Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ திரு விருத்தம் -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 25, 2020

இவனோடு கூட ஒரு படுக்கையிலே இருக்கச் செய்தே பிரிந்தான் என்று நினைத்து
பிரிந்தால் பிறக்கும் காரியமும் பிறந்து – செல்லுகிறது –

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11–மாலுக்கு வையம் -6-6-

ஆகாரத்தே பட்ட முத்தும் –பசும் பொன்னாய் இருந்த படி-இவை உண்டாய் இருக்கப் போகையாவது என்
இக் கண்களைக் கண்டார் படும்பாட்டை -கண் தான் பட்ட படி

ஸ்வா பதேசம் –
இத்தால் ஆழ்வாருக்கு வைஷ்ணவர்களோடே கூடி இருக்கச் செய்தே பிரிவை அதிசங்கை பண்ணி
நோவு படும்படி பிரிவு பொறாமை -இருந்தபடி –

————-

கீழ் எல்லாம் வைஷ்ணவர்களை தலைமகனாகப் பேசிற்று -இதில் எம்பெருமானைத் தலை மகனாகப் பேசுகிறது –
பகவத் சம்ஸ்லேஷம் பாகவத சம்ஸ்லேஷ பர்யந்தமாய் நிற்கக் கடவதாகையாலும்
இவர்க்குக் கீழ் உண்டான பாகவத சம்ஸ்லேஷம் பகவத் சம்ஸ்லேஷம் பர்யந்தம் ஆக்கின படி –

பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-

தலைவன் பிரியப் பெற்ற தலைவி தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல்-

மணி மாமை என்று தன் நிறத்தைத் தானே கொண்டாடுவான் என் என்னில்
ஒரு நிறமே ஒரு எழிலே என்று அவன் கொண்டாடும் படிகளை கேட்டிருந்த படியாலே
தனக்குத் தான் அன்றியிலே அவனுக்குக்காகத் தான் இருக்கையாலும் –

சார்வ பௌமரான ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலேயும்
ஸ்ரீ பர்ண சாலையில் நின்றும் இளைய பெருமாள் போக ராவணன் புகுந்தால் போலேயும் –பயலை பரக்கிற படி-
கலப்பதற்கு முன்பு முப்பது நாழிகையாய் இரா நின்றால்-கலந்தவாறே ஒரு ஷணமாய் இரா நின்றது
பிரிந்தவாறே கல்பங்களாய் இரா நின்றது –

ஈர்க்கின்ற சக்கரம் –பிரதிகூல ரைப் போய் ஈரும்-அனுகூலரை கையில் சேர்த்தியாலே ஈரும்
பிரதிகூலரை ஆண்மையாலே கொல்லும்-அனுகூலரை அழகாலே கொல்லும் –

தம்முடைய நெஞ்சை நல் நெஞ்சினார் என்பான் என் என்னில்
பிரஜைகளே யாகிலும் பகவத் விஷயத்தில் முற்பாடானார் ஆனாரை இங்கன் அல்லது சொல்லல் ஆகாது –

ஸ்வா பதேசம் –
மன ஏவ மனுஷ்யாணாம் -என்னும்படியாலே–இவர் நெஞ்சம் அங்கே பிரவணம் ஆனபடி –

————-

ஆசுவாச கரமான காலம் போகையும் ,பிரதி கூலமான காலம் வருகையும் ,அதற்கு சக காரிகள் குவாலாகையும்
ரஷகன் வாராது ஒழிகையும் முடிந்தோம் இறே என்கிறாள்

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13—மல்லிகை கமழ தென்றல் -9-9-

ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-
மறந்தும் புறம் தொழா அடிமைத் தனத்தை பாதுகாப்பார் யார் –வளை-அநந்யார்ஹ சேஷத்வம்-

————–

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-நலம் பாராட்டு துறை–துவளில் மா மணி மாடம் -6-5-

தோல் புரை போகிறதில்லை-அச்சேத்யோயம்-என்று அழிக்காததை அழித்தபடி-
அயர்வறும் அமரர்களுக்கு தாரக போஷகமாம் படி விட்டு இருக்கும் திருமேனி
அம்மான்-அவ் வடிவுக்கு தோற்று ஜிதம் என்று இருக்கும்-
அப்படி விலஷணமான விஷயத்தை காற் கடை கொண்டு ,அதிலும் விலஷணமான இக் கண்களை தேடி வருகிற படி–
அப்பிராக்ருதமாய் இருக்கிற படி –கண் என்று சம்சயித்து ,கயல் என்று நிர்ணயித்த படி-
பரமபதத்தினால் தேடப்படுகின்றன -நித்ய முக்தரும் ஆசைப்படும் கண்கள்-

————–

பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,அமாணனை பட்டு திரியுமா போலே ,இவர்களை இழந்து ,
தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15—கண்ணன் கழலினை -10-5-

முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல ,இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் ,
வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த படி-
அவனுக்கு தன் ஓர் ஆயிரம் பிள்ளைகளோ பாதி , இவளுக்கும் அநேகர் உண்டாய் இருக்கையாலே ,அவனோடு கிட்டினார்க்கு ,
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்னுமா போல இறே இவர்களோடு கூடினாரும் இவளை போலே இறே இருப்பது-
இத்தனை காலம் வழி பார்த்துக் கண் மறைந்தோம்-இப்போது வந்தீரோ உம்முடைய ஆற்றாமை காட்ட –
நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொகட்டு இன்றோ உமக்கு போது விடிந்தது என்கிறான் –
இத்தால் ஆழ்வாருடைய வை லக்ஷண்யத்தைக் கண்டும் இப்படிப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டும் தாம் ஈடுபடுகிறபடி –

——————

சில காலம் சம்ச்லேஷித்த தலை மகன் பிரிந்தான் ..பிரிந்து முற்றினது என்னவாம் -பிரிந்து பிரதம தசை என்னவுமாம்
தோழி வார்த்தை என்னவுமாம் -தலை மகள் வார்த்தை என்னவுமாம்– அநேக காலம் கலந்து அல்ப காலம் பிரிந்தால்
அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16—பயிலும் சுடர் ஒளி -3-7-

பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-
இத்தால் ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-

——————–

சம்ஸ்லேஷித்து செல்லா நிற்க செய்தே முகம் தெரியாமே போக என்று நினைத்து ,இருளிலே நாயகன் தேரிலே ஏறி போக
தன் ஆற்றாமையாலே சக்கரவர்த்தி திரு மகனைப் போலே தேர் காலை மறைத்து போகாதே தெரியும் படி போன தேர் காலைப்
பார்த்து தரித்து இருக்க ,சமுத்ரமானது ,தன் திரையாலே வந்தது இத்தை அழிக்க புக ,கடலை நோக்கி சரணம் புகுகிறாள்
பெருமாள் போலே இவரும் கடலை சரண் அடைகிறார்

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் ஏறி கடலே–17—அணைவது அரவணை மேல் -2-8-

கடலுக்கு நெஞ்சில் சீற்றத்தாலே கருத்து இருந்தது -உள்ளது எல்லா வற்றையும் கொடுத்து உஞ்ச விருத்தி பண்ணி
ஜீவிப்பாரை போலே ,அவரை போக விட்டு வழி பார்த்து கிடந்தோம் –இத்தை அழியாதே கொள் என்கிறாள்-
சம்ச்லேஷம் அறிந்தாய் அத்தனை போக்கி –விச்லேஷம் புதியது உண்டிலை காண் –
அவனைக் கிட்டினார் பர சம்ருத்யைக பிரயோஜனராய் அன்றோ இருப்பது –உன்னைக் குற்றம் கொள்ளுகிறது என் ?
உனக்கும் குருகுல வாஸம் அங்கே அன்றோ ? தம்மையே ஒக்க அருள் செய்வாரே

————

ஏழாம் பாசுரம் போல் கால மயக்கு துறையாகும் இதுவும் ..அது மழை காலம் தொடக்கம் இது முடிவு –
இவன் இவள் ஆகியும் ,அவன் அவனாகையும் ,தசை இதுவாகையும்,இது அல்லது இல்லையே இருந்த படி –
கீழ் காண்கிற பதார்த்தங்களை அபலபித்து கால மயக்கு ஏற்பட -இங்கு பதார்த்தங்களை அபலப்பதும் செய்து
சாஸ்திர சித்த மானவற்றை முன்னிடுவதும் செய்தது -மேகத்துக்கும் கடலுக்கும் அன்யோன்யம் விரோதமாய் பிணங்குகிறது காண்-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18—சூழ் விசும்பணி முகில் -10-9—

இப் பிரளயத்துக்கு அடி கடல் உடைந்தால் போல் இக் கண்ணில் வெள்ளம் காண்
காரிகையே–இவை எல்லாம் பொறுக்க மாட்டாத அபலை கிடீர்-
இவளை ஜீவிப்பைக்காக காலத்தை மயக்கி ஆசிவசிப்பிக்கிறாள் -நம்பிள்ளை
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -இது காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்த பாசுரம் என்பர்-

——————–

ஆணை அணி வகுத்தால் போல-மேகம் நாலு மூலையும் கையும் அணியும் வகுத்து வர்ஷிகிற படியை கண்டு இவள் மோஹிக்க-
“எம்மின் முன்னவருக்கு மாய்வர் “-திருவாய் மொழி -1-1-5-என்னும் படி இவள் உடைய மோகத்தை கண்டு தோழியும் மோகிக்க
இவ் அளவிலே உணர்ந்து இருந்த தாயார் இவ் அவசாதம் நீங்கிடுக என்று ரஷா விதாநம் பண்ணுகிறாள்-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19—பாலனாய் ஏழு உலகு -4-2-

அம் தண் துழாய் -போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை –சாந்தா கரணி -விசல்யா கரணி-என்னுமா போலே —
இறை கூய் அருளார்–பிரணயித்வம் தவிர்ந்தால் ச்வாமித்வமும் தவிர வேணுமோ ?
தாம் வந்து அணைத்து தம் தோளில் மாலை என் மார்பில் கிடக்க பேரா விட்டால் சத்தா தாரமாக அது தனையும் தந்தால் ஆகாதோ ?
தாமே வரவுமாம் -அழைக்க்கவுமாம்–பேறு அத் தலையாகவே என்று இருந்த படி-
இப்போது இவர் பழி என்கிறது–பகவத் பிராவண்யத்தை இ றே-அத்தை பழி என்பான் என் என்னில்-
அத் தலையால் வரக் கண்டு இருக்கும் அத்தனை ஒழிய இத் தலையால் பெற ப்ரவர்த்திக்குமது பழியாய் இருக்கும் இறே –
ஆன பின்பு பழி என்னத் தட்டில் இறே -நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்

இத்தால் ஆழ்வாருக்கு பக்தி வியதிரேகத்தில் அங்கே சம்பந்தம் உள்ளதால் ஒன்றாலே ஆகிலும்
தரிக்க வேண்டும் படி ஆற்றாமை மிக்க படி சொல்லிற்று-

——————-

மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-இத்தசையைக் கண்டு சோகித்து இருக்கிற
திருத் தாயார் முன்னே தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-அபிஜாதையுமாய்
இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி கருமுக மாலையை -நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –
இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று அத்தை நிஷேதித்திக் கொண்டு –
இவளுடைய நோயையும் இந்நோய்க்கு நிதானத்தையும் இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –

சின் மொழி நோயோ கழி பெரும் தெய்வம் ,இந நோய் இனது என்று
இன் மொழி கேட்க்கும் இளம் தெய்வம் அன்று இது வேலன் நில் நீ
என் மொழி கேண்மின் என் அம்மானை ஈர் உலகு ஏழும் உண்டான்
சொன் மொழி மாலை அம் தன் துழாய் கொண்டு சூடுமினே –20–வெறி விலக்கு துறை –தீர்ப்பாரை யாமினி -4-6-

சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது ஒரு சர்வ சக்தி வேண்டாவோ
இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி –
சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் -தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று மேல் பூசும் மருந்தும் –
தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 24, 2020

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –

கருவிருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே –

இருள் தரும் மா ஞாலத்தில் அவித்யாதி தோஷங்களை அனுசந்தித்தால் இறே திரு நாடு சித்திப்பது
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவில்ல தரம் உடையவர் ஸ்ரீ ஸூக்தி இறே–
அருளே தாரகமாய்-ஆழ்வாருக்கு அவஸ்தா சப்தகங்களும் பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்-

———–

இந்நின்ற நீர்மை -என்கையாலே முக்தர்
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்கையாலே -முத்த ப்ராயர் -என்றும்
மாறி மாறி -என்கையாலே -நித்யர் என்றும்
அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்கையாலே எம்பெருமான் என்றும் சங்கை வருமே-
இவர் சம்சாரத்தில் ஒருவராம் இத்தனை –
அராஜகமான தேசத்திலே ஆனையைக் கண்ணைக் கட்டி விட்டால் ஆனை எடுத்தவன் ராஜாவாமா போலே
எம்பெருமான் கடாஷித்தார் ஒருவராம் இத்தனை-

மகாராஜருக்கு பெருமாளைக் கண்ட பிரியமும் வாலிக்கு அஞ்சிப் போந்து இருந்த அப்ரியமும் போலே
இவருக்கும் பிரக்ருதியோடே இருக்கிற அப்ரியமும் எம்பெருமானைக் கண்ட பிரியமும் –
பகவத் விஷயத்தில் அவஹாகிக்கும் போது கடகர் வேண்டுகையாலும்-அனுபவ தசையில் வ்ருத்த கீர்த்தனம்
பண்ணுகைக்கு இவர்கள் வேண்டுகையாலே வைஷ்ணவர்களையும் தலை மகனாகப் பேசுகிறார் –

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும்–அழுந்தார் பிறப்பாம் -என்றும் உபக்ரமமும் உபசம்ஹாரமும்
ஏகார்த்தம் ஆகையாலே-விரோதியைப் போக்கித் தர வேணும் என்கிறது இப் பிரபந்தத்தால் –

—————-

சர்வேஸ்வரன் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களையும் நித்ய விபூதி யோகத்தையும் லீலா விபூதி யோகத்தையும்
காட்டிக் கொடுக்க கண்டு இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –

திருமாலால் மயர்வற மதிநலம் பெறும்படி அருளப்பட்ட நம்மாழ்வார்
தம்முடைய அனுபவ பரிவாஹங்களான பிரபந்தங்கள் நாலில் முதல் பிரபந்தமாய் இவர் தம் வ்ருத்தாந்தங்களை
முன்னிடுகையாலே திருவிருத்தம் என்ற பேர் பெற்ற பிரபந்தத்தில் முதல் பாட்டில் பூர்வ உபகார ஸ்ம்ருதியை
முன்னிட்டுக் கொண்டு உத்தர உபகார அபேக்ஷையிலே உபக்ரமிக்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1—ஒழிவில் காலம் –3-3-

நின்ற-இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ
விவேகம் பண்ணி அருளினார்
இந்நின்ற நீர்மை -ருஷிகள்பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்-
ஆழ்வார் பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்-தம் படியைக் காட்டுகிறார் -ஆளவந்தார் நிர்வாஹம்
இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்-இது ஒரு வெட்டு – பொல்லா ஒழுக்கம் -இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு

இனி-உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு-
யாம் உறாமை -பரா அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்-
யாம் -என்கிற இது -பரித்ராணாயா சாதூனாம் -என்கிற சாது பஹுத்வத்தைக் காட்டுகிறது
பசு மனுஷ்யா பஷி வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரய -இத்யாதிகள் படியே சம்பந்திகளையும் கூடக் காட்டுகிறதாகவுமாம்
உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் -நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு-

மெய் -உன்னுடைய திவ்ய மங்கள விகிரஹத்துடன் சேவை சாதித்து அருள வேணும்
திரௌபதிக்கு வராமல் புடவை சுரந்தது போலே ஆகாதே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் என்னும்படி என் அழுக்கு உடம்புக்குள்ளே ஜூகுப்ஸை பண்ணாதே அணியனாய் நின்று என்னவுமாம் –
விஞ்ஞாபனம் இதம் சத்யம்-மங்க வொட்டு உன் மா மாயை -என்னும் அளவும் செல்ல-
அறிவித்தால் இத்தலைக்கு செய்ய வேண்டுவது இல்லாமை-

அடியேன் -என்கிறார் இவருடைய நான் -இருக்கிறபடி –
நான் என்றாகில் இ றே -சொன்ன வார்த்தை -எனபது–அடியேன் -என்கையாலே -செய்யும் விண்ணப்பம் -என்கிறார்

பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று –

இப்பாட்டில்
சுத்த அசுத்த ரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
சித் அசித் பேதமும்
பத்த முக்த நித்ய விபாகத்தை உடையரான ஜீவர்களுடைய அன்யோன்ய பேதமும்
ஜீவ ஈஸ்வர பேதமும்
ஈஸ்வர ஐக்யமும்
ஞான ஞாத்ரு பேதமும்
சத் அசத் ஞான பேதமும்
சத் அசத் அனுஷ்டான பேதமும்
சித்த ஸாத்ய உபாய பேதமும்
பர அவர புருஷார்த்த பேதமும்
கிடக்கிறபடி யதாஸ்தானம் சப்தமாகவும் அர்த்தமாகவும் அனுசந்திப்பது

புருஷோத்தம வித்த்யையில் சொன்ன சர்வாதிக்யத்தை யுடையனான ஸ்ரீ யபதி தன்னுடைய திவ்ய அவதார பிரகாரத்தை
பஹுனி மே வியதீதானி என்று – தொடங்கி தான் அறிவித்தபடியே அறிந்தார்க்கு எல்லாம் அதிகார அனுகுண
உபாய பூர்த்தியைப பண்ணிக் கொடுத்து – இத் தேகம் விட்டால் இனி ஒரு பிறவி வேண்டாதபடி
ஸ்வ ப்ராப்தியைக் கொடுக்கும் என்கிற இவ் வுபகாரம் இப் பாட்டுக்கு பிரதான தாத்பர்ய விஷயம் ஆகிறது –

————

இமையோர் தலைவா -என்று அவனுடைய பரம பும்ஸ்வத்தை முதலிலே அனுசந்தித்து
அப்படி அவனைக் கிட்டப் பெறாமையாலே ஆண் -பெண்ணாம் படி யாயிற்று –
ஒரு பிராட்டி தசையாம்படி எங்கனே என்னில் சம்ச்லேஷத்தில் இனிமையும் விச்லேஷத்தில் தரியாமையும்
ச்வத சித்தமான சம்பந்தமும் –அனந்யார்ஹ சேஷத்வம் -உண்டாகையாலே –
அநந்ய சரணத்வம் அநந்ய போக்யத்வம் ததேக நிர்வாஹ்யத்வம் மூன்றும் உண்டே –

இவருக்கு கீழ்ச் செய்தது ஜ்ஞான லாபம் ஆகையாலே அநந்தரம் பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்
ஈஸ்வரனுக்கு இங்கனே இருப்பதொரு புடை உண்டு-பிரஜைகள் பசித்திருக்க விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாராண பரிகரத்துக்கு தாழ்த்தும்-மகா ராஜர் கார்யம் செய்து பின்னை பிராட்டி கார்யம் செய்கை-

இவளுக்கு சம்ச்லேஷம் வ்ருத்தமாக கழிந்தது என்று அறிந்து இனி நாம் உடன்பட்டு இவள் சத்தையை உண்டாக்கிக் கொள்வோம்
என்று இது ஓர் வடிவு இருந்த படி என் இவ்விருப்பு நித்யமாக வேணும் – என்று தோழி மங்களா சாசனம் பண்ணுகிறாள் –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—கோவை வாயாள் -4-3-

அஸி தேஷணை-கண் கிடீர்-பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்
இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்-இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை –
அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே –
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி –
மேகம் ஜலம் இரண்டாய் இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –
கண்களுக்கு கயலும் -கண்ண நீருக்கு தடாகமும் –

ஓர் அவயவம் நன்றாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கும்
ஒருவனுக்கு பவ்யமாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நீர்மை உடையார் இல்லை என்று இருக்கும்
ஒருவனுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நிர்வாஹகர் இல்லை என்று இருக்கும்
இம்மூன்றும் கண் அழிவு அற உண்டான பசும் கூட்டு இறே பரதத்வம் ஆகிறது-
சந்தன கர்ப்பூர கும்கும கூட்டு போலே-இதுக்கு இறே இவள் ஈடுபட்டது
நீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவாரம் தொழும் -பத த்ரயத்துக்கும் வியாக்யானம்

ஸ்வாபதேசம்-பிரதம தர்சனத்திலே பிரகிருதி பிராக்ருதங்களிலே உபேஷை பிறக்கும்படி தமக்கு பகவத் விஷயத்தில்
பிறந்த ப்ராவண்யத்தைக்-கண்டார் உகந்து பேசும்படியை தாம் அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

————

கீழில் பாட்டில்-பிரிவின் பிரதம அவதி யாகையாலே-தன்னுடைய தசையை ஸ்த்ரீத்வத்தாலே ஒழித்தாள்
அங்கன் அன்றிக்கே தோழிக்கு சொல்லித் தரிக்க வேண்டும்படிக்கு ஈடான தசா விபாகத்தாலே
அவன் பின்னே போன நெஞ்சானது வருமோ -அங்கனே போமோ -என்று தோழியைக் கேட்கிறாள் –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3—வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பெரிய பிராட்டியார் – ஆஸ்ரிதர் குற்றத்தை பொறுக்கும் பிராட்டி –
குற்றம் காண்பான் என் பொறுப்பான் என்-என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி
நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும் –
பெரிய பிராட்டியார் இவனுக்கு சம்பத்தாய் இருக்கும் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி -அது விளையும் தரை
நப்பின்னை பிராட்டி அதனை அனுபவிக்கும் போக்தா –

நிழற் போல்வனர்-அவனுக்கு நிழல் போலே இருப்பவர்கள் –ஒருவருக்கு ஒருவர் நிழல் போலே இருப்பவர்கள் –
ஆஸ்ரயித்தாருக்கு நிழல் போலே இருப்பவர்கள் –
மிக்க சீர் இத்யாதி-அநந்ய பிரயோஜனர் இட்ட அழகிய திருத் துழாயின் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில்
அநந்ய பிரயோஜனர் என்பான் என் என்னில் -அத்தலைக்கு பரிவார் உண்டு என்று தான் தேறுகைக்காக-

ஸ்வா பதேசம் –
பிராட்டிமாரையும் நித்ய சூரிகளையும் சொல்லுகையாலே சர்வ ஸ்மாத் பரனாய்-ஸ்ரீ வைகுண்ட நாதனாய்
இருக்கிற இருப்பிலே தமக்கு பாவ பந்தம் பிறந்தது என்னும் இடம் சொல்லுகிறது –

———–

இமையோர் தலைவா -என்னும்படியே நித்ய விபூதியைக் காட்டிக் கொடுக்கையாலே
அங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியைச் சொல்லுகிறது –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4—ஓடும் புள்ளேறி -1-8-

தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல்
திருவடி மேலே இருக்கிற இருப்பிலே தோளின் மாலையோடு அணைக்கக் காணும் ஆசைப் படுகிறது –
திருத் துழாயை முடித்து வந்து போலே காணும் பூதனையை முடித்தது –
பனி நஞ்ச மாருதமே -விசஜாதியர் செய்யுமத்தை சஜாதீயமான நீ செய்யக் கடவையோ-

————

மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே பரபக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் ஏக ஷணத்திலே இவர்க்கு உண்டாகையாலே
இங்கே இருக்கச் செய்தே-ஸ்மாரகமாய் நலியும்படி -இவருக்குப் பிறந்த ஜ்ஞான வைசத்யம் இருந்த படி –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5—மாயா வாமனனே -7-8-

நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை கிளவித் துறை –

பதார்த்தங்கள் ஸ்வ பாவ பேதமும் ஸ்வரூப பேதமும் பண்ணிக் கொண்டே யாகிலும் இவளை அழிக்க நினைத்த படி-
அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால் அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோ

————-

நாயகி உடைய முழு நோக்கிலே அகப்பட்ட நாயகன் தாம் தாம் சத்தைக் கொண்டு தரித்து இருக்க வேண்டுவார்
இச் சந்நிவேசத்திலே செல்லாதே கிடிகோள்-என்கிறான் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6—உண்ணும் சோறு -6-7-

அம்பு -என்கிறது ஜாதி பன்மையாலே–சிலைகளும் -என்கிறது இரண்டாகையாலே
அம்பும் சிலைகளும் உபமானமாக சொல்லாதே தானேயாக சொல்லுவான் என் என்னில் -சர்வதா சாத்ருசம் உண்டாகையாலே –
தனக்கு என்ன ஒரு கொள் கொம்பைப் பற்றி அல்லது நிற்க ஒண்ணாத அளவிலும் செயல்கள் இப்படியாய் இருக்கை –
காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிறவன் –அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே தானே முடிக்கை-

ஸ்வா பதேசம் –
சம்சாரத்திலே குடியும் தடியுமாய் இருக்க நினைத்தார் ஆழ்வார் திருப்புளிக்கு கீழே இருக்கும் இருப்பு காணச்
செல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறது –குடி -க்ருஹம் தடி ஷேத்ரம்-ஆழ்வாரை சேவிக்க சம்சாரம் அடி அறும் –

————

பிரபஞ்சாபலாபம் பண்ணி -ஈஸ்வரனும் ஜகத்தும் இல்லை என்பார்கள் -பாஹ்யர்கள்
இவள் ஜகத்தும் ஈஸ்வரனும் உண்டாகைக்காக செய்கிறாள்-இப்படி கால ஷேபம் பண்ணாது ஒழியில்
நாயகி ஆற்றாளாய் முடியும் -இவள் இல்லையாகில் அவன் இல்லையாம் -பின்னை விபூதியாக இல்லையாம் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7–கால மயக்கு–இன்னுயிர்ச் சேவல் -9-5–

அவன் உகப்பாரை கை விடுமவன் அன்றே–இவளுக்கு ஆசை இல்லாமை அன்று -வர வேண்டும் தசை இல்லாமை அன்று
பிராப்தி இல்லாமை அன்று -திருமால் -என்றதால் பிராப்தியும் சித்தம்-
காண்கின்ற என் பாபம் இத்தனை இறே -மத்பாபம் ஏவா துர் நிமித்தம் –

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் உடைய விஸ்லேஷ தசையைக் கண்ட வைஷ்ணவர்களுக்கு பிரபஞ்ச அலாபம் பண்ணி யாகிலும்-
தரிப்பிக்க வேண்டு இருக்கிற படி –

——————–

இப்படி தோழி இவளை தர்ப்பித்த அளவிலே நாயகன் வந்து இவளோட்டை அதிமாத்ரமாக சம்ச்லேஷம் பண்ணின
படியைக் கண்டு யதா பூர்வமான பரிமாற்றம் அன்றியே கலவியிலே குவால் வகைகள் உண்டாய் இருந்தது
இப்படி செய்கைக்கு அடி பிரிய நினைத்தானாக வேணும் என்று அதி சங்கை பண்ணுகிறாள் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8––கையார் சக்கரம் -5-1-

காலை எடுத்து தலையிலே வைப்பது கும்பிடுவது -அடியேன் -எனபது வாயது விரல் மார்பத்து எழுத்து என்று
சொல்லுகிற சாடு சதங்கள்-பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற இவற்றின் ஹேது அறிந்தோம் –
மகா ராஜர் பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக விட்டுப் போய் உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதா போலே
இப்போது எங்கே குருகுல வாசம் பண்ணினீர் –அம் மென்மை எல்லாம் போய் திண்மை எங்கே உண்டாயிற்று-

————–

எம்பெருமானார் திரு மலைக்குப் போவதாய் பிறந்த படி கேட்டு பிள்ளை உறங்கா வல்லி தாசர் தம் அகத்தே போய்
மூடிக் கொண்டு கிடந்து காண்கின்றனகளும் -என்கிற பாட்டை அனுசந்தியா நிற்க
அங்குச் செய்கின்ற அளவு என்ன என்று ஒரு வைஷ்ணவரை போக விட இப் பாட்டை அனுசந்தித்து சோகித்து கிடந்தார் -என்ன
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் -என்று சொல்லி போர மாட்டிற்று இல்லையோ என்று அருளிச் செய்தார்-
தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் –

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-பொலிக பொலிக –5-2-

எம்பெருமான் தம் ஒருவருக்குமே மயர்வற மதி நலம் அருள தாம் ஜகத்துக்கு மயர்வற மதி நலம் அருளின படி –
தாமே சொல்லினும் -வண் சடகோபன் -என்று இறே சொல்லுவது-
மணி வல்லி -தனக்குத் தான் ஆபரணமாய் இருக்கிற படி-நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய கொடி –
கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறபடி – ஒரு கொம்பிலே சேர்க்க வேண்டி இருக்க
நிலக் கிடை கிடக்கிற படி –பிரணயித்வம் இல்லாமை யாகிலும் சைதன்யம் இல்லையோ

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் வைஷ்ணவர்களோடே கூட இருக்கச் செய்தே பிரிவு வரில் செய்வது என்-என்று அதி சங்கை பண்ண –
அத்தைக் கண்ட வைஷ்ணவர்களே பரிஹரிக்க வேண்டி இருக்கிறபடி –

————

துறை -மதி உடன்படுதல் –தலைமகள் தோழி மாரும் தானுமாய் புனத்திலே இருக்க தலைமகன் சென்று
இரண்டாம் காட்சி யாகையாலே -தன் ஆசையை ஆவிஷ்கரிக்கிறான் –
மதி உடன்படுதல் தோழிக்கு உரித்து -என்னும் பஷத்தில் அவள் முகத்தை நோக்கிச் சொன்னான் -ஆகவுமாம் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10–நெடுமாற்கு அடிமை -8-10-–

நோய் கொள்வேனும் நானேயாய்-வருவானும் நானேயாய்-சொல்லுவேனும் நானேயாய் யானாலும்
கேட்கை அரிதாக வேணுமோ –அனுஷ்டானம் வேண்டா -கேட்கவே அமையும்
இத்தால் –
ஆழ்வார் உடைய ஆத்மா குணங்களோடு தேக குணங்களோடு அவற்றில் ஏக தேசத்தோடு வாசி அற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –
வேங்கட வல்லிக் கொடிகாள் -என்கையாலே
திவ்ய தேச வாசமும் சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் -ஆகிற இவை –
உமது திரு முக மண்டலமும்-திருவாய் மொழியும் -திருவாய் இதழ்களும் -தனித்தனியே வருத்தம் செய்பவன-
இன்னது என்று பகுத்து அறிய கொள்ளோம் நீரே அருளிச் செய்ய வேணும் -என்கிறார்கள் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–32-/ஸ்ரீ நம்மாழ்வார்–33- திருநாமங்கள் –/ஸ்ரீ மத் ராமானுஜர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் -18-தடவை நடந்தது–

April 23, 2020

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–32-

1-சத் வித்யா -சகலத்துக்கும் சர்வ வித காரணம் -சாந்தோக்யம்
2-அந்தர் ஆதித்ய வித்யா -சாந்தோக்யம்
3-ஆகாச வித்யா -சாந்தோக்யம்
4-பிராண வித்யா -சாந்தோக்யம்
5-பரஞ்சோதி வித்யா -சாந்தோக்யம்
6-சாண்டில்ய வித்யா -சாந்தோக்யம்
7-உபகோஸல வித்யா -சாந்தோக்யம்
8-வைச்வானர வித்யா -சாந்தோக்யம்
9-பூமா வித்யா -சாந்தோக்யம்
10-சத்யகாம வித்யா -சாந்தோக்யம்
11-தகர வித்யா -சாந்தோக்யம்
12-மது வித்யா -சாந்தோக்யம்
13-சம்வர்க்க வித்யா -சாந்தோக்யம்
14-காயத்ரி வித்யா -சாந்தோக்யம்
15-பஞ்ச அக்னி வித்யா -சாந்தோக்யம்
16-அஷி வித்யா -சாந்தோக்யம்
17-அந்தர்யாமி வித்யா -ப்ருஹதாரண்யம்
18-அக்ஷர வித்யா -ப்ருஹதாரண்யம்
19-ஜ்யோதிஷம் ஜ்யோதி வித்யா -ப்ருஹதாரண்யம்
20-மைத்ரேயி வித்யா -ப்ருஹதாரண்யம் -கணவர் யஜ்ஜனவல்க்யர் உபதேசம்
21-சர்வ அந்தராத்மா வித்யா -ப்ருஹதாரண்யம்
22-ஆனந்தமய வித்யா –தைத்ரியம்
23-வருணி வித்யா -தைத்ரியம்
24-ந்யாஸ வித்யா -தைத்ரியம்
25-பரம புருஷ வித்யா -கதா உபநிஷத்
26-நிச்சிகேத வித்யா -கதா உபநிஷத் -அக்னி உபாஸ்யம்
27-அங்குஷ்ட ப்ரமிதா வித்யா -கதா உபநிஷத்
28-பரியங்க வித்யா -கௌஷிதிக உபநிஷத்
29-ப்ரதர்தன வித்யா -கௌஷிதிக உபநிஷத் -இந்திரன் உபாஸ்யம்
30-பாலகி வித்யா -கௌஷிதிக உபநிஷத்
31-அக்ஷர பர வித்யா -முண்டக உபநிஷத்
32-ஈசாவாஸ்ய வித்யா -ஈஸா வாஸ்ய உப நிஷத்

—————-

ஸ்ரீ நம்மாழ்வார்–33- திருநாமங்கள்

1- சடகோபன் ….
2-தொண்டர்பிரான்
3-..மாறன் ..
4- நாவீரர்
5-..காரி மாறன் ..
6- திரு நாவீறு யுடைய பிரான்
7-பராங்குசன் ….
8-உதயபாஸ்கரர்
9-வகுளாபரணன் ….
10- வகுள பூஷண பாஸ்கரர்

11-குருகைப்பிரான் ….
12- ஞானத் தமிழுக்கு அரசு
13-குருகூர் நம்பி ….
14-ஞானத் தமிழ் கடல்
15-திருவாய்மொழி பெருமாள் ….
16- மெய் ஞானக்கவி
17-பொருநல் துறைவன் ….
18- தெய்வ ஞானக்கவி
19-குமரித்துறைவன் ….
20- தெய்வ ஞான செம்மல்

21-பவரோக பண்டிதன் ….
22-நாவலர் பெருமான்
23-முநி வேந்து ….
24- பாவலர் தம்பிரான்
25-பரப்பிரம்ம யோகி ….
26- வினவாது உணர்ந்த விரகர்
27-நிகாவலன் பெருமாள் ….
28- குழந்தை முனி
29-ஞான தேசிகன் ….
30- ஸ் ரீவைஷ்ணவ குலபதி

31-ஞானப்பிரான் ….
32-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
33-மணிவல்லி – 9th பாசுரம் – திரு விருத்தம் -.
34-தென் குருகை வள்ளல்–ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி-54

——————

ஸ்ரீ மத் ராமானுஜர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் -18-தடவை நடந்தது பிரசித்தம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பி பல தடவை ஸ்ரீ ரெங்கம் வந்து இவர் நன்மைக்கும் அர்த்தங்களை அருளுவதற்கும் வந்தமையும் உண்டே

1-சம்சார ஆசை தொலைந்து வர வேண்டும்
2-அகங்கார மமகாரங்கள் தொலைந்து வர வேண்டும்
3-ஆத்மஞானங்கள் பெற்ற பின்பு வர வேண்டும்
5-ஐஸ்வர்ய கைவல்ய ஆசைகள் தொலைத்து வர வேண்டும்
6-விஷயாந்தரங்களில் ஆசை தொலைந்து வர வேண்டும்
8-விருப்பு வெறுப்பு -ராக த்வேஷம் இரட்டைகள் தொலைந்து வர வேண்டும்
9-பரதந்தர்ய உணர்வு வந்த பின்பு வர வேண்டும்
10-ஸ்ரீ வைஷ்ணவம் கை கூடிய பின்பே வர வேண்டும்
11-சாத்விக பரிக்ரஹம் கிடைத்த பின்பே வர வேண்டும்
12-பாகவத பரிக்ரஹம் கிட்டிய பின்பே வர வேண்டும்
14-அநந்ய உபாயத்வம் பெற்ற பின்பே வர வேண்டும்
15-அநந்ய பிரயோஜனத்வம் மட்டில் த்வரை கிடைத்த பிறகே வர வேண்டும்
16-அநந்ய போக்யத்வம் கிடைத்த பிறகே வர வேண்டும்
17-ஆச்சார்யரை பற்றிய பின்பே வர வேண்டும்
18-அவர் கிருபையால் திரு மந்த்ரார்த்தம் கை கூடும் –

நமக்கு காட்டி அருளவே இந்த நாடகம் –
ஸ்ரீ ராமானுஜர் -18-படிகளை காட்டி திருமந்த்ரார்த்தம் பெற்று ஆசை யுடையோர்க்கு எல்லாம் வழங்கி -எம்பெருமானார் ஆனார் —

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் –ஒரே பலன்கள் —

April 4, 2020

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே––பெரியாழ்வார் திருமொழி -1-1-10-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே––நாச்சியார் திரு மொழி–4-11-

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –பெரிய திருமொழி -9-9-10-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—-பெரிய திருமொழி–1-9-10-

——–

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே –பெரியாழ்வார் திருமொழி –1-4 10-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே –பெரியாழ்வார் திருமொழி -3 2-10 –

———-

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே –பெரியாழ்வார் திருமொழி -1-6 10-

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப்பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே பெரியாழ்வார் திருமொழி –2 8-10 –

————-

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த்தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களை பெற்று மகிழ்வரே பெரியாழ்வார் திருமொழி -1 9-11 – –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—–நாச்சியார் திரு மொழி–6-11-

————–

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே -3 3-10 –

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

—————

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 4-10 – –

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடிமுல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 5-11 –

—————–

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே – 3-8 10-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-

——————

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9 11- –

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –பெரிய திருமொழி-–10-1-10-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே––ஸ்ரீ திருவாய் மொழி–9-10-9-

———–

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– பெருமாள் திருமொழி–7-11-

காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே – 5-1 10-

———–

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –பெரிய திருமொழி–5 4-11 –

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–-நாச்சியார் திரு மொழி–7-10-

————

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—–பெருமாள் திருமொழி–1-11-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே––பெருமாள் திருமொழி–10-11–

———–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே –பெருமாள் திருமொழி–4-11-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—-பெருமாள் திருமொழி— 8-11-

———-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே––பெரிய திருமொழி–1-10-10-

நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே ––பெரிய திருமொழி–4-7-10-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—–பெரிய திருமொழி–2-1-10-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே ––பெரிய திருமொழி–9-10-10-

———

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—–பெரிய திருமொழி–2-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —பெரிய திருமொழி–5-7-10-

—————-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே––பெரிய திருமொழி–3-2-10-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே –பெரிய திருமொழி–8-5-10-

——————-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே ––பெரிய திருமொழி–5-8-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –பெரிய திருமொழி-–7-3-10-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —பெரிய திருமொழி–8-8-10-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே ––பெரிய திருமொழி–9-6-10-

————-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –பெரிய திருமொழி–8-9-10-

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –பெரிய திருமொழி-–11-7-10-

————

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-

கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடி யுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே ––பெரிய திருமொழி–9-1-10-

—————-

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே––பெரிய திருமொழி–3-1-10-

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –பெரிய திருமொழி-–7-9-10-

————

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –நாச்சியார் திரு மொழி-–9-10-

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே––ஸ்ரீ திருவாய் மொழி–6-5-11-

—————————————————–—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்மாழ்வார் பற்றிய தனிப்பாடல் திரட்டு–

January 18, 2020

திரு வழுதி வள நாடர்-பிள்ளை -அறம் தாங்கியார் -பிள்ளை சக்ர பாணியார் -பிள்ளை அச்சுதர்-பிள்ளை –
செந்தாமரைக் கண்ணர் -பிள்ளை செங்கண்ணார் -பிள்ளை பொற் காரியார் பிள்ளை காரியார் -பிள்ளை நம்மாழ்வார்
திருமால் அறம் காக்கும் யோகிகள் போலே அல்லும் பகலும் உறங்காப் புளி தானும் உண்டு

அண்ட கோளத்தார் அணுவாகிப்
பிண்டம் பூத்த பேர் எழில் ஒருமை
ஈர் உயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து
நித்திலத்தன்ன வெண் மணல் பரப்பி
வேரும் தானே வித்தும் இன்றித் தானே
தன் வலி அறியாத் தொன் மிகு பெரு மரம்
மூ வழி முப்பழம் முறை முறை தருதலின்
ஓன்று உண்டு ஒண் சுவை தருவது மற்றது
கலீல் எழுந்து கடலில் அழுந்து
அறு கால் குரவன் நீர் அற விளைக்கும்
நிறை பொழில் குப்பை தறு கட்பு ஒன்றுவித்து
அறு கோட்டாமா விளைக்கும் நாடான்
அவனே தலையிலி அவன் மகள் முலையிலி
தானும் ஈனாள் ஈனவும் படாள்
எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள்
அவள் இவள் அவள் என்று அறிதல்
துகளறு காட்சிப் புலவரது கடனே

ஈய் ஆடுவதோ கருடற்கு எதிரே
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறு வெம் புலி முன்
நரி கேசரி முன் நடையாடுவதோ
பேயாடுவதோ அழகு ஊர்வசி முன்
பெருமான் வகுளாபரணன் அருள் கூர்ந்து
ஓவாது உரை ஆயிரம் மா மறையின்
ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே–சங்கப்புலவர்கள்

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசனோ நாரணனோ தாமம்
துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு –சங்கப்புலவர்கள்

நீயே அறிவை நின் அகத்தே நிற்கும் நேமி யங்கை
யாயே அறியும் மாற்றார் அறிவார் அடியோங்களுக்குத்
தாயே பொருநைத் திருக் குருகூர் தமிழ்க் காரி பெற்ற
செயே நினது திருவாய் மொழியின் செழும் பொருளே –சங்கப்புலவர்கள்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட் பொருளைத் தண் குருகூர்
சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகின்
தாய் மொழியது என்பன் தகைந்து–ஒவ்வையார் -இடைக்காதர்

சேய் மொழியோ வாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று அவ்
வாய் மொழியை யாரும் மறை என்ப –வாய் மொழியால்
ஆய் மொழிகள் சால உள எனினும் அம் மொழியின்
தாய் மொழி என்பன் யான் தகைந்து–ஒவ்வையார் -இடைக்காதர்

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாரி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ பெருமான் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி பாடும் ஞானத் தமிழ்க் கடலே —

இதுவோ திரு நகரி ஏதோ பொருநல்
இதுவோ பரமபதத்து எல்லை இதுவோ தான்
வேதம் தமிழ் செய்து மெய்ப்பொருட்க்கும் உட் பொருளாய்
ஓதும் சடகோபன் வூர் –எம்பெருமானார்

நின் கண் வேட்க்கை எழுவிப்பனே–திரு விருத்தம் -96-என்றவர் தாமே
ஏ பாவம் பரமே -என்று கிலேசித்து-அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே –பெரிய திருவந்தாதி -25-என்று கை வாங்கி
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –பெரிய திருவந்தாதி -26–என்று திரிகால ஞார்கையாலே
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று அருளிச் செய்தார்

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — திருவிருத்தம்– 94-

தாராயுடையாய் அடியேற்கு உன் தாளிணை யன்பு
பேரா யுலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊராமி லைக்கக் குருட்டாமிலைத் தாங்கு உன் தாளிணை யன்புக்
காரா யடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே –திருவாசகம்

ஈன்றோள் இருக்க மணை நீராட்டி –திருவாசிரியம்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ –பெரிய திருமொழி

பரிமேல் அழகர் இறை மாட்சி -அதிகார அவதாரிகையில் -திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே
என்று பெரியாரும் பணித்தார் -என்று நம்மாழ்வாரை பெரியார் என்றே குறிப்பிடுகிறார்
பற்று அற்ற கண்ணே -349-குறள் உரையில் –
அற்றது பற்று எனில் உற்றது வீடு -என்றும்
ஆரா இயற்கை -370-குறள் உரையில் –
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு மற்று ஒளிக் கொண்ட சோதியுமாய்
உடன் கூடுவது என்று கொலோ -என்ற பாடலின் கருத்தை
களிப்புக் கவர்வுகளும் பிறப்புப் பிணி மூப்பு இறப்புகளும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய் நிற்றலின்
வீட்டினைப் பேரா இயற்க்கை என்றும் அஃது அவா நீத்த வழிப் பெறுதல் ஒரு தலையாகலின் அந்நிலையே தரும்
என்றும் கூறினார் என்ற சொற்களால் கூறிவிட்டு
நன்றாய் ஞானம் கடந்து போய்-என்ற பாடல் முழுமையும் தந்து என்பதுவும் இக்கருத்தே பற்றி வந்தது -என்றும் எடுத்துக் காட்டுகிறார்

என்னில் மிகு புகழார் யாவரே-என்ற ஆழ்வார் அருளிச் செயலைப் போலவே
காரைக்கால் அம்மையார் யானே தவம் உடையேன் -என்கிறார்

மாயா வாய் மொழி உரை தர வலந்து வாய் மொழி யோடை மலர்ந்த -பரிபாடல் –
மாயா வாய் மொழி -நித்தியமான வேதம் -பரிமேல் அழகர்

திருக் கோனேரி தாஸ்யை-என்பவர் திருவாய் மொழி வாசக மாலை -என்ற ஒரு திரட்டு நூல்-
ஏட்டுப்பதிவில்- பதின்மூன்றாம் நூற்றாண்டில்
இதில் -164-பாடல்கள் -பதிகம் தோறும் உள்ள முதல் பாட்டும் சில உயிரான பாட்டும் முதல் பாட்டான
உயர்வற உயர்நலம் உடையவன் என்பதுடன் இயைந்து பொருள் அமைந்து இருப்பதை விளக்கி உள்ளார்

திருக்கோனேரி தாஸ்யை-வைணவப் பெண்மணியான இவர், திருவாய்மொழி வாசகமாலை என்ற நூலை எழுதினார்.
இந்நூல் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தேர்ந்தெடுத்த 164 பாடல்களுக்கு வியாக்கியானம் போல அமைந்துள்ளது.
வாசகமாலை ஆசிரியர் தம் நூலில் ஒவ்வொரு பதிகத்திலும் முதல் பாட்டையோ அல்லது முதல் பாட்டும் மற்றொரு பாட்டும்
ஆக இரு பாட்டுக்களையோ எடுத்துக் கொண்டு, அவற்றுக்குத் திருவாய்மொழியின் முதல் பாடலுக்குத் தகுந்தவாறு பொருள் கூறுகின்றார்.
திருவாய்மொழிப் பாசுரங்கள் அனைத்திலும் சொல்லப்பட்ட பொருள் முதல் பாசுரத்தின் பொருளே என விவரிக்கின்றார்.
இவ்வாறு இவர் 100 பகுதிகளாக விவரிப்பதால் இந்த நூல் விவரண சதகம் என்று பெயர் பெற்றது.
நாலாயிரப் பிரபந்த உரைகள் போல இந்நூலும் மணிப் பிரவாள நடையில் அமைந்துள்ளது.
பல வடமொழி நூல்கள் இதில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பல பழமொழிகளைக் கூறுகின்றார் ஆசிரியர்.

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப -நச்சினார்க்கு இனியார் தொல்காப்பியம் உரையில்
பிறை கவ்வி மலை நடக்கும் என்று இருப்பது அறியத் தக்கது

ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல்
நீராக நீளும் இந் நோய் –திருக்குறள் -1147-
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து –ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்-5-3-4-
புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே
பிறவிக் கடல் நீந்துவார் -திருக்குறள் -10-

கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
செல்லமே சென்று செல்லாதன முன்நிலாம்
காலமே உன்னை எந்நாள் கண்டு கொள்வேன்

மேலை வானவரும் அறியாதோர்
கோலமே எனை ஆட் கொண்ட கூத்தனே
ஞாலமே விசும்பே இவை வந்து போம்
காலமே உன்னை என்று கொல் காண்பதே–திருவாசகம்

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

செங்கண் நெடியான் மேல் தேர் விசயன் ஏற்றிய பூ
பைங்கண் வெள்ளேற்றான் பால் கண்டாற்றால் -முத்தொள்ளாயிர ஆசிரியர்

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம் மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திரு மாலுக்குச் சேருமே–3-9-6-

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர் -சிவா ஞான சித்திப் பாடல்
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர்த் தருகிலாப் பொய்மையாளரைப் பாடாதே
எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் -சுந்தரர் -திருப் புகலூர் பதிகம்

தின்னும் வெற்றிலை –
அக்காலத்திலே வெற்றிலை உண்டே
அம்மென் திரையலோடு அடைக்காய் -சிலப்பதிகாரம்

———

சடகோப திவ்ய சரிதம்-119-பாடல்களில் -ஸ்ரீ தேவராஜ ஐயங்கார் சென்ற நூற்றாண்டில் அருளிச் செய்துள்ளார்
அவற்றில் சில-

பேர் உறும் ப்ரபந்தமதில் பிரான்
நாரணன் என்றதும் உயிர் நாடிடும்
சீரும் அன்னவன் செய்கும் உபாயமும்
ஏர் கொள் நாடினை ஈதலும் ஓதினான்

பண் அமைந்த அப் பா முதல் பத்தினில்
கண்ணனே பரன் என்று கழறி மற்று
எண்ணும் ஓர் இரண்டு எவ்வுயிர்கட்க்கும் அவ்
வண்ணலே இனியான் என்று அறைந்தனன்

பின்னும் மூன்றினில் பேர் அருளாளன் குணம்
தன்னையே உயிர் சாற்றிடும் என்றதும்
உன்னும் நான்குள் உயிர் அவன் தன்னையே
மன்னும் என்றதும் வாய்ப்ப விளம்பினான்

ஏயும் ஐந்தினில் எம்பெருமானே உ
பாயமாம் உயிர்க்கு என்று பகர்ந்த பின்
ஆயும் ஆறினில் ஆருயிர் உய்குவான்
மாயவன் செய் உபாயம் வழங்கினான்

மற்றும் ஏழினில் மாயனைச் சேருதற்கு
உற்றிடும் பல் விரோதம் உரைத்து நல்
சொல் இகழ்ந்திடு எட்டில் சொல் விரோதிகள்
அற்றிடும் என்று அறைந்தனன் நன்றிரோ

பாகு நேர் ஒன்பதில் திருவாளானால்
ஆகும் லாபம் அறைந்து ஒரு பத்தில் தான்
சோக மோகம் தொலைத்தவர் வாழ் திரு
மாக மாநிலம் வைகியது ஓதினான்

நான்காம் பத்து கேட்டு அருளி பொலிந்து நின்ற பிரான் திரு உள்ளம் உகந்து சடகோபருக்கு ஒரு விருது அருளினான்
இத்திருவாய் மொழியினை மாறனும் உகந்து அங்கு இயம்பலும் அச்சுவை செவியால் இனிது மாந்தி
வித்தகன் நம் பொலிந்து நின்ற பரன் நெஞ்சம் வியந்து அதற்கோர் கைம்மாறு விருது ஈவான் தண்
சித்தமதில் உன்னியனத் துவசம் வண்டார் செய்ய மகிழ்த் தொடையலும் அச் செவ்வியோன் பால்
மத்தகசத் தறு கண் அறச் செய்தேவர் ஈந்து வாக்குல பூஷணன் எனப் பேர் வழங்கப் பெற்றான்

————

மகிழ்மாறன் திருவவதாரச் சரிதை -பிள்ளைத் தமிழில்

அங்கண் வழுதி வள நாடர் குலத்து ஆரமுதாம் எங்கள் பெருமானை எம்பெருமான் காக்கவே
ஏனோர்க்கும் பெம்மானை எம்பெருமான் காக்கவே
அந்தாமரை போன்று அலர்ந்த திரு முகத்து எம்மைந்தா திருக்கண் மலரை மலர்த்துகவே
மாறா திருக்கண் மலரை மலர்த்துகவே
பெற்ற பசு மஞ்சள் பொடி நாவின் மேல் தடவக் கற்றவர் தம் கண்ணே கனிவாய் திறந்து அருளே
காரி தரு மாறா கனிவாய் திறந்து அருளே
இருமைக்கும் எம்முயிர் பேர் இன்பமுறத் தந்த அருமைப் புதல்வா என் அம்ம பருகவே ஆராவமுதே என் அம்ம பருகவே
முத்திக்கு வித்தாம் முதல் கனியை கண்டு உள்ளத்தே தித்திக்கும் தெள்ளமுதே செங்கீரை யாடுகவே
செஞ்சொல் தமிழுக்கு அரசே செங்கீரை யாடுகவே
சேமத்தால் வந்து உதித்தாய் சேய மகிழ் மாறன் என்னும் தாமத்தாய் நாமத்தாய் தாலேலோ தாலேலோ
தத்வ ஞானப் புதல்வா தாலேலோ தாலேலோ
யான் என்று எனது என்று இழிந்தார்க்கு இடியேறு தான் என்று அவதரித்தாய் சப்பாணி கொட்டுகவே
தாள் தாமரைக் கரத்தால் சப்பாணி கொட்டுகவே
புதல்வா குறுங்குடி வாழ் புண்ணியா புத்தேளிர் முதல்வா மழலையின் வாய் முத்தம் தருகவே
மூரல் எழுப்பி யுன் வாய் முத்தம் தருகவே
விண்ணிற்கு வித்தாம் விதியுடையாய் ஈண்டு இம்மண்ணனிற்கு வித்தாக வாழ்வே வருகவே
மாணிக்கக் கிண்கிணித் தாள் வாழ்வே வருகவே
பேதித்த ஒன்பதுடன் பின்பு ஒரு பதாயுதித்த ஆதிச் சுடர் இவனோடு ஆடவா அம்புலியே
அன்பன் உயிர் காண் இவனோடு ஆடவா அம்புலியே
அழுத கண்ணீர் மாற்ற அருள் புரிந்தே வந்த வழுதி வள நாடா மாணித் தொட்டில் ஆடுகவே
வண் குருகூர் மாறா மணித் தொட்டில் ஆடுகவே

———-

பாடுவது எல்லாம் பராங்குசனை நெஞ்சத்தால்
தேடுவது எல்லாம் புளிக் கீழ் தேசிகனை -ஓடிப் போய்
காண்பது எல்லாம் நங்கையிரு கண் மணியை யான் விரும்பிப்
பூண்பது எல்லாம் மாறன் அடிப்போது —

பாராத கல்விப் பிரபந்தப் பொருள் அனைத்தும்
நேராக முன் வந்து நிற்குமே -தேராது
தே வீறு கொண்ட திருமாலை முத்தமிழ் தேர்
நா வீறு அனைத்து உதித்த நாள்

அருமறை துணிந்த பொருள் முடிவை இந்த சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி
அருளிய சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன அரவணை விரும்பி அறி துயில் அமர்ந்த
அணி திரு அரங்கர் மணி திகழ் முகுந்தர் அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே –ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

மறை நாலும் வடித்துத் தெளித்து ஆயிரம் பன்னு தமிழ் பாடிய பஷத்தர் கஸ்தூரிப்பொட்டு அணிவோர் தொழு நெடுமாலே –
வண் தமிழ் ஆயிரமும் செய்து உடல் பொய் என்கிறார் தம் திருவாய் மொழி கொண்டு அருளும் நெடுமாலே
புலவோர்க்கு வேதம் தமிழ் எனவே செய் குருகூர்க்குள் வாழும் திரு மகிழ் மாறர் புகழ் தீர்த்தனே பங்கய முக சேவை அருள்வாயே
மிகுத்த நான்மறையினை விந்தையாகிய தமிழ்ச் சொல் ஆயிரம் வடி கொண்ட நீடிரு விருத்த நூறோடு தமிழ் அந்தாதி செய்யொரு நூலும்
விளைந்த ஆசிரியம் யது என்ற ஏழும் இவ்விதத்திலே உரை செய்து நங்கை பாலகர் விதித்தா பா எனு மணி தொங்கல் சூடிய நெடுமாலே
வேரி வகுளத் தொடை பிறங்க ஞான முழு முத்திரைக் கை கொண்ட வீறர் குருகைப் பதிக்கு இலங்கு மகிழ் மாறர்
வேத மறையைத் தனிப் பிரபந்தம் ஆயிரம் வடித்து எடுத்த தொங்கல் மேவு பிரதித் தலத்தில் நின்ற பெருமானே — குரவை இராமானுஜ தாசர் திருப்புகழ்

ஸ்ரீ பராங்குச நாடகம் -ஸ்ரீ மாறன் அலங்காரம் –ஸ்ரீ மாறன் அகப்பொருள் ஸ்ரீ மாறன் பா வினம் –
திருக் குருகைப் பெருமாள் கவிராயர் -16-நூற்றாண்டு

தென்னம் பொதியம் தரு பொருநைத் தென் கரையின்
மன்னும் புளிக் கீழ் வளர் தரு வொன்று -இன்னமிர் தொத்து
ஆன்ற சுவைத் தீங்கனி யோர் ஆயிரமும் தண்ணளி கூர்ந்து
ஈன்று அளித்த தன்பால் எமக்கு

முத்தமிழ் -சித் அசித் ஈஸ்வரந் -மூன்றும் கூறும் தமிழ் வேதம் திருவாய்மொழி

மறை முரசம் தாமம் மகிழ் வழுதி நாடர்
துறை பொருநை வெற்பூர் துடரி உறை குருகை
யஞ்சம் பராங்குசம் வெள்ளானை கொடியாணை மா
பஞ்ச கலி யாணன் பரி-தசாங்கம்

1- வழுதி நாடர் துறை பொருநை
2-3-4-வெற்பும் ஊரும் துடரியும் உறை யுளாம் குருகா புரியும்
5- பரி -பஞ்ச கலி யாணன்
6- மா -வெள்ளானை
7- ஆணை -ஸ்ரீ பராங்குசம்
8- கொடி–அன்னம்
9- தாமம் -மகிழ்
10-முரசு – மறை –

கைக்கு அணி ஓன்று ஈகை கருத்திற்கு அணி ஞானம்
மெய் செவிகட்க்கு ஏற்ற அணி மேதகு நூல் -உய்த்தறிதல்
சென்னிக்கு அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சல்
என்னுக்கு அணி வேறு இனி

முத்திரைக் கைம் மாறன் மொழிந்த தமிழ் வேதப்
புத்தமிர்தை யுண்டு இன்புறுவேனை பத்தர்கள்
வேறு தமிழ் கேட்பிப்பான் வேட்கு மனம் கேட்கிலதை
சீறும் எனது இன்பச் செவி

சித்திரை மாதத்து உதித்தான் ஆடீரூசல்
திரு மகிழ் மாறனைப் பணிவோம் ஆடீரூசல்
பத்தர் இருதயத்து உறைவோன் ஆடீரூசல்
பதினோரு பாட்டில் இனிதுரைத்தான் ஆடீரூசல்
உத்தம முக்குணம் கடந்தான் ஆடீரூசல்
உபநிடதம் பகுத்து உணர்ந்தோம் ஆடீரூசல்
வைத்த மா நிதியை அனுதினமும் போற்றும் மதுரகவி யாழ்வாரே ஆடீரூசல்

மாறன் வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள் மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட –ஸ்ரீ ரெங்க நாயகரூசல்

மட்டோலிடும் தொங்கல் வகுள மணம் நாறு தோள் மாறன் வண் தமிழ்ப் படுத்தி
வசைவிட்டுறையும் முனி தன்னாலும் எழுத ஒணா மறை நாலும் எழுதுவிக்கப்
பட்டோலை எழுதி ஆங்கு அவனை ஈரைந்து கவி பாடி
நெடுமால் தன்னையும் பாடாத மதுரகவி இரு தாள் துதிக்கும் என் நா

உபய வேதங்களையும் கிருஷ்ணைக்கு வடக்குக் கீர்வாண தேசம் ஆகையால் பகவான் கங்கா தீரத்தில்
ஸ்ரீ வியாசராய் அவதரித்து கீர்வாண வேத பிரசரம் செய்து அந்த வேத அர்த்தங்களையே இதிகாசமாகிய
பாரத புராணங்களாக அருளிச் செய்தார்
கிருஷ்ணைக்கு தெற்குத் திராவிட தேசமாகையாலே அந்த பகவான் தாமிரபரணி தீரத்தில் ஸ்ரீ பராங்குச பகவானாய் அவதரித்தது –
திராவிட வேதத்தை வெளிப்படுத்தி அவ்வர்த்தத்தை விபவ அவதாரத்தில் ஸ்ரீ மதுரகவிகளுக்கும்
அர்ச்சாவதாரத்தில் ஸ்ரீ மந் நாத முனிகளுக்கும் அருளிச் செய்து அது பரம்பரையாய் ஸ்ரீ பாஷ்யகாரர் பர்யந்தமாக
உபதேசமாய் வந்து அவர் தம்முடைய சிஷ்யராகிய திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலானவர்களுக்கும் உபதேசித்து –

வரும் பொருநைத் துறையாட பெறுவேனாகில்
வடமூலைக் கருடன் அடி பணிவேனாகில்
அரும்பு மணிக் கோபுரத்துள் புகுவேனாகில்
ஆதி நாதன் சரண் தொழுவேனாகில்
விரும்பு திருப் புளி நீழல் வலமாய் வந்து
உன் மெய்ஞ்ஞான முத்திரைக் கை காண்பேனாகில்
தரும் புவியில் இப்பிறப்பே வேண்டுகின்றேன் சடகோபர் யதிராசா தம்பிரானே

பொய்கை பூதம் பேயாழ்வார் பொருநர் சடையர் போர் ஏறு
மெய் கொள் வேதம் தமிழ் செய்வார் விதியார் கமலப் பா காலர்
மை கொள் சோலை மழிசையார் கோன் மண்டங்குடிக் கோன் மறை மன்னன்
துய்ய பாணன் எதிராசன் துயரில் பாதம் துணை நமக்கே

சீராரும் திருவரங்கம் ரெங்கநாதர் திகழ் உறையூர் அமர்ந்த பிரான் நின்ற நம்பி —
தஞ்சையில் வாழ் நீலமேகர்–அன்பில் வடிவு அழகப் பெருமாள் கண்டீர்
ஏராரும் கரம்பனூர் உத்தமன் வாழ் இயம்ப வெள்ளறை செந்தாமரைப் பூம் கண்ணர்
தாரார் புள்ளம் பூதங்குடி வல் வில் ராமர் தகு திருப்பேர் வாழ் நாராயணர் தாம் தாமே

பெரியதோர் வைகுந்தம் பரமபத நாதர்
திருப் பாற் கடலில் வாழ் சிங்காத்ரி நாதர்
திரு அயோத்தியில் வாழ் ரகுநாதர் என்க
பெரு மதுரையில் வாழ் முகுந்தனார்
பெரிய திருவாய்ப்பாடி கிருஷ்ணனார்
மருவுடை துவாரகையில் மன்னனார் என்க
வந்து தென் துவாரகையில் மன்னனார் ஆனார்

சோழ மண்டல நாற்பத்து இரண்டுடன் துய்ய பாண்டிய பதினெட்டும் சொல்லியே
வாழு மா மலையாளம் ஈர் ஏழுடன் மன்னர் போற்றிய வாழ் தொண்டை மண்டலம் ஏழு மூன்றும் எதிர் ஆறும் இரண்டுடன்
இதன் வடக்குப் பதினொன்றும் பாற் கடல் ஆழியான் பதி நூற்று எட்டும் ஓதுவார்க்கு அன்று செய்வினை அன்றே அகலுமே

வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதிமன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழைஎனப் பெய்யு மே.- விவேகசிந்தாமணி

செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறை நெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச் செலவும் இம்மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து – திரிகடுகம்

ஆறாகி இருதடங்கள் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர
வேறான துகில் தகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற உடல்புளகித்து உள்ளமெலாம் உருகினாளே.- வில்லிபாரதம் 2:2:247

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லம் சேறாக்கும்
ஒப்பு

1. சேல் உண்ட ஒண்கனாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை.- கம்பர் .பால.1:2:13

2. மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே – நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும்
உடையான் சடையப்பன் ஊர் – கம்பர் (தனிப்பாடல்)

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டு
ஒப்பு
1. பசுங்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேதமுதல்வன் என்ப தீதறவிளங்கிய திகிரியோனே – நற்றிணைக் கடவுள் வாழ்த்து

2. திங்களும் செங்கதிரும் கண்களாக – தண்டபாணிசுவாமிகள்

3. சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ – பாரதியார்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள்- 1-10–

January 1, 2020

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

முயற்றி சுமந்து –
எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை

எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-வாசிக கைங்கர்யத்தில் -உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை
ஆழ்வார் திரு உள்ளம் முந்துற்று -இளைய பெருமாள்
ஸ்ரீ ஸூந்தர காண்டம் – 33-28 “–பிராகேவது மஹா பாக ஸுமித்ரிர் மித்ர நந்தன -பூர்வஜஸ் அநு யார்த்தே
த்ருமசிரைர் அலங்க்ருத -மரவுரி தரித்து முன்னால் சென்றால் போலே –
அயோத்யா காண்டம் – 21-17 -தீப்தமக்னிம் ஆரண்யம் வ யதி ராம பிரவேக்ஷயதி ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி த்வம் பூர்வமதாரய -என்று
பெருமாள் அக்னி பிரவேசமோ ஆரண்ய பிரவேசமோ பண்ணினால் முன்னால் நான் போவேன் என்றான் சுமத்தரை இடம்-

எழுந்து –
உடனே ஆர்வத்துடன் கிளம்பி

முந்துற்ற நெஞ்சே –
அவ்விஷயத்திலே என்னை விட முற்பட்டு இருக்கிற மனமே –
நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு போது போக்க உசாத் துணை நெஞ்சு ஒன்றே தானே-
இந்த இருள் தரும் மா ஞாலத்தே-யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்பார் மேலே
யதித்வம் பிரஸ்திதோ துர்கம் வனமாத்யைவ ராகவா அக்ரஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நாதி குசக் அந்தகாந் -என்று
முன்னே சென்று முற்கள் போன்றவற்றை அகற்றுவேன் -என்ற இளைய பெருமாளைப் போலே –

இயற்றுவாய் –
கார்யத்தை நடத்த வேண்டும்

எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து –

இயற்றுவாய் எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து கார்யத்தை நடத்த வேண்டும்-கைங்கர்யம் செய்ய தூண்டிய எனக்கு
நன்றிக் கடனாக என்னையும் கூட்டி அன்றோ நீ செய்ய வேண்டும்

இருவரும் கூடி நடத்தவேண்டிய கார்யம் என்னவென்றால்
நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –
அழகிய காயாம்பூ வில் உண்டான-நிறம் போன்ற நிறத்தை உடையனான
எம்பெருமான் உடைய-திருக் கல்யாண குணங்களை –
“கோ சத்ரூஸோ கவ்ய : கவ்ய சத்ரூஸோ கவ் போலே பூவீன்ற வண்ணன் –
அவனது வண்ணம் கொண்ட பூ என்றும் பூவின் வண்ணம் கொண்ட அவன் என்றும்
பூவைப் பூ த்ருஷ்டாந்தம் ஆகாதே ஆகவே நல் பூவைப் பூ என்று விசேஷண விசிஷ்டா பூவைப் பூ

புகழ் –
அப்ராக்ருதம் -ஞான ஆனந்த சுத்த சத்வ மயம் -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவை அன்றோ –

நயப்புடைய –
அன்பு பொருந்திய-இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்
ஆசை கொண்ட நாவினால்-அன்பு கொண்ட சொற்களால்
என்னால் தன்னைப் பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு–7-9-10-என்றபடி உயர்வுடைய -என்றபடி

நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-
நாவினாலே கனனம் செயப்படுகிற –
ஈனுதல் -உண்டாக்குதல் –
நெஞ்சின் உதவி இல்லாமல் பாடப்பட்டதால் ஸ்ரமம் இல்லையே –
சேர்க்கைப் பொருத்தம் உடைய சொற்களாலே-அடக்குவோமாக –
பதங்களுக்கு ஒன்றோடு ஓன்று அமையும் சேர்த்தி அழகு தொடை
பதா நாம் சௌ ப்ராத்ராத நிமிஷ நிஷேவ்யம் ச்ரவண்யோ -ஸ்ரீ குண ரத்ன கோசம் –

தைத்ரியம் ஆனந்த வல்லி– “யதோ வவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ
வித்வான் ந பிபேதி குத்ஸநேதி ” என்று மீண்டாலும் ஆழ்வார் முயன்று அவனது குணங்களை அனுபவிக்கிறார்

நாவின்
நாவால் -நெஞ்சின் சஹகார்யம் இல்லாமலும் நானும் வேண்டாமலும் பாட முடியுமே
என்னால் தன்னைத் தானே பாடிக் கொண்டான்

————————————————————————–

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

நற் பூவீன்ற பூவை வண்ணன் புகழை –நயப்புடைய –பொதிவோம் என்றார் கீழ்-
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாக கிளர்ந்து சூழ்த்த அமரர் துதித்தால்-உன் தொல் புகழ் மாசூணாதோ –
இந்த நீசன் புகழலாமா –

புகழ்வோம் பழிப்போம்
ஒருவராலும் புகழ்ந்து முடிக்க முடியாத உன்னை-அற்ப ஞானிகளான நாங்கள் புகழ்வோம் ஆகில்-
அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி அன்று ஆதலால்-உன்னை நாங்கள் பழித்தவர்கள் ஆக ஆகி விடுவோம் –
ஆசார ஹீனன் வசிஷ்டர் நல்ல ஆச்சார்ய சீலர் -என்னுமா போலே

புகழோம் பழியோம் –
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு புகழாது இருந்தோம் ஆகில்
உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம் –
மேல் அருளிய அர்த்தத்தையே ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார்

இகழ்வோம் மதிப்போம்-
மதிப்போம் இகழ்வோம்-
உன்னை சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோம் ஆகில்
உன்னை அகௌரவப் படுத்தினவர்களாக ஆகி விடுவோம் –
தைத்ரிய சம்ஹிதை 7-5-3-மன பூர்வோ வாக் உத்தர -நினைத்தாலும் அவனை இகழ்ந்தோமாய் ஆவோம்
புகழ்வோம் பழிப்போம்-கீழே சொன்னதை புனர் யுக்தி தோஷம் இல்லை –

மதியோம் -இகழோம் –
அப்படி நெஞ்சால் நினையாது இருந்தோம் ஆகில்-அகௌரவப் படுத்தாதவர்களாக ஆவோம்-
வாயால் புகழா விட்டாலும் நெஞ்சால் நினைப்பதும் இகழ்வாகும்

ஆக-இவற்றை அறிந்து இருந்தும் புகழாமலோ மதியாமலோ இருக்க மாட்டோம்
அப்படி புகழ்ந்தாலும் மதித்தாலும்

மற்று இகழ்வோம் மதிப்போம்
யஸ்ய மதம் அமதம் -இத்யாதி
அமதம் மதம் மதம் அதமம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜ முதஜூகுஷாத் த்ரயி ஸ்துமஹே வயம் நிமிதி தம் ந சக்னுமா–ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் –1-13 –

மற்று எங்கள் மால் செங்கண் மால்-சீறல் நீ தீ வினையோம் –
நீ கோபம் கொள்ளல் ஆகாது –
திரு நா வீறுடைய பிரானான ஆழ்வார் இப்படி அருளிச் செய்ததும்-ஆசை கொண்டு இருந்த எம்பெருமான்-
அந்த ஆசை ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழியும்படி
ஆழ்வார் நைச்ய அனுசந்தானம் பண்ணி -சொல்லவும் இன்றிக்கே நினைக்கவும் கூடாது -என்ன-
உண்ணும் சோற்றை எதிர் பார்த்து இருந்த பசியன் சோறு தடுமாறிப் போனால்
கண்கள் சிவந்து கோபம் கொண்டதும்-அந்த நிலைமையை கண்ட ஆழ்வார்
எங்கள் மால் செங்கண் மால் என்று விளிக்கிறார் –

தஸ்ய யதா புண்டரீகம் ஏவம் அஷிணி –சாந்தோக்யம் — 1-6-7-
செங்கண்மால் -பரத்வம்
எங்கள் மால் -ஸுவ்லப்யம்
செங்கண் மால் சீறேல்
எங்கள் மால் சீறேல்

ஆழ்வீர் நினைக்கவும் சொல்லவும் மாட்டீர் என்றீரே
ஏன் அழைக்கிறீர் போம் போம் என்று சீற்றம் தோன்ற திரு முகத்தை மாற வைக்க
அநந்ய கதியான என் மேலே சீறுவதே-என்ன
ஆழ்வீர் நீர் புகழவும் நினைக்கவும் மாட்டேன் என்று சொன்ன இதுக்கு சீறாமலும் இருக்க வேணுமோ -என்று-
எம்பெருமான் திரு உள்ளமாக
தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை –-என்கிறார்
புகழவும் நினைக்கவும் பார்த்தால் என் அந்தராத்மா சீறுகிறது-இல்லையேல் நீர் சீறுகிறீர்-
இந்த பாவத்துக்கு என்ன பண்ணுவேன்-யான் என் செய்வேன் என்கிறார்

எங்கள் மால் கண்டாய் இவை –
இப்படி புகழ நினைப்பதும்-புகழாமல் பின் வாங்குவதும்-மகா பாபிகளான எங்களுடைய பிரமமே யாகும்-
இங்கு -மால் -ஆச்சார்யம்-

—————

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா நிறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

சீறல் நீ -என்று பிரார்த்த ஆழ்வார் இடம்-அது கிடக்கட்டும் -நீர் என்ன தீர்மானம் செய்து உள்ளீர் என்ன –
இவை அன்றே நல்ல–
உன்னை புகழாமையும் சிந்திப்பாமையும் -இவை -அன்றோ நல்லது –

இவை அன்றே தீய –
உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதும் -இவை -அன்றோ கெட்டது –

இவை என்று இவை அறிவனேலும் –
இவை இவை என்று அறிவேனேலும்-
ஆகவே இப்பது இப்படிப் பட்டது என்று உண்மையாக-நான் தெரிந்து கொண்டு இருந்தேன் ஆகிலும்

இவை எல்லாம் –
புகழாமையும் மதியாமையும் -புகழ்தலும் மதித்தாலும் -ஆகிய
ஆகிற இவை எல்லாம் –

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா –
என்னாலே-பற்றவும் முடியாது-விடவும் முடியாதே –
அடைப்பு -பரிஹரித்தல்
நீக்கல் -பரித்யஜித்தல்

நிறையவனே என்னால் செயற்பாலது என் –
சபலனான என்னால் செய்யக் கூடியது-என்ன இருக்கிறது -என்னுடைய எண்ணம் ஒன்றும் பலிக்கிறது இல்லை –
என் நா முதல் வந்து புகுந்து நல்லீன் கவி-தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பன் -என்றபடி-
என் வாக்குகளுக்கு பிரவர்த்தகன் நீ –
ஆகையால்-புகழ்வதோ இகழ்வதோ உன் கார்யம் தான்-என்னால் செயற்பாலது என்
அன்பு செய்கிறது ஒழிய வேறு ஒன்றும் இல்லை -என்றபடி-

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்ம ஸ்வரூபத்திலேயே விருப்பம் வைக்கத் தக்கது –
அந்த அந்த கர்மங்களுக்குப் பலமாக ஓதப்படும் ஸ்வர்க்காதி அல்ப பலன்களில் ஒரு போதும் விருப்பம் வைக்கத் தகாதது
கர்மத்திற்கும் பலத்திற்கும் காரணமாக நீ ஆகாதே –
மோக்ஷ சாதனமான கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில் உனக்கு ஈடுபாடு வேண்டாம்
அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் —
கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை –
கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் –
காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் – மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-

பலம் கேட்க அறியாத குழந்தை -போலே நாம் -பலம் அவனே கொடுப்பான் -பலம் எதிர்பார்க்காமல்-
த்ரிவித தயக்கத்துடன் – கர்மம் செய்வதே கர்தவ்யம் –
தொட்டால் தங்கமாகும் வரம் பெற்ற கதை –

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

என்னால் செயற்பாலது என் –
இவற்றை நீ அருளிச் செய்த பின் என்னால் செயற்பாலது என் -புகழாமல் இருக்கத் தான் முடியுமோ என்னால் –

————————————————————————–

ஹா ஹா -நம்முடைய வாயால் எம்பெருமான் உடைய-திருக் குணங்கள் பாடப் பெற்றோமே-
நம்மில் யார் பாக்கியசாலிகள் -என்கிறார் -இதில் –

என்னில் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று -4-

என்னில் மிகு புகழார் யாவரே -என்றும்-
பின்னையும் மற்று எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் -என்றும் –
இரட்டித்து சந்தோஷ அதிசயத்தால் அருளிச் செய்கிறார்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –போலே
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு –ஸ்ரீ பூதத்தாழ்வார் -100-
யான் அணுவானாலும் என் புகழ் அவனைப் போலவே விபூவாயிற்றே-

என்னில்-
என்னை விட –

மிகு புகழார் யாவரே –
மிக்க புகழை உடையார் யார் கொல்-

பின்னையும் மற்று எண்ணில்-
மற்று பின்னையும் எண்ணில் –
இன்னமும் ஆராய்ந்து பார்க்கும் அளவில் –

மிகு புகழேன் யான் அல்லால் —
மிக்க புகழை உடையவன் நானே தவிர-வேறு யாரும் இல்லை –

என்ன கருஞ்சோதிக் கண்ணன் –
என்னுடையவனான கறுத்த நிறத்தை உடைய ஸ்ரீ கிருஷ்ணனும்-

கடல் புரையும் சீலப –
கடல் போன்ற கம்பீர ஸ்வபாவம் உடையவனும் –
தன்னுடைய வடிவை ஆழ்வாருக்கு அனுபவிக்கக் கொடுத்தவனும் –

பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று –
மிகப் பெரும் சோதி வடிவமானவனுமான எம்பெருமானுக்கு-என்னுடைய நெஞ்சானது அடிமைப் பட்டதால் –
நைச்ச்ய பாவம் நீங்கி-நெஞ்சு ஆழ்ந்து அவஹாக்கிக்கப் பெற்றதால்-நானே பாக்யசாலி -என்கிறார் –

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்றும் -சீலம் இல்லா சிறியேனேலும் செய் வினையோ பெரிதால் -என்றும் –
தாம் நினைவு வந்தால் –
வடிவு அழகும் போக்யதையும் நெஞ்சையையும் மனத்தையும் மூடி வைக்க விடாமல்
பரவசமாக பிரவர்த்தம் உண்டாக்கப் பண்ணுமே-
யானே தவம் செய்தேன்
என்னில் மிகு புகழார் யாவரே –
எனக்கு ஆரும் நிகர் இல்லையே -பேச வைக்குமே-

ஸுவ்சீல்யம்-மஹதாய் இருந்தாலும் மந்தவர்கள் உடன் நீர் போலே கலப்பவன் அன்றோ
இதனாலே பரஞ்சோதி –
ஈசன் வானவர்க்கு என்பேன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே –

ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்-பண்ணின பிறகு அனுதாபம் காட்டுதலும்
இரண்டும் அவிருத்தம் அல்ல என்று கொள்வது போலே இதனையும் கொள்ள வேண்டும்

————————————————————————–

அசந்நேவ பவதி அசத் ப்ரஹமேதி வேதேசேத் -அஸ்தி ப்ரஹமேதி சேத் வேத சந்தமேநம் ததோ விது–தைத்ரியம் ஆனந்த வல்லி
அவனைப் புகழாமல் நீச பாவனை பாவித்து விலகினால் ஸ்வரூபமே இழக்க நேருமே –
பரம காருண்யத்தால் ஆழ்வாரை மீட்டு அருளியத்துக்கு க்ருதஜ்ஜை அருளிச் செய்கிறார் இதில் –

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

பெற்ற தாய் நீயே –
பெற்ற தாய் போலே-பிரியமானதையே செய்பவனும் நீயே –
நைச்ய பாவம் மாற்றி பிரவர்த்திப்பிக்கும் படி செய்து அருளிற்றே-

பிறப்பித்த தந்தை நீ –
மாதா பாஸ்த்ரா பிது புத்ரா -மாதா பாத்திரம் போலே புத்ரன் பிதுவுக்கே-
உண்டாக்கின பிதாவை போலே-ஹிதமானதையே செய்பவனும் நீயே –

மற்றையார் யாவாரும் நீ –
ஆத்மாவுக்கு நன்மைகள் செய்து-விலஷண ஜென்மத்தைக் கொடுக்கிற
மற்றும் ஆசார்யரும் நீயே-உன்னை புகழாமல் இருந்தால் என் சத்தையே போய் விடும்
அது போகாதபடி காப்பாற்றி அருளின உபகாரகர்
சரீரம் ஏவ மாதா பிதா ஜனதயா-ச ஹி வித்யாஸ் தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம -ஸ்ரீ ஆபஸ்தம்ப ஸூத்ரம் –1-1-6 –

பேசில் –
உன்னால் நான் பெற்ற உபகாரங்களைப் பேசப் புகுந்தால்

எற்றேயோ –
எற்றே ஒ -எனக்கு ஆச்சர்யமானவை-என்று உருகுகிறார் –

மாய –
மாயவனே –

மா மாயவளை மாய-
மகத்தான வஞ்சனை உடையவளான-பூதனையை முடிப்பதற்காக

முலை –
அவளது விஷம் தடவின முலையை –

வாய் வைத்த நீ-
அமுது செய்த நீ –

யம்மா –
ஸ்வாமியே –
அந்த ஆச்சர்ய செயல் போலே-அடியேனுடைய நைச்ச்ய பாவம் மாற்றி
புகழ வைத்து அருளினாயே-உன் பக்கலிலே அவஹாகிக்கும் படி வழி காட்டிற்றே

காட்டும் நெறி –
எனக்குக் காட்டின வழிகள்-

————————————————————————–

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

எம்பெருமான் இடம்-ஸ்வா தந்த்ர்யமும்-நிர்ஹேதுக கிருபா குணம்-இரண்டுமே உண்டே
நெறி காட்டி-நின்பால்- நீக்குதியோ –
கர்மம் ஞானம் போன்ற உபாயாந்தரங்களைக் காட்டி-இவற்றை அனுஷ்டித்து பலன் பெறுவாய் என்று-சொல்லி
என்னை கை விடப் பார்க்கிறாயோ —

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

தேர்தட்டு வார்த்தையாக சரம ஸ்லோகம் அருளிச் செய்தானே-
நளன் தமயந்திக்கு–ஏஷ பந்தா விதர்பானாம் ஏஷ ஏத்தி ஹி கோசலான் – என்று நெறி காட்டி பின் கை விட்டானே –

நெறி காட்டுகையும் -நீக்குகையும் பர்யாயம் போலும் இவருக்கு –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயத்தைக் காட்டி-உன் பக்கலில் நின்றும்-என்னை அகற்றப் பார்க்கிறாயோ -அல்லது –

கரு மா முறி மேனி காட்டுதியோ –
கறுத்த மா மரத்தின் தளிர் போன்ற உனது திரு மேனியை-சேவை சாதிப்பித்து
அனுக்ரஹிக்க நினைக்கிறாயோ –
நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ச்ருதேன
யமேவைஷ வ்ருணதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்—கட உபநிஷத் – 1-2-23-
அனுக்ரஹிக்க திரு உள்ளம் பற்றி இருப்பவர்க்கு பூரணமாக காட்டி அருளுவான்
முறி -என்று தளிர்க்குப் பெயர் -முறிக்கப் படுவது முறி
மா முறி -மாந்தளிர் -அது போல் ஸூகுமாரமாயும்
கரு -ச்யாமளமாயும்-இருக்கிற திருமேனியைக் கட்டி அருளுவாயோ –
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ –

மேனாள் –
மேல் நாள் -அநாதி காலமாக –

அறியோமை –
அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-
அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்

என் செய்வான் எண்ணினாய் –
என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறாய்-
மந் மநா பவ இத்யாதி-18-65– என்பாயோ–
சர்வ தர்மான் பரித்யஜ்ய -மாஸூச -18 -66 -என்பாயோ

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–49–

பகவன் அச்யுத—அடியாரைக் கை விடாத எம்பெருமானே
அவிவேகக நாந்த திங்முகே–அவிவிவேகம் ஆகிற மேகங்களினால் இருந்து கிடக்கிற திசைகளை உடையதும்
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி–பலவிதமாக இடைவிடாமல் பெருகுகின்ற துக்கங்களை வர்ஷித்துக் கொண்டு இருப்பதுமான
பவதுர்த்திநே –சம்சாரமாகிற துர் ததிநத்திலே–மழைக் கால விருளிலே—மப்பு மூடின தினத்துக்கு துர்த்தினம்
நண்ணாதார் முறுவலிப்ப நல்ல உற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
பத ஸ்கலிதம் மாமவ லோகயா–கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம்
வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே
நல் வழியில் நின்றும் தப்பி இருக்கிற அடியேனை கடாக்ஷித்து அருள வேணும்
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று-உனது கடாக்ஷம் அடியேனுக்கு உஜ்ஜீவன ஹேது

கண்ணனே ஈதுரையாய் –
தேவரீர் உடைய திரு உள்ளம் இன்னது-என்பதை அருளிச் செய்ய வேண்டும் –
மாஸூசா -என்று உனக்கு வார்த்தை -எங்களுக்கு உஜ்ஜீவனம் –

என் செய்தால்–
நீ எமக்கு எந்த நன்மை செய்தாலும் –

என்படோம் யாம் –
1-யாம் எந்த அனர்த்தத்தைத் தான்-அனுபவிக்க மாட்டோம் -நீ எது செய்தாலும் அதன் படி உடன்படத் தக்கவன் அடியேன் –
அன்றிக்கே
2-நன்மை செய்தாலும் யானையை குளிப்பாட்டி-உடனே அது அழுக்கை தலையிலே போட்டுக் கொள்வது போலே-
நீ செய்து அருளும் நன்மையையும் ஏற்றுக் கொண்டு தீமையையும் ஏறிட்டுக் கொள்வேன் -என்றுமாம் –

————————————————————————–

மானஸ சாஷாத்காரமே பெற்றேன் -அவனை நேராக கண்டு ஆலிங்கனம் பெற ஆசைப்பட்ட அடியேனுக்கு
இது மலைக்கும் அணுவுக்கும் உள்ள வாசி அன்றோ -யாமே அரு வினையோம்-என்கிறார் –

யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-

யாமே அரு வினையோம் –
போக்க முடியாத பாவத்தைப் பண்ணி யுள்ள-நாங்கள் மாத்திரமே –
நெஞ்சுக்கு மட்டும் சேவை-கட் கண்ணால் காண வில்லை
கைகளால் அணைத்து களிக்கும் படியாகவும் சேவை சாதிக்கப் பெற வில்லை –

பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த அம்மா –
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் நின் பாதத்தருகு -சார்ந்து ஒழிந்தார் –
அருவினையோம் யாமே சேயோம் -என்று அந்வயம்

என்னை சேர்த்து கார்யம் செய் என்ற சொல்லிய எனது சொல்லை லஷ்யம் செய்யாமல் –
தான் மாத்ரம் அந்தரங்க அணுக்கராக திரு வடிகளில் சேர்ந்து விட்டது –
நல்ல பேறு பெற்றதே-தாம் மட்டும் இருள் தரும் மா ஞாலத்திலே உழல
அவர் திரு உள்ளம் பாதார விந்தத்திலே அழுந்தி விட்டதே –

நெஞ்சினார் சார்ந்து ஒழிந்தார்-
உயர் திணை-திருவடிகளில் அழுந்தி ஆழம் கால் பட்டதால்-உயர்த்தி அருளிச் செய்ய வேண்டுமே
அணுக்கர் –
அந்தரங்கர் -சமீபத்தில் உள்ளவர் –
சேயோம் -தூரத்தில் இருக்கிறோம் –

என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் –
பூ மேய –தாமரைப் பூவிலே பொருந்தி இருக்கிற –செம் மாதை
ஹிரண்ய வர்ணனையான-ஸ்ரீ பிராட்டியை —நின் மார்வில் சேர்வித்து –
உனது திரு மார்பிலே சேர்த்து கொண்டவனாயும் -கடல் கடைந்து பெண்ணமுதம் கொண்டானே-
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பனாய் இருந்தும் அன்றோ இழந்தேன்-

பாரிடந்த –
பிரளயத்தில் அழுந்திக் கிடந்த பூமியைக்-குத்தி எடுத்தவனுமாய்-இருக்கிற -ஸ்ரீ வராஹாவதார அனுபவம் –
ஸ்ரீ கோல வராஹம் ஒன்றாய் பூமியையையே பிரளயத்தில் இருந்து இடந்து எடுத்த உனக்கு சிறியேனான அடியேனை
சம்சார பிரளயத்தில் இருந்து இடர்ந்து எடுத்து உன் திருப்பாதத்தில் சேர்த்துக் கொள்ளுவது அருமையோ-

அம்மா –ஸ்வாமி-

நின் பாதத்தருகு –
தேவரீர் உடைய திருவடிகளின்-சமீபத்திலே –

—————————————————————-

கண்ணால் காணாமல் இருக்கச் செய்தேயும்-கண்ணால் கண்ட விஷயங்களில் போலே
அன்பு அதிகரித்து வருகின்றதே-இதற்க்கு என்ன காரணம்-சொல்லாய் -என்று
அப்பெருமானையே கேட்கிறார் –

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பருகலாம் பண்புடையீர் பாரளந்தீர்-பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்-
நும்மை அருகும் சுவடும் தெரி யுணரோம்-அப்படி இருந்தும்-நுமக்கே அன்பு மிக பெருகும்-இது என் பேசீர் -என்று அந்வயம் –

அருகும்-கிட்டுவதையும்
சுவடும் -கிட்டுவதற்கு உபாயத்தையும் –
தெரி யுணரோம்- நாங்கள் பகுத்து அறிந்தோம் இல்லை –
அப்படி இருக்கச் செய்தேயும் –

நும்மை நுமக்கு – அன்பே பெருகும் மிக-
உம் விஷயத்திலேயே-எமக்கு ஆசையானது மிகவும் பெருகா நின்றது —

பருகலாம் பண்புடையீர்-
வாய் மடுத்து பானம் பண்ணுவதற்கு உரிய திருக் கல்யாண குணங்களை உடையவரே –
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஓத்தே -2-3-1
பொதுவாக சொன்னாலும் சௌசீல்யம் குணத்தில் நோக்கு–
சாரங்கன் தொல் சீரை ஓவாத உணவாக ஊண்-என்று மேலே அருளிச் செய்கிறபடியால்-
பகவத் குணங்களை உணவாக கொள்கிறவர் –
அப்படிக் காட்டி அருளின இடம் மேலே அருளுகிறார் –

பாரளந்த்தீர்-
திரு விக்ரமனாய் பூமி எல்லாம் அளந்து அருளினவரே –

பாவியேம் கண் காண்பரிய –
பாவிகளான எங்களுடைய கண்களாலே-காண முடியாத வைலஷண்யத்தை உடையவரே –
கருதரிய உயிர்க்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம் -என்றபடி-
நீ எங்கும் நிறைந்து இருந்தாலும் அருகில் இருப்பதாக தெரிந்து -கொள்ள வில்லை –
நீ அருகில் வந்து சேவை சாதிக்க வில்லை -என்றபடி –
இப்போது அறிந்து கொள்ள வில்லை என்றாலும் மேலும் அறிந்து கொள்ள வழி உண்டோ என்னில்-

சுவடும் தெரிந்து யுணரோம்-
சேவை கிடைக்கும் என்கிற அடையாளமும் இல்லையே
அடியேன் இடம் யோக்யதையும் இல்லை என்னவுமாம்-
சுவடு -யோக்யதை-அடையும் உபாயம் -அடையும் ஸூசகம் என்றுமாம் –

நுண்புடையீர்-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ அயோத்யையில் ஸ்ரீ பெருமாள் உடன் 12 ஆண்டு காலம் இருந்து அனுபவித்தால் போலே
ஆயினும் அன்பு மாதரம் வளர்ந்து சென்று கொண்டே இருக்கிறதே-
இது என் பேசீர் -இதுக்கு என்ன காரணம்-நீர் தான் சொல்ல வேணும் –

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் -10 சூர்ணிகை-அருகும் சுவடும் -ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம்-
உம்முடைய அருகு வருதல்-உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க
உம்மளவிலே ஸ்நேஹமானது அறமிக்கு வாரா நின்றது -இதுக்கு அடி அருளிச் செய்ய வேணும் -என்று
இந்த பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்

பாட்டின் முடிவில் நும்மை நுமக்கு -என்று இருக்கிறதே-அதற்கு எங்கே அந்வயம் என்று
ஸ்ரீ நஞ்சீயர்-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரைக் கேட்க-
நும்மை அருகும் சுவடும் –
நுமக்கு அன்பே பெருகும் மிக -என்று அன்வயித்து பொருள் உரைக்கலாம் என்று அருளிச் செய்தாராம்-

————————————————————————–

அந்த எம்பெருமான் நம்மை அனுக்ரஹித்தாலும் அனுக்ரஹிக்கா விடிலும் போகட்டும்
திரு உள்ளம்,ஆன படி செய்யட்டும்-நெஞ்சே-நீ மாத்ரம் அவர் திறத்தில் செய்திடுக-

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9

மாலார் அவர் தாம்-
எம்பெருமான் ஆகிற அப்பெரியவர் தாம் –

சார்வரியரானால்-
நமக்கு கிட்ட முடியாதவராய் இருக்கும் பொழுது-ஆர்த்தி உடன் கத்தினாலும் சேவை சாதிக்காமல் இருப்பவன்

மாலார் தமக்கு –-
அவ் வெம்பெருமானை நோககி -ஆஸ்ரிதர் பேரில் வ்யாமோஹமே வடி எடுத்தவர்-என்று பேர் மாத்ரமே கொண்டவர்

நுமக்கு அடியோம் என்று என்று-
நாங்கள் உனக்கு அடிமைப் பட்டவர்கள் என்று பல தடவை –
ஸக்ருத் உச்சாரணமே பேற்றுக்கு -கிடையாமல் மீண்டும் மீண்டும் சொல்வது அவன் திரு உள்ளத்தை புண்படுத்தும்
ஆர்த்தோ வா யதி வா திருப்தா பரேஷாம் சரணாகத –பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மனா–ஸ்ரீ யுத்த காண்டம் –18-28-

நொந்து உரைத்தென்
வாய் நோவச் சொல்வதில் என்ன பலன்-
நோவு நமக்கு மட்டும் அல்ல -அவனது திரு உள்ளத்துக்கும் தானே

இனி-
இன்று முதலாக

எமக்கினியாதானும் ஆகிடு-
நமக்கு எது வேணுமாகிலும் நடக்கட்டும் –
பசிக்கு உணவு கிடைக்காமல் பின்பு கிடைத்தால் என்ன பயன் –
இங்கே அனுபவத்துக்கு கரையும் பொழுது கிடைக்காமல் அங்கே பெற்று என்ன பயன் –

கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே
இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி -13-9–

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய புக்த சேஷம் இவை உதகம் நய மாம் வீர விஸ்ரப்த பாபம் மயி ந வித்யதே–அயோத்யா -27-8-
ஸ்ரீ சீதா பிராட்டி பெருமாளை விட்டு பிரிந்தால் உயிர் வாழகில்லேன் என்றாளே தண்டகாரண்யத்துக்கு எழுந்து அருளும் பொழுது –

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய
பொறாமை கோபம் விட்டு -நான் உம்மை பின் தொடர்ந்தால் தந்தை சொல் கேட்டு போன உம்மைப் போலே
நான் உம்மை தொடர்ந்தேன் என்று உலகம் சொல்வதால் உமக்கு பொறாமையோ –

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய புக்த சேஷம் இவை உதகம்
வசிஷ்டர் சிஷ்யராக இருந்து இவை உமக்குக் கூடுமோ –
தாகம் தீர்ந்த பின்பு தண்ணீர் குடிப்பார் உண்டோ -கோபமும் பொறாமையும் உமக்குக் கூடாதே –
நய மாம் -அடியேனையும் கூட்டிச் செல்லும்
வீர -நீர் வீரர் அன்றோ
விஸ்ரப்த -அடியேன் சொற்களை விஸ்வசித்து அருளும் -இது வாய் வார்த்தை சொல் அல்ல -மனப் பூர்வகமாக சொன்னதே
பாபம் மயி ந வித்யதே–உம்மை விட்டு பிரிந்தால் உயிர் வாழகில்லேன்

அவர் திறத்தே
அப் பெருமான் விஷயமாகவே

யாதானும் சிந்தித்து இரு-
எதையாவது
நல்ல என் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என் -என்றபடி-
அவர் நெறி காட்டி நீக்கினாலும் நீக்கட்டும்-
கரு மா முறி மேனி காட்டினாலும் காட்டட்டும் நீ அவர் விஷயமாக ஏதாவது சிந்தித்து இரு

பேறும் இழவும் இரண்டும் ஒக்க எண்ணி இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன-
அவனே வேண்டும் என்றது அவனுடைய அனுக்ரஹம் வேண்டும் என்றபடி-
சத்தைக்கு இது எல்லாம் வேண்டா காண்-
அவன் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும்-நம்முடைய சத்தைக்கு அவன் சத்தை இறே காரணம்-
அவன் நம்மை விட்டாலும் நம்மிடம் இருந்து அவன் தன்னைப் பிரித்து போககில்லேனே -அப்ருதக் சித்தம் அன்றோ –

அவனுடைய அனுக்ரஹம் போலே நிக்ரஹமும் நமக்கு அனுசந்தேயமே
நம்மைப் பற்றி எம்பெருமான் திரு உள்ளத்தில் பட்டிருக்க வேண்டும் -அதுவே அபேஷிதம்-
கூவிக் கூவி நெஞ்சுருகி கண் பனி சோர நின்றால் பாவி நீ என்று என்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய்மொழி -4-7-3-
விருப்போ வெருப்போ கண் முன்னே வந்து தோற்றி அருளிச் செய்ய வேணும் என்பதே அருளிச் செய்கிறார்-
ஆண்டாளும்-செம்மை உடைய திரு மார்பில் சேர்த்தானேலும்-
ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோககி விடை தான் தருமேல் மிக நன்றே-

கை விடப் போகிறேன் என்ற சொல்லை யாவது முகம் நோக்கிச் சொல்வான் ஆகில்
அப்போது சேவை யாவது கிடைக்குமே-கண்ணிலே தென் பட்டான் ஆகில்
அப்போது உபாயங்களால் ஸ்வாதீனப் படுத்திக் கொள்ளலாமே
நல்ல அபிப்ராயமோ தீய அபிப்ராயமோ-நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்து அன்றோ உண்டாக வேண்டும்
அந்த நினைவு தானே நமக்கு போதுமானது -என்கிறார்

காண் -முன்னிலை அறை
ஆகிடு ஆகிடுக –

————————————————————————–

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

நாம் அயோக்யர் என்று கை வாங்கி இருப்பதே நல்லது-என்று நைச்யானுசந்தானம் செய்து-
ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தேவர்கள் அன்றோ துதிக்க அர்ஹ்யர்
ஒரு குணமுமே அன்றி குற்றமே வடிவாக உள்ள நாம்-எம்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு என்பதற்கும்-
நம்முடைய வணக்கம் என்பதற்கும் இங்கே என்னே விஷயம் இருக்கிறது-
எதற்காக வீணாக நாக்கை நீட்டி இருக்கிறாய் -என்கிறார் நெஞ்சை பார்த்து-

இதற்கு வேறு படியாகவும் அவதாரிகை உண்டு –

நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காணலுமாம் கொலோ என்றே –
எம்பெருமான் வடிவு அழகில் சிறிதும் ஈடுபாடு இன்றியே
உப்புச்சாறு கேட்டு -சாவாமைக்கு கடலைக் கடைந்து கொடு-மாவலியைக் கொல்லு இரணியனைக் கொல்லு -என்று-
நிர்பந்திக்கிற பிரயோஜனாந்திர பரர்களுக்கு சேவை கிடைக்குமே ஒழிய-
உம் வடிவு அழகின் அனுபவமே பரம பிரோஜனம் என்று இருக்கும் நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே-
பிரயோஜனாந்திர பரர்களுக்கே கார்யம் செய்யக் கடவோம் என்று சங்கல்பித்து கொண்டு இருக்கிற அந்த பெரியவருக்கு
நம்முடைய அநந்ய பிரயோஜனத்வம் தோஷமாக அன்றோ திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது-
நமக்கு அவனுடைய அனுக்ரஹம் கிடைக்குமோ-என்று
இன்னாப்பாகச் சொல்லுகிறார் என்னவுமாம்

வள வேழ் உலகம் -1-5- தலை எடுத்து அருளுகிறார் என்றுமாம்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் –முதல் திருவந்தாதி –52-
அவர் அஷ்ட வசுக்களை எண்மர் என்றார் இவர்– இரு நால்வர் -என்கிறார்
அவர் ஏகாதச ருத்ரர்களை பதினொருவர் -என்றதை இவர் ஈரைந்தின் மேல் ஒருவர் என்கிறார்
அவர் த்வாதச ஆதித்யர்களை ஈரறுவர் என்றதை இவர் எட்டொரு நால்வர் என்கிறார்
அச்விநீ தேவதைகளை இருவரும் ஓரிருவர் -என்கிறார்கள்–
ஆண்டாளும்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று-20- -என்றாள் இறே-
வேதமும் –
த்ரயஸ் த்ரிம்சத் வைதேவா -என்று பல இடங்களும் ஓதா நின்றது
ஆக-ஆழ்வார் நிச்சய அனுசந்தானமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்கிறார்-
இரு நால்வர்-அஷ்ட வசுக்கள் என்ன– ஈரைந்தின் மேல் ஒருவர் -ஏகாதச ருத்ரர்கள் என்ன –
எட்டோ டொரு நால்வர் -த்வாதச ஆதித்யர்கள் என்ன –ஓர் இருவர் அல்லால் –
அஸ்விநீ தேவர்கள் என்ன-ஆகிய முப்பத்து மூன்று அமரர்கள் தவிர மற்றவர்களான

திரு மாற்கு யாமார் –
நாம் எம்பெருமானை பணிவதற்கு-எவ்வளவு மனிசர் –

வணக்கமார்-
வணக்கம் யார் –
நம்முடைய பணிவு தான் எத்தகையது –
பிறப்பு ஒழுக்கம் இவற்றால் அயோக்யரான நாம்-ரஷ்ய வர்க்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லோம் –
அயோக்யரான நம்முடைய ஆஸ்ரயணம் தான் எங்கனே-
அயோக்யரான நாம் ஆஸ்ரயித்தோம் எனபது அவனுக்கு ஒரு பொருளா –
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாக இருந்து ஏத்த வீற்று இருந்த இது வியப்பே -என்னும்படியாக உள்ள அவனுக்கு
அறிவொன்றும் இல்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டு எண்ணத் தக்கதோ -என்றபடி
வணக்கம் எது -என்னாது–வணக்கம் ஆர் -என்று உயர் திணையாக அருளிச் செய்தது ஒரு வகைக் கவி மரபு

ஏ பாவம் –
அந்தோ –இரு நிலத்தோர் பழி படித்தேன் ஏ பாவமே -திரு நெடும் தாண்டகம்

நன்னெஞ்சே –
நல்ல மனமே –

நாமா மிகவுடையோம் நாழ் –
நாமோ என்றால் ‘குற்றம் உள்ளவர்களாக-இருக்கிறோம் இறே-
புருஷோத்தமனான அவன் முன்னே ஒரு பதார்த்தமாக நிற்பதும்-வணங்கினோம் என்பதும்-எவ்வளவு ஹேய விஷயம் –
நாமாமிக வுடையோம் நாழ்-நாமா -நாமோ என்றபடி
நைச்யம்-பண்ணும் பஷத்தில் – அபராத சஹச்ர பாஜனம்-
வெறுத்து அருளுகிற பஷத்தில்-பிரயோஜனாந்தர பரர்களுக்கே கார்யம் செய்வதாக திரு உள்ளத்தில் சங்கல்பம் கொண்டவர்-
குற்றமாக கொண்ட அநந்ய பிரயோஜனத்வத்தை கொண்ட நாமோ -என்றபடி-
நாழ் -குற்றம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

December 31, 2019

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

குணங்களால் பெருமை என்பது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸர்வேஸ்வரன்
நிர்ஹேதுகமாக ஆழ்வாரைக் கடாக்ஷித்து
இமையோர் தலைவா என்று பேசலாம் படி
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
(கிருபையே காரணம் -கண்டு என்பதால் ஜீவாத்மா விலக்காமல் கிருபைக்கு பாத்ர பூதனாய் )
தன்னை அனுபவிக்கைக்கு அனுகூலமான தேசத்தையும் அனுகூலமான ஞானம் வ்ருத்தம்
உள்ள -தேகத்தையும் காலத்தையும்
இங்கே இல்லாமல்
சதா அனுபவ அனுபவம் பண்ணும் நித்ய ஸூ ரிகளையும் கண்டு
தமக்கு அவர்களோபாதி அவன் பக்கல் உண்டான பிராப்தி உண்டாவதை உணர்ந்து
இவ்வனுபவத்துக்கு பிரதிகூலமான ஞான வ்ருத்த தேகங்களை தாம் உடையராய் இருக்கிறபடியும்
பிரதிகூலமான சம்சாரத்தில் இருக்கும் இருப்பையும் உணர்ந்து
தத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி சம்பந்தம் போக்கித் தர
இனி யாம் உறாமை -என்று
இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும் அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா
என்றார் திரு விருத்தத்தில்

திரு விருத்தத்தில் நூறு பாட்டுக்கும் இதே அர்த்தமாக வேணும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று உப ஸம்ஹரித்து
அடியேன் செய்யும் விண்ணப்பம் உபக்ரமித்து
மாறன் விண்ணப்பம் செய்த என்று தலைக் கட்டுகையாலும்

உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல் கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்
ஆற்றாமையால் சொல்லியவையே நடுவில் உள்ள பாட்டுக்கள்

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
ஸ்ரீ திரு விருத்தம்
இமையோர் தலைவா -விளிக்கிறார்
அவன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி அனைத்தையும் விஸத தமமாகக் காட்டி அருள

நித்ய ஸூரிகள் நித்ய விபூதியில் அனுபவிக்க
நித்ய சம்சாரிகள் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து உழலும் படியைக் கண்டு –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று நிகமித்து
இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பமே–என்பதைக் காட்டி அருளினார் ஸ்ரீ திருவிருத்தத்தில்-

பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை

தான் நினைத்த கார்யங்கள் தலைக்கட்டவே பீஷ்மர் சர கல்பத்தில் கிடைக்க அவரைக்கொண்டு நாட்டுக்கு தர்மங்களை உபதேசம்-
தர்மபுத்ரனை வியாஜ்ய மாத்ரம்
ஆழ்வாரை சம்சாரத்தில் இருக்க வைத்ததும் இத்துடன் ஒக்குமே
திருவாய் மொழி பர்யந்தமாகப் பாடுவித்து நாட்டை வாழ்விக்க வேண்டும் என்றே
இவருக்கு தான் சேஷியாய் இவர் சேஷ பூதராய் விரோதி நிவ்ருத்தி பண்ணுவாரும் தானேயாய் இருக்க
ஸ்ரீ வைஷ்ணவர்களை சேஷியாக தலைமக்களாக சொல்லுவான் என்
1-ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனைப் பெருக்கைக்கு உபகாரகர்கள் என்பதாலும் த்வார சேஷிகள் -நாயகனாய் நின்ற
2- -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு நாளும் பிரிகிலேன் –ஸ்ரீ பெரிய திரு மொழி -7-4-4- – -பர தசையில் ப்ராப்யர் ஆகையாலும்
இங்கே உபகாரகர் -புருஷகார பூத்தார் அங்கு ப்ராப்யர்
3- போதயந்த பரஸ்பரம் இதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை
என்றபடி அவர்களையே தம் திரு விருத்தத்தில் முக்கியமாக அருளுகிறார் –
மச் சித்தா மத் கதா பிராணா போத யந்த பரஸ்பரம் -கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீ கீதை -10-9-
விருத்தமான சம்ச்லேஷத்துக்கு உசாத்துணை ஆவார்கள் என்பதால் அவர்களைத் தலைமகனாக அருளிச் செய்கிறார்

திருவாசிரியத்தில்
தான் நினைத்த கார்யம் தலைக்கட்டவும்
(எல்லாமும் பண்ணக் கூடாது ஒன்றுமே பண்ணாமல் இருக்க முடியாது )
ப்ரக்ருதி சம்பந்தம் அருத்திலன் ஆகிலும்
நின்ற நிலையில் காட்டில் சிறிது விசேஷம் பண்ணிக்க கொடாவிடில் இவர் தரிக்க மாட்டாரே
ப்ரக்ருதி சம்பந்தம் அற்றார் அனுபவிக்கும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதியை
பிரக்ருதியிலே இருக்கும் போதே அனுபவிக்கும் படி ஞான வைஷ்யத்தை அருளிச் செய்தார்
(ஞானம் விளங்க விளங்க தானே அனுபவம் -ஹர்ஷம் -கைங்கர்யம் அனைத்தும் கிட்டும்
ஸாஸ்த்ரம் புறம்பானாலும் ஸத்யஸங்கல்பன் எதுவும் செய்யலாமே )
ஆழ்வார் அனுபவித்து திருவாசிரியம் அருளிச் செய்தார்

இதில் -பெரிய திருவந்தாதியில் –
இதர விஷயங்கள் அனுபவிக்கும் பொழுது ஓன்று அன்றிக்கே
அனுபவித்தாலும் இன்னது அனுபவித்தோம் என்று சொல்வதற்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும் –
ஆனால்
பகவத் விஷயத்தில் -இப்படி இன்றிக்கே –
அனுபவித்த விஷயம் சொல்லி முடிக்க முடியாமல்
அநுபூத விஷயம் தோற்றாமல்
அனுபாவ்ய அம்சம் பெருத்து இருக்குமே -அனுபவிக்க வேண்டிய விஷயம் விஞ்சி இருக்குமே
ஆகையால்
முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்ரீ பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -ஸ்ரீ திரு விருத்தம் –

ஸ்ரீ சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை ஸ்ரீ திருவாசிரியம்

ஸ்ரீ நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை இந்த ஸ்ரீ பெரிய திருவந்தாதி

ஸ்ரீ திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதைக் கண்டு
ஸ்வரூப அனுரூபமான பேறு பெற்ற நிலை ஸ்ரீ திருவாய்மொழி –

திரு விருத்தம் -பர பக்தி
திருவாசிரியம் -பரஞானம்
பெரிய திருவந்தாதி -பரம பக்தி
திருவாய் மொழி -பிராப்தி -என்றுமாம்

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
ஆழ்வாருக்கு தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளை நித்ய ஸூரிகளுக்குப் போலவே இங்கேயே காட்டி அருள
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த ஹர்ஷ அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்வ கீயாம் பகவத் அநுபவே ஸ்போதயாமாச தீவ்ரம் ஆசாம்-
பெரிய த்வரை உடன் அவனையே மடி பிடித்து
ஆர்த்தியை வெளியிட்டு அருளுகிறார் இதில் –

விஷய கௌரவரத்தால் இது பெரிய திருவந்தாதி –

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம்
தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி–56—

அவனுடைய நிர்ஹேதுக கிருபைக்கு அடி அறிய ஒண்ணாதே-காரணம் எதுவாய் இருந்தால் என்ன-
வாழ்ச்சி நன்றாக இருக்கிறது அத்தனை-என்கிறார் இதில்-

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

உகந்து அருளின நிலங்களை எல்லாம் விட்டு உம்முடைய நெஞ்சில் அன்றோ
நித்ய வாஸம் செய்கிறோம் என்ன-

அது கேட்டுத் தேறி
ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்கிறார் இதில்

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-

எம்பெருமானுக்கு நிழலும் அடி தாறும் ஆனோம்-விட்டு நீங்காது அத்தாணிச் சேவகம் செய்யப் பெற்றோம்-
ஆகையாலே கார்யம் கை கூடிற்று –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய
ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-

திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-
குடக்கூத்தாடி-
அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு
நிழலும் அடிதாறும் ஆனோம்

வெந் நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை–60–
வல் வினைகள் அடர்த்தாலும்-தமது அத்யாவசாயம் குலையாமல் இருப்பதை அருளிச் செய்கிறார் இதில்-

நெஞ்சே உனக்கு புதிதாக உபதேசிக்க வேண்டியது இல்லை
அவனை விஸ்வசித்து அவனையே அனுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாய் ஆகில் உகக்கிறேன்
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும்
என்று வெறுத்து இருக்கிறேன் -என்கிறார்

மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே – –22-
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ யம்மா காட்டும் நெறி —-5–
நல் காப்பான் தாய் தந்தை எவ் வுயிர்க்கும் தான் –23-

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால் அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

சீறேல் நீ –2-அபராத ஷாமணம்
உன் அடியார்க்கு என் செய்வேன் என்றே இருத்தி நீ -53-
நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூசசா –

இவ்வாறு பலவாறும் தாஸஸ்த்வம் அருளிச் செய்வதாலும் இது பெரிய திருவந்தாதி –

ஸ்வரூப ஞானம் பெற்று குணக் கடலுள் அழுந்தி குள்ளக் குளிர நீராட கடாக்ஷ லேசத்தாலே
அருளுவான் என்றதை எடுத்துக் காட்டியதால் பெரிய திருவந்தாதி-

அதர்வண வேத சாரமாகும் –

(அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –
தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்
ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185
பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

————-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-என்று தொடங்கி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-என்று நிகமிக்கிறார் –

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் -குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

December 31, 2019

(பரத்வத்திலே நோக்கு வேதங்களில்
ஸுலப்யத்தில் நோக்கு அருளிச் செயல்கள்
சரீரத்தால் பேறு வேதம் சொல்ல
ஆத்மாவாலும் அவனாலும் பிராட்டியாலும் பேறு –
வேத தாத்பர்யங்களான ரஹஸ்ய த்ரய அர்த்தங்களை சொல்ல வந்ததே அருளிச் செயல்கள்
வேதம் சர்வாதிகாரம் அல்ல
அருளிச் செயல்களோ ரஹஸ்ய த்ரயங்களை சொல்ல வந்தாலும் சர்வாதிகாரம் –

பெரியவர் ஆழ்வார் அருளிச் செய்த ஆழமான அர்த்தங்களை சொல்லும் பெரிய திருவந்தாதி
ஆழ்வார்களுக்கு அங்கி நம்மாழ்வார் -நம்பெருமாள் ஆதாரத்தோடு நம்மாழ்வார் என்று அபிமானிக்கப் பட்டவர்
அர்ச்சா திருமேனி -திரு முத்துச் சட்டையும் கொடுத்து அருளி நம்மாழ்வாருக்கு
நம் சடகோபனைப் பாடினாயோ எஞ்சு விஞ்சிய ஆதாரத்தோடு பேச -சடகோபர் அந்தாதி பிறந்ததே –

நஹ குலபதி வகுளாபிராமம் -ஆளவந்தார் -நம் குலபதி அன்றோ
விப்ரர்களுக்கு கோத்ர ஸூத்ர சரண குலபதிகள் -பராங்குச பரகால யதிவராதிகள்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அன்னையாய் அத்தனாய் நம்மை ஆண்டிடும் -பிரிய ஹித -வேண்டிய பிரியங்களை சொல்லி ஹித உபதேசம்
இன்ப மாரி இவர்
அருள் மாரி அங்கமான கலியன்
ஆதி சேஷன் உறங்கா புளி -5122 வருஷம் பழைய
கருட அம்சம் -மதுரகவி விபவ தசையில் சாஷாத்கரித்து
நாதமுனிகள் யோகம் மூலம் அர்ச்சா திருமேனியை சாஷாத்கரித்து
பவிஷ்யத் ஆச்சார்யர் ஆழ்வாரால் காணப் பட்டு பரகத ஸ்வீ காரம்

விசாகம் நக்ஷத்ரம் இஷ்வாகு குல நக்ஷத்ரம் -யுத்த காண்டம் நான்காம் அதிகாரம் –
அன்று தான் யுத்தம் முடிந்து இலங்கை விட்டு கிளம்பினார்கள்
திருவாய் மொழிப் பிள்ளையும் விசாகம் நக்ஷத்ரம்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி தானே இவரது அருளிச் செயல்கள் –
திருமாலவன் கவி
என் நாவில் புகுந்து தானே தன்னைப்பாடி

விஸ்வம் பரரையே பரிக்கும் பெரியவர் இவரே
நான் பெரியன் —
நீ பெரியை என்பதை யார் அறிவார்
நேமியைக் கேட்டாலும் இப்படியே சொல்வார்கள்

நமோ வாஸ யாச உதித யாச அனு உதித தஸ்யை வச -உதித்திப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுக்கும் -இன்னும் உதிக்கப்படும்
ஸ்ரீ ஸூக்திகளுக்கும் நமஸ் -வேதமே சொல்லும்
அத்ராஷீ -சஹஸ்ர -பார்த்தார் -பண்டை நான் மறை -கண்டு இவர் வாயனவாறே சர்வ உஜ்ஜீவனம் ஆனதே
வேதக் கடல் உப்பு -மேகம் பெருகின சமுத்ராம்பு -ஸர்வதா சர்வ உஜ்ஜீவனம் ஆனதே –
அது தான் தோன்றி –வேதம் தமிழ் செய்த மாறன் -ம்ருத் கடம் போல் அன்றே பொற் குடம்

சடாரி உபநிஷத் உபகான மாத்ர போகா -கண்ணி நுண் தனியன்
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

ருக்கும் 100 ஸூக்தங்கள் -திருவிருத்தம்
யஜுர் -7-காண்டம் -திருவாசிரியம்
முண்டக உபநிஷத் —87-பகுதி என்பர் -அதர்வண வேத சாம்யம் பெரிய திருவந்தாதி
சாம வேதம் -சாகை ஆயிரம் -திருவாய் மொழி

ஓம் நம -திரு விருத்தம்
நாராயணாயா -திரு வாசிரியம்
சரம ஸ்லோகம் -பெரிய திருவந்தாதி -திருவடிகளே மாம் ஏகம் -நெறி காட்டி நீக்குதியோ -கண்ணனாலேயே மனத் துக்கும் மாயத்தேன்
த்வயம் -திருவாய்மொழி -சார ஸங்க்ரஹம் தீர்க்க சரணாகதி

பா மன்னு மாறன் அடி பணிந்த- பராங்குச பாத பக்தரான -ஆழ்வாராலேயே சாஷாத்கரித்து
அருளப் பட்ட எம்பெருமானாரே -வளர்த்த இதத் தாயான –
பூதூரில் வந்து உதித்த புண்ணியனான
இதற்கும் பெருமாள் திருமொழிக்கும் தனியன் சாதித்து அருளி உள்ளார் –
தங்கும் மனம் நீ எனக்குத் தா -இவர் இடமே பிரார்த்தித்துப் பெற வேண்டுமே )

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

இது பெரிய திருவந்தாதி திவ்ய பிரபந்த தனியனாக பெரியோர்களால் அனுசந்தித்துக் கொண்டு போவதாய் இருக்கும்
(தனியனில் பெரிய திருவந்தாதி பற்றி நேராக இல்லையே
முயற்றி பதம் கொண்டே இப்படி -காலக்ஷேபத்தில் சாதித்ததை ஓராண் வழியாக உபதேசித்து அருளிச் செய்வார்கள் )
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே-என்ற பாசுர ஸ்ரீ ஸூக்திகளே –
முந்துற்ற நெஞ்சே -முயற்றி தரித்து -என்று முன் பின்னாக இருக்கிறது

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

(நெஞ்சைப் பார்த்து நினைக்கச் சொல்லாமல் கூறச் சொல்கிறார்
எங்கள் குலசேகரன் என்றே கூறு அங்கும் –
எல்லாக் கரணங்களும் மற்றவற்றின் செயல்களையே ஆசைப்படும்
நாம் சொல்லுவோம் இராமானுசன் என்று அவர் நாமங்களையே சொல்லிக் கொண்டு போக வேண்டுமே
வாழ்த்தியே -பாட பேதம் வெண்டளைக்குப் பொருந்தும் )

முந்துற்ற நெஞ்சே -ஆழ்வாரை ஸமாஸ்ரயணம் செய்ய -என்னைக் காட்டியிலும் -முன் செல்லும் நெஞ்சே
முயற்றி -முயற்றி -என்று உபக்ரமித்து உள்ள இந்த திவ்ய பிரபந்தத்தை
முயற்றி -உத்ஸாகம் ப்ரயத்னம் என்றுமாம் -உத்ஸாகத்தை உள்ளத்தில் தரித்து என்றுமாம்
தரித்து -புத்தியில் தரித்து
உரைத்து-வாயாலே சொல்லி
வந்தித்து -ஆழ்வாரை வணங்கி
வாயார வாழ்த்திச் -வாய் ஓயும் வரை மங்களா ஸாஸனம் பண்ணி
(உரைத்து என்று விஷயம் சொல்லி
அடுத்து வாயார வாழ்த்தி மங்களா ஸாஸனம் பண்ணுவதே பிரதானம்
வாழ்த்தியே -பாட பேதம் வெண்டளைக்குப் பொருந்தும் )
முருகூரும்-தேன் பெருகும் படியான
சந்த சோலை -சந்தன மரங்களை யுடைய சோலைகளாலே
சூழ் மொய் பூம் பொருநல்-சூழப்பட்டதாய் -நீர் நிறைந்த அழகிய தாமிரபரணி நதியை யுடைய
குருகூரன் மாறன் பேர் கூறு –திரு நகரிக்கு ஸ்வாமியான நம்மாழ்வாருடைய திரு நாமத்தை அனுசந்தித்துப் போரு

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஒ மனமே
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில்
உத்சாகம் கொண்டு-என் நிலைமையை ஆழ்வார் இடம் விஞ்ஞாபித்து

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -என்றே தொடங்கும் பிரபந்தம் –

வந்தித்து வாயார வாழ்த்திச் –
தண்டன் சமர்ப்பித்து-வாய் படைத்தது சபலமாம் படி வாழ்த்தி
வாயார வாழ்த்தியே -வெண்டளை பிறழாத பாடம் –

முருகூரும் -சந்த சோலை சூழ் –
தேன் பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்

மொய் பூம் பொருநல்-
நெருங்கிய-அழகிய-தாமர பரணியை உடையதுமான

குருகூரன் –
திரு நகருக்குத் தலைவரான

மாறன் பேர் கூறு –
நம் ஆழ்வார் உடைய திரு நாமங்களை நீ சொல்லு

முந்துற்ற நெஞ்சே-
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் முன்புற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரது திரு உள்ளம் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் முன்புற்றதே ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலவே –

என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி — நாண் மலர்ப் பாத மடைந்ததுவே–ஸ்ரீ திருவாய் மொழி-8-2-10-

என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்––ஸ்ரீ திருவாய் மொழி-7-3-4-

என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-7-

காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–49-

தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி–50-

என் நெஞ்சினாரை கண்டால் என்னைச் சொல்லி –-ஸ்ரீ திரு விருத்தம்-30-

முயற்றி தரித்து –
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -(ஸ்ரீ கண்ணி )–என்கிறபடியே
உத்ஸாஹத்தை யுடைத்தாய்
முயற்றி சுமந்து -என்ற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி

முயற்றி தரித்து உரைத்து –
ஸ்ரீ பெரிய திருவந்தாதியை அருளிச் செய்ததை காட்டி அருளிய படி

அன்றிக்கே –
முயற்றி (என்று தொடங்கும் ) திவ்ய பிரபந்தத்தை புத்தி ஸ்திதமாம் படி தரித்து
பின்பு
வாஸிகமாக அநு சந்தித்து -என்றுமாம்

உரைத்து –
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே––ஸ்ரீ திருவாய் மொழி-6-8-1-என்றபடி –
ஸ்ரீ ஆழ்வார் போலவே
ஸ்ரீ ராமானுஜர் பிரிவாற்றாமையால் உரைத்தபடி

இட்ட மா மகிழ் மாலை தந்திடில் இந்த மாலையை எல்லாம் செம்பொத்த கொங்கை மேல் செழும்
சந்தனக் குழம்பு பொறுக்குமோ ஆழ்வாரே (ப்ரமாணத்துக்கு ஆகாரம் இல்லை )-என்றால் போலே
என் தசையைச் சொல்லி

வந்தித்து
திருவடி தொழுது

முயற்றி தரித்து உரைத்து வந்தித்து
ஞான முத்திரை -திரு மார்பை சேவித்து –
(சேஷி சேஷ பாவ ) சம்பந்த அனுசந்தானத்தோடே வந்தித்து
பிரபந்த வக்தாவானவை பிரணாமம் பண்ணி

கரு வண்ணம் முதலான அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-3–என்றால் போலே

சகல கலா பூர்ணமான சந்த்ர மண்டலம் போலே இருப்பதாய் –

ஒண் நுதல் (திரு விருத்தம் )-என்ற
ஊர்த்வ புண்ட்ர மண்டிதமான -திரு முக மண்டலத்தையும்

கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

ஆட் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்––ஸ்ரீ திருவாய் மொழி-4-10-11-என்றால் போலே

மகிழ் மாலை திரு மார்பையும்
ஞான முத்ரா முத்ரிதமான திருக் கை மலரையும்
பத்மாசன உபவிஷ்டமான பத யுகங்களை கண்டு தொழுது
அநந்தரம் வாயார வாழ்த்தி

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு––ஸ்ரீ பெரிய திருவந்தாதி-12-என்றால் போலேவும்

அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-39—என்றால் போலேவும்

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-84-என்றால் போலேவும்

புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-5-என்றால் போலே
வாய் படைத்த பிரயோஜனம் பெற
(திவ்ய தேச யாத்திரைக்கு போவார் இடம் எனக்காகவும் சேவித்து வா என்று இந்தப் பாசுரம் சொல்லுவார்கள் )

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்ற ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலே
பிரத்யஷே குருவ ஸ்துதியா –என்று வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டுமே –

இனி அவ்வளவிலே நில்லாதே அவர் திருநாமத்தை இங்கே வந்து சொல்லுதல்
அவர் ஸந்நிதியில் சொல்லுதல் -என்னும்படியைச் சொல்லுகிறது

சந்த முருகூரும் சோலை சூழ்
முருகூரும் சந்த சோலை சூழ்
ஆரப் பொழில் தென் குருகை–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -என்கிறபடியே
மகரந்த ப்ரவாஹத்தை யுடைய சந்தனச் சோலையாலே சூழப்பட்டு இருப்பதாய்

மொய் பூம் பொருநல் -என்கிறபடியே
மொய் பூம் பொருநல் ஆற்றை யுடைய

நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் –ஸ்ரீ திரு விருத்தம் -100-
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் –ஸ்ரீ திருவாய் மொழி -4-5-11-

சம்ருத்தமாய் -ஸ ரஸமான -நிர்மல சலிலத்தை யுடைய திருப் பொருநல் தீரமான
திரு நகரி ஆழ்வார் திரு நாமத்தை சத்தை பெறும்படி சொல்லு

சடகோபன் தெரிந்துரைத்த
குருகூர் சடகோபன் -2-5-11–
நான் கூறும் கூற்றாவது இத்தனையே –ஸ்ரீ பெரிய திருவந்தாதி –46-
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்––5-9-11–
நாராயணன் நாமங்களே–5-9-10-
நாமம் பராங்குசமோ –இத்யாதி போலே
நாமம் பராங்குசன் என்னும்படியாக நாமத்தைக் கூறு
நம் மாறன் -என்ற பாடமாகில் -நம்மாழ்வார் என்று கருத்து

குருகூரன் மாறன்
குருகூர் நம் மாறன் (பாட பேதம் )
நம்மாழ்வார் என்றபடி –

பேர் கூறு –-
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே–5-4-5–
நாடு எல்லாம் கை கூப்பும் படி கூறு –
குருகூர் சடகோபன் என்றதுமே கை கூப்பி வணங்குவோம்
எண்டிசையும் அறிய இயம்புகேன் –போலே ப்ரஸித்தமாகக் கூறு

குரு பதாம்புஜம் த்யாயேத் குருர் நாம சதா ஜபேத் -குரு சேவாம் சதா குர்யாத் ச அம்ருதத்வாய கல்பதே-ப்ரபஞ்ச சாரம் –

ஆச்சார்யர் திருவடி தியானித்து –
ஆச்சார்ய திரு நாம சங்கீர்த்தனமும்
ஆச்சார்ய கைங்கர்யமும் செய்து முமுஷுத்வம் பெறுவோம்

ஆழ்வார் ப்ரபந்தத்துக்கு முன்னே
அவர் அபிமானம் அநு சந்தேயம் என்றதாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செயல்களில் – இனி – சப்த பிரயோகங்கள்-

December 28, 2019

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் சூரணை-229 –

இனிமேல் இவர் பிரதமத்தில் -இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று ஆர்த்தராய்
சரணம் புக்க போதே விரோதி நிவ்ருத்த பூர்வகையான ஸ்வ பிராப்தியை பண்ணுவியாமல்
இவ்வளவாக இவரை வைக்கைக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே
வைக்கைக்கு ஹேது பல உண்டு என்னும் அத்தையும்
அவை எல்லா வற்றிலும் முக்ய ஹேது இன்னது என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் –

உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது
நாடு திருந்த –
நச்சுப் பொய்கை யாகாமைக்கு –
பிரபந்தம் தலைக் கட்ட –
வேர் சூடுவார்
மண் பற்றுப் போலே –
என்னும் அவற்றிலும்
இனி இனி என்று இருபதின் கால் கூப்ப்பிடும்
ஆர்த்த் யதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம் .–

அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற
பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய் திரு அடிகளில்
விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-என்று திரு அடிகளைக் கிட்டி –
ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –

தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் —

பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் -பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –

தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம்
பரிசமாப்தம் ஆகைக்காகவும் –

வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே –
ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே –
இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான
விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-

1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி இவளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-
4-இனி அவர் கண் தாங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-
6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-
7-எந்நாள் யான் உன்னை இனி வந்துகூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-
9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-
10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-
11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-
14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-
15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-
16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-
18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்று

(ஆறாம் பத்திலும் எட்டாம் பத்திலும் இல்லை
இனி -வேறே இடங்களில் –9-10-10-ஹர்ஷத்தால் பாடியவை போல்வன இங்கு எடுக்கப்பட வில்லை -)

இப்படி இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து –
பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை ..

ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது -ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி —
பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது –
ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் –
இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து –

————————————

ஸ்ரீ திரு விருத்தம்–

1-தாமான தன்மையில் அருளிச் செய்தது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

2-பிரிவாற்றாத் தலைவி இருளுக்கும் வாடைக்கும் இரங்குதல்-
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவியப்
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவரார் எனை யூழி களீர்வனவே –13–

3-இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண் பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள் தன்
நிறையோ இனி யுன் திருவருளால் அன்றிக் காப்பு அரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -62-

———–

ஸ்ரீ திருவாய் மொழி–

4-என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-

5-நீ யலையே சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

6-வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

7-முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
வென் நாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து
எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே –3-2-1-

8-கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து, அலமருகின்றேன்;
மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?–3-2-9-

9–மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்று உண்பர்
அறப் பொருளை யறிந்து ஓரார் இவை என்ன உலகியற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே –4-9-6

10-ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல் லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே–5-4-2-

11-வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே–5-4-9-

12-நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் ஆகிலும் இனி யுன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை யம்மானே
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்று இருந்த எந்தாய் உனக்கு மிகை யல்லேன் அங்கே –5-7-1-

13-அரியேறே! என் னம் பொற் சுடரே! செங்கட் கரு முகிலே!
எரி யேய் பவளக் குன்றே! நால் தோள் எந்தாய்! உன தருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே–5-8-7-

14-இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந்தினி யாரைக் கொண்டென் உசாகோ! ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே–7-3-4-

15-இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

16-எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10-

17-புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

18-முனியே நான் முகனே முக்கண்ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1-

19-எனக்காரா வமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என்னன்பேயோ -10-10-6-

20-கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

—-

ஸ்ரீ திரு விருத்தம்–

தலைமகனது தாரில் ஈடுபட்ட தலைவி அற்றது கூறுதல் –
எங்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேரமரர்
தங்கோனுடைய தங்கோனும்பரெல்லாயவர்க்கும் தங்கோன்
நங்கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே–25–

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

————–

ஸ்ரீ திருவாய் மொழி–

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரிற் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?–1-7-7-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் இங்கு இல்லான் இனிப்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
முன்னை அமரர் முழு முதலானே–1-7-8-

அமரர் முழு முதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலுமோ?–1-7-9-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-

நெஞ்சமே! நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–1-10-4-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10–

எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்!
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–2-3-4-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேன் உட் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனிச்
செடியார் நோய்கள் எல்லாம் துரத்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும்
விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே–2-6-7-

எந்தாய்!தண் திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்! மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா!
கொந்து ஆர் தண் அம் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைந்த எம்
மைந்தா! வான்ஏறே! இனி எங்குப் போகின்றதே?–2-6-9-

மாதவன் என்றதே கொண்டு, என்னை இனி இப்பால் பட்டது
யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே!
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்;
வெம்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?–3-2-1-

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பான் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2-

கிற்பன் கில்லேன் என்றிலேன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

கோலமே தாமரைக் கண்ணது ஒரஞ்சன
நீலமே நின்று எனதாவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதான முன்னிலாம்
காலமே உன்னை எந்நாள் கண்டு கொள்வனே –3-8-8-

கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர ஓராயிரம் தோள் துணித்த
புள்வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே–3-8-9-

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ் வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டோ?–4-5-9-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த்
தேர்ப் பாக னார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே–4-6-1-

மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்று உண்பர்
அறப் பொருளை யறிந்து ஓரார் இவை என்ன உலகியற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே –4-9-6

கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே–5-1-1-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே-5-3-2-

வாராவருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக் குடந்தை
ஊரா உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –5-8-10-

மின்னிடை மடவார்கள் நின் னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலி னேர் தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே–6-2-4-

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங் கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக் கென் னினி நோவதுவே?–6-4-3-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங் குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே–6-4-7-

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப்பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –6-9-3-

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஓன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே –6-9-8-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –5-9-9-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே
மெய் நான் எய்தி எந்நாள் உன்னடிக் கண் அடியேன் மேவுவதே –6-10-6-

என்றே என்னை உன்னேரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திரு மாலே –7-3-8-

துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங் கொல் இன்றே?–6-7-5-

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங் கண்கள் பனி மல்கவே–6-7-6-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே–6-7-9-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே–6-7-10-

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப்பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –6-9-3-

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறி தொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே–6-9-8-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–6-9-9-

தீர் மருந் தின்றி ஐவர் நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங் குடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்!அடலாழி ஏந்தி அசுரர் வன் குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே–7-3-5-

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே–7-3-7-

என்றே என்னை உன்னேரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திரு மாலே –7-3-8-

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லள வன்று இமையோர் தமக்கும்
எல்லை யிலாதன கூழ்ப்புச் செய்யும் அத் திறம் நிற்க எம் மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப் பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே—8-2-6-

காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

என் னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வ தென் என்னெஞ்சென்னை
நின் னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக் கொண்டு
பன் னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன் னெடும் குன்றம் வருவ தொப்பான் நாண் மலர்ப் பாத மடைந்ததுவே-8-2-10-

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-

புகலிடம் அறிகிலம் தமியமாலோ
புலம்புறு மணி தென்றல் ஆம்பலாலோ
பகலடு மாலை வண் சாந்தமாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடையாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என் உயிர்க்கும் மாறு ஏன் –8-9-2-

இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
நுனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
தாமரைக்கு கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-8-9-3-

அவனுடைய அருள் பெறும் பொது அரிதால்
அவ்வருள் அல்லது வருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் நிருவாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகும் இடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் –8-9-6-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடுவினை நஞ்சே என்னுடையமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே –9-2-10-

எவை கொல் அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகழாவது ஓர் நாள் அறியேனே –9-8-3-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே–10-1-3-

தகவிலை தகவிலையே நீ கண்ணா
தடமுலை புணர்தொரும் புணர்ச்சிக்கு ஆராச்
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சரம உபாய நிர்ணயம்–ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள்

October 5, 2019

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -நிலை -பவிஷ்யத்ககார ஆச்சார்யர் -ஸ்ரீ பெருமாளே காட்டி அருள –
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை –பற்றி இரண்டு தனியன்கள்-

ஸூருத்த யர்த்த சார ஜனகம்-ஸ்ம்ருதி பால மித்ரம் -( இளம் சூரியன் போலே) -பகவத் அங்கிரி
புராண பந்து- (பழ வடியேன்-சேஷத்வம் தொன்மை ) ஞானாதி ராஜம் -அபயப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி

அபயப்பிராய பாதர் தேசிக உத்பவம் திருக்குமாரர் -அகில ஜகத் ஜீவன உபாயம் – ஆகிய –
அஸ்மத் தேசிகன் ஆஸ்ரயே யத் பிரசாத் சரம உபாய நிர்ணய ஸஹாய குரும் நியம ஆதரானே ஆசை யுடன் ஸ்துதிக்கிறேன்

த்யான ஸ்லோகங்கள் நான்கும்

1-அபாய பிரய பாதர் -ஆகிய -என்று புகழாகச் சொல்லப்பட்ட -அஸ்மத் தேசிகன்-
அடியேனுக்கு பிதாவும் குருவுமான -யத் பிரசாத் -வாக்ய-எழுதப்பட்டது

2-அஸ்மத் ஜனக காருண்ய –ஸூதா ஸந்துஷ்ட ஆத்மாவான்-அமுத வெள்ளத்தில் நனைக்கப்பட்டவன் –
கரோமி சரம உபாய நிர்ணயம் மத் பிதா யதா மத் பிதா ஏதா -தந்தை சொன்னபடியே திரும்பி சொல்கிறேன்

3-அஸ்மத் உத்காரகம் வந்தே – யதிராஜம்-ஜகத் குரும்- -யத் கிருபா ப்ரேரிதா குருமி -சரம உபாய நிர்ணயம்
அரங்கம் ஆளி என் ஆளி போலே

4-பூர்வ அபர குரு ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டும் -முன் பின் குருக்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை – –
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்கள் இரண்டும் ஆதாரமாகக் கொண்டு மயா சம்யக் கிரியதே-நன்றாக அடியேனால் செய்யப்பட்டது –
யதிராஜரே சரம உபாயம் என்பது பொருந்தும் -என்னும் அர்த்தம் சொல்லப்பட்டது

————-

ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –பொதுவாக எழுதி -சர்வருக்கு உஜ்ஜீவன அர்த்தமாக –
இவர் இங்கே காட்டி அருளுவது -ஸ்ரீ ராமானுஜர் அபிமானம் உத்தாரகம் –
ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -அவர் அவர்களுக்கு அவர் அவர்கள் பெருமாள் என்று காட்டி அருளியது போலே –
சாஷாத் ஆச்சார்யத்வைத்தை -நம் முதலிகள்-தம் தாம் ஆச்சார்யர்கள் அபிமானம் உத்தாரகம் -சம்சாரம் தாண்ட –
என்று அறுதி விட்டார்களே ஆகிலும் -முதல் படி இது –

ஆச்சார்யர்கள் உடையவரே உத்தாரகம் என்று காட்டிக் கொடுத்து-நீங்களும் இப்படியே
விஸ்வசித்து போங்கள் என்று அருளியதால் – இவரே சரம உபாயம் –
சாஷாத் -நேரே மோக்ஷம் கொடுப்பவர் -என்றும் கண் முன் நேராக என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டே
குருவி தலையில் பனங்காயை வைத்தது போலே -என்பார்கள்

குரு -சொல் பொருந்தும் இடம் -விஷ்ணு சேஷி -ததீயா ஸூப குண நிலைய விக்ரஹ ஸ்ரீ சடாரி -விஷ்ணுவுக்கு திருமேனி
ஸ்ரீ ராமானுஜர் ஆழ்வார் பாத கமலங்கள் -மாறன் அடி பணிந்தவர் –
தஸ்மிந் ராமாநுஜார்யரே குரு என்னும் சொல் இங்கே தானே நன்கு பிரகாசிக்கும் -நான்யத்ர-என்றவாறு –
பிரதம பெருமாள் -மத்யம-பாகவத ஆழ்வார் – சரம-ஆச்சார்யர் ராமானுஜர் -என்றவாறு –
தஸ்ய நாதஸ்ய சேஷம் -அனைவரும்–அவதார விசேஷம் என்பதால் இவர் ஆதி சேஷன் -குரு என்பதால் சேஷியும் இவரே Dhanya Mata
ஒளி விஞ்சி விவஸ்திதம் இங்கே -ஸ்ரீ வடுக நம்பி வார்த்தையை நினைப்பது –

சம்பந்தம் விலகாமல் -முன்புள்ள பின்புள்ள முதலிகள் – இதுவே பரம உத்தாரகம் -த்வித சம்பந்தம் –
ஆரோகணம் அவரோகணம் -சம்பந்தம்
ஆசார்யத்வேன -சிஷ்யத்வேன இவை இரண்டுக்கும்-ஆரோஹண அவரோஹண கிரமங்களுக்கும் விளை நிலம் உடையவர் இறே –
ஓன்று நிரவதிகமாய் ஓன்று சாவதிகமாய் இருக்கும் -அவரோகணம் இன்னும் நிரவதிகமாய் இருக்கும்
பர்யந்தம் சொல்லு முடிவு இன்றிக்கே இருக்கும் -ஸ்ரீ லஷிமீ வல்லபன் பர்யந்தம் சா வதிகம் தானே
ஆ பகவத் -ஆ ராதனம் -ஆ காசம் -ஆ சமந்தாத் -முதலில் இருந்து எல்லாம் அவனுக்கு ப்ரீதி ஏற்படுத்தும் செயல்கள் –
அசவ் -இதி பகவத் அளவும் -ஸ்ரீ எம்பெருமானார் அளவும் கொழுந்து -விட்டு படரும் –
கொழுந்து இலை கிளை தண்டு மரம் –அவரோகணம் -மரம் தொடங்கி ஆரோஹணம்
இடையிலே -நின்றார் -நடு நாயகமாய் இருப்பார் -குரு பரம்பரா ஹாரம்
குரு பரம்பரையில் இடையிடப்பட்டார் அன்றோ இவர் -இரு தலை நாயகமாகக் கொண்டு பிரகாசப்படுத்துவார்
பத்தோடு பதினொன்று தானே இவர் சங்கை கூடாதே –மேல் ஒன்பது -கீழே ஒன்பது -பாரபக்ஷம் இல்லாமல் –
இரண்டு திறத்தாரும் கார்யம் கொள்ளும் பொழுது மத்தியஸ்தர் கொண்டே தானே கார்யம் செய்ய வேண்டும்

முன் பின் பெற்ற பிரகாரம் -உற்றேன் உகந்து பணி செய்தென் -கார்யம் தலைக்கட்டும்
பத த்ரயத்துக்கும் மத்யம பதம் போலே -பர்வத த்ரயத்துக்கும் மத்தியஸ்தர் இவர்
ம ஜீவர் /நார-சேதன அசேதனங்கள் -பதத்தில் சொல்லப்பட்ட மகார ஜீவர்களுக்கு உபாயம் –
நமஸ் உபாய -அசேதனத்துக்கு இல்லை -ஞானம் உடையவனும் தானே உபாயம்
நடுவில் நின்று இருவருக்கும் கார்யம் -சம்பந்த த்வயம் உண்டே –
கார்ய உபயோகி -ஆச்சார்யத்வேன -சிஷ்யத்வேன -உத்தாராகத்வம் -இது தானே இவருக்கு விசேஷம் –
அசாதாரணத்வம் -இவருக்கு மட்டும்
இந்த ஆகார த்ரயத்தை விசேஷேண வெளியிட்டுக் கொண்டு விஸ்வசனீயராக இருக்கிறார்-
நம்பனை நரசிங்கனை -ஆழ்வாராதிகளுக்கு மட்டுமே -அவன்
அர்வாஞ்சோ–யத் பத சரஸிஜ த்வந்த பூர்வே -தோயம் ராமானுஜ அபி யஸ் சம்பந்தாத் -ஸ்ரீ கூரத்தாழ்வான் பெருமை

கிருபாமாத்ர ப்ரசன்னாச்சார்யார் இடம் தானே நம்பலாம் -எலி எலும்பின் ஆச்சார்யர் திரு உள்ளத்துக்கு ஏற்க அனுவர்த்திக்கப் போகாதே
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலமாக இருப்பார் துர்லபம் -ஸ்ரீ முதலியாண்டான் நமக்காக ஸ்ரீ கூரத்தாழ்வான் இடம் –
மத்தகத்துக்கு –ஞான சாரம் பாசுரம் -பரகத சுவீகாரம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்று —
நம்முடைய ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளுவார்
சோமாசி ஆண்டான் -அபராதம் செய்யும் பிரபன்னர் -காருணிக குணத்தால் ரஷிக்கும் ஆச்சார்யர் முக்கிய குரு –
அப்ரமேயர் -குரு குணாவளி பிரபந்தத்தில் அருளிச் செய்துள்ளார்
உத்தாரகத்தாராகவும் கிருபா மாத்ர பிரசன்பனாச்சார்யராக இருப்பது இவர் இடமே பொருந்தும் –
பூர்ணமாக இருப்பது உத்தாரகத்வ விசிஷ்டமான கிருபா மாத்ர ப்ரசன்னாசாரத்வம் இவர் இடமே பொருந்தும்

ஸ்ரீ அரையர் குமாரரை திருத்தி -அரங்கமாளி-என்பான் திருவடி நிலைகளை தலையிலே சாத்தி –
நீ பற்றின காலுக்கும் இதுக்கும் வாசி கண்டாயே அவை நரவாஹகம் -அன்று தொடங்கி அவன்
இந்த ரஹஸ்யத்தை எனக்கு உபதேசித்து தந்தை சொல்ல அப்படியே நானும் விஸ்வசித்து போருவேன்
இவை இரண்டுமே பிரமாணம் -மேலும் இவ்வர்த்தத்தை ஸ்திரீகரிக்க மேலும் பல ஸ்ரீ ஸூக்திகள் –
ஸ்வப்ன விருத்தாந்தங்கள் மேலே அருளிச் செய்கிறார்

இந்த பிரபன்ன குலத்தில் அவதரிக்கப் போகிறார் -அவராலே நாடு அடங்க உஜ்ஜீவிக்கும் -ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ நாதமுனிகளுக்கு சொல்ல –
பயன் நன்றாகிலும் –முயல்கிறேன் -செயல் நன்றாக திருத்தி -மூன்று நிலைகள் -பாசுரம் அருளி –
இவர் அவதாரம் செய்வார் -விக்ரஹம் காட்டி மூன்றும் –
அற்றை இரவில் ஸ்வப்ன முகேன எழுந்து அருளி -திருமேனி காட்டி அருள
ஆஜானுபாஹுவாய் நிரவதிக தேஜோ ரூபம் -நீண்ட காது காப்பும் முகமும் முறுவலும்-ஆகர்ஷகமாய் உமது திருமேனி விட –
சொல்ல ஸ்ரீ ஆழ்வார் முகம் மலர்ந்து —(ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் இப்படி சொல்ல வில்லை -இவர் ஆச்சார்ய வம்சம் அன்றோ –
பக்தி பாரவஸ்யம் -அங்கு ஞானாதிக்யம் இங்கு )லோகம் எல்லாம் இந்த விரக்தியில் அன்றோ மேல் விழப் போகிறது என்று அருளிச் செய்ய
இந்த திருமேனி நித்யம் அனுபவிக்க விரகு-ஏது என்று விண்ணப்பம் செய்ய –
மற்றை நாள் ஸூ விக்ரஹத்தை உருவாக்கிய சிற்பி வம்சாவளி ஸ்வப்னா முகேந எழுந்து அருளி -சமஸ்தானத்தை வகுத்து காட்டி அருளி –
நாளை நம் புளி அருகில் வந்து சர்வ அவய பூர்ணமாக அமையுங்கோள்
அங்கு முந்திய விக்ரஹம் -இங்கு சர்வ அவயவ பூர்ணமாக அமையும் என்று இங்கு ஆணை
ஆகார நித்திரை இல்லாமல் நிர்மிந்து கொடுக்க -அதில் சக்தி விசேஷத்தை ஆவேசித்து அருளி –
ஸ்ரீ ராமனுக்கு வலக்கை ஸ்ரீ இலக்குமணன் போலே ராமஸ்ய -ஸ்ரீ ஆழ்வார் -என் அவலமாக நினைத்து -இந்த வியக்தி அடி நாம் ஆகையால் –
நமக்கு அடியுமாய் நம் காரியத்துக்கு காரியமாக -பிரபத்தி மரியாதை உலகுக்கு காட்டி -உரு பெரும் செல்வமும் இத்யாதி
நம் தரிசனத்துக்கு அடி இட்டு வைத்தோம் -உம்முடைய குலத்தில் ஒருவர் இந்த விரக்தியை சாஷாத்கரிப்பார் –
ஸ்ரீ பெருமாள் திரு அபிஷேகத்துக்கு நாள் குறித்தால் போலே -நம் பிறவி நாள் -விசாகம் –18-நாள் கழித்து -திருவாதிரை
பிரதம உபாயம் பிறந்தது -18-அத்யாயம் பின்பு வந்தால் போலே –

ஸ்ரீ கிருஷ்ணன் பிரதம உபாயம் அருளி -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் சரம உபாயம் காட்டி அருளினார் என்றதாயிற்று
ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி திருமகள் வரை ஓராண் வழியாக ரஹஸ்யமாக வந்தது
ஸ்ரீ திருக்கண்ண மங்கை ஆண்டானுக்கு ஸ்ரீ நாதமுனிகள் இவ்வர்த்தம் பிரசாதித்து –
ஆரோஹண க்ரமத்தால் பெற்ற பேறு இருந்தவாறு என்று உகந்து
பின்னை ஸ்ரீ உய்யக் கொண்டார் -தரிசன பிரவர்த்தக கைங்கர்யம் கொடுத்து
ஸ்ரீ ஈஸ்வர முனிவர்-உமக்கு திருக்குமாரர் -உண்டாவார்- ஸ்ரீ யமுனைத்துறைவன் என்று திரு நாமம் சாத்த வேண்டும் என்றும் – –
ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் -யோக சாஸ்திரம் -மூவருக்கும் பிரசாதித்து –

ஒருவருக்கும் சொல்லக் கூடாது என்று ஸ்ரீ உய்யக் கொண்டாருக்கு சூளுறவு கொண்டு –
ஸ்ரீ ஈஸ்வர முனி குமாரருக்கு நான் தஞ்சமாக பற்றின விக்ரஹம் என்று கொண்டு அந்த விக்ரஹத்தையே திரு உள்ளத்தில்
த்யானம் பண்ணிக் கொண்டே அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடே கலந்தார் -திரு முடி சம்பந்தம் –
இவர் ஸ்ரீ மணக்கால் நம்பி -ஸ்ரீ திருவல்லிக்கேணி அரையர் -ஸ்வப்னம் வ்ருத்தாந்தம் அருளிச் செய்து —
12-வருஷம் கைங்கர்யம் பெற்ற பின்பு ஸ்ரீ மணக்கால் நம்பிக்கு -சரம தசையில் தான் விக்ரஹம் பிரசாதம் —
சொட்டைக் குலத்தில் அவதரிக்கப் போவார் -அவருக்குப் பின்பு குரு பரம்பரை யார் யார் என்று ஏங்கத் தேவை இல்லை –
பிரபன்ன குலமாக பேறு பெறும்படி அவராலே தர்சனம் விளங்கப் போகிறது
ஸ்ரீ மணக்கால் நம்பியுடைய சரம தசையில் -நாட்டை அளித்து உய்யச் செய்த்து நடத்துபவனை தேடச் சொன்னோம்
என்று சொல்லும் -அனைத்து உலகும் உய்யப் பிறக்கப் போகும் உடையவர்
நமக்கு ஸ்வப்னத்தில் -சாஷாதாக பேரன் பெற்றால் என் நெஞ்சாறல் தீரும் என்று ஸ்ரீ நாத முனிகள் –
அவதார ரஹஸ்யத்தை பேணிக் கொண்டு போந்தார்கள்
தேட ஆரம்பிக்கிறார் -ஆச்சார்யர் சிஷ்யரை -பரகத ஸ்வீகாரமே கார்ய கரம்

ஸ்ரீ திருக்கச்சி நம்பி முகேன-கண்டு -திரு நக்ஷத்ரம் கேட்டு அருளி -அவரே இவர் என்று உள்ளத்தால் தேறி –
மூன்று படியாலும் ஒத்து இருக்கையாலே -கடாக்ஷித்து அருளி ஆ முதல்வன் இவன் என்று –
சரம தசையில் -திருக்கோஷ்டியூர் நம்பிக்கு பிரசாதித்து அருளி -விக்ரஹம் கொடுத்து அருளி –
ஸ்ரீ ரஹஸ்ய அர்த்தங்களை அருளிச் செய்யும் -என்று நியமித்து அருளி -அவர் திரு நாமத்தால் தர்சனம் –
ஸ்ரீ எம்பெருமானார் பேர் அளித்தவர் இவர் தானே -வரம்பு அறுத்தவர் -ஸ்ரீ எம்பெருமானை விட அதிகர் –
உங்களுக்கு ஒருவரை உண்டாக்கி நாம் பேறு பெறுகிறோம் -நாம் அன்றோ இழவோடு போகிறோம் என்று
சரம தசையில் ஸ்ரீ முதலிகளுக்கு அருளிச் செய்தார்

லோகாந்தாரஸ்தர் -முற்பட்டவர் -ஸ்ரீ வைஷ்ணவர்-தாங்கள் குலத்தில் பிறந்து –
பித்ருக்கள் புத்த நரகர் புகாமல் -பின்பட்டவரால் பயன் உண்டே
ஸ்ரீ வைஷ்ணத்வம் இல்லாமல் லோகாந்தரங்களில் காத்து உள்ளார் -பித்ரு லோகம் இடைப்பட்ட –
பூர்வர்களுக்கு அப்படி இல்லையே -தாங்களே ஸ்ரீ வைஷ்ணவ அக்ரேஸர்கள் –
அடைய வேண்டிய இடம் அடைந்தார்கள் -எவ்வாறு உத்தாரகர் ஆவார் –
ஸ்ரீ நாதமுனிகளுக்கு ஸ்ரீ ஆழ்வார் உத்தாரகர் -பிரதிபத்தி நடக்கும் -ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அறுதி இட்டு இருப்பார்
ஆழ்வார் தாமும் -அவயவமாக நினைத்து இரும் என்று சாதித்து இருக்க –
இந்த வ்யக்திக்கு அடி நாம் ஆகையால் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -ஸ்ரீ பராங்குச பாத பக்தம் –
ஸ்ரீ யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி-ஸ்ரீ பெரிய நம்பி -ஆச்சார்ய பதயுக்தமே கதி
கொடுமின் கொள்மின் -உபதேசம் பிரசாதித்து அருளி -தாங்கள் புத்திரர்களை இவர் மூலம் கொண்டு
சம்பந்தம் அறுதி இட்டு இருந்தார்கள்
ஆச்சார்யர் வியாஜேன சம்பந்தம் -சாந்தீபன் வசிஷ்டாதிகள் போலே
அத்வாரக சம்பந்தம் விட சத்வாரக சம்பந்தத்தை ஸ்ரேஷ்டமாக கொண்டு பிடித்தார் பிடித்தார் இத்யாதி
ஸ்ரீ தாசாரதி- ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -ஸ்ரீ நந்தகோபன் குமரன் யசோதை இளஞ்சிங்கம் இத்யாதிகளாலே ஹ்ருஷ்டானாவான் அவனும்
ஸூ உத்பாதாக விஷயீகார விஷயத்தில் உத்தாரக பிரதிபத்தி பண்ணி இருப்பார்கள் –
கண்டாகர்ணன் -உடன் பிறந்த அளவும் -விபீஷணர் பெற்ற பேறு நால்வருக்கும்
ஸ்ரீ பிரஹலாதன் -விஷயீகாரம் மகாபலி அளவும் சென்றபடியும் உண்டே
பந்த மோக்ஷம் -பிரதம விஷயம் இவை இருக்க -சரம பர்வத்தில் கேட்க வேண்டாமே –

ஸ்ரீ உடையவருக்கு முந்திய ஆச்சார்யர்கள் -உபகாரத்துவத்திலே அந்வயிக்கும் உத்தாரத்திலே புகாது —
ஸ்ரீ பகவானுக்கும் உத்தாரகத்வம் ஸ்ரீ ராமானுஜர் என்று நிகமிப்பார்
தங்கள் பக்கல் உத்தாரகத்வம் இருக்குமாகில் தங்கள் தங்கள் குமாரர்களை உடையவர் இடம் சேர்த்து இருக்க வேண்டாமே
உத்தாரகத்வம் வ்யக்தி த்ரயம் -ஸ்ரீ மான் -சேஷி தம்பதிகள் -உபய விபூதி நாதத்வம் இருக்க வேண்டும்
பொன் உலகு ஆளீரோ புவநி முழுதும் ஆளீரோ-
ஸ்ரீ பெரிய பெருமாள் அருள- ஸ்ரீ உடையவர் ஆனார் -ஆகையால் விவஸ்திதம் –
இம்மூவரிலும் இவர் இடமே உறைத்து இருக்கும்
ஸ்ரீ ஆழ்வார் அறப் பதறி வீடு பெற்றார் -மங்க ஒட்டு உன் மாயை இத்யாதிகளால் இனி இனி -20-கால் கூப்பிட்டு
-120-சம்வத்சரம் இருந்து -73-மா முனிகள் -7-இவர்களும் துடித்து இருக்க ஸூசகம்
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தி இவர்களால் பொலிந்ததே-உத்தாரகத்தின் உறைப்பே இதன் காரணம்

கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் –கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
ஸ்ரீ கீதையிலும் -அனுவ்ருத்தி ப்ரசன்னாச்சார்யார் -தானும் இருந்து விதித்து
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் -உத்தாரகம் -இருந்து உபதேசித்து திருத்துவது -இவர் பக்கலிலே
அரச மரம் -புன்னை மரம் அகில உலகம் மகிழ பிறந்தவர் மகிழ மரத்தடியில் -ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மதுராந்தகத்தில் –
பர சம்பந்த வேதனம் -சங்கு சக்ர லாஞ்சனம் -வளையாதி விபூஷணம் பதிவிரதா –
ஸ்ரீ பகவத் சம்பந்தம் பூர்வகமாக மந்த்ர ரத்னம் -பஞ்ச சம்ஸ்காரம் -இவருக்கு
பின்பு நமக்கு எல்லாம் ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் -இந்த பஞ்ச சம்ஸ்காரம் -ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ ஸூக்தி அடியாக
பிரபன்ன குலமே விளங்கப்போகிறது -தேவரீர் உத்தாரகர் ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ உடையவருக்கு அருளிச் செய்து -சம்ப்ரதாயம்

வெம் கதிரோன் குலத்தில் ஓர் விளக்கு -ஸ்ரீ ராம சந்திரன் -பிரகாசமும் குளிர்ச்சியும் கலந்த -ஜனகானாம் குல கீர்த்தி-போலவே –
ஓர் இடத்தில் அவதரித்து அனைவரும் வாழ பிறந்த ஸ்ரீ எதிராசர் –
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி -அமோக உத்தாரகர் நீரே என்று -நேராக-அருளிச் செய்தார் –
ஸ்ரீ எம்பாரை உதக தாரா பூர்வகமாக அளித்து -ஸ்ரீ ராமாயண வ்யாஜத்தாலே எனக்கு சம்பந்தம் கிடைத்தது –
என்று மகிழ்ந்து -நிர்பரராய் இருக்கிறோம் –
நிழலும் அடிதாருமாக இருக்க ஆசீர்வாதம் -ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா தானே இவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் -பவித்ரம் -ஸ்ரீ முதலியாண்டான் -பாதுகா -தண்டம் இரண்டுமாக
ஸ்ரீ திரு கோஷ்டியூர் நம்பி -லோக சம்ரக்ஷணர்த்தமாக தேவரீர் அவதாரம்

தரிசன ப்ரவர்த்தகராக ஸ்ரீ ஆளவந்தார் கடாக்ஷம் –
பொலிக –ஸ்ரீ திருமாலை ஆண்டான் -காலஷேபம் -நடக்க -ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பி இவரை கடாக்ஷித்து —
தேவரீர் பிறந்த -அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே -கலி கெட்டு -நாரணற்கு ஆளானார் –
பிரபன்ன குல உத்தாரகர் -அஸ்மாதாதிகளைக் கரை ஏற்றவே –என்று அருள ஸ்ரீ திருமாலை ஆண்டானும்
மயிர் கூச்சு எறிந்து சம்பந்தம் பெற்ற ஹர்ஷம் -இனி நான் ஸ்ரீ ஆளவந்தாரை அறியேன் -தேவரீர் உடன் சம்பந்தமே பேற்றுக்கு தஞ்சம்
அடுத்து ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் –
அனுவர்த்தித்து -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -தேவரீர் இடமே பொருந்தும் -முக்கியமாக விலை செல்லும் –
சர்வ உத்தாரகர் -ஸ்ரீ நாத முனிகளே அருளிச் செய்த அர்த்தம் –

மேவினேன் உம் பொன்னடி -ஸ்ரீ திரு கோஷ்ட்டியூர் நம்பியும்-அவர் திருக் குமாராத்தியும்-சொன்னாராக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
அந்திம காலத்தில் -தேவரீருக்கு பேறு முற்படத்தது உடையவர் சம்பந்தத்தால் -அவரும் வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று மகிழ்ந்தார் ஸ்ரீ நம்பியும்
விக்ரஹத்தை அவள் இடம் சாதித்து -ஸ்த்ரீ என்று பாராமல் -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று சொல்லிக் கொண்டே திருவடி சேர்ந்தார்
ஸ்ரீ திருக்கச்சி நம்பி -தேவ பெருமாள் -ஆறு வார்த்தை -அறியாமல் கேட்கவில்லை -லோக ஹிதார்த்தமாக -கேட்டார் என்று ஸ்ரீ தேவப்பெருமாளே அருளிச் செய்ய

திரு மா மகள் தானே குருவாகி வந்து -சாஷாத் ஹரி நாராயண -பீதக வாடைப் பிரானார் பரம காருணிகனாய் வந்து
சஸ்த்ர பாணியாய் -இவரும் ஸ்ரீ பகவத் அவதாரமே -சம்பந்தம் கொள்ளவே ஆச்சார்யராக ஸ்ரீ பெரிய நம்பி முதலாமவர் –
ஆச்சார்யத்தை வ்யாஜமாக -சம்பிரதாய ஸ்ரவணத்தால் -பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வம் இவர் இடம் அறுதி இட்டு இருப்பார்கள்
ஸ்ரீ எம்பெருமானுக்கே இவர் உத்தாரகர் -என்றால் இவர்களுக்கு சொல்ல வேண்டாவே
ஸ்வரூப ஸத்பாவம் உண்டாக்கி கரை மரம் சேர்ப்பதே உத்தாரகம்

ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் இயற்கையான தன்மை -அத்தை இழக்க –உணர்த்தி தன் ஸ்தானத்தில் வைப்பதே உத்தாரகம்
ஸ்ரீ எம்பெருமானுக்கு -பாஹ்ய குத்ருஷ்டிகள் -மதி விகற்பால் -ப்ரஹ்ம ஸ்வரூபம் இல்லை செய்ய —
பஹு மதி –தூரஸ்திதாம்-இத்யாதிப்படியே -18-துர்மதவாதிகளும் பேர்களும் சேர்ந்து இல்லை செய்ய – –
வேதமும் ப்ரஹ்ம ஸ்வரூபங்கள் இழக்க -அத-பதித்தனாக -ஸ்வரூப சித்தி ஏற்படுத்தி -கரை மரம் சேர்த்தார் –
ஸ்ரீ கோபாலன் யாதவ வம்சம் மக்நம்-உத்தரித்தால் போலேயும் -கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலர் போலே –
ஸ்ரீ நாரதர் -ஸ்ரீ கண்ணன் பிறந்து உத்தாரகம் செய்வார் என்றது போலே
கலியும் கெடும் கண்டு கொண்மின்-ஸ்ரீ நம்மாழ்வார்
இங்கும் அங்கும் இவர் பெயரால் தர்சனம் -நிரவதிக ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ இன்று வரும் கொழுந்து விட்டு படருகிறதே -வைதிக மார்க்கம் –
அர்ஜுனன் வ்யாஜத்தாலே சரம ஸ்லோகம் பிரதம பர்வம் –
ஸ்ரீ உடையவரும் தம் பக்கல் சரம உபாயம் என்று ஸ்ரீ முதலியாண்டானுக்கு ஸ்ரீ திருநாராயண புரத்தில்-யதுகிரி மஹாத்ம்யம் வாசிக்கும் பொழுது
சதுர்த்த பாதப் பொருள் அனந்த பிரதம ரூபம் -இத்யாதி -ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வாரை அபேக்ஷித்து ருஷி சொன்னதாக
அருளிச் செய்ய -முதலிகளுக்கு திருப்தி இல்லாமல் இருக்கக் கண்டு -பின்னை வெளியிடுகிறோம்
அன்று இரவில் -அந்யோந்யர்களுக்கு இதில் -ரஹஸ்யமாக –
நாமே விஷயம் நம் பிறவி சர்வ உத்தாரகத்துக்கே-இவ்வர்த்தம் பரம ரஹஸ்யம் -என்று ஸ்ரீ உடையவரே அருளிச் செய்தார்
யதிகட்க்கு இறைவன் -யதிராஜர் -சம்பந்தம்
அநந்தம் ப்ரதமம் ரூபம் லஷ்மணஸ்ய பலபத்ர கலவ் கச்சித் –அவ்வர்த்தம் அருளிச் செய்ய பிரார்த்திக்க கச்சித் -நாமே விஷயம்
சர்வ உத்தாரகமாய் பிறந்த பிறவியாய் இருக்கும் -மாம் ஏகம் வ்ரஜ -என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னது போலவே
உண்மையாக இருப்பதால் தற் புகழ்ச்சி இல்லையே
இவர் மட்டும் சொல்லவில்லையே -முற்பட்டார்களும் பின் பின் வந்தவர்களும் கூட இருந்து உணர்ந்தவர்களுக்கு உண்டே –

திரு அத்யயன உத்சவம் பொழுது -ஸ்ரீ பெரிய நம்பி திரு அம்சத்தார் –நாயந்தே-ஸ்ரீ ராமானுஜ உடையார் -என்னும் பொழுது வாராமல் இருக்க –
எங்களுக்கு சேஷ பூதர் அன்றோ -என்று அவர்கள் நினைக்க -ஸ்ரீ பெரிய நம்பி ஸ்தானத்தாலே தங்களை நினைத்து இருக்க
ஸ்ரீ அழகர் சாதித்தவை இவரோட்டை சம்பந்தம் அறுத்தால் உங்களுக்கு கதி ஏது –
ஸ்ரீ கிடாம்பி ஆச்சானுக்கு -ஒரு பாசுரம் சொல்லிக் காண் என்ன – ந தர்ம நிஷுடோமி – அநந்ய கதி அகிஞ்சனன் சொல்லி சரணம் புக
இந்த வருத்தம் தீர தானே -நம் ஸ்ரீ ராமானுஜரை வைத்தோம் -இனி அகதி சொல்லலாமோ –
இன்றும் திருப்பாவை கோஷ்ட்டி எல்லாம் ஸ்ரீ உடையவர் சந்நிதியில் தானே ஸ்ரீ ரெங்கத்தில் –
ஸ்ரீ ஷீராப்திக்கு போனேன் –ஸ்ரீ ஷீராப்தி நாதன் ஸ்ரீ சேனை முதலியாரை நியோமிக்க-
எல்லாரும் நமக்கு ஆளாம்படி- ஸ்ரீ இளையாழ்வாராக வந்து அவதரித்தார் –
சேஷோவா ஸைன்ய நாதாவோ -உண்டே
ப்ரஹ்ம ரஜஸ்ஸூம் -யாதவ பிரகாசர் -வ்ருத்தாந்தம் -அவதார விசேஷம் என்பதை வெளியிட்டதே
ஸ்ரீ உடையவரும் சாரதா பீடம் எழுந்து அருள -வ்ருத்தி கிரந்தம் -குறிப்புரை -சரஸ்வதியும் எதிரே வந்து வரவேற்று
ஸ்ரீ சர்வேஸ்வர அம்ச அவதாரம் என்று அதி ப்ரீதியுடன் -கப்யாசம் வாக்யார்த்தம் சாதிக்க பிரார்த்திக்க –
அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூ ஒக்கும் – ஸ்ரீ சரஸ்வதியும் கேட்டு சந்தோஷித்து -அடியேனைக் கடாக்ஷிக்கவே நூறு காதம் வந்தீர்
ஸ்ரீ பாஷ்யகாரர் திரு நாமம் சாத்தி –

ஸ்ரீ பேர் அருளாளர் -கூரத்தாழ்வான் -பிரசாதிக்க –அத்தி வரதர் அர்த்தி வரதர் -நாம் வான் இளவரசாகையாலே –
யுவா குமாரா -இளமையை வீட்டுக் கொடுக்காமல் -வான் இளவரசு வைகுண்ட குட்டன்-நமக்கு ஸ்வா தந்தர்யம் மட்டமாய் இருக்கும் –
ஸ்ரீ யதி ராஜர் -அவர் தந்தோம் என்றால் போய் வாரும் என்றார் –
ஸ்ரீ உடையவர் இடம் தேவரீர் மேல் எழுத்து விண்ணப்பம் செய்ய -வலது திருச் செவி த்வயம் சாதித்து – நலம் அந்தமில் நாடு புகுவீர்
நாலூரானுக்கு பிரசாதிக்க பிரார்த்திக்க
கண்டா கர்ணன் விஷயீகாரம் அவன் பிராதாவுக்கு போலே விஷயீகாரம் நாலூரான் அளவும் செல்லும் என்று சாதித்தார் –
ஸ்ரீ பட்டரைக் கொண்டு திரு அத்யயனம் நடத்தி -பட்டரைக் கூட்டி ஸ்ரீ கோயிலுக்கு செல்ல -இத்தால் சுப ஸ்வீகாரம் கோயிலுக்கு செல்லும் வழக்கம்
உமக்கு பிதா போனீர் வ்யாகுலப்படாதீர் நாமே பிதா -ஸ்ரீ பெருமாளே சாதிக்க -புத்ர சுவீகாரம் –
த்ருஷ்டத்துக்கு நாம் -அத்ருஷ்டத்துக்கு ஸ்ரீ உடையவர் -துணிந்து இரும் -நம் பரமாயது உண்டே -திருமாலை போலே
சரம பருவத்துக்கு -சரம உபாயம் நிர்ணயம் ஸ்ரீ பெரிய பெருமாளே சாதிக்க –

ஸ்ரீ நம் ஆழ்வாரை சேவிக்க ஸ்ரீ உடையவர் எழுந்து அருள -திருமுடியை திருவடிகளில் மடுக்க சொல்லி-
கொத்து பரிவாரம் இங்கும் உண்டே -ஸ்ரீ மா முனிகள் -ஆஜ்ஜை-
அனைத்து கொத்து பரிவாரங்களும் அருளப்பாடிட்டு நம் பாதுகை ஸ்ரீ ராமானுஜரை பற்றுங்கோள்-
நம் ஸ்ரீ ராமானுஜரை நீங்கள் உடையவராய் பிழையுங்கோள்-நமக்கு ஸ்ரீ உடையவர் பட்டம் –
அன்று தொடங்கி ஸ்ரீ பாதுகை ஸ்ரீ ராமானுஜன் -அங்கு மட்டும் -முன்பு ஸ்ரீ சட கோப பாத த்வயம் ஸ்ரீ மதுர கவி –
ஆகவே ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது
ஸ்ரீ மதுர கவி வம்சம்-ஸ்ரீ பராங்குச தாசர்–யோகி -பல வருஷங்கள் -ஸ்ரீ நாத முனி -இவர் சிஷ்யர் –
ஒருத்தி மகனாய் பிறந்து மறைந்து விஸ்வரூபம் காட்டின் போலே -நாலாயிரம் –
மேவினேன் அவன் பொன்னடி -என்று சா அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
பிற்காலம் உணர்ந்து -ஸ்ரீ ராமானுஜர் பொன்னடி என்று -தாமரை அடி என்னாமல் -பரம பாவனம் என்பதால் -தாமரை போக்யத்வம்
சகல த்ரவ்ய உத்க்ருஷ்டம் -எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படி -பல ப்ரசாதகமாயும்
ருசி உள்ளார் அனைவர் இடம் வசிக்கும் வ்யக்தி தாரதாம்யம் இட்டு வர்த்தக்காமல் இருக்குமே
ஆண்களும் பெண்களும் தொடும்படியாய்
பின் தொடரும்படியாய்
கைப்பட்டால் நோக்கிக் கொள்ளுமதாய்
இழந்தால் உயிர் விடும்படி கிலேசம் கொடுக்கும்
காருண்யம் -உத்க்ருஷ்டர் உடையவர் -74-சிம்ஹாசனாதிபதிகள் மேல் விழுந்து ஆசைப்படும்படி
மோக்ஷ பல பிரதர்
இன்னார் இணையார் இல்லாமல் -ருசி உடையார் அனைவருக்கும் ரஹஸ்ய அர்த்தங்கள் வெளியிட்டு அருளி
கிருமி கண்ட சோழன் இடம் ரக்ஷணம் பேணப்பட்டு
தம்முடைய விஸ்லேஷத்தில் பலர் மூச்சடங்க–இப்படி ஏழு பெருமைகள் உண்டே –

ஸ்ரீ உடையவர் பிரயாணத்தில் -மூச்சு அடக்கினார் பலர் உண்டே
ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்-உடையவராய் சேவிக்க வர -வழியில் ஒருவர் உடையவர் பிரயாணத்தை சொல்ல –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று சொல்லி மூச்சு அடக்கினார்
ஸ்ரீ குமாண்டூர் இளையவல்லி -சொப்பனத்தில் உடையவர் திவ்ய விமானம் ஏறி ஆயிரம் சூர்யன் தேஜஸ் ஸூக்களுடன் –
ஸ்ரீ பரமபத நாதன் நித்ய சூரி வர்க்கங்கள் உடன் புடை சூழ நிறைந்து ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ நாதமுனிகள் உடன் சேர்ந்து
எதிர் கொண்டு -நிரவகாசமாக நிறைந்து – தொடர்ந்து தானும் பின் போவதாக -கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்து
அசல் அகத்தில் வள்ளல் மணி வண்ணனை எழுப்பி -கண்டேன் –
இனி தரியேன்-என்று -ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம் என்று அருளிச் செய்து மூச்சு அடக்கினார்
இப்படி இருந்த இடங்களிலே அடக்கினார் பலர்
அருகில் இருந்த முதலிகள் ஆற்றாமையுடன் -கோகுலத்தில் அனைத்து கோபிகளும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் குறையாமல் –
மோகித்தும் பரபரத்தும் இருப்பர் – -அழகில் -மயங்கி -சிலர் எழுப்ப -இருந்தால் போலே –
ஸ்ரீ ராமானுஜர் சத்ய ப்ரதிஜ்ஜை வாங்கிக் கொண்டார்-ஆணை இட்டு விலக்கி தரிசன அர்த்தம் பிரவர்த்திப்பிக்க விட்டு வைக்க –
ஸ்ரீ ஆளவந்தாரும் முன்பு செய்தால் போலே -ஸ்ரீ வைகுண்ட பிராப்தி கல்யாணம் போலே இயற்க்கை-எய்தினார் உடம்பை மற்றும் அறிந்தவர் –
இறைவன் அடி சேர்ந்தார் சிலர் -அவன் உபாயம் -ஆச்சார்யர் திருவடி அடைந்து -அத்ரபரத்வ என்று இருப்பார் –
பிரிந்து முடியாமல் ஆற்றாமை மிக்கு -இப்படி வை லக்ஷண்யம் உடையவர்

ஸ்ரீ உடையவர் ஸ்ரீ திரு குருகைப் பிரான் பிள்ளானுக்கு–பொலிக -பொலிக -அர்த்தம் கேட்டு -விஸ்மயித்து -ஆட -வேறுபாடு தோற்ற நிற்க
ஸ்ரீ ஆழ்வார் தேவரீர் திரு அவதாரம் -கண்டு கொண்மின் என்று எங்களை போல்வாரை அன்றோ அருளிச் செய்தார்
-நாமே இதுக்கு விஷயம் என்று தேவரீரும் தொட்டுக் காட்டி அருளினார் -நினைத்து ஹர்ஷ பரவசராய் –
நாடு அடங்க வாழப் பிறந்த உம் சம்பந்தம் பெற்று உம்மால் திருவாய் மொழி வியாக்யானமும் கேட்கப் பெற்றேன் என்று
ஸூஹ்ருத்த தேவரால் என்று விசமயப் பட்டார்
அன்று இரவு -ஸ்ரீ பிள்ளானைக் கைப்பிடித்து தம் திருவாராதன பெருமாள் ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதிக்கு கூட்டிச் சென்று
திருவடிகளை அவர் திரு முடியில் வைத்து இத்தையே சரணம் என்று விசுவாசித்து உபதேசித்து அருளும் –
நாளைக்கு தேவப்பெருமாள் சேவித்து ஆறாயிரப்படி அருளிச் செய்ய நியமித்தார்
அன்று உரைத்தது இன்பமிகு ஆறாயிரம் -ஸ்ரீ மா முனிகள்

ஸ்ரீ முதலி ஆண்டான் -ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் -ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலானோர் இருக்கும் -கோஷ்ட்டியில்
ஸ்ரீ உடையவர் திருவாய் மொழி கால ஷேபம்–ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ எச்சான் -ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஆஸ்ரயிக்க வர –
அவர்களை ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க
குறிவித்தலையில் பனங்காயைக் கட்டினால் போலே என்று அவரும் அருளிச் செய்ய -சர்வ உத்தாரகர் –
ஜகத் அடங்க -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று அவரை விஸ்வஸித்து இருக்கச் சொல்லி –
ஸ்ரீ எம்பெருமானாரும் -அவரை பற்ற நாம் உம்மிடம் வந்து திருவடிகளை தலையிலே வைத்து உங்கள் பேற்றுக்கு நாமே கடவோம் –
இத்தையே தஞ்சமாக நினைத்து இரும்
உபகாரம் -உத்தாரகம் -மோக் ஷப்ரதம் மூன்றும் நம் ஆச்சார்யர் உடையவர் எம்பெருமான் கர்தவ்யம்
ஸ்ரீ திருமலைக்கு ஏற-விண்ணோர் வெற்பு -திரு தாழ்வரை அடியிலே இருந்து -ஆழ்வார் தீர்த்தம் –
அங்கு இருந்து தொண்டைமான் ஸ்ரீ திருமலைக்கு செல்ல வழி இன்றும் உண்டே –
தொழும் அத்திசை உற்று நோக்கி -என்றபடி -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -ஸ்ரீ திருமலையே தருமே –
முதலிகளும் ஏற மாட்டோம் என்று வற்புறுத்தி -சொல்ல -மீண்டும் சுத்தி பண்ணிக் கொண்டு -ஏறி அருளி –
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ ஆதி சேஷ பீடம் காலை வைத்து ஏறி அவன் மடியிலே அமர்வது போலே

ஸ்ரீ திருமலை நம்பி பெருமாள் பிரசாதம் கொண்டு வரவேற்க -நானே நீசன் -ஐவரும் -ஸ்ரீ திருவடியும் அங்கே ஸ்ரீ சீதா பிராட்டி இடமும் –
உமது பெருமைக்கு ஸ்ரீ திருவேங்கடமுடையான் வர வேண்டும் -சகல ஜன ஜீவாது-அவனுக்கும் உத்தாரகர் நீர் –
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தார் வாழியே -நான் வந்தது தகாது -அவன் நியமிக்க வந்தேன் -சென்றதும் ஸ்ரீ திருவேங்கடமுடையானும்
என்ன குறையாக வந்தீர் -தெற்கு திரு வீட்டில் உபய விபூதியும் கொடுத்தோம் -நீர் மட்டுமே நம் சொத்து –
கிடந்ததோர் கிடைக்கை உம்முடைய விபூதி கொடுத்தீர் -உம்மைக் கொடுக்க வேண்டுமே பிரான் இருந்தமை காட்டி
கண்டவாற்றால் தனக்கு உலகு என்று நின்ற -ஸ்ரீ ஹஸ்திகிரி சேவித்தான் -இருக்கும் நிலை கண்டு அனுபவிக்க வந்தேன் என்றார் –
ஸ்ரீ கோவிந்தராஜரும் ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானே -ஸ்ரீ சிதம்பர பாசுரம் நித்ய அனுசந்தானம் அங்கு இன்றும் –
ஸ்ரீ உடையவரே மூலவரை பிரதிஷ்டை-
வாரும் என்று திருவடிகளில் தலையை வைக்கச் சொல்லி இத்தை மறவாதே நெஞ்சிலே கொண்டு தர்சனம் நடத்தும்
உம்முடைய அபிமானத்தில் ஒதுங்கினவர் நமக்கு வேண்டியவர்
அனைவரையும் நமக்கு ஆளாக திருத்தும் -இதற்கு அன்றோ உம்மை இங்கே அனுப்பி வைத்தேன் –
சூழல் பல பல என்று அவதரித்து இழவோடே போனேன் –
இத்தால் ஸ்ரீ திருவேங்கடமுடையானும் இவரது உத்தாரகத்வத்தை காட்டி அருளினார் ஆயிற்று –

ஸ்ரீ திருக்குறுங்குடி -நம்பி -அருள்பாடிட்டு -எல்லாரும் உமக்கு ஆளாய் இருக்க -அகப்படுத்திக் கொண்ட விரகு –
கேட்டு அருளும் விதத்திலே கேட்டு அருள வேண்டாவோ -திவ்ய ஆஸ்தானத்தில் இருந்து இரங்கி
தரையிலே ஓலையில் அமர்ந்து ஸிம்ஹாஸனம் கொடுத்து அருளி –
வலது பக்கம் அமர்த்தி வலது காதில் உபதேசிக்க -தலையில் வலது கை வைத்து – இடது கையை மார்பில் வைத்து –
கடாக்ஷித்து தன் ஆச்சார்யரை மனசில் வைத்து -மந்த்ர ரத்னம் த்வயம் அருளிச் செய்து -அவர் காதிலே —
ஸ்ரீ திருநறையூர் நம்பி ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -ஒருவருக்கு மட்டுமே அருளி –
நாம் முன்பு ஒரு காலத்தில் -இத்தையே செய்தாலும் -நாம் நர நாராயணன் திருமந்திரம் வெளியிட்டு –
இப்பொழுது மத் வ்யதிரிக்த்தரில் ஆச்சார்யர் -குறை நீங்கப் பெற்றோம் –
ஸ்ரீ வைஷ்ணவ சித்தி -ஸ்ரீ ராமானுஜர் உடையார் ஆகப் பெற்றோம் -ஸ்வா தந்திரத்தில் எல்லை நிலம் ஸ்ரீ நம்பியுடைய சிஷ்யத்வம்

ஸ்ரீ நடாதூர் அம்மாள் -பக்தி பிரபத்தி -இரண்டும் துஸ் சஹமாய் -ஸ்வரூப விருத்தமாய் -விஸ்வாச துர்லபத்வம் –
இவை இரண்டும் இல்லாதவர்க்கு ஸ்ரீ எம்பெருமானார் அபிமானமே உத்தாராகம் -இத்தை ஒழியவே பேற்றுக்கு வேறு உபாயம் இல்லை –
நானும் இத்தையே விஸ்வஸித்து இருக்கிறேன் –
சரம தசையில் -மீண்டும் -ஸ்ரீ எம்பெருமானாரை பற்றி -விஸ்வஸித்து இருங்கோள் என்று இத்தையே ஸ்திரப்படுத்தி அருளினார்
பிரயாண கால -ஸ்ரீ ராமாநுஜார்யம் திருவடிகளே உத்தாரகம்

ஸ்ரீ காராஞ்சியில் சோமயாஜியார் -தேவியார் தேக உபாதியால் -ஆச்சார்யரை சென்று சேவிக்காமல் –
ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய மங்கள விக்ரஹம் எழுந்து அருளி பண்ணி -சமஸ்தானம் -மனசுக்கு பிடித்தபடி இல்லாமல்
வேறே ஏறி அருள பண்ண -அன்று சொப்பனத்தில் -அபிமானமே உத்தாரகம் என்று விஸ்வஸித்து இருக்காமல்
இப்படி அழித்து பண்ணுவான் என் -திடுக்கிட்டு எழுந்து அருளி -தேவியாரைத் துறந்து ஸ்ரீ கோயில் ஏறி
ஸ்ரீ உடையவர் திருவடிகளில் விழுந்து -நடந்தத்தை அறிவிக்க -உம்முடைய ஸ்த்ரீ பாரவஸ்யத்தை தடுக்க செய்து அருளினோம் –
நீர் விட்டாலும் நாம் விட மாட்டோம் -நீர் எங்கு இருந்தாலும் நம் அபிமானத்தால் உஜ்ஜீவிப்பீர் –
சர்வ பரன்களையும் என்னிடம் பொகட்டு நிர்ப்பரராய் இரும் என்று அருளிச் செய்தார் என்று ஸ்ரீ நம் பிள்ளை அருளிச் செய்தார்

ஸ்ரீ கணியனூர் சிறியாத்தான் -தீர்த்தமாடி துடிப்புடன் உபாசன்னராய் பெரிய திரு மண்டபத்தில் ராஜ்ய சபை கூடினால் போலே –
சத்யம் சத்யம் -புநஸ் சத்யம் யதிரஜு ஜகத் குரு ஸமஸ்த உத்தாரகர் -அருளிச் செய்து -பிரபன்ன குலத்தாருக்கு எல்லாம் -கோஷித்தார்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ எச்சான் முதலானார் -இவ்வாத்மாவுக்கு ஆச்சார்யர் ஒருவரா பலரா -ஸ்ரீ பொன்னாச்சியாரை கேளுங்கோள் என்று
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்ய –
இவர்கள் அங்கு சென்று கேட்க -திருக் குழல் கற்றையை-உதறி கட்டி -அபலையான அடியேனுக்கு தெரியுமோ
ஸ்ரீ எம்பெருமானார் சொல்ல வேண்டும் -தரையில் உள்ள காவி நூலை தலையில் சூடி அனுப்ப –
அவர் செய்த வியாபாரம் என்ன என்று கேட்க -இவர்களும் சொல்ல -அர்த்தம் உணர்த்தி அன்றோ சென்றாள்-சொல்லாமல் சொன்னாளே-
இவ்வாத்மாவுக்கு -ஆச்சார்யரை பார்க்கும் போது ஓர் ஆகாரத்தால் பலராய் இருக்கும் –
ஸ்ரீ உடையவருக்கு பஞ்ச ஆச்சார்யர்கள் உண்டே -ஒன்றாக முடிந்ததால் -பேற்றைப் பண்ணிக் கொடுப்பவர் ஒருவர் என்றபடி –
தரையில் உள்ள காவி நூலை எடுத்தது -ஒருவரே உத்தாரகர் -என்று காட்டி அருளி –
தலையிலே வைத்ததால் -அனைவருக்கும் அதிசய நாயக ரத்னம் –
உள்ளே சென்றது உள்ளத்துக்குள்ளே வைத்து அனுசந்தித்து இருப்பதே க்ருத்யம்
இத்தால் ஸ்ரீ பொன்னாச்சாரியாரை விடுவித்து வெளியிட்டு அருளினார்

ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ வடுக நம்பி -இருவரும் தேவு மற்று அறியேன் -சேஷி -சரண்யன் ப்ராப்யம்- மூவருமே ஆழ்வார் –
ஸ்ரீ மதுரகவி நிலையை எமக்கும் -பிரதம பர்வம் பார்க்காமல் -தேவரீர் இடம் மட்டுமே இருக்குமாறு தந்து அருள வேண்டும் என்று பிரார்த்திக்க —
நம்மிடத்தில் இருக்குமாறு செய்தோம் -இனி என் வேண்டுவது -இந்த பிரதிபத்தி யாவதாத்ம பாவி இருக்குமாறு அருளிச் செய்ய வேண்டும் –
அங்கும் இதே நிஷ்டை என்றபடி -மிகவும் உகந்து அருளி -உபாய உபேய தமேவ சரணம் வ்ரஜேத்-நமக்கும் இரண்டு ஆகாரம் உண்டு –
இரண்டு இடத்திலும் -இங்கும் அங்கும் இரண்டையும் நம் பக்கலிலே அறுதியிட்டு இருக்க குறையில்லை
இது தான் உங்களுக்கு மட்டும் இல்லை -நம் சம்பந்திகள் அனைவருக்குமே இதுவே கார்யகரமாவது –
ப்ராப்ய பூமியில் உபாய பாவம் கொள்ளுவது எங்கனே என்னில் –
ஸ்ரீ வைகுண்டத்தில் உபாயத்வம் எதுக்கு என்னில் -அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்று அருளிச் செய்தது –
தத்துவமே உபாய ப்ராப்ய பாவங்கள் இயற்க்கை ஸ்வபாவிகம் -வந்தேறி இல்லையே -இரண்டும் ஸ்வரூபம் –
ஒன்றுக்கு கார்யம் இல்லாவிட்டால் மழுங்கி இன்னும் ஓன்று பளிச்சிடும் -அத்யாபகர் உபயன்யாசகராவும் இருக்கலாமே –
ப்ராப்யமும் ப்ராபகமும் வடிவாக கொண்டவர் -இங்கும் அங்கும் -தமேவ உபாய உபேய பாவேந -அவதாரணம் –
இவர் ஒருவரே இரண்டுக்கும் இரண்டு இடத்திலும் -வேறு ஒன்றை ஸஹிக்காதே -அந்ய யோக விபச்சேதம் –
ஸஹாயந்தரம் அஸஹ்யமாய் இருக்கும் -அந்திம உபாயம் –இது ஒன்றே

சம்சார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாக இருக்கும் -இது மோக்ஷ ஏக ஹேதுவாய் இருக்கும்
ஸ்ரீ பகவத் சம்பந்தம் ஆச்சார்ய சம்பந்தம் அபேக்ஷித்து இருக்கும் -அலர்த்தக்கடவ ஆதித்யன் நீர் சம்பந்தம் இல்லாமல் உணர்த்துவான்
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தத்துக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தம் வேண்டாதாய் இருக்கும் -ஸ்ரீ ஆச்சார்யர் சம்பந்தம் பெற்றே ஸ்ரீ பகவத் சம்பந்த ஞானம் பிறக்கும்
ஸ்வரூப விகாசம் -ஆச்சார்யர் விஷயீகாரத்துக்குப் பின்னே –
அவனே இதுக்கு ஆசைப்பட்டு -ஸ்ரீ கீதாச்சார்யர் -ஸ்ரீ லஷ்மீ நாதன் -குரு பரம்பரையில் -நிரபாய உபாய பூதர் ஸ்ரீ உடையவர் –
யாவதாமாபாவியாக இருக்கக் குறை இல்லை

ஆகில் ஸ்ரீ ஆளவந்தார்-ஸ்ரீ நாதமுனிகள் திருவடிகளே உபாயம் உபேயம் என்றது எங்கனம் என்னில்
உபகாரம் நினைத்து செய் நன்றியாக -மதீயம் -எனக்கு -கோஷ்டிக்கு சொல்லாமல் -க்ருதஞ்ஞா ஆவிஷ்காரம்-
கருவிலே திருவுடையனாக்கினார் -ஸ்ரீ மணக்கால் நம்பி -ஸ்ரீ உய்யக்கொண்டார் -மூலம் -உபகாரத்துக்குத் தோற்று
உபகார ஸ்ம்ருதி யாவதாத்மபாவி -அத்ர பரத்ர சாபி -என்று -அவர் அருளிச் செய்த விஷயத்து அளவும் –
ஸ்ரீ நாதமுனிகள் நினைவே யாயிற்று இவருக்கும் திரு உள்ளோடும் நினைவு –
ஆழ்வார் இடத்தில் சர்வம் -யதேவ -என்று அருளிச் செய்துள்ளார் இவரும்-ஆகவே ஆழ்வார் திருவடிகளில் தானே உபாய உபேய –
ஸ்ரீ மத தத் அங்க்ரி யுகளம் மாறன் அடி பணிந்து உய்ந்தவர் மாறன் -மேவினேன் அவன் பொன்னடி என்றார் அன்றோ -ஆகவே உடையவரே உத்தாரகம்
இங்கு மத் அன்வயியானாம் -சம்பந்தி பரம்பரைக்கும் -ஸ்ரீ நாதமுனிகள் இடம் மதீயம் மட்டும் -ஒருவரை சொல்லி உபகாரம்

ஸ்ரீ எம்பார் -திருவீதியில் குண அனுபவம் -ஸ்ரீ பட்டர் -கண்டு -ஆச்சார்யத்வம் -அனுவ்ருத்தி ஆச்சார்யரை விட க்ருபா மாத்ரா -பிரதானம் –
பரகத சுவீகாரம் பேற்றுக்கு உடல் -இவை இரண்டும் ஸ்ரீ எம்பெருமானார் -நீரும் பெருமாள் சுவீகார புத்திரர் என்று இறுமாந்து இராமல்
என்னைப்போல் அவரே உத்தாரகர் என்று விஸ்வஸித்து இரும்
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ நஞ்சீயருக்கு -திருவடி நிலையை தலையிலே வைத்து -உமக்கு இவை அன்று தஞ்சம் –
உமக்கும் எமக்கும் சர்வருக்கு உடையவரே -என்று நினைத்து இரும் இல்லாவிடில் நித்ய சம்சாரியாய் விடுவீர் –
ஸ்ரீஎம்பெருமானார் சம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல் –

ஸ்ரீ அமுதனாரும் -ஸ்ரீ ராமானுஜரும் நிற்க -வேறு -என்பர் நல் அறிவு இழந்தே
சரம பர்வம் இருக்க பிரதம பர்வத்தில் இழிவதும் அஞ்ஞான காரியம் அன்றோ
எட்ட இருந்த குருவை -விட்டோர் -பரனை வழிபடுதல் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -கைப்பட்ட நீரை விட்டு
மேகம் பார்த்து இருப்பது போலே–ஸ்ரீ முகில் வண்ணன் ஸ்ரீ நம்மாழ்வார் போல்வாருக்கு தானே
கைப்பட்ட பொன்னை விட்டு புதையலை தேடி தோண்டுவாரைப் போலே
ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி -ததீய சேஷத்வ ஞானம் இல்லாதவனுக்கு தத் சேஷத்வ ஞானம் இல்லாமல் போகும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டன் பிரதம பர்வத்தில் கை வையான் –
ஈஸ்வர அபிமானம் குலைத்தவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
ஆச்சார்ய சம்பந்தம் குலைத்துக் கொண்டவனுக்கு ஸ்வரூப சங்கோசம் ஸ்ரீ ஈஸ்வரன் பண்ணுவான்
இத்தால் -ஸ்ரீ எம்பெருமானாரோடு சம்பந்தம் இல்லாதவனை ஸ்ரீ ஈஸ்வரன் கை விடும்
தோஷங்களை பார்த்து கை விடார் ஸ்ரீ எம்பெருமானார் –
தானே வைகுந்தம் தரும் -யாரும் முயல வேண்டாம் -தனியாக யத்னம் பண்ண வேண்டாமே

தேவு மற்று அறியேன் -மேவினேன் அவன் பொன்னடி -இரண்டும் வேண்டும் -சர்வ பிரகாரத்தாலும் சர்வருக்கு உத்தாரகர்
ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி —15- பாசுரங்கள்-பாத கமல பக்தி -ப்ராவண்யம் -ஜனகம்
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களை -சரணாரவிந்தம் மன்னி வாழ –
ப்ராப்ய பிராப்பகங்கள் அவர் -பேறு ஓன்று மற்று இல்லை உன் சரண் அன்றி-
ஆறு ஒன்றும் இல்லை -அந்ய யோக விவச்சேதம் -தத் ஏக நிஷ்டன்
குறை இருப்பதால் விட்டு இங்கே வரவில்லை –ஈஸ்வர அபிமானம் கலசாதபடி
ஸ்ரீ வடுக நம்பி -நம்முடைய ஸ்ரீ மதுர கவிகள் என்பாராம் ஸ்ரீ ஸ்வாமி
ஸ்ரீ ஆண்டானையும் ஸ்ரீ ஆழ்வாரையும் இரு கரையர் என்பார்
ஆச்சார்ய அபிமான நிஷ்டன் வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாமல் போலே இருப்பாரே
குண க்ருத தாஸ்யம் இல்லை -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் சொல்ல இந்த உதாரணம் -தத் அபிமானத்தை தவிர வேறு ஒன்றையும் மதியான்
பாதகனான தசையிலும் -ஸ்ரீ கூரத்தாழ்வான் திண்ணையிலே -இருந்த விருத்தாந்த – வைத்த இடத்தில் இருக்க வேண்டுமே –
மோதிரக்கையாலே குட்டுப்பட வேண்டுமே -திருத்திப் பணி கொள்வார்
தத் அபிமான ராஹித்யத்தில் சத்தை இல்லாமல் -நான் உன்னை அன்றி இலேன் –

ஸ்ரீ வசன பூஷணம் ஆச்சார்யர் பொதுவாக இங்கே -விசேஷித்து -அனைத்தும் ராமானுஜர் -ஸ்பஷ்டமாக –
உபகாரத்வம் உத்தாரகத்வம் இரண்டையும் சொல்லும் இவை இரண்டும்
வாசா –யதீந்த்ர மனசா -முக்கரணங்களாலும் -கொள்ள வேண்டும் –
சகல வேத வித்தகர் -ஸ்ரீ அமுதனார் வீடு அளிப்பான் விண்ணுலகத்தின் நின்றும் அவதரித்து
ஸ்ரீ நம்பிள்ளை -ஸ்ரீ எம்பெருமானார் இடம் -ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி சாற்று முறைக்கு பின்பு
அடியேனுக்கு ஹிதம் அருளிச் செய்ய பிரார்த்திக்க -சொப்பனத்தில் திருவடிகளை திருமுடியில் வைத்து
இதுவே தஞ்சம் -உம்மை அண்டினாருக்கும் இத்தையே அருளிச் செய்யும்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை கூப்பிட்டு அருளிச் செய்ய -சரம தசையில் நமக்கு ஹிதம் என்ன என்று அருளிச் செய்ய –
கேட்க வேண்டுமோ அவர் அபிமானத்தில் அந்தர்கதரன பின்பு

1–இருப்பிடம் -தொழும் பெரியோர் எழுந்து இருந்து ஆடும் இடம் -ஞானாதிகர் கழித்து வர்த்திக்கும் இடமே வாசஸ்தானம்
2–அனுபவ விஷயம் இங்கு இருக்கும் நாள் -உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி உள் மகிழ்ந்தே -இதுவே கர்த்தவ்யம்
3–ஸ்ரீ ராமானுஜன் மிக்க சீலம் அல்லாது உள்ளாது என் நெஞ்சு
4–சாரா மனிசரை சேரேன்-இனி எனக்கு என்ன தாழ்வு -ஆதிக்யம் பார் -ஸ்வரூப ஹானி பிறக்கும் சேர்ந்தால்
5–புகழ் அன்றி என் வாய் பரவலாகாது -வாசா அனுசந்தேயம் இதுவே
6–மன்னு மா மலர் தாள் மறவேன் -எத்தை நினைத்தாலும் இவர் திருவடிகளையே -எவ்வாறு அடர்க்கும் தீ வினை
7–உன் தொண்டர்க்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -அநந்யார்ஹர் -இதுவும் உடையவர் இடமே பிரார்த்தித்து பெற வேண்டும்
8–மெய்யில் சீர் -திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமே -காஷாய சோபை -இல்லை எனக்கு எதிர் இல்லை எண்ணப் பண்ணுமே
9–திரு நாமங்களில் விஸ்வஸித்து -அடியார்களுக்கு கைங்கர்யம் செய்வதே கர்தவ்யம்
10–இது இல்லாமல் அகல் இடத்தர் ஏது பேறு என்று காமிப்பாரே துர்லபம்

சகல பிராமண ப்ரமேய தீர்க்க தர்சி வசன அனுஷ்டானங்களால் -சத்யம் சத்யம்
பொருந்தா நிலை -யாவதாத்மபாவி சம்சாரம் அநுவர்த்திக்கும்
உடையவருக்கு உடையவராய் இருப்பார்க்கு யாவதாத்மா பாவி சர்வ அபீஷ்டங்களும் சித்திக்கும்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.