தர்மம் என்பது சாஸ்திரங்களில் சொல்லப் பட்டதாய், பலனை அளிப்பதான செயலாகும். சாஸ்திரங்களில் முக்கியமான (உபதேசரத்னமாலை 61-ல்] ஞானம், அனுஷ்டானம் இவை நன்றாகவே உடையவனான குருவை அடைந்தக்கால், தேனார் கமலத் திருமாமகள் கேள்வன். தானே வைகுந்தம் தரும் என்கிறார் மணவாள மாமுனிகள். இந்தத் தர்மம் தான் மிக உயர்த்த தருமம். இத் தர்மத்தை மதுரகவி நிஷ்டை சரமோபாய நிஷ்டை, அந்திமோபாய நிஷ்டை என்று பல பெயர்களால் குறிப்பிடுவர்.-கர்ம ஞான பக்தி யோகங்களோடு அவதார ரகஸ்ய ஞானம், புருஷோத்தம வித்தை, புண்ய க்ஷேத்ர வாஸம், திருநாம சங்கீர்த்தனம், திருவிளக்கு எரிக்கை, திருமாலை எடுக்கை முதலானவற்றையும் கீதாச்சார்யன் உபதேசித்த அளவில் அவை யாவும் உடலை வருந்திச் செய்ய வேண்டி யிடுப்பதாலும் ஐம் பொறிகளை அடக்குவது அரிதாயிருப்பதாலும், நீண்ட காலம் அவற்றைக் கைக் கொள்ள வேண்டி யிருப்பதாலும் எளிதில் முடிக்க இயலாததாலும் மேற்கொள்ள அரிதாயிருக்கும். மேலும் அவை யாவும் நம்முடைய முயற்சியால் இயற்றப் படுவதால் அத்யந்த பாரதந்திரமாகிற ஆத்ம ஸ்வரூபத்துக்கு முற்றிலும் பொருந்தாதாதலால் மேற் கொள்ள அரிதாயிருக்கும் என்று கருதியே அர்ஜுனனுக்கு பற்றுதற்கு எளிதாகவும் ஆத்ம ஸ்வரூபத்துக்கு பொருத்தமாகவும் உள்ள உபாயத்தை எம்பெருமான் கிருபையினால் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா,”ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச-என்ற ஸ்லோகத்தை அருளிச் செய்தான். இக் கருத்தை நம்மாழ்வார் வார்த்தை அறிபவர் மாயவர்க்காளன்றி யாவரோ
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை
பேர்த்துப் பெருந் துன்பம் நோற நீக்கித் தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே‘(திருவா 7.4.10) என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே எம்பெருமானையே உபாயமாகக் கொள்ளும் பிரபத்திக்கு தேச, கால, பிரகார அதிகாரி நியமங்களும், பல நியமும் இல்லை. விஷய நியமமே உள்ளது என்றார் பிள்ளை லோகாச்சாரியார் (ஸ்ரீ வசனபூ. சூ 28-ல்)ஆகவே இந்தப் பிரபத்தியானது எவ்விதத்திலும், எக் காலத்திலும் எந்த முறையிலும், எவராலும், எந்த பயனைக் குறித்தும் செய்யத் தக்கதாக இருக்கும். ஆனால் மன உறுதிப் பாட்டையே வடிவாகக் கொண்ட பிரபத்திக்கு மகா விஸ்வாசம் ஏற்படுவது கடினம்.-மேலும் பந்த மோக்ஷங்கள் பிரபத்தி, ஆசார்ய அபிமானம் (இரண்டுக்கும்] பொதுவாயிருக்கும் ஸர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை நினைத்தால், நான் இதற்குத் தகுதி யுடையவன் அல்ல என்று அஞ்சும்படி இருக்கும். ஆகவே இத்தகைய அசக்தர்களுக்கும் உய்யும் உபாயமாக இருப்பது ஆசார்ய அபிமானமேயாகும்.-ஆசார்ய அபிமானமே பிரபத்தி போல ஸ்வதந்திரமான உபாயமாக இருந்து பகவத் பிராப்தியை உண்டாக்கித் தருமாதலால் அது அந்திம உபாயமாகக் கொள்ளப்படுகிறது. கர்ம, ஞான, பக்திகளை விட பிரபத்தி சிறந்ததாயிற்று. அதையும் விட ஆசார்ய அபிமானமே சரமோபாயமாகும்.-ஆசாரியன் திருவடிகளையே உபாயமாகக் கொண்டு தெய்வம் வேறு அறியாத நிஷ்டனுக்கு அறியத் தக்க விஷயங்கள் ஏழாகும். அவை முறையே.
1- ஆசார்யனுடைய திவ்ய நாமப் பிரபாவம்
2-ஆசார்யனுடைய திவ்ய குண வைலக்ஷண்யம்.
3-ஆசார்யனுடைய திவ்ய அவதாரச் சிறப்பு.
4-ஆசார்யனுடைய வாசஸ்தல வைபவம்.
5-ஆசார்யனுடைய திரு வுருவப் பெருமை.
6-ஆசார்யனுக்குச் செய்யத் தகும் அடிமைத் திறம்
7-ஆசார்ய : விஷயமான மங்களாஸாஸனத்தின் மாண்பு
என்பனவாகும்.ஸதாசார்யனை நன்கு பற்றுவதற்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காள ராத்திரியாகும். பற்றிய அன்று தொடங்கிச் சேதனனுக்கு நல் விடிவு காலமாகும். ஆதித்ய, ராம திவாகர அச்யுத பானுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, வற்றாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் அலர்ந்தது வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே (ஆ. ஹி 8) என்று கூறுகிறார் அழகிய மணவாளப் பெருமான் நாயனார். ஆகவே ஆசார்யனுடைய தோற்றத்தைச ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள். மேலும் ஆசார்ய கடாக்ஷமானது வேறு ஒரு வழி முறைகள் முயற்சிகள் வேண்டாதபடி , மகா பாபிகளுடைய கர்மத்தையும் அடியோடு நீக்குவதால், அவர்கள் பரிசுத்தராக, முடிவில் நிலையான பரம பதத்தையும் அடைவார்கள் என்ற கருத்தை மாமுனிகள் விளக்கமாக”நாராயணன் திருமால், நாரம் நாமென்னும் உறவு
ஆராயில் நெஞ்சே அநாதியன்றோ, சீராரும்
ஆசாரியனாலே யன்றோ நாமுய்ந்ததென்று
கூசாமல் எப்பொழுதும் கூறு”-என்கிறார். (ஆர்த் 45]
பிறவிப் பெரும் பிணியைப் போக்குவதான பெரிய திரு மந்திரத்தை உபதேசித்தவனே ஆசார்யனாகின்றானே யன்றி அற்பமான பலன்களைத் தரும் மந்திரங்களை உபதேசிப்பவர்களுக்கு ஆசார்யன் ஆகும் தகுதியில்லை. ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தையே பேணிக் கொண்டிருப்பான். பிறர் சிஷ்யருடைய தேகத்தையே பேணிக் கொண்டிருப்பார்கள். ஆசார்யனுடைய தேக ஸம்ரக்ஷணம் சிஷ்யனுடைய பணியாகும். சிஷ்யனுடைய ஆத்ம ஸம்ரக்ஷணம் ஆசார்யனுடைய பணியாகும். ஈஸ்வரனைப் பற்றுகை கையைப் பிடித்துக் காரியம் கொள்வது போலிருக்கும். ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் சுரரியம் கொள்வது போலிருக்கும். கையைப் பிடித்தால் சுலபத்தில் விடுவித்துக் கொண்டு போய் விடலாம். ஆனால் காலைப் பிடித்து விட்டால் அபயம் கொடுத்தே யாக வேண்டுமாதலால் ஆசார்யனைப் பற்றுவதே மேலானது.
ஆகையால் தான் ஈஸ்வரனே ஆசார்யத்வத்தை ஆசைபட்டுக் குரு பரம்பரையில் முதல் இடம் பெற்றும் கீதையும் அபயப் பிரதரனமும் அருளிச்செய்தும் பெருமை அடைந்தான். ஆசார்யன் செய்த உதவிக்குக் கைம்மாறு ஒன்றும் இல்லை. திருமந்திர உபதேசத்தால் வைகுண்ட பதியான எம்பெருமானையே அடைகின்றபடியால்,இன்னுமொரு வைகுந்தமும், இன்னுமொரு வைகுந்தனும் இருந்தாலொழிய ஆசார்யனுக்குப் பிரதி உபசாரம் பண்ண முடியாது.-அவை யில்லையாதலால் என்றும் பிரதியுபகாரம் பண்ண முடியாது.-ஈஸ்வர சம்பந்தம், பந்தம், மோட்சம் இரண்டுக்கும் பொதுவாயிருக்கும். ஆனால் ஆசார்ய சம்பந்தம் மோக்ஷ்த்துக்கே ஹேதுவாயிருக்கும். பக்தியில் அசக்தனுக்குப் பிரபத்தி. பிரபத்தியில் அசக்தனுக்கு ஆசார்ய அபிமானம். ஆகவே கர்ம, ஞான பக்தி, பிரபத்திக ளுக்கு மேல் எல்லையாக இருப்பதால் ஆசார்ய அபிமானம், அந்திமோபாயம் என்று சொல்லப்படுகிறது.
குற்றமின்றிக்குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய் என்று பெரியாழ்வார் கூறியபடி சாஸ்திரங்களில் குற்றம் என்று சொல்லப்பட்ட செயல்களைத் தவிர்த்து அந்தக் கரண, புறக் கரணங்களை அடக்கி சமம், தமம் முதலான குணங்களை வளர்த்துக் கொண்டு, ஆசார்யனைத் தெய்வமாகப் போற்றிக் கெளரவத்துடன் தன்னுடைய சேவைகளால் மகிழச் செய்வதே சிஷ்பனுடைய ஸ்வ ரூபமாகும். தேவுமற்றறியாது
“மாடும் மனையும் கிளையும் மறைமுனிவர்
தேடும் உயர்வீடும் செந்நெறியும் – பீடுடைய
எட்டெழுத்துத் தந்தவனே என்றிராதார் உற்வை
விட்டிடுகை கண்டீர் விதி (ஞா. ஸா 30) என்றார் அருளாளர் பெருமாள் எம்பெருமானார்.
சிஷ்யன் ஆசாரியனுக்குச் செய்யும் பணிவிடைகளையே லட்சயமாகக் கொண்டு ஆர்த்தி, ஆதரம், அநஸுயை இவற்றுடன் எப்போதும் இருக்க வேண்டும். ஆர்த்தி என்பது பணிவிடை செய்யத் துடிப்பது. ஆதரமாவது. அறிவு வேட்கை, அநஸுயை-பொறாமை இல்லாதிருப்பது. இவனுடைய ஞானத்திற்கு இலக்கு
ஆசார்ய குணங்கள். அஞ்ஞானத்திற்கு இலக்கு ஆசார்ய தோஷங்கள். இவனுடைய சக்திக்கு இலக்கு ஆசார்ய கைங்கர்யம். அசக்திக்கு இலக்கு தீய ஒழுக்கங்கள். இவனுக்கு இகலோக பரலோக ப்ராப்யங்கள் ஆசார்யன் திருவடிகளே. ஆசார்யனிடத்தில் செய்நன்றி மறவாமை தொடர்ந்திருக்க வேண்டும்.-ஆசார்ய நிஷ்டையில் சிறந்தவர்களைக் குறிப்பிடும்போது-வேட்டுவச்சி சபரியைச் சொல்ல வேண்டும். இராமபிரான் தனக்கு
முன் பிரத்யக்ஷ்மாக இருந்தும் அவனை விரும்பாமல் ஆசார்யன் மதங்க மகரிஷி பாதசேவையை விரும்பி உடலைத் துறந்தாள்.
தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பொன்றில்லாதான்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோ ன் – இன்பமிகு
விண்ணாடு தானளிக்க வேண்டியிரான் ஆதலால்
நண்ணாரவர்கள் திருநாடு (உ. தே. மா 60),
உய்ய நினை உண்டாகில் உங்குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மாநிலத்தீர் — மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக்கனி (உ.தே.மா. 62)
தன்னாரியனுக்குத் தான் அடிமை செய்வது. அவன்
இந் நாடு தன்னில் இருக்கும் நாள் – அந்நேர்
அறிந்தும் அதிலாசையின்றி ஆசாரியனைப்
பிரிந்திருப்டாரார் மனமே! பேசு (உ தே.மா. 64)
ஆசாரியன் சிச்சனாருமிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை – ஆசையுடன்
நோக்குவனென்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம் (உ தே.மா. 65)
மானிடவன் என்று குருவை மலர்மகள் கோன்
தானுகந்த கோலம் உலோகமென்றும் – ஈனமதா
எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழாம் நரகு: (ஞா. ஸா 32)
எட்ட இருந்த குருவை இறையன்றென்று
விட்டோர் பரனை விருப்புறுதல் – பொட்டெனத்தன் கண்செம்பளித்திருந்து கைத்துர்தி நர்தூவி அம்புதத்தைப் பார்த்திருப்பான் அற்று (ஞா. ஸா 33)
என்றும் அனைத்துயிர்க்கும் ஈரஞ்செய் நாரணனும்
அன்றும் தன் ஆரியன்பால் அன்பொழியில் – நின்ற
புனல்பிரிந்த பங்கயத்தை பொங்குசுடர் வெய்யோன்
அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று (ஞா. ஸா.35)
ஆசார்யனைப் போலவே ஆசார்யன் பத்தினியையும் சிஷ்யன் மதித்து அடிமைகள் செய்ய வேண்டும் என்பதை நம்பிள்ளையும் அவர் சிஷ்யர் வடக்குத் திருவீதிப் பிள்ளையும் நடத்திய வரலாறு கூறுகிறது. நம் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டி ஓடத்திலிருந்து மழையையும், புயலையும் பொருட்படுத்தாது நீரில் குதித்த ஒரு சாத்விக அம்மையாரின் ஆசார்ய நிஷ்டைக்கு மதிப்பே கிடையாது. உடையவர் ஒரு ஊமைப் பெண்ணுக்குத் தன் பாதார விந்தங்களைப் பற்றாசாகக் கொள்ளுமாறு கூறிய பொழுது, ஆழ்வான் தனக்குப் பிரபத்தியை உடையவர் காட்டி விட்டார். நானும் ஊமையாய் இருந்தால் எனக்கும் இந்தப் பேறு கிடைக்குமே என்று வருந்தினார் என்பர்.-மண்கலந்த நீரை ஒரு பாத்திரத்திலிட்டுத் தேற்றாங்கொட்டையை யிட்டுத் தேற்றினால் மண்ணானது கீழ்ப்படிந்து தெளிந்த நீர் மேலே நிற்கும். அது போலவே அஞ்ஞானம் நிறைந்த சரீரத்தில் உள்ள ஆத்மாவை ஆசார்யனாகிற மகா உபகாரகன், திருமத்திரமாகிற தேற்றாம்விரையாலே தேற்றினால் அஞ்ஞானம் படிந்து
ஞானம் பிரகாசிக்கும். தெளிந்த நீரை வேறு பாத்திரத்தில் சேர்க்கும் வரை கை பட்ட போதெல்லாம் கலங்குமா போலே, பிறந்த ஞானத்தைக் கலக்குகிற பிராகிருத சரீரத்தை விட்டுப் போய் அப்பிராக்ருத சரீரத்தில் புகுந்தனையும் கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதா சார்யன் கண் வட்டத்திலே வாழ்தலே ஸ்வரூபம் என்றனர் பூர்வர்கள்.
“பின்பழகராம் ஜீயர் பெருந்திவத்தில்
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால் – நம்பிள்ளைக்
கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
எனமற எப்பொழுதும் ஓர்”
ஆசார்யனுடைய திருமுகமண்டல சேவையையும், கைங்கர்யத்தையும் விட்டு வைகுந்தம் போகவும், அவர் இச்சைப்பட வில்லை. ஆசார்யன் செய்கிற தப்பான கார்யங்களையும் கூட சிஷ்யன் மனமகிழ்வுடன் அங்கீ கரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்-அக்காலத்தில் நம்பிள்ளை ஒரு உரு திருவாய்மொழி நிர்வஹித்தருளினார். அதைக்கேட்ட நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் (கூரத்தாழ்வானுடைய பேரர்) அதற்கு ஈடாக ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் கிரந்தமாக எழுதியதை நம்பிள்ளையிடம் சமர்ப்பிக்க, நம்பிள்ளை தன்னுடைய அனுமதி யில்லாமல் எழுதியதற்காக மிகவும் கோபித்து அதை வாங்கி நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க அவை அன்றே அழிந்து போயின. வடக்குத் திருவீதிப்பிள்ளை எழுதிய திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாமிரமும் நம்பிள்ளை கண்டு
மிகவும் உகந்தருளி நன்றாக எழுதினீர். ஆனால் நம்முடையஅனுமதி யில்லாமல் எழுதினீராதலால் இங்கே தாரும் என்று வாங்கி தமக்கு அபிமத சிஷ்யரான ஸ்ரீ மாதவப் பெருமாள் என்கிற ஈயுண்ணிச் சிறியாழ்வானிடம் கொடுத்தார்
சீரார் வடக்குத் திருவீதிப்பிள்ளை எழுது
ஏரார் தமிழ்வேடத்தீடுகளைத் – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தான் கொடுத்தார் பின்னதனைத்தான்’
சிலர் ஸ்ரீ பாஷ்யம் எப்படி இருக்கும் என்று வினவ, அவர்கள் நடுவில் திருவீதியில் மாலை நேரத்தில் பழுத்த வேட்டியும் உத்தரீயமும் தரித்து கூரத் தாழ்வான் என்ற உருவில் உலவும் என்றார்களாம். பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று கேட்ட பொழுது, நடுவில் திருவீதிப்பிள்ளை; பட்டர் என்பதொரு தேன் மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து கல்லிட்டு எறியாதே ஏறித் துகையாதே அடியிலே இருக்கவே மடியிலே விழும் என்றார்களாம். எம்பெருமான் பெரிய ஜீயரிடம் ஒரு வருட காலம் திருவாய்மொழி ஈடுகேட்ட வைபவத்தை ஜீயர் தாமே தமது பேற்றினை பின்வரும் பாடலில் கூறுகிறார்,
நாமார், பெரிய திருமண்டபம் யார் நம்பெருமான்
தாமாகவே என்னத் தனித்தழைத்து – நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாளுமிங்கே
வந்துரை யென் றேவுவதே வாய்ந்து என்று கூறுகிறார்
பரிதாபி வருஷ ஆவணி மாத திருப் பவித்ர திருநாளின் போது பெரிய திரு மண்டபத்திலே தாமும் நாச்சிமாரும் எதிராஜர் சேனை முதலியார் ஆழ்வாரும் உடனிருக்க பெரிய திரு வோலக்கமாக எழுந்தருளியிருந்து ஒரு வருட காலம் ஒரு தடையுமின்றி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக ஐந்து வியாக்யானங்களையும் ஜீயர் திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையையும் கேட்டுகந்த விபரத்தை
“நல்லதோர் பரிதாபி வருடந்தன்னில்
நலமான ஆவணியில் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்குவெள்ளிக்
கிழமை வளர்பக்கம் நாலாம்நாளில்
செல்வமிகு பெரிய திருமண்டபத்தில் செழுந்
திருவாய் மொழிப்பொருளைச் செப்புமென்று
வல்லியுடை மணவாளர் அரங்கர்நங்கள்
மணவாள மாமுனிக்கு வழங்கினாரே’-என்ற பாடல் சாற்றுகின்றது.
ஒருநாள் பிள்ளை உறங்காவில்லி தாஸர் முதலியாண்டான் ஸ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு சிஷ்ய லட்சணம் இருக்கும்படி என்? என்று வினவ, முதலியாண்டான், ஆசார்ய விஷயத்தில் சிஷ்யன், பார்யா ஸமனுமாய், சரீர ஸமனுமாய், தர்ம ஸமனுமாய் இருக்கக் கடவன். அதாவது சொன்னதைச் செய்கையும் நினைத் தைச் செய்கையும், நினைவாக இருக்கையும் என்று இருக்க வேண்டும் என்றார். அதாவது பார்யை சொன்னசைச் செய்வாள்,-சரீரம், மனம் நினைத்ததைச் செய்யும். தர்மமான இயல்பு நினைவாக இருக்கும் என்பது பொருள். அதே போல் சிஷ்யன் விஷயத்தில் ஆசார்யன் பர்த்தா ஸமனுமாய் சரீர ஸமனுமாய் தர்மிஸமனு மாய் இருக்க வேண்டும்.-ஏவிக்கொள்ளுகையும், எடுத்து இடுவிக்
கையும் (அசேதனத்தை: நினைத்தபடி விநியோகம் கொள்வது போல் ) எடுத்துக் கொள்கையுமாகும்.
ஒருநாள் கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் ஸ்யவாநுவிருத்திப் பிரஸந்நாசார்யரால் மோக்ஷமா, கிருபா மாத்ரப் பிரஸந்நா சார்யாரால் மோக்ஷமா என்ற கேள்வி எழுந்தது. முதலியாண்டான் ‘குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்’ என்று பெரியாழ்வார் கூறியபடி ஸ்வானுவிருத்தப் பிரசந்நாசார்யரால் தான் என்று முதலியாண்டான் கூற ஆழ்வான், பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான், குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி என்று மதுரகவிகள் சொல்லியபடி, நமக்கெல்லாருக்கும் ஸ்யவாநுவிருத்தி இயலாமையாலே கிருபா மாத்ரத்தினால் மோக்ஷம் கிடைக்க
வேணடும் என்றார். முதலியாண்டானும் அதை ஒத்துக் கொண்டார்.
ஸாஷாத்காரம் என்ற ஞான விசேஷம்,-விபூதி ஸாஷாத்காரம் -உபயவிபூதி ஸாஷாத்காரம், பிரத்யஷ ஸாக்ஷாத்காரம் என்று மூன்று வகை உண்டு. பிரத்யஷ ஸாக்ஷாத்காரம் இல்லாத போது ஏனைய வற்றால் பிரயோஜனமில்லை. அந்தப் பிரத்யக்ஷ ஸாக்ஷத்காரத்தை,
பரத்வம், வ்யூஹம் விபவம், அந்தர்யாமி, அர்ச்சை, ஆசார்யத்வம் என ஆறுவகையாகக் கொண்டனர். பரத்வம் தித்ய முக்தர்க்கும் வியூஹம், ஸநகாதிகளுக்கும், விபவம் அக் காலத்தே வாழ்ந்தவர்களுக்கும், அந்தர்யாமித்வம், உபாஸகர்களுக்கும், அர்ச்சாவதாரம்
எல்லோருக்கும் ஆசார்யத்வம் கதி சூனியருக்கும் பிரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாயிருக்கும்.
கதி யவற்றவர்களுக்கு மேற் சொன்னவை, தேச, கால, கர்ணங்களுக்கு அப்பாற் பட்டதாதலால் கிட்ட முடியாது. ஆராய்ந்து பார்த்த இடத்தில் ஆசார்யாவதாரத்தால் அல்லாது ஞான தானம் பண்ண முடியாது. எனவே தான் ஈஸ்வரன் தானே உபாயமாகவும் உபேயமாகவும், ஆசார்யனாக வந்து அவதரித்து ஞான தானம் பண்ணி, சிஷ்யனை அடிமை கொண்டு ஆதரிப்பார். ஆகவே தான்
ஆழ்வாராதிகளும் ஆசார்யப் பெரு மக்களும் ஒரே குரலில் ஸ்ரீயப்பதியான நாராயணன் தானே ஆசார்யனாக வந்து அவதரித்தான் என்று பல இடங்களிலும் உறுதியாகக் கூறியுள்ளனர். ஆகவே நம்மை ஸம்ஸார ஸாகரத்தில் நின்றும் கரையேற்றவே, பகவான் பத்ரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபத்தில் அவதரித்தான். ஆகவே உபாயத்தில் முதல் நிலை எம்பெருமான். இறுதி நிலை ஆசார்யன் என்றுஉணர வேண்டும். ஆசாரியனை மனிதனாக எண்ணாமல் பீதக வாடைப் பிரானே பிரம குருவாக வந்து (பெரியதிரு 5.2.8) என்றபடி பகவதவதாரம் என்று கொள்ள வேண்டும்.
கூரத்தாழ்வான் சிஷ்யன் வீர சுந்தரப் பிரம்மராயன், கூரத்தாழ்வான் மகனான பட்டருடன், விரோதம் பூண்டு, அவரை ஊரை விட்டே விரட்டிய போதிலும், அவன்
இறந்து போன செய்தி கேட்ட ஆண்டாள் மிகவும் வியாகூலப்பட,அதைக் கண்ட மற்ற முதலிகள் பட்டரைத் தொல்லைப் படுத்திய விரோதி இறந்ததற்கு நீர் ஏன் விசாரப்பட வேண்டும் என்று கேட்டபொழுது, வீரசுந்தரன் நேரே ஆழ்வானுடைய சிஷ்யனாயிருந்து ஆசார்ய புத்திரனாகிய பட்டரைத் துன்புறுத்தி அவர் திறத்தில் மகா அபராதம் செய்து பின்னர் அவரிடம் மன்னிப்பும் பெறாதே இறந்து போனான். அவனை யம படர் அடித்துத் துவைத்து இம்சை செய்வார்கள் என்றுதான் நான் கவலைப்படுகிறேன். உங்களுக்கு அது தெரியவில்லை என்றாள்.
மற்றொரு நாள் ஆண்டாள் பட்டரிடம் ஸ்ரீ பாத தீர்த்தம் முதலிய பிரசாதங்களைப் பெற்ற பொழுது, பிள்ளையை வணங்கலாமா என்று முதலிகள் வினவ, பிள்ளைகாள், ஏனைய ஆசாரியள்ர் ஸ்வாமிகளை வணங்கலாம். தான் ஏறி யருளப் பண்ணிக் கொண்ட எம்பெருமானுடைய தீர்த்தப் பிரசாதங்கள் கிரஹிக்கலாகாதா என்று பதில் கூறினார்
”மிலேச்சனும் பக்தனால் சதுர்வேதிகள் அனுர்வர்த்திக்கத் தக்க அறிவு கொடுத்துக் குல தெய்வத்தோடு சமமாகப் பூஜை கொண்டு தீர்த்த பிரசாதனம் என்ற திருமுகப்படியும் என்ற கருத்தைக் கூறி வெளியிட்டார், ஆசார்ய ஹ்ருதயத்தில் அழகிய மணவாளப்பெருமாள். கூரத்தாழ்வான் நாராயண ராமானுஜ என்ற மந்திரங்கள் இரண்டுக்கும் வாசி ஒன்று. பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாயும் மற்றது மோக்ஷத்துக்கும் ஹேதுவாயுமிருக்கும் என்றகருத்தில் சதுரா, சதுரக்ஷரி என்றருளிச் செய்தார். ஆகவே ஸதாசார்யனது லட்சணம் தன் சிஷ்யர்களைப் பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ள வேண்டியது. தன்னுடைய சிஷ்யனான நாலூரானும், தன்னுடைய விஷயத்திலே
மகா பாதகத்தைப் பண்ணினவன் என்று தெரிந்தும், பகவானிடத்தில் நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரம் கேட்ட, பகைவனிடத்தும் பரிவு காட்டிய கூரத்தாழ்வான் போன்ற பண்பாளர்களும் உள்ளனர். ஆழ்வார் திருநகரியில் மாமுனிகள் வாழ்ந்த இடமான ஓலை மச்சில் நடுஇரவில் அவர் தூங்கிக் கொண்டு இருக்கும் நேரத்தில் தீயிட்டுக் -கொழுத்திய பாபிகளை அரசன் தண்டிக்கச் சொல்ல, மாமுனிகள் தலை யிட்டு அவர்களது உயிர்களைக் காப்பாற்றினார் என்ற வைபவம் பெரிய ஜீயரது அமானுஷ்யமான கிருபையைக் காட்டுகிறது. சிற்ற வேண்டா சிந்தப்பே அமையும் என்கிறபடியே, தேவுமற்றறியேன் என்றிருக்கும் ஸ்ரீமான்களான அதிகாரிகள் யாவர் யாவர் எனில் பெரியாழ் வார் திருமகளாரான ஆண்டாள், ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயித்த மதுரகவிகள், நாதமுனிகள் திருவடிகளில் குருகைக் காவலப்பன், ஆளவந்தார் திருவடிகளில் தெய்வ வாரி யாண்டான், எம்பெருமானார் திருவடிகளில் வடுகநம்பி, நம்பிள்ளை திருவடிகளில் பின்பழகிய பெருமாள் தாஸர் பிள்ளை யோகாச்சாரியர் திருவடிகளில் கூர குலோத்தம தாசர் திஸருவாய் மொழிப்பிள்ளை- இவர் திருவடிகளில் நம் ஜீயர், நம் ஜீயர் திருவடிகளில் முதலிகள் பலருமாவர்.
ஆகவே மந்திரமும் தேவதையும் பலமும் பலானுபந்திகளும் பல ஸாதனமும் ஐஹிக போகமும் எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன் என்று பிள்ளை லோகாச்சார்யர் அருளியபடி உறங்கும் பெருமாளான அரங்கனை விட உலவும் பெருமாளான
ஆசார்யனே நமக்கு அந்திமோபாய நிஷ்டைக்கு பிரமாணமாக அனுசந்திக்கக் கூடியதாயிருக்கும். ஏத்தி இருப்பாரை வெல்லுமே அவர் தமைச் சாத்தி யிருப்பார் தவம் என்னுமாப்போல, பரதாழ்வான் ஏத்தி யிருந்தார். அவரைச் சாத்தியிருந்து உய்ந்து போனார் சத்ருக்கனாழ்வார். ஏத்தியிருந்தார் நம்மாழ்வார். அவரைச் சாற்றி இருந்தார் மதுரகவிகள். ஏத்தி யிருந்தார் பெரியாழ்வார். அவரைச் சாற்றி யிருந்தார் நாச்சியார். ஆகவே ஆச்சார்யர்களுக்கு ஏற்படும் மகத்துவம் அவர்களது சிஷ்யர்களுக்கும் தாமாகவே வந்தமையும் எனக் காண்கிறோம்.
பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வருங்குருகேசன் விட்டுச் சித்தன்
தும்பகுலசேகரன் நம் பாண நாதன்
தொடண்டரடி.ப்பொடி மழிசை வந்த ஜோதி,
வையமெலாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதி
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே.
என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு.
யானடைவேன் அவர் குருக்கள் நிரைவணங்கி,
சின்னருளால் பெரும்பூதூர் தந்த வள்ளல்
பெரிமநம்பி ஆளவந்தார் மணற்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமழதத்திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.
அடியார்கள் வாழ அரங்கநகர் வாழு,
சடகோபன் தண் தமிழ் நூல் வாம, கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ, மணவாள மா(முனியோ
இன்னுமொரு நூண்றாண்டிரும்
நானிலமுந்தான் வாழ நான்மறைகள் தாம் வாழ மாநகரின் மாறன் மறைவாழ – ஞானியர்கள் சென்னியணிசேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்.
வைஷ்ணவ ஜனதோ என்று தொடங்கும் தர்ஸிமேத்தா எழுதிய பாடலின் தமிழாக்கமான நாமக்கல் கவிஞரது பாடல்
வைஷ்ணவன் என்போன் யார்?
வைஷ்ணவன் என்போன் யாரெனக்கேட்பின் வகுப்பேன்
அதனைக்கேட்பீரே? (வைஷ்)
1-பிறருடைய துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்.
உறுதுயர் தீர்த்ததில் கர்வங்கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்.
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல், மனம், சொல் இவற்றால்.
அறமெனத் தரய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவன் அருந்தவத்தான் (வைஷ்)
2-விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அந்நிய மாதரைத் தாயென
உணர்வோன் வைணவன் தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன், ஒரு போதும் அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்.
வளர்ப்புற குணமதை வகூப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்
3-மாயையும் மோகமும் அணுகாதவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயகனாகிய ஸ்ரீராமன் இரு
நாமம் கேட்டதும் மெய்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடை_ப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்,
ஆயன யாவையும் அடங்கி. கேஷேத்திரம்,
ஆகும் அவனே வைஷ்ணவனும்
4-கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காமக்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப்பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள் எழுபத்தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அமரப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக்கரை சேர்வர் (வைஷ்)
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply