சீரரங்க நகரன்னை சேவடி சேர்த்தும் வணம்
நாராரடைக்கல நன்மாலை ஓன்று நவில் வதற்க்கிப்
பாரோர் புகழ் எம் பராங்குச மா முனி பாதமலர்
ஏரார் நின் பாங்கு அருந்திப் பரவுதி என்னுளமே –காப்பு
திருக்கச்சி வெக்காப்பதி வந்த பொய்கைத் திரு முனிவன்
உருக்கலை என்னுளத்து ஒளிர்ந்து வோங்க வுவத்தி என்றுன்
கருக்கச் சளந்தீர் கழற் சரண் புக்கனன் காமர் வளப்
பெருக்கத்து ஒளிரும் அரங்க நகரன்னைப் பெண் மணியே –பொய்கையாழ்வார்
பூத்திகழ் காக்கடன் மல்லை வரு முனி புங்கவன் வெண்பாத்
திகழ் நூல் என்னுள்ளத்தில் படியப் பணித்தி என்றுன்
மாத்திகழ் வாரீச மாணடி மன்னி மறை புகுந்தேன்
ஒத்தகழார் சேர் அரங்க நகர் அன்னை உத்தமியே –பூதத்தாழ்வார்
மயிலைப்பதி வந்த மா முனிவன் கலை மன் பொருளாம்
வெயிலைப் பொழிந்தென்றும் வீடா வவித்தை வினையிருள் செய்
துயிலைத் துடைத்தி என்று உன் துணைத்தாள் சரண் டுன்னினனால்
அயிலைப் பொரும் கண்ணர் அரங்க நகரன்னை யாரணியே –பேயாழ்வார்
ஆழி தரும் கலையாகு மழிசை யடிகள் நன்னூல்
பாழி பெரும் பொருள் என்னுளத்து என்றும் படர்ந்து நிற்க
வாழி யருள் செய்தி என்றுன் மலரடி வந்தடைந்தேன்
வீழி யிதழ் கொள் அரங்க நகரன்னை வித்தகியே –-திருமழிசை யாழ்வார்
கோளூர் முனிவன் குருகூர் முனி மேல் குறித்த கலை
வாளூர் பொருள் என் மனம் மன்னி நிற்க மகிழ்தி என்றுன்
தாளூர் சலசச் சரண் அடைந்தேன் உயிர் தாங்கு மொன்பான்
கேளூர் ரரங்க நகரன்னையாம் கிருபாகரையே –மதுரகவியாழ்வார்
உண்மை உலகினர் ஒர நம் மாறன் உகந்துரைத்த
திண்மை நன்னூல்கள் என் சிந்தையில் தேங்கிடச் செய்தி என்றுன்
ஒண்மை யடியை வுவந்து அடைந்தேன் உலகோர்ப் புரக்கும்
வண்மை யரங்க நகரன்னை யாகும் வராநநையே –நம்மாழ்வார்
கொல்லி நகர் வந்த கோ முனிவன் கலை கொண்ட பொருள்
புல்லி என்நெஞ்சில் பொலியக் கருணை புரிதி என்றுன்
அல்லி மலரடி யண்டை கொண்டேன் மறையந்த முறை
வல்லி யரங்க நகரன்னையாம் பத்த வத்ஸலையே –குலசேகராழ்வார்
பரத்துவம் செய்து நற் பஞ்சவன் பொற் கிழி பார்ப்படுத்த
உரத்துவ வில்லி புத்தூர்க்கோன் கலை என்னுளத்து நிற்கத்
திரத்துவம் செய்தி என நின் சரண் சரண் சேர்ந்தனாற்
றரத்துவர் முத்தவரங்க நகரன்னைத் தற் பரையே –பெரியாழ்வார்
திருக்கோதை நாயகி செய்ந் நூல் என் சிந்தையில் தேக்குவித்து என்
கருக் கோதை நீக்கக் கருணை செய்வாய் என்றுன் கான் மலரின்
மருக்கோதை சூடி மறை புகுந்தேன் மறையோர் பயிலும்
இருக்கோதைத்தாய வரங்க நகரன்னை இந்திரையே -கோதை நாயகித் தாயார்
விற்கலை வந்த பரகால மா முனி வேந்தனருள்
நற் கலை என்னுள நாடொறு நண்ண நயத்தி என்றுன்
அற்கலைத் தோட்டு மடிச் சரண் புக்கனனாரணமா
நற்கலை யோங்கு மரங்க நகரன்னை நாயகியே –திருமங்கையாழ்வார்
விப்பிர நாராயண முனி யேந்தல் வின்கலைகள்
பப்பிரதப் பொருணாளும் என்நெஞ்சில் பதித்தி என்றுன்
துப்பிரசன்னத் துணையடியில் சரண் டுன்னினால்
அப்ரமேய வநக வரங்க நகரன்னையே –-தொண்டரடிப்பொடியாழ்வார்
முனி யூர்தி யூர்ந்து என் முகுந்தன் முன் வந்த முனித்தலைவன்
கனியூர் சுவைக்கலை என்னுள நிற்கக் கணித்து என்றுன்
பனியூர் திருமலர்ப் பாதத் தடைந்தனன் பக்தி யிறைத்
தனியூர்தி யூரும் அரங்க நகரன்னை தாக்கணங்கே — திருப்பாணாழ்வார்
நாதமுனிகள் எனும் எம்மடிகள் இன மலர்ப்
பாதம் உவந்து பணிந்து உய்யும் வண்ணம் பணித்தி என்றுன்
சீத முளரித் திருவடியில் சரண் சேர்ந்தனனால்
வேத முழக்கத் தரங்க நகரன்னை வித்தகியே -நாதமுனிகள்
புலம் செயிர்த்து ஓங்கிய உய்யக் கொண்டார் புகழ் பூத்து ஒளிர்ந்து
புலம் செய் அடிகள் என் புந்தி வைத்து ஏத்தப் புரிதி என்றுன்
நலம் செய் திருவடி நண்ணின னல்லவர் நாளு நண்ணி
வலம் செய் யரங்க நகரன்னை யாகும் வரோ தயையே –உய்யக் கொண்டார்
கூறு புகழ்க் குருகை காவலப்பன் குறிக் கொணிட்டை
தேறும் எனக்கும் சிறந்து ஒங்க நீ யருள் செய்தி என்றுன்
நாறு மலரடி நண்ணினன் சீர்த்தி யிஞ்ஞாலம் எலாம்
வீறும் அரங்க நகரன்னை வேத விளக்கே –குருகைக் காவல் அப்பன்
நம்பி கருணாகர தாசர் வள்ளல் நல்லொழுக்கங்
கும்பி யுழைக்கும் எனக்கும் வர நின் குரை கழலை
நம்பி யடைந்தனன் நாளும் பிற விரலை யுற்றோர்க்
கம்பி யனைய வரங்க நகரன்னை யம்புயையே —நம்பி கருணாகர தாசர்
ஏறு திருவுடையார் என்றுரை எம்மிரு நிதிக்குப்
பேறு தருமவன் பால் வரு நேயப் பெருக்கின் வளம்
தேறும் எனக்கும் அளித்து என்றுன் பதம் தேர்ந்து அடைந்தேன்
நாறு மலர்ப் பொழில் நண்ணும் அரங்க நகரன்னையே –ஏறு திருவுடையார்
தூய திருக்கண்ண மங்கை யாண்டான் என்னெஞ்சுரநதிதன்
நேய் வடிகளடியி னுறுமன்பி னீத்த மிந்தத்
தீயனுற்றுய்ய நின் சேவடி சேர்ந்தனன் றெய்வ மயில்
சாயல் யரங்க நகரன்னை யாகும் தயா பரையே –திருக் கண்ண மங்கை யாண்டான்
மறையோர் புகழ் வான மா மலை யாண்டான் மகிழ் தரு தன்
இறையோனுழிக் கொண்ட வீர மடியற்குமீதி என்றுன்
பொறை யோங்கு தாளிற் புகல் புகுந்தேன் ஐம் புலனை வென்ற
நிறையோர் நிலவும் அரங்க நகரன்னை நின்மலையே –வானமாமலை யாண்டான்
பேணும் உருப்பட்டூராச்சான் பிள்ளைப் பேர் பெருந்தகை தன்
மாணுரு மாரி யன்பால் கொண்ட நிட்டை மரபு எனக்கும்
பூணுறும் வண்ணம் புரிது என்று உன் தாள் புகல் புகுந்தேன்
சேணுறு சோலை யரங்க நகரன்னைச் செந்திருவே –உருப்பட்டூராச்சான் பிள்ளை
சோகத்தூராழ்வான் சுக நிலை நிட்டை துடி இடையார்
மோகத்தூ ரெற்கு முரண் அற்று உண்டாக நின் முண்டகத் தாள்
ஆகத்தூடு உய்த்து இன்று அடைக்கலம் புக்கனனைய வென்னை
நாகத்தூர்த்தித் தலைவன் போற்ற அரங்க நகரன்னையே – சோகத்தூராழ்வான்-
கீழ் வானெழு பகல்போலொளிர் வண் புகழ் கீழையகத்
தாழ்வானெனத் தமிழாரணம் பாடும் பண்ணாரழைவு
தாழ்வாரெனக்குந் தயை செய நின்னைச் சரணடைந்தேன்
வாழ்வாரரங்க நகரன்னையாகும் வதானியையே–கீழையகத்தாழ்வான்
மேலையகத்துறை யாழ்வானென யான் வியந்து திரு
மாலையகத்த மறைத் தமிழ் பாடி மகிழும் வளத்
தாலை யளித்தி யென நின் சலசச் சரணடைந்தேன்
சோலையகத்த வரங்க நகரன்னைச் சுந்தரியே–மேலையகத்தாழ்வான்
திருமணக்கானம்பி சேவடி சிந்தையிற் சேரச் செய்து என்
கருமணக் காகரமாங் காம நோயைக் களைதி யென்றுன்
மருமணத் தாளின் மறை புகுந்தேன் மணிவண்ணனெம்மான்
திரு மணக் காந்தை யரங்க நகரன்னைச் செய்யவளே.–மணக்கால் நம்பி
பெருக்கத் திருக் கைரவக் கேணிப் பாண் பெருமாளரையர்
தருக்கத் தவாளந் தணந்த நடை யெற்குஞ்சார்க வென்றுன்
திருக் கத்திகைக் கழலிற் சரண் சேர்ந்தனன் றேர்வரிய
இருக்கக்தையான வரங்க நகரன்னை யின்ப வைப்பே–திருவல்லிக் கேணிப் பாண் பெருமாளரையர்
சொட்டைப் பூசிச் செண்டலங்கார ராரியன் திருவடியில்
நெட்டைப் பேரன்புற்ற நிட்டை யெனக்கு நிகழ்க வென்தன்
மட்டைச் செய் தாமரை மாணடி புக்கனன் மன்னனந்த
முட்டைப் பெற்றாளு மரங்க நகரன்னை முன்னவளே-சொட்டைப் பூசிச் செண்டவலங்கார தாசர் –
குரு விண்ணகர் தருவானெனுங் கொள்கை கொள் கோமடத்துத்
திரு விண்ணகரப்பன் சேவடி யேத்துந் திறம் பெற நின்
மருவிண்ணளவுமரையடி மேவினன் வையகத்துப்
பெரு விண்ணரங்க நகரன்னை யாஞ்சுப் பிரசன்னையே–கோ மடத்துத் திருவண்ணகரப்பன்
நல்லொழுக்கத் துலகப் பெருமாணங்கை நண்ணு நிட்டை
புல்லொழுக்கேற்கும் புகுமா கருணை புரிதி யென்றுன்
எல்லொழுக்கிண்டை யிணை தாளடைந்தன னென்றும் பொன்னி
நல்லொழுக்காரு மரங்க நகரன்னை நப்பின்னையே–உலகப் பெருமாணங்கை
சீரார்ந்த நற் புண்டரீகாக்கதா சந்தத் தேசிகன் பால்
நாரார்ந் தொழுகு நடை யெற்கு நண்ண நயத்தி யென்றுன்
ஏரார்ந்த விண்டை யிணைத் தாளிலில்லடை யெய்தினனாற்
பாரார்ந்த கீர்த்தி யரங்க நகரன்னைப் பார்க்கவியே, -ஸ்ரீபுண்டரீகாக்ஷ தாசர் –
ஆளவந்தா ரெம்மடிகளடியா மருத்த வைப்பென்
நாளவந்தீர மன மஞ்சிசம் வைத்து நன்றுற நின்
நாள வந்தாமரை நல் தாள் அணுகின னண்பர் பவ ்
மாள வந்தாளு மரங்க நகரன்னை மாநிதியே, –-ஸ்ரீஆளவந்தார்
திருமான் முனஞ் செந்தமிழ் மறை பாடும் திருவரங்கப்
பெருமாளரையர் எனப் பாடியாடு நற்பேறு எனக்கு
வருமாறுன் றாளின் மறை புகுந்தேன் வழுவாத முத்தி
தருமா வரங்க நகரன்னையாகும் தயாம்புதியே –திருவரங்கப் பெருமாள் அரையர்
கை யொழியா நன்னடைச் சொட்டை நம்பி தன் கான்மலரைப்
பொய் யொழியாத வென் புந்தி வைத்தேத்தப் புரிதி யென்று
மெய் யொழியா வன்பர் மேவு நின்றாட் சரம் மேவினனான்
மையொழியாக் கண்ணரங்க நகரன்னை மைதிலியே–சொட்டை நம்பி
அகந்தூயனாமெம் மரசு நம்பிப் பெரியோனடியை
உகந்தூதியமென வுன்னிட வுள்ளமுவத்தி யென்றுன்
சுகந் தூங்கு தாளிற்றுனைந் தடைந்தே னற்றோறுப் புரப்பால்
நகந்தூக்கு நாரணனண்ணு மரங்க நகரன்னையே–௮ரசு நம்பி
அவா நிலை நீத்த வடிகள் தெய்வத்துக்கரசு நம்பி
சுவா நிலை யேற்குந் துணை நிற்க வன்பு சுரத்தி யென்று
தவாநிலைத் தாபதர் தாழு நின்றாளிற் சரணடைந்தேன்
உவா நிலைச் துண்டத் தரங்க நகரன்னை யொள்ளொளியே,–தெய்வத் துக்கரசு நம்பி
பிள்ளை யரசு நம்பிப் பெரியோன் கழல் பேணி நின்றிவ்
வெள்ளை யறிவனும் வீடு பெற்றுய்ய நின் வீங்கு மொளிக்
கொள்ளை யடிச் சரண் கூடினன் பேரண்ட கோடிக் கெல்லாந்
தன்ளை யரங்க நகரன்னையாஞ் சத்ய சங்கற்பையே, – பிள்ளைக்கரசு நம்பி
செருக்காற்றிற் செல்லாச் சிறு புள்ளுடையார் திருவடியிற்
பெருக் காற்றிற் பீடுறும் பேரன்பு நாளும் பிறங்க வென்றுன்
இருக்காற்றின ரெண்ணிணை யடிக்கில்லடை யெய்தினனால்
அருக்காற்றுப் பொன்னே யரங்க நகரன்னை யக்கரையே–சிறு புள்ளுடையார் –
சீரார் திருமாலிருஞ்சோலை தாசர் தஞ் சிர்த்திகளை
நாராரென்னா வின விற்றி யுய்வானருணல் குதியென் உகள்
றேரார் நின்றாள் களிலில்லடை யெய்தினனீர்ம்பொழிற் கட்
காராரங்க நகரன்னையாங் கருணாலயையே,-திருமாலிருஞ்சோலை தாசர்
தெருள் சேர்ந்த வங்கி புரத்தாய்ச்சி நிட்டையைச் சேர்ந் தொழுகி
மருள் சேரென்றோற்றத்தை மாற்றிட வுள்ள மகழ்தி யென்றுன்
பொருள் சேர் கழலிற் புகல் புகுந்தேன் பொழில் பூத்தளிக்கும்
அருள் சேரரங்க நகரன்னையாகு மகளங்கையே–வங்கி புரத்தாய்ச்சி –
அருங்கலைக் கேள்விப் பெரிய நம்பிக்குத் தன்னாரியன் பால்
ஒருங்கலில் பேரன்புதித்தாங்கெனக்கு முதிக்க வென்றுன்
பிருங்க மிமிரம் புயத் தாளடைந்தனன் பெட்குமின்னின்
மருங்கு லரங்க நகரன்னையா மங்களாகரையே-பெரிய நம்பிகள்
திருக் கோட்டியூர் நம்பிச் செம்மற்குத் தன்றிருத் தேசிகன் பாற்
றிருக்கோட்டு மன்பு செழித்தாங்கெனக்குஞ் செழிக்க வென்றுன்
தருக்கோட்டுந் தாளிற் சரண் புகுந்தேன் மெய்ச் சது மறையோர்
திருக்கோட்டி யோங்கு மரங்க நகரன்னைச் செஞ்சுடரே-திருக்கோட்டியூர் நம்பி
பெரிய திருமலை நம்பி யெனு மெம் பெருந்தகை தன்
அரிய திருவருட்காளாகும் வண்ணமருடி யென்றுன்
ரிய சரணடைந்தே னுனையோரா வுளத்தினர் கட்
கரிய வரங்க நகரன்னையா மம்புயா தனையே–பெரிய திருமலை நம்பி –
குற்றமிலா மாறனேர் நம்பி தன் குரவன் கழலில்
அற்றமிலா வன் படைந்தாங்கி யானுமடைக வென்றுன்
சுற்றமிலார் துணையா மடியிற் சரண்டுன்னினனாற்
செற்றமிலார் சேரரங்க நகரன்னைச் சிற்பரையே-மாறனேர் நம்பி
திருக்கச்சி நம்பி யடிகட்குத் தந்திருத் தேசிகன் பால்
அருக்கச்சுதவன் பமைத் தாங்கெனக்கு மமைத்தி யென்றுன்
கருக்கச் சளங் கழற்றுங் கழற்கை யடை கண்டனன் சீர்ப்
பெருக்கத் தரங்க நகரன்னையாகும் பிராப்பியையே –திருக்கச்சி நம்பி
திருமாலை யாண்டா னெனுஞ் செம்மலுக்குத் தன் றேசிகன் பால்
பெருமாலை யாக்கிய பெற்றியினெற்கும் பிறப்பி யென்றுன்
மருமாலைத் தாளின் மறை புகுந்தேன் மன மாசறுத்தோர்
கருமாலை நீக்கு மரங்க நகரன்னைக் காரணியே-திருமாலை யாண்டான் –
ஆழ்வானறிவின்றலை நின்றொழுகு மெம்மாள வந்தார்
ஆழ்வானுக் காரியன் பாலானவன் பெற்குமாக வென்றே
ஏழ்வான் பிறப்பு மிரிக்கு நின்றாட் சரணெய்தினனிற்
றாழ்வார்க் கருளு மரங்க நகரன்னைச் சற் குணியே, –ஆளவந்தாராழ்வான்
திரு வான மா மலை யாண்டான் றெருணடைச் செல்வமெற்கும்
வருவான குடி யென்றுன் மரைத் தாளின் மறை புகுந்தேன்
பெரு வானவர் பெறும் பேற்றை யடியவர் பெற்றுவக்கத்
தருவான ரங்க நகரன்னையாகுஞ்ச நாதனையே–வான மா மலை யாண்டான்
அமலனெனுந் தெய்வ வாரி யாண்டான் றன்னடி யிணையாங்
கமல மென்னுள்ளக் கமலம் வைத்தேத்தக் கணித்தி யென்றுன்
நிமல வடிகளினீழலடைந்தன னித்தியர் சேர்
விமல வரங்க நகரன்னை யாரண வேத்தியையே-தெய்வவாரி யாண்டான் –
இலங்கெழின் மேதை கொளெம்மீச னாண்டாற் கிறைவனுழித்
துலங் கெழிலன்பு சுரந்தாங்கெனக் குஞ்சுரக்க வென்றுன்
கலங்கெழு தாள்களிற் கையடை புக்கனன் காயம் வையத்
தலங்கெழு சீர்த்தி யரங்க நகரன்னைத் தற் பரையே, –ஈசனாண்டான்
சிதஞ்செய் பஞ்சேச்தியச் சீயராண்டாற்குத் தன்றீர்த் தனுழி
இதஞ் செயயும் பக்திமை யேய்ந்தாங்கெனக்கு மியைக வென்றுன்
பதஞ் செய் பதங்களைப் பற்றினன் பத்தர்கள் பாவமெலாம்
அகஞ்செய் யரங்க நகரன்னையா மருளார் கலியே–ஜீயராண்டான்
தன்னாரியன் பாற் திருக் குருகூரப்பன் றானடைந்த
இன்னா வறுமன்பெனக்கு முண்டாக விழைக்தி யென்றுன்
பொன்னாரத்தவம் போருகத் தாளிற் புகல் புகுந்தேன்
கொன்னா ரரங்க நகரன்னையாகுங்கு சேசயையே, -திருக்குருகூர் அப்பன்
தேசிகன் பானந் திருமோகூரப்பன் சிறந்து கொண்ட
ஆசில தாமன் பெனக்கு முண்டாக வருடி யென்றுன்
ஏசிகறாள்களி லேன்றடைந்தே னெண்ணி ருக்கெகர் நற்
கோசிகமேத்து மரங்க நகரன்னைக் கோமளையே–திரு மோகூர் அப்பன்
நீடுறு சீர்த் திருமோகூர் நின்றானெனு நின்மலன்றன்
பீடுறு நன்னடையின் பெருக்கெற்கும் பெருக வென்றுன்
தோடுறு தோடகத்தாட் சரண்டுன்னினன்றும் பியிசை
பாடுறு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே-திருமோகூர் நின்றான்
தெருதித் தெய்வப் பெருமாட் பெருந்தகை சீரடியைப்
பொருணிதி யென்ன வென் புந்தி வைத்தென்றும் புகழு மன்பு
மருணிதியா மெற்கும் வாய்க்க வென்றுன்னை மறை புகுந்தேன்
அருணிதியான வரங்க நகரன்னை யற்புதையே,-தெய்வப்பெருமாள்-
மதியார் வகுளா வணிச் சோமயாஜி தன் மாண்டியே
நிதியா யென்னுள்ள நிறுவி யுய்வானின்னிறை தவர்ககுக்
கதியாங் கழல்களிற் கையடை புக்கனன் கற்றவர்கள்
துதியா ரரங்க நகரன்னையாகுஞ் சுடர்க் கொடியே. –வகுளாபரணசோமயாஜியார்
சீரார்த் திருக்குருகூர் தாசரென்னு மெந் தெய்வ மணிக்
கேரார் தன்னாரியன் பாலேய்ந்த நிட்டை யெனக்குமுற
வாராரருள் செய்தி யென்றுன் கழலின் மறை புகுந்தேன்
தேரார் தெருவார ரங்க நகரன்னைச் சின்மயையே–திருக் குருகூர் தாசர்
திருமாலிருஞ் சோலை தாசரெனுந் தெய்வத் தேனு தன் சீர்க்
குரு மா மணி யுழிப் பெய்யன்புப் பால் வெள்ளக் கோலமெற்கும்
வருமாறுன் வாரிச மா மலர்த்தாளின் மறை புகுந்தேன்
திரு மா மணிப் பூணரங்க நகரன்னைச் சேம வைப்பே--திருமாலிருஞ்சோலை தாசர்
வட மதுரைப் பிறந்தானென்னும் வண்மை மணி மலைக்குத்
திடமதுரைத் தவன்றே மன்புவதை செழித்தலென
மடமலியெற்கு மளித்தி யென்றுன் றாண் மறை புகுந்தேன்
நட மலிந்தோங்கு மரங்கார ரங்க நகரன்னையே–வட மதுரைப் பிறந்தான்
ஆட் கொண்டி யென்னு மடிகளடி களகத்தில் வைத்தேன்
சேட் கொண்ட தீ வினை தீர்ந்துய் குவானின் சிறு சதங்கைத்
தாட் கொண்ட தாமரைத் தாளடைந்தே னம்பிச் சார்ந்வரை
ஆட் கொண்டருலளு மரங்க நகரன்னை யம்புயையே--ஆட்கொண்டி.
மறை கொண்ட மாண் பொருண் மன்னுளத் தம்மங்கி வள்ளலினெந்
சிறை கொண்ட தீ வினை தீர்வானடியர் செயுஞ் செயிர்கள்
பொறை கொண்ட நின் புண்டரீகப் பொற் பாதம் புகல் புகுந்தேன்
நறை கொண்ட பூம் பொழினண்ணு மரங்க நகரன்னையே–அம்மங்கி –
பொன்னித் துறைவன் புரோகிதன் பொங்கெழிற் பொன்னடி யென்
சென்னிக் கணி யெனச் சேர்ந்துய்யுமாறருள் செய்தி யென்றுன்
உன்னித் துறவோர் தொழுந் தாளடைக்கல முற்றனன் மால்
பன்னிப் பிரியை யரங்க நகரன்னைப் பார்க்கவியே–இராஜ புரோகிதர் நாதமுனிகள்
ஆத்தி யந்தாரனற்றார மரங்கத்ம் மன்னொழுக்கஞ்
சாத்தியமாக வெற்கென்றுன் சலசச் சரணடைந்தேன்
ஏத்திய மா மறைக் கெட்டாப் பரம் பொருளே யினிதாம்
வாத்திய வோதை யரங்க நகரன்னை மா மருந்தே–இராஜ மகிஷி திருவரங்கத்தம்மன்
எம்பெருமாற் கென்றுமின் பணி செய்தி தயத்துகக்கும்
எம்பெருமானா ரிணையடியே யெனக்கென்றும் பொன்றாச்
சொம் பெரும் பேறென்று துன்னக் கருணை சுரந்தருள்வாய்
நம்பெருமாண மணவாட்டி யரங்க நகரன்னையே,–எம்பெருமானார் –
இனிய கருத்துடனின் சொலெவர்க்கு மிசைக்கு மலை
குனிய நின்றார் தங்குரை கழல் கூடி யென் கோதறுப்பான்
நனி யருள் செய்தி யென்றுன் கழனண்ணின னாரணற்குக்
கனியனையா யெம் மரங்க நகரன்னைக் கண்மணியே--மலை குனிய நின்றார்
தன்மவுரு வாரியச் சீ சடகோப தாசரெனும்
நின்மல பாநுவி னெஞ்சிருணீங்கியிந் நீடு கன்மச்
சன்ம மொழிக்க நின்றாட் சரண் புக்கனன் சார்ந்தவர்க்குப்
பொன் மலை போலு மரங்க நகரன்னைப் புண்ணியையே,--ஆரிய ஸ்ரீ சடகோப தாசர்
அணி யரங்கத் தமுதப் பேரடிகளடிகள் பவப்
பிணி யரங்கப் பிடித்துய்வான ருளென்றுன் பெட்கு மொன்பான்
மணி யரங்கத் தண்டை மாணடி புக்கனன் மாதவிகள்
நணி யரங்கக்து நடஞ்செய் யரங்க நகரன்னையே–அணி யரங்கத் தமுதனார்
திருவாய்த் தலமுடையாரடி சேர்ந்தடியேன் விவிதக்
கருவாய்த் தல மரனீங்க வருள் செய்து காத்தி யென்றுன்
மருவாய்த் திலங்கு மரையடி புக்கனன் மாணுருவாய்
அருவாய்த் திகழு மரங்க நகரன்னை யம்புயையே--திருவாய்த் தலமுடையார்
இசை யோங்கு கூரத்திறை யெம்மடிக ளிணை யடியில்
நசை யோங்கி யுய்ய நயந்திருக்காதிய நான்மறையின்
மிசை யோங்கு நின்னடி மேவினனல்குதி மெய்ப்புகழெண்
டிசை யோங்கரங்க நகரன்னையாகுஞ் சிந்தாமணியே--கூரத்தாழ்வான் –
ஊண்டானென நம்மெதிபதி சீருண்டுறை முதலி
யாண்டானெனை யென்று மாள்வானருடி யென்றஞ்சிறைத்தேன்
பாண்டான் முரல் பதுமப் பதம் பற்றினன் பாரளப்பான்
நீண்டான் மகிழு மரங்க நகரன்னை நீரசையே--முதலியாண்டான்
அம்புவி போற்ற ருளாளப் பெருமாளெனு மடை கொள்
எம்பெருமானா ரிணை யடி யென்பவ கீர்க்கு மென்று
நம்புறு நன்மன நண்ண நின்றாளை நயந்தடைந்தேன்
வம்பவிழ் சோலை யரங்க நகரன்னை மா மணியே.--அருளாளப் பெருமாளெம்பெருமானார் ஜீயர்
மைந்தாரைந்தா நெறி மாண்பினனா மெம் வடுக நம்பி
கந்தார் நடை யெற்குக் கை கூட நின்றன் கருணை கொள்வான்
பைந்தார் புனை நின்பதஞ் சரண் புக்கனன் பாயும் பொன்னிச்
சிந்தார ரங்க நகரன்னை வேதச் சிரப் பொருளே–வடுக நம்பி
சீரார் திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடியில்
நாரார் மன நல நண்ணிட நீ யருணல்கி டென்றுன்
தாரார் சலசச் சரணத் துணையிற் சரணடைந்தேன்
ஏராரரங்க நகரன்னை யாமெம் மிறையவளே--திருக் குருகைப் பிரான் பிள்ளான்
கனந் தாழ் பொழிற் திருவேங்கட மாமலைக் கண்ணனுக்குத்
தினந் தாழ்ந்து தே மலர்க் கண்ணித் திருப் பணி செய்துவந்த
அநந்தாழ்வானிட்டை யளித்தி யென்றுன் றாளடைந்தனனற்
சனந்தாழரங்க நகரன்னையாகுஞ் சரணியையே— –அநந்தாழ்வான்
சீரிய ஞான வெழுபத்து நான்கு சிங்கா தனராம்
ஆரியர் தங்களருட் கிலக்காக வருடி யென்றுன்
வேரி மரை புரை மென்றாளடைக்கலம் வேட்டடைந்தேன்
நாரியரதனமே நல்லரங்க நகரன்னையே–எழுபத்து நான்கு சிங்காதனாதிபதிகள் –
சத்தமனெங்க ளெதிராசமாமுனி தாளடைக்த
உத்தமமா மாச்சரமிகளோ ரெழு நூற்றுவர்கள்
தத்தம நிட்டை தமியேற்குற நின் சரணடைந்தேன்
புத்தமு தொத்த வரங்க நகரன்னைப் புங்கவியே-எழுநூறு உத்தம ஆச்சிரமிகள்
கதியார் பன்னீராயிரவரே காந்திகள் காற்றுணை யென்
விதியாறொழு கெம்மி ராமானுச முனி வேந்தனருட்
மதியார நின்னை மறை புகுந்தேன் வையமையலற்றோர்
நிதியாமரங்க நகரன்னையாகு நியாமகையே-பன்னீ ராயிராவர் ஏகாந்திகள்
எம்மையுமாட்கொளு மெம்பெருமானா ரிணையடி சேர்
அம்மையரோ ரெழு நூற்றுவர் நிட்டை யடியனுக்கும்
இம்மை வர நின்னிணை யடிக்கில்லடை யெய்தினனாற்
செம்மை யரங்க நகரன்னையாகிய தேசிகையே--எழு நூற்றுவர் அம்மையர்கள்
திருவரங்கத் தமுதாந் தெள்ளியன் செய்த செந் தமிழ் நூல்
கருவரங்கத்தினங் கற்றுய்யுமாறெனைக் காத்தி யென்று
மருவரங்கத்த நின் மாணடியிற் சரண் வந்தடைந்தேன்
தெருவரங்கத்த வரங்க நகரன்னைச் செந்திருவே–திருவரங்கத்தமுதனார்
கம்பார் களத்தியர் காதலிக்கும் தீக் கரும மொழிந்
தெம்பாரடிகளை யெண்ணி யுய்வானெற் கருடி யென்றுன்
வம்பார் வனச மலர்த் தாட் சரண வசணமுற்றேன்
அம்பாரரிக் கண்ண ரங்க நகரன்னை யற்புதையே--எம்பார்
தேக்கும் புகழெம் பராசர பட்டர் திருவடி யென்
வாக்கு மனமும் வழுத்தி நினைக்கும் வரம் பெற நின்
சேக்குமரையடி சேர்ந்தனனிந்தச் செக மனைத்துங்
காக்கு மரங்க நகரன்னையாங் கமலாலயையே--பராசர பட்டர்
வெண் மணிப் பிள்ளைப் பெருமாளை யங்கர்நின் வேந்தன் தன் பேர்
நண் மணித் தாசரை நண்ணி யுய்வானுள நள்ளிருடீர்
விண் மணியே நின் விரையார் மலர்க்கழல் வேட்டடைந்தேன்
ஓண் மணி மாலை யரங்க நகரன்னை யுத்தமியே-அழகிய மணவாள தாசர்
ஆராமப் போதால லங்கலணிந் தென்னகத் திருத்திச்
சீ ராமப் பிள்ளையைச் சிந்திக்கச் செவ்வருள் செய்தி யென்றன்
மாராமத்தாளின் மறை புகுந்தே னன்மரபடியர்
நாராமப் பூவை நயக்கு மரங்க நகரன்னையே–சீராமப் பிள்ளை
வெஞ்சீய மெண்ணிடு வேழத்தின் வேண்டார் வெருவ வந்த
நஞ்சீயர் நற் கழனாடொறு நாடி நயக்க வெற்கு
நெஞ்சீதி யென்று நின்னீரசத் தாட் சரணேர்ந் தடைந்தேன்
மஞ்சீயன் முத்த வரங்க நகரன்னை மாணிக்கமே--நஞ்சீயர்
நலந் திகழ் நாராயணச் சீயர் நற் கழனண்ணி யுய்வான்
பொலந் திகழ் நின்னடிப் புண்டரிகத்திற் புகல் புகுந்தேன்
வலந் திகழ் வன்னி வளர்ப்போர் வழுத்து மலர் மகளே
நிலந் திகழ்ந்தோங்கு மரங்க நகரன்னை நிச்சலையே--நலம் திகழ் நாராயணச் சீயர்
சொல்ல வரிய சொல்லார்ந்த நம்பிள்ளை துணை யடியாற்
கல்ல வரிய பிறவியைக் கல்லக் கருதி வந்துன்
வல்ல நற்றாளின் மறை புகுந்தேன் மறை வாணர் தொழும்
நல்ல வரங்க நகரன்னையா நளினாம்பகியே–நம்பிள்ளை
சேணோங்கு நல்லுரச் சேனாபதி யெனுஞ் சீயரடி
கோணோங்கு மென்னுளங் கொண்டுய்ய நீ யருள் கூர்தி யென்றுன்
பூணோங்கு தாளிற் புகல் புகுந்தேன் சிறைப் புட் கணத்தின்
பாணோங்கு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே--ஸ்ரீ சேனாபதி ஜீயர்
மாண்ட குணத்தெம் பெரியவாச்சான்பிள்ளை மாணருளே
பூண்ட வரன்பு புனைந்துய்ய நின் கழல் புக்கடைந்தேன்
தூண்டலிலாத சுடர் விளக்கேது கடீர் வளங்கள்
நீண்ட வரங்க நகரன்னையாகு நிரஞ்சனையே–பெரியவாச்சான்பிள்ளை
எந்தை நம்பிள்ளை சுதனாம் ராமானுசாரியன் தாள்
சிந்தையில் வைத்து எளியேனுய்ய நீ யருள் செய்தி என்றுன்
முந்தை மறை முடித்தாளில் அடைக்கல முந்தினன் ஓர்
நிந்தையுமில்லா வரங்க நகரன்னை நித்தியையே –இராமானுசாசாரியார்
நீடு மெய்ஞ்ஞான நெறி நின்றொழுகு நன்னிட்டைகள் கை
கூடும் வடக்குக் திருவீதிப் பிள்ளே குரை கழலே
நாடு நலம் பெற நின்னடி நண்ணினன் நான் மறையும்
நேடுமரங்க நகரன்னையாகு நிராமயையே--வடக்குத் திருவீதிப் பிள்ளை
மாவள மோங்குஞ் சிவிக்கரைப் பிள்ளை மலரடிச் சீர்
நாவள மோங்க நவிற்றி யென் சன்மத்தின் ஞாட்பறுப்பான்
பூவள மோங்கிப் பொலியு நின்றாளிற் புகல் புகுந்தேன்
காவள மோங்கு மரங்க நகரன்னைக் கற்பகமே--சிவிக்கரைப்பிள்ளை
மால் வெட்டி யென்றன் மனத்தை யெப்போதும் வளர் கருணை
வேல் வெட்டிப் பிள்ளை விழுத்தாணிறுத்தும் விரகு பெற
நூல் வெட்டியோர் தொழு நின்றாளடைந்தன னோற்பவர்க்கு
மேல் வெட்டிக் காட்டு மரங்க நகரன்னை விண்ணவியே–வேல் வெட்டிப் பிள்ளை
எங்கு நிறைபுகழ் ஈ புண்ணி மாதவனின்னருளாற்
றங்கு மென் சன்மந் தவிர்ப்பானினது தயை பெற நின்
கொங்குண் மலரடி கூடினனன்பர்கள் கூட்டுணுஞ் சீர்
பொங்கு மரங்க நகரன்னையாங் கடற் புத்திரியே–ஈ யுண்ணி மாதவப் பெருமாள்-இவர்க்கு ஈயுண்ணி சிறியாழ்வானப் பிள்ளை யென்றும் திரு நாமம்
சுரக்குமளிப் பத்ம நாபப் பெருமாடுணை யடி யென்
பரக்கு மனத்திற் பதித்துய்ய நின்னைப் பணிந்தனன் யான்
கரக்குஞ் சராசரம் யாவையு மீளவுங் கண்டவற்றைப்
புரக்கு மரங்க நகரன்னையா மணிப் பூடணையே–ஈ யுண்ணி பத்ம நாதப் பெருமாள் பிள்ளை
சீரார் நாலூர்ப் பிள்ளை சேவடி யேத்தி யென் தீவினையின்
வேரார் வம் வெட்டி விரத்தி வழி நின்று வீடடைவான்
எரார் நின்னிண்டை யிணை யடியிற் சரணெய்தினனாற்
காரார் பொழில் சூழரங்க நகரன்னைக் கண்மணியே–நாலூர்ப்பிள்ளை –இவருக்குக் கோலேஸர் – கோல வராகப் பெருமாள்,இராமானுஜ தாசர் என்றும் திரு நாமம்
நாலூராச்சான் பிள்ளை நற் பத நண்ணி நளிர்ந்த தென்றத்
காலூர்தியைப் புறங் கண்டண்டர் யாவருங் காண்பரிய
மேலூர் புக நின் விழுத் தாளடைக்கல மேவினனற்
சேலூர் திருக் கண்ண ரங்க நகரன்னைச் செந்திருவே–நாலூராச்சான் பிள்ளை–இவர்க்கு நாலூர் தேவப் பெருமாள் பிள்ளை யென்றும் திரு நாமம்
கடுவிற் கொடி தாக்க வற்று மிரு வினைக் கட்டறுத்த
நடுவில் திருவீதிப் பிள்ளை நல் தாள் நண்ணி நான் பிறவி
வடுவிற்றொழிய நின் வண் மலர்த் தாளின் மறை புகுந்தேன்
அடுவிற் புருவ வரங்க நகரன்னை யம்புயையே--நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
பின்பழகார்ந்த பெருமாளென் சீயர் பெருமை புகழ்ந்
தென் பழங்கண்ணிரித் தீறினல் விட்டின்ப மெய்த வெண்ணி
இன் பழ நேர் நின்னிணைத் தாளிலில்லடை யெய்தினனாற்
றென் பழனஞ் சூழரங்க நகரன்னைச் சின்மயையே–பின்பழகிய பெருமாள் சீயர்
ஏறு திரு வுடையார் தாசர் சீர்த்தி யிசைத்திதயத்
தேறு திருக்கை யிரிப்பான் ௧ருணை யிழைத்தி யென்றுன்
வீறு திருப்புகழ் வேய்ந்த நின்றாண் மறை மேவினனால்
நாறு திருமலர்ச் சேக்கை யரங்க நகரன்னையே–ஏறு திருவுடைய தாசர்
தாரணியோர் புகழும் வான மா மலை தாசர் பதம்
ஏரணி நெஞ்சத் திருத்தி யுய்வான் அருளீதீ யென்றுன்
தாரணி தாளிற் சரணடைந்தே னுயிர் தங்குலக
காரணியாகு மரங்க நகரன்னைக் கற்பகமே–வான மா மலை தாசர் –
வானேய் புகழ்க் குருகூர் தாசர் நோக்கின் வளனெனக்கு
மீனேய் நோக்கென்றெண்ணி யுய்வானருள் செயல் வேண்டு மென்றுன்
தேனேய் செழுங்கமலத் தாளடைந்தனன் சேர்ந்தவரை
ஊனேய் தனீத் தாளரங்க நகரன்னை யுத்துங்கையே–திருக்குருகூர் தாசர்
ஞான வொழுக்க நயினாராச்சான் பிள்ளை நல்லடி யென்
ஈன வொழுக்க மற்றெண்ணி யுய நீ யிரங்கி டென்றுன்
மோன வொழுக்கர் தொழுந் தாளடைந்தனன் முத்தி நெறிக்
கான வொழுக்கர்க் கருளு மரங்க நகரன்னையே-நயினார் ஆச்சான் பிள்ளை –
தேவாதி கேசரி நீன் கொழுநன் பெயர்ச் சீயர் புகழ்
ஓவாதிசைத்துய்ய நீ திருவுள்ள முவத்தி யென்றுன்
தேவாதியர் தொழுஞ் சேவடியிற் சரண் சேர்ந்தனன் யான்
ஓவாதிருக்கோகரங்க நகரன்னை யொண்மணியே-வாதி கேசரி அழகிய மணவாள சீயர்
பக்குவ நெஞ்சப் பரகால தாசர் பதத் துணை யென்
சக்குவக்கக் கண்டு தாவங்க ணீங்கத் தயை புரியென்
றிக்கு வட்டிண்டை யடியினிலில்லடை யெய்தினனெண்
டிக்குவக்குஞ்சீ ரரங்க நகரன்னைச் செல்வ வைப்பே–பரகால தாசர்
தெருளார் செழு நடைச் சீ ரெங்காசாரியர் சேவடி யென்
இருளாரிதயத் திருத்தி யுய்வானீ யிழைத்தி யென்றுன்
பொருளார் பூம் புண்டரிகப் பொற் பதத்திற் புகல் புகுந்தேன்
அருளாரரங்க நகரன்னையா மநந் தாக்கியையே--சீ ரெங்காச்சார்யார்
நல்லவரேத்து நின்னா தன் றிருப் பெயர் நண்ணயினார்
பல்லவ பாதம் பணிந்துய்யவன் புபணித்தி யெற்கென்
றெல்லவர் போலொளி ரிண்டை யடிச் சரணெய்தினலூல்
வல்லவர் வாழ்த்து மரங்க நகரன்னை மா மணியே–அழகிய மணவாள நயினார்
அண்ணன் முடும்பைல காரியன் கலையார் பொருளென்
திண்ணன்னுளத்திற் றிகழ்ததுவிப்பா யென்றுன் சேவடி யாங்
கண்ணன் மலர்களிற் கையடை புக்கனன் காந்து மணி
வண்ணன் மகிழு மரங்க நகரன்னை வானவியே--பிள்ளை லோகாச்சார்யார்
சாந்த குண னங்கள் கூர குலோத்தம தாதர் பத
காந்த மென்னெஞ்சக் கரும் பொற் கவரக் கணித்தி யென்றுன்
சேந்த கமலத் திருவடியிற் சரண் சேர்ந்தனன் செங்
காந்தளங்கையாய ரங்க நகரன்னைக் காஞ்சனமே--கூர குலோத்தம தாச நாயன்
விஞ்சிய யோகி விளாஞ்சோலைப் பிள்ளை விரை யடி யென்
நெஞ்சினில் வைத்துதித் துய்யும் வண்ண நினைத்தி யென்றுன்
கஞ்சவடிகளிற் கையடை புக்கனன் காதரரை
அஞ்சலென்றாளு மரங்க நகரன்னையாந் திருவே--விளாஞ்சோலைப்பிள்ளை -இவருக்கு நலம் திகழ் நாரணன் என்னும் திருநாமமும் உண்டு –
ஊக்கத்துடன் றன் குரவனை யுன்னு முளத்து மணப்
பாக்கத்து நம்பி பதந் தொழுதுய்யப் பணித்தி யென்றுன்
ஆக்கக் கழலிலடைக்கலம் புக்கன னன்பர் மனத்
தேக்கத்தை நீக்கு மரங்க நகரன்னை யின்ப வைப்பே–மணப்பாக்கத்து நம்பி
ஆவலறுத்தோர்க் கருளுங் குண நிதியான கொல்லி
காவல தாசர் கழறொழுதுய்யக் கணித்தி யென்றுன்
பூவலர் பாதம் புகல் புகுந்தேன் புன்மை போக்கு மறை
நாவலரேத்து நலத்தா யரங்க நகரன்னையே–கொல்லி காவல தாசர் –
வண்மைக் கோட்டூரண்ணர் வாரிசத் தாளை வழுத்தி யென்றன்
தண்மைச் சனனந் தவிர்ப்பானுளத் தெண்ணித் தாழ் வொன்றில்லா
உண்மைச் சுருதித் தலை வாழ் நின்றாளிலு வந்தடைந்தேன்
ஒண்மைக் கருணை யரங்க நகரன்னை யுத்தமியே–கோட்டூர் அண்ணர்
கண்ணங்குடிப்பிள்ளை கண்ணருளாலென் கடு வினையைத்
திண்ணங்குடி யெவனெனும் புகுவிக்குஞ் சிந்தையனாய்
வண்ணங்குடி கொணின் வண் பத மெய்தினன் மாசறுத்தோர்
எண்ணங்குடி கொளரங்க நகரன்னை யிந்திரையே–திருக் கண்ணங்குடிப் பிள்ளை
திருப்புட் குழி யமர் சீயர் திருவடி சேர்ந்து பெரு
நெருப்புட்டணந்தரு நீள் பவ நீக்க நினைத்து நின்றன்
திருப் புட்கரச் சேவடிச் சரண் சேர்ந்தனன் சீத மதித்
திருப்புட்கரிணி யரங்க நகரன்னைச் செய்யவளே--திருப்புட் குழிச் சீயர்
திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சேவடி யென்
கருமலை நன் மருந்தா வெண்ணி வாழக் கணித்தி யென்றுன்
மருமலி தாளின் மறை புகுந்தேன் றொண்டர் மா மனத்தின்
பொரு மலை நீத்தாள ரங்க நகரான்னைப் பொன் மகளே–திருவாய் மொழிப் பிள்ளை
மாட்சிக் குணத்தெம் மணவாள மா முனி மணடியைப்
பூட்சிக்குரிய வென் புந்தியில் வைத்துப் புனிதமுறக்
காட்சிக்குரிய நின்காற் சரண் புக்கனன் காழ்த்தவண்ட
ஆட்சிக்குரியா யரங்க நகரன்னை யச்சுதையே--மணவாள மா முனிகள்
உண்டிக் குடைக்குழல்வேன் றொழுதுய்ய வுவக்தி யென்றுன்
எண்டிக்கி பங்களெனு மெண்மராரிய ரிண்டை யடி
தொண்டக் குலந் தொழுந் தூவடியிற் சரண்டுன்னினனால்
அண்டக் குலத்தாயரங்க நகரன்னை யற்புதையே–அஷ்ட திக் கஜங்கள்
நானெறிப் பட்ட குரவர் பலரவர் நாமம் வண் சீர்
நூ நெறி கண்டு னுவன்று நிற் சார்ந்திடு நோன்மையிலேன்
ஏனெறி காறுமியம்பி நினைச் சரணெய்து மெனை
மேனெறி யுய்த்தாளரங்க நகரன்னை மெய்ப் பொருளே—நானெறி-1-ஆஸ்ரயண குரு பரம்பரையும் -2-ரஹஸ்ய த்ரய குரு பரம்பரையும் -3-அருளிச் செயல் வியாக்யான குரு பரம்பரையும் -4-ஸ்ரீ பாஷ்ய ஸ்ருத பிரகாசிகா குரு பரம்பரையும் –
சிருட்டி முதலிது காறுமெடுத்த செனனந் தொறும்
மருட்டி வருமன மாதியிற் செய்தவழு வறுத்தெற்
நெருட்டிப் பணி கொளெளப் புகல் புக்கனன் செய்யவருட்
டிருட்டி வைத்தாடி யரங்க நகரன்னைச் செய்யவளே
தெருட் கடல் செய் மதித் திண்மையைத் தேய்த்துத் தெறும வித்தை
இருட் கடல் வற்ற விழைத்தி யென்றுன்னை யிரந்தடைந்தேன்
அருட் கடலே யெனை யாளுதி யாரணத் தந்தமுரை
பொருட்கடலே நல்லரங்க நகரன்னைப் பூமகளே.
ஒரு காலெனப் பல காலுளத்தார்த்தி யுவட்டலினின்
இருகாற் கமலத்திடைச் சரண் புக்கனனேன்றெனை நின்
பெரு காரருட் கிலக்காக்கனினக்குப் பெருமை யதாம்
முருகார் குழலா யரங்க நகரன்னை முன்னவளே
ஊக்கக்தொடு நின்னுபய வடிகளினுற்றவன் பின்
ஓக்கக்தொடு சரண்புக்க வென்மீ துன்னுள மிரங்கிக்
காக்கக் கருதிடினின் பேர் கருணைக் கடலெனலாம்
ஆக்கத் துணைவி யரங்க நகரன்னை யம்புயையே
குற்றமென நூல் குறிக்கின்ற யாவைக்குங் கொள் கலனா
யுற்ற வெளியனை யோம்புமவ ரிவ் வுலகுதனில்
அற்றவனாய் நின்னடி யிணை யம்புயப மண்டை கொண்டேன்
நற்றவர் போற்று மரங்க நகரன்னை நாயகியே-
புறவொன்று தன்பாற் புகு வேடன் றன்னைப் புரந்து துண்டவ்
வுற வொன்று கொண்டு நின்னொண் கழலிற் சரணுற்றடைந்தேன்
துறவொன்று தூயவர் நெஞ்சத் தொளிருஞ் சுடரொளியே
நறவொன்று கூந்தலரங்க நகரன்னை நாயகியே-
கண்டு முனிவரன் கட்டுரையின் படிக்கை யடை நிற்
கண்டு புகுந்தோனெ வனாயினு மவற் காத்தனன் றாம்
விண்டு கை சோர விட றீது மெய்யின்ப வீடளிக்கும்
விண்டுவின் பன்னி யரங்க நகரன்னை வித்தகியே-
அறத்திற் கடைப்பட்ட வாதனின் பாத வரணடைந்தேன்
அறத்திற் குறவிலனாயினு நீ யெனை யாதரித்தல்
அறத்தி சிறந்த வறமென நூல்களறைந்து நிற்கும்
அறத்திற் கருத்துணையாகு மரங்க நகரன்னையே-
பல்வழி யானும் படர் படச் சன்மப் பரவைக்கும்
அல்வழிகாட்டி யடியனைக் கூத்துகளாட்டி நிற்கும்
வல்வழி மாயையை மாய்ப்பானினைச் சரண் வந்தடைந்தேன்
நல்வழி சேர்த்தி யரங்க நகரன்னை நாயகியே-
பிறவிப் பிணிக்குப் பெரும் பீரடைந் ததைப் பேர்த்திடு நின்
அறவிப் பிரர் தொழு மம்புயத் தாளிணை யண்டை கொண்டேன்
மறவிப் பிரமமொழித் துனை யேத்தும் வரமருள்வாய்
துறவிப் பிரிய வரங்க நகரன்னைசத் தூயவளே
பிறப்பினை யெண்ண வென்னெஞ்சந் திடுக்கிட்டுப் பீரடையும்
இறப்பினை யெண்ண விதயம் விதிர்விதிர்த்தேங்கி நனி
விறப்பினை நண்ணு மதனானினைச் சரண் வேட்டடைந்தேன்
சிறப்பினை நல்கு மரங்க நகரன்னைச் செய்யவளே
பத்தி யிலாதவன் பாமரன் பாதகன் பற்று மனச்
சுத்தி யிலாதவன் சொல் கவிச் சொற் பொருட்டோம் பொறுத்து
முத்திவைத்தாள நின் முண்டகத்தாளின் முயன்றடைந்தேன்
நத்தி யெற்காத்தனலமா மரங்க நகரன்னையே-
போற்றி திருமுகம் போற்றி கருணை பொழி திருக்கண்
போற்றி புன் மூரல தரங்களங்குழை பூண்ட கன்னம்
போற்றி வரதாபயகர முந்தி பொலி யுரம்
போற்றி யரங்க நகரன்னை பொங்கொளிப் பொன்னடியே-
வாழி யரங்க மத வள மன்னதில் வாழ் முகுந்தன்
வாழி யரங்க நகரன்னை நாளும் வளர் கருணை
வாழி யிரு மறை யாழ்வார் களாரிய வர்க்க மென்றும்
வாழி யெதிபதி திப்பிய வாணை யிவ் வையகத்தே-
வைப்பா மரங்க நகரன்னை தாளில் வயங்கு சத
முப்பான் ௧வியாலடைக்கல மாலை மொழிந் தனனால்
ஓப்பாரிலா வைணவர் பதமுள் வைத்துவப்பவர் பாற்
பப்பார் பரிவினன் பள்ளி கொண்டா னெனும் பாவலனே-
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பள்ளி கொண்டான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply