Archive for the ‘ஸ்ரீ வசன பூஷணம்’ Category

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –429-440- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

இரண்டு தலைக்கும் இவன் உபகரித்தவை இவை என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ருஷ்ட்டி அவதாரங்களில் ஒரு வஸ்துவும் எட்டுப்படாமல் இழவானாய் இடம் பார்த்து தேடி திரியின் ஈஸ்வரனுக்கு
ஸ்ரீ கௌஸ்துபம் போலே -சரீர -மாய வன் சேற்று -கழுவி பொலிந்து நின்று பிரான் திருக்கையிலே கொடுத்து அருளி –
அசத் கல்பனான -கையில் கனி என்ன அபகரித்து -பிராப்த நிரதிசய போக்யனான
வஸ்துவை -அவனுக்கும் -கண் கெட்டு இருந்த இவனுக்கு கண்ணையும் கொடுத்து அவனையும் காட்டித் தந்தான் –
சரீரம் அவனுக்கு -பிராணனை இவனுக்கு கொடுத்து
சா பேஷணனுக்கு நிரபேஷ வஸ்துவை உபகரித்து நிரபேஷணனுக்கு சா பேஷணனை உபகரித்து –

அதாவது –
மேன்மேலும் சிருஷ்டி அவதாரங்களைப் பண்ணி வசீகரிக்க பார்த்த இடத்திலும் –
ஓர் ஆத்ம வஸ்துவும் எட்டுப் படாமையாலே -இழவாளனாய் இருக்கிற ஈஸ்வரனுக்கு –
சேஷமான ஆத்ம வஸ்துவை அஜ்ஞாத ஜ்ஞாபன முகேன திருத்தி -இஷ்ட விநியோக அர்ஹமாமாம் படி கை படுத்தினான் –
பகவத் ஜ்ஞான அபாவத்தாலே அசத் கல்பனாய் கிடந்த சேதனனுக்கு –
பகவத் சம்பந்தத்தை அறிவித்து -இச் சேஷியான அவனைக் காட்டிக் கொடுத்தான் என்கை –
இத்தால் ஆசார்யனுடைய -சேதன ஈச்வரர்கள் இருவருக்கும் உபகாரகன் ஆகை ஆகிற வைபவம் சொல்லப்பட்டது –

———————————————————–

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

இன்னம் ஒரு பிரகாரத்தாலே ஆசார்ய வைபவத்தை பிரகாசிப்பிக்கிறார் –

பொறாமை -ராம தூதன் பெயர் பெற்றான் நாமும் பெறுவோம் என்று ஆசைப்பட்டான் -அநன்யர் அனைவரும்
இன்னார் தூதன் என நின்றான் -அதே போலே குரு பரம்பரையில் முதல் ஸ்தானம் -தேர் தட்டில் கீதாச்சார்யன் –
குரு பரம்பரையில் இல்லாதவர்களுக்கு /அதுவும் போராது என்று -சுக்ரீவனுக்கு சொல்லி விபீஷணன் கேட்க சொல்பவனும் இவன்
குரு பரம்பரை -ஸ்ரீ கீதையும் -அபய பிரதானம் சேர்த்து -சுக்ரீவன் முகேன விபீஷணனுக்கு –
இந்த ஏற்றத்தைக் கண்ட ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தானும் -உம்மைத் தொகை -பாரதந்தர்ய வேஷம் ஒவ்வாது –
பொருந்தாது இருந்தாலும் -நாக்கு நீரூற பேகணித்து இருக்கும் -பரதந்த்ரனான சேஷியாவதற்கு -சேராச் சேர்க்கை அன்றோ இது –
பரதந்த்ர சேஷி -ஆச்சார்யர் சேஷித்வத்தை ஆசைப்பட்டு -பேகணித்து இருக்கும்-நாமும் இப்படி உபகரிக்கும் படியாய் –
போலே -மோக்ஷ ஏக ஹேதுவாய் -உபயத்துக்கும் இல்லாமல்–பந்த ஹேது இல்லாமல் –
யார் மோக்ஷ ஏக ஹேது -அவரைப் போலே இருக்க ஆசைப்பட்டு -ஆச்சார்யராக –
குருத்வம் பெற்று வாழப் பெறுவோம் என்று ஆசைப்பட்டு இறுமாந்து இருக்கும் –

அதாவது –
இதுக்கு இட்டு பிறவாத ஈஸ்வரன் தானும் இவ் ஆசார்யத்வத்தின் ஏற்றத்தை பற்ற
இதிலே மிகவும் ஸ்ரத்தை பண்ணி இருக்கும் -என்கை –

முனிவரை இடுக்கியும் -முந்நீர் வண்ணனாயும் -கீதாச்சார்யராக –
ஸத்வாராக மட்டும் இல்லாமல் அத்வாராக-ஆசைப்பட்டு -அநாதி -குரு பரம்பரை

—————————————

சூரணை -431-

ஆகை இறே -குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் -அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னும் ஆ காங்ஷையிலே அத்தை மூதலிக்கிறார்-

அலங்கரித்து -தலைமை -அந்வயம் மட்டும் இல்லை -இங்கும் அன்வய சப்தம் -ஆசைப்பட்டு –
உயர்ந்ததால் தானே ஆசைப்படுவார் -ஆகையால் அலங்கார சப்தம் இல்லாமல் அந்வயம் -இங்கு பிரயோகம் –
அபய பிரதானம் மூன்றே ஸ்லோகங்கள் ஸ்ரீ ராமாச்சார்யார் -சக்ருதேவ –ஏதத் விரதம் மம -பிசாசான் இத்யாதி –
விபீஷணனுக்கு விஷயம் -சுக்ரீவனுக்கு சொல்லி -சமாதானப்படுத்தி -ராவணன் வந்தாலும் -கூட்டி வா –
சந்திக்கும் முன்பே இந்த உபதேசம் -பின்பு தானே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் வந்து பெருமாளை சரண்
ரஹஸ்ய த்ரயம் உபதேசம் -நர நாராயணனாய் -சிங்காமை விரித்து –
நரன்-அர்ஜுனன் பிறருக்கு உபதேசம் இல்லையே
ஆகையால் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியாருக்கு உபதேசித்து -ஸ்ரீ விஷ்வக் சேனர்-
மருவற்ற பரதந்த்ர சேஷி நிறைந்த குரு பரம்பரையில் -ஸ்வா தந்தர்யம் மாற்றி -சேஷித்வத்தை -மறைத்துக் கொண்டு –
மேனாணிப்பு -பொருந்தாதே ஆகையால் மறைக்க வேண்டுமே -ஆச்சார்யர் உயர்த்தி நமக்கு தெரிவிக்க -ஆசைப்படுகிறான் –
மெள்ள ஒரு தலையிலே அந்வயித்ததும் -தேடிப்பிடித்து மா முனிகளை தேர்ந்து எடுத்து நடுவில் -அந்வயம் சப்தம் நடுவில் இருக்க வேண்டுமே –
ஆச்சார்யர் க்ருத்யத்தை -நாச்சியார் விழி -பழகி -பழகி -ஏறிட்டுக் கொண்டால் போலே-பாவித்து -பாவித்து –
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யர் -சரம ஸ்லோகம் சாரம்
வசிஷ்ட சிஷ்யர் ஸ்ரீ ராமனாய் சரம ஸ்லோகத்தில் யுக்த சரணாகதி பிரபாவ பரமான அபய பிரதானம் -அச்சம் இன்மை வழங்கி –
அபய பிரதான சாரம் -அநாதிகாரிகளும் கேட்க்கும்படி பிரகாசிப்பித்து –

அதாவது –
ஆச்சர்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கையாலே இறே –
சதாசார்யவம்  சொஜ்ஜேய ஆசார்யணாம சாவசாவித்யா பகவத்த -அசவ் அசவ் இதி ஆ பகவதா -என்னும்படி –
குரு பரம்பரையிலே -த்வய உபதேஷ்ட்ருத்வேன அன்வயித்ததும் –
ஆசார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டு அர்ஜுனனைக் குறித்து -தத்வ விவேகாதி-2-12- சரம உபாய பர்யந்தார்த்த-18-66- பிரதிபாதிகையான
ஸ்ரீ கீதை அருளி செய்ததும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிமித்தமாக – சக்ருதேவ பிரபன்னாய த்வாச்மீதி சயாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் மம-என்று
அபய பிரதானம் அருளி செய்ததும் -என்கை –
இத்தால்-
ஈஸ்வரனும் ஆசைப் படும் படி அன்றோ ஆசார்யத்வத்தின் பெருமை என்று -ஆசார்ய வைபவம் சொல்லிற்று ஆயிற்று

———————————————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் -ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இன்னும் ஒரு வழியாலே ஆசார்ய வைபவத்தை தர்சிப்பிக்கிறார் –

இல்லா வற்றைச் சொல்லி -உயர்த்தியை ஸ்தாபிக்கிறார் -/
மஹா உபஹாரர் -ஆச்சார்யர் -தன்னேற்றம் -உபகரித்த உபய விபூதிக்கும் -விபூதிமானுக்கும் -சத்ருசமாக பிரதியுபகாரம்-
நித்ய விபூதி த்வயமும் -லீலா விபூதி த்வயமும் -ஆக விபூதி சதுஷ்ட்யமும் –
நஹி வாசோ தரித்திரத-சொல்லி வைக்கலாம் -மிடியன்-கைம்முதல் இல்லாதவன் –
ஈஸ்வர த்வயமும் -புதிதான துவயத்துக்கு ஆள வேண்டுமே -அகடிதம் உண்டானால் செய்யலாம் -என்கிறார் –
பகவத் த்யானம் அளித்தவர்க்குக்கு கைங்கர்யம் மட்டுமே முடிந்த அளவு செய்ய வேண்டும் – -தத் துல்யம் தர முடியாதே

அதாவது –
உபய விபூதியையும் விபூதிமாணன் ஈஸ்வரனையும் தான் இட்ட வழக்காம் படி பண்ணிக் கொடுத்த ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு சத்ருசமாக
பிரத்யுபகாரம் பண்ணலாவது -இப்படியே இன்னும் இரண்டு விபூதியும் விபூதிமானாய் இருப்பான் ஈஸ்வரனும் வேறு உண்டாகில் இறே -என்கை –
யோதத் யாத்ப் பகவத் ஜ்ஞானம் குர்யாத்த்தர்ம உபசேவனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ந் தத் துல்யம் கதஞ்சன -என்றார் இறே –
(சிஷ்ய தர்மம் பொருத்தமான பணிவிடைகள் செய்வதே -கிருத்ச்னம் பிருத்வி லீலா -வா நித்ய விபூதி )
இத்தால் ஆசார்யனுடைய பிரத்யுபகார அவகாச ரஹித மகா உபகாரத்வம் ஆகிற வைபவம் சொல்லிற்று ஆயிற்று
(பயன் நன்றாகிலும் –முயல்கின்றேன் என்னும் அளவே -ஈடு அல்லவே )

—————————————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

இன்னமும் ஒரு முகத்தாலே ஆச்சார்ய வைபவத்தை அருளிச் செய்கிறார் –

சம்பந்தம் என்றால் என்ன -சேஷ சேஷி சம்பந்தம் -மஹா உபகாரகன் ஆச்சார்யர் உபகரிக்கும்
தந்த்ரனான ஈஸ்வரன் உடன் சேதனனுக்கு சம்பந்தம் –
ஆச்சார்யர் உடன் நேராக சம்பந்தம் -இவர் காட்டிய பகவத் சம்பந்தம் இரண்டுக்கும் காரணம் –
ஈஸ்வர சம்பந்தம் -சேஷி சேஷ சம்பந்தம் -அநாதி சம்சார சம்பந்தத்துக்கும் -மத்யத்தில் வரும் –
நடுவே வந்து உய்யக் கொள்ளும் நாதன் -மோக்ஷ சம்பந்தம் -அநியதமாய் இருக்கும் -பொதுவாய் இருக்கும்
ஈஸ்வரன் உபகரித்த மஹா உபாகாரகன் சதாச்சார்யர் ஸச் சிஷ்ய சம்பந்தம் -விளம்பம் அற்ற சம்சார மோக்ஷத்துக்கே ஹேதுவாய்
அபங்குரமாய்-அஹிதம் கலசாமல் இருக்கும் –

இவ்விடத்தில் ஈஸ்வர சம்பந்தம் -என்கிறது -ஈஸ்வரனைப் பற்றுகை -என்ற கீழ் சொன்ன -தத் ஆஸ்ரய ரூப -சம்பந்தத்தை –
அந்த -பந்த மோஷங்கள் இரண்டுக்கு பொதுவாகையாவது-
கர்ம அநு குணமாக சம்சரிப்பிக்கவும் -காருண்ய அநு குணமாக முக்தனாக்கவும் -வல்ல
நிரந்குச ஸ்வாதந்த்ரனோடு உண்டான சம்பந்தம் ஆகையாலே -உபய சாதாரணமாய் இருக்கை-
ஆசார்ய சம்பந்தம் -ஆகிறது -ஆசார்யனை பற்றுகை -என்று கீழ் சொன்ன தத் ஆஸ்ர்யண ரூப சம்பந்தம் –
அது -மோஷத்துக்கே ஹேதுவாகையாவது-கர்ம அநு குணமாக சம்சரிக்கவும் விடும் ஸ்வதந்த்ரன் அன்றிக்கே –
சர்வ பிரகாரத்தாலும் இவனை உஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிசய க்ருபாவானோட்டை சம்பந்தம் ஆகையாலே –
சம்சார மோஷங்களுக்கு பொது அன்றிக்கே சம்சார விமோசன ஏக ஹேதுவாய் இருக்கை –
இத்தால்-
மோஷ ஏக ஹேதுத்வ நிபந்தனமான வைபவம் சொல்லப்பட்டது –

ஆச்சார்ய அபிமான ஹேதுக-இச்சா ரூப ஞானம் காரணம் -பகவானுக்கே உள்ள மோக்ஷ பிரதான சங்கல்பம் –
விஷய ரூப ஈஸ்வர சம்பந்தம்-மோக்ஷம் கொடுத்தே தீருமே -பொது அல்லவே பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் –
கேவல பகவத் சம்பந்தம் இல்லை -ஆச்சார்யர் மூலம் போகும் பகவத் சம்பந்தத்துக்கும் மேலே ஆச்சார்ய சம்பந்தம் –
தோள் மாறி பகவத் சம்பந்தம் போக கூடாதே -இங்கேயே நிற்க வேண்டுமே -உறுதி தளரக் கூடாதே –
ஆச்சார்யர் மூலம் பெற்ற பகவத் சம்பந்தம் பந்துக்கு ஹேது வாகாதே-சக்தியும் நியதமாயும் இருக்க வேண்டுமே
ஆஸ்ரயணம்-சரண வரணம்–கர்ம நாஸகம் அல்லாமையாலே அருளிச் செய்கிறார் -சங்கல்பம் இருந்தால் தானே பலிக்கும் –
ஸ்ரீ பரத ஆழ்வான் -விளம்பம் -சரண்ய ஹ்ருதய அனுசரணம் இருக்க வேண்டுமே –
நிரங்குச ஸ்வதந்த்ரன் – நிரதிசய -காருண்யகன் ஆச்சார்யர் இல்லையே –
ஆகையால் நியதமாக இருக்காதே –
சரண வரணம்-அதிகாரி விசேஷணம் தானே -பிரபாவம் இல்லை -ஒன்றுமே பண்ணவில்லை –
சரண்ய ஹ்ருதய அனுசாரியாக இருந்தால் தானே சரண வரணம் ஆகும்-
அதுவும் அவனது இன்னருள் -சரண வரணம் வார்த்தை -தேவரீர் அனுக்ரஹம் வந்தால் தானே –
ஆகையால் தான் தோள் மாறாமல் இங்கேயே நிலை நின்று இருக்க வேண்டும்
சரண்ய ஹ்ருதயம் அனுசாரியாக இருந்தால் தான் சரண வரணம் ஆகும்
உபதேச அதீன ஞானவத்தான ஆச்சார்ய சம்பந்தம் -பகவத் சம்பந்தம் இடைவராமல் இருக்க வேணும் –
ஷிபாமி சங்கல்பம் இல்லை இங்கே – கிருபையே ஸ்வ பாவம் இங்கே –

——————————————-

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

உத்தராகத்வத்தில் ஆசார்யனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் கீழ் –
உபகாரத்வத்தில் ஈஸ்வரனுடைய ஆதிக்யத்தை அருளி செய்க்கைகாக வடி கொண்டு எழுந்து இருக்கிறார் மேல் –

–மேலே -436-சூரணைக்கு அடித்தளம் இதுவும் அடுத்ததும் -யத்னம் இல்லாமல் லபிக்கை ஆச்சார்யராலே
உத்தாராகம் -வேறே உபகாரத்வம் வேறே -இது தகுதி கொடுக்கும் -அது மோக்ஷம் அளிக்கும் –
ஈஸ்வரன் உபகாரகன் -ஆச்சார்யர் உத்தாரகன் -என்கிறார் –
உயர்ந்த ஆச்சார்யர் கொடுத்ததால் ஏற்றம் பகவானுக்கு என்றவாறு –

அதாவது –
நிருபாதிக சேஷியாய் நிரந்குச ஸ்வதந்த்ரனாய் இருக்கும் பகவானை லபிக்கை –
தத் சம்ருத ஏக பிரயோஜனனாய் கொண்டு -மங்களா சாசனத்துக்கு ஆளாக வேணும் என்று தன்னை அங்கீகரித்து –
தத் வியாமோஹ விஷயம் ஆக்கின ஸ்வ ஆசார்யனாலே -என்கை -‘

——————————————————

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

ஏவம் பூதனான ஆசார்யன் தன்னை லபிக்கைக்கு ஹேது எது என்னும் அபேஷையில்
அருளிச் செய்கிறார் –

அசாதாரண சிறந்த பந்து -ஆச்சார்யர் தானே -பகவான் சாதாரண பொது பந்து தானே –
அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் இல்லை

அதாவது –
பகவத் லாப ஹேதுவாய் -பரம ப்ராப்ய பூதனான ஆசார்யனை லபிக்கை –
ஈச்வரச்யச ஸௌ ஹார்த்தம் -இத்யாதிபடியே –
நிருபாதிக சூஹ்ருதாய் –
விசேஷ கடாஷ பற்றாசைகளையும்-(யதிருச்சா ஸூ ஹ்ருத்துக்கள்நாம் யார் நிரூபண விசேஷங்கள் -இத்யாதி ) தானே கற்பித்து கொண்டு –
விசேஷ கடாஷம் பண்ணி –
அத்வேஷத்தை பிறப்பித்து –
ஆபிமுக்க்யத்தை உண்டாக்கி –
சாத்விக சம்பாஷணத்திலே மூட்டி –
சதாச்சார்யா ப்ராப்தியை –
பண்ணுவிக்கும் -நிர்ஹேதுக க்ருபாவானான -பகவானாலே -என்கை-

ஈஸ்வர ஸுஹார்த்தம் அனைவருக்கும் பொது -பொதுவான ஸ்ருஷ்ட்டி தானே -அது மோக்ஷ ஹேது இல்லையே –
ஆச்சார்ய சம்பந்தம் –பெற்ற பின்பு -சரம பர்வ நிஷ்டை துர்லபம் –
விசேஷித்து பெருமாள் இடம் உறுதி பட ஆச்சார்யர் மூலம் -/ ஆச்சார்யர் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை-
அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் இல்லாமல் நிரூபகம்-பகவல் லாபம் ஆச்சார்யர் என்றது சாதாரண ஆச்சார்யர் –
பொதுவாக அனைவருக்கும் கீழ் சொன்ன படிக்கட்டுகள்
ஆச்சார்யராலே பகவல் லாபம் உயர்ந்த பகவான் என்றபடி
பிரகரண விரோதம் இல்லை -ராஜா கொண்டாட -புலவன் -நீர் என்ன உம்முடைய ராஜ்ஜியம் ராணி புதல்வனை கொண்டாடுவது போலே
பகவானை பெற்றதே ஆச்சார்யராலே என்பதால் -தோஷம் இல்லை

———————————

சூரணை -436-

உபகார வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யனில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

ஆனால் இருவரும் உபகாரத்தில் சமரோ என்ன -அருளிச் செய்கிறார் –

ஈஸ்வரனே மஹா உபகாரகன் -உபகரித்த வஸ்துவை சேர பிடித்து ஒப்பிட்டால் –

அதாவது –
உபயரும் உபகரித்த வஸ்துக்களை சீர் தூக்கி பார்த்தால் -ஆசார்ய உபகார வஸ்துவான -பந்த மோஷ அபய ஹேதுவாய் -பிரதம பர்வமாய் –
இருக்கிற பகவத் விஷயத்தில் காட்டில் -பகவத் உபகார வஸ்துவான -மோஷ ஏக ஹேதுவாய் -சரம பர்வமாய் -இருக்கிற
ஆசார்ய விஷயத்தினுடைய கௌரவத்தாலே -ஈஸ்வரனை உபகரித்த ஆசார்யனைக் காட்டில் மிகவும் உபகாரகன் ஈஸ்வரன்

———————————————————–

சூரணை -437
ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

நமோ சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஞான வைராக்ய ராசயே நாதாய முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே -என்கிறபடியே –
ஆசார்யன் தனக்கு ஏற்றம் -ஞான வைராக்ய பக்திகளாலே -இறே-
அந்த ஞான வைராக்ய பக்திகள் உண்டான அவன் இந்த ஆசார்ய சம்பந்தத்தை நெகிழ நின்றான் ஆகிலும் –
அவை பகவல் லாபத்துக்கு உடலாமோ என்ன –
அருளிச் செய்கிறார் -மேல் –

சேஷ பூத சிஷ்யத்வ சம்பந்தம் -தேவதாந்தர -மந்த்ராந்தர தோஷ கந்தம் ஸ்பர்சத்தால் – குலையாமல்
ஞானம் இத்யாதி மெள்ள உண்டாக்கிக் கொள்ளலாம் –
இவை இருக்க அவன் கை விட்டால் -அநர்த்தம்-ஆகி – ஆத்ம அலங்காரமாக அவை இருந்தாலும்-பூர்வ ஜென்ம கர்ம பலனாக பிரயோஜனம் இல்லை –
ஆச்சார்யர் கை விட்டாலும் ஞானம் இத்யாதி வருமோ என்றால் பூர்வ ஜென்ம கர்ம பலன்கள் –
ஆத்ம குணம் இருப்பதே ஆச்சார்ய சம்பந்தம் பெறுவதற்கு -இவை மோக்ஷ பலம் ஆகாதே
மிருத சஞ்சீவனம் ஆச்சார்ய சம்பந்தம் –
அகாத பகவத் பக்தி சிந்து -ஸ்ரீ மன் நாத முனிகள் –
முளை விட்ட ஆத்ம குணம் ஆச்சார்ய சம்பந்தத்துக்கு ஹேது -வளருவது ஆச்சார்யராலே–கொடி மேலே ஏற்ற கொள் கொம்பு வேண்டுமே –
அத்வேஷம் -ஆபீமுக்யம் -வரை ஸுஹார்த்தம் -அத்வாரகம் இது வரை -மேலே சத்வாரகம் -ஸ்ருஷ்ட்டி போலே இங்கும்
ஆச்சார்யர் இடம் சேர்க்க சாது சமாகம் வேண்டும் -பாகவதர்கள் தானே சேர்த்து வைப்பர் –
ஆச்சார்யர் தான் ஆத்ம குணங்களை வளர்ப்பார் -பின்பு பரம ப்ராப்ய பகவ லாபம் பெறுவோம் என்றபடி
ஆத்ம குணம் தானே ஆச்சார்யர் இடம் சேர்க்கும் என்பது முளை விடுவது போலே –
அந்யோன்ய தோஷம் வர கூடாதே –
ஐந்து படிக்கட்டுக்கள் வரை அத்வாரகம் -மேலே சத்வாராகம்
சத்தைக்கு-அவன் -வளர்த்து பிராப்தி பர்யந்தம் வரை ஆச்சார்யர் க்ருத்யத்வம்
சத்தா ப்ரயுக்தம் -பகவத் சம்பந்தம் குலையாது / ஆச்சார்யர் சம்பந்தம் குலைய வாய்ப்பு மந்த்ர குரு தேவதா பரிபவம் பண்ணினால் உண்டாகும்

அதாவது –
கீழ் சொன்னபடியே-உத்தாரகனும் உபகாரனுமாய் இருந்துள்ள ஸ்வ ஆசார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானித்து
இருக்கும் படி அவன் திருவடிகளில்
தனக்கு உண்டான சம்பந்தம் -ஸ்வ விப்ரபத்தியாலே குலையாத படி அதை நோக்கிக் கொண்டு கிடந்தால்-
ஆத்ம அலங்காரங்களான -தத்வ ஞானம் -அப்ராப்தி விஷய வைராக்கியம் – ப்ராப்த விஷய பக்தி -ஆகிற ஆத்ம குணங்கள் இல்லையாகிலும் –
அவ் ஆசார்ய பிரசாதிகளாலே க்ரமமே உண்டாக்கி கொள்ளலாம் –
சர்வ மங்கள ஹேதுவான அந்த ஆசார்ய சம்பந்தம் ஸ்வ பிரதிபத்தியால் குலைந்தால் –
ஞாநாதிகளானவை பூர்வ சூக்ருதங்களாலே சிறிது உண்டாயிற்று ஆகிலும் –
பகவத் அங்கீகார ஹேது  ஆகாமையாலே நிஷ் பிரயோஜனம் -என்கை

———————————–

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

பிரயோஜனம் அல்லாமையே அன்று -அவத்யகரமும் -என்கிறார் –

தாலி ஸ்தானீயம் ஆச்சார்யர் / பூஷணங்கள் ஸ்தானீயம் ஞானாதிகள் -/பதி சம்பந்த ஸூ சகம் தாலி பிரதமம் –
அபிரூபைக்கு தாலி அளவே போதும் -ஆத்ம குண ஜீவனுக்கு -ஆச்சர்ய சம்பந்தம் ஒன்றுமே போதும் –
ஞானாதி -ஆதி பக்தி வைராக்யங்கள்
ஆச்சார்யர்கள் இதனால் தான் சிஷ்யர்களை விட்டே கொடுக்காமல் அபிமானித்து இருப்பார்கள் —
ஸ்ரீ ராமானுஜர் இடம் சேர்த்து விடுவதே அவர் கர்தவ்யம் –
ஆச்சார்யர் சிஷ்யர்கள் மேல் உள்ள அபிமானம் குலையவே குலையாமல் இருக்குமே

அதாவது –
பதி விரதையான ஸ்திரீக்கு பதி சம்பந்த சூசுகமான தாலி ஒன்றும் போகாமல் கிடந்தால் –
பூஷணங்கள் இல்லையே ஆகிலும் -முதல் உண்டான போது-பண்ணிப் பூண்டு கொள்ளலாய் இருக்கும் –
இத்தனை பூஷணங்கள் உண்டே என்று நினைத்து தாலியை வாங்கிப் பொகட்டால்-
விதவ அலங்கார கல்பம் ஆகையாலே பூண்ட பூஷணங்கள் எல்லாம் அவத்யவஹங்களாய் இருக்கும் -என்கை –
இத்தால் –
ஆத்ம பூஷணங்களான-ஞான வைராக்ய பக்திகள் இல்லையே ஆகிலும் -ஆசார்ய சம்பந்தம் மாத்ரம் குலையாமல் கிடந்தால்
அவன்-ஆசார்ய- பிரசாதத்தாலே அவைகளை க்ரமேண உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் இத்தனையும் குலைந்தால் ஆத்ம குணங்களான ஞான வைராக்ய பக்திகள் எல்லாம் உண்டானாலும் –
அவை ஸ்லாக்யதா ஹேது அன்றிக்கே -அவத்யாவஹமாய் விடும் -என்றபடி

———————————————

சூரணை-239-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

ஆச்சார்ய சம்பந்தம் கிடந்தாலும் -ஸ்வரூப விகாசகன் ஈஸ்வரன் அன்றோ –
அது குலைந்தது ஆகிலும் -இத்தனை ஆத்ம குணம் உடைய அவனுக்கு அவன்
ஸ்வரூப விகாசத்தை பண்ணானோ என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஜலஜம் -என்னும்படி ஜலத்திலே பிறந்து ஜல ஏக தாரமாய் இருக்கும் தாமரைக்கு –
(செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால் )
நியமேன விகாசகனாய் போரும் ஆதித்யன் தானே -ஸ்வ தாரகமான ஜலத்தை
விச்லேஷித்தால் -அந்த தாமரையை விகசிப்பியாத மாத்ரம் அன்றிக்கே -சோஷிப்பிக்குமா போலே –
ஆச்சார்ய அன்வயத்தாலே சத்தை பெற்று -ஸ்வ சத்தா தாரகமான தத் சம்பந்தம்
குலையாதே நிற்கும் அளவில் -இவனுடைய ஸ்வரூபத்தை ஞான விகாச முகேன-
உள்ள உலகு அளவும் யானும் உளனாவன் -என்னும்படி –
விகசிப்பிக்கும் ஈஸ்வரன் தானே -ஸ்வ சத்தா தாரகமான ஆசார்ய சம்பந்தத்தை
ஸ்வ விப்ரபத்தியாலே இவன் குலைத்து கொண்ட காலத்தில் -தான் விகசிப்பிக்க
கடவ அந்த ஸ்வரூபத்தை விகசிப்பியாத மாத்ரம் அன்றிக்கே -நாளுக்கு நாளும்
நஷ்ட பிரஜ்ஞ்மாய் -சங்கோசித்து போம்படி பண்ணும் -என்கை –
நாராயணா அபிவிக்ருதம் யாதி குரோ பிரச்யுதச்ய துர்புத்தே
கமலம் ஜலாதபேதம் சோஷய திரவிர்ந தோஷயதி- என்னக் கடவது இறே–

ஸ்வரூப ஆவிர்பாவம் பண்ணும் ஈஸ்வரன் தானே –அலர்த்தும் ஆதித்யன் உலர்த்துமா போலே –
பரம பந்து தானே விடப்பார்க்கும் -நாராயணன் அபி -அவன் -கூட-விகாரம் அடைந்து –
துர்புத்தி படைத்தவன் -குருவிடம் நழுவினால்-ஸ்வரூப நாசம் அடைவிக்கிறார் –
தாரகம் நீர்-தாமரை தானே வெளியிலே வராதே -அசேதனம் -ஜீவாத்மா சேதனன்- அந்நியர் பிரிக்கப் பிரிந்தால் –
ஆச்சார்யம் திருவடி சம்பந்தமே தாரகம் -அபிமானத்தில் ஒதுங்கி -ஞானம் வளர்ந்து –
ஆனந்தம் -அவன் அளவும் -உள்ள உலகம் அளவும் யானும் உளன் ஆவான் என் கொலோ -பெரிய திருவந்தாதி -76-
உலகு அளந்த அவன் ஆனந்தம் வரை ஞான விகாசம் பண்ணும் ஈஸ்வரன்
தேவதாந்த்ர அந்நிய ஸ்பர்சத்தால் -ஆதி -மந்தர இத்யாதி -ஆச்சார்ய சம்பந்தம் குலைந்தால்-பவிஷ்கரன் ஆனால் –
உபயோக யோக்யம் இல்லாதபடி வாடப் பண்ணும் – பழைய பகவத் சம்பந்தம் உண்டாக்கிக் கொள்வோம் என்னப் பண்ண முடியாது

————————————————–

சூரணை -240-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இங்கன் சொல்லுகிறது என்-இவ் ஆசார்ய சம்பந்தம் குலைந்தது ஆகிலும் –
ஒழிக்க ஒழியாது -என்கிற பகவத் சம்பந்தம் உஜ்ஜீவனத்துக்கு உடல் ஆவாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அநாதி சித்தமாய் இருக்க செய்தேயும் -ஆசார்யன் உணர்த்துவதற்கு முன்பு அசத் கல்பமாய் –
அவன் உணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதாய் -இருக்கும் அது –
இவ் ஆசார்யம் சம்பந்தம் குலைந்த போது-இதடியாக வந்த தானும் குலைந்து போம் ஆகையாலே –
இவ் ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய பகவத் சம்பந்தம் இவனுக்கு கிடையாது -என்கை –
ஆகையால் இது போயிற்று ஆகிலும் அது நமக்கு உஜ்ஜீவனத்துக்கு உடல் என்று இருக்க விரகு இல்லை என்று கருத்து –

ஸ்வரூப உஜ்ஜீவனம் -ஆச்சார்ய சம்பந்தம் பிரதானம் –இது ஒழிந்தால் -பகவத் சம்பந்தம் -நிலை நின்ற -யவாதாத்மபாவி துர்லபம் –
தத் சம்பந்தம் குலைந்து இருந்தால் -ஏதத் சம்பந்தம் சுலபமாம் -இது குலைந்தால் அது துர்லபம் –
சத்தா ப்ரயுக்தம் அன்றோ -பகவத் சம்பந்தம் -இங்கு சொல்வது ஆஸ்ரயண சம்பந்தம் –
சேஷி சேஷ பாவ சம்பந்தம் குலையாது –
ஆச்சார்யனால் பகவத் ஆஸ்ரயணம் -பகவானால் ஆச்சார்ய லாபம் பொது- முதல் ஐந்து படிகள் -பந்து சம்பந்தம் போகாது –
சாமான்ய சம்பந்தம் இருந்தால் ஆச்சார்ய சம்பந்தம் கிட்ட வாய்ப்பு உண்டு –
அவன் ஸுஹார்த்தத்தால் ஆச்சார்ய சம்பந்தம் -ஆச்சார்ய சம்பந்தத்தால் பகவத் ஆஸ்ரயணம்-
உஜ்ஜீவனம் -மோக்ஷ பர்யந்தம் -வஸ்து சத்தை வேறே –ஆச்சார்ய சம்பந்தம் அறிந்து உபதேசம் பெற்று தானே
ஆஸ்ரயணம் மூலம் உஜ்ஜீவனம் -லீலா விபூதி விளையாட்டு -சத்தை அடியாக –

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –421-428- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463-

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -421-

இப்படி சொல்லும்படி பண்ணிற்று கிருபையாலே என்று –
சிநேகமும் -உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது -இறே–

இவ் உக்தி தான் தாயார் சொன்ன குண ஹானிக்கு ஒரு பரிகாரம்
பண்ணின மாத்ரமோ-ச ஹ்ருதயமாய் சொன்னதோ -என்கிற சங்கையில் -அதன் ச ஹ்ருதயத்தை மூதலிக்கிறார்–

குண ஹானி தாயார் சொல்ல -கிருபை உடையவன் -என்னை சரியாக புரிய வைத்த உபகார ஸ்ம்ருதி –
மேலும் ஸ்நேஹம் -பின்னும் மிக விரும்பும் உடனே -பிரான் -செய்த உபகாரத்துக்கு –
தோஷ ஸ்ரவண வேளையிலே – குண கிரஹணம் பண்ணுவித்ததுக்கு -நெஞ்சாறால் பண்ண வேண்டிய விஷயம்

அதாவது -குண ஹானி சொன்னத்தைத் தள்ளி -குணம் சொல்லும்படி பண்ணிற்று-கிருபையாலே என்று –
மிக விரும்பும் -என்று சிநேகமும் –
பிரான்-என்று உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது இறே –
ஆகையால்-தகவுடையவனே -என்ற இது ச ஹ்ருத யோக்தி -என்கை-

——————————————–

சூரணை -422-

நிரக் க்ருணனாக சங்கித்துச்
சொல்லும் அவஸ்தையிலும் –
காரணத்தை ஸ்வ கதமாக -விறே சொல்லிற்று –

அநந்தரம் -பிராட்டி உடைய வசனத்தை தர்சிப்பிக்கிறார் –

நெஞ்சு நிறைந்து வாய் கொள்ளாமல் -கரை புரண்ட ஆற்றாமை அவஸ்தையிலும் -சங்கா காரணம் –
குணம் மட்டுமே நினைக்க வேண்டிய நான் தோஷம் நினைத்ததே என் குற்றம் –
இதே போலே ஸ்ரீ பரத ஆழ்வானும்-ந மந்த்ர –மத் பாபவே நிமித்தம்-விஸ்லேஷ சித்த கலுஷ அவஸ்தையிலும் –
ஸ்வ கதமாகவே அருளிச் செய்தால் போலே –

அதாவது –
பிரிவாற்றாமையாலே பெருக கலங்கின ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
பெருமாள் தன் ஆற்றாமைக்கு உதவ வந்து முகம் காட்டப் பெறாதா இன்னாப்பாலே –
க்யாதா ப்ராஞ்சக்ருதஞ்ச சாநுக்ரோசச்ச ராகவா
சத்வருத்தோ நிர நுக்ரோச  சங்கே-சுந்தர காண்டம் -26-13- -என்று பெருமாளை -நிரக் க்ருணனாகச் சொல்லுகிற அவஸ்தையிலும் –
மத்பாக்ய சம்ஷயாத்-என்று இப்படி சங்கிகைக்கு அடி என்னுடைய பாஹ்ய ஹானி என்கையாலே –
சங்கா காரணத்தை ஸ்வ கதமாக விறே சொல்லிற்று -என்கை –

—————————————————

சூரணை -423-

குண தோஷங்கள் இரண்டும் –
சூத்திர புருஷார்த்தத்தையும் –
புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்—

பிரதம பர்வதத்தை விட்டு -என்கிற இடத்தில் -அர்த்தாத் உக்தமான -பகவத் சம்ச்லேஷமும் –
தோஷம் உண்டானாலும் -என்கிற இடத்தில் -அர்த்தாத் உக்தமான -பகவத் விச்லேஷமும் ஆகிற –
இவை இரண்டும் செய்யும் அத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்வரூப குணம் -திருமேனி அழகு தோஷம் இரண்டும் -என்றபடி –
விஷயாந்தர ஷூத்ர புருஷார்த்தம் குலைக்கும் –ஸ்வரூப குணம்
திருமேனி அழகு புருஷார்த்த காஷ்டயை குலைக்கும்
அன்றிக்கே
கலவி -சம்ச்லேஷம் குணம் -ஷூத்ர புருஷார்த்தம் குலைக்கும் -விஸ்லேஷ தசையில் -ஆச்சார்யர் இடம் வர வில்லை
கிடைக்கும் வரை காத்து இருந்து புருஷார்த்த ஷ்டையைக் குலைக்கும்
இப்படி இரண்டு நிர்வாகங்கள் –
பிரதம பர்வ விரோதியை அறுக்கும் குணங்கள் -சரம பர்வ விரோதி திருமேனி அழகு -ரூப ஸுந்தர்ய தோஷம்
ஆச்சார்ய கைங்கர்யம் நிஷ்டையை குலைத்து தன் பக்கலிலே இழுக்கும்
கூட்டம் கலக்கியார் -விரோதி தானே திருவாய்மொழி கேட்க்கும் உத்தேசியத்துக்கு விரோதி ஆவது போலே –
மா முனிகள் -குணமே இரண்டையும் குலைக்கும் / தோஷம் இரண்டையும் குலைக்கும்
கொப்பூழில் எழு கமல பூ அழகு –சுழியாறு-ஸுந்தர்ய நதி -போக முடியாமல் -ஷூத்ர புருஷார்த்தம் புருஷார்த்த காஷ்டையும் குலைக்கும் –

குணமாவது -ஸ்வ சௌந்த்ர்யாதிகளை -ஆஸ்ரிதர்க்கு முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுத்து கொண்டு இருக்கும் -கலவி –
தோஷம் ஆவது -அவ் வனுபவ அலாபத்தாலே அவர்கள் கண்ணாஞ்சுழலை இட்டு துடிக்க- தான் முகம் காட்டாது இருக்கை யாகிற -பிரிவு –
இவை இரண்டும் சூத்திர புருஷார்த்தத்தையும் -புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கை -யாவது —
ஓர் ஒன்றே இரண்டையும் குலைக்கை –

இதில் குணம் இரண்டையும் குலைக்கை  யாவது –
மால் பால் மனம் சுழிப்ப –மங்கையர் தோள் கை விட்டு -என்றும் –
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துரந்தார் தொழுது ஆரத் தோள் -என்றும் தத் விஷய வை லஷண்யத்தாலே
சூத்திர விஷய வைராக்யத்தை பிறப்பிக்கையாலே- சூத்திர புருஷார்த்த அந்வயத்தை குலைக்கையும் –

பயிலும் சுடர் ஒளியிலே -ததீய சேஷத்வத்தில் ஊன்றின ஆழ்வாரை அந்த ததீயருடைய ஸ்வரூப நிரூபகத்வேந ப்ரஸ்துதமான
தத் ஸௌந்த்ர்ய சீலாதிகளாலே -ததீய தாஸ்ய ரசத்தை மறந்து அவனை அனுபவிக்கையில் ஆசை கரை புரண்ட அநந்தரம் –
திருவாய் மொழியிலே தாமும் தம்முடைய கரண க்ராமங்களும்-பெரு விடாய் பட்டு – கூப்பிடும்படி பண்ணினாப் போலே –
(பயிலும் சுடர் ஒளி -அடுத்த திருவாய் மொழியிலே -முடியானே-என்று கிடக்கும் என் நெஞ்சமே –)
வேறு ஒன்றுக்காக புகுந்தாலும் -தன்னை ஒழிய புறம் ஒன்றுக்கு ஆளாகாதபடி பண்ணும் –
த்ருஷ்டி சித்த அபஹாரி யானவன் -பக்கலிலே சுழி ஆறுபடுத்தி புருஷார்த்த காஷ்டையான ததீய சேஷத்வத்தில் நிலையை குலைக்கையும் –

தோஷம் இரண்டையும் குலைக்கை யாவது –
அனுபவ அலாப க்லேசத்தாலே -சர்வ காலமும் தன் பக்கலிலே மனசாய்-
உண்டு அறியாள் உறக்கமும் பேணாள் -சிறகின் கீழ் அடங்கா பெண் பெற்றேன் -பரகால நாயகி தாயார்
பந்தொடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்-5-5- -என்கிறபடியே –
முன்பு அனுபவித்துப் போந்த ப்ராக்ருத போகங்கள் ஆகிற சூத்திர புருஷார்த்தங்களில் பொருந்தமையை விளைக்கையும் –

அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய –8-10-
செந்தாமரை கண் திருக் குறளன் நறு மா விரை நாண் மலர் அடிக்கீழ் புகுதல்-உறுமோ பாவியேனுக்கு-என்றும் –
தனிமா தெய்வத் தளிரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் நனிமா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே-என்றும்
இப்படி தத் விஷய சம்ச்லேஷ ரசம் வேண்டாதபடி -ததீய விஷய சம்ச்லேஷ ரசமே அமையும் என்று இருக்கும் அவர்களையும் –
அந்த ததீயருடனே கூடி இருந்தாலும் அவர்கள் பக்கல் நெஞ்சு அற்று அவனை அனுபவிக்கையில் ஆசையால் –
காண வாராய் –
காணுமாறு அருளாய் -என்று கூப்பிடுவது –
வெஞ்சிறைப்புள் தனிப்பாகன் -இத்யாதிகளாலே அவர்கள் தங்களோடு வெறுத்து வார்த்தை சொல்லுவதாம் படி பண்ணுகையாலே –
புருஷார்த்த காஷ்டையிலே நெஞ்சு பற்றாதபடி பண்ணுகையும்–

—————————————–

சூரணை -424-

நித்ய சத்ருவாய் இறே இருப்பது –

இதில் சூத்திர புருஷார்த்தைத்தை குலைக்கும் -என்ற இது -தன் பக்கலிலே அகப்பட்டாரை- புறம்பு ஒரு விஷயம் அறியாதபடி பண்ணும் –
( மற்று ஒன்றை காணா என்னப் பண்ணுமே-பாவோ நான்யத்ர கச்சதி -துஷ்க்ருதம் க்ருதவான் ராம -பிரபு –
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள்- சோகத்தால் –முடியலாமே -கர்மாதீனத்தால் முடிவு இல்லை நித்யம் -கிருபாதீனத்தால் முடிய வேண்டாமோ )
இவ் விஷயத்தின் ஸ்வாபம் சொல்லுகைக்காக கூப்பிட்டுக் கொண்ட இத்தனை -புருஷார்த்த காஷ்டையை குலைக்கும்
என்னும் அதுவே இவ்விடத்தில்  அபேஷிதம்-ஆன பின்பு சூத்திர புருஷார்த்த பஞ்சகத்வம் ப்ராசங்கிகம் – ( இடை பிற வரல் -ப்ராசங்கிகம் )
ஆகையாலே -அத்தை விட்டு –
பிராகரணிகமான -சரம புருஷார்த்த பஞ்சகத் வத்தை மூதலிக்கிறார்-

அயோத்யா காண்டம் முதல் ஸ்லோகம் -கச்சதா மாதுல குலம்–பாகவத சேஷத்வ பாரதந்த்ரம் அறிந்த ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான்-
நிறைய வியாக்யானம் -உண்டே-பாயச அம்ருதம் ஒத்த இறுதி பகுதி உண்டு பெற்ற பிள்ளை அன்றோ –
செம்புகன் தன்னை -தம்பிளால் வான் ஏற்று -லவணாசுரன் வென்ற விருத்தாந்தம் –
ராம ஸுந்தர்யம் இ றே நித்ய சத்ரு இவர் நிலையில் -உத்தேச்ய விரோதி -என்பதால் -அநக -நித்ய சத்ரு –
சரம புருஷார்த்தம் பஞ்சகம் -குலைக்கும் –
விஷயாந்தர பிராவண்யங்கள் நமக்கு சத்ரு -நித்யம் இல்லையே -அநித்தியம் தானே ‘
இங்கு நித்ய சத்ரு -ஸ்ரீ ராம ஸுந்தர்யம் –
ஏவம் ரூப பகவத் தோஷம் சரமத்தில் வர ஒட்டாமல் –
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடுமது கண்டு -வாராயோ -நீ தான் ஆடி வெல்லுவாய் –சென்றேன் என் வல்வினையால் -மடல் எடுக்க விரோதி அன்றோ
மன்றம் அமரும் படி பண்ணிச் சென்றான் -ஸ்ரீ கிருஷ்ண பக்தி -சத்ரு இங்கு –
ஆச்சார்ய கைங்கர்யம் துர்லபம் -அமுக்குண்ணாமல் அவ்வளவும் வர பெற்றால் அலப்ய லாபம் –
பிரதம பர்வ அன்வயம் -அதன் பலமே சரம பிராப்யம்

அதாவது –
சத்ருக்னோ நித்ய சத்ருக்ன -என்று பெருமாளுக்கு அபிமத விஷயமான ஸ்ரீ பரத ஆழ்வானையே தமக்கு உத்தேச்யமாகப் பற்றி –
அவனை அல்லாது அறியாதே  இருக்கும் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் –
பரத அனுவ்ருத்திக்கு விரோதியான -ராம ஸௌ ந்த்ர்யம் ஆகிற நித்ய சத்ருவை ஜெயித்து இருக்கும் என்கையாலே –
ததீய கைங்கர்ய நிஷ்டனுக்கு -நித்ய சத்ருவாய் இறே -பகவத் ஸௌந்த்ர்யம் இருப்பது -என்கை –
ஆகையால் இப்படி விலஷணமான விஷயத்தில் -சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டும்
புருஷார்த்த காஷ்டையை குலைக்கும் என்ன குறை இல்லை என்று கருத்து –

அன்றிக்கே –
கீழ் சொன்ன குண தோஷங்கள் இரண்டும் செய்யும் அத்தை அருளிச் செய்கிறார் –
குணமாவது -இங்கு அது செய்ய ஒண்ணாது -என்கிற இடத்தில் சொன்ன
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான ஸௌந்த்ர்ய சீலாதிகள் –
தோஷம் ஆவது -குணம் போலே உபாதேயமாய் இருக்கும் -என்கிற இடத்தில் சொன்ன-கடியன் கொடியன்-இத்யாதிகள்-
இரண்டும் சூத்திர புருஷார்த்தையும் புருஷார்த்த காஷ்டையும் குலைக்கும் -என்றது –
ஓர் ஒன்றே இரண்டையும் செய்யும் என்றபடி -(ஆய் ஸ்வாமி ஒவ் ஒன்றும் ஒன்றை குலைக்கும் )-

குணம் இரண்டையும் செய்கையாவது –
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துரந்தார் தொழுது ஆரத் தோள் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
சூத்திர புருஷார்த்தைத்தை குலைக்கையும் –
ஸ்வ வைலஷண்யத்தால் ஆழங்கால் படுத்தி புருஷார்த்த காஷ்டையான ததீய சேஷத்வ நிலையை குலைக்கையும் –

தோஷம் இரண்டையும் குலைகையாவது -குணம் போலே உபாதேயமாய் -அவன் என்றே கிடக்கும்படி பண்ணுகையாலே
ஊண் உறக்கம் பந்து கழல் -முதலானவற்றில் பொருந்தாமை விளைத்து சூத்திர புருஷார்த்தத்தை குலைக்கையும் –
சிறுமா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய –நறு மா விரை நாண்-மலர் அடிக்கீழ் புகுதல் -உறுமோ -என்னும் படியான
புருஷார்த்த காஷ்டையை குலைக்கையும் – என்று இங்கனே யோஜிக்க்கவுமாம் –
இந்த யோஜனைக்கு -நித்ய சத்ரு -என்கிறது -ஸௌந்த்ர்யாதி குண விசிஷ்ட வஸ்து விஷயமாகக் கடவது -( அழகன் நித்ய சத்ரு என்றபடி)

அங்கனும் அன்றிக்கே –
குணம் புருஷார்த்த காஷ்டையை குலைக்கும் என்னும் அதுக்கும் –
தோஷம் சூத்திர புருஷார்த்தத்தை குலைக்கும் என்னும் அதுக்கும் –
பூர்வ யோஜனைகளில் சொன்னபடியே பொருளாககடவது-
இவ் விஷய ஸ்வாபம் இது வாகையாலே சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற இது -தான் துர்லபம் என்று
சிம்ஹாவலோகந ந்யாயத்தாலே -கீழோடு அந்வயம்-

—————————————

சூரணை-425-

இப்படி பிராப்யத்தை அறுதி இட்டால் அதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் –

ஸ்வரூபத்துக்கும் ப்ராபகத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே ப்ராபகம் -என்ற இதில் –
ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யம் -சரம பர்வமான ஆசார்ய கைங்கர்யம்-என்று நிர்ணயித்தாரார் நின்றார் கீழ் –
இந்த ப்ராப்ய அநு ரூபமான பிராபக நிர்ணயம்-பண்ணுகிறார் மேல் –

ஆச்சார்யன் கைங்கர்யம் ப்ராப்யம் என்று நிரூபித்த பின்பு -அதுக்கு உபாயம் -பற்றி மேலே -ஆச்சார்யர் திருவடிகளே சத்ருசமான உபாயம் –
சாத்தியம் -சாதனம் – திருக்கடித்தானம்-ஸாத்ய ஹ்ருதஸ்யத்னன்-சாதனம் ஓருக்கடிக்கும் தாயப்பதி-க்ருதஜ்ஜை
திவ்ய தேசம் சாதனமாக கொண்டு ஆழ்வார் திரு உள்ளம் அங்கு போலே –

அதாவது –
இப்படி ஆசார்ய கைங்கர்யமே ப்ராப்யம் என்று அறுதி இட்டால் இந்த
ப்ராப்யத்துக்கு தகுதியாக வேணும் இறே ஏதத் ப்ராபகம் -என்கை –
இத்தால் ஆசார்ய கைங்கர்யம் ஆகிற சரம ப்ராப்யத்துக்கு ஆசார்யனே ப்ராபகனாக வேணும் -என்றபடி –

சத்ருசம் -அனுரூபம் -தகுதி -யோக்யதை மட்டும் போதாதே -சிறப்பான பொருத்தம் -இருக்க வேண்டும்
பகவத் திருவடியும் தகுதி தானே -அனுரூபம் இல்லை என்றபடி –
ச ஹ்ருதய ஆஹ்லாத கரத்வம் -தகுதி -ஆகும் -சந்த்ர சகோதரி -சம்சாரி தாபம் போக்கும் -பிராட்டி
ச ஹ்ருதயர் -சேதன ஸ்வரூப யாதாத்ம்யம் அறியும் ஈஸ்வரன் -பகவான் திரு உள்ளம் குளிர வைக்கும் தகுதி என்றபடி –
தன்னை பிடித்தாலும் குளிரும் -உபாயம் தன்னைப் பொறுக்கும் -அனுரூபத்வம் இல்லையே -தகுதிக்கு மேலே அனுரூபத்வம் –
சேதன ஸ்வரூப யாதாம்யாம் அறிந்த -ஆச்சார்ய சேஷத்வம் அறிந்த பெருமாள் என்றபடி –
அல்லி கமலக் கண்ணன் -அவனை விட்டு ஆச்சார்யரை பற்றினால்-அன்றோ –

—————————————-

சூரணை -426–

அல்லாத போது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்க்யம் இல்லை —

இப்படி இல்லாத போது வரும் ஹானி எது என்ன –
அருளிச் செய்கிறார் –

அவனும் அவளுமான சேர்த்தியில் அவர்கள் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் -இருக்க வேண்டுமே –
கர்ம ஞான பக்தி -உபாயாந்தரங்கள் -ப்ராபகம் பகவான் -ஐக்கியம் இல்லை
சரணாகதி மூலம் -ஐக்கியம் உண்டே –
அடுத்த நிலை -ஆச்சார்ய கைங்கர்யம் பிராப்யம் நிரூபித்த பின்பு ப்ராபகம் ஆச்சார்யர் திருவடிகள்
இது உபாயாந்தரம் தோஷம் ஆகுமோ என்னில்–இல்லை என்கிறார் மேல் –
அங்கும் ஆச்சார்யர் பின்பு வர தான் பூர்ண கும்பம் வைத்து வணங்கி -ஆழ்வான் நிஷ்டை –
ஆச்சார்யர் ராஜ்ஜியம் ஸ்ரீ வைகுந்தம் ஈர் அரசு பட்டு இராதே –
புல்லை காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே சரம உபாயம் கொண்டு சரம ப்ராப்யம் –

அதாவது –
இப்படி இப் ப்ராப்யத்துக்கு சத்ருசாம்படி ஆசார்யனை ப்ராபகமாக கொள்ளாதே ஈஸ்வரனை ப்ராபகமாக கொள்ளும் போது –
ப்ராப்யத்துக்கும் ப்ராபகத்துக்கும் – தன்னில் ஐக்க்யம் இல்லை என்கை-
பிரதம  பர்வதுக்கு உண்டான ப்ராப்ய பிராபக ஐக்க்யம் -சரம பர்வதத்துக்கும் ஒக்கும் இறே –
ஆகை இறே பிள்ளை அமுதனார் –
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி –
அப்பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டுமே ஏக விஷயமாகவே அருளி செய்தது –

————————————

சூரணை -427-

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ  பாதி–

இப்ப்ரபந்தத்தில் உபக்ரமே பிடித்து -ஸ்வ தந்த்ரனை -இத்யாதி -வாக்யத்து  அளவும் –
சித்தோ உபாய தயா சகல சாஸ்திர சித்தனான ஈச்வரனே -பரம உபாயமாகவும் –
ஆசார்யன் அஜ்ஞாத ஜ்ஞாபனம் முகேன-உபகாரனாகவும் இறே சொல்லிப்  போந்தது –
இப்போது ஈஸ்வரனை விட்டு ஆசார்யனே உபாயம் என்னும் அளவில் -சாஸ்திர விரோதமும் -ஸ்வ உக்தி விரோதமும் சம்பவியாதோ –
(இரண்டாம் கேள்வி -யாதோ வா இமானி –ஜாயந்தே -இத்யாதி சாஸ்த்ர வாக்கியம் ப்ரஹ்மத்தாலே மோக்ஷம்
இரண்டும் சித்தம் ஸூ கரத்வம் -ஏற்றம் எது )
ஈஸ்வரனை உபாயமாக பற்றுமத்தில் காட்டில் -ஆசார்யனை உபாயமாகப் பற்றினால் வரும் ஏற்றம் தான் ஏதோ என்கிற சங்கையின் மேலே
அருளிச் செய்கிறார் –

சித்த உபாயம் பகவான் தன்னைப் பொறுக்கும் -ஆச்சார்யர் அந்நயத்வம் சுலபம் உறுதி -எளிமை -கெஞ்சினால் கார்யகரம் ஆகுமே
நிரங்குச ஸ்வ தந்த்ரன் -திமிறி உதறினாலும் உதறுவான் -ஸ்வ ஆச்சார்ய பரதந்த்ரர் கிருபா பரதந்த்ரர் ஸ்வ ஆச்சார்யரை பற்றுகை –
கிருபாளுவானவன் சுலபனானவனுடைய காலைப் பிடித்து-அங்கே கலசல் -கிருபையும் ஸ்வ தந்தர்யம்
இள நெஞ்சு -தாக்ஷிண்யம் பார்த்து கார்யகரம் ஆகுமே -அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுக்கைக்கு உடலாகும்
அன்றிக்கே
ஈஸ்வரன் -அர்ச்சா அவதாரம் -கையைப் பிடித்தது -இம்மூவரும் சரணாகதி அர்ச்சையில் பார்த்தோம் -அஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பாரவஸ்யர் –
ஆச்சார்யர் திருவடிகள் ஸ்தானம் –
அவயவி பகவான் ஒருவனே -அர்ச்சா ஆச்சார்யர் இருவரும் அவயவங்கள் -கர ஸ்தானம் சுலப விஷயம் காட்டில் –
சரண ஸ்தானம் சுலப விஷய பகவத் விஷயம் பற்றுவது போலே -ஆகையால் உபாயாந்தர தோஷம் வராதே -சுகமாகவும் திருடமாகவும் இருக்குமே
இரண்டாம் நிர்வாகம் இது –

அதாவது –
ஈஸ்வரனைப் பற்றுகை அவன் கையைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ  பாதி -என்கை
இங்கன் அருளிச் செய்தது –
ஈஸ்வர விஷயத்தோடு ஆசார்ய விஷயத்து உண்டான அநந்யத்வமும் –
(அநந்யத்வம்–ஸ்வரூப ஐக்கியம் இல்லை -ஏக தத்வம் -ஜீவ பர பேதம் இல்லை -தோஷம் வரக் கூடாதே –
தப்த அய பிண்டம் -இரும்பு -அக்னி தேஜஸ் -கொல்லன் பட்டறையில் -தக தக இருக்குமே –
நெருப்பா பிருத்வியா சங்கை போலே-பண்டம் இரண்டு -அதுவே இது சொல்லுமா போலே –
அதிஷ்டானம் -ஒரு நிலையில் இருக்கும் அவஸ்தை -இரும்பை நெருப்பாக பார்க்க வைக்கும்
ஆச்சார்யரை அப்படி அதிஷ்டான விசேஷம் செய்து அருளி -தாதாத்ம்யம் -அதுவே இது என்கிற தன்மை -தவிர ஸ்வரூப ஐக்கியம் இல்லை -)
அவ் விஷயத்தை பற்றுமதில் இவ்விஷயத்தை பற்றுமதுக்கு உண்டான கார்ய சித்தியில் அமோகத்வமும்-(வீணாகாதே) தோற்றுகைக்காக-
(ஸ்ரீ பரத ஆழ்வான் சரணாகதி பலிக்க -14- ஆண்டுகள் ஆனதே -)
அது எங்கனே என்னில் –
சரணத்வ உக்தியாலே தத் அநந்யத்வம் சம்ப்ரதிபந்தம் –
ஈஸ்வரனைப் பற்றுகை அவன் கையைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி – என்கையாலே -மகா பிரபுவாய் இருப்பான் ஒருவனை
வசீகரித்து காரியம் கொள்ளுவான் ஒருவன் -அவன் கையைப் பிடித்து வேண்டிக் கொண்டு கார்யம் கொள்ளப் பார்க்கும் அளவில் –
நீர்மையாலே -நெஞ்சு இளகி கார்யம் செய்யவுமாய்-ஸ்வாதந்த்ர்யத்தால் உதறி விடவுமாய் இருக்கையாலே –
இன்னபடி என்று அறுதி இட ஒண்ணாது போலே –
ஆஸ்ரிதனான இவனுடைய அபேஷிதம் தன்னுடைய கிருபையாலே நெஞ்சு இளகி கார்யம் செய்யில் பலிக்கும் படியாயும் –
ஸ்வதந்த்ர்யத்தால் முருகி செய்யாது ஒழியில் விபலிக்கும்படியாயும் இருக்கையாலும் –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ  பாதி-என்கையாலே
அப்படி பிரபுவானவன் தன்னையே காலைப் பிடித்து வேண்டிக் கொண்டு கார்யம் கொள்ளும் அளவில் -தயா பரவசனாய்
கார்யம் செய்து அல்லது நில்லாமையாலே தப்பாமல் கார்யம் சித்திக்குமா போலே -ஆஸ்ரிதனான இவனுடைய அபேஷிதம்
உறுதியாக பலிக்கும்படி இருக்கையாலும் -அமோகத்வம் சம்ப்ரதிபன்னம்–

———————————–

சூரணை -428-

ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —

உபயருக்கும் உபகாரகர் -ஆஸ்ரயண சுலபனாவது மட்டும் இல்லை -சேஷ சேஷி சா பேஷரான சேஷி சேஷருக்கும் என்றவாறு –

ஆக –
ப்ராப்ய நிர்ணயத்தை பண்ணி -இதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் -என்கிற இத்தாலே ஆசார்ய கைங்கர்யம் ஆகிற
சரம ப்ராப்யத்துக்கு ஆசார்யனே சத்ருச உபாயம் என்னும் அத்தை பிரதிபாதித்து –
அப்படி அன்றிகே –
ஈஸ்வரனை உபாயமாக கொள்ளும் அளவில் வரும் விரோதம் காட்டி -ஆசார்யனுக்கு ப்ராப்யத்வம் ஈச்வரனோடே அன்வயத்தாலே யாமோபாதி-
(அன்வயம் -என்றால் -அதிஷ்டானம் -சிறப்பு -தனது முக உல்லாச காஷ்டை அதுக்கு ஹேது-அதிஷ்டான ரூப சம்பந்தம் —
ஆச்சார்யர் முக மலர்ச்சியை பகவான் திரு முக மலர்ச்சியின் எல்லை நிலம் -சாஷான் நாராயண தேவ என்கையாலே
குழந்தைக்கு ஏதோ கொடுக்க அது சிரிக்க தாய் மிக மகிழுமா போலே -மத் பக்த பஃதேஷூ ப்ரிய தமம்)
ப்ராபகத்வமும் தத் அனந்யத்வ நிபந்தனம் என்னும் அத்தையும் –
(அநந்யத்வ நிபந்தனம்-தத் கிருபா அதிசய ஆச்சார்யர் கிருபையே -பகவத் கிருபையை தூண்டி விடும் அதிஷ்டான விசேஷம் )
ஈஸ்வரனை பற்றுமதில் இவனை பற்றும் அதுக்குள்ளே ஏற்றத்தையும்
அருளிச் செய்தார் கீழ் –
இனிமேல் பல ஹேதுக்களாலும் ஆசார்ய வைபவத்தை பிரகாசிக்கிறார் –
இவ்விஷயத்தை உபாயமாக பற்றுமவர்களுக்கு ருசி விச்வாசங்கள் விளைக்கைக்கு உறுப்பாக -அதில் பிரதமத்தில் –
ஈஸ்வர சேதனர் இவர்களுக்கும் இவன் உபகாரகன் ஆனமையை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப்படி உபாயமாக கீழ் சொல்லப்பட்ட ஆசார்யன் -சேஷி சேஷபூதரான-ஈஸ்வர சேதனர் –
இருவருக்கும் அபிமத வஸ்துகளை கொடுத்த உபகாரகன் -என்கை –

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –407-420 – சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 21, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாதநஸ்ய கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -80–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் 
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் 

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது -நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

இப் ப்ரபந்தத்தில் -உபக்ரமமே பிடித்து -இவ்வளவாக -சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனே சேதனருக்கு -பரம புருஷார்த்த லஷண மோக்ஷ சித்திக்கு நிரபேஷ சாதனம் என்று அருளிச் செய்து –
உபய பூதனான சர்வேஸ்வரன் கர்ம நிபந்தனமாக சம்ஸ்கரிப்பிகவும் –
காருண்ய நிபந்தனமாக முக்தன் ஆக்கவும் வல்ல  நிரந்குச ஸ்வ தந்த்ரன் ஆகையாலே –
அவனை உபாயமாகப் பற்றி இருக்கும் அவர்களுக்கு –
ஸ்வ கர்ம அநு சந்தானத்தாலும் -தத் காருண்ய அநு சந்தானத்தாலும் –
வரும் பய அபயங்கள் யாவத் ப்ராப்தி மாறி மாறி நடக்கும் படியையும் -தர்சிப்பித்தார் கீழ்

இனி மேல் –
சாஷாத் நாராயணோ தேவோ க்ருத்வா மர்த்ய மயீம் தநும்-என்றும் –
திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி -என்று சொல்லுகையாலே –
அந்த சித்த உபாய பஹிர்பூதம் அன்றியே -தச் சரம அவதியாய் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கை அன்றிக்கே -மோஷ ஏக ஹேதுவாய் இருக்கையாலே தந் நிஷ்டருக்கு பய பிரசங்கம் இன்றியே –
எப்போதும் ஒக்க நிர்பயராய் கொண்டு இருக்கலாம் படியாய் –
சரம அவதியான ஸ்வரூப ப்ராப்யங்களுக்கு அநு ரூபமான சரம உபாயம் -சதாச்சார்யா அபிமானமே -என்று -சகல வேதாந்த சார வித் தமரான
பூர்வாச்சார்யர்கள்  தங்களுக்கு தஞ்சமாக -அநு சந்தித்தும் -உபதேசித்தும் -போந்த ரஹஸ்ய அர்த்தத்தை சகலரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி –
பிரபந்த சேஷத்தாலும் ஸூஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –

அதில் இப்படி பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி அநு வர்த்தியாமல் –
எப்போதும் ஒக்க நிர்பயனாய் இருக்கலாவதொரு வழி இல்லையோ என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை-407-

ஸ்வ தந்த்ரனை உபாயமாகத்தான் பற்றின போது இறே-
இப் ப்ரசங்கம் தான் உள்ளது –

(ஆயி ஸ்வாமிகள்-பஞ்சம உபாய நிஷ்டை -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
நிர்ஹேதுக அங்கீகார விஷய பூதனான -சரம அதிகாரிக்கு சரம ப்ராபகம் ப்ராப்யம் சொல்லி தலைக் கட்டுகிறார்
அதில் முந்துற யாவன் மோக்ஷம் அனுவர்த்திக்கும் பயாபயங்கள்- மாறி மாறி வரும் பயங்களும் அபயங்களும் -ஸ்வ தந்த்ரனை பற்றின போது தானே
பர தந்த்ர சேஷியைப் பற்றினால் உண்டாகாதே -சேராததைச் சேர்க்கும் சக்தன் -ஆச்சார்யரை பர தந்த்ர சேஷி -ஆக்குவானே-திருவடிகளைப் பற்றின அன்றே ப்ராப்யம்
பந்தம் மோக்ஷம் இரண்டுக்கும் காரணம் நிரங்குச ஸ்வாதந்த்ரன் -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்ட பிராப்தி –
ரக்ஷகன் -சம்சார -தன் நிவர்த்தனம் -அனுசந்தான காரியமே பயமும் அபயமும் -கமன ரூபம் -சித்த விகாரம் அடையும் –பிரசங்கம் நிரங்குச ஸ்வதந்த்ரனை பற்றும் பொழுது தானே
மோக்ஷ ஏக ஹேது -தன் ஆச்சார்யருக்கு பரதந்த்ரர் -சரம உபாயம் பற்றினால் -பய அபய கலசாமல் நிர்பயத்வம் மாத்திரமே உள்ளது –)

(சாஷாத் நாராயணோ தேவோ க்ருத்வா மர்த்ய மயீம் தநும்-தானே மானிடராக –
லோகம் மக்கிப் போக சாஸ்திரம் கை கொண்டே கருணையால் மேலே தூக்குகிறார் –
சாஸ்திரம் ஆகிய கை என்றும் -சாஸ்திரம் பிடித்த மனுஷ்ய ஆச்சார்யர் என்றுமாம்
திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி —-அருளாள பெருமாள் எம்பெருமானார் –அங்குசம் இட அவள் உண்டே –
அந்த சித்த உபாய பகிர்பூதம் அன்றியே-தனித்து வெளிப்பட்டவர் இல்லையே -பிரபந்தத்துக்கு ஒரே அர்த்தம் -தச் சரம அவதியாய் –இது இருக்குமே
ஆச்சார்யனை உபாயமாகப் பற்றினால்-உபாயாந்தரம் ஆகாதோ என்னில் –சாஸ்த்ர பாணித்வ லிங்கம் -ஆச்சார்ய பகவத் அநந்யத்வம் கண்ட யுக்தம் சித்தம் –
கேவல பகவத் அநந்யத்வம் -ஸ்வா தந்த்ர பயம் -நாராயணன் -மட்டும் இருந்தால் -ஸ்ரீ லஷ்மீ தத் பதிகளுடைய விசேஷ அதிஷ்டானம் ஆச்சார்யர் -சங்கை போக்கி –
பிரதிபத்திக்கு விஷயம் –சித்திர் பவதி ந ஸம்சய ஆச்சார்யரைப் பற்றினால் – ஆஸந்நத்வாத் அருகில் தயை மட்டும் காட்டி -தத்வ தர்சி -ஏற்றம்
இவரே அவரானால் பயம் கெட காரணம் எது என்னில் -ஸ்தல விசேஷம் –
ராஜா -நிக்ரஹ சங்கல்பம் யுத்த களத்தில் -தர்பார் -அந்தரங்கம் -வேறே அவஸ்தை தானே
பிரமாணம் வைஷம்யம் -வேறு படுத்தி -அவஸ்தா பேதம் -உபபன்னம் ஆகுமே -)

(உபாயமாகத்தான் -என்று ஒரு முழு சொல் இத்தனை -என்றது -தான் உபாயமாகப் பற்றியது என்று பிரித்து சொல்ல வில்லை என்றவாறு
சரமாவதியான ஸ்வரூபம் ததீய பர்யந்தம் சேஷத்வம் -சரம -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -சரமாவதியான புருஷார்த்தம் ததீய பர்யந்த கைங்கர்யம்
ஆச்சார்ய அபிமானம் -நம்முடைய அபிமானம் -அவரால் அபிமானம் -மூன்றாம் ஆறாம் வேற்றுமை உருபுகள்
பிரதானம் -அவர் நம்மை அபிமானிப்பதே -கர்மத்வமே விலக்ஷணம் -குருவால் அபிமானிக்கப்படுகிறானோ -ஸ்ரேஷ்டம் என்றவாறு -)

அதாவது
கர்ம அநு குணமாக சம்சரிப்பிக்கவும் -காருண்ய அநு குணமாக சம்சார நிவ்ருத்தியைப் பண்ணி திருவடிகளில் சேர்த்துக்   கொள்ளவும் வல்ல -நிரந்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகாரங்களுக்கு உபாயமாகப் பற்றின போது இறே –
யாவத் பிராப்தி பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி நடக்கும் இப் ப்ரசங்கம் தான் உள்ளது -என்கை-

பர தந்திர ஸ்வரூபனாய்-மோஷ ஏக ஹேதுவான ஆச்சார்யனை உபாயமாகப் பற்றினால் – இப் ப்ரசங்கம் இல்லை -சதத நிர்பயனாய் இருக்கலாம் என்று கருத்து –

உபாயமாகத்தான் -என்று ஒரு முழுச் சொல் இத்தனை –

———————————————–

பிரமாணாத் பிரமேய நிச்சயம் பண்ண வேணும் இறே -இவ் வர்த்தம் என் கொண்டு
நிச்சயிக்கக் கடவோம் என்னும் ஆ காங்ஷையிலே -அருளிச் செய்கிறார் –

சூரணை -408-

உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று
இவ் வர்த்தம் அறுதி இடுவது —

(ஆயி ஸ்வாமிகள்-பகவத் அனுபவத்தால் மகிழ்ந்தும் -இல்லாவிடில் வருந்தியும் – அன்றிக்கே பாகவத அனுபவமே உணவு -என்றுமாம் –
பர தந்த்ர சேஷியை உபாயமாக –நிஷ்டை உள்ளவர்களைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும் இந்த சரம பர்வ நிஷ்டை
ஓவாத ஊண் -பகவத் விக்கிரக அனுபவம் -ஜெனித ஹர்ஷ -உந்த கர்வம்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -மாறுளதோ இம் மண்ணின் மிசையே -பகவத் அனுபவ ஜெனித ஹர்ஷ ப்ரகர்ஷ கர்விதமான வார்த்தை
உண்ணும் நாள் இல்லை -பாஹ்ய சம்ஸ்லேஷ அலாபத்தால் -மானஸ அனுபவம் முதல் பாசுரத்தில் உண்டே –
விக்ரஹ அனுபவம் பெறாத போது -ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் –
உன் வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-பெரிய திருமலை நம்பி -சாயலோடு – மாமை தளர்ந்தேன் -திரை விலக்கி-அருளிச் செய்தார் –
சோக பிரகர்ஷம் இது -கத்கதம் நா தழுதழுத்து பேசுவார்கள் – மாற்றி மாற்றிச் சொல்லுவார் பத்து பேரும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -பிரதம பர்வ நிஷ்டர் -தெளிவாக உள்ளவர்கள் பாசுரம் கொண்டா இந்த ஆச்சார்யர் நிஷ்டை சொல்வது
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே – தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே- உன் தீர்த்த அடிமைக்கு குற்றேவல் செய்து –
ஸ்வ தந்த்ர பகவத் விஷயமே உபாய உபேயம் அறுதியிட்டு -சோக ஹர்ஷ கலப்பனான பாசுரங்கள் கொண்டு –
சதாசார்யர் திருவடிகளே உபாய உபேயம் அறுதியிட்டு -சம்சயம் விபர்யயம் இல்லாமல் சொல்ல முடியாதே-)

மயர்வற மதி நலம் அருளப் பெற்று -பகவத் அனுபவ  ஏக தாரகராய் இருக்கும் ஆழ்வார்களுக்கு –( உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் )
உண்ட போதும் உண்ணாத போதும் ஆவன -பகவத் அனுபவ தத் லாப அலாப காலங்கள் –

அதில் பகவத் அனுபவம் பண்ணி ஹ்ருஷ்டரான போது -தத் தாஸ்ய விருத்தி காம தயா -ததீய தாஸ்யத்தில் ஊன்றி –
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை ஆளும் பரமர் –
நாளும் பிறப்பிடை தோறும் எம்மை ஆளுடை நாதர் –
வருமையும் இம்மையும் நம்மை ஆளும் பிராக்கள் –
சலிப்பின்று ஆண்டு எம்மை சன்ம சன்மம் தோறும் காப்பர் –
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –
எம் பல் பிறப்பிடை தோறும் எம் தொழு குலம் தாங்கள் –

அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே -செந்தாமரை கண் திருக் குறளன்
நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ பாவியேனுக்கு-என்றும் –

ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே-
நச்சித் தொழுவாரை நச்சு என்றன் நன் நெஞ்சே-
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே –
கண்ணாரக் கண்டு உருகி கையாரத் தொழுவாரைக் கருதும் கால் உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேராவே -என்றும் –

ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவதே –
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே 
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -என்றும்

இத்யாதிகளாலே தத் விஷயத்திலும் காட்டில் ததீயரே நமக்கு சேஷிகளும்-உபாய உபேய பூதரும் என்று அத்ய ஆதரத்தை பண்ணிப் பேசுவது –
பகவத் அனுபவ  அலாப க்லிஷ்டர் ஆனபோது -அப்படி பரம சேஷிகளும் பரம பிராப்ய பிராபக பூதருமான ததீயர் சந்நிஹிதருமாய் இருந்தாலும்-
-( திருமங்கை ஆழ்வாரும் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் கூட இருந்து இருப்பாரே அருள் மாரி பெயர் -திரு மழிசை ஆழ்வாரும் முதல் ஆழ்வாரும் ஒரே காலம் ) -அவர்கள் பக்கல் நெஞ்சு செல்லாமல் –
பகவத் விஷயமே பிராப்யமும் பிராபகமுமாய் நினைத்து-

காண வாராய் –
காணுமாறு அருளாய் –
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -( பெரிய திருமொழி -8–5-அழுகை -திருவாய்மொழி -8-5-போலவே )
வெஞ்சமத்து அடு சரம் துரந்த வெம்மடிகளும் வாரானால் –
வாஸூதேவா உன்  வரவு பார்த்து –வார் மணல் குன்றில் புலர நின்றேன்-( இது ஊடல் -மற்றவை அலறுவது )
என்று இத்யாதிகளால் -ஆர்த்தி பரவசராய் –
அலற்றுவது
ஊடுவது –

வெஞ்சிறைப் புள் – (வெறுப்பது)
உங்களோடு எங்கள் இடை இல்லை –(உதறுவது)
இத்யாதிகளாலே –
வெறுப்பது
உதறுவது

ஆகையாலே -உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் -சொல்லுவார் என்கிறார் –

ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரக்ருதிகளாய்-ஏக கண்டராய் இருக்கையாலே –
பத்துப் பேர் உண்டு இறே -என்கிறார் –

அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -என்றது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் ஆகையாலே பிரதம பர்வத்தில் காட்டில்
சரம பர்வத்துக்கு உள்ள தன்னேற்றம் அடையத் தெளியக் கண்டு பேசினார்களே ஆகிலும் –
சரம பர்வ ஏக நிஷ்டர் அன்றியே -பிரதம பர்வதத்திலே மண்டி –
தத் அனுபவ ஹ்ருஷ்டரான போது ஒன்றைச் சொல்லுவது –
தத் அலாப க்லிஷ்டரான போது ஒன்றைச் சொல்லுவதாய்-
ஒரு படி பாடர் அல்லாதவர்கள் பாசுரம் கொண்டு அன்று –
ஆச்சார்யனே உபாயம் என்று இவ் வர்த்த நிச்சயம் பண்ணுவது -என்கை –

—————————————-

பின்னை யார் பாசுரம் கொண்டு அறுதி இடுவது என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -409-

அவர்களைச்
சிரித்து இருப்பார்
ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு –
இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் –

(ஆயி ஸ்வாமிகள்-இள நெஞ்சரைப் பார்த்து சிரித்து -ஹர்ஷை ஏக ஹேது சரம விஷயத்தை பற்றி -சுகித்து இருக்க மாட்டாமல் -சோகம் ஹர்ஷம் இரண்டுக்கும் ஸ்வ தந்த்ரனைப் பற்றி
இவர்கள் படுகிற பாட்டைக் கண்டு -மேவினேன் அவன் பொன்னடி -விஸ்லேஷ கந்தம் இல்லாமல் –இறந்த காலம் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-இன்பம் மிக்கு ஆழ்வாருடைய உபாய உபேயம் திருவடிகளே பற்றி நிஸ் ஸலந சிந்தையாக –
பாதுகையை சிரஸா வகித்து -ஸ்வாமியைப் பார்த்து -நீர் தரிக்கும் ரத்ன கிரீடம் உயர்ந்ததா என் தலையில் உள்ளது நன்றாக உள்ளதா –
கண்ணன் திருவடி தலையில் வைத்தவரைப் பார்த்து -சிரித்தால் இது அபசாரம் ஆகாதோ என்ன -ஆச்சார்யர் ப்ரீதி வளர்க்கும் -அபசாரமாகத் தலைக் கட்டாது இவர் சிரிப்பு –
பிரேம அதிசயத்துக்கு போக்கு வீடாக -தத்- பக்தி வல்லி- பூத்த பூவாகவே இவருக்கு முக்கிய ஆபரணம்)

அதாவது –
மேவினேன் அவன் பொன்னடி -தேவு மற்று அறியேன் -என்று –
ஸ்வ ஆசார்யரான ஆழ்வார் திருவடிகளைப் பிராப்யமும் பிராபகமுமாய்
புரை அறப் பற்றி -அவிதித  அந்ய தேவதராய் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தத் சங்கீர்த்த ஆநந்த நிர்பரராய்-
அடியேன் சதிர்த்தேன் -என்று உறுவது அறிந்து பற்றின சதுரராய் -இருக்கையாலே –

சரம பர்வத்தில் ஏற்றம் அறிந்து பேசா நிற்கச் செய்தே -தத் ஏக நிஷ்டர் அன்றியே –
பிரதம பர்வத்தில் மண்டி -தத் வைலஷண பரவசராய் -உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் -சொல்லுகிற ஆழ்வார்கள் பதின்மரையும் –

அடியிலே ஒரு ஆசார்யன் திருவடிகளைப் பற்றி அநவரத ஸூகிகளாய் இருக்கப் பெறாதே –
ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றும் பகவத் விஷயத்திலே முந்துற முன்னம் இழிந்து –
தத் அனுபவ தசையில் ஒன்றைச் சொல்லுவது –
தத் அலாப தசையில் ஒன்றைச் சொல்லுவதாய் –
இவர்கள் படுகிற பாடு என் என்று -பரிஹசித்து இருக்கும் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் ஒருவர்
உண்டு இறே –

சரம பர்வ நிஷ்டராய் -சதைக ரூப வசனரான இவருடைய பாசுரமான –
கண்ணி நுண் சிறுத் தாம்பை கொண்டு -இவ் வர்த்தத்தை சம்சய விபர்யய கந்தம் அற
நிச்சயிக்கக் கடவோம் -என்கை –

அதவா –
உண்ட போது -இத்யாதிக்கு பகவத் அனுபவம் பண்ணின போது –
உண்டு களித்தேற்க்கு உம்பர் என் குறை –
யாவர் நிகர் அகல் வானத்தே –
மாறுளதோ இம் மண்ணின் மிசை -என்று
இப்படி பகவத் அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷ கர்விதமான ஒரு வார்த்தையும் –

தத் அனுபவம் பெறாத போது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால்-
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து –
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -என்று இப்படி
சோக வேக ஜனிதமான ஒரு வார்த்தையும் சொல்லுவார் ஒருவர் இருவர் அன்றிக்கே-பத்து பேர் உண்டு இறே –

ததீயரே சேஷிகளும் -உபாய உபேய பூதரும் என்று அறிந்து இருக்கச் செய்தே –
தத் அநு குணமாக நிற்க மாட்டாமல் -பகவத் விஷய வைலக்ஷண்ய   பரவசராய் -இப்படி
உண்ட போது ஒரு வார்த்தை சொல்லுகிறவர்கள் உக்தி கொண்டு அன்று –
ஸ்வ ஆச்சார்ய சரண யுகளமே உபாயம் என்கிற இப் பரமார்த்த நிர்ணயம் பண்ணுமது

அவர் திருவடிகளையே தனக்கு தஞ்சமாகப் பற்றி -தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே –
பிரதம பர்வதத்திலே மண்டி ஹர்ஷ சோக பரவசராய் பேசுகிறவர்களை
பரிஹசித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அப்படி இருந்துள்ள
ஸ்ரீ மதுரகவிகள் திவ்ய ஸூக்தியைக் கொண்டு இவ் வர்த்தம் நிச்சயம் பண்ணக் கடவோம்
என்று இங்கனே யோஜிக்கவுமாம்

—————————————————

இப்படி பிரமாண சித்தமான அர்த்தத்தை உப பத்தியாலே ( உபபத்தி -வஸ்து சாமர்த்தியம் )ஸ்தீரீகரிக்கிறார் மேல் –

சூரணை -410-

ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும்
சேர்ந்து இருக்க வேணும்
இறே பிராபகம் –

(அகாரம் ஆச்சார்யர் -என்று கொண்டு ஓங்காரத்திலே அர்த்தம் கொண்டு சரம பர்வ —
சாஷான் நாராயண தேவ -அவனே ஆச்சார்யராக அவதரித்து -இதுக்கு சுருக்கமே அகார வாச்யன் –
நமஸ் -நேராகவே அர்த்தம் கொள்ளலாம் –
மகாரம் -ஆச்சார்யருக்கு சேஷன் -இப்படி ஓங்காரத்தாலே -சரம பர்வ நிஷ்டை –
நமஸ் அர்த்தம் நயனம் பண்ணி -ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு ஆச்சார்யர் உபாயம்-)

(ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை நிஷ்கரிஷிக்கும்  அளவில் -பிரதமம் ஸ்வரூபத்தை
உள்ளபடி நிஷ்கரிஷித்து -அநந்தரம்-பிராப்யத்தை தத் அநு ரூபமாக நிஷ்கரிஷித்து –
பிராபகத்தை தத் உபய அநு ரூபமாக நிஷ்கரிஷிக்க வேணும் இறே –
வ்யுத்புத்தி தசையிலும் -உபேயம் முற்பட்டு -உபாயம் பிற்பட்டு இருக்கும் –
அனுஷ்டான தசையில் மாறாடி இருக்கும் -(பறை தருவான் –புருஷார்த்தம் முதலில் சொல்லி
தருவான் பறை -கறவைகள் சிற்றம் சிறுகாலை போலே
அன்னம் புருஷார்த்தம் – மனுஷ்யன் ஸ்வரூபம் அறிந்து கிருஷி பண்ண வேண்டுமே )
ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேராமையால் இறே உபாயாந்தரத்தை
பரித்யஜித்தது –
ஆகையாலே -ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே-
என்கிறார் -( உபாயாந்தரம் விட்டது -ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேராதே -ஸ்வாதந்தர்யம்-ஸ்வார்த்ததை இல்லாமல் )

(இனி ஸ்வரூபம் தன்னை நிரூபித்தால் -ஞான ஆனந்தங்களும் புற இதழ்  என்னும்படி –
பகவத் அனந்யார்க்க சேஷத்வமே  வடிவாய் -அதனுடைய யாதாத்ம்யம் தச் சேஷத்வமும்
புற இதழ் என்னும்படி ததீய சேஷத்வமே வடிவாய் இறே இருப்பது –
ஏவம் பூத ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யத்தை நிரூபித்தால் -தத் கைங்கர்யம்
பிரதம அவதியாய் -ததீய கைங்கர்யம் சரம அவதியாய் இருக்கும் –
ஸ்வரூப பிராப்ய வேஷம் இது ஆகையாலே -தத் உபய அநு குணமான
பிராபகம் ததீயரே யாக வேண்டி இறே இருப்பது -இனி அந்த ததீயரில் வைத்து கொண்டு –
முதலடியில் தன்னை அங்கீகரித்து –
தத்வ ஞான பிரதானத்தை பண்ணின மகா உபகாரனான ஸ்வ ஆசார்யருக்கே
சேஷமாய் இருக்கை -சமஸ்த பாகவதருடைய உகப்புமாய் -தந்
ஸ்வரூபத்தின் உடைய எல்லை நிலமுமாய் இருக்கும் –
இந்த ஸ்வரூபத்துக்கு அநு ரூபமான பிராப்யமும் ஸ்வ ஆச்சார்யன் திருவடிகளில் பண்ணும்
கைங்கர்யமுமாய் இருக்கும் –
இப்படி ஸ்வரூப பிராப்யங்களாய் ஆன  இவை இரண்டுக்கும் சத்ருசமான
பிராபகம் ஸ்வ ஆச்சார்ய சரண யுகளுமாய் வேணும் -என்கை –
இதுவே ஸ்வரூப பிராப்யங்களுக்கு சேர்ந்த உபாயம் என்கையால் –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்ய பீத்யா நிர்பயத்வத்தை பற்ற இதில் போந்த அளவல்ல –
முக்கிய உபாயம் இதுவே என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் இறே —)

(பிரதம -மத்யம -சரம -தசை என்பது கரும்பின் கணைகள் போலே ஒரே வியக்தியில் வரும் அவஸ்தா விசேஷங்கள் –
சிஷ்ய கர்த்ருகத்வம் – ஆச்சார்ய கர்த்ருகத்வம் -இரண்டும் கொண்டே ஆச்சார்ய அபிமானம் -என்றால்
ஆச்சார்யர் இடம் அபிமானம் என்றும் ஆச்சார்யரது அபிமானம் என்றுமாம் –
அவர் அபிமானம் உபாயம்-பஞ்சம உபாய நிஷ்டை இது – -மூன்றாவது நிலை -ஸ்வரூபம் முதலில் அறிந்து –
அடுத்து புருஷார்த்தம் அறிவது இரண்டாவது நிலை –
பகவத் சேஷத்வம் ஸ்வரூபம் என்றும் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்றும் அறிந்து இதுக்கு பகவத் திருவடிகள் உபாயம் என்பது முதல் நிலை –
பாகவத சேஷத்வம் ஸ்வரூபம் -பாகவத கைங்கர்யம் புருஷார்த்தம் -பாகவதர் திருவடிகள் உபாயம் நடு நிலை -இங்கு பாகவதர் பொது சொல் -இதுக்கு மேலே
ஆச்சார்ய சேஷத்வம் ஸ்வரூபம் -ஆச்சார்யர் கைங்கர்யம் புருஷார்த்தம் -ஆச்சார்யர் அபிமானம் உபாயம் சரம நிலை -ஆகுமே –
அடிப்பாகம் -கணை மேல் மேல் போலே கரும்பின் ஒரே விஷயமே இது –
சித்த உபாயம் முதல் பிரகரணம் -சரம பரவ ஆச்சார்ய அபிமானமே உபாயம் இதில் -அருளிச் செய்கிறார் -)

(ஆயி ஸ்வாமிகள்-ஆச்சார்யர் தத் சத்ருசகர் உகக்கும் படி சிரித்து இருக்கும் இவர் சொன்ன -நம்பிக்கு ஆள் உரியனாய் -ஸ்வரூபம் -ஆச்சார்ய ஏக சேஷத்வம் –
பீதியால் இல்லை -இது தான் யாதாத்ம்யம் -நம்பிக்கு ஆள் புக்க காதல் அடிமை பயன் அன்றே -ஸ்வரூப அனுரூப பிராப்தி -ஆச்சார்ய கைங்கர்யம் தானே புருஷார்த்தம்
மேவினேன் அவன் பொன்னடி-ஸ்வரூப பிராப்பியங்களுக்கும் நடுவில் -உபய மத்யஸ்ய -உபாயம் -ஆச்சார்ய அபிமானம்-மூன்றுமே தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -அவர் பாசுரத்தில் இருந்து —ஸ்வரூபம் சரம சேஷிக்கு சேஷம்-தத் கைங்கர்யமே சரம ப்ராப்யம் சரம ஞான விவசாயம் உறுதி பிறந்தால் -சரம சேஷி உபாயம் ஆகா விட்டால் சேராச் சேர்த்தி ஆகுமே –
பிரதம சேஷத்வம் -பாகவத சேஷத்வத்துக்கு சென்று சரம சேஷத்வம் சென்ற பின்பு பகவத் ஆச்சார்ய -இரண்டையும்-முக்கியமாக -பிடித்துக் கொண்டு இருப்பது சேராதே
பிரதம நமசிலே –திருமந்திர மத்யமாம் பதம் -அடியேன் எனக்கு உரியேன் அல்லேன் – -த்வய நமஸ் – பிரதம த்ருதீய அக்ஷரம்--லுப்த சதுர்த்தியால் –அகாரம் ஆச்சார்யர் -மகாரம் சிஷ்யன் சேஷன் -ஆய -ஆச்சார்யருக்கு கைங்கர்யம் சொன்னால் தான் இடைப்பட்ட நமஸ் பொருந்தும் )

சித்த உபாய ஸ்வீ காரம் அபிமதம் -ஆச்சார்ய அபிமானம் -அத்யந்த அபிமதம்–அதிகார பேதம் -விதி நிஷேதங்கள் அதிகாரி பேதத்தால் –
பய அபயங்கள் மாறி மாறி நடக்கும் -பகவானைப் பற்றினால் -இது முக்கிய காரணம் இல்லை –
ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம் – பரிஜன –பரம பதம் –ஆத்மதேகம் -வரத சகலமும் பக்தருக்காக -ஜிதந்த்தே-பக்தானாம் —
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ –தர்மம் பிரகாரம் -அவர் திரு உள்ளபடி செயல்பட வேண்டுமே –
அதே தர்ம ஸ்வரூபம் அடியேனுக்கும் உண்டே -சகல மேது ஸம்ஸரித்தார்த்தம் ஜகர்த்த —
ஸ்வ இதர –தன்னைத் தவிர மற்றவர்களுக்கு -சேதன தர்மி ஸ்வரூபம் –
அவன் திரு உள்ளபடியே நடப்பது -நித்ய பிரகாரம் ஆதேயம் சேஷம் -அந்தரங்க நிரூபகம்-
ஆச்சார்ய அபிமானம் -வித்து மரம் பிரணவம் அனைத்தும் போலே சகலமும் சித்தம் –
சரம அவதி நிரதிசய ப்ரீதி ஹேதுத்வம் –

ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை நிஷ்கரிஷிக்கும்  அளவில் -பிரதமம் ஸ்வரூபத்தை
உள்ளபடி நிஷ்கரிஷித்து -அநந்தரம்-பிராப்யத்தை தத் அநு ரூபமாக நிஷ்கரிஷித்து –
பிராபகத்தை தத் உபய அநு ரூபமாக நிஷ்கரிஷிக்க வேணும் இறே –

வ்யுத்புத்தி தசையிலும் -உபேயம் முற்பட்டு -உபாயம் பிற்பட்டு இருக்கும் –
அனுஷ்டான தசையில் மாறாடி இருக்கும் –
ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேராமையால் இறே உபாயாந்தரத்தை
பரித்யஜித்தது –
ஆகையாலே -ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே-
என்கிறார் –

இனி ஸ்வரூபம் தன்னை நிரூபித்தால் -ஞான ஆனந்தங்களும் புற இதழ்  என்னும்படி –
பகவத் அனந்யார்க்க சேஷத்வமே  வடிவாய் -அதனுடைய யாதாத்ம்யம் தச் சேஷத்வமும்
புற இதழ் என்னும்படி ததீய சேஷத்வமே வடிவாய் இறே இருப்பது –
ஏவம் பூத ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யத்தை நிரூபித்தால் -தத் கைங்கர்யம்
பிரதம அவதியாய் -ததீய கைங்கர்யம் சரம அவதியாய் இருக்கும் –
ஸ்வரூப பிராப்ய வேஷம் இது ஆகையாலே -தத் உபய அநு குணமான
பிராபகம் ததீயரே யாக வேண்டி இறே இருப்பது –

இனி அந்த ததீயரில் வைத்து கொண்டு –
முதலடியில் தன்னை அங்கீகரித்து –
தத்வ ஞான பிரதானத்தை பண்ணின மகா உபகாரனான ஸ்வ ஆசார்யருக்கே
சேஷமாய் இருக்கை -சமஸ்த பாகவதருடைய உகப்புமாய் -தந்
ஸ்வரூபத்தின் உடைய எல்லை நிலமுமாய் இருக்கும் –
இந்த ஸ்வரூபத்துக்கு அநு ரூபமான பிராப்யமும் ஸ்வ ஆச்சார்யன் திருவடிகளில் பண்ணும்
கைங்கர்யமுமாய் இருக்கும் -இப்படி ஸ்வரூப பிராப்யங்களாய் ஆன  இவை இரண்டுக்கும் சத்ருசமான பிராபகம் ஸ்வ ஆச்சார்ய சரண யுகளுமாய் வேணும் -என்கை –

இதுவே ஸ்வரூப பிராப்யங்களுக்கு சேர்ந்த உபாயம் என்கையால் –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்ய பீத்யா நிர்பயத்வத்தை பற்ற இதில் போந்த அளவல்ல –
முக்கிய உபாயம் இதுவே எண்ணும் இடம் சம்ப்ரதிபன்னம் இறே —

—————————————————–

இவ் வர்த்த விஷயமாக ஓர் ஐதிஹ்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -411-

வடுக நம்பி
ஆழ்வானையும்
ஆண்டானையும்
இருகரையர்
என்பர் —

தத் உபய விபரீத பிரபாகந்தர பரிக்ரகம் -பகவானை பற்றி பகவானை அடைவது -சரம நிஷ்டருக்கு அநபிமதம் -திருப் பவித்ரமான கூரத் தாழ்வானையும் -திரி தண்டமான ஆண்டானையும் –

(அர்வாஞ்சோ–ஆழ்வான் சம்பந்தத்தால் உகந்த எம்பெருமானார் –
ஆஸ்ரய தோஷம் இல்லை -விஷய தோஷம் -என்பதால் இவர்கள் இடம் குறை இல்லை -விஷய தோஷமே தத் விஷய வை லக்ஷண்யம்
கண்ணி நுண் சிறு தாம்பில் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்-தடுமாறி மீண்டார் இறே ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் )

அதாவது ஆழ்வார் திருவடிகளில் ஸ்ரீ மதுரகவிகள் இருந்தால் போலே
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் எம்பெருமானார் திருவடிகளே என்று பிரதிபத்தி பண்ணி –
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் வடுக நம்பி –( உம்மை ஒழிய மற்று ஒரு தெய்வம் அறியா வடுக நம்பி )
எம்பெருமானாருக்கு நிழலும் அடி தாறும் போலே அவிநா பூதராய்-
ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
ராமாநுஜார்ய வசக பரிவர்த்திஷீய( பரிசரணம் -பரிகைங்கர்யம் என்றபடி- அழகர் இடம் பிரார்த்தனை ) -என்று
உபாய உபேயங்கள் அவர் திருவடிகளும் -அத் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யம் என்று இருக்கும் கூரத் ஆழ்வானையும் -தாத்ருசரான முதலி ஆண்டானையும் –
சம்சாரத்தில் இருப்பில் அடிக் கொதிப்பால் வந்த ஆர்த்தியின் மிகுதியாலே கலங்கி காதாசித்கமாக பெருமாள் பக்கலிலும் சென்று பல் காட்டுவது –
தத் வை லஷண்யம் கண்ட வாறே பிரவணராய்ப் போருவதாம் இவ்வளவைக் கொண்டு –(ஆழ்வார்கள் போலே பிரசுரம் இல்லை -எப்போதும் இல்லை எப்போதோ என்றபடி -வடுக நம்பி நிஷ்டைக்கு உயர்த்தி சொல்ல வந்தது )
எம்பெருமானார் திருவடிகளே பிராப்யமும் பிராபகமும் ஆனால் -தேவுமற்று அறியேன் -என்று இருக்க வேண்டாவோ –

அங்கன் இன்றிகே -சரம அவதியிலும் பிரதம அவதியிலும் கை வைத்து நிற்கிறவர்கள் -இரு கரையர் என்று அருளிச் செய்வர் -என்றபடி —

——————————————–

ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே- என்கிற இடத்தில் ஸ்வரூபத்தை ஒரு வழியால் இசைந்து –
பகவத் கைங்கர்யம் அன்றோ பிராப்யம் -பிராப்யத்துகு சத்ருசமாக வேணும் என்றபடி எங்கனே என்பாருடைய சங்கையை பரிகரிக்கைக்காக
பிரதமம் பிராப்ய வேஷத்தை யோட வைத்துக் காட்டுகிறார் –

சூரணை -412-

பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் —(ஆச்சார்ய பகவத் பாகவத விஷய கைங்கர்யம் இல்லை -ஆச்சார்ய பகவத் பாகவத ப்ரீதி விஷய கைங்கர்யம் என்றபடி -)

பகவத் பாகவத ஆச்சார்ய விஷய கைங்கர்ய த்ரயம் -ஸ்வரூபம் -ஞான பரிபக்குவமாக – பர்வம் அம்சம் பகுதி –
எண்ணெய் சுத்தி கரிப்பு நிலை -தார் – -டீசல் பெட்ரோல் -போலேயும் -கரி வைரம் போலேயும்-
பிரதம -மத்யம அம்சம் -சரம அம்சம் -மாறாடி அர்த்தம் -பகவத் கைங்கர்யம் பாகவத கைங்கர்யத்தில் மூட்டும்
அது ஆச்சார்ய கைங்கர்யத்தை நிலை நிறுத்தும்
பகவத் கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் ஆகாதே மக்கள் சேவை ஆகாதே மகேசன் சேவை
சாமான்யமான பாகவத கைங்கர்யத்தில் விசேஷமான ஆச்சார்ய கைங்கர்யம் ஆகாது –
ஆச்சார்ய கைங்கர்யத்தில் இவை இரண்டுமே சேரும் –
பகவத் கைங்கர்யம் கை விட்டால் பாகவதர் ஆச்சார்யர்கள் கை கொள்ளார்கள்
ஆச்சார்ய பாகவத ப்ரீதி வளர்க்கும் பாகவத கைங்கர்யம்
மூன்றும் பண்ண வேண்டும் -முற்றிய நிலை அது -ஆச்சார்ய கைங்கர்யம் முப்புரி போலே –
பகவத் கைங்கர்யம் நிரூபாதிகம் -பாகவத ஆச்சர்ய கைங்கர்யம் உபாதி -பகவத் சரீர பூதர் என்று இருப்பர் பிரதம நிஷ்டர்
சத்தா நிபந்தம் என்று பண்ணுவார்
ததியர்-கைங்கர்யம் -உபதேச நிபந்தனை புத்தியால் பண்ணுவார்
சரம நிஷ்டர் சத்தா -இது -ப்ரீதியால் மற்றவை –
கைங்கர்ய த்ரயமும் அவர்ஜனீயம்–பாகற்காய் சாப்பிட்ட பின்பு பால் சாப்பிட்டால் போலே –
பாலும் பழமும் உண்டு ஹரிதா -கடுக்காய் போலே அது
ஞான பரிபாகம் -ரசனை மாறி பர்வ மாறி -ஒன்றில் ஓன்று சாரமாய் – இருக்கும்

பிராப்யமாவது -சேஷத்வ ஏக நிரூபணீயமான ஆத்ம வஸ்துவுக்கு புருஷார்த்தமான கைங்கர்யம் -பர்வ சப்தம் அம்ச வாசி –

இங்கு பிரதம பர்வமாக சொல்லுகிற -ஆச்சார்ய கைங்கர்யம் ஆவது -திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கி -என்கிறபடியே –
முதலடியிலே தன்னை அங்கீகரித்து -பகவத் விஷயத்துக்கு ஆளாகும்படி திருத்தின ஆசார்யனுக்கு உகப்பாக பண்ணும்  பகவத் கைங்கர்யம் –

மத்யம பர்வமாக சொல்லுகிற பகவத் கைங்கர்யமாவது -அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே –
தான் உகந்தாரை தன் அடியார்க்கு அடிமைப் படுத்தும் பகவானுக்கு உகப்பான -பாகவத கைங்கர்யம் –

சரம பர்வமாக சொல்லுகிற பாகவத கைங்கர்யம் ஆவது -ஆசார்ய பரன் என்று உகக்குமவர்களாய்- ஆச்சார்ய வைபவ ஜ்ஞாபகராய் –
ஆசார்ய கைங்கர்யத்தின் ஏற்றம் அறியுமவர்களான-பாகவதர்கள் எல்லாருக்கும் உகப்பாகப் பண்ணும் ஆச்சார்ய கைங்கர்யம் –

ஆக –
ஆச்சார்ய ப்ரீதி விஷயமான பகவத்  கைங்கர்யத்தை -ஆச்சார்ய கைங்கர்யம் -என்றும் –
பகவத் ப்ரீதி விஷயமான பாகவத கைங்கர்யத்தை -பகவத் கைங்கர்யம் -என்றும் –
பாகவத ப்ரீதி விஷயமான ஆச்சார்ய கைங்கர்யத்தை -பாகவத கைங்கர்யம் -என்றும் -சொல்லிற்று ஆயிற்று –

ஆகையால் –
ஆச்சார்ய கைங்கர்யம் பிராப்யம் என்று சொன்னதில் குறை இல்லை என்று கருத்து –

———————————————————–

சூரணை-413-

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப்  போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே சரம பர்வம் என்று சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தே –
இது வருகிற வழி தான் என்-என்கிற சங்கையிலே -அருளிச் செய்கிறார் –

இதற்கு மூலமான நம்பிள்ளை ஈடு -7-10- அவதாரிகை –
இனித் தான் வேத வாக்யங்களும் -ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று ஸ்வரூப பிராப்தி அளவும் சொல்லவே
அதுக்கு அவ்வருகில் கைங்கர்யமானது அவகாத ஸ்வேதம் போலே தன்னடையே வரும் என்று ப்ரஹ்ம பிராப்தி அளவும் சொல்லி விடும் –
ஆழ்வார்கள் -வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று அது தன்னையே சொல்லா நிற்பர்கள்
பிராப்தி பலமான கைங்கர்யத்தில் ருசியாலே ஸம்ஸாரம் த்யாஜ்யம் -ஸர்வேஸ்வரன் உத்தேச்யன் என்ற ஞானம் பிறந்து
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் -பேஷஜம் பகவத் பிராப்தி -என்று பகவத் பிராப்தி அளவிலே நின்றார்கள்
அவர்களில் காட்டில் மயர்வற மதிநலம் அருளினன் என்று பகவத் ப்ரஸாத லப்தமான ஞானத்தை யுடையரான இவர்களுக்கு வாசி இது வாயிற்று –

கந்தல் கழிந்தால் -சேஷத்தவ ஏக நிரூபகம் -இயற்க்கை இதுவே பிராப்திக்கு பலம் – பகவத் கைங்கர்யம் —
வி விருத்தி -வளர்ந்து பாகவத ஆச்சார்ய கைங்கர்யம் வரை வளர்ந்து -ப்ரீதி அதிசய -ராக பிராப்தமாக தன்னடையே வரக்கடவது –
ஸ்வ அசாதாராண ஆகாரத்தினுடைய ஆவிர்பாவ ரூபையான-பிராப்தியே-
அஷ்ட குணங்கள் -ஆவிர்பாவம் -சாதாரணம் -சேதனனுக்கும் பகவானுக்கும் -அசாதாரண ஆகாரம் –
திரோதிகமான இருந்தது -சேதனனுக்கு மட்டும் -பரமாத்மாவுக்கு அதீனமாய்-அவன் அருளி பெற்றதால் –
நித்ய சங்கல்பத்தால் நித்யத்வம் நித்ய ஸூரிகளுக்கு-அருளி -அடங்கி -இரண்டையும் சமன்வயப்படுத்த நித்ய சங்கல்பம் -ஸத்ய சங்கல்பம் -அன்றோ –

அதாவது –
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று
பர பிராப்தி பூர்விகையா யநாதி கர்ம நிபந்தன அசித் சம்பந்த்தாலே –
மலாவ குண்டித மணி பிரபை போலே திரோஹிதமான ஸ்வ அசாதாராண ஆகாரத்தினுடைய ஆவிர்பாவ ரூபையான-பிராப்தியே –
வேதாந்த சாஸ்திரம் புருஷார்த்தமாகச் சொல்லா நிற்க -இப்படி ஆவிர்பூதமான ஸ்வரூபத்தை உடைய ஆத்மா –
சேஷத்வ ஏக நிரூபணீயதயா-சேஷி விஷய கிஞ்சித்காரத்தால் அல்லது செல்லாதபடியாய் இருக்கையாலே –
அந்த ஸ்வரூப பிராப்தி பலமாய் கொண்டு -பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் வருகிறாப் போலே –
சேஷியான பகவானுக்கு -ஸ்வ விஷய கிஞ்சித்காராத்திலும் –
ஸ்வகீய கிஞ்சித்காரம் உகப்பு ஆகையாலே -அந்த பாகவத கைங்கர்யம் ஆகிற
சாத்தியத்தின் விருத்தி ரூபமாய் கொண்டு மத்யம பர்வமான பாகவத கைங்கர்யம் வரக் கடவதாய்-
அந்த பாகவதர் எல்லார்க்கும் ஸ்வ விஷய கிஞ்சித்காரத்திலும் தனக்கு உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் கிஞ்சித்காரமே உகப்பு ஆகையாலே –
அந்த சாத்தியத்தின் உடைய விசேஷ விருத்தியாய்க் கொண்டு -சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்யம் வரக் கடவது -என்கை-

—————————————

சூரணை -414-

இது தான் துர்லபம் –

இந்த சரம பர்வ லாபத்தின் அருமையை தர்சிப்பிக்கிறார் மேல் –

மனசை அடக்குவது துர்லபம் -இந்திரியங்கள் வலிமை -ஸ்ரீ கீதையில் அருளி -மேலே அப்பியாசம் –
தன்னிடம் வைக்கச் சொல்லி -அதே போலே இங்கும் ருசி பிரதிபந்தக ப்ராபல்யத்தாலே துர்லபம் –
தாது அர்த்தம் -அடைவது அருமை -கீழே ஆச்சார்ய கைங்கர்யம் -மத் பக்த பஃதேஷு ப்ரீதி -ஞாபகப்படுத்தி வந்ததால் –
பழக்கத்தால் வந்ததனால் அருமை இருக்காதே -பகவத் கைங்கர்யம் இயற்கை -அதிலே இருந்து இழுத்து கொண்டு நிலை நாட்டியதால் -துர்லபம் –
பகவத் ஸமஸ்த கல்யாண குணங்களே தடங்கல் என்று மேலே அருளிச் செய்கிறார் – பிள்ளை லோகாச்சார்யார்
மா முனிகள் போல்வாருக்கு மட்டுமே பலித்தது
மா முனிகள் திரு வாக்காக பிரதிவாதி பயங்கர அண்ணன்-ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் அருளி –

—————————————

சூரணை -415-

விஷய பிரவணனுக்கு-அத்தை விட்டு –
பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே-வருகைக்கு உள்ள அருமை –

இது தன்னை விவரிக்கிறார் மேல் –

ஏக தேசத்திலே சுழி ஆறு படுத்தும் -அநந்தம்-ஸ்திரம் -தோள் கண்டார் தோளே கண்டார் -ஆக்குமே /
அபரிமித போக்கிய தர்மமான ஸ்வரூபம் ரூபம் குணங்கள் உண்டே -தத் கைங்கர்யங்களில் ஆழம்கால் படுத்தும் –
தத் இஷ்ட தமமான ஆச்சார்ய கைங்கர்யம் -துர்லபம்
நிர்தோஷம்-கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் இங்கு –

அதாவது –
சூத்திர விஷயங்களின் புறப் பூச்சான வைலஷண்யத்தில் ஈடுபட்டு மீட்க ஒண்ணாதபடி அவற்றிலே பிரவணனாய் நின்ற அவனுக்கு –
அவற்றைக் கை விட்டு -வகுத்த விஷயமான பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரியான -பகவத் விஷய பிரவணனாய் -தத் கைங்கர்ய நிரதனானவனுக்கு
பிரதம பர்வமானவற்றை விட்டு -சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்யத்தில் வருகைக்கு உள்ள அருமை -என்றபடி —

————————————

சூரணை -416-

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் –
இங்கு அது செய்ய ஒண்ணாது –

அது எங்கனே என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

வாழ்க்கைப்பட்ட சிறு பெண் -புக்ககம்-செல்லும் அருமை போலே -சூத்ர விஷயங்களில் -மெள்ள வாவது மீளலாம் –
சரீர தோஷம் துர்கந்தம் -உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட ஆளில்லை –
நிரவதிக தேஜா மயமான -ஒளி மணி வண்ணன் என்கோ–நிரவதிக ஸூ கந்தத்வாதி திவ்ய குண பூர்ணன் –
தோஷ தர்சனம் பண்ண முடியாது -எண்ணிறந்த குணங்கள் – ஒன்றுமே இல்லாத தோஷங்கள் -இரண்டையும் எண்ண முடியாதே இங்கு

அதாவது –
சூத்திர விஷயங்களில் -தேக தோஷாதிகளும்-(வாதம் பித்தம் கபம் -மூன்றும் -சேர்ந்தே இருக்கும் -ஆதி -மனஸ் தோஷம் -மன அழுத்தம் இத்யாதி )
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களும்
உண்டாய் இருக்கையாலே அவற்றை தர்சிக்கவே அறுவறுத்து மீளலாய் இருக்கும் –
விலஷண விக்ரக யுக்தமாய் -சமஸ்த கல்யாண குணாத்மகமாய்-நித்தியமாய் -அபரிச்சேத்யமான –
இவ்விஷயத்தில் தோஷ கந்தம் இல்லாமையாலே -தோஷ தர்சனம் பண்ணி மீளப் போகாது -என்கை –
சங்க்யாதும் நைவ சக்யந்தே குணா தோஷச்ச சார்ங்கிணா
ஆனநத்யாத் பிரதமோ ராசிர் அபாவ தேவ பச்சிம -என்ன கடவது இறே-

கருவரை போல் நின்றானை -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு -மீள வழி இல்லை –

——————————————

சூரணை -417-

தோஷம் உண்டானாலும் –
குணம் போலே –
உபாதேயமாய்
இருக்கும் –

சூத்திர விஷயங்களுக்கு சொல்லுகிற தோஷம் ஒன்றும் இங்கு சொல்லல் ஆவது
இல்லை ஆகிலும் -ஸ்வ விஷய பக்தி பரவசர்க்கு -சம்ச்லேஷ சுகத்தை
உருவ நடத்தாதே விச்லேஷித்து துக்கத்தை விளைக்கையாலே –
கடியன் கொடியன் -இத்யாதிபடியே சொல்லலாம் படி தோற்றுவன சில தோஷம் உண்டே –
அது தான் மீளுகைக்கு உடலாமோ என்ன –
அருளிச் செய்கிறார் –

விஷப்பால் அமுதுண்டான் -விஷமே அமுதமாகும் அவனால் -ஆகிலும் -கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்-ஆழ்வார்
ராவணன் எவ்வளவு குணவானாக ராமன் இருந்தாலும் என் உள்ளம் செல்லாது -மாற்றி சொல்லி மாய்ந்தான் –
ஆற்றாமையால் -தோன்றும் தோஷங்கள் -என்றவாறு –

அதாவது –
அப்படி ஆற்றாமையாலே தோற்றுவன சில தோஷம் உண்டானாலும் –
கொடிய வென்நெஞ்சம்  அவன் என்றே கிடக்கும் -என்று அவை தன்னை விரும்பி
மேல் விழும்படி இருக்கையாலே ஹேயமாய் இராது –
விஷயத்தை விரும்பி மேல் விழுகைக்கு உடலான குணம் போலே –
உபாதேயமாய் இருக்கும் -என்கை –

———————————

சூரணை -418-

லோக விபரீதமாய் இறே இருப்பது –

லோகத்தில் தோஷம் ஹேயமாய் -குணம் உபாதேயமாய் அன்றோ இருப்பது –
தோஷம் குணம் போலே உபாதேயம் ஆமோ என்ன –
அருளிச் செய்கிறார் –

தோஷம் -உபாதேயமாக இல்லையே லோகத்தில் -இங்கு குண தோஷ விபாகம் இல்லாமல் -லோக ஸ்வபாவ விபரீதம் –

அதாவது –
தோஷம் விடுகைக்கு உடலாய் –
குணம் பற்றுகைக்கு உடலாய் -இருக்கும் லோக பிரக்ரியை அன்றியே -தோஷமும் குணம் போலே
உபாதேயமாய் இறே இவ்விஷயத்தில் இருப்பது -என்கை –

அது இது உது-என்னாலாவன அல்ல உன் செய்கை என்னை நைவிக்கும்-
நல்ல குணம் உள்ளவர் நல்லவர் லோகத்தில் -உன்னிடம் உள்ள குணம் நல்லதாகும் உன் சம்பந்தத்தால் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-இங்கிதம் நிமிஷதஞ்ச தாவகம்-

————————————————–

சூரணை -419-

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –
தோஷத்துக்கும் உண்டு இறே —

எல்லாம் செய்தாலும் -தோஷம் குணம் போலே உபாதேயமாக கூடுமோ என்னும்
ஆ காங்ஷையிலே -அருளிச் செய்கிறார் –

பிராப்தி என்பதால் -ஆஸ்ரய வைலஷண்யம் -உயர்ந்தது -ஏற்றம் -பிராப்தன் -அபிமதன் -சேஷி மூன்றும் உண்டே இங்கு –
அபிமத விலக்ஷண விஷய தோஷமும் அபிமதம் தானே –
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் – குண க்ருத தாஸ்யம் -இரண்டும் உண்டே –
குணங்களும் தோஷங்களும் பிராப்த சேஷியிடம் இருப்பதால் கொள்ளத் தக்கவையே –

அதாவது –
பகவத் குணம் தத் பிரவணருக்கு உபாதேயமாகைக்கு ஈடான பிராப்த சேஷி கதத்வம் ஆகிற ஹேது –
அவ்விஷயத்தில் தோற்றுகிற தோஷத்துக்கும் உண்டு இறே -என்கை –
இத்தால் –
அவன் பக்கல் உள்ளது என்னும் அத்தாலே குணம் உபாதேயம் ஆகிறவோ பாதி –
அவன் பக்கல் உள்ளது என்னும் அத்தை பற்ற -தோஷமும் -உபாதேயமாக- குறை இல்லை என்றது ஆயிற்று –
இப்படி ஆகையாலே -தோஷம் உண்டானாலும் அது மீளுகைக்கு உடல் ஆகாது என்று கருத்து –

————————————–

சூரணை -420-

நிர்குணன் என்ன -வாய் மூடுவதற்கு முன்னே –
க்ருணாவான் என்று -சொல்லும்படியாய் இருந்தது இறே —

விஸ்லேஷ தசையில் தோற்றும் நைர்க்க்ருண்யாதி தோஷத்தை அங்கீகரித்து –
அது தான் குணத் உபாதேயமாய்  இருக்கும் படியை அருளிச் செய்தார் கீழ் –
அந்த நைர்க்க்ருண்யாதி தோஷம் தான் முதலிலே இவ் விஷயத்தில் இல்லை
என்னும் இடத்தை அபியுக்த வசனங்களாலே தர்சிப்பிக்கிறார் மேல் –
அதில் முதலில் ஆழ்வாருடைய வசனத்தை தர்சிப்பிக்கிறார் –

ஆடி ஆடி –தாய் பாசுரம் -தவள வண்ணர் தகவுகளே-கருணை உண்டா -ஈரம் காயும் முன்பு தகவுடையவனே என்னும் –
பிறர் தோஷம் சொல்ல கேட்கவும் பொறாத விஷய ஸ்வ பாவம் -அன்றோ -விசேஷ வசனம் –
இவள் இராப்பகல் வாய் வெருவி-பெருமாள் இருப்பது போலே இவள் -கண்ணநீர் கொண்டாள்-
தண் அம் துழாய் கொடீர்-வண்டுக்களுக்கு கொடுக்கிறீர் -வெள்ளை வண்ணம் -சத்வம் -இருந்தபடி -ஷேபத்துடன்-தாயார் சாதிக்க –
சொல்லி வாய் மூடுவதற்கு முன்னே -வாயை புதைத்தால் போலே -சகல குண பூர்த்தி உள்ளவன் -உயிருக்கு அமுதம் –
மிக விரும்பும் பிரான் -என்று சொல்லி -நேராக வந்தால் போலே சாஷாத்கார சாமான்ய ஆகாரம் -மானஸ அனுபவம் –
நித்ய கிருபையை நிரூபகமாக யுடையவன் -என்பாள் –
இறை தேடும் குருகே-தகவு இல்லை -சொல்ல சொல்லி -மயர்வற மதி நலம் அருள பெற்ற நான் தான் சொல்ல வேண்டும்-
பிறர் சொல்ல பொறுக்க மாட்டாள் –

அதாவது –
என தவள வண்ணர் தகவுகளே -என்று
எங்கனே இருந்தன சுத்த ஸ்வாபரான உம்முடைய கிருபைகள் -நாட்டிலே இப்படி
ருஜுக்களுமாய் -பர துக்க அசஹிஷ்ணுக்களுமாய் இருப்பார் சிலர் தார்மிகர்
நடையாட -அபலைகளுக்கு அழகியதாக குடி கிடக்கலாய் இருந்தது என்று பெண்பிள்ளை
ஆற்றாமைக்கு உதவாதது கொண்டு திருத் தாயார் நிர்க்குணன் என்ன -வாய் மூடுவதற்கு
முன்னே -அவள் வாயைப் பொதைத்தாப் போலே -தகவுடையவனே -என்று கெடுவாய்- ஆகரத்தில்
தகவு மறுக்குமோ -அது நம் குற்றம் காண் -என்று க்ருணாவாத்யைச் சொல்லும்படியாய்
இருந்தது  இறே என்றபடி –

பொற் குவியல் அக்ஷய பாத்திரம் -கிருபைக்கு பிறப்பிடம் அன்றோ -அங்கே குறை இல்லை –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –387-406 -நிர்ஹேதுக கிருபை வைபவ பிரகரணம் –ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்–

January 3, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஐந்தாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் 
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் 

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது எட்டாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது -நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் – படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம்

——————————————

இப்படி அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை ஆகிலும் ஹேதுவாக கொண்டு
கடாஷிக்கும் அளவில் -அங்கீகாரம் சஹேதுகம் ஆகாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

(ஆயி ஸ்வாமிகள்-இது இன்னும் ஒரு படி மேல் -ஜீவனால் உண்டாக வில்லையே -கால க்ரமத்தால் விளையும் படி விசித்திர சக்தி உக்தன் அநாதி காலமாக விரகிட்டு –
எப்பொழுதாவது அஞ்ஞான ஸூ ஹ்ருதம் ஏற்படும்படி -பண்ண விதிக்கும் சாஸ்திரமும் விதிக்காமல் தானும் அறியாமல் -ஈஸ்வரன் நினைவாலே தானே இவையும் –
ராவணனுக்கும் அடுத்த பிறவியில் அஞ்ஞாத ஸூஹ்ருதம் வரும் -ஷிபாமி நாக்கிலே குறியிட்டு பயப்படுத்துமா போலே அன்றோ கோபமும் அனுக்ரஹ கார்யம் தானே -சீறி அருளாதே என்று உண்டே -தடுப்பை நீக்கினால் தானே கார்யகரம் ஆகும் – தடுக்காமை உபாயம் இல்லை —கிருஷி பலிக்காதது கண்டு கிருஷிகன் உடைய தப்பாக நினைக்கக் கூடாதே -அஞ்ஞாத ஸூஹ்ருதமும் -உம்மை தொகை-ஞான ஸூ ஹ்ருதங்களும் இருக்கும் படி அன்றோ ஸ்ருஷ்டித்தது-வஹ்யமான நிருபண  விசேஷங்களை-மேலும் சொல்லப் போகிறதையும் சொல்லிற்றாகவுமாம் – )

அதாவது –
இந்த யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதங்களும் உள்பட இவனுக்கு உண்டாம் படி இறே
இவற்றுக்கும் யோக்யதை இல்லாதபடி கரண களேபர விதுரனாய் கிடந்த இவன் தன்னை –
சிருஷ்டி காலத்தில் கரணாதிகளை கொடுத்து அவன் ( அவனுக்கு)உண்டாக்கிற்று -என்கை 

இத்தால் கடாஷ ஹேதுவாக சொன்ன யாத்ருச்சாதிகளும் அவனுடைய கிருஷி பலம் -என்கை –

ச -சப்தத்தாலே துல்ய அந்ய அஞ்ஞாத ஸூஹ்ருத பலங்களும் அடி அவன் கிருஷி -என்கிறது 

அன்றிக்கே –
வஹ்யமான நிருபண  விசேஷங்களை சமுச்சியிகிறதாகவுமாம் –

சிருஷ்டி தான் சேதன கர்ம அநு குணமாக வன்றோ என்னில் –
சிருஷ்டிப்பது கர்மத்தை கடாஷித்தே ஆகிலும் -யௌக பத்யம் அனுக்ரஹ கார்யம்-இறே —

——————————————

தந் நிரூபணத்தில் இவனுக்கு சம்பவிக்கும் அத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும்
செய்ய வேண்டாதபடியாய்  -இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-இந்த சர்வ வித ரக்ஷகத்வ ஸ்வ பாவம் தன்னை -நிரூபித்தால் -தான் ஏற ரஷித்து -மேல் விழுந்து செய்கிறானே -ஸ்ருஷ்டிக்கும் பொழுது யாதிருச்சிக்க ஸூஹ்ருதங்களுக்கு விரகு பார்த்து செய்கிறவன் அன்றோ –சரீர பூதனான இவனுக்கு புத்தி பூர்வகமாகவும் இவனுக்கு ஏதும் செய்ய வேண்டாம் -)

(நிர்ஹேதுக –கரண களேபர விதரணம் -உபாயாந்தர நிஷ்டனுக்கும் இப்படியே -சாதாரணம் அன்றோ–அவரே கொடுத்ததால் அவரே பார்த்து கொள்ளட்டும் -பிரயத்தனம் செய்பவர்களுக்கும் இதே -நிர்ஹேதுக கடாக்ஷ பிரதத்வ ஹேதுத்வமான ஸூ யத்ன நிவ்ருத்தி வேண்டுமே -விஷய விபாகம் -அதனாலே -)

அதாவது –
அசித்  அவிசேஷிதமாய் கிடக்கிற தசையில் -உஜ்ஜீவன உபயோகியான கரண களேபரங்களை பரம தயையாலே அவன் தந்த படியை -அநு சந்தித்தால் –
தத் அதீன சத்தாதிகனான இவன் தனக்கு ஸ்வ உஜ்ஜீவன அம்சத்தில் அவன் செய்த படி கண்டு இருக்கை ஒழிய தான் ஒரு ப்ரவ்ருத்தி  பண்ண வேண்டாதபடியாய் இருக்கும் -என்கை –

—————


ஈஸ்வர ஸ்ருஷ்டியால் இவனுக்கு விளையும் அங்கீகார பற்றாசைகள்-யாத்ருச்சிகதிகள் -மாத்ரமே அன்று -இன்னம் சில உண்டு என்று தர்சிப்பிக்கைகாக வாதல் -கீழ்ச் சொன்ன இவை தான் உண்டாம் பிரகாரத்தை உபபாதிக்கைக்காக வாதல் -அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –பக்தி உழவன் பழம் புனத்தை சிருஷ்டித்த கட்டளை –

(ஆயி ஸ்வாமிகள்-உதிரி போலே அஞ்ஞான ஸூ ஹ்ருதங்கள் –உண்டாக்க வல்ல சர்வ சக்தன் அன்றோ -அனுக்ரஹம் காடு மேடும் பாயும் -ததாமி புத்தி யோகம் –பழையதாக உழுவது -உதிரி விளையும் யோக்கியதையும் இல்லாமல் கூடாதே – நடுவது -சாவி போகாமல் விளைவது -விளைச்சல் பூமி –அநாதி அவிச்சின்னம் -ஸூ க்ஷேத்ரம் -வியாபாரம் இல்லாமல் இருந்தால் ஜலம் ஒன்றே இருந்தால் -சர்வ அங்குரித்த சஹகாரி தண்ணீர் அன்றோ –தன்னடையே முளை விட்டு பிரவாஹ ரூபேண -சம்சாரி சேதனன் -அநாதி பகவத் சங்கல்ப வைச்சித்ர சக்தி மாத்திரம் கொண்டே -தண்ணீர் போலே –
பற்றாசாகக் கொண்டு -மற்று ஒரு ஹேது வேண்டாத படி -பலம்-பகவத் அங்கீ காரம் வரை-பக்தி உழவன் -பழம் புனம்- அநாதி கால சம்சாரம் -நியமமாய் வரும் கட்டளை -ஆக யாதிருச்சாதிகளும் அவன் சங்கல்பம் அடியாகவே வரும் என்றதாயிற்று)

அதாவது –
புதியதாக தரிசு திருத்தினது அன்றிக்கே  பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்க் கொண்டு -செய் காலாய்ப்  போரும் ஷேத்ரத்திலே -கர்ஷகன் அதுக்கு என்று ஒரு க்ருஷியும் பண்ணாது இருக்க -உதிரியானது முளைத்து விளைந்து தலைக் கட்டுமா போலே –
மேல் சொல்லப்  படுகிற நிரூபண விசேஷங்கள் ஆதல் – கீழ் சொன்ன யாத்ருச்சிகாதிகள்  ஆதல் -இதுக்கு என்ன ஒரு கிருஷி செய்ய  வேண்டாதே -இச் சேதனர் பக்கல்
தன்னடையே விளையும் படி ஆயிற்று -பக்திக்கு கர்ஷகனான ஈஸ்வரன்
பிரவாஹ ரூபேண நடக்கிற சம்சாரம் ஆகிற பழம் புனத்தை சிருஷ்டித்து திருத்தும் -என்றபடி 

——————————————-

இவை என்று கீழ் அருளிச் செய்தவற்றை விசதீகரிக்கைக்காக
தத் விஷய பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

சூரணை -390-

அவை தான் எவை என்றால் –

———————————————–

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

சூரணை -391-

பூர்வ க்ருத புண்ய அபுண்ய பலங்களை- சிரகாலம் புஜித்து-உத்தர காலத்திலே –
வாசனை கொண்டு ப்ரவர்த்திக்கும் அத்தனை -என்னும்படி -கை ஒழிந்த தசையிலே –
நாம் யார் -நாம் நின்ற நிலை யேது-நமக்கு இனிமேல் போக்கடி யேது –
என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு -அவை ஆதல் -முன்பு சொன்னவை ஆதல் –

(ஆயி ஸ்வாமிகள்-சேதனன் கர்ம பரம்பரைகளை 1-பண்ணுவது -2-அனுபவிப்பது —ஸூக துக்கங்களை அனுபவித்து — கர்ம பரம்பரைகளில்-பூர்வ க்ருத கர்ம பலன் அனுபவித்தது-உத்தர தசையில் -தத் உபய வாசனை கொண்டு அனுபவிக்க பிரவர்த்திக்கிறான் –மத்யம தசையில் -மற்று ஓன்று பற்றுவது ஒழிந்த க்ஷணத்தில் -குடம் இட்டு நீக்க நீங்கும் குளப் பாசி போலே –மேல் எழ தானே நீங்கப் படும்-அப்படி அந்த க்ஷண கால -கர்ம பல அனுபவம் மேல் எழ நீங்கப் பெற்ற போது -யார் தான் -கெடும் படி நின்றோமோ –ஈடேறி நின்றோமோ -நினைத்தது செய்யும் ஸ்வா தந்த்ரர் இல்லையே- மேல் உள்ள காலம் ஈடேற போக்கிடம் இன்னது என்று -கண்டு பிடிக்க வில்லை – இல்லையே என்று இழவு மேலிட கவலைப் படுவான் – -அச்ச ஸூஷ்மமான காதா சித்கமாக பிறக்கும் ஞான சம்சய கார்ய நிரூபண விசேஷங்கள்-ஸ்வரூப ஸ்திதி பலம் பற்றி வரும் அறிவும் சங்கைகளும் வருமே -அநாதி ஸ்ருஷ்ட்டி கால அவன் நினைவால் இவை வருமே –)

அதாவது –
முன்பு செய்யப்பட்ட-புண்ய பாப ரூப கர்ம த்வயத்தினுடையவும் பலங்களை ஸ்வர்க்க நரகாதிகளிலே நெடும் காலம் அனுபவித்து –
மேலுள்ள காலத்தில் – பூர்வ கர்ம வாசனை கொண்டு -புண்ய பாப ரூப கர்மங்களில் ப்ரவர்த்திக்கும் அத்தனை என்று -சொல்லத் தக்கதாம் படி –
அச்ச (ஸூஷ்மமான)கர்மாவாய் கர்ம பல அனுபவத்தில் கை ஒழிந்து நின்ற தசையிலே –
காண்கிற தேகமோ -தேகாதி ரிக்தரோ -ஸ்வதந்த்ரரோ -நாம் யார் என்றும் –
நசிக்கும்படி நின்றோமோ -பிழைக்கும் படி நின்றோமோ -நாம் நின்ற நிலை யேது என்றும் –
இப்படி நின்ற நமக்கு இனி மேல் ஈடேறுகைக்கு ஈடான போக்கடி யேது என்று -தன்னடையே உண்டாவன சில நிரூபண விசேஷங்கள் உண்டு –
அந் நிரூபண விசேஷங்கள் ஆதால்-பூர்வ உக்தங்களான யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதங்கள் ஆதல் -என்கை –

——————————————–

இந் நிர்ஹேதுக விஷயீகாரம் சாஸ்த்ரத்தில் எங்கே சொல்லிற்று என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை -392-

யதாஹி மோஷகா பாந்தே –என்று துடங்கி இதனுடைய க்ரமத்தை
பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று —

(ஆயி ஸ்வாமிகள்-யதாஹி மோஷகா பாந்தே —திருடர்கள் நிலை போலே என்றவாறு –பாப புண்யங்கள் கை வைக்க வந்தது போலே விலகும் அவன் கடாக்ஷத்தாலே -என்றவாறு
லீலா ரசம் இல்லை போக ரசத்துக்கு -முக்கிய அமுக்கிய நிர்ஹேதுக அங்கீ கார விசேஷங்கள் –வேதாந்த யோஜனையிலும் தாத்பர்ய யோஜனையிலும் ஸித்தம்
அஞ்ஞாத ஸூஹ்ருதம் இரண்டு அவஸ்தைகள் உண்டே -சாஸ்த்ர தாத்பர்ய வசன சித்தம் அன்றோ இவை இரண்டும் -வக்தா நாராயண ஸ்வயம் -தானே அருளிச் செய்த பாஞ்சராத்ரம் -விவரித்து அருளிச் செய்தார் -)

பகவத் சாஸ்திரம் நூற்று எட்டு சம்ஹிதையாய் இறே இருப்பது –
அதிலே ஓன்று இறே யஹிர் புத்த்ன சம்ஹிதை –
பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -என்கிறபடியே –
சகலத்துக்கும் ஆதி வக்தா பகவானாய் இருக்கச் செய்தே -தத் தத் சம்ஹிதைகள்
தோறும் -அவாந்தர வக்தாக்களும் உண்டு இறே -அதில் இந்த சம்ஹிதைக்கு
அஹிர் புத்னய சம்ஞகனான ருத்ரன் வக்தாவாய் இருக்கையாலே -இத்தை அஹிர் புத்த்ன்ய  சம்ஹிதை என்கிறது –

இந்த சம்ஹிதையிலே -நுண் உணர்வில் நீலார் கண்டத்து அம்மானும் -என்கிறபடி -சத்வம் தலை எடுத்த போது-ஸூஷ்ம தர்சியாய் இருக்கும் ருத்ரனை –
தேவர் ரிஷியாய் ப்ரஹ்ம வித்தமனான ஸ்ரீ நாரத பகவான் சென்று அநு வர்த்தித்து
ஸ்வ ஸம்சயங்களை எல்லாம் கேட்க -அவன் நிர்ணயித்து கொண்டு வாரா நிற்க -பதினாலாம் அத்யாயத்தில் -இவன் பண்ணின பிரஸ்னத்துக்கு உத்தரமாக
சம்சாரமோஷ ஹேதுக்களாக நிக்ரஹ சக்தி -அனுக்ரஹ சக்தி என்று –
சர்வேஸ்வரனுக்கு இரண்டு சக்தி உண்டு என்று பிரதிக்ஜ்ஜை பண்ணி -அதில் –
திரோதாந கரீச கதிஸ் ஸா நிக்ரஹா சமாஹ்வயா புமாம்சாம் ஜீவ சம்ஜ்ஞம் ஸா திரோபாவயதி  ஸ்வயம் -என்று துடங்கி –
நிஹ்ரகாத்மிகையான சக்தியிலே -திரோஹித ஸ்வ ஸ்வரூபாதிகனாய் ஜீவாத்மா சம்சரிக்கும் படியை விஸ்தரேண பிரதிபாதித்து –

அநந்தரம்-
அநுக்ரஹாத்மிகையான சக்தியாலே சம்சாராணாம் முக்தனாம் படியை பிரதிபாதிப்பதாக –
ஏவம் சம் ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமானே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபாகாப்யு பஜாயதே
சமீ ஷீதஸ்து தாசோயம் கருணா வர்ஷா ரூப்யா கர்ம சாம்யம் பஜத்யேவ ஜீவோ விஷ்ணு சமீஷயா
சக்தி பாவஸ் ஸ்வை ஜீவை முத்தாரயதி சம்ஸ்ருதே கரமாநிஸ் ஸ்மே தத்ர தூஷ்ணீம் ப்பாவ முபாகதே-என்று
சம்சார சக்ரஸ்தனாய் -துக்காகுலானன  ஜீவன் விஷயமாக சர்வேஸ்வரனுக்கு ஒரு கிருபை ஜனிக்கும்படியையும் -அந்த கிருபைக்கு அடியாக
உண்டான அவன் கடாஷத்துக்கு விஷய பூதனனாய் கொண்டு இவன் கர்ம சாம்யத்தை பஜிக்கும் என்னும் அத்தையும் -அந்த அநுக்ரஹாத்மிகையாந சக்தியினுடைய
சத்பாவம் இவனை சம்சாரத்தின் நின்றும் உத்தரிப்பிக்கும் என்னும் இடத்தையும் –

கீழ் கர்ம சாம்யம் என்றதின் கருத்தையும் சங்க்ரஹேண சொல்லி –யதாஹி மோஷகா பாந்த்தே பரிபர்ஹமுபெயுஷி நிவ்ருத்த மோஷ னோத்த்யோகா ஸ்தாதாசந்த உபாசதே
அநுக்ரஹாத் மிகாயாஸ்து  சக்தே பாத்ஷணே ததா உதாசாதே சமீபூய கர்மநீதேசு பாசுபே
தத்பாதாநன்தரம் ஜந்துர் யுகதோமோஷா சமீஷயா ப்ரவர்த்தமான வைராக்யோ விசேஷ அபிநிவேசவான்
ஆகமானநு சஞ்சித்ய குருநபயபசர்வயச லப்த்த சத்த பிரகாரச்த்தை ப்ரபுத்தோ போத பாலன-இத்யாதி அத்யாத சேஷத்தாலே
வழி போகிறவன் சம்பாரத்தை வைத்து மறைய நின்ற அளவிலே -அவனுடைய சம்பாரத்தை அபஹரிப்பதாக உத்யோகிக்கிற தஸ்கரர்-அந்த சம்பாரத்தை அவன் வந்து
கை பற்றின அளவில் -யாதொருபடி -நிவ்ருத்த மோஷண உத்யோகராக நின்று கொண்டு எப்போதும் உதாசீனராய் இருந்து விடுவர்கள் –

அப்படியே பகவத் அனுக்ரஹ சக்தி
இவன் பக்கல் வந்த ஷணத்தில் இவ் ஆத்மாவை தந் வழியே இழுப்பதாக நின்ற புண்ய பாபங்கள் இரண்டும் இவனை வந்து மேலிடாமல் உதாசீனத்து இருந்து விடும் –
அந்த அநுக்ரஹாத்மிகையான சக்தி தந் பக்கல் வந்த அநந்தரம் -இச் சேதனன் -மோஷ சமீஷா யுக்தனாய் பிரவ்ருத்தமான வைராக்யனாய் விவேக அபிநிவேசயாய்
சாஸ்திர பிரவணனாய் சதாச்சார்யா சம்ஸ்ராயணம் பண்ணி லப்த்த சத்தாகனாய் லப்த்த ஞானனாய் -அந்த ஞானத்தை ரஷித்துக் கொண்டு -சாரக் க்ராஹியாய்
சமுசித உபாய பரிக்ரகத்தாலே சம்சார உத்தீரணாய் பரம பதத்தை பிராபிக்கும் என்று சொன்னான் -இறே

ஆகையாலே -யதாஹி மோஷகா பாந்த்தே -என்று துடங்கி -இந் நிர்ஹேதுக விஷயீகாரத்தின் உடைய க்ரமத்தை ஆப்த பிரமாணமான
பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று -என்கிறார்

—————————————-

இப்படி சாஸ்திரம் சொன்ன அளவு அன்றிக்கே -நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு நேரே பாத்திர பூதராய் -ஆப்த தம அக்ரேசரான ஆழ்வார் இவ் அர்த்தத்தை  தெளிய அருளிச் செய்தார் என்கிறார் -மேல் –

சூரணை -393-

வெறிதே அருள் செய்வர் -என்று இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக
அருளிச் செய்தார் -இறே –

(ஆயி ஸ்வாமிகள்-வெறிதே அருள் செய்வர் -8–7–8—சாஷாத் நிர்ஹேதுகத்வத்தை அனுபவித்து தாமே அருளிச் செய்தார் -ருத்ரன் விஷயீ காரத்துக்கு ஆள் இல்லையே
தானே சொன்னார் என்றாலும் அருளினவன் அவன் -அருளப்பட்ட இவர் ஸ்ரீ ஸூக்திகள்-பிரமாணம் அன்றோ-வெறுமனே -சாஷாத் -நிர்ஹேதுகத்வம் -அஞ்ஞாத ஸூஹ்ருதையும் எதிர்பார்க்காமல் – யாதிருச்சிக்க ஸூஹ்ருதம் -அஹேதுத்வம் -சாஸ்த்ர உபதேசி வசன சித்தம் -இது தாத்பர்யம் அறிந்தவர் வசன சித்தம்)

வெறிதே அருள் செய்வர் -என்றது -நிர்ஹேதுகமாக கிருபை பண்ணுவார் -என்றபடி –
இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்-என்றது –
இந் நிர்ஹேதுக விஷயீகாரமாகிற ரகஸ்ய அர்த்தத்தை -சம்சய விபர்யயம் அற சகலரும் அறியும் படி பிரகாசமாக அருளிச் செய்தார் -என்கை –

—————————————–

அந்த திவ்ய ஸூக்திக்கு அநந்தரம் ஓர் உக்தியில் அபிப்ராயம் அறியாதார் சங்கையை அனுவதித்து பரிஹரிக்கிறார் –

சூரணை -394-

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது -ஸூஹ்ருதம் என்னா நின்றதே என்னில் –
அப்போது -வெறிதே -என்கிற இடமும் சேராது –

(ஆயி ஸ்வாமிகள்-செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது எது – -ஸூஹ்ருதம்
என்றால் வெறிதே சேராதே -கிருபை பண்ணும் படி யத்னம் பண்ணுபவர்களுக்கு-புத்தி பூர்வக ஸூஹ்ருதம்-தெரிந்து செய்த நன்மை -இருந்தால் அருளுவார் -என்ற சங்கைக்கு -ஸூ ஹ்ருதம் அடியாக அருள் செய்வார் என்னில் -வெறிதே- எதிர்பார்க்காமல் சேராதே -ஸூவசன விரோதம் வரும் -தான் செய்ய நினைத்தவர்களுக்கு என்பதே பொருளாக வேணும் -)

அதாவது –
அருள் செய்வர் -என்ற அநந்தரம் -ஆர்க்கு தான் என்னும் அபேஷையில்-செய்வார்கட்கு -என்று அருளுகுகைக்கு உறுப்பாக திரு உள்ளம் உகக்கும்படி சிலவற்றை செய்யும் அவர்களுக்கு என்கையாலே –
அவன் கிருபை பண்ணுகைக்கு ஹேது -சேதன ஸூஹ்ருதம் -என்னா நின்றதே -என்னில் –
இப்படி சொல்லும் போது -நிர்ஹேதுக வாசகமான -வெறிதே -என்கிற இடம் சங்கதம் ஆகாதே -என்கை –

ஆகையால்-செய்வார்கட்கு -என்றது -தான் செய்ய நினைத்தவர்களுக்கு -என்றபடி –

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யாருக்கு என்னில் –எவனைப் பரம்பொருள் விரும்புகிறானோ –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு-தாம் தாம் ஓன்று செய்வார்க்கு -என்னில் வெறிதே -என்னக் கூடாதே அன்றோ-ஆயினும் ஒரு காரணம் வேண்டாவோ அருள் செய்வதற்கு -என்னில் –ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்-ஜிஜ்ஜாஸூ அதிகரணத்தில் –
அவனே எல்லாமாக நினைத்து வேறு ஒன்றையும் கெடுக்காத அநந்ய பிரயோஜனர் பிரிய தமர் -அவர்களை வரிப்பான் –ருசி உண்டானாலும் இவன் சேதனனான வாசிக்கு அறிவின் காரணமான-தன்மை என்று அதனைக் கொள்ளலாம் –ஹேது வேண்டாம் -அதிகாரம் வேண்டாம் சொல்ல வில்லையே -ஹேது அவன் உகப்பு -ஆசை அதிகாரி யோக்யதை –
அத்தனை அல்லது-பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –காரணம் இல்லாமலே செய்யப்படும் அருளை -நிர்துஹேக கிருபையை –இப்படி வேறு எங்கு கண்டீர் -என்ன-புறம்பு தேடித் போக வேணுமோ –மிகச் சிறியேனான என்னுடைய மனத்துக்குள்ளே –தம்மாலே பாது காக்கப் படுகின்ற பொருளை முறையாலே நோக்குகிறவர்-
என்னுடைய மனத்திலே பொருந்தி முறை கெட பரிமாறா நின்றார்-
தம்மை சிறுமைக்கு எல்லையாக நினைத்த படியாலே-முறை கேடாகத் தோற்றா நின்றதாயிற்று இது-அவன் இவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-

————————————————-

ஆபிமுக்க்யத்துக்கு பகவத் கிருபை வேணும் –
அத்வேஷத்துக்கு ஸூஹ்ருதம் காரணம் என்று நினைத்து சொல்லுவார் வசனத்தை
அநுவதித்து கொண்டு பரிஹரிக்கிறார் –

சூரணை -395-

பகவத் ஆபிமுக்யம் –ஸூஹ்ருதத்தால் அன்றிக்கே -பகவத் கிருபையாலே பிறக்கிறது –
அத்வேஷம் ஸூஹ்ருதத்தாலே என்னில் -இந்த பல விசேஷத்துக்கு அத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது –(காரணம் என்ன ஒண்ணாது )

(ஆயி ஸ்வாமிகள்-இரண்டுமே கிருபையால் தான் ஏற்பட வேண்டும் -இந்த பல விசேஷத்துக்கு ஸூஹ்ருதத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —பகவத் வை முக்கிய நிவ்ருத்தி பலமான கிருபா -யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதத்தால் அன்றிக்கே -விஷ்ணோர் கடாக்ஷம் -தானே-1-ஈஸ்வர ஸுஹார்த்தம் -2-அஞ்ஞாத யாதிருச்சா ஸூ ஹ்ருதம் -3-விஷ்ணு கடாக்ஷம் -4-அத்வேஷம் -5-ஆபி முக்கியம் -6-ஆத்ம சமர்ப்பணம் -இப்படி தானே படிக்கட்டுக்கள்-பிரசாத பலமாக தானே -முதலிலே ஈஸ்வரஸ்ய ஸூஹார்த்தம்-பூர்வ பாவியாய் இருப்பதாலே சொல்லக் கூடாதே-உஜ்ஜீவன மூலம்- அத்வேஷம்- மகா பல விசேஷம் -ஆகுமே -துச்சமாம் இந்த யாதிருச்சா ஸூஹ்ருதம் சொல்லக் கூடாதே -ரத்னத்துக்கு பலகரை சாதனமாகாதே —இதுக்கும் மேலே இவை பரம்பரையா காரணங்கள் ஆக மாட்டாவோ என்னில் -ஸூர்ய உதய பிரகாச காரணமான உசக் காலம் -பின் மாலை பொழுது தாமரையை மலர வைக்கும் என்று சொல்லுமா போலே -விஷ்ணு பிரசாத உதய காரணம் -யத்தருஷ்ஷா ஸூஹ்ருதம் —மேல் உள்ளவற்றுக்கு காரணம் ஆக மாட்டாதே கல்பனா கௌரவ தோஷம் வரும் -சரமமான பகவத் ஸூஹார்த்தத்துக்கே சொல்லலாம் பரம்பரையா காரணத்வம்-)

அதாவது –
அநாதி காலம் விமுகனாய் போந்த -இச் சேதனனுக்கு பகவத் விஷயத்தில் பிறக்கிற
ஆபிமுக்யம் இவனுடைய ஸூஹ்ருத நிபந்தனம் ஆக அன்றிக்கே -கேவல பகவத் கிருபையாலே பிறக்கிறது –
தத் பூர்வ பாவியான அத்வேஷம் ஸூஹ்ருதம் அடியாக பிறக்கிறது என்று சொல்லப் பார்க்கில் -அகில ஆத்ம குணாதியாய் ஆத்மா உஜ்ஜீவன ஆங்குரமாய் இருந்துள்ள பகவத அத்வேஷமாகிற இப் பல விசேஷத்துக்கு -அதி ஷூத்ரமான யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதத்தை காரணம் என்று சொல்ல ஒண்ணாது -என்கை 

ஆகையால்-அத்வேஷத்துக்கும் பகவத் கிருபையே காரணம் என்று சொல்ல வேணும் என்று கருத்து –

——————————————-

சாஸ்திர அவிஹிதமாய் -சேதன அவிதிதமுமான இந்த யாத்ருச்சிகாதிக்கு
ஸூஹ்ருதம் என்று பேர் இட்டார் என்னும் இடத்தை சங்கா பரிஹர ரூபேண
அருளிச் செய்கிறார் –

சூரணை -396-

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் –
நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-க்ருத -செய்த -ஏற்பட்ட -புத்தி பூர்வக செயல் -நாமும் அறியாமல் – -மோக்ஷம் செல்ல அறியாத ஸூஹ்ருதம் செய்வாய் விதிக்காமல் -சாஸ்திரமும் விதிக்காமல் இருக்க இதற்கு பெயர் இட்டது நாம் அல்ல-அநாதியாய் ஸூஷ்மமாய் இருக்கும் இவற்றுக்கு செய்யப்பட்டு விட்டது -என்று சர்வேஸ்வரன் தானே சர்வ முத்தி பிரசங்கம் வாராமல் இருக்க இப் பெயர் இட்டுள்ளார் -என்று கேட்பதாய் இருக்கும் -)

அதாவது –
இதம் குர்யாத் -என்று சாஸ்திர விகிதமுமாய் -கர்த்தரு பூதரான சேதனராலே புத்தி பூர்வேண அனுஷ்டிதமுமான ஒன்றை இறே- ஸூஹ்ருதம் என்பது -அப்படியே இத்தை செய்வான் என்று சாஸ்திரமும் விதியாதே -இன்ன ஸூஹ்ருதம் பண்ணினோம் என்று தத் கர்த்தாக்களான நாமும் அறியாதே இருக்கிற- இந்த யாத்ருச்சிகாதியை ஸூஹ்ருதம் என்று -நாம் பேரிட்டபடி எங்கனே என்னில் –
இதுக்கு ஸூஹ்ருதம் என்று நாம் பேரிடுகிறோம் அன்று –
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக சர்வஞ்ஞனான ஈஸ்வரன் -ஸூஹ்ருதம் என்று பேரிட்டு வைத்தான் என்று தத்வ தர்சிகளான ஆச்சார்யர்கள் அருளிச் செய்யக் கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கை-

ஆக –
கீழே வெறிதே அருள் செய்வர் -என்று மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்களில் தலைவரான நம் ஆழ்வார் நிர்ஹேதுக விஷயீகாரம் ஆகிற இவ் வர்த்தத்தை விசதமாக அருளிச் செய்த படியை தர்சிப்பித்து –
அதன் மேல் வந்த சங்க பரிஹாரம் பண்ணி அருளினார் ஆயிற்று –

——————————–

இனி இவ் அர்த்த விஷயமாக ஆழ்வார்கள் பாசுரங்களில் அந்யோந்ய விருத்தம் போல் தோற்றும் அவற்றுக்கு பரிகாரமும் – இவ் வர்த்த ஸ்தாபகமாக மற்றும் சொல்ல  வேண்டும் பிரமாணங்களும் தர்க்கங்களும் இவ் விடத்திலே தாம் அருளிச் செய்யாமைக்கு ஹேது இன்னது என்கிறார் –

சூரணை-397-

இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —

(ஆயி ஸ்வாமிகள்-ஆழ்ந்து தெரிந்து கொள்ள முடியாதே -நிர்ஹேதுக விரோதி பரிகாரங்களை –ச ஹேதுக- நிர்ஹேதுகம் — அ ஹேதுக நிர்ஹேதுகம் –முக்கிய நிர்ஹேதுக விஷயம்-ஏக கண்டர்-அங்கீ கரித்த பிரகாரம்
1-எண் தான் இன்றியே எண்ணிலும் வரும் -இரண்டும் உண்டே 
2-வெறிதே அருள் செய்வார் செய்வார் கட்கு
3-நோற்ற நோன்பிலேன்- நோற்றேன் பல் பிறவி
4-நின் அருளே புரிந்து இருந்தேன்- இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்
5-உன் அருளே பார்ப்பேன் -உன் அருள் என்பாலதே-வணங்கினால் கிடைக்கும்
6-போதரே–ஆதாரம் பெறுக வைத்த அழகன் -உன்னை அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி
7-திருக் கமல பாதம் வந்து -சென்றதாம் என் சிந்தையே
8-யான் எத் தவத்தால் காண்பேன் -யான் எத் தவம் செய்தேன்
உபய பிரகாரங்களை அருளிச் செய்வதாக மந்த மதிகளுக்கு தோற்றும் –

1-எண் தான் இன்றியே எண்ணிலும் வரும் –எண்ணிலும் வருகைக்கு பரிகணநா பிரபாவம் -பகவத் பிரபாவம் சொல்ல வந்தது -என்றவாறு -26-சொல்லவும் வருவானே-
2-வெறிதே அருள் செய்வார் செய்வார் கட்கு –நியமித்த சப்தார்த்தம் -செய்ய நினைப்பார்க்கு என்றவாறு
3-நோற்ற நோன்பிலேன் நோற்றேன் பல் பிறவி-நோற்றேன் க்கு –தத் தரிசன அர்த்தம் இழந்து பல பிறவிகளில் அழுகை -பெற முயற்சி இல்லையே -தெளிவாக நோற்ற நோன்பு இலேன் இத்யாதி இல்லை என்றாரே
4-நின் அருளே புரிந்து இருந்தேன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்
இன்று வந்துக்கு–தத் தரிசன ஜெனித விஸ்லேஷ அஸஹிஷ்ணுத்வம் – -பிரிந்து இருக்க முடியாமல் ஓடி வந்தேன்
5-உன் அருளே பார்ப்பேன் -நாம் வேண்டி நிற்பன்-தத் வை லக்ஷண்ய பிரேரிதத்வம் -வேண்டுவதே பொருந்தும் -வேண்டியது காரணம் இல்லை –
அடி இணை வணங்கினேன்-பிரணதி பெருமை -நமஸ்காரம் ஏற்றம் என்பதால் –
6-போதரே–ஆதாரம் பெறுக வைத்த அழகன் -உன்னை அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி
க்ரூர விஷய ஸ்மரண ஆக்ரோஷம் –நாய் துரத்த ஓடி முதலில் வந்தது போலே
7-திருக் கமல பாதம் வந்து -சென்றதாம் என் சிந்தையே-சென்றதாம் -விக்ரஹம் அனுபவிக்க ஆசை அபி நிவேசம்
8-யான் எத் தவத்தால் காண்பேன் கொல் -யான் எத் தவம் செய்தேன்-தவம் செய்தேன்- பிரசன்ன பாஷா ஸ்துதி லாபம் -பாடும் பாக்யம் ஆனந்தம் வெளிப்பட

நிர்ஹேதுக அங்கீ காரம் என்றது -ஹேதுவின் அபாவம்- கிருபை தவிர வேறே ஹேது இல்லை என்று சொல்ல வந்தது –அத்யந்த அ பாவத்தை காட்ட வில்லை -கடம் இல்லை -கட அபாவம் இல்லை -அத்யந்த அபாவத்தை காட்டாதே-அங்கீ காரம் ஹேது கிருபையுடன் ஓக்க அநாதி சம்சார பந்த விநாசகமாக கூடாதோ என்னில் –ஜல சக காரி தோன்ற விதை முளைக்கும்-அதே போலே லீலா ரஸ போக ரஸ இச்சை சககாரி பெற்றால் கிருபை -சம்சார நிவர்த்தகம் காலாந்தரத்தில் வரலாமே
கிருபை சம்சாரம் -தேஜஸ் இருட்டு ஒரே இடத்தில் கூடாதே என்னில் -அது போலே இல்லை -பாக்ய பாதகங்கள் சம்பந்தம் இல்லையே இவற்றுக்கு
பிரதிபந்தகம் அற்ற சஹகாரம் பெற்ற பின்பு –கிருபை வந்ததும் சம்சாரம் அனைவருக்கும் போகாதே -யாரோ ஒருவனுக்கு தானே -த்ருஷ்டாந்தம் பொருந்தாது
தண்ணீர் சம்பந்தம் எந்த விதைக்கு உண்டோ அது தானே முளை விடும் -அது ஏற்பட்டவனுக்கு இது உண்டாகும் என்றவாறு
சம்சாரம் ஸ்வரூபமே நாசமாகாதே -பகவத் கிருபா அங்கீ காரம் -மாத்திரமே – யாதிருசிக்காதி ஹேது போலே தோற்றும்)

(வெறிதே அருள் செய்வர் –சாஷாத் நிர்ஹேதுகம்
எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே -செய்ததை தேடுகிறாரோ –
திரு மால்  இரும் சோலை மலை என்றேன் என்ன –செய்த ஒன்றை சொல்கிறாரோ
மாதவன் என்றதே கொண்டு -என்று-ச ஹேதுகமாகுமோ -சொல்லாதவனை விட வேறு பட்டது என்று காட்டவே –
வியக்தி அந்தர –மலையந்தர-மாதவன் அந்தர –வேறே வியக்தி கள் இடம் மாறுபட்டது -ஓன்று பத்தாகி -ஊரைச் சொல்லி பேரைச் சொல்லி இவற்றில் இருந்து
நல்லதோர் அறம் செய்தும் இலேன் -என்று-ஒன்றும் செய்ய வில்லை
நோற்றேன் பல் பிறவி -செய்தவற்றைச் சொல்கிறாரோ –பல ஜென்மங்கள் -ஸூ நிகர்ஷம் -நோற்றுப் பெற வில்லை –உபாயாந்தரங்களைச் செய்து இழந்தேன் –
பல பிறவிகளில் -தாழ்ச்சியைச் சொல்லி -இன்று பெற்றேன் – அவனை இத்தனை தடவை ஜன்மம் பல பல செய்து – என்னைக் கொள்ளுமாறு செய்தேன் –
யான் என் தவத்தால் காண்மின் கொல் இன்று -ஒன்றும் இல்லையே
யானே தவம் செய்தேன் – செய்தவற்றைச் சொல்கிறாரோ -ப்ரீதி அதிசயத்தாலே -இப் பேறு பெற்ற தம்மை ஸ்லாகித்த மாத்ரம் பெற்ற பேற்றை தவம் என்கிறார் 
நான் வைகுந்தம் -மஹா தபசிகளுக்கு கொடுக்கும் — உமக்கு அருளுகிறேன் -ஜடாயுவுக்கு பெருமாள் –கிருபா வைபவம் உமக்கு அவர்கள் தவத்தால் பெற்றதை அருளுகிறேன்
காப் யுபஜாயதே –யார் இடத்திலோ எப்பொழுதோ வரும் -ஸ்வாதந்திரம் ஜீவனம் –
கேவலம் ஸ்வ இச்சயை வாஹம்-இச்சையாலேயே -மட்டும் -இரண்டு ஏவகாரங்கள் ஸ்திரப்படுத்த கஞ்சித் கதாசன – யாரையோ எப்பொழுதோ கடாஷிக்கிறேன் -என்றானே 
கல்யாண குணம் -ஒன்றை எதிர்பார்க்கக் கூடாதே – குணங்களும் திரு மேனியும் கல்யாணம் -நாசவ் புருஷகாரேண -தானே அருளுகிறானே 
எப்பொழுதும்  எல்லாருக்கும் -பிராட்டி அல்லாது கார்யம் செய்யான் என்பதும் உண்மை
யாருக்கோ எப்போவோ தானே அருளுவான் இவள் புருஷகாரமும் இல்லாமலும் -இரண்டும் உண்டே -நிராங்குச ஸ்வா தந்த்ரத்துக்கு விஷயமும் வேண்டுமே
யாரோ ஒரு சிலர் இடத்தில் தான் இப்படி அருளுகிறார் -கிருபாதி குணத்துக்கும் நிர்ஹேதுகத்வத்துக்கும் கொத்தை வரக் கூடாதே 
கொசித் ரஷணே-உபாதை தர்சனம் -ஸ்வாதந்திரமும் -பிராந்தி ஞானத்தால் தான் தோன்றும் உபாய விதி வையர்த்தம் வராதே )

அதாவது –
நிர்ஹேதுக விஷயீகாரம் ஆகிற இவ் அர்த்த விஷயமாக -இவ் விஷயீ காரத்துக்கு இலக்காய்-மயர்வற மதி நலம் அருளப் பெற்ற -ஆழ்வார்களுடைய-பகவத் அங்கீகார பிரகாசங்களான-பாசுரங்களில் –
வெறிதே அருள் செய்வர் –
எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே -என்றும் –

திரு மால்  இரும் சோலை மலை என்றேன் என்ன –
மாதவன் என்றதே கொண்டு -என்றும் –

நல்லதோர் அறம் செய்தும் இலேன் -என்றும் –
நோற்றேன் பல் பிறவி -என்றும் –

யான் எத் தவத்தால் காண்மின் கொல் இன்று -என்றும் –
யானே தவம் செய்தேன் -என்றும் -இத்யாதிகளாலே

பகவத் அங்கீகார ஹேதுக்கள் ஒன்றும் தங்கள் பக்கல் இல்லை என்பதும் -உண்டானாப் போலே சொல்லுவது ஆகையாலே  கருத்து அறியாதவர்களுக்கு பரஸ்பர விருத்தம் போலே பிரதி பாசிக்கும் -என்கை –

அவற்றில் சொல்லும் பரிகாரங்களான-
மாதவன் -மலை -என்கிறவை வியாவ்ருத்தி உக்தி மாத்ரம் ஆகையால் அவற்றை
ஆரோபித்து வந்து மேல் விழுகிற பகவத் கிருபையே அங்கீகார ஹேது -அவை ஹேது அன்று என்ற இடம் சித்தம் –

நோற்றேன் பல் பிறவி -என்றது இவனுக்கு பல ஜன்மங்கள் உண்டாகும் படியாக
ஆயிற்று நான் சாதன அனுஷ்டானம் பண்ணிற்று என்று -ஸ்வ நிகர்ஷம் சொன்ன இத்தனை -அநேக ஜன்மமும் அவனைப் பெருகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணினேன் என்ற படி அன்று –

யானே தவம் செய்தேன் -என்றது -இரும் தமிழ் நன்மாலை இணை அடிக்கே சொல்லப் பெற்ற ப்ரீதி அதிசயத்தாலே -என்னைப் போலே பாக்கியம் பண்ணினார் இல்லை என்று
இப் பேறு பெற்ற தம்மை ஸ்லாகித்த மாத்ரம் என்று இப்புடைகளிலே -நிர்ஹேதுக வசன விரோதம் -வராதபடி ச ஹேதுகம் போல் தோற்றும் அவற்றுக்கு பரிகாரங்கள் –

மற்றும் உண்டான வக்தவ்யங்கள் ஆவன -மற்றும் இந் நிர்ஹேதுக ஸ்தாபன அர்த்தமாக சொல்ல வேண்டும் அவையான –
ஏவம் சம் ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராஹ்யமாணே ஸ்வ கர்மபி
ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபஜாயதே –
நிர்ஹேதுக கடாஷேண மதீயேன மகாமதே
ஆசார்ய விஷயீகாராத் ப்ராப்னுவந்தி பராம் கதிம்
நாசவ் புருஷகாரேண நசாப் யன்யேன ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -இத்யாதி பிரமாணங்களும்

ஏதத் அனுஹ்ரஹ தர்க்கங்களும் விஸ்தார பயத்தால் சொல்லுகிறோம் அல்லோம் -என்றது -இவை எல்லாம் சொல்லப் பார்க்கும் அளவில் க்ரந்த பரப்பு வரும் என்று அஞ்சி சொல்லுகிறோம் இல்லை -என்றபடி –

————————————

ஆக
கீழ் -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்ன பிரதிஜ்ஜைக்கு உபபாதமாக -த்ரிபாத் விபூதியிலே -என்று துடங்கி -இவ்வளவும் -ஈஸ்வரன்
இவ் வாத்ம உஜ்ஜீவன அர்த்தமாக -விமுக தசையே பிடித்து கிருஷி பண்ணிப் போரும்படியை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அது தன்னை -நிகமிக்கிறார் –

சூரணை -398-

ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –

(ஆய் ஸ்வாமி -398-399-400-401-நான்கு சூரணைகளுக்கும் சேர்ந்தே வியாக்யானம் – கண் முன்னே வியாப்தி -எதிர் சூழல் – ஸ்ருஷ்ட்டி அவதாரம் எல்லாம் அடியேனுக்காக –
ஞானாதிகர் அனுசந்தானம்–அதே போலே வியாப்தியும் தமக்காக என்று நினைப்பார்கள் -வியாப்தியும் –அஞ்ஞர் தனக்கே கொடுத்தாலும் அவருக்கும் கொடுத்து தானே எனக்கு கொடுத்தான் என்று நினைப்பான்
நிர்ஹேதுகமாக அங்கீ கரிக்கும் பாந்தம் -உண்டே -அனுசந்திக்க -அதிகாரி கர்தவ்யம் -ஹேது ஒன்றும் இல்லை-அவனுக்கு சரீர பூதன் இந்த சேதனன் -விஷயாந்தர பிரவணனாய் சம்சாரத்தில் உழன்றாலும் -விமுகனாய் -குண லேசமும் இல்லாமலும் இருந்தாலும் – –
அத்வேஷாதிகள் யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் விளைய முன்னமே சங்கல்பித்து கிருஷி பண்ணின சரீரியான ஈஸ்வரன்–நிருபாதிக ரக்ஷகன்-இத்தை அனுசந்திக்க ஞான தசை தொடங்கி நிச் சிந்தையாய் மார்பிலே கை வைத்து உறங்கலாமே -தன் உடமையைத் தானே கொள்ளுகிறான் என்று இருப்போமே -)

(கிருஷி பண்ணும் கட்டளை இது ஆகையால்-கர்மாதீன கட்டளையும் கிருபாதீன கட்டளையும் உண்டே- லீலா போக ரசத்துக்கு –ஸ்வா தந்தர்யமும் – ஸ்வாதந்தர்யத்தால் ஏறிட்டு கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
அவஸ்த்த ஆபன்னராக்கின நம்மை-அத்வேஷ ஆபி முக்கிய -ஆத்ம குணம் ஆச்சார்ய ஸமாஸ்ரயணம் தத்வ ஞானம் சாதனாந்தர நிவ்ருத்தி யாதி –விசேஷ யுக்தராக்கின நம்மை இந்த படிக்கட்டுக்கள் தாண்டிய பின்பு -குண அத்யாவசாயத்தாலே உறுதியான நம்பிக்கையால் -பய பிரசங்கமே இல்லையே)

அதாவது –
ஈஸ்வரன் இவ் வாத்ம உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணும் கட்டளை இது ஆகையால் -இப்படி இச் சேதனன் தன் பக்கல் விமுகனான அவஸ்தையிலும் உட்பட இவன் உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணிப் போந்த குணாதிகனான அவனை அனுசந்தித்தால் –
ஏவம் பூதனான அவன் இவ் வஸ்த்தா பன்னராக்கின நம்மை கர்ம அநு குணமாக சம்சரிக்க விடான் என்று -தத் குண விஸ்வாசத்தாலே சர்வ காலமும் நிர் பயனனாயே இருக்கும் இத்தனை -பய பிரசங்கம் இல்லை -என்றபடி –

—————————————-

விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின -ஈஸ்வரனை அனுசந்தித்தால் -என்று தாம் கீழ்
அருளிச் செய்த அர்த்தத்தில் ஆப்திக்கு உடலாக – ஞானாதிகருடைய அனுசந்தான  விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -399-

எதிர் சூழல் புக்கு -2-7-6-

(நம் ஆழ்வார் -ஆப்தர் வசனம் – தப்ப ஒண்ணாத படி -நான் தப்பிப் போகாத படி -அவன் தப்பிப் போக முடியாதே விபு தானே
வியாக்யானங்களில் விபவ பரம் இவர் வியாப்தி பரமாக அருளிச் செய்கிறார் -)

எதிர் சூழல் புக்கு -என்றது -எனக்கு (நான்)தப்ப ஒண்ணாதபடி பார்த்த இடம் எங்கும் தாமே யாம்படி யான வ்யாப்தியிலே உள் புக்கு என்ற படி –

எதிர் சூழல் -என்கிறது -அவதார பரமாக மற்று உள்ளாராலே வ்யாக்யாதம் ஆயிற்று ஆகிலும் –இப்போது இவர் இவ் விடத்தில் வ்யாப்தி பரமாக அருளிச் செய்கிறார் -அநேக யோஜனைகள் உண்டாய் இறே இருப்பது –

——————————————–

அதுக்கு திருஷ்டாந்தம்  அருளிச் செய்கிறார் –

சூரணை -400-

ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைப்பாரைப் போலே –
வ்யாப்தியும் –

(சர்வ வியாப்தியும் ஒரு ஜீவனை பிடிக்கவே -சர்வ பூதாத்ம -வியாப்தியும் -உம்மைத் தொகை -ஸ்ருஷ்ட்டி அவதாரங்கள் என்றுமாம் – -சர்வ சத்தா ஹேது அதுவும் உள்பட என்றுமாம் -ஆழ்வார் இந்த சர்வா சத்தா ஹேதுவான வியாப்தியைக் கூட தன்னை அங்கீ கரிக்கவே-கைங்கர்யம் கொண்டு பேற்றை அருள செய்த செயலே என்கிறார்)

அதாவது –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் -அவனை தப்பாமல் பிடிக்க வேணும் என்ற அபிநிவேசத்தால் அவ்வூரைச் சேர வளையுமா போலே யாயிற்று –
ஒரு ஆத்மாவை அகப்படுத்தி  கொள்ளுகைக்காக -சகல சேதன அசேதனங்களிலும் வியாபித்து நிற்கும் படி –
ஆகையால் -வ்யாப்தியும் ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது என்கிறார் –

வியாப்தியும் -என்றது -சர்வ சத்தா ஹேதுவான அதுவும் உட்பட -என்றபடி –

————————————

சிருஷ்டி அவதாராதிகளை ஸ்வ அர்த்தமாக அனுசந்திக்கையை சித்தவத்கரித்து
இதுக்கு திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

சூரணை -401-

சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –

(முந்நீர் ஞாலம் படைத்த -எம் முகில் வண்ணனே –நம் தலையில் பலித்த பின்னே நீர் முகில் வண்ணன் ஆனீர் -நீல மேக ஸ்யாமளன் ஆனாய் – சிருஷ்டியை ஸ்வ அர்த்தமாகவும் –
வான் மா வையம் அளந்த என் வாமனா –என்றும் அளந்ததும் தனக்காக -இப்படி இருந்தும்- மாய பல் பிறவியில் ஆழ்ந்து உள்ளேன் 
கொல்லா மாக் கொல் செய்து பாரதப் போர் -எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் -அவதாரங்களை ஸ்வ அர்த்தமாகவும் –
எம் முகில் வண்ணனே -என் வாமனா- எந்தாய் -என்றாரே –ஆக ஸ்ருஷ்ட்டி அவதாரங்கள் குணங்கள் சேஷ்டிதங்கள் எல்லாம் ஆழ்வாருக்காகவே என்று தானே அனுசந்திக்கிறார்)

முந்நீர் ஞாலத்தில் முதல் பாட்டிலே சிருஷ்டியை ஸ்வ அர்த்தமாகவும் –
இரண்டாம் பாட்டிலும் மூன்றம் பாட்டிலும் அவதாரங்களை ஸ்வ அர்த்தமாகவும் –
இவர் தாமே அநு சந்தித்து அருளினார் -இறே

அவதாராதிகள் -என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தாலே -குண சேஷ்டாதிகளைச் – சொல்லுகிறது —

———————————-

இப்படி இவன் விமுகனான தசையிலும் -சிருஷ்டி அவதாரதிகளாலே இவனுடைய உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகிறது – தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே இறே –
தாத்ருசா க்ருபா பலம் இவனுக்கு அவஸ்யம் அனுபாவ்யம் என்னும் இடத்தை சத் திருஷ்டாந்தமாக அருளிச் செய்யா நின்று கொண்டு – கீழ்-நிர்பரனாய் இருக்கும் இத்தனை – என்றவற்றை ஸ்த்ரீகரிக்கிறார் மேல் –

சூரணை -402-

கர்ம பலம் போலே கிருபா பலமும்
அனுபவித்தே அற வேணும் –

( ஆயி ஸ்வாமிகள்-நிர்பரனாய் இல்லாமல் ஸூ ரக்ஷணத்தில் முயன்றும் விலக்க தேடினாலும் அவன் கிருபையை இவனால் தவிரப் போகாதே -இதே கிருபை மிக்கு இருப்பதால் எம்பெருமானார் ஆனார் – பரம காருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை -ஸாஷாத்தாக ஆழ்வார்கள் திரு உள்ளக் கருத்தை நமக்கு காட்டி அருளினார்கள் –
இரண்டும் கரை அழித்து-வருமே – அநாதி அவித்யா சஞ்சிதம் -அனுபவித்தே தீர்க்க வேண்டும் – நமக்கு ஞானம் பிறந்த நாள் தான் தான் பிறந்ததாக நினைப்பான் அவனும்
அனந்த அநாதி பகவத் கிருபா -கர்மம் போலே -கர்மம் ச அந்தம் முடியுமே -கிருபை அங்கும் தொடரும் ஆதியும் அந்தமும் இல்லாமல் -சஞ்சிதமான ஞானம் பிறந்து வைராக்யம் -பக்தி பிரபத்தி மோக்ஷம் -அனந்த ஸ்திர சுக பலம் –புண்ய பாபம் ச அந்தம் அஸ்திரம் -சுகம் துக்கம் கலந்து இருக்குமே –தன்னால் தவிர்க்க முடியாதே – இவன் விலக்கடி பார்த்து விலக்கும் பொழுதும் உண்டே)

(ச ஹேதுக கிருபையாக இருந்தால் தான் பாரமுகம் பொழுது கிருபை இருக்காது – கர்ம பலத்தை த்ருஷ்டாந்தம் ஆக்கி அருளிச் செய்கிறார் –
நிர்ப்பரனாய் நிரபரமாய் இருக்கலாமே – போக பாகி-பங்கு போட்டுக் கொள்ளலாம் -அங்கே அனந்த போகம் -தானே —ஆசை யுடையோர்க்கு ஆரியர்கள் என்ற சொன்ன பின்பு இச்சை இல்லா விடிலும் -நிர்ஹேதுகமாக -என்பதைக் காட்டத் தானே இது – –நிர்ஹேதுகமாக ருசியையும் விளைவிப்பான் -யார் இடத்திலோ எப்போதோ என்றவாறு -)

அதாவது –
தான் செய்த புண்ய பாப ரூப கர்ம பலம் -அவஸ்யம் அனுபோக்தவ்யம் -என்கிறபடி –
அனுபவித்தே அற வேண்டுமோபாதி-நித்ய சம்சார ஹேதுவான கர்மத்தைத் தள்ளி –
நித்ய ஸூரிகளோடு சமான போக பாகி ஆக்குகைக்கு ஹேதுவான அவனுடைய கிருபா பலம் இவனுக்கு இச்சை இல்லை ஆகிலும் அவஸ்யம் அனுபவித்தே விட வேணும் -என்கை –

——————————————–

ஏவம் பூத கிருபை அநாதியாக இருக்கச் செய்தே கர்மா கர்த்தாவான சேதனனுடையவும்
தத் பல தாதாவான ஈஸ்வரனுடையவும் ஸ்வாதந்த்ர்யங்களாலே  தகையைப்பட்டு அன்றோ கிடந்து போந்தது –இன்னும் அப்படி ஆனாலோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -403-

கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இரு கரையும் அழியப் பெருகும்

(ஆயி ஸ்வாமிகள்-அசக்தனான அவனாலும் –ஸ்வா தந்தர்யம் அடியாக ரஷிக்க அசக்தனாக இருப்பானே – சர்வ சக்தனான அவனாலும் முடியாதே – 
ஸ்வ தந்திரம் அணையை உடைத்து -கடல் உடைத்தால் போலே பெறுகப் புக்கால் ஸ்வாதந்த்ரயம் -நிரங்குசமானாலும் -இயற்கையான கிருபையை இயற்கையான ஸ்வாதந்திரத்தாலும் நம்முடைய ஆகந்துக ஸ்வாதந்தர்யத்தாலும் அடக்கியும் விலக்கியும் முடியாதே –இரண்டு கரைகளும் அழியும் -அதன் பெருமையை பார்த்து பெருகும் -அக்கரைப் படுத்தி அல்லாது நில்லாது விதி வாய்க்கின்று காப்பார் யார் -தலையிலே பெருக தடுப்பவர் இல்லையே –அவனாலும் அவளால் தன்னாலும் தடுக்க முடியாதே -ஜீவ பர ஸ்வாதந்திரங்கள் அழிந்தால் தானே அக்கரை பட முடியும் – கிருபா மூலம் அங்கீ காரமே -நிர்ஹேதுகமே- பிரபலம் -ச ஹேதுகம் இல்லை -என்றதாயிற்று -)

(உல்லங்கநம் பண்ணினவனை விடாமல் தண்டிப்பேன் -ஆஜ்ஜை இருந்தாலும் உல்லங்கநம் பண்ணுகிறோம் -இருந்தாலும் கிருபை பெருகி நம்மை உஜ்ஜீவிக்கிறதே)

அதாவது –
கிருபா குணம் -நிரந்குச ஸ்வாதந்த்ரனான ஈஸ்வரன் தானிட்ட  கட்டளையிலே வந்தவாறே -அங்கீகரிக்கக் கடவோம் என்று இச் சேதனனை கர்ம அனுகுணமாக நிர்வகிக்கும் அளவில்- இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும்- தகையப்பட்டு நிற்கும்
அது ஒழிய -அக் கட்டளையிலே வாராமையாலே -துர்க் கதியே பற்றாசாக -இவனை அவன் தானே மேல் விழுந்து அங்கீகரிகைக்கு உடலாம்படி பெருகும் அளவில் -ஸ்வ ஆஸ்ரயமான ஈஸ்வரனுடைய -ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஜயா யஸ்தா முல்லங்கய வர்த்ததே என்கிறபடியே
ஈஸ்வர ஆஜ்ஜையை அதிலங்கித்து நடக்கைக்கு அடியான- ஸ்வாதந்த்ர்யத்தாலும் நிரோதிக்க ஒண்ணாதபடி –
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே -உபய ஸ்வாதந்த்ர்யமான இரண்டு தலையும்  உடைந்து அழியும்படி – ஒரு மட்டில் நில்லாமை மேல் மேலும் பெருகா நிற்கும் -என்கை-

—————————————–

பிரகரண ஆதியில் -பய அபய ஹேதுக்களாக சொன்ன -ஸ்வ தோஷ- பகவத் குணங்களில் வைத்து கொண்டு -கர்ம காருண்யங்கள் பிரதானங்கள் ஆகையால் -அவற்றை உபபாதித்து கொண்டு வந்தார் கீழ் –
அது தன்னை நிகமித்து அருளுகிறார் மேல் –

சூரணை -404-

பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –

(ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம் அபயா ஹேது -366-என்று உபக்ரமித்து -நிகமிக்கப் போகிறார்-சாமான்யம் அங்கு -இங்கு விசேஷம் -ஸூ தோஷத்தில் கர்மம் – பகவத் குணம் காருண்யம்  இவை தானே பிரதானம் -)

(ஆயி ஸ்வாமிகள்–கிருபா விஷய அதிகாரி பயப்பட வேண்டியதையும் – கிருபையே தஞ்சம் என்று நிர்பயனாய் இருக்க வேண்டியதையும் அருளிச் செய்கிறார்
இன்னம் சம்சரிக்கில் செய்வது என் -பயத்துக்கு ஹேது அநாதி காலமே பிடித்து -ஸூவ க்ருத சத் அசத் கர்ம ஸ்மரணம்-இனி சம்சாரம் அடி அற்றது -சரீர அவசானத்தில் பேறு -என்று இருப்பது பகவத் நிர்ஹேதுக காருண்யமே —சம்சாரம் அறுத்து அருளைக் -கொடுக்கும் அபங்குர -பங்கப்படாத -காருண்யம் நினைக்கையே – அபய ஹேது-)

(தயை மட்டும் இல்லா விட்டால் ஞானம் பலம் ஐஸ்வர்யாதிகள் எல்லாம் தோஷமாகவே ஆகுமே -இது இருந்தால் தானே அவைகள் கார்ய கரம் ஆகும்
நிர்ஹேதுக காருண்ய ஸ்மரணம்–கீழே அனுசந்தானம் -கர்மம் பற்றிய நினைவே பயத்துக்கு காரணம் -காருண்யம் நினைக்கவே பயம் போகும்)

அதாவது –
ஈஸ்வரனே உபாயம் என்று இருக்கிற இவ் வதிகாரிக்கு இன்னமும் -சம்சாரம் அனுவர்த்திக்கில் செய்வது என் என்கிற பயத்துக்கு ஹேது –
அநாதி காலம் சம்சரிக்கைக்கு காரணமாய்ப் போந்த -ஸ்வ கர்ம ஸ்மரணம் –

சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெருமே –திரு விருத்தம் -45-என்கிறபடியே -சம்சாரம் நம் அருகே வர மாட்டாது –சரீர அவசாநத்தில் பகவத் ப்ராப்திக்கு கண் அழிவு இல்லை என்று நிர் பயனாய் இருக்கைக்கு ஹேது -கர்மத்தைப் பாராமல் அங்கீகரித்து –சம்சாரத்தை அடி அறுத்து- தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுகைக்கு உறுப்பான -அவனுடைய நிர்ஹேதுக காருண்ய ஸ்மரணம் என்கை –

ஸ்வ தோஷ அனுசந்தானம் -பகவத் குண அனுசந்தானம் -என்று துடங்கினத்தை
நிகமிக்கும் இடம் ஆகையாலே -கர்மம்-காருண்யம் -என்கிற இடத்தில் ஸ்மரண பர்யந்தம்  விவஷிதம் –

———————————————–

இப் பயம் அபயங்கள் இரண்டும் இவனுக்கு எவ்வளவாக நடக்கும் என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை -405-

பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் — –

(ஆயி ஸ்வாமிகள்-மோக்ஷ பிராப்தி அளவும் என்பது இல்லை -ஞான உத்பத்தி தசை அளவு தானே -இங்கேயே வெல்லலாம் பக்தி உபாசகனுக்கு -பிரபன்னனுக்குச் சொல்ல வேண்டுமோ-தத் தத் நினைவுகளையே பற்றாசாகக் கொண்டு மாறி மாறி அர்ச்சிராதி கதி போகும் வரை வரும்-முமுஷுத்வ லக்ஷணம் விரக்தியும் விஸ்வாசமும் முற்ற வளர மாறி மாறி வர வேண்டும்)

(பிரகிருதி உடன் இருப்பதால் -அநாதி காலம் சம்சரிக்க காரணமான கர்மா பற்றி நினைக்க பயமும் -அத்தைப் பாராதே அங்கீ கரிக்கும் காருண்யம் நினைக்க பயம் நீங்குமே
பகவத் பிராப்தி உத்பத்தி அளவும் -தொடக்கத்திலே பயம் போகும் -அனுபவாதி ரூப பிராப்தி -ஸ்திரப்படும் அங்கு -இங்கு அஸ்திரம் –அனுபவத்தில் பயம் இருக்காதே –கால நிர்தேசம் இல்லையே -மாறி மாறி நடக்கும்)

அதாவது –
பகவத் க்ருபா விஷயமாயும் -பிரகிருதி யோடே இருக்கையாலே அநாதி காலம் சம்சரண ஹேதுவாய்ப் போந்த ஸ்வ கர்மத்தை அனுசந்திப்பது –
அத்தைப் பாராதே அங்கீகரித்த பகவத் காருண்யத்தை அனுசந்திப்பதாய்க் கொண்டு இறே இவ் வதிகாரி இருப்பது –
அதில் கர்மத்தை அனுசந்தித்த போது பயமும் – காருண்யத்தை அனுசந்தித்த போது அபயமுமாய் -இரண்டும் மாறி மாறி -பிரகிருதி சம்பந்தம் அற்று பகவத் ப்ராப்தி பண்ணும் அளவும் நடக்கும் -என்கை –

————————————————-

இப்படி உபயமும் மாறி மாறி பிராப்தி அளவும் நடக்கிறது என் -தத் குண விஸ்வாசத்தாலே எப்போதும் ஒக்க நிர்பயனாய் இருக்க ஒண்ணாதோ -என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -406-

நிவர்த்திய  ஞானம் பய ஹேது-நிவர்த்தக ஞானம் அபய ஹேது

(ஆயி ஸ்வாமிகள்-நிவர்த்தய  ஞானம்–சம்சாரம் -கர்மா -பற்றிய ஞானம் பய ஹேது-நிவர்த்தக ஞானம்–பகவத் கிருபை பற்றிய ஞானம் – அபய ஹேது-பகவத் கிருபையால் நிவர்த்தகம் -பிரபல்ய சம்சாரம் கர்மா -இன்னம் மயக்குண்டு மீண்டும் பிறந்தால் என்று நினைக்கவே பயம் – -நிர்ஹேதுக அங்கீ காரத்தால் நிவர்த்திக்க – -ச வாசனமாக போக்க வல்ல கிருபை நினைக்கவே அபயம் -இனி நாம் மேல் விழுந்தாலும் சம்சாரம் நம்மை கிட்டாதே –-)

(ஆயி ஸ்வாமிகள்-அஞ்ஞாத ஸூஹ்ருத நிமித்த அங்கீகாரத்தையும் -தத் அநபேஷமான நிர்ஹேதுகமான அங்கீகாரத்தையும் அருளிச் செய்து -இரண்டும் அபிமதம் என்பதால் இல்லை –சாஷாத் நிர்ஹேதுக கடாக்ஷம் அபிமதம் – ஞான ஸூஹ்ருதம் கொண்டே அங்கீ கரிப்பார் என்று சொல்ல வந்தவரை நிரசிக்க-தெரியாமல் செய்த வற்றைக் கொண்டே அங்கீ கரிப்பார் என்கிறார்-
ரஜோ தமஸ் ஒழிக்க -சத்வ குணம் வளர்க்க -முக் குணங்களும் தாண்ட வேண்டுமே -முதலில் இத்தைச் சொன்னால் எடுபடாதே -அதே போலே இங்கும் –
ஞான ஸூஹ்ருதம் -அஞ்ஞாத ஸூஹ்ருதம் -சாஷாத் ஸூஹ்ருதம் -இப்படி வகைப்படுத்த வேண்டும் -திரஸ்கரிக்க வேண்டும் ஒவ் ஒன்றாக –
வெறிதே அருள் செய்வார் -சாஷாத் -ஒன்றே அபிமதம் -நிரங்குச ஸ்வாதந்தர்யத்துக்கு கொத்தை வாராமல் –
பகவத் ஸ்வாதந்தர்ய கார்யம் சம்சாரம் -கிருபை கார்யம் மோக்ஷம் என்று பூர்வர் அனுசந்திப்பார்கள் -உபய நிர்ஹேதுகத்வம் -எதையும் எதிர்பார்க்காமல்
ச ஹேதுவ உக்தியால்- அஞ்ஞாத ஸூஹ்ருதம் என்று மறைத்து வேதாந்த பிரகிரியையால் அருளிச் செய்வார் -ஸூவ தோஷ பர குண அனுசந்தானம் -காரியங்களில் -மாறாடி நினைக்கில் -ஸூவ குணம் பகவத் தோஷம் -விபர்யய ஸ்மாரகம் ஆனால்
பர லாப அலாப முக்கிய காரணங்கள் கிருபா கர்மா என்று சொல்லி
நிர்பய யுக்தி பிரேரகத்வ கிருபாளுத்வம் – கிருபா பரவச பரி கல்பித -யாதிருச்சிகாதி ரூப நிமித்த ச ஹேதுக அங்கீ காரத்தையும்-நிர் ஹேதுக அங்கீ காரங்களின் துர்பல பிரபல ஸூசக நிரூபண விசேஷணமும்-அதில் அஹேதுக அங்கீகார ஹேதுவான -நம் இடம் ஹேது இல்லை -அவர் இடம் உள்ள ஹேது -இப்படி ஹேது -இல்லாமல் இருந்தால் சர்வ முத்தி பிரசங்கம் –துர் நிவாரம் -பகவத் கிருபை -விதி வாய்க்கின்று -காப்பார் யார் -கிருபா அனுசந்தான பலத்தால் பயம் நீங்குமே)

அதாவது –
அவனுடைய காருண்யத்தாலே நிவர்த்திக்கப் படுமதான -அவித்யா -கர்ம -வாசனை-ருசி – பிரகிருதி சம்பந்த விஷய ஞானம் -இவை கிடைக்கையாலே இன்னமும் சம்சாரம் மேலிட்டால் செய்வது என் என்கிற பய ஹேது
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று சர்வேஸ்வரன் அவற்றைத் தள்ளிப் பொகடும் படி பண்ணுகையாலே -இவற்றுக்கு நிவர்த்தகமான அவனுடைய காருண்ய விஷய ஞானம் -தத் பய ராஹித்ய ஹேது -என்கை –

நிவர்த்தக பலம் அறிந்தாலும் -நிவர்த்யம் கிடக்கும் அளவும் – பயமும் நடு நடுவே கலசிச் செல்லும் என்று கருத்து –

ஆக –
இப் பிரகரணத்தில் –
இவனுக்கு பய அபய  ஹேதுக்களும் -366-
தத் உபய விபர்யயத்தில் சித்திக்கும் அதுவும் -367-
தந் நிபந்தன சங்க பரிகாரங்களும் -368-380-
சர்வேஸ்வரன் சம்சாரிகளுக்கு உஜ்ஜீவனத்தில் கிருஷி பண்ணும் படியையும் -381-
அஞ்ஞாத ஸூக்ருத பகவத் அங்கீகார ஹேதுத்வமும் -381-
அந் நிர்ஹேதுக விஷயீகார வைபவ அநபிஜ்ஞர் படியையும் -383-
ஏதத் வைபவ அபிஜ்ஞர் படியையும் -384-
இவ் வர்த்தம் அபியுக்த வசன சித்தம் என்னும் அதுவும் -385-
அஜ்ஞ்ஞாத ஸூக்ருத் வ்யாஜேனே அவன் அங்கீகரிக்கும் படியையும் -386-
அங்கீகார ஹேதுவாகும் அஞ்ஞாத ஸூக்ருதங்களின் தத் கிருஷி பலத்வமும் -387
தந் நிரூபண  பலித்வமும் -அங்கீகார பற்றாசாம் அவை காதாசித்கமாக ஸ்வயமேவ விளைக்கைக்கு அடியும் -389-
அவற்றின் த்வை விதயமும் –
ஏவம் பூத விஷயீகார சாஸ்திர சித்தத்வமும் -392-
இவ் விஷயீகாரம் பெற்றவர் இத்தை வெளியாக பேசின படியும்-393-
ஏதத் அநபிஞ்ச வசன பரிகாரமும் -394-
ஆபி முக்யவத் அத்வேஷ தத் கிருபா ஜனித்வமும் -395-
யாத்ருச்சிகாதிகளின் ஸூக்ருத நாமம் ஈஸ்வர க்ருதம் என்னும் அதுவும் -396-
ஏதத் அர்த்த விஷய அபியுக்த வசன பரஸ்பர விரோதி பரிகாராத் அனுயுக்தி ஹேதுவும் -397-
கீழ் பரக்க உபபாதித்து வந்த இதின் பலிதமும் -398-
தத் ஆப்தி ஹேது தயா ஞானாதிகர் அநு சந்தானமும் -399-
நிர்ஹேதுக கிருபா பல அவஸ்ய அனுபாவ்யத்வமும் -402-
ஈத்ருசா கிருபா பிரவாஹ துர் நிவாரகத்வமும் -403-
பிரகரண ஆதி ப்ரதிஞ்ஞா தத் அர்த்த நிகமனமும் –404-
பய அபய அனுவர்த்தன காலாவதியும் -405-
ஏதத் உபய ஹேது பூத ஜ்ஞான விசேஷங்களும்-406- -சொல்லுகையாலே –
இவ் வதிகாரிக்கு அத்வேஷாதி மோஷ பர்யந்த அகில லாப ஹேதுவான பகவத் ஆகஸ்மிக கிருபா பிரபாவம் விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது –

இத்தால் -த்வய உபதேஷ்ட்ரு பூத ஆசார்ய உபசத்யாதிகளுக்கும் தத் உபதிஷ்ட த்வார்த்த ஞானாதிகளுக்கும் –ஹேதுவான பகவந் நிர்ஹேதுக கிருபா வைபவம் சொல்லப் பட்டது –
(த்வயத்தை பெற்றது ஆச்சார்யம் மூலம் -உபசத்யாதி-கைங்கர்யாதிகள் –ஆச்சார்யரைப் பெற்றது பகவத் நிர்ஹேதுக கிருபையால் என்றதாயிற்று-)

ஆறு  பிரகரணங்களில் ஐந்தாவதான -பகவந் நிர்ஹேதுக கிருபா பிரபாவம் முற்றிற்று –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –381-386 -நிர்ஹேதுக கிருபை வைபவ பிரகரணம் –ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

January 3, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஐந்தாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் 
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் 

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது எட்டாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது -நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம்

——————————————

இனி பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது -என்று கீழ் அருளிச் செய்ததை விசதீகரிகைக்காக -ஈஸ்வரன் இவ் வாத்ம உஜ்ஜீவனத்துக்கு பண்ணும் கிருஷி பரம்பரையை -அருளிச் செய்கிறார் –

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் –
கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான
சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையைத் தாய்
முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று –
விடாதே சத்தையை  நோக்கி உடன் கேடனாய்-

இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை
காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ண நீரோடே மீளுவது –

தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப்  போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடி மாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்-
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

(ஸ்ருஷ்டி இத்யாதி பரம்பரையான உபகாரங்கள் -முதல் பகுதி – -நாம் செய்யும் பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் -இரண்டாம் பகுதி –
பேற்றுக்கு இவன் செய்த நிர்ஹேதுகத்வ கிருஷிகள் -மூன்றாம் பகுதி -)

(ஆயி ஸ்வாமிகள்-அசேதனமான கர்மம் இழவுக்கு -காரணம் இல்லை -பகவத் –ஸ்வாதந்திரமே இழவுக்கு அடி -ஸ்வ தந்த்ர ஸ்வாமி யுடைய கிருபையே பேற்றுக்கு அடி –
என்னும் இடத்தை உபாயேன அருளிச் செய்து -கிருபை -சா பேஷம் நிரபேஷம் -இரண்டு வகை – யாதிருச்சிக்காதிகளை எதிர்பார்த்து கிருபை –தானே தலையில் இட்டதை காரணமாகக் கொண்டு –சா பேஷம் இது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக– மேலே இதுவும் கூட வேண்டாம் என்று நிரபேஷ கிருபை –நிர்ஹேதுக ப்ரதீதி விஷயமான முற்பட்ட சா பேஷை கிருபை –எதிர்பார்ப்பது கண் துடைப்பு என்று காட்டி அருள இந்த சூரணை –

த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -லீலா விபூதியில் மும் மடங்கு-நித்ய விபூதி – -அபரிச்சின்ன -ஆனந்த அனுபவம் பரிபூரணம் -இருந்தாலும் -கீழாறு போய் உண்டது உருக்காட்டாதே
சந்நிஹித்த புத்ரன் இங்கு இருந்தாலும் – தேசாந்தர கத புத்ரன் -அறியாத பிள்ளைகள் இடம் திரு உள்ளம் சென்று -வாத்சல்யம் -பிதா புத்ர ஸ்மரண க்ரஸ்த ஹிருதயம் —
இலஷ்மணன் கூட இருந்ததை கணிசியாமல் எப்பொழுது பரதனைக் கூடுவேனோ சத்ருக்னனைக் கூடுவேனோ உன்னையும் கூடுவேனோ -என்றது போலே –
சந்நிஹிதர் பால் பற்று அற்று ச வாசனமாக குடி போய் -ச ஏகாகீ ந ரமேத– நிரந்தர கவலை -அஞ்ஞர் தூரஸ்தர் சம்சாரிகள் பக்கல் -ஸ்நேஹம் மிக்கு —
ஆற்றல் மிக்க அடக்கம் அற்று ஆற்ற மாட்டாதே கரண ஸூன்யராய்- சம்சாரிகள் பக்கல் புரை அறக் கலந்து பரிமாற உப கரணங்களான கரண களேபரங்களைக் கிருபையால் கொடுத்து

ஸூ பர ஸ்வரூபத்தை அறியாதே -அநாதி மாயயா ஸூக்தனான -அறிவிலி பத்த ஜீவன் -தான் அறிந்த சம்பந்தமே காரணமாக த்யஜிக்க மாட்டாதே
மேலே பல படி உயர்ந்து த்ருஷ்டாந்தம் இல்லையே அவன் படி -ஒரு பிறவியில் கர்மாதீனம் இது -அநாதி காலம் -சர்வரையும் உள்ளும் பூராவும் வியாபித்து –
அனுபவம் ஆகிற -வாழ்ச்சியில் -ஜீவனை அனுபவிக்க ஆசை கொண்டு –ஆக்ரோஷம் ஆகிய தொடர்ச்சி -விடாமல் அவதரித்து -வியவஹாரம் ஆகிற வெற்றிக்கு
சத்தை குலையாத படி பர்த்தா- தாங்கி தாரகனாய்க் கொண்டு நோக்கி -சத்தை அழியாமல் -சத் அசத் கர்ம பலமான -ஸ்வர்க்க நரக அவஸ்தைகளிலும் விட மாட்டாதே –
வாத்சல்ய விஷயமான இவர்கள் -ஸூ கத -இவன் கொடுத்த சக்தி கொண்டு ஆத்மாவின் விரோத செயல்களில் ஈடுபட்டு –பேகணிப்பித்து மருந்து கொடுத்து ரஷிக்கும் தாய் போலே -ருசியைப் பின் சென்று அசத் கர்மம் அனுமதியும் கொடுத்து உதாசீனனைப் போலே இருக்கிறார் –

ஹித ப்ரதனாய் இருந்தே உதாசீனம் அன்றிக்கே இருக்கச் செய்தேயும் -உதாசீன போலே -இருந்து நியமனாதி யோக்யதை உண்டாய் இருக்க -உபேக்ஷித்து இருக்கும் –
ஸ்வரூப அனுரூப ருசியில் மூட்டுவதற்காக -பகவத் பாகவத கைங்கர்யத்தில் ஈடுபடுத்த -ச வாசனமாக விஷயாந்தரங்களில் இருந்து மீட்க-அபி சந்தி விராமம் –விருப்பம் அற்ற செயல் –முன் விரும்பி தப்பு -இப்பொழுது விருப்பம் இல்லை -செயல்களில் இருந்து ஒய்வு இல்லையே இன்னும் –நினைக்க அவகாசம் காத்து உள்ளேயே பதி கிடந்தது -அங்கீ கரித்து -திரு முன்னில் அவிக்கிற விளக்கை திருடுவதுக்கு தூண்டுகை –அணையும் விளக்கை தூண்டினான் என்ற கணக்கால் -யாதிருச்சிகம்
திரு ஆபரணங்களை அபகரிக்கை –வணங்கி -இதுவே -நன்மை என்ற பேர் இடலாம் படி -தீமையும் சர்வஞ்ஞனும் காணாமல் அறியாமல் –
சர்ப்பம் -புத்ரனை நெற்றி கொத்தி பார்த்து மருந்தும் மந்திரித்தும் -சுக்கிட்டு ஊதி பிராணம் பசை காணாமல் -ஒதுங்கின பிராணன் உண்டோ என்று முயலும் பிதா பரிதவித்து கண்ணும் கண்ண நீரும் கொண்டு –சப்தாதி விஷய சர்ப்பம் -அஹங்காராதி விஷம் தலை மண்டி -சைதன்யம் மூச்சு அற்று –விவேக ஞானம் இல்லாமல் –அசத் கல்பனாய் –
முக்கிய கரணம் நெற்றி -சாஸ்திரம் கத்தி -உபதேசம் கூரிய கத்தி -மீளுமோ
தாத்பர்ய உபதேசம் -சுக்கு -ரஹஸ்ய த்ரயார்த்தம் – அவதார ரூபம் பசு மருந்து வார்த்தும் -ததீய ஆகார ஸ்பர்சம் மந்த்ரம்-சேஷத்வ ஞான உதயமான பிராண பசை இல்லாமல் ஆத்ம வஸ்து இழந்தோம் என்று கலங்கி -சஞ்சாத பாஷ்பம் பரவீர ஹந்தா -வாலி வத அனந்தரம் –
உரு அழிந்து கண்ண நீர் -வந்த வழி தன் வீடு ஏறிப் போவது -மடக்கியும் -போக முடியாமல்
ஆத்ம வஸ்து சபலனான தனக்கே ஏற புறப் பூச்சு இடம் பெற்ற அளவிலே -இவன் அவ்வூர் இவ்வூர் என்று திருக் கோளூர் இத்யாதி -வாயாரச் சொன்னாய் –தேசோயம் சர்வ காமம் துக் -பவத் விஷய வாசினா -அயோத்யையில் இருந்ததே கொண்டு அன்று சராசரங்கள் வைகுந்தது ஏற்றி –அவன் இவன் என்றால் போலே திருப் பேர் நகரான -பேர் ஆயிரம் உடையான் என்றால் போலே ஓர் ஆயிரமாய் நம்முடைய பெயரை எல்லாரும் கேட்க வாயாரச் சொன்னாய் -மா மாயன் மாதவன் வைகுந்தன் -போலே -வீறுடைய பேர் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை இருவர் வழி பறிக்க முன்னும் பின்னும் சென்று -வில்லாளி -திருடன் பறியாமல் போக – தர்ச நீயரான அடியாரை  பறியாமல் நோக்கினாய்
வாய் கொப்பளிக்க -அடியார் -நாம் அறிய தீர்த்தாய் -சாஸ்த்ர முகத்தால் இல்லை நாமே நாம் மட்டுமே அறிய –தனக்காகக் கட்டின இரப்பு வாரத்தில்-திண்ணையில் –நிழலை பண்ணிக் கொடுத்தாய் -அவன் அறியாதது சிலவற்றை அவன் தலையில் ஏறிட்டு -அவன் அகப்பட்டு நிற்கும்படி –மடி மாங்காய் இட்டு –  நம்முடையவன் என்று பிடித்து -பொன்னில் அதி லுப்தனான – பொன் வாணியன் ஓன்று இரண்டு உரையில் -நெடும் பொன் க்ரஹிஷிக்கும் -உடையவன் அறியாமல் உரைத்து -ஸூஷ்ம-இழகின மெழுகால் – ஒத்தி எடுத்து – ஒன்றும் சேஷியாத படி -எடுத்து -உருக்கி கால் பொன்னாயிற்று -அல்ப அல்பமாக சில திரட்டுமா போலே-பேராசை –ஆத்ம லுப்தனான சர்வேஸ்வரன் -அநாதி பிடித்து அந்தாதியாய் வரும் ஜென்ம பரம்பரைகள் தோறும் -என் அடியாரை நோக்கினாய் என்ற யாதிருச்சிகம் –
என் பேரைச் சொன்னாய் பிராசங்கிகம் -விடாய் தீர்க்கை -ஒதுங்க நிழல் கொடுத்தல் -ஆனு ஷங்கிகம் செய்தவன் அறியாமல் தானே அறிந்து -தானே கல்பித்து -அல்பம் அநேகம் ஆகும்படி ஓன்று பத்தாக்கி மேல் மேல் என நடத்திக் கொண்டு போகும்-ஸ்ப்ருஹநீயமான ஆத்ம வஸ்துவை தர்ம சாதனம் உரைகல் – சம்சரிக்கை ஆகிய உரை உரைத்து- கிருபா ஆர்த்த சித்தம் ஆகிய மெழுகால்  ஒத்தி எடுத்து –ஸூஹ்ருதம்  யாதிருச்சிக பொன் துளிகள் பற்ற எடுத்து -த்ருஷ்ணா விசேஷத்தால் உருக்கி -ஒவ் ஒரு ஸூஹ்ருத லவமாக தானே பெருக்கி அது பெற்றாசாக வாழ முயலும் —ஸ்வாதந்திரம் அடக்கி ஆள வல்ல கிருபா குணம் -பூர்ண அனுபவத்தை போலி வழிக்கும் பர துக்கத்தை நினைவு படுத்தி வேண்டியது எல்லாம் செய்வித்து – அவனை அடையத் தானே கல்பித்து -சேதனன் அறியா ஒன்றை இடுக்கி -சாதகன் ஒன்றுமே பண்ணாமல் இருக்க செய்வதால் நிர்ஹேதுகம்-யாதிருச்சிகாதிகளை எதிர்பார்த்தாலும் சேதனனுக்கே தெரியாதே -)

(அஞ்ஞாத ஸூ ஹ்ருதத்தை கொண்டே -நமக்கே தெரியாத -நல்லதாக செய்யப்பட்டதை கொண்டே -கைக் கொள்ளுகிறான் —யதர்ச்சையாக -யாரோ ஒருவர் இச்சை அடியாக -பிரசங்கம் -ப்ராசங்கிக்கமாக பேச்சு வாக்கில் ஆனு ஷங்கிகம் பின் தொடர்ந்து -சேர்க்கை –
இப்படி மூன்று விதம் -ஆக நிர்ஹேதுகம் -என்றவாறு –
த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி–1 –மூன்று மடங்கு பெருத்த நித்ய விபூதி -பரம வ்யோமம்- மாக வைகுந்தம் -அம்ருதம் -நித்யம் என்றபடி 
அல்பம் லீலா விபூதி -மஹத் நித்ய விபூதி என்றபடி  இதுக்கு கீழ் எல்லை இல்லை -அதுக்கு மேல் பக்க எல்லைகள் இல்லை 
தீப பிரகாசத்திலே –வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்கையாலே –
த்ரிபாத்த்வ-மூன்று-2- போக்யம்-கல்யாண குணங்கள்-திரு மேனி  போக ஸ்தானம் -திரு மா மணி மண்டபம்  போக உபகரணங்கள்-செடி புஷ்பம் சந்தனம் –அனைத்தும் அப்ராக்ருதங்கள் இங்கு அல்பம் இந்த மூன்றும் –
வேறே மூன்றும் –3 -ஜகத் அந்தர்கத வஸ்தபிமாநிகளான-நித்தியரும்  -கேவல பகவத் அனுபவராய் இருக்கும் -நித்தியரும்  -முக்தருமாய் –இப்படி மூன்று அம்சமாய் இருக்கும் ஆத்மாக்களை -திரு ஆழி திருச் சக்கரம் திரு ஆபரணம் அந்தர்கதம் – வைகுந்தத்து அமரரும் முனிவரும் –இப்படி மூவகை ஆத்மாக்கள் அங்கு -இங்கு சம்சாரிகள் முமுஷுக்கள் -கைவல்யம்- பகவத் அனுபவம் -மூன்றும் உண்டே
யுகபவதேவ – அநுபகிக்கை-நித்ய முத்தர்கள் உடன் கூடி தன்னுடைய நித்யோதிக தசை-தன் ஸ்வரூபத்தை அனுபவித்தும் –சாந்தோதித தசை -தன் ரூபம் குணம் விபூதி சேஷ்டிதங்களை அனுபவிக்கை –
அது உண்டது உருக்காட்டாதே -ராஜ் போக்-இத்யாதி திருத் துவாரகை அப்போது அப்போது புது திரு உடைகள் சாத்தி அனுபவம் இங்கே உண்டே
ப்ரஹ்ம தேஜஸ் முகத்தில் தெரியும் -அனுபவித்து -ஜீவனுக்கு -ப்ரஹ்மதுக்கு அனுபவம் சொல்ல வேணுமோ -திரு உள்ளம் நேராக சம்சாரிகள் இடம் தானே சென்று –
நிரங்குச ஸ்வா தந்தர்யம் –உண்டே –
சம்ஹ்ருதராய்க் கிடக்கும் அளவில்–இவன் போகும் வழியில் போகாமல் இருக்க கோபத்தால் தான் சம்ஹாரம் செய்ததை மறந்து -கரண களேபரங்கள் இல்லாமல்
இழக்கிறார்கள் என்ற திரு உள்ளத்தால் தானே ஸ்ருஷ்ட்டி – பிரிவே இல்லாத இவன் -சரீராத்மா பாவம் சம்ஹார திசையிலும் உண்டே அப்ருதக் சித்தம் தானே 
பரதன் கூட சேர்ந்தால் தான் இருப்பு இவனுக்கு 
ஏகாகி-தனியன் – அரத்திமான் பவதி -ஹேய ப்ரத்ய நீகன் -ஆனந்த மயத்வம் ஸ்ருதி விரோதிக்காதோ -கர்ம மூலத்து இல்லை -இது கிருபா மூலம் தானே –
சித் சக்தி ஞானம் -இத்தை கொண்டே பிரவ்ருத்தி நிவ்ருத்திகள்
எனக்காக படைத்து -அவன் திரு உள்ளம் படி நடக்காமல் இருந்தும் பொறுத்தும்- -ஜீவ ஸ்வாதந்தர்யம் நாம் தானே கொடுத்தோம் என்ற திரு உள்ளத்தால் -கிருபை பொழிவானே-
எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஆனுகூல்யமே செய்வதாக சங்கல்பித்து உள்ளான் –
சத்தா தாரக தயா -உளன் கண்டாய் உத்தமன் என்று உள்ளுவார் உள்ளம் உடன் கண்டாய் -எங்கும் சத்தா தாரகத்துக்காக இருந்தாலும்-அறிந்தவர் உள்ளத்தில் மகிழ்ந்து இருப்பானே –
ஜ்ஞான சிகீர்ஷாண பிரயத்நாதி -அறிகை –முடிவு எடுத்து -பிரயத்தனம் -என்றவாறு
நன்மை என்று பேரிடலாவது–யார் எண்ணத்தால் நன்மை -சாஸ்திரத்தாலும் சேதனன் அறிந்தும் இல்லாமல் தன் திரு உள்ளபடியே என்றபடி –
ஸ்யேநேந அபி சரண்யஜேத -அபிசார கர்மா -சாஸ்திரத்தில் உள்ளதே -பக்தன் பிரபன்னன் செய்யக் கூடாதே –)

த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -என்கையாலே -நித்ய விபூதியை த்ரிபாத் விபூதி என்னக் கடவது இறே-இதனுடைய த்ரிபாத்த்வம் பல படியாக நிர்வகிக்கலாய் இருக்கும் –
எங்கனே என்னில் –
பாதோஸ்ய விஸ்வா பூதானி திரிபாத ஸ்யாம்ருதம் திவி -என்று இந்த விபூதியில் –
எல்லா பூதங்களும் இவனுக்கு நாலத் தோன்றும் என்னும் படி அல்பமாய் இருக்கும் –
பரம ஆகாசத்தில் இவனுடைய நித்தியமான விபூதி -த்ரிபாத் -என்னும் படி மும் மடங்காய் இருக்கும் –

இந்த விபூதி த்வய விஷயமான -பாத சப்தமும் -திரிபாத -சப்தமும் –
அல்ப மகத்வங்களுக்கு-உப லஷணம் இத்தனை ஒழிய -பரச்தேத பரம் அன்று -லீலா விபூதியில் அண்டங்கள் தானே அசங்கயாதங்களாய்-இறே இருப்பது –என்று -தீப பிரகாசத்திலே ஜீயர் அருளி செய்கையாலே –இவ் விபூதியில் -கார்ய ரூப பிரதேசத்தைப்  பற்ற-பரம ஆகாசத்தில் நித்ய விபூதி மும் மடங்காய் இருக்கும் என்னவுமாம் –

அன்றிக்கே –
இத்ய ப்ராக்ருதம் ஸ்தாந முஸ்யதே  த்ரிபாத் த்வஞ்ச அப்ராக்ருதைர் போக்ய போக உபகரண போக ஸ்தான விசேஷைர்வா-பூஷணா அஸ்த்ராதி ரூபேண ஜகத் அந்தர்கத வஸ்த அபிமானிபிர் நித்யை பகவத் அனுபவ மாத்ர பரைஸ் ச நித்ய சித்தைர் முக்தைஸ் ச ஆத்மா பிர்வா சம்பவதி -என்று ஸ்ருத பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தபடி –
அப்ராக்ருதமாய் இருந்துள்ள -போக்ய விசேஷங்கள் போக உபகரண விசேஷங்கள் –
போக  ஸ்தான விசேஷங்கள் -ஆக மூன்று அம்சங்களோடு இருக்கையாலே ஆதல் –
அஸ்த்ர பூஷணத்தியாயத்தில் படியே பூஷண அஸ்த்ராதி ரூபத்தாலே –
ஜகத் அந்தர்கத வஸ்தபிமாநிகளான-நித்தியரும்  –
கேவல பகவத் அனுபவராய் இருக்கும் -நித்தியரும் முக்தருமாய் -இப்படி
மூன்று அம்சமாய் இருக்கும் ஆத்மாக்களை உடைத்தாயாகையாலே –
த்ரிபாத் -என்னவுமாம் –

ஆக இப்படி லீலா விபூதியில் -அத்யந்த வ்யாவ்ருத்தை ஆகையாலே
நிரதிசய ஸூக வஹையான நித்ய விபூதியிலே –
பரி பூர்ண அனுபவம் -நடவா நிற்க –
நித்ய முக்தரோடே கூடி இருந்து ஓர் ஒன்றே -நிரதிசய ஆனந்த ஜனகமான –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாவற்றையும் -யுகபவதேவ – அநுபகிக்கை
ஆகிற பரி பூர்ண அனுபவம் -அவிச்சின்னமாய் செல்லா நிற்க –

அது உண்டது உருக் காட்டாதே –
அதாவது –
அப்போது அப்போது வடிவிலே இட்டு மாறினால் போலே -புதுக்கணித்து வரப் பண்ணும்
அந்த அனுபவம் ஒன்றும் வடிவிலே தோன்றாதே என்கை-

தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் -அதாவது –
அநேக புத்ரர்களில் வைத்துக் கொண்டு -ஒருவன் ஸ்வ கர்ம அனுகுணமாக
தேசாந்தரமே போனால் -மற்று உண்ட புத்ரர்களும் தானுமாய் இருந்து ஜீவியா நிற்கச் செய்தேயும் -இவர்களோபாதி அவனும் கூடி இருந்து -வாழுகைக்கு இட்டுப் பிறந்து வைத்து -இத்தை ஒழிந்து கிடக்கிறானே என்று -தேசாந்தர கதனான அந்த புத்திரன் பக்கல் பிதாவினுடைய ஹிருதயம் கிடக்குமா போலே -நித்தியரும் முக்தரும் தானும் கூடி இருந்து வாழச் செய்தே – இப் போகத்தில் ப்ராப்தி உண்டாய் இருக்க -இச் சேதனன் இழந்து கிடப்பதே என்று -தேசாந்தர ஸ்தரான சம்சாரிகள் பக்கல் திரு உள்ளம் நேராகப் போய் -என்கை –

இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
அதாவது –
சம்ஹ்ருதி சமயத்தில் பிராப்தி உண்டாய் இருக்க -நித்ய விபூதியில்
சம்சாரி சேதனரை தான் பிரிந்து தான் இருக்கும் அளவில் -புத்திர பௌத்ராதிகளோடு
ஜீவித்தவன் -அவர்களை இழந்து -தனியனானால் போலே –
ச ஏகாகீ ந ரமேத -என்கிறபடி -அவ் விழவு சஹிக்க மாட்டாதே -என்கை –
சம்ஹ்ருதராய்க் கிடக்கும் அளவில் -இவர்களை சரீரமாய் கொண்டு -தான்
சரீரியாய் இருக்கச் செய்தேயும் -அத்தை ஒரு கலவியாக நினையாதே –
கரண களேபர சஹிதராய் அவர்கள் வர்த்திக்கிற காலத்தில் -அந்தர் ஆத்ம தயா –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளை -நிர்வகித்துக் கொண்டு இருக்கை முதலான வற்றை இவர்களோடு கலவி யாகவும் -இவர்கள் கரண களேபர விதுரராய்-அசித் அவிசேஷிதராய் கிடக்க -தான் நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை இவர்களைப் பிரிந்து இருக்கிற இருப்பாகவும் நினைத்து இருக்கையாலே -இவர்களைப் பிரிந்தால் -என்று அருளிச் செய்கிறார் 

இவர்களோடு கலந்து பரிமாறுகைக்கு கரண களேபரங்களைக் கொடுத்து –
அதாவது –
அந்தராத்மதையாலும் –
அவதார –
அர்ச்சாவதாரங்களாலும் –
இவர்களோடு கலந்து பரிமாறிக்கைக்கு உறுப்பாக –
விசித்ரா தேக சம்பந்தி -இத்யாதிப்படியே –
ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயேண உபகரணமான கரண களேபரங்களை  தயமான மனாவாய் கொடுத்து என்கை –

அவற்றைக் கொண்டு வ்யாபரிகைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
அதாவது –
அந்த கரண களேபரங்களைக் கொண்டும் அவற்றை அறிந்து -செய்ய வேண்டும் அவற்றைச் செய்து-தவிர வேண்டும் அவற்றைத் தவிர்ந்து -இப்படி வ்யாபரிக்கைக்கு ஈடான 
சித் சக்தி -பிரவ்ருத்தி சக்தி -நிவ்ருத்தி சக்திகள் ஆகிற சக்தி விசேஷங்களையும் கொடுத்து -என்கை –

கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று
கண்ணுக்கு தோற்றாத படி –
அதாவது –
இத்தனையும் செய்து -ஸ்வாமித்வ ப்ராப்தி தோற்ற இவர்கள் கண்ணுக்கு விஷயமாக நிற்கில் –
த்வம்மே – என்றால் சஹியாமல் –
அஹம்மே -என்றும் ஸ்வ தந்த்ரர் ஆகையாலே -எங்கள் கண் முகப்பில் நீ ஒருக்காலும் –
நிற்க்கக் கடவை இல்லை -என்று திரு ஆணை இட்டு -நிஷேதிப்பர்கள் என்று -நினைத்து –
ந சஷூஷா பஸ்யதி கைச்ச நைநம் – –
கட்கிலி –
என்கிற படி இவர்கள் -கண்ணுக்கு ஒருக் காலமும் விஷயம் ஆகாதபடி -என்கை –

உறங்குகிற பிரஜையைத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே -அக வாயிலே அணைத்து-
அதாவது –
தன்னையும் தாயும் அறியாதே கிடந்தது உறங்குகிற பிரஜையை –
வத்சலை யானவள் -தான் அறிந்த ரஷ்ய ரஷக  பாவ சம்பந்தம் அடியாக -முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே -அநாதி மாயயா ஸூப்தராய் -ஸ்வ பர ஸ்வரூபங்களில் ஒன்றையும் அறியாமல் கிடக்கிற இச் சேதனரை-சேஷியான தான் அறிந்த -ரஷ்ய ரஷக சம்பந்தமே ஹேதுவாக விட -ஷமன் அன்றிக்கே –
யா ஆத்ம நிதிஷ்டந்-என்கிறபடியே -அந்தராத்மத்வேண -இவற்றை ஸ்பரிசித்து கொண்டு -என்கை –

ஆட்ச்சியில் தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி –
அதாவது –
ஒருவன் உடைமையை வேறு ஒருவன் அபஹரித்து ஆளா நிற்க -உடையவனாய் வைத்து
உடைமையை இழந்தவன் தன்னது என்ன தோற்ற பல நாளும் துடர்ந்து போந்தால் பின்பு
வ்யவஹாரத்தில் விஜய ஹேதுவாக நிற்கும் இறே –
அப்படியே -அனுபவ விபவாத் -என்கிற சேதனர் ஆட்சியிலும் நம்மது என்னும் இடம் தோற்ற
ஒரு தலை பற்றிக் கொண்டு போருகிற தொடர்ச்சி பிரபலம் என்று நினைத்து –
அந்தராத்மா தயா வஸ்திதனான தான இவர்களை ஒருக்காலும் கை விடாதே –
தாரகனாய்க் கொண்டு தாரக  பூதரான இவர்கள் சத்தை அழியாமல் நோக்கி -என்கை –

உடன் கேடனாய் –
அதாவது
இப்படி சத்தா தாரக தயா -ஸ்வர்க்க நரக ப்ரேவேசாதி-சர்வ அவஸ்தையிலும் –
இவர்களுக்குத் துணையாகப் போருகை-
உடன் கேடன் -என்பது -இவன் கேடு தன் கேடாய் இருக்கும் அவனை  இறே

இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
அதாவது –
ஆதவ் ஈஸ்வர தத்தயைவ புருஷ -ஸ்வாதந்த்ர்ய சக்த்யா ஸ்வயம்-தத் தத் ஜ்ஞான சிகீர்ஷண பிரயத்நாதி உத்பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
அடியிலே தான் கொடுத்த ஜ்ஞாத்ருத்வ ரூப ஸ்வாதந்த்ர்ய சக்தியாலே -ஸ்வ ருஷ்ய அநுகுணமாக –பிரவ்ருத்திகளைக் கொண்டு போருகைக்கு யோக்யரான இச் சேதனர் துர்வாசன பலத்தாலே பாப கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் அளவிலும் –
அந்தர்யாமியான தான் நினைத்தால் மீட்க்கலாய் இருக்கச் செய்தேயும் -அப்படி செய்யும் அளவில் –ஸ்வ ஆஞ்ஞா  ரூப சாஸ்திர விநியோகம் அறும் என்னத்தைப் பற்றவும் -மீட்க மாட்டாதே அனுமதி தானத்தைப் பண்ணியும் -உதாசீனன் அன்றிக்கே இருக்கச் செய்தேயும் -இவர்கள் என் பட்டால் நல்லது என்று இருக்கும் உதாசீனரைப் போலே இருந்தும் -அசத் கர்மாவில் பிரவர்த்திக்கும் பொழுது மீட்க நன்மை என்னும் பேர் வைக்கும்படி தீமையும் கிடைக்காத பொழுது -அதில் நின்றும் அவர்களை மீட்க்கைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொள்ள தக்கதொரு நன்மை ஆகிய அவகாசம் பார்த்து -என்கை –

நன்மை என்று பேரிடலாவது தீமையும் காணாதே –
அதாவது –
பர ஹிம்சை செய்து கொண்டு திரியா நிற்கச் செய்தே -பகவத் பாகவத விரோதிகளாய் இருப்பாரை -யாத்ருச்சிகமாக ஹிம்சிக்கை –
விஷய ப்ரவணனாய் பகவத் தாசிகளைப் பின் பற்றி பல காலம் கோவில்களிலே புக்கு புறப்படுகை –
வயல் தின்ன பசுவைத் தொடர்ந்தவாறே அது ஒரு கோவிலிலே வளைய  வருமாகில் அத்தை அடிக்கையில் உண்டான ஆக்ரஹத்தாலே தானும் வளைய வருகை –
நிந்தார்த்தமாக திருநாமங்களைச் சொல்லுகை -முதலானவை –

நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ண நீரோடே மீளுவது–
அதாவது –
சர்ப தஷ்டராய்  ம்ருத கல்பர் ஆனவர்களை -மந்த்ராதிகளால் எழுப்புகைக்கு
பிராண ஸ்த்தி பரிஷார்த்தமாக நெற்றியை கொத்திப் பார்த்தால் ஒரு பிரகாரமும்
ரத்த ஸ்பர்சை காணாத அள்ளவிலே -இவ் விஷயம் நமக்கு இனி கை புகுகிறான் என்று
இராதே- இழவோடு கை வாங்கும் பந்துக்களைப் போலே -நன்மை காணாத அளவில்- விடாதே –
நன்மை என்று பேரிடலாவது -தீமை தான் உண்டோ என்னும் அளவாக பார்த்த அளவிலும்
ஒரு பிரகாரத்தாலும் இவர்கள் பக்கல் பசை காணா விட்டால் இவ் விஷயம் நமக்கு ப்ராபிக்க
படுமது அல்ல -இத்தை இழந்தோம் என்று அழுது கண்ண நீரோடு மீளுவது -என்கை –

அன்றிக்கே –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமை -என்கிறது –
ஸ்யேநேந அபி சரண்யஜேத-என்று ஆஸ்திக்ய ஜனகமாய் -விஹிதம் ஆகையாலே –
நன்மை என்று பேரிடலாய் இருக்குமதாய் -பர ஹிம்சை ஆகையாலே தீமை ஆகிற
ஸ்யேனவித்ய அனுஷ்டானத்தையாய் -அங்கீகாரத்துக்கு உடலானதொரு நன்மை
காணாத அளவு அன்றிக்கே -சாஸ்திர மரியாதையாலே மேல் தானாகிலும் ஆக்கிக் கொள்ளுகைக்கு யோக்யமான சாஸ்திர ஆஸ்திக்யத்துக்கு  உடலான -அது தானும் உட்பட இவர்கள் பக்கல் காணப் பெறாதே என்னவுமாம் –
அப்போதைக்கு -நெற்றியை கொத்திப் பார்த்தால் -இத்யாதியால் -ஜ்ஞாத ஸூ ஹ்ருத யோக்யதை இல்லாமையாலே -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் தான் உண்டோ
என்று ஆராய்ந்து-அதுவும் இல்லாமையாலே ஒரு வழியாலும் அங்கீகார யோக்யதை அற்று -இழவோடு   மீளும் படி சொல்லிற்று –

தனக்கேற இடம் பெற்ற அளவில் –
அதாவது –
இப்போது மீண்டால் போலே -மீண்டு விடுகை அன்றிக்கே -இவர்களை
உஜ்ஜீவிப்பிகைக்கு அவகாசம் பார்த்து திரியும் -தனக்கேற அவகாசம் பெற்ற அளவில் -என்கை –

என்னூரைச் சொன்னாய் -இத்யாதி -என்றால் போலே சிலவற்றை ஏறிட்டு –
அதாவது –
அவ்வூர் இவ்வூர் என்று இவன் பல ஊர்களையும் சொல்லா நிற்க -கோவில் திருமலை
முதலாக தானுகந்த ஊர்களிலே ஏதேனும் ஒன்றைச் சொன்னால்-அம் மாத்ரமே பற்றாசாக என்னுடைய ஊரைச் சொன்னாய் என்றும் –
அவர் இவர் என்றால் போலே சொல்லா நிற்க -ஒருவன் பேரைச் சொல்லுகிறதாக
திரு நாமங்களிலே ஒன்றைச் சொன்னால் -அவ்வளவைக் கொண்டு என் பேரைச் சொன்னாய் என்றும் –
சில பாகவதர் காட்டிலே வழி போகா நிற்க -அவர்களை ஹிம்சித்து கையில் உள்ளது அபஹரிப்பதாக வழி பறிக்காரர் உத்யோக்கிக்கும் அளவில் -ஸ்வ காரியத்தில் போகிறான் ஒரு சேவகன் அவர்கள் பின்னே தோன்ற – அவனை தத் ரஷண அர்த்தமாக வருகிறான் என்று நினைத்து -அவர்கள் பயப்பட்டு பறியாது ஒழிய -அது பற்றாசாக அந்த சேவகனை
என் அடியாரை நோக்கினாய் என்றும் –
ஒருவன் கர்ம-வெயில்- காலத்திலே தன் வயல் தீய புக்க வாறே -நீருள்ள இடத்தில் -நின்று
வயலிலே வர நெடும் தூரத்திலே துலை இட்டு இறையா நிற்க -மரு பூமியிலே நெடும் தூரம் நடந்து இத்தனை ஜலம் பெறில் தம் பிராணன் தரிக்கும் என்னும்படி இளைத்து வருகிறார்கள் சில பாகவதர்கள்-அவன் அறியாமல் அந்த நீரிலே தங்கள் ஸ்ரீ பாதம் முதலான வற்றை விளக்கி இளைப்பாறிப்  போனால் -அதடியாக -என் அடியார் விடாய் தீர்த்தாய் -என்றும் –
ஒருவன் தனக்கு சூது சதுரங்கம் போருகைகும் -காற்று அபேஷிதமான போது வந்து இருக்கைக்கும் -இவற்றுக்காகா புறம் திண்ணை கட்டி வைக்க –
வர்ஷ பீடிதரா -அங்கே ஒதுங்குவோம் என்று -வருகிறார் சில பாகவதர் அங்கே ஒதுங்கி இருந்து போக –
தாவன் மாத்ரத்தாலே என் அடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும் –
இப் புடைகளிலே சிலவற்றை அவர்கள் அறியாது இருக்க -தானே ஆரோபித்து -என்கை –

மடி மாங்காய் இடுகை  -ஆவது-
மாங்காய் எடாமல் வெறுமனே வழி போகிறவன் மடியிலே -மாங்காயை மறைத்துக் கொண்டு சென்று இட்டு மாங்காய் களவு கண்டாய் -என்கை –
இது வலிய வாரோபிக்கும் அதுக்கு திருஷ்டாந்தம் –

பொன் வாணியான் -இத்யாதி -ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் –
அதாவது –
பொன் வாணியம் செய்வான் ஒருவன் ஆரேனும் பரீஷிக்கைக்காகக் காட்டின பொன்னை
உரைகல்லிலே வைத்து -ஒன்றும் சோராதபடி மெழுகாலே ஒத்தி எடுத்து –
நாள் வட்டதுடனே கால் பொன்னாயிற்று கழஞ்சு பொன்னாயிற்று என்று திரட்டுமா போலே –
ஒரு ஜன்மம் இரண்டு ஜன்மத்து அளவு அன்றிகே சேதனருடைய ஜன்ம பரம்பரைகள் தோறும் –விடாயைத் தீர்த்தாய் -ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் -என்றால் போலே உண்டாக்கும் -யாத்ருச்சிகம் –
ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய் -என்றால் போலே வரும் ப்ராசங்கிகம்-
அடியாரை நோக்கினாய் -என்றாப் போலே உண்டாகும் ஆநு ஷங்கிகம்-என்கிற ஸூ ஹ்ருத விசேஷங்கள் –
சாஸ்திர விஹிதமும் -சேதன விதிதமும் அன்றி இருக்க -தானே கல்ப்பித்தும் -கல்பிதமான தன்னை ஒன்றையே அநேகமாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கை

——————————————–

இவ் வஜ்ஞ்ஞாத ஸூ ஹ்ருதம் அடியாக ஈஸ்வரன் அங்கீ கரிக்கும் என்னும் அது –
காணலாம் இடம் உண்டோ -என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –
சுருக்கம் ஓழியக் காணலாம் –

(ஆயி ஸ்வாமிகள்-யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் பல ஹேதுவாக கண்ட இடங்கள் -விஷ்ணு தர்மம் -காசிராஜா-சாறு சர்மா – -360-மனைவி -லலிதை -அத்யந்த அபிமதை-அபி ருபாய் –
தீபம் ஏற்றி கைங்கர்யம் செய்து -ச பத்னிகள் கேட்க-சொல்கிறாள் – -தேவி ஆற்றங்கரையில் –சிந்து சவ்வீரா ராஜா புரோகிதன் மைத்ரேயன் ஏற்றின திரு விளக்கைக் கவ்வித் தள்ள -பெண் எலி யான தான் திரியைக் கவ்வா நிற்க -பூனை வந்து கழுத்தை கவ்வி ஏங்கி சாவும் நான் -நடுங்கும் மூஞ்சி – அத் திரியை வாங்கி அவிக்கிற விளக்கு நன்றாக எரிய அதன் பலமாக இந்த நன்மைகள் உண்டாயின -என்று சொன்னாள்-
ஸூவ்ரதை சரித்திரம் –தத்வ வித் ப்ராஹ்மணர் புத்ரி தாயார் இல்லை தந்தையும் போக தர்ம ராஜன் ப்ராஹ்மண வேஷம் கொண்டு வர -பூர்வ ஆர்ஜித பலம் இது –தெரியாமல் துஷ் க்ருதம்- பூர்வ ஜென்மத்தில் சுந்தரி வேசியை ஸ்த்ரீ ப்ராஹ்மண புத்ரனை மற்று ஒருவன் ஹிம்சிக்க -அவனுடைய மாதா பிதாக்கள் புத்ரனை கொல்வித்த நீ தாய் தந்தை இழந்து சபிக்க –தசரதன் -முகந்து சப்தம் கேட்டு மானை கொன்றால் போலே அதனால் சாபம் அடைந்தான்-பாபியான நான் உத்தம ஜென்மத்தில் -பிறந்து -படுவது எதனால் என்ன –உன் வாசல் திண்ணையில் ஒதுங்கின ஸ்ரீ வைஷ்ணவர் -தலையார் கள்ளன் என்று பிடிக்க
நீ ஆசுவாசம் படுத்தி வீட்டுக்கு உள்ளே கொண்டு சென்றாய் – அத்தாலே உண்டாயிற்று என்று எம தர்ம ராஜன் சொல்லிப் போக – –
இதனால் அஞ்ஞாத ஸூ ஹ்ருதமே ஹேதுவாக -சாதன புத்தியால் -ஈஸ்வர புத்தியால் வியாஜ்யமாக நினைத்ததால் அந்த பல பிராப்தி ஒக்கும் -இந்த இரண்டு சரித்ரங்களால்)

(க்ருத புத்த்திர் வாராணனா –இழுக்க வேண்டும் என்று சங்கல்பித்து இழுத்தேன் -செய்தது தீமை ஸ்பஷ்டம் யுகபத் ஸ்ருஷ்ட்டி -ஒரே காலத்தில் அனைவரையும்-இதுக்கு காரணம் சங்கல்பம்-அனுக்ரஹ அதீனம் இதுக்கு அடி -மேலே கர்மம் அடியாக ஒவ் ஒருவரையும் -பிறப்பித்து –அஸ்வத்த தீர்த்தத்திலே-ஸ்ரீ ரெங்க புண்ய தீர்த்தங்களில் ஓன்று)

அதாவது –
விதர்ப்ப ராஜ ஸூதையாய் -காசி ராஜ மகிஷியான லலிதை -ச பத்நிகளான முன்னூறு ஸ்திரிகளில் காட்டில் -ஆபிரூப்யம்-அதிவஸ்ய பர்த்ருமத்தை -தேக தேஜஸ்ஸூ -சர்வ குண சம்பத்தி -இவை உடையளாய்-அஹோராத்ரா விபாகம் அற-
பகவத் சந்நிதியிலே அநேகம் திரு விளக்கு ஏற்றி -அதிலே நிரதையாய் போருகிற படியைக் கண்டு –
உனக்கு இவ் ஆபி ரூபாதிகளுக்கும் தீப ஆரோபண கைங்கர்ய ப்ராவண்யத்துக்கும்-காரணம் என் என்று ச பத்நிகள் கேட்க –
அவள் ஜாதி ஸ்ம்ருதியோடே பிறந்தவள் ஆகையால் –
ததேஷா கதயாம் யேதத் யத் வ்ருத்தம்  மம சோபநா -என்று துடங்கி –
ஸௌ வீர  ராஜஸ்ய புரா மைத்ரேயோ பூத்  புரோஹிதா
தேனசாய தனம் விஷ்ணோ காரிதம் தேவி கா தடே –
அஹன்யஹாநி ஸிஸ்ரூஷாம் புஷ்ப தூபாம்பு லேபனை
தீபா தானாதி பிச்சைவ சக்ரே தத்ர வசந் திவிஜா -என்று
ஸௌ வீர ராஜ புரோகிதனான மைத்ரேயன் -தேவி ஆற்றம் கரையிலே -ஓர் எம்பெருமான் கோவில் உண்டாக்கி – அங்கே நாள் தோறும் சகல கைங்கர்யங்களையும் பண்ணி வர்த்தித்த படியையும் –

கார்த்திகே தீப தோ தீப  உபாத்தஸ் தேன சைகைதா
ஆசின் நிர்வாண பூயிஷ்டோ தேவஸ்ய புரதோ நிசி –
தேவதா ஆயதனே சாசம் தத் ராஹாமபி மூஷிகா
பிரதீப வர்த்தி க்ரஹேண க்ருத புத்த்திர் வராநனா
க்ருஹீ தாசம யாவர்தீ ப்ரூஷதம் சோ ரராவச
நஷ்டா சாஹம் ததஸ் தஸ்ய மார்ஜாலஸ்ய பயா நுகா
வக்த்ர ப்ராந்தே  நனஸ் யந்த்யா சதி பப்ரேரிதோ மயா
ஜ்ஜ்வால பூர்வத் தீப்த்யா தஸ்மின் நாயதநே புந -என்று
கார்த்திகை மாசத்திலே அவன் அந்த எம்பெருமான் சன்னதியில் ஏற்றின திரு விளக்கைத் தேடுகிற அளவில் -அக் கோவிலிலே பெண் எலியாய் கொண்டு
வர்த்திக்கிற தான் -அத் திரு விளக்கிலே திரியைக் கவ்விக் கொண்டு போவதாக நினைத்து கவ்வின அளவில் -ஒரு பூனை கத்தின குரலைக் கேட்டு அஞ்சி –
மரணத்தை அடையா நிற்க -அப்போது பயத்தாலே நடுங்குகிற தன் மூஞ்சியாலே அத் திரி தூண்டப் பட்டு -முன்பு போலே அத் திரு விளக்கு பள பளத்து எரிந்த படியும் –
ம்ருதாசாஹம்  ததோ ஜாதா வைதர்ப்பீ ராஜா கன்யகா
ஜாதிஸ் மரா காந்திமதீ பவதீ நாம் பரா குணை-என்று
அநந்தரம் தான் மரித்து விதர்ப்ப ராஜனுக்கு புத்ரியாய்-ஜாதி ஸ்ம்ருதியாதிகளோடே பிறந்த படியையும் –
ஏஷ பிரபாவோ தீபஸ்ய கார்த்திகே மாசி சோபனா
தத் தஸ்ய விஷ்ணு ஆயுதனே யஸ் ஏயம் வுயுஷ்டி ருத்தமா
அசம் கல்பிதம் அப்யஸ்ய ப்ரேரணம் யத்த க் ருதம் மயா
விஷ்ணு ஆயுதனே தீபஸ்ய தஸ்யத்தப் புஜ்யதே பலம்
ததோ ஜாதி ஸ்ம்ருதிர் ஜன்ம மானுஷ்யம் சோபனம் வபு
வஸ்ய பதிர் மே சர்வாசம் கிம்பு நர் தீப தாயினாம் -என்று அந்த அஜ்ஞ்ஞாத ஸூ ஹ்ருதம் பலமாக தனக்கு இவ் வேற்றங்கள் எல்லாம் உண்டான படியையும் -சொன்னாள் என்று –
ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலே லலிதா சரிதம் விஸ்தரேண சொல்லப் பட்டது இறே-

இனி -ஆதி -சப்தத்தாலே –
தத்வ வித்தாய் இருப்பான் ஒரு பிராமணனுடைய புத்ரியான ஸூவ்ரதை-அதி பால்யத்திலே மாத்ரு ஹீனையாய் -அது தோற்றாதபடி-பரம தயாளுவான –
பிதா வர்த்தித்துக் கொண்டு போர வளர்ந்து -இனி ஒருவர் கையிலே பிரதானம் பண்ண ப்ராப்தம் என்னும் அளவிலே -அந்த பிதாவும் மரிக்கையாலே-யதீவ சோகார்த்தையாய்
யேன சம்வர்த்தி தாபாலா எனாஸ்மி பரிரஷிதா
தேன பித்ரா வியுக்தாஹம் நஜீவயம் கதஞ்சன
நத்யாயம்வா நிபதிஷ்யாமி சமித்தேவா ஹூதாசனே
பர்வ தாத்வா பதிஷ்யாமி பித்ரு ஹீனா  நிராஸ்ரையா-என்று தேஹா த்யாகோத் யுக்தையான  அளவிலே
ஆகத்ய கருணா விஷ்டோ யமஸ் சர்வ ஹிதே ரத
ஸ்தவிரோ ப்ரஹ்மணோ பூத்வா ப்ரோவாசே தம் வசஸ் ததா -என்கிறபடியே
சர்வ பிராணிகள் உடையவும் ஹிதத்தில் நிரதனாய் இருக்கும் யமன் -க்ருபா விஷ்டனாய் -ஒரு பிராமண வேஷத்தைக் கொண்டு  வந்து –
அலம்பாலே விசாலாஷி ரோதநே நா திவஹ்வலே
ந பூய ப்ராப்ய தேதாதஸ் தஸ்மான் நார்ஹதி சோசிதும் -இத்யாதியாலே இவளுடைய சோகாப நோதனத்தை பண்ணி –
தஸ்மாத்த்வம் துக்க முத்ஸ்ருஜ்ய ச்ரோதும் மர்ஹசி ஸூவ்ரதே
பித்ருப்ப்யாம் விப்ரயோகோயம் யேனா பூத் கர்மணாதவ-என்று- ஆகையால் உன்னுடைய துக்கத்தை விட்டு -இந்தா மாதா பித்ரு வியோகம் உன்னுடைய யாதொரு கர்மத்தாலே உண்டாயிற்று -அத்தைச் சொல்ல கேள் என்று தான் சொல்லி –
புராத்வம்  சுந்தரி நாம வேஸ்ய பரம ஸூந்தரி
நிருத்த கீதாதி நிபுணா வீணா வேணு விசஷணா-என்று துடங்கி –
நீ பூர்வ ஜன்மத்தில் -சுந்தரி என்பாள் ஒரு வேஸ்யை-உன்னாலே வசீக்ருதனாய் -உன்னுடன் சம்ஸர்க்கித்து   போருவான் ஒரு பிராமண புத்ரனை உன் நிமித்தமாக
ஸ்பர்சையாலே -ஒரு ஷுத்திரன் வதிக்க-அவனுடைய மாதா பிதாக்கள் எங்கள் புத்ரனை கொல்லுவித்த நீ -இனி ஒரு ஜன்மத்தில் மாதா பிதாக்களை இழந்து மருகி பரிதவிப்பாய் என்று சபித்த படியாலே காண் உனக்கு இந்த சோகம் வந்தது என்ன –

ஆனால் இந்த பாவியான நான் உத்தம ஜன்மத்தில் பிறக்கைக்கு ஹேது என் என்று கேட்க –
ஸ்ருணு தஸ்ய மகா ப்ராஜ்ஞ்ஞே நிமித்தங்க ததோ மம
யே நத்வம் ப்ராஹ்மணஸ் யாஸ்ய குலே ஜாதா மகாத்மான -என்று துடங்கி –
ஞ்ஞாநாதிகனாய்  ஒன்றிலும் பற்று அற்று -சர்வத்ர சம தர்சியாய் -பகவத் த்யான பரனாய் -க்ராமைக்ராந்தர ந்யாயத்தாலே எங்கும் சஞ்சரிப்பான் ஒரு பாகவதன் ஒரு ராத்திரி உன்
புறத் திண்ணையிலே ஒதுங்கின அளவிலே -தலாரிக்காரன்  அவனை கள்ளன் என்று பிடித்து கட்ட -அவ்வளவிலே நீ வோடிச் சென்று -அக் கட்டை விடுவித்து அந்த பாகவதனை
உன் க்ரஹத்திலே கொண்டு புக்கு ஆஸ்வசிப்பித்தாய்-அத்தாலே உனக்கு இது உண்டாயிற்று என்று இதிகாச சமுச்சயத்திலே சொல்லப்பட்ட ஸூவ்ரதோ உபாக்யானமும் –

இன்னம் ஒரு ஸ்திரி யமபடராலே அத்யந்த பீடிதையாய் -ஆகாசத்திலே ரஷக அபேஷை தோற்ற -கூப்பிட்டுக் கொண்டு வரா நிற்க –
அஸ்வத்த தீர்த்தத்திலே சிரகாலம் தபசு பண்ணி இருந்த மாதலி -அத்தைக் கண்டு கிருபை பண்ணி -தான் ஒரு நாள் செய்த தப பலத்தை அவளுக்கு கொடுக்க –
அப்போதே யம படரும் பந்து பூதராய்-யாம்ய மார்க்கமும் – ஸூ கோத்தரமாய் யதனா சரீரமும் போய் -விலஷண சரீரமுமாய் இவளையும் கொண்டு அவர்கள் யம சந்நிதியில் சென்ற அளவில் –
பிதேவ தர்ம ராஜோ பூத் தச்யாஸ் தத்ப்ரிய தர்சன
சாந்த்வயன்ச மஹாதேஜோ வியாஜ ஹாராச தாம் ப்ரிதி -என்று பித்ருவத் ப்ரன்னவதனாய் இவளைக் குறித்து இன்னும் சொல்லும் சொல்லி யமன் –
பத்ரேத்வையா ஷுஷ்டுக்ருதம் நகிஞ்சிதிஹா வித்யதே
இதோ த்வாதச ஜன்மாந்தே த்வாம் கச்சித் சித்த ஆவிசத்
விஷ்ணு பக்தோ நிவாசார்த்தம் ராத்ர்யா–சாது சமாஹம்
சாஹிவை பிரம விதுஷீ ஸ்ரீமத் ரங்கம் உபாஸ்ரிதா
தத்ர தீர்தோத்தமம் ஸ்ரீ மத ஸ்வத்தம் நாம சம்ஸ்ரிதா
தர்மஜ்ஞா தர்ம பரமா யஸ்யாஸ்தே சங்கமோ பவத் -என்று மாதலியினுடைய அங்கீகாரம் உனக்கு வருகைக்கு உறுப்பாக நீ அறியச் செய்த ஒரு நன்மை இல்லை –
இன் ஜென்மத்துக்கு பன்னிரண்டாம் ஜன்மத்திலே ஒரு ராத்திரி உன்னுடைய க்ரஹத்திலே தங்கிப் போகைகாக ஒரு பாகவதன் வந்து உன்னைக் கிட்டி இருந்து போனான் –
தத் சந்நிதானத்தினாலே உண்டது காண் உனக்கு இந்த சாது சமாஹம் என்று முன்பே உண்டானதோர் அஞ்ஞாத ஸூஹ்ருதத்தை இவள் பேற்றுக்கு அடியாகச் சொன்னான்
என்கிற காருட புராணத்திலே கோவில் மகாத்ம்யத்தில் கதையும் முதலான வற்றைச் சொல்லுகிறது –

சுருக்க மொழியக் காணலாம் -என்றது விஸ்தரேண காணலாம் என்றபடி –
இவ் அஞ்ஞாத ஸூஹ்ருதங்கள் அடியான பகவத் கடாஷமே இவர்களுக்கு இவ்வோ  பலங்கள் வருகைக்கு ஹேதுவாகையாலே-
அஞ்ஞாத ஸூஹ்ரு தங்களை பற்றாசக் கொண்டு ஈஸ்வரன் அங்கீகரிக்கும் என்னும் இதுக்கு இவை உதாஹரணம் ஆகலாம் இறே-

————————————–

ஆக –
சர்வேஸ்வரன் தன் நிர்ஹேதுக கிருபையாலே சம்சார சேதனை உஜ்ஜீவிப்பிக்கையில் யுத்யுக்தனாய் –
கரண களேபர பிரதாநாதிகளைப் பண்ணி -ஸ்வ ஆஞ்ஞா ரூப சாஸ்திர அநு குணமாக இவர்கள் பக்கலிலே சில ஸூ ஹ்ருத விசேஷம் கண்டு
அங்கீகரிக்கலாம் வழி உண்டோ என்று பார்த்து -தத் அபாவத்தில் –
சர்வ முக்தி  பிரசங்கமும் -வைஷம்ய நைர் க்ருண்யமும் வாராமைக்காக -அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை தானே கல்பித்து –
அவை தன்னை ஜன்ம பரம்பரைகள் தோறும் -ஓன்று பத்தாக்கி நடத்திக்  கொண்டு போரும்படியை விஸ்தரேண அருளிச் செய்து –
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் அங்கீகார ஹேதுவாம் படியையும்-தர்சிப்பித்தாராய்  நின்றார் கீழ் –
இந் நிர்ஹேதுக விஷயீகார வாசி அறியாதவர்கள் -இதுக்கு இசைந்து வைத்தே -ஏதத் அநு சந்தான வித்தர் ஆகாமல் இருப்பர்கள் என்கிறார் மேல் –

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்
வாளா தந்தான் என்று
இருப்பர்கள்-

(ஆயி ஸ்வாமிகள்-ஹேது ஆகாது -சர்வ முக்தி பிரசங்கம் ஆகாமைக்கும் – வைஷம்யம் நைர் க்ருண்யம் வாராமைக்கும் தானே -மந்த அதிகாரிகள் -பெருமை தெரியாமல் -ஸூ யத்ன கந்த அஸஹத்வம்-பாரதந்த்ரம் உள்ள -ஞானிகள் -இல்லாதார் அஞ்ஞானிகள் 
யாதிருச்சிகாதிகளை கண்டு அருளினான் என்று ஈடுபடாமல் வாளா இருப்பார்கள்
அன்றிக்கே-வாளார் –என்றுமாம் -ஸூ பிரயோஜனம் வாள் கையில் கொண்டு வாள் வழி ஸூ சக்தியால் இத்தைப் பெற்றோம் என்று இருப்பார்கள் -)

(காருண்யம் வெளிப்படுத்தவும் -வைஷம்யம் நைர் க்ருண்யம் இல்லாமல் கடாஷிப்பான் என்று சொன்னால் தான் பெருமை -எனவே அஞ்ஞான ஸூ ஹ்ருதம் அடியாக என்று உணர வேண்டும் வெறுமனே சொல்லக் கூடாதே வெறுமனே-உபகரித்தான் -நிர் ஹேதுகம் என்பர் மந்த அதிகாரிகள் – அஞ்ஞாத ஸூஹ் ருதம் அடியாக கடாக்ஷித்தான் என்று ஈடுபடாமல் -பெருமையை உணராமல் என்றபடி -)

அஞ்ஞர் ஆகிறார் -நிர்ஹேதுக விஷயீகார வைபவம் அறியாதவர்கள் –
வாளா தந்தான் என்று இருப்பர்கள் -என்றது -இப்படி உபகரித்து அருளுவதே என்று தலை சீய்த்து ஈடுபடுவது வேண்டி இருக்க -அது செய்யாமல் -வெறுமனே உபகரித்தான் என்கிற மாத்ரத்தை அநு சந்தித்து இருந்து விடுவர்கள் என்றபடி -(தந்தான்-என்று வாளா இருப்பர்கள்)

——————————————

இதன் வாசி அறிந்தவர்கள் ஈடுபடும் படியை அருளி செய்கிறார் –

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக்  கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

(ஆயி ஸ்வாமிகள்-ஞானவான்கள் – நிர்ஹேதுக கிருபா வைபவம் அறிந்தவர்கள் -என்றபடி
சாஷாத் நிர்ஹேதுகம் -வெறுமனே நிர்ஹேதுகம் இல்லை –எது என்று நாமும் வேதமும் அறியாத தான் மட்டுமே அறிந்த ஓன்று
உபகாரம் -உபகரித்த நீ அறியில் அறியும் இத்தனை என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ —
பர தந்த்ர விசேஷண ஸ்வரூபம் அறிந்தவர்கள் –ஸ்வதந்த்ர விசேஷண பர ப்ரஹ்மத்தையே பற்றி –அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் ஹேது வாகாதே–
என்னது இல்லையே நாம் அறியோம் -சாஸ்திரமும் அறியாதே -காரணம் ஆக்க முடியாதே -குறுக்கே இந்த அஞ்ஞாத ஸூஹ்ருதம் –
இன்னும் மற்ற பேர் எதனால் போக வில்லை என்று தடுக்கவும் அவன் தலையில் குற்றம் ஏறிடாமைக்கும் தானே 
அவஸ்துவான என்னை வஸ்துவாக்கி -நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான தன்னை நித்ய சம்சாரிகளுக்கும் கீழே -உள்ள என்னை -அபேஷா நிரபேஷமாக –
நெஞ்சில் திகழ்கின்றானே தலையோடு முடிந்தேனோ -ஜடாயு போலே செய்ய வில்லையே – கண்டேன் என்று வந்தேனோ த்ருஷ்டா சீதா திருவடி போலே –
எந்த நன்மையையும் செய்யாமல் இருக்க –பெறாத பேறு பெற்று விளங்குகிறான்
உதிரக் கையானாய் பர ஹிம்சையே யாத்திரையாக திரியா நிற்கவும் மத்யே நினைவற வந்து உஜ்ஜீவிப்பித்துக் கொள்ளும் ஸ்வாமி -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்
அறியாதது அறிவித்த அத்தா -கனா கண்டு அறியாத தத்வார்த்தங்களை அறிவித்த ஸ்வாமி -சேஷி நீர் பண்ணிய உபகாரங்கள் சேஷ பூதனான அடியேன் அறியலாய் இருந்ததோ-பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தாய்-அசத்தான என்னை சத்தாக்கி சத்தையை நிலையிட்டாய் -அடிமை கொண்டாய் -அஞ்ஞான குரூரமான மனசை நினைவறக் கெடுத்து -ஸூ மனஸ்ஸூ அருளி –தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக கொண்டு அருளியதை ஈடுபட்டு அருளுவார் –சாஷாத் -அவன் மட்டுமே அறிந்த நிர்ஹேதுகம் –)

ஞானவான்கள் ஆகிறார் -நிர்ஹேதுக விஷயீகார வைபவத்தை உள்ளபடி அறியும் அவர்கள்-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான் -இத்யாதி –
அநாதி காலம் அவஸ்துவாய் கிடந்த என்னை -இன்று வஸ்துவாக்கி -நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான தன்னை –நித்ய சம்சாரிகளுக்கும் இவ் வருகான என்னுடைய ஹேயமான நெஞ்சுள் வைத்தான் –
பெரிய உடையாரைப் போலே தலை உடன் முடிந்தேனோ -திருவடியைப் போலே -த்ருஷ்டா சீதா -என்று வந்தேனோ –
அன்றிக்கே –தன்னுடைய ஆஞ்ஞா அனுவர்தனம் பண்ணினேனாம் படி விஹித கர்மங்களை அனுஷ்டித்தேனோ –
என்ன நன்மை செய்தேனாக என் நெஞ்சிலே புகுந்து -பெறாப் பேறு பெற்றானாய் விளங்குகிறது –

விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து உஜ்ஜீவிப்பியா நின்ற ஸ்வாமீ-

எனக்கு அஞ்ஞாத ஞாபனத்தைப் பண்ணி ஸ்வாமியான நீ சேஷ பூதனான என் பக்கல் பண்ணின உபகாரம் -உபகரித்த நீ அறியில் அறியும் இத்தனை என்னால்
சொல்லித் தலைக் கட்டப் போமோ –
அசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பனாய் கிடந்த என்னை -சந்தமேனம்-என்கிறபடியே சத்தாவானாய்  ஒரு வஸ்துவாம்படி பண்ணி -அந்த சத்தை நிலை நிற்கும் படி
கைங்கர்யத்தையும் கொண்டு அருளினாய் –

அம்ருதத்தையும் விஷயத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே
உன்னையும் உகந்து ஷுத்திர விஷயங்களையும்  உகக்கும்  பொல்லாத நெஞ்சைப் போக்கினாய் –
அநந்ய பிரயோஜநமாய்  கொண்டு உன்னையே அனுபவிக்கும் மனசை தந்தாய் –

என்று அவன் நிர்ஹேதுகமாகப் பண்ணின உபகார விஷயங்களை அநு சந்தித்து தலை சீய்த்து ஈடுபடா நிற்ப்பர்கள் -என்கை

அன்றிக்கே-
அஞ்ஞர் இத்யாதிக்கு -வாளார் தந்தார் -என்று பாடமாகில் –
இப்படி சர்வேஸ்வரன் தன் நிர்ஹேதுக கிருபையாலே தங்களை உஜ்ஜீவிப்பிக்க கிருஷி பண்ணிக் கொண்டு வரும் பிரகாரத்தை அறியாத மனுஷ்யர் –
வாள் வலியாலே ஜீவித்து திரிவார் -தங்களுக்கு வந்த தொரு சம்ருதியை நம்முடைய  வாளார் தந்தார் என்று நினைத்து இருக்குமா போலே –
நிர்ஹேதுகமாக வந்த பகவத் அங்கீகாரத்தை தங்கள் ஸூக்ருத பலத்தாலே வந்ததாக நினைத்து இருப்பர்கள் என்று பொருளாகக் கடவது –

அப்போதைக்கு –
சகலமும் அவன் அருளாலே வந்தது என்று தெளியக் கண்டவர்கள்- அவன் நிர்ஹேதுகமாக பண்ணின உபகார விசேஷங்களை அநு சந்தித்து ஈடுபடும்படியை
அருளிச் செய்கிறார் என்று -மேலில் வாக்யத்துக்கு சங்கதி

———————————————-

இந்த நிர்ஹேதுக விஷயீகார ஸ்தாபகம் ஆனதோர் ஐதிஹ்யத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

(ஆயி ஸ்வாமிகள்-அஞ்ஞர்– பேற்றுக்கு அடி அஞ்ஞாதமான அசேதனம் -என்று நினைப்பர் -அஞ்ஞாத ஸூஹ்ருதம் தான் அடி என்ற நினைவு உண்டே -இவர்களுக்கு 
அஞ்ஞாத ஸூஹ்ருதம் சங்கல்பித்த அவனே பேற்றுக்கு அடி -விஞ்ஞாதமான பரம சேதனம் -நன்றாக அறிந்தவன் -ஞான வான்கள் மெய்ஞ்ஞானிகள் கூற்று
வேதாந்தம்-தாத்பர்யம்-ரஹஸ்ய த்ரயம் – -இரண்டும் – சாம்ராஜ்யம் பண்ணும் நல்லடிக்காலம் -இவ்வர்த்தம் வெளிப்படும் நல்ல நாள்
அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற நம் பெருமாள் -புறப்பாடு -தனையும்-பெருமாளுக்கு தக்க -பெரிய திரு மண்டபத்தில் -கிழக்கு பக்கம் –
உடையவரை அழகை சேவித்துக் கொண்டு காத்து இருக்கும் நிழலில் ஒதுங்கி -பகவத் குண அனுபவம் பண்ணிக் கொண்டு–ஸூஹ்ருதம் அடியாக இங்கே கூடி நிற்கிறோம்
பிரபாகர் அபூர்வ தேவதையை கல்பித்தால் போலே -அபூர்வம் கிளம்பி -மகா பூர்வம் -அபூர்வ வாதம்-அதே போலே ஸூஹ்ருத தேவரை நீர் கல்பித்தீரோ-இதுவும் அசேதனம் தானே —
பிரசங்காத் ப்ரஸ்த்துதம் -சாத்யமாய் அசேதனம் புறப் பூச்சு -இல்லை –சித்தம் -பரம சேதனம் -வைரம் பற்றின அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனை-வடிவு பட்ட சாஷாத் ஸூஹ்ருதம் காணும் அவர் சொல்வது -நிர் ஹேதுகம் -ஸ்தாபித்து அருளிச் செய்த வார்த்தை ஸ்மரிப்பது –ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகளை அதிகாரிகள் அல்லாதார் கேட்கக் கூடாதே நினைவில் கொள்ள வேண்டும் -)

(சாஷாத்தாக -நிர்ஹேதுகமாக பல பர்யந்தம் -அருளினாலும் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் பற்றாசாக -என்பது –
வரவாறு ஓன்று இல்லை -அடியேனுக்கும் தெரியாது -சாஸ்திரமும் ஒத்துக் கொள்ள வில்லையே -ஆகவே நிர்ஹேதுகம்
ஆகையால் சாஷாத் -இத்தையும் எதிர்பார்க்காமல் –என்று நேராக சொல்லாமல் -ப்ராதிதிக தோற்றுவதால் –
நிர் ஹேதுகத்வம் ஸூசகம் வேதாந்தத்தில் -மறைந்ததே இருக்கும்
நாயமாத்மா-அயம் ஆத்மா -தியானாதிகளால் அடைய முடியாதே -எமே ஏஷ வ்ருணித தேன லப்ய –அடையப் படுகிறான் -தன்னை அவனுக்கே முழுவதுமாக காட்டி அருளுகிறார்
யார் ஒருவன் -ஏதாவது பண்ண வேண்டுமா வேண்டாமா -பிரிய தமனாக இருப்பவனையே வர்ணித்து கொள்கிறான் -ஹேது இருக்குமே பிரிய தமன்-
ஆனால் இவனால் எத்தாலும் அடைய முடியாது என்று அருளிச் செய்த அனந்தரம் ஏதோ அல்பம் எதிர்பார்ப்பதாக சொன்னால் விரோதிக்குமே
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக அஞ்ஞாத ஸூஹ்ருதம் -பற்றாசாகக் கொண்டு கடாஷியா நிற்கும்
இது இவர் திரு உள்ளம் இல்லையே -எதிர்பார்க்கிறான் என்று சொல்ல முடியாதே
சாஸ்த்ர தாத்பர்யம் -ரஹஸ்ய த்ரயம் –வேதாந்த தாத்பர்ய உபய த்ருஷ்ட்டி வேண்டுமே –அதனாலே ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகளைக் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் ஸுஹார்த்தாலே அனைத்தையும் பண்ணினான் என்றாலே சர்வ முக்தி பிரசங்கம் வருமே –
நடுவில் ஏதோ ஓன்று நடக்கும் -என்றால் அவன் ஸ்வாதந்தர்யத்துக்கும் நிரபேஷத்துக்கும் குறை வராமல் வைஷம்ய நைர் க்ருண்யம் வாராமல் இருக்க -ஆழ்வார் பாசுரங்கள் கீழே பலவும் காட்டி அருளினார்
அஞ்ஞாத ஸூஹ்ருதம் இவற்றில் ஒன்றுமே இல்லையே -மறைத்து அருளிச் செய்கிறார் என்று ஆய் ஸ்வாமி இதனால் அருளிச் செய்கிறார்-
மேல் வேறே ஓன்று குழப்பம் – உபாயாந்தரம் சஹேதுகம் புரியும் – நமக்கு நிர்ஹேதுகம் -ஆழ்வாருக்கு நிர்ஹேதுகம் -இரண்டுக்கும் நிறைய வாசி உண்டே
நமக்கும் பக்தி யோகனுக்கும் வாசி ஸ்பஷ்டம் – அத்யந்த பாரதந்தர்யம் அறிந்தவர்கள் ஆழ்வார்கள் 
எல்லா குணங்களும் எல்லா சாஸ்திரமும் ஜீவிக்க வேண்டும்
ஸாத்ய உபாயம் -சித்த உபாயம் இரண்டும் -ஸ்வா தந்தர்யம் இருப்பார்க்கும் இல்லாதவருக்கும் -இது தெளிவு 
நிரங்குச ஸ்வாதந்தர்யம் அடியாக -இந்த இரண்டு கோஷ்டிக்கும் வேலை இல்லையே
இதற்கு ஆழ்வார்கள் – நம்மிடம் அஞ்ஞாத ஸூஹ்ருதம் அதிகாரம் – நிரங்குச ஸ்வாதந்தர்யத்துக்கு விநியோகம் வேண்டுமே -இத்தையும் வேண்டாமல் ஆழ்வார்களுக்கு –
மயர்வற மதி நலம் அருளினது நிர்ஹேதுகம் -அத்தை வைத்துக் கொண்டு நாம் உரிமை கொள்ள முடியாதே –
சாஸ்த்ர யோஜனையில் -அஞ்ஞாத ஸூஹ்ருதம் அடியாக -என்றும் -தாத்பர்ய யோஜனையில் -ஒன்றுமே இல்லாமல் -என்றும் -கொண்டு
நாம் உபாயாந்தரம் ஒன்றும் பற்றாமல் அபாயத்தையே பண்ணிக் கொண்டே இருக்கிறோம் -ஈஸ்வரஸ் ச ஸுஹார்த்தம் -போது அனைவருக்கும்
யாதர்ச்சுக ஸூஹ்ருதம் அடுத்து -இதுவும் அனைவருக்கும் வருமே –பொது கடாக்ஷம் மாற்றி விசேஷ கடாக்ஷம் எங்கே மாறும் -அவன் மாற மாட்டார் –
தண்டவாளம் தானே மாற்ற வேண்டும் -ரயில் தானே மாறாதே -அதே போலே -தடம் புரண்டது என்கிறோம் ரயில் புரண்டது என்று சொல்லாமல் -தப்பு தண்டவாளத்தில் தானே
உபாய பாவம் இருந்தாலும் அபாய பாவம் இருந்தாலும் சித்த உபாயம் சித்திக்காதே –அஞ்ஞாத ஸூஹ்ருதமும் அவனே சேர்த்து வைத்து இருக்க –
உபாய அபாய பாவத்தால் இவை வேலை செய்யாதே – கடாக்ஷிக்க வரும் பொழுது குற்றங்கள் -பாப கர்மாக்களோ விஷயாந்தர சம்பந்தமோ
தேவதாந்த்ர பஜனமோ பாகவத அபசாரமோ இருந்தால் -கார்யகரம் ஆகாதே –
அபாயம் உள்ளவர்களுக்கு பலிக்க வில்லை என்றால் -அபாயம் இல்லாமை ஹேது வாக்குமோ என்னில் -இல்லையே -அதிகாரம் தானே
தடம் மாறாமல் இருக்க தானே புகை வண்டி நிலையத்துக்கு வர முடியும் -இது காரணம் இல்லையே -அதே போலே –தடம் புரளாமல் இருப்பதே இதன் கர்தவ்யம் –
அபாயம் இல்லாமை இதே போலே அதிகாரி விசேஷணம் தான் -இதுவே தாத்பர்ய சாரார்த்தம் –
உபாயத்தையும் அபாயத்தையும் பற்றாமல் -அவனையே தடுக்காமல் இருக்க வேண்டும் -தடுத்தவர்கள் பலம் அடியார்கள் –
ஞானாதிகரான முதலிகள் –384 -இனி ஞானாதிகர் ஈடுபட்டு இருக்கும்-ஆய் ஸ்வாமிகள் வியாக்யானம் – -ஞானவான் -சூரணை வார்த்தை –
ஞானம் அதிகம் உள்ள ஆழ்வாராதிகள் என்று காட்டாமல் – ஆழ்வார்கள் பாசுரம் பிரமாணம் -அதிலும் நம்மாழ்வார் பாசுரங்களையே பிரமாணம் காட்டி அருளுகிறார் –
ஞானாதிகர் -அவர் ஒருவரே -அஞ்ஞாத ஸூஹ்ருதத்தையும் எதிர்பாராமல் இவர் இருப்பாரே –
இப்படி யார் இருந்தாலும் இப்படித் தான் ஈடுபடுவார்கள் என்று காட்டி அருளுகிறார் –
ஸூஹ்ருதம் என்று சொல்லுகிறது நினைக்கிற விஷயம்-நினைப்பது  சர்வேஸ்வரன் தானே -நாமும் அறியோம் -சாஸ்திரமும் அறியாதே –
உன் தன்னைப் பிறவி புண்ணியம் நாம் உடையோம் என்பது போலே -உன் சரண் அல்லால் வேறே சரண் இல்லை -உன் நினைவே சரண் -பேற்றுக்கு அடி அவன் நினைவே)

அதாவது –
சகல வேதாந்த தாத்பர்ய அர்த்தங்கள் எல்லாம் -சம்சய விபர்யயம் அற நடந்து செல்லுகிற -நல்லடிக் காலமான பாஷ்யகாரர் காலத்தில் –
ஒரு நாள் பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து -பெரிய திருமண்டபத்துக்கு கீழாக ஞானாதிகரான முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் யார் வாசலில் அவர்கள் புறப்பாடு பார்த்து இருந்தோமோ என்று தெரியாது –
இன்று வகுத்த சேஷியான பெருமாள் புறப்பாடு பார்த்து வந்து இருக்க என்ன-ஸூஹ்ருதம் பண்ணினோம் என்ன –
தத் பிரசங்கத்திலே -நித்ய சம்சாரியாய் போந்தவனுக்கு -பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே –
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஞ்ஞாத ஸூக்ருதம் என்ன பிறந்ததாய்-
அவ்வளவிலே கிடாம்பி பெருமாள் இருந்தவர் -நமக்கு பகவத் விஷயம் போல ஸூஹ்ருத தேவர் என்னும் ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயர் என்ன –
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிறது நினைக்கிற விஷயம் தன்னைக் காண் -என்று அருளிச் செய்ய –
ஆக -இப்படி பின்பு பிறந்த வார்த்தைகளை இவ்விடத்திலே நினைப்பது -என்றபடி –

இக் கதை தான் -தரு துயரம் தடாயேல்-என்கிற பாட்டில் வ்யாக்யானத்திலே சங்க்ரஹேண பூர்வர்கள் அருளி செய்து வைத்தார்கள் -இறே –

இத்தால் அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் உண்டாயிற்று ஆகிலும் பல ஹேது அன்று –
அத்தை வ்யாஜமாக்கி அங்கீகரிக்கும் ஈஸ்வரனே பல ஹேது என்றது ஆயிற்று –

———————————————————–

கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறார்-

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

(ஆயி ஸ்வாமிகள்-தன் சம்பந்தமே ஹேதுவாக -அங்கீ கரிக்கிறார் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் தேவை இல்லையே -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக சேதனனால்
அஞ்ஞாதமான ஸூ ஹ்ருத -துச்ச நன்மைகள் -சேதன அங்கீ கார பற்றாசாக கொண்டு – கடாஷியா நிற்கும் –
ஆகையால் -சாஷாத் நிர்ஹேதுக உத்தி சித்த தாத்பர்யம் -வேதாந்தம்- ரஷ்யாம் அபேக்ஷை எதிர்பார்க்கிறான் என்பதால் – -ஏதாவது ஒன்றையே –
காரண விசேஷம் இன்னது என்று அறிய முடியாத காரணத்தைப் பற்றி அருள்கிறான் – வேதாந்த யோஜனைக்காக மறைத்து அருளுகிறார் -)

அதாவது –
கீழ்ச் சொன்ன  பிரகாரத்தாலே –
சர்வ முக்தி பிரசாங்காதிகள் வாராமைக்காக இச் சேதனன் அறியாமல் விளையும் அவையான சில ஸூஹ்ருத விசேஷங்களையே-இவனை
அங்கீகரிக்கைக்கு பற்றாசாக பிடித்துக் கொண்டு விசேஷ கடாஷத்தைப் பண்ணா நிற்கும் -என்கை-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –366-380 -நிர்ஹேதுக கிருபை வைபவ பிரகரணம் — ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

January 2, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -80–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஐந்தாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் 
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் 

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது எட்டாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி -ஸூசிக்கப்பட்டது
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது -நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் – படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம்

——————————————

இனி ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது  பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது-366- என்று துடங்கி -நிவர்த்ய ஞானம் பய ஹேது நிவர்த்தக ஞானம் அபய ஹேது -406–என்னும் அளவாக இவ் வதிகாரிக்கு அநாதி கால ஆர்ஜித கர்ம விநாச காரணமாய் அத்வேஷம் முதலாக  ப்ராப்தி பர்யந்தமாக நடுவாக  உள்ள பேறுகளுக்கு எல்லாம் பிரதான ஹேதுவான
பகவந் நிர்ஹேதுக க்ருபா வைபவம் சொல்லப் படுகிறது –

சம்சாரிகள் தோஷமும் ஸ்வ தோஷம் என்று நினைக்கை முதலாக  ப்ரசக்த அனு ப்ரசக்தமாய் வந்த அர்த்த விசேஷங்களை பிரதிபாதித்துத் தலைக் கட்டின  அநந்தரம் கீழ்
ஸ்வ தோஷத்துக்கும் இத்யாதி வாக்யத்தாலே இவனுக்கு அநவரத கர்தவ்யமாய் சொன்ன
ஸ்வ தோஷ  பகவத் பாகவத குண அனுசந்தானங்களில் வைத்துக் கொண்டு  பாகவத குண அனுசந்தானம் பிரதிபாத்ய அம்சத்துக்கு உபயுக்தம் அல்லாமையால் அத்தை விட்டு
அதுக்கு உபயுக்தமான ஸ்வ தோஷ  பகவத் குண அனுசந்தானங்களை அங்கீகரித்துக் கொண்டு அவை இரண்டுக்கும் பிரயோஜனம் இன்னது என்கிறார் மேல் –

சூரணை -366
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

(ப்ரஸக்தம்–ஸூ தோஷத்வ அனுசந்தானம் – -அனு ப்ரஸக்தம் –பர தோஷங்களை பகவத் பாகவதர்களுக்கு அறிவியாமை -பகவத குண உபயுக்தம் சங்கதி -பய க்ருத பய நாசன -வேதாந்த ப்ரயுக்தம் இந்த சூரணை-)

(ஆயி ஸ்வாமிகள்-ஏவம் வித சிஷ்ய குண விசிஷ்டனுக்கு -பகவத் பிரசாதம் -நிர்ஹேதுகம் வெளியிட்டும் -மறைத்தும் அருளிச் செய்கிறார்-
அத்வேஷம் -முதல் ஆபி முக்கியம் -சாது சமாகம் ஆச்சார்ய பிராப்தி நடுவாக -பகவத் பிராப்தி -ஆச்சார்ய கைங்கர்யம் -அனைத்துக்கும் பகவத் -பிரசாத நிர்ஹேதுகத்வமே
யாவத் பிராப்தி அனுவர்த்திக்கும் பய அபய காரணங்கள் -இன்னது என்கிறார் –
ஸர்வத்ர குண கிரஹணம் பார்க்க வேண்டிய நிர் தோஷனான இவ் வதிகாரி -அநாதி காலம் பிடித்து ஸூவ தோஷம் நினைக்க நினைக்க –அடையாமை அபிராப்தி -அதுக்கு ஹேது ஸூதோஷம் — காட்பேறிக் கிடக்கிற அவித்யாதிகளும் –வைரம் பாய்ந்து இருக்குமே —
போக மாட்டாமோ என்ற பயத்துக்கு ஹேது இந்த அனுசந்தானம் –எங்கனே இவற்றை தாண்டுவோம் என்ற எண்ணம்-அந்த தோஷமே பச்சையாக அங்கீ கரிக்கும் பகவத் குண அனுசந்தானம் – இனி இப் பிராப்யம் கை புகுந்ததே என்று பயம் நீங்கப் பெறுவோம்)

(துதுரந்தஸ்யா அநாதே அபரகரநீயஸ்ய மகாதோ நிஹீந ஆசாரோ அஹம் நிரூபசு அஸூபஸ் யாஸ்பதமபி– தயா சிந்தோ -பந்தோ- நிரவதிகவ வாத்சலிய ஜலதே தவஸ் மாரம் ஸ்மாரம் குண கணம் இதீ இச்சாமி கதாபி– ஸ்தோத்ர ரத்னம் -பயம் பிறந்த காரணங்களையும் பயம் நீங்கப் பெற்றதுக்கும் காரணம் காட்டி அருளினார்-)

ஸ்வ தோஷம் ஆவது –
அநாத்ம குணாதிகளும்-அதுக்கு மூலமாய் -அநாதி காலமே பிடித்து காட்பேறிக் கிடக்கிற
அவித்யாதிகளும் -ஏதத் அனுசந்தானம் இது இதுவாக இன்னம் சம்ஸ்ரணம் வரில் செய்வது என் என்னும் பயத்துக்கு ஹேது –

பகவத் குணம் ஆவது -இத் தோஷத்தை பார்த்து இகழாமல் அங்கீகரித்து -இவற்றைப் பொறுத்து -இவ் வாத்மாவை திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுகைக்கு  உடலான அவனுடைய தயா ஷாந்தியாதிகள் –ஏதத் அனுசந்தானம் அநாதி காலம் சம்சார ஹேதுவாய் போந்த ஸ்வ தோஷ பலத்தை பார்த்து – இன்னமும் அப்படியாகில் செய்வது என் என்கிற பயத்தினுடைய நிவ்ருத்திக்கு ஹேது என்கை-

துரந்தஸ்யா அநாதே அபரகரநீயஸ்ய மகாதோ நிஹீந ஆசாரோ அஹம் நிரூபசு அஸூபஸ் யாஸ்பதமபி– தயா சிந்தோ -பந்தோ- நிரவதிகவ வாத்சலிய ஜலதே தவஸ் மாரம் ஸ்மாரம் குண கணம் இதீ இச்சாமி கதாபி – ஸ்தோத்ர ரத்னம்- என்னக் கடவது -இறே-

——————————————

இப்படி இவ்விடத்திலே -பய அபய ஹேதுக்களான-சகல தோஷ -சகல குணங்களையும் -சேரச் சொல்லி இருக்கச் செய்தே –
இழவுக்கு அடி கர்மம் -பேற்றுக்கு அடி கிருபை -377-என்றும் -கர்ம பலமும் போலே க்ருபா பலமும் அனுபவித்தே அற  வேணும்-406- -என்றும்
கர்மத்தையும் கிருபையுமே இழவு பேறுகளுக்கு ஹேதுவாய் சொல்லிக் கொண்டு போய் -பய ஹேது கர்மம் -அபய ஹேது காருண்யம்-என்று நிகமித்தது –
இவை எல்லாவற்றிலும் இவனுக்கு -சம்சார மோஷங்களுக்கு பிரதான ஹேதுக்களவை ஆகையாலே -இவை இரண்டையும் பின் செல்லும் –
மற்றுள்ளவையும் இவை புக்கிடத்தே தானே வந்து விடும் இறே –
இங்கன் அன்றிக்கே –
அவன் படியை நினைத்து பயமும் –
தன் படியை நினைத்து அபயமுமாம் அளவில் அறிவிலித் தனமே பலிக்கும் -என்கிறார் –

சூரணை-367-

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்
அஜ்ஞதையே சித்திக்கும் –

( ஆயி ஸ்வாமிகள்-நம் குண லேசத்தை நினைத்தாலும் பகவானுடைய தோஷம் -நிராங்குச ஸ்வா தந்தர்யம் -நினைத்தாலும் அறிவிலி பட்டம் தான் வரும் –
நிராங்குச ஸ்வ தந்த்ரன் இன்னும் சம்சரிக்கையில் செய்வது என் என்று அவனை நினைத்து பீதனாய் -தோஷத்தை நினைத்து சொல்லவும் கூசி –
ஞானியான நாம் பண்ணின தோஷம் கணக்கு பண்ண மாட்டான் என்ற சட்ட நுணுக்கு அறிந்து ஓட்டை தேடி வாதம் பண்ணுவாரைப் போலே –
என்னுடைய பந்தும் கழலும் தந்து -அஞ்ஞானம் ஞானம் முதிர்ந்து வருமே -ஞானி தோஷம் கணக்கு பண்ண மாட்டானே –
மாறாடி-பய அபயங்களில்-ஹேது விபர்யயம் ஏற்படில்-அநாதி காலம் பிடித்து ஸூ பர ஸ்வரூபங்களை விப்ரபத்தி பண்ணிப் போந்த அந்யதா ஞானம் -தலையிலே வந்து விழுமே 
வேறே படிக்கட்டில் இருந்து உருண்டதாகுமே -அதே போலே உழன்று -பாரதந்த்ரத்தை ஸ் வதந்த்ரம் என்ற நினைவு முன்பு பழையதே மடங்கி சித்தித்தாய் விடுமே -ஏதத் விபர்யயத்தில் தோஷ நிவர்த்தக ஆஸ்ரய சக்தி அசக்தி -அஞ்ஞதை வெளிப்பட்டதாய் விடுமே -)

(கர்மம் மட்டும் நம்மிடம் -கிருபை மட்டும் அவன் இடம் -எடுத்தது
சம்சார மோக்ஷங்களைப் பற்ற பிரதானம் என்பதால் -இவை புக்க இடம் மற்றவை தானே வருமே-கர்மம் பின் தொடர்ந்து அவித்யா ஜென்மம் -வாசனை ருசி இவைகள் வருமே 
கிருபையை தொடர்ந்து வாத்சல்யாதி குணங்களும் வருமே
ஞாத்ருத்வம்-மூல மந்த்ரத்திலே மகார யுக்த ஞானத்துக்கு -ஜடப் பொருளை விட வேறு பட்டவன் -பிரதம அக்ஷர யுக்த அகாரம் அவ ரக்ஷணே தாது – –ரக்ஷகத்வம் அவனே -மத்யம பதத்தில் அஸ்மத் சப்தம் என்னுடையது மம என்றால் ம்ருத்யும் -மம இல்லை என்றால் அம்ருதம் மோக்ஷம் –ததாவித ஞானத்துக்கு ஆஸ்ரயமாக இருக்க வேண்டும் – மாறாடினால் கொத்தை உண்டாகும் )

அதாவது –
கீழ்ச் சொன்னபடி அன்றிகே –
அநாதி காலம் தனக்கு பரதந்த்ரமான ஆத்ம வஸ்துவை -கர்ம வ்யாஜத்தாலே சம்சரித்துப் போனவன் அன்றோ –நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆனவன் இன்னமும் சம்சரிப்பிக்கில் செய்வது என் -என்று அவன் படியை நினைத்து பயப்படுகையும் –
முன் போல் அன்றிக்கே –
நமக்கு இப்போது ஆத்ம குணங்கள் உண்டாகையாலே -பேற்றில் கண் அழிவு இல்லை என்று –தன் படியை நினைத்து பயம்  கெடுகையாம் அளவில் –

தான் தமக்கு நாசகன் என்று பயப்படுகையும் –
ஈஸ்வரன் ரஷகன் என்று பயம் கெடுகையும் ஆகிற –
ஜ்ஞாத்ருத்வ வேஷம் இல்லாமையாலே -அஜ்ஞத்தையே சித்தித்து விடும் -என்கை –

———————————————

அஜ்ஞதையே சித்திக்கும் -என்ற இத்தைத் தள்ளுகைக்காக -ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு ப்ரத்யவஸ்தானம் பண்ணினவர்கள் சங்கையை அனுவதிக்கிறார் –

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -7-1-
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -11-8-1-
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

(ஆயி ஸ்வாமிகள்-அநந்ய கதியான என்னை ஸ்வாமியான நீ -பிராப்தமும் போக்யமுமான திருவடிகளை-பாத பங்கயம் பிராப்தம் போக்யம் -பாவானத்வமும் போக்யத்வமும் –கிட்டா வகையாக உயிர்க் கொலையாக-சரணாகதி அடைந்த அடியேனை -ஸ்வ தந்த்ரனான நீ-தோற்றக் குழி-கர்ப்பம் -கர்ப்பாதி களில் தள்ளி சம்சரிக்க திரு உள்ளம் பற்றினாயோ –சம்சாரத்தை அடி அறுத்த பின்பும் வேர் பறியுண்டு விழத் தளும்புகின்ற பெரும் காற்று -அநாதி க்ருத தோஷ தரங்கம்-ஸ்திதி இல்லாமல் -பீத பீதகனாகா நின்றேன்-பொய்யில் பாடல்களில் உண்டே -கருக் குலைந்து கூப்பிடுகின்றார்கள் -என்ற ப்ரஸ்னம் பண்ண)

அதாவது –
இப்படி ஆகில் -தத்வ வித அக்ரேசரான ஆழ்வார்கள் –
உள் நிலாவிய இவை ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -என்றும் –
காட்டிப் படுப்பாயோ -என்கிற படியே
விஷயங்களைக் காணில் முடியும்படியான என்னை -உள்ளே நிரந்தர வாசம் பண்ணுகையாலே ஆந்த்ர சத்ருக்களாய் இருக்கிற இந்திரியங்கள் ஐந்தினாலும் நலிவு உண்ணும் படி பண்ணி –
ப்ராப்தமுமாய் போக்யுமுமான உன் திரு வடிகளைக் கிட்டாதபடி யாகவே
சரணாகதனான பின்பும் சம்சாரத்திலே வைத்து நலிய வெண்ணா நின்றாய் என்றும் –

மக்கள் தோற்றக் குழி தோற்றி விப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -என்று
மனுஷ்யர்களுடைய கர்ப்ப ஸ்தானத்திலே என்னுடைய கர்ம அநு குணமாக
இன்னம் சம்சரிப்பிக்கிறாயோ என்று இப்போது இப்போது போயிற்று என்னும்படி 
பய ஸ்தானமான ஆற்றம் கரையிலே வர்த்திக்கிற மரம் போல் உன் ஸ்வாதந்த்ர்யத்தை
நினைத்து அஞ்சா நின்றேன் என்றும் அருளிச் செய்த பாசுரங்களுக்கு நிதானம் என் என்னில் -என்கை-

———————————–

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

சூரணை -369-

பந்த
அனுசந்தானம் –

(ஆயி ஸ்வாமிகள்-நிருபாதிக ரஷணன் உடன் தங்களுக்கு உள்ள நிருபாதிக சம்பந்தம் அடியாக -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் அடியாக தானே -பந்தம் மோக்ஷம் நீயே காரணம் என்று இருப்பார்கள் -)

(அவன் அன்றி அணுவும் அசையாது -தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் -ஞானம் -இருக்க வேண்டிய நிலை இல்லாமல் -மேலே வந்து – நாமோ மோக்ஷம் நாம் தாம் காரணம்- பந்தம் அவன் காரணம் -என்கிறோமே )

அதாவது
பேறு இழவுகள் இரண்டும் அவனாலே என்னலாம்  படி நிருபாதிக ரஷகன் ஆனவனோடு
தங்களுக்கு உண்டான சம்பந்தத்தினுடைய அனுசந்தானம் -என்கை –

—————————————

பந்த அனுசந்தானத்தாலே இப்படி தன்னால்  வரும் அவற்றை -அவன் குறையாகச் சொல்லலாமோ என்ன –
ஆம் என்னும் இடத்தை -ச த்ருஷ்டாந்தமாக -அருளிச் செய்கிறார் –

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

(ஆயி ஸ்வாமிகள்-லௌகிக த்ருஷ்டாந்தம் -விளையாடும் பிள்ளை -தெருவிலே அலைந்து திருந்தி இடறி கால் நொந்து ஸூவ க்ருஹத்திலே அழுது கொண்டு வந்து –
அந்நிய பரையாய் குனிந்து கார்யம் செய்கிற -முதுகில் குத்த முதுகும் கீழே இருக்க வேண்டுமே -தாய் முதுகில் அவர் இடறு விட்டாளாக நினைத்து குத்துமா போலே
முக்தனான அறியாத பத்த சேதனன் -சம்சாரித்து துக்கித்து வந்த நோவாலே எவ்வுயிர்க்கும் தாய் போலே இருக்கும் அவனே துக்கிப்பிக்கிறான் என்று ஏறிடுமா போலே
கர்ம உபாதை இல்லாமல் ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -அறிந்து போக்க வல்ல சர்வ சக்தன் -உதாசீனித்து ஒழிந்தால் -நீயே சம்சரிப்பாய் என்று அவர்களுக்கு சொல்லலாம் இறே
இதே போலே உறவு மனசில் பட்டால் -ஞான விபாகம் வந்தால் நாமும் கேட்கலாம் -என்றவாறு )

அதாவது –
க்ரீடார்தமாக -தெருவிலே ஓடித் திரிகிற பிரஜை -அங்கே இடறி கால் நொந்தவாறே –
அழுது கொண்டு அகத்திலே வந்து -தனக்கு இவ் வேதனை வந்தது -தாயாலே யாக நினைத்து அவள் முதுகிலே குத்துமா போலே -ஒரு உபாதி  பரயுக்தம் அல்லாமையாலே –
ஒழிக்க ஒழியாத பந்தத்தை உடையவனுமாய் -இச் சேதனனுடைய கர்மத்தோடு
பிரகிருதி ப்ராக்ருதங்களோடு வாசி அற நலிவை தவிர்க்கைக்கு சக்தனுமாய் இருக்கிறவன்
நலிவு பட விட்டு விலக்காது ஒழிந்தால் -அவன் இவற்றை இட்டு நலிவிக்கிறான் என்னலாம் -இறே-

———————————————–

விலக்காத மாத்ரம் கொண்டு -அவன் செய்தான் என்னலாமோ -என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது  -இறே –

(இதற்கு மூலமான பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா -11-8-5-பெரிய திருமொழி -11-8-5–தள்ளி
எல்லாவற்றுக்கும் அவனை இன்னதாகலாம் படி இறே ஸம்பந்தம் இருப்பது –
தான் இடறித் தாய் முதுகிலே குத்தும் பிரஜையைப் போலே
அத்தலையாலே வந்ததுக்கு அவனை இன்னாதாமோ பாதி
இத்தலையாலே வந்ததுக்கும் அவனை இன்னதாகலாம் படி இறே பிராப்தி இருப்பது
கிணற்றிலே விழுகிற பிரஜையை வாங்காத தாயைத் தானே தள்ளினாள் என்னக் கடவது இறே)

(ஆயி ஸ்வாமிகள்-அந்நிய பரதையாக சா பாயமான திறந்த கிணற்று -வான் கிணறு -வாங்காமல் ஒழிந்தால் -லோகத்தில் பழி-ஸ்தனந்தய பிரஜை வந்து குத்தாதே – சம்சார படு குழியில் எடுக்க வல்ல சர்வ சக்தன் -செய்யாவிட்டால் அவன் மேலே -ஏறிடலாமே கிணற்றின் கரையில் இருக்க விட்டதே குற்றம் -சம்சாரத்தில் வைத்த குற்றமும் அவனதே – ஸ்வா தந்த்ர நிவ்ருத்தி -ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏவ பிரபத்தி -அனுமதி செய்த பின்பு-இந்த அனுமதி மோக்ஷ ஹேது இல்லையே-இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது இல்லையே  அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது இல்லை -முத்தாய்ப்பு வைத்து நிகமனம் அடுத்து -தப்பாக கால் இடறினதே காரணம் -அனுமதி காரணம் இல்லை ரஷ்யத்வ அனுமதி அசேதன வியாவருத்தி -அசித்தை விட வேறுபட்டவன் அன்றோ -)

அதாவது –
கிணற்றின் கரையிலே பிரஜை இருக்கிற படியைக் கண்ட மாதாவானவள் –
அப்பொழுது ஓடிச் சென்று -கிணற்றின் கரையின் நின்றும்  வாங்காது ஒழிந்தால் –
கிணற்றிலே பிரஜை விழுந்த அளவில் -தாய் அப்போதே சென்று எடுத்தாள் ஆகில் –
இப்ப்ரஜை விழுமோ -கிணற்றின் கரையில்  இருப்பை -இவள் அனுமதி பண்ணி இருக்கையால் அன்றோ விழுந்தது -ஆன பின்பு -இவள் அன்றோ -தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே -என்கை –

—————————————————

ஆனால் -அப்ரதிஷித்தம் அநுமதம்-என்கிற ந்யாயத்தாலே -விலக்காமையாவது-அனுமதியாய் யற்ற பின்பு -அனுமதியோ பின்னை இழவுக்கு ஹேது என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

அதாவது –
ரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்கு ஹேது அல்லாதவோ பாதி – ரஷகனான அவனுடைய  சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை ஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற இருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –

———————————————–

இவ் வனுமதி த்வயம் பின்னை ஆவது என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

(ஆயி ஸ்வாமிகள்-ரஷ்யத்வ அனுமதியும் -சம்சார அனுமதியும் ஆகிற இரண்டும் பரதந்த்ர ஸ்வ தந்த்ர -ரஷ்ய ரக்ஷகர் இருவருக்கும் ஸ் வ ஸ் வ அனுரூப ஸ்வரூபம் –
அவன் அனுமதிக்க -பின் தொடர அனுமதி தத் ஆதீன வஸ்து ஸ்வரூபம் -கர்மத்தால் வந்தோம் என்ற எண்ணம் வேண்டுமே –ஸூவ இச்சா -சாரி -விருப்பப்படி நடப்பவர் –சம்சாரி ருசியைப் பின் சென்று செய்யும் அனுமதி -ருசிக்கு அனுகுணமாக -வத்சலத்வ ஸ்வரூபம் என்று அருளிச் செய்வர்-மோக்ஷம் கேட்க்காமல் ஸ்வர்க்கம் கைவல்யம் ஐஸ்வர்யம் கேட்டு பெறுவதும் குற்றமே என்றாலும் போக்யமாக கொள்ளுவதே வாத்சல்ய கார்யம் –
ஸ்வாதந்த்ர உத்ரேகத்தால் அனுமதித்து சம்சாரித்தாலும் -தன் நிவர்த்தக ஸ்வாமியின் கிருபா உதிக்க கார்யம் -பர துக்க அஸஹிஷ்ணுத்வமே கிருபை –கிருபையை கிளப்பத் தானே நம் துக்கம் –தொட்டிலையும் ஆட்டி கிள்ளியும் விடுவாரோ -விழ அவன் காரணம் இல்லை -நம் கர்மா -தானே-அவன் அனுமதி சம்சாரிக்க காரணம் இல்லை -காரணம் ஹேது உபாயம் சாதனம் பர்யாய சப்தங்கள் -பிள்ளை பேகணி யாமல் மண் திண்ண விட்டு மாற்று மருந்து கொடுக்கும் தாய் போலே -)

(சேஷி -இச்சா -அனுவிதாயி -பின் செல்லும் வடிவை -எண்ணமே பாரதந்தர்யம் -இதுவே ஸ்வரூபம் –இத்தை அனுமதிக்க தூண்டும் அவன் ரஷிக்க வரும் பொழுது –எனவே ஸ்வரூப அந்தர்கதம் )

இருவருக்கும் ஸ்வரூபம்-என்றது -பர தந்த்ரனாயும்- ஸ்வதந்த்ரனாயும் இருக்கிற இருவருக்கும் ஸ்வ அசாதாரண ஆகாரம் என்றபடி –

அதாவது –பரதந்த்ரனான இவனுக்கு ஸ்வ ரஷ்யத்வ அனுமதி -ஸ்வரூப அதிரேகி அல்லாமையாலே -ஸ்வரூபம் –

ஸ்வ தந்த்ரனான அவனுக்கு ஸ்வ ரஷ்ய வஸ்து ரஷணத்தில் ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர அநு குண நிர்வாகண அர்த்தமான சம்சார அனுமதி -ஸ்வாதந்த்ர்ய  வேஷம் ஆகையாலே -ஸ்வரூபம் -என்கை –

————————————-

ஆனால் இழவு பேறுகளுக்கு அடி எவை என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

(ஆயி ஸ்வாமிகள்-உபய அனுமதியும் ஸ்வரூபம் என்றால் -இழவு பேற்றுக்கள்-அடி -அநாதி காலமே -அநாதி அவித்யை சஞ்சிதமான கர்ம புண்ய பாப ரூபம் -சத் அசத் ரூபம் -இழந்து திரியும் இவனுடைய பேற்றுக்கு அடி– அயன சம்பந்த நிபந்தமான ஸுஹார்த்தம் அடியான -கிருபை -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே -ஸூ ஹிருதயம் -உண்டே -கிருபை க்கு அடிப்படை ஸுஹார்த்தம் -இதுக்கு அயன சம்பந்தம் -கிருபா பரதந்த்ரன் -ஸ்வா தந்தர்யத்தால் ஏறிட்டுக் கொண்டானே -கிருபை என்று வேதாந்த தாத்பர்யம் மறைத்து அருளிச் செய்கிறார் -திருமந்த்ரார்த்தம் -தானே -சேஷி பக்கல் தோஷம் ஏறிடாமல் சேஷனுக்கு கர்தவ்யம் -யதாவாக சொல்லி -இவை ஸூவ கர்மம் அடியாக அனுசந்திப்பது ஸூவ சேஷத்வ உசிதம் தானே)

அதாவது –
பகவத் விஷயத்தை அநாதி காலம் இழக்கைக்கு  ஹேது – முன் செய்த முழு வினை-1-4-2- -என்னும் படி அநாதி கால சஞ்சிதமான இவனுடைய கர்மம் –

இப்படி இழந்து கிடந்தவன் அவ் விஷயத்தைப் பெருகைக்கு ஹேது -விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்னும் படி இரு கரையும் அழியப் பெருகும் -பகவத் கிருபை -என்கை –

————————————–

இங்கன் அன்றிகே -மாறிச் சொல்லும் அளவில் வரும் அனர்ததத்தை அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

(ஆயி ஸ்வாமிகள்-மாறாடிச் சொல்லில் -என்னாமல் மற்றைப் படி -இரண்டையும் அவன் இடம் —இழவு பேறுகள் இரண்டுக்கும் காரணம் ஸ்வா தந்த்ரன் தானே -எல்லாம் அவன் தலையில் வைத்து -பகவத் அதீனம் அனைத்தும் -பர தந்த்ரன் எதுக்கும் காரணம் ஆக மாட்டானே –பேற்றுக்கு கிருஷி பண்ணும் நம்மை இழவுக்கும் அடி என்னில் -பகவான் திரு உள்ளம் -இழந்தே போகட்டும் -அவன் சொன்னதை-உண்மையாக செய்வோம் என்று அவன் சீற – அவனை இழக்கவும் வழி வகுக்குமே-இழந்து போகைக்கு உடலாம் )

(அந்த அந்த நிலைக்கு ஏற்ப -கால தாமதம் ஆகும் -நிரபேஷ ரக்ஷகன் – உபேஷா ஹேதுவாக -கடுக பெற்று விடாமல் இப்பொழுது இழந்து போக உடலாகும்)

அதாவது –
இப்படி அன்றிக்கே -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–367-என்கிற இடத்தில் -போலே –
இழவுக்கு அடி ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் –
பேற்றுக்கு அடி சேதன சத் குணம் -என்கிற
இழவு பேறுகளுக்கு ஹேதுவை மாற்றிச் சொல்லில் –
ஈஸ்வரன் கை வாங்குகையாலே-அவன் திருவடிகளைப் பெறாமல் இழந்து போகைக்கு உடலாம் -என்கை –

அதவா –
மற்றைப்படி -இத்யாதிக்கு –
இழவுக்கு அடி சேதன கர்மம் –
பேற்றுக்கு அடி ஈஸ்வர கிருபை -என்று
இழவு இவனாலும் -பேறு அவனாலுமாகச் சொன்னபடி அன்றிக்கே -இழவு பேறுகள் இரண்டுக்கும் அடி -ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமே என்று அநாதி காலம் இழந்ததுக்கும் அடி அவனாகச் சொல்லில் -அவன் கை வாங்குகையாலே -ஒரு காலும் அவனைப் பெறாமே-இழந்து போகைக்கு உடலாய் விடும் -என்னவுமாம் –

—————————————

இப்படி சொல்லும் அளவில் ஈஸ்வரன் கை வாங்கும் என்னும் அத்தை – லௌகிக நியாயத்தை உபஜீவித்து கொண்டு தர்சிப்பிக்கிறார் —

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே –

(ஆயி ஸ்வாமிகள்-நிதர்சனம் -ஸ்வதந்த்ர ஸ்வாமி வினோத அர்த்தமாக -ஸூ ப்ருத்யனை குழியிலே தள்ளி -ஸூ ஸ்நேஹத்தாலே ஓக்க குதித்து வாரி எடா நிற்க –
தள்ளிய நீரே எடுக்க வந்தாயோ என்ன – தள்ளி விட்டு அழிக்க வல்ல ஸ்வா தந்தர்யம் இருக்க பர தந்த்ரனான நீ செய்து கண்டு இராமல் கேட்கலாமோ —
சீறி எடுக்காமல் போகுமே -புரட்சிகரமாக ஆய் ஸ்வாமி அருளிச் செய்கிறார் -இவ்வாறு –
உபயமும் அவனாலே என்பது யதார்த்தம் ஆகிலும் -சரீரத்துடன் அவித்யை -பொது காரணம் சாமான்ய காரணம் அவன் தானே-வேதாந்த பிரிகிரியையில் சொல்லலாமே -விசேஷ காரணம் கர்மம் -லோகவத்து லீலா கைவல்யம் –ஓன்று என்னாலே பரம சேஷத்வம் அறிந்தவன்-ஸூவ க்ருதம் என்று சொல்லி -பேறு பர க்ருதம் என்று நினைப்பான்)

(உப ஜீவனம் -உதவ வர லௌகிக த்ருஷ்டாந்தம்-காட்டுகிறார் இதில் 
அநவதானம் சஷூசுக்கு கூப தர்சனம் -கிணறு தெரியாமல் கண் பராக்கு பார்த்து -கவனக் குறைவால் -என்றபடி)

அதாவது –
ஆழ்ந்த கிணற்றில் தன் கர்ம அநு குணமாக அநவதாநத்தாலே விழுந்தவனை –
அருகு நின்றான் ஒரு க்ருபனானவன் எடுப்பதாக யத்தனிக்கும் அளவில் –
தான் விழுகிற போது-அவன் ஆசன்னனானவன்  என்கிற மாத்ரத்தைக் கொண்டு –
அவன் தன்னைத் தள்ளினனாக நினைத்து -இக் கிணற்றில் என்னைத் தள்ளினாயும்  நீ அன்றோ -என்றால்-நான் செய்யாத கார்யத்தை இவன் சொல்வதே-என்று -சீற்றம் எழுந்து இருந்து -எடாமல் கை வாங்குகைக்கு உறுப்பு ஆம் போலே –

ஸ்வ கர்மத்தாலே சம்சாரம் ஆகிற  படு குழியில் விழுந்து கிடக்கிற தன்னை –
எடுக்க நினைக்கிற க்ருபவானனான ஈஸ்வரனை –
இத்தனை காலமும் என்னை சம்சாரத்தில் தள்ளி விட்டு வைத்தாயும் நீயே-என்றால்-
சீறிக் கை வாங்கி பட்டது படுகின்றான் என்று விடுகைக்கு உறுப்பாம் இறே -என்கை –

————————————————-

அப்படிச் சொல்லுகை ஈஸ்வரனுக்கு சீற்றத்துக்கு உடல் என்னும் இது லௌகிக ந்யாயம் கொண்டு சொல்ல வேணுமோ -தத்வ தர்சிகளான-திருமங்கை ஆழ்வார் -பூர்வோக்திக்க அனந்தரத்திலே – தாமே அருளிச் செய்தார் இறே -என்கிறார் –

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே-
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே

(சீற்றம் உள–பெரிய திருமொழி -11–8–2- என்ற -அனந்தரத்திலே–மாற்றம் உள- சொன்னதுக்கு பின்பு -இவ் அர்த்தத்தை -தாமே அருளி செய்தார் -இறே-
எடுக்க வந்தவனை தள்ளினாப் போலே -கோபம் வரும் -என்று அறிந்தும் -சொல்லுவேன் -ஆகிலும் சொல்லுவேன் -என்றாரே –கர்ப்பக் குழியுள் – தோற்றக் குழியில் நீ தள்ளினாய் -என்று சொல்லத் தான் போகிறேன் -என்றாரே -உண்மையில் எடுக்க நினைத்தாய் –எதனால் நான் சொல்லுகிறேன் என்னில் -எனக்கு உம்மை விட்டால் ஆள் இல்லையே என்பதால் சொல்லுவேன் —அடியேன் அநந்ய கதித்வம் காட்டத் தான் இப்படி சொல்லுகிறேன் )

(ஆயி ஸ்வாமிகள்–ஈன்ற தாய் அகற்றிடினும் அவளை நினைந்தே -இருக்கும் குழவி போலே –பந்தம் அறிந்து சொல்லுவேன் —கீழே லோக த்ருஷ்டாந்தம் -பர தந்த்ரனான என்னை ஸ்வ தந்த்ரனான நீ தள்ளினாய் என்று உண்மைப்படி சொல்லி -உடனே சீற்றம் உள —மக்கள் தோற்ற குழியிலே தோற்றுவிக்கிறாய் -உடனே ஆகிலும் செப்புவேன் -நம்மாழ்வார் நம்முடன் நிறுத்தி ஆகிலும் சொல்லுவேன் -சொன்னால் விரோதமானாலும் –கர்ப்ப ஜென்மாதிகளிலே உளள வைத்தீர் என்று சொல்லியே கூசாமல் -சொல்லி -பொய்யான இத்தைக் கூட கூசாமல் சொல்லி –காரணம் பந்தம் தானே -பயந்து உள்ளேன் -பல த்ருஷ்டாந்தங்கள் கொண்டு பயத்தை காட்டிய பிரகரணம் -)

(பூர்வ யுக்தி -சீற்றம் உள -உத்தர யுக்தி – ஆகிலும் செப்புவேன் மாற்றம் உள- பூர்வ யுக்தி -உத்தர யுக்தி- தோற்ற குழியில் தோற்றுவிப்பாய் என்றுமாம் -)

அதாவது –
இன்னம் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று –
ஈஸ்வரன் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே சம்சரிப்பிக்கிறான் ஆக சொன்ன இது –
கர்ம அநு குணமாக சம்சரிக்கிற ஆத்மாவை -சம்சாரத்தில் நின்று எடுக்கைக்கு கிருஷி பண்ணிப் போரும் அவன் திரு உள்ளம் சீறுகைக்கு உடல் என்று நினைத்து -கீழ் விண்ணப்பம் செய்த வார்த்தையாலே திரு உள்ளத்துக்கு சீற்றம் உண்டு என்ன
முதல் வார்த்தைக்கு அநந்தரம் -இழவுக்கு அடி அவனாக சொல்லுகை -நிக்ரஹ ஜனகம் -என்னும் இவ் வர்த்தத்தை -முன்பு அப்படி அருளிச் செய்த தாமே – அருளிச் செய்தார்  -என்கை

—————————————–

சீற்றம் உள -என்ற பின்பும்
ஆகிலும் செப்புவன் -என்று முன்பு சொன்னது -தன்னையே சொல்லுகைக்கு
ஹேதுவை -ப்ரஸ்ன உத்தர ரூபேண-பிரகாசிப்பிகிறார் –

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வ தந்த்ர ஸ்வாமி -சீற்றம் உள -அஞ்சாமல் சொல்லும் படி என் என்னில்- திருவடியை அடையும் படி அருள–சீற்றத்தை அடக்கி ஆளும்படியான இன் அருள் -அனுக்ரஹம் –கோபத்தை அடக்கி ஆளும் -ஜித க்ரோத -குணம் உண்டே -அஞ்சுகிறேன் பல காலும் சொல்ல -சீற்றம் மாறி அருளுவாயே –அடக்கி ஆளும் இன் அருளை -நம்பி பேசலாமே  –இதுக்கும் மேலே கரை யற்ற சம்சார ஆர்த்தியும் உண்டே – இதுக்கும் மேலே
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாதே -அநந்ய கதித்வமும் உண்டே -உன் சேவடி தவிர வேறு ஒன்றும் நயவேன் -மேல் விழும்படியான கத்யந்த்ர ஸூந்யத்வமும் உண்டே –
சீற்றம் உள என்று அறிந்தும் வாய் விட்டு பேசப் பண்ணுமே -இப்படி பல சூரணைகளுக்கும் இந்த திரு மொழி பிரமாணம்-)

(அவன் சீற்றத்தை தன் சந்நிதியில் ஜீவிக்க ஒட்டாத -பிராட்டி -தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகத்வ சர்வ சித்தாந்தம் –காருண்யம் வர்த்தயதி -சத்தை பெறச் செய்கிறாள் இவள் -)

அதாவது –
கீழ்ச் சொன்ன இத்தால் ஈஸ்வரன் திரு உள்ளத்துக்குச் சீற்றம் உண்டு என்று அறிந்தால் –
பின்னையும் இவ் வர்த்தத்தைக் கூசாமல் திரு முன்பே சொல்லும்படி எங்கனே -என்னில் –
அவன் சீற்றத்தை தன் சந்நிதியில் ஜீவிக்க ஒட்டாத -பர துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபையும் –
உன் சீற்றம் கண்டு அஞ்சி வாய் மூட ஒட்டாதபடி கரை இழந்து செல்லுகிற சம்சார ஆர்த்தியும் 
சீறி எடுத்து எறியிலும் வேறு புகல் இல்லாமையாகிற -அநந்ய கதித்வமும் –
சொல்லும்படி பண்ணும் -என்கை –

இத் திரு மொழியிலே-11-8-
அடைய அருளாயே -நினைக்கும் தன் அருளே -6
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -7
தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய் -9-என்று பல இடங்களிலும் அவன் அருளையும் 

ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -1
காற்றத்திடை பட்ட கலவர் மனம் போலே ஆற்ற துளங்கா நிற்பன் -2-(கலவர் -மரக்கலத்தில் இருப்பவர் -)
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் தாங்காது உள்ளம் தள்ளும் -3
இருபாடு எரி கொள்ளியின் உள் எறும்பு போல் உருகா நிற்கும் என் உள்ளம் -4-
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் -5-என்றும்- பல த்ருஷ்டாந்தகளாலும் தம்முடைய-
ஆர்த்தி
அநந்ய கதித்வங்களையும் அருளிச் செய்தார்-இறே-

——————————————-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டானாலும் அவனுக்குச் சீற்றம் பிறக்கும் படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே

(ஆயி ஸ்வாமிகள்-பஹுவிதமாக சொல்லி இல்லாத தப்புக்களையும் சொல்லலாம் -பெத்த பாவிக்கு விடப் போமோ-தொண்டரானவர்க்கு இன்னருள் செய்யும் பரம கிருபாவணனாய் இருப்பவனைப் பெறப் பெற்றால் அஞ்சாமல் உள்ளது எல்லாம் –மனசில் தோன்றுவது எல்லாம் -பந்தம் உறவு கொடுத்த பலத்தால் சொல்லலாமே -)

(தயையால் எடுக்க வந்தவனை பார்த்து அன்றோ இப்படி அருளிச் செய்கிறார் —கதறுகின்றேன்-பக்தி யோக நிஷ்டனுக்கும் பிரபன்னனுக்கும் வாசி அறியாமல் கத்துகின்றேனே -அதே போலே இங்கும் திரு மங்கை ஆழ்வார் –வேறே கதி இல்லாமல் -அருளிச் செய்கிறார் -உடனே கரியவாகிப் புடை பெயர்ந்து மிளிர்ந்து நீண்ட அப் பெரியவாய கண்கள் -கொண்டு கடாக்ஷித்து திருவடிக் கீழ் சேர்த்து கொள்வான்)

அதாவது சீறின காலத்திலும் சீற்றத்துக்கு விஷயமானவர்களுக்குச் சென்று திருவடிகளைப் பூண்டு கொள்ளலாம் படி பரம க்ருபாவானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றால் நினைத்தபடி எல்லாம் சொல்லலாம் இறே என்கை –

————————————–

சீறின தசையிலும் காலைக் கட்டிக் கொள்ளலாய் இருக்கும்  படிக்கு பிரமாணம்  காட்டுகிறார்

சூரணை -380-

க்ருபயா பர்ய பாலயத் –
அரி சினத்தால் –

(ஆயி ஸ்வாமிகள்-கோபப்பட தகுதியாய் இருந்தும் -தடுத்து திருவடிக் கீழ் கொள்ளும் கிருபை –அறுத்து அறுத்து அழிக்க வேண்டிய அபராதம் செய்தானாகிலும் – பிறந்து படைத்த பேரை யுடைய பெருமாள் -காகுஸ்த வம்சம் –சர்வ லோக சரண்யா ராகவாயா -போலே –இஷ்வாகு குலத்தில் பிறந்தால் உயிரை விட்டாவது ரஷிக்க வேண்டுமே -இந்திரன் காளை மாட்டின் ககுத்தத்தில் உட்க்கார்ந்து தேவர்களை ரஷித்தவன் காகுஸ்தன் –
அபராததுக்கு ஒரு கண் அழிவு செய்து கிருபையால் ரஷித்து அருளினான் –
சீற்றம் உள -ஆகிலும் காலிலே விழுவேன் -அருள் அவன் இடம் நித்யம் – அநந்ய கதித்வம் -ஆர்த்தி இல்லையாகிலும் -மூன்றில் இரண்டு இருந்தாலும் பேறு காகாசுரனுக்கு —
வருந்திப் பெற்று போற்றி வளர்க்கும் ஈன்ற தாய் -வளர்த்தும் – இரண்டும் உள்ளவள் -தீம்பு கண்டு கிளர்ந்த சினத்தால் காலாலே உதைத்துத் தள்ளத் தள்ள வேறே போக்கடி அற்று சீறி உதைக்கும் -தாய் முகத்து இரக்கத்தையே பார்த்து வாத்சல்யையான நீர் -மலங்கத் தள்ளினாலும் -வேறே போக்கடி இல்லையே-அனுகூல பிரதிகூல விபாகம் அற–நம்பிப் போகும் படி -சீற்றம் இருந்தாலும் -மேல் விழும்படி கிருபை இருப்பதால் சொல்ல ஒண்ணாதது ஏதும் இல்லையே –)

(சக்தி விசேஷங்களை -ஞான பிரவ்ருத்தி நிவ்ருத்தி மூன்றையும் -மோக்ஷ வியாபாராதிகளில் கவலை இல்லாமல் ஈடுபட -ஹிதைஷியாய் -அருளி-இதுக்கும் மேலே -கண்ணுக்கு இலக்காகும் படி நில்லாமல் –எவ்வுள் -கேட்டால் -எங்கே போவோம் -தனி இடம் கேட்டே இருக்கும் இவர்கள்-கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் – -காண வேண்டாம் என்று -கண் காண நின்று ரஷிக்க ஆசை கொண்டால் இவர்கள் இவன்-உள் நின்றார் மேல் ஆணை இட்டு விலக்குவார்கள் -நின் ஆணை திரு ஆணை –புறங்கையால் அடித்து -அஹம் மே-என்று விலக்குவார்களே
த்வம் மே –சம்பந்தம் விட்டு போகாது இருக்க -சொன்னாலும் -கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் புறக்கணிக்கும் கண்ணுக்கு தோற்றாத படி – அணைக்கும் தாயையும் தன்னையும் அறியாத ஸ்தந்தயே பிரஜை -தாய் த்ருஷ்டாந்தம் – முதுகிலே மெள்ள அணைத்துக் கொண்டு -பரிவையும் உணர்த்தி – புருஷோத்தமனை தாய் ஸ்தானம் வைத்து -பாரதந்தர்ய வாசனையும் அறியாதவன் – அகடி தகடநா சாமர்த்தியம் அன்றோ)

அதாவது –
சதம் நிபதி தம் பூமவ் சரண்யச் சரணாகதம் வதார்ஹமபி ககுஸ்த்ச  க்ருபயா பர்யபாலயத் –ஸூந்தர காண்டம் -38- –என்று அபராதத்தை தீரக் கழியச் செய்து –
ப்ரஹ்மாஸ்ரத்துக்கு இலக்காய்-புறம் புகல் அற்றவாறே வந்து -திருவடிகளிலே விழுந்த காகத்தை – கிருபையாலே ரஷித்தார் ஆகையாலும் –
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்னருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -என்று –
பெருகைக்கு வருந்தி -வரம் கிடந்தது -பெற்ற தாயானவள் -இது செய்த தீங்கைக் கண்டு –
எறிந்து பொகட வேணும் சீற்றத்தை உடையவளாய் கொண்டு -கிட்ட வர ஒட்டாமல் தள்ளி விட்டாலும் -வேறு போக்கடி அற்று
சீறி எடுத்து எறிகிற அவளுடைய முகத்து இரக்கத்தையே நினைத்து -அழுது காலைத் தழுவிக் கொள்ளும் குழவி போலே –
என் அபராதத்தைக் கண்டு அருகு வராதபடி தேவரீர் தள்ளி விடப் பார்க்கிலும் –
திருவடிகள் அல்லது வேறு போக்கடி அற்று இருந்தேன் என்று -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்கையாலும் –
சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான் ஒருவன் -என்னும் இடம் சித்தம் -என்கை –

இப்படி ஆழ்வார் அருளிச் செய்த இவ் வர்த்தத்தை –
நிராஸ கஸ்யாபி ந தாவதுத்சஹே மகேச ஹாதும்  தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோபி ஸிஸூஸ் தநந்த்தயோ ந ஜாது மாதுச் சரணவ் ஜிஹாசதி -26–என்று ஆளவந்தாரும் அருளிச் செய்தார் -இறே

ஆக
இவ்வளவும்
பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞ்ஞதையே சித்திக்கும் -என்கிறதின் மேல் வந்த சங்கா பரிகாரங்கள் பண்ணப் பட்டது –

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||-ஶ்லோகம் 26 –ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

த்ருதீய  பிரகரணம் சம்பூர்ணம் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –321-365 -சத் குரூப சேவகம்-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் –ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்- ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

January 1, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது நான்காவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் 
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் 

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் -24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஏழாவது பிரகரணம்

——————————————-

ஆக –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது -308-என்று துடங்கி -ஆசார்யத்வ பூர்த்தி இல்லை -320- என்னும் அளவும் ஆசார்ய ஸ்வரூபம் சோதனம் பண்ணி -அநந்தரம் அதின் மேல் வந்த
பிராசங்கிக சங்கைகளையும் பரிகரித்தார் கீழ்- மேல் சிஷ்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் –

சூரணை -321-

சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதன ஸூஸ்ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநஸூயையும்
உடையவனை –

(ஆயி ஸ்வாமிகள்-ஸச் சிஷ்ய ஸ்வரூப சோதனம் இது முதல் 365 வரை -சிஷ்ய சப்தத்துக்கு அர்த்தம் இதில் –ஸ்ரவணம் பண்ணும் அனைவரும் சிஷ்யர்கள் இல்லையே -இந்த ஐந்தும் வேன்டும்-கீழ் அருளிச் செய்த யுக்த லக்ஷண சதா ஆச்சார்யர் சேவைக்குத் தக்க ஸச் சிஷ்யர் –ஸூ ஆச்சார்ய கைங்கர்யமும் அவருக்கு உத்தேசியமான பகவத் பாகவத-தத் ததீய – கைங்கர்யமும் —இதை ஒழிந்து தனக்கு விருப்பம் என்று பண்ணினால் சாத்யாந்தரம் ஆகும் -இதிலே ச வாசன நிவ்ருத்தி வேண்டுமே -ஐஸ்வர்யம் கைவல்யாதிகள் -கீழ் நிலை
1–பல சாதனபகவத் விஷய ஞானத்துக்கு -சாதனமான -ஆச்சார்யருக்கு-அவருக்கு -கைங்கர்யம் -சிசுரூஷை –
2 —ஸ்வரூப அனுரூபமான ஸ்ரோதும் இச்சா சிசுரூஷா -பலத்தையும் சாதனத்தையும் கேட்க இச்சா -என்றுமாம்
3–பலமான ஆச்சார்யர் அடைதல் -அதுக்கு சாதனம் பகவான் -அதுக்கு சிசுரூஷா
4–பலம் ஆச்சார்யர் அடைய சாதனம் பாகவதர்கள் -அவர்களுக்கு கைங்கர்யம்
5–ஆச்சார்ய கைங்கர்யம் சாஷாத் பலம் -அதுக்கு சாதனம் திருமேனி கைங்கர்யம் -சிசுரூஷை –
இப்படி பல படைகளால் அருளிச் செய்வர்கள் –
சிசுரூஷையும் ஆர்த்தியும் -துடிப்பும் வேண்டுமே -சம்சாரம் பிரதிபந்தகங்கள் -அடிச்சுட்டு -கொதித்து -அதிசயித்து வரும் ஆர்த்தியும்-ஆச்சார்ய விக்ரஹ அனுபவ நித்ய கைங்கர்யம் செய்ய -ஆதாரம் வைகுந்தம் -அத்ர பரத்ர இங்கும் அங்கும் -நிரந்தர சேவா யோக்ய பூமி கொழுந்து விடும் ஆதாரம்-ஞான அனுஷ்டானம் கண்டும் அவர்கள் பண்ணும் கைங்கர்யம் கண்டும் – ச ப்ரஹ்மசாரிகள் பக்கல் -அநஸூயை -கொண்டு –இப்படி –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப–ஈடுபட வேண்டிய விலக்க வேண்டிய -ரூப – சத் குண சம்பன்னனை ஸச் சிஷ்யன் என்னும் -)

(மேல் சிஷ்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் – மேல் எழுந்த வாரி– வாரி தண்ணீர் -ஆழ்ந்து இல்லாமல் என்றபடி –இந்த ஐந்து லக்ஷணங்கள் உள்ளவனையே ஸச் சிஷ்யன் –தேவு மற்று அறியேன் என்று இருக்கை -உறாமை உடன் உற்றேன் ஆகாமல் ஒழிந்தது ஆர்த்தி பூர்த்திக்காகத் தானே – அனுப பூஷை-விருப்பம் -அடுத்து அடுத்து பூய ஏவ மஹா பாவோ -திரும்பி திரும்பி அருளிச் செய்வான் – -திரும்ப திரும்ப கேட்க ஆசை அர்ஜுனன் -)

சிஷ்யன் என்பது -என்றது -உபதேச ஸ்வரணம் மாத்திரம் கொண்டு -மேல் எழுந்த வாரியாக
சொல்லுகை அன்றிக்கே-சிஷ்யன் என்று முக்யமாக சொல்லுவது -என்றபடி –

சாத்யாந்தர நிவ்ருத்தி-யாவது -ஸ்வரூப விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற
ப்ராப்யாந்தரத்தில் மறந்தும் அன்வயம் அற்று இருக்கை –
அன்றிக்கே
இவ் வாசார்யன் தன்னை ஒழிய வேறு ஒரு பிராப்ய வஸ்து அறியேன் என்று இருக்கையும் ஆகவுமாம்-

பல சாதன ஸூஸ்ரூஷை-யாவது -குரு ஸூஸ்ரூஷயா வித்யா -என்கிறபடி
ஆசார்யனை தான் பண்ணுகிற ஸூஸ்ரூஷையாலே சந்தோஷிப்பித்து ஞானோப ஜீவனம் பண்ணுகை ப்ராப்தம் ஆகையாலே -ஆசார்யன் தனக்கு உபகரிக்கிற தத்வ ஞானம் ஆகிற
பலத்தினுடைய சித்திக்கு சாதனமாய் இருந்துள்ள ஆசார்ய பரிசர்யை –
அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமான பலத்திலும் -சாதனத்திலும் உண்டான ஸ்ரோதும் இச்சை யாகவுமாம்-
அதவா
ஆசார்ய முக உல்லாசம் ஆகிற பலத்துக்கு சாதனமான தத் பரிசர்யை -என்னவுமாம் –

ஆர்த்தி -யாவது -இருள் தருமா ஞாலம் -என்கிறபடியே பிறந்த ஞானத்துக்கு விரோதியான
இவ் விபூதி யினின்றும் கடுகப் போகப் பொறாமையாலே வந்த க்லேசம் –
அன்றிக்கே
ஆசார்ய விக்ரக அனுபவ அலாபத்தில் க்லேசம் ஆகவுமாம் –

ஆதரம்-ஆவது -உத்தரோத்தரம் அனுப பூஷை-(விருப்பம்) – விளையும் படி ஆசார்யன் அருளி செய்கிற பகவத் குண அனுபவத்தில் மென்மேலும் உண்டாகா நிற்கிற விருப்பம் –
அன்றிக்கே
ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாப் போலே -தத் அனுபவ
கைங்கர்யங்களிலே மண்டி விழும்படியான விருப்பம் ஆகவுமாம் –

அநஸூயை ஆவது -ஆசார்யன் -பகவத் பாகவத வைபவங்களை பரக்க உபபாதியா நின்றால்-ப்ரவஹ்யாம் யநஸூயவே -என்னும் படி இதில் அஸூயை அற்று இருக்கை –
அன்றிக்கே
ஆசார்யனுடைய உத்கர்ஷத்தையும் -ச பிரமசாரிகளுடைய உத்கர்ஷத்தையும் கண்டால்
அதில் அஸூயை அற்று இருக்கை -என்னவுமாம்-

அஸூயா பிரசவ பூ -என்கிற இதுக்கு ஹிதம் சொன்னவனுடைய உத்கர்ஷமே ஆயிற்று
பொறாதது என்று இறே பூர்வர்கள் அருளி செய்தது -பகவத் விஷயத்தில் உள் பட அஸூயை
பண்ணா நின்றால் -ததீய விஷயத்தில் சொல்ல வேணுமோ –
இதம் துதே குஹ்ய தமம் ப்ரவஹ்யாம் யநஸூயவே-என்றான் இறே –

ஆக -இப்படி இருந்துள்ள  சத் குண சம்பன்னனை ஆயிற்று -நேரே சிஷ்யன் என்பது –

——————————————–

இப்படி உக்த லஷணனான சிஷ்யனுக்கு ஸ்வ ஆசார்யர் விஷயத்தில்
உண்டாக வேண்டும் பிரதிபத்தி விசேஷத்தை விதிக்கிறார் மேல் –

சூரணை-322-

மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –

(ஆயி ஸ்வாமிகள்-ஈத்ருசனனான சிஷ்யனுக்கு -உண்டாக வேன்டும் அத்யாவசிய விசேஷம்மனனம் பண்ணுபவனை ரஷிக்கும் திருமந்திரமும் -தன் மந்த்ர பிரதிபாத்ய
பலம் பரதேவதையும் -தத் பிரதாத்மமான கைங்கர்ய பெரும் பலமும் -பலத்துடன் தொடர்ந்து-வருமவையான -விரோதி நிவ்ருத்தியும்-பிராப்தி அனுபவ ப்ரீதி ரூபங்களாயும் -சர்வ தேச கால அவஸ்தா கைங்கர்ய – தத் பல சித்த சாதனமும் -புத்ர பசு அன்னாதி
இஹ லோக ஐஸ்வர்யங்களும் யுக்த லஷண சம்பன்னனான சதாச்சார்யர் -என்று அத்யவசித்து நிர் பரராய் இருக்கக் கடவன் –
சேம நல் வீடும் இத்யாதி திருவாய் மொழியே போலேயும் – மாதா பிதா இத்யாதி போலேயும்
மந்த்ரமும் பலமும் -சாதன சாத்தியம் -சமான அதிகாரணம் ப்ரதிபாத்ய ப்ரதிபாதக சம்பந்தம் -உபதேசிப்பது -ஸூ ஆச்சார்ய கைங்கர்யம் -விஷய விஷீயீ சம்பந்தம் உண்டே)

(குருரேவ பரம் ப்ரஹ்ம-பர தேவதை
குருரேவ பரா கதி-பரமமான சாதனம் –
குருரேவ பரா வித்யா–மந்த்ரமும்
குரு ரேவ பராயணம்-பரம ப்ராப்யம் பலம்
குருரேவ பரா காமோ-தத் பல அனுபந்திகளும் –
குருரேவ பரம் தனம்-ஐ ஹிக போகம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா ஸௌ-தஸ்மாத் குருதரோ குரு–அனைத்தும் சச்சார்யார் என்ற விசுவாசம் வேண்டுமே
ஐ ஹிகம் ஆமுஷ்மிகம் சர்வம் ச சாஷ்டாஷர தோகுரு இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி– மந்த்ரம் தேவதா சாதனம் ஐஹிக போகங்கள் ஐஹிகம் -பலமும் அனுபந்திகளும் ஆமுஷ்மிகம் – அஷ்டாக்ஷரம் கொடுக்கும் ஆச்சார்யரே –இப்படியாக யார் நினைக்க வில்லையோ அவர்கள் மநுஷ்யரால் கை விடப் பட வேண்டியவர்கள்)

அதாவது –
மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே அநு சந்தாத்ரு ரஷகமாய் இருந்துள்ள –
திருமந்த்ரமும் –
தத் பிரதிபாத்ய -பர தேவதையும் –
தத் பிரசாத லப்தமான -கைங்கர்ய ரூப மகா பலமும் –
தத் அநு பந்திகளான-அவித்யாதி (கர்மம் வாசனா ருசி)நிவ்ருத்தி பூர்வகமான -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாகமும் –
சா லோக்யாதிகளும் -ஆகிய இவையும் –
ததாவித பல பிரதமான சாதனமும் –
புத்திர தார க்ருக ஷேத்திர பசு அன்னாத்ய அநு பவ ரூபமான இஹலோகத்தில் போக்யமான இவை எல்லாம்
நமக்கு நம்முடைய ஆசார்யனே என்று பிரதிபத்தி பண்ணக் கடவன் -என்கை-
குருரேவ பரம் ப்ரஹ்ம
குருரேவ பரா கதி
குருரேவ பரா வித்யா
குரு ரேவ பராயணம்
குருரேவ பரா காமோ
குருரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா ஸௌ தஸ்மாத் குருதரோ குரு-என்றும் –
ஐஹிகம் ஆமுஷ்மிகம் சர்வம் ச சாஷ்டாஷரதோ குரு இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி-என்றும் இப்படி
சாஸ்த்ரங்களில் சொல்லுகையாலே -நினைக்கக் கடவன் -என்று விதி ரூபேண அருளிச் செய்கிறார்-

——————————–

இப்படி தாம் அருளிச் செய்த இவ் வர்த்தத்தில் ஆப்திக்கு உடலாக இது பரமாச்சார்ய வசன சித்தமும் -என்று அருளிச் செய்கிறார் –

சூரணை -323-

மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –

(ஆயி ஸ்வாமிகள்–தாமும் அனுசந்தித்து சாரஞ்ஞருக்கும் உபதேசித்து அருளும் ஆளவந்தார் -ஆழ்வார் திருவடிகளே பிரிய பரமாயும் –விருப்பமாயும் -ஹித பரமாயும் -நலத்தையே -அபிமதமும் -ஆசைக்கு விஷயம் -ஸூக கரமும் -தனயன் –ஸ்ப்ருஹணீயமும்-விபூதி -சர்வம் ஐஹிக போகமும் -சர்வம் -சொல்லாமல் விடப்பட்டவை அநுக்த வாசகம் -பல சாதன அனுபந்திகளும் –பர தேவையும் –ச விசேஷண-அடை மொழி யுடன் கூடிய ப்ரணதி வாசகம் -ஸ்ரீ மத் தத் அங்கரி யுகளம் -மந்த்ரம் என்னும் இடமும் –வகுளா பரணர் திரு நாமம் உண்டே –விசேஷணம் -கைங்கர்ய செல்வமுடைய ஆழ்வார் திருவடிகள் -ஆய அர்த்தம் ப்ரணமாமி நம–மந்திரத்துக்கு வேண்டியவை எல்லாம் உண்டே –அவதாரணம் நியமேன -ஏவ -அத்யாவசியம் உண்டே குரோர் நாம சதா ஜபேத் -குரு ரேவ பர ப்ரஹ்ம எழுத்து அக்ஷரம் அறிவித்தவன் இறைவன் ஆவான் – குரு ரேவ பரம் தனம் -சொத்து குருரேவ பர காம –விருப்பம் குரு ரேவ மாதா பிதா -)

அதாவது
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி ஸ சர்வம்
யதேவ நியமேந மதன்வயானாம் -என்றி ஐஹிக போகங்களையும் -சர்வம் -என்று
அநுக்த சகல கதநத்தாலே -மந்திர தேவதா பலாதிகளையும் எடுத்து –
இத்தனையும் ஆழ்வார் திருவடிகளே என்று அருளிச் செய்கையாலே –
அந்த ஸ்லோகத்தில் இவ் அர்த்தத்தை பரமாச்சார்யான ஆளவந்தாரும்  அருளிச் செய்தார் என்கை –

————————————————–

இப்படி எல்லாம் இவனே என்று அநு சந்திக்கைக்கு அடி எது என்ன- அருளிச் செய்கிறார் –

சூரணை -324-

இதுக்கடி
உபகார ஸம்ருதி-

(ஆயி ஸ்வாமிகள்-ப்ராந்தனோ என்ற சங்கை வருமே இப்படி ஒன்றை மாற்று ஒன்றாக நினைத்தால் -விபரீத ஞானம் கூடுமோ என்னில் -அறியாதது அறிவித்த மஹா உபகார ஸ்ம்ருதி உண்டே -அறியாக் காலத்து உள்ளே அடிமைக்கு அன்பு செய்வித்த -அறியா மா மாயத்து அடியேனை -அத்தன் ஸ்வாமி தந்தை –திருத்திப் பணி கொள்வான் -பயன் நன்றாகிலும் பங்கு அல்லராகிலும் – க்ருதம் செய்யப்பட்டது -அறிகிறான் ஞானாதி -க்ருதஞ்ஞன்-)

(உபதேசாதி –ஆதி என்றது அனுஷ்டானம் -கருணை -கடாக்ஷ பலம் இவற்றால்எட்டு எழுத்தே ஸர்வார்த்த சாதகம்அத்தையே கொடுத்த ஆச்சார்யர்வைகுந்த மா நகர் மற்றது கை அதுவே -மந்த்ரம் கிடைத்தால் – ஆத்மனோ அதி நீசன் -யோகி த்யேய பதம் அர்ஹம் -ஆகும் படி பண்ணின -கிருபையால் உபகரித்த ஆச்சார்யரை எப்போதும் நினைத்து க்ருதஞ்ஞனாக இருக்க வேண்டும்சத்ருசமாக கொடுக்க ஒன்றுமே இல்லை -திருவடிக்கு திரும்பக் கொடுக்க உயிரைக் கொடுத்தாலும் நிகர் இல்லைஆலிங்கனம் செய்து அருளினார் அன்றோ-)

அதாவது –
இப்படி ஆசார்யனே நமக்கு சகலமும் என்று அநு சந்திக்கைக்கு ஹேது –
நித்ய சம்சாரியாய் கிடந்த தன்னை உபதேசாதிகளாலே திருத்தி 
நித்ய ஸூரிகளுடைய அனுபவத்துக்கு அர்ஹனாம் படி பண்ணின உபகார அநு சந்தானம் என்கை –

————————————————–

இவ் வுபகார ஸ்ம்ருதி பிரசங்கத்திலே -அதனுடைய பிரதம சரம அவதிகளை தர்சிப்பிக்கிறார்-

சூரணை -325-

உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஜதை –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஜதை –

(ஆயி ஸ்வாமிகள்ஒரு பொருள் பன் மொழி -செய் நன்றி அறிதல் – அறிவித்த ஆச்சார்யர் கிடைத்ததும் பகவான் இன் அருளாலே தானே அத்யாவசாய ஹேதுவான –உபகார ஸ்ம்ருதிக்கு -மந்த்ரமும் –இத்யாதி எல்லாம் ஆச்சார்யனே -ஏவ காரம் தான்- அத்யாவசய ஹேது -முதல் படி தன்னை இவ்வளவு ஆக்கின -ஆச்சார்யன் பக்கல்-கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தந்ததால் உபகாரம் அனுசந்திப்பதால் -முடிந்த நிலம் -ஈர்ப்பு காந்தன் பெருமாள் தானே —ஆச்சார்ய பிராப்திக்கு ஹேதுவான ஈஸ்வரன் பக்கல் இந்த ஆச்சார்ய விஷயத்தையே உபகரித்தத்தை அநுஸந்திக்கும் நன்றி உணர்வு உண்டே
பிரதம உபகார ஸ்ம்ருதி -உபகார்ய வஸ்துவின் வை லக்ஷண்யத்தைப் பற்றி வரும் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் பகவான் தானே -அதனால் வரும் –சரம உபகார ஸ்ம்ருதி உபகார்ய வஸ்துவின் கௌரவ்யத்தை பற்றி வரும்-கௌரவம் -மஹா உபாகரத்வம் –
குருர் குரு தம -குருவாக இருப்பதை காட்டிலும் குருவான தன்மை -சர்வேஸ்வரனையே கொடுத்ததால் -முன்புற ஈஸ்வர வை லக்ஷண்யம் ஆச்சார்யருக்கு வசப்பட்டு இருக்கும் -முடிவில் ஆச்சார்ய கௌரவமும் ஈஸ்வர கௌரவமும் பகவானுக்கு சேஷமாய் இருக்கும் -)

(வெள்ளி விட தங்கம் ஏற்றமாக இருந்தாலும் -வெள்ளி கொடுத்தவரை விட தங்கம் கொடுத்தவர் ஏற்றம் தானே -ஏற்றம் மாறுமே -க்ருதம்-செய்ததை ஞானம் -அறிவு – க்ருதஞ்ஞதையும் உபகார ஸ்ம்ருதியும் பர்யாயம் – -வேதம் த்யானம் நித்யாஸனம் உபாசனம் பக்தி பர்யாயம் போலே)

இச் சேதனன்  முந்துற அநு சந்திப்பது -அஞ்ஞான ஞாபனக முகத்தாலே -தனக்கு அகிலத்தையும் அறிவித்து -பகவத் விஷயத்தை கைப் படுத்தின -ஆசார்யன் பண்ணின உபகாரத்தை ஆகையாலே -உபகார ஸ்ம்ருதிக்கு முதலடி ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஜதை -என்கிறது –
க்ருதஜ்ஜ்தையும் உபகார ஸ்ம்ருதியும் பர்யாயம்

ஆச்சார்ய கெளரவம் (மஹா உபகாரம் )நெஞ்சில் பட -அவ் விஷயத்தில் தன்னைக் கொண்டு வந்து சேர்த்த ஈஸ்வரன் பண்ணின கிருஷி பரம்பரையை பின்னை அநு சந்திக்கையாலே –முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஜதை –என்கிறது -இதுவும் ஈஸ்வரன் பக்கல் உபகார ஸ்ம்ருதி என்றபடி –

இத்தால் -பகவத் விஷயத்தை உபகரித்த ஆசார்யன் பண்ணின உபகாரத்தை அநு சந்திக்க இழிந்தால் -அவனுடைய வைபவம் நெஞ்சிலே ஊற்று இருந்தவாறே –இப்படி இருக்கிற விஷயத்தை நாம் பெற்றது எம் பெருமானாலே அன்றோ என்று தத் க்ருத உபகார அநு சந்தானத்திலே சென்று தலைக் கட்டும் என்றது ஆயிற்று –

———————————

இந்த சாதாச்சர்யா -சச் சிஷ்யர் களுடைய பரிமாற்றம் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-326-

சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –

(ஆயி ஸ்வாமிகள்-இவ்வளவாக சிஷ்ய லக்ஷணம் -அத்யாவசிய வை லக்ஷண்யம் -அருளிச் செய்து – மேல் பரிமாற்றம் இருக்கும் படி -இவர்கள் விருத்தி -செய்ய வேண்டிய செயல்கள் பற்றி –இருவரும்- அன்யோன்யம் பிரிய ஹிதங்களை -இரண்டையும் -இருவரைக் குறித்து -நடத்த வேன்டும் -சிஷ்யர் ஆச்சார்யர் – சம விருத்தி- அந்யோன்ய வியாவ்ருத்தி-நடத்தணும் என்ற அளவு தான் சம விருத்தி – வியாவ்ருத்தி -நடத்தும் முறை மாறும் —ஹிதம் ஆச்சார்யர் தானே செய்து பிரியம் ஈஸ்வரனை கொண்டும் – சிஷ்யர் ஹிதம் ஈஸ்வரனைக் கொண்டும் பிரியம் தானே செய்து -என்பதில் வாசி உண்டே –
சாஸ்திரம் ஒத்து கொள்ளும் அடையாளங்கள் உள்ள பிரிய ஹித பரர்களான ஸச் சிஷ்ய சதாசார்யர் -தம் தம் நிலை குலைந்து அன்யோன்யம் பிரிய ஹிதங்கள் இரண்டையும் -காதா சித்தமாக -ஆச்சார்யர் ஹிதத்தை நித்தியமாக பிரியத்தை காதாசித்தமாக சிஷ்யர் ஆச்சார்யர் பிரியத்தை நித்தியமாக -ஹிதத்தை காதாசித்தமாக -இதிலும் வாசி உண்டே

(நடத்தக் கடவன் -தானாகவும் பிறராலும் செய்வார் என்றபடி -அனுஷ்ட்டித்தார் -என்றால் தானே செய்பவர்–பிரியம்உகப்பிலே அனுகூலமாய் தோற்றும் ஹிதம் போகப் போகத் தான் நல்லது உணர்வோம்-முதலில் தோன்றா விடிலும் அப்பவே நன்றாக பிரியம் – அப்புறம் நன்றாக ஹிதம் -பிரியம் ஹிதம் இரண்டிலும் விருப்பம் இருக்க வேண்டும் -விருப்பத்துக்கு அனுகுணமாக செயல்பாடு இருக்க வேண்டும் சிஷ்யனை புத்ரன் போலே நினைக்க வேண்டும் -ஹித பரனாக -ஆபஸ்தம்பர் பரத்வாஜ கௌதம ரிஷிகள் வசனம் உண்டே)

அந்யோந்யம் பிரிய ஹிதங்களை நடத்துகை யாவது –
சிஷ்யன் ஆசார்யனுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டையும் நடத்துகையும் –
ஆசார்யன் சிஷ்யனுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டையும் நடத்துகையும் –

நடத்தக் கடவர்கள் –என்றது இதனுடைய அவஸ்ய கரணீயத்வம் -தோற்றுகைக்காக-

————————————–

இருவரும் இரண்டையும் அந்யோந்யம் நடத்தும் க்ரமம் என் என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

(ஆயி ஸ்வாமிகள்–பிரிய ஏக பரனான சிஷ்யன் -சேஷியான ஆச்சார்யருக்கு நிஷ் களங்க ஸூவ ஞான அனுஷ்டான -ரூப பிரியத்தை நடத்தக் கடவன்
ஆச்சார்யருக்கு பிராமாதிக ஞானாதி காலித்யம் -கவனக் குறைவாலும் – விக்ரஹம் நோவு சாத்திக் கொண்டாலும் – எங்கள் ஆச்சார்யர் திரு உள்ளம் திரு மேனி கலக்கம் போக்கி அருள வேணும் என்று ஹிதைஷி யான ஈஸ்வரன் -இடம் காதா சித்தகமாக நடத்தக் கடவன்
ஹிதம் நோக்கும் ஆச்சார்யர் -சிஷ்யர் ஸ்வரூப ஹானி வாராத படி நியமித்து ஹிதத்தையே முடிய நடத்தியும்-இவனுக்கு தத் ததீய கைங்கர்ய உபயோகியான -அதி சங்குசித்தமாகும் போது -இவனுக்கு உசித கைங்கர்யம் நடக்கும் படி திரு உள்ளம் பற்ற வேன்டும் என்று ஈஸ்வரனை கொண்டு பிரியத்தை காதாசித்கமாக நடத்தியும் இப்படி சிஷ்யனை போல் அன்றியே பிரிய ஹிதங்களை மாறாடி நடத்தக் கடவன் -)

(சிஷ்யன் ஸ்வரூபம் -நீசன் நைச்ய கர்ப்ப சேஷத்வ அனுகுணம் -சாஷாத் பலம் மங்களா சாசனம் தானே -அனைவரும் இதற்காகவே –
இந்த லீலா விபூதி மாற்றி விடுமே -அதற்காக ஏதேனும் கலக்கம் வந்தால் போக்கி தர பிரார்த்திக்க வேண்டுமே
ஹேய உபாதேயங்களினுடைய ஹானி உபாதானங்களிலே ஸ்காலித்யம் பிறவாமல் நியமித்து –ஹேய ஹானி —உபாதேய உபாதானம் –
இவற்றில் மாறாடாமல் என்றபடி – தெரியாததை தெரிவிக்க வேண்டுமே
நலங்கும்-– -ஸூ வ உபதேச ஞானம் மூலம் கைங்கர்யம் –செய்து கொண்டே இருந்தாலும் விபூதி ஸ்வ பாவத்தால் –பிரகிருதி சம்பந்தத்தால் – குலையுமே
இவையும் – சோறு தண்ணீர் உடுக்க உடை இவை அப்ரதானம்தேக தாரண மாத்ரத்துக்கும் சங்கோசம் உண்டானால் -இவற்றையும் பிரார்த்தித்து கொடுக்க வேன்டும்
போகாத வழியில் போகாமை பிரார்த்திப்பதே – பிரதானம் -தானே செய்ய சக்தி இவருக்கு பெருமாள் அருள வில்லையே –
தத் பாத பக்தி ஞானம் தவிர வேறே பலத்தையும் பிரார்த்திக்க கூடாதே -ஸ்வரூபம் அழியுமே -பரார்த்த பிரார்த்தனை உசிதம் இல்லை –
பக்தி ஞானம் வர தேக தரணம் வேண்டுமே – -இதற்கு சேராததுக்கு பிரார்த்திக்கக் கூடாதே
குருவுக்கு ஹிதம் நேராக ரகஸ்யத்திலும் சொல்லக் கூடாது -கவனக் குறைவால் செய்தாலும் –நியம அதிக்ரமம் செய்தாலும் -சாஷாத் ஹித போதனம் – கௌரவ விஷயத்தில் செய்தால் நைச்ய விரோதி ஆகுமே – அதிகாரம் உள்ளோர் ரஹஸ்யத்தில் சொல்லலாம் –நீசனாக இல்லாதவன் தானே சொல்லலாம் –-சீஷா வல்லி ஸ்ருதி கொண்டே ஈஸ்வரனைக் கொண்டே நடத்த வேன்டும் –மங்களா சாசன பரனாக ஆக்கினத்துக்கு இது தானே கர்தவ்யம் )

அதாவது –
சிஷ்யன் ஆசார்யனுக்கு இரண்டையும் நடத்தும் இடத்தில் -தன் ஸ்வரூப அநு குணமாக
ஆச்சார்ய முக உல்லாசமே புருஷார்த்தம் என்று நினைத்து -தன்னுடைய கிஞ்சித் காராதிகளாலே -தன் ஆசார்யனுக்கு சர்வ காலமும் பிரியத்தை நடத்திப் போரக் கடவன் –

மங்களா சாசன பரனாகையாலே-இவ் விபூதி ஸ்வாபத்தால் திரு உள்ளத்தில் ஒரு கலக்கம்
வாராது ஒழிய வேணும் என்றும் -அப்படி ஏதேனும் ஓன்று வந்த காலத்தில் -இத்தைப் போக்கிக் தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் -என்கை –

ஆசார்யன் மாறாடி நடத்துகை யாவது ஹித ஏக பரனாகையாலே இவனுக்கு ஸ்வரூப ஹானி வாராதபடிக்கு ஹேய உபாதேயங்களினுடைய ஹானி உபாதானங்களிலே ஸ்காலித்யம் பிறவாமல் நியமித்து சர்வ காலமும் நல் வழி நடத்திக் கொண்டு போருகையாகிற ஹிதத்தை தான் நடத்தி  த்ருஷ்டத்தில் சங்கோசத்தாலே இவன் மிகவும் நலங்கும் அளவில் இருந்த நாளைக்கு இவன் நலங்காமல் இவையும் அவனுக்கு உண்டாம்படி திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்று அர்த்தித்து ஈஸ்வரனைக் கொண்டு பிரியத்தை நடத்தக் கடவன் என்கை —

——————————————

இப்படி செய்து போரும் இடத்தில் இருவருக்கும் இரண்டும் சம பிரதானமாய் இருக்குமோ –
என்கிற சங்கையிலே -அருளிச் செய்கிறார் –

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ் ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

(ஆயி ஸ்வாமிகள்-வேறே வார்த்தை உகப்பு பிரியம் -உஜ்ஜீவனம் -ஹிதம் – அந்யோன்யம் ஹித பிரியம் நடத்த வேன்டும் – கீழே பார்த்தோம் –
நிலை நின்ற வேஷம் இதுவே – பிரதானம் -சேஷி சேஷ பூதன் -ஸ்வரூப ஞான விபாகம் ஆகிற உகப்பு -விபாகம் பழுத்து என்றபடி –
நிரந்தரம் -நித்யம் – வேர் விழ -ஆழமாக -ஊன்றி போகும்
ஹிதைஷி ஆச்சார்யன் நிர்மல ஞானம் முதலானவை விருத்தி தானே சிஷ்யனுக்கு ஸ்வரூபம் உஜ்ஜீவனம் -நிரந்தரம் நிச்சலனமாக ஊன்றி போகும்)

அதாவது –
சிஷ்யன் சேஷ பூதன் ஆகையாலே சேஷியான ஆசார்யனுடைய ப்ரீதியில் ஊற்றமாய் போரும் –
ஆசார்யன் பரம க்ருபாவான் ஆகையாலே -தன்னுடைய சிஷ்யனான இவன் சம்சாராத் உத் தீர்ணனாய் உஜ்ஜீவிக்கையிலே ஊற்றமாய் போரும் என்கை –
ஆகையால் சிஷ்யனுக்கு பிரிய கரணமும்- ஆசார்யனுக்கு ஹித கரணுமுமே- பிரதானம் -என்று கருத்து –

————————————–

கீழ்ச் சொன்னவற்றால் பலிக்கும் அத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

(ஆயி ஸ்வாமிகள்-ஷமாகவே இருந்து அவராலே உஜ்ஜீவனம் என்று அறிந்து பிரியத்தையே நடத்தி போவதால் -இதுக்கு இலக்காக மாட்டான் –
ஒரு வேளை அப்படி நடந்தாலும் சீறி அருளாதே -கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –அதுவும் ப்ராப்தமே ரோஷம் அப்ரீதி கோபம் –
இப்படி பிரிய கரனாக -ஆச்சார்யருக்கு பிரியம் செய்பவன் –என்றவாறு -இவருக்கு பிரியம் என்பது இல்லை –
ஆச்சார்யருடைய –தன் ஞான அனுஷ்டான அபிவிருத்தி தர்சனத்தாலே –அபிவிருத்தமாம் ஹர்ஷத்துக்கு -நித்ய விஷயமாவது ஒழிய
அப்ரியதுக்கு விஷயமாவது -காதா சித்கமாகவும் கிஞ்சித் அவகாசம் இல்லையே)

அதாவது –
சிஷ்யன் ஆசார்யனுடைய பிரிய கரணமும்
ஆசார்யன் சிஷ்யனுடைய ஹித  கரணமும்
பிரதானமாக நடத்திப் போருகையாலே -சிஷ்யனான இவன் ஆசார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமாக போருகை ஒழிய –
அநிஷ்ட கரணாதிகளாலே நிக்ரகத்துக்கு விஷயம் ஆகைக்கு இடம் தான் முதலிலே இல்லை என்கை –

ஆகையாலே -என்று உகப்பிலே ஊன்றிப் போரும் என்று சொன்னது ஒன்றையும் அநு வதிக்கிறதாகவுமாம்-

———————————————

பிரகிருதி சம்பந்தத்தோடு இருக்கிறவனுக்கு -எப்போதுமொரு படி பட்டு இருக்குமோ –
காலுஷ்யங்கள் உண்டாகாதோ -அதடியாக நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது –
அந்த நிக்ரஹம் இரண்டு தலைக்கும் -எங்கனே யாகக் கடவது -என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -330-

நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

(ஆயி ஸ்வாமிகள்-சீறினாலும் அருள் தானே -இரக்கத்துடன் அனுக்ரஹம் – கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து சரண் அடைந்தேன் -என்பார் – நம் விரோதிகளையும் முதலை போலே கோபத்துடன் நிரசிப்பாரே –
காதாசித்தகமாக வரும்– சிஷுகனான ஆச்சார்யர் -திருத்தி பணி கொள்ளும் பொழுது –ஸ்வரூப விருத்தங்களை விட்டு ஸ்வரூபத்தை பேணி வர்த்திக்கும் படி பண்ணி ஸ்வரூபத்தை உஜ்ஜீவிப்பிக்கும் ஹித ரூபம் ஆகையால் இருவருக்கும் உபாதேயம் -யுக்தம் தானே -ஸூவ ஸூவ ஸ்வரூப அனுகுணமானதாகுமே)

(யபதே பிரவர்த்தன் ஆகாத படி -தவறான மார்க்கத்தில் போகாத படி திருத்திப் பணி கொள்ள வேண்டுமே -சம்சாரம் பலாத்காரம் தப்பு பண்ணத் தானே வைக்கும் –
எல்லே -இளங்கிளியே -ஸ்வா பதேசம் -சில் என்று அழையேன்மின் -ஆச்சார்யர் கோபிக்கும் பொழுது இப்படி பதில் சொல்லக் கூடாது என்று காட்ட –அது கண்டு ஆச்சார்யரும் கோபிக்கக் கூடாதே -வல்லை உன் கட்டுரைகள் — இப்படி ஆன பின்பு நானே தான் ஆயிடுக -பாகவத லக்ஷணம் சொல்லும் பாசுரம் -)

அதாவது –
அநிஷ்ட கரணாதிகள் அடியாக ஆச்சார்ய நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் தசையில் -அந்த நிக்ரஹம் சிஷ்யனான இவனை யபதே பிரவர்த்தன் ஆகாத படி நியமித்து நல் வழி நடத்துக்கைக்கு உறுப்பாகக் கொண்டு -ஹித ரூபமாய் இருப்பது ஓன்று ஆகையாலே -இப்படி நம்மை நிக்ரஹிப்பதே என்று -இவன் நெஞ்சு உளைதல்- இவனை இப்படி நிக்ரஹிக்க வேண்டுகிறதே என்று ஆசார்யன் நெஞ்சு உளைதல் – செய்கை அன்றிக்கே -நிக்ரஹ விஷயமான இவனுக்கும் -நிக்ரஹ ஆஸ்ரயமான ஆசார்யனுக்கும் -அங்கீகார்யம் -என்கை

————————————————–

நிக்ரஹம் உபாதேயம் ஆகில் -நிக்ரஹ காரணமும் உபாதேயம் ஆகாதோ என்ன -அது
த்யாஜ்யம் என்கிறார் –

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹ காரணம்
த்யாஜ்யம் –

(ஆயி ஸ்வாமிகள்-ப்ரியாவஹனாய சிஷ்யனுக்கு ஸ்வரூப விரோதி வர்த்தனம் சவாசனமாக த்யாஜ்யம் –வாத்சல்யம் காட்ட வைக்க தோஷங்களையே பண்ணக் கூடாதே)

அதாவது –
நிக்ரஹம் உபாதேயம் என்று நினைத்து மீளவும் தத் காரணத்தைச் செய்ய ஒண்ணாது –
யாதொரு காரணத்தாலே நீரிலே நெருப்பு எழுமா போலே -தன் விஷயத்தில் குளிர்ந்து தெளிந்து இருக்கிற -ஆச்சார்ய ஹிருதயத்தில் நிக்ரஹம் எழுந்து இருந்தது -அந்த காரணத்தை மறுவலிடாதபடி இட வேணும் -என்கை-

——————————————-

கீழ்ச் சொன்ன ஆச்சார்ய நிக்ரஹம் ஹித ரூபம் என்று வைதமாக உபாதேயமாம்
அளவன்றிக்கே -இவனுக்கு பிராப்ய கோடி கடிதமாய் இருக்கும் என்னும் அத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

(ஆயி ஸ்வாமிகள்-ப்ரீதி காரித கைங்கர்யம் தானே ப்ராப்யம் -அவன் இடம் உள்ள எல்லா குணங்களும் உபாதேயம் -கோபமும் அப்படியே
காரணம் த்யாஜ்யமானால்–ஹித ரூப நிக்ரஹம் த்யாஜ்யம் தத் காரியமும் குற்றம் தானே -என்னில் -த்யாஜ்யம் ஆகாதே
ஹிதம் பண்ண கோபித்து கொண்டானே கொண்ட சீற்றம் ஓன்று உண்டே -கோப வசத்துக்கு பெருமாள் திருவடியை ராவணன் அடித்த பின்பு 
ஆணைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் -பிரிய தமம் பரார்த்த நீயம் -அனுக்ரஹம் போலே கொள்ளத் தக்கதே
ஹர்ஷ வர்த்தகனாய் சிஷ்யன் -நிக்ரஹ ஹேதுக்களை த்யஜித்தும் -ஹித ரூபம் கோபத்தையும் சந்தோஷமாகக் கொள்ள வேன்டும் –
ப்ராப்யமாக கொள்ளத் தக்கதே -ப்ரீதி காரித கைங்கர்யம் போலே ஆதாரத்துடன் -மோதிரக் கையால் குட்டுப் பட ஆசை வேண்டுமே –பிராப்தி பிரதிபந்தகங்கள் போக்குவதும் ப்ராப்ய அந்தர்கதம் தானே -கோபம் -திருந்தப் பண்ணி அடைய வைக்கும் -தண்டனை அனுபவித்தே பாபங்களைப் போக்க வேண்டும் -)

அதாவது ஸ்வ ஆசார்யன் ஸ்வ விஷயத்தில் -ஹித ரூபேண பண்ணுகிற நிக்ரஹம் தான் –
ஸ்வ விரோதி நிவ்ருத்திக்கு உறுப்பாகையாலே-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –
செய்யேல் தீவினை -இத்யாதிகளில் சொல்லுகிற
பகவந் நிக்ரஹம் போலே புருஷார்த்த கோடியிலே அந்தர்பூதம் -என்கை-

ஆசார்யன் அர்த்த காமங்களிலே நசை அற்றவன் ஆகையாலே -அவை ஹேதுவாக பொறுக்கவும் வெறுக்கவும் பிராப்தி இல்லை –
இனி இவனுடைய ஹித ரூபமாக வெறுத்தானாகில் அதுவும் பிராப்ய அந்தர்கதமாக கடவது -என்று இது தன்னை மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே –

———————————————-

கீழ் இருவருக்கும் பிரதான க்ருத்யங்களான சொன்ன -ஹித கரண- பிரிய கரணங்களின் வேஷத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

(ஆயி ஸ்வாமிகள்-கீழ் இருவருக்கும் பிரதான க்ருத்யங்களான சொன்ன -ஹித கரண-
பிரிய கரணங்களின் வேஷத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –
பரதந்த்ரமான ஸ்வரூபத்தை -வளர்க்க -த்யாஜ்ய உபாதேயங்களை கேடப்பித்து -தியாக பரிக்ரஹ நிஷ்டையை பிறப்பித்து –தத் ததீய விஷய -ப்ராவண்ய விளைப்பித்து சிஷ்ட அனுஷ்டானங்களை பிறப்பித்து பிராப்தி பர்யந்தமாக பேணக் கடவன்
அஹங்கார கர்ப்பமான விஷய பிராவண்ய வர்த்தகமான தேகத்தை பேணக் கடவன் அல்லன்-ஸூபாஸ்ரயமான ஆச்சார்யர் யுடைய திரு மேனியை உசித கைங்கர்யங்களால் பேணக் கடவன்
சேஷி ஸ்வரூபம் -சேஷன் பேணக் கடவன் அல்லன் -பேணினால் சேஷத்வத்துக்கு கொத்தை உண்டாகும்- ஸ்வரூப ரக்ஷணம் கர்தவ்யம் அவருக்கு -தேக ரக்ஷணம் பிராப்தி இவனுக்கு –எல்லாவற்றையும் ஆச்சார்யருக்காக -என்ற எண்ணமும் -உசித திருமேனி கைங்கர்யமும் பண்ண வேன்டும் சிஷ்யனுக்கு

(மந்த்ரம் பிரதானம் செய்பவர் -உபகார ஆச்சார்யர்  அர்த்தம் பிரதானம் செய்பவர் உத்தாரக ஆச்சார்யர் -பிராவண்யம் பள்ள மடை இவர் இடம் –ஞானம் அனுஷ்டானம் மிக்கு இருப்பதால் –இதனால் தானே உத்தாரகத்வம் சித்திக்கும் -ஞானம் அவனே உபாயம் என்று இருப்பவர் –அனுஷ்டானம் ப்ராப்யத்தில் த்வரை மிக்கு இருப்பவர் 
அருள் ஒள் வாள் உருவி சம்சாரம் வெட்டி ஆபிமுக்கியமாதி ஏற்படுத்திய உத்தாரகர் கிருஷி -பண்ணும் படி செய்தவர் உபகார ஆச்சார்யர் -பல பர்யந்தம் இல்லையே –
திருவடிகள் இரண்டு -வை சாம்யம் இல்லையே -அதே போலே இவர் இருவரும் –
உத்தராக ஆச்சார்யர் ராமானுஜர் மட்டுமே -மற்றவர் பல பர்யந்தம் சேர்க்க ஆள் இல்லையே இந்த லக்ஷணங்கள் அவர் இடம் மட்டுமே பொருந்தும் 
உடையவர் -விஷ்ணு லோக மார்க்கம் காட்டுபவர் -5000-வருஷ திட்டம் பவிஷ்யத் ஆச்சார்யர் 
அந்தரங்கர்களை மட்டும் – இவர்கள் தானே தங்கள் நெஞ்சில் தோன்றிய படி சொல்ல மாட்டார்கள் -வெளியார் யாரும் உள்ளே வர முடியாது
உள்ளார்களையும் திருத்திப் பணி கொள்ளும் கடமை இவர்களுக்கும் உண்டே 
சிம்ஹாசனாதி பதிகள் வம்சத்தில் பிறந்ததால் பெற்ற மஹிமை உண்டே இவர்களுக்கு -)

அதாவது –
உஜ்ஜீவன பரனான ஆசார்யன் உஜ்ஜீவ விஷுவாய் வந்து -உபசத்தி பண்ணி –
உகப்பிலே ஊன்றிப் போகிற -சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை -பிரேம அதிகமாகவும் –
ஒரு பழுது வாராதபடி ஏகாக்ர சித்தனாய் கொண்டு -உபதேசாதிகளாலே நோக்கிக் கொண்டு போரக் கடவன் –

பிரிய பரனான சிஷ்யன் -தன்னுடைய உஜ்ஜீவன பரனாய்-தன் ஸ்வரூப ரஷணமே
நோக்கிக் கொண்டு போருகிற ஆசார்யனுடைய திருமேனியை -உசித கைங்கர்யங்களாலே சர்வ காலமும் -ஏகாக்ர சித்தனாய் நோக்கிக் கொண்டு போரக் கடவன் -என்கை –

——————————————

இப்படி இருவரும் இரண்டும் பேணினால் -இரண்டு தலைக்கும் பலிக்கும் அத்தை -அருளிச் செய்கிறார் –

சூரணை -334-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்–சேஷ சேஷிகளாய் கொண்டு ஸூவ ஸூவ ஸ்வரூப அனுரூபமாய் -ஆச்சார்யரால் பேணப்படும் சிஷ்ய ஸ்வரூபமும்-சிஷ்யனால் பேணப்படும் ஆச்சார்யர் திருமேனியையும் -அவன் திருவடி ஸ்தானீயம் தானே -ஸ்வரூபமும் பகவத் விக்ரஹங்கள் ஆகையால் -சரீராத்மா பாவம் உண்டே — சேஷ சேஷிகள் ஸ்வரூபமும் -சித்திக்கும் கைங்கர்யமும் கிட்டினதாகும்- மங்களா சாசன பரனாக ஆக்குவதே ஸ்வரூபம் பேணுதல் ஆச்சார்யர் திருமேனி பேண பகவத் குண அனுசந்தானம் பண்ண முடியும் – ஆகையால் இரண்டுமே பகவத் கைங்கர்யம் தானே –ஆச்சார்யரானால் -ஆச்சார்யத்வம் பேணா விடில் நிற்காது – சிஷ்யன் ஸ்வரூபம் பேணுபவர் எல்லாரும் ஆச்சார்யர் என்று சொல்ல முடியாது -ஈஸ்வரனும் பேணுவானே-வியாப்யம் -சிஷ்யத்வம் -ஆச்சார்ய தேக ரக்ஷணம் வியாபகம் இதே போலே -பண்ணா விடில் சிஷ்யத்வம் நிற்காது -என்றபடி)

அதாவது –
ஆச்சார்யரானால் (ஆச்சார்யாக இருந்தால் என்றபடி )சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணுகையும் – சிஷ்யனால் ஆசார்யனுடைய தேகத்தை பேணுகையும் -ஸ்வ அசாதாரணங்கள் ஆகையாலே -இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் –

அஹம் அன்னம் -என்கிறபடியே – அவனுக்கு போக்கியம் ஆகைக்கு யோக்யமாய் வைத்து அநாதி காலம் அப்படி விநியோகப்படப் பெறாமல் கிடந்த இவன் ஸ்வரூபம் தாத்ருச விநியோக அர்ஹமாய் திருந்தும்படி பேணிக் கொண்டு போருகையும் –நன்கு என்னுடல் அங்கை விடான் -என்கிறபடியே -அவனுக்கு விட்டுப் பிடிக்க சஹியாத படி போக்யமாய் இருக்கிற ஆச்சார்ய விக்ரஹத்தைப் பேணிக் கொண்டு போருகையும் – பகவானுக்கு  மிகவும் உகப்பு ஆகையாலே –இவை தான் வஸ்து கதயா பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் -என்கை –

——————————

இப்படி வியவஸ்திததமாக வேணுமோ-ஆசார்யனுக்கு தன்னுடைய தேக ரஷணத்திலும்-
சிஷ்யனுக்கு தன்னுடைய ஸ்வரூப ரஷணத்திலும் அந்வயம் உண்டானால் வரும் அது என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

(ஆயி ஸ்வாமிகள்-சிஷ்யன் பொறுப்பு -இவர் எடுத்துக் கொண்டால் – -ஸூ தேக உபேக்ஷகனான தன்னுடைய விரக்த ஸ்வரூபத்துக்கு ஹானி
ஸூ ஆத்ம ஹித ரூப ரக்ஷணம் -தான் செய்கை -சிஷ்யனுக்கு -ஸூ ஆத்ம அபிமானம் இல்லாத பரதந்த்ர ஸ்வரூப ஹானி உண்டாகும்)

(ஆசார்யத்வம் ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி –-சாஸ்திரம் கற்று அனுஷ்ட்டித்து கற்ப்பித்து-அன்றோ –ஸ்வயம் ஆசரதி -தேக உபேக்ஷை இருக்க வேண்டுமே -)

அதாவது –
தன்னுடைய தேக யாத்ரையில் தான் உபேஷகனாய் இருக்க –
சிஷ்யன் இதுவே நமக்கு ஸ்வரூபம் என்று தன்னுடைய தேகத்தை பேணிக் கொண்டு போருகை ஒழிய  தன்னுடைய தேகத்தை தான் ரஷிக்கை யாகிற இது -ஆசார்யனுக்கு -ஆசார்யத்வம்  ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி –

தான் ஆசார்யன்  பக்கலிலே ந்யஸ்த பரனான பின்பு -தன் ஸ்வரூபத்தை அவன் பேணிக் கொண்டு போரக் கண்டு இருக்கை ஒழிய தான் தன் ஆத்ம ரஷணம் பண்ணுகை யாகிற இது -சிஷ்யனுக்கு சிஷ்யத்வம் ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி -என்கை –

ஆகையால்-மறந்தும் -சிஷ்யனுக்கு தன்னுடைய ஸ்வரூப ரஷணமும்- ஆசார்யனுக்கு தன்னுடைய தேக ரஷணமும் கர்த்தவ்யம் அன்று -என்றது ஆயிற்று –

———————————————-

இனி ஆசார்யனும் சிஷ்யனும் தம் தாமுக்கு வியவஸ்திதங்களான ஆத்ம ரஷண-தேக ரஷணங்களைப் பண்ணும் இடத்தில் அவஸ்யம் பரிஹர நீயங்களான விரோதிகளை அருளிச் செய்கிறார்-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி

(தான் ஆச்சார்யனே இல்லையே -ஸூவ ஆச்சார்யருக்கு சிஷ்யன் தானே -இவனும் தன் சிஷ்யன் இல்லையே -ஸூவ ஆச்சார்யருக்கு சக சிஷ்யர்கள் தானே
அதே போலே சிஷ்யன் அனைத்தையும் சமர்ப்பித்த பின்பு இவனது ஒன்றுமே இல்லையே)

(ஆயி ஸ்வாமிகள்-தத் ஆச்சார்யருக்கு சேஷமான த்ரவ்யம் கொண்டு நிரபிமான ரக்ஷகத்வம் ஆச்சார்யரது -சர்வேஸ்வரனுக்கு அஹங்காரமும் மமகாரமும் உண்டே -அவை வேண்டியவை தானே -இயற்க்கை-சேஷத்வ அனுகுணமாக ரக்ஷணம் -சிஷ்யன் -ஆச்சார்யர் அபிமானம் இல்லாமல் ரஷிக்க வேண்டுமேமமகாரம் சேஷத்வ ரக்ஷண அனுகுண விரோதி-அஹங்காரம் நிரபிமான ரக்ஷண அனுகுண விரோதி — தர்சன நிர்வாகம் பண்ணி அருளிய -ஸ்ரீ ராமானுஜர் –தனியாக சிஷ்யரை நெறி வழி படுத்துவது மட்டும் இல்லாமல் – ஆதி சேஷன் அன்றோ-நீண்ட நோக்கு பார்வையுடன் ஸம்ப்ரதாய நிர்வாஹம்  )

அதாவது
ஹித பரனான ஆசார்யன் -ஸ்வ உபதேசாதிகளால் (அனுஷ்டானம் கடாக்ஷம் )சிஷ்ய ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -நான் ரஷித்துக் கொண்டு போகிறேன் -என்கிற அஹங்காரம் 
ஆச்சார்ய பரதந்த்ரம் ஆகிற தன் அதிகார விரோதி –

பிரிய பரனான சிஷ்யன் -த்ரவ்யாதிகளாலே ஆச்சார்ய தேக ரஷணம் பண்ணும் இடத்தில் –
என்னுடைய த்ரவ்யங்களாலும் கரணங்களாலும் இப்படி ரஷித்துக் கொண்டு போகிறேன் -என்கிற மமகாரம் -சரீர அர்த்த பிராணாதிகள் எல்லாம் ஆச்சார்ய சேஷம் என்று இருக்கக் கடவ -தன் அதிகாரி விரோதி -என்கை –

————————————-

ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் தம் தாமுடைய தேக ரஷண தசையில் பிரதிபத்தி
விசேஷங்களை வகுத்து அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன்

(தேக ரக்ஷணமே பண்ணக் கூடாது -என்னில் -எல்லாம் ஆச்சார்யரது -பொன்னுலகு ஆளீரோ புவனம் முழுதும் ஆளீரோ -சரீரம் பிராணம் அர்த்தம் அனைத்தும் அவரது-
ஸ்வாமியான ஆச்சார்யர்தேக தாரண பிரதிபத்தியா பண்ணும் -ஸ்நானம் -போலே -தேக ரக்ஷணம் -என்னது என்ற எண்ணம் இல்லாமல் –அனைத்தையும் சமர்ப்பித்த பின்பு -இது நம்மது இல்லை என்ற வாசனையும் இல்லாமல் இருக்க வேன்டும்துரபிமானம் இல்லாமல் –
தன்ன தான பர தந்த்ர சிஷ்யனுடைய பரி சுத்த வஸ்து -ஸ்வதந்த்ர லேசமும் இல்லாமல் அபிமானமும் இல்லாமல் கொடுத்த வஸ்து தானே – என்னது என்ற அபிமானமானால் -ஹீந வஸ்து இல்லையே –கூசாமல் கொள்ள வேண்டுமே –
சிஷ்யனும் -புண்ணுக்கு மருந்து போலே பண்ணும் ஸ்வ தேக தாரணம் -ஸூ தேக ரக்ஷணம் -ஸ்வ கீயம் ஆச்சார்ய வசம் –மாம் மதியஞ்ச யானும் என் உடைமையையும் -சேதன சேதனாத்மகம் -உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு -ஆச்சார்ய வஸ்துவான ஸூவ வஸ்துவைக் கொண்டு உடமையை பாழாக இறைக்கிறோம் என்ற பிரதிபத்தியைக் கொண்டு நிர்வேதத்துடன் வெறுப்புடன் பண்ணக் கடவன் -)

(நஞ்சீயர் தோட்டம் நம் பெருமாள் சிக்கு தலைக்கு இல்லை -பட்டர் குழந்தைகள் விளையாடி பாழாகப் போன புஷ்ப்பங்களை நம் பெருமாளுக்கு போதும் என்பாராம்
அவன் கால உசிதமாக கிஞ்சித் கரிக்கும் இவற்றை -இந்த காலத்துக்கு இன்ன வேணும் என்று கொடுப்பதே கர்தவ்யம்-சொத்தை ஜாக்ரதையாக பார்க்கும் கடமை – பொறுப்பு அவரது இல்லையே -ஆத்ம ரக்ஷணம் தானே அவர் கர்தவ்யம்திருமாளிகைக்கு வேண்டியவற்றைக் கண்டு கால உசிதமாக செய்வதே சிஷ்யனுடைய கர்தவ்யம்
சாண்டில்ய வசனம் -ஆச்சார்யர் த்ரவ்யம் தானே சிஷ்யர் -அனைத்தையும் அவரே அனுபவிப்பார்–வாங்கி –கொடுத்து வைத்தவற்றைக் கொள்ளுமா போல் -கிரஹணம் -மட்டுமே பிரதி க்ரஹம் அல்ல -என்ற எண்ணம் வேண்டும் — -பிள்ளை தங்க கோப்பை வாங்கி வரும் பொழுது நம் அவயவம் என்ற எண்ணம் தாய் தந்தைக்கு உள்ளது போலே -சிஷ்யனுடைய அனைத்தும் அவரது தானே)

சரீரம் அர்த்தம் பிராணம் ச சத் குருப்யோ நிவேதயத் -என்கிறபடியே சிஷ்ய சர்வமும் -அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ஸ்வ தேக ரஷணத்துக்கு உறுப்பாக அவன் கால உசிதமாக கிஞ்சித் கரிக்கும் இவற்றை -அவனது என்னும் நினைவு அன்றிக்கே -தன்னது என்றே வாங்கி விநியோகம் கொள்ளக் கடவன் -என்கை –

சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் -என்றது –
தனக்கு ஓர் உடைமை இன்றிக்கே -சகலமும் ஆச்சர்ய சேஷம் ஆகையாலே –
ஸ்வ தேக ரஷணத்துக்கு உறுப்பாக விநியோகம் கொள்ளும் அவற்றை -ஆசார்யன் உடைமை என்று பிரதிபத்தி பண்ணி விநியோகம் கொள்ளக் கடவன் -என்கை –

——————————————-

ஆசார்யன் தேக ரஷணத்தில் வந்தால் சிஷ்யன் தனக்கு உள்ளது எல்லாம் அங்குற்றை உடைமை என்னும் நினைவாலே கொடுக்கையும் -ஆசார்யனும் தாத்ருச வஸ்துவை வாங்குகையும் ஒழிய – சிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்துவை இருவரும் கொள்ளவும் கொடுக்கவும் கடவர்கள் அல்லர் என்கிறார் –

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

(ஆயி ஸ்வாமிகள்-விஷயம் அதுவே -வேறே மாதிரி அருளிச் செய்து திருடமாக்குகிறார் -அபிமானம் இருந்தால் வாங்கிக் கொள்ளக் கூடாதே –சிஷ்யனும் தன் வஸ்து என்ற அபிமானதுடன் கொடுக்கக் கடவன் அல்லன் -அஹங்கார மமகார வாசனையும் கூடாதே –
ஸ்வ தந்த்ரனான நான் என் வஸ்துவை கொடுக்கிறேன் என்ற எண்ணம் உபய தூஷிதம் -பிரமித்து கொடுத்தால் -ஹீந வஸ்து -ஸ்பர்சிக்கவும் யோக்யதை போலே -அம்ருதத்தில் விஷம் கலந்தால் போலே –நீச வஸ்து வாசனையும் பொறுக்காத ம்ருத ஸ்வ பாவர்- இவருக்கு -லஜ்ஜா பயம் இல்லாமல் – கொடுக்கவும் கூடாதே-பணம் பணம் தான் வர்ணம் இல்லை என்று நினைப்பவனாக இருந்தால் கொடுக்கலாம் –ம்ருத பிரக்ருதியான இவருக்கு கொடுக்கக் கூடாதே)

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் -என்றது -இவன்
மதியம் என்று அபிமானித்து இருக்கும் வஸ்துவை மறந்தும் -அங்கீகரிக்கக் கடவன் அல்லன் -என்கை –

சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் -என்றது –
ஸ்வகீயம் என்று அபிமானித்து இருக்கும் வஸ்துவை -அஹங்கார மமகார ஸ்பர்சம் உள்ளவை விஷம் என்று வெருவி இருக்கும் -ம்ருது பிரக்ருதியான ஆசார்யனுக்கு விஷத்தை இடுமா போலே சமர்ப்பிக்கக் கடவன் அல்லன் -என்கை –

——————————————–

அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

(ஆயி ஸ்வாமிகள்-ஆச்சார்யர் – கொள்ளில் மிடியனாம் -தரித்ரன் -ஆவான்  என்னது என்று அபிமானித்து -வந்ததை உபேக்ஷியாதே சபலனாய் -அஸ்தானே ஆசை வைத்து –
மஹா பாதகி கள்ளன் -அம்பஷ்டன்  மருத்துவன் சொத்து -கோள் சொல்பவன் இடமும் வாங்கக் கூடாதே -சாஸ்திரம்-சரீரம் அர்த்தம் பிராணம் மத் குருவஞ்ச என்று சமர்ப்பித்த பின்பு -இந்த நினைவால் இவன் கள்வன் தானே-உபய விபூதி மானைப் பற்றின – இவன்-பூர்ண ஐஸ்வர்யம் உள்ளவன் — இத்தைக் கொண்டால் அல்ப அஸ்திர வஸ்துவைக் கொள்ளில் இதுவும் இல்லாத தரித்ரன் தானே
நித்ய தரித்ரனான சிஷ்யன் கொடுக்கில் கள்ளனாம் –தன்னது என்று அபிமானித்து ஸ்வாமியான ஆச்சார்யருக்கு நிர்பயமும் வெட்கமும் -இல்லாமல் -ப்ரஹ்ம ஸ்வம் -சொத்தை அபஹாரியான -கோயில் கள்ளன் ஆவான்ப்ரஹ்ம ஸ்வம் தானே ஆச்சார்யர் -நம் அங்கை கை விடான் தானே -ப்ரஹ்மம் -)

(தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரன் ஆவான் என்றது –உம்மைத் தொகையாலே -ஆத்ம ரக்ஷணம் முடியாது என்று சொல்லவும் வேணுமோ என்றவாறு -ப்ரஹ்ம ஸ்வம் -ஆச்சார்யர் -ப்ரஹ்மம் சொல்லே ஆச்சார்யரைக் குறிக்கும் என்றுமாம் -)

அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் -தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –

என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-

—————————————

இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

(ஆயி ஸ்வாமிகள்-ஆச்சார்ய சிஷ்ய ரூப சம்பந்தமும் குலையும் -கொண்டாலோ கொடுத்தாலோ -சேஷ சேஷி நித்ய சம்பந்தம் மீண்டும் பொறுத்த ஒண்ணாத படி -உடைந்த கண்ணாடி ஒட்டாதே –)

அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் – அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க – இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் – இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான – கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-

——————————

இப்படி தாரித்ர்ய -(த்ரவ்ய )அபஹாரங்கள் வருவதும் – சம்பந்தம் குலைவதும் -கொள் கொடை தான் உண்டாகில் இறே-
அது தான் அவர்கள் செய்யார்கள் என்னும் இடத்தை ச ஹேதுகமாக அருளிச் செய்கிறார் –

சூரணை -341-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –

(ஆயி ஸ்வாமிகள்-ஆச்சார்ய ஸ்வமான சிஷ்யன் – ஸ்வாமியான அவருக்கு தன்னது என்று கொடுக்க மாட்டானே – -உபய விபூதிமானைக் கொண்ட பூர்ணனான அவரும் கொள்ள மாட்டாரே-இப்படி இருந்தால் தான் உபய ஸ்வரூப ஸித்தம் )

அதாவது –
சிஷ்யனான இவன் சகலமும் ஆச்சார்ய ஸ்வம் -நம்மது என்று சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லை -என்று இருக்கும் மிடியன் ஆகையாலே – நாம் அங்குற்றைக்கு ஒன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான் –

ஆசார்யன் ஆனவன்- ஈஸ்வரன் -சகல பர நிர்வாஹனாய் நடத்திக் கொண்டு போருகையாலே நமக்கு இனி என்ன குறை உண்டு என்று இருக்கும் பரி பூர்ணனாய் இருக்கையாலே -இவன் அபிமான துஷ்டமான ஒன்றையும் அங்கீ கரியான் -என்கை

————————————-

இந்த பூர்த்தி தாரித்யங்களால் இருவருக்கும் பலித்தவற்றை அருளிச் செய்கிறார் –

சூரணை -342-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –

(ஆயி ஸ்வாமிகள்-இதுக்கு யோக்யதை தான் உண்டாகில் தானே சம்பந்தம் குலையும் -ஆதான -தான -வாங்குவதும் கொள்வதும் -நிவர்த்தக -பூர்த்தியும் தாரித்ர்யமும் –
ஆச்சார்யர் இடம் பூர்த்தி -வாங்க மாட்டார் -சிஷ்யர் இடம் தாரித்ர்யம் -கொடுக்க மாட்டான் –
ஆக ஸ்வரூபம் ஜீவிக்கும் -பிராகிருத வஸ்துவில் நிரபேஷனான ஆச்சார்யர் பூர்த்தியாலே -பிராகிருத பிரயோஜன –நிஸ்ப்ருஹத்வம் என்னும் –ஆச்சார்ய ஸ்வரூபம் ஜீவிக்கும் -இது தானே அவரை உயர்ந்த நிலையில் வைக்கும் -ஸ்வீகய வஸ்து சத் பாவ பிரதிபத்தி லேசமும் அற்ற சிஷ்யனுக்கு- ஸ்வீயகத்வ புத்தி ராஹித்ய ஹேதுவான –ததீயன் ஆகிய ஸ்வரூபம் -சேஷன் தானே சித்திக்கும்)

(பல்லாண்டு பாட -மங்களா சாசனம் பரராக்குவதே பரம பிரயோஜனம் என்னில் ஸ்ரீ -ராமானுஜர் ஆறு கட்டளைகள் உண்டே -இது மட்டுமே போதுமோ என்னில் –
திருப் பல்லாண்டு -12-பாசுரங்களில் அனைத்தும் உண்டே -மண்ணும் மனமும் கொள்மின்  அஸாது சேவை கூடாதே –நாம சங்கீர்த்தனம் -ஒவ் ஒரு பாட்டிலும் உள்ள வினைச் சொல் சேர்த்து பார்த்தால் அனைத்துமே இருக்குமே -தொண்டைக் குலம் -தொண்டு புரிவது தானே கைங்கர்யம் –வழி வழி ஆடச்செய்ய வேன்டும் -குடி குடி ஆள் செய்கின்றோம் சமாஸ்ரயணம் பண்ணி கொண்டே – அத்தாணி சேவகம் –தந்து -அனுபவமும் உண்டே
உடுத்துக் களைந்த சூடி உண்டது உண்ண -சமர்ப்பிக்கவும் வேண்டுமே –
அல் வழக்கு ஒன்றுமே இல்லாமல் இருக்க வேண்டுமே -களை அற்ற கைங்கர்யம் பர்யந்தம் யோக்யதை வேண்டுமே
சேனாபதி ஜீயருக்கு எறும்பி அப்பா -அருளிச் செய்த வார்த்தை -கூப்பிட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேன்டும்)

அதாவது –
ஆசார்யனுக்கு இவன் அபிமான துஷ்டமானவை ஒன்றையும் கொள்ளாமைக்கு உடலான
பூர்த்தியாலே ஆச்சார்யத்வம் ஆகிற ஸ்வரூபம் ஜீவித்தது –

சிஷ்யனான இவனுக்கு ஸ்வ கீயத்வ புத்த்யா ஒன்றையும் சமர்ப்பிக்கைக்கு யோக்யதை இல்லாத சகலமும் -ததீயத்வ பிரதிபத்தி சித்த தாரித்யத்தாலே சிஷ்யத்வம் ஆகிய ஸ்வரூபம் ஜீவித்தது -என்கை –

——————————————————-

இனி சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் இன்னது என்று அருளிச் செய்வதாக தத் விஷய பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

சூரணை -343-

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –

(ஆயி ஸ்வாமிகள்-சங்கை மட்டும் இங்கே -சமாதானம் அடுத்த சூரணை –ஹித பிரிய பரத்வாதிகளான சிஷ்ய ஆச்சார்ய -சாதாரண -அசாதாரண -விருத்தி விசேஷங்களை அருளிச் செய்து கொண்டு -மேல் சிஷ்ய சாதாரணமான -பிரவ்ருத்தி நிவ்ருத்தி விசேஷங்களை அருளிச் செய்கிறார்
உபகார ஸ்ம்ருதி செயலில் ஈடுபடுத்த வேண்டுமே –சேஷத்வம் -நானும் உனக்கு பழ அடியேன் -உனக்கே நாம் ஆள் செய்வோம் –அடிமைத் தனம் சித்திக்க கைங்கர்யம் வேண்டுமே -ஸ்வரூப சித்தி அர்த்தமாக செய்ய வேண்டியது என்ன -என்கிற சங்கைக்கு பதில் -மேலே)

(உபகார ஸ்ம்ருதியால் உபகாரமும் –தான ஆதான யோக்யதா விரஹத்தாலே தத் அபாவமும்-உபகார அபாவமும் -உபகாரம் செய்யாமையும் – உபஸித்திதம் ஆகையால் எழுந்த சங்கை போக்கும் பொருட்டு உத்தர கிரந்தம் அருளிச் செய்கிறார் -ஆத்ம சமர்ப்பணமும் சமர்ப்பித்ததுக்கு ஷாமணமும் நித்யமாகவே இருக்கும்-)

அதாவது –
இப்படி கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லை ஆகிலும் –
உபகார ஸ்ம்ருதி  உடைய சிஷ்யன் -மகோ உபகாரனான ஆசார்யனுக்கு
பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் -என்கை –

———————————————

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

சூரணை -344-

ஆசார்யன் நினைவாலே உண்டு –

(ஆயி ஸ்வாமிகள் தன்னிடம் எதுவும் இல்லை என்று அறிந்த -ஸ்வரூப ஞானம் உள்ள சிஷ்யன் நினைவாலே இல்லை -க்ருதஞ்ஞனான ஆச்சார்யர் – நினைவாலே உண்டே

(வில்லாளி-தொடர – திருடன் நடுவில் –பாகவதர் முன்னால்-வில்லாளி இரும-திருடன் பயந்து விலக்க – பகவான் என் பாகவதனை ரஷித்தான் என்ற கணக்கு எழுதிய கதை –
கிருஷி பலித்ததே என்ற நினைவாலே -ஞானம் பக்தி வளர்ந்து மங்களா சாசன பரனாக ஆனதால் –பலித்ததே போதும் -என்றுமாம்)

அதாவது
ஸ்வரூபஜ்ஞனான சிஷ்யன் நினைவால் ஒருக்காலும் ஒன்றும் இல்லை –
ஸ்வ கிருஷி பல சந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே உண்டு -என்கை –

———————————————

அது என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -345-

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –

(அதாவது–1 ஜ்ஞான -2-வ்யவசாய- -3 -ப்ரேம–4- சமாசாரங்கள் -நான்கும் – ஞானம் முதலில் -அதுக்கு தக்க விவசாயமும் அதுக்கு தக்க ப்ரேமமும் அதுக்கு தக்க சமாசாரங்கள்
திரு மந்த்ர சரம ஸ்லோக த்வயம் -மூன்றாலும்–ஞானம் விவசாயம் -ப்ரேமம் – மூன்றும் ஏற்பட்ட பின்பு-சமாசாரம் -அனுஷ்டானங்கள் சம்யக் ஆச்சரம் -நன்றாக -முன்னோர் அனுஷ்டானம் கொண்டே-விவசாயம் -அத்யாவசியம் -உறுதி -ஏகாக்ர சிந்தை –என்றபடி -)

(ஆயி ஸ்வாமிகள்-ஆச்சார்யர் நினைவால் உண்டாகும் உபகாரமாவது -திரு மந்த்ரார்த்த ததீயத்வ சேஷ பர்யந்த ஞானம் – அதுக்கு அனுரூபமாய் சரம ஸ்லோகார்த்த உபாய விவசாயம் -தத் ஸித்தமாய்-த்வயார்த்தமான -உபேய ப்ரேமமும் -உபேய நிஷ்டராய் உறுதி கொண்ட மந்த்ர த்ரயம் -இடை விடாமல் சிந்தித்து ஸ்ரேஷ்டர் உடைய – சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -நிர்மல சமாச்சாரம் -இவை நான்கும் -இவன் செய்யும் உபகாரமாக ஆச்சார்யர் நினைத்து இருப்பாரே –குரு பரம்பரை சேர்த்து ரஹஸ்யார்த்தம் சொல்லி நான்கும் உண்டாகும் -)

(ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும்-பன்மையால் -இந்த ஞானத்தால் வரும் மேல் உள்ளவை –மூன்றும் வருமே –
திருமந்த்ரார்த்தத்திலே இவை எல்லாம் உண்டே -மற்றவை இதன் விவரணம் –ஸ்வரூபத்தில் ஞானமும் -உபாயத்தில் விவசாயமும் -புருஷார்த்தங்களில் ப்ரேமமும் –
இவற்றால் அநு ரூபமான இவனுடைய அனுஷ்டானங்களையும் சொன்னதாகவுமாம் –
ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஸமஸ்த பதம் –ஞானத்தையும் -விவசாய ப்ரேம சமாசாரமும்– இப்பொழுது இரண்டாகுமே அதனால் பன்மை –
த்வி வசனம் -சமஸ்க்ருதம் வேறே தெளிவாக தெரியும்
ஏக ஜாதிகள் இவை -ஞானத்தின் கார்யம் இவை என்பதால் -ஆச்சார்ய உபதேசத்தால் பெற்றவை -உபதேச கிருஷி பலத்தால் வந்தவை -உபகாரத்வம் –
பிரார்த்தனாயாம் சதுர்த்தி யாலே புருஷார்த்த ப்ரேமம் வெளிப்படும் – சப்தார்த்தம் -பொருள் தேறின-தாத்பர்யம் –ஞானாதி அனுகுண அனுஷ்டானம் -பகவத் ஏக சேஷ பூதன் உபாயம் ப்ராப்யம் -உபாயாந்தரங்களையும் போகாந்தரங்களையும் விட்டு -பக்தி ஞான சமாசார அனுஷ்டானங்கள்-வைராக்யம் பரத்வாஜ சம்ஹிதை சொல்லுமே -த்ருஷ்ட மாத்ரத்தால் ப்ரீதி அடைகிறார் ஆச்சார்யர் -ஞான கார்யமான பக்தி உந்த இவை எல்லாம் -)

ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஆவன –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-
தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும் –
உபேய ப்ரேமமும்-
இவை மூன்றுக்கும் அநு ரூபமான சம்யக் அனுஷ்டானமும் –

இத்தால் திருமந்த்ரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்க படுகிற ஸ்வரூப -உபாய -புருஷார்தங்களில் -ஜ்ஞான வ்யவசாய பிரேமங்களையும் -தத் அநு ரூப அனுஷ்டானங்களையும் சொல்லுகிறது –

—————————————–

ஆசார்யனுக்கு உகப்பாக இவன் பண்ணும் கைங்கர்யம் தான் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமாய் இருக்கையாலே –
பிரவ்ருத்தி ரூபமானவற்றை அருளி செய்த அநந்தரம்-
நிவ்ருத்தி ரூபமானவற்றை அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -346-

ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –

(குரு மந்திர தேவதா பரிபவமும் -ஒருமையில் சொன்னது ஜாதி ஏக வசனம் -சமமான பக்தி மூவர் இடமும் -ஸ்லோகம் சொல்லலாம் –ஆச்சார்யர் சொல்லாமல் குரு -பர ப்ரஹ்மம் சொல்லாமல் தேவதா -பிரமாணம் -வாக்கியம் இருப்பதால் –
மந்த்ரத்திலும் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ர பிரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால் கார்யகரமாவது -முமுஷுப்படி -4-இதற்கும் இந்த பிரமாணம் உண்டே 
பக்திக்கு விஷயமாக இருக்க வேண்டியவை மூன்றும் –பரிபவம் -அவமதிப்பது -என்றவாறு)

(ஆயி ஸ்வாமிகள்-தன் அனுஷ்டானம் கண்டு உகக்கும் ஆச்சார்யர் -இதுவே புருஷார்த்தம் சிஷ்யனுக்கு –இதற்க்கே செயல்பட வேண்டுமே –இவர் கோபிக்கும் படி நீ என்ன பண்ணினாய் என்று நினைக்க வேன்டும் -கோபித்தாலும் அருள் தான் -சீற்றம் உத்தேச்யம் -காரணமான தோஷங்கள் த்யாஜ்யம் -ப்ரீதி அர்த்தமாக ப்ரீதியே புருஷார்த்தமான சிஷ்யனுக்கு ஸ்வரூப ஹானி வராமல் இருக்க இவற்றைத் தவிர்க்க வேண்டுமே –
பிரதானமான பகவத் த்ரவ்யம் –பகவான் இடம் பிரதான த்ரவ்யம் பிறர் நன் பொருள் தானேஜீவாத்மா தானே -நிர்பயனாக அபகரிப்பது -ஸ்வ தந்த்ரன் என்று-பண்டே உன் தொண்டாம் பழ உயிரை -பழைமையாக – தொண்டு கொண்ட -கள்வா – பஸ்யதோ அபஹாரம் -அன்றோ இது -பெரு மிடறு செய்து விரும்பி அமுது செய்யும் பகவத் போஜனத்தை மிடறு செய்து விலக்குகையும் –குருவை அவமதித்தால் மிருத்யு -ஸ்வரூபத்தை உருக்குமே
மந்த்ரத்தை அவமதித்தால் தரத்திரன்-ஞானம் இத்யாதி சம்பத்துக்கள் இல்லாமல் விலகும்
கோர நரகத்தில் தள்ளும் தேவதா பர ப்ரஹ்ம பரிபவமும் )

அவை தன்னை உத்தேசிக்கிறார் -இத்தால்

—————————————–

இப்படி உத்தேசித்த அவற்றின் பிரகாரங்களை அடைவே விசதீகரிக்கிறார் மேல்-

சூரணை -347-

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை  விலக்குகை –

(ஆயி ஸ்வாமிகள்-நிஷித்தவற்றில் -மிகவும் கொடிய பகவத் த்ரவ்யம் அபகரிப்பது -அவர் சொத்தான தன்னை -பரதந்த்ரனாய் இருந்தும் ஸ்வா தந்தர்யம் ஏறிட்டு கொள்ளுகையும்
அநந்யார்ஹ சேஷ பூதனாய் வைத்து -தத் அந்நிய சேஷம் என்று பிரமிக்கையும் -ஆகிய இரண்டு வகைகளும் –
ஆசையுடன் ரஷிக்க வரும் பொழுது –அஹம் என்றத்தை பற்றவும் இனிதான -மாம் -அஹம் -ஸ்ரீ கிருஷ்ணனை காட்டிலும் இனிதான – உணவாக இருக்கும் ஜீவாத்மா அவனுக்கு -அவன் திரு உள்ளத்தில் இப்படி எண்ணம் உண்டே -பகவத் போஜனம் -கையைப் பற்றி விலக்குவது போலே -நிருபாதிக ரக்ஷணத்தை -புறம் கையால் அடித்து விலக்கி -சோற்றில் குற்றம் இல்லை -உள்ளம் கையால் அவன் உண்ண இருக்க -உன்னை சாப்பிட விட மாட்டேன் என்று விலக்கி -காலால் தள்ளுவது போலே செய்தாலும் அந்தப் பிரயோகத்துக்கு கூசி இப்படி அருளிச் செய்கிறார் –ஸூ ரக்ஷண ஸ்வான்வயம் கூடாதே -புறங்கையால் எடுக்க முடியாதே -ரக்ஷித்துக் கொள்ள முடியாதே இவனால் -அதனாலே புறங்கை என்றுமாம் –
கையில் நன் முகம் வைக்கும் நையும்-அவன் கை மட்டும் தானே பட வேண்டும் -உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் –
அவன் உள் கையால் நம்மை ருசித்து உண்ண வர -நாமோ நிராசையால் தள்ளுகிறோமே
தாத் அர்த்த சித்தம் அவ ரஷணே -சாலப் பல நாள்- காக்கும் இயல்பினன் கண்ணன் -ஈரக் கையால் தடவி ரஷிக்கும் -சர்வ ரக்ஷகன் –நிருபாதிக ரக்ஷகத்வம் -குடல் துவக்கு சாதாரணம் -பெத்த பாவிக்கு விடப் போமோ -காரணம் சம்பந்தம் அல்லவோ என்னில் -காரணம் சம்பந்தம் அனைவருக்கும் பொதுவான படியால் -நிர்ஹேதுகத்வம் உண்டே சம்பந்தம் சாமான்யமான படியால் -ராவணன் சிசுபாலனுக்கும் உண்டே ஸூ ரக்ஷண அன்வய ரூப புறங்கை -ஈடுபாடு தான் புறங்கை -கார்யம் பலிக்காதே ரக்ஷகனுக்கு ரக்ஷகத்வம் தானே ஜீவனம் -)

(அயோக விபச்சேதம் – தொலைத்து கூடும் -சேஷத்வம் இவனுக்கு -ஆய -இவனுக்கு ஸ்வா தாந்தர்யம் கூடாது -ஸ்வ இதர சேஷத்வ அபாவம் -தானே ஸ்வா தந்தர்யம் -தன்னைக் காட்டிலும் வேறு பட்ட அனைவருக்கும் அடிமை இல்லை –அ – -ஆய ஏவ -ம -அவனுக்கே -லுப்த சதுர்த்தி -தாதர்த்த சதுர்த்தி -சேஷத்வம் சித்திக்கும் -ஸ்வா தந்தர்யம் போகுமே இத்தால் –யோகம் ஸ்தாபித்த பின்பு – அந்நிய யோக விவச்சேதம் -உகாரம் – எனக்கு ஸ்வா தந்திரம் இல்லை என்றாலும் -மற்றவருக்கும் சேஷம் -என்றால்-அவனுக்கே -என்பதால் -பகவானுக்கு சேஷ பூதனே என்பதை மாற்றி பகவானுக்கே சேஷ பூதன் -அந்நிய தமரில் அந்நிய தமன் -பகவானைத் தவிர மற்ற யாரும் ரக்ஷகர் இல்லை -நாமும் ரக்ஷகர் இல்லையே -அடியேன் பகவானுக்கே ரஷ்யம் -நான் எனக்கு உரியன் அல்லேன் நமஸ் சொல்லுமே -)

பகவத் த்ரவ்யம் -என்கிறது –
பிறர் நன் பொருள் -என்னும் படி -ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹணீயமான ஆத்ம த்ரவ்யத்தை –

ஸ்வாதந்த்ர்யம் ஆவது -சேஷத்வைக நிரூபணீயமானவற்றைத் தனக்கு உரித்தாக நினைத்து இருக்கை-

அந்ய சேஷத்வம் ஆவது -பகவத் ஏக சேஷமானவற்றை தத் இதர சேஷமாக நினைத்து இருக்கை –
இது தான் மாதா பித்ராதி தேவதாந்திர பர்யந்தமாய் இருக்கும் –

இவை இரண்டும் பிரதம அஷரத்தில் சதுர்த்தியாலும் -மத்யம அஷரத்தாலும் கழிக்கப் படுகிறவை இறே –
இது தன்னை –
கிந்தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா  -என்று சகல பாப மூலமாக சொல்லப்படா நின்றது இறே –

பகவத் போஜனம் இத்யாதி -ரஷணத்தை பகவத் போஜனம் என்கிறது
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்-அவனுக்கு பசித்தவனுக்கு ஊண் போலே தாரகமாய் இருக்கையாலே –
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட -என்கிற இடத்தில் –
ரஷணம் அவனுக்கு தாரகமாய் இருக்கையாலே -உண்ட என்கிறது -இல்லையேல் -காக்கும் -என்ன அமையும் -என்று இறே நம்பிள்ளை அருளிச் செய்தது –

ஏவம் பூதமான அவனுடைய ரஷகத்வத்தை விலக்குகையாவது-அவ ரஷணே -என்கிற
தாதுவாலே நிருபாதிக சர்வ ரஷகனாக சொல்லப்படுகிற அவனுக்கு ரஷிக்க இடமறும்படி-ஸ்வ யத்னத்தாலே  யாதல் –பிறராலே ஆதல்-தன்னை ரஷிக்கையில் பிரவிருத்தன்  ஆகை-

இது தான் பகவத் ஏக ரஷ்யத்வ பிரதிபாதகமான -நமஸால்-கழிக்கப் படுகிறது இறே –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-பூமியையும் தெய்வ உலகங்களையும் வெள்ளம் கொள்ளப்புக, அவற்றுள் ஒன்றும்-பிரி கதிர்ப்படாதபடி – தப்பாதவாறு- ஏக-ஒரே காலத்தில் அவற்றை எல்லாம் எடுத்துத் தன் திருவயிற்றிலே வைத்துக் காத்த நம் கண்ணன். காத்தல் அவனுக்குத் தாரகமாகையாலே ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும்.

———————————————

அவன் ரஷித்து அருளும் க்ரமம் தான் என்ன -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -348-

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –

குரு பரிபவம் ஆவது -கேட்ட அர்த்தத்தின் படி அனுஷ்ட்டிக்காது ஒழிகையும் -அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் –
மந்த்ர பரிபவம் ஆவது -அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்- விபரீதார்த்த பிரதிபத்தியும் –
தேவதா பரிபவம் ஆவது -கரண த்ரயத்தையும்- அப்ராப்த விஷயங்களிலே பிரவணம் ஆக்குகையும் –தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காது ஒழிகையும் –

(ஆயி ஸ்வாமிகள்-சர்வ வித ரக்ஷகர் இவனே – அந்நியர் ரக்ஷகர் அல்லர் -ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்-பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு —உயிராகி நின்று –பெரிய திரு மொழி -8–9–7–(திருக் கண்ணபுரம் -திவ்ய தேசம் ஸ்பஷ்டமாக இல்லாத -4-பத்தில் -இரண்டு இடங்களிலும் -5 – ஒன்பது இடங்களிலும்-9-பத்தில் ஏழு இடங்களில்–18 -பாசுரங்களில் இல்லை -) பெற்றோர் உருவில் தான் வருவான் -மற்ற உருக் கொண்டு -இன் சொல்லி சொல்லியும் –சர்வ வித ரக்ஷகன் -சால பல நாள் உகந்து உயிர்கள் காப்பானே –அவன் ரஷித்து அருளும் க்ரமம் தான் என்ன -என்ன அருளிச் செய்கிறார் –

அஞ்ஞான அந்தகாரம் போக்கும் குரு ரேவ பர ப்ரஹ்ம குரு ஸாஷாத் -குருவே நம–குரவே நம-என்பதே சரிஅருளிச் செய்யக் கேட்ட தத்வ ரஹஸ்ய தாத்பர்யம்-படி சிரேஷ்ட சமாசாரம் அனுஷ்டியாது இருப்பதும் -கேட்டதாய் பாலியில் போடுவது போலே அதிகாரிகள் அல்லாதார்களுக்கு சொல்லாமையும் அத் தன்மையை வெளியில் காட்டிய ஆச்சார்யர்

வண்மை -இரண்டாலும் நம் இடம் வர -யதார்த்தத்தில் விஸ்ம்ருதியும் –அத்தை வைத்து பிரயோஜனாந்தரத்துக்கு போகக் கூடாதே –துர்மானித்தவ நிபந்தமான விபரீதார்த்தம் பிரதிபத்தி பண்ணக் கூடாதே-

தேவதா -மந்திரத்தால் பிரதிபாதிக்கப்படும் பர ப்ரஹ்மம் -தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – அஞ்சலி ஸ்துதி மனனம் –மூன்றுக்கும் சாதனம் -தத் கைங்கர்ய உபகரணமான -மூன்றையும் தத் இதரர்களை நெஞ்சினால் நினைத்தும் -வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதது செய்தும் –அபிராப்தங்களில் செலுத்தியும் -பிராப்த விஷய ப்ராவண்யம் இல்லாமையும் பரிபவமே – -மால் கொள் சிந்தையராய் –நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது -ஸ்வரூப பிராப்தமுமாய் -நிரதிசய போக்யமுமான விலக்ஷண தத் விஷயத்தில் மீட்க ஒண்ணாத படி பிரணவம் ஆக்காமல் இருப்பதும் அவமரியாதையே-நமக்கு தஞ்சமே திருமந்திர சாரார்த்தங்கள் தானே  -)

( நாஸ்திக்யாதிகளாலே–நாஸ்திகர் -பொறாமை கொண்டவர் -தபஸ் இல்லாமை- பக்தி இல்லாமை -சிசுரூஷை இல்லாமை
கொங்கு நாட்டு பெண்மணி -மறந்து -மீண்டும் த்வயம் -கேட்டு -காரேய் கருணை -மறந்து பரிபவம் என்றால் அருளால் இருப்பது ஆச்சார்யார்க்கு கொத்தை யாகுமே –
பள்ளத்தில் விழுமா போலே பிரவணமாம் படி பண்ணுகை –இதுவே இயற்க்கை -அவனை நோக்கி போவது -நாமோ வலிந்து இவற்றை திருப்பி விஷயாந்தரங்களில் செலுத்துகிறோமே -இதை விலக்கவே அவன் இடம் பிரவணம் ஆகுமே
மந்தரே தத் தேவதா யாம்ச ததா மந்திர பிரதே குரவ் த்ரிஷூ பக்திஸ்  ஸதாகார்யா– சதா கார்ய பக்தி கனக்க உண்டாக வேண்டுமே மூவர் இடத்திலும் –
மந்திர நாதம் குரும் மந்த்ரம் சமத்வே நானுபாவயேத்-சமமாகவே கொள்ள வேண்டுமே 
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு தகுதியான அனுஷ்டானம் –தியாகத்துக்கு த்யாஜ்ய விஷயத்துவமும் ஸ்வீ காரியத்துக்கு ஸ்வீகார்ய விஷயத்தவமும் –சாஸ்திரம் க்ருத்யம் அக்ருத்யம் வாசி சொல்லி இருந்தாலும் -ஆச்சார்ய உபதேசம் வாங்கிக் கொண்டு விடுவதே பிரமாணம் –அவன் அருளிச் செய்ய கேட்டு அனுஷ்டானம் அதுக்கு தக்க படி இருக்க வேண்டும் –உபதேசம் -முதல் நிலை -அறிவது இரண்டாம் நிலை -அனுஷ்டானம் மூன்றாவது நிலை –இல்லாமல் இருப்பதே பரிபவம் – – பரத்வாஜ பராசர வசன பிரமாணங்களைக் காட்டி அருளுகிறார்-மந்த்ரத்தை நன்றாக காத்து –கேட்க்காமல் மந்த்ரத்தை சொல்லாமல் -அப்படி கேட்ட்டாலும் நமஸ் -மட்டும் சொல்லி –மேலும் கேட்ட பின் நாராயணாயா -மீண்டும் மீண்டும் கேட்டால் பிரணவம் -அர்த்தம் சொல்லாமல் குஹ்ய தமம் சம்ப்ரதாயம் —ஆஸ்ரிதர் அதி பக்தாயா -தேவரீர் கதி- சாஸ்த்ரார்த்தம் அறிய அபி நிவேசம் -உள்ளவனுக்கு சொல்ல வேண்டும்- டம்பம் க்யாதி பூஜா காரணமாக சொல்லக் கூடாதே –பர வான் -தேவரீரை பரனாக உடையவன் -நித்யம் நாராயண பக்தர்களுக்கு கைங்கர்யம் -இதுவே மந்த்ரார்த்தம்  இல்லாமல் இருப்பதே உதாசீனம் -)

அதாவது –
சர்வ ரஷகனான அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணம் என்கிற
பிரபந்தத்திலே விசதமாக சொன்னோம் -அங்கே கண்டு கொள்வது என்கை –
அதிலே அவனை ஒழிந்தார் அடங்கலும் ரஷகர் அல்லர் என்னும் அத்தை பிரதிபாதித்த அநந்தரம் –
ஈஸ்வரன் மாதா பிதாக்கள் கை விட்ட அவஸ்தையிலும் –
பின்னு நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து -என்கிறபடியே
தன் உருக்கெடுத்து வேற்று உருக் கொண்டு தான் முகம் காட்டி இன் சொல் சொல்லியும் –
என்று துடங்கி -இவனே எல்லார்க்கும் ரஷகன் -என்கிறது அளவாக
அவனுடைய ரஷகத்வ க்ரமத்தை ஸூவ்யக்தமாக அருளிச் செய்தார் இறே

குரு பரிபவம் -இத்யாதி -கேட்ட அர்த்தத்தின் படி அனுஷ்டியாது ஒழிகை -யாவது –
ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமாக அவன் அருளிச் செய்து கேட்ட த்யாஜ்ய உபாதேய ரூபமான –
அர்த்த விசேஷங்களுக்குத் தகுதியாய் இருந்துள்ள த்யாக ஸ்வீ கார ரூபமான அனுஷ்டானத்தை பண்ணாது ஒழிகை –

அநதிகாரர்களுக்கு உபதேசிக்கையாவது -தனக்கு தஞ்சமாக அவன் உபதேசித்த
சாரார்தங்களை நாஸ்திக்யாதிகளாலே-இதுக்கு அதிகாரி இல்லாதவர்களுக்கு
க்யாதி லாபாதிகளை நச்சி உபதேசிக்கை-

மந்திர பரிபவம் -இத்யாதி -அர்த்தத்தில் விஸ்ம்ருதி யாவது -ஆசார்யன் அந்த மந்த்ரத்துக்கு அருளிச் செய்த யதார்த்தங்களை பல காலும் அனுசந்தித்து நோக்கிக் கொண்டு போருகை அன்றிக்கே -ஒவ்தாசீந்த்யத்தாலே மறந்து விடுகை –

விபரீதார்த்த பிரதிபத்தி -யாவது -ஆசார்யன் அருளிச் செய்த -பிரகாரம் அன்றிக்கே –
மந்த்ரத்துக்கு விபரீதமாய் இதுக்கும் அர்த்தங்களை இதுக்கு அர்த்தம் என்று ப்ராந்தியாலே பிரபத்தி பண்ணி இருக்கை-

தேவதா பரிபவம் இத்யாதி -கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களில் பிராவண்யம் ஆக்குகை -யாவது –
விசித்ரா தேக சம்பந்தி ஈஸ்வராய நிவேதிதும் –
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணமிவை-என்கிறபடியே- பகவத் பரிசர்யர்த்தமாக ஸ்ருஷ்டங்களாய்
உன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கை தொழவே -என்கிறபடியே
அவனை நினைக்கைக்கும் -ஸ்துதிக்கைகும் -வணங்குகைக்கும்-உறுப்பான மனோ வாக் காயங்களை -ஸ்வரூபம் பிராப்தம் அல்லாத ஹேய விஷயங்களில் -மேட்டில் நீர் பள்ளத்தில் விழுமா போலே பிரவணமாம் படி பண்ணுகை –

தத் விஷயத்தில் பரவணம் ஆகாது ஒழிகை யாவது -மால் கொண்ட சிந்தையராய் –
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
ஸ்வரூப ப்ராப்தமான அவ் விஷயத்தில் மண்டி விழும்படி பண்ணுவியாது ஒழிகை –

ஆக –
மந்தரே தத் தேவதா யாம்ச ததா மந்திர பிரதே குரவ் த்ரிஷூ பக்திஸ்  ஸதாகார்யா-என்றும் –
மந்திர நாதம் குரும் மந்த்ரம் சமத்வே நானுபாவயேத்-என்றும் –
பூஜ்யமாக சொல்லப் படுகிற இம் மூன்று விஷயத்தையும் பரிபவிக்கை யாவது இவை ஆயிற்று –

—————————————–

ஆக இப்படி ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக செய்ய வேண்டும் அவையும் –
தவிர வேண்டும் அவையும் -அருளிச் செய்தாரார் நின்றார் கீழ் –
இன்னும் அவனுக்கு அபேஷிதமாய் இருப்பது ஒன்றை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-349-

இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-சரீர அவசானத்து அளவும் – யாவன் மோக்ஷம் இவனுக்கு ஆச்சார்யர் பக்கல் உபகார ஸ்ம்ருதி விசேஷம் இருக்க வேண்டுமே 
ஆச்சார்யர் இஷ்ட அநிஷ்டங்களே தனக்கும் -பரிபாகம் பிடித்த சிஷ்யனுக்கு -ஆச்சார்யர் ஸமாஸ்ரயணம் ஆன பின்பும் பிரக்ருதியிலே இருப்பதால் —
உரு மாய்ந்து போக விரோதி ஸ்மரணமும் அனுவர்த்திக்குமே சரீர அவசானம் வரை
துஷ்டமான மனசை வி நஷ்டமாக்கி -தீ மனம் கெடுத்தாய்  என்னை தீ மனம் கெடுத்தாய் -என் தீ மனத்தைக் கெடுத்தாய் -என்றபடி –நல்ல மனம் கொடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய் – -வாமன ஸ்ரீ தர பாசுரங்களில் இந்த இரண்டும் –
உபகார ஸ்ம்ருதி மறவாமல் இருக்க வேண்டும் –அங்கு போனால் சம்சார ஸ்ம்ருதி லேசமும் கூடாதே -ஆகையால் தீ மனம் கெடுத்தாய் என்று சொல்ல முடியாதே —நோ பஜனம் சரீரம் ஸ்மரன்-நினைவு வராமல் உபகார ஸ்ம்ருதியும் அங்கே வராதே – -விரோதி ஸ்மரண ஹேதுவான உபகார ஸ்ம்ருதி கூடாதே –
அனந்த கிலேச பாஜனம் இங்கு – நிரதிசய ஆனந்தாவஹம் அங்கு- -பிரான் இருந்தமை காட்டினீர்- ப்ராப்யம் காட்டுவதற்கு தீமை நினைவு வேண்டாமே —ப்ராப்ய அனுபவ ஜெனித ஸ்ம்ருதி -வரலாமே – முமுஷு தசையில் நிவர்த்ய விரோதி ஸ்மரணம் – நிவர்த்தகர் -ஆச்சார்யர் –முக்த தசையில் தொலைக்கப்பட்ட எதுவிலும் லேச ஸ்மரணமும் கூடாதே -மோக்ஷ ஹேதுவான நெஞ்சு -மருவித் தொழும் மனமே தந்தாய்-ஆனுகூல்ய ஆகாரம் -ததீயத்வ ஆகாரேண -நினைக்கலாமே என்னில் இதுக்கு பிரதிகோடி தீ மனம் கெடுத்தது ஆகுமே – பந்த ஹேதுவான பிரதிகூலமான – பிரான் இல்லாமை இல்லை இருந்தமை காட்டினார் – மருவித் தொழும் மனம் என்றால் தொழாத மனம் இருந்தது போலே இல்லை-பிரான் இருந்தமை காட்டினத்துக்கு பிரதிகூல இல்லாமையே இல்லையே என்றவாறு –அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை அனுகூலமாகவே இருப்பது ஒன்றே அனுசந்தேயம் –)

அதாவது –
இவ் வதிகாரிக்கு சரீரத்தோடு இருக்கும் காலம் இத்தனையும் -மகோ உபாகாரனான ஆசார்யன் பக்கல்-
என்னுடைய தீய மனசைப் போக்கினாய் –
அநந்ய பிரயோஜனமாக அனுகூல விருத்திகளைப் பண்ணும் மனசைத் தந்தாய் –
என்று உபகார ஸ்ம்ருதி அநு வர்த்திக்க வேணும் என்கை-

—————————————

மனசுக்கு தீமை யாவது என் என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை -350-

மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை  –

(ஆயி ஸ்வாமிகள்-அவன் கெடுத்த மனசின் தீமையை -மனன சாதனமான மனசுக்கு -தீமை -தனக்கு உண்டாய் வருகிற – சாந்தி சம தமாதி குணங்களையும் -இருக்கிற வற்றையும் நினைக்கக் கூடாதே-நினைத்தால் அஹங்காரம் அபி விருத்தம் ஆகுமே-
தோஷ யோக்யதா ஸ்பர்சம் அற்ற பகவத் பாகவத விஷயங்களில் இல்லாத தோஷங்களையும் நினைக்கக் கூடாதே -நினைத்தால் அபசாரம் அபி விருத்தமாகுமே -)

ஸ்வ குணத்தை நினைக்கையாவது -சம தமாதி ஆத்ம குணங்கள் தனக்கு உண்டானாலும் –
நிறை ஒன்றும் இலேன் –
நலம் தான் ஒன்றும் இலேன் –என்கிறபடியே -நமக்கு ஒரு ஆத்ம குணமும் இல்லை என்று தன் வெறுமையை அனுசந்திக்க வேண்டி இருக்க –
இவை எல்லாம் நமக்கு இப்போது உண்டு என்று தனக்கு உண்டான சத் குணங்களைப் போரப் பொலிய நினைக்கை –

பகவானுடைய தோஷத்தை நினைக்கை யாவது –
1-தனக்கு பர தந்த்ரமான இவ் வாத்ம வஸ்துவை -தன் உபேஷையாலே-அநாதி காலம் கர்மத்தை வியாஜமாக்கி கை விட்டு இருந்தவன் –
2-அவ்வளவும் அன்றிக்கே -நிர் தயரைப் போலே -யதா கர்ம  பல தாயியாய் நிரயங்களிலே தள்ளி -அறுத்து அறுத்து தீர்த்துமவன் –
3-கைக் கொண்டாலும் -நிரந்குச ஸ்வ தந்த்ரன் ஆகையாலே இன்ன போது இன்ன செய்யும்  என்று விஸ்வசிக்க ஒண்ணாதவன் என்றால் போலவும் –
4-கிருஷ்ண அவதாரத்தில் ஸ்வைர விஹாரங்களை இட்டு தர்ம சம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவனுக்கு இங்கன் செய்கை முறைமையாய் இருந்தது இல்லையோ என்றால் போலவும் நினைக்கை –

அல்லது –சமஸ்த கல்யாண குணாத்மகமான விஷயத்தில் நினைக்கலாவது ஒரு தோஷம் இல்லை இறே-

இனி பாகவத தோஷத்தை நினைக்கை யாவது –
திருமேனி யோடு இருக்கையாலே மேல் எழத் தோற்றுகிற ஆகாரங்களை இட்டு
பிரகிருதி வஸ்யர் அஹங்கார க்ரஸ்தர் என்றால் போலே நினைக்கை –

ஆக-இது -ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷத்தையும் -நினைக்கை யாவது –

——————————————

ஆனால் தனக்கு சிலம் குணம் உண்டாய் இருக்க -அது நினைக்கலாகாதோ என்கிறாப் போலே – அத் தலைக்கும் சில தோஷம் உண்டாய் இருக்க நினைக்கலாகாதோ-என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை-351-

தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே 

(ஆயி ஸ்வாமிகள்-பகவத் பாகவத தோஷம் நினையாது ஒழிகை–நம் குணம் போலே-சிறிது -உண்டாய் இருந்தாலும் இல்லை என்று மறைத்து நினைக்க வேண்டியது போலே அன்று -என் என்னில் பகவத் பாகவத விஷயங்களில் தோஷமே -இல்லாமையாலே –என்றவாறு –
மித்யா ப்ரதீதி -பொய்யாக தோற்றும் -இவை -தோஷ ஸத்பாவ ஸ்பர்சம் இல்லையே -தீண்டுதலும் இல்லையே – அத்யந்த அபாயம் என்றவாறு –
தனக்கு தோஷம் இருந்து மாறி குணவானாக ஆன பின்பு -முன்பு இவர்கள் குணங்கள் கண்ணில் படாதே -இப்பொழுது நல்லவனான பின்பு அவர்கள் தோஷங்கள்
கண்ணில் படாதே-அவர்கள் தோஷ குணங்கள் இரண்டும் உண்டாய் -தோஷத்தை நினையாது ஒழிகிறான் -குணங்களை நினைக்கிறான் என்றும் சிலர் சொல்லுவார்கள் -)

(இல்லாத குற்றம் -நினைவே தப்பு -என்பதற்கு மேலே நான்கு விவரணம்-
1-சர்வ முக்தி பிரசங்கம் வாராதபடி -தான் இட்ட கட்டளையிலே -தான் சங்கல்பித்த பிரகாரம்-கருணை காரியமாக ஸ்ருஷ்ட்டி அவதாராதிகள் –லோகபத்யம் அனுக்ரஹ கார்யம்-பிரயோஜனம் பிரதானம் – -வீட்டைப் பண்ணி விளையாடும் –விளையாடுவதே சேதனன் உஜ்ஜீவனத்துக்காகவே தான்-லீலை -ஆனுஷங்கிக பலம் பிரதானம் இல்லை -கூடவே வந்தது என்றவாறு –சம்சாரிகள் உஜ்ஜீவனமே பிரதானம் -சர்வ சக்தன் என்பதால் லீலை –
ஆனந்த மயன் -துக்க லேசமும் இல்லை -உபேக்ஷகத்வ ரூப பிரதம தோஷம் பரிஹ்ருதம்
2–நிர்த் தயரைப போலே -கர்ம அநு குணமாக -தண்டிக்கிறதும் -ஹித பரனாய் செய்கையாலே -உஜ்ஜீவனத்துக்கு உடலாம் இத்தனை உஜ்ஜீவனத்துக்கு உட்பட்டதே தண்டனையும்-
3-கர்ம பலனும் கிருபா பலனும் அனுபவித்தே தீர்க்க வேண்டுமே -கிருபா பரதந்த்ரனாய் அங்கீ கரித்த பின்பு -நிராங்குச ஸ்வா தந்தர்யம் ஸ்லாக்யமாகுமே
ஸ்ருஷ்டிக்கு வேண்டிய கிருபை நம்மை எதிர்பார்க்காது -பொதுவான கிருபை அது -இந்த கிருபை வேறே -அங்கீ கரித்து மோக்ஷம் அளிக்கும் கிருபை -இது –
நாமும் பர தந்த்ரர் -இவனது ஏறிட்டுக் கொண்ட கிருபா பாரதந்தர்யம் -இதுவும் தடுக்க முடியாது நிராங்குச ஸ்வா தந்தர்யம் அடியாக ஏறிட்டுக் கொண்டதால் – நமக்கு இயற்க்கை -கிருபா பரதந்த்ரன் -கிருபையால் ஸ்வாதந்திரம் தடுக்கப் பட்டு தன் கிருபைக்கு தானே பரதந்த்ரர் ஆன பின்பு தோஷம் இல்லையே-
4-போகத்தில் ஒட்டு இல்லாமையை-ப்ரஹ்மசர்யம் உண்மையானால் பரீக்ஷித் உயிர் -பிழைத்தான் – கோபிகள் காமத்தால் -தன் பக்கல் பிரவணம் ஆக்கி உத்தரிப்பித்தானே
இப் புடைகளிலே -பகவத் பாகவத விஷயங்களில் தோஷங்கள் தோற்றித்தாகில் பரிகாரங்கள் கண்டு கொள்வது என்பதற்கு -தாடகா வாதம்—மக ரிஷி வசனம் அடியாக -12-வயசுக்கு பின்பே இவனுக்கு -யமனுக்கு சாபம் -விதுரராக பிறந்தது — பூதனா நிரசனமும் கன்னி-முதல் – வதம் பெண் வதம் -கர வதத்தில் அப தர்ப்பணம் -முன்னே முன்னே சென்று அடிப்பது -சில சமயம் முன்னே போகாமல் பின்னே வந்தது கூடுமோ என்னில் -வீரத்துக்கு குறை இல்லை –14000-அடி பட்டு துர்கந்தம் -ராமர் க்ஷத்ரியர் ஸூ கந்ததுடன் இருந்தவர் -வாசனை தாங்காமல் பின் வாங்கினார் என்றபடி
வாலி வதம் மறைந்து பான பிரயோகம் –சுக்ரீவ வதார்த்த சரணாகதி வாலி செய்தால் என் செய்ய-அதனால் முன்னே போக வில்லை –
மஹா லஷ்மி கடாக்ஷம் மஹா பலிக்கு வர கூடாது என்று மறைத்தது போலே 
தேவர் பரதன் சரணாகதி -விளம்பித்து செய்யும் படி -விரோதம் இல்லாமல் நடத்த முடிந்ததே 
ஆயுதம் எடேன் என்று சொல்லியும் ஆயுதம் எடுத்தும் -பகலை இரவாக்கியும் முதலானவற்றுக்கு -ஆஸ்ரித ப்ரதிஜ்ஜா சத்யம் ஆக்கும் கார்யம் -ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ –
பெரிய திருவடி -சுமுகன் -அபயம் அளித்து -இந்திரிய பயம் தோஷம் உண்டோ என்னில் –
பிரஹ்லாத ஆழ்வான்-பேரன் -மஹா பலி -த்ரிவிக்ரமன் -பாதாளத்தில் தள்ளி –எதிர்த்து வந்தான் -பிரக்ருதி ராக்ஷஸ நினைவால் -விரோசனன் தடுத்தும் அடிக்க வந்தானே
நம்பி மூத்த பிரான் -தீர்த்த யாத்திரை சென்று -சமந்தக மணி நிமித்தமாக -சத்ரஜித் -இடம் -சூரியன் கொடுத்தது -தம்பி கொண்டு போக- சிங்கம் அடித்து- தொலைய –
அக்ரூரர் -நாம் கண்ணனை கூட்டி வந்தோம் அஹங்காரம்
ஈஸ்வர சங்கல்பத்தாலே கல்பித்த தோஷங்கள் இவை  சீதா பிராட்டி லஷ்மணன் இடம் பட்ட அபசாரம் போலே  நமக்கு பாகவத அபசாரம் மிக குரூரம் என்று புரிய வைக்க –
இங்கும் பிரகிருதி வச குரூரம் காட்ட – தேவ தேவி வசம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -இதுவும் ஈஸ்வர சங்கல்ப பஞ்ச இந்திரியங்கள் லீலா விபூதி தோஷ குரூரம் புரிய வைக்க ஈஸ்வர கார்யம் இவை)

அதாவது –
பகவத் பாகவத விஷயங்களிலே தோஷம் நினையாது ஒழிகிறது-
தனக்கு குணம் உண்டாய் இருக்க -அது நினையாது ஒழிகிறாப் போலே –
உண்டாய் இருக்க நினையாது ஒழிகிறது அன்று -முதலிலே இவ் விஷயங்களிலே அது இல்லாமையாலே -என்கை-
எங்கனே என்னில் –
1-சர்வ முக்தி பிரசங்கம் வாராதபடி தான் இட்ட கட்டளையிலே அங்கீகரிக்கைக்காக –
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -என்றும்
எதிர் சூழல் புக்கு -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஆத்மாக்களுடைய உஜ்ஜீவனத்துக்கும் ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளாலே
கிருஷி பண்ணிக் கொண்டு போருகையாலே -அநாதி காலம் உபேஷிகனாய் கை விட்டு இருந்தான் என்ன ஒண்ணாது –
2-நிர்த் தயரைப் போலே -கர்ம அநு குணமாக தண்டிக்கிறதும் -மண் தின்ன பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் தாயைப் போலே ஹித பரனாய் செய்கையாலே -உஜ்ஜீவனத்துக்கு உடலாம் இத்தனை –
3-நிரங்குச ஸ்வாதந்த்ர்யம் பூர்வம் பந்த ஹேதுவாய் போந்ததே ஆகிலும் -கிருபா பரதந்த்ரனாய் அங்கீ கரித்த பின்பு -நித்ய சம்சாரியை நித்ய ஸூரிகளோடு சமாந போக பாகி ஆக்கும் அளவில் -நிவாகர் அற செய்கைக்கு உறுப்பாக இத்தனை ஆகையால் ஸ்லாக்யமாம் இத்தனை –
4-கிருஷ்ண அவதாரத்திலே ஸ்வைர விஹாரம் -யதிமே பிரமசர்யம் ஸ்யாத்-என்கிறபடியே தனக்கு இந்த போகத்தில் ஒட்டு இல்லாமையை வெளி இடுகைக்காகவும் –
கோபயா காமாத் -என்கிறபடியே அவ் வழியாலே அவர்களைத் தன் பக்கல் ப்ரவணராக்கி யுத்தரிப்பிக்கைக்காவும் செய்தார் ஆகையாலே -குணம் அத்தனை அல்லது குற்றமன்று –

இனி -பாகவதர்களும் – குற்றம் இன்றி குணம் பெருக்கி -(பெரியாழ்வார்-4-4-)என்கிறபடியே -நிர்தோஷராய்-நிரவதிக குணராய் இருக்கையாலே உள்ளூற ஆராய்ந்து பார்த்தால் -அவர்கள் பக்கலிலும் காணலாவது தோஷம் இல்லை இறே-

மற்றும் இப் புடைகளிலே -பகவத் பாகவத விஷயங்களில் தோஷங்கள் தோற்றித்தாகில் பரிகாரங்கள் கண்டு கொள்வது –

இவை எல்லாம் திரு உள்ளம் பற்றி ஆயிற்று -இல்லாமையாலே -என்று இவர் அருளிச் செய்தது –

————————————-

தோஷம் இல்லை என்று ஸ்வ பஷத்தால் சாதித்தார் கீழ் –
இனி பர தோஷத்தால் -தோஷ சத்பாவத்தை அங்கீகரித்து கொண்டு –
தத் பரிகாரத்தை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -352-

தோஷம் உண்டு  என்று நினைக்கில் பர தோஷம் அன்று- ஸ்வ தோஷம் –

(ஆயி ஸ்வாமிகள்-நிர் தோஷம் அவர்களுக்கு -பிரமித்தால் தோஷ தர்சனம் பண்ணும் ஸூவ தோஷமே -பர ஸப்தம் அமுக்கியம் -அப்யமமக வாதம்-நல்ல வஸ்துவில் தோஷம் பார்த்தால் -இல்லாத ஒன்றை இருப்பதாக பார்க்குமதுவே தோஷம் –)

அதாவது –
கீழ்ச் சொன்னபடி அன்றிக்கே -பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் உண்டு என்று நினைக்கில் –
அவர்கள் பக்கல் தனக்கு தோற்றுகிற தோஷம் -அவர்கள் தோஷம் அன்று –
தத் த்ரஷ்டாவான தன்னுடைய தோஷம் -என்கை –

——————————————————-

தத் விஷய ப்ரஸ்னத்தை அநு வதிக்கிறார்-

சூரணை -353-

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-

பரகதமாய் தோற்றுகிற அது -ஸ்வ தோஷமான படி எங்கனே என்னில்-என்றபடி –

——————————————

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

சூரணை -354-

ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –

(ஆயி ஸ்வாமிகள்-இரண்டு காரணங்களால் – உண்மையால் அவன் இடம் தோஷம் இல்லை – ஸூவ சித்த தோஷம் -உள்ளத்து அழுக்கால் தானே இவன் தர்சிக்கிறான் –
கண்களிலும் மனத்திலும் உள்ள தோஷம் -காரணமாக இல்லாததைக் காண்பது -காசாதி துஷ்ட த்ருஷ்டிமானுக்கு-கண் பார்வையில் குறை உள்ளவனுக்கு -என்றபடி –
பகவத் பாகவத தோஷங்கள் இருந்ததே ஆகிலும் அவனது தன்னதாம் படி உள்ள பந்தம் -சரீராத்மா பாவத்தால் -பந்தத்தால் ஸூவ தோஷமாகும் -ஒரு சரீரீ –
த்வ சந்த்ர தர்சனம் போலேயும்-மாத்ரு தோஷம் புத்ரனாவது போலே -சொத்து கடன் எல்லாம் பிள்ளையது தானே – குடல் துவக்கு உண்டே -பந்த விசேஷத்தாலே என்றபடி-)

அதாவது –
காசாதி துஷ்ட த்ருஷ்டிமானுக்கு சந்திர த்விதாதிகள் தோற்றுமா போலே –
நிர் தோஷமான விஷயங்களில் -தோஷம் தோன்றும்படியான -துர் வாசன துஷ்ட சித்தை யாகிற ஸ்வ தோஷத்தாலும் –
புத்ராதிகள் தோஷம் பித்ராதிகள் தாமாம் போலே அவர்களுக்கு உண்டான தோஷம்
தன்னதாம் படி அவர்களோடு தனக்கு உண்டான பந்த விசேஷத்தாலும் -என்கை –

ஸ்வ தோஷத்தாலும் -என்கிற இது அத் தலையில் தோஷ அபாவத்தை பற்றிச் சொல்லுகிறது 
மற்றையது தோஷ வத்தையை அங்கீ கரித்துக் கொண்டு சொல்லுகிறது –

———————————–

ஸ்வ தோஷத்தாலே என்னலாவது-தோஷம் தான் உண்டானால் அன்றோ -என்ன
அருளிச் செய்கிறார் –

சூரணை-355-

ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-த்ருஷ்ட்டி தோஷம் இல்லாத போது -த்வி சந்திரன் தோன்றாதே – குண பிரதிபத்தி -பிறர் குணம் கண்ணில் படும் -ஹேது மட்டும் இதில் –
குணம் பிரபத்தி நடவாத படியால் தோஷம் தர்சிக்கிறான் என்றவாறு -ஸூ நிர்தோஷ ஸூசகையான குண பிரதிபத்தி நடக்கும் –
இதனாலே தான் பர தோஷம் பார்ப்பது ஸூவ தோஷமே -அவன் நம் குற்றம் பார்க்காமல் இருப்பதே அவன் குற்றம் இல்லாமல் இருப்பதாலே தானே
சம்சாரிகள் இடம் போகாதே -பந்தம் இல்லையே இவர்கள் இடம் -பக்த பாகவத தோஷங்களைப் பற்றியே இது –
சம்சாரிகள் உடன் கூட வாசம் பண்ணுவதும் ஸூவ தோஷமே -வைராக்யம் வேண்டுமே )

அதாவது-
சந்திர த்வித்வ தர்சன ஹேதுவான சஷூர் தோஷம் இல்லாத போது சந்திர ஏகத்வமே தோற்றுமா போலே –
தோஷ தர்சன ஹேதுவான ஸ்வ சித்த தோஷம் இல்லாதபோது  பகவத் பாகவத விஷயங்களில்  குண பிரதிபத்தியே நடக்கும் என்கை-அது நடவாமையால் தோஷம் உண்டு என்று கொள்ள வேண்டும் என்று கருத்து –

————————————–

நடந்தது இல்லையாகில் வரும் தோஷம் என்-என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -356-

நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —

(ஆயி ஸ்வாமிகள்-நிர்தோஷ குண பூர்ண தத் ததியர் பக்கல் -இவ்வாறு குண பிரதிபத்தி நடந்தது இல்லையாகில்- தோஷ ஜ்ஞானமே -பெரிய -தோஷமாகும் –
கண் முன்னே யானை இருக்க காணாதது கண்ணின் குற்றமே -அதே போலே -இவர்கள் இடம் இருப்பது குணங்களே —
தத் தோஷ கிரஹண ரூப ஞானமான ஸூ வ தோஷம் -மஹா பாதகம் -பஞ்ச மஹா பாதகங்களும் மேலே
அத்தால் வருமது தோஷாந்தரம் வேறே என்று என்ன வேண்டாம் -ஆகையால் இத்தை தவிர்க்க வேண்டும் -)

அதாவது –
குண பிரதிபத்தி நடவாது ஒழிந்தால் -தோஷ பிரதிபத்தி இறே நடப்பது –
அந்த தோஷ ஜ்ஞானம் தானே -இவனுக்கு பகவத நிக்ரஹ ஹேதுவான தோஷமாம் –
இதடியாக வேறு ஒரு தோஷம் உண்டாம் என்ன வேண்டாம் -என்கை –

இத்தால் இது அவஸ்யம் பரிஹர நீயம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

————————————–

இது தான் எல்லாம் சொல்ல  வேண்டுவது -இது தனக்கு அவகாசம் இவனுக்கு
உண்டானால் இறே என்கிறார் மேல் –

சூரணை -357-

இது தனக்கு அவசரம் இல்லை –

(ஆயி ஸ்வாமிகள்-இது தனக்கு அவசரம் -பொழுது- காலம் இல்லை -என்றவாறே -பிறர் குணம் பார்க்கவும் ஸூவ தோஷம் பார்க்கவும் பொழுது யில்லாத பொழுது இதுக்கு ஒதுக்க நேரம் இல்லையே )

(ஞானம் உள்ளவனுக்கு -தன் தோஷம் பார்த்து பிராயாச்சித்தம் பண்ணவே பொழுது இருக்காதே)

அதாவது -பகவத் பாகவத தோஷ சிந்தனம் ஆகிற இது -தனக்கு அவசரம் தான்
முதலிலே இல்லை -என்கை –

———————————

அது எத்தாலே என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -358-

ஸ்வ தோஷத்துக்கும் பகவத் பாகவத குணங்களுமே காலம் போருகையாலே-

(ஆயி ஸ்வாமிகள்-பயனுள்ள செய்து பயன் அல்ல நெஞ்சே – நீசனேன் -ஸூவ தோஷ அனுசந்தானம் -அத்தையே பச்சையாக என்னை ஆள்வர்-எம்மை ஆளும் பரமர் –
கை விடாமல் -அங்கீ கரித்து அடிமை கொள்ளும் பகவான் பாகவதர் -குணங்களை அனுசந்திக்கவும் மேல் உள்ள காலமும் போதாத பொழுது -குணங்களுக்கு எண்ணிக்கை இல்லையே -ஸமஸ்த கல்யாண குண நிதியாய் இருக்க தோஷ தரிசனத்துக்கு சேஷிக்கும் காலம் -கலா ஏக தேசமும் இல்லையே –அர்த்தாத் சித்தம் இறே – -அனுமானித்து அறியலாம்)

அதாவது –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை –
அமர்யாதா ஷூத்திர -வித்வேஷ மாந மத ராக விலோப மோஹாத் யஜ்ஞான பூமி –
அதிக்ராமந் நா ஜ்ஞாந்தவ விதி நிஷே தேஷு பவதே
ப்யபித்ருஹ்யந் வாக்த்தீக்ருதி பிரவி பக்தாய சததம்
அஜாநந்ஜாநந் வாப  வத சஹா நீ யாக சிரத –
ஸ்ரீ ரெங்கேஸ த்வத் குணா நாமி வாஸ்மத் தோஷானாங்க பார த்ருஸ்வாய தோஹம்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே -அனவதிகமான தன்னுடைய தோஷ அனுசந்தானத்துக்கும் –
அந்த தோஷத்தைப் பாராமல் அங்கீகரித்து அருளின பகவானுடையவும் –

வேதம் வல்லார்களைக் கொண்டும் -என்றும் –
போத யந்த பரஸ்பரம் -என்றும் –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ-என்றும் சொல்லுகிறபடியே –
புருஷகார உசாத் துணையும் ப்ராப்யருமான பாகவதர்கள் உடையவும் –

சமஸ்த கல்யாண குணாம்ருதோததி-
அசங்க்யேய கல்யாண குண கணவ்க மகார்ணவ்-
எதா ரத்னாநி ஜல தேர அசங்க்யேயாநி புத்ரகததா குணாஹ்ய நந்தஸ்ய அசங்க்யேயா மகாத்மன-
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணான் பத்ம புவோப்ய கம்யான்-என்றும் சொல்லுகிறபடியே-அசங்க்யேமாய் இருந்துள்ள  குண அனுசந்தானங்களுக்குமே காலம் போந்து  மற்று ஒன்றுக்கு அவகாசம் இல்லாமையாலே -என்கை –

இவற்றுக்கே காலம் போருகையாலே -என்கையாலே –
ஸ்வ குண ஸ்மரணத்துக்கு அவகாசம் இல்லை என்னும் இடம் அர்த்தாத் சித்தம் இறே –

—————————————-

ஆக –
மனசுக்கு தீமையாவது –350-என்று துடங்கி -இவ்வளவும்
பகவத் பாகவத தோஷ ஸ்மரணம் ஆகாது என்னும் இடமும் -அவர்களுடைய நைர் தோஷமும் -351
தோஷம் உண்டு என்று நினைக்கில் -அது தத் தோஷம் அன்று -ஸ்வ  தோஷம் -352-என்றும் –
அது ஸ்வ தோஷம் ஆகைக்கு நிதானங்களும் -353-354-
ஸ்வ தோஷ பாவ சங்கைக்கு உத்தரமும் -355
தோஷ பிரதிபத்தி நடக்கில் -அது தான் இவனுக்கு மகா தோஷம் -356=என்றும் –
ஸ்வ தோஷ பகவத் பாகவத குண அனுசந்தானத்துக்கே காலம் போருகையால் இது தனக்கு இவனுக்கு அவசரம் இல்லை –357-358-என்றும் அருளிச் செய்தார் கீழ்

இப்படி தனக்கு உத்தேஸ்யமான -பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் நினையாமலும் –
நினைத்தான் ஆகிலும்  அது தன்னுடைய தோஷமாக நினைத்து இருக்க வேணும் என்று அருளிச் செய்த பிரசங்கத்திலே -சம்சாரிகள் தோஷ விஷய அனுசந்தானமும் -இன்னபடியாக வேணும் என்கிறார் -மேல்

சூரணை -359-

சம்சாரிகள் தோஷம்  ஸ்வ தோஷம் என்று  நினைக்கக் கடவன் –

(ஆயி ஸ்வாமிகள்-கீழே பகவத் பாகவத தோஷ விவரணம் –தத் ததியர் இடம் இல்லாத தோஷங்கள் – சம்சாரிகள் இடம் -உண்மையாக உள்ள தோஷங்கள் -நினைக்கலாமே என்ன
அவர்களை துறக்க விரக்கற்ற ஸூவ தோஷம் -நாற்றும் உள்ள இடத்தில் வாசம் செய்வோமோ புலி துரத்த நிற்போமோ -அநாதி காலம் நாம் பட்டது பட்டும் திரியும் சம்சாரிகள் -அன்றோ -ஆக இதுவும் ஸூவ தோஷமே
விடு விடாதே உபதேசம் இல்லை -விட முடியாதது உன் பந்தம் காரணம் ஆகையால் தோஷமே)

அதாவது-
சம்சாரிகளுக்கு உண்டான பகவத் வைமுக்யம்- அநாத்மந் யாத்மா புத்தி- யஸ்வேஸ் ஸ்வ புத்தி -முதலான தோஷம் கண்டால் -அந்த தோஷங்களை இட்டு அவர்களை இகழ்ந்து இவர்களுக்கும் நமக்கும் பணி என்று இராதே  –
அவர்களுடைய தோஷம் -தன்னுடைய தோஷம் என்று அனுசந்திக்க கடவன் -என்கை-

—————————————

அதுக்கு ஹேது என் -என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -360-

அதுக்கு ஹேது பந்த ஞானம் –

(ஆயி ஸ்வாமிகள்-நாராயணத்வ ப்ரயுக்த சம்பந்த ஞானம் -ஒரே சரீரீ -இருவரும் அவயவங்கள்-ஏக சரீரத்தில் பற்றின ஏக தேகத்வ தோல் போன்றது தானே
ஏக பித்ருகத்வம் -ஒரே தந்தை உடையோமாய் இருக்கிறோம்  வெட்டி விலக்க முடியாத சம்பந்தம் -ப்ரக்ருதி பந்துக்கள் -சரீரத்தால் ஏற்பட்ட உறவு -தோல் வியாதி ஓர் இடத்தில் இருக்காதே -சம்சாரிகள் தோஷம் தன்னதாகவே நினைக்க வேண்டும் -)

அதாவது –
தனக்கு சேஷிகளான-பகவத் பாகவதர்கள் தோஷம் ஸ்வ தோஷமாக அனுசந்திக்கைக்கு ஹேது அவர்களோடு தனக்கு உண்டான சம்பந்த ஞானம் ஆனாப் போலே –
சம்சாரிகளுடைய தோஷத்தை தன்னுடைய தோஷமாக அனுசந்திக்கைக்கு ஹேது – நாராயணத்வ பிரயுக்தமான  சம்பந்த ஞானம் என்கை –

எல்லோர்க்கும் ஈஸ்வரனோடு சம்பந்தம் ஒத்து இருக்கையாலே  அவ்வழியாலே தனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உண்டு ஆகையாலே 
தனக்கு அவர்ஜ நீயரான பிரகிருதி பந்துக்களுக்கு வந்த தோஷம் தனக்கு வந்ததாக நினைத்து இருக்குமோ  பாதி  சம்சாரிகளுக்கு உண்டான தோஷம்
தன்னுடைய தோஷம் என்றே நினைக்கக் குறை இல்லை -இறே –

————————————

இது தான் வேண்டுவது -அவர்கள் தோஷம் தான் -இவனுக்கு தோன்றில் இறே –
அது தான் முதலில் இவனுக்கு தோன்றாது என்கிறார் மேல் –

சூரணை -361-

இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –

(ஆயி ஸ்வாமிகள்-ஸூ சீல ஸுலப விஷயம் -நம்மை பெறத் தானே வந்து தரைக் கிடக்கிறான் -பிராகிருத வஸ்துக்களை ஓக்கவாவது ஒருக்காலும் நினைக்காமல் இருக்கும் நன்றி கெட்டவர்களை க்ஷணம் கூட எண்ணக் கூடாதே -நாமும் நம் சம்பந்திகளும் ஸ்மரியோம் என்று அத்யவசித்து இருக்க வேண்டும் –தோஷம் தர்சனம் பிரசங்கிக்கவும் கூடாதே)

அதாவது –
கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -(2-6-1-)என்று பரம பதத்தில் நித்ய ஸூரிகள் பரிந்து பரிசர்யை பண்ண இருக்கும் பெருமை உடையனாய் வைத்து  திருக் கடல் மல்லையிலே வந்து தங்களை பெறுகைக்காக-தரைக் கிடை கிடக்கிற நீர்மையை உடையவனை  இது ஒரு நீர்மை இருக்கும் படி என் என்று அந் நீர்மையிலே தோற்று -அனவரதம் அனுசந்தானம் பண்ண வேண்டி இருக்க –அவனிடை ஆட்டம் கொண்டு கார்யம் அற்று கேவல தேக போஷாணாதி பரராய் இருக்கிற சம்சாரிகளை க்ஷண காலமும் நினையோம் -என்கையாலே –
சம்சாரிகள் தோஷம் தான் இவ் அதிகாரிக்கு தோன்றாது -என்கை –

திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்த இது ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லார்க்கும் ஒக்கும் இறே 

——————————————–

தோன்றாது -என்னப்  போமோ –
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் –
கொண்ட பெண்டிர் -இத்யாதியாலே ஆழ்வாருக்கு உள்பட்ட சம்சாரிகள் குற்றம்
தோன்றிற்று இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -362-

தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –

(ஆயி ஸ்வாமிகள்-ஆழ்வாராதிகளுக்கு-லோக யாத்திரை அறியாத ஆழ்வாரும் சம்சாரிகளைக் கண்டார் என்னில் தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –
வீடு சொன்னால் ஒரு கொண்ட நான்காலும்  குற்றங்கள் பட்டதே என்னில் –
போக்கி நல்லவர்களாக நாடும் ஊரும் உலகமும் தன்னைப் போலே ஆக்கி அருளத் தானே –
அஸேவ்ய சேவை – ஐஸ்வர்ய கைவல்யம்-ஆபாச பந்து பாசம் கூடாது என்பதற்காவே  பணியா அமரர் -சேவிக்கக் கூடாதவர்களை சேவிக்க மாட்டார்களே
நாம் வர்த்தகாரத்துக்கு -ஒன்றைப் பத்தாக்கி தோஷங்களை ஆக்குகிறோம் -ஆழ்வாராதிகள் நிவர்த்திக்க அன்றோ -அனைத்து உறவின் காரியத்தையும் அவன் இடம் பார்த்து கைங்கர்யம் வேண்டிப் பிரார்த்திக்கிறார் -ஆழ்வார்-)

அதாவது –
சம்சாரிகள் தோஷம் தோன்றுவது -அந்த தோஷங்களின் நின்றும்
அவர்களை நிவர்திப்பிக்கைக்காக -என்கை –

சொன்னால் விரோதம் -முதலான வற்றால் ஆழ்வாரும் அதில் திரு உள்ளம் வைத்தது –
அசேவ்ய சேவ்யாதிகளின்  நின்றும் அவர்களை நிவர்திப்பிக்கைகாக இறே –
அது எல்லார்க்கும் ஒக்கும் என்று கருத்து –

——————————————

ஆக இவ் அதிகாரி சம்சாரிகள் தோஷம் கண்டால் அனுசந்திக்கும் பிரகாரமும் –
தத் தோஷம் தான் இவனுக்கு தோன்றாது என்னும் இடமும் –
தோன்றுவது இன்னதுக்காக என்றும் அருளிச் செய்தார் கீழ் –
இப்படி காதா சித்தமாக தோன்றும் சம்சாரிகள் தோஷங்களை ஸ்வ தோஷமாக நினைத்தும்
தன் நிவர்தகனாயும் போரும் அளவன்றிகே -ஸ்வ விஷயத்திலே குற்றங்களைச் செய்தால்
இவன் இருக்க வடுக்கும் படி அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -363-

பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்கக்க் கடவன் அல்லன் –

(ஆயி ஸ்வாமிகள்-மூன்றாவது வகை இது -பகவத் பாகவத -சம்சாரிகளை பற்றி அருளிச் செய்த பின்பு -தனக்கு பிறர் செய்த குற்றங்கள் –இந்த மூன்றாவது கோஷ்ட்டி –
கீழ் பொறி புறம் தடவுதல் போலே -தனக்கு ஆபத்து வந்தால் இவை தீருமே –இத்தையும் நினைக்கக் கூடாதே-சீதை பெருமாள் இடம் சொல்லவில்லை -பகவான் இடம் சொல்ல கூடாது என்பதுக்கு த்ருஷ்டாந்தம் -திருவடிக்குச் சொல்ல வில்லை -பாகவதருக்கு சொல்லக் கூடாது என்பதுக்கு த்ருஷ்டாந்தம் –
அபிமத அந்தரங்கர் இடம் -பேசி பாடாற்றுகிற பிராட்டி -விபீஷணர் -சரமா த்ரிஜடா அனலா-மூவரும் அந்தரங்கர் -பிராட்டிக்கு –
க்ரூர ராக்ஷஸிகள் குற்றம் -மீதும் திரு அயோத்யைக்கு வந்த பொழுதும் சொல்லாமல் -பட்ட காலத்தில் இருந்து விட்ட காலத்து அளவும் சொல்லாமல் –
விரோதியையும் ஆற்றாமையும் அறுத்து ஆகாசம் மார்க்கமான கூட்டிச் செல்லும் போது பேசி ஆசிவசிப்பிக்க இருக்க -தீக் குறளைச் சென்றோதோம் –
உதவி ஆசுவாசிப்பித்த திருவடிக்கும் நெஞ்சில் கிடந்த அளவும் சொல்லி இருந்த திசையிலும் – -மறந்தும் அறிவியாதாப் போலே
குற்றம் காண்பது -தூஷணமான தனக்கு -நமக்கு –நிர் நிபந்தனமாக பிறர் நிரந்தரம் செய்யும் குற்றங்களை -பதிலுக்கு அடிக்க வில்லை -நித்தியமாக ஹிம்சித்தாலும் –
நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமான் இடமும் -எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கும்-தன் நெஞ்சிடம் கோயில் கொண்ட பகவத் பாகவதர்கள் -விஷயங்களில் தீக் குறளைச் சென்றோதோம் என்றபடி மறந்தும் அறிவிக்க கடவன் அல்லன்
இங்கு நெஞ்சகம் கோயில் கண்டது -நெஞ்சில் நினைக்கவும் கூடாதே என்று -வாயைத் திறந்து பேசாமல் இருப்பது மட்டும் போதாது –மனசில் நினைத்தாலும் இவர்கள் அறிவார்கள் -)

(ராவணனால் -துராத்மாவால் அபகரிப்பட்டதை மட்டும் திருவடிக்கு அருளிச் செய்கையாலே -ராக்ஷஸிகள் குற்றம் அறிவித்தமை ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை-பெருமாள் இடம் அறிவித்ததும் இல்லை-திருவடி இடம் -சென்று சொல்லச் சொல்லி -லஷ்மணன் உடன் கூடி உள்ள பெருமாள் இடம் -ராக்ஷஸிகள் துன்புறுத்த -ப்ராப்ய த்வரா-தூண்ட -துவரையை அறிவிப்பதே நோக்கம் –சோகம் மம தீவிர வேகம் –ராஷஷிகளால் துன்பப்படுவதையும் -அறிவிப்பீர் -பிரதானம் சோகம் தீர்த்து அடைவதே –முன்னும் பின்னும் இந்த வார்த்தை -பாபா நாம் சுபா நாம் வா சொல்லுகையாலே நடுவில் நிக்ரஹ வார்த்தை தாத்பர்யம் இல்லை தானே )

அதாவது
ஏகாஷீ-ஏக கர்ணி -முதலான ஏழு நூறு ராஷசிகள் -ஏக திவசம் போலே பத்து மாசம் தர்ஜன பர்த்ஸ்னம் பண்ண இருந்த பிராட்டி -இவர்கள் அப்படி செய்த குற்றத்தை –
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கும் -அறிவியாதாப் போலே -தன் விஷயமாக பிறர் செய்த குற்றங்களை -பகவத் விஷயத்தில் ஆதல் –
பாகவத விஷயத்தில் ஆதல் -மறந்தும் விண்ணப்பம் செய்யக் கடவன் அல்லன் -என்கை –

————————————-

இது கிம் புனர் நியாய  சித்த மாம்படி -ஈஸ்வரன் படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -364-

அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —

(ஆயி ஸ்வாமிகள்-சம்சாரிகள் குற்றங்களை நித்ய ஸூரிகளுக்கும் சர்வஞ்ஞன் சொல்ல மாட்டான் -என்று பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் அருளிச் செய்கிறாரே
ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடை சோதிக்கு தனியாக எழுந்து அருளி -தன்னுடன் பற்ற குற்றங்களையும் அறிவிக்க வில்லை-ஆகையால் இவனுக்குச் சொல்ல வேண்டாம் –
சூழ்ந்து அடியார் -சீல ரூப குணங்களுக்கும் சரிதங்களுக்கும் ஒருவருக்கும் அகப்படாமல் -தரையை மோதி – முட்டி அழுவது -அவஜாநந்தி மாம் மூடா –
அவ மரியாதை பண்ணினதை நித்ய ஸூரிகள் -வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் அடியார் சூழ்ந்து இவனை எதிர் கொண்டு –
தேவர் ப்ரதிஜ்ஜை படி ஒருவரும் வரக் காணவே யில்லையே என்று கேட்டாலும் -திருந்தினார்கள் திருந்தினார்கள் இல்லை வருகிறார்கள் வருகிறார்கள் இல்லை இரண்டும் சொல்ல மாட்டாமல்-மற்ற மறுமாற்றம் காணாமல் –சுற்றும் முற்றும் பர பர என்று பார்த்து வெட்க்கி திகடாடுகிற தசையில் சொல்லுவது போலே திரு அதரம் -திரு பவளத் துண்டம் போலே -ஈரப் பசைக்கு உதட்டை நனைத்து -ஸ்புரிப்பது -மந்த ஸ்மிதம் -முறுவல் செய்து –அசட்டு சிரிப்பு சிரித்து -புறத்தே வழியைக் கடைக் கணிப்பது வருகிறார்கள் என்று பார்க்குமா போலே – ப்ரதிஜ்ஜை வெற்றி நிலை நாட்டுவதாக கொண்டு —இருக்க மேலே கேட்க்காமல் உள்ள நித்யர்கள் வாழ்ந்திடட்டுமே -ஆழ்வார் அருளிச் செய்கிறார் -பெரு வாழ்வு வாழ்வார் -பாவனை அறிந்தும் திருந்தாமல் போன குற்றவாளர்கள்
அந்தரங்கருக்கு உள்ளத்தை உள்ள படி சொல்ல வேண்டிய பின்பும் குணம் சொல்ல தேடுகிறான் –வரேன் என்று சொல்லி உள்ளவர்கள் குணங்களைத் தேடி ஸ்புரிக்கும் –
குற்றம் சொல்லில் பேசாமல் இருக்க காரணத்துக்கு சாக்குத் தேடி -நாம் பிரபுத்வத்தால் பேசாமல் இருப்பதை –சர்வ சக்தன் போக்கற்று நின்றானே -திரு உள்ளம் திருந்தினார்கள் என்று நினைத்தால் திருந்தினராகவே நம்புவார்கள் -இப்படிப் பட்ட -சர்வஞ்ஞர்கள் -நித்ய ஸூரிகள்-வாழ்ந்தே போகட்டும் – மாய மயக்கு திரை இட்டு மயக்கும் – நமக்கு பிரகிருதி பகவத் ஸ்வரூபத்தை மறைக்கும் –அவன் சாகச் செயல்களும் திருமேனி வைலஷ்ணயம் இவர்களுக்கு மறைக்க உபகரணங்கள்-நிஷ் கலங்க ஸூஷ்ம தர்சி பிரமாணம் பிரபன்ன ஜன கூடஸ்தர் அருளிச் செயல் புதிதாக நம்மிடம் அறிவித்து – -ரிஷிகளுக்கு நினைவு படுத்தி -நித்ய ஸூரிகள் மறைக்க விஷயம் -கேள்வியே மறக்கும் படி திரு விக்ரஹ வைலக்ஷண்யம் –ஸ்ம்ருதி ஞானம் மறதி மூன்றும் என் ஆதீனம் –ஸ்ரீ கீதை -அபோகனம் கர்மம் அடியாக வந்தால் தானே குற்றம்)

அதாவது-
எதிர் சூழல் புக்கு -என்கிறபடியே -தன்னுடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி -சம்சாரி சேதனரைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுவதாக வந்து அவதரித்து –
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-அவர்கள் அப்படி அனுகூலராய் தோன்றாது ஒழிந்தாலும்-இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்-நாம் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம்  இறே -என்று அது தானே போக்யமாக இருப்பர்-

அதுக்கு மேல் அவர்கள் வைமுக்யம் பண்ணினார்கள்  என்று
அவர்கள் குற்றத்தை -தனி இருப்பிலே பிராட்டிக்கும் அருளிச் செய்யார் -என்கிற –
சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டில் சேதனர் செய்த குற்றங்களை -தன் திரு உள்ளத்துக்கு உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு பிராப்தனான சர்வேஸ்வரனும்
உள் பட தன் திரு பவளம் திறந்து அருளிச் செய்யாதே -தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் -அறிய வல்ல சர்வஞா விஷயங்களுக்கும் மறைக்கும் என்று
சொல்லா நின்றது இறே -என்கை –

இத்தால் அவன் உட்பட இப்படி மறையா நின்றால்- இவனுக்கு பின்னை சொல்ல வேணுமோ -என்றபடி –

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே
இவர்களை சூழ்ந்து அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும்
(தோன்றா விடுகை -ஆபி முக்யம் பண்ணா விடுகை)இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –வை முக்யம் பண்ணினார் என்று தனி இருப்பிலே பிராட்டிக்கு வாய் திறவார்-பிரஜைகள் குற்றம் செய்யத் தாய்க்கு இறே சொல்லுவது அவளுக்குச் சொல்லார்-

————————————-

இப்படி உத்தேஸ்ய விஷயங்களில் அறிவியாது இருக்கும் மாத்ரம் போராது –
குற்றம் செய்தவர்கள் விஷயமாக -ஷம தயாதிகளும்-நடக்க வேணும் என்கிறார் -மேல் –

சூரணை -365-

குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிரிப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதியும்
நடக்க வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-தத் ததீய விஷயங்களில் – அறிவிக்க ஒண்ணாத அளவே அன்று -மேலே இந்த ஐந்தும் உண்டாக வேண்டும் —அஸஹ்யங்களான -பாருஷ்யம் -ஆதி -கண்டபடி ஏசி அடித்து முக் கரணங்களாலும் தீரக் கழிய செய்தவர்கள் -பக்கலில்-சக்தர்களுக்கு பூஷணம் ஷமா -காணா கண் இட்டு இருக்க- பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபையான கிருபை -பத்ம கோடி சஹஸ்ரம் மன்னிக்காமல் அவர் கோபத்துக்கு இலக்காவானே இவன் – கிருபை பிறக்க வேணும் -இரக்கத்தின் கார்யம் –
குற்றத்துக்கு இலக்கான சரீரத்தைப் பார்த்து-உமக்கு இத்தனையும் வேண்டும் -எள்ளி நகை ஆடுவது —வாய் சிரிக்கும் -அகவாய் உகக்கும் -நம் உடம்பை பார்த்து இவை –
அன்றிக்கே -கடலைக் கையாலே முகந்து கொட்டுமா போலே என் குற்றங்களைச் சொல்லி முடிக்கும் என்று ஆரம்பித்ததை பார்த்து சிரிக்கவும்-ஷேம சிரிப்பும் என்றவாறு –
கடவுள் காப்பாற்றட்டும் என்னுமா போலே – குற்றம் சொல்ல சொல்லக் கேட்டு–திரு முன் காணிக்கை -உபகாரங்கள் உடன் சமர்ப்பிப்பது –மேல் மேல் பாசம் செய்யும் உகப்பும் –நாம் இதுக்கு முன் அறியாத குற்றங்களை அறிவித்த -உபகார ஸ்ம்ருதியும் –
குற்றம் செய்த போது எல்லாம் குறையாமல் இவை நடக்க வேணும் – இவை ஒன்றில் ஓன்று அதிகமான ஞான பரிபாக விசேஷங்கள்-அறிவு முதல் நிலை -மேலே இந்த ஐந்தும் -வர வேண்டுமே -நம் தோஷங்களை அறிவிப்பது கர்தவ்யம் என்ற நினைவு வர வேண்டுமே
பட்டர் ஒரு நாள் பெருமாள் சந்நிதியில் தோஷ அனுசந்தானம் பண்ணா நிற்க-பகவத் குண அனுபவத்துக்கே அவகாசம் இல்லாமல் இருக்க –நாலு பேர் இவர் தோஷம் பட்டியலை வாசிக்க பஹுமானம் சமர்ப்பித்து –வைக்கிறான் என்று அஞ்சி கொடுக்க வில்லை –
அறியாதவற்றை பெருமாள் திருச் செவி சாத்தும் படி செய்ததும் உபகார ஸ்ம்ருதி —
நஞ்சீயர் -தொடையில் கண் வளர்ந்து த்வயம் சாதித்து அருளிச் செய்தார் -இங்கு பஹுமானம் கொடுத்தது -இவன் உகந்தவற்றைத் தானே கொடுக்க வேண்டுமே –
சம்சாரிகள் இவர்கள் -நாம் உகந்ததை கொடுக்கப் பெறாமல் பன்றி உகந்ததை அதுக்கு கொடுத்தது போலே -என்று நம்பிள்ளை அருளிச் செய்வார்-)

(ஆச்சார்யர் உபதேசத்தால் மநோ தோஷம் அற்ற ஸச் சிஷ்யன் –தன் குணம் நினையாமல் பர தோஷம் நினையாமல் -கந்தமே அற்று -இருப்பர்-
அபவாதி – ஹரித் பாபம் -வைத்தவன் நம் பாபத்தைப் போக்கி -அபவாதம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி – அபவாதம் செய்பவன் இடம் நம் பாபங்கள் போகுமே –
பாப ஹரணம் சித்த உபாய நிஷ்டனுக்கு முகாந்தரேண அநுசிதம் அன்றோ -அப்படி என்றால் எவ்வாறு உபகாரம் ஆகும் என்னில் —தோஷ கதன ஸ்மரண த்வாரா புன புன பிரதிபத்தி சங்கையே வரக் கூடாதே – பிரதிபந்தகம் -நம்பிக்கை இல்லாமல் பண்ணுவது -வசவு தடுப்பதால் –உபகாரம் தானே)

(ஆயி ஸ்வாமிகள்-விகசித ஞான -சேஷத்வம் -அனைவருக்கும் சிஷ்யத்வம் உண்டே -சகல ஆத்மா சாதாரண்யம் – முக்தர் நித்யர் -தாயார் -கரை ஏற்றுமவனுக்கும் நாலாறும் அறிவிப்பார்-அவனுக்கும் உண்டே- பரம ஆப்த உபதேசத்தால் ஸ்புரிக்கும் ஞானம் -சேஷன் சிஷ்யன் -விகசித ஞானம் -அடைந்த அடிமை -சத்தா நிபந்தம் -இது  உபதேச நிபந்தநமாயும் இருக்கும்
ததேக பரதந்தரையான பிராட்டி தொடங்கி-சத்தா நிபந்த சேஷத்வம்  ஞான விகாசம் நித்தியமாய் இருக்குமே நித்யருக்கும் பிராட்டிக்கும் -சங்கல்பம் நித்யம் –
அத்தால் இவர்கள் நித்யர்  இல்லை யாக்கை முடியாதே – சங்கல்பத்துக்கும் நித்யத்துக்கும் கொத்தை வராதே –
தத் ததீய பரந்தரனான முக்தர்களுக்கும் -பக்தர்களுக்கும் -சங்கல்பத்தைத் தொடர்ந்து அனுஷ்டிப்பவர்கள் இவர்கள் இருவருக்கும் உபதேச நிபந்தநமான சிஷ்யத்வம் உண்டு – –
ஞான விகாசம் இதனால் -அநாதி சங்கல்ப சித்த -தத் உபாய பாவ -காதாசித்க கடாக்ஷ உபதேசங்களால் விகசித ஞானம் –
நித்ய பத்தர்களுக்கு -தத் சங்கல்பத்தால் -ஞான விகாசம் ஏற்படாத -நித்ய சங்கல்பம் இல்லை -இங்கு கேட்டுத் திருந்த வேண்டும் -நாளை கேட்டு மாறும் யோக்யதை உண்டே

லஷ்மீ ப்ரப்ருதி குரு பரம்பரைக்கு –ஆச்சார்யத்வம் -ஸூவ ஸூ வ குரு சிஷ்யத்வமே நிலை நின்ற வேஷம் -கடாக்ஷ உபதேச ஸித்தமான ஆச்சார்யத்வம் –பரம குருவினால் -கடாக்ஷத்தால் வரும் -அத்தனை – 
பரம குருவின் சிஷ்யர் அல்லார் இல்லார் -அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெட செங்கோல் நடாத்துவானே -அனுபவ ஹர்ஷ பாரவஸ்ய . அயதா கிரஹண ரூபமான அஞ்ஞானம் த்வயம் —
நர ரூபமான சிஷ்ய ஏக காலத்வ- நாராயண ரூபமான ஆச்சார்யத்வம் -ப்ராதுர்பாவமும் ஒரே காலம் -பின்ன காலத்தில் ஜனன மரணம் மற்றவர்களுக்கு –
ஸூக துக்க ஜென்ம மரண கர்ம பேதங்களும் பல அனுபவ பேதங்களும் உண்டே -ஆக ஐக்கியம் இல்லையே சிஷ்யருக்கும் ஆச்சார்யருக்கும்
ஸ்வராட் -கர்மத்தின் தலையில் இருந்து விடுதலை -சிஷ்யர் ஆவதற்கு குறை இல்லையே  பிரான் இருந்தமை காட்டினீர் -அங்கும் சிஷ்யத்வம் உண்டே
உபகார ஸ்ம்ருதி அங்கும் உண்டே – உபய திசையிலும் அழியாத ஒன்றே

கேவல சிஷ்யத்வம் -மாத்திரம் என்ற படி -ஆச்சார்யத்வ விசிஷ்ட சிஷ்யத்வம் -இரண்டு வகைகள் –
விசிஷ்டம் இரண்டு வகை -சாஷாத் தன் நினைவால் – பரம்பரையா சிஷ்யத்வம்
தனது ஆச்சார்யரது கரணமாக இருந்து உபதேசம்-
கேவல சிஷ்யத்வம் -ஆச்சார்ய ஸ்வரூப-குண பிரயுக்தம் -திருமேனி ப்ரயுக்தம்
ஸ்வரூப குண -மஹத் குணம் பற்றியும் ஸுலப்யம் பற்றியும் ஆக இரண்டு வகை
விக்ரஹ -பிரதானம் -சரண பிரதானம் -தத் சம்பந்தி பிரதானம் -அடியார்கள் -உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி ஆக இரண்டு வகைகள் உண்டே
இதுவே பிரதானம் -ஏவ காரம் -வர வர முனி தாசர்கள் இடம் நித்ய யோகம் எறும்பி அப்பா அந்திம உபாய நிஷ்டர்
யதிகட்க்கு இறைவன் இணை அடியாம்- சரண சம்பந்தமும் -பெரிய நம்பிகள் சம்பந்தமும் சித்திக்கும் இத்தால் –
வடுக நம்பிகள் -பாதுகை கோயில் ஆழ்வார் மேல் வைத்து எழுந்து அருளினை ஐதிக்யம்
ஸ்வரூப குண ப்ரயுக்த சிஷ்யத்வம் -உபாய பிரதான சிஷ்யத்வம் உபேய பிரதான சிஷ்யத்வம் என்றும் – திருமேனி ப்ரயுக்த சிஷ்யத்வமும் –இங்கும் உபாய பிரதான சிஷ்யத்வம் உபேய பிரதான சிஷ்யத்வம்
திரு மேனி பிராப்யம்- நம்பிள்ளை திரு முதுகு அழகை சேவிப்பதே பரம புருஷார்த்தம் என்று இருந்தாரே –
உபாய பிரதானம் -அங்க உபாய பிரதான சிஷ்யத்வம் -ஸ்வ தந்த்ர உபாய பிரதான சிஷ்யத்வம் -அங்கம் ஈஸ்வரன் -அவர் மூலம் ஆச்சார்யரைப் பற்ற –
உபேய பிரதான சிஷ்யத்வம் -பிரதம உபேய பிரதான சிஷ்யத்வம் -சரம உபேய பிரதான சிஷ்யத்வம் –
இப்படி பலவகைகளால் பிரிந்து – ஆச்சார்ய விஷயத்தில் பகவத் பிரதிபத்தி – மதுர கவி முதலான ஆச்சார்யர்கள் -ஆழ்வார் போல்வாரும்  -பகவத் விஷயத்தில் ஆச்சார்ய பிரதிபத்தி மற்றுள்ள ஆழ்வார்கள்
ஸ்ரீ ராமானுஜரை சேர்த்தே மதுரகவி ஆழ்வார் ஆண்டாள் -பற்றி உபதேச ரத்ன மாலை பாசுரங்கள்)

(இத்தால்
சிஷ்யருக்கு உண்டாம் ஸச் சிஷ்ய சத் குண அத்வவசாயமும்-321-325-
சிஷ்ய ஆச்சார்யர் சாதாரண அசாதாரண பரிமாற்றங்களையும்-326-342-
ஆச்சார்ய ப்ரீதி விஷயமான ஸச் சிஷ்யருக்கு வேண்டிய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விசேஷங்களையும்-345-349-
ஆச்சார்ய உபகார ஸ்ம்ருதி ஹேது சிஷ்ய சித்த தோஷ நிவ்ருத்தியும்-350-365- சொல்லப்பட்டது-)

1-பொறை யாவது -அவர்கள் செய்த குற்றத்துக்கு -தாம் ஒரு பிரதி க்ரியை பண்ணுதல் –
நெஞ்சிலே கன்றி இருத்தல் -செய்யாமை ஆகிற அபராத சஹத்வம் –
2-கிருபை-யாவது -நாம் பொறுத்து இருந்தோம் ஆகிலும் -எம்பெருமான் உசித தண்டம்
பண்ண அன்றோ புகுகிறான் -ஐயோ இனி இதுக்கு என் செய்வோம் -என்கிற பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
3-சிரிப்பாவது -அத்ருஷ்ட விரோதமாக இவர்களால்  செய்யலாவது ஓன்று இல்லை இறே  –
பாருஷ்யாதி முகத்தாலே -க்யாதி லாபாதி த்ருஷ்ட விரோதங்கள் இறே இவர்களால் செய்யலாகாது -அப்படி சிலவற்றைச் செய்தால் தங்களோபாதி நாமும் இவற்றால் சபலராய் – இவற்றினுடைய ஹானியைப் பற்ற நெஞ்சாறல் பட்டு தளர்வுதோம் என்று இருந்தார்கள் ஆகாதே -இவர்கள் அறிவிலித்தனம் இருந்தபடி என் என்று பண்ணும் -ஹாஸ்யம்
4-உகப்பு -ஆவது -அவர்கள் பண்ணும் பரிபவாதிகளுக்கு விஷயமான சரீரத்தை தனக்கு சத்ருவாகவும் -அவர்கள் ஹானி பண்ணும் த்ருஷ்ட பதார்த்தங்கள் தனக்கு பிரதி கூலங்களாகவும்  நினைத்து இருக்கையாலே தன்னுடைய சத்ரு விஷயமாக ஒருவன் பரிபவாதிகளை பண்ணுதல்  தனக்கு பிரதிகூலங்கள் ஆனவற்றை போக்குதல்  செய்தால் உகக்குமா போலே  அவர்கள் அளவில் பிறக்கும் ப்ரீதி
5-உபகார ஸ்ம்ருதி யாவது -நம்முடைய தோஷங்களை நாம் மறந்து இருக்கும் தசைகளிலே உணர்த்தியும்  நமக்கு இவ் இருப்பில் நசை அறும்படியான செறுறப்புக்களைச் செய்தும்(நிர்வேதங்களை) இவர்கள் நமக்கு பண்ணும் உபகாரம் என் தான் என்று இருக்கும்  க்ருதக்ஜ்ஜை

நடக்க வேணும்  என்றது இவை இத்தனையும் குற்றம் செய்தவர்கள் விஷயத்திலே
இவனுக்கு அவஸ்யம் உண்டாய் போர வேணும் என்று தோற்றுகைகாக-

ஆக
இப் பிரகணத்தால்-ஹித உபதேச சமயத்தில் -விபிரதி பத்தி விசேஷங்களும் -308-ஆரம்பித்து-
தத் ரஹிதமாக உபதேசிக்க வேணும் என்னும் இடமும் –
உபதேச சாஷாத் பலமும் -311-
உபதேஷ்டாவின் ஆசார்யத்வமும் சித்திக்கும் வழிகளும் –
விபிரதிபத்தி யுடன் உபதேசிக்கில் உபயர்க்கும் ஸ்வரூப சித்தி இல்லாமையும் -312-
உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு அவஸ்ய அபேஷித குண த்வயமும் -313-
சாஷாத் ஆச்சர்யத்வம் இன்ன மந்த்ரத்தை உபதேசித்தவனுக்கு என்றும்-315- – சொல்லுகையாலே சதாசார்யா லஷணத்தையும் -308-320-

தத் அநந்தரம்-
சச் சிஷ்ய லஷணத்தையும் –321-
தத் உபயருடைய பரிமாற்றங்களையும் –
சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் -தீ மனம் கெடுத்தாய் -இத்யாதிப் படியே
யாவச் சரீர பாதம் உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் -எனும் அத்தையும் –
மனசுக்கு தீமை என்னது என்னும் இடத்தையும் –
அதில் உபபாத நீயாம்சத்தின்  உபபாதநத்தையும்(விளக்க வேண்டியவற்றை விளக்கியும் )

தத் பிரசங்கத்திலே-
மற்றும் இவனுக்கு அபேஷிதமான அர்த்த விசேஷங்களையும் -பிரதிபாதிக்கையாலே –
கீழ்ச் சொல்லி வந்த த்வய நிஷ்டனான அதிகாரிக்கு –
தத் உபதேஷ்டாவான ஆச்சார்ய விஷயத்தில் உண்டாக வேணும் பிரதி பத்திய அனுவர்தன பிரகாரங்களும் சொல்லப் பட்டது –

ஆறு பிரகரணங்களில் நான்காவதான-சதாசார்யா அனுவர்தன பிரகரணம் -முற்றிற்று-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –308-320 -சத் குரூப சேவகம்-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம்–ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 29, 2017

1–புருஷகார வைபவம் -24-
2–சாதநஸ்ய கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -80–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாயதாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது நான்காவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் 
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் 

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் -24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்

——————————————-

த்வயார்த்தம் முடிந்தது இது வரை -கண்ட யுக்தமானவை இது வரை – ஆர்த்தமான அர்த்தங்கள் மேல் – அபிபிரேதமான அர்த்தங்கள் இனி மேல் என்றவாறு
ஆச்சார்ய கைங்கர்யம் -நிர்ஹேதுக கிருபா வைபவம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் இவை மூன்றும் த்வயத்தில் சப்தத்தில் இல்லை –
அவன் திரு உள்ளத்தில் உள்ளவை அன்றோ இவை -இத்தை ஓராண் வழியாக உபதேசித்து -அவிச்சின்னமாக பரம்பரையா சம்பிரதாயத்தில் வந்த அர்த்தங்கள் –
முன்னோர் முறை தப்பாதே கேட்டு இருக்க வேண்டுமே –

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

பூஜ்ய விஷய விசாரம் மீமாம்சை -வேத -வேதாந்த -வேதாந்த தாத்பர்ய மீமாம்சைகளை மூன்றும் உண்டே –
சாஸ்திரம் சாப்தமாக உபதேசித்தது -முதல் சொல்லி –தர்ச பூர்ண மாசம் -அக்னி ஹோத்ரம்-சோம யாகம் -இம் மூன்றும் கிருஷ்ண யாகங்கள் -மூன்றையும் விவரித்து சொல்லிற்று –
ஷட்க பேதம் பூர்வ மீமாம்சை ஜைமினி -கர்ம விசாரம் -உபதேச முதல் ஆறும் – அதி தேசம் அடுத்த ஆறும் –
த்ரவ்யத்தை தேவதைக்கு தியாகம் செய்வதே யாகம் –
உபதேசமாக அர்த்தங்களை வைத்து மற்றவற்றுக்கு ஊகிக்க வேண்டும் -தேவதை த்ரவ்யம் பலம் இவற்றை-இம் மூன்றை -ஏதாவது ஒன்றைக் கோடி காட்டும் –

த்விக பேதம் உத்தர மீமாம்சை வேதாந்த விசாரம் -சித்த ஸாத்ய த்வீகங்கள்- உபேய உபாய த்வீகங்கள் என்றவாறு –
சமன்வய அவிரோத -இரண்டும் ப்ரஹ்மம் குறித்து சித்த த்விகம்-உபாய த்விகம்–காரணந்து த்யேய சொல்ல வந்ததால் –
சாதன பல அத்தியாயங்கள் -ஸாத்ய த்விகம் – உபேய த்விகம்-பக்தி உபாசனம் ஸ்வயம் பிரயோஜனம் அதுவே உபேயமாகுமே –

பூர்வ த்ரிதகம்-அவை -மேலே – உத்தர த்ரிகம் -இதுவும் மீமாம்சை -பூர்வ உத்தர மீமாம்சைகளை போலே இதுவும் –
இங்கும் கண்ட உக்தமும் அபி பிரேரிதமாயும் இருக்கும் –த்வய நிஷ்டருக்கு வேண்டிய ஆழமான கருத்துக்கள் மேலே என்றவாறு –

————————————–

அநந்தரம்-தான் ஹித உபதேசம் பண்ணும் போது–என்று துடங்கி –
உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் –365-என்னும் அளவாக
இவ் அதிகாரிக்கு கீழ் சொன்ன அர்த்த விசேஷங்கள் எல்லாம்  307–உபதேஷ்டாவான
ஆசார்ய விஷயத்தில்  உண்டாக வேணும் பிரதிபத்தி அநு வர்தன பிரகாரங்களை) எண்ணமும் செயலையும் )தர்சிப்பிக்கைக்காக –
சதாசார்யா லஷணம் –
சச் சிஷ்ய லஷணம் –
தத் உபயருடைய பரிமாற்றம் -இவை இருக்கும் படியை ப்ரசக்த அநு ப்ரசக்தமாக அருளிச் செய்கிறார் –
இவ் வதிகாரிக்கு அசக்தி விஷயமான நிஷித்தங்கள் சொன்ன பிரசங்கத்தில்
அவை எல்லாவற்றிலும் -க்ரூர நிஷித்தம் -பர உபதேச சமயத்தில் -விப்ரதிபத்தி – என்று அருளிச் செய்கிறார் –

சூரணை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

(மாறாடி நினைத்தால் க்ரூரமாகவும் நிஷித்தமாகவும் இருக்கும் –கீழே -300-நிஷித்தம் நாலு வகை -ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாகவும் நிஷித்தமாகவும் இருக்கும்
இவை அதை விட குரூரம் -இது தானும் கெட்டு சேர்ந்தவர்களையும் கெடுக்கும்
ஆச்சார்யனான தான் -என்ற நினைவு கூடாதே -மாறாடுவது- சிஷ்யனாக நினைத்தால் பிரதி சம்பந்தி ஆகும் -தன் ஆச்சார்யருக்கு சிஷ்யன்
பலம் திருத்திப் பணி கொள்வது இல்லை –மங்களா சாசனம் பண்ண வைப்பதே பலம்இஹ லோக பர லோக மோக்ஷம் கொடுப்பது என்ற நினைவு மாறாடுவது -)

(ஆயி ஸ்வாமிகள்–யுக்த தினசர்யா -பிரகரணம்-அனுசந்தான உபதேஷ்டாவான சதாசார்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் – மாறாடி நினைப்பவர் அசத் ஆச்சார்யர் ஆவார் -சதாசார்யர் ஆக மாட்டார்
308-320-வரை ஆயி ஸ்வாமிகள் ஒன்பதில் ஆறாவது இது என்று அவதாரிகை – மா முனிகள் -ஆறில் நாலாவதாக அவதாரிகை –சிஷ்யனுக்கு கீழே -க்ரூரமாயும் நிஷித்தமாயும் இருக்கும்-இனி ஆச்சார்யருக்கு இங்கு  ஸூவ பர-சிஷ்ய- ஸ்வரூப விபர்யய ஸ்மரணம் -க்ரூரமாயும் நிஷித்தமாயும் இருக்கும்
ஸூவ ஆச்சார்ய பர தந்திரனாய் -அநந்ய பிரயோஜனாய் -கிருபாவானாய் -ஆப்த தமனாய் -சத் சம்பிரதாய க்ரமம் தப்பாத படி –
பூர்வ மீமாம்சை உத்தர மீமாம்சை ரஹஸ்ய மீமாம்சைகளை மூன்றையுமே ஒன்றுமே தப்பாமல் சமன்வயப்படுத்தி –ஸச் சிஷ்ய ஸ்வரூப ஹிதமான-அவசர பிரதீஷானாய் இருந்து சிஷ்யன் கேட்டுக் கொள்ள வேன்டும் தேசிகன் -சார மந்த்ரார்த்தைப் பேணி உபதேசிக்கும் பொழுது –சாஸ்த்ர சாரம் -வேதாந்தம் சாரம் -ரஹஸ்ய த்ரயம் –
ரூப ஹிதம் -சரீரகதம் -வேதம் பார்க்கும் -ஸ்வரூப ஹிதம் இங்கு  ஹித உபதேசம் -மந்த்ர ரூபம் -என்றது -மோக்ஷத்தில் இச்சையுடன் வருபவன் என்பதால் —
வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியின் முதல் ஓதுகின்ற பொருள் முடிவான சுருக்கை –என்றவாறே – போஷித்து உபதேசிக்க வேன்டும் –மந்திரத்தையும் மந்திரத்தின் அர்த்தங்களையும் ஸூவ ஆச்சார்ய பரதந்த்ரனாக உபதேசிக்கும் தன்னையும் மாறாடி நினைப்பது ஸ்வ தந்த்ரனாக நினைப்பது தானே
சம்சார நிர்வேதம் பிறந்து –வந்து உபதேசம் கேட்க்கிற சிஷ்யனையும் -உபதேச அனுகுண பலத்தையும் -உள்ளபடி நினையாமல் மாறாடி -நினைக்கை
கீழ் சொன்ன-300-301- நிஷித்த விஷயம் போலே இல்லையே -அதி க்ரூரமாய் இருக்கும் என்றவாறு-உபய ஸ்வரூப நாசகார -தானும் கெட்டு சிஷ்யனும் கெட்டு-க்ரூரமுமாய் சான்றோர்களால் தவறு என்று சொல்லப்படும் –
பிரதிபத்திய அநு வர்தன பிரகாரங்களை-எண்ணத்தையும் செயலையும் –என்றவாறு )

(உபேதேசாதிகளும்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணம் – அருளிச் செய்த பின்பு
-உபதிஷ்ட அர்த்த விஷய மஹா விஸ்வாச ஹேது -நிர்ஹேதுகம் -கிருபா வைபவமும் அருளிச் செய்த பின்பு-
உபத்திஷ்ட அர்த்த சரம அவதி -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -கிரமத்தாலே மேலே அருளிச் செய்கிறார் –
மேல் மேல் உத்தர உத்தர சங்கதிகள்-ஹித உபதேசம் -திருமந்திரம் -கொண்டே உபதேசிப்பது முமுஷுவுக்கு ஹிதமாகும் அன்றோ -)

அதாவது
கீழ் பிரபந்தத்தில் சொல்லப்பட்ட அதிகாரி லஷணங்கள் எல்லாவற்றாலும் குறை அற்று
இருந்துள்ள தான்  உஜ்ஜீவிஷுக்களாய் வந்து  தன்னை உபசத்தி பண்ணினவர்களுக்கு
உஜ்ஜீவன ஹேதுவான மந்திர ரூப ஹிதத்தை உபதேசிக்கும் காலத்தில் –
உபதேஷ்டாவான தன்னையும் –
உபதேச பாத்ரனான சிஷ்யனையும் –
உபதேச பலத்தையும் –
விபரீத பிரதிபத்தி பண்ணுகை பூர்வ உக்த நிஷிதங்களில் காட்டில்  க்ரூர நிஷித்தம் என்கை-

அவ்வோ நிஷித்தங்கள் இவன் தனக்கு நாசகம் இத்தனை இறே
அவ்வளவு இன்றிக்கே –
இவன் உபதேசம் கேட்டவனுக்கும் கேடாகையாலே இத்தை அவற்றிலும் காட்டில் க்ரூர நிஷித்தம் என்கிறது –
இருவருக்கும் ஸ்வரூப சித்தி இல்லை என்று இறே மேல் சொல்லத் தேடுகிறது –

—————————————-

தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் -மாறாடி நினைக்கை யாவது -எது என்னும்
ஆ காங்ஷையிலே -அவற்றை உபபாதிக்கிறார் –

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்பஷ்டீ கரிக்கிறார் -யதா க்ரமத்தை மாறாடி-தன்னை -தன் ஆச்சார்யருக்கு சேஷம் என்று நினைக்காமல் சேஷி என்று நினைப்பது –
ஸூ ஆச்சார்ய பரதந்த்ரனான தான் -என்ற நினைவு வந்தாலே சிஷ்யனை தனது சிஷ்யனாக என்ன மாட்டானே – தனக்கு–தன்னை பற்றி சரியாக எண்ணி —
ஆச்சார்யருக்கு பரதந்த்ரனான இவனை தனது சிஷ்யனாக நினைக்கை –
இப்படி இரண்டில் ஓன்று தப்பானாலும் க்ரூரமாகுமே -ஸ்வரூப நாசம்
உபதேச பலத்தை -நம் ஆச்சார்யர் நமக்கு அந்தர்யாமியாய் உபதேசிக்க -யானாய் தன்னைத் தான் பாடி போலே -இருக்க வேண்டுமே -இதுக்கு பிரயோஜனம்
பலம் அந்தராத்மாவுக்குச் சேர வேன்டும் –திருவடி ஸ்தானீயம் தானே ஆச்சார்யர் -ஸூவ ஆச்சார்யருக்கு -மங்களா சாசனத்துக்கு அதிகாரி யாம் என்று நினைக்க வேன்டும்
ஆக இந்த சரம நிஷ்டையில் பெருமாள் ஒரே இடத்தில் மட்டுமே நிர்ஹேதுக கடாக்ஷம் தான்  இங்கு ஆச்சார்யர் -நம் ஸமாச்ரயண ஆச்சார்யர் பர்யந்தம் வர வேன்டும்
என்பதால் தான் உத்தாரக -உபகார ஆச்சார்யர் பர்யந்தம் வரவழைக்கத் தானே இந்த பிரபந்தம் –
நாம் சிறிது த்ருஷ்டம் பெறலாம் என்றோ- உஜ்ஜீவிப்பவன் ஸூ ஆச்சார்யர் என்று நினையாதே தானே கார்யம் என்று நினைப்பதுவும் -என்று அருளிச் செய்து இருந்தாலும் இங்கு இதுக்கும் மேல்  மா முனிகள் இங்கே உஜ்ஜீவனம் என்று நினைப்பதே மாறாடுதல்-என்பர் ஸூ நிமித்த உஜ்ஜீவனத்தை பலமாக மாறாடி நினைக்கை தோஷம் 
நம் ஆச்சார்யர் திருத்தி பகவத் கைங்கர்யம் செய்கிறார் என்று நினைக்க வேன்டும் -நாம் அங்குத்தைக்கு ஆளாக பண்ணினோம்-நமக்கு பகவத் கைங்கர்யம் என்ற நினைவு கூடாதே 
ஸஹ வாஸம் பண்ண தம் ஆச்சார்யர் வழி வகுத்தார் என்று நினைக்காமல் தன் உபதேசம் -ஸூ பிரயோஜன ஸஹ வாஸம் என்று நினைப்பதும் தோஷம் –
இந்த நாலும் வேன்டும் —ஆச்சார்யர் நினைவு -தானே தப்பு –ஸூ ப்ரயத்னத்தால் இல்லை –
அங்குத்தைக்கு கரண பூதனாகவும் –தன் ஆச்சார்யர் -பரமாச்சார்யர் திருக் கைகள் நாக்கு திரு உள்ளம் போல -பரதந்த்ரனாக-பிரதிபத்தி -பண்ண வேண்டுமே –
இப்படியே அவர் நினைவும் -அஸ்மத் ஆச்சார்யர் பர்யந்தம் -இதனாலே இன்றும் ஜீவிக்கிறது இந்த தனியன் –அவிச்சின்ன குரு பரம்பரை —
சிஷ்யன் இவரை ஆச்சார்யராக நினைக்க வேண்டுமே -அவரை பொறுத்த படி நினைக்க கூடாதே –இரண்டையும் சமன்வயப்படுத்தி அடுத்த சூரணை யிலே அருளிச் செய்கிறார் -)

(ஆளும் ஆளார்–என்று ஆழ்வார் -மங்களா சாசன பரராக ஆசைப்பட்டார் -எழுந்து இருந்து திரு ஆழி திருச் சங்கு பிடிக்க ஷமர் இல்லார் –கிஞ்சித்காரம் பண்ணாதவனுக்கு சேஷத்வம் சித்திக்காதே –
ஆச்சார்ய அதீன விருத்தி–அனைத்தும் இருக்க வேன்டும் -சாஸ்திரம் கற்று அது படி நடந்து சிஷ்யனை அதன்படி நிலை நிறுத்த வேன்டும் –
சிஷ்யன் இவற்றைச் செய்யும் பொழுது தன் ஆச்சார்யரை உள்ளத்திலே நினைத்து செய்தால் தான் நிலை நிற்கும் -தனியன் சொல்லியே கால ஷேபம் –
ஆச்சார்யர் வாக்காக நினைத்தே உபதேசம் -மங்களா சாசன பரராக ஆக்குவதே பெரியாழ்வார் -பிரயத்தனம் -பரம பிரயோஜனம் இதுவே –
அவாப்த ஸமஸ்த காமனுக்கு இதுக்கு மேற்பட்ட ப்ரீதி தருவது வேறே இல்லையே -மங்களா சாசன யோக்யதை ஏற்படுத்தவே உபதேசம் –
ஆறு தொழில் அந்தணன் -தானம் த்ருஷ்ட பலம் வாங்கிக் கொள்ளலாம் கொடுக்கலாம் உள்ளதே என்னில் –விசேஷ சாஸ்திரம் பரமை ஏகாந்தி –
சிசுரூஷா லாபம் யஜஸ் அர்த்தமாக செய்யக் கூடாதே கிருபையால் விருப்பம் இல்லாமல் செய்ய வேண்டுமே – திருமுக மலர்த்திக்கு ஒப்பிட்டால்-உஜ்ஜீவனமும் வேண்டாம் -அச்சுவை பெறினும் வேண்டேன் -அத்தை விட இதுக்கு ஏற்றம் என்றவாறு -பிரதானம் இதுவே என்பதால் –
திவ்ய அர்ச்சா ப்ரதிஷ்டை ஆராமம் தடாகம் கைங்கர்யங்கள் தானே-இவற்றுக்கும் மேலே சேதன ஸம்ஸ்கார பல பூதனாக்குவது – –
மங்களா சாசனம் இதுக்கும் மேலே என்றவாறு -வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்பதுவும் அதி அல்பம் மங்களா சாசனம் பார்த்தால் என்றபடி –
ஸஹ வாஸம் பண்ணப் போதயந்த பரஸ்பரம் -என்றாலும் இத்தை விட அல்பம் என்றவாறு 
மத் சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் மூன்றும் திரு நெடும் தாண்டகம் மூன்று பத்துக்களும் –)

அதாவது
உபதேஷ்டாவான தன்னை உள்ளபடி நினையாமல் -மாறாடி நினைக்கை யாவது –
உபதேச சமயத்தில் -தன்னுடைய ஆசார்யனையே இவனுக்கு உபதேஷ்டாவாகவும் –
தான் அங்குத்தைக்கு கரண பூதனாகவும் -பிரதி பத்தி பண்ணிக் கொண்டு உபதேசிக்க வேண்டி இருக்க -அப்படிச் செய்யாதே -ஸ்வாசார்ய பரதந்த்ரனான இருக்கிற தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைக்கை –

உபதேச பாத்ரனான சிஷ்யனை உள்ளபடி நினையாமல்-மாறாடி நினைக்கை யாவது –
தன்னோபாதி இவனையும் -தன்னுடைய ஆசார்யனுக்கு சிஷ்யனாய் பிரதிபத்தி பண்ணி உபதேசிக்க வேண்டி இருக்க -அது செய்யாதே -இவனை தனக்கு சிஷ்யன் -என்று நினைக்கை –

உபதேச பலத்தை உள்ளபடி நினையாதே -மாறாடி நினைக்கை யாவது -பர உபதேசம் பண்ணும் அளவில் -இவ் ஆத்மா திருந்தி -ஆளும் ஆளார் -என்கிற விஷயத்துக்கு மங்களா சாசனத்துக்கு ஆளாக வேணும் என்னும் இதுவே பலமாக உபதேசியாதே -இவனால் வரும் அர்த்த ஸிஸ்ருஷ ரூபமான த்ருஷ்ட பிரயோஜனத்தை ஆதல் –சிஷ்யனான இவன் சம்சாராது உத் தீர்ணனாய் வாழுகை யாகிற உஜ்ஜீவனத்தை ஆதல் –திரு நந்தவனாதிகளைச் செய்கிற இதிலும் காட்டில் ஓர் ஆத்மாவை திருத்தினால் எம்பெருமான் திரு உள்ளம் உகக்குகையாலே -இப்படி இருந்துள்ள பகவத் கைங்கர்யம் ஆதல் –சம்சாரத்தில் இருக்கும் நாள் தன் தனிமை தீர கூடி வர்திக்கை யாகிற சகவாசத்தை யாதல் –உபதேசத்துக்கு பலமாக நினைக்கை -என்றபடி –

————————————————-

இவன் இப்படி நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் -என்கிற
தஜ்ஜிஞாஸூ ப்ரஸ்னத்தை அனுவதித்துக் கொண்டு -அவை சித்திக்கும் வழி  அருளிச் செய்கிறார் –

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-அவர்ஜ நீயமான -விலக்க முடியாததனான -இந்த நான்கும் -த்ருஷ்ட பலம் ஆச்சார்யருக்கும் மூன்றும் சிஷ்யனுக்கும் -ஆத்மாத்மீயங்கள் அனைத்தும்
ஆச்சார்யர் இடம் சமர்ப்பித்து – -சரீரம் அர்த்தம் பிராணம் சத் குருவிடம் நிவேதயத் –ஆச்சார்ய சேஷம் -சத்தா நிபந்தனம் –
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் போலே –-பரம்பரையா உண்டே –மதீயத்வ எண்ணம் கந்தம் இல்லாமல் தெளிந்த சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் ஆச்சார்யார்க்கு கிட்டும் கட்டாம் தரை மேல் பாட்டம் மழை போலே -அவரது அவர் வாங்கிக் கொள்வதால் இவருக்கும் குறை இல்லை –ப்ராப்த த்ருஷ்ட பலன் -பகவத் பாகவத ஸூவ ஆச்சார்ய கைங்கர்ய அர்த்தமாக -இது சித்திக்கும் -என்றவாறு –
நமக்கு எட்டுப் படாமல்மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லாஎதிர்மலைந்து- அசத் கல்பனான இவனை -நமக்கும் நம் உடையாருக்கும் மங்களா சாசனம் பண்ணும்படி திருத்தி திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய இம் மஹாநுபாவன் என்ற கௌரவ புத்தி – திரு உள்ளத்தால் உகக்கவே -ஈஸ்வர ப்ரீதி தானே புண்யம் -பரமம் சாம்யம் உபைதி -மோக்ஷம் சித்திக்கும்
அடுத்து பகவத் கைங்கர்யம் -ஸூவ ஆச்சார்யர் நினைவால் -பூர்வாச்சார்யர் அநுஸந்திக்கும் கிரமத்தில் -உபதேசித்து  பால் பாய திருத்தி மங்களா சாசனத்துக்கு பிராப்தனாக்கி பகவத் கைங்கர்யம் இவன் பண்ணப் பெறுவதே என்று அகவாயிலே நினைக்கும் -அந்த நினைவாலே இது பழுதற சித்திக்கும் —
இனி ஸஹ வாஸம் -உபகார ஸ்ம்ருதியால் -என் நன்றி செய்வேனோ என் நெஞ்சில் திகழ –செயல் நன்றாகத் திருத்தி -பூர்ண விஷயம் அன்றோ நித்ய ஸேவ்யன் என்று பாத சாயையாக வர்த்திக்க ஆசைப்படுவான் –
ஆக ஆச்சார்யர் நினையாது இருக்க -பல சதுஷ்டயமும் சிஷ்ய- -ஈஸ்வர -ஸூவ ஆச்சார்ய -பிரதிபத்தி விசேஷங்களாலே சித்திக்கையாலே –ஆபத்து நீங்கி சம்பத்து -சேஷித்வ அபகாரம் நீங்கி -ஸூ ஆச்சார்ய த்ரவ்ய அபகாரமும் நீங்கி -ஸூத்ர பிரயோஜன ஆகாங்ஷையும் நீங்கி ஸூவ பிரபாவை ஸ்மரணம் ஆகிய குற்றமும் நீங்கி -ஸூ கர்த்ருத்வ ஆரோபண தோஷமும் நீங்கி -ஸூ பூஜா அபேக்ஷையும் ஆகிய தோஷ விஷய பிரசங்கமும் நீங்கி -இதுக்கு தானே ஸஹ வாஸம் எதிர்பார்ப்பு – உஜ்ஜீவனம் தன்னாலே வரும் -கைங்கர்யம் பர்யந்தம் சித்திக்கும் -இதுக்கு மாறாடினால்-சித்திக்காததும் இல்லாமல் தோஷமும் வந்து இருவர் ஸ்வரூபமும் நாசமாகும்-)

(காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்- -பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ– பகவான் நம்மை பெற கிருஷி -என்பதை – அவன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் -நாம் ஆச்சார்யர் மூலமே அவனை பெற வேன்டும்)

சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் -என்றது –
சிஷ்யனாவன் தனக்கு சேஷத்வமே ஸ்வரூபம் என்று அநு சந்தித்து இருக்கையாலே –
கிஞ்சித்காரம் இல்லாதபோது -சேஷத்வம் கூடாது என்று -தன் ஸ்வரூப லாபத்துக்காக
தன்னாலான கிஞ்சித்காரம் பண்ணிக் கொண்டு போருகையாலே -அர்த்த சிஸ்ருஷைகள்
ஆகிற த்ருஷ்ட பலம் -சித்திக்கும் -என்றபடி –

ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் -என்றது –
எதிர் சூழல் புக்கு திரிந்து -தன் விசேஷ கடாஷங்களாலே அத்வேஷாதிகளை உண்டாக்கி-
ஆசார்ய சமாஸ்ரயணத்திலே மூட்டி -இவ் வாச்சார்யனுடைய உபதேச அன்வயத்தை
உண்டாக்கி -அதடியாக இவனை சம்சாரத்தின் நின்று அக்கரைப் படுத்த வேண்டுகிற
எம்பெருமானுடைய க்ருபா கார்யமான நினைவாலே சிஷ்யனுடைய உஜ்ஜீவனம் சித்திக்கும் -என்றபடி –

ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –என்றது –
இவன் ஹிதோபதேசம் பண்ணி மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி சேதனரை திருத்துகிற இது -எம்பெருமான் திரு உள்ளத்துக்கு மிகவும் உகப்பாகையாலே -இது பகவத் கைங்கர்யம் அன்றோ என்று அநு சந்தித்து இருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே -உபதேஷ்டாவான தனக்கு பகவத் கைங்கர்யம் சித்திக்கும் -என்றபடி –

உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –என்றது –
அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி —

———————————————–

இப்படி இவன் நினையாது இருக்க -இப் பல சதுஷ்ட்யமும்-சிஷ்ய ஈஸ்வர -ஸ்வாசார்யர்கள்
நினைவாலே சித்திக்கும் என்னும் இடம் அருளிச் செய்து –
உபதேசத்துக்கு சாஷாத் பலமாய் உள்ளதும் –
உபதேஷ்டாவான ஆசார்ய பரதந்த்ரனுக்கு உபதேச பாத்ரமானவனைக் குறித்து உண்டாம் ஆசார்யத்வமும் -சித்திக்கும் படியை -பிரசந உத்தர ரூபேண அருளிச் செய்கிறார் –

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

(சிஷ்யனுக்கு சாஷாத் பலம்-ஸூ ஆச்சார்யனுக்கு -மங்களா சாசனம் தானே -இவருக்கு ஆச்சார்யத்வம் சித்திப்பதும் சாஷாத் பலன் தானே -இந்த முக்கிய இரண்டு பலங்களை பற்றி இங்கே-இவர் சிஷ்யனுக்கு சாஷாத் பலன் கிடைக்க நினைக்கலாமா என்னில் இத்தை தான் நினைக்க வேன்டும் -பலத்தை மாறாடி தானே நினைக்கக் கூடாது என்றார் கீழே-பலத்தை உத்தேச்யமாக இல்லாமல் மந்த புத்தி உள்ளவனும் செய்ய மாட்டானே-)

(ஆயி ஸ்வாமிகள்ஆப்த தமர் ஆச்சார்யர் -இரக்கம் உடைய தன் நினைவாலே -இவன் நமது ஆச்சார்யருக்கு மங்களா சாசனம் -சூழ்ந்து இருந்து ஏத்த -பரம்பரையாக-சரம ப்ராப்யம் -சித்திக்கும் -நம்மாலும் திருத்த ஒண்ணாத இவன் திருத்த -ஈஸ்வரன் திரு உள்ளது நினைவாலே -சித்திக்கும்
பரம ஆச்சார்யர் -ஈஸ்வரன் அனுக்கிரகத்தால் பேறு கிட்டாதோ
இவருக்கும் ஈஸ்வரன் எதுக்கு பரம ஆச்சார்யர் நினைவாலே கிட்டாதோ -என்னில் –
குரு பரம்பரையால் சிஷ்யனுக்கு நன்மை உண்டாம் என்ற நியதி வேண்டுமே –
ஸூ ஆச்சார்யர் தன்னை ஆச்சார்யராக ஆக்கினால் தானும் சிஷ்யனுக்கு தரலாம் என்ற எண்ணம் வருமே – -ஸாஜாதீய ஸ்வஸ் சித்த புத்தி தவிர்க்க வேண்டுமே -பகவத் சங்கல்பம் அதீனம் ஆச்சார்யத்வம் ஸ்வதஸ் சித்தம் இல்லை என்றவாறு-
ஸ்வரூப சித்திக்கு தன் ஆச்சார்யர் மங்களா சாசனம் -அவர் ப்ரீதிக்காக பரமாச்சார்யருக்கு மங்களா சாசனம் -இப்படி விநியோகம் கொள்ளும் படி ஆக்கிக் கொள்ள வேண்டுமே
பரமாச்சார்யருக்கும் ஸூ ஆச்சார்ய பரமாச்சாரியார் ஒழிந்த -மணக்கால் நம்பி ஆளவந்தார் ஒழிய -பெரிய நம்பி எம்பெருமானார் கூரத் தாழ்வான் —தன் ஆச்சார்யருக்கு இவர்கள் சிஷ்யர் என்ற எண்ணம் வேன்டும் –குருவி தலையில் பனங்காய் போலே -எல்லாம் ராமானுஜர் திருவடிகளில் சேரும் – சிஷ்யனுக்கு சித்த ஆச்சார்ய ஸ்மரணம் -ஒழிய சாதிக்கப் பட்டவர் என்ற எண்ணம் கூடாதே-பகவத் சங்கல்பத்தால் பெற்றோம் என்ற நினைவு வேன்டும்
நினைக்கைக்கு பிராப்தரும் -சக்தரும் -க்ருதஞ்ஞருமாய்ஆச்சார்ய ஈஸ்வர நினைவாலே சிஷ்ய ஆச்சார்ய சாஷாத் பலன்கள் சித்திக்கும் என்றவாறு–நம்மால் திருத்த முடியாத -என்ற செய் நன்றி -உண்டே -இவர்களுக்கு)

(யதா பிரதிபத்தி ரூபம் பொருந்தி இருக்கும் –விப்ரதிபத்தி மாறாடி இருப்பது நினைப்பிடுகை –சங்கல்பம்  யதா ப்ரதிபத்தி யுக்த -உபதேசிக்கும் ஆச்சார்யர் –மந்த்ர ரூப ஹித உபதேசிக்கும் -இவரே ஆச்சார்யர் – வியாச பகவான் -முக்கிய விருத்தி சர்வேஸ்வரன் இடம் தானே மற்றவை உபசார வழக்கு –இதே போல் ஆச்சார்யார் சொல்லும் திரு மந்த்ர உபதேஷ்டாவான அவரிடமே பொருந்தும்  – மற்றவர்கள் இடம் உபசார வழக்கு-பூர்த்தி இவர் இடம் மட்டுமே – பரம்பரையா வந்த ஆச்சார்ய பரம்பரை –பிரகாசம் -பதவி -பகவத் சங்கல்பத்தாலே பிரகாசப்படும்-உடையவர் இடம் விட்டு -74-சிம்ஹாசனாதிபதிகள் மூலம் -ஸத்ய ஸங்கல்பன்  ஜீவாத்மாவை அழிக்க சக்தனாக இருந்தும் ஸத்ய ஸங்கல்பன் என்பதால் நித்யம்-சுலபமாக நாம் அடைய வைத்த வழி தானே இது -சம்பிரதாய அடிப்படை –பகவத் சங்கல்பம் அடியாகவே -ஆச்சார்ய பரம்பரை என்றவாறு-பரதன் ஜ்யேஷ்ட ராம பக்தன் -தம்பியான படியால் இல்லை பரதன் ஆனபடியால் -அதே போலே உபதேசத்தால் மறைந்து உள்ள-வியஞ்சமான- ஆச்சார்யத்வம் சங்கல்பத்தாலே பிரகாசிக்கும்)

சாஷாத் பலமாவது-உபதேச பாத்ரமான இவன் திருந்தி மங்களா சாசனத்துக்கு ஆளாகை-

இது தன் நினைவாலே சித்திக்கை யாவது -உபதேஷ்டாவான தான் விப் ப்ரதிபத்திகள் ஒன்றும் இன்றி இதுவே பலமாக நினைத்து உபதேசிக்க -அவன் அப்படி திருந்தி மங்களா சாசன அதிகாரி ஆகை-

ஆசார்யத்வம் ஆவது -தன்னை ஆசார்ய பரதந்த்ரனாகவே அநு சந்தித்து இருக்கிற இவன்
தன் பக்கல் உபதேசம் கேட்கிறவனுக்கு ஆசார்யன்  ஆகை –

இது -ஈஸ்வரன் நினைவால் சித்திக்கை யாவது –
இப்படி -தன்னையும் -சிஷ்யனையும் -பலத்தையும் -விப் ப்ரபத்தி பண்ணாதே
உள்ளபடி அநு சந்தித்து உபதேசிக்கும் பரிபாகம் உடையனான இவன் -இவனுக்கு
ஆசார்யன் என்று நினைப்பிட்டு அருளுகையாலே இவனுக்கு ஆசார்யத்வம் உண்டாகை-

————————————–

இங்கன் அன்றி க்ரூர நிஷிதமாக அடியில் சொன்ன விப்ரதிபத்தியாலே உபதேசிக்கில்
உபய ஸ்வரூபமும் சித்தியாது -என்கிறார் –

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

(ஆயி ஸ்வாமிகள்-இந்த நினைவு மாறாடினால் -இருவர் ஸ்வரூபமும் -நாசமாகும் -ஸூ ஆச்சார்ய பரதந்த்ரனான இவருக்கும் சிஷ்யருக்கும் என்றவாறு)

இருவருக்கும் ஸ்வரூப சித்தி இல்லை -என்றது –
கீழ்ச் சொன்னபடியே யதா பிரதிபத்தியோடே உபதேசிக்கில் ஒழிய -ஈஸ்வரன் இவனை
ஆச்சார்யனாக நினைப்பிடாமையாலே -உபதேஷ்டாவுக்கு ஆசார்யத்வம் ஆகிற ஸ்வரூப
ஸித்தி இல்லை-

அப்படி யதா பிரதிபத்தியாலே இவன் உபதேசியாத அளவில் -உபதேச
ஸூத்தி இல்லாமையாலே அவனுக்கு சிஷ்யத்வம் ஆகிற ஸ்வரூப சித்தி இல்லை -என்கை

—————————————

ஆசார்யனுக்கு இரண்டு குணம் அவஸ்யம் வேணும் என்கிறார் –

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-நியதமாக வேண்டுவது -தத்துவார்த்த உபதேஷ்டா -தத் சாரார்த்த ஸ்ரோதாவாய் வந்து ஆஸ்ரயித்த சிஷ்யர் பக்கல் -சரம அர்த்தம் அறிந்து உஜ்ஜீவிக்க கிருபையும் –இரக்கம் இருந்தாலே போதும் – உரிமை உடையவர் அருளியது தானே – சிஷ்ய ஆச்சார்ய சம்பந்தம் ஈஸ்வர சங்கல்ப அதீனம் தானேதனது ஆச்சார்யர் தனக்கு நியாந்தா -பாரதந்தர்யம் -அவருக்கு கருவியாக உபதேசம் செய்யும் எண்ணமும் வேண்டும்)

அதாவது
உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு உஜ்ஜீவிஷூவாய் வந்து உபசன்னான சிஷ்யன் பக்கல்
ஐயோ என்று இரங்கி -அவன் உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பான உபதேசாதிகளை பண்ணுகைக்கு ஈடான கிருபையும் -தன்னைக் கர்த்தாவாக நினையாதே -அத் தலைக்கு கரண பூதனாக அநு சந்திக்கைக்கு ஈடான ஸ்வாசார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யமும் அவஸ்யம் உண்டாக வேணும் என்கை-

—————————————-

இவற்றால் பலிக்கும் அவற்றை அருளிச் செய்கிறார் –

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-தயா நீயானான -சிஷ்யன் -தயாளு ஆச்சார்யர் இத்தைப் பெற -தகுதி உடையவன் -ஸூ அசாதாரண ரூபம் -சரம ஞானமும் அனுஷ்டானமும் –பலம் கிடைக்க இரக்கத்தால் சித்திக்கும்
தனது ஆச்சார்யர் அதீனம் -உபதேச கர்த்தா அவரே தான் கருவி தானே –ஈஸ்வரன் ஆசைப்பட்டு மடியிலே வைத்து கொள்ளலாமே அதே போலே இவர் ஆச்சார்யர் என்ற நினைவால் சித்திக்கும் – ஸூ ஆச்சார்ய நித்ய பாரதந்தர்யம் இவருக்கு உண்டே -உபதேச கர்த்ருத்வம் தட்டாமல் ஆச்சார்யத்வம் சித்திக்கும் –உபதேச ப்ரேரத்வம் -சிஷ்யர் தூண்ட ஆச்சார்யர் உபதேசம்-நம்மாழ்வார் மைத்ரேயர் தானே அவர் அவா இது தூண்டத் தூண்டத் தானே திருவாய் மொழி –இரக்கம் தானே பிரேரிதம்- தூண்டும் -உபதேசம் பண்ண –ஸ்வ தந்த்ர கர்த்தா என்ற தூஷணம் போக்கிக் கொள்ள ஆச்சார்ய பரதந்தர்யர் என்ற எண்ணத்தால் போக்கி கொள்ளலாமே )

அதாவது –
அப்படி அவன் ஸ்வரூபம் திருந்தும் அளவும் உபதேசாதிகளைப் பண்ணிப் போரும்
இவன் கிருபையாலே -நாளுக்கு நாள் ஸ்வரூபம் நிர்மலம் ஆகையாலே சிஷ்யனுடைய ஸ்வரூபம் சித்திக்கும் –

ஸ்வ கர்த்ருத்வ புத்தி அற்று -ஸ்வாசார்ய கரண பூதனாக தன்னை அநு சந்திக்கைக்கும் –
மற்றும் சர்வ கார்யத்திலும் -தத் அதீனாய் வர்திக்கைக்கும் உடலான பாரதந்த்ர்யத்தாலே
ஆசார்யனான தன்னுடைய ஸ்வரூபம் சித்திக்கும் -என்கை –

ஆக
கீழ்ச் செய்ததாய் ஆயிற்று ஹித உபதேச சமயத்தில் ஸ்வ விஷயத்திலும் –
சிஷ்ய விஷயத்திலும் –
பல விஷயத்திலும்
உண்டாம் விப்ரதிபத்திகள் தான் இன்னது என்றும் -308-
இவன் நினையாது இருக்க -த்ருஷ்ட பிரயோஜனாதிகள் வந்து சித்திக்கும் வழியும் -310-
சாஷாத் பல ஆசார்யத்வங்கள் சித்திக்கும் வழியும் -311-
இப்படி அன்றியே விப் ப்ரபுத்த்யா உபதேசிக்கில் உபய ஸ்வரூபமும் சித்தியாமையும் -312-
ஆசார்யனான அவனுக்கு  அவஸ்ய அபேஷித குண த்வயமும் -313
தத் உபய பலமும் -314
சொல்லிற்று ஆயிற்று –

——————————————

இப்படி உபதேச  அநு குண நியமங்களை தர்சிப்பித்த அநந்தரம் -உபதேசிக்கும் அளவில் –
இந்த மந்த்ரத்தை உபதேசித்தவனையே -சாஷாத் ஆசார்யன் என்பது -என்கிறார் –

சூரணை -315-

நேரே ஆசார்யன் என்பது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

(ஆயி ஸ்வாமிகள்-சம்சார வர்த்தகம் -ராம கோபால மந்த்ரங்கள் குழந்தை பேற்றுக்கும் ஐஸ்வர்யத்துக்கும்  ஏவம் குண விசிஷ்டன் கிருபை பாரா தந்தர்யம் –
விசிஷ்ட பரிஹிரீத திருமந்திரம் -சடக்கென -ஸக்ருத் உச்சாரண மாத்திரம் -உபய ரஹஸ்யமும் தன் பக்கல் அடங்கும் படியான த்வயம் –ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான குரு பரம்பரையா பூர்வக த்வயம் -தத் ஏக நிஷ்டராய் -நினைவில் மாறாட்டம் இல்லாமல் உபதேசிப்பவன் –சர்வ சங்க்ரஹமாய் -எம்பெருமானே சிஷ்யனுமாய் -உபதேசித்த பெருமை -சம்சார நிவர்த்தக சர்வ மந்த்ராந்தர உத்க்ருஷ்டமான -திரு மந்த்ரம் -என்றும் அருளிச் செய்வார்-சரம ஸ்லோகம் விதிக்கும்-த்வயம் அனுஷ்டானம் -சரணாகதியைக் காட்டிய -சரம ஸ்லோகமும் -என்றுமாம் -ஆக ரகஸ்ய த்ரயமும் அனுசந்தேயம்)

நேரே ஆசார்யன் என்பது –என்கிறது -ஆசார்யத்வம் குறைவன்றி இருக்கச் செய்தே –
ப்ரதீதி மாத்திரம் கொண்டு செல்லும் அளவு அன்றிக்கே -சாஷாத் ஆசார்யன் என்று சொல்லுவது -என்றபடி –

சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேசித்தவனை -என்றது
ஐஹ லவ்கிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப் படியே அகில பல பிரதமாய் இருந்ததே ஆகிலும் –
அந்ய பலங்களில் தாத்பர்யம் இன்றிக்கே -மோஷ பலத்தில் நோக்காய் இருக்கையாலே –
சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாஷரோ ந்ரூணாம் அபுநர்ப்பவ காங்ஷீணாம்-என்கிறபடியே
சம்சார நிவர்தகமாய் -அத ஏவ – மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாணாம் குஹ்ய முத்தமம் பவித்ரஞ்ச பவித்ராணாம் மூல மந்த்ரஸ் சநாதன -என்கிறபடியே
சர்வ மந்த்ராந்தர உத்க்ருஷ்டமான பெருமை உடைத்தான திரு மந்த்ரத்தை –
சம்சார நிவர்தகத்வ பிரதி பத்தி யோடே கூட உபதேசித்தவனை-என்கை –

த்வயம் பூர்வ உத்தர வாக்யங்களாலே -இதில் மத்யம சரம பத விவரணமாய் -சரம ஸ்லோகம் பூர்வ உத்தர அர்த்தங்களாலே அதில் பூர்வோத்தர வாக்ய விவரணமாய்
இருக்கையாலே -மற்றைய ரஹஸ்ய த்வயமும் -பிரதம ரஹஸ்யமான இத்தோடே அன்வயமாய் இருக்கையாலே -இத்தைச் சொல்லவே – அவற்றினுடைய  உபதேசமும் தன்னடையே சொல்லிற்றாம் என்று திரு உள்ளம் பற்றி -பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவனை – என்கிறார் –

ஆகையால் இது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லஷணம் –

———————————————————-

பகவன் மந்த்ரங்களில் ஏதேனும் ஒன்றை உபதேசித்தவர்களுக்கும் ஆசார்யத்வம் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

(ஆயி ஸ்வாமிகள்-ஒழிந்த தன் மந்த்ர உபதேஷ்டாக்களுக்கும்-பூர்த்தியும் இல்லை – ருசி பேதத்தால் -ஷூத்ரம் கைங்கர்யமாக ராம கோபால மந்த்ரம் சொன்னால் அவை ஷூத்ரம் ஆகாதே -பலம் கருதி சொன்னால் தானே ஷூத்ரமாகும்- மஹா மந்திரத்துக்கு எதிர்த்தட்டாக -அல்ப அஸ்திரம்-வியாபக மந்த்ரங்கள் மூன்றும் -மற்றவை அவ்யாபக மந்த்ரங்கள் -ஓம் கேசவயா நம -ஓம் நமோ நாராயணாயா –நம முன்பும் திரு நாமம் பின்பும் இவற்றில் மட்டும் தானே -சம்சார நிவர்த்தகம் இவற்றுக்கு என்பதால் -அசிஷ்டர்களும் சொல்லுவார்கள் மற்றவற்றை -அபூர்ண அர்த்தத்வம் இவற்றுக்கு  வியாப்தி –யார் நாராயணன் –யாரை -நாரங்களை –வியாபகம் வியாபகம் வியாப்தி பூர்த்தி பலம் ஐந்தையும்பூர்ணமாக உபாயம் ப்ராப்யமாக -இதில் மட்டுமே —அஷ்ட ஸ்லோகி -சொல்லுமே – மேல் எழுந்த ஆச்சார்யத்வம் மட்டும் ப்ரதீதி- உபசாரமாக மற்றவர்களுக்கு)

அதாவது –
சம்சாரத்தை நிவர்த்திப்பியாத மாத்திரம் அன்றிக்கே -வளர்க்குமவையாய்-
பெருமை அன்றிக்கே ஷூத்ரங்களுமாய் இருந்துள்ள -தத் இதர பகவன் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு -உபதேஷ்ட்ருத்வ பிரயுக்தமான ஆசார்யத்வ பிரதீதி மாத்ரம் ஒழிய தத் பூர்த்தி இல்லை -என்கை –

——————————-

ஷூத்ரங்கள் எனபது -ஷூத்ர தேவதா மந்த்ரங்களை அன்றோ –
பகவந் மந்த்ரங்களை இப்படிச் சொல்லுகிறது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பல த்வாரா –

(ஆயி ஸ்வாமிகள்-விலக்ஷண பகவான் மந்த்ரங்களை -ஷூத்ரம் -என்னலாமோ என்னில் -பலத்தினால் -அபிசந்திக்கு ஈடாக -(விருப்பத்துக்குத் தக்கபடி தருவதால்)

அதாவது –
பர தேவதையான பகவத் விஷயம் ஆகையாலே வந்த பெருமையை உடைய மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்று சொல்லுகிறது -அர்த்த காம புத்திர வித்யாதி ஷூத்திர
பலன்களைக் கொடுக்கிற வழியாலே –

———————————————

சம்சார வர்த்தகங்கள் என்கிறது என் என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

(ஆயி ஸ்வாமிகள்-ஆத்ம பிரதிகூல ரூப துக்கம் -ஆவஹமான அநாதிகால அவித்யா வஸ்யனாய் -மகா பல பிரவர்த்தகம் – சம்சாரிக துக்க பிராய ஷூத்திர பலன் -சுகம் போலே தோன்றும் –கிடைத்தாலே சம்சாரம் வளரும்)

அத்தாலே -என்றது கீழ் சொன்ன பந்தகமான ஷூத்திர பலன்களைக் கொடுக்கையாலே -என்கை –

——————————————

ஆனால் இவற்றுக்கு இது ஸ்வாபாவிகமோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

(ஆயி ஸ்வாமிகள்-இயற்கையிலே இப்படி இல்லை -காரணத்தால் -கொடுக்கும் – சம்சார வர்த்தகம் -உபாதி ப்ரயுக்தமாய் வந்தது-)

இது தான் -என்று ஷூத்ர பல பிரதத்வத்தை பராமர்சிக்கிறது –
 (ஒவ்பாதிகம் -என்றது -உபாதி பிரயுக்தமாய் வந்தது இத்தனை -என்கை –)

—————————————–

அத்தை உபபாதிக்கிறார் –

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –

(ஆயி ஸ்வாமிகள்-மந்த்ர ஜபம் பண்ணும் -பிரகிருதி வஸ்யன்-நிபந்தனமாக ஹீந ருசியாலே வரும் -)

(ஆயி ஸ்வாமிகள்-உபதேசம் -செய்யும் யோக்யதை –பகவத் சங்கல்பத்தால் பிரகாசப்படும் -ஆச்சார்யத்வம் -பண்பு –ஜாதி – குணம் -கிரியை -போதக சக்தி சப்தத்துக்கு -சாப்தம் ஆர்த்தம்-இரண்டும் உண்டே – ஆச்சார்யத்வம் இருப்பது பகவான் இடம் தான் -ஆச்சார்யர் இடம் இல்லை -கீதாச்சார்யன் – திருவாய் மொழியும் -அவன் இடம் தான் –நிஷ்க்ருஷ்ட பகவத் ஸ்வரூப தர்மம்  விசிஷ்ட பகவத் ஸ்வரூபம் இரண்டும் கொண்டு இவற்றை விலக்ஷண ஆத்ம விசிஷ்ட பகவத் ஸ்வரூப தர்மம் -ஆச்சார்யத்வம் -பரம்பரையா உபதேசிக்கும் இடத்தில் – பாரம்பர்ய உபதேசத்திலும் –விலக்ஷண ஆத்ம விஸிஷ்ட ப்ரஹ்மம் -அதாவது ஆச்சார்ய விஸிஷ்ட ப்ரஹ்மம் -நிஷ்க்ருஷ்ட வேஷம் கூடாதோ என்னில் -விசிஷ்ட ப்ரஹ்மம் எதற்கு -குரு பரம்பரைக்கு -ஸ்வரூப ஐக்கிய தோஷம் பிரசங்கிக்கும் —

தத் அதிஷ்டித குரு பரம்பரை ஜீவாத்ம ஸ்வரூப தர்மம் என்று சொன்னால் – –ஆத்ம தர்மம் -ஆத்ம புத்தி தோஷம் பிரசங்கிக்கும் -தேவு மற்று அறியேன் -பொருந்தாதே –
அன்றிக்கே இருவருக்கும் உண்டே -என்று சொல்வோம் ஆகில் -ஆச்சார்யத்வம் பொதுவாக சொன்னால் –பரமாத்மா தர்மம் ஜீவாத்ம தர்மம் இரண்டும் சொல்வது பொருந்தாதே –
ஜாதியே வேறே -ஒரு ஆச்சார்யத்வத்தில் பர்யவசாயம் ஆக முடியாதே- ஸ்வாமி தாச -ஈஸன் ஈஸித்வயம் -ஆத்ம சரீரம் -பர்த்தா பார்யா -அன்றோ –ஏக பத அர்த்த த்வதீய வ்யாவ்ருத்தி தோஷம் வருமே -ஆக பகவத் குணம் என்றே கொள்ள வேணும் –லோக அநல வத்– உருகின இரும்பில் இரும்பும் நெருப்பும் கலந்து -இரும்பை அதிஷ்டானம் செய்த நெருப்பு -தானே-தன்மை இரும்பினதா நெருப்பினதா – நெருப்பின் தான் –அதிஷ்டானம் பண்ணப்பட்ட இரும்பு ஆச்சார்யன் -அதிஷ்டாதா பகவான் -என்றால் பொருந்தும் அன்றோ –தேவு மற்று அறியேன் – -நாராயண வஸதி நம்மாழ்வார் -வடதள சடகோப வாக் வபுஸில் -விலக்ஷண -ஆத்ம உடன் விசிஷ்டமாக இருந்து திருவாய் மொழி அருளினான்
குரு ரேவ பரம் ப்ரஹ்ம -ஆச்சார்யனே ஈஸ்வரன் என்னத் தட்டு இல்லை பரா கதி சாஷாத் அவரே -சாமா நாதி கரண்யம்-இவர் தான் அவர் என்னலாம் –
ஆச்சர்யரை மனுஷ்யர் என்னும் அந்யதா ஞானம் போகும் -ஸ்வரூப ஐக்கியம் குரு பரம்பரை வீண் -பிரமமும் போகும்

ஆச்சார்யர் இடத்தில் பகவத் பிரதிபத்தியை பண்ணுவான் சிஷ்யன் –
ஸூவ விஷயத்தில் -தன்னுடைய ஆச்சார்யர் இடம் பரதந்த்ரர் என்று தன்னை எண்ணுவான்
இரண்டும் மாறாடினால் குறை – பிரதிபத்தி த்வயத்தால் –ஒரே ஆசார்யனை சிஷ்யன் சேஷி என்றும் தான் சேஷன் என்றும் நினைப்பதால் த்வய பிரதிபத்தி உண்டாகும்-
வியாவ்ருத்த ஸ்வரூப விசேஷம் –விபரீத பிரதிபத்தி த்வயத்தாலே ஒன்றிலே ஒதுக்குகை -அவரும் சேஷி என்று நினைத்தால் -தோஷம் உண்டாகும்-அப்பா பிள்ளைக்கு -இருந்தாலும் தன் அப்பாவுக்கு தான் பிள்ளையே – இரண்டும் உண்டாகும் –ஒன்றிலே ஒதுக்கினால் விபரீத பிரதிபத்தி உண்டாகும் -பகவானே இவர் என்று நினைத்தால் -அதிஷ்டானம் என்று நினைக்காமல் குரு பரம்பரை ஐக்கியம் உண்டாகும்
ஸூ -பர பிரதி பத்தியாலும் -ஸூ பர விபாகம் இல்லாமல் இருப்பது சர்வேஸ்வரன் ஒருவன் இடம் தானே -சேஷி -ஏக பிரதிபத்தி – மா முனிகள் இடம் மட்டும் சேஷன் -ஈடு சாதித்த பின்பு – ஸூ பர பிரதிபத்தி த்வயம் மற்ற எங்கும் –ஏக பிரதிபத்தி நடப்பது ஸ்வ தந்த்ர சேஷிக்கு மட்டுமேமற்றவர் பரதந்த்ர சேஷி -ஸூ பிரதிபத்தி பரதந்த்ரர் பர சிஷ்யர் நினைவால் சேஷி தானே
சிஷிதனான இவன் -ஆச்சார்யன்–அஹம் என்ன மாட்டானே -ஞானம் வந்ததே -அப்படி அன்றாகில் சேஷி என்று சொன்னால் பழைய தேவோஹம் என்பதே தலைக் கட்டுமே
சரீர ப்ரயுக்தம் போலே ஆகுமே -தேஹாத்ம அபிமானம் அங்கு –இங்கு உயர் நிலை அபிமானம்-யானைக்கு தக்க வீக்கம் -சேஷனாக இருக்க சேஷி என்ற நினைவு –

ஆச்சார்யத்வம் ஸூவ ஆச்சார்யத்வம் பரமாச்சார்யத்வம் த்விதம் –
பரமாச்சார்யரான ஆளவந்தார் என்பர் எப்பொழுதும் ராமானுஜரை நிலையில் வைத்து அருளிச் செய்வார்
அதில் ஸூவ ஆச்சார்யர் -ஸ்வ தந்த்ர ஆச்சார்யர் என்றும் பரதந்த்ர ஸூவ ஆச்சார்யர் என்றும் இரண்டு –குரு பரம்பரை ஒத்து கொள்ளாமலுமொத்துக் கொண்டும் பரமாச்சார்யரும் இப்படி இரண்டு –
ஸ்வ தந்த்ர ஆச்சார்யருக்கு- ஸூவ ஆச்சார்யர்  சத் பாவ யோக்யதையே இல்லையே –
பர தந்த்ர ஸ்வாச்சார்யருக்கு -பரதந்த்ர பரமாச்சார்யருக்கும் தத் உபயமும்-ஸூவ ஆச்சார்யத்வம் பரமாச்சார்யத்வம்- உள்ளது -)

அதாவது –
பகவன் மந்த்ரங்கள் ஆகையால் -மோஷ ப்ரதத்வ சக்தியும் உண்டாய் இருக்கச் செய்தே -இவற்றினுடைய ஷூத்திர பல ப்ரதத்வம்
பிரகிருதி வஸ்யனான சேதனனுடைய ஷூத்திர பல ருசியாலே வருகையாலே -என்கை –
ஐஸ்வர்ய காமர்க்கு கோபால மந்த்ராதிகளும் –
புத்திர காமர்க்கு ராம மந்த்ராதிகளும் –
வித்யா காமர்க்கு ஹயக்ரீவ மந்த்ராதிகளும் –
விஜய காமர்க்கு -ஸூதர்ஸன நாரஸிம்ஹ மந்த்ராதிகளுமாய் -இப்படி நியமேன
ஷூத்திர பலன்களையே கொடுத்துப் போருகிற இது -சேதனனுடைய ருசி அநு குணமாக
இவ்வோ மந்த்ரங்களில் இவ்வோ பலன்களைக் கொடுக்கக் கடவது என்று ஈஸ்வரன் நியமேன கல்பித்து வைக்க இறே –
அது தான் சேதனருடைய ருசி அநு குணமாக கல்பித்தது
ஆகையாலே அவற்றுக்கு அவை ஸ்வாபாவிகம் அன்று -ஒவ்பாதிகம் என்னலாம் இறே

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -268-307-தத் அதிகாரி க்ருத்யம் -பெறுவான் முறை -பிரபன்ன தினசரியா- ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 28, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307-அதிகாரி நிஷ்டா க்ரமம்–பெறுவான் முறை-

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307- இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————-

இப்படி புருஷகார சாபேஷம் என்னில் -உபாயத்தினுடைய நைரபேஷ்ய ஹானி  வாராதோ -என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -268-

உபாயம் ஸ்வீகார காலத்தில்  புருஷ சாபேஷமுமாய் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும் –
கார்ய காலத்தில்  உபய நிரபேஷமாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்–நிரபேஷமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகாரத்தில் ஸ்வீ கர்த்தாவும் ஸ்வீகரிப்பிக்கும் அவளும் வேணுமே -ஸ்வீகர்த்தா இல்லை என்றால் ஸ்வீ காரமும் இல்லையே – புருஷகாரம் இல்லை என்னில் ஸ்வீகார அதிகாரம் இல்லை
ஸ்வீகார அநந்தரம்  கார்ய பல காலத்தில்  அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி சமயத்தில் இருவரையும் எதிர் பார்க்காமல் தானே செய்யுமே-ஆக நைர பேஷ்யத்துக்கு பங்கம் இல்லையே )

(சரணமாகும் தன தாள் அடைந்தாற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–சரம ஸ்லோகம் -ஏக சப்தம் -இரண்டு பக்ஷங்கள்
என்னை தவிர வேறே ஒன்றுமே உபாயம் இல்லை ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது -புருஷகார புரஸ்காரம் விருத்தம் ஆகாதோ என்னில் –
ஐந்தாம் அதிகாரி –ஸ்வீயகார ஸ்வீகாரம் உபாயம் -சித்த உபாய நைர பேஷ்ய பிரசங்கமே இல்லை –-பிரபத்தியை எதிர் பார்க்கிறார் என்று உபாய பிரதிபத்தி தானே அதுஅங்கே ஏக சப்தார்த்தம்  என்னைப் பற்று -இத்தை தவிர வேறே உபாயம் இல்லை என்றவாறு –என்னை மட்டுமே பற்று என்றவாறு -பற்றுதலாகிற உபாயம் தவிர வேறே ஒன்றையும் பற்றாதே –
பிராட்டிக்கு உபாயத்வமும் -வேதாந்த தேசிகர் பக்ஷம் -ஏக சப்தம் ஸ்வீ காரம் பிரதான பரம் என்பர்-பற்றும் பற்றுதலும் உபாயம் இல்லை -லோகாச்சார்யார் பக்ஷம்  -)

அதாவது
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம்
சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில்  ஸ்வீகர்த்தாவான புருஷனையும் –
ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும்  அபேஷித்து இருக்கும் –

ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி  பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற கார்ய காலத்தில் 
புருஷனும்  புருஷ காரமும்  ஆகிற உபயத்தையும் அபேஷியாதே தானே செய்து தலைக் கட்டும் என்கை –

கார்ய காலத்தில் ஸஹகாரி சாபேஷம் உண்டாகில் இறே உபாயத்தினுடைய நைரபேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து

——————————————-

ஸ்வ பிரயோஜன பரரை பிரதி கூலர்  என்று அவிசேஷண அருளிச் செய்தார் இறே –
இந்த ஸ்வ பிரயோஜன பரதை அனுகூல அக்ரேசரான ஆழ்வார்கள் பக்கலிலும் தோற்றி இருக்கையாலே தந் நிபந்தனமான பிரதி கூல்யம் அவர்கள் பக்கல் வராதபடி
பரிஹரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி  தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

சூரணை -269-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –

(ஆயி ஸ்வாமிகள்-பிரதிகூலர் வகையைச் சொல்லுகிறது – விஷய தோஷம் ஒழிய ஆழ்வார்கள் தோஷம் இல்லையே – பேர் அழகு லாவண்யம் ஸுந்தர்யம் குற்றம் -அத்தை ஆழ்வார்களால் விலக்க முடியாதே -)

நமக்கே நலம் ஆதலில் -என்றும் –
நாம் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாயே -என்றும் –
கண்டு நான் உன்னை உகக்க -என்றும் –
இத்யாதி வசனங்களாலும் –
மடல் எடுக்கை முதலான பிரவிருத்திகளாலும் –
ஆழ்வார்களுக்கும் இந்த ஸ்வ பிரயோஜன பரத்வம் உண்டாகத் தோற்றா நின்றது இறே –
ஆன பின்பு ஸ்வ பிரயோஜன பரரை எல்லாரையும் பிரதி கூலர் என்று சொல்லப் பார்க்கில்
ஆழ்வார்களையும் அப்படி நினைக்க வேண்டி வாராதோ என்று சங்கைக்கு அபிப்ராயம் —

————————————–

அத்தை பரிஹரிக்கிறார் –

சூரணை-270-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–

(ஆயி ஸ்வாமிகள்சேஷத்வ ஆஸ்ரயமான ஜீவ ஸ்வரூபத்துக்கு -பர ஏக பிரயோஜனத்துக்கு மட்டும் என்று இல்லாமல் -ஸூ பிரயோஜனமாக -தனக்காக இருந்தமை குற்றம்
பகவத் விஷயத்தில் உள்ள பேர் அழகு என்பதே விஷய தோஷம் -புத்தியை பேதலிக்க வைப்பதே தோஷம் –அத்யந்த அசித்வத் பாரதந்தர்ய நிலையை மாற்றி நினைக்க வைத்த இதுவே தோஷம் என்றவாறு-இணைக் கூற்றங்களோ அறியேன் என்னப் பண்ணுமே திருக் கண்கள்-)

அதாவது –
பிரதி கூலமாக சொல்லுகிற இவ்விடத்தில்  ஸ்வ பிரயோஜனம்  என்கிறது –
அனுபவ கைங்கர்யங்களுக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய அவித்யாதி தோஷத்தால் வந்த ஸ்வ பிரயோஜனத்தை என்கை –
இத்தை  ஆஸ்ரய தோஷம் ஜன்யம்  என்று ஒதுக்குகையாலே  ஆழ்வார்களுடைய ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யம் என்று கருத்து –
(இது தன்னை விஷய  தோஷத்தால் வருமவை -சூரணை -272 – என்கிற வாக்யத்தில் வ்யக்தமாக அருளிச் செய்கிறார் இறே–)

————————————–

இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் –

சூரணை -271-

ஆகையாலே தோஷம் இல்லை –

(ஆயி ஸ்வாமிகள்-ஸூ பிரயோஜனத்வம் ஆழ்வார்கள் இடம் இல்லை -வருமா என்ன வேண்டிக் கொள்ள வேண்டுமே ஆழ்வார்கள் நிலையை –ஆஸ்ரய தோஷ ஜன்யமாய் -அவித்யா அடியாக வந்தால் தானே தோஷம் -விஷய தோஷமே இங்கு –ஸூ பிரயோஜன பரர்களை மட்டும் பிரதி கூலர் என்னலாம் -)

அதாவது –
பிரதி கூல்ய ஹேதுவாக சொல்லப் பட்ட  ஸ்வ பிரயோஜனம்  ஆஸ்ரய தோஷ ஜன்யமாய் 
ஆழ்வார்கள் பக்கல் ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யமாய் இருக்கையாலே –
அந்த பிரதி கூலம் இவர்கள் பக்கலிலும் வரும் என்கிற தோஷம் இல்லை என்கை –

அன்றிக்கே –
ஸ்வ பிரயோஜன பரரை சாமான்யேன பிரதிகூலர் என்று சொல்லும் அளவில் –
அனுகூலரான ஆழ்வார்கள் பக்கலிலும் இந்த ஸ்வ பிரயோஜன பரதை தோற்றுகையாலே –
அவர்களையும் பிரதிகூலர் என்று நினைக்க வேண்டி வருகையாலே -ஸ்வ பிரயோஜன பரரை பிரதிகூலர் என்கை தோஷம் அன்றோ என்று நினைத்து பண்ணின சங்கையை அநு வதிக்கிறார்-இங்கு  என்று தொடங்கி அர்த்தம் பூர்வவத் நிகமிக்கிறார் –

ஆகையால் தோஷம் இல்லை -என்று –ஆகையால் என்ற இதுக்கு அர்த்தம் -பூர்வவத் -தோஷம் இல்லை என்றது  ஸ்வ பிரயோஜன பரரை பிரதிகூலர் என்று சொன்னதில் தோஷம் இல்லை என்கை  என்று இங்கனே யோஜிக்கவுமாம் –

——————————————–

இப்படி ஆஸ்ரய தோஷ ஜன்யம் அன்றிக்கே  விஷய தோஷ ஜன்யம் ஆனாலும் ஸ்வரூப விருத்தமானது  த்யாஜ்யமாய் அன்றோ  என்ன அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -272-

விஷய தோஷத்தால் வருமவை எல்லாம்  துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —

(ஆயி ஸ்வாமிகள்-துஸ் த்யஜயமாய் – விடவே முடியாது என்றவாறு –விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -நம்மால் தடுக்க முடியாதே –
சேஷனான அதிகாரிக்கு விஷயம் அனுபவத்துக்கும் கைங்கர்யத்துக்கும் –சேஷித்வம் -விக்ரஹ வை லக்ஷண்யம் என்கிற தோஷத்தால் வரும் ஸூ பிரயோஜனத்வம் –
நமக்கே நலமாதலால் -ஸூ போக்யத்வம் அனுசந்தானம் பண்ணி வருந்தி த்யஜிக்க தேடினாலும் போக்க முடியாதே -இருப்பதே என்று பரிக்ரஹிக்கிறார் –
ஆஸ்ரய தோஷத்தால் வந்த அவித்யை அடியாக வந்தால் போக்கத் தக்கதே–ஸ்வரூப ஞானம் பிறக்கவே விட்டுப் போகும் –விஷய தோஷம் அடியாக வந்த –
இது போகவே போகாதே –ஆழ்வார்கள் அனுகூல சீமா பூமி அன்றோ-அனுகூல விசேஞ்ஞர்கள் அன்றோ இவர்கள் – -பிரதி கூல லேசமும் இல்லையே –
விஷய தோஷம் நித்யமாகையாலேஆடவர் பெண்கள் அவாவும் தோளினாய் -தானும் நித்தியமாய் -விடப் பட வேண்டாதாய் -கொள்ளத் தக்கதாய் இருக்குமே –
விக்ரஹ வை லக்ஷண்யம் கல்யாண குணம் ஆகிலும் தோஷத்வ கதனம்-ஸ்வரூப விரோதம் ஸூ பிரயோஜனத்தை தூண்டி விட்டதால் —வருமவை என்றது ஸ்வ பிரயோஜன புத்தி -அதுக்கு அடியான ப்ராவண்யம் -மடல் எடுப்பவை போன்ற பிரவ்ருத்திகள் எல்லாம்)

அதாவது –
அனுபவ விஷயமான அவனுடைய வயிர உருக்காய் ஆண்களையும் பெண் உடை உடுத்தும் படியான விக்ரஹ வைலஷண்யமாகிற தோஷத்தால் வருகிற  ஸ்வ பிரயோஜன பரதை தத் ஹேதுவான ப்ராவண்யம் தத் சித் யர்த்தமான வியாபாரங்கள் ஆகிற இவை எல்லாம் 
ஸ்வரூப விருத்தம் என்று விடப் பார்த்தாலும்  விட அரிதாய் இறே -இருப்பது என்கை –

விஷய தோஷத்தாலே வருமது  என்ற பாடமான போது ஸ்வ பிரயோஜன மாத்ரத்தையே சொல்லுகிறது –

———————————————

விஷய தோஷத்தால் வரும் அதின் துஸ் த்யஜ்யத்வத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –

சூரணை -273-

ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்யதிச்ச்சதி-

(ஆயி ஸ்வாமிகள்-அனுஷ்டான சேஷமாக விட முடியாததை -காட்டி அருளுகிறார் செவிடரோடு ஊமையர் வார்த்தை போலே இது ஆண்டாள் –நீங்கள் சொல்வதை நான் கேட்க்கும் சக்தர் அல்ல-ஸ்ரீ யபதி விஷயமாக இரு புரி உண்டு வரும் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்கள் அன்றோ -பிராவண்ய விஷயம் –உபேய கோடியிலே நின்ற நான் பட்டது பட்டால் மடல் எடுத்த என் தமப்பனார்கள் தான் அறிவார்
வல் வினையாட்டிகள் தான் அறியலாம்உபாய கோடியில் நின்று அந்த பிராப்யாம் கனா கூட கண்டு அறியாத உங்களுக்குவன் நெஞ்சினர் உங்கள் அறிவுக்கு விஷயம் அன்று
மடுவில் திரு முக்களம் போல் -ஆழ்ந்து உள்ள எனக்கு ஆழம் கால் பட்டு சலனமே இல்லாத எனக்கு நீங்கள் சொல்லும் நிஷேத வசனம் எல்லாம் கேட்பதற்கும் சொல்வதற்கும் கரணம் அற்ற இவள் கேட்க சக்தி அல்லள் –உங்களுக்குத் தெரியாதே பேசுவதும் வெறும் வாய் ஆசைப்பதே —ஹிதம் சொல்லும் தாயாரைப் பார்த்துவிட முடியாது என்பதற்கு பிரமாணம்ஆளவந்தார் -ஸ்ரீ ஸூக்தி -மதுவே ஜீவனமான வண்டு தாமரை தேனில் மூழ்கி நிற்க -முள்ளிப் பூவின் தேனை –போந்தது- என் நெஞ்சு என்னும் பொன் வண்டு தெளி தேனை உண்டு இருக்க -விட முடியுமோ -திரும்பியே பார்க்காதே)-)

(என்னோடு வேறு பட்டு இருந்தீர் -மற்று -என் நெஞ்சினால் நோக்கி காணீர் –
மாதவன் என்பதோர் அன்பு பிராவண்யத்தை நன்றாக கொண்ட எனக்கு இருந்தேன் –நகர முடியாமல் நான் இருக்க –கமனம் தடுக்கும் உங்கள் பேச்சு எல்லாம் -கேட்க சக்தி இல்லாதவரைக் குறித்து பேசுவதற்கு சக்தி இல்லாதவன் பேசுவதோடு ஒக்கும் )

மற்று இருந்தீர்கட்க்கு  என்று தொடங்கி  அத் தலையாலே பேறு என்று அறுதி இட்டால் அவன் வருமளவும் க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண் நீ இங்கனே பதறலாகாது என்ற தாய்மாரைக் குறித்து –
இவ் விஷயத்தில் பிராவண்யமின்றிக்கே என்னுடைய நிலைக்கு வேறாய் இருந்த உங்களுக்கு  எனக்கு ஓடுகிற தசை அறியப் போகாது –
அவன் அவன் என்று வாய் புலத்தும்படி  ஸ்ரீ யபதி  விஷயமான பிராவண்யத்தை மாறுபாடு உருவ உடையளாய் இப்படி அவனை ஒழியச் செல்லாமை உண்டானால்  அவன் இருந்த இடத்தே சென்று கிட்டுகை ப்ராப்தமாய் இருக்க  அதுக்கு கால்நடை தாராதபடி  இருக்கிற எனக்கு  நான் அவனோடு சென்று சேராமைக்கு உறுப்பாக நீங்கள் செல்லும் வார்த்தை 
கேட்க்கைக்கு பரிகரம் இல்லாத செவிடரோடே சொல்லுகைக்கு பரிகரமிலாத ஊமைகள் சொன்னால் போலே இருப்பது ஓன்று என்று ஆண்டாள் அருளிச் செய்கையாலும் –

தவாம்ருதச்யந்தினி என்று தொடங்கி வகுத்த சேஷியான தேவருடைய தேனே மலரும் திருவடித் தாமரைகளில் போக்யதையில் அழுந்தின நெஞ்சு – மற்றொரு ஸூத்திர விஷயத்தை விரும்பும் படி எங்கனே –
மதுவே ஜீவனமான வண்டு மது பரிபூரணமான தாமரைப் பூ வானது  நில்லா நிற்கச் செய்தே  அதின் சுவடு அறிந்த தான் கிட்டுகை அரிதாய் கிட்டினாலும் நாக்கு நனைக்க போகாதாய் இருக்கிற முள்ளிப் பூவில் சென்று படியாத மாத்ரம் அன்றிக்கே -அத்தை கடாஷிப்பதும் செய்யாதே என்று -ஆளவந்தார் அருளிச் செய்கையாலும் –

விக்ரஹ வைலஷண்யம் கண்டு பகவத் விஷயத்தில் பிரவணரானவர்களை மீட்க அரிது என்று தோற்றுகையாலே விஷய தோஷத்தால் வருமது துஸ் த்யாஜ்யம் என்னுமிடம் சித்தம் -இறே

—————————————————–

ஆக –
தினசர்யோக்த மங்களா சாசன அனுகூல சஹவாச பிரதி கூல சஹவாச நிவ்ருத்திகளை
விவரித்தார் கீழ் –
சதாசார்யா பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக்  கடவன் -என்றதை விவரிக்கிறார் மேல் –

சூரணை -274-

இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –
5-பரித்யாஜ்யம் -அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
6-கர்த்தவ்யம் -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் —

(ஆயி ஸ்வாமிகள்-மங்களாசாசனம் -அனுகூல பிரதிகூல -மூன்றையும் விஸ்தரித்த பின்பு -சதாசார்ய பிரசாதத்தால் -விளைந்த வளர்ந்த -தினசரியா அனுசந்தான குணங்கள் –
அதிகார பூர்த்தி யர்த்தமாக -வளர்ந்து கொண்டு போக –
ஹித உபதேசத்தால் ஸ்வரூபம் மாறாத படி சதாசார்ய சந்நிதியும் -தத் அலாபத்தில்- கிடைக்காத பக்ஷத்தில் -அவன் காட்டிக் கொடுத்த அர்ச்சாவதார பகவத் சந்நிதியும் – -பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ குருவி காட்டும் இடத்தில் வாழலாமே –
சம விகல்பம் இல்லை -விவஸ்தித விகல்பம் -கதா சித் கேசவ பக்தி -தத் பக்த பக்தி -சம்சாரம் தாண்ட -விஷ மரம் -கேசவன் தமர் -அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன்
கர்ம பாகத்திலும் ப்ரஹ்மச்சாரி அத்யயனம் குருகுல வாசமே முற்பட விதித்தது
ஞான அனுஷ்டான வைபவம் வாயாரச் சொல்லி -தத் உபய அபாவம் தனக்கு –இது சமுச்சயம் அல்ல -பிரதானம் ஆச்சார்ய வைபவம் –தாழ்ந்த என்னையும் தூக்கி விடும் வைபவம் காட்ட -வேறே ஒன்றையும் பேச கூடாதே என்பதால் இத்தைச் சொன்னதும் அதுக்கு அதிசயகாரம் என்பதை காட்டவே – நீசத்தை பாராமல் அங்கீ கரித்து அருளும் வைபவம்
புன்மையாக -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னை -விசேஷண அன்னையாய் அத்தனாய் ஹித பிரியம் -அருள் மிக்கதே -ஆச்சார்ய வைபவ கதனம்
அநதிகாரிகள் கேளாமல் –ஜப்த்தவ்யம் த்வயம் பூர்வ பாவியான குரு பரம்பரையும் -குரு பரம்பரையை முன்னிட்டு த்வயமும் – இரண்டும் சேர்ந்தே இருக்க வேன்டும் பிரியாதே -சமுச்சயம் பின்னம் இல்லைஸஹ அனுசந்தான நியதி பரம் அத்தனை –
உத்தேசியர் குரு பரம்பரை -ஆச்சார்ய பிரியதயா என்பதால் ஆச்சார்யர் தனியனும் த்வயமும் -சேர்ந்தே அனுசந்திக்க வேன்டும்
ராமானுஜா அங்க்ரி சரணோஸ்மி –சரணம் சிஷ்யன்- ஸ்வா ச்சார்யவம் சோ ஞேய ஆசார்யானாம் அசவ் அசவ் ச வித்யா பகவத்த—மேலே மேலே குரு பரம்பரை பகவான் வரைக்கும் என்றபடி –வியாபகம் குரு பரம்பரை -வியாப்யம் த்வயம் –திட பிராமண புத்தி பூர்வகமாக நாத முனிகள் தொடக்கமான –ஸ்வரூபாதி அனுசந்தானம் -வசனமும் அனுரூபமான நிர்மல அனுஷ்டானமும் -பரம பிரமாணம் – சமுச்சயம் சம பிரதானம் இவை இரண்டும் –ஆழ்வார்களுடைய வாக்கால் நாத நுனியால் பரிக்ரஹிப்பட்டதே அருளிச் செயல்கள் –இவர் திருவாயால் பரிக்ரஹிப்பட்டதால் ஏற்றம்-ஆழ்வார் அனுஷ்டானம் நம்மால் பரிக்ரஹிக்கப் பட முடியாதே –வாமனன் மண் இது என்றும் – ஆச்சார்யர்கள் அனுஷ்டானம் நம் போல்வாருக்கு –நாத முனிகள் முதலாக இவ்வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய -வசனமும் அனுஷ்டானமும் பரிக்ராஹ்யம் –
ருசி வாசனைகள் உடன் பரித்யாஜ்யம் அவைஷ்ணவ ஸஹ வாஸம் -ஸ்வரூப நாசகார -அபிமானிக்கப் பாடவும் கூடாதே அவர்களால்-நாமும் அபிமானிக்க கூடாதே –
இதுவும் சம பிரதானம்
ஸ்வரூப ப்ராப்தமான கர்தவ்யம் நித்ய சேஷியான ஆச்சார்ய கைங்கர்யமும் -தத் ப்ரீதி வர்த்தகமான பகவத் கைங்கர்யமும் -இந்த சமுச்சயம் -சமம் அல்ல –பிரதானம் முதலில் -சகஜம் -பிற்பட்டது உபாதியால் வந்த -அப்ரதானம் –கிங்கரனனுடைய கைங்கர்யம் சேஷியுடைய அபிமதம் செய்பவன் கிங்கரன் -பலத்தை எதிர்பார்க்காமல் –ஸூவ ரசார்த்த கைங்கர்யமும் -கூடாதே )

இப்படி இவை அனைத்தும் சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு -என்றது –
கீழ் சொன்ன பிரகாரத்திலே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் எல்லாம் சதாசார்யனுடைய
பிரசாதத்தாலே கொழுந்து பட்டு வளர்ந்து வரும் போதைக்கு என்றபடி –

1–வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் -அதாவது –
இவனுக்கு வாசஸ்தலம் ஹிதைஷியாய் உபதேசாதிகளால் இவற்றுக்கு உத் பாதகனான
ஸ்வாச்சார்யனுடைய சந்நிதியும்  அவன் காட்டிக் கொடுக்கக் கைக் கொண்டு அவனுக்கு உகந்த விஷயமாய் தன் பக்கலிலே விசேஷ  கடாஷாதிகளை பண்ணிக் கொண்டு போரும் அர்ச்சாவதாரமான பகவான் சந்நிதியும் -என்கை-
இது சமுச்சயமும்  அன்று  -சம விகல்பமும் அன்று -ஆச்சார்ய சன்னிதியே பிரதானம் -தத் அலாபத்தில் அர்ச்சாவதார சந்நிதி என்றபடி –
ஆக இறே  ஆசார்ய சந்நிதியை முற்பட அருளி செய்தது-மத்பக்தைஸ் சஹ சம்வாசஸ் தத் அஸ்திதவ் மயா பிவா -என்று இறே பகவத் உக்தியும் –
இனி -வக்தவ்யம் -தொடங்கி -மேல் அடைய -சமுச்சயம் –

2-வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும் –
அதாவது –
இவனுக்கு சர்வ காலமும் வாக்கால் சொல்லப்படுமது துர்கதியே பற்றாசாக தன்னை அங்கீகரித்து அருளின  ஆசார்யனுடைய தயா ஷாண்யாதி வைபவமும் 
எத்தனை யேனும் தயாதி குண பரிபூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அறுவருக்கும் படி நின்ற அநாத்மா குண பூர்த்தியாகிற தன்னுடைய நிகர்ஷமும் ஆகிற இவை என்கை –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -நன்மையால்-என்ற பாட்டுத் தொடங்கி இவை இரண்டையும் விசதமாக அருளிச் செய்தார் இறே —

3–ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –
அதாவது -இவனுக்கு கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் உறுப்பாக (ப்ரபன்னனுக்கு இவை சாதனமாக அல்லவே -அனுபவ ரஸத்துக்காகவே)ரகஸ்யமாக அனுசந்தித்துக் கொண்டு போரப்படுமது -ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி -இத்யாதில் படியே சர்வேஸ்வரன் குளிர நோக்குகைக்கு உடலாய் -ஸ்வா ச்சார்யவம் சோ ஞேய ஆசார்யானாம் அசவ் அசவ் ச வித்யா பகவத்த -என்கிறபடியே-ஸ்வ ஆசார்யாதி பரமாச்சார்ய பகவத் பர்யந்தையான குரு பரம்பரையும் -அந்த குரு பரம்பரா பிராப்தமாய் ஸ்வ ஆசார்யன் தனக்கு  தஞ்சமாக உபதேசித்த த்வயமும் -என்கை-
இத்தால் குருபரம்பரா பூர்வகமான த்வயமே இவனுக்கு ரகஸ்யமாக அநு சந்தித்துக் கொண்டு போரப்படும் என்றபடி –
பாஷ்யகாரருக்கு காலஷேபம்  பிரகாரம் அருளிச் செய்கிற இடத்தில்  த்வயம் அர்த்த அநு சந்தாநேன சஹசதைவம்  வக்தா  என்று இறே  பெரிய பெருமாள் அருளிச் செய்தது –

(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ச ச –அந்த ஆளவந்தார் தாமும் நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-ச ச -அந்த நாதமுனிகளும் பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்–ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும் தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ)

4–பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் -அதாவது –
தனக்கு ஞான அனுஷ்டானங்கள் ஊற்று இருக்கைக்கு உறுப்பாக  கண்ட கண்ட இடங்களில் இவனால் பரிகிரஹிக்கப்படுமது நாத முனிகள் முதலாக இவ் வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய ஞாதவ்யார்த்த ப்ரகாசகமான திவ்ய வசனங்களும் -அந்த வசன அநு ரூபமாக மறுவற்ற அனுஷ்டானங்களும் -என்கை
ஸூவ்யாஹ்ருதாநி மஹதாம் ஸூக்ரதாநி ததச்ததா-சஞ்சின்வன் தீர ஆஸீத் சிலஹாரி சிலம்யதா -என்னக் கடவது இறே —

5-பரித்யாஜம் அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
அதாவது –
ஞான அனுஷ்டான நாசகம் என்னும் பயத்தாலே இவனுக்கு சவாசனமாக விடப்படுமது வைஷ்ணவ லஷணம் இல்லாதவர்களோட்டை சஹவாசமும் –
அவர்கள் இவன் நம்முடையவன் என்று ஓர் அன்வயங்களால் தம் திறத்தில் பண்ணும் அபிமானமும் என்கை

6-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -அதாவது-இவனுக்கு ஸ்வரூப அனுகூலமாகவே எப்போதும் செய்யப்படுமது –
மகோ உபாகாரகனான ஸ்வ ஆசார்யன் விஷயத்தில் பிரேம பூர்வகமாய் பண்ணும் கைங்கர்யமும்  தந் நியோக பரதந்த்ரனாய் பண்ணும் பகவத் கைங்கர்யமும் -என்கை –

ஆக
தினசர்யையில் சொன்ன ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம் சதாச்சார்ய பிரசாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போருகை யாவது –
இப்படி இருந்துள்ள
1-வஸ்தவ்ய
2-வக்தவ்ய
3-ஜப்தவ்ய
4-பரிஹ்ராஹ்ய
5-பரித்யாஜ்ய
6-கர்தவ்யங்களை அறிந்து  இவற்றிலே நிஷ்டனாய் போருகை  என்றது ஆயிற்று –

————————————-

இப்படி கர்தவ்யமான கைங்கர்யங்கள் இரண்டும் அறிவதும் எம் முகத்தாலே என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார்-

சூரணை -275-

கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —

(ஆயி ஸ்வாமிகள்-கீழே வஸ்தவ்யாதி அவஸ்ய அனுஷ்டான விசேஷங்களை அருளிச் செய்து -ஆச்சார்ய பிரசாதம் நம் மேல் வளர இவை வேன்டும் —
தினசர்யா நடத்தைக்கு சமதம ஆத்ம குணங்கள் வளர ஆச்சார்ய பிரசாதம் வேண்டுமே –
கைங்கர்யம் -ஸ்வார்த்த -நம் அனுபவம் நம் ரசத்துக்காக -என்ற எண்ணம் இல்லாமல் -வேதாந்த சாஸ்த்ர முகத்தால் – காம ரூபியாக அநு சஞ்சரித்து -பகவானைத் தொடர்ந்து ஏதத் சாம காயன் –சாயுஜ்யம் அடைந்து கிங்கரம் பவதி -உபத்திரவம் இல்லாமல் –
ஆச்சார்ய தாத்பர்ய வசனம் –சாஸ்திரம் பொதுவான சொன்னதை ஆராய்ந்து யாதாம்யா தாத்பர்யம் விலக்கி அருளிச் செய்வார்கள்
கேவல சாஸ்த்ரத்தால் அறிவதை விட தாத்பர்யம் அறிந்து செய்வது ஸ்ரேஷ்டமாகும்
சாஸ்திரமும் சாஸ்த்ர தாத்பர்யமும் -ரஹஸ்ய த்ரய ஞானம் -இரண்டுக்கும் வேண்டும்உபய சாஸ்த்ர முகத்தாலும் விசேஷித்து ஆச்சார்ய கைங்கர்யம் –
இதுக்கும் சாரம் -பால் தயிர் வெண்ணெய் நெய் -போலே –சாஸ்திரம் -சாஸ்த்ர தாத்பர்யம் -திரு மந்திரத்தில் வளர்ந்து –த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருப்பவர் அனுஷ்டானமும்சரம உபதேச சார விசேஷம் – தாத்பர்ய சாரம்.-உபாய பாவத்தில் கண் வைக்காமல் ப்ராப்ய பாவத்தில் கண் வைத்து -கைங்கர்ய நிஷ்டராய் இருப்பது
சாஸ்திரம் பக்தியும் அவனும்  தாத்பர்யம் -உபாய உபேயம்-தாத்பர்ய சாரம் உபேயம் ஒன்றிலே கண் வைத்து – இதில் இருந்து-ஸூஷ்ம தர்சி -சரம தசை ஸ்ரீ ஸூ க்திகள் பரம பிரமாணம் உபய வ்யாவ்ருத்தம் அன்றோ -பரார்த்த கைங்கர்யம் இதனாலே கிட்டும்)

(பரத்வாதி விஷயத்தில் கைங்கர்யம் நித்ய முக்தர்களுக்கு சார்வஞ்ஞதை -விபவம் தத் கால வர்த்திகளுக்கு தத் வசனத்தாலும் -அர்ச்சையில் இப்பொழுது உள்ள அதிகாரிகளுக்கு சாஸ்திரம் ஒன்றுமே பிரமாணம் )

கீழ் -என்றது வஸ்தவ்யாதிகளை சொன்ன இந்த கணனையில் என்றபடி –

பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே -என்றது –
பகவான் இவனுக்கு இப்போது வாய் திறந்து ஒன்றை அருளிச் செய்யாமை யாலே –
தத் பிரதிபாதகமான ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி சாஸ்திர முகத்தாலே அறிய வேணும் -என்கை

ஆசார்ய கைங்கர்யம் அறிவது -சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் –என்றது –
ஆச்சார்ய விஷயத்தில் ஸூஸ்ருஷா பிரகாரங்களை பிரதிபாதிக்கிற சாஸ்திர முகத்தாலும் –
தனக்கு இஷ்ட அநிஷ்டங்கள் இன்னது என்னும் இடத்தை அவன் அருளிச் செய்த வசனத்தாலும் -என்கை –

—————————————

சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –

(ஆயி ஸ்வாமிகள்-பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபேண இரண்டு வகைப் பட்டு இருக்கும் -பிரமாணம் சொல்லிய பின்பு -லக்ஷணம் அருளிச் செய்கிறார் -)

இப்படி கர்தவ்யமான கைங்கர்யங்கள் இரண்டும் அறிவதும் எம் முகத்தாலே என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார்

—————————-

சூரணை -277-

அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –

(ஆயி ஸ்வாமிகள்-ஆச்சார்யாருக்கும் பகவானுக்கும் -இஷ்டம் செய்வதும் -அநிஷ்டம் தவிருவதுவும் -)

(ஸ்வயம் பிரயோஜன- சேஷி இஷ்ட கரண- தத் அநிஷ்ட அகரண அந்நிய தரத்வம் -இரண்டில் ஒன்றாலும் செய்வதே -கைங்கர்ய லக்ஷணம் –-பகவல் திமுக உல்லாசம் -திருமுக மலர்த்தி -இரண்டும் காரணம் –ஏதாவது ஒன்றோ இரண்டுமே கைங்கர்யம் -என்றவாறு)

அது ஆவது என்ன -அதாவது இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்கிறார் –

————————————–

இவை தான் இரண்டும் எத்தை அவலம்பித்து இருக்கும் என்ன அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -278-

இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-வர்ண ஆஸ்ரமங்களையும்- தர்மங்கள் என்று சொல்லாமல்–தேக ஸ்வரூபங்களையும் என்று சொல்லாமல் -ஆத்ம ஸ்வரூபத்தையும்-அவலம்பித்து-பற்றி இருக்கும் -என்றபடி –
இஷ்டங்கள் -வர்ண ஆஸ்ரமங்களையும் ஆத்ம ஸ்வரூபத்தையும் பற்றி இருக்கும் என்றும்
அநிஷ்டங்கள்-வர்ண ஆஸ்ரமங்களையும் ஆத்ம ஸ்வரூபத்தையும் என்றும் –
மர்ம ஸ்பர்சி ஆத்ம -பழுதிலா ஒழுகல் தேகத்துக்கு – இஷ்டங்கள் செய்வது பிரதானம் அநிஷ்டங்கள் தவிருவது அப்ரதானம் என்று இல்லை –
அச்சு எழுத்து குறைத்தது முன்னால் அல்ப அக்ஷரம் பூர்வம் –
1-மேல் எழுந்து –தேகத்தை பற்றி -வந்தேறி வர்ணாஸ்ரமம் -நித்தியமான சேஷத்வம் -நிரூபகமான ஆத்ம ஸ்வ ரூபம் பார்ப்பதே இஷ்டம்
பாஹ்யமான த்யாஜ்யத்தை- வந்தேறி -அநிஷ்டம் அவலம்பித்தும் -இஷ்டம் ஆந்தரமான ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி இருக்கும்
2–தேக கதமான வர்ணத்தையும் தத் அனுகுணமான ஆஸ்ரமமும் பற்றுவதும் அநிஷ்டம்
ஸ்வரூப கத சேஷத்வ வர்ணத்தையும் அனுகுண பிரபன்ன ஆஸ்ரமத்தையும் பற்றுவதும் இஷ்டம்
3–போக்தாவாய் கொண்டு சேஷமாய் இருக்கும் ஸ்வரூபம் அநிஷ்டம்
போக்யமாய் கொண்டு பாரதந்திரமாய் இருப்பது இஷ்டம்
சேஷத்வ போக்த்ருவங்கள் போலே இல்லையே பாரதந்தர்ய போக்யங்கள்
இப்படி இஷ்ட அநிஷ்டங்கள் இரண்டிலும் கொள்ள வேன்டும்
அன்றியே
4-தர்சன தூஷணமாக வர்ணாஸ்ரம விபரீதம் செய்வது அநிஷ்டம் -செய்யாது இருப்பது இஷ்டம்
ஸ்வரூப விருத்தங்களை செய்வது அநிஷ்டம்- செய்யாமல் இருப்பது இஷ்டம்-)

(யாதொரு அளவாலே -என்றது -அவ்வளவும் அனுஷ்டேயம் என்றது -ஏதோ ஆன மட்டும் இல்லை – முடிந்த அளவும் பண்ண வேன்டும்
அகரணே பிரத் யவாயம் –எம்பிரானுடைய அநபிமத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாக கடவது-என்ற எண்ணம் வேன்டும் –நரகத்துக்கு போவோமே என்ற எண்ணம் வந்தால் ஸ்வார்த்த காரணம் ஆகுமே
இச்சை ஸ்வரூபம் – இரக்கம் உபாயம் -இனிமை உபேயம் -விநியோக தசையில் சேஷியுடைய இச்சையே –போகத்திலே தட்டு மாறிய சீலம் காட் கரையிலே பிரசித்தம்
பிரபன்னன் ஆந்ரு சம்சயத்தால் -அனுஷ்ட்டித்தால் சாதனம் ஆகாது -இரக்கத்தோடே செய்தால் அவனுக்கு பிடித்தம் ஆகுமே –சம்சாரத்தில் கட்டுப் படுத்தாதே பிரவ்ருத்தி தர்மமாக இருந்தாலும் -ஆகையால் -குறை இல்லை – விநியோகம் பகவல் முக லாபத்துக்காக செய்வது கைங்கர்யமே -பலாந்தர ஹேது வாகாது -கர்மத்தின் ஸ்வரூபமே மாறுமே –பிரியாய மம விஷ்ணோ ச -பிராட்டிக்கு அவனுக்கும் பிரியகரமாய் இருக்குமே -எந்த நினைவுடன் செய்கிறாய் என்பதற்கு தகுந்த பந்த மோக்ஷம் -அதிகாரி –பர கத அதிசயம் -சேஷத்வம் -இச்சையே உபாதேயம் )

அதாவது –
கீழ் சொன்ன கைங்கர்ய பிரதிசம்பந்திகள் இருவருடையவும் இஷ்ட  அநிஷ்டங்கள்
இவ் வதிகாரி உடைய வர்ண ஆஸ்ரமங்களையும் -ஆத்ம ஸ்வரூபத்தையும் -பற்றி இருக்கும் -என்கை –
1-இஷ்ட அநிஷ்டங்கள் வர்ண ஆஸ்ரமங்களை பற்றி இருக்கையாவது –
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான தர்மங்களை பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை இஷ்டமாய் -ஸ்வார்த்த புத்த்யாய்-அநிஷ்டமாய் இருக்கை-

பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை யாவது -லோக சங்கரஹ தயாவாகவும் –
சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவும் ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கை –
இவ் வர்த்தத்தை  இனி இவற்றில் நம் ஆசார்யர்கள் அனுஷ்டிக்கிற இவை சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாக ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கிறார்கள் அத்தனை 
இப்படி அனுஷ்டியாத போது -பகவத் விபூதி பூதரான சேதனருக்கு நாச ஹேது வாகையாலே
ஈஸ்வரனுக்கு அநபிமத பூதனாவன் -ஆகையால் யாதொரு அளவாலே லோக
சங்கரஹம் பிறக்கும் -யாதொரு அளவாலே சிஷ்யர் புத்ரருகளுக்கு உஜ்ஜீவனம் உண்டாம்
அவ்வளவும் அனுஷ்டேயம் என்றது ஆயிற்று –

பிரவ்ருத்தி தர்மம் தானே அபிசந்தி பேதத்தாலே நிவ்ருத்த தர்மமோபாதி-இந்த நிவ்ருத்த தர்மமும் பிராப்யமாக கடவது –
இவ்விடத்திலே அகரணே பிரத்யவாயம் -எம்பிரானுடைய அநபிமத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாக கடவது -என்று தனி ஸ்லோகத்தில் இவர் தாமே அருளி செய்தார் இறே-

இனி ஸ்வார்த்ய புத்த்யா அனுஷ்டிக்கை யாவது -ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமாக விஹிதமாகையாலே -நமக்கு இவை அனுஷ்டியாது ஒழியில்-
க்ருத்ய அகரண ரூப பாவம் வரும் என்று நினைத்து அனுஷ்டிக்கை –

இஷ்ட அநிஷ்டங்கள் ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி இருக்கை யாவது –
இச்சை ஸ்வ ரூபம் -என்கிறபடியே -விநியோக தசையில் -சேஷி உடைய இச்சா அநு குணமாக ஸ்வரூபத்தை விநியோகப் படுத்துகை -இஷ்டமாய் –
தட்டுமாறி விநியோகம் கொள்ளும் அளவில் தன்னுடைய சேஷத்வத்தை இட்டு இறாய்த்தல்-
பாரதந்த்ர்யத்தை இட்டு எதிர் விழி கொடாது ஒழிதல் செய்கை அநிஷ்டமாய் இருக்கை –

அங்கன் இன்றிக்கே –
2-இஷ்ட அநிஷ்டங்கள் -இத்யாதி
ஸ்வ  வர்ண ஆஸ்ரம உசிதங்களைச்  செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களைச் செய்கை அநிஷ்டம்-என்றும்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு உசிதமாகச் செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களைச் செய்கை அநிஷ்டம் 
என்றும் யோஜிக்கவுமாம் –

அங்கனும் அன்றிக்கே –
3-ஒவ்பாதிகமாயுமாய்  அநித்யமுமாய்  வர்ண ஆஸ்ரமங்களிலே ஊற்றி இருக்கை அநிஷ்டம்
நிருபாதிக நித்ய சேஷமான ஆத்ம ஸ்வரூபத்தில் ஊற்றி இருக்கை இஷ்டம் -என்றும்
யோஜிக்கவுமாம் –

இங்கன் ஊற்றத்தைப் பற்றிச் சொல்லுகை அன்றிக்கே அநிஷ்டம் வர்ண ஆஸ்ரமத்தைப் பற்றி இருக்கும் –
இஷ்டம் ஆத்ம ஸ்வரூபத்தை அவலம்பித்து இருக்கும் என்று இங்கனே விபஜித்து -வர்ண ஆஸ்ரமத்தை அநிஷ்ட கோடியாக சொல்லப்  பார்க்கில் –
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஞா ஆஸ்தா முல்லங்க்ய வர்த்த -ஆஜ்ஞாச் சேதி மம த்ரோஹீ மத் பக்தோபி  ந வைஷ்ணவ –என்றும் –
அபிப்லவாய தர்மாணாம் பால நாயகுலசய ச ஸங்கரஹாய ச லோகஸ்ய மர்யாதாஸ் ததாப நாய ச ப்ரியாய மம விஷ்ணோஸ் ச தேவ தேவஸ்ய சார்ங்கினா மநீஷீ வைதிகாசாரம் மனசாபி நலங்கயேத் யதாஹி வல்லபோ ராஜ்ஞ்ஞோ நதீம் ராஞ்சா ப்ரவர்த்திதாம்
லோகோபயோகி நீம் ரம்யாம் பஹூசஸ் ய விவர்த்திநீம் லங்கயன் ஸூலமா ரோஹேதா அனபேஷாபி தாம்பிரதி–ஸ்ரீ லஷ்மீ தந்திரம்– என்றும்
ஏவம் விலங்க கயன் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம் ப்ரியோ சன ப்ரியோ ஸௌமே மதா  ஜ்ஞாவ்யதி வர்த்த நாத் உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜே யேன் மனசா ஸூதீ—ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -என்றும்
சர்வேஸ்வரனும் பிராட்டியும் அருளிச் செய்த வசனங்களோடும்  பூர்வாச்சார்யர்களுடைய அனுஷ்டானங்களோடும் விரோதிக்கும் இறே-
ஆன பின்பு கீழ்ச் சொன்ன படியே -இவ் வாக்யத்துக்குப் பொருளாகக் கடவது –

—————————————-

இம் மூன்று யோஜனைக்கும் மேலில் வாக்யத்தோடு சங்கதி என் என்னில் –

சூரணை -279-

புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே

(ஆயி ஸ்வாமிகள்-புண்யத்தை சாதனமாக நினைத்து செய்யாதே என்னில் -புண்யத்தை என் நினைவால் செய்ய வேணும் -அவனுக்கு அநிஷ்டம் என்று விசிஷ்ட வேஷ அனுபந்திகளை விடில் பாப பிரவ்ருத்திகள் வாராதோ என்னில் –வராது –
மோக்ஷ விரோதி என்று புண்யத்தையும் செய்ய அஞ்சுபவன் சாமான்யரும் செய்யாத பாபத்தைச் செய்யான்-த்யஜிக்கைக்கு அடியான பிரவ்ருத்தி ரூபத்வம் – ஆகாரம் இரண்டுக்கும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -கர்மத்தையே –இரு வினைகள் ரூபம் -ஒரே கோஷ்ட்டி –எத்தைப் பண்ணுவான் புண்யத்தை மட்டும் சாதனம் என்று பண்ணாமல் கைங்கர்ய ரூபமாகச் செய்வான் -என்றபடி-)

(தர்மங்களை பரித்யஜ்யம் -என்னில் அதர்மங்கள் புகுராதோ என்னில் -இது பிரபன்னனுக்கு சொன்னது அன்றோ -உபாய புத்தி யுடன் செய்யாதே என்றே அருளிச் செய்தான் அதே போலே இங்கும்)

பிரதம யோஜனையில்-இப்படி வர்ணாஸ்ரம அனுஷ்டானத்தில் பிரதிபத்தி விசேஷங்களிலும்-ஆத்ம ஸ்வரூபத்தினுடைய விநியோக தசையில் அனுகூல்ய பிரதி கூல்யங் களிலுமாக இஷ்ட அநிஷ்டங்களுக்கு விஷய விபாகம் பண்ண வேணுமோ –
வர்ணாஸ்ரம அனுரூபமாயும் ஆத்ம ஸ்வரூப அனுரூபமாயும் உள்ளவற்றைச் செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களான அக்ருத்யாதிகளைச் செய்கை அநிஷ்டம் என்றாலோ என்ன
அருளிச் செய்கிறார் -மேல் புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-

த்வதீய யோஜனையில் -இப்படி வர்ணாஸ்ரம விருத்தங்களையும் ஸ்வரூப விருத்தங்களையும் செய்கை அநிஷ்டம் என்று இவனுக்குச் சொல்லித்
தவிர்ப்பிக்கை தான் வேணுமோ என்ன -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-

த்ருதீய யோஜனையில் இப்படி வர்ணாஸ்ரமங்களில் ஊற்றம் அறுத்தால் அக்ருத்ய கரணங்கள் வந்து புகுராதோ என்ன – புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

பகவத் அனுக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர சித்தமாக இருக்கச் செய்தேயும் மோக்ஷ விரோதி என்னும் அத்தாலே புண்ணியம் செய்கைக்கு உட்பட அஞ்சுகிற இவ் வதிகாரி
பகவத் நிக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர ஸித்தமாய் நரகாவஹம் என்று சாமான்யரும் உட்படச் செய்யாத பாபத்தை ஒருக்காலும் செய்யான் இறே

————————————-

இவன் புண்ணியத்துக்கு அஞ்சும்படியையும் வத்ஸலனான  ஈஸ்வரனுக்கும் இடம் அறும்படி பாப பிரவிருத்தியில்  அந்வயம் அற்று இருக்கும் படியையும் -தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை -280-

இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –

(ஆயி ஸ்வாமிகள்-பாபத்தையே புண்ணியமாக கொள்ள இருப்பானே வாத்சல்யம் காட்ட வாய்ப்பு என்று -அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் —
இவனோ புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் -இவன் அது செய்யான் -அதனால் அவனுக்கு அந்த பாக்யம் கிட்டாதே
வத்சலனானவனுக்கு இடம் அற -நியதனாய் இருக்கும் -நாட்டார் சுக ஹேது என்று பிரமித்து நினைப்பார்கள் -அல்ப அஸ்திர சுகம் -துக்க ஹேது என்று-த்யஜிக்கும் பாபம் போலே இவன் நினைத்து இருப்பானே -சாம்சாரிக போகம் எல்லாம் துக்கம் -சாதனம் எல்லாம் பாபம் –செய்த குற்றம் எல்லாம் நற்றமாக கொள்ள-கழுகு போலே காத்து இருப்பானே- நம் வாத்சல்ய குணத்துக்கு இறை பெற்றோம் -இது நம் புண்யம்-பெறாப் பேறு என்று இறுமாந்து -என்ற திரு உள்ளம் –ஆசைப்பட்டு பேகணித்து போகிறவனுக்கு துராசையே சேஷிக்கும் -அவாப்த ஸமஸ்த காமனுக்கு -பாப ரூபமான போக்யம் ஒருக்காலும் கிடைக்காது -)

(குணம் போனது என்ற குற்றம் வாராதோ என்னில் –வாத்சல்யம் கார்யகரம் ஆக பிராமாதிகமாக செய்யும் உத்தராகம் இருக்குமே -அத்தை இதுக்கு விஷயமாகும்
தேக தோஷம் –அபுத்தி பூர்வக உத்தராகம் -புத்தி பூர்வக பூர்வாகம் உண்டே -புத்தி பூர்வக உத்தராகம் இல்லை -நியதமாக இருக்கும் அதிகாரி —அதிகாராந்தர விஷயத்தில் வாத்சல்யத்துக்கு விஷயம் உண்டே )

அதாவது –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கையாலே –
புண்ணியம் பாபங்கள் இரண்டும் மோஷ விரோதி என்று இருக்கும் இவ் வதிகாரி –
நாட்டார்கள் ஹேது என்று  விரும்பி இருக்கும் புண்ணியத்தை -பகவத் பிராப்தி பிரதிபந்தக தயா அநிஷ்டாவஹம் ஆகையாலே  துக்க ஹேதுவான பாபம் என்று நினைத்து -வெருவி இருக்கும் –

ஆஸ்ரிதர் செய்த குற்றம் நற்றமாகவே கொள்ளும் அதிமாத்ர வத்சலனான ஈஸ்வரன் –
இவ் வதிகாரி ஏதேனும் ஒரு பாபத்தைப் பண்ணினாலும் -அத்தைக் குற்றமாக நினையாதே நற்றமாக நினைத்துக் கொண்டு இருக்கும் –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -இவ் வதிகாரி பாப பிரவ்ருத்தியில் அந்வயம் அற்று
நியதனாய் வர்திக்கையாலே -பாபத்தை புண்ணியமாகக் கொள்ளும் வத்ஸலனனான அவனுக்கு ஆசைப்பட்டு போம் இத்தனை ஒழிய கிடையாது என்கை –

ஆக –
கீழ் கர்தவ்யமாகச் சொன்ன கைங்கர்யம் அறிவது இன்னத்தாலே–277-  என்றும் –
கைங்கர்யம் தான் த்விவிதம்–276- என்றும் –
அது தான் இன்னது–277-என்றும் –
தத் உபயமும் இன்னத்தை அவலம்பித்து இருக்கும்-278- என்று சொல்லி –
அதில் பிரசங்கிக சங்கா பரிஹாரமும் பண்ணப் பட்டது –

———————————————-

ஈத்ருச கைங்கர்யம் இவனுக்கு ஏதேனும் ஒரு வழியாலே ஆகிலும் உண்டாக வேணும் -என்று இதனுடைய அவஸ்ய கரணீயத்வத்தை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -281-

கைங்கர்யம் தான் பக்தி மூலம்  வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —

(ஆயி ஸ்வாமிகள்-சர்வஞ்ஞனுக்கும் இடம் கொடுக்காத இந்த அதிகாரிக்குப்ராசங்கிக்கத்தை தலைக்கட்டி -ப்ரஸ்துதமான -கைங்கர்ய விஷயம் –
தினசரியாவில் இறுதியில் அருளிச் செய்ததை தொடர்ந்து -அநிஷ்ட தியாக ரூபம் -இஷ்ட பிரவ்ருத்தி ரூபமான கைங்கர்யம் -பரம பக்தி உந்த –பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் இல்லை யாகிலும் -அகிஞ்சித்கரத்வ சேஷத்வம் சித்திக்காதே –இத்தைக் கண்டாவது செய்வான் –பக்தி மூலம் பிரதானம் -பீதி ரூபம் அப்ரதானம்-)

(தட்டிக் கொட்டிக் கூட்டி வர பீதி அடியாகவாவது வரச் சொல்ல வேண்டுமே–ப்ரேமம் அடியாக என்று சொல்லி -ஒருவரும் பண்ணாமல் போக -பீதி அடியாக வர வழி முறை வைக்க வேண்டுமே -வேற மதஸ்தர்கள் இத்தை முக்கியமாக கொண்டார்கள் -)

பக்தி மூலம் வருகை யாவது -சேஷி உடைய முக மலர்த்திக்கு உறுப்பானவையே செய்து கொண்டு நிற்க வேண்டும்படியான -தத் விஷய ப்ரேமம் அடியாக வருகை –

அல்லாத போது பீதி மூலமாய் வருகை யாவது -அது அன்றிகே ஒழிந்தால் -அகிஞ்சித் கரஸ்யய சேஷத்வ அநுபபத்தி -என்கிறபடியே –
சேஷத்வ விருத்தி இல்லாத போது -சேஷத்வ ஹானி பிறக்கும் என்னும் பீதி அடியாக வருகை –

இதில் பக்தி மூலம் ஆனதுவே முக்கியம் – தத் அலாபத்தில் பீதி மூலம் தாம் ஆகிலும் வேணும் என்றபடி –

—————————————

அது தானும் இல்லா விடில் செய்வது என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -282-

அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம்  இன்றிக்கே ஒழியும்-

(ஆயி ஸ்வாமிகள்-அமுக்யமான பீதி ரூபமும் இல்லாத போது -உபாய உபேய -தத் தத் அனுரூபமான பாரதந்தர்ய போக்யத்வ அதிகாரத்திலும் இழவாக போகும்
அநிஷ்டம் போக கைங்கர்யம் வேன்டும் -இதில் ஈடுபடாவிட்டால் விஷயாந்தர ப்ராவண்யத்தில் இழிய வைக்கும் -விஷய பிரவ்ருத்தி இல்லை என்றால் விஷயாந்தரங்களில் மூட்டுமே ஸ்வரூப ஸ்திதி இல்லாமல் ஒழியும்-கைங்கர்யம் இல்லா விடில் என்றோ ஒரு நாள் அடையும் வாய்ப்பும் இழந்து போவான் -)

அதாவது –
அமுக்யமான பீதி மூல கைங்கர்யம் தானும் இல்லாத போது -கிஞ்சித் கார அபாவத்தாலே -சேஷத்வ ரூபமான அதிகாரத்திலும்  –அதிகாரி சா பேஷமாய் இருந்துள்ள சேஷி உடைய கிருபா ரூபமான உபாயத்திலும் –இவனுடைய அனுகூல விருத்தி சா பேஷமான அவனுடைய முக மலர்த்தி யாகிற உபேயத்திலும்- அந்வயம் அற்று விடும் -என்கை –

—————————————————-

ஆக –
கீழ் இரண்டு வாக்யத்தாலும் -கைங்கர்ய அவஸ்ய கர்த்தவ்யமும் -கைங்கர்ய அபாவத்தில்
வரும் அநர்த்த விசேஷங்களும் காட்டப் பட்டது –
ஏவம் வித கைங்கர்யத்தில் சாதன புத்தியைத் தவிர்க்கிறார் மேல் –

சூரணை -283-

கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாக்க வேணும்

(ஆயி ஸ்வாமிகள்-சாதன புத்தியை தவிர்க்கிறார் இத்தால் -நாம் கொடுக்க வேன்டும் -அவன் கொள்ள வேன்டும் -முக்கியமாகவும் அமுக்கியமாகவும் –
அல்ப அநல்ப போக மோக்ஷ ரூபமான ஏதேனும் ஒரு பலத்துக்கு சாதனம் ஆக்காமல் -பிசகாதே எல்லா பலனும் இதுவே என்ற எண்ணம் –இதுவே புருஷார்த்தம் -என்று நினைக்க வேன்டும் –அதற்கு ஒரு பலன் இல்லை -அதுவே பலம் என்றவாறு)

அதாவது –
இப்படி அவஸ்ய கரணீயமாக -கீழ்ச் சொன்ன கைங்கர்யம் தன்னை பண்ணும் அளவில் –
த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில்-ஏதேனும் ஒன்றுக்கு -சாதனமாக -பிரதிபத்தி பண்ணாதே –
ஸ்வயம் பிரயோஜனமாக பிரதி பத்தி  பண்ண வேணும் என்கை –

—————————————–

இத்தை விசதீகரிக்கிறார் மேல்

சூரணை -284-

அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்கப்
பண்ணுகை–

(ஆயி ஸ்வாமிகள்-சாதனத்வ பிரதிபத்தி கந்தம் அற -சித்த ஸாத்ய பிரதிபத்தியே -பலம் என்ற புத்தியே -அவன் அனுக்ரஹத்தால் கிடைத்த இது என்று – –இனிமை முக விலாசம் இதுவே -என்ற எண்ணம் வேன்டும் –
சாதனம் ஆக்காமல் பலம் ஆக்குவது -சேஷத்வ ஸ்வரூபத்துக்கு அநு ரூபமாக -உன்னை கைங்கர்யம் கொண்டோமே -இதுக்கு என்ன சமர்ப்பிக்க போகிறாய் –
உன் ஸ்வரூபம் சித்திக்க நாம் கைங்கர்யம் கொண்டோம் -பழைய நிலைமை மறந்து -இதுக்கு கை கூலி கொடுக்கலாகாதோ–என்ற திரு உள்ளம் –
மேலும் கைங்கர்யம் கொடுக்க -கைக் கூலி லஞ்சம் மேலே கைங்கர்யம் செய்வதே -பரிபூர்ணனான அவன் ஏங்கினது போலே குறைவாளனாக கை ஏந்தும் படி —
தன்னை வணங்க வைத்த கரணங்கள் இவை பெற்ற பிரயோஜனம் கைங்கர்யம் -)

(துருவன் -நிறைந்த சோதி வெள்ளம் -உள்ளே இருந்த உருவம் மறைக்க -எதிரே நின்ற -அதே சோதி -பேச முடியாமல் விக்கித்து நிற்க -திருச் சங்காழ்வானால் ஸ்பர்சித்து –தர்சனமே பலன் -தர்சனத்துக்கு பலம் கேட்கக் கூடாதே
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதி க்ருணாதிவை ஸ்வயம்-தானே-விரும்பி ஆசைப்பட்டு தலையால் பெற்றுக் கொள்கிறான் –-கடனாக நினைத்து –அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி -)

(ஸ்வயம் பிரயோஜன- சேஷி இஷ்ட கரண- தத் அநிஷ்ட அகரண அந்நிய தரத்வம் -இரண்டில் ஒன்றாலும் செய்வதே -கைங்கர்ய லக்ஷணம் –பகவல் திமுக உல்லாசம் -திருமுக மலர்த்தி -இரண்டும் காரணம் -ஏதாவது ஒன்றோ இரண்டுமே கைங்கர்யம் -என்றவாறு–கைங்கர்ய லக்ஷணம் -ஸ்வயம் பிரயோஜன தன் முக விலாச -உத்தேச்யக -சேஷிக்கு இஷ்டம் செய்து -அநிஷ்டம் தவிருவதாய் –அந்நிய தரத்தில் -இவற்றில் ஓன்று என்று -இருப்பதே கைங்கர்யம் –அகரணம் கரணம் – அந்நிய -பொய் சொல்லாமை -தர்ண பூச மாச யாகம்-இவற்றைக் கைங்கர்யம் என்னக் கூடாதே —அதி வியாப்தி தோஷம் இல்லாத -லக்ஷணம் –-இதனால் முக விலாசம் -சேஷிக்கு இஷ்டமாகவும் -வேன்டும் — தலையில் குட்டி கன்னத்தில் அறைந்து -பிராந்தி ஹேதுக சேஷிக்கு இஷ்டம் என்ற எண்ணம் -அதி வியாப்தி கூடாதே-அந்நிய தரத்வம்-இரண்டில் ஓன்று -என்றது -அவ்யாப்தி இல்லாமல் போகும் இது இல்லாமல் இருந்தால் -உத்தேச்யம் -கைங்கர்யம் -சாஷாத் முக விலாசம்ஆந்ரு சம்சயம் -லோக சங்க்ரஹம்- புத்ராதிகள் நன்றாக இருக்கவும் இரக்கத்துடன் செய்வதும் கைங்கர்யம் ஆகாதே-அது பரம்பரையா முக விலாசத்துக்கு ஹேது -இது சாஷாத் முக விலாசம்
நாம சங்கீர்த்தனம் பண்ண பண்ண பக்தி வளர்ந்து மோக்ஷம் -அதனால் நாம சங்கீர்த்தனம் பரம்பரையா ஹேது பக்தி தான் சாஷாத் ஹேது -என்று விசேஷணம் சேர்த்தே நம் பூர்வர் அதே போலே இங்கும் –கைங்கர்யம் யுக்த லக்ஷணம் -சாஷாத் முக விலாசத்துக்கு ஆகும் –
இரக்கம் பட்டாலும் அவனுக்கு பிடிக்கும் -அது தான் முக விலாசம் ஹேது -அதனால் பரம்பரையா ஹேது -இப்படி வாசி அறிய வேன்டும் –-நித்ய அனுஷ்டானம் செய்யச் செய்ய –ஆந்ரு சம்சயம் -என்ற புத்தி இல்லாமல் நேராக முக விலாசம் என்ற எண்ணத்துடன் செய்ய வேன்டும் -)

அதாவது -என்றது -இத்தை சாதனம் ஆக்காதே பலம் ஆக்குகை யாவது என்றபடி —
தான் கை ஏலாதே அவனை கை ஏற்கப் பண்ணுகை யாவது -கைங்கர்யம் பண்ணுகிற தான்  அதுக்கு பலமாக அவன் பக்கலிலே ஒன்றை அர்த்தியாதே -ஸ்வயம் பிரயோஜனமாக
செய்யா நின்று கொண்டு -கைங்கர்யம் கொள்ளுகிற அவனை –
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதி க்ருணாதிவை ஸ்வயம்-என்கிறபடியே
தன் பூர்த்தி பாராதே -சாபேஷனாய் -விரும்பிக் கைக் கொள்ளும்படி பண்ணுகை –

———————————————

இவ்வளவும் போராது-தான் கொடுத்ததை அவன் கொண்டதுக்கு பிரத்யு உபகாரம் பண்ணவும் வேணும் என்கிறார் மேல் –

சூரணை -285-

கொடுத்துக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-கை ஏந்தாதவன் பரம பக்தன் -அவனுக்கு உரிய அடியவனாய் -அவனாலே தூண்டப் பட்டு அவனுக்கு கைங்கர்யம் செய்து பிரஜானாந்தரங்களை பெறாமல் –அவன் கைங்கர்யம் கொண்டதுக்கு மென்மேலும் கைங்கர்யம் கொள்ள உடன்பட்டு கைக் கூலி கொடுக்க வேன்டும்-)

(பெரியாழ்வார் திரு மகள் -என்றது இந்த குணம் அவரால் வந்தது என்பதைக் காட்டவே  ஒன்றுக்கு லக்ஷம் -மேலே கொடுத்து–வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் வாரி விழுங்குமவனுக்கு இது கிஞ்சித் தானே – உன் அபிப்பிராயம் -லக்ஷம்  அவன் அபிப்பிராயம் அந்யத் பூர்ண கும்பத்துக்கும் தாழ்ந்தவை இவை – ஆய்ச்சியர் வெண்ணெய் தானே அவன் உகப்பான் -ஆழ்வார் –ப்ராஹ்மணர் வெண்ணெய் இல்லை – அதனாலே இடைச்சி ஏறிட்டு கொண்டார்கள் இவளும் இவள் திருத் தமப்பனாரும்பால் சோறு மூட நெய் பெய்து கிளறி இன்றும் -பக்தி ஞானம் வைராக்யம் கலந்து -பூர்ணன் வேறே ஒன்றுமே அமுது செய்யாமல் கை எந்தும் அழகர் –கோயில் அண்ணன்-ஸ்ரீ ராமானுஜர் -கைங்கர்யம் கோதாக்ரஜர்–ஞானம் பர்யவசாயம் பரம பக்தியில் –நாள் தோறும் நைந்து ஞானம் கனிந்த நலம் -மதி நலம் -)

அதாவது –
தேஹி மே ததாமி தே -என்கிறபடியே -தான் அவனுக்கு ஒன்றை  சமர்ப்பித்து -அவன் பக்கலிலே ஒரு பிரயோஜனம் கொள்ளாதே –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்ற
பெரிய ஆழ்வார் திருமகளைப் போலே -தான் சமர்ப்பித்த த்ரவ்யத்தை அவன் அங்கீகரித்த உபகாரத்துக்காக -அப்படி இருந்துள்ளவற்றை –
தன் அபிநிவேச அநு குணமாக நிறையக் கொண்டு வந்து சமர்ப்பியா நின்று கொண்டு -பின்னையும் அடிமை செய்கையும் ஆகிற கைக் கூலி கொடுக்க வேணும் -என்கை –

——————————————-

ஆக இப்படி அநந்ய பிரயோஜனனாய் கிஞ்சித்கரித்தால் ஆயிற்று ஸ்வரூபம்  உஜ்ஜ்வலம் ஆவது என்னுமத்தை -ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -286-

ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –

(மூவரும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் தோள் தீண்டி –அநந்ய பிரயோஜனராய் கைங்கர்யம் செய்வதே ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆகும் -கௌஸ்துப ஸ்தானம் தானே ஜீவாத்மா –
அபிமதரான விதுரர் -முடுக்கு சந்தில் தேடி வரும் படி பரிவரான ஸ்ரீ மாலா காரர் -ஸ்பர்சம் பெற்று அங்கீகரிக்கப் பெற்ற ஸ்ரீ கூனி-ஸூவ பிரயோஜன லேச கந்தம் இல்லாத -சேஷத்வ ஸ்வரூபம் உஜ்ஜவலமாகும்)

—————————————-

திருஷ்டாந்த பூதரான அவர்கள் கிஞ்சித்கரித்த பிரகாரம் தன்னை அருளிச் செய்கிறார் –

சூரணை -287-

1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத- படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-

(ஆயி ஸ்வாமிகள்-சுரு-அக்னி பட்டு கருகல் இல்லாமல் என்றுமாம் – சோற்றை இட்டு மடியை பிடித்து முடிச் சரக்கை அறுத்து கொள்ளாமல்-அநந்ய பிரயோஜன பக்தி பரவஸ்யம் –
இரண்டும் உள்ள விதுர அன்னாநி -பல வகைகள்ஸூஸீநீ குணம் -மனஸ் சுத்தி ரஸவத்-பாவனத்வ போக்யத்வங்கள் -நாவிலும் நெஞ்சிலும் வேர் விழும் படி நல்லதோர் சோறு
சுருள் சாபலம் வைத்து பார்த்து மோந்து சுருள் நாறா பண்ணி -அக்னி ஸ்பர்சம் போலே இவன் தலை அஹங்கார நெருப்பு பட்ட பூ இல்லாமல்பிரசாத பரமோ நாதவ் மம கேஹம் உபா கதவ் -சந்தில் உள்ள குடில் -தேர்ந்து எடுத்து மம கேஹம்-மால்ய உப ஜீவனம் செய்பவன் -வஸ்திரம் சந்தனம் புஷ்ப்பம் அலங்காரம் நகரப் பெண்களுக்காக —மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூ –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் போலே-அநேகம் பொன் காசி கொடுத்து சந்தனம் ஒரு பிந்து சுண்ணாம்பு தெரிக்கக் கெட்டுப் போகுமே -கலசாமல் –வடிவு அழகுக்குத் தோற்று சாற்றி ஸ்ரீ கூனிபூசும் சாந்து என் நெஞ்சமேபிரயோஜன ஸ்மரண லேசமும் இல்லாமல் -அவன் அர்த்தித்த அநந்தரம் -கொடுத்தாள் )

1-மடி தடவாத சோறு ஆவது -முந்துற ஆதாரத்தோடு இட்டு பின்னை இதுக்கு  காசு தரலாகாதோ என்று -மடி சீரைச் சோதிக்கைக்காக
மடியைப் பிடித்து தடவி -உண்டவன் நெஞ்சு உளையும்படி பண்ணும் பிரயோஜனந்த பரர் இடும் சோறு போல் அன்றிக்கே -உண்டவன் நெஞ்சு உகக்கும் படி –
அநந்ய பிரயோஜனமான சோறு – இப்படி இருந்துள்ள சோறு இறே –
புக்தவத்ஸூ த்விஜாக்ரேஷூ நிஷண்ணா பரமாசநே விதுர அன்னானி புபுஜே  ஸூஸீனி குண வந்திச-என்று பாவனத்வ -போக்யத்வ -ப்ரசஸ்தமாம் படி ஸ்ரீ விதுரன் அவனுக்கு சமர்ப்பித்து –

2-சுருள் மாறாத பூ ஆவது -அக்நி ஸ்பர்சம் உண்டானால் சுருள் நாறும் படி இறே பூவின் ஸ்வாபம் இருப்பது –
அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற சுருள் நாற்றம் இல்லாதபடி -அநந்ய பிரயோஜனத்வ பரிமள யுக்தமாக இடும் புஷ்பம் –
இப்படி இருந்துள்ள புஷ்பம் இறே -பிரசாத பரமவ் நாதவ் மமஹேக முபாகதவ் தந்யோ அஹம் அர்ச்ச இஷ்யாமீ த்யாக மால்யோப ஜீவன -என்று
விசேஷஜ்ஞர்-(பராசரர் )- ஸ்லாகிக்கும் படி -அத்யாதர பூர்வகமாக ஸ்ரீ மாலா காரர் அவனுக்கு கொடுத்தது –

3-சுண்ணாம்பு தடவாத சாந்தாவது -ஆயிரம் பொன் அழிய கூட்டியும் -சுண்ணாம்பு திவலை பட கெடும் படி இறே -சாந்தின் ஸ்வாபம் -அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற தோஷம் இன்றிக்கே -அநந்ய பிரயோஜனமான சாந்து -இப்படி இருந்துள்ள சாந்து இறே –
ஸூகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே ஆவயோர் காத்ர சத்ருசம்  தீயதாம நுலேபனம் -என்று அவன் அர்த்தித்த அநந்தரம்- பூசும் சாந்தாம்படி கூனி கொடுத்தது –

ஆக இப்படி அநந்ய பிரயோஜனமாக கிஞ்சித் கரித்தால் ஆயிற்று -கைங்கர்ய ஆஸ்ரயமான
ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது -என்கை

ஆக –
இவ்வளவும் வஸ்தவ்யாதி கணனையில் -சரம உக்தமான -கர்தவ்ய ரூப கைங்கர்யத்தை
சோதித்து -தாத்ருச கைங்கர்யத்தாலே -ஸ்வரூபம் உஜ்ஜ்வலமாம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————-

சூரணை -288-

கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —

(ஆயி ஸ்வாமிகள்-சதாசார்ய பிரசாத விருத்திக்கு ஹேதுவாக கர்தவ்யமான வஸ்தவ்யாதி நியமங்களில் சரமமாக உபய வித கைங்கர்ய சோதனம் –ஆஸ்ரய ஸ்வரூப விரோதம் வராதபடி -சரம பாவி கைங்கர்ய தசை- ஸூவ பிரயோஜன கந்தம் படாத படி பர ஏக பிரயோஜனம் போலே முன்பு உள்ள தசைகளிலும் –அடைவே -வரிசையாக -தசா விசேஷங்களில் தது தது விரோதி விசேஷங்கள் ஸ்பர்சியாத படி பேணிக் கொண்டு ஆத்ம ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேன்டும்-கைங்கர்யம் -முக்த தசையில் என்பதாகக் கொண்டு அதுக்கு முன்புள்ள நான்கு தசைகளையும் இங்கே அருளிச் செய்கிறார் -)

இப்படி அநந்ய பிரயோஜனனாய் கொண்டு கைங்கர்யம் செய்தாலே ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது என்று சொன்ன இதிலே – முக்த அவஸ்தையில் -கைங்கர்ய தசையில் ஸ்வரூப உஜ்வல்யமும் அர்த்தாதுக்தம் என்று நினைத்து -இப்படி கைங்கர்ய தசையில் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்குமோபாதி-ஏதத் பூர்வ தசா விசேஷங்களிலும் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்க வேணும் என்று அருளிச் செய்கிறார் மேல் –

முன்புள்ள தசைகளிலும் -என்றது -கைங்கர்யத்துக்கு பூர்வ தசைகளிலும் -என்ற படி –

——————————————-

சூரணை -289-

முன்பே நாலு தசை உண்டு –

(அழுக்கு சோதித்து ஒவ் ஒரு தசையிலும் எடுக்க வேன்டும் -)

முன்பு எத்தனை தசை உண்டு என்னும் மா காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

————————————–

அந்த நாலு தசையும் தான் எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -290-

அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வரூப ஞான தசை – உபாய வரண தசை / பிராப்ய பிராப்தி தசை – பிராப்தமான ப்ராப்யம் அனுபவிக்கும் தசை –நான்கும் உண்டே முக்தனுக்கு -ஐந்தாவது பிராப்த கைங்கர்யம் -கிரமேண இந்த தசா விசேஷங்கள் உண்டே -)

(-பிரார்த்தனை -வரித்தல் -தேவரீரே உபாயமாக இருக்க வேணும் என்று ஆச்சார்யர் உபதேச பூர்வகமாகப் பற்ற வேண்டுமே -அதிகாரி ஆவதற்கு -ஞப்தி பல முக்தி -விருத்தி -விரக்தி -பக்தி- பிரபத்தி -சக்தி யுக்தம்- பிராப்தி- பூர்த்தி -ஆர்த்தி ஹரத்வம் போலே இங்கும் -)

1-ஞான தசையாவது -ஆசார்ய உபதேசத்தாலே தனக்கு ஞானம் பிறந்து செல்லுகிற தசை –
2-வரண தசையாவது -சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனை தனக்கு உபாயமாக வரிக்கை-
3-பிராப்தி தசை யாவது -சம்சாரிக சகல துரித நிவ்ருத்தி பூர்வகமாக அவன் திருவடிகளை ப்ராபிக்கிற தசை –
4-ப்ராப்ய அனுபவ தசை -யாவது -ப்ராப்ய பூதனான அவனைக் கிட்டு அனுபவிக்கிற தசை –
இவ் அனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம் இறே பரம புருஷார்த்தம் –

பிரதம அபேஷிதமான தத்வ ஞானமும் –
ஞான பலமான உபாய வரணமும் –
வரண பலமான பிராப்தியும் –
ப்ராப்தி பலமான அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமுமாய் இறே க்ரமம் இருப்பது –

ஆகையால் கைங்கர்ய தசை சரம தசையாய் –
பூர்வ தசைகள் நாலும் இதிலே வந்து  யேறுகைக்கு இட்ட படி ஒழுங்காய் இருக்கும் –

—————————————–

இவ்வோ தசைகளில் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்கும் படியை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை -291-

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —

(ஆயி ஸ்வாமிகள்-எத்தை வைத்து அணுக வேன்டும் என்று விவரிக்கிறார் -ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்கும் படி -அழுக்கு -விரோதம் நீக்கி -ஞானி – அகங்காரம் மேலிடாத படி -ஞானம் கொண்டு அறிய வேண்டியது சேஷத்வம் -இதுக்கு தானே ஞானம் சம்பாதிக்க வேண்டும் –யானே என்னை அறிய கில்லாத – யானே என் தனதே இருந்தேன் -அறிவு ஒன்றுமே இல்லாத -அடியேன் சிறிய ஞானத்தன் –அஞ்ஞானத்தை முன்னிட்டே உஜ்வலம் ஆக்க வேண்டும் -பிராணவார்த்தம்
நோற்ற நோன்பிலேன்–சரம ஸ்லோகார்த்தம் -ஞானி ஆகிஞ்சன்யம் நிறம் பெரும் படி -அபூர்த்தியை முன்னிட்டு கிஞ்சித் கார லேசம் அபாவ ரூபி அபூர்த்தி -முன்னிட்டே உஜ்வலம் ஆக்க வேண்டும்
ஸஹேதுக கர்மத்தால் சம்சாரம் தொலைந்து -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இல்லாமல் -ஆர்த்தி விளம்ப அஸஹத்வம் -துடிப்பை முன்னிட்டு பிராப்தி –
துடிப்பு தூண்ட ஆத்ம ஸ்வரூபம் ஒளி விடும் இந்த தசையில்
பிராப்ய அனுபவம் -ஸ்வரூப ரூப குணமும் பகல் விளக்கு போலே -நித்ய முக்த ப்ராப்யம் -அங்கும் திருப்தி பிறவாமல் அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களிப்பேனே –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதே –அபி நிவேசம் பொங்கப் பொங்க ஸ்வரூபம் உஜ்வலம் அங்கே -)

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடுகை யாவது -ஆசார்யன் தனக்கு மேன்மேல் அஞ்ஞாத ஞாபனம் பண்ணும்படி -தத்வ ஹித புருஷார்த்தங்களில்  தன்னுடைய அஞ்ஞானத்தை பலகாலம் விஞ்ஞாபிக்கை –

வரண தசையில் அ பூர்த்தியை முன்னிடுகை யாவது-நோற்ற நோன்பு  இலேன் –
ந தர்ம நிஷ்டோஸ்மி –
சத் கர்ம நைவ கில கிஞ்சன சஞ்சி நோமி –(ஸ்ரீ வைகுண்டம் ஸ்தவம் 88)-இத்யாதி படியே
பேற்றுக்கு ஹேதுவாகக் கொள்ளலாவதொரு ஸூஹ்ருதாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற -ஆகிஞ்சன்யத்தை புரஸ்கரிக்கை

ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடுகையாவது -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராதே
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் இனி-
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -இத்யாதிப் படியே விலம்ப அசஹத்வ நிபந்தனமான தன்னுடைய க்லேச அதிசயத்தை தர்சிப்பிக்கை –

ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடுகை யாவது –
பெரு விடாயனுக்கு கொடுத்த தண்ணீர் ஆராதாப் போலே -அனுபூதாம்சத்தால்
திருப்தி பிறவாதே மென்மேலும் தனக்கு விளைந்து செல்கிற அனுபவ அபிநிவேசத்தை
பிரகாசிப்பிக்கை –

ஆக –
ஞான தசை முதலான நாலு தசையிலும் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்குகையாவது –
இவ்வோ ஆகாரங்களை முன்னிடுகை என்று கருத்து –

—————————————–

இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் -இவனுக்கு இவை சமிப்பது எத்தாலே என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-292-

அஞ்ஞானம் போவது ஆச்சார்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்த்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –

(ஆயி ஸ்வாமிகள்-தோஷங்கள் நிவ்ருத்தி -இவற்றால் என்று அருளிச் செய்கிறார் -அபி நிவேசம் குறையக் கூடாதே -அனுபூவ அம்சம் குறைய -அனுபவிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய -அனுபவமும் அபி நிவேசமும் தொடர்ந்தே போகுமே அங்கு -விரோதி ஸ்பர்சம் இல்லாத படி -இந்த தசைகளில் ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆகும் படி –
ஸ்வரூபாதி ஞானம் இல்லாமை அஞ்ஞானம் மேலிடாமல் போவது ஸூ ஆச்சார்யனால் விகசிதமான நிர்மல ஞானத்தால் –நிர்ஹேதுகத்தால் -அனுக்கிரகத்தால் -போகும் –
அகிஞ்சித் கரனாய் கிஞ்சித் கார லேச அபாவம் ஆகிய அபூர்த்தி அவாப்த ஸமஸ்த காமனுடைய நிரபேஷ பூர்த்தியால் போகுமே –
ஆர்த்தி -அடியார்க்கு ஆவா என்று அருளும் பெரு விசும்பு அருளும் பெரிய கிருபையால் போகும்
அபி நிவேசம் -ஸ்வரூபம் ரூபம் குணம் அனுபவிக்க -மேல் மேல் உண்டாகும் பகவத் அனுபவம் –
முன் உள்ள அபி நிவேசம் போக்கி அடுத்த அனுபவத்தில் மூட்டும் -இப்படி தொடரும்)

அதாவது –
தத்வ ஹித புருஷார்த்தங்களில் இவனுக்கு உள்ள அஞ்ஞானம் ச வாசனமாக நிவ்ருத்தமாவது -அவற்றை அலகு அலகாக தர்சித்து –
அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகைக்கு ஈடான ஆசார்யனுடைய  ஞானத்தாலே –

பேற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள சத்கர்மாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற அபூர்த்தி சமிப்பது -இத்தலையில் உள்ளது ஒன்றும் அபேஷியாமல்
கார்யம் செய்யும் உபாய பூதனான ஈஸ்வரனுடைய ஸஹகாரி நைர பேஷ்யம் ஆகிற பூர்த்தியாலே-

அவலம்பேன திருவடிகளைப் பெறாமையாலே உண்டான ஆர்த்தி தீருவது – ஆர்த்தி கண்டால் ஆற்ற மாட்டாதே -அப்போதே கார்யம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பான -பர துக்க அசஹிஷ்ணுத்வம் ஆகிற அவனுடைய கிருபையாலே –

அனுபவ தசையில் அநு ஷணம் பிறக்கும் அபிநிவேசம் அடங்குவது -அவ் விஷயத்தை மென்மேலும் அனுபவிக்கையாலே -என்கை –

————————————————

இவ் அஞ்ஞா நாதி சதுஷ்டயத்துக்கும் ஹேது எது என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

சூரணை -293-

அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –

(ஆயி ஸ்வாமிகள்-ஞான தசையில் அஞ்ஞானத்துக்கு முன்னிடுவதற்கு அடி அபராதம் -ஜனாதி அஞ்ஞான க்ருதமான ஸூ அபராத ஸ்மரணம்-ஞானம் வந்தால் கூட பண்ணின அபராதம் நினைவிட அஞ்ஞானி என்பானே-
வரண தசையில் –ஸூவ கத தத் அங்கீ கார ஹேது ஒன்றுமே இல்லை என்கிற ஞானம் வந்த பின்பு -அபூர்த்தியை முன்னிட்டு சரண வரணம் பண்ணுவோம்
பிராப்தி தசையில் ஆர்த்திக்கு அடி –விளம்ப பிராப்தி அலாபம் -துடிக்க வேன்டும் -அனுபவ தசையில் அபி நிவேசத்துக்கு அடியான -அபிவிருத்திக்கு ஹேதுவான-அழகு தானே)

அதாவது –
ஞான தசையில் -முன்னிடுகிற அஞ்ஞானத்துக்கு மூலம் -அநாதி கால க்ருத்ய  அகரண அக்ருத்ய கரண ஆதி ரூபமான அபராதம்

வரண தசையில் முன்னிடுகிற அபூர்த்திக்கு நிதானம் -பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கலாவது ஒன்றும் தனக்கு இல்லாமையை தர்சிப்பிக்கைக்கு உடலான ஞான பூர்த்தி 

ப்ராப்தி தசையில் முன்னிடுகிற ஆர்த்திக்கு ஹேது -ப்ராப்ய வஸ்துவை சீக்கிரமாகக் கிட்டப் பெறாமை யாகிற அலாபம் –

ப்ராப்ய அனுபவ தசையில் முன்னிடுகிற அபிநிவேசதுக்கு காரணம் அனுபவித்த அளவால் திருப்தி பிறவாதே மேன்மேலும் ஆசைப்படப் பண்ணும் அவன் வடிவழகு -என்கை –

—————————————————-

ஆர்த்தி அபிநிவேசம் இருக்கும் படி என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -294-

ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –

(ஆயி ஸ்வாமிகள்-சரம தசையில் உள்ள ஆர்த்தி அபி நிவேசம் -அர்ச்சிராதி கதி நித்ய அனுசந்தானம், -திரு வேங்கட யாத்திரை -அர்ச்சிராதி கதி -அக்ரூரர் கதி மூன்றும்
பாம்பின் வாயில் சிக்கிய தவளை போலே -இனி இனி இருபதின் கால் கூவி –திருவாணை நின் ஆணை என்று தடுத்தும் வளைத்தும் பெற வேன்டும் படி பரம பக்தி அடியாக ஆர்த்தி
செங்கனிவாய் அனுபவித்து வழு விலா அடிமை செய்ய நாநா தேகம் பரிகரித்து கேட்டவர்களுக்கு ஆர்த்தி அபி நிவேசம் வரும் படி அங்கே அருளிச் செய்தவற்றை படித்து அறிய வேண்டும்)

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று துடங்கி
திருவாணை நின் ஆணை கண்டாய் -என்று
தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படி பரம  பக்தி தலை எடுத்தது -என்னும் அளவாக ஆர்த்தி இருக்கும் படியையும் –

செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -என்கிறபடியே
முன்புற்றை அழகை அனுபவித்து -என்று துடங்கி -தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அனுபவித்து -என்னும் அளவாக அபிநிவேசம் இருக்கும் படியையும்
அந்த பிரபந்தத்திலே ஸூஸ்பஷ்டமான அருளிச் செய்தார் இறே –

ஆக
கைங்கர்ய தசைக்கு முன்னே நாலு தசை உண்டு-289- என்றும் –
அவை தான் இன்னது  -290-என்றும் –
அவ் வவ்   தசை அநு குணமான அஞ்ஞா நாதிகளை முன்னிடவே
அவ் வவ் தசைகளில் ஸ்வரூப உஜ்ஜ்வலம் ஆம் -291-என்றும் –
அவ் வஞ்ஞாநாதிகளைப் போக்குமவை ஆச்சார்ய ஞானாதிகள்–292- என்றும்
அவ் வஞ்ஞாநாதிகளுக்கு நிதானங்களும் சொல்லிற்று ஆயிற்று -293-

—————————————

இந்த தசை சதுஷ்டய பிரசங்கத்திலே -இவனுடைய குண சதுஷ்ட்யத்தையும்
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -295-

இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –

(ஆயி ஸ்வாமிகள்-சம்பாவித ஸ்வபாவமான விருத்த சத் குண யோகத்தை -இந்த அதிகாரிக்கு -வருமே உஜ்ஜவலமான இவனுக்கு –ஸ்வரூப உஜ்ஜ்வல பரிபாக தசைகள் கீழே நான்கும் இங்கு ஒளி பெற்று இருக்கும் பரஸ்பரம் ஒன்றுக்கு ஓன்று கூட்டிக் கொடுக்கும் -)

அதாவது
இவ் வதிகாரிக்கு ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்யதுக்கு உடலாக கீழ்ச் சொன்ன தச சதுஷ்ட்யம் போலே – ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான குண சதுஷ்டயமும் உண்டு என்கை –

—————————————–

அவை தான் எவை என்னும் ஆகாங்ஷையிலே எந்த எந்த குணங்கள் என்று அருளிச் செய்கிறார் –

சூரணை-296-

அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –

(ஆயி ஸ்வாமிகள்-யதார்த்த ஞானம் -உபாதேயமான அஞ்ஞானம் -ஸ்வரூப அநு ரூப சக்தி -ஸ்வரூப விருத்தமான வற்றில் சக்தியும்)

———————————

இவனுடைய குண சதுஷ்டயம் சொன்ன பிரசங்கத்திலே ஈஸ்வரனுக்கும் இவை உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -297-

இது தான்
அவனுக்கும் உண்டு —

(ஆயி ஸ்வாமிகள்-ஈஸ்வரனுக்கும் அஞ்ஞானமும் சக்தியும் உண்டே)

இது தான் அவனுக்கும் உண்டு -அவன் -என்று  கீழ்ச் சொல்லிக் கொண்டு வந்த
ஈஸ்வரனை பராமர்சிக்கிறது –

——————————————

இப்படி இருந்துள்ள இருவருடைய குணங்களுக்கு விஷயங்கள் எவை என்ன அவற்றை விபஜித்து அருளிச் செய்கிறார் –

சூரணை -298-

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –

(ஆயி ஸ்வாமிகள்-இவன் தோஷத்தை அவன் குணம் என்று திருவுள்ளம் -யுகபத் சர்வ தர்சி அவன் –ஞானத்துக்கு -தோஷ துஷ்டனான இவனுடைய தோஷங்களால் மூடிய சிறிய குண திவலை-
வாத்சல்யத்துக்கு முழு இலக்கு -இவனுடைய தோஷம் –-குற்றங்கள் கண்ணில் படாமல் —பட்டும் குணமாக கொள்வதே அவனுடைய அஞ்ஞானம் –
குண லவத்தை மறைக்கும்-புத்தி பூர்வகமாக பண்ணும் அக்ருத் கரணாதி தோஷங்கள் –
அகடிதகடநா சக்திக்கு இலக்கு இவன் ரக்ஷணம் -அசக்திக்கு இலக்கு -தோஷங்கள் கண்டு விட மாட்டாமை)

(இவனுக்கே அநிஷ்டம் நிவர்த்திக்கவும் இஷ்டம் பெறவும் விருப்பம் இல்லாத போது செய்தவதால் சேராததைச் சேர்க்கும் சக்தி வேண்டுமே-கீழே280 -அவனுக்கு அது கிடையாது -மநோ ரதம் பூர்த்தி ஆகாது பார்த்தோம் -இங்கு குற்றம் பண்ணினவன் உண்டே என்னில் அங்கே உத்தம அதிகாரி -இங்கு மத்யம அதமர்கள்)

கீழ் எடுத்த அடைவில் அன்றிக்கே  ஈஸ்வர குண விசேஷங்களை  முந்துற அருளிச் செய்தது
சேதன குண விசேஷங்களைச் சொல்லி  முடித்தால்-அதின் தோஷத்தை சிஷிதாதா தசா துர் வித்யத்தை விஸ்தரேண அருளிச் செய்கைக்காக –

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் -என்றது
-யஸ் சர்வஜ்ஞ என்றும் –
சகஸ்ராம்ஸூ -என்றும் -சொல்லுகிற படியே
சர்வஜ்ஞனான அவனுடைய திவ்ய ஞானத்துக்கு விஷயம் -அத்வேஷ ஆபி முக்கியம் தொடங்கி-இச் சேதனன் பக்கல் உண்டான ஆத்ம குணம் -என்கை

அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் -என்றது –
அவிஞ்ஞாத   சகஸ்ராம்ஸூ -என்றும்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ்ஸூ கமல லேஷணே சதா ஜகத் சமஸ்தஞ்ச பஸ்யன்நபி ஹ்ருதி ஸ்திதித-என்றும் சொல்லுகிற படியே
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே -அவிஜ்ஞாதாயாவாய் இருக்கும் அவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம்-பிரக்ருதி வஸ்யனான  இவன் (புத்தி பூர்வகமாக)பண்ணும் அக்ருத்ய கரணாதி தோஷம் என்கை –

சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் -என்றது -பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிற படியே சர்வ சக்தியான
அவனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் ஆகிற சக்திக்கு விஷயம் –
இவனுடைய சகல அநிஷ்டங்களையும் போக்கி -ஸ்வரூப  அநு குணமான சகல இஷ்டங்களையும் கொடுக்கிற -ரஷணம் -என்கை –

அசக்திக்கு இலக்கு பரித்யாகம் -என்றது
அப்படி சர்வ சக்தியான அவனுடைய அசக்திக்கு விஷயம் துஸ் சஹமாக இவன் செய்யும் தோஷங்களாலே சீறிக் கை விடுகை -என்கை-

—————————————————–

இப்படி ஈஸ்வர குணங்களை அருளிச் செய்து -மேல் சேதன குண விஷயங்களை அருளிச் செய்கிறார் –

சூரணை -299-

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —

(ஆயி ஸ்வாமிகள்-இல்லாத குண கிரஹணமும் உள்ள தோஷ க்ரஹணமும் பண்ண மாட்டாமை —அரியன செய்து -எளியன விடாமல் –மேல் விழும் படி அபிமதானம் படி
இவனுடைய ஆச்சார்ய கடாக்ஷ விகசித ஞானத்துக்கு அசாதாரணமான இலக்கு -அஞ்ஞான ஞாபக சதாசார்யர் யுடைய ஞான பக்தியாதி குணங்கள்-
விகசித ஞானவான் இவனுடைய ஞான கார்யமான அஞ்ஞானத்துக்கு அவஸ்யம் அபேக்ஷிதமான இலக்கு ஆச்சார்யர் இடம் இல்லாத உடைய ப்ரதிபாதம் –தோற்றம்
மிஸ்ர சத்வம் -சுத்த சத்வம் -வாசி –தூ மணி துவளில் மா மணி -தோஷம் இருக்காது -நம் மந்த புத்திக்கு தெரிய வில்லை என்ற எண்ணம் வேண்டுமே –
ஸூயத்னத்தில் அசக்தனான இவனுடைய சத்தா ப்ரயுக்த ப்ராவண்ய கார்யமான சக்திக்கு சரம இலக்கு-பகவத் கைங்கர்யம் தாண்டி பாகவத கைங்கர்யம் தாண்டி சுலபனாய் நித்தியமான ஆச்சார்ய கைங்கர்யம்
அசக்திக்கு முற்பட இலக்கு ஸூ விருத்த அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டானம் -இது முதலில் வர வேன்டும் -கைங்கர்யாதிகள் அப்புறம் என்றபடி ஸ்வரூபம் உஜ்ஜீவிக்க அபேக்ஷித்தமானவை இந்த நான்கும் -)

(இச்சா கிருபை இரக்கம் இனிமை மூன்றுக்கும் இவை வேண்டுமே-ஆச்சார்ய கைங்கர்யம் செய்தால் அதற்குள் பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேரும் -இதுவே சரம தசை –)

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் -என்றது –
இச் சேதனனுடைய ஞானத்துக்கு விஷயம் -மகோ உபாகாரனான ஆசார்யனுடைய சத் குண சமூகம் -என்கை —

அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் -என்றது –
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் -ஆசார்யன் திருமேனி ஸ்வபாவமாய் ஆகந்துகமாய் உள்ள தோஷம் என்கை –

சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் -என்றது-
இவன் பிரவ்ருத்தி சக்திக்கு விஷயம் -ஸ்வ ஆசார்யனுக்கு உகப்பாக செய்யும் கைங்கர்யம் என்கை

அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் –என்றது –
இவனுடைய அசக்திக்கு விஷயம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளான (ப்ரபந்ந ) சாஸ்திர- நிஷித்தங்களில் இவனுடைய அனுஷ்டானம் -என்கை –

——————————————————–

இப்படி இருந்துள்ள நிஷித்தத்தின் படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -300-

நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வரூப ஹானி நிவர்த்தக அசக்தி ரூபமான குண விஷயமான -இது தோஷம் இல்லையே -நிஷித்த அனுஷ்டானம் தான் விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட விசேஷத்வேன நான்கு வகைகள் )

(டம்பம் க்ரோதம் அகங்காரம் தர்மம் விட்ட குருவை ஏற்றுக் கொள்ளக் கூடாது -ஸ்ருதி சொல்ல – ஆச்சார்யர்களை ஏற்படுத்தி தனித்து விடாமல் –காரேய் கருணை ராமானுஜன் – தேர்ந்து எடுக்க வேண்டிய பாரம் நம் மேல் இல்லையே – பரம்பரையா கிடைத்த பின் இது பற்றி நினைவிலே கொள்ள வேண்டாமே –மானஸ தோஷம் ஆச்சார்யருக்கு இல்லை -திருமேனி அடியாக உள்ளவையும் -ஆஸ்ரயிக்கும் பொழுது கண்ணிலே படாதே )

அதாவது
உபாதேயமான குண சதுஷ்டயம் போலே -ஹேயமான நிஷித்தம் தானும் சதுர் விதமாய் இருக்கும் -என்கை –

———————————

அந் நாலு படியான அது தான் எது என்னும் -அபேஷையிலே- அவை தன்னை உத்தேசிக்கிறார் -(நாமங்கள் மட்டுமே பெயர் அளவிலே அருளிச் செய்கிறார் )

சூரணை-301-
அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —

(ஆயி ஸ்வாமிகள்-நரக ஹேது -சாஸ்த்ர நிஷித்தம் செய்வதான -அக்ருத்ய கரணம் –க்ருத்ய அகரணம் சொல்லாமல் விட்டது – -விஷித்த கோஷ்ட்டியில் தானே இது உண்டு -இயற்கையிலே க்ருத்யம் பண்ணுபவன் இல்லையே என்றுமாம் –இத்தைப் பற்ற அத்யந்த குரூரமான பகவத் அபசாரம் –சம்சார ஹேது பாகவத அபசாரம் –தத் ததீய விஷயத்தில் சத்தா நாசகமான -ஆத்ம உளன் என்று சொல்லக் கூட முடியாத அஸஹ்ய அபசாரம் -)

———————————————–

இவற்றினுடைய வேஷம் தான் என்னும் ஆகாங்ஷையிலே -இத்தை அடைவே விவரிக்கிறார்

சூரணை -302-

அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –

(ஆயி ஸ்வாமிகள்-அடைவிலே விவரிக்கிறார் -சாஸ்த்ர நிஷித்தம் செய்வது -பகவத் -சரீர பூதர் –சரீர பர்யந்தம் அநர்த்த ஹேதுவாகும் என்ற அறிவு வேண்டுமே –அச்சமும் இல்லாமல் -செய்கிறோம் -தர்ஜன பார்த்ததும் பிரகாரம் போன்ற பர ஹிம்சை
பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹமான நாக்கால் அபிராப்தமான அந்நிய ஸ்தோத்ரம்
நரக பீரோக்களான -மாம்சம் உண்ணும் சாமான்யம் – சாமான்யர்களும் செய்யாத பர தார பரிக்ராஹ்யம்பர பொருளை கொள்ள நினைக்கும் பொழுதே நரகம் ஹேது -எடுத்தால் மட்டும் இல்லை-பூதங்கள் நெஞ்சு உளுக்கும் படி -உண்மை விளம்பி –அசத்தியம் கதனம் பிராணியை ஹிம்சை பண்ண உண்மையே பேசினாலும் அசத்யமாகுமே
சாஸ்த்ர நிஷித்தமான அபாஷ்ய பஷணம் -ஜாதியாதி -சிஷ்டர்களால் தொடக் கொடாத அவை உண்ணக் கூடாதே -அஸேவ்ய சேவாதிகள் )

(பர ஹிம்சை -தனக்கு தானே ஹிம்சையும் கூடாது -ஸ்வ இதர ஹிம்சை அர்த்தம் இல்லைஅபிசாரத்தால் பகவத் பாகவத ஹிம்சை பண்ணுமவர்களை -விலக்க வேண்டுமே –தலையை அறுப்பதே கருமம் கண்டாய் உண்டே -கிருத்யமாகுமே -பர தூர -அதிக்கிரமித்து செய்யப்பட ஹிம்சையை சொல்லிற்று என்றவாறு –
பூத ஹிதமும் அன்றிக்கே இருக்கும் வசனத்தைச் சொல்லுகை –பசு மாடு -கண் பார்த்தாலும் பேசாதே -வாய் பார்க்கவில்லை -ரிஷி தப்பிய கதை –
மனு ஸ்ம்ருதி மானஸ -மூன்றும் -அபிதானம் சிந்தனை -வீணான பேராசை – சாஸ்திரம் நிஷித்த வாக்கு தோஷம்  சாரீர த்ரிவிதம் -இப்படி பல உண்டே)

பர ஹிம்சை யாவது -ந ஹிம்ஸ்யாத் சர்வ பூதானி -என்கிற விதியை அதிக்ரமித்து பண்ணும் பிராணி பீடை –

பர ஸ்தோத்ரம் ஆவது -ப்ராப்த விஷய ஸ்தோத்ர அர்ஹமான வாக்கைக் கொண்டு – அப்ராப்த விஷயங்களை  ஸ்துதிக்கை –

பர தார பரிக்ரகம் ஆவது -பிறர்க்கு அனந்யார்ஹமான ஸ்த்ரீ விஷயங்களை மோஹாதிகளாலே ஸ்வீகரிக்கை –

பர த்ரவ்ய அபஹாரம் ஆவது -பிறர் உடைமை யானவற்றை -அவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க -பிரகாசமாகவாதல் -அப்ராகாசமாகவாதல் -க்ரஹிக்கை-

அசத்திய கதன -மாவது -யாதாத் த்ருஷ்டார்த்த விஷயமும் -பூத ஹிதமும் அன்றிக்கே இருக்கும் வசனத்தைச் சொல்லுகை –

அபஷ்ய பஷணம் ஆவது -ஜாத்ய ஆஸ்ரம நிமித்த துஷ்டங்களாய் கொண்டு -தனக்கு அப்யபஷம் அன்றிக்கே இருக்கும் அவற்றை பஷிக்கை –

துடக்கமானவை -என்றது –
பர த்ரவ்யேஷ வபித்த்யானம்  மனசா அநிஷ்ட சிந்தனம் விததாபி நிவேசஸ் ச த்ரிவிதம் கர்ம மானஸம்
பாருஷ்ய மன்ரு தஞ்சைவ பைசுநஞ்சைவ சர்வச அநீ பத்த ப்ரலாபஸ் ச வான்மயம் ஸ்யாஸ் சதுர்விதம்
அதத்தா நாமு பாதானம் ஹிம்சா சைவ அவிதானத பர தாரா அபஹாரஸ் ச சாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம் -இத்யாதிகளாலே
மனு ஆதி ஸ்ம்ருதி களிலே சொல்லப் படுகிறவை அநேகம் ஆகையாலே

———————————————

அநந்தரம் பகவத் அபசாரத்தை விவரிக்கிறார் –

சூரணை -303-

பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை

(ஆயி ஸ்வாமிகள்-அத்யந்த நிஷித்தம் இது -தேவதைகள் அங்கம் -என்று கொள்ளாமல் சமமாக சொல்வது -முதல் தெய்வம் மூன்று என்பர் –நம்பாடுவான் பிரதிஜ்ஜை செய்து போன விஷயம் –ப்ரஹ்ம ரஜஸ் கூட செய்யாததை செய்கிறார்களே – அங்கம் என்பதால் இகழவும் கூடாதே -மதிப்பும் வேன்டும் –அங்கி கூட சாம்யம் கொள்ளக் கூடாதே 
கூட பழக்க வந்தவனை சஜாதீய புத்தியுடன் பார்க்கக் கூடாதே -தர்மம் ரக்ஷணத்துக்காக அஜகத் ஸ்வ பாவனாய் ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்தவன் 
கிருபையால் -பெருமையில் ஒன்றுமே குறையாமல் -அவதரித்த -ராம கிருஷ்ண முக்கிய அவதாரங்களில் சஜாதீய புத்தி கூடாதே – அமுக்கிய அவதாரங்கள் மனுஷ்யர் மேல் ஆவேசம் தானே -அங்கே குற்றம் வாராது –
கர்ப்ப வாஸம் -அத்தத்தின் பத்தாம் நாள் -மயங்கும் படி – ஜனன சோகம் மோகம் -சஜாதீய பாவன சாதுர்யம் -அறியாமல் -பாமர மநுஷ்யராக புத்தி பண்ணி அநர்த்தம் படுக்கையும்
தர்சன தூஷண -சாஸ்திரம் படி இல்லாமல் –வர்ணாஸ்ரம விபரீதமான -செய்பவையும் கூடாதே -பிரபன்ன வர்ணம் ஆஸ்ரமம் மாறி -ஸ்வரூப கத விபரீதமான
சேஷத்வமும் பாரதந்தர்யம் இயற்க்கை தானே –உபாயாந்தரங்கள் -ஸூவ கத ஸ்வீகாரம் இவை விரோதம் ஆகுமே -ஸ்வார்த்த ஸ்வ தந்த்ர புத்தியும் கூடாதே
மாத்ரு யோனி பரீஷை யுடன் ஒக்கும் அர்ச்சையில் உபாதான புத்தி பண்ணுவது 
சர்வ பாப சாதன -ஸ்வதந்த்ர -ஆத்ம அபஹாரம் –நம்பினேன் பிறர் நன் பொருளை –
அமுதுபடி சாத்துப்படி பகவத் த்ரவ்யம் திருடுவது -ஆகமம் படி சமர்ப்பிக்கா விட்டாலே திருடு தான் -)

(யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி-பாஷாண்டிகள் -கோரமான நரகத்தில் அழுந்தி சந்த்ர ஸூரியர்கள் இருக்கும் வரை –
உபசாரம்16-ஆரம்பித்து-32- அபசாரங்களை பண்ணுகிறோம் –சர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம)

தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையாவது –
யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி நோஞ்ஞேயா சர்வ கர்ம பஹிஷ் க்ருதா யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபி மன்யதே சயாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்று தேவதாந்தரங்களோடு ஈஸ்வரனை சம புத்தி பண்ணலாகாது என்று சாஸ்திரம் சொல்லா நிற்க –
அந்தப் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜாநாநாம் சர்வாத்மா -தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -நதஸ் சமஸ் சாப்ப் யதிகச்ச த்ருஸ் ஸயதே -என்கிறபடியே ஸ்வ இதர சகல நியாமகனாய் -சமாநாதிக ரஹீதனான -ஈஸ்வரனை -அங்கான் அந்ய தேவதா -என்று -தச் சரீர தயா பிரமாதி தேவதைகளோடு சம புத்தி பண்ணுகை-

ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மனுஷ்ய சஜாதீயதா புத்தி -ஆவது –
அஜோபிசந் நவ்யயத்மா பூதானாம் ஈஸ்வரோபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாமி யாத்மா மாயா -என்கிறபடியே
அஜகத் ஸ்வாபனாய்-அப்ராக்ருத -திவ்ய சமஸ்தானத்தை -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு –
துயரில் மலியும் மனிசர் பிறவி யில் தோன்றி -நிற்கிற நிலை அறியாதே அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக அவன் செய்து காட்டின
கர்ப்ப வாச -ஜனன -சோக -மோஹாதிகளை இட்டு -கர்ம வஸ்யரான மனுஷ்யரோடு சஜாதீயனாக நினைக்கை –

வர்ண ஆஸ்ரம விபரீதமான  உபசாரம் ஆவது -தத் ஆராதன தசையில் -த்ரை வர்ணிக அர்ஹமான வைதிக மந்தரங்களாலே  சதுர்த வர்ணரானவர்கள் ஆராதித்தல் -உத்தம ஆஸ்ரமிகள் முதலானோர் க்ருஹஸ்தவத் தாம்பூல நிவேதனாதிகளை பண்ணுதல் துடக்கமானவை –

அர்ச்சாவதாரத்தில் உபாதான நிரூபணம் ஆவது -தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -இத்யாதிப் படியே
ஆஸ்ரிதர்க்கு அபிமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை -திருமேனியாக அங்கீகரித்து -அதிலே அப்ராக்ருத விக்கிரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணி எழுந்து அருளி இருக்கிற இத்தை அறியாதே -மாத்ரு யோனி பரிஷிகரைப் போலே -இது இன்ன த்ரவ்யம் அன்றோ என்று விக்ரக உபதானத்தை நிரூபிக்கை-

ஆத்ம அபஹாரம் ஆவது –
யோ அந்யதா சந்த மாத்மான மன்யதா ப்ரதிபத்யதே கிந்தே ந நக்ருதுதம்பம் சோரேணே ஆத்ம அபஹாரிணா –என்று
சகல பாப மூலமாகச் சொல்லப் படுகிற -பகவத் ஏக சேஷ பூதமான ஆத்ம வஸ்துவில் -ஸ்வதந்திர புத்தி –

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றை-பிரகாசமாகவாதல்  -அப்ரகாசமாகவாதல் -தனக்கு ஆக்குகை-

துடக்கமானவை -என்றது –
இன்னும் இப்படி க்ரூரமாக சாஸ்த்ரங்களில் சொல்லுமவை பலவும் உண்டாகையாலே
த்வா த்ரிம்சத அபசாராதிகளும்-(32 அபசாரங்கள் )- உண்டு இறே

—————————————-

கீழ் சொன்ன வற்றோபாதி -பகவத் த்ரவ்ய அபஹாரமும் பகவத் அநிஷ்டமாய் இருக்குமோ
என்கிற சங்கையில் -தான் அபஹரிக்கிற மாத்திரம் அன்றிக்கே-அபஹரிப்பார்க்கு
சஹகரிக்கை முதலானவையும் அவனுக்கு அநிஷ்டமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -304-

பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும் அயாசிதமாகவும்  பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும்–

(ஆயி ஸ்வாமிகள்-சர்வமும் அறிவான் உள்ளே இருந்து -சாஷிகளும் பல உண்டே அச்சம் இல்லாமல் -யாசித்து திருடினவற்றை வாங்குவதும் குற்றம் –அவர்களே தக்ஷிணையாக இவற்றைக் கொடுத்தாலும் குற்றமே-கையே அவனது -இத்தைக் கொண்டு பிடிக்காததை கூச்சம் இல்லாமல் -கொள்வதும் – பாபிஷ்டர்களுக்கு சஹகரிப்பதும் – கோயில் நிலங்கள் அபகரித்து பிரபலம் —செய்வார் செய்வது எல்லாம் அறிந்து தத் அனுரூபமாக தண்டிக்க வல்ல ஞான சக்தியாதி பரிபூர்ணனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் புண்படும் படி இருக்குமே)

தான் அபஹரிக்கையாவது -நேர தானே இதுக்கு கர்த்தாவாகச் செய்கை –

அபஹரிப்பார்க்கு  சஹகரிக்கை யாவது -நாம் அபஹரிக்கிறோம் இல்லை என்று நினைத்து அபஹர்த்தாக்களுக்கு அனுமத்யாதிகளாலே சஹாயம் பண்ணுகை –

அவர்கள் பக்கலிலே யாசிதமாக பரிக்கிரக்கை யாவது -நாம் இவ் அபஹாரத்துக்கு கூட்டு அன்றே என்று நினைத்து தான் அவர்கள் பக்கல் சிலவற்றை அபேஷித்து வாங்கிக் கொள்ளுகை

அவர்கள் பக்கலிலே அயாசிதமாக பரிக்கிரக்கை யாவது-நாம் அபேஷித்திலோம் என்று நினைத்து அவர்கள் தரும் அவற்றை வாங்குகை

பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும் -என்றது இவை இத்தனையும் -இவனுடைய உஜ்ஜீவ பரனாய் கிருஷி பண்ணிப் போரும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்துக்கு அநபிமதமாய் இருக்கும்  என்கை

——————————————

அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –

சூரணை -305-

பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள்  அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –

(ஆயி ஸ்வாமிகள்-பகவத் அபசார பரிபாகமான பாகவத அபசாரம் ஆஸ்ரயத்தை அழிக்கும் அஹங்காரம் அல்ப அஸ்திர அர்த்தம் அடியாகவும் –துர் ஆசையை வர்த்தகம் -சத் ஜனங்கள் வெறுக்கும் காமம் அடியாக இவற்றுக்கு -நிவர்த்தகராய் நிற்கும் பரம பாகவதர்கள் பக்கம் நிலை நின்ற அபசாரம்)

அதாவது
பர உத்கர்ஷம் கண்டு சஹியாமைக்கும் ஸ்வ உத்கர்ஷ புத்திக்கும் உடலான அஹங்காரம் அடியாகவும் – அவர்கள் வைஷ்ண ஆகாரத்தைப் புத்தி பண்ணி -இவர்கள் ஆசைப் பட்டது ஒன்றாகில் இவற்றை விட்டுப் பற்றுவோம் என்று இருக்க மாட்டாமல் -அர்த்த காமங்கள் அடியாகவும் – ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செய்யும் விரோதம் -என்கை —

——————————————

அநந்தரம் அசஹ்ய அபசாரத்தை விவரிக்கிறார் -(பகவானாலும் சஹிக்க முடியாமல் இருப்பது அன்றோ -)

சூரணை -306-

அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –

அல்லாத அபசாரங்களில் காட்டிலும் -ஈஸ்வரனுக்கு இது அத்யந்த அசஹ்யமாய்
இருக்கையாலே -அசஹ்ய அபசாரம் -என்கிறது –

(அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-பவத் அஸஹநீய ஆகஸீ—ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்-)

நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்  அசஹமானனாய் இருக்கை யாவது –
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தனமாக அன்றிக்கே -ஹிரணியனைப் போலே பகவத் விஷயமும் பாகவத விஷயமும் என்றால்-காண கேட்க பொறாதபடி இருக்கை-

ஆசார்ய அபசாரம் ஆவது -அவன் அருளிச் செய்த அர்த்தத்தின் படி அனுஷ்டியாமையும் -அவன் உபதேசித்த மந்திர தத் அர்த்தங்களை -அல்ப பிரயோஜனங்களை  நச்சி
அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் -துடக்கமானவை –

தத் பக்த அபசாரமாவது -ஆச்சார்ய பக்தரான ச ப்ரமசாரிகளுடன் ஐக ரஸ்யம் உண்டாய் வர்த்திக்க வேண்டி இருக்க -அது செய்யாமல் –அவர்கள் திறத்தில் பண்ணும் அஸூயையும் அவஞ்சையும்-அவமரியாதையும் – துடக்கமானவை –

————————————————

இப்படி அக்ருத்ய கரணாதி சதுஷ்டைத்தையும் அடைவே விவரித்து அருளி
இவற்றினுடைய க்ரௌர்ய விசேஷங்களையும் -இவை தான் இன்னதுக்கு
விரோதியாய் இருக்கும் என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -307-

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–

(ஆயி ஸ்வாமிகள்-உபய அபசார பரா காஷடை -பகவத் பாகவத -இரண்டுக்கும் எல்லை இது -அர்த்தாத் நிபந்தம் இல்லாமல் அஸஹ்யா அபசாரம் –
ஸ்ருத விபரீத ஆசரணம் -ஆச்சார்யர் இடம் கேட்டதுக்கு விபரீதம் –
ச ப்ரஹ்மசாரிகள் இடம் சமம் புத்தி பண்ணுவதும் ஸ்வரூப நாஸகம் –
சர்வ விரோதி நிவர்த்தக உபாய பூத வைமுக்யத் ஹேதுத்வேண உபாய விரோதி பிராப்திக்கு தடங்கலுமாய் உபேய விரோதியுமாய் இருக்கும்-
அசக்திக்கு இலக்கான நிஷித்த அனுஷ்டானங்களை நான்கையும் விவரித்து
தினசர்யா அனுஷ்டானம் – சரம கைங்கர்ய சோதனம் -பூர்வ தச உஜ்ஜ்வலம் ஆகும் ஸ்வரூபத்தையும் -தத் குண விசேஷங்களும் -இதர தோஷ விசேஷங்களும் சொல்லப் பட்டது)

ஓன்றுக்கு ஓன்று க்ரூரங்களாகையாவது –
அக்ருத்ய கரணத்தில் -பகவத் அபசாரம் க்ரூரமாய் -அதிலும் பாகவத அபசாரம் க்ரூரமாய் -அது தன்னிலும் அசஹ்ய அபசாரம் க்ரூரமாய் இருக்கை-
இதுக்கடி பூர்வங்களில் காட்டில் உத்தர உத்தரங்களில் -பகவன் நிக்கிரஹம் அதிசயித்து இருக்கை –

அக்ருத்ய கரணத்தில் -ஸ்வ ஆஞ்ஞா அதிலங்கனம் அடியான சீற்றம் இறே-

அவ்வளவு அன்றிக்கே -இவ் ஆத்மாவுக்கு ஆத்மாவாய்-அதின் சத்தையே பிடித்துக் கொண்டு போரும் தன் திறத்தில் அபசாரத்தால் வரும் சீற்றம் –

அவ்வளவும் அன்று இறே -ஞாநீத்வாத்மைவ – என்கிற படியே -தனக்கு உயிர் ஆக நினைத்து இருக்கும் பாகவத விஷயங்களில் அஹங்காராதிகள் அடியாக பண்ணும் அபசாரத்தால் வரும் சீற்றம் –

அது தன்னளவும் அன்று இறே நிர் நிபந்தனமாக தன் பக்கலிலும் தன் அடியார் பக்கலிலும் ஆதல் -உபய வைபவ ஞாபகனாய் – உபய அபிமதனான ஆசார்யர் பக்கலிலே ஆதல் -மூவருக்கும் அபிமதரான தத் பக்தர் பக்கலிலே ஆதல் -செய்யும் அபதாரத்தால் வரும் சீற்றம்

ஆகையால் ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாய் இருக்கும் –

அக்ருத்ய கரணத்திலே-பகவத அபசாராதிகளும் அந்தர் பவிக்குமதாய் இருக்க தனித் தனி இப்படிப் பிரித்துச் சொல்லுகிறது இவற்றினுடைய க்ரூர விசேஷங்களைப் பற்ற இறே –

உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமாய் இருக்கை -யாவது –
இவ் ஆத்மாவினுடைய உஜ்ஜீவனத்தில் ஒருப்பட்டு -மென்மேலும் கிருஷி பண்ணுகைக்கு உறுப்பான எம்பெருமானுடைய கிருபைக்கும் –
எப்போதும் இவனுக்கு பிராப்யமாய் இருந்துள்ள அவனுடைய முகோல்லாசத்துக்கும் இலக்காய் இருக்கை –
இரக்கம் உபாயம்- இனிமை உபேயம்-என்னக் கடவது இறே –

ஆகையால் இவ் வக்ருத்ய கரணாதிகள்-நீரிலே நெருப்பு எழுமா போலே -அவன் திரு உள்ளத்திலே நிக்ரஹத்தைக் கிளப்பி -அவனுடைய கிருபையும் உகப்பும் –
இவன் பக்கல் அறும்படி பண்ணுகையாலே -அவற்றை உபாய உபேய விரோதிகள் என்னத் தட்டில்லை –

தனக்குத் தானே தேடும் நன்மை-160 -என்று துடங்கி நமஸ் சப்தார்த்தை விஸ்தரேண பிரதிபாதிக்கையாலும் –
உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயமும்-243 -என்று உகந்து அருளின நில பிரசங்கத்தாலும் –
மேலே -பகவத் கைங்கர்யமும்-274 -என்கிற இடத்தில் -பகவத் சப்தத்தாலும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தி பிரதிபாதகமான ஸ்ரீ மத் பத நாராயண -பதார்த்தங்களை ஸூசிப்பிக்கையாலும் –
244-258-மங்களா சாசன பிரகரணத்தாலும்-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும்
பகவத் கைங்கர்யமும் -274-என்று துடங்கி கிஞ்சித் கரித்தால் ஸ்வரூபம் நிறம் பெறுவது-286- -என்னும் அளவும் சதுர்த்த்யர்தத்தை அருளிச் செய்கையாலும் –
நிஷித்த சாதுர்வித்ய பிரதி பாதன முகேன ப்ராசங்கிகமாக-மீளவும் நமஸ் சப்தார்த்தை பேசுகையாலும்-
இவ்வளவும் உத்தர கண்டார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆக-
இப் பிரகரணத்தால்-
கீழ் உக்த உபாயத்தைக் கொண்டு-79-வரை -உபேயத்தை பெரும் சேதனனுக்கு
உபாய உபேய அதிகார பிரதான அபேஷிதங்களையும்-
மேல் 115-133 வரை -பிரபகாந்தர பரித்யாக ஹேதுவான ஸ்வரூப நாசகத்வாதியையும் –
பிரபத்தியின் ஸ்வரூப அனுகூலத்வாதியையும் –
ஸ்வ கத ஸ்வீகார அனுபாயத்வத்தையும் –
பரகத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
தத் பிராபல்யத்தையும் –
அவனே ஸ்வீ கரிக்கும் இடத்தில் புருஷகாரத்தை முன்னிடும் படியையும் –
உபயரும் முன்னிடும் அதுக்கு பிரயோஜன விசேஷங்களையும் –
உபேய தசையிலும் ப்ராப்தி தசையிலும் -இவன் சேஷத்வ பாரதந்த்ர்யங்களும் –
ஸ்வ தோஷ நிவ்ருத்தியும் –
பர அனுபவ விரோதியாம் படியையும் –
மேல் 160-தன்னால் வரும் நன்மை அவனால் வரும் நன்மைக்கும் உள்ள வாசியையும் –
ஈஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் -என்னும் அத்தையும் –
தன்னைத் தான் நசிப்பிக்கும் பிரகாரத்தையும் –
அஹங்காரமும் விஷயங்களும் ஸ்வரூபேணவும் பாகவத விரோதத்தை விளைத்தும்
இவன் ஸ்வரூபத்தை நசிக்கும் படியையும் –
பாகவத அபசார க்ரௌர்யத்தையும் –
தத் பிரசங்கத்திலே பாகவத மகாத்ம்யத்தையும் –
இவன் தினசர்யையும் –
தினசர்யோக்தங்கள் அடைய சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு
அபேஷிதமான வஸ்தவ்யாதியையும் –
தத் சரம உக்த கர்தவ்ய ரூப கைங்கர்ய வேஷத்தையும் –
கைங்கர்ய தத் பூர்வ தசைகளிலே ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படியையும் –
இவனுக்கு உண்டான குண சதுஷ்ட்யத்தையும்-
தத் விஷய விபாகத்தையும் –
அதில் அசக்தி விஷய நிஷித்த சாதுர்வித்யத்தையும்
சொல்லுகையாலே –
அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லப்பட்டது –

ஆறு பிரகரணங்களில் மூன்றாவதான -அதிகாரி நிஷ்டா பிரகரணம் முற்றிற்று –
ஒன்பது பிரகரணங்களில் ப்ரபந்ந தினசர்ய ஐந்தாவது பிரகரணம் முற்றிற்று

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -249-267-தத் அதிகாரி க்ருத்யம் -பெறுவான் முறை -பிரபன்ன தினசரியா- ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 27, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307-அதிகாரி நிஷ்டா க்ரமம்-பெறுவான் முறை

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307- இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————-

இன்னும் இவ் அர்த்தத்துக்கு உதாரணமாக கீழ்ச் சொன்னவர்கள் காட்டில் வ்யாவிருத்தரான
ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே
என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

(ஆயி ஸ்வாமிகள்-கண்ட காட்சியில் ஸ்நேஹம் இவர்களது -புதியது உண்டு அறியாமல் உள்ளவர்கள் – -நமக்கு நன்மை தேடும் தண்ணியர் -நம் போல் உள்ளவர் என்று தோற்றும்
புரையறக் கலந்த ஆழ்வார்கள் -உத்யோதக கல்பர் -குளப்படி-இவர்கள் ஆழ்வார்களை பார்த்தால் –பிராட்டி ஜனகராஜர் பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஒழிய இவர்கள் என்றபடி என்பர் ஆய் ஸ்வாமிகள் -)

(மதி நலம் பக்தி ரூபா பன்ன ஞானம்- ப்ரேம யுக்தர் –அத்வேஷ ஆபீ முக்கியம் சம்பந்த ஞானம் நமக்கும் உண்டே சேஷம் என்று அறிவோம்- இதனாலே நாமும் இதிலே அன்வயம் என்கிறார்)

இவர்கள்-என்று சக்கரவர்த்தி முதலாக -கீழ் சொன்ன அதிகாரிகள் அடைய பராமர்சிக்கிறது 
ஆனால் பிராட்டியையும் ஒக்க சொல்லலாமா என்னில் -ஆழ்வார்களில் தலைவரான
நம் ஆழ்வாரைக் காட்டிலும் பெரிய ஆழ்வாருக்கு ஏற்றம் சொல்லுகிறவோபாதி –
போக பரவசையான அவளைக் காட்டிலும் மங்களா சாசனத்திலூற்றத்தாலே
ஆழ்வார்களுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை –

ஆனாலும் -நம்முடைய கோடியிலே -என்னலாமோ -என்னில் -இவ் அர்த்த நிஷ்டையில் இவர்களுடைய ஆதிக்யத்தை தர்சிப்பிகைக்காகச் சொன்னது ஆகையாலே விரோதம் இல்லை –

ஆகையால் இவ் விஷய வை லக்ஷண்ய கலுஷ சித்தராய் இதுக்கு என் வருகிறதோ என்று பரிந்து நோக்கினவர்களாகக் கீழ்ச் சொல்லப் பட்டவர்கள் எல்லாரும் என்ற படி –

நம்முடைய கோடியிலே என்னும் படி ஆயிற்று என்றது -இவ் விஷயத்திலே அன்வயித்து இருக்கச் செய்தேயும்  பிரேம பாவத்தாலே மங்களா சாசனத்திலூற்றம் அற்று இருக்கும் நம் போல்வர் மாத்ரம் என்று சொல்லாம் படி ஆயிற்று என்றபடி –

ஆழ்வார்கள் நிலை -என்றது மயர்வற மதி நலம் பெற்றவர்கள் ஆகையாலே நிரதிசய பிரேம யுக்தரான ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டை என்ற படி —

—————————————————–

இவ் வாழ்வார்கள் தாங்கள் மங்களா சாசனத்தில் வந்தால் தங்களில் ஒப்பர்களோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும்
போல் அல்லர் பெரிய ஆழ்வார்-

(ஆயி ஸ்வாமிகள்–ஏக சப்தத்தால் ஆழ்வார்கள் -பரஸ்பர சாம்யம் இருப்பதால் கீழே சொல்லி  –தாரதம்யம் இல்லா ஞானம் பக்தி வைராக்யம் –பர்வத பரம அணு வாசி உண்டே மங்களா சாசனத்தில் வந்தால் –அனைவரும் கூடினாலும் இவருக்கு ஒரு புடையாக மாட்டார்கள்)

அதாவது
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் பெரிய ஆழ்வாருக்கும் நெடு வாசி உண்டு என்கை-

—————————————–

அவர்களைப் பற்ற இவர்க்கு இதில் ஏற்றம் எது என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –
இவர்க்கு இது நித்யம் –

(கதறுவது எப்போதோ கூடுவோம் இதுவே இவர்களுக்கு நித்யம் -மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்களில் -தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றி -பொங்கும் பரிவால் -பெரியாழ்வார் அன்றோஇலஷ்மணன் பரதன் சத்ருக்கனன் மூவரையும் மற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆண்டாள்பெருமாளை அன்று மற்று ஓன்று அறியா பரதனை அன்றி மற்று ஓன்று அறியா நிஷ்டையாலேநித்யம் மங்களா சாசனம் இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கைத்தல சேவை யுடன் அரையர் -நித்ய அனுஷ்டானம்
ஆற்றாமையால் வரும் ஸூவ ஸம்ருத்தி அன்வய சம்பாவனை அவர்களுக்கு உண்டே -உயர்நிலை சுயநிலம் –பகவானுக்கு கைங்கர்யம் அடியேனுக்கு அஹங்காரத்தால் இல்லை -ஆற்றாமையால் அன்றோ –பர ஸம்ருத்தி ஏக வேஷம் மங்களா சாசனம் அன்றோ
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -பாட அடியேன் வேண்டுமே -சாமர்த்தியமான -திரு மாங்கல்யம் உடன் நீ நூறு வருஷம் இருக்க வேன்டும் போலே
அவர்களுக்கு தேடிப் பிடிக்கும் படி மங்களா சாசனம் – இவருக்கு பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் -ஸூ ஸம்ருத்தி அன்வய கந்தம் இல்லாத  ஞான திசையிலும் ப்ரேம திசையிலும் இவருக்கு -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்த ஞான தசையிலும் மங்களா சாசனம் உண்டே இவருக்கு –அடியோம் –பல்லாண்டு –சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு –மூன்றையும் காட்டி அடியோம் பல்லாண்டு இந்த விபூதியில் -கலங்கி ப்ரேம தசையில் பல்லாண்டு சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு அங்கே அதீத ஞான தசை – )

(மயர்வற மதி நலம் உடையவர் என்னாமல் பெற்றவர் -நிர்ஹேதுகமாக பகவானால் -அக்லிஷ்ட்ட ஞானம் –சிரமம் இல்லாமல் பெற்ற பகவத் பக்தி ஞானம் வைராக்யம் அன்றோ
பெண்மையை –அவாவும் தோளினாய்–ஸம்ஸ்லேஷிக்க ஆசைப்படுவார்கள் அவர்கள் -இவரோ அஸ்தானே பய சங்கை -போற்றி காதாசித்தம் அவர்களுக்கு -பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுவார் இவர் -ஞான தசையிலும் ப்ரேம ஸ்வ பாவம் இவருக்கு)

அதாவது –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமை  ஒத்து இருக்கச் செய்தே -வைர உருக்காய்- ஆண்களையும் பெண்ணுடை உடுத்தும் பாகவத விக்ரஹ வைலக்ஷண்யத்தை அநு சந்தித்தால் -உத்தோரத்தர அனுபவ காமரராக இருக்கும்  மற்ற ஆழ்வார்களுக்கு
பர சம்ருத்தியே பிரயோஜநமான இந்த மங்களா சாசனம்  எப்போதும் ஒக்க இன்றிகே எங்கேனும் ஒரு தசையிலே தேடிப் பிடிக்க வேண்டும்படியாய் இருக்கும் –
தத் வை லக்ஷண்யத்தை தர்சன அநந்தரம் தத் அனுபவ பரராகை அன்றிகே  அஸ்தானே பய சங்கை பண்ணி  திருப் பல்லாண்டு பாடும் பிரேம ஸ்வாபரான இவருக்கு இந்த மங்களா சாசனம் சர்வ கால வர்த்தியாய் செல்லும் என்கை —

————————————————–

அதுக்கு ஹேது ஏன் என்ன  அருளிச் செய்கிறார் –

சூரணை -252-

அவர்களுடைய ஆழங்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-அவர்களைப் போல இள நெஞ்சு அல்லாதவர் இவர் -அழகை அனுபவிக்காமல் என் வருகிறதோ என்பர் -ரெங்க ராட்டினம் பார்ப்பத்துக்கும்-எந்த்ரா ரூடேன மாயயா -ரெங்கனே ராட்டினமாக பண்ணுபவன் என்ற எண்ணம் வாசி உண்டே-ஸுந்தர்ய சபலர்-அவர்கள் -சுழித்து குமிழ் நீரூட்டும் அகாத ஸுந்தர்யம் –மங்களா சாசன சபலர் -நாம் ஐஸ்வர்ய சபலர் – அவன் ஆஸ்ரித சபலன் –அனைவருக்கும் சபல புத்தி-ஸுந்தர்யத்தின் இனிமையில் கண் வைப்பார்கள் அவர்கள் – -இவர் மேன்மையில் கண் வைப்பார்-)

(இளவரசன் அழகு -அழகில் முக்யத்வம் அவர்களது -இளவரசில் கண் வைத்தார் இவர்-அனுபவ பரரான அவர்கள்-மரகத குன்றம் ஒக்கும் -அழகு -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் -இனிமையே முக்கியம் அவர்களுக்கு -மங்களா சாசன பரரான இவர்-மல்லாண்ட தோள்களுக்கு பல்லாண்டு இவர் -)

அதாவது –
அனுபவ பரரான அவர்களை  த்ருஷ்டி சித்த அபஹாரம் பண்ணி  ஆழங்கால் படுத்தும் அவனுடைய சௌந்தர்யம் தானே  அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சி  மேன்மேலும் காப்பிடும்படி  மங்களா சாசன பரரான இவர்க்குத் தரித்து நின்று மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடான நிலமாய் இருக்கும் என்கை –

————————————-

இவருக்கு பய ஹேது எங்கனே  என்னும்  அபேஷையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -253-

அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது –
இவருக்கு உபய விருத்திக்கும் ஹேதுவாய்
ஸ்வரூபத்தை கரை ஏற்றும் – 

(பகவத் பாகவத சேஷத்வம் -தத் ததீய -உபய சேஷத்வம்-அழகை அனுபவிக்க கைங்கர்யம் நழுவுமே -ஸ்வரூபம் அழியுமே – உபய விருத்தி -இவருக்கு வளரப் பண்ணும் ஸுந்தர்ய அபிலாஷைகள் -)

(ஆயி ஸ்வாமிகள்-ஆற்றாமை கரை புரண்டு -ஸ்வரூபம் போகுமே-ஸூ பிரயோஜன நிவ்ருத்தி பயன் தத் சேஷத்வ பலன்அந்த சேஷத்வத்தை ஒழிக்கும் இவர்களுக்கு – இதுவே போன பின்பு ததீய சேஷத்வம் பற்றி கேட்க வேண்டுமோநமக்கே நலமாதலில் -ஸூவ பிரயோஜனம் உண்டே -சாதன பக்தி -ஓதி நாமம் குளித்து –பயப்படுத்துகிறார் திருப் புல்லாணி பெருமாளை-ததேக சேஷம் -உருவு அழிக்கும்  ஸுந்தர்யம் தன்னில் ஏக தேசத்தில் அழுத்தி ததீய சேஷத்வத்தை இழக்கப் பண்ணுமே–இது த்யாஜ்யம் அது உத்தேச்யம் என்று போக மாட்டார்களே  ஸுந்தர்யம் வெளி விழுங்கில் என் ஆகும் என்று பீத பீதராய்-அடியோமோடும் –வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு —பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு —அடியோமோடும் முதலில் -யசோதை பாவனை உண்டே –
பகவத் சேஷத்வம் வளர்ந்து அது மூட்ட -ததீயருக்கும் பல்லாண்டு -உபயமும் விருத்தி -அதே அழகு இப்படி அவர்களையும் இவரையும் பண்ணுமே –ததீய சேஷத்வ பர்யந்த தத்சேஷத்வம்பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனம் ஆகிய கரை ஏற்றும் – குமிழ் நீர் உண்ணுவார்கள் அவர்கள் ஸூ பிரயோஜனத்தால் –இது தான் நதி -இதன் கரையே பர ஸம்ருத்தி ஸுந்த்ரம் ஆஸ்ரய விஷயத்தில் மங்களா சாசனம் -தத் சேஷத்வ -ததீய சேஷத்வம் –சர்வ ததீய சேஷத்வம் -விருத்தம் -சேவடி -நின்னோடும் தத் சேஷத்வம் – மங்கை ஆழியும் ததீய சேஷத்வம் – அடியோமோடும் -சர்வ ததீய சேஷத்வம்-பிரதம மத்யம பத சித்தம் தானே தத் சேஷத்வமும் ததீய சேஷத்வம் -)

(எட்டாம் பத்தில்-கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்-உபய சேஷத்வத்தையும் -அநு சந்திக்கும் படி – சொல்லி -ஒன்பதாம் பத்தில் –வண்டே கரியாக வந்து கை விட்டு போனார் —
நமக்கே நலமாதலில் -முன்பே திருக் கல்யாணம் ஆனது என்று -பெருமாள் சொல்லும் படியான வார்த்தை -கை விட்ட குற்றம் கூடாதே –பயப்படுத்த -யாம் மடலூர்த்தூம் போலே பயத்திலே ஒருப்படுத்தி கார்யம் கொள்வார்களே  மடல் எடுத்து பலப்படுத்தினார் இவர்மன்னு வட நெறியே வேண்டி பயப்படுத்துவதற்காக சொன்னதும் ஸூ பிரயோஜனம் வர அர்ஹதை காட்டியவை பல இடங்களில் உண்டே –
ஒரே ஸுந்தர்யம் அவர்களை அப்படி பண்ணுவித்து இவருக்கு இப்படி பண்ணுவிக்குமே -பர பிரயோஜனம் இவருக்கு ஸூ பிரயோஜன லேஸம் அவர்களுக்கு காத சித்தகம் நித்யம்  ஆழம்கால் மேடு -ஸ்வரூபம் அழித்து வளர்க்கப் பண்ணும் -என்று மூன்று சூரணைகளில் அருளிச் செய்த அர்த்தங்களை சமன்வயப்படுத்துகிறார் -)

அதாவது
பகவத் அனுபவ ஏக பரராய் -தத் அலாபத்தால் ஆற்றாமை கரை புரளும்படி இருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
அநு சந்திக்கும் படி -பிரதம மத்தியம பத சித்தமான பகவத் சேஷத்வமும்-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் -ஆகிய உபய சேஷத்வத்தையும் –
நமக்கே நலமாதலில் -என்னும் படி ஸ்வ பிரயோஜனத்தில் மூட்டியும் -விளம்ப ரோஷத்தாலே 
போகு நம்பீ-
கழகமேறேல் நம்பீ -என்னும்படி ஆக்கியும் –
ஸ்வ பிரவ்ருத்தி ஆகாதோ என்னும் அளவில் –
உங்களோடு எங்களிடை இல்லை -என்று உதறும்படி பண்ணியும் –
வென் சிறைப் புள் -இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும்   அழித்து –
பர அதிசய கரத்வமே  வடிவான ஸ்வரூபத்தை -மங்களா சாசனம் என்பது  ஓன்று அறியாதபடி தன் பக்கலிலே மக்நமாக பண்ணுமதான பகவத் ஸௌந்த்ர்யம் –

அந்த ஸௌந்தர்ய தர்சனத்தில் அனுபவத்தில் நெஞ்சு செல்லாதே -அதுக்கு என் வருகிறதோ என்று வயிறு  எரிந்து காப்பிடுமவரான இவர்க்கு –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
மங்கையும் பல்லாண்டு –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சன்யமும் பல்லாண்டு -என்று
தத் விஷயத்துக்கும் ததீய விஷயத்துக்கும் -மங்களா சாசனம் பண்ணுவிக்கையாலே –
உபய சேஷத்வ விருத்திக்கும் ஹேதுவாய் -ஸ்வரூபத்தை தன் பக்கல் மக்னம் ஆகாதபடி நடத்தும் என்றபடி –

ஆக -அவர்களுக்கு அப்படி ஸ்வரூபத்தை குமிழ் நீர் உண்ணப் பண்ணுகிற அவனுடைய ஸௌந்த்ர்யம் -இவருக்கு இப்படிச் செய்கையாலே அவர்களுடைய ஆழங்கால் தானே இவர்க்கு மேடாய் இருக்கையாலே  அவர்களுக்கு போலே காத சித்தம் ஆகை அன்றிக்கே –
மங்களாசாசனம் இவர்க்கு நித்தியமாய் செல்லும் என்றது ஆயிற்று –

————————————————-

மற்றை ஆழ்வாருக்கு மங்களா சாசனம் காதாசித்தமாகச் செய்தே -இவர்க்கு நித்யம் ஆகைக்கு  நிதானம் இன்னது என்று தர்சிப்பிக்கிறார் கீழ் –
இதுதான் இவர்க்கு நித்யமாக செல்லும்படி தன்னை வ்யக்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -256-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே என்பது –
5-அநிமிஷரைப் பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

(ஆயி ஸ்வாமிகள்-இந்த மங்களாசாசன ஏக யாத்திரை -ஸுகுமார்யத்தால் வந்த தமக்கு பயம் கெட-இவன் மல்லர் நிரசனம் -பிரபல புஜ லஷ்மி ஸ்ரீ மஹா லஷ்மி – சுடர் ஆழி – பாஞ்ச ஜன்யமும் –வீர ஸ்ரீ –ஸ்ரீயபதித்தவம்-– திவ்ய ஆயுதங்கள் காட்ட  -காட்டக் கண்டு –என் வருகிறதோ-கைவல்ய ஐஸ்வர்யார்த்திகளையும் கூட்டி அனுகூலராக்கியும் -அபி சப்தம் பிரதி கூலரையும் -பிரதி யோகி சமுச்சய பரம்ஸ்வ தந்த்ர அபிமான ஸூ போக்த்ருத்வ புத்தியையும்-இந்த இரண்டும் கைவல்யார்த்திக்கு உள்ள தோஷங்கள்  -தேஹாத்ம அபிமானம் -தத் அனுபந்தி போக்த்ருத்வம் -இவை இரண்டும் ஐஸ்வர்யார்த்திகள் தோஷம் அனுகூலர்களை பரம அனுகூலர்களாக்கி சாதனாந்தர சங்கையும் ஸூவ கத ஸ் வீகாரம் மாற்றி – ஸூவ பிரயோஜனத்தையும் மாற்றி –-ராவண வதம் இப்பொழுது நடக்கும் என்று நினைத்து இலங்கை பாழாளாக படை பொருதானுக்குப் பல்லாண்டு பாடுவார் -அதீத அபதானம்-உத்தர காலம் வயிறு எரிவது-பிராப்தி சீமா -பர ஸம்ருத்தி ஏக ஸ்வரூபம் -அங்கும் இதுவே –ஹரி வக்ஷஸ்தல தயா லஷ்ம்யா-தேவர்களுக்கு மங்களத்துக்கு இவளே காரணம்  -விஷ்ணு பராங்முக- அசுரர் -இழந்து-சதா பஸ்யந்தி உன் நித்ரா ஜாக்ரதையாக பார்த்து இருப்பாரையும் சங்கித்து பார்த்து -தாமஸரை உணர்த்துவது போலே –அங்கே சுத்த சத்வமேயாக இருக்கும் -மறந்து பல காலும் உணர்த்த -நியமித்து எழுப்ப -இதுவே தேக யாத்திரையும் கால யாத்திரையும் இவருக்கு -குண அனுசந்தானம் குண அனுபவம் யாத்திரை அவர்களுக்கு -)

(அன்று-இன்று போற்றி -ஆண்டாள் -இவர் சம காலத்தில் போலே-குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற -அன்று இருந்த கோப குமாரர்ர்கள் உடன்-போலே இவரும் குணம் விஷமாகப் படுத்தும் இணைக் கூற்றங்களோ அறியேன் என்றாரே வசம் இழந்து )

அதாவது –
1-தன் ஸௌ குமார்யத்தை கண்டு கலங்கி -இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ
என்று மறுகுகிற இவர் பயத்தை பரிஹரிகைக்காக  மல்ல வர்க்கத்தை அநாயாசேன
அழித்த தோள் வலியைக் காட்ட  இந்த தோள் வலியை நினைத்து மதியாதே  அசூர
ராஷச யுத்தத்தில் புகில் என்னாகக் கடவது என்று -அது தனக்கு பயப்பட்டு மங்களா சாசனம் பண்ணுவது –
உண்டான அவமங்களங்கள் போக்குகைக்கும்  இல்லாத மங்களங்கள் உண்டாக்குகைக்கும் தன் கடாஷமே அமைந்து இருக்கிற இவள் –
அகலகில்லேன் இறையும்–என்று நம்மைப் பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அவமங்களங்கள் உண்டோ -என் செய்யப் படுகிறீர் என்று  லஷ்மீ சம்பந்தத்தைக் காட்ட -இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி -மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது —
இந்த பயத்தை பரிஹரிக்கைகாக  இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி  கல் மதிள் இட்டால் போலே இருக்கிற  இவர்களைப் பாரீர் என்று இரண்டு இடத்திலும் ஏந்தின ஆழ்வார்களைக் காட்ட  அவர்களுக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது –
2-அநந்ய பிரயோஜன தயா அனுகூலரான பகவத் சரணார்த்திகளை மங்களா சாசனத்துக்குத் துணையாக கூட்டிக் கொண்ட அளவால் -பர்யாப்தி பிறவாமையாலே பிரயோஜனாந்தர பர தயா பிரதிகூலரான கேவலரையும்  ஐஸ்வர்யார்த்திகளையும் திருத்தி  மங்களா சாசனத்துக்கு ஆளாகும் படி அனுகூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-இலங்கை பாழ் ஆளாக  படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -இத்யாதியாலே
கீழ்க் கழிந்த காலத்தில் அவன் செய்த அபதானங்களுக்கு  பிற் காலத்திலேயே  சம காலத்தில் போல் வயிறு எரிந்து  மங்களா சாசனம் பண்ணுவது –
4-சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே  என்று பகவத் பிராப்திக்கு பலமும் அந்த மங்களா சாசனமே என்பது –
5-ஸ்நேஹாத அஸ்த்தாந ரஷா வ்யசநிபி ரபயம் சார்ங்க சக்ராசி முக்க்யை-என்கிறபடியே
அஸ்தானே ரஷா வ்யசநிகள் ஆகையாலே  அநிமிஷராய் இருக்கிற திவ்யாயுத ஆழ்வார்கள்
முதலானவரைப் பார்த்து  குண வித்தராய்  நஞ்சுண்டாரைப் போலே உந்தாமை அறியாது இருத்தல்  அனுபவத்திலே அழுந்தி கைங்கர்ய பரராய் இருத்தல் செய்யாதே  உணர்ந்து நோக்குங்கோள் என்று பல காலும் சொல்லுவதாய்க் கொண்டு இவ் மங்களா சாசனமே விருத்தியாய்ச் செல்லும் என்கை –

—————————————————

இப்படி மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி -பிரதி கூலரை அனுகூலர் ஆக்குகைக்கு பண்ணுகிற உபதேசம் திருப் பல்லாண்டு ஒன்றிலும் அன்றோ உள்ளது -மேல் இவர் உபதேசித்த இடங்களில் அல்லாதார் உபதேசத்தில் காட்டிலும் வ்யாவிருத்தி என் என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார்

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்
தனிமையைத் தவிர்க்கை அன்றிக்கே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

(ஆயி ஸ்வாமிகள்-பெரியாழ்வாருக்கும் பாஷ்யகாரருக்கும் சாம்யம் – உபயருக்கும் -உபதேசித்து நிறுத்துவது வேதாந்தம் அறுதி இட்டு -நிர்ணயம் -ஸ்ரீ பாஷ்யம் முகேன-ஆளவந்தாரின் மூன்றில் ஓன்று இது -கிரந்த நிர்மாணம் -பண்ணி – வேண்டிய வேதங்கள் ஓதினார் பெரியாழ்வார் -வேதாந்த நிர்ணயம் சமஸ்க்ருதம் தமிழ் -இரண்டாலும் -நிர்ணயம் -மங்களா சாசனம் தானே வேதாந்த தாத்பர்யம்-பிரதிகூலர் அனுகூலராக மற்ற ஆழ்வார்கள் திருத்தி -இது மங்களா சாசனமாக பர்யந்தம் இவர்கள் இருவருமே
திரு குருகூர் அதனை உள்ளத்து கொள்மின் -உம்மை உய்யக் கொண்டு போக -தனிமை போக -இனி யாரைக் கொண்டு உஸாக –என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -தன் தனிமை தீர்க்கவும் -உபதேசம் உண்டே –
ஆளும் ஆளார் -பூ ஏந்தினால் போலே இருப்பதும் தலை சுமையாக நினைத்துஉபதேச வஸ்துவின் ஸுகுமார்யம் அறிந்து தம்மைப் போலே மங்களா சாசனம் பண்ண ஆள் இல்லாமையால் –குறையை நிறைவேற்ற ஆள் இல்லை -அழுதார் –பகவான் தனிமையை தீர்க்க ஆள் இல்லையே-தனிமையை தவிர்ப்பித்து -பெரியாழ்வார் -பலர் உண்டாக முயன்று வெற்றி அடைந்துசமன்வய அவிரோத சாதன பல ரூப அத்யாய சதுஷ்டய வேதாந்த -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -அவனே காரணம் -அவனே உபாயம் -அவனே பலம் -என்பதே நான்குக்கும் –இப்படி ஆகார வேதாந்தத்தின் -யதார்த்த நிர்ணய ஸ்ரீ பாஷ்யம் —அவனுக்காக வந்து கைங்கர்யம் -அவன் தனிமையை தீர்த்து –திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கி –
கலியும் கெடும் காண்மின் ஸூசிப்பித்து நம்மாழ்வார் பாதுகையாய் இருந்து அவர் ஆசைப்பட்டதை முடித்து வைத்தார் –வேண்டிய வேதங்கள் ஓதி வேதாந்த நிர்ணயம் பண்ணிய பெரியாழ்வார் –அனுகூல பிரதிகூல வாசி இல்லாமல் அனைவருக்கும் –
பிரயோஜனாந்தர பரர்கள் இவருக்கு பிரதிகூலர் – வேதாந்தத்துக்கு பிரதிகூலர்களுக்கு ஸ்ரீ பாஷ்யகாரர் – உபதேச வஸ்துவின் சீர்மையை அறிந்து அவருக்குத் தனிமை தவிர்த்து சகாயம் வேண்டிய இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு வியாவ்ருத்தம் உண்டே -)

(கைங்கர்யத்தில் அந்நிய பரராய் -லீலா விபூதியில் போகத்தில் ஆழ்ந்து-நித்ய விபூதியில் குண அனுபவத்தில் ஆழ்ந்து அந்நிய பரராக இருக்க -இவர் உபதேசித்து திருத்தினார்
இவர்களுடைய ப்ரேம ஆதிக்ய ஹேதுக -அஸ்தான சங்கா க்ருதவிபூதி த்வய மங்களா சாசன அர்ஹ புருஷ அபாவம் -அனுசந்தான ஆயத பகவத் அஸஹாயத்வம் -திருப்பல்லாண்டு -உறகல்-இத்யாதி -உபக்ரம உப சம்ஹாரம் -மங்களா சாசனம் உண்டே –
ஆளவந்தார் மநோ ஹர க்ருத ஸ்ரீ பாஷ்யம் க்ருதம் –-தாத்பர்யம் -காட்டி -யாதாத்ம்ய ஞானம் –உபதேச விதேய சாஸ்திரம் -காரணத்தை தியானித்து -கைங்கர்யத்துக்கு ஆள்களை சேர்த்து –பலமே மங்களா சாசனம் -அனுஷ்டான பர்யந்தமாக காட்டி அருளி-ஸ்ரீ பாஷ்யகாரர் -பெரியாழ்வார் ஆளவந்தார் ஸ்ரீ பாஷ்யகாரர் -சேர்ந்து செய்த இந்த பேசிற்றே பேசும் ஏக கண்டர் -)

அதாவது
பரோ உபதேசத்தில் வந்தால்  மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போல் –
உபதேசிக்கிறவர் தம்மிடம் கேட்கிற சம்சாரிகளுடைய அநாதி அஜ்ஞாநத்தாலே நல் துணையான பகவத் விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும் 
வக்த்தாக்களான தங்களுடைய பகவத் குண அநு சந்தான தசையில்  போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த தனிமையையும் தவிர்க்கை பிரயோஜனமாக உபதேசிக்கை அன்றிக்கே  சௌகுமார்ய அநு சந்தானத்தாலே வயிறு மறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்த இடத்தில் அடைய அந்ய பரராய் தோற்றுகையாலே –
உபய விபூதியிலும் பரிகைக்கு ஆளில்லை  தம் வாசி அறிந்து பரிந்து நோக்குகைக்கும்  ஒரு ஆளும் ஆளுகிறிலர் என்று பேசும்படி இருக்கிற நிரதிசய சௌகுமார்ய யுக்தனான சர்வேஸ்வரனுடைய தனிமை தீர மங்களா சாசனத்துக்கு இவர்கள் ஆளாக வேணும் என்று இதுவே பிரயோஜனமாக வாயிற்று –பரம காருணிகரான பிராமாணிகரான ஆச்சர்யர்களில் பாஷ்யகாரரும்  மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்களில்  இவ் வாழ்வாரும் உபதேசித்து அருளுவர் என்கை-

ஆகையால் –
இவ் வாழ்வார் பிரதிகூலரை அனுகூலராக-(அனுகூலர் ஆகும்படியாக )- உபதேசிக்கும் இடம் எல்லாம் மங்களா சாசன அர்த்தமாக என்னக் குறை இல்லை -என்று கருத்து –

எம்பெருமானார் என்னாதே பாஷ்ய காரர் என்றது -ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே வேதாந்த தாத்பர்யம் பண்ணி அருளினவர் என்னும் வைபவம் தோற்றுகைக்காக–

—————————————

மயர்வற மதி நலம் பெற்றவர்கள் எல்லாருக்கும் -சத்தா சம்ருத்திகள் -பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலேயாக   அன்றோ தோற்றுகிறது-
அவ்வாகாரம் இவர்க்கும் ஒவ்வாதோ –
அப் போதைக்கு மங்களா சாசனமே யாத்ரையாக நடக்கும் என்னுமது கூடும்படி என்-என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்
பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு
மங்களா சாசனத்தாலே –

(ஆயி ஸ்வாமிகள்-இருப்பதும் செழிப்பாக இருப்பதும் இது ஒன்றாலே – தர்சனம் அனுபவம் கைங்கர்யகளும் இதுக்காக தானே –அபிலாஷை மற்றவர்களுக்கு-அவர் வீதி ஒரு நாள் ஜாலாகிரந்தரத்தாலே காண வாராய் – ஸக்ருத் தர்சனம் போதும் -துவர்ந்து போகாமல் இருக்க –சத்தை இருக்க தர்சனம்–ஸம்ருத்திக்கு அனுபவமும் கைங்கர்யமும் எல்லாம்  சேஷத்வ ரூப ஸம்ருத்தி–இருக்க தர்சனம் -செழிப்பாக இருக்க இவை-அனுபவமும் கைங்கர்யமும் – வேன்டும்-ஸுகுமார்ய ஏக ஸம்ருத்தி -அடியோம் என்கிற  தர்சனம் சத்தைக்கு வாழ இது வேன்டும் சூழ்ந்து இருந்து ஏத்துவார் என்கிற ஸம்ருத்தியும் பல்லாண்டு என்கிற மங்களா சாசனத்தாலே தானே இவருக்கு )

சத்தை யாவது -தாங்கள் உளராகை இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே  தத் தர்சனத்தாலேயாய் இருக்கும் –
அவராவி துவராமுன் -அவர் வீதி ஒரு நாள் -அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு ஜாலா கிரந்தரத்திலே ஆகிலும்
ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே ஒரு நாள் போக அமையும் என்று சொல்-என்கையாலே  தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம் சித்தம் இறே–

சம்ருத்தியாவது  -உளராய் இருக்கிற மாத்ரம் அன்றிக்கே மேலுண்டாய் செல்லும் தழைப்பு -அது அவர்களுக்கு
அந்தாமத்து  அன்பு -முடிச்சோதி-துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும் —
அன்றிகே –
தர்சன  அனுபவங்கள் இரண்டாலும் சத்தையும் -கைங்கர்யத்தால் சம்ருத்தியுமாக சொல்லவுமாம்–
அங்கனம் அன்றிக்கே –
அந்த சத்தை பிராவண்ய கார்யமான அனுபவம் இல்லாத போது குலையும்  என்று இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும் –
நாளை விநியோகம் கொள்ளுகிறோம் என்னில் அழுகவும் கூட சத்தை இல்லை என்று கைங்கர்யம் சத்தா ஹேதுவாக அநு சந்தானத்திலே சொல்லுகையாலும் –
கண்டு களிப்பன் என்று தர்சனம் தான் சம்ருத்தி ஹேதுவாகவும் தோற்றுகையாலும்-
சத்தைக்கும் சம்ருத்திக்கும் மூன்றுமே காரணமாம் என்னவுமாம் –

மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு இவற்றுக்கு என் வருகிறதோ என்று வயிறு எரிந்து மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு  மங்களா சாசன விச்சேதம் வரில் தாமுளராக மாட்டாமையாலும் –
அப்படி அவிச்சின்னமாக  செல்லுகை தானே தழைப்புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலேயாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களா சாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –

——————————–

ஆக – மங்களா சாசனத்தில் -பெரிய ஆழ்வாருக்கு உண்டான -அநவரத நிஷ்டையை தர்சிப்பித்தார் கீழ் –
இனி மேல் அவருடைய யாத்ரையே நமக்கு எல்லாருக்கும் யாத்ரையாக வேணும் என்று –
முன்பு தினசரியையில் யுக்தமான மங்களா சாசனத்தினுடைய அவஸ்ய கர்தவ்யதையை அருளி செய்கிறார் –

சூரணை -257-

உகந்து அருளின நிலங்களை
அநு சந்தித்தால்
ஊணும் உறக்கமும் இன்றிக்கே
இவருடைய யாத்ரையே
நமக்கு எல்லாருக்கும்
யாத்ரையாக வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-இது நமக்கு உபதேசம் -அவர்களுக்கு தர்சநாதிகளால் பிறக்குமது எல்லாம் மங்களாசாசனம் -தானுகந்த ஊர் எல்லாம்-உகந்து அருளினை நிலங்களுடைய –
வைலக்ஷண்யத்தை -ப்ரீதி புரஸ்தரமாக அனுசந்தித்தால் -உண்ணா நாள் பசி ஆவது ஒன்றுமே இல்லை – உன பாதம் நண்ணா நாள் -உண்ணும் நாள் இல்லை உறக்கமும் தான் இல்லை –உண்ணாது உறங்காது ஒலி கடலை அடைத்த பெருமாள் –கோல வில்லி ராமன் -வீர ராகவனை நினைக்க –சரீர ஸ்திதி ஹேதுவான -ஊணும் தத் லகுவாக ஹேதுவான உறக்கமும் –மூச்சாடுகை அன்றியே -மங்களா சாசனம் -இவருடைய -மறுவில்லாத -சரம யாத்திரையே வெறும் ஊணும் உறக்கமும் -பல்லாண்டு என்று மேல் எழச் சொல்வது மட்டுமே யாத்திரையாக இருக்கும் நமக்கு -அவர் அருளாலே நிரந்தர யாத்திரையாக வேணும்-இதுவே சேஷத்வ சித்தியாகும் அபாய பஹூள்யமான தேசம் -அநபாயினி–நித்ய பிரிவின்மை – அபாயம் -பிரிவு -)

அதாவது –
அத்யந்த ஸூகுமாரனான சர்வேஸ்வரன் -ஆஸ்ரித ஸூலபத் வர்த்தமாக தன்னை அமைத்துக் கொண்டு -தான் உகந்த வூர் என்னும்படி –
தான் அத்ய ஆதாரத்தைப் பண்ணி வர்த்திக்கும் -கோவில் திருமலை முதலான திவ்ய தேசங்களை அநு சந்தித்தால் –
அபாய பஹூள்யமான தேசம் ஆகையாலே இங்கு எழுந்து அருளி நிற்கிற நிலைக்கு
ஏதேனும் ஒரு தீங்குகள் வரில் என்னாகக் கடவதோ என்னும் வயிறு எரிச்சலாலே
ஆகார நித்ரைகளிலும்  அந்வயம் இன்றிக்கே –
நிரதிசய பிரேம யுக்தரான இவ் வாழ்வாருடைய நிரந்தர மங்களா சாசன யாத்ரையே
சேஷ பூதரான நமக்கு எல்லாம் யாத்ரையாக வேணும் -என்கை-

———————————–

உக்த அர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –

சூரணை -258-
ஆகையால் மங்களா சாசனம் ஸ்வரூப அநு குணம்-

(ஆயி ஸ்வாமிகள்-இதுவே தாரகம் -இவருடைய சரம அதிகாரம் -புஷ்ப்ப கைங்கர்யத்தை விட வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தத்தை விட இதுவே பிராரத்த நீயம் -நித்ய மங்களா சாசனமும் இத்தாலே வரும்உபய சேஷத்வ  கைங்கர்ய விருத்தியும் அதுவே தேக யாத்திரை -அதுக்கு ஆள் தேடி பிடிக்கையும் அதுவே சத்தா ஸம்ருத்திக்கு ஹேதுவாகவும் அதுவே ப்ராப்திக்கு பலமாகவும் -இவருடைய விருத்தியே சத் பிரார்த்த நீயம்நிரதிசய ஸுந்தர்ய விசிஷ்ட சேஷிக்கு மங்கள சாசனம் -தத் ஸுகுமார்ய அனுசந்தான ஜெனித ப்ரேம பரவச சேஷ பூத சரம ஸ்வரூப அனுரூபம் -ஸ்வரூப விருத்தம் அல்ல என்று நிகமிக்கிறார்-)

(ராக பிராப்தமான மங்களா சாசனத்துக்கு ஸூ பிரயோஜக பரம்பரயா அவஸ்ய கர்தவ்யம் -அவாப்த ஸமஸ்த காமனுக்கு இத்தால் ஓன்று உண்டாக வேண்டாம்–இது ஒரு ஸ்வபாவ விசேஷம் என்று அவன் திரு உள்ளம் நிரதிசய ப்ரீதி அதிசயத்துக்கு ஹேதுவாகுமே -அதிசய ஆசாசனம் ஆகும் – சேஷிக்கு அதிசயத்தை விளைப்பதே சேஷ பூதனுக்கு கர்தவ்யம் -ஏற்புடையதே –)

அதாவது –
இப்படி சேஷ பூதரான வர்களுக்கு எல்லாருக்கும் அவஸ்ய கர்த்தவ்யமாய் இருப்பது ஓன்று ஆகையாலே – மங்களா சாசனம் ஸ்வரூபதுக்கு சேரும் என்கை –
சேஷ வஸ்து வாகில்-சேஷிக்கு அதிசயத்தை விளைத்தே –தன் ஸ்வரூப சித்தி ஆகையாலே 
சேஷிக்கு அதிசயத்தை யாசாசிக்கிற இது சேஷ பூதனான இவனுடைய ஸ்வரூபத்துக்கு அநு குணம் இறே —

——————————————-

இப்படி தினசரியையில் உக்தமான மங்களா சாசனத்தினுடைய ஸ்வரூப விருத்தத்வ சங்கையை பரிகரித்த அநந்தரம்-
அனுகூல சஹவாசம் –என்ற இடத்தில் சொன்ன அனுகூலருடைய லஷணத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -259-

அனுகூலர் ஆகிறார்
ஞான பக்தி வைராக்யங்களிட்டு மாறினாப்போல வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கும் பரமார்த்தர் —

(ஆயி ஸ்வாமிகள்-இனி -அர்த்தஅந்தர ஸூசகம் -வேறே விஷயம் தொடக்கம் -ஞானாதி பிரேமம் வைராக்யம் -வளர்த்துக் கொடுக்கும் ஸஹவாஸிகள் –
தத்வ த்ரய விஷயீ கரிக்கும் ஞானம் – ஈஸ்வர ஞானம் அடியான பக்தி-ராகம் தத்வ த்வயம் பற்றி வைராக்யம் -நிஸ்ப்ருஹை ‘வைஷ்ணவ அலங்காரங்கள் இவை –
ஒவ் ஒன்றிலே மட்டும் நிலை நில்லாமல் –ஒவ் ஒன்றிலும் நிலைத்து இருப்பவர்கள் -உண்டோ ஒப்பு -பெரியாழ்வாருக்கும் நம்மாழ்வாருக்கும்-உபதேச ரத்னமாலையில் –
இட்டு மாறினாப் போலே என்றது –வாசனை மிகுந்து — தோள் கண்டார் தோளே கண்டார் போலே –சமுதாய ரூபமான வடிவு -காணலாம் படி புற வெள்ளம் இடும் படி இருக்கும் பரம ஆர்த்தர்  –ஞான அனுரூபமான பிராப்தி அலாபம்–பக்தி அனுரூப அனுபவ அலாபம் – வைராக்ய அனுரூப விரோதி நிவ்ருத்தி அலாபம் -மூன்றாலும் -தவித்து துடித்து –உடன் கூடுவது என்று கொல் -அதனில் பெரிய அவா -பக்தி – பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா —பெரு மிடறு செய்து கூப்பிடுவார்கள் –இவை எங்கே தெரியும் –வடிவிலே தொடை கொள்ளுவார்கள் -என்றது கண்ணிலே தெரியுமே-காணக் கருதும் கண் -ஏக்கம் காட்டுமே – பொன்னி பேர் ஆறு போலே கண்ண நீர் கொண்டு – உருவொடு பேர் அல்லால் கண் -அரங்கவோ என்று அழைக்கும் திருப் பவளம் – ஆடிப் -பாட அழைக்கும் -வாய் அவனை அல்லது வாழ்த்தாது – கையாரத் தொழுவார் -தோள் அவனை அல்லால் தொழா- ஞானம் பக்தி வைராக்யங்கள் காணலாய் இருக்குமே –ஞான வைராக்ய ராசயே அகாத பகவத் பக்தி சிந்தவே ஞான வைராக்ய ரத்ன குவியல் -ஆழம் கால் காண முடியாத பக்தி கடல் -)

(இட்டு மாறி -மாறி இட்டால் போல்-பதாந்தரம் -முதல் நிர்வாகம் –அன்றிக்கே -இவர் இடமே உத்பத்தியாய் -ஞானவானாய் இருந்து -அது மாறி -பக்திமானாகி -அது மாறி வைராக்ய சீலராய் இருப்பார் என்றுமாம் –புதியது புதியதாக உயர்ந்த தசை என்றவாறு -ஆஸ்திகன் -பரம ஆஸ்திகன் -வைராக்யம் மிக்கு -ஆர்த்தி மிக்கு இனி இனி என்று இருபதின் கால் கூப்பிடுவார் –இப்படி உள்ளோர்களுடன் நாம் ஸஹவாசம் கொள்ள வேன்டும் என்றவாறு -)

அனுகூலர் ஆகிறார் -என்றது
ஞானாதி வர்த்தகர் ஆகையாலே  சஹவாச யோக்யராய் கீழ்ச் சொல்லப்பட்ட அனுகூலர் ஆகிறார் -என்றபடி –
ஞான பக்தி வைராக்யங்கள் ஆவன –
தத்வ யாதாத்ம்ய ஞானமும் – பகவத் ஏஷ விஷையை யான பக்தியும் –
தத் உபய கார்யமாய் வரும் -பகவத் வ்யதிரிக்த விஷய விரக்தியும் -இவை தான் வைஷ்ணவ அலங்காரங்கள் இறே –
இவற்றை இட்டு இறே வைஷ்ணவர்கள் ஏற்றம் சொல்லுவது –
ஆகை இறே நாத முநிகளுடைய திவ்ய வைபவத்தை அருளிச் செய்கிற ஆளவந்தார் –
அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஞான வைராக்ய ராசயே அகாத பகவத் பக்தி சிந்தவே -என்று அருளிச் செய்தது –

இட்டு மாறினாப் போலே -என்றது
ஒரு பதார்த்தம் இருந்த பாத்ரத்திலே -பதார்த்தாந்தரத்தை இட்டு -முன்பு இருந்ததை மாற்றினால் -அதுவே உள்ளதாய் தோற்றுமா போலே –
இந்த ஞானாதிகள் மூன்றும் -ஏக ஆஸ்ர்ய கதமாய் இருக்கச் செய்தே -இவற்றில் ஒரொன்றை பார்க்கும் அளவில் –
ஒன்றை இட்டு மற்றவற்றை மாற்றினாப் போலே இதுவே இவ் வாஸ்ரயத்தில் உள்ளது என்று தோற்றும்படி இருக்கை–

வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கை யாவது –
இவர்கள் வடிவு கண்ட போதே இவற்றோடு இவர்களுக்கு உண்டான சம்பந்தம் க்ரஹிக்கலாம் படி இருக்கை –
த்யாஜ்ய உபாதேய விவேக பூர்வகமான பரிமாற்றத்தாலே ஞானம் வடிவிலே தொடை கொள்ளலாம் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -காலும் எழா கண்ணா நீரும் நில்லா -இத்யாதிப் படியே இருக்கையாலே -பக்தி வடிவிலே தொடை கொள்ளலாம் –
இதர விஷயங்களை கடைக் கணியாமல் இருக்கையாலே வைராக்கியம் வடிவிலே தொடை கொள்ளலாம் –

அன்றிக்கே –
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்  நவ நவ உன்மேஷ சாலிகளாய் வருகையாலே அபூர்வமான ஞானாதிகளை இட்டு
பூர்வத்தில் அவற்றை மாற்றினால் போலே – தங்கள் வடிவிலே இவை காணலாம் படி இருக்கும் பரம ஆர்த்தர் என்னவுமாம்-

பரம ஆர்த்தர் -என்றது –
சம்சாரத்தில் பொருந்தாமையாலும் – பகவத் விஷயத்தை கிட்டப் பெறாமையாலும் –
இனி இதுக்கு மேல் இல்லை என்னும்படியான ஆர்த்தியை உடையவர்கள் -என்கை –

—————————————————-

இவர்களோட்டை ஸஹ வாசத்தால் சித்திக்கும் அது எது -என்ன அருளி செய்கிறார் –

சூரணை -260-

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே
இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல்
தீரக் கடவதாய் இருக்கும்

(ஆயி ஸ்வாமிகள்-ஞானாதிகள் இல்லாத குறை தீரும்உகந்தவன் உகந்து மடை விடவே விளைவது ஒரு நல்ல வயல் செய்யில் -அரை வயிறு படாமல் நிரம்ப நிரந்தரம் நீர் நின்றால் -உடையவன் உபேக்ஷிக்க உலறும் அசல் செய் -உபேக்ஷை அடியாக ஞானாதிகள் பசை அற்று –உலர்ந்த சம்சாரிக்கும் அந்த ரக்ஷகனான பூர்ண கடாக்ஷத்தாலே-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மான்களுடைய  தர்சன ஸ்பர்ச மாத்திரத்தாலே -ஞானாதி பசை இல்லா உறாவுதல் தீர –வறட்சி கெட தோன்ற பொசிந்து காட்டுமா போலே—நெஞ்சப் பெரும் செய்யை யுடையவராக கடவதாய் இருக்கும் –மடல் எடுக்க பாரித்த திருவாய்மொழி காதல் கடல் புரைய விளைவித்த காரமர் கண்ணன் -அனுகூலர் சஹ வாசத்தால் ஞானாதிகள் நமக்கும் உண்டாகும் -என்றவாறு –ஸஹ வாச ரூப சம்பந்தம் -தர்சனம் ஸ்பர்சம் வேண்டுமே -பூ உடன் சேர்ந்த நாறும் மணக்குமே -)

அதாவது
ஒரு வயலிலே நிறைய நீர் நின்றால் -நீரற்று உறாவிக் கிடக்கிற அசல் வயல் -தத் ஆசக்தியால் (தத் அசலாக இருப்பதாலே )வந்த பொசிவாலே வாட்டம் அற்று கிடக்குமா போலே – ஞான பக்தி வைராக்யங்கள் ஆகிய இவை இல்லாமையாலே ஸ்வரூபம் உறாவிக் கிடக்கிறவர்களும் இவற்றால் பரி பூர்ணரான இவர்களோட்டை ஸஹவாச ரூப சம்பந்த்தாலே இவற்றிலே சிறிது அந்வயம் உண்டாய் – இவை நேராக இல்லாமையால் -உண்டான வுறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -என்கை

—————————————-

ஏதத் சகவாசத்தால் -இப்படி உறாவுதல் தீர்ந்து கிடக்கும் அளவோ என்னில் –
இவ்வளவும் அன்று -இந்த ஸ்வபாவ விசேஷங்கள் பிராப்திக்குமாக விளைந்து அறும் என்கிறார் –

சூரணை -261-

ஆறு நீர வர அணித்தானால் – அதுக்கு ஈடான அடையாளங்கள் உண்டாமா போலே –
பிராப்தி அணித்தானவாறே இந்த ஸ்வபாவ விசேஷங்கள்  தன்னடையே விளையக் கடவதாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-மோக்ஷ ப்ராப்தியே ஆற்று நீர் -ஞானாதிகள் வெளிப்படும் இந்த நிலையிலே -பூர்ணமாக விளையும் –கீழே பொசியும் -இப்போது உண்டாக காணா விட்டாலும் –மறைந்து இருந்தாலும் -சரம காலத்தில் வெளிப்படும்-புது நீர் இன்றோ நாளையோ அணித்தானால் வற்றிய ஆற்றில் மணல் திரண்டு –பிராப்தி காலம் அணித்த வாறே -விசத தம ஞான பக்தி வைராக்யம்விசதம் -விசத தரம் – விசத தமம் –சிறப்பான விளக்கமான -நிர் யத்னமாக வளர்ந்து -கைங்கர்யம் செய்ய செய்ய -நிறைவேற பிராப்தி ஸூ சகமாக -சரம பாகமாய் விளையும் -அனுகூல ஸஹ வாஸம் அப்பொழுது பலித்து இல்லை யாகிலும் பிராப்தி காலத்தில் பலியாது ஒழியாது என்றவாறு)

அதாவது –
வற்றிக் கிடக்கிற ஆறு- நீர் வரத்து ஆசன்னவாறே -தத் ஸூசகமான மணல் பொசிகை முதலான அடையாளங்கள் உண்டாமா போலே –
பகவத் பிராப்தி ஆசன்னையான வாறே -தத் ஸூசகமான இந்த ஞானாதி ஸ்வபாவ விசேஷங்கள் ஸ்வயமேவ  விளையக் கடவதாய் இருக்கும் -என்கை –

——————————-

இவை இப்படி விளைந்து வரப் புக்கால் -பிராப்தி அணித்தது என்று தோற்றி இருக்குமோ என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -262-

இவற்றைக் கொண்டு சரம சரீரம் என்று
தனக்கே அறுதி இடலாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-யானே என்னை அறியகிலாத-நிலை தவிர்ந்து –பிராப்தி அணித்தவாறே நாமே அறியும் படி -நமக்கு தெளிவைக் கொடுக்கும்–ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்திகள் இது போல்வனவே —திருவாய் மொழி அனுபவ பரம் -இது அனுஷ்டானத்துக்கு வழி கொடுக்கும்
பரதராஜர் ஆஸ்ரமம் -பரத ஆழ்வான் அறிந்தான் – அன்னலனுடை ஒருவனை நணுகினம் நாமே -இதுவே சரம தசை பரதனுக்கு க்ஷணம் தோறும் புதுக்கணித்து பேறு தப்பாது -என்று –சங்கித்து போன தனக்கே சம்சயம் இல்லாமல் தானே அறுதி இடலாம் படி விசத தமமாக இருக்கும் -)

(கர்மாந்தரேஷூ –பலத்துக்காக ஒன்றுமே செய்யாமல் நீர்ப் பண்டமாக உருகி விரக்தி நிறைந்து உகந்து இருக்கும் பாகவத கைங்கர்யத்தில் ஆழ்ந்து சோம்பல் இல்லாமல் சிரத்தை யுடன் ஆடம்ப வர்ஜனம் லோபி இல்லாமல் க்ரோதம் மோகம் இல்லாமல் -பயமும் அற்று –தேக இந்திரிய சுத்தி -த்ரவ்ய தேச சுத்தி -அகால நித்திரை ஆசனம் ஆண் பெண் கூடுதல் இல்லாமல் – –ஸர்வதா சாஸ்திரம் வழி -பாரவஸ்யம் பிரமாணம் -என்று அறிந்து –நிஷித்த வர்ஜனம் -தயா ஷாந்தி அத்ரோகம் சர்வ ஐந்துஷூ -தயை ஷாந்தி –சத் ஸ்வ பாவங்கள் வந்த பின்பு ஜீவன் பகவானை அடைவான் என்று கண்டு கொள்ள வேண்டும்சாண்டில்ய ஸ்ம்ருதிஇந்த குணங்கள் ஞானம் -பக்தி வைராக்யம் அந்தர்கதம்-பக்தியால் உருகி விரக்தி மற்றவற்றில்)

அதாவது –
இப்படி மேன்மேலும் புதுக் கணித்து விளைந்து வருகிற  ஞான பக்தி வைராக்யங்களைக் கொண்டு இனி நமக்கு ஒரு சரீர பரிக்ரஹம் இல்லை இது சரம சரீரம் என்று தம் மனசுக்கே நிச்சயித்துக் கொள்ளலாய் இருக்கும் -என்கை –

———————————————

ஆக -இப்படி ஸஹவாச விஷயமாக  தினசர்யையில் சொன்ன அனுகூலருடைய
லஷணத்தையும்-தத் ஸஹ வாச பலத்தையும் -அருளிச் செய்து -தத் -அநந்தரம் –
ஸஹ வாச நிவ்ருத்தி விஷயமாகச் சொன்ன பிரதிகூலர் இன்னார் என்னும் இடம்
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -263-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –

(ஆயி ஸ்வாமிகள்-அநு கூல லக்ஷணமும் தத் ஸஹ வாச பலமும் அருளிச் செய்த அநந்தரம் –பிரதி கூல வகை இன்னது என்றும் -உத்தேசயாதி பேதம் இன்னது என்றும் அருளிச் செய்கிறார் –ஞானாதி நாசகராய் கொண்டு -பிரதி கூலர் -ஸஹ வாச யோக்யதை அல்லாத –தேஹாத்ம அபிமானிகள் – ஆத்ம பரமாத்மா விவேகம் அற்ற ஸ்வ தந்த்ரரும்-
பிராப்த சேஷி அபிராப்த சேஷி அறியாத அந்நிய சேஷ பூதரும்-சித்த உபாய விவேகம் அற்ற உபாயாந்தர நிஷ்டரும் -அநு ரூப ப்ரயோஜன பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்-அவன் ப்ரீதிக்கு உகப்பாக -இல்லாமல் அப்ரயோஜன விவேகம் அற்ற – ஸூ ப்ரயோஜன பரர்–)

(ஸ்வம் தந்திரம் -பிரதானம் – ஸ்வ தந்த்ரர்
1-த்ருதீயஅஷரத்தாலே ஆத்மாவினுடைய தேக அதிரிக்தத்தையும் –மகாரார்த்தம் -ஞான ஸ்வரூபன் ஞான குணகன் -அவ்வானவர்க்கு மவ்வானவன் அடியான்
2-பிரதம அஷரத்தில் -சதுர்தியால் -பகவத் சேஷத்வத்தையும் –ஏறிக் கழிந்த லுப்த சதுர்த்தி ததார்த்தம் —
3-மத்யம அஷரத்தில் -தத் அனந்யார்ஹத்வத்தையும்– -கோவிந்தா உனக்கே நாம் ஆட்ச்செய்வோம் உகாரார்த்தம்
4-மத்யம பதத்தால்-அநந்ய சரண்யத்வத்தையும்–நமஸ் -அர்த்தம்
5-சரம பதத்தால் -அநந்ய போக்யத்வத்தையும்-நாராயணாயா அர்த்தம் –
ஒவ் ஒன்றுமே மேல் மேல் கூட்டிச் செல்லுமே -ஐந்தையும் அறியலாமே-அஷ்ட ஸ்லோகி அர்த்தம்-அனுகூலர் ஸஹ வாஸம் தர்சனம் ஸ்பர்சனம் வேண்டுமே -இங்கே பிரதி கூலர் உதார வீக்ஷணை பார்த்தால் ஆபத்து– தள்ளி இருக்க வேன்டும் -)

பிரதிகூலர் ஆகிறார் -என்றது -ஞானாதி நாசகர் ஆகையாலே -ஸஹ வாச யோக்யர் அல்லாராக கீழ்ச் சொன்ன பிரதி கூலர் ஆகிறார் என்றபடி –
1-தேகாத்ம அபிமானிகள்-இத்யாதி -தேகாத்ம அபிமானிகள் ஆகிறார் -காண்கின்ற தேகத்துக்கு அவ்வருகு ஓர் ஆத்மா உண்டு என்று அறியாதே -தேகத்தில் அஹம் புத்தியைப் பண்ணி  இத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கும் அவர்கள் –
2-ஸ்வ தந்த்ரர் ஆகிறார்  தேக அதிரிக்தமான ஆத்ம வஸ்துவை அறிந்து இருக்கச் செய்தே அத்தை தனக்கு உரித்தாகவே நினைத்து ஒரு விஷயத்திலும் சேஷத்வத்துக்கு இசையாதவர்கள் –
3-அந்நிய சேஷ பூதராகிறார்  சேஷத்வத்தை இசைந்து இருக்கச் செய்தே அத்தை அபிராப்த விஷயங்களில் விநியோகித்து இருக்குமவர்கள்
4-உபாயாந்தர நிஷ்டராகிறார் -பிராப்த சேஷி விஷய சேஷத்வத்தை யுடையராய் வைத்தே தத் பிராப்தி யுபாயம் தத் சரணார விந்த சரணா கதி என்று இருக்கை அன்றிக்கே கர்மாதி யுபாயங்களைப் பற்றி நிற்கிறவர்கள்
5-ஸ்வ ப்ரயோஜன பரராகிறார் ஆகிறார் -பிராப்த  சேஷி கமலங்களை -உபாயமாகப் பற்றி இருக்கச் செய்தே  தாங்கள் பற்றின பற்றை உபாயமாக நினைத்தும் -உபேயமான கைங்கர்யத்தை ஸ்வ போக்யமாக  நினைத்தும் இருக்கும் அவர்கள் –

இப்படி இருக்கிற இவர்கள் பிரணவத்தில்
1-த்ருதீய அஷரத்தாலே ஆத்மாவினுடைய தேக அதிரிக்தத்தையும் –
2-பிரதம அஷரத்தில்  சதுர்தியால் பகவத் சேஷத்வத்தையும் –
3-மத்யம அஷரத்தில்  தத் அனந்யார்ஹத்வத்தையும்-
4-மத்யம பதத்தால் அநந்ய சரண்யத்வத்தையும்-
5-சரம பதத்தால்  அநந்ய போக்யத்வத்தையும்  தர்சிக்கும் அதிகாரிக்கு பிரதிகூலர் இறே-

———————————————-

இந்த பிரதி கூல்யதை உபபாதிக்கைக்காக இவர்களுடைய விப்ரதிபத்தி நிபந்தனமான -உத்தேஸ்யாதி பேதங்களை அருளிச் செய்கிறார் –

சூரணை -264-

இவர்களுக்கு உத்தேஸ்யரும் –
உபாய உபேயங்களும் –
பேதித்து இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-இந்த பிரதி கூல்யதை உபபாதிக்கைக்காக இவர்களுடைய விப்ரதிபத்தி நிபந்தனமான -உத்தேஸ்யாதி பேதங்களை அருளி செய்கிறார்-இவர்களுக்கு -பிரதி கூலர்களுக்கு –விப்ரதிபத்தி -ஸ்வரூபத்தை ஜடம் என்றும் -ஸ்வ தந்த்ரன் என்றும் –
அந்நிய சேஷம் என்றும் -ப்ராப்யம் ஸ்வ யத்ன சாத்தியமும் ஸ்வார்த்தமும் என்றும் -வருகிற விப்ரதிபத்தி உடைய பிரதி கூலர்கள்–இவர்களுக்கு -ஸூ அபிமத பிரதரான உத்தேசியர் வேறே வேறே-ஸூ அபிமத -உபாயங்களும் -ஸூ அபிமத உபேயங்களும் -ரஜஸ் தமஸ் குணம் அடியாக பேதித்து இருக்குமே-)

(பக்தி உபாயம் -உத்தேசியர் பெருமாள் உபாசகனுக்கு -பிடித்ததே புருஷார்த்தம் -ஆக மூன்றும் உண்டே –தத் தத் விப்ரபத்தி அடியாக வேறு பட்டு இருக்குமே -யாகத்து ஜ்யோதிஷட ஹோமம் –யாகம் பண்ணுவது உபாதேயம் -ஸ்வர்க்கம் உத்தேச்யம் -எதனால் என்றால் யாகம் -ஆதரணீயர் இங்கே -அர்த்தம் -அடையப் போகும் புருஷார்த்தம் உபேயத்தில் உண்டே –பிரதிகூலருக்கு உபாதேயத்வமும் உத்தேஸ்யத்வமும் இல்லை ஆகையால் ஆதரிக்கத் தக்கவர் என்பதே கொள்ள வேண்டும்  –பல பிரதரே ஆதரணீயர் -இவரே உத்தேஸ்யம் இவர்களுக்கு)

உத்தேஸ்யர் ஆகிறார் ஆதரணீயர்-
அவர்கள் ஆகிறார் இவ்விடத்தில் ஸ்வ அபிமத பிரதரானவர்கள் –

உபாயங்கள் யாவன –
ஸ்வ அபிமத புருஷார்த்த சாதனங்கள் –

உபேயங்கள்  யாவன –
ஸ்வ அபிமத புருஷார்த்தங்கள் –

இவை பேதித்து இருக்கை யாவது –
தத் தத் விப்ரப்ரதிபதி அநு குணமாக வேறு பட்டு இருக்கை —

————————————-

அது தன்னை அடைவே உபபாதிக்கிறார் மேல் –

சூரணை -265-

1-தேக ஆத்மா அபிமானிகளுக்கு உத்தேஸ்யர் –
தேக வர்த்தகரான மனுஷ்யர்கள் –
உபாயம்-அர்த்தம்
உபேயம் -ஐஹிக போகம்–
2-ஸ்வ தந்த்ரர்க்கு உத்தேஸ்யர் -ஸ்வர்க்காதி போக ப்ரதர் –
உபாயம் -கர்ம அனுஷ்டானம் –
உபேயம்-ஸ்வர்க்காதி போகம்-
3-அந்ய சேஷ பூதர்க்கு உத்தேஸ்யர் -பிரம ருத்ராதிகள்
உபாயம் -தத் சமாஸ்ரயணம்
உபேயம் -தத் சாயுஜ்யம் –
4-உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேஸ்யன் -தேவதா அந்தர்யாமியான சர்வேஸ்வரன் –
உபாயம் -கர்ம ஞான பக்திகள் –
உபேயம் -பகவத் அனுபவம் –
5-ஸ்வ பிரயோஜன பரர்க்கு உத்தேஸ்யன் -நெஞ்சினால் நினைப்பான்  யவன் -என்கிறவன் 
உபாயம் -ஸ்வ கீய ஸ்வீகாரம்
உபேயம் -ஸ்வார்த்த கைங்கர்யம் –

(ஆயி ஸ்வாமிகள்-பகவத் விஷய-ஆத்ம விஷய ஞான கந்தம் அற்ற தேகாத்ம அபிமானிகள்உத்தேச்யர்-பாலும் சோறும் இட்டு -தேக வர்த்திகள் -மரணத்தை தர்மமாகக் கொண்டு இருக்கும் மநுஷ்யர்கள்-
தேக போக உபாயம் -தனமும் தானியமும் பொருளும் –அர்த்த சாத்யம் உபேயம்-ஸ்நானம் பானம் -போஜன லேபனம்-ஐஹிக போகம் -கண்டு கேட்டு உற்று மோந்து உழல்வார்கள்
இரண்டாவது வகை – பரமாத்மா ஞானம் அற்ற -பரதந்த்ரர் என்று அறியாமல் ஸ்வ தந்திரர்க்கு உத்தேஸ்யம் ஸ்வர்க்காதி போக பிரதர் —அல்ப அஸ்திரமான ஸ்வர்க்காதி -அக்னி இந்த்ராதி ப்ரஹ்மாதிகள்  உபாயம் -காம தகா க்ருதம் யாகாதிகள்
பலத்தில் அபிசந்த யுக்த பிரவ்ருத்தி கர்ம அனுஷ்டானம் –ப்ராப்யம் அல்ப அஸ்திர ஸ்வர்க்காதிகள்
மூன்றாவது வகை -அந்நிய சேஷ பூதர்-பகவத் சேஷத்வ தூஷர்களான -தத் அந்நிய சேஷ பூதருக்கு ஸூ அநு ரூப உத்தேஸ்யம் ஷேத்ரஞ்ஞர் –ப்ரஹ்ம ருத்ராதிகள் படைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் கர்ம வஸ்யர்களான-இவர்கள் -உத்தேஸ்யர்-
உபாயம் -துஷ்கரமான தத் சமாஸ்ரயணம் -ராவணன் தலை அறுத்து ஹோமம் -பிள்ளை கறி கேட்க்கும்
பலம் -அவர்கள் லோகம் அடைந்து சாம்சாரிக போக சாயுஜ்யம்
நான்காவது -உபாயாந்தர நிஷ்டர் -ஸாத்ய உபாய நிஷ்டர் -உபாஸ்யனான உத்தேஸ்யர் -அக்னி இந்த்ர- அந்தர்யாமியான சர்வேஸ்வரன் -இவர் தானே இவர்களுக்கும் பலம் கொடுப்பார்
உபாயம் -பல அபிசந்தி ரஹித கர்ம யோகம்இந்திரிய உப ரதி ஒய்வு கொடுத்து -அடக்கியஞான யோகம்உபய சாத்தியமான அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்தைல தாராவத் –பக்தி யோகம் – உபேயம் சோஸ்னுதே -நிரந்தர ஆனந்த நிர்ப்பரே பகவத் அனுபவம்
பிரபன்னர் -பர ஏக பிரயோஜத்வ தூஷக ஸூ பிரயோஜன பரரானதனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே மறந்து – -பிரபதவ்யன் –நெஞ்சினால் நினைப்பான் அவனாகும் நீள் கடல் வண்ணன் –அர்ச்சாவதார எம்பெருமான் உத்தேசம் -கீழ் போலே அந்தர்யாமி தயா இல்லை இவனுக்கு  –(பர ஏக பிரயோஜனராக இருக்கும் அனுகூலர்க்கு யார் உத்தேஸ்யர் என்றால் – அர்ச்சாவதார -வேறே வகை இவனுக்கு -மா முனிகள் அருளிச் செய்கிறாரே )
உபாயம் -அஹங்கார கர்ப்பமான ஸ்வ கீய ஸ்வீ காரம் -தான் பற்றும் பற்றுதல்-உபாயம்
உபேயம் -ஸூ போக்த்ருத்வ கர்ப்பமான ஸ்வார்த்த பகவத் கைங்கர்யம்-)

(மனுஷ்யர்-மரண தர்மம் நினைத்து இருப்பவர்கள் -ஞாத்ருத்வ -கர்த்ருத்வ -போக்த்ருத்வ -யுக்தனாய் இருக்கும் என்கிற மாத்ரத்தை-அறிவு இருந்தால் தான்
கர்த்தாவாகவும் அனுபவித்து போக்தாவாயும் -ஆத்மா -மூன்றை மாத்ரத்தையே -சேஷத்வத்தை அறியாத ஸ்வ தந்த்ர புத்தி -ஜீவன் தனித்து ஸ்வர்க்கம் போகலாம்
என்று அறிந்து இருப்பானே -அக்னி இந்திராதி தேவதைகளை உத்தேசித்து பலத்துக்காக யாகம் தானம் ஹோமம் அனுஷ்டானங்களை செய்து –
ஸ்வர்க்காதி -சந்த்ர லோகம் இத்யாதிகள் உண்டே -மேல் அதிகாரி சேஷத்வத்தை அறிந்து -அநந்யார்ஹம் அறியாமல் அனன்ய தேவதா –
வேதம் பிரம்மாவை இந்திரனை அக்னியை வணங்கச் சொல்லி இருப்பதை மேலோட்டமாக அறிந்து -ஆபாத ப்ரதீதி -சித்தம் தானே இது —
ஈ ஆடுவதோ கருடன் எதிரே — இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ நாய் ஆடுவதோ நர கேசரி முன் 
சாயுஜ்யம் உபயோரத்ரா போக்தவ்ய ஸ்யா   விசிஷ்டதா சார்ஷ்ட்டி தாததிர போக்யஸ்ய தாரதம்ய விஹீ நதா—
சாலோக்யம் சாமீப்யம் சாரூப்பியம் -சாயுஜ்யம் -ச யுஜ்யோ பாவ சமான போக்யனாகை ஐகிய பாவம் இல்லை -போக்த்ரு சக்தி தாரதம்யம் —
போக்யம் ஒன்றாக இருந்தாலும் -போக்த்ரு உடைய அனுபவ சக்தி வேறு பாட்டால் -அனுபவம் மாறுமே —சார்ஷ்டித மோக்ஷம் –வஸ்து ஒன்றாகவும் தார தம்யம் இல்லாமல் அனுபவிப்பார் –சக்தியிலும் வேறு பாடு இல்லை என்றவாறு –
சாஸ்திரம் தெளிவாக இப்படி சொல்வதால் ஐக்யம் இல்லையேஅவன் இவர்களை அனுபவிக்கும் பொழுது சமமாக அனுபவிப்பதால் சாயுஜ்யம் –
இவர்கள் அங்கு உள்ளவற்றை அனுபவிப்பதில் வேறுபாடு இல்லாமல் அனுபவிப்பது சார்ஷ்டிதம் என்றவாறு –
ஞான யோக பக்தி யோகங்களுக்கு அசாதாரண விக்ரக விஷயத்வம் உண்டாய் ஆகிலும் –அந்தர்யாமியாய் இல்லாமல் -இருந்ததே ஆகிலும் -வாசனை –
கர்ம யோகம் தளம் -நிலம் -அகல் விளக்கு போலே கர்ம யோகம் -ஆராத்யனாக இருந்ததால் மறக்க மாட்டானே இவனும் –
ஞான பக்தி அன்விதம் கர்ம ஜனகாதிஷூ த்ருச்யதே
கர்ம பக்தி அன்விதம் ஞானம் ப்ரா யேன பரதாதிஷூ
கர்ம ஞான அன்விதம் பக்தி பிரகலாத பிரமுகாஸ்ரையா-
கர்ம யோகத்தால் ஜனகன் -இவர்களுக்கு ஞானம் பக்தி அங்கங்கள்
ஆதி ஜட பரதர் ஞான யோகம் பிரதானம் -கர்ம பக்தி யோகம் அங்கம்
பிரகலாதனுக்கு பக்தி -இவர்களுக்கு கர்ம ஞானம் அங்கம்
இப்படி தனித் தனியே என்றும் பக்தியே உபாயம் இவையே சொன்னது உபசாரத்துக்காக என்றுமாம் – உபாயங்கள் கர்ம ஞான பக்தி -என்று சொல்லாமல் உபாயம் என்றது தனி தனி என்றுமாம் ப்ருதக் உபாயத்வம் ஒத்துக் கொள்ளப்படுகிறது -சாஸ்திரங்களில் –
ந கர்மணா -கேவல கர்மாக்களுக்கு இல்லை– கர்ம யோகத்தால் மட்டும் தான் –
ந அந்நிய பந்தா -தமேவ வித்வான் அம்ருதம் பவதி –வேதனம் தவிர வேறே ஓன்று இல்லை —அந்நிய சப்தம் -கர்ம யோகம் தவிர வேறே என்றவாறு -இது அங்கமாகும் -பரஸ்பர ஸஹிதமாக இவை இருக்கும் –
வித்யா த்வயம் ப்ரதர்தன மது வித்யை -வைஸ்வாரண வித்யை -அந்தர்யாமி -நேராக -சர்வ வித்யா சாதாரணத்வம்-32-வித்யைகளிலும் -சில சாஷாதாக இருந்தாலும் –
கர்மாத் உபாயங்களில் -துஷ்கரத்வ புத்தியாலே அவற்றை விட்டு–ஐந்தாம் அதிகாரி —அநு கூலர் பிராப்தம் இல்லை என்று தானே விடுவார்கள் -இவர்கள் –பிரயோஜன பரர்கள் – எளிதாக இருப்பதாலே பிரபத்தியில் இழிந்த வர்கள்இவர்கள் அர்ச்சாவதாரத்துக்கு அந்தர்யாமியாக நினைப்பார்கள்
அநு கூலர் அர்ச்சாவதாரமான என்று பிரிக்க மாட்டார்கள் –
நிரஸ்த அதிசய ஆஹ்லாத சுக பாவைக லஷண பேஷஷம் பகவத் பிராப்திர் ஏகாந்த ஆத்யந்த கீம்தா- நிரஸ்த அதிசயத்வம்– ஆஹ்லாதத்வம் -தாபம் தீர்க்கும்
ஸுகாந்தர அனுபவத்துக்கு போக வேண்டாம் -துக்கம் கலசாத -ஆத்யந்திகம் நித்யம் -என்றவாறு
பேஜஷம் சம்சாரத்துக்கு மருந்து
பரித்யஜ்ய –துஷ் கரம் என்று விட்டு – கீதா ஸ்லோகார்த்தம் –ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் ரஹஸ்ய த்ரயார்த்தம் -வாசி உண்டே
அனுபாய பிரபத்தி -பல பிரபத்தி -பல அனுபத்துக்கு யோக்யதை கொடுப்பதுஉபாய புத்தி இல்லை -அதிகாரி விசேஷணம் தானே
அர்ச்சை தான் உத்தேச்யம் இருவருக்கும் –உபாய பிரதிபத்திக்கு -விசிஷ்டம் அவனுக்கு — இவன் அர்ச்சையே ஸ்வயமேவ உத்தேசித்து இருப்பானே -)

அதாவது –
1-தேகத்தையே தானாக அபிமானித்து இருக்கிறவர்களுக்கு உத்தேஸ்யர் –
தாரக  போஷக போக்ய பதார்த்தங்களை இட்டு தேகத்தை நன்றாக வளர்த்துக் கொண்டு போரும் மனுஷ்யர் –
அபிமத சித்திக்கு உபாயம் – ஸ்வர்ணயாதி யான தனம்
அபிமதமான உபேயம் -இஹ லோகத்தில் உண்டான ஸ்த்ரி அன்ன பானாதி விஷய அனுபவம் –

2-தேக அதிரிக்தனாய் இருப்பான் ஒரு ஆத்மா உளன் அவன் தான் ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ  யுக்தனாய் இருக்கும் என்கிற மாத்ரத்தை சாஸ்திர முகத்தாலே அறிந்து தங்களை ஸ்வ தந்த்ரராக நினைத்து இருக்கும் அவர்களுக்கு உத்தேஸ்யர் –அனுஷ்டித்த சாதனத்துக்கு அநு குணமாக ஸ்வர்க்காதி ஆமுஷ்மிக போகங்களைக் கொடுக்கும் அக்னி இந்த்ராதிகளான தேவதைகள் –(ஆதி -ஸூர்யன் போல்வார் )
உபாயம்-ஜோயிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -இத்யாதிகளால் சொல்லப்படுகிற பல அபிசந்தி சஹிதமான யாகாதி கர்ம அனுஷ்டானம் – 
உபேயம்–ஐகிக போகாத் விலக்ஷண ஸ்வர்காத்யனுபவம்-

3-ஜகத்து தெய்வாதீனம் என்னுமத்தை சாஸ்த்ரங்களில் கேட்கையாலே சேஷத்வத்தை இசைந்து  வைத்தே அத்தை பர தேவதா பர்யந்தமாக போக வறியாதே ஆபாத பிரதீத சித்தங்களிலே ஒன்றைப் பற்றி நிற்கும்  அந்ய சேஷ பூதர்க்கு உத்தேஸ்யர் –ஜகத் சர்காதி கர்த்ருதையா பரத்வ புத்தி அர்ஹரான பிரம ருத்ராதிகள் –
உபாயம் -துராராதரானவர்கள் பக்கல் பண்ணும் துஷ்கர சமாஸ்ரண்யம் –
உபேயம் அவர்களோடு -சாமான போக்யானாகை ஆகிற சாயுஜ்யம் –
சாயுஜ்யம்  உபயோரத்ரா போக்தவ் யஸ்யா   விசிஷ்டதா சார்ஷ்ட்டி தாததிர போக்யஸ்ய தாரதம்ய விஹீ நதா-என்னக் கடவது இறே-

4-ஆத்ம ஸ்வரூபம்  பகவத் அனந்யார்க்க சேஷம் என்னும் இடத்தை வேதாந்த முகேனே அறிந்து வைத்தே  அபிமத லாபத்துக்கு அவன் தன்னையே உபாயமாக பரிக்ரஹிக்க அறியாதே  உபாயாந்தர நிஷ்டர் ஆனவர்களுக்கு உத்தேஸ்யன் -அக்னி இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர் யாமியான ஈஸ்வரன் –
இது கர்ம யோகத்துக்கு ஸ்வரசம்–ஞான யோக பக்தி யோகங்களுக்கு அசாதாரண விக்ரக விஷயத்வம் உண்டாய் ஆகிலும் –கர்மாநுஷ்டானம் தளமாக எழுந்து இருந்தவை ஆகையாலும்  கர்ம ஆராத்யனாவனே ஸ்வ சாதாரண விக்ரஹ விசிஷ்ட வேஷத்தை நமக்கு
பிரகாசிப்பித்தான் என்னும் நினைவு நடக்கையாலும்  தேவதாந்தர அந்தர்யாமியே உத்தேஸ்யனாக சொல்லுகிறது என்று கொள்ள வேணும் –
உபாயம் -தனித்தனியே மோஷ சாதன தயா -சாஸ்திர சித்தங்களான-கர்ம ஞான பக்தி யோகங்கள் –இவை தனித் தனியே உபாயமாம் இடத்தில் -ஓர் ஒன்றுக்கு மற்றவை இரண்டும் அங்கமாய் இருக்கும் –
ஞான பக்தி அன்விதம் கர்ம ஜனகாதிஷூ த்ருஸ்யதே -கர்ம பக்தி அன்விதம் ஞானம் ப்ராயேன பரதாதிஷூ (ஆதி ஜட பரதர் )கர்ம ஞான அன்விதம் பக்தி பிரகலாத பிரமுகாஸ்ரையா-என்னக் கடவது இறே —

அன்றிக்கே –
கர்ம ஞான பக்திகள்-என்கிற இடத்தில் -வேதாந்த மரியாதையால் -கர்ம ஞான அநு க்ருஹீதையான -பக்தியே உபாயமாய் -தத் அங்க தயா கர்ம ஞானங்களை உபாயம் என்று உபசரித்து சொல்லுகிறது ஆகவுமாம்-
உபேயம் -சோஸ்நுதே சர்வான் காமான் சஹா ப்ரஹ்மண விபச்சிதா -இத்யாதி ஸ்ருதிகளாலும் –
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷண பேஷஷம் பகவத் பிராப்திர் ஏகாந்த ஆத்யந்தகீ மதா -இத்யாதி ஸ்ருதி உப ப்ருஹ்மணங்களாலும் சொல்லப்படுகிற நிரதிசய அதிசய ஆனந்த ரூப பகவத் அனுபவம் –
இந்த ஸ்லோகத்தில் -பகவத் பிராப்தி -என்கிற இது -பகவத் அனுபவகமாக இறே
நம் ஆச்சார்யர்கள் (எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தம் -இந்த ஸ்லோகம் ஸ்ரீ விஷ்ணு புராணம் )- ஸ்வ பிரபந்தங்களிலே அருளிச் செய்தது –

5-கர்மாத் உபாயங்களில்  துஷ்கரத்வ புத்தியாலே அவற்றை விட்டு (அனுகூலர் அபிராப்தி என்று விட்டு )ஸூகரத்வ புத்த்யா பிரபத்தியில் இழிந்த -ஸ்வ பிரயோஜன பரர்க்கு-உத்தேஸ்யன் -நெஞ்சினால் நினைப்பான் எவன் – என்கிறபடியே ஆஸ்ரிதர் தங்கள் நெஞ்சால் யாதொரு த்ரவ்யத்தை தனக்கு திருமேனியாக கோலினார்கள் அத்தையே தனக்கு திருமேனியாக  அபிமானித்து அதிலே அப்ராக்ருத விக்ரஹத்தில் பண்ணும் ஆதாரத்தை பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கிற அர்ச்சாவதாரமான சர்வேஸ்வரன்(அனுகூலருக்கு -ஆனவன் என்று இல்லாமல் -அர்ச்சாவதாரமே-அர்ச்சையே உத்தேஸ்யம் )
உபாயம்-அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் அவனை உபாயமாக நினைத்து- தான் பற்றின பற்று –
உபேயம் -தனக்கு உகப்பாக பண்ணும் கைங்கர்யம்-

———————————————————–

ஆக உத்தேஸ்யாதி பேதத்தாலே -அவர்களுக்கு உண்டான -அந்யோந்ய விசேஷத்தை தர்சிப்பித்தார் கீழ் –
இவர்களில் பகவத் விஷயத்தோடு ஓட்டற நின்ற மூவருக்கும் -பகவத் விஷயத்தையே பற்றி நின்ற இருவருக்கும் உண்டான விசேஷத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை-266-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்கு
மற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு ..

(ஆயி ஸ்வாமிகள்-பகவத் பாகவதருக்கு-இந்த ஐவரில் -பிரதி கூலர்கள் —நிக்ரஹ அனுக்ரஹ யோக்யதை இன்னார் என்றும் -266- –கர்ம விநாச ஹேது இன்னது என்றும் -267-அருளிச் செய்கிறார்-ஸஹ படின யோக்யர் -முதல் மூவர் -பகவத் லாபம் உத்தேச்யம் இல்லை -தேக ஸ்வர்க்க ப்ரஹ்மாதி சாயுஜ்ய பிராப்தி தானே இவர்களுக்கு -நேராக பிரதி கூலர் பாகவதருக்கு நிக்ரஹத்துக்கு இலக்காவார் —
தேகாதி விலக்ஷணமாய் பகவத் பர தந்திரமாய் தத் ஏக சேஷமாய் ஸ்வரூபம் என்று தெளிந்த பாகவதர்கள் இவற்றை கால் கடைக் கொண்டு இருக்கும் விலக்ஷணர்கள்
இவர்களுக்கு இம் மூன்று பேரும் -எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் என்று -தள்ளிக் கதவு அடைத்து -காண கண் புதைக்கை ஆகிற நிக்ரஹத்துக்கு நேரே இலக்கு –
மேல் இருவரும் ஸஹ படின யோக்யர்-உபாயாந்தர பரரும் ஸூ பிரயோஜன பரரும் முமுஷுக்கள் -தர்சன ஸ்பர்சன சம்பாஷணத்துக்கு இலக்காவார்கள்-அன்றிக்கே பகவத் நிக்ரஹம் அனுக்ரஹத்துக்கு இலக்கு என்றுமாம்)

அதாவது –
தேக ஆத்ம அபிமானமும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் –
அந்ய சேஷத்வமும் -ஆகிய இவற்றுக்கு அவ்வருகே ஒன்றும் அறியாமையாலே
பகவத் அன்வய கந்த ரஹிதரான மூவரும் -ஷிபாமி -என்கிற பகவத் நிக்ரஹத்துக்கு விஷயம் 

ப்ரக்ருதே பரமாய்  பகவத் அனந்யார்ஹ சேஷமான ஸ்வரூபத்தை அறிந்து  பகவத் அனுபவ கைங்கர்யங்களை புருஷார்த்தமாகக் கொள்ளுகையாலே –
அநந்ய பிரயோஜனராய் –
கர்ம ஞாநாதிகளான உபாயாந்தரங்களிலும்
பிரபதநத்திலும்-
நிஷ்டரான இருவரும் –
ததாமி –
மோஷ இஷ்யாமி –
என்கிற பகவத் அனுக்ரஹதுக்கு விஷயம் -என்கை-

———————————————–

இவர்களுக்கு கர்ம விநாச ஹேது பேதத்தால் வந்த விசேஷங்களை தர்சிப்பிக்கிறார்  மேல்

சூரணை -267-

மூவருடைய கர்மம் அனுபவ விநாஸ்யம்-
நாலாம் அதிகாரிக்கு பிராயச் சித்த விநாஸ்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு புருஷகார விநாஸ்யம் —

(ஆயி ஸ்வாமிகள்–தத் – ததீய -நிக்ரஹத்துக்கு இலக்கான அம் மூவருடைய அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மங்கள் தத் தத் பல சுக துக்க விநாஸ்யம் –
அல்ப அனுக்ரஹத்துக்கு இலக்கு உபாயாந்தர நிஷ்டர் -பாபம் அசத் கர்மம் -பிராயச்சித்த தர்மத்தால் போக்கி கொள்ள வேன்டும்-பிராயச்சித்தம் பண்ணிப் போக்க முடியாத புண்ணியம் பாபம் -இரண்டையும்பகவத் பிரசாதத்தால் போக்கி கொள்ள வேன்டும்
அனுக்ரஹ விசேஷத்துக்கு இலக்காகும் பிரபன்னர் -ஸூவ பிரயோஜன பரர்ந கச்சின் ந அபராத்யதி -பிராட்டி புருஷகார பலத்தால் பொருப்பித்து -அபராத பய நிவ்ருத்தி
அநிஷ்ட நிவர்த்தகம் சித்த உபாய காரியமானாலும் – ஆஸ்ரயண விரோதி நிவ்ருத்தி மாத்திரம்  -தத் சங்கல்பம் அடியாக பிராட்டிக்கு இந்த அதிகாரம் அருளிபிராட்டி கார்யம்-)

அதாவது –
நிக்ரஹத்துக்கு இலக்கான  மூவருடையவும் அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மம் –
அவஸ்யம் அநு போக்தவ்யம் கர்த்தும் கர்ம ஸூபாஸூபம் நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதை ரபி-என்கிறபடியே-அவஸ்யம் தத் பலமுள்ளதை அனுபவித்தால் அன்றி நசியாமையாலே அனுபவ விநாஸ்யம் -என்கிறார்-

அனுக்ரஹத்துக்கு இலக்காகச் சொன்ன இருவரிலும்  வைத்துக் கொண்டு  உபாயாந்தர நிஷ்டனான நாலாம் அதிகாரிக்கு கர்ம ஞான பக்திகள் ஆகிற உபாய விசேஷங்களில் ஒன்றை அனுஷ்டித்தால் அத்தை பிராயச்சித்த ஸ்தாநீயமாக்கி ஈஸ்வரன் சர்வ கர்மங்களையும் கழிக்கையாலே கர்மம் பிராயச் சித்த விநாஸ்யம் என்கிறார் 

பிரபதன நிஷ்டனான ஐஞ்சாம் அதிகாரிக்கு  ஆஸ்ரயண வேளையில் அநாதி கால க்ருத அபராத பீதனாய்  அவற்றை அடைய ஈஸ்வரன் பொறுக்கைக்கு  உறுப்பாக பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு ஆஸ்ரயிக்கையாலே அவளுக்காக இவனுடைய அபராதத்தை எல்லாம் பொறுத்து அங்கீகரித்து இவனுடைய அகில கர்மங்களையும் தள்ளிப் பொகடுகையாலே புருஷகார விநாஸ்யம்  என்கிறார்-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –