத் தான் அடிமையாகப் பெற்றுந் தன்னுடைய சத்திய நிலையிலே தவறாது நடந்தான்.

மாவலியை மாலுக்கு மண்ணுதவா மற்றடுத்த
காவலினாற் சுக்கிரனுங் கண்ணிழந்தான் – நாவதனால்
நன்னீதிப் புன்னைவன நாதமகி பாவுலகத்
தின்னீ வதுவிலக் கேல். (4)

விரோசனன் மகனாகிய மாவலி என்னும் அசுரனானவன் மூவுலகங்களுக்கும் அரசனாக வரம்பெற்று அரசுசெய்யுங்காலத்திலே தம்முலகங்களை இழந்த தேவர்கள் யாவரும் விட்டுணுமூர்த்தியையடைந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். விட்டுணுமூர்த்தியும் காசிபன் அதிதி என்னும் இருவருக்கும் மகனாகப் பிறந்து வாமனரூபத்தோடும் மாவலியிடம் போய் மூவடி மண்கேட்டார். மாவலியும் மூவடிக்கும் உடன்பட்டு நீர்விட்டுக் கொடுக்கும்போது குருவாகிய சுக்கிராசாரியர் வண்டுவடிவங்கொண்டு சென்று நீர்விடுங்கரக மூக்கிலிருந்து தடுத்து விட்டுணுமூர்த்தியின் தர்ப்பைநுனியாற் குத்துண்டு கண்ணிழந்தார்.

உள்ளபடி தன்சிறகி லுண்டுபல மென்றொருசொல்
விள்ளுஞ் சடாயுமுனம் வீழ்ததுபார – வள்ளற்
றனபதியே புன்னைவனத் தாளாளா வொன்னார்க்
குனதுடைய துவவிளம் பேல். (5)

காசிபமுனிவருக்கு வினதையென்பவளிடத்திலே கருடன், அருணன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள். அருணனுக்குச் சமபாதி, சடாயு என இருபிள்ளைகள் பிறந்தார்கள். இந்தச்சடாயு தசரதனுக்கு நண்பனாதலாற் சீதா பிராட்டியை இராவணன் கவர்ந்துகொண்டு போனபோது தன்சிறகிலே பெலமுண்டென்று சொல்லி இராவணனோடு தடுத்துப்போராடி அவனுக்கு வருத்தத்தை யுண்டாக்கினான். உண்டாக்கியும் பின்னர் இராவணனாலேயே சிறகு வெட்டப் பட்டுப் பூமியிலே விழுந்தான்.

ஊரி னரபலிக்கா வூர்சகட மேல்வீமன்
தீரன் பகசூரன் றீதடக்குங் – காரணம்பார்
தேக்குபுகழ்ப் புன்னைவன தீரனே யாவுறினும்
ஊக்க மதுகை விடேல்.

தருமன் முதலிய பாண்டவர்கள் ஐவரும் வேதத்திரகீயநகரத்திலே போய் ஆண்டுள்ள வேதியர் வீடொன்றிலே வாசஞ்செய்தகாலத்திலே அந்நகருக்குச் சமீபமாயுள்ள ஏகசக்கிரம் என்னுங் காட்டிலிருந்துகொண்டு பகன் என்னும் இராட்சதன் குடிக்கொரு பண்டிசோறும் நரபலி ஒன்றுந் திறைவாங்கி உண்டு வந்தான். இப்படி உண்டுவருங் காலத்திலே பாண்டவர்கள் இருக்கும் வீட்டார் கொடுக்கவேண்டிய நாள் வந்தது. அவ்வீட்டுப் பிராமணன் மனைவி தன்னுடைய குலமுதல்வனாகிய ஒரேமகனைப் பலிகொடுப்பது எப்படி என்று வருந்தினாள். அதனை அறிந்த குந்திதேவி அவளுடைய துன்பத்தையாற்றித் தன் மகனாகிய வீமனையே பலிக்கு நியமிக்க வீமனும் உடன்பட்டு அவ்வீட்டார்கொடுத்த சோற்றினையும் வண்டியிலேற்றிக்கொண்டுபோய் அவனைச் சமீபித்தவுடன் அச்சோற்றினையுமுண்டு அதுகண்டு கோபித்து வந்தெதிர்த்த அந்தப் பகனையும் ஊக்கமுடன் கொன்றான்.

எண்ணரிய கோளுடுக்க ளெல்லா மொருமையாதாத்
திண்ணந் துருவர்கையிற் சேர்தலினான் – மண்ணுலகிற்
போற்றுந் தமிழ்ப்பாகைப் புன்னைவன பூபாகேள்
ஏற்றெண் ணெழுத்திகழேல். (7)

சுவாயம்பு மனுவின்மகனாகிய உத்தாநபாதனுடைய மனைவியராகிய சுருதி. சுநீதி என்னும் இருவருள்ளே சுருதி என்பவளிடத்திலே உத்தமன் என்பவன் பிறந்தான். சுநீதி என்பவளிடத்திலே துருவன் என்பவன் பிறந்தான். ஒருநாள் உத்தாநபாதனாகிய பிதாச் சிங்காசநத்திலே வீற்றிருக்கும்போது அவன்மடியிலே மகனாகிய உத்தமன் என்பவன் ஏறியிருந்தான். அப்போது மற்றமகனாகிய துருவன் என்பவனும் ஏறினான். அதுகண்ட சுருதி என்பவள் அவனைநோக்கி நீ பட்டத்துகுரியையல்லை; சிங்காசநத்திலேறாதே என்று தடுத்தாள். சுருதி என்பவளிடத்தேயுள்ள காதலால் அரசனும் அதற்குடன்பாடு டையவனாயிருந்தான். அதுகண்ட துருவன் மிகவும் மனம்நொந்து நடந்த சம்பவத்தைத் தாய்க்கு வந்தறிவித்துத் தாயின் சம்மதியோடு சத்தமுனிவரையடைந்து உபதேசம் பெற்றுத் தவஞ்செய்து கிரக நட்சத்திரங்களையெல்லாம் பிணித்த திகிரியைக் கணக்கின்படி சுற்றியிழுத்து விளங்கும் உயர்பதவியை விட்டிணுவாற் பெற்று மாதாவோடு மேம்பட்டான்.

மாவலிபான் மண்ணிரக்க மாதவனே வாமவுரு
வாமென்றான் மாதவற்கஃ தாகுமோ-மூவுலகிற்
பேர்பரவும் புன்னைவனப் பேரரசே யெவ்வகையாற்
சீர்பெறினு மேற்பதிகழ்ச்சி. (8)

வன்பிரம ராக்கதன்பான் மங்கலியப் பிச்சையருள்
என்பவளுக் கேகொடுத்தீ டேறினான் – அன்பதனால்
வள்ளலெனும் புன்னை வனநாத வஞ்சமிலா
துள்ளதிலே யையமிட் டுண். (9)

தாரணிபோ லெவ்வுயிருந் தாங்குந் தகைமையதாச்
சீரணிந்து நாளுஞ் சிறந்தோங்க-ஆரந்
தழைந்தபுகழ்ப் புன்னைவனத் தாளாளா யார்க்குங்
குழைந்தொப்புரவொழுகு. (10)

மச்சகந்தி தன்வயிற்றில் வந்துதித்து மோதலினால்
விச்சைபெற்ற வேத வியாசனைப்பார்-நிச்சயமே
பன்னுதமிழ்ப் புன்னைவனப் பார்த்திவனே யுண்மைநூ
லின்னோ துவதொழியேல். (11)

முன்னொருகாலத்திலே பராசரமுனிவர் பல சிவஸ்தலங்களைந் தரிசித்துப் பல தீர்த்தங்களிலும் ஸ்நாநஞ்செய்து பூமிப்பிரதக்கிணஞ்செய்து வருகையிலே கெளதமை (கங்கையென்பார் சிலர்) என்னும் யாற்றிலுந் தீர்த்தமாடினார். தீர்த்தமாடியபின் கவுதமையாற்றினைக் கடந்துபோக ஓடம்விடுதற்கு யாருங் கிடையாமல் அங்குள்ள வலைஞர்மகளாகிய மச்சகந்தி என்பவளை ஓடம்விட இயலுமா என்று கேட்டார். மச்சகந்தி ஆயிரம்பேருடைய பாரமமைந்தாலன்றி இந்த ஓடம்விடுதல் அரிதென்றாள். பராசரமுனிவர் ஆயிரம்பேருடைய பாரத்தையும் யானே அமைப்பேன் என்றுசொல்லி ஓடம்விடுவதற்கு அவளை உடம்படுத்தி ஏறிச் சென்றார். செல்லும்போது அந்த மச்சகந்தியிடத்திலே இச்சைமிகுந்தவாராய்ப் பனியினாலே சூரியனைமறைத்து மீன்மணம்போய் நறுமணங்கமழும்படி பரிமளங்கொடுத்துப் பரிமளகந்தியாக்கி அவளைப் புணர்ந்தார். அப்போது வியாச முனிவர் அம்மச்சகந்தியிடத்திலே அவதரித்தார். வியாசமுனிவர் மச்சகந்தியிடத்திற பிறந்தும் வேதம் முதலியவைகளை ஓதுதலினாலே ஞாநம் பெற்றுயர்ந்தார்.

மாதர்முன்னே யுத்தரனு மாபெலவான் போலுரைத்துக்
காதமரி லாச்சுனனாற் கட்டுண்டாண் – ஆதலினால்
வண்மைபெறு புன்னை வனநாதா சீருடைய
திண்மையுன்னி யெளவியம்பேசேல். (12)

பாண்டவர்கள் விராடனுடைய மச்சநாட்டிலே அஞ்ஞாதவாசஞ் செய்யுங் காலத்திலே விராடன்மகனாகிய உத்தரன் என்பவன் தன்னகரத்திலே பசுக்கவர வந்தவர்களை இமைப்பொழுதுள்ளே வெற்றிகொள்வேன் என்று தாய்முதலிய பெண்களுக்குச் சொல்லிவந்தும் போரிலே பயந்தோடித் தேர்விட்டுவந்த அருச்சுனனாற் பிடித்துக் கட்டப்பட்டான்.

மைக்கடல்கொண் முட்டைதனைவாங்குவோமென்றுசிட்டுப்
புக்கதனை வென்றதுதன் புத்தியினால்-அக்கதைபோல்
வேளாளா புன்னைவன மேகமே யுண்மையெனக்
கேளாயஃ கஞ்சுருக் கேல். (13)

ஒருகடற்கரையிலே சேவலும் பேடுமாக இரண்டு சிட்டுக்குருவிகள் வாசஞ்செய்தன. பேடு தன் முட்டைகளையெல்லாம் பலமுறையுங் கடல்வந்து கவர்ந்துகொண்டு போகக்கண்டு துக்கங்கொண்டு தன் நாயகனாகிய சேவலுக்கு முறையிட்டது. சேவல் பறைவைகளையும் அழைத்துக்கொண்டுபோய்ப் பறவை வேந்தனாகிய கருடனுக்கு முறையிட்டது. கருடன்போய் விட்டுணுமூர்த்திக்கு முறையிட்டது. விட்டுணுமூர்த்தி கடலைவருவித்து முட்டைகளைச் சிட்டுக்குருவிடங் கொடுக்கும்படி கட்டளை செய்தார்.

கள்ளற் குரைத்தான் கனகத் தியவிரதன்
உள்ளபடி வேதியர்சொல் லோர்வழியைத்-தெள்ளியசீர்
மாதனதா புன்னைவன வள்ளலே மேலெண்ணா
தேதெனினுங் கண்டனசொல்லேல். (18)

தீதி லரிட்டங்கள் செய்யவுண வைக்கொள்ள
மேதினியிற் றம்மினத்தை மேவுதலால்-நீதிநெறி
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா வுற்றாரை
மாற்றிருமெய் ஙப்போல் வளை. (19)

அரிட்டம்-காகம். காகங்கள் யாதேனும் உணவைக் காணும்போது தம்மினத்தினையும் அழைத்து உண்பது வழக்கம்.

ஞாயிறுயிர்க் கீறுதிங்க ணம்பரருள் செய்கிலர்செவ்
வாய்பிணிதுக் கங்குருநாள் வாழ்வுபோந் – தூயவெள்ளி
போடிதெல்லாம் புன்னைவன பூபாலா மிக்கபுத‌
னோடுசனி நீராடு. (16)

தொட்ட‌டித்தோ னன்றிசெய்த தூயோ னிருவருக்கும்
பட்டணத்துப் பிள்ளை பகர்ந்ததுபார் – மட்டுலவுந்
தென்பாகைப் புன்னைவன தீரனே யாரிடத்தும்
அன்பாய் ஞயம்பட வுரை. (17)

பட்டணத்துப் பிள்ளையார் சிவஸ்தல‌ யாத்திரையாக‌ப் பலநாடுகளுக்கும் போய்க் கொங்குநாட்டில் வந்தபோது ஒருநாள் அர்த்த ராத்திரியிலே பசியினால் வருந்தி மூர்க்கனான ஒரு இல்லாச் வாயிலிலே நின்று கையிலே தட்டினார். அவன் இவர் ஒரு சிவயோகி என்றறியாது யாரோ காமதூர்த்தன் என்றெண்ணிக்கொண்டு விரைந்து வந்து தடியினாலே அடித்தான். அடிக்கும்போது பிள்ளையார் நின்றநிலைதானும் பெயரவில்லை. சிவ சிவ என்றார். அப்போது அடுத்த‌ வீட்டுப் புறத்திண்ணையிற் கிடந்த கிழவன் ஒருவன் ஓடிவந்து அம்மூர்க்கனை நோக்கி ஏடா! பேதையே! இவர் ஒரு சிறந்த சிவயோகி! இவருக்கேன் இத்தீங்கு செய்தனை! என்று விலக்கிப் பிள்ளையாரை அழைத்துக்கொண்டுபோய் அன்போடும் உண்பித்துப் பெரிதும் உபசரித்தான். அப்போது பிள்ளையார் திருவருளை நினைத்துப் “பூணும்பணிக்கல்ல” “இருக்குமிடந்தேடி” என்னும் பாக்களைப் பாடினார்.

நித்தியமாம் வீட்டு நெறியிலிடம் பாடல்லாற்
பொய்த்தவின்ப வீட்டிற் பொருளடையா – தத்தம்
நடையறியும் புன்னைவன நாதனே பூமி
இடையிடம்ப டவ்வீ டெடேல். (18)

செய்யபுகழ் விக்கிரமா தித்தனொரு தட்டாரப்
பைய லுறவுபற்றிப் பட்டதனால் – வையம்
மணக்குஞ்சீர்ப் புன்னை வனநாதா நீயும்
இணக்க மறிந்திணங் கு. (19)

விக்ரமாதித்தன் கூரியபுத்தியுடைய ஓர் அரசனாயிருந்தும் விசயன் என்னுந் தட்டான் ஒருவனைத் தனக்குச் சிறந்த நட்பாளனாகக்கொண்டு நடந்தான். அவன் மந்திரியாகிய பட்டி என்பவன் இதனை அறிந்து தட்டானுறவு தப்பாது தீங்கு பயக்கும் என்று தடுத்தும் தீவினையனுபவிக்கும் ஊழ்வசத்தால் அரசன் கேட்கவில்லை. அரசன் அத்தட்டான் கற்றிருந்த இந்திரசாலம், மகேந்திரசாலம் என்னும் வித்தைகளை அவனிடத்திலே கற்றுக்கொண்டு, தான் கற்றிருந்த பரகாயப் பிரவேசவித்தையை அத்தட்டானுக்குக் கற்பித்தான். தட்டானோ அரசனை வஞ்சித்து இராச்சியபோகங்களைத் தான் அநுபவிக்க வேண்டும் என்று சமயம் பார்த்திருந்தான்.

இப்படியிருக்கும் நாளிலே அரசன் மந்திரியைவிடுத்துத் தனியேசென்று வேட்டையாடும்படி காட்டிற்போயிருந்தான். இதுவே சமயமென்று தட்டானும் அக்காட்டினை அடைந்தான். பின் அரசன் தட்டான் என்னும் இருவருங் கூடி வேட்டையாடிக்கொண்டு ஒரு குளக்கரையிலே நின்ற ஓர் ஆலமரத்தின் நிழலை அடைந்தார்கள். அரசன் ஆயாசத்தினாலே தட்டான் மடியிலே தலையை வைத்துப் படுத்துக்கொண்டு மேலே பார்த்தான். அவ்வாலமரத்திலே ஆணும் பெண்ணுமாக இரண்டு கிளிப்பறவைகள் புணர்ச்சிசெய்துகொண்டிருந்தன. அப்போது ஆண்கிளி சடிதியாக இறந்துவிடப் பெண்கிளி அதன் பிரிவாற்றாது மிகவருந்திற்று. அதனைச் சீவகாருண்ணியமுடைய அரசன் பார்த்துப் பெண்கிளியின் துயரைத் தீர்க்கக்கருதிப் பரகாயப்பிரவேசவித்தையினாலே தன்னுடலை விடுத்து ஆண்கிளியினுடலிற் பிரவேசித்தான். உடனே ஆண்கிளி எழுந்து பெண்கிளியை மகிழ்வித்தது. அரசனுடல் கிடந்தது. தட்டானும் சமயம் வாய்த்தது என்று தனக்கு அரசன் கற்பித்த பரகாயப்பிரவேச வித்தையைக் கொண்டு அரசனுடலிலே புகுந்து பட்டணத்தையடைந்தான். இவைகளைக் குறிப்பினால் அறிந்த மந்திரி அரசன்மனைவியர் கற்புக்குப் பங்கம்வாராது உபாயஞ்செய்து கொண்டான். கிளியுடலிற் பிரவேசித்த அரசன் மகதநாட்டிலே போய் ஒரு வேடன் வலையிலகப்பட்டு பின் ஒரு செட்டிக்கு விற்கப்பட்டு ஒருதாசியின் விகாரத்திலே வருந்திக் கிளியுருநீங்கித் தன்னுருவம் பெற்றான்.

அணையிடர்தீர்த் தான்கருட னந்தணன் செங்கந்தை
தனையெடுத்துச் சாவு தவிர்த்தான் – இனையவர்போற்
சீராரும் புன்னைவன தீரனே நாடோறும்
பேராருந் தந்தைதாய்ப் பேண். (20)

காசிபமுனிவருடைய மனைவியர்களுள்ளே கத்திரு என்பவள் அநந்தன் முதலிய பாம்புகளைப் பெற்றாள். வினதை என்பவள் கருடன் அருணன் என்னும் இருவரையும் பெற்றாள். ஒருநாள் இவ்வினதை கத்திரு என்னும் இருவரும் ஓரிடத்திலே இருக்கும்போது அங்கே இந்திரனுடைய உச்சைச்சிரவம் என்னுங் குதிரை வந்தது. அக்குதிரையின் வாலைக் கத்திரு பார்த்து கருமை என்ன வினதை வெணமை என்றாள். இவ்வாறு இருவரும் முரணி ஏவள் வார்த்தை மெய்ம்மையாகுமோ அவளுக்கு மற்றவள் அடியாளாகக் கடவுள் ……… ….. …… (Proof Reader: Pls include the missing characters. I can’t read from image ) எனச் சபதமுங் கூறினர். பின்னர் கத்திரு தன்மகனாகிய கார்க்கோடகன் என்னும் பாம்பினால் அவ்வாலைச் சுற்றிக் கருமையாக்குவித்துக் காண்பித்து வினதையைத் தனக்கடிமையாக்கினாள். பின்னர்க் கருடன் அமுதங் கொண்டுவந்து கத்துருவின் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தாயாகிய வினதையின் அடிமையை நீக்கினான். அந்தணன்கதை வந்துழிக் காண்க-

உன்னாட்டா ரெல்லா முயிர்காத்துக் கோத்திரத்தில்
எந்நாளும் வாழ்ந்தே யிருத்தலாற்- பன்னாளும்
பூதலத்தின் மேன்மைபெறும் புன்னைவன நாதனே
ஏதிகழ்ந்து நன்றிமற வேல். (21)

உன்னாட்டிற் பொற்களந்தை யூரர்நன்னாட் செய்தபயிர்
பொன்னே விளையப் புகழ்பெற்றார் – ஒன்னார்
பயந்திடுவேற் புன்னைவன பார்த்திவனே நீயுஞ்
செயும்

கூறவழக் கெண்ணாத கூதைசக டற்குவண்டி
ஏறமுன்போல் வாரா திருந்ததனாற் – றேறியென்றும்
மாதிலாக புன்னைவன மன்னாகேள் பூமியதில்
ஏதிலன் மண்பறித்துண்ணேல். (23)

மன்னவனுக் குன்னாட்டார் வந்து முடிசூட்ட‌
முன்னனலின் மூழ்கிமுதன்மைபெற்றார்- அன்னவர்போல்
நன்றரியும் புன்னைவன நாதனே வையகத்தில்
என்றுமியங் கித்திரி யேல். (24)

இருடிமேற் செத்தபாம் பேற்றிப் பரீக்கித்
தரவினாற் பட்ட தறிந்தே – திரைகடல்சூழ்
மண்ணுலகிற் புன்னைவன மன்னவா பாவமிதென்
றெண்ணி யரவமாட் டேல். (25)

அருச்சுனனுடைய மகன் அபிமன்னு. அபிமன்னுவின் மகன் பரீக்கிது. அந்தப் பரீக்கிது மகாராசன் காட்டிலே வேட்டைக்குப்போய் ஒரு மானை எய்தான். அந்தமான் அம்பு பட்டுந் தப்பியோடிற்று. அதனைத் தேடிப் பார்க்கும்போது சமீகர் என்னும் முனிவர் எதிர்ப்பட்டார். அவரை நோக்கி மானை விசாரித்தான். அவர் யாதொன்றும் பேசவில்லை. அவர் பேசவில்லை என்று கோபங்கொண்டு செத்துக் கிடந்த பாம்பொன்றை எடுத்துக் கொண்டு போய் அவருடைய‌ தலையிலே போட்டுவிட்டுப் போனான. பின் அவருடைய மகன் அதனை அறிந்து சொல்லிய சாபப்படி தக்கன் என்னும் பாம்பினாற் கடிக்கப்ப‌ட்டிறந்தான்

அன்னத்தின் றூவிகோங் காகு மரசர்க்குப்
பன்னும் பருத்திதான் பாங்கல்ல – இன்னதனால்
வள்ளலெனும் புன்னை வனநாதா மையிரவிற்
றுள்ளிலவம் பஞ்சிற் றுயில். (26)

மாயனார் தம்மக்கண் மாமுனியைக் கேட்டகர்ப்ப‌
மேயவரைக் கொல்லு மிருப்புலக்கை – ஆயதனான்
மாரனெனும் புன்னை வனநாதா வையகத்திற்
சீருறா வஞ்சகம்பேசேல். (27)

துவாரகையிலே கண்ணபிரான் தருமராசனுக்கு வேள்விகளை முடித்துத் தன்பதஞ்சாருதற்கு நினைத்திருக்குங் காலத்திலே அவரைக் காண விரும்பித் துருவாசர், விசுவாமித்திரர், நாரதர்முதலிய முனிவர்கள் வந்தார்கள். அப்போது யாதவகுமார‌ரிற் சிலர் சாம்பவன் என்பவனை ஒரு கர்ப்பஸ்திரிபோல அலங்கரித்து அம்முனிவர்களுக்கு முன்னே நிறுத்தி “இப்பெண் என்னபிள்ளை பெறுவாள்? சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அம்முனிவர்கள் இவர்களுடைய கபடத்தை அறிந்து கோபங்கொண்டு “இக்கருப்பத்தினின்று ஒருமுசலம் பிறக்கும். அந்தமுசலத்தாலே இந்த யாதவகுலமெல்லாம் நாசமாகும்” என்று சாபஞ் சொல்லிவிட்டுக் கண்ணபிரானையும் காணமல் வந்த வழியே திரும்பிப்போய் விட்டார்கள். மற்றைநாள் யமதண்டம்போன்ற ஓருலக்கை சாம்பன் வயிற்றினின்றும் பிறந்தது. அவ்வுலக்கையைக் கண்ட யாதவர்களெல்லாம் அஞ்சி நடுநடுங்கிக் கண்ணபிரானுடைய பிதாவாகிய வசுதேவருக்கு நடந்த காரியத்தை அறிவித்தார்கள். வசுதேவர் அவ்வுலக்கையை அரத்தால் அராவிப் பொடியாக்கி அப்பொடிகளைக் கடலிலே இடும்படிசொன்னார். யாதவர்களும் அவ்வாறே செய்துமுடித்து முனிவர்சாபத்தைக் கடலிலே கரைத்து விட்டோம் என்று நினைத்திருந்தார்கள்.

பின்னர் அந்தப் பொடிகளெல்லாம் அலையினாலொதுக்கப்பட்டுக் கரையிலே வந்து வாட்கோரைப் புல்லாக முளைத்து வளர்ந்திருந்தன. அந்த இரும்புப் பொடிகளுள்ளே கடலைவிதையளவு பிரமாணமுடைய ஒருதுண்டு ஒரு மீனால் விழுங்கப்பட்டு உலுப்தகனென்னும் வேடன்கையிலகப்பட அவன் அத்துண்டினைத் தன்னம்பொன்றின் நுனியிலே வைத்திருந்தான். பின்னர்க் கண்ணபிரானும் பலராமனும் யாதவரும் கடற்கரையிற்போய்க் கடனீரிலாடிக் கடற்றெய்வத்துக்குப் பூசையும் விழாவுநடத்தினார்கள். நடத்தியபின் பலராமனுங் கண்ணபிரானுந் தவம்புரியுமாறு காடுநோக்கினர். நைவேதித்த கள்ளினை அதிகமாக உண்டயாதவர்கள் வெறியினாலே ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசிக் கோபமூள இருப்புலக்கைப் பொடியினாலே அங்கே முளைத்திருந்த அவ்வாட்கோரைகளைப் பிடுங்கி ஒருவருக்குருவர் அடிக்க எல்லோரும் இறந்தார்கள். இக்கதை மகாபாரதத்து மெளசலபருவத்திலுஞ் சீர்காழிப்புராணத்திலும் அற்ப வேறுபாட்டுடன் காணப்படும். சாபஞ்சொன்னவர் கபிலர் என்றும், துருவாசர் என்றுஞ் சொல்வாருமுளர்.

வாணன் சிவனை வணங்கிவசஞ் செய்துலகோர்
காணநின்று தன்வாயில் காக்கவைத்தும்-பாணியெல்லாம்
போனதனாற் புன்னைவன பூபாலா யாரிடத்துந்
தானழக லாதனசெ யேல். (28)

காசிபமுனிவருக்குத் திதி என்பவளிடத்திலே இரணியகசிபு இரணியாக்கன் என்னும் இருவரும் பிறந்தார்கள். இரணியகசிபுவுடைய பிள்ளைகள் பிரகிலாதன், அநுகிலாதன் முதலிய நால்வர். பிரகிலாதன் பிள்ளைகள் ஆயுண்மான் விரோசனன் முதலிய நால்வர். விரோசனனுடைய பிள்ளை மாவலி. மாவலிக்குப் பிள்ளைகள் நூறுபேர். அவருள்ளே வாணன் என்பவனும் ஒருவன். இந்த வாணன் என்பவன் திருக்கைலாச மலையிற்சென்று சிவனுடைய திருநடனத்திற்கு மத்தளம் அடித்துச் சிவனை மகிழ்வித்துத் தான் என்றுங் கண்டு வணங்கும்படி தன்னுடைய சோணிதபுரவாயிலிலே வந்து வீற்றிருக்கும்படி செய்தான். செய்தும் அழகலாதவைகளைச் செய்து பலரோடும் போராடி இறுதியிலே விட்டுணுமூர்த்தியாலே கைகளெல்லாம் இழக்கப்பெற்றான்.

கல்வியிள மைக்குளிலாக் காளிதா சன்மனையாள்
வல்வசையாற் பொல்லா மரணமுற்றுச்-செல்வதனான்
நற்றாமா புன்னைவன நாதா விதையறிந்து
கற்றா லிளமையிற் கல். (29)

அரிகரபுரத்திலுள்ள அனந்தநாராயணன் என்னும் விப்பிரனுக்கு அரிகரன் என்னும் பெயருடைய புத்திரனெருவனிருந்தான். அப்புத்திரன் அதிக மூடனாக ஆடுமேய்க்க நியமிக்கப்பட்டு மேய்க்கும் நாள்களிலே ஒருநாள் ஆடுகளுண்ணும் குழைக்காக ஒரு மரத்திலேறி நுனிக்கொம்பிலிருந்து அடிக்கொம்பைத் தறித்தான்.

கல்வியிலே வாதுசெய்து தன்னை வெல்லுகிறவனையே விவாகஞ்செய்ய நிச்சயித்திருந்த ஓரிராசகுமாரியோடு வாதுசெய்து தோல்விபெற்ற வித்துவான்கள் சிலர், இவனை மரத்தினின்றும் இறக்கிக்கொண்டுபோய் அவ்விராசகுமாரிக்கு வித்துவான் என்று காட்டி அங்கீகரிக்கச்செய்தார்கள். அவ்விராசகுமாரி வித்துவான்கள்செய்த அமடுகளெல்லாம் அறிந்து காளிதேவியிடம்போய் வரம்பெறும்படி அவனை அனுப்பினாள். அப்படியே அவன் காளிதேவியிடம்போய் வரம்பெற்று வித்துவானாய்க் காளிதாசன் என்னும் பெயரும்பெற்றுப் போசராசனுடைய சபை வித்துவான்களுக்குத் தலைவனாக விளங்கினான்.

இப்படிப் போசராசனுடைய சபையிலே பலநாளிருந்து பின் யாதோ ஒரு காரணத்தால் அவனை வெறுத்துத் தன்னுடைய தாசிவீட்டிலேபோய் மறைந்திருந்தான். அப்போது போசராசன் காளிதாசனை வெளிப்படுத்தக் கருதி ஒரு சுலோகத்திற் பாதியை முடித்து மற்றப்பாதி முடிப்பவனுக்கு தன்னரசாட்சியிற் பாதி கொடுக்கப்படும் என்று பிரசித்தஞ்செய்தான். இதனை அறிந்த அந்தத் தாசி காளிதாசனைக்கொண்டு மற்றைப்பாதியை முடிப்பித்து அரசாட்சியின் பாதியைத் தானே பெறக்கருதிக் காளிதாசனை வெட்டிக்கொன்றுவிட்டுச் சுலோகப்பாதியைக் கொண்டுபோய்ப் போசராசனுக்குக் காட்டினாள்.

பத்ரகிரி ராசன் பகர்சனகன மெய்விதுரன்
சித்தபரி சுத்தஞ் செலுத்துதலால்-இத்தரையில்
மன்னனெனும் புன்னை வனநாதா யாவுறினும்
என்ன வறனைமற வேல். (30)

பத்திரகிரிராசன் -கோவிந்தசாமி என்பனுடையமகன்; அரசனாயிருந்து பட்டணத்துப்பிள்ளையுடைய அருளினாலே துறவுபூண்டவன். சனகன் – துரவு போண்ட ஓரரசன். விதுரன் – வியாசனுக்கு அம்பாலிகையிடம் பிறந்தவன்.

காலைதுயில் சீலமபோங் கண்டபக லாக்கம்போம்
மாலைதுயி னோயாம் வகையறிந்து-ஞாலமதிற்
புண்ணியகா லந்தெரிந்து புன்னைவன பூபாலா
எண்ணி யனந்தலா டேல். (31)

இரணியனு மாங்காரத் தெண்ணா துரைத்து
நரகரியா லிற்றான்முன் னாளிற்-சுரதருவைப்
போலே கொடுக்கின்ற புன்னை வனநாதா
மாலே கடிவதுமற. (32)

இரணியன் தவஞ்செய்து பிரமதேவரிடத்திலே வரம்பெற்று மூவுலகுக்கும் அரசனாய் இரணியனேநம என யாவருந் தன்னை வணங்கும்படி கட்டளை யிட்டான். அவன் மகனாகிய பிரகிலாதன் அதனைமறுத்து ஓநமோநாராயணாய என்று சொல்லி வாதாடினான். அவனைநோக்கி உனது நாராயணன் இத்தூணிலும் இருப்பானோ என்று சொல்லி இரணியன் அத் தூணிலே தன்கையால் அடித்தான். அப்போது விட்டுணுமூர்த்தி அத்தூணிலிருந்து நரசிங்கமாகத்தோன்றி அவனைக்கொன்றார்.

துய்ய சிலாதன்சேய் துங்கவிர தங்களெலாஞ்
செய்யநந்தி யாகச் சிறப்புற்றான்-பொய்யலவே
தேன்காண்சொற் புன்னைவன தீரனே யைம்பொறியைத்
தான்காப் பதுவிர தம். (33)

முன்னொரு காலத்திலே திருமறைக்காட்டிலே இருந்த ஒரு பிராமணச் சிறுவர் தம்வீட்டிலே பிச்சைக்குவந்த மற்றொரு பிராமணணுடைய பிச்சையன்னத்துக்குள்ளே ஒரு சிறுகல்லையிட்டு விட்டார். அந்த பிராமணன் அவ்வன்னத்தை அக்கல்லோடுதானே கொண்டுபோய் உண்டான். பின்னர் இச்சிறுவர் வளர்ந்து சாத்திரங்களும் படித்துத் தவங்களுஞ் செய்து கோரதவசி எனப் பேரும் பெற்று அட்டசித்திகளிலும் வல்லராய் யமபுரத்திலும் போய் அங்கே செய்யுந் தண்டனைகளையும் பார்தது வருகையிலே அங்கே ஒரு பெரிய மலையைக் கண்டு இம்மலை யாதென்று வுனாவினார். அப்போது அங்கேநின்றசிலர் அவரை நோக்கிப் “பூமியிலே கோரதபசி என்றொரு பாவி பிச்சைக்குவந்த ஒரு பிராமணனுடைய அன்னத்திலே ஒருகல்லையிட அக்கல்லோடு பிராமணன் அவ்வன்னத்தையுண்டான். அக்கல்லே அக்கோரதபசி இறந்தபின் உண்டற்கு இங்கே மலையா வளர்கின்றது” என்றார்கள். அதனைக் கேட்ட கோரதபசி அஞ்சி அதுசெய்தவன் இதினின்று தப்பிக்கொள்ளும் வகையுளதோ என்று வினாவினான். “பூமியிலே இவ்வளவோர் மலையைக் கரைத்துண்பானாயின்; இம்மலைய*ம் தானாக இங்கே கரைந்துவிடும்” என்றார்கள். கோதரபசி உடனே பூமியிலேவந்து தன்னூரை அடைந்து ஒரு மலையை நியமித்துச் சிறிதுசிறிதாக நாடோறும் இடித்துப் பொடியாக்கி நீரிற்கரைத்து உண்டுவந்தார். அம்மலை உண்டொழிய இயமபுரத்திலுள்ள மலையுங் கரைந் தொழிந்தது. அக்கோரதபசி மலையைக் கரைத்துண்ட காரணத்தாற் சிலாதர் என்னும் பெயர் பெற்றார்.

இந்தச் சிலாதர் புத்திரப்பேற்றினை விரும்பித் திருவையாற்றிலே பஞ்சாக்கினி மத்தியினின்று பலவருடங்களாகத் தவஞ்செய்தார். அத்தவத்திற் கிரங்கிச் சிவபெருமானும் வெளிப்பட்டு முனிவனே! உனக்கு வேண்டும் வரம் யாதென்று வினாவச் சிலாதமுனிவர் ஒரு சற்புத்திரனைத் தந்தருளவேண்டுமென்றார். சிவ பெருமான், “சகலகுணங்களும் நிறைந்த ஒரு சற்புத்திரன் பதினாறுவயதுடையவனாய் நீ செய்யும் யாகபூமியிலே உழுபடைச்சாலிலே தோன்றுவான்” எனச்சொல்லி மறைந்தார். பின்னர் யாகசாலையை உழுதபோது ஒரு மாணிக்கப்பெட்டி தோன்றிற்று. சிலாத முனிவர் அப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே நெற்றிக் கண்ணுஞ் சந்திரசடாமுடியும், சதுர்ப்புயமுமாக விளங்குஞ் சிவமூர்த்தம் இருக்கக்கண்டு துதித்து நின்றார். அப்போது “முனிவனே! பெட்டியை மூடித்திற” என்றோர் அசரீரி தோன்றிற்று. பின்னர் அந்த அசரீரிப்படி மூடித் திறந்தார். அப்பொழுது பெருமான் ஒரு குழந்தையாக அழுதார். சிலாதமுனிவர் அக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய்ப் பிராமணர்க்குரிய கிரியைகளெல்லாஞ்செய்து செப்பீசுவரர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். வளர்த்துவருங்காலத்திலே பதினாறாம் வயசும் வந்தது. பதினாறுவயசென்னும் நியமத்தைக் குறித்துத் தந்தையார் வருந்தினர். புத்திரர் அவர்களைப் பயப்படவேண்டாம் என்று சொல்லி அயனரிதீர்த்தநடுவினின்று ஸ்ரீருத்திரத்தை ஓதி அருந்தவஞ் செய்தார். அப்போது சிவபிரான் வெளிப்பட்டு நித்தியமாகிய சாரூப்பியங் கொடுத்து தமது நாமமாகிய நந்தி என்னும் நாமத்தையுஞ் சூட்டி சுகேசி என்னுங் கன்னிகையையும் மணம்புணர்வித்துக் கணத்தலைமையுங் கொடுத்துத் தமது கோயில் வாயிலிலே காவல்செய்யும்படி சுரிகையும் பிரம்புங் கொடுத்து முடிசூட்டி வைத்தார்.

தண்டமிழ்க்காக் கம்பருக்குத் தாமடிமை யென்றுதொண்டை
மண்டலத்தா ரேட்டில் வரைந்ததுபோல்-எண்டிசைக்கும்
பொன்னான புன்னைவன பூபாலா தென்பாகை
மன்னா கிழமைபட வாழ். 34)

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாட்டாழ்வார் ஏரெழுபதென்னும் பிரபந்தம் பாடியபோது தொண்டைமண்டலத்துள்ள வேளாளர் யாவரும் பெருமகிழ்ச்சியுற்று இதற்கு எங்களாலே தரத்தக்க வேறுபரிசு யாதொன்றுமில்லை எங்களையடிமையாக உமக்குத் தருவதே பரிசாகும் என்றுசொல்லிக் கம்பருக்கு அடிமையோலை எழுதிக் கொடுத்தார்கள்.

பெண்கேட்ட வேந்தனுக்குப் பெண்ணாயைப் பந்தரிலே
கண்காண நின்குலத்தார் கட்டிவைத்த-பண்பதுபார்
நன்பாகைப் புன்னைவன நாதனே யப்படிப்போல்
அன்பான கீழ்மை யகற்று. (35)

நீர்கலந்த பாலையன்ன நீர்பிரித்துக் கொள்வதுபோற்
சீர்கலந்தார் நற்குணமே சேர்ந்துகொள்வார்-ஏர்கொள்
புகழாளா புன்னைவன பூபால னேமிக்
குண மதுகை விடேல். (36)

அர்ச்சுனன்மால் சார்பிழந்த வன்றே கருதலர்*முன்
கைச்சிலைவெற் பாக்கனத்துக் கைதளர்ந்தான் – நிச்சயமே
மன்றலர்சூழ் புன்னை வனநாதா தக்கோரை
என்றுங்கூ டிப்பிரி யேல். (37)

பாண்டவர்கள் அத்தினாபுரத்திலிருக்கும்போது ஒரு தூதன் வந்து யாதவகுமாரர் யாவரும் கடல்விழாக் கொண்டாடிக் கள்ளுக்குடித்துத் தம்முள்ளே பகைத்துப் போராடி இறந்தார்கள் என்றும், கண்ணபிரானும் பலதேவனும் தவம் புரியுமாறு காட்டிற்புகுந்தார்கள் என்றுஞ் சொன்னான். அதுகேட்ட பாண்டவரும் பெண்களும் பெருந்துயரடைந்து புலம்பினார்கள். அவருள்ளே அருச்சுனன் மிகுவிரைவாகத் துவாரகைக்குப் போய் வசுதேவனையும் பெண்களையும் கண்டு புலம்பி அவர்களுக்கும் ஆறுதல்கூறிப் பின் காட்டிற்புகுந்து கண்ணபிரானையும் பலதேவனையுந் தேடியபோது அவர்களுடைய உடம்புகண்மாத்திரமிருக்கக் கண்டு விழுந்து புரண்டழுது கண்ணபிரானுடைய பேரனாகிய வச்சிரமேவனைக்கொண்டு அந்தியக்கர்மங்களைச் செய்வித்தான். செய்வித்தபின் ஏழுநாளுள்ளே துவாரகை கடலாற் கொள்ளப்படும் என்று முன்னரே கண்ணபிரான் சொன்னபடி நடக்குமென்றஞ்சி அங்கே இருக்கவிடாமல் கண்ணன்மனைவியரையும் நகரத்தாரையும் அழைத்துக்கொண்டு துவாரகையை நீங்கிப் பஞ்சவடம் என்னும் இடத்திலே வரப் பொழுதும்பட்டது. அப்போது அவர்கள் துவாரகையிலேயிருந்து கொண்டு வந்த திரவியங்களையும் பெண்களின் ஆபரணங்களையும் கண்டு சில வேடர்கள் அங்கே வந்து பறித்தார்கள். அப்போது தடுத்து வில்லிலே அம்புபூட்டி அருச்சுனன் பிரயோகஞ் செய்தும் கண்ணன்சார்பிழந்தமையாற் பயன்படவில்லை.

வாலிகெட ராமனொரு வாளிதொட்ட வெம்பழியை
மேலொருசென் மத்திலன்னோன் மீண்டுகொன்றான் – ஞாலமதில்
வல்லவனே புன்னை வனநாதா யாரெனினும்
ஒல்லை கெடுப்ப தொழி. (38)

விட்டுணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமச் சந்திரன் கிட்கிந்தைமலையிலே குரங்குகளுக்குத் தலைவனாயிருந்த வாலியென்பவனை அவன்தம்பியாகிய சுக்கிரீவன் பொருட்டு மறைந்துநின்று பாணப்பிரயோகஞ் செய்து கொன்றான். அவ்வாறு கொல்லப்பட்ட வாலி பின்னர் உலுப்தகன் என்னும் வேடனாகப்பிறந்து விட்டுணுவின் மற்றோரவதாரமாகிய கண்ணபிரானை ஒரு காட்டிலே படுத்திருக்கும்போது உள்ளங்காலிலே பாணப் பிரயோகஞ் செய்து கொன்றான்.

முன்பகவற் கீதை முனியுரைக்கக் கன்னிமரந்
தன்படியே கேட்டுலகிற் றார்வேந்தர் – அன்புறல்போல்
மாதவனே புன்னை வனநாதா நன்மையுற
மூதறிவோர் கேள்வி முயல். (39)

இந்திரன்வாள் வைக்க வெடுத்துமுன முற்கலனார்
தந்தருமம விட்டுத் தவமிழந்தார் – சந்ததமும்
பாகையில்வாழ் புன்னைவன பார்த்திவா வாகையினா
லேகை வினைகர வேல். (40)

பிரம்மதேவருடைய மநத்திலே பிறந்த முநிவர் பதின்மர். அவர் மநு, மரீசி, புலத்தியன், தக்கன், புயகன், அங்கிரா, வசிட்டன், பிருகு, அத்திரி, கிருது, என்பவர். அவருள்ளே அங்கிரா என்னும் முநிவர்கணத்தோர் முப்பத்துமூவர். அவர் அங்கிரசு, மாந்தாதா, புருகுச்சன், முற்கலன் முதலியோர். அவருள்ளே முற்கலமுநிவர் தவஞ்செய்யுங்-காலத்திலே அத்தவத்தைக் கெடுக்க நினைத்த இந்திரன் வாட்படையைக் கொண்டுபோய் அம்முனிவருக்கு முன்வைத்தான். அம்முற்கலமுநிவர் அவ்வாட்படையை எடுத்து மரங்களையன்றிப் பலமிருகங்களையும் வெட்டிக் கொன்றார். வாளெடுத்து வெட்டிய காரணத்தினாலே தம்முடைய தருமமுந் தவமுமிழந்து நரகயாதனையும் பெற்றார்.

கொட்டமிட்டே யுத்தரத்திற் கோக்கொள்ளை யாடவந்த
துட்டனர வக்கொடியோன் றோற்றிடுக்கண் – பட்டதனால்
நீதிபரா புன்னைவன நேயனே யேதெனினும்
பேதைமையாக் கொள்ளைவிரும் பேல். (41)

பாண்டவர்கள் விராடபுரத்திலே வசிக்கும்போது விராடனுடைய பசுக்கவரவந்த துரியோதனன்பக்கத்தார்க்கும் விராடன்பக்கத்தார்க்கும் யுத்தம் நடந்தது. அப்போது துரியோதனனும் வந்து பேடிவடிவத்தோடும் அங்கே இருந்த அருச்சுனனாலே முடியும் பங்கப்பட்டுத் தோல்வியும் பகற்றுத் துயருமடைந்தான்.

நம்பனுக்காஞ் செவ்வந்தி நன்மலர்வே சிக்களித்த
செம்பியனு மணமழையாற் சீரழிந்தான் – அம்புவியில்
எவ்வாறும் புன்னைவன மென்னுமுகி லேநீதிக்
கொவ்வாத கோதாட் டொழி. (42)

சாரமாமுனிவர் என்பவர் திரிசிராமலையையடைந்து சிவபூசைசெய்துவரும் நாள்களிலே ஒருநாள் அங்கே நாககன்னிகைகள் கொண்டுவந்து பூசித்த சுகந்தமுள்ள செவ்வந்திமலரைக்கண்டு தாமும் அம்மலர்களாற் பூசிக்கவிரும்பி அக்கன்னிகைகளோடும் பாதலத்திற்போய் அந்தச் செவ்ந்திச்செடிகளைக் கொண்டு வ வந்துந்து அங்கே உண்டாக்கி அம்மலராற் புசித்துவந்தார். அக்காலத்திலே அரசனாக உறையூரிலேயிருந்த பராந்தகன்என்னுஞ் சோழன் அம்மலர்களைப்பறித்துத் தன்னிச்சைப்படி உபயோகப்படுத்தினான். அதனைஅறிந்த அம்முனிவர் சிவபெருமானுடைய சந்நிதியையடைந்து முறையிடச் சிவபெருமான் அவனுடைய உறையூரிலே மண்மாரிபெய்யச் செய்தார். மண்மாரிபெய்து நகரழிதலைக்கண்ட அவ்வரசன் மனைவியையும் அழைத்துக்கொண்டு தன்னகரை விட்டோடினான். ஓடியுஞ் சிவபூசைக்குரிய பூவைக் கவர்ந்த குற்றத்தினாலே நகரோடழிந்து நரகமடைந்தான். செம்பியன் – சோழன்.

மண்டலத்திற் செங்கோல் வழியிற் செலுத்தாமற்
றண்டகனென னும்மொருவன் றான்மடியக் – கண்டதனால்
வேள்புரையும் புன்னைவன வித்தகா வெந்நாளும்
நீழ்சக் கரநெறி நில். (43)

மனுமரபிலே தோன்றிய தண்டகன் என்பவன் தன்னாட்டினைத் தருமமுந்தயையுமின்றி அரசுசெய்துவருநாளிலே குருவாகிய சுக்கிரன் தவஞ்செய்யுங் காட்டிலேபோய்ச் சுக்கிரன்மகளைக்கண்டு மனமயங்கி அவளை வலாற்காரமாகப் புணர்ந்தான். அவளுந் துக்கத்தோடும் போய்ப் பிதாவுக்கு முறையிட்டாள். பிதாவாகிய சுக்கிரன் மிக்க கோபமுடையவனாய் “என்மகளுக்குத் தீராவிடும்பைசெய்த தண்டகனும் அவனாடும் கிளையும் பிறவும் வெந்து பொடியாகுக” எனச் சாபஞ் சொன்னான். அச்சாபப்படியே அவனுடைய நாடுங் காடாகித் தண்டகாரணியம் என்னும் பெயாராயிற்று.

ஈச னுமைமணத்தி லேவடதிக் காழ்ந்ததெனக்
காசினிசீ ராக்கக் கலசமுனி-வாசமுற்றுச்
செய்ததுபார் புன்னைவன தீரனே யப்படிச்சீர்
எய்துஞ்சான் றோரினத்திரு. (44)

இமயமலையிலே சிவபிரானுக்கும் உமாதேவிக்கும் நடந்த கல்யாணத்தைத் தெரிசிக்குமாறு பலரும் போய்ச் சேர்ந்தபோது பாரம்மிகுந்து பூமியின் வடபாகந் தாழத் தென்பாகம் உயர்ந்தது. உலகமுழுதும் நிலைகுலைந்தது. தேவரும் பிறரும் வருந்திச் சிவனேயென்றிரங்கினர். யாவரும் இரங்குதலைச் சிவபெருமானுணர்ந்து பூமியைச் சமப்படுத்தக் கருதி அகத்திய முனிவரை அழைத்துத் தெற்கேயுள்ள பொதியமலையிலே போயிருக்கும்படி கட்டளையிட்டார். அப்படியே அகத்தியரும் பொதியமலையிலே போயிருந்து பூமியைச் சமமாக்கினார்.

சீதைபண்பி ராவணற்குச் செப்பிக் குலங்கெடுத்த
பாதகிமூக் கன்றிழந்த பங்கம்பார் – ஆதலினால்
தாரணிக்குட் புன்னைவனத் தாளாளா தன்னையெண்ணாச்
சேரலர்க்குச் சித்திரம்பேசேல். (45)

சுமாலி என்பவனுடைய மகளாகிய கைகசி என்பவளிடத்திலே விச்சிரவா என்னும் முனிவனுக்கு இராவணன் முதலிய புத்திரர்களும் சூர்ப்பநகை என்பவர்களும் பிறந்தார்கள். இந்தச் சூர்ப்பணகி தண்டகாரணியத்திலே இராமலக்குமணர்களையுஞ் சீதாப்பிராட்டியையுங் கண்டபோது இராமலக்குமணரை விரும்பியுந் தன்கருத்துச் சித்தியாகாது சீதாப்பிராட்டியைக் கவர்ந்துசெல்ல முயன்று இலக்குமணராலே மூக்குவெட்டப்பட்டாள். பின்னர் இராவணனிடம்போய்ச் சீதா பிராட்டியுடைய அழகு முதலியவைகளை அறிவித்தாள். இராவணன்வந்து சீதா பிராட்டியைக் கவர்ந்துபோனான். பின்னர் இராமசுவாமிபோய் இராவணன் முதலியோரைக் கொன்றார். ஆதலால் தன்குலங் கெடுதற்குச் சூர்ப்பணகியே காரணமாயினாள்.

உற்றதொடைப்* புண்ணுக் குடைகீறிக் காட்டிநின்றான்
கொற்றவன்மு னுன்கங்கை கோத்திரத்தான்-வெற்றிபுனை
மன்னான புன்னைவன வள்ளலே யாதலினால்
எந்நாளுஞ் சீர்மைமறவேல். (46)

சகுனிதுரி யோதனற்குச் சர்ப்பனையாக் கேடு
மிகவுரைத்துத் தன்னுயிரும் வீந்த- நகைபார்
மனுநெறிதேர் புன்னை வனநாதா யாவ
ரெனினுஞ் சுளிக்கச்சொல்லேல். (47)

காந்தாரதேசரானாகிய சகுனியென்பவன் வஞ்சகப் புத்திகளைச் சொல்லிக் கொடுத்துத் தன் மருகனாகிய துரியோதனனைக் கெடுத்தழித்தன்றித் தானுங் கெட்டழிந்தான்.

தோராத நூற்றுவருந் தோற்றபஞ்ச பாண்டவரும்
பாரே யகன்றுபட்ட பாரதம்பார் – பேராண்மை
வற்றாத புன்னைவன மாகடலே மிக்கசெல்வம்
பெற்றாலுஞ் சூதுவிரும் பேல். (48)

பாரதவீரர்களாகிய நூற்றுவர் ஐவர் என்னும் இருபாலருள்ளே தருமன் முதலிய ஐவரும் துரியோதனன்முதலிய நூற்றுவரோடுஞ் சூதாடி இராச்சியமுமிழந்து காடடைந்தார்கள். நூற்றுவரும் இராச்சியம் பெறவந்த ஐவரோடும் போராடி இறந்தார்கள்.

வேள்விக்கு மூவருமே வேண்டுமென் றெண்ணாமற்
றாழ்வுசெய்து தக்கன் றலையிழந்தான் – ஏழுலகும்
வீசுபுகழ்ப் புன்னைவன வித்தகா செய்கையறிந்
தேசெய்வன திருந்தச் செய். (49)

இருமைக்கு மெய்த்துணையா மென்றுமார்க் கண்டன்
அரனடியைச் சேர்ந்தா னவன்போல-அருள்பெருகும்
பூசா பலாபாகைப் புன்னைவன மேமனமொத்
தேசேர் விடமறிந்து சேர். (50)

மிருகண்டுமுனிவருடைய புதல்வராகிய மார்க்கண்டேயமுனிவர் இம்மைக்கும் மறுமைக்கும் நற்றுணையென்று கருதிச் சிவனடியைச் சேர்ந்து பூசித்து யமனையும் வென்று தீர்காயுசும் பெற்றார்.

தூயரகு ராமனபாற் சோரமுன்னி மாரீசன்
மாயமா னாய்த்திரிந்து மாய்ந்ததுபார்- ஞாயமன்றோ
வீசுபுகழ்ப் புன்னைவன மேகமே யித்தலத்தி
லேசை யெனத்திரி யேல். (51)

தாடகையென்பவளுடைய மகனாகிய மாரீசனைச் சீதையைக் கவரும்படி இராவணன் நினைத்து இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையைத் தனிமை யாக்கும்படி அனுப்பினான். மாரீசனும் ஒருமானின் வடிவெடுத்துப்போய்ச் சீதாபிராட்டி காணும்படி உலாவினான். மானின் சிறப்பைக்கண்ட சீதாப்பிராட்டி இம்மானை எனக்குப் பிடித்துத் தரவேண்டும் என்று இராமனை வேண்டினாள். இராமனும் வெகுதூரந் தொடர்ந்துபோயும் அகப்படாமைக்கண்டு அம்புசெலுத்த அவ்வம்பினால் விழுந்திறந்தான். விழும்போது “சீதாலக்குமணா” என்ற சொற் கேட்டு இலக்குமணனுந் தொடர்ந்தான். சீதையுந் தனியளாயினாள். அப்போது சந்நியாசியாக இராவணன் சென்று சீதையைக் கவர்ந்தான்.

நித்தியத்தைக் கேட்கப்போய் நித்திரையென் றேகுளறிப்
புத்தியற்ற கும்பகன்னன் பொன்றினன்பார் – மத்தமத
குன்றநிகர் புன்னைவனக் கொற்றவா பாகைமன்னா
என்றுஞ்சொற் சோர்வுப டேல். (52)

இராவணன், கும்பகன்னன், விபூடணன் என்னும் புத்திரர் மூவரும் உக்கிரமான தவஞ்செய்து பிரமதேவரிடத்திலே வேண்டிய வரங்களைக்கேட்டார்கள். அப்போது பிரமதேவர் கும்பகன்னனை நோக்கி உனக்கு வேண்டும் வரம் யாது என்று கேட்கக் கும்பகன்னன் நித்தியவரங்கேட்க நினைத்திருந்தும் சொற்சோர்ந்து நித்திரையென்று குளறிக் கேட்டடைந்தான்.

நளனிருது பன்னன்றோ நாண்மூன்றில் வீமன்
வளநகரி சேர்த்து மனையா-ளுளமகிழ
நின்றதுபார் புன்னைவன நேயனே தன்முயற்சி
என்றுஞ்சோம் பித்திரி யேல். (53)

வீரசேனன் என்பவனுடைய மகனும் நிடததேசராசனுமாகிய நளனென்பவன் சூதாடித் தோல்வியடைந்து நாட்டினைவிட்டுத் தன்மனைவியாகிய தமயந்தியோடுங் காட்டில் வசிக்குங்காலத்திலே ஒருநாளிரவு கலியின்வசத்தினாலே அத்தமயந்தியைப் பிரிந்து அயோத்திநகரிலே போயு இருதுபன்னன் என்பவனுக்குத் தேர்ப்பாகனாக இருந்தான். தமயந்தியும் தேடிக் காணாமற் குண்டினபுரத்திலே பிதாவாகிய வீமனுடைய வீட்டிலே போயிருந்தாள். பின்னர்ச் சயமரமென்று இருதுபன்னனுக்குத் தெரிவித்தபோது இருதுபன்னன் குண்டினபுரத்துக்கு வரப் புறப்படத் தேர்ப்பாகனாயிருந்த நளன் அவனைத் தேரிலேற்றி மூன்றுநாளைக்குள்ளே குண்டினபுரத்திலே கொண்டுவந்து சேர்த்துத் தமயந்தியும் மனமகிழும்படி நின்றான்.

சைவ சமயத்தைத் தலையாகச் சம்பந்தர்
செய்துலகில் யாண்டுஞ் சிறப்புற்றார்-வையமிசைப்
பொங்குபுகழ்ப் புன்னைவன பூபாலா பாகைமன்னா
எங்குந்தக் கோனெனத்தி ரி. (54)

சீர்காழிப்பதியிலே திருவவதாரஞ் செய்த திருஞானசம்பந்தர் தாம்பாடியருளிய தேவாரத்தினாலும் தாஞ் செய்தருளிய அற்புதத்தினாலுஞ் சமணரோடு செய்த வாதத்தினாலுஞ் சிவனே முழுமுதற் கடவுள் எனவும், சைவமே மெய்ச் சமயம் எனவும் எங்குந் தாபித்துப் பெரும்புகழ்பெற்றார்.

முன்செ யறத்தை முகுந்தற் களித்தகன்னன்
பின்செயலு மீவனென்றே பேர்பெற்றான் – தன்செயல்போல்
தாதாவே புன்னைவனத் தாளாளா பூமியின்மேல்
தான மதுவிரும் பு. (55)

சூரன் என்பவனுக்கு மகளாய்ப் பிறந்து குந்திபோசன் என்பவனுக்குத் தத்தபுத்திரியான குந்தி கன்னியாயிருக்குங் காலத்திலே சூரியனைச்சேர்ந்து ஒரு புதல்வனைப் பெற்றுப் பெட்டியிலடைத்துக் கடலிலே விட்டாள். அப்பிள்ளை கரையையடைந்து ஒரு தோப்பாகனால் வளர்க்கப்பட்டுத் துரியோதனனையடைந்து அங்கதேசத்துக்கு அரசனாக்கப்பட்டுக் கன்னன் என்னும் பெயரோடு விளங்கினான். இந்தக் கன்னன் பதினேழாம் நாட்போரிலே அருச்சுனனுடைய அம்பினாலே தாக்கப்பட்டுத் தளர்ந்து தேரிலே விழுந்து கிடந்தபோது கண்ணபிரான் ஒரு மாதவவேதிய வேடத்தோடு சென்று கன்னனை நோக்கி “நின் புண்ணிய முற்றுந் தருக” என்று யாசிக்கப் புண்ணியம் முற்றுங் கொடுத்துப் “பின்செய்வதுந் தருவேன்” என்றான்.

அண்டர் முனிவர்க் கவதாரம் பத்தெடுத்து
மிண்டரைவெட் டித்தரும மேபுரக்கக்-கண்டதனால்
மந்தரனே புன்னைவன வள்ளலே யெந்நாளுஞ்
செந்திருமா லுக்கடிமை செய். (56)

ஈசர்வர முஞ்சிதைந்தே யெய்தியபோ ராக்கமும்போய்த்
தேசழிந்து தானவர்கள் தேய்ந்ததனாற்-காசினியில்
வாழ்பாகைப் புன்னைவன மன்னவா நன்மையன்றிச்
சூழ்தீ வினையகற் று. (57)

தூயரா மன்பகையாற் றுன்பமுற்றுந் தஞ்சமென்றே
சேயினையுந் தேவேந் திரனிழந்த-ஞாயம்பார்
மாதுங்கா புன்னைவன மன்னவா வஃதறிந்
தேதுன்பத் திற்கிடங்கொ டேல். (58)

எதிரிபலம் பாதிகொள்வ னென்றறிந்து வாலி
வதைபுரிய ராமன் மறைந்து-துதிபெறல்பார்
பாரளந்த புன்னைவனப் பார்த்திவா வப்படியே
சீரறிந்து தூக்கிவினை செய். (59)

வினதை என்பவளுடைய மகனாகிய அருணன் சூரியனுக்குத் தேர்ப்பாகனாயிருக்குங் காலத்திலே தேவலோகத்திற் போய்ப் பெண்வடிவத்தோடு நின்ற அருணனை இந்திரன் கண்டு விரும்பித் புணர்ந்து வாலி என்பவனைப் பெற்றான். இந்த வாலியென்பவன் சிவனை வழிபட்டுத் தன்னுடனே எதிர்க்கும் எதிரிகளுடைய பெலத்திற் பாதி தன்னைச் சேருமாறு வரம்பெற்றுக் குரங்குகளுக்குத் தலைவனாய்க் கிட்கிந்தையிலே வசித்தான். அதனையறிந்த இராமர் மறைந்து நின்று பாணம் விட்டுக் கொன்றார்.

தாருகத்தார் மூவரையுந் தாழ்வுசெய்து தங்கடங்கள்
காரியத்தால் வேறு கதியளித்தார்-தாரணிக்கண்
மாதவனே புன்னை வனநாத மீதிடுக்கண்
ஏதெனினுந் தெய்வமிக ழேல். (60)

எல்லா மதத்திற்கு மெவ்வுயிர்க்கு நீர்நிழல்போல்
நல்லா தரவை நயந்தருளி-வல்லாண்மை
சூழ்தேசு புன்னைவனத் தோன்றலே நீயுமென்றும்
வாழ்தேசத் தோடொத்து வாழ். (61)

மாதுசித்தி ராங்கிசொல்லான் மைந்தனைக்கை கால்களைந்
தேதுபெற்றா னோர்மன்ன னிப்புவியில்-நீதிநெறி
மாதவனே புன்னை வனநாதா பாகைமன்னா
ஏதெனினுந் தையல்சொற்கே ளேல். (62)

சித்தாராங்கியென்பவள் இராசராசநரேந்திரன் என்னும் அரசன் மனைவி. இவள் ஒருநாள் அந்தப்புரத்தில்வந்த சக்களத்திமகனைக்கண்டு மோகங்கொண்டு புணரும்படி பிடித்திழுக்க அவன் மறுத்தோடினான். அதனால் அவன்மேற் கோபமுற்று அரசனிடம்போய் அரசனே! நின்மகன்செய்த அநீதியைப் பாரென்று வளைத் தழும்பையுங் கிழிந்த புடவையையுங் காட்டி முறையிட்டாள். அரசனும் அவள் சொல்லை நம்பி மகனுடைய கைகால்களை வெட்டுவித்துப் பின்னர் உண்மையறிந்து பெருதுந் துக்கப்பட்டான்.

பண்டு துரோணன் பழமையெண்ணாப் பாஞ்சாலன்
மிண்டமரி லர்ச்சுனனால் வீறழிந்தான்-கண்டதன்றோ
பொன்னாளும் புன்னைவன பூபாலா தன்னையிறந்
தெந்நாளுந் தொன்மைமற வேல். (63)

இளமைப்பருவத்திலே தன்னோடு பிரியநண்பனாகத் துரோணாச்சாரியர் நடந்த்தையுந் தான் அவருக்கு அரசனாய் வருங்காலத்திலே உலகிற் பாதி தருவேன் என்று சொன்னதையும் மறந்து துரோணாச்சாரியரை அறியேன் என்ற பாஞ்சால தேசராசனாகிய யாகசேனன் பின்னர்த் துரோணாச்சாரியராலே ஏவிவிடப்பட்ட அருச்சுன்னோடு போராடித் தோல்வியடைந்தான்.

சண்டனொடு மிண்டன் றனைவென்ற சங்கரிபால்
மிண்டுமகு டன்பொருது வெட்டுண்டான்-புண்டரிக
மாதாரும் புன்னை வனநாதா நீணிலத்தி
லேதோற் பனதொட ரேல். (64)

முன்னொரு காலத்திலே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரிலே தேவர்களால் அசுரர்கள் இறந்தார்கள். புத்திரரை இழந்த அசுரமாதாவாகிய‌ திதியென்பவள் தன்மகளைநோக்கித் தேவர்களெல்லாரையும் வெல்லத்தக்க ஒரு புத்திரனைப் பெறும்படி தவஞ்செய்யவிட்டாள். அவள் அவ்வாறே தவஞ்செய்து சுபாரிசமுனிவருடைய அருளினாலே மகிடன் என்னும் புத்திரனைப் பெற்றாள். இம்மகிடாசுரன் போரிலே பலரையும் வென்று பின்னர்த் துர்க்கையோடும் போராடி வாளால் வெட்ட‌ப்பட்டான்.

அரசமரந் தொல்கடனீந் தந்தணனைக் கால‌
புரவழியிற் காத்த புகழின் – பெருமையைப்பார்
மன்றலந்தார்ப் புன்னைவன வள்ளலே யார்க்கும்
என்றுநன் மைகடைப்பி டி. (65)

நடோடும் போது நடுவோட வேண்டுமென்று
தேடுந் தருமர்சொன்ன சீரதனால் – நீடு
பொருந்துபுகழ்ப் புன்னைவன பூபாலா நன்றாய்த்
தெரிந்து நாடேற்பன செய். (66)

சஞ்சரித்து நின்ற சைலங் களையெல்லாம்
வெஞ்சினத்தா லிந்திரன்முன் வெட்டுதலாற் – செஞ்சரணால்
மண்ணளந்த புன்னை வனநாதா வென்றுநன்மை
எண்ணிநிலை யிற்பிரி யேல். (67)

முன்னொருகாலத்திலே மலைகளெல்லாம் சிறகுடையனவாய் ஆகாயத்திலே பறந்து பட்டணங்களிலே போய்த் தங்கிப் பட்டணங்களையுஞ் சீவராசிக‌ளையும் அழித்துப் பெருந்துயர் விளைத்தன. அதனையறிந்த இந்திரன் அம்கமலைக‌ளின் சிறகுகளையெல்லாம் வெட்டிவிட்டான்.

கண்ண‌னருண‌ மைந்தர் கருங்கடனீராடி
எண்ணரும்வாட் கோரையினா லிற்றனரால் – புண்ணியத்தின்
கண்ணான் புன்னைவனக் காராளா மேல்வருஞ்சீர்
எண்மையினா னீர்விளையா டேல். (68)

கோசிகனார் மாணக்கர் கூறரிய நாய்நிணத்தைப்
போசனஞ்செய் தேபுலையாய்ப் போயினார் – வீசுபுகழ்த்
தென்பாகைப் புன்னைவன தீரனே யெள்ளளவும்
இன்பான நுண்மைநுக ரேல். (69)

கற்றதனா லுங்கள் கவிவீர ராகவமால்
வெற்றிபர ராசசிங்க மேன்மைசெயப் – பெற்றதனால்
ஞாலமதிற் புன்னைவன நாதனே நற்பருவ‌
காலமதி னூல்பல கல். (70)

அண்டா முதலோர்க் கமிர்தமய மாவடிவு
கொண்டறமே முத்திக்குங் கொள்கருவாக் – கண்டதனால்
தக்கபுகழ்ப் புன்னைவனத் தாளாளா வெப்பயிர்க்கும்
மிக்ககுண நெற்பயிர்வி ளை. (71)

வேத நெறிநின்ற வேதியர்போ னின்மரபோர்
ஆதிமுத லாப்புகழை யாண்டதுபார் – ஆதுலர்க்குத்
தாயான புன்னைவனத் தாளாளா பாகைமன்னா
நீயுநேர் கோனெறி நில். (72)

செய்தவமும் பாராமற் சீராமன் சம்புகனை
நைதலின்றிச் சென்னிகொண்ட ஞாயம்பார் – உய்தரும‌
வானான புன்னை வனநாதா துட்டர்பங்கி
லேநை வினைநணு கேல். (73)

ஸ்ரீராமச்சந்திரன் அரசுசெய்யுங்காலத்திலே சம்புகன் என்னும் பெயருடைய சூத்திரவருணத்தோன் ஒரு சோலையிலே தலைகீழுங் கால்கள் மேலுமாகத் தூங்கிக்கொண்டு தவஞ்செய்தான். அவன் தனக்குரியதல்லாத தவத்தினைச் செய்த காரணத்தினால் அந்நாட்டிலே ஒரு பிராமணச் சிறுவன் அகாலதிலே இற‌ந்தான். இறந்த சிறுவனையும் எடுத்துக்கொண்டு தாயுந் தந்தையும் வந்து ஸ்ரீராமச்சந்திரனுக்கு முறையிட்டுப் புலம்பினார்கள். இராமச்சந்திரனும் விசாரணை செய்து சம்புகன் தவஞ்செய்தலே அகாலமரண‌மாக அச்சிறுவன் இறத்தற்குக் காரணமென்றறிந்து பல‌திசையுந் தேடித் தவஞ்செய்யுஞ் சம்புகனைக்கண்டு வாளினால் அவன்றலையை வெட்டி வீழ்த்தினான்.

கந்தருவன் றஞ்செமன்ற காலையின்மா யோன்பகையைச்
சிந்தையில்வைத் தெண்ணினனோ தேர்விசயன் – பைந்தமிழ்தேர்
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா யாரெனினும்
ஏற்றதற்பி னொய்யவுரை யேல். (74)

பசியூண் விலக்கினர்முன் பார்த்திவன் சீயாக்காய்
பிசைபுனலுண் டப்பசியைப் பேர்த்தான் – இசைபெறவே
பொன்னாளும் புன்னைவன பூபாலா வப்படியே
எந்நாளு நோய்க்கிடங்கொ டேல். (75)

பரதன் என்னும் அரசன் போசந‌காலஞ் சிறிதுந் தவறாமல் “அருந்தியத‌ற்றது போற்றியுண்டு” நோய்க்கிடங்கொடாமல் நடந்து வருதலை அறிந்த ஒருவைத்தியன் அரசனுடைய வேலைக்காரனைத் தன்வசமாக்கி அரசன் தைலமிட்டிருக்கும் ஒருதினத்திலே அவனது போசன‌காலத்திற்குச் சமீபமாகச் சீயாக்காயயும் வெந்நீரையும் அமைத்து வைக்கும்படி செய்தான். அரசன் ஸ்நான மண்டபம் அடைந்தவுடனே பசியுமுண்டாயிற்று. போசநமகப்படவில்லை. பின் அந்தச் சீயாக்காயையும் வெந்நீரையும் உன்டு தன் பசியைப் போக்கினான்.

சூடுமுடி ராகவனார் சூடாமற் கைகேயி
கேடுசொன்ன வார்த்தை கிடைப்பதனால் – நீடுபுகழ்க்
காராளா புன்னைவன்க் கற்பகமே யாரிடத்தும்
*ஏரா பழிப்பனபக ரேல். (76)

அயோத்திநகர‌ராசனாகிய தசரதச்சக்கரவர்த்திக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என மூன்று மனைவியருளர். கோசலையிடத்திலே ஸ்ரீராமனும், கைகேயியிடத்திலே பரதனும், சுமித்திரையிடத்திலே இலக்குமணன், சத்துருக்கினன் என்னும் இருவருமாக நான்குபுத்திரர் அச்சக்கரவர்த்திக்குப் பிறந்தார்கள். நால்வரும் வளர்ந்து சமர்த்தராய் விளங்கினர். தசரதச் சக்கரவர்த்தியும் வெகு வருடங்களாக அரசுசெய்து பின்னர் வயோதிகானாய்த் தளர்ச்சியுற்றுத் தன்னரசியலை இராமனுகுக் கொடுக்க நிச்சயித்தான். இதனை அறிந்த கூனியென்பவளாலே வ‌ப்பட்ட கைகேயி சக்கரவர்த்தியை நோக்கித் தன்மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டிற்போகவேண்டும் என்றும் இருவரங் கேட்டாள். சக்கரவர்த்தியும் முன்னொருகாரியத்திலே கைகேயிடத்திலே மகிழ்ச்சியுற்ற‌போது உனக்கு இரண்டு வரம் நீ கேட்டபடி தருவேன் என்று சொல்லியிருந்தபடியே கைகேயி கேட்ட இருவரத்தையுங் கொடுத்தான். இராமன் காடுசென்றான்.

வாசுகிமுன் னாட்பழகும் வானோர்க் கமுதெழுமுன்
மோசமுற நஞ்சுமிழ்ந்த மூர்க்கம்பார் – காசினியில்
நன்றறியும் புன்னைவன நாதா விஃதறிந்தே
என்றும்பாம் பொடுபழ கேல். (77)

காசிபமுனிவருடைய மனைவியர்களுள் ஒருத்தியாகிய கத்திரு என்பவளிட‌த்திலே அனந்தன், வாசுகி முதலிய பல பாம்புகள் பிறந்தன. அவற்றுள்ளே வாசுகி என்னும் பாம்பைத் தேவர்கள் திருபாற்கடலைக் கடைந்தபோது தாங்கள் கொண்ட மரத்திலே கயிறாகப்பூட்டி இழுத்தார்கள். அப்போது வாசுகி என்னும் பாம்பு நஞ்சினை உமிழ்ந்தது.

சாபால ராமன் சபையிலோர் சொற்பிழைத்துக்
கோபால னஞ்சுடாமெய் குன்றியே – சோகமுற்றான்
ஆதலினாற் புன்னைவனத் தையனே யாவரிடத்
தேதும் பிழைபடச்சொல் லேல். (78)

நீலிபழி யைக்களைந்து நின்மரபில் வேளாளர்
சூலிமுது கிற்சூடச் சோறிட்டு – மேலான‌
ஞாயம்பார் புன்னைவன நாதனே யப்படியே
நீயுமிகப் பீடுபெற நில். (79)

ஒருபெண் தன்னாயகன் நாடோறும் வேறு பெண்களிடஞ்சென்று கொண்டாடி வருதலையறிந்து கோபத்தோடும் அவனைத் தடுத்துத் தன்வசமாக்கும்படி வேண்டிய உபாயங்கள் செய்தாள். அவனோ இவள் என்கருத்திற்கு மிகவும் இடையூறாய் நிற்கிறாளென்று நினைத்த்க்கொண்டு அடுத்தவூரிலே நடக்கும் ஒரு சிறப்புக் காட்டுகிறேன் என்று சொல்லி அவளைக் கூட்டிகொண்டுபோய் ஒரு காட்டின் நடுவிலே விட்டுக் கொன்றுவிட்டான். பின் அவள் ஒரு பிசாசாய்ப் பிறந்து நீலி என்னும் பெயர் பெற்று அவனைக் கொல்லக் கருதியிருந்தாள். அவ‌னும் பின்னரிறந்து ஒரு செட்டியாகப் பிறந்திருந்தான்.

பின்னர் அந்தச் செட்டியின் சாதகத்தை ஒரு சோதிடன் பார்த்து அந்தச் செட்டியை நோக்கி நீ வடதிசை நோக்கிச் செலவாயாயின்; ஒரு பேயினாலே நிச்சயமாய் மரணமடைவாய்; நான் ஒரு மந்திரவாள் தருகிறேன். அந்த வாள் உன்னிடமிருக்கும் வரையும் அந்தப் பேய் உன்னை அணுகமாட்டாதென்று சொல்லி வாளையுங் கொடுத்துவிட்டுச் சென்றான். அச்செட்டியும் அவ்வாளை எடுத்துக் கொண்டு வியாபாரஞ் செய்யும்படி வடதிசைநோக்கிப் போனான்.

நீலி என்னும் பேயும் அச்செட்டியின் மனைவிபோல் வடிவங்கொண்டு ஒரு கள்ளிக்கொம்பினை ஒருகுழந்தையாக்கிக்கொண்டு அவனைத் தொடர்ந்தது. அவன் சில குறிப்பினாலே இது பேயென்றறிந்துந் தன்கையிலிருக்கும் மந்திரவாளின் வலியினாலே சிறிதும் பயப்படாமல் அங்கே எதிர்ப்பட்ட வேளாளர்களையடைந்தான். அந்தப் பேயும் அவர்களையடைந்து “இவர் என்கணவர்; வெகுநாளாக என்னோடு விரோதமாயிருக்கிறார், நான் எவ்வளவோ பணிந்து நடந்துஞ் சிறிதும் இரக்கமின்றி என்னை வெறுத்துத் தள்ளுகிறார். நீதிமான்களாகிய நீங்கள் அவ‌ருக்கு என்மேலுள்ள கோப‌த்தை நீக்கி இம்மண்டபத்திலே அவரையும் என்னையுஞ் சில வார்த்தை பேசும்படி விடவேண்டும்” என்று வஞ்சகமாய்ச் சொல்லிற்று. செட்டியும் அவர்களை நோக்கி ” இவள் என்மனைவியல்லள்; கொல்லும்படி வந்த ஒரு பேய்” என்றான். அதுகேட்ட நீலிஎன்னும் பேய் ‘ என்னிடுப்பிலுள்ள இக்குழந்தையை இவரிடம் விட்டால் அது இவரென்கணவர் என்பதை உங்களுக்கு நிச்சயமாய்க் காண்பிக்கும்” என்று சொல்லி அக்குழந்தையை நிலத்திலேவிட அக்குழதையும் அச்செட்டியின் மேலேறி விழுந்து விளையாடிற்று.

அது கண்ட வேளாளரெல்லாஞ் செட்டியை நோக்கிச் “செட்டியாரே! நீரேன் பொய் சொல்லுகிறீர்? இவள் உம்முடைய மனைவிதான்! இவள் வருந்தாமல் இம்மண்டப்பத்திற் புகுந்து இவளுக்குச் சமாதானஞ்சொல்லிவாரும்” என்றார்கள். தன்கையில் வாளுடனே அந்தச்செட்டி மண்டபம் நோக்கிச் சென்றான். அது கண்ட நீலி அந்த வேளாளரை நோக்கி ” இந்த வாளினை வாங்கிக்கொண்டு விடுங்கள்; வாளோடு வருவாராயின் என்னைக் கொன்றுவிடுவார்” என்றது. அவ‌ர்கள் அவ்வார்த்தையை நிச்சயமென்று நம்பி வாளினை வாங்கச் செட்டி பயந்து இந்தவாளிருந்தபடியால் இதுவரையும் பிழைத்திருந்தேன். இது என்னைவிட்டு நீங்குமாயின் இந்தப் பேயினாலே இறந்துபோவேன்” என்றான். நீர் ஒருவர் இறந்து போவிராயின் நாங்கள் எழுபதின்மரும் உயிர் விடுகின்றோம் என்று தேற்றி அவ‌ர்கள் அவனை அனுப்பினார்கள்.

அவன் புகுந்த அக்கணமே அந்தப் பேயும் புகுந்து அவனைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவன் தாய்போல வடிவமெடுத்துவந்து அவ்வேளாளர்களை நோக்கி “உங்களிடத்திலே வந்த என்மகனை யாதுசெய்தீர்கள்?” என்று கேட்டது. அவ‌வேளாள‌ர்கள் வெகுநேரம் பார்த்து செட்டிவாராமையாற் போய்க் கதவைத் திறந்துபார்த்து செட்டியினுடலம் கிழிக்கப்பட்டிருத்தலைக்கண்டு தாங்கள் எழுபது பேருந் தீயிலே குதித்துச் சொன்னசொல்லுந் தவறாமல் இறந்தார்கள்

விழுமிந் திரத்துய்மன் மிக்கபுகழ் சொல்லிக்
கழறமுன்போ னாடடைந்த காதை – பழமையன்றோ
செய்ய புகழ் புன்னைவன தீரனே நீயுமிந்த‌
வையம் புகழ்பட வாழ். (80)

இந்திரத்துய்மன் என்னும் அரசன் எத்தனையோ யாகங்கள் செய்து தேவுல‌கம்பெற்று எண்ணிறந்த இந்திரகாலம் போகமநுவித்து வரும் நாள்களிலே தேவர்கள் அவனை நோக்கி நின்பெயர் பூமியிலே நிலைபெறாமையால் நீ பூமியிற் போய்ப் பெயர்நாட்டிவரக் கடவாய் என்று தள்ளிவிட்டார்கள். பூமியிலே விழுந்த அவ்வரசன் மார்க்கண்டேய முனிவரைக்கண்டு “முனிவரே! என்பெயர் உலக‌த்திலே உண்டா இல்லையா?” என்று கேட்டான். மார்க்கண்டேய முனிவர் “சிவனிடத்திலே நான் சிரஞ்சீவியாக வரம்பெற்ற நாண்முதல் இன்றுவரையும் 187 பிரமகற்பமாயிற்று; இதற்குள்ளே உன்பெயரில்லை; என்னினும் மிக்க வய‌துடைய கூகையொன்று இமய‌மலைச்சாரலிலே தவஞ்செய்து கொண்டிருக்கின்றது. அதனைக் கண்டு கேட்டறி” என்றார். என்றவுடனே இந்திரத்துய்மன் ஒரு வெள்ளைக் குதிரை வடிவங்கொண்டு மார்க்கண்டேயரையுஞ் சுமந்துகொண்டு போய் அக்கூகையைக் கண்டு கேட்டான். கூகை “நான் 224 பிரமகற்பங் கண்டேன். இதற்குள்ளே உன் பெயரில்லை; சரசுவதி நதி தீரத்திலே என்னினும் மூத்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குரண்டதேவர். அவரைக்கண்டு கேட்டறி” என்றது. அதனையுங் கூட்டிக்கொண்டுபோய் அக்குரண்டதேவரைக் கண்டு கேட்டான். குரண்டதேவர் “நான் 350 பிரமகற்பங் கண்டுளேன். இத‌ற்குள்ளே உன் பெயர் வரவில்லை. கோபஞ்சக‌த்திலிருந்து தவஞ்செய்யுங் கூர்ம‌ தேவர் என்னினும் மூத்தவர். அவரைக் கண்டு கேட்டறி” என்றார். பின்னர் எல்லாரும் போய் அக்கூர்மதேவரைக் கண்டு கேட்டபோது கூர்மதேவர் இந்திரத் துய்மன் செய்த தர்மம் முதலியவைகளை யாவர்க்கும் புலப்படச்சொன்னார். உட‌னே தேவர்கள் விமானத்தோடுவந்து ” அரசனே! நின்னைப் பூமியிலே விட்டது
நின் கீர்த்தியை விளக்க” என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். அரசனும் மார்க்கண்டேயர் முதலியவர்களை ஆங்காங்கு விடுத்துத் தேவர்களுட‌ன் தேவுலகம் புகுந்தான்.

தலந்தீர்த்தந் தானந் தவஞ்சேய்சந் தானம்
நலம்பெறலாற் றேவரெலா நாடி – நிலந்துதிப்பார்
மந்திரியே புன்னை வனநாதா வாதலினாற்
புந்தியினிற் பூமி விரும்பு. (81)

தந்தை யிரணியனைத் தள்ளிப் பிரகிலாதன்
சிந்தையின்மா யன்றுணையே தேடினாந்–சந்ததமும்
நட்பறியும் புன்னைவன நாதமகி பாவுலகிற்
குட்பெரியோ ரைத்துணைக் கொள். (82)

கோவதைசெய் யப்பிடித்த கோளரிக்குத் தன்னுடலை
ஈவனென்றா னேதிலீப னென்னுமன்னன்–ஆவதனால்
நட்பாளும் புன்னைவன நாதமன்னா வெப்போதும்
உட்பேதை மையகற் று. (83)

திலீபன் என்பவன் சூரியவமிசத்துள்ள ஓரரசன். இவன் பிரபல கீர்த்திமானாய் அரசியல் செய்து வருங்காலத்திலே புத்திரப்பேறின்றிப் பிதிர்கடனை எப்படித் தீர்ப்பேன் என்று மிக்க விசனமுற்றுத் தன்மனைவியோடு குலகுருவாகிய வசிட்டமுனிவரையடைந்து தன்குறையை முறையிட்டான். வசிட்டமுனிவரும் திலீபனுக்குச் சந்ததி பிறப்பதற்குத் தடையாயுள்ள காரணத்தை ஆராய்ந்து “அரசனே! நீ ஒருமுறை தேவலோகம் போய் வருகையிலே வழியிற்கிடந்த காமதேனுவை வழிபடாது புத்திரோற்பவகாலங்கருதி விரைந்து வந்தாய்! அக்காமதேனு தன்னை அவமானஞ்செய்தாய் என்று கோபித்துச் சாபங்கூறிற்று.

அக்காமதேனுவின் கன்றாகிய இந்த நந்தினியை விரதம்பூண்டு வழிபடுவாயா யின்; அச்சாபநீங்கப்பெற்றுப் புத்திரப்பேற்றினையும் அடைவாய்” என்றார். பின்னர் திலீபன் அம்முனிவரை நோக்கி இந்த நந்தினியை எப்படிவழிபட வேண்டும் என்று கேட்டான். வசிட்டமுனிவர் திலீபனை நோக்கி “அரசனே! காமம் முதலியவைகளை வெறுத்துச் சாகமூலபலாதிகளைப் புசித்துப் பரிசுத்தத்தோடும் இந்த நந்தினிக்குப் பூசை செய்தி. இந்த நந்தினி நிற்கும்போது நீயும் நிற்றி! போகும்போது நீயும் போகுதி1 நீருண்ணும்போது நீயும் உண்ணுதி! கிடக்கு்போது நீயும் இருத்தி! இது நின் வழிபாட்டிலே மனம் மகிழும்வரைக்கும் வேறொன்றை எண்ணாதே! இதற்கு யாதொரு தீங்கும் வாராது காத்தி! நின் பெருந் தேவிதானும் இது மேயச் செல்லும்போது என்னுடைய ஆச்சிரம வெல்லைவரையும் கொண்டுபோய் விடவேண்டும். அது திரும்பி வரும்போது அவ்வெல்லையிற் போய்நின்று வழிபட்டுப் பூசித்துப் பின்வரல் வேண்டும்”
என்று கட்டளையிட்டு ஆசீர்வதித்துப் பன்னசாலையில் விடுத்தார்.

பின்னர் மற்றைநாள்தொடங்கி வசிட்டமுனிவர் சொல்லியபடியே விரதம் பூண்டு நந்தினியை பூசித்து வழிபட்டு வந்தான்.அப்படியே இருபத்தொரு நாள் சென்றொழிந்தது. அவ்விருபத்தொராம் நாளிலே அந்த நந்தினி அரசனுடைய அன்பினைப் பரிசோதிக்கக் கருதி மேய்ந்து மேய்ந்து இமயமலைச்சாரலிற் போயிற்று. அரசன் இமயமலையின் சிறப்புக்களை ஒருகணம் வரையிற் பார்த்து நின்றான். நந்தினி இளம்புல்லை மேய்ந்துகொண்டு அங்குள்ள ஒரு முழைஞ்சிலே புகுந்தது. அப்போது சிங்கமொன்று நந்திநிமேலே பாய நந்தினி குளறி விழுந்தது. அரசன் பாணம்விட முயன்றுங் கைகள் பந்தமாயின. பின்னர் அரசனுஞ் சிங்கமுஞ் சம்பாஷணை செய்தபோது அரசன் இப்பசுவை விடும்படியும் அதற்காகத் தன்னுடலை யுண்ணும்படியுங் கேட்டுப் பல நியாயங்காட்டி யாசித்தான். பின்னர்ப் பசுவாகிய நந்தினி சிங்கமாய் வந்ததுந் தானே என்று சொல்லிப் புத்திரப்பேற்றிற்கும் அருள் செய்தது. இப்படியே நந்தினியின் வரத்தினாலே இத்திலீபன் இரகு என்பவனைப் பெற்றான்.

சச்சந் தனைமுன் சதிகட்டி யங்காரன்
நிச்சயமாய்ச் செய்த நிறைபிழைபார் – பொற்சிகர
தீபமென்னும் புன்னைவன தீரனே யானதுகண்
டேபைய லோடிணங் கேல். (84)

சச்சந்தன் என்பவன் ஏமாங்கதநாட்டிலே இராசமாபுரத்திலே அரசு செய்துவந்த ஓர் அரசன். இவனுக்கு மந்திரிமார் பலர். அவருள்ளே கட்டியங்காரன் என்பவனும் ஒருவன். சச்சந்தன் ஸ்ரீதத்தன் மகளாகிய விசயை என்பவளை விவாகஞ்செய்து பேரழகுடைய அவண்மேற்கொண்ட ஆசைப்பாட்டின் மிகுதியினாலே இடையறாமல் அவளோடு சுகமநுபவிக்கக் கருதி இராச்சியபாரத்தையும் வெறுத்து மற்றை மந்திரிமார் சொல்லையுங் கொள்ளானாய்க் கட்டியங்காரனை அழைத்து “நான் மனைவியாகிய விசயைப் பிரிதலாற்றேன். நீயே அரசனாய் இந்நாட்டினைக் காத்துவருக” என்று அவனை நியமித்து மனைவியைப் பிரியாது வாழ்ந்தான். பின்னர்க் கட்டியங்காரன் சேனைகளோடும் போய் அரசனோடு போராடி அரசனைக் கொன்றுவிட்டுத் தான் கருதியபடியே இராச்சியத்தைத் தன்னுடையதாக்கிக் கொண்டான்.

நவநிதி பெற்றுந்தன் னம்பாரு ளில்லார்க்
கவிழுநல்கான் காப்பா னவன்போற் – புவிதழையத்
தேன்பொழியும் புன்னைவன தீரனே நீயென்றும்
வான்பொரு டனைப்போற்றி வாழ். (85)

சங்கரனை யன்றியுமை தன்னைவலஞ் செய்யாமற்
பிங்கிருடி மூன்றுகால் பெற்றதனாற் – றுங்க
மனந்தளராப் புன்னை வனநாதா தொண்டர்
இனம்போற் றடிப்பிரி யேல். (86)

வேதாந்தங்களை நன்றாகக் கற்றுணர்ந்த பிருங்கி என்னும் முனிவர் “சிவனொருவரே தியானிக்கப்படத்தக்கவர்” என்பது முதலிய சுருதிகளைக் கடைப்பிடித்துத் தேவியாகிய உமையை விலக்கிச் சிவனை மாத்திரம் வலஞ்செய்துவந்தார். இதனை அறிந்த உமாதேவியார் எம்பெருமானுடைய திருமேனியிலே தாமும் பாதியாயிருக்கக் கருதித் திருக்கேதாரத்திலே போய்ச் சிவனை நோக்கித் தவஞ்செய்து சிவனுடைய திருமேனியிலே தாமும் பாதியாயினர். பின்னர்ப் பிருங்கிருடி வண்டு வடிவங்கொண்டு தேவியுஞ்சிவனுமாயிருக்குந் திருமேனியிலே தேவியை விலக்கவெண்ணி நடுவே துளைத்தார். அதுகண்ட உமாதேவியார் அவ்வண்டின் சக்தியை இழுத்துவிட வண்டுருவங்கொண்ட பிருங்கிருடி கீழே விழுந்தார். அதுகண்ட சிவன் அம்முனிவருக்கு முன்னொருகாலும் ஒருதண்டமுங் கொடுத்தார்.

கஞ்சனூ ராழ்வார் கனன்முக்கா லிக்குளிருந்
தஞ்சாமற் சைவநிலை யாக்கினர்*பார்–தஞ்சமென்பார்
புண்ணியமே மெய்த்துணையாம் புன்னைவன பூபதியே
எண்ணி மனந்தடுமா றேல். (87)

இவர்-அரதத்தாசாரியர்- கஞ்சனூரிலே இருந்த வைஷ்ணவப் பிராமணர்களுள்ளே ஒருவராகிய வாசுதேவர் என்பவருடைய புதல்வர். அதுபற்றி இவரைக் கஞ்சனூராழ்வார் எனவுஞ்சொல்வர். இவர் பிதாவாகிய வாசுதேவர் கொள்ளும் விஷ்ணுசமயத்தை இளம்பருவந் தொடங்கி மறுத்துரையாடி சைவசமயமேன்மைதளையே பாராட்டி வந்தார். வைஷ்ணவர்கள் வந்து விஷ்ணுபரத்துவம் பேசியபோது யான் ஒழுகக் காய்ச்சிய இருப்பு முக்காலியின் மேலிருந்து சிவபிரானே கடவுளென்று சாதிப்பேன் என்று சொல்லி அவ்வாறு காய்ச்சி வைக்கப்பட்ட இருப்பு முக்காலியின் மேலிருந்து சதுர்வேத‌தாற்பரியம் முதலியவைகளைச் சொல்லிச் சைவசமயத்தைத் தாபித்தார். அப்போது சிவானுக்கிரகத்தினாலே அந்தக் காய்ச்சிய முக்காலி அவருக்குச் சீதளமாயிருந்தது.

காகம் பசித்துவரக் காரிருளி ன‌ன்மைசெய்த‌
கூகை பகற்பட்ட கொடுமையினால்—வாகு
புனைதாமா புன்னைவன பூபாலா மோச‌
மெனமாற்றா னுக்கிடங்கொ டேல். (88)

தென்தேசத்திலே மயிலை என்னும் நகரிலே ஓராலமரத்திலே மேகவர்ணன் என்னும் பெயருடைய காகராசன் தன்னினங்களோடும் வாசஞ்தெய்தது. அந்தக் காகங்களையெல்லாம் உருமர்த்தனன் என்னும் கூகையரசன் தன்னினங்களோடு இராக்காலங்களிலே வந்து கொல்லத் தொடங்கிற்று. இதனைக் காகராசன் அறிந்து மந்திரிகளோடும் ஆலோசித்தபோது பலரும் பலவாறு கூறினர். அவருள்ளே சிரஞ்சீவி என்னும் பெயருடைய கிழமந்திரி “அடுத்துக்கெடுத்தலே தக்க புத்தி”என்று அரசனுக்குச் சொல்லிவிட்டுக் கூகைகள் இருக்குமிடத்திலே போய் “யான் நீதிகூறி அரசனாலே தண்டிக்கப்பட்டதனாலே பிரிந்து பசித்து உங்களிடம் அடைக்கலம் வந்தேன்” என்றது. குரூரநாசன் என்னும் மந்திரி யொழிந்த கூகைகளெல்லாம் அக்காகத்தினை நம்பி உபசரித்துச் சேர்த்துக் கொண்டன. குரூரநாசன் என்னும் மந்திரி உடனே வேற்றிடம்போயிற்று. காகம் நாளுக்குநாள் கூகைகளின் கோட்டைவாயிலிலே சிறிதுசிறிதாக விறகுகளைச் சேர்த்துவைத்துப் பின்னர்த் தன்னினங்களைக்கொண்டு நெருப்பு வைப்பித்து விடக் கூகைகளெல்லாம் எரிந்துபோயின

சங்கரா சாரியனார் தாயை யிகழ்குலத்தார்
தங்கணமனை யேசுடலை தானாகிப்–பங்கமுற்றார்
ஆதலினாற் புன்னைவன வையனே யாரிடத்தும்
ஏது மிகைபடச்சொல்லேல் (89)

சங்கராசாரியர் சந்நியாசம்பெறும்போது அவர்தாயாகிய ஆரியாம்பாள் அவரை நோக்கி “மகனே! என்னுடைய அந்தியகாலத்திலே உன்கையாலே கடன் கழிக்கப்பெற்றுக் கதியடையவிரும்புகிறேன்” என்றாள். சங்கராசாரியர் தாயை நோக்கி “அன்னாய்! நீ அந்தியகாலத்திலே என்னை நினைப்பாயாயின்; நான் எங்கே இருந்தாலும் நீ இருக்குமிடத்திலே வந்து உனக்குச் செயற்பாலனவாகிய கிரியைகளை யெல்லாஞ் செய்துமுடித்து நற்கதியிலே உன்னைச் சேர்ப்பேன்” என்று சொல்லித் தீர்த்தயாத்திரை போயினர். பின்னர்த் தாயின் அந்தியகாலத்தை யோகத்தினாலே உணர்ந்து வான்வழிக்கொண்டு மலைநாட்டை அடைந்து தாய்க்கு முன்னர்ச்சென்று நின்றார். தாயார் சங்கராசாரியரைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு “மகனே! எனக்குக் கடன்களைச் செய்து நற்கதியில்விடுக” என்றாள். சங்கராசாரியர் தாயார்க்கு அத்துவித உண்மையாகிய நிர்க்குணத்துவ உபாசனா மார்க்கங்கூறினார். தாயார் “மகனே! என்னறிவு இதற்கேற்றதன்று; சகுணோ பாசனையுட் சிறந்ததொன்று கூறவல்லையோ?” என்றார். அப்போது சங்கராசாரியர் எட்டுப் புயங்கப் பிரயாத விருத்தத்தினாலே சிவத்துதி செய்தார். உடனே சிவாஞ்ஞையினாலே சிவகணங்கள் தோன்றின.

அதுகண்ட தாயார் கண்களை இறுக மூடிக்கொண்டு “மகனே! மகனே! நான் இவர்களோடு செல்லமாட்டேன்” என்றார். சங்கராசாரியர் “உனக்கறும் பெரும் பேறுங்கிடையாதொழிந்ததா?” என்று கூறி விட்டுணுபுயங்க தோத்திரஞ் செய்தார். உடனே விட்டுணுவாஞ்ஞையினாலே விட்டுணுகணங்கள் தோன்றினர. உடனே தாயார் விட்டுணுபாதங்களிற் சிந்தைவைத்துத் தேகத்தை விடுத்தார். அப்போது சங்கராசாரியர் தமது முன்னையாச்சிரமத்தின் தாயுடம்பினைச் சம்ஸ்காரஞ்செய்யும்படி பிராமணர்களை வருவித்து அவர்கள் வீட்டிலுள்ள பரிசுத்தமான அக்கினியைத்தரும்படி கேட்டார். பிராமணர்கள் இவர் சந்நியாச தருமத்திற்கு மாறாக நடக்கின்றார் என்று தங்களுக்குத் தோன்றியவாறெல்லாம் பேசி அக்கிநிகொடுக்க உடன்படாது போயினர். தாயாரைச் சுமந்துகொண்டு போய்ச் சுடலையிற் சேர்ப்பாருமில்லாமையாற் சங்கராசாரியர் இரண்டு கைகளையுந் தேய்த்து வலக்கையிலே தீயுண்டாக்கி அவ்வீட்டையே விறகாக்கித் தாயார் கிரியையைமுடித்துவிட்டுப் பிராமணர்களை நோக்கி “உங்களுக்குச் சந்நியாசி பிச்சைதருந் தகுதியில்லாது போகக்கடவது; நீவிர் வேதத்துக்குப் புறத்தராகக் கடவீர்; உங்கள் வீடுகளிலே மயானம் உண்டாகுக; உங்கள் தேசம் சந்நியாசிகள் வருவதற்கு தகுதியற்றாதாகுக” என்று சபித்துச் சென்றார்

இழிவறிந் துண்பான்க னின்பம்போ னிற்குங்
கழிபோ ரிரையான்க ணோயென்—றுளமுதுநூல்
வாக்கியத்தாற் புன்னை வனநாதா முன்னயிறல்
போக்கிமீ தூண் விரும்பேல் (90)

ஆட்டுக் கடாப்போரி லன்றுதசை நாடிநரி
மாட்டிக்கொண் டேயுயிரு மாய்ந்ததுபார்—தோட்டுமலர்
மாமருவும் புன்னைவனநாதா வீணாக
வேமுனைமு கத்துநில் லேல் (91)

இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றோடொன்று பகைகொண்டு உக்கிரமான கோபத்தோடும் அடிபட்டன. இரண்டுக்குங் காயமுண்டாகிச் சரீரத்தினின்றும் இரத்தம் பெருகிற்று. அதனை ஒரு நரி கண்டு இரத்தம்பொருந்திய தசையையுண்பேன் என்று விரும்பிச் சென்று அவ்விரண்டுக்கும் இடையிலே அச்சமயத்திலே போய் அகப்பட்டுத் தாக்குண்டிறந்தது.

வேங்கை வரிப்புலி நோய்தீர்த்த விடகரியென்
றோங்கு மவ்வை சொன்ன வுரைப்பொருள்பார்–பாங்குடைய
காமாற்றும் புன்னைவனக் காராளா வானதனால்
மூர்க்க ரோடிணங்கேல் (92)

போதவே நற்குணங்கள் போந்துந் தனைமூத்த
மாதரின்பந் தீதே மனுநெறியார்—-ஆதலினால்
துய்யபுகழ்ப் புன்னைவனச் சோமா விளையாளாஞ்
செய்யகுண மெல்லியாடோள் சேர் (93)

ஆசிரியன் சொற்கேட்ட வன்றே தசரதனார்
கோசிகன் பாலிராகவனைக் கூட்டிமிக்க–தேசுபெற்றார்
நாட்கமலப் புன்னைவன நாதமகி பாதருமங்
கேட்கின்மேன் மக்கள் சொற் கேள் (94)

சூரியகுலத்துள்ள இரகுவென்பவனுடைய புத்திரன் அயன். அயனுடைய மகன் தசரதன். இந்தத் தசரதனுக்கு புத்திரர் நால்வர். அவருள்ளே மூத்த புத்திரன் ஸ்ரீராமன். இந்த இராமன் வளர்ந்து சாமர்த்தியமுடையவனாய் விளங்குங் காலத்திலே விசுவாமித்திரமுனிவர் செய்யும் யாகங்களுக்கு இராட்சதர்கள் இடையூறு செய்து வந்தார்கள். விசுவாமித்திர் இராட்சதர்களை அடக்கித் தம்முடைய யாகத்துக்குத் துணைசெய்யத்தக்கவன் இராமனே என்று நிச்சயித்துத் தசரதனிடம் போய் இராமனைத் தமக்குத் துணையாக விடும்படி கேட்டார். குருவாகிய வசிட்டமுனிவரும் விசுவாமித்திரருடனே இராமனை விடும்படி சொன்னார். பின்னர்த் தசரதன் பெரிதும் மனவருத்தமுடையனாய் மறுத்தற்கஞ்சி இராமனை விசுவாமித்திரரோடுங் கூட்டியனுப்பினான். இராமன் விசுவாமித்திரரோடு கூடிச்சென்று கல்லாகக் கிடந்த அகலிகையை முன்போலப் பெண்ணாக்கியும், விசுவாமித்திரருடைய யாகத்துக்குத் தீங்குசெய்ய வந்த தாடகை என்பவளைக் கொன்றும், மிதிலையிலே வந்து வில்லுமுறித்துச் சீதாபிராட்டியை விவாகஞ் செய்துந் தந்தைக்குங் கீர்த்தியை உண்டாக்கினான்.

விப்பிரநா ராயணன்முன் வேசிதன்மே லாசையினால்
இப்புவியிற் கட்டுண் டிழுக்குற்றான்–தப்பலவே
சைவநெறிப் புன்னைவனத் தாளாளா வெந்நாளும்
மைவிழியார் மனைய கல் (95)

வீமனுட லிற்பாதி மெய்வழக்கிற் றேர்ந்தபுரு
டாமிருகத் தின்பங்கென் றார்தருமர்—ஆமவர்போல்
பூமியெலாங் கொண்டாடும பொய்யாத புன்னைவன
மேமொழிவ தறமொ ழி. (96)

பாண்டவருள்ளே தருமர், இராயசூயயாகஞ்செய்தபோது புருடா மிருகத்தினை அழைத்து வரும்படி வீமசேனனை அனுப்பினார். வீமசேனன் போய்ப் புருடா-மிருகத்தினை வரும்படி கேட்டான். புருடாமிருகம் வீமசேனனை நோக்கி “நீ நான்குகாதவழி முன்னே செல்லுதி; யான் பின்னே உன்னைத் தொடர்ந்து வருவேன்; நான்வரும்போது நீ என்னெல்லையுள்ளே அகப்படுவாயாயின்; உன்னை யான் உண்டுவிடுவேன். என்னெல்லையைத்தாண்டி உன்னெல்லையிற் போய்விடுவாயாயின், நான் உன்னைத் தொடர்ந்து வருவேன்” என்று சொல்லிற்று. வீமனும் அதற்குடன்பட்டவனாய் வேகமாய் வரும்போது புருடாமிருகமும் வீமனைத் தொடர்ந்து நெருங்கி வந்தது. அதுகண்ட வீமன் அப்போது ஒரு மணீயாம்பரற் கல்லைப் பூமியிலே போட்டான். அவ்விடத்திலே ஒரு சிவாலயமுந் தீர்த்தமு-முண்டாயின. புருடாமிருகம் அத்தீர்த்ததிலே ஸ்நானஞ் செய்து சிவாலயத்தையும் வழிபட்டு வருமுன் வீமசேனன் வெகுதூரம் நடந்தும் வீமசேனனை நெருங்கித் தொடர்ந்தது. நெருங்க நெருங்க அப்படியே ஒவ்வொன்றாக ஏழுமுறை பரற்கல்லிட்டான். புருடாமிருகமும் அவ்வப்போதே அங்கங்கே தோன்றிய தீர்த்தங்களிலே ஸ்நானஞ்செய்து கோயில்களையும் வழிபட்டு வழிக் கொண்டுவந்து பின்னர் வீமசேனன் தன்னெல்லையில் ஒருகாலும் மற்றையெல்லையில் ஒருகாலுமாகப் பொகும்போது அவனைப் பிடித்தது. அப்போது வீமசேனன் எல்லைதவறிப் பிடித்தாயென்னப் புருடாமிருகந் தன்னெல்லையிற் பிடித்தேனெனன இருவரும் வழக்காடித் தருமரிடம்போய் முறையிட்டார்கள். இருவர் வாய்மொழியையுந் தருமர் கேட்டுத் தம்பி என்றும் பாராமல் வீமசேனனைச் சரீரத்திற் பாதி புருடாமிருகத்திற்குக் கொடுக்கும்படி சொன்னார்.

தேவா முனிவர்மண்ணோர் தென்புலத் தார்க்குமோகம்
பாவவித் தென்றோதும் பழமறைகள்—ஆவதனால்
வேளாளா புன்னைவன வித்தகா வித்தரையின்
மூளுமோ கத்தை முனி. (97)

குழந்தையென்று மாயனைப்பேய் கொல்லமுலைப் பாலீந்
திழந்ததுயி ரென்பதுல கெங்கும்—முழங்குதலால்
வீறாளா புன்னைவன மேகமே யாரிடத்தும்
மாறான வல்லமைபே சேல் (98)

கண்ணபிரான் இடைச்சேரியிலே குழந்தையாய் வளருங்காலத்திலே கஞ்சனாகிய மாதுலனால் அவரைக்கொல்லும்படி வஞ்சகமாக அனுப்பபட்ட பூதனை என்னும் பேயானது தாய்போலச் சென்று கண்ணபிரானாகிய குழந்தைக்கு முலைப்பால் கொடுத்தது, கண்ணபிரான் இது கஞ்சனுடைய வஞ்சகமென்றுணர்ந்து முலைப்பாலோடு அப்பேயின் உயிரையும் உண்டார்.

இந்திரன்முன் கோசிகன்வ சிட்டனுடன் வாதிலரிச்
சந்திரனைப் பொய்யனென்ற தப்பதனால்—வந்ததுபார்
மாதனே புன்னை வனநாதா வாயிடும்பால்
ஏதெனினும் வாதுமுற்கூ றேல். (99)

தேவுலத்திலே இந்திரசபையிலே ஒருநாள் பூவுலகத்துள்ள பலமுனிவர்களும் போய்க்கூடினார்கள். அப்போது முனிவர்களையெல்லாம் இந்திரன் நோக்கி “முனிவர்களே! பூவுலகத்திலே அரசர்களுள்ளே காட்சிக்கெளியனாய்க், கடுஞ் சொல்லிலனாய், ஏகபத்தினிவிரதனாய், சத்தியவானாய், பொறுமையுடைவனாய், மநுநீதிதவறாது அரசு செய்பவன் யாவன்” என்றுவினாவினான். அப்போது வசிட்ட முனிவர் அதற்குவிடையாக அரிச்சந்திரனை வியந்துகூறினர். அதுகேட்டவிசுவா-மித்திரர் வசிட்டர் கூறியதனை மறுத்து வெய்யன், கபடன், வீணன், பொய்யன், கையன், கயவன், அரசர்க்குரிய வொழுக்கமில்லாதவன் என்று இன்னோரன்ன நிந்தைவார்த்தைகளால் அரிசந்திரனை இகழ்ந்தார். இப்படி இருவரும் வாதுபேசியபோது வசிட்டமுனிவர் “அரிச்சந்திரனிடத்திலேயுளதாக நான்கூறிய நல்லொழுக்கங்களிற் சிறிதானுந் தவறுமாயின்; நான் என்தவம் முழுவதுங் கைவிட்டுத் தலையோட்டிலே கள்ளேந்தியுண்டு தெற்குநோக்கிச் செல்வேன்” என்று சபதங்கூறினர். விசுவாமித்திரரும் “நான் பரிசோதிக்கும்போது இவர் கூறிய நற்குணங்கள் அவ்வரிச்சந்திரனிடத்தே தவறாதிருக்குமாயின்; நான் வருந்திச் செய்த தவத்திலே பாதிகொடுப்பேன்” என்று சபதங்கூறினர். பின்னர் விசுவாமித்திரர் பலவாறு பரிசோதித்தும் அரிசந்திரன் சிறிதும் வழுவாமை கண்டு விசுவாமித்திரர் சொல்லியவாறே தவத்திலே பாதிகொடுத்துவிட்டார்.

வள்ளுவரைக் கல்வியன்றோ வண்டமிழ்ச்சங் கஞ்சயிக்கத்
தெள்ளுதமிழ் நூலுதவி செய்ததெல்லாம்–உள்ளதன்றோ
சந்திரனே புன்னைவனத் தாளாளா பேரறிவாம்
புந்தியினில் வித்தைவிரும் பு (100)

புலைத்தொடர்புடையராயிருந்தும் வள்ளுவர் தம்மிடமிருந்த கல்வி மகத்துவத்தினாலே மதுரைச் சங்கத்திலே போய்ச் சங்கப்புலவர்களையும் வென்று சங்கப்பலகையும் பெற்றுத் தமது நூலாகிய திருக்குறளையும் அரங்கேற்றிச் சங்கப் புலவராற் பாயிரமும் பெற்றார்.

நிலையா வுடல்பொரு ணீரி னிறைகஞ்சம்
மலரிலைபோ லெத்தனைநாள் வாழ்த்தும்-இலகுபொருள்
பக்தியெனும் புன்னைவனப் பார்த்திவா சனகனைப்போல்
நித்தியமாம் வீடுபெற நில். (101)

வேத வியாசன் விதுர னுருப்பசிதன்
காதன்மைந்த னான கனவசிட்ட-னீதியைப்பார்
நேயத்தாற் புன்னைவன நீதிபா தாரணியி
லேயுத் தமனா யிரு. (102)

ஊருந்தா யுஞ்சரியே யூரையன்றி யேதனிவாழ்ந்
தாருந்தா யைத்தளிவாழ்ந் தாருமொப்பர்-பாரின்பால்
பொன்னூரும் புன்னைவன பூபாலா நீயிதெண்ணி
மன்னூ ருடன்கூடி வாழ். (103)

தருமருயர் வெள்வி தனிற்சிசுபா லன்பார்த்
தரியைநிந்தை சொல்லி யழிந்தான் – தெரிவதன்றோ
பார்புகழும் புன்னைவன பார்த்திபா மேலோரைச்
சீர்மைதப்பி வெட்டெனப்பே சேல் (104)

சேதிதேசராசனும் தமகோஷன் மகனுமாகிய சிசுபாலன் என்பவன் தருமருடைய இராயசூயத்திலே கண்ணபிரானுக்கு அக்கிரபூசை செய்யப்பட்டதென்று கண்ணபிரானை நிந்தித்துக் கண்ணபிரானாற் கொல்லப்பட்டான்.

ஆடாசாய் வேந்தாடா யாற்றுரும் வாசமதாய்த்
தேடுமிடைக் காடருரை செய்ததுபார்-நீடழகு
சார்ந்தபுகழ்ப் புன்னைவனத் தாளாளா நன்றாகத்
தேர்ந்துகொண்டு வேண்டிவினை செய். (105)

செய்யமுகம் வாய்கைகாற் றேகசுத்தி செய்துமெய்யிற்
றுய்யவெண்ணீ றிட்டரனைத் தோத்திரஞ்செய்-துய்யும்வகை
மாவெய்தும் புன்னைவன மன்னவா மையிரவி
லேவைக றைத்துயிலெ ழு. (106)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார்
அழுதகண் ணீரு மனைத்தென்-றெழுசொலைப்பார்
தூயபுகழ்ப் புன்னைவனத் தோன்றலே சொப்பனத்தி
லேயுமொன் னாரைத்தே றேல். (107)

அந்தணர்கள் வாழி யறம்வாழி கீர்த்திநிலை
தந்தவர்கள் வாழி தவம்வாழி-சந்ததமும்
மானஞ் செறிபுன்னை வனாநாதா விவ்வகையே
தானோ துவது தவம். (108)

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ அரங்க நகர் அன்னை அடைக்கல மாலை-

November 9, 2025

சீரரங்க நகரன்னை சேவடி சேர்த்தும் வணம்
நாராரடைக்கல நன்மாலை ஓன்று நவில் வதற்க்கிப்
பாரோர் புகழ் எம் பராங்குச மா முனி பாதமலர்
ஏரார் நின் பாங்கு அருந்திப் பரவுதி என்னுளமே
–காப்பு

திருக்கச்சி வெக்காப்பதி வந்த பொய்கைத் திரு முனிவன்
உருக்கலை என்னுளத்து ஒளிர்ந்து வோங்க வுவத்தி என்றுன்
கருக்கச் சளந்தீர் கழற் சரண் புக்கனன் காமர் வளப்
பெருக்கத்து ஒளிரும் அரங்க நகரன்னைப் பெண் மணியே
–பொய்கையாழ்வார்

பூத்திகழ் காக்கடன் மல்லை வரு முனி புங்கவன் வெண்பாத்
திகழ் நூல் என்னுள்ளத்தில் படியப் பணித்தி என்றுன்
மாத்திகழ் வாரீச மாணடி மன்னி மறை புகுந்தேன்
ஒத்தகழார் சேர் அரங்க நகர் அன்னை உத்தமியே
–பூதத்தாழ்வார்

மயிலைப்பதி வந்த மா முனிவன் கலை மன் பொருளாம்
வெயிலைப் பொழிந்தென்றும் வீடா வவித்தை வினையிருள் செய்
துயிலைத் துடைத்தி என்று உன் துணைத்தாள் சரண் டுன்னினனால்
அயிலைப் பொரும் கண்ணர் அரங்க நகரன்னை யாரணியே
–பேயாழ்வார்

ஆழி தரும் கலையாகு மழிசை யடிகள் நன்னூல்
பாழி பெரும் பொருள் என்னுளத்து என்றும் படர்ந்து நிற்க
வாழி யருள் செய்தி என்றுன் மலரடி வந்தடைந்தேன்
வீழி யிதழ் கொள் அரங்க நகரன்னை வித்தகியே –
-திருமழிசை யாழ்வார்

கோளூர் முனிவன் குருகூர் முனி மேல் குறித்த கலை
வாளூர் பொருள் என் மனம் மன்னி நிற்க மகிழ்தி என்றுன்
தாளூர் சலசச் சரண் அடைந்தேன் உயிர் தாங்கு மொன்பான்
கேளூர் ரரங்க நகரன்னையாம் கிருபாகரையே
–மதுரகவியாழ்வார்

உண்மை உலகினர் ஒர நம் மாறன் உகந்துரைத்த
திண்மை நன்னூல்கள் என் சிந்தையில் தேங்கிடச் செய்தி என்றுன்
ஒண்மை யடியை வுவந்து அடைந்தேன் உலகோர்ப் புரக்கும்
வண்மை யரங்க நகரன்னை யாகும் வராநநையே
–நம்மாழ்வார்

கொல்லி நகர் வந்த கோ முனிவன் கலை கொண்ட பொருள்
புல்லி என்நெஞ்சில் பொலியக் கருணை புரிதி என்றுன்
அல்லி மலரடி யண்டை கொண்டேன் மறையந்த முறை
வல்லி யரங்க நகரன்னையாம் பத்த வத்ஸலையே
–குலசேகராழ்வார்

பரத்துவம் செய்து நற் பஞ்சவன் பொற் கிழி பார்ப்படுத்த
உரத்துவ வில்லி புத்தூர்க்கோன் கலை என்னுளத்து நிற்கத்
திரத்துவம் செய்தி என நின் சரண் சரண் சேர்ந்தனாற்
றரத்துவர் முத்தவரங்க நகரன்னைத் தற் பரையே
–பெரியாழ்வார்

திருக்கோதை நாயகி செய்ந் நூல் என் சிந்தையில் தேக்குவித்து என்
கருக் கோதை நீக்கக் கருணை செய்வாய் என்றுன் கான் மலரின்
மருக்கோதை சூடி மறை புகுந்தேன் மறையோர் பயிலும்
இருக்கோதைத்தாய வரங்க நகரன்னை இந்திரையே
-கோதை நாயகித் தாயார்

விற்கலை வந்த பரகால மா முனி வேந்தனருள்
நற் கலை என்னுள நாடொறு நண்ண நயத்தி என்றுன்
அற்கலைத் தோட்டு மடிச் சரண் புக்கனனாரணமா
நற்கலை யோங்கு மரங்க நகரன்னை நாயகியே –
திருமங்கையாழ்வார்

விப்பிர நாராயண முனி யேந்தல் வின்கலைகள்
பப்பிரதப் பொருணாளும் என்நெஞ்சில் பதித்தி என்றுன்
துப்பிரசன்னத் துணையடியில் சரண் டுன்னினால்
அப்ரமேய வநக வரங்க நகரன்னையே –
-தொண்டரடிப்பொடியாழ்வார்

முனி யூர்தி யூர்ந்து என் முகுந்தன் முன் வந்த முனித்தலைவன்
கனியூர் சுவைக்கலை என்னுள நிற்கக் கணித்து என்றுன்
பனியூர் திருமலர்ப் பாதத் தடைந்தனன் பக்தி யிறைத்
தனியூர்தி யூரும் அரங்க நகரன்னை தாக்கணங்கே
— திருப்பாணாழ்வார்

நாதமுனிகள் எனும் எம்மடிகள் இன மலர்ப்
பாதம் உவந்து பணிந்து உய்யும் வண்ணம் பணித்தி என்றுன்
சீத முளரித் திருவடியில் சரண் சேர்ந்தனனால்
வேத முழக்கத் தரங்க நகரன்னை வித்தகியே
-நாதமுனிகள்

புலம் செயிர்த்து ஓங்கிய உய்யக் கொண்டார் புகழ் பூத்து ஒளிர்ந்து
புலம் செய் அடிகள் என் புந்தி வைத்து ஏத்தப் புரிதி என்றுன்
நலம் செய் திருவடி நண்ணின னல்லவர் நாளு நண்ணி
வலம் செய் யரங்க நகரன்னை யாகும் வரோ தயையே
–உய்யக் கொண்டார்

கூறு புகழ்க் குருகை காவலப்பன் குறிக் கொணிட்டை
தேறும் எனக்கும் சிறந்து ஒங்க நீ யருள் செய்தி என்றுன்
நாறு மலரடி நண்ணினன் சீர்த்தி யிஞ்ஞாலம் எலாம்
வீறும் அரங்க நகரன்னை வேத விளக்கே
–குருகைக் காவல் அப்பன்

நம்பி கருணாகர தாசர் வள்ளல் நல்லொழுக்கங்
கும்பி யுழைக்கும் எனக்கும் வர நின் குரை கழலை
நம்பி யடைந்தனன் நாளும் பிற விரலை யுற்றோர்க்
கம்பி யனைய வரங்க நகரன்னை யம்புயையே —
நம்பி கருணாகர தாசர்

ஏறு திருவுடையார் என்றுரை எம்மிரு நிதிக்குப்
பேறு தருமவன் பால் வரு நேயப் பெருக்கின் வளம்
தேறும் எனக்கும் அளித்து என்றுன் பதம் தேர்ந்து அடைந்தேன்
நாறு மலர்ப் பொழில் நண்ணும் அரங்க நகரன்னையே
–ஏறு திருவுடையார்

தூய திருக்கண்ண மங்கை யாண்டான் என்னெஞ்சுரநதிதன்
நேய் வடிகளடியி னுறுமன்பி னீத்த மிந்தத்
தீயனுற்றுய்ய நின் சேவடி சேர்ந்தனன் றெய்வ மயில்
சாயல் யரங்க நகரன்னை யாகும் தயா பரையே
–திருக் கண்ண மங்கை யாண்டான்

மறையோர் புகழ் வான மா மலை யாண்டான் மகிழ் தரு தன்
இறையோனுழிக் கொண்ட வீர மடியற்குமீதி என்றுன்
பொறை யோங்கு தாளிற் புகல் புகுந்தேன் ஐம் புலனை வென்ற
நிறையோர் நிலவும் அரங்க நகரன்னை நின்மலையே
–வானமாமலை யாண்டான்

பேணும் உருப்பட்டூராச்சான் பிள்ளைப் பேர் பெருந்தகை தன்
மாணுரு மாரி யன்பால் கொண்ட நிட்டை மரபு எனக்கும்
பூணுறும் வண்ணம் புரிது என்று உன் தாள் புகல் புகுந்தேன்
சேணுறு சோலை யரங்க நகரன்னைச் செந்திருவே
–உருப்பட்டூராச்சான் பிள்ளை

சோகத்தூராழ்வான் சுக நிலை நிட்டை துடி இடையார்
மோகத்தூ ரெற்கு முரண் அற்று உண்டாக நின் முண்டகத் தாள்
ஆகத்தூடு உய்த்து இன்று அடைக்கலம் புக்கனனைய வென்னை
நாகத்தூர்த்தித் தலைவன் போற்ற அரங்க நகரன்னையே
– சோகத்தூராழ்வான்-

கீழ் வானெழு பகல்போலொளிர் வண் புகழ் கீழையகத்‌
தாழ்வானெனத் தமிழாரணம் பாடும் பண்ணாரழைவு
தாழ்வாரெனக்குந் தயை செய நின்னைச் சரணடைந்தேன்‌
வாழ்வாரரங்க நகரன்னையாகும் வதானியையே
–கீழையகத்‌தாழ்வான்

மேலையகத்துறை யாழ்வானென யான் வியந்து திரு
மாலையகத்த மறைத் தமிழ் பாடி மகிழும் வளத்‌
தாலை யளித்தி யென நின் சலசச் சரணடைந்தேன்‌
சோலையகத்த வரங்க நகரன்னைச் சுந்தரியே
–மேலையகத்தாழ்வான்‌

திருமணக்கானம்பி சேவடி சிந்தையிற் சேரச்‌ செய்து என்‌
கருமணக் காகரமாங் காம நோயைக் களைதி யென்றுன்‌
மருமணத் தாளின் மறை புகுந்தேன் மணிவண்ணனெம்மான்‌
திரு மணக் காந்தை யரங்க நகரன்னைச் செய்யவளே
.–மணக்கால் நம்பி

பெருக்கத் திருக் கைரவக் கேணிப் பாண் பெருமாளரையர்‌
தருக்கத் தவாளந் தணந்த நடை யெற்குஞ்சார்க வென்றுன்‌
திருக் கத்திகைக் கழலிற் சரண்‌ சேர்ந்தனன் றேர்வரிய
இருக்கக்தையான வரங்க நகரன்னை யின்ப வைப்பே
–திருவல்லிக் கேணிப் பாண் பெருமாளரையர்‌

சொட்டைப் பூசிச் செண்டலங்கார ராரியன் திருவடியில்‌
நெட்டைப் பேரன்புற்ற நிட்டை யெனக்கு நிகழ்க வென்‌தன்‌
மட்டைச் செய் தாமரை மாணடி புக்கனன் மன்னனந்த
முட்டைப் பெற்றாளு மரங்க நகரன்னை முன்னவளே
-சொட்டைப் பூசிச் செண்டவலங்கார தாசர்‌ –

குரு விண்ணகர் தருவானெனுங் கொள்கை கொள் கோமடத்‌துத்‌
திரு விண்ணகரப்பன் சேவடி யேத்துந் திறம் பெற நின்‌
மருவிண்ணளவுமரையடி மேவினன் வையகத்துப்‌
பெரு விண்ணரங்க நகரன்னை யாஞ்சுப் பிரசன்னையே–
கோ மடத்துத் திருவண்ணகரப்பன்‌

நல்லொழுக்கத் துலகப் பெருமாணங்கை நண்ணு நிட்டை
புல்லொழுக்கேற்கும் புகுமா கருணை புரிதி யென்றுன்‌
எல்லொழுக்கிண்டை யிணை தாளடைந்தன னென்‌றும் பொன்னி
நல்லொழுக்காரு மரங்க நகரன்னை நப்பின்னையே
–உலகப் பெருமாணங்கை

சீரார்ந்த நற் புண்டரீகாக்கதா சந்தத் தேசிகன் பால்‌
நாரார்ந் தொழுகு நடை யெற்கு நண்ண நயத்தி யென்றுன்‌
ஏரார்ந்த விண்டை யிணைத்‌ தாளிலில்லடை யெய்‌தினனாற்‌
பாரார்ந்த கீர்த்தி யரங்க நகரன்னைப் பார்க்கவியே,
-ஸ்ரீபுண்டரீகாக்ஷ தாசர்‌ –

ஆளவந்தா ரெம்மடிகளடியா மருத்த வைப்பென்‌
நாளவந்தீர மன மஞ்சிசம் வைத்து நன்றுற நின்‌
நாள வந்தாமரை நல் தாள் அணுகின னண்பர் பவ ்‌
மாள வந்தாளு மரங்க நகரன்னை மாநிதியே, –
-ஸ்ரீஆளவந்தார்‌

திருமான் முனஞ் செந்தமிழ் மறை பாடும் திருவரங்கப்‌
பெருமாளரையர் எனப் பாடியாடு நற்பேறு எனக்கு
வருமாறுன் றாளின் மறை புகுந்தேன் வழுவாத முத்தி
தருமா வரங்க நகரன்னையாகும் தயாம்புதியே
–திருவரங்கப் பெருமாள் அரையர்

கை யொழியா நன்னடைச் சொட்டை நம்பி தன் கான்மலரைப்‌
பொய் யொழியாத வென்‌ புந்தி வைத்தேத்தப்‌ புரிதி யென்று
மெய் யொழியா வன்பர் மேவு நின்றாட்‌ சரம் மேவினனான்‌
மையொழியாக் கண்ணரங்க நகரன்னை மைதிலியே
–சொட்டை நம்பி

அகந்தூயனாமெம் மரசு நம்பிப் பெரியோனடியை
உகந்தூதியமென வுன்னிட வுள்ளமுவத்தி யென்றுன்‌
சுகந் தூங்கு தாளிற்றுனைந் தடைந்தே னற்றோறுப் புரப்‌பால்
நகந்தூக்கு நாரணனண்ணு மரங்க நகரன்னையே
–௮ரசு நம்பி

அவா நிலை நீத்த வடிகள் தெய்வத்துக்கரசு நம்பி
சுவா நிலை யேற்குந் துணை நிற்க வன்பு சுரத்தி யென்று
தவாநிலைத் தாபதர் தாழு நின்றாளிற் சரணடைந்தேன்‌
உவா நிலைச்‌ துண்டத் தரங்க நகரன்னை யொள்ளொளியே,
–தெய்வத்‌ துக்கரசு நம்பி

பிள்ளை யரசு நம்பிப் பெரியோன் கழல் பேணி நின்‌றிவ்‌
வெள்ளை யறிவனும் வீடு பெற்றுய்ய நின் வீங்கு மொளிக்‌
கொள்ளை யடிச்‌ சரண் கூடினன் பேரண்ட கோடிக் கெல்லாந்‌
தன்ளை யரங்க நகரன்னையாஞ்‌ சத்ய சங்கற்பையே,
– பிள்ளைக்கரசு நம்பி

செருக்காற்றிற் செல்லாச் சிறு புள்ளுடையார்‌ திருவடியிற்‌
பெருக் காற்றிற் பீடுறும் பேரன்பு நாளும் பிறங்க வென்றுன்‌
இருக்காற்றின ரெண்ணிணை யடிக்கில்லடை யெய்தினனால்‌
அருக்காற்றுப் பொன்னே யரங்க நகரன்னை யக்கரையே
–சிறு புள்ளுடையார்‌ –

சீரார் திருமாலிருஞ்சோலை தாசர் தஞ்‌ சிர்த்திகளை
நாராரென்னா வின விற்றி யுய்வானருணல் குதியென்‌ உகள்
றேரார் நின்றாள் களிலில்லடை யெய்‌தினனீர்ம்பொழிற் கட்
காராரங்க நகரன்னையாங் கருணாலயையே,
-திருமாலிருஞ்சோலை தாசர்‌

தெருள் சேர்ந்த வங்கி புரத்தாய்ச்சி நிட்‌டையைச் சேர்ந் தொழுகி
மருள் சேரென்றோற்றத்தை மாற்றிட வுள்‌ள மகழ்‌தி யென்‌றுன்‌
பொருள் சேர் கழலிற் புகல் புகுந்தேன் பொழில் பூத்தளிக்கும்‌
அருள் சேரரங்க நகரன்னையாகு மகளங்கையே–
வங்கி புரத்தாய்ச்சி –

அருங்கலைக் கேள்விப் பெரிய நம்பிக்குத் தன்னாரியன் பால்‌
ஒருங்கலில் பேரன்புதித்தாங்கெனக்கு முதிக்க வென்றுன்‌
பிருங்க மிமிரம் புயத் தாளடைந்தனன் பெட்குமின்னின்‌
மருங்கு லரங்க நகரன்னையா மங்களாகரையே
-பெரிய நம்பிகள்

திருக் கோட்டியூர் நம்பிச் செம்மற்குத் தன்‌றிருத் தேசிகன் பாற்
றிருக்கோட்டு மன்பு செழித்‌தாங்கெனக்குஞ் செழிக்க வென்றுன்‌
தருக்கோட்டுந் தாளிற் சரண் புகுந்தேன் மெய்ச் சது மறையோர்‌
திருக்கோட்டி யோங்கு மரங்க நகரன்னைச் செஞ்சுடரே-
திருக்கோட்டியூர் நம்பி

பெரிய திருமலை நம்பி யெனு மெம் பெருந்தகை தன்‌
அரிய திருவருட்காளாகும் வண்ணமருடி யென்றுன்‌
ரிய சரணடைந்தே னுனையோரா வுளத்தினர் கட்‌
கரிய வரங்க நகரன்னையா மம்புயா தனையே
–பெரிய திருமலை நம்பி –

குற்றமிலா மாறனேர் நம்பி தன் குரவன் கழலில்‌
அற்றமிலா வன் படைந்தாங்கி யானுமடைக வென்றுன்‌
சுற்றமிலார்‌ துணையா மடியிற்‌ சரண்டுன்னினனாற்
செற்றமிலார் சேரரங்க நகரன்னைச் சிற்பரையே
-மாறனேர் நம்பி

திருக்கச்சி நம்பி யடிகட்குத் தந்திருத் தேசிகன் பால்
அருக்கச்சுதவன் பமைத் தாங்கெனக்கு மமைத்தி யென்றுன்‌
கருக்கச்‌ சளங் கழற்றுங் கழற்கை யடை கண்டனன்‌ சீர்ப்‌
பெருக்கத் தரங்க நகரன்னையாகும் பிராப்பியையே
–திருக்கச்சி நம்பி

திருமாலை யாண்டா னெனுஞ் செம்மலுக்குத் தன் றேசிகன் பால்
பெருமாலை யாக்கிய பெற்றியினெற்கும் பிறப்பி யென்றுன்‌
மருமாலைத் தாளின் மறை புகுந்தேன் மன மாசறுத்தோர்‌
கருமாலை நீக்கு மரங்க நகரன்னைக் காரணியே
-திருமாலை யாண்டான் –

ஆழ்வானறிவின்றலை நின்றொழுகு மெம்மாள வந்தார்‌
ஆழ்வானுக் காரியன் பாலானவன் பெற்குமாக வென்றே
ஏழ்வான் பிறப்பு மிரிக்கு நின்றாட் சரணெய்‌தினனிற்‌
றாழ்வார்க் கருளு மரங்க நகரன்னைச் சற் குணியே,
–ஆளவந்தாராழ்வான்

திரு வான மா மலை யாண்டான் றெருணடைச் செல்வமெற்கும்‌
வருவான குடி யென்றுன் மரைத் தாளின் மறை புகுந்தேன்‌
பெரு வானவர் பெறும் பேற்றை யடியவர் பெற்றுவக்கத்
தருவான ரங்க நகரன்னையாகுஞ்ச நாதனையே
–வான மா மலை யாண்டான்‌

அமலனெனுந் தெய்வ வாரி யாண்டான் றன்னடி யிணையாங்‌
கமல மென்னுள்ளக் கமலம் வைத்தேத்‌தக் கணித்தி யென்‌றுன்‌
நிமல வடிகளினீழலடைந்தன னித்தியர் சேர்‌
விமல வரங்க நகரன்னை யாரண வேத்தியையே-
தெய்வவாரி யாண்டான் –

இலங்கெழின் மேதை கொளெம்மீச னாண்டாற் கிறைவனுழித்‌
துலங்‌ கெழிலன்பு சுரந்தாங்கெனக் குஞ்சுரக்க வென்றுன்
கலங்கெழு தாள்களிற் கையடை புக்கனன் காயம் வையத்‌
தலங்கெழு சீர்த்தி யரங்க நகரன்னைத் தற் பரையே,
–ஈசனாண்டான்‌

சிதஞ்செய் பஞ்சேச்தியச்‌ சீயராண்டாற்குத் தன்‌றீர்த்‌ தனுழி
இதஞ் செயயும் பக்‌திமை யேய்‌ந்தாங்கெனக்கு மியைக வென்றுன்‌
பதஞ் செய் பதங்களைப் பற்றினன் பத்தர்கள் பாவமெலாம்‌
அகஞ்செய் யரங்க நகரன்னையா மருளார் கலியே
–ஜீயராண்டான்‌

தன்னாரியன் பாற் திருக் குருகூரப்பன் றானடைந்த
இன்னா வறுமன்பெனக்கு முண்டாக விழைக்தி யென்றுன்‌
பொன்னாரத்தவம் போருகத் தாளிற் புகல் புகுந்தேன்‌
கொன்னா ரரங்க நகரன்னையாகுங்கு சேசயையே,
-திருக்குருகூர் அப்பன்

தேசிகன் பானந் திருமோகூரப்பன் சிறந்து கொண்ட
ஆசில தாமன் பெனக்கு முண்டாக வருடி யென்றுன்‌
ஏசிகறாள்களி லேன்றடைந்தே னெண்ணி ருக்கெகர் நற்‌
கோசிகமேத்து மரங்க நகரன்னைக் கோமளையே
–திரு மோகூர் அப்பன்

நீடுறு சீர்த் திருமோகூர் நின்றானெனு நின்மலன்றன்‌
பீடுறு நன்னடையின் பெருக்கெற்கும் பெருக வென்றுன்‌
தோடுறு தோடகத்தாட் சரண்டுன்னினன்றும் பியிசை
பாடுறு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே
-திருமோகூர் நின்றான்

தெருதித் தெய்வப் பெருமாட் பெருந்தகை சீரடியைப்‌
பொருணிதி யென்ன வென் புந்தி வைத்தென்றும் புகழு மன்பு
மருணிதியா மெற்கும் வாய்க்க வென்றுன்னை மறை புகுந்தேன்‌
அருணிதியான வரங்க நகரன்னை யற்புதையே,-
தெய்வப்பெருமாள்-

மதியார்‌ வகுளா வணிச் சோமயாஜி தன் மாண்டியே
நிதியா யென்னுள்ள நிறுவி யுய்வானின்னிறை தவர்ககுக்‌
கதியாங் கழல்களிற் கையடை புக்கனன் கற்றவர்கள்‌
துதியா ரரங்க நகரன்னையாகுஞ் சுடர்க் கொடியே.
–வகுளாபரணசோமயாஜியார்‌

சீரார்த் திருக்குருகூர் தாசரென்னு மெந் தெய்வ மணிக்‌
கேரார் தன்னாரியன் பாலேய்ந்த நிட்‌டை யெனக்குமுற
வாராரருள் செய்தி யென்றுன் கழலின் மறை புகுந்தேன்‌
தேரார் தெருவார ரங்க நகரன்னைச் சின்மயையே
–திருக் குருகூர் தாசர்‌

திருமாலிருஞ் சோலை தாசரெனுந் தெய்வத் தேனு தன்‌ சீர்க்‌
குரு மா மணி யுழிப் பெய்யன்புப் பால் வெள்ளக்‌ கோலமெற்கும்‌
வருமாறுன் வாரிச மா மலர்த்தாளின் மறை புகுந்தேன்‌
திரு மா மணிப் பூணரங்க நகரன்னைச்‌ சேம வைப்பே-
-திருமாலிருஞ்சோலை தாசர்‌

வட மதுரைப் பிறந்தானென்னும் வண்மை மணி மலைக்குத்‌
திடமதுரைத் தவன்றே மன்‌புவதை செழித்தலென
மடமலியெற்கு மளித்தி யென்றுன் றாண் மறை புகுந்தேன்‌
நட மலிந்தோங்கு மரங்கார ரங்க நகரன்னையே
–வட மதுரைப் பிறந்தான்‌

ஆட் கொண்டி யென்னு மடிகளடி களகத்தில்‌ வைத்தேன்‌
சேட் கொண்ட தீ வினை தீர்ந்துய் குவானின் சிறு சதங்கைத்
தாட்‌ கொண்ட தாமரைத் தாளடைந்தே னம்பிச் சார்ந்வரை
ஆட் கொண்டருலளு மரங்க நகரன்னை யம்புயையே-
-ஆட்கொண்டி.

மறை கொண்ட மாண் பொருண் மன்னுளத் தம்மங்கி வள்ளலினெந்
சிறை கொண்ட தீ வினை தீர்வானடியர் செயுஞ் செயிர்கள்‌
பொறை கொண்ட நின் புண்டரீகப் பொற் பாதம் புகல் புகுந்தேன்‌
நறை கொண்ட பூம் பொழினண்ணு மரங்க நகரன்‌னையே
–அம்மங்கி –

பொன்னித் துறைவன் புரோகிதன் பொங்கெழிற் பொன்னடி யென்‌
சென்னிக் கணி யெனச் சேர்ந்துய்யுமாறருள் செய்தி யென்றுன்‌
உன்னித்‌ துறவோர் தொழுந் தாளடைக்கல முற்றனன் மால்‌
பன்னிப் பிரியை யரங்க நகரன்னைப் பார்க்கவியே
–இராஜ புரோகிதர் நாதமுனிகள்

ஆத்தி யந்தாரனற்றார மரங்கத்ம் மன்னொழுக்கஞ்‌
சாத்தியமாக வெற்கென்றுன் சலசச் சரணடைந்தேன்‌
ஏத்திய மா மறைக் கெட்டாப் பரம் பொருளே யினிதாம்‌
வாத்திய வோதை யரங்க நகரன்னை மா மருந்தே
–இராஜ மகிஷி திருவரங்கத்தம்மன்‌

எம்பெருமாற் கென்றுமின் பணி செய்தி தயத்துகக்கும்‌
எம்பெருமானா ரிணையடியே யெனக்கென்றும் பொன்றாச்‌
சொம் பெரும் பேறென்று துன்னக் கருணை சுரந்தருள்வாய்‌
நம்பெருமாண மணவாட்டி யரங்க நகரன்னையே,
–எம்பெருமானார்‌ –

இனிய கருத்துடனின் சொலெவர்க்கு மிசைக்கு மலை
குனிய நின்றார்‌ தங்குரை கழல் கூடி யென் கோதறுப்பான்‌
நனி யருள் செய்தி யென்றுன் கழனண்ணின னாரணற்குக்‌
கனியனையா யெம் மரங்க நகரன்னைக் கண்மணியே-
-மலை குனிய நின்‌றார்‌

தன்மவுரு வாரியச் சீ சடகோப தாசரெனும்‌
நின்மல பாநுவி னெஞ்‌சிருணீங்கியிந் நீடு கன்மச்‌
சன்ம மொழிக்க நின்றாட்‌ சரண் புக்கனன் சார்ந்தவர்க்குப்‌
பொன் மலை போலு மரங்க நகரன்னைப் புண்ணியையே,-
-ஆரிய ஸ்ரீ சடகோப தாசர்‌

அணி யரங்கத் தமுதப் பேரடிகளடிகள் பவப்‌
பிணி யரங்கப் பிடித்துய்வான ருளென்றுன் பெட்கு மொன்பான்‌
மணி யரங்கத் தண்டை மாணடி புக்கனன் மாதவிகள்‌
நணி யரங்கக்‌து நடஞ்செய் யரங்க நகரன்னையே
–அணி யரங்கத் தமுதனார்‌

திருவாய்த் தலமுடையாரடி சேர்ந்தடியேன் விவிதக்‌
கருவாய்த் தல மரனீங்க வருள் செய்து காத்தி யென்றுன்‌
மருவாய்த் திலங்கு மரையடி புக்கனன் மாணுருவாய்‌
அருவாய்‌த் திகழு மரங்க நகரன்னை யம்புயையே-
-திருவாய்த் தலமுடையார்‌

இசை யோங்கு கூரத்திறை யெம்மடிக ளிணை யடியில்‌
நசை யோங்‌கி யுய்ய நயந்திருக்காதிய நான்மறையின்‌
மிசை யோங்கு நின்னடி மேவினனல்குதி மெய்ப்புகழெண்‌
டிசை யோங்கரங்க நகரன்னையாகுஞ் சிந்தாமணியே-
-கூரத்தாழ்வான்‌ –

ஊண்டானென நம்மெதிபதி சீருண்டுறை முதலி
யாண்டானெனை யென்று மாள்வானருடி யென்‌றஞ்சிறைத்தேன்‌
பாண்டான் முரல் பதுமப் பதம் பற்றினன் பாரளப்பான்‌
நீண்டான் மகிழு மரங்க நகரன்னை நீரசையே-
-முதலியாண்டான்‌

அம்புவி போற்ற ருளாளப் பெருமாளெனு மடை கொள்‌
எம்பெருமானா ரிணை யடி யென்பவ கீர்க்கு மென்று
நம்புறு நன்மன நண்ண நின்றாளை நயந்தடைந்தேன்‌
வம்பவிழ் சோலை யரங்க நகரன்னை மா மணியே.-
-அருளாளப் பெருமாளெம்பெருமானார் ஜீயர்‌

மைந்தாரைந்தா நெறி மாண்பினனா மெம் வடுக நம்பி
கந்தார் நடை யெற்குக் கை கூட நின்றன் கருணை கொள்வான்‌
பைந்தார்‌ புனை நின்பதஞ் சரண் புக்கனன் பாயும் பொன்னிச்‌
சிந்தார ரங்க நகரன்னை வேதச் சிரப் பொருளே
–வடுக நம்பி

சீரார் திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌ திருவடியில்‌
நாரார் மன நல நண்ணிட நீ யருணல்கி டென்றுன்‌
தாரார் சலசச் சரணத் துணையிற் சரணடைந்தேன்‌
ஏராரரங்க நகரன்னை யாமெம் மிறையவளே-
-திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌

கனந் தாழ் பொழிற் திருவேங்கட மாமலைக் கண்ணனுக்குத்‌
தினந் தாழ்ந்து தே மலர்க் கண்ணித் திருப் பணி செய்துவந்த
அநந்தாழ்வானிட்டை யளித்தி யென்றுன் றாளடைந்தனனற்‌
சனந்தாழரங்க நகரன்னையாகுஞ் சரணியையே
— –அநந்தாழ்வான்‌

சீரிய ஞான வெழுபத்து நான்கு சிங்கா தனராம்‌
ஆரியர் தங்களருட் கிலக்காக வருடி யென்றுன்‌
வேரி மரை புரை மென்றாளடைக்கலம் வேட்டடைந்தேன்‌
நாரியரதனமே நல்லரங்க நகரன்னையே–
எழுபத்து நான்கு சிங்காதனாதிபதிகள்‌ –

சத்தமனெங்க ளெதிராசமாமுனி தாளடைக்த
உத்தமமா மாச்சரமிகளோ ரெழு நூற்றுவர்கள்‌
தத்தம நிட்டை தமியேற்குற நின் சரணடைந்தேன்‌
புத்தமு தொத்த வரங்க நகரன்னைப் புங்கவியே
-எழுநூறு உத்தம ஆச்சிரமிகள்

கதியார் பன்னீராயிரவரே காந்திகள் காற்‌றுணை யென்‌
விதியாறொழு கெம்மி ராமானுச முனி வேந்தனருட்‌
மதியார நின்னை மறை புகுந்தேன்‌ வையமையலற்றோர்‌
நிதியாமரங்க நகரன்னையாகு நியாமகையே
-பன்னீ ராயிராவர் ஏகாந்திகள்

எம்மையுமாட்கொளு மெம்பெருமானா ரிணையடி சேர்‌
அம்மையரோ ரெழு நூற்றுவர் நிட்டை யடியனுக்கும்‌
இம்மை வர நின்னிணை யடிக்‌கில்லடை யெய்தினனாற்‌
செம்மை யரங்க நகரன்னையாகிய தேசிகையே-
-எழு நூற்றுவர் அம்மையர்கள்

திருவரங்கத் தமுதாந் தெள்ளியன் செய்த செந் தமிழ்‌ நூல்‌
கருவரங்கத்தினங் கற்றுய்யுமாறெனைக் காத்தி யென்று
மருவரங்கத்த நின் மாணடியிற் சரண் வந்தடைந்தேன்‌
தெருவரங்கத்த வரங்க நகரன்னைச் செந்திருவே
–திருவரங்கத்தமுதனார்

கம்பார் களத்தியர் காதலிக்கும் தீக் கரும மொழிந்
தெம்பாரடிகளை யெண்ணி யுய்வானெற் கருடி யென்றுன்‌
வம்பார் வனச மலர்த் தாட் சரண வசணமுற்றேன்‌
அம்பாரரிக் கண்ண ரங்க நகரன்னை யற்புதையே-
-எம்பார்

தேக்கும் புகழெம் பராசர பட்டர் திருவடி யென்‌
வாக்கு மனமும் வழுத்தி நினைக்கும் வரம் பெற நின்‌
சேக்குமரையடி சேர்ந்தனனிந்தச் செக மனைத்துங்‌
காக்கு மரங்க நகரன்னையாங் கமலாலயையே-
-பராசர பட்டர்

வெண் மணிப் பிள்ளைப் பெருமாளை யங்கர்நின்‌ வேந்தன்‌ தன் பேர்‌
நண் மணித் தாசரை நண்ணி யுய்வானுள நள்ளிருடீர்‌
விண் மணியே நின் விரையார் மலர்க்கழல் வேட்டடைந்தேன்‌
ஓண் மணி மாலை யரங்க நகரன்னை யுத்தமியே
-அழகிய மணவாள தாசர்

ஆராமப் போதால லங்கலணிந் தென்னகத் திருத்திச்‌
சீ ராமப் பிள்ளையைச்‌ சிந்திக்கச் செவ்வருள்‌ செய்தி யென்றன்‌
மாராமத்தாளின் மறை புகுந்தே னன்மரபடியர்‌
நாராமப் பூவை நயக்கு மரங்க நகரன்னையே–
சீராமப் பிள்ளை

வெஞ்‌சீய மெண்ணிடு வேழத்தின் வேண்டார் வெருவ வந்த
நஞ்சீயர் நற் கழனாடொறு நாடி நயக்க வெற்கு
நெஞ்சீதி யென்று நின்னீரசத் தாட் சரணேர்ந் தடைந்தேன்‌
மஞ்சீயன் முத்‌த வரங்க நகரன்னை மாணிக்கமே-
-நஞ்சீயர்

நலந் திகழ் நாராயணச்‌ சீயர் நற் கழனண்ணி யுய்வான்‌
பொலந் திகழ் நின்னடிப் புண்டரிகத்திற் புகல் புகுந்தேன்‌
வலந் திகழ் வன்னி வளர்ப்போர் வழுத்‌து மலர் மகளே
நிலந் திகழ்ந்தோங்கு மரங்க நகரன்னை நிச்சலையே-
-நலம் திகழ் நாராயணச் சீயர்

சொல்ல வரிய சொல்லார்ந்த நம்பிள்ளை துணை யடியாற்‌
கல்ல வரிய பிறவியைக் கல்லக் கருதி வந்துன்‌
வல்ல நற்றாளின் மறை புகுந்தேன் மறை வாணர்‌ தொழும்‌
நல்ல வரங்க நகரன்னையா நளினாம்பகியே
–நம்பிள்ளை

சேணோங்கு நல்லுரச் சேனாபதி யெனுஞ் சீயரடி
கோணோங்கு மென்னுளங் கொண்டுய்ய நீ யருள் கூர்தி யென்றுன்‌
பூணோங்கு தாளிற் புகல் புகுந்தேன்‌ சிறைப் புட் கணத்தின்‌
பாணோங்கு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே-
-ஸ்ரீ சேனாபதி ஜீயர்

மாண்ட குணத்தெம் பெரியவாச்சான்பிள்ளை மாணருளே
பூண்ட வரன்பு புனைந்துய்ய நின் கழல் புக்கடைந்தேன்‌
தூண்டலிலாத சுடர் விளக்கேது கடீர் வளங்கள்‌
நீண்ட வரங்க நகரன்னையாகு நிரஞ்சனையே–
பெரியவாச்சான்பிள்ளை

எந்தை நம்பிள்ளை சுதனாம் ராமானுசாரியன் தாள்
சிந்தையில் வைத்து எளியேனுய்ய நீ யருள் செய்தி என்றுன்
முந்தை மறை முடித்தாளில் அடைக்கல முந்தினன் ஓர்
நிந்தையுமில்லா வரங்க நகரன்னை நித்தியையே
–இராமானுசாசாரியார்

நீடு மெய்ஞ்ஞான நெறி நின்றொழுகு நன்னிட்டைகள் கை
கூடும் வடக்குக் திருவீதிப் பிள்ளே குரை கழலே
நாடு நலம் பெற நின்னடி நண்ணினன் நான் மறையும்‌
நேடுமரங்க நகரன்னையாகு நிராமயையே-
-வடக்குத் திருவீதிப் பிள்ளை

மாவள மோங்குஞ் சிவிக்கரைப் பிள்ளை மலரடிச்‌ சீர்‌
நாவள மோங்க நவிற்றி யென் சன்மத்தின் ஞாட்பறுப்பான்‌
பூவள மோங்கிப் பொலியு நின்றாளிற் புகல் புகுந்தேன்‌
காவள மோங்கு மரங்க நகரன்னைக் கற்பகமே-
-சிவிக்கரைப்பிள்ளை

மால் வெட்டி யென்றன் மனத்தை யெப்போதும் வளர் கருணை
வேல் வெட்டிப் பிள்ளை விழுத்தாணிறுத்‌தும் விரகு பெற
நூல் வெட்டியோர் தொழு நின்றாளடைந்தன னோற்பவர்க்கு
மேல் வெட்டிக் காட்டு மரங்க நகரன்னை விண்ணவியே
–வேல் வெட்டிப் பிள்ளை

எங்கு நிறைபுகழ் ஈ புண்ணி மாதவனின்னருளாற்
றங்கு மென் சன்மந் தவிர்ப்பானினது தயை பெற நின்‌
கொங்குண் மலரடி கூடினனன்பர்கள் கூட்டுணுஞ் சீர்‌
பொங்கு மரங்க நகரன்னையாங் கடற் புத்‌திரியே
–ஈ யுண்ணி மாதவப் பெருமாள்-இவர்க்கு ஈயுண்ணி சிறியாழ்வானப் பிள்ளை யென்றும் திரு நாமம்‌

சுரக்குமளிப் பத்ம நாபப் பெருமாடுணை யடி யென்‌
பரக்கு மனத்திற் பதித்‌துய்ய நின்னைப் பணிந்தனன் யான்‌
கரக்குஞ் சராசரம் யாவையு மீளவுங் கண்டவற்றைப்‌
புரக்கு மரங்க நகரன்னையா மணிப் பூடணையே–
ஈ யுண்ணி பத்ம நாதப் பெருமாள் பிள்ளை

சீரார் நாலூர்ப் பிள்ளை சேவடி யேத்தி யென்‌ தீவினையின்‌
வேரார் வம் வெட்டி விரத்தி வழி நின்று வீடடைவான்‌
எரார் நின்னிண்டை யிணை யடியிற் சரணெய்‌தினனாற்‌
காரார் பொழில் சூழரங்க நகரன்னைக் கண்மணியே
–நாலூர்ப்பிள்ளை –இவருக்குக் கோலேஸர் – கோல வராகப் பெருமாள்‌,இராமானுஜ தாசர்‌ என்றும் திரு நாமம்‌

நாலூராச்சான் பிள்ளை நற் பத நண்ணி நளிர்ந்த தென்றத்‌
காலூர்தியைப் புறங் கண்டண்டர் யாவருங் காண்பரிய
மேலூர் புக நின் விழுத் தாளடைக்கல மேவினனற்‌
சேலூர்‌ திருக் கண்ண ரங்க நகரன்னைச் செந்திருவே
–நாலூராச்சான் பிள்ளை–இவர்க்கு நாலூர் தேவப் பெருமாள் பிள்ளை யென்‌றும் திரு நாமம்‌

கடுவிற் கொடி தாக்க வற்று மிரு வினைக் கட்டறுத்த
நடுவில் திருவீதிப் பிள்ளை நல் தாள் நண்ணி நான் பிறவி
வடுவிற்றொழிய நின் வண் மலர்த் தாளின் மறை புகுந்தேன்‌
அடுவிற் புருவ வரங்க நகரன்னை யம்புயையே-
-நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்

பின்பழகார்ந்த பெருமாளென்‌ சீயர் பெருமை புகழ்ந்
தென் பழங்கண்ணிரித் தீறினல் விட்டின்ப மெய்த வெண்ணி
இன் பழ நேர் நின்னிணைத் தாளிலில்லடை யெய்‌தினனாற்
றென் பழனஞ் சூழரங்க நகரன்னைச் சின்மயையே
–பின்பழகிய பெருமாள் சீயர்

ஏறு திரு வுடையார் தாசர் சீர்த்தி யிசைத்திதயத்‌
தேறு திருக்கை யிரிப்பான் ௧ருணை யிழைத்தி யென்‌றுன்‌
வீறு திருப்புகழ் வேய்ந்த நின்றாண் மறை மேவினனால்‌
நாறு திருமலர்ச் சேக்கை யரங்க நகரன்னையே
–ஏறு திருவுடைய தாசர்

தாரணியோர் புகழும் வான மா மலை தாசர் பதம்‌
ஏரணி நெஞ்சத் திருத்தி யுய்வான் அருளீதீ யென்‌றுன்‌
தாரணி தாளிற் சரணடைந்தே னுயிர்‌ தங்குலக
காரணியாகு மரங்க நகரன்னைக் கற்பகமே
–வான மா மலை தாசர் –

வானேய் புகழ்க் குருகூர் தாசர் நோக்கின் வளனெனக்கு
மீனேய் நோக்கென்றெண்ணி யுய்வானருள் செயல் வேண்டு மென்‌றுன்‌
தேனேய் செழுங்கமலத் தாளடைந்தனன் சேர்ந்தவரை
ஊனேய் தனீத் தாளரங்க நகரன்னை யுத்‌துங்கையே
–திருக்குருகூர் தாசர்

ஞான வொழுக்க நயினாராச்சான் பிள்ளை நல்லடி யென்‌
ஈன வொழுக்க மற்றெண்ணி யுய நீ யிரங்கி டென்றுன்‌
மோன வொழுக்கர் தொழுந் தாளடைந்தனன் முத்தி நெறிக்‌
கான வொழுக்கர்க் கருளு மரங்க நகரன்னையே
-நயினார் ஆச்சான் பிள்ளை –

தேவாதி கேசரி நீன் கொழுநன் பெயர்ச் சீயர் புகழ்‌
ஓவாதிசைத்துய்ய நீ திருவுள்ள முவத்தி யென்றுன்‌
தேவாதியர் தொழுஞ் சேவடியிற் சரண் சேர்ந்தனன் யான்‌
ஓவாதிருக்கோகரங்க நகரன்னை யொண்மணியே
-வாதி கேசரி அழகிய மணவாள சீயர்

பக்குவ நெஞ்சப் பரகால தாசர் பதத்‌ துணை யென்‌
சக்குவக்கக் கண்டு தாவங்க ணீங்கத் தயை புரியென்‌
றிக்கு வட்டிண்டை யடியினிலில்லடை யெய்‌தினனெண்‌
டிக்குவக்குஞ்‌சீ ரரங்க நகரன்னைச் செல்வ வைப்பே
–பரகால தாசர்

தெருளார் செழு நடைச்‌ சீ ரெங்காசாரியர் சேவடி யென்‌
இருளாரிதயத் திருத்தி யுய்வானீ யிழைத்தி யென்றுன்‌
பொருளார் பூம் புண்டரிகப் பொற் பதத்திற் புகல் புகுந்தேன்‌
அருளாரரங்க நகரன்னையா மநந் தாக்‌கியையே-
-சீ ரெங்காச்சார்யார்

நல்லவரேத்து நின்னா தன்‌ றிருப் பெயர் நண்ணயினார்‌
பல்லவ பாதம் பணிந்துய்யவன் புபணித்தி யெற்கென்‌
றெல்லவர் போலொளி ரிண்டை யடிச் சரணெய்‌தினலூல்‌
வல்லவர் வாழ்‌த்து மரங்க நகரன்னை மா மணியே–
அழகிய மணவாள நயினார்

அண்ணன் முடும்பைல காரியன் கலையார் பொருளென்‌
திண்ணன்னுளத்திற் றிகழ்ததுவிப்பா யென்றுன் சேவடி யாங்
கண்ணன் மலர்களிற் கையடை புக்கனன் காந்து மணி
வண்ணன் மகிழு மரங்க நகரன்னை வானவியே-
-பிள்ளை லோகாச்சார்யார்

சாந்த குண னங்கள் கூர குலோத்தம தாதர் பத
காந்த மென்னெஞ்சக் கரும் பொற் கவரக் கணித்தி யென்றுன்‌
சேந்த கமலத் திருவடியிற் சரண் சேர்ந்தனன் செங்‌
காந்தளங்கையாய ரங்க நகரன்னைக் காஞ்சனமே-
-கூர குலோத்தம தாச நாயன்

விஞ்சிய யோகி விளாஞ்சோலைப் பிள்ளை விரை யடி யென்‌
நெஞ்சினில் வைத்‌துதித்‌ துய்யும் வண்ண நினைத்தி யென்றுன்‌
கஞ்சவடிகளிற் கையடை புக்கனன் காதரரை
அஞ்சலென்றாளு மரங்க நகரன்னையாந் திருவே-
-விளாஞ்சோலைப்பிள்ளை -இவருக்கு நலம் திகழ் நாரணன் என்னும் திருநாமமும் உண்டு –

ஊக்கத்துடன் றன் குரவனை யுன்னு முளத்து மணப்‌
பாக்கத்‌து நம்பி பதந் தொழுதுய்யப் பணித்தி யென்றுன்‌
ஆக்கக் கழலிலடைக்கலம் புக்கன னன்பர் மனத்‌
தேக்கத்தை நீக்கு மரங்க நகரன்னை யின்ப வைப்பே
–மணப்பாக்கத்து நம்பி

ஆவலறுத்தோர்க் கருளுங் குண நிதியான கொல்லி
காவல தாசர் கழறொழுதுய்யக் கணித்தி யென்றுன்‌
பூவலர் பாதம் புகல் புகுந்தேன் புன்மை போக்கு மறை
நாவலரேத்‌து நலத்தா யரங்க நகரன்னையே–
கொல்லி காவல தாசர் –

வண்மைக் கோட்டூரண்ணர் வாரிசத் தாளை வழுத்தி யென்றன்‌
தண்மைச் சனனந் தவிர்ப்பானுளத் தெண்ணித்‌ தாழ் வொன்றில்லா
உண்‌மைச் சுருதித் தலை வாழ் நின்றாளிலு வந்தடைந்தேன்‌
ஒண்மைக் கருணை யரங்க நகரன்னை யுத்தமியே–
கோட்டூர் அண்ணர்

கண்ணங்குடிப்பிள்ளை கண்ணருளாலென் கடு வினையைத்‌
திண்ணங்குடி யெவனெனும் புகுவிக்குஞ்‌ சிந்தையனாய்‌
வண்ணங்குடி கொணின் வண் பத மெய்‌தினன் மாசறுத்தோர்
எண்ணங்குடி கொளரங்க நகரன்னை யிந்திரையே
–திருக் கண்ணங்குடிப் பிள்ளை

திருப்புட் குழி யமர்‌ சீயர்‌ திருவடி சேர்ந்து பெரு
நெருப்புட்டணந்தரு நீள் பவ நீக்க நினைத்‌து நின்றன்‌
திருப் புட்கரச்‌ சேவடிச் சரண் சேர்ந்தனன்‌ சீத மதித்‌
திருப்புட்கரிணி யரங்க நகரன்னைச் செய்யவளே-
-திருப்புட் குழிச் சீயர்

திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சேவடி யென்‌
கருமலை நன் மருந்தா வெண்ணி வாழக் கணித்தி யென்றுன்‌
மருமலி தாளின் மறை புகுந்தேன் றொண்டர் மா மனத்தின்‌
பொரு மலை நீத்தாள ரங்க நகரான்னைப் பொன்‌ மகளே
–திருவாய் மொழிப் பிள்ளை

மாட்சிக் குணத்தெம் மணவாள மா முனி மணடியைப்‌
பூட்சிக்குரிய வென் புந்தியில் வைத்துப் புனிதமுறக்‌
காட்சிக்குரிய நின்காற்‌ சரண் புக்கனன் காழ்த்தவண்ட
ஆட்சிக்குரியா யரங்க நகரன்னை யச்சுதையே-
-மணவாள மா முனிகள்


உண்டிக்‌ குடைக்குழல்வேன் றொழுதுய்ய வுவக்தி யென்றுன்‌
எண்டிக்கி பங்களெனு மெண்மராரிய ரிண்‌டை யடி
தொண்டக் குலந் தொழுந் தூவடியிற் சரண்டுன்னினனால்‌
அண்டக் குலத்தாயரங்க நகரன்னை யற்புதையே
–அஷ்ட திக் கஜங்கள்

நானெறிப் பட்ட குரவர் பலரவர் நாமம் வண்‌ சீர்‌
நூ நெறி கண்டு னுவன்று நிற் சார்ந்திடு நோன்மையிலேன்‌
ஏனெறி காறுமியம்பி நினைச் சரணெய்‌து மெனை
மேனெறி யுய்த்தாளரங்க நகரன்னை மெய்ப் பொருளே
நானெறி-1-ஆஸ்ரயண குரு பரம்பரையும் -2-ரஹஸ்ய த்ரய குரு பரம்பரையும் -3-அருளிச் செயல் வியாக்யான குரு பரம்பரையும் -4-ஸ்ரீ பாஷ்ய ஸ்ருத பிரகாசிகா குரு பரம்பரையும் –

சிருட்டி முதலிது காறுமெடுத்த செனனந் தொறும்‌
மருட்டி வருமன மாதியிற் செய்தவழு வறுத்தெற்‌
நெருட்டிப் பணி கொளெளப் புகல் புக்கனன் செய்யவருட்‌
டிருட்டி வைத்தாடி யரங்க நகரன்னைச் செய்யவளே

தெருட் கடல் செய் மதித்‌ திண்மையைத் தேய்த்‌துத் தெறும வித்தை
இருட் கடல் வற்ற விழைத்தி யென்றுன்னை யிரந்தடைந்தேன்‌
அருட் கடலே யெனை யாளுதி யாரணத் தந்தமுரை
பொருட்கடலே நல்லரங்க நகரன்னைப் பூமகளே.

ஒரு காலெனப் பல காலுளத்தார்த்தி யுவட்டலினின்‌
இருகாற் கமலத்திடைச் சரண் புக்கனனேன்றெனை நின்‌
பெரு காரருட் கிலக்காக்கனினக்குப் பெருமை யதாம்‌
முருகார் குழலா யரங்க நகரன்னை முன்னவளே

ஊக்கக்தொடு நின்னுபய வடிகளினுற்றவன் பின்‌
ஓக்கக்தொடு சரண்புக்க வென்மீ துன்னுள மிரங்கிக்‌
காக்கக் கருதிடினின் பேர் கருணைக் கடலெனலாம்‌
ஆக்கத்‌ துணைவி யரங்க நகரன்னை யம்புயையே

குற்றமென நூல் குறிக்கின்ற யாவைக்குங் கொள் கலனா
யுற்ற வெளியனை யோம்புமவ ரிவ் வுலகுதனில்‌
அற்றவனாய் நின்னடி யிணை யம்புயப மண்டை கொண்டேன்‌
நற்றவர் போற்று மரங்க நகரன்னை நாயகியே-

புறவொன்று தன்பாற் புகு வேடன் றன்னைப் புரந்து துண்டவ்‌
வுற வொன்று கொண்டு நின்னொண் கழலிற் சரணுற்றடைந்தேன்‌
துறவொன்று தூயவர் நெஞ்சத் தொளிருஞ் சுடரொளியே
நறவொன்று கூந்தலரங்க நகரன்னை நாயகியே-

கண்டு முனிவரன் கட்டுரையின் படிக்கை யடை நிற்‌
கண்டு புகுந்தோனெ வனாயினு மவற் காத்தனன் றாம்‌
விண்டு கை சோர விட றீது மெய்யின்ப வீடளிக்கும்‌
விண்டுவின் பன்னி யரங்க நகரன்னை வித்தகியே-

அறத்‌திற் கடைப்பட்ட வாதனின் பாத வரணடைந்தேன்‌
அறத்திற் குறவிலனாயினு நீ யெனை யாதரித்தல்‌
அறத்தி சிறந்த வறமென நூல்களறைந்து நிற்கும்‌
அறத்திற் கருத்துணையாகு மரங்க நகரன்னையே-

பல்வழி யானும் படர் படச் சன்மப் பரவைக்கும்‌
அல்வழிகாட்‌டி யடியனைக் கூத்துகளாட்டி நிற்கும்‌
வல்வழி மாயையை மாய்ப்பானினைச் சரண்‌ வந்தடைந்தேன்‌
நல்வழி சேர்த்தி யரங்க நகரன்னை நாயகியே-

பிறவிப் பிணிக்குப் பெரும் பீரடைந் ததைப் பேர்த்திடு நின்‌
அறவிப் பிரர் தொழு மம்புயத் தாளிணை யண்டை கொண்டேன்‌
மறவிப் பிரமமொழித்‌ துனை யேத்தும் வரமருள்வாய்‌
துறவிப் பிரிய வரங்க நகரன்னைசத் தூயவளே

பிறப்பினை யெண்ண வென்னெஞ்சந் திடுக்‌கிட்‌டுப் பீரடையும்‌
இறப்பினை யெண்ண விதயம் விதிர்விதிர்த்தேங்கி நனி
விறப்பினை நண்ணு மதனானினைச் சரண் வேட்டடைந்தேன்‌
சிறப்பினை நல்கு மரங்க நகரன்னைச் செய்யவளே

பத்தி யிலாதவன் பாமரன் பாதகன் பற்று மனச்‌
சுத்தி யிலாதவன் சொல் கவிச் சொற் பொருட்டோம் பொறுத்து
முத்திவைத்தாள நின் முண்டகத்தாளின் முயன்‌றடைந்தேன்‌
நத்தி யெற்காத்தனலமா மரங்க நகரன்னையே-

போற்றி திருமுகம் போற்றி கருணை பொழி திருக்கண்‌
போற்றி புன் மூரல தரங்களங்குழை பூண்ட கன்னம்‌
போற்றி வரதாபயகர முந்தி பொலி யுரம்‌
போற்றி யரங்க நகரன்னை பொங்கொளிப் பொன்னடியே-

வாழி யரங்க மத வள மன்னதில் வாழ் முகுந்தன்‌
வாழி யரங்க நகரன்னை நாளும் வளர் கருணை
வாழி யிரு மறை யாழ்வார் களாரிய வர்க்க மென்றும்‌
வாழி யெதிபதி திப்பிய வாணை யிவ் வையகத்தே-

வைப்பா மரங்க நகரன்னை தாளில் வயங்கு சத
முப்பான் ௧வியாலடைக்கல மாலை மொழிந் தனனால்‌
ஓப்பாரிலா வைணவர் பதமுள் வைத்துவப்பவர் பாற்
பப்பார் பரிவினன் பள்ளி கொண்டா னெனும் பாவலனே-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வைஷ்ணவ தர்மம்–

November 3, 2025

தர்மம்‌ என்பது சாஸ்‌திரங்களில்‌ சொல்லப் பட்டதாய்‌, பலனை அளிப்பதான செயலாகும்‌. சாஸ்திரங்களில்‌ முக்கியமான (உபதேசரத்னமாலை 61-ல்‌] ஞானம்‌, அனுஷ்டானம்‌ இவை நன்றாகவே உடையவனான குருவை அடைந்தக்கால்‌, தேனார்‌ கமலத் திருமாமகள் கேள்வன்‌. தானே வைகுந்தம்‌ தரும்‌ என்கிறார்‌ மணவாள மாமுனிகள்‌. இந்தத்‌ தர்மம் தான்‌ மிக உயர்த்த தருமம்‌. இத் தர்மத்தை மதுரகவி நிஷ்டை சரமோபாய நிஷ்டை, அந்திமோபாய நிஷ்டை என்று பல பெயர்களால்‌ குறிப்பிடுவர்‌.-கர்ம ஞான பக்தி யோகங்களோடு அவதார ரகஸ்ய ஞானம்‌, புருஷோத்தம வித்தை, புண்ய க்ஷேத்ர வாஸம்‌, திருநாம சங்கீர்த்தனம்‌, திருவிளக்கு எரிக்கை, திருமாலை எடுக்கை முதலானவற்றையும்‌ கீதாச்சார்யன்‌ உபதேசித்த அளவில்‌ அவை யாவும்‌ உடலை வருந்திச்‌ செய்ய வேண்டி யிடுப்பதாலும்‌ ஐம் பொறிகளை அடக்குவது அரிதாயிருப்பதாலும்‌, நீண்ட காலம்‌ அவற்றைக்‌ கைக் கொள்ள வேண்டி யிருப்பதாலும்‌ எளிதில்‌ முடிக்க இயலாததாலும்‌ மேற்‌கொள்ள அரிதாயிருக்கும்‌. மேலும்‌ அவை யாவும்‌ நம்முடைய முயற்சியால்‌ இயற்றப் படுவதால்‌ அத்யந்த பாரதந்திரமாகிற ஆத்ம ஸ்வரூபத்துக்கு முற்றிலும்‌ பொருந்தாதாதலால்‌ மேற் கொள்ள அரிதாயிருக்கும்‌ என்று கருதியே அர்ஜுனனுக்கு பற்றுதற்‌கு எளிதாகவும்‌ ஆத்ம ஸ்வரூபத்துக்கு பொருத்தமாகவும்‌ உள்ள உபாயத்தை எம்பெருமான்‌ கிருபையினால்‌ ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா,”ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச-என்ற ஸ்லோகத்தை அருளிச் செய்தான்‌. இக் கருத்தை நம்மாழ்வார்‌ வார்த்தை அறிபவர்‌ மாயவர்க்காளன்றி யாவரோ
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை
பேர்த்துப்‌ பெருந் துன்பம்‌ நோற நீக்கித்‌ தன் தாளின்‌ கீழ்ச்‌
சேர்த்து அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணித்‌ தெளிவுற்றே
‘(திருவா 7.4.10) என்று குறிப்பிட்டுள்ளார்‌. ஆகவே எம்பெருமானையே உபாயமாகக்‌ கொள்ளும்‌ பிரபத்திக்கு தேச, கால, பிரகார அதிகாரி நியமங்களும்‌, பல நியமும்‌ இல்லை. விஷய நியமமே உள்ளது என்றார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌ (ஸ்ரீ வசனபூ. சூ 28-ல்‌)ஆகவே இந்தப்‌ பிரபத்தியானது எவ்விதத்திலும்‌, எக் காலத்திலும்‌ எந்த முறையிலும்‌, எவராலும்‌, எந்த பயனைக் குறித்தும்‌ செய்யத் தக்‌கதாக இருக்கும்‌. ஆனால்‌ மன உறுதிப் பாட்டையே வடிவாகக்‌ கொண்ட பிரபத்திக்கு மகா விஸ்வாசம்‌ ஏற்படுவது கடினம்‌.-மேலும்‌ பந்த மோக்ஷங்கள்‌ பிரபத்தி, ஆசார்ய அபிமானம்‌ (இரண்‌டுக்கும்‌] பொதுவாயிருக்கும்‌ ஸர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை நினைத்தால்‌, நான்‌ இதற்குத்‌ தகுதி யுடையவன்‌ அல்ல என்று அஞ்சும்படி இருக்கும்‌. ஆகவே இத்தகைய அசக்தர்களுக்கும்‌ உய்யும்‌ உபாயமாக இருப்பது ஆசார்ய அபிமானமேயாகும்‌.-ஆசார்ய அபிமானமே பிரபத்தி போல ஸ்வதந்திரமான உபாயமாக இருந்து பகவத்‌ பிராப்தியை உண்டாக்கித்‌ தருமாதலால்‌ அது அந்திம உபாயமாகக்‌ கொள்ளப்படுகிறது. கர்ம, ஞான, பக்திகளை விட பிரபத்தி சிறந்ததாயிற்று. அதையும் விட ஆசார்ய அபிமானமே சரமோபாயமாகும்‌.-ஆசாரியன்‌ திருவடிகளையே உபாயமாகக்‌ கொண்டு தெய்வம்‌ வேறு அறியாத நிஷ்டனுக்கு அறியத் தக்க விஷயங்கள்‌ ஏழாகும்‌. அவை முறையே.
1- ஆசார்யனுடைய திவ்ய நாமப்‌ பிரபாவம்‌
2-ஆசார்யனுடைய திவ்ய குண வைலக்ஷண்யம்‌.
3-ஆசார்யனுடைய திவ்ய அவதாரச் சிறப்பு.
4-ஆசார்யனுடைய வாசஸ்தல வைபவம்‌.
5-ஆசார்யனுடைய திரு வுருவப்‌ பெருமை.
6-ஆசார்யனுக்குச்‌ செய்யத் தகும்‌ அடிமைத் திறம்‌
7-ஆசார்ய : விஷயமான மங்களாஸாஸனத்தின்‌ மாண்பு
என்பனவாகும்‌.ஸதாசார்யனை நன்கு பற்றுவதற்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம்‌ ஒரு காள ராத்திரியாகும்‌. பற்றிய அன்று தொடங்கிச்‌ சேதனனுக்கு நல் விடிவு காலமாகும்‌. ஆதித்ய, ராம திவாகர அச்யுத பானுக்களுக்குப்‌ போகாத உள்ளிருள்‌ நீங்கி, வற்றாத பிறவிக் கடல்‌ வற்றி விகஸியாத போதில்‌ கமலம்‌ அலர்ந்தது வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே (ஆ. ஹி 8) என்று கூறுகிறார்‌ அழகிய மணவாளப்‌ பெருமான்‌ நாயனார்‌. ஆகவே ஆசார்யனுடைய தோற்‌றத்தைச ஸூர்யோதயமாகச்‌ சொல்லுவார்கள்‌. மேலும்‌ ஆசார்ய கடாக்ஷமானது வேறு ஒரு வழி முறைகள்‌ முயற்சிகள்‌ வேண்டாதபடி , மகா பாபிகளுடைய கர்மத்தையும்‌ அடியோடு நீக்‌குவதால்‌, அவர்கள்‌ பரிசுத்தராக, முடிவில்‌ நிலையான பரம பதத்தையும்‌ அடைவார்கள்‌ என்ற கருத்தை மாமுனிகள்‌ விளக்கமாக”நாராயணன்‌ திருமால்‌, நாரம்‌ நாமென்னும்‌ உறவு
ஆராயில்‌ நெஞ்சே அநாதியன்றோ, சீராரும்‌
ஆசாரியனாலே யன்றோ நாமுய்ந்ததென்று
கூசாமல்‌ எப்பொழுதும்‌ கூறு”-என்கிறார்‌. (ஆர்த்‌ 45]

பிறவிப்‌ பெரும் பிணியைப்‌ போக்குவதான பெரிய திரு மந்திரத்தை உபதேசித்தவனே ஆசார்யனாகின்றானே யன்றி அற்பமான பலன்களைத் தரும்‌ மந்திரங்களை உபதேசிப்பவர்களுக்கு ஆசார்‌யன்‌ ஆகும்‌ தகுதியில்லை. ஆசார்யன்‌ சிஷ்யனுடைய ஸ்வரூபத்‌தையே பேணிக் கொண்டிருப்பான்‌. பிறர்‌ சிஷ்யருடைய தேகத்‌தையே பேணிக் கொண்டிருப்பார்கள்‌. ஆசார்யனுடைய தேக ஸம்‌ரக்ஷணம்‌ சிஷ்யனுடைய பணியாகும்‌. சிஷ்யனுடைய ஆத்ம ஸம்ரக்ஷணம்‌ ஆசார்யனுடைய பணியாகும்‌. ஈஸ்வரனைப்‌ பற்றுகை கையைப்‌ பிடித்துக் காரியம்‌ கொள்வது போலிருக்கும்‌. ஆசார்யனைப்‌ பற்றுகை காலைப் பிடித்துக்‌ சுரரியம்‌ கொள்வது போலிருக்‌கும்‌. கையைப் பிடித்தால்‌ சுலபத்தில்‌ விடுவித்துக் கொண்டு போய்‌ விடலாம்‌. ஆனால்‌ காலைப் பிடித்து விட்டால்‌ அபயம்‌ கொடுத்தே யாக வேண்டுமாதலால்‌ ஆசார்யனைப்‌ பற்றுவதே மேலானது.
ஆகையால் தான்‌ ஈஸ்வரனே ஆசார்யத்வத்தை ஆசைபட்டுக்‌ குரு பரம்பரையில்‌ முதல்‌ இடம்‌ பெற்றும்‌ கீதையும்‌ அபயப் பிரதரனமும்‌ அருளிச்செய்தும்‌ பெருமை அடைந்தான்‌. ஆசார்யன்‌ செய்த உதவிக்குக்‌ கைம்மாறு ஒன்றும்‌ இல்லை. திருமந்திர உபதேசத்தால்‌ வைகுண்ட பதியான எம்பெருமானையே அடைகின்றபடியால்‌,இன்னுமொரு வைகுந்தமும்‌, இன்னுமொரு வைகுந்தனும்‌ இருந்‌தாலொழிய ஆசார்யனுக்குப்‌ பிரதி உபசாரம்‌ பண்ண முடியாது.-அவை யில்லையாதலால்‌ என்றும்‌ பிரதியுபகாரம்‌ பண்ண முடியாது.-ஈஸ்வர சம்பந்தம்‌, பந்தம்‌, மோட்சம்‌ இரண்டுக்கும்‌ பொதுவாயிருக்கும்‌. ஆனால்‌ ஆசார்ய சம்பந்தம்‌ மோக்ஷ்த்துக்கே ஹேதுவாயிருக்கும்‌. பக்தியில்‌ அசக்தனுக்குப்‌ பிரபத்தி. பிரபத்தியில்‌ அசக்தனுக்கு ஆசார்ய அபிமானம்‌. ஆகவே கர்ம, ஞான பக்தி, பிரபத்திக ளுக்கு மேல்‌ எல்லையாக இருப்பதால்‌ ஆசார்ய அபிமானம்‌, அந்திமோபாயம்‌ என்று சொல்லப்படுகிறது.

குற்றமின்றிக்குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்கு அனுகூலராய்‌ என்று பெரியாழ்வார்‌ கூறியபடி சாஸ்திரங்களில்‌ குற்றம்‌ என்று சொல்லப்பட்ட செயல்களைத்‌ தவிர்த்து அந்தக் கரண, புறக் கரணங்‌களை அடக்கி சமம்‌, தமம்‌ முதலான குணங்களை வளர்த்துக்‌ கொண்டு, ஆசார்யனைத்‌ தெய்வமாகப்‌ போற்றிக்‌ கெளரவத்துடன்‌ தன்னுடைய சேவைகளால்‌ மகிழச் செய்வதே சிஷ்பனுடைய ஸ்வ ரூபமாகும்‌. தேவுமற்றறியாது
மாடும்‌ மனையும்‌ கிளையும்‌ மறைமுனிவர்‌
தேடும்‌ உயர்வீடும்‌ செந்நெறியும்‌ – பீடுடைய
எட்டெழுத்துத்‌ தந்தவனே என்றிராதார்‌ உற்வை
விட்டிடுகை கண்டீர்‌ விதி
(ஞா. ஸா 30) என்றார்‌ அருளாளர்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌.
சிஷ்யன்‌ ஆசாரியனுக்குச்‌ செய்யும்‌ பணிவிடைகளையே லட்சயமாகக்‌ கொண்டு ஆர்த்தி, ஆதரம்‌, அநஸுயை இவற்றுடன்‌ எப்போதும்‌ இருக்க வேண்டும்‌. ஆர்த்தி என்பது பணிவிடை செய்யத் துடிப்பது. ஆதரமாவது. அறிவு வேட்கை, அநஸுயை-பொறாமை இல்லாதிருப்பது. இவனுடைய ஞானத்திற்கு இலக்கு
ஆசார்ய குணங்கள்‌. அஞ்ஞானத்திற்கு இலக்கு ஆசார்ய தோஷங்‌கள்‌. இவனுடைய சக்திக்கு இலக்கு ஆசார்ய கைங்கர்யம்‌. அசக்‌திக்கு இலக்கு தீய ஒழுக்கங்கள்‌. இவனுக்கு இகலோக பரலோக ப்‌ராப்யங்கள் ஆசார்யன்‌ திருவடிகளே. ஆசார்யனிடத்தில்‌ செய்நன்றி மறவாமை தொடர்ந்திருக்க வேண்டும்‌.-ஆசார்ய நிஷ்டையில்‌ சிறந்தவர்களைக்‌ குறிப்பிடும்போது-வேட்டுவச்சி சபரியைச்‌ சொல்ல வேண்டும்‌. இராமபிரான்‌ தனக்கு
முன்‌ பிரத்யக்ஷ்மாக இருந்தும்‌ அவனை விரும்பாமல்‌ ஆசார்யன்‌ மதங்க மகரிஷி பாதசேவையை விரும்பி உடலைத் துறந்தாள்‌.
தன்‌ குருவின்‌ தாளிணைகள்‌ தன்னில்‌ அன்பொன்றில்லாதான்‌
அன்பு தன்பால்‌ செய்தாலும்‌ அம்புயை கோ ன்‌ – இன்பமிகு
விண்ணாடு தானளிக்க வேண்டியிரான் ஆதலால்‌
நண்ணாரவர்கள்‌ திருநாடு (உ. தே. மா 60),
உய்ய நினை உண்டாகில்‌ உங்குருக்கள்‌ தம் பதத்தே
வையும்‌ அன்பு தன்னை இந்த மாநிலத்தீர்‌ — மெய்யுரைக்கேன்‌
பையரவில்‌ மாயன்‌ பரமபதம்‌ உங்களுக்காம்‌
கையிலங்கு நெல்லிக்கனி (உ.தே.மா. 62)
தன்னாரியனுக்குத் தான்‌ அடிமை செய்வது. அவன்‌
இந் நாடு தன்னில்‌ இருக்கும்‌ நாள்‌ – அந்நேர்‌
அறிந்தும்‌ அதிலாசையின்றி ஆசாரியனைப்‌
பிரிந்திருப்டாரார்‌ மனமே! பேசு (உ தே.மா. 64)
ஆசாரியன்‌ சிச்சனாருமிரைப்‌ பேணுமவன்‌
தேசாரும்‌ சிச்சனவன்‌ சீர் வடிவை – ஆசையுடன்‌
நோக்குவனென்னும்‌ நுண்ணறிவைக்‌ கேட்டு வைத்தும்‌
ஆர்க்கும்‌ அந்நேர் நிற்கை அரிதாம்‌ (உ தே.மா. 65)

மானிடவன்‌ என்று குருவை மலர்மகள்‌ கோன்‌
தானுகந்த கோலம்‌ உலோகமென்றும்‌ – ஈனமதா
எண்ணுகின்ற நீசர்‌ இருவருமே எக்காலும்‌
நண்ணிடுவர்‌ கீழாம்‌ நரகு:
(ஞா. ஸா 32)

எட்ட இருந்த குருவை இறையன்றென்று
விட்டோர்‌ பரனை விருப்புறுதல்‌ – பொட்டெனத்தன்‌ கண்செம்பளித்திருந்து கைத்துர்தி நர்தூவி அம்புதத்தைப்‌ பார்த்திருப்பான்‌ அற்று
(ஞா. ஸா 33)

என்றும்‌ அனைத்துயிர்க்கும்‌ ஈரஞ்செய்‌ நாரணனும்‌
அன்றும்‌ தன்‌ ஆரியன்பால்‌ அன்பொழியில்‌ – நின்ற
புனல்பிரிந்த பங்கயத்தை பொங்குசுடர்‌ வெய்யோன்‌
அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று
(ஞா. ஸா.35)

ஆசார்யனைப் போலவே ஆசார்யன்‌ பத்தினியையும்‌ சிஷ்யன்‌ மதித்து அடிமைகள்‌ செய்ய வேண்டும்‌ என்பதை நம்பிள்ளையும்‌ அவர்‌ சிஷ்யர்‌ வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையும்‌ நடத்திய வரலாறு கூறுகிறது. நம் பிள்ளையைக்‌ காப்பாற்ற வேண்டி ஓடத்திலிருந்து மழையையும்‌, புயலையும்‌ பொருட்படுத்தாது நீரில்‌ குதித்த ஒரு சாத்விக அம்மையாரின்‌ ஆசார்ய நிஷ்டைக்கு மதிப்பே கிடையாது. உடையவர்‌ ஒரு ஊமைப் பெண்ணுக்குத்‌ தன்‌ பாதார விந்தங்களைப்‌ பற்றாசாகக்‌ கொள்ளுமாறு கூறிய பொழுது, ஆழ்வான்‌ தனக்குப்‌ பிரபத்தியை உடையவர்‌ காட்டி விட்டார்‌. நானும்‌ ஊமையாய்‌ இருந்தால்‌ எனக்கும்‌ இந்தப் பேறு கிடைக்குமே என்று வருந்தினார்‌ என்பர்‌.-மண்கலந்த நீரை ஒரு பாத்திரத்திலிட்டுத்‌ தேற்றாங்கொட்டையை யிட்டுத்‌ தேற்றினால்‌ மண்ணானது கீழ்ப்படிந்து தெளிந்த நீர்‌ மேலே நிற்கும்‌. அது போலவே அஞ்ஞானம்‌ நிறைந்த சரீரத்தில்‌ உள்ள ஆத்மாவை ஆசார்யனாகிற மகா உபகாரகன்‌, திருமத்திரமாகிற தேற்றாம்விரையாலே தேற்றினால்‌ அஞ்ஞானம்‌ படிந்து
ஞானம்‌ பிரகாசிக்கும்‌. தெளிந்த நீரை வேறு பாத்திரத்தில்‌ சேர்க்கும்‌ வரை கை பட்ட போதெல்லாம்‌ கலங்குமா போலே, பிறந்த ஞானத்தைக்‌ கலக்குகிற பிராகிருத சரீரத்தை விட்டுப் போய்‌ அப்பிராக்ருத சரீரத்தில்‌ புகுந்தனையும்‌ கலங்காமல்‌ நோக்கும்‌ தன்னுடைய ஸதா சார்யன்‌ கண் வட்டத்திலே வாழ்தலே ஸ்வரூபம்‌ என்றனர்‌ பூர்வர்கள்‌.

“பின்பழகராம்‌ ஜீயர்‌ பெருந்திவத்தில்‌
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால்‌ – நம்பிள்ளைக்‌
கான அடிமைகள்‌ செய்‌ அந்நிலையை நன்னெஞ்சே
எனமற எப்பொழுதும்‌ ஓர்‌”

ஆசார்யனுடைய திருமுகமண்டல சேவையையும்‌, கைங்கர்‌யத்தையும்‌ விட்டு வைகுந்தம்‌ போகவும்‌, அவர்‌ இச்சைப்பட வில்லை. ஆசார்யன்‌ செய்கிற தப்பான கார்யங்களையும்‌ கூட சிஷ்யன்‌ மனமகிழ்வுடன்‌ அங்கீ கரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்‌-அக்காலத்தில்‌ நம்பிள்ளை ஒரு உரு திருவாய்மொழி நிர்வஹித்‌தருளினார்‌. அதைக்கேட்ட நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டர்‌ (கூரத்தாழ்வானுடைய பேரர்‌) அதற்கு ஈடாக ஒரு லட்சத்து இருபத்தையாயிரம்‌ கிரந்தமாக எழுதியதை நம்பிள்ளையிடம்‌ சமர்ப்பிக்க, நம்பிள்ளை தன்னுடைய அனுமதி யில்லாமல்‌ எழுதியதற்காக மிகவும்‌ கோபித்து அதை வாங்கி நீரைச் சொரிந்து கரையானுக்குக்‌ கொடுக்க அவை அன்றே அழிந்து போயின. வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை எழுதிய திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாமிரமும்‌ நம்பிள்ளை கண்டு
மிகவும்‌ உகந்தருளி நன்றாக எழுதினீர்‌. ஆனால்‌ நம்முடையஅனுமதி யில்லாமல்‌ எழுதினீராதலால்‌ இங்கே தாரும்‌ என்று வாங்கி தமக்கு அபிமத சிஷ்யரான ஸ்ரீ மாதவப் பெருமாள்‌ என்கிற ஈயுண்ணிச்‌ சிறியாழ்வானிடம்‌ கொடுத்தார்‌

சீரார்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை எழுது
ஏரார்‌ தமிழ்வேடத்தீடுகளைத்‌ – தாருமென
வாங்கி முன்‌ நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்‌
தான்‌ கொடுத்தார்‌ பின்னதனைத்தான்‌’

சிலர்‌ ஸ்ரீ பாஷ்யம்‌ எப்படி இருக்கும்‌ என்று வினவ, அவர்கள்‌ நடுவில்‌ திருவீதியில்‌ மாலை நேரத்தில்‌ பழுத்த வேட்டியும்‌ உத்தரீயமும்‌ தரித்து கூரத் தாழ்வான்‌ என்ற உருவில்‌ உலவும்‌ என்றார்களாம்‌. பகவத்‌ விஷயம்‌ எங்கே கேட்கலாம்‌ என்று கேட்ட பொழுது, நடுவில்‌ திருவீதிப்பிள்ளை; பட்டர்‌ என்பதொரு தேன் மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப்‌ பார்த்து கல்லிட்டு எறியாதே ஏறித் துகையாதே அடியிலே இருக்‌கவே மடியிலே விழும்‌ என்றார்களாம்‌. எம்பெருமான்‌ பெரிய ஜீயரிடம்‌ ஒரு வருட காலம்‌ திருவாய்மொழி ஈடுகேட்ட வைபவத்‌தை ஜீயர்‌ தாமே தமது பேற்றினை பின்வரும்‌ பாடலில்‌ கூறுகிறார்‌,

நாமார்‌, பெரிய திருமண்டபம்‌ யார்‌ நம்பெருமான்‌
தாமாகவே என்னத்‌ தனித்தழைத்து – நீ மாறன்‌
செந்தமிழ்‌ வேதத்தின்‌ செழும்பொருளை நாளுமிங்கே
வந்துரை யென்‌ றேவுவதே வாய்ந்து
என்று கூறுகிறார்‌

பரிதாபி வருஷ ஆவணி மாத திருப் பவித்ர திருநாளின் போது பெரிய திரு மண்டபத்திலே தாமும்‌ நாச்சிமாரும்‌ எதிராஜர்‌ சேனை முதலியார்‌ ஆழ்வாரும்‌ உடனிருக்க பெரிய திரு வோலக்கமாக எழுந்தருளியிருந்து ஒரு வருட காலம்‌ ஒரு தடையுமின்றி ஈடு முப்பத்தாறாயிரம்‌ முதலாக ஐந்து வியாக்யானங்களையும்‌ ஜீயர்‌ திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையையும்‌ கேட்டுகந்த விபரத்தை

“நல்லதோர்‌ பரிதாபி வருடந்தன்னில்‌
நலமான ஆவணியில்‌ முப்பத்தொன்றில்‌
சொல்லரிய சோதியுடன்‌ விளங்குவெள்ளிக்‌
கிழமை வளர்பக்கம்‌ நாலாம்நாளில்‌
செல்வமிகு பெரிய திருமண்டபத்தில்‌ செழுந்‌
திருவாய்‌ மொழிப்பொருளைச்‌ செப்புமென்று
வல்லியுடை மணவாளர்‌ அரங்கர்நங்கள்‌
மணவாள மாமுனிக்கு வழங்கினாரே’
-என்ற பாடல்‌ சாற்றுகின்றது.

ஒருநாள்‌ பிள்ளை உறங்காவில்லி தாஸர்‌ முதலியாண்டான்‌ ஸ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு சிஷ்ய லட்சணம்‌ இருக்கும்படி என்‌? என்று வினவ, முதலியாண்டான்‌, ஆசார்ய விஷயத்தில்‌ சிஷ்யன்‌, பார்யா ஸமனுமாய்‌, சரீர ஸமனுமாய்‌, தர்ம ஸமனுமாய்‌ இருக்கக் கடவன்‌. அதாவது சொன்னதைச்‌ செய்கையும்‌ நினைத்‌ தைச்‌ செய்கையும்‌, நினைவாக இருக்கையும்‌ என்று இருக்க வேண்டும்‌ என்றார்‌. அதாவது பார்யை சொன்னசைச்‌ செய்வாள்‌,-சரீரம்‌, மனம்‌ நினைத்ததைச்‌ செய்யும்‌. தர்மமான இயல்பு நினைவாக இருக்கும்‌ என்பது பொருள்‌. அதே போல்‌ சிஷ்யன்‌ விஷயத்‌தில்‌ ஆசார்யன்‌ பர்த்தா ஸமனுமாய்‌ சரீர ஸமனுமாய்‌ தர்மிஸமனு மாய்‌ இருக்க வேண்டும்‌.-ஏவிக்கொள்ளுகையும்‌, எடுத்து இடுவிக்‌
கையும்‌ (அசேதனத்தை: நினைத்தபடி விநியோகம்‌ கொள்வது போல் ) எடுத்துக் கொள்கையுமாகும்‌.
ஒருநாள்‌ கூரத்தாழ்வானுக்கும்‌ முதலியாண்டானுக்கும்‌ ஸ்யவாநுவிருத்திப்‌ பிரஸந்நாசார்யரால்‌ மோக்ஷமா, கிருபா மாத்ரப்‌ பிரஸந்நா சார்யாரால்‌ மோக்ஷமா என்ற கேள்வி எழுந்தது. முதலியாண்டான்‌ ‘குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்கனுகூலராய்‌’ என்று பெரியாழ்வார்‌ கூறியபடி ஸ்வானுவிருத்தப்‌ பிரசந்நாசார்யரால் தான்‌ என்று முதலியாண்டான்‌ கூற ஆழ்வான்‌, பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணி கொள்வான்‌, குயில்‌ நின்றார் பொழில்‌ சூழ்‌ குருகூர்‌ நம்பி என்று மதுரகவிகள்‌ சொல்லியபடி, நமக்கெல்லாருக்கும்‌ ஸ்யவாநுவிருத்தி இயலாமையாலே கிருபா மாத்ரத்தினால்‌ மோக்ஷம்‌ கிடைக்க
வேணடும்‌ என்றார்‌. முதலியாண்டானும்‌ அதை ஒத்துக் கொண்டார்‌.
ஸாஷாத்காரம்‌ என்ற ஞான விசேஷம்‌,-விபூதி ஸாஷாத்காரம்‌ -உபயவிபூதி ஸாஷாத்காரம்‌, பிரத்யஷ ஸாக்ஷாத்காரம்‌ என்று மூன்று வகை உண்டு. பிரத்யஷ ஸாக்ஷாத்காரம்‌ இல்லாத போது ஏனைய வற்றால்‌ பிரயோஜனமில்லை. அந்தப் பிரத்யக்ஷ ஸாக்ஷத்காரத்தை,
பரத்வம்‌, வ்யூஹம்‌ விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை, ஆசார்யத்வம்‌ என ஆறுவகையாகக்‌ கொண்டனர்‌. பரத்வம்‌ தித்ய முக்தர்க்கும்‌ வியூஹம்‌, ஸநகாதிகளுக்கும்‌, விபவம்‌ அக் காலத்தே வாழ்ந்தவர்களுக்கும்‌, அந்தர்யாமித்வம்‌, உபாஸகர்களுக்கும்‌, அர்ச்சாவதாரம்‌
எல்லோருக்கும்‌ ஆசார்யத்வம்‌ கதி சூனியருக்கும்‌ பிரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாயிருக்கும்‌.
கதி யவற்றவர்களுக்கு மேற் சொன்னவை, தேச, கால, கர்ணங்‌களுக்கு அப்பாற் பட்டதாதலால்‌ கிட்ட முடியாது. ஆராய்ந்து பார்த்த இடத்தில்‌ ஆசார்யாவதாரத்தால்‌ அல்லாது ஞான தானம்‌ பண்ண முடியாது. எனவே தான்‌ ஈஸ்வரன் தானே உபாயமாகவும்‌ உபேயமாகவும்‌, ஆசார்யனாக வந்து அவதரித்து ஞான தானம்‌ பண்ணி, சிஷ்யனை அடிமை கொண்டு ஆதரிப்பார்‌. ஆகவே தான்‌
ஆழ்வாராதிகளும்‌ ஆசார்யப் பெரு மக்களும்‌ ஒரே குரலில்‌ ஸ்ரீயப்பதியான நாராயணன்‌ தானே ஆசார்யனாக வந்து அவதரித்தான்‌ என்று பல இடங்களிலும்‌ உறுதியாகக்‌ கூறியுள்ளனர்‌. ஆகவே நம்மை ஸம்ஸார ஸாகரத்தில்‌ நின்றும்‌ கரையேற்றவே, பகவான்‌ பத்ரிகாஸ்‌ரமத்திலே நர நாராயண ரூபத்தில்‌ அவதரித்தான்‌. ஆகவே உபாயத்‌தில்‌ முதல்‌ நிலை எம்பெருமான்‌. இறுதி நிலை ஆசார்யன்‌ என்றுஉணர வேண்டும்‌. ஆசாரியனை மனிதனாக எண்ணாமல்‌ பீதக வாடைப் பிரானே பிரம குருவாக வந்து (பெரியதிரு 5.2.8) என்றபடி பகவதவதாரம்‌ என்று கொள்ள வேண்டும்‌.
கூரத்தாழ்வான்‌ சிஷ்யன்‌ வீர சுந்தரப் பிரம்மராயன்‌, கூரத்தாழ்வான்‌ மகனான பட்டருடன்‌, விரோதம்‌ பூண்டு, அவரை ஊரை விட்டே விரட்டிய போதிலும்‌, அவன்‌
இறந்து போன செய்தி கேட்ட ஆண்டாள்‌ மிகவும்‌ வியாகூலப்பட,அதைக் கண்ட மற்ற முதலிகள்‌ பட்டரைத்‌ தொல்லைப் படுத்திய விரோதி இறந்ததற்கு நீர்‌ ஏன்‌ விசாரப்பட வேண்டும்‌ என்று கேட்டபொழுது, வீரசுந்தரன்‌ நேரே ஆழ்வானுடைய சிஷ்யனாயிருந்து ஆசார்ய புத்திரனாகிய பட்டரைத்‌ துன்புறுத்தி அவர்‌ திறத்தில்‌ மகா அபராதம்‌ செய்து பின்னர்‌ அவரிடம்‌ மன்னிப்பும்‌ பெறாதே இறந்து போனான்‌. அவனை யம படர்‌ அடித்துத்‌ துவைத்து இம்சை செய்வார்கள்‌ என்றுதான்‌ நான்‌ கவலைப்படுகிறேன்‌. உங்களுக்கு அது தெரியவில்லை என்றாள்‌.
மற்றொரு நாள்‌ ஆண்டாள்‌ பட்டரிடம்‌ ஸ்ரீ பாத தீர்த்தம்‌ முதலிய பிரசாதங்களைப்‌ பெற்ற பொழுது, பிள்ளையை வணங்கலாமா என்று முதலிகள்‌ வினவ, பிள்ளைகாள்‌, ஏனைய ஆசாரியள்ர் ஸ்வாமிகளை வணங்கலாம்‌. தான்‌ ஏறி யருளப் பண்ணிக் கொண்ட எம்பெருமானுடைய தீர்த்தப் பிரசாதங்கள்‌ கிரஹிக்கலாகாதா என்று பதில்‌ கூறினார்‌

”மிலேச்சனும்‌ பக்தனால்‌ சதுர்வேதிகள்‌ அனுர்வர்த்‌திக்கத் தக்க அறிவு கொடுத்துக்‌ குல தெய்வத்தோடு சமமாகப்‌ பூஜை கொண்டு தீர்த்த பிரசாதனம்‌ என்ற திருமுகப்படியும்‌ என்ற கருத்‌தைக் கூறி வெளியிட்டார்‌, ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ அழகிய மணவாளப்பெருமாள்‌. கூரத்தாழ்வான்‌ நாராயண ராமானுஜ என்ற மந்திரங்‌கள்‌ இரண்டுக்கும்‌ வாசி ஒன்று. பந்த மோக்ஷங்கள்‌ இரண்டுக்கும்‌ பொதுவாயும்‌ மற்றது மோக்ஷத்துக்கும்‌ ஹேதுவாயுமிருக்கும்‌ என்றகருத்தில்‌ சதுரா, சதுரக்ஷரி என்றருளிச்‌ செய்தார்‌. ஆகவே ஸதாசார்யனது லட்சணம்‌ தன்‌ சிஷ்யர்களைப்‌ பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணி கொள்ள வேண்டியது. தன்னுடைய சிஷ்யனான நாலூரானும்‌, தன்னுடைய விஷயத்திலே
மகா பாதகத்தைப்‌ பண்ணினவன்‌ என்று தெரிந்தும்‌, பகவானிடத்‌தில்‌ நான்‌ பெற்ற பேறு நாலூரானும்‌ பெற வேண்டும்‌ என்று வரம்‌ கேட்ட, பகைவனிடத்தும்‌ பரிவு காட்டிய கூரத்தாழ்வான்‌ போன்ற பண்பாளர்களும்‌ உள்ளனர்‌. ஆழ்வார்‌ திருநகரியில்‌ மாமுனிகள்‌ வாழ்ந்த இடமான ஓலை மச்சில்‌ நடுஇரவில்‌ அவர்‌ தூங்கிக்‌ கொண்டு இருக்கும்‌ நேரத்தில்‌ தீயிட்டுக்‌ -கொழுத்திய பாபிகளை அரசன்‌ தண்டிக்கச்‌ சொல்ல, மாமுனிகள்‌ தலை யிட்டு அவர்களது உயிர்களைக்‌ காப்பாற்றினார்‌ என்ற வைபவம்‌ பெரிய ஜீயரது அமானுஷ்யமான கிருபையைக்‌ காட்டுகிறது. சிற்ற வேண்டா சிந்தப்பே அமையும்‌ என்கிறபடியே, தேவுமற்றறியேன்‌ என்றிருக்‌கும்‌ ஸ்ரீமான்களான அதிகாரிகள்‌ யாவர்‌ யாவர்‌ எனில்‌ பெரியாழ்‌ வார்‌ திருமகளாரான ஆண்டாள்‌, ஆழ்வார்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்த மதுரகவிகள்‌, நாதமுனிகள்‌ திருவடிகளில்‌ குருகைக் காவலப்‌பன்‌, ஆளவந்தார்‌ திருவடிகளில்‌ தெய்வ வாரி யாண்டான்‌, எம்பெருமானார்‌ திருவடிகளில்‌ வடுகநம்பி, நம்பிள்ளை திருவடிகளில்‌ பின்பழகிய பெருமாள்‌ தாஸர் பிள்ளை யோகாச்சாரியர்‌ திருவடிகளில்‌ கூர குலோத்தம தாசர்‌ திஸருவாய்‌ மொழிப்பிள்ளை- இவர் திருவடிகளில்‌ நம்‌ ஜீயர்‌, நம்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ முதலிகள்‌ பலருமாவர்‌.

ஆகவே மந்திரமும்‌ தேவதையும்‌ பலமும்‌ பலானுபந்திகளும்‌ பல ஸாதனமும்‌ ஐஹிக போகமும்‌ எல்லாம்‌ ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்‌ என்று பிள்ளை லோகாச்சார்யர்‌ அருளியபடி உறங்கும்‌ பெருமாளான அரங்கனை விட உலவும்‌ பெருமாளான
ஆசார்யனே நமக்கு அந்திமோபாய நிஷ்டைக்கு பிரமாணமாக அனுசந்திக்கக்‌ கூடியதாயிருக்கும்‌. ஏத்தி இருப்பாரை வெல்லுமே அவர் தமைச்‌ சாத்தி யிருப்பார் தவம்‌ என்னுமாப்போல, பரதாழ்‌வான்‌ ஏத்தி யிருந்தார்‌. அவரைச்‌ சாத்தியிருந்து உய்ந்து போனார்‌ சத்ருக்கனாழ்வார்‌. ஏத்தியிருந்தார்‌ நம்மாழ்வார்‌. அவரைச் சாற்றி இருந்தார்‌ மதுரகவிகள்‌. ஏத்தி யிருந்தார்‌ பெரியாழ்வார்‌. அவரைச்‌ சாற்றி யிருந்தார்‌ நாச்சியார்‌. ஆகவே ஆச்சார்யர்களுக்கு ஏற்படும்‌ மகத்துவம்‌ அவர்களது சிஷ்யர்களுக்கும்‌ தாமாகவே வந்தமையும்‌ எனக் காண்கிறோம்‌.

பொய்கை முனி பூதத்தார்‌ பேயாழ்வார்‌ தண்‌
பொருநல்‌ வருங்குருகேசன்‌ விட்டுச்‌ சித்தன்‌
தும்பகுலசேகரன்‌ நம்‌ பாண நாதன்‌
தொடண்டரடி.ப்பொடி மழிசை வந்த ஜோதி,
வையமெலாம்‌ மறைவிளங்க வாள்வேலேந்தும்‌
மங்கையர்கோன்‌ என்றிவர்கள்‌ மகிழ்ந்து பாடும்‌
செய்ய தமிழ்மாலைகள்‌ நாம்‌ தெளியவோதி
தெளியாத மறைநிலங்கள்‌ தெளிகின்றோமே.

என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு.
யானடைவேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிரைவணங்கி,
சின்னருளால்‌ பெரும்பூதூர்‌ தந்த வள்ளல்‌
பெரிமநம்பி ஆளவந்தார்‌ மணற்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்‌
நாதமுனி சடகோபன்‌ சேனை நாதன்‌
இன்னமழதத்திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே.

அடியார்கள்‌ வாழ அரங்கநகர்‌ வாழு,
சடகோபன்‌ தண்‌ தமிழ்‌ நூல்‌ வாம, கடல்‌ சூழ்ந்த
மண்ணுலகம்‌ வாழ, மணவாள மா(முனியோ
இன்னுமொரு நூண்றாண்டிரும்‌

நானிலமுந்தான்‌ வாழ நான்மறைகள்‌ தாம்‌ வாழ மாநகரின்‌ மாறன்‌ மறைவாழ – ஞானியர்கள்‌ சென்னியணிசேர்‌ தூப்புல்‌ வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்‌.

வைஷ்ணவ ஜனதோ என்று தொடங்கும்‌ தர்ஸிமேத்தா எழுதிய பாடலின்‌ தமிழாக்கமான நாமக்கல்‌ கவிஞரது பாடல்‌
வைஷ்ணவன்‌ என்போன்‌ யார்‌?
வைஷ்ணவன்‌ என்போன்‌ யாரெனக்கேட்பின்‌ வகுப்பேன்‌
அதனைக்கேட்பீரே? (வைஷ்‌)
1-பிறருடைய துன்பம்‌ தனதென எண்ணும்‌
பெருங்குணத்‌ தவனே வைஷ்ணவனாம்‌.
உறுதுயர்‌ தீர்த்ததில்‌ கர்வங்கொள்ளான்‌
உண்மை வைஷ்ணவன்‌ அவனாகும்‌.
உறவென மனிதர்கள்‌ உலகுள யாரையும்‌
வணங்குவன்‌ உடல்‌, மனம்‌, சொல்‌ இவற்றால்‌.
அறமெனத்‌ தரய்மை காப்பவன்‌ வைஷ்ணவன்‌
அவனைப்‌ பெற்றவன்‌ அருந்தவத்தான்‌ (வைஷ்‌)

2-விருப்பும்‌ வெறுப்பும்‌ விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள்‌ விட்டவனாய்‌
ஒருப்புடன்‌ அந்நிய மாதரைத்‌ தாயென
உணர்வோன்‌ வைணவன்‌ தன்‌ நாவால்‌
உரைப்பதிற்‌ பொய்யிலன்‌, ஒரு போதும்‌ அவன்‌
ஊரார்‌ உடைமையைத்‌ தொடமாட்டான்‌.
வளர்ப்புற குணமதை வகூப்பவன்‌ எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்‌

3-மாயையும்‌ மோகமும்‌ அணுகாதவனாய்‌
மனத்தினில்‌ திடமுள வைராக்யன்‌
நாயகனாகிய ஸ்ரீராமன்‌ இரு
நாமம்‌ கேட்டதும்‌ மெய்மறந்து
போயதில்‌ பரவசம்‌ அடைகிற அவனுடை_ப்‌
பொன்னுடல்‌ புண்ணிய தீர்த்தங்கள்‌,
ஆயன யாவையும்‌ அடங்கி. கேஷேத்திரம்‌,
ஆகும்‌ அவனே வைஷ்ணவனும்‌

4-கபடமும்‌ லோபமும்‌ இல்லாதவனாய்க்‌
காமக்ரோதம்‌ களைந்தவனாய்த்‌
தபசுடை அவனே வைஷ்ணவன்‌ அவனைத்‌
தரிசிப்பவரின்‌ சந்ததிகள்‌
சுபமடைவார்கள்‌ எழுபத்தோராம்‌
தலைமுறை வரையில்‌ சுகமுறுவர்‌
அமரப்‌ புனிதம்‌ அடைகுவர்‌ பிறப்பெனும்‌
அலைகடல்‌ நீந்திக்கரை சேர்வர்‌ (வைஷ்‌)

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் வைபவம்-

November 2, 2025

ஸ்ரீமந்‌ நிகமாந்த மகாதேசிகன்‌ அருளிய தேசிகப்‌ பிரபந்தம்‌ உலகத்து உயிர்களனைத்தும்‌ நற்கதி பெற வேண்டும்‌ என்ற கருணை உள்ளத்தோடு நாள் தோறும்‌ பாராயணம்‌ பண்ணுவதற்கு ஏற்றவாறு அருளிச்செய்த 24 பிரபந்தங்களில்‌ 19 பிரபந்தங்கள் தான்‌
இப்போது நமக்குக்‌ கிடைத்துள்ளன. ஆழ்வார்கள்‌ அருளிய 24 பிரபந்தங்களும்‌ ‘அருளிச்செயல்‌’ என்ற பெயருடன்‌ வழங்குவது போல ஸ்ரீதேசிகன்‌ உலகம்‌ உய்வதற்காக அருளிச் செய்த பிரபந்தங்‌கள்‌ தேசிகப் பிரபந்தம்‌ என்ற பெயரால்‌ வழங்கப் படுகின்றன.-தத்துவங்களின்‌ ஸ்வரூபம்‌, ரகஸ்யங்களின்‌ அர்த்தம்‌, உபாயம்‌ பலன்‌. ஆசாரம்‌, அனுஷ்டானம்‌, ஆகார நியமம்‌ முதலிய பல விஷயங்கள்‌ இதில்‌ மிக அரிய பாக்களில்‌ வெளியிடப்படுவதால்‌ ஸத் ஸம்ப்ரதாய கிரந்தங்களுள்‌, ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்‌ தலை சிறந்து விளங்குகிறது. வேதத்திற்கும்‌ வேதாந்தத்துக்கும்‌ போல்‌ வரையறை யன்றி, எல்லாச் சாதியாரும்‌, பெண் பாலரும்‌ அனுசந்தித்து நல் வாழ்வு பெற வேண்டுமென்ற கருணை யுள்ளத்தோடு இந்தப்பிரபந்தங்களை ௮ருளிச்‌ செய்தார்‌. தத்துவ, ஹித புருஷார்த்தங்களை இனிய சொற்களிலே கலந்து பிரபத்தி என்னும்‌ தேனைக் குழைத்து இப்பிரபந்தங்களாகிய அழுதத்தைத்‌ திரட்டி உலகுக்கு வழங்கினார்‌ நம்‌ ஆசார்ய வள்ளல்‌. வேறு தெய்வத்தை நாடாத ஏகாந்திகளும்‌, வேறு பயனையும்‌ நாடாத பரம ஏகாந்திகளும்‌ இந்தப்‌ பிரபந்தங்களைத் தினமும்‌ அனுசந்தித்து இதன்‌ கருத்துக்களில்‌ ஈடுபட்டுப்‌ போற்றுகின்றனர்‌.-ஸ்ரீ தேசிகன்‌ காஞ்சிபுரத்தில்‌ திருத்தண்கா வெனப்படும்‌ விளக்‌கொளி யெம்பெருமான்‌ ஸந்திதிக்கு அருகில்‌ உள்ள தூப்புல்‌ என்ற புண்ணிய பூமியில்‌ கி.பி. 1268-ல்‌ புரட்டாசி மாதத் திருவோண நன்னாளில்‌ அவதரித்தார்‌. தவப் புதல்வராகப்‌ பிறந்தார்‌. ஆழ்வார்களும்‌, ஸ்ரீ பாஷ்யகாரர்‌ (இராமானுசர்‌] வரையிலுள்ள மஹாச்சார்யார்‌களும்‌ அருளிய திவ்ய ஸூக்த்திகளின்‌ கருத்தையும்‌, மதக் கொள்கைகளையும்‌, ரஹஸ்யார்த்தங்களையும்‌ மேலும்‌ விரிவாய்‌ அறிந்து சேதனர்கள்‌ இன்புற்று வாழ்வதற்கு வேண்டி ஸ்ரீ பாஷ்யகாரரது அவதாரமே என்று புகழும்படி ஸ்ரீ தேசிகனை அவதாரப் படித்தி அருளினான்‌ ஸர்வேஸ்வரனான எம்பெருமான்‌ எனலாம்‌.

ஸ்ரீமந்‌ அநந்தஸுரி என்னும்‌ வைணவ சீலருக்கும்‌ அவரது தர்ம பத்நியாகிய தோதாரம்மாவுக்கும்‌ அருந்தவப்‌ புதல்வராய்ப்‌ பிறந்தவருக்கு, திருவேங்கட முடையானது திருநட்சத்திரத்திலேயே அவதரித்த காரணத்தால்‌ ஸ்ரீ வேங்கடேசன்‌ என்று திருநாமம்‌ சூட்டினர்‌ பெற்றோர்‌. இராமானுஜரது சிஷ்யரான கிடாம்பியாச்‌சான்‌ என்பவரின்‌ சிஷ்யரான கிடாம்பி அப்புள்ளான்‌ தன்‌ சகோதரி மகனான தேசிகருக்கு மதம்‌, தத்துவம்‌, ஞானம்‌ முதலியவைகளில்‌ சிறந்த பயிற்சி கொடுத்தார்‌. இவரும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்‌லாம்‌ கசடறக் கற்று உபய வேதாந்தங்களிலும்‌ (தமிழ்‌ – சமஸ்கிருதும்‌) ஒப்புயர்வற்ற ஞானத்தோடு விளங்கினார்‌. அப்புள்ளாரும்‌-ஸ்ரீமத்‌ நாத முனிகள்‌ வாயிலாக வந்து ஆளவந்தாரால்‌ வளர்க்கப்‌ பட்டு ஸ்ரீ பாஷ்யகாரரால்‌ நன்கு பாதுகாக்கப்பட்டு வந்த ஸ்ரீ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை மேலும்‌ ஒளி விடுமாறு பாதுகாத்‌துப்‌ பாசுரம்‌ செய்ய தமக்குப்‌ பரம்பரையாய்‌ வந்த கருட மந்திரத்தை உபதேசித்தார்‌ தேசிகருக்கு.பெற்றோர்கள்‌, நியமனப்படி திருமங்கையார்‌ என்னும்‌ அழகுத் திருவுருவை மணந்தார்‌. பேரருளாளன்‌ திருவருளால்‌ அவருக்கு நாயனாராச்சான்‌ பிள்ளை என்ற திருக்குமாரன்‌ அவதரித்த போதிலும்‌, இல்லற வாழ்க்கையில்‌ மிக்க ஈடுபாடின்றி இல்லற தர்ம அனுஷ்டானங்களை மட்டும்‌ வழுவாது நடத்தி வந்தார்‌. தனது அருமைக் குமாரனுக்கு ‘வரதன்‌’ என்ற சிறப்பு நாமமிட்டு உரிய காலத்தில்‌ அந்தந்த ஸம்ஸ்காரங்களையும்‌ (சடங்குகளையும்‌) உபநயனத்தையும்‌ செய்து வித்யாப்யாசத்தையும்‌ செய்வித்தார்‌. இவரும்‌ தம்‌ தகப்பனார்‌ ஸந்நிதியிலேயே பஞ்ச ஸம்ஸ்காரம்‌ பெற்றுக்‌ கால க்ஷேபம்‌ செய்து தீபத்தில்‌ தோன்றிய பிரதிதீபம்‌ போல்‌ விளங்கினார்‌.-அப்புள்ளார்‌ தம்‌ அந்திம காலத்தில்‌ ஸ்ரீ தேசிகனை அழைத்து நீ பாஷ்யகாரருடைய பாதுகைகளையும்‌, தாம்‌ உபயோகித்து வந்த திருவாழி திருச்சங்கையும்‌ கொடுத்து, தேசிகன்‌ திருமுடியில்‌, தன்‌ திருவடிகளை வைத்து அனுக்ரஹித்துத் தாம்‌ திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌. பிறகு சில நாள்‌ சென்றவுடன்‌ தேசிகன்‌ திருவயிந்திபுரத்‌திற்கு எழுந்தருளி, அங்குள்ள தெய்வ நாயகனையும்‌, பிராட்டியையும்‌ மங்களஸாஸனம்‌ செய்து அங்குள்ள ஒளஷதாத்ரி என்ற மலையில்‌ ஏறி ஸ்ரீ நரசிம்ஹன்‌ ஸந்நிதிக்கு எதிரில்‌ ஒரு அச்வ மரத்தடியில்‌ கருட மந்திரத்தை ஜபித்தார்‌. அதனால்‌ மகிழ்ந்த கருட பகவான்‌, ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து யோக நிலையில்‌ இருக்கும்‌ ஒரு ஹயக்ரீவ விக்ரகத்தையும்‌ கொடுத்து விட்டு மறைந்தார்‌. தேசிகன்‌ ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து, அவரையே தியானித்துக்‌ கொண்டிருந்தமையால்‌ மிகவும்‌ மகிழ்ந்த ஹயக்ரீவன்‌ நேரில்‌ எழுந்தருளி, ஞானமும்‌ பிரவசன சக்‌தியும்‌ மென்மேலும்‌ பெருகுமாறு தன்னுடைய திருவாய்‌ அமுதத்தை இவருக்கு அளித்‌தார்‌. அதன்‌ பின்னர்‌ தேசிகர்‌ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்‌, கருட பஞ்சாசத்‌,தேவநாயக பஞ்சாசத்‌, அச்யுத சதகம்‌ முதலிய ஸ்தோத்திரங்களையும்‌, மும்மணிக்கோவை, நவமணிமாலை முதலிய தமிழ்‌ பிரபந்‌தங்களையும்‌ அருளிச்செய்து அவ்வூரிலேயே சித்தாந்த உபந்யாசம்‌ நடத்திக் கொண்டு நெடுங்காலம்‌ வாழ்ந்திருந்தார்‌. அதன்‌ பின்னர்‌ காஞ்சியில்‌ பேரருளாளரைச்‌ சேவிக்க விரும்பி வரும்‌ வழியில்‌ முதலாழ்வார்களுக்கு எம்பெருமான்‌ சேவை சாதித்த திருக் கோவலூருக்குச்‌ சென்று திருவிக்ரமப்பெருமாளைச்‌ சேவித்து, பின்‌ காஞ்சி சென்று, பெருமாளையும்‌, தாயாரையும்‌ பரிபூர்ணமாக அனுபவித்து நியாஸ சதகம்‌, வரதராஜ பஞ்சாசத்‌ முதலிய ஸ்தோத்ரங்களையும்‌, அடைக்கலப் பத்து, அருத்த பஞ்சகம்‌, முதலிய பிரபந்தங்களையும்‌ அருளிச் செய்தார்‌. அருகே யுள்ள திருவெஃகா, திருப்புட்குழி, முதலிய தேசத்துப் பெருமான்களையும்‌, மங்களா சாஸனம்‌ செய்து, யதோக்தகாரி ஸ்தோத்ரம்‌ முதலிய பல ஸ்தோத்ரங்களையும்‌ அருளிச் செய்து ஸம்பிரதாயப் பரிசுத்த முதலிய சில்லரை ரஹஸ்யங்களையும்‌, வேதாந்த கிரந்தங்களையும்‌ அருளிச் செய்து கொண்டிருந்தார்‌. அப்பொழுது பாஷ்யகாரருக்கு ஸரஸ்வதி தேவியால்‌ அளிக்கப்பட்ட ஹயக்ரீவர்‌ விக்ரகம்‌, அப்புள்‌ளாரின்‌ சந்ததி வழியாய்‌ இவருக்குக்‌ இடைத்தது. அதையும்‌ சேர்த்து ஆராதித்துக் கொண்டு சிஷ்யர்களுக்கு உபந்யாசம்‌ செய்து கொண்டிருநதார்‌. பின்பு திருக் கடிகை முதலிய திவ்ய தேசங்களைச்‌ சேவித்துக்‌ கொண்டு திருமலைக்கு எழுந்தருளி, அவ்வெம்பெருமானைப்‌ பூரணமாய்‌ அனுபவித்து அவனது தயையை வேண்டித்‌ தயா சதகம்‌ என்ற ஸ்தோத்ரத்தை அருளிச்‌ செய்தார்‌. பின்னர்‌ அங்கிருந்து வடக்கிலுள்ள பிருந்தாவனம்‌, திருவயோத்தி, சாளக்ராமம்‌, பத்ரியாஸ்ரமம்‌ முதலிய திவ்ய தேசங்களை மங்களாசாஸனம்‌ செய்து திரும்பி, திருவல்லிக்கேணி, திருவெவ்வுள்‌ முதலியவற்றையும்‌ சேவித்து மகிழ்ந்தவராய்‌, ஸ்ரீபெரும்புதூரில்‌ எம்பெருமானாரைக்‌ கண்டு களித்து மீண்டும்‌ காஞ்சி வந்து சித்தாந்தப் பிரசங்கம்‌ செய்து கொண்டிருந்தார்‌.

ஸ்ரீ பகவத்‌ ராமானுஜ சித்தாந்தத்தை நாடெங்கும்‌ பரவச்‌ செய்து, சேதனர்களது வாழ்வை வளப்படுத்த, ஸ்ரீரங்கமே வசதியான இடம்‌ என எண்ணியதால்‌ அங்கேயே நெடுங்காலம்‌ வசிக்க விரும்பினார்‌. உபய வேதாந்த ஸம்ப்ரதாயம்‌ தமக்குப்‌ பிற்காலத்‌தில்‌ நல்ல பிரசாரம்‌ அடைவதற்குச்‌ சிறந்த வழியாக பகவத் தியாந ஸோபாநம்‌, தசாவதார ஸ்தோத்ரம்‌, முதலிய ஸ்தோத்ரங்களையும்‌, தத்துவ ரத்நாவளி, ஸர்வார்த்த ஸித்தி, நியாயப் பரிசுத்தி, நியாய சித்தரஞ்சனி, ஈஸ்வர மீமாம்சை சததூஷணை, தத்துவ மாத்ருகை போன்ற பல வேதாந்தக்‌ கிரந்தங்களையும்‌ அருளிச் செய்ததால்‌ இவர்‌ செய்யும்‌ பேருபகாரத்தைக்‌ கண்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாதன்‌ இவருக்கு ‘வேதாந்தசார்யார்‌’ என்ற விருதை அளித்தார்‌. ஸ்ரீரெங்கநாச்சியார்‌ இவருக்கு ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர் ‘ என்ற விருதை அளித்தருளினார்‌. அங்குள்ள மகா வித்வான்கள்‌ ‘கவிதார்க்‌கிக ஸிம்ஹம்‌’ என்ற விருதைச்‌ சமர்ப்பித்து மகிழ்ந்தனர்‌.ஒரு கால்‌ கிருஷ்ண மிச்ரன்‌ என்ற ஒரு வித்வான்‌ ஸ்வாமியிடம்‌ வாதம்‌ செய்தபோது, ஸ்வாமி தம்முடைய மேதா விலாசத்தால்‌ அவனை ஜயிக்க, அவனும்‌ ஸ்வாமியின்‌ பெருமையை வியந்து பணிந்து சென்றான்‌. அப்பொழுது அவதரித்தது ‘ஸங்கல்ப ஸூர்‌யோதயம்‌ என்னும்‌ அற்புத நாடகக்‌ கிரந்தம்‌ என்று தெரிகிறது.-இவ்வாறு ஸ்ரீரங்கத்தில்‌ நீண்ட நாட்கள்‌ இருந்த பின்னர்‌ தென்னாட்‌டிலுள்ள திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி, ஸ்ரீவரமங்கை (நாங்குனேரி) முதலிய திவ்ய தேசங்களைச்‌ சேவித்து, ஸ்ரீவில்லிபுத்‌தூரில்‌, கோதா பிராட்டியாரைத்‌ தொழுது, கோதா ஸ்துதியை அருளிச்‌ செய்து திருப் புல்லாணி முதலிய திவ்ய தேசங்களையும்‌ வணங்கி, குருகூரில்‌ ஆழ்வாரைத்‌ திருவடி தொழுது, திருவனந்தபுரம்‌ முதலிய மலை நாட்டுத்‌ திருப்பதிகளையும்‌, சோழ நாட்டுத் திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாசனம்‌ செய்து, திருவயிந்திபுரத்திற்கு எழுந்தருளித்‌ தம்‌ கடமைகளை அனுஷ்டித்து வந்தார்‌.-அங்கும்‌ அவரது வல்லமையைப்‌ பரீட்சிக்கக்‌ கருதிய ஒரு கொத்தன்‌, கோணலான கற்களையே எடுத்துக் கொடுக்க ஸ்வாமி தம்‌ வல்லமையால்‌ அவற்றையே பயன்படுத்தி மிக அழகிய திருக்கிணற்றை அமைத்து அவனது செருக்கை அடக்கி அவன்‌ தன்னைப்‌ பணியுமாறு செய்தார்‌. இன்றும்‌ அக் கிணறும்‌ ஸ்ரீதேசிகன்‌ திருமேனித்‌ திருவடிகளின்‌ ஸ்பரிசம்‌ பெற்ற திருமாளிகையும்‌ எல்லாராலும்‌ சேவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாள்‌ சைன மதத்‌ தமிழ்ப் புலவர்கள்‌ பலர்‌ பல்வேறு மதத்தினர்களையும்‌ துணை கொண்டு ஸ்வாமியிடம்‌ வாது புரிய வந்தனர்‌. ஸ்ரீதேசிகனும்‌ அடியவர்க்கு மெய்யனான திரு முன்பே அவர்கள்‌ அனைவரையும்‌ வாதத்‌திலே தோற்கடித்து, அவர்களது வாதப் போக்கையும்‌, அவர்களைக்‌ கண்டித்த முறையையும்‌ தொகுத்துப்‌ ‘பரமத பங்கம்‌” என்னும்‌ ரஹஸ்யமாக அமைத்தருளினார்‌ என்பது பரம்பரைச்‌ செய்தியாகும்‌.-சீடர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்கி காஞ்சிக்குத்‌ திரும்பியவர்‌, காஞ்சியில்‌ ஒரு பாம்பாட்டி ஸ்வாமி முன் வந்து தன்‌ பெட்டியிலிருந்த பாம்புகளை வெளியே ஓட விட்டான்‌. சில கோடுகளை ஸ்வாமி பூமியில்‌ கீறவே பாம்புகளால்‌ அவற்றைத் தாண்ட முடியவில்லை. ஒரு கொடிய பாம்பு மட்டும்‌ அவற்றைத் தாண்டி ஸ்வாமியை அணுக, அவரும்‌ கருட மந்திரத்தை உச்சரித்தார்‌. உடனே ஆகாயத்திலிருந்து கருடன்‌ பறந்து வந்து எல்லாப் பாம்புகளையும்‌ தூக்கிச் சென்று விட்டான்‌. பாம்புப் பிடாரன்‌ தனக்குத் தோல்வி நேர்ந்தது மட்டுமன்றித்‌ தன்‌ ஜீவனோபாயமான சர்ப்பங்களையும்‌ இழக்க நேரிட்டதற்கு வருந்தி ஸ்வாமியைப்‌ பணிந்து பிரார்த்திக்க, ஸ்வாமியும்‌ மனமிரங்கி கருட தண்டகத்தை இயற்றி அனுஸந்தித்‌தார்‌. உடனே கருடன்‌ அந்த ஸர்ப்பங்களை யெல்லாம்‌ திரும்பக்‌ கொண்டு வந்து போட்டார்‌. பிடாரன்‌ மகிழ்ந்து, ஸ்வாமியை ஸர்வ சித்தி வல்லவர்‌ என்று கொண்டாடிப்‌ பாம்புகளை எடுத்துச்‌ சென்றான்‌.-காஞ்சியில்‌ பேரருளாளரது உத்சவ காலத்தில்‌ பெருமாளுக்கு முன்னால்‌ திவ்யப் பிரபந்தத்தை அனுசந்தித்தல்‌ சாஸ்த்ர விரோதமென்று பலர்‌ ஆட்சேபித்த பொழுது, ஸ்வாமிகள்‌ திவ்யப் பிரபந்தம்‌ பரம வைதிகமே யென்று ஸ்தாபித்து, உத்சவத்தைத்‌ தடையின்றி நடத்தச் செய்தார்‌. இவ் வெற்றிக்கு அறிகுறியாகப்‌ பேரருளாளன்‌, தன்‌ திருச்சின்னங்கள்‌ இரண்டினில்‌ ஒன்றைத்‌ தேசிகனுக்கு மனமுவந்து அருளினான்‌. இந்த வரலாற்றினைத்‌ தழுவியே இன்றும்‌ பேரருளாளனுக்கு ஒற்றைத்‌ திருச்சின்னமே சேவிக்கப்படுகின்ற தென்று பணிப்பர்‌ பெரியோர்‌.காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம்‌ செல்லும்‌ வழியில்‌, திருக்கோவலூரில்‌, இரவில்‌ ஒரு கடலை வியாபாரி வீட்டில்‌ தங்க நேர்ந்தது.ஸ்ரீ ஹயக்ரீவனுக்குச்‌ சுத்த தீர்த்தத்தை நிவேதனம்‌ செய்து தாம்‌ உபவாசமிருந்தார்‌. நள்ளிரவில்‌ அந்த வைசியர்‌ ஓடிவந்து சுவாமியிடம்‌, ஒரு வெள்ளைக் குதிரை தம்‌ வீட்டிற்குள்‌ புகுந்து கிடங்கிலுள்ள கடலையை மேய்வதாகவும்‌, தம்மால்‌ அடக்க முடியவில்‌லையென்றும்‌ முறையிட்டார்‌. ஸ்ரீ ஹயக்கிரீவனே அவ்வாறு செய்வதாக அநுமானித்த தேசிகர்‌, வைசியரிடம்‌ கொஞ்சம்‌ பால்‌ கொண்டு வரச் சொல்லி முழுவதும்‌ குதிரை வடிவு கொண்டிருந்த ஹயக்கிரீவனுக்கு நிவேதனம்‌ செய்ய குதிரையும்‌ மறைந்தது.வைசியரும்‌ மிகச்‌ சிறந்த பக்தரானார்‌. இந் நிகழ்ச்சியால்‌ அவருக்குப்‌ பெருஞ்செல்வம்‌ குவிந்தது.“உன்னை, விஜயநகரப்‌ பேரரசின்‌ ஆஸ்தான வித்வானாக ஆக்குகிறேன்‌’ என்று கூறிய தன்‌ நண்பர்‌ வித்யாரண்யரிடம்‌, எனக்குப்‌ பணமும்‌ பதவியும்‌ தேவையில்லை.-எனக்குக்‌ காஞ்சி வரதராஜரருளும்‌ அருட்செல்வமே, அமைதியையும்‌ ஆனந்தத்தையும்‌, அளிக்கவல்லது என்று கூறி விரும்பித்‌ தாமே வறுமையை ஏற்றுக் கொண்டவர்‌ இவர்‌. அப்பொழுது இவர்‌ அருளிய வைராக்ய பஞ்சகம்‌ என்ற ஐந்து ஸ்லோகங்கள்‌ சிறப்பு வாய்ந்தவைகளாகும்‌. அந்த வைராக்ப பஞ்சகப் பொருள்‌ சுருக்கம்‌ வருமாறு:நல்ல ஞானத்தைப்‌ பெற்றவர்களும்‌ தம்‌ வயிற்றை வளர்க்க, அரசர்களிடம்‌ சென்று அவர்களைப்‌ போற்றிப் புகழ்ந்து தம்‌ ஸ்வரூபத்தைக்‌ கெடுத்துக்‌ கொள்கிறார்களே. வயிற்றுப்‌ பசியைத்‌ தீர்த்துக்‌ கொள்ள, வயலில்‌ சிந்தியுள்ள தானியமே போதுமே. நீரைக்‌ கொண்டு கூட உயிர் தரித்து விடலாமே. உடலை மறைக்க ஒரு கந்தல்‌ துணி போதுமே. இப்படியிருக்க இவற்றிற்காக, நல்ல அறிஞர்களும்‌ கூடக்‌ கெட்டுப் போகிறார்களே. மல்லிகை மலர்‌ எம்பெருமானுக்கே உரியதாவது போல, நம்‌ வாக்கும்‌ எம்பெருமானைத்‌ துதிப்பதற்கே யமைந்தது. யாம்‌ மானிடம்‌ பாட வந்த கவியோமல்லோம்‌ என்கிறார்‌. இறையருள்‌ செல்வம்‌ என்‌ வசம்‌ இருக்கும் பொழுது நான்‌ ஏன்‌ வேறொரு செல்வத்தை நாட வேண்டும்‌. ‘சரீரபத நாவதி’ என்று தொடங்கும்‌ நாலாவது ஸ்லோ கத்தில்‌ ‘தநம்‌’ என்ற எழுத்துக்களை பதினோரு தடவை உபயோகித்‌திருக்கிறார்‌. நானோ என்‌ தந்தையோ பொருள்‌ சம்பாதிக்கா விட்‌டால்கூட என்‌ பாட்டன்‌ பிரம தேவன்‌ சம்பாதித்த செல்வமான பேரருளாளன்‌ அத்திகிரி உச்சியில்‌ உள்ளது. வேறு இழியும்‌ செல்வத்தை நான்‌ நாட வேண்டாம்‌ என்கிறார்‌. பிதாமஹன்‌ என்ற சொல்‌ பாட்டனர்‌, பிரமன்‌ என்ற இரு பொருளில்‌ இச்சுலோகத்தில்‌ அமைந்துள்ளது. தேசிகப்‌ பிரபந்தம்‌ மிக அரிய பாக்களால்‌ வெளியிடப்படுவதால்‌, ஸத் ஸம்பிரதாயக்‌ கிரந்தங்களுள்‌ தலை சிறந்ததாக விளங்குகிறது. இவர்‌ தமிழில்‌ மட்டுமின்றி சமஸ்கிருதம்‌, பிராகிருதம்‌ மணிப் பிரவாளம்‌ ஆகிய மொழிகளிலும்‌, நன்றாக எழுதும்‌ திறமைசாலி. அவர்‌ எழுதிய சஙகல்ப ஸூர்யோதயா என்ற வடமொழி நாடகம்‌ ஜீவாத்மா, பரமாத்மாவைப் போய்‌ அடைவதற்கு மேற்‌ கொள்ள வேண்டிய முயற்சிகளைக்‌ கூறுகிறது. எத்தனை விதமான,ஆசை, கோபம்‌, அகங்காரம்‌ போன்ற தடைகளைத்‌ தாண்ட வேண்டும்‌ என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌. ‘யாதவாப்யுதயம்‌” என்ற தலைப்பில்‌ பகவான்‌ ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதார மகிமையை எழுதியுள்ளார்‌. அவர்‌ எழுதியுள்ள ரகரியத் திரயசாரம் , சத தூஷணி போன்ற நூல்கள்‌ வைணவ பக்தி இலக்கியத்தின்‌ மாட்சியினைப்‌ பல வகையிலும்‌ காட்டுகின்றன. அவரது இலக்கிய கருவூலத்தின்‌ மணிமுடிகளாக விளங்குவது பாதுகா ஸகஸ்ரம்‌, தயா சதகம்‌ என்ற இரண்டுமே யாகும்‌. பாதுகா ஸகஸ்ரம்‌ என்ற கவிதை பகவான்‌ ஸ்ரீரெங்கநாதனது பாதுகை மகிமையையும்‌, அவரது பாதுகையான நம்மாழ்வாரது அளவு கடந்த பக்திப் பிரவாகத்தையும்‌ கூறுவதால்‌, காலக் கிரமத்தில்‌ உப கண்டத்தில்‌ அழிக்க அழியாத பக்திச்சுரங்கமாக மாறும்‌ தகுதி பெற்றவை. திவ்ய தம்பதிகளை ஸ்ரீதேசிகன்‌ அனுபவித்த முறைகளை நாமும்‌ அறிந்து இன்புறலாம்‌.ஸ்ரீ தேசிகன்‌ அருளிய 19 தமிழ்ப் பிரபந்தங்கள்‌ முறையே அமிருதரஞ்சனி, அதிகார சங்கிரகம்‌ அமிருதா சுவாதினி, பரமபத சோபானம்‌, பரமத பங்கம்‌, மெய்விரத மான்யம்‌ (அத்திகிரி மான்ய முதல்‌ ஆறு பிரபந்தங்களில்‌ பேரருளாளன்‌ புகழ்‌ பாடுகிறார்‌.-அவரது அருளிச் செயல்கள்‌ அருத்த பஞ்சகம்‌, அடை.க்கலப்பத்து,ஸ்ரீவைணவ தினசரி, திருச் சின்னமாலை, பன்னிருநாமம்‌, திருமந்திரச் சுருக்கு, த்வயச் சுரக்கு சரம சுலோகம்‌, கீதார்த்த சங்கிரகம்‌, மும்மணிக்கோவை, நவமணிமாலை, பிரபந்த சாரம்‌, ஆகார நியமம்‌ முதலியனவாகும்‌. ஸ்ரீதேசிகன்‌ திருக் குமாரரான நமினாராச்சாியார்‌, ஸ்ரீ தேசிகன்‌ பிள்ளையந்தாதி என்னும்‌ பிரபந்தத்தைப்‌ பாடியருளினார்‌. . ஸ்ரீதேசிகப் பிரபந்தத்தைத்‌ தொகுத்துக்‌ கொடுத்த ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமிகள்‌ ஒவ்வொரு பிரபந்தத்தலும்‌ அமைந்துள்ள விஷயங்களைச்‌ சுருக்கி பிரபந்‌தார்த்த ஸங்கிரகம்‌ என்ற பகுதியில்‌ கூறி யுள்ளார்கள்‌. -தம வாயிருந்து தாமேயான ஸர்வார்த்தங்களையும்‌ கூறும்‌ ஸ்ரீதேசிகனது ‘ஆபால கோபாலம்‌’ அனைவரும்‌ படித்தறிந்து அனுபவிக்கக் கூடியது. அவரது காவ்ய கிரந்தங்கள்‌; தர்க்க வேதாந்த சாஸ்திரநூல்கள்‌, வாத கிரந்தங்கள்‌ என்று வடமொழியில்‌ அருளிச்‌ செய்யப்பட்டுள்ள அனைத்திலுமுள்ள பயன்படக் கூடிய ஸாரார்த்‌தங்கள்‌ அனைத்தும்‌ இத் தமிழ்ப் பிரபந்தங்களில்‌ அடங்கியிருப்பதால்‌ இதை ஒரு ஸர்வார்த்த சித்தி என்றே கருதலாம்‌. ஆகவே தான்‌ இவரைத்‌ தமிழ்க் கடவுள்‌ என்று பிற மதத்திலுள்ளவர்கள்‌ கூடப்‌ புகழ்கின்றனர்‌.தமது உபய வேதாந்தாச்சார்யத்தை ஸ்தாபித்துக்‌ கொண்டதும்‌ அதன்‌ மூலமாக ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌ உபய வேதாந்தாச்‌சார்யர்களாக இன்றளவும்‌ விளங்குவதும்‌ இப்பிரபந்தத்தின்‌ பெருமையினாலேயே. வடமொழியில்‌ உள்ள கவிதை நயங்களை யெல்‌லாம்‌ தமிழ்க் கவிதையிலும்‌ உட்புகுத்தி எண்ணிறந்த காவிய சித்திரங்களை உண்டாக்கி அளித்துள்ளார்‌. ஆகவே இப்பிரபந்த நூல்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ மட்டுமின்றி தமிழறிஞர்கள்‌ அனைவருமே படித்து ஆனந்திக்க வேண்டிய ஒன்றாகும்‌. அமிருத ரஞ்சனி-இதில்‌ ஸ்ரீ தேசிகன்‌ ஆச்சாரியாரது அருள்பெற்றுத்‌ தாம்‌ உய்ந்து போனதைக்கூறி சேதனம்‌, அசேதனம்‌ ஈஸ்வரன்‌ என்னும்‌ மூன்று தத்துவங்களின்‌ ஸ்வரூபத்தைப்‌ பிரித்துக் காட்டி, திருமந்திரம்‌, த்வ யம்‌, சரமஸ்லோகம்‌ என்னும்‌ மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்தத்தையும்‌ சுருக்கி வெளியிடுகிறார்‌.“காரணமாய்‌ உயிராகி அனைத்துங்‌ காக்கும்‌ கருணை முகில்‌ கமலையுடன்‌ இலங்குமாறும்‌
நாரணனாய்‌ வடிவான வுயிர்களெல்லாம்‌
நாமென்று நல்லடிமைக்‌ கேற்குமாறும்‌ தாரணி நீர்‌ முதலான மாயை காலம்‌
தனிவான்‌ என்றிவை உருவாந்‌ தன்மை தானும்‌
கூரணி சேர்‌ மதி யுடைய குருக்கள்‌ காட்டக்‌
குறிப்புடன்‌ நாம்‌ கண்டு வகை கூறினோமே.–என்று வைணவத்தில்‌ ஆச்சார்ய ஸ்தானம்‌ எவ்வளவு சிறப்பானது என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌. இதனை அடுத்து வரும்‌ அதிகார ஸங்க்ரஹம் என்ற பகுதியில்‌ பத்து ஆழ்வார்கள்‌ மதுரகவிகள்‌. எட்டு ஆச்சார்யர்கள்‌ இவர்களைப்‌ புகழ்ந்து பேசித் தனியே எம்பெருமானார்‌, ஆளவந்தார்‌, நாதமுனிகள்‌ என்னும்‌ ஆச்சார்யர்கள்‌ நம்‌ ஸித்தாந்தத்துக்கு செய்த உபகாரத்தைக்‌ கூறிக்‌ கோயில்‌, திருமலை, பெருமாள் கோயில்‌ ஆகிய திவ்ய தேசங்களுக்கும்‌ ஒவ்வொரு பாசுரமிட்டு ஸ்ரீ ரெங்கநாதனின்‌ திருவடிகளின்‌ பெருமையை ஒரு பெரிய பாசுரத்தால்‌ விளக்கி ஆச்சார்யர்களின்‌ உபகாரத்தை அனுசந்‌தித்து முடிக்கிறார்‌.
பொய்கை முனி பூதத்தார்‌ பேயாழ்வார்‌, தண்‌
பொருநல் வருங்குருகேசன்‌, விட்டுச்‌ சித்தன்‌
துய்ய குலசேகரன்‌ நம்‌ பாண நாதன்‌
தொண்டரடிப் பொடி, மழிசை வந்த சோதி
வையமெலாம்‌ மறை விளங்க வாள்வேலேந்தும்‌
மங்கையர் கோன்‌ என்றிவர்கள்‌ மகிழ்ந்து பாடும்‌
செய்ய தமிழ்‌ மாலைகள்‌ நாம்‌ தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள்‌ தெளிகின்றோமே என்றும்‌
என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு
யானடை வேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிரை வணங்கிப்‌
பின்னருளாற்‌ பெரும்புதூர்‌ தந்த வள்ளல்‌
பெரியநம்பி ஆளவந்தார்‌ மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்‌
நாதமுனி, சடகோபன்‌ சேனை நாதன்‌
இன்னமுதத் திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே–என்றும்‌ ஆழ்வார்களையும்‌, ஆச்சாரியர்களையும்‌ புகழ்ந்து பாடியவர்‌, திருவரங்கப்‌ பெரிய கோயிலையும்‌ விண்ணுயிர்‌ வெற்புடை வேங்கடத்தையும்‌ புகழ்ந்து
ஆராத அருளமுதம்‌ பொதிந்த கோயில்‌
அம்புயத்தோன்‌ அயோத்தி மன்னற்களித்த கோயில்‌
தோலாத தனி வீரன்‌ தொழுத கோயில்‌
துணையான வீடணற்குத்‌ துணையாங் கோயில்‌
சேராத பயனெல்லாஞ்‌ சேர்க்கும்‌ கோயில்‌
செழு மறையின்‌ முதலெழுத்துச்‌ சேர்ந்த கோயில்‌
தீராத வினை யனைத்தும்‌ தீர்க்கும்‌ கோயில்‌
திருவரங்கம்‌ எனத் திகழும்‌ கோயில்தாமே
என்றும்‌
கண்ணனடி யிணை யெமக்குக்‌ காட்டும்‌ வெற்பு
கடுவினைய ரிரு வினையுங்‌ கடியும்‌ வெற்பு
திண்ண மதுவீடென்னத் திகழும்‌ வெற்பு
தெளிந்த பெருந் தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு
பொன்னுலகிற்‌ போக மெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
வேங்கட வெற்பென விளங்கும்‌ வேத வெற்பே”-என்றும்‌
உத்தம வமர்த்தல மமைத்ததோ ரெழிற்றணு வினுய்த்த கணையால்‌
அத்திவரக்கன்‌ முடி பத்து மொரு கொத்தென உதிர்த்த, திறலோன்‌
மத்துறு மிகுத்த தயிர்‌ மொய்த்த வெண்ணெய்‌ வைத்ததுணுமத்த
விடமாம்‌
அத்திகிரி, பத்தர் வினை, தொத்தறவனுக்கும்‌ மணி யத்திகிரியே–என்றும்‌ பாடியுள்ளார்‌. இத்தனை அற்புதமான பாசுரங்கள்‌ அருளிய தேசிகன்‌ இறுதியில்‌ தன்னடக்கமாக வெள்ளைப்‌ பரிமுகர்‌ தேசிகராய்‌ விரகால்‌ அடியோம்‌ உள்ளத் தெழுதியது. ஓலை யிட்டனம்‌ நாமிதற்கே
கொள்ளத் துணியினும்‌ கோதென்றி கழினுங்‌, கூர் மதியீர்‌,
எள்ளத்தனையுகவர்து இகழாதெம் மெழில் மதியே’–என்று பாடியிருப்பது அவரது சீலத்தையும்‌ பக்தியையும்‌ காட்டுகிறது.இனி அமிருத சுவாதினியில்‌ திருமந்திரம்‌ முதலிய மூன்று ரஹஸ்யங்களின்‌ தாத்பர்யம்‌. இராமாயணத்தின்‌ சாரமான காக சரணாகதி, விபீஷண சரணாகதி முதலியனவும்‌ வராகப்‌ பெருமானுக்‌கும்‌, பூமிப் பிராட்டிக்கும்‌ நடந்த உரையாடலின்‌ விளைவாக எழுந்த வராக சரம ஸ்லோகத்தின்‌ பொருள்‌, அஞ்சலியின்‌ பெருமை, ஏனைய ரஹஸ்யங்களின்‌ சுருக்கமும்‌ கூறப்பட்டு இறுதியில்‌ பாஷ்‌யகாரரின்‌ கீர்த்தியைக் கூறி அமலனடிப்பிரானின்‌ ஸாரார்த்தத்துடன்‌ முடிவடைகிறது.
நின்னருளாங்‌ கதியின்றி மற்றொன்றில்லேன்‌
நெடுங் காலம்‌ பிழை செய்த நிலை கழிந்தேன்‌
உன்னருளுக் கினிதான நிலை யுகந்தேன்‌
உன்சரணே சரணென்னுந்‌ துணிவு பூண்டேன்‌ –
மன்னிருளாய்‌ நின்றநிலை யெனக்குத்‌ தீர்த்து வானவர்தம்‌ வாழ்ச்சி தர வரித்தேனுன்னை
இன்னருளாலினி யெமக்கோர்‌ பரமேற்றாமல்‌
என் திருமாலடைக்கலங்‌ கொள்‌ என்னை நீயே!–என்றும்‌
பாண்‌ பெருமாள்‌ பெருமையினைக்‌
காண்பனவு முரைப்பனவு மற்றொன்றின்றிக்‌
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற்‌
பாண் பெருமாள்‌ அருள்‌ செய்த பாடல்‌ பத்தும்‌
பழ மறையின்‌ பொருளென்று பரவுகின்றோம்‌
வேண்‌ பெரிய விரி திரைநீர்‌ வையத்துள்ளே
வேதாந்த வாரியென் றியம்ப நின்றோம்‌
நாண்‌ பெரியோமல்லோம்‌ நாம்‌ நன்றுந்தீதும்‌
நமக்குரைப்பாருளரென்று நாடுவோமே–என்றும்‌ அருளியுள்ளார்‌.
இதனை அடுத்து வரும்‌ பரமபத சோபானம்‌ (படி) என்ற பகுதியில்‌ பரமபதமெனும்‌ மிக்க உயரத்திலுள்ள ஓர்‌ இடத்தை அடைவதற்கு ஒன்பது படிகளை அமைத்துள்ளார்‌. அவைமுறையே.
1) தத்துவங்கள்‌ முதலியவற்றை அறிதல்‌,
2) ஸம்ஸாரத்‌தில்‌ வெறுப்பு,
3) உலக சுகங்களில்‌ ஆசை அறுதல்‌,
4) தன்‌ பாபங்களின்‌ விளைவால்‌ இனி வர இருக்கும்‌ நரகானுபவத்தை எண்ணி அஞ்சுதல்‌,
5) எம்பெருமான்‌ மோக்ஷத்தை அருள்வதற்குக்‌ காரணமான உபாயங்களை அனுஷ்டித்தல்‌
6) இச்சரீரத்திலிருந்து ஜீவன்‌ வெளியேறுதல்‌,
7) அர்ச்சராதி மார்க்கத்தால்‌ (புண்ணியம்‌
செய்தவர்கள்‌ செல்லும்‌ பாதை)செல்லுதல்‌, 8) ஸ்ரீ வைகுண்டம்‌ என்னும்‌ திவ்ய லோகம்‌ சேர்தல்‌,
9) அங்குள்ள ஸர்வேஸ்வரனைக்‌ கண்ணாரக் கண்டு களித்து அந்த நித்யானத்தத்திலேயே எப்பொழுதும்‌ மூழ்கிக்‌ கடத்தல்‌
என்ற விஷயங்களையும்‌ சுருக்கமாக வெளியிட்டுள்ளார்‌. இதன்‌ விரிவுரையை இவர்‌ எழுதிய ரஹஸ்ய கிரந்தத்தில்‌ காணலாம்‌.
மாளாதவினை யனைத்தும்‌ மாள நாம்‌ போய்‌
வானேறி மலர்மகளாரன்பு பூணும்‌
தோளாத மாமணிக்குத்‌ தொண்டு பூண்டு
தொழுதுகந்து தோத்திரங்கள்‌ பாடியாடிக்‌
கேளாத பழமறையின்‌ கீதங்கேட்டுக்‌
கிடையாத பேரின்பம்‌ பெருக நாளும்‌
மீளாத பேரடிமைக் கன்பு பெற்றோம்‌
மேதினியில்‌ இருக்கின்றோம்‌ விதியினாலே–என்று பாடி அருளியுள்ளார்‌. இனி பரமதபங்கம்‌ என்ற பகுதியில்‌ திருவெயிந்தையில்‌ அந்நிய மதத்தினருடன்‌ வாதம்‌ புரிந்து வெற்றி பெற்று, அம் மதங்களில்‌ உள்ள தோஷங்களையும்‌ வைணவத்தின்‌ மேன்மையையும்‌ பற்றி எழுதப்பட்ட ரகஸ்யத்தின்‌ ஒவ்வொரு அதிகாரத்தையும்‌ சுருக்கிப்‌ பாசுரங்களாகத்‌ தொகுக்கப்பட்ட பரமபத பங்கம்‌ என்ற பிரபந்தமாகத்‌ தோன்றியது. இதில்‌ அன்னிய மதங்களில்‌ பொதுவாய்‌ உள்ள தோஷங்களை வெளியிட்டு சார்வாகமதம்‌, பெளத்தம்‌, அத்வைதம்‌, ஜைனம்‌, பாஸ்கர யாதவ மதம்‌ போன்ற எல்லா மதங்களின்‌ முக்கியக் கொள்கைகளைச்‌ சுருக்கிக்‌ கூறிக் கண்டித்து பாஞ்சராத்திர சாஸ்திரத்தின்‌ பெருமையைப்‌ பேசி,சரணாககி ஸ்வரூபத்தின்‌ பெருமையையும்‌ பலனையும்‌ எடுத்துக்‌ காட்டி முடிவில்‌ தமக்கு அருள் புரிந்த திருவாழி ஆழ்வானுடைய திருக்கரங்களின்‌ பெருமையையும்‌ பேசித் தலைக் கட்டுகிறார்‌.
கோதவமொன்றில்லாத தகவே கொண்ட
கொண்டலென வந்துலகிலைவர்க்கன்று ஓர்‌
தூதுவனாய்‌ யொருகோடிமறைகளெல்லாம்‌
தொடர்ந்தோடத்தனி யோடித்‌ துயரந்தீர்த்த
மாதவனார்‌ வடகொங்கில்‌ வானியாற்றின்‌
வண்ணிகை நன்னடங்கண்டு மகிழ்ந்து வாழும்‌
போது, இவை நாம்‌ பொன்னயிந்தை நகரில்‌ முன்னாள்‌
புணராத பரமதப்‌ போர்பூரித்தோமே –என்கிறார்‌.
இனி ஸ்ரீதேசிகன்‌ பேரருளாளன்‌ மீது அத்திகிரி மான்யம்‌, மெய்விரத மான்மியம்‌, அருத்த பஞ்சகம்‌, அடைக்கலப்பத்து போன்ற ஆறு பிரபந்தங்களைப்‌ பாடுகிறார்‌. மெய்விரதமான்மியம்‌ என்ற பகுதியில்‌ ஸ்ரீ பாஷ்யத்தின்‌ பதினாறு பாதங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ ஒரே பாசுரத்தில்‌ அமைத்து அருளிச்‌ செய்துள்ளார்‌.பேரருளாளனின்‌ திருமேனி அழகையும்‌, இரு பிராட்டிமாருடன்‌ அவன்‌ காட்சி யளிப்பதையும்‌, தக்க எடுத்துக்காட்டுகளுடன்‌ வர்‌ணித்திருப்பது படித்துச் சுவைத்து அனுபவித்தால் தான்‌ தெரியும்‌.அருத்த பஞ்சகத்தில்‌ முக்தியைப் பெற விரும்புபவன்‌ முக்கியமாய்‌ உணர வேண்டியதான ஐந்து பொருள்களைக்‌ கூறுகிறார்‌. -அவை யாவன
1] தம்மால்‌ அனுபவிக்கப்பட வேண்டிய எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌, எம்பெருமானை அடையவிடாமல்‌, இதுவரை உள்ள இடையூறுகள்‌, மோக்ஷத்திற்காகச்‌ செய்யும்‌ உபாயங்‌கள்‌ முக்கிய பலமாகிய பகவத்‌ அனுபவம்‌ என்பனவாம்‌. அடைக்கலப்பத்து என்ற பகுதியில்‌ பேரருளாளன்‌ திருவடிகளில்‌ அடைக்கலம்‌ புகுந்தமையைப்‌ பத்துப்‌ பாசுரங்சளில்‌ விளக்குகிறார்‌. ஸ்வநிஷ்டை, உத்தி நிஷ்டை, ஆசார்ய நிஷ்டை., பாகவத நிஷ்டை என்று சரணாகதி பாகுபாடு பெற்றதைக் கூறி முடிவில்‌ சரணமடைந்து தலைக் கட்டுகிறார்‌.அடுத்து ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்‌ தினந்தோறும்‌ செய்ய வேண்‌டிய காரியங்களான ஐந்தும்‌ கூறப்பட்டுள்ளன அவை யாவன.-அபிகமனம்‌; அதாவது அன்று முழுதும்‌ நடக்க வேண்டிய காரியங்‌கள்‌ தடையின்றி நடந்தேறப்‌ பிரார்த்தித்துப்‌ பிரபத்தி பண்ணுவது.அடுத்து உபாதானம்‌; அதில்‌ பகவானது ஆராதனத்துக்கு வேண்டிய பொருள்கள்‌ முக்கியமாக மனது சுத்தமடைய ஆழ்வார்களும்‌ ஆச்சாரியர்களும்‌ அருளிய ஸ்ரீ ஸக்தி காலக்ஷேபத்தில்‌ ஈடுபடுதல்‌,பின்னர்‌ வருவது இஜ்யை, இதில்‌ பாஞ்சராத்ர சாஸ்திரத்திலும்‌ ஆஹ்நிகங்களிலும்‌ சொல்லிய முறைப்படி பகவானுக்குத்‌ திருவாராதனம்‌ செய்தல்‌, அடுத்து ஸ்வாத்யாயம்‌ என்பது. இதில்‌ வேதாந்த பாடங்களைப்‌ படித்துத்‌ தெரிந்து கொள்ளுதல்‌, இறுதியாக யோகம்‌ என்பதில்‌ பகவான்‌ திருவடிகளில்‌ இரவும்‌ பகலும் தான்‌ தலையை வைத்திருப்பதாய்த்‌ தியானம்‌ செய்து சயனித்தல்‌ என்று ஐந்து கார்யங்களையும்‌ பேரருளாளன்‌ விஷயமாக்கி வெளியிடுகிறார்‌.அடுத்துவரும்‌ திருச்சின்னமாலையில்‌ பேரருளாளன்‌ சந்நிதியில்‌ எழும்‌ திருச்சின்னத்தின்‌ ஓசையில்‌ மயங்கிய தேசிகன்‌ முதல்‌ ஆறு பாசுரங்களில்‌ திருமந்திரத்தின்‌ ஸாரார்த்தத்தையும்‌ 7, 8 பாசுரங்களில்‌ த்வயத்தின்‌ விசேஷார்த்தத்தையும்‌ 9-வது பாசுரத்தில்‌ சாம ஸ்லோகத்தின்‌ முக்கயார்த்தத்தையும்‌ வெளியிட்டு இறுதியில்‌ பேரருளாளன்‌ பெருமை பேசி ஆச்சார்யோபதேசத்தின்‌ ஸாரமடங்கிய இப்பிரபந்தத்தின்‌ இனிமையை சிற்றின்பத்தில்‌ பற்றில்லாமல்‌ வேறு இச்சையின்றி ஈடுபடுவோரே அனுபவிக்க முடியும்‌ என்று கூறி முடிக்கிறார்‌.இதை அடுத்துவரும்‌ பன்னிரு நாமம்‌, பேரருளாளன்‌ விஷயமே. கேசவன்‌ முதல்‌ தாமோதரன்‌ வரையில்‌ உள்ள பன்னிரு திருநாமங்களைச்‌ சொல்லி, அந்த அந்தத் திருமண்‌ காப்புகளில்‌ அவ்வவ் வெம்பெருமான்களின்‌ திருமேனி நிறம்‌, அவர்கள்‌ அணிந்‌திருக்கும்‌ ஆயதங்கள்‌, அவர்கள்‌ தலைவராய்‌ வீற்றிருக்கும்‌ திசை,நம்‌ சரீரத்தில்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ பாகம்‌ முதலியவற்றைக்‌ கூறுவதால்‌ புண்ட்ரம்‌ (நாமம்‌) தரிக்கும் பொழுது இப்பிரபந்தம்‌ அவசியம்‌ பாராயணம்‌ செய்ய வேண்டும்‌.
“கத்தித் திரியும்‌ கலைகளை வெல்லும்‌ கருத்தில்‌ வைத்துப்‌
பத்திக்குறு துணை பன்னிருநாமம்‌ பயில்பவர்க்கு
முத்திக்க மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும்‌
தித்திக்கு மெங்கள்‌ திருவத்தி யூரரைச்‌ சேர்பவற்கே-என்ற பாசுரத்துடன்‌ முடிக்கிறார்‌.

இனி வரும்‌ மூன்று பிரபந்தங்களால்‌ முறையே திருமந்திரம்‌ த்வயம்‌. சரம ஸ்லோகம்‌ ஆகிய மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்தத்தை நம்‌ தேசிசுன்‌ விளக்கி யருள்கிறார்‌. திருமந்திரத்தைப்‌ பதம்‌ பதமாக,அதாவது, 1) அகாரம்‌ 2) அதன்‌ மேல்‌ உள்ள நான்காம்‌ வேற்றுமை
உருபு, 3) உகாரம்‌, 4) மகாரம்‌ நமபதம்‌, நார பதம்‌, அயன பதம்‌, அதன்‌ மேலுள்ள நான்காம்‌ வேற்றுமை உருபு ஆகியவற்றின்‌ பொருளை முறையே கூறி, இவ் வர்த்தங்களெல்லாம்‌ நிதியைப்‌ போல்‌ ஆச்சார்யர்களால்‌ சேமித்து வைக்கப் பட்டவை என்கிறார்‌.
அடுத்து த்வயச் சுருக்கு. த்வயம்‌ இரண்டு பாகமாக உள்ளது.-முதற்பாகம்‌ ௨பாயத்தையும்‌, இரண்டாம்‌ பாகம்‌ பலனையும்‌ வெளியிடுகிறது. அம்மந்திரத்தின்‌ அர்த்தத்தைச்‌ சுருக்கி வெளியிடுவதால்‌ த்வயச்‌ சுருக்கு எனப் பெயர்‌ பூண்டது. மந்திரத்தைப்‌ பத்துப்‌
பதமாகப்‌ பிரித்துக் கூறிப்பின்‌ அப்பத்து அர்த்தங்களையும்‌ ஒரு பாசுரத்தில்‌ சேர்த்துக் கூறி முடித்திருக்கிறார்‌.
தன தன்றிவையெனத்‌ தானென்றென மறைசொன்ன வெலாம்‌,
எனதென்றும்‌ யானென்று மெண்ணுதலால்‌ வருமீனமெலாம்‌,
மனதொன்றியின்று நமவென்றதே கொண்டு மாற்றுதலால்‌
தனதன்றி யொன்றுமிலாத்‌ தனித்தாதை சதிர்த்தனனே-
-என்பது சுருங்கியபொருள்‌. இதை அடுத்து சரம சுலோகச் சுருக்கு.
முதற்பாசுரத்தில்‌ சரம ஸ்லோகத்தின்‌ முழுத் தாத்பர்யத்‌ (சரணாகதிதத்துவம்‌) தையும்‌ அருளிச் செய்து பின் பத்துப்‌ பாசுரங்களில்‌ பாகங்களுக்கு வியாக்கியானமும்‌ செய்தருளுகிறார்‌.
கல்லாரகலும்‌ கருமமுஞானமுங்‌ காதலும்‌ மற்‌
றெல்லா நிலைகளுக்கேற்ப விதித்த கிரிசைகளும்‌
வல்லார்‌ முயல்க, வலியிழந்தாரென்றனைத்‌ தொழுகென்று
எல்லாத்‌ தருமமுரைத்தவன்‌ இன்னடி சேர்ந்தனமே
-என்பது திரண்ட பொருள்‌.

கீதார்த்த சங்கிரகம்‌ என்ற பகுதியில்‌ பதினெட்டு அத்யாயங்‌கொண்ட கீதையின்‌ ஒவ்வோர்‌ அத்யாயத்தின்‌ சாரத்தையும்‌ ஒவ்‌வோர்‌ ஸ்லோகத்தில்‌ ஆளவந்தார்‌ எழுதி யுள்ளவற்றைத்‌ தமிழில்‌ மொழி பெயர்த்துத்‌ தனித் தனியாக 21 பாசுரங்களில்‌ எழுதி யுள்ளார்‌.இவ்வாறு கீதை மொழிந்தருளிய வேதாந்த தேசிகனார்‌ இதை அடுத்து மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தில்‌ முதலில்‌ பிராட்டியின்‌ பெருமையையும்‌, ஸ்ரீசப்தத்தின்‌ ஆறு பொருள்களையும்‌ பேசித் தெய்வநாயகனுடைய திருக் கல்யாண குணங்களைப்‌ புகழ்ந்து எல்லாப்‌ பொருளாயும்‌ எல்லாப்‌ பந்துவாயும்‌, இருப்பவன்‌ அவனே என்று காரணத்துடன்‌ கூறி அவனது பக்தர்கள்‌ அவனுக்குச்‌ சமமானவர்‌ என்று வெளியிடுகிறார்‌ தேசிகன்‌. மொத்தம்‌ முப்பது பாசுரங்கள்‌ இருக்க வேண்டிய இப்பிரபந்தத்தில்‌ பத்துப் பாகரங்‌களே காணப்படுகின்றன. அகவல்‌, வெண்பா, கட்டளைக் கலித்‌துறை என்று மூன்று வகைப் பாக்களால்‌ இப்பிரபந்தம்‌ அமைக்கப்‌பட்டு மூவகை மணிகளால்‌ அமைந்த ஹாரம்‌ போலிருத்தலின்‌ இதற்கு மும்மணிக் கோவை என்ற பெயர்‌ வந்தது என்று தெரிகிறது.அடுத்து வரும்‌ நவமணிமாலை (நவரத்னமாலையென்றும்‌ வழங்கப்படுவதுண்டு ) வெண்பா முதலிய பாக்கள்‌ ஒன்பது அமையப் பெற்ற இப்பகுதியில்‌ முதலில்‌ திருவயிந்திரபுரத்து எம்பெருமானின்‌ பெருமை பேசிப்பின்‌ அவன்‌ எடுத்த பத்து அவதார வரலாற்‌றையும்‌, பிரம்மா, கருடன்‌, அனந்தாழ்வான்‌, பூமி தேவி முதலியோர்‌ தீர்த்த உருக்கொண்டு அவன்‌ அருள்பெற்று அங்கிருக்கும்‌ வரலாற்றையும்‌ கூறி, மாசி மாதத்தில்‌ கடற்கரையில்‌ நடக்கும்‌ உத்சவத்தையும்‌ புகழ்ந்து, தம்முடைய அந்திம காலத்தில்‌ தமக்கு அபயமளிக்க வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டு அவன்‌ தன்‌னைப் பாடப்‌ பணித்ததையும்‌ கூறி முடிக்கிறார்‌.
மஞ்சுலாவு சோலை சூழயிந்தை மன்னு மன்னுசீர்‌
வரையெடுத்து நிரையளித்த மாசில்‌ வாசுதேவனே
செஞ்சொலன்பர்‌ சிந்தை கொண்டு திதிலாத தூதனாய்த்‌
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வ! தெய்வ நாயக!
வெஞ்சொலாளர்‌ காலதூதர்‌ வீசுபாசம்‌ வந்தென்மேல்‌ விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்கு முன்னர்‌ நீ
அஞ்சலஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டும்‌, அச்சுதா
அடியவர்க்குமருளியக்குமடியவர்க்கு மெய்யனே-என்று பாடிய பின்‌ இறுதிப் பாசுரத்தில்‌

அந்தமில்‌ சீரயிந்தை நகரமர்ந்த நாத, னடியினை மேல்‌ அடியுரையாலைம்பதேத்திச்‌
சிந்தை கவர்‌ பிராகிருதம்‌ நூறு கூறிச்‌
செழுந்தமிழ்‌ மும்மணிக்கோவை செறியச் சேர்த்துப்‌
பந்து கழல்‌ அம்மானை யூசலேசல்‌
பரவு நவமணிமாலை இவையுஞ்‌ சொன்னேன்‌.
முந்தை மறை மொழிய வழி மொழிநீயென்று
முகுந்தனருள்‌ பெற்ற பயன்‌ பெற்றேன்‌ நானே
-என்று தான்‌ முகுந்தனருளால்‌ பாடிய பாசுரங்களைத்‌ தொகுத்துக் கூறுகிறார்‌. பந்து கழல்‌ அம்மானை ஊசல்‌ ஏசல்‌, பரவு நவமணி மாலை இவையுஞ்‌ சொன்னேன்‌ என்று அருளியிருப்பதால்‌ அவர்‌ அருளிய மும்மணிக்கோவையில்‌ இருபது பாசுரங்களும்‌ பந்து, கழல்‌ முதலிய ஐந்து பிரபந்தங்களும்‌ மறைந்து விட்டன எனத் தெரிகிறோம்‌.
பிரபந்தசாரம்‌ என்ற இறுதிப்பகுதியில்‌, ஆழ்வார்கள்‌ அவதரித்த ஸ்தலம்‌, மாதம்‌, நட்சத்திரம்‌, அவர்கள்‌ பெருமை, அருளிச்‌ செய்த பிரபந்தங்களின்‌ பெயர்‌, அவற்றின்‌ பாசுர எண்‌ அவற்றின்‌சாரம்‌ இவற்றை வெளியிட்டு இறுதியில்‌ இரு பாசுரங்களில்‌
ஆழ்வார்கள்‌ திருநாமத்தையும்‌ அவர்கள்‌ அருளிய பாசுர எண்களையும்‌ கூறி ஒரு பாசுரத்தில்‌ ஒரே கோஷ்டியாக அவர்சுளை அனுபவித்து ‘தமிண் மறையோன்‌’ என்று தன்னை பெருமையாகப்‌ பேசி
இப்பிரபந்தத்தை அனுசந்திப்பவருக்கு எம்பெருமான்‌ கருணை யால்‌ சகல நன்மைகளும்‌ உண்டாகுமென்று கூறி முடிக்கிறார்‌.
ஆழ்வார்களது பிரபந்தத்தின்‌ சாரமாக அமைந்திருப்பதால்‌ இது
இப் பெயர்‌ பெற்றுள்ளது.
எண்ணின்‌ முதலாழ்வார்கள்‌ மூன்று நூறும்‌ 300
எழில் மழிசைப்பிரான்‌ இரு நூற்றொரு பத்தாறும்‌ 216
உண்மை மிகு மாறன்‌ மறையாயிரத்தோடு 1296
உற்ற இரு நூற்றுத்தொண்ணூறுமாறும்‌ 11 வண்மையுடை மதுர கவிபத்துமொன்றும்‌
வஞ்சியர்‌ கோன்‌ நூற்றைந்தும்‌, பட்டநாதன்‌ 105
பண்ணியல்‌ நானூற்றேழுபத்துமூன்றும்‌ 473
பார்க்கோதை நூற்றெழுபத்துமூன்றே 173
பத்தரடிப்பொடி பாடலைம்பத்தைந்தும்‌ 55
பாணர்புகல்‌ பத்துடனே பரகாலன்‌ சொல்‌ 10
அத்தனுயர்‌ வேங்கடமாற்காயிரத்தொடு 1253
ஆன இரு நூற்றோரைம்பத்து மூன்றும்‌ 108
முத்தி தரும்‌ எதிராசர்‌ பொன்னடிக்கே மொழிந்த வமுதர்‌ பாடல்‌ நூறுமெட்டும்‌ எத்திசையும்‌ வாழ
இவர்‌ பாடி வைத்த இவை நாலாயிரமும்‌ அடி யோங்கள்‌ வாழ்வே 4000
என்றும்‌ தொகுத்துத்‌ கொடுக்கிறார்‌. ஆகவே நாலாயிரப் பிரபந்தத்‌தில்‌ இராமானுச நூற்றந்தாதியையும்‌ அடக்கியே பெரியோர்‌ கணித்‌துள்ளனர்‌ எனத் தெரிகிறோம்‌.
ஆகார நியமம்‌: தேசிகரின்‌ கடைசித்தமிழ்‌ பிரபந்தம்‌ ஆகார நியதி பற்றிக் கூறுகிறது. ‘ஆகாரத்தில்‌ இருவகையாம்‌ நன்றுந்தீதும்‌,
அருமறை கொண்டெதிராசரிவை மொழிந்தார்‌ என ஆரம்பித்து,
ஆகாரத்தில்‌ சுத்த மில்லா விட்டால்‌ மனம்‌ தெளிவடைவதில்லை.
மனந் தெளியாதபோது எந்தவொரு நல்ல காரியத்தையும்‌ சிந்திக்‌கவோ செயல் படுத்தவோ முடியாது. ஆகவே முனிவர்கள்‌ சாஸ்‌திரங்களில்‌ கூறிய முறையைத்‌ தழுவி, உண்ணத் தகாத பதார்த்தங்‌களை எடுத்துக் காட்டி அவற்றை விலக்குமாறும்‌ உண்ணத் தக்கபதார்த்தங்களையும்‌ கூறி விளக்குகிறார்‌.
மாலமுது செய்யாமல்‌ வந்தவெல்லாம்‌
வருவிருந்தில்‌ வழங்காமல்‌ வைத்தவெல்லாம்‌
காலமிது வன்றென்று கழிந்தவெல்லாம்‌
கடையில்‌ வருங்கறி முதலாக்கழுவாவெல்லாம்‌
நூலிசையா வழிகளினால்‌ வந்தவெல்லாம்‌
சீலம்பிலாச்‌ சிறியோ ராக்கினவு, நல்லோர்‌
செல மலங்கள்‌ பட்டனவுந்தின்னார்தாமே
என்று கூறியவர்‌, உண்ண வேண்டியவை களையெல்லாம்‌ கூறும்‌ பொழுது,
தாதை நல்லாசிரியன்‌ முதற்றமையனெச்சில்‌
தரணிசுரர்‌ சோமத்திலருந்து மெச்சில்‌
மாதர்‌ கட்குக்‌ கணவனிதமான வெச்சில்‌
மயிர்‌ புழு நூல்‌ விழுந்தாலும்‌ புனிதம்‌
என்றார்‌. இவரைப் பற்றிப்‌ புகழ்ந்து இவர்‌ புதல்வர்‌ நாயினாராச்சாரியார்‌ அந்தாதித்‌ தொகையில்‌ பிள்ளையந்தாதி பாடியுள்ளார்‌. அதில்‌ தேசிகன்‌ பெருமைகளை யெல்லாம்‌ நன்கு விளக்கியுள்ளார்‌. அவர்‌ ஆராய்ந்து கண்ட சித்தாந்தம்‌, திருவேங்கடமுடையானே தேசிகனாக அவதரித்துள்ளான்‌. தேசிகன்‌ குணங்களைப் பாடி அவரை மனத்து இருத்தினால்‌ பாபங்கள்‌ பறந்து போகும்‌. அவரது ௮ருளன்றி உபாயமில்லை என்பதாம்‌. சுவாமி திருமேனி பல்லாண்டு
வாழும்படி வாழ்த்தி இந்தப்‌ பாசுரத்தைச்‌ சேவிப்பவர்‌ முடிவில்‌ தேசிகன்‌ திருவடிகளில்‌ விளங்கப் பெறுவர்‌ என்று பலன்‌ கூறி முடிக்கிறார்‌.
தொண்டருகக்குத்‌ துணையடி வாழி, நின்‌ தூமுறுவல்‌
கொண்ட முகம்‌ வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை
வண்டிரு நாமமும்‌ வாழி மணிவட முப்புரிநூல்‌
கொண்ட சீர்‌ தூப்புற்குலமணியே வாழிநின்வடிவே.–என்று வாழ்த்துகிறார்‌. நாலயிரப் பிரபந்தத்தைப் போல்‌ தேசிகப்‌
பிரபந்தத்திலும்‌ சாத்துமுறைப் பாடல்கள்‌ உள்ளன.
நானிலமுந்தான்‌ வாழ நான்‌ மறைகள்‌ தாம்‌ வாழ
மாநகரின்‌ மாறன்‌ மறை வாழ – ஞானியர்கள்‌
சென்னி யணி சேர்‌ தூப்புல்‌ வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்‌

வஞ்சப்பரசமயம்‌ மாற்றவந்தோன்‌ வாழியே.
மன்னுபுகழ்ப்பூதூரான்‌ மனமுகப்போன்‌ வாழியே.
கஞ்சத்‌ திருமங்கை யுகக்க வந்தோன்‌ வாழியே.
கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன்‌ வாழியே.
செஞ்சொல்‌ தமிழ்மறைகள்‌ தெளிந்துரைப்போன்‌ வாழியே.
திருடிலைமால்‌ திருமணியாய்ச்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
தஞ்சப்பர கதியைத்‌ தந்தருள்வோன்‌ வாழியே.
தண்டமிழ்த்‌ தூப்புல்‌ திருவேங்கடவன்றாள்‌ வாழியே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் வைபவம்-ஸ்ரீ எம்பெருமானார் பின்புள்ளார்-

November 2, 2025

இராமானுஜரது திரிதண்டம்‌, பவித்ரம்‌ என்று சொல்லப்படும் பிரதம சீடர்களான முதலியாண்டான்‌, கூரத்தாழ்வான்‌ என்ற இருவரில்‌ முதலில்‌ காண இருப்பது கூரத்தாழ்வான்‌ வைபவம்‌.ஜீவ காருண்யம்‌, ஆச்சார்ய பக்தி, பகவத் பக்தி, வைராக்யம்‌, பாண்‌டித்யம்‌, ஸத்கர்மானுஷ்டானம்‌ (நல்ல காரியங்களையே செய்தல்‌) முதலிய எண்ணிறந்த நற் குணங்களுக்கும்‌ பிறப்பிடமென்ன அமைந்த கூரத்தாழ்வானது திவ்ய சரிதத்தை, தினந்தோறும்‌ அனுசந்‌திப்பது ஸ்ரீவைஷ்ணவர்களது கடமையாகும்‌.
கச்சிமாநகருக்கு வடமேற்கிலுள்ள கூரம்‌ என்னும்‌ நகரில்‌ முன்னோர்‌ அனுசந்தித்தபடி கலியுகம்‌ 4180-ம்‌ ஆண்டில்‌ செளம்ய வருஷத்தில்‌ தைமாதம்‌ அஸ்த நட்சத்திரத்தில்‌ வடமான்‌ குலத்தில்‌ இம் மகான்‌ அவதரித்தார்‌. இவரது இயற்பெயர்‌ திருமறுமார்பன்‌ என்பது. இவரது தகப்பனார்‌ அனந்தர்‌. தாயார்‌ பெருந்தேவி நாயகி தேவியார்‌ – ஆண்டாள்‌. பகவத்‌ விஷயத்திலே மிக்க ஊக்கமுடையவரான போதிலும்‌ எம்பெருமானாருக்குத்‌ தாம்‌ சிஷ்யராகையால்‌, அவருக்கு நேர்‌ ஸ்தானத்தில்‌ குருவாக இருந்து உபதேசிக்க விரும்‌பாமல்‌ ஏனைய முதலிகளுக்கு (சீடர்களுக்கு) உபதேசிக்க, அவர்‌கள்‌ அதைக்கேட்டு அப்படியே எம்பெருமானார்‌ முன்‌ விண்ணப்‌பம்‌ செய்வதாக ஒரு நியதி ஏற்பட்டு, முதலிகளுக்கு ‘உயர்வற உயர்நலம்‌’ உடையவன்‌ என்ற திருவாய்மொழிப் பாசுரம்‌ தொடங்கினவாறே மதியெலாமுள்‌ கலங்கி மயங்கித்‌ தரையில்‌ விழுந்தார்‌.
பர சமயவாதிகள்‌ பிரஹ்மத்திற்குக்‌ குணமென்பதே கிடையாது. நிர்குணமென்கிறார்களே, ஆழ்வார்‌ முதலடியிலேயே உயர்வற உயர்நலமுடையவன்‌ என்கிறபடி என்னே! என்று சொல்லிக்‌ கொண்டே மோஹித்தவாறு மூர்ச்சித்து விழ முதலிகள்‌ ஓடிச்சென்று இராமானுசரிடம்‌ விவரத்தைக்கூற, அவரும்‌ ஒடிவந்து ‘எத்திறம்‌ உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே, என்று ஆறு மாதம்‌ மோகித்துக்‌ கிடந்த நம்மாழ்வாரைக்‌ காணப்‌ பெறாத குறைதீர, இன்று கண்ணாரக்‌ காணப் பெற்றோமே என ௨ள்ளமெலாமுருகிக்‌ குரல்‌ தழுத்து ஆழ்வான்‌, ஆழ்வான்‌ எனக்கூவித்‌ தட்டி எழுப்பி உணர்த்தத்‌, தொடங்கும்போதே உயர்வற உயர்நலமுடையவனென்‌பதே என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்‌. உருக்கத்திலே நம்‌ ஆழ்வாரைப் போன்றே இருந்தமையால்‌ எம்பெருமானார்‌ ‘ஆழ்‌வான்‌’ என்று ஏக வசனமாகத்‌ தட்டி எழுப்பினார்‌. அது முதல்‌ இவருக்கு ஆழ்வான்‌ என்று திருநாமம்‌ வழங்கலாயிற்று. கூரத்தில்‌ பிறந்தமையால்‌ கூரத் தாழ்வான்‌ என்று அழைக்கப்பட்டார்‌.ஆழ்வானின்‌ வைபவத்தைக் காட்டிலும்‌ அவரது தேவியார்‌ ஆண்டாளின்‌ வைபவம்‌ அளவற்றிருக்கும்‌. சாஸ்திரங்களில்‌ தமக்கு ஏதாவது சந்தேகம்‌ தோன்றினால்‌ தேவியாரைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்வது வழக்கம்‌ என்று பெரியோர்‌ கூறுவர்‌. கூரம் மா நகரில்‌ பெருஞ்செல்வராக வாழ்ந்த இவர்‌ தம்‌ செல்வத்தினால்‌ பல ஏழைகளையும்‌, சாதுக்களையும்‌ மற்றும்‌ பலரையும்‌ பலவகையால்‌ போஷித்துக் கொண்டு மகா தர்மவானாய்‌ இருந்து வந்தார்‌. நாள் தோறும்‌ பெருமாள் கோயில்‌ (காஞ்சி) திருக்கதவுகள்‌ இரவில்‌ மூடப்‌பட்ட பின்பே இவரது மாளிகைக்‌ கதவுகள்‌ இரவில்‌ மூடப்படும்‌.ஒரு நாள்‌ திருவிழாவை முன்னிட்டு கோயில்‌ கதவு மூடுவதற்குத்‌ தாமதமாயிற்று. ஆனால்‌ ஆழ்வார்‌ பணியாட்கள்‌ குறித்த நேரத்தில்‌ அவர்‌ வீட்டுக் கதவை மூடி விட்டனர்‌. அந்த மணியோசையைக்‌ கேட்ட பேரருளாளன்‌ தனக்கு ஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்யும்‌ திருக்கச்சி நம்பியிடம்‌ நமது இரவுத்‌ திருவாராதனம்‌ முடியு முன்பே கதவுகள்‌ சாத்தப்படுகின்றனவே என்று கேட்க, அவர்‌ கூரத்தாழ்வானது வீட்டுக் கதவுகள்‌ மூடப்பட்டன என்று சொன்னாராம்‌.அதைக் கேட்ட தேவர்பிரான்‌ ஆழ்வான்‌ செல்வமோ நம்மை இவ்வாறு மயக்கிற்று என்றாராம்‌. இந்த உரையாடலைப்‌ பின்னர்‌ கேட்டறிந்த கூரத்தாழ்வான்‌ தமது அந்திம காலத்துக்கு வேண்டிய சிறிதளவு செல்வத்தை மாத்திரம்‌ வைத்துக் கொண்டு பாக்கியை யெல்லாம்‌ ஏழை எளியவர்களுக்கு தானம்‌ செய்து விட்டு இனித்‌ தான்‌ ஒர்‌ நல்லாசிரியரை அடைந்து உய்வு பெற விரும்பி, விசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகரான உடையவர்‌ இராமானுஜ முனிவரைச்‌ சரணடைந்து, பஞ்ச சம்ஸ்காரங்களைப்‌ பிரார்த்தித்துப்‌ பெற்று அவரது திருவடிகளை விட்டு நீங்காமல்‌, சாமான்ய சாஸ்திரங்களையும்‌, அத்யாத்ம சாஸ்திர சம்பிரதாயங்களையும்‌ ஓதியும்‌, ஒதுவித்துக் கொண்டும்‌ வாழ்ந்து வருவாராயினார்‌-இவ்வாறு இருக்கும்‌ காலத்தில்‌ திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌, இராமானுசரைத்‌ திருவரங்கம்‌ அழைத்துச் சென்ற பொழுது,அவரை விட்டகல முடியாத கூரத்தாழ்வானும்‌, அவருடையே பிரதான சீடராய்‌, சகல சாஸ்திர நிபுணர்‌ என்று எல்லோராலும்‌ போற்றப்படுபவராய்‌, அவரோடேயே வாழ்ந்து வந்தாராதலால்‌,அவர்‌ முன்னர்‌ தம்‌ ஊரிலே தம்‌ அந்திம காலத்துக்காகச்‌ சேமித்து வைத்த சிறு பொருளையும்‌, அவசியமற்றது என்று கருதியதால்‌,இராமானுசரது அனுமதி பெற்றுக்‌ கூரம் நகருக்கு வந்து அப்பொருளைப்‌ பரம பாகவதர்களுக்கு தானம்‌ செய்து விட்டுத்‌ தமது தேவியாரான ஆண்டாளையும்‌ கூட்டிக் கொண்டு, திருவரங்கத்துக்கு நம்‌பெருமாள்‌ சந்நிதிக்கு வரும்‌ வழியில்‌, மதுராந்தகம்‌ சமீபத்தில்‌ காட்டு வழியில்‌ தேவியார்‌ பயமாக இருக்கிறதே என்று கூற,மடியில்‌ கனம்‌ இருந்தாலல்லவா வழியில்‌ பயம்‌ வரும்‌. நீ ஏதேனும்‌ விலை மதிப்புள்ள பொருள்‌ வைத்திருக்கிறாயா? என்று கேட்க ஆண்டாளும்‌, தாங்கள்‌ வழக்கமாக உணவு கொள்ளும்‌ பொன் வட்‌டிலை மட்டும்‌ கொணர்ந்தேன்‌ என்று கூறவே, ஆழ்வானும்‌ அப் பொன்‌ வட்டிலை வாங்கத்‌ தூர எறிந்து விட்டு, மதுராந்தகத்து ஏரி காத்த பெருமாளைத் தொழுது ‘த்வயம்‌’ விளைந்த இடம்‌ என்று அந்த மகிழ மரத்தைச்‌ சேவித்துப்பின்‌ மறுநாள்‌ தொடங்கி பயண கதியாய்‌, வழியிலுள்ள திருப்பதிகளைச்‌ சேவித்துக் கொண்டு திருவரங்‌கம்‌ சென்று முன் போலவே உடையவர்‌ பாதத்தில்‌ அத்தாணிச்‌ சேவகராய்‌ வாழ்ந்து வந்தார்‌. பொன் வட்டில் தனை எறிந்த புகழினைப்‌ பெற்றார்‌.

ஒரு நாள்‌ கோயில் கொத்தி(ஊழியர்கள்‌)லுள்ள வர்களுக்குத்‌ தலைவராயிருந்த திருவரங்கத்தமுதனார்‌ உடையவரை அணுக),மகா பாபியான என்னைத்‌ திருத்திப்‌ பணி கொள்ளத் தக்க ஒரு சாத்விகரை நியமித்தருள வேண்டும்‌ என்று வேண்டிக் கொள்ள உடையவரும்‌ ஆழ்வானை அக் காரியத்திற்கு நியமித்தார்‌. இவருடைய தாழ்வுகளைப்‌ பாராமல்‌ இவரை அனுகூலராக்க, நம்‌ பக்கலிலே கொண்டு வந்து சேரும்‌ என்று கட்டளையிட, ஆழ்வானும்‌ அவரை ஆறுமாத காலம்‌ உபதேசம்‌ பண்ணி பரிபக்குவராக்கி உடையவரிடம்‌ அழைத்து வர, உடையவரும்‌ அவ்வமுதனாரை, ஆழ்வான்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிப்பித்தார்‌. இந்நன்றியை மொழியைக்‌ கடக்‌கும்‌ பெரும்புகழான்‌ வஞ்சமுக்குறும்பாங் குழியைக்‌ கடக்கும்‌ நம்‌ கூரத்தாழ்வான்‌ சரண்‌ கூடிய பின்‌ என்று குறிப்பிடுகிறார்‌. தாம்‌ அருளிய இராமானுச நூற்றந்தாதியில்‌. அமுதனார்‌ ஆழ்வானது சீடனாகி வாழ்ந்து வருகிற காலத்‌திலே, அமுதனாரது தாயார்‌, ஆச்சாரியன்‌ திருவடி யடையவே(இறந்துவிடவே) பத்து நாளும்‌ கடந்த பின்‌ ஏகாஹத்துக்கு (ஈமச்சடங்கின்போது ஆத்மா நற்கதி பெற வேண்டிச்‌ செய்ய வேண்டியஒரு சடங்கு] ஒருவரை அனுப்புமாறு வேண்ட, உடையவரும்‌ ஆழ்வானை நீர்‌ போய்‌ வாரும்‌ என்ன, ஆழ்வானும்‌ சிறிதும்‌ தயங்காமல்‌ சென்றார்‌. அமுதனாரும்‌ ஆச்சாரியார்‌ இங்கனே எழுந்தருளுவதே என்று மிகவும்‌ தாழ்ந்து, ஏஹாக்கரத்திலே அமுதுசெய்யப் பண்ணுவித்து, அபரிமிதமான பொருள்களைச்‌ சமர்ப்பிக்க,ஆழ்வானும்‌ அவற்றை யெல்லாம்‌ அங்கீகரித்து பின்‌ அவற்றைத்‌ தெருவிலே பொன்‌ மழையாக இறைத்து விட்டு காவேரியிலே நீராடி திருமண்‌ காப்பிட்டு உடையவர்‌ முன் வந்து சேவித்து நிற்கவே, உடையவரும்‌ அங்கு இடைத்தது என்ன என்று கேட்‌கவே, ஆழ்வானும்‌ அவை அனர்த்தமாகையாலே அப்பொழுதே கழிந்து போயின என்று நடந்தவற்றைக்‌ கூறினார்‌. இவ்வாறு பணத்தாசையே யில்லாத ஒருவர்‌ இருக்கிறாரே என்று உடையவரும்‌ மிகவும்‌ ஆனந்தமடைந்தார்‌. அவர்‌ அமுதனார்‌ வீட்டிற்கு ஆழ்வானை அனுப்பியதற்குக்‌ காரணம்‌ நம்‌ பெருமாள்‌ கோயில்‌ திறவுகோல்‌ அமுதனாரது கை வசம்‌ இருந்ததனால்‌ அதை உடையவர்‌ ஒரு உபாயமாகக்‌ கைப்பற்ற எண்ணி, ஆழ்வானிடம்‌ நீர்‌ போய்‌ ஏகாஹத்தில்‌ புசித்து முடிவில்‌ சந்நதித் திறவு கோலைப்‌ பெற்றாலன்றி சர்வம்‌ சம்பூர்ணம்‌ என்று சொல்ல வேண்டாம்‌ என்று நியமித்தனுப்ப ஆழ்வானும்‌ அப்படியே செய்து திறவு கோலை அமுதனாரிடமிருந்து பெற்று வந்து உடையவரிடம்‌ சமர்ப்பித்தார்‌.

எம்பெருமானார்‌ கோஷ்டியில்‌ உபய வேதாந்த கிரந்த காலட்‌சேபம்‌ நடக்கையில்‌, ஆத்மாவுக்கு ஞானானந்தங்களும்‌ சேஷத்வமும்‌ நிருபகமாகச்‌ சொல்லப்பட்டது. இவற்றுள்‌ அந்தரங்க நிரூபகம்‌ எது என்ற சர்ச்சை எழ, எம்பெருமானார்‌ இதை ஆச்சார்யார்‌ மூலமாக வெளியிடக்கருதி ஆழ்வானை திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ சென்று அறிந்து வாரும்‌ என்று அனுப்பி விட நம்பியும்‌ ஆறுமாத காலமாக ஆழ்வான்‌ காத்திருந்தும்‌ பதிலனுப்பாததால்‌, தான்‌ உடையவர்‌ பக்கம்‌ போகப் போவதாக ஆழ்வான்‌ சொல்லவே நம்பி அவரை அழைத்து மயர்வற மதிநல மருளப் பெற்ற நம்மாழ்வார்‌.-அடியேனுள்ளான்‌ என்றருளிச்‌ செய்தபடி கண்டாயே’ என்று மொழிந்தருள, ஆழ்வானும்‌ ‘தந்யோஸ்மி என்றெழுந்தருளினார்‌.-இதன்‌ கருத்து யாதெனில்‌ அடியேனுள்ளான்‌ என்ற பாசுரம்‌ திருவாய்மொழி (9-8-2)ம்பாட்டு. ஆத்மாவிலுள்ளான்‌ என்று சொல்‌லாமல்‌, என்னுள்ளான்‌ என்றும்‌ சொல்லாமல்‌, அடியேனுள்ளான்‌ என்று அடிமையை விட்டு ஆத்மாவை நிரூபித்தமை தோற்ற அருளிச் செய்ததாலே, ஆத்மாவுக்கு ஞானானந்தங்களைக் காட்டிலும்‌ சேஷத்வமே மகத்தான நிரூபக மென்றதாயிற்று. அதாவது ஞானத்தை விட சரணாகதியே பிரபத்தியே, சிறந்ததாயிற்று என்பதாகும்‌.
ஆழ்வான்‌ எந்நாளும்‌. மாதுகரம்‌ (உஞ்ச விருத்தி) பண்ணின பொருளை வைத்தே தேக யாத்திரை (வாழ்வது) நடத்துவது வழக்கம்‌. ஒருநாள்‌ விடாமல்‌ மழை பெய்ததால்‌ வெளியே செல்ல முடியாமல்‌ நாண் மலர்‌, கொண்டு உன் பாதம்‌ நண்ணா நாள்‌ எனக்குப்‌ பட்டினி நாளே என்றபடியே அருளிச்செயல்‌ அனுசந்தானமே தாரகமாகக்‌ கொண்டு வேறு உணவின்றியே கண் வளர்ந்திட, அன்றிரவு பெரிய பெருமாள்‌ அமுது செய்கிற பொழுது திருச்சின்ன ஒலி கேட்ட ஆழ்வானது தேவி ஆண்டாள்‌, உமது பக்தர்‌ பட்டினியா யிருக்க நீர்‌ குலவிக் குலவி அமுது செய்கிறீரே என்று மனத்தளவில்‌ நினைத்ததை உணர்ந்த எம்பெருமான்‌ தனக்குக்‌ கைங்கர்யம்‌ செய்‌கிற உத்தம நம்பிக்கு அர்ச்சகர்‌ மூலம்‌ தாம்‌ அமுது செய்த அக்கார அடிசிலை ஆழ்வானுக்குக்‌ கொடுக்குமாறு கட்டளையிட கோயில்‌ மரியாதைகளுடன்‌ அவர்கள்‌ கொண்டு வருவதைக் கண்ட ஆழ்வான்‌ பதறி எழுந்து எதிர் கொண்டு தனக்கும்‌ தேவிக்குமாக இரு திரளைகளை எடுத்துக் கொண்டு மிகுதியை அனுப்பி விட்டார்‌. தசரதனது பத்தினியர்‌ புத்திர காமேஷ்டி யாகத்தில்‌ பெற்ற பாயசத்தை உண்டதால்‌ ராம லட்சுமணாதிகள்‌ பிறந்ததைப் போல, இப்பொழுது இவர்க்கும்‌ திரு பராசர பட்டர்‌ திரு வேத வியாச பட்டர்‌ (ஸ்ரீராமப்‌பிள்ளை] என்ற இரு திருக் குமாரர்கள்‌ .பிறக்க ஏதுவாயின.-சோழ ராஜ சபையில்‌ நேர்ந்த கஷ்டங்களுக்குப் பிறகு திருவரங்‌கம்‌ திரும்பிய ஆழ்வான்‌, அரங்கனைச்‌ சேவிக்கக்‌ கோயிலுக்குச்‌ சென்ற பொழுது சோழனது காவலர்கள்‌ இராமானுஜரது சம்பந்தம்‌ உள்ளவர்கள்‌ கோயிலுக்குள்‌ நுழையக் கூடாது என்று தடுத்து விட ஆழ்வான்‌ எல்லோருக்கும்‌ உண்டாகும்‌ ஆத்ம குணம்‌ ஆச்சார்ய சம்பந்தத்துக்கு ஏதுவாக இருந்தது. என்னுடைய ஆத்ம குணம்‌ ஆச்சார்ய சம்பந்தத்தை அறுத்துக் கொள்ள ஏதுவாகி விட்டதே என்று வருந்தி அன்றே கோயில்‌ வாசத்தை விட்டொழித்து திருமாலிருஞ்‌ சோலைக்கு தேவியோடு பயண கதியாய்ப்‌ புறப்பட்டு வழியிலே தங்கள்‌ மனக் கவலையை மறக்குமாறு பகவானது ஸ்வரூப, ரூப குண விபூதிகளை நினைந்து நெஞ்சு கனிந்து ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌, அதிமானுஷ ஸ்தவம்‌ என்ற இரு ஸ்தோத்ரங்களை அருளிச்‌ செய்தார்‌. நூறு ஸ்லோகங்களைக்‌ கொண்ட ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌.-இவர்‌ அருளிய பஞ்ச ஸ்தவங்களில்‌ முதலானது. இதனை அடுத்த அதிமானுஜ ஸ்தவத்தில்‌, நரசிம்மரது அவதாரங்களைச்‌ சுருக்கமாகவும்‌ இராம கிருஷ்ணாவதாரங்களைப்‌ பெருக்கமாகவும்‌ பேசி அனுபவித்தார்‌. இது வரை உலகில்‌ வெளிவந்த சம்ஸ்கிருத வாங்மயங்களில்‌ இவற்றுக்கு ஈடில்லை என்னும்படி சொல்‌ நோக்கு,பொருள்‌ நோக்கு, தொடை நோக்கு, நடை நோக்கு அமைந்துள்‌ளது என்று வித்வத்‌ ரஸிக விவேகிகள்‌ (சகல கலா: வல்லுநர்கள்‌!ஒரு முகமாக விளம்பி யுள்ளனர்‌.-இவ்வாறு அழகர்‌ கோயிலை அடைந்து, அடி வாரம்‌ தன்னில்‌ அழகர்‌ வடிவழகைப் பற்றி, முடியும்‌ அடியும்‌ படிகலனும்‌ முற்றும்‌ அனுபவித்து அவ்வெம்பெருமான்‌ விஷயமாக 148 ஸ்லோகங்கள்‌ கொண்ட ‘சுந்தரபாஹு ஸ்தவம்‌’ அருளிச் செய்து திருவரங்க மாநகர்‌ சோழன்‌ கொடுமையிலிருந்து விடுபட்டு எம்பெருமானார்‌ திரும்பி வந்து அவர்‌ திருவடி நிழலில்‌ தாம்‌ வாழ வேண்டும்‌ என்று பிரார்த்தித்துக் கொண்டு 18 வருட காலம்‌ அங்கு வாழ்ந்து வந்தார்‌.சோழ மன்னன்‌ மாண்டானென்று கேள்விப்பட்டு ஆழ்வான்‌ அழகர்‌ கோவிலை விட்டு மீண்டும்‌ திருவரங்கம்‌ வந்தார்‌. சோழன்‌ உபத்திரவத்திற்குப்‌ பயந்து திருநாராயண புரத்திலிருந்த எம்பெருமானாரும்‌ சோழன்‌ மடிந்ததை அறிந்து, அங்கிருந்து புறப்பட்டு,கோயிலுக்கு எழுந்தருளி, ஆழ்வானைப் பார்க்க அவர்‌ திருமாளிகைக்கு வர, ஆழ்வானும்‌, உடையவரை எதிர் கொண்டு அவர்‌ காலடியில்‌ விழுந்து கிடக்க, இருவரும்‌ வார்த்தை ஒன்றும்‌ பேச இயலாமல்‌ இருந்த பின்‌ உடையவர்‌ ஆழ்வானிடம்‌ இந்த வைணவ தர்சனத்திற்குக்‌ கண்‌ போன்றவரான உமக்குக்‌ கண்‌ போனதே என்று வருந்திப்‌ பின்‌ அவரையும்‌ அழைத்துக் கொண்டு மடத்திற்குச்‌ சென்றார்‌. ஆழ்வான்‌ தாம்‌ அருளிய மூன்று ஸ்தவங்களையும்‌ படிக்கக்‌ கேட்டு மகிழ்ந்தவராய்‌ அவரைப் பார்த்து நாம்‌ காஞ்சிக்குச்‌ சென்று பேரருளாளரிடம்‌ உமக்குக்‌ கண் பார்வை தருமாறு வேண்டி வருவோம்‌ என்று கூறி காஞ்சியில்‌ வரதராஜ ஸ்தவத்தைப்‌ பேரருளாளர்‌ திரு முன்பு விண்ணப்பஞ்‌ செய்து முடிக்கிற போது உடையவர்‌,கவனியாதிருக்கும் பொழுது, ஆழ்வான்‌ உடையவர்‌ திரு உள்ளப்‌படி தனக்குக்‌ கண்‌ வேண்டிக் கொள்ளாமல்‌ நான்‌ பெறும்‌ பேறு நாலூரானும்‌ பெற வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டார்‌. ௮ச்‌ சோழ ராஜனை அடுத்திருந்த நாலூரானுடைய முயற்சியே பெரியநம்பி திருநாடு அலங்கரிப்பதபற்கும்‌ (இறப்பதற்கும்‌] ஆழ்வான்‌ கண்‌ இழப்பதற்கும்‌ காரணமாகும்‌. அத்தகைய படுபாவியான நாலூரானுக்குக்‌ கொடிய நரகம்‌ நிச்சயம்‌ கிடைக்குமாதலால்‌,வைணவ குலத்தில்‌ பிறந்த ஒருவன்‌ படுகுழியில்‌ விழலாகாது என்று இரக்கமுற்று, நம்மாலல்லது அவன்‌ உய்வு பெற வழியில்லை என்று அறுதி யிட்டு, பரம துரோகியான அவனுக்கும்‌ நற் கதி வேண்டினார்‌. இச் சிறந்த குணம்‌ ஆழ்வான்‌ ஒருவனுக்கே அசாதாரணமாக அமைந்துள்ளது என்பது மிகத் தெளிவான உண்மையாகும்‌.-ஆழ்வான்‌ பிரார்த்தித்ததை பேரருளாளன்‌ அங்கீ கரித்ததைக் கேட்ட எம்பெருமானார்‌ பதறி பேரருளாளரான நீர்‌ என்‌ நினைவைத்‌ தலைக்கட்ட வில்லையே என்றும்‌, ஆழ்வானை நோக்கு, ‘நீர்‌ ஸ்வதந்திரராய்‌ என்‌ நினைவைத்‌ தலைக் கட்டாதே உபயோகமற்ற ஒன்றை வேண்டிக் கொண்டீரே என்றும்‌ வெறுத்துரைத்து இனி என்‌ செய்வது என்று மனக்குறைபட்டு நிற்க, அதனை உணர்ந்த பேரருளாளன்‌, ‘இராமானுஜா’ ஆழ்வான்‌. நம்மையும்‌ உம்மையும்‌ காணு மிடத்து உட் கண்ணால்‌ காணக் கடவன்‌’ என்று வரமருளினார்‌.அவ்வாறு இருப்பதைச்‌ சோதித்துத்‌ தேர்ந்து தெளிந்த உடையவர்‌ திரு உள்ள முகந்தவராய்‌ ஆழ்வானுடன்‌ மீண்டும்‌ கோயிலுக்கே எழுந்தருளினார்‌. ஒருநாள்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ சிலர்‌ ஆழ்வானிடம்‌ மகா பாபியான நாலூரானுக்கு நற்கதி வேண்டிக் கொண்டதற்குக்‌ காரணம்‌ வினவ, அப்படிப்பட்ட பாவிகளுக்கன்றோ இரங்க வேண்டுவது, மீனுக்குத்‌ தண்ணீர்‌ வார்த்துப் பலனென்ன என்றார்‌. இதைக்‌ கேட்டவர்கள்‌ எம்பெருமானாரிடத்தில்‌ கூடக் காணக் கிடைக்காத நற் குணங்கள்‌ ஆழ்வானிடத்தில்‌ அழகாக அமைந்திருப்பதைக்‌ கண்டார்கள்‌.ஆழ்வானுடைய சிஷ்யர்கள்‌ பலரில்‌ பிள்ளைப் பிள்ளையாழ்‌வான்‌ என்பவர்‌ நற்குல நற் செல்வத்தால்‌ மேன்மை பெற்ற செருக்கினால்‌, பாகவதர்களிடம்‌ வினயமின்றிக்கே அபசாரப் பட்டுக்‌ கொண்‌டே யிருந்தார்‌. இவரைத்‌ திருத்திப்‌ பணிக் கொள்ளத்‌ தீர்மானித்த ஆழ்வான்‌, ஒரு புண்ணிய தினத்திலே நீராடின பின்பு, அவரிடம்‌ பிள்ளைப் பிள்ளாய்‌ எல்லாரும்‌ புண்ணிய காலமென்று தானம்‌ வழங்குவார்கள்‌. நீர்‌ நமக்கு ஒரு தானம்‌ வழங்க மாட்டீரோ என்று கேட்க, நான்‌ எதைத் தானம்‌ பண்ணுவது? எல்லாமே சாமியினுடையதே யன்றோ என்று கூறினார்‌. அதற்குப் பதிலாக அவ்வளவு போதாது. மனமொழி, மெய்களால்‌ பாகவத அபசாரப் படாமல்‌ இருக்க வேண்டும்‌ என்று கேட்டு அப்படியே அவரும்‌ வாக்குறுதி செய்தார்‌. பின்பு ஒரு நாள்‌ அவர்‌ மானசீகமாக, ஒரு பாகவதரிடத்தில்‌ அபசாரப் பட நேர்ந்தது. ஆனால்‌ மிகவும்‌ வருந்தியவர்‌ மள,மொழி, மெய்களால்‌, அபசாரப் படாதபடி இப் பொல்லா அழுக்குடம்புடனே இருப்பது அரிதாய்‌ இருக்கிறது என்று வருந்தவே இத்தனை நற்குணம்‌ இவருக்கு உண்டாயிற்றே என்று ஆழ்வானும்‌ மகிழ்ந்து பிள்ளைப் பிள்ளாய்‌, நெஞ்சினால்‌ நினைத்தற்கு அனுதாப முண்டாகிய படியால்‌ எம்பெருமான்‌ பொறுத்தருள்வான்‌. ராஜ தண்‌டம்‌ நேருமென்ற அச்சத்தினால்‌ சரீர மூலமாக ஒருவரையும்‌ நலியமாட்டீர்‌. ஆன பின்னர்‌ மானஸீகமாகப்‌ பட்ட அபசாரத்தை உமக்குக்‌ கழித்துத்‌ தந்தோம்‌. இனி வாக்கை மாத்திரம்‌ நன்றாகக்‌ குறிக் கொண்டு நல்ல முறையில்‌ வாழக் கடவீர்‌’ என்று கூறினார்‌.

எம்பெருமானின்‌ அருளினாலே, ஆழ்வானுக்கு இரண்டு புத்திரர்கள்‌ பிறந்தமையை முன்னரே கண்டோம்‌.-அக் குழந்தைகளைக்‌ காண வேண்டி உடையவர்‌ ஆழ்வான்‌ திரு மாளிகைக்குச்‌ சென்று தம்‌ சிஷ்யரான எம்பாரை நோக்கிக்‌ குழந்தைகளை எடுத்துக்‌ கொண்டு வருமாறு சொன்னார்‌. அவரும்‌ பிரபந்ந குலக் கொழுந்‌தான அக் குழந்தைகளை எடுத்து வரும் பொழுது காப்பாக ‘த்வயம்‌”* மந்திரத்தை அனுசந்தித்து வாழ்த்திக் கொண்டே வந்து குழந்தைகளை எம்பெருமானாருக்குக்‌ காட்டினார்‌. அவரும்‌ மிக மகிழ்ந்து,இக் குழந்தைகளிடம்‌ ‘த்வயம்‌’ பரிமளிக்கின்றதே, காரணம்‌ என்ன’ என்று கேட்க, எம்பாரும்‌ குழந்தைகளுக்குக்‌ காப்பாகத்‌ ‘த்வயானுசந்தானம்‌” செய்து கொண்டு வந்தேன்‌’ என்று சொன்னார்‌. அவ்‌வாறு எம்பார்‌ காப்பிட்டதற்கு உகந்து எம்பாரிடம்‌ அக் குழந்தைகளை உய்யும்‌ வகையை நாடிச் சென்று முற்பட்டீராதலில்‌ நீரே இவர்கட்கு ஆச்சாரியராகக்‌ கடவீர்‌ என்று நியமித்தார்‌. அதன் படியே அத் திருக் குமாரர்களுக்கு எம்பாரே ஆச்சார்ய கிருத்யங்கள்‌ செய்தருளினாரென்றும்‌, இது பற்றியே எம்பெருமானார்‌, எம்பார்‌, பட்டர்‌,நஞ்சீயர்‌, நம்பிள்ளை என்றபடி ஆச்சார்ய பரம்பரை வருகிற தென்பது பிரசித்தமாயிருக்கும்‌.-இவ்வாறிருக்க ஆழ்வானுக்கும்‌ ஆச்சார்ய பரம்பரையில்‌ அனுப் பிரவேசம்‌ (இடம்‌) உண்டானதே, அது எங்கனம்‌ என்று கேட்டால்‌, ஆழ்வான்‌ தம்‌ திருக் குமாரர்கட்குத்‌ திருவாய்மொழிக்‌குப்‌ பொருள்‌ கற்பித்து வரும் பொழுது ‘எண்பெருக்கந்நலத்‌ தொண்‌பொருள்‌ ஈறில, வண் புகழ்‌ நாரணன்‌ திண் கழல்‌ சேரே‘ என்ற பாசுரம்‌ வந்தது. அந்த அளவிலே இது திருமந்திர வார்த்தையை விவரிக்கிறதாகையாலே இம் மந்திரத்தின்‌ அர்த்தத்தை ஆச்சாரியரி னிடத்திலேயே கேட்டறிய வேண்டியதாகையால்‌, தான்‌ அவர்களுக்குச்‌ சொல்லாது நிறுத்தி, இதனை உங்கள்‌ ஆச்சாரியரிடம்‌ சென்று கேட்டுக் கொள்ளுங்கள்‌ என்று சொல்ல, அதனை விரைவில்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌ என்ற ஆவலினால்‌ அவர்கள்‌ உடனே எழுந்து ஆச்சாரியரான எம்பாரிடத்திற்குப்‌ போகப்‌ புறப்‌ பட்டார்கள்‌.ஆனால்‌ ஆழ்வான்‌ அவர்களைத்‌ தடுத்து நிறுத்தி ‘மின்னின்‌ நிலையில்‌ மன்னுயிராக்கைகள்‌’ என்றபடி யாக்கை நிலையாமையைத்‌ திரு உள்ளத்தில்‌ கொண்டு அவர்களை அழைத்து இருந்து கேளுங்கள்‌ என்று கூறித்‌ திருமந்திரத்தைச்‌ சொல்லி, இப் பாட்டின்‌ பொருளையும்‌ விவரித்து, இப் பாசுரத்தைத்‌ திருமந்திரத்தின்‌ அர்த்தமாக நினைத்திருங்கள்‌ என்று பணித்தருளினமையால்‌ தம்‌ இரு குமாரர்களுக்கு ஆழ்வானும்‌ ஒரு ஆச்சாரியராக அமைந்தருளினார்‌.

ஆகவே தான்‌ பட்டர்‌ ஸஹஸ்ரநாம பாஷ்யமருளிச்‌ செய்த பொழுது ஆசார்ய வந்தனம்‌ செய்கிற முதல்‌ ஸ்லோகத்தில்‌ ‘வந்தே கோவிந்த தாதெள என்று எம்பாரையும்‌ திருத் தகப்பனாரையும்‌ தொழுகின்‌றேன்‌ என்றருளிச் செய்து உபய ஸம்பந்தம்‌ தமக்கு உண்டான வழியைக்‌ காட்டுகிறார்‌.-பட்டர்‌ சிறுவராக இருந்த காலத்தில்‌ ஒருநாள்‌ தம்‌ தகப்பனாரான ஆழ்வானிடத்தில்‌ திருவாய்மொழி அனுசந்திக்கும் பொழுது
உறுமோ பாவியேனுக்கே’ (8.10.3) என்ற பாசுரத்தில்‌ ‘சிறு மா மனிசராய்‌ என்னை ஆண்டாரிங்கே திரியவே! என்றதைக்‌ கேட்டு, சிறுமை பெருமை இரண்டும்‌ ஒரு சேர எவ்வாறு ஒரு பொருளுக்குப்‌ பொருந்தும்‌ என்று பட்டர்‌ வினா எழுப்ப ஆழ்வான்‌ வடிவு சிறுத்து மகிமை பெருத்தவர்களும்‌ மனிதரென்று பார்க்கும்‌ பொழுது சிறுமை தோன்றினாலும்‌, பகவத்‌ பக்தி, ஞானம்‌,அனுஷ்டானம்‌ முதலிய நற் குணங்களை நோக்கும்‌ அளவில்‌ நித்ய முக்தர்களுக்கு நேர் மேன்மை பெற்று விளங்குகிறவர்கள்‌. அத்தகைய மகா புருஷர்களையே ஆழ்வார்‌ சிறுமாமனிசர்‌ என்று குறிப்பிடுகிறார்‌ என்று விளக்க, பட்டர்‌ அது தகும்‌ என்று இசைவு கொண்டார்‌.
ஆழ்வானுடைய குடும்ப காரியங்கள்‌ அனைத்தையும்‌ எதிராசரே நிர்வஹித்து (நடத்தி) வந்தார்‌. ஆழ்வானது குமாரர்கள்‌ இருவருக்கும்‌ சகல வித்யைகளையும்‌ புகட்டுவித்த பின்‌ அவர்கள்‌ விவாகத்‌துக்குரிய பருவத்தை அடைந்த அளவில்‌ ஆண்டாள்‌ ஆழ்வானைப்‌ பார்த்து, இவர்களுக்கு விவாகம்‌ செய்விக்க வேண்டாமோ என்று வினவ, ஆழ்வானும்‌ உடையவரிடம்‌ சென்று இப் புத்திரர்களுக்கு விவாகம்‌ செய்விக்க வேண்டும்‌ என்று சொல்கிறார்களே என்று விண்ணப்பம்‌ செய்ய, அவரும்‌ பெரிய நம்பி உறவினருக்குப்‌ பெண்‌ கொடுக்கும்படி வேண்ட முதலில்‌ மறுத்தவர்கள்‌ பின்னர்‌ பெருமாள்‌ தாமே கனவில்‌ தோன்றி கன்னிகைகளைக்‌ கல்யாணம்‌ செய்து கொடுக்கும்படி கட்டளை யிட அவர்களும்‌ இசைந்து, ஆழ்வான்‌ குமாரர்களுக்கு தங்கள்‌ குமாரத்திகளை கன்னிகா தானம்‌ செய்து கொடுத்துச்‌ சிறப்பாக விவாகமும்‌ நடந்தேறியது. இதனால்‌ ஆழ்வானுடைய குடும்ப கார்ய மனைத்தும்‌ எம்பெருமானார்‌ தலையில்‌ கடந்தது என்பது விளங்கும்‌.

நம்‌ ஆச்சாரியார்கள்‌ எல்லோரும்‌ சகல சாஸ்திரங்களிலும்‌ வல்லவராக இருந்த போதிலும்‌, ஆழ்வார்களுடைய ஈரச் சொற்களையே கொணடு, சகல சாஸ்த்ரார்த்தங்களையும்‌ அருளிச் செயல்களிலேயே நயிப்பித்து அனுபவிப்பார்கள்‌. இந்த அனுபவம்‌ ஆழ்வானுக்கு அதிகமாகவே இருக்கும்‌. திவ்யப்‌ பிரபந்தங்கவில்‌ பல பாசுரங்களில்‌ ஆழ்வானுடைய நிர்வாகம்‌ அருமையாகக்‌ கொண்டாடப்படும்‌. உதாரணமாக,திருவாய் மொழியில்‌ ஆழ்வார்‌ நாயகி பாவனையிலே பேசுகின்ற பாசுரங்களில்‌ மாசறுசோதி (5:83) என்ற
பாசுரத்தை உபந்யசிக்கும் போது தலையால்‌ வணங்கவுமாங்‌கொலோ தையலார்‌ முன்பே (5:3:7] என்ற ஈற்றடியின்‌ பொருளை விவரிக்குமளவில்‌ ஆமருவி நிரை மேய்த்தான்‌ நம்பியார்‌ என்ற பெரியவர்‌ எழுந்து தலைவி, தலைவனைத்‌ தலையில்‌ வணங்குவதுண்டோ என்று கேட்க, ஆழ்வான்‌ ஸீதாப் பிராட்டி, சிறிய திருவடியிடத்தில்‌ சந்தேகம்‌ சொல்லி அனுப்பும் பொழுது எனக்காக அவரைத்‌ தலையால்‌ வணங்கு என்று சொன்னது கண்டீரே என்று கூறியதைக்‌ கேட்டு அப்பெரியவர்‌ மகிழ்ச்சியடைந்தார்‌. இதைப்போன்ற பல விஷயங்களைப்‌ பிரபந்த வியாக்யானங்களில்‌ காணலாம்‌.
திருமாலிருஞ்சோலை யாத்திரையில்‌ அருளிய மூன்று ஸ்தவங்‌களும்‌ பின்பு எம்பெருமானார்‌ நியமனத்தால்‌ அருளிய வரதராஜஸ்தவமும்‌ பின்னர்‌ அருளிய ஸ்ரீஸ்தவமும்‌ ஆக மொத்தம்‌ ஐந்து ஸ்தவங்களாகும்‌. இவை தவிர வேறு வேறு சில ஸ்தோத்ரங்களும்‌ அருளிச் செய்தார்‌ என்பதை பட்டர் தம்‌ தகப்பனார்‌ அருளிச் செய்ததாகச்‌ சொல்லும்‌ ஸ்தோத்திரங்களிலிருந்தும்‌ தெரிகிறோம்‌. இவை தவிர பட்டரும்‌ ஆழ்வானும்‌ தாங்கள்‌ அருளிச் செய்த நித்ய கிரந்தங்களில்‌ என்று இருக்கக்‌ காண்கையில்‌ ஆழ்வான்‌ நித்யக் கிரந்தம்‌ ஒன்றும்‌ அருளியிருப்பதாக விளங்குகிறது. இவ்விடத்திலேயே ஆழ்வானுடைய சரமஸ்லோக வியாக்யானத்தையும்‌ நாம்‌ குறிப்‌பிட வேண்டும்‌. ஆனால்‌ சரம ஸ்லோக வியாக்யானம்‌ நமக்குக்‌ கிடைக்கவில்லை.ஆழ்வான்‌ திருநாட்டுக்கு ஏக வரம் பெற்றதைக்‌ கேட்டு வருந்‌திய உடையவர்‌ முன்னர்‌ தான்‌ தம்‌ ஆச்சாரியார்‌ திருக் கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ பட்ட அபசாரத்தால்‌ நமக்கு நரகமே கிட்டும்‌ என்று வருந்தினேன்‌. ஆனால்‌ இப்பொழுது ஆழ்வானோடு சம்பந்தமுடையார்‌ அனைவருக்கும்‌ மேல் வீடு கிட்டும்‌ என்று நம்‌ பெருமாள்‌ நியமித்தபடியால்‌, நமக்கு ஆழ்வானோடு சம்பந்தமுண்டாதலால்‌ ஒரு குறைவுமில்லை என்று களிப்புற்றுத்‌ தம்‌ காஷாயத்தை ஆகாயத்திலே வீசி யெறிந்து மகழ்ச்சிக்குப்‌ போக்கு விட்டதாகவும்‌ சொல்வர்‌.-ஆனாலும்‌ தனக்குயிரான ஆழ்வானைப்‌ பிரிந்து எங்கனம்‌ உயிர் தரிப்பது என்று திருஉள்ளம்‌ நொந்து ‘இப்படிச்‌ செய்தீரே,எங்களையும்‌ அரங்கனையும்‌ மறந்து மேல்நாடு போகத்‌ தீர்மானித்தது ஏன்‌ என்று கேட்க ஆழ்வானும்‌ உடையவருக்கு முன்னே போய்‌ உடையவரை எதிர் கொண்டழைக்கவே என்று கூற இப்படியும்‌ ஒரு ஆச்சார்ய பக்தி உண்டோ என்று வியந்து ‘உம்முடைய பேற்றுக்கு நாம்‌ விலக்காகலாமோ? சுகமாக நித்யவிபூதி யேற எழுந்தருளுவீர்‌: என்று சொல்லிச்‌ செவியிலே த்வயத்தை அருளிச் செய்தார்‌. பின்னர்‌ ஆழ்வானது திருமுதுகைத் தடவி அஞ்சலித்து விடை கொடுத்தருளினார்‌.உடையவரின்‌ நிரூபணம்‌ பெற்ற ஆழ்வான்‌ உடையவரின்‌ திருவடித்‌ தாமரைகளைக்‌ கண்களிலும்‌ மார்பிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸ்ரீ பாத தீர்த்தம்‌ கொண்டு ‘இனி மடமேறி எழுந்தருள வேண்டும்‌”என விண்ணப்பம்‌ செய்ய, வடவாற்றங்கரை வழியாக உடையவர்‌ பின்னே செல்ல, இனி நில்லும்‌ எனத்‌ தண்டம்‌ சமர்ப்பித்து மீண்டும்‌ ஆழ்வான்‌ திருமாளிகைக்கு அருகிலிட்ட திருக்காவணத்தின்‌ நடுவே எழுந்தருளி யிருந்து தம்‌ தேவியார்‌ ஆண்டாளைப் பார்த்து என்ன நினைத்திருக்கிறாய்‌ என்று கேட்க, தேவரீர்‌ திரு உள்ளத்தைப்‌
பின்‌ செல்வதன்றி வேறு நினைவுண்டோ என்று கூறி விட ஆழ்வானும்‌, பட்டரையும்‌ ஸ்ரீராம பிள்ளையையும்‌ அருகிலழைத்து பெருமாளும்‌ நாச்சிமாரும்‌ எழுந்தருளி யிருக்க உங்களுக்கு ஒரு குறையுமில்லை. நம்‌ பெருமாள்‌ பெற்று வளர்த்தார்‌ என்று இறுமாந்திராதே, எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌ என்றிருங்கள்‌.ஆண்டாளுக்குக்‌ குறைவு வராமல்‌ நடந்து கொள்ளுங்கள்‌. பாகவத அபசாரப்‌்படாமல்‌ அவர்களை ஆதரித்துப்‌ போங்கள்‌ என்று உபதேசித்து அவர்கள்‌ கண்ணீரைத்‌ துடைத்து நீங்கள்‌ பிராக்ருத சம்பந்‌தத்தை நினைத்து வருந்தினீர்களானால்‌ உடையவர்‌ திருவடி சம்பந்‌தத்தைத் தூஷித்தவர்‌ ஆவீர்கள்‌. ஆத்ம ஸம்பந்தத்தை நினைத்து வருந்துவீர்களானால்‌ நம்முடைய ஒழிக்க ஒழியாத உறவை அறிந்திலீர்கள்‌ ஆவீர்கள்‌ என்று அவர்களைத்‌ தேற்றிப் பின்‌ கோயிலுக்கு நேரே, பிள்ளைப் பிள்ளை யாழ்வான்‌ மடியிலே திருமுடியையும்‌,ஆண்டாள்‌ மடியிலே திருவடிகளையும்‌ வைத்துக் கொண்டு, ஆளவந்தார்‌ திருவடிகளைச்‌ சிந்தை செய்து கொண்டு அன்றே திருநாட்‌டுக்கு எழுந்தருளினார்‌. பின்னர்‌ எம்பெருமானார்‌ எழுந்தருளித்‌ திருக் குமாரர்களைக் கொண்டு சரம கைங்கர்யங்களைப்‌ பெருக்க நடத்தி யருளினார்‌. மொழியைக் கடக்கும்‌ பெரும் புகழாகிற திருமேனியோடும்‌ அர்ச்சாவதாரத் திருமேனியோடும்‌ இவ் விபூதி எங்கும்‌ நிறைந்து விளங்குகிறாராகையால்‌ நாமும்‌ கண்கள்‌ துஞ்சாதே கண்ணாரக் கண்டு களிக்கும்‌ பாக்யம்‌ பெற்றோம்‌.

சீராருந்‌ திருப்பதிகள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
தென்னாங்கர்‌ சீரருளைச்‌ சேருமவன்‌ வாழியே.
பாராரும்‌ எதிராசர்‌ பதம்‌ பணிந்தோன்‌ வாழியே.
பாடியத்தின்‌ உட்பொருளைப்‌ பகருமவன்‌ வாழியே.
நாராயணன்‌ சமயம்‌ நாட்டினான்‌ வாழியே.
நாலூரான்‌ தனக்கு முக்தி நல்கினான்‌ வாழியே.
ஏராருந்‌ தையிலத்துத்‌ திங்குவந்தான்‌ வாழியே.
எழில்‌ கூரத்தாழ்வான்‌ தன்‌ இணையடிகள்‌ வாழியே
.

திருவரங்கத்தமுதனார்‌ -அவதாரஸ்தலம்‌ திருவரங்கம்‌. தகப்பனார்‌ அணியரங்‌கத் தமுதனார்‌. இவரது இதர நாமங்கள்‌ மூங்கில் குடி யமுதனார்‌. இவரது நட்சத்திரம்‌ பங்குனி ஹஸ்தம்‌. இவர்‌ 138 வருஷம்‌ வாழ்ந்திருந்‌தார்‌ என்பன இவரது வாழ்க்கைக்‌ குறிப்புகள்‌. ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரனை அடைவதற்கு அடி நிலையாகச்‌ சொல்லப்படுவது ஆச்சார்ய சம்பந்தம்‌. அத்தகைய ஆச்சார்ய சம்பந்தம்‌ பெற்று உய்ந்து போனவர்‌ திருவரங்கத் தமுதனார்‌. இவர்‌ பல கலைகளும்‌ பயின்று கோயிலில்‌ புரோஹிதராய்‌ செல்வாக்குடன்‌ பெரிய கோயில்‌ நம்பி என்னும்‌ பெயருடன்‌ திகழ்ந்து வந்தார்‌. பெரிய கோயிலில்‌ உடையவர்‌ பெரிய பெருமாளால்‌ உபய விபூதிகளும்‌ இஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளலாம்படி வழங்கப்பட்டமையால்‌ கோயில்‌ காரியங்‌களை உடையவர்‌ ஆராய்ந்து வரலானார்‌. அக் காலத்தில்‌ பெரிய கோயில்‌ நம்பி ரஜோ குணம்‌ மிக்கவராய்‌ உடையவருக்குக்‌ கீழ்ப்படியாமல்‌ கோயில்‌ நிர்வாஹத்திற்கு இடையூறுகள்‌ பல செய்து வந்தார்‌. அதனால்‌ உடையவர்‌ மனம்‌ உடைந்து பெரிய கோயில்‌ நம்பியைக்‌ கோயிலின்றும்‌ வெளியேற்றத்‌ திருஉள்‌ளம்‌ கொண்டிருந்தார்‌. ஒரு நாள்‌ பெருமாள்‌ புறப்பாட்டிற்காகக்‌ காத்திருக்கும் பொழுது, உடையவர்‌ கனவிலே பெருமாள்‌ முதிய வேதியனாகத்‌ தோன்றி, பெரிய கோயில்‌ நம்பி வெகு நாட்களாக நம்மையே நம்பி இருக்கிறார்‌. பிறகு தேவரீர்‌ திரு உள்ளம்‌ என்று கூறி மறைந்தார்‌. உடையவர்‌ தான்‌ கண்ட கனவினைக்‌ கூரத்தாழ்வானிடம்‌ சொல்லி நம்‌ திறத்துப்‌ பகைமை பாராட்டும்‌ பெரிய கோயில்‌ நம்பியை வெளியேற்றலாகாது. இங்கேயே வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்பது பெருமாள்‌ திரு உள்ளம்‌ போலும்‌.-நம்மால்‌ அவனோடு நிர்வாகம்‌ நடத்த இயலாது. ஆகையால்‌ நாம்‌ பெருமாள்‌ கோவிலுக்கே போய்‌ விடுவோம்‌ என்று கூறினார்‌.-அதைக் கேட்டு ஆழ்வான்‌ இவ் விதம்‌ அருளிச்செய்த பெருமாளுக்‌குப்‌, பெரிய கோயில்‌ நம்பியைத்‌ திருத்திப் பணி கொள்ள வேண்‌டும்‌ என்பது தான்‌ திருஉள்ளமாக இருக்க வேண்டும்‌ என்று கூறினார்‌. உடையவர்‌ அவ்வாறாயின்‌ நீரே அவரைத் திருத்தும்‌ என்று கூறினார்‌. ஆச்சாரியன்‌ கட்டளையைத்‌ தலைமேற் கொண்டு, ஆழ்‌வானும்‌ புலமை வாய்ந்த பெரிய கோயில்‌ பெரிய நம்பியை மெல்ல மெல்லச்‌ சீர்திருத்தினார்‌. திருத்தப்பட்ட நம்பியை ஆழ்‌வான்‌ உடையவர்‌ திருவடிகளிலே பொருத்தமுறச்‌ சேரவிட்டார்‌.-நம்பியை உடையவர்‌ அகமகிழ்ந்து முகமலர்ந்து ஏற்றுக்‌ கொண்டார்‌.-பெரிய கோயில் நம்பி ஆத்ம ஹித சிந்தனையில்‌ தம்மிலும்‌
மேம் பட்டவராய்‌ விளங்கனமையால்‌, ஆழ்வான்‌ திருவடிகளையே அவர்‌ குருவாகப்‌ பற்றும்படி செய்தருளினார்‌ உடையவர்‌. அரங்கனுக்குச்‌ சேஷப்பட்டு அவன்‌ செய்ய தானிணைகள்‌ பேர்வின்றிஇருந்தாலும்‌, தொண்டு பட்டவர்‌ பால்‌ சார்வின்றி நின்றதாகத்‌ தம்மைப் பற்றி (இராமானுஜ நூற்றந்தாதி (80)) இவர்‌ கூறிக் கொள்வதால்‌ இவர்‌ அரங்கனுக்குச்‌ சேஷப்பட்டவராய்‌ பணிவிடை புரிந்துகொண்டிருந்தாலும்‌, எம்பெருமானார்‌ அடியார்கள்‌ விஷயத்தில்‌ அனுகூலராய்‌ இல்லாமலிருந்தமை புலனாகிறது.
அன்பார்ந்த இன்பம்‌ ததும்பும்படி யமைந்த பெரிய கோயில்‌ நம்பியின்‌ சொல்லின்‌ இனிமையை நுகர்ந்த உடையவர்‌ இவருக்கு-அமுதன்‌’ என்று திருநாமம்‌ சூட்டினார்‌. அதிலிருந்து இவருக்குத்‌ திருவரங்கத்தமுதனார்‌ என்ற பெயர்‌ வழங்கலாயிற்று. நம்மாசாரியர்‌கள்‌, இவரிடத்திலுள்ள நம்‌ மதிப்புத்‌ தோன்ற ‘பிள்ளை அமுதனார்‌! என்று இவரைக்‌ குறிப்பிடுவார்கள்‌. ஈட்டிலும்‌ பெரிய ஜீயர்‌ மணவாள மாமுனி இராமானுஜ நூற்றந்தாதிக்கு இயற்றிய உரையிலும்‌, ஸ்ரீவசன பூஷணத்திற்கு அவரருளிய வியாக்யானத்திலும்‌(சூத்திரம்‌ 416) பிள்ளை யமுதானாரென்று தான்‌ வழங்கப்பட்டுள்‌ளது.-சில நாட்களுக்குப் பின்னர்‌ அமுதனார்‌ தாயாருக்குச்‌ சரம கைங்‌கர்யம்‌ செய்ய நேர்ந்தது. ஏகாதிஹ்த்திற்கு ஆள்‌ வேண்டி உடையவரிடம்‌ விண்ணப்பித்துக்‌ கொண்டார்‌. பூரியரோடுள்ள சுற்றம்‌ புலத்‌திக் கொண்டவராதலால்‌, மற்றெவருமே துணிந்து ஏற்காத இப் பணியை உடையவர்‌ கட்டளைப்படி ஆழ்வான்‌ துணிந்து ஏற்றுக்‌ கொண்டார்‌. ஆழ்வான்‌ அமுது செய்து திருப்தி கூறும்‌ காலத்தில்‌ அமுதனாருடைய கோயில்‌ புரோகிதத்தையும்‌, புராண படநதையும்‌தானம்‌ செய்யச் சொல்லி அவற்றைப் பெற்று உடையவரிடம்‌ ஒப்படைத்தார்‌. உடையவர்‌ நியமனத்தினால்‌ கோயிற் புரோகிதமும்‌,புராண படநமும்‌ ஆழ்வானாலே நிர்வஹிக்கப்பட்டு வந்தன.
உடையவர்‌ கோயிற் பணியை ஆழ்வானுக்குத்‌ தானமாக வழங்‌கி விட்டபடியால்‌, கோயிலிலே ஒட்டற்றிருந்தார்‌ அமுதனார்‌. இந்நிலையினை நோக்கிய, உடையவர்‌ வித்வானான அமுதனார்‌ இப்படி ஓய்ந்திருக்கலாகாது என்று எண்ணி, பிள்ளை திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌ திருமாளிகைக்கு எழுந்தருளி, இயற்பா, ஸ்ரீகோசத்தை தானமாகக்‌ கேட்டு வாங்கி இன்று முதல்‌ ஸந்நிதியில்‌ இயற்பாவை நீங்கள்‌ சேவிக்க வேண்டாம்‌ என்று கூறி, அதனை அமுதனாரிடம்‌ கொடுத்து, ஒர்‌உரு இயற்பாவினைச்‌ சாதித்து, இயற்பா ஆயிரமும்‌ ஸந்நிதியில்‌ சேவிக்கும்‌ அந் நாட்களிலே அரையருக்கு நடப்பவைகளான மரியாதைகளனைத்தையும்‌ நடத்தும்படி ஏற்பாடு செய்தார்‌. நாச்சியார்‌ ஸந்நிதி முதலிய இடங்களிலும்‌, அமுதனார்‌ இயற்பாவை தொடங்க,ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தொடர்ந்து அனுசந்திக்கும்படி நியமித்தருவினார்‌. திவ்யப் பிரபந்தங்களிலே இயற்பா நீங்கலாக மற்ற இசைப் பாக்கள்‌ அனைத்தும்‌ அரையராலேயே அனுசந்திக்கப் படுகின்றன. இவ்வாறு உடையவர்‌ திட்டம்‌ செய்த சில நாட்களுக்குப் பிறகு
அமுதனார்‌ எம்பெருமானார்‌ விஷயமாக, காயத்ரியை உரு எண்‌ணும்‌ கணக்கில்‌ நூற்றெட்டுக்‌ கட்டளைக் கலித்துறையில்‌ அமைந்த அந்தாதி நூலை அருளிச் செய்து பெருமாளிடம்‌ விண்ணப்பம்‌ செய்தார்‌. பெருமான்‌ ஒரு ஸப்தாபரணத் திருநாளிலே, உடையவரை நம்முடன்‌ கூட, வர வேண்டாம்‌ என்று நியமித்து திரு வீதி யிலே சகல வாத்யங்களையும்‌ நிறுத்தி, ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ இதை அனுசந்திக்கக் கேட்டு போர உகந்தருளினார்‌. அதுமுதல்‌ பெருமாள்‌ நியமனத்தாலே பெரிய ஸந்நிதியில்‌ இயற்பா அனுசந்தித்தவுடனே நூற்றந்தாதியைப்‌ பெருமாள்‌ வரிசையுடன்‌ கேட்டருள்கிறார்‌. நாச்சியார்‌ சன்னிதியிலும்‌ அப்படியே பெருமாள்‌ திருஉள்ளத்தை அனுசரித்து எம்பெருமானார்‌ முதலாயிரத்திலே கண்ணி நுண் சிறுத்தாம்பினைப்போல இயற்பாவின்‌
இறுதியில்‌ இராமானுஜ நூற்றந்தாதியையும்‌ சேர்த்து ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌, இந்த நூற்றந்தாதியை பிரபந்ந காயத்ரியாக நாடோறும்‌ அனுசந்திக்க வேண்டுமென்று கட்டளையிட்டருளினார்‌.-இந்த இராமானுஜ நூற்றந்தாதி ஆச்சார்ய அபிமான நிஷ்டர்களுக்கு அறிய வேண்டிய விஷயங்கள்‌ அனைத்தையும்‌ விரிவாகவிளக்கிக் காட்டுகிறது. ஆச்சார்ய அபிமான நிஷ்டன்‌ பகவானை அறவே விட்டவனாக மாட்டான்‌. ஆசார்ய வழிபாட்டிலேயே, எம்பெருமானும்‌ வழிபட்டவனாகி விடுகிறான்‌ என்னும்‌ உண்மையைப்‌ பிரபந்தத்தைக் கொண்டு அறுதியிட்டு எம்பெருமானாரையே வழிபடுவார்களாயினர்‌ முன்னோர்கள்‌. இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌: (106) என்னும்‌ பாசுரம்‌ இவ்வுண்மையை உணர்த்தும்‌.நம்மாழ்வாருக்கு மதுரகவிகள்போல எம்பெருமானாருக்கு அமுத னார்‌ அமைந்துள்ளார்‌. இருவரும்‌ ஆச்சார்யன்‌ திறத்துத்‌ தங்கள்‌ நிலையை விளக்கியும்‌ பிறருக்கு உபதேசித்தும்‌ உய்வுறுத்தும்‌ பொருள்களை உலகற்கு வெளியிட்டு உதவுகின்றனர்‌. ஆயினும்‌ மதுரகவிகளைப்‌ போலச்‌ சுருங்கக்‌ கூறாது, அமுதனார்‌ பரக்கக் கூறிப்‌ பரமோபகாரம்‌ புரிவதை நன்குணர்ந்து நாம்‌ நன்றி பாராட்டக்‌ கடமைப்பட்டுள்ளோம்‌.-இங்கனம்‌ அறிவில்‌ முதிர்ந்தோர்களால்‌, முக்கிய பிரமாணமாக ஏற்கப்பட்ட இப்பிரபந்தத்தை வைணவர்களனைவரும்‌ பிரபந்நகாயத்ரியாக நாடோறும்‌ அனுசந்திக்க வேண்டுமென்று உடையவர்‌ இட்ட கட்டளைக்கு ஏற்பவும்‌ அவரது மறு அவதாரமான மணவாள மாமுனிகள்‌ உபதேசித்ததற் கேற்பவும்‌ இந்த இராமானுஜ நூற்றந்‌தாதியை ஒதி ௨ய்வுறுவோமாக.

நயந்தரு பேரின்பமெல்லாம்‌ பழுதென்று நண்ணிதைபால்‌
சுயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணைமேல்‌ உயர்ந்த குணத்தத்‌ திருவரங்கத்தமுது ங்கும்‌ அன்பால்‌ இயம்பும்‌ கலித்துறை யந்தாதி ஓத இசை நெஞ்சமே.

எந்தாதை கூரேசர்‌ இணையடியோன்‌ வாழியே.
எழில்‌ மூங்கிற்குடிவிளங்க இங்கு வந்தோன்‌ வாழியே.
நந்தாமல்‌ எதிராசர்‌ நலம்‌ புகழ்வோன்‌ வாழியே.
நன்மதுர கவிநிலையை நண்ணினோன்‌ வாழியே.
பைந்தாம அரங்கன்‌ பதம்‌ பற்றினான்‌ வாழியே.
பங்குனியில்‌ அத்தநாள்‌ பாருதித்தான்‌ வாழியே.
அந்தாதி நூற்றெட்டும்‌ அருளினான்‌ வாழியே. அணியரங்கத்தமுதனார்‌ அடியிணைகள்‌ வாழியே.

உடையவர்‌ மேல்நாட்டிலே சைவர்கள்‌ மிகுந்திருந்த கோவையூரிலே ஒரு புஷ்கரணியிலே நீரெடுக்கும்‌ துறையிலே முதலியாண்‌டானைத்‌ திருவடி விளக்கி வரச்செய்தார்‌. அந்த ஸ்ரீபாத தீர்த்தப்‌ பிரபாவத்தாலே அவ்வூரார்‌ அனைவரும்‌ எம்பெருமானை ஆஸ்ரயித்தனர்‌. அவ்வூருக்கு ஸ்ரீ சாளக்கிராமம்‌ என்று திருநாமம்‌ வழங்கினார்‌. அங்கிருந்துதான்‌ வடுகநம்பிக்கு தர்ஸநார்த்தங்களை அருளிச்‌செய்தார்‌. வடுநம்பியின்‌ தகப்பனார்‌ பெயர்‌ ஸாலக்ராம ஐயன்‌. பிறந்த நட்சத்திரம்‌ ஸர்வ ஜீத்‌ வருஷம்‌ மாசிப் புனர்பூசம்‌. திருநாமங்‌கள்‌ ஸாலக்ராம ஐயன்‌. வடுக நம்பி பஞ்சமோபாய சம்பந்தர்‌ முதலியன. இவர்‌ 895 வருடம்‌ வாழ்ந்திருந்தார்‌. இவர்‌ பரமஏகாந்தியாய்‌ ஆச்சார்ய அபிமான நிஷ்டராகையாலே இவருக்கு
இருப்பிடம்‌ எம்பெருமானார்‌ சந்நிதியே. வடுகநம்பி எம்பெருமானார்‌ திருவடிகளே உபாயோபேயம்‌ என்று விஸ்வசித்து அவர்‌ திருவடிநிலைகளையே திருவாராதனம்‌
பண்ணிப்‌ போகுவார்‌.-இவ்வாறிருக்கையில்‌ ஒரு நாள்‌ உடையவர்‌
திருவாராதனத்தையும்‌, தன்னுடைய திருவாராதனத்தையும்‌ (வணங்கும்‌ கடவுள்‌) சேர எழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டு வர உடையவர்‌ கண்டு, ‘வடுகா இது என்‌ செய்தாய்‌ என்ன?” இவரும்‌ உங்கள்‌ தேவரில்‌ எங்கள்‌ தேவருக்கு வந்த குறையென்‌’ என்றார்‌.-வடுகநம்பி உடையவருடன்‌ பெருமாளைச்‌ சேவிக்கப் போனாலும்‌, உடையவர்‌ விக்கிரகத்தையே சேவித்துக் கொண்டு போவார்‌. ஒரு நாள்‌ எம்பெருமானார்‌ பெரிய பெருமாள்‌ திருக்கண்ணழகைப் பாராய்‌ என்ன இவரும்‌ உடையவர்‌ திருக்கண்ணழகையும்‌ பெரிய பெருமாள்‌ கண்ணழகையும்‌ பார்த்து என்னமுதினைக்‌ கண்ட கண்கள்‌, மற்றொன்றினைக்‌ காணாவே என்ன உடையவரும்‌ இதொன்றிருந்தபடி என்‌, என உகந்து பூரண கடாட்சம்‌ செய்தருளினார்‌.-வடுகநம்பி எம்பெருமானார்‌ அமுது செய்தருளி பிரஸாதம்‌ ஸாதித்தால்‌, இரண்டு கைகளாலும்‌ ஏற்றுக்கொண்டு ஸ்வீகாரம்‌ பண்ணித்‌ தம் திருமுடிமிலே கைகளைத்‌ தடவிக்கொள்‌வார்‌. இதைக் கண்டு உடையவர்‌ மிகவும்‌ கோபித்து வடுகா கையைக்‌ கழுவிக்கொள்‌ என்ன கழுவிக் கொண்டு மற்ற நாள்‌ நம்பெருமாள்‌ பிரஸாதத்தை உடையவர்‌ தாமும்‌ ஸ்வீகரித்து இவருக்கும்‌ பிரஸாதிக்க வாங்கி ஸ்வீகரித்து கைகழுவிக் கொண்டார்‌உடையவர்‌ இதைப் பார்த்து என்‌ செய்தாய்‌ என்ன வடுக நம்பி நேற்று அருளிச்செய்தபடி செய்தேன்‌ என்றார்‌. இதைக்கேட்ட உடையவர்‌ வடுகா உமக்குத்‌ தோற்றோம்‌ என்றார்‌. மற்றொரு நாள்‌ வடுகநம்பி உடையவருக்குப்‌ பால்‌ காய்ச்சும்‌ பொழுது, பெருமாள்‌ பெரிய திருநாளில்‌ உடுத்து முடித்துப்‌ பூண்டு புறப்பட்டுவர உடையவரும்‌ நம்பியைத்‌ தம்மோடு பெருமாளை சேவிக்க வருமாறு அழைத்தார்‌. வடுகநம்பியும்‌ உம்முடைய பெருமாளைச்‌ சேவிக்க வந்தால்‌ என்‌ பெருமாளது பாலமுது பொங்கப்‌போகும்‌, வரக்கூடாது என்று கூறினார்‌. வடுக நம்பியகத்தே, பூர்வ சம்பந்திகளாயிருப்பவர்கள்‌ வந்து தங்கிப்போக, அகத்தையெல்‌லாம்‌ சுத்தி பண்ணி, உபயோகித்த பாத்திர பண்டங்களையும்‌ தூர எறிந்துவிட்டுப்‌ பிராயச்சித்தமாக ஸ்ரீ வைஷ்ணவனான முதலியாண்‌டான்‌ புழக்கடையில்‌ கழித்துக்‌ இடந்த பாத்திரங்களைக்‌ கொண்டு போய்‌ ஒரு பக்தனுடைய எச்சில்‌ நமக்குப்‌ பிரசாதம்‌ என்று உபயோகித்தார்‌. இவர்‌ உடையவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தமல்லால்‌ மற்றொருவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தம்‌ கொள்ளார்‌. உடையவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தத்தை
சாளக்கிராமத்திலே தாம்‌ சேர்த்த தனமாகச்‌ சேமித்து உடையவர்‌ திருவடிகளையே தஞ்சமாகக்‌ கொண்டு தமது சரம தசையிலும்‌ தமக்கு அந்தரங்கரான பந்துக்களுக்கும்‌, தஞ்சமாகக்‌ காட்டிக் கொடுத்து சீர்த்ததனமிது வருந்தியும்‌ பேணிக் கொண்டு போங்கள்‌ என்றுஅடைக்கலங்காட்டிக்‌ கொடுத்தருளினார்‌.

உன்னையொழிய ஒரு தெய்வம்‌ மற்றறியா
மன்னுபுகழ்சேர்‌ வடுகநம்பி தன்நிலையை
என்‌ தனக்கு நீ தந்து எதிராஜா எந்நாளும்‌ உன்தனக்கே ஆட்கொள்‌ உகந்து
: (ஆர்‌.பி.ர 11)

வடுகநம்பி தாம்‌ எழுதிய ஸ்ரீ யதிராஜ வைபவம்‌ என்ற நூலின்‌ இறுதியில்‌; தனது அந்தரங்க சிஷ்யர்களில்‌ ஒவ்வொருவரையும்‌ ஒவ்வொரு கைங்கர்யத்தில்‌ நியமித்த எதிராஜர்‌ மிகவும்‌ தகுதியற்ற என்னையும்‌ தமக்குப் பால்‌ காய்ச்சும்‌ கைங்கர்யத்தில்‌ நியமித்தருளினார்‌. அத்துடன்‌ தம்‌ அடியார்க்கு அடியார்க்கு, அடியார்க்கு அடியனாகவும்‌, தமக்கு நல்லது செய்பவனாகவும்‌ கொண்டு என்‌னையும்‌ ரட்சிக்கிறவரான அவர்‌ பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறார்‌. இறுதியில்‌ பல ஸ்ருதியில்‌ எதிராஜரின்‌ வைபவத்தை விளக்குவதாய்‌, கலியின்‌ குற்றங்களைப்‌ போக்குவதான இந்நூலை எவர்கள்‌ படிக்கிறார்களோ அவர்கள்‌ உபய விபூதி நாயகராவார்கள்‌ என்பது உறுதி என்று நூலின்‌ பயனையும்‌ கூறி முடிக்கிறார்‌.

முதலியாண்டான்‌ திரு அவதார ஸ்தலம்‌, தொண்டை மண்டலத்தில்‌ ஸ்ரீபுருஷமங்‌கலம்‌. திரு நக்ஷத்திரம்‌ ப்ரபவ வருஷ சித்தரை மாதம்‌ 85-ம்தேதி கிருஷ்ண பக்ஷ தஸமி வியாழக் கிழமை, புனர் பூசம்‌, தகப்பனார்‌. ஆனந்த தீஷிதர்‌, தாயார்‌, நாச்சியாரம்மன்‌; குலம்‌- வடமான்‌ வாதூல கோத்ரம்‌. திருநாமங்கள்‌:-தாஸரதி, ராமானுஜன்‌ பொன்‌னடி, ஸ்ரீவைஷ்ணவதாசர்‌, திருமறுமார்பன்‌ முதலியன. குமாரர்‌ -கந்தாடை யாண்டான்‌. ஆசாரியார்‌ – எம்பெருமானார்‌. திருவாராதனம்‌ – அழகிய சிங்கர்‌.-இருப்பிடம்‌. கோயில்‌ பிரபந்தங்கள்‌-அருளிச் செய்தவர்‌ திருத்தகப்பனார்‌. இவர்‌ எம்பெருமானாருக்குத்‌ திருமருமகனாராய்‌, திருவடிகளுமாய்த்‌ த்ரிதண்டமுமாயிருப்பார்‌.-இவர்‌ அருளிய பிரபந்தம்‌ ரஹஸ்யத்ரயம்‌. இவர்‌ கந்தாடை திருவம்‌ ஸத்துக்கெல்லாம்‌ கூடஸ்தர்‌. இவர்‌ 150 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌.-இராமானுஜர்‌ (இளையாழ்வார்‌ சுவாமிகள்‌) சந்யாச தர்மத்தை மேற்கொண்ட பின்னர்‌ வாதூல குலத்து வந்த முதலியாண்டானும்‌, கூரத்தாழ்வானும்‌ அவரை ஆஸ்ரயித்து அவரது சீடர்களானார்கள்‌, முதலியாண்டானைத்‌ தன்னுடைய தண்டமாகவும்‌ கூரத்தாழ்வானைத்‌ தன்னுடைய பலித்ரமாகவும்‌ கருதி ஏற்றுக் கொண்டார்‌ இராமானுஜர்‌. அவர்‌ பதினெட்டு முறை திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாளிகைக்கு அலைந்த பின்னர்‌ அவர்‌ மனமிரங்கித்‌ திருமந்தரத்தை உபதேசிக்கத்‌ தீர்மானித்து நீர்‌ மட்டும்‌ தனியாக வாரும்‌ என்று சொல்லி யனுப்ப உடையவர்‌ முதலியாண்டானையும்‌, ஆழ்‌வானையும்‌ உடன்‌ அழைத்துச் சென்று, ஆண்டானை இவர்‌ என்‌ திரிதண்டம்‌ என்றும்‌ ஆழ்வானை இவர்‌ என்‌ பவித்ரம்‌ என்றும்‌ கூறி அவர்களுக்கும்‌ அப்பேறு கிடைக்குமாறு செய்தமை நமக்குத்‌ தெரிந்ததே. பின்னர்‌ சரமஸ்லோக அர்த்தத்தையும்‌ உபதேசிக்க எண்ணி நீர்‌ ஒருவர்‌ மாத்திரம்‌ வாரும்‌ என்று கூறிட ஆழ்வானுக்கு நான்‌ இதை வெளியிடாதிருக்க முடியாதே என்று கூறவே, நம்பியும்‌ அவரது அத்யாவஸியத்தை (தகுதியை)ப்பரீஷித்தறிந்து உபதேசியும்‌ என்றார்‌. ஆகவே ஆழ்வானின்‌ தகுதியைச்‌ சோதித்து அவரது மாஸோபவாஸம்‌ கடந்த பின்‌ அவ்வர்த்தத்தை உபதேசித்தார்‌. பிறகு முதலியாண்டானும்‌ வந்து தொழுது பிரார்த்திக்க நீர்‌ நம்பி பக்கல்‌ அனுமதி பெற்று வாரும்‌ என்றிட ஆண்டானும்‌ திருக்கோட்டியூர்‌ சென்று ஆறுமாத காலம்‌ அவருக்கு அடிமை செய்து காத்திருந்தும்‌, பெறாமையால்‌ வருந்தி, ஒருநாள்‌ நம்பியை உபதேசம்‌ செய்யுமாறு கனக்கப்‌ பிராத்திக்கைமில்‌, முக்குறும்பும்‌ போனால்‌ எம்பெருமானார்‌ தாமே பிரஸாதிப்பார்‌-போய்க் கேளும்‌ என்று விடை கொடுத்து அனுப்பிவிட ஆண்டானும்‌ மிக ஆவலோட எம்பெருமானாரிடம்‌ யாசித்த பின்னர்‌ மிகவும்‌ மகிழ்வோடு ஆண்டானுக்கு அதை உபதேசித்தருளினார்‌.-எம்பெருமானார்‌ வடநாட்டு யாத்திரை சென்ற பொழுது அவரது யாத்ரா சகாவாக உடன்‌ சென்றவர்‌ முதலியாண்டான்‌. அவர்கள்‌ யாத்திரையின் போது வஹ்நி புஷ்கரிணியாகிற கிராமத்திற்குச்‌ சென்று தங்கிவிட்டு, அருகிலுள்ள மிதிலாபுரி சாளக்கிராமத்துக்குச்‌ சென்ற பொழுது அவ்வூர்‌ ஜனங்கள்‌ அனைவரும்‌ பிரச்சந்த விரோதிகளாகையாலே (வேறு மதத்தவர்கள்‌ உடையவரை ஆதரிக்கவில்லை. உடையவர்‌ முதலியாண்டானிடம்‌, நீர்‌ போய்‌ அவ்வூரார்‌ நீர் முகக்கும்‌ துறையிலே உம்முடைய ஸ்ரீபாதத்தை நீட்டிக்‌ கொண்‌டிரும்‌ என்று சொல்ல, அவரும்‌ அப்படியே செய்ய, அவரது ஸ்ரீபாத தீர்த்த விசேஷத்தால்‌ மக்கள்‌ மனம்‌ தெளிந்து உடையவரிடம்‌ வந்து ஆஸ்ரயித்தனர்‌. இவரது பெருமையை விளக்கும்‌ மற்றொரு சம்பவம்‌ வடுகநம்பியின்‌ செயலாகும்‌. அதை நாம்‌ வடுக நம்பி வைபவத்திலேயே கண்டோம்‌.
எதிராஜருடைய பாதுகைகள்‌ எவருடைய பெயராலே (முதலியாண்டான்‌ என்று) வழங்கப்படுகின்றனவோ, தாஸரதி என்னும்‌ திருநாமமுடைய அந்த முதலியாண்டானின்‌ திருவடிகளை யான்‌ தலையிலே தரிக்கிறேன்‌ என்கிறார்‌ குரு பரம்பராப்‌ பிராமணத்திரட்டு என்ற நூலின்‌ ஆசிரியர்‌.ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரையில்‌ கூரத்தாழ்வானை யடுத்து வருபவர்‌ முதலியாண்டானாகும்‌.

அத்தகிரி யருளாள ரடிபணிந்தான்‌ வாழியே.
அருட்‌ பச்சை வாரணத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே.
சித்திரையிற்‌ புனர்பூசம்‌ சிறக்க வந்தான்‌ வாழியே. சீபாடிய மீடுமுதல்‌ சீர்‌ பெறுவோன்‌ வாழியே.
உத்தமமாம்‌ வரதூலம்‌ உயர வந்தான்‌ வாழியே.
ஊர்‌ திருந்தச்‌ சீர்பாத மூன்றினான்‌ வாழியே.
முத்திரையும்‌ செங்கோலும்‌ முடிபெறுவோன்‌ வாழியே.
முதலியாண்டான்‌ பொற்பதங்கள்‌ ஊழிதோறும்‌ வாழியே.

எம்பெருமானாரது சகோதரியின்‌ புதல்வரான ஸ்ரீவத்ஸ கோத்‌தரத்தில்‌ வந்த வரத விஷ்ணு என்னும்‌ பெயர்‌ கொண்ட நடதாராழ்‌வான்‌, எம்பெருமானாரது எழுபத்து நான்கு ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸ னாதிபதிகளில்‌ ஒருவர்‌. அணுவான ஆத்ம ஸ்வரூபம்‌ முக்தி தசையில்‌ விபுவாகி விடுகிறது என்ற இவரது வாதத்தை அதிவாதம்‌ என்று வேதாந்த தேசிகர்‌ கூறியுள்ளார்‌. எம்பெருமானார்‌ சிஷ்யர்களி டையிலேயே சில கருத்து வேற்றுமைகள்‌ உண்டென்பதும்‌ அதை எம்பெருமானாரே தடை செய்யாமல்‌ விட்டிருந்தார்‌ எனவும்‌தேசிகர்‌ அருளியுள்ளார்‌.

திருவெள்ளறையில்‌ ஸ்ரீ விஷ்ணு சித்தர்‌ என்ற பெயருடன்‌ சித்தரை ரோஹினியில்‌ அவதரித்தவர்‌ இவர்‌. கூரத்தாழ்வான்‌ கண்ணை இழந்த பின்பு அவருக்குப் பதிலாக, ஸ்ரீபாஷ்யத்தின்‌ எஞ்சிய பகுதியை எம்பெருமானார்‌ எழுதி முடிக்க உறு துணையா யிருந்தவர்‌. இவர்‌ ஆழ்வாரைப் போலவும் கூரத்தாழ்வானைப் போலவும் அறிவாளியாயிருந்ததால்‌ உடையவர்‌ ‘எங்கள்‌ ஆழ்வானோ’ என்று அபிமானித்தார்‌ என்பது கர்ண பரம்பரைச் செய்தி.

“இன்னவாறு திருப்பதிகள்‌ எங்கும்‌ வாழ்வித்து எதிராஜன்‌
தன்னதாக்கித்‌ தரிசனமும்‌ தரணியெங்கும்‌ விளங்குவித்து
முன்னமுரைத்த பாடியத்தின்‌ முற்றமூன்றத்‌ தொருகூறு
தன்னைச்‌, சென்றாண்டாயிரந்தாங்‌ கெழுபத் தேழில் -சாற்றினான்
-என்று ராமானுஜர்‌ மேல்‌ நாட்டிலிருந்து திரும்ப வந்து ஏழெட்டு வருடங்கள்‌ கழிந்த பின்பே ஸ்ரீ பாஷ்யத்தில்‌ மூன்றிலொரு பகுதியைப் பூர்த்தி செய்தார்‌ என்று குறித்திருப்பது கர்ண பரம்பரைச் செய்தியை வலியுறுத்துகிறது-74-ஸிம்ஹஸனாதிபதிகளில்‌ இவரும்‌ ஒருவர்‌. இவர்‌ மணிப் பிரவாள நடையில்‌ எழுதிய ஸர்வார்த்த சதுஷ்டயம்‌ வார்த்தாமாலையில்‌ உள்ளது. நடதூராழ்வானது பேரரான வாத்ஸ்ய வரதாசார்யார்‌ என்னும்‌ நடதூரம்மாள்‌ இவருடைய சிஷ்யர்களில்‌ முதன்மை யானவர்‌.நடதூராழ்வான்‌, நடதூரம்மாளுக்குத்‌ தக்கபடி காலட்சேபம்‌
சொல்லுவது தம்மால்‌ இயலாது என்பதை உணர்ந்து, திருவெள்ளறைக்கு எங்களாழ்வானிடம்‌ பாடம்‌ கேட்க அனுப்பினார்‌. ஆனால்‌ எங்களாழ்வான்‌, ‘நான்‌ என்னும்‌ அகங்காரம்‌ செத்த பின்‌ வா, என்றும்‌ எனக்கு சரம கைங்கர்யம்‌ (அந்திம காலச்சடங்கு) செய்ய உன்‌ தாய்‌ தந்தையர்‌ அனுமதி தர வேண்டும்‌ என்றும்‌ பலமுறை திருப்பி அனுப்பிய பின்‌ தாய்‌ தந்தையர்‌ அனுமதி பெற்று எங்களாழ்‌வானிடம்‌ நீண்ட நாட்கள்‌ திருவெள்ளறையிலேயே தங்கி இருந்து ஸ்ரீ பாஷ்யார்த்தங்கள்‌ அனைத்தையும்‌ கற்றார்‌. இவ்வாறு அம்மாளுக்கு ஆச்சார்யரானபடியாலே அம்மாளாசார்யார்‌ என்றழைக்கப்‌பட்டார்‌. எங்களாழ்வான்‌. இன்றும்‌ அப்பட்டத்தால்‌ அந்தவம்சத்தினர்‌ அழைக்கப்படுகின்றனர்‌.
எங்களாழ்வான்‌ எம்பெருமானாரை விட மிகவும்‌ இளையவராக இருக்க வேண்டும்‌. இவர்‌ நூறு வயதுவரை வாழ்ந்திருந்தார்‌.
கி.பி. 12-ம்‌ நூற்றாண்டின்‌ பெரும்பகுதி வாழ்ந்தவராதலால்‌ நம்‌பிள்ளை காலம்‌ வரை இவர்‌ வாழ்ந்திருந்ததாகக்‌ கூறப்படுகிறது.-சகல சாஸ்திரங்களும்‌ வல்லவர்‌ எங்களாழ்வான்‌ என்று நம்பிள்ளை அருளியதாகக் கூறுவர்‌. எங்களாழ்வானது கடைசிக் காலத்தில்‌ அவரது பூட்டனான வரதாசாரியார்‌ என்பவரை ஸ்வீகார புத்திரராக்கி நடாதூரம்மாள்‌ சகல அர்த்தங்களையும்‌ கற்பித்து வந்தார்‌.

எம்பெருமானாரது சிஷ்யர்களில்‌ ஒராண் வழிக் குரு பரம்பரையில்‌ இடம்‌ பெறுபவர்‌ எம்பார்‌ ஒருவரே. எம்பெருமானாருக்குப்‌ பின்‌ திருவரங்கத்தில்‌ தர்சன நிர்வாகராயிருந்து தமது சிஷ்யரான பட்டரிடம்‌ அதை ஒப்பித்தவர்‌ எம்பாரே யாவார்‌. எம்பெருமானார்‌
அவதரித்து எட்டு வருடங்களுக்குப் பின்‌ குரோதன வருஷத்தில்‌ கி.பி. 1026-ல்‌ ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த வட்ட மணிக்குடியில்‌ உடையவரது சிறிய தாயாரான பெரிய பிராட்டி ஸ்ரீதேவிக்கும்‌ அவரது கணவர்‌ கமலநயன பட்டருக்கும்‌ குமாரராக கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமத்துடன்‌ அவதரித்தவர்‌ எம்பார்‌. இவர்‌ அருளிய பிரபந்தம்‌ விஜ்ஞானஸ்துதி என்பது-நல்லொழுக்கமுடையவராய்‌, எம்பெருமானாரது சகமாணவராய்‌ இருந்த கோவிந்த பட்டரும்‌ யாதவப்‌ பிரகாசனுடைய கெட்ட எண்ணத்தை நடுக்காட்டில்‌ ராமானுஜருக்கு அறிவித்து அவரை நிறுத்தித்‌ தாம் மட்டும்‌ யாதவரோடு யாத்திரை செல்லும்‌ கோஷ்டியோடு தொடர்ந்து சென்றார்‌ என்ற விபரம்‌ முன்னரே கூறப்பட்டது.
யாதவாது மந்திர சக்திக்குக்‌ கட்டுப்பட்ட கோவிந்தரும்‌ கங்கையில்‌ நீராடும்பொழுது தமது உள்ளங்கையில்‌ சிவலிங்கத்தைப்‌ பெற்றவராய்‌ தமது கிராமமான மதுர மங்கலத்துக்குச்‌ சென்று அந்த லிங்கத்தைப்‌ பிரதிஷ்டை செய்து காளஹஸ்தி சென்று அங்குள்ள
சிவாலயக்‌ கைங்கர்யங்களில்‌ ஈடுபட்டவராய்‌ வசித்து வந்தார்‌ என்பதையும்‌ முன்னரே கண்டோம்‌.-இராமானுசருடைய பிரார்த்தனைக்கு இரங்கி அவருடைய மாதுலரான பெரிய திருமலை நம்பி காளஹஸ்திக்குச்‌ சென்று இவரை மறுபடியும்‌ வைஷ்ணவராகத்‌ திருத்தினார்‌. இவ்வாறு திருந்திய ஸ்ரீ கோவிந்தப் பெருமாள்‌ திருமலைநம்பி திருமாளிகையில்‌ சகல கைங்கர்யங்களும்‌ செய்து வந்தார்‌.-ஒருநாள்‌ நம்பிக்குப்‌ படுக்கை விரித்து அதில்‌ முதலில்‌ தாம்‌படுத்துறங்குவதைக் கண்ட எம்பெருமானார்‌ அவரது அடாத
செயலை நம்பிக்குத்‌ தெரிவிக்க அவர்‌ கூப்பிட்டு விசாரித்த பொழுது, கோவிந்தர்‌ ஆசார்யரது அபசாரத்திற்காகத்‌ தனக்கு நரகமே கிடைததாலும்‌ தேவரீர்‌ திருமேனியில்‌ ஒன்றும்‌ ஊறுதல்‌, உறுத்தல்‌ செய்யக் கூடாது என்று எண்ணினேன்‌ என்றார்‌. அவரது ஆச்சார்ய பக்தியைக் கண்டு எல்லோரும்‌ வியந்தனர்‌. மற்றொரு நாள்‌ உடையவர்‌ நம்பியின்‌ நந்தவனத்தில்‌ உலவி வந்த சமயம்‌ ஓரிடத்திலே கோவிந்தப் பெருமாள்‌ ஒரு பாம்பின்‌ வாயிலே கையிட்டு, அதன்‌ நாக்கில்‌ இருக்கும்‌ முள்ளை எடுத்து விட்டு நீராடி ஏனைய கைங்கர்‌யத்தைச்‌ செய்தார்‌. இராமானுசரும்‌ அவரது பூத தயை கண்டு
வியந்து மகிழ்ந்தார்‌. எம்பெருமானார்‌ முதல்முறை திருமலைக்குச்‌ சென்ற போது கோவிந்தரைத்‌ தானமாகப்‌ பெற்றுத்‌ தம்‌ சிஷ்யராக அழைத்துச்‌ சென்றார்‌. அவ்வாறு அவர்கள்‌ திரும்பி வரும் வழியில்‌ கடிகாசல மேறி மிக்கார்‌ வேத விமலர்‌ விரும்பும்‌ ௮க்காரக்கனியையும்‌ சேவித்துக் களித்து மீண்டும்‌ திருக்கச்சி நம்பி, ஸந்நிதியில்‌
எழுந்தருளியிருந்தார்‌. கோவிந்தரை அழைத்துக் கொண்டு திருவரங்கம்‌ செல்லும்‌ போது வழியில்‌ கோவிந்தரது முகம்‌ வாடி வெளுத்திருப்பதை கண்டு திருமலை நம்பியைப்‌ பிரிந்து வந்ததின்‌ விளைவு ஈதென்று அனுமானித்து, திரும்பவும்‌ அவரைப் போய்ச்‌ சேவித்து வாரும்‌ என்று கோவிந்தரைத்‌ துணையோடு திருமலை நம்பியிடமே அனுப்பி வைத்தார்‌. ஆனால்‌ திருமலை நம்பி அவரை வர விடாமல்‌ விற்ற பசுவுக்குப்‌ புல்லிடுவாருண்டோ, பித்தனைப் போகச்‌ சொல்‌லுங்கள்‌ என்று சொல்லித்‌ தாம்‌ முகம்‌ கொடாமல்‌ வெறுத்து அனுப்பி விட்டார்‌. ஆகவே நம்பியைக் காணும்‌ ஆசையைத்‌ துறந்து சிறிதும்‌ தாமதிக்காமல்‌ எம்பெருமானாரிடம்‌ திரும்பி, அவர்‌ காலடியே தஞ்சமென்று விழுந்து கிடக்க, நடந்ததை யெல்லாம்‌ கேட்டறிந்த உடையவர்‌, நம்பி நம்‌ நினைவறிந்து நடந்து கொண்‌டாரே என்று வியந்து உகந்தார்‌. கோவிந்தரை எடுத்தணைத்துக் குளிர நோக்கி உடன்‌ அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம்‌ சென்றடைந்து பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ சேவித்து மகிழ்ந்தார்‌ உடையவர்‌.திருவரங்கத்தில்‌ உடையவரையே தமக்கு மாதா, பிதா, ஆசார்யன்‌ தெய்வம்‌ எல்லாமாகக்‌ கொண்டு அவர்‌ திருமேனி யழகிலும்‌ ஆத்மகுணங்களிலும்‌ ஈடுபட்டு அவருக்கு ஆட்செய்வதையே பணியாகக்‌ கொண்டு வாழ்ந்து வரலானார்‌ கோவிந்தர்‌. கோவிந்தருடைய ஞானம்‌ ஆசார்ய பக்தி வைராக்யம்‌ (பற்‌றின்மை) முதலான பண்புகள்‌ நாளுக்கு நாள்‌ வளர்ந்து வரவே கண்டவர்‌ யாவரும்‌ அவரை நேருக்கு நேராகவே கொண்டாடிப்‌ பேசினார்கள்‌. அவரும்‌ இவை யாவும்‌ ஒக்கும்‌ ஒக்கும்‌ என்று தம்மைத் தாமே மெச்சிக் கொண்டார்‌. இதைக் கண்ட உடையவர்‌ “பலரும்‌ உம்மைப்‌ பாராட்டினால்‌’ நீர்‌ நைச்சிய வார்த்தை (தகுதியின்மை) தாழ்மை தெரிவிப்பது) சொல்லாமல்‌, உம்மை நீரே போற்றிக் கொள்ளுதல்‌ தகுமோ என்று கேட்க அவர்‌ ‘ஐயோ அவர்கள்‌ அடியேனைக்‌ கொண்டாடுவதென்றால்‌ காளஹஸ்தியில்‌ சிவ வேடத்தில்‌ இருந்த பொழுது கொண்டாடினால் தான்‌ என்னைக்‌கொண்டாடியதாகும்‌. ௮டியேனைத்‌ திருத்திப்‌ பணிக் கொள்ள தேவரீர்‌ பண்ணிய கிருஷி பலனை (சுபமான எண்ணம்‌, அதற்கேற்றசெயல்‌ இவற்றின்‌ பயன்‌) கொண்டாடுபவை யன்றோ? இதை அடியேனும்‌ சேர்ந்து நன்றிப் பெருக்கோடு கொண்டாடுவதன்றோ முறை என்றார்‌. இதைக் கேட்ட உடையவர்‌ மகிழ்ந்து உமது உயர்ந்த ஆத்ம குணங்கள்‌ நமக்கும்‌ படியும்படி உமது நெஞ்சினால்‌நம்மை அணைத்துக் கொள்வீர்‌ என்று கூறித்‌ தம்பியை வாரி யெடுத்து அணைத்துக் கொண்டு அதனால்‌ தாம்‌ தூய்மை பெற்றதாகக்‌ கருதினார்‌ இராமானுஜர்‌-ஒருநாள்‌ திருவரங்கத்து வீதி ஒன்றில்‌ ஒரு (தேவதாசி) அடியாள்‌ வீட்டு வாசலில்‌ கோவிந்தர்‌ தம்‌ வேலைகளைப்‌ புறக்கணித்து விட்டு நெடுநேரம்‌ நின்று உள்ளிருந்து வந்த இனிமையான குரலில்‌
அமைந்த இராமானுசரது தாலாட்டைக் கேட்டு மெய்மறந்திருந்தார்‌.-இவரைத்‌ தப்பாகப்‌ புரிந்து கொண்டவர்கள்‌ இந்நிகழ்ச்சியை உடையவருக்குத்‌ தெரியப்படுத்தினர்‌. கோவிந்தரை அழைத்துவிசாரித்து உண்மையைத்‌ தெரிந்துகொண்டவர்கள்‌ அவரது யதிராஜ பக்தியைக்‌ கண்டு வியந்து கொண்டாடினர்‌. இந்த நிலை நாளுக்கு
நாள்‌ முதிர்ந்து வந்தது. இராமானுஜர்‌ குணானுபவமும்‌, அவர்‌ திருமேனி யழகில்‌ ஈடுபாடும்‌ கோவிந்தருக்கு உண்ணும்‌ சோறு, பருகும்‌ நீர்‌, தின்னும்‌ வெற்றிலை எல்லாம்‌ என்ற நிலை நாளுக்குநாள்‌ முதிர்ந்தது.
எம்பெருமானார்‌ வடிவழகில்‌ ஈடுபட்ட எம்பார்‌ எழுதியபாசுரம்‌
பற்பமெனத்‌ திகழ்‌ பைங்கழலுன்றன்‌ பல்லவமே விரலும்‌
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்‌
முப்புரி நூலோடு முன்கையிலேந்திய முக்கோல்‌ தன்னழகும்‌
முன்னவர்‌ தந்திடு மொழிகள்‌ நிறைந்திடு முறுவல்‌நிலாவழகும்‌
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்க ண்ணழகும்‌,
காரி சுதன்‌ கழல்‌ சூடிய முடியும்‌ கனக நற்சிகை முடியும்‌,
எப்பொழுதும்‌ எதிராசன்‌ வடிவழகென்னிதயத் துளதால்‌
இல்லையெனக்கெதிரில்லையெனக்கெதர்‌ இல்லையெனக்‌கெதிரே.
–என்பதாகும்‌.
கோவிந்தர்‌ இராமானுசன்‌ மிக்க சீலமல்லால்‌ உள்ளாது என்‌ நெஞ்சு என்றபடியே வாழ்ந்து வருகையில்‌ அவரது தாயார்‌ கோவிந்தா, நம்‌ குடும்பம்‌ விளங்க மாட்டுப் பெண்‌ வாழ ஒரு குழந்தை வேண்டாமோ என்று கேட்க, அவரும்‌ தான்‌ தனியாய்‌ இருக்கும் போது அவகாசம்‌ பார்த்து அவளை அனுப்பி வையும்‌ என்றார்‌. தாயார்‌ பல நாள்‌ காத்திருந்தும்‌ அப்படியொரு அவகாசம்‌ காணாமையாலே உடையவரிடம்‌ முறையிட்டாள்‌. உடையவர்‌ தம்பியை அழைத்து ‘கோவிந்தரே நம்‌ ஆணை. நல்ல வேளையில்‌ மனையாளுடன்‌ கிருஹஸ்த தர்மம்‌ நடத்துவீராக என்றார்‌. கோவிந்‌தரும்‌ தம்‌ மனையாளை அழைத்து ஓரிரவு பூராவும்‌ அவளுக்கு அந்தர்யாமியான பகவானைக்‌ காட்டித்‌ தந்து பகவத்‌ குணானுபவத்‌தைப்‌ பண்ணி வைக்க வேறு எதற்கும்‌ வாய்ப்பில்லாமல்‌ போயிற்று. இவ்விருப்பை மருமகள்‌ சொல்லி யறிந்த தாயார்‌ மகனிடம்‌ தம்‌ விருப்பம்‌ நிறைவேறாமைக்கு வருத்தப்பட அவரும்‌
அந்தர்யாமி ஒளிவிட்டு விளங்க அழிச்சாட்டம்‌ கூடவில்லையே என்று கூறி விட்டதால்‌ மீண்டும்‌ உடையவரிடமே முறையிட்டாள்‌. அவரும்‌ தம்பியை அழைத்து விசாரிக்க இவரும்‌ அந்தர்யாமி
பிரகாசிக்கும்போது இதற்கு இருட்டேது? தனிமை யேது? அடியேன்‌ செய்யக்கடவது என்‌ என்றார்‌.ஆச்சாரியரும்‌ இவரது பற்றற்ற நிலை கண்டு மகிழ்ந்து உமக்கு
விஷயாந்திர விரக்தி இந்த அளவுக்கு உள்ளதாகில்‌ உத்தமாஸ்ரமம்‌ தானே (துறவுநிலை) கைக்கொள்ளும்‌ என்று நியமித்து, அவருக்குத்‌ திரிதண்டம்‌ காஷாயங்களை யணிவித்து, தம்மைப் போன்றே முக்‌கோற் பகவராக்கி யருளினார்‌. அப்புதிய துறவிவிக்கு எம்பெருமானார்‌ என்று தமது பெயரையே தாஸ்ய நாமமாகச்‌ சூட்டினார்‌.
பெயரைப்‌ பெற்றவரோ இத்திருநாமம்‌ அடியேனால்‌ சுமக்க முடியாது. சுவாமிக்கு நிழலும்‌ அடி தாறுமாய்‌ உள்ளவனுக்கு பொருந்தும்படி பெயரருள வேண்டும்‌ என்று வேண்‌ட சுவாமியும்‌ அப்பெயரைச்‌ சுருக்கி ‘எம்பார்‌’ என்று பெயரைச் சூட்டினார்‌. பின்னர்‌ எம்பார்‌ கூரத்தாழ்வான்‌ குமாரரான பராசர பட்டருக்கு ஆசாரியராகி பட்டரால்‌ அருளுப்பட்ட பின் வரும்‌ தனியனைப்‌ பெற்றார்‌.
“ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வாக பாயிநீ
த்தாயத்ததஸ்வ ரூபாஸகஜீயாத் மத்விச்ர மஸ்தவி’

எம்பெருமானார்‌ என்ற பெயரைச்‌ சுருக்கிப்‌ பெற்ற திருநாமத்தை எம்பார்‌ எமக்கு இளைப்பாறுமிடம்‌’ என்று பொருள்‌ கொண்டு“மத்‌ விச்ரமஸ்‌ தவீ” என்று தனியனிட்டது பட்டரின்‌ மாமேதைக்கு எடுத்துக் காட்டாகும்‌. அந்தர்யாமி பிரகாசித்துக்‌ கொண்டிருக்கையில்‌ அழிச்சாட்டம்‌ கூடுமா என்று எம்பார்‌ கூறியது முழுதும்‌ உண்மை யென்று உடையவர்‌ மற்றவர்களுக்குக்‌ காட்ட விரும்பிச்‌ செய்த செயல்‌ குருபரம்பரைச்‌ செய்திகளில்‌ கூறப்பட்டுள்ளது. கோவிந்தர்‌ முன்னிரவக்கமித்த ஓர்‌ இருட்டறையில்‌ ஒரு ஊசியை எறிந்துவிட்டு அங்குள்ள ஊசியைக்‌ கொண்டு வாருங்கள்‌ என்று சிஷ்யர்களுக்குக்‌ கட்டளை இட அவர்களால்‌ ஒளிமிக்க விளக்குடன்‌ சென்று தேடியும்‌ ஊசி இடைக்க வில்லையாம்‌. பின்னர்‌ கோவிந்தரை அழைத்து அவ்வறையில்‌ தரையில்‌ ஏதாவது பொருள்‌ இருந்தால்‌ எடுத்து வாரும்‌ என்று அனுப்ப அவர்‌ கையில்‌ விளக்கேதுமில்லாமலேயே சென்று அங்கு ஊசியிருக்கக்‌ கண்டு எடுத்து வந்து ‘இதுவே அங்கு தரையில்‌இருந்தது என்று கொடுத்தாராம்‌.-அந்தர்யாமியான எம்பெருமான்‌ ஒளி விட்டுப்‌ பிரகாசித்ததால்‌ அவ் வூசியை அவரால்‌ எளிதில்‌ கண்டு பிடிக்க முடிந்தது.-ஆச்சாரியார்‌ தமக்குத்‌ துணையாக சைவத்தனின்றும்‌ மீட்டுக்‌கொண்டு வரப்பட்ட இவரைக்‌ கொண்டாரென்றும்‌ ஸ்வாமிக்கு அணுக்கராய்‌ பல குற்றேவல்களை இவர்‌ புரிந்திருந்தார்‌ என்றும்‌ ஊஹிக்கிறோம்‌.-எம்பெருமானாருக்கும்‌ இவருக்கும்‌ நெருங்கிய தொடர்பு இருந்தது. எதிராஜர்‌ அமுது செய்ததும்‌ நூறு அடி நடப்பதுஎன்ற பழக்கத்தைக்‌ கொண்டவர்‌. இப்படி உலாவுகையில்‌ ஸ்வாமி ஆழ்வார்களின்‌ பாசுரங்களை மனதில்‌ அனுசந்திப்பது வழக்கம்‌.-ஒருநாள்‌ வழக்கமாகச்‌ செல்லும்‌ தூரம்‌ செல்லாமல்‌ சடக்கெனத்‌ திரும்பக் கண்ட எம்பார்‌ திருமாலிருஞ் சோலையாகாதே திரு ௨ள்‌ளத்தில்‌ ஓடுவது என்றாராம்‌. மடித்தேன்‌ மனை வாழ்க்கையினில்‌ நிற்பதோர்‌ மாயையை என்று சொல்லி மடித்தேன்‌ என்று திரும்ப
இந்தப் பாசுரம்‌ சுவாமி மனதில்‌ ஓடுகின்றது என்று கண்டு கொண்ட செய்தி அதிசயமாக இருக்கிறது.-சரணாகதி கத்யம்‌ எம்பெருமானாருக்கும்‌ எம்பெருமானுக்கும்‌ நடந்த உரையாடலாக அமைந்துள்ளது. எக்காலமும்‌ தேவரீருக்கடிமை செய்திருப்பவனாக வேண்டும்‌ என்று எம்பெருமானார்‌ வேண்டிட; என்றும்‌ எனக்காட் செய்பவராக இருப்பீராக. ‘த்வயத்‌தை அர்த்தத்துடன்‌ அனுசந்தித்துக் கொண்டு இத் திருவரங்கத்தே இனிதிரும்‌ என்று பெருமாள்‌ ஸ்வாமியை நியமித் தருளியதாகத்‌ தெரிகிறது. இப்படிப்‌ பெரிய பெருமாள்‌ அருளிச் செய்தார்‌ என்‌பதை நாங்கள்‌ நம்புவது எப்படி என்று எம்பார் கேட்க, எனக்குப்‌ பெரிய பெருமாள்‌ தனது சவ்லப்யாதி குணங்களை கையில்‌ நெல்லிக்கனியாகக்‌ காட்டித்தந்து அவர்‌ சொல்லிக்கச்‌ சொன்ன வார்த்தையாகையாலே அவர்‌ அருளிச் செய்த வார்த்தை என்று எடுத்துக் கொள்ளத்‌ தடையில்லை என்று எம்பெருமானார்‌ அருளினார்‌. எம்பாருக்கு
உடையவர்‌ திருவாக்கில்‌ நம்பிக்கை இல்லை என்று அர்த்தமில்லை. நம்‌ போல்வார்‌ நெஞ்சில்‌ தோன்றும்‌ ஐயப்பாட்டை ஸ்வாமி திருவாக்கைக்‌ கொண்டே போக்க வேண்டுமென்றேஎம்பார்‌ இக் கேள்வியைக்‌ கேட்டிருக்க வேண்டும்‌. சாமான்யமாக ஒரு சிஷ்யன் தன்‌ ஆச்சாரியரைக்‌ கேட்கக்‌ கூடாத கேள்வியை எம்பார்‌ இங்கு கேட்டிருக்கிறார்‌. எந்த அர்த்தத்‌தையும்‌ ஆச்சார்யர்‌ மூலமாய்‌ வெளியிட்ட பெரியோர்கள்‌ பாங்கறிந்து பின்பற்றத்தக்கது. எம்பார்‌ திருவாக்கான பாசுரம்‌ ஒன்று
எங்கள்‌ கதியே இராமானுசமுனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்‌ மங்கையர்‌ கோனீந்த மறையாயிரமனைத்தும்‌ தங்கு மனம்‌ நீ எனக்குத் தா-என்ற பாசுரத்தைப் போலவே எம்பாரின்‌ பிரிய சிஷ்யர்‌ பட்டர்‌ திருவாய்மொழி தங்கு மனத்தை எம்பெருமானாரிடத்தில்‌ வேண்‌டிப்‌ பாசுரம்‌ சாதித்துள்ளது, ஏய்ந்த பெருங்கீர்த்தி…..
என்பது இவர்கள்‌ கருத்தில்‌ ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களை ஆச்சாரியரான உடையவர்‌ அருளினால் தான்‌ மனதில்‌ தரிக்க முடியும்‌ என்பது தெரிூறது.-முன்பொருகால்‌ ஆழ்வார்‌ திருநகரியில்‌ ஒரு சலவைத்தொழிலாளி தன்‌ குழந்தைகளைத்‌ தனித் தனியே சடகோபா, காரிமாறா ,குருகூர் நம்பி என்று நம்மாழ்வாரின்‌ இனிய பெயர்களை யிட்டு,
அழைத்ததைக் கேட்ட உடையவர்‌ தமக்கு இந்தப் பாக்கியம்‌ கிடைக்‌வில்லையே என்று நினைத்து வருந்தியதாகச்‌ சொல்வதுண்டு.-அது போலவே “இராமானுஜ பதச்‌ சாயா’ என்று ராமானுஜரின்‌ நிழலும்‌ அடி தாறுமான எம்பார்‌ ராமானுஜர்‌ என்றழைத்து அந்த
நாமத்தின்‌ அமுதச்‌ சுவையைப்‌ பருக தனக்கு ஒரு சிறுவன்‌ இல்லையே என்று ஏங்கினாராம்‌. இவ் விஷயத்தைக்‌ கேள்விப்‌பட்ட இராமானுஜர்‌ எம்பாரை அழைத்து, அழகான திருவாழி, திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால்‌ அலங்கரிக்கப்பட்ட தம்முடைய உப பாத்திரத்தை (பஞ்ச பாத்திரம்‌) அவருக்குத்‌ தந்தருளி இத்தை நமது பெயரால்‌ அழைப்பீராக! என்று நியமிக்க எம்பார்‌
அப்பாத்திரத்தை நிதி எனப்பெற்று அதை இராமானுஜன்‌ என்று அழைத்து வரலானார்‌. அது முதலாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் தாம்‌ கையாளும்‌ உபபாத்திரத்தை ராமானுஜன்‌ என்றே அழைத்து வருகின்றனர்‌.-நம்‌ பெருமாள்‌ நம்‌ மணவாளமாமுனிகளுக்கிட்ட தனியனில்‌
ஸ்வாமியை ‘தீபக்யாதி குணார்ணவம்‌’ என்று போற்றுகிறார்‌.-ராமானுஜர்‌ உட்பட பூர்வாசாரியார்கள்‌ அனைவரும்‌ மெய்யறிவு, பகவான்‌ மற்றும்‌ ஆச்சாரியார்களிடம்‌ அளவு கடந்த பிரேமை,விஷய வைராக்யம்‌ முதலான குணங்களைக்‌ கடல் போன்று பெற்‌றுள்ளவர்கள்‌. எம்பெருமானார்‌ எம்பாருக்கு அறிய வேண்டிய அர்த்தங்களை யெல்லாம்‌ தாமே புகட்டினார்‌. கூரத்தாழ்வானுக்கும்‌,
முதலியாண்டானுக்கும்‌ எம்பெருமானார்‌ அவர்கள்‌ தகுதியைச்‌ சோதித் தறிந்த பின்னரே உபதேசம்‌ பண்ணினார்‌. ஆகவே அவர்கள்‌ அதைப் பெற அரும்பாடு பட வேண்டியதாயிற்று . ஆனால்‌ எந்தவிதமான சிரமமும்‌ வைக்காமல்‌, எவ்விதச்‌ சோதனைகளுக்கும்‌ உள்‌ளாக்காமல்‌ தாமே எம்பாருக்கு உபதேசித்தார்‌-மேலும்‌ ஆண்டான்‌ ஆழ்வானுக்கில்லாத ஒரு தனிப் பெருமையும்‌ எம்பாருக்கு உண்டு. ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரையிலன்‌வயம்‌
லஷ்மி நாத ஸமாரம்பாம்‌ நாத யாமுந மத்யமாம்‌
அஸ்மதாசார்ய பர்யந்‌தாம்‌ வந்தே குரு பரம்பராம்‌-என்று ஆழ்வான்‌ அருளிய பிரசித்தமான தனியன்‌, திருமகள்‌
கேள்வனான, பெரிய பெருமாள்‌, பெரிய பிராட்டி, சேனை முதலியார்‌, நம்மாழ்வார்‌, நாத முனிகள்‌, உய்யக் கொண்டார்‌, மணக்கால்‌நம்பி, ஆளவந்தார்‌ பெரிய நம்பி எம்பெருமானார்‌ எம்பார்‌ என்று ஆழ்வான்‌ அனுசந்திக்கும்‌ ஆசார்ய பரம்பரையில்‌ இடம்‌ பெறுகிறார்‌ எம்பார்‌.-அருளிச்செயல்‌ வியாக்யானங்களில்‌ பலப் பல இடங்களில்‌
பட்டர்‌ நிர்வாஹம்‌ என்று மிகவும்‌ சுவையான பொருள்கள்‌ காட்டப்பட்டுள்ளன. இவற்றுக்குத்‌ தோற்றுவாய்‌ பட்டரின்‌ ஆச்சாரியராக எம்பெருமானாரால்‌ நியமிக்கப்பட்ட எம்பாரும்‌, திருத்‌தகப்‌பனாரான கூரத்தாழ்வானுமே யாகும்‌. ‘எம்பார்‌ நிர்வாஹம்‌’ என்று திவ்யப் பிரபந்த வியாக்யானங்களில்‌ காணப்படுபவை
பொருட் சுவை மிக்குள்ளவை. உதாரணமாக ‘நாச்சியார்‌ திருமொழி
(4.11) ஊடல்‌, கூடல்‌, உணர்தல்‌ புணர்தலை, நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர்‌ என்ற இடத்தில்‌ ஆய்ச்சியருக்கு நிறை புகழாவது கிருஷ்‌ணனை இன்னவள்‌ பட்டினி கொண்டாள்‌ என்ற புகழ்‌ காணும் என்கிறார்‌ எம்பார்‌. ஆயர்‌ மகளீர்‌ கண்ணனிடம்‌ ஊடுவது அடிக்கடி நிகழும்‌ நிகழ்ச்சியாகும்‌. வாசுதேவன்‌ வரவு பார்த்துக்‌ காத்திருப்பவர்‌ பல பெண்கள்‌. ஒருத்தி, ஒரே வேளையில்‌ சினம்‌ தீர்ந்து கண்ணனை அழைப்பாள்‌. ஒருத்தி கோபம்‌ நான்கு நாட்கள்‌ வரை நீடிக்கும்‌. இவனும்‌ அது வரை பொறுத்துக்‌ கடப்பது அந்த ஆய்ச்சியின்‌ ரூபம்‌, குணம்‌, இவற்றால்‌ கவரப்பட்டதால் தான்‌. இப்படிக்‌
கண்ணனைக்‌ காக்க வைப்பது அவர்கள்‌ நிறை புகழ்‌ என்பார்‌ எம்பார்‌.

பூவளரும்‌ திருமகளார்‌ பொலிவுற்றேசன்‌ வாழியே.
பொய்கை முதல்‌ பதின்மர்‌ கலைப் பொருளுரைப்போன்‌வாழியே.
மாவளரும்‌ பூதூரன்‌ மலர்ப் பதத்தான்‌ வாழியே.
மகரத்திற்‌ புனர் பூசம்‌ வந்‌துதித்தான்‌ வாழியே.
தேவு மெப்பொருளும்‌ படைக்கத்‌ திருந்தினான்‌ வாழியே.
திருமலை நம்பிக் கடிமை செய்யுமவன்‌ வாழியே.
பாவையர்கள்‌ கலவி யிருள்‌ பகலென்றான்‌ வாழியே.
பட்டர் தொழும்‌ எம்பார்‌ பொற்பதமிரண்டும்‌ வாழியே.

தம்முடைய தரிசனத்தில்‌ எம்பெருமானாருடைய பதவியை வஹித்தவராய்‌ அவரினும்‌ விஞ்சிய ஞான, வைராக்கியத்தை உடையவரான பட்டர்‌ என்னும்‌ ஆச்சாரியாரது வைபவத்தைக்‌ காண விழைகின்றோம்‌. இவர்‌ கூரத்தாழ்வான்‌ திருக் குமாரர்‌ என்றும்‌ ஸ்ரீ
ரங்கநாதனுடைய திருக்குமாரர்‌ என்றும்‌ வழங்கப்படுவார்‌. இவரது பிறப்பு வரலாற்றை நாம்‌ கூரத்தாழ்வான்‌ வைபவத்திலேயே விரிவாகக்‌ கண்டுள்ளோமாதலால்‌ இங்கு குறிக்கப் படவில்லை. கூரத்‌தாழ்வான்‌ திருக்குமாரர்கள்‌ இருவரின்‌ திருநாமங்கள்‌ முறையே ஸ்ரீபராசரபட்டர்‌, ஸ்ரீ ராமப்பிள்ளை என்ற வேத வியாச பட்டர்‌ என்பதாகும்‌. பெயர்‌ பராசரபட்டர்‌ என்ற போதிலும்‌ பட்டர்‌ என்றே சுருக்கமாக இவ்வாச்சாரியார்‌ வழங்கப்படுவார்‌. பட்டர்‌ என்ற சொல்‌ வேத விற்பன்னர்களையும்‌ ஸ்தோத்திரம்‌ சொல்பவர்களையும்‌ குறிக்கும்‌ பொதுச்சொல்‌. விளையும்‌ பயிர்‌ முளையிலே தெரியும்‌, என்றபடி பட்டர்‌ என்ற பெயருக்குப்‌ பொருத்தமாக இவரும்‌ சர்வஞ்ஞராய்‌ விளங்கிப் புகழ்‌ பெற்று எம்பெருமானாருடைய சத்ய சங்கல்பத்தை நிலை நாட்டினார்‌. இவர்‌ 105 திருநட்சத்திரம்‌ வாழ்ந்திருந்தார்‌.-இவர்‌ பிறந்த உடனேயே இவரை எம்பெருமானார்‌ பார்க்குமுன்னரே இவருக்கு ‘த்வயம்‌’ என்னும்‌ மந்திரம்‌ காப்பாக எம்பாரால்‌ அனுசந்திக்கப்பட்டது என்பதும்‌ எம்பெருமானார்‌ நியமனப்‌படி எம்பாரே இவருக்கு ஆச்சாரியராக விளங்கினார்‌ என்பதும்‌ முன்னரே கண்டோம்‌. ஆகவே பட்டருக்கு ஆச்சாரிய கிருத்யங்கள்‌ எம்பாரே செய்தருளினார்‌. இருந்தும்‌ ஆழ்வானும்‌ பட்டருக்கு ஒரு
ஆச்சாரியராயினார்‌ என்பதும்‌ முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது.பட்டரை இளங்குழந்தைப்‌ பருவத்திலேயே ஸ்ரீரங்கநாதன்‌ தனது புத்திரனாக அங்கீ கரித்துத்‌ தன்னுடைய சந்நிதியிலேயே திருமணத் தூணினருகே தொட்டிலில்‌ விடுவித்து, ஸ்ரீரங்கநாச்சியாரும்‌ தானுமாகச்‌ சீராட்டி வளர்க்க, அங்கனம்‌ வளர்கின்ற ௮க்‌குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள்‌ அமுது செய்வதற்கு வைத்துள்ள அடிசிலைக்‌ கைகளால்‌ அள்ளி அளைந்து துழாவ,பெருமாள்‌ அது கண்டு உகந்தருளி, அந்த இன்னடி சிலை பிரியமாக அங்கீகரிப்பாராம்‌. இப்படி ஸ்ரீ ரங்கநாதன்‌ இவரைப்‌ புத்திர ஸ்வீகாரம்‌ செய்தருளியபடியால்‌, பட்டர்‌ ஸ்ரீ ரெங்கநாத புத்திரர்‌ என்றழைக்கப்பட்டார்‌. -‘வானிட்ட கீர்த்தி வளர்‌ கூரத்தாழ்வான்‌ மகிழ வந்த தேனிட்‌டதா நம்‌ பெருமாள்‌ குமாரர்‌ பட்டர்‌’ என்று இவரது சிஷ்யரான பிள்ளைப் பெருமாள்‌ ஐயங்கார்‌ தமது திருவரங்கக்‌ கலம்பகக்‌ காப்புச்‌ செய்யுட்களில்‌ ஒன்றில்‌ கூறியுள்ளார்‌. பட்டர்‌ தாமும்‌ (ஸ்ரீ ரங்கவாஜ ஸ்தவத்தில்‌ 17-ம்‌ ஸ்லோகத்தில்‌ ‘ஸ்ரீரங்கராஜ கமலாபத லாலி தத்வம்‌ என்ற பதத்தினால்‌ இதனைக் குறிப்பிட்டுள்ளார்‌. இப்‌ பேராசிரியர்‌ சகல சாஸ்திரங்களிலும்‌ அபாரமான பாண்டித்யம்‌ பெற்றவர்‌ என்பதை இவர்‌ அருளிய விஷ்ணு ஸகஸ்ரநாம பாஷ்யம்‌ ஒன்று கொண்டே உணரலாம்‌. இவர்‌ கவித் திறமையில்‌ ஒத்தாரும்‌ மிக்காரும்‌, இல்லாதவர்‌ என்பதை இவரது ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ ஸ்ரீகுணரத்ந கோசாதிகளால்‌ உணரலாம்‌.-அருளிச் செயல்களில்‌ அற்புதமான விசேஷார்த்தங்களை அருளிச்‌ செய்வர்‌ என்று பெரியவாச்சான்‌ பிள்ளை முதலானோர்‌ அடிக்கடி கூறுவதுண்டு. உதாரணமாக ஒன்றை மட்டும்‌ காணலாம்‌.
திருநெடுந்தாண்டகத்தில்‌ ‘அறுகாலச்‌ சிறுவண்டே’ தொழுதேனுன்னை‘ என்ற பாசுரத்தில்‌ வண்டுக்கு ஆறு கால்கள்‌ உள்ளமையை எதற்காகச்‌ சொல்லலாயிற்று என்பதை விளக்கப் புகுந்து இரண்டு காலாகவும்‌, நாலு காலாகவும்‌ இன்றி விரைந்து செல்லுகைக்கு உறுப்பாக ஆறு கால்கள்‌ இருக்கப்பெற்ற பாக்யம்‌ என்னே என்று வியந்து கூறுவதாகச்‌ சிலர்‌ பொருள்‌ கூறுவார்கள்‌. இந்தக் கூற்று அவ்வளவு பொருத்தமானதாகத்‌ தெரியவில்லை. வண்டு பறந்து செல்வதற்குச்‌ சாதனம்‌ சிறகே யன்றிக்‌ கால்களில்லை. ஆகவே ஆறுகாலே என்ற அடைமொழிக்கு அவ்வாறு கருத்துரைத்தல்‌ பொருத்தமில்லை என்று பட்டர்‌ அருளிச் செய்வது. தொழுதேனுன்னை என்று தொடர்ந்து கூறுவதால்‌ என்‌ தலையில்‌ வைப்பதற்கு ஆறு கால்கள்‌ உள்ளனவே என்று வியந்து சொல் கறைபடியாகும்‌. தூது சென்று திரும்பி வந்தால்‌ வண்டின்‌ கால்களைத்‌ தலையில்‌ வைத்துக் கொண்டு கூத்தாடிக்‌ குதூகலித்திருப்பதனால்‌ அதற்குப்‌ பொருத்தமாக இவ்வாறு கருத்துரைப்பதாகும்‌.–வழக்கமாக வண்டாகச்‌ சொல்வது ஆச்சாரியர்களையே. ஆச்சாரியனும்‌, அவருடைய தேவியாரும்‌ அவர்களுடைய திருக்குமாரரும்‌ ஆக மூவருக்கும்‌ சேர்த்து ஆறு திருவடிகளாதலால்‌ அக்கருத்துத்‌ தோன்றவே ‘அறுகாலச்‌ சிறுவண்டே’ என்றது என்பது பட்டர்‌ வியாக்யானம்‌. கொங்கார்‌ பூந்துழாய்முடி என்குடக்‌ கூத்தற்கென்‌ தூதாய்‌ நும்கால்கள்‌ என்‌ தலைமேல்‌, எழுமிநோநுமரோடே ‘ என்று திருவாய்மொழிப்‌ பாசுரத்துக்கு மிகவும்‌ பொருத்தமாக இருக்கிறது இவ் விளக்கம்‌.-பட்டருடைய அதி ஞான பக்தி வைராக்யங்களை விளக்கும்‌ வேறொரு நிகழ்ச்சியும்‌ சொல்லப்படுவதுண்டு. அவர்‌ ஐந்து வயதுப் பாலகனாய்‌ தெருவில்‌ விளையாடிக்‌ கொண்டிருக்கையில்‌ ஒருவன்‌ ‘ஸர்வஜ்யபட்டன்‌ வந்தான்‌ என்று எக்காள மூதிக் கொண்டு வர, உடையவர்‌ ஆழ்வான்‌ ஆண்டான்‌ போன்றவர்கள்‌ இருக்க இவன்‌ யார்‌ தன்னைச்‌ சர்வஜ்யபட்டன்‌ என்று சொல்வது என்று மனதில்‌ எண்ணி இருகைகளிலும்‌ மண்ணை அள்ளிக் கொண்டு அவனைப்‌ பார்த்து நீ ஸர்வஜ்யனன்றோ? இது எத்தனை சொல்‌? என்று கேட்க அவன்‌ ஒன்றும்‌ சொல்ல மாட்டாது வெட்டித் தலைகுனிய இது ஒருகைப்புழுதி மண்‌ என்று கூடத்தெரியாத நீ என்ன ஸர்வஜ்யன்‌ என்று அவமானப்படுத்தி அனுப்பினார்‌ என்பது கர்ண பரம்பரைச்‌ செய்தி. திரிபுவன வீர தேவராயன்‌ என்ற அரசன்‌ பட்டர்‌ வைபவத்‌தைக்‌ கண்டும்‌, கேட்டும்‌, அவரிடத்து மதுப்புக் கொண்டு அவரைச்‌ சன்மானிக்க எண்ணியவனாய்‌ பட்டரே, அரண்மனைக்கு வந்து போம்‌ என்றழைக்க பட்டர்‌ அதற்குச்‌ சிறிதும்‌ இணங்காமல்‌ ‘நம்‌ பெருமாள்‌ அஞ்சல்‌ என்ற கை மறித்தாலும்‌ அவர்‌ வாசலொழிய வேறு போக்கிடமுண்டோ எமக்கு என்று சொல்லி மறுத்துவிட்‌டார்‌. தன்னைத்‌ தஞ்சடைந்தவர்களுக்கு ஆவன வெல்லாஞ் செய்து,அவர்களைப்‌ பாதுகாத்தலையே விரதமாகக்‌ கொண்டு அவர்களுக்கு அபயமளிப்பவனான பரம புருஷனுக்கு அடிமைப்பட்ட நாம்‌ சில சிற்றரசரின்‌ வாசலிலே கிடந்து துவளக் கூடவோ மல்‌லோம்‌ என்ற அவரது திண்ணிய தீர்மானத்தையே காட்டுகிறது-இந்தச் செயல்‌.

தென்னரங்கர்‌ மைந்தனெனச்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
திருநெடுந்தாண்டகப்‌ பொருனைச்‌ செப்புமவன்‌ வாழியே.
அன்னவயல்‌ பூதூரானடி பணிந்தோன்‌ வாழியே.
அனவரதம்‌ எம்பாருக்காட்‌ செய்வோன்‌ வாழியே.
மன்னுதிருக்கூரனார்‌ வளமுரைப்போன்‌ வாழியே.
வைகாசியனுடத்தில்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
பன்னுகலை நால்‌ வேதப்பயன்‌ தெரிவோன்‌ வாழியே.
பராசரனாம்‌ சீர்பட்டர்‌ பாருலகில்‌ வாழியே.

நஞ்சீயர் ஆதியில்‌ அத்வைதியாக இருந்தவர்‌. மாதவாச்சாரியார்‌ என்பது இவரது பூர்வீகத்திருநாமம்‌. வேதாந்தி என்பது இவரது சிறப்புத்‌ திருநாமம்‌. ஆறு சமயங்களுக்கு ஆறு ஆசனமிட்டு நிகரற்ற வித்வானாக மேல்நாட்டில்‌ எழுந்தருளியிருந்தார்‌. பல பிற மத வித்வான்‌௧ளைத்‌ திருத்துப்‌ பணி கொண்ட உடையவர்‌ இவரையும்‌ திருத்திப்‌ பணி கொள்ள விரும்பினார்‌. ஆனால்‌ அவரது வாழ் நாளில்‌ அது முடியாமற் போகவே தனது அந்திம காலத்தில்‌ தனது தர்சன வாரிசான பட்டரிடம்‌ மேல் நாட்டிலுள்ள வேதாந்தியைத்‌ திருத்திப்‌ பணி கொள்வீர்‌ என்று நியமித்தார்‌. பட்டரும்‌ அதனை நிறைவேற்றுவதற்குச்‌ சமயம்‌ பார்த்துக்‌ காத்திருந்தார்‌.இந் நிலையில்‌ மேல்‌ நாட்டிலிருந்து வந்த ஒரு அந்தண யாத்ரிகர்‌ பட்டரிடம்‌ மேல் நாட்டிலும்‌ உம்மைப் போலவே சகல கலைஞானங்களும்‌ அறிந்த வேதாந்தி ஒருவர்‌ இருக்கிறார்‌ என்று கூறினார்‌. பின்னர்‌ அவர்‌ திரும்பித்‌ தன்‌ ஊருக்குச்‌ சென்ற பொழுது வேதாந்தியிடம்‌, ‘ஸ்ரீரங்கத்தில்‌ பட்டர்‌ என்றொரு வித்வான்‌ இருக்‌கிறார்‌. அவரது பக்தியும்‌ ஞானமும்‌ சொல்லிலடங்கா. அவரது சிஷ்யர்களின்‌ பெருமை அளவிட முடியாது என்று கூறினார்‌. வேதாந்தி, ‘அவர்‌ நமக்கு ஒத்த வித்வான்‌ தானோ? என்று கேட்க, அவர்‌ உம்மிலும்‌ மேம்பட்டவர்‌ என்று யாத்ரிகர்‌ சொல்லவே, நம்மில்‌ மிக்கார்‌ யாருமில்லையென்றிருந்தோம்‌.-பட்டர்‌ நம்மிலும்‌ மிக்கார்‌ என்று சொல்கிறாரே என்று கவலையோடு இருந்தார்‌. இந்தச் சம்பவத்தை அந்த யாத்ரிகர்‌ திரும்ப ஸ்ரீரங்கம்‌ வந்தபொழுது பட்டரிடம்‌ தெரிவிக்கப்‌ பட்டர்‌ அவரிடம்‌ நமக்குத்‌ திருநெடுந்‌ தாண்டக சாஸ்திரம்‌ தெரியும்‌ என்று சொன்னீரா என்று கேட்க, அந்தணரும்‌ அப்படியே சொல்கிறேன்‌ என்று வேதாந்தியிடம்‌ சென்று பட்டருக்குத்‌ திருநெடுந்தாண்டக சாஸ்திரம்‌ அசாதாரணம்‌ என்று கூற அந்த சாஸ்திரம்‌ இன்னதென்றறியாத வேதாந்தி அது என்னவோ என்று வியந்து கொண்டிருந்தார்‌. இவ்வாறு சிலநாள்‌ சென்றபின்‌ உடையவர்‌ நியமனத்தை நிறைவேற்ற வேண்டி வேதாந்தியைத்‌ திருத்திப்‌ பணிகொள்ள நம்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே நியமனம்‌ பெற்றுப்‌ கோலாகலமாகப்‌ பரிவாரங்களோடு புறப்பட்டு, மேல்நாட்டில்‌ எழுந்தருளிச்‌ சிறுபுத்‌தூர்‌ என்ற இடத்திற்கு அருகில்‌ செல்கையில்‌ அங்கு திருமலையிலிருந்து உடையவர்‌ சிஷ்யர்‌ அனந்தாழ்வான்‌ வந்து பட்டரைச்‌ சேவித்து, அவர்‌ காடும்‌, மலையும்‌ கடந்து வந்த காரணம்‌ கேட்க,பட்டரும்‌ வேதாந்தியைத்‌ திருத்துவதற்காகத்‌ தன்னை உடையவரும்‌ நம்‌ பெருமாளும்‌ நியமித்திருப்பதாகவும்‌ அதை நிறைவேற்றத்‌ தான்‌ வந்திருப்பதையும்‌ கூறினார்‌. அதைக்கேட்ட அனந்தாழ்வான்‌ மிகவும்‌ மகிழ்ந்து பட்டரையும்‌ அவரது பரிவாரங்களையும்‌ திரு நாராயண புரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மங்களாசாசனம்‌ செய்வித்த பின்‌ வேதாந்தி இருக்கும்‌ ஊருக்கும்‌ அழைத்துச்‌ சென்‌றார்‌.சிஷ்ய கோஷ்டிகளுடனும்‌, பரிவார சேனைகளுடனும்‌ இவர்‌ எழுந்தருளுவதைக் கண்ட அங்குள்ள அந்தணர்கள்‌ பட்டரிடம்‌ நீர்‌ இப்படி வந்தால்‌ வேதாந்தியைக்‌ காண இயலாது. அவரது சிஷ்யர்‌கள்‌ உம்மை வாசலிலேயே நிறுத்தி அனுப்பி விடுவார்கள்‌. ஆனால்‌ வேதாந்தி மிகப்பெரிய செல்வராதலால்‌ தினம்‌ பிராமண போஜனம்‌ செய்விக்கிறார்‌. அங்கு புசிக்க வருகிறவர்களுடன்‌ கலந்து தேவரீரும்‌ சென்றால்‌ அவரைக் காணலாம்‌ என்று வழி சொன்னார்கள்‌.-அதன்படியே பட்டரும்‌ போஜன சாலைக்குள்‌ சென்று பந்தியில்‌ சென்று சேராமல்‌ வேதாந்திகள்‌ பக்கத்திலேயே நிற்க, அவரும்‌ அவர்‌ வந்த காரணத்தை வினவ பட்டரும்‌ ‘நான்‌ அன்ன பிட்சைக்கு வரவில்லை. உம்முடனே தர்க்க பிட்சை கேட்டு வந்துள்ளேன்‌: என்றார்‌.-இதைக்கேட்ட வேதாந்தி திடுக்கிட்டு ‘நீர்தாம்‌ பட்டரோ:என்று வினவ இவரும்‌ ‘ஆம்‌’ என்ன, இவருடைய வித்யானுபவம்‌ காண்போமென்று தீர்மானித்து இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ சளைக்காமல்‌ ஒன்பது நாள்‌ தர்க்கித்தனர்‌. பத்தாம்‌ நாள்‌ பட்டர்‌ அத்வைதத்தைக்‌ கண்டித்து, விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்துத்‌ திருநெடுந்தாண்டக பாசுரத்தின்‌ விழுமிய பொருளையும்‌ அற்புதமாக விளக்கியருள, வேதாந்திகள்‌ மிகவும்‌ மூழ்ந்து கூப்பிய கரங்களுடன்‌ நின்று உம்மை மனிதராகவே எண்ணி யிருந்தேன்‌.-உமக்கும்‌ நம்பெருமாளுக்கும்‌ வாசி (வேறுபாடு)யில்லை. ‘உறங்‌கும்‌ பெருமாள்‌ அவர்‌. உலவும்‌ பெருமாள்‌ நீர்‌: என்று பலவாறு துதித்து அடியேனை அங்கீ கரித்தருள வேண்டும்‌ என்று விண்ணப்‌பம்‌ செய்ய, பட்டரும்‌ தம்‌ காரியம்‌ பலித்ததென்று மகிழ்ந்து,வேதாந்திகளுக்கு பஞ்ச ஸமஸ்காரம்‌ பிரசாதித்து, மகாபாகவதோத்தமராக்கி, எம்பெருமானார்‌ தர்சனத்தை நிர்வஹித்துப்‌ போரீர்‌ என்று நியமித்து விரைந்து திருவரங்கம்‌ திரும்பி அன்று மாலையே நம்‌பெருமாள்‌ திருமுன்பு வணங்கி நிற்க, பெருமாளும்‌ ‘பட்டரே நீர்‌ போன காரியம்‌ என்ன ஆயிற்று! என்று வினவ, பட்டரும்‌, வேதாந்திகள்‌ தேவரீருடைய திருவடிகட்கு அடியவராயினார்‌ என்று கூறி நடந்தவற்றையெல்லாம்‌ கூறவே ‘எங்கனே’ என்று கேட்க திருநெடுந்தாண்டகத்தைத்‌ திருவோலக்கத்திலே பட்டர்‌ உபதேஸித்‌தார்‌. அன்று தொட்ஙகி இன்று வரை நம்‌ பெருமாள்‌ ஸன்னிதியில்‌ திரு அத்யயன உத்ஸவத் தொடக்கத்திற்கு முன்னால்‌, திருநெடுந்‌ தாண்டகத்‌ திருநாள்‌ என்று மிகச் சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னர்‌ பட்டர்‌ இக் கைங்கர்யத்தை அரையருக்கு அளித்‌தாராம்‌.-இது இங்கனமிருக்க வேதாந்திகள்‌ தன்‌ தேசத்திலே திருமாலடியார்களைப்‌ பூசித்து வரும்‌ நாளில்‌ சம்சாரத்தில்‌ விரக்தி ஏற்பட்டு,பட்டர்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து (சரணடைந்து) சந்யாச தர்மம்‌ பூண்டு அவரது தாசனாக வாசம்‌ செய்ய விரும்பி, கோயிலுக்கு எழுந்தருளும்‌ வழியில்‌ சிறுபுத்தூாரிலே அனந்தாழ்வானைக்கண்டு,
அவர்‌ ஆட்சேபித்ததையும்‌ புறக்கணித்து கோயிலுக்கு எழுந்தருளியதைக்‌ கண்ட பட்டர்‌ மிகவும்‌ உகந்தருளி, நம்‌ ஜீயர்‌ வந்தார்‌ என்று சொல்லித் தம்‌ திருவடிகளில்‌ விழுந்து கிடக்கும்‌ வேதாந்தகளை எடுத்தணைத்து அவருக்கு சகல அர்த்தங்களையும்‌ ஓதுவித்துப்‌ பிரஸாதித்தருள, ஜீயரும்‌ பட்டரை யன்றித்‌ தேவு மற்றறியேன்‌ என்றிருந்தார்‌. பட்டர்‌ நம்முடைய ஜீயர்‌ என்று சொல்லி அணைத்‌துக் கொண்டதால்‌ அன்று முதல்‌ வேதாந்திகளுக்கு நஞ்சீயர்‌ என்ற பெயர்‌ வழங்கலாயிற்று.

நம்பெருமாள்‌, நம்மாழ்வார்‌, நஞ்சீயர்‌, நம்பிள்ளை
என்பர்‌ அவரவர்‌ தம்‌ ஏற்றத்தால்‌ அன்புடையோர்‌
சாற்று திரு நாமங்கள்‌ தானென்று நன்னெஞ்சே
ஏற்று அதனைச்‌ சொல்லி நீ இன்று
(உ.தே.மா. 66)

நஞ்சீயருடைய ஆச்சாரிய பக்தி மிகவும்‌ போற்றுதற்குரியது.-ஒரு கைசிக ஏகாதசி யன்று பட்டர்‌ திருவீதி அலங்கரிக்கப்‌ புறப்பட்‌டவாறே நஞ்சீயரும்‌ ஸ்ரீபாதம்‌ தாங்கப்புக, அங்குள்ளோர்‌ திரிதண்ட தாரியான (சந்யாசி) உமக்கு இது தகாது என்று ஆட்சேபிக்க எனக்கு உறுதுணையாகி என்னை ரட்சிக்க வேணும்‌ என்ற பொருளுடைய ‘ஸகாமா கோபாய” என்ற மந்திரம்‌ சொல்லி அளிக்கப்பட்ட இந்த முக்கோல்‌ எனக்கு விரோதியாமாகில்‌ எனக்கு அது வேண்டாம்‌ என்று தூர வீசப் போக, எல்லோரும்‌ அவரது பக்தி விசேஷத்தைக் கண்டு வியந்தனர்‌. பட்டர்‌ ஒரு நாள்‌ பகலெல்லாம்‌
வழிநடந்த களைப்பால்‌ ஒருமரத்தடியில்‌ நஞ்சீயர்‌ மடியில்‌ தலையை வைத்துக்‌ கண்வளர்ந்தருள இரவு முழுவதும்‌ அசையாமல்‌ இருந்தார்‌ என்பதும்‌ இவரது ஆச்சார்ய பிரேமத்தின்‌ சிறப்பினை நன்கு விளக்குகிறது.-நஞ்சீயர்‌ வெகுநாள் வரை அருளிச் செயல்களின்‌ வாசனையையும்‌ அறியாதவரா யிருந்தும்‌ பட்டரால்‌ தடுத்தாட் கொள்ளப்பட்ட பின்னர்‌ அவரது அருள்‌ நோக்கால்‌ திவ்யப் பிரபந்தங்களை ஒதித் தரித்து, அவற்றின்‌ விசேஷார்த்தங்களை நிர்வஹிப்பதில்‌ நல்ல விரகராய்‌ இருந்தார்‌ என்பது அதிசயிக்கத் தக்கதாகும்‌. அவட்கு மூத்தோனை வெந்நரகம்‌ சேராவகையே சிலை குனித்‌தான்‌’ என்ற பதத்திற்கு நஞ்சீயர்‌ சாதாரணப் பொருள்‌ கூற ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்‌ இந்தப் பதத்திற்கு பட்டர்‌ வெகு அழகாகப்‌ பொருள்‌ கூறுவர்‌ என்று சொல்லி அவர்‌ கூறும்‌ பொருளைக் கூறவே, அதைக்‌ கேட்ட ஜியர்‌, இவ்வாறு பொருள்‌ கூற வல்ல பட்டரை சேவிக்க வேண்டும்‌ என்ற காதல்‌ வளர்ந்ததாலேயே அவர்‌ ஸ்ரீரங்கத்திற்கு வந்து பட்டரைக் கண்டு அவர்‌ திருவடியில்‌ சரணடைந்தார்‌ என்று கூறுவர்‌.
இவரது திருஅவதார ஸ்தலம்‌ மேல்நாட்டில்‌ திருநாராயணபுரம்‌. திரு நக்ஷத்திரம்‌ விஜய வருஷம்‌ பங்குனி மாதம்‌ உத்தரம்‌. குலம்‌, வடமான்‌. திருநாமங்கள்‌ வேதாந்தி, நிகமாந்த யோகி ,ஸ்ரீமாதவர்‌, நஞ்சீயர்‌. இருப்பிடம்‌ கோயில்‌, ஆசார்யர்‌ பெரிய பட்‌
டர்‌. திருவாராதனம்‌ கிருஷ்ண விக்ரகம்‌ சிஷ்யர்‌ நம்பிள்ளை. இவர்‌ செய்தருளின கிரந்தங்கள்‌. திருவாய்மொழிக்கு வியாக்யானம்‌ 9000படி. திருப்பாவைக்கு வியாக்யானம்‌ ஈராயிரப்படி திருப்பல்‌லாண்டு, கண்ணி நுண் சிறுத்தாம்பு திருவந்தாதிகளுக்கு உரை,
ரஹஸ்ய த்ரய விவரமான நூற்றெட்டு, ஸரணாகதி கத்ய வியாக்யானம்‌, திருவாய்மொழி நூறுரு வியாக்யானம்‌ செய்கையாலே நஞ்சீயர்‌, ஸதாபிஷேகம்‌ பண்ணினார்‌ என்பது பிரசித்தம்‌. இவர் தொண்ணூற்றஞ்சு திருநட்சத்திரம்‌ வாழ்ந்திருந்தார்‌ என்பன இவரைப்‌ பற்றிய முக்ய குறிப்புகள்‌.

தெண்டிரை சூழ்‌ திருவரங்கம்‌ செழிக்க வந்தான்‌ வாழியே.
சீமாதவனென்னும்‌ செல்வனார்‌ வாழியே.
பண்டை மறைத் தமிழ்ப்‌ பொருளைப்‌ பகர வந்தோன்‌ வாழியே.
பங்குனியில்‌ உத்தரதாள்‌ பா ன்‌ வாழியே.
ஒண்டொடியான்‌ கலவி தன்னை ஒழித்திட்டான்‌ வாழியே.
ஒண்பதினாயிரப்‌ பொருளை ஓதுமவன்‌ வாழியே.
எண்டிசையும்‌ சீர் பட்டரிணை யடியோன்‌ வாழியே

நம்பிள்ளைக்குத்‌ திருவவதார ஸ்தலம்‌ சோழ மண்டலத்தில்‌ நம்‌பூர்‌. திருவவதார நக்ஷத்திரம்‌ பிரபவ வருஷம்‌ கார்த்திகை மாதம்‌ கிருத்திகை.-குலம்‌ – வடமான்‌ குடி-நம்பூர்‌. இவரது திருநாமங்கள்‌ வரதராஜன்‌,திருக்கலிகன்றிதாஸர்‌, கலிவைரிதாஸர்‌, நம்பிள்ளை, லோகாசார்‌யார்‌, ஜகதாசார்யார்‌, உலகாரியர்‌ முதலியன. தேவியர்கள்‌ -ஸ்ரீரங்கநாச்சியாரும்‌, ஆண்டாளுமாகும்‌. இருப்பிடம்‌. கோயில்‌ திருவாராதனம்‌ – வயலாலி மணவாளர்‌. ஆசார்யர்‌ – நம்‌ ஜீயர்‌குமாரர்‌ – ராமானுஜாசார்யார்‌.

நஞ்சீயர்‌ சிஷ்யர்களில்‌ முதன்மையானவர்‌ நம்பிள்ளை. அவரது இயற்பெயர்‌ நம்பூர்‌ வரதராஜாசாரியார்‌ என்பது. அவருக்கு நம்பிள்ளை என்ற பெயர்‌ வரக்காரணம்‌ வருமாறு:நஞ்சீயர்‌, பட்டர்‌ நியமனப்படி (உத்தரவின்‌) திருவாய்மொழியின்‌ அர்த்தங்களை உபந்யாசம்‌ செய்வதையே பொழுது போக்காகக்‌ கொண்டு வாழ்ந்து வந்தார்‌. திருவரங்கம்‌ பெரியகோயிலில்‌ அவரது உபந்யாசத்தைக்‌ கேட்க வருபவர்களில்‌ நம்பூர்‌ வரதராஜாசார்யரும்‌ ஒருவர்‌. இவர்‌ நீறு பூத்த நெருப்புப் போல இருந்த படியால்‌ இவருடைய பக்தி ஞான வைராக்யம்‌ போன்ற பெருமைகளை யாரும்‌ அறியாதிருந்தனர்‌. இப்படி யிருக்கையில்‌ பட்டர்‌, நஞ்சீயரிடம்‌ திருவாய்மொழிக்‌குத்‌ திருக்குருகைப்பிரான்‌ பிள்ளானது(எம்பெருமானார்‌ ஞானபுத்‌திரன்‌) ஆறாயிரப்படி வியாக்யானத்தை விட விரிவாக ஒரு வியாக்‌யானமிடும்படி கட்டளையிட்டபடியால்‌, அதைச் செவ்வையாகப்‌ பட்டோலை எடுக்கவல்லார்‌ யாரென்று விசாரிக்க; அவரது அந்தரங்கர்கள்‌ நம்பூர்‌ வரதராஜாச்சாரியார்‌ என்றொருவர்‌ ஸ்வாமியின்‌ காலட்க்ஷேப கோஷ்டிக்குத் தவறாது வருகிறார்‌. அவர்‌ நல்ல விரகர்‌,எழுத்திலும்‌ வல்லவர்‌. அவரைக் கொண்டு இப் பணியை நிறைவேற்றிக் கொள்ளலாம்‌ என்றனர்‌. ஆகவே அவரை அழைத்துஆரார்ந்து பார்க்கையில்‌ அவரது திறமை தெரிய வந்தது. அதனால்‌ மகிழ்ந்த ஜீயர்‌ அவரிடம்‌ கருணை காட்டி தம்முடைய ஒன்பதினாயிரப்படியை வரியடைவே அவருக்கு விளக்கிக் காட்டி அதை எழுதித்‌
தரும்படி ஸ்ரீகோசத்தை அவரிடம்‌ கொடுத்தார்‌. அதைப் பெற்றுக் கொண்டு தம்‌ ஊருக்குப்‌ போகையில்‌ வழியில்‌ காவேரியில்‌ நீந்திச்‌ செல்கையில்‌ அந்த ஸ்ரீகோசம்‌ நெகிழ்ந்து விழுந்து வெள்ளத்தில்‌ போய் விடவே மிகவும்‌ வருந்தியவர்‌, அந்த வியாகயானத்தைச்‌ ஜீயர்‌ சொல்லக்‌ கேட்டிருந்தபடியால்‌ அவரது கிருபையால்‌, அவரது திருவடிகளைச்‌ சிந்தித்துக் கொண்டே தம்‌ நினைவிலிருந்தே பட்டோலை எடுத்து அந்த ஸ்ரீகோசத்தை ஆசாரியரிடம்‌ சமர்ப்பித்தார்‌. நான்‌ கொடுத்த ஏடு எங்கே? என்று நஞ்சியர்‌ கேட்கவே நடந்தவற்றை விவரிக்க வேண்டியதாயிற்று. பின்னர்‌ நஞ்சியர்‌ ஸ்ரீகோசத்தை விரித்துப்‌ பார்க்கையில்‌ தாம்‌ அருளிச்‌ செய்த ஸ்ரீ ஸூக்திகள்‌ விடாமலும்‌, தம்மிடம்‌ அவர்‌ கேட்டிருந்த அர்த்த விசேஷங்கள்‌ ஈடும்‌ பொருத்தமாக அமைந்தும்‌ விரிவுமில்லாமல்‌ இருந்த அழகுக்கு மிகவும்‌ உகந்து ‘வாரீர்‌ நம்முடைய பிள்ளையே” என்று எடுத்தணைத்துக்‌ கொண்டார்‌. அது முதல்‌ நம்பிள்ளை என்றே இவர்‌ அழைக்கப்பட்டார்‌. திருக்கலிகன்றிதாசர்‌ என்பதும்‌ இவருக்கு நஞ்சீயர்‌ சாத்தின திருநாமமாகும்‌. திவ்யப்‌ பிரபந்தங்களுக்கும்‌ இதிகாச புராணாதிகளுக்கும்‌ ஆழ்ந்த இன்சுவையே வடிவெடுத்த அர்த்தங்களை அருளிச்‌ செய்வதில்‌ இவருக்கு ஒத்தாரும்‌ மிக்காரும்‌ இல்லை என்று பெரிய வாச்சான்‌ பிள்ளை போன்ற பிரபல வைஷ்ணவ சீலர்களும்‌ கூறியுள்ளனர்‌.-லோகாச்சார்யார்‌ என்ற திருநாமமும்‌ இவருக்குண்டு. இவர்‌ கோயிலில்‌ வாழ்ந்த காலத்தில்‌ சகல ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ இவருடைய சீடர்களாகி ஸகல அர்த்தங்களையும்‌ கேட்டு வந்தனர்‌. நம்‌பெருமாள்‌ கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ என்னும்படி ஸம்பத்துடன்‌ வாழ்ந்து வந்தார்‌.அப்பொழுது முதலியாண்டான்‌ பேரனான கந்தாடை தோழப்பர் தாம்‌ வித்வானாயிருந்தும்‌ தம்மிடம்‌ யாரும்‌ பாடங்கேட்க வரவில்லையே என்ற பொறாமையில்‌ இழிந்த வார்த்தைகளால்‌ பரிபவித்து விட்டுத்‌ தன்‌ வீட்டிற்குச்‌ சென்றார்‌. வீட்டில்‌ அவருடைய மனைவியார்‌ இப்படியும்‌ ஆச்சாரியாரை நிந்திப்பீரோ? உமக்கு உய்வும்‌ உண்டோ என்று பலவுஞ்‌சொல்லி அவரது தவறை உணர்த்த தோழப்பரும்‌ நம்பிள்ளையிடம்‌
மன்னிப்புப்‌ பெறவேண்டுமென்று காத்திருந்தார்‌.-அதற்குள்‌ நம்பிள்ளை தாமே தோழப்பர்‌ வீட்டிற்குச் சென்று தேவரீருடைய திருஉள்ளம்‌ வருந்தும்படி நடந்துகொண்ட அடியேனுக்கு தேவரீருடைய மன்னிப்பைத் தவிர வேறு கதியில்லை என்று அவர்‌ திருவடிகளில்‌ விழுந்து வேண்டவே, தோழப்பர்‌ அந்த சீல குணத்திற்கு வியந்து ஸ்வாமி இதுநாள்‌ வரை நான்‌ தங்களைச்‌ சில பேர்களுக்கே ஆச்சாரியார்‌ என்றிருந்தேன்‌. இப்போது லோகத்‌துக்கெல்லாம்‌ தேவரீர்‌ ஆச்சாரியார்‌ என்று அறிந்து கொண்டேன்‌ என்றார்‌.-அது முதல்‌ லோகாசார்யார்‌ என்ற திருநாமமும்‌ வழங்கி வந்தது.

துன்னு புகழ்‌ கந்தாடை தோழப்பர்‌ தம்முகப்பால்‌
என்ன உலகாரியனோ என்றுரைக்க – பின்னை
உலகாரியனென்னும்‌ பேர்‌ நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல்‌ நின்றது என்றும்‌ மேல்‌
(உ.தே.மா. 51)

பின்பழகராம்‌ பெருமாள் ஜீயர்‌. பெருந் திவத்தில்‌
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால்‌ – நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள்‌ செய்‌ அந் நிலையை நன்னெஞ்சே
ஈனமற எப்பொழுதும்‌ ஓர்‌
(உ.தே.மா.66) -நம்‌ பிள்ளைக்குப்‌ பல சிஷ்யர்கள்‌ இருந்த போதிலும்‌, பின்‌பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ பக்தி ஒப்பற்றது.

இப்பேராசிரியரிடம்‌ சகல அர்த்தங்களையும்‌ கேட்டுத் தரித்த வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையும்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌ உலகுக்குச்‌ செய்திருக்கும்‌ உபகாரம்‌ நிகரற்றது. பட்டர்‌ ஸந்ததியில்‌ தோன்றிய மகா வித்வான்‌ நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டரும்‌, தோழப்பரைப் போலவே பொறாமை கொண்டிருந்தார்‌. அவர்‌ ஒரு நாள்‌ ராஜ சபைக்குச்‌ சென்றிருந்த பொழுது, அந்த ராஜா ‘ஸ்ரீராமன்‌ தன்னுடைய பரத்வத்தை மறைத்துக்‌ கொண்டு மனிதனாக அவதரித்திருக்கையில்‌ ஜடாயுவுக்கு முக்தியளித்தது எவ்வாறு பொருந்தும்‌ என்று கேட்க விடையளிக்க முடியாமல்‌ ஆலோசிக்க வேண்டியதாயிற்று. அந்நேரத்தில்‌ ௮ங்கு வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரிடம்‌ இந்தக்‌ கேள்விக்கு நம்பிள்ளை எப்படிப்‌ பதிலளிப்பார்‌ என்று கேட்டார்‌. ஏனெனில்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ நம்பிள்ளையிடம்‌ அந்த விஷயங்களை ஏற்கெனவே கேட்டறிந்தவர்‌. அவர்‌ ‘ஸத்யேக லோகாந்‌ ஜயதி’ என்ற ஸ்லோகத்தைக்‌ கொண்டு பதிலளிப்பார்‌ என்று சொல்ல, அதை மனதில்‌ நன்றாக வாங்கிக் கொண்டு ராஜாவுக்கு விடை யளித்தார்‌. அரசனும்‌ மிகவும்‌ மகிழ்ந்து விசேஷமாகப்‌ பரிசுகள்‌ வழங்கினான்‌. அவற்றை நம்‌பிள்ளை திருவடிகளில்‌ அர்ப்பணித்து தேவரீருடைய சிந்திப்போன ஸ்ரீ ஸூக்த்திகளில்‌ ஒரு சொல்லுக்குப்‌ பெற்ற பரிசு இது. இதைத்‌ தாங்கள்‌ அங்கீ கரித்து என்னை வாழ்விக்க வேண்டுமென்று பணிவுடன்‌ வேண்டினார்‌. நம்‌ பிள்ளையும்‌ அவரையும்‌ தம்‌ கோஷ்டியில்‌ சேர்த்துக் கொண்டு உய்வித்தார்‌. நடுவில்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்‌ளையின்‌ விஷயார்த்தங்களை விளக்கி ஒரு லட்சம்‌ கிரந்தம்‌ எழுதியிருந்தார்‌. ஆனால்‌ அதை நம்பிள்ளை பிரசாரத்திற்கு அனுமதிக்கவில்லை. நம்‌ பிள்ளையின்‌ அர்த்த விசேஷங்கள்‌ திவ்யப்பிரபந்த வியாக்யானங்களிலும்‌ வார்த்தாமாலை முதலியவற்றிலும்‌ பாக்யசாலிகளால்‌ உய்த்து உணரப்படுகின்றன.

இந்திரன்‌ வார்த்தையு நான்முகன்‌ வார்த்தையு மீசனுடன்‌
கந்தன்‌ சொல்‌ வார்த்தையுங் கற்பவ ராரிந்தக்‌ காசினிக்கே
நந்தினமுத்தெறி நம்பூர்‌ வரதர்‌ தம்‌ மாளிகையிற்‌
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திரை கொள்ளுவரோ
-என்று -நம்பிள்ளை வைபவத்தை ஸ்ரீபாதத்து முதலிகள்‌ அனுசந்தித்தனர்‌.

வாழி பதின்மருடன்‌ ஆண்டாள்‌ மதுரகவி
வாழிய நாதன்முதலா மாமறையோர்‌ – வாழி
யொருக்‌ கோலரை நெருக்கி வேட்டு மெதிராசன்‌
திருத்தாள்‌ வணங்கினார்‌ சீர்‌.

தேமருவும்‌ செங்கமலத் திருத்தாள்கள்‌ வாழியே.
திருவரையில்‌ பட்டாடை சேர் மருங்கும்‌ வாழியே.
தாம மணி வடமார்பும்‌ புரிநூலும்‌ வாழியே.
தாமரைக்கை இணையழகும்‌ தடம்புயமும்‌ வாழியே.
பாமருவுந்‌ தமிழ் வேதம்‌ பயில் பவளம்‌ வாழியே.
பாடியத்தின்‌ பொருள் தன்னைப்‌ பகர் நாவும்‌ வாழியே.
நாமநுதல்‌ மதிமுகமும்‌ திருமுடியும்‌ வாழியே.
நம்பிள்ளை வடிவழகும்‌ நாடோறும்‌ வாழியே.
மாதகவா வெவ்வுயிர்க்கும்‌ வாழ்வளித்தான்‌ வாழியே.
மதிஅரங்க ரோலக்கம்‌ வளர்த்திட்டான்‌ வாழியே.
நாதமுனி யாளவந்தார்‌ நலம் புகழ்வோன்‌ வாழியே.

நம்பிள்ளை திருவடிகள்‌ நாடோறும்‌ வாழியே.
காதலுடன்‌ நஞ்சீயர்‌ கழல்‌ தொழுவான்‌ வாழியே.
கார்த்திகை கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே.
போதமுடன்‌ ஆழுவார்‌ சொற் பொருளுரைப்போன்‌ வாழியே.
பூதூரன்‌ பாடியத்தைப்‌ புகழுமவன்‌ வாழியே.

பெரியாழ்வாரைப் போல ஆனியில்‌ சோதியில்‌ அவதரித்தவர்‌ இவர்‌. ஸ்ரீவசன பூஷணம்‌, முழுக்ஷப்படி முதலிய அஷ்டதச ரகஸ்யங்களை அருளிச்செய்த பிள்ளை லோகாசாரியருக்கும்‌ ஆச்‌சார்ய ஹிருதயம்‌ அருளிச் செய்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருக்கும்‌ திருத்தந்தையார்‌ இவர்‌, இவருடைய இயற்பெயர்‌ ஸ்ரீ கிருஷ்ண மஹாகுரு என்பது. இந்தத்‌ இருநாமமே பெரியவாச்‌ சான்‌ பிள்ளை என்ற மற்றொரு ஆச்சாரியருக்கும்‌ இருந்ததால்‌, நம்பிள்ளை சிஷ்யர்களான இவர்களுக்குள்‌ வாசி (வித்யாசம்‌) தெரிவதற்காக இவர்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை என அழைக்கப்‌ பட்டார்‌. திருவரங்கம்‌ பெரிய கோயிலில்‌ வடக்குத்‌ திருவீதியில்‌ வாழ்ந்து வந்ததே இப் பெயர்‌ வந்ததற்குக்‌ காரணம்‌. இவருடைய ஞானப்பெருமைகள்‌ மிகப்பல. பகவத்‌ விஷயமென வழங்கப்படுகிற (திருவாய்மொழி வியாக்யானமான) ஈடு 36,000 படியை இவரே பட்டோலை கொண்டவர்‌.

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை,
வள்ளல்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை
இந்த நாடறிய மாறன்‌ மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம்‌

நம்‌ பிள்ளை அருளிய ஈடு சொல் நயமும்‌ பொருளாழமும்‌ உடையது. ஈட்டின்‌ (பங்க்தி ஸந்நிவேசம்‌) விளக்கம்‌ வேறு எந்தக் கிரந்தத்தலும்‌ கண்டறியாததும்‌ காண முடியாததுமான அத்வீதிய விலக்ஷண சந்தர்ப்பம்‌. தமிழ்‌ வித்வான்‌௧ஞம்‌ ஸமஸ்க்ருத வித்‌வான்களும்‌ தனித்தனியே உள்‌ குழையத் தக்க உயர்ந்த ரசனாவிசேஷம்‌. ககனம்‌, ககநாகாரம்‌, ஸாகரஸ்‌ ஸாக ரோபம்‌” என்கிறாப்‌ போல ஈட்டுக்கு ௨வமை ஈடே. பெரிய புலவர்கள்‌ பத்தெட்டு வரிகளில்‌ எழுத வேண்டியவற்றை ஒரு வரியில்‌ கம்பீரமாக அடக்கி எழுதும்‌ திறன்‌ இவ்வாசிரியர்க்கே அமைந்தது.-மணவாள மாமுனிகள்‌ இவ்வாகிரியரை வள்ளல்‌ என்று
குறிப்பிடுகிறார்‌. திருக்குருகைப்பிரான்‌ பிள்ளான்‌ அருளிய ஆறாயிரப்படி வியாக்யானம்‌ நஞ்சியர்‌ அருளிய ஒன்பதினாயிரப்படி வியாக்யானம்‌ இருந்த போதிலும்‌ ரசிகர்களுக்குப்‌ பரிபூரணத் திருப்‌தியை விளைவிக்கப்‌ போதாதவை. நம்பிள்ளை தம்‌ நல்லருளால்‌ ஏவி விட பெரியவாச்சான்‌ பிள்ளை யருளிய 24,000 படி வியாக்யானம்‌ சிறிது விரிவாக இருக்கும் -, ஸ்ரீ ராமாயணம்‌ போன்ற இதிகாஸ புராணங்களிலிருந்து மேற்கோளாக ஸ்லோகங்‌கள்‌ எடுத்துக்‌ கையாளப்பட்டிருப்பதாலும்‌ இது சிறப்படைந்துள்‌ளது. திருவிருத்தத்துற்கும்‌ ஈடு வியாக்யானம்‌ அருளி யுள்ளார்‌. தவிர அஷ்டாக்ஷர தீபிகை என்ற கிரந்தமும்‌ இவ்வாசிரியரது படைப்பு என்று தெரிய வருகிறது. இவையெல்லாவற்றிற்கும்‌ மேலாக உலகுக்கெல்லாம்‌ உயிரான பிள்ளை லோகாச்‌சாரியாரையும்‌, அவர்‌ தம்பி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரையும்‌ பெற்றுக் கொடுத்தருளியதேயாகும்‌.

ஆனிதனில்‌ சோதிநாள்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆழ்வார்கள்‌ கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே,
தாணுகந்தநம்பிள்ளை தாள்‌ தொழுவோன்‌ வாழியே.
சடகோபன்‌ தமிழ்க்கீடு சாற்றினான்‌ வாழியே.
நானிலத்தில்‌ பாடியத்தை நடத்தினான்‌ வாழியே.
நல்ல உலகாரியனை நமக்களித்தான்‌ வாழியே.
ஈனமற எமையாளும்‌ இறைவனார்‌ வாழியே.
எங்கள்‌ வடவீதிப்பிள்ளை இணையடிகள்‌ வாழியே.

பிள்ளை லோகாச்சாரியாரும்‌ அவர்‌ தம்பி அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ நைஷ்டிகப் பிரமச்சாரிகள்‌. ஐப்பசியில்‌ திருவோணத்தவதரித்த பரம காருணிகரான இவர்‌ கிருபா மாத்ரப் பிரஸந்‌நாச்சாரியார்‌. அனுவர்த்தப்‌ பிரஸன்னாச்‌ சாரியர்களைப்‌ போலன்றி
சிஷ்யப்‌ பிரார்த்தனையைச்‌ சிறிதும்‌ எதிர் பார்க்காமல்‌ பயனன்றாகிலும்‌, பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்தப்‌ பணி கொள்பவர்கள்‌. நமது ஆச்சார்ய கோஷ்டியில்‌ எம்பெருமானாரே முதல்‌ கிருபா மாத்ரப்‌ பிரசன்னாசாரியார்‌ ஆவர்‌. அவர்‌ பிரஹ்ம ஸூத்திரத்‌திற்கு (பாஷ்யம்‌) அர்த்தத்தை விளக்கும்‌ நூல்கள்‌ எழுதியபோதிலும்‌ ரகஸ்யார்த்த விவரணமாக ஒரு சிறு நூலும்‌ எழுதவில்லை.பின்னால்‌ இன்னுமொரு திருக் கோலம்‌ பூண்டு (மணவாள மாமனிகளாக) செய்யலாம்‌ என்று விட்டு விட்டார்‌ போலும்‌. அக்குறையைத்‌ தீர்க்கவே பிள்ளை லோகாச்சாரியார்‌ தோன்றி ஸ்ரீ வைஷ்ணவ மண்டலிக்கு பேருபகாரம்‌ செய்துள்ளார்‌. இவர்‌ தகப்பனார்‌ இவருக்‌குத்‌ தமது ஆச்சாரியரான நம்‌ பிள்ளையின்‌ பெயரான உலோகாச்சாரியார்‌ என்றே திருநாமம்‌ சாத்தினார்‌. வாசி தெரிவதற்காக பிள்ளைலோகாச்சாரியார்‌ என்று வழங்குதல்‌ நிகழ்ந்தது என்பதை உபதேச
ரத்ன மாலையில்‌.
பின்னை வடக்குத் திரு வீதிப்பிள்ளை – அன்பால்‌ அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ்‌. மைந்தர்க்குச்‌ சாற்றுகையால்‌ வந்து பரந்தது எங்கும்‌
இந்தத்‌ திருநாமம்‌ இங்கு
(உ.தே.மா. 52) -என்கிறார்‌.

இவர்‌ அருளிச் செய்த நூல்கள்‌ அஷ்டாதச ரகஸ்யம்‌. அவற்றுள்‌ ஸ்ரீவசன பூஷணம்‌, தத்வத்ரயம்‌, முமுக்ஷப்படி என்ற மூன்றும்‌ ஸூத்திர வடிவில்‌ அமைந்தவை. ஸ்ரீவசன பூஷணத்தின்‌ பெருமையை, மணவாள மாமுனிகள்‌ உபதேச ரத்னமாலையில்‌ ஏழு பாசுரங்களில்‌ கொண்டாடியுள்ளார்‌. ஆசார்ய பரம்பரப்‌ பிராப்தமான அர்த்தங்களில்‌ முன்னோர்கள்‌ ரகசியமாக உபதேசித்துப்‌ போந்தமையால்‌, அந்த அர்த்த விசேஷங்களை பின்புள்ளோர்‌ இழக்க ஒண்ணாதபடி தன்னுடைய கிருபையோடு பெருமாளும்‌ ஸ்வப்பனத்தில்‌ நியமித்தபடியால்‌ ஸ்ரீவசன பூஷணமாகிய பிரபந்‌தத்தை அருளிச் செய்தவர்‌. முன்பே பேரருளாளப்‌ பெருமாள்‌ கிருபையால்‌ மணப் பாக்கத்தில்‌ இருப்பாரொரு நம்பியாருக்கு விசேஷக்‌ கிருபை பண்ணி தஞ்சமாயிருப்பதான சில விசேஷ அர்த்தங்‌களை விளக்கி, அவரைத்‌ திருவரங்கத்தில்‌ போய்க்‌ காத்திரும்‌, அங்கு நாம்‌ உமக்கு விசேஷ அர்த்தங்களைச்‌ சொல்லுவோம்‌ என்று அருளினார்‌.-ஆகவே அவரும்‌ திருவரங்கத்தில்‌ ஏகாந்தமாக ஒரு கோயிலிலே காத்திருந்தார்‌, பிள்ளை லோகாச்சாரியாரும்‌ அந்த இடத்‌திற்கு வந்து ரகஸ்யார்த்தங்களை அருளிச் செய்து கொண்டிருந்தார்‌.-கோயிலிலிருந்த நம்பியும்‌ வெளியே வந்து அவர்‌ பாதங்களில்‌ தண்டனிட, அவரும்‌ மிகவும்‌ மகிழ்ந்து முன்னரே காஞ்சியில்‌ வாக்களித்தபடி அவரையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டு பெருமாள்‌ கட்டளைப்படி பிரபந்தமிட்டருளினார்‌ என்பது பிரசித்தம்‌ என்‌பவை மணவாள மாமுனிகள்‌ வியாக்யானம்‌.திவ்யப்‌ பிரபந்தங்களுக்கோ ஸ்தோத்ரங்களுக்கோ உரையிடாமல்‌ (அஷ்டதச ரகஸ்யங்கள்‌) பதினெட்டு ரகஸ்யங்களை அருளிய இவர்‌ இந்த நூல்களில்‌ விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக்‌ கொள்கைகளையும்‌ திவ்யப்‌ பிரபந்த வியாக்யாதாக்கள்‌ அருளிய ரஹஸ்ய கிரந்தங்களையும்‌ விரிவாக விளக்கி யுள்ளார்‌. வாழ் நாள்‌ முழுவதும்‌ திருமணமும்‌ செய்து கொள்ளாமல்‌, வைஷ்ணவ தர்சனத்துக்காகவே வாழ்ந்து முகமதியர்‌ படையெடுப்பின்போது அரங்‌கனைக்‌ காப்பாற்றுவதற்காக உயிரையும்‌ அர்ப்பணித்த மஹானுபாவர்‌ இவர்‌,அன்ன புகழுடும்பை அண்ணல்‌ உலகாசிரியன்‌ இன்னருளால்‌ செய்த கலையாவையிலும்‌ – உன்னில்‌ திகழ் வசன பூடணத்தின்‌ சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய்‌ இப்போது (உ.தே.மா. 53)இவரது அஷ்ட தச ரகஸ்யங்களில்‌ பல இவரது தம்பியாலும்‌,நாயனாராச்சான்பிள்ளை (சமகாலத்தவர்‌)யாலும்‌ அடுத்து வந்த மணவாள மாமுனிகளாலும்‌ தமது நூற்களில்‌ மேற்கோள்களாகக்‌ காட்டப்பட்டுள்ள. ஆகவே அஷ்டதச ரகஸ்ய நூல்களில்‌, பல அவற்றின்‌ ஆசிரியர்‌ காலத்திலேயே மிகப்புகழ்‌ பெற்று விட்டன எனத் தெரிகிறது. இந்நூல்களில்‌ முமுஷுப்படியே காலத்தால்‌ முற்‌பட்டது.-சிறப்பால்‌ முற்பட்டதுமாகும்‌ எனத் தெரிகிறது. பிள்ளை லோகாச்சாரியார்‌ தாமே தமது ரகஸ்யங்கவில்‌ முற்பட்டவை சிலவற்றைப்‌ பிற்பட்ட ரகஸ்யங்களில்‌ குறிப்பிட்டுள்ளதாகச்‌ சொல்கிறார்‌. மணவாள மாமுனிகள்‌ உபதேச ரத்னமாலையில்‌ அன்ன புகழ்‌ முடும்பை அண்ணல்‌ உலகாசிரியன்‌ இன்னருளால்‌ செய்த கலை யாவையிலும்‌, திகழ்‌ வசன பூடணத்தின்‌ சீர்மை ஒன்றுக்கில்லை இவ்வார்த்தை மெய்‌ இப்போது என்று தொடங்கி உ.தே.மா.(59-59) முடிய 7 பாசுரங்களால்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌ அருளிய ரகஸ்யக் கிரந்தங்கள்‌ அனைத்திலும்‌ தலைசிறந்தது ஸ்ரீவசன பூஷணமே என்று நிரூபிக்கிறார்‌.-ஆக பதினெட்டு ரகஸ்யங்கவில்‌ உரையிடுவதன்‌ மூலமும்‌ மேற்கோள்‌ காட்டுவதின்‌ மூலமும்‌ மற்ற ஆசார்யர்களால்‌ கையாளப்பட்டிருப்பவை முறையே 1) முமுஷுப்படி 2) தத்வத்திரயம்‌,3] ஸ்ரீ வசன பூஷணம்‌, 4) ஸார ஸங்கரஹம்‌, 5) நவரத்ன மாலை,6) யாத்ருச்சிகப்படி, 7) பரந்தபடி, 8) ஸ்ரீயப்பதிப்படி, 9) தத்வ சேகரம்‌, 10) அர்ச்சசாதி ஆகியவை பிள்ளை லோகாச்சாரியராலேயே குறிப்பிடப்பட்டவை. பிரபந்ந பரித்ராணம்‌, தத்‌வ சேகரம்‌, அர்ச்சராதி பிள்ளைலோகம்‌ ஜீயர்‌ உரையிட்டது. அர்த்த பஞ்சகம்‌ அழகிய மணவாள நாயனாரால்‌ எடுத்தாளப்பட்டது. முன்னோர்களால்‌ கையாளப்பட்ட இந்த ரகஸ்யங்களுடன்‌, ஸம்ஸார ஸாம்ராஜ்யம்‌,நவவித ஸம்பந்தம்‌, தனித் த்வயம்‌, தனிப் பிரவணம்‌ என்னும்‌ நான்கையும்‌ சேர்த்து நெடுங்காலமாகப் பிள்ளை லோகாச்சாரியார்‌ அருளிய அஷ்டதச ரகஸ்யம்‌ என்று சொல்லப்பட்டு வருகிறது.-இவை தவிர இவர்‌ தனிச்சுலோகமும்‌ கத்ய வியாக்யானமும்‌ அருளியிருப்பதாக மாமுனிகள்‌ மேற்கோள்‌ காட்டுகிறார்‌. ஆனால்‌ அவை இப்போது கிடைக்கவில்லை.

அத்தகிரியருளாள ரனுமதியோன்‌ வாழியே.
ஐப்பசியில்‌ திருவோணத்தவதரித்தான்‌ வாழியே.
முக்திநெறி மறைத்தமிழால்‌ மொழிந்தருள்வோன்‌ வாழியே.
மூதரிய மணவாளன்‌ முன்புதித்தான்‌ வாழியே.
நித்தியம்‌ நம்பிள்ளை பதம்‌ நெஞ்சில்‌ வைப்போன்‌ வாழியே.
நீள்வசன பூடணத்தால்‌ நியமித்தான்‌ வாழியே.
உத்தமமாம்‌ முடும்பை நகருதித்த வள்ளல்‌ வாழியே.
உலகாரியன்‌ பதங்கள்‌ ஊழிதோறும்‌ வாழியே.

நம்‌பிள்ளை சீடர்களில்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை, நடுவில்‌ திருவீதிப்பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ண என்னும்‌ வடக்‌குத்‌ திருவீதிப்பிள்ளை, பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌, ஈயுண்ணி மாதவப் பெருமாள்‌ முதலியோர்‌ முக்கியமானவர்கள்‌. இவர்களில்‌ பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌, ஊணும்‌ உறக்கமுமின்றியே பிள்ளை திருவடிகளிலே வழுவிலா அடிமை செய்து கொண்டு வாழ்ந்திருந்‌தார்‌. இங்கனம்‌ மிருக்கையில்‌ பிள்ளையிடம்‌ இவ்வாத்மாவுக்கு, ஸ்வரூப, உபாய, புருஷார்த்தங்கள்‌ எவையென்று அருளிச் செய்ய வேண்டுமென்று விண்ணப்பிக்க, பிள்ளை இச்சை ஸ்வரூபம்‌, இரக்கமே உபாயம்‌, இனிமை உபயம்‌ என்று அருளிச் செய்ய, அதை மறுத்து ஜீயர்‌, தேவரீர்‌ திருவடிகளே தஞ்சமென்றிருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, அடிமையாய்‌ இருக்கையே ஸ்வரூபம்‌, அவர்‌களது அபிமானமே உபாயம்‌ அவர்களது முக மலர்ச்சியே உபேயம்‌ என்று நினைத்திருப்பேன்‌ என்றார்‌. பின்பழகிய பெருமாள் ஜீயர்‌ திருநட்சத்திரம்‌ ஐப்பசி சதயம்‌. அவர்‌ அருளிய கிரந்தம்‌ குரு பரம்பராப்‌ பிரபாவம்‌ என்பது.

அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனார்‌ வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ இரண்டாவது குமாரர்‌. இவர்‌ பிறந்த நட்சத்திரம்‌ மார்கழி அவிட்டம்‌. இவரது ஆச்சாரியார்‌ இவரது தமையனார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌. இவர்‌ அருளிய கிரந்தம்‌, ஆசார்ய ஹிருதயம்‌, திருப்பாவை வியாக்யானம்‌, திருவந்‌தாதி; கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம்‌, அருளிச் செயல்‌ ரகஸ்யம்‌ முதலியன. இவர்‌ சிஷ்யர்‌ கூர குலோத்தம தாஸர்‌.

பெரிய வாச்சான்பிள்ளை கிபி. 1167ல்‌ பிறந்தார்‌ அவதார ஸ்தலம்‌, சோழ நாட்டுச்‌
சங்கநல்லூர்‌, நட்சத்திரம்‌ ஸர்வஜித்‌ ஆவணி மாத கிருஷ்ணாஷ்டமி ரோஹிணி. குலம்‌ பூர்வசிகை. இவர்‌ தகப்பனார்‌ யாமுனா தேசிகர்‌. தாயார்‌ நாச்சியாரம்மன்‌. இவரது இதர திரு நாமங்கள்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை, அபயப் ப்ரத ராஜர்‌, ஸ்ரீமத்‌ கிருஷ்ணர்‌ முதலியன.
திருவாராதனம்‌: கிருஷ்ண விக்கிரஹம்‌. இருப்பிடம்‌: பெரியகோயில்‌. இவர்‌ செய்தருளின கிரந்தங்கள்‌ திருவாய்மொழி 24,000 படி.-மற்ற பிரபந்தங்களுக்கும்‌ அவர்‌ ஒருவரே வியாக்யானம்‌ செய்தவர்‌.-ஆகவே ஸ்ரீரங்கநாதனால்‌ அபயப் ப்ரதராஜா என்று அழைக்கப்பட்‌டார்‌. ஸகல பிரமாணதாத்பர்யம்‌, உபகார ரத்னம்‌ கத்ய த்ரய வியாக்‌யானம்‌, அபயப் பிரதான வியாக்யானம்‌, சரம ரஹஸ்யம்‌, அனுசந்தான ரஹஸ்யம்‌, நியமனப்படி, மாணிக்கமாலை, நவரத்ன மாலை, ஆளவந்தார்‌ ஸ்தோத்ர ரத்னம்‌, முதலியன. இவர்‌ 95 வருடம்‌ வாழ்ந்திருந்தார்‌. இவரது சிஷ்யர்கள்‌ பரகால தாஸர்‌, பின்‌ பழகிய
பெருமாள்‌ ஜீயர்‌, ஸ்ரீ ரங்காச்சாரியார்‌ முதலியோர்‌.

ஸ்ரீ ராமாயாண விசேஷார்த்தங்களை தனிச்சுலோக வியாக்யானமாகவும்‌ அருளி ஸ்ரீராமாயணப்பெருக்கர்‌ என்று புகழ்‌ பெற்றவர்‌.-கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார்‌, கலிகன்றிதாஸரான நம்பிள்‌ளையாகவும்‌ கிருஷ்ண பரமாத்மாவுக்குச்‌ சமானமாக (கிருஷ்ணஸுரி) எனும்‌ பெரியவாச்சான் பிள்ளையாகவும்‌ அவதரித்தனர்‌
என்பர்‌ பெரியோர்‌. நம்‌ பிள்ளைக்குப் பின்னர்‌ ஸ்ரீரங்கத்தில்‌ தர்ஸனம்‌ நிர்வகித்தவர்‌ இவரே. இவரது தீர்த்தம்‌ இறந்த காலம்‌ (கி பி.1262) எனக் கொள்ளலாம்‌.
நஞ்சீயர்‌ செய்த வியாக்கியைகள்‌ நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்குமில்லையே – தம்‌ சீரால்‌
வைய குருவின்‌ தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும்‌ சில.
(உ.தே.மா. 47).
பெரியவாச்சான்‌ பிள்ளை பின்புள்ள வைக்கும்‌
தெரிய வியாக்கியைகள்‌ செய்வரால்‌ – அரிய
அருளிச்‌ செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச்‌ செயலாய்த்‌ தெரிந்து
(உ.தே.மா. 46)-என்று மாமுனிகள்‌ அருளிச் செய்தபடி இவராலேயே பின்புள்ளோர் அனைவரும்‌ அருளிச் செயலின்‌ பொருளை யறிந்து ஆசார்ய பதம்‌ நிர்வஹித்தார்கள்‌.

தன்மை சிங்கம்‌ ரோகினிநாள்‌ தழைக்க வந்தோன்‌ வாழியே.
தாரணியில்‌ சங்கநல்லூர்‌ தானுடையோன்‌ வாழியே.
பூன்மை தவிர்‌ திருவரங்கர்‌ புகழுரைப்போன்‌ வாழியே.
பூதூர்‌ எதிராசர்தாள்‌ புகழுமவன்‌ வாழியே.
மன்புகழ்சேர்‌ சடகோபர்‌ வளமுரைப்போன்‌ வாழியே.
மறைநாலின்‌ பொருள்தன்னைப்‌ பகுத்துரைத்தோன்‌ வாழியே.
அன்புடன்‌ உலகாரியர்‌ தம்‌ அடியிணையோன்‌ வாழியே.
அபயப்ரதராசர்‌ தாள்‌ அனவரதம்‌ வாழியே.

வாதிகேஸரி அழகிய மணவாளப்‌ பெருமான்‌ ஜீயர்‌-அவதாரஸ்தலம்‌ தென்‌ தேசத்தில்‌ பிரமதேசம்‌ மன்னார்‌ கோவில்‌. இவரது திருநட்சத்திரம்‌ ஆனிமாதத்து ஸ்வாதியாகும்‌.-பஞ்ச ஸமஸ்காரங்களும்‌, நித்யானுசந்தானங்களும்‌ அருளிய ஆச்சாரியார்‌ பெரியவாச்சான் பிள்ளை. திருவாய்மொழி முதலிய பிரபந்தங்களும்‌ ஈடு முதலான வியாக்யானங்களும்‌ ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களும்‌ தத்வத்ரயாதி ரஹஸ்யங்களும்‌ அருளியவர்‌ நாயனாராச்‌சான்‌ பிள்ளை. திருவாராதனம்‌. அழகிய சிங்கர்‌. இருப்பிடம்‌-கோயில்‌. சிஷ்யர்‌ திருமாலை யாண்டான்‌. பின்‌ சென்ற வில்லி ஜீயர்‌-
அருளிச்‌ செயல்கள்‌. திருவிருத்தத்துக்கு உரை (பாவனத்வ பிரபோதகை)-திருவாய்மொழிக்கு உரை 18,000 படி. இருபத்தி நாலாயிரப்‌ பிரமாணத் திரட்டு, கீதா சாரம்‌, சதுஸ்லோகி , தமிழ்க்கவி-முதலியன இவரது திருநாமங்கள்‌; வரதராஜர்‌ சுந்தர ஜாமாத்ரு முனி முதலியன.

நாயனாராச்சான்‌ பிள்ளை-பெரியவாச்சான்‌ பள்ளியின்‌ தத்து புத்திரர்‌. இவரது அவதாரஸ்தலம்‌ சங்க நல்லூர்‌.-செய்தருளிய கிரந்தங்கள்‌ ஜ்ஞாநார்ணவம்‌,
தத்வத்ரய விவரணம்‌ சரமோபாய நிர்ணயம்‌, முக்த போகாவளி-முதலியன
.

ஓராண் வழி ஆசார்யர்‌ வரிசையில்‌ பிள்ளை லோகாசாரியரை யடுத்து வருபவர்‌ கூர குலோத்தம தாசர்‌. இவரது திருவவதார ஸ்தலம்‌-கோயில்‌. இருப்பிடம்‌ கோயில்‌. குலம்‌ பூர்வசிகை. திருநக்ஷ்த்திரம்‌-ஐப்பசி மாதம்‌ திருவாதிரை. பஞ்ச ஸம்ஸ்காரங்களும்‌ நித்யானுசந்‌தானங்களும்‌ சாதித் தருளியவர்‌ ஆசார்யார்‌ வடக்குத்‌ திருவீதிப்‌
பிள்ளை. திருவாய்மொழி முதலான பிரபந்தங்களும்‌ ஈடு முதலான
வியாக்யானங்களும்‌ ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களும்‌ சாதித்தருளியவர்‌
ஆசார்யார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌, தத்வத்ரயாதி ரஹஸ்யங்களும்‌, ஸகல ரஹஸ்யார்த்தங்களும்‌ அருளியவர்‌ அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாராசார்யர்‌. திருவாராதனம்‌ ஸ்ரீரங்கராஜர்‌,
சிஷ்யர்கள்‌, திருவாய்மொழிப்பிள்ளை, மணவாள மாமுனிகள்‌ (பெரிய ஜீயர்‌) முதலானவர்கள்‌.

சந்ததமுமாழ்வார்கள்‌ தமிழ்‌ வளர்த்தோன்‌ வாழியே.
தாரணியிற்‌ சிறுநல்லூர்‌ தானுடையோன்‌ வாழியே.
எந்தை உலகாரியனை யிறைஞ்சுமவன்‌ வாழியே.
இலகு துலா ஆதிரையிலிங்குதித்தான்‌ வாழியே.
இந்த வுலகத்தோர்க்கிதமுரைத்தோன்‌ வாழியே.
எழில்‌ வசனபூடணத்துக்கினிமை செய்தான்‌ வாழியே.
குந்திநகர்‌ சிந்தை கொண்ட செல்வனார்‌ வாழியே.
கூரகுலேத்தமதாசர்‌ குரைகழல்கள்‌ வாழியே.

திருவாய்மொழிப்பிள்ளை அவதாரஸ்தலம்‌ பாண்டிய நாட்டிலுள்ள குந்திகை .
இவரது நட்சத்திரம்‌ விபவ வருஷம்‌ வைகாசி விசாகம்‌. இவரது திருநாமங்கள்‌ திருமலை யாழ்வார்‌, திருவாய்மொழிப்பிள்ளை, ஸ்ரீசைலேசர்‌ முதலியன. பஞ்ச ஸம்ஸ்காரங்களும்‌ பிரபந்தங்களும்‌ அருளியர்‌ இவரது ஆச்சாரியார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌. ஈடு முதலான பகவத் விஷயங்களை அருளியவர்‌, நாலூராச்சான்‌ பிள்ளை, கூரகுலோத்தமதாஸர்‌, விளாஞ்சோலைப் பிள்ளை முதலானோர்‌. இவர்‌ அருளிய வியாக்யானம்‌ பெரியாழ்வார்‌ திருமொழி.
இருப்பிடம்‌ திருநகரி. இவர்‌ செய்த கைங்கர்யம்‌ ஆழ்வார்‌ திருநகரி கோயில்‌ ஜீரணோத்தாரணம்‌ (புதுப்பிக்கப்படுதல்‌) இவர்‌ சிஷ்யர்‌கள்‌, பெரிய ஜீயர்‌ (மணவாளமாமுனி) எம்பெருமானார்‌ ஜீயர்‌, சடகோப ஜீயர்‌ முதலானோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்‌தார்‌..

வையக மெண்சடகோபன்‌ மறைவளர்த்தோன்‌ வாழியே.
வைகாசி விசாகத்தில்‌ வந்துதித்தான்‌ வாழியே.
ஐயணருண்‌ மாரிகலை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே.
அழகாரு மெதிராசரடி பணிவோன்‌ வாழியே.
துய்யவுலகாரியன்‌ தன்‌ துணைப்பதத்தோன்‌ வாழியே.
தொல்குருகா புரியதனைத்‌ துலக்கினான்‌ வாழியே.
தெய்வநகர்‌ குந்திதன்னில்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள்‌ வாழியே.

மணவாள மாமுனிகள்‌ (பெரிய ஜீயர்‌)அவதாரஸ்தலம்‌ பாண்டிநாட்டில்‌ உள்ள கடாரம்‌ என்ற ஊர்‌. இவரது திருநட்சத்திரம்‌ ஐப்பசியில்‌ திருமூலம்‌. இவரது திருஅவதாரத்தை எம்பெருமானாரது இரண்டாவது அவதாரம்‌ என்பர்‌. இவரது திருத்தகப்பனார்‌ பிள்ளை லோகாச்சாரியாரது சிஷ்யரான திகழக்கிடந்தான்‌. திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணன்‌. தாயார்‌ ஸ்ரீ ரங்கநாச்சியார்‌. திருத்தம்‌பியார்‌ திருமலையாழ்‌வார்‌. இருப்பிடம்‌ கோயில்‌. திருவாய்மொழி முதலான பிரபந்தங்களும்‌ ஈடு முதலான வியாக்யானங்களும்‌ அருளியவர்‌ திருவாய்மொழிப்பிள்ளை. ஸ்ரீ பாஷ்யாதி. கிரந்தங்களை அருளியவர்‌ கிடாம்பி திருமலை ஐயங்கார்‌, கூரகுலோத்தமதாஸர்‌ முதலியோர்‌. இவரது திருவாராதனப்‌ பெருமாள்‌ ஸ்ரீ ரங்கராஜர்‌. இவரது திரு நாமங்கள்‌-பெரிய ஜீயர்‌, மணவாள மாமுனி, இராமானுசன்‌ பொன்னடி,யதீந்திர பிரவணர்‌, வரயோகி, வரவரமுனி போன்று பதினொரு நாமங்கள்‌. இவர்‌ அருளிய கிரந்தங்கள்‌ முறையே தத்வத்ரயம்‌,ரகஸ்யத்திரயம்‌, ஸ்ரீவசன பூஷணம்‌, ஆசார்ய ஹிருதயம்‌ ஞானசாரம்‌, பிரமேயசாரம்‌, பெரியாழ்வார்‌ திருமொழி, திருவாய்மொழி நூற்றந்தாதி ஆகிய எட்டுப்‌ பிரபந்தங்களுக்கு வியாக்யானமும்‌, ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு, (ஆறாயிரம்‌) தத்வத் திரயம்‌ பிரமாணத்‌ திரட்டு, ஸ்ரீவசன பூஷண பிரமாணத் திரட்டு, ஆர்த்தி பிரபந்தம் – யதிராஜவிம்ஸதி, உபதேசரத்னமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி திருவாராதன கிரமம்‌ முதலான பிரபந்தங்கள்‌ முதலியன.எம்பெருமானாருடைய புனரவதாரமான பெரிய ஜீயர்‌,பூப் பிரதட்சணம்‌ பண்ணி அனேக ஸ்தலங்களில்‌ உள்ள கோயில்களுக்கு ஜீரணோத்தாரணம்‌ பண்ணி யருளினார்‌. திருநகரியில்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்குத்‌ தன்னுடைய நிஜஸ்வரூபமான ஸேஷாவதாரத்தைக்‌ காட்டினார்‌. பரமத நிரஸன சுப மத ஸ்தாபனம்‌ பண்ணினார்‌. (பிற மதங்களைக்‌ கண்டித்து வைஷ்ணவக்‌ கொள்கைகளைப்‌ பரப்பினார்‌) ஸர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கு மோக்ஷம்‌ சாதித்‌தருளினார்‌. வடமதுரையில்‌ ஜீரணோத்தாரணம்‌ பண்ணினார்‌. நம்‌
பெருமாளுக்கு ஒரு வருஷமாக திருவாய்மொழி ஈடு விண்ணப்பஞ்‌ செய்கையாலே பெரிய ஜீயர்‌ என்று நம்‌ பெருமாள்‌ திருநாமம்‌ சாத்தியருளினார்‌.ஆகவே இவர்‌ எல்லோருக்கும்‌ உத்தேஸ்யர்‌ (தலைமையானவர்‌) இவர்‌ திரு மேனி ஸ்வேதவர்ணம்‌, (வெள்ளை) ஆகையால்‌ வெள்ளை ஜியர்‌ என்ற திருநாமமுண்டு. இவரது திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள்‌ வானமாமலை ஜீயர்‌, பத்தங்கி பரவஸ்நு, பட்டர்‌பிரான்‌ ஜீயர்‌, திருவேங்கட ஜீயர்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌, பிரதிவாதி பயங்கர மண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை,அப்பிள்ளான்‌. இவரெல்லாரும்‌ அஷ்ட திக்கஜங்கள்‌, சேனை முதலியாண்டான்‌ நாயனார்‌, நாலூர்‌ சிற்றாத்தான்‌, கந்தாடை போரேற்று நாயன்‌ போன்றவர்கள்‌ நவரத்னங்கள்‌. திருப்பாணாழ்‌வார்‌ தாஸர்‌, வடுகநம்பி ஜீயர்‌, நாயனார்‌ தொடக்கமானவர்கள்‌-சிஷ்யர்கள்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌ உடையவருக்கு முதலியாண்டானைப்போல இவருக்கு மெய்க்காப்பாளர்‌. எறும்பியப்பா வடுகநம்பியைப் போல தேவுமற்றறியாத அத்யந்த அபிமானி. பிரதிவாதி பயங்கர மண்ணா கூரத்தாழ்வானைப்போல உசாத்‌ துணையா யிருப்பார்‌. அப்பிள்ளார்‌ மடத்தில்‌ ஸர்வ பரங்களையும்‌ நடத்திக் கொண்டு போவார்‌. வானமாலை ஜீயர்‌, ஆஸ்ரயித்த நாளிலிருந்து பிரியாது ஆட்செய்திருப்பார்‌. பட்டர்‌ ஜீயர்‌ எம்பாரைப்‌ போல திருவடியாக இருப்பார்‌. ஜீயர் நாயனார்‌ திருக்குருகைப்பிரான்‌ பிள்ளானைப் போல ஞானகுமாரராய்‌ இருப்பர்‌. இவர்கள்‌ எல்லோருக்கும்‌ ஸ்வரூபோபாய புருஷார்த்தங்கள்‌ சாதித்துக்‌ கொண்டு பெரிய ஜீயர்‌ நம்பெருமாள்‌ கோயிலில்‌ 72 ஆண்டுகள்‌ வாழ்ந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌. என்ற விபரங்கள்‌ கோயில்‌ கந்தாடை நாயன்‌ அருளிய பெரிய திருமுடி அடைவிலிருந்து தெரிந்து கொள்கிறோம்‌. மணவாள மாமுனிகளைப்‌ போலவே ராமானுஜ தர்சனத்தின்‌ சரணாகதி தத்துவத்தை எங்கும்‌ பரவச்‌ செய்தவர்‌ அகோபில மட ஸ்தாபகரான ஸ்ரீ சடகோப யதீந்தர ஜீயர்‌

இனி மணவாள மாமுனிகள்‌ சீடர்களான, வானமாமலைஜீயர்‌, பட்டர்‌ பிரான்ஜீயர்‌, திருவேங்கட ஜீயர்‌ எறும்‌பயப்பா, அப்பிள்ளை, ராமானுஜரென்னும்‌ அப்பிள்ளான்‌ கோயில்‌ கந்தாடையண்ணன்‌, கந்தாடை போரேற்றுநாயனார்‌, ஸ்ரீசைல நரசிம்மாச்சாரியார்‌, மணவாள மாமுனி தாமே விரும்பி மறுபடி அவதரித்தாரோ எனும்‌ படியான அவரது பேரர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌, ஸ்ரீநிவாசாச்சாரியார்‌ என்ற கோயில்‌ கந்தாடை யப்பன்‌,ஆத்தான்‌, ராமானுஜம்‌ பிள்ளை, அழகிய மணவாள சீயர்‌, கந்‌தாடை அண்ணனின்‌ பிள்ளையான கந்தாடை நாயன்‌ போன்று பலர்‌ உள்ளனர்‌ என்ற விவரங்கள்‌ கோயில்‌ கந்தாடை அண்ணன்‌ அருளிய பெரிய திருமுடி அடைவு பிரபந்தத்திலிருந்து தெரிந்து
கொள்கிறோம்‌.

இப்புவியில்‌ அரங்கேசர்க்கீடளித்தான்‌ வாழியே.
எழில்‌ திருவாய்‌ மொழிப்பிள்ளை இணையடியோன்‌ வாழியே.
ஐப்பசியில்‌ திருமூலத்தவதரித்தான்‌ வாழியே.
அரவரசப்‌ பெருஞ்சோதி அனந்தனென்றும்‌ வாழியே.
எப்புவியும்‌ ஸ்ரீசைல மேத்தவந்தான்‌ வாழியே.
ஒராரு மெதிராசரென வுதித்தான்‌ வாழியே.
முப்புரிநூல்‌ மணிவடமும்‌ முக்கோல்‌ தரித்தான்‌ வாழியே.
மூதரிய மணவாள மாமனிகள்‌ வாழியே.

செந்தமிழ்‌ வேதியர்‌ சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுவான்‌
சீருலகாரியர்‌ செய்தருள்‌ நற்கலை தேசு பொலிந்திடுநாள்‌
மந்தமதிப்‌வி மானிடர்‌ தங்களை வானிலுயர்ந்திடுநாள்‌
மாசறு ஞானியர்‌ சேரெதிராசர்தம்வாழ்வு முளைத்திடுநாள்‌
கந்தமலர்ப்‌ பொழில்சூழ்‌ குருகாதிபன்‌ கலைகள்‌ விளங்கிடுநாள்‌
காரமர்‌ -மேனியரங்கநகர்க்கிறைகண்கள்‌ களித்திடுதாள்‌
அந்தமில்சீர்‌ மணவாள முனிப்பரனவதாரம்‌ செய்திடுநாள்‌
அழகுதிகழ்ந்திடுமைப்பசியில்‌ திருமூலமதெனுநாளே

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் வைபவம்-ஸ்ரீ எம்பெருமானார் வரையிலும்-

November 1, 2025
வீர நாராயணபுரத்திலே (தற்பொழுது காட்டு மன்னார்கோவில்‌) சுவாமி
மன்னனார்‌ திருவடிகளிலே சகலவித கைங்கர்யங்களையும்‌ செய்து கொண்டு வாழ்ந்து வருகிற ஈஸ்வர பட்டாழ்வாரும்‌ அவரது குமாரர்‌ ஸ்ரீ ரங்கநாதமுனிகளும்‌ அவர்‌ குமாரர்‌ ஈஸ்வர முனிகளும்‌, மன்னனனாரிடம்‌ அருளாசி பெற்று, வடக்கே பத்ரிஹாஸ்ரமத்திலி௫ந்து பெருமாள்‌ அவதரித்து விளையாடியருளின வடமதுரை, திருவாய்ப்பாடி, பிருந்தாவனம்‌, யமுனாதீரம்‌, கோவர்த்தனகரி, அயோத்தி, சாளக்கிராமம்‌ முதலான வடதிசையில்‌ உள்ள திவ்ய தேசங்களை யெல்லாம்‌ சேவிக்க எண்ணிக்‌ குடும்பத்தோடு புறப்‌பட்டுப்‌ போய்ச்‌ சேவித்து வருகையில்‌, யமுனா தீரத்திலுள்ள ஸ்ரீகோவர்த்தனபுரம்‌ என்ற நகரின்‌ அழகிலே ஈடுபட்டு அங்கு நித்தய வாசம்‌ பண்ண வேண்டும்‌ என்று தீர்மானித்து வாழ்ந்து வரும்‌ காலத்தில்‌ சுவாமி மன்னனார்‌ நாதமுனிகள்‌ கனவில்‌ தோன்றி நம்முடைய வீரநாராயணபுரத்திற்கே வாரும்‌ என்று கூறியதால்‌,அங்கிருந்து புறப்பட்டு வாரணாசி, புருஷோத்தமம்‌ (பூரி ஜகந்தாத்‌) சிருங்கேரி, அகோபிலமடம்‌ வழியேத்‌ திருவேங்கடம்‌ வந்து,அங்கேயும்‌ நித்ய வாசம்‌ பண்ண மன்னனார்‌ இசையாததால்‌, அங்கிருந்தும்‌ புறப்பட்டுக்‌ காஞ்சி திருக்கோவலூர்‌, திருவரங்கம்‌, திருக்குடந்தைப்‌ பெருமான்களையும்‌ சேவித்து மீண்டும்‌ வீரநாராயணபுரத்‌துக்கே வந்து, மன்னாருக்குத்‌ திருநந்தவனம்‌ அமைத்தும்‌ புஷ்ப கைங்கர்யமும்‌ ஏனைய கைங்கர்யங்களும்‌ செய்து கொண்டு
வாழ்ந்து வருவாராயினர்‌.
இவ்வாறிருக்கையில்‌ ஒரு நாள்‌ சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ மன்னனாரைச்‌ சேவித்து அவர்‌ திருமுன்பு ஆரா அமுதே" என்றுதொடங்கும்‌ திருவாய்மொழிப்‌ பாடலை அனுசந்திக்க அதைக்‌கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள்‌ அவர்களிடம்‌ உங்களுக்கு இப்பிரபந்‌தம்‌ முற்றும்‌ தெரியுமா என்று கேட்டபொழுது அவர்களும்‌ எங்களுக்கு இப்பத்துப்பாட்டு மட்டுமே தெரியும்‌ என்று சொல்லிவிடவே, நாதமுனிகள்‌ சடகோபன்‌ அவதரித்துள்ள திருக்குருகூர்‌ திருநகரிக்குச்சென்று அங்கு எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற
பிரான்‌, சடகோபன்‌, முதலானோரைச்‌ சேவித்து நின்றார்‌. அங்‌குள்ள மதுரகவியாழ்வாரது சிஷ்யரான பராங்குஸதாஸரைச்‌ சேவித்து அவரிடம்‌ இவ்விடம்‌ திருவாய்மொழி ஒதினவர்கள்‌ உண்டா என்று கேட்க, அவரும்‌ திருவாய்‌ மொழியும்‌ ஏனையப்‌பிரபந்தங்களும்‌, வெகு காலத்துக்கு முன்பே அனுசந்திப்பார்‌ இல்‌லாமல்‌ மறைந்து போயின. என்னுடைய ஆச்சாரியார்‌ அடியேனுக்கு அருளிய 'கண்ணினுண்சிறுதாம்பு' பதிகம்‌ மட்டுமே உள்ளது என்றார்‌. அதை அவரிடம்‌ கற்று, திருப்புளியாழ்வாரடியில்‌, ஆழ்‌வார்‌ திருமுன்பு பன்னீராயிரம்‌ உரு 'கண்ணினுண் சிறுத்தாம்பு" பாசுரத்தை நியமத்தோடு அனுசந்தித்தார்‌.
நம்மாழ்வார் அவருக்கு ஞானக் கண்‌ அருளித்‌ திவ்யப் பிரபந்தங்களையும்‌,, ரஹஸ்யத்திரயத்‌தையும்‌, தர்ஸன தாத்பர்யங்களையும்‌, அஷ்டாங்க யோக ரகஸ்யத்‌தையும்‌ அருளிச்செய்தார்‌. 'மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌ நிற்கப்பாடி என்‌ நெஞ்சுள்‌ நிறுத்தினான்‌! என்கிறபடி இவர்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌, நம்மாழ்வாரையும்‌ அனுபவித்து வரும்பொழுது, மன்னனார்‌ மீண்டும்‌ அவர்‌ கனவில்‌ தோன்றித் தான்‌
பிரபந்தத்தைக்‌ கேட்க விரும்புவதாகவும்‌, அதனால்‌ மீண்டும்‌ வீரநாராயண புரத்துக்கே வாரும்‌ என்று கூறிவிடவே, அவரும்‌ ஆழ்‌வார்‌, ஆதிப்பிரான்‌ அனுமதி பெற்று, வீரநாராயணபுரம்‌ வந்து மன்னனார்‌ திருமுன்பு ஓதினார்‌. அதன்‌ அழகிலும்‌ சுவையிலும்‌ ஈடுபட்டு மன்னனார்‌ இத்தகைய உயர்ந்த செல்வம்‌ மீண்டும்‌ மறைந்துவிடக்கூடாது. நீர்‌ இவற்றை இயலும்‌ இசையுமாக்கும்‌ என்று அர்ச்சகர்‌ மூலமாகக்‌ கட்டளையிட்டு நியமித்தார்‌. நாதமுனிகளும்‌ தன்‌ மருமக்களான கீழையகத்தாழ்வான்‌ (கிருஷ்ணமாச்சார்‌யார்‌] மேலையகத்தாழ்வான்‌ (வரதாச்சார்யார்‌] இவர்களை அழைத்து, அவர்களின்‌ மூலமாக இன்கவிபாடும்‌ பரமகவிகளாக, திவ்யகானத்திலேயமைத்து, இயலும்‌ இசையுமாக பாடுவித்தருள அது உலகத்தில்‌ மீண்டும்‌ சிறப்புற்று எல்லோராலும்‌ பாடப்பட்டுப்‌
பரவி வந்தது.கோயில்களில்‌ உற்சவ காலங்களில்‌ இசையுடன்‌ அபிநயித்துப்‌ பாடவைத்தனர்‌. இவ்வாறு ஆரம்பித்த அரையர்சேவை இன்றும்‌ ஸ்ரீரங்கம்‌, ஆழ்வார்‌ திருநகரிபோன்ற முக்கிய வைணவ ஸ்தலங்களில்‌ மட்டும்‌ நடைபெறுகிறது. வேதவியாசர்‌ அருளிய சூத்திரத்தின்‌ விரிவாக்கமாக அமைந்தது நாதமுனிகள்‌ அருளிய யோக ரஹஸ்யங்‌கள்‌ என்பர்‌. தியான யோகமே இறைவனையும்‌ ஜீவனையும்‌ இணைக்கின்ற பாலமாகும்‌. இந்த உணர்வு எல்லோராலும்‌ பெற முடியாது. மனதில்‌ தானாகவே உருவாக வேண்டும்‌. இந்த உள்‌ளொளியே உலகுக்கு நித்தியப்‌ பிரகாசாதிபரன்‌ எனச்‌ சுயம் பிரகாசியாக உள்ளது.-இவருடைய முக்கிய சிஷ்யர்கள்‌ உய்யக்கொண்டாரும்‌ (புண்‌டரீகாக்ஷர்‌) குருகைக்‌ காவலப்பனுமாவார்கள்‌. அவர்கள்‌ மூலமாகத் திவ்யப்பிரபந்தத்தையும்‌ யோக ரகஸ்யத்தையும்‌ பிரசாரம்‌ செய்‌வித்து, இனிப்பிறக்க இருக்கும்‌ தன்னுடைய பேரனான யமுனைத்‌துறைவருக்கு இவற்றை அளிக்கும்படி நியமித்து விட்டு குருகைக்‌ காவலப்பன்‌ கோயிலிலேயே பரம பதித்தருளினார்‌. இவர்‌ சுமார்‌ 102 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌. இவர்‌ கி.பி, 822ல்‌ ஆனி மாதம்‌ ஏழாம்‌தேதி பிறந்தார்‌. இவர்‌ பிறந்த இடம்‌ சோழ நாட்டில்‌ வீரநாராயணபுரம்‌, பிறந்த குலம்‌ சொட்டைக்குலம்‌. இவருக்குத்‌ தகப்பனார்‌ இட்ட பெயர்‌ ரெங்கனாதன்‌ என்பது. இவர்‌ யோகாப்யாசம்‌ கைவந்தவராகையாலே இவரை ரெங்கநாதமுனிகள்‌ என்றனர்‌.
அப்பெயரைச்‌ சுருக்கி நாதமுனிகள்‌ என்றும்‌ அழைத்தனர்‌. ஆளவந்தார்‌ என்ற யமுனைத்துறைவர்‌ அருளிய ஸ்தோத்திர ரத்னத்தின்‌ கடைசி ஸ்லோகத்தில்‌ 'என்னுடைய நடத்தையை நினைக்காமல்‌, உன்னுடைய திருவடித்தாமரைகளில்‌ இயற்கையாக
இருக்கும்‌ மேலான அன்பிற்கு எல்லை நிலமாயிருப்பவரும்‌,ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவரும்‌, எனக்குப் பாட்டனாருமாகிய நாதமுனிகள்‌ கடாக்ஷித்து எனக்கு அருள்‌ புரிய வேண்டும்‌" என்கிறார்‌. நாதமுனிகள்‌ வீட்டில்‌ இல்லாதபோது வில்லேந்திய இருவீரரும்‌, ஒரு பெண்ணும்‌ ஒரு குரங்கும்‌ அவரைத் தேடி வந்துவிட்டுப்‌ போனதாக வீட்டிலுள்ளவர்கள்‌ சொன்னதாகவும்‌, அவ்வாறு வந்தவர்‌ ஸீதா ராமலட்சுமண அனுமானாகத்தான்‌ இருக்க வேண்டும்‌ என எண்ணி அவர்களைத்‌ தொடர்ந்து அவர்கள்‌ போன இடமான கங்கைகொண்ட சோழபுரம்‌ சென்று அங்கேயே தேகப்பிராப்தி அடைந்தார்‌ என்பதும்‌ கர்ண பரம்பரைச்செய்தி. நாதமுனி அதிக நாட்கள்‌ வாழ்ந்தால் கூட அவர்‌ வாழ்நாளிலேயே ஒரே மகனை இழக்கும்‌ அவல நிலை ஏற்பட்டதாகச்‌ சொல்லப்படுகிறது. அவரது மகன்‌ ஈஸ்வர முனியின்‌ மகனான யமுனாச்சாரியார்‌ இளவயதிலேயே மிகக்‌ கீர்த்தி வாய்ந்தவராக இருந்தார்‌.

ஆரப்பொருள்‌ தென்குருகைப்பிரான்‌, அமுதத் திருவாய்‌ ஈரத்தமிழின்‌ இசையுணர்ந்தோர்கட்டு, இனியவர்தம்‌
சீரைப்‌ பயின்றுய்யும்‌ சீலங்கொள்‌ நாதமுனியை நெஞ்சால்‌
வாரிப் பருகும்‌ இராமானுசன்‌ என்தன்‌ மாநிதியே
(இரநூந்‌. 20)
தெருளுற்ற ஆழ்வார்கள்‌ சீர்மை அறிவாரார்‌?
அருளிச் செயலை அறிவாரார்‌? — அருள்‌ பெற்ற
நாதமுனி முதலான நம்‌ தேசிகரை யல்லால்‌
பேதை மனமே! உண்டோ பேசு
.(உபதே. 36)

நாதமுனிகள்‌ அருளிய நம்மாழ்வார்‌, பெரியாழ்வார்‌ திருவாய்மொழி, மதுரகவியாழ்வார்‌ இவர்களைப் பற்றி யருளிய தனியன்களில்‌ மதுரகவி பற்றிய தமிழ்த் தனியன்‌ வருமாறு.
வேறொன்றும்‌ நானறியேன்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த
மாறன்‌ சடகோபன்‌ வண்குருகூர்‌ ஏறு – எங்கள்‌
வாழ்வாமென்றேத்தும்‌ மதுரகவியார்‌ எம்மை
ஆழ்வார்‌ அவரே அரண்‌
–என்பதாகும்‌. இவர்‌ யோகத்தில்‌ இருக்கும் பொழுதே குருகைக்‌
காவலப்பன்‌ கோயிலில்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனார்‌ திருவடிகளில்‌ சேர்ந்தார்‌ என்று கூறப்படுகிறது.

ஆனிதனில்‌ அனுடத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆளவந்தார்க்குபதேசம்‌ அருளி வைத்தான்‌ வாழியே.
பானு தெற்கில்‌ கண்டவன்‌ சொல்‌ பலவுரைத்தான்‌ வாழியே
பராங்குசனார்‌ சொற்பிரபந்தம்‌ பரிந்து கற்றான்‌ வாழியே
கானமுறத் தாளத்தில்‌ கண்டுறைத்தான்‌ வாழியே
கருணையினால்‌ உபதேசக்கதியளித்தான்‌ வாழியே
நானிலத்தில்‌ குருவரையை நாட்டினான்‌ வாழியே
நலந்திகழும்‌ நாதமுனி நற்பதங்கள்‌ வாழியே

நாதமுனிகளின்‌ பிரதான சீடரான உய்யக் கொண்டார்‌, என்ற புண்டரீகாக்ஷர்‌, நாதமுனிகள்‌ அவதரித்து 63 வருடங்களுக்குப் பின்‌னர்‌ கி.பி. 886-ல்‌ சித்திரை மாதம்‌ கார்த்திகை நட்சத்திரத்தில்‌ திருவெள்ளறை என்னும்‌ திருத்தலத்தில்‌ ஸ்ரீ வைஷ்ணவ பிராமண குலத்தில்‌ பிறந்தவர்‌, ஆச்சார்ய பரம்பரையில்‌ நாதமுனிகளாகிய மலையிலிருந்து விழுகிற அருவியாக அமைந்தவர்‌ உய்யக்கொண்‌டார்‌. ஆதி காலத்தில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ காடாக இருந்த காலத்திலே ஸ்ரீராமபிரானுக்கு முன்னோனாகிய சிபிச்சக்கவர்த்தியால்‌, மத்தியப் பிரதேசத்திலிருந்து 2700 ஸ்ரீ வைஷ்ணவ பிராமண குடும்பங்கள்‌ திருவெள்ளறையில்‌ எழுந்தருளியிருக்கும்‌ புண்டரீகாக்ஷப்‌ பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதற்காகக்‌ கொண்டு வரப்பட்டனர்‌. இவ்வாறு ஆதி காலத்திலேயே ஏற்பட்ட புனிதத்தல மாகையால்‌ இதை இன்றும்‌ மக்கள்‌ ஆதித் திருவெள்ளறை என்று அழைக்கின்றனர்‌. ஆதிகாலத்திலேயே சோழ தேசத்திற்கு வந்தவர்களாதலால்‌ சோழியர்கள்‌ என்றழைக்கப்பட்டனர்‌. இத்தகைய ஸ்ரீ
வைஷ்ணவப் பிரமாண குலத்தில்‌ பிறந்தவர்‌ உய்யக் கொண்டார்‌. ஞான ஜன்மமே தேக ஜன்மத்தை விடச்‌ சிறந்ததாகக்‌ கருதப்பட்டு வந்த காலமாதலால்‌ உய்யக்கொண்டாரது ஆச்சார்ய, சிஷ்யர்களைப்‌ பற்றிக்‌ குறிக்கப்பட்டது போல, அவரது பெற்றோர்களைப்‌ பற்றியும்‌ மக்களைப்‌ பற்றியும்‌ விவரங்கள்‌ குறிக்கப்படவில்லை. சிறந்த வைணவ பக்தர்களுக்குக்‌ குமாரராக அவதரித்தவர்‌ என்றும்‌ பெற்‌றோர்களால்‌ முறைப்படி புண்டரீகாக்ஷன்‌ என்று திருநாமம்‌ சூட்டப்‌பட்டு உரிய காலங்களில்‌ அன்னப் பிரசானம்‌ செளனம்‌, உபநயனம்‌ முதலான சடங்குகளெல்லாம்‌ செய்யப்பட்டு தக்க ஆச்சாரியனை எதிர்நோக்கிக்‌ காத்திருந்தவர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.
இந்நிலையில்‌ அவரை நாதமுனிகளிடத்தில்‌ சீடராய்‌ இருந்து பாடங்கேட்குமாறு அனுப்பிவைத்தனர்‌. அந்நாளிலிருந்து நாதமுனிகளையல்லாது அறியாதவராய்‌, குருகுலவாசம்‌ செய்து வந்தார்‌.-நாதமுனிகள்‌ சிஷ்யர்களில்‌ முக்கியமானவர்கள்‌ உய்யக்கொண்டாரும்‌, குருகைக்‌ காவலப்பனுமேயாவார்கள்‌. இதில்‌ குருகைக்‌ காவலப்பன்‌, நாதமுனிகள்‌ அருகில்‌, எப்போதும்‌ யோகத்தில்‌ எழந்தருளியிருக்கும்‌ இடத்திற்கு அருகிலேயே யோகத்திலே எழுந்‌தருளியிருந்தார்‌. நாதமுனிகளிடம்‌ இரு நிதிகள்‌ இருந்தன. பகவத்‌ பிராப்தக்கு (முக்திக்கு) உறுப்பான பக்தி யோகம்‌ ஒன்று. பகவத்‌
குண ஸ்வரூப விபூதிகளைத்‌ தெளியப் பேசும்‌ நாலாயிரம்‌ பாசுரங்களடங்கய திவ்யப்பிரபந்தம்‌ மற்றொன்று. முதல்‌ நிதியினிலால்‌ சேதனன்‌ ஒருவன்தான்‌ முக்தி யடைய முடியும்‌. இரண்டாவது நிதியினாலே உலகத்தையே உய்விக்க முடியும்‌. இவற்றுள்‌ எது வேண்டும்‌ என்று குருகைக்‌ காவல் அப்பனை வினவினார்‌ நாதமுனிகள்‌.-நான்‌ பக்தி யோகத்தைப் பெற்று உய்ந்து போகிறேன்‌ என்றார்‌ அவர்‌. அதன்‌ படியே உபதேசம்‌ பெற்று உஜ்ஜீவனமடைந்தார்‌. நாதமுனிகள்‌ புண்டரீகாஷரையும்‌ வினவ, அவர்‌ ‘பிணங் கெடக்க மணம்‌ புணருவாருண்டோ? உலகமே ஆத்ம நாசமடைந்து, பிணக்காடாயிருக்கும் பொழுது அடியேன்‌ ஒருவன்‌ பெருமானோடு ஆத்ம விவாஹம்‌ செய்து கொண்டு மோட்சமடைவது சரியாகுமோ, அடியேன்‌ எப்படியானாலும்‌ பரவாயில்லை. உலகம்‌ உய்யும்‌ வகையாகத்‌ திவ்யப் பிரபந்தங்களை உபதேஸிப்பீர்‌’ என்றார்‌.

இதைக் கேட்ட நாதமுனிகள்‌ அவரை வாரி அணைத்துப்‌ “புண்‌டரீகாக்ஷ்ரே! நீரே உலகையும்‌, உலகை உடையவனான நாராயணனையும்‌, அவனைச்‌ சொல்லும்‌ அருளிச் செயல்களையும்‌ அதைப்‌ பெற்ற என்னையும்‌ உய்யக் கொண்டவர்‌. உம்மாலே தான்‌ நான்‌அரும்பாடு பட்டுப் பெற்ற அத்தமிழ்‌ மறைகள்‌ உலகெங்கும்‌ பரவி அனைவரையும்‌ உய்விக்கப்‌ போகின்றன. இன்று முதல்‌ நீர்‌ ‘உய்யக் கொண்டார்‌’ என்ற திருநாமத்தாலேயே விளங்கக்‌ கடவீர்‌’
என்று அருளிச்‌ செய்து திவ்யப் பிரபந்தங்களை உய்யக்கொண்டாருக்கு உபதேசித்தருளினார்‌, உய்யக்கொண்டாரது இத்தகைய சுயநலம்‌ பேணாத பரந்த மனப்பான்மையினால்‌ இன்று நாம்‌ அருளிச்‌ செயல்களாலேயே உய்ந்து போகிறோம்‌. இதனாலேயே இவர்‌ ஸ்ரீ வைஷ்ணவ சமூகம்‌ முழவதற்கும்‌ பிரேமாச்சாரியராய்‌, நாதமுனிகளுக்கு பின்‌ அனுசந்திக்கப்படுகிறார்‌.
நாதமுனிகள்‌ யோக திசையில்‌ நம்மாழ்வாரிடம்‌ திருவாய்‌மொழி உபதேசம்‌ பெறும் பொழுது ‘பொலிக பொலிக: என்னும்‌ திருவாய்மொழி வந்தவுடன்‌ கலியும்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌:என்று நான்‌ சொன்னதை மெய்யாக்க ஒரு மஹான்‌ அவதரிக்கப் போகிறார்‌ என்றார்‌ ஆழ்வார்‌. அவரைச் சேவிக்க வேண்டும்‌ என்று நாதமுனி வேண்ட, ஆழ்வாரும்‌ அப்படியே இராமானுஜரின்‌ உருவைச்‌ சேவை சாதிக்க தேவரீரைக்‌ காட்டிலும்‌ அழகிய இந்தத்‌ திருமேனியை அடியேன்‌ எப்பொழுதும்‌ சேவித்து வழிபட வேண்‌டும்‌ என்று நாதமுனி பிரார்த்திக்க ஆழ்வாரும்‌ சிற்பிகளை கனவு மூலமாக நியமித்து எம்பெருமானாருடைய விக்ரகத்தைச்‌ செய்‌வித்து நாதமுனிகளிடம்‌ கொடுத்தருளி, இவரை நம்முடைய -அடியாக நினைத்திரும்‌ என்று அருளினார்‌ என்று நாயனாராச்சான்‌ பிள்ளை என்ற வைஷ்ணவ சீலர்‌ அருளிச் செய்வார்‌.
தம்முடைய அந்திம காலத்திலே நாதமுனிகள்‌, உய்யக்கொண்டாரிடம்‌ ‘ஒருவருக்கும்‌ வெளியிடாதே கொள்ளும்‌ என்று அந்தப்‌ பவித்திரமான விக்ரகத்தைக்‌ கொடுத்து ‘இதை என்‌ பேரனுக்கு. நான்‌ விரும்பின விஷயம்‌’ என்று கொடும்‌ என்று கூறி ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌ என்று சடகோபன்‌ பொன்னடியான அவ்விக்ரகத்தைத்‌ தியானம்‌ பண்ணிக் கொண்டு இறைவனடி சேர்ந்தார்‌.
உய்யக்கொண்டாரது கடைசிக்காலம்‌ வரை நாதமுனிகளது பேரன்‌ அவதரிக்காததால்‌, அவ் விக்ரகத்தைத்‌ தம்முடைய பிரதான சீடரான மணக்கால்‌ நம்பியிடம்‌ கொடுத்து நாதமுனிகளது பேரன்‌ யமுனைத்‌ துறைவரிடம்‌ அதை அளிக்கும்படி கட்டளையிட்டார்‌ என்றும்‌ அவரும்‌ அவ்வண்ணமே அளித்தார்‌ என்றும்‌ கூறுவர்‌.
உய்யக்கொண்டார்‌ சீடர்கள்‌ ஐந்துபேரில்‌ பிரதானமான மணற்‌கால்‌ நம்பியின்‌ இயற்பெயர்‌ ‘ஸ்ரீராமன்‌’ என்பது. இவர்‌ உய்யக்‌கொண்டார்‌ திருவடிகளில்‌ 13 வருடகாலம்‌ சகல கைங்கர்யங்களும்‌ செய்து கொண்டிருந்தார்‌. ஒரு சமயம்‌ உய்யக் கொண்டாரது மனைவி இறந்துவிடவே திருமாளிகை (வீடு) காரியமெல்லாமும்‌ தானே செய்துவந்த காலத்தில்‌ ஒரு நாள்‌ உய்யக் கொண்டாரது சிறுமிகள்‌ இருவரையும்‌ நீராட்டி அழைத்து வரும் பொழுது வழியில்‌ வாய்க்கால்‌ சேறாயிருப்பதைக்‌ கண்டு அவர்கள்‌ திகைத்துநிற்க, தாம்‌ படியாய்க்கிடந்து, அவர்களைத்‌ தன்‌ முதுகிலே கால்‌ வைத்து நடக்குமாறு செய்து கூட்டிப் போக, உய்யக் கொண்டார்‌,தம்‌ புத்திரிகள்‌ கால்‌ சுவடுகள்‌ (மணற்கால்‌] அவர்‌ முதுகில்‌ பொலிய நின்றதைப் பார்த்து அவரை மணற்கால்‌ நம்பி என்றும்‌ அவர்‌ பிறந்த ஊருக்கு மணற்கால்‌ என்றும்‌ திருநாமம்‌ சாத்தினார்‌.இத்தகைய ஆச்சார்ய நிஷ்டையினால்‌ உய்யக் கொண்டாரது போற்‌றுதலுக்கும்‌ பாத்திரரானார்‌ மணற்கால்‌ நம்பி. உய்யக்கொண்டாரது அந்திம காலத்தில்‌ இந்த வைணவ தர்ஸனத்தை நடத்துபவர்‌ யார்‌ என்று கேட்க மற்ற முதலிகளையும்‌ (ஸ்ரீவைஷ்ணவர்கள்‌) கூட்டிக் கொண்டு நீரே நடத்துவீர்‌: பின்னர்‌ நாதமுனிகளுக்குப்‌ பேரன்‌ பிறந்த பின்னர்‌ அவருக்கு யமுனைத் துறைவர்‌என்ற பெயரை வழங்கி இந்த எம்பெருமானார்‌ விக்ரகத்தையும்‌ கொடுத்து தகுந்த ஆச்சாரியரைத்‌ தேடிக்கண்டுபிடித்து அவரிடம்‌ தர்ஸன நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டியது அவரது கடமை என்று நாதமுனிகள்‌ நியமித்ததாகச்‌ சொல்லி அவருக்கு எல்லா அர்த்தங்களையும்‌ உபதேசியும்‌ என்று கூறி நாதமுனிகள்‌ திருவடிகளை நினைத்தவாறே திருநாட்டுக்கு ஏகினார்‌. உய்யக் கொண்டார்‌ கிரந்தம்‌ எதுவும்‌ எழுதினதாகத்‌ தெரியவில்லை. இவரது வேறு பெயர்கள்‌ புண்டரீகாக்ஷர்‌, பத்மாக்ஷர்‌, அரவிந்தாக்ஷர்‌ என்பர்‌.
இவரது ஆச்சாரியார்‌ நாதமுனிகள்‌ என்று கண்டோம்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகின்றது. இவர்‌ அருளிய திருப்பாவைத் தனியன்கள்‌.

அன்ன வயல்‌ புதுவை ஆண்டாள்‌ அரங்கற்குப்‌
பன்னு திருப்பாவை பல் பதியம்‌ – இன்னிசையால்‌
பாடிக் கொடுத்தாள்‌ நற் பா மாலை பூ மாலை
சூடிக்‌ கொடுத்தாளைச்‌ சொல்லு
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவாய்‌
பாடி யருள வல்ல பல் வளையாய்‌ – நாடிநீ
வேங்கடவெற் கென்னை விதி யென்ற இம் மாற்றம்‌
நாம்‌ கடவா வண்ணமே நல்கு:

நாதமுனிகள்‌ உய்யக் கொண்டாரிடம்‌, குளப்படியில்‌ நீரைத் தேக்கினால்‌ வற்றிப் போகும்‌. வீராணத்து ஏரியில்‌ தேக்கினால்‌ நாட்டுக்கு உபகாரமாகலாம்‌. ஆகவே இந்தப்‌ பிரமேய ரத்னத்தை ஆளவந்தாருக்கு உபதேசியும்‌ என்று சொன்னதாகச்‌ சொல்லுவர்‌.

வால வெய்யோன்‌ தனை வென்ற வடிவழகன்‌ வாழியே
மால் மணக்கால்‌ நம்பி தொழும்‌ மலர்ப் பதத்தான்‌ வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்பான்‌ வாழியே
சித்திரையில்‌ கார்த்திகை நாள்‌ சிறக்க வந்தான்‌ வாழியே
நாலிரண்டும்‌ ஐயைந்தும்‌ நமக்குரைத்தான்‌ வாழியே
நாலெட்டின்‌ உட்பொருளை நடத்தினான்‌ வாழியே
மாலரங்க மணவாளர்‌ வளமுரைப்பான்‌ வாழியே
வையமுய்யக்‌ கொண்டவார்‌ தாள்‌ வையத்தில்‌ வாழியே
நாலிரண்டு
– திருவெட்டெழுத்துதிருமந்திரம்‌
ஐயைந்து இருபத்தைந்து எழுத்துக்களுள்ள த்வையம்‌ மந்திரம்‌
நாலெட்டு – முப்பத்திரண்டு எழுத்துக்களுள்ள சரம ஸ்லோகம்‌-ரகஸ்ய த்ரயம்‌ சொன்னபடி.

நாதமுனிகளுக்கு மேலையகத்தாழ்வான்‌ (வரதாச்சார்யார்‌,கீழையகத்தாழ்வான்‌ (கிருஷ்ணமாச்சார்யார்‌] என்ற மருமக்கள்‌ இருவர்‌ உண்டு. இவர்களைப் பற்றி வேங்கட சேஷாச்சாரியார்‌ என்பவர்‌ வரதாச்சார்யார்‌ என்பவர்‌ ஸ்ரீதர யோகாபதி என்றும்‌, கிருஷ்ணமாச்சார்யார்‌ ஸ்ரீதர யோகக்கல்பகத்தரு என்னும்‌ பெயருடைய
யோக சாஸ்திரங்களைச்‌ செய்தனர்‌ என்பார்‌. வரதாச்சார்யார்‌ குமார ரான நிர்மல தாஸர்‌ ஸ்ரீமத்நாதமுனிகள்‌ அருளிச் செய்த யோகசாராப்ரத்துக்கு விருத்தி (விளக்கம்‌) அருளிச்செய்தார்‌. இவர்‌ குமாரரான ஞான வராஹாச்சாரியார்‌ நாதமுனிகளுடைய யோக சாஸ்திரத்‌துக்கும்‌ பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கும்‌, ஐக கண்டயம்‌ செய்தார்‌.
குருகைக் காவலப்பன்‌ என்னும்‌ இவர்‌ குமாரரான குருகேசர்‌ ஸ்ரீஆளவந்தாருக்கு யோக சாஸ்திரத்தை உபதேசிக்க விரும்பி நான்‌ நித்ய விபூதிக்கு எழுந்தருளும்போது (மரணமடையும்‌) வருமாறு நியமித்திருக்க அக் காலத்தை ஆளவந்தார்‌. மறந்து வராமலிருந்து விட்டபடியால்‌ ஸ்ரீ குருகைக்காவலப்பன்‌ வரை வந்த யோகானுஷ்‌டானம்‌ நின்று விட்டது.
குருகைக்‌ காவலப்பன்‌ நாதமுனிகளின்‌ மருமகனின்‌ பூட்டன்‌ -அக் காலத்தில்‌ தமக்குத்‌ தெரிந்த ஞான சாஸ்திரங்களைப்‌ பிறருக்குச்‌ சொல்வதில்‌ எவ்வளவு கண்டிப்பாக இருந்தார்கள்‌ என்பதை அறிகிறோம்‌. இராமானுஜர்‌ காலத்தில்‌ எவ்வாறு இந்த நிலை மாற்றமடைந்தது என்பதைக் காண இருக்கிறோம்‌. நாதமுனிகள்‌ தன்னுடைய மருமக்களான கீழையகத்தாழ்வாரையும்‌, மேலையகத்தாழ்‌வாரையும்‌ அழைத்து ஆழ்வார்‌ பாசுரங்களை இயலும்‌ இசையுமாகப்‌ பாடுவித்தருளிய வைபவத்தை ஸ்ரீவேதாந்த தேசிகர்‌ குருபரம்‌பரா ஸாரத்தின்‌ இறுதிப்பகுதியில்‌
காளம்‌ வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்‌
தாளம்‌ வழங்கித்‌ தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்‌
மூளூம்‌ தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளூம்‌ தொழுதெழுவோம்‌ நமக்கார்‌ நிகர்‌ நானிலத்தே.-
என்று அவர்கள்‌ இருவரையும்‌ காளம்‌ வலம்புரி போல வைத்து இனிய தேவ கானத்தை அமைத்துக்‌ கொடுத்த நாதமுனி என்று புகழ்கிறார்‌.

குருகைக்‌ காவலப்பன்‌ நாதமுனிகளின்‌ சிஷ்யரென்றும்‌ அவரிடமிருந்து யோக
ரகஸ்யத்தைக்‌ கேட்டுப் பெற்றார்‌ என்றும்‌ முன்னரே கண்டோம்‌.ஆளவந்தாருக்குக்‌ குருகைக்‌ காவலப்பன்‌ கூறியதாகச்‌ சொல்லும்‌ ஒரு செய்தி உண்டு. அப்பன்‌ ஸ்ரீபாதத்தில்‌ ஒரு ரகஸ்ய விசேஷம்‌உண்டு என்று மணற்கால்‌ நம்பி கூற அதைக்கேட்க வேண்டும்‌ என்று ஆளவந்தாரும்‌, குருகைக்‌ காவலப்பன்‌ ஒரு குட்டிச்சுவரருகே யோகத்திலே இருக்கும்‌ இடத்திற்கு வந்தார்‌. ஆளவந்தார்‌ அவரதுசமாதி நிலையைக்‌ கலைக்க விரும்பாது மறைந்து நிற்க, அப்பனும்‌ யோகத்திலிருந்து கலைந்து கண்விழித்துப் பார்த்து இங்கு சொட்‌டைக்‌ குலத்திலிருந்து வந்தவர்‌ யாரேனும்‌ உண்டா என்று .கேட்க ஆளவந்தார்‌ நாங்கள்‌ மறைந்திருந்தது தேவருக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டாராம்‌. அதற்குக்‌ குருகைக்‌ காவலப்பனும்‌ நானும்‌ பெருமாளும்‌ தனித்திருக்கும் பொழுது பெரிய பிராட்டியார்‌ வந்‌தால்‌ கூடக்‌ கவனிக்காத எம்பெருமான்‌, என்‌ கழுத்தை அமுக்கி நாலு தரம்‌ எட்டிப் பார்த்தார்‌. அப்படி அவர்‌ பார்த்தால்‌ சொட்டைக்‌குடியில்‌ யாரேனும்‌ வந்திருக்க வேண்டும்‌ என்று நினைத்தேன்‌ என்றாராம்‌.-ஜகத்திற்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள தொடர்பு எத்தகையது என்று ஒருவர்‌ அப்பனைக்‌ கேட்டபொழுது இந்த சரீரத்திற்கும்‌, இதற்கு ஈஸ்வரனாயுள்ள ஜீவாத்மாவிற்கும்‌ உள்ள தொடர்பாகிற சரீராத்மாத்‌ தன்மையே; உலகிற்கும்‌ ஸர்வேஸ்வரனுக்கும்‌ உள்ள தொடர்பாகும்‌ என்று கூறினாராம்‌. அதே மனிதன்‌ அப்பனைப்‌ பார்த்து எப்பொழுதும்‌ எம்பெருமானை நினைத்துக்‌ கொண்டிருக்‌கும்‌ நீர்‌ அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்‌ என்று வேண்ட, அதற்கு அவர்‌, நான்‌ உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்லுகிறேன்‌. நீ அவனை மறக்க எனக்கு வழி சொல்கிறாயா என்றாரம்‌. இதன்‌ பொருள்‌, எந்தப்பொருளுமே எம்பெருமானுக்குச்‌ சரீரியாய்‌ இருப்பதால்‌ சரீரமாய்‌ விசேஷமான அவனுடைய நினைவே வரவேண்டியிருக்கும்‌. ஆகவே உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களும்‌ பகவானது சரீரத்தின்‌ பகுதிகளே, பார்க்குமிடமெங்கும்‌ நீக்கமற நிறைந்திருப்பவன்‌ அவன்‌ என்பது கருத்து. ஆளவந்தாரால்‌ இவரிடமிருந்து யோகானுஷ்டா னத்தைப் பெற முடியாமல்‌ போன சம்பவத்தை முன்னரே பார்த்தோம் –

குருகைக்‌ காவலப்பன்‌ பிறந்த இடம்‌ பாண்டிய நாட்டிலுள்ள திருக்குருகூர்‌. பிறந்த நட்சத்திரம்‌ தை மாதத்தில்‌ விசாகம்‌. அவர்‌ இருந்த இடம்‌ நாதமுனிகளது திருப்பள்ளி. அது அன்று முதலாக சோழ தேசத்திலே காவிரிக் கரையிலே குருகைக்‌ காவலப்பன்‌ கோயில்‌ என்றழைக்கப்படுகிறது. அவருடைய ஆச்சார்யார்‌ நாதமுனிகள்‌. அவருடைய திருவாராதனப்‌ பெருமாள்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனார்‌. இவரது இளமைப்பெயர்‌ புண்டரீகாக்ஷர்‌. இவர்‌ 157ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகிறது. இவர்‌ அருளிய மூன்றாம்‌ திருவந்தாதித் தனியன்‌
சீராரும்‌ மாடத்‌ திருக்கோவலூரதனுள்‌
காரார்‌ கருமுகிலைக்‌ காணப்புக்கு – ஓராத
திருக்கண்டேன்‌ என்றுரைத்த சீரான்‌ கழலே
உரைக்கண்டாய்‌ நெஞ்சே உகந்து
:-என்பதாகும்‌.

மகரமதில்‌ விசாகம்‌ நாள்‌ வந்துதித்தான்‌ வாழியே
மாறன் தாள்‌ நாதமுனி மலரடியோன்‌ வாழியே
நிகரில்‌ நன்‌ ஞான யோகம்‌ நீண்டு செய்வோன்‌ வாழியே
நிர்ணயமா ஐந்து பொருள்‌ நிலையறிவான்‌ வாழியே
அகமறுக்குமிராமர்‌ பதம்‌ ஆசையுள்ளோன்‌ வாழியே
ஆழ்வார்கள்‌ மறையதனை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே
செகதலத்தில்‌ குருகூரில்‌ செனித்த வள்ளல்‌ வாழியே
செய்குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌ வாழியே

திருக்கண்ணமங்கையாண்டான்‌ நாதமுனிகளின்‌ முக்கிய சிஷ்யர்கவில்‌ ஒருவர் – இவர்‌ திருக்‌கண்ணமங்கை என்ற ஊரில்‌ பிறந்தவர்‌. இவரைப் பற்றிய பல செய்திகள்‌ பல கிரந்தங்களில்‌ உள்ளன. நாதமுனிகள்‌ இவருக்குத்‌ திருவாய்‌ மொழி உபதேசிக்கும்பொழுது ‘பொலிக பொலிக’ என்ற பாசுரம்‌ வந்தபொழுது நம்மாழ்வார்‌ அளித்துள்ள இராமானுஜரது
விக்ரகத்தின்‌ விருத்தாந்தங்களை யெல்லாம்‌ கூறக்கேட்டு, அத்தகைய பேற்றைப் பெற்ற தங்களுடைய சீடனான எனக்கு ஒரு குறைவும்‌ இல்லை என்று கூறினார்‌ என்பர்‌.-ஒரு நாள்‌ அவர்‌ ஒரு மகிழ மரத்தடியில்‌ உள்ள சருகுகளைப்‌ பெருக்கிச்‌ சுத்தம்‌ செய்து கொண்டிருந்த பொழுது ஒரு நாஸ்திகர்‌ அவரிடம்‌ உமக்கும்‌ எனக்கும்‌ என்ன வித்யாசம்‌ என்று கேட்க,
அவர்‌ பெருக்க இடமும்‌ பெருக்காத இடமும்‌ போல என்றாராம்‌.
“உபாயத்தை நிலையிட்டவர்கள்‌, பிராட்டி, திரெளபதி, திருக்‌கண்ணமங்கை ஆண்டான்‌ என்பவர்கள்‌’ என்று பெரியவாச்சான்‌பிள்ளை மாணிக்கமாலை என்ற நூலில்‌ அருளிச் செய்துள்ளார் . அவன்‌ தன்‌ சுயவியாபாரத்தை விட்டான்‌ என்ற பதத்திற்கு உரை கூறும்பொழுது, ஒரு சேவகனது நாயை ஒரு சேவகன்‌ அடிக்க, அதைப்‌ பொறாமல்‌ அடித்தவனை எதிர்த்துப்‌ பொருது, அவனையும்‌ கொன்று தானும்‌ குத்திக் கொள்வதாக இருக்கிறதைப்‌ பார்த்து, ஒரு சாதாரண மனிதன்‌ ஒரு தாய்க்காகத்‌ தன்‌ உயிரையும்‌ இழக்க இருக்கப்‌ பரம சேதனான இறைவன்‌ அவனடியாரை எவ்வளவு நிச்சயமாகப்‌ பரிபாலிப்பான்‌ என்று கருதித்‌ தன்‌ சுய வியாபாரத்தை விட்டுத்‌ திருக்கண்ணமங்கையில்‌ பக்தராகி, திருவாசலில்‌ அடைக்கலம்‌ புகுந்தார்‌. எறும்பியப்பா என்ற பக்தர்‌ திருக்கண்ண மங்கையாண்டானைப்‌ போலப்‌ பற்றற்றிருந்தால்‌ அவனுக்கு உலக அபவாதமும்‌ வராது. சாஸ்திர விரோதமும்‌ வராது, லோக அபராதமும்‌ வராது, பகவத நிக்ரகமும்‌ வராது என்றார்‌. இவர்‌ அருளிய நாச்சியார்‌ திருமொழித்தனியன்‌,
அல்லிநாட்டாமரைமேல்‌ ஆரணங்கின்‌ இன்துணைவி
மல்லி நாடாண்ட மடமயில்‌ – மெல்லியலாள்‌
ஆயர்குல வேந்தன்‌ ஆகத்தாள்‌ தென்புதுவை வேயர்‌ பயந்த விளக்கு’ –
என்பதாகும் –

உய்யக்கொண்டாரது சிறந்த சீடரான மணற்கால்‌ நம்பி என்ற ஸ்ரீ ராமமிஸ்ரர்‌, உய்யக்கொண்டார்‌ அவதரித்து 33 வருடங்களுக்குப்‌ பின்னர்‌ கி.பி. 929-ல்‌ லால்குடி அருகே இப்பொழுது மணற்கால்‌ என்று கூறப்படும்‌ கிராமத்தில்‌ அந்தணர்‌ குலத்தில்‌ மாசி மாதம்‌ மக நட்சத்திரத்தில்‌ பிறந்தார்‌. இவருக்கு எதனால்‌ மணற்கால்‌ நம்பி என்ற பெயர்‌ வந்தது என்பதை முன்னரே கண்டோம்‌. இவர்‌ தம்‌ ஆச்சார்யரான உய்யக்கொண்டார்‌ நியமனப்படி நாதமுனிகள்‌ பேரரான ஆளவந்தாரைத்‌ திருத்திப்‌ பணிகொண்டு அவருக்குத்‌ திவ்யப்‌ பிரபந்தங்களையும்‌ ரகஸ்ய த்ரயத்தையும்‌ நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற பவித்ரமான ராமானுஜ விக்ரகத்தையும்‌ கொடுத்தருளினார்‌.-அவரது அவதார ஸ்தலத்தில்‌ உள்ள அவரது திருவிக்ரகம்‌ திரிதண்‌டத்துடன்‌ காணப்படுவதால்‌ அவர்‌ கடைசிக் காலத்தில்‌ சந்யசித்திருக்க வேண்டும்‌ என்று தெரிகிறது. இவரும்‌ கிரந்தம்‌ எதுவும்‌ எழுதினதாகத்‌ தெரியவில்லை.
இவரது சீடர்கள்‌ ஆளவந்தார்‌ என்ற யமுனாச்சாரியார்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌, தெய்வத்துக்‌ கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, சிறு புள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலைதாஸர்‌, வங்கிபுரத்தாச்சி முதலியோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகிறது. இவரையும்‌ எம்பெருமானார்‌ சீடர்‌ வடுக நம்பியையும்‌ ஆச்சார்ய கைங்கர்யத்திற்கு உதாரணமாகச்‌ சொல்வர்‌. இவர்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
ஆரம்‌ கெடப்‌ பரனன்பர்‌ கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங்கொடு குடற் பாம்‌பிற் கை யிட்டவன்‌, மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல்‌ கொல்லி காவலன்‌ வில்லவர் கோன்‌
சேரன்‌ குலசேகரன்‌ முடி வேந்தர்‌ சிகா மணியே”

தேசமுய்யக்‌ கொண்டவர்‌ தாழ் சென்னி வைப்போன்‌ வாழியே.
தென்னரங்கர்‌ சீரருளைச்‌ சேர்ந்திருப்போன்‌ வாழியே.
தாசரதி திரு நாமம்‌ தழைக்க வந்தோன்‌ வாழியே.
தமிழ் நாத முனி யுகப்பைத் தாபித்தோன்‌ வாழியே.
நேசமடன்‌ ஆரியனை நியமித்தோன்‌ வாழியே.
நீனிலத்தில்‌ பதின்மர்‌ கலை நிறுத்தினோன்‌ வாழியே.
மாசிமகந் தனில்‌ விளங்க வந்துதித்தான்‌ வாழியே.
மால்‌ மணற்கால்‌ நம்பி பதம்‌ வையகத்தில்‌ வாழியே.

மணற்கால்‌ நம்பி அவதரித்து 47 வருடங்களுக்குப்‌ பிறகு கி.பி. 976-வது வருஷம்‌ ஆடி மாதம்‌ பெளர்ணமி திதியில்‌ உத்தராட நட்சத்திரத்தில்‌ நாதமுனிகளின்‌ குமாரரான ஈஸ்வர முனிகளுக்கும்‌ அவருடைய தர்ம பத்தினியான ஸ்ரீரங்க நாயகிக்கும்‌, நாதமுனிகள்‌ அவதரித்த காட்டுமன்னார்‌ கோவிலிலேயே அவதரித்தார்‌. நாதமுனிகள்‌ நியமித்தபடியே அவருக்கு யமுனைத்துறைவன்‌ என்ற நாமம்‌ சூட்டப்பட்டது. ஈஸ்வர முனிகளால்‌ உரிய காலத்தில்‌ அன்னப்பிரசானம்‌ உபநயனம்‌ போன்ற சடங்குகளெல்லாம்‌ செய்‌யப்பட்டன. அவருக்கு வேதத்தை அப்யஸித்தபொழுது ஏகசிந்தைஉடையவராய்‌ மகா மேதாவிலாசத்தை உடையவராய்‌ இருந்தார்‌. உரிய காலத்தில்‌ இவருக்கு விவாகமும்‌ செய்விக்கப்பட்டது.மகா பாஷ்ய பட்டர்‌ என்பவரிடம்‌ இவர்‌ சாஸ்திரங்களைக்‌ கற்று வந்தார்‌. அக்காலத்தில்‌ ராஜப் புரோகிதரான ஆக்கி யாழ்வான்‌ என்பவன்‌ தன்‌ வித்யா கர்வத்தாலே எல்லா வித்வான்களிடமும்‌ கப்பம்‌ வாங்கி வந்தான்‌. அவன்‌ ஒரு நாள்‌ கப்பம்‌ கேட்டு மஹாபாஷ்ய பட்டருக்கு ஓலை அனுப்ப, பட்டர்‌ கப்பம்‌ செலுத்த வழியில்லாமல்‌ தகைத்து நிற்பதைப் பார்த்து யமுனைத் துறைவர்‌ அவ்வோலையைக்‌ கிழித்தெறிந்து விட்டார்‌. அதைக்‌ கேட்ட ஆக்கி யாழ்வான்‌ அவ்வோலையைக்‌ கிழித்தவன்‌ வெறும்‌ கவியோ அல்லது சாஸ்திரம்‌ தந்திரம்‌ எல்லாம்‌ அறிந்த பண்டிதனோ என்றுகேட்டனுப்பினான்‌. அதற்கு அவர்‌ ‘நாம்‌ வெறும்‌ பண்டிதன்‌ மாத்திரமல்லோம்‌ மீமாம்ஸ சாஸ்திரக்கடலை மாத்திரம்‌ கரை கண்டவர்களல்லோம்‌. எதிர்வாதம்‌ புரிபவர்களாகிய யானைகளின்‌ மத்தகத்தைப்‌ பிளக்கும்‌ வல்லமை யுடையோம்‌’ என்று பதில்‌ அனுப்பினார்‌. உடனே அரசன்‌ யமுனைத் துறைவரை ராஜசபைக்கு வரச் சொல்லி ஒலை அனுப்பினார்‌. அவர்‌ ராஜ ஓலையையும்‌ கிழித்துப் போட அவர்‌ ஒரு மகான்‌ என்பதை உணர்ந்து பல்லக்குபரிவாரங்களை அனுப்பினார்‌ அரசர்‌.யமுனைத் துறைவரும்‌ அப்பல்லக்கில்‌ ராஜசபைக்கு வந்து தனக்குப்‌ பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை இரண்டிலும்‌ விசேஷமான பயிற்சி உண்டு. என்னைப் போன்ற மற்றொருவன்‌ தேடினாலும்‌ கிடைக்க மாட்டான்‌ என்ற பொருளுடைய ஸ்லோகத்தை எழுதி யனுப்பினார்‌. அதற்குப் பின்னர்‌ இவருக்கும்‌ ஆக்கி யாழ்வானுக்கும்‌ வித்வான்‌௧ள்‌ முன்னிலையில்‌ சம்வாதம்‌ (தர்க்கம்‌) நடந்‌தது. இந்த வாதத்தில்‌ ராஜாவும்‌, மகிஷியும்‌ பின்வருமாறு சபதம்‌ செய்து கொண்டனர்‌. யமுனைத்துறைவர்‌ தோற்றாராகில்‌ நான்‌ மகிஷி பதவியைத்‌ துறந்து உமக்கு வேலைக்காரியாவேன்‌ என்றாள்‌ ராஜமகஷி. ஆக்கியாழ்வான்‌ தோற்றானாகில்‌ நான்‌ யமுனைத்துறைவருக்குப்‌ பாதி ராஜ்யம்‌ தருவேன்‌ என்றார்‌ ராஜா. பின்னர்‌ வாதம்‌ ஆரம்பித்தது.இளம்‌ பிள்ளையான இவரை சாஸ்திர விவாதமில்லாமல்‌ லெளகிக விஷயங்களிலேயே தோற்கடித்து விடலாமென்றெண்ணிய ஆக்கி யாழ்வான்‌ லெளசீகங்களில்‌ நீர்‌ இல்லையென்பது நான்‌ உண்டு என்பேன்‌, நீர்‌ உண்டு என்பதை நான்‌ இல்லையென்பேன்‌.வென்றவன்‌ தோற்றவன்‌ தலையில்‌ அடிக்க வேண்டியது என்று கூறினான்‌. அதற்கிசைந்த யமுனைத் துறைவர்‌, 1) உன்‌ தாய்‌ மலடியல்ல, 3) அரசன்‌ தார்மீகன்‌, 3) ராஜ பத்தினி பதி விரதை என்ற மூன்று வாக்கியங்களைச்‌ சொல்லி அவனை மறுக்கச்‌ சொன்னார்‌. அவற்றை மறுக்க இயலாமல்‌ மெளனியாய்‌ இருந்தான்‌. பின்பு சாஸ்திர விவகாரமும்‌ நடந்தது. அதிலும்‌ அவன்‌ தோல்வியுற்றான்‌.பின்னர்‌ நீர்‌ சொன்ன மூன்று லெளகிக வாக்கியங்களை உம்மால்‌ மறுக்க முடியுமா என்று அரசனும்‌ அரசியும்‌ கேட்டனர்‌. முடியும்‌ என்று சொல்லி யமுனைத்துறைவர்‌ பின்வருமாறு மறுத்துக்காட்டினார்‌.-ஒர் மரமும்‌ தோப்பல்ல. ஒரு பிள்ளையும்‌ பிள்ளையில்லை-என்ற ௨லக வழக்கின்படி நிலையற்றதான இவ்வுலகில்‌ ஒரு பிள்ளையைப் பெற்றதாய்‌, இப் பிள்ளை நமக்குத்‌ தக்க வேணுமே என்று கலங்கிக் கொண்டே இருப்பாளாதலால்‌, அவள்‌ பிள்ளை பெற்றும்‌ மலடியே யாவாள்‌. இம் முறையில்‌ ஒரு பிள்ளை பெற்ற ஆக்கியாழ்வானுடைய தாய்‌ மலடியே யாவாளாதலால்‌ முதல்‌ வாக்‌கியம்‌ மறுக்கப்பட்டது. அடுத்துக்‌ குடிகள்‌ செய்யும்‌ பாபம்‌ அரசனைச்‌ சேருமாகையால்‌, பரம தார்மீகமான இவ்வரசனும்‌ குடிகள்‌ செய்யும்‌ பாவத்தில்‌ பங்கு பெறுகிறானாதலால்‌, இரண்டாவது வாக்கியமும்‌ மறுக்கப்பட்டது. இறுதியாகச்‌ சோமன்‌ முதல்‌ நாள்‌ உன்னை மணம்‌ புணர்ந்தான்‌. கந்தர்வன்‌ அடுத்த நாள்‌ உன்னை மணம்‌ புரிந்தான்‌. மூன்றாவது நாள்‌ அக்கினி உனக்குப்‌ பதியாகிறான்‌. நான்காவது நாளிலே தான்‌ கைப்பிடித்த கணவன்‌ உனக்குக்‌ கணவனாகினான்‌ என்ற வேத வாக்யெத்தின்படி எல்லாப்‌ பெண்களுக்கும்‌ முதல்‌ மூன்று நாட்களில்‌ தேவதைகளோடு தொடர்பு உண்டாகையால்‌ பதிவிரதை தத்துவத்துக்குக்‌ குறையுண்டு. ௮க்‌ குறை பரம வைதிகமான முறையில்‌ அரசனைக்‌ கைப்பிடித்த அரசிக்கும்‌ உண்டாகையால்‌ மூன்றாவது வாக்கியமும்‌ மறுக்கப்பட்‌டது.இவ்வாறு லெளகீக, சாஸ்திர வாதங்களில்‌ ஆக்கியாழ்வானை வென்ற போதிலும்‌ முதலில்‌ பண்ணின சபதத்தின்படி அவன்‌ தலையில்‌ அடிக்க மறுத்து விட்டார்‌. அவருடைய பண்பையும்‌, புலமையையும்‌, உலக அனுபவத்தையும்‌ கண்டு வியப்புற்ற அனைவரும்‌ அவரைப்‌ பெருமைப்படுத்தி கெளரவித்தனர்‌. ராஜமாதேவி “என்னை ஆளவந்தீரே’ என்று தன்‌ பிள்ளையைப்‌ போல்‌ எடுத்தணைத்துக் கொண்டு அரசனுடன்‌ அரண்மனைக்குள்‌ புகுந்தாள்‌.-அரசன்‌ தான்‌ ஒப்புக் கொண்டபடியே இவருக்குப்‌ பாதிராஜ்யம்‌ கொடுத்தான்‌. இவரை எல்லோரும்‌ ஆளவந்தார்‌ என்றே அழைக்கலாயினர்‌. இவரும்‌ தம்‌ பத்தினியோடு கூடி அரசாட்சி செய்து கொண்டு அரச போகத்தில்‌ ஆழ்ந்திருந்தார்‌. உய்யக்கொண்டார்‌ நியமனத்தாலே யமுனைத்துறைவரைத்‌ தர்ஸன கைங்கர்யத்திலே ஈடுபட வைக்க ஆசைகொண்ட மணற்கால்‌ நம்பியால்‌ கட்டுங்காவலுமாய்‌ இருந்த அரண்மனைக்குள்‌ சென்று ஆளவந்தாரைக்‌ காண இயலவில்லை. தூதுவளைக்கீரையே ஆளவந்தார்‌ விரும்பி உண்‌ணும்‌ கறியமுது என்றறிந்து மடப்பள்ளிக்கு ஆறுமாத காலம்‌ கீரையை அளித்து வந்தார்‌. அப்போதும்‌ இவரைப் பற்றி ஆளவந்தார்‌ விசாரிக்காமல்‌ இருக்கவே நாலு நாள்‌ தூதுவளை கொடுப்பதைத்‌ தவிர்த்து இருந்தார்‌. ஆளவந்தார்‌ அமுது செய்யும் பொழுது தூதுவளை இல்லாமல்‌ இருப்பதேன்‌ என்று வினவிய பொழுது ஆறு மாத காலமாக ஒரு வயோதிக அந்தணர்‌ அளித்து வந்தார்‌. நாலு நாளாக வரவில்லை என்றனர்‌. மறுநாள்‌ மணற்கால்‌ நம்பியும்‌ இன்னமும்‌ முயற்சி செய்து பார்க்கலாமென்றெண்ணி தூதுவளை கொண்டுவந்து மடைப்பள்ளியில்‌ கொடுத்தார்‌. அவர்களும்‌ நம்‌பியை ஆளவந்தாரிடம்‌ : அழைத்துச் சென்றனர்‌. ஆளவந்தாரும்‌ அவரை நல்லமுறையில்‌ வரவேற்று ‘நீர்‌ தூதுவளை கொண்டு வந்து கொடுக்கக்‌ காரணம்‌ யாது என்று வினவ, இவரும்‌ உம்முடைய பாட்டனார்‌ தேடி வைத்த நிதி ஒன்று என்னிடம்‌ இருக்கிறது. அதை உம்மிடம்‌ அளிப்பதற்கு நான்‌ இங்கு வந்து போகத்‌ தடை செய்யாமல்‌ இருக்கும்படி உத்தரவிட வேண்டும்‌ என்று கூறினார்‌.

அன்றுமுதல்‌ அவ்வாறே செய்யுமாறு அரண்மனை ஏவலாளர்‌களுக்குக்‌ கட்டளையிட்டிருந்தார்‌ ஆளவந்தார்‌. நம்பியும்‌ தினமும்‌அரண்மனைக்குச்‌ சென்று கீதையின்‌ செம்மைப்பொருளை உபதே சிக்க அதில்‌ ஆவல்மிகுந்த ஆளவந்தார்‌ எம்பெருமானை அடைய உபாயமேது என்று நம்பியைக்‌ கேட்டார்‌. நம்பியும்‌ அவருக்கு சரம
ஸ்லோகத்தை (சரணாகதி தத்துவத்தை) உபதேசித்து அவனை
அடைய அவனே உபாயம்‌ என்ற உறுதியை அவருக்கு உண்டாக்கினார்‌. ஆழ்வார்கள்‌ அருளிச்செயல்களையும்‌ அவற்றின்‌ அரும்பொருள்களையும்‌ உபதேசித்தார்‌. பின்னர்‌ திருவரங்கத்திற்கு அவரை அழைத்துச்சென்று பெரிய பெருமாளைத்‌ திருவடி தொழச்செய்து உங்களுடைய பாட்டனார்‌ தேடிவைத்த பெருநிதி இதுவேயாகும்‌
என்று காட்டிக்கொடுக்க, பெரியபெருமானிடம்‌ ஈடுபட்ட ஆளவந்‌தார்‌, ராஜ்ய பாரத்தைத்‌ துறந்து துறவு பூண்டு ஸ்ரீரங்கத்தில்‌ தர்ஸன நிர்வாகம்‌ செய்து வந்தார்‌. அக்காலத்திலே, பெரியதம்பி திருக்‌கோட்டியர்‌ நம்பி, பெரிய திருமலைநம்பி, திருமாலையாண்டான்‌
முதலான வைணவ பிராமணோத்தமர்களும்‌, திருக்கச்சி நம்பி, மாறனேரிநம்‌பி முதலான பாகவதோத்தமர்களும்‌ அவரை ஆஸ்ர யித்திருந்தார்கள்‌. (அடைக்கலமடைந்திருந்தார்கள்‌].

பின்னர்‌ மணற்கால்‌ நம்பி, ஆளவந்தாரிடம்‌ நாதமுனிகள்‌ குருகைக்‌ காவலப்பனிடம்‌ யோக ரகசியத்தைத்‌ தெரிந்து கொள்ளச்‌ சொன்னதையும்‌, அது நிறைவேறாமற்போனதையும்‌ நாம்‌ குருகைக்‌ காவலப்பன்‌ வைபவத்திலேயே தெரிந்து கொண்டோம்‌. ஆளவந்‌தார்‌ கோயில்‌ நிர்வாகத்தின்போது நம்‌ பெருமாள்‌ திரு அத்யயன உத்சவத்தில்‌, திருவரங்கப்‌ பெருமாள்‌ அரையர்‌, ஆளவந்தார்‌ திருமுகத்தைப்பார்த்து ‘நடமினோ நமர்களுள்ளீர்‌, நாமுமக்கறியச்‌ சொன்‌னோம்‌” என்று பல காலம்‌ பாடியருள, ஆளவந்தாரும்‌, பெரியபெருமாள்‌, நியமனம்‌ பெற்று திருவனந்தபுரம்‌ சென்று சேவித்துத்‌ திரும்பாமுன்‌, இவருடைய பிரிவினால்‌, மடத்துக்குக்‌ காவலாயிருந்த தெய்வவாரியாண்டான்‌, வாடி வலிய அவரை ஆளவந்தாரிடம்‌ கூட்டிச் செல்லும்பொழுது பாதிவழியில்‌ ஆளவந்தார்‌ திரும்பி வரவும்‌, அவரைக்கண்டபின்‌ உடல்‌ முன்போல்‌ தேறி அவருக்கு ஆச்சார்ய கைங்கர்யம்‌ செய்து வருவாரானார்‌.-இந்நிலையில்‌ தனக்குப்பின்‌ இந்தத்‌ தர்ஸனத்திற்கு அதிகாரி யார்‌ என்று மிகுந்த கவலையோடு இருந்தபொழுது காஞ்சியிலிருந்து வந்த இரு வைணவர்கள்‌ ஆளவந்தாரிடம்‌, யாதவப்பிரகாசன்‌ என்ற ஏகதண்டி சந்நியாசியிடம்‌ ஸ்ரீ பெரும்புதூர்‌ இளையாழ்வார்‌ என்ற ஒருவர்‌ வேதாந்தம்‌ கற்று வருகிறாரென்றும்‌, அவர்‌ வேதப்‌ பொருளுக்கு விளக்கம்‌ சொல்வது மிகவும்‌ நன்றாக இருக்கிறது என்றும்‌ சொன்னார்கள்‌. ஒரு நாள்‌ இளையாழ்வார்‌ யாதவப்பிரகாசருக்கு எண்ணை தேய்த்துக்‌ கொண்டிருக்கும்பொழுது யாதவப்பிரகாசர்‌ ‘கப்யாசம்‌’ என்ற பதத்திற்கு குரங்கின்‌ ஆசனவாய்‌ என்று தப்பர்த்தம்‌ சொன்னதைக்கேட்ட இளையாழ்வார்‌ மனக்கிலேசப்‌பட்டு கண்ணீர்‌ விட அது அவன்‌ தொடையில்‌ விழ அவன்‌
கிலேசத்திற்குக்‌ காரணம்‌ கேட்க, இவரும்‌ சூரியனைக்‌ கண்டு மலர்ந்த கமலம்‌ போல பரமபுருஷன்‌ கண்கள்‌ என்று சொல்ல வேண்டியிருக்க தாங்கள்‌ தப்பர்த்தம்‌ சொல்லியதைக்கேட்டு வருந்‌தினேன்‌ என்று சொன்ன சம்பவத்தைச்‌ சொன்னார்கள்‌-

இந்த விருத்தாந்தங்களை யெல்லாம்‌ கேட்ட ஆளவந்தார்‌ இளையாழ்வாரது மேதா விலாசத்தையும்‌, ஞானவைராக்யங்களையும்‌ கேட்ட மாத்திரத்திலேயே மிகவும்‌ மகிழ்ந்தவராய்‌, அவரைக்‌ காண வேண்டும்‌ என்ற ஆவலுடன்‌ பெரிய பெருமாள்‌ அனுமதி
பெற்று காஞ்சி சென்று, அங்கு திருக்கச்சி நம்பிகள்‌ மிகவும்‌ பக்தியோடு இவரை வரவேற்க இவரும்‌ மிக உகந்து பேரருளாள௫க்கு அவர்‌ ஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்து வருகிறதை சிலாகித்து அவரையும்‌ உடன்கொண்டு அங்கு கோயில்‌ அருகிலுள்ள புற்றின்‌ சமீபத்தில்‌ உள்ள திருவனந்தாழ்வானையும்‌, கரிய மாணிக்கத்தாழ்‌வாரையும்‌ சேவித்து வரும்பொழுது யாதவப்பிரகாசருடைய கூட்‌டம்‌ வரக்கண்டு, இதில்‌ யார்‌ இளையபெருமாள்‌ என்று கேட்க
நம்பியும்‌ சிவந்து நெடுக வலியவராய்‌, ஆஜானுபாகுவாய்‌ நடுவில்‌ வருகிறவர்‌ என்று காட்டக்கண்டு மிகவும்‌ மகிழ்ந்து ‘ஆம்‌ முதல்‌வன்‌ இவன்‌’ என்று மனதில்‌ தெளிந்து, பின்னர்‌ பேரருளாளரிடம்‌ அடியேனுக்கு இளையாழ்வாராகிய மகானைத்‌ தர்ஸனத்நிற்குத்‌
தந்தருள வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டு அப்போது அவருக்கு ஒரு நல்வார்த்தை சொல்ல வாய்ப்பில்லாததால்‌ மீண்டும்‌ திருவரங்கம்‌ கோயிலுக்கே எழுந்தருவினார்‌. இவரது அபிலாஷை நிறைவேறி இளையாழ்வார்‌ கோயில்‌ நிர்வாஹத்தைக்‌ கைக்‌கொண்ட வரலாற்றை பார்க்கும் முன்பே ஆச்சார்யர் திருவடி சேர்ந்தார் என்பதை இளையாழ்வார்‌ வைபவத்தில்‌ காண இருக்கிறோம்‌.

ஆளவந்தார்‌ தமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடனேயே கோயில்‌ தர்ஸனத்தை இளையாழ்வாரிடம்‌ கொடுக்க எண்ணி,
பெரியநம்பி ஸ்வாமிகளைக்‌ காஞ்சிக்கு அனுப்பி அவரைத்‌ திருவரங்கத்துக்கு அழைத்து வரப்பணித்தார்‌. ஆனால்‌ அவர்‌ வருமுன்பே ஆளவந்தார்‌ பரமபதித்து விட்டதால்‌, அவரை உயிரோடு நேரில்‌ காணாத விரக்தியினால்‌, ஏமாற்றமடைந்து காஞ்சிக்கே திரும்பச்‌ சென்று விடுகிறார்‌ இளையாழ்வார்‌. ஆளவந்தாரது திஸ்ருமேனியை இளையாழ்வார்‌ கண்டு சேவிக்கும் பொழுது கைவிரல்கள்‌ மூன்று மடங்கி இருப்பதைப் பார்த்து, முன்னர்‌ இவரது விரல்கள்‌ இவ்வாறு தான்‌ இருந்தனவா என்று விசாரித்து இல்லை என்று தெரிந்தவுடனே, அவரது மனதில்‌ ஏதேனும்‌ நிறைவேறாத ஆசைகள்‌ இருந்தனவா என்று கேட்க, அங்குள்ளவர்கள்‌ ஆளவந்தார்க்கு மூன்று விருப்பங்கள்‌ உண்டு. அவை, பிரஹ்ம ஸூத்திரத்துக்கு மஹா பாஷ்யம்‌ எழுதுதல்‌, விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்குப்‌ பாஷ்யம்‌
எழுதுதல்‌, திருவாய்மொழிக்கும்‌ பாஷ்யம்‌ எழுதுதல்‌
என்பன என்றார்கள்‌. அவர்‌ விருப்பத்தைத்‌ தாம்‌ நிறைவேற்றி வைப்பதாக உறுதிபூண்டு சபதம்‌ செய்யவே, ஆளவந்தாரது மடங்கிய விரல்கள்‌ மூன்றும்‌ நிமிர்ந்தன என்பர்‌.

ஆளவதந்தாரது அந்திமகாலத்தில்‌ அருகிருந்த அவரது சீடர்கள்‌ எங்களுக்கு இனியார்‌ தஞ்சம்‌ என்று கேட்க, உங்களுக்கு நாம்‌ ஒருவரை உண்டாக்கி யன்றோ பேறு பெறப் போகிறோம்‌. உங்களுடைய இழவைத் தீர்த்து நாம்‌ மாத்திரமன்றோ இழவோடு போகிறோம்‌ என்றாராம்‌. இவருக்கு ஆச்சாரியார்‌ ஸ்ரீமத்‌ நாத முனிகளும்‌ புருஷாகாரர்‌ (போதித்தவர்‌) மணற்கால நம்பியுமாகும்‌. இவர்‌ 125ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌ என்பர்‌.
ஓம்‌ நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தில்‌ முதற்பதமான பிரணவம்‌ ‘ஒம்‌’ ஸ்வரூப ஞானத்தை விளக்கு கையாலே பகவத்‌ சம்பந்தத்தையும்‌ ‘நம” பதம்‌ பிரபத்தி வித்யா நிஷ்டை (சரணாகதி தத்துவம்‌)யையும்‌, மூன்றாவதான ‘நாராயணாய: என்ற பதம்‌
பகவத்‌ பாகவத கைங்கர்யமாகிற நல்லொழுக்கத்தையும்‌ ஜீவனுக்கு
விளைவிக்கிறது என்பது ஆளவந்தார்‌ கருத்து. திருக்கோஷ்டியூர்‌
நம்பி ஆளவந்தாரிடம்‌ இறைவனை அடைய உபாயம்‌ என்ன என்று கேட்க இறைவனுக்கும்‌ ஜீவனுக்கும்‌ உள்ள உறவு (பர்த்தா, பார்யா) கணவன்‌ மனைவி உறவைப் போன்றது. அறியாமையாகிற அழுக்கு மண்டிக் கிடக்கும்‌ ஜீவன்‌ இவ்வழுக்கை அகற்ற அகற்ற, எம்பெருமான்‌ திருஉள்ளம்‌, கணவன்‌ மனைவியிடம்‌ உள்ள குண நலனள்களும்‌
அழகும்‌ வெளிப்பட வெளிப்பட அவளை நேசிப்பதைப் போல பக்தனிடம்‌ மிகவும்‌ ஈடுபடும்‌ ஆகவே இவனுக்கு வேறு ஒரு உபாயமும்‌ தேவையில்லை என்று கூறினார்‌ என்பர்‌.
ஏழைக்குப்‌ புதையல்‌ கிடைத்ததைப்போல நமக்கெல்லாம்‌’த்வய மந்திரம்‌’ என்பார்‌ ஆளவந்தார்‌. தம்‌ சீடர்களில்‌ ஒருவரான அம்மங்கி என்ற வாலிபனைப் பார்த்து உன்னுடைய வாலிப வயதைக்‌ கவனிக்காமல்‌ உனக்கு பகவத்‌ விஷயத்தைச்‌ சொல்லிவிட்‌டேன்‌. உடம்புக்கு இரையிட்டு ஆத்ம நாசத்தை விளைவிக்காமல்‌,உயிருக்கு இரையிட்டு ஆத்ம ஜீவிதத்தை விளைவிப்பாயாக என்றாராம்‌. இறைவனை அணுகும்போது வேறு எந்தப்பலனையும்‌ விரும்பாது இறைவனையே விரும்பித்தொழ வேண்டும்‌. எம்பெருமானாரின்‌ திருவடிகளை உபாயமாக உடையவனாக இருக்கிறேன்‌.-அந்த எம்பெருமானார்‌ யமுனைத்துறைவர்‌ குலவிளக்காய்‌ இருக்கிறார்‌. அந்த யமுனைத்துறைவர்‌ நாதமுனிகள்‌ வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகள்‌ நம்மாழ்வார்‌ வழிவந்தவர்‌. அந்த நம்மாழ்வார்‌ பெரியபிராட்டியின்‌ திருவருள்‌ பெற்றவர்‌. வரதராஜரே இவ்விதம்‌ தேவருக்கு வழி வழித்‌ தொண்டன்‌. தேவரீர்‌ திருவருளுக்கு உரியவனாகிறேன்‌ என்பது கூரத்தாழ்வான்‌ அருளிய ‘ஸ்ரீவரதராஜஸ்தவம்‌’ ஸ்லோகத்தின்‌ தமிழாக்கச் சுருக்கம்‌.

நிதியைப்‌ பொழியும்‌ முகிலென்று நீசர்‌ தம்வாசல்பற்றித்‌
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன. இனித்தூய்நெறிசேர்‌
எதிகட்கிறைவன்‌ யமுனைத்‌ துறைவன்‌ இணையடியாம்‌
கதிபெற்றுடைய இராமானுசனென்னைக்‌ காத்தனனே

ஆளவந்தார்‌ எழுதிய பிரபந்தங்கள்‌ – ஆகமப்பிராமாண்யமும்‌,புருஷ நிர்ணயமும்‌, ஆத்மஸித்தி ஈஸ்வர ஸித்தி, ஸம்வித்ஸித்தி என்ற ஸித்தித்திரயமும்‌, ஸ்ரீ கீதார்த்த சங்ரஹமும்‌, ஸ்தோத்ர ரத்னமும்‌, சதுஸ்லோகியும்‌ ஆக எட்டும் -. அவரது
குமாரர்கள்‌ திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌, தெய்வத்துக்கரசுநம்பி, பிள்ளை அரசு நம்பி, சொட்டை நம்பி என்று பெரிய திருமுடியடைவு குறிப்பிடுகிறது. இவர்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளிய (இறந்த) இடம்‌ பெரிய கோயில்‌, திருப்பள்ளிப்படுத்தப்பட்ட
(அடக்கம்‌ செய்யப்பட்ட) இடம்‌ திருப்பராய்த்துறையாகும்‌.
பரப்பிரஹ்மமே மாயையால்‌ மறைக்கப்பட்டு அறிவு குறைந்த ஜீவனாகவும்‌, சம்ஸாரத்தில்‌ ஈடுபட்டதாகவும்‌ ஆகிறது-அந்தப் பரப்பிரஹ்மமே தேவர்‌ மனிதர்‌ முதலான உண்மையான சரீரங்களாகிற உபாதிகளோடு சம்பந்தப்பட்டு சம்சாரி ஜீவனாகிறது. அந்தப்‌ பரப்பிரஹ்மமே உலகோடு இயல்பாகவே பேதாபேதமுடையதாகையாலும்‌, உலகமாகப்‌ பரிணமிக்கையாலும்‌ தோஷங்‌களுக்குக்‌ கொள்கலமாகிறது. -இவ்விதம்‌ கூறும்‌ சங்கரருடைய மாயா வாதமும்‌ பாஸ்கரருடைய ஸத்யோபாதிமதமும்‌, யாதவப் பிரகாசருடைய பேதா பேதமதமுமாகிற மூன்று மதங்களும்‌ ஸ்ருதிக்‌கும்‌ யுக்தக்கும்‌ பொருந்தாதவையாகும்‌. ஆயினும்‌ மோகத்தை விளைவிக்கும்‌ இம் மூன்று மதங்களாகிய இருள்‌ எவரால்‌ தமது
நூல்களின்‌ மூலம்‌ நீக்கப்பட்டதோ, அந்த யமுனைத் துறைவரான ஆளவந்தார்‌ வெற்றியுடன்‌ விளங்குகிறார்‌. ஆளவந்தாராகிய அமுதக் கடலில்‌ மூழ்கி, அறிந்த அளவு நான்‌ பக்தி யோகமாகிற ரத்‌னத்தை எடுத்துக் காண்பிக்கிறேன்‌ என்கிறார்‌. ஸ்ரீ வைகுண்ட கத்ய
மங்கள ஸ்லோகத்தில்‌ கூரத்தாழ்வான்‌.
என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு
யானடைவேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிறை வணங்கி
இன்னருளால்‌ பெரும்புதூர்‌ வந்த வள்ளல்‌
பெரியநம்பி, ஆளவந்தார்‌ மணற்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்‌
நாதமுனி சடகோபன்‌ சேனைநாதன்‌
இன்னமுதத்‌ திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே.
நீளவந்தின்று விதி வகையால்‌ நினை ஒன்றிய நாம்‌
மீள வந்தின்னும்‌ வினையுடம்‌ ஒன்றி விழுந்துழலாது ஆள வந்தாரென்று வந்து அருள் தந்து விளங்கிய சீர்‌
ஆளவந்தா ரடியோம படியோமினி அல்வடிக்கே–என்று அருளிச் செய்கிறார்‌ ஸ்ரீ தேசிகர்‌ அதிகார சங்கிரஹம்‌ என்ற நூலில்‌.
“மாதாபிதா யுவதயஸ்தநயாவிபூதிஸ்‌
ஸர்வம்‌ யதேவ நியமேந மநந்வயாநாம்‌
அத்யஸ்யந: குலபதேர்‌ வகுளாபிராமம்‌
ஸ்ரீமத்‌ ததங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா ॥ ஆளவந்தார்‌ அருளிச்செய்த நம்மாழ்வார்‌ தனியன்‌.
மச்சணியும்‌ மதிள் அரங்கம்‌ வாழ்வித்தான்‌ வாழியே
மறை நான்கும்‌ ஓருருவில்‌ மகிழ்ந்து கற்றான்‌ வாழியே
பச்சை யிட்ட இராமர்‌ பதம்‌ பகருமவன்‌ வாழியே
பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌ வாழியே
கச்சி நகர்‌ மாயனிருகழல்‌ பணிந்தோன்‌ வாழியே
கடக வுத்த ராடத்துக்‌ காலுதித்தோன்‌ வாழியே
அச்சமற மன மகிழ்ச்சி யணைத்‌ திட்டான்‌ வாழியே
ஆளவந்தார்‌ தாளிணைகள்‌ அனவரதம்‌ வாழியே

ஆளவந்தார்‌ பிறந்து 11 வருடங்களுக்குப் பின்னர்‌ (கி பி.997-98-ல்‌] மார்கழிக் கேட்டையில்‌ பிராமண குலத்தில்‌ பரத்வாஜ கோத்திரத்தில்‌ பராங்குச தாஸர்‌ என்ற திருநாமத்தில்‌ அவதரித்தவர்‌ பெரியநம்பி ஸ்வாமிகள்‌. ஆளவந்தாருடைய சிஷ்யர்களில்‌ பெருமை பெற்றவர்‌ இவர் தான்‌. எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம்‌ செய்தவர்‌. ஆளவந்தார்‌ காலத்திற்குப் பின்‌ ஆளவந்தாரது மற்ற சிஷ்யர்கள்‌ கேட்டுக்கொண்டதன்‌ பேரில்‌ இவரே இராமானுஜரை திருவரங்கர்‌ சேவைக்கு அழைத்து வரக்‌ காஞ்சிக்குச்‌ சென்றவர்‌.
காஞ்சியில்‌ தேவப் பெருமானின்‌ நியமனம்‌ பெற்று, இராமானுசரும்‌ இவரிடம்‌ சரண் புக எண்ணி திருவரங்கத்துக்குப்‌ புறப்பட இருவரும்‌ வழியில்‌ மதுராந்தகம்‌ ஏரி காத்த பெருமாள்‌ கோவிலில்‌ சந்திக்க நேர்ந்தது. அங்கு இராமானுசருக்கு ஸமாஸ்ரயணம்‌ நடை பெற்றது.-எம்பெருமானார்‌ வெள்ளை உடுத்தி மேல்‌ நாட்டுக்குச்‌ சென்ற பொழுது, கூரத்தாழ்வானோடு சோழ ராஜனது சபைக்குச் சென்று நம்‌ தர்ஸனத்திற்காகத்‌ தம் தர்ஸனத்தையும்‌ (கண்களையும்‌) உயிரையும்‌ இழந்தவர்‌ தியாக மூர்த்தியான இந்தப்‌ பெருமகனார்‌. இவர் தம்‌ குமாரரான புண்டரீகாக்ஷ்ரையும்‌ பெண்ணான அத்துழாயையும்‌ எம்பெருமானாருடைய திருவடிகளிலேயே சரணமடையச்‌ செய்தவர்‌. ஆளவந்தாரது சிஷ்யரான தாழ்ந்த குலத்தில்‌ பிறந்த மாரனேரி நம்பிக்கு ஈமச்சடங்குகள்‌ செய்து பெருமை பெற்றவர்‌. இவரைப்‌ பற்றிய விரிவான செய்திகளை இராமானுசருடைய வைபவத்தில்‌ காண உள்ளோம்‌.-ஆளவந்தாரது சீடர்கள்‌ எல்லோரும்‌ கூடியிருந்து பெரிய நம்பியிடம்‌, இனி இந்தத்‌ தர்ஸனத்தை நடத்துபவர்‌ யார்‌? என்று கேட்க இவரும்‌ முன்னர்‌ இராமானுஜர்‌, தான்‌ ஆளவந்தாரது மூன்று ஆசைகளையும்‌ நிறைவேற்றுவதாகச்‌ சொன்னவுடனேயே அவரது விரல்கள்‌ நிமிர்ந்தனவே, அந்தக்‌ குறியீடே ஆளவந்தார்‌ தமக்குப்‌ பின்‌ அந்தப் பணியை இராமானுஜர் தான்‌ செய்ய வேண்டும்‌ என்று விரும்பினார்‌ என்பதைத்‌ தெரிவிக்கவில்லையா என்று சொல்ல, எல்லோரும்‌ இராமானுசரையே தம்‌ ஆச்சாரியராக முடிவு செய்து அவரைக்‌ காஞ்சியிலிருந்து திருவரங்கத்துக்கு அழைத்து வருமாறு பெரிய நம்பியையே அனுப்பினார்கள்‌. அவரும்‌ அப்போதே குடும்ப சகிதமாகப்‌ புறப்பட்டு நம்‌ பெருமாள்‌ அனுமதி பெற்று, காஞ்சிக்குச்‌ செல்லும்‌ வழியில்‌, மதுராந்தகத்தில்‌ ஏரி காத்த பெருமாள்‌ கோயிலிலே, இராமானுஜரும்‌ ஸ்ரீரங்கம்‌ செல்லும்‌ வழியில்‌ அங்கு வர இருவரும்‌ சந்தித்து மிகப் பிரீதியுடன்‌ தழுவிக் கொண்டு மகிழ்ந்தனர்‌. இளையாழ்வாரும்‌ பெரிய நம்பியைத்‌ தனக்கு அப்‌போதே ஹிதோபதேசம்‌ செய்து ரட்சிக்க வேண்டும்‌ என்று விண்‌ணப்பிக்க, பெரிய நம்பியும்‌ இவருடைய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து திருவிலச்சனை பிரசாதித்து (சங்கு சக்கர முத்திரைகளைக்‌ கையில்‌ பொரித்து) தன்‌ வலது புறத்தில்‌ அடக்கத்தோடும்‌ அஞ்சலியோடும்‌ கூடிய சீடனை இருத்தி ஞானத்தைத்‌ தரவல்ல தனது வலது கரத்தைச்‌ சீடனின்‌ சிரசில்‌ வைத்து தனது இடது கையைச்‌ சீடனின்‌ மார்பில்‌ வைத்து, அருளுடன்‌ சீடனை ஆச்சார்யன்‌ காப்பாற்றக் கடவன்‌, தன்‌ ஆச்சார்யனை இருதயத்தில்‌ தியானித்து குரு பரம்பரையை ஜபித்து, இவ் வகையாக எம்பெருமானைச்‌ சரண மடைந்து, ரிஷி, சந்தஸ்‌ தேவதைகளுடன்‌ கூடிய மூமலந்திரத்தைத்‌ தானே சீடனுக்குக்‌ கருணையால்‌ உபதேசிக்கக்‌ கடவன்‌ என்று சொல்லுகிறாப்போல, ஆளவந்தார்‌ திருவடிகளை மனதில்‌ தியானம்‌ பண்ணிக் கொண்டு த்வயத்தை (மந்திர ரத்னத்தை) இராமானுஜருக்கு அவரது வலது காதில்‌ ஓதினார்‌.-இராமபிரான்‌ தன்‌ பாதுகைகளைப்‌ பரதாழ்வானிடம்‌ கொடுத்‌துக்‌ காட்டுக்குப்‌ போனாற்போல, ஆளவந்தாரது ஏவலாளன்‌ நான்‌.உமக்கு நேரே ஆச்சார்யார்‌, யமுனைத்‌ துறைவரான ஆளவந்தாரே என்று கூறினார்‌. ஆதலால் தான்‌ இராமானுஜ நூற்றந்தாதியில்‌-பிள்ளை அமுதனார்‌ ‘எதிகட்கு இறைவன்‌ யமுனைத் துறைவன்‌ இணையடியாம்‌ கதிபெற்றுடைய இராமானுஜன்‌ ‘என்றருளிச்‌ செய்‌தார்‌. இராமானுஜரும்‌ ‘பிரமாணம்‌ எது? பிரமேயம்‌ எது? பிரமாதாக்‌கள்‌ யார்‌? என்று பெரிய நம்பியைக்‌ கேட்க, அவரும்‌ மாதவன்‌ பேர்‌ சொல்வதே ஓத்தின்‌ சுருக்கு என்றபடியே ‘பிரமாணம்‌ த்வயமே’. பிரமேயமும்‌ அத்தகிரி மேலிருக்கும்‌ பெருமாளே, பிரமாதா நீர் தாம்‌. இந்தப் பிரமாணத்தாலே பிரமேயத்தை அனுபவிக்க வாரும்‌ என்று கூறினார்‌. இருவரும்‌ காஞ்சியில்‌ பெருமாள்‌ கோவிலுக்குச்‌ சென்றார்கள்‌. அங்கு திருக்கச்சி நம்பியும்‌ பெரிய நம்‌பியைச்‌ சரணடைய அவரையும்‌ ஆசீர்வதித்து ஏற்றுக் கொண்டார்‌. இராமானுஜர்‌ பெரிய நம்பிகளைக்‌ குடும்பத்துடன்‌ தன்‌ இல்‌லத்துக்கு அழைத்துச் சென்று தம்‌ தேவியையும்‌ பெரிய நம்பி திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கச்‌ செய்தார்‌. பெரிய நம்பி இளையாழ்வாருக்கு திருவாய்மொழி நீங்கலாக அருளிச் செயல்‌ மூவாயிரத்தையும்‌, தர்ஸனார்த்‌தங்களையும்‌ போதித்துக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது அவ்விருவருடைய தேவிகளுக்குள்ளும்‌ மனஸ்தாபம்‌ வர, பெரியநம்பி, இளையாழ்வாரிடம்‌ சொல்லாமலே மனைவியுடன்‌ ஸ்ரீரங்கத்திற்குத்‌ திரும்பிவிட்டார்‌.-பெரிய நம்பி திருமகளாரான அத்துழாய்‌ புக்ககத்தில்‌ வாழுங்‌காலத்தில்‌, ஒருநாள்‌ நீராடி வரத் துணைக்கு வருமாறு மாமியாரை வேண்ட அவளும்‌ உன்‌ சீதன வெள்ளாட்டியை அழைத்துக்‌ கொண்டு போ என்று சொல்லி விடவே, அத்துழாய்‌ பெரிய நம்பியிடம்‌ விவரம்‌ கூற அவர்‌ ‘எனக்குத்‌ தெரியாது. உங்கள்‌ ஜீயரிடம்‌ (இராமானுஜர்‌) சொல்‌ என்று கூறிவிட, அவளும்‌ அங்கே போய்‌ விண்ணப்பம்‌ செய்ய, ஜீயரும்‌ அருகிருந்த முதலியாண்‌டானை “இந்தாரும்‌ உமக்குச்‌ சீதன வெள்ளாட்டி என்று சொல்லி“போம்‌” என்ன ஆண்டானும்‌ கூடப்‌ போய்‌ நீராடப் பண்ணுவித்து அவளுடைய புக்கத்தில்‌ வேலை செய்யத்‌ தொடங்க, புக்ககத்தார்‌ அவரிடம்‌ ஆண்டான்‌ இது என்‌’ என்று கேட்க அவரும்‌ என்னை வரவிட்ட ஜீயரைக்‌ கேளுங்கள்‌. ஆச்சார்யார்‌ சொன்னதைச்‌ செய்ய வேணுமே’ என்று சொல்லிவிடவே அவர்களும்‌ பெரிய நம்பியிடம்‌ போய்‌, ‘முதலியாண்டானை அனுப்பி எங்களை இப்படித்‌ தண்டிக்க வேண்டுமா: என்று கேட்க அவரும்‌ ‘நான்‌ அறிந்தேனா? ஜீயரைக்‌ கேளுங்கள்‌ என்று சொல்லி விடவே அவர்களும்‌ அங்கே சென்று விண்ணப்பிக்க இராமானுசரும்‌, அத்துழாய்க்குச்‌ சீதன வேலைக்காரியாகத்‌ தந்தோம்‌ அவர்‌ அங்கிருப்பது பிடிக்கவில்லையாகில்‌ இங்கிருந்து அடிமை செய்கிறார்‌ என்று மீண்டும்‌ அவரை அழைப்பித்துக்‌ கொண்டார்‌.பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு அந்திமக் கிரியைகள்‌ செய்ததைக்‌ கேட்ட இராமானுஜர்‌ அவரிடம்‌ ‘இவ்வாறு செய்யலாமா:என்று கேட்க அவரும்‌ இக்ஷ்வாகு வம்சத்து இராமபிரான்‌ சடாயுக்கு ஈமக்கிரியைகள்‌ செய்ய வில்லையா? அவரைவிட நான்‌ உயர்ந்தவனா? ஜடாயுவை விட இவர்‌ தாழ்ந்தவரா? தருமபுத்திரன்‌ விதுரனுக்குச்‌ செய்ய வில்லையா?தருமரைக்‌ காட்டிலும்‌ நான்‌ உயர்ந்தவனா? விதுரனைக் காட்டிலும்‌ இவர்‌ சிறியவரா? இத்தகைய மகான்கள்‌ விஷயத்திலாவது இதைச்‌ செய்யாவிடில்‌ நம்மாழ்‌வார்‌ அருளிச்செய்த ‘பயலுஞ்சுடரொளி’ (திருவாய்‌ 3:7) நெடுமாற்‌கடிமை (இருவா 8:10) என்னும்‌ திருவாய்மொழிகள்‌ கடலோசை போல பொருளற்றதாகி விட்டதா என்று சொல்ல இராமானுஜரும்‌ கேட்டு உகந்து இசைந்தார்‌. பெரியநம்பி செய்த இக்காரியத்தைக்‌ கண்டு ஸ்ரீரங்கத்தில்‌அந்தணர்‌ பெரும்பாலோர்‌ அவரைத்‌ தள்ளி வைத்தனர்‌ என்றும்‌, நம்பெருமாள்‌ சித்திரைத்‌ தேரில்‌ எழுந்தருளும்போது, பெரிய நம்பி திருமாளிகையிலிருந்து தேர்‌ நகராமல்‌ நிற்கவே அவருக்கு அருளப்‌ பாடிட்டுத்‌ தீர்த்தப் பிரசாதம்‌ சாதித்து அவர்‌ பெருமையை அனைவருக்கும்‌ உணர்த்திய பின்னரே தேர் மேலே புறப்பட்டது என்பதும்‌ வரலாற்றுச்செய்தி.-சோழ மன்னனால்‌ கண்கள்‌ பிடுங்கப்பட்டு சோழபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம்‌ திரும்பி வரும்‌ வழியில்‌ பெரிய நம்பிக்கு அந்திம காலம்‌ நெருங்க வரும் பொழுது உயிர்‌ பிரியுமுன்‌ ஸ்ரீரங்கம்‌ சென்று விட வேண்டும்‌. வேகமாகச்‌ செல்ல வாகனம்‌ இருந்தால்‌ நன்றாக இருக்கும்‌ என்று அவர்‌ குமாரி அத்துழாய்‌ தெரிவித்தபோது இங்கேயே உயிர்‌ பிரிந்தாலும்‌ எம்பெருமான்‌ அருளாலே பரமபதம்‌ நிச்சயம்‌. ஸ்ரீரங்கத்துக்குப் போய்‌ பிராணனை விட்டால்‌, மற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ இதை முன் மாதிரியாகக்‌ கொண்டு ஸ்ரீரங்கத்‌திதில்‌ மரணமடைந்தால் தான்‌ மோட்சம்‌ என்று முடிவு கட்டி மற்ற இடங்களில்‌ உயிர் விடப்‌ பயப்படுவார்கள்‌ என்று சொல்லி வழியிலேயே பரமபதமடைந்தார்‌ என்று அறிகிறோம்‌.-பதி விரதைக்கு மங்கள ஸூத்திரம்‌ போல நமக்குத்‌ ‘த்வயம்‌:என்பார்‌ பெரியநம்பி. ஒரு தரம்‌ பிள்ளை உறங்கா வில்லி தாஸர்‌ என்ற வைணவர்‌ இராமானுஜரிடம்‌, விபீஷணாழ்வார்‌, இராமபிரானிடம்‌ சரணம்‌ புக வந்தபோது, வானர சேனைகள்‌ அவரைத்‌ தடியாலும்‌ கல்லாலும்‌ அடித்தனர்‌ என்பதை எண்ணிப் பயப்படுகிறேன்‌ என்ற போது இராமானுஜர்‌ கமுகுண்ணில்‌ வாழை உண்ணும்‌.எமக்குப்‌ பெரிய நம்பியுண்டு. உமக்கு நானுண்டு. கமுகுக்குத்‌ தண்ணீர்‌ பாய்ச்சும் பொழுது வாழையும்‌ அந்நீரை உண்டு வளருவதைப்‌ போல, பெரிய நம்பி சம்பந்தத்தைப் பார்த்து பெருமாள்‌ என்னை ரக்ஷிப்பார்‌. என்‌ சம்பந்தத்தைப் பார்த்து உம்மையும்‌ ரட்சிப்‌பார்‌ என்று கூறித்‌ தேற்றினாராம்‌.-ஒரு நாள்‌ இராமானுஜரும்‌ முதலிகளும்‌ எழுந்தருள பெரிய நம்பி தண்டனிட இராமானுஜர்‌ அஞ்சலி பண்ணிப் போக முதலிகள்‌ இது ஏன்‌ என்று வினவ, இராமபிரான்‌ கட்டளை யிட்டதற்கு இணங்கி பரதன்‌ அரச பாரத்தை ஏற்றுக் கொண்டதைப் போல
பெரிய நம்பி தண்டனிட்டதை ஏற்றுக் கொள்வதே நமக்கு ஸ்வரூபம்‌ என்றாராம்‌.

ஒரு நாள்‌ பெரிய நம்பி திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாலையாண்டான்‌ மூவருங்‌ கூடி யிருந்து தங்கள்‌ ஆச்சாரியாரான ஆளவந்தார்‌ வைபவத்தை எண்ணி அனுபவித்துக்‌ கொண்டிருந்தபொழுது திருவரங்கச் செல்வர்‌ (பலி சாதிக்கும்‌ பெருமாள்‌) புறப்பட இவர்களது பகவத்‌ பாகவத ஆச்சார்ய அனுபவத்துக்குத்‌ தடை பிறந்து எழுந்திருந்து தண்டனிட வேண்டுமாகையால்‌ கூட்டம்‌ கலக்கியார்‌ வந்தார்‌. இனிமேல்‌ பலி பெருமான்‌ எழுந்தருளாத கோயிலிலேயே இருக்கக் கடவோம்‌ என்று நீர்மானித்ததாகவும்‌, இவ்வாறு மகாத்‌மாக்களுக்குத்‌ தொல்லையா யிருப்பதைப்‌ பார்த்த திருவரங்கச்‌ செல்‌வர்‌, தம்மைப்‌ பலி சாதிக்க எழுந்தருளப்‌ பண்ண வேண்டாம்‌ என்று நியமித்து விட்டதாகவும்‌ அந்த நியமனம்‌ இன்றளவும்‌ நடப்பதாகவும்‌ கூறுவர்‌. வித்தாகுங் காய்‌ பிஞ்சிலேயே தெரியும்‌ என்றார்‌ பெரியநம்பி, உலகம்‌ வாழ வந்தவர்‌ எம்பெருமானார்‌ என்பதை அவருடைய சிறுவயதிலேயே நாங்கள்‌ கண்டு கொண்டு விட்‌ டோம்‌ என்ற கருத்தில்‌.-ஏற்றங்கள்‌ பிராமணரல்லாத ஸ்ரீ வைஷ்ணவர்களிடமும்‌ இருக்‌கிறது என்பதை மனதில்‌ கொண்டே ஸ்ரீராமபிரான்‌ ரிஷிகளைக்‌ காட்டிலும்‌ குகப் பெருமானிடமும்‌, வானர முதலிகளிடமும்‌, விபீஷணாழ்வாரிடமும்‌ ஈடுபட்டார்‌. நம்‌ பெருமாள்‌ லோக சாரங்க முனியைக் காட்டிலும்‌ திருப்பாணாழ்வாரிடமும்‌ திருமலையப்‌பன்‌, முடி மன்னனாகிய தொண்டைமான்‌ சக்கரவர்த்தியைக்‌ காட்டிலும்‌, குயவரான குறும்பறுத்த நம்பியிடமும்‌ ஈடுபட்டார்‌. பெரியநம்பி பிராமண, ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய விரோதத்தைப்‌ பொருட்படுத்தாமல்‌ மாறனோர்‌ நம்பிக்கு அந்திம ஸம்ஸ்காரங்கள்‌ செய்தருளினார்‌. ஆகவே இதை உணர்ந்தவர்கள்‌ சாத்தாத முதலிகளின்‌ (பிராமணரல்லாதவர்‌) பெருமையை அறிவர்களாதலால்‌ அவர்களிடம்‌ அபசாரம்‌ ஏற்படாது. எம்பெருமான்‌ திருவடிகள்‌ எளிதில்‌ கிட்டும்‌ என்று இராமானுஜர்‌ முதலியாண்டானுக்கு ௮ருளிச் செய்தார்‌-ஆளவந்தாருடைய கட்டளையாலே ஸ்ரீ பாஷ்யகாரரான இராமானுஜரை அங்கீ கரித்த பூர்ணரான பெரிய நம்பி, அவரைத்‌ தமக்கு நண்பர்களான திருக்கோட்டியூர்‌ நம்பியிடம்‌, அர்த்த சிக்ஷை பண்ணவும்‌, திருமாலை யாண்டானிடம்‌ திருவாய்மொழி கேட்கவும்‌, திருவரங்கப் பெருமான்‌ அரையரிடம்‌ நல்‌ வார்த்தை கேட்கவும்‌ நியமித்‌தார்‌. பெரிய நம்பி சோழ மன்னனால்‌ ஹிம்சிக்கப்பட்டு கண்ணையும்‌ இழந்து வரும்‌ வழியில்‌, இறுதிக் காலம்‌ நெருங்கவே ஆழ்வான்‌ மடியிலே கண் வளர, கோயிலும்‌ பாஷ்யகாரரும்‌ இருக்க, இங்கே மரணம்‌ ஏற்படவா என்று ஆழ்வான்‌ சோகிக்க, பெரிய நம்பி ஒரு பாகவதர்‌ மடியை விடக்‌ கோயில்‌ சிறப்பான தல்ல என்று கூறி உயிர்‌ நீத்தார்‌. பாஷ்யகாரருக்கு ‘த்வயத்தை’ அருளிச்‌ செய்தவர்‌ பெரியநம்பி, அதன்‌ அர்த்தத்தை அருளிச்‌ செய்தவர்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி, ஞான பூர்ணரான ஆளவந்தார்‌ சீடர்‌ பெரிய நம்பி அருளிய திருப்பாணாழ்வார்‌ தனியனில்‌ இரு காவிரிகளுக்கு நடுவில்‌ பள்ளி கொண்ட பெருமாளைத்‌ திருவடி முதல்‌ திருமுடி வரை அனுபவித்து பேரானந்தம்‌ கொண்ட நெஞ்சினராய்த்‌ தம்‌ கண்கள்‌ மற்றொன்றைக்‌ காணா என்று எவர்‌ அறுதியிட்டாரோ, அந்த முனி வாஹனரை அனுசந்திக்கிறேன்‌ என்றார்‌. பெரிய நம்பிக்குத்‌ திரு அவதாரஸ்தலம்‌ கோயில்‌ (ஸ்ரீரங்கம்‌) இவரது இதர திருநாமங்கள்‌ பராங்குசதாஸர்‌, மஹாபூர்ணர்‌ பூரணாசார்யார்‌ என்பன. இவரது குமாரர்‌-பெயர்‌ புண்டரீகாக்ஷர்‌ திருவாராதனப் பெருமாள்‌ அழகிய சிங்கன்‌-இவரது ஆச்சாரியார்‌ ஆளவந்தார்‌. இவரது சிஷ்யர்கள்‌ திருக்கச்சி நம்பி, எம்பெருமானார்‌, மலைகுனிய நின்றார்‌, சடகோப தாஸர்‌,அணி அரங்கத்தமுதனார்‌ (திருவரங்கத்தமுதனாரின்‌ தந்‌தை ) திருவாய்க்குலமுடையார்‌ பட்டர்‌ முதலானோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌. இவர்‌ இறந்த இடம்‌, சோழ தேசத்தில்‌ பசுபதி கோயில்‌.

அம்புவியில்‌ பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே
ஆளவந்தார்‌ தாளிணையை அடைந்துய்ந்தோன்‌ வாழியே.
உம்பர் தொழும்‌ அரங்கேசர்க்குகப் புடையோன்‌ வாழியே.
ஓங்கு தனுக் கேட்டை தனில்‌ உதித்த பிரான்‌ வாழியே.
வம்பவிழ்தார்‌ வரதருரை வாழ்வளித்தான்‌ வாழியே.
மாறனோர்‌ நம்பிக்கு வாழ்வளித்தான்‌ வாழியே.
எம்பெருமானார்‌ முனிவர்க்‌ கிதமுரைத்தான்‌ வாழியே.
எழில்‌ பெரிய நம்பி சரண்‌ இனிதூழி வாழியே.

ஆளவந்தார்‌ அவதரித்துப்‌ 11 வருடங்கள்‌ கழிந்த பின்‌ கிபி-987-ல்‌ பெரியாழ்வாருக்குப்‌ பரம ஆப்தரான செல்வ நம்பியின்‌ சந்ததியில்‌ பிராமண குலத்திலே திருக்குருகைப்பிரான்‌ என்னும்‌ திருநாமமுடையவராய்ப்‌ பிறந்தார்‌ திருக்கோஷ்டியூர்‌ நம்பி. நாதமுனிகளிடமிருந்து உய்யக்கொண்டார்‌, மணற்கால்‌ நம்பி மூலம்‌ கிடைத்த அந்தப் பவித்ரமான இராமானுஜ விக்ரகத்தை ஆளவந்தார்‌ தம்முடைய அந்திம காலத்தில்‌ இவரிடம்‌ கொடுத்து அது வந்த
வழியையும்‌ கூறி ரகஸ்யார்த்தங்கள்‌ அனைத்தையும்‌ இராமானுஜருக்கு உபதேசிக்கும்படியும்‌, நம்‌ தர்ஸனத்தை அவர்‌ நாமத்தாலே விளங்க வைக்கும்படியும்‌ நியமித்துச்‌ சென்றார்‌. அதன்படியே நம்பியும்‌, அனுவருத்தி பிர்சந்நாச்சாரியார்‌ (ஒராண் வழி ஆச்சார்‌யர்‌] பரம்பரை தன்னுடன்‌ முடிவு பெற்று எம்பெருமானார்‌ தொடங்கி (கிருபாமாத்ர பிரசந்நாச்சார்யார்‌) ஆசையுள்ளோர்‌ அனைவரும்‌ கற்கும்‌ உரிமைகளுடைய பரம்பரை வளர வேண்டும்‌ என்னும்‌, திருவுள்ளத்தாலே ஸ்ரீ ராமானுஜரை பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு நடக்கச் செய்து வேறு யாருக்கும்‌ உபதேசிக்கக் கூடாது என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டு அவருக்குத்‌ திருமந்‌திரத்தை உபதேசிதார்‌. இராமானுஜர்‌ தம்‌ எல்லையற்ற கருணையினால்‌ ஆச்சார்யார்‌ கட்டளையையும்‌ மீறித்‌ தமக்கு நரகம்‌ வந்தாலும்‌ வரட்டும்‌. பலர்‌ உய்ந்து போனால்‌ போதும்‌ என்னும்‌ திருஉள்ளத்துடன்‌ பலருக்கும்‌ திருமந்திரத்தை உபதேசித்தார்‌. இதைக் கேள்விப்‌பட்ட நம்பி ‘எம்பெருமானாரே’ என்று இராமானுஜரை அணைத்‌துக் கொண்டு, அவர்‌ பெயராலேயே எம்பெருமானார்‌ தர்சனம்‌ என்றே அந்தத் தர்சனம்‌ விளங்கட்டும்‌ என்று அனுக்கிரகித்து அவருக்குத்‌ தாமே சரம ஸ்லோகத்தை (சரணாகதி தத்துவத்தை] உபதேசித்து அதைத் தக்க அதிகாரிகளுக்கு உபதேசிக்கும்படி கட்டளையிட்டார்‌-திருமாலை யாண்டானை எம்பெருமானாருக்குத்‌ திருவாய்‌மொழி காலட்சேபம்‌ சொல்லும்படி நியமித்தவரும்‌ இவரே-ஆளவந்தாரிடம்‌ கேட்காத அர்த்தங்களை விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியாக (தானே புதிதாக உண்டாக்கி) எம்பெருமானார்‌ கூறியதாலே கோபமடைந்த திருமாலையாண்டான்‌ காலட்சேபத்தை நிறுத்திய பொழுது எம்பெருமானாருடைய பெருமையைத்‌ திருமாலை யாண்‌டானுக்கு எடுத்துரைத்து மறுபடியும்‌ காலட்சேபம்‌ தொடங்குமாறு செய்தவரும்‌ இவரே. இராமானுஜர்‌ உஞ்ச விருத்தி செய்து வரும்‌பொழுது ஸ்ரீரங்கத்தில்‌ உள்ள ஒருவர்‌ விஷங்கலந்த அன்னத்தை இட்டபடியால்‌, இராமானுஜர்‌ உபவாசமிருக்கிறார்‌ என்று கேள்விப்‌பட்டுத்‌ திருக்கோஷ்டியிலிருந்து பதறி ஓடிவந்து, எம்பெருமானார்‌ சிஷ்யர்களில்‌ கிடாம்பி யாச்சானுக்கே, எம்பெருமானாரது திருமேனியில்‌ பரிவு உள்ளதைச்‌ சோதித்து தெரிந்து கொண்டு அவரை உடையவருக்கு மடப்பள்ளிக்‌ கைங்கர்யம்‌ செய்யுமாறு நியமித்தவரும்‌ இவரே. இவற்றிலிருந்து இவர்‌ ஒரு பெரிய தீர்க்கதரிசி என்பதும்‌ எம்பெருமானாரிடம்‌ பொங்கும்‌ பரிவை உடையவர்‌ என்பதும்‌ தமக்குக்‌ கெட்ட பெயர்‌ ஏற்படும்‌ என்றாலும்‌ எம்பெருமானாருக்குச்‌ சிறப்பு விளைவிப்பதில்‌ ஊன்றி நின்றவர்‌ என்பதுவும்‌, ஆளவந்தார்‌ சிஷ்யர்களில்‌ தலைமை பெற்றவர்‌ என்பதும்‌ விளங்குகிறது.இவர்‌ குமாரத்தி தேவகிப்பிராட்டி ஒரு ஞானாதிகை (ஞானம்‌ வாய்க்கப் பெற்றவர்‌). எம்பெருமானாருடைய சிஷ்யை! உந்து மத களிற்றன்‌ பாட்டை (திருப்பாவை 18) எம்பெருமானார்‌ பாடிக்‌கொண்டு உஞ்ச விருத்திக்கு வந்த பொழுது திருக்கோட்டியூர்‌ நம்பி வாசலிலே செந்தாமரைக்‌ கையால்‌ சீரார்‌ வளை யொலிப்ப வந்து திறவாய்‌ மகிழ்ந்து என்று பாடிய அளவிலே, தேவகிப் பிராட்டியார்‌ கதவைத் திறக்க அவளை நப்பின்னையாகவே எண்ணித் திருவடியில்‌ விழுந்தார்‌, எம்பெருமானார்‌ என்ற விபரம்‌ பல நூல்களில்‌ காண்கிறோம்‌.திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாளிகை வாசலிலே திருப்பாவை அனுசந்தானத்துடனே தண்டன்‌ சமர்ப்பித்து சீரார்‌ வளை யொலிப்ப வந்து திறவாய்‌ மகிழ்ந்து என்ற விருத்தாந்தம்‌ ராமானுஜார்ய திவ்ய சரிதையில்‌ பின் வருமாறு உள்ளது.மாதுகரத்துத்‌ கெழுந்தருளிவரும்‌ போதன்றிப்‌ போம் போதும்‌ ஓதும்‌ கோதை திருப்பாவை உரையோடுலாவித் திரிபவரும்‌ வேதம்‌ வல்ல திருக்கோட்டி நம்பி மனையில்‌ மெய் ஞானப்‌போதமுடையார்‌ ஆங்கொரு நாள் புக்கார்‌ உந்து மகளிற்றில்‌.(மாதுகரம்‌-பிக்ஷ, மெய்ஞ்ஞான போதம்‌ மெய்ஞான அறிவு).பந்தார்‌ விரலி உன்‌ மைத்துனன்‌ பேர் பாடச்‌ செந்தாமரைக் கையால்‌ சீரார்‌ வளை யொலிப்ப வந்தாரணங்கே திறவென்ன வாசலின் முன்‌ எந் தாதை நின்றார்‌, அவ்வெல்லையினில்‌ நம்பி தரும்‌ அன்னமென்‌ நடையாள்‌ தேவகி யென்னும்‌ அரும் பெயருடைய ஆரணங்கு தன்னொரு கரத்தால்‌ கந்துகமொன்று தாங்கியோர்‌ தாமரைக்‌ கையால்‌ இன்னிசை எதிகட்கிறைவனார் திறவென்‌றிசைத்தசொல்‌ இறுமுனம்‌ திறந்தாள்‌ மின்னுமா மணி சேர்ந்திலங்கிய கபாடம்‌ விண்டுவின்‌ தொண்டர்‌ மெல்லியவாள்‌ கண்டனர்‌. பின்னைப்‌ பிராட்டி மற்றிவளும்‌ கள்வனேன்‌ பொருட்டினாலலர்ந்த புண்டரீகச்சீர்‌ திருவடி வருந்தப்‌ போந்திவை திறந்தனளென்னப்‌ பண்தரும்‌ பனுவல்‌ மறந்தனர்‌, மண்ணில்‌ பதைப்புற வொடுங்கினர்‌, விழுந்தார்‌ ஒண்டொடி கண்டு வெகுளியோடேகி உற்றதைப்‌ பெற்றவர்க்‌ குரைப்பாள்‌ என்றிவை மகளார்‌ இயம்பிட நம்பி இன்பமுற்றிருந்து இளையாழ்வீர்‌! ஒன்று சீர்‌ உந்து மதகளிறென்ன ஓதிய பாடலோ சந்தை இன்று நம்‌ வாசல்‌ தலையுறுமளவில்‌ என்றனர்‌. ‘ஆம்‌’ என எழுந்து சென்று மா மாதுகரம்‌ பரிமாறத்‌ தேசிகக்‌ குன்றையும்‌ வணங்கி-என்று வடிவழகிய நம்பி தாஸராலும்‌-இவ் விருத்தாந்தம்‌ வர்ணிக்கப்‌பட்டுள்ளது.

இராமானுஜர்‌ திருக் கோட்டியூர்‌ சென்று அங்குள்ளவர்களிடம்‌ நம்பி திருமாளிகை எங்கே என்று கேட்க அவர்களும்‌ அதோ தெரிகிற கூரை என்று கூறக் கேட்டு அவ் விடத்திருந்தே நம்பி திருமாளிகை யளவும்‌ தண்டனிட்டுக் கொண்டே எழுந்தருளியதால்‌, அவ்வூரிலுள்ள, குற்றமின்றிக்‌ குருக்களுக்கு அனுகூலராய்‌ வாழும்‌ நல்லவர்கள்‌ நம்பியின்‌ பெருமையை அறிந்து அவரை வழிபடலா யினர்‌.
ஒரு நாள்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி கோயில்‌ தர்ஸனம்‌ செய்து திரும்பும்பொழுது எம்பெருமானார்‌ அவரை அணுகித்‌ தனக்குத்‌ தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளுமாறு வேண்ட அவரும்‌ தான்‌ ஆச்சார்யார்‌ ஆளவந்தார்‌ நீராடும் பொழுது அவரது திரு முகுது இருக்கும்‌ அழகைக் கண்டு அதுவே தஞ்சம்‌ என்றிருப்பேன்‌. நீரும்‌ மறவாமல்‌ இதை நினைத்திரும்‌ என்றாராம்‌ கூரத்தாழ்வான்‌ ஒரு மாத காலம்‌ உபவாசமிருந்து இராமானுஜரிடமிருந்து சரம ஸ்லோகத்தின்‌ பொருளை அறிந்து கொண்டவராதலால்‌, முதலியாண்‌டான்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பி பக்கம்‌ ஆறுமாதம்‌ தொண்டு செய்து அவரிடம்‌ ஸ்வரூப சிட்சை பெற்றபின்னர்‌ இராமானுஜரிடம்‌ சரம ஸ்லோகார்த்தத்தைப்‌ பெற்றார்‌.
திருக்கோஷ்டியூர்‌ நம்பி இராமானுஜருக்கு அருளிச்செய்த உபதேச மொழிகள்‌ வருமாறு. ஒரு பக்தனது நித்தியக் கடமைகள்‌ முறையே, ஆஸ்ரயண விரோதி, அதாவது நான்‌, எனது என்னும்‌ அகங்கார மமகாரங்களும்‌ உடலின்‌ மேல்‌ உள்ள ஆசையும்‌ நீக்குதல்‌, அடுத்தது புருஷாகாரமான பிராட்டியையும்‌, ஆச்சார்யர்களையும்‌ அவமதிக்காது இருப்பது, அடுத்து பகவத்‌ பிராப்தி (அருள்‌)கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயமும்‌ ஒரு ஜீவனை எம்பெருமானை அணுகாதபடி தடுத்து விடுகின்றது என்ற கருத்து, அடுத்து ஸ்ரவண விரோதி என்பது தன்னை மறந்து மற்ற தெய்வங்களைப்‌பற்றிய கதைகளைக்‌ கேட்பது எம்பெருமானைப் பற்றிய பெருமைகளைக்‌ கேட்பதைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து, அடுத்து அனுபவ விரோதி என்பது சந்தனம்‌, புஷ்பம்‌ முதலான போகப் பொருள்‌களை உபயோகிப்பதால்‌ உலக இச்சைகளில்‌ பற்றுகளை விளைவிப்பதன்‌ மூலம்‌ பகவதனுபவத்தைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து.-அடுத்து ஸ்வரூப விரோதி என்பது எம்பெருமான்‌ இட்ட வழக்காக பரதந்திரனாக இல்லாமல்‌ தன்னை ஸ்வதந்தந்திரனாக நினைத்து அவன்‌ ஆணையை மீறுவது. அடுத்து பரத்வ விரோது என்பது பிரமன்‌, உருத்திரன்‌ முதலான தேவதைகள்‌ தன்னை விட விஞ்சியவர்களாக இருப்பதால்‌ அவர்களை வணங்கினால்‌ எம்பெருமானுடைய பரத்வத்தை அறிய முடியாதபடி தடுத்து விடும்‌ என்ற கருத்து=அடுத்து ப்ராப்தி விரோதி என்பது எம்பெருமானை இனியவனாக
நினையாது தனக்கு உடல்‌ சம்பந்தமான காரியங்களைச்‌ செய்து தரும்‌ பாவனனாக நினைப்பவரோடு சேருவது பகவத் பிராப்தியைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து என்பதாகும்‌.-பொன்னைப் புடம்‌ போடப்‌ போட ஒளி விஞ்சுவதைப் போல ஜீவாத்மா ஸ்வரூபம்‌ பொன்‌ போல குற்றமற்றது. தேக சம்பந்தத்‌தால்‌ ஏற்பட்ட அழுக்குகள்‌ நீங்கி முக்தி நிலையில்‌ அனன்ய சேஷத்வம்‌, அனன்ய சரணத்வம்‌, அனன்ய போக்யத்வம்‌, ஸம்ஸ்‌லேஷத்தில்‌ (கூடினால்‌) தரிப்பது, பிரிந்தால்‌ தரியாமை, எம்பெருமானிட்ட வழக்கா யிருக்கை என்னும்‌ ஆறு வகையாலே ஜீவனுக்கு நற் கதி உண்டாகும்‌ என்ற கருத்து. எம்பெருமான்‌ உபேயமாகும்‌ போது பிராட்டிமார்‌ நித்ய முக்தர்கள்‌ முதலானவர்களோடு சேர்ந்தே உபேயமாகிறான்‌.
திருக்கோஷ்டியூர்‌ நம்பி தனது அந்திம காலத்தில்‌ தன்‌ குமாரத்தி தேவகிப் பிராட்டியிடம்‌ என்‌ பிரயாணத்தில்‌ (மரணத்தில்‌) நீ நினைத்திருப்பது என்‌ என்று கேட்க, ‘அய்யரே, எங்கள்‌ ஆச்சார்யரான எம்பெருமானாரோடு உண்டான சம்பந்தத்தினால்‌ தேவரீருக்கு நற்கது உண்டாகப்‌ போகிறது என்று நினைத்தேன்‌’ என்றாளாம்‌. அவரும்‌ தன்‌ மகளிடம்‌ ஆளவந்தாரிடம்‌ பெற்ற இராமானுஜர்‌ விக்ரகத்தைக்‌ கொடுத்து வளர்த்ததனால்‌ ஆய பயன்‌ பெற்றேன்‌ என்று கூறி எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌ என்று கூறி திருநாடு ஏகினார்‌.
திருக்கோட்டியூர்‌ நம்பியின்‌ வேறு திருநாமங்கள்‌:- கோஷ்டிபூரணர்‌, கோஷ்டி புரீசர்‌, என்பன. இவரது குமாரரான தெற்காழ்வானும்‌, இராமானுஜரது சீடரே. இவரது இருப்பிடம்‌ திருக்கோஷ்டியூர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌.

மன்னியசீர்‌ ஆளவந்தார்‌ மலர்ப்பதத்தோன்‌ வாழியே.
வைகாசிரோஹினிநாள்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
இன்னிளவஞ்சிக்கினிதுரைத்தான்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்பேர்‌ இயம்புமவன்‌ வாழியே.
தென்னணியாம்‌ காசிபகோத்திரத்துதித்தான்‌ வாழியே.
திருக்குருகைப்பிரான்‌ எனும்‌ பேர்‌ திகழ வந்தான்‌ வாழியே.
முன்னாரும்‌ பெரும்‌ புதூர்‌ முனிக்குரைத்தான்‌ வாழியே.
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில்‌ வாழியே.
காசிபன்‌ தன்‌ கோத்திரத்தைக்‌ கருதி வந்தோன்‌ வாழியே
கலையனைத்தால்‌ முன்னவர்க்குக்‌ கதியளித்தான்‌ வாழியே.
மாசற மெய்ப்பொருள்‌ எதிக்கு வழங்குவோன்‌ வாழியே.
வையகமுன்‌ தர்சனத்தால்‌ வாழுமென்றான்‌ வாழியே.
ஏசறவே யுகந்தெதியை எடுத்தணைத்தான்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்‌ பெயர்‌ இயம்புமவன்‌ வாழியே.
தேசுபுகழ்‌ செல்வன்‌ மொழி தேர்ந்துரைப்பான்‌ வாழியே.
திருக்கோட்டியூர்‌ நம்பி சகதலத்தில்‌ வாழியே.
ஈரேழு மூன்றொன்றில்‌ இதமுரைத்தான்‌ வாழியே.
ஏற்றமா ஆளவந்தாரிணையடியோன்‌ வாழியே.
ஈரெழுவருக்கும்‌ பதம்‌ ஈயுமவன்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்‌ பேரியம்புமவன்‌ வாழியே.
நாலேழில்‌ நாலாநாள்‌ நாடி வந்தான்‌ வாழியே.
நன்மதுர கவி நிலையை நண்ணினான்‌ வாழியே.
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான்‌ வாழியே.
நங்கள்‌ திருக்கோட்டி நம்பி நற் பதங்கள்‌ வாழியே.
அல்லும்‌ பகலும்‌ ஆளவந்தார்‌ அடி நினைவான்‌ வாழியே.
அனவரதம்‌ தெற்காழ்வார்க்‌ காட் செய்வோன்‌ வாழியே.
வெல் பொருள்வெளியிட எதியை வெறுத்துரைத்தான்‌ வாழியே.
மேதினியோர்‌ உய்வெரென்று மெச்சினான்‌ வாழியே.
உள்மந்திர மெதிராசர்க் கொளித்துரைத்தான்‌ வாழியே.
உந்துமதத்தெதியை உகந்தணைத்தான்‌ வாழியே.
செல்வநம்பி குலம் தழைக்கச்‌ செகத்‌ துதித்தான்‌ வாழியே.
திருக்கோட்டியூர்‌ நம்பி செகதலத்தில்‌ வாழியே.

திருக்கோட்டியூர்‌ நம்பி பிறந்த மறு வருடம்‌ அழகர் கோவிலான திருமாலிருஞ்சோலையில்‌ ஸ்ரீ வைஷ்ணவப்‌ பிராமண குலத்‌தில்‌ பிறந்தவருக்கு ஞான பூரணர்‌ என்று பெயர்‌ சூட்டினர்‌ பெற்றறோர்கள்‌. இவருடைய முன்னோர்களில்‌ ஒருவரான கண்ணுக்கினியான ஸ்வாமி என்பவர்‌, ஒரு முறை சில மலையாள மாந்திரீகர்கள்‌ கண்ணில்‌ மையிட்டுக்கொண்டு வந்து அதன்‌ மகிமையால்‌ அழகரது தேஜசை அபகரித்துக் கொள்ள முயன்றதைக் கண்ட இந்த ஸ்வாமி,அவர்கள்‌ உண்ணும்‌ பிரசாதத்தில்‌ மிளகை அதிகம்‌ சேர்த்திட அதனால்‌ அந்த மாய மை கண்ணிலிருந்து கரைந்திட அவர்கள்‌ குற்றம்‌ வெளிப்பட்டுத்‌ தண்டிக்கப்பட்டார்களாம்‌. அதனால்‌ அந்தக்‌ கண்ணுக்கினியான்‌ ஸ்வாமிக்குத்‌ திருமாலை யாண்டான்‌ என்ற பட்டப்பெயரும்‌ ஏற்பட்டு அந்தக்கோயில்‌ புரோகிதராகவும்‌ நியமிக்கப்பட்டு, பரம்பரையாக இன்றளவும்‌ அப் பெருமைகள்‌ அவருடைய சந்ததியாரால்‌ அனுபவிக்கப்பட்டு வருகின்றன.திருக்கோட்டியூர்‌ நம்பி கட்டளைப்படி இராமானுஜருக்கு திருவாய்‌ மொழி உபதேசித்து வரும்‌ காலத்தில்‌, ஆளவந்தார்‌ அருளிய அர்த்தங்களுக்கு மாறாக, இராமானுஜர்‌ சில இடங்களில்‌ அர்த்தஞ்சொல்லிய காரணத்தால்‌ மனம்‌ வெதும்பிப்‌ பாடம்‌ சொல்‌வதை நிறுத்தி விட்டார்‌. பின்னர்‌ திருக்கோட்டியூர்‌ நம்பியினால்‌ ஆளவந்தாருக்குத்‌ தோன்றாத அர்த்தம்‌ இராமானுஜருக்குத்‌ தோன்‌றாது. ஸ்ரீ கிருஷ்ணன்‌ சாந்தீப முனியிடம்‌ பாடம்‌ கேட்டதைப்‌ போல இராமானுஜர்‌ உம்மிடம்‌ சந்தை கேட்கிறார்‌. ஆகவே நீர்‌ தொடர்ந்து சொல்லும்‌ என்று கட்டளையிட அவரும்‌ தொடர்ந்து நடத்தி நிறைவு செய்தார்‌. இவர்‌, தம்‌ குமாரரான சுந்தரத் தோளுடையானை எம்பெருமானாரது சீடராக்கினார்‌. திருமாலையாண்டான்‌ வம்சத்தில்‌ வந்த யமுனாச்சாரியார்‌ என்பவர்‌ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயருக்கு சிஷ்யராயிருந்தவர்‌.இவர்‌ அருளிய பல கிரந்தங்களில்‌ பிரமேய ரத்தினம்‌ தத்வ பூஷணம்‌ என்ற இரண்டும்‌ இப்போதும்‌ கிடைக்கின்றன. திருமாலை யாண்டான்‌ வம்சத்தவர்கள்‌ இன்றும்‌ அழகருக்குப்‌ புரோகிதராயிருந்து பல விசேஷ கெளரவங்களைப் பெற்று வருகின்றனர்‌. சித்திரா பெளர்ணமி யன்று மதுரைக்கு அழகர்‌ எழுந்தருளும்‌ மகோத்ஸவத்‌தில்‌ அழகர்‌ வரு முன்னரே திருமாலை யாண்டான்‌ வம்சத்தினர்‌ பல்லக்கில்‌ எழுந்தருளுவதைக் கண்ட பொது ஜனங்கள்‌ ஆண்டான்‌ பல்லக்கு முன்னே, அழகர்‌ பல்லக்குப் பின்னே என்று கூறுவார்கள்‌.திருமாலை யாண்டான்‌ உடையவருக்கு திருவாய்மொழிச்சந்தை சொல்லும் பொழுது நீர்‌ ஆளவந்தாரைக்‌ கண்ணாலும்‌ காணாதிருக்க, இப்படி அருளிச் செய்யார்‌ என்று சொல்லக் காரணம்‌ என்ன என்று வினவ, நான்‌ ஆளவந்தாருக்கு ஏகலைவனன்றோ என்று பதில்‌ சொல்லவே திருமாலை யாண்டானும்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி சொல்லியதை ஒத்திருந்தது. நாம்‌ ஆளவந்தாரிடம்‌ கேளாத அர்த்தமெல்லாமல்‌ இவரிடம்‌ கேட்டோம்‌ என்று அவரை வணங்கினாராம்‌.வங்கிபுரத்து நம்பி திருமாலை யாண்டானது சிஷ்யனாக, பாஷ்‌யகாரரடம்‌ ஞானோபதேசம்‌ பெற்றார்‌.-நாலூராண்டான்‌ என்பவர்‌ ஆளவந்தாரிடம்‌ ஆஸ்ரமித்துத்‌ திருமாலை யாண்டானிடம்‌ ஞான ஜீவனம்‌ பண்ணினார்‌.-பெரியாண்டான்‌ என்பது திருமலை யாண்‌டான்‌ புதல்வன்‌ சுந்தரத் தோளுடையான்‌. பெரியாண்டான்‌ திருத்‌தோரணம்‌ தொடங்கி அழகர்‌ திருவடிகளிலேயே பதினெட்டு வருடங்கள்‌ இரவும்‌ பகலும்‌ தண்டனிட்டுக்‌ கிடப்பார்‌. ஆண்டான்‌ இடக்கிறாரோ பசுக் கடக்கிறதோ, வழி பார்த்துப்‌ போங்கள்‌ என்று சொல்லுமாறு பகவதனுபவம்‌ சலியாமல்‌ பண்ணுவார்‌. கிணற்றில்‌ விழுந்தவனை இரண்டு. பேருமாக எடுத்தாற்போல, பர்ஷ்யகாரரும்‌, எம்பாரும்‌ என்னைக்‌ கடாக்ஷித்தார்கள்‌ என்று பெரியாண்டான்‌ கூறுவார்‌.அழகர்‌ திருவோலக்கத்தில்‌ பிள்ளை யழகப்‌ பெருமான்‌ என்பவர்‌ பெரியாண்டானைப் பார்த்து ‘பரமபதம்‌ எப்படி இருக்கும்‌:என்று கேட்க ‘இப்படியே தான்‌ இருக்கும்‌. ஆனால்‌ இங்கிருந்தால்‌ முதுகு கடுக்கும்‌ அங்கு பேனால்‌ அது செய்யாது’ என்றாராம்‌.ஒரு பாக்கு மரத்தைப்‌ பயிரிட்டு 16 ஆண்டுகள்‌ பாடுபட்டாலும்‌ பெறும்‌ பலன்‌ வெகு சொற்பமே. மிகத் தாழ்வானவருக்குச்‌ சம்ஸாரத்தைப்‌ போக்கி மிகச்‌ சிறந்ததான பரமபதத்தைத்‌ தருவதற்கு த்வயத்தை அருளிச் செய்த ஆச்சாரியரது திருவடிகளில்‌ எப்போதுமே நன்றி யில்லாத ஸம்ஸாரிகளுக்கு எத்தைச் சொல்லி என்ன பயன்‌ விளையப் போகிறது என்று திருமாலை யாண்டான்‌ வெறுத்‌துக் கூறினார்‌. எதிராஜர்‌ திருமாலை யாண்டானிடம்‌ திருவாய்மொழி பெரிய திருமொழி முதலாயிரம்‌ இயற்பா அனைத்தும்‌ சந்தைகளையும் கேட்டவர்‌.

அம்புவியில்‌ ஆளவந்தாரடியிணையோன்‌ வாழியே.
ஆரியனாம்‌ அவர்‌ பதத்தை அன்பு செய்தோன்‌ வாழியே.
வெம்பிவரும்‌ வாதியரை வேர் களைந்தோன்‌ வாழியே.
மேதினியில்‌ நாலூர் விளக்க வந்தான்‌ வாழியே.
எம்பெருமானெதிகாசர்க்‌ கீடுரைத்தான்‌ வாழியே.
ஏற்றமுள்ள மாசி மகமிலங்க வந்தோன்‌ வாழியே.
வம்பவிழும்‌ சோலை மலை வாழ வந்தோன்‌ வாழியே.
மாலாதராரியன்‌ தாள்‌ மாநிலத்தில்‌ வாழியே.
வீசு புகழ்ச்‌ சங்காழி விளங்கு புயம்‌ வாழியே.
விண்ணுயர்ந்த மலை யழகர்‌ விரும்புமவன்‌ வாழியே.
மாசி மகம்‌ இப் புவியில்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
மறைப் பொருளை உடையவர்க்கு வகுத்துரைத்தோன்‌ வாழியே.
காசிப நற் குலத்துதித்த கருணை நிதி வாழியே.
கையாழி சங்கதனால்‌ கதி தருவோன்‌ வாழியே.
தேசு புகழ்‌ ஆளவந்தார்‌ திருவடியோன்‌ வாழியே.
திருமாலை யாண்டான்‌ தாள்‌ செகதலத்தில்‌ வாழியே.

பெரிய திருமலை நம்பி இராமானுஜருக்கு மாதுலராகும்‌ (தாய்‌ மாமன்‌). இவரது
மூத்த சகோதரி பூதேவி என்னும்‌ காந்திமதிக்கும்‌ ஸ்ரீபெரும்புதூர்‌ கேசவ சோமயாஜாலுவுக்கும்‌ பிறந்த மகனே எம்பெருமானாரான இராமானுஜர்‌. இவரது இளைய சகோதரியான ஸ்ரீ தேவியை மதுரமங்கலம்‌ கமல நயன பட்டருக்கு மணம்‌ செய்து கொடுத்தார்‌.அவர்களது குமாரர்கள்‌ எம்பார்‌ என்னும்‌ கோவிந்தரும்‌ அவரது தம்பி சிறிய கோவிந்தப் பெருமாளும்‌ ஆவார்கள்‌. இவர்‌ எம்பெரு மானாருக்கு ஒரு வருடகாலம்‌ கீழத்திருப்பதியில்‌ வால்மீகியின்‌ இராமாயணத்தை காலட்சேபம்‌ செய்தார்‌. திருவேங்கடமுடையான்‌ இவரைத்‌ திருத் தகப்பனாராக அபிமானித்தார்‌ என்பர்‌. சைவராக மாற்றப்பட்டுக்‌ காளஹஸ்தியில்‌ உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக இருந்த மருமகன்‌ கோவிந்தரை மறுபடி ஸ்ரீ வைஷ்ணவராகத்‌ திருத்தியவர்‌ இவர்‌. தம்முடைய குமாரர்களான பிள்ளை திருமலை நம்பியையும்‌, பிள்ளானையும்‌, இரு குமாரத்திகளையும்‌ உத்தாரகரான எம்பெருமானார்‌ திருவடிகளில்‌ அபிமானம்‌ வைக்கச்‌ செய்‌தார்‌. உடையவரது வாழ்க்கையோடு பின்னிப்‌ பிணைந்ததே இவரது வாழ்க்கையாகும்‌.-எம்பெருமானார்‌ தம்‌ சீடர்களுடன்‌ திருப்பதிக்கு யாத்திரை சென்ற பொழுது ஆழ்வார்கள்‌, தரிசிக்காத இடத்திற்குத் தானும்‌ போக விரும்பாமல்‌ அடிவாரத்திலே எழுந்தருளியிருக்கிற ஆழ்வாராதிகளைச்‌ சேவித்துக் கொண்டு திருப்பதியில்‌ விட்டலதேவனையும்‌ மற்றும்‌ முப்பது வைஷ்ணவர்களையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டு வாழ்ந்து வரும்‌ நாளில்‌ திருமலையிலிருந்து அனந்தாழ்‌வான்‌ முதலிய வைணவர்கள்‌ இதைக் கேள்விப்பட்டு கீழே இறங்கி வந்து எம்பெருமானாரை திரு மலைக்கு எழுந்தருளுமாறு வேண்ட,
அவரும்‌ ஆழ்வார்கள்‌ செல்லாத இடத்திற்கு தாமும்‌ செல்ல விரும்பவில்லை என்று கூற உடனே உடனிருந்த ஏனைய வைணவர்களும்‌ நாங்களும்‌ ‘ஏறோம்‌’ என்று கூறவே உடையவரும்‌ ஏற ஒருப்பட்டுத்‌ திருமலையில்‌ திருப்பரியட்டப்‌ பாறை யளவிலே ஏறியிருக்கும்பொழுது அவரை எதிர்கொண்டு, திருவேங்கடமுடையானது தீர்த்தப்‌ பிரசாதங்களுடன்‌ திருமலை நம்பியே அழைக்க வந்தார்‌. அவரிடம்‌ வேறு யாரேனும்‌ சிறியவர்களை அனுப்பக் கூடாதா, தாங்களே வர வேண்டுமா என்று உடையவர்‌ கேட்கத்‌ திருமலை நம்பி, என்னை விடச்‌ சிறியவர்கள்‌ யாரையும்‌ காணவில்லை. ஆகவே நானே வந்தேன்‌ என்றார்‌. உடையவர்‌ அம்மலை யழகில்‌ மனமகிழ்ந்து இது பூலோகவைகுந்த மாயிருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு திருமஞ்சனம்‌ கண்‌டருளி, இவ்விடம்‌ விண்ணோர்‌ வெற்பாகையாலே, அமரர்‌ முனிக்‌கணங்கள்‌ போன்ற நித்ய ஸூரிகள்‌ வாழுமிடம்‌. நாம்‌ இப்போதே இங்கிருந்து இறங்க வேண்டும்‌ என்று கூற பெரிய திருமலைநம்பி திவ்ய தேசங்களில்‌ மூன்று நாளாவது இருக்க வேண்டும்‌ என்று கூறினார்‌. ஆகவே உடையவரும்‌ மூன்று நாட்களும்‌ அமுது செய்யாமல்‌ பகவானை அனுபவித்து, பிரபந்தப் பாடல்களை அனுசந்தித்து மூழ்ந்தார்‌. பின்னர்‌ கீழிறங்கி கீழத்திருப்பதியில்‌ மாதுலரான பெரிய திருமலை நம்பியின்‌ திருமாளிகையில்‌ உணவருந்தி அவரிடம்‌ வால்மீகி இராமாயணம்‌ பிரவசனம்‌ கேட்டவாறு ஒரு வருடகாலம்‌ தங்கி இருந்தார்‌.
பெரிய திருமலை நம்பியின்‌ ௮வதார ஸ்தலம்‌: திருமலை(திருப்பதி) அவரது திரு நட்சத்திரம்‌, சித்திரை மாதத்து ஸ்வாதி ஆகும்‌. ஆனால்‌ இவரது வாழித் திருநாமத்தில்‌ வைகாசி ஸ்வாதி என்று வருவதால்‌ நிச்சயிக்கக்கூடவில்லை. இவரது இதர திருநாமங்கள்‌ ஸ்ரீ சைல பூர்ணர்‌, பெரிய திருமலைநம்பி. இவரது குமாரர்‌கள்‌ பிள்ளை திருமலைநம்பி, அப்புள்ளான்‌ ஆவர்‌, குமாரத்திகள்‌இருவருண்டு.-திருவாராதனப்பெருமாள்‌: மலை குனிய நின்ற பெருமாள்‌.இவர்‌ அருளிய அமலன்‌ ஆதிப்பிரான்‌ தனியன்‌
காட்டவே கண்ட பாத கமலம்‌ நல்லாடை உந்தி
தேட்டரு முதர பந்தம்‌ திருமார்பு கண்டம்‌ செவ்வாய்‌
வாட்டமில்‌ கண்கள்‌ மேனி முனியேறித்‌ தனி புகுந்து
பாட்டினால்‌ கண்டு வாழும்‌ பாணர் தாள்‌ பரவினோமே’

வைகாசி சோதி நாள்‌ வந்துதித்தான்‌ வாழியே.
வண் திருவேங்கட முடையான்‌ வரபுத்ரன்‌ வாழியே.
அய்யன்‌ ஸ்ரீ ஆளவந்தார்‌ அடி தொழுவோன்‌ வாழியே,
அனவரதம்‌ மலை குனியோர்க்கு அடிமை செய்வோன்‌ வாழியே.
மெய்யன்‌ இராமானுசாரியான்‌ விரும்புமவன்‌ வாழியே.
மிக்க திருமலையார்க்கெல்லாம்‌ மேலாவான்‌ வாழியே.
செய்ய தமிழ் வேதத்தின்‌ சிறப்பறிந்தான்‌ வாழியே.
திருமலை நம்பிகள்‌ உபய திருவடிகள்‌ வாழியே.

திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ எம்பெருமானார்‌ அவதரித்த அதே வருஷத்தில்‌ (கி.பி. 7017) வைகாசி கேட்டையில்‌ யமுனாச்சாரியாருக்கும்‌ ஸ்ரீரங்கநாயககிக்கும்‌ முதல்‌ குமாரராய்‌ அவதரித்தவர்‌. இவரைத்‌ தம்‌ ஆச்சாரியரான மணக்கால்‌ நம்பியிடம்‌ சிஷ்யராக இருந்து வருமாறு பணித்தார்‌ ஆளவந்தார்‌. நம்‌ பெருமாள்‌ ஸ்ரீரங்கநாதன்‌ நியமனத்தாலே காஞ்சியில்‌ தேவப் பெருமாளைத்‌ தமது இசையாலே மயக்கி வரம்‌ பெற்று எதிராஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர்‌ இவர்‌. ஸ்ரீரங்கநாதனுக்கு அரையராய்‌ இருந்த இவர்‌, எம்பெருமானாருக்கு அருளிச்‌ செயல்‌ சந்தையும்‌ சரமோபாயமும்‌ நல் வார்த்தைகளும்‌ உபதேசித்தவர்‌. இவருக்குச்‌ சந்ததி யல்லாமையால்‌ தம்‌ தம்‌பிகளான தெய்வத்‌துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி ஆகியவர்‌களை எம்பெருமானாருக்கு சிஷ்யர்களாக்கினார்‌.-ஆகவே எம்பெருமானாருடைய ஆச்சாரியர்களான பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாலை யாண்டான்‌ பெரிய திருமலை நம்பி, திருவரங்கப்பெருமான்‌ அரையர்‌ ஆகிய ஐவரும்‌,எம்பெருமானாரே எல்லோருக்கும்‌ உத்தாரக ஆச்சாரியார்‌ என்பது தோற்றத்‌ தங்களுடைய தம்பிகளையும்‌ குமாரர்களையும்‌, குமாரத்திகளையும்‌ எம்பெருமானாரிடமே அடைக்கலமாகக்‌ கொடுத்தனர்‌.-எம்பெருமானார்‌ திருவரங்கப் பெருமாள்‌ அரையருக்கு மனது உகக்‌கும்படியாக ஆறுமாத காலம்‌ பாலமுதம்‌ பக்குவமாகக்‌ காய்ச்சிக்‌ கொடுத்தும்‌ திருவத்யயன காலத்தில்‌ மஞ்சள்‌ காப்பரைத்து நீராடப்‌ பண்ணுவித்தும்‌ அவரை மகிழ்வித்ததனால்‌ அவரும்‌ ‘வாரீர்‌ எம்பெருமானாரே, உமக்கு சரம புருஷார்த்தம்‌ சொல்கிறோம்‌ என்று தொடங்கி தேவுமற்றறியாத மதுரகவிகளைப் போல நீரும்‌ குருவே மேலான பிரஹ்மம்‌. குருவே மேலான தவம்‌, குருவே மேலான காமம்‌. குருவே மேலான பிராப்யம்‌, குருவே மேலான கல்வி குருவே மேலான பிராபகம்‌. அப் பரம் பொருளையே உபதேஸிப்பதால்‌ குரு அதைக் காட்டிலும்‌ உயர்ந்தவர்‌. தீ மனம்‌ கெடுத்தும்‌,மருவித் தொழும்‌ மனம்‌ தந்தும்‌, அறியாதன அறிவித்த ஆச்சார்யனே -உபாயோபாயம்‌ என்ற விசுவாசத்துடன்‌ ‘பீதகவாடைப்‌ பெருமானார்‌ பிரம குருவாகி வந்து என்று சொல்வது போல உறங்கும்‌ பெருமாளே உலவும்‌ பெருமாளாக வந்தாரென்றிரும்‌’ என்று-பஞ்சோபாய நிஷ்டையான் பரம பர்வார்த்த விசேஷத்தைப்‌ பிரசாதித்தருளினார்‌.திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ காஞ்சிபுரத்தில்‌ வரதராஜப்‌ பெருமாளைச்‌ சேவித்து மிகுந்த பக்தியோடு ‘என்‌ நெஞ்சமே நான்‌:என்று தொடங்கி தொழுதெழு தொண்டர்கள்‌ தமக்கு பிணி யொழித்து அமரர்‌ பெரு விசும்பருளும்‌ பேரருளாளன்‌ என்று பாலேய்‌ தமிழில்‌ பண்ணார்‌ பாடல்‌ இன்னிசையில்‌ பாடிட பெருமாள்‌ மிக மகிழ்ந்து அவருக்கு முத்துத்‌ தாழ் வடம்‌ போன்ற வெகு மதிகளை வழங்க முற்பட அரையர்‌ தமக்கு இவையெல்லாம்‌ தேவை யில்லை. இராமானுசரை அடியேனுக்குத்‌ தந்தருளு வேண்டும்‌ என்று விண்ணப்பஞ்செய்ய பெருமாளும்‌ முன்னர்‌ எதுவும்‌ தருவோம்‌ என்று வாக்குக் கொடுத்ததை மறுக்க இயலாமல்‌ இராமானுசரை அனுப்ப இசைந்தார்‌. இராமானுசரும்‌ பேரருளாளரைச்‌ சேவித்து விடை கொண்டு, கூரத்தாழ்வாரையும்‌ முதலியாண்டானையும்‌ மடத்துக்குச்‌ சென்று தனது திருவாராதனப் பெருமாளான பேரருளாளனை எடுத்துவரச்‌ சொல்லித்‌ திருக்கச்சி நம்பியிடமும்‌,மற்றங்குள்ளோரிடமும்‌ விடைபெற்றுக் கொண்டு பெரிய கோயிலுக்கு எழுந்தருளினார்‌. இவ்வாறாக இராமானுசரைக்‌ கோயிலுக்‌குக்‌ கொண்டு வந்தவர்‌ இவ் வரையரே. இவர்‌ 175 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌. இவரது இதர நாமங்கள்‌ ரங்கார்யர்‌, குடிசொட்டை என்பன.-இவரது இசைப் புலமையும்‌ பகவத்‌ அனுபூதியும்‌ சேர்ந்து திரு அத்யயன உத்சவத்தில்‌ இவர்‌ இசைத்து நாட்டியமாடி நடித்துக் காட்‌டிய பெருமாள்‌ விபவாதாரத்தில்‌ (இராம கிருஷ்ண அவதாரங்கள்‌)செய்தருளின. அபதாநங்களைக்‌ கண்டு பெருமாள்‌ மிகவும்‌ மகிழ்ந்து இவருக்குக்‌ ‘கோயிலுடைய பெருமாளரையர்‌ என்ற திருநாமத்தைச்‌ சாத்தினார்‌. உத்ஸவங்களிலெல்லாம்‌ பெருமாள்‌ தோளுக்கினியான்‌ வாகனத்தில்‌ உலா வரும் போது நம்‌ நடையழகுக்கு யீடாகப்‌ பாடிடும்‌ என்று அருளிட இவரும்‌ இசையில்‌ ஏத்திக்‌ கொண்டு வரக்‌ கோயிலுக்கு எழுந்தருளுவார்‌. அதிலிருந்து அடுக்‌குச்‌ சாத்திக்கொண்டு அந்தந்தத்‌ திருக் கோலத்துடனே உத்சவ காலங்‌களில்‌ பெருமாளுடன்‌ எழுந்தருளுகிற வைபவம்‌ நடந்து வருகிறது.அரையர்‌ அருளிய திருமாலை, திருப் பள்ளி யெழுச்சித் தமிழ்த்தனியன்கள்‌.

மற்றொன்றும்‌ வேண்டா மனமே – மதினரங்கர்‌
கற்றினம்‌ மேய்த்த கழலிணைக்கீழ்‌ – உற்ற திருமாலை பாடும்‌ சீர்த்‌ தொண்டரடிப்‌ பொடியெம்‌
பெருமானை எப்பொழுதும்‌ பேசு(திருமாலை)
மண்டங்குடியென்பர்‌ மாமறையோர்‌ மன்னிய சீர்‌
தொண்டரடிப்பொடி தொன் நகரம்‌ – வண்டு
திணர்த்த வயல்‌தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
உணர்த்தும்‌ பிரான்‌ உதித்த ஊர்‌”(திருப்பள்ளி)

நாதமுனி குலந்திகழ நன்குதித்தோன்‌ வாழியே,
நற்றமிழின்‌ மறைக்கிசையை நவின்றுரைப்போன்‌ வாழியே.
காதலரங்கேசரிரு கழல்‌ பணிவோன்‌ வாழியே.
கானவர நாவிசையால்‌ களிப்பிப்போன்‌ வாழியே.
ஏதமில்‌ வண் கச்சியனை ஏத்திசைப்போன்‌ வாழியே.
எதிபதியைப்‌ பரிசாக ஏற்று வந்தோன்‌ வாழியே.
தீதில்‌ யமுனைத் துறைவன்‌ சேவடியோன்‌ வாழியே.
திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ திருவடிகள்‌ வாழியே.

திருக்கச்சி நம்பி சென்னைக்கு அருகிலுள்ள பூவிருந்தவல்லி என்ற ஊரில்‌
வைசியர்‌ குலத்தில்‌ வீர ராகவருக்கும்‌ கமலைக்கும்‌ நான்காவது குமாரராய்‌ அவதரித்தார்‌. சிலர்‌ இவரை நான்காம்‌ வர்ணத்தில்‌-(சூத்திரர்‌) பிறந்தவராகவும்‌ கூறுவர்‌. அக்காலத்திலேயே க்ஷத்திரிய வைஸ்யர்கள்‌ வேதாத்யயனம்‌ முதலியவற்றை விட்டு விட்டதால்‌ நாலாவது வர்ணமாகக்‌ கூறியிருக்கலாம்‌. இவரது இயற்பெயர்‌ கஜேந்திர தாஸர்‌ என்பது. இவர்‌ பார்க்கவரான திருமழிசை யாழ்வாருடைய அருளாலே பிறந்தவராதலால்‌ இவருக்குப்‌ பார்க்கவப் பிரியர்‌ என்றும்‌ பெயரிட்டனர்‌. இவர்‌ ஆளவந்தாரது சிஷ்யர்களில்‌ ஒருவர்‌. ௮வர்‌ அளித்த திருநாமம்‌ பேரருளாள தாஸர்‌ என்பது.-கச்சியில்‌ வாழ்ந்தமையால்‌, திருக்கச்சி நம்பி, காஞ்சிமுனி, காஞ்சி பூர்ணர்‌ என்றழைக்கப்பட்டார்‌. இவர்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளுக்குத்‌ திருவால வட்டக் கைங்கர்யம்‌ செய்து கொண்டிருந்தார்‌-அப்பெருமான்‌ ஒருவருக்கும்‌ தெரியாமல்‌ இவருடன்‌ பேசிக்‌ கொண்டிருந்தார்‌ என்பது பிரசித்தம்‌. அந்திம காலத்தில்‌ மோட்சம்‌ விரும்பிய நம்பிக்கு, ‘நீர்‌ வீசினீர்‌’ நான் பேசினேன்‌ இரண்டும்‌ சரியாயிற்று. ஒரு பரம பாகவதரின்‌ அபிமானத்தைப்‌ பெற்றாலே உமக்கு மோட்சம்‌ என்று பெருமான்‌ கூறி விட்டார்‌. அதற்குப் பின்‌ மாறுவேஷத்தில்‌ திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ மாடு மேய்க்கும்‌ கைங்கர்யம்‌ செய்து ‘நம்‌ பையல்‌’ என்று அவரால்‌ அபிமானிக்கப்‌ பெற்று அவ்வபிமானமே காரணமாக மோட்சம்‌ பெற்றார்‌ என்று கூறப்படுகிறது.-இராமானுஜர்‌ இவரிடம்‌ சீடராக வேண்டுமென்று ஆசைப்பட்‌டார்‌. நம்பி மறுத்து விட்டார்‌. இவர்‌ உண்ட கலத்திலே உண்ண வேண்டும்‌ என்று ஆசைப்பட்டார்‌ இராமானுஜர்‌. அதை இராமானுஜரது மனைவி நிறைவேறாமல்‌ செய்து விட்டாள்‌. தேவராஜப்‌ பெருமாளிடமிருந்து ஆறு வாக்கியங்கள்‌ பெற்றுக் கொடுத்து தர்ஸநார்த்தங்களை உறுதிப் படுத்திய மகானுபாவர்‌ இவரே. தேவராஜப்‌ பெருமானைப்‌ பற்றிய எட்டு ஸ்லோகங்கள்‌ கொண்ட தேவராஜாஷ்‌டகம்‌ என்னும்‌ ஸ்துதி நூல்‌ இவர்‌ அருளிச் செய்தது. இராமானுஜர்‌ கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர்‌ பேரருளாளரிடம்‌ கேட்டு இராமானுஜருக்குச்‌ சொன்ன ஆறு விஷயத்திற்கும்‌ பேரருளாளர்‌ கூறிய பதில்‌ வருமாறு.
1) பரத்வம்‌ நாமே, 2) பேதமே தர்ஸனம்‌, 3) உபாயமும்‌ பிரபத்தியே, 4) அந்திம ஸ்மிருதியும்‌ வேண்டா, 5) ஸரீராவசானத்‌தாலே மோட்சம்‌, 6) பெரிய நம்பி திருவடிகளை ஆஸ்ரயிப்பதுவே
என்று கூறியவற்றை நம்பி இராமானுஜரிடம்‌ கூறி இதுவோ நீர்‌ நினைத்திருந்தது என்று கேட்க இராமானுஜரும்‌ ஆம்‌ என்ன. இருவர்‌ நினைவும்‌ ஒத்திருந்தபடியை எண்ணி மகிழ்ந்தார்‌. மேலே சொன்ன வாக்கியங்களின்‌ பொருள்‌ ஸ்ரீமானான நானே பரத்வம்‌. உலகிற்கும்‌ எனக்கும்‌ பேதம்‌ உண்டு என்பதே. என்‌ மதம்‌,
என்னைச்‌ சரணடைவதே என்னைப்‌ பெறுவதற்குக்‌ கண்ணழிவற்ற
உபாயம்‌, அப்படிச்‌ சரணடைந்தவர்களுக்கு அந்திம காலத்தில்‌ என்‌ நினைவு தேவையில்லை. இப்பிறப்பின்‌ இறுதியிலேயே அவர்களுக்கு மோட்சம்‌ உறுதி. பெரியநம்பியே இராமானுஜரால்‌ ஆஸ்ரயிக்கத்தக்கவர்‌ என்பது, இந்த ஆறு வார்த்தைகளையும்‌ இராமானுஜருக்குக்‌ கூறி ‘ராமானுஜமாந்யர்‌’ (இராமானுசரால்‌ கெளரவிக்கப்பட்‌டவர்‌) என்னும்‌ பெயரைப்‌ பெற்றார்‌. இவரிடம்‌ சரண்‌ புகுந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்குப்‌ பிரபத்தியை அருளிச் செய்தார்‌. அது பொறுக்காத அவனது உறவினர்கள்‌ அவனைப்‌ பிரித்துக்‌ கொண்டு போய்‌ பிராயச்சித்தம்‌ பண்ண முயற்சிக்க, அவன்‌ அவர்களிடமிருந்து தப்பி வந்து நம்பியிடம்‌ சரண் புக, நீர்‌ போகா விட்டால்‌ அவர்கள்‌ என்னைப்‌ பொல்லாங்கு கூறுவார்களே என்று நம்பி கூற,அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம்‌ பொறுக்காமல்‌ பிராணத் தியாகம்‌ செய்தார்‌ என்பர்‌.
திருக்கச்சி நம்பி அருளிய திருச்சந்த விருத்தத்‌ தனியன்கள்‌
திருச்சந்தம்‌ பொழில்‌ தழுவு தாரணியின்‌ துயர் தீர
திருச்சந்த விருத்தம்‌ செய் திருமழிசைப்‌ பரன் வருமூர்‌
கருச்சந்தும்‌ காரமுகிலும்‌ கமழ் கோங்கு மண நாறும்‌
திருச்சந்தத்துடன்‌ மருவு திருமழிசை வளம்பதியே.
உலகு மழிசையும்‌ உள்ளுணர்ந்து தம்மில்‌
புலவர்‌ புகழ்க் கோலால்‌ தூக்க – உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும்‌ மா நீர்‌ மழிசையே
வைத்தெடுத்த பக்கம்‌ வலிது.

மருவாருந்‌ திருமல்லி வாழ வந்தோன்‌ வாழியே.
மாசி மிருசீரிடத்தில்‌ வந்துதிததோன்‌ வாழியே.
அருளாளருடன்‌ மொழி சொல்‌ அதிசயத்தோன்‌ வாழியே.
ஆறுமொழி பூதூரர்க்‌ களித்த பிரான்‌ வாழியே.
திருவாலவட்டம்‌ செய்து சேவிப்போன்‌ வாழியே.
தேவராசாட்டகத்தைச்‌ செப்புமவன்‌ வாழியே.
தெருளாரு மாளவந்தார்‌ திருவடியோன்‌ வாழியே.திருக்கச்சி நம்பியிரு திருவடிகள்‌ வாழியே

மாறனேரி நம்பி ஆளவந்தார்‌ சிஷ்யர்களிலே ஒருவர்‌. பஞ்சம குலத்தில்‌ பாண்டிய நாட்டில்‌ புராந்தகம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ ஆடிமாதம்‌ ஆயில்ய நட்சத்திரத்தில்‌ பிறந்தவர்‌. ஆளவந்தாருக்கு ஏற்பட்ட ராஜபிளனயை அவரிடம்‌ பிரார்த்தித்து ஆசார்யப்‌ பிரசாதமாகப்‌ பெற்றுக் கொண்டவர்‌ இவர்‌ என்று கூறுவர்‌. இவர்‌ தம்‌ கடைசிக் காலத்தில்‌ ஆளவந்தார்‌ உகந்ததான இந்த தேகத்தை அவைஷ்ணவர்களான என்‌ உறவினரிடத்தில்‌ ஒப்படைக்காமல்‌ நல்லடக்கம்‌ செய்ய வேண்டும்‌ என்று பெரிய நம்பிகளிடம்‌ பிரார்த்‌தித்தார்‌. அதன் படியே, இவர்‌ பரமபதித்த பின்‌ பெரிய நம்பி தாமே அவரது அந்திமக்‌ கிரியைகளைச்‌
செய்தார்‌. பஞ்சமரான அவருக்குப்‌ பிராமணரான நீர்‌ ஈமச்சடங்குகள்‌ செய்தல்‌ தகுமோ என்று கேட்ட இராமானுஜருக்கு அவர்‌ அளித்த பதில்‌ பெரியநம்பி வைபவத்திலேயே கூறப்பட்டுள்ளது.

ஆனிதனில்‌ ஆயில்யம்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆளவந்தார்‌ திருவடிகள்‌ ஆஸ்ரயித்தான்‌ வாழியே.
மாநிலம்‌ எதிராசர் மனம்‌ வாழ்வித்தான்‌ வாழியே.
மதிளரங்க நகரமதில்‌ வாழ்ந்தருள்‌வோன்‌ வாழியே.
தேனமருந்‌ தென்மொழியின்‌ சிறப்பறிந்தோன்‌ வாழியே.
திகழ் ஞான பத்திகளால்‌ சேர்ந்திருப்போன்‌ வாழியே.
வானவரில்‌ ஒருவரிங்கு மகிழ்ந்து வந்தோன்‌ வாழியே.
மாறனேரி நம்பி யிணை மலரடிகள்‌ வாழியே.

தெய்வ வாரி யாண்டான்‌–வகுளாபரண ஸோமயாஜியார்‌ என்ற ஸ்ரீ வைஷ்ணவர்‌ தெய்வ வாரி யாண்டானை எம்பெருமான்‌ இங்கு வந்து அவதரிக்கக் காரணம்‌ என்ன என்று கேட்க, பாகவதாபசாரம்‌ பொறுக்காமையால்‌ என்றாராம்‌. ஆளவந்தாரது பிரிவை சிறிது காலம்‌ கூடப் பொறுக்க முடியாதவர்‌ இவர்‌. ஒருதரம்‌ மடத்துக்காரியத்தை இவர்‌ பொறுப்‌பில்‌ விட்டுவிட்டு, ஆளவந்தார்‌ திருவனந்தபுரம்‌ சென்று விட மிகவும்‌ மெலிந்து விடவே உடனிருந்தோர்‌ இவரைத்‌ திருவனந்தபுரத்திற்குக்‌ கொண்டு போகத்‌ தீர்மானத்த போது, அந்த எண்ணத்திலேயே உடல் நலம்‌ தேறி வந்தது. பின்னர்‌ ஆளவந்தாரை நேரில்‌ பார்த்தவுடன்‌ திருமேனி வாட்டம்‌ தீர்ந்தது. ஆளவந்தார்‌ இவரை திருவனந்தபுரம்‌ போய்‌ ஸ்வாமி தரிசனம்‌ செய்து வரச் சொன்ன போது, என்னுடைய திருவனந்தபுரம்‌ இதோ என்‌ எதிரிலேயே இருக்கிறது என்று ஆளவந்தாரைக் காட்டி, திருவனந்தபுரம்‌ போக இசைய வில்லையாம்‌. வனமாமலை யாண்டான்‌ என்னும்‌ ஆளவந்‌தார்‌ சிஷ்யர்‌ பகவத்‌ பக்தர்கள்‌ பெருமாளுக்கும்‌ பிராட்டிக்கும்‌ கெளஸ்துப மாலை போன்று இனிமை யானவர்கள்‌. அவர்களிடம்‌ அபசாரப்படுவது கெளஸ்துப மாலையில்‌ கரிக்கோடு கிழிப்பதை ஒத்தது என்றாராம்‌.

ஆளவந்தார்‌, சிஷ்யர் அம்மங்கி யிடம்‌ உடையவர்‌ திருக்கண்ணபுரத்திலிருந்து போய் வர விண்ணப்‌பித்த போது அம்மங்கி அவரிடம்‌ அக்கினி ஜ்வாலையில்‌ அகப்படாதே கிடீர்‌. அரு நஞ்சு தின்னாதே கிடீர்‌. அஸி மிதியாதே இடர்‌. அபலைகளோடு செறியாதே கிடீர்‌. ஆஸ்திகரோடு சேர்ந்து போருங்‌ கிடீர்‌ என்றாராம்‌. அதன்‌ விரிவாக்கம்‌, அக்னி ஜுவாலையில்‌ அகப்படாதே கிடீர்‌ என்பது பெளத்தர்கள்‌, ஜைனர்கள்‌, அத்வைதிகள்‌, சைவர்கள்‌ முதலானோர்‌ வேதத்துக்குப்‌ புறம்பானவர்கள்‌.-இவர்களோடு வாதிடும் பொழுது பாம்பு, ௮க்னி போன்றவற்றோடுபழகுவது போல நெருங்காமல்‌ இருக்க வேண்டும்‌ என்பது,-அடுத்து அருநஞ்சு தின்னாதே கிடீர்‌ என்பது ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய நாம ரூபங்களைத்‌ தரித்துக் கொண்டு வைஷ்ணவத்தைக்‌ கெடுப்பவர்களோடு கலந்தால்‌ ஆத்ம நாசத்தை விளைவித்து விடுவார்கள்‌. இலுமிச்சம்பழமும்‌ கற்பூரமும்‌ கலந்து உண்டால்‌ உயிரை முடிப்பதைப் போல இவர்களது உறவு ஆத்ம நாசத்தையே உண்டு பண்ணச்‌ செய்யும்‌ என்பது. அடுத்து அஸீசி மிதியாதே கிடீர்‌ என்பது சரீரத்தை வளர்ப்பதிலேயே கவனம்‌ செலுத்தும்‌ சம்சாரிகள்‌, கல்‌, கட்டை போன்றவர்கள்‌. அவர்களை விட்டு விலகச் செல்ல வேண்டும்‌ என்பது. அடுத்து அபலைகளோடு செறியாதே கிடீர்‌ என்பது அனுகூலர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்த போதிலும்‌, கொள்ளத் தக்கவை எவை, தள்ளத் தக்கவை எவை என்ற பாகுபாடு தெரியாத தெளியாத அறிவைப்‌ பெற்றவர்களது உறவை விட வேண்டும்‌ என்பது. அடுத்து ஆஸ்திகரோடு செறிந்து போகுங்‌கள்‌ என்பது பகவத்‌ பாகவத விஷயங்களை அனுபவிக்கத் தக்க பூர்ணாதிகாரிகள்‌. அவர்களது உறவு அனுபவிக்கத்தக்கது. ஆகையால்‌ அவர்ளோடு நெருங்கிப் பழக வேண்டும்‌ என்பதாகும்‌.-வைத்த கையிலும்‌ வாங்கிக் கொடுத்த கை தஞ்சம்‌ என்றார்‌ ௮ம்‌மங்கி. அஞ்சேல்‌ என்று அபய கரம்‌ வைத்துக்‌ காட்டிய பெருமாஞடைய கையைக் காட்டிலும்‌, அவரிடம்‌ உபய விபூதிச்‌ செல்வத்தை வாங்கின கையாகிற எம்பெருமானாருடைய கையே தஞ்சம்‌ என்ற கருத்து விளங்குகிறது.

ஆளவந்தாரின்‌ சிஷ்யர்களாகவும்‌ எம்‌பெருமானாரின்‌ ஆச்சாரியாராகவும்‌ விளங்கியவர்‌ பெரியநம்பி தொடங்கி, திருக்கோட்டியூர்‌ நம்பி, திருமாலையாண்டான்‌ பெரிய
திருமலை நம்பி திருவரங்கப்‌ பெருமாளரையார்‌, திருக்கச்சி நம்பி,
மாறனேரி நம்பி முதலிய எழுவர்களில்‌, முன்னர்‌ கூறிய ஐவரே உடையவரது ஆச்சாரியார்களாகவும்‌ விளங்கினார்கள்‌. இவர்‌ பெரியநம்பி திருவடிகளில்‌ ஆஸ்ரயித்த போதே ஸ்வரூப சித்தி உண்டாகியிருக்க, இவர்‌ ஏன்‌ பலர்‌ திருவடிகளிலும்‌ விழுந்து உபதேசம்‌ கேட்க வேண்டும்‌-ஆளவந்தார் தம்‌ திருவருள்‌ செல்வத்தை அவர் தம்‌ சிஷ்யர்கள்‌ பலர்‌ மூலமாகத்‌ தனது ஆத்ம புத்திரரான இராமானுசரிடம்‌ ஒப்படைக்கச்‌ சொன்னது; ஒரு அரசன்‌ தன்‌ அரசச் செல்வத்தை பல அமைச்சர்களிடத்தே பகிர்ந்து கொடுத்துப்‌
பின்‌ அரச குமாரர்‌ அவற்றை நிர்ஹிக்கும்‌ பொறுப்புக்கு வந்தவுடன்‌ அந்த ஐஸ்வர்யத்தை அரச குமாரனிடம்‌ ஒப்படைக்கச்‌ சொன்னதாப்‌ போலாகும்‌; ஆளவந்தாரும்‌ இவர்களிடத்தில்‌ ஒவ்வொரு அர்த்த விசேஷத்தை உபதேஸித்து வைத்து எம்பெருமானார்‌ ஆளவந்‌தாரிடம்‌ நேரில்‌ உபதேசம்‌ பெற முடியாத இழவைத்‌ தீர்த்தார்‌ என்று கொள்ள வேண்டும்‌. இவ்வாசார்யர்களுக்கு முன்னரே, ஆளவந்தார்‌ -முதன்முதலாக இராமானுசரைக்‌ கண்டவுடனேயே ‘ஆம் முதல்வன்‌ இவன்‌’ என்று கடாட்சித்து (கிருபை செய்து) நாம்‌ உங்களுக்குச்‌ சொல்லும்‌ பரம ரகஸ்யத்தை இளையாழ்வாருக்குச்‌ சொல்லுங்கள்‌என்று நியமித்த படியால்‌ சிஷ்யனாக வேணும்‌ ஆச்சார்யனாகவேணும்‌ ௮வரது இலட்சண சம்பந்தம்‌ வேண்டும்‌ என்று தாமாகவே இராமானுசரோடு தொடர்பை பெற்றுக் கொண்டார்கள்‌. ஆகவே முன்புள்ள ஆச்சாரியர்கள்‌ இவருக்கு ஆச்சாரியர்களாகத்‌ திகழ்ந்து
பெருமை பெற்றார்கள்‌. பின்புள்ளவர்கள்‌ இவரது சீடராகத்‌ தோன்றி பெருமை பெற்றார்கள்‌. ஒரு மாலையின்‌ நடுவிலே பதிக்கப் பெற்ற மாணிக்கப் பதக்கம்‌ போலே இருந்து அந்த மாலையை அழகு படுத்துமாப் போலே, இராமானுச முனியாய்‌ விளங்கி பரப்பிரஹ்மம்‌ ஸ்ரீமந் நாராயணனே என்று அறுதி யிட்டுத்‌ தர்ஸனப்‌ பிரவர்த்தனம்‌ பண்ணிக் கொண்டு வந்தார்‌ இராமானுஜர்‌.-மஹோப நிஷத்தில்‌ ஆரம்பத்தில்‌ நாராயணன்‌ ஒருவன்‌ முதலில்‌ இருந்தான்‌. பிரளய காலத்தில்‌ லீலா விபூதிகள்‌ அழிந்து கிடந்த போது இவன்‌ ஒருவனாயிருந்து இன்புறவில்லை. ௮சத்‌தாய்க்‌ கிடந்த பக்த சேதனரைக் கண்டு அவர்கள்‌ உய்யும்‌ வழியாக உலகைப் படைத்து இச் சேதனர்களுக்கு சரீர இந்திரியங்களைக்‌ கொடுத்து, அஞ்ஞான இருளைப் போக்கும்‌ சாஸ்திரத்தைக்‌ கொடுத்‌தும்‌ அவர்கள்‌ இருந்தமையாலே, தானே பலவிதமான அவதாரங்‌களை எடுத்தும்‌, ஆழ்வார்களையும்‌ ஆச்சாரியர்களையும்‌ அவதரிக்‌கச்‌ செய்யத்‌ திருஉள்ளங் கொண்டான்‌ ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்‌.-உயிர்களாகிய பயிர்களைச்‌ செழிப்பிக்க வேண்டித்‌ தண்ணீர்ப்‌ பிரவாகத்தைப்‌ பருகும்‌ காளமேகமாக ஆழ்வாராதிகளையும்‌ அந்நீரைத்‌ தாங்கும்‌ மலையாக நாதமுனிகளையும்‌, அம்மலையில்‌ இருந்து விழும்‌ அருவிகளாக உய்யக் கொண்டார்‌, மணக்கால்‌ நம்பிகளையும்‌, அவ்வருவி நீர்‌ பெருகும்‌ ஆறாக ஆளவந்தாரையும்‌ அவ்வாற்றிலிருந்து வெட்டப்பட்ட கால் வாய்களாக, பெரிய நம்பி, முதலான ஆச்சாரியர்களையும்‌ அவதரிக்கச்‌ செய்தான்‌. எம்பெருமானான ஸர்வேஸ்வரன்‌, பெரிய நம்பி தொடங்கிய வாய்க்கால்களின்‌ மூலம்‌, அந்நீர்‌ தேங்கும்‌ பெரிய ஏரியாக விளங்கினார்‌ இராமானுஜர்‌. ௮வ்வேரியிலிருந்து உயிர்களாகிய பயிர்களுக்கு நீரைப் பாய்ச்‌சும்‌ மதகுகளாக எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளையும்‌ அவதரிப்பித்தார்‌ என்பது எம்பெருமானாரது பாதுகையான எம்பார்‌ கருத்து. இதுவரை எம்பெருமானார்‌ வரை வந்துள்ள வைணவ தரீசனத்தைச்‌ சுருக்கமாகக்‌ கண்டோம்‌. இனி எம்பெருமானார்‌ தொடக்கமாகக்‌ காண உள்ளோம்‌.

ஆளவந்தாரது பிரதம சீடர்களில்‌, ஒருவரான பெரிய திருமலை நம்பியிடம்‌, ஆளவந்தார்‌ தனக்குப் பின்‌ இந்த வைஷ்ணவ தர்சனத்‌தைத்‌ திறம்பட நடத்தக்கூடிய ஆச்சாரியரைக்‌ கண்டு பிடித்து அவரிடம்‌ தர்ஸன்‌ நிர்வாகத்தை ஒப்புவிக்க வேண்டும்‌ என்று கட்டளை
யிட்டிருந்நதையே குறிக்கோளாகக்‌ கொண்டு திருமலையில்‌ வாழ்ந்து வருவாரானார்‌. தம்முடைய இரு சகோதரிகளுக்கும்‌ தகுந்த வரன்களைத் தேடி மூத்தவளான பூதேவியை, ஸ்ரீ பெரும்பூதூரில்‌ வாழ்ந்து வரும்‌ ஸ்ரீ வைஷ்ணவரான கேசவ சோமயாஜி என்பவருக்கு மணமுடித்துக்‌ கொடுத்தார்‌. அவர்களுக்குப்‌ பிறந்த பிள்‌ளையே இராமானுஜராகும்‌. உலகிற்கே மங்களமளிக்கும்‌ பிங்கள வருஷத்தில்‌ வியாழக் கிழமை யன்று சிம்ம லக்கனத்தில்‌, மறைமுடிகளின்‌ முடிவை நிலநாட்டுவதற்காகவும்‌, வேதத்திற்குப்‌ புறம்பான செய்திகளைச் சொல்லும்‌ மதங்கள்‌ அழிவதற்காகவும்‌ ஒளி மிகுந்த ஒரு மகா புருஷராய்‌ அவதரித்தார்‌ ஸ்ரீ இராமானுஜர்‌. செய்தி அறிந்த திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூருக்கு விரைந்து வந்து அற்புதமான மருமகனை ஆசீர்வதித்து குழந்தையின்‌ ரட்சையின்‌ பொருட்டு பஞ்சாயுதங்கள்‌ கொண்ட ஐம்படைத் தாலியை அணிவித்து இளையாழ்வார்‌ என்ற திருநாமமும்‌ சூட்டினார்‌.-இளையாழ்வாரும்‌ உரிய காலத்தில்‌ அன்னப் பிரசானம்‌ உபநயனம்‌ முதலான கிரியைகள்‌ எல்லாம்‌ செய்யப் பெற்று வேதத்தையும்‌ கற்றுத் தேர்ந்து, சகல கலைகளும்‌ கற்றுணர்ந்த பண்டிதராக விளங்கினார்‌. உரிய காலத்தில்‌ தஞ்சமாம்பாள்‌ என்ற பெண்ணையும்‌ திருமணம்‌ செய்து கொண்டு, காஞ்சியில்‌ வரதராஜப்‌ பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்து வருகிற நாளில்‌, திருப்புட்குழி என்ற இடத்தில்‌ யாதவப் பிரகாசன்‌ என்ற ஒரு அத்வைதிப் பிராமணர்‌ வேதாந்தம்‌ போதிக்கிறார்‌ என்று கேள்விப்பட்டு, அவரிடம்‌ மாணாக்கனாக இருந்து வேதாப்யாசம்‌ செய்து வரும்பொழுது, ஒரு நாள்‌ யாதவர்‌,ஸர்வம்‌ கல்விதம்‌ பிரஹ்ம (இவ்வுலகனைத்தும்‌ பிரம்மமே) எனும்‌ வேதவாக்கியத்திற்கு அவப் பொருளை உரைத்ததைக்‌ கேட்ட இளையாழ்வார்‌, உண்மைப்‌ பொருளைக் கூறி வேதார்த்த சாரத்தை அவருக்கு அறிவுறுத்தினார்‌.-இச் சம்பவத்தைத்‌ திருவரங்கத்தில்‌ ஆளவந்தார்‌ கேள்விப்‌ பட்டு, இராமானுஜரைக்‌ காண வேண்டித் தன்‌ சிஷ்யர்களோடு காஞ்சிக்கு வந்து பேரருளாளரையும்‌ பெருந் தேவித்‌ தாயாரையும்‌ வணங்கிப்‌ பின்‌ கோயிலில்‌ சிஷ்யர்களால்‌ சூழப்பட்ட யாதவரையும்‌, அவர்களிடையே ஒளிவீசும்‌ முகமுடைய இளையாழ்வாரையும்‌ கண்டார்‌. இந்த யாதவர்‌ இராமானுஜருக்குச்‌ சிஷ்யராகவே இருக்கத் தக்கவர்‌ என்று எண்ணினார்‌ ஆளவந்தார்‌. ஸ்ரீ வைஷ்ணவர்‌கள்‌ பல்கிப்‌ பெருகுவதற்கு இளையாழ்வாரைக்‌ காத்தருள்வீர்‌ என்று பெருமாளை வேண்டிக் கொண்டு, அவரிடம்‌ இப்பொழுது
பேசினால்‌ அவரது வேதபாடம்‌ தடைப்படும்‌. இவரே வைஷ்ணவ தர்சனத்தை விளங்க வைக்கும்‌. ஆம்‌ முதல்வன்‌ என்று தீர்மானித்து, அவரிடம்‌ பேசாமலேயே ஸ்ரீரங்கத்திற்குத்‌ திரும்பிவிட்டார்‌. இளையாழ்வாரும்‌ யாதவரிடம்‌ பாடம்‌ படித்து வரும்‌ நிலையில்‌ அந்‌ நாட்டு அரசனுடைய புத்திரி பிசாசத்தால்‌ பீடிக்கப்பட்டு, எவர்‌ செய்யும்‌ மந்திரத்திற்கும்‌ கட்டுப்படாதிருக்கவே, அரசன்‌ யாதவருடைய மந்திரத்திற்குக்‌ கட்டுப்படும்‌ என்று நினைத்து யாதவரை அரண்னைக்கு வரவழைத்தான்‌. தன்‌ அந்தரங்க சிஷ்யர்களோடு சென்ற யாதவரைக்‌ கண்டு சிரித்து அவரை அவமானப்படுத்திய பிரம்மராட்சசன்‌ இளையாழ்‌வாரைச்‌ சரணடைந்து அரசனது புதல்வியையும்‌ தன்‌ பாபத்தையும்‌
ஒருங்கே விட்டது. அதி அற்புதமான இந்த நிகழ்ச்சியைக்‌ கண்ட அரசன்‌ இளையாழ்வாரைச்‌ சிலாகித்துப்‌ பரிசளித்தான்‌. அவரும்‌ அதைக்‌ குருயாதவரிடம்‌ அடக்கத்தோடு சமர்ப்பித்தார்‌.-இந்நிகழ்ச்சியால்‌ இளையாழ்வாரிடம்‌ பொறாமை கொண்ட யாதவர்‌ அவரது கருத்தைப்‌ பரீட்சிக்கும்‌ நோக்கோடு வேதாந்த பாடங்களைப்‌ போதித்து வந்தார்‌. பின்னர்‌ ஒருநாள்‌ இளையாழ்வார்‌ யாதவருக்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ‘கப்யாசம்‌ புண்டரீகம்‌’ என்று பரமாத்மாவின்‌ திருக் கண்களை வர்ணிக்கும்‌ ஸ்லோகத்துக்கும்‌ அவப் பொருள்‌ கூறுவதைக் கேட்டு இளையாழ்‌வார்‌ துன்பக் கண்ணீர்‌ உருக்க அது யாதவரின்‌ தொடையைச்‌ சுட்டது. யாதவர்‌ சோகத்துக்குக்‌ காரணம்‌ கேட்க, ஆழமான நீரில்‌ முளைத்த தாமரை போன்ற கண்களை உடையவன்‌ என்று பொருள்‌ இருக்க குரங்கின்‌ ஆசனவாய்‌ என்று தாழ்ந்த திருஷ்டாந்தம்‌ சொன்னதாலே வருந்திக் கண்ணீர்‌ வடித்தேன்‌ என்று சொல்லவே, ஆத்திரமடைந்த யாதவர்‌ இனி இங்கே படிக்க வர வேண்டாம்‌ என்றார்‌. இராமானுஜரும்‌ குருவிடம்‌ மன்னிப்புக்‌ கோரினார்‌.

இதனாலெல்லாம்‌ கோபமடைந்த யாதவர்‌ இளையாழ்வாரை,ஒழித்துக் கட்ட வேண்டும்‌ என்று தீர்மானித்தவராய்‌, இளையாழ்வாரையும்‌ கூட்டிக் கொண்டு கங்கா ஸ்நானத்தின்‌ பொருட்டுக்‌ காசியாத்திரை செய்யும்‌ வியாஜ்யத்தோடு அவரைக்‌ கொலை செய்யப்‌ புறப்பட்டார்‌. நல்லொழுக்கமுடையவரான இளையாழ்வாரோடு கூடப் படித்த நண்பரும்‌, அவருடைய சிறிய தாயாரின்‌ பிள்ளையுமான கோவிந்த பட்டர்‌, யாதவரது கெட்ட எண்ணத்தை நடுக்காட்‌டில்‌ அந்தரங்கமாக இளையாழ்வாருக்கு அறிவித்து, அவரை நிறுத்தித் தான்‌ மட்டும்‌ காசி யாத்தரை செல்லும்‌ யாதவரோடு தொடர்ந்து சென்றார்‌-நடு இரவிலே நடுக்காட்டிலே அகப்பட்ட இளையாழ்வார்‌ மிக வருந்திய நெஞ்சினராய்‌, பெருந்தேவியோடு விளங்கும்‌ பேரருளாளரைச்‌ சரண்‌ புகுந்தார்‌. கடவுட்‌ தம்பதியரிருவரும்‌ வேட வுருவோடு வந்து அவருக்கு ஆறுதல்‌ சொல்லி, காஞ்சியை எளிதில்‌ அடையலாம்‌ என்று முன்னே வழிகாட்டிச் சென்று, இளையாழ்வாரிடம்‌ வேண்டிப்பெற்ற சாலைக்கிணற்று நீரைத்‌ தம்‌ தேவியோடு கூடப்பருகி மறைந்தனர்‌. விடியற்காலை வேளையில்‌ அத்திகிரியின்‌ புண்யகோடி விமானம்‌ அருகில்‌ தெரிவதைக் கண்டு நீர்‌ பருகியவர்கள்‌ பேரருளாளனும்‌ பெருந்தேவித்தாயாருமே என அறுதியிட்ட இளயாழ்வார்‌ பேரானந்தமும்‌, பேராச்சரியமும்‌ அடைந்தார்‌. அன்றிலிருந்து அவ் வரதன்‌ விரும்பிப் பருகிய சாலைக்‌ கிணற்று நீரைத்‌ தினந்தோறும்‌ தாமே சுமந்து சென்று அபிஷேகத்‌துக்கு அளித்து மகழ்ந்தார்‌. யாதவரின்‌ மந்திர சக்திக்கு வசப்பட்ட கோவிந்தரும்‌ கங்கையில்‌ நீராடும் பொழுது தமது உள்ளங்கையில்‌ சிவ லிங்கத்தைப்‌ பெற்றவராய்‌, தமது கிராமமான மதுர மங்கலத்துக்குச்‌ சென்று அந்த லிங்கத்தை அங்குள்ள கோயிலில்‌ பிரதிஷ்டை செய்து, காளஹஸ்‌திக்குச்‌ சென்று அங்குள்ள சிவாலய கார்யங்களை மேற் பார்வை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கி கோயில்‌ பூசை செய்து கொண்டு வாழ்ந்து வருவாராயினார்‌.காஞ்சி திரும்பிய யாதவரும்‌ அங்கு இளையாழ்வாரைக்‌ கண்டு வியந்து விருத்தாந்தங்களைக்‌ கேட்டு அவரை அழைத்து மயக்கத்‌ திரும்பவும்‌ தம்‌ சிஷ்யர்களோடு சேர்த்துப் பாடம்‌ சொல்லி வந்தார்‌. திரும்பவும்‌ யாதவர்‌ உபநிஷத்‌ வாக்கியத்திற்கு அவப் பொருள்‌ சொல்லவே, அந்த வாக்கியம்‌ சகல கல்யாண குணங்களும்‌ பொருந்திய பிரஹ்மத்தையே சொல்கிறது என்று சரியான பொருளைச்‌ சொல்லி அவருக்கு அறிவுறுத்தி யாதவரிடம்‌ படிப்பதை அடியோடு கைவிட்டார்‌ இளையாழ்வார்‌.யாதவரிடமிருந்து விடுபட்டு இளையாழ்வர்‌, வரதரது சேவையிலேயே இருக்கிறார்‌ என்று கேள்விப்பட்ட ஆளவந்தார்‌, அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருமாறு தமது சிஷ்யரான பெரிய நம்‌பியை அனுப்பினார்‌. காஞ்சிக்குச்‌ சென்று பெரிய நம்பியும்‌ ஆளவந்தார்‌ அருளிய ‘ஸ்தோத்திர ரத்னத்தை’ அனுசந்தித்து, இளையாழ்வாரை உகப்பித்து, அவரால்‌ அபிமானிக்கப்பட்டுத்‌ தாமும்‌ உகந்தார்‌. பெரிய நம்பியோடு கூடிய இளையாழ்வாரும்‌ ஆளவந்தாரை சேவிப்பதற்கு ஸ்ரீரங்கம்‌ நோக்கிச்‌ செல்லும்பொழுது வட திருக்காவிரியில்‌ மிகுதியான வைணவர்‌ திருக்கூட்டத்தைக்‌ கண்‌டார்‌. ஆளவந்தார்‌ திருக்குமாரரான திருவரங்கப்பெருமாளரையர்‌ முதலான அந்த வைணவர்கள்‌ ஆளவந்தார்‌ பரமபதமடைந்ததை விண்ணப்பிக்கக்‌ கேட்ட இளையாழ்வார்‌ மிகவும்‌ மனம்‌ வருந்தினார்‌. ஒருவாறு ஆறுதலடைந்தவராய்‌ அவரது திருமேனியைத்‌ தரிசிக்கும் பொழுது அவரது இடது கையில்‌ மூன்று விரல்கள்‌ மடங்கி யிருப்பதைக்‌ கண்டார்‌.திருவிரல்கள்‌ மடங்கியிருப்பதற்குக்‌ காரணமான ஆளவந்தாருடைய மூன்று மனக் குறைகளைப்‌ பற்றிக் கேள்விப்பட்ட இளையாழ்வார்‌ அவருடைய மனக் குறையைத்‌ தீர்ப்பதற்காக 1) வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரத்திற்கு பாஷ்யமெழுதி விவரிப்பேன்‌. 2) அவருடைய தகப்பனாரான பராசர மகரிஷி பெயரையும்‌, நம்மாழ்வார்‌ பெயரையும்‌ இருவருக்கு இடுவதன்‌ மூலம்‌ அவர்களுக்கு நன்றி செலுத்துவேன்‌ என்று சபதம்‌ செய்து அவரது திருவடிகளை வணங்கினார்‌. ௮க் கணத்தலேயே ஆளவந்தாரது மூன்று விரல்களும்‌ முன் போல்‌ நிமிர்ந்தன. அதைக் கண்ட அனைவரும்‌ இவரே வைதீக சிந்தாந்தத்தை நிலை நிறுத்துபவர்களுக்குத்‌ தலைவராவார்‌ என்பது உறுதி என்று நிச்சயித்தார்கள்‌.ஆளவந்தாரை உயிரோடு சேவிக்காத மனக் குறையாலே, அரங்‌க நகரப்பனை சேவிக்காமலேயே காஞ்சிக்குத்‌ திரும்பின இளையாழ்வார்‌ முன்போல்‌ கோயில்‌ கைங்கர்யங்களைச்‌ செய்து கொண்டு வந்தார்‌, ஒரு சமயம்‌ தான்‌ இனிச் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திததார்‌. காஞ்சியில்‌ வாழ்பவராய்‌ பரம வைஷ்ணவராய்‌ வரதனுக்கு அந்தரங்கராய்‌ அவருக்குத்‌ திருஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்து வரும்‌ திருக்கச்சி நம்பிடம்‌ மிகவும்‌ பணிவுடன்‌ ‘நம்பியே நான்‌ நெஞ்சில்‌ கொண்டுள்ள அர்த்தங்களைத்‌ (கருத்துக்களை) தேவப் பெருமாளிடமிருந்து அறிந்து அவை பெருமாள்‌ உகந்தவை தாமா என்பதை எனக்குச்‌ சொல்லுவீர்‌ என்று பிரார்த்தித்தார்‌. அவை என்ன என்பதையும்‌ அதன்‌ தத்வார்த்தத்தையும்‌,திருக்கச்சிநம்பி வைபவத்திலேயே கண்டோம்‌.-இளையாழ்வாரும்‌ பெரிய நம்பியை ஆச்சாரியராகக்‌ கொள்வதற்காக, ஸ்ரீரங்கத்துற்குச்‌ செல்கின்றவர்‌. வழியில்‌ மதுராந்தகத்தில்‌ ஸீதையோடு கூடிய ஏரிகாத்த ராமனைச்‌ சேவித்திருக்கையிலே, ஆளவந்தாரின்‌ மற்ற சிஷ்யர்களால்‌ இளையாழ்வாரை ஆட்கொள்ளும்‌படி நியமிக்கப்பட்டு, மதுராந்ததத்தை அடைந்திருந்த பெரிய நம்பியையும்‌ அங்கேயே தெய்வச்‌ செயலால்‌ சந்தித்து அவருடைய இணையடி வணங்கி, தங்களுக்கு ஏற்பட்ட நியமனத்தை விசாரித்து அறிந்த பின்‌, அந்த மதுராந்தகம்‌ கோயில்‌ மகிழ மரத்தடியிலேயே பெரிய நம்பியை இளையாழ்வார்‌ ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்‌. சங்கசக்கர லாஞ்சனம் ஊர்த்வ புண்டர தாரணம்‌ (12 திரு நாமங்கள்‌ அணிதல்‌)தாஸ்ய நாமம்‌. யாக ஸம்ஸ்காரம்‌, மந்திர ரத்னமாகிய த்வயம்‌ திரு அஷ்டாட்சரம்‌ என்னும்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்களைப்‌ பெரிய நம்பி இளையாழ்வாருக்குச்‌ செய்தருளினார்‌. இராமானுச முனி என்று அவருக்குத்‌ தாஸ்ய நாமம்‌ வழங்கப்பட்டது. பின்னர்‌ அவ்விடத்திலிருந்து இராமானுஜரும்‌ ஆசார்ய பெரிய நம்பியும்‌ காஞ்சியை அடைந்து வரத ராஜரை வணங்கிய பின்‌ இராமானுஜருடைய இருப்பிடத்தை அடைந்தனர்‌. மிக வுகந்த பெரியநம்பி பிரபந்தத்தில்‌ (திராவிட வேத சாரம்‌) முதல்‌ இரண்டாயிரமும்‌, வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரத்தின்‌ பொருளையும்‌ ராமானுஜருக்கு உபதேசித்தார்‌. மனைவியோடு வந்துள்ள அவரை இராமானுசரும்‌ அவருக்கு வேண்டிய கைங்கர்யங்களைச்‌ செய்து ஆராதித்து வந்தார்‌. பின்னர்‌ ஒரு நாள்‌ இராமானுஜர்‌ இல்லாத நேரத்தில்‌ அவரது தேவிக்கும்‌ பெரிய நம்பி தேவிக்கும்‌ மன கிலேசம்‌ உண்டாகவே, இராமானுசர்‌ திரும்பி வரு முன்‌ மனைவியை அழைத்துக்‌ கொண்டு ஸ்ரீரங்கம்‌ சென்று விட்டார்‌ பெரியநம்பி. விபரமறிந்த இராமானுஜர்‌ மனைவியைக்‌ கோபித்துத்‌ தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு துறவறம்‌ மேற் கொண்டார்‌.-பேரருளாளப்‌ பெருமான்‌ சன்னிதியில்‌ தேவப் பெருமாள்‌ அவருக்கு எதிராஜர்‌ என்ற தாஸ்ய நாமத்தை அளித்து அவரது துறவறத்தை ஏற்றுக் கொண்டார்‌. அதற்‌குப்பின்‌ எதிகட்கிறைவனான இராமானுஜர்‌ திரி தண்டத்தை உடையவராய்‌ சிகை, யஞ்ஞோபவீதம்‌, காஷாயம்‌ ஆகியவற்றோடுகூடியவராய்‌, மந்திர ரத்னமான த்வயத்தை அனுசந்திப்பவராய்‌ வர்ணாஸ்ரம தர்மப்படி நடப்பவராக வாழ்ந்து வருவாராயினார்‌,

அக்காஞ்சியிலேயே கூரத்தாழ்வானும்‌ ராமானுஜருடைய மருமக்களான வாத்ஸ்ய குலத்‌ தலைவரான நடதூராழ்வானும்‌ வாதூல குலத்‌ தலைவரான முதலியாண்டானும்‌ இராமானுஐரை ஆஸ்ரயித்‌தனர்‌. ராமானுஜரான எதிராஜர்‌ அவர்களுக்குப்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்‌கள்‌ செய்வித்தார்‌. ஆளவந்தாரது அருள் நோக்கால்‌ சுத்தி யடைந்த யாதவப்‌ பிரகாசரும்‌, எதிராஜர்‌ சிஷ்யராகி கோவிந்த ஜீயர்‌ என்ற தாஸ்ய நாமம்‌ பெற்று, எதிராஜர்‌ பணித்த வண்ணம்‌ சந்யாசிகளின்‌ தர்மத்தை விளக்கும்‌ ‘யதி தர்ம சமுச்சயம்‌* என்ற நூலை இயற்றினார்‌. அதில்‌ 1) ஸந்யாச விதி, 2) ஸந்யாசம்‌ செய்து கொள்ள வேண்டிய காலம்‌, 3) ஸந்யாசியின்‌ சரீரத்திலுள்ள சிகை முதலிய அடையாளங்களும்‌ சரீரத்திற்கு வெளியிலுள்ள தண்டம்‌ முதலிய அடையாளங்களும்‌, 4) ஸந்யாச ஸ்வீகார க்ரமம்‌, 5) ஸந்யாசி முக்கியமாக அனுஷ்டிக்க வேண்டிய யோகாப்யாசம்‌ முதலியவை,6) ஸந்யாசி இரவும்‌ பகலும்‌ செய்ய வேண்டிய கிரியைகள்‌,7) ஸந்யாசிக்குரிய சமம்‌, தமம்‌ முதலான ஒழுக்கம்‌, 8) யதிகளுக்குரிய சாதுர் மாஸ்ய விரதம்‌ முதலியவை, 9) ஸந்யாசி ஒரிடத்தில்‌ இருக்கைக்கும்‌ ஸஞ்சரிக்கைக்கும்‌ உரிய தேச காலங்கள்‌, 10) ஸந்‌யாசிக்கு ௮க்ருத்ய கரணமும்‌, க்ருத்யா கரணமும்‌ நேரிட்டால்‌ செய்ய வேண்டிய பிராயச்‌ சித்தங்கள்‌, 11) ஸந்யாசி சரீர விவேகத்‌திற்குப்பின்‌ செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்கள்‌ என்ற பதினோரு பாவங்களும்‌ விளக்கப்பட்டுள்ளன.-கோபிகள்‌ காமத்தினாலும்‌, கம்ஸன்‌ அச்சத்தினாலும்‌, சிசுபாலன்‌ துவேஷத்தினாலும்‌ வருஷிணி குலத்திலுள்ளவர்கள்‌ ஸம்பந்‌தத்தினாலும்‌ பாண்டவர்கள்‌ ஸ்நேகத்தினாலும்‌ நாங்கள்‌ பக்தயினாலும்‌ புனிதமடைந்தோம்‌ என்றபடி இராமானுஜருக்குப்‌ பண்ண எண்ணிய துவேஷமே. இறுதியில்‌ அவருக்கு உஜ்ஜிவிதமான நல் வழியைக் காட்டியது. ஒரு சமயம்‌ ஆளவந்தாரது முதல்‌ குமாரரான திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ காஞ்சிக்கு சென்று வரதனை வணங்கி அவரிடமிருந்து ராமானுஜரை வரமாகப்‌ பெற்று அழைத்‌துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குப்‌ புறப்பட்டார்‌. அவர்களுடன்‌ கூரத்‌தாழ்வான்‌ முதலியாண்டான்‌ போன்ற அந்தரங்க சிஷ்யர்களும்‌, உடன்‌ வந்தனர்‌, மதுராந்தகப் பெருமாளை வணங்கிய பின்‌ ஸ்ரீரங்கம்‌ வரும்பொழுது பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனது ஆக்ஞை (கட்‌டளை)ப்படியே அவரை எதிர் கொண்டழைக்க பெரிய நம்பி முதலான கோஷ்டிகள்‌ வந்து கோயில்‌ மரியாதைகளைச்‌ செலுத்தி அபிமானம்‌ செய்யப்பட்டவராய்‌ பெரிய பெருமாளையும்‌ பெரிய பிராட்டியாரையும்‌, பரிவாரத் தேவதைகளையும்‌ வணங்கி ஸ்ரீரங்க ஸ்ரீகார்ய நிர்வாஹத்திற்குத்‌ தலைவரானார்‌.

பெரிய பெருமாளும்‌ இராமானுஜரைத்‌ தம்‌ தாமரைக்‌ கண்களால்‌ குவிர நோக்கி ஜோதி வாய் திறந்து ‘பொங்கோதஞ்‌ சூழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌” என்ற உபய விபூதி ஐஸ்வர்யத்தையும்‌ எமது கோயில்‌ நிர்வாஹத்தையும்‌ உமக்கும்‌ உம்முடையார்க்கும்‌ தந்தோம்‌. நம்‌ வீட்டின்‌ கார்யத்தை யெல்லாம்‌ ஆராய்ந்து நடத்தும்‌ என்று திருவாய் மலர்ந்து அருளி உடையவரென்ற தாஸ்ய நாமத்தையும்‌ வழங்கித்‌ திரு விக்ரமன்‌ வீதியில்‌ வடக்கு மாடத் திருவீதியில்‌ கீழ்க்கண்டத்தில்‌ முதல்‌ மனையான சேரன்‌ மடத்திலே உடையவரை வாழப் பண்ணிலனார்‌. அங்கு வாழ ஆரம்பித்த காலத்திலிருந்து சுமார்‌ அறுபத்தைந்து ஆண்டுகளாக திருவரங்கன்‌ செல்வம்‌ முற்றும்‌ திருத்தி வைத்த வரலாற்றைக்‌ காண்போம் ஆழ்வானை தர்ஸன நிர்வாஹத்துக்குத்‌ தமக்கு உதவியாக நியமித்து முதலியாண்டானை உள் துறைக்‌ கைங்கர்யத்திலே நியமித்தார்‌. தாம்‌ திருக்கொட்டார வாசலுக்குத்‌ தென் புறத்தில்‌ உமிக்‌கட்டில்‌ குறட்டிலே யிருந்து திருவிடையாட்டப்‌ பிரபாவமும்‌, மேல்‌ முகம்‌ கீழ்முகங்களான திருத்தோப்புகளில்‌ விசேஷங்களும்‌ திருக்‌கொட்டாரத்தில்‌ மரியாதைகளும்‌ அறிவறியாக விசாரித்து, படித்தனம்‌ முதலானதுகளும்‌ திட்டம்‌ பண்ணி நாள் தோறும்‌ கணக்குகளைப்‌ பெருமாளிடம்‌ பெருமாள்‌ பெரிய அவசரம்‌ செய்தருளிய பின்பு, ஏகாந்தமாக ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்து ஸ்ரீ கார்யம்‌ விசாரித்து ஒழுங்கு படுத்தினார்‌. இவரது கண்டிப்பை விரும்பாத விஷமிகள்‌ உபாதைகளை உண்டாக்கியதையும்‌ பொருட்படுத்தாமல்‌, அகளங்க நாட்டாழ்வான்‌ சமர்த்தராகையாலே திருவிடையாட்‌டம்‌ விசாரிக்கன்ற பணியை அளித்து ஆலிநாடன்‌ திருவீதியில்‌ பெரிய திருமண்டபத்தின்‌ குறட்டின்‌ மேலே மண்டபங்‌ கட்டுவித்‌தார்‌.-ஒருநாள்‌ ஆண்டான்‌ ததீயாநத்தோடு நாவல்பழம்‌ அழுது செய்ததினால்‌, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ முகம்‌ வாடியிருப்பதைக்‌ கண்டு ஆண்டானைக்‌ கோபித்து, கருடவாகன பண்டிதரைக்‌ கொண்டு பெருமாளுக்குச்‌ சிகிச்சை அளித்துத்‌ தன்வந்திரியைப்‌ பிரதிஷ்டை செய்து அந்தக் கோயில்‌ கார்யத்தைக்‌ கவனிக்க கருட வாஹன பண்டிதருக்குக்‌ கட்டளையிட்டு தினமும்‌ இரவில்‌ திருக்‌காப்புச்‌ சேர்க்கறதிற்கு முன்பாக குடிநீர்‌ பாலமுது செய்தருளும்படி திட்டம்‌ பண்ணித்‌ திருவரங்கத் திருப்பதி வைகாநஸமாயிருக்கலாகாது என்று முன் போல பாஞ்சராத்திரமாக மாற்றி ஏகாயநருக்கு ஐந்து பேருக்கு தீக்ஷை சாதித்து பாகவத நம்பியார்‌ என்ற பெயரும்‌ வளங்கி, தோதவத்தித்‌ தூய மறையோரான (வெள்ளை வஸ்திரம்‌ தரிப்பவர்‌) கொடுவாளெடுப்பார்‌ கையிலே பூட்டும்‌ திறவு கோலும்‌, தளையிடுவார்‌ முத்திரையான கருடமுத்திரையும்‌ சாதித்து ஆரியபட்டான்‌ காவலும்‌, பல்லவன்‌ விருப்பரையன்‌ கணக்குமாக நடந்து வர ஏற்பாடு செய்தார்‌.ஸ்தலத்தார்‌ அனுமானித்த படியே வேளாளனான விழுப்பரையனுக்கு கோயில்‌ கணக்கனுக்குள்ள சடகோப தாஸன்‌ என்ற தாஸ்ய நாமத்தை வழங்கி, ஸ்தல சம்பிரதி என்ற பெயரையும்‌ நாட்டி, அவரவர்களுக்குக்‌ கைங்கர்யங்களும்‌ நிர்ணயம்‌ பண்ணி முன்னர்‌ கொடுவனர்‌, கொடவர்‌, கொடு வாளைடுப்பார்‌, பாடுவார்‌, தளையிடுவார்‌ என்று ஐந்து கொத்திலே பரிஜனங்கள்‌ அடங்கி நடந்து வந்ததைப்‌ பத்துக் கொத்தாகப்‌ பெருக்கி நடத்த வழி வகுத்தார்‌.-அவை யாவன முதல்‌ கொத்தாக திருப்பதியார்‌ என்பவர்‌ முன்னால்‌ கோயில்‌ சம்பந்தமற்றுத்‌ தன்னுடைய திருவடிகளை ஆஸ்ரயித்த திவ்ய தேசத்து வாசிகளாவார்‌. திருப்பாற்கடல்‌ தாஸர்‌, திருக்குருகைப் பிரான்‌ போன்றவர்களுக்குக்‌ கைங்கர்யம்‌ நிர்ணயித்தார்‌.-இரண்டாம்‌ கொத்தாக கொடவரில்‌ திருத்தாழ்வரை தாஸர்‌ வம்சரான அஞ்சு திருநாமத்துக்கு, திருக்குருகூர்‌ தாஸர்‌, நாலு கவிப்‌ பெருமாள்‌ தாஸர்‌, ஸடகோபதாஸர்‌. திருக்கலிகன்றி தாஸர்‌, ராமானுஜ தாஸர்‌ என்ற திருநாமம்‌ சாதித்து அவர்களுக்குக்‌ கோயில்‌ கைங்கர்யங்களையும்‌ நிர்ணயம்‌ பண்ணி திருப்பணி கொள்வார்‌ என்று குறிப்பிட்டார்‌. மூன்றாம்‌ கொத்தாக பாகவத நம்பிமாரை பிரதிஷ்டிப்பித்து அவர்களுக்குக்‌ கைங்கர்ய மரியாதை செய்வித்‌தார்‌, நான்காவதாக கொடுவாளெடுப்பாரில்‌, பெரியபெருமாள்‌ திருவரங்கமாளிகையார்‌ போன்றோருக்கு ஆஸ்ரயணாதிகளைப்‌ பண்ணுவித்து உள்ளூரார்‌ என்று பெயரிட்டார்‌.அடுத்துப்‌ பாடுவாரான நாதமுனி அரையர்களுக்கும்‌ ஆஸ்ரயணாதிகளைச்‌ சாதித்து கைங்கர்யங்களையும்‌ நிர்ணயித்து விண்ணப்‌பஞ்‌ செய்வார்‌ என்று குறிப்பிட்டார்‌. ஆறாவதாக திருவரங்க வள்ளலார்‌ தூயமணி வேழம்‌ என்ற தம்முடைய சிஷ்யர்களுக்கு திருமஞ்சனம்‌ முதலான கைங்கர்யங்களை உண்டு பண்ணி திருக்கரகக்‌ கையார்‌ என்று பெயரிட்டார்‌. தளையிடுவாரான சேனைநாதப்‌ பிரஹ்மராயர்‌ முதலானோருக்கு ஆஸ்ரயணாதிகளை சாதித்து அவர்‌களுக்குப்‌ பூர்வம்‌ அந்தந்த பிரபுக்கள்‌ பேர்‌ கொடுத்துக்‌ களை விளங்கும்படி பண்ணி அவர்களை ஸ்தாநத்தார்‌ என்று குறிப்பிட்‌டார்‌. அடுத்து ஸ்ரீ பாஷ்யம்‌ முதல்‌ சகல வேதாந்தங்களையும்‌ தினமும்‌ ஸந்நிதியில்‌ திருவாராதனை காலங்களில்‌ விண்ணப்பம்‌ செய்யும்படி தன்னுடைய சிஷ்யர்களான கருட வாகன பண்டிதர்‌,பெரியநம்பி, ஆழ்வான்‌, கோவிந்தப் பெருமாள்‌ திருவரங்கத்தமுதனார்‌, பிள்ளான்‌, போன்றவர்களை நியமித்து அவர்களைப்‌ பட்‌டான்‌ கொத்து என்று பெயரிட்டார்‌. ஆரியபட்டாளையும்‌ ஒரு கொத்தாக்கி அவர்கள்‌ கைங்கர்யத்தையும்‌ திட்டம்‌ பண்ணினார்‌.-புண்டரீக தாஸர்‌ கைங்கர்யத்தையும்‌ ஒரு கொத்தாக்க தாஸன்‌ கொத்து என்றழைத்தார்‌. இவ்வாறு பத்துக் கொத்துக்கும்‌ கைங்கர்யம்‌ நிர்ணயம்‌ பண்ணி தேசாந்திரிகளான ஏகாங்கிகள்‌ நான்கு பேருக்கும்‌ சில கைங்கர்யங்‌களை நியமித்துத்‌ தங்கப்பிரம்பு 4, வெள்ளிப்பிரம்பு 2, தலைவளைசல்‌ பிரம்பு 8 ஆக எட்டுப் பிரம்புக்கும்‌ திருநாமதாரிகளை நியமித்‌துத்‌ தேசாந்திரிகளான சாத்தாத முதலிகளுக்கும்‌ கைங்கர்யங்களை நியமித்து திருவரங்கச் செல்வம்‌ சிந்தாமே மங்காமே பொங்கும்படி ஆராய்ந்து கொண்டுவந்தார்‌. திருநகரியிலிருந்து திரு அத்யயன உத்ஸவத்துக்கு ஆழ்வார்‌ வரமுடியாமற்போகவே, தாமே கோயிலில்‌ மங்கை மன்னனைத் தவிர ஏனைய ஆழ்வார்களையும்‌ நாதமுனியையும்‌ பிரதிஷ்டை செய்து பெருமாள்‌ அருளப்பாடு, அரையருக்கு அருளப்பாடு முதலியன சாதிக்கும்படி பண்ணினார்‌.இவ்வாறு கோயில்‌ கைங்கர்ய பரரையும்‌ அவரவர்க்குரிய பொருத்தமான கைங்கர்யங்களையும்‌ திட்டம்‌ செய்தருளி ஆழ்வார்‌களையும்‌ பிரதிஷ்டை செய்து அவர்களுக்கு திருநட்சத்திர உபாஸனங்களையும்‌ ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமப்‌ பிரகாரம்‌ நடக்கத்‌ திட்டம்‌ பண்ணி பெருமாளுக்குத்‌ திருவாராதனம்‌ நித்யோத்ஸவ பக்ஷோத்‌ஸவ, மாஸோத்ஸவ, வருஷோத்ஸவ, மகோத்ஸவங்களையும்‌ விஸ்தாரமாக நடத்தி யருளினார்‌. திருவீதியில்‌ சிறியதாக ஒரு கோசாலை கட்டுவித்து அஞ்சு கிராமத்தை அழித்து வனமாக்கி ஆநிரை காத்த பெருமானைப்‌ பிரதிஷ்டை செய்து பிருந்தாவனத்‌தைப்போல பசுக்கள்‌ இருக்குமாறு பண்ணினார்‌.-இவ்வாறு அரங்கனால்‌ அளிக்கப்பட்ட உபய விபூதி சாம்ராஜ்‌யத்தை பெரிய நம்பியின்‌ அருள்‌ நோக்கால்‌ (கடாட்சம்‌) கிடைத்ததாக எண்ணி, அவரது திருவடிகளை வணங்கி அவருக்கு வசப்பட்‌டவராய்‌ விளங்கினார்‌ உடையவர்‌. பின்னர்‌ பெரியநம்பி சொற்படி திருக்கோட்டியூர்‌ நம்பியின்‌ திருவடிகளை வணங்கி, திருமந்திரார்த்‌தத்தையும்‌, சரம ஸ்லோகார்த்தத்தையும்‌, அவரிடமிருந்து உபதேசம்‌ பெற்று, அவர்‌ ஒருவருக்கும்‌ சொல்லாதே கொள்ளும்‌ என்று

சொன்ன ஆணையையும்‌ மீறி, திருக்கோஷ்டியூரிலேயே பலருக்கும்‌
திருமந்ரத்தை உபதேசித்தார்‌ இராமானுஜர்‌. திருக்கோஷ்டியூர்‌ நம்பியும்‌ ராமானுஜரது திருஉள்ளத்தில்‌ பொங்கும்‌ கருணையை அப்‌போதே அறிந்து எதிகட்கிறைவரை ‘எம்பெருமானாரே’ என்று அழைத்துக்‌ கொண்டாடி மிக வுகந்தவராய்‌ இந்தத்‌ தர்ஸனம்‌ இன்று முதல்‌ உமது பெயராலேயே “எம்பெருமானார்‌ தர்ஸனம்‌ என்ற பெயர்‌ பெற்று விளங்கும்‌ என்று கூறினார்‌.-ஆகவே தான்‌ வைணவம்‌ அது முதல்‌ இராமானுஜர்‌ தர்சனம்‌ அல்லது எப்மெருமானார்‌ தர்ஸனம்‌ என்ற பெயரில்‌ விளங்குகிறது.-மறுபடியும்‌ பெரியநம்பி நியமனப்படி திருவரங்கப்‌ பெருமாளரையரை அணுகி வணங்கி அவரிடமிருந்து நம்மாழ்வார்‌ திருவாய்மொழியையும்‌ அதன்‌ சாரார்த்தத்தையும்‌ மற்ற ஆழ்வார்களின்‌ பிரபந்தங்களையும்‌, ஆளவந்தார்‌ அருளிய ஸ்தோத்ர ரத்னம்‌, சதுஸ்லோகி என்ற இரு ஸ்தோத்ரங்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ பெற்றார்‌. மறுபடியும்‌ பெரியநம்பி ஏவியபடி திருமாலை யாண்டானை அணுகி அவரிடமிருந்து திருவாய்மொழி, திருமங்‌கையாழ்வாரது பெரிய திருமொழி, மற்றும்‌ முதலாயிரம்‌, இயற்பா ஆகிய அனைத்துப்‌ பொருளையும்‌, கற்றார்‌. இப்படிக்‌ கற்று வரும் பொழுது சிற்சில இடங்களில்‌ இப்படியும்‌ அர்த்தமாகலாம்‌ என்று எதிராஜர்‌ அவரிடம்‌ கூறினார்‌. அதைக் கேட்டு திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடமும்‌ பெரிய நம்பியிடமும்‌ ஆளவந்தார்‌ அருளாத அர்த்தங்களை இவர்‌ இப்படி விசுவாமித்ர சிருஷ்டியாகச்‌ சொல்கிறாரே என்று குறைபட இவர்‌ சொன்னவையும்‌ ஆளவந்தார்‌ வேறு உருக்களில்‌ அருளிச்‌ செய்யப்பட்டவையே யாகும்‌. ஆளவந்தார்‌ திருஉள்ளம்‌ உகக்காதது இவர்‌ நெஞ்சில்‌ தோன்றாது” என்று அவர்களால்‌ கொண்டாடப்படவே பட்டார்‌ எதிராஜர்‌.இவ் வண்ணமாக ரகஸ்யார்த்தங்களோடு கூடிய உபய வேதாந்‌தங்களையும்‌, ஆசார்யர்களிடமிருந்து கற்று கூரத்தாழ்வான்‌, நடதூராழ்வான்‌, முதலியாண்டான்‌ முதலிய சிஷ்யர்களோடு மிகவுகந்து திருவரங்கத்தில்‌ வாழ்ந்தார்‌ எதிராஜர்‌. அதற்குப்பின்‌ ஆத்ரேய குலத்துதித்த பிராணதார்த்திஹரர்‌ என்னும்‌ கிடம்பியாச்சான்‌, எதிராஜரிடம்‌ சீடனாக வந்து சரணடைந்தார்‌. தனது அத்தைக்கும்‌ இராமானுஜரின்‌ மாமாவான பெரிய திருமலை நம்பிக்கும்‌ பிள்ளையான பிள்ளானை இராமானுஜருக்கு அறிமுகப்படுத்தி, அவருடைய நல்லொழுக்கத்தையும்‌ எதிராஜ பக்தியையும்‌, அவருக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதில்‌ உள்ள விருப்பத்தையும்‌ விண்ணப்பித்து இந்த யதிராஜரையே திருவேங்கடமுடையானாக நினைத்து அடைவாயாக என்று திருமலை நம்பி அவனுக்குச்‌ சொன்ன வார்த்தையையும்‌ ஆச்சான்‌ இராமானுஜருக்குக்‌ கூறினார்‌. இளம்‌ வயதினரான அப் பிள்ளானைக்‌ கருணையோடு நோக்கி, அப்போதே கிடாம்பி ஆச்சானுக்கு எல்லா மந்திரங்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ உபதேசித்து அவரையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டருளினார்‌.-அப்போது ஒரு சமயம்‌ அவரிடம்‌ விரோதம்‌ கொண்ட ஒருசிலர்‌, அவர்‌ மாதுகரத்துக்கு (உஞ்ச விருத்தி ) வரும் பொழுது விஷங்கலந்த பிட்சையை இடுவதை உணர்ந்த எதிராஜர்‌ மூன்றுதினங்கள்‌ உணவே கொள்ளாமல்‌ உபவாசமிருந்தார்‌. விஷயத்தைக்‌ கேள்விப்பட்ட பெரிய நம்பியும்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பியும்‌ பதறியபடியே திருவரங்கம்‌ வந்தார்கள்‌. அவர்களை எதிர் கொண்டழைக்க வந்த எதிராஜர்‌, நடுப் பகலில்‌ காவேரி மணலில்‌ அவர்களைக்‌ கீழே விழுந்து வணங்கா நிற்க, அவரது திருமேனியின்‌ பரிவாலே கிடாம்பி யாச்சான்‌ பதறிக் கோபிக்க, உம்முடைய திருமேனியில்‌ பரிவுடைய இந்த கிடாம்பியாச்சானால்‌ தயாரிக்கப்பட்ட பிட்சையையே நீர்‌ தினந்தோறும்‌ கொள்வீர்‌ என்று நம்பிகளிருவரும்‌, யதிராஜருக்கு நியமித்தனர்‌. அதுமுதல்‌ அவரும்‌ அப்படியே செய்து வந்தார்‌.-தனது சிறிய தாயாரின்‌ பிள்ளையான கோவிந்த பட்டரின்‌ கருத்தைத்‌ திருத்தித்‌ திரும்பவும்‌ வைணவத்திற்குக்‌ கொண்டு வருவதற்காக பெரிய திருமலை நம்பியிடம்‌ எதிராஜரால்‌ அனுப்‌பப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அங்கு சென்று திரும்பி வந்து கோவிந்‌த பட்டர்‌ உள்ளங்கை கொணர்ந்த நாயனாராயிருந்த நிலை போய்‌,சிவலிங்க சம்பந்தம்‌ கழியப் பெற்று பெரிய திருமலைநம்பியின்‌ திருவடித் தாமரையில்‌ வண்டு போலாயினார்‌ என்னும்‌ நற்செய்‌தியை எதிராஜருக்குத்‌ தெரிவித்தனர்‌. அதற்குப்பின்‌ எதிராஜர்‌ வேதார்த்த ஸங்க்ரஹத்தையும்‌, பிரஹ்ம ஸூத்ர வியாக்யானங்களான வேதாந்த சாரங்களையும்‌ கீதோபாஷ்யத்தையும்‌ அருளி, கூரத்தாழ்‌வான்‌, முதலியாண்டான்‌ முதலான சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்‌.ஆதி யந்தமற்ற வேத வாக்கியங்களுக்கு முரண்படாத பொருளை விளக்குவதன்‌ மூலம்‌, வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரங்களுக்கு உண்மைப் பொருளை விளக்கும்‌ ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச்‌ செய்து ஆளவந்தாரின்‌ மனோ ரதமான தனது பொறுப்புகளில்‌ முதலாவதை நிறைவேற்றினார்‌.

அதற்குப்பின்‌ ஒரு பங்குனி உத்‌திரத் திருநாளில்‌ ஸ்ரீரங்க நாயகியும்‌ ஸ்ரீரங்கநாதனும்‌ சேர்த்தியிலே பேரானந்தத்தோடு திருமஞ்சனம்‌ கண்டருளிய பின்னர்‌, அவர்களைச்‌ சரணமடைந்து அதை விளக்கும்‌ கத்ய த்ரயத்தையும்‌ அருளிச்‌ செய்தார்‌ எதிராஜர்‌, ஸ்ரீ பாஷ்ய கீதோபாஷ்ய சார தீப வேதார்த்த ஸங்க்ரஹங்களால்‌ தத்வ ஹித புருஷார்த்தங்களை அறிந்தவனாய்‌, மூன்று கத்யங்களாலும்‌ ஸ்ரீமன்‌ நாராயணனைச்‌ சரணமடைந்தவனாய்‌, அந்த ஸ்ரீயப்பதிக்கே கைங்கர்யம்‌ செய்யும்‌ அதிகாரிக்கு அந்த லக்ஷிமி பதியை அடையும்‌ வரையில்‌ செய்ய வேண்டிய நித்ய கைங்‌கர்யங்களை நித்ய கிரந்தம்‌ என்னும்‌ நூலின்‌ மூலம்‌ தெரிவித்தார்‌.
அதற்குப் பின்‌ யதிராஜர்‌ பல சிஷ்யர்களோடு கூடியவராய்‌, காஞ்சி மார்க்கமாகப்‌ பக்தியோடு பேரருளாளனைச்‌ சேவித்துப் பின்‌ திருவேங்கட மலைக்குச்‌ சென்றார்‌. அங்கு பெரிய திருமலை நம்பி என்றெ ஆச்சாரியரால்‌ எதிர் கொண்டழைக்கப்பட்டு அவரை வணங்கி அவரிடமிருந்து தீர்த்தப் பிரசாதம்‌ பெற்று அவருடைய அருள் நோக்கினால்‌ அலர் மேல்‌ மங்கை யுறை மார்பனை சரணடைந்து, அத் திருமலையிலேயே ஒரு வருட காலம்‌ வாழ்ந்து அத் திருமலை நம்பியிடமிருந்து பலவிதமான அரும்‌ பொருள்கள்‌ நிறைந்த வால்மீகி வழங்கிய ஸ்ரீராமாயணத்தை உபதேசம்‌ பெற்‌றார்‌. ௮வர்‌ தம்முடைய குமாரர்களான பிள்ளானையும்‌ பிள்ளை திருமலை நம்பியையும்‌ எம்பெருமானாரது சீடர்களாக்கினார்‌-அவர்கள்‌ இருவரும்‌ எதிராஜரிடமிருந்து எல்லா அர்த்தங்களையும்‌ உபதேசமாகப்‌ பெற்றனர்‌. திருமலை நம்பியின்‌ பிள்ளையான பிள்‌ளானை திருமலைநம்பி எதிராஜருக்கு அபிமான புத்திரராகத்‌ தத்துக்‌ கொடுத்தார்‌.-யதிராஜரும்‌ நம்பியால்‌ அளிக்கப் பெற்ற அப்பிள்ளானையும்‌,தானே யாசித்துப் பெற்ற சிறிய தாயாரின்‌ பிள்ளையான கோவிந்த பட்டரையும்‌ அழைத்துக் கொண்டு காஞ்சி மார்க்கமாகவே ஸ்ரீரங்‌கத்தை அடைந்தார்‌. அந்த கோவிந்த பட்டர்‌ இல் வாழ்க்கையில்‌ ஈடுபாடின்றி விஷய வைராக்கியம்‌ உள்ளவராய்‌ இருப்பதைக்‌கண்டு அவருக்கு ஸந்யாச தர்மத்தையும்‌ அவர்‌ வேண்டிக் கொண்டபடி தனது பெயரைச்‌ சுருக்கி எம்பார்‌ என்ற தாஸ்ய நாமத்தையும்‌ வழங்கினார்‌ எம்பெருமானார்‌. ஸ்ரீரங்கநாதரின்‌ அருட் பிரசாதத்‌தாலே கூரத்தாழ்வானுக்குப்‌ பிள்ளையாகப்‌ பிறந்தார்‌. பிஞ்சாய்ப்‌ பழுத்தவரான பட்டர்‌, அந்தப் பிள்ளைக்கு பராசர மகரிஷி பெயரைச்‌ சூட்டி, அவரால்‌ இயற்றப்பட்ட விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தையும்‌ அரங்கேற்றி ஆளவந்தாரது இரண்டாவது மநோ ரதத்தை நிறைவேற்றினார்‌ எதிராஜர்‌. ‌ ஒரு பாசுரத்தின்‌ பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த இராமானுஜரைக்கண்டு, பிள்ளான்‌ அவர்‌ ஆராய்ந்து கொண்டிருக்‌கும்‌ பொருள்‌ இது வன்றோ என்று உரைத்தார்‌. தாம்‌ முடிவு கட்டிய பொருளும்‌ பிள்ளான்‌ கூறிய பொருளும்‌ ஒத்திருப்பதைக்‌ கண்ட
எதிராஜரும்‌ மிக்க ஆச்சர்யமடைந்தவராய்‌, நாதமுனிகளின்‌ ஞானவம்சத்தில்‌ பிறந்த பெருமையினால்‌ இவர்‌ இந்தப் பொருளை அறிந்தார்‌ என எண்ணி ‘என்‌ ஞான புத்திரரே’ என்று அணைத்துக்‌ கொண்டார்‌. எதிராஜரான இராமானுஜருக்கு ஞான புத்திரர்‌ என்றும்‌
அவரது பாதுகை என்றும்‌ புகழ்‌ பெற்றவரான பிள்ளான்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி வியாக்யானம்‌ அருளிச்‌ செய்தார்‌. பிள்ளான்‌ என்ற பெயருடைய அவருக்கு நம்மாழ்வாரின்‌ திருநாமமான திருக்குருகைப்பிரான்‌ என்னும்‌ பெயரை இட்டு அவர்‌ அருளிய ஆறாயிரப்படி வியாக்யானத்தையும்‌ அரங்கேற்றி
ஆளவந்தாரது மநோ ரதத்தை நிறைவேற்றினர்‌. அநந்தரம்‌ எம்பார்‌ திருத் தம்பியார்‌ சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குமாரர்‌ அவதரித்தருள அதைக் கேட்டு வுகந்து அக்குமாரருக்கு ‘பராங்குச நம்பி’ என்று நம்மாழ்வார்‌ திருநாமத்தைச்‌ சூட்டி ஆளவந்தாரது
மூன்றாவது மநோ ரதத்தையும்‌ நிறைவேற்றினார்‌ இராமானுஜர்‌.
அதற்குப் பின்னர்‌ எதிராஜருக்கும்‌, யக்ஞமூர்த்தி என்ற அத்வைதிக்கும்‌ விவாதம்‌ நடந்தது. இவ் விவாதத்தில்‌ தோற்றவர்கள்‌ வென்‌றவர்கள்‌ மதத்தைப்‌ பின்பற்ற வேண்டும்‌ என்பது உடன்பாடு.-ஸ்ரீரங்கத்தில்‌ பதினெட்டு நாள்‌ விவாதப் போர்‌ நடந்தது. மனம்‌ சோர்ந்த எதிராஜரது கனவில்‌ அவரது ஆராதன மூர்த்தியான வரதராஜர்‌ தோன்றி அபயமனித்தார்‌. அவரது அருள்‌ பெற்ற எதிராஜர்‌ பதினெட்டாவது நாள்‌ மாயாவதி மதத் தலைவரான யக்ஞமூர்த்‌தியை வாதத்தில்‌ வென்று, அருளாளப் பெருமாள்‌ அருளால்‌ வென்‌றமையால்‌, அவருக்கு அப் பெருமானின்‌ திருநாமத்தையும்‌ தமது பெயரையும்‌ சேர்த்து அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ என்னும்‌ தாஸ்ய நாமத்தை யிட்டார்‌. எதிராஜர்‌ சிஷ்யராகி அவரும்‌ ஞான சாரம்‌’ ‘பிரமேய சாரம்‌’ என்ற இரு பிரபந்தங்களை யிட்டருவினார்‌. அவற்றில்‌ ஸச் சிஷ்யனுக்கு (நல்ல சிஷ்யன்‌) ஸதாசார்யனே பரதேவதை. அவன்‌ திருவடிகளில்‌ கைங்கர்யமே பரம ப்‌ராப்யம்‌. (பெருந்தனம்‌) அவன் தான்‌ பகவதவதார விசேஷம்‌ என்ற கருத்துக்களை அருளிச்‌ செய்தார்‌.

அதற்குப்‌.பின்னர்‌ எதிராஜர்‌ திக் விஜயம்‌ செய்ய எண்ணி, பல சிஷ்யர்களோடு புறப்பட்டு ஆங்காங்கு சென்று பிற மதத்தினர்‌-அனைவரையும்‌ வென்று காஷ்மீர தேசத்திலுள்ள ஸரஸ்வதி பீடத்தை அடைந்தார்‌. அங்கு அவருடைய பிரஹ்ம ஸூத்திரப் பாஷ்‌யத்தை சிரசா வகித்த ஸரஸ்வதி தேவி, இதுவே ஸ்ரீபாஷ்யம்‌-மிகச் சிறந்த பாஷ்யத்தைச்‌ செய்த நீர்‌ இனி ஸ்ரீ பாஷ்யகாரர்‌ என்றே புகழ்‌ பெறுவீர்‌ என்று கூறி அந்த ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ கோசத்தையும்‌ தனது ஆராதன மூர்த்தியான ஹயக்கிரீவரையும்‌ அவரிடம்‌ ஒப்படைத்தாள்‌. அவற்றையும்‌ ஏற்றுக் கொண்டு தனது திருவாராதனப்‌ பெருமாளான வரதராஜனோடு தினந்தோறும்‌ ஆராதித்துக்‌ கொண்டு, திருவேங்கடமலைக்கு மீண்டும்‌ எழுந்தருளினார்‌.
பக்தனான தொண்டைமான்‌ சக்கரவர்த்தியின்‌ வசம்‌ சங்கு சக்கரங்களைக்‌ கொடுத்திருப்பதைப்‌ பற்றாகக் கொண்டு ஸ்ரீநிவாசன்‌ சிவனே யொழிய விஷ்ணு அல்ல என்று சைவர்கள்‌ வாதம்‌ புரிய முற்பட, அவர்‌ விஷ்ணுவே என்பதை நிலைநாட்டினார்‌ எதிராஜர்‌-ஆனால்‌ சைவர்கள்‌ பிடிவாதம்‌ பிடித்தமையால்‌ அனைவரும்‌ கூடிச் சேர்ந்து நிச்சயித்து சங்கு சக்கரங்களையும்‌, சூலத்தையும்‌ கர்ப்பக் கிரகத்தில்‌ வைத்துக்‌ கதவைச் சாத்தி எல்லோரும்‌ ஒன்றாக இருந்து காவல்‌ காத்து, காலையில்‌ ஒன்றாகவே வந்து கதவைத் திறந்து உள்ளே புகுந்து திருவேங்கடமுடையானைக்‌ கண்டனர்‌. சூலத்தை விடுத்துச்‌ சங்கு சக்கரங்களைத்‌ தரித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனைக் கண்ட சைவர்கள்‌ உடனே ஓடிவிட்டார்கள்‌. யதிராஜரும்‌ திருமலை நம்பியும்‌ மிக உகந்தனர்‌. திருமலை நம்பியால்‌ பரிபூரணமாகக்‌ கடாட்சிக்கப்பட்ட எதிராஜர்‌, எல்லா சிஷ்யர்களோடும்‌ ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி, வேதாந்த சித்தாந்தத்தை நிலைநாட்‌டுவதில்‌ வல்லவரானார்‌. பிற மதத்தவர்கள்‌ அதனால்‌ பொறாமை கொண்டனர்‌.பிற மதத்தவர்களால்‌ துர்ப்போதனை செய்யப்பட்ட சோழராஜன்‌ சிவனைக் காட்டிலும்‌ மோலனவன்‌ இல்லை என்று ஏட்டில்‌ எழுதிக்‌ கையெழுத்திடுமாறு நல்லவர்கள்‌ அனைவரையும்‌ துன்‌புறுத்தி வந்தான்‌. அவன்‌ இதற்காக எதிராஜரை அழைத்து வரத்‌ தன்‌ சேவகர்களை அனுப்பினான்‌. சிஷ்யர்கள்‌ மூலம்‌ இச் செய்தி ஸ்ரீரங்கத்தை எட்டியது. இதைச்‌ செவியுற்ற கூரத்தாழ்வான்‌ காஷாயத்தையும்‌ திரிதண்டத்தையும்‌ தரித்தவராய்‌ பெரிய நம்பியோடு கூட ராஜசபைக்குச்‌ சென்றார்‌. நடதூராழ்வான்‌ முதலானோரோடு கூடியவராய்‌ யதிராஜரும்‌ வெள்ளை வஸ்திரம்‌ சாத்திக் கொண்டு -மேற்குத்‌ திக்கை நோக்கிப்‌ புறப்பட்டார்‌. அரங்க நகரப்பனே வழித்‌ துணையாகக்‌ கூடச்‌ சென்றான்‌. ஒரு மலையடியிலே இவரது சிஷ்யரான திருமலை நல்லானின்‌ சிஷ்யர்களான வேடமுதலிகள்‌, மிகவும்‌ தளர்ந்து வந்த எம்பெருமானார்‌ கோஷ்டியை வரவேற்று உபசரித்து குளிர் போக்கி உண்ண தேனும்‌ தினைமாவும்‌ அளித்தனர்‌. பின்னர்‌ பக்கத்திலுள்ள ஒரு ஊரில்‌ உள்ள அந்தணர்‌ இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கட்டளைவாரி என்ற அந்தணனகத்திலே ‘அமுது செய்‌யப்‌ பண்ணுவியுங்கள்‌’ என்று கூறிவிட்டுச்‌ சென்றனர்‌. அவனது பார்யை முன்னரே எதிராஜர்‌ சிஷ்யையாதலால்‌, முதலில்‌ எதிராஜரை அடையாளம் காண மாட்டாது திகைத்தவள்‌ பின்னர்‌, தன்‌ ஆத்மாவை உய்வித்த எதிராஜர்‌ என்று கண்டு, தன்‌ கணவனை எம்பெருமானாரது சிஷ்யனாக்கி, தன்‌ வீட்டில்‌ அவர்கள்‌ சில நாள்‌ தங்கிப் போகுமாறு உபசரித்து, பின்னர்‌ அவருக்கு வேண்டிய காஷாயம்‌ திரி தண்டம்‌ முதலியவற்றையும்‌ சமர்ப்பித்தாள்‌. சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்ட முறையில்‌ மறுபடியும்‌ ஏற்றுக் கொண்டு எம்பெருமானார்‌, எம்பெருமான்களுக்குத்‌ திருவாராதனம்‌ செய்து வந்தார்‌. இவ்வாறு வழிநடந்து மேல்நாட்டை (மைசூரை) அடைந்‌தார்‌ எதிராஜர்‌.அந்த தேசத்து அரசன்‌ விட்டல தேவராயனும்‌, அவனது மகளுக்குப்‌ பிடித்திருந்த பிசாசை ஓட்டிய எதிராஜரது திறமையான பக்தியில்‌ ஈடுபட்டுத்‌ தானும்‌ வைணவனாக மாறி விஷ்ணு வர்த்தனன்‌ என்ற நாமமேற்று அவரது சீடரானான்‌. எதிராஜரை அவனுக்கு அறிமுகம்‌ செய்த தொண்டனூர்‌ நம்பி போன்ற சில அந்தணர்‌ தலைவர்களும்‌ எதிராஜரது சீடர்களானார்கள்‌. அவ் வரசனை வசப்படுத்தி யிருந்த ஜைனர்களும்‌ எதிராசரால்‌ வாதில்‌ தோற்கடிக்கப்பட்டு
அரசனால்‌ தண்டிக்கப்பட்டனர்‌. தொண்டனூர்‌ நம்பிக்கு ‘நம்பி தம்‌பிரான்‌’ என்ற திருநாமம்‌ வழங்கப்பட்டது. எம்பெருமானாரது மஹாப் பிரபாவம்‌ எல்லோருக்கும்‌ தெரியலாயிற்று.
இவ்வாறு எம்பெருமானார்‌ சிங்கர்‌ கோவிலில்‌ இருக்கும் பொழுது அவர்கள்‌ கனவில்‌ தோன்றிய திருநாராயணன்‌, யாதவாத்ரியில்‌ பூமிக்கு அடியில்‌ இன்ன அடையாளமுள்ள இடத்தில்‌ நான்‌ புதைந்து இருக்கிறேன்‌. என்னை அங்கு பிரதிஷ்டை செய்வாய்‌.-ஊர்த்வ புண்டரத்திற்கு (திருநாமம்‌) வேண்டிய வெள்ளை மண்‌ணையும்‌ எடுத்துக் கொள்வாய்‌ என்று அவரிடம்‌ கூறி அருளினான்‌.
அப்போது எதிராஜரும்‌ மிகவும்‌ உகந்தவராய்‌ கல்யாண ஸரஸ்ஸில்‌ -நீராடிப்‌ பரிசுத்தி பெற்றவராய்‌, அவ்வடையாளங்களைக்‌ கொண்டு திருநாரணனோடு கூடிய விமானத்தைக்‌ கண்டுபிடித்து, அக்கோயிலிலே மூலமூர்த்தியான திருநாரணனைப்‌ பிரதிஷ்டை செய்தார்‌.-வெள்ளை மண்ணையும்‌ சிஷ்யர்களைக்‌ கொண்டு எடுத்துத்‌ தரித்‌துக் கொண்டு திருநாராயணனின்‌ உத்ஸவ மூர்த்தியான ராமப்பிரியரைத்‌ தேடிக் கொண்டு டில்லிக்குச்‌ சென்றார்‌. அங்கு டில்லி அரசனான சுல்தானின்‌ பெண்ணின்‌ அந்தப் புரத்தில்‌ இருந்த அப்பெருமாளை ‘என்‌ செல்லப்‌ பிள்ளாய்‌ வருக” என்று கூவினார்‌. ஓடி வந்து மடியில்‌ ஏறிய ராமப் பிரியரை அழைத்துக்‌ கொண்டு வந்து திருநாராயணபுரத்தில்‌ உற்சவ மூர்த்தியாகச்‌ சேர்த்து, அந்தச் செல்வப் பிள்ளையான திருநாரணனுக்கு உற்சவம்‌ முதலானவற்றைச்‌ செய்து இன்புற்‌றார்‌. அப்பெருமானைத் தேடி வந்த சுல்தானின்‌ பெண்‌ அங்கேயே ஒன்றுபட்டு மறைந்தாள்‌. அவளையும்‌ ஆண்டாளைப் போல துலுக்‌க நாச்சியார்‌ என்று வணங்குகின்றனர்‌.பெரிய நம்பியும்‌ கூரத்தாழ்வானும்‌, தர்சனத்திற்காக (வைணவத்திற்காக) தர்சனத்தை (கண்களை) இழந்ததைக்‌ கேள்விப்பட்டு மிக வருந்திய எதிராஜர்‌ பெரிய நம்பி பரமபதமடைந்த போதிலும்‌, கூரத்தாழ்வான்‌ க்ஷேமமாயிருப்பதையும்‌, சோழ அரசன்‌ விரைவிலேயே துர் மரணம்‌ அடைந்ததையும்‌ கேள்விப்பட்டு ஸ்ரீரங்கச்‌ செல்வத்திற்கு உபத்திரவம்‌ நீங்கியதை எண்ணி ஆனந்தமடைந்தார்‌.-அதற்குப் பின்னர்‌ கல்யாண தீர்த்தம்‌ சிறப்படைந்தது. அந் நகரமும்‌ திருநாராயணபுரமாயிற்று. அங்குள்ள ஸ்ரீயப்பதியும்‌ ஸம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) ஆனார்‌. யதிராஜரின்‌ ஜயஸ்தானமாயிற்று அவ்‌வூர்‌. மேலும்‌ எதிராஜர்‌ தமது திருவடிகளைச்‌ சரண் புகுந்த ஜனங்களின்‌ நன்மைக்காக தமது அர்ச்சா மூர்த்தியை (மூலவரை) அவர்களுக்கு அளித்தார்‌. அதனால்‌ கிரேதா யுகத்தில்‌ நாராயணாத்ரி என்றும்‌ திரேதா யுகத்தில்‌ வேதாத்ரி என்றும்‌ துவாபர யுகத்தில்‌ யாதவாத்ரி என்றும்‌ அழைக்கப்பட்டு வந்த :யாதவாத்ரி, இராமானுஜர்‌ பெயரால்‌ யதுகிரி என்றும்‌ பெயர்‌ பெற்றது.-செல்வப் பிள்ளையையும்‌ யதுகிரி நாச்சியாரோடு கூடிய திருநாராயணனையும்‌ வணங்கி, அங்குள்ள சிஷ்யர்களை (திருநாராயணனை) முறையாகப்‌ பூஜிக்கும்படி நியமித்து விட்டு சில அந்தரங்க சிஷ்யர்களோடு திரும்‌பிய எதிராஜர்‌ ஸ்ரீரங்கத்திற்குச்‌ சென்று ஸ்ரீரங்கநாதனை ஆனந்தக் கண்ணீரோடு வணங்கினார்‌. குலோத்‌துங்க சோழன்‌ மனந்திருந்தி உடையவரிடம்‌ மன்னிப்புக் கேட்டு திருவரங்கச்‌ செல்வத்தைத்‌ திருப்‌பிக் கொடுக்க வாங்கி முதலியாண்‌டானுக்குத் தான ஸாஸனம்‌ பண்ணுவித்து அந்த விருத்தாந்தத்தை (சம்பவத்தை) ஆர்யபட்டாள்‌ வாசலிலே சிலாசாசனம்‌ செய்தார்‌.இவ்வாறு ஆண்டானைக்‌ கொண்டு, ஸ்ரீகார்யம்‌ நடத்தி வருகையில்‌ பெரிய நம்பி குமாரருக்கு ஆளவந்தார்‌ மடத்தையும்‌, ஆழ்வானுக்‌கும்‌ ஆண்டானுக்கும்‌ மனைகளையும்‌ ஸ்ரீ சேநாபதி பட்டையமும்‌ ஸாதித்தருளினார்‌. இவ்வாறு எம்பெருமானார்‌ முதலிகளுடன்‌ வாழ்ந்தருளி நூறு சாதுர்மாஸ்யா நந்தரம்‌ (நூறு ஆண்டுகாலம்‌] கழித்து ஸதாபிஷேகமும்‌ கண்டருளி எதிராஜன்‌ என்னும்‌ பேர்‌ பெறறு தம்‌ சிஷ்யரான ராமானுஜதாசன்‌ மூலம்‌ தன்னுடைய விக்ரகத்தைப்‌ பண்ணுவித்து தன்‌ சத்தியை அதில்‌ ஆதானம்‌ பண்ணிக்‌ கந்தாடை ஆண்டானைக்‌ கொண்டு ஸ்ரீபெரும்புதாரில்‌ பிரதிஷ்டை செய்தார்‌.அவதாரங்களெல்லாம்‌ ஒத்திருக்க ராம கிருஷ்ண அவதாரங்களுக்கு முக்யத்வம்‌ உண்டானாற்போல, திவ்ய தேசங்களெல்லாம்‌ ஒத்திருக்க கோயில்‌, திருமலை, பெருமாள்‌ கோயில்‌, திருநாராயண புரத்திற்கு முக்கியத்வம்‌ உண்டாவதைப் போல, ஆச்சார்யர்கள்‌ எல்லோரைக் காட்டிலும்‌ எம்பெருமானாருக்கு முக்கியத்வம்‌ ஏற்‌பட்டது. பின்னர்‌ அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீரங்கத்திற்குத்‌
திரும்பிச் சென்று ஸ்ரீரங்கநாதரை ஆனந்தக் கண்ணீர்‌ ததும்ப வணங்கினார்‌. பின்னர்‌ அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்‌; ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களுக்கான திருஅத்யயன உத்ஸவம்‌ ஆழ்வார்‌ திருநகரியிலிருந்து நம்மாழ்வார்‌ எழுந்தருள இயலாமையால்‌ தடைப்‌பட்டு விட்டது என்று அவரிடம்‌ கூறினார்கள்‌. அந்த ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார்‌ விக்கிரகம்‌ ஒன்றைப்‌ பிரதிஷ்டை செய்வித்து, அவரைக் கொண்டு அரங்கநகரப்பனுக்கு இருபது நாள்‌ அத்யயன உத்ஸவத்தைச்‌ செய்வித்து பிற்காலத்தில்‌ மற்ற ஆழ்வார்களின்‌ பிரபந்தங்களையும்‌, தன்‌ விஷயமான இராமானுஜ நூற்றந்தாதியையும்‌ சேர்த்துத்‌ திருவரங்கன்‌ செவி சாத்துப்படி செய்தார்‌. மற்றைய ஆழ்வார்களுக்கும்‌ ஆண்டாளுக்கும்‌ விக்கரகப்‌ பிரதிஷ்டையும்‌ செய்து வைத்தார்‌. அதைப் போலவே மிகச்சிறந்த திவ்ய தேசங்களிலும்‌ ஆழ்வார்‌களுடையவும்‌ ஆண்டாளுடையவும்‌ விக்கரகங்களைப்‌ பிரதிஷ்டை செய்து அத்யயன உத்ஸவமும்‌ நடக்கும்படி செய்தார்‌. எம்பெருமாளுக்கு ஏற்பட்டதான பாஞ்சராத்திர ஆகம விதி திருவாராதனம்‌,ஆளவந்தார்‌ காலத்திற்குப் பின்‌ வைகானஸ ரீதியாக மாறி நடந்ததை மாற்றி உடையவர்‌ முன்‌ போலவே பாஞ்சராத்திர விதிப்படி நடக்கும்படி பண்ணுவித்தார்‌. உடையவர்‌ திருவரங்கப் பெருமாளரையரிடத்திலே திருவாய்‌ மொழியை பண்‌ இசை தாளத்துடன்‌ ஓதி அப்படியே பாடவல்ல பல விண்ணப்பஞ்‌ செய்வாரை(அரையர்களை) ஏற்படுத்தி , அவர்களுக்குத்‌ தனி அலங்காரமும்‌ மான்யங்களும்‌ வழங்கினார்‌. பிள்ளை உறங்கா வல்லி தாஸரைப்‌ பெரிய பெருமாளது அடியாராக்கி, பெருமாளுக்குத்‌ திருமேனிக்‌ காவலராய்‌ நியமித்தார்‌. அவருடைய மருமக்களான வண்டரும்‌,சுண்டரும்‌ மடத்திற்குத்‌ ததியாராதனத்துக்கு அழுதுபடி முதலானவை நடத்திக் கொண்டு வந்தார்கள்‌.-உடையவர்‌, திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌ சந்நிதியில்‌ ஆளவந்தாரது ஸ்தோத்ரத்திற்கு ஆசார்யன்‌ உபாயம்‌ என்னும்‌ அர்த்தத்‌தைப்‌ பெற்று லட்சுமண முனி என்ற நாமத்தையும்‌ பெற்றார்‌. உடையவர்‌ கொங்குப் பிராட்டி என்ற பெண்மணிக்கு இருமுறை த்வயத்தை உபதேசித்துத்‌ தன்‌ திருவடி நிலைகளை அருளிச் செய்தார்‌.-உடையவர்‌ திருவேங்கட யாத்திரைக்கு எழுந்தருளும்‌ வழியில்‌ திருவெள்ளறை , திருக் கோவலூர்‌ ஆகிய கோவில்களைச்‌ சேவித்து அங்கிருந்து புறப்பட்டு அஷ்ட ஸஹஸ்ரநாமம்‌ (எண்ணாயிரம்‌) குடியைச் சேர்ந்த யக்ஷேசர்‌ (எச்சான்‌) என்பவர்‌ ரஜோ குணம்‌ மிகுந்‌தவராய்‌ இருக்கையாலே அவர்‌ வீட்டில்‌ அமுதுண்ண மறுத்து,சாத்வீகையான பருத்திக்‌ கொல்லை யம்மாள்‌ வீட்டில்‌ எழுந்தருளி,அமுது செய்தார்‌. பின்னர்‌ எச்சானையும்‌ அவன்‌ தவறை உணர்ந்து திருந்தும்படி செய்தார்‌.-உடையவர்‌ தம்‌ தர்சனத்தை நிலை நாட்ட திக்விஜயங்கள்‌ செய்தார்‌. திருமாலிருஞ்சோலை அழகரை மங்களாசாசனம்‌ செய்து, தென் மதுரையில்‌ கூடலழகரையும்‌, ஸ்ரீவில்லிபுத்தூரில்‌ பெரியாழ்‌வாரையும்‌, வடபெருங்கோயிலுடையானையும்‌, ரங்கமன்னாரையும்‌ ஆண்டாளையும்‌ மங்களாஸாஸனம்‌ செய்தார்‌. ஆண்டாள்‌ பாரித்தபடியே நூறுதடா நிறைய அக்கார அடிசிலும்‌, நூறுதடா நிறைய வெண்ணையும்‌ சமர்ப்பித்து ஆண்டாளின்‌ அருள் நோக்கையும்‌ அவளால்‌ கோவிலண்ணர்‌ என்று சிறப்பாகச்‌ சொல்லப்படும்‌ சன்மானத்தையும்‌ பெற்றார்‌.பின்னர்‌ திருப்புளிங்குடி முதலான திவ்ய தேசங்களைச்‌ சேவித்து, திருக்குருகூரில்‌ நம்மாழ்வாரையும்‌, பொலிந்து நின்ற பிரானையும்‌ மங்களாஸாஸனம்‌ செய்தார்‌. ‘மதுரகவிகள்‌’ என்று திருநாமமாயிருந்த ஆழ்வார்‌ திருவடி நிலைகளுக்கு ‘இராமானுசன்‌’என்று திருநாமம்‌ ஆக வேண்டும்‌ என்று உடையவர்‌ பிரார்த்தித்‌ததை ஆழ்வார்‌ அங்கீகரித்தார்‌, உடையவர்‌ திருக்கோளூரில்‌ வைத்த மாநிதிப்‌ பெருமாளைச்‌ சேவிக்கச்‌ சென்றபொழுது அங்குள்ள ஒரு சிறு பெண்ணோடு ஸம்வாதம்‌ செய்து அவளது பிரபந்த அறிவினை மெச்சி அக்குடும்பத்தை ரட்சித்தார்‌. பின்னர்‌ நவ திருப்பதி பெருமாள்களை யெல்லாம்‌ வணங்கி, வானமாமலை, திருக்குறுங்குடி எம்பெருமான்களையும்‌ மங்களாசாசனம்‌ செய்தார்‌. திருக்குறுங்குடி நம்பிக்கு ஆசார்சயராக இருந்து த்வயத்தை உபதேசித்து ‘வைஷ்‌ணவ நம்பி’ என்ற தாஸ்ய நாமத்தையும்‌ சாத்தி யருளினார்‌. திருவண்‌பரிசாரம்‌, திருவட்டடாரம்‌, திருவனந்தபுரம்‌ போன்ற குட்ட நாட்‌டுத்‌ திருப்பதிகளையும்‌ மலை நாட்டுத்‌ திருப்பதிகளையும்‌ மங்களாசாசனம்‌ செய்தார்‌. சோழராஜாவால்‌ இடிக்கப்பட்ட தில்லைச்சித்திரகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்த ராஜப்‌பெருமாளின்‌ உத்சவ மூர்த்தியை வேங்கடமலை அடிவாரத்தில்‌ பிரதிஷ்டை செய்து முறைப்படி ஆராதனைக்கு ஏற்பாடு செய்தார்‌.நம்மாழ்வார்‌ முதலான ஏனைய ஆழ்வார்களையும்‌, பிரதிஷ்டை செய்த பின்‌ வெற்றி வீரராய்‌ சிஷ்ய கோடிகளோடு திருவரங்கத்திற்‌குத்‌ திரும்பச்‌ சென்று பின்‌ மற்ற மதங்களைப்‌ பற்றியிருந்த ஜனங்களைத்‌ தன்‌ அடியார்களாக்கி சிஷ்யர்களுக்கு முறைப்படி ஓவ்வொரு கைங்கர்யத்தையும்‌ பிரித்துக் கொடுத்து கவலை நீங்கப்‌ பெற்றவராய்‌ இன்புற்றிருந்தார்‌ எதிராஜர்‌.உடையவர்‌ தெற்கிலுள்ள திவ்ய தேசத்துப்‌ பெருமான்களை எல்லாம்‌ சேவித்து மங்களாசாசனம்‌ செய்த பின்‌ வடநாட்டிலுள்ள பத்ரிஹாஸ்ரமத்தில்‌ நர நாராயணனையும்‌, சாளக்ராமத்தில்‌ மலை யையும்‌, மற்றும்‌ அயோத்தி, மிதிலை, காசி, ஜகன்னாதம்‌ முதலிய இடங்களில்‌ பெருமாள்களையும்‌, சேவித்து மங்களாசாசனம்‌ செய்‌தார்‌. வாரங்கல்‌ என்ற பட்டிணத்தில்‌ ‘பாஞ்சாலராயன்‌’ என்ற பெருமாளை பிரதிஷ்டை செய்தார்‌. ஸ்ரீகாகுளத்தில்‌ ஸ்ரீவல்லபன்‌ என்னும்‌ எம்பெருமானுக்கு தெலுங்குராயன்‌ என்று திருநாமம்‌ சாத்தினார்‌. இவ்வாறு உடையவர்‌ வடநாடு தென்னாடு முதலிய எல்லா இடங்களுக்கும்‌ சென்று வைணவத்திற்குச்‌ சேவை செய்த பாங்கினை எல்லாம்‌ ஸ்ரீபிள்ளை லோகம்‌ ஜீயர்‌ அருளிய ‘ஸ்ரீ ராமானுஜார்ய திவ்ய சரிதை’ என்ற மணிப்பிரவான நடையில்‌ எழுதப்பட்ட நூலில்‌ காண்கிறோம்‌.எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான்‌ த்ரிதண்டம் முதலிஆண்டான்‌ பவித்ரம் -பாதுகைகள்‌, எம்பார்‌ பாதச்சாயை (திருவடி நிழல்‌)அருளாளப்பெருமாள்‌ எம்பெருமானார்‌ ஆத்ம ஸமர்‌. பிள்ளை உறங்கா வில்லி தாசர்‌ (பாஹிசமர்‌) தோழர்‌. பெரிய நம்பி தொடக்கமான ஐந்து ஆசார்யர்கள்‌ ஐந்து தலைகள்‌. திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌ புத்திரஸமர்‌ ஆவார்கள்‌. ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களைக்‌ கொண்டு பாஷ்யகாரர்‌ ஸ்ரீ ஸுத்ர பாஷ்யத்தை அருளிச்‌செய்து அதைக்‌ கிடாம்பி ஆச்சான்‌ கிடாம்பிப்‌ பெருமாள்‌ முதலானோர்‌ மூலமாக சாரதா பீடத்துக்கு அனுப்பினார்‌. ஸரஸ்வதி தேவி அதைத்‌ தலையில்‌ தரித்து ஸ்ரீ பாஷ்யகாரர்‌ என்று எம்பெருமானாருக்‌குத்‌ திருநாமம்‌ சாத்தினாள்‌ என்பதை முன்பே கண்டோம்‌. உடையவர்‌ ஒர்‌ ஊமைக்கு தம்முடைய திருமேனியை ரக்ஷகமாகக்‌ காட்டியருள அதைக்கண்ட கூரத்தாழ்வான் தான்‌ ஊமையாய்‌ பிறக்கவில்‌லையே என்று தம்மை வெறுத்தார்‌. முதலியாண்டான்‌ தன்‌ குமாரனுக்கு இராமானுஜன்‌ என்று திருநாமம்‌ சாத்தினார்‌. கந்தாடையாண்‌டான்‌ என்று பிரசித்தி பெற்ற அவரை ஆட்கொண்ட வில்லி ஜீயரது சீடனாக்கினார்‌. ஏனைய சீடர்களும்‌ தம்‌ குமாரர்களுக்கு உடையவரது திருநாமம்‌ இட்டனர்‌. அவ்வாறு செய்த ஒரு வைணவ வண்ணானுடைய பிள்ளைக்கும்‌ இராமானுசர்‌ அருள்‌ புரிந்தார்‌. . இவ்வாறு உபய கைங்கர்ய நிர்வாஹகராய்‌ செங்கோல்‌ செலுத்தி உபயவிபூதியிலும்‌ தம்முடைய சிறு முறி செலுத்தி, 74 ஆச்சார்யார்களும்‌ எழுநூறு ஜீயர்களும்‌ பன்னீராமிர ஏகாங்கிகளும்‌ அனேக வைணவர்களும்‌ சேவிக்க திருவரங்கத் திருப்பதியிலே வாழ்ந்து கொண்டிருந்தார்‌,எம்பெருமானார்‌ திருவடிகளில்‌ சரணமடைந்த முதலிகளான எழுபத்து நாலு ஆச்சார்யர்களாவது, ஆளவந்தார்‌ குமாரர்களில்‌ சொட்டை நம்பி தொடங்கி பெரிய நம்பி குமாரர்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பி குமாரர்‌, திருமாலையாண்டான்‌, பெரிய திருமலைநம்பி முதலிய ராமானுசரது ஆச்சார்ய குமாரர்களும்‌, கூரத் தாழ்வான்‌ முதலியாண்டான்‌ முதலான அவரது சிஷ்யர்களின்‌ குமாரர்களுமாக எழுபத்து நாலு சிம்மாசனாதிபதிகளையும்‌ நியமித்தார்‌. அவர்களில்‌ முக்கியமானவராக நால்வரை ஸ்ரீ பாஷ்ய சிம்மாசனாதிபதிகளாகவும்‌ அந்நால்வரிலும்‌ தன்‌ ஞான புத்திரனான பிள்ளானை உபய வேதாந்த பாஷ்ய சிம்மாசனாதிபதியாகவும்‌, ராமானுஜாச்சாரியார்‌ நியமித்தருளினார்‌. அந்த 74 சிம்மாசனாதிபதிகளுடன்‌ எழுநூறு ஸந்யாசிகளுடனும்‌, பன்னீராயிரம்‌ பரம ஏகாந்திகளுடனும்‌, முன்‌னூறு கொற்றியம்மையார்களுடனும்‌, எண்ணிறந்த ராஜாக்களாலும்‌, மற்றும்‌ பல சாத்தன. சாத்தாத முதலிகளாலும்‌ பிள்ளையுறங்கா வில்லிதாசர்‌ முதலான திருநாம தாரிகளாலும்‌ பொன்னாச்சியார்‌ போன்ற திருநாம தாரி ஸ்‌த்ரீகளாலும்‌, ஆசர்யமான சிஷ்ய ஸம்விருத்தி பெற்றவராய்‌ விளங்கினார்‌.

பெரியவர்களான கூரத்தாழ்வான்‌ முதலியாண்டான்‌, தம்பியான எம்பார்‌, ஞான புத்ரரான பிள்ளான்‌ அனைவரையும்‌ தம்‌ அருள் நோக்கால்‌ ஆசிர்வதித்து மூழ்ந்தார்‌. சிஷ்யர்களால்‌
பிரார்த்தக்கப்பட்டவராய்‌ (உத்ஸவ மூர்த்திகளான] தம்‌ அர்ச்சா விக்கிரங்களை முறையே ஸ்ரீங்கத்திலும்‌, ஸ்ரீ பெரும்புதூரிலும்‌ திரு நாராயணபுரத்திலும்‌ பிரதிஷ்டை செய்து சீடர்களின்‌ விருப்பத்‌தைப்‌ பூர்த்தி செய்தார்‌-இப்பொழுதும்‌ எனக்கு இடமின்றி விரட்டியதால்‌, நான்‌ எனக்குச்‌ சமயம்‌ வாய்க்கும் பொழுது, உமது மதத்தையும்‌ கலக்குவேன்‌ என்று ஆணையிடுகிறேன்‌ என்று கலி புருஷன்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேட்டு, ஆதிபுருஷனான ஸ்ரீயப்பதியைச்‌ சரணடைந்து எனது தர்சனம்‌ (மதம்‌) தடையற்றதாய்‌ வாழக் கடவது என்று அருள் புரியுமாறு பிரார்த்தித்தார்‌ எதிராஜர்‌. தனது அந்திம தசையில்‌ தன்‌ குலதெய்வமான தேவப் பெருமாளையும்‌ ஸரஸ்வதி அளித்த ஹயக்‌ரீவனையும்‌ தன்‌ ஞான புத்திரரான பிள்ளானுக்கு அளித்தார்‌ மூவுலகிலும்‌ சிறப்புறப்‌ புகழடைந்தவரான எதிராஜர்‌.இப்படியிருக்கிற உடையவர்‌ திருவடிகளில்‌ நித்ய கைங்கர்யம்‌ பண்ணும்‌ முதலிகள்‌:- கூரத்தாழ்வானும்‌ முதலியாண்டானும்‌,நடதூராழ்வானும்‌, பட்டர் வர்க்கமும்‌ ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத்துணையாக இருப்பவர்கள்‌. அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ திருவாராதனம்‌ செய்தருளுவார்‌. கிடாம்பிப்‌ பெருமாளும்‌ கிடாம்பியாச்சானும்‌ திருமடைப்பள்ளிக்குக்‌ கடவராயிருப்பர்‌. வடுகநம்பி எண்ணைக் காப்புச்‌ சாத்துவார்‌. கோமடத்துச்‌ சிறியாழ்வான்‌ கலசப்‌பாளையும்‌ ஸ்ரீபாதாட்சையும்‌ எடுப்பார்‌. அவரது சீடரான பிள்ளை உறங்கா வல்லிதாசர்‌ கருவூலம்‌ (பணப்பற்றுகள்‌] நோக்குவார்‌. அம்மங்கி பாலமுதம்‌ காய்ச்சுவார்‌. உக்கலாழ்வான்‌ பிரசாதம்‌ எடுப்பார்‌.-உக்கலம்மாள்‌ தரு ஆலவட்டம்‌ பரிமாறுவார்‌. மாருதிப்‌ பெரியாண்டான்‌ திருக்கைச்‌ செம்பு பிடிப்பார்‌. மாருதிச்சிறியாண்‌டான்‌ மடத்திற்கு அமுதுபடி கறியமுது, நெய்யமுது முதலானவை நடத்திப் போகுவார்‌. தூயமுனிவேழம்‌ திருமஞ்சனமெடுப்பார்‌. திருவரங்க மாளிகையார்‌ ஸ்ரீ பண்டாரம்‌ நோக்குவார்‌. பிள்ளை உறங்காவல்லிதாசர்‌ சீடர்களான வண்டரும்‌ சுண்டரும்‌ கைக்கு ஆயிரம்‌ பொன்னுக்கு ராஜ சேவகம்‌ பண்ணி மடத்துக்கு திருக்கை வழக்காக்‌கி யருள்வார்கள்‌. இராமானுச வேளைக்காரர்‌ திருமேனிக்காவலாய்‌ இருப்பார்கள்‌. அகளங்க நாட்டாழ்வான்‌ பிரதிபக்ஷ நிரஸனம்‌ பண்ணுவார்‌.-இவ்வாறு நூற்றிருபது பிராயங்கள்‌ வரை வாழ்ந்திருந்து திருவரங்கர்‌ செல்வம்‌ முற்றும்‌ திருத்த வைத்த இராமானுஜர்‌,வாழ்க்கையில்‌ ௮ருசி பிறந்து, எம்பெருமானிடம்‌ என்னைக்‌ காலக்‌ கழிவு செய்யாமல்‌ உன்‌ பொன்னடி சேர்த்து, ஒல்லை வேறே போகவிடாது, எஞ்ஞான்றும்‌ விடாதொழிய வேணும்‌ என்று பிரார்த்திக்க அரங்கனும்‌ இற்றைக்கேழாம்‌ நாள்‌ அப்படியே செய்கிறோம்‌ என்று திருவாய்‌ மலர்ந்தருளினார்‌. பின்பு எதிராஜர்‌ மடத்திலுள்ள அனைத்துக்‌ கொத்திலுண்டானவர்களையும்‌ சித்த மகிழ்ச்சியுடன்‌ அனுப்பி யருளி, சிஷ்ய வர்க்கங்களுக்கு அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ மூன்று நாளாக உபதேசித்து, இவ் வர்த்தங்களை யெல்லாம்‌ நீங்களும்‌ விஸ்வசித்து உங்களைப்‌ பற்றினார்க்கும்‌ பரம்பரை பரம்பரையாய்‌ உபதேசியுங்கள்‌ என்று அருளினார்‌.பின்னர்‌ தாம்‌ இற்றைக்கு நாலாம்‌ நாள்‌ பெரிய பெருமாள்‌ திருவடிகள்‌ ஏறப் போகிறோம்‌ என்பதை எல்லோர்‌ மனமும்‌ கலங்குமாறு கூறவே அவர்கள்‌ நாங்களும்‌ கூட வருவோம்‌ என்று கூற,உடையவர்‌ அப்படிச் செய்தால்‌ அவர்களுக்குத்‌ தம்மோடு சம்பந்தம்‌ இராது என்று சொல்லித்‌ தேற்றித்‌ தரிக்கப் பண்ணினார்‌.பின்னர்‌ அந்தத்‌ தர்சனத்தைத்‌ தனக்குப் பின்னர்‌ ஏற்று நடத்துமாறு பெரிய பட்டருக்கு (பராசரபட்டர்‌) கட்டளை இட்டருளி,திருக்குருகைப்பிரான்‌ பிள்ளான்‌ முதலான முதலிகளை பட்டருக்கு இஷ்டமாயிருங்கள்‌ என்று ஆக்ஞாபித்து கோயில்‌ அனைத்துக்கொத்‌தையும்‌ (ஊழியர்களையும்‌) அழைப்பித்து (அபராத ஷாமணம்‌)மன்னிப்பு வேண்டினார்‌. அவர்கள்‌ எவ்வாறு நாங்கள்‌ தரித்திருப்‌போம்‌ என்று துக்கிக்க அணியரங்கரனிருக்க உங்களுக்கு ஒரு தாழ்வில்லை என்று கூறி எல்லோரும்‌ பட்டரை முன்னிட்டு ஆராய்ந்து போருங்கோள்‌ என்று கூறிப்‌ பட்டரைப் பார்த்து பெரிய பெருமாள்‌ திருவாராதனத்தையும்‌ பெருக்க நடத்திக் கொண்டு நம்‌முடைய தர்சனத்தையும்‌ நன்றாய்‌ நடத்திக் கொண்டு வாரும்‌ என்று
கூறியருளினார்‌. பின்னரும்‌ அவர்களைப் பார்த்து ஒருவன்‌ பிரபந்நனானால்‌ அவனது ஆத்ம யாத்ரை ஈஸ்வராதீனமாகையாலே அதற்கு வருந்தக் கூடாது. வருந்தினால்‌ ஆத்ம சமர்ப்பணம்‌ பொய்யாகிவிடும்‌. அவனது தேக யாத்திரை கர்மாதீனமாகையாலே அதுக்கும்‌ வருந்தக்கூடாது. வருந்தினால்‌ நாஸ்திகன்‌ என்றாகிவிடும்‌. ஆகவே உபய யாத்திரையிலும்‌ இவனுக்கு அந்வயமில்லை என்று அருளிச்‌ செய்து பின்‌ முதவிகளை நோக்க நீங்கள்‌ அனுசந்திக்க வேண்டியது மூன்று விஷயங்களுண்டு என்று கூறினார்‌. அவை யாவன அனுகூலர்‌, பிரதிகூலர்‌, அனுபயர்‌ என்பதாகும்‌. அவை என்ன என்பதையும்‌ விளக்கி தெளிவுபடுத்தினார்‌.பின்னர்‌ பட்டரிடம்‌ மேல்நாட்டிலுள்ள வேதாந்ததி யென்ற வித்‌வானை வாதில்‌ வென்று நம்‌ தர்னத்திற்குக்‌ கொண்டுவர வேண்டும்‌ என்று ஆணையிட்டு பின்பு திருக் கண்களைச்‌ செம்பளித்தருளி;பரவசமான பொலிவுடன்‌ எம்பார்‌ திருமடியில்‌ திருமுடியும்‌, வடுகநம்பி திருமடியிலே திருவடிகளுமாக கண்‌ வளர்ந்தருளினார்‌. ஆயிரஞ்சுடர்வாய்‌ அரவணையோடே நம்பி மூத்த பிரானைப்‌ போல எம்பெருமானாரான இவரும்‌ கூடி யருளினார்‌.

பின்பும்‌ அன்பருடன்‌ களித்த சீர் பெரும்புதூர்‌ எதிராசன்‌
இன்பமுடன்‌ இசைந்தொரு நூற்றிருபதாண்‌ டிங்கிருந்ததன்பின்‌
அன்பன்‌ ஆழ்வான்‌ ஆண்டான்‌ நற்குமாரர்க்கு அடியாமுடி
புனைந்து மன்பதையை வாழ்வித்தாங்கமருமென வாழ்வித்தருளி
ஆராமஞ்‌ சூழ்‌ அரங்கர் தமை, மலர் மா மகளை மடி யிறைஞ்சித்‌
தாரீர்‌ சரணந்தனை யென்னத்‌ தந்‌தோமெனலும்‌ எதிராசர்‌
பாரோர்‌ பரவும்‌ பாகவதர்‌ பிரிவால்‌ பிரிவில்‌ படர் கூரச்‌
சீரோர்‌ திருநாடடைந்திருந்த சீடனுடனே சேர்ந்தனராம்‌

பின்னர்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌ (உடையவரதுஞான புத்ரர்‌) உடையவருக்கு அந்திமக் கிரியைகள்‌ நடத்தினார்‌.-அவர்‌ திருமேனியை ஆழ்வார்‌ திருமேனியைப் போல கோயிலுக்‌குள்ளேயே பள்ளிப் படுத்தி வைத்தார்கள்‌.

இன்னமுத மூட்டுகேன்‌ இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம்‌ பாடவல்ல சீர்ப்பெருமாள்‌ – பொன்னஞ்‌
சிலைசேர்‌ நுதலியர்‌ வேள்‌ சேரலர்‌ கோன்‌, எங்கள்‌
குலசேகரனென்றே கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
வாழிபரகாலன்‌ வாழிகலிகன்றி
வாழிகுறையலூர்‌ வாழ்வேந்தன்‌ – வாழியரோ
மாயோனை வாள்வலியால்‌ மந்திரங்‌ கொள்‌, மங்கையர்கோன்‌
தூயோன்‌ சுடர்மான வேல்‌
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருமொழித் தனியன்‌
முந்துற்றநெஞ்சே முயற்றித்‌ தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே – சந்த
முருகூரும்‌ சோலை சூழ்‌ மொய்பூம்‌ – பொருதல்‌ குருகூரன்‌ மாறன்‌ பேர்கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருவந்தாதி தனியன்‌

சீரார்‌ திருவெழு கூற்றிருக்கை யென்னும்‌ செந்தமிழால்‌
ஆராவமுதன்‌ குடந்தைப் பிரான்‌ றனடியிணைக்கீழ்‌
ஏரார்‌ மறைப் பொருளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
‘சேராமர்சொன்ன வருள்மாரிபாதம்‌ துணை நமக்கே.
-திருவெழு கூற்றிருக்கை தனியன்

அழுக்கென்றிவையறிந்தேன்‌ அம்பொன்‌ அரங்கா
ஒழித்தருள்வாய்‌ உள்ளில்‌ வினையை பழிப்பிலா
என்னாரியர்க்காக எம்பெருமானர்க்காக
உன்னாருட்காக உற்று’
-விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச் செய்தது

சீராரும்‌ எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி.
திருவரையிற்‌ சாத்திய செந்துவராடை வாழி.
ஏராரும்‌ செய்ய வடிவு எப்பொழுதும்‌ வாழி.
இலங்கிய முந் நூல்‌ வாழி இணைத் தோள்கள்‌ வாழி.
சோராத துய்ய செய முகச்சோதி வாழி.
தூ முறுவல்‌ வாழி துணை மலர்க்‌ கண்கள்‌ வாழி.
ஈராறு திருநாம மணிந்த எழில்‌ வாழி.
இனி திருப்போடெழில்‌ ஞான முத்திரை வாழியவே.

அறு சமயச்‌ செடி யதனை யடி யறுத்தான்‌ வாழியவே.
அடர்ந்து வரும்‌ குதிட்டிகளை யறத் துறந்தான்‌ வாழியவே.
செறு கலியச்‌ சிநிதுமறத் தீரத்து விட்டான்‌ வாழியவே.
தென்னரங்கர்‌ செல்வ முற்றும்‌ திருத்தி வைத்தான்‌ வாழியவே.
மறையதனில்‌ பொருளனைத்தும்‌ வாய் மொழிந்தான்‌ வாழியவே.
மாறனுரை செய்த தமிழ்‌ மறை வளர்த்தோன்‌ வாழியவே.
அறம் மிகு நற் பெரும்புதூர்‌ அவதரித்தான்‌ வாழியவே.அழகாரும்‌ எதிராசர்‌ அடியிணைகள்‌ வாழியவே.

அத்தகிரி யருளாளரடி பணிந்தோன்‌ வாழியவே.
அருட்கச்சி நம்பியுரை யாறு பெற்றோன்‌ வாழியவே.
பக்தியுடன்‌ பாடியத்தைப்‌ பகர்ந்திட்டோன்‌ வாழியவே.
பதின்மர்‌ கலையுட்‌. பொருளைப்‌ பரிந்து கற்றோன்‌ வாழியவே.
சுத்த மகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன்‌ வாழியவே.
தொல்‌ பெரிய நம்பி சரண்‌ தோன்றினான்‌ வாழியவே.
சித்திரையில் லாதிரை நாள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியவே.
சீர் பெரும்புதூர்‌ முனிவன்‌ திருவடிகள்‌ வாழியவே.

எண்டிசை யெண்‌இளையாழ்வார்‌ எதிராசன்‌ வாழியவே.
எழுபத்து நால்வர்க்கெண்ணான்‌ குரைத்தான்‌ வாழியவே.
பண்டை மறையைத்‌ தெரிந்த பாடியத்தான்‌ வாழியவே.
பரகால னடிஇணையைப்‌ பரவுமவன்‌ வாழியவே.
தண்டமிழ்நூல்‌ நம்மாழ்வார்‌ சரணானான்‌ வாழியவே.
தாரணியும்‌ விண்ணுலகும்‌ தானுடையோன்‌ வாழியவே.
தெண்டிரைசூழ்‌ பூதூரெம்பெருமானார்‌ வாழியவே.
சித்திரையிற்‌ செய்ய திருவாதிரையோன்‌ வாழியவே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்