Thiruvonum's Weblog


Archive for the ‘ஸப்த காதை’ Category

« Older Entries
Newer Entries »

ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி ஸூ சரித சஷகம்

February 16, 2024

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||
-இவர் தனியன்:

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-திருநக்ஷத்ரம் -ஆனி அவிட்டம் -அவதார ஸ்தலம் -ஸ்ரீ திரு மழிசை -ஆச்சார்யர் –திருத்தகப்பனார் -ஸ்ரீ நரசிம்ஹாச்சார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

மூலர்ஷே ஸ்ரீ நகர்யாம் உதயம் அதிகாதோ ஜைத்ர ஜிஹ்வே ஸதாஸாத்
தஸ்மாத் தாபாதி பூர்வம் ருசிர வர இதி ப்ராப்த நாமா குணைஸ்வா
திஷ்டந் கிராம் கடாரே கதிசந ஸரதோ மாதூலா வாஸ பூதே
ஸ அங்க உபாங்காக மஜ்ஜோ த்ரமிட நிகம வித் பிராப தாரா நுதாரான்
–1-

மணவாள மா முனிகள் ஆழ்வார் திரு நகரியில் திகழக்கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணருக்குத் திருகுமாரராக ஐப்பசித் திரு மூலத்தில் திரு அவதரித்தார்
தம்முடைய திருத்தகப்பனாரிடம் இருந்து திருவிலச்சினை ப்ரஸாதிக்கப் பெற்று வடிவழகினாலே அழகிய மணவாளன் என்று திருநாமம் இடப்பெற்றார்
பின்பு ஒரு சில ஆண்டுகள் சிக்கில் கடாரத்தில் தம் அம்மான் திருமாளிகையில் இருந்து கொண்டு அங்க உபாங்கங்களோடு வேதத்தையும் ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் கற்று குணவதியான பத்னியையும் அடைந்தார்

பூய ஸ்ரீ ரெங்க நாதே நிஜ நிலயகதே ஸ்ரீ நகர்யாம் கடாராத்
ஸ்ரீ சைல ஆர்யம் ஆஸ்ரித தத் கலி யதிபதவ் விம்சதிம் ஸம் ஸதி ஸ்ம
தத் தத் தாம் தத்ஸபர்யாமநுதி நம கரோத் த்ராவிட ஆம்நாய பாஷ்யம்
ஷட் த்ரிம்ஷத் ஸஹஸ்ரைஸ் ஸூ கணிதமதிபிர் வாக் விதேயம் ததவ் ஸா
-2-

நம்பெருமாள் மீண்டும் கோயிலேற எழுந்து அருளின பிறகு அழகிய மணவாளரும் சிக்கில் கடாரத்தில் இருந்து ஆழ்வார் திருநகரிக்குச் சென்று திருவாய் மொழிப்பிள்ளை என்று ப்ரஸித்தரான திருமலை ஆழ்வாரை ஆச்ரயித்தார்
அங்கு அந்தத் திருவாய் மொழிப்பிள்ளையால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த உடையவரைக் குறித்து யதிராஜ விம்சதியை அருளிச் செய்தார்
திருவாய் மொழிப்பிள்ளையால் அளிக்கப்பட யதிராஜ கைங்கர்யத்தைத் தினம் தோறும் செய்து வந்தார்
திருவாய் மொழிக்கு வியாக்யானமான ஈடு முப்பத்தாயிரத்தை கூர்மையான புத்தியுள்ள ஸ ப்ரஹ்ம சாரிகளுடன் கேட்டு வாஸோ விதேயமாக்கிக் கொண்டார்

ஸ்ரீ சைலேஸாய க்ருத்வா ஸஸ பதம் அகில த்ராமிட ஆம்னாய பாஷ்ய
வ்யாக்யா தீஷாம் ததோ அஸ்மின் ஸ்ரிதவதி பரமம் தாம தத் கிம் க்ரியாட்யா
தத் ஸூக்த்யா ரங்கநாத ப்ரணமருதுகீ பட்ட நாதேந கோதாம்
நத்வோத் யாநாத்ரி நாதம் ததநு வரவரோ ரங்கராஜம் ததர்ஸ
–3-

அந்த அழகிய மணவாள நாயனார் திருமலை ஆழ்வாரின் அந்திம தசையில் -ஆழ்வார்களுடைய தர்ம வேதங்களை தத் வ்யாக்யானங்களோடு கூடக் கால ஷேபம் செய்து கொண்டு இருப்பேன் என்று சபதம் செய்து
பின்பு அவர் திரு நாடி அலங்கரித்த போது அவருக்குச் செய்ய வேண்டிய சரம கைங்கர்யங்களை செய்தார்
அவரது வாக்குப்படி பெரிய பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று ஆவலுடன் திரு நகரியில் இருந்து புறப்பட்டு வழியில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாரையும் ஆண்டாளையும் மங்களா ஸாஸனம் செய்து திருமாலிருஞ்சோலை அக்கறையும் மங்களா ஸாஸனம் செய்து திருவரங்கத்தை அடைந்து பெரியபெருமாளைக் கண்டு களித்தார்

தேநாஸ்மின் நித்ய வாஸம் ப்ரதி நியமித ஹ்ருல் லோக குர்வாதி சர்யாம்
தத் ஸூக்திம் தத் க்ருஹாம்ச ஸ்வமநஸி கலயன் ரங்க கைங்கர்ய மாப்தா
கத்வா உசவ் வேங்கடாத்ரிம் ததநு கரிகிரிம் பூத புர்யாம் யதீந்த்ரம்
நத்வா கத்வா உத காஞ்சீம் வரத குரு வரதாத்ரி ஜாத் பாஷ்யமாப
-4-

அந்த பெரிய பெருமாளுடைய தரிசனத்தால் ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாஸம் பண்ண வேண்டும் என்று கட்டுண்ட மனத்தை யுடையவரானார்
பிள்ளை லோகாச்சார்யர் முதலான ஆச்சார்யர்களின் சரித்ரங்களைக் கேட்டு அவர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை மனதில் அனுசந்தித்து -அவர்களுடைய திரு மாளிகைகளை ஸேவித்து திரு அரங்கநாதனின் கைங்கர்யத்தைப் பெற்றார் -பின்பு திவ்ய தேசங்களை மங்களா ஸாஸனம் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி -திரு வேங்கட மலைக்கும் -அத்திகிரிக்கும் சென்று பின்னர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பெருமானாரைத் திருவடி தொழுது பிறகு திரு வெஃகாவை அடைந்து கிடாம்பி திருமலை நாயனார் என்கிற ஆத்ரேய வரதாச்சார்யர் ஸந்நிதியில் ஸ்ரீ பாஷ்யத்தை அதிகரித்தார் –

ஸ்ரீ ரெங்கம் ப்ராப்ய தஸ்மிந் நித்ய வசதி க்ருத் மங்களா ந்யஸ்ய வாஞ்சந்
ஆசவ் சார்த்தஸ் ஸூதே நோஜ் ஜஹத தத் க்ருஹிணீம் துர்ய மாபாஸ்ரமம் ஸா
அத்ர ஸ்ரீ சைல நாதாஹ்வய பரி மலிதம் மண்டபம் காரயித்வா
லோகாச்சார்யாதி ஸூக்திம் வ்யவ்ருணுத நிபுணம் ரம்ய ஜாமாத்ரு யோகீ
–5-

மீண்டும் திருவரங்கத்தை அடைந்து அங்கே நியதமாக வசிப்பதற்கு ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொண்டு எம்பெருமானுக்குத் தடை இன்றி மங்களா ஸாஸனம் செய்ய விரும்பியவராய் எழுந்து அருளி இருந்தார்
அதற்கு இடையூறான ஆஸவ் சத்தைச் சிலர் தெரிவிக்க அதனால் போரக் கிலேசித்து பத்னியையம் குமாரரையும் த்யஜித்து ஸந்யாஸ ஆஸ்ரமத்தை ஸ்வீ கரித்தார் –
பெரிய பெருமாளிடம் இருந்து அழகிய மணவாள ஜீயர் என்று திரு நாமத்தைப் பெற்று அங்கு ஸ்வாச்சார்யரான திருமலை ஆழ்வாரின் திரு நாமத்தால் ஒரு வியாக்யான மண்டபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தே இருந்து கொண்டு பிள்ளை லோகாச்சார்யார் முதலிய பூர்வர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை நன்றாக விவரித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

தத்ராச்சாம் ரங்க ராஜம் ததுதித நியமாத் ப்ராப்ய பூயோபி ரார்யை
வாதூலாத்யைஸ்ரி தாங்க்ரி கமபி து குத்ருஸாம் தாஸ ரத்யார்ய வர்யாத்
ஜித்வா தஸ்மிந் வதூலே ஸஹ வரத குரு ஸ்வ ஆச்சார்ய ரங்காதி ராஜம்
தத்வா வாதூல வம்சோ ஸமதிககருணாம் ஸர்வ லோகே விவவ்வரே
–6-

பின்பு பெரிய ஜீயர் பெரிய பெருமாளுடைய நியமனத்தாலே ஸ்ரீ ரெங்கராஜரைத் தமக்கு திருவாராதனமாகப் பெற்றார் –
பின்னர் கோயில் அண்ணன் முதலான அநேக கந்தாடை அய்யங்கார்களும் மா முனிகளின் திருவடிகளை ஆஸ்ரயித்தனர்
பின்பு ஒரு சமயம் ஒரு ஏக தண்டி ஸந்யாஸி பெரிய ஜீயரைத் தன்னுடன் வாதத்துக்கு அழைக்க அவனை வேடலப்பையின் சிஷ்யரான தாசரதி யட்சன் மூலமாக ஜயித்தார்
பின்பு கோயில் அண்ணனும் தாசாரதி ஆச்சானை மடத்துக்கு அழைத்துக் கொண்டு வர ஜீயரும் ப்ரீதியுடன் தன்னுடைய திரு வாராதனத்தில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ ரெங்கராஜரை அவருக்கு ப்ரஸாதித்து வாதூல வம்சத்தில் தனக்குள்ள அதிகமான கருணையை அனைத்து உலகிற்கும் வெளிப்படுத்தினார் –

வாத்ஸ்யே தேவாதி ராஜே வரத குரு வரைஸ் சாகமாகத்ய த்ருஷ்ட்வா
ஸ்மேரஸ் வாந்தோ அபி பாக்ய வ்யதிகர விரஹாத் ஷேமம ப்ராப்ய யாதே
ஸ்வாச்சார்ய ஸ்ரீ ஜாநகீ ஸப்ர பல நியமநே நாபி முக்யாது பேதே
ஸ்பீதை ஸ்வைர் த்ருஷ்டி பாதைர் கநதர கருணா சார வர்ஷம் வவர்ஷ
–7-

ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் உதித்த தேவராஜன் என்கிற எறும்பி அப்பா -திருவரங்கத்துக்கு வந்து ஆப்த பந்துவான கந்தாடை அண்ணனோடே கூட ஜீயர் மடத்துக்கு எழுந்து அருளி -மணவாள மா முனிகளை ஸேவித்து திருவாய் மொழியில் ஓர் இடத்திற்கு ஜீயர் சாதித்து அருளிய அர்த்த விசேஷங்களைக் கேட்டுப் போர ப்ரீதரானார்
ஆனாலும் விதி கூடாமையாலே ஜீயர் மடத்தில் அமுது செய்யாமலும் -ஜீயருடைய திருவடிகளில் ஆஸ்ரயிக்காமலும் தமது ஊருக்கு மீண்டும் எழுந்து அருளினார்
அவரது திருவாராதன எம்பெருமானான சக்ரவர்த்தித் திருமகன் அவரது கனவிலே -நீர் சேஷ அவதாரமான ஜீயர் திருவடிகளிலே அபசாரப்பட்டு வந்தீர்
ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம் பண்ணிக்கொண்டு வந்தால் ஒழிய உம்முடைய கையாலே திரு வாராதனம் கொள்ள மாட்டோம் நீர் கடுகப் போவீர் என்று எறும்பி அப்பாவை நியமித்து அருள
அவரும் உடனே புறப்பட்டுக் கோயிலுக்கு எழுந்து அருளி அத்யாதாரத்துடனே ஜீயரை தண்டனிட ஜீயரும் தமது மலர்ந்த திருக் கண்களாலே குளிரக்கடாக்ஷித்து அப்பாவிடம் மிகவும் கருணை மழையைப் பொழிந்தார் –

பத்வேமாம் ஸப்த கோத்ரீம் பிரதிவத பயக்ருத் வர்ய கோவிந்த வர்யவ்
வாத்ஸ்யம் ஸ்ரீ தேவ ராஜம் யமிநமபி மஹாவாந சைலாதி வாஸம்
ஆர்யா நந் யாம்ஸ் ச க்ருத்வா வஸூதிகி பவராந் பஞ்ச ரத்நீம் ச க்ருத்வா
பவ்த்ரவ் ஸ்வவ் ரம்ய ஜாமாதரமதிக குணம் பட்ட நாதம் ரரக்
ஷ -8-

எழுபத்து நான்கு சிம்ஹாசனாதி பதிகளிலே பரிகணிதரான முதலியாண்டான் முடும்பை நம்பி முடும்பை அம்மாள் ஆஸூரிப்பெருமாள் கிடாம்பிப்பெருமாள் குமாண்டூர் இளையவல்லி யாச்சான் -வங்கி புரத்து நம்பி ஆகிய ஏழு கோத்ரத்தாரும் தங்களுக்குள்ளே சம்பந்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று நியமனம் செய்து ஸப்த கோத்ர வ்யவஸ்தையை ஏற்படுத்தினார் பெரிய ஜீயர்
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் பூர்வ ஆஸ்ரமத்தில் கோவிந்த தாஸர் என்கிற திரு நாமமுடையவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் எறும்பி அப்பா வான மா மலை ஜீயர் கோயில் கந்தாடை அண்ணன் திருவேங்கட ராமானுஜ ஜீயர் அப்பிள்ளார் அப்பிள்ளை ஆகிய எண்மரையும் அஷ்ட திக் கஜங்களாக நியமித்து பஞ்ச ரத்னங்களையும் நியமித்தார்
நற்குணங்கள் நிறைந்த தமது பவ்த்ரர்களான அழகிய மணவாள நாயனாரையும் -ஜீயர் நாயனாரையும் -பெரியாழ்வார் ஐயனையும் நன்கு ரக்ஷித்தார்

தேவம் பூயோ தித்ருஷுஸ் ஸட மத நமஸவ் ஸ்ரீ நகர்யாம் கதஸ்தம்
நத்வா ஸ்துத்வா ப்ரஹ்ருஷ்டோ விபு நவ நிலயீம் வர்த்த யித்வா அர்ய சேதா
ஜிஞ்ஞாஸூர் யாதவாத் ரோதி சரணி ஜனந் யார்ய தர்சீ நிவ்ருத்த
ப்ராப்தார்த்தஸ் துஷ்ட சேதாஸ் சத நிஜ நிலயே வஹ்னிதாநத்வ க்ருஹ் ணாத்
-9-

மீண்டும் சடகோபரான நம்மாழ்வாரை ஸேவிக்க விரும்பி ஆழ்வார் திருநகரிக்குச் சென்று அவரை ஸ்துதித்து ஏத்தி திருவடி தொழுது இன்புற்றவராய் நவதிருப்பதி எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்
திரு நாராயணத்து ஆய் என்ற ஜனன்யார்ச்சர்யர் இடம் இருந்து ஆச்சார்ய ஹ்ருதயத்தின் பொருளை அறிய வேண்டும் எண்டு விரும்பி திரு நாராயண புரத்துக்குப் புறப்பட்டார்
வழியில் சிறிய தொலைவிலேயே அவரைக் கண்டு அவருடன் திருநகரிக்கு மீண்டு எழுந்து அருளி ஆச்சார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறிந்தார்
பின்பு கூரை வேய்ந்த தம் மடத்துக்கு தீ வைத்தவர்களை அந்த தேசத்து அரசன் தண்டிக்க முற்பட்ட போது அதனைத்தடுத்து அவர்களைக் காத்து அருளினார்

க்ருத்வா அசவ் ஸ்ரீ நகர்யாம் சட மதந முதே மண்டபம் கால மேகம்
வீதி ஸ்ஸீமாஸ் ச க்ருத்வா ருசிர வர மஹா மண்டபம் கல்பயித்வா
விப்ரம் ஸ்ரீ ஹர ஸ்வகுட்யாம் நிஜசரந ஜூஷம் தத்ர கைங்கர்ய கார்யே
நிஷ் ப்ராப்யாஸாத்யா ஹ்ருஷ்டா புநரபி குருகா மாக மத் ரங்க தாம
-10-

பெரிய ஜீயர் நம்மாழ்வார் திரு உள்ளம் உகக்கும் படி திரு நகரியில் காளமேக திரு மண்டபத்தையும் திரு வீதிகளையும் எல்லைகளையும் ஏற்படுத்தி அழகிய மணவாளன் திரு மண்டபத்தையும் உண்டாக்கினார்
தம் திருவடிகளை ஆஸ்ரயித்த திருவேங்கடமுனையான் என்ற ப்ராஹ்மணனைத் திருக்குறுங்கடி கைங்கர்யத்திலே நியமித்து மீண்டும் திரு நகரி ஏற எழுந்தருளி ஆழ்வாருக்கு அனைத்து அழகும் கண்டருளப்பண்ணி மகிழ்ந்து பின்பு திருவரங்கத்துக்கு எழுந்து அருளினார் –

தத்ர ஸ்ரீ தால வ்ருத்த வ்யஜந பரிகரேண உத்தமம் சேவமாநம்
ஸ்வப்நே ஸ்ரீ ரெங்க பர்த்ரா ஸ்வயம் அநுகதி தஸ்வாஹி ராஜாவதார
மத்யாஹ்நே காஞ்ச வ்ருத்தாம் ப்ரதி ரஹஸி பரம் ஸ்வாஹி ராஜத்வ வேத்ரீம்
ஸ்வம் பாவம் நிஹ்நுவாத பணி பதீ சயனம் ப்ரத்யஹம் சேவதே ஸ்ம
–11-

ஒரு நாள் திருவாலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த உத்தம நம்பி பெரிய ஜீயருடைய பாலின் வண்ணமான திருமேனி நிறத்தை வேறு விதமாக நினைத்து -நெடும் போது இருக்க வேண்டாம் என்று கூடி அபசாரப்பட ஜீயரும் மடத்துக்கு எழுந்து அருளினார் –
உத்தம நம்பியும் தூங்கிப் பல கணிக்கதவிலே சாய்ந்திருக்க -பெரிய பெருமாள் அவர் கனவிலே தோன்றி -திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி -இவர் காணும் மா முனிகளாக அவதரித்துள்ளார் -என்று கூறினார்
உத்தம நம்பியும் கண் விழித்து அப்போதே மடத்துக்கு வந்து ஜீயர் திருவடிகளில் விழுந்து அபராத ஷாமணம் பண்ணிக்கொண்டார் –
பின்பு ஒரு நாள் மத்யாஹ்னம் சடகோபகொற்றி என்கிற மூதாட்டி திருமலை ஆழ்வார் என்கிற வ்யாக்யான மண்டபத்திலே யகாந்தமாக எழுந்து அருளி இருந்த ஜீயரைக் கதவுப்புரையிலே ஆதி சேஷனாகக் கண்டதை ஒருவருக்கும் வெளியிடாமல் மறைக்கும் படி நியமித்தார் ஜீயர் –
ப்ரதிதினமும் அரவின் அணை மிசை மேய மாயனாரான பெரிய பெருமாளை மங்களா ஸாஸனம் செய்து கொண்டு எழுந்து அருளி இருந்தார்

ஏவம் பூதம் முனீந்த்ரம் தரணி ஜலதி ஜாநாயகோ ரங்க நாத
ஸ்வஸ்மை பாஷ்யம் ஸ்ருதிநம் லகு தர ரமுநேர் வக்தும் ஆஜ்ஞா பயத்தம்
ஸோ அயம் ஸம்வத்ஸரேண த்ரமிட மய ஸூதாம் ரங்க நாதாய வர்ஷத்
ஸ்ரீ சைலேத் யாதி பத்ய ப்ரவசன முக தஸ்தேந ஸம் பூஜிதோ அபூத்
–12-

இப்படி இருக்கிற பெரிய ஜீயரை ஒரு நாள் ஸ்ரீ பூ நாயகரான நம்பெருமாள் மகிழ் மாலை மார்பினரான நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமான திருவாய் மொழியின் வியாக்கியானங்களைச் சொல்லும்படி நியமித்தார்
அவரும் ஒரு ஸம்வத்ஸர காலம் தொண்டர்க்கு அமுதான திருவாய் மொழியின் ஈடு முதலான வ்யாக்யானங்களை நம்பெருமாள் திரு முன்பே அருளிச் செய்தார்
சாற்று முறை அன்று நம்பெருமாள் அரங்கநாயகம் என்கிற ஐந்து வயதான அர்ச்சக குமாரனாக வந்து ஸ்ரீ சைல தயா பாத்ரம் எண்டு தொடங்கும் தனியனை அருளிச் செய்து ஆசார்யரான ஜீயரை உரிய முறையில் ஸம்மானித்தார்-

லோகாசார்ய யுக்த தத்வத்ரிதயமநு யுக ஸ்லோக வாக் பூஷ டீகா
மாலா ஸம் ஷேப கீதாஹ்ருதய விவரணே ஞான சாரதி டீகே
அந்தாதிம் ரத்ன மாலாம் ஸடரிபு பணி திவ்யா க்ரியாமாந கோலம்
சக்ரே கௌசித் விவைராவ கலயத நிஹீநாத்ம ப்ருச் சாபதே ஸாத்
–13-

பெரிய ஜீயரும் பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த தத்வத்ரயம் ரஹஸ்ய த்ரய அர்த்த ப்ரதி பாதகமான முமுஷுப்படி -ஸ்ரீ வசன பூஷணம் -இவைகளுக்கு வியாக்கியானங்களை கீதைக்கு சங்ஷிப்தமான தொரு விவரணத்தையும் ஞான சாரம் மற்றும் ப்ரமேய ஸாரத்திற்கு வியாக்கியானங்களையும்
திருவாய் மொழி நூற்றந்தாதி உபதேச ரத்னமாலை ஈடு முப்பத்தாறாயிரப்படிக்கு ப்ரமாணத்திரட்டு ஆகியவற்றையும் அருளிச் செய்தார்-நீங்களும் ஸ்ரீ வசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம் மேலிட்டுச் சண்டை இடுவதற்கு என்று தெருவில் சண்டையிடும் நாய்களைக் கேட்க்கும் வ்யாஜத்தால் விவாதம் பண்ணிக்கொண்டு இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருவரைத் தம்முள் விரோத பாவம் அற்றவர்களாகச் செய்தார் ஜீயர்

தத்த்வா க்ஷேத்ரம் மடீயம் ப்ருதக புஜி மிஷாத் ரங்க பர்த்ரே நிசீதே
வ்ருத்தாம் காஞ்சித் விவாஸ்ய ஸ்த விரத ருருஹந்யாயதோ அலர்க்க ஹேதோ
பத்தீம் வ்ருத்தாம் ச ஹித்வா புநரபி க்ருபயா வைஷ்ணவா கோவி முக்தாம்
அங்கீ குர்வன் நஸாஹ்யாக தவரத ஹரிம் ஸ்வீச காராதி க்ருச்ச்ராத்
–14-

ஒரு சமயம் மடத்திற்குச் சொந்தமான விளை நிலத்துக் கூலி யாட்கள் மடத்திற்குச் சொந்தமான இடத்தில் உண்டு சென்றதை அறிந்து உடனே அந்நிலத்தை பெருமாளுக்கு ஸமர்ப்பித்தார்
ஒரு நாள் வயதான மூதாட்டி ஒருத்தி இரவு மடத்திலே சயனிக்க முற்பட கிழட்டணி லாகிலும் மரமேற வல்லது ஓன்று அன்றோ –
உகவாதார் அபவாதம் சொல்ல இது போதுமே என்று கூறி அவ்வம்மையாரை வெளியேற்றினார்
தளிகைக்காக கறியமுது திருத்தித் தரும் அம்மையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரிவோடு ஸமர்ப்பித்த தூதுளங்கீரையை உதாஸீனத் படுத்தியதை அறிந்து அவ்வம்மையாரை கைங்கர்யத்தில் இருந்து விலக்கி பின்னர் பாகவத அவமானம் பண்ணின பாபத்துக்கு மன்னிப்புக் கேட்கச் செய்து கிருபையுடன் ஏற்றுக் கொண்டார்
ஜீயரை ஆஸ்ரயிக்கத் தனியே வந்த வரம் தரும் பெருமாள் பிள்ளையை -வரத ஹரியை -ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிடாதே தனித்து வருவதே என்று வெறுத்து ஆறு மாஸம் புறத்திண்ணையிலே இருக்கச் செய்து பின்பு அங்கீ கரித்து அருளினார் –

சத்த்வஸ்தோதி ஸ்வரூபம் வ்ரதிவர மஹிதம் ப்ராப்ய சத்தேச கர்த்தா
பட்டார்யாய ஸ்வ சிஷ்யான் விநய பரிதயந் தோஷத் ருஷ்டிம் விதூய
பூர்வ அநுஷ்டாந நிஷ்டா புநரபி வ்ருஷபாத்ரிஸ முக்யான் தித்ருஷு
சாகம் ஸ்ரீ வாதி பீக்ருத் குருமுக விநதை ராஸ்தயா அசவ் ப்ரதஸ்தே
–15-

ஸத்வ குணத்தில் நிலை நிற்பவராய் வான மா மலர் முதலான யதிகளால் ஆஸ்ரயிக்கப்பட்டவரான மா முனிகள் நல் வார்த்தை கேட்டு அனுப்பிய வடநாட்டு அரசன் ஒருவனுக்கு பாகவத சேஷத்வமே பரமார்த்தம் என்று எழுத அனுப்பினார்
அக்காலத்தில் கோயில் பட்டர் ஒருவர் ஜீயரிடம் உம்முடைய ஸிஷ்யர்கள் நம்மை வணங்காமல் அவமானப்படுத்துகிறார்கள் என்று கூற
ஜீயரும் விசாரித்த அளவிலே ஸிஷ்யர்கள் அவருடைய தோஷங்களை சொல்லி எங்களுக்கு அவரை அனுவர்த்திக்க விருப்பமே இல்லை -என்ன
அவரைப் பெருமாளாக நினைத்துப்பணிவுடன் சேவித்துப் போங்கள் எண்டு தோஷம் உள்ள இடத்திலும் குண பிரதிபத்திநாடக்கும்படி செய்தார்
பூவர்களின் அனுஷ்டானத்தில் நிலை நிற்பவரான பெரிய ஜீயர் மீண்டும் திருவேங்கடம் முதலான திவ்ய தேசத்து எம்பெருமான்களை ஸேவிக்க ஆசைப்பட்டு பிரதிவாதி பயங்கரம் அண்ணன் முதலான பணிவுள்ள முதலிகளுடன் புறப்பட்டார் –

நாதம் ஸ்தம்பேரமாத் ரேஸ் ததநுஸக ருதா மீஸ்வராம் ஸாவ தம்சம்
ஸ்துத்வா தத்வா அத தஸ்மிந் கதி பயதி வசான் தேவராஜாதி யுக்த
நத்வா க்ருத ரஹ்ரதேஸம் ததனு ச கடிகாத் ரீஸ்வரம் தேவராஜ
க்ராமம் ஸ்ரீ ரெங்கயித்வா விமல மத ஸரஸ் ஸஹ் யஜாம் ஸ ஹ்ய கார்ஷீத் –
-16-

அத்திகிரி நாதனான பேர் அருளாளனை ஸேவித்து வைகாசித்திரு நாளில் பக்ஷி ராஜனான பெரிய திருவடி நாயனார் மீது ஆபரணம் போல் திகழும் அவனைப் பணிந்து ஏந்தி அங்கேயே சில நாட்கள் எழுந்து அருளி இருந்தார்
பின்பு ஒரு நாள் ஸேவிக்க வந்த எறும்பி அப்பாவோடு புறப்பட்டு திருப்புடக்குழி எம் போர் ஏற்றையும் கடிகைத் தடம் குன்றில் அக்காரக்கனியையும் மங்களா ஸாஸனம் செய்து அருளி எறும்பியை அடைந்து அவ்வூருக்கு வட திருவேங்கடம் என்று திரு நாமம் இட்டு அங்குள்ள குளத்திற்கு திருக்காவேரி என்று பெயர் இட்டு அருளினார்

த்ருஷ்ட்வா ஸ்ரீ வேங்கடாத்ரிம் ததநு ஸ நிகடே தஸ்ய கோவிந்த ராஜம்
யோகீந்த்ர ஸ்தாபிதம் ஸ்ரீ சடமதந முகான் சம்யமீந்த் ராம்ஸ் ச நத்வா
ஆருஹ் யாத்ரிம் ததீஸம் யதிபதி ஸஹிதம் ஸ்ரீ நிதிம் சங்க சக்ரோ
தஞ்சத் பாஹும் ஸடாரி ப்ரமுக ஸூவ சநைஸ் துஷ்டுவே ஹ்ருஷ்ட சேதா
–17-

பின்னர் திரு வேங்கட மலையை அடைந்து அதன் அடிவாரத்தில் எம்பெருமானாராலே எழுந்து அருளப் பண்ணப் பட்ட கோவிந்த ராஜனையும்
நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களும் சேவித்து திருமலை ஏறி அருளி யதிராஜரான எம்பெருமானரோடு திருவாழி திருச்சங்குகளை திருக்கைகளில் ஏந்திய அலர் மேல் மங்கை உறை மார்பனை அருள் மாறன் சேரலர் கோன் நற்கலியன் முதலான ஆழ்வார்கள் திருவேங்கடமுடையான் விஷயமாக அருளிச் செய்த பாசுரங்களை அனுசந்தித்துத் திருவடி தொழுது மனம் மகிழ்ந்தார் –

தத்ர ஸ்ரீ கார்ய க்லுப்த்யை யாதிபதி யமிநம் கல்பயித்வா நிதேசே
தஸ்மாத் ப்ரஸ்தாய கத்வா ரகுவர நிலயம் கிம் க்ருஹம் நிஸ்து லேஸம்
ஸ்ரீ மந்தம் பக்தி ஸாரம் தசரத தநயம் பூர்ணவர்யம் ச நத்வா
ஸூதம் பார்த்தஸ்ய நீரஷிததர திலகம் ஸம்ய மீந்த்ரம் ச பேஜே
—-18-

அங்கே -திருமலையில் -ஸ்ரீ காரியத்திற்காக இளம் கேள்வி எம்பெருமானார் ஜீயரை நியமித்து அங்கு புறப்பட்டு திரு வெவ்வுளூர் வீர ராகவனையும் -திரு நின்றவூர் நித்திலத் தொத்தையும் திரு மழிசையில் பக்தி ஸாரரான திருமழிசைப் பிரானையும் பிச்சை வாரணப் பெருமாள் கோயிலில் தாசாரதியான முதலியாண்டானையும் -பூவிருந்த வல்லியில் காஞ்சீ பூர்னரான திருக்கச்சி நம்பியையும் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதியையும் திரு நீர்மலை எம்பெருமானையும் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பெருமானாரையும் மங்களா ஸாஸனம் செய்து அருளினார் –

பூயோ நத்வா கரீசம் ததநுஸ மதுராம் தத் த்வயோத்பத்தி பூதம்
கத்வா ஸ்துத்வா அபி ராமம் பணி திலக புரே தேவ நாதம் ச நத்வா
வந்தி த்வா ஸத் கவீந்த்ரம் கலி மதந முநீம் திவ்ய தேசான் ப்ரணம்ய
ஸ்ரீ ரெங்கம் ப்ராப்ய யோகீ சிரவிரஹருஜம் ஸ்பீத மோதோ முமோச
–19-

மீண்டும் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி பேர் அருளாளனை ஸேவித்து அங்கிருந்து த்வயம் விளைந்த திருப்பதியான மதுராந்தகத்திற்குச் சென்று சக்ரவர்த்தித்த திருமகனை ஸ்துதித்து பின்னர் திரு வஹீந்திர புரத்துக்கு எழுந்து அருளி தெய்வ நாயகனை மங்களா ஸாஸனம் செய்து அருளி நாலு கவிப்பெருமாளும் திருக்கலி கன்றியுமான திருமங்கை ஆழ்வாரை திரு நகரியிலே ஸேவித்து திருக்கண்ண புரம் ராஜ மன்னார் குடி திருக்குடந்தை முதலான திருப்பதிகளையும் வணங்கி திருவரங்கத்தை அடைந்து பெரிய பெருமாளை நெடுநாள் பிரிந்ததால் உண்டான வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தார்

நத்வா ஸ்ரீ ரெங்க நாதம் விவித மணி முகைர் வஸ்துபிஸ் தோஷயித்வா
நித்யம் தத்ரைவ திஷ்டன் ஸ்வ தின சரித க்ருத தேவராஜார்ய ஜூஷ்டா
ஸார்வஞ்ஞாத் வ்ருத்த கேஸம் வரத ஹரி மசவ் பாவநார்த்தம் நிதேஷ்டா
த்ருஷ்டாத் த்ருஷ்டைர் வதூலம் வரத குரு வரம் சத்ததம் சம்பு போஷ
–20-

பெரிய பெருமாளை ஸேவித்து தாம் கொண்டு வந்த பலவகைப்பட்ட திரு ஆபரணங்கள் -திரு வெண் கொற்றக்குடை கள் -திரு வெண் சாமரங்கள் -திரு ஆலவட்டங்கள் -முதலான பொருள்களாலே உகப்பித்து நித்தியமாக அங்கேயே திருவரங்கத்திலேயே -எழுந்து அருளி இருக்கையாலே தம் வ விஷயமான தின சர்யை என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்த எறும்பி அப்பாவால் வந்து அடையப்பட்டார்
ஜீயர் எல்லாம் அறிந்தவராகையாலே கைங்கர்யத்திற்காக வந்த வரம் தரும் பெருமாள் பிள்ளை தீஷையோடு இருப்பதைப் பார்த்து ஸூத்த்யர்த்தமாக இன்றைக்கு திருமுடி விளக்குவித்துக் கொள்ளும் என்று நியமித்தார்
அன்றைய தினமே வரம் தரும் பெருமாள் பிள்ளைக்குக் குமாரர் பிறந்து பத்து நாளும் கடந்தது என்ற செய்தி வர அனைவரும் ஜீயரின் எல்லாம் உணர்ந்த தன்மையைக் கண்டு வியந்தனர்
கந்தாடை அண்ணன் திரு மாளிகையில் உபாதான திரவ்யத்தைக் கொண்டு நடந்து வந்த அழகிய சிங்கர் திரு வாராதனத்திற்கு த்ரவ்யம் குறைந்து வருகிறபடியைக் கண்டு
தமக்கு வந்த திரு முன் காணிக்கை த்ரவ்யத்தை தினம் தோறும் அண்ணன் திரு மாளிகைக்கு அனுப்பும் படி நியமித்து
இவ்வண்ணம் த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் அண்ணனை அந வரதம் ஆதரித்துப் போந்தார்

அர்ச்சா ரூபாம் ஸ்வ மூர்த்திம் சரண ஸரஜி ஜத்ராயிணீம் உத்தரீயம்
ஸ்வ தர்சம் ஸ்வேத ம்ருத்ஸ்நாம் ஸ்வமத விதரன் ப்ராஹிணோத் தேவ ராஜம்
வாநாத்ரவ் யோகி வர்யம் விபு பரி சரணே ஸ்தாபயித்வா ஸ்வ ஸிஷ்யம்
கோவிந்தார்யம் ச கோதா ப்ரஸதந முகதோ பட்ட நாதம் ஸமாக்யத்
-21-

பிறகு ஜீயர் தம்முடைய அர்ச்சா விக்ரஹத்தையும் திருவடித் தாமரைகளைப் பாதுகாக்கும் திருவடி நிலைகளையும் -திருப்பரி யட்டத்தையும் -திருக்கண்ணாடியையும் -திருமண் காப்பு சேஷத்தையும் தந்து எறும்பி அப்பாவை அவருடைய ஊருக்கு அனுப்பி அருளினார்
அழகிய வரதரான ராமானுஜ ஜீயரை வான மா மலையில் தெய்வ நாயகப்பெருமாள் ஸ்ரீ காரியத்துக்காக நியமித்தார்
திருவாடிப் பூரத்தில் ஆண்டாளுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ஆதரத்தோடு கொணர்ந்து சமர்ப்பித்த கோவிந்த தாஸர் அப்பருக்கு பட்டர் பிரான் தாஸர் என்று திரு நாமம் சாத்தி அருளினார்

த்ரஷ்டும் பூயஸ் சடாரிம் ஸபதி ஜிக மிஷத் மாதுரம் பாண ராஜம்
தாபாத் யை பாவயித்வா ததுசிதஸிபி காதாரணாத் யர்ச்யமாநா
தத் தத்த க்ராம வர்யம் ருசிர வர இதி க்யாப யித்வா முனீந்திர
ஸேதோர் மார்கேண கச்சந்த குருத மனஸா தீந்த்ரிணீ வ்ருஷ மோக்ஷம்
–22–

மீண்டும் நம்மாழ்வாரை ஸேவிக்க விரும்பி விரைந்து புறப்பட்ட ஜீயர் மதுரை அரசனான மஹா பலி வாணராயனுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து அருளி அவனாலே பல்லக்குச் சுமத்தலாகிற கைங்கர்யத்தினால் கௌரவிக்கப் பட்டார் –அவன் கொடுத்த முத்தரசனத்தல்
என்ற க்ராமத்தை அழகிய மணவாள நல்லூர் என்று பெயர் இட்டார் –
திருவணை வழியாகச் செல்லும் போது தமக்கும் முதலிகளுக்கும் நிழல் கொடுத்த பெரிய புளிய மரம் மோக்ஷம் அடைய வேண்டும் என்று மனத்தால் நினைத்தார் -அவ்வளவிலே அம்மரம் பட்டுப்போய் பரமபதத்தை ப்ராபித்தது

த்ருஷ்ட்வா ஸ்ரீ மச் சடாரிம் புநரபி ருதுகீ பூர்வ வத் ரங்க தாம்நி
ஸ்ரீ ஸம் நத்வா வநாத்ரவ் யதிவரயமிநம் ப்ராஹிணோத் கிங்க்ரி யார்த்தே
ஸ்ரீ மத் ராமானுஜ அங்க்ர் யோரம்ருத குரு வரை ரர்ப்பித்தாம் ஸூக்தி மாலாம்
வ்யாஸஷாணோ மஹார்கைர சரஸ க்ருத முகை ரங்க நாதம் புபோக்ஷ
–23-

நம்மாழ்வாரை மங்களா ஸாஸனம் செய்து விட்டு மீளவும் குதூ ஹலத்தோடு கோயிலுக்கு எழுந்து அருளிப் பெரிய பெருமாளைப் பணிந்து நின்றார் –
திருமாலிருஞ்சோலையில் ஸ்ரீ கார்ய நிர்வாஹகராய் இருந்து கைங்கர்யம் பண்ண யதிராஜ ஜீயரை அனுப்பி வைத்தார்
எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளில் திருவரங்கத்து அமுதனாரால் சமர்ப்பிக்கப்பட்ட சொல் மாலையான இராமானுஜ நூற்றந்தாதி க்கு வ்யாக்யானம் அருளிச் செய்தார்
நறு நெய் பச்சை கற்பூரம் முதலிய சிறந்த பதார்த்தங்களாலே நம்பெருமாளை உபசரித்து உகப்பித்தார்

ஸ்ரீ மான் காந்தோ பயந்தா ஸடரிபு பணி திவ்யாக்ரியாயா ஸஹஸ்ரை
ஷட்பிஸ் த்ரிம்ஷத் ஸஹஸ்ர்யா உபசயக்ருதி தி ஸ்ரீஸ பட்டார்ய கீத
ஆக்யாதாம் க்ருஷ்ண பாதைர் கலி கலுக்ஷபலாத் கர்சிதாம் பூர்வ டீகாம்
திருஷ்ட்வா பட்டேச ஸூக்தேர் லலிதர ஸமயீம் வ்யாக்ரியாம் ஸாது சக்ரே
–24-

கைங்கர்யச் செல்வம் நிறைந்தவரான மணவாள மா முனிகள் திருவாய் மொழி வியாக்யானமான ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்று திருமாலை தந்த பெருமாள் என்கிற பட்டராலே கொண்டாடப்பட்டார்
கிருஷ்ண ஸூரியான பெரியவாச்சான் பிள்ளையால் அருளிச் செய்யப்பட பெரியாழ்வார் திரு மொழி வியாக்யானத்தின் முன் -பெரும் -பகுதி கலியின் கொடுமையினால் காணாமல் போக அப்பகுதிக்கு ரஸ மயமான ஒரு வியாக்யானத்தை நன்றாக அருளிச் செய்தார் ஜீயர்

பாலம் வாதூல நாதம் ஸ்வ க்ருத விவரண ஸ்லாகிநம் வர்தயித்வா
பாணார்யே தத் சஹாயே புவந குரு தனம் ரங்க நாதம் ததவ் ஸா
ஆம்நாய நாம் விமர்ஸீ குருவர ஹ்ருதயம் ஸ்தாவிரே வ்யாசி கீர்ஷத்
யுஷ்மத் வம்ஸ் யார்த்த மேதத்த்விதி வரத குரும் ப்ராஹ தேதாநு புக்தா
–25-

தம்முடைய வியாக்யானத்தைக் கொண்டாடின அதி பாலரான கந்தாடை நாயனை ஆசீர்வதித்து பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானம் எழுதும் போது உடன் இருந்து உதவிய திருப்பாண் ஆழ்வார் தாதர் நாயனாருக்கு பிள்ளை லோகாச்சார்யரின் திருவாராதனப் பெருமாளான ஸ்ரீ ரெங்கராஜரைக் கொடுத்து அருளினார்
ஜீயர் முதுமையில் திருக்கழுத்து நோவ ஆசார்ய ஹ்ருதய வியாக்யானம் எழுதுகையில் எதற்க்காக இப்படி ஸ்ரமப்பட வேண்டும் என்று கேட்ட கோயில் கந்தாடை அண்ணனுக்கு உம்முடைய வம்சனத்திற்காகவே என்று பதில் உரைத்தார்

ஹ்ருதயம் வாதூல வர்யம் வரத குரு வரம் வாதிபீ க்ருத் குரும் ச
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ சடாரிம் ஸ்ருதி விவரணயோர் கல்பயித்வா அபி ஷிக்தவ்
தேவஸ் யாதேஸ மேவம் ஜகதி சபலயந் ஸ்வாவ தாரேண பூயா
ப்ராப்தும் ஸ்வம் தாம திவ்யம் ருசிர வரமுனிஸ் சேதநாயாம் சகாங்ஷே
–26-

ஜீயர் தம் மனதுக்கு இனியவர்களான கந்தாடை அண்ணனையும் பிரதிவாதி பயங்கரம் அண்ணனையும் முறையே பகவத் விஷய ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாசனங்களில் அபிஷேகம் செய்து அருளினார்
இவ்வண்ணம் எம்பெருமானுடைய நியமனத்தை தம்முடைய அவதாரத்தாலே நிறைவேற்றி மணவாள மா முனிகள் மீண்டும் தம்முடைய திவ்யமான ஸ்தானத்தை அடைய மனஸ்ஸால் நினைத்தார் –

ஆர்த்திம் ஸ்வோக்த்யா விவ்ரண்வத் ருசிர வர முனி ஸ்யந்த நஸ்தம் ரமேஸம்
ஸ்ரீ ரெங்கேஸம் தித்ருஷு ஸ்வ மட துரி சமாகத்ய திஷ்டந்த மேவ
த்ருஷ்ட்வா தூதாகி லாத்திர் கதிபயதி வசான் லோக பாக்யேந ஜீவன்
பூயோ ராமானுஜ அங்கரி த்வய சமுபகமே துர் நிவாரத்வரோ அபூத்
–27-

எம்பெருமானை உடனே அடைய வேண்டும் என்று தம்முடைய திரு உள்ளத் துடிப்பை -ஆர்த்தி பிரபந்தம் மூலம் வெளிப்படுத்திய ஜீயர் திருத்தேரிலே புறப்பட்டு திருமகள் கொழுநனாகிய நம்பெருமாள் மடத்து வாசலிலே நின்று ஸேவை ஸாதிக்கக் கண்ட துக்கம் எல்லாம் தீர்ந்தவராய் உலகத்தார் செய்த பாக்யத்தால் ஒரு சில நாட்கள் எழுந்து அருளி இருந்து மீண்டும் எம்பெருமானாரின் திருவடி இணையை அடைவதில் மிகுந்த த்வரையை யுடையவரானார் –

தஸ்மின் காலே ஷிதீஸம் கமபி யதுகிரே ஸூந்தரம் பட்ட நாத
த்வாரா ரஷத் ஸ்வ பவ்த்ரே நிஜதநு க்ருதயே பாஜநம் ஸ்வம் திதேச
ஸ்தித்வா ராமானுஜ அங்க்ரிய ஆஸ்ரித இஹ சரதாம் சப்ததிம் த்ரயப்த பூர்வாம்
ஸோ அயம் ராமானுஜ அங்க்ரித்வய மதருதிரோத் காரி கும்பே ப்ரபேதே
–28-

அக்காலத்தில் வந்தடைந்த அண்ணராய சக்ரவர்த்திக்கும் மேல் நாட்டுத் தோழப்பருக்கும் வர தமையரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கும் பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரைக் கொண்டு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்து அருளினார் –
பின்பு தம்முடைய பூர்வாஸ்ரம திருப்பேரானார் இடத்தில் தமது அர்ச்சா விக்ரஹத்தை எழுந்த அருளப் பண்ணுவதற்காகத் தம்முடைய திருக்கைச் செம்பைக் கொடுத்து அருளினார்
எம்பெருமானார் திருவடிகளில் ஊன்றியவராய் 73 திரு ன் நக்ஷத்ரங்கள் இந்நிலவுலகில் எழுந்து அருளி இருந்த ஜீயர் ருதிரோத்காரி ஸம்வத்சரத்தில் எம்பெருமானார் திருவடிகளை அடைந்தார்

ஸாஹஸ்ராணாம் சதுஷ்காத நுகலி சரதே ஸர்வாக் சதுர்ப்யாஸ தேப்யா
சப்தத் யூர்த்வம் த்விதீயே சதுலசித கருத் யுக்த சாதாராணாப்தே
மூலே க்லுப்தா வதாரோ க ந இவ ஸஜலா ஸர்வ ஸந்தாப ஹாரீ
ஸ்ரீ மான் காந்தோ பயந்தா முனி ரிஹ ஜய தாதா விரிஞ்ச ப்ரபஞ்சம்
–29-

கலியுகம் பிறந்த 4472-ஸாதாரண வருஷத்தில் துலா -ஐப்பசி -மாதத்தில் வளர்பிறையில் திருமூல நன்னாளில் திருவவதரித்து நீருண்ட காள மேகம் போலே அனைவருடைய தானங்களையும் போக்கிக்கொண்டு எழுந்து அருளி இருந்த கைங்கர்யச் செல்வரான பெரிய ஜீயர் உலகம் உள்ளவரையில் இங்கே வெற்றியோடு விளங்கட்டும்

வரத யாக்ருத்யாத ரங்க ப்ரபு மணி வஸசா மிஞ்ச வ்ருத்தாகி ராஸ
ஸ்வா வாஸே வஹ்னி ஜூஷ்டே பணி பதி வபுஷா நாலதோ நிர்கமேன
ஸ்ரீ மான் சேஷ அவதாரோ வரவர முனி ரித்யேவ ஸர்வோ அபி லோக
யம் மேநே தம் குணாட் யம் ருசிர வர முனிம் ப்ரோஸச்ய தன்யோ மதாத்மா
–30-

பாலின் வண்ணம் போன்ற திருமேனி நிறத்தாலும் உத்தம நம்பிக்கு கனவிலே தோன்றிய பெரிய பெருமாள் -இவர் காணும் மா முனிகளாக அவதரித்துள்ளார் -என்று திருவானந்தாழ்வானைத் தொட்டுக் காட்டி அருளிச் செய்கையாலும் -திருமலை ஆழ்வார் கால ஷேப கூடத்திலே சடகோபக் கொற்றி என்ற மூதாட்டி பெரிய ஜீயரை ஆதிசேஷன் உருவில் கொண்டதாலும்
ஆழ்வார் திருநகரியிலே ஜீயர் எழுந்து அருளி இருந்த மடத்துக்கு சிலர் நெருப்பு வைத்த போது பாம்புருக்கொண்டு கோமுகச்சாரிக்கை வழியே வெளியில் வந்தபடியால் கைங்கர்யச் செல்வம் நிறைந்த ஆதி சேஷனின் அவதார பூதரே மணவாள மா முனிகள் என்று எல்லா உலகத்தாராலும் கருதப்படும் குணக்கடலான பெரிய ஜீயரைப் பற்றி பேசி அடியேன் தன்யன் ஆனேன்

இத்தம் பூ சார வாசான் ந்ருஹரி குரு வராடீ தாசரத் யார்ய வம்ஸ்யாத்
ஜாதஸ் தத் த்ருஷ்டி பூதோ வரத குரு க்ருபா லப்த போத ப்ரபுத்த
ஸத்ஸே வீராக வார்யோ ருசிர வர முனே ஸர்வ லோகேடி தாங்க்ரே
வ்யாஜஹ்ரே திவ்ய சர்யா ரஸ சஷகம் இதம் யா படேத் ஸோ அதி தன்ய
–31-

இவ்வண்ணம் மஹீ சார க்ஷேத்ரமான திருமழிசையில் வஸிக்கும் முதலியாண்டான் திரு வம்ஸ்யரான நரசிம்ஹாச்சார்யருக்கு புத்ரனாகப் பிறந்து அவரால் கடாக்ஷிக்கப் பட்டவரும் வரதாச்சார்யருடைய அருளாலே பெற்ற அறிவினால் விளங்குபெறும் நல்லோர்களைப் பணிபவருமான வீர ராகவார்யர் அனைத்து உலகினராலும் வணங்கப்படும் திருவடிகளை யுடையவரான மணவாள மா முனிகளின் திவ்ய சரித்ர அமுதத்தை இவ்வாறு அருளிச் செய்தார் -இந்நூலைப் படிப்பவர் அதி தன்யராவர்-

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Posted in ஸப்த காதை, ஸ்ரீ மணவாள மா முனிகள் | Leave a Comment »

ஸ்ரீ:  “சாரீரக பரிபாஷா” என்னும் ஸ்ரீ: யதீந்த்ர மத தீபிகை–

February 6, 2024

ஸ்ரீ:யதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தமானது ஸ்ரீ:சோளஸிம்ஹபுரம் மஹாசார்யர் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யரால் அருளப்பட்டது. இதில் விசாரிக்கப்பட்டுள்ள விஷயங்களே பகவத் ஸ்ரீ:இராமானுச ஸித்தாந்தம் என்று சொல்லப்படும் ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் முக்கிய விஷயங்கள் ஆகும்.

இந்நூலில் மொத்தம் 10 அவதாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அபிநவ தசாவதாரமோ என்று வியக்கும்படி இக் க்ரந்தம் 10 அவதாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அவதாரத்தில், பதார்த்தங்களின் பிரிவைக் காட்டி விட்டு பின் ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது அவதாரத்தில் அனுமானம் விசாரிக்கப்படுகிறது. மூன்றாவது அவதாரத்தில் சப்தம் விசாரிக்கப்படுகிறது. இப்படி ப்ரமாணங்கள் விளக்கப்பட்ட பின், ப்ரமேயங்கள் விளக்கப்படுகின்றன. நான்காவது அவதாரத்தில் ப்ரக்ருதியும், ஐந்தாவது அவதாரத்தில் காலமும் விளக்கப்படுகின்றன. ஆறாவது, ஏழாவது அவதாரங்களில் முறையே நித்ய விபூதியும் தர்ம பூத ஞானமும் விளக்கப்படுகின்றன. எட்டாவது அவதாரத்தில் ஆத்மாவாகிற ஜீவன் விசாரிக்கப்படுகிறது. ஒன்பதாவது அவதாரத்தில் ஈச்வர தத்வம் விளக்கப்பட்டுள்ளது. 10வது அவதாரம் அத்ரவ்ய தத்வத்தினை விளக்குகிறது.

இந்நூலினை இவ்வாசிரியர் தாமே “சாரீரக பரிபாஷா” என்று அருளியுள்ளார். 

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் -1-
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்
–2-

ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யர் தாம் தொடங்கிய க்ரந்தம் நிர்விக்னமாக நிறைவு பெறுவதற்கும், பின்புள்ளார் அனுஸந்திப்பதற்கும் முதலில் இஷ்ட தேவதா நமஸ்காரமாக ச்லோகம் அருளிச்செய்கிறார்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனான ஸ்ரீநிவாஸனையும், ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் கச்சி தேவப்பெருமாளையும், கடிகாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரஸிம்ஹனான அக்காரக்கனியையும், கீதாசாரியனான கண்ணன் எம்பெருமானையும், ஸித்தாந்த ஸ்தாபகரான எம்பெருமானாரையும், ஸ்வப்னத்தில் ஸேவை ஸாதித்தருளிய மஹாசார்யரையும் அடியேன் வணங்குகிறேன்.

  • இந்த ஸ்வாமிக்கு அவர்தம் ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி ஸ்வப்னத்தில் ஸேவை ஸாத்திதருளி இக்க்ரந்தம் அருள நியமித்தார் என்பது ப்ரஸித்தம்.
  • ஸ்வாமி திருமலையில் நெடுநாட்கள் கைங்கர்யம் செய்ததால் முதலில் ஸ்ரீவேங்கடாசல நாயகனான ஸ்ரீநிவாஸன் என்று தொடங்கினார் என்னவுமாம்
  • ஸ்ரீநிவாஸன் எனத்தொடங்கி எம்பெருமானார் நடுவாக தமது ஆசார்யரான மஹாசர்யர் பர்யந்தமாக அருளியதால் இந்த ச்லோகம் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்…. அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் என்று குருபரம்பராநுஸந்தானமும் அருளிச் செய்தாராயிற்று.
    • தண்ணார் வேங்கடம் – குளிர்மிக்கு இருந்துள்ள திருமலை. ரக்ஷகனுக்கு ரக்ஷ்ய வர்க்கம் பெறாமையால் வரும் தாபத்தையும், இங்குள்ளார்க்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் தீர்க்கவற்றாய் இருக்கை. (தி. வா. மொழி 1-8-3)
    • வட வேங்கடம் – உபயவிபூதிக்கும் நடுவான (திரு. நெடு – 16)
    • சீரார் திருவேங்கடமே – நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒக்கமுகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையாய் ஏற்றம் உண்டிறே திருமலைக்கு – (சி. திருமடல்)
    • வேங்கடவன் – அர்ச்சாவதாரத்துக்குப் பொற்கால் பொலிய விட்ட இடம். (அமலனாதிபிரான் – 1 நாயனார் வ்யா) – இத்யாதி ஏற்றம் பெற்றதிறே திருமல(க்ருஷ்ணேந ஸஹ யதி ராஜம்) என்பது இன்சுவை மிக்கது.
    • க்ருஷ்ணன் கீதாசாரியன், கீதை அருளியவன். ஸ்வாமி அதற்கு செம்மைப் பொருள் பாரினில் தெரிய வ்யாக்யானம் அருளியவர்.
    • அவன் பலராமானுஜன். இவர் இராமானுசர்.
    • அவன் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான். இவர் மேதினி (பூமி) நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்க (பூமாதேவி நல்லவர்களைத் தாங்குவது எளிது. தீயவர்களை சுமப்பது மிகவும் சுமையாகக் கருதுபவள். எம்பெருமானார் திருவவதரித்ததால் அனைவரும் திருந்தி விட்டதால் தம் சுமை நீங்கியது என ஆறி இருந்தாள். அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே – நாரணற்காயினரே) திருவவதரித்தார்.
    • க்ருஷ்ணனின் மாமாவான கம்ஸன் ஸாரதியாய் தேரோட்டினான்; க்ருஷ்ணனும் பார்த்தஸாரதியாய் தேரோட்டினான் – ஸ்வாமியின் மாதுலரான பெரிய திருமலை நம்பி திருவேங்கடமுடையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்தார் – ஸ்வாமியும் சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்தார்.
    • அவன் – கருந்தெய்வம், இருளன்ன மாமேனி கொண்டவன்; ஸ்வாமி – [உத்யத்திநேசநிபமுல்லஸதூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே] (உதிக்கும் ஸூரியனை ஒத்ததும் திருமண்காப்பு துலங்குவதுமான தேவரீர் திருமேனி) என்றபடி உதிக்கும் ஸூரியனை ஒத்த திருமேனியை உடையவர்
    • யதீச்வரம் ப்ரண்ம்யாஹம் வேதாந்தார்யம் மஹாகுரும் |
      கரோமி பாலபோதார்த்தம் யதீந்த்ரமத தீபிகாம் || 2
    • யதிகளுக்கெல்லாம் தலைவரான எம்பெருமானாரையும், வேதாந்தாசாரியரையும், தமது ஆசாரியரான மஹாசாரியரையும் வணங்கி, பாலர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு  யதீந்த்ர மத தீபிகை என்னும் இந்த க்ரந்தத்தை இயற்றுகிறேன்.
    • இதனால் இந்த க்ரந்தத்தில் அருளும் அர்த்தம் குரு பரம்பராப்ராப்தமானது என்பதைக் காட்டியருளினாராயிற்று.
    • யதீந்த்ரர் என்றால் யதிகளுக்கு அரசர் என்றர்த்தம். இத் திருநாமம் கச்சி தேவப்பெருமாளால் ஸ்வாமிக்கு ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரிக்கும் பொழுது அனுக்ரஹிக்கப்பட்டது. பெரிய திருமொழித் தனியனிலும் எம்பெருமானாரை “தவராசா” என்றது காண்க.
    • பாலர்கள் என்றால் தத்வத்தை அறிந்து கொள்வதில் ஆசையுள்ளவர்கள் என்றபடி. மீமாம்ஸா பரிபாஷா முதலான க்ரந்தங்களிலும் பாலர்கள் என்பது இவ்வர்த்ததில் ப்ரயோகப்படுத்தியிருப்பது காண்க
    • ஸ்ரீமந் நாராயண ஏவ சிதசித் விசிஷ்டாத்வைதம் தத்வம், பக்தி ப்ரபத்திப்யாம் ப்ரஸன்ன ஸ ஏவ உபாய: இதி வேதாந்த வாக்யை: ப்ரதிபாதயதாம் வ்யாஸ போதாயன குஹதேவ பாருசி ப்ரஹ்மநந்தி ட்ரமிடாசார்ய ஸ்ரீபராங்குச நாத யாமுன முனி யதீச்வர ப்ரப்ருதீநாம் மதாநுஸாரேண பால போதனார்த்தம் வேதாந்த அநுஸாரிணி யதீந்த்ர மத தீபிகாக்யா சாரீரக பரிபாஷா மஹாசார்ய க்ருபாவலம்பினா மயா யதா மதி ஸங்க்ரஹேண ப்ரகாச்யதே || 3 ||
    • க்ரந்தத்தின் ஆதியில், மங்களாசாஸனம், நமஸ்காரக்ரியா ஆகியவை தவிர அக்க்ரந்தத்தில் தெரிவிக்கப்படும் விஷயத்தையும் அறிவிப்பது சாஸ்த்ரக்ரமம். ஆகையாலே முதலில் ஸித்தாந்தத்தை ஸங்க்ரஹிக்கிறார் –
    • அறிவுள்ள சேதனர் எனப்படும் சித், அறிவற்றவையான அசித் இவையிரண்டையும் தனக்கு, பிரிக்க முடியாத விசேஷணங்களாக, ப்ரகாரமாக உடையவனான பெரிய பிராட்டியாருடன் கூடியவனான நாராயணன் ஒருவனே தத்வம். இதனையே பரமாசாரியாரன ஸ்வாமி நம்பிள்ளை ஈட்டில் “நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று. அவையாவன – சித்தும், அசித்தும், ஈச்வரனும். ப்ரகார ப்ரகாரிகள் ஐக்யத்தாலே ஒன்றென்னலாய், ஸ்வரூப பேதத்தாலே பலவென்னலாயிருக்கும்.” என்றருளினார். ப்ரகாரம் என்றால் பிரிக்க முடியாத விசேஷணம் என்றபடி.  “குண்டலங்களை அணிந்த புருஷர் வருகிறார்” – என்ற வாக்கியத்தில் குண்டலங்கள் விசேஷணமாக இருந்தாலும் அதனை விசேஷ்யமான புருஷனிடமிருந்து பிரித்துவிடலாம். ஆனால் *அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்தித:* என்று உள்ளும் புறமும் ஒக்க வ்யாபித்திருக்கும் நாராயணனுக்கு, சித் அசித் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத விசேஷணங்களாகின்றன. எனவே அவை ப்ரகாரங்கள் ஆகின்றன. இதையே அப்ருதக்ஸித்த விசேஷணம் என்று அழைப்பர்.
    • இதனையே திருமழிசைப் பிரான் * உலகு நின்னொடொன்றி நிற்க * என்றார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையினுடைய வ்யாக்யானம்.” ஜகத்து உனக்கு சரீரமாகையாலே உன்னைப் பிரியாதே நிற்க ” அதாவது ப்ரபஞ்சம் முழுவதும் சரீரியான உன்னோடு சரீரமாய் அணைந்து நிற்க என்றபடி.
    • தானே எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்திருசுடருமாய இறை (சுடர் விடும் அக்னியும் பெரிய குலபர்வதங்களும் எட்டுத் திக்குக்களும் அண்டத்தினுள்ள சந்த்ர சூர்யர்களும் தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்) என்றார் மஹதாஹ்வயரான பேயாழ்வார். தானே என்ற ஏகாரத்தினால் இப்படி இருப்பவன் ஒருவனே – வேறுயவனுமில்லை என்றருளினாராயிற்று
    • ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:
    • வநாநி விஷ்ணுர் கிரயோ திசச்ச |
    • நத்ய: ஸமுத்ராச்ச ஸ ஏவ ஸர்வம்
    • யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய || (ஸ்ரீ வி.பு – 12-12-38)
    • ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே “அந்தணர் தலைவரே! (மைத்ரேயரே!) சோதிகளும் விஷ்ணுவே; உலகங்களும் விஷ்ணுவே; வானங்களும் விஷ்ணுவே; வனங்களும், மலைகளும், திசைகளும் , நதிகளும், ஸமுத்ரங்களும் விஷ்ணுவே; நிலையானதாகையால் உள்ளதெனப்படும் சேதனமும், நிலையற்றதாகையாலே இல்லதெனப்படும் அசேதனமும் ஆகிய எல்லாம் அவனே” என்று ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாய், தான் ப்ரகாரியாய், தன்க்கு ஒரு ப்ரகார்யந்தரமன்றிக்கே இருக்கக்கடவன் ஸர்வேஸ்வரன் என்பதனை அருளினார்.
    • (த்வயோர்பாவத் த்விதா – த்விதம்; த்விதைவ த்வைதம்; நாஸ்தி த்வைத யஸ்மின், ததத்வைதம்; சிதசிதோர்ப்ருதக்ஸித்தவிசேஷணத்வேந ப்ரஹ்மண்யண்தர்பூதத்வாத் விசிஷ்டம் ஏகமேவ தத்த்வம் இத்யர்த்த🙂 இரண்டாகப் பாவிப்பது த்விதம் – இரண்டு என்பது த்வைதம் – இரண்டாவது இல்லை என்பது அத்வைதம் – சித் அசித் ஆகியவற்றைத் தனக்கு சரீரமாகக் கொண்ட வஸ்துவான ப்ரஹ்மத்தைப் போன்று இரண்டாவது வஸ்து இல்லை என்பது விசிஷ்டாத்வைதம்.
    • இப்படி இருக்கும் பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனே பக்தி, ப்ரபத்தி எனும் இரண்டில் ஒன்றினால் அகமகிழ்ந்து, தானே உபாயமாகிறான். உபாயமாகிறான் என்றது மோக்ஷம் அளிக்கிறான் என்றபடி. இப்படி மோக்ஷம் அளிக்கும் வல்லமை ஸ்ரீமந்நாராயணனுக்கே உண்டு. ஆழ்வார் தாமும் எம்பெருமானுடைய பரத்வத்தை அறிவிக்க நாலு திருவாய்மொழிகளை அருளிச் செய்தார் (உயர், திண், அணை, ஒன்று என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் அவை காட்டப்பட்டுள்ளது காண்க). அவற்றுள் அணைவது அரவணை மேல் என்னும் திருவாய்மொழியில் மோக்ஷப்ரதத்வம் என்னும் குணத்தையே ஆழ்வார் காட்டியருளினார். ஸ்ரீமத் வரவரமுனிகளும் இத்திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி அருளிச்செய்யுமிடத்து, இது தன்னையே குணந்தனையே என்றருளினார்.
    • ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதான தேசவிஷேஷமான பரமபதத்தில் இருக்கும் அவ்வெம்பெருமானே மோக்ஷத்தில் அடையப் பெரும் பொருளாகிறான். இது அப்ராக்ருதம் என்றதினால், இந்த தேசம், அங்கு கிடைக்கும் பலன் ஆகியவை அழியாதது என்ற அர்த்தம் கிடைத்தாயிற்று. ப்ராக்ருதம் – ப்ரக்ருதி ஸம்பந்தமுடையது; அப்ராக்ருதம் – அது இல்லாதது. இத்தால் ப்ரக்ருதி மண்டலம் போல ஸத்த்வ, ரஜஸ், தமோ குணங்கள் சேர்ந்தது இல்லாமல் சுத்த ஸத்வமாய் உள்ளது என்றதாயிற்று. * சோதி விண் * என்றபடி. ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யானம் – ஸூ 79 இது விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • ஆக இவ்வளவினால் தத்வ, ஹித, புருஷார்த்தங்களை அருளினாராயிற்று. தத்வம் -> சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மம்; ஹிதம் -> எம்பெருமானின் அருள்; புருஷார்த்தம் -> ஸ்ரீவைகுண்டத்தில் அவனைக் கிட்டி அங்கு பெறும் வாழ்வு.
    • இதனால் எம்பெருமானே உபாயம்; அவனே உபேயம் என்பதனை தெரிவித்தருளினாராயிற்று. புல்லைக் காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பலஸாதநங்களுக்கு பேதமில்லை என்கிற ஸ்ரீவசன பூஷண ஸ்ரீஸுக்தி இங்கு நினைக்கத் தக்கது.
    • இது தன்னையே வேதாந்த வாக்யங்கள் ப்ரதிபாதிக்கின்றன. மேலும் ஆசாரியர்களும் இது தன்னையே கைக் கொண்டார்கள். அவ்வாசார்ய பரம்பரையை அனுஸந்திக்கிறார்.
    • இவர்கள் அனைவருமே மேலே கூறிய மதத்தையே ஆசரித்திருக்கிறார்கள். அவர்களுடைய மதத்தை அனுஸரித்து “யதீந்த்ர மத தீபிகை” என்னும் சாரீரக பரிபாஷையானது என் ஆசாரியரான ஸ்வாமியின் க்ருபையால் சிறுவர்களுக்கு ஞானம் உண்டாவதற்காக செய்யப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்திற்கு சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்றே பெயர். ஸமஸ்த சேதனாசேதனங்களும் எம்பெருமானுக்கு சரீரம்; எம்பெருமான் சரீரி – சாரீரனைப் பற்றிக் கூறும் சாஸ்த்ரம் ஆகையாலே இது சாரீரகம். (யஸ்ய ப்ருதிவீ சரீரம்) என்றாம்பித்து (யஸ்யாத்மா சரீரம்) என அனைத்தையும் ப்ரஹ்மத்திற்கு சரீரமாக ஸ்ருதி சொன்னது.
    • நம்மாழ்வாரைக் குறிப்பிடும் பொழுது மட்டும் “ஸ்ரீ” சேர்க்கப்பட்டது காண்க. ருஷிகளில் காட்டிலும் இவருக்கு உண்டான ஏற்றம் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டப்பட்டுள்ளது இங்கு ஸ்மரிக்கத் தக்கது.
    • (வேதாந்த வாக்யை:) என்ற பஹுவசனத்தினால் (பன்மையினால்), சிலரைப் போன்று, ஒன்று இரண்டு வாக்யங்களை முக்யமாகக் கொண்டு ஸித்தாந்தம் செய்வதில்லை. வேதத்தில் உள்ள வாக்யங்கள் அனைத்தையும் கொண்டு தான் ஸித்தாந்தம்  செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டியருளினார் ஆயிற்று. ஸ்வாமி எம்பெருமானாரும் தம்முடைய வேதார்த்த ஸங்க்ரஹத்தில், இதே ரீதியில் வேதாந்த வாக்ய ஜாதம் (வேதாந்த வாக்யங்களின் கூட்டங்கள்) என்றார்.
    • வ்யாஸரை இவரது ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியும் தமது பாராசர்ய விஜயத்தில்
    • வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||
    • என்னும் ஶ்லோகத்தினால் கொண்டாடியிருப்பது குறிக்கத்தக்கது. அதாவது “வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான்.” என்றபடி.
    • ———————
    • ஸர்வம் பதார்த்த ஜாதம் ப்ராமாண ப்ரமேய பேதேன த்விதா பிந்நம் ॥ 4
    • இனி க்ரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் வஸ்துக்களின் பிரிவினைக் காட்டி விட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து விளக்க உள்ளார். அனைத்து வஸ்துக்களயும் ப்ரமாணம், ப்ரமேயம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
    • ப்ரமாணாணி த்ரீண்யேவ | ப்ரமேயம் த்விவிதம், த்ரவ்யத்ரவ்யபேதாத் ॥ 5
    • ப்ரமாணம் – உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது; ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது. ப்ரமாணங்கள் மொத்தம் மூன்று – 1) ப்ரத்யக்ஷம், 2) அனுமானம், 3) ஶப்தம். ப்ரமேயத்தை மொத்தம் இரண்டாகப் பிரிக்கலாம். 1) த்ரவ்யம் – மாறும் நிலைகளையுடைய பொருள்; 2) அத்ரவ்யம் – த்ரவ்யங்களின் நிறம், சுவை முதலிய தன்மைகள்.
    • அழகிய மணவாளச் சீயரும் தம்முடைய தத்வ நிரூபணத்தில் “இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும், அநுமாநத்தையும், ஆகமத்தையும் இம்மூன்றையும் வைதிகர் ப்ரமாணமாக பர்க்ரஹிக்கிறவளவிலே…” என்றருளிச் செய்தது இங்கு குறிக்கொள்ளத்தக்கது..
    • ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது என்று ஸாதாரணமாகச் சொன்னாலும், முமுக்ஷுக்களுக்கு சிதசித் விலக்ஷணான பரமாத்மாவே ப்ரமேயம் என்பது அறியத் தக்கது.
      • கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ – ஈடு ஸ்ரீ ஸூக்தி – இவ்விஷயத்தையொழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடலல்ல என்றிருக்கிறார். தத்ஜ்ஞாநமதோந்யதுக்தம் என்றானிறே. பகவல்லாபத்துக்குஉடலான ஜ்ஞாநம் ஜ்ஞாநமாகிறது; அல்லாதது அஜ்ஞாநமென்னக்கடவதிறே
      • ஸர்வம் -வஸ்து –பிரமாணம் ப்ரமேயம் -என்ற இரண்டு
      • பிரமாணம் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -சப்தம் -என்ற மூன்றும்
      • ப்ரமேயம்-த்ரவ்யம் அத்ரவ்யம் என்ற இரண்டும்
      • த்ரவ்யம் த்விவிதம் ஜடமஜடம் சேதி ॥ 6
      • த்ரவ்யத்தை ஜடம், அஜடம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஜடமாவது – வேறொரு ஜ்ஞானத்தால் மட்டுமே தோன்றக்கூடியது; அஜடமாவது – தானாகவே ப்ரகாஶிப்பது.
      • ஜடம் ச த்விவிதம், ப்ரக்ருதி காலச்சேதி । ப்ரக்ருதிச் சதுர்விம்ஶதி தத்வாத்மிகா । காலஸ்து உபாதி பேதேந த்ரிவித: ॥7
      • ஜடத்தின் பிரிவுகள் இரண்டு – ப்ரக்ருதி மற்றும் காலம். ப்ரக்ருதி – 24 தத்வங்களாவது; சூரியனுடைய உபாதி பேதத்தால் காலம் மூன்று – 1) பூத (இறந்த காலம்), 2) பவிஷ்ய (வருங்காலம்); 3) வர்த்தமான (நிகழ் காலம்) காலங்கள்.
      • அஜடம் து த்விவிதம், பராக் ப்ரத்யக் சேதி। பராகபி த்விவிதா-நித்ய விபூதி:, தர்ம பூத ஞானம் சேதி। ப்ரத்யகபி த்விவிதா: – ஜீவேஶ்வர பேதாத்॥ 8
      • அஜடம் இருவகைப்படும் – 1) ப்ரத்யக் மற்றும் 2) பராக். ப்ரத்யக் – தன்னைப் பற்றிய ஜ்ஞானம் தனக்கு வருமாறு உள்ள பொருள். பராக் – தன்னப் பற்றின ஜ்ஞானம் மற்றொன்றிற்கே வருமாறு உள்ள பொருள் (ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அஜடப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வரும்)
      • நித்ய விபூதியும் தர்மபூத ஞானமும் பராக் –
      • ஜீவனும் பரமாத்மாவும் ப்ரத்யக்
      • ஜீவ: த்ரிவித: பத்த முக்த நித்ய பேதாத் ॥  9
      • ஜீவர்கள் மொத்தம் மூன்று வகை – பத்தர், முக்தர், நித்யர்.
      • பத்தர்க்கும் பரமபதத்திலிருக்கும் நித்யர்க்கும், முக்தர்க்கும் உள்ள படியினை ஸ்ரீ லோகதேசிகனான பிள்ளை லோகாசார்யர், அஷ்டாதச க்ரந்தங்களில் ஒன்றான அர்ச்சிராதியில் கீழ்க்கண்டவாறு அருளியுள்ளார்.
      • (அர்ச்சிராதி மூலம்) நித்யர் மற்றும் முக்தர், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப (திருவாய் 4-9-10) என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடைய அபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள்.  லீலாவிபூதியிலுள்ளார் அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய் “நம இத்யேவ வாதிந:” என்கிறதுக்கு எதிராக, “ந நமேயம்”, “ஈஶ்வரோஹம்” என்கிறபடியே, மனையடைவே, “யானேயென்றனதே” என்று,
      • ஒண்டொடியாள் – அழகிய வளைகளை உடையவள்; கழலாத வளைகளை உடையவள் – அகலகில்லேன் இறையும் என இருப்பவளிறே; சங்கு தங்கு முன்கை நங்கையிறே; சீரார் வளை (திருப்பாவை – 6000 படி ஸ்ரீ ஸூக்தி) – வளைக்குச் சீர்மையாவது – கையில் நின்றும் கழலாதொழிகை. விஶ்லேஷவ்யஸநம் அநுபவியாத வளை. சங்குதங்குமுன்கை – ஒண் டொடியாள் திருமகள் திருமகளும் – பெரிய பிராட்டியாரும்; நீயுமே – எம்பெருமானுமே;  செங்கோல் – செம்மையான கோல்/ஆட்சி; ஏகாதபத்ரமாக –வேறு ஒருவனுடைய தலையீடு இல்லாமல்/ ஒரு குடைக்குக் கீழே; அபிமானம் – எம்பெருமானால் தன்னுடையவன் (மதீயர்கள்) என்று நினைக்கப்படுதல்;  சந்தாநுவர்த்திகளன்றிக்கே– எம்பெருமான் திருவுள்ளம் அறிந்து கைங்கர்யம் செய்பவர்களாய் இருக்கை தவிர்ந்து; ஸங்கல்பாநுவிதாயிகளாய் – ஸங்கல்பத்தைப் பின்செல்லுபவர்களாய்; நம இத்யேவ வாதிந: – இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு வாயால் எப்போதும் நம: என்று சொல்லிக் கொண்டும் (நித்யர் மற்றும் முக்தர் படி); ந நமேயம் – ஒருவனையும் வணங்க மாட்டேன் (இராவணன் சொன்னது); ஈஶ்வரோஹம் – நானே ஈஶ்வரன் [பகவத் கீதை]; (லீலா விபூதியிலுள்ளார் படி);  மனை யடைவே – ஸம்ஸாரம் முழுவதும்; யானே யென்றனதே – அஹம்/மம, நான்/எனது என்றிருக்கும் இருப்பு
      • (மூலம்) அவர்கள் “பணியா அமரர்” (திருவாய் 8-3-6) யிருக்கும் இருப்புக்கெதிராக “மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து” (திருவாய் 4-10-7)
      • பணியா அமரர் – ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்காதே;
      • (மூலம்) “மிக்கார் வேத விமலர்” (திருவாய் 2-9-8) என்கிறபடியே, அவர்களைப்போலே “பெருமக்களாய்” (திருவாய் 3-7-4) இராதே “சிறியார் சிவப்பட்டார்” (நான். திரு 6) என்கிறபடியே சிறியாராய்
      • மிக்கார் – பகவதனுபவத்திலே எல்லாரைக் காட்டிலும் விசேஷமாண ஸ்வபாவம் உடையவர்களாய்; மலம் – அழுக்கு; விமலர் –தோஷமில்லாதவர்கள் வேத விமலர் –  வேதத்திலே விமலராய் சொல்லப்பட்டவர்கள்; சிறியார் – அல்ப்பர், சிறியார் – ஸ்வத:ப்ரமாணமான வேதத்தை விட்டு ஆகமத்தைக் கொண்டவர்கள் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பர் என்னக்கடவதிறே.
      • (மூலம்)  “அயர்வறும் அமரர்கள்” (திருவாய் 1-1-1) என்கிறபடியே அவர்களைப்போலே திவ்ய ஜ்ஞாநோபபந்நராயிராதே அறிவிலா மனிசராய் (திருமாலை 13), ஒளிக் கொண்ட சோதிக்கெதிராக (திருவாய் 2-3-10) அழுக்குடம்பை (திருவிருத்தம் 1) பரிக்ரஹித்து,
      • அயர்வு – மறதி முதலானவைகள்; திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே – திவ்யமான ஜ்ஞானம் உடையவராய் இராதே; ஒளிக்கொண்டசோதி – ரஜோகுணம் தமோகுணம் கலசாதே ஸுத்தசத்வ திவ்ய மங்கள விக்ரஹம்;
      • (மூலம்)  விபந்யவ: விண்ணோர் பரவுந்தலைமகன் (திருவாய் 2-6-3) என்றதுக்கெதிராக உலகில் கண்டவா தொண்டரைப் பாடி (பெரிய திருமொ 1-1-7),
      • விபந்யவ: – விசேஷமாக எம்பெருமானைத் துதிப்பவர்கள்; விண்ணோர் பரவுந்தலைமகன்  – நித்ய ஸூரிகளால் துதிக்கப் படுபவன்; உலகில் கண்டவா தொண்டரைப் பாடி – கண்ட ஆ – தன்னை ஸ்தோத்திரம் பண்ண இச்சை உடையவர்களை பாடி, திருவாய்மொழி ஈட்டில் ஒரு அற்புதமான கதை த்ருஷ்டாந்தமாக இவ் வர்த்ததிற்கு எடுக்கப்பட்டுள்ளது இங்கு நோக்கத் தக்கது
      • (மூலம்) உனக்கே நாமாட்செய்வோம் (திருப்பாவை 29) என்கிறபடியே அவனுக்காட் செய்யாதே மாரனார் வரிவெஞ்சிலைக்காட்செய்து (பெரு திரு 3-3), தொண்டுபூண்டமுதமுண்ணாதே (திருமாலை 5) பாவையர் வாயமுதமுண்டு (பெரிய திருமொ 1-3-5),
      • உனக்கே நாமாட்செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாயிருக்கிற இருப்பைத் தவிர்ந்து “தனக்கேயாக” என்னுமா போலே கொள்ள வேணும் (திருப்பாவை 6000படி ஸ்ரீ ஸுக்தி); மாறன் – மன்மதன்;
      • (மூலம்) ஸ ஏகதா பவதி என்கிறதுக்கெதிராக குலந்தானெத்தனையும் பிறந்து (பெரிய திருமொ 1-9-4), உருவார் சக்கரஞ்சங்கு சுமந்திங்கவனோடு ஒருபாடு உழலாதே (திருவாய் 8-3-7) ஆக்கையின் வழியுழன்று (திருவாய் 3-2-1),
      • ஸ ஏகதா பவதி – பரமபதம் செல்லும் முக்தாத்மா எம்பெருமான் ஸங்கல்பத்தாலே சரீரங்களை கொள்கிறான் – ஏனெனில் எம்பெருமானை ஒரு சரீரத்தால் அனுபவித்து முடிக்க முடியாமையாலே. பரம பதத்தில் இருப்பவர்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்காக சரீரம் கொள்கிறார்கள்; ஸம்ஸாரத்தில் உள்ளார் கர்மமடியாக பல சரீரங்களை எடுக்கிறார்கள் என்பது தாத்பர்யம்; உருவார் – அழகான; ஒருபாடு – ஒரு பக்கம்; அவனுடைய திருவாயுதங்களைச் சுமந்து கொண்டு அவனோடு போகாதே; ஆக்கை – உடம்பு; ஆக்கையின் வழியுழன்று  – சரீரத்தைக் கொடுத்து எம்பெருமானை அடை என்றால், சரீரம் செல்லும் வழி சென்று
      • (மூலம்) ஏதத் வ்ரதம் மம என்கிறவனுடைய வ்ரதத்துக்கெதிராக யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை (திருவிருத்தம் – 95) ஏறிட்டுக் கொண்டு, அவர்தருங் கலவியே கருதி ஓடினேன் (பெரிய திருமொ 1-1-1) என்கிறபடியே அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் (திரு நெடு – 6) எட்டாதபடி கைகழியவோடி, அற்பசாரங்களவை சுவைத்தகன்று (திருவாய் 3-2-6) போரக் கடவராயிருப்பர்கள்.
      • ஏதத் வ்ரதம் மம – ஒருக்காலே சரணம் அடைந்தார்க்கும் எல்லாராலும் வரக்கூடிய பயங்களைப் போக்குகிறேன் என்னும் பெருமாளின் வ்ரதம்; யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை – ஏதேனும் பற்றிக் கொண்டு நாம் எம்பெருமானை விட்டு நீங்கும் வ்ரதம்; ஏறிட்டுக் கொண்டு – இத்தால் இது (யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை) வந்தேறி என்றபடி – நானும் உனக்குப் பழவடியேன் என்பதே ஜீவாத்மாவின் உண்மையான நிலை; அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் – ஆச்ரிதர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் நிறுத்தாத நீண்ட நெடுங்கைகள்; எட்டாதபடி கை கழிய வோடி – அதற்கும் தப்பி; அற்பசாரம் – சப்தாதி விஷயங்கள்
      • பத்தோபி த்விவித: – புபுக்ஷுமுமுக்ஷுபேதாத்॥ 10
      • பத்தர் இருவகைப்படுவர் – புபுக்ஷு, முமுக்ஷு
      • புபுக்ஷுபி த்விவித: – அர்த்தகாமபரோ தர்மபரச்சேதி | தர்மபரோ த்விவித:- தேவதாந்தரபரோ பகவத்பரஶ்சேதி|| 11
      • புபுக்ஷுக்கள் இருவகை – அர்த்தபரர் மற்றும் தர்மபரர். தர்மபரர்கள் இருவகைப்படுவர் – தேவதாந்தரபரர் மற்றும் பகவத்பரர்கள்.
    • முமுக்ஷுபி த்விவித: – கைவல்யபரோ மோக்ஷபரச்சேதி | மோக்ஷபரோ த்விவித: – பக்த: ப்ரபந்நச்சேதி | ப்ரபந்நச்ச த்விவித: – ஏகாந்தீ பரமைகாந்தி சேதி | பரமைகாந்தீ த்விவித: – த்ருப்தார்தபேதாத் ॥12
    • முமுக்ஷுக்கள் இரண்டு வகைப்படுவர் – கைவல்யபரர் மற்றும் மோக்ஷபரர்கள்; மோக்ஷபரர்கள் பக்தர்கள் மற்றும் ப்ரபந்நர்கள் என்று இரண்டு வகைப்படுவர்கள். ப்ரபந்நர்கள் மறுபடியும் ஏகாந்தீ, பரமைகாந்தீ என இரண்டு வகைப்படுவர்கள். பரமைகாந்தீ த்ருப்தன் ஆர்த்தன் என இரண்டு வகைப்படுவர்.
    • மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் முமுக்ஷுக்கள். மோக்ஷம் என்றால் பரமானந்தம் என்று நிகண்டு. அதாவது ப்ரஹ்மானுபவம்.
    • த்ருப்தன் – சரீரம் விடும்பொழுது மோக்ஷம் கிடைக்கட்டும் என ஆறி இருப்பவன்; ஆர்த்தன் – சரணாகதி செய்தயுடன் மோக்ஷம் வேண்டுபவன்
    • ஈஶ்வர: பஞ்சதா – பரவ்யூஹவிபவாந்தர்யாம்யர்சாவதாரபேதாத் | பர ஏகதா | வ்யூஹச்சதுர்தா – வாஸுதேவஸங்கர்ஷணப்ரத்யும்னாநிருத்தபேதாத் | கேசவாதி வ்யூஹாந்தரமத்ரைவாந்தர்பவதி | மத்ஸ்யாதயோ விபவா: புந: அநந்தா: | அந்தர்யாமி ப்ரதிஶரீரமவஸ்தித: | அர்சாவதாரஸ்து ஸ்ரீரங்கவேங்கடாத்ரிஹஸ்திகிரியாதவாத்ரி கடிகாசலாதிஷு ஸகலமனுஜநயநவிஷயதாம் கதோ மூர்த்திவிசேஷ: || 23
    • ஈஶ்வரன் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து ப்ரகாரமாக இருக்கிறான். பரமபத நாதனான பகவான் ஸ்ரீமந் நாராயணன் என்கிற ரூபம் ஒன்றுதான். * ஆதியஞ்சோதிவுரு * . இவ்வுருவில் இருந்தே மற்ற ரூபங்கள் தோன்றுவதினால் பரம் என்னப்பட்டது. வ்யூஹ ருபங்கள் – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்று நான்கு. மத்ஸ்யம், கூர்மம் முதலான ரூபங்கள் விபவங்கள். அவை கணக்கற்றவை. அந்தர்யாமி நிலையாவது ஒவ்வொரு உடம்பிலும் அவர்கள் உபாஸிக்கும்படி அவர்கள் ஹ்ருதயத்தில், கட்டை விரல் அளவுள்ளதாய் இருக்கும் ரூபம். அர்ச்சாவதாரமாவது, ஸ்ரீரங்கம், திருவேங்கடம், முதலான திவ்யதேசங்களில் அனைவர் கண்களுக்கும் விஷயமாம்படி இருக்கும் நிலை.
    • தத்வத்ரயம் – 182, ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானம் இவ்வர்த்தம் அழகாக விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • விபவங்கள் அநந்தம் என்னுமிடம் தத்வத்ரயம் – 189வது சூர்ணிகையில் ” பரிகணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அநந்தமாய் ” என்ற வ்யாக்யான ஸ்ரீஸூக்தி கொண்டு நோக்க வேண்டியது.
    • அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வெல்லும் அவன் இவன் என்று பரமபதத்தில் இருக்கும் பெருமானே அர்ச்சாவதாரமாக உள்ளான் என்று கொண்டு அர்ச்சாவதாரமே முக்கியமாகக் கொண்டனர் நம் ஆசார்யர்கள். மற்றைய நிலைகளைக் காட்டிலும் இதன் ஏற்றம் * தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்கும் இடத்திலே எல்லாம் பூர்ணம் * என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின் வ்யாக்யானத்தில் கண்டு கொள்வது.
    • இங்ஙனே த்ரவ்யம் பலவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,
    • சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டவன் என்பதினால் ஒன்று என்றும்,
    • ஆத்மா, அநாத்மா (ஆத்மா அல்லாதது – ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அனைத்தும்) என்ற பேதத்தால் இரண்டு என்றும்,
    • * போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா * என்ற ச்ருதியை அனுஸரித்து சித், அசித், ஈச்வரன் என மூன்றாகவும்,
      • இங்கு ” போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா என்று போக்த்ரு சப்தத்தாலும், போக்ய சப்தத்தாலும், ப்ரேரயித்ரு சப்தத்தாலும் சிதசிதீச்வர தத்வங்கள் மூன்றையுமிரே சொல்லுகிறது” என்னும் ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யான ஸ்ரீஸுக்தி ஸ்மரிக்கத்தக்கது.
    • ப்ரக்ருதி, காலம், நித்யவிபூதி, தர்மபூதஜ்ஞானம், ஜீவன், ஈச்வரன் என ஆறாகவும் கொள்ளலாம்.
    • அத்ரவ்யம் து ஸத்வரஜஸ்தமச்ஶப்தஸ்பர்சரூபரஸகந்தஸம்யோகஶக்திபேதாத்தசதைவ || 24
    • அத்ரவ்யம் ஶப்தம், ஸ்பர்ஶம், ரூபம், ரஸம், கந்தம், ஸத்வம், ரஜஸ், தமஸ், ஸம்யோகம், ஶக்தி என 10 பிரிவுகளைக் கொண்டது.
    • —————–
    • ஏவமுத்தேச க்ரமேந பரீக்ஷா க்ரியதே |
    • இனி நிர்ணயித்த க்ரமத்திலேயே வஸ்துக்களைப் பற்றின லக்ஷணம் உரைக்கப்பட்டு அவை பரீக்ஷிக்கப் படுகின்றன. சாஸ்த்ர க்ரந்த விசாரங்கள் இந்த ரீதியிலே அமையும். முதலில் வஸ்துக்களை வரிசைப்படுத்தி, பின்பு அவற்றின் லக்ஷணமுரைத்து, அந்த லக்ஷணங்களை ஆராய்வது இந்த ரீதியிலேயே இருக்கும்.
    • இது தன்னை பெரிய ஜீயரும் தத்வத்ரய வ்யாக்யானத்தில் “உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்று மூன்று வகைப்பட்டிறே தத்வ நிர்ணயக்ரமம் இருப்பது” என்றருளிச் செய்தார்
    • தத்ர ப்ரமாகரணம் ப்ரமாணம் | ப்ரமாணம் லக்ஷ்யம் | ப்ரமாகரணம் லக்ஷணம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமா || ப்ரமா லக்ஷ்யம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுண ஞானத்வம் லக்ஷணம் | ஞானம் ப்ரமேத்யுக்தே ஶுத்திகாயாம் “இதம் ரஜதம்” இதி ஞானேSதிவ்யாப்தி: | அத உக்தம் வ்யவஹாரானுகுணம் ஞானமிதி | ஏவமபி தத்ரைவாதிவ்யாப்தி: ப்ராந்தி தஶாயாமிதம் ரஜதமிதி வ்யவஹ்ரியமாணத்வாத் | அத உக்தம் யதாவஸ்திதேதி |
    • ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு லக்ஷணம் – லக்ஷ்யம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவ் வஸ்துவின் லக்ஷணமாகும். அந்த லக்ஷணத்தால் அறிந்துகொள்வது லக்ஷ்யமாகும். இனி ப்ரமாணம் லக்ஷ்யமாமிடத்தில் – ப்ரமாகரணம் அதன் லக்ஷணம் ஆகும். அதாவது ப்ரமைக்கு கரணமாயிருப்பது. ப்ரமா லக்ஷ்யமாமிடத்தில் – ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்குக் (வ்யவஹரிப்பதற்கு) காரணமான அறிவு (அ) ஞானம் என்பது அதன் லக்ஷணம் ஆகும்.  ப்ரமைக்கு ஏன் ஞானம் என்று லக்ஷணம் உரைக்ககூடாது என்னில் – அப்படிக் கொண்டால் சுத்தி என்று சொல்லப்படும் முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுவதும் ப்ரமை என்றாகிவிடும். இது அதி வ்யாப்தி எனும் தோஷமாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே ப்ரமைக்கு ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்கு (வ்யவஹரிப்பதற்க்கு) காரணமான அறிவு என்று லக்ஷணம் உரைக்கப்பட்டது.
    • லக்ஷணம், அதி வ்யாப்தி, முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுகிற ஞானம் இவை அனைத்தும் மேலே விளக்கப்படவுள்ளன.
    • யதாவஸ்தித பதேன ஸம்சய அந்யதா விபரீத ஞான வ்யாவ்ருத்தி: | தர்மிக்ரஹணே மிதோ விருத்த அநேக விசேஷ ஸ்புரண ஸம்சய: | யதா ஊர்த்வதாவிசிஷ்டே ஸ்தாணூர்வா புருஷோ வேதி ஞானம் | அந்யதாஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா கர்த்ருத்வேன பாஸமானே ஆத்மநி குயுத்பி: கர்த்ருத்வஸ்ய ப்ராந்தத்வோபபாதனம் | விபரீத ஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா வஸ்துனோ வஸ்த்வநந்தர ஞானம் |
    • உள்ளதை உள்ளபடி வழங்குதல் என்றதினால் ஸம்சய ஞானம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் ஆகியவைகள் தள்ளப்பட்டன.
    • ஸம்சயம் என்றால் என் என்னில் – தர்மியை (தர்மி – பூ; தர்மம் – அதனுடைய  மணம்/நிறம்) க்ரஹிக்கும் பொழுது ஒரே சமயத்தில் விருத்தமான (ஒன்றுக்கொன்று விரோதமான) பல தர்மங்கள் (விசேஷணங்கள்) தோன்றுவது ஸம்சயம் ஆகும். உதாரணத்திற்கு நாம் இருட்டில் தூரத்தில் ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அது கை, கால்கள் கொண்ட மனிதன் போன்று தெரிகிறது. அதே சமயத்தில் அது கிளைகள் கொண்ட மரம் போன்றும் தோன்றுகிறது. இது தன்னையே ஸ்தாணுர் வா புருஷோ வ (மரமா அல்லது மனிதனா) என்று உரைப்பர்கள். ஒரே வஸ்துவினிடத்தில் மரத்தினுடைய விசேஷணங்களும், மனுஷ்யத்வமும் தோன்றுவதால் – இது ஸம்சயம் ஆகும்.
    • அந்யதா ஞானமாவது – தர்மியை க்ரஹிக்கும் விஷயத்தில் மாறாட்டம். ஒரு வஸ்துவினுடைய தர்மத்தை மாறாகக் க்ரஹிப்பது. கர்த்ருத்வம் எனப்படும் செயல்படும் தன்மையாவது ஆத்மாவின் (ஆத்மா – தர்மி; கர்த்ருத்வம் – தர்மம்) தர்மம் அன்று என்று தர்ம விஷயத்தில் மாறுபாடகக் கொள்வது அந்யதாஞானமாகும்.  இப்படி கர்த்ருத்வமாவது ஆத்மாவிற்கு கிடையாது என்று கொள்வது ஸாங்க்யர்கள் பக்ஷமாகும். அவர்கள் அதை ப்ரக்ருதிக்கேயுள்ளது என்கிறார்கள். அவர்களை நிரஸிக்கிறார். அப்படிக் கொண்டால் சேதனனைக் குறித்துக் கட்டளையிடும் வேத வாக்யங்கள் பயனற்றவையாகி விடும்.
    • இதன் விரிவினை தத்வத்ரய சூர்ணிகைகள் 31, 32 மற்றும் ஸ்ரீமத் வரவரமுநிகளின் வ்யாக்யானம் கொண்டு மேலும் அறிந்து கொள்ளலாம்.
    • விபரீத ஞானமாவது – தர்மியையே மாறாடி க்ரஹிக்கை. ஒரு வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது அந்த வஸ்துவையே தவறாகக் க்ரஹிக்கை. உதாரணமாக சுக்திகையை (சிப்பியை) ரஜதமென்று (வெள்ளியென்று) க்ரஹிக்கை, அல்லது தேஹத்தை ஆத்மா என்று கொள்ளுகை.
    • “அந்யதாஞானமாவது தேவதாந்தர சேஷமென்றிருக்கை. விபரீதஞானமாவது ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வபோக்யமாகவும் நினைத்திருக்கிற கேவலனைடைய ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் (1-1-1 மயர்வற),
    • “சேஷத்வஸயைவ ஆத்மந ஸ்வரூபநிரூபகத்வாத் ததவிஹாய ஸ்வதந்த்ரத்வேநாநுஸந்தாநம் தர்மிவிபர்யாஸ இத்யபிப்ராயேணாஹ, விபரீதஞானமாவது யத்வா நிரதிசய போக்யத்தை பராபிக்கவேணுமென்று அபேக்ஷித்து, அந்த போக்யந்தான் ஏதென்று நிரூபித்து போக்யந்தானே என்று நிச்சயிக்கையினாலே கேவலன் போக்யத்திலே ஸ்வபேதாத்யவஸாயம் பண்ணுகிறான் அது தர்மயாரோபரூப விபரீதஜ்ஞாநமென்று திருவுள்ளம்.” என்று அதன் அரும்பத ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது.
      • ஆத்மாவினுடைய தர்மமான பகவானுக்கு மட்டும் அடிமைப்பட்டு இருத்தல் என்பதை மாறாக தேவதாந்தரங்களுக்கு சேஷமாக நினைப்பதால் அது அந்யதாஞானம்.
      • கேவலனான கைவல்யார்த்தி பரம புருஷார்த்தத்தை நிச்சயிக்கும் பொழுது அதைத் தவறாக பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவிப்பதாகிற சிற்றின்பமாகக் நிச்சயிப்பதால் அது விபரீத ஞானமாகும்.
    • அந்யதாஞானம் மற்றும் விபரீத ஞானம் இரண்டையும் சேர்த்து விபர்யயம் என்று சொல்வதுண்டு.
    • “*துயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் *ஸ்தாணூர்வா புருஷோவா* என்கிறபடியே க்ராஹ்யவஸ்துவை இன்னதென்று நிச்சயிக்கமாட்டாத ஸம்சயமும், *மயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ரஜ்ஜூ சுக்த்யாதிவிஷய ஸர்ப்பரூப்யாதி புத்திபோலே அதஸ்மிந் தத்புத்தியகிற விபர்யமும்” – என்கிற ஸ்ரீமத்வரவரமுனிகளின் ஆசார்ய ஹ்ருதய (ஸூ – 98) வ்யாக்யான ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது
    • லக்ஷணஸ்ய த்ரீணி தூஷணாநி ஸந்தி, அவ்யாப்திரதிவ்யாப்திரஸம்பவம் | லக்ஷயைகதேசே லக்ஷணஸ்யாவர்தனமவ்யாப்தி | லக்ஷாயதந்யத்ர வர்த்தமானத்வமதிவ்யாப்தி: | லக்ஷ்யே க்வாப்யவரதமனஸம்பவ | யதா ஜீவோ குணத்ரயவச்ய இத்யுக்தே அவ்யாப்தி:, ஞாநகுணக இத்யுக்தே அதிவ்யாப்தி:, சக்ஷுர்விஷயோ ஜீவ இத்யுக்தேSஸம்பவ ஏவ | அத்ரோக்ததூஷணத்ரயாபாவாத் ப்ரமாண லக்ஷணம் ஸுஸ்தம் |
    • லக்ஷணம் என்றால் ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது என்று முன்பு உரைக்கப்பட்டது. ஒரு வஸ்துவிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது, அந்த லக்ஷணத்திற்கு மூன்று விதமான தூஷணங்கள் (குற்றங்கள்) ஸம்பவிக்கலாம். அவை அவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அஸம்பவம் ஆகும்.
    • உதாரணத்திற்கு பசு மாட்டிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது வெள்ளை நிறமுடையது பசுமாடு என்று லக்ஷணம் உரைத்தால், மற்ற நிறமுடைய பசுக்கள் விடுபடும். இது அவ்யாப்தியாகும்.
    • கொம்புடையது மாடு என்று கொண்டால், ஆட்டிற்கும் கொம்பு இருப்பதால் அது அதிவ்யாப்தி ஆகும். அந்த லக்ஷணம் ஆட்டையும் சேர்த்துக் கொள்ளும்.
    • இரண்டு கால்கள் உள்ளது பசு மாடு என்றால், அது மாட்டையே குறிக்காததாகையால் அது அஸம்பவம் ஆகும்.
    • மூலத்தில் குறிப்பிட்டுள்ள உதாரணமாவது – ஜீவர்கள் முக்தர்கள், நித்யர்கள் மற்றும் பக்தர்கள் என் மூவகைப்படுவர்கள். ஜீவர்களுக்கு லக்ஷணம் சொல்லும் பொழுது – குணத்ரயவச்யர்கள் ஜீவர்கள் என்று கொண்டால் அது முக்தர்கள் மற்றும் நித்யர்களைக் குறிக்காது – ஆகையினால் அது அவ்யாப்தி ஆகும். ஞானத்தையுடையவன் என்று லக்ஷணம் சொன்னால் அது ஈச்வரனையும் குறிக்கும் ஆதலால், அது அதிவ்யாப்தி ஆகும். கண்ணால் பார்க்கப்படுபவன் ஜீவன் என்று சொன்னால் அது அஸம்பவம். ஒரு ஜீவனையும் கண்ணால் பார்க்க முடியாது.
    • இங்கு “இப்போது இவர்களுக்கு லக்ஷணம் – சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.” என்கிற தத்வத்ரய சூர்ணிகையும் (61),
      • “சேஷத்வமாத்ரத்தை சொல்லில் அசித்வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், ஜ்ஞாத்ருத்வமாத்ரத்தை சொல்லில் ஈச்வரவ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணம் என்கிறார்” என்கிற அதன் வ்யாக்யான ஸ்ரீஸுக்தியும் நினைக்கத்தக்கது.
    • இம்மூன்று தோஷங்களும் இல்லாதது லக்ஷணமாகும். ப்ரமைக்கு சொன்ன லக்ஷணமாவது இந்த மூன்று தோஷங்களும் இல்லாமல் உள்ளது.
    • ஸாதகதமம் கரணம் | அதிசயித ஸாதகம் ஸாதகதமம் | யஸ்மிந் ஸத்யவிலம்பேந ஞானமுத்பத்யதே தததிசயிதமித்யுச்யதே |
    • கரணம் என்பது ஸாதகதமம் ஆகும். அதாவது மிகுந்த உபகாரத்தைச் செய்வது. இவ்விடத்தில் ப்ரமை உண்டாவதற்கு தாமதமில்லாமல் மிகுந்த உபகாரத்தைச் செய்வது என்று கொள்ளல் வேண்டும். அதாவது ப்ரமா எனப்படும் உள்ளதை உள்ளபடி வழங்குதல் எனும் ஞானம் விரைவாக உண்டாவதற்கு உபகாரத்தைச் செய்வது.
    • இத்தால், ப்ரமாணம் என்பதன் லக்ஷணத்தை (ப்ரமா கரணம்) விரிவாக அருளிச் செய்தாராயிற்று.
    • ———-
    • தானி ப்ரமாணானி ப்ரத்யக்ஷானுமானஶப்தாக்யானி த்ரீண்யேவ | தத்ர ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷம் | அனுமானாதிவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸாக்ஷாத்காரிதி | துஷ்டேந்த்ரியவ்யாவ்ருத்த்யர்த்தம் ப்ரமேதி |
    • இப்படி விளக்கப்பட்ட ப்ரமாணமானது மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – அவை (1) ப்ரத்யக்ஷம், (2) அநுமானம், (3) ஶப்தம். அவைகளில் நேராய் (ஸாக்ஷத்தாய்) வஸ்துவை அறிவதற்குக் காரணமாயிருப்பது ப்ரத்யக்ஷமாகும். ஸாக்ஷாத்காரி என்னும் சொல்லினால் அநுமானம், ஶப்தம் ஆகிய ப்ரமாணங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தோஷமுள்ள இந்த்ரியங்களால் வருவதை ப்ரமாணம் என்று கொள்ளாமல் இருக்க லக்ஷணத்தில், ப்ரமை எனும் சொல் சேர்ந்திருக்கிறது.
    • அநுமானம், ஶப்தம் ஆகியவற்றின் விளக்கம், லக்ஷணம் ஆகியவை மேலே அவதாரங்களில் வரப் போகின்றன. இப்போதைக்கு ஸாக்ஷத்தாய் (நேராய்) வஸ்துவை அறிவது ப்ரத்யக்ஷத்தால் என்று கொள்வது.
    • துஷ்ட இந்த்ரியத்திற்கு எடுத்துக்காட்டு காமாலை நோய் வந்தவனின் கண்கள். அதைக் கொண்டு பார்த்தால் வெண்சங்கும் மஞ்சளாகத் தெரியும். அதனை ப்ரமை விலக்குகிறது.
    • ப்ரமையின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டது.
    • தச்ச ப்ரத்யக்ஷம் த்விவிதம் – ஸவிகல்பகநிர்விகல்பகபேதாத் | நிர்விகல்பகம் நாம குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டப்ரதமபிண்டக்ரஹணம் | ஸவிகல்பகம் து ஸப்ரத்யவர்ஷம் குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டத்விதீயாதிபிண்டக்ரஹணம் | உபயமப்யேதத் விஶிஷ்டவிஷயமேவ | அவிஶிஷ்டக்ராஹிண: ஞானஸ்யானுபலம்பாத் அனுபபத்தேச்ச |
    • இந்த ப்ரத்யக்ஷ ஞானமானது இரண்டு வகை.
    • நிர்விகல்பகம்
    • ஸவிகல்பகம்.
    • நிர்விகல்பகமாவது ஒரு வஸ்துவை முதன் முதலில் அறிவது. அப்போதும் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம். ஸவிகல்பகமாவது அதே வகுப்பைச் சேர்ந்த வஸ்துவை பின்னர் அறியும் பொழுது உண்டாகும் ஞானமாகும். இப்போதும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  இப்படி இரண்டாவதாக அறிவதினால் (ஸவிகல்பக ஞானத்தால்) முதலில் அறியப்பட்ட வஸ்து நினைவில் வந்து, சில அமைப்புக்கள் இந்த வஸ்துவின் வகுப்பிற்கே பொது என்னும் ஞானம் உண்டாகிறது.
    • உதாரணமாக முதன் முதலில் ஒரு பசுமாட்டைப் பார்க்கிறோம். அப்போது நமக்கு பசுவின் ஸம்ஸ்தானம் – அமைப்புகள், தெரிந்து அவற்றைக் க்ரஹித்துக் கொள்கிறோம். இப்பொழுது எல்லாப் பசுக்களுக்கும் இந்த அமைப்புக்கள் இருக்கும் என்பதை அறியமாட்டோம். இது நிர்விகல்பகம் ஆகும்.
    • பின்பு சிறிது காலம் கழித்து வேறு ஒரு பசுமாட்டைப் பார்க்கும் பொழுது, கோத்வம் முதலிய விசேஷணங்கள் மற்றும் ஸம்ஸ்தானங்கள் பசு வகுப்பிற்கே பொதுவானவைகள் என்று அறிந்து கொள்கிறோம்.
    • இவ்விருவகையிலும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  விசேஷணங்கள் இல்லாமல் வஸ்துவின் ஞானம் மட்டும் உண்டாகாது. விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது.
    • இது தன்னை (விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது) பாஷ்யகாரர்  [கேனசித்விசேஷேண இதமித்தமிதி ஹி ஸர்வா ப்ரதீதிரூபஜாயதே] (ஸ்ரீ பாஷ்யம் 1-1-1) என்றருளிச்செய்தார். அதாவது எல்லா ஜ்ஞாநமும், ஏதாவது விசேஷத்தையிட்டு ‘இது இப்படியானது’ என்றுதானே உண்டாகிறது.
    • அத்வைதிகள், நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்கிறார்கள். நிர்விகல்பகம் என்பதை விகல்பம் அற்றது என்று கொண்டு, ப்ரஹ்மம் ஒன்றே இருக்கிறது. வேறு இல்லை அது தன்னைக் க்ரஹிக்கிறோம் என்கிறார்கள்.
    • – பலவாகக் கல்பிக்கப்படுவது
    • இது கிடையாது, நிர்விகல்பகம் என்றால் ஏதாவது விசேஷணங்களை விட்டுவிட்டு க்ரஹிப்பதே அன்றி, விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது அன்று. ஒருவனை நிர்தனன்/தரித்ரன் என்று சொன்னால் மிகவும் குறைவாக பணம் உள்ளவன் என்று ஆகுமே அன்றி, பணமே இல்லாதவன் என்று ஆகாது.
    • வைசேஷிகர்களும் நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது, ஸவிகல்பகமாவது – விசேஷணம், விசேஷ்யம், அவைகளின் ஸம்பந்தம் ஆகிய மூன்றும் தோன்றும் ஜ்ஞாநம் என்கிறார்கள்.
    • இதற்கு உதாரணமாகக் குழந்தைகள் இப்படித் தான் க்ரஹிப்பார்கள் என்கிறார்கள்.
    • ஆனல் அதுவும் சரியன்று, பாலர்களும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள். ஒரு குழந்தை விளையாடும் பொம்மையை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைக் கொடுத்தால் அது ஏற்பதில்லை. எனவே குழந்தைகளும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள்.
    • க்ரஹணப்ரகாரஸ்து – ஆத்மா மனஸா ஸம்யுஜ்யதே | மன இந்த்ரியேந, இந்த்ரியமர்தேந | இந்த்ரியாணாம் ப்ராப்யகாரித்வநியமாத் | அத: கடாதிரூபார்தஸ்ய சக்ஷுரூபேந்த்ரியஸ்ய ச ஸன்னிகர்ஷே ஸதி அயம் கட: இதி சாக்ஷுஷஞானம் ஜாயதே | ஏவம் ஸ்பார்சந ப்ரத்யக்ஷாதயோபி | த்ரவ்யக்ரஹணே ஸம்யோக: ஸம்பந்த: | த்ரவ்யகதரூபாதிக்ரஹணே ஸமவாயானங்கீகாராதி ஸம்யுக்தாஶ்ரயணம் ஸம்பந்த: ||
    • ப்ரத்யக்ஷ ஜ்ஞாநமாவது கண் முதலான இந்த்ரியங்களால் உண்டாவது என்று விளக்கப்பட்டது. இப்பொழுது அவை க்ரஹிப்படும் ப்ரகாரம் விளக்கப்படுகிறது. முதலில் ஆத்மா மனதோடு சேருகிறது, மனம் இந்த்ரியத்தோடு சேருகிறது, இந்த்ரியம் கடம் முதலான வஸ்துக்களோடு சேருகிறது. இப்படி ஐந்து விதமான ப்ரத்யக்ஷ ஜ்ஞாநங்கள் உண்டாகின்றன, கண், மெய், நாக்கு, செவி, மூக்கு என்ற ஐந்து இந்த்ரியங்கள் வாயிலாக அவை உண்டாகின்றன.
    • இதனால் தான் மனம் ஒன்றாவிட்டால் இந்த்ரியங்கள் அதன் வேலையைச் செய்தாலும் நம்மால் க்ரஹிக்க இயலவில்லை. இதனை அனுபவத்திலேயே உணரலாம். நாம் மனம் செலுத்தாவிட்டால், எதிரில் நடந்து வரும் நமக்குத் தெரிந்த நபரையே அறியாமல் சென்று விடுவோம்.
    • இப்படி ஒரு த்ரவ்யத்தை அறியும் பொழுது அதற்கும் இந்த்ரியத்திற்கும் ஸம்பந்தம் ஸம்யோகம். அந்த த்ரவ்யத்தை ஆச்ரயித்திருக்கும் ரூபம் முதலான குணங்கள் அறியும் பொழுது அந்த ஸம்பந்தம் – ஸம்யுக்தாஶ்ரயணம்.
    • வைசேஷிகர்கள் ரூபம் முதலான குணங்கள் ஸமவாயம் என்பதினால் சேர்ந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். எம்பெருமானார் தரிசனத்தில் ஸமவாயம் அங்கீகரிக்கப் படவில்லையாதலால், அது ஸம்யுக்தாஶ்ரயணம் ஆகிறது.
    • ஸமவாயம் என்பது ஒரு ஸம்பந்தம் – அதை ஒரு பொருளானது, அதன் ஆதாரத்தை விட்டுப் பிரியாமல் இருந்தால் அந்த தொடர்பு ஸமவாயம் என்பது வைசேஷிகர்களின் கொள்கை. இதிலுள்ள குறைகள்/தோஷங்கள் ஸ்ரீ பாஷ்யத்தில் மஹத்தீகாதிகரணத்தில் காட்டப்பட்டுள்ளது.
    • ——–
    • நிர்விகல்பகஸவிகல்பகபின்னம் ப்ரத்யக்ஷம் த்விவிதம், அர்வாசீனமநர்வாசீனம் சேதி | அர்வாசீனம் புனர்த்விவிதம், இந்திரியஸாபேக்ஷம் ததநபேக்ஷம் சேதி | ததநபேக்ஷம் த்விவிதம் – ஸ்வயம்ஸித்தம்திவ்யம் சேதி | ஸ்வயம்ஸித்தம்-யோகஜந்யம், திவ்யம் பகவத்ப்ரஸாதஜந்யம் அநர்வாசீனம் து, இந்த்ரியாநபேக்ஷம் நித்யமுக்தேஶ்வரஞானம் | அநர்வாசீனம் ப்ரஸங்காதுக்தம் | ஏவ ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷமிதி ஸித்தம் |
    • நிர்விகல்பகம், ஸ்விகல்பகம் என இரண்டு வகையான ப்ரத்யக்ஷமானது – (1) தாழ்ந்தது, (2) உயர்ந்தது என இரண்டு வகைப்படும்.
    • தாழ்ந்தது என்பது இந்த்ரியத்தைக் கொண்டு உண்டாவது, இந்த்ரியம் இல்லாமல் உண்டாவது என்று இருவகைப்படும். இந்த்ரியமில்லாமல் உண்டாவது என்பதும் தானே உண்டாவது (ஸ்வத ஸித்தம்), திவ்யம் (எம்பெருமானால் உண்டாவது) என்றும் இருவகைப்படும். தானே உண்டாவது – யோகத்தினால் உண்டாவது. திவ்யம் ஆவது எம்பெருமானின் அனுக்ரஹத்தினால் உண்டாவது.
    • யோகிகளின் ப்ரத்யக்ஷமாவது (ஸ்வத ஸித்தமாவது) – யோகாப்யாஸத்தாலோ, அல்லது தபஸினாலோ உண்டாகிறது. ஆகையினாலே இவர்களால் வேறு லோகத்தில் நடப்பவை ப்ரத்யக்ஷமாகப் பார்க்கப்படுகிறது.
    • திவ்யம் என்பது தேவனால் அளிக்கப்படுவது. தேவன் என்பது எம்பெருமானே. திவ் க்ரீடாதௌ என்கிற தாது ஸித்தமான அர்த்தம் எம்பெருமானையே குறிக்கும். இதுவே “மயர்வற மதிநலம் அருளுவது” (திருவாய் 1-1-1). பகவத் கீதையிலே இது தன்னையே [திவ்யம் ததாமி தே சக்ஷு:] (11-8) என்றருளினான்.
    • இங்கு ஸ்வாமி எம்பெருமானார் வ்யாக்யானம் – [தவ திவ்யம் – அப்ராக்ருதம் மத்தர்சனஸாதனம் சக்ஷுர்ததாமி] என்பது நினைக்கத்தக்கது.
    • அநர்வாசீநமாவது இந்த்ரியங்களின் உதவியில்லாமல் வரும் அறிவு. இது பகவானுக்கும், நித்யர்களுக்கும், முக்தர்களுக்கும் உள்ளது. இது ப்ரஸங்காத் சொல்லப்பட்டது.
    • உபநிஷதானது [அபாநிபாதோ ஜவனோ க்ருஹீதா பச்யத்யசக்ஷு: ஸ ச்ருநோத்யகர்ண:] என்றது. அதாவது எம்பெருமானுக்கு ஒரு பொருளை எடுப்பதற்குக் கைகள் தேவையில்லை. கண்கள் பார்ப்பதற்கு அவசியமில்லை. அவனது திருவருளால், முக்தியடைந்தார்க்கும் இது கலங்காப்பெருநகரம் என்னும் பரமபதம் அடைந்தவுடன் இது ஸம்பவிக்கிறது.
    • ஸ்வாமி கூரத்தாழ்வான் தம்முடைய வரதராஜஸ்தவத்தில் 24-வது ஶ்லோகத்தில் இந்த விபூதியிலே பேரருளாளப் பெருமாளை இவ்விதம் அவனது திருவருளால் இந்த்ரியங்களின் அடைவுகெட அனுபவிக்க ஆசைப்பட்டதும் இந்த ரீதியிலே – முக்தி தசையில் அனுபவிக்கப் படுவதை இங்கு அனுபவிக்க ஆசைப்பட்டார்
    • நநு யதாவஸ்திதவ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமேதி உக்தம் | ஏவம் ச ஸ்ம்ருதேரபி யதாவஸ்தித வ்யவஹாராணுகுணஞாநத்வேன ப்ராமாண்யாத் ஸ்ம்ருதேரபி ப்ரமாணத்வேன பரிகணனாத் த்ரீந்யேவ ப்ரமாணானி இதி கதம் ப்ரதிபாத்யதே இதி சேத்; உச்யதே – ஸ்ம்ருதே: ப்ராமாண்யாங்கீகாரேSபி ஸம்ஸ்காரஸாபேக்ஷத்வாத், தஸ்ய ப்ரத்யக்ஷமூலத்வாத் மூலபூதப்ரத்யக்ஷேSந்தர்பாவ: இதி ந ப்ருதக்ப்ரமாணத்வகல்பனம் | அத: த்ரீண்யேவேதி ஸம்பவதி ||
    • இப்பொழுது ஸ்ம்ருதி என்பது தனி ப்ரமாணம் அல்லவா? என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு ஸ்ம்ருதி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஸ்ம்ருதியாவது ஒரு வஸ்துவை முன் அனுபவித்ததால் எழும் ஜ்ஞானம் ஆகும். அதாவது முன் அறிந்ததை மறுபடியும் நினைத்துக் கொள்வது.
    • இப்பொழுது மூலம் விளக்கப்படுகிறது. – ஒரு வஸ்துவை உள்ளது உள்ளபடி அறிவது ப்ரமா என்று சொல்லப்பட்டது. அப்படிக் கொண்டால் ஸ்ம்ருதியும் ஒரு ப்ரமாணமாகும். அப்படி இருக்கும் பொழுது, ப்ரமாணங்கள் மூன்று தான் என்று சொல்வது எப்படி என்று கேட்டால்?
    • பதில் சொல்கிறோம். ஸ்ம்ருதியை ப்ரமாணம் என்று அங்கீகரிப்பதற்குக் காரணம் ஸம்ஸ்காரம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் ப்ரத்யக்ஷத்தாலே உண்டாகிறது. எனவே ஸ்ம்ருதியை தனி ப்ரமாணமாகக் கொள்ள வேண்டியது இல்லை – அது ப்ரத்யக்ஷத்திலேயே அடங்கி விடுகிறது.
    • ஸம்ஸ்காரம் என்பது கீழே விளக்கப்படுகிறது.
    • ஸ்ம்ருதிர்நாம பூர்வானுபவஜன்யஸம்ஸ்காரமாத்ரஜன்ய ஞானம் | தத்ர சோத்புத்த: ஸம்ஸ்காரோ ஹேது: | ததுத்போதச்ச “ஸத்ருஷ-அத்ருஷ்ட – சிந்த்யாத்யா:” இத்யுக்தப்ரகாரேண க்வசித் ஸத்ருஷதர்ஷநாத் பவதி, க்வசித் அத்ருஷ்டாத், க்வசிச்சிந்தயா | ஆதிஶப்தேந ஸாஹசர்யஸ்யாபி க்ரஹநாத்தேனாபி ச பவதி | ஸாத்ருஶ்யஜா யதா – தேவதத்தயஞ்தத்தயோ: ஸத்ருஶயோர்தேவதத்ததர்ஷன யஞ்தத்தஸ்ம்ருதி: | த்விதீயா யதா – யாத்ருச்சிக காலான்தரானுபூத ஸ்ரீரங்காதி திவ்யதேஶஸ்ம்ருதி: | த்ருதீயா யதா சிந்த்யமானே ஸ்ரீவேங்கடேஸஸ்ய கமனீயதிவ்யமங்கலவிக்ரஹஸ்ம்ருதி: | சதுர்தீ து – ஸஹசரிதயோர்தேவதத்தயஞதத்தயோர்மத்யே அந்யதரதர்ஷநேன ததந்யதரஸ்ம்ருதி: | ஸம்யகனுபூதஸ்ய ஸர்வஸ்ய ஸ்ம்ருதிவிஷயத்வநியம: | க்வசித் காலதைர்த்யாத் வ்யாத்யாதினா வா ஸம்ஸ்காரஸ்ய ப்ரமோஷாத் ஸ்ம்ருத்யபாவ: |
    • ஸ்ம்ருதி என்பது முன் அநுபவத்தினால் உண்டான ஸம்ஸ்காரத்தினால் மட்டும் உண்டாகும் ஜ்ஞானம். இதற்கு ஸம்ஸ்காரம் தான் முக்கிய காரணம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் வருவதற்கு காரணங்கள்
    • ஒற்றுமை,
    • அத்ருஷ்டம்,
    • சிந்தை
    • சில சமயங்களில் முன்பு பார்க்கப்பட்ட வஸ்துவிற்கும், இப்பொழுது பார்க்கப்படுகிற வஸ்துவிற்கும் இருக்கும் ஒற்றுமையினாலும், சில சமயங்களில் அத்ருஷ்டத்தாலும், சில சமயங்களில் சிந்தையினாலும் உண்டாகிறது. “ஆதி” ஶப்தத்தால் ஸாஹசர்யம் சொல்லப்பட்டது. இவற்றுக்கு உதாரணங்கள்
    • (1) ஒருவருக்கொருவர் ஒப்பாக உள்ள தேவதத்த யஜ்ஞதத்தர்களுள் தேவதத்தனைப் பார்க்கும் பொழுது, வரும் யஜ்ஞதத்தனின் நினைவு.
    • (2) யாத்ருச்சிகமாக வேறு காலத்தில் அநுபவித்த ஸ்ரீரங்கம் முதலான திவ்யதேஶங்களின் நினைவு,
    • (3) சிந்திக்கும் பொழுது தோற்றும் ஸ்ரீவேங்கடேசனுடைய ரம்யமான திருமேனியின் நினைவு.
    • (4) எப்பொழுதும் சேர்ந்தே பார்க்கப்பட்ட தேவதத்தன், யஜ்ஞதத்தன் ஆகியவர்களில், தேவதத்தனைப் பார்க்கும் பொழுது வரும் யஜ்ஞதத்தனின் நினைவு. இதற்கும் (1) வித்யாஸம் உள்ளது. முதலாவது ஆகார ஒற்றுமை (உருவ ஒற்றுமை) யினால் உணர்த்தப்படுவது. இங்கு யானையையும் அதன் பாகனையும் சேர்த்தே பார்த்த ஒருவனுக்கு, யானையைக் கண்டவுடன் வரும் பாகனின் நினைவு.
    • நன்றாய் அநுபவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு வராமல் இருக்காது. ஆனால் நீண்ட காலமாவதாலும், வ்யாதி முதலியவைகளாலும் ஸம்ஸ்காரம் மழுங்கிப் போவதால் நினைவுக்கு வருவதில்லை.
    • யதா ஸ்ம்ருதே: ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ஏவம் “ஸோSயம் தேவதத்த: ” இதி ப்ரத்யபிஜ்ஞா அபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ||
    • எப்படி ஸ்ம்ருதியானது ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறதோ, அப்படியே “இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன், முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தன் தான்” என்னும் ப்ரத்யபிஜ்ஞாவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது.
    • இந்த ப்ரத்யபிஜ்ஞா என்பது நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானம், ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. எல்லாவற்றிற்கும் ஆகாரம் பொதுவானது என்றறிவது ஸவிகல்பக ஞானம். ஸ்ம்ருதியின் ஸம்ஸ்கார காரணங்கள் (நான்கு) கீழே விளக்கப்பட்டன. ப்ரத்யபிஜ்ஞா என்பது முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தனே, இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன் என்னும் ஞானம்.
    • அஸ்மந்மதே அபாவஸ்ய பாவந்தர ரூபத்வாத்தஸ்யாபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: | கடப்ராகபாவோ நாம ம்ருதேவ | கடத்வம்ஸச்ச கபாலமேவ | ப்ராய: புருஷேநாநெண பவிதவ்யமித்யேதத் ஊஹ: | ஸம்ஸய உக்த: || தயோரபி ப்ரத்யக்ஷே அந்தர்பாவ: | புண்யபுருஷநிஷ்டா ப்ரதிபாபி ப்ரத்யக்ஷேSந்தர்கதா ||
    • பரம வைதிக மதமான எம்பெருமானார் தரிசனத்தில், அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தமாகக் கொள்ளப்படவில்லை. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. வைசேஷிகர்களான தார்க்கிகர்கள் அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தம் என்றும், அது ப்ராகபாவம் (இல்லாமை), ப்ரத்வம்ஸாவாம் (த்வம்ஸமாகை) என்றும் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு குடம் செய்வதன் முன்பு அது காணப்படாது – அது ப்ராகபாவம்; அது உருவாகி உடைந்த பின்பும் அது காணப்படாது – அது ப்ரத்வம்ஸாவாம் என்கிறார்கள்.
    • இது கல்பிப்பதே – ப்ராகபாவம் – மண்கட்டி (குடம் ஆவதன் முன்); ப்ரத்வம்ஸாவாம் – கபாலங்கள்.
    • அதே போன்று ஊஹமும் (ஒரு வஸ்துவில் கால்/கை அசைவதால் அவன் மனிதனே என்பது) ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ஸம்ஸயம் என்பது கீழே விளக்கப்பட்டது. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது.
    • புண்ணியம் புரிந்த ஒரு புருஷனிடத்தில் இருக்கிற ப்ரதிபையும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ப்ரதிபையாவது ஒரு மலை, நதி ஆகியவைகளைக் கண்டால் மேன்மேலும் அதைப் பற்றித் தோன்றும் ஞானம்.
    • ————
    • “யதார்தம் ஸர்வவிஜ்ஞானமிதி வேதவிதாம் மதம்” இத்யுக்தத்வாத் ப்ரமாதி ப்ரத்யக்ஷஞானம் யதார்தமேவ, அக்யாதி – ஆத்மக்யாதி – அநிர்வசனீயக்யாதி – அன்யதாக்யாதி வாதினோ நிரஸ்ய ஸத்க்யாதி பக்ஷஸ்வீகாராத் | ஸத்க்யாதிர்நாம ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தர்ஹி ப்ரமத்வம் கதமிதி சேத், விஷயவ்யவஹாரபாதாத் ப்ரம: | ததுபபாதயாம: – பஞ்சீகரணப்ரக்ரியா ப்ருதிவ்யாதிஷு ஸர்வத்ர ஸர்வபூதானாம் வித்யமானத்வாத், அத ஏவ ஶுக்திகாயாம் ரஜதாம்ஶஸ்ய வித்யமானத்வாத் ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தத்ர ரஜதாம்ஶஸ்ய ஸ்வல்பத்வாத்து ந வ்யவஹார இதி தஞ்ஞானம் ப்ரம: | ஶுக்தயம்ஸபூயஸ்த்வஞானாத் ப்ரமநிவ்ர்த்தி: |
    • இதுவரையில் ப்ரத்யக்ஷத்தின் லக்ஷணம் மற்றும் அவற்றின் பிரிவுகள் ஆகியவற்றை விசாரித்துவிட்டு, இப்பொழுது ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் அறியப்படுபவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார். ஸர்வவிஜ்ஞானம் – அனைத்து ஞானங்களும்; யதார்த்தம் – யதார்த்தமே – வஸ்துக்களை உள்ளபடி காட்டுகின்றன; இதி வேதவிதாம் மதம் – என்று வேதம் அறிந்தவர்களுடைய, ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் ஆகியோருடைய மதம் – என்று ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் அருளியுள்ளார்.
    • ஸ்ரீமந்நாதமுனிகள் தம்முடைய ந்யாய தத்வத்தில் – [ஷஷ்டீம் சேயம் க்யாதியதார்த்தக்யாதி] என்றருளியுள்ளார்.  அதாவது (1) அஸத்க்யாதி, (2) ஆத்மக்யாதி, (3) அநிர்வசநீயக்யாதி, (4) அந்யதாக்யாதி, (5) அக்யாதி என்று 5 விதமான க்யாதிகள் இல்லாமல் ஆறாவதான யதார்த்தக்யாதி என்பதே நம் ஆசார்யர்களால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
    • குறிப்பு – இப்போது சில விஷயங்கள் அறிந்து கொள்வது, மேல் விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு அவசியம் ஆகிறது.
    • ஶுக்தி எனப்படும் முத்துச் சிப்பியை சில சமயம் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது – அது வெள்ளி போன்று தோன்றுகிறது. பின்பு நெருங்கிச் சென்று அதை கையில் எடுத்துப் பார்த்தால் அது வெள்ளியன்று என்று ப்ரமம் நீங்கி விடுகிறது. இதை பலவாறாகப் பல மதங்களிலே கொண்டுள்ளார்கள்.
    • (1) அஸத்க்யாதி,
    • இது மாத்யாமிகனுடைய மதம் சார்ந்தது. ஜ்ஞானமும் ஆகட்டும், வெளியிருக்கிற வஸ்துக்களாகட்டும் ஒன்றும் இல்லை – சூந்யம் தான் உள்ளது. அஸத் தோன்றுவதால் இது அஸத்க்யாதி என்னப்பட்டது.
    • (2) ஆத்மக்யாதி
    • இது பௌத்தர்களுடையதாகும் (யோகாசாரர்களுடையது). ஆத்மாவான ஞானம் ஒன்று தானிருக்கிறது. இது வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது, வஸ்துக்கள் இல்லை. ஜ்ஞானம் தான் இவைகள். ஜ்ஞானம் இல்லாத பொழுது இவை தோன்றவில்லையே! ஆகவே ஜ்ஞானமே ப்ராந்தியால் விஷயமாகத் தோன்றுகிறது என்பது இவர்கள் கொள்கை.
    • (3) அநிர்வசநீயக்யாதி,
    • இது அத்வைதிகளின் பக்ஷம். முத்துச்சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியானது ப்ரத்யக்ஷமாய் இல்லை. கடையில் இருக்கும் வெள்ளி ப்ரத்யக்ஷமாகத் தோன்றாது. இது தன்னை ஸ்ம்ருதி என்றும் சொல்ல முடியாது. எனவே சிப்பியில் வெள்ளி தோன்றும் பொழுது, அது எல்லாராலும் கடையில் காணப்படும் வெள்ளியினைக் காட்டிலும் அவித்யையின் மஹிமையால் வேறொரு வெள்ளி உண்டாகிறது. இது இப்படி என்று சொல்ல முடியாதாகையாலே இது அநிர்வசநீயம் என்னப்பட்டது. இது ப்ரஹ்ம வ்யதிரிக்தமான பதார்த்தம் (ப்ரஹ்மத்தைத் தவிர்த்த வேறு பதார்த்தம்) ஆகையாலே இதை ஸத் என்றும் சொல்லமுடியாது (அவர்கள் கொள்கைப்படி ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம்), தோன்றுவதால் அதை அஸத் என்றும் சொல்லமுடியாது
    • (4) அந்யதாக்யாதி,
    • இது தார்க்கிகர்களின் மதம் ஆகும். ஆபரணம் செய்வதற்கு உபயோகப்படும் வெள்ளியானது தோஷத்தாலே சிப்பியிலே தோன்றுகிறது. சிப்பியானது அந்யத்தாக (வேறாக) தோன்றுவதால் இது அந்யதாக்யாதி
    • (5) அக்யாதி
    • மீமாம்ஸகர்கள் மதம் அக்யாதி வாதத்தினை கொண்டுள்ளது. சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று ப்ரமிக்கும் பொழுது,
    • இதம் (இது) என்றும் ரஜதம் என்றும் இரண்டு ஜ்ஞானங்கள்
    • இது என்பது ப்ரத்யக்ஷம் – கண்ணால் காண்பது.
    • ரஜதம் என்பது ஸ்ம்ருதி அல்லது ஸ்மரணம்.
    • இவை இரண்டின் பேதத்தை அறியாமையே ப்ரமம் (சிப்பியை வெள்ளி என்று எண்ணுவது).
    • இந்த பேத க்ரஹணம் இல்லாமையே அக்யாதி.
    • க்யாதி: பேத க்ரஹ: – க்யாதி (ஜ்ஞானம்) என்பது பேத க்ரஹணம்.
    • ததபாவ: – அக்யாதி – அது இல்லாமை அக்யாதி.
    • இவற்றுள் முதலாவதான அஸத்க்யாதிக்கு நிரதிஷ்டான க்யாதி என்றும் பெயர். அவர்கள் பக்ஷத்தில் தோன்றும் அனைத்தும் அஸத்.
    • ஆத்மக்யாதியும் நிலை நிற்காது. ஜ்ஞானமும் விஷயமும் சேர்ந்தே தோன்றுகிறது. அப்படித் தோன்றினாலும் அவை வெவ்வேறே! ஜ்ஞானமாவது வஸ்துவை க்ரஹிக்கிறது. “अहम् घटम् जानामि” என்பதால் நான் கடத்தை அறிகிறேன் என்னும்பொழுது, அறியக்கூடிய ஜ்ஞானமும் அறியப்பட்ட கடமும் ஒன்றாக ஆகமுடியாது.
    • அநிர்வசநீயமும் ஸத்தா அஸத்தா என்று கேட்டால் அதுவும் நிற்காது. அநிர்வசநீயம் என்பது எப்படி அறியப்படுகிறது? இன்னதென்று சொல்ல முடியுமா என்று கேட்டால் – ஆம் என்று விடையளிப்பார்களாயின், அது அநிர்வசநீயமே அன்று. இல்லை என்றால் – அஸத்தான ஒன்றைக் கொண்டு நிர்வாஹம் செய்ய முடியாதாகையாலே, அதுவும் தள்ளுண்டதாகும்.
    • எனவே மீமாம்ஸகர்களுடைய விளக்கத்தையோ அல்லது தார்க்கிகர்களின் விளக்கத்தையோ கொண்டு தான் மேல் விவரிக்க வேண்டும். இதில் அக்யாதி எனப்படும் மீமாம்ஸகர்களின் கொள்கையானது அனுபவத்திற்க்கும், நமது மதத்திற்க்கும் ஒத்து வருகிறது.
    • யதார்த்தக்யாதி
    • இனி நாம் நம் ஆசார்யர்கள் கொண்ட யதார்த்தக்யாதி எனப்படும் ஸத்க்யாதியினைப் பார்க்கலாம்.
    • தூரத்தில் இருந்து சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியினுடைய அம்சமான பளபளப்பு தோன்றுகிறது.
    • சிப்பியில் இந்த அம்சம் தோன்றுவதன் காரணம் பஞ்சீகரணம் ஆகும். (பஞ்சீகரணம் மேலே விளக்கப்படுகிறது).
    • இதனால் இது வெள்ளி என்று நினைத்து அதை ஒருவன் எடுத்துக் கொள்ள எத்தனிக்கிறான்.
    • அருகில் பார்த்ததும், அது சிப்பி (வெள்ளியின் அம்சம் குறைவானது) என்பது தெரிந்து கொள்கிறான்.
    • இதில் அனைத்து ஜ்ஞானமும் உண்மையே. பின்பு ஏன் சிப்பியினை வெள்ளி என்று கொள்வதில்லை என்றால் – அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் வ்யவஹாரம் பாதிக்கப்படுகிறது.
    • பஞ்சீகரணம்
    • பஞ்சீகரணமாவது ப்ருத்வியாதி ஐந்து பூதங்களிலும் மற்ற நான்கு பூதங்களை 50% சேர்ப்பது. உதாரணத்திற்கு ஆகாசம் என்னும் பூதத்தில் ஆகாசம் 50 சதவிகிதமும், மற்றைய பூதங்கள் (அக்னி, வாயு, நீர், ப்ருதிவீ) சேர்ந்து 50% உள்ளன. ஒவ்வொரு பூதத்தில் நின்றும் 1/8 பங்கு பிற பூதங்களில் உள்ளன. இந்த பஞ்சீகரணம் ஸ்ருஷ்டிக்கு அவசியமாகிறது.
    • இங்குக் கீழே ஆகாசம் காட்டப்பட்டுள்ளது. இது போன்றே பிற பூதங்களையும் கொள்ள வேண்டியது.
    • இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகள் தத்வத்ரயம் – 116 சூர்ணிகையில் ” ஆகாசாதி பூதங்களைந்தையும் தனிதனியே இரண்டு கூறுகளாக்கி, அவற்றிலே ஒரு கூறை நாலு கூறுகளாக்கி, அந்தக் கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி, ஸர்வ பூதங்களிலும் ஸர்வமுண்டாம்படி பண்ணுகை.” என்றருளியுள்ளது நோக்கத் தக்கது.
    • இனி மூலத்தில் உள்ளபடி விளக்கப்படுகிறது.
    • ஸத்க்யாதி என்றால் ஜ்ஞானத்தின் ஸத்யத்வம். ஜ்ஞானம் ஸத்யம் என்றால், ப்ரமம் எப்படி உண்டாகிறது என்னில், ப்ரமமானது வ்யவஹாரத்தைப் பாதிப்பது. அதாவது சிப்பியில் சிறிதளவு பார்த்திபாம்சம் இருப்பதனால், அதை வெள்ளி என்று பார்க்கும் ஜ்ஞானம் ஸத்யமாய் இருந்தாலும், அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் அதை வெள்ளி என்று வ்யவஹரிப்பதை (அதைக் கடையில் கொடுத்து ஆபரணம் ஆக்க முடியாது) பாதிக்கிறது.
    • பஞ்சீகரணப் ப்ரக்ரியையினாலே ஸர்வ பூதங்களிலும் மற்ற பூதங்கள் அம்சம் சிறிதளவு கலந்து இருப்பதினால் சிப்பி, வெள்ளி போன்று தோற்றம் அளிக்கிறது. அந்த ரஜதாம்சம் ஸ்வல்பம் என்று அறியாமல் இருப்பது ப்ரமம். அதை அறிவது ப்ரம நிவ்ருத்தி ஆகும்.
    • ஸ்வப்நாதிஞானம் து ஸத்யமேவ | தத்தத்புருஷானுபாவ்யதயா தத்தத்காலாவஸானாந் ரதாதீந் பரமபுருஷ: ஸ்ரூஜதீதி ஹி ஶ்ருத்யா அவகம்யதே |
    • இனி சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல இருக்கும் வேறு சிலவற்றை நிர்வஹித்தருளுகிறார். ஸ்வப்நத்தில் பார்க்கப்படும் வஸ்துக்களும் உண்மையே. அந்த அந்த புருஷர்களின் புண்யபாபங்களுக்கு ஏற்ப, எம்பெருமான், அவன் மட்டும் அனுபவிக்குமாறு அவற்றை ஸ்ருஷ்டிப்பதாலே.
    • ஸ்வப்ன காலத்தில் ரதங்களோ, குதிரைகளோ, பாதைகளோ இல்லை, அந்த சமயம் ரதங்களையும், குதிரைகளையும், பாதைகளையும் (ஸவப்னம் அனுபவிப்பவன் மட்டும் பார்க்கும் படி ஈஶ்வரன் ஸ்ருஷ்டிக்கிறான் – அவனல்லவோ ஸர்வ கர்த்தா – என்னும் ப்ருஹதாரண்ய உபநிஷத்தை திருவுள்ளத்தில் கொண்டு ஶ்ருத்யா அவகம்யதே என்றார்.
    • பீதஶ்ஶங்க இத்யாதௌ நயநவர்திபித்தத்ரவ்யஸம்பின்னா நாயனரச்மயஶ்ஶங்காதிபி: ஸம்யுஜ்யன்தே: | தத்ர பித்தகதபீதிமாபிபூதச்ஶங்ககதஶுக்லிமா ந க்ருஹ்யதே | அத: ஸுவர்ணானுலிப்தச்ஶங்கவத் “பீதஶ்ஶங்க:” இதி ப்ரதீயதே | ஸுக்ஷ்மத்வாத் பீதிமா ஸ்வநயநநிஷ்க்ராந்ததயா ஸ்வேநைவ க்ருஹ்யதே, நத்வன்யை: |
    • வெண்மையான ஶங்கம் மஞ்சளாகத் தோற்றுவது இந்த்ரியத்தின் தோஷத்தாலே. கண்ணில் இருக்கும் பித்தத்துடன் கலந்த சக்ஷுரிந்த்ரியத்தின் கிரணங்கள் க்ரஹிப்பதால் அவனுக்கு மாத்திரம் வர்ணம் மஞ்சளாகத் தெரிகிறது.
    • ஜபாகுஸுமஸமீபவர்திஸ்படிகமநிரபி ரக்த இதி க்ருஹ்யதே | தத்ஞானம் ஸத்யமேவ |
    • செவ்வரத்தம்பூவின் பக்கத்திலுள்ள ஸ்படிகம் சிவப்பாக அறியப்படுவதும் ப்ரமை தான். பூவிலுள்ள சிவப்பு வர்ணம் ஸ்படிகத்தின் வெண்மையை மறைத்துவிடுகிறது
    • மரீசிகாயாம் ஜலஞானமபி பஞ்சீகரணப்ரக்ரியயா பூர்வோக்தவதுபபத்யதே | பஞ்சீகரணப்ரக்ரியா து உத்தரத்ர வக்ஷ்யதே |
    • கானல் நீர் தோற்றுவதும் முன்பு சொன்ன பஞ்சீகரணத்தாலே. பஞ்சீகரண ப்ரக்ரியை முன்பு விளக்கப்பட்டது.
    • திக்ப்ரமோபி ததைவ. திஷி திகந்தரஸ்ய வித்யமானத்வாத் அவச்சேதக-மன்தரேன திகிதி த்ரவ்யான்தரானங்கீகாராச்ச |
    • ஒரு திக்கை வேறு திக்காக எண்ணுவதும் அப்படியே. திக்கு என்பது வஸ்துவின் இடத்தைப் பொறுத்து மாறுவதாலும்.
    • அலாதசக்ராதௌ து ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹநாத்தத்தத்தேஸஸம்யுக்த தத்தத்வஸ்துந ஏவ சக்ராகாரேந க்ரஹணம் | ததபி ஸத்யமேவ |
    • ஒரு கொள்ளிக்கட்டையை வேகமாகச் சுற்றும் பொழுது இடைவெளி தோன்றாமல் அது சக்ரமாகத் தோன்றுகிறது. அதனாலே ஒரு சக்ரமாகப் பார்க்கப்பட்டதும் உண்மையில் இருப்பது தான்.
    • தர்பணாதிஷு நிஜமுகாதிப்ரதீதிரபி யதார்தா | தர்பணாதிப்ரதிஹதகதயோ நாயநரஷ்மயோ தர்பணாதி க்ரஹநபூர்வகம் நிஜமுகாதி க்ருஹ்ணன்தி | தத்ராப்யதி ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹணாத்ததா ப்ரதீதி: |
    • கண்ணாடி முதலியவற்றில் தெரியும் முகமும் ஸத்யமே. கண்ணாடியில் பட்டு கண்ணில் இருந்து வரும் கிரணங்கள் திரும்பி வருகின்றன. முதலில் கண்ணாடியைப் பார்த்துப் பின் முகத்தைப் பார்க்கின்றன. இவை அனைத்தும் வேகமாக நடப்பதால் நம்மால் பிரித்து உணர முடியவில்லை. எனவே கண்ணாடியில் முகம் இருப்பது போன்று தோன்றுகிறது.
    • த்விசந்த்ரஞானதாவபி அங்குல்யவஷ்டம்ப திமிராதிபிர்நயனதேஜோகதிபேதாத் ஸாமக்ரீத்வயமந்யோந்யநிரபேக்ஷம் த்விசந்த்ரக்ரஹநஹேதுர்பவதி | ஸாமக்ரீத்வயம் பாரமார்திகம் | தேன த்விசந்த்ரஞானம் பவதி | அதஸ்ஸர்வம் ஞானம் ஸத்யம் ஸவிசேஷவிஷயம் ச; நிர்விஶேஷவஸ்துநோSக்ரஹணாத் ||
    • கண்ணில் விரலை வைத்துப் பார்த்தால் சந்த்ரன் இரண்டாகத் தெரிவது – கண்ணில் இருந்து புறப்படும் கிரணங்கள் இரண்டாகப் பிரிந்து தனித்தனியே போய் சந்த்ரனுடன் ஸம்பந்தப்படுகின்றன. ஆகையால் சந்த்ரன் இரண்டாகத் தெரிகிறது.
    • ஆகையால் எல்லா ஜ்ஞானங்களும் ஸத்யமாகவும், விசேஷணங்களுடன் கூடியே தான் இருக்கும் என்பது காட்டப்பட்டது. நிர்விசேஷ க்ரஹணம் என்பது ஸம்பவிக்காது.
    • ஏவம் பூதம் ப்ரத்யக்ஷம் ப்ரதமதோ பேதமேவ க்ருஹ்ணாதி | பேத இதி வ்யவஹாரே து ப்ரதியோக்யபேக்ஷா, ந து ஸ்வரூபே | தேநாவஸ்தான்யோந்யாஶ்ரயதோஷோSபி நாஸ்தி | உபர்யுபரி த்வபேக்ஷா அநவஸ்தா | பரஸ்பராபேக்ஷா அந்யோந்யாஶ்ரய: ||
    • வஸ்துக்களை க்ரஹிக்கும் பொழுது விஶேஷணங்களுடன் சேர்ந்தே க்ரஹிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. இந்த விஶேஷணம் அந்த வஸ்துவின் தர்மமாகவே இருக்கிறது. இதனை நையாயிகர்கள், அந்த வஸ்துவின் ஜாதியைக் காட்டிலும் வேறான பேதமாகக் கொண்டார்கள். உதாரணத்திற்கு ஒரு பசு மாட்டினை பார்க்கும் பொழுது அதன் ஜாதியான கோத்வம் (பசுவாயிருக்கும் தன்மை) என்பது விஶேஷணம். இதனை அவர்கள் வேறு பேதம் என்று கொள்கிறார்கள். அப்படிக் கொண்டால் அந்யோந்யாஶ்ரயணம், அநவஸ்தா என்கிற தோஷங்கள் வரும். எனவே அது கூடாது.
    • அந்யோந்யாஶ்ரயணம் – பசுமாட்டையும், வேறு ஒரு விலங்கு – ஆட்டினையும் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த விஶேஷணம் பேதம் என்று கொண்டால், அது ஆட்டில் இருந்து வேறுபட்டது என்று தெரிய ஆட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். ஆட்டின் விஶேஷணம் அறிய, அது மாட்டின் விஶேஷணத்தில் இருந்து வேறுபட்டது என்று அறிய மாட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். இப்பொழுது அறிந்து கொள்ள ஆரம்பித்ததே மாட்டின் விஶேஷணத்தைத் தான்!
    • அநவஸ்தா – ஆட்டின் விஶேஷணம் மாட்டைக் காட்டில் வேறாகில், அது மாட்டின் விஶேஷணத்தை காட்டிலும் வேறு என்றறிவதற்கு ஒரு பேதத்தையும், அதை மாட்டில் இருந்து வேறுபடுத்திக் காட ஒரு பேதத்தையும் கொள்ள வேண்டும். இது முடிவே இல்லாமல் போகும்
    • நநு தஶதத்வமஸி இத்யேததபி ப்ரத்யக்ஷம் கிம் நஸ்யாதிதி சேந்ந; த்வமிதேதஸ்ய ப்ரத்யக்ஷத்வேSபி தஶமோSஹமித்யேதஸ்ய வாக்யஜன்யத்வாத் | யதி தஶமோஹமித்யேதஸ்ய ப்ரத்யக்ஷவிஷயத்வம் தர்ஹி தர்மவாம்ஸ்த்வமித்யேத்ஸ்யாபி ப்ரத்யக்ஷத்வம் ஸ்யாத் | அங்கீகாரேSதிப்ரஸங்காத் | அத ஏவ தத்வமஸி இதி வாக்யஸ்ய நாபரோக்ஷஞானஜனகத்வம் ||
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்று கூறும் அத்வைதிகள் பக்ஷத்தினைக் கண்டிக்கிறார். தன்னை மறந்த 10 மூடர்கள் கதை எனப்படும் – அதாவது ஒரு ஆற்றினை பத்துப் பேர் கடக்கிறார்கள். ஆற்றினை கடந்த பின்பு அனைவரும் கடந்து விட்டோமா என்று பார்ப்பதற்க்காக அனைவரையும் எண்ணுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை எண்ணாமல் மற்ற 9 பேர்களை எண்ணி, ஒருவனைக் காணவில்லை என்று துக்கிக்கும் பொழுது – ஒரு அறிவாளி அதனைப் பார்த்து – நீ தான் அந்த பத்தாவது நபர் என்று அறிவுரை கூறியவுடன். நாம் பத்துப் பேர்கள் என்கிற ஜ்ஞானம் வந்து மகிழ்ச்சியடைகிறார்கள்.
    • அதுபோன்று தன்னையொழிந்த பதார்த்தங்கள் அனைத்தும் மித்யை என்று தெரியாத ப்ரஹ்மமானது, ஒரு ஆசாரியன் “தத்வமஸி” என்று உபதேசம் பெற்றவுடன் அந்த மித்யை நீங்கி, மோக்ஷம் அடைகிறான் எனவும், தத்வமஸி என்னும் வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்றும் கூறுகிறார்கள்.
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் என்றுமே ப்ரத்யக்ஷம் ஆக முடியாது. அப்படிக் கொண்டால் ப்ரமாணத்தின் வரைமுறையே போய்விடும். தனது வருங்காலத்தை தெரிந்து கொள்வதில் ஆசையுடைய ஒருவன் ஒரு ஜோஸ்யனிடம் சென்று பார்க்கிறான். அந்த ஜோஸ்யன் அவனை நோக்கி “நீ தர்மவானாக இருக்கிறாய்” என்றால் – இவர்கள் கொள்கைப்படி – தர்மவான் என்பது ப்ரத்யக்ஷம் ஆகிவிடும்!
    • ஏதேந ப்ரத்யக்ஷப்ரமாகரணம் ப்ரத்யக்ஷப்ரமாணம் | ப்ரமா சாத்மசைதன்யமேவ, சைதன்யம் ச த்ரிவிதம் – அந்த:கரணாவச்சிந்ந சைதன்யம், வ்ருத்த்யவச்சிந்ந சைதன்யம், விஷயாவச்சிந்ந சைதன்யம் சேதி | யதா த்ரயாணாமைக்யம் தா ஸாக்ஷாத்கார: | ஸோSபி நிர்விஶேஷவிஷய ஏவ, அபேதமேவ க்ருஹ்ணாதி-இத்யாதி குத்ருஷ்டிகல்பநா நிரஸ்தா | நிர்விகல்பகம் நாம ஜாத்யாதியோஜனாஹீனம் வஸ்துமாத்ராவகாஹி கிஞ்சிதிதமிதி ஞானமிதி நையாயிகாநாம் மதமபி நிரஸ்தம் |
    • இனி அத்வைதிகள், ப்ரமையாவது ஆத்மசைதந்யமாகும். அதுவும் மூன்று வகைப்படும்.
    • 1) அந்த:கரணத்தோடு சேர்ந்த சைதந்யம்,
    • 2) செயல்படும் சைதந்யம்,
    • 3) விஷயத்தோடு சேர்ந்த சைதந்யம்
    • எப்போது இந்த மூன்றும் ஒன்று சேருகின்றதோ, அப்போது ஸாக்ஷாத்காரம் உண்டாகிறது. அவ்வறிவும் பேதமின்மையே காட்டுகிறது. அதற்கு விஷயம் நிர்விஶேஷ ஜ்ஞானமாத்திரமான ப்ரஹ்மமேயாகும். என்பது அவர்கள் பக்ஷமாகும்.  இவையனைத்தும் ப்ரமாணத்திற்கு விருத்தமாகயாலே பொருந்தாது.
    • இவ்விடத்தில், ப்ரமாண விருத்தம் என்றதற்கு
    • [இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோSநுவிதீயதே – ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி]-2-67) விஷயங்களில் ஈடுபடும் இந்த்ரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி செய்யப்படுகிறதோ, அந்த மனம்  (சைதந்ய திரிவிதமோ அந்த:கரணமோ இங்கு அருளவில்லை என்பது )- என்கிற பகவத் கீதா வாக்யமும்,
    • ஸ்ரீ பாஷ்ய ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் மஹா ஸித்தாந்தத்தில் ஸ்வாமி பாஷ்யகாரர் ஸ்ரீஸுக்திகளையும்
    • திருவுள்ளம் பற்றி ப்ரமாணத்திற்கு விருத்தம் என்று அருளுகிறார்.
    • ஆத்மா வஸ்துக்களை க்ரஹிக்கிற விதம் கீழேயே அருளப்பட்டது.
    • இனி நையாகிகர்கள் (தார்க்கிகர்கள்) பக்ஷம் விலக்கப்படுகிறது. அவர்கள் பக்ஷத்தில் “நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் என்பது ஜாதி (ஜாதி என்றால் பசு மாடுகள் அனைத்தும் ஒரு ஜாதி, ஆடுகள் அனைத்தும் ஒரு ஜாதி என்பன போன்று) முதலான விசேஷணங்கள் இல்லாமல் வஸ்து மாத்திரத்தைத் தெரிவிக்கிறது” என்பதாகும். அதுவும் தள்ளப்பட்டது. நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானங்கள் கீழே விளக்கப்பட்டது காண்க.
    • நநு “காணாதம் பானிணீயஞ்ச ஸர்வஸாஸ்த்ரோபகாரத்வகம்” இத்யுக்த்வாத் கதம் கௌதமமதநிராஸ இதி சேத்; உச்யதே – நாஸ்மாபி: கார்த்ஸ்ன்யேனாஸ்ய மதஸ்ய நிராஸ: க்ரியதே, யாவதிஹ யுக்தியுக்தம், தாவத் ஸ்வீக்ரீயதே; பரகல்பிததடாகோபஜீவனவத் | ந கலு தடாகஸ்த: பங்கோSபி ஸ்வீக்ரீயதே | அத: பரமாணுகாரணத்வம், வேதபௌருஷேயத்வம், ஈஶ்வரானுமானிகத்வம், ஜீவவிபுத்வம், ஸாமான்யவிசேஷஸமாவாயானாம் பதார்தத்வேன ஸ்வீகார:, உபமானாதே: ப்ரமாணாத்வகல்பனம், ஸங்க்யாபரிமாநப்ருதக்த்வ பரத்வாபரத்வகுருத்வத்ரவத்வாதீனாம் ப்ருதக்குணத்வ கல்பனம், திஶோSபி த்ரவ்யத்வகல்பனம் இத்யாதிஸூத்ரகாராதிவிருத்தா ப்ரக்ரியா நாஸ்மாBஹி: ஸ்வீக்ரியதே | அவிருத்தானி ஸ்வீக்ரியந்தே இதி விரோத: |
    • காணாதரால் ப்ரவர்த்திப்பிக்கப்பட்ட தர்க்கமும், பாணினியை முதல்வராகக் கொண்ட வையாகரண மதமும் எல்லா ஶாஸ்த்ரங்களுக்கும் உபகாரம் செய்கின்றன என்று சொல்லி இருக்க – அம் மதங்களைத் தள்ளலாமா என்று கேள்வியை அனுவாதம் (அனுமதித்து) செய்து, அதற்கு உத்தரம் அருளுகிறார்.
    • வேதவிருத்தமான விஷயங்கள் அம்மதங்களில் இருப்பதினால் வைதிகர்கள் அம்மதங்களைக் கொள்ளமாட்டார்கள். அவைகளாவன,
    • ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம் என்று பொருட்களைக் கற்பிப்பது,
    • ஸங்க்யை, பரிமாணம், ப்ருதக்த்வம், பரத்வம், அபரத்வம், குருத்வம், த்ரவத்வம் – என்ற ஏழும் தனிக்குணங்கள்
    • வேதம் பரமபுருஷனால் செய்யப்பட்டது
    • பரமாணுக்கள் ஜகத் காரணம் என்பது
    • ஜீவனை விபு என்பது
    • உபமானம் முதலானவற்றை தனிப் ப்ரமாணம் என்பது
    • திக்கை தனி த்ரவ்யமாகக் கொள்வது
    • முதலான கொள்கைகளால் வேத விருத்தமானவற்றை ஆதரிப்பதால், வைதிகர்கள் அவற்றைக் கைக்கொள்ளார்கள். குளத்தில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளத் தக்கதாயிருந்தாலும், அதில் உள்ள சேறு உபயோகப்படாதாப் போலே, அவர்கள் மதத்தில் உள்ள வேத விருத்தமில்லாதவற்றைக் கைகொள்ளலாம் என்பதே “ஸர்வஶாஸ்த்ரோபகாரகம்” என்பதின் விஷயமாகும்.
    • —–
    • ஆக இந்த முதல் அவதாரத்தால், ஸித்தாந்த ஸங்க்ரஹத்தை முதலில் சொல்லி, பின்பு, உத்தேச, லக்ஷண, பரீக்ஷா க்ரமத்தில் உத்தேசிக்கப்பட்ட பதார்த்தங்களின் பிரிவினைக் காட்டி, அதன் பின்பு முதலில் ப்ரத்யக்ஷத்தை விசாரிக்க ஆரம்பித்து, ப்ரமாணத்தின் லக்ஷணத்தைச் சொல்லி, ஸம்சய அந்யதா விபரீத ஜ்ஞானங்களை விவரித்து, லக்ஷணத்தின் தோஷங்களைக் காண்பித்து, அத்தோஷங்கள் கீழ்ச் சொன்ன லக்ஷணத்தில் இல்லை என்பது விளக்கியருளி, நிர்விகல்பகம் – ஸவிகல்பகம் ஆகியவற்றை விளக்கி, நிர்விகல்பகம் வஸ்து மாத்ரம் க்ரஹிப்பது அன்று என்று விளக்கியருளி, ப்ரத்யக்ஷ ஜ்ஞானம் உண்டாகும் விதத்தினைக் காட்டி, நிர்விகல்பக ஜ்ஞானத்தின் பிரிவுகள் காட்டியருளி, ஸ்ம்ருதி, ப்ரத்யபிஞை ஆகியவைகள் தனிப் ப்ரமாணம் அன்று – அவைகள் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது என்பதையும் காட்டி அபாவத்தின் அநங்கீகாரத்தையும் காட்டி, ஜ்ஞானங்கள் அனைத்தும் உண்மையே என்கிற ஸத்க்யாதி பக்ஷத்தைக் விளக்கியருளி, அதன் காரணத்தையும் காட்டி, வாக்யஜன்ய ஞானம் ப்ரத்யக்ஷம் அன்று என்பதையும் விளக்கியருளி, காணாதம் எனப்படும் ந்யாய மதம் முதலானவற்றை ஏற்காத காரணங்களையும் அருளிச் செய்து இந்த ப்ரத்யக்ஷ அவதாரத்தைத் தலைக்கட்டியருளுகிறார்.
    • முதல் அவதாரம் முற்றிற்று.
    • ————————-
    • ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    • ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-

Posted in தத்வ த்ரயம், ஸப்த காதை, ஸ்ரீ ராமானுஜர், Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ சரம குரு நிர்ணயம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்/ ஸ்ரீ சரம குரு நிர்ணயம் -ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை ஸ்வாமிகள்

February 1, 2024

ஸ்ரீ ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரண அம்புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரு வந்தே திவ்ய ஞான பிரதம் ஸூபம்
–

யோகிகளுக்குள் தலைவரான ஸ்ரீ மா முனிகளின் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு
மது போன்ற திவ்யமான-அசாதாரணமான – ஞானம் அருளிய உபகாரகர் அன்றோ இவர் –

துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே

ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாள மா முனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்-எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி

அவதார ஸ்தலம்: எறும்பி

ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்

நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம்(ப்ரஸ்ன உத்தர ரூபமாக ஸேனாபதி ஆழ்வான் பட்டோலை செய்து அருளியது), சரம குரு நிர்ணயம்-உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்

அப்புள்ளார் தீர்த்த யாத்ரை அருளி இவரைக் கண்டு வாதம் செய்ய வர இவரது மஹிமையைப் பார்த்து அனுவர்த்தி செய்தார்
பெரிய கந்தாடை அண்ணன் இவரது ஆப்த பந்து -அவர் மூலம் மா முனிகள் காலஷேபம் கேட்க செல்லும் பொழுது மாமுனிகள் வைபவம் கேட்டு அவரைத் தண்டனிட கோயில் (ஸ்ரீரங்கம்) வந்த எறும்பியப்பா, மாமுனிகளின் காலக்ஷேபத்தில் திருவாய்மொழி முதல் பாசுரமான “உயர்வற” பாசுர விளக்கத்தில் எம்பெருமான் பரத்வம் கேட்டு அதில் வேத வேதாந்தங்கள் செறிவுக்கு நெகிழ்ந்தார். மாமுனிகள் அவரைத் ததீயாராதனத்துக்கு எழுந்தருளப் பண்ண, அப்பா சந்யாசி அளிக்கும் ஆஹாரம் நிஷேதம் எனும் சாமான்ய சாஸ்த்ரம் காட்டி அவ்வுணவுண்டால் தோஷம் நீங்கச் சாந்த்ராயண வ்ரதம் செய்யவேணும் என்று நினைத்து திருமாலையில் ஆழ்வார் 41ம் பாசுரத்தில் “தருவரேல் புனிதமன்றே” என்று அருளிய விசேஷ தர்மத்தை உணராது  மறுத்து தன் ஊர் திரும்பினார். காலையில் அநுஷ்டானங்கள் முடித்து அவர் தம் திருவாராதனத்துக்குக் கோயிலாழ்வார் திறக்கமுயல, அது முடியாமல் போக, தம் பெருமாளான சக்ரவர்த்தித் திருமகனைத் தொழாத வருத்தத்தால் ப்ரசாதம் உண்ணாமல் உறங்க, கனவில் அவன் வந்து மாமுனிகள் ஆதிசேஷன் அவதாரம் ஆதலால் அவரைச் சரண் புக்கு உய்வுறும் என நியமிக்க, (சேஷ ஸ்ரீ மான் -போகி பூதா ராகவஸ்ய -பூத்வா வரவர முனி -பத்ர பீடம் ரஷதி -ஸ்லோகம்)அப்பா மீண்டும் விரைந்து கோயிலேறச் சென்று மாமுனிகளிடம் பிழை பொறுத்தருள  வேண்டி, கோயில் கந்தாடையண்ணன் புருஷகாரத்தால் மாமுனிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரமும் பெற்று, சிஷ்யராகி அஷ்ட திக் கஜங்களில் ஒருவரும் ஆனார்.

இந்தக் கிரந்தத்தில் உதாஹரிக்கப்பட்ட பூர்வாச்சார்கள் திரு நாமமும் அவர்கள் அருளிய க்ரந்தங்களின் திரு நாமமும்
1-சோமாஸி யாண்டான் –குரு குண விவரணம் -குரு குண வலி
2-வடுக நம்பி
3-வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்
4- நஞ்சீயர்
5-கணியனூர் சிறியாச்சான்
6-நலம் திகழ் நாராயண தாஸர் –குரு ப்ரபாவ தீபிகை
7- ஜீயர்
8- அபியுக்தர்

———-

அவனும் ஆச்சார்ய பதத்தை விரும்பி -குரு பரம்பரையில் பிரதமம் இடத்தைப் பிடித்துக் கொண்டான்
ஆனால் அவனது ஸ்வ தந்தர்யம் -இல்லாத நம் பூர்வாச்சார்யர்களின் ஏற்றம் சொல்ல வேண்டாமே-
இறுதியான பெருமை -சரமம்- ப்ரதாநம் –
யோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம–வ்யாமோஹ தஸ்ததி தராணி த்ருணாயமேநே |அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.||அனந்த பிரதம ரூபம் லஷ்மணஸ்து தத் பரம் பல பத்ரஸ் த்ருதீயஸ்து கலவ் ( ராமாநுஜஸ் ஸ்ம் ருத )–கச்சித் பவிஷ்யதி -பாட பேதம் ஆர்ஷ வசனம் -அனைத்து உலகும் வாழப் பிறந்த உத்தாரக ஆச்சார்யர் -ஒருவரே –
ஆச்சாரகர்கள் அருளிச் செய்த பட்டோலை கிரந்தம் -சரம உபாயம் பற்றியும் சரம குரு பற்றியும் உண்டு
சரம குரு ராமானுஜரே என்று நிர்ணயம் பண்ணும் கிரந்தம்
சரம உபாய ஸங்க்ரஹம் என்றும் சரம உபாய தாத்பர்யமும் இவர் அருளிச் செய்ததாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்த பட்டோலை என்ற நூலில் உள்ளது-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சரம உபாயம் -பஞ்சம உபாயம் –

————-

சரம குரு நிர்ணயம் ஸமதநுத யஸ் ஸ்வயம்
பரம புருஷஸ்ய ஸத் பத கமல பக்தித
யதி வர பதாம்புஜ ப்ரவண மநஸம் ஸூபம்
வரத குரும் அந் வஹம் வர குண நிதிம் பஜே

பரம புருஷனுடைய திருவடித்தாமரை இணையில் அன்பாலே எவர் ஒருவர் சரம குரு நிர்ணயத்தை அருளினாரோ -யதிராஜருடைய திருவடித்தாமரையில் ஈடுபட்ட நெஞ்சுடையவரும் -மங்களமானவரும் -நற்குணங்களுக்குக் கொள்கலமானவருமான அந்த வரத குருவாகிற எறும்பி யப்பாவை தினம் தோறும் உபாஸிக்கிறேன் -என்றவாறு

கு ஸப்தஸ்த் வந்தகாரஸ் ஸ்யாத் ரு ஸப்தஸ் தந் நிரோதக
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே
—(ப்ரபந்ந அம்ருதத்திலும் -6-7-எடுத்து அருளப்பட்ட ஸ்லோகம்)

(கு ஸப்தம் இருளைக் குறிக்கும் ரு ஸப்தம் அதன் அழிவைக் குறிக்கும் -இருளை அழிப்பவனாகையாலே ஆசார்யன் குரு எனப்படுகிறான் -என்றவாறு)

என்று கு ஸப்தம் அந்தகார வாஸியாய் -ரு ஸப்தம் அந்தகார நிவர்த்தக வாஸியாய் -ஆக குரு ஸப்தம் அந்தகார நிவர்த்தகனான ஆச்சார்யனைச் சொல்லுகிறது
அந்தகாரமாவது
ஸம்ஸாரியான இச் சேதனனுக்கு க்ருத்யாக்ருத்யங்கள் இன்னது–உத்தேஸ்ய அநுத்தேஸயங்கள் இன்னது -உபாதேய அநுபாதேயங்கள் இன்னது என்று
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி அக்ருத்ய அனுத்தேஸ்யங்களைக் கழித்து க்ருத்ய உத்தேஸ்ய உபாதேயங்களை அனுஷ்ட்டித்து -விரும்பிக் கொண்டு(ப்ரீதி பூர்வகமாக)
ஸ்வரூப அனுரூபமாக வர்த்திக்கும் படியான நிஷ்டையை அறிய ஒட்டாமல் மாம்ஸ த்ருஷ்டி விஹீநத்வம் பதார்த்த தர்சந அஷமத்வத்தைப் பண்ணுமா போலே ஒரு போகியான இருட்சியைப் பண்ணக் கடவதான அஞ்ஞான விசேஷம் இறே
இத்தை நிவர்திப்பிக்கை யாவது -ப்ரக்ருதி சம்பந்தித்தினுடைய ஹேயதையும் (கர்மாதீனம் ஜடம் முக்குண வசம் அழுக்கு உடம்பு -பொல்லா ஒழுக்கம் -பொய் நின்ற ஞானம்)ப்ரக்ருதே பரனான ஆத்ம ஸ்வரூபத்தினிடைய (அஜடம் நித்யம் சேஷ ஆனந்த ஞான மயன் ஞான குணகன் அணு ஸ்வரூபம்)உத்தேஸ்யதையையும் -சித் அசித் ஸ்வரூப நிர்வாஹகனான ஈஸ் வரனுடைய உபாதேய தமத்வத்தையும் ப்ரமாண முகத்தாலே உள்ளபடி உணர்த்தி நிவர்த்திப்பிக்கை
இப்படிப்பட்ட இச் சேதனனுடைய அஞ்ஞானத்தை நிவர்த்திப்பிக்கும் அவனுக்கு ஆய்த்து குரு ஸப்த வாஸ்யத்வம் உள்ளது-

தத்வ த்ரய சூர்ணிகைகள்

(அசித்து-ஞான சூன்யமாய்-விகாராஸ்பதமாய் இருக்கும் –இது சுத்த சத்வம்
என்றும் மிஸ்ர சத்வம் என்றும் சத்வாதி சூன்யம் என்றும் த்ரிவிதமாய் இருக்கும் –)

(ஆத்ம ஸ்வரூபம்-சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே-1-தேக இந்த்ரிய மன
பிராண புத்தி விலஷணமாய்-2-அஜடமாய்-3-ஆனந்த ரூபமாய்-4-நித்யமாய் 5-அணுவாய்
6-அவ்யக்தமாய்-7-அசிந்த்யமாய்8-நிரவயவமாய் 9-நிர்விகாரமாய் 10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய் 12-தார்யமாய் 13-சேஷமாய் இருக்கும்-)

(ஈஸ்வரன்-அகில ஹேய ப்ரத்ய நீக-அனந்த ஜ்ஞான ஆநந்தைக ஸ்வரூபனாய்-
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –-சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்-ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்- தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்- விலஷண விக்ரஹ யுக்தனாய் – லஷ்மி பூமி நீளா நாயகனாய் – இருக்கும்)

அஞ்ஞான திமிராந் தஸ்ய ஞான அஞ்ஞன ஸலாகயா
சஷுர் உன் மீலிதம் யேந தஸ்மை ஸத் குரவே நம
–2-என்னக் கடவது இறே-ஸலாகயா-சங்கிடுவான்

(அஞ்ஞான அருளாலே குருடனாய் இருப்பவனுக்கு அறிவாகிற மைக்குச்சியைக் கொண்டு எவராலே கண் திறக்கப்படுகிறதோ அத்தகைய பெருமையுடைய நல்லாசிரியருக்கு நம்காரம் -என்றபடி)

(ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணம் நிறைந்த கூரத்தாழ்வான்-இதில் குருவுக்கு அவஸ்யம் வேண்டிய அஷ்ட லக்ஷணங்களை அருளிச் செய்கிறார் மேல்)

(தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய
||–ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 4 –)

(ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.)

அஞ்ஞான நிவர்த்தகனான ஆச்சார்யனை அன்றி ஸம்ஸார நிவ்ருத்திக்கு வேறு பிஷக் இல்லை
ஓவ்ஷத்யம் பரமம் மன்யே குரோர் அஞ்ஞான வாரகாத் -(அஞ்ஞானமாகிய நோயைப் போக்கடிக்கையாலே ஆச்சார்யனை மேலான மருந்தாக நினைக்கிறேன்)என்று இறே பராசர பகவான் சொல்லி வைத்தது
இப்படிப்பட்ட குருவாகிறான் ஸர்வ லக்ஷண ஸம்பந்தனாய்த்து இருப்பது –

1-சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் உள்ளபடி ப்ரதிபாதிக்கவற்றான வேதாந்த ஞான பூர்த்தியை யுடையவனாய் இருக்க வேணும்
2-வேதாந்த ஞானம் யுடையவனாய் இருந்தானே யாகிலும் தத் ப்ரதிபாத்யனான பகவத் விஷயத்தில் ப்ராவண்யம் இல்லாவிடில் அநர்த்தா வஹமாய்த் தலைக்கட்டும்
அப்படி ஆகாமைக்கு வேதாந்த ப்ரதிபாத்யனான எம்பெருமான் இடத்தில் நிரவதிக பக்தி யுக்தனாக வேணும்-

3- பக்தி உண்டானாலும் பிரயோஜனம் இல்லை இறே ஏதத் ஞான பக்தி யுக்தரான ததியர் இடத்தில் த்வேஷம் நடையாடுமாகில் –
ஆகையால் ஞானாதி குண பூர்ணரான ஸஜ் ஜன விஷயத்தில் த்வேஷ ரஹிதனாய் பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனாக இருக்க வேணும்
(நரஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹ- யாதவ ஸிம்ஹ- ரெங்கேந்திர ஸிம்ஹ விஷயங்களில் பார்த்தோமே )
துர்லபம் மா முனிகள் முன்பே அருளிச் செய்துள்ளார் அன்றோ -ஆட் கொண்ட வில்லி ஜீயர் நஞ்சீயர் ஸம்வாதம் -பிள்ளாய் -பாகவத நிஷ்டை அறியாதவள்)
4-இந்த குணங்கள் உண்டாய் இருக்கச் செய்தே –மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யம் உத்தமம் பவித்ரஞ்ச பவித்ராணாம் மூல மந்தரஸ் ஸநாதந-(நாரதீய கல்பம்-அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யை-1-11-)(மந்திரங்களில் மேலான மந்த்ரமும் ரஹஸ்யங்களுக்குள் மேலான ரஹஸ்யமும் -பாவனங்களுக்குள் பரம பாவனமும் -பழையதான அஷ்டாக்ஷரம் என்னும் மூல மந்திரமே யாகும்)என்கிறபடியே -பகவத் மந்திரமான எல்லாவற்றிலும் உத்க்ருஷ்ட மந்திரமாய் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை உள்ளபடி ப்ரதிபாதிக்க வற்றான திருமந்திரத்தை உள்ளபடி அறிந்து தந் நிஷ்டனாய் இருக்க வேண்டும்(திருமந்திரத்தில் பிறந்து த்வயத்திலே வளர்ந்து யாவச் சரீர பாவம் தன்னிஷ்டனாய் இருக்க வேண்டுமே)
5-மந்த்ர ஞானம் உண்டாய் இருந்ததே யாகிலும் தத் ப்ராவண்யம் இல்லையே யாகில் ஞாதமான அர்த்தம் நெஞ்சில் தேங்காது இறே -ஆகையால் மந்த்ர விஷயத்தில் பக்தி யுடையவனாக இருக்க வேணும்(ஸ்ரீ மன் நாராயணன்-இங்கு திருமந்திரம் சொல்வது சேஷித்வ உபாயத்வ உபேயத்வங்கள் -வேதாந்தம் சொல்வது காரணத்வ அந்தர்யாமித்வ நியந்த்ருத்வங்கள்)
6–மந்த்ர விஷயத்தில் ஞான பக்திகள் உண்டாகவே அந்த மந்த்ர அனுசந்தானம் இவன் பக்கல் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்கும் படி இராமல்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோநாராயணமே”(6-10-6)-என்கிறபடியே நிரவதிக போக்யமாய் இருக்க வேண்டும்(குலம் தரும் இத்யாதி முதலில் -பின்பு ஆறு நூறு பாசுரங்களுக்குப் பின்பு அன்றோ இனிமை பற்றிய அருளிச் செயல்)

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
–6-10-6-

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்
–1-1-9-
7-இவை இத்தனையும் யுண்டாய் இருந்தும் ஸூக்தி இல்லாவிடில் கார்யகரம் ஆகாது இறே -ஸூக்தியாகிறது-ஸ்வயம் பிரயோஜனமாக திருமந்த்ரத்தை பிரயோஜனாந்தரத்தைக் கணிசித்து அஸத் பாத்ரங்களிலே விநியோகிக்கை யாகிற குற்றம் அற்று இருக்கை(மந்த்ரம் யத்நேனே கோபயேத்)
மற்றப்படி ம்ருத் வாரிகளால் யுண்டான ஸூத்தி ஸூத்தி அன்று -அர்த்த ஸூத்தியே ஸூத்தி(மண்ணாலும் நீராலும் கழுவுவது மட்டும் ஸூத்தியாகாதே -பொருள் அர்த்தம் ஒன்றே ஸூத்தி யாகும்)
ஸர்வேஷாம் ஏவ ஸுஸாநாம் அர்த்த ஸுஸம் பரமம் ஸ்ம்ருதம் யோ அர்த்தே ஸூஸ் ஸஹி ஸூசிர் ந ம்ருத்வாரி ஸூசிஸ் ஸூசிர் -(மனு ஸ்ம்ருதி-5-10-6-)(எல்லா ஸூத்திகளுக்குள்ளும் -பொருள் விஷயத்தில் ஸூத்தனாய் இருக்கையே மேலானதாக எண்ணப்படுகிறது -பொருள் விஷயத்தில் எவன் ஸூ த்தனாய் இருக்கிறானோ அவனே ஸூத்தன் -மண்ணாலும் தண்ணீராலும் மட்டும் ஸூத்தி செய்து கொள்ளுபவன் ஸூத்தன் அல்லன்)என்று இறே பிரமாணம்
ஆகையால் இப்படிப்பட்ட ஸூத்தியை யுடையனாய் இருக்க வேண்டும்

8-மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்த்ர ப்ரதே குரவ்
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம்
–(ஸ்ரீ விஷ்ணு தத்வம்)என்னக் கடவது இறே(மந்திரத்தின் இடமும் அதன் தேவதையிடமும் அப்படியே மந்த்ரத்த அளித்த ஆச்சார்யனிடமும் ஒன்றும் ஒழியாமல் இம் மூன்றினிடமும் எப்போதும் பக்தி செய்யப்பட வேண்டும் -அந்த பக்தியே பகவத் ப்ராப்திக்கு முதல் உபாயமாகும்)
இப்படிக்கு கீழுள்ள அர்த்தங்களை ஒருவன் உபதேஸிக்க அறிந்து தன்னிஷ்டனாய் இருந்தானே யாகிலும்
பிரமாண ஞான புரஸ்ஸரம் ஆகாவிடில் அதுக்கு ஸ்தைர்ய ஸித்தி பிறவாது ஆகையாலே தத் ஸித்தி யர்த்தமாக வேத உப ப்ரும்ஹணங்க ளாய் தத்வ த்ரய ஸ்வரூப ஸ்வபாவ குரு லக்ஷண யதார்த்த ப்ரதிபாதன பரங்களான ஸ்ரீ விஷ்ணு புராணாதிகளை விசேஷித்து உள்ளபடி அறிந்து இருக்க வேணும்
ஆக இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் லக்ஷண பூர்த்தியை யுடையனாய் இருக்குமவன் யாய்த்து குரு என்று சொல்லலாவது-இப்படி இறே பிரமாணம் சொல்லுகிறது-இந்த அஷ்ட லக்ஷணங்களையும் சொல்லும் பிரமாணம் –

ஆச்சார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர
மந்த்ரஜ்ஜோ மந்த்ர பக்தஸ் ச ஸதா மந்த்ர ஆஸ்ரயஸ் ஸூசி
குரு பக்தி ஸமா யுக்த புராணஜ்ஜோ விசேஷத
ஏவம் லக்ஷண ஸம்பந்த குருரித் யபிதீயதே

(ஆச்சார்யன் ஆவான் 1-வேத அத்யயனம் செய்தவனாகவும் -2-விஷ்ணு பக்தனாகவும் 3–மாத்சர்யம் அற்றவனாகவும் -4-மந்த்ரத்தை அறிந்தவனாகவும் -5-மந்திரத்தில் பக்தி யுள்ளவனாகவும் -6-எப்போதும் மந்த்ரத்தைப் பற்றி இருபவனாகவும் -7-அதைக்கொண்டு ஷூத்ர பலன்களை ஸாதித்துக் கொள்ளாத )பரி ஸூத்தி யுடையவனாகவும் -8-தனது ஆச்சார்யன் இடத்தில் பக்தி யுடையவனாகவும் -9-சிறப்பாகப் புராணங்களை அறிந்தவனாகவும் இருக்க வேண்டும் இத்தகைய லக்ஷணங்களை யுடையவனே குரு என்று சொல்லப்படுகிறான்)

சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியம் அநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்ய வாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத்
–1-நியாய விம்சதி முதல் ஸ்லோகம் தேசிகனும் 14 ஆச்சார்ய லக்ஷணங்கள் காட்டி அருளி உள்ளார்

1-ஸத் ஸம்ப்ரதாயே – ஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி,     வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.

2-ஸ்திர தியம் – சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.

3-அநகம் – ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்

4-ஸ்ரோத்ரியம் – வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்

5-ப்ரும்ஹ நிஷ்டம் – எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்

6-ஸத்வஸ்த்தம் – ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.

7-ஸத்ய வாசம் – ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.

8-ஸமய நியதயா ஸாது வ்ருத்யா – காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.

9-டம்ப அஸூயாதி முக்தம் – தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.

10-ஜித விஷயி கணம் – இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.

11-தீர்க்க பந்தும் – இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.

12-தயாளும் – மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.

13-ஸாஸிதாரம் – தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)

14-ஸ்வபர ஹிதபரம் – ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான்

இன்னம் குரு லக்ஷணங்கள் அநேகம் உண்டு -இப்படி ஸர்வ லக்ஷண ஸம் பன்னமான குருத்வம் ஸார்வத்ரிகமாகக் காணாமையாலே ஒரு வியக்தியிலே விசேஷ நிஷ்டமாக்கி நிர்ணயிக்க வேணும் இறே(ராமன் இடம் 16 குண பூர்த்தி போல்)
அது செய்யும் இடத்தில் அஸ்மத் குரு (வாக்ய குரு பரம்பரை)என்று தொடங்கி –ஸ ச ஆசார்ய வம்ஸோ ஜேயோ பவதி ஆசார்யாணாம் அஸாவஸாவித்யாய பகவத்த (ரஹஸ்ய ஆம்நாய ப்ராஹ்மணம் )(பகவானிடம் இருந்து தொடங்கி -அல்லது பகவான் வரையில் -இவர் இவர் என்று குரு பரம்பரை முழுவதும் அறியப்பட வேண்டும் )-என்கிறபடியே எம்பெருமான் அளவும் செல்ல இவர்களுடைய ஸ்வபாவங்களை உள்ளபடி அறிந்து நிர்ணயிக்க வேணும்

(அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம் அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.
வாக்ய குருபரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேதவாக்யங்கள். மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது ஆகும்)

இப்படி நிர்ணயிக்கப் படுகிற குருத்வம் தான் பிரதம குரு என்றும் சரம குரு என்றும் த்வி விதமாய் இருக்கையாலே அதில் பிரதம குருவான எம்பெருமானை ஒழிய இவ்வருகுள்ள வ்யக்திகளிலே நிர்ணயிக்க வேணும் இறே
குருத்வம் எல்லாருக்கும் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே பவ்ரயாபர்ய விபாகத்தாலே பிரதம சரமம் என்னப்படுகிறது
இவர்கள் பக்கல் ஆபேஷிக ப்ராதம்யம் ஒழிய நைசர்கிக ப்ராதம்யம் இல்லை இறே -அது உள்ளது எம்பெருமானுக்கே யாய்த்து -நித்ய சித்தனாய் யாகையாலே
இப்படி எல்லாருக்கும் சரம குருத்வம் அவிசிஷ்டமாகில் ஏகத்ர விசேஷ நிஷ்டமாக்க வேண்டுவான் என் என்னில்
குருத்வம் அவிசிஷ்டமாய் இருந்ததே யாகிலும் அது இவ்விபூதியிலே நிரர்கலமாக விலைச் செல்ல வேணும் –
அப்படி விலைச் செல்லுகிற குருத்வம் சார்வத்ரிகம் ஆக மாட்டாது
ஆகையால் வ்யக்தி நிஷ்டமாகவே கொள்ள வேணும் இறே -அது கொள்ளும் பிரகாரம் எங்கனே என்னில்

புரா மந்த்ர த்வயம் ப்ரஹ்மன் விஷ்ணு லோகே மஹா புரே
தஸ்மிந் நந்தபுரே லஷ்ம்யை மயா தத்தம் ஸநாதநம்
–என்கிறபடியே(அந்தணரே -ஆதி காலத்தில் விஷ்ணு லோகமாகிற பெரிய உலகில் அந்தப்புரத்திலே ஸநாதனமான த்வய மந்த்ரம் லஷ்மீ தேவிக்கு என்னால் உபதேஸிக்கப் பட்டது )
பெரிய பிராட்டியார் எம்பெருமான் பக்கலிலே மந்த்ர ரத்னமான த்வயத்தைப் பெற்று ஸிஷியஸ்தாநீயரான சேனை முதலியாருக்கு உபதேஸித்து அவ்வளவிலே அவளுடைய குருத்வம் விலைச் சென்றது இத்தனை போக்கி ஸார்வத்ரிகமாகப் பெற்றது இல்லை

லஷ்ம்யா தத்தம் ஸ்வயம் ஸம்யக் ஸேநேஸோ அபி ததாஸ் ஆதராத்
பரங்குசாய ப்ராயச்சத் மந்த்ர ரத்னம் மஹத்தரம்
-என்கிறபடியே
பெரிய பிராட்டியார் பக்கலிலே லப்தமான மந்த்ர ரத்னமான த்வயத்தை ஸேனாபதி யாழ்வானும் ஆதர பூர்வகமாக நம்மாழ்வாருக்கு உபதேஸித்து வ்யக்த்யந்தரத்தில் போகாமையாலே அவருடைய குருத்வமும் ஆழ்வார் அளவிலே நின்றது

பெரிய பிராட்டியாருடையவும் சேனை முதலியாருடையவும் குருத்வமானது உபதேஷ்ட்ருத்வ முகத்தாலே ரூடியாய் வந்தது இத்தனை போக்கி அஞ்ஞான தமோ நிவர்த்தக த்வாரா யோகமாய் வந்ததன்று
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அஸங்குசித ஞாநாதி குண யுக்தரான சேனை முதலியாருக்கு அஞ்ஞானஸ் தமஸ் ப்ரவ்ருத்தி யுண்டாய் தன் நிவ்ருத்தி யர்த்தமாக உபதேசித்தாள் இல்லை இறே
லோக ரக்ஷண அர்த்தமாக லீலா விபூதியிலே ப்ரவர்த்திப்பிக்க வேண்டி அர்த்தத்தை சீர்மையாலே உபதேஸ பரம்பரா ப்ராப்தமாக வேணும் என்ற நினைவாலே உபதேசித்தாள் அத்தனை இறே
ஆகையால் உபதேஷ்ட் ருத்வ பர்யாயமான குருத்வமே உள்ளது(பங்கஜம் ரூடி தாமரை -சேற்றில் பிறந்த அனைத்துக்கும் யவ்கிக்க பொருளில் -அதே போல் குருத்வம் ரூடி யாகவும் அஞ்ஞானம் போக்கியவருக்கும் பொருந்தும் அன்றோ)
ஆழ்வாரைக் குறித்து யுண்டான சேனை முதலியாருடைய குருத்வமும் –மயர்வற மதி நலம் அருளினன் -என்கிறபடியே பிரதம குருவான எம்பெருமான் அஞ்ஞான நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுத்து -பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிரதமத்திலே கொடுத்தானாகையாலே -ஆழ்வாருக்கு அஞ்ஞானம் நடையாடுகிற தசையிலே தன்நிவ்ருத்தி யர்த்தமாக உபதேஸிக்கை அன்றிக்கே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அநந்தரம் உபதேஸித்தான் ஆகையாலே உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வம் அத்தனை

இனி இவ்வருகுள்ள ஆழ்வார் தொடக்கமாயுள்ள ஆச்சார்யர்களுக்கு அஞ்ஞான தமோ நிவர்த்தன த்வாரா வந்த குருத்வம் தான் ஸார்வத்ரிகமாக விலைச் செல்லப் பெற்றது இல்லை -எங்கனே என்னில்

பகவன் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற நம்மாழ்வார்
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் -என்றும்
நின் கண் வேட்க்கை எழுவிப்பேனே -என்றும்
எம்பெருமானோடே மார் தட்டி அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -என்று நிவ்ருத்தரானார் அத்தனை போக்கி
ஸங்கல்பித்த படியே தம்முடைய குருத்வத்தை ஸார்வாத் ரிகமாக விலைச் செலுத்தக் கண்டதில்லை
ஸங்கல்பித்த அம்சத்தில் சிலர் திருந்தின இத்தனை –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே

போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

(வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – திருவிருத்தம்-96 )

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான்
—பெரிய திருவந்தாதி-25-
எழுந்து அருளி இருந்த முப்பத்து நான்கு திரு நக்ஷத்ரமும் (சில இடங்களில் 32 திரு நக்ஷத்ரம் என்பர்-மூவாறு மாதம் மோகித்து இருந்தார் அன்றோ -முன்பு 16 வருஷமும் மதுரகவி வந்த பின்பு 16 வருஷமும் -ஆக 34 என்றும் சொல்லலாம்)குண அநுபவத்திற்கும் விஸ்லேஷ வ்யஸன அநுபவத்துக்கும் -ஸ்வ தேஹ தோஷத்தை அறிவிக்கைக்குமே உடலாய்த்து(மங்க ஒட்டு உன் மா மாயை)
ஆகையால் ஆழ்வாருடைய குருத்வ பூர்த்திக்கும் சிலவொருவாய் யூன்றி இருக்கும்

(ஓ ஓ உலகினில் இயல்பே என்றும்– மருள் ஒழி மட நெஞ்சே -திருவாறன்விளையிலேயே இருப்பதாகவே போதும் என்று முன்பு அருளிச் செய்தாலும் பின்னர் நெஞ்சுக்கும் உபதேசித்து அங்கு செல்ல த்வரித்தார் அன்றோ)

ஓ ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து  இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்   
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது   
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,  
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே–திருவாசிரியம்–6–

மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

(அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே)

ஆழ்வாருக்கு இவ்வருகுள்ள நாத முனிகள் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி ஆளவந்தார் பெரிய நம்பி முதலான நம் பூர்வாச்சார்யர்கள்
ஸ்வ ஸ்வ காலங்களிலே உபதேஸ அனுஷ்டானாதி முகத்தாலே சில ஜீவாத்மாக்களைக் கறுந்தரையிலே திருத்தி உஜ்ஜீவிப்பித்துக் கால யாபனம் பண்ணிப் போந்தார்கள்
ஆகையாலே அவர்களுடைய குருத்வமும் க்வாசித்கமாகி விட்டது
இனி ஸர்வ லக்ஷண உபேதமான குருத்வ பூர்த்தி தீர்க்கஸ் தாயியாய் நின்று கண்டாபதமாய்க் கொண்டு விலைச் சென்றது நம் குல நாதரான எம்பெருமானார் திருவவதரித்த பின்பு இறே

எம்பெருமான் ஸம்ஸாரி சேதன உஜ்ஜீவன அர்த்தமாக வேத இதிஹாஸ புராணாதிகளைப் ப்ரவர்த்திப்பித்தும் -ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்தும் -ஆழ்வார்களை அவதரிப்பித்தும்
ஜகத்தைத் திருத்தப் பார்த்த இடத்தில் ஒருவரும் திருந்தக் காணாமையாலே ஆச்சார்ய ரூபேண சிலரை அவதரிப்பித்து ஜகத்தைத் திருத்தக் கடவோம் என்று திருவாழி ஆழ்வானை ஏவுவது -திருவனந்த ஆழ்வானை ஏவுவதான இடத்திலும் -ஆடவிட்டுத் திருந்தக் காணாமையாலே
இனி நாமே சென்று ஆச்சார்ய ரூபேண அவதரித்து சிறிது காலம் வருந்தி இருந்தாகிலும் ஜகத்தை அடையாத திருத்தக் கடவோம் என்று அமோகமாக ஸங்கல்பித்து
ஆச்சார்யத்வ பூர்த்திகளிலே யாதல் -லக்ஷணங்களிலே யாதல் ஒரு குறைகளும் இன்றிக்கே ஸர்வ லக்ஷண உபேதனாயக் கொண்டு எம்பெருமான் தானாகவே அவதரித்த அவதாரம் இறே எம்பெருமானார் –எம்பெருமானாருக்குப் பின்பும் ஒருவரை அவதரிப்பித்து ஜகத்தைத் திருத்த வேண்டும்படி இன்றிக்கே அப்ரதிஹத மநோ ரதனாய் நின்று ஸங்கல்பித்து இதுவே அவதியாக குரு ரூபேண அவதரித்த அவதாரமாகையாலே எம்பெருமானது சரம குருத்வமும் இவர் பக்கலிலே யாய்த்து உள்ளது-

(மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே
.–41-)

இந்த குருத்வம் தான் ரூடி யோக த்வயத்தாலும் பரிபூர்ணமாகக் கண்டது இவர் பக்கலிலே இறே –
ஆச்சார்ய பதம் நிர்வஹிப்போம் என்று இருப்பார் பக்கல் குருத்வம் போலே சங்குசிதமாய்க் கிடக்கை அன்றிக்கே –விஷ்ணு சேஷி ததீய ஸூவ குண நிலயோ விக்ரஹ ஸ்ரீ ஸடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்
தஸ்மிந் ராமாநுஜார்யே குரு ரித ச பதம் பாதி நான்யத்ர தஸ்மாத்
ஸிஷ்டம் ஸ்ரீ மத் குரூணாம் குலமிதம் அகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ
(பெரியவாச்சான் பிள்ளை அருளியதாக ஸ்ரீ வைஷ்ணவ சமாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஸ்லோகம் )(விஷ்ணுவானவர் அனைவருக்கும் சேஷியாய் இருப்பவர் -நற்குணங்களை இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார் -கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடையாளாகிய திருவடித்தாமரை இணையாய் விளங்குகிறார் -அந்த எம்பெருமானார் இடத்திலேயே ஆசார்ய ஸப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது -வேறு ஒருவர் இடமும் அப்படி விளங்க வில்லை -ஆகையால் மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும் தலைவரான அந்த எம்பெருமானார்க்கே சேஷமாய் இருப்பது ) என்று நாள் தோறும் நாள் தோறும் ஒளி விஞ்சிச் செல்லும்படி இறே எம்பெருமானாருடைய குருத்வம் (இதனால் தான் நம்மாழ்வார் சந்நிதியில் ஆழ்வார்திருநகரியில் ராமானுஜன் சாதிக்கவும் மற்ற இடங்களில் மதுரகவி சாதிக்கவும் நிற்கிறோம் )
ரூடி க்ரமத்தாலே உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வமும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் நின்று உபதேசிக்கிற இவர் பக்கலிலே முக்ய தமமாய் இருக்கும்

(காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.
–25-)

ஏதத் வ்யதிரிக்த விஷயத்தில் உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வம் நிஷ்க்ருஷ்ட ஸ்வ அநு வ்ருத்தி பூர்வகமாய் இருக்கும் –நிஷ்க்ருஷ்ட ஸ்வ அநு வ்ருத்தியாவது சிஷ்யனுடைய அநு வர்த்தகம் பாதி ஆச்சார்யனுடைய கிருபை பாதியாய் உபதேஸிக்கை இன்றிக்கே சிஷ்யனுடைய அநு வர்த்தன ப்ரதீஷனாய் தத் அநு வர்த்தகத்துக்கு முகம் மலர்ந்து உபதேஸிக்கை
ஸம் மிஸ்ர அநு வ்ருத்தி யாவது -சிஷ்யன் விஷயத்தில் ஆச்சார்யனுக்கு கிருபை உண்டாய் இருக்கவும் தத் அனுவர்த்தன அபாவத்தில் முகம் மாறி வருத்தப்பட்டு உபதேஸிக்கை
இப்படி யன்றிக்கே மறுவற்ற கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யத்வ முகத்தாலே சிஷ்யனுடைய துர்கதியே பற்றாசாக மேல் விழுந்து உபதேஸிக்கும் ஆகாரம் இவருக்கே யாய்த்து உள்ளது

(தாயுக்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் -நம்மாழ்வாருக்கு -இவர் அடி பணிந்தாருக்கும் இவை உள்ளது -கனைத்து இளம் –நினைத்து -முலை வழியே பால் பொழியுமா போல்)

அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே
.–53-

காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.
–25-

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-

யோக க்ரமத்தாலே அஞ்ஞான தமோ நிவர்தந த்வாரா வந்த குருத்வமும் இவர் பக்கலிலே முக்கிய வ்ருத்தி-ஏதத் வ்யதிரிக்த விஷயங்களில் குருத்வம் அந்நிய சாபேஷமாய் இருக்கும் -எம்பெருமானாரை முன்னிட்டு வேண்டுகையாலே

1-ஸம்ஸாரி ஜந அநர்த்த தர்சன அஸஹிஷ்ணுத்வம் -2-தத் விஷய காருண்ய மஹா குணாகரத்வம் ச -3-அஸ்மத் குல நாதே -4-அஸ்மத் சேஷிணி -5-அஸ்மத் ஸ்வாமிநி 6-அபரிமிதோதார பாவ கல்யாண குண சாகரே -7-அநவதிக அதிசய ஆஸ்ரித வாத்ஸல்ய ஸுசீல்யைக நிதவ் சம தமாதி ஸமஸ்த ஆத்ம குணவ்க மஹா ஆர்ணவே -பகவதி ஸ்ரீ மத் ராமானுஜாச்சார்யே வ்யவஸ்திதே பவத -என்று
சோமாஸி ஆண்டானும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் எம்பெருமானார் பக்கலிலே வ்யவஸ்திதமாய் இருக்கும் என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே

(ஸம்ஸாரத்தில் உழலும் சேதனர்களின் அநர்த்தம் கண்டு ஆற்ற மாட்டாமையும் அவர்கள் விஷயத்தில் கருணையாகிற பெரிய குணத்தை யுடையவராய் இருக்கையும் -நமது குல நாதராய் நமது சேஷியாய் நமது ஸ்வாமியாய் எல்லையற்ற வண்மையுடைய கல்யாண குணக்கடலாய் எல்லையற்ற பெருமையுடைய ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் ஆகியவற்றுக்குக் கொள் கலமாய் -சமம் தமம் முதலான எல்லா ஆத்ம குண வெள்ளங்களும் சேரும் பெரும் கடலாய் இருக்கும் பகவானான ஸ்ரீ மத் ராமானுஜாச்சார்யார் இடம் நிலை நிற்கின்றன-என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்)

(கிடாம்பி ஆச்சானுக்கு -அநாதன் -சொல்லக்கூடாது அழகர் அருளிச் செய்த வ்ருத்தாந்தம்
சேஷி ராமானுஜன் சேஷ ராமானுஜன் உடையவரும்-கண்ணனும் என்பர் பொதுவாக – -இங்கு ராமானுஜரே சேஷி -உடையவர் பட்டம் என்பதால் ஸ்வாமி -உபய விபூதி -ஆள்பவர்
நீ நம்மை விட்டாலும் நாம் உம்மை விட மாட்டாதே -என்று அருளிச் செய்தார் அன்றோ)

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே.
–26-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?
–48-

அஞ்ஞாந தமோ நிவர்த்தந த்வாரா யாத குருத்வம் யப் யஸ்மின் ராமானுஜ குரவ் முக்ய வ்ருத்தி ந த்விதரேஷு தைஸ் தஸ்ய புரஸ் க்ருதத்வாத் -என்றும் அருளிச் செய்தார் இறே

(அஞ்ஞான இருளைப் போக்குவதன் மூலம் ஏற்பட்ட குருத்வமும் இந்த ராமாநுஜாசார்யார் இடமே முக்கியமாகப் பொருந்தி இருக்கின்றது -மற்றவர்கள் இடம் அப்படியில்லை -அவர்கள் -எம்பெருமானாரை முன்னிட்டு வேண்டி இருக்கையால் -என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்)

இப்படி ஸர்வ பிரகார குரு லக்ஷண பூர்த்தியை யுடையவராய் -சரம குரு ரூபேண பகவத் அவதாரமான எம்பெருமானாருடைய அபிமானம் உஜ்ஜீவனேச்சுக்களான ஸமஸ்த சேதனருக்கும் உத்தாரகம்-ஏதத் வ்யதிரிக்த குரு ஜனங்களுக்கு எல்லாம் உபகாரத்வமே யுள்ளது
1-சரம குரு ரூபேண பகவத் அவதாரமான எம்பெருமாருடைய வைபவத்தை (பார்த்தசாரதியை ஸ்வாமி அவதாரம் அன்றோ)பிரதமத்திலே இவனுக்கு உள்ளபடி யுணர்த்தி -2-அவருடைய அபிமானம் இவனுக்கு ஸம்ஸார நிஸ்தரண உபாயம் என்னும் பரமார்த்தத்தையும் அறிவித்து -3-தந் குண அநுஸந்தானமே கால ஷேப விஷயம் என்றும் உபதேஸித்து அவ் வழியாலே இச் சேதனனுக்கு உபகாரகராய்ப் போருவார்கள்(இதுக்கும் மேல் எம்பார் ஸ்வாமி வடிவு அழகு இதயத்தில் உள்ளதால் இல்லை எனக்கு எதிர் என்று அருளிச் செய்தார் அன்றோ)

(1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –(பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ  சம்ஸ்ரயா தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் )
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –)

ஏவம் ஸர்வ பிரகார குரு லக்ஷண பூர்ண சரம குரு ரூப பகவத் அவதார ராமானுஜ குரோர் அபிமான ஏவ ஆத்ம உஜ்ஜீவன அபேஷாணம் அகில சேதநாநாம் ஸம்ஸார நிரயகர்த்த நிஸ்தரண உபாய -தத் வ்யதிரிக்த பூர்வாபர குரு ஐநாநாம் உபகாரத்வம் ஏவ -நாத் உத்தாரகத்வம் -தே புநஸ் அஸ்ய ஸம்ஸாரி சேதனஸ்ய ஆத்ம ஹிதைஷிண ப்ரதமதோ அஸ்மச் சேஷிண பரம காருணிகஸ்ய அபரிமித உதார பாவஸ்ய பகவத் ஸ்ரீ ராமானுஜ குரவ் வைபவம் உபதிஸ்ய தஸ்ய அபிமானம் ஏவ ஸம் ஸ்ருதி நிஸ்தரண உபாய -தத் குண அனுசந்தானம் ஏவ காலக்ஷேப விஷய இதி ஞாபயித்வா தத் த்வாரா சேதநஸ்ய பரம உப கர்த்தாரோ பவந்தி –என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்

(இவ் வண்ணமாக எல்லா வகையான குரு லக்ஷணங்களும் நிறைந்த சரம குருவாய் -எம்பெருமானுடைய அவதாரமாய் இருக்கும் ராமானுஜாச்சாருடைய அபிமானமே ஆத்ம உஜ்ஜீவனத்தை விரும்பும் எல்லாச் சேதனருக்கும் ஸம்ஸாரம் ஆகிற நரகப்படு குழியில் இருந்து கரை ஏறும் உபாயமாகும் -அவருக்கு முன்னும் பின்னுமுள்ள மற்ற ஆச்சார்யர்களுக்கு உபகாரகத்வம் உண்டே ஒழிய உத்தாரகத்வம் கிடையாது -அவர்கள் இந்த ஸம்ஸாரி சேதனனுடைய ஆத்மாவுக்கு நன்மையை விரும்புபவர்களாய் முதன் முதலில் நமக்கு ஸ்வாமியாய் -பரம காருணிகராய் -எல்லையற்ற வண்மை யுடையரான பகவானான ஸ்ரீ ராமானுஜாச்சார்யருடைய பெருமையை உபதேசித்து அவரது அபிமானமே ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவதற்கு உபாயம் என்றும் -அவரது குண அநு ஸந்தானமே போது போக்குக்கு விஷயம் என்று அறிவித்து -அவ்வழியாலே இந்தச் சேதனனுக்கு மேலான உபகாரத்தைச் செய்கிறார்கள் -என்றபடி)

(பரமார்த்த த்ரயம் உபதேசம் –
1-இராமானுஜர் வைபவம் உபதேசம்
2-ராமானுஜர் அபிமானம் பெற உபதங்களை உபதேசிப்பது
3-இனி இருக்கும் காலம் ராமானுஜர் குணங்களை அனுசந்தித்து போக வேண்டும்)

(இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-)

தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஆச்சர்யத்வமும் உபதேஷ்ட்ருத்வ முகத்தாலே ரூடி க்ரமாகதமான ஆச்சார்யத்வம் ஒழிந்து யோக க்ரமத்தாலே வந்த ஆச்சார்யத்வம் அன்று
அது முக்ய வ்ருத்தியாகக் கண்டது நம் குல நாதரான எம்பெருமானார் பக்கலிலே யாய்த்து
வடுக நம்பி -ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் உள்ளது எம்பெருமானாருக்கே யாய்த்து -என்று அருளிச் செய்தார் இறே

அவதாரணத்தாலே அந்நிய யோக வ்யவச்சேதம் பண்ணப்படுகிறது(எம்பெருமானாரே குரு ஆச்சார்யர் என்றபடி)

(அழகிய மணவாளன் என்று பட்டர் அருளிச் செய்வதும் -தொலைவில்லி மங்கலம் என்று நம்மாழ்வாரும் -திருக்கண்ணபுரம் என்று திருமங்கை ஆழ்வாரும்- எம்பெருமானார் என்று வடுக நம்பி அருளிச் செய்வதும் ஸ்ரேஷ்ட்டம் அன்றோ)

ஆச்சார்யத்வ பதம் ததைவ குருதா யோக க்ரமாதாகதே
ஞாந அபாவ தமோநிவ்ருத்தி கரண ஸ்ருத் யர்த்த விஷ்டாப நாத்
காருண்ய ஏக நிதவ் பவாப்தி தரண ப்ரபோதக உத்தாரகே
ஸ்ரீ மல் லஷ்மண யோகிநி வ்யவசிதே நாந்யேஷு மாந்யேஷ் வபி
–என்று இறே சோமாஸி ஆண்டான் பணிக்கும் படி

(ஆச்சார்ய பதவியும் ஆச்சார்யத் தன்மையும் யோக க்ரமத்தாலே பொருள் கொள்ளும் போது -அஞ்ஞானமாகிற இருளைப் போக்குவதையும் -வேதார்த்தத்திலே நிலை நிறுத்துகையும் செய்கையாலே கருணைக்கு ஓர் கொள் கலமும் -ஸம்ஸாரக் கடலைத் தூண்டுவிக்கும் உத்தாரகருமான ஸ்ரீ ராமானுஜாச்சார்யார் இடத்திலேயே நிலை நிற்கின்றன -கௌரவிக்கத் தக்கவர்களாயினும் மற்ற ஆச்சார்யர்களிடம் நிலை நிற்பது இல்லை-என்கிறபடி)

(கீழ் யோக கிராம குரு அர்த்தம் அருளிச் செய்து மேல்)யோக க்ரமாகதமான ஆச்சார்யத்வமாவது
ஆசிநோதி ஹி ஸாஸ்த்ர அர்த்தான் ஆசாரான் ஸ்தாபயத் யபி
ஸ்வயம் ஆரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத
–(எவன் ஒருவன் 1-ஸாஸ்த்ரங்களைச் சேகரித்துத் 2-தானும் அவற்றின்படி நடந்து காட்டிப் 3-பிறரையும் ஆசாரத்தில் நிலை நிறுத்துகிறானோ -அவனே ஆச்சார்யன் எனப்படுவான் -ப்ரபந்நாம்ருதம் -63-5-6-)என்கிறபடியே
ஏதத் ப்ரதிபாத்யமான ஆசாரங்களை யுடையனாய் இருக்கை -அதாவது
ஆசிநோதி -வேதாந்தங்களிலே பல இடங்களிலும் கூளமும் பலாப்பிசிலும் போலே ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ண அரிதாம் படி கலந்து கட்டியாய் ஸ குண பரமாயும் நிர்குண பரமாயும் பின்ன பரமாயும் அபின்ன பரமாயும் போருகிற வாக்ய ப்ரதிபாத்யங்களான அர்த்தங்களை எல்லாம் உருவக் கண்டு -தரித்து- ஸகல ஸாகா ப்ரத்யய முகத்தாலே அக்ராஹ்யமான அர்த்தங்களை ஒதுக்கி -உபா தேயமான அர்த்த அம்சங்களை அவிரோதேன ஒன்றும் சிதறாமல்
ஹம்ஸோ யதா ஷீர மிவாம்பு மிஸ்ரம -என்கிறபடியே (அநந்த பாரம் பஹு வேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பகவஸ் ச விக்நா யத் சார பூதம் தத் உபாததீத ஹம்ஸோ யதா ஷீரமிவாம்பு மிஸ்ரம் –-உத்தர கீதை -3-1-அறிய வேண்டிய ஸாஸ்த்ரங்கள் பலவாகவும் கரை காண ஒண்ணாதவை யாகவும் உள்ளன -காலமோ சிறிது -இடை யூறுகளோ பற்பல -ஆகையால் நீரோடு கலந்திருக்கும் பாலை ஹம்ஸம் பிரித்து எடுத்துக் கொள்வது போலே அசார அல்ப ஸாரமான அர்த்தங்களோடே கலந்து இருக்கும் ஸாஸ்த்ரங்களில் ஸாரமானதையே அறிவாளி எடுத்துக் கொள்ள வேண்டும் -என்றபடி)மறு வில்லாதபடி திரட்டி எடுக்கும் உபகாரத்தைச் சொல்லுகிறது
ஹி -ஸப்தம் ப்ரஸித்தி பரம் -அதாவது இப்படி உபா தேயமான அம்ஸங்களைத் திரட்டி எடுக்க வல்ல சக்தி ப்ரஸித்தியைச் சொன்னபடி (புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்)–அன்றியே ஹேது பரமாகவுமாம்
ஸாஸ்த்ர அர்த்தான்-வேதார்த்தம் -என்றபடி(ந தேவம் கேசவா பரம் -ந ஸாஸ்த்ரம் வேதம்)
வேத ஸாஸ்த்ர அவிரோதிநா -என்னக் கடவது இறே(ஆர்ஷம் தர்ம உபதேஸம் ச வேத ஸாஸ்த்ரா விரோதி நா –யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ஸ தர்மம் வேத நேதரே –மநு ஸ்ம்ருதி -ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லப்பட்ட அர்த்தங்களை அந்த ஸ்ருதி ஸ்ம்ருதிகளோடு முரண்படாத தர்க்கங்களைக் கொண்டு எவன் அர்த்த நிஷ்கர்ஷம் செய்கிறானோ -அவன் தர்மத்தை அறிவான் -அப்படிச் செய்யாதவன் அறிய மாட்டான் -என்றபடி)
வேத நூல் -என்றும் உண்டு இறே

(வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே–திருமாலை -3-)
இது உபரிதன பாகத்துக்கும் உபலக்ஷணம் –
அன்றிக்கே –ஸாஸ்த்ரம் -என்று பூர்வ பாகத்தைச் சொல்லி –அர்த்த ஸப்தத்தாலே உபரிதந பாகத்தைச் சொல்லவுமாம்
இத்தை ஸாஸ்த்ரம் என்றது —சாஸநாத் ஸாஸ்த்ரம் -என்கிறபடியே –இதம் குரு இதம் மா கார்ஷீ (இதைச் செய் இதைச் செய்யாதே என்று ஆணை விடுவது ஸாஸ்த்ரம்-ஸாஸ்த்ர ஸப்த வ்யுத்பத்தி)என்று விஹித ப்ரஷித்த விவேக உபாதேந முகத்தாலே கர்த்தாவான இச் சேதனனை மர்யாதையிலே ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு போருகையாலே(கர்த்தா சாஸ்த்ரார்த்தத்வாத்) இப்படி பூர்வ உத்தர பாக த்வய ரூபேண அவஸ்திதங்களான வேத வேதாந்த ப்ரதிபாத்யங்களாய் இருந்துள்ள அர்த்தங்களை அறிந்து- 1-வர்ண அநு பந்திகளாயும் -2-பகவத் ஆராதன ரூபங்களாயும் -3-தத் பிராப்தி சாதன பூதங்களான உபாஸனாதிகளுமாயுமுள்ள க்ரியா கலாபங்களை என்றபடி
ஆசாராந் -ஆசாரங்களாவன சிஷ்டாசாரங்கள் என்றபடி(சர நடத்தல் ஆ சார முழுவதுமான நல்ல நடத்தைகள்)

தர்மஞ்ஞ சமயத்தை இறே முந்துற முன்னம் ஸ்தாபிக்க வேண்டியது (வேதம் அறிந்த சான்றோர் நடத்தையை முதலில் சொல்லி அப்புறம் வேதத்தைச் சொல்லி)-பிரமாண உபாதானத்தில் ப்ரதமோ பாத்தமாகையாலே ப்ரபலம் இறே -வேத ப்ரமாணத்தைக் காட்டிலும் சிஷ்டாசாரம் ப்ரபலம் என்னும் அர்த்தம் தோற்ற வேண்டி ப்ரதமத்தில் –யத் யதாசரதி ஸ்ரேஷ்ட -(3-21)என்றான் இறே பகவானும்
மேலையார் செய்வனகள் என்றாள் இறே ஆண்டாளும் –

(யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே
—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர் அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது)

(மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்*
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே*
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே*
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
)

சிஷ்டாசாரங்கள் தான் பலவாம் -இதோடு அன்று
ஸ்வயம் ஆசரதே–தர்ம ஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே என்றவன் தானே
உத் ஸீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் –வர்த்த ஏவ ச கர்மணி -என்று ஸ்வ அநுஷ்டான முகத்தாலே தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணா விடில் லோகோத்ஸாதனம் பிறக்கும் என்றான் இறே

(பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
—৷৷4.8৷৷

நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்

உத்ஸீதேயு ரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்.–
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா ப்ரஜா
—৷৷3.24৷৷

நான் கர்மத்தைச் செய்ய வில்லை யாகில் என்னைப் பின் பற்றும் இவர்களும் கர்மத்தைச் செய்யாமல் அழிந்து விடுவார்கள் –வர்ணாஸ்ரமக் கலப்பைச் செய்பவனாகவும் நான் ஆகி விடுவேன் –அதனால் இந்த மனிதர்கள் உய்வற்றவர்களாயும் ஆக்கி விடுவேன்

ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி
—৷৷3.22৷৷

பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத் தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்)


பத்ரிகாஸ்ரமத்தில் திரு மந்த்ர உபதேஸம் பண்ணும் அளவில் தானே நர நாராயண ரூபேண நின்று நாராயண அம்சம் ஆச்சார்ய ரூபமாகவும் நர அம்சம் ஸிஷ்ய ரூபமாகவும் நின்று உபதேசித்தான் (அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும்) இறே -ஸிஷ்யனான நரனுக்கு ஸ்வ அநுஷ்டான முகத்தாலே செய்யாவிடில் லோகம் கொள்ளாது என்று-

யஸ் –யச் சப்தம் இவை எல்லாம் அங்குசிதமாக நிர்வஹிக்க வல்ல அநுஷ்டாதாவினுடைய ஸ்வரூப வை லக்ஷண்ய ப்ரஸித்தியைக் சொல்லுகிறது
து -ஸப்தம் -இவனுடைய வ்யபதேஸ்யத்தவ விசேஷத் யோதநார்த்த மாயிருக்கிறது
ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத –அவன் தான் ஆசார்யன் என்று நினைக்கப்படுமவன்
ஸ -யச் ஸப்தத்தாலே சொல்லப்பட்ட ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடையவன்
ஆசார்ய இதி -இதுவே யாய்த்து இவனுக்கு நிரூபகம்
ஸ்ம்ருத –இப்படிப்பட்ட ஆசார்யனாய்த்து நிரந்தர ஸம் ஸ்ம்ருதிக்கு விஷய பூதனாகிறான்
இப்படிப்பட்ட ஆச்சார்யத்வம் ஸதா சார்ய க்ருத்யங்களில் ஒன்றும் குறைவற்று ஸர்வ ப்ரகார பரிபூர்ணரான எம்பெருமானாருக்கே வ்யவஸ்திதம் -தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸம்மிஸ்ர வ்யவஹாரிகமான ஆச்சார்யத்வமே உள்ளது

ஆசார்யத்வம் உபாயதாத்மாகமஹோ ராமானுஜர்யே குரவ்
ந அந்யேஷ் வார்ய வரேஷு தே யதி வராதீந ஆத்ம சத்தா யத
தஸ்மாத்
ஆர்ய பரம்பராஸ்ரித பதாம் போஜஸ்ய பாதாஸ்ரய
கர்த் தவ்யஸ் ஸ்வ ஹிதைஷிபிர் கில ஜநைஸ் ஸம்ஸார சஞ்சித்தயே
–என்னக் கடவது இறே

(உத்தாரகத்வ ரூபமான ஆச்சார்யத்வம் ஆச்சார்யரான ராமானுஜர் இடமே உள்ளது -வேறே எந்த ஆச்சார்ய ஸ்ரேஷ்டர் இடமும் இல்லை ஏன் எனில் -அவர்கள் அனைவரும் அந்த எதிராஜாராலேயே சத்தை பெற்றவர்கள் அன்றோ –ஆகையால் தமக்கு நன்மையை விரும்புகிறவர்கள் ஆச்சார்ய பரம்பரையால் உத்தாரகமாகக் கொள்ளப்பட்ட திருவடித் தாமரையை யுடைய அந்த எம்பெருமானாருடைய திருவடிகளையே ஸம்ஸாரம் அடியோடு நீங்குவதற்காக ஆஸ்ரயிக்க வேண்டும் -என்றபடி-நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு பவிஷ்யத் ஆச்சார்யர் திருவிக்ரஹமும் அருளி இவ்வர்த்தத்தைக் கட்டி அருளினார் அன்றோ)

உபாயத்மகம் ஆசார்ய ஸ்வரூபம் ஸூ வ்யவஸ்திதம்
அஸ்மச் சேஷிணி யோகீந்த்ரே லஷ்மணார்யே மஹாத்மநி
அந் யேஷாம் அபி ஸர்வேஷாம் குரூணாம் ந ஸமர்த்திதம்
வ்யாவஹரிக மேவாஸ்மிந் குரு வர்க்கே ந முக்யதா
யததீநாத்ம ஸத் தாத்யா தேஸிகாஸ் ஸத்வ வித்தமா
தத் க்ருதே நாபி மாநேந தேஷாம் முக்திர் ந ஸம்ஸய
ஏதத் வரண கர்த்ருத்வாத் ப்ராக்தநா குரவஸ் ஸ்வயம்
பவந்த்யஸ்யோப கர்த்தார ந முக்தி பலதா ஹி தே
தஸ்மாத் உஜ்ஜீவநேச் ஸூநாம் பவாப்திம் தர்த்து மிச்ச தாம்
அஸ்மத் குல பதே ஸ்ரீ மல் லஷ்மணார் யஸ்ய தீமத
அங்க்ரி யுக் மாத்ருதே தேஷாம் உபாயோ நைவ த்ருஸ்யதே
-என்று
வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார் இறே

(உத்தாரகத்வ ரூபமான ஆச்சார்ய ஸ்வரூபம் -நமக்கு சேஷியாய் -மஹாத்மாவாய் -யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் சார்யர் இடம் நன்கு நிலை நிற்கிறது -மற்ற எல்லா ஆச்சார்யர்கள் இடமும் இது இல்லை –ஆச்சார்யத்வம் மற்ற ஆச்சார்யர்கள் இடம் ரூடி வழங்கினால் வழங்கப்படுகிறதே ஒழிய முக்யமாவது இல்லை -எம்பெருமானாருடைய திரு உள்ளம் அறிந்தவர்களில் தலை சிறந்தவர்களாக அவ் வாச்சார்யர்கள் அவருக்கு அதீனமான சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையவர்களாய் இருக்கையாலே அவரது அபிமானத்தாலே அவர்களுக்கு மோக்ஷம் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை -இவரை உத்தாரகராக வரிக்கச் செய்கையால் மற்ற பூர்வாச்சார்யர்கள் சேதனனுக்குத் தாமே உபகாரம் புரிகின்றனர் -ஆயினும் அவர்கள் மோக்ஷம் அளிக்கும் உத்தாரகர்கள் அல்லர் ஆகையால் உய்ய விரும்புபவர்களாய் ஸம்ஸாரக் கடலைத் தாண்ட விரும்புபவர்களுக்கு நமது குலபதியும் பேர் அறிவாளருமான ஸ்ரீ மத் ராமானுஜருடைய திருவடியிணை தவிர வேறு உபாயம் ஒரு போதும் காணப்படுவது இல்லை -என்றபடி)

நஞ்சீயரும்
சித் அசித் ஈஸ்வர தத்வ ஸ்வரூப ஸ்வ பாவ திரோதாயக ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தி பூர்வக நிரவதிக ஆனந்த ஜனக பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷ மஹா பல ப்ரதாந நிபுணம் அப்ரதிஹத உபாயாத்மகம் ஆசார்யத்வம் -ஹி -பரம காருணிகஸ்ய அபரிமித உதார பாவஸ்ய அநவதிக அதிசய ஆஸ்ரித வாத்ஸல்ய ஸுசீல்ய குணாகரஸ்ய நிஷ்க்ருஷ்ட சம தமாத்யாதி யாத்ம குண கண ஏக மஹா ஆர்ணவஸ்ய -நிகில நிகம ஸிரோ விஞ்ஞாந விசக்ஷணஸ்ய அநவரத விதித பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஜாத யாதாத்ம்யஸ்ய ப்ரபந்ந ஜன கூடஸ்த பகவத் பராங்குச பாதார விந்த யுகல பூதஸ்ய பராபர நிகில குரு ஜன ஸமாஸ்ரித விமல சரண கமலா யுக்மஸ்ய ஸம்ஸாரி ஸகல சேதன உஜ்ஜீவந கரண ஏக தத்த சித்தஸ்ய பகவதஸ் ஸ்ரீ ராமானுஜ குரோரேவ வ்யவஸ்திதம்
ந த்விதரேஷு -தே புநஸ் ஸர்வே ராமாநுஜார் யாயத்த ஆத்ம ஸத்தாஸ்திதி ப்ரவ்ருத்தய ததபிமாந அந்தர் பூதா தச் சரணாரவிந்த யுகல மேவ சரணம் மந்வாநா ஸ்வ ஆஸ்ரிதாநாம் அபி ததேவ சரணம் உபதி சந்த தத் ஸம்பந்த கடநாதேவ ஸ்வ ஆஸ்ரித ஸர்வ ஜன உபகர்த்தாரோ பவந்தி–என்று அருளிச் செய்தார் இறே

(சித் அசித் ஈஸ்வரன் எனும் தத்வ த்ரயங்களின் ஸ்வரூப ஸ்வ பாவங்களை மறைக்கும் ஸம்ஸார ஸம்பந்தத்தை நீக்கி எல்லையற்ற பேரின்பத்தை விளைக்கும் பகவத் ப்ராப்தியாகிற மோக்ஷம் என்னும் பெரும் பயனை அளிக்க வல்லதாய் -தடையற்ற உபாயத்வமாய் இருப்பதான ஆசார்யத்வம் -பரம காருணிகராய் எல்லையற்ற வண்மை யுடையவராய் -எல்லையற்ற பெருமையை யுடைய ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் எனும் குணங்களுக்கு இருப்பிடமாய் -சிறப்பை அளிக்கும் சமம் தமம் முதலான ஆத்ம குணங்களுக்குப் பெரும் கடலாய் இருப்பவராய் எல்லா வேதாந்தங்களின் பொருளையும் அறிய வல்லவராய் -பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளின் உண்மையை எப்போதும் காண்பவராய் -ப்ரபந்ந ஜன கூடஸ்தரான பகவத் பராங்குசர் எனும் நம்மாழ்வாரின் திருவைத்தாமாரை இணையாய் இருப்பவராய் முன்னும் பின்னும் உள்ள எல்லா ஆச்சார்யர்களாலும் ஆஸ்ரயிக்கப் பெட்ரா குற்றமற்ற திருவடித்தாமரை இணையை யுடையவராய் -ஸம்ஸார மண்டலத்தில் உள்ள எல்லாச் சேதனரும் உய்வதிலேயே திரு உள்ளம் ஊன்றி இருப்பவரான பகவான் ஸ்ரீ ராமாநுஜாசார்யார் இடமே நன்கு நிலை நிற்கிறது -வேறு எவரிடமும் இல்லை -அவர்கள் அனைவரும் ராமாநுஜாசார்யாராலே சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளை அடைந்தவர்களாய் அவரது அபிமானத்தில் அடங்கியவர்களாய் அவரது திருவடித் தாமரை யிணையையே உபாயமாகக் கொள்கின்ற வர்களாய் தம் அடியார்களுக்கும் அவ்வண்ணமே உபதேஸிக்கின்றவர்களாய் அவ்வெம்பருமானாருடைய சம்பந்தத்தை உண்டாக்குவதன் மூலமே தம் அடியார்களுக்கு உபகாரம் செய்பவர்களாய் விளங்குகின்றனர் -என்றபடி )_

இப்படி தத்வ வித அக்ரேஸரான பூர்வதந ஸகல குரு ஜனங்களாலும் அறுதியிடப்பட்ட ஸர்வ ப்ரகார குரு லக்ஷண பூர்ணமான ஆசார்யத்தை யுடையவராய் -பகவத் அவதாரமான எம்பெருமானாரே ஸகல சேதனருக்கும் உத்தாரகராகையாலே ஏதத் அபிமான அந்தர் பூதராய் உஜ்ஜீவிக்குமது ஒழிய ஸம்ஸாரி சேதனருக்கு வழியில்லை இறே

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத் குரு
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா ந அத்ர ஸம்ஸய
-ப்ரபந்ந அம்ருதம் –61-45- என்று (முக்காலும் ஸத்யம் செய்து கூறுகிறேன் -யதிராஜரே உலக குருவாவார் எல்லா வுலகும் உய்விக்க வல்லவர் அவரே -இதில் ஐயம் இல்லை)கணியனூர் சிறிய ஆச்சான் ஸசேலஸ்நாந பூர்வகமாக ஸ்ரீ சடகோபனைத் தலையில் வைத்து எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழிய ஸம்ஸாரி சேதனருக்கு வேறு உஜ்ஜீவிக்கைக்கு வழியில்லை என்று பெருமாள் திரு ஓலக்கத்திலே சபதம் பண்ணினார் இறே
(கூரத்தாழ்வானும் கொள்ளிடத்தில் இறங்கி அருளிச் செய்ததாகவும் சொல்வர்)ஏதத் சம்பந்தத்தை விட்டு ப்ரகாராந்தரத்திலே உஜ்ஜீவிக்கிறோம் என்று இருக்கும் துர்மானிக்கு யவாதாத்மபாவி ஸம்ஸாரம் அனுவர்த்திக்கும்

மம ஆசார்ய அவதாரத்வே யேஷாம் பக்திர் பவிஷ்யதி -29-என்று(ஆச்சார்ய ரூபமான என்னுடைய அவதாரத்தில் இவர்களுக்கு பக்தி யுண்டாகிறதோ அவர்களுக்கே உய்வுண்டு மற்றவர்களுக்கு இல்லை) எம்பெருமான் தானே அருளிச் செய்தான் இறே

ஸர்வ உபாய தரித்ராணாம் சேதநா நாம் வராந நே
மம அபி மாநாத் ஸர்வேஷாம் முக்திர் குரு ஸரீரிண
–(அழகிய முகமுடையவனே வேறு எவ்வகையான உபாயமும் அற்ற சேதனர் அனைவருக்கும் ஆசார்யனை சரீரமாகக் கொண்ட எனது அபிமானத்தாலேயே மோஷம் ஏற்படும்)என்றும் சொன்னான் இறே(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானத்தை ஒழிய வேறே விரகில்லை என்பதுக்கு இதுவே பிரமாணம்)
பகவத் ஸம்பந்தம் குலையாமல் நிலை நிறுத்திக் கொள்ளுமவனுக்கு எம்பெருமானாருடைய ஸம்பந்தம் இல்லாவிடில் நிலை நில்லாது இறே
இவனுக்கு ப்ரதமத்தில் பகவத் ஸம்பந்தம் தான் உண்டாகிறதும் பகவத் ப்ரவண உஜ்ஜீவனம் உண்டானாலாய்த்து -அந்நிய சேஷத்வத்தைத் கழித்துக் கொண்டு பகவத் அநந்யார்ஹ சேஷத்வ முகத்தாலே உஜ்ஜீவனம் யுண்டாம்படி பண்ண வேண்டும் -இப்படி உஜ்ஜீவன உப யுக்தமான தத் அநந்யார்ஹ சேஷத்வம் நிலை நிற்கும் போது ததீய பர்யந்தமாய் நிற்க வேண்டுகையாலே -ததீய அக்ரேஸரராய் பரம காருணிகரான எம்பெருமானாருக்கு அடிமைப்பட்டு (காருணிகரான சர்வேஸ்வரன் -ஸ்வா தந்திரம் இருப்பதால்
-பரம காருணிகர் -எம்பெருமானார்)ஏதத் அநந்யார்ஹ சேஷத்வ ஸித்தியை யுடையவனாய் அநந்தரமாய்த்து -தத் அநந்யார்ஹ சேஷத்வ ஸம்பந்த ஸித்தியை யுடையவனாவது -ஆகையால் ப்ரதம பர்வ நிஷ்டனுக்கும் சரம குருவான எம்பெருமானாருடைய ஸம்பந்தம் அவஸ்யம் வேணும் இறே

நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-
8-10-1-

பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ரூப ஸம்பந்த ஸ்தைர்யாஸ் அகாங்ஷிண –சரம குரு ராமாநுஜாசார்ய ஸம்பந்த அபாவே தத் ஸம்பந்த ஸ்தைர்ய ஸித்திர் ந ஸ்யாத் -அஸ்ய சேதநஸ்ய ப்ரதமதோ பகவத் ஸம்பந்த ஸத் பாவோ அபி பகவத் ப்ரவண உஜ்ஜீவந ஸத் பாவே சதி சேத் –தத் ஸித்திர் அபி அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வக பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஸத் பாவே ஹி ஸ்யாத் –ஏவம் உஜ்ஜீவந உப யுக்த தத் அநந்யார்ஹ சேஷத்வ ஸத் பாவஸ்ய ததீய பர்யந்தத்வ ஏவ சித்தத்வாத் ததார்த்தம் ததீய அக்ரேஸர பரம காருணிக ராமானுஜ குரு சமாஸ்ரயணம் லப்த்வா ஏதத் அநந்யார்ஹ சேஷத்வ சம்பந்த யுக்தஸ் சந்தத நந்தரம் கலு ததநந்யார்ஹ சேஷத்வ ஸித்தி யுக்தோ பவதி -அத ஏவ பிரதம பர்வ நிஷ்டஸ்யாபி சரம குரு பரம காருணிக ராமானுஜ குரு சரண சமாஸ்ரயண ம் அவஸ்ய அபேக்ஷிதம் பவதி –-31-என்று ஜீயர் அருளிச் செய்தார் இறே

(எம்பெருமானோடு அநந்யார்ஹ சேஷத்வ ரூபமான ஸம்பந்தம் நிலை நிற்க வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் -சரம குருவான ராமாநுஜாசார்யாரோடு ஸம்பந்தம் இல்லாவிடில் அந்த பகவத் சம்பந்தம் அவனுக்கு நிலை நில்லாது -இச் சேதனனால் சிலருக்கு பகவானிடத்தில் ஈடுபாடு உண்டாகி உஜ்ஜீவனம் உண்டானால் தான் இவனுக்கு முதன் முதலில் பகவத் ஸம்பந்தம் உள்ளதாகக் கொள்ள முடியும் ஆகையால் இவன் சிலருக்கு அந்நிய சேஷத்வத்தைக் கழித்து -எம்பெருமானோடு அநந்யார்ஹ சேஷத்வம் உண்டாம்படி செய்து -அவர்களை உய்விக்க வேண்டும் =இப்படிப் பிறரை உய்விப்பதற்கு உறுப்பான பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் நிலை நிற்க வேண்டுமானால் இவனுக்கு எம்பெருமானுடைய அடியார்கள் இடத்திலும் சேஷத்வம் உண்டாக வேண்டும் -ஆகையால் அச்யுதன் அடியார்களில் தலை சிறந்தவராய் பரம காருணிகரான எம்பெருமானாருக்கு அடிமைப்பட்டு அவருக்கு அநந்யார்ஹ சேஷ பூதனான பின்பு தான் இவன் எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதனாக முடியும் -ஆகையாலேயே ஓ பிரதம பர்வமான எம்பெருமானிடம் ஊன்றி இருப்பவனுக்கும் சரம குருவாய் பரம காருணிகரான ராமானுஜருடைய திருவடிகளை அடைவது அவஸ்யமாகிறது -என்றபடி )

(ஞானம் அனுஷ்டானம் நன்றாக உடைய -உடையவரே உத்தாரகர் என்ற ஞானமும் அவர் இடம் ப்ராவண்யம் என்னும் அனுஷ்டானமும் -அவர் ரூப குண அனுசந்தானமே கால ஷேபம் -என்று உபதேசிப்பதும் -நன்றாக உள்ள ஆச்சார்யர் என்றபடி
பகவல் லாபம் ஆச்சார்யனாலே -ஆச்சார்ய லாபம் ஈஸ்வரனாலே -ஸ்ரீ வசன பூஷணம் -எனவே ஈஸ்வரனும் உபகாரகன் -ராமானுஜரே உத்தாராக ஆச்சார்யர்)

இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவன இச்சுக்களான ஸகல சேதனர்க்கும் எம்பெருமானாருடைய ஸம்பந்தத்தை வருந்தியும் தத் அபிமான நிஷ்டரை த்ரிவித கரணத்தாலும் அனுவர்த்தித்தப் பெற வேணும் இறே -இனி எம்பெருமானாருடைய அபிமான அந்தர் பூதனாய் இருக்கும் சரமாதிகாரிக்கு –குரும் ப்ரகாசயேத் தீமான் மந்த்ரம் யத்நேந கோபயேத் -அப்ரகாஸப் ரகாஸாப்யாம் ஷீயதே ஸம் பதா யுஷீ -சேஷ ஸம்ஹிதை -14-50-(அறிவாளியாய் இருப்பவன் குருவை வெளிப்படுத்தக் கடவன் -மந்திரத்தை மிக முயன்று அநாதிகாரிகள் இடமிருந்து மறைக்கக் கடவன் -ஆசார்யனை வெளிப்படுத்தாததாலும் மந்த்ரத்தை வெளிப்படுத்துவதாலும் முறையே செல்வமும் ஆயுளும் நசிக்கும் என்றபடி ) –என்கிறபடியே -எம்பெருமானாருடைய ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை(காஷாய ஷோப-இத்யாதி -பத்மம் என திகழும் பல்லவம் விரலும் இத்யாதி) எண்டிசையும் அறிய இயம்புகேன் -என்னும்படி ஸார்வாத்ரிகமாக எல்லாரும் அறியும்படி-ப்ரஸித்தமாம் படி கொண்டு வர்த்திக்க வேணும் —

(அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்
யதே கூரநாத:)

(கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.)

இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் பரம காருணிகராய் சரம குருவான எம்பெருமானாருக்கு ஸர்வோத் தாரகத்வம் கொள்ளும் போது ஸர்வ ஸப்தத்துக்கு ஸங்கோசம் இல்லாமையாலே ஏதத் பூர்வ காலீநரான நாத யாமுன ப்ரப்ருதிகளான நம் பூர்வாசார்யர்களுக்கும் இவர் உத்தார கராக வேண்டி வரும் -அப்படி நாம் கொள்ளும் அளவில் அசங்கதமாய்த் தோற்றும் -இது என் என்னில் -அப்படி சொல்லப்படாது
நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் ஸ்வப்ந முகேன பவிஷ்யதாசார்யரான எம்பெருமானாருடைய ஸம் ஸ்தானத்தை வகுத்துக் காட்டியருளி -இந்த வியக்தி இருந்தபடி கண்டீரே -இவ் வியக்தியே ப்ரபந்ந குல அந்தர் பூதரான எல்லாருக்கும் உத்தாரகமாகப் போகிறது –என்று அருளிச் செய்ய
நாதமுனிகள்-நித்யமாக இந்த வியக்தியை ஸாஷாத் கரித்துக் கொண்டு இருக்கும் விரகு ஏது என்று கேட்க
பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை உண்டாக்கி அந்த விக்ரஹத்திலே ஒரு ஸக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்து அவ்விக்ரஹத்தை ப்ரஸாதித்து (ஏற்கனவே மதுரகவி ஆழ்வாருக்கு அருளிய இந்த விக்கிரஹத்தை ப்ரசாதித்து)-ராமஸ்ய தஷிணோ பாஹு –(அயோத்யா -34-13-இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன்)-என்கிறபடியே இவ் வியக்தியை நமக்கு அவயவமாக நினைத்து இரும் இவ் வியக்தியினாலே நாடடஙக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கொழுந்து விட்டுச் செல்லப் போகிறது -இவ்வியக்தியையே உத்தாரகமாக உபதேஸியும் என்று ஸூஸ் பஷ்டமாக அருளிச் செய்கையாலே நாத முனிகள் தொடங்கி இவ்வருகுள்ள உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி முதலான நம் ஆச்சார்யர்கள் ஆழ்வார் அனுமதிப்படி நாதமுனிகள் ஸம் ப்ரதாய ஸித்தமான இவ் வர்த்தத்தை உப தேசித்துப் பரமாசார்ய ப்ரஸாத லப்தமான விக்ரஹத்தையும் காட்டிக் கொடுக்கையாலே இவ்விடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டு தத் ஏக நிஷ்டராய்ப் போந்தார்கள்
பெரிய நம்பி தொடக்கமான பஞ்ச ஆச்சார்யர்களும் தங்களுக்கு உத்தார கத்வம் இல்லாமையாலே உபதேஷ்ட்ருத்வ வ்யாஜேன இவரோடு சம்பந்தம் யுடையராய்த் தம் தாம் குமாரர்களை எம்பெருமானார் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து அவ்வழியாலே இவருடைய உத்தார கத்வத்தை வெளியிட்டார்கள்
இந்த சங்கா பரிஹாரங்கள் எல்லாம் சரம உபாய ஸங்க்ரஹத்திலே பரக்கச் சொல்லுகையாலே இங்கு விவரிக்க வில்லை -ஆகையால் ஸர்வ உத்தார கராகக் குறையில்லை -(சரம உபாய தாத்பர்யம் என்னும் கிரந்தம் நாயனார் ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்துள்ளார்)

உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.
–95-என்றும்-புல்லுயிர்க்கும் பாட பேதம்

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே
– 18- –என்றும்-(பெரியவர் சீரை என்றது மதுரகவி ஆழ்வார் சீரை -சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்)

ஸத் வ்ருத்த சிர உபாஸநா லப்த ஸகல அர்த்தங்களையும் அறிந்து ஸர்வஞ்ஞரான அமுதனார் இவருடைய ஸர்வ உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் இறே
ஆகையால் எம்பெருமானாருடைய திருவடிகளே உஜ்ஜீவன இச்சுக்களான அதிகாரிகளுக்கு ப்ராப்ய ப்ராபகங்கள்

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே
– 45- –என்றும்-அமுதனார் தாமே அருளிச் செய்தார்

பேறு ஓன்று மற்று இல்லை–ஆறு ஒன்றும் இல்லை—என்று அந்நிய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே தத் வ்யதிரிக்த விஷயங்களிலே ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவஸாயமானது ஏதத் அபிமான அந்தர் பூதனுக்கு ஏதன் முக கமல விலாஸ ஹேதுவாம் இத்தனை போக்கி கார்யகரத்வத்திலே புகாது -நம்முடைய சம்பந்தத்தை உணர்த்தினவர்கள் பக்கல் இவனுக்கு இத்தனை ப்ராவண்யம் உண்டாவதே என்று எம்பெருமானாருக்குத் திருமுகம் மலருமாய்த்து

ஏதத் வ்யதிரிக்த விஷய ப்ராப்யத்வ ப்ராபகத்வ புத்திர் அபி ஏதத் அபிமான அந்தர் பூதாநாம் ஏதத் ராமாநுஜ குரு முக கமல விலாஸ ஹேது கோடவ் அந்தர் பூதா பவதி ந கார்ய கரண கோடவ் -தத் உத்பாத கோப யுக்த வ்யவசாயஸ்ய தஸ்ய தஸ்மிந் நேவ க்ருதத்வாத் –என்று இறே ஜீயர் பணிக்கும் படி

(எம்பெருமானார் ஸம்பந்தமுடைய ஆச்சார்யர்கள் இடத்தில் ஒரு சேதனன் இவர்களே பரம ப்ராப்ய பரம ப்ராபகம் என்று உறுதி கொள்வது -எம்பெருமானாரது அபிமானத்தில் அடங்கிய அச் சேதனன் விஷயத்தில் நம்முடைய ஸம்பந்தத்தை உணர்த்தினவர்கள் இடம் இவனுக்கு இத்தனை ஈடுபாடு உண்டாவதே -என்று எம்பெருமானாருக்குத் திரு முக மலர்த்தி உண்டாக்க காரணமாகிறது -அவ்வுறுதி இவனுக்கு மோக்ஷ பலனை விளைப்பது அன்று -மோக்ஷ பலனுக்கு உறுப்பான ஆறாகவும் பேறாகவும் இருப்பவர் எம்பெருமானாரே -என்று உறுதி கொள்ளும்படி அன்றோ இவன் தன் ஆசார்யனால் ஆக்கப்பட்டு இருக்கிறான் -என்றபடி )

ஸ்ரீ மல் லஷ்மண யோகி நோ அந்நிய குருஷு ப்ராப்யாதி பாவாஸ்ரயா -புத்திர் தன் முக ஹர்ஷ ஸம்பவகாரா விஞ்ஞாயதே நான்யதா
தஸ்மாத் தத் பத பங்கஜே ப்ருச கரம் பூர்வைஸ் க்ருதத்வாதயம்
ஸர்வேஷாம் அபி முக்தித கருணயா ராமாநுஜாக்யோ குரு
–என்று —குரு குணாவளியிலே சோமாஸி யாண்டான் அருளிச் செய்யும் படி

(ஸ்ரீ மத் ராமாநுஜாசார்யாரின் ஸம்பந்தமுடைய மற்ற ஆச்சார்யர்கள் இடம் அவரவர்களுடைய சிஷ்யர்கள் ப்ராப்யம் என்றும் -ப்ராபகம் என்றும் -உறுதி கொள்வது எம்பெருமானாருடைய முக மலர்த்தியை விளைப்பதாகவே அறியப்படுகிறது -அவ்வுறுதியினால் மோக்ஷம் விளைவது இல்லை -ஆகையால் பூர்வாச்சார்கள் அனைவரும் எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளையே ஆறாகவும் பேறாகவும் உறுதி கொள்ளுகையாலே அந்த ராமாநுஜாசாரியரே அனைவருக்கும் கருணையினால் மோக்ஷம் அளிப்பவர் ஆவார் -என்றபடி)

(சித்திர் பவது வா ந வா பக்த இத்யாதி -அடியார்களை பற்றி பேறு நிச்சயம் -அவனோ பணத்துக்கும் மோக்ஷத்துக்கும் -துர்லபமும் ஆகும்
சஷுர் கம்யம் குரு கைக்கு எட்டிய இவரை விட்டு ஸாஸ்த்ரம் மூலமே அறியப்படும் அவனைப் பற்றுவது துர்லபம் அன்றோ)

எம்பெருமானாருடைய அபிமான அந்தர் பூதர்களான சரம அதிகாரிகளுக்கு எம்பெருமானாருடைய திருமுக மலர்த்தியே ப்ரயோஜனமாகையாலே தத் ஸித்தியானது தத் வ்யதிரிக்த குரு விஷயங்களில் ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவசாயத்தாலே சம்பவிக்குமாகில் எம்பெருமானார் விஷயத்தில் ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவசாயம் வேண்டுவான் என் என்னில் -அப்படிச் சொல்ல ஒண்ணாது
இந்த சரம அதிகாரிக்கு ப்ராப்ய பூதமான எம்பெருமானாருடைய முகோலாசமானது பரோஷமாயும் அபரோஷமாயும் -(அதாவது ப்ரத்யக்ஷம் இல்லாமலும் ப்ரத்யக்ஷமாயும்-ப்ரோஷம் கண்ணுக்கு விஷயம் இல்லாமல் என்றபடி-)இரண்டு படிப்பட்டு இருக்கும்
இவ் விபூதியிலே பரோஷமும் நித்ய விபூதியிலே அபாரோஷமாயும் இருக்கும் -பரோஷமான முக விலாசம் இரண்டு வழியிலே வர வேணும்
-அதவாது -ஸ்வ அனுவ்ருத்தியாலும் அபிமான நிஷ்டரான ததீய அனுவ்ருத்தியாலும் ஸித்திக்க வேணும் -இந்த அனுவ்ருத்தி த்வயத்தினாலும் எபெருமானார் இடத்தில் பிறக்கும் முகோலாசம் அர்ச்சாவதாரத்திலே யாகையாலே -அர்ச்சாவதார தான் திருப்பவளம் திறந்து வார்த்தை அருளிச் செய்தல் -திருக்கண்களாலே குளிர நோக்குதல் -திருக்கைகளாலே அணைத்தல் செய்யக் காணாமையாலே அர்ச்சாவதாரமான எம்பெருமானார் இடத்தில் பிறக்கும் முகோலாஸம் ஏதத் அர்வா ஸீநரான அஸ்மதாதிகளுக்கு எல்லாம் பரோக்ஷ ஸித்தமாய் இருக்கும் -தத் சம கால வர்த்திகளான ஆண்டான் ஆழ்வான் எம்பார் தொடக்கமான ஸஜ்ஜனர்களும் பிரத்யஷமாகப் பெறலாயிற்று -தத் பூர்வ காலீ நரான நாதமுனி ப்ரப்ருதிகளும் (யோக மகிமையால் பெற்றார்கள்)பரோஷமாகப் பெற்றார்களே -நித்ய விபூதியிலே அபரோக்ஷ ஸித்தமான எம்பெருமானாருடைய முகோலாசம் அஸ்மதாதிகள் பெறுமளவில்லை -ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ஒரு தேச விசேஷத்திலே போய் பெற வேண்டுகையாலே -ஸம்ஸார உத்தாரகத்வம் எம்பெருமானாருக்கே உள்ளது ஒன்றாகையாலே ஸம்ஸார நிவ்ருத்தி அர்த்தமாக உத்தாரகரான எம்பெருமானார் இடத்தில் ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டு தத் ஏக நிஷ்டனாய் இருக்க வேணும் –இவ்வர்த்தங்களை எல்லாம் குரு ப்ரபாவ தீபிகையிலே பரக்க அருளிச் செய்தார் இறே எம்பெருமானாருடைய ஸிஷ்ய ப்ரசிஷ்யரான நலம் திகழ் நாராயண தாஸரும் –அதாவது –

சரம குரு ராமானுஜாச்சார்ய அபிமாந அந்தர் பூதாநாம் சரம அதிகாரிணாம் தந் முக்கோலாஸ ஏவ பரம ப்ரயோஜனத்வாத் –தத் ப்ராப்தேர் அபி தத் அபிமான நிஷ்ட -ததீய ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவஸ்ஸாய புத்தி சித்தத்வாத் –ராமானுஜ குரு விஷய ப்ராப்யத்வ ப்ராபகத்வ யவசாயபுத்தி யையர்த்தம் ஸ்யாதிதி சேத் –தத் யுக்திர் ந யுக்தா -அஸ்ய ச சரம அதிகாரிண ப்ராப்ய பூத பகவத் ராமானுஜ குரு முக விலாஸோ அபி விபூதி த்வய வாஸ பேதேந பரோக்ஷ அபரோக்ஷ ரூபத் வைசித்ய யுக்தோ பவதி –தத்ர பிரதமோ பாத்த பரோக்ஷ முகோல்லாஸ மார்க்க த்வயேநோபகதஸ் ஸ்யாத் ஸ்வ அநுவர்த்தநேந ஸ்வ அபிமான நிஷ்ட ததீய அநுவர்த்தநேந ச –ஏதத் அநுவர்த்தநத்யேந ராமானுஜ குரு உத்பத்யமாந முககோல்லாஸஸ் யார்ச்சாவதார ஜன்யத்வாத் -அர்ச்சாவதாரஸ்யாபி ஆலோக ஆலாப ஆலிங்கநாதி கரண அஷமத்வாதி -அர்ச்சாவதார பூத ராமானுஜாச்சார்ய முகோல்லாஸ தத் அர்வாசீந அஸ்மதாதி சரம அதிகாரிணாம் பரோக்ஷ ஸித்த ஏவ ஸ்யாத் –தத் சம கால வர்த்திநாம் தாசரதி ஸ்ரீ வத் ஸாங்க மிஸ்ர தத் ஸூநு பட்டாரக கோவிந்த குருகேஸ ப்ரப்ருதிநாம் தேந ஸஹாவஸ்தி தத்வாத் அபரிமித அசிந்த்ய ஸூஹ்ருத விசேஷ பாஜாம் தேஷாம் குரு ஐநாநாம் தஸ்ய பரம காருணிகஸ்ய பரம உதார பாவஸ்ய அபரிமித அநவதிக அதிசய யாஸ்ரித வாத்ஸால்ய ஸுசீல்ய மஹா குண ஸாகரஸ்ய அசிந்த்ய திவ்ய ஞான பக்தி வைராக்ய ராஸே -அபரிச்சின்ன மஹாத்ம்யஸ்ய விமல விசத சம தமாத்யாத்ம குண கணாகரஸ்ய -நிரந்தர நிகில குரு ஐநநி வஹ சமாஸ்ரயணீய நிஜ சரண கமல யுகலஸ்ய நித்ய நிரவத்ய பகவத் அனுபவ அதிசய ஜெனித நிரதிசய அநந்த ஸந்தோஹ அம்ருத சாகர அந்தர் நிமக்ந ஸர்வ அவயவஸ்ய அகில ஜகத் பரம குரோ அஸ்மத் குல நாத பூதஸ்ய -அஸ்மத் ஸ்வாமிந் -அஸ்மந் நிருபாதிக சேஷிண -அசரண்ய ஸரண்யஸ்ய ப்ரபந்ந ஐந ஹ்ருதய பங்கேருஹ ஹம்ஸாய மாநஸ்ய பகவத ஸ்ரீ மத் ராமானுஜ குரோ -அபரிமித நிர்மல கம்பீர ஜலாசய மத்ய உத் பன்ன ஸூம்ருஷ்ட நாலமிஹிரத தருண கிரண நிகர விகசித புண்டரீக தல அமலாய தேஷண முகோல்லாஸ ஸ்வ கரதல நிஹித ஸூவ்ருத்த மல ஆமலகவத் ப்ரத்யக்ஷ ஸித்தோ பபூவ –தத் பூர்வ காலீந ராம மிஸ்ர புண்டரீக நயன நாதமுனி ப்ரப்ருதீ நாம் அபி பரோக்ஷ ஸித்த ஏவாபவத் -அத புந நித்ய விபூதவ் அபரோக்ஷ ஸித்த பகவத் ராமானுஜ குரு முகோல்லாஸே அஸ்மதாதிபிர் லப்தவ்யே ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகம் ப்ராப்ய தேச பூத ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரம் உப கம்ய தஸ்ய லப்யத்வாத் ஸம்ஸார உத்தாரகத்வஸ் யாபி அஸ்மின் ராமானுஜ குராவேவ அசாதாரணத்வேந வ்யவஸ்தி தத்வாத் ஸம்ஸார நிவ்ருத்தி யர்த்தம் ஸர்வ உத்தாரக ராமானுஜ குரவ் ப்ராப்ய ப்ராபகத்வ த்வயமபி நிஸ் சித்ய ததேக நிஷ்டாவதா பூத்வா சரம அதிகாரிணா ஸ்தா தவ்யம் பவதி -என்று அருளிச் செய்தார் இறே

(சரம ஆச்சார்யரான ராமானுஜருடைய அபிமானத்திலே அடங்கிய சரம பர்வ நிஷ்டர்களுக்கு அவரது முக மலர்த்தியே பரம ப்ரயோஜனமாகையாலும் -அவருடைய அபிமானத்திலே அடங்கிய ஆசார்யர் ஒருவரிடம்-இவரே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் ஆவார் -என்னும் உறுதியாலே அந்த முக மலர்த்தி சித்திக்கையாலும் -ராமானுஜர் விஷயத்தில் இவரே ப்ராப்யமும் ப்ராபகமும் ஆவார் -என்று உறுதி கொள்ளுவது தேவை இல்லையே எனில் இப்படிக் கூறுவது பொருந்தாது -இந்தச் சரம அதிகாரிக்கு ப்ராப்யமாய் இருக்கும் எம்பெருமானாரின் முக மலர்த்தியும் –இரண்டு விபூதிகளில் வஸிப்பதை விட்டு அப்ரத்யக்ஷமாகவும் ப்ரத்யக்ஷமாகவும் இரண்டு படிப்பட்டதாய் இருக்கும் -இவற்றில் முதலில் எடுக்கப்பட்ட அப்ரத்யக்ஷ முக மலர்த்தி தன் கைங்கர்யத்தால் ஏற்படுவது என்றும் -தன் அபிமானத்திலே அடங்கியவர்களுடைய கைங்கர்யத்தால் ஏற்படுவது என்றும் இரண்டு வழியாலே வருவதாய் இருக்கும் -இவ்விரண்டு கைங்கர்யத்தாலும் ராமாநுஜாசார்யார் இடம் விளையும் முக மலர்த்தி அர்ச்சாவதாரத்தில் விளைவதாகையாலும் -அர்ச்சாவதாரத்தில் குளிரக் கடாக்ஷித்தல் வாய் திறந்து பேசுதல் -அணைத்தல் -செய்யக் காணாமையாலும் இந்த எம்பெருமானார் முக மலர்த்தி அவருக்குப் பிற் காலத்தில் உண்டான நம்மைப்போன்ற சரம பர்வ நிஷ்டர்களுக்கு அப்ரத்யக்ஷமாகவே இருக்கும் -அவரோடு ஒரே காலத்தில் வாழ்ந்த முதலியாண்டான் கூரத்தாழ்வான் அவர் குமாரரான பட்டர் எம்பார் திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலானவர்கள் இப்படி ஒரே காலத்தில் வாழ்ந்ததனால் எல்லை அற்றதும் நினைத்ததற்கு அரியதுமான புண்ணியம் யுடையவர்களான அந்த ஆச்சாயர்களுக்கு -பரம காருணிகராய் பெரு வண்மை யுடையவராய் -எல்லை அற்றதும் ஒப்புயர்வற்றதுமான ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் முதலான பெரும் குணங்களுக்குக் கடலாய் இருப்பவராய் நினைத்ததற்கு அரிய திவ்ய ஞான பக்தி வைராக்யங்களுக்குக் கொள்கலமாய் இருப்பவராய் -எல்லை யற்ற பெருமை யுடையவராய் குற்றம் அற்றவையாய் -தெளிவானவையான சமம் தமம் முதலிய ஆத்ம குணங்களுக்கு இருப்பிடமாய் இருப்பவராய் -எல்லா ஆச்சார்ய ஸமூஹங்களாலும் எப்போதும் ஆஸ்ரயிக்கப்படும் திருவடித் தாமரையிணையை யுடையவராய் -நித்யமாய் குற்றம் அற்றதான பகவத் அனுபவ வெள்ளத்தால் உண்டான எல்லையற்ற ஆனந்தம் அலை எறியும் அமுதக்கடலில் மூழ்கிய ஸர்வ அவயவங்களையும் உடையவராய் -உலகு அனைத்துக்கும் பரம ஆச்சார்யராய் -நமக்கு குல நாதராய் நமக்கு ஸ்வாமியாய் நமக்கு இயல்வான சேஷியாய் -புகலற்ற அனைவருக்கும் புகலாய் இருப்பவராய் ப்ரபந்ந ஜனங்களுடைய இதயத்தாமரையில் வாழும் ஹம்ஸமாய் இருப்பவராய் -பகவானான ஸ்ரீ மத் ராமாநுஜாசார்யாருடைய மிகுந்ததாய் குற்றம் அற்றதாய் ஆழ்ந்ததான நீர் நிலையின் நடுவில் உண்டானதாய் பருத்த கண்டாய் உடையதாய் இளம் ஸூர்யனுடைய கிரணங்களால் மலர்ந்ததான தாமரையின் இதழ் போன்று குற்றமற்று நீண்டு விளங்கும் திருக்கண்களை யுடைய திரு முக மண்டலத்தின் மலர்த்தி -தம் கையில் இலங்கும் உருண்டையான அழுக்கற்ற நெல்லிக்கனி போல் நேரில் காணலாய் இருந்தது -எம்பெருமானார்க்கு முற்காலத்தில் இருந்த மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் நாதமுனி முதலானவர்க்கும் அம்முக மலர்த்தி அப்ரத்யக்ஷமாகவே இருந்தது –இனி நித்ய விபூதியில் ப்ரத்யக்ஷமாக எம்பெருமானாரின் முக மலர்த்தியை நாம் அடைய வேண்டி இருக்கும் போது ஸம்ஸாரம் நீங்கி ப்ராப்ய பூமியான ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரத்தை யடைந்து அந்த முக மலர்த்தியை அனுபவிக்க வேண்டி இருக்கிற படியாலும் ஸம்ஸாரத்தில் இருந்து கரை ஏற்றுவிக்கும் உத்தாரகத்வமும் இந்த ராமாநுஜாசார்யாருக்கே உரியதாய் இருகையாலும் சரம அதிகாரிகள் சர்வ உத்தார கரான ராமானுஜர் இடமே ப்ராப்ய ப்ராபகத்வங்கள் இரண்டையும் அறுதியிட்டு அதிலேயே ஊன்றி இருப்பவர்களாய் இருக்க வேண்டும் -என்றபடி)

(பாட்டு கேட்க்கும் இடமும் இத்யாதி –அனைத்தும் வகுத்த இடமே -ஆச்சார்யர் இடம் உபகாரத்வ புத்தி இருக்க வேண்டும் -உடையவர் முக மலர்த்தியே பரம பிரயோஜனம் -ப்ரத்யக்ஷமாக அங்கே தானே காணலாம் -அங்கு செல்ல உத்தாரகத்வ புத்தியும் வேணுமே -)

(பர பக்தி பர ஞானம் பரம பக்தி நித்தியமாக வேணுமே -யாவதாத்ம பாவி கைங்கர்யம் செய்ய ருசி வளர அங்கும் வேண்டுமே
இங்கு உத்தாரகத்வம் ப்ராப்யம் -என்று கொண்டு அங்கு போனபின்பு அவர் திருவடிகளே ப்ராபகம் என்று உணர வேண்டுமே -ஆனந்தமாக அனுபவித்து கைங்கர்யம் வேண்டுமே
அங்கும் பகவத் கைங்கர்யங்கள் கிட்ட இவரது ப்ராபகத்வ புத்தியும் வேண்டும் கூரத்தாழ்வான் உடையவருக்கு முன்னே நித்ய விபூதிக்குச் சென்ற வ்ருத்தாந்தம் அறிவோமே -அங்கும் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று அணுவார்த்தனம் பண்ணினார் அன்றோஇத்தை மேலே அருளிச் செய்து நிகமிக்கிறார் மேல்)

நிஷ்க்ருஷ்ட ஸத்வாத்மகமாய் -பஞ்ச உபநிஷத் மயமாய் -அஞ்ஞான தமோ லேஸமும் நடையாடுகைக்கு இடமில்லாத நித்ய விபூதியில் ஸர்வோபாதி விநிர்முக்தராய் நிஷ்க்ருஷ்ட தர்ம பூத ஞான ஆனந்த ஸ்வரூபராய் -பகவத் ஆயத்த ஆத்ம சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்களை யுடையராய்- அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ யுக்தராய் -பகவத் அநுபவ ஜெனித நிரவதிக ஆனந்த யுக்தராய் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜனம் பரமம் ஸாம்யம் உபைதி –-முண்டகம் -3-1-3-(பரம புருஷனை ஸாஷாத் கரித்தவுடன் ப்ரஹ்ம ஞானியானவன் புண்ய பாபங்களை விட்டு ப்ரக்ருதி சம்பந்தம் அற்றவனாய் -புருஷோத்தமனுடன் -மேலான ஸாம்யத்தை அடைகிறான் -என்றபடி-சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் )-என்கிறபடியே எம்பெருமானோடு பரம ஸாம்யாபத்தியைப் பெற்று எல்லாரும் நித்ய பரிபூர்ணராய் இருக்கிற தசையிலே -ஸிஷ்ய ஆச்சார்ய விபாகம் யுண்டாய் தத் தத் கார்யங்களும் நடக்கும்படி எங்கனே என்னில் -அங்கும் நடக்கும் -எல்லாருக்கும் பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் அவிசிஷ்டம் என்னும் இடத்தில் ஸங்கோசம் இல்லை இறே -இவ்விபூதியில் போலே ஒருவன் உணர்த்தின போது தெளிய அறிந்தும் -உணர்த்தாத போது ஸ்வரூப ஞானம் இல்லையாயும் போருகிற ஆகாரம் அங்கு இல்லை இறே (அவிபாகேந த்ருஷ்டத்வாத் -விட்டுப் பிரியாமல் நித்ய அனுபவம் அங்கு -ஸ்வரூப விளக்கம் ஆவிர்பாவம் உண்டே அங்கு)-ஆகையால் அவ் விபூதியில் ஆத்ம ஸ்வரூபம் தோற்றும் போது எல்லாம் பகவத் அநந்யார்ஹ சேஷமாய்த் தோற்றி -அது தான்- ததீய பர்யந்தமாகா விடில் ஸ்தைர்ய ஸித்தி பெறாதாகையாலே முதலடியிலே நிற்கை யன்றிக்கே- ததீய பர்யந்தம் சென்று ஸ்வரூபமானது மறுவற்ற ததீய அநந்யார்ஹ சேஷமாய்த் தோற்றும் -இப்படி இருக்கிற ததீய அநந்யார்ஹ சேஷத்வ ஸ்வரூபமானது –நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -(மீமாம்ஸகர் வழக்கு-கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் இல்லை) என்றும் –அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநுப பத்தி -(மீமாம்ஸகர் வழக்கு-கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் பொருந்தாது)-என்கிறபடியே கிஞ்சித்கார அபாவத்தில் சத்தை பெறாதானாகையால் -தத் ஸித்தி யர்த்தமாக ததீய பர்யந்தம் சேஷ வ்ருத்தி பண்ணிப் போர வேணும்-

நநு பகவத் வ்யதிரிக்த ஸகல ஜீவாத்மாக்களுக்கும் ததீய சேஷத்வம் ஸ்வரூபம் -தத் ஸித்தி ததீய கிஞ்சித் காரத்தாலே யுண்டாக வேணும் என்று கொள்ள வேணுமாகில்- அப்போது கிஞ்சித் கரிப்பார் சிலரும் கிஞ்சித்கார ப்ரதி சம்பந்திகள் சிலரும் ஆகையால் இவர்களுக்கு ஸ்வரூபம் ததீய சேஷத்வமாய் -தத் ஸித்தி யர்த்தம் ததீய கிஞ்சித்காரம் பண்ண வேண்டி வரும் -அப்போது வேறே சில ப்ரதி சம்பந்திகளை அங்கீ கரிக்க வேணும் -அவர்கள் ஸ்வரூபத்தைப் பார்த்தால் அவ்வளவே சில ப்ரதி சம்பந்திகள் வர வேணும் –இனி கிஞ்சித் கர்த்தாக்களே ப்ரதி சம்பந்திகளாய் ப்ரதி சம்பந்திகளே கிஞ்சித் கர்த்தாக்கள் ஆகையால் அந்யோன்ய ஆஸ்ரய தோஷமும் அநவஸ்தையும் ப்ரசங்கிக்குமே என்னில் -அப்படி சொல்ல ஒண்ணாது
நித்யாபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -40-என்கிறபடியே -எல்லாருக்கும் ஸ்வரூபம் ததீய சேஷத்வமாய்த்து –

(கைங்கர்ய நித்ய நிரதைர் பவத் ஏக போகை
நித்யைர் அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-77-

கைங்கர்ய நித்ய நிரதைர்–ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி ஆட் செய்பவர்களாயும் –பவத் ஏக போகை-அநந்ய போக்யத்வ ஸ்வரூபத்தில் தலை நின்றவர்களாயும்-நித்யைர்-நித்ய ஸித்தர்களாயும்-அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை-க்ஷணம் தோறும் புதிது புதிதாக விளைகின்ற-பகவத் அனுபவ ருசியினால் உருகின நெஞ்சை உடையராயும் பரஸ்பர நீச பாவைர் -பாகவதர்களுக்குள் பரஸ்பரம் சேஷத்வத்தையே சதா விரும்புவர்களாயும் – மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய-அடியேனுக்குத் தெய்வமாகக் கொண்டாடாத தக்கவர்களாயும் இருக்கிற தேவரீருடைய அடியார்களுடன் உடனே கூடி வாழக் கடவேன்)

தானும் ததீய சேஷத்வ வ்ருத்தியாலே நிலை நிற்க வேணுமாகையாலே எல்லாரும் ஸ்வரூபத்தைத் தவிர்ந்து இருக்கும் அளவில் ப்ரதி சம்பந்திகள் இல்லாமையாலே சேஷ வ்ருத்தி அபாவ ப்ரயுக்தமான ஸ்வரூப சங்கோசத்துக்கு இடமாகையாலே சில ததீயர் சில ததீயரை சேஷிகளாக வரித்து தத் விஷயத்திலே கிஞ்சித் கரிக்க வேணும் -அவர்களும் தங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல் இவர்கள் முக மலர்த்தியை ப்ரயோஜனமாகக் கொண்டு இவர்கள் பண்ணுகிற கிஞ்சித் காரத்தை அங்கீ கரிக்க வேணும் -தாங்களும் தங்கள் சேஷத்வ ஸ்வரூபமான நைச்யத்தை முன்னிட்டு அவர்களை சேஷிகளாக வரித்து தத் விஷய கிஞ்சித் கார்த்தாலே ஸ்வரூப ஸித்தி பெற வேணும் -ஆகையால் பரஸ்பர சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான நீச பாவத்தைப் பிரார்தித்துப் பெறுகிற இடமாகையாலே (நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்)ஸ்வரூபத்தோ பாதி ஸ்வரூப அநு பந்தியான பரஸ்பர நைச்ய ப்ரார்தனையும் அங்கமாக நடக்கும் என்றிட்டு கிஞ்சித் கர்த்தாக்கள் ப்ரதி சம்பந்திகளாய்-ப்ரதி சம்பந்திகள் கிஞ்சித் கர்த்தாக்களாம் இடத்தில் குற்றம் இல்லை –

இப்படி ஸ்வரூபம் எல்லாருக்கும் ஒத்து இருந்ததே யாகிலும் -அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகளில் தலைவரான அநந்த கருட விஷ்வக் சேன ப்ரப்ருதிகளுக்கு ப்ராதான்யம் கொண்டால் போலே நிரஸ்த ஸம்ஸார ஸம்பந்தரான முக்த வர்க்கத்தில் நம் ஆச்சார்யர்களில் சிலருக்கு ப்ராதான்யம் கொள்ள வேணும் -அதாவது –குரு பரம்பரை -அத்தாலே யுண்டோ என்னில் –பராங்குசாத்யைர் பக்தைர் அபி யாசார்யைஸ் ஸம் உபஸ்திதம் –— (பக்தர்களான பராங்குசர் முதலான ஆச்சார்யர்களால் கூடி இருக்கப் பெற்ற பரமபத நாதனை)என்று இறே அபியுக்தர் வசனம் –இப்படிப்பட்ட இருக்கிற நாயகக் கல் போலே இறே நம் குல நாதரான எம்பெருமானார் -இப்படி உபய விபூதி வர்க்கத்துக்கும் ஒவ்ஜ்ஜ்வல்ய கரரான எம்பெருமானார் பக்கல் அங்கு விசேஷ பிரதிபத்தி நடக்க வேணும்

(அமுநா தபந அதிசாயி பூம் நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி-யதிராஜ சப்ததி-15

ஸ்வாமி தேஜஸ் ஒளி விஞ்சி -பிரபன்னர் உடைய மாநசீக குரு பரம்பரையில் நடு நாயகமாக உள்ளார் –)

இவருடைய அபிமானம் கொண்டு ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ப்ராப்ய பூமியிலே இவனுக்கு தத் விஷயத்திலே அங்கும் விசேஷ ப்ரதிபத்தியுடனே அசேஷ சேஷ வ்ருத்திகளையும் பண்ணி அவ்வழியாலே தன் முகோல்லாஸமான ப்ராப்யத்தைப் பெறுகை ஸ்வரூபம் இறே –இங்கு இருக்கும் நாள் அபரோக்ஷ ஸித்தமான எம்பெருமானாருடைய முகோல்லாஸம் பெறாத அவ்விழவு எல்லாம் அவ்விபூதியில் தத் விஷய அசேஷ சேஷ வ்ருத்தி கரண ஜன்யமான முகோல்லாஸ ரூப ப்ராப்ய லாபத்தாலே தீரப்பெற வேணும்

இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசியற உபய விபூதி விசேஷ ப்ரதிபத்திக்கு விஷயமான எம்பெருமானார் இடத்திலே பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டு -தத் விஷயத்தில் அகதி நிஷ்டனாய் எம்பெருமானாருடைய திருவடிகளே ப்ராப்ய ப்ராபக முகமாக அத்யவசித்து-தத் அபிமான அந்தர் பூதனாய் இருக்கும் சரம அதிகாரிக்கு -1-யாவச் சரீர பாதம் எம்பெருமானாருடைய குண அநு ஸந்தானமும் -2-ஏதத் குண அநு சந்தான ரஹித துஷ் ப்ரக்ருதிகளுடன் ஸஹ வாஸ நிவ்ருத்தியும் ஸஹ போஜன நிவ்ருத்தியும் -3-ஏதத் அபிமான அந்தர் பூதரான சரம அதிகாரி விஷயத்தில் ப்ராவண்யமும் தத் ஸஹ வாஸமும் தத் ஸம் பாஷணமும் தத் பாத தீர்த்த ஸ்வீ காரமும்(போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே) —நாராயண ஏக நிஷ்டஸ்ய யா யா வ்ருத்திஸ் ததர்சநம் -யோ யோ ஜல்பஸ் ஸ ஸ ஜய தத் த்யானம் யந் நிரிக்ஷணம் –தத் பாதாயப் சதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸூ பாவநம் -ததுக்தி மாத்ரம் மந்த்ர அக்ரயம் தத் ஸ்ப்ருஷ்டம் அகிலம் ஸூசி –விஹகேந்த்ர ஸம்ஹிதை (நாராயணனையே ப்ராப்ய ப்ராபகமாகக் கொண்டவன் எந்தச்செயல் செய்தாலும் அது எம்பெருமானுடைய அர்ச்சனமாகும் -அவன் எதைப் பேசினாலும் அது எம்பெருமான் மந்த்ரத்தை ஜபிப்பதாகும் -அவன் எதை உற்று நோக்கினாலும் எம்பெருமானைத் த்யானிப்பதாகும் -அவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தம் பரி ஸூத்தப்படுத்துவதில் ஒப்பற்றதாகும் -அவன் உண்டு உமிழ்ந்த எச்சில் பரி ஸூத்தப்படுத்துவதில் தலை சிறந்ததாகும் -அவனுடைய சொல் எல்லாம் உயர்ந்த மந்திரமாகும் அவன் தொட்டது எல்லாம் ஸூ த்தமாகிறது -என்றபடி)- என்னும்படியான தளிகை ப்ரஸாத ஸ்வீ காரமும் தத் ஸஹ வாஸத்துடன் கால க்ஷேபமும் அநவ்ரதம் யுண்டாம்படி ஸர்வ உத்தாரகரான எம்பெருமானார் திரு முன்பே நித்யமாகப் பிரார்த்திக்க்க் கொண்டு த்ரிவித கரணத்தாலும் ததீய விஷயத்தில் பர ஸம்ருத்யேக ப்ரயோஜன புத்தியுடன் ஸ்வரூப அநு குணமாக முன்னடி பார்த்து வர்த்திக்கை அவஸ்ய அபேக்ஷிதம் எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யம் இல்லாத துர்மானிகளுடன் ஸஹ வாஸம் வருந்தியும் பரிஹரணீயம்

ஸ்ரீ சரம குரு நிர்ணயம் முற்றிற்று

———————————————————–

ஸ்ரீ சரம குரு நிர்ணயம் -ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை ஸ்வாமிகள்

ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே
ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது.
நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித் தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு
அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.

“ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள்.
“உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது.
ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,

ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார்.
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது.
நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார்.
நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.
நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர்.
நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது,
எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று
அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார்.
இவ்வாறாக ஈடு வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே, ஸ்ரீ நம்பிள்ளை அதனை ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-
என்னக் கடவது இறே–(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய
ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||–ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்

மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே
||–ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்

சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹ
ம் பஜே ||–நாலூர் பிள்ளை தனியன்

நமோஸ்து தேவராஜாய சதுர்க்கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||நாலுராச்சான் பிள்ளை தனியன்

—————-

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்

சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் |

யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் ||

பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத் சரணாரவிந்த ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி ,
தத் சித் யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானார் அபிமானத்திலே ஒதுங்கி , தத் விஷய ப்ரபத்தி நிஷ்டையை யுடையவனாயிருக்க வேணும் .

பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத் யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க ,
அத்தை விட்டு , அதில் லகுவான சரம பர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனேயென்னில்;

1 ”யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந: | ஸயத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே” (பகவத்கீதாஅத்யா 3 ஶ்லோ 21)என்கிற கணக்கிலே
ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள்,
அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள்

எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன்
யத் யதாசரதி — எந்தபடி யநுஷ்டிக்கிறான் ,
தத்த தேவ – அந்த அந்த படிகளையே ,
இதரோஜந: — பூர்ண ஜ்ஞாநமில்லாதவனும் ,
ஆசரதி – அநுஷ்டிக்கிறான் ,
ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் ,
யத் ப்ரமாணம் – ( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு ,
குருதே — அநுஷ்டிக்கிறானோ ,
தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து ,
லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் ,
அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.

“கர்ம ஞானஞ்ச பக்தி: ப்ரபதந மிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதானாலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந் தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தான பூர்வே யதிவர சரண த்வந்த்வ மூர்தாபி யுக்தாஸ்தத் காருண்யாபிமாநாத் ததநுச குரவோ–பூர்வாசார்ய ஸூக்தி

கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற ,
ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் ,
ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து ,
புந: — திரும்பவும் ,
ஏதாந் -– இந்த உபாயங்களை ,
ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று ,
ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து ,
இஹ -– இந்த உபாயங்களில் ,
சுதராம் – மிகவும் ,
தோஷ த்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை ,
விதாய —- செய்து( அதாவது கர்ம,ஜ்ஞாந,பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே ,
இவை பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமாயிருக்கிற தென்றும் ;
ப்ரபத் யுபாயம் மஹா விஸ்வாஸ ரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமாயிருக்கிறதென்றும் ;( நன்றாக அறுதியிட்டு என்கை ) ,
கர்தும் – இவற்றையநுஷ்டிக்கைக்கு ,

முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக் குடலாக பற்றலாமோ
என்று உணர்ந்துணர்ந்து பார்த்த விடத்தில் ஸ்வரூப விருத்தத்வதுஸ்ஸகத்வ விஸ்வாஸபூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கை யாலே
இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரித்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்களும் பின்புள்ள ஆசார்யர்களும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிக அபக்ரேசருமா யிருக்கையாலே
பரம காருணிகராய் ப்ரபந்ந ஜந கூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய்
எம்பெருமானாருடைய காருண்ய ப்ரவாஹ ஜநிதமான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே

பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும்போது அது ப்ரமாண புரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர்பவிதாயோவென்னில் ;-திராதிறே ,  “ விதயஶ்ச வைதிகாஸ் தவதீய கம்பீரா மனோனு சாரிண: (“ ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 )என்றதிறே .

விதயஶ்ச – இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன ,
மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , ஷுத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,
“ நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்தில் அபவகாஹியாதார்க்கிறே வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .

இதுக்கு மேலே முக்த கண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனேயென்னில் ,

ஸ்ரீஶாஸ்த்ரத்திலே பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லுகிற விடத்திலே“ ஸம்யக் உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந்தவ வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரம்பிமேவத ||

ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே ,
த்வயா – தேவரீராலே ,
தவ ஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய ,
வைபவம் – ப்ரபாவமானது ,
ஸம்ய குக்தம் – நன்றாக சொல்லப்பட்டது ,
த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீருடைய வாசார்ய ரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் ,
மே – எனக்கு ,
வத – அருளிச் செய்ய வேணும் , என்று
பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .

“ தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் “ என்றும் “ மேலையார் செய்வனகள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல

ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் ,
மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற ,
பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் ,
யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு ,
தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே ,
ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை என்ற படி ) பின் சென்றவர்களோடு கூட முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .

——————–

த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |

க்ருதஸ்யாப்வயதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||

ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ
ஆசார்யாவதாரஸ் து – ஆசார்ய ரூப அவதாரமானது ,
( இவ்விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும்
ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது )
த்வயா – தேவரீராலே ,
கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப் படுகிறது ,
க்ருத்ஸ்யாப் யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்ட வந்த வவதார விசேஷத்துக்கு ,
கிம்வாபலம் – எந்த பலன் தான் ,
அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .

இதி ப்ருஷ்டோ மஹா லக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |

குருரூபாவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||

பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரி பூர்ணனாயும் ,
நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் ,
மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே ,
இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகாரமாக கேட்கப்பட்டவராய்க் கொண்டு ,
குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்ய ரூப மான அவதாரத்தினுடைய ,
வைபவம் –- வைபவத்தை ,
வக்தும் – சொல்லுகைக்கு ,
உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத

————–

ஸ்ரீபகவாந் | ஸாது ப்ருஷ்ட்டஸ் த்வயா தேவீ ஸாராம் ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷ்யே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ ||

சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான ,
ஹே தேவி -– ஸர்வ ஸமாஶ்ரயணீயையானவளே ,
ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள ,
ஸாராம்ஸ: — ஸார பூதமான விஷயம்,
ப்ருஷ்ட: — கேட்கப் பட்டது ,
மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய ,
வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை,
தவ – உனக்கு ,
வக்ஷ்யே -– சொல்லுகிறேன் ,
ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .

ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாநுஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கே நாபி முக்திர் லப்தா ந பூதலே ||

ஸம்ஸார ஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ,
மக்நாந் –- முழுகிக் கிடக்கிற ,
சேதநாந் –– பத்த சேதநரை ,
உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே ,
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும் ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் ,
ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டது
( இத்தனையும் செய்த போதிலும் )
தேந மார்கேண – கீழ்ச் சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே
பூதலே -– லீலா விபூதியில் ,
கேநாபி – ஒருத்தனாலேயும் ,
முக்தி: — பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷமானது ,
ந லப்தா – அடையப் படவில்லை .

ததோ விபவ ரூபேண ஜந்மாநி ஸுபஹுநிமே || ஜாதாநி தேவி மோக்ஷ ஆர்த்த கோபி ந பவத் ||

இப்படி மத் ஆஜ்ஞா ரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு ,
விபவ ரூபேண – ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே ,
ஸுபஹுநி -– அநேகங்களான ,
ஜந்மாநி – அவதாரங்களானவை ,
மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு ,
ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே ,
தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் ,
( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதி செய்கையாலே ) ,கோபி — ஒருத்தனாவது , மோக்ஷஆர்த்தி — மோக்ஷஆபேக்ஷஐ யுடையவனாக , ந பவது — ஆகவில்லை .

————-

1 வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |

தேஷ்வப்யஶக்தாஸ்யாத் மாநஸ்ஸம்ஸரந்தி புந:புந: ||

“ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) ,
மயா — என்னாலே ,
வேதாந்தே — ப்ரஹ்ம ப்ரதிபாதந பரமான வேதாந்த ஶாஸ்த்ரங்களிலே ,
பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான ,
விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் ,
விஹிதா: — விதிக்கப்பட்டவை ,
( இப்படி விதித்த விடத்திலும் ) ,
ஆத்மாந: — பத்த சேதநர்கள் ,
தேஷ்வபி — அந்த பக்த்யாத யுபாயங்களை யனுஷ்டிக்கும் விஷயத்திலும் ,
அஶக்தாஸ் ஸந்த: — ஶக்தி யில்லாதவர்களாய்க் கொண்டு ,
புந:புந: — அடிக்கடி ,
ஸம் ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .

ஏவம் பஹுவிதோபாயேஷ் வநிஷ்பந்ந பலேஷ் வஹம் |
ஸதாசார்ய ஸ்வரூபேண ஜநித்வா ஸர்வ சேதநாந் |
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யா மீத்வ சிந்தயம் ||

ஏவம் — இந்த ப்ரகாரமாக ,
பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க ளெல்லாம் ,
அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் ,
அஹம் — ஸர்வஜ்ஞனான நான் ,
ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் ,
ஜநித்வா — அவதரித்து ,
ஸர்வ சேதநாந் — எல்லா சேதநர்க ளையும் ,
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப் பிடியாக பிடித்துக் கொண்டே ,
கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று ,
அசிந்தயம் — எண்ணினேன் .

ஏவம் சந்சிந்த்ய பத்மாக்ஷஇ குருரூபேணவைபுரா |

அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித்ஜநாந் பவாதப்யுத்தரம் ரமே ||

ஏ பத்மாஷீ — தாமரைப் பூப் போன்ற திருக் கண்களை யுடையவளாய் ,
ரமே — நமக்கு ஆனந்தவஹையாயும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே ,
ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி ,
புரா — முற்காலத்திலே ,
குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் ,
அவதீர்ண: — அவதரித்தவனாய்க் கொண்டு ,
காம்ஸசித்ஜநாந் — சில பத்த சேதநர்கள் ,
பவாத் — ஜன்ம மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும்
அப்யுத்தரம் — கரை யேத்தினேன் .

இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புராதேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்நசேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜப்ரபாவத: 

ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயும் இருந்துள்ள விக்ரஹ குணங்களும் ஆத்ம குணங்களுமுடையவளே ,
புரா — முன்பு ,
மயா — என்னாலே ,
ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
யதா க்ருதா — எவ்விதமாக செய்யப் பட்டதோ ,
ததா — அவ் விதமாகவே ,
இத:பரஞ்சாபி — இனிமேலும் ,
கரிஷ்யதே — செய்யப்படப் போகிறது ,
குரு ஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
நிமக்ந சேதநாந் — ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கிற பத்த சேதநர்களை ,
நிஜ ப்ரபாவத: — ஆசார் யாபிமான ரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே ,
ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப் போகிறேன் .

——————-

லக்ஷ்மீ: ||

( லக்ஷ்மீ: ) — ( இப்படி எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தைகளைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .

கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர் ஜநிம் | கஸ்மிந் யுகே வதீர்ணஸ்த்வம் பவிஷ்யஸி வத ப்ரபோ: ||

ஹே விஷ்ணோ — ஸர்வ வ்யாபியான ஸ்வாமீ ,
பவாந் — தேவரீர் ,
குரோர் ஜநிம் — ஆசார்ய ரூபமான விலக்ஷண அவதாரத்தை
கஸ்மிந் குலே — எந்த திரு வம்ஸத்திலே ,
கரிஷ்யதி — செய்யப் போகிறது ,
ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ ,
த்வம் — தேவரீர் ,
கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலே தான் ,
அவதீர்ணோ பவிஷ்யஸி -அவதரிக்கப் போகிறீர் ?
வத — ( இவ் வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் )
தேவரீரே அருளிச் செய்ய வேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .

ஶ்ரீபகவான் || அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||

இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்கிறார் .

தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||

( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிக தேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி
( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ் விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) ,
அஹம் — ஸர்வ ஜ்ஞனான நான் ,
ஆசார்ய ரூபேண — ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
யுகே யுகே — யுகங்கள் தோறும் ,
பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் ,
தத்ராபி — அப்படி யவதரிக்கு மிடத்திலும் ,
யோகிநாம் பும்ஸாம் — பரம யோகிகளாயிருக்கிற மஹா புருஷர்க ளுடைய ,
மஹதி — ஸர்வ ஶ்லாக்யமாயிருந்துள்ள ,
குலே — திருவம்ஸத்திலே ,
மே — எனக்கு ,
ஜந்ம — அவதாரமானது ,
பவிஷ்யதி — உண்டாகப் போகிறது

விஶிஷ்யமே தேவி கலௌ யுகே குரோர் ஜநிர் பவித்ரீ கலு ஸத் குலே ரமே | த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் பவிஷ் யதி ஸா ஹி புஜிஷ்ய பூயஸீ ||
ஹே ரமே தேவி — நிரதிஶய ஆநந்த யுக்தையாய்க் கொண்டு நமக்கு பட்ட மஹிஷியாயிருக்குமவளே ,
கலௌ யுகேது — கலி யுகத்திலேயோ வென்றால் ,
( இவ் விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்ல வேண்டுகையாலே ,
து — என்கிற அவ்யயம் அத்யாஹரிக்கப்பட்டது )
ஸத் குலே — ஒரு விலக்ஷணமான திரு வம்ஶத்திலே
மே — எனக்கு ,
விஶிஷ்ய — பூர்வ அவதாரங்களைக் காட்டில் விலக்ஷணமாக ,
குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
பவித்ரீ கலு — உண்டாகப் போகிறது( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ் வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது

( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின் படியே ,
மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸ ரூபத் விவிதாஹங்காரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் ,
தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) ,
புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்ய ஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு ,
த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “என்கிற ஶ்லோகத்தின்படியே ,த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது ,
பவிஷ்யதி — ஆகக் கடவது .
இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது ,
இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ் வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .

ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குரு ஸரீரிண:

ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுக மண்டலத்தை உடைய பிராட்டி ,
ஸர்வோபாய தரித்ராணாம் — கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவராயிருக்கிற ,
ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்தி விவசருமான எல்லா சேதநர்களுக் கும் ,
( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்ய ப்ரேமாதிஸயத்தாலே ஸிதில கரணராய்
ஆந்ரு ஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையும் அடவு பட வநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) ,
குரு ஸரீரிண: — பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்ய ரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்தி: — மோக்ஷ மானது ,
( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ் ஶம்ஶயமாக உண்டாகக் கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து ஆகர்ஷிக்கப்படுகிறது . )

மத் பக்தா ஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே |
த்ரிதண்டிந அபிமாநாந் மே தே ஸர்வே குருரூபிண: |
முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||

கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் ,
ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்த பஞ்சக ஜ்ஞாந பூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு,
( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற
ஸ்ரீ ஸூக்திபடியே யெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) ,
மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்ய ரூபியான வென்னிடத்தில் நிரதிஶய பக்தி யுடையவர்களாகிறார்களோ ,
தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும்,
த்ரிதண்டிந: — த்ரிதண்டதாரியாயும் ,
குரு ரூபிண: — ஆசார்ய ரூபியாயுமிருக்கிற ,
மே — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள்
( இவ்வர்த்தத்தை ) ,
அஹம் —நான் ,
தே — உனக்கு ,
ஸத்யேந — ஸபத பூர்வமாக ,
ப்ரவீமி — சொல்லுகிறேன் .

மத் க்ருதோ யோபிமாநஸ்யாதாசார்யத்வே ஸுபாநநே |

ஸ யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||

ஹே ஸுபாநநே — ஸர்வருக்கும் மங்களாவஹமான திருமுக மண்டலத்தை யுடையவர்களாயும் ,
தேவி — நம்முடைய விபூத்யைஶ்வர்யத்துக்கு ஸஹ தர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி ,
ஆசார்யத்வே — ஆசார்ய கார்யமான வுபதேச விஷயத்திலே
மத்க்ருத இதி — ( பின்புள்ளார் உபதேசத்தாலும் , அது க்ருபா மாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால்
செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற ,
யோபிமாநஸ் ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ ,
ஸயேவ — அதுவே தான் ,
முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோஷ ப்ரதமாக ,
பவிஷ்யதி — ஆகப் போகிறது ,
ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .

குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||

ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத்தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது ,
குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — என்னுடைய ,
நாம்நா — திரு நாமத்தாலே ,
விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக் கடவது ;
இவ் விடத்தில் என்னுடைய திரு நாமத்தாலே யென்னது ,
இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம் -( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜய ஶீலமாகக் கடவதென்கை .

————-

மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||

ஹே பத்மாஷீ — தாமரை போன்ற திருக் கண் அழகை யுடைய பிராட்டி ,
ஸமய: — அப்படி வ்ருத்தி யடைந்து வருகிற பரம வைதிக ஸித்தாந்தமானது ,
மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு ,
( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே ,-யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ள வேணும்)லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப் போகிறது .

குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ரதத்ர நிதாயவை |

ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||

( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்ய ஶக்தியை ,
தத்ர தத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே ,
நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து ,
ஸமயம் — லோபிக்கப் போகிற ஸித்தாந்தத்தை ,
யதா — எந்த ப்ரகாரமாக ,
நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ ,
ததா — அந்த ப்ரகாரமாக ,
ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப் பிடிக்கப் போகிறோம் .

மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர் பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||

யேஷாம்து — யவர்களுக்கானால் ,
மம — என்னுடையதான ,
ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே ,
பக்தி: — ஸ்நேஹ பூர்வகமாய் , இடைவிடாத நினைவு ,
பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ ,
தேஷாமேவ — அவர்களுக்குத் தானே ,
முக்தி: — பகவத் ப்ராப்தியாவது ,
ஸுலபா — சுகமாக லபிக்குமது ,
பவேத் — ஆகக் கடவது ,
அந்யேஷாம் — அந்த வாசார்ய பக்தி யில்லாதவர்களுக்கு ,
ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .

அஸ்மிந்நர்தேஹி விஸ்வாஸஸ்ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி |

மத்கடாக்ஷஓ பவேத்யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: ||

( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே ,
விஶ்வாஸ: — இது தான் பரமார்த்தம் என்கிற நினைவு ,
ஸர்வேஷாம் — எல்லாருக்கும் ,
ந ஜநிஷ்யதி: — உண்டாகப்போகிறதில்லை என்பது நிச்சயம் ;
( ஆனால் பின்னை யுஜ்ஜீவிக்கும் விறகேதென்னில் )
யஸமிந் — எந்த சேதநந் விஷயத்திலே ,
மத் கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது ,
பவேத் — உண்டாகக் கடவதோ ,
ய: — எந்த சேதநன் தான் ,
மய்யேவ — என்னிடத்தலேயே,
ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ ,
தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு ,
ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்றதாக ,
அயம் -– இந்த பாவ விசேஷமானது-( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) ,
பவிஷ்யதி -– உண்டாகப் போகிறது,
ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை ,
ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .

என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே ,
முக்த கண்டமாக முக்ய ப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன .
இவை யெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாண ப்ரதிபாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து ,-நம்மாசார்யக ளனைவரும் தந்நிஷ்டராய் ,
தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் .
இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் ,
த்ரிதண்டதாரியா யாசார்ய ரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச் செய்கையாலே மற்றுமவனருளிச் செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலை நின்றிருப்பது ;
ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளதும் அபவரிடத்திலேயே யிறே ,
அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶய விபர்யமற நம் பூர்வாசார்யர்களும் அறுதி யிட்டார்களிறே ;
ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாண ப்ரதிபந்நமென் றும் , சொல்லிற்றாயிற்று .

—————-

இனி சரம பர்வமான எம் பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ;
பக்தி தான் ஸ்வ யத்ந ஸாத்யமாகையாலும் , பகவத் பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ ப்ர வ்ருத்தி விரோதி யாகையாலும் ,
ஸ்வ ஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்ம சத்தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ;
பாரதந்த்ரிய ஸ்வரூபத்துக்கு அனு குணமாய் பகவத் விஷய விஸ்வாச ரூபமான ப்ரபத்யுபாயமும்
“ பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே “ என்கிறபடியே
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப்படப்பண்ணும் .
இப்படி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த் யுபாயமும் , ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே சரம பர்வநிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;

( பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப் போலே
அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண்வளர்ந்திருக்குமவரே ,
ஜந்து: — சேதநநாநவன்,
த்வயைவ –- உன்னாலே தான் ,
பவ மோக்ஷணயோ: — பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக ,
க்ரியதே -– செய்யப்படுகிறான் ;
“ இல்லவல் லருள் நல்வினைகள் ” என்னும் மாசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப் படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ;
இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்கதர்ஶந மாத்ரத்தாலே நிர் ஹேதுகமாக கடாஷித்து நிரதிசய ஆனந்த ரூப
ஸ்வ ப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் ,
இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ;
இதற்கு மேல் சொல்ல வேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்ய தோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டு கொள்வது .

ஆகையாலிறே , இவ் வதிகாரிக்கு பக்தி ப்ரபத்திக ளுபாயமன்னென்றும் ,
எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் ,
நம் பூர்வாசார்யர்க ளறுதியிட்டதும் . (ப்ரயாண காலே ) இத்யாதி , —
அதாவது பக்தி ப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர் ஹேதுகமாக கடாஷித்து பவ்யனாக்கி கொண்டு போறும்
பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே ,
இவனுக்கு ஸம்சாரோத்தாரக மென்றபடி
ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே .

இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் ,
உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் ,
மஹா விஸ்வாச ரூபையான ப்ரபத்தியானது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக பாபஹரத்வேந தத்வர்த்தகமான வங்கமுமாய் ,
“ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178
( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,

“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில்
பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவையை .
இதுதான் , உபாய விஷயத்திலாம் போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ;
உபாய பக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது ,
ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்து விடும்;
பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற ,
ஸா -– ஸாத்ய பக்திஸ்து –
“ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் ,
ப்ராரப்தஸ்யாபி – கர்ம ஜ்ஞாந ஸஹ க்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் ,
ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ;
து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துக்குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ;

இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவஷிதராகையாலே ,அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ;
இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத் வாதிகளாலே , அங்கமுமாய் ,தேவமிவாசார்ய துபாஸீத “ ,ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே
என்மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல் வழி போங்கோளென்று சொல்லுகிற
“ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உப ப்ரும்மணத்தின் படியே
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப் போலே ,
உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்த ப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .

“ ஆசார்யான் புருஷோ வேதா “ ,ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –-
ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற ,
புருஷ: — முமுஷு வான புருஷன் ,
வேத -– அர்த்த பஞ்சகங்களை யலகலகாக வறியக் கடவன் .

“ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “ ப்ரபந்ந பாரிஜாதே –
குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) –

தமேவ –– அப்படிப்பட்ட ஆசார்யனையே ,
உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே ,
சரணம் –- ரக்ஷகனாக ,
வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .–என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் .
பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே
இந்த வாசார்யாபி மாநமாகிற சரம ப்ரபத்தியும் , ஸ்வதந்த்ரோபாயமாய் வந்தது ;
பக்திக்கந்தர்யாமி விஷயம் ,
ப்ரபத்திக்கச் சாந்வதாரம் விஷயம் ,
சரம ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெரு மானார் விஷயம் .
ப்ராக்ருத விக்ரஹ யுக்தரா யெழுந்தருளியிருக்கை யாலே ,அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே
ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;

“ ததப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று
சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்தபோதே கிடைக்க வில்லை யென்னும் ஆற்றாமையாகிற மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லிற்றே

ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததே யாகிலும் ,
எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் ,
இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்கையாலும் ,
பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .

——————–

ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;

தத் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென்கிற விவ்வர்த்தம் ,
பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் ,
பகவதா -– ஈஶ்வரனாலே ,
ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து ,
உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .

மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே ||

எங்ஙனேயென்னில்
ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே ,
ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வ ஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற ,
மம -– என்னுடைய ,-தத் –-ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான ,
ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது ,
பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாண குண புஷ்கலமாயும் ,
ஷட் விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் ,
பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .

பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||

அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன ,
பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் ,
அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ;( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள்வது )
அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே
ஸமஸ்த கல்யாண குண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரம் ,
இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே
தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற விவையிரண்டுமென்றும் ,
மே -– என்னுடையதான ,
ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது ,
ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .

—————-

பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன்முன்னானவைகள் காட்டில் ,
உத்தரோத்தர: — பின்பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக் காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் ,
தேஷு – அவைகளில் வைத்துக் கொண்டு ,
ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே ,
காருண்யம் – ஆஶ்ரித ஸம் ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது ,
பரிபூரிதம் –- வடிவிலே தொடைக் கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்

ஜ்ஞாநாதி குணதஸ் தத்ர விஶேஷா திஷ்டிதிர் பவேத் |
ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குரு பாவத: |
சரமஸ்ய வதாரஸ்ய குருரூபஸ்ய மே ஸதா ||
குருரூபஸ்ய –- ஆசார்ய ரூபத்தை யுடைத்தா யிருக்கிற ,
சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது ,
ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்க வேண்டியதான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே
“ பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடி வந்து கிட்டியிருப்பதாலும் ,
தயாளுத்வாத் -– கர்மாநுகுணமாக விவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே
ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் ,
ஜ்ஞாநித்வாத் – “ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் ,
குருபாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் ,
தத்ர – அந்த அவதாரத்தில் ,
ஜ்ஞாநாதிகுணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தின வவதார பஞ்சகத்திற் காட்டில் ,
மே – என்னுடைய ,
விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது ,
ஸதா –- எப்போதும் ,
பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .

ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந்மத்பாதயுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||
(அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் ,
ஸ்வ நிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ;
குணௌ – நமக்கவை குணங்களாக ,
நமதௌ – எண்ணப் பட்டதன்று ,
தஸ்மாத் -– ஆன படியாலே,-என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே -இத்தாலும் , எம்பெரு மானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் .
இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹா ப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன்
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனியனாய் இவன் கார்யம் செய்கைக்கும்
ஸ்வதந்த்ரனாய் சீறி யுதறி யுபேஷிக்கைக்கும் உடலாயிருக்கும் ;
அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக் கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதறமாட்டா மல் , கார்யம் செய்து விடுமோபாதி ,
சரணஸ்தாநீயரான வெம்பெருமானாரை பற்றினால் , அவன் பரம தயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .

———————

“ லோகே ச பாதபதநம் பாணி ஸங்க்ரஹணாதபி | தயா ஹேதுதயா த்ருஷ்டுமித்யுக்தம் சரணாவிதி “ என்றும் ;

லோகே ச -– இருள் தரு மா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட ,
பாத பதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது ,
பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் ,
தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக ,
த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று ,
சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) ,
உக்தம் –- சொல்லப்பட்டது .

“ அநதிக்ரமணீயம்ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரண க்ரஹண மமோகோபாயமிறே |
சரண க்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப் பிடித்துக் கொள்கையென்றால் ,
அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக்கூடாத தாய் இருக்குமிறே ;

பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின் விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .

நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்காலவர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்-இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன ,
உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ள வந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டு வந்தான் ,
ஒருவன் உம்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ;
காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன ,
அப்ப டியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம்
, அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் .
உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி
குலையாமல் ஸத்தையுடன் கிடைக் கப்பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வஜ்ஞாநமும் , அநந்யபக்தி யும் , அந்யவைராக்யமும் இல்லாவிடிலும் ,
மேலந்த ஸம்பந்தத் தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ;
ம்ருதஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்தாநுஷ்டாநாந்வயலேஸத் தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் ,
அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப்போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் .
ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட் டும் ;

அவத்யகரமாகையாவது , பகவந் நிக்ரஹத்தை விளைத்து யாவ தாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோ டுண்டான ஸம்பந்தம் ஸ்வரூபவிகாஸஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .

“ மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ்ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ –விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் என்று எம்பெருமான் தானே யருளிச் செய்தானிறே .-
ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே ,
ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற ,
மயி -– என்னிடத்தில் ,
யஸ்யது –- எவனுக்கானால் ,
பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
மோக்ஷகாமிநாம் முமுஷுக்களுக்கு ,
மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே ,
சரண்யம் — ரக்ஷகமாகக் கடவது .

“ ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: |
தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாதரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாதபாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “
என்று இறே நம்பிள்ளை யருளிச் செய்யும்படி ; அதாவது
எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரிய பெருமாள் , என்னை யாதரித்து “ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ;
அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு ,
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத் ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திதுவன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே ,-தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ;-இதென்ன வாச்சர்ய மென்று கண்டருளினாரென்றபடி ,
இத்தால் எம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியும் எம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது,
நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் பரம காருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே ஸம்ஸாரோத் தாரகமென்று கூடிய தாஸ்ய ருசியானது ,
ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ ,
தஸ்ய –- அந்த சேதநநுக்கு ,
ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது ,
பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ;
ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை .
( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ;
ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் ,
அன்றிக்கே பகவதநுபவகைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் ,
அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;

லக்ஷ்மண தேஶிகேந்த்ர – ஆசார்ய குல ஶிகாமணியான வெம்பெருமானாருடைய
( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக் காலைக் காட்டுகிறது ) ,
சரணத்வந்த் வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே
( மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),
ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான ,
ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் ,
மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று
எம்பெருமானார் தாமே காட்டிக் கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை ,
ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி ,
மஹா:பல ப்ரசவிதா – நித்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) ,
ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே ,
தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை ,
த்ருஷ்ட்வா – கடாஷித்தருளி ,
ரங்கநாத ரமணீ –( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநையும் திருத்தி
சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெருமாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –-
பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் ,
அயம் –- இந்த நம்பிள்ளை ,
ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபயவிபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும் படியான
ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று ,
மயி –- அடியேனிடத்தில் ,
ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற ,
தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை ,
ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ;
அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே ,
எம்பெருமானார் செய்தருளின விவ்வுபகாரம் ஆச்சர்ய கரமாயிருக்கிறதென்கிறார் .

சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கி யம்மாளுக்கு , எங்களாழ் வான் தாமுமருளிச் செய்தாறிறே .

ஸோமாஸியாண்டானும் ,

“ பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார

ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய் ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத் சரணார விந்தயுகள
சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற
பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி
ஸாத்யாயா: — ஸ்வ யத்ந ரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே ஸாதிக்கப்படுமதான,
பக்தே: — கர்ம ஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி யோகத்திற்கு ,
ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் ,
( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் ,
வர்ணா ஶ்ரம விஹிதக ர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தியோகத்தை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )

( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்தவிஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,
“ ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே ,
பக்தி யோகமானது நழுவும் போது ,
“ ஏவம் நியம யுக்தஸ் யாஶ்ரம விஹித கர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று
அந்த பக்தி யோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் ,
தத் ஸாத்யையான பக்தி யோகத்தோடு , ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று ,
இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ;
“ இவன் தானிவைதன்னை நேராக விட்டிலன் “ என்கிற க்ரமத்திலே ,
இவையெல்லாமிவனுக்கு வகுத்தவிடமான வெம் பெருமானாருடைய முகமலர்த்தியாகிற உபேயத்துக்கு ஶேஷமாய்க் கொண்டு ,
அத்தாலே யவர் விஷயத்தில் “ த்யாயேத்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா “ என்று ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட

( நிரவதிக ப்ரேம ரூப த்ருவாநுஸ்ம்ருதியென்கிற ) பக்தி யோகத்துக்கு நாடோறு மதிஶயாவஹங்களாகையாலே ,
மிகவுமுத்தேஶ்யங்களு முபாதேயதமங்களு மாயிருக்கும் –

இவ்வர்த்தங்களை ” ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டுமல்லாதார்க்கு பாயாங்கமாயிருக்கும் , இவனுக்குபேயாங்கமாயிருக்கும் “ என்று துடங்கி
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே பரக்க வருளிச் செய்தாறிறே –
இவ்வளவும் ப்ராஸங்கிகமாக சொல்லவேண்டித்து )

இனி ப்ரக்ருதார்த்தங் கள் சொல்லப்படுகிறது

பகவந்தமுபேத்ய தத் சரணாரவிந்த யுகள சரணா கதேரபி –
த்வா ச , ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி
சரணாரவிந்த சரணாகதிரேவ ஸர்வோஜ்ஜீவனாய பவதி இதி ஸமர்த்திதம் “ என்று
ஸ்வ ப்ரணீதமான சரமோபாய விவரணத்திலே யருளிச் செய்தார் இறே |

பகவந்தம் -– ஈஶ்வரனை ,
உபேத்ய –- கிட்டி ( இவ்விடத்தில் ப்ரபத்தி விவஷிதமாகையாலே யதுக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரத்திலே நோக்காய் ,
அதுதான் “பூர்ணம் “ என்கையாலே , ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு
ஆஶ்ரித கார்யாபாதகங்களான குணங்களோடு வாசியற
ஸகல கல்யாண குண பூர்ணமென்கிற விவ்வர்த் தத்தை இந்த பகவத் ஶப்தம் காட்டுகிறது ) ,
தத் சரணாரவிந்த யுகள சரணாகதேரபி —
தத்சரணாரவிந்தயுகள — அந்த வெம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிரண்டிலும் செய்யப்படுமதான ;
சரணாகதேரபி — உபாயாந்தர பரித்யாகமாகிற வங்கத்தோடே கூடி ,
ஸ்வதந்த்ரமாயிருந்துள்ள ப்ரபத்திக்கும் ; நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா —
நிரங்கு ஶைஸ்வர்ய -– பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் தனக்கு மேலற்ற நிர்வாஹக னான ;
பகவத் – எம்பெருமானுடையதான ,
ஸ்வாதந்த்ர்ய -– கர்ம நிபந்தனமாக ஸம்ஸரிப்பிக்கவும் ,
காருண்ய நிபந்தனமாக முக்தனாக்கவும் வல்ல ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ;
ஸ்மரண த்வாரா -– அநுஸந்திக்கிற வழியாலே ;
பீதி ஹேது த்வாச்ச – பலத்தில் ஸம்ஶயத்தால் வரும் பயத்துக்கு காரண மாகையாலும் ;
ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ;
ததுபயவிஷய -– அந்த பக்தி ப்ரபத்தி களிரண்டுக்கும் விஷயபூதனான ;
பகவத் — ஈஶ்வரனுடைய ;
அவதாரபூத -–அவதார விஶேஷமான ,
பரமகாருணிக – ( பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே , மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கையாலே )
ஈஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயிருக்கிற ,
ராமாநுஜயோகி – எம்பெருமானாருடைய ,
இவ்விடத்தில் யோகி என்கிற பதம் ஸுபாஶ்ரய மான வெம்பெருமானிடத்தில் தம் திருவுள்ளத்தை
ஸ்தாவர ப்ரதிஷ்டை யாக வைத்திருக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
சரணாரவிந்த – திருவடித் தாமரைகளிலே ( செய்யப்படுமதான ) ,
சரணாகதிரேவ – ப்ரபத்தி தானே ,ஸர்வோஜ்ஜீவனாய – அஜ்ஞ , விசேஷஜ்ஞ விபாகமறவெல்லாருடையவும் உஜ்ஜீவனத்தைப் பொருட்டு ,
பவதி இதி – ஆகிறதென்று ,
ஸமர்த்திதம் – நிர்வஹிக்கப்பட்டதென்கை |

வாதிகேசரி அழகிய மணவாளஜீயரும் 1 “ பார தந்த்ர்யம் ஸ்வரூபம் ஹி ஸர்வஜீவாத்மநாமபி | தத்வ்ருத்தா ஹி பக்திஸ்து ஜீவ யத்நாபி லாஷிணீ ||வாதிகேஸரி அழகியமணவாளச் சீயரருளிச் செய்த சரம குரு சரிதையில்,
ஸர்வ ஜீவாத்மநாமபி –- பத்த , முக்த , நித்யரென்கிற த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கும் ,
பாரதந்த்ர்யம் – ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கை ,
ஸ்வரூபம் ஹி – ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டிலும் அந்தரங்க நிரூபகமாகவே யிருக்கும் ,
ஜீவயத்நாபிலாஷிணி –- ( “ ஒன்றி நின்று நற்றவம் செய்து” என்கிற பாட்டிலும் ,“
புன்புல வழியடைத்து “ என்கிற பாட்டிலும் திருமழிசைப்பிரானருளிச் செய்த ) சேதந ப்ரயத்நங்களை யபேஷித்திருக்கிற
பக்திஸ்து — ( ஸர்வ க்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண ஸாதிக்கப்படுவதான)பக்தி யோகமோ வென்னில் ;
தத் விருத்தாஹி — அந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகவே யிருக்கும் |

த்யாகோ நிவ்ருத்தி ஸாத்யோயம் நிர்மலாநந்த ஸாயிந: | ஸ்வாதந்த்ர்ய ஸ்ம்ருதிமாத்ரேண பீதிஹேதுர்பவிஷ்யதி || 1
தஸ்மாத் பக்திம் ப்ரபத்திம் ச விஹாய விமலாஶயா: | அஸ்மத் ஆர்யா மஹாத்மாந: சரணாஶ்ரயா:|தத்க்ருதேந அபிமாநேந நிஸ்தரந்தி பவார்ணவம் ||

நிவ்ருத்தி ஸாத்ய: —
“ சிற்ற வேண்டா “ என்கிறபடியே பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ ப்ரவ்ருத்தியினுடைய நிவ்ருத்தியினாலே ஸாதிக்கப்படுமதான ,
அயம் த்யாக: — இந்த ப்ரபத்தியானது ; (
இவ்விடத்தில் புரோவர்த்தியாநத்தைக் காட்டுமதான “ அயம் “ என்கிற பதம் ப்ரயோகித்திருக்கையாலே ,
ப்ரபத்யுபாயமானது , ஸகல வேத வேதாந்தாதிகளிலும் புகழ் பெற்றதென்றும் ,
தர்மஜ்ஞ ருசி பரிக்ருஹீத மென்றும் ,
சரண்ய ஹ்ருதயாநுஸாரியென்றும் ,
பாரதந்த்ர்ய ஸ்வரூபத் துக்குசிதமானதென்றும் , இத்யாதிகளைக் காட்டுகிறது ),
நிர்மலானந்த ஸாயிந: ;
நிர்மல – அகிலஹேய ப்ரத்யநீகனாயும் ,
அநந்த ஸாயிந: — திரு வனந்தாழ்வானாகிற படுக்கையிலே சாய்ந்தருளுகிறவனாயுமிருக்கிற வெம் பெருமானுடைய ;
ஸ்வாதந்த்ர்ய ஸ்ருதி மாத்ரேண –
ஸ்வாதந்த்ர்ய – நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ,
ஸ்ம்ருதி மாத்ரேண –ஸ்மரண மாத்திரத்தினாலே ,
பீதி ஹேது: — ஃபலஸித்தியிலே ஶம்ஶயமாகிற பயத்துக்கு காரண மாக ,
பவிஷ்யதி – ஆகக்கடவது |

( இந்த ஶ்லோகத்தில் “ நிர்மல “ என்கிற பதம் “
அநஸ்நந்யோ அபிசாகசீதி“ என்கிற ஸ்ருதியில் சொல்லுகிற
“ தத் கத தோஷைர ஸம்ஸ்புருஷ்டத் வத்தை “
( அதாவது சேதந தோஷங்கள் ஈஶ்வரனுக்கு தட்டாமையை ) சொல்லுகிறது ,
ஸ்ருதியில் “ அபிசாக சீதி “ என்றிருப்பதால் ,
அகில ஹேயப்ரத்யநீகனாய் என்று அர்த்தமெழுத வேண்டிற்று ;
இப்படி விளங்கா நின்றுள்ள வீஶ்வரன் தான் சேதனனோடே ஏக தத்வமென்னலாம்படி பொருந்தி யிருக்கச் செய்தேயும் ,
“ தயோரந்ய:பிப்பலம் ஸ்வாத்வத்தி “ என்று அந்த ஸ்ருதியில் சொல்லுகிறபடியே
சேதநந் கர்மஃபலத்தை யநுபவிக்குமிடத் தில் –- தன் கர்மஃபலத்தை தான் புஜிக்கிறானென்று , உபேஷித்திருக்கை யாலே ,
“ நிர்மல” என்கிற குணம் ஸ்வாதந்த்ர்ய பயத்துக்கு ஹேதுவாகிறது|

இனி “ அனந்தஸாயிந: “ என்கிற பதத்தினர்த்தத்தை ஆராயுமிடத்தில் –-
அது தான் , ஸ்ரீநாரத பகவான் போல்வாரையும் ,
கச்ச நாரதமாசிரம் | ஏகாக்ராச்சிந்தயேயுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி “ என்று
ப்ரேமம் இல்லாதவராக விலக்க வேண்டும்படி நித்ய நிரவத்ய நிரதிசய ப்ரேமமுடையராய் “
அஸ்தாநேபயஸங்கிகளா “ யிருக்கிறவர்களுக்குத் தன்னுடம்பை ஸர்வ ஸ்வதாநமாக கொடுத்துக் கொண்டிருக்கும்படியைச் சொல்லுகையாலே ,
அநாதி கர்ம பரவசராய்க்கொண்டு , பகவதி ப்ரேம கந்தமே கண்டறியாத
நம்மை “ ஷிபாமி “ என்று தள்ளி விடுகைக்கு ஹேதுவாயிருக்கிற ஸ்வா தந்த்ர்யத்தினுடைய பயம் ஸித்தம் ;
இதுக்கு மேலே , பரதந்த்ர ஶேஷியாய்,மோஷ ஏக ஹேதுவான ஆசார்யாவதாரத்துக்கு ஊற்றுவாயான திருவநந் தாழ்வானும் ,
பகவத் ப்ரேம பரவசராய் , அஸ்தாநே பயஶங்கைபண்ணி ,“
தஹ்யமாநா வநந்தஸ்ய விஷ ஜ்வாலா ப்ரவேஸ “ என்று ,
ஷீராப்தி நாதனைக் கிட்டத் தேடுகிற மதுகைடபரென்கிற அசுரரை , தன் விஷ ஜ்வாலைகளாலே
உறுமாய்ந்துபோம்படி பண்ணுகிறவவதாநத்தை காட்டுகையாலே
“ அநந்தஸாயிநா “ என்கிறது மிகவும் பய ஹேதுவாயிருக்கும் |
“ வத்யதா மேஷ தண்டேன தீவ்ரேண ஸஸிவைஸ்ஸஹ | ராவணஸ்ய ந்ருஸம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: “ என்றிறே ,
ப்ரேம பரவசருடைய பரி மாற்றமிருக்கும்படி |
( ஸ்ரீநாரத பகவான் ஸ்வேததீபத்துக்கு எழுந்தருளி அங் குள்ள திவ்ய புருஷர்களை ஸேவித்து தத்ஸமீபத்தில் நின்று ,
ஊர்த்வ பாஹுவாய் ஸமாஹித சித்தனாய் , ஸர்வேஶ்வரனை , ஸ்ரீமஹா புருஷ ஸ்தவமென்கிற
பரம குஹ்யமான ஸ்தோத்ரத்தாலே ஸ்துதிக்க , அப்போது ஸர்வேஶ்வரன் ,
இவருக்கு தன்னுடைய விஶ்வ ரூபத்தை அநேக வர்ண ஸம்ஸ்தாநத்தோடு விசித்ரதரமாகக் காட்டிக்கொடுத்து ,
ஏகதத்விதத்ரிதர்க ளுக்கும் கூடக் காணவரிதான இந்த திவ்ய ரூபத்தை , ஏகாந்தி ஸத்தமராகை யாலே நீர் காணப்பெற்றீர் .
இவ்விடத்திலிருக்கிற திவ்ய புருஷர்களுடைய பக்திபாரவஸ்யத்தைப் பார்த்தால் , உம்முடைய பக்தி
குளப்படியென்ன வேண்டும்படியா யிருக்குமாகையாலே , அவர்களுடைய த்ருவாநுஸ்ம்ரு திக்கு விக்நம் தட்டாதபடி நீர்
இவ் விடத்திலிருந்து கடுகப் புறப்பட்டுப்போ மென்று ஸர்வேஶ்வரனருளிச் செய்ததாக ,
ஸ்ரீமஹாபாரத சாந்தி பர்வாந்தர் கத மோக்ஷ தர்ம பர்வத்தில் 339-340 அத்யாயங்களில்
சொல்லப்பட்ட வர்த்தம், இவ்விடத்தில் அநுஸந்தேயமாகக் கடவது | )

1 ( தஸ்மாதிதி ) , தஸ்மாத் – அந்தக்காரணத்தாலே ;
விமலாஶயா: — பரிசுத்தமான அந்த:கரணத்தை யுடையராய்
மஹாத்மாந: — ஸர்வஜ்ஞரா யிருக்கிற ;
( இவ்விடத்தில் , விமலாஶயா: — மஹாத்மாந: என்கிற பதங் கள் ,
“ மநஸாதுவிஸுத்தேந “ என்கிறபடியே
“ அறியவேண்டு மர்த்தமெல் லாமறிகைக்கு “ அந்த:கரண ஸுத்தி தான் ப்ரதானகாரணமென்று மர்த்தத் தைக் காட்டுகிறது “ )
அஸ்மதார்யா: — நம் பூருவாசாரியர்கள் ;
பக்திம் – ஸ்வரூப விருத்தமான பக்தி யோகத்தையும் ,
ப்ரபத்திம் ச -– “ ப்ரபத்யுபாயத் திக்கிக் குற்றங்கள் ஒன்றுமில்லை “ என்கிறபடியே
நிர்தோஷமாயிருக்கச் செய்தேயும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமுள்ளதான ப்ரபத்தியையும் ,
விஹாய –- விட்டு ,
ஸதாசார்ய சரணாஶ்ரயாஸ்ஸந்த: — அந்த ஸித்தோபா யத்துக்கு வேறாவதன்றியே தத் சரமாவதியான
ஸதாசார்யனுடைய திருவ டிகளே யுபாயோபேயமென் றாஶ்ரயித்தவர்களாய்க் கொண்டு ,
தத் க்ருதேந – அந்த ஸதாசார்யனாலே பண்ணப்பட்ட ,
அபிமாநேந -– இவன் நம்முடைய வனென்கிற அபிமாநத்தாலே ,
பவார்ணவம் –- ஸம்ஸார ஸாகரத்தை ,
நிஸ்தரந்தி -– கடக்கப் பாய்கிறார்கள் |

1 லகூபாயேந லப்தவ்யே:பலே மஹதி தேஹிநாம் |
குரூபாய த்வயாத் கிம்வா கர்த்தவ்யம்ஸ்யாந் முமுஷுபி: || என்று
சரமகுரு சரிதையிலே யருளிச் செய்தாறிறே |

1 ( லகூ பாயேநேதி )
தேஹிநாம் -– விரோதியான ப்ரக்ருதியோடு கூடி அதிட்டவழக்காயிருக்கிற சேதநவர்க்கத்திற்கு ,
மஹதி:பலே “ :பலமத உப பத்தே: “ என்று , எம்பெருமானாலேயே ஸித்திக்க வேண்டும்படியான
பெருமையை யுடையதாய் ஸகல புருஷார்த்த விலக்ஷணமான கைங்கர்ய ரூப :பலமானது ,
லகூபாயேந –- ( க்ருப மாத்ர ப்ரபந்நரான ஸதாசார்யரு டைய வபிமாநமாகிற ) ஸுலபோபாயத்தாலே ;
லப்த வ்யேஸதி –- அடைய த்தக்கதாயிருக்க ,
முமுஷுபி: — ப்ரக்ருதியினுடைய தோஷங்களையறிந்து ப்ராப்ய ருசி தலை யெடுத்திருக்குமதிகாரிகளாலே ;
குரூபாயத்வயாத் -– ஸ்வரூப விரோத பயத்தாலும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும் ,
துர்ல பங்களான பக்தி ப்ரபத்திகளால் ;
கர்த்தவ்யம் -– செய்யவேண்டுமது ;
கிம்வாஸ்யாத் -– என்னதானிருக்கும் |
ப்ரக்ருதி பரவசராகையாலே முமுஷுத்வமில்லாத சேதநர்களுக்கும் கூட , ஸதாசார்யாபிமாநத்தாலே பேறு லபிக்கத்தக்கதாயிருக்க ,
முமுஷுக்களாய் ஆசார்ய அபிமாநத்திலொதுங்கி யிருக்குமவர்களுக்குச் சொல்ல வேண்டா விறே ;
ஆகையாலே, இவர்களுக்கு பக்தி ப்ரபத்திகளால் கார்யமில்லை யென்றபடி |

ப்ராமாணிகாக்ரேசரரான பட்டரும் , “

2 பரம காருணிகச்ய பரமகுரோர் பகவத: ஸ்ரீமந் நாராயணஸ்ய புண்டரீக தளா மலாயதேக்ஷணமுக கமல விகாஸ

2 ஸ்ரீபராஶரபட்டார்ய ஸுக்தி |
( பரம காருணிகேத்யாதி )
பரமகாருணிகஸ்ய – ( “ ஈஶ்வரஶ்யச ஸௌஹார்த்தம் “ இத்யாதியில் படியே , ஆசார்ய ப்ராப்திக்கும் ப்ரதம ஹேது தானாகையாலே ) மேலான காருணிகனாய் ;
பரம குரோ: — “ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் “ என்று குரு பரம்பராதியிலே தன்னை யநுஸந்திக்க வேண்டுகையாலே , மேலானவாசார்யனாய் ;
பகவத: — அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதானனாய் ;
ஸ்ரீமந் நாராயணஸ்ய –
ஸ்ரீமத் – புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடே நித்ய ஸம்யுக்தனாயிருக்கிற ,
நாராயணஸ்ய -– எம்பெருமானுடைய ;
புண்டரீக தளாமலாயதேக்ஷண முககமலவிகாஸ ஹேதுபூதம் ஹி -–
புண்டரீக தள – வெள்ளைத் தாமரை தளங்களைப் போன்றதாயும் ,
அமல — நிர்மலங்களாயும் ,
ஆயத – நீண்டதுகளாயு மிருக்கிற ,
ஈக்ஷண -– திருக்கண்களை யுடைத்தான ,
முக கமல — திருமுக மண்டலமாகிற செந்தாமரையினுடைய,
விகாஸ — மலர்கைக்கு ,
ஹேது பூதம் ஹி – காரணபூதமாகவேயன்றோ ?
பகவத் ராமாநுஜ சரணார விந்த சரணவரணம் —
பகவத் ராமாநுஜ “ ஸர்வ கல்யாண ஸம்பூர்ணம் , ஸர்வஜ்ஞாநோப ப்ரும்ஹிதம் ;
ஆசார்யமாஶ்ர யேத் “ என்கிற ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையரான எம்பெருமானாருடைய ,
சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளிலே பண்ணும் ,
சரணவரணம் – சரணாகதி தானிருப்பது ; என்கை |
(இத்தால் எம்பெருமானார் திருவடிகளில் ஸமாஶ்ரயணமே ஸ்ரீமந்நாராயணனுடைய முக்கோல்லாஸ ஹேதுபூதமென்னதாயிற்று )
தஸ்மாத் -– அந்த ஹேதுவினாலே ,
ததேவ – அந்த எம்பெருமானாருடைய திருவடிகளிலே பண்ணும் ப்ரபத்தி தானே ,
அஸ்மாகம் – அஸ்மதாதிக ளுக்கு ,
உஜ்ஜீவனாய – உஜ்ஜீவிக்கைக்கு ,
அலமிதி -– போறுமென்று ,
அஸ்மத் தாதபாதா: — பூஜ்யரான நம் திருத்தகப்பனார் , மேநிறே – திருவுள்ளத்திலறுதியிட்டாரென்கை |

ஹேது பூதம் ஹி பகவத் ராமாநுஜ சரணாரவிந்த சரண வரணம் |
தஸ்மாத் ததேவாஸ்மாக முஜ்ஜீவனாயாலமித்யஸ்மத்தாத பாதாமேனிறே “ என்று
ஆழ்வானுடைய ஸித்தாந்தமாக குருப்ரபாவதீபி கையிலே யருளிச்செய்தார் |

1 லக்ஷ்மணாசார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய …..கலு தத் க்ருபா பரம் | யத் க்ஷணேன நிஜ முக்யமாநி தாம் வ்யுத்ஷிணோதி ……..

1 ( லக்ஷ்மணார்யேதி ) –
இந்த ஶ்லோகம் தான் எழுபத்துநாலு ஸிம்ஹா ஸநஸ்தர்களிலே முதலியாண்டான் போல்வாரான ஆசார்யர் அருளிச் செய்ததாயிருக்கும் |
இதில் எம்பெருமானார் ஸ்வாஶ்ரிதர்க்கு “ வித்யா மதோ , தந மத ஸ்ததைவாபிஜநோ மத: “ என்கிற முக்குறும்பை
ஸவாஸ நமாக நிரஸித்தபடியைச் சொல்லி , எவ்வழியாலுமவரே ரக்ஷகரென்று சொல்லுகிறது |
தத் க்ருபா , பரம் என்கிற பதங்களால் அவருடைய க்ரு பையே அவரை ஆஶ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகமென்றும் ,
கலு , என்று இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியும் , சொல்லுகையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு பூர்வ பாவியான அத்வேஷாதிகள் மாத்ரமே பகவத் க்ருபையாலே உண்டாகிற தத்தனைப் போக்கி ,
ஆசார்ய ப்ராப்திக்குப் பின்பு “ செயல் நன்றாக திருத்துகை “ ஆசார்ய க்ருத்தமென்னதாயித்து ;
“ ஆசார்யன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் “ என்னக் கடவதிறே |
உடையவர் தாம் ப்ரமா ணங்களைக் கொண்டு ஸ்வாஶ்ரிதரைத் தாமே திருத்துகை யன்றிக்கே,
திருக்கோட்டியூர் நம்பியைக்கொண்டும் , முதலியாண்டானுக்கு ஸ்வரூப சிக்ஷஐ ப்ரஸாதிப்பித்தருளினார் ;
இவரைப் பின்சென்றவாழ்வானும் பிள்ளை பிள்ளையாழ்வானுக்கு ஸ்வரூப சிஷை ப்ரஸாதித்தருளினார் |

“ திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கு “ மதிலும் காட்டில் ,
ததீயர்க்கும் அவர்கள் மிகவும் விரும்புகிற வாசார்யனுக்கும் இஷ்ட விநியோகார்ஹ னாம்படி செய்கை மிகவும் உத்தேஶ்யம் ;
ஸர்வேஶ்வரன் தானும் அடியார்க்காள்படுத்துமிறே |
இனி இவர்களைத் திருத்தி முக்குறும்பை ஸவாஸநமாக நிரஸித்தாலொழிய ,
அந்த உத்தேஸ்யம் தலைக் கட்டப் போகாது ; அதுவும் ஈஶ்வரனே செய்தா லோவென்னில் ?
அவன்தான் ஸ்வாதந்த்ர்யத்தாலே “ ந க்ஷமாமி “ என்று கொண்டு
“ அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் “ என்று , சீறுகையாலே
இவர்களைத் திருத்த விசையமாட்டான் ;
இப்படிப்பட்ட வெம்பெருமான் திருவுள்ள மறிந்து இவர்களை யவன் கையில் காட்டிக் கொடுக்கில் என்படுமோ என்று வயிறெரிந்து
க்ருபா மாத்ர ப்ரஸந்நராய் இவர்களை வரிந்து திருத்துகையா லிறே
“ லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாயகலு தத்க்ருபா பரம் “ என்றருளிச் செய்ததும் |
யத் – எந்த காரணத்தினாலே
( எம்பெருமானார் நிர்ஹேதுகமான தம்முடைய ஆஶ்ரித வாத்ஸல்யமே காரணமாக என்கை)
நிஜ முக்யமாநிதாம் –
நிஜ – தம்மைப் பற்றின ஆசார்யர்களிடத்தில் உண்டாகக் கடவதான ,
முக்யமாநி தாம் – முக்குறும்பை ,
ஃபலரீதி தத்வத: —
ஃபல — இவை இருப்பதாலும் , இவற்றை நிரஸிப்பதாலும் வரக் கடஃ:பலத் தினுடைய ,
ரீதி தத்வத: — ப்ரகார யாதாத்ம்யத்தாலே ,
( அதாவது ப்ரகா ரங்களை உள்ளபடிக் காட்டுகையாலே என்கை) |
க்ஷணேன – ஒரு நிமிஷத்திலே ஏக தேசமான அல்ப காலத்திலேயே ,
வ்யுத்ஷிணோதி –- ஸவாஸநமாக எடுத்துப் பொகடுகிறாரோ ,
தத் —அந்தக் காரணத்தினாலே ,
( யத்த தோர் நித்ய ஸம்பந்த: என்கிற ந்யாயத்தாலே இங்கு “தத்” சப்தம் வருகிறது )
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் – லக்ஷ்மணார்ய குரு -– “ ஆசார்யோ வேதஸம்பந்ந:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸர்வ லக்ஷண ஸம்பந்நராய் ஆஶ்ரிதர்க்கு அஜ்ஞாந நிவர்த்தகராயக் கொண்டு ,
உத்தாரக ஆசார்ய ரான எம்பெருமானாருடைய ,
பாதஸேவிநாம் – ( “ இராமாநுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ “ என்கிறபடியே , பரம ப்ராப்யமான )
திருவடி களை உபாயமாகப் பற்றினவர்களுடைய ,
ரக்ஷணாய – ரக்ஷணத்தின் பொருட்டு ,
தத் க்ருபா பரம் கலு – அந்த வெம்பெருமானாருடைய க்ருபை தானே யன்றோ ? அமைந்திருக்கிறது |
இப்படி ஸ்வரூப சோதநமே பிடித்து :பலரீதி த்த்வத: “ என்று பூர்வர்கள் சொல்லும் முக்தகமிறே |

1 “ ஸ்வ வ்யாபாரேண ஸாத்யா பஜநகதிரியம் ஸ்வாநுரூபத்வஹா நாத்யாஜ்யா பூஜ்யைஹி ப்ரபந்நைச் சரண வரணிதா தேஶிகைர் நாப்யுபாத்தா |
கிம்த்வாசார்யாபிமாநாத் பரமபதமஹோ லப்யதே நாந்யதோ , ந தஸ்மாத் ராமாநுஜாங்க்ரி த்விதீயமநுபமம் ஸாதநம் பாவயாம: “
என்று
பக்தி ப்ரபத்திகளை த்யாஜ்ய கோடியிலேயாக்கி தத் க்ருபையினாலேயாயிருக்க ,
பேற்றுக்கவர் திருவடிகளே ஸாதநமென்பது , கிம் புநர் ந்யாய ஸித்தமிறே யென்கை |

1 நாயனாராச்சாம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்தி | ( ஸ்வ வ்யாபாரே ணேதி ) –
ஸ்வ வ்யாபாரேண -– ஸ்வப்ரயத்நத்தாலே
( இங்குச் சொல்ல வேண்டிய வர்த்த விஶேஷங்களெல்லாம் , இதற்கு முன்னமே சொல்லப் பட்டிருக்கிறது ) ;
ஸாத்யா – ஸாதிக்கப்படுவதான ,
இயம் பஜநகதி: — இந்த பக்த்யுபாயமானது
( இவ்விடத்தில் ஸமீப வர்த்தியாநத்தைக் காட்டுகிற இயம் என்கிற பதம் ஸ்ரீபாஷ்யத்திலறுதியிட்ட
இந்த பக்த்யுபாயத்தின் ப்ராதாந்யம் இவர் திருவுள்ளத்திலோடுகின்ற படியைக் காட்டுகிறது )
ஸ்வாநு ரூபத்வ ஹாநாத் —
ஸ்வ – பரதந்த்ரனான தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநுகுணமாயிருக்கும்படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கை யாலே ,
பூஜ்யை: — பூஜ்யராயிருக்கிற ,
ப்ரபந்நை: — ஜ்ஞாநாதிக்யத்தாலே , ப்ரபந்நரான நாத யாமுந யதிவராதிகளாலே ,
த்யாஜ்யா -– த்யஜிக்கத் தக்க தாய்விட்டது ; ( அப்படியே )
தேஶிகை: — நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு கட வரான அந்த ஆசார்யர்களாலே ,
சரணவரணிதாபி -– பகவச் சரணாரவிந்த சரணாகதனாயிருக்கும்படியும் ,
ஸ்வாநுரூபத்வ ஹாநாத் –
ஸ்வ -– ஆசார்ய பரதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநு குணமாயிருக்கும் படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கையாலே ,
நோபாத்தா –- அங்கீகரிக்கப்படவில்லை |
அதவா -–
பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்கும் ப்ரஶக்தியில்லாததாக அங்கீகரிக்கப்படவில்லையென்னுமாம் |
கிந்து -– பின்னையோவென்னில் ,
ஆசார்யாபிமாநாத் -– “ ஆசிநோதிஹி ஶாஸ்த்ரார்த்தான் “ இத்யாதி ப்ரகாரங்களாலே
பரிபூர்ணனான ஸதாசார்ய னுடைய வபிமாநத்தாலே |
பரமபதம் – நலமந்தமில்லதோர் நாடானது ,
லப்யதே –- அடையப் படுகிறது ; ( என்றும் )
அந்யத: — பகவத் பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பக்த்யுபாயமென்ன
ஆசார்ய பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பகவத் சரணாரவிந்த சரணாகதியென்ன ,
இவைகளாலே , ந லப்யதே – அடையப் படுகிறதில்லை ;
ந சேஜ்யயா “ )
பக்த்யா த்வநந்யயா ஸக்ய: ( இத்யாதி பரஸ்ஸதங்களான ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே |
“ உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய “
ஏவம் நியமயுக் தஸ்ய ; இத்யாதி ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான வதிகாரியினாலே அடையப்படுமதான பரமபதமானது ,
ஆசார்யாபிமான ரூப ஸுலபோபாயத்தாலே லபிக்கப்படுகிறதென்கிறது ) ஆஶ்சர்யமென்னபடி |
தஸ்மாத் –- இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரக மாகையாலே ,
ந: — அஸ்மதாதிகளுக்கு
இராமாநுஜாங்க்ரித்விதயம் — இராமாநுஜ –- ( உபாயாத்மகமானவாசார்யத்வ முள்ள ) எம்பெருமானா ருடைய ,
அங்க்ரித்விதயம் -– திருவடிகளிரண்டுமே,
அநுபமம் – இதர நிரபேக்ஷமாகையாலே நிகரின்றிக்கே இருக்கிற ,
ஸாதநம் -– உபாயமாக ,
பாவயாம: — அத்யவஸிக்கக்கடவோம் | 1
எம்பெருமானாருடைய வபிமாநத்தாலே பேறு தப்பாதென்று , தத் சரணார விந்தங்களை
யுபாயமாக வறுதியிட்டார் இறே நாயனாராச்சாம் பிள்ளையும் |

இப்படி நம் பூர்வ ஆசார்யார்களனைவரும் ப்ரமாண புரஸ் ஸரமாக வெம்பெருமானாரிடத்திலே யுத்தாரகக்வத்தை யறுதி யிட்டு ,
அவர் அபிமாநத்திலே யொதுங்கி “ தேவுமற்றறியேன் “ என்று ததேகநிஷ்டராய் போந்தார்களிறே |
ஆகையால் எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தத்துக் கிசையாதே
“ தொண்டுக்கே கோலம் பூண்டு” என்கிறபடியே குழச்சியிடுவதும் , கும்பிடுவதுமாய் கொண்டு
பரப்ரா மகராய்த் திரியும் துர்மாநிகளான கள்ளக் கழணிமிண்டர்க்கு ,
யாவ தாத்மபாவி யீஶ்வரன் பல:ப்ரதனன்றிக்கே, ஸம்ஸார ஸாகரத்திலே யழுந்தி போரும்படி யிட்டு வைப்பன் |
இவ்வர்த்தத்தை , இராமாநுசன் மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடை புன்மையினோர்க் கென்றும்
நன்மை செய்யா பெருந்தேவரைப் பரவும் பெரியோர் “
என்று ஸ்பஷ்டமாக வருளிச் செய்தார் இறே |

1 “ யஸ் ஸ்ரீலக்ஷ்மண யோகி வர்ய சரண த்வந்த்வாஶ்ரயீ நா பவத் தஸ்யாத்யந்த தயாதி ஸத் குணநிதிர் நாராயண ஸ்ரீபதி: |  நஞ்ஜீயரருளிச் செய்த ஸ்ரீஸூக்தி

( யஸ் ஸ்ரீலக்ஷ்மணேதி ) –
ய: — எந்த சேதநந் ,
ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய , சரண த்வந்த்வாஶ்ரயீ — ஸ்ரீ – ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் , லக்ஷ்மண யோகி வர்ய – சேஷாவதாரமென்று ஸூசிக்குமதான
லக்ஷ்மண னென்கிற திருநாமத்தையுடைய யோகிஶ்ரேஷ்டருடைய
( இளைய பெரு மாள் “ ந தேவ லோகாக்ரமணம் “ ) என்னிருந்தாப்போலே இவரும்
“ காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மானை “ யல்ல தறியாரிரே ) |
சரணத்வந்த்வாஶ்ரயீ -– ஒன்றைக்காட்டிலுமொன்று போக்யமாய் ஸேர்த்தி யழகையுடைய இரண்டு திருவடிகளுமே
யுபாயோபேயத்வேந தாதும் முக்தி மனாதரோபவ ப்ருஹத் வாராஸயே ஸந்ததம் நிஷேப்யைவ ஹ்ருதாபிநோ
கணயதி ப்ராக் சித்த கர்மேரித: “ என்று நஞ்ஜீயர் இவ் வர்த்தத்தை யருளிச் செய்தார் ;

அதாவது
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த ரஹிதநாய் நான் வைஷ்ணவனென்று யாதொருத்தன்
ப்ரஸித்தி தோற்றவிருக்கிறான் , அவனுக்கு நிரவதிக வாத்ஸல்ய யுக்தனான ஸர்வேஶ்வரன் ,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரருகிலிருந்தாலும் தயாதி குண பரிபூர்ணனாயிருந் தாலும் ,
மோக்ஷபலம் கொடாமல் அநாதரித்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே தள்ளியிட்டு வைத்து ,
அவன் தான் தன்னுடைய அநாதி சித்தமான கர்மத்துக்கு பரவசனாகி , இப்படி அநர்த்தப்பட்டானென்று கொண்டு ,
என் செய்தான் , என் பட்டான், என்று , திருவுள்ளத்தாலும் எண்ணானென்னபடி —
இப்படி பரம காருணிகராய் , பரமோத்தாரகரான வெம்பெருமானர் அபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் வைஷ்ணவாதிகாரி , த
னக்கு ஸஹவாஸ யோக்யரும் ஸதாநுபவ யோக்யரும் , ஸத்கார யோக்யரும் , உண்டாம்படி தேடிக் கொண்டிருக்க வேணும் ;
இல்லை யாகில் ஸ்வ ஸ்வரூப ப்ரத்யுதிவந்து அத:பதித்து விடுவன் ,
இதில் , ஸஹவாஸ யோக்யராகிறார் , மரு வற்ற சரம பர்வ நிஷ்டராய் , எம்பெருமானாருடைய பற்றினவனாக ,
ந பவத் — ஆகவில்லையோ ,
தஸ்ய — அந்த சேதநநுக்கு ,
( இந்த பதத்துக்கு தாதும் முக்திமநாதர: என்கிற பதங்களோடு ஸம்பந்தம் )
நாராயண: — நிரவதிக வாத்ஸல்யாதி கல்யாண குணயுக்தனான ஸர்வேஶ்வரன் ,
ஸ்ரீபதி: — புருஷகாரபூதையான பிராட்டி சொல்வழி வருமவனாயிருந்தாலும்
அத்யந்த தயாதி ஸத்குணநிதி: — நிரவதிக க்ருபாதி குண பரிபூர்ணனாயிருந்தாலும் ,
முக்திம் -– மோக்ஷத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
அநாதரஸ் ஸந் – ஆதரமில்லாதவனாய்க் கொண்டு( ராமாநுஜ பதாஶ்ரயனாகாத வந்த சேதனனை ) ,
ப்ருஹத்வாராஸயே -– ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே ,
நிஷேப்யைவ — “ ஷிபாமி “ என்கிற படியே மறுவலிடாதபடி தள்ளி விட்டு ,
( அயம் ) ப்ராக் ஸித்தி கர்மேரித: — ( இதி ) ( இவன் தான் ) தன்னுடைய அநாதி சித்தமான
கர்மத்தாலே ப்ரேரிதனாய் ( இப்படி அதோ கதி யடைந்தானென்று கொண்டு ) ,
ஹ்ருதாபி – ஒருக்காலும் மனஸ்ஸாலும் கூட ,
நோ கணயதி – ( இவன் என்பட்டான் என் செய்தான் என்று ) எண்ணமாட்டானென்கை |

# ( குண:ப்ரதிபாதகமான ) திவ்யஸூக்திகளை ப்ரஸங்கிக்கில் ,
இவையும் சில ஸூக்திகளிருந்தபடியே , பாவியேன் , இவற்றை யநாதி காலமிழந்து கெட்டேன் , என்று நெஞ்சுருகி
யீடுபட்டிருக்கு மவர்கள் ; ஸதாநுபவ யோக்யராகிறார் ,
எம்பெருமானார் திருநாம த்தை யுச்சரியா விடில் நாக்கு வற்றுமென்று ததேகாநுஸந்தான தத் பரராய் ,
ததுக்தி ஶ்ரவணத்தில் ப்ரணவராய் , ஸர்வநேத்ராங்க விக்ரி யையை யுடையவராய் ,
தத் விஷயத்தில் ப்ரவணராயிருக்குமவர்கள்; ஸத்காரயோக்யராகிறார் ,
தேஹயாத்ரையில் உபேஷை பிறந்து , ஆத்ம யாத்ரையில் மிக்க வபிநிவேஶத்தை யுடையராய் ,
ததீயாபிமா நத்திலே யொதுங்கி எம்பெருமானாருடைய திருநாமாநுஸந்தாநத் தாலே மாதுகரங்கொண்டு , தேஹதாரணம் பண்ணி வர்த்திக்குமவர்கள் |
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களிலே மக்நாஶயரல் லாதாரோடு ஸஹவாஸம் , சரம பர்வாதிகாரிக்கு அவத்யமாயிருக்கும் ;
“ இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரே னெனக்கென்ன தாழ்வினியே “, என்றும் , அருளிச்செய்து வைத்தார் இறே |
இவ் வதிகாரிக்கு க்ஷணமுமிடைவிடாமல் காலஷேபத்துக்கு விஷயமாகிறது

# ( குணப்ரதிபாதகமாக ) என்கிற குண்டலித க்ரந்தமில்லாவிடிலும் , அழகி யது .
1 ( த்வத் ப்ரபந்த பரிஶீலநைரிதி ) – இதுதான் எம்பெருமானார் விஷயமான ப்ரார்தநா பஞ்சகத்தில் ஶ்லோகமாயிருக்கும் .
இதில் எம்பெருமானாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களுடைய பரிசீலநத்தால் கால யாபநம் பெறவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறது . “
பராங்குச முனீந்த்ராதி “ என்கிற ஶ்லோகத்திலே அருளிச் செயல்களில் ருசியை ப்ரார்த்திக்கிறவர்
அதற்கு முன் ஸ்ரீபாஷ்யாதி பரிசீலநத்தை ப்ரார்த்திப்பானெ னென்னில் ? —
“ 1 த்வத் ப்ரபந்த பரிஶீலநை: காலஷேபோஸ்து-என்கிறபடியே
தத் ப்ரதிபாதிதமான வேதாந்த க்ரந்தங்களும் , பகவத்  குணாநுபவரூபாதி திவ்ய ஸூக்திகளும் ;
திவ்யஸூக்திகளாவன –- ஆழ்வார்களுடைய வருளிச்செயல்களும் , திருப்பாவையும்
பூர்வா சார்யர்களருளிச் செய்த ரஹஸ்யங்களும் .
இனி யிந்த சரமாகாதிகாரிக்கு நாலு நிலையுண்டு , அதாவது ,
ஸ்வரூப ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப நிஷ்டையென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையென்றும் நாலுவகையாயிருக்கும் ;

இவற்றில் ஸ்வரூபஜ்ஞாநமாவது-
பகவத் பரதந்த்ரமாயிருக்கிற வசா தாரணாகாரத்தை யெவ்வழியாலும் ஸத்தை குலையாமல் நின்று ணர்ந்து ,
அதுதான் ததீயபர்யந்தமாகாவிடில் குலையுமாகையாலே
யெம்பெருமானாருக்கும் ததீயருக்கும் , அத்யந்த பரதந்த்ரமா யிருக்கு மென்றறுதி யிட்டு ,
ததேக நிஷ்டராயிருக்கு மிருப்பை யுள்ளபடியறிகை

ஸ்வரூபநிஷ்டையாவது , இஷ்ட விநியோகார்ஹ ஸ்வரூபமான-Two lines of handwritten Telugu manuscript–எழுதியது புரியவில்லை

“ மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் “ என்கிறவிடத்தில் ஸ்ரீபாஷ்யத்தை யருளிச் செயல்களுக்குக் காவலாகச் சொல்லுகையாலே .
இனி , இந்த ஶ்லோகத்தில் “ ஆமோக்ஷம் லக்ஷ்மணார்ய “ இத்யாதி பதங்களுமிருக்கையாலே , அவைகளையும் சேர்த்துக் கொண்டு அர்த்தமெழுதப்படுகிறது .
ஹே லக்ஷ்மணார்ய – அபியுக்தாக்ரேசரரான வெம்பெருமானாரே ,
ஸத்பி: — தேவரீரபிமாநத்திலே யொதுங்கியிருக்கும் ஸத்துக்களோடே ,
ஸஹவாஸம் — ஸஹவாஸத்தை ,
உபேயுஷாம் – அடைந்திருக்கிற ,
ந: — அடியோங்க ளுக்கு ,
த்வத் ப்ரபந்தபரிசீலனை –
த்வத் – தேவரீராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ,
ப்ரபந்த -– ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களினுடைய ,
பரிசீலனை –- பரிசீல நத்தாலே
( பரி என்கிற உபஸர்க்கத்தோடு கூடின இந்த பதம் அந்த க்ரந்தங்களி லறுதியிடப்பட்ட அர்த்தங்களில்
ஓன்றும் நழுவாதபடி அடிக்கடி ஸேவிக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
காலஷேப: — கால க்ஷேபமாக ,
அஸ்து –- ஆகக் கடவது ;
இப்படியெத்தனை நாள் வரையென்னில் ?
ஆமோக்ஷம் -– மோக்ஷமுண்டாகிற வரையிலும் . ( ப்ரக்ருதிஸம்பந்தமிருக் கிறவரையிலும் )
மந்யதா ப்ரதிபத்யாதிகள் துர்ஜயமாகையாலும் ,
அதுகளை ஸ்ரீபாஷ்யாதி ஸூக்திகளாலே பல படியாக நிரஸித்திருக்கையாலும் ,
மோக்ஷமுண்டாகிற வரையில் , இன்னமொரு ஜந்மமுண்டாகிலும் அப்போதும் இவற்றினுடைய பரிஶீலநமே
காலஷேபமாயிருக்க வேணுமென்று ப்ரார்த்திக்கிறார் ) .

ததீயஶேஷத்வம் ;
1 “ அகிஞ்சித் காரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: “ என்கிறபடியே

1 ( அகிஞ்சித்கரஸ்யேதி ) —-
அகிஞ்சித் கரஸ்ய – கிஞ்சித்கரியாதவனுக்கு ,
ஶேஷத்வாநுபபத்தி: — ஶேஷத்வத்தினுடைய வுபபத்தியில்லை என்கை

கிஞ்சித்காரமில்லாதபோது அந்த ஶேஷத்வம் நிலை நில்லாமையாலே ,
தத் சித்யர்த்தமாக , தத் ப்ரதிஸம்பந்திகளாய் பரம ஶேஷிகளான எம்பெருமானாரபிமான நிஷ்டர் விஷயத்திலும் ,
த்ரிவித கரணத்தாலும் , கிஞ்சித்கரித்துப்போரும் நிலையிலேயொரு படப் பண்ணுகை .

ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமானது
எம்பெருமானா ருடைய வபிமாநத்திலொதுங்கி , தத் விஷய கிஞ்சித்காரத்தாலே நிலையையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ,
அவ்யபிசாரிணியான பக்தியைப் பண்ணி , தத் விஷய விஷயீகாரத்திலே ஸ்வ ஸ்வரூபத்தைச் சொறுகியிட்டு ,
இந்த ஸ்வரூபம் அத்தலைக்கே யுறுப்பாய் விநியோகப்படவேணுமென்று
இவ்வர்த்தத்தினுடைய நித்ய ப்ரார்த் தனையிலே நிலையுடையனா யிருக்குமிருப்பை யுள்ளபடியறிகை ; “
உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கியங்காட் படுத்தே “ என்று , அமுதனாரும் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தார் இறே

ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையாவது ,
சரம பர்வமான எம்பெருமானாருடைய முக விகாஸத்துக் குடலாக ததீய விஷய கிஞ்சித்காரத் தாலும்,
தன் முக விகாஸ ஹேதுவான தத் சேஷ விஷய கிஞ்சித்காரத் தாலும்,
ஸ்வரூபத்தை விநியோகார்ஹமாம்படி , தத்தத் சந்தாநு வர்த்தன பூர்வகமாக
அஶேஷ ஶேஷ வ்ருத்தியிலுமந்வயிப்பித்து , அதுதான் தத் தத் விஷய பூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
பரம்பரா பர்யந்தமாக த்ரிவித கரணத்தாலும் பர்யவஸிக்கும்படி பண்ணி ,
தத் விஷய கிஞ்சித்காராபாவத்தில் ஆத்ம ஸத்தையில்லை யென்னும் படியான நிலை பிறந்து ததேகநிஷ்டையிலே தத்பரனாயிருக்கை .
இனி இவ்வர்த்த நிஷ்டைதான் ஓரொருவர்க்கு சரம ஶேஷியான. வெம்பெருமானாருடைய கடாக்ஷ விசேஷத்தாலே
லபிக்குமதொழிய மற்றபடி துர்லபமாயிற்று ;
ஆகையாலேயிறே அந்த சந்தத்தில் சரம சேஷியான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம்
ஸார்வத்ரி கமன்றிக்கே , தேடிப் பிடிக்க வேண்டும்படி க்வாசித்க மாயிருக்கிறது .

“ அஸ்மிந்நர்தே விஶ்வாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி | மத் கடாஷோ பவேத் யஸ்மிந் மய்யேவ ப்ரவணோஹிய: |
தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ் தோயம் பவிஷ்யதி ந ஶம்ஶய
: “ என்று ,
எம்பெருமான் தானே சரம பர்வ விஷயமான ப்ரதிபத்தி , தத் கடாக்ஷமடியாக வுண்டாகவேணுமென்று சொல்லிவைத்தானிறே .
உஜ்ஜீவநேச்சுவான வதிகாரி , தனக்கு , ப்ரதமத்திலே சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் விளைகைக் குடலாக ,
ததபிமாந நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலுமநுவர்த்தநம் பண்ணி , ததவசர ப்ரதீக்ஷனாய் ,
தனக்கவர்கள் ஸ்வரூப ஸோதநம் கொடுத்து, தன்னை விரும்பி மேல் விழுந்து , தத் குண வைபவத்தை யுபதேசிக்க
சுக்கான் பாறை போலே கடின ஹ்ருதயனன்றிக்கே நெஞ்சிரக்கமுடை யனாய்ச் செவிதாழ்த்து ,
கண்ணும் கண்ணீருமா யிருக்கும் படியான பரிபாக தசை பிறந்தால் ,சரமசேஷி கடாக்ஷம் பிறந்து
தடையின்றி யிலே யிவன் பக்கல் ப்ரவஹிக்கும் ;
பின்பு , தத் ஸம்பந்தம் அபிச் சின்ன ஸ்ரோதோ ரூபேண நடந்து செல்லுமிறே .
இப்படிப்பட்ட ஸம் பந்தத்தை இவனுக்கவர்களுணர்த்தும்போது , இவன் அறியாததாய் ,
எம்பெருமானாரும் ததீயருமறிந்ததாயிருப்பன சில கைமுதலிவன் பக்கலுண்டாயிருக்கவேணுமிறே ;
அவையாவன : —
நிரங்குஸ ஸ்வ தந்த்ரனாய் நிருபாதிக ஶேஷியான வெம்பெருமான் ,
இவ்வதிகாரியி னிடத்திலே நன்மையை நினைக்கும் படியான குளிர்ந்த திருவுள்ள த்தை யுடையனாக வேணும் ;
அதுக்கடியாக விவனுக்கு ஜ்ஞாதமாய் , அவனுக்கு ஜ்ஞாதமா யிருப்பதொரு யாத்ருச்சிக ஸூஹ்ருதம் பிறந்திருக்க வேணும் ;
இவன் பக்கலேதேனும் யாத்ருச்சிகமாக ஒரு நன்மை காணும் போது என்றோவென்று ,
எங்குமொக்க வ்யாப்தி பண்ணி யவ காசம் பார்த்திருக்கும் ஸர்வேஶ்வரனுடைய கடாக்ஷ விஶேஷம்
இவன் பக்கல் அபிமுகமாயிருக்க வேணும் ;
இப்படி யெம்பெருமானுடைய விஶேஷ கடாக்ஷ மபிமுகமான தசையிலே , பகவத் ப்ரஸங்கம் வந் தால் ,
சிவிட்கென்று த்வேஷம் கொண்டாடாமல் , அநுமதி ப்ரதனா யிருக்கவேணும் ;
இதடியாக பகவத் குண விக்ரஹ விபூதி தர்சநத்தில் முகம் மாறாடாமல ,அபிமுகனா யிருக்கும் படியான நினைவு பிறக்க வேணும் ;
இதுக்கெல்லாமடியாக இவை இத்தனையும் பெற்று , பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய ஜ்ஞாநத்தையுடையராய்
நிஷ் க்ருஷ்ட ஸத்வ குண நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஸம்பந்தத்துக்கு பூர்வபாவியான ஸம்பாஷணமுண்டாக வேணும் ;
இவையித்த னையுமுண்டாகிலிறே , இவனுக்கு ஸதாசார்யராய் சரம பர்வனான வெம்பெருமானாரோடு ஸம்பந்தம் சித்திப்பது .
“ ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தம்( ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தமிதி ) –
இந்த ஶ்லோகந்தான் இப் ப்ரபந்தத்துக்கு நாயக ரத்னமாயிருக்கிறது .
ஆசார்ய ப்ராப்திக்காக வீஶ்வரன் பண்ணுகிற க்ருஷி பரம்பரைகளைச் சொல்லுகையாலே , சரமோபாயவைபவத்தைப் பற்றி இதுக்குமேல் வக்தவ்யாம்ஶமில்லை .
ஆஶ்ரயண ஸௌகர்ய ஆபாத கங்களான வாத்ஸல்ய , ஸ்வாமித்வ , ஸௌஶீல்ய , ஸௌலப்யங்களும்,
ஆஶ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞாந , ஶக்திகளுமாக , பகவத் ப்ராப்திக்கு ஆறு குணங்கள் போலே ,
ஆசார்ய ப்ராப்திக்கும் இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற ஆறு ஹேதுக்களும் அக் குணங்களோடு
இவற்றுக்கு உண்டான ஸாதர்ம்யத்தை க்ரந்த விஸ்தரபயத்தாலே இவ்விடத்தில் ப்ரதி பாதிக்கிக்கிறிலோம் .
ஈஸ்வரஸ்ய –- ஸர்வ நியந்தாவான வெம்பெருமா னுடைய ஸௌஹார்தம் –
சேதந விஷயத்தில் நன்மையை நினைப்பிடு கைக்கீடான நல்ல ஹ்ருதயமும் ,
( இவ்விடத்தில் , ஈஸ்வரபதம் “ மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹ நம் ச “ என்று கர்மாநுகுணமாக
பந்தமோக்ஷங்க ளிரண்டுக்கும் கடவனாயிருக்கும்படியைக் காட்டுகிறது .
ச -– என்கிற , அவ்யவம் , இப்படிப்பட்டவனுக்கு ஸௌஹார்தம் ஜநிக்கை யறிதென்னும் படியான வதிஸங்கையைக் காட்டுகிறது ;
நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே இவனை ஸம்ஸார ஹேது வான நிக்ரஹ ஸக்திக்கிலக்காக்கி
“ ஷிபாமி “ என்று தள்ளி வைத்தமையை பார்த்தால் , இவனுக்கும் ஸௌஹார்த மென்பதுண்டோ என்று அதிசங்கை பண்ண வேண்டும்படியிறே யிருப்பது .
இனி ஸௌஹார்தம் என்கிற பதம் நிருபாதிக ஸ்நேஹத்தைக் காட்டு கிறது ;
பிதா புத்ர ஸம்பந்தத்தாலே ஸ்நேஹம் நிருபாதிகமாகவே இருக்கும் ;
“ ஷிபாமி “ என்பதும் ஹித பரனாய்ச் செய்தவித்தனை )
இப்படி நிருபாதிக ஸ்நேஹ யுக்தனான வீஶ்வரனிவனிடத்தில் நன்மை–
யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாதத் வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம்
ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: “ என்று இறே
இதுக்கு நினைக்கும்படியைச் சொல்லுகிறது மேல் ,
யத்ருச்சா ஸுஹ்ருதம் –
விடாயைத்தீர்த்தாய் , ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் ; என்றாப்போலே ஈஶ்வரனே உண்டாக்குகிற யாத்ருச்சிக ஸுஹ்ருதமும் ,
ததா –- ஸௌ ஹார்தத்தாலே யாத்ருச்சா ஸுஹ்ருதம் பிறந்தாப்போலே ,
விஷ்ணோ: ப்ரஸாதாத் -– ஸர்வ வ்யாபகனான , அவனுடைய அநுக்ரஹத்தாலே ,
அத்வேஷ அபிமுக்யம் ச –- பகவத் ப்ரஸங்கத்தில் த்வேஷமில்லாமை யென்ன
பகவத் குண விக்ரஹாதிகளி லாபிமுக்யமென்ன ,
விவை யிரண்டும் ,
ஸாத்விகை: ஸம்பாஷணம் – வேதங்கற்பான் போன்ற பரம ஸாத்வி கரோடு ஸம்பாஷணமும் , ஏதாநிஷட் -– ( ஆகிற ) இவையாறும் ,
ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: — ஆசார்ய ப்ராப்திக்குக் காரணங்களாகின்றன .
( இவற்றில் விஷ்ணோ: என்கிற பதம் ஸர்வத்ர வ்யாபித்து நிற்கும்படியைச் சொல்லுகையாலே
நிருபாதிக ஸ்நேஹ விஶிஷ்டனான வீஶ்வரன் சேதநனிடத்தில் யத்ருச்சா ஸுஹ்ருதம் கிடைக்கும்போது , என்றோ , என்று ,
அவசர ப்ரதீக்ஷனா யிருக்கும்படியைக் காட்டுகிறது .
ததா – என்கிற அவ்யயமும்,
ப்ரஸாதாத் என்கிற பஞ்சம்யந்த பதமும் நிருபாதிக ஸ்நேஹத்தாலே யத்ருச்சா ஸுஹ்ருதத்தைத் தேடிப் பிடித்தாப்போலே ,
க்ருபையாலே அத்வேஷாதிகள் உண்டாக்கினபடி சொல்லுகிறது .
அத்வேஷத்துக்கும் , ஆபிமுக்யத்துக்கும் ஹேது பகவத் ப்ரஸாதமே தவிர , யத்ருச்சா ஸுஹ்ரு தமன் னென்னுமிடம்
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே ஸுஸ்பஷ்டம் .

பகவத் ப்ரஸாதத்துக்கு யத்ருச்சாஸுஹ்ருதம் காரணமானதும் , வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராமைக்காக வாயிற்று ;
இல்லையாகில் ஸௌஹார் தத்தாலே பகவத் ப்ரஸாதமும்
அத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதமுமாக விப்படி பிறக்கவமையும் .
அத்வேஷ பதம் ஸம தமாதி ஸமஸ்தாத்ம குணங்களுக்கு முபலக்ஷணம் ;
“ ஆசார்ய லாபம் ஆத்மகுணத்தாலே “ என்கையாலே , அத்வேஷமும் ஆபிமுக்யமும் பகவத்க்ருபையாலே என்று சொல்லுகையாலே
“ ஆசார்யலாபம் பகவானாலே “ என்கிற சரம ஸூக்த் யர்த்தம் ஸூசிக்கப்படுகிறது .
ஸாத்விகைஸ் ஸம்பாஷணம் என்னுமிடத்தில் ஜந்ம வ்ருத்தாதிகளை யிட்டுச்சொல்லாதே ,
அவிஶேஷண ஸாத்விகை : என்கையாலும் ,
ஸம்பாஷணமாவது ஸம்யக் பாஷணமாகையாலும் ,
ஜந்ம வ்ருத்தாதி நிரூபணம் பண்ணாதே ஜ்ஞாந விஶேஷத்தையே பார்த்து
“ தொழுமினீர் கொடுமின் கொள்மின் “ என்கிற படியே ,
பரம ஸாத்விகரோடு கலந்து பலிமாறும்படியைச் சொல்லுகிறது .

இனி எம்பெருமானாருடைய வபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் சரமாதிகாரியான வைஷ்ணவனுக்கு வஸ்தவ்ய பூமியா வது ,
“ இராமாநுசனை தொழும் பெரியோரெழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிட “ மென்கையாலே ,
எம்பெருமானார் திருவடிக ளில் ப்ராவண்யமுடையவராய் , பெரியமதிப்பராய் ,
தத் ஸம்பந்த வைலக்ஷ்ண்யாபிவிருத்தி யுண்டாகப் பெற்றோமென்கிற ஹர்ஷ ப்ர ஹர்ஷத்தாலே ஸ ஸம்ப்ரந்ருத்தம் பண்ணி வர்த்திக்கிற ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளி யிருக்கும் பரமபாவனமான தேசம் .

“ அஸ்மத் தேஶிக பகவத் ராமாநுஜ யோகி சரணயுகள ———ஷடேதாநி , என்கையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு இவை யித்தனையும் வேண்டுமென்றதாயித்து ;
அவையாவன ; கர்மமடியாக , “ ஷிபாமி “ என்கிற பகவந் நிக்ரஹம் மாறி , நிருபாதிக ஸ்நேஹம் தலையெடுக்க வேணும் ;
அதடியாக யத்ருச்சா ஸுஹ்ருதமென்பதொன்னுண்டாக வேணும் ;
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக இந்த யத்ருச்சா ஸுஹ்ருதத்தை ஹேதுவாகக் கொண்டு பகவத் க்ருபை பிறக்க வேணும் .
அத்தாலே அத்வேஷமும் , அத்தைப் பின் செல்லுமதான ஆபிமுக்யம் உண்டாக வேணும் .
அதுக்கு மேலே , ஆசார்ய ஸமாஶ்ரயணத்துக்கு ப்ரதாந அபேஷிதமான பாகவதர்களோடு ஸம்பாஷணமாகிற ஸம்பந்த முண்டாக வேணும் .
ஆகவிவையத்தனையும் வேணுமென்றதாயித்து .
ஆசார்யப்ராப்திஹேதவ: என்கிறவிதில் ஆசார்ய பதம் “ ஆசினோதிஹி ஶாஸ்த்ரார்தான் “ இத்யாதியில் சொல்லுகிறபடியே ,
ஞானமனுட்டான மிவை நன்றாகவே வுடையனான னாசார்யனைச் சொல்லுகிறது .
ப்ராப்தி , யென்கையாலே யிப்படிப்பட்ட வாசார்யன் லபிக்குமது பெறாப்பேறாயிருக்கு மென்கிறது .
ஈஶ்வரனைப் பார்த்தால் ஸௌஹார்தம் பிறக்கையே அரிதென்னும்படி இருக்கையாலும் ,
சேதநனைப் பார்த்தால் அத்வேஷமுள்பட பகவத் க்ருபையாலே உண்டாக வேண்டும்படி அஸூயா ப்ரஸவ பூவா யிருக்கையாலும் ,
கர்மங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ப்ரம்ம கல்ப நியுதாநுபவேப்யநாச்யமா யிருக்கையாலும் ,
அத்வேஷ பதத்தாலே ஸூசிக்கப்பட்ட மற்ற வாத்ம குணங்களைப் பார்த்தால் அவை நம்மாலும் , பிறராலும் பிறப்பித்துக்கொள்ள வொண்ணாததுகளா யிருக்கையாலும் ,
ஆசார்ய லாபம் பெறாப் பேறாகவே யிருக்கும் )

நாயனாராச்சாம்பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி , ( அஸ்மத் தேஶிகேத்யாதி )
அஸ்மத் தேஶிக பகவத்ராமாநுஜ யோகிசரணயுகளமாஶ்ரிதாநாம் –
அஸ்மத் தேஶிக – நம்மு டைய உஜ்ஜீவநத்துக்கு கடவரான ,
பகவத்ராமாநுஜயோகி – பகவத் ஸர்வமாஸ்ரிதாநாம் ததபிமாநைகநிஷ்டாநாம்
தத் குண ஸந்தோஹாநுப வாநந்தாம்ருத ஸாகரதரங்க ஷீகர ஸம்பந்த ஶீதலஹ்ருதயாநாம் ததீய திவ்ய கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ணஜ்ஞாநத்தையுமுடையரான , ராமாநுஜயோகி — “
அவை தம்மொடும் வந்திருப்பிடம மாயனிராமாநுசன் மனத்து “ என்கிறபடியே ,
ஸர்வேஶ் வரன் ஸ விபூதிகனாய்க்கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் வீற்றிருக் கும்படியான யோக நிஷ்டையையுடைய வெம்பெருமானாருடைய ,
( யோக ரஹஸ்ய க்ரமம் குருகைக் காவலப்ப னோடே தீர்த்தம் ப்ரஸாதித்ததாயிருந்தாலும்
“ யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா |
ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம்ஸமே யுக்ததமோ மத: “ என்கிறபடியே
“ உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகம் தொறும் “ என்கிற பாட்டில் சொன்ன நிரதிசய ப்ரேமத்தை
இவ்விடத்தில் யோக நிஷ்டையாக சொல்லுகிறது ;
இதுதான் “ நித்ய யுக்த ஏக பக்தி: “ என்றும் ,“
ஜ்ஞாநீத்வாத்மைவ “ என்றும்,
அவனே வாய் விட்டு புகழும்படியான பெருமையை யுடைத்தா யிருக்குமிறே ) .
சரண யுகளம் –- இரண்டு திருவடி களை ,
ஆஶ்ரிதானாம் -– உபாயோ பேயமென்று பற்றினவர்களாயும் ,
ததபிமானைகநிஷ்டாநாம் -– அந்த வெம்பெருமானாருடைய வபிமாநத்தி லேயே நிலைபெற்றவர்களாயும்,
தத்குண ஸந்தோஹாநுபவானந்தாம்ருத ஸாகர தரங்க ஷீகர ஸம்பந்த ஸீதல ஹ்ருதயாநாம் –
தத்குணஸந்தோஹ –
( “ செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி “ என்கிறபடியே
பேரளவு டையவர்களுக்கு பரிச்சேதிக்கவரிதான )
அவருடையதான கல்யாண குண ஸமூஹத்தினுடைய ,
அநுபவ – அநுபவத்தினாலுண்டான ,
ஆனந்த – ஆனந்தமாகிற ,
அம்ருத ஸாகர -– அம்ருதமய ஸமுத்திரத்தினுடைய ,
தரங்க -– அலைகளின் ,
ஷீகர – திவலைகளுடைய ,
ஸம்பந்த -– நித்ய ஸம்ஶ்லேஷத்தாலே ,
ஶீதல ஹ்ருதயாநாம் – குளிர்ந்த திரு வுள்ளத்தை யுடையவர்களாயும் ,
ததீய திவ்ய நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் –
ததீய – அந்த வெம்பெருமானா ருடையதான ,
திவ்ய நாம – ( “ சதுரா சதுரக்ஷரீ “ என்று அபியுக்தர் நெஞ்சுருகி கொண்டாடுமதான ) திருநாமத்தினுடைய ,
உச்சாரண – வாக் வ்யாபார மாத்ரத்தாலே ,
ஜநித -– உண்டான ,
ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் – ஆனந்தாதிஸயத்தாலே ,
ஸஸம்ப்ரமநர்த்தனம் குர்வதாம் –- ( ப்ரீதியுள்ள டங்காமையாலே ) பரவஸராய் ,
நர்த்தனம் குர்வதாம் – நர்த்தனம் செய்யு மவர்களாயும் ,
ஸாத்விகாக்ரேசராணாம் -– பரமஸாத்விகளில் உத்க்ருஷ்ட தமராயும் ,
ஸமதமாதிகுணேபேதாநாம் – ஸமதமாத்யாத்மகுண ஸம்பந்ந ராயும்
( இவ்விடத்தில் ஸமம் என்கிறது அந்த:கரண நியமனத்தை;
நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் ஸ்வாதி காக்ரேசராணாம்
ஸம தமாதி குணே பேதாநாம் தத்வ வித்தமானாம் அஸ்மத் ஸ்வாமிநாம் ஆந்த்ர பூர்ண கோவிந்தார்ய துல்ய
ஸ்வபாவாநாம் உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் , ஸ்ரீவைஷ்ணவானாம் ஆவாசஸ்தான மேவ
அஸ்மதாதி சரமாதிகாரிணாம் அபி ஆவாஸபூமி
: “ என்று
நாயனா ராச்சாம் பிள்ளை யருளிச்செய்தார் இறே .

இனி இந்த சரமாதிகாரிக்கு பரிஹரிக்க வேண்டும் அம் ஶங்கள் சிலவுண்டு ;
அவையாவன –1- பரம காருணிகரான வெம்பெருமானாருடைய குணானுஸந்தான
ஸ்ரவணத்தில் ஸிவிட்கென்று நெஞ்சிறக்க மற்றிருக்கும் துர்மாநிகளுடன் ஸம்பாஷணமும் ,
2-அவர்களுடன் ஸஹவாஸமும் ,
3-அவர்களுடன் கூடி புஜிக்குமதுவும் ,
4-தத் பாத தீர்த்தமும் ,
5-பாணி பக்வாந்நபோஜநமும் ,

ஶரீர ஸம்பந்த ப்ரயுக்தமாக வவர்களுடன். (தமமென்கிறது பாஷ்யகரண நியமனத்தை ) ,
தத்வ வித்தமாநாம் -– பராவர தத்வ யதாத்ம்யத்தை யறிந்தவர்களில் ஸ்ரேஷ்டராயும் ,
அஸ்மத் ஸ்வாமி நாம் -– அஸ்மதாதிகளுக்கு வகுத்த ஶேஷிகளாயும் ,
ஆந்த்ரபூர்ணகோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் -– வடுகநம்பி , எம்பார் , இவர்களோடொத்த வாசார்யநிஷ்டையை யுடையவர்களாயும் ,
உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் –
உபாதேயதம -– “ மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நநுக்கு “ என்கிறபடியே மிகவும் வேண்டுமவை யான ,
திவ்யஜ்ஞாந -– ( கேவலனுடைய ஜ்ஞாநம் போலன்றிக்கே ,“ தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு “ என்கிற ) ;
ஸ்ரீய: பதி விஷயமான ஜ்ஞாநமென்ன ,
பக்தி -– ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண பரிணமிக்கக் கடவதான ) தத்விஷயத்தில் பக்தி யென்ன ,
வைராக்ய –- “ ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற் றம் “ என்கிற வைராக்ய விஶேஷமென்ன ,
இவற்றில் , நிஷ்டானாம் -– நிலை நின்றவர்களாயுமிருக்கிற ,
( இவ்விடத்தில் , திவ்ய , என்கிற பதம் , ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றிலு மந்வயித்து ,
அவற்றினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தைக் காட்டுகிறது ) .
ஸ்ரீவைஷ்ணவாநாம் – இராமாநு சனைத் தொழும் பெரியோர்களுடைய ,
ஆவாசஸ்தாநமேவ – எழுந்திரைத் தாடுமிடம் என்கிற விருப்பிடமே ,
ஆவாசபூமி( “ தேசோயம் ஸர்வ காம துக் “ என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் , இஷ்டப்ராப்திக்கும் ஹேதுவாய்க்கொண்டு )
வஸ்தவ்யமான விடமாகக் கடவதென்னபடி அஸ்மதாதி சரமாதிகாரிணாமபி –-
அஸ்மதாதி — அடியேன் முதலான சரமாதிகாரிணாமபி ( ஸ்வாபிமாநத்தா லே யீஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொள்ளுகையாலேபோக்கற்ற செயல் மாண்டு “
6-த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌகமத்யே மித்யாசராமி “ என்கைக்குத் பரந்தவாஸக்தி யுண்டாகையும் ,
7-தத் க்ருத பகவத் குணாநுஸந்தான ஶ்ரவணமும் ,
8-தத் ததீய ஸத்காரமும் ,
9-தத் தத்த த்ரவ்ய ஸ்வீகார மும்,
10-தத் விஷய ப்ரணாமமும் ,
ஆக இந்த 10 க்ருத்யமும் ,
சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் மருவத்த ப்ராவண்யமு டையனாய் ,
ததபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் உத்தமாதிகாரி க்கு விஶேஷித்து பரிஹரிக்கவேணும் .

இல்லையாகில் , ஒருதலை த்வந்த்வ பக்தியும் , ஒருதலை # விழுப்புமாய் போருமிவனுக்கு , உபய ஸம்பந்தமும் குலைந்து ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமநுவர்த் திக்குமொழிய , கரை காண்கிறதில்லை .

ஸ்ரீய:பதியாய் ,
பரம தயாளு வாய் ,
பரம ஶேஷியாய் ,
ஸர்வ ஶக்தி யுக்தனான வெம்பெருமானுடைய திருவடிகளை யுபாயமாகப்பற்றி ,
தத் குண ப்ரதிபாதிக திவ்ய ப்ரபந்தங்களை , யநுஸந்தாநத்துக்கு விஷயமாக்கி ,
“பொழுதெனக்கு மற்றது வெப்போது “ என்கிறபடியே போது போக்கி வர்த்திக்கிற நமக்கு ,
பேற்றில் கண்ணழிவுண்டோவென்று நினைத்து , சரம பர்வத்திலிறங்காமல் , துரபிமாநிகளாயிருக்கும் கழணிமிண்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலே பேறுண் டென்றிருக்கிலும் ,

“ ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே சரணமிதி தியா @ தத்ர பக்தி தக்கவரா யிருக்கிற ) பஞ்சமோபாய நிஷ்டர்க்கும் 
ஈஶ்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே , சரம பர்வமான வெம்பெருமானார் பக்கல் கண் வையோமென்றிருந்த வதுவே ஹேதுவாக
வவர்களுக்கு , பேற்றைப் பண்ணிக் கொடாத மாத்ரமே யன்றியே ,
இவர்கள் ஸ்வரூபத்தையும் , கால க்ரமத்திலே , ஸங்குசிதமாம் படி பண்ணி விடுவன்

# யிழவு பாடாந்தரம் @ தத் ப்ரபத்தி பாடாந்தரம் .

எம்பார் ஸூக்தி – ( ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜ இதி )
ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே –
ஸ்ரீச -– ஸ்ரீய:பதியினுடைய ,
ஸ்ரீமத் பதாப்ஜே –-
“ பிராட்டியுமவனும் விடிலும் திரு வடிகள் விடாது “ என்கிற பெருமையை யுடைத்தான “ திருவடித்தாமரைக ளிரண்டுமே
“ சரணமிதி -– இதர நிரபேக்ஷமான வுபாயமென்கிற ,
தியா –- புத்தியினாலே ,
தத்ர – அந்த திருவடிகளிலே பக்தி

த்வராணாம் ஸ்ரீமத் ராமாநுஜார்ய ப்ரணதிம் அபஜதாம் கூட சித்தா ஸயாநாம் |
காருண்ய ஷாந்தி ஸிந்து ஸ்வ பத நிவஸதிம் நேஸ்வரோ தாது மிச்சேதித்யேவம் சிந்தகாநாமபி பரமபதம் தாதுகா மஸ் ஸஜாது
“ என்று ,
எம்பாரருளிச்செய்த இந்த திவ்ய ஸூக்தி , உக்தமமான வர்த்தத்துக்கு ப்ரமாணமாக அநு ஸந்தேயமாகக் கடவது .

த்வராணாம். –
“ ஸ்நேஹ பூர்வமநுத்யாநம் பக்தி: “ என்கிற ப்ரீதி பூர்வக ஸ்மரணத்தில் மேன் மேலும் அபிநிவேஸமாகிற த்வரையை யுடையவராய்க் கொண்டு ,
( பாடாந்தரம் தத் ப்ரபத்தி த்வராணாம் –- அந்த திருவடிக ளில் பண்ணக் கடவதான சரண வரண ரூப ப்ரபத்தியில்
த்வரையை யுடைய வர்களாய்க்கொண்டு ,
இந்த பக்ஷத்தில் , த்வரை , ஸாதநாந்தரங்களுடைய தோஷ தர்ஶநத்தாலும் , ஸம்ஸாரத்திலடிக் கொதிப்பாலும் உண்டாகிற தென்று கொள்ளவேணும் ) . ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிம பஜதாம் –
ஸ்ரீமத் –- அந்த ஸ்ரீய:பதியினுடைய திருவடிகள் தாமே யென்னும்படியான நிரவதிக ஸம்பத்தை யுடையராயிருக்கிற ,
ராமாநுஜார்ய -– எம்பெருமானாருடைய ,
ப்ரணதிம் –- ( திருவடிகளில் செய்யக் கடவதான ) சரணாகதியை ,
அபஜதாம் – செய்யாதவர்களாய் ,
கூடஸித்தாஸயாநாம் — இப்படி எம்பெரு மானாரை யுபேஷித்திருக்கிற தங்களுடைய வந்தரங்காபிப்ராயத்தை வெளிப்படுத்தாமல் ,
தம்மை எம்பெருமானார் தர்ஶநத்தில் நிஷ்டை யுடைய வரென்று பிறர் நினைக்கும்படி இருக்குமவர்களுக்கு ,
( எம்பெருமான் பரம பதத்திலிடம் கொடானென்கிற மேலில் வாக்யத்தோடி இதற்கு அந்வயம் ).
காருண்யஷாந்தி ஸிந்து: —
காருண்ய –- ( அத்வேஷம் துடங்கி யாசார்ய ப்ராப்தி பர்யந்தமாக செய்து கொடுக்கைக்கீடான ) க்ருபைக்கும் , ஷாந்தி: –

( “ தன்னடியார் “ என்கிற பாட்டின்படியே
“ என்னடியார் அது செய்யார் “ என்கைக்கீடான பொறுமைக்கும் ,
ஸிந்து: — ஸமுத்திரம் போலே யிருக்கு மவனான ,
ஈஶ்வர: — ஸர்வேஶ்வரன் ,
ஸ்வபதநிவசதிம் -– தனக்குப் படை வீடான பரமபதத்தில் ஸ்தானத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
நேச்சத் –- இச்சிக்க மாட்டான் .
( இவ்வளவேயன்றிக்கே )
இத்யேவம் -– இந்த ப்ரகார மாகவே ,
சிந்தகாநாமபி –- ( எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயியோ மென்று ) மநஸ்ஸில் நினைக்குமவர்களுக்கும் கூட ,
ஜாது –- ஒருகாலும் ,
பரமபதம் -– நலமந்தமில்லதோர் நாட்டை ,
தாதுகாம: — கொடுக்க இச்சை யுடையவனாக ,
ந பவேத் -– ஆக மாட்டான் )
( இவ்விடத்தில் ந பவேத் என்கிற அவ்யயமும் , க்ரியையும் ஔசித்யத்தாலே அத்யாஹரிக்கப்படு கிறது .
இத்தால் கால க்ரமத்திலே இவர்களுடைய ஸாமாந்ய ஜ்ஞாநத்தையும் மலிநமாம்படி பண்ணி
ஸ்வரூபத்தை ஸங்குசிதமாக்கி விடுவதென்ற தாயித்து )

இன்னமும் ராமாநுஜ பதச்சாயையென்று புகழ் பெற்றவிவர்
“ ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த சரணாகதிரேவ உஜ்ஜீவநாய பவதீதி புத்யா ,
பகவந்தம் பரம காருணிகம் பரமோதாரம் அபார கல்யாண குணாகரம்
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் அசரண்ய அகில ஜந சரண்யம் அநவரதம்
ஆஶ்ரயணீய சரண கமல யுகளமபி மதாநுரூப நிரவதிக அனந்த சந்தோஹ ஜநக
“ நித்யஸூரி பரிஷ தந்தர் பாவ மஹா:பல ப்ரஸாதக மஸ்மதுத் தாரகம் அதி ரமணீய
விமலதர , லாவண்யகர திவ்ய மங்கள விக்ரஹமதிஶீதல விமல கம்பீர ஜலாஸயப்ரபவ
மிஹிரதருண கிரணநிகிர விகசித விராஜ மான கமலதளாயத திவ்யநயனயுகளம் ஸ்வவசகமிதி

சிதசிதீஶ்வர தத்வ த்ரய ஸூசக தண்ட த்ரய ரூப மண்டன மண்டித மஸ்மந்மாதர
மஸ்மத்பிதரமம்ருத லஹரீவதநுகூல நவ்ய திவ்ய கோமல விமல மதுராயமாண
நிஜஸூக்திகலாபைராஸ்ரி தாநகில ஜநாஹ்லாதயந்தம் ஸ்ரீமந்தமார்ய ஜநாபிவந்த்யம்
அஸ்மத் குலநாத மஸ்மத் அஸாதாரண ஶேஷிண மஸ் மதாதி ரக்ஷ்யவர்க ஸர்வ ப்ரகார ரக்ஷணைக தீஷாகுரும்
ஸ்ரீராமா நுஜாசார்யமநாத்ருத்ய , பரமகாருணிக: பகவாநேவ ஸ்வசரணகமல ஸமாஶ்ரிதாநாமஸ்மாகம்
ஸ்வப்ராப்திரூப பலம் ப்ரயச்சதீதி ஸ்வமதேந விசிந்த்ய வர்த்தமாநாநாம் ,
தத்வஜ்ஞாநலவலேஶ தேஶாதிகாநாம் துரபிமாநஸஹக்ருத ,
பரப்ராமக வ்ருத்தாநாம் ரூபவேஷதாரிணாம் வயமேவ ஸ்ரீவைஷ்ண வா இதி ,
ஸ்வமதேநாத்மாநம் பஹுமந்யமாநாநாம் சேதநாநாம் , அபார காருண்யௌதார்ய
வாத்ஸல்ய ஸௌஶீல்யைக நிதிரபி பகவான் புருஷோத்தம:–எம்பார் ஸ்ரீஸூக்தி


ஸ்ரீமந்நாராயண சரணார விந்த சரணாகதிரேவ — ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளில் பண்ணும் ,
சரணாகதிரேவ -– ப்ரபத்தி தானே ,
உஜ்ஜீவநாய – ஆத்மோஜ்ஜீவநத்தைப் பொருட்டு ,
பவதீதி -– ஆகிறதென்கிற,
புத்யா — “ வ்யவஸாயாத்மிகா புத்தி: “ என்கிற ஜ்ஞாந விஶேஷத்தாலே ;
பகவந்தம் -– பரிபூர்ண ஜ்ஞாநத்தை யுடையராயும் ,
பரம காருணிகம் –- பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான வீஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயும் ,
பரமோதாரம் –- ( ஸ்வாபிமாநாந்தர்பூதர்க்கு கார்யம் செய்யவேணும் “ என்று ஈஶ்வரனோடே மன்னாடுகையாலே )
இதுக்கு மேலில்லை யென்னும்படியான ஔதார்யத்தை யுடையராயும் ,
அபார கல்யாண குணா கரன் -– அபாரமான கல்யாண குணங்களுக்கு நிவாசஸ்தாந பூதராயும் ,
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் –- அவற்றில் வாத் ஸல்ய ஸௌஶீல்யங்கள் அபரிமிதமா யிருக்கையாலே ,
அவற்றுக்கு ஸமுத்ரம் போன்றவராயும் ,
( வாத்ஸல்யம் தோஷபோக்யத்வம் ,
ஸௌஶீல்யம் -– தாழ்ந்தவர்களோடு கலந்து பரிமாறுகை )
அசரண்யாகில ஜநசரண்யம் –
அசரண்ய -– ( “ நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாத “ , ஸர்வேஶ்வரனும் கைவிடுகையாலே )
கத்யந்தரமில்லாத ,
அகில ஜந -– ஸமஸ்த சேதநர்களுக்கும் ,
சரண்யம் -– ரக்ஷகராயும் ,
அநவரதமாஶ்ரயணீய சரண கமலயுகளம் —
அநவரதம் -– “ அத்ர பரத்ராச் சாபி “ என்கிறபடியே ஸம்ஸாரத்திலும் , ப்ராப்யமான நித்ய விபூதியிலும் ,
ஆஶ்ரயணீய –- ஆஶ்ரயிக்கைக்கு யோக்யமான ,
சரணகமலயுகளம் –-திருவடித் தாமரைகள் இரண்டுமுடையவராயும் ,
அபிமதாநுரூப + மஹாப் பலப்ரஸாதகம் –
அபிமதாநுரூப – ( ஸ்வரூப ஜ்ஞாநமுடையவனுக்கு ) அபிமதமாயும் , அநுரூபமாயும் , இருந்துள்ள ,
நிரவதிகானந்த -– எல்லை யில்லாத ஆனந்தத்தினுடைய ,
ஸந்தோஹ -– ஸமூஹத்துக்கு ,
ஜநக –- மேன்மேலும் அபிவிருத்தியை யுண்டாக்குமதான ,
நித்யஸூரி பரிஷத் –- நித்யஸூரி கோஷ்டியில் ,
அந்தர்பாவ –- உடன் கூடுகையாகிற ,
மஹா:பல –- ஸர்வோத்தம்மான:பலத்தை ,
ப்ரஸாதகம் -– க்ருபை செய்தருளுமவராயும் ,
அஸ்மதுத்தாரகம் -– அடியே னுக்கு உத்தாரகாசார்யராயும்
( முதலிலே பெரியநம்பி தம்மை விஷயீகரித் ததற்கும் , உடையவர் காரணமாகையாலும் ,
அவர்தா முபாயோபேயங்களி ரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயென்று தமக்கு காட்டிக்கொடுக்கை யாலும் , அடியேனுக்கு உத்தாரகாசார்யனென்கிறார் ) .
அதிரமணீய + மங்க ளவிக்ரஹம் —
அதிரமணீய -– பரம போக்யமாய்
( “ உன்றன்மெய்யில் பிறங் கிய சீரன்றி வேண்டிலன் “ என்னும்படியிறே போக்யதைதானிருப்பது )
விமலதர -– ( ஜ்ஞாந பரிமளமெல்லாம் வடிவிலே தொடைக்கொள்ளலாம் படி ) மிகவும் நிர்மலமாய் ,
லாவண்ய கர – ( பகவத் குணாநுபவத்தாலே களித்திருக்கையாலே , திருமேனியெங்கும் நிறைந்த ) காந்தி வெள்ளத்துக் கிருப்பிடமாய் ,
திவ்யமங்கள -– ( “ திருமாலிருஞ்சோலைமலையே “ என்கி றபடியே , எம்பெருமான் விரும்புகையாலே ) அப்ராக்ருதமாய் விலக்ஷண மாயிருக்கிற ,
விக்ரஹம் –- திருமேனியை யுடையவராயும் ,
அதிஶீதல + நயனயுகளம் —
அதிஶீதல –- மிகவும் குளிர்ந்து ,
விமல –- தெளிந்து ,
கம்பீர –- ஆழங்காணவரிதாயிருக்கிற ,
ஜலாஶய –- ஏரியில் ,
ப்ரபவ –- பிறந்ததாய் ,
மிஹிரதருணகிரண –- பாலஸூர்ய கிரணங்களாலே ,
விகசித – அலர்த்தப்பட்டதாய் ,
விராஜமான – செவ்வி மாறாமல் ப்ரகாஸித்துக் கொண்டிருக்கிற ,
கமலதள -– தாமரை யிதழைப் போலே ,
ஆயத – கர்ணாந்த விஶ்ராந்தமான ,
திவ்ய நயன யுகளம் -– கண்ணுள் நின்றகலாதவனுக்கு கோயில் கட்டணமாயிருக்கிற திருக் கண்களை யுடையவராயும் ;
( இவ்விடத்தில் கண்ணென்று ஜ்ஞாநமாய் அதுதான் ஸ்ரீய:பதி விஷயமா யிருக்கையாலும்
இரண்டாயிருக்கையாலும் உபய வேதாந்த விஷய ஜ்ஞாநத் தைக் காட்டுகிறது ) .
ஸ்வ — வசகமிதி தம் வசமாக்கப்பட்ட ,
சிதசிதீஶ்வர -– சேதந த
த்வம், அசேதந தத்வம் , ஈஶ்வரதத்வமென்கிற , தத்வத்ரய -– மூன்று தத்வத்துக்கும் ,
ஸூசக –- ஸூசிக்குமதாயிருக்கிற ,
தண்ட த்ரய ரூப -– த்ரிதண்டரூபமான ,
மண்டன -– அலங்காரத்தாலே ,
மண்டிதம் –- அலங்க ரிக்கப்பட்டவராயும் ,
அஸ்மந் மாதரம் -– அடியேனுக்கு ப்ரியமே நடத்திக் கொண்டு போருகையாலே , மாத்ருபூதராயும் ,
அஸ்மத் பிதரம் -–இதத்தைச் செய்கையாலே தந்தையாயும் ,
அம்ருதலஹரீவத் + ஆஹ்லாதயந்தம் —-
அம்ருதலஹரீவத் — அம்ருதப்ரவாஹத்தினுடைய அலைகள் போலே , அநுகூல -– செவிக்கினய செஞ்சொற்களாய் ,
நவ்ய –- அபூர்வங்களாய் ,
திவ்ய –- “ கேட்டாரார் வானவர்கள் “ என்கையாலே திவ்யரான நித்ய ஸூரிகளுக்கு கேட்க யோக்யங்களாய் ,
கோமல –- ம்ருது ஶைலியோடுகூடி ,
விமல –- நிர்தோஷங்களாய் ,
மதுராயமாண -– (ஸ்ரீய:பதி , நித்யஹேயப்ரத்யநீகனாயும் , கல்யாணைகதானனாயும் இருப்பனென் றறுதியிடுகையாலே )
தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலிருப்ப தான ;
நிஜ ஸூக்திகலாபை: — ஸ்ரீபாஷ்யம் முதலான தம்முடைய திவ்ய ஸூக்தித்தொடைகளாலே ;
ஆஶ்ரிதான் -– தம்மை ஆஶ்ரயித்த ,
அகில ஜனான் –- ஸமஸ்த சேதநர்களையும் ;
ஆஹ்லாதயந்தம் –- ஆனந்திப்பித் துக் கொண்டிருக்குமவராயும் ,
ஸ்ரீமந்தம் — “ ஸம்ஸேவிதஸ் ஸம்யமி ஸப்தஸத்யா பீடைஸ்சதுஸ்ஸப்ததிபிஸ்ஸமேத: “ இத்யாதி படியே
அடியார்களுடைய நிரவதிக ஸம்பத்தை உடையவராயும் ,
ஆர்ய ஜநாபி வந்த்யம் -– நாதயாமுந ப்ரப்ருதி பூர்வாசார்யர்களால் புகழப்பட்டவராயும் ,
அஸ்மத் குல நாதம் -– நம்முடைய ப்ரபந்நகுலத்துக்கு நாதராயும் ,
அஸ்மதஸாதாரண ஶேஷிணம் -– அடியேனுக்கு வகுத்த ஶேஷியாயும் ,
அஸ்மதாதிரக்ஷ்யவர்க + தீக்ஷஆகுரும் ––
அஸ்மதாதி –- அடியேன் முத லான ,
ரக்ஷ்யவர்க -– ரக்ஷ்ய பூதருடைய திரளை ,
ஸர்வப்ரகார –- எல்லா ப்ரகாரத்தாலும் ,
ரக்ஷண -–ரஷிக்கை யென்கிற ,
ஏக –- முக்யமான ,
தீஷா – தீஷையுடைய ,
குரும் – ஆசார்யராயுமிருக்கிற ,
ஸ்ரீராமாநுஜா சார்யம் -– தர்ஶந ஸ்தாபநாசார்யரான வெம்பெருமானாரை ,
அநாத்ருத்ய -– அநாதரித்து ,
பரம காருணிக: — ( ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே , அடியே தொடங்கி க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே ) தனக்கு மேலற்ற காருணிகரான ,
பகவாநேவ – ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்க ளோடு , ஆஶ்ரித கார்யாபாதகங்களோடு வாசியற
ஸமஸ்த கல்யாண குணங்களாலும் பரிபூர்ணனான ஸர்வேஶ்வரன்தானே ,
ஸ்வசரண கமலஸமாஶ் ரிதானாம் -– ( “ வணங்க வைத்த கரணமிவை “ என்னுமவர் வேண்டாதபடி
“ விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் “ என்று ஶாஸ்த்ரத்தாலறிந்து தம் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்தவர்களான ,
அஸ்மாகம் –- நமக்கு ,
ஸ்வப்ராப்திரூபபலம் –- தன்னுடைய ப்ராப்தியாகிற பரம்புருஷார்த் தத்தை ,
ப்ரயச்சதீதி — தருகிறானென்று ,
ஸ்வமதேந — ( அஹங்கார தூஷிதமான ) ஸ்வாபீப்ராயத்தாலே ,
விசிந்த்ய –- ஆலோசித்து ,
வர்த்த மாநாநாம் -– அந் நிலையில் நின்றும் பேராதவர்களாயும் ,
தத்வஜ்ஞாந லவலேஸ தேஸாதிகாநாம் —
தத்வஜ்ஞாந –- வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய,
லவலேஸ -– ஏகதேஶத்தில் அல்ப பாகமாவது நடையாடுகிற ,
தேஶ — ப்ரதேஶத்தை ,
அதிகாநாம் – அதிக்ரமித்து ( அதாவது அந்த ஜ்ஞாந மாத்ரமேயன்றிக்கே
தத்வ ஜ்ஞாநமென்பதொன்றுண் டென்றிருக்குமவர்கள் வஸிக்கும் ப்ரதேஶத்தையும் கூடவறியாமல் ) இருக்கிறவர்களாயும் ,
( “ பரஞ்சோதிரூப ஸம்பத்ய “ இத்யாதி ப்ரகாரமாக ஆவிர்பூதஸ்வரூப னான வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாய்
அது தான் ததீய பர்யந்த மாயன்றி நில்லாதென்கிறவிதுவே வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய உள்கருத் தாய்
அந்த ததீயருடைய முகமலர்த்திக்குறுப்பாக வாசார்ய ஶேஷத்வம் ராகப்ராப்தமாய் தன்னடையே வருகிறதாகையாலே ,
ஆசார்யத்வ பூர்த்தி யுள்ள வெம்பெருமானாரை யனாதரித்தவர்களுடைய தத்வ ஜ்ஞாநம்
அஸத்கல்பமாகவேயிருக்குமென்று கருத்து )
துரபிமாந ஸஹக்ருத பரப்ராமக வ்ருத்தாநாம் — ( இப்படி தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநகந்தமே யில்லாதிருந்தாலும் )
துர்மாநத்தை யுள்கொண்டு , தம்மைப் பிறர் காணில் “ இந்தளத்தில் தாமரைபோலே யிவரும் சிலரேயென்று மோஹிக்கும்படி ,
பரமஸாத்விகருடைய வநுஷ்டாநத்தை யபிநயிக்குமவர்களாயும் ;
ரூபவேஷதாரிணாம் -– ( “ ஆக்ருதிமத்வச்சரணாரவிந்த ப்ரேம “ என்கிற தற்கு நேரே எதிர்தட்டாக )
க்ருத்ரிமமான ஸ்ரீவைஷ்ணவரூப வேஷங்களை யுடையவர்களாயும் ,
வயமேவ + மந்யமாநாநாம் —
வயமேவ – நாங்களே,
ஸ்ரீவைஷ்ணவா இதி -– வைஷ்ணவாக்ரேசரரென்று ,
ஸ்வமதேந -– அஹங் கார க்ரஸ்தமான தம்முடைய வபிப்ராயத்தாலே ,
ஆத்மாநம் -– தங்களை,
பஹுமந்யமாநாநாம் -– ( “ அமர்யாத: க்ஷஊத்ர: “ இத்யாதிக்கு நேரே எதிர் தட்டாக )
போரப் பொலியக் கொண்டாடிக் கொள்ளு மவர்களாயுமிருக்கிற ,
சேதநாநாம் -– சேதநர்களுக்கு , ( இவர்களை அசேதநர் என்னவேண்டியிரு க்க , “ சேதநாநாம் “ என்றது
அமங்கள வாரத்தை , மங்களவாரமென்றாப் போலே )
பகவான் -– அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக தானனாய் ,
புருஷோத்தம: — “ யஸ்மாத் க்ஷரமதீதோஹ மக்ஷராதபிசோத்தம: |
அதோ ஸ்ரீமந்நாராயண: அஸ்மத்குல ஸ்வாமிநோ பகவத: ஸ்ரீமத்ராமாநுஜ குரோ:சரணயுகள
ஸம்பந்தராஹித்யம் ஹ்ருதிநிதாய கதாசிதபி ஸ்வப்ராப்திரூப மோக்ஷ:பலமகுர்வாண: ,
யாவதாத்ம பாவி ஸம்ஸார நிரயகர்த்தே
“ ஷிபாம்யஜஸ்ர “ மிதி வதன் நிஷேப்ய , கதாசிதபி தான் ஹ்ருதாநகணயன் ,
ராமாநுஜகுரு க்ருபாபிமாநாந்த் தர்பூத ஸாத்விக ஜநேஷு ஸ்மிலோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: “
என்கிறபடியே
க்ஷர ஶப்த வாச்யரான பக்தசேதநரென்ன ,
அக்ஷர ஶப்தவாச்யரான முக்தசேதநரென்ன
இவர்களில் காட்டில் விலக்ஷணனாகையாலே புருஷோத்தமனென்று ப்ரஸித்தனாயிருக்கிற , ஸ்ரீமந்நாராயண: — ஸ்ரீய:பதியானவன் ,
அபார காருண்ய + நிதிரபி ,
அபார –- பாரமில்லாத ,
காருண்ய – ( “ க்ருபா காப்யுபஜாயதே “ என்கிறபடியே , ஸம்ஸாரி சேதநருடைய உஜ்ஜீவநத்துக்கு ஹேதுபூதமான ) காருண்யமென்ன ,
ஔதார்ய “ சேரும் கொடை “ என்கிற உதாரத்வமென்ன ,
வாத்ஸல்ய -– தோஷ போக்யத்வமென்ன ,
ஸௌஶீல்யதன் — பெருமை பாராதே தாழ்ந்தார்களோடு புரையறக்கலக்கும் ஸ்வபாவமென்ன , இவற்றுக்கு ,
ஏக –- அத்விதீயனான ,
நிதிரபி – நிவாச ஸ்தான பூதனாயிருந்தாலும் ,
அஸ்மத் குல ஸ்வாமிந: + ஹ்ருதிநிதாய —
அஸ்மத் குல ஸ்வாமிந: — “ ந: குலபதே: “ என்கிறபடியே அடியேனுடைய குலத்துக்கு ஸ்வாமியாய் ,
பகவத: ( நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு வேண்டும் கைமுதல்களான ) ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையராய் ,
ஸ்ரீமத் ராமாநுஜகுரோ: — ( “ ஆசார்ய பதமென்று தனியேயொரு பதமுண்டு , அதுள்ளது எம்பெருமானார்க்கே , என்கிற )
நிலை நின்ற ஆசார்ய பத ஸம்பத்தை யுடையருமான வெம்பெருமானாருடைய ,
சரணயுகள ஸம்பந்த ராஹித்யம் —
சரணயுகள -– இரண்டு திருவடிகளில் ,
ஸம்பந்த ராஹித்யம் -– ஆஶ்ரயண ரூப ஸம்பந்தமில்லாமையை ,
ஹ்ருதி –- தன் திருவுள்ளத்திலே ,
நிதாய -– வைத்து ,
கதாசிதபி –- ஒருக் காலமும் ,
ஸ்வ:ப்ராப்தி ரூப மோக்ஷ:பலம் — தன்னுடைய ப்ராப்தியா கிற மோக்ஷ:பலத்தை ,
அகுர்வாண: — செய்து கொடுக்காமல் ,
யாவதாத்ம பாவி + நிஷேப்ய —
யாவதாத்ம பாவி – ஆத்ம ஸத்தை யுள்ளதனையும் ,
ஸம்ஸார நிரயகர்த்தே –- ஸம்ஸாரமாகிற நரக கூபத்திலே “ ஷிபாம்ய ஜஸ்ர “ மிதிவதன் , நிஷேப்ய -– அஹங்காரம் , பலம் , தர்ப்பம் , காமம் , க்ரோதம் ச ஸம்சிதா: “ என்று தொடங்கி
“ தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான் க்ஷஇபாம்யஜஸ்ரம் “ என்று
அஹங்காராதி தோஷ துஷ்டரான புருஷாதமரை ஜந்ம மரணாதி ரூபேண சுழன்று வருகிற ஸம்ஸாரத்தில்
க்ரூர ஸ்வபாவமுள்ளவராய் பிறக்கும் படியாகவே

நித்ய தத்தத்ருஷ்டி: தேப்யஸ்ஸர்வஸ்வதாந கரணேபி கிமபி ந தத்தமே வேத்யத்யாப்ய பரிதுஷ்ட: ,
ராமாநுஜகுரு சரணயுகள ப்ராவண்ய நைரந்தர்ய ப்ரதாநைக நிஷ்ணாதோ வர்த்ததே “
என்று
எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவர்களுக்கு , ஸர்வ ப்ரகாரத்தாலும் ஈஶ்வரன் ஸ்வ ப்ராப்தி பண்ணிக் கொடாமல் ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற நரக குழியிலே தள்ளியிட்டுவைத்து ,
திருவுள்ளத் தாலும் அவர்களை நினையா நின்றருளிச் செய்தார் இறே .
ஆகையால் ஸர்வ ப்ரகாரத்தாலும் , உஜ்ஜீவிக்க வேணுமென்றும் நினைவுடைய வன் ,
அசரண்ய சரண்யராய் , பரம காருணிகராய் , பரமோதாரரான வெம்பெருமானாருடைய
வபிமாநமே , உத்தாரகமென்றறுதியிட்டு , ததேகநிஷ்டனாய்
“ தேவு மற்று அறியேன் “ என்று ஶேஷித்வ , சரண் யத்வ ப்ராப்யத்வங்களை
யெம்பெருமானார் பக்கலிலே யறுதியிட்டு ,நிக்ரஹித்துத் தள்ளி விடுவேனென்றாப்போலே சொல்லிக்கொண்டே தள்ளி விட்டு ,
கதாசிதபி — ஒருக் காலமும் ,
தான்— அவர்களை ,
ஹ்ருதா — திருவுள்ளத்தால் ,
ந கணயன் –- நினையாமல் ,
ராமாநுஜகுரு + தத்த த்ருஷ்டி:–
ராமாநுஜகுரு -– அஜ்ஞாநி வர்த்தகரான வெம்பெருமானாருடைய ,
க்ருபாபி மாநாந்தர்பூத நிர்ஹேதுக க்ருபையால் வந்த வபிமாநத்தி லொதுங்கின ,
ஸாத்விக ஜநேஷு –- பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்க ளிடத்திலே ,
நித்ய தத்த த்ருஷ்டி: — வைத்த கண் வாங்காமல் பூர்ண கடாக்ஷமுடையனாயக் கொண்டு ,
தேப்யஸ்ஸர்வஸ்வ + பரிதுஷ்ட: —–
தேப்ய: — அவர்களுக்கு ,
ஸர்வஸ்தாந கரணேபி -– உபயவிபூதியோடு தன்னையே கொடுத்திருந்தாலும் ,
கிமபி ந தத்தமேவேதி -– ( “ அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதம் “ என்னாப் போலே ) இவர்களுக்குத் தகுதியாக
ஒன்றும் செய்யப் பெற்றிலோமே ? என்று ,
அத்யாப்யபரிதுஷ்ட: — இன்னமும் குறைவாளனாய் ,
ராமாநுஜா + வர்த்ததே —
ராமாநுஜகுரு – அப்படிப்பட்ட வெம்பெருமானாருடைய ,
சரண யுகள –- இரண்டு திருவடிகளிலும் ( உண்டாயிருக்கிற ) ,
ப்ராவண்ய -– நிரதிசய ப்ரீதிக்கு ,
நைரந்தர்ய –- தைலதாரா துல்யமான அவிச்சேதத்தை ,
ப்ரதான கொடுக் கையில் ,
ஏக -– அத்விதீயனான ,
நிஷ்ணாத: — உள் புக்காராயுமவனாய் ( அதாவது ஆண்களையும் பெண்ணுடை யுடுக்கப்பண்ணும்
வைர உறுக்கா கையாலே , இவ்வதிகாரிக்கு நித்ய சத்ருவான தன்னுடைய நிரதிசய
ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு , இரு கரையராகாமல் நோக்கிக் கொண்டு போறுமவனாய் )
வர்த்ததே -– இதுவே பணியாக விருக்கிறான் , என்று எம்பார் அருளிச்செய்தாரென்கை .

சரமோபாய தாத்பர்ய ப்ரமாண வசநாசயா: | பூர்வாசார்ய லஸத்ஸூக்தீரூபஜீவ்ய விசோதிதா: ||.

பேற்றுக்குடலாக ப்ரதம பர்வத்தில் நெஞ்சு தாழ்ந்து , இருகரை யனாய் யாதாயாதம் பண்ணிய லமாவாதே ,
எம்பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி , நமக்குப் பேற்றில் கண்ணழிவில்லை யென்று நெஞ்சில் தேற்றமுடையவனாய் ,
எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்ய சீமா பூமிகளான பரம ஸாத்விக வர்க்கத்துடன் ,
“ போதயந்த: பரஸ் பரம் “ பண்ணிக்கொண்டு , பரஸம்ருத்யைக ப்ரயோஜனனாய் ,
எம் பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யமுடையாரைக் கண்டால் , இந்தளத்திலே தாமரைப் பூத்தாப்போலே ,
இருள் தரு மாஞா லமான விக்கொடு உலகத்திலே , இங்ஙனேயும் சிலருண்டாகப் பெறுவதே யென்று
ஷர்ஷ புலகித ஶரீரனாய் , யாவச் சரீரபாதம் , த்ரிவித கரணத் தாலும் , ஒருபடிப்பட ஸ்வரூபத்தை நோக்கிக்கொண்டு .,
எம்பெருமா னாருடைய , திருநாமோச்சாரணமில்லாவிடில் நாக்கு வற்றும்படி யான நிலையோடு பொருந்தி ,
மநஸ்ஸை ஸாவதாநமாய்ப் பண்ணிக் கொண்டு , ஸ்வரூபாநுகுணமாக வர்த்திக்க வேணும்

சரமோபாய தாத்பர்யம் ஸமாப்தம்

சரமோபாய தாத்பர்யம் தேவராஜகுரூதிதம் | ஸம்ப்ரதாயாநுரோதேந யதாமதி விசோதிதம் ||

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in ஸப்த காதை | Leave a Comment »

ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் அருளிச் செய்த -ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்ரீ வாநாத்ரி யோகி பிரபத்தி

September 21, 2023

ஸ்ரீ ஆதி சேஷன் -ஸ்ரீ இளைய பெருமாள் பகவத் கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
முதல் பிரதான சிஷ்யர் -அஷ்ட திக் கஜங்களில் பிரதானம்

பாதுகா சில சமயம் பிரியலாம் –
பாதுகா சாயா -சில சமயம் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம் –
பாத ரேகா இவர் என்பர்

பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே

இவர் கால் வைத்த காரணத்தால் சிஷ்ய ஸம்பத் பெருகியதால் பொன்னடிக்கால் ஜீயர் -செம் பொன் கழல் அடி -பொன்னடிக்கால் ஜீயர்
இவருக்கு அஷ்ட திக் கஜங்கள்
ஸ்ரீ சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
ஸ்ரீ சமரபுங்கவாசார்யர்,
ஸ்ரீ சுத்தசத்வம் அண்ணா,
ஸ்ரீ ஞானக்கண்ணாத்தான்,
ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை ,
ஸ்ரீ பள்ளக்கால் சித்தர்,
ஸ்ரீ கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா.

—————-

ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் அருளிய முக்யமான சம்ஸ்க்ருத அருளிச் செயல்கள்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் மங்களாசாஸனம்

இதற்கான மூலமும் மற்றும்
அதற்கான ஸ்ரீ தென்திருப்பேரை உ.வே. அரவிந்த லோசனன் ஸ்வாமி அவர்களின் எளிய தமிழ் மொழி பெயர்ப்பும் காண்போம்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி

முதல் 11 ஸ்லோகங்களில் சரண் அடைந்து
அடுத்து 3 ஸ்லோகங்கள் இவரே சரண் அடையத்தக்கவர்

——–

ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–1-

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

——–

காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வாநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே–2-

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

——–

தாராத்மஜாதி ஜநிதம் ஸூகமை ஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–3–

மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.

——–

ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–4–

முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.

———-

வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்ய மாரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வரம் வரஸ்ய யதீஸி துஸ்தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-

யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.

——–

பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதி ஸது தாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-

செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

—————

யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–7–

யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

———–

பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–8–

எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

———–

யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–

புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்கவல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

———

வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--10–

வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

————

ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம் நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--11–

நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று  நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)

——-

வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-

ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு
ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக
இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!

————

கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர–13-

ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ்வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே
ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே
சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.

———

சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-

முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.

———————————–

பொன்னடிக்கால் ஜீயரின் பூர்வாச்ரமப் பெயர் “அழகிய வரதர்”.
வானமாமலை ஜீயர், வானாத்ரி யோகி, ராமாநுஜ ஜீயர், ராமாநுஜமுனி என்று இவருக்கு பல திருநாமங்கள் உண்டு.
இவர் அழகிய மணவாள மாமுனிகளின் முதல் சிஷ்யர் மட்டுமல்லாது ப்ரதான சிஷ்யருமாவார்.

அழகிய வரதரான இவர் அழகிய மணவாள மாமுனிகளுக்கு க்ருஹஸ்தராய்
எழுந்தருளியிருந்த காலத்தே சிஷ்யரானார். முதல் சிஷ்யரும் இவர்தான்.
அழகிய வரதர் உடனே சந்யாஸாச்ரமம் ஏற்று வெகுகாலம் மாமுனிகளோடே தங்கி, கைங்கர்யம் செய்து வந்தார்.
மாமுனிகளின் சிறந்த சிஷ்ய செல்வத்துக்கு இவர் முதலடி இட்டமையால் இவருக்கு
பொன்னடிக்கால் ஜீயர் என்ற திருநாமம் வழங்கலாயிற்று.
இவர் பாரத தேசம் முழுவதும் பல இடங்களில் தோதாத்ரி மடங்களை நிறுவி நம் சம்பிரதாயத்தை விஸ்தாரம் செய்தார்.

மாமுனிகள் திருமலை திவ்யதேசத்து யாத்திரைக்கு முதல் முறையாக செல்ல,
அப்போது பெரிய கேள்வியப்பன் ஜீயர் ஸ்வப்னத்தில் ஒரு க்ருஹஸ்தர் சயனித்திருக்க
அவர் திருவடி நிலையில் ஒரு சந்யாசியையும் கண்டார்.
உடனே கேள்வியப்பன் ஜீயர் இது குறித்து விசாரிக்க, அதற்கு அங்கிருந்தோர்கள்
“ஈட்டுப் பெருக்கர்” என்கிற அழகிய மனவாளாப்பெருமாள் நாயனார்  மற்றும் பொன்னடிக்கால் ஜீயர் என்று கூறினர்.

பல ஆசார்யர்கள் மாமுனிகளை தரிசிக்கப் பொன்னடிக்கால் ஜீயரே புருஷகரமாக இருந்தார்.
பல ஸ்ரீவைஷ்ணவர்கள் பொன்னடிக்கால் ஜீயரின் புருஷகாரத்தாலேயே மாமுனிகளை தர்சிக்க ,
பொன்னடிக்கால் ஜீயரும் மகிழ்வோடு அவர்களை ஆதரித்து, கைங்கர்யத்தையும் தந்து அருளினார்.

கந்தாடை அண்ணனும் அவர் திருமேனி சம்பந்திகளும் மாமுனிகளுக்குச் சிஷ்யர்கள் ஆன பின்னே ,
பொன்னடிக்கால் ஜீயரைத் தன் “ப்ராண ஸுக்ருத்” என்றும்,
தனக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருளினார்.
அப்பாச்சியாரண்ணா மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட,
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அவரை அமரச்செய்து ,
தன் திருவாழி – திருச் சக்கரத்தையும் (திருச் சங்கு – திருச் சக்கரம்) கொடுத்து
அப்பாச்சியாரண்ணாவுக்கு திருவிலச்சினை (சமாச்ரயணம்) செய்யுமாறு கட்டளை இட்டார் .
முதலில் பொன்னடிக்கால் ஜீயர் சங்கோஜத்துடன் இதை மறுத்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து மாமுனிகள் வலியுறுத்த அவ்வாரே அப்பாச்சியாரண்ணாவுக்கும்
அவருடன் வந்துருந்த சிலருக்கும் சமாச்ரயணம் செய்து  மாமுனிகள் கட்டளையை பூர்த்தி செய்துவித்தார்.
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.
அவர்கள் –
சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
சமரபுங்கவாசார்யர்,
சுத்தசத்வம் அண்ணா,
ஞானக்கண்ணாத்தான்,
ராமானுஜம் பிள்ளை ,
பள்ளக்கால் சித்தர்,
கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் அப்பாச்சியாரண்ணா.

மாமுனிகள் அப்பாச்சியாரண்ணாவை ஸ்ரீரங்கத்தை விட்டுக் காஞ்சிபுரம் செல்லுமாறு பணிக்க,
அதைக் கேட்டு அவர் மனம் நொந்தார்.
உடனே மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயர் ஆராதித்த தன் பழைய ராமாநுஜனை
(தீர்த்த சொம்புக்கு நம் சம்ப்ரதாயத்தில் வழங்கப்படும் சொல்)
அப்பாச்சியாரண்ணாவை ஏற்கச்செய்து, தன்னைப்போல் இரண்டு அர்ச்சா திருமேனிகளை செய்து
ஒன்றை ஆசார்யரான பொன்னடிக்கால் ஜீயருக்கும்
மற்றொன்றை சிஷ்யரான அப்பாச்சியாரண்ணாவுக்கும் தந்தருளினார்.

பிறகு தெய்வ நாயகன் எம்பெருமான் (வானமாமலை) சேனை முதலியார் வாயிலாக
“பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலை எழுந்தருளி கைங்கர்யம் செய்ய வேண்டும்” என்று
ஒரு ஸ்ரீமுகத்தை மாமுனிகளுக்கு விண்ணப்பித்தார்.
உடனே இதை பொன்னடிக்கால் ஜீயருக்கு மாமுனிகள் தெரிவித்தார்.
அதன் பிறகு தன் முதலிகள் எல்லோரையும் (பொன்னடிக்கால் ஜீயர் உட்பட)
பெரிய பெருமாள் முன்னிலையில் தினம் 100 பாசுர க்ரமமாக 4000 திவ்யப்ரபந்தத்தை அந்வயிக்குமாறு பணிக்க,
அவ்வாறே பெரிய பெருமாள் திருச்செவி சாற்றுகிறார்
(பெரிய பெருமாள் கேட்கிறார்). “அணியார் பொழில் சூள் அரங்கநகரப்பா” என்று முதலிகள் (சிஷ்யர்கள்)
சேவிப்பதைக் கேட்டு பெருமான் மனம் குளிர தன் சந்நிதியிலிருந்து
அரங்கநகரப்பனை (ஸ்ரீ லக்ஷ்மிநாராயண விக்ரஹம்) பொன்னடிக்கால் ஜீயருக்கு வழங்கி
வானமாமலை எழுந்தருளப்பண்ணுமாரு பணித்தார்.
மேலும் பொன்னடிக்கால் ஜீயருக்கு தனிப்ரசாதமும், ஸ்ரீசடகோபமும் அளித்தார்.
மாமுனிகள் மேற்கொண்டு பொன்னடிக்கால் ஜீயரை மடத்துக்கு வரச்செய்து
விசேஷ ததியாராதனை செய்து வானமாமலைக்கு வழி யனுப்பி வைக்கிறார்.

பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலையில் தங்கிப் பல கைங்கர்யங்களை செய்து வந்தது மட்டுமின்றி
அருகிலிருக்கும் நவ திருப்பதி, திருக்குறுங்குடி கைங்கர்யங்களையும் ஏற்றார்.
மேலும் பதரீகாச்ரமத்திற்கும் யாத்திரை சென்றார்.
இந்த மார்க்கத்தில் இவருக்கு பல சிஷ்யர்கள் கிடைத்து
அவர்களுக்கு காலக்ஷேபமும், கைங்கர்யங்களையும் நல்கினார்.

பொன்னடிக்கால் ஜீயர் மேலும் ஒரு நெடிய வடதேச யாத்திரை மேற்கொண்டார்.
அப்பொழுது மாமுனிகள் இந்த நில உலகைத் துறந்து பரமபதம் சென்று திருநாடு அலங்கரித்தார்.
பொன்னடிக்கால் ஜீயர் யாத்திரை முடித்துக் கொண்டு திரும்புகையில் திருமலையை அடைந்தபோது
விஷயம் தெரிந்து மிகவும் கலக்கமுற்றார்.
அதனால் சில காலம் திருமலையிலேயே தங்கி இருந்தார்.
மேலும் அங்கிருந்து தான் யாத்திரையின் பொது சேகரித்த செல்வங்களோடு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
அங்கு ஜீயர் நாயனாரையும் (பூர்வாச்ரமத்தில் மாமுனிகளின் திருப்பேரனார் ) சில ஸ்ரீவைஷ்னவர்களையும்
தண்டன் சமர்ப்பித்து தன் ஆசார்யனை பிரிந்து தான் வாடும் சோகத்தை பகிர்ந்துகொண்டார்.
அப்பொழுது மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம் (தன் தண்டத்தின் மீதம்),
திருவாழி மோதிரம் மற்றும் பாதுகைகளும் பொன்னடிக்கால் ஜீயரிடம் சமர்ப்பிக்க பட்டன.
இப்பொழுதும் வானமாமலை ஜீயர்கள் உற்சவ காலங்களில்
மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிகிறார்கள்.
அதன் பிறகு வானமாமலையில் தொடர்ந்து கைங்கர்யங்களை மேற் கொண்டார்.

அக்காலத்தில் வானமாமலையில் ஸ்ரீவரமங்கை நாச்சியாருக்கு
உற்சவ விக்ரஹம் எழுந்தருளப் பண்ணவில்லை.
ஒரு முறை தெய்வநாயகன் பொன்னடிக்கால் ஜீயரின் ஸ்வப்பனத்தில் எழுந்தருளி
திருமலையிலிருந்து நாச்சியாரை எழுந்தருளப்பண்ணுமாறு ஆணையிட்டார்.
எனவே பொன்னடிக்கால் ஜீயர் திருமலைக்கு யாத்திரை புறப்பட்டு அடைந்தார்.
அப்பொழுது திருமலை நாச்சியார் ஸ்வப்பனத்தில் எழுந்தருளி
“அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளப்பண்ணி தெய்வநாயகனோடு திருக்கல்யாணம் செய்து வெய்யும்”
என தன் சங்கல்பத்தை தெரிவித்தாள்.
இதே போல் திருமலை ஜீயர்களின் ஸ்வப்பனத்திலும் எழுந்தருளினாள்.
இதையேற்ற ஜீயர்கள் அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம் அர்ச்சா திருமேனியை ஒப்படைத்தனர்.
பொன்னடிக்கால் ஜீயர் தானே தாயாரை எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார்.
தெய்வ நாயகனும் பொன்னடிக்கால் ஜீயரை பெரியாழ்வாரைப்போலே “மாமனாராக” கொள்கிறார்.
இன்றும் இந்த வைபவம் வானமாமலையில் கொண்டாடப்படுகின்றது.

இதன் பிறகு பல திருநக்ஷத்ரங்கள் வாழ்ந்து பல சத்தான உபதேசங்களை எல்லோருக்கும் நல்கி ,
பொன்னடிக்கால் ஜீயர் தன் ஆசார்யரான அழகிய மணவாளமாமுனிகளை த்யானித்து
தன் சரம திருமேனியைத் துறந்து திருநாடு அலங்கரித்தார் (பரமபதம் அடைந்தார்).
அவர் நியமித்த அடுத்த ஜீயர் ஸ்வாமிகளைத் தொடர்ந்து இன்றுவரை வானமாமலையில்
ஆசார்ய பரம்பரை தொடர்ந்து வருகிறது.

நாமும் பொன்னடிக்கால் ஜீயரின் திருவடியை இதேபோல் எம்பெருமான்
மற்றும் ஆசார்ய சம்பந்தத்துக்காகப் பிரார்த்திப்போம்!!!

மாமுனிகள் முதல்முறையாக திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்றபோது,
பொன்னடிக்கால் ஜீயரும் உடன் சென்றார்.
இருவரும் அடிவாரத்தில் (அலிப்ரி) தங்கியிருந்தனர்.
அன்றிரவு திருப்பதி கோயில் ஜீயர் சுவாமியான பெரிய கேள்வியப்பன் ஜீயரின் கனவில், ஒரு குடும்பஸ்தர் படுத்திருக்க,
அவரது திருவடியில் ஒரு சந்நியாசி அமர்ந்திருப்பது போன்று கண்டார்.
மறுநாள், கேள்வியப்பன் ஜீயர் இது குறித்து விசாரிக்க, மணவாள மாமுனிகளும், பொன்னடிக்கால் ஜீயரும்
திருமலைக்கு வந்திருப்பது தெரியவந்தது.

தனக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும்’
என்று, தமது சீடர்களிடம் மாமுனிகள் அருள்வது வழக்கம்.
அப்பாச்சியாரண்ணா என்பவர் மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட,
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அமரச்செய்து,
அப்பாச்சியாரண்ணாவுக்கு சமாச்ரயணம் (பஞ்ச சம்ஸ்காரம்) செய்யுமாறு கட்டளை இட்டார்.
அதனை, பொன்னடிக்கால் ஜீயரும் பூர்த்தி செய்தார்.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் கைங்கர்யத்துக்காக,
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து ஜீயர் புறப்பட எண்ணினார்.
அப்போது, பொன்னடிக்கால் ஜீயர் உட்பட மாமுனி களின் சீடர்கள் தினம் 100 பாசுரங்களாக, திவ்ய பிரபந்தத்தை சேவித்தனர்.
“அணியார் பொழில் சூழ் அரங்கநகரப்பா” என்று அவர்கள் சேவிப்பதைக்கேட்டு
ஸ்ரீ ரங்கநாதபெருமான் மனம் குளிர்ந்து, தனது சந்நிதியில் இருந்த அரங்க நகரப்பனை ( ஸ்ரீ லக்ஷ்மிநாராயண விக்ரஹம்),
பொன்னடிக்கால் ஜீயருக்கு வழங்கி, அதனை நாங்குநேரிக்கு எழுந்தருளச் செய்யுமாறு பணித்தார்.
இந்த விக்கிரகத்தையும் இப்போது நாங்குநேரி வானமாமலை மடத்தில் தரிசிக்கலாம்.

வானமாமலையில் மட்டுமின்றி, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருக்குறுங்குடி மற்றும் நவ திருப்பதிகளிலும்
பல்வேறு கைங்கர்யங்களை ஏற்றார்.
பொன்னடிக்கால் ஜீயர் வடதேச யாத்திரை சென்றிருந்தபோது, மாமுனிகள் இந்த நில உலகைத் துறந்தார்.
இதையறிந்து பொன்னடிக்கால் ஜீயர் மிகவும் கலக்கமுற்றார்.
மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம் (தன் தண்டத்தின் மீதம்), திருவாழி மோதிரம்
மற்றும் பாதுகைகள் பொன்னடிக்கால் ஜீயரிடம் வழங்கப்பட்டன.
வானமாமலை மடத்து ஜீயர்கள் உற்சவ காலங்களில் மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிவது
இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

கனவில் வந்த நாச்சியார்
அக்காலத்தில் வானமாமலையில் வரமங்கை நாச்சியாருக்கு உற்சவ விக்கிரகம் இல்லை.
பொன்னடிக்கால் ஜீயர், திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்தார்.
அப்போது, திருமலை நாச்சியார் அவர் கனவில் தோன்றி,
“அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளச் செய்து, அத்தலத்து எம்பெருமானான
தெய்வநாயகனோடு திருக்கல்யாணம் செய்து வையும்” என தெரிவித்தாள்.
இதேபோல் திருமலைக் கோயில் ஜீயர்களின் கனவிலும் கூறினாள்.
இதையேற்ற ஜீயர்கள், அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம், நாச்சியாரின் விக்கிரகத்தை ஒப்படைத்தனர்.
பொன்னடிக்கால் ஜீயர் தானே நாச்சியாரை, எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.
தெய்வநாயகனும் பொன்னடிக்கால் ஜீயரை பெரியாழ்வாரைப்போல “மாமனாராக” கொள்கிறார்.
இன்றும் இந்த வைபவம் வானமாமலையில் கொண்டாடப்படுகிறது.

ஏராளமான உபதேசங்களை அருளிய, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியின் திருவரசை நாங்குநேரியில் தரிசிக்கலாம்.
அவர் நியமித்தபடி வானமாமலையில் ஆச்சார்ய பரம்பரை தொடர்ந்து வருகிறது.
தற்போது, 31ஆவது பட்டம் ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், வானமாமலை மடத்தை நிர்வகிக்கிறார்.

——————-

ஸ்ரீ வானமாமலை முதலாவது ஸ்வாமி விஷயமான மங்களாசாஸநம்‌, ப்ரபத்ததி
[“* மஹார்யர்‌ ?” என்ற தொட்டயாசார்யர்‌ அருளியவை-
பண்டித ரத்னம்‌, திருக்கண்ணபுரம்‌ செள. ஸ்ரீநிவாஸாசார்யர்‌ (சிரோமணி) இயற்றிய உரையுடன்‌

ஸ்ரீவரமஹாசலயோகி மங்களாசாஸகம்‌ ”, *
*ஸ்ரீவரமஹாசல யோக ப்ரபத்தி.” என்ற இரு, ஸ்தோத்திரங்களையும்‌ அருளிச்‌ செய்துள்ளார்
இவை இரண்டும்‌ அக்காலம்‌ முதலே வானமாமலை மடத்தில்‌ நித்ய ததியாரதன காலங்களில்‌ முதலில்‌ அநுஸந்திக்கப்பட்டுப்‌
பிறகு .ஸ்ரீ மணவாளமாமுனிகளின்‌ தினசர்யை முதலியன அநுஸந்திக்கப்படுகின்றன.
மேலும்‌ .ஸ்ரீ அரங்கநகரப்பன்‌ டோலோத்ஸவ காலங்களி.லும்‌ இவை யிரண்டும்‌ அநுஸக்திக்கப்படுகின்‌றன.
எனவே .ஸ்ரீவானமாமலை மடத்து ஸம்ப்ரதாயத்தை அநுஸரித்து வருமவர்களுக்கு, நித்யம்‌ அநுஸந்தேயங்கள்‌ இவை.
இவ,ற்றுக்கு ஸம்ஸ்‌கிருத பாஷையிலோ இதர -பரஷைகளிலோ இதுவரையில்‌ வ்யாக்யானம்‌ ஒருவரும்‌ எழுதியதாய்த்‌ தெரியவீல்லை.
ஆகையால்‌ மடத்து ஸம்ப்ரதாயமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களுள்‌ ஸம்ஸ்க்ருத. பாஷையில்‌ அதிகம்‌ பரிசயமில்லாதவர்களுக்‌கும்‌
ஸ்த்ரீ பரலர்களுக்கும்‌ ௮.நுஸந்தானம்‌ செய்யும் போதே எளிதில்‌ அதன்‌ அர்த்தத்தை அறிந்து அ.நுஸந்திப்பதற்கு
அநுகுணமாக வர்த்தமான ஸ்வாமியின்‌ திருவுள்ளத்தைப்‌ பின் சென்று அடியேன்‌ இரண்டு கீரந்தங்களுக்கும்‌
எளிய நடையில்‌ தமிழில்‌ பதவுரையும்‌,
சில ஸ்லோகங்களில்‌ தாத்‌பர்யம்‌ துரவஹமாயிருப்பதால்‌ அதை நன்கு விளக்கும்‌ கருத்‌துரையுமாகச்‌ சேர்த்து உரையை எழுதினேன்‌.
தற்‌பொழுது ஸ்ரீமத்‌ பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸ்ரீமதுபய வேதாந்தாசார்யரான வர்த்தமான ஸ்வாமி ஸ்ரீவானமாமலை ராமாநுஜ ஸ்வாமியின்‌ நியமனத்தாலும்‌ ஆதரவாலும்‌ இந்த உரை மடத்து வெளியீடுகளில்‌ ஒன்றாய்‌ வெளியிடப்பட்டிருக்கறது.
இந்த தொட்டய்யங்கார்‌ ஸ்வாமி தமது ஸ்வாமி விஷயமாய்‌ தினசர்யை என்ற கரந்தமும்‌ அருளிச்‌ செய்திருப்பதாய்த்‌ தெரிகிறது.

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌, தீபக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்ரப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முதிம்‌ |

ரம்யஜாமாத்ருயோகீந்த்ர – பாதரேகாமயம்‌ ஸதா |
ததாயத்தாத்மஸத்தாதிம்‌ ராமாநுஜமுநிம்‌ பஜே |

ஸ்ரீ வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை பற்றிய மங்களாசாஸனம் –
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான ஸ்ரீ தொட்டையங்கார் அப்பை என்னும் மஹாசார்யர் அருளிச்செய்தது

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக்கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையவராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

அவதாரிகை
ஸ்ரீமத்‌ வாதூலகுல திலகராய்‌ ஸ்ரீநிவாஸார்யர்‌ என்ற
அபர: நாமத்தையுடைய மஹார்யர்‌, கோயிலில்‌
ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க விருப்பமுற்று எழுந்தருள, ஸ்ரீ மாமுநிகளும்‌ இவரைத்‌ தமது ப்ரதம சிஷ்பரான
ஸ்ரீ வானமாமலை ராமாநுஐ ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி. பணித்தார்‌.
அவரும்‌ அவ்வாறே ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்த மந்த்ர மந்த்ரார்த்த ரஹஸ்யாதி கிரந்தங்களையும்‌ ஸ்ரீபாஷ்ய பகவத்‌: விஷயாதிகளையும்‌ அவரிடம்‌ அதிகரித்துச்‌ சிறந்த. ஞானமுடையராய்‌ ஸ்வாசார்ய சுச்ரூஷா பரராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
பிறகு மாமுனிகள்‌ தமக்குண்டான அதிசய மெல்லாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உண்டாகவேண்டு மென்று இருக்குமவராகையாலே,
தம்மைப்‌ போலவே அவருக்கும்‌, அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து முதிர்ந்த ஞானமுடையவர்களில்‌ சிறந்த சிலரை ௮ஷ்ட திக்‌ கஜங்களாகக்‌ கல்பித்தருளினார்‌.
அவ்வெண்மர்‌ திருநாமங்களும்‌ “:ஸ்ரீமத் மஹார்ய ரண புங்கவ” என்ற ஸ்லோகத்தில்‌ கூறப்பட்‌டுள்ளது.

மாமுனிகள்‌ ஒரு காளல் தமது திக்கஜங்களோடு’ தம்மை ஸேவித்து நிற்கும்‌ வானமாமலை ஜீயரையும்‌
அவருடைய ஸம்ருத்தியையும்‌ கடாக்ஷித்து அதிஸந்துஷ்டராய்‌ எழுந்தருளியிருந்து,
மஹார்யரைக்‌ குறித்து, “*உமது ஆசார்‌யன்‌ விஷயமாய்‌ ஒரு ஸ்லோகம்‌ சொல்லிக்‌ காணும்‌” என்ன, அவரும்‌ அவசராய்‌,
“* ரம்ய ஜாமத்ரு…முநிம் பஜே ” என்று அருளிச் செய்ய அது தமது அபிமதத்திற்கு இசைந்து இருந்தபடி யாலே ஸந்தோஷிக்க,
மற்ற சிஷ்யர்களும்‌ இந்த ஸ்லோகத்தைக்‌ கேட்டு மாமுனிகளைப்‌ பார்த்து,
“*அடி.யோங்‌களுக்கு இற்றைக்கு ஓர்‌ மஹா நிதி ப்ராப்தமாயிற்று”’ என்று: கொண்டாட,
மாமுனிகளும்‌ தமது ஸ்ரீசைலேச தயாபாத்‌ரத்‌ தனியனோடு இந்த ** ரம்யஜாமாத்ரு யோ$ந்த்ர”” என்‌னும்‌ தனியனையும்‌
நியதமாகச்‌ சேர்த்து அநுஸந்திக்கும்படி.நியமித்துத்‌ தமது அம்சாவதாரமே வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ என்று
அவர்‌ வைபவத்தை ப்ரகாசப்படுத்தினார்‌.

பிறகு அந்த மஹார்யர்‌, மணவாளமுனிகளால்‌ அநேக ஸமயங்‌களில்‌ ஸூஸிப்பிக்கப்பட்ட தமது ஆசார்யன்‌ வைபவத்தையும்‌,
உபய வேதாந்த மந்த்ர ரஹஸ்யாதி விஷயமான ஸ்ரீ ஸுக்திகளையும்
ஞானத்தையும்‌, ஸெளலப்யம்‌, ஸெளசில்யம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலிய அவரது குணகணங்களையும்‌ கண்டு அதிசயித்து,
அக்குணங்களில்‌ ஆழ்ந்து பக்திபரவசராய்‌, மெய்மறந்து பல்லாண்டு பாடியல்லது நிற்கவொண்ணாத நிலையை எய்தி,
அவரது மங்களாசாஸநஈத்திலே ப்ரவ்‌ருத்தராகிறார்‌ இந்த கிரந்தத்திலே..
இந்த ராமாநுஜ முனி விஷயமான ப்ரபத்தி கிரந்தத்தை ‘ அருளிச்செய்தவரும்‌ இவரேயாவர்‌.
இவருக்குத்‌ தொட்டை அய்யங்கார்‌ அப்பை என்ற திருநாமமும்‌ உண்டு.

ரம்யோ பயந்த்ரு முநி வர்ய தயாநிவாஸம்‌
கருணாம்ருதாப்‌திம்‌ ஆத்மவக்தம்‌ ஆஜக்மஸித்த
பரிபூத சரித்ர போதம்‌ மகோஜ்ஞவரதாஹ்வயம்‌
யதிபதம்‌ ராமாநுஜம்‌ வந்தே -1-

பதவுரை:–
ரம்யோ பயந்த்ரு முநி வர்ய-அழகிய மணவாள மாமுனிகளது,
தயாநிவாஸம்‌-கருணைக்கு இருப்பிடமாயும்‌,
கருணாம்ருதாப்‌திம்‌-கருணையென்னும்‌ அம்ருதத்திற்கு உறை விடமான கடல்போன்றவரும்‌,
ஆத்மவக்தம்‌-தைர்யத்தை.யுடையவரும்‌, (ஆஜக்மஸித்த…போதம்‌) ஆஜக்மஸித்த -பிறப்பு முதலேயுண்டாகிய,
பரிபூத – மிகவும்‌ புனிதமான,
சரித்ர-ஆசரணையையும்‌,
போதம்‌-ஞானத்தையும்‌ உடையவரும்‌, மகோஜ்ஞவரதாஹ்வயம்‌-தமது பிதாவினால்‌ அழகிய வரதர்‌ என்ற திருபாமம்‌ சாற்றப் பெற்றவரும்‌,
யதிபதம்‌-யதிகட்கு இறைவருமான,
ராமாநுஜம்‌ – வாராசல ராமாநுஜ முனிவரரை,
வந்தே – வணங்குகின்றேன்‌.

அழகிய மணவாள மாமுனிகளின் தயையால் பெறப்பட்ட நற்குணக் கூட்டங்களுக்கு கடல்போல் இருப்பவரும், முனிவர்களுக்குத் தலைவரும், எங்கள் குலத்திற்கு நாதருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமிக்கு எப்பொழுதும் வணக்கம் உரித்தாகுக.

இந்த வாநாசல ராமாநுஜ முநிவர்‌, ஸ்ரீமணவாள் மாமுனிகள்‌ கிரஹஸ்த தாமத்தை அநுஷ்டித்துத்‌
திருக்குருகூரில்‌ எழுந்தருளியிருந்த காலத்திலேயே அவரது திருவடி.களில்‌ முதலில்‌ ஆஸ்ரயித்த முதலாவது சிஷ்யராவார்‌.
ஆகையால்‌ அவரது தயைக்கு இவரே உறைவிடமாயினர்‌.

இவர்‌ ஆத்மவானும்‌ ஆவர்‌. அதாவது ஓரிடத்திலும்‌ மழுங்‌காத தைர்யமென்னும்‌ குணத்தை உடையவர்‌.
இத்தால்‌ தம்மை ஆஸ்ரயித்தவர்களை உய்விக்க இவர்‌ யத்னம்‌ செய்‌தால்‌ அது விஷயத்தில்‌ தளர்வை எய்தார்‌ ‘எனக்‌ கூறப்‌பட்டதாகும்‌.

ஸ்ரீ ராமாயணத்தில்‌ ‘* ஆத்மவாந் கோ ஜிதக்ரோத: ” என்னுமிடத்தில்‌ இப் பதத்திற்ரு தைர்யவான்‌
என்ற அர்த்தமே கோவிந்தராஜரால்‌ கூறப்பட்டுள்ளது காண்க.

அல்லது ஆத்ம சப்தம்‌ ஸ்வபாவத்தைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அபிமுகனான சேதநனை ரக்ஷிக்கும்‌
ஆசார்ய ஸ்வபாவத்தைக்‌ கூறி, அத்தகைய ரக்ஷண ஸ்வபாவம்‌ வாய்ந்தவர்‌ என்றுமாம்‌.

அல்லது ஆத்ம சப்தம்‌ மனதைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அதிஈமாய்‌ தம வசத்திலாய மனத்தையுடையவர்‌ என்றுமாம்‌.
இத்தால்‌ இவரது வைராக்யமுடைமை கூறப்பட்டதாகும்‌.

இவர்‌ கருணை யாகிய அம்ருதம்‌ நிறைந்த கடல்‌ போன்றவர்‌.
இவரைக்‌ கடலாகக்‌ கூறியதால்‌ கடலில்‌ தண்ணீரை ஒருவராலும்‌ வற்றச் செய்ய முடியாதாப்‌ போலவே
இவர்‌ கருணையையும்‌ வற்றச்‌ செய்ய இயலாது என்பது ஸூஸிதமாம்‌.

கருணையை அம்ருதமாகக் கூறியதால்‌, அம்ருதம்‌ தன்னை அருந்தியவருக்கு அமரத்‌ தன்மை யளிப்பது போலவே,
இவரது கருணையும்‌ தமக்கு விஷயமானவர்களுக்கு அமரத்வத்தை(நித்பத்வத்தை) அளிக்குமென்பது தேறுகிறது.
நிற்க இப்‌ பொழுது இவர்‌ நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸத்தை எய்தி ராமாநுஜ முனி என்று திருநாமம்‌ உடையராயினும்‌,
தமது பால்யத்தில்‌ தமது பிதாவால்‌ மிகுந்த அழகு வாய்ந்துஇருந்தமை காரணமாக, இவர்‌ அழகிய வரதரென்று அழைக்‌கப்பட்டவரா யிருப்பர்‌.
பிறப்புடனே கூட உண்டாகிய மிகப்‌ பரிசுத்தமான அநுஷ்டானங்களையும்‌ ஞானத்தையும்‌ உடையவர்‌ இவர்‌.
இத்தகைய பெருமை வாய்ந்த யதித்‌ தலைவரான ராமாநுஜ முனியை வணங்குகின்றேன்‌

————

அவதாரிகை.–
முதல்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜ முநிவர்‌ மணவாளமாமூனிகளின்‌ தயைக்குப்‌ பாத்ரமானவர்‌என்றார்‌.
இதில்‌ இவருக்கு உண்டாகிய வாத்ஸல்ய ஸெளலப்ய ஸெளஸீல்யாதி குணங்களுக்கு ஊற்றுவாய்‌ மாமுனிகள்‌ எனக்‌ கூறி,
இவரே எனது குலத்திற்கு நாதன்‌” எனவும்‌ கூறி வணங்குகின்றார்‌

ரம்யோ பயந்த்ரு, முநிவர்ய தயாநுபாவ
ஸம்ஸித்த-சன்ய ஸத்குணகண, ஓக
மஹார்ணவாய , யமிரர்ம்‌ வராய மாமக குலஸ்ய நாதாய
ராமாநுஜாய முநயே நம: அஸ்து -2-

பதவுரை:–
ரம்யோபயந்த்ரு…மஹார்ணவாய) ரம்யோ பயந்த்ரு- அழகிய மணவாளனென்னும்‌,
முநிவர்ய – யதித்‌ தலைவனது,
தயாநுபாவ -.கருணையின்‌ ப்ரபாவத்தினால்‌,
ஸம்ஸித்த-சன்ய்‌ ஸித்‌திக்கப்பெற்ற,
ஸத்குணகண-சிறந்த குணங்களின்‌ திரளாகிற,
ஓக-ப்ரவாஹத்திற்கு,
மஹார்ணவாய – புகலிடமாகிய ஸமுத்ரம்‌ போன்றவரும்‌, யமிரர்ம்‌-மனதை அடக்கியாளும்‌ யோகிகளுள்‌
வராய – தலைசிறந்தவரும்‌,
மாமக குலஸ்ய-எனது குலத்திற்கு,
நாதாய-யஜமானரும்‌,
ராமாநுஜாய – இராமாநுசன்‌ எனப்‌ பெயர்பூண்டவருமான; முநயே – முநிவரின்‌ பொருட்டு,
நம: – எனது நமஸ்காரம்‌,
அஸ்து – ஆயிடுக.

இந்த வாநாத்ரி முநிவர்‌ பிறப்பே தொடங்கி உண்டாகிய ஸதாசாரம்‌, ஞானம்‌ இவைகளையுடையராயும்‌
மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்த பின்னர்‌, அவரது கருணையின்‌ மஹிமையால்‌ உண்டாகிய வாத்ஸல்ய
ஸெளசில்ய ளெளலப்யாதி குணத்‌ திரள்‌ ப்ரவாஹமாகச்‌ சென்று சேரும்‌ பெருங்கடலாயினர்‌.
இவரை குணக்‌ கட.லாகக்‌ கூறியதால்‌, குணங்கள்‌ வற்றாத ஆகரம்‌ இவர்‌ என்றதாயிற்று
இவர்‌ இந்த்ரியங்களை அடக்கி .மனதைத்‌ தம்‌ நிலையிலே நிறுத்தும்‌ யோகிகளுள்‌ சிறந்த தலைவர்‌.
எனது குலத்தை நிர்வஹித்து ஈடத்திப்போரும்‌ நாதனுமாவார்‌-
இப்‌ பெருமை வாய்ந்த இவ்வாநாசல முனிவருக்கு நித்யமாக எனது நமஸ்காரம்‌ உரித்தாகுக

———–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜ முநிவருக்கு உண்டாகிய ஸத்குணங்கள்‌ மணவாள மாமுனிகளின்‌ தயா ப்ரபாவத்தாகே என்றார்‌.
இதில்‌ இவருக்கு தாரக போஷகாதிகளும்‌ மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளே எனக்‌ கூறி,
இவர்‌;தமது குலத்திற்கு நாதரானமையை விளக்‌கிக்‌ கூறுகிறார்‌.

ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர பாதகம் ஜாத
ப்ருங்கம்‌ கருணாந்தரங்கம்‌ மதீய ஹ்ருத்‌
சந்த்ர காந்கோபல பூர்ண சந்தரம்‌
ராமாநுஜம்‌ முநிம்‌ கெளமி -3-

பதவுரை:–
ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
பாத – திருவடிகளாகிற,
கம்ஜாத – தாமரை மலர்களில்‌ படியும்‌,
ப்ருங்கம்‌ – வண்டு போன்றவரும்‌,
கருணாந்தரங்கம்‌- கருணையுடன்‌ கூடிய மனதை உடையவரும்‌,
மதீய- என்னுடையதான,
ஹ்ருத்‌ – மனதாகிற,
சந்த்ர காந்கோபல – சந்த்ர காந்தக்‌ கல்லுக்கு,
பூர்ண சந்தரம்‌ – கலைகள்‌ நிறைந்த சந்த்ரன்‌ போன்றவருமான,
ராமாநுஜம்‌ முநிம்‌ – ராமாநுஜன்‌ என்னும்‌ முநிவரை,
கெளமி – ஸ்துதிக்‌கின்றேன்‌.

அழகிய மணவாள மாமுனிகளுடைய திருவடித்தாமரைகளில் வண்டுபோல் இருப்பவரும், கருணை நிறைந்த மனதுடையவரும், அடியேனுடைய மனதாகிற சந்த்ரகாந்தக்கல்லுக்கு முழுமதி போன்றவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.

இவ்விராமா நுஜ முநிவர்‌ மணவாள மாமுனிகளினுடைய திருவடித்‌ தாமரைகளில்‌ படிந்த
வண்டு போன்றவர்‌ என்பதால்‌ அத்திருவடி. மலர்களையே . தமக்கு தாரக போஷகங்களாகக்‌ கொண்டவர்‌ எனக்‌ கூறியவாறு
வண்டுகளுக்கு மலரே தாரக போஷகங்களல்‌ஃவா?
இவர்‌ கருணையோடு கூடிய மனது வாய்ந்தவர்‌,
மேலும்‌ எனது மனதாகிற சந்த்ரகாந்தக்‌ கல்‌.லுக்கு கலாபூர்ணனான சந்திரன்‌ போன்றவர்‌.
இவரைச்‌ சந்திரனாகவும்‌ மனதைக்‌ கல்லாகவும்‌ கூறியதால்‌, கல்லையும்‌ உருகச் செய்யும்‌ சக்தி வாய்ந்தவர்‌
இம்‌ முனிவர்‌ என்றும்‌, அக்கல்‌ சந்திரனுக்கன்றி மற்றொன்றைக்‌ கண்டு உருகமாட்டாதது போலவே,
எனது கல் கெஞ்சம்‌ அவருக்கன்றி மற்றையோருக்குக்‌ கரையாது என்றும்‌,
கலாபூர்ண னான சந்த்ரனென்று ரூபகமாகக்‌ கூறியதால்‌ இவரும்‌ ௮ச் சந்த்ரனைப் போலவே கலா பூர்ணர்‌ (வித்யைகள்‌ நிரம்பியவர்‌ )
என்றும்‌ கூறப்பட்டதாகும்‌. இதனால்‌ இவர்‌ கல்வியின்‌ பெருமை காரணமாகத்‌ தம்‌ நெஞ்சம்‌ உருகியதாகக்‌ கூறப்‌ பட்டதாகும்‌.
கல்வி காரணமாகத்‌ தமது குலத்துக்கு நாதர்‌ என்று கீழில்‌ ஸ்லோகத்திற்கு இது விவரணமுமாகும்‌.
இவ்‌ வாறு சிறப்பு வாய்ந்த இராமாநுச முநியைத்‌ துதிக்‌ கின்றேன்‌

அவதாரிகை:–
இந்த ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கல்யாண குணங்களில்‌ சிலவற்றைக்‌ கூறி, இவர்‌
அழகிய மணவாள மாமுனிகளுக்கு அந்தரங்கராய்‌
**பஹி: சர: ப்ராண:”’ என்னுமா போலே அம்முனிவரின்‌ ப்ராண ஸ்தாந ருமாவார்‌ என்கிறார்‌.

வாத்ஸல்ய ஸெளசீல்ய ஞான ஆதி குண ஸாகரம்‌
ரம்ய ஜாமாத்ரு முநி ஜீவிதம்‌ ரமாநுஜ முநிம்‌ வந்தே -4-

பதவுரை :–
வாத்ஸல்ய -வாத்ஸல்ய குணமென்ன,
ஸெளசீல்ய – ஸெளசீல்ய குணமென்ன,
ஞான- ஞானமென்ன,
ஆதி – இவை முதலாய,
குண – குணங்கட்கு,
ஸாகரம்‌ – கடல்‌ போன்‌ றவரும்‌
ரம்ய ஜாமாத்ரு முநி – அழகிய மணவாள மாமுனிகட்கு,
ஜீவிதம்‌ – ப்ராணன்‌ போன்‌றவருமான,
ரமாநுஜமுகிம்‌ – ராமாநுஜ முனியை,
வந்தே – வணங்குகின்றேன்‌:

வாத்சல்யம், சீலம், ஞானம் முதலான நற்குணங்களுக்கு கடல் போன்று இருப்பவரும்,
அழகிய மாமுனிகளை தனக்கு ப்ராணனாக கொண்டிருப்பவருமான ராமாநுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்

வாத்ஸல்யமென்பது – தன்னை ஆஸ்ரயித்தவர்‌கள்‌ இழைத்த குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொள்ளும்‌
மிகப்‌ பெரியோரின்‌ ௮ற்புத குணமாம்‌. இக்‌ குணம்‌ எமது குற்றங்‌களைக்‌ கண்டும்‌ அஞ்சாது அப்பெரியோரை நாம்‌ அணுகு வதற்கு உறுப்பாகும்‌.
செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்ளுதல்‌ பெரியோரின்‌ இயல்பு.
ஸெளசீல்யமென்பது.. தான்‌ எவ்வளவு பெருமை யுடையவனாயினும்‌ தன்‌ மேன்மையைக்‌ கொஞ்சமும்‌
தன்‌ மனத்தால்‌ நினையாது மிகத்‌ தாழ்ந்தோருடனும்‌ புரையறக்‌ கலக்கும்‌ குண விசேஷமாகும்‌.
இஃது நாம்‌ கிட்ட விரும்பும்‌ பெரியோரின்‌ பெருமையைக்‌
கண்டு நாம்‌ அகல வேண்டாமைக்மு உரித்தாய குணம்‌,
ஞானமென்பது தன்னை ஆஸ்ரயித்தவர்களின்‌ அபே
க்ஷையை அறிய ஹேதுவாய குணம்‌.
ஆதி சப்தத்தால்‌ ஸ்வாமித்வம்‌, ப்ராப்தி-பூர்த்தி முதலிய குணங்களும்‌ கூறப்‌ பட்டனவாகும்‌.
இக்குணங்கட்கு இவரைக்‌ கடலெனக்‌ கூறியதால்‌ இவைகள்‌ வற்றாது நிரம்பி இருக்குமிடமென்று: கூறியதாகும்‌.
நிற்க இம்முனிவரை மாமுனிகளுக்கு ப்ராணன்‌ எனக்‌ கூறியதால்‌ இவரை க்ஷண காலமும்‌ விட்டுப் :
பிரிந்து
மாமுனிகள்‌ தரிக்கவல்லரல்லர்‌ என்றதும்‌,
(ஸ்ரீராம பிரானுக்கு இளைய பெருமாள்‌ போல்‌ ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌
எல்லா விதக்‌ கைங்கர்யங்களையும்‌ செய்யும்‌ அந்தரங்கர்‌ என்ற அம்சமும்‌ தோற்றுகின்றன.
இத்தகைய பெருமை வாய்ந்தவரை வணங்குகின்றேன்‌.

———————–

அந்தராளாஸ்ரம த்வயம்‌ யத்‌ அகாதர ஸம்வரீடம்‌ –
வாந மஹாசைல ராமாநுஜ மஹாமுமிம்‌ வந்தே-5-

அந்தராளாஸ்ரம த்வயம்‌ – ப்ரும்ஹசர்யத்‌திற்கும்‌ ஸந்யாஸத்திற்கும்‌ மத்தியிலுள்ள கார்ஹஸ்த்யம்‌,
வாநப்ரஸதம்‌ என்னும்‌ ஆஸ்ரமங்களிரண்டும்‌,
யத்‌-எந்த முனிவரது,
அகாதர – ஆதரவின்மையாலே,
ஸம்வரீடம்‌ – மிமுந்த லஜ்ஜையை உடையதாக,
(ஆயிற்றோ)
வாந மஹாசைல- (அந்த) வானமாமாலை,
ராமாநுஜ மஹாமுமிம்‌ – ராமானுஜர் என்னும்‌ மாமுனியை, வந்தே-நமஸ்கரிக்கின்றேன்‌.

எவருடைய அனாதரத்தால் பிரம்மச்சர்ய சந்யாஸாச்ராமங்களுக்கு நடுவிலுருக்கும்
மற்ற இரண்டு ஆச்ரமங்களும் வெட்கத்தை அடைந்தனவோ,
அந்த வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.
(வானமாமலை ஜீயர் ஸ்வாமி பிரம்மச்சர்ய ஆச்ரமத்திலிருந்து நேரே சந்யாஸாச்ரமத்திற்கு ச்வீகாரம் செய்தவர்.
எனவே நடுவில் இருக்கும் ஆஸ்ரமங்கள் வெட்கம் அடைந்தனவாம். )

இங்கு “*வாந மஹாசைல ‘* எனக்‌ கூறியது எம்பெருமானை. ** வானமாமலையே அடியேன்‌ தொழ வந்‌தருளே ‘*
என்று நம்மாழ்வார்‌ அவனையே கூறியுள்ளார்‌,
அந்த வானமாமலை என்ற தழிழ்ப்‌ பதமே ஸம்ஸ்க்ருத பதமாக ** வாந மஹாசைல ”? என்று மஹார்யரால்‌ கூறப்பட்ட தாகும்‌.
எனவே அவ்வெம்பெருமானுக்கு உரிமை பூண்டவராய்‌ அவருடைய கல்யாண குணங்களையே அநவரதம்‌
அநு ஸந்தாநம்‌ செய்யுமவராகையாலே, **மஹா முநிம்‌’” என்றார்‌-
இந்த ஸ்லோகத்தின்‌ பீற்‌ பகுதியால்‌ இவரது சிறந்த வைராக்‌யம்‌ என்னும்‌ குணம்‌, மிகுந்த சமத்காரத்துடன்‌ கூறப்படுகிறது
அதாவது, இந்த ராமாநுஜ முநிவர்‌ தமது பிதாவால்‌ உபநயன ஸம்ஸ்காரம்‌ பெற்று ப்ரும்ஹ சர்‌யத்துடன்‌
வேத வேதாங்கங்களை நன்கு கற்றறிந்து வைராக்‌.யத்தை எய்தி, அதன்‌ மேலீட்டால்‌ ப்ரும்‌ஹசர்யத்திற்கும்‌
ஸந்யாஸத்திற்கும்‌ நடுவிலுள்‌௪ கார்‌ஹஸ்‌யம்‌, வான ப்ரஸ்‌தம்‌ என்ற இரண்டு ஆஸ்ரமங்களையும்‌ கண்ணெடுத்தும்‌ பாராது
இவர்‌ அநாதரவு செய்ததால்‌ அவைகள்‌ மிகுந்த வெட்கத்தை எய்தின என்‌கிறார்‌, மஹார்யர்‌ ரஸோக்‌ தியாலே,
வைகுண்ட என்றும்‌ சப்தம்‌ எம்பெருமானையும்‌, அவருக்கு வாஸ ஸ்தானமான பரமபதத்தையும்‌ கூறுவதுபோல
இங்‌கும்‌ வாநாசல என்ற பதம்‌ எம்பெருமானையும்‌ அவருடைய திருப்பதியான ஸ்ரீ வரமங்கல நகரையும்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌.
தற்காலத்தில்‌ வ்யவஹாராமம்‌ இவ்வாறே உண்டாயிருக்கலாம்‌.
“தேசிக சிகாமணிகளான எம்பெருமானார்‌ மணவாளமாமுனிகள்‌ போன்‌றவரும்‌ சிறிது காலம்‌
தர்மங்களை அதுஷ்டி.த்து நம்மை ஆதரித்திருக்க, அந்தோ நம்மை இவர்‌ கண்ணெடுத்து ஏற இறங்கவும்‌
பார்க்கவில்லையே” என்று இவரால்‌ ஏற்கப்படாத கீருஹஸ்‌ தாஸ்ரமம்‌ வெட்கமுற்றதாம்‌.
இது வாநப்ரஸ்தத்‌ திற்கும்‌ உபலஷணம்‌.
இத்தால்‌ அவ்விருவரிலும்‌ காட்டிலும்‌ வைராக்ய விஷயத்தில்‌ இவர்‌ சிறப்புற்றவர்‌ எனக்‌ கூறப்‌ பட்டதாகும்‌.
மணவாள மாமுனி கருஹஸ்த தர்மங்களை அநுஷ்டித்து வரும்‌ காலத்திலேயே அவரது ஸம்பந்தம்‌ பெற்ற இவர்‌,
தமது வைராக்யத்தின்‌ மேலீட்டால்‌ . ஸம் ஸாஸ்ரமத்தை எய்தினார்‌ என்பதை யதிந்தர ப்ரவண ப்ரபாவம்‌, ககநகிரிமுநி சரிதம்‌ முதலியவற்றில்‌ காணலாம்‌.
இச்‌ சிறந்த வைராக்யம்‌ பூண்ட இராமாநுஐ முநியை வணங்குகிறேன் என்கிறார்-

——————

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ அழகிய மணவாள மா முனிகளின்‌ திருவடிகளில்‌ முதலிலேயே இவர்‌ ஆஸ்ரயித்து,
அவருடைய கருணை பாயும்‌ முதல்‌ இடமாயுமானவர்‌ இவர்‌ என்று கூறுகிறார்‌.
அதாவது இவரே அவரது முதல்‌ சிஷ்யர்‌. இவரது கால்‌ நலத்தாலே மற்றெல்லா சிஷ்யர்‌களும்‌
தம்மை ஆஸ்ரயித்துத்‌ தாம்‌ பெருமை எய்தியதாக
மாமுனிகளும்‌ நினைத்தன்றோ இவருக்கு “*பொன்னடிக்கால்‌ ஜீயர்‌ ‘” என்று திருநாமம்‌ சாற்றியதும்‌.
எனவே அவர்‌ கருணைக்கு முதல்‌ இலக்கு இவர்‌. மேலும்‌ காமம்‌, குரோதம்‌ என்ற தீக்குணங்கள்‌ தம்மிடம்‌ இல்லாததோடு
தம்மை ஆஸ்ரயித்த மற்றையாரின்‌ தீய குணங்களையும்‌ அகற்றுமவர்‌ இவர்‌, என்ற பெருமையையும்‌ கூறுகிறார்‌.

ரம்ய ஜாமாத்ரு யோந்த்ர ப்ரஸாத ப்ரதமாஸ்பதம்‌
காமாதி துரிதாபஹம்‌ ராமாநுஜ முநிம்‌ வந்தே–6-

பதவுரை :-

ரம்ய ஜாமாத்ரு யோந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌, :
ப்ரஸாத -அருளுக்கு,
ப்ரதமாஸ்பதம்‌ – முதலாவது ஸ்தானமாகியவரும்‌,
காமாதி துரிதாபஹம்‌ – காமம்‌ முதலான பாபங்‌களை அகற்றுமவருமான,
ராமாநுஜ முநிம்‌ – வாநாத்ரி ராமாநுஜ முநிவரை,
வந்தே-வணங்குகின்றேன்‌.

அழகிய மணவாளமாமுனிகளின் அருளுக்கு முதல் இலக்கானவரும்,
காமம் முதலிய தோஷங்களைக் களைபவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்.

மற்றைய சிஷ்யர்கள்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ பெருமையை உணர்ந்து அவரை ஆஸ்ரயிப்பதற்கு
வெகுகாலம்‌ முன்னமேயே அவர்‌ கிருஹஸ்தாஸ்ரமத்தை யுடையராய்‌ திரு நகரியில்‌ எழுந்தருளியிருன்த போதே,
இந்த ராமாநுஜ முனிவர்‌ அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து அவரது கருணைக்கு முதல்‌ பாத்திரமாய்‌
அவர்‌ பாதரேகா ஸமராயிருந்து, பின்பு (மாமுனிகளை) ஆஸ்ரயித்த அண்ணன்‌, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌
முதலியோருக்கு ஆஸ்ரயணத்தில்‌ இவர்‌ புருஷகார மாயிருந்தமையாலும்‌ அவருடைய கருணைக்கு முதல்‌ விஷயம்‌ இவரே.
மேலும்‌ இவர்‌ வைராக்யசாலி யாகையால்‌ காமம்‌, க்ரோதம்‌, லோபம்‌, மோஹம்‌, மதம்‌, மாத்ஸர்யம்‌ என்று சொல்லப்படும்‌
உடன்‌ பிறந்த சத்ருக்‌களாகிய ஆறு தீய குணங்களையும்‌ தாம்‌ அகற்றியதோடு தம்மைச்‌ சார்ந்தோரையும்‌
அத் தீய குணங்கள்‌ சாரா வண்ணம்‌ நீக்கும்‌ சக்தி வாய்க்தவர்‌.
**காமாத்‌ தீரோதோபிஜாயதே க்ரோதாத்‌ பவதி ஸம்மோஹ :’” இத்யாதிகளாலே காமாதிகளின்‌ கொடுமை ஸ்ரீ கீதையில்‌
கண்ணனால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது. இவைகளைப்‌ பாப வாசகமான துரித சப்தத்தாலே கூறியது,
அப் பாபத்துக்கு இத்‌ தீய குணங்கள்‌ காரணமாகையாலே. இப்படிப்பட்ட பெருமை வாய்‌ந்த ராமானுஜ முகியை வணங்குகின்றேன்‌.

————-

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவர்‌ ராக த்வேஷாதிகள்‌ அற்றவரெனக்‌ கூறினார்‌.
இந்த ஸ்லோகத்தில்‌ ராக த்வேஷங்களே, நமக்கு நிலமன்று; நாம்‌ இங்‌கிருக்க இயலாது?” என்று
இவரை விட்டுத்‌ தாங்களே கை வாங்கிள்‌’ என்றும்‌, இவர்‌ அழகிய குணங்களுக்கு உறைவிடமென்றும்‌,
உத்தம புருஷ லக்ஷணம்‌ வாய்ந்தவரென்றும்‌ அருளிச் செய்கிறார் –

ரமணிய குணாகரம்‌ ராக த்வேஷ விநிர் முக்தம்‌
ராஜீவ லோசனம்‌ ராமாநுஜ முநிம்‌ வந்தே–7-

பதவுரை:–

ரமணிய குணாகரம்‌ – அழகிய குணங்களுக்கு உற்பத்தி ஸ்தாநமாயும்‌,
ராக த்வேஷ விநிர் முக்தம்‌ – ராக த்வேஷங்களால்‌ விடப் பெற்றவரும்‌,
ராஜீவ லோசனம்‌ – தாமரைப்‌ பூவின்‌ இதழ் போல்‌ அழகிய நீண்ட கண்களை யுடையவருமான,
ராமாநுஜ முநிம்‌ – ராமாநுஜ யோகியை,
வந்தே – வணங்குகிறேன்‌.

நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், விருப்பு வெறுப்பு ஆகியவைகளிலிருந்து விடுபட்டவரும்,
தாமரை இதழ் போன்ற திருக் கண்களை யுடையவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்.

இம்‌ முனிவர்‌ அனைத்து நற்குணங்கள்‌ உற்‌பவிக்கும்‌ கனியாவார்‌. -ராக த்வேஷங்களால்‌ விடப்பெற்றவர்‌.
அதாவது ௮வை இவரிடம்‌ முன்பிருந்து இவருடைய முயற்சியால்‌ அகற்றப்பட்டவையல்ல;
அவைகளே இவரைக்‌ கண்டு பயந்து ஓடுங்க, **இவர்‌ நமக்கு நிலமன்று” என்று இவரை விட்டு நீங்க.
இத்தால்‌ இவர்‌ ராக த்வேஷங்களின்‌ வாஸனையும்‌ அற்றவர்‌ எனக்‌ கூறப்பட்ட.தாகும்‌.
தாமரை இதழ் போன்ற அழகிய . திருக் கண்களை யுடையவர்‌ எனக்‌ கூறியதால்‌ இவரது மஹாபுருஷ லக்ஷண மும்‌,
அழகிய வரதர்‌ என்ற திரு நாமத்துக்குக்‌ காரணமான இவரது அழகும்‌ கூறப்பட்டனவாகும்‌.
இத்தகைய ராமாநுஜ முநியை: வணங்குகின்றேன்‌.
——————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது தோஷ.மின்மையும்‌ கல்யாணகுணங்களும்‌ ஸெளந்தர்யமுமாகி’யவை கூறப்பட்டன.
இதில்‌ இவரது வைராக்யத்தின்‌ பெருமை விஸ்தரிக்கப்படுகிறது.

ய வைராக்ய ஸம்பத்‌ பவ்காத்மஜே புரா உத்பத்திம்‌ அலபத
தத: ய சாந்தே – சாந்தரவே ஸம்ருத்தாம்‌ ருத்திம்‌ மிரந்தரம்‌ ௮காத்‌
ஸா இயம்‌ யம்‌ ஸமேத்ய புவநே நைகதா வித்யோததே ,
குரு வரம்‌ தம்‌ ராமாநுஐயோகீம்‌ வயம்‌ சச்வத்‌ பஸ்பேம—-8-

பதவுரை:–
ய – எந்த,
வைராக்ய ஸம்பத்‌ – வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌, பவ்காத்மஜே – வாயுவின்‌ புத்திரனான அநுமானிடம்‌,
புரா – முற்காலத்தில்‌,
உத்பத்திம்‌ – உற்பத்‌தியை,
அலபத – அடைந்ததோ,
தத: – அதன் பிறகு,
ய–எந்த வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌,
சாந்தே – அடக்கப்‌ பட்ட மனதையுடைய,
சாந்தரவே – சந்தநு மஹாராஜனின்‌ புதல்வனான பீஷ்மரிடம்‌,
ஸம்ருத்தாம்‌ – பூர்ணமான,
ருத்திம்‌ – ஸம்ருத்தியை,
மிரந்தரம்‌ – இடைவிடாது, நித்யமாக என்றபடி,
௮காத்‌ – அடைந்ததோ,
ஸா – அப்படிப்‌ பட்ட,
இயம்‌ – இந்த வைராக்யம்‌ என்னும்‌ ஐஸ்வர்யம்‌,
யம்‌ -எந்த ராமானுஜ முநியை,
ஸமேத்ய – அடைந்து,
புவநே -உலகில்‌,
நைகதா- அநேக விதமாக,
வித்யோததே – ப்ரகாசிக்‌கின்றதோ,
குரு வரம்‌ – ஆசார்யர்களுள்‌ சிறந்தவரான,
தம்‌ -அந்த,
ராமாநுஐயோகீம்‌ – இராமானுஜ முநியை,
வயம்‌ -நாம்‌,
சச்வத்‌ – அடிக்கடி,
பஸ்பேம-பார்க்கக் கடவோம்‌,–கண்டு களிக்கக் கடவோம்‌ என்றவாறு.

வைராக்கியமாகிற செல்வமானது வாயுகுமாரனிடத்தில் உற்பத்தியை அடைந்தது. பின்பு அது சந்தனு புத்ரரான பீஷ்மரிடம் நன்கு வளர்ச்சியை அடைந்து அது இப்பொழுது வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை அடைந்து பலவிதமாகப் பிரகாசிக்கிறது. அந்த ஜீயர் ஸ்வாமியை நாம் எப்பொழுதும் கண்களால் கண்டு களிப்போம்

வைராக்யம்‌ என்பது உலகில்‌ மிகச்‌ சிறந்த ஓர்‌ ஐஸ்வர்யமாகும்‌ ; அது எல்லோருக்கும்‌ கிடைத்த லரிது.
அவ்வைஸ்வர்யம்‌ முதலில்‌ வாயு புத்ரனாகிய அநுமானிடமே. உண்டாயிற்று.
அதன்‌ பிறகு மனச்‌ சாந்தி பெற்ற சந்தநு மஹாராஜனின்‌ குமாரனாகிய பீஷ்மரிடம்‌ நிரந்தரமாக மிக விருத்தியைப்‌ பெற்றது.
இவ்‌ விருவரை யொழிந்த மற்றையோருக்கு இவ் வைஸ்வர்யம்‌ இருந்ததில்லை என்பதை
*:௮கீயத்ர பீஷ்மாத்‌ காங்கேயா தர்யத்ரச ஹ.நூமத: | ஹறிணீ குர மாத்ரேண சர்மண மோஹிதம்‌:ஐகத்‌ ‘” என்ற வசனத்தால்‌ அறிகிறோம்‌. :
இந்த ஸ்லோகத்‌தின்‌ கருத்து ** கங்கா புத்திரனான பீஷ்மனையும்‌ அநுமானையும்‌ தவீர்த்து மற்றைய உலகம்‌
மானின்‌ குளப்படி போன்ற ஸ்திரீகளின்‌ அவயவ விசேஷத்தாலே மோஹ முற்றதே யாகும்‌”’ என்பதாம்‌.
பீஷ்மரின்‌ வைராக்யம்‌ அநுமானது வைராக்யத்தை விடச்‌ சிறந்ததாகும்‌. ஏனெனில்‌,
மிகுந்த வீர்யத்தையும்‌ ஐஸ்வர்யத்தையும்‌ உடையராய்‌ எல்லா போக்‌யங்களையும்‌ அனுபவிக்கத்‌ தகுதி வாய்ந்த அரசிளங்‌ குமாரரல்லவா அவர்‌?
அத்தகையவர்‌ தமது பிதாவின்‌ விருப்‌பத்தை உணர்ந்து மேலும்‌ பிதா காம போகங்களை அநுபவிக்க வேண்டியதற்காகவே
தமது யெளவனப்‌ பருவத்திலும்‌ தமது போகத்தை சபத பூர்வமாகத்‌ துறந்து உலகறி யச்செய்து உயிருள்ளளவும்‌
ப்ரும்ஹசர்யத்தையே அநுஷ்‌டித்துப்‌ போந்த மஹா வைராக்யசாலி யாயிற்றே அவர்‌,
மேலும்‌ தமது ப்ராதாவான விசித்ர வீர்யன்‌ நிமித்தமாக ஸ்வயம்வரத்தில்‌ பலாத்காரத்தால்‌ கொண்டு வரப்பட்ட
காசி ராஜன்‌ மகள்‌ அம்பா என்பவள்‌, தான்‌ ஏற்கனவே   ஸால்வராஜனை வரித்திருப்பதாயும்‌
தனது மனம்‌ அவனையே விரும்புவதாகவும்‌ சொல்ல, பீஷ்மரும்‌ விசித்ர .வீர்யனும்‌ அவளை அவள்‌ விருப்பப்படி. செய்ய அநுமதித்தார்கள்‌.
ஆனால்‌ அவள்‌ ஸால்வனைச்‌ சந்தித்து தன்னை மணக்கும்படி கேட்க **பிஷ்மரால்‌ பலாத்கரித்து வீர்யத்தால்‌ கொண்டு போகப்பட்ட
உன்னை நான்‌ விவாஹம்‌ செய்து கொள்ள மாட்டேன்‌”” என்று திரஸ்கரித்து விட்டான்‌.
பிற்கு அவள்‌ பீஷ்மரிடம்‌ வந்து, “*“ஸால்வன்‌ நிராகரித்து விட்டபடியா லும்‌ நீரே வீர்யத்தால்‌ என்னைக்‌ கொண்டுவந்தபடியாலும்‌
நீரா வது என்னை விவாகம்‌ செய்துகொள்ள வேண்டும்‌; இல்லையேல்‌ தவம்‌ செய்தாவது உமது உயிரை மாய்க்கும்‌
உபா யத்தைக்‌ கைக்கொள்வேன்‌”” என்று சபதம்‌ பண்ணினவிடத்‌திலும்‌ உயிரையும்‌ மதியாது தாம்‌ முன்‌
பண்ணிய சபதத்‌தின்படி ப்ரும்ஹசர்யத்தைப்‌ பேணிப்‌ போந்த மஹாநுபாவருமாவர்‌ அவர்‌.
இப்படி அவ்விருவரிடமும்‌ காணப்பட்ட வைராக்யம்‌, இக்‌ கலி காலத்திலும்‌ விரக்தர்களில்‌ தலைவரான
இவரிடம்‌ காணப்படுவதால்‌ மிகவும்‌ ப்ரகாசிக்கிறது என்‌றார்‌.
காமக்ரோதாதி தோஷமே நிறைந்த இக்‌. கலியிலும்‌ ஒருவரிட.ம்‌ அந்த வைராக்ய மிருந்ததால்‌ அது அபிவருத்‌
தியை யடைந்து ப்ரகாசிக்கின்றது எனக்‌ கூறப்பட்டது.
அத்தகைய வைராக்யம்‌ பூண்ட ராமாநுஐ முநிவரை அடிக்கடி காணக்கடவோம்‌; கண்டு களிப்பெய்தக்‌ கடவோம்‌ – என ப்ரார்த்திக்கிறார்‌.
இக்காலத்தில்‌ அத்தகைய வைராக்யம்‌ ‘வாய்ந்தவரை தர்சிப்பதும்‌, அதிலும்‌ அடிக்கடி தர்சிப்பதும்‌
கிடைக்கக் கூடிய தல்லவாகையால்‌ அதை ப்ரார்த்திக்கிரார்‌

—————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது வைராக்‌யத்தின்‌ பெருமை கூறப்பெற்றது.
இதில்‌ சிறந்த பண்டிதர்‌களாலும்‌ மெச்சப்படும்‌ இவரது கரந்த வ்யாக்யான சக்தியும்‌
மிகவும்‌ தூய்மையான ஆசாரமும்‌ கூறப்படுகின்‌றன

யஸ்ய வ்யாகீயா விதக்த ஸுரி பரிஷத்‌ சித்த அபஹார ,க்ஷமா யத்‌ தைநந்தின ,
ஸத்க்ரியா யதிவராதி ஆசார ஸக்மாத்ருகா ப்வகந்தி ஸெளம்ய வரேச யோக
சரண த்வந்த அரவிந்த ஆஸ்ரயம்‌ அமலம்‌ ஞாநாதி பூர்ண
(ஆசயம்‌) தம்‌ ராமாநுஜயோவர்யம்‌ வந்தே–9-

பதவுரை:–
யஸ்ய – எந்த ராமாநுஜ முனிவருடைய,
வ்யாகீயா – உபய வேதாந்த கிரந்தங்களுக்கும்‌ மந்த்ர மந்த்‌ரார்த்தங்களுக்கும்‌ கூறப்படும்‌ தெளிவுரை வ்யாக்யானம்‌,
விதக்த – மிகவும்‌ ஸமர்த்தர்களான,
ஸுரி பரிஷத்‌ – பண்டித கோஷ்டியின்‌,
சித்த – மனத்தை,
அபஹார – கவர்வதில்‌,
க்ஷமா – தகுதி வாய்ந்ததாக ஆகிறதோ,
யத்‌ – எவரது,
தைநந்தின -ப்ரதி தினம்‌ அதுஷ்டிக்கப்பட வேண்டடிய, ஸத்க்ரியா-சிறந்த அதுஷ்டாநங்கள்‌,
யதிவராதி- எம்‌பெருமானார்‌ மூதலானாருடைய,
ஆசார-அநுஷ்டானங்களை
ஸக்மாத்ருகா:- ஸ்லாக்யமான மூல ப்‌ரமாணமாகக்‌ கொண்‌டனவாக,
ப்வகந்தி-ஆகின்‌றனவோ,
ஸெளம்ய வரேச யோக – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
சரண த்வந்த – இரு திருவடி. களாகிற,
அரவிந்த – தாமரை மலரை,
ஆஸ்ரயம்‌ – தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண டவரும்‌,
அமலம்‌-தோஷங்களற்றவரும்‌,
ஞாநாதி -ஞாநம்‌ பக்தி முதலியவற்றால்‌,
பூர்ண – நிறைந்த,
(ஆசயம்‌) மனத்தை யுடையவருமான,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜயோவர்யம்‌ – ராமானுஜ முனிவரை,
வந்தே -. நமஸ்கரிக்கின்றேன்‌.

யாருடைய வ்யாக்யானமானது வித்வத் ஜனங்களின் மனதை கவர்ந்திழுக்கக்கூடியதோ, யாருடைய நித்யானுஷ்டேயங்களான நற்கிரிசைகள் மற்ற யதிவரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனவோ, அத்தகையவரும், குற்றமற்றவரும், ஞானம் முதலிய நற்குணங்கள் நிறைந்தவரும், அழகிய மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரையினை ஆச்ரயித்தவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியை ஸேவிக்கிறேன்.

ஸ்ரீ பாஷ்ய, ‘ பகவத் விஷய, மந்த்ரார்த்த ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு இம்‌ முனிவர்‌ அருளிச்‌ செய்யும்‌
தெளி பொருள்‌ விளக்கம்‌ (வ்யாகீயானம்‌),
மிகவும்‌ பாண்டித்‌ யம்‌ பெற்ற பண்டித ஸமூகங்களின்‌ மனதையும்‌ கொள்ளை கொள்ளும்‌ தன்மை வாய்ந்தது.
இது இந்த கரந்தகாரருக்‌கும்‌ மற்றும்‌ இவரைப் போன்ற மற்ற மஹா வித்வான்‌௧ளான அஷ்டதிக்கஜங்களுக்கும்‌
நேரே அநுபவ விஷயமாதலால்‌ இவ்வாறு கூறினார்‌. இவரது ஆசரணைகள்‌,யதிகட்சிறைவனான ஸ்ரீ ராமானுலமுநி முதலிய பெரியோர்களின்‌ அநுஷ்டாகங்களை த்‌ தமக்கு மூல ப்ரமாண (க்ரந்த) மாகக்‌ கொண்டவை யாகும்‌.
மாத்ருகா. என்பது முதலில்‌ ஒருவரால்‌ எழுதப்பட்ட (மூலபூதமான) முதலாவதான சுவடி;
அதுவே பின்னர்‌ பல சுவடிகளாக வெளிவருவதற்குக்‌ காரணமா யிருப்பதால்‌ அது அவ்வாறு மாத்ருகா எனக்‌ கூறப்படும்‌.
அதுபோலவே முன்னர்‌ எம்பெருமானார்‌ முதலிய யதிகள்‌ அனுஷ்டித்த அநுஷ்டானங்களே இவரது
ஸத்கர்மா நுஷ்டாகங்களுக்கு மூலங்களாகும்‌.
எனவே இவர்‌ பெரியோர்களின்‌ அநுஷ்டானங்களில்‌ எள்ளளவும்‌ பிற்ழாதவர்‌.
ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருப்பாத மலர்களையே தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண்டவர்‌.
எனவே தோஷங்கள ற்றவர்‌. ஞானம்‌, பக்தி, விரக்தி என்னும்‌ குணங்கள்‌ நிறைந்த மனதையுடையயவர்‌.
இப்படிப்‌ பெருமை வாய்ந்து ப்ரஸித்தி பெற்ற ராமாநுஐ முநிவரை வணங்குகின்றேன்‌.

——————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ எல்லா க்ரந்தங்‌களுக்கும்‌ இவர்‌ அருளிச்‌ செய்யும்‌ பொருள்‌ விளக்கம்‌ பண்டிதர்களின்‌ மனதையும்‌ கவரும்‌ தன்மையது;
அநுஷ்டானமும்‌ பெரியோர்களின்‌ அநுஷ்டாநங்களில்‌ நின்றும்‌ கொஞ்சமும்‌ நழுவாதது என்றார்‌.
இதில்‌ இவரது தெளிபொருள்‌ விளக்கத்‌தால்‌ இவரது கோஷ்டியின்‌ பக்கத்திலிருந்து இதைக்‌ கேட்‌டுக்‌
கொண்டிருக்கும்‌ பக்ஷிகளும்‌, ** பரதத்வம்‌ ஸ்ரீமந்நாரா யணனே ” என்று விளங்கச்‌ சொல்லும்‌ சக்தி
வாய்ந்தன வாகின்றன என்று தாம்‌ ஆச்சர்யமுறுகிறார்‌.

யத்‌ கோஷ்டி ஸவித ஸ்திதா சகுநா:௪- பரம்ஜ்யோதி: –
பரம்‌ தத்வம்‌ வேத ரஹஸ்ய ஸார படிதம்‌
ஸ்ரீபதி நாராயண:- ம்ச சதுராககாதி விபுதா ததீ சேஷ பூதா
இதி பரஸ்பரம்‌ வ்யாகுர்வந்தி தம்‌ ராமாநுஜம்‌ பஜே–10-

பதவுரை:–
யத்‌ – ஏந்த ராமாநுஜ முனிவருடைய,
கோஷ்டி – காலக்ஷேப கோஷ்டியின்‌,
ஸவித – பக்கங்களிலே,
ஸ்திதா:- இருக்கின்ற,
சகுநா:௪-பக்ஷிகளும்‌,
பரம்ஜ்யோதி: – பரஞ்சோதியென்றும்‌,
பரம்‌ தத்வம்‌-பர தத்வமென்றும்‌,
வேத ரஹஸ்ய -வேதங்களில்‌ ரஹஸ்யங்களான உ.பநிஷத்துக்களின்‌
ஸார – ஸாரமான நாராயணாநுவாகத்தில்‌,
படிதம்‌ -:**நாராயண பரம் ப்ரஹ்ம’” என்றும்‌,
** நாராயண பரோஜ்‌யோதி என்றும்‌, :
**தத்வம்‌ த்வம்‌ நாராயண: பர:? என்றும்‌, *,
சிவமச்யுதம்‌?” என்றும்‌ படிக்‌கப்பட்ட பொருள்‌,
ஸ்ரீபதி:- லக்ஷ்மீ வல்லபனான,
நாராயண:- நாராயணனே ஆவான்‌,
ம்ச — மேலும்‌,
சதுராககாதி-பிரமன்‌ முதலிய,
விபுதா:- தேவர்கள்‌,
ததீ—அந்த நாராயணனுக்கு,
சேஷ பூதா:- சரீரமாய்க் கொண்டு சேஷப் பட்டவர்கள்‌,
இதி – என்று,
பரஸ்பரம்‌ – ஒன்றுக்‌ கொன்று,
வ்யாகுர்வந்தி – வ்யாக்யானம்‌ செய்கின்றனவோ,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனியை,
பஜே – ஸேவிக்‌கிறேன்‌-

யாருடைய கோஷ்டியில் அருகில் இருக்கும் பக்ஷிகளானது “ஸ்ரீயப்பதியான நாராயணனே வேதாந்தப் பிரதிபாத்யன்,
பரம் ஜ்யோதி, பரம் தத்த்வம், எப்பொழுதுமுள்ளவன்” என்றும்,
“மற்ற நான்முகன் தொடக்கமான தேவர்கள் அவனுக்கு சேஷபூதர்கள்” என்று ஒன்றுக்கொன்று பேசுகின்றனவோ,
அந்த ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்

இந்த ராமாநுஜ முநிவர்‌ வைதிக வாக் யங்களில்‌
“*ஸதேவஸோம்ய இதமக்ர ஆஸீத்‌”,
ஆத்மாவா இதமக்ர ஆஸீத்‌”,
““ப்ரம்ஹவா இதமக்ர ஆஸீத்‌” என்று ஸாதாரணங்களான “ஸத்‌, ஆத்ம, ப்ருஹ்ம” சப்தங்களாலும்‌
,விசேஷமான நாராயண சப்தத்தாலும்‌ காரண வஸ்துவை கூறிக்‌, “காரணந்து த்யேய:” என்று அதையே
தத்வம்‌ எனக்‌ கூறுவதால்‌,
இவை வெவ்வேறு தத்வங்‌களா? அல்லது ஓன்றேயா? . என விசாரிக்கும்போது
வேதங்களின்‌ ஸாரங்களான உபகிஷத்துக்களிலும்‌ ஸார
மாகக்‌ கொள்ளப்படும்‌ நாராயணாநுவாகத்தில்‌
** ஆத்ம, ப்ரஹ்ம, ஜ்யோதி” முதலான சப்தங்களை நாராயண பதத்‌தோடு ஸமாகவிபக்தி (வேற்றுமை) கமாய்‌
** நாராயண பரம்‌ ப்ருஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோஜ்யோதிராத்மா நாராயண: பர:”” இத்யாதி வாக்யங்களால்‌
படிக்கப் பட்டிருப்பதால்‌ ஸாமாந்ய விசேஷ ந்யாயத்தாலே ஐகத்துக்‌குக் காரணமான பர தத்வம்‌ லக்ஷ்மீபதியாகிய நாராயணனே;
மற்றய ப்ரும்ஹ ருத்ரா திகள்‌ பரதத்வமன்று; அவர்கள்‌
ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து உண்டானவர்கள்‌,
அவனுக்கு சரீரமாய்க்‌ கொண்டு சேஷ பூதர்கள்‌ என்று உபநிஷத்து வாக்கயங்களை விளங்கக்‌ கூறி பரதத்வ ஸ்தாபனம்‌ செய்வது: அவரது வழக்கமாகலால்‌,
அவரது கோஷ்டியின்‌ பக்கங்களிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்‌, ஞானத்திற்கு அடை வல்லாத பக்ஷிஜாதிகளும்‌, அந்த வாக்கியங்களைச்‌ சொல்லி
பரதத்வ’ஸ்தாபனம்‌ பண்ணாகின்‌ றன” என்கிறார்‌. இதனால்‌ ஞானத்திற்கு இட்டுப்‌ பிறவாத பகஷிகளும்‌ நன்கு அறிந்து கொள்ளும்படி விஷயங்களைக்‌ கற்பிக்கும்‌ விஷயத்தில்‌
இவ ருக்குள்ள ஆற்றல்‌ நன்கு . வெளியிடப்பட்டது.
இங்கு“* பரஸ்பரம்‌ வ்யாகுர்வந்தி ” எனக்‌ கூறியதால்‌ அப்பஷிகளிலும்‌ ஒருவர்க்கொருவர்‌ ஞானத்தில்‌ குறைந்தவர்கள்‌ இல்லை;
ஆயினும்‌ ‘*போதயந்த: பரஸ்பரம்‌” என்ற’ கணக்கலே’
“ஒன்றுக்கொன்று போதிக்கின்றன என்று கூறப்பட்டதாகும்‌.
ஸாமாந்ய விசேஷ பர்யவச மாவது *நிர்விசேஷம்‌.
ஸாமாந்யம்‌ ‘” என்கிறபடியே ஒரு ஸாமான்ய பதத்தை
விசேஷ போதக சப்தத்தைக்‌ கொண்டு விசேஷ விஷயமாக
இப்‌ பொருள்கொள்வது.
** பசுமா யஜேத ”’ என்று விதிவரக்‌ யத்தில்‌ நாற்கால்‌ ஐந்துக்கள்‌ எல்லாவற்றையும்‌ கூறும்‌ பசு சப்தத்திற்கு
**ச்சாகஸ்ய வபாயா:”” என்ற மந்த்ரத்தைக்‌ கொண்டு ௮ப்பசு என்பது **ஆடு” என நாமிர்த்தாரணம்‌ செய்வதாகும்‌.
இவ்வாறு ஞானஹீகர்களையும்‌ ஞாநவான்களாக்கும்‌
ராமாநுஜ முனிவரை வணங்குகின்றேன்‌.

—————–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸமீபத்தில்‌ இருக்கும்‌ பக்ஷிகளுக்கும்‌ வ்யாக்யானம்‌ செய்யும்படி, சக்தியை விளைவித்து
இருக்கும்‌ இவரது ஞானத்தின்‌ பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌ இவருடைய உபந்யாஸ கோஷ்டியில்‌’சேரவும்‌ வேண்டா; பக்கத்‌திலிருக்கவும்‌ வேண்டா.
இவரது கருணை அலை யெறியும்‌ கடைக்‌ கண்ணால்‌’கடாக்ஷிக்கப் பெற்றவர்களே
அர்த்த பஞ்சக ஞானம்‌ பெற்றவருள்‌ சிறந்தவர்கள் என்ற அதிசயத்தைக்‌ கூறி,
வானமாமலை எம்பெருமானுக்கு இவர்‌ செய்த சாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌
இவர்‌ அதிகம்‌ பெருமை வாய்ந்தவர்‌ என்கிறார்

யேகே௫ித்‌ யத்‌ காருண்ய ஸுதா தரங்க விலஸத்‌ நேத்ராஞ்சல
ப்ரேக்ஷிதா தே இமே அர்த்த பஞ்சக விதாம்‌ ஸங்கீயாவதாம்‌ முக்யா
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய மஹிதை த்ருவை கைங்கர்ய ஜாதை ,
பூயாச்‌ ஆஸ்ரித கல்பக அயம்‌ ராமாநுஜ முநி விஜயதே-11-

பதவுரை:–
யேகே௫ித்‌ – எந்தச்‌ சில மனிதர்கள்‌,
யத்‌ – எந்த முனிவரின்‌,
காருண்ய – கருணை யாகிற,
ஸுதா – அம்ருதத்தின்‌,
தரங்க – அலைகளாலே,
விலஸத்‌ – விளங்குகின்ற,
நேத்ராஞ்சல – கண்ணின்‌ கடையினாலே,
ப்ரேக்ஷிதா: – பார்க்கப்பட்டனரோ,
தே – அப்படி.பாக்யம்‌ பெற்ற,
இமே- இம்‌ மனிதர்கள்‌,
அர்த்த பஞ்சக விதாம்‌-ஐந்து அர்த்தங்களையும்‌ நன்கறிந்த, ஸங்கீயாவதாம்‌ -பண்டிதர்களுள்‌,
முக்யா: – தலை சிறந்தவர்கள்‌ ஆகிறார்கள்‌,
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய – ஸ்ரீ வானமாமலை எம்பெரு
மானுக்குச்‌ செய்தவையும்‌,
மஹிதை:-கொண்டாடத்தக்கவையும்‌,
த்ருவை:-சாச்வதங்களுமான,
கைங்கர்ய ஜாதை:-கைங்கர்‌யங்களின்‌ ஸமூகத்‌தினால்‌, பூயாச்‌-சிறப்பு வாய்ந்தவரும்‌,
ஆஸ்ரித கல்பக: – தன்னை ஆஸ்யரயித்தவருக்கு கல்பக வ்ருக்ஷம்‌ போல்‌ அபேக்ஷிதங்களைக்‌ கொடுக்குமவருமான,
அயம்‌-இந்த,.
ராமாநுஜ: – ராமானுஜன்‌ என்னும்‌,
முநி :-முனிவர்‌,
விஜயதே – மற்றெல்லோரிலும்‌ சிறந்து விளங்குகின்றார்‌.

.
காருண்யமாகிற அம்ருத அலைகள் விளங்காநிற்கும் எவருடைய கடைக்கண் பார்வைக்கு இலக்கானவர்கள்
அர்த்தபஞ்சக ஞானம் பெற்ற வித்வான்களில் தலைவராக ஆவாரோ,
அத்தகைய ராமானுஜ ஜீயர் ஸ்வாமி, சிஷ்யர்களுக்கு கற்பகவ்ருக்ஷம் போன்றும்,
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்குச் சிறந்த பல கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் சிறந்து விளங்குகின்றார்.

அர்த்த பஞ்சகமாவது:-
1) ஸ்வஸ்வரூபம்‌ எனப்படுவது, ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபம்‌,
(2) பரஸ்வரூபம்‌ எனப்படுவது, பரமாத்மாவின்‌ ஸ்வரூபம்‌,
(8) புருஷார்த்த ஸ்வரூபமெனப்படுவது, முமுக்ஷுக்களின்‌ விருப்பத்திற்கு விஷயமான மோக்ஷஸ்வரூபம்‌,
(4) உபாய ஸ்வரூபமெனப்‌படுவது, அம் மோகஷத்தை அடைய சாஸ்த்ரங்களால்‌ ஸாதனமாகக்‌ கூறப்பட்டவை,
(5) விரோதி ஸ்வரூபமெனப்படுவது மோக்ஷத்தைப்‌. பெற விரோதியாய்‌ இடைமறித்து நிற்‌கின்ற அவித்யை, கர்மா வாஸநா ப்ரக்ருதி ஸம்பந்தங்கள்‌ முதலியனவாகும்‌.
இவ்வர்த்த பஞ்சகத்தையே ஸகல வேத சாஸ்த்ர புராணங்களும்‌ கூறுகின்றன.
இவ்வர்த்த பஞ்சக ஞானமின்றி உஜ்ஜீவனமில்லை.
இத்தகைய அர்த்த பஞ்சக ஞாநமும்‌ வெகு கிலேசப்பட்டு சாஸ்த்ராப்யாஸங்களால்‌ ஸாதிக்கப்பட வேண்டி யிருக்க,
இந்த ராமாநுஜ முனிவருடைய கருணா பூர்ணமான கடாக்ஷ லேசத்தினாலே உண்டாகிறது. நிற்க
இவரது கருணா பூர்ணமான கடாக்ஷம்‌ தனக்கு விஷயமானவர்களை அர்த்த பஞ்சகங்களை
நன்குணர்ந்த பண்டிதர்களுள்‌ ப்ரதாநர்களாகவும்‌ ஆக்குகிறது என்று இவருடைய பெருமை கூறப்பட்டது.
இங்கு தாம்‌ நேரில்‌. கண்டறிந்ததுடன்‌ மற்றவருக்கும்‌ ப்ரத்யக்ஷிக்கலாம்‌ எனத்‌ தோற்றும்படி
“*இமே”” எனக்‌ கூறுவதால்‌, இதில்‌ அர்த்தவாதமில்லை என்கிறார்‌.
மேலும்‌ இந்த ஸ்வாமி ஸ்ரீ வானமாமலை எம்பெருமானுக்குச்‌ செய்‌துள்ள பல சாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌ போற்றத்‌தக்கவர்‌
தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு கல்பக விருக்ஷம்‌போல்‌ அபேக்ஷிதங்களை அளிக்கவல்ல பெரியவர்‌.
எனவே இந்த வானமாமலை ராமாநுஐ முனிவர்‌ மற்றையோர்களில்‌ சிறப்புடையராய்‌ விளங்குகின்றார்‌.

————–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரின்‌ கடாக்ஷம்‌ முக்தி ஸாதநமான அர்த்தபஞ்சக ஞானத்தை எல்லோருக்கும்‌
அளிக்க வல்லதென்று பொதுவாகக்‌ கூறியவர்‌, இதில்‌ மிகவும்‌ தண்ணியனாய்‌,
அஹங்கார மமகாரங்கள்‌ நிறைந்தவனான என்னை. உஜ்ஜீவிப்பிக்க முயற்சிக்கும்‌ பெரியோரிடித்திலும்‌
விமுகனாய்த்‌ திரிகின்ற மேட்டு மடையான என்னிடமும்‌ இக்‌ கருணை பாலிபாயா நின்றது என்‌கிறார்‌.

அஸ்தி ஸ்காயு வஸா வபை மாம்ஸ நி௫தே அநித்யே விகாராஸ்பதே
அகஹமி தேஹே அஹம்மதிகரே – சப்தாதி ஸேவாப்ரே
ஸ்ரீமத்‌ வைஷ்ணவ மத்பர ஆர்ய விமுகே மயி அபி ய தயாம்‌ அகார்ஷீத்‌
வ்யோம மஹா௫ரே: மூல த்ரவ்யம்‌ தம்‌ ராமாநுஜம்‌ பஜே – 12-

பதவுரை:–
அஸ்தி – எலும்பு என்ன,
ஸ்காயு – சிறு நரம்புகள்‌ என்ன,
வஸா-வபை என்ன,
௮ஸ்ரஃரகீதமென்னடி
மாம்ஸ – மாம்ஸமென்ன,
நி௫தே – இவைகள்‌ செறிந்ததும்‌,
அநித்யே – அநித்யமானதும்‌,
விகாராஸ்பதே – பால்யம்‌ பெளவனம்‌,பருப்பது,இளைப்பது முதலிய வேறுபாடுகளுக்கு உறைவிடமாயும்‌,
அகஹமி – உண்மையில்‌ அஹம்‌ என்னும்‌ பதத்திற்கு அர்த்தமல்லாததுமான,
தேஹே – சரீரத்திலே,
அஹம்மதிகரே – நானென்று அஹம்புத்தியைப்‌ பண்ணுமவனும்‌,
(ஆதலால்‌)
சப்தாதி ஸேவாப்ரே-சப்தாதி விஷயங்‌களில்‌ ப்ராவண்யத்தால்‌ அவைகளை அனுபவித்துப்‌ போருமவனும்‌,
(ஸ்ரீமத்‌ விமுகே) ஸ்ரீமத்‌ வைஷ்ணவ – பரம ஸாத்‌’விகர்களாய்‌ பகவத்‌ ஸம்பக்தத்திலே மூட்டும்‌ அடியார்களி டத்திலும்‌,
மத்பர – ஆர்ய – என்னை உஜ்ஜீவிப்ப திலேயே நோக்குள்ள ஆசார்யர்களிடத்திலும்‌,
விமுகே – வைமுக்‌யத்தை யுடையனான,
மயி அபி- என்னிடத்திலும்‌,
ய:-எந்த முனிவர்‌,
தயாம்‌-தயையை,
அகார்ஷீத்‌ – செய்தாரோ”
வ்யோம மஹா௫ரே: – வானமாமலை அப்பனுக்கு, பரிபணம்‌-
மூல த்ரவ்யம்‌, முதல்‌- போன்ற,
தம்‌ ராமாநுஜம்‌ – அந்த ராமாநுஜ முனிவரை,
பஜே – ஸேவிக்கின்றேன்‌.

எலும்பு. நரம்பு, கொழுப்பு, உதிரம், சதை இவற்றின் கூட்டுரவானதும், மாறுபாடுடையதும், அழியக்கூடியதுமான, இந்த நான் அல்லாத உடம்பில், நான் என்ற எண்ணத்தை உடையவனும், தன்னை நோக்கிக்கொண்டு போரும் ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் பாராமுகமாக இருப்பவனுமாகிய அடியேன் இடத்திலும் எவர் அருள்புரிந்தாரோ, அத்தகைய வானமாமலை திவ்ய க்ஷேத்தரத்திற்கு நிதியான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்

இந்த ஸ்லோகத்தின்‌ மூன்று பாதங்களாலும்‌ தமது தண்மையைக்‌ கூறி,
நான்காவதால்‌. தம்மிடமும்‌ இம்‌ முனிவரது கருணை ஏறிப்‌ பாய்ந்தது என்கிறார்‌. அதாவது
நான்‌ எலும்பும்‌ சிறிய நரம்புகளும்‌ வபையும்‌ ரத்தமும்‌ மாம்ஸமுமாய்ச்‌ செறிந்தும்‌,
அநித்யமாயும்‌, . அடிக்கடி பருப்பது இளைப்பது முதலிய வேறுபாட்டுக்கு உறை விடமாயும்‌,
அஹம்‌ என்ற பதத்திற்கு அர்த்தமான ஆத்மா வல்லாததுமான சரீரத்தில்‌ ஆத்ம புத்தியைப்‌ பண்ணும்‌ ப்ரமத்தை யுடையவன்‌.
நிற்க இத்தகைய ப்ராந்த்தியால்‌ இந்த்ரியங்களுக்கு எப்பொழுதும்‌ இரை யிட்டுக்கொண்டு
ஹேயமான சப்தாதி விஷயங்களைக்‌ கொண்டே பொழுது போக்குமவன்‌.
ஸ்ரீ. வைஷ்ணவ ஸம்பத்து நித்யமாய்ச்‌ செல்‌லும் பரம பாகவதர்களைக் கண்டால்‌ முகத்தை மாறவைத்துச்‌ செல்‌லுமவன்‌.
அதிகம்‌ சொல்லி என்‌? என்னை அங்கீ கரித்து உஜ்ஜீவிப்பிக்க வேணுமென்று ப்ரயத்கம்‌ செய்யும்‌
ஆசார்‌யர்களைக்‌ காணிலும்‌ அவர்களைக்‌ கண்ணெடுத்தும்‌ ஸேவிக்‌கப்‌ பெருத பாக்யஹீநனான தண்ணியன்‌.
இப்படிப்பட்ட என்னிடத்தும்‌ இவர்‌ தயையைச்‌ செய்து என்னைத்‌ திருத்தி ஆட்கொண்டவர்‌.
இவரை வானமாமலை எம்பெருமானது மூலதனம்‌ (முதல்‌) எனக்‌ கொள்ளவேண்டும்‌. ஏனெனில்‌ ?
மூலதனம்‌ உடையவன்‌ அந்த தநத்தைக்‌ கொண்டு தொழில்‌
வியாபாரம்‌ முதலியவற்றைச்‌ செய்து தனத்தைப்‌ பெருக்கிக்‌கொள்ளுவது வழக்கமல்லவா?
அதுபோலவே எம்பெருமானும்‌ இவரை அவதரிப்பித்து அம்முனிவராகிற மூலத்‌தனத்தைக்‌ கொண்டு அகேக ஜீவாத்மாக்களை
நல்வழிப்‌படுத்தி அவர்களைப்‌ பெறுகிறானாகையால்‌, அவ்வீசனது (பரிபணம்‌) ‘* மூலதனம்‌ ‘*, இம்‌ முனிவரர்‌ என்று கூறக்‌ குறையில்லை.
இப்படிக்‌ கூறியதால்‌ **சேதந லாபம்‌ ஈஸ்வரனுக்கு” எனப்படும்‌ ஸார தமமான ஸம்ப்ரதாயார்த்தம்‌ வெளியிடப்பட்டதாகும்‌.
இப்படி ஈஸ்வரனுடைய லாபத்திற்‌கும்‌ காரணமான இம்‌ முனிவரை ஸேவிக்கின்றேன்‌.
————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கருணை தம்மிடமும்‌ ஏறிப்‌ பாய்ந்தது எனக்‌ கூறினார்‌.
இதில்‌ இம் முனிவரிடம்‌ காணப்படும்‌ சிறந்த கல்வி, விரக்தி, மற்றுமுள்ள ஸெளலப்ய ஸெளஸீல்யாதிகள்‌,
பெரியோர்‌ வகுத்த வழியைப்‌ பேணிக்‌ காக்கும்‌ தன்மை, பகவத்‌ விஷயத்‌ திலுள்ள ப்ராவண்யம்‌,
இவைகளை விரித்து அருள்கிறார்

வித்யாகேளிக்குஹம்‌ விரக்தி லதிகா விச்‌ராந்தி கல்பத்ருமம்‌
ப்ரோக்மீலத்‌ குண திவ்ய ரத்ன படலீ நிக்ஷேப மஞ்ஜு5ஷிகாம்‌
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய பதவீ ரக்ஷைக தீக்ஷா குரும்‌
ஸ்ரீமத்வான மஹாசலேச நிரதம்‌ ராமாநுஜார்யம்‌ ஸ்ரயே .–13-

வித்யை விளையாடுமிடமாக இருப்பவரும், வைராக்யமாகிற கொடியானது ஓய்வெடுக்கும் கல்பகவ்ருக்ஷம் போன்றும், உயர்ந்த காந்தி பொருந்திய குணங்களாகிற் ரத்னங்களை வைக்கும் பெட்டி போன்றும் இருப்பவரும், எம்பெருமானால் நியமிக்கப்பட்ட ஆசார்ய பீடத்தை நிர்வஹிப்பதிலும் உறுதிபூண்டவரும், ஸ்ரீ வானமாமலை எம்பெருமானிடத்தில் எப்பொழுதும் ஈடுப்பட்டு இருப்பவருமான வானமாமலை எம்பெருமானிடத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியை ஆஸ்ரயிக்கிரேன்.

தன்னைப்‌ பேணி ஆதரித்த முனிவரின்‌ ப்ரபா வத்தைச்‌ சுருங்கக்‌ கூறுகின்றார்‌ இதில்‌.
இந்த ராமாநுஜ முனிவர்‌ *வித்யாஹ்யேதா: சதுர்தச” என்ற பதினான்கு வித்யைகளையும்‌ கரை கண்டவராகையாலே,
அவைகள்‌ இவரிடம்‌ களிநடம்‌ புரிகின்றன என்கிறார்‌.
இவர்‌ அவை களுக்கு ரங்கஸ்தலம்‌ (நடனமாடுமிடம்‌) போலும்‌,
மிகுந்த வைராக்ய முடையவராதலால்‌ கொடி. மரத்தைப்‌ பற்றிப் படர்வதுபோல்‌ இவரது வைராக்யமென்னும்‌ கொடி
தன்னிஷ்டப்படி மூடப்‌ படர்ந்து விஸ்ராந்தியைப்‌ பெற்று
இளைப்பாறும்‌ கற்பக வருக்ஷம்‌ போன்றவர்‌ இவர்‌.
மேலும்‌ ஆத்ம குணங்களாகிற சிறந்த ரத்நக்‌ குவியலை வைத்துப்‌ பூட்டிக்‌ காப்பாற்றும்‌ பேழை போன்றவர்‌.
இத்தால்‌ இவர்‌ எண்ணிறந்த குணங்களுக்கு உறைவிடமென்பது கூறப்‌பட்டது.
எம்பெருமானாராலே ஸ்தாபிக்கப்பட்ட விசிஷ்‌டாத்வைத ஸித்தாந்தத்தை ரக்ஷிக்கையாகிற முக்ய
தீக்ஷையில்‌ ஆசார்யனாய்‌ வழிகாட்டுமவர்‌ இவர்‌. இப்படி இந்த தர்சனத்திற்கு வழிகாட்டியா யிருப்பது மாத்திரமன்றி
அவ்வழியே ஒழுகி எப்பொழுதும்‌ வானமாமலை தெய்வ
நாயகனிடம்‌ நிரதிசய ப்ரீதி ரூபாபந்நமான பக்தி பூண்டவருமாவர்‌.
இத்தகைய குணக்‌ கடலான ராமாநுஜ முனிவரெனப்படும்‌ எனது ஆசார்யனை ஸேவிக்கின்றேன்‌.

—————

அவதாரிகை :–
வாநா மஹாத்திரி ராமாநுஜயோகி மங்களாசாஸமென்னும்‌ ப்ரபந்தத்தின்‌ கடைசியான இந்த ஸ்லோகத்தில்‌
வாநாசல ராமாநுஜ மூனிவரின்‌ பெருமைகள்‌ கீழ்க்‌ கூறியவை எல்லாம்‌ திரட்டிக்‌ கூறப்படுகின்‌றன

காந்தோபயந்த்ரு முநிவர்ய தயா நிவாஸம்‌
வைராக்ய முக்ய மஹநீய குண ௮ம்புராசிம்‌
ஸ்ரீதேவநாயக ,பத ப்ரணய ப்ரவீணம்‌ யதிபதிம்‌
ராமாநுஜம்‌ நித்யம்‌ ப்ரணமாமி–14-

பதவுரை:–
காந்தோபயந்த்ரு முநிவர்ய – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
தயா-கருணைக்கு,
நிவாஸம்‌ – உறைவிடமாயும்‌,
வைராக்ய முக்ய- வைராக்யம்‌ முதலிய,
மஹநீய-கொண்டாடத்‌ தகுந்த,
குண – குணங்கட்கு,
௮ம்புராசிம்‌ – கடலாயும்‌,
ஸ்ரீதேவநாயக – வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகனுடைய,
பத – திருவடிகளில்‌,
ப்ரணய – ப்ரீதி செய்யும்‌ விஷயத்தில்‌,
ப்ரவீணம்‌ – சிறந்தவரும்‌,
யதிபதிம்‌ – யதித் தலைவருமாகிய,
ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனிவரை, .
நித்யம்‌- எப்‌’பொழுதும்‌,
ப்ரணமாமி – நன்கு வணங்குகின்றேன்‌. ‘

அழகிய மனவாளமாமுனிகளின் தயைக்கு இருப்பிடமானவரும், வைராக்கியம் முதலிய நற்குணங்களுக்கு கடல் போன்றிருப்பவரும், ஸ்ரீதெய்வனாயகப்பெருமானுடய திருவடிகளில் மிகுந்த அன்புடயவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை எப்பொழுதும் வணங்குகின்றேன்.

இந்த ஸ்லோகத்தின்‌ முதல்‌ பாதத்தால்‌ ஸ்ரீமத்‌-வரவரமுநிகளின்‌ கருணைக்கு வாஸஸ்தான மென்று இவரது பெருமையை யறிவித்தார்‌.
அவ்வாசார்யனுடைய கடாக்ஷத்‌தால்‌ இவர்‌ வைராக்யம்‌ முதலிய நற்குணங்கள்‌ ஒருங்குகேரும்‌ குணக்கடலாயினர்‌ என்றார்‌;
இரண்டாம்‌ பாதத்‌தால்‌. ‘ கடலாக ரூபித்ததால்‌ வைராக்யாதி குணங்கள்‌ ஒரு நாளும்‌ இவரிடம்‌ குறைந்து காட்டிய தில்லை என்பது தேறும்‌…
மூன்றாமடியால்‌ இவ்வாத்ம குணங்களடியாக உண்டாகும்‌
ஸர்வேஸ்வரன்‌ விஷயமான இவரது நிரதிசய ப்ரீதியை நிரூபித்தார்‌.
நான்காமடியால்‌ கீழ்க்‌ கூறியபடி மாமுனிகளின்‌
கருணைக்குப்‌ பாத்திரமாய்‌
அதடியாக உண்டாகிய வைராக்‌யாதி குணங்களையுடையராய்‌,
அதடியாக உண்டாகிய பகவத்‌ ப்ரேமத்தை யுடையராகையாலே
யதிகட்கிறைவரானார்‌ என்று இவரது ப்ரபாவங்களைப்‌ பணித்து,
இத்தகைய பெருமை வாய்ந்த வானமஹாத்ரி யோகியாகிய ராமானுஜ. முனியை ப்ரதி தினம்‌
வணங்குகின்றேன்‌ எனக்‌ கூறி மங்களா
சாஸநத்தை முடிக்கிறார்‌.
இங்கு **ப்ரணமாமி’” என்ற வர்த்தமானத்தால்‌ தமது அதிகார மாந்த்யத்தைப்‌ பார்த்துத்‌ தான்‌
கலங்கியபோதெல்லாம்‌ ஆசார்யன்‌ திருவடிகளை இவர்‌:
வணங்குகின்றார்‌ என்று தேறுகிறது.
“ப்ர’? என்ற உபஸர்க்‌கத்தால்‌ வணக்கத்தில்‌ மநோ வாக் காயம்‌ என்ற கரணங்களின்‌ பூர்த்தி கூறப்பட்டது.
நித்யம்‌ என்பது ப்ரதி தினமும்‌ என்பதாகும்‌.
இந்த கிரந்தம்‌ மஙகளாசாஸநம்‌ என்ற பெயரால்‌
வழங்கப்பட்டு வருகிறதே;
இதில்‌ *’ஸ்வஸ்தி- பத்ரம்‌-மங்‌களம் என்பவை போன்ற பதங்கள்‌ காணப்படவில்லையே யென்று சிலர்‌ ஐயமுறலாம்‌.
எனினும்‌ “*நம:- ஜிதந்தே,தோற்றோம்‌, போற்‌றி, பல்லாண்டு ” என்னும்‌ இவை -பர்‌யாயம்‌ என்ற பெரியவாச்சான்‌ பிள்ளை
ஸ்ரீஸூக்தியை நன்கு உற்று அநுஸந்திக்குமவர்கள்‌ இந்த நூல்‌ மங்களாசாஸந ரூபந்தான்‌ என்று எளிதில்‌ உணரலாகும்‌.
இக்ரந்தத்திலும்‌ இம்‌ முனிவரது குணங்கட்கு தோற்று, வந்தே, நமோஸ்து, கெளமி, விஜயதே என்ற ஸ்வரூப
வாசியான பதங்களை மஹார்யர்‌ ப்ரயோகித்திருப்பதும்‌ காணத் தக்கது.

———–

ஸ்ரீ தொட்டை அய்யங்கார்‌ அப்பை எனப்படும்‌ மஹார்யர்‌ அருளிய  ஸ்ரீ வானமஹாசலயோகி ப்ரபத்தி தமிழ்‌ உரையுடன்‌

அவதாரிகை:–ஸ்ரீமத்‌ வானமாமலை ராமாநுஐ முனிவ”ரின்‌ அஷ்ட திக்கஜங்களில்‌ ஒருவராகிய தொட்டையங்கார்‌’
அப்பை எனப்படும்‌ மஹார்யர்‌, தமது ஆசார்யராகிய ராமாநுஜ முனிவரது கல்யாண குணங்களிலும்‌ விக்ரஹ ஸெளக்‌தர்‌ யத்திலும்‌ ஆழ்ந்தார்‌.

அவர்‌ பூர்வாச்ரமத்தில்‌ அழகிய வரதரிறே; எனவே முந்துற மங்களாசாஸகத்‌இல்‌ இழிந்தார்‌..
தாம்‌ ஸ்வாமியின்‌ கடாக்ஷ விஷயீகாரத்தைப்‌ பெற _,அவர்‌ திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌, இப் ப்ரபத்தியில்‌,

ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--1-

பதவுரை :–
‘
ஸத்ய: – அப்‌பொழுதே,
ப்ரபுத்த- நன்றாக மலர்ந்த,
ஸரஸீருஹ – தாமரைப் பூவோடு,
துல்ய – ஒப்பான,
சோபெள – காந்தியை யுடை யதுகளும்‌,
ஸம்பச்யதாம்‌ – நன்றாய்‌ ஸேவிப்பவர்களுடைய,
தயநயோ: – கண்களுக்கு,
முதம்‌-சந்தோஷத்தை,
ஆததாகெள – உண்டு பண்ணுமவைகளாயும்‌,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
ஸாகர-ஸமுத்ரத்திலிருந்து,
ஸமுத்தரண – கரையேற்றுவதில்‌,
ப்ரவீணெள-மிக சாமர்த்யம்‌ வாய்ந்தவைகளுமான,
வாநாத்ரியோகி சரணெள–வானமாமலை ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌- உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வாநாத்ரி ராமாநுஐ முனிவரின்‌ திருவடிகளைப்‌ பற்றும்‌ மஹார்யர்‌ அதன்‌ பெருமைகளை விளக்குகிறார் மூன்று பாதங்களாலே.
முதல்‌ பாதத்தில்‌ அப்‌ பொழுதே முழுதும்‌ அலர்ந்த செவ்வித்‌ தாமரை மலர்களோடொத்த சோபையை உடையன அத்திருவடிகள்‌ என்கிறார்
இதனால்‌ ம்ருதுத்‌ தன்மை, ஸ்கந்தம்‌, குளிர்த்தி இவைகளை யுடையது அத்திருவடிகள்‌ என்று அதன்‌ போக்யதை உணர்த்தப்பட்டது.
இரண்டாம்‌ பாதத்தில்‌ அத்‌.திருவடி௧ளை நன்கு ஸேவிக்குமவர்களின்‌ கண்களுக்குக்‌ களிப்பூட்டுமவை அவையென்கிறார்‌.
இதனால்‌ அவற்றின்‌ அழகு கூறப்‌பட்டதாகும்‌.
மூன்றாவது பாதத்தில்‌ அவை ஸம்ஸாரமென்‌னும்‌ ஸமுத்ரத்தில்‌ ஆழ்ந்து கடக்கும்‌ ஸம்ஸாரிகளை
அவற்‌றில்‌ நின்றும்‌ கரையேற்றுவதில்‌ மிகுந்த ஸாமர்த்ய்ம்‌ பெற்‌றவை என்றார்‌.

இத்தால்‌ மென்மை, குளிர்த்தி, நாற்றம்‌, அழகு போன்‌.ற குணங்களை யுடையனவாய்‌
இம்மையில்‌ போக்யதையால்‌ களிப்பூட்டுவது மாத்திரமின்றி
மறுமையில் மோக்ஷத்தையும்‌ அளிக்கும்‌ பெருமை வாய்ந்தவைஅவை யெனக்‌ கூறி,
அவைகளைத்‌ தமக்கு உபாயமாகப்‌ பற்றுகிறேன்‌ என்றார்‌.
இங்குக்‌ கூறப்பட்ட பற்றுதல்‌ மாந ஸீகமே யாயினும்‌ அமையும்‌ கார்யகரமாகைக்கு.

————–

அவதாரிகை:–
முன்‌ ஸ்லோகத்தில்‌ ராமாநுஜ: முனிவரது ஸம்ஸார உத்தாரகத்வம்‌ கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌” அதற்குக்‌ காரணமாகிய காம க்ரோதாதி: துஷ்ட குணங்களில்லாமை,
சத் குணங்களுக்கு உறைவிடமாயிருத்தல்‌ முதலிய பெருமையையும்‌,
ஸ்ரீ மணவாள மாமுனிவரின்‌ இன்னருளால்‌ அப்பெருமையை இவர்‌ பெ.ற்றமையையும்‌ கூறி,
இத்தகைய ப்ரபாவம்‌ வாய்ந்த ராமாநுஜ முனிவ:ரின்‌ திருவடிகள்‌,
தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கல்பக வ்ருஷம்‌ போன்றவை எனக்‌ கூறி
அவைகளைச்‌ சரணம்‌. புகுகிறார்‌.

காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே--2-

பதவுரை:–
காந்தோ பயந்தருமுநி வர்ய – அழகிய மண:வாள மாமுனிவரின்‌,
தயா – கருணையினால்‌,
ஆத்த பூம்ந- பெறப்‌ பட்ட பெருமையை யுடையவரும்‌,
காமாதி- காமம்‌ க்ரோதம்‌ முதலியவற்றை,
நிக்ரஹ கரஸ்ய- அடக்குமவரும்‌,
குணாம்பு ராசே: – சற் குணங்களுக்‌குக்‌ கடல் போன்றவருமான,
வநாத்ரி லக்ஷ்மண முநே : – வான மாமலை ராமாநுஜ முனிவரது
நத லோக –தன்னை. வணங்கும் ஜனங்களுக்கு,
கல்ப வ்ருஷாயமாண் -கற்பக வ்ருக்ஷம் போல்‌ ஆசரிக்கின்‌ற,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌- உபாயமாக,
ப்ரபத்யே- பற்றுகிறேன்‌

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இந்த ஸ்லோகத்தின்‌ முதலடியில்‌ -இம்முனிவர்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ கருணைக்குப்‌ பாத்திரமாய்‌
அதனால்‌ பெற்ற அதிசயத்தை உடையவர்‌ என்றார்‌.
இரண்‌டாமடியில்‌ காமம்‌, க்ரோதம்‌, லோபம்‌, *மோஹம்‌, மதம்‌, மாத்ஸர்யம்‌ என்று கூறப்படும்‌ ஸஹஜ சத்ருக்களையும்‌
அடக்குமவரென்றும்‌, சற் குணங்கள்‌ நிறைந்த கடல்‌ போன்றவர்‌ என்வும்‌ கூறினார்‌.
இங்கு காமாதிகள்‌ சேரா வண்ணம்‌ துறத்துமவர்‌ எனப் பொதுவாசுக்‌ கூறியதனால்‌ –
தம்மை ஆஸ்ரயித்த பிறருடைய காமாதிகளையும்‌ துறத்தும்‌ ஆற்றல் வாய்ந்தவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌.
சற்குணங்‌களுக்குக்‌ கடலென்றதனால்‌ ஒரு நாளும்‌ வற்ருத சற்குண ஸம்பத்தர்‌ இவர்‌ என்றதாயிற்று.
இனி ஸ்லோகத்தின்‌ பிற்‌பகுதியால்‌ இப்படிப்‌ பெருமை வாய்க்த வநாசல ராமாநுஜ முனிவரது,
தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கற்பக வ்ருக்ஷம்‌ போன்றதான திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறார்‌.
இதில்‌ -நத லோக–தம்மை வணங்கிய ஜனங்களுக்கு”’ எனப்‌ பொதுவாகக்‌ கூறியதால்‌
தம்மை வணங்கியவரின்‌ பெருமை சிறுமைகளைப்‌ பார்த்துக்‌ கொடுக்கும்‌ புன்மை
திருவடிகளுக்கில்‌லாமை கூறப்பட்டதாகும்‌.
கற்பக வ்ருஷமென அவைகளைக்‌ கூறியதால்‌ நினைத்த மாத்திரத்திலே இம்மை மறுமைப்‌ பயன்களை
அர்த்தித்தார்‌ அர்த்தித்தபடியே கொடுக்கும்‌ பெருமையும்‌ கூறப்பட்டதாகும்‌.

——–

அவதாரிகை:–
இம் முனிவர்‌ மா முனிகளின்‌ கருணைக்‌குப்‌ பாத்திரமாய்‌, அதனால்‌ இவர்‌ பெற்ற மிகச்‌ சிறந்த
வைராக்ய . குணத்தை விரித்துக்‌ கூறுகிறார்‌, இந்த ஸ்லோகத்தில்‌.

தாராத்மஜாதி ஜநிதம் ஸூக மைஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--3–

பதவுரை:–
தாராத்மஜாதி-பெண்‌டிர்‌ மக்கள்‌ முதலியோரால்‌,
ஐநிதம்‌-உண்டு பண்ணப் பெற்றதும்‌;
ஐஹிகம்‌ – இம்மையில்‌ அநுபவிக்க வேண்டுமதான,
ஸுகம்‌ – சுகத்தை,
ய:-எந்த ராமாநுஜ முனிவர்‌
காராக்ருஹ – சிறைக்‌ கூடத்தில்‌,
ப்ரபவ – உண்‌டாகிய,
து:க ஸமம்‌-துக்கத்தோடு ஓத்ததாக,
விசார்ய-நிர்ணயம்‌ செய்து,
ஸெளம்யோ பயந்த்ரு முநி — அழகிய மணவாள முனிவரின்‌,
பாத யுகம்‌-இரு பாதங்களையும்‌,
சரித: – ஆஸ்ரயித்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வநாசல ராமாநுஐ முனிவரது திருவடி.களை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.

இவ் வுலகில்‌ மற்றையோர்‌ ஸுகங்களென ப்ரமித்துக்‌ களிக்கும்‌, மனைவி மக்கள்‌ முதலியோரால்‌
உண்டாகக் கூடிய ஸுகங்கள்‌ சிறைக் கூடத்திலனுபவிக்கும்‌ துன்பத்தோ டொப்பானவை
என இம் முனிவர்‌ தீர்மானித்து, மாமுனிகளின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புக்கார்‌ என்கிறார்‌.
அது எவ்வாறு எனில்‌
சிறைக்‌ கூடமென்பது ஓருவன்‌ செய்த தீச் செயலுக்குத்‌ தக்கவாறு அரசனால்‌ சிக்ஷை விதிக்கப் பெற்று
அடைத்து வைத்திருக்கு மிடமாகும்‌.
அது போலவே ஸம்ஸாரமமும்‌ சிறைக்கூடமே யென்‌னத்‌ தட்டில்லை. எப்படி. எனில்‌
அவ்வவ ஜீவன்‌ முன்பிறவிகளில்‌ செய்த கன்ம: பலங்களை யநுபவிக்க வேண்டியே ஈசஸ்வரனும்
ஸம்ஸாரத்தில்‌ பிறக்கும்படி. செய்யப்படுவதால்‌ :-அதுவும்‌ சிறைக்கூடமே.
ஸம்ஸாரத்திலும்‌ சிலர்‌ நெடு நாள்‌ சுகவான்களாயும்‌ ஆரோக்யாதிகளை யுடையராயும்‌ ஸ்வதக்‌தரர்களாயும்‌ காணப்படவில்லையா ?
எனவே எவ்வாறு இது சிறையாகுமெனில்‌, நன்கு ஆராய்ந்தால்‌ அதன்‌ உண்மை புலனாகும்‌.
நாம்‌ ஸம்ஸாரத்தில்‌ சிறிது சகம்‌ பெற்றாலும்‌ அது அற்பமும்‌ அஸ்திரமுமாகையாலும்‌, அதுவே மேலும்‌.
பல பிறகளாகிய -சிறைகளுக்குக்‌ காரணமாவதாலும்‌,
அது மேலெழப்‌ பார்ப்பவர்களுக்கு ஸு கமாகத்‌ தோன்றினாலும்‌ உண்மையில்‌ துக்கமேயாகும்‌.
எனவே தான்‌ நிரூபணத்தில்‌ இழிந்த ஆழ்வார்கள்‌
“*பெண்டிரால்‌ சுகங்களுய்ப்பான்‌ பெரியதோ ரிடும்பை பூண்டு” என்றும்‌,
* ஒரு நாயகமாய்‌ ஒட உலகுடனாண்டவர்‌…பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌ ‘” என்றும்‌
ஸம்ஸார ஸுகம்‌ துக்கமென்‌ பதையும்‌,
ஐச்வர்யம்‌ ௮ஸ்‌ திரமாகையால்‌ துக்காஸ்பதமென்‌பதையும்‌ கூறியுள்ளனர்‌.
சிறைக்கூடத்திலும்‌ அரசன்‌ உதாரனா யிருந்தால்‌ சிறிது ஸுகமெய்தலா மல்லவா?
அது போலவே தான்‌ . ஸம்ஸார ஸுகமும்‌ என்னத்‌ தட்டில்லை.
இப்படித்‌ தீர்மானித்த இம் முனிவர்‌ செய்தது என்‌ என்னில்‌?’
ஸாஸ்வதமான சுகத்தைப்‌ பெற அழகிய மணவாளமுனிவரின்‌ திருவடியைச்‌ சரணமாகப்‌ பற்றினார்‌.
அது போலவே யானும்‌ மாமுனியைச் சரணம்‌ புக்க, இம் முனிவரது திருவடிகளிலே:
எனது தலையை மடுக்கிறேன்‌ என்‌கிறார்‌.

——–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தில்‌ இவருக்கு உண்டாகிய விரக்தி கூறப்பட்டதல்லவா ?
இந்த.ஸ்லோகத்தில்‌ அந்த விரக்தி என்னும்‌ குணமானது கிளைத்‌துத்‌ தழைத்துப்‌ படர்ந்ததும்‌,இம்முனிவரிடமே எனக்‌ கூறப்‌ படுகிறது

ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--4–

பதவுரை :–
ஆதெள – முதலிலே,
ஹநூமதி – ஆஞ்ச நேயரிடத்தல்‌,
ப்ரஸுூதா – உண்டானதும்‌,
பச்சாத்‌ -பிறகு,
குரு ப்ரவரம்‌ – குரு வம்சத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரான பிஷ்மரை ,
ஏத்ய- அடைந்து,
விவ்ருத்திம்‌ – மிகுந்த விருத்தி ,
ஆப்தா – ௮டைந்ததுமான,
விரக்தி லதா –விரக்தி யென்னும் கொடியானது,
யம்‌-எந்த ராமாநுஜ முனிவரை,
உபேத்ய – கட்டி யடைந்து,
சாகா ஸஹஸ்ரருசிராய முபேத்ய- ஆயிரக்கணக்கான =அகேகம்‌ மனதைக்‌ கவர்வதாக இருக்கிறதோ,
தாத்ருக்‌ – அப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி – வானகிரி முநிவரின்‌,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,.
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.

விரக்தி என்பது: செவி, வாய்‌, கண்‌, மூக்கு உடலெனப்படும்‌ இந்திரியங்களுக்கு விஷயங்களாகிய,
சப்த ரஸ ரூப கந்த ஸ்பர்சங்களில்‌, அவ்விந்த்ரியங்கள்‌ புகாமல்‌ காத்தலே யாகும்‌.
இந்த விரக்தியை ஓர்‌ கொடியாக நிரூ பணம்‌ செய்கிறார்‌ மஹார்யர்‌.
ஓரு கொடி முதலில்‌ விதையிவிருந்து உண்டாகிக்‌ கொள்‌ கொம்பில்‌ படர்ந்து பின்‌ பெரிய மரத்தைச்‌ சார்ந்து
பூர்ணமாகப்‌ படர்வது போல்‌, இக்த விரக்‌திக் கொடியும்‌ இம்‌ முநிவரைப்‌ பற்றி அநேகக்‌ கிளைகளுடன்‌
பூர்ணமாகப்‌ படர்ந்து இலங்குகின்‌றது என்கிறார்‌.
இக் கொடி முன்பு த்ரேதாயுகத்தில்‌ அநுமானிடம்‌ முளைத்தது;
பின்னர்‌ குருவம்சத்‌ தரசனாகிய பீஷ்மரிடம்‌ விருத்தியை யடைந்தது.
இக் கலியுகத்தில்‌ இந்த ராமானுஜ முனியிடம்‌ நன்கு படர்ந்து அகேகம்‌ கிளைகளோடு கூடியதாய்‌
கண்டவர்‌ மனதையும்‌ ஆகர்ஷிக்குமதாய்‌ இருக்கிறது என்கிறார்‌.
அனுமானையுங்‌ காட்டில்‌ பீஷ்மரிடம்‌ வைராக்யம்‌ அதிகம்‌ என்பது, தமது உயிரையும்‌ த்ருணமாக மதித்து
அவர்‌ ப்ரும்ஹசர்யத்தைப்‌ போற்றி வந்ததாலாகு மென்பது கீழ்‌ மங்களாசார்ஸந உரையில்‌ விரிவாய்க்‌ கூறப்பட்டிருக்கிறது.
அந்த பீஷ்மரைக் காட்‌டி.லும்‌ ஸ்வாமி ராமாநுஐ முனிவரிடம்‌ ௮ந்த வைராக்யம்‌ அதிகம்‌ என்பது எவ்வாறு என்னில்‌?
காம க்ரோதாதிகளே நிறைந்த இக் கலி காலத்திலும்‌ காமப்‌ பயனைப்‌ பெறுவிக்கும்‌ கிரஹஸ்தாஸ்ரமத்தை பீஷ்மர்‌
தமது தந்தையின்‌ சுகாநுபவத்துச்காகத்‌ துறந்தது போலல்லாமல்‌,
**இல்லறம்‌ தமது ஆசார்யா நுவர்த்தன கைங்கர்யாதி களுக்கு விரோதி ‘ என்று ஒரு நிர்ப்பந்தமுமின்றி
தாமே அதைத்‌ துறந்து விரக்த்தியை ஏறிட்டுக் கொண்டதாலாகும்‌.
இங்கு “சாகர ஸஹஸ்ரருசரா ”’ என்று பல கிளைகளாய்க்‌ கிளைத்‌ததாலும்‌ இங்கு அது பூர்ணம்‌. அதாவது
இவரது விரக்தியின்‌ ‘பெருமையைக்‌ கண்டு கிரஹஸ்தர்களான இவரது சிஷ்யர்களும்‌ மிகுந்த வைராக்ய சாலிகளானார்கள்‌ என்பது வரமங்கைமுனி வைபவத்தில்‌ காணலாம்‌.
ஸ்வாமி யின்‌ ஞான புத்ரனான ராமானுஜம்‌ பிள்ளான்‌ மிகுந்த வைராக்ய முள்ளவராதலால்‌ ஓரு கால்
அவருடைய பத்னீ ஸர்வபூஷணா லங்க்ருதையாய்‌ எதிரில்‌ நிற்க,
**நீ எனக்கு ப்ரதி கூலையாகா நின்றாய்‌; பதிவ்ரதைக்குச்‌ சீலமன்றோ: பூஷணம்‌. இந்த பூஷணங்களால்‌ ஆவது என்‌?’” என்று க்ஷேபிக்க,
அவளும்‌ கடுகடுங்கி தனது ஆபரணங்களை யெல்லாம்‌ களைந்து பர்த்தாவிடம்‌ கொடுத்தாள்‌.
அவரும்‌ எல்லாவற்றையும்‌ வாங்கி உருக்கி வானமாமலை தெய்வ நாய்கப்‌ பெருமாளுக்குத்‌ திருமார்பு லக்ஷ்மியாய்‌ ஏறி யருளப்‌ பண்ணி,
தமது ஸ்வாமியின்‌ அநுமதியின்‌ பேரில்‌ ப்ரதிஷ்‌.டி.ப்பித்துச்‌ சாத்தியருளினர்‌” என்‌றதனால்‌
பல சிஷ்யர்கள்‌ இவரது வைராக்யத்தையே கடைப்பிடித்தனர்‌ என்பதும்‌: இதுக்குத்‌ தக்க சான்றாகுமல்லவா ?
ஆதலால்‌ அகேகங்‌ கினைகளு டன்‌ படர்ந்தது எனக்‌ கூறினர்‌. நிற்க
௮ந்த வானமாமலை ராமாநுஜ முனிவரிடம்‌ அக் காலத்தில்‌ ஸந்யாஸம்‌ பெற்ற: வைராக்யசாலிகள்‌ சிலரும்‌,
பிறகு காலதுவரையில்‌ அந்தப்‌ பட்டத்தை அலங்கரித்து வரும்‌ ஸ்வாமிகள்‌ பலரும்‌ வைராக்ய பூர்ணராய்‌
ஸந்யஸித்து அவரது கைங்கர்யங்களை அநுஷ்டித்து வருவது அவர்‌ மூலமே யாகையாலும்‌
அவ்‌ வைராக்யம்‌ அவரை யாஸ்ரயித்துப்‌ பல கிளைகளுடன்‌ படர்ந்தது என்னக்‌ குறையில்லை.
இத்தகைய வைராக்யம்‌ வாய்ந்த முனிவரின்‌ திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறார்‌. –

———-

அவதாரிகை:-
இந்த ஸ்லோகத்தில்‌, முன்‌ கூறப்பட்ட.
சிறந்த வைராக்ய ஸ்ரீ மாத்திரமின்றி
பகவத்‌ கைங்கர்ய ஸ்ரீயும்‌ இம்முனிவரிடம்‌ குடி கொண்டது என்கிறார்‌,

வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்யம்‌  ஆரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வர வரஸ்ய யதீஸிதுஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-

பதவுரை:–
யதீஸிதுஸ் – யதிகட்கு இறைவனாகிய,
வரவரஸ்ய ஸ்ரீவரவரமுனிவரது,
ப்ரீத்யை பரம்‌-ப்ரீதியை உத்தேசித்தே,
ய: – எந்த வாகாசல முனிவர்‌,
பணி நாதவத்‌ – ஆதி சேஷனைப் போலே,
வாநாசலஸ்ய – வானமாமலையான எம்‌ பெருமானுக்கு,
வர மண்டப – சிறந்த. மண்டபங்களென்ன,
கோபுர – கோபுரங்களென்ன,
ஆதி-.இவை முதலியவற்றின்‌,
கைங்கர்யம்‌ – திருப்பணியை,
ஆரசி தவான் – செய்தனரோ,
தத்‌ – அந்த,
வாநாத்ரி யோகி – வாநாசல முநிவரின்‌,
சரணெள- திருவடிகளை.
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.

இதில்‌ இம் முனிவர்‌ யதிகட்கிறை யாகிய.ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருவுள்ளத்தைப்‌ பின்‌ சென்று
அவரது ப்ரீதிக்காகவே “*வானமாமலையே அடியேன்‌.தொழ வந்தருளே” என்ற ஆழ்வார்‌ பாசுரப்படியே
வான மா மலை எம்பெருமானுக்கு சிறந்த மண்டபங்கள்‌, கோபுரங்கள்‌,
ஆதி சப்தத்தால்‌ ப்ராகார வாஹநாதிகள்‌ என்ற. பலவற்றையும்‌ உண்டாக்கி,
பரமபத நாதனுக்கு அங்குப்‌ பரமபதத்தில்‌ சேஷன்‌ என்று கூறப்படும்‌ ஆதிசேஷன்‌
**சென்றால்‌ குடையாம்‌” என்கிற பாசுரப்படி அநேக கைங்‌ கர்யங்களையும்‌ செய்யுமாபோலே,
இவரும்‌ இங்கு அநேகம்‌ கைங்கர்யங்களைச்‌ செய்துள்ளார்‌ என்று இவருடைய அநந்‌த அவதாரத்தை ஸூஸிப்பிக்கிருர்‌.
இங்கு **ப்ரீத்யை பரம்‌ வரவரஸ்ய ” எனக்‌ கூறியதால்‌ இவர்‌ இந்த கைங்கர்‌யங்களுக்காக மா முனிகளைப்‌ பிரிய மனமில்லாவிட்டாலும்‌
அவருடைய உகப்புக்காக வானமாமலை எம்பெருமானின் கைங்கர்‌யங்களைச் செய்து அருளிய
ஞான பரிபூர்ணர்‌ என்று இதில்‌ கொண்டாடுகிறார்‌.

——–

பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதிஸத்‌ உதாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-

பதவுரை:–
பாஷாந்தரேண – வேறு பாஷையான திராவிட பாஷையாக,
பரிணாவத ஆகமாகாம்‌ – மாறுபாட்டை யடைந்த வேதங்களாயும்‌,
ஸ்ரவண அம்ருதாகாம்‌- காதுகளுக்கு அமுதம்‌ போன்றவைகளுமான,
ஸ்ரீ சடாரி வசஸாம்‌ அர்தான்- ஸ்ரீ சட கோபனின்‌ திருவாக்குக்களான திருவாய்மொழி முதலியவற்‌றின் அர்த்தங்களை,
உதாரதர:-மிக உதாரரான,
ய:-எந்த முனிவர்‌,
ஸதாம்‌ – ஸாத்விகர்களுக்கு,
உபாதி ஸத்‌-உபதேஸித்தனரோ,
தத்‌ – அப்படிப்‌ பட்ட,
வாநாத்ரி யோகி-வாநாத்ரி முனிவரது,
சரணெள – திரு வடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌..

செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வேத வேத்யனான பரம புருஷன்‌ ஜீவ ராசிகளை உஜ்ஜிீவிப்பிக்க விரும்பி, தனது பெருமையைச்‌
சிறிதும்‌ பாராது-தன்னை ௮ழியமாறி மானீட சாதியிலும்‌ மற்றும்‌ திர்யக்‌ ஸ்தாவர ஜாதிகளிலும்‌ அவதரித்தது போலவே,
அவனை ப்ரதி பாதிக்கின்ற வேதமும்‌, சிலருக்கே ‘அதிகாரமுடையதாகையாலும்‌,,
அதன்‌ அர்த்தங்களும்‌ அநேக சாஸ்த்ர ஞாநா பேக்ஷமாய்‌ கிலேசப் பட்டே அறிய. வேண்டும்படி யிருக்கையாலும்‌,
தன்னால்‌ உலகைத்‌ திருத்த இயலவில்லையே என்று வருந்தி, வ்யாஸ பராசராதிகள்‌ பக்கலில்‌
“* வேத: ப்ராசேத ஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா ” என்கிறபடியே இதிஹாஸ புராணாதிகளாக அவதரித்தாப் போலே,
ஸம்ஸ்கிருத பாஷையை யறியாதாரும்‌ உஜ்ஜீவிக்க வேணு மென்ற க்ருபா அதிசயத்தாலே,
திராவிட வேதமாகவும்‌ பரிணாமத்தை யடைந்தது.
இப்படி மாறுபாட்டுடன்‌ உதித்தவை ஸ்ரீநடகோபன்‌ அருளிச் செய்த திரு வாய்மொழி முதலியனவாம்‌..
இது மற்றய ஆழ்வார்களின்‌.ப்ரபந்தங்களுக்கும்‌ உபலக்ஷணமாகும்‌.

அவையும்‌ நாதமுனி களுக்காக ஸ்ரீ சடகோபன்‌ முகமாக வெளி வந்தவையே.
இவற்றை ** ஸ்ரவண அம்ருதாநாம்‌. ” எனக்‌ கூறியது “*செவிக்‌கினிய செஞ்சொல்லே’? என்றதை அடி யொற்றிய படி.
அம்ருதம்‌ எனக்‌ கூறியதால்‌, இப்‌ரபந்தங்களே
**உள்ளத்தை மாசறுத்து”,
“*இருவினைப்‌ பாசங்கள்‌ நீக்கி”,
**வீடும்‌ தரும்‌”* என்ற விஷயம்‌ ஸூஸிப்பிக்கப்‌ பெற்றது.
இப்படிப்‌ பட்ட அர்த்த விசேஷங்களை ஸத்துக்களுக்கு உபதஸித்த உதாரர்‌ இம் முனிவர்‌.
இங்கு ஸத்துக்களாகிறுர்‌ **ஸந்த மேநம்‌ ததோ விது:” என்று கூறப்பட்ட வேதாந்த ஞான முடைய பெரியோர்கள்‌.
அப்படிப்பட்ட பெரியோர்களுக்கும்‌ இப்‌ ப்ரபந்தார்த்தங்களில் உண்டாகக் கூடிய
ஸம்சய விபர்யங்‌ களைத்‌ தமது உபதேசத்தால்‌ அறவே நீக்கும்‌ சிறந்த ஞானி இவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌.

இங்கு உதார : என்னாதே “உ தார தர:”” எனக்‌ கூறியதால்‌, பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்த ஆழ்வாருடையதும்‌
அதற்குப்‌ பாஷ்யமாக ஈடு முத லிய வ்யாக்யானங்களை அருளிச் செய்த ஆசார்யர்களுடையதுமான, ஓளதார்யங்களைக்‌ காட்டிலும்‌,
அந்த ஈடு முதலிய வ்யாக்யானங்களில்‌ நேராக அறிய முடியாத அர்த்தங்கள்‌ தெளிவு பெறும்படி.
அருளிச் செய்யும்‌ ஆற்றல் வாய்ந்த ஆசார்யர்கள்‌ இல்லாதிருந்த காலத்திலே இவர்‌ எல்லாருக்கும்
உப தேசிக்கையாலே இவர்‌ சிறந்த ஓளதார்யமுடையவர்‌ எனக்‌ கூறினார்‌.

இப்படிப்பட்ட அதிகாரி துர்லபமாயிருத்த படியால்தான்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை மாமுனிகளைப்‌
பகவத்‌ விஷயத்தையே பேணிப்‌ போரும்படி. நியமித்ததும்‌.
ஆகையல்‌“*உதாரதர:” என்னத்‌ தட்டி.ல்லை.
இங்ஙகனன்றியே தமது பீடத்தை உண்டாக்கித்‌ தமது பரம்பரையிலே இன்றளவும் அலங்கரிக்கும்‌ முனிவர்களை
யாவரையும்‌ ஸாதுக்களுக்கு உபதேகிக்கும்படி நித்யமாய்‌ நியமித்த ஒளதார்ய விசேஷத்‌தாலே ** உதாரதர:” எனக்‌ கூறினர்‌ எனவும்‌ கொள்ளலாம்‌.
ஆக இவ்வாறு உதாரரான வானமாமலை மூனிவரின்‌ சரணங்களைச்‌ சரணடைகின்றேன்‌:

—————

அவதாரிகை:–
கீழில்‌ இம்முனிவரின்‌ ஒளதார்யம்‌ பரக்கப்‌ பேசப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌, இவருடைய ** ராமானுஜன்‌ ” என்னும்‌ திரு நாமமே விஷத்தைப்‌ பேர்க்கும்‌ மந்த்ரம்‌ போலே
ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்க வல்லது என்றும்‌,
தன்னை உச்சரிப்பவர்‌களுக்கு பரம புருஷனோடு பரம ஸாம்யத்தையும்‌ (முக்தியையும் ) தரவல்லது என்றும்‌
திரு நாமத்தின்‌ பெருமையைக்‌ கூறி, இவர்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகிறார்‌.

யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--7–

பதவுரை :–
ஆர்யா: – பெரியோர்‌,
அநு க்ஷணம்‌ .-ஷணந்தோறும்‌ செய்யப்படும்‌,
யத்‌-எந்த முனிவரது,
நாம கீர்த்தனம்‌ – திரு நாம ஸங்கீர்த்தனத்தை,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
போகி – ஸர்பத்தினுடைய,
விஷ- விஷத்தை,
நிர்‌ ஹரணாய -போக்குவதன்‌ பொருட்டாக
மந்த்ரம்‌-மந்தரமாக,
ஆஹு:-சொல்லுகிறார்களோ,
பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு,
பரேண -பராத் பரனான,
புருஷேண ௪ – புருஷனோடும்‌,
ஸாம்யதம்‌ – ஸாம்யத்தை கொடுக்கவற்றோ, (
தத்‌-௮ப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி-வாநாத்ரி முனிவரின்‌,
சரணெள-திருவடிகளை;
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே–பற்றுகிறேன்‌.

யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இம்முனிவரது ராமானுஜன்‌ என்னும்‌ திரு நாமம்‌ ப்ரதி ஷணமும்‌ செய்யப்படுமானால்‌. அது ஒரு மந்த்ரத்தின்‌ கார்யத்தைச்‌ செய்ய வல்லது.
அடிக்கடி ஜபித்து அதன்‌ ஸித்திக்கு உறுப்பாகச் செய்ய வேண்டிய எண்ணிக்கையோடு கூடி ஸித்தியைத்‌ தரும்‌
கருட மந்த்ரமானது, ஸ்மரண மாத்ரத்தாலே எப்படி ஸர்ப்பாதி துஷ்ட ஜந்துக்களின்‌ விஷத்தை நீக்குமோ
அது போலவே அநவரதம்‌ சிந்திக்கப்படும்‌ இந்த ராமாநுஜன்‌ என்லும்‌ இவர்‌ திருநாமம்‌,
ஸம்ஸாரமாகிற. ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்கும்‌.
அது மாத்திரமேயன்றி பரம புருஷனான ஸ்ரீ மந் நாராயணனோடு ஸாம்யத்தையும்‌ அளிக்கும்‌ என்று பெரியோர்கள்‌ கூறுகிறார்கள்‌.
இங்கு ஸம்ஸாரத்தை ஸர்ப்பமாகக்‌ கூறியதால்‌ பாம்பு போலவே ஸம்ஸாரமும்‌ வக்ர கதியை உடையது என்வும்‌,
அப் பாம்பால்‌ தீண்டப்பட்டவன்‌ மூர்ச்சை யுறுவது போலவே இந்த ஸம்ஸார ஸ்பர்சம்‌ பெற்றவனும்‌
உண்‌மையை உணராது மயங்குகிறான்‌ என்றும்‌
அதை நீக்கும்‌ கருட மந்த்ரம்போல்‌ ஸம்ஸார ஸ்பர்சத்தால்‌ வந்த மயக்‌கத்தை நீக்கி உண்மை;உணர்வை அளிப்பது,
அடிக்கடி. உச்சரிக்கப்படும்‌ இந்த முனிவரது திரு நாமமே யாகையால்‌ அதை.மந்த்ரமாகக்‌ கூறுவர்‌
ஞானவான்களான பெரியோர்‌. “* மந்‌தாரம்‌ த்ராயத இதி மந்த்ர:’” என்ற வயுத்பத்திப்படி தன்னை அநுஸந்திப்பவனைக் காப்பாற்றுவது மந்தரம்‌அல்லவா? நிற்க
இத் திருநாமம்‌ நான்கே அக்ஷ்ரமுள்ளதாயினும்‌ திருவஷ்டாரம் போலவே பரம புருஷனாகிய ஸ்ரீ மந் நாராயணனோடு
**பரமம்‌ ஸாம்யம் உபைதி”என வேதத்தால்‌ கூறப்படும்‌ பரம ஸாம்யத்தையும்‌ தர வல்லது.
**நமோ நாராயண திரு மந்த்ரோயாளக:, வைமுண்டபுவமம்‌ சமிஷ்யதீதி” என்ற ப்ரமாணத்‌தின்டடியே
அஷ்டாஷர மஹா மந்த்ரம்‌ ஸ்ரீவைகுண்‌டத்தைக்‌ கொடுத்து
பரமனோடு பரம ஸாம்யத்தையும் கொடுட்பது போலவே இத் திருநாமமும்‌ என்று பணிப்பர்‌ பெரியோர்‌.
அப்படிப்‌ பெருமை வாய்ந்த திரு நாமத்தை யுடையவரான வானாத்ரி முநிவரின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌

———–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகங்களில்‌ ஞான வைராக்‌யாதிகளாலும்‌ திரு நாம ப்ரபாவத்தாலும்‌ வந்த இம் முனிவரது பெருமையைக்‌ கூறி, திருவடிகளில்‌ சரணம்‌ புக்கார்‌.
இனி மேல்‌ நான்கு ஸ்லோகங்களில்‌ ஸாஷாத்தாகத்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்தையே கூறி, அவற்றைச்‌ சரணம்‌ புகுகிறார்‌..
அதிலும்‌ இந்த முதல்‌ ஸ்லோகத்தில்‌ ஸ்வாமியின்‌ திருவடிகள்‌ கேவல ஸ்மரணத்தாலே ஜந்மாந்தரத்தில்‌ உண்டான
பாப ஸமூஹத்தையும்‌ நசிப்பிக்கும்‌ பெருமை வாய்ந்ததெனக்‌ கூறிச்‌ சரணம்‌ புகுகிறார்‌.

பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--8–

பதவுரை :–
பும்ஸாம்‌ – மனிதர்களுடைய,
புராதந -பழைமையான,
பவ-ஐன்மங்‌களில்‌,
ஆர்ஜித-ஸம்பாதிக்கப்பட்ட,
பாப ராசி:, பாபங்‌களின்‌ திரளானது,
யயோ: – எந்தத்‌ திருவடிகளினுடைய,
ஸக்ருத்‌-ஏக மாவகவே செய்யப்படும்‌,
ஸம்ருத்யா ௮பி-௮நுஸந்தானத்தாலும்‌,
ப்ரளயம்‌-நாசத்தை,
ப்ரயாதி-௮டைகிறதோ,
ஸத்வந்திதெள-பெரியோர்களால்‌ ஈமஸ்கரிக்கப்‌ பெற்றதும்‌,
பரம-மிகச்‌ சிறந்த,
பாவந-பரி சுத்தத்‌ தன்மையையே,
ஏக வேஷெள-முக்கிய ஸ்வரூபமாயுடையதுமான,
வாநாத்ரி யோகி சரணெள-வாநாத்ரி முனிவரின்‌ திரு வடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ப்‌ரபத்யே- பற்றுகிறேன்‌.

எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

இம் முனிவரின்‌ திருவடிகள்‌ புராதனமான அநேக ஜன்மங்களில்‌ ஸம்பாதித்து மனிதர்களால்‌ கூடு பூரிக்‌கப்பட்ட
பாப ஸமூஹங்களையும்‌ ஒருக்கால்‌ ஸ்மரித்த மாத்‌திரத்திலேயே நசிக்கும்படி. செய்கின்றது”என்‌கிறார்‌.

**மனத்‌தினால்‌ சிந்திக்கப்‌ போய பிழையும்‌ புகு தருவான்‌ நின்றனவும்‌ -என்று ஆண்டாளருளிச்‌ செய்ததை
இவர்‌ தமக்கு வகுத்த விஷயத்திலே யாக்கி யருளுகிறார்‌.

பும்‌ஸாம்‌ என்றது ஸ்த்ரிகளுக்கும்‌ உபலக்ஷணம்‌.-ஆசார்ய சரணாரவிந்த சிந்தனத்தில்‌ அதிகார நியமம் யில்லை யிறே.
“*பும்ஸாம்‌” எனக்‌ கூறியதால்‌ வர்ணாசஸ்ரமாதி அதிகார நியதியில்லாமை கூறப்பட்டது.
இது ஸர்வே பரப்மாந: ப்ர.தூயந்தே ‘* என்ற உபநிஷத்‌ வாக்‌யத்தை நினைப்பூட்டுகிறது.
மேலும்‌ இத்திருவடிகள்‌ **ஸந்த மேநம்‌ ததோ-விது:’” என்று கூறப்படும்‌ ப்ரும்ஹ ஞானிகளான
அப்பாச்சியாரண்ணா, ராமானுஜம் பிள்ளான்‌ போன்றவர்களால்‌ வணங்கப்‌ படுமவை,
மிகுந்த புனிதத்‌ தன்‌மையையே தமக்கு ஸ்வரூபமாகக்‌ கொண்டவை.
இத்தால்‌ நித்ய ஸித்தமான அபஹதபாப்மத்வாதி கல்யாண குணங்‌களை யுடையவனே தன்னை ஆஸ்ரயித்தவனுக்கு
அக்‌ குணாஷ்டக ப்ராதுர்பாவத்தைச்‌ செய்விக்கச்‌ சக்தனாமாம் போலே
இத் திருவடிகள்‌ ஸ்மரித்தவர்களின்‌ பா பங்களையும்‌ போக்குவிக்கும்‌ சக்‌தி வாய்ந்தவை யாயின என்று
முற்கூறியதற்குக்‌ காரணமும்‌ இத்தால்‌ ஸூஸிப்பிக்கப் பட்டதாகும்‌.
** பரமபாவந தைகவாஸெள *’ என்று பாடங்‌ கொண்டால்‌ “புனிதத்‌ தன்மைக்கு முக்கியமான உறைவிடம்‌ ” என்பதாகும்‌.
தாத்பர்யத்தில்‌ அதிக பேதமில்லை. இத்தகைய திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

———–

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ இத் திரு வடிகள்‌ தான்‌ வேண்டுமோ?

இவைகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாத தீர்த்தமே।தாப த்ரயமாகிற அக்னியை ௮ணைக்க வல்‌லது;
இவைகளின்‌ சம்பந்தம்‌ பெற்று உதிரும்‌ திருவடித்‌ துகளும்‌, உள்ளே உண்டாகும்‌ ரஜோ குணங்களையும்‌ சமகம்‌ ‘செய்யு மவையல்லவா ?
இத்தகைய பெருமை வாய்ந்த இம்‌ முனிவரின்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகன்றேன்‌ என்கிறார்‌.

யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–

பதவுரை :–
யத் தீர்த்த வாரி – எந்தத்‌ திருவடிகளில்‌ நின்றும்‌ கிரஹிக்கப்பட்ட ஸ்ரீபாததீர்த்தம்‌,
விமலம்‌ – பரி சுத்தமானதாய்க்‌ கொண்டு,
கலிகால -கலியுகமாகிற,
ஸமீரண – காற்றினாலே,
உத்த – வ்ருத்தி யடைந்த,
தாப த்ரய – ஆத்யாத்மித ஆதிபெளதிக ஆதி தைவங்கள் என்னும்‌ தாபங்கள்‌ மூன்றாகிற,
௮க்நி -நெருப்பை,
சமகம்‌ – அணைக்கத் தகுந்ததோ,
யத் ரேணு: – எந்தத்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததுளி,
அந்தர – மனதில்‌ உண்டாகும்‌,
ரஜ: – ரஜோகுணத்தை,
ப்ரசமாய ௪ – நீக்குவதன் பொருட்டு ஆகிறதோ,
ஏத்த் வாநாத்ரி யோகு சரணெள – இத்தகைய சக்தி வாய்ந்த
வாநாத்ரி முனிவரது இத் திருவடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ட்ரபத்யே – பற்றுகிறேன்‌-

புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்க வல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கல்மஷ மற்று பரிசுத்தமான, இம்முனிவரின்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததீர்த்தம்‌
கலி யுகமாகிய காற்றின்‌ ஸஹாயத்தினால்‌ அபிவ்ருத்தி யடையும்‌,
ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகம்‌ என்னும்‌ அக்நியை அணைக்கும்‌ சக்‌தி வாய்க்தது.
ஆத்யாத்மிகமென்பது சரீரதீதிலுண்டாகும்‌ நோய்களாலான துன்பங்களும்‌ நாசமும்‌.
ஆதிபெளதிகமென்பது கரடி. புலி காளை முதலியவற்‌றால்‌ ஏற்படும்‌ துன்பம்‌ நாசம்‌ முதலியன.
ஆதி தைவிகமென்‌பது இடி. மின்னல்‌ முதலியவற்றால்‌ தெய்வீகமாய்‌ ஏற்படும்‌ துக்கங்களும்‌ நாசங்களுமாகும்‌.
இவைகளை அக்நி யாக நிரூப ணம்‌ செய்ததால்‌ அக்நி தனக்கு ஆதாரமான விறகுகளையும்‌ அழிப்பது போல்‌
இதுவும்‌ ஆஸ்ரயத்தை அழித்தே தீருமென்‌பதைக்‌ தெரிவிக்கிறது.
கலி காலத்தை வாயுவாகக்‌ கூறியதால்‌ அக்நிக்கு அநுகூலமாய்‌ அதை வ்ருத்தி செய்விக்கும்‌ வாயுவைப் போல்‌
கலிகாலம்‌ அந்தத்‌ தாப த்ரயங்களுக்கும்‌ அநுகூலமாய்‌ அவற்றை வ்ருத்தி செய்கிறது என்ற அம்சம்‌ கூறப்பட்ட தாகும்‌.
தாப த்ரயத்தை அக்நியாய்க்‌ கூறியதால்‌ இது சீக்‌கிரம்‌ பரவும்‌ ஸ்வபாவமுடையது என்றும்‌
தாமதித்தால்‌ அணைக்கக்‌ கூடாதவை எனவும்‌ தோற்றுகிறது.
எனவே அத்தகைய தீயை யணைக்கும்‌ தன்மை வாய்ந்தது இந்த முனிவ:ரின்‌ ஸ்ரீபாத தீர்த்தம்‌.
இப்படி ப்ரபாவம்‌ வாய்த்த ஸ்ரீபாத தீர்த்தம்‌ இன்றளவும்‌ நாம்‌ பெறும்படி யிருப்பதும்‌ நமது பாக்ய வசமேயாகும்‌. நிற்க
இத் திருவடிகளின்‌ துகளும்‌ மனிதனின்‌ உள்ளத்து உண்டாகும்‌ ரஜோ குணத்தைப்‌ “போக்கும்‌ தன்மை பெற்றதாயிருக்கிறது.
ஒரு ரஜஸ்௭ு மற்றொரு ரஜஸ்ஸைப்‌ போக்குிறபடி என்னே?
இப்படிப்‌ பெருமை வாய்ந்த இத் திருவடிகளைச்‌ சரண்‌ புகுகின்றேன்‌.

———

அவதாரிகை :–
கீழ்‌ திருவடிகளின்‌ ஸ்மரண ப்ரபாவமும்‌ தீர்த்த ப்ரபாவமும்‌ ரஜஸ் ப்ரபாவமும்‌ கூறப்‌பட்டன.
இந்த ஸ்லோகத்தில்‌ பெரியோர்களும்‌ இந்தத்‌ திரு
வடி.களில்‌ வந்து ஆஸ்ரயிப்பதால்‌ வந்த பெருமையைப்‌ பேசி அவற்றைச்‌ சரண்‌ புகுகிறார்‌.

வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–10–

பதவுரை
வாதூல வம்ச திலக: – வாதூல குலத்‌திற்கு அலங்காரமான: திலகம்‌ போன்றவரும்‌,
வாத்ஸல்ய ஸிந்து: – வாத்ஸல்யமென்னும்‌ குணத்திற்கு கடல்‌ போன்றவரும்‌,
அகில ஆத்ம குண சமதமாதி களான எல்லா ஆத்ம குணாங்களாலும்‌,
உபபந்ந; – நிறைந்‌த தாயும் இருக்கிற,
வரதார்யவர்ய : –வரதாசர்ர்யர்‌ என்று திருநாமமுள்ள அப்பாச்சி யாரண்ணா என்பவர்‌,
யயோ : – எந்தத் திரு வடிகளில்‌,
சகலம் – எல்லாவிதமான,
நிஜ பரம்‌-“தம்முடைய பாரத்தை,
நிக்ஷிப்தவான்‌ – வைத்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வானமாமலை முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே –

வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கந்தாடைத்‌ திருவம்சத்திற்குத்‌ திலகம்‌ போன்றவரும்‌,
கோயிலண்ணனின்‌ சிறிய தகப்பனார்‌ குமாரரூம்‌,
திருமஞ்சனம்‌ அப்பா என்பவருக்கு தெளஹித்‌தராயும்
ஆய்ச்சியின்‌ குமாரருமாய்‌, -வாத்ஸல்யமென்‌ னும்‌ குணத்திற்குக்‌ கடல்போன்றவரும்‌
சமதமாதி அநந்தாத்ம குண பரிபூர்ணருமான அப்பாச்சியா ரண்ணா என்று வழங்கும்‌ திருநாமமுடையவருமான்‌ வரதாசார்யர்‌ என்பவர்‌,
இம் முனிவரது திருவடிகளையே பற்றி அவைகளிலே தமது பரத்தை எல்லாம்‌ ஸமர்ப்பித்து நியஸ்த பரராயிருந்தார்‌.
அதாவது ஆகிஞ்சந்யம்‌ அநந்ய கதித்‌வம்‌ இவைகளை முன்னிட்டு இந்த ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளையே உபாயமாகப்‌ பற்றிப்‌ பின்பு
ஸ்வ ரக்ஷணத்‌தில்‌ அந்வயமின்றி ஓடத்தில்‌ ஏறியவன்‌, தன்னைக்‌ காப்பாற்‌றும்‌ பொறுப்பை ஓடக்காரனிடம்‌ விட்டு விட்டுக்‌
கரை சேரும்‌ காலத்தையே சிந்தித்துக்‌ கொண்டிருப்பதுபோல்‌ இத் திரு வடி.களிலே தமது பொறுப்பை ஓப்புவித்தபடியால்‌,
**கூவிக் கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ ”” என்று இருந்தார்‌.
ஆசார்யரும்‌ ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அப்புறப்படுத்துமவனாகையால்‌ ஓடக்காரனாகவே கொள்ளப்படலாம்‌.
எனவே சிறந்த குடிப்‌ பிறப்பும்‌ ஆத்மகுணமும்‌ நிறைந்த பெரியோரும்‌ தமது பாரத்தை ஒப்புவிக்கும் பெருமையை யுடையரான வாநாத்ரி முனிவரின்‌
திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

————

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌, போரேற்று நாயனார்‌ என்று சொல்லப்படும்‌ ஸமரபுங்க வாசாரியர்‌ என்‌ற
மற்றொரு பெரியோரால்‌ அர்ச்சிக்கப்பட்டது இம்முனி
வரின்‌ திருவடி என்று .அதன்‌ பெருமையைக்‌ கூறி,
அத்‌திருவடிகளையே சரணம்‌ புகுகிறார்‌.

ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம்நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–11–

பதவுரை
ஸத்வருத்த – சிறந்த ஸதாசாரங்களுக்கு,
ஸம்பவபுவா – உத்பத்தி ஸ்‌தானமாயும்‌,
சம – மன அடக்கத்திற்கும்‌,
தாந்தி – மற்‌றைய இந்த்ரியங்களின்‌ அடக்கத்திற்கும்‌,
ஸீம்நா – எல்லை நிலமாயும்‌,
ஸத்வந்‌ தீதே – ஸாதுக்களால்‌ வணங்கப் பெற்றவரும்‌, நிகமாஞ்சல-வேதாந்தங்களின்‌,
ஸார–ஸாரார்த்தங்களால்‌, (அறிந்தமையால்‌-வந்த)
பூம்நா – பெருமையை யுடையவருமாயிருக்கிற,
ஸமர புங்கவ தேசிகேக – ஸமர புங்கவர்‌ என்னும்‌ ஆசார்யனாலே,
ஸம் பூஜஷிதெள -நன்கு! பூஜிக்கப்பட்ட,
வாநாத்ரி யோகி சரணெள – வாநாசல முநிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே -பற்றுகிறேன்‌.

நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று  நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)

போரேற்று நாயனார்‌ எனப்படும்‌ ஸமர புங்கவாசார்யர்‌, சிஷ்டர்களின்‌ மிகச்‌ சிறந்த ஆசாரங்களுக்கு விளையும்‌ பூமி எனப்‌ போற்றப்படுமவர்‌.
மனதை அடக்கி யாளுகையாகிற :*: சம’”மென்னும்‌ குணத்திற்கும்‌,
மற்றய கண்‌ முதலிய வெளி இந்த்ரியங்களை அடக்க யாளுகையாகிற.** தமம்‌ ” எனப்படும்‌ குணத்திற்கும்‌
எல்லை நிலமென்றும் மெச்சப்படுமவர்‌;
ஞானிகளான ஸாதுக்களும்‌ வணங்கும்‌ பெருமை வாய்ந்தவர்‌.
** வேதாந்த வாக்யங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ நன்கு உணர்ந்தவர்‌ ‘” ஏன்னும்‌ அதிசயம்‌ வாய்க்‌கப்‌ பெற்றவர்‌.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஸமர புங்கவராலும்‌ இம்முனிவரது திருவடிகள்‌ நன்கு பூஜிக்கப்‌ பெற்றன என்றால்‌
இதனில்‌ மிக்க பெருமையும்‌ உண்டோ ?’
அப்படிப்பட்ட இம்முனிவரின்‌ திருவடிகளை அடைக்கல மாகப்‌ பற்றுகிறேன்‌.
ஸதாசாரங்களும்‌ சமதமாதி குணங்‌களும்‌ ஞானிகள்‌ வணங்கும்‌ பெருமையும்‌ வாய்ந்து,
வேதாந்த.ஸாரார்த்த ஞானமு முடைய ஸமரபுங்கவரும்‌ இவர்‌ திருவடி.களை ஆஸ்ரயித்து அவற்றை பூஜிப்பர்‌ என்றால்‌,
இம்முனிவரிடம்‌ ஸதாசார ஞான வைராக்யாதி குணங்கள்‌ எவ்வளவு பூர்ணமாக இருக்க வேண்டுமென்பது,
கைமுதிக நியாயத்‌தாலே ஸித்தமான தொன்றன்றோ?
இத்தால்‌ “ஒப்பற்ற ஞான வைராக்யாதிகளை யுடைவர்‌ இத்த ராமாநுஜ முனிவர்‌’” என்றது ஸூஸிப்பிக்கப்‌ பட்டதாகும்‌.

——-

அவதாரிகை:–
இப்படித்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்‌தைக்‌ கூறிப்‌ பின்னும்‌ இந்த வாநாத்ரி முனிவரின்‌ வைராக்‌யம்‌ பக்தி ஞானம்‌ என்ற குணங்களில்‌
ஓவ்வொரு குண விஷயத்திலும்‌ ஒருவரிருவரை உபமானமாகக்‌ கூறி
**இவருக்கு ஓப்பாமவர்‌ உலகில்‌ ஒருவரும்‌ இலர்‌” என்கிறார்‌.

வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-

பதவுரை:–
வாநாத்ரி லஷ்மணமுநே –வாநாத்ரி ராமாநுஐ முனிவரது,
வைராக்யம்‌ – வைராக்யம்‌ என்னும்‌ குணம்‌,
யதி(வர்ண்யதே)-நிரூபணம்‌ செய்யப்படுமேயாலால்‌,
வாயு – வாயு தேவனுடையவும்‌,
சந்தனு- சந்தனு மஹாராஜனுடையவும்‌,
ஸுத-புத்ரர்களான அறுமானை

எம்பெருமானார்‌, மணவாள மாமுனிகள்‌ இவர்களின்‌ ஞாநத்‌தின்‌ ரீதியை இவரது ஞானம்‌ உடையதாக ஆகும்‌.
பூர்வாசார்யர்களின்‌ ஞானத்தோடொத்த ‘ ஞானத்தை: உடையவர்‌ எனத்‌ தேறிற்று.
இப்படிப்பட்ட ஞான பக்தி வைராக்யங்களை யுடையராய்‌ இருப்பதால்‌ உலகில்‌ இம்‌.முனிவர்க்கு ஓப்பாவார்‌ ஒருவருமில்லை என்கிறார்‌.
இங்கு.கீழே ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஓவ்வொன்றுக்கும்‌ உபமானமாக சிலரைக்‌ கூறியிருக்க

கோவாஜகத்யா ம்ஸம:–உலகில்‌ ஓப்பாவார்‌ மார்‌? எனக்‌ கேட்பது அஸம்பாவித மன்றோ?
எனச்‌ சிலர்க்கு சங்கை பிறக்கக்கூடுமல்லவா ? அதற்குப்‌ பரிஹாரம்‌ என்‌? என்னில்‌,.
வைராக்யத்திற்கு அனுமான்‌ பீஷ்மர்‌ இருவரையும்‌,
பக்திக்கு நம்மாழ்வார்‌ “முதலிய பல ஆழ்வார்களையும்‌,
ஞானத்திற்கு நாதமுனிகள்‌ முதலிய பல ஆசார்யர்களையும்‌ இவர்‌ உபமானமாகக்‌ கூறிய தால்‌,

ஓவ்வொரு குணத்திற்கே இவர்‌ குணப்‌ பெருமையால்‌ பலரை உபமானமாகக்‌ கொள்ளவேண்டி. யிருப்பது தெளிவு…
எனவே எல்லா குணங்களும்‌ சேர்ந்து திரண்டு இருக்கும்‌ இவரைப்‌ போன்ற அக்‌ குணங்களுக்கு ஆஸ்ரய மில்லாமை.
ஸித்திப்பதால்‌ இவருக்கு ஓப்பாவார்‌ யார்‌ என்றார்‌.
௮ன்‌றியே
இவரது வைராக்ய பக்தி ஞானங்களுக்கு தெய்வாம்சம்‌. பகவதாஞ்ஞையால்‌ ஆழ்வார்களும்‌ ஆசார்‌யர்களுமாய்‌
அவதரித்த நித்ய ஸூரிகளும்‌ ஒப்பாமதொழிய-இவ் வுலகில்‌ கர்மமடியாகப்‌ பிறந்தார்‌ ஓப்பாவரோ? என்றுமாம்‌.
அல்லது ௮க்காலத்திலுள்ளார்‌ ஒப்பாமதொழிய இக்‌.காலத்தவர்‌ ஒருவராவது இவரோடு ஓப்பாமவர்‌ உளரோ என்றுமாம்‌.
** ஐகத்யாம்‌”” (இவ்வுலகில்‌) எனக்‌ கூறிய தால்‌, அவ்வுலகில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ உள்ளவர்‌ ஒப்பாவர்‌ எனத்‌ தேறுகிறதல்லவா ?
எனவே கீழ்க்‌ கூறியவாறு ஆழ்வார்கள்‌ ஆசார்யர்கள்‌ உபமானமாசக்‌ கொள்‌ளப்படுவதில்‌ ஆக்ஷேபம்‌ ஏதுமில்லை என்பதும்‌ உணரத்‌ தக்கது.

ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!

————

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஒப்பாவார்‌ ஒருவருமில்லை என்றார்‌.
‘இந்த ஸ்லோகத்தில்‌ பகவத்‌ கைங்கர்ய விஷயத்திலும்‌, பகவத்‌ பஜந விஷயத்திலும்‌, பாகவத ஸேவா விஷயத்திலும்‌
ஆசார்ய சரண கமலார்ச்சன விஷயத்திலும்‌ ஓவ்வொன்‌றுக்கும்‌ ஓரொருவரை உபமானமாகக்‌ கூறி,
இவரது ஒப்பற்ற தன்மையை நிரூபணம்‌ செய்து, இவரே சிறந்த குணங்கட்‌கெல்லாம்‌ முக்கியமான உறைவிடம்‌ என்கிறார்‌.

கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர--13-

பதவுரை :–
௮ஸ்ய-இந்த முநிவருடையதாய் ,- முனிவர்‌ செய்த என்றபடி,
வானசைல – வானமாமலை என்ற திருநாமமுள்ள,
கமலாகாந்தஸ்ய -லக்ஷ்மீ வல்லப விஷயமான,
கைங்கர்யம்‌ – மண்டப ப்ராகாராதி நிர்மாண ரூபமான திருப் பணிகள்‌,
நிரூப்யதே யதி ..ஆராயப்படுமாயின்‌,
சேஷக்ரமாத்‌ – ஆதிசேஷனுடைய**சென்றால்குடையாம்‌” என்ற கைங்கர்ய க்ரமத்தை அதுஸரித்ததாக,
ஸ்யாத்‌ – ஆகும்‌.
பஜே – அநத எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌,
தத் பக்த பூஜாவிதெள-அவ்‌ வெம்பெருமானிடம்‌ பக்தி பூண்ட பாகவதர்களை ஆராதிக்‌கும்‌ விஷயத்திலும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
ப்ரீதி: -சந்தோஷமானது,
நிரூப்யதே சேத்‌-ஆராயப்படின்‌,
குலசேகரஸ்ய (இவ) குலசேகர ஆழ்வாருடையது (போல),
ஸ்யாத்‌-ஆகும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
(சார்ய) -ஆசார்யனுடைய,
அங்கரிஸசரோருஹ – தாமரை போன்ற திருவடிகளின்‌,
அர்ச்சகவீதெள-அர்ச்சு ப்ரகாரத்‌தில்‌,
உஜ்வலா : – நன்கு விளங்குகின்ற,
தா : தா:-அந்தந்த
ப்ரக்ரியா : – ப்ரகாரங்கள்‌, அநுஷ்டானங்களென்றப்டி,
யதி நிரூப்யக்தே – ஆராயப்படுமானால்‌,
மஞ்ஜுகவே:((இவ)-ஸ்ரீமதுரகவிகளுடையது போன்றதாக, (ஸ்யாத்‌)ஆகும்‌,
(ஆகையால்‌) வாநாத்ரியோகீஸ்வர : – வாநாசல முநிவர்‌, குணைகஸதகம்‌-குணங்கட்கொல்லாம்‌ முக்யமான உறை விடமாக

ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ் வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.

இம்முனிவர்‌ வானமாமலை எனத்‌ திருநாமம்‌ பூண்ட ஸ்ரீ ய :பதிக்குச்‌ செய்தருளிய பலவித கைங்கர்யங்‌களையும்‌ ஆராயின்‌,
அவை பலவாகையாலே, **சென்றால்‌.குடையாம்‌”, “நிவாஸசையாஸநக” என்கிற வசனங்களின்‌ படி
பல கைங்கர்யங்களையும்‌ செய்து போரும்‌ ஆதிசேஷ.னுடைய ரீதியை(கிரமத்தை) அநுஸரித்ததாகக்‌ கூறலாம்‌..
அவ்வானமாமலை எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌ அவனது பக்தர்களை பூஜிக்கும்‌ விஷயத்திலும்‌
இவரது ஆர்வத்தை ஆராய்ந்தால்‌ குலசேகர ஆழ்வாருடைய ஆர்‌வத்தை யொத்ததாகக்‌ கூறலாம்‌.
ஆசார்ய சரணாரவிந்தத்தை அர்ச்சிக்கும்‌ கிரமத்தில்‌ ஒப்புயர்வற்ற இம்‌ முனி’வரின்‌ அந்தந்த ப்ரகார விசேஷங்கள்‌
ஆராயப்படுமானால்‌: அவ்வவ அநுஷ்டானங்கள்‌ ஸ்ரீமதுரகவி யாழ்வாருடையன: போன்றனவாகும்‌.
எனவே இம்முனிவர்‌ சிறந்த குணங்களுக்குக்‌ கொள்கலமாவார்‌ என்கிறார்‌.
இங்கு **வாநசைல கமலா:- காந்தஸ்ய ‘? என்ற இடத்தில்‌ வானசைல என்று ஊரைச்‌ சொல்லி,
“*கமலாகாந்தஸ்ய’” என்று அங்கு எழுந்தருளி யிருக்கும்‌ எம்பெருமான்‌ எனக்‌ கொள்வது
**வானமா மலையே”” என்று எம்பெருமானையும்‌ ** சிரீவரமங்கலககர்‌ ‘? சிரீவரமங்கை என்று திருப்பதியையுங்‌ கூறிய ஸ்ரீ ஸூக்திகளோடு பொருந்தாது.
அன்றியே இந்த சப்தம்‌ * வைகுண்டோவிஷ்டரஸ்ரவா :” என்று எம்‌பெருமானுக்கும்‌,
* வைகுண்டேது பரே லோகே ?’ என்று: ஸ்தானத்திற்கும்‌ பேராகக்‌ கொள்ளப் படுமா போலே
அத்‌ திருப்பதிக்கும்‌: பேராகக்‌ கொள்ளப்படினும்‌ குற்‌றமில்லை-
இந்த ந்யாயத்தைக்‌ கொண்டுதான்‌ வானமா மலை என்று அவ்‌வூருக்கும்‌ பேராகத்‌ தற்காலம்‌ எல்லோரா லும்‌ வழங்கப்‌
பெற்று வருகிறது என்பது உணரத்தகும்‌.
இவ்விராமானுஐ .முனி பல சைங்கர்யங்களைச்‌ செய்ததால்‌, ஆதிசேஷனின்‌ கைங்கர்யத்தை யநுஸரித்தது இவரது கைங்கர்யம் என்கிறார்‌.
சேஷக்ரமாத்‌” என்பதற்கு “*சேஷக்ரம மநுஸ்ருத்ய ‘”என்று “ல்யப்லோபே பஞ்சமீ” எனக்‌ கொண்டு அர்த்தம்‌கூறப்பட்டது.
பகவத்‌ பஜனத்திலும்‌ ஸ்ரீவைஷ்ணவ பூஜா விஷயத்திலும்‌ மற்றை ஆழ்வார்களை விட்டு ஸ்ரீகுலசேகரரை
இவர்‌ உபமானமாகக்‌ கொள்வான்‌ என்‌? என்னில்‌,
அவ்வாழ்‌வாருடைய பஜந ப்ரகாரம்‌ விலக்ஷண்மல்லவா? பகவத்‌ ஸம்பத்‌தம்‌ பெற்ற தேசமே அமையும்‌-;

அத்தேசத்திலும்‌ ஞானத்‌திற்கு அடைவில்லாத திர்யக்‌ ஸ்தாவர ஜங்கமங்களும்‌ அமையும்‌ என்று நினைத்து
** குருகாய்ப்‌ பிறப்பேன்‌,” *மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையனாவேன்‌ ‘?,
“*தம்பகமாய்‌ நிற்கும்‌ தவ முூடையேன்‌ ஆவேன்‌ ,
“படியாய்க்‌ கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேன்‌ ”’ என்றாரல்லவா?
அது போலவே ‘இம்முனிவரும்‌ அவனுகந்த திருப்பதியில்‌ “ஏதேனுமாவேன்‌”என்‌ற அத்யவஸாயம்‌ பெற்றவர்‌ என்றபடி.
பாகவதர்களை ஆராதிக்கும்‌ விஷயத்திலும்‌ ““ஆரங்கெடப்‌ பரனன்பர்‌ கொள்ளாரெனக்‌ குடப்பாம்பில்‌ கையிட்ட” ஸ்ரீகுலசேகராழ்வாரைப்‌ போலே
ஸ்ரீவைஷ்ணவ விஷயத்தில்‌ கூறப்படும்‌ தோஷலே சத்தையும்‌ ஸஹியாது பரிந்து அவர்களை பூஜிக்குமவர்‌ என்று தோற்று கைக்காக இந்த உபமானம்‌
இனி இம் முனிவர்‌ தமது ஆசார்‌யனான மணவாளமாமுனிகளின்‌ திருவடிகளை அர்ச்சிக்கும்‌ க்ரமங்களும்‌,
அந்தந்த ப்ரகாரங்களும்‌ மதுரகவி நிலையை ஓத்ததாகும்‌. அதாவது–
அவர்‌ **தேவுமற்றறியேன்‌ ” என்று ஆழ்வாரையே தெய்வமாகப்‌ பற்றினாப் போலே
இவரும்‌ “*ஆசார்யதேவோ பவ” என்கிறபடியே ஆசார்ய ப்ரபத்தி யையே தேவனாகக்‌ கொண்டு அர்ச்சிக்கும்‌ நிலையாகும்‌,
ஆயின்‌ இவருக்கு பகவத்‌ கைங்கர்யத்தில்‌ ப்ரவ்ருத்தி சேருவது எங்‌கனே என்னில்‌ ?
ஆசார்ய முகோல்லா ஸார்த்தமாகச்‌ செய்கையாலே சேரும்‌.
இதுதான்‌ **ப்ரீத்யை பரம்‌ வர வரஸ்ய’” என்றவிடத்தே கூறப்பட்டதாகும்‌.
கவி :’” என்றது மதுரகவி என்றபடியாம்‌.

———

அவதாரிகை :–
ஆக இவ்வளவும்‌ வர வாநாத்ரி முனிவரது ஞானம்‌, பக்தி, வைராக்யம்‌, பகவத் கைங்கர்யம்‌,
பகவத் பாகவத ப்ராவண்யம்‌, ஆசார்ய பாதார்ச்சனம்‌ முதலியவற்றை உபமான முகத்தாலே சிறப்பித்துக்‌ கூறி
அவ்வழியாலே இவர்‌ ப்ரபாவத்தைக்‌ கூறியவர்‌ எம்பெருமானே நர நாரணனாய்‌ உலகத்தறநூல்‌ சிங்காமை விரித்தாப்‌ போலே,

ஞானப்ரதானம்‌ செய்து உலகினை உய்விக்க விரும்‌பிய ஆதிசேஷனே அநேகாவதாரம்‌ செய்தவர்‌ என்றும்‌
ஸ்ரீமந் மணவாள மாமுனிகளாகவும்‌ அவரது சிஷ்யரான வானமா மலை ராமானுஜ முநிவராயும்‌ அவரித்தவரும்‌ அவரே என்‌றும்‌
இவரது அநந்தாவதாரத்வத்தை அருளிச்‌ செய்து அவ்‌வழியாலே
அவரது ஓப்புயர்வில்லாப்‌ பெருமையை உணர்த்துகிறார்‌ இந்தக்‌ கடைசி ஸ்லோகத்தால்‌.

சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-

முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.

லக்ஷ்மீபதி: – லக்ஷ்மீ வல்லபனான எம்பெருமான்‌,
ஆத்மாகம்‌-தன்னை (ப்ராயேண்‌) –
அநேகம்‌ தடவை, சிஷ்யாசார்யதநுத்வயம்‌ -சிஷ்பனென்னும்‌ ஆசார்யனென்னும்‌ இரு
சரீரங்களையுடையவனாக,
நிரபஜத்‌ – பகுத்தான்‌,
ஏக: – அவ்‌ விருவரில்‌ ஒருவன்‌,
புரா – முற்காலத்தில்‌
கரஸம்ஞக: –
நர நாராயணன்‌, நரநாராயணர்களென்கிற சிஷ்யாசார்யர்களாக அவதரித்தது போலவே
திருவநந்தாழ்வான்‌ மாமுனிகளும்‌ வானமாமலை “ ராமனுஜ முனிவருமாய்க்கொண்டு
சிஷ்யாசார்யர்களாக அவதரித்தார்‌ எனக்‌ கொள்வதே
தகுதியுடையதாகும்‌.
ஸ்ரீ மணவாளமாமூனிகளையும்‌. இந்த ராமானுஜ முனிவரையும்‌ ஈச்வராம்சமாகச்‌ சொல்லுமிடங்‌
களில்‌
““ஸாக்ஷ£ந்‌ நாராயணோதேவ:”’ என்று ஆசார்ய
ஸாமாந்யத்தையும்‌ பகவதம்சமாகக்‌ கூறும்‌ ஸாமாந்ய வசனத்தைக்‌ கொண்டே. சொன்னதாகக்‌ கொள்ள வேண்டும்‌.
இல்லாவிடில்‌ எம்பெருமானார்‌ முதலியோருக்குக்‌ கூறப்படும்‌ சேஷாவதாரத்வம்‌ ஸித்தியாது.
இந்த மஹார்யரென்றும்‌ தொட்டை ஐயங்கார்‌ அப்பை, இந்த “*மங்களாசாஸசம்‌ ப்ரபத்தி என்ற இரு கரந்தங்கள்‌ போலவே
தமது ஆசார்யரான வானமாமலை ராமானுஜ ஜீயர்‌ விஷயமான *: தினசர்யை ‘” என்னும்‌ கீரந்தமும்‌ அருளிச்‌ செய்திருக்கிறார்‌
என்‌பது ஸ்ரீ வரமங்கைமுகி வைபவத்தால்‌ அறியப்படுகிறது.
இந்த ப்ரபந்தங்களை ராமானுஜம்‌ பிள்ளான்‌ அருளிச்செய்ததாகவும்‌ சிலர்‌ கூறுவர்‌.

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Posted in ஸப்த காதை, ஸ்தவம் | Leave a Comment »

ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ பரமார்த்த ஸ்லோக த்வயம்

June 2, 2023

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஐந பூஷணம்
பாஷ்ய அம்ருத ப்ரதாநாத் யஸ் சஞ்ஜீவயதி மாமபி

ஸத் சங்காத் பவ நிஸ் ஸ்ப்ருஹோ குரு முகாத் ஸ்ரீ ஸம் ப்ரபத் யாத்மவாந்
ப்ராரப்தம் பரி புஜ்ய கர்ம சகலம் ப்ரஷீண கர்மாந்தர
ந்யாஸாதேவ நிரங்குச ஈஸ்வர தயா நிர் லூந மாய அந்வய
ஹார்த்த அநு க்ரஹ லப்த மத்ய தம நித்வாரா பஹிர் நிர்க்கத –1

முக்தோ அர்ச்சிர் திந பூர்வ பக்ஷ ஷடு தங்மா ஸாப்த வாதம் ஸூமத்
க்லவ் வித்யுத் வரு ணேந்திர தாதரு மஹித ஸீ மாந்த சிந்த் வாப்லுத
ஸ்ரீ வைகுண்டம் உபேத்ய நித்யம் அஜடம் தஸ்மிந் பர ப்ரஹ்மண
ஸா யுஜ்யம் சமவாப்ய நந்ததி சமம் தேநைவ தந்ய புமான் –2-

ப்ரதார் நித்ய அநு சந்தேயம் பரமார்த்தம் முமுஷுபி
ஸ்லோஹ த்வயேந ஸம் க்ஷிப்தம் ஸூவ்யக்தம் வரதோ அப்ரவீத்

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Posted in அஷ்டோத்ரம், ஸப்த காதை, Stotrams/Slokams | Leave a Comment »

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

May 17, 2023
ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்: நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார். “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம், அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.” தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார் அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால் பேதை மனமே உண்டோ பேசு   –உபதேச ரத்ன மாலை                                           திருநக்ஷத்ரம்: ஆனி அனுஷம் அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்) ஆசார்யன்–நம்மாழ்வார் ஶிஷ்யர்கள்: உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார், திருக் கண்ண மங்கை ஆண்டான், வான மா மலை தெய்வ நாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான். அவர் சீடர்கள்களில் முக்கியமானவர்கள் :- 1.உய்யக்கொண்டார்(திருவெள்ளறை புண்டரிகாட்சன்) 2. குருகைக் காவலப்பன் 3.கீழையகத்தாழவான் 4.மேலையகத்தாழ்வான் 5. திருகண்ணமங்கையாண்டான் 6. பிள்ளை கருணாகர தாசர் 7.நம்பி கருணாகர தாசர் 8. ஏறு திருவுடையார் 9 வான மா மலை தெய்வ நாயக ஆண்டான் 10. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை 11.சோகத்தூர் ஆழ்வான் . ஜ்யேஷ்டா மாஸே த்வநூராதே ஜாதம் நாத முநிம் பஜே| ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ: ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்ய ப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம் திருஅவதாரம்–முதலாசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகள், சேனை முதலியாரின் படைத் தலைவர் கஜாநனர் என்கிற யானை முக நித்ய ஸூரியின் அம்சமாக அவதரித்தார். சோழ நாட்டில் வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயிலில்) கி.பி. 823 இல் சோபக்ருத் வருடம், ஆனி மாதம் 7ஆம் தேதி, பௌர்ணமி, புதன் கிழமை, அனுஷ நட்சத்திரத்தில், ஈஸ்வர பட்டரின் புத்திரராக சொட்டைக் குலமெனும் சடமர்ஷண கோத்ரத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் யோக வித்தையில் ஈடுபட்ட பிறகு, நாதமுனிகள் ஆனார். ஸ்ரீமந் நாதமுனிகள், வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈஶ்வர பட்டாழ்வார்க்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர் என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர் தான் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது. திருமணம்:- ஸ்ரீமந் நாதமுனிகள் அரவிந்தப்பாவை என்ற உத்தமியை மணந்து கொண்டு காட்டுமன்னார்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீர நாராயணப் பெருமாளுக்கு நித்திய கைங்கர்யம் (தொண்டு) செய்து வந்தார். நாதமுனிகள் அவருடைய திருத்தகப்பனார் மற்றும் அவருடைய திருக்குமாரருடன் (ஈஶ்வர முனி) வட மதுரை, வ்ருந்தாவனம், கோவர்தன கிரி, த்வாரகை, பதரிகாஶ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்பச் செல்கிறார். திரும்பும் வழியில் வாரணாசி, பூரி ஜகந்நாத், ஸிம்ஹாசலம், திருவேங்கடம், கடிகாசலம், காஞ்சிபுரம் (மற்றும் பல திவ்ய தேசங்கள்), திருவஹிந்திரபுரம், திருக்கோவலூர், திருவரங்கம் மற்றும் திருக்குடந்தை திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணிவிட்டுக் காட்டு மன்னார் கோவிலுக்குச் செல்கிறார். ஒரு நாள் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை திருநாராயணபுரம்) காட்டு மன்னார் கோயில் எம்பெருமான் மன்னனார் முன்பு திருவாய்மொழியில் உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். அந்த பாசுரத்தின் அர்த்தத்தை அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம் நாதமுனிகள் கேட்க, அந்த 11 பாசுரத்தை தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டனர். திருக்குருகூருக்கு சென்றால் இந்த பாசுரங்களை பற்றி ஏதெனும் தெரிந்துகொள்ளலாம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் நாதமுனிகளிடம் சொல்ல, உடனே நாதமுனிகளும் மன்னனாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) சென்றார். ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் ஶிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார். பராங்குச தாசர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்திக்க சொன்னார். நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே நம்மாழ்வாரைத் தியானித்து 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பை அனுசந்தித்து முடித்தார். உடனே நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அஷ்டாங்க யோகம், நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார். இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச் செய்தார். நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து மன்னனார் முன்பு நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தைச் சேவித்தார். மன்னனார் மிகவும் மகிழ்ந்து நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை வகைப்படுத்தி உலகெங்கும் பரப்புமாறு நியமித்தார். நாதமுனிகள் அருளிச் செயலை (நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை) தேவ கானத்தில் இசைத்து, அதைத் தன் மருமகன்களான கீழை அகத்தாழ்வான் மற்றும் மேலை அகத்தாழ்வானுக்கு கற்றுக் கொடுத்து அவர்கள் மூலம் உலகமெங்கும் பரப்பினார். நாதமுனிகள் தேவகானத்திலும் வல்லவராக இருந்தார். ஒரு முறை ஒரு ராஜா   ஸாமான்ய கானம் இசைப்பவரையும், தேவ கானம் இசைப்பவரையும் வேறுபடுத்த முடியாமல் குழம்ப, நாதமுனிகள் தேவ கானம் இசைப்பவரை அடையாளம் காட்டினார். அந்த ராஜா அவருடைய திறமையைப் பற்றிக் கேள்வி கேட்க,  ஒரே சமயத்தில் 4000 தாளங்களை ஒலிக்கச் செய்து அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வொரு தாளத்தின் ஒலியையும் உணர்ந்து கூறினார். இதைக் கண்ட அந்த ராஜா, நாதமுனிகளுடைய திறமையை அறிந்து அவருக்குச் செல்வங்களைக் கொடுத்தார், ஆனால் நாதமுனிகளோ அந்தச் செல்வத்தில் ஆசை இல்லாமல் இருந்தார். நாதமுனிகள் கண்ணன் எம்பெருமான் மீது உள்ள ப்ரீதியினால் தன்னுடைய திருப் பேரனாருக்கு “யமுனைத் துறைவன்” என்று பெயர் சூட்டுமாறு ஈஶ்வர முனியிடம் (நாதமுனிகள் குமாரர்) கூறினார். பிறகு அனைத்து ஸம்ப்ரதாய விஷயங்களையும் யமுனைத் துறைவருக்குக் கற்றுக் கொடுக்குமாறு அவருடைய ஶிஷ்யர்களிடம் கூறினார். நாத முனிகள் எம்பெருமானை தியானித்துக்கொண்டிருக்கும் போது அனைத்தையும் மறந்து விடுவார். ஒருமுறை நாத முனிகள் யோகத்தில் இருக்கும் பொழுது ஒரு ராஜா தன்னுடைய மனைவிகளுடன் அவரைச் சந்திக்க வந்தார். அவருடைய யோகத்திற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்து அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் நாதமுனிகளோ அவருடைய பக்தி பாவத்தினால் அவர்களை “கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். மற்றோரு முறை அந்த ராஜா வேட்டையாடி விட்டு, அவருடைய துணைவி, ஒரு வில்லாளன் மற்றும் ஒரு குரங்குடன் நாதமுனிகளைச் சந்திக்க வந்தார். மறுபடியும் நாதமுனிகளின் பக்தி பாவத்தினால் அவர்களை “ராமன், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமன்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். தன் பார்வையிலிருந்து மறைந்தவுடன் அங்கேயே மயங்கி விழுந்தார். எம்பெருமானுடைய பிரிவைத் தாங்க முடியாமல் உடனே இவ்வுடலை விட்டுப் பரமபதம் சென்று அடைந்தார். இதை அறிந்த ஈஶ்வர முனி மற்றும் நாதமுனிகளுடைய ஶிஷ்யர்கள் அந்த இடத்திற்கு வந்து அவருக்கு சரம கைங்கர்யங்களைச் செய்தார்கள். நாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (அருளிச்செயல்) கிடைத்தது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் முதல் மூன்று ஶ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார். ஶ்லோகம் 1 – முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகளின் உண்மையான செல்வமான ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார். நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே | நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே || நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார். அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன். ————- ஶ்லோகம் 2 – இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது. அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார். தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே | நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் || மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

மதுகைடபர்கள் வேதங்களை அபகரித்தது போல ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு நீண்ட நெடுங்காலமாக தர்சன நிர்வாஹகர்களான ஆசார்யர்கள் ஒருவரும் இல்லாமல் போனதாலும், மேலும் அஸுரப்ரக்ருதிகளின் சூழ்ச்சியாலும் அஜ்ஞானம் என்னும் பேரிருள் இவ்வுலகத்தை சூழ்ந்து திராவிட வேதத்தில் மக்களுக்கு கலக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவற்றை மறந்து போனார்கள். மதுரமான தமிழ் பாசுரங்கள் மறைந்தும் போயின. அச்சமயத்தில் திருக்குடந்தை ஆராவமுதனின் காரூண்யத்தால் ஆழ்வார் திருநகரி சென்றடைந்து, மதுரகவியாழ்வாரின் சிஷ்ய பரம்பரையினர் மூலம் கண்ணிநுண் சிறுத்தாம்பைப் பெற்று அதனைப் பல்லாயிரம் முறை பாராயணம் செய்து ஆழ்வாரை ஸாக்ஷாத்கரித்து தமிழ் வேதங்களை மீட்டெடுத்து அவற்றைத் திரும்பவும் உலகில் நடையாடச் செய்தவர் ஸ்ரீமந் நாதமுனிகள்.

ஆகவே இவருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவனுக்கும் ஒப்புமை அதிகம். அதனாலேயே ஸ்ரீ ஆளவந்தார், எம்பெருமானின் மற்ற அவதாரங்கள் இருக்க ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரத்தை முதலில் இவர் விஷயத்தில் அருளிச் செய்தது இங்கு நன்கு சுவைக்கத்தக்கது.

“சடகோபமுனி” வழிவந்த முனி

ஜ்ஞானமும், வைராக்யமும், கண்ணனிடத்தில் கடலைப் போல கரைகாண முடியாத பக்தியும்  கொண்ட ஸ்ரீமந் நாதமுனிகள், ஆழ்வார் காட்டியபடி சரணாகதியை மோக்ஷத்திற்க்காக அநுஷ்டித்தவர். ஆயினும் எம்பெருமான் அநுபவத்தில் இருக்கும் த்வரையினால் ஸ்வயம் ப்ரயோஜனமாக பக்தியோகத்தை அநுஷ்டித்து அவனை ஸாக்ஷாத்காரம் பண்ணி ஸேவித்து வந்தவர். அதனாலேயே சடகோபமுனிக்குப் பிறகு நம் ஸம்ப்ரதாயத்தில் “முநி”(நாதேந முநி)என்ற ஏற்றத்தையும் பெற்றவர் இவரே.
நாதே₂ந முநிநா தேந ப₄வேயம் நாத₂வாநஹம் | யஸ்ய நைக₃மிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் க₃தம் ||-ஸ்ரீ யதிராஜசப்ததி – 5

“வேதத்தில் மறைந்து கிடந்த ஸகல ரஹஸ்யார்த்தங்களும் எம்பெருமான் மற்றும் ஆழ்வார் அநுக்ரஹத்தால் எவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் விளங்கிற்றோ அவரையே தலைவராகக் கொண்டவனாக நான் ஆகிறேன்”.

———— ஶ்லோகம் 3 – தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே, ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார். பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: | லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி யோகாய நாதமுநயே யமிநாம் வராய || பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள். அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள். ————— ஶ்லோகம் 65 – ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’ (ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும், என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும் ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க, எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான். ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார். அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் | பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா || எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும். ——– மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித் தாமரைகளை வணங்குவோம். ஆளவந்தார் அவதாரம்:- யமுனைத் துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும்,  மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடி மாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு “ யமுனைத் துறைவன்” என்று  பெயர் சூட்டி அழைத்தனர். யமுனைத் துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம்  பெற்று, ஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார். பின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார். ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:- இப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன். ஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே?’ என்று கேட்டனர்  அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர். கோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’  என்று சொல்லி  ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார். இவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா! இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்”  என்று அழைக்கப்படுகிறது.. இன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் ,  அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர்  என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர். இவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்க வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா?” என்று கேட்டார். அவர்களும் “ஆம்! கண்டோம்! கண்டோம்! அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், முகம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்ட மங்கலம்” என்ற ஊர். இவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கை கொண்ட சோழ புரத்தை நோக்கிச் சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காண வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா? என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் ! என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை  தான் காணவில்லை என்ற ஏக்கத்தில்  இருந்தார். கடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற  ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்து விடு” என்று கூறியவாறு எம்பெருமான்  திருவடிகளை அடைந்தார். ஸ்ரீராமனை தேடி போனவருக்கு  அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராம மிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது. ஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப் பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் திருக்கோயிலில் வணங்கிவிட்டு வரும் போது ”நாதமுனிகள் திருவரசு செல்லும் பாதை” என்ற ஒரு புதிய அறிவிப்புப் பலகையைப் பார்க்கலாம் மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம் 200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’. ஸ்ரீமந் நாதமுனிகளின் “திருவரசு ”அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் வட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊருக்கு கிழக்கே 1கி.மீ தூரத்திலுள்ள சம்போடை என்ற ஊரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னார்குடி, சிதம்பரம் மார்க்கத்தில் 12 கி.மீ தூரத்திலுள்ளது சம்போடை கிராமம். கும்பகோணம் சென்னை மார்க்கத்தில் சுமார் 30கி.மீ தூரத்துலுள்ள ஜெயங்கொண்டம் கூட்டுரோடு என்ற பிரிவிலிருந்து மேற்கே ஒரு கி.மீ சம்போடை கிராமம். நாதமுனிகளுடைய வாழி திருநாமம்: ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே ——— வைதிக மதங்கள் -வேதத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளுபவை வைணவம் சைவம் சாத்தமம் காணா பத்த்யம் ஸுரவம் கௌமாரம் வைதிக மாதமாய் இருந்தும் வேதத்தை மறைக்குமாக ஏற்றுக் கொள்ளுபவை நியாயம் வைசேஷிகம் சாங்க்யம் யோகம் மீமாம்ஸை வேதாந்தம் அவைதிக தத்வம் சாருவாகம் உலோகாயதம் புத்த ஜைன மதங்கள் ————– ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் மங்கள ஸ்லோகம் யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக ஸதா -எப்போதும் – ஸ்வத -இயல்பாகவே தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம் ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத் உவமானம் நான்காவதாக நையாயிகர் லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம் மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன் அபின்ன நிமித்த காரணம் நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள் வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா கட்டைப் போல் -நையாயிகன் தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார் நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார் ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை – கண்டிக்க ஸ்லோகங்கள் ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம் அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே   குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார் இரண்டாவது இல்லையே அஞ்ஞானம் அநிர் வசனீயம் ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும் கயிறு பாம்பு போல் ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால் ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும் ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும் இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே ப்ரஹ்மம் அனுபவம் அறிவு அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம் ஞானம் அஞ்ஞான விரோதி அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம் நாத முனி ஆதி முனி ஓதும் முனி கீதா முனி தாத முனி தூத முனி ரெங்க நாத முனி பாத முனி முனி போத முனி பேத முனி அபேத முனி மோத முனி வேத முனி ——————————————————— ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Posted in Acharyarkall, ஸப்த காதை, ஸ்தவம், Sri Vaishna Concepts | Leave a Comment »

ஸ்ரீ வகுள மாலை–ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம்–

February 24, 2023

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமங்கள்

சடகோபன்,
மாறன்,
காரிமாறன்,
பராங்குசன்,
வகுளாபரணன்,
குருகைப்பிரான்,
குருகூர் நம்பி,
திருவாய்மொழி பெருமாள்,
பெருநல் துறைவன்,
குமரி துறைவன்,
பவரோக பண்டிதன்,
முனி வேந்து,
பரப்ரம்ம யோகி,
நாவலன் பெருமாள்,
ஞான தேசிகன்,
ஞான பிரான்,
தொண்டர் பிரான்,
நாவீரர்,
திருநாவீறு உடையபிரான்,
உதய பாஸ்கரர்,
வகுள பூஷண பாஸ்கரர்,
ஞானத் தமிழுக்கு அரசு,
ஞானத் தமிழ் கடல்,
மெய் ஞானக் கவி,
தெய்வ ஞானக் கவி,
தெய்வ ஞான செம்மல்,
நாவலர் பெருமாள்,
பாவலர் தம்பிரான்,
வினவாது உணர்ந்த விரகர்,
குழந்தை முனி,
ஸ்ரீவைணவக் குலபதி,
பிரபன்ன ஜன கூடஸ்தர்,
மணிவல்லி,
பெரியன் –
இவையெல்லாம் நம்மாழ்வாரின் திருநாமங்களாக போற்றப்படுகிறது.

————–

ஸ்ரீ வகுள மாலை-may june -1937-

அகந்தை செத்த பின் அமலன் தோற்றுவான்
ஆடை இல்லாதவன் அரை மனிதன்
இந்திரையை மார்பில் வைத்தான் இருடீகேசன்
ஈசன் இடத்து உமையை அந்தி பகல் அமைத்தான்
உந்திக் கமலன் கமலையை நாவில் வைத்தான்
ஊமையராய் வாழ்தலை உத்தமன் உகவான்
எக்காலத்தும் எம்பெருமான் அடி சேர்
ஏய்ந்த புகழ் யுடையோன் எம் இராமானுசன்
ஐ ஐத் தத்துவம் நம் உயிர் என்க
ஒரு தனி முதல்வன் காண் எம் ஆதிப்பிரான்
ஓதல் ஓதுவித்தல் ஒப்பிலார் தொழில்கள்
ஒவ்வியம் அவித்தலே ஆக்கத்திற்கு அடியாம்

—————

ஸ்ரீ மாறன் அடி மெய்ம்மை

மாறன் அடி பணிந்து உயந்த உடையவர் ஒருவரே உத்தாரகர் -உலகு உய்ய ஒரே வழி

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவாமே

சந்திம் இச்சந்தி சாது -சாதுக்கள் ஸத்தின் மேல் அன்பு செய்பவர்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -பரமனின் திரு நாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி நிலமே சடகோப தத்வம்
பாதுகா ஸ்ரீ பெற்ற பரதாழ்வானை -பரனை ஒன்றினீரோ -பேறு பெற்றீரோ –என்று உஸாவினார் பரத்வாஜ முனிவர் –
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமாந் -என்று வால்மீகி பகவான் புகழ்கிறார்
இது அடியாகவே
நாம் ஆழ்வாரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-ஆத்யஸ்யன குல பதே-
குல தனம்
குல தைவதம்
எம்பெருமான் திருப்பாதத்தையும் ஸ்ரீ சடாரி என்கிறோம் –

சத்ருக்ந ஆழ்வானை -பாதுகா ப்ருத்ய அநு ப்ருத்யன் என்பர்

சூழ் விசும்பு திருவாய் மொழியில்
நிதி -பத பிரயோகம் ஸ்ரீ சடகோபன் -திருவடி நிலை என்றே பிள்ளானும் நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார்கள்
நிதி -நல்ல ஆதாரம் -நல்ல காப்பு -என்றவாறு
சாந்தியை சாதுவாக்குவாரே சாதுக்கள்
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
கவி முனி ரிஷி இவரே
ஏஷ விக்ரஹவான் தர்ம
ஏஷ புத்யாதி கோ லோகே
தபஸ் ச பராயணம்
விச்வா மித்ரர் -உலகுக்கு எல்லாம் அன்பார் அன்றோ -மந்திரம் கொள் மறை முனிவன்
காயத்ரியே விஸ்வ ஜநநீ
இவரையே ஏஷ வீர்ய வாதம் வர -என்கிறார் வால்மீகி

அந்த விச்வா மித்ர முனிவரிலும் தூயராய்
அவ்வன்பர் தமக்கும் நல் அன்பராய்
தமிழ் மறை பருப்பதமுமாய்
அப்பன் பொற் பாதுகமுமாய்
அப்பனும் அடியாரும் ஒன்றித் திகழும் ஓர் தனிச் சாந்தி நிலமாய்
திரு நாரணன் ஒருவனே தனக்கு மாறு என்னலாம்படி மதி நலம் அருளும்
தெள் அருள் மாரியாய் -தெள்ளிய மாறப் பிரானாய்

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

பக்தா நாராயண பராயணா
கலவ் தேவ பராங்குச

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

மறைச் சிரம் மருவும் ஆன்றோர் அன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறன் அமிழ்தின் இணை அடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழும் மூதுவர் உலகு வாழ
நிறை யரித்து திருவாய் ஓதும் நிதி எனும் நிலை விரித்தோம் –

—————

ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம்

காரணந்து த்யேய
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸூ -அடுத்து ப்ரஹ்ம லக்ஷண வாக்யம்
ப்ரஹ்மம் ஆனந்த மயம் -ப்ரஹ்மமே ஆனந்தம் -உயர்வற உயர் -நலம்
உடையவன் அவன் -ஸர்வ ஸ்வாமி -அஸ்மத் ஸ்வாமி
அருளினன்
அதிபதி
அடி தொழுது -அடிகள் தோறும் ஸ்வாமித்வம் சொல்லி
உ
ம்
அ
து
என்று நான்கு அடிகளிலும் தொடங்கி -உமது என்று தானும் அவனதே என்று காட்டி அருளி
முடிவிலும் முனியே நான்முகனிலும்
என் என்பது என் யான் என்பது என் என்று
ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களை -விலக்கி
என் முதல் தனி வித்தேயோ
முழு மூ வுலகாதிக்கு எல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை
முக்தி பெறும் தர்ணத்திலே அனுசந்தித்து
முனியே என்ற விளியால் காரணமே -மவ்நம் -சிந்தனை –தவம் செய்து
இனிப்போடே தொடங்கி
இனிதே பேசிப்பாடி
இனிப்போடே
இந்த திவ்ய ப்ரபந்தம்
இனிது முற்றிற்று
ஆனந்த வல்லி ப்ருகு வல்லி கூட்டிப் பொருள் அருளுகிறார்

————–

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

————

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்மவஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் போரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ்ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

வாதியர்-புற சமயிகள்
தேற்றம் -துணிபு
திரு எட்டு எழுத்தின் உரியார்–ப்ரதிபாத்யர் ஸ்ரீயப்பதி
உடு -நக்ஷத்ரம்
பேச்சு -உபதேசம் –

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

புத்தியம் -புத்தி
பத்தியம் -வேதம்

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக்குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக்கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக -சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாலை யாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப்பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிர பெற்றேன் ஆகில் பரமபதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த்தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

கை –கீழ் மகன்
அகம் -இடம்
மெய்யகம் -ஸத்யமான ஹ்ருதயம்
விரை -மணம்
பூ மகள் -ஸ்ரீ தேவி

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராமபிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –
இராமபிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மண ம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப்பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத்தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
0–பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

————————-

ஶ்ரீவைணவ ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம் நாளை(17/02/2023) மாசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசியுடன் கூடிய திருநாள்

ஸ்ரீராமாநுஜரின் புனரவதார புருஷரான ஸ்ரீ மணவாள மாமுனிகள் பரமபதம் எய்திய திருநாள் 16-2-1444
ருதிரோத்காரி ஆண்டு

இந்த நாளில் தான் பெரிய ஜீயரான மாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்
( இன்று 16-2-2023 ஆச்சாரியர் திருநட்சத்திரமான மூலம் என்னே பொருத்தம்)

மாமுனிகள் திருநாட்டுக்கு எழந்தருளிய பிரகாரத்தை ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

யதீந்த்ர ப்ரவண பிரபாவம் என்னும் ஸ்ரீமணவாள மாமுனிகள் திவ்ய சரிதத்தில் கீழே உள்ளவாறு அருளிச் செய்துள்ளார்

ஆதித்ய அஸ்தமன மானவாறே தம்முடைய கர்ம அனுஷ்டானங்களை செய்தருளி திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளே சரணம்
வாழி உலகாசிரியன்
என்று அனுஸந்தித்துக் கொண்டு
பிள்ளையை தியானித்து கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள ஸ்ரீபாதத்து முதலிகள் எல்லாரும் கைகூப்பிக் கொண்டு

ப்ரஹ்மவல்லி ப்ருகுவல்லி சூழ்விசும்பணி முகில்
அர்ச்சிராதி இராமானுஜ நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய் பெரிய ஆரவாரத்துடன் சொல்லுகிற அளவில்

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் (இரா.நூற்.108) பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுஸந்திக்க கேட்டு தாமும் கிருதாஞ்சலி புடராய் (தம் திருக்கைகளைக் கூப்பி) எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று அனுஸந்தித்துக் தத்கத சித்தராய் திருக்கண்களை செம்பளித்து கொண்டிருக்க

கநககிரிமேலே கரியமுகில்போல விநதை சிறுவன் மேற்கொண்டு’
(ஆர்த்.பிர.52)என்றும் எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல் வந்து முகங்காட்டி வழி நடத்த (59) என்றும் இவர் அபேக்ஷித்தபடியே பெரிய பெருமாளும்

செழும்பறவை தானேறி திரிவராய்த் தம் தாளிணையை (திரு.மொழி10-6-5) இவர் திருமுடி மேலே வைத்து
மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில் போன்ற (பெரிய.திரு.9-2-8)
தன் வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து அநுபவிக்க அநுபவித்து
உன் சரணம் தந்தென் சன்மங் களையாயே என்றும் ஸுகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய என்றும்

நோய்களால் என்னை நலுங்காமல் சதிராக உன் திருத்தாள் தா என்றும்

நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்கீகரிக்கப் பெற்று மாதவன் தன் துணையா நடந்தாள் என்றும்

அரங்கத்துறையுமின் துனைவனோடும் போய் என்றுஞ் சொல்லுகிறபடியே

ச்ரியபதியான பெரிய பெருமாள்

பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன் வழி நடத்த ஷுஷும்நையாகிற (நாடி)
வாசலிலே புறப்பட்டு சிர கபாலத்தைப் பேதித்து பரஹ்மரந்த்ரத்தாலே
ஜீயர் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்கிறார்

ஆச்சாரியன் திருநாடு எழுந்தருளிய நாளை தீர்த்த தினம் என்பர் (ஆசார்யரின் நினைவைப் போற்றிஅவரது ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்து கொள்வதால்)

திருவத்யயனம் தீர்த்த பரிபாலனம் (ஆசார்யர் நினைவைப் போற்றித் திருவாய் மொழி அத்யயனம் செய்வதால்-சேவிப்பதால்) என்று வைணவ சம்பிரதாயத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது

(சாதாரணமாக சிரார்த்தம் திதிவதிவசம் எனப்படுகிறது)

ஒருவருடைய திருஅத்யயனம்/தீர்த்தம் (திதி) அவருடைய நேரடி சந்ததி(குமாரர்) அல்லது நேரடி சீடரால் மட்டுமே அனுஷ்டிக்கப் படுகிறது

ஆழ்வார்கள் ராமாநுஜர் மற்றுள்ள ஆசார்யர்களுக்கு நேரடி சந்ததி/சீடர் இன்று இல்லாததால் அவர்களுக்கு திருவத்யயனம் அனுஷ்டிப்பதில்லை

மணவாளமாமுனிகள் சுமார் 580 ஆண்டுகளுக்கு முன்னரே பரமபதம் எய்தியிருந்தாலும் அவருடைய நேரடி சீடர் இன்றும் எழுந்தருளி இருக்கிறார் அவர் என்றென்றும் எக்காலத்திலும் இருப்பார்

அவர் தமது ஆசார்யருக்கு ஆண்டுதோறும் திருவத்யயனம் செய்கிறார்

ஆம் மணவாள ஜீயரின் (மாமுனிகளின்),மகத்தான அழகிய மணவாள சீடர்
அந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாளே

ஶ்ரீரங்கநாயகம் என்னும் பாலகன் வடிவில் வந்து மாமுனிகளை தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்

திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் ஈடு வியாக்யனத்தை
மணவாள மாமுனிகள் திருவாயால் செவியுற விரும்பிய அழகிய மணவாளர் (நம்பெருமாள்) ஒரு வருடம் தம்முடைய உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாமுனிகளிடம் சிரத்தையாக ஈடுவியாக்யானம் கேட்டார்

வியாக்யானம் முடியும் சாற்றுமுறை தினத்தில் நம்பெருமாளே ஒரு பாலகனாக உருவெடுத்து வந்து மாமுனிகளை ஆசார்யராக ஏற்று கொண்டதற்கு ஆசார்ய சம்பாவணையாக ஒரு தனியனைச் சுவடியில் எழுதிச் சமர்ப்பித்தார்

அந்தத் தனியனே நாம் அனைவரும் நாளும் அனுஸந்திக்கும்

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம்முநிம் என்னும் தனியன்

(ஸ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய்மொழிப் பிள்ளையின்
எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமான வரும்,வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும் யதிராஜரான ராமாநுஜர் மீது அளவுகடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்)

அதோடு மட்டுமல்ல ஒரு சீடர் ஆசார்யருக்குச் செய்ய
வேண்டிய சிஷ்ய லட்சணமான ஐந்து கடமைகளையும் செவ்வனே நடத்தினார் நம்பெருமாள்

1) தனியன் சமர்ப்பித்தல்

2) ஆசார்யர் கீர்த்தியை வையம் எங்கும் பரப்புதல்

எல்லா திவ்ய தேசங்களிலும்
பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன் முதலிலும் சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ஸ்ரீசைலேச தயாபாத்ரம் சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்

அதுபோக ஶ்ரீமடங்கள் ராமானுஜ கூடங்கள் ஆசார்யர்கள் பாகவதர்கள் திருமாளிகைகள் என நாளும் சேவிக்கபடுகிறது

3) ஒரு சீடர் தனக்கென்று எந்த உடமையும்/சொத்தும் இல்லையென்றும் எல்லாம் ஆசார்யருடையதே தாம் அனுபவிப்பது அவர் கிருபையால் தந்தருளியது என்னும் நிஷ்டையில் இருத்தல் அவசியம்

இதை நடைமுறை செய்யவே அரங்கன் தம் உடமைகளை யெல்லாம் ஆளும்/நிர்வகிக்கும் ஆதிசேஷனையே மாமுனிகளுக்குத் தந்து விட்டார்
அதனால் தான் மாமுனிகள் எங்கும் எப்போதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார்

ஆதிசேஷ அவதாரமான ராமாநுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுனிகளுக்குத் கொடுத்து அருளினார் நம்பெருமாள்

4) ஆசார்யருடைய திருநாமத்தை சீடர் தரித்தல்

நம்பெருமாளின் திருநாமம்- அழகிய மணவாளன் என்பதே அது மாமுனிகளின் இயற்பெயர் அவர் சந்யாசம் ஏற்ற போது
சடகோப ஜீயர் என்னும் நாமத்தை ஏற்க விரும்பினார் ஆனால் பெருமாள் நியமனத்தால் பழைய நாமத்தையே தொடர்ந்தார் (அப்படியிருந்தால் தானே ஆச்சார்யர் திருநாமமும் பெருமாள் திருநாமமும் ஒன்றாக இருக்க முடியும்)

5) ஆசார்யர் திருநட்சித்திரத்தையும்
தீர்த்தத்தையும் சிறப்பாக அனுஷ்டித்தல்

அரங்கர் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார்

இரண்டு நாட்களிலும் பெருமாள் பிரசாதங்கள் உடுத்துக்களைந்த மாலைகள் பரிவட்டங்கள் சந்தனம் முதலானவற்றை மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கிறார்

தீர்த்த நாளன்று (நாளை) அரங்கருக்குத் திருவாராதனம் செய்யும் அர்ச்சகரே மாமுனிகளுக்கும் ஆராதனம் செய்கிறார்

நம்பெருமாளுக்குக் காலை நைவேத்யம் இல்லை

மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே இவருக்கு நைவேத்யம்.(நம் போன்றே நம்பெருமாளும் காலை உபவாசம்)

அன்று பெருமாள் சுருளமுது (வெற்றிலை) கண்டருள்வதில்லை

ஆக நாளை ஶ்ரீமணவாள மாமுனிகளின் தீர்த்த நாளில் அவசியம் ஶ்ரீமடங்களுக்கு எழுந்தருளி தீர்தம் ஸ்வீகரியுங்கள்

அவசியம் அகத்தில் ஒரு இனிப்பு பட்சணம் செய்து ஆச்சாரியனுக்கு சமர்பித்து பகவானுக்கும் சமர்பித்து ஸ்வீகரியுங்கள்

கும்பம் பாஸ்வதி யாதி தத் ஸூ ததிநே பக்ஷே வள க்ஷேத்ரே
த்வாதஸ்யாம் ஸ்ரவணர் க்ஷபாஷி ருதி ரோத் கார்யாக்ய ஸம் வத்சரே
தீ பக்த்யாதி குண ஆர்ணவோ யதி வராதீ நா நிலாத்ம ஸ்த்திதி
ஸ்ரீ வைகுண்ட மகுண்ட வைபவ மகாத் காந்தோ பயந்தா முனி–மணவாளமாமுனிகளின சரம ஸ்லோகம்

ஞான பக்த்யாதி குணங்களுக்கு மஹா சமுத்திரம் போன்றவரும்
எம்பெருமானாருக்கு ஸ்வா தினமான ஸமஸ்த நிலைகளையும் யுடையவரான
மணவாள மா முனிகள்
ருதிரோத்காரி சம்வத்சரத்தில்
ஸூ ர்யன் கும்ப ராசியை அடைந்த அளவில் -மாசி மாதத்தில்
சனிக்கிழமை
கிருஷ்ண பக்ஷம்
திருவோணம் நக்ஷத்திரத்தில்
துவாதசி தினத்து அன்று
எல்லையற்ற பெருமை கொண்ட ஸ்ரீ வைகுண்டத்தை அலங்கரித்து அருளினார்
என்று அங்குத்தை அந்தரங்கள் அருளிச் செய்தார்கள்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Posted in திரு வாய் மொழி, ஸப்த காதை, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், ஸ்ரீ ராமானுஜர் | Leave a Comment »

ஸ்ரீ தேசிக‌ நூற்ற‌ந்தாதி–

February 24, 2023

ஸ்வாமி தேசிக‌னைப் போற்றி ஸ்ரீந‌யினாராசாரியாரின் சிஷ்ய‌ரான‌ க‌ந்தாடை ம‌ன்ன‌ப்ப‌ங்கார் எழுதிய‌ அற்புத‌மான‌ நூல் ஸ்ரீதேசிக‌ நூற்ற‌ந்தாதி. ஏனோ அவ்வ‌ள‌வாக‌ ப்ர‌ப‌ல‌மாகாத‌ இந்நூலை, ப‌ல‌ அரிய‌ நூல்க‌ளைத் தேடிப்பிடித்து கூடுமான‌ம‌ட்டிலும் விளக்கங்களுடன் வெளியிட்ட‌ அன்றைய திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் 1937ல் ச‌ங்க‌த்தின் இர‌ண்டாவ‌து வெளியீடாக‌ இந்த‌ தேசிக‌ நூற்ற‌ந்தாதியின் மூல‌த்தை ம‌ட்டும் ப‌திப்பித்து வெளியிட்டிருக்கிற‌து.

பின்னும் அந்த‌ நூலுக்குக் கிடைத்த‌ ஆத‌ர‌வினாலும், ஏற்க‌ன‌வே அச்சிட்ட‌ நூல் பிர‌திக‌ள் தீர்ந்து விட்ட‌தாலும், ச‌ங்க‌த்தின் 58வ‌து ப‌திப்பாக‌, பாட‌ல்க‌ளுக்குச் சிறு குறிப்புக‌ளுட‌ன் 1954ல் வெளியிடப் பட்டிருக்கிற‌து.

பின் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின் ஸ்ரீம‌த் ஆண்ட‌வ‌ன், ஸ்ரீம‌த் ப‌ர‌வாக்கோட்டை ஆண்ட‌வ‌ன் அனுக்ர‌ஹ‌ங்க‌ளுட‌ன் திருவேங்க‌ட‌த்தான் திரும‌ன்ற‌ம், பேராசிரிய‌ர் ந‌.சுப்பு ரெட்டியாரைப் ப‌திப்பாசிரிய‌ராக‌வும், இராசிபுர‌ம் திரு மு. இராம‌சாமியை உரையாசிரிய‌ராக‌வும் கொண்டு சுருக்க‌மான‌ உரையுடன் 2002ல் வெளியிட்டுள்ள‌து.

அத‌ன்பின் ம‌துரை ஸ்ரீதேசிக‌ன் ச‌ன்ன‌தி ச‌பையின‌ர் அத‌ன் மூல‌த்தை ம‌ட்டும் 2003ல் திருப்புல்லாணி ஸ்ரீதேசிகன் சந்நிதி சம்ப்ரோக்ஷணத்தின்போது ஸ்ரீமத் ஆண்டவன் திருக்கரங்களால் வெளியிட்ட‌ன‌ர்.

சமீபத்தில், ஸ்ரீபௌண்டரீகபுரம் ஆண்டவன் ஆச்ரமத்திலிருந்து பல தேசிக விஷயமான ஸ்தோத்ரங்களுடன் இந்த நூற்றந்தாதியையும் சேர்த்து விரிவான வ்யாக்யானத்துடன் வெளியிட்டிருக்கின்றனர்.

திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தார் அளித்துள்ள‌ குறிப்புக‌ள் வைண‌வ‌ நூல்க‌ளில் ஆழ‌ங்கால் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்குத் தேனாய் இனிக்கும். புதிய‌வ‌ர்க‌ளுக்கு அங்கு குறிப்பிட்டுள்ள‌ மேற்கோள்க‌ள் அந்நூல்க‌ளைத் தேடிப் ப‌டித்து இன்புற‌ வைக்கும்.

ஸ்ரீதேசிக நூற்றந்தாதி

தனியன்கள்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம். (1)

யஸ்சக்ரேநிகமாந்தார்ய ஸ்துதிம் காதாசதாத்மிகாம்
மன்னப்பங்காரபிக்யந்தம் ஆச்ரயே தேசிகப்ரியம். (2)

வெண்பாத் தனியன்

சீரொன்று தூப்புற் றிருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

சீர் ஒன்று – சிறப்புப் பொருந்திய; தூப்புல் – தூப்புல் குடியில் அவதரித்த; திருவேங்கடம் உடையான் – வேதாந்த தேசிகர்; பார் ஒன்ற – பூமியில் நிலைத்திருக்கும்படி; சொன்ன – செய்தருளிய; பழமொழியுள்—பழமையான வேத ஸாரமாகிய நூல்களுள்; ஓரொன்றுதானே – ஒவ்வொரு கிரந்தமே; தாரணியில் வாழ்வார்க்கு – இப்பூமியில் வாழும் மனிதர்களுக்கு; வான் – வைகுந்த்த்தை; ஏறப்போம் அளவும் – ஏறியடையும் வரைக்கும்; வாழ்வு – வாழ்வாக; அமையாதோ? – பொருந்தாதோ? (பொருந்தும் என்றபடி)

பழவினைக டாமகலப் பரவாதி சிங்கத்தின்
கழலிணையைத் தன்னெஞ்சிற் கழலாமே எந்நாளும்
தொழுதொழுமன் னப்பங்கார் தூயமலர்த் தாளிணையே
தொழுதெழுநீ நன்னெஞ்சே தொல்வினைகள் தொடராவே

பழவினை – ஊழ்வினை, “அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித், துக்கத் தொழுநோ யெழுபவே – யக்கா, லலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற, பழவினை வந்தடைந்தக்கால்” (நாலடியார், தீவினையச்சம் 3); பரவாதி – புறச்சமயி, “பறந்துபுக் குப்பர வாதிக டுன்னும் படுநரகுன்” (திருநூற்றந்தாதி 51); தொல்வினை – பழவினை, “தொல்வினை தொடர்ந்து தருசூழ் பிறவியென்னும் வல்வினை தொடர்ந்து”(பிரமோத்.பஞ்சா 38); தொடரா – பின்பற்றமாட்டா; தொழுதெழுநீ நன்னெஞ்சே – “அவன், துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே.” (திருவாய்மொழி 1-1-1); “எம்பெருமானுடைய ஆச்ரிதஜந ஸமஸ்த்து;காபநோதந ஸ்வபாவமான திருவடி மலர்களிலே ஸர்வதேச ஸர்வாவஸ்தோசித ஸர்வசேஷ வ்ருத்தியையும் பண்ணி உஜ்ஜீவியென்று தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்.” (ஆறாயிரப்படி); “இதுக்கு அவ்வருகே விக்ரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப்பட்டுக் கீழ்நின்ற நிலையைக் குலுக்கி ‘அவன்’ என்று அவ்வருகே போகிறார்; (துயரறு) – ‘துயரறுக்கும்’ என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும்படி; ஸமஸ்தது;காபநோதந ஸ்வபாவமான திருவடிகள்; ஸகலாத்மாக்களுடையவும் து:கத்தைப் போக்குகையே ஸ்வபாவமான திருவடிகள்; ‘துயரறு சுடரடி’ என்று எம்பெருமானார் அருளிச் செய்யும்படி:– “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம்பவதி து:கித:” என்றால் து:க நிவ்ருத்தியும் அவனதாயிருக்குமிறே; இவர் துயரறத்தான் துயர் தீர்ந்தானாயிருக்கை. இத்தால், இவர் மயர்வற அவன் துயரற்றபடி. (சுடரடி) – நிரவதிக தேஜோரூபமான திவ்யமங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது. (சுடர்) – பஞ்ச சக்திமயமான புகரைச் சொல்லுகிறது. (அடி) – சேஷபூதன் சேஷிபக்கல் கணிசிப்பது திருவடி களையிறே. ஸ்தநந்தய ப்ரஜை முலையிலே வாய் வைக்குமாபோலே, இவரும் ’உன் தேனே மலருந்திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறர். (தொழுது) – நித்யஸம்ஸாரியாய்ப் போந்த இழவெல்லாம் தீரும்படி ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயித்து, (எழு)- ’அஸந்நேவஸபவதி’ என்னும் நிலைகழிந்து, “ஸந்தமேநம்ததோவிது” என்கிறவர்கள் கோடியிலே எண்ணலாம்படியாக “உஜ்ஜீவிக்கப்பார். அடியிலே தொழாமையால் வந்த ஸங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது-உஜ்ஜிவியென்கிறார், (என்மனனே) – இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ’அருளினன்’ என்று நின்ற வித்தனையிறே முன்பு. இருவர் கூடப் பள்ளியோதி யிருந்தால், அவர்களிலே ஒருவனுக்கு உத்கர்ஷமுண்டானால், மற்றையவன் தனக்கு அவனோடே ஒரு ஸம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாபோல ‘மநஏவமநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ’ என்கிறபடியே நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடே தமக்கு ஒரு ஸம்பந்தத்தை ஆசைப்பட்டு ’என்மனனே’ என்கிருர். …….. ‘தொழுதெழு’ என்கையாலே – ப்ராப்திபலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று. ’என்மனனே’ என் கையாலே பரிசுத்தாந்த: கரணனே அதிகாரியென்னுமிடம் சொல்லிற்று.”-(ஈடு முப்பத்தாறாயிரப்படி) *நல்லைநெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்” -(அறிவுதரும் பெரிய திருமொழி 1-7-9), “சோதியநந்தன். கலியிற் றொழுதெழ நின்றனரே” (தேசிகமாலே, மெய்விரத நன்னிலத்து மேன்மை. 26), ‘நாதமுனிகழலே நாளுந் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே” (தேசிக மாலை, அதிகாரஸங்கிரஹம், 6).

எந்தைமன் னப்பங்கா ரென்றைக்குந் தன்னாமம்
சிந்தைதனில் வைத்திடவே செல்வஞ்சேர் – தந்தையொடு
தாயாகிக் காப்பரிந்தத் தாரணியி லுள்ளாரை
வாயார வாழ்த்து நலம். (3)

(3) எந்தை – எம்ஸ்வாமி; தந்தையொடு தாயாகிக் காப்பர்- “அன்னையாய் அதீதனாய் என்னை யாண்டிடும், தன்மையான்.” (கண்ணிநுண்சிறுத்தாம்பு.4), “மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும், மாலார்வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார், சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய்தந்தையும் அவரே இனி யாவாரே.” (திருவாய்மொழி 5-1-8); தாரணி-பூமி; வாயார வாழ்த்து – “எண்திசையும் அறிய இயம்புகேன், ஒண்தமிழ்ச் சடகோபனருளையே” (கண்ணிநுண் சிறுத் தாம்பு, 7.)

1. சென்னியில் சூடும் மலர்

வேதமுடித் தேசிகனே! வேதியர் குலத்து அரசே!
சாது சனங்களுக்குத் தாவளமே! – போது அமரும்
நின் அடியை என்றும் நினைத்திருப்பார் பாதம் என்தன்
சென்னிதனில் சூடும் மலர். (1)

பொழிப்புரை:- வேதங்களை உனது திருமுடியில் தரித்த அழகனே! அந்த வேதங்களை நாள் தோறும் ஓதிக் கொண்டிருக்கும் அந்தணர்கள் கூட்டத்துக்குத் தங்கும் இடமாக இருப்பவனே! தாமரை மலர் போன்ற உனது திருவடியை என்றும் எண்ணிக்கொண்டு இருக்கின்ற அடியார்களது திருவடியே எனது தலையில் (முடியில்) அணிந்துகொள்ளும் மலராகும்.

நூல்.

(1) எல்லா நூல்களும் மங்கலமொழி முதல் வகுத்துக் கூற வேண்டுவது மரபாதலால், ’வேதமுடி’ என்று தொடங்கினார்.. கம்பநாட்டாழ்வான் இயற்றியருளிய ’ஆழ்வார் நூற்றந்தாதி’ என்கிற ’சடகோபரந்தாதி’, ’வேதத்தின் முன்செல்க’ என்று : தொடங்கி யுள்ளது காண்க. வேதம் – ஆதிநூல். வித்தென்னும் பகுதியடியாகத் தோன்றிய பெயர் என்பர். வித் – ஞானம். இது: பரதகண்டத்து ஆஸ்திகர்களால் கொண்டாடப்பெறும் நூல். இது இருக்கு, எஜுஸ், சாமம், அதர்வணம் என்று நான்கு பிரிவை யுடையது. இது ஞானகாண்ட, கர்மகாண்ட வகையால் ஈச்வரனையும், அவனை உபாஸிக்கும் யஞ்ஞாதிகளையும் கூறும். இதற்கு இராவணன் சந்தமுதலிய வகுத்தான். இது சிக்ஷை, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், சோதிஷம், கல்பம் என ஆறு அங்கங்களை யுடையது. இதனைச் சோமுகன் என்னும் அசுரன் திருடிச்செல்லப் பின் விஷ்ணுமூர்த்தி அன்ன உருவமாய்ப் பிரமனுக்கு: உபதேசித்தனர். இதன் முடிவு உபநிஷத்துக்கள். மீமாம்சா சாஸ்திரிகள் வேதம் சிருட்டிக்கப்பட்டன அல்ல அநாதி என்பர்: நியாயவேதாந்தியர் ஈச்வரவாக்கியம் என்பர். கடவுள் வேதங்களைப் பிரமனுக்கு உபதேசிக்கப் பிரமன் அதனை இருடிகளுக்கும் அவ்விருடிகள் அதனைத் தம் சீடருக்கும் உபதேசித்தனர் என்பர். – (அபிதான சிந்தாமணி); தேசிகன் – அழகன் (தேசிகம். அழகு) ’வடிவழகார்ந்த வண்தூப்புல் வள்ளல்’-(பிள்ளை யந்தாதி. 20). குரு. “பற்றற்றவன் கொடுக்கும் பண்டமனைத்தினையும் பற்றுதலுந் தேசிகர்க்குப்பாங்கு’-(சைவ. ஆசா.88). ’பூருவா சாரியர்கள் போதமநுட் டாநங்கள், கூறுவார் வார்த்தை களைக் கொண்டுநீர் – தேறி, இருள்தருமா ஞாலத்தே யின்பமுற்று வாழும், தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து’-(உபதேச ரத்தினமாலை. 72) *அருள்பெற்ற, நாதமுனி முதலான நந்நேசிகரையல்லால், பேதை மனமேயுண்டோ பேசு” (உபதேசரத்தின மாலை. 36), “தேசிகர்பால் கேட்ட செழும் பொருளை” (௸. 57), ‘யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்’ -(திருக்குறள். துறவு. 6) “தோனல்லாத வுடம்பை யானென்றும், தன்னோடியைபில்லாத பொருளை எனதென்றுங்கருதி அவற்றின்கட் பற்றுச் செய்வதற். கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் வானோர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகத்தை யெய்தும். மயக்கம் அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதி மொழிகளானும் யோகப்பயிற்சியானும் அவை யானெனதன்மை தெளிந்து, அவற்றின்கட் பற்றை விடுதல்.”) தேசாந்தரி, வணிகன். (3, 4 பிங்கல 3678) தமிழில் தேசிகன்? என்னும் சொல்லுக்கு வணிகன் என்றும், ஆசான் என்றும் இரு பொருள்கள் உள. “தேசிகன் வணிகன் ஆசான்” – (சூடாமணி நிகண்டு) நம் தேசிகனை ஆசான் என்றமட்டில் உணர்வது போதாது. உலகமறிந்த வணிகர்களுக்கெல்லாம் இவன் உயர்ந்த, கொண்டு விலை செய்யும் வணிகன். விலையுள்ள பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவை கிடையாத வேறிடங்களில் கொண்டுபோய் உயர்ந்த விலைக்கு விற்று நல்ல லாபத்தை அடைபவன் வணிகன் என்று உலகம் அறியும். விலையில்லாத (அதாவது யாரும் விலைமதிக்கவும் கொடுக்கவும் முடியாத) பொருள்களை (சாஸ்திரததிவங்களையும் அர்த்தங்களையும்) யாரும் அறியாத (அதாவது வேதசாஸ்திரங்களில் மறைபொருளாகக் கிடந்த) இடங்களில் தேடி வாங்கி (மனத்தில்  கொண்டு) இவைகிடையாது தவிக்கும் இடங்களாகிய சம்ப்ரதாய நிஷ்டர்களுக்கு அவர்களுடைய பக்திச்ரத்தையாகிய விலைக்கு மட்டில் விற்று அவன் த்ரவ்ய லாபம் அடைவதைப்போல் அன்றிக்கே படிப்போரும், கேட்போரும் அனுஷ்டிப்போரும் ஆத்மலாபம் அடையச் செய்வதாக்கும் இவன் விசித்திர வாணிபம் இருந்தபடி. தேசிகன் என்னும் வடமொழிச் சொல்லுக்கு வழி காட்டுபவன் என்பது தாதுப் பொருள். கார்யாகாரியங்களையும் விதி நிஷேதங்களையும் தன்னை அடுத்தவனுக்கு எடுத்துக்கூறி அவனை நல்வழிப்படுத்தி இவ்வுலகிலுள்ள மட்டும் பாபதோஷங்கள் இல்லாத நல்வாழ்வும் பிறகு மோக்ஷபர்யந்தமான நற்கதியும் சித்திக்கும்படி வழிகாட்டுபவன் ஆசான் ஆதலின் அவனுக்குத் தேசிகன் என்பது பெயராயிற்று. பட்டப்பெயராகவோ காரணப் பெயராகவோ மற்றவர்கள் தேசிகன் என்ற சொல்லைத் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொண்டபோதிலும் இச்சொல் இடுகுறிப் பெயராக இவன் ஒருவனுக்கே தமிழ் மொழி வழங்கும் நாடுகளிலும் பிற நாடுகளிலும் அமைந்து கிடக்கும் திறம் ஒன்றே இவனைப் பரமாச்சாரியன் ஆக்கித் தருகிறது. “சீலங் கவர்ந்திடுந் தேசிகர்” என்பது ரஹஸ்ய ஸந்தேசப் பாசுரம் .-(அமிருதரஞ்சனி.15) இதற்கு “சீலங்கவர்ந்திடும்” என்கிற பாட்டாலே ஸதாசார்ய ப்ரஸாதமடியாக தனக்கு வருகிற பரமபுருஷார்த்த லாபத்தை அநுஸந்திக்கிறான். (சீலங்கவர்ந்திடுமென்றது) – ஆத்ம குணங்களையும் ஆசாரத்தையும் அங்கீகரிக்கு மவர்கள் என்றபடி, (தேசிகர் என்றது)- “ஆச்ரிதரை வழியல்லா வழிபோகாதபடி விலக்கி நல்வழி காட்டுகைக்கு நிலவர் என்ற படி..”- (ரஹஸ்ய ஸந்தேச விவரணம்) என்று நம் வேதாந்த குருவே வியாக்கியான மிட்டுள்ளார். ’மருளற்ற தேசிகர் வானுகப் பாலிந்த வையமெல்லா, மிருளற் றிறைவ னிணையடி பூண்டுய வெண்ணுதலாற், றெருளுற்ற செந்தொழிற் செல்வம் பெருகிச் சிறந்தவர்பா லருளுற்ற சிந்தையினுலழி யாவிளக் கேற்றினரே.’ – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 37) ’தெருளார் மறைமுடித் தேசிக னேயெங்க டுப்புற்றேவே.’ – (பிள்ளையந்தாதி 12) ’அருள்தரு மாரண தேசிகனே யெங்க டூப்புற்றேவே.’-(பிள்ளையந்தாதி. 18) வேதியர் — வேதமுணர்ந்தோர்; வேதியர் குலத்தரசே – ’நல்வேதியர்கள் தொழும் திருப்பா தனிராமாநுஜன்” – (இராமாநுச நூற்றந்தாதி. 105); சாதுசனங்களுக்கு – ஸ்ரீவைஷ்ணவர்கட்கு. ” வாதியர் மன்னுந்தருக்கச் செருக்கின் மறைகுலையச் சாது சனங்க ளடங்க நடுங்கத் தனித்தனியே, யாதி யெனாவகை யாரண தேசிகர் சாற்றினர்நம், போத மருந்திரு மாதுட னின்ற புராணணையே – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 13) “சாது சனம் வாழவென்று சாற்றியநற் ப்ரபந்தசாரம்?-(தேசிகமாலை. பிரபந்தசார சிறப்புத்தனியன், சாதுக்கள். * தம்பிறப்பாற் பயனென்னே சாதுசனங்களிடையே” – (திருவாய்மொழி 3-5-4), “சாதுசனத்தை நலியும்” – (திருவாய்மொழி 3-5-5); தாவளம்- இருப்பிடம் (தெலுங்கு), வசிக்குமிடம். ‘பூவள ருந்திரு மாது புணர்ந்தநம் புண்ணியஞர், தாவள மான தனித் திவஞ் சேர்ந்து தமருடனே’- (தேசிகமாலை. பரமபத சோபானம், 18) ; போது – பூ, மலரும் பருவத்தரும்பு, “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்.” -(திருக்குறள், காமத்துப்பால். பொழுது கண்டிரங்கல். 7); பாதம் – திருவடி, “ அவர் பாதம் வணங்கினற்கு,”; நின்னடியையென்று நினைந்திருப்பார் பாதம் – ‘ எந்தை பிரான் தன்னை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர், ஒதும் பிறப்பிடை தோறும் எம்மையாளுடையார்களே.’ — (திருவாய்மொழி 3-7-3), “எந்தைபிரான் தனக்கு அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார்தம், அடியாரடியோங்களே.” – (திருவாய்மொழி 3-7-9) ; சென்னி – தலை; மலர் – பூ. (2)

2. நமக்குப் பற்று

மலர்மகள்கோன் தாள் இணையை மன்னி இருப்பார்கள்
சிலர் அவரால் செய்கருமம் என்னாம்? – மலர் அறுசீர்
வேதாந்த தேசிகனை வேறு ஆகாது ஏத்துவார்
பாதாம்புயம் நமக்குப் பற்று. (2)

பொழிப்புரை:– தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளது கணவன் திருமாலின் திருவடியைப் பொருந்தி (நினைந்து) இருப்பவர்கள் சிலர் உண்டு. அவர்களால் செய்யக்கூடிய காரியம் என்ன இருக்கிறது? ஆனால், குற்றம் நீங்கிய சிறப்பை உடைய வேதாந்த தேசிகனை, தன்னோடு வேறு ஆகாமல், அந்த ஆசாரியரோடு ஒன்றி நின்று போற்றும் அடியார்களது திருவடித் தாமரையே, நமக்குப் பற்றுக்கோடு ஆகும். (தஞ்சமாக) அடைக்கலமாக ஆகும்.

மலர்மகள்கோன் – திருமாமகள் கேள்வன், திருமால்; மன்னி – பொருந்தி; கருமம் – கடமை ; மலம் – அழுக்கு, பற்று, ஆர்வம், செற்றம் முதலியவற்றிற்கும் மலமெனக் கூறுவர்; வேதாந்த தேசிகன் – “எழில் வேதாந்தாரியன்” – (தேசிக மாலை திருச்சின்ன மாலை சிறப்புத்தனியன்), “மின்னுறு நூலமர் வேங்கட நாதனந் தேசிகனே” – (தேசிகமாலை, பன்னிரு நாமம் சிறப்புத்தனியன்), “ சீர்கொண்ட தூப்புற் றிருவேங்க டாரியன்.”- (௸,௸), “ சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை -(தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம். சிறப்புத் தனியன்), * கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார்.” (௸,௸), “ சீராரும்‘வேதாந்த தேசிகர்கோன்,”- (தேசிக மாலை, ஆகார நியமம். சிறப்புத்தனியன்), “ ஞானியர்கள், சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே” ‘தூப்புல் வருநிகமாந்தாசிரியன்’-(வாழித்திருநாமம்), “வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம். ‘ -(தேசிக மாலை, அமிருதாசுவாதினி. 37), “சந்தமிகு தமிழ்மறையோன் றுாப்புற் றோன்றும் வேதாந்த குரு.”- (தேசிகமாலை. பிரபந்தசாரம், 18), “ தீதற்ற நற் குணப் பாற்கடற் றாமரைச் செம்மலர்மேன், மாதுற்ற மார்பன் மருவவின் கீதையின் வண்பொருளைக், கோதற்ற நான்மறை மெளலியி னாசிரி யன்குறித்தான், காதற் றுணிவுடை யார் கற்கும் வண்ணங் கருத்துடனே.” – தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம் 21), ’ மெய்விரத நன்னிலத்து மேன்மை யேத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே.”-(தேசிகமாலை. மெய்விரத நன்னிலத்து மேன்மை. 28), “பெருவேலியா மெம்பி ரான் பேசுபய வேதாந்த தேசிகன்”-(அழகர்பிள்ளைத் தமிழ். பழிச்சினர்ப்பரவல். 12), “செந்தமிழு மாரியமுந் தேர்ந்த பொதுத் தேசிகனே, யெந்தவிதச் சித்து மியற்ற வல்லாய்.”, “ தேசிக னிதயக் கோயிற் செழுமலர் மிசைவார்”, “செந் தமிழ்ப் புலவரேத்துந் தேசிகப் பெருமான்,” “ மருள்புகாநிலைத் தேசிகன்,” “சருவ சித்தியு மெய்தித் தேசிகன் றன்னையே நிகர், “ “ தேசிக னென்னுமாசான்,”” புவனி போற்று நந் தேசிகன் “-(ஸ்ரீலஸ்ரீ தண்டபாணிசுவாமிகள்) ; “வேறாகா தேத்துவார் – “,” தேவுமற்றறியேன், “ “வேறென்றும் நான் அறியேன்” என்ற நிலையிலுள்ளோர்; பாதாம்புயம் – திருவடித் தாமரை பற்று – அடைக்கலம் * “பற்றுக பற்றற்றான் பற்றினையப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு”-(திருக்குறள். துறவு, 10), “ கட்டப் பொருள்விரித்த காசினியி னான்மறையி, னிட்டப் பொருளியம்பு மின்பொருளைச் – சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கடிருப் பாதாம் புயமடியேன் பற்று. ’, ‘* கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார், பாதார விந்தமலர் பற்று “-(தேசிகமாலை, கீதார்த்தசங்கிரகம், சிறப்புத் தனியன்கள்); நமக்குப்பற்று- ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அனைவருக்குந் தஞ்சமாகும்.

3. என்பால் இருப்பார்.

பற்று ஒன்றும் இன்றிப் பராங்குசனை யேபற்றும்
சித்தம்உடை வேதாந்த தேசிகனை – குற்றம்இல்லா
அன்பால் அடைபவர்க்கு ஆளாகும் அன்பரே
என்பால் இருப்பர் இசைந்து. .3.

(பொழி) எந்தவிதமான உலகப் பற்றும் இல்லாமல், நம்மாழ்வாரையே தஞ்சமாகப் பற்றிக் கொள்கின்ற மனத்தை உடைய வேதாந்த தேசிகனை, குற்றம் இல்லாத அன்போடு அடைகின்ற பக்தர்களுக்கு அடியவர்களாகின்ற அன்பர்களே, என்னிடத்தில் விருப்பத்துடன் தங்கியிருப்பார்கள்.

(3) பற்று – ’ இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு, எல்லையில் அந்நலம், புல்குபற்றற்றே.” -(திருவாய்மொழி 1-2-4), “ அற்றது பற்றெனில், உற்றது வீடுஉயர், செற்றது மன்னுறில், அற்றிறைபற்றே.” –( ௸1-2-5), “புற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன், பற்றிலையாய் அவன் முற்றிலடங்கே.” (௸1-2-6); பராங்குசன் – பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களிற் கூறிய தத்துவார்த்தங்களாற் செருக்கடக்கி அவற்றிற்கு மாவெட்டியென்னுங் கருவிபோல இருக்கும் நம்மாழ்வார். “பாடுவ தெல்லாம் பராங்குசனை நெஞ்சத்தாற், றேடுவதெல் லாம்புளிக்கீழ்த் தேசிகனை-ஓடிப்போய்க், காண்ப தெலா நங்கையிரு கண்மணியை யான்விரும்பிப், பூண்பதெலா மாறனடிப் போது.”-(பெருந்தொகை. பொருளியல். 1823), ”தேன ருமகிழ்த் தொடையலு மவுலியுந் திருக்கிளர் குழைக் காதும், கான ருமலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயும், மோன மாகிய வடிவமு மார்பமு முத்திரைத் திருக்கையும், ஞான தேசிகன் சரணதா மரையுமென் னயனம்விட் டகலாவே.”. (௸1824); பராங்குசனையே பற்றும் – பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த, பாமன்னுமாறனடி பணிந் துய்ந்தவன் ”-(இராமாநுச நூற்றந்தாதி. 1) “மாமலர்மன் னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாட் டூமலர் சூடியதொல் லருண் மாறன் றுணயடிக்கீழ், வாழ்வை யுகக்கும்.”-(பிள்ளை யந்தாதி. 1); அன்பாலடைபவர் – ”அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம், அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு, அன்பனாய்.”- (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 11); ஆளாகும் அன்பர் – ” என் நம்பிக்கு ஆள், புக்ககாதல் அடிமைப் பய னன்றே ” – (கண்ணிநுண்சிறுத்தாம்பு, 9), ” நகர்நம்பிக்கு ஆள், உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.” – (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 3) ; என்பால் – என்னிடத்து; இசைந்து – உடன்பட்டு.

4. மன்னினர்

இசைந்தேன் மனம்இவரை ஏத்த எப்போதும்
கசிந்துகரை யும்உளம்என் செய்கேன் – பசுந்துளவ
மாலையான் தன்னிலும் மன்னினரே வண்டுஅறையும்
சோலைசூழ் தூப்புல் இறை. .4.

(பொழி) பசுமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை விட, வண்டுகள் ஒலிக்கும்படியான மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்துள்ள தூப்புல் என்ற திருத்தலத்தில் அவதாரம் செய்த தலைவராகிய தேசிகர், எனது உள்ளத்தில் நிலையாகத் தங்கிக் கொண்டார். அதனால், எனது மனம், எல்லாக் காலத்தும் இந்தத் தேசிகரையே போற்றுகிறது. அதனையே நான் விரும்பினேன். எனது உள்ளமும் அவரிடத்திலேயே ஈடுபட்டு உருகிக் கொண்டிருக்கும். நான் என்ன செய்வேன்?

இசைந்தேன் – ஒப்பினேன்; மனமிவரையேத்த – “பற்றிப் பொருந்தாதான் மார்பிடந்து பூம்பாடகத்துள், இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு.” – (இயற்பா. இரண்டாம் திருவந்தாதி. 94.) ஏத்த – புகழ: கசிந்து – ஈடுபட்டு; என் செய்கேன் – என்ன செய்வேன்; பசுந்துளவமாலையான் – பசுமையாகிய துளசி மாலையைத் தரித்த எம்பெருமான்: தன்னிலும் – “அன்பர்க்கே யவதரிக்கு மாய னிற்க வருமறைக டமிழ் செய்தான் றாளே கொண்டு, துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழிக டுணிவார் கட்கே.”– (தேசிக மாலை. அதிகார சங்கிரகம், 21); அறையும் – சப்திக்கும், முறையிடும்; தூப்புல் இறை – தூப்புற் கோமான், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம், ஐயனி ராமாநுசன் என்றழைக்கும் அருவினையேன், கையும் தொழும் கண் கருதிடும் காணக்கடல் புடைசூழ், வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே.”- (இராமாநுச நூற்றந்தாதி. 102).

5. ஆழ்துயர் அறுக்கும்

இறையும் எமக்காய், இருள் அகற்றும் தேசாய்,
கறையில்குணம் கொள்கடவுளோனாய் – மறை அனைத்தும்
வாழ்வித்த வாதியர் சீயம்இவ் வையகத்தில்
ஆழ்துயர்எல் லாம்அறுக்கும் ஆய்ந்து
              (5)

(பொழி) எங்களுக்குத் தலைவனாகவும், அறியாமையாகிற இருட்டைப் போக்கக் கூடிய ஞான ஒளியாகவும், குற்றம் இல்லாத குணங்களைக்கொண்ட கடவுளாகவும், வேதங்கள் எல்லாவற்றையும் உலகத்தில் வாழவைத்தவராகவும், வாதம் செய்பவர்களுக்குச் சிங்கமாகத் தோன்றுபவராகவும் உள்ள வேதாந்த தேசிகர், இந்த உலகத்தில், ஆழமாக மண்டிக் கிடக்கின்ற துன்பங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்து, அவைகள் இனி வளராதபடி, அவற்றை அடியோடு அறுத்துவிடுவார். (போக்கி விடுவார்.)

(5) இறை – ஆள்பவன், நாயகன், ஈசுவரன், அரசன் ; அகற்றும் – போக்கும் ; தேசு – ஒளி, பிரகாசம் ; கறையில் – அழுக்கற்ற, குற்றமற்ற, குணங்கொள் கடவுள் – “குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும், இன்று முதலாக என் நெஞ்சே!-என்றும், புறனுரையே யாயினும் பொன்னுழிக் கையான், திறனுரையே சிந்தித் திரு.”-(இயற்பா. முதல் திருவந்தாதி. 41); மறையனைத்தும் வாழ்வித்த – பகவதாராதந ரூபமான கர்மங்களை முக்கியமாய் வெளியிடுவதால் கர்ம காண்டம் எனப் பெயர் கொண்ட பூர்வ மீமாம்ஸையும், அக் கர்மங்களால் ஆராதிக்கப் பெறும் பகவானை முக்கியமாய்ப் பேசுவதால் ப்ரஹ்ம காண்டம் எனப் பெயர்பெற்ற உத்தர மீமாம்ஸையும் ஒரே-சாஸ்திரம் ஆகும் என்பது போதாயனர், ஆளவந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் முதலிய முன்னேர்களால் ஸ்தாபிக்கப்பட்டதை நன்கு நிலைநிறுத்தி வேதமனைத்தும் வாழச் செய்தவர். ‘கனை கடல்போ லொருநீராஞ் சூத்தி ரத்தைக் கவந்தனையு மிராகுவையும் போலக் கண்டு நினைவுடனே நிலைத்தரும மிகந்து நிற்கு நீசர்நிலை நிலைநாடா வண்ண மெண்ணி, வினைபரவு சைமினியார் வேத நூலை வேதாந்த நூலுடனே விரகாற் கோத்த, முனையுடைய முழுமதிநம் முனிவர் சொன்ன மொழிவழியே வழியென்று முயன்றிட்டோமே..?-(தேசிகமாலை. பரமத பங்கம். 35.); சீயம் சிங்கம். “வலிமிக்கசீயம்.”-(இராமாநுச நூற்றந்தாதி. 88); வையகத்தில் – நிலவுலகத்தில் ; ஆய்ந்து – ஆராய்ந்து.

6. விரும்புவார்

ஆய்ந்தபுகழ் மங்கையர்கோ னம்புயத் தாளிணையிற்
சாய்ந்த மனத்தராய்த் தம்மடியார்க் – கீய்ந்த
பெருங்குணத்த ரெம்மைப் பெருகு மருளால்
விரும்புவர்வே தாந்த குரு. (6)

(பொழி.) வேதாந்த தேசிக ஆசார்யர், ஆராயத்தக்க பெரும்புகழை உடைய திருமகள் கேள்வனான திருமாலினது தாமரை மலர் போன்ற திருவடிகளில் ஈடுபட்ட மனத்தவராகி, தமது அடியவர்களுக்கு ஞான உபதேசம் கொடுக்கும் சான்றோராக விளங்குகின்றார். அவர், தமது நிறைவான திருவருளினால், எங்களை விரும்புபவராக அமர்ந்துள்ளார்.

(6) மங்கையர் கோன் – திருமா மகள் கணவன், திருவுக்குந் திருவாகிய செல்வன்; அம்புயத்தாளிணை – திருவடித் தாமரை; சாய்ந்த – ஈடுபட்ட; பெருங் குணத்தர் – சான்றோர் ; விரும்புவர் – ஆசைப்படுவர்; வேதாந்த குரு – “ சந்த மிகு தமிழ்மறையோன் றூப்புற் றோன்றும், வேதாந்த குரு.” -(தேசிகமாலை. பிரபந்தசாரம், 18)

7. குணத்தனையே கூறு.

குருமா மணியே குலவுவரை மார்பன்
திருமா மகள்கணவன் றன்னைத் — தருவானாய்
நின்றீலு மென்வாக்கே நீள்சோலைத் தூப்புல்வரும்
குன்றாக் குணத்தனையே கூறு. .7.

(பொழி.) எனது நாக்கே! ஒளிமயமான சிறந்த கௌத்துவமணி விளங்கும் மலை போன்ற திருமார்பை உடையவனும், திருமாமகளாகிய இலக்குமிப் பிராட்டியின் கணவனுமாகிய திருமால், நமக்கு முன்னால் நின்று, தன்னையே தருவதாக இருந்தாலும், நீண்ட சோலைகள் சூழ்ந்த தூப்புல் நகரில் அவதாரம் செய்து, குறையாத பெருங்குணத்தினராக தேசிகரது பெருமையைப் பேசுவாய்.

(7) குருமாமணி – சிறந்த விலக்ஷணமான மாணிக்கம் ; “தோளாத மாமணி.”-(தேசிகமா8ல. பரமபத சோபானம். 21.); குலவு – விளங்குகின்ற ; வரை – மலை ; மார்பன் – “திருவுடன் வந்த செழுமணி போற்றிரு மாலிதய மருவிடம்.” -(தேசிகமாலை. அதிகார சங்கிரகம், 8) , திருமா மகள் கணவன் – “ தேனார் கமலத் திருமக ணாதன்.”- (தேசிகமாலை அதிகார சங்கிரகம். 26.), “பூவள ருந்திரு மாது புணர்ந்த நம் புண்ணியனார்.”-(தேசிகமாலை. பரமபத சோபானம்.18) * தரும வரும் பயனாய, திருமகளார் தனிக்கேள்வன், பெருமை யுடைய பிரானார், இருமைவினை கடிவாரே.”- (திருவாய் மொழி. 1-6-9); தூப்புல் வரும் குன்றாக்குணத்தன் – “ குணக்குலமோங்கு மிராமானுசன்குணங் கூறுந்தூப்பு லணுக்கன்.”- (பிள்ளை யந்தாதி.9) ; குன்ரறா – குறைவில்லாத பூரணமான. “கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன், மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத், தொய்யில் கிடக்கிலும் சோதி விண்சேரிலும் இவ்வருள்நீ செய்யில் தரிப்பன் இராமாநுச! என்செழுங் கொண்டலே.” -(இராமாநுச நூற்றந்தாதி. 104)

8. உறுப்பினர்களின் உயர்வு

கூறாது நாவேறு கொண்டுபிற வற்றைநெஞ்சந்
தேறாது சென்னி வணங்காது – சேறாரும்
நீள்வயல்சூழ் தூப்புனகர் நின்மலனார் தேசுடைய
தோளல் லதுதொழா தோள். .8.

(பொழி.) எனது நாக்கு, தேசிகரின் புகழை அன்றி, பிறருடைய புகழை வேறு சிறப்புக்குரியதாகக் கொண்டு, பேசாது. எனது மனம், பிற பொருள் எதையும், உய்வுக்குரியதாகத் தெளியாது. எனது தலை, தேசிகரையன்றி வேறு யாரையும் வணங்காது. எனது கைகள் சேறு நிறைந்த பெரிய வயல்கள்சூழ் தூப்புல் நகரில் அவதரித்த குற்றமற்ற, ஒளி பொருந்திய தேசிகரது திருவடியை அல்லாமல் வேறு ஒருவர் பாதத்தைத் தொழாதவையாகும்.

(8) “ வாய் அவனையல்லது வாழ்த்தாது கைஉலகம், தாயவனை யல்லது தாம்தொழா – பேய்முலைநஞ்சு, ஊணாக வுண்டான் உருவொடு பேரல்லால், காணாகண் கேளா செவி” – (முதல் திருவந்தாதி. 11); தேறாது – தெளியாது, நிச்சயிக்காது; சென்னி வணங்காது – “சென்னி வணங்கச் சிறுபனி சோரவெங் கண்ணிணைகள், வெந்நரகங்களும் வீய வியன்கதி யின்பமேவத், துன்னு புகழுடைத் தூப்புற் றுரந்தன் றுாமலர்த்தாண், மன்னிய நாள்களு மாகுங்கொன் மாநிலத் தீர்நமக்கே.” – (பிள்ளை யந்தாதி. 2) ; சேறு ஆரும் – சேறுநிறைந்த நின்மலன் – “இப்படி ஸெளலப்ய ஸெளசீல்யங்கள் உண்டானாலும், ஆச்ரித தோஷத்தைக் காணுமாகில் அணுகக் கூசார்களோ என்னில் (நின்மலன்) * அவிஜ்ஞாதா” என்றும், “ என்னடியார் அது செய்யார்” என்றும் சொல்லுகிறபடியே ஆச்ரிதருடைய தோஷ தர்சநமாகிற சரண்ய தோஷமில்லாதவன். ஸர்வஜ்ஞனா யிருக்கச் செய்தே ஆச்ரித தோஷத்தைக் காணான் என்றது, காணுமதுவும் இவர்களுடைய தோஷத்தைக் கழிக்கைக் குறுப்பாம் என்றபடி. “விமலன் என்று தொடங்கி இவ்வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில் உபாயத்வப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும் உபயவிபூதி நிர்வாஹத்வமும் சொல்லிற்றாயிற்று.” -(முநிவாஹந போகம்); தோளல்லது தொழாதோள் – “தோள் அவனையல்லால் தொழா.”-(முதல் திருவந்தாதி. 63); தேசுடைய தோள் – “தேசுடைய சக்கரத்தான் சங்கினன் சார்ங்கத்தான்.”-(மூன்றாந் திருவந்தாதி. 21); கூறாது ……… வணங்காது – “ புவனமெங்கும், ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என், வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்றொன்றையே.” (இராமாநுச நூற்றந்தாதி. 56.)

9. அருள் செய்வார்.

தோளா யிரமுந் துணித்தன்று வாணன்றன்
மாளாத செல்வத்தை மாற்றினான் – தாளென்றும்
தான்வணங்கி யான்வணங்கத் தன்னை யளித்தருளும்
வானருளான் தூப்புல் வளல். .9.

(பொழி.) தூப்புல் நகரில் அவதரித்த வள்ளலாகிய தேசிகர், தன்னை நான் வணங்குவதற்காக, வாணனது ஆயிரம் தோள்களையும் வெட்டி வீழ்த்தி, அவனது அழியாத செல்வத்தையும் இல்லாதபடி செய்தவனாகிய திருமாலினது திருவடிகளை, எல்லாக் காலத்தும் தாம் வணங்கி, அவரது சிறந்த திருவருளால், என்னிடத்தில் அன்பு காட்டி அருள் பாலிப்பார்.

(9) வாணன். மாற்றினான் – “ மூவுலகும் பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை”(இராமாநுச நூற்றந்தாதி. 22) ‘ விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்.”(திருவாய்மொழி. 2-4-2); மாளாத அழியாத ; மாற்றினான் – அழித்தான், கண்டித்தான், விலக்கினன்; வானருளான் – சிறந்த கிருபா மூர்த்தி, அளவிடவரிய பெருகு மருளான்; தூப்புல் வளல் – ‘வண்தூப்புல் வள்ளல் ’ (பிள்ளையந்தாதி. 20)

10. உதித்தான்

வள்ளல் மணிவண்ணன் மாயன் பவக்கடலில்
அள்ள லழுந்துமெமை யாதரித்துக் – கள்ளமனம்
தீர்த்துத்தன் சேவடியைச் சிந்திக்கச் செய்வதற்கே
பார்த்துதித்தான் றூப்புற் பரன். (10)

(பொழி.) பிறவியாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கும் எங்களை, ஆசைப்பட்டு, வள்ளலாகவும், மாணிக்கம் போன்ற கருநிறத்தனாகவும் ஆச்சரியமான செயல்களுக் குரியவனாகவும் உள்ள திருமால், எங்களுடைய திருட்டுத்தனமான எண்ணத்தை நீக்கி, தனது சிவந்த திருவடியைச் சிந்திக்கச் செய்வதற்காகவே, ஆராய்ந்து பார்த்து, வேதாந்த தேசிகராகத் தூப்புல் என்ற நகரில் அவதாரம் செய்தான்.

(10) வள்ளல் – வரையாது கொடுப்போர், கொடையாளர் ; மணிவண்ணன் எம்பெருமான் ; நீல ரத்நம் போன்ற வடிவையுடையவன்.” (‘மணிவண்ணா”) – அபரிச் சேத்யனா யிருக்கச் செய்தேயும் முன்தானையிலே முடிந்து ஆளலாம்படி யிருக்கை. கீழ்ச்சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழலிடுகை. இந் நீர்மையின்றிக்கே காதுகனானாலும் விட வொண்ணாத வடிவழகு, பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவென்னவுமாம். “ மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்னக்கடவதிறே -(திருப்பாவை. 26. மூவாயிரப்படி); மாயன் – ‘மாயனை’ (திருப்பாவை. 5.) பவம் – சம்ஸாரம்; அள்ளல் – குழைசேறு, நெருக்கம் ; கள்ளமனம் – “கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்” (பெரிய திரு மொழி. 7-9-1) ; சேவடி – சிவந்தபாதம். * சேவடி செவ்வி திருக்காப்பு.” (திருப்பல்லாண்டு. 1) உதித்தான் – அவதரித்தான்; பரன் – உயர்ந்தவர்களுக்குள்ளும் உயர்ந்தவன். “ தூப்புல் மாபூருடன்” (பிள்ளையந்தாதி. 8); “ தூப் புற்றேவே “ (௸ 12), “ தூப்புன்மாலே.” ( ௸ 13.); கள்ள மனம் தீர்த்து – “ விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரைமலராள், வளக்காதல் கொண்டுறை மார்பன் றிறத்து முனதடியார், துளக்காத லில்லவர் தங்க டிறத்திலுந் தூய்மை யெண்ணிக், களக்காதல் செய்யுநிலைகடியாய்தூப்புற் காவலனே.” -(பிள்ளையந்தாதி. 16.)

1. உரைத்தான்

பரனா ரணனவன்பா தத்திற்காட் செய்கை
உரமிவ் வுயிர்கட்கென் றோரார் — சிரமத்தைத்
தீர்க்க வேதாந்த தேசிகனாய் வந்துதித்து
மார்க்கமிது வென்றுரைத்தான் மால். (11)

(பொழி.) இந்த உலகத்தில் உயிர்களுக்கு, எது வல்லமை தருவது என்று ஆராய்ந்து பார்க்காத மக்களது துன்பத்தைப் போக்குவதற்காகவே, திருமால், வேதாந்த தேசிகனாக வந்து இம்மண்ணுலகத்தில் அவதாரம் செய்து, அந்தத் திருமால், மேலோனாகிய நாராயணனது திருவடிகளுக்கு அடிமைப் பணி செய்வதே, அந்த இறைவனை அடைவதற்குரிய வழி, இதுவே சிறந்த மார்க்கம் என்று உரைத்தான்.

(11) பரன் நாரணன் – உயர்வற வுயர்நலமுடையவன், அயர்வறு மமரர்கட்கதிபதி ; நாரணன் – விட்டுணு, “கள்ளகந்தளித்த மலர்த்தலைச் சேக்குங் கடவுணாரனன் முதலானோர்” (தனிகை. நந்தி. 3), நாராயணன்-(நீரையிடமாக வுடையவ னென்றபடி, நாராயண: நாரம் – நீர், அயந – இடம்) “ நாரா யணன்பர னாமவ னுக்கு நிலையடியோஞ், சோரா தனைத்து மவனுடம் பென்னுஞ் சுருதிகளாற் சீரார் பெருந்தகைத் தேசிக ரெம்மைத் திருத்துதலாற், றீரா மயலகற் றுந்திறம் பாத்தெளி வுற்றனமே” (தேசிகமாலை. அமிருதரஞ்சனி.17); அவன் பாதத்திற்கு ஆட்செய்கை உரம் – கைங்கரியமே புருஷார்த்தம். பரதத்வம் ஸ்ரீமந் நாராயணன். அநந்யார்ஹசேஷத்வமே ஸ்வரூபம். குணநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யமே புருஷார்த்தம். அஹங்கார மமகாரங்கள் தத்விரோதி. தந் நிவ்ருத்திக்கும் கைங்கர்ய ஸித்திக்கும் ஸர்வஸுலபனான ஸர்வேச்வரன் திருவடிகளே உபாயம். ஜிதேந்த்ரியத்வம் தொடக்கமாகக் கைங்கர்ய பர்யந்தமாக உபாயபலம். ஸகலவேத தாத்பர்யம் இவையே; உரம் – பலம்; ஒர்தல் – ஆராய்தல், நிச்சயித்தல், அறிதல், தெளிதல்; ஒரார் – ஆராய்ந்து அறியார் ; சிரமம் – கஷ்டம் ; தீர்க்க நீக்க. ‘ இடுக்கண் டீர்த்தசேவடி “ (சேதுபு. சேதுச. 1) மார்க்கம் – வழி, சமயம்; மால் – திருமால், * திருமலைமால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன்” (வாழித் திருநாமம்) வந்துதித்து மார்க்கமிது வென்றுரைத் தான் ” சீராரும் வேதாந்த தேசி கர்கோன் செழுமறையினுட் பொருளைச் சிந்தை செய்தே, யாராய்ந்து வாழ்வுறவிப் புவியோர் தங்கட் கன்புடனே யாகார நியதி சொன்னான்” (தேசிகமாலை. ஆகார நியமம். சிறப்புத்தனியன்); மால்-ஆச்ரித விஷ யத்தில் வ்யாமோஹத்தை யுடையவன். “மணிவரை யூர்ந்த மங்குன் ஞாயிற், றணிவனப் பமைந்த பூந்துகில் புனைமுடி இறுவரை யிழிதரும் பொன்மணி யருவியின், நிறனொடு மாறுந் தார்ப் புள்ளுப்பொறி புனைகொடி தண்ணளி கொண்ட வணங் குடை நேமிமால்.” (பரிபாடல். 13:1-6, “ நீலவரைக்கட் பரந்த இளஞாயிற்றினது அழகுபோலும் அழகமைந்த பீதாம்பரத்தையும், நீலவரையை ஊர்ந்த இளஞாயிற்றினது அழகு போலும் அழகமைந்த புனைமுடியையும், அவ்வரையினின்றிழியும் பொன்மணிகளையுடைய அருவியின் நிறத்தொடு மாறுகொள்ளும் தாரினையும், புள் எழுதிய புனைகொடியையு முடையையாய் விண்ணின்கண் நின்று அளித்தற்றொழிலைக் கொண்டமாலே !)

12. நாரணனும் ஒவ்வான்

மாலா யடியவர்பான் மாநிலத்தில் வந்துதித்த
நால்வேத மெய்ப்பொருளா நாரணனும் – சால
அருள்செய்த வேதாந்த வாரியரோ டொவ்வான்
இருளனைத்து மீங்ககற்றி யே. (12)

(பொழி.) அடியவர்களிடத்தில் அன்பு கொண்டவனாய், பெரிய இந்த மண்ணுலகத்தில் வந்து தோன்றிய, நான்கு வேதங்களுக்குரிய உண்மையான பொருளாக விளங்குகின்ற நாராயணனும் அறியாமையாகிய இருட்டை இவ்வுலகத்தில் போக்கி, மிகுதியான திருவருளைச் செய்த வேதாந்த ஆசாரியரோடு ஒத்திருக்க மாட்டான்.

(12) அடியவர் – பரன் திருவடிக் கடவாதே வழிபடுவார். “ பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும், கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழி வந்து ஆட்செய்யும், தொண்டர்.” (திருவாய்மொழி 9-2-1), “குடிக்கிடந்தாக்கஞ் செய்து நின்தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன்பொன் அடிக்கடவாதே வழிவருகின்ற அடியர்” (௸ 9-2-2), தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டர்.” ( ௸ 9-2-3), “நம்முடையடியர் “ ( ௸ 9-27), “ தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனைத் திருமாது வாழ், வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்திமால்கொள் சிந்தை யராய், ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் “ -(பெருமாள் திருமொழி 2-1), “ தோடுலா மலர்மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர்வாளியால், நீடுமாமரம் செற்றதும் நிரைமேய்த்ததும் இவையே நினைந்து, ஆடிப்பாடி அரங்கவோ ! என்றழைக்கும் தொண்டர்” (௸ 2-2), “ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்முன் இராமனாய், மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி வண் பொன்னிப்பேராறுபோல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் சேறுசெய் தொண்டர்.” (௸ 2-3), “தோய்த்ததண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்றாய்ச்சி கண்டு, ஆர்த்த தோளுடை எம்பிரான் என்னரங்கனுக்கு அடியார்களாய், நாத்தழும்பெழ நாரணா வென்றழைத்து மெய்தழும்பத் தொழுது, ஏத்தி இன்புறும் தொண்டர்’ (௸ 2-4), ‘ஆதியந்த மனந்த மற்புதமான வானவர் தம்பிரான் பாதமா மலர்கூடும் பத்தியிலாத பாவிகள் உய்ந்திட தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கனெம் மானுக்கே, காதல் செய்தொண்டர்” ( ௸ 2-6), “மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டுகிண்டு நறுந்துழாய், மாலையுற்ற வரைப் பெருந் திரு மார்வனை மலர்க்கண்ணனை, மாலையுற்றெழுந் தாடிப் பாடித் திரிந்து அரங்கனெம்மானுக்கே, மாலையுற்றிடும் தொண்டர்” ( ௸ 2-8), “ மொய்த்துக்கண் பனிசோர மொய்கள் சிலிர்ப்ப ஏங்கி யிளைத்து நின்று, எய்த்துக் கும்பிடு நட்டமிட்டெழுந்து ஆடிப்பாடி யிறைஞ்சி என், அத்தனச்சனரங்கனுக்கு அடியார்கள்” ( ௸ 29), அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன் மெய்யடியார்கள்” (௸ 2-10), ‘அடியார்” என்கிற இத்தாலே த்ரீதீயாக்ஷரத்திலே சொன்ன ஜீவவர்க்கமும், ஜீவர்களுக்கு ஈசுவரனைக் காட்டில் வேறுபாடும், அந்யோந்யம் பிரிவும் காட்டப்படுகிறது. “அடியார்? என்ருல் ஸர்வ ஸாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களையெல்லாம் காட்டிற்றேயாகிலும், இங்கு அடியார்” என்கிறது “யோஹ்யேநம் புருஷம் வேத தேவோ அபிநதம் விது:” என்னும்படி அபரிச்சேத்ய மாஹாத்ம்யரான சேஷத்வஜ்ஞாந ரஸிகரை. ”(ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த முநிவாஹந போகம்), “அருடரு மடியர்பான் மெய்யை வைத்துத், தெருடர நின்ற தெய்வநாயக“- (தேசிக மாலை. மும்மணிக்கோவை, 1), ‘திருமா லடியவர்க்கு மெய் யனார்”.- (௸. ௸, 2), நின்றனக்குநிகர் நின்னடி யடைவார்.” -( ௸. ௸.10); நால்வேத மெய்ப்பொருளா நாரணன்* ஸர்வே வேதா யத்பதமாமநந்தி “ (எல்லா வேதங்களும் எந்தப் பதத்தைப் பேசுகின்றனவோ), “ வேதைச்ச ஸர்வைரஹமேவ வேத்ய” (எல்லா வேதங்களாலும் நானே அறியப்படுபவன்), நாராயண பரா வேதா” (வேதங்களெல்லாம் நாராயணனைப் பேசுபவை), ‘உளன், சுடர்மிகு சுருதியுள்” (திருவாய்மொழி 1-1-7), “மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே.” (திருவாய்மொழி 3-1-10), ஒதுவாரோத் தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை” ( ௸ 3-1-6), வீடாக்கும் பெற்றியறியாது மெய் வருத்திக், கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர்! – வீடாக்கும் மெய்ப்பொருள் தான் வேதமுதற் பொருள்தான் விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாரா யணன்.” (இயற்பா நான்முகன் திருவந்தாதி. 13), “இனியறிந்தேன் ஈசர்க்கும் நான்முகற்குந் தெய்வம், இனியறிந்தேன் எம்பெருமான் ! உன்னை – இனியறிந்தேன், காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை, நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.” ( ௸. ௸. 96); சால – மிகவும் ; இருளனைத்தும் ஈங்கு அகற்றியே- “ பேரிருள் சீப்பன “ -(சடகோபரந்தாதி, 2), ‘ஆதித்யராமதிவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, சோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகஸியாதபோதிற் கமலம் மலர்ந்தது வகுளபூஷண பாஸ்க ரோதயத்திலே” (ஆசார்யஹ்ருதயம்), ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் உலகத்தை நல்வழிப் படுத்துதலிற் பயன்பட்ட விதம் போதாதென்று அதன்பின் எம்பெருமான் பிரபஞ்சத்தவரைப் பிறவிப் பெருங் கடலினின்று கரையேற்றிக் கைப்பற்றுதற்கு ஆழ்வாராசார்யர்களை அவதரிப்பிப்பான் என்பது ஐதிகியம் ; நாரணனும் சால, அருள் செய்த வேதாந்த வாரியரோ டொவ்வான்- “அன்பர்க்கே யவதரிக்கு மாயனிற்க வருமறைக டமிழ்செய்தான் றாளே கொண்டு, துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழிகடுணிவார் கட்கே” (தேசிக மாலை. அதிகார சங்கிரகம், 2 ஸ்ரீமதுரகவிகள் ஆழ்வார் திருவடிவாரத்திற்கு வரும்போது கண்ணன் இப்பூமியிலேதான் எழுந்தருளி யிருந்தான்; இதையறிந்தும் மதுரகவிகள் அவனைப் புறக்கணித்து, ஆழ்வாரையே சிறந்த கதியாகப் பற்றினதால் ஆயன் நிற்க, என்னப்பட்டது.) “நின்னிற் சிறந்த நின்றாளிணை யவை”-(பரிபாடல் 4-62. வீடளிக்குங்கால் நின்னினுஞ் சிறந்த நின்தாளிணையை யுடையை) “ஐந்தறிவார், இருளொன் றிலா வகை யெம்மனந் தேற வியம்பினரே,” (தேசிகமாலை அதிகாரச் சுருக்கு 11), ’மறைநூல் தந்த ஆதியர் அருளால் தேற இயம்பினர்’ (௸. ௸ 12), “துணை ஆம்பரனை வரிக்கும் வகை அன்பர் அறிவித்தனர்” ( ௸. ௸ 18). ஒவ்வான் “ என்பதை நன்கு ஆராய்ந்து தெளிக.

13. வைம்மின்

அகற்றி வினையனைத்து மந்தமிறஞ் சீராற்
சகத்திற் சதிராக வெம்மை – உகப்புடனே
உய்விக்கும் வேதாந்த தேசிகரா முத்தமரை
வைம்மின் மனந்தன்னில் வைகல்.

(பொழி) வேதாந்த தேசிகர்தான், மக்களது தீவினைகளை நீக்கி அவர்களைப் பக்தர்களாக வாழச் செய்பவர். அவரே, தமது சிறப்பான ஞானத்தினால் பக்தர்களை, சாமர்த்தியம் உள்ளவராக வாழவைத்து மகிழ்பவர். அதுவே, மக்கள் உய்யும் வழி. இப்படி உய்வகை காட்டும் உத்தமராகிய சுவாமி தேசிகனை, என்றும் மறவாது மனத்துள் வைத்துக் கொள்வது மக்களது கடமையாகும்.

(13) வினை – பாபம். ‘ வினைகா ளுமக்கினி வேறோ ரிடந் தேட வேண்டும்” -(பிள்ளையந்தாதி, 7), “மங்கிய வல்வினை நோய்காள்” -(பெரியாழ்வார் திருமொழி 5-2-4) “இருவினை பற்றறவோடும்” -(இராமாநுசநூற்றந்தாதி 43); சகத்தில் – உலகத்தில்; சதிர் – பெருமை, சிறப்பாக; சதிராக – நேர்த்தியாக ; வ்யாவ்ருத்தமாக, “எந்தை எதிராசனின்னருளுக் கென்று மிலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர் தாம்’-(உபதேச ரத்தினமாலை. 73); உய்விக்கும் உஜ்ஜீவிப்பிக்கும் அகற்றி உய்விக்கும்- “மயக்கும் இருவினை வல்லியில்பூண்டு மதிமயங்கித், துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயரகற்றி, உயக்கொண்டு நல்கும் இராமாநுச!”-(இராமாநுசநூற்றந்தாதி. 101); உத்தமர் – அனைவரினும் மேம்பட்டவர், ‘ எங்கள் தூப்புல், மெய்த்தவன் உத்தமன்” -(பிள்ளையந்தாதி, 6.) “ உத்தமன் – இத்தை, இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினானாகவன்றிக்கே தன் பேறாக நினைத்திருக்கிறபடி ; பிறரை ஹிம்ஸித்துத் தன் வயிற்றை வளர்க்க வேணுமென்று இருக்கு மவன் – அதமன் ; ’பிறரும் ஜீவிக்கவேணும், நாமும் ஜீவிக்க வேணும்’ என்று இருக்குமவன் – மத்யமன் தன்னையழிய மாறியாகினும் பிறர் ஜீவிக்கவேணுமென்று இருக்குமவன் – உத்தமன். ‘ பக்தாநாம் “ (** நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம், ததாபிபுருஷாகாரோ பக்தாநாம்த்வம் ப்ரகாசசே.” தேவரீருடைய திவ்யாத்மஸ்வ ரூபமானது தேவரீருக்கு அன்று. தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹமும் தேவரீருக்கு அன்று. தேவரீருடைய திருவாழி முதலான ஆயுதங்களும் தேவரீருக்கு அன்று. ஆச்ரித விரோதி நிரஸநத்துக்காகவே. தேவரீருக்கு ஸ்தானமான பரமபதமும் தேவரீருக்கன்று. ஆனபோதிலும் அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையவராய்க் கொண்டு தேவரீர் ஆச்ரிதர்களுக்காகவே ப்ரகாசிக்கிறீர்.-(ஜிதந்தா ஸ்தோத்ரம், 5) ”அப்யஹம் ஜிவிதம் ஜஹ்யாம்” (“ அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் தீவாம் வாஸிதேஸலக்ஷ்மணாம், நதுப்ரதிஜ்ஞாம் ஸம்ச்ருதிய ப்ராஹ்மணேப்யோ விசேஷத” -(ஸ்ரீமத்ராமாயணம். ஆரண்யகாண்டம். 10-17. பிராட்டியைப் பார்தீதுச் சக்ரவர்த்தித் திருமகன் வார்த்தை.- ஸீதையே! நான் எல்லாவற்றாலும் ரக்ஷிக்கத்தக்க ப்ராணனையாகிலும் எனக்கு சரீரபூதஞன இலக்குவனை யாகிலும், என் ஆத்மாவில் பாதியான உன்னையாகிலும் விடுவேன். பிரதிஜ்ஞையை ஒருவன் பொருட்டுச் செய்து பின்பு அதை நழுவவிடமாட்டேன். ப்ரஹ்மஜ்ஞாநிகள் விஷயத்திற் செய்யப் பட்ட ப்ரதிஜ்ஞையையோ விசேஷமாகக் கை விடவேமாட்டேன்) என்றிருக்கை,” (திருப்பாவை, 3, மூவாயிரப்படி); வைம்மின் -வையுங்கள்; வைகல் – தினந்தோறும் * வைகலும் வெண்ணெய், கைகலந்து உண்டான், பொய்கலவாது என் மெய் கலந்தானே” (திருவாய்மொழி 1-8-5). “மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே” (௸ 5-10-11). “வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு” (திருவாய் மொழி நூற்றந்தாதி. 51). “வைகலும் வைகல்வரக் கண்டு மஃதுணரார், வைகலும் வைகலை வைகுமென்-றின்புறுவர், வைகலும் வைகற்றம் வாழ்நாண் மேல்வைகுதல், வைகலை வைத்துணரா தார்.”-(நாலடியார். அறன்வலியுறுத்தல், 9).

14. ஈது ஒப்பது இல்லை.

வைகல் கவிவாதி சிங்க மறையவரைக்
கைகலந்து நாமங் கருதினால் – செய்கருமம்
ஈதொப்ப தில்லையிங் கிப்படியே யங்கமெனச்
சாதுசனங் காட்டுஞ் சதிர். (14)

(பொழி) கவியால் வாதிட்டு வழக்கிடுபவர்களுக்குச் சிங்கமாகத் தோன்றுகின்ற வேதாந்த தேசிகரை, நாள்தோறும், கைகூப்பி வணங்கி அவரது திருநாமத்தை (வாயால் சொல்லி) மனத்தில் கருதிக் கொண்டிருந்தால் (அதுவே) செய்யக்கூடிய நல்ல காரியமாகும். இந்த நற்செயலை ஒத்து விளங்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இம் மண்ணுலகில் இதுவே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு (பாகவதர் களுக்கு) அழகு என்று காட்டக்கூடிய சாதுரியமாகும்.

(14) மறையவர் – வேதமுணர்ந்த பிராமணர், வேதாந்தி; கலந்து – சேர்ந்து. “திருக்கலந்து சேரும் மார்ப!” , தேவதேவ தேவனே! இருக்கலந்த வேதநீ ஆகிநின்ற நின்மலா , கருக் கலந்த காளமேக மேனியாய்! நின்பெயர், உருக்கலந்தொழி விலாது உரைக்குமாறு உரைசெயே.” (திருச்சந்தவிருத்தம் 103); நாமங் கருதினால் – “துஞ்சும்போது அழைமின் துயர் வரில்நினைமின் துயரிலீர்சொல்லிலும் நன்றாம், நஞ்சுதான். கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணா வென்னும்நாமம்.” -(பெரிய திருமொழி 1-1-10); சாதுசனம்-சாதுக்கள்; சதிர்க்ருதக்ருத்யம், பெருமை “கேசவன்தமர் கீழ்மேலெம ரேழேழு பிறப்பும், மாசதிரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!” -(திருவாய்மொழி 7-1-1). “தமர்கள் கூட்ட நல்வினையை நாசஞ்செய்யுஞ் சதிர்மூர்த்தி தமர்கள்தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே”- (திருவாய்மொழி 8-10-9); கை கலந்து – “இப்படி “த்வதங்க்ரி முத்திச்ய” என்கிற ச்லோகத்திலே முமுக்ஷுவான அதிகாரியினுடைய அநந்ய தேவதாகத்வமும், அநந்ய ப்ரயோஜநத்வமும், இவன் ஸர்வஸ்வாமி திருவடிகளை உத்தேசித்துப் பண்ணுகிற அஞ்ஜலிக்குக் காலநியமமும், இத்தால் உபலக்ஷிதமான தேசநியமமும், வர்ணாச்ரமாதிகார நியமமும் ப்ரகாரநியமமும், ஆவ்ருத்திநியமமும் என்றவிவை இல்லாத படியையும், இதினுடைய ஆசுகாரித்வமும், அசேஷ தோஷநிவர்த்தகத்வமும், அசேஷ கல்யாண காரணத்வமும், அநுபந்திரக்ஷகத்வமும், அக்ஷய பலப்ரதாநத்வமும், பலரூபஸ ஜாதீய பரிணதிமத்த்வமும் என்கிற ப்ரபாவங்களையும், இது அநந்யப்ரயோஜ நனானப்ரபத்தி நிஷ்டனுக்கும் ப்ரயோஜநாந்தர பரனுக்கும் நிற்கிற நிலைகளையும் அநுஸந்தித்தால், கைகளைக் கட்டின அஞ்சலி ஒருவருக்கும் கைவிட வொண்ணாதபடி நிற்கும்.*-(அஞ்சலிவைபவம்). ‘கண்ணன் கழறொழக் கூப்பிய கையின் பெருமைதனை, யெண்ணங் கடக்க வெமுனைத் துறைவ ரியம்புதலாற், றிண்ண மிதுவென்று தேறித் தெளிந்தபின் சின்மதியோர், பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே.” (தேசிகமாலை. அமிருதாசுவாதினி. 24. கைகளைக் கூப்புவது அஞ்சலி, ஈதோர் அடையாளம். இது கண்டு பகவானுக்கு உண்டாகும் மகிழ்ச்சி உரைக்கும் தரமன்று. எம்பெருமானிடம் பரந்யாஸம் செய்தவன் தன்னைக் காத்துக்கொள்ள வேறொரு காரியமும் செய்யாதவாறு நிற்கும் நிலையையும் காட்டுவது இவ்வடையாளம்) “ஐச்வர்யமக்ஷரகதிம் பரமம் பதம்வா கஸ்மைதஞ்சலிபரம் வஹதேவிதீர்ய, அஸ்மை நகிஞ்சிது சிதம் க்ருதமித்யதாம்ப த்வம் லஜ்ஜஸே கதய கோயமுதாரபாவ:” –(ஸ்ரீகுணரத்நகோசம். 58. ‘ஹே அம்மா! கைகூப்புதல் என்கிற அஞ்சலியைச் செய்தவனுக்கு ஜாத்யாதி வைஷம்யமன்றியில் இஹலோக ஐச்வர்யம், கைவல்யம், பரமபதம் இவைகளெல்லா வற்றையும் நீர் கொடுத்தாலும் “இவ்வளவு சுமைசுமந்தவனுக்கு இதுதானா நாம் கொடுக்கிறது. சரியானகூலி நாம் கொடுக்க வில்லையே?” என்று வெட்கப்படுகிறீர். இவ்வளவு ஒளதார்யம் எங்கிருந்து உம்மால் அப்யஸிக்கப்பட்டதோ நீர்தான் சொல்ல வேணும்.”) “ஹஸ்தீச துக்க விஷதிக்த பலாநுபந்தி ந்யாப்ரஹ்மகீட மபராஹத ஸம்ப்ரயோகே, துஷ்கர்மஸஞ்சய வசாத்துரதி க்ருமேந: ப்ரத்யஸ்த்ர மஞ்சலிரஸெள தவநிக்ரஹாஸ்த்ரே.” -(ஸ்ரீவரதராஜபஞ்சாசத், 30. “அத்தீச துக்கமாமால மார்ந்த பலமுற்ற தாகி யமர, எத்தாலுந் தாக்க வியலாததாகி யிறையாதி கீடம் வரையே, வித்தார மாமெம் வினையால் விலக்க வொண்ணாத தாகி யிலகு, மத்தாவு னிக்ர கத்தம் மெதிர்க்கு மம்பெங்க ளிவ்வஞ் சலியே”- ஏ! ஹஸ்தீச! துக்கம் என்கிற விஷத்தால் பூசப்பட்ட (ஸம்ஸார) பலத்துடன் (பலம் — பாணத்தின்முனை) சம்பந்தப் பட்டிருக்கிறதும், பிரமன் முதல் புழுவரையிலும் ஒருவராலும் எவ் விதமும் தடுக்க முடியாததாய் தன் கார்யத்தை முடித்துக் கொள்வதில் ஸாமர்த்யமுடையதும், விஸ்தாரமாக பாவங்களைச் செய்திருக்கும் அடியோங்களால் விலக்க முடியாததுமான உன் நிக்ர ஹாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரம் அடியோங்களுடைய இந்த அஞ்சலியே.-தவிர வேறே யொன்றுமில்லை.”)

15. மயங்குவதே

சதிருடையோம் யாமென்றுந் தம்மையெண்ணி யிங்கே
எதிரெமக்கி யாரென்று மெண்ணி – மதியில்லா
மானிடர்க ளந்தோ மயங்குவதே வாதிசிங்கந்
தானிருக்க விங்கே சதிர்த்து.

(பொழி) அறிவில்லாத மக்களே! வாதிடுபவர்களுக்கெல்லாம் சிங்கமாகத் தோன்றும் வேதாந்த தேசிகர் இங்கு அவதாரம் செய்திருக்க, நீங்கள், ‘நாம் அழகு உடையோம்’ என்று உங்களை எண்ணிக்கொண்டும், ‘எமக்கு எதிராக எண்ணிக் கொண்டும்’ உங்கள் உடல் வலிமையில் மயங்குகின்றீர்களே! என்னே அறியாமை! (நீங்கள் பரிதாபத்துக்கு உரியவர்களே!)

(15) சதிர் – சாதுரியம், “ சார்வது சதிரே” (திருவாய் மொழி 2-10-1 ’திருமலையைக் கிட்டுமிதுவே இவ்வாத்மாவுக்குச் சதிர் ; அல்லாதவையெல்லாம் இளிம்பு. “கண்ணுக் கிலக்கான விஷயங்களை விட்டு வேறே சிலவற்றைப் பெறுகைக்கு யத்நியா நின்றிகோளி” என்று நினைத்திருக்குமதுவே இளிம்பு “ இதுவே சதிர் “ – ஈடு), “சதிரிளமடவார்” (திருவாய்மொழி 2-10-2. “சதிரை யுடையராயிருப்பர்கள் – பிறரை யகப்படுத்திக் கொள்ளுகைக்கீடான விரகையுடையராயிருப்பர்கள், செத்துக் காட்டவுங்கூட வல்லராயிருக்கை. சதிரையும் பருவத்தினிளமை யையுங் காட்டியாயிற்று அகப்படுத்துவது. கீழே “கிளரொளி யிளமை” என்றதே, அப்பருவங்கண்டவிடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகளாயிற்று விஷயங்கள்,” ஈடு); மதி — புத்திதத்துவம், அறிவு. மதிநுட்பம் – இயற்கையாகிய, நுண்ணறிவு “மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம், யாவுள முன்னிற்பவை,” (திருக்குறள், அமைச்சு. 6. “இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூலறிவோடு உடைய அமைச்சர்க்கு மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்னிற்பன யாவையுள. மதி நுட்பமென்றது பின்மொழி நிலையல். அது தெய்வந்தர வேண்டுதலின் முற்கூறப்பட்டது.) மதியாவது மூவகைப்படும், அதமம் மத்யமம் உத்தமம் என்று. அவற்றில் அதமமதியாவது தேவதாந்தரங்களுக்கு சேஷமென்றிருக்கை, மத்யமமதியாவது எல்லாம் அவன் மூர்தீதியாகையால் எல்லாத் தெய்வங்களுக்கும் நாம் சேஷமென்றிருக்கை. உத்தமமதியாவது எம்பெருமானுக்கே சேஷமென்றிருக்கை, “துய்யமதி – பெற்ற மழிசைப்பிரான்” (உபதேசரத்தினமாலை.12. ‘என் மதிக்கு விண்ணெலாமுண்டோ விலை” (நான்முகன் திருவந்தாதி 51) என்று தாமும் ஆதரித்துப்பேசும்படியாயிறே யிருப்பது. மதிக்குத் தூய்மையாவது – தேவதாந்தரங்கள்பக்கல் பரத்வபுத்தியாகிற மாலிந்ய மற்றிருக்கை”); மானிடர் – மனிதப்பிறவியடைந்தோர்; அந்தோ – “யாவரணுகப் பெறுவார்? இனியந்தோ!” (திருமொழி 9-8-9), (“அந்தோ! அணுகப்பெறுநாள் என்று எப்போதும் சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பேன்.” (திருவாய்மொழி 9-8-10); மயங்குவதே – அறிவுகலங்குதலே; சதிர்த்து – “அன்பனாயடியேன் சதிர்த்தேனின்றே” – (கண்ணி நுண்சிறுத்தாம்பு, 5. “அபூர்ணமானபகவத் விஷயத்திலே அடியனுமவனாகாதே பூர்ணரான வாழ்வாருக்கு அடியேனாய் சதுரனானேனென்கிறார். ஸ்திரீகளை விச்வஸித்து இளிம்பனான நான் ஆழ்வாரைப்பற்றி இன்று சதுரனானேனென்றுமாம் – நஞ்ஜியர் வியாக்கியாநம்.” “சதிர்த்தேன் — ஈச்வரசேஷமான வாத்ம வஸ்துவை என்னதென்றிருக்கைக்கும் இதரவிஷயப்ரவணனாகைக்கும் மேற்பட சதிர்க்கேடில்லை யிறே. அவற்றைவிட்டு பகவச்சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வாரளவும் வருமவனாம்படியான சதிரையுடையவனானேன். ஆசார்யர்களை நம்பியென்கைக்கும், அவர்களழைத்தால் அடியேன் என்கைக்கும் ஹேது ச்ரீ மதுர கவிகள் வாஸநையாய்த்து. – நம்பிள்ளை ஈடு. “ “சதிர்த்தேன் – சதிரையுடையனானேன். ஈச்வரசேஷமான வாத்ம வஸ்துவை என்னதென்றிருக்கைக்கும் இதரவிஷய ப்ராவண்யத்துக்கும் மேற்பட சதிர்க்கேடில்லையிறே. அவற்றைவிட்டு பகவத் விஷயத்தளவிலே நில்லாதே ஆழ்வாரளவும் வரும்படியான சதிரையுடைய னானேன், – பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநம்,” “ சதிர்த்தேன் – சதிரனானேன், “மோக்ஷயிஷ்யாமி” என்றவன் முழங்கைத் தண்ணீர் பார்த்திராதே” (பகவற்கீதை 18.66) ஆழ்வாருடைய ப்ரபாவத்தை யிட்டு வென்றேன். (நம்பிக் கன்பனாய் சதிர்த்தேன்) – “மாற்பால் மனம் சுழிப்பமங்கையர் தோள்கைவிட்டு” (மூன்றந்திருவந்தாதி. 14) என்கிறபடியே ஆழ்வாருக்கன்பனாய் அந்ய விஷயங்களை வென்றேன், (நம்பிக்கன்பனாயடியேன்) – ஆத்மாத்மீயங்களிரண்டும் ஆழ்வாரதாய்த்து, அவர்தாம் “யானேநீ என்னுடைமையும் நீயே” (திருவாய் மொழி 2-9-9) என்று தத்விஷயத்திலே ஸமர்ப்பித்தாப்போலே, (மடவாரையும் நம்பினநான் சதிர்த்தேன்) அவர்கள் சதிரிளமடவாராகையாலே இளிம்புபட்டநான், ஆழ்வாரை யண்டைகொண்டு சதிரனாய்விட்டேன்.” – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் வ்யாக்யாநம்.)

16. மதித்தார்

சதிர்த்தா ரவர்காண்மின் றாரணியின் மீதில்
எதிர்த்தாரு மிப்பவ நீங்க – மதித்தார்
கவிவாதி சிங்கத்தைக் காதலுடன் கண்டு
புவியிடத்துப் புண்ணிய ரானார். (16)

(பொழி) இந்த மண்ணுலகத்தில் தம்மை எதிர்த்து வாதிடுபவரும், இந்தப் பிறவி நீங்குவதற்காக உபாயம் செய்தவர் அந்த வேதாந்த தேசிகர்தான். இதனை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். கவிகளால் வாதிடக்கூடிய எதிரிகளுக்குச் சிங்கமாகத் தோன்றும் அந்த தேசிகரை, அன்புடன் நோக்கி, அவரை மனதால் போற்றி மதித்தவர், இந்த உலகத்தில் புண்ணியம் செய்த நல்லவராக விளங்குவார்கள்.

(16) தாரணி – பூமி. “தசரதன் மதலையாய் வருதுந் தாரணி”. — (இராமாவதாரம், பாலகாண்டம், திருவவதாரப் படலம். 22); பவம் – ஸம்ஸாரம். ‘நிறுத்தார் பவத்தி னெடுநா ளுழன்றமை கண்டு — (தேசிகமாலை, பரமபதசோபாநம். 4. “ஆராய்ந்துபார்த்து நிறைந்த ஸம்ஸாரத்தில் வெகுகாலம் வருந்தியது கண்டு “), “ஊனேறு பவக்குழியை வெறுத்து, ” — -(தேசிகமாலை, பரமபதசோபாநம், சிறப்புத்தனியன், “சரீரத்தையே வ்ருத்திசெய்கிற ஸம்ஸாரமாகிய படுகுழியை வெறுத்துத்தள்ளி,”. காதல் – பக்தி, ஆசை; புவி – பூமி, “நிறையிரும்புவியை முன்போனிலைபெற நிறுவிற்றன்றே.” — (கூர்மபு, அந்தகா 6) ; புண்ணியர் – ஸ்ரீ தேசிகனை இடைவிடாது அநுபவிக்கும் பாக்கியசாலிகள், தருமவான்கள், “புண்ணியம் புரிந்தோர்”— (இராமா. பால. நகரப். 5), “புண்ணிய!”– (பால. பரசுராமப், 40.)

17. அமரரோ! மற்றவரோ!

ஆனா ரிவரார்தா மந்தமில் பேரின்ப
வானாட் டமரரோ மற்றவரோ – தேனாரும்
பங்கயத்தா ணாதன்போற் பாடும் புகழுடைய
எங்கவிஞர் சிங்கத்தின் பா.

(பொழி.) தேன் நிறைந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய நாதமுனிகளைப் போன்று, தமிழ் மறையைப் பாடக்கூடிய புகழைப் பெற்றிருக்கின்ற எமது கவிஞராகிய சிங்கத்திடத்தில் ஒன்றியவராக இருக்கும் இவர் யார்? முடிவு இல்லாத பேரின்பம் நிறைந்த வானுலகத்தில் உள்ள தேவரோ? மண்ணுலகத்தில் உள்ள மக்களோ?

(17) அந்தமில் பேரின்பவானாட்டு அமரர் – “ வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து, அந்தமில்பேரின்பத்து அடியர்” — (திருவாய்மொழி 10-9-11); அந்தமில் பேரின்பம் – முடிவில்லாத நிரதிசயவின்பம்; அமரர்– த்ரிபாத்விபூதி யோகத்தைப்பற்றச் சொல்லுகிறது. பரம ஸாம்யாபந்நராயிருக்கையாலே ஒலக்கமிருந்தாலாயிற்று, அவர்களுக்கும் அவனுக்கும் வாசியறியலாவது; பிராட்டிமாராலேயாதல், ஸ்ரீ கெளஸ்துபாதிகளாலே யாதல் சேஷியென்று அறியுமத்தனை — (திருவாய்மொழி 1-1-1) ஈடு.” தேன்ஆரும் – தேன்நிரம்பிய ; புகழ் – கீர்த்தி, “புகழும் நல் ஒருவன்” — (திருவாய்மொழி 3-4-1), “ நாள் தோறும் பாடிலும் நின்புகழே பாடுவன்”– (முதல் திருவந்தாதி,88), “ புகழொன்று மால் “-(திருவாய்மொழி நூற்றந்தாதி. 24); நாதன் – எப்பொருட்குமிறைவன். “சங்குசக்கரம் அங்கையில்கொண்டான், எங்கும் தானுய, நங்கள்நாதனே,” – – (திருவாய்மொழி 1-8-9, “நங்கள் நாதனே — நம்மையெழுதிக் கொள்ளுகையே ப்ரயோஜநமாக. – ஈடு). “நாதன் ஞாலங்கொள், பாதன் என்னம்மான், ஒதம்போல்கிளர், வேதநீரனே.”- – (திருவாய்மொழி 1-8-10); கவிஞர் சிங்கம் – “கச்சிநகர் வந்துதித்த பொய்கைப்பிரான் கவிஞர்போரேறு” –(முதல் திருவந்தாதி, தனியன் “கவிஞர் போரேறு என்கையாவது கவிச்ரேஷ்டர் என்றபடி, முதலாழ்வார்கள் மூவரில் முதலானவராகையாலே ‘ஆதிகவி’ என்னும்படியான அதிசயத்தையுடைய ராயிருப்பர். படைத்தான் கவியாலும், பரகாலகவியாலும் “செஞ்சொற்கவிகாள்” என்றும், ‘செந்தமிழ் பாடுவார்’ என்றும் கொண்டாடப்படுமவராய் நாட்டிற்கவிகளுக்கும் விலக்ஷணகவியாயிருப்பர். இது பொய்கையார் வாக்கிற் கண்டு கொள்க’ என்றிறே தமிழ் கூறுவது. அந்த வேற்றமெல்லாவற்றையும் பற்ற ’கவிஞர் போரேறு’ என்கிறது.”); பா – பாட்டு, தூய்மை ; கவிஞர் சிங்கத்தின்பா – “ நொண்டிச்சிந்து “ சிங்கம் வருகிறதைப் பார் கவிவாதி சிங்கம் வருகிறதைப்பார். (சிங்). வேதாந்தாசார்ய ரென்று வேதியர்கள் விருதூத, வேதவொலி முழங்க, வாதியர்கள் பயந்தோட, (சிங்). ஸர்வார்த்தஸித்தி என்னும் கவசமணிந்து கொண்டு, சததூஷணி என்னும் கர்ஜனைகள் செய்துகொண்டு, (சிங்). பரமதபங்கமென்னும் பற்களின் ஒளிவீச, பரவாதியர்கள் பல முகமாய்ப் பயந்தோட (சிங்). ந்யாயஸித்தாஞ்ஜனம் ந்யாய பரிசுத்தி என்னும், ஜ்ஞானக்கண்கள் ஒளிவீச மெளனமாய் வாதியர்கள் நிற்க, (சிங்), ஐந்துரக்ஷை என்னும் அங்கை உகிரைக் கண்டு, அஞ்சியே வாதியர்கள் பஞ்சுபோல் பறந்தோட (சிங்). திருவடிதொழுதேத்தும் நரஸிம்மதாஸன் தன்னை, அருள்மழை பொழிந்திட அன்புடனே நோக்கம்கொண்டு, (சிங்)”– (தமிழர் தொழுவேதாந்த வாசிரியன், திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 16), “பா வளருந்தமிழ்”– (தேசிக மாலை, பரமபதஸோபானம், 18)

18. இன்பம் பெறலாம்.

இன்பம் பெறலா மிமையோர்த நற்பதமும்
அம்புவியோ டாளலா மாங்கே – செம்பவள
வாயான் மலர்ப்பதத்தான் வண்மையுடை வேதாந்த
தேசிகனைச் சிந்திப்பார்க் கின்று. (18)

(18) இன்பம் பெறலாம் – “ நாவினால் நவிற்றின்ப மெய்தினேன்” -(கண்ணிநுண் சிறுத்தாம்பு. 2). “ அடியை யடைந்து உள்ளம்தேறி, ஈறிலின்பத்திருவெள்ளம் யான் மூழ்கினன்” – (திருவாய்மொழி 2-6-8) “ இன்பம் வளர” – (திருவாய்மொழி 2-7-9); இமையோர் – இமையவர் – கண்ணிமையாதவர், எப்பொழுதும் எம்பெருமானையே ஸேவித்துக் கொண்டிருப்பவர், அகநோக்காகிய ஞானக்கண் குவியாதவர், பரமபதத்தில் எம்பெருமானை ஸேவிப்பதற்குப் பிரதிபந்தக மொன்றுமில்லாமையாலே அங்கு அவனைக்கண்டு ஆநந்திப்பதையே பொழுதுபோக்காகவுடைய விண்ணுலகத்து அடியார்கள். இமை – ஒளி, “மாசுஅற இமைக்கும் உறவினர்”- (திருமுருகாற்றுப்படை 128, எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கற விளங்கும் வடிவினையுடையவர் – நச்சினார்க்கினியருரை), தேவருடைய மேனிகள் எப்போதும் மழுங்காமல் மிக்க ஒளியைப் – பிரகாசத்தை உடைத்தாய் இருக்கும். “இருளிரியச்சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி” – (பெருமாள் திருமொழி 1-1), “விடுசுடர் இமைக்கும் பூணான்”- (சீவகசிந்தாமணி 213) “கதிர்பரந்து இமைக்கும் மேனியன்” (சீவகசிந்தாமணி 950), “மணிபரந்து இமைக்கும் மேனியன்” – (சீவகசிந்தாமணி 2266), “இமை” என்னும் உரிச்சொல் “ஒளி – பிரகாசம்” என்னும் பொருளைச் சுட்டுகின்றது. ** “இமையோர்தலைவா!” – (திருவிருத்தம். 1. “ஸ்வ ஸ்வாமி பாவஸம் பந்தம் ஒத்திருக்கச்செய்தே, அநாதி கர்மவசத்தாலே நாங்கள் இழந்துகிடக்க, நித்யஸூரிகள் நித்யாநுபவம் பண்ணும்படி ஸர்வஸமனான ஸர்வஸ்வாமியானவனே” – (உபகார ஸங்க்ரஹம்) ; அம்புவி – அங்கண்மா ஞாலம்; இன்பம் – “நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும் நிறைவேங்கடப்பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும், உன்தனக்கு. எத்தனையின்பந்தரும் உன்னிணைமலர்த்தாள், என்தனக்கும் அது இராமாநுச! இவை ஈந்தருளே”.- (இராமாநுச நூற்றந்தாதி. 76). “இடுமே இனிய சுவர்க்கத்தில்? இன்னும் நரகிலிட்டுச் சுடுமே? அவற்றைத் தொடர்தருதொல்லை சுழல் பிறப்பில், நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே விடுமே? சரணமென்றால் மனமே? நையல்மேவுதற்கே.”, – (இராமாநுச நூற்றந்தாதி 98); “இன்பம்……ஆளலாம்” – “ நீதியனு போகநெறி நின்றுநெடு நாளதினி றந்து சகதண்ட முழுதுக், காதிபர்க ளாயரசு செய்துளநி னைத்ததுகி டைத்தருள்பொறுத்துமுடிவிற் சோதிவடி வாயழிவில் முத்திபெறு வாரெனவு ரைத்தசுரு தித்தொகைகளே.”- (இராமாவதாரம், காப்பு முதலியன. 19); செம்பவளவாயான் — சிவந்த பவழம்போன்ற வாயை யுடையவன். “செம்பவளத்திரள்வாய்” – (பெருமாள் திருமொழி. 10-8); செம்பவள ……….வேதாந்த தேசிகன் – “வடிவழ கார்ந்தவண் டூப்புல்வள்ளல்”- (பிள்ளையந்தாதி. 20); சிந்திப்பார்க்கு – “சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினலும் தேவபிரானையே, தந்தைதாயென்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்”- (திருவாய்மொழி 6-5-11) சிந்தை மற்றென்றின் திறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும், சிந்தையினால் செய்வதானறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை, சிந்தையினல் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழுவணங்கும், சிந்தைமகிழ் திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.” – (திருவாய்மொழி 7-10-10), ‘நல்லோர், சீரினில் இன்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே.”- (இராமாநுச நூற்றந்தாதி, 68), “சிந்தையினேடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள், அந்த முற்றாழ்ந்தது கண்டு அவை யென்தனக் கன்றருளால், தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானது தந்து எந்தை இராமாநுசன் வந்தெடுத்தனன் இன்று என்னையே.” –(இராமாநுச நூற்றந்தாதி. 69) – “பெயரினையே, புந்தியால் சிந்தியாது ஒதியுருவெண்ணும், அந்தியாலாம் பயனங்கென்” — (முதல் திருவந்தாதி. 33), “மூப்புஉன்னைச் சிந்திப்பார்க்கில்லை திருமாலே.” – (முதல்திருவந்தாதி, 75); இன்று – திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும், அருக்கனணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும், பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று” -(மூன்றாந்திருவந்தாதி. 1) “இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்” (௸, 2), “அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர், சிறியார் சிவப்பட்டார் செப்பில் – வெறியாய மாயவனை மாலவனை மாதவனையேத்தாதார், ஈனவரே யாதலால் இன்று” – (நான்முகன் திருவந்தாதி. 6), “இன்றாக நாளையேயாக இனிச்சிறிதும், நின்றாக நின்னருள் என்பாலதே – நன்றாக, நான் உன்னையன்றியிலேன் கண்டாய் நாரணனே! நீ யென்னை யன்றியிலை.” – (நான்முகன் திருவந்தாதி. 7), “ஒன்றே செய்யவும்வேண்டும் அதுவும் நன்றே செய்யவும் வேண்டும் அதுவும் இன்றே செய்யவும் வேண்டும். “

19. துயரம் அடையார்

இன்று நிகமாந்த தேசிகனை யெண்ணுவார்
ஒன்று மடையா ருறுதுயரம் – குன்றெடுத்த
மாயன் மலரடிக்கீழ் வாழ்ச்சி பெறுவரே
மாயும் வினையனைத்து மற்று. (19)

(பொழி) இன்றைய நல்ல நாளில், வேதாந்த தேசிகனை மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், (மேலும்) கோவர்த்தனகிரியைக் குடையாக ஏந்திய ஆச்சரியமான செயலினனாகிய கண்ணபிரானது திருவடிக்கீழ் வாழும் வாழ்க்கையை அடைவார்கள். அதனால் அவர்கள் பாபங்கள் எல்லாம் அகன்றுவிடும். (“மற்று” அசைநிலை.)

(19) நிகமம் — வேதம். “நிகமமெனிலொன்றுமற்றுநாடொறு” — (திருப்பு. 145. நியமமாகவுணர்தற்கருவி என்க.) “நிகமாந்த தேசிகன் – வேதாந்த தேசிகன் துயரம் – துன்பம் “இம்மூன்று-மருந்துயரங் காட்டு நெறி. – (திரிகடுகம். 5), துக்கம். — “துயரமேதரு துன்பவின்ப வினைகளாய்”.-(திருவாய் மொழி. 3-6-8); எண்ணுவார் ஒன்று மடையாருறுதுயரம் – “விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை தொழுமின்தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே.” -(திருவாய்மொழி 3-6-7); குன்றெடுத்த மாயன் – “குன்ற மேந்திக் குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான் பரன், சென்று சேர் திருவேங்கடமாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே.” — (திருவாய்மொழி 3-3-8); மாயன் – அதிசயச் செய்கையன். “மாயன் என்னெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்கும் அஃதே, காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே.” -(திருவாய்மொழி 1-9-6) மலரடிக்கீழ்வாழ்ச்சி – “ நின் தாளிணைக்கீழ், வாழ்ச்சி”- (திருவாய்மொழி 3-2-4); வாழ்ச்சி – வாழ்க்கை, செல்வம், வாழ்தல், வாழ்நாள்; பெறுவர் – அடைவர்; மாயும் – மறையும்; மற்று – அசைநிலை, பிறிது, வினைமாற்று. இம்மூன்று பொருளையுந் தரும் இடைச்சொல்.

  1. சித்தந் தெளியும்.

மற்றொன்றுஞ் சேரா மனக்கவலை மானிடர்க்குச்
சித்தந் தெளியுஞ் சிறப்புடனே – குற்றமில்சீர்
தூப்புனகர் வந்துதித்த தூய மனத்தரையே
சேர்ப்பரேல் சிந்தைதனித் தே. (20)

(பொழி) புகழோடு குற்றம் இல்லாத சிறப்புடைய தூப்புல் என்ற நகரத்தில் வந்து அவதாரம் செய்த தூய்மையான மனத்தை உடைய தேசிகரையே, தனித்த சிந்தையில் இடைவிடாது நினைப்பவரானால், அத்தகைய மக்களுக்கு, மனத்தை வாட்டும் துன்பம் எதுவும் வாராது.(அதற்கு மேல்) அவரது மனமும் தெளிவு பெறும்.

(20) மற்றென்றுஞ் சேரா – “மற்றொருபேறுமதியாது”. – (இராமாநுச நூற்றந்தாதி 57);  “மற்றென்றும் வேண்டா மனமே!”– (திருமாலைத்தனியன்); மனக்கவலை – மனத்தின் கணிகழுந் துன்பங்கள்.  “தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்றலரிது.” — (திருக்குறள் கடவுள் வாழ்த்து. 7. “தாள் சேராதார் பிறவிக் கேதுவாகிய காம வெகுளி மயக்கங்களை மாற்ற மாட்டாமையின், பிறந்து அவற்றான் வருந் துன்பங்களுள் அழுந்துவரென்பதாம்.”); சித்தம் – மனம்; தெளியும் – தெளிவுபடும்; தூப்புனகர் வந்துதித்த தூயமனத்தர் – “தூப்புற் புனிதர்”– (பிள்ளையந்தாதி. 7); தூயமனத்தர் – “புறந்தூய்மை நீரானமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.”-(திருக்குறள். வாய்மை. 8. “ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே யுண்டாம் ; அதுபோல மனந்தூய்தாந்தன்மை வாய்மையானுண்டாம். காணப் படுவதுள்ளதாகலின், உண்டாமென்றுரைக்கப் பட்டது. உடம்பு துாய்தாதல் வாலாமை நீங்குதல். மனந்தூய்தாதல் மெய்யுணர்தல். புறந்தூய்மைக்கு நீரல்லது காரணமில்லாதாற்போல, அகந்தூய்மைக்கு வாய்மையல்லது காரணமில்லை யென்றவாறாயிற்று. இதனானே துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டுமென்பதூஉம் பெற்றாம்.”) தூப்புற்கோமான் இல்லறத்துறவியிறே. மாந்தர்க்குப் பொதுவுணர்வு மனங் காரணமாகவுண்டாம். மனந்தூய னாதலாவது விசேடவுணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமை யினீங்குதல். மனந்தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும். நிலைபெற்ற வுயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும். ஒருவற்கு மனநன்மையானே மறுமையின்பமுண்டாம். ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின் அவன் தவமுந் தானமும் ஒருங்கு செய்வாரினுஞ் சிறப்புடையன். தத்தமக்கு இயலுந் திறத்தான் அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃதெய்துமிடத்தா னெல்லாஞ் செய்க. இயலுந் திறமாவது இல்லறம் பொருளளவிற்கேற்பவும், துறவறம் யாக்கைநிலைக் கேற்பவுஞ் செய்தல். ஓவாமை இடைவிடாமை. எய்துமிடமாவன மனம் வாக்குக் காயமென்பன. அவற்ருற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலுமெனவிவை. இதனால் அறஞ் செய்யுமாறு அறியலாம். அவ்வாற்றான் அறஞ்செய்வான் தன் மனத்தின்கட் குற்றமுடையனல்லனாகுக ; அனைத்தளவே அறமாவது; அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறமெனப்படா, ஆரவார நீர்மைய. குற்றம் தீயன சிந்தித்தல். பிறரறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், ஆகுல நீரவென்றார். மனத்து மாசுடையனாய வழி அதன் வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதும் கூருமலே விளங்கும் ; சேர்ப்பரேல் – இடைவிடாது நினைப்பரேல்.

  1. நெஞ்சு உருகும்

தேறு மனக்கலக்கஞ் சிக்கென வாந்தேசும்
மாறு மறமனைத்தும் வண்புகழோர் – கூறும்
குணத்தன் குளிர்சோலைத் தூப்புனகர்க் கோமான்
குணத்திற் குருகுமென் னெஞ்சு.   (21)

(பொழி) நிறைந்த புகழுடையோர் போற்றிக் கூறிக்கொண்டிருக்கும் குணத்தினை உடையவரும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த தூப்புல் நகர்க்குத் தலைவருமாகிய தேசிகரது குணத்திற்கு எனது மனம் உருகும். (அதனால்) மனத்திலிருந்த மயக்கம் (நீங்கியது) தெளிந்தது. புகழும் உறுதியாக்கப் பட்டது. பாவம் எல்லாம் என்னைவிட்டு மாறிப் போய்விட்டது.

(21) தேசு – அழகு, ஒளி, கீர்த்தி, ஞாநம், பெருமை, விசிட்டம் ; குணத்தன் –  “உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும் திருவாய்மொழியின் மணந்தரு மின்னிசை மன்னுமிடந் தொறும் மாமலராள், புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும்புக்கு நிற்கும், குணந்திகழ் கொண்டல்.”– (இராமாநுச நூற்றந்தாதி. 60); குணத்திற்கு உருகும் என் நெஞ்சு – “நையும் மனம் உன் குணங்களை யுன்னி — (இராமாநுச நூற்றந்தாதி. 102)

  1. அன்பர் காண்பர்.

நெஞ்சு நெகிழ்ந்து நினையாமன் மற்றொன்றை
அஞ்சும் படியாக வுள்ளடக்கி – வெஞ்சுடரோன்
சோதியெனத் தோன்றுந் தொல்புகழ்சேர் தூப்புனக
ராதியையே காண்பரன் பர்.       (22)

(பொழி.) ஆசாரியரிடம் அன்புகொண்ட அடியார்கள், மனம் கட்டுக்குலைந்து, வேறு எதனையும் எண்ணாமல், பிழைக்கும்படியாக மன எழுச்சியை அடக்கிவைத்து, வெம்மையான ஒளி உடைய சூரியனது ஒளி என்று சொல்லும் வண்ணம் அவதரித்த பழமைப் புகழ் நிறைந்த தூப்புல் நகரின் முதல்வராகிய தேசிகரையே அகக் கண்களால் காண்பார்கள்.

(22) நெஞ்சு –மனம். “அஞ்சன்மினும்மை நானவனிதோயுமு, னெஞ்ச வீட்டிடுவனிவ், விறைவன்றன்னையு, நெஞ்சுறத் தந்தைபானிறுத்தி நானுமவ், வஞ்சகப் பிறப்பினை மாற்றுவேனென்றாள்.” – (மகாபாரதம். ஆதிபருவம். குருகுலச் சருக்கம். 70),  “எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே” (திருவாய்மொழி 1-10-3)  “நெஞ்சமே ! நல்லைநல்லை.” – (௸. 1-10-4), “ நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே”  – (௸ 3-8-1) “நெஞ்சமே நீள்நகராக இருந்த என், தஞ்சனே!” – (௸. 3-8-2), “நல்லை நெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்” – (பெரிய திருமொழி 1-7-9); நெகிழ்ந்து – இளகி, உருகி. “சேவடிநோக்கி – விரும்பியுண்ணெகிழ”-(கூர்மபு. அரியய. 16); நினையாமல் – தியானிக்காமல்; நெஞ்சு நெகிழ்ந்து –  “கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை திருமணிவண்ணனைச் செங்கண்மாலினைத் தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்தெழுந்தாடி, பெருமையும் நானும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.” – (திருவாய்மொழி3-5-10); அஞ்சும்படியாக – “அஞ்சுவதஞ்சாமை பேதைமை யஞ்சுவ, தஞ்ச லறிவார் தொழில்.” – (திருக்குறள். அறிவுடைமை. 8, “அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அவ்வஞ்சப் படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம். பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும் சாதி பற்றி அஞ்சுவதென்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல், அஞ்சுதல் எண்ணித் தவிர்தல்.”),  “அஞ்சுவ தோறு மறனே யொருவனை, வஞ்சிப்ப தோரு மவா – (திருக்குறள் அவா வறுத்தல் 6, “மெய்யுணர்தலீறாகிய காரணங்களெல்லா மெய்தி அவற்றான் வீடெய்தற்பாலனாய ஒருவனை மறவிவழியாற் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்கவல்லது அவா. ஆகலான், அவ்வவாவை அஞ்சிக்காப்பதே துறவறமாவது. அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை யொழிந்து பராக்காற்காவானாயின் அஃதிடமாக அவனறியாமற் புகுந்து பழைய வியற்கையாய் நின்று பிறப்பினை யுண்டாக்குதலான், அதனை வஞ்சிப்பதென்றார். காத்தலாவது வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமற் பரிகரித்தல்.”) “அஞ்சும்” – (திருக்குறள். பகைமாட்சி 3. ஒருவன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சா நிற்கும்.”); உள்ளடக்கி – * ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி, னெழுமையு மேமாப் புடைத்து,”-(திருக்குறள், அடக்கமுடைமை, 6,  “ஆமை போல ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையுமடக்க வல்லனாயின் அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின்கண்ணும் அரணாதலை யுடைத்து. ஆமை ஐந்துறுப்பினையும் இடர்புகுதாமல் அடக்குமாறுபோல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாம லடக்கவேண்டுமென்பார், ஆமைபோலென்றார்.”), “ உரனென் னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற் கோர் வித்து.” -(திருக்குறள். நீத்தார் பெருமை, 4. “திண்மையென்னுந் தோட்டியால் பொறிகளாகிய யானை யைந்தனையும் தத்தம் புலன்கண்மேற் செல்லாமற் காப்பான் எல்லா நிலத்தினும் மிக்கதென்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்தாம்.”), “வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும், சேரிதிரியாமல் செந்நிறீஇ – கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார்காண் பரேமேலொருநாள், கைந்நாகம் காத்தான் கழல்.”- (முதல் திருவந்தாதி. 47. பொய்கையார்மாலை. திருவல்லிக் கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு. 24-பக்கம் 97-ல் இதன் விளக்கம் காண்க) “அடல்வேண்டு மைந்தன்புலத்தை விடல் வேண்டும், வேண்டிய வெல்லா மொருங்கு.” – (திருக்குறள் துறவு. 3. “வீடெய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட் குரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும். கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல்.வேண்டும். புலமென்றது அவற்றை நுகர்தலை, அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானுமன்றி வாராத பொருள்கண் மேலல்லது வீட்டு நெறியாகிய யோக ஞானங்களிற் செலுத்தாமையின், அதனை யடல்வேண்டு மென்றும், அஃது அப்பொருள்கண்மேற் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், வேண்டிய வெல்லாமொருங்குவிடல் வேண்டுமென்றுங் கூறினார்.”); அன்பர் அன்புடைய மஹான்கள்,  “அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா, ரென்பு முரியர் பிறர்க்கு.” – (திருக்குறள். அன்புடைமை.2. ‘அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானுந் தமக்குரியர்; அன்புடையார் அவற்றானேயன்றித் தம்முடம்பானும் பிறர்க்குரியர். என்பு முரியராதல் ‘தன்னகம் புக்க குறுநடைப் புறவின் றபுதி யஞ்சிச்சீரை புக்கோன்? முதலாயினர்கட் காண்க.”), “அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம், அன்பன்தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய்” (கண்ணிநுண்சிறுத்தாம்பு 11)

23. போற்றுமின்

அன்பரா யாதரிக்கு மாரியர்காள் போற்றுமின்
இன்பமிகு வேதியர்க ளேத்தவே – அம்புவியில்
வந்துதித்த வள்ள லெதிராசன் வண்புகழே
சிந்திக்குந் தூப்புனகர்ச் சிங்கம். (23)

(பொழி.) தூப்புல் நகரில் தோன்றிய கவிவாதி சிங்கமாகிய சுவாமி தேசிகன், அழகிய பூமியில் வந்து அவதாரம் செய்த வள்ளலாகிய இராமாநுசரது வண்மைப் புகழையே சிந்தித்துக் கொண்டிருப்பார். மேலோர்களே! நீங்கள், அத்தகைய தேசிகரையே, விரும்புகின்ற அன்பர்களாக இருந்து, இன்பம் நிறைந்த வேதம் ஓதுபவர்களாகிய உங்களைப் போற்றும்படியாக, தேசிகரைப் பின்பற்றுங்கள்.

(23) அன்பராயாதரிக்கும் – “ஐயன்கழற்கு அணியும் பரன்தாளன்றியாதரியா மெய்யன்” -(இராமாநுச நூற்றந்தாதி 13); ஆரியர்காள் – சிறந்த அனுஷ்டானமுள்ளவர்களே!; “ஓராண் வழியா யுபதேசித் தார்முன்னோர், ஏரா ரெதிராச ரின்னருளால் – பாருலகில், ஆசையுடையோர்க்கெல்லா மாரியர்காள் கூறுமென்று, பேசி வரம்பறுத்தார் பின்.” -(உபதேசரத்தின மாலை. 37. ஆரியர்காள் – ஆச்சார்யர்களே ! ‘கார்யங்கருண மார்யேண’ என்கிறபடியே நீங்களும் கேவல க்ருபையாலே உபதேசித்துப் போருங்கோள்.), “அரிய, அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கிப்போ, தருளிச் செயலாய்த் தறிந்து” -(உபதேசரத்தின மாலை. 46), “ஆரியர்காள், என்றனக்கு நாளும் இனிதாக நின்றது” -(௸ 59) ; போற்றுமின் – போற்றுங்கள், துதியுங்கள், வணங்குங்கள், பேணுங்கள், மங்களா சாஸனஞ் செய்யுங்கள் ; ஏத்தவே – துதிக்கவே; இன்பமிகு வேதியர்கள் ஏத்தவே அம்புவியில் வந்துதித்த வள்ளல் – “தாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து தலமுழுதும் கலியே, ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன்…….வாழ்கின்ற வள்ளல்.” -(இராமாநுச நூற்றந்தாதி.16), ‘இராமாநுசன் புகழோதும் நல்லோர், மறையினைக்காத்து இந்த மண்ணகத்தே மன்னவைப்பவரே.’ – (௸ 9), “அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொற், கடல் கொண்ட வொண்பொருள் கண்டளிப்ப பின்னும் காசினியோர், இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண் பொருள் கொண்டு அவர்பின், படருங்குணன் எம் இராமா நுசன்.”-(௸ 36), “சுருதிகள் நான்கும் எல்லை, யில்லா அற நெறியாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர், நல்லார் பரவும் இராமா நுசன்.”- (௸ 44), “புன்மையிலோர், பகரும் பெருமை இராமாநுச!-(௸ 48), “ஆனது செம்மையறநெறி பொய்ம்மையறு சமயம், போனது பொன்றி இறந்தது வெங்கலி. இராமாநுசன் இத்தலத்துதித்தே.” – (௸ 49), “நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது தென்குருகை வள்ளல், வாட்டமிலா வண்தமிழ்மறை வாழ்ந்தது.” – (௸ 54), “தொகையிறந்த, பண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலைமேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குலமே.” – (௸ 55), “நல்தவர் போற்றும் இராமாநுசனை.” – (௸ 57), பேதையர் வேதப்பொருளி தென்று உன்னி பிரமம் நன்றென்று, ஒதி மற்றெல்லாவுயிரும் அஃதென்று உயிர்கள் மெய்விட்டு, ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம், வாதில் வென்றான், எம் இராமாநுசன் மெய்ம்மதிக்கடலே.” – (௸ 58), “எங்களிராமாநுசமுனி வேழம் மெய்ம்மை, கொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது.” – (௸ 64), “மறையவர் தம் தாழ்வற்றது….. இராமாநுசன் தந்த ஞானத்திலே” – (௸ 65), “நல்லார் பரவும் இராமாநுசன்.” – (௸ 80), “ஒதிய வேதத்தின் உட்பொருளாய் அதனுச்சி மிக்க, சோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர், பேதைமை தீர்த்த இராமாநுசனை.” – (௸ 85), “எம் இராமாநுசன், மண்ணின் தலத்து உதித்து மறைநாலும் வளர்த்தனனே.” – (௸95), “நல்வேதியர்கள் தொழும் திருப்பாதனி ராமாநுசனை.” – (௸ 105); வள்ளல் எதிராசன் – “வள்ளல் இராமானுசனென்னும் மாமுனியே.” – (இராமாநுச நூற்றந்தாதி. 16), “கொள்ளக் குறைவற்றி லங்கி கொழுந்து விட்டோங்கியவுன், வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்.” – (௸ 27), “செறுகலியால், வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த, அருந் தவன் எங்களிராமாநுசனை” – (௸ 32), “வண்மை இராமானுச!” – (௸ 71), “நிறைபுகழோருடனே, வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே” – (௸ 72), ‘’வண்மையினாலும்….ஞானமுரைத்த இராமானுசனை” – (௸73), ‘’வண்மை இராமானுசற்கு” – (௸ 77), ‘’உன்னுடைய, கார்கொண்ட வண்மை இராமானுச ! – (௸ 83), “உணர்வின்மிக்கோர், தெரியும் வண்கீர்த்தி இராமானுசன்” – (௸87), “பின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல்” -(தேசிகமாலை. அதிகார சங்கிரகம், 3); எதிராசன் வண்புகழே – “பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ்பாடி” – (இராமாநுச நூற்றந்தாதி. 7), “இராமாநுசன் புகழோதும் நல்லோர்” (௸9), “வஞ்சர்க்கரிய இராமாநுசன் புகழன்றி” – (௸ 28), “இராமாநுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்” – (௸ 29), ‘’இராமாநுசன் தன்நயப்புகழே” – (௸ 34), “எம் இராமாநுசன் தொல்புகழ், சுடர்மிக்கெழுந்து” (௸61). எதிராசன் வண்புகழே சிந்திக்கும் தூப்புனகர்ச்சிங்கம் – “மாறன் றுணையடிக்கீழ் வாழ்வை யுகக்கு மிராமா னுசமுனி வண்மைபோற்றுஞ் சீர்மைய னெங்கடூப் புற்பிள்ளை.” – (பிள்ளையந்தாதி. 1. நம்மாழ்வாருடைய திருவடிகளையே உபாயமாகவும் பலனாகவும் நாடி நின்று பெருமை பெற்றவர் ஸ்ரீபாஷ்யகாரர். ஸ்ரீபாஷ்யம் முதலிய தம் ஸூக்திகளின் வாயிலாக உலகுக்கு க்ஷேமத்தைச் செய்தருளிய இந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய ஒளதார்ய குணத்தை வாயாரப் புகழ்ந்து பேசுமவர் ஸ்ரீதேசிகன்), ‘’உத்தர வேதியுள் வந்துதித்த, செய்ய வண் மேவிய சீரரு ளாளரைச் சிந்தைசெய்யு, மெய்யவ னெந்தை யிராமானுசனருண் மேவிவாழு, மையனிலங்குதூப் புற்பிள்ளை.” -(பிள்ளையந்தாதி. 4. பிரமனுடைய அசுவமேதயாக வேதியில் வந்து திருவவதரித்த பெருந்தேவி நாயகஞன பேரருளாளனையே எப்பொழுதும் தொழும் பெருமையை உடையவரான ஸ்ரீபாஷ்யகாரருடைய கிருபையையே தமக்கு ஆதாரமாகக் கொண்டு வாழும் ஸ்ரீதேசிகன்), “மாநிலத் தோதிய மாமறை மன்னிய நற்கலைகலைளானவை செப்பு மரும்பொரு ளத்தனை யேயருளுந், தூநெறி காட்டு மிராமா னுசமுனித் தோத்திரஞ்செய், யூனமி றுாப்புலம்மான்.” – (பிள்ளையந்தாதி. 3. ஸகல ஜீவராசிகளுக்கும் ஹிதமான அம்சங்களையே போதிக்கும் வேதங்கள், அவற்றைத் தழுவி நிற்கும் சாஸ்திரங்கள் ஆகிய இவற்றின் உண்மைப் பொருளை உலகுக்கு வெளியிட்டு ப்ரபத்தி மார்க்கத்தையும் காட்டிக் கொடுத்த ஆசார்யசிரேஷ்டரான ஸ்ரீபாஷ்யகாரரின் புகழை வாய் வெருவிப் பேசி மகிழ்ந்து நிற்பவரான ஸ்ரீதேசிகன்), “இராமா னுசமுனி யின்னுரை சேருந்தூப்புற், புனிதர்.-(பிள்ளையந்தாதி. 7. ஸ்ரீபாஷ்யகாரருடைய திவ்ய ஸூக்திகள் தம்முள்ளத்தில் குடி கொள்ளப் பெற்ற ஸ்ரீதேசிகன்), “குணக்குல மோங்கு மிராமா னுசன் குணங் கூறுந்தூப்பு லணுக்கன்.” – (பிள்ளையந்தாதி, 3. அளவற்ற நற்குணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீபாஷ்யகாரருடைய பெருமையையே பேசுமவரும் தூப்புலில் தோன்றிய பாகவத சீரேஷ்டருமான ஸ்ரீதேசிகன்), “ஆரண நூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர், வாரண மாயவர் வாதக் கதலிகண் மாய்த்தபிரா, னேரணி கீர்த்தி யிராமா னுசமுனி யின்னுரைசேர், சீரணி சிந்தையி னோஞ்சிந்தி யோமினித் தீவினையே.” – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 4. வேதாந்த சாஸ்திரத்தின் வழியின் நேர்மையைக் கெடுப்பவர்களான ஹைதுகர்களுக்கு நிகரற்ற யானையாய் வந்து அவர்களுடைய வாதமாகிய வாழைகளை ஒழித்த உபகாரகரும், உலகுக்கே பொருந்திய அலங்காரமாய் உள்ள புகழையுடைய வருமான ஸ்ரீபாஷ்யகாரருடைய இனிய ஸூக்திகளில் பொருந்திய சிறப்புப் பெற்ற மனத்தை யுடையோமாஞேம். இனிமேல் கொடிய கர்மங்களை மனத்தாலும் நினைக்கமாட்டோம்.), “அடற்புள் ளரசினு மந்தணர் மாட்டினு மின்னமுதக், கடற்பள்ளி தன்னினுங் காவிரி யுள்ள முகந்தபிரா, னிடைப்பிள்ளை யாகி யுரைத்த துரைக்கு மெதிவரனார், மடைப் பள்ளி வந்த மணமெங்கள் வார்த்தையுண் மன்னியதே.” -(தேசிகமாலை. பரமபத சோபானம். 1. வேத வேதாந்தங்களிற் காட்டிலும் இனிய அமுதமாகிய பிராட்டி அவதரித்த திருப்பாற்கடலாகிய படுக்கையிடத்திற் காட்டிலும், காவிரிக் கரையில் உள்ள திருவரங்கம் முதலிய திவ்விய தேசங்களில் மணம் மிக மகிழ்ந்து எழுந்தருளியுள்ள எம்பெருமான் இடைச்சிறுவனாய் அவதரித்து வெளியிட்ட பகவத்கீதையின் தாத்பர்யத்தையே தம் பாஷ்யங்களில் விளக்கியவரான யதிகளுள் சிறந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய திருமடைப்பள்ளி வழியாக வீசிய வாசனை யாம் வெளியிடும் கிரந்தங்களுள் மன்னியுள்ளது. ஸர்வேசுவரனான எம்பெருமான் கோப குமாரனாகிக் கண்ணனாய்த் திருவவதரித்து உரைத்தது ஸ்ரீபகவற்கீதை, அதற்கு வியாக்கியானம் இட்டருளினார் ஸ்ரீபாஷ்ய காரர். கீதோபநிஷதாசார்யனான கண்ணன் அருளிச் செய்ததையே அருளிச்செய்யும் இராமாநுசன். அதாவது, இடைப்பிள்ளையாகி யுரைத்ததையே இராமாநுசனாகி யுரைக்கும். எதிராசனுடைய திருவாக்கு கண்ணனுடைய கீதைக்கு ஒப்பு எனலுமொன்று. கண்ணபிரான் பலராமனுக்குத் தம்பியாக அவதரித்ததனால் அவனை “ராமாநுஜன்” என்பர். ஸ்ரீபாஷ்யகாரரை இளைய பெருமாளுடைய அபராவதாரமென்று சொல்லுவது போலவே கண்ணபிரானுடைய அபராவதாரமென்றும் நிர்வஹிப்பர். இதனைப் ‘’பெரும் பூதூர் வந்த வள்ளல்”-(வேதாந்த தீபிகை. 25-ஆம் ஸம்புடம். பக்கங்கள். 519-521. கண்ணனும் ஸ்ரீபாஷ்யகாரரும் என்ற பகுதி) என்ற எமது கட்டுரையில் பரக்கக் காண்கலாம். “உரைத்ததுரைக்கும்” என்ற சொல்லாற்றலால் இவரது ஒருமையே மொழியு நீர்மை நன்கு புலனாகும். ‘’இப்படி ரஹஸ்யத்ரயத்தைப் பற்றின கீழு மேலுமுள்ள பாசுரங்களெல்லாம் வேதாந்தோதயந ஸம்ப்ரதாயமான மடப்பள்ளி வார்த்தையை ஆசார்யன் பக்கலிலே தாங்கேட்டருளின படியே கிடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாபோல பழக்குவிக்க அவர் திருவுள்ளத்திலிரக்கமடியாகப் பெருமாள் தெளிய ப்ரகாசிப்பித்து மறவாமற்காத்துப் பிழையறப் பேசுவித்த பாசுரங்கள்.”-(ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், ஆசார்யக்ருத்யாதிகாரம்.) ஸ்ரீபாஷ்யகாரருடைய திருமடைப்பள்ளியில் அந்தரங்க கைங்கர்யம் செய்து வந்து அவரிடமே ஸகலார்த்தங்களையும் கற்றறிந்த கடாம்பியாச் சான் வழியாக நம் ஸம்ப்ரதாயம் தழைத்தோங்குவதுபற்றி “மடைப்பள்ளி வந்த மணம்” என்னப்பட்டது. உண்ணக்கடவ உயர்ந்த பண்டங்களைச் சேமித்துத் திருமடைப்பள்ளி யில் வைத்து அனைவருக்கும் வழங்குமாறு போல கற்றறிந்து அநுபவிக்க வேண்டிய வேதாந்தத்தின் ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம் ஸ்ரீபாஷ்யகாரர் கடாம்பியாச்சானுக்கு உபதேசித்து, அவர் முகமாய் உலகுக்கு வழங்கச் செய்தபடியால் அவருக்கு மடைப்பள்ளி யாச்சானெனத் திருநாமம் வந்தது என்றும் கூறுவர் பேரறிஞர்.), “அலர்ந்த வம்பு யத்தி ருந்து தேனருந்தி யின்னக லல்கு லார சைந்த டைந்த நடைகொ ளாத தனமெனோ, நலந்த விர்ந்த தாலதென்கொ னாவின் வீறி ழந்ததா னாவ ணங்கு நாதர் தந்த நாவின் வீறி ழந்ததென், சலந்த விர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவி லேனெ னக்க னைத்து ரைத்த வேதி ராசர்தம், வலந்த ருங்கை நாய னார்வ ளைக்கிசைந்த கீர்த்தியால் வாரி பால தாம தென்று மாசில் வாழி வாழியே.”- (தேசிகமாலை. அமிருதாசுவாதினி. 33. ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஈடுபட்ட இருவர் அவரது புகழைப்பற்றி ஸம்பாஷித்ததாக அமைந்துள்ளது இப்பாசுரம், ஒருவர் :- அன்னம் மலர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருந்து அதில் உள்ள தேனைப் பருகி அழகிய அகன்ற அல்குலையுடைய ஸ்திரீகளின் அசைந்து நடக்கும் நடையைக்கொள்ளாமல் வருந்தி வாடிக்கிடப்பதன் காரணம் என்ன? மற்றவர் – தன் பெருமையை அது இழந்துவிட்டதால் தான் வருந்திக்கிடக்கின்றது. ஒருவர் :- அது எவ்வாறு பெருமை இழந்தது? மற்றவர் :- தன் நாவிற்குள்ள பாலையும் நீரையும் பிரிக்கும் சக்தியை இழந்து, விட்டதால் இவ்வாறு வருந்துகின்றது. ஒருவர் :- வாக்குக்குத் தேவதையாகிய நாமகள் கணவனான பிரமனால் அளிக்கப்பெற்ற நாவின் அந்தச் சக்தியை ஏன் இழந்தது? மற்றவர் :- கூறு கின்றேன் கேளும். அடிக்கடி வாதத்திற்கு வந்த முரடர்களான வாதிகளை குற்றமில்லாது வாதம் செய்து ஜயித்து, இன்னும் யாவர் வாதம்புரிய வந்தாலும் தளரமாட்டேன் என்று கர்ஜித்துக் கூறிய ஸ்ரீபாஷ்யகாரருடையதும் அடைந்தவர்களுக்குப் பலத்தைத் தரும் கையையுடைய எம்பெருமானுடைய சங்கம் போன்றதுமான கீர்த்தி உலகமெங்கும் பரவியதால் ஜலம் முழுதும் பாலாகிவிட்டதாம். ஜலம் முழுதுமே பாலாகிவிட்டதால் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் சக்திக்கு உபயோகமே ஏற்படாமல் பயனற்றுப் போய்விட்டதை எண்ணி இந்த அன்னம் வருந்தி நிற்கின்றது. எக்காலத்திலும் குறைவுபடாத அந்தப் புகழ் வாழக்கடவது), ‘வாழி யருளாளர் வாழியணி யத்திகிரி, வாழி யெதிராசன் வாசகத்தோர்-வாழி, சரணா கதியெனுஞ் சார்வுடன் மற் றென்றை, யரணாகக் கொள்ளாதா ரன்பு.” – (தேசிகமாலை. மெய்விரத நன்னிலத்து மேன்மை. 1), ‘ ஆகாரத் திருவகையா நன்றுந் தீது மருமறைகொண் டெதிராச ரிவைமொ ழிந்தா, ராகாத வழிவிலக்கி யாக்குங் கண்ண னனைத்துலகும் வாழவிது சாற்றி வைத்தான்.” -(தேசிகமாலை. ஆகார நியமம். 1); தூப்புனகர்ச்சிங்கம் – “ஏராரு மெதிராச ரருளினாலே யெதிர்ந்தவர்கள் சிங்கமென விங்கு வந்தோன், சீராரும் வேங்கடவன் றுாப்புற் பிள்ளை.”-(தேசிகமாலை. ஆகார நியமம். சிறப்புத்தனியன்).

24. காப்பின் கடை.

சிங்க முகத்தானைத் திங்கள் பலகாட்டும்
அங்க முடையவனை யாதரிக்கும் – எங்கள்பிரான்
தூப்புல்வரு மாரியனைத் தோத்திரியா மானிடர்க்குக்
காப்பனைத்து மாகுங் கடை. (24)

(பொழி.) நரசிங்க மூர்த்தியும், பல சந்திரர்களது ஒளியைக் காட்டும் திருமேனியை உடையவனும் ஆகிய (கோடி சூரிய ப்ரகாசத் திருமேனி) திருமாலை விரும்புகின்ற எங்கள் பெருமானாகிய தூப்புல் நகரில் அவதரித்த உயர்ந்தோனாகிய தேசிகரைத் துதிக்காத மக்களுக்குப் பிறவற்றால் வரும் பாதுகாவல் அனைத்தும் பயனற்றனவாகும்.

(24) சிங்கமுகத்தான் “அழகியான்தானே அரியுருவன்” (நான்முகன் திருவந்தாதி. 22) ; தோத்திரியா – துதிக்காத

25. வருத்தம் அறக்காக்கும்

கடைந்தான் கடலைக் கடல்வண்ணன் முன்னம்
இடந்தான்பின் னேனமாப் பூமி – அடைந்தார்
வருத்தமறக் காக்குமே வையத் தருளால்
திருத்தமுடைத் தூப்புல்வாழ் தேவு. (25)

(பொழி.) கடல்போன்ற நீலநிறத்தினனாய் திருமால், முன்காலத்தில், பாற்கடலைக் கடைந்தான். பிறகு, வராக அவதாரம் எடுத்து, பூமியினைக் கீழிருந்து குத்தி எடுத்துப் பெயர்த்தான். (ஆனால்) ஒழுங்கு நிறைந்த தூப்புல் நகரில் வாழும் தெய்வமாகிய தேசிகர், தமது அருளால், இந்த உலகத்தில் தம்மை அடைக்கலமாக அடைந்த அடியவர்களைத் துன்பம் இல்லாமல் பாதுகாப்பார்.

(25) கடைந்தான் கடலை – ”அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன்” – (திருவாய்மொழி 1-3-11); இடந் தான் பின்னேனமாப்பூமி “இடந்தது பூமி” – (முதல் திருவந்தாதி. 39) “ஈனச் சொல்லாயினுமாக எறிதிரைவையம் முற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் இருங்கற்பகம் சேர், வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லா யவர்க்கும் ஞானப் பிரானையல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே.” 😦திருவிருத்தம். 99), “கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ, நீலவரை இரண்டு பிறைகவ்வி நிமிர்ந்ததொப்ப, கோலவராக மொன்றாய் நிலம் கோட்டிடைக்கொண்ட எந்தாய் ! நீலக்கடல் கடைந்தாய் ! உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ” -(திருவாய்மொழி 10-10-7); வருத்தம் – துன்பம் ; வையத்து – பூமியில்; திருத்தம் — ஒழுங்கு. “திருத்தம் பெரியவர்” -(தேசிகமாலை, அமிருதாசுவாதினி 20. திருந்திய ஜ்ஞாநம் அநுஷ்டாநம் இவற்றால் பெரிய மஹரிஷிகள்) ; தேவு – தெய்வம், தேவாந்தன்மை. “தேவிற் சிறந்த திருவள்ளுவர்”- (திருவள்ளுவமாலை 39.); தூப்புல் வாழ் – தூப்புல் மாநகரில் நித்ய வாஸஞ் செய்யும்.

26. எங்கள் குரு.

தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பத்தர்களும்
பூவின் மழைபொழிந்து போற்றியே – தாவி
யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந்
தூப்புற் குலகுருவே யெங்கள் குரு. (26)

(பொழி.) விண்ணுலகத் தேவர்களும், மண்ணுலகத் துறவிகளும், ஞானிகளும், பக்தர்களும் மலர் மழை சிதறிப் போற்றிப் புகழுமாறு கடந்து உலகைத் தன் காலால் அளந்த திருமாலை, உள்ளத்தால் உணர்ந்து மகிழும் தூப்புல்வந்த வைணவ குலத்துக் குருவே, எங்களுக்கும் குருவாக விளங்குவார்.

(26) தேவர் – சுரர், விண்ணுலகத்து உள்ளவர், விளங்குபவர், “நஞ்சடவெழுதலு நடுங்கி நாண்மதிச், செஞ்சடைக் கடவுளை யடையுந் தேவர் போல்.” – (இராமாவதாரம், பால காண்டம், வேள்விப்படலம் 50.), “சிவன்றேவர்க்கிறைவன் போல” – (அபிதா, சிவரக. அபுத்திபூருவ. 4); முனிவர் – மநநசீலர், கடவுளை எப்பொழுதும் தியானஞ் செய்பவர், திரிகால ஞானமுடையவர்; பத்தர் – பக்தர், பாகவதர் ; தேவர் முனிவர்களும் சித்தர்களும் பத்தர்களும் – “அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ? அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ”-(திருப்பள்ளியெழுச்சி. 7), “மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர்”- (திருப்பள்ளியெழுச்சி. 9); பூவின் மழை பொழிந்து போற்றியே – புஷ்ப வருஷத்தைச் சொரிந்து துதித்து, “விற்கொண்ட மழைய னான் மேற் பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே.” – (இராமாவதாரம். பாலகாண்டம். தாடகைவதைப் படலம். 76), “புனித மாதவ ராசியின் பூமழை பொழிந்தார்.” – (இராமாவதாரம். பாலகாண்டம். வேள்விப்படலம் 56); தாவி – கடந்து; உலகளந்தமால் – திரிவிக்கிரமன். இந்த இருபத்தாறாவது பாசுரம் திருவத்திகிரிப் பேரருளாளப் பெருமாள் திருமஞ்சனங் கண்டருளுங் காலத்து அநுஸந்திக்கப்பெறும் கட்டியத்தில் இன்றும் ஸேவிக்கப் பெறுவதாயின் இந்நூற்றந்தாதியின் தொன்மையும் பெருமையும் ஆன்றோர்களாற் போற்றி வரப் பெற்றுள்ள பெற்றியும் கூறாமலே விளங்கும்.

27. கோப்பு உடையோம்
குருவுங் குலத்தரசுங் குற்றமிலாச் சுற்றந்
தருமமுந் தாய்தகப்ப னாரும் – வருபுனல்சூழ்
தூப்புல்வருந் தூய்மறையோன் றொல்லருளே யென்றிந்தக்
கோப்புடையோம் யாமென்றே கூறு. (27)

(பொழி.) (மனமே) ஓடிவருகின்ற ஆற்றுநீர் சூழ்ந்த தூப்புல் நகரில் அவதரித்த, தூய்மையான வேதம் கற்ற தேசிகரே தமது இயல்பான பழமையைக் கொண்ட திருவருளாலே, ஞான ஒளி காட்டும் குருவாகவும், எங்கள் வைணவக் குலத்துக்குத் தலைவராகவும், குற்றம் இல்லாத உறவினராகவும், நல்வழிப்படுத்தும் அறத்தினராகவும், பெற்றெடுத்த தாய் தகப்பனாராகவும் அமைந்துள்ளார் என்று சொல்லும் இந்த உபாயத்தை நாங்கள் உடையோம் என்று உலகினர் அறியக் கூறுவாய்.

(27) குரு – “குருப்யஸ்தத்குருப்யச்ச நமோவாக மதீமஹே, வ்ருணிமஹேச தத்ராத்யெள தம்பதி ஜகதாம்பதீ.”- (ஸ்ரீகுரு பரம்பராஸாரம், ஆசார்யர்களின் பொருட்டும், அவர்களின் ஆசார்யர்களின் பொருட்டும், நம: என்கிற வார்த்தையை அடிக்கடி சொல்லுகிறோம். அந்த ஆசார்யபரம்பரையில் எல்லாவற்றிற்கும் காரணமாகிய லோகங்களுக்கு சேஷிகளான பிராட்டியும் எம்பெருமானுமாகிய தம்பதிகளை ஆச்ரயிக்கிறோம்.) “தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்”- (பா. ஸ. 41-21. ஸஹாதேவன் வார்த்தை. அப்படிப்பட்ட இந்த அக்ரபூஜையை அடைவதற்குத் தகுந்த ஸர்வாகாரங்களினாலும் பூர்ணரான ப்ரும்ம வித்யையை உபதேசம் செய்தவராயும் தகப்பனாராயும் வேதாத்ய யனம் செய்வித்தவராயும் இருக்கிற), “மமாப்யகில லோகாநாம் குருர் நாராயணோ குரு:”-(வி.பு.5-1-14. எல்லா லோகங்களுக்கும் ஆசார்யனாகிய நாராயணன் எனக்கும் ஆசார்யன்), “த்வமேவ பந்துச்ச குருஸ்த்வமேவ ” (நீரே பந்துவும் நீரே ஆசார்யனும்) “இவர்கள் தேஹேந்திரியாதி வ்யதிரிக்தனாய் நித்யனாயிருப்பானொரு ஆத்மாவுண்டு. இச்சேதநா சேதநங்களிரண்டுமொழிய விவற்றுக்கந்தர்யாமியாய் சேஷியா யிருப்பானொரு பரமாத்மாவுண்டு. இப்பரமாத்மாவையொழிய விவ்வாத்மாவுக்குத் தானும் பிறரும் ரக்ஷகராக மாட்டாரென்ற தத்வத்தையும், அநாதிகால மந்தாதியாக ஸம்ஸரித்துப் போந்தவடியேனுக்கு இனியொரு கர்ப்பவாஸாதிக்லேசம் வாராதபடி திருவடிகளைத் தந்து ரக்ஷித்தருளவேணுமென்று ஆசார்யன் ப்ரஸாதித்த குருபரம்பரா பூர்வக த்வயத்தாலே ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை சரணமாகப் பற்றி ஆத்மாத்மீயங்களையும் அவற்றைப் பற்றவருஞ் சுமைகளையும் அங்கே ஸமர்ப்பிப்ப தென்று ஹிதத்தையும், ஸதாசார்யன் காட்டிக்கொடுக்கக் கைக்கொண்ட வெம்பெருமானினி நம்மை யொருபடிக்குங் கைவிடானென்கிற தேற்றத்தோடே யிங்கிருந்த காலம் அபவர்க்க பூர்வாங்கமான நிரபராதாநுகூல வ்ருத்தியோடே நடப்பதென்று உத்தரக்ருத்யத்தையும் ஸங்கிரஹருசிகளுக்குச் சுருங்கவருளிச் செய்வார்கள்.”- (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். ஆசார்ய க்ருத்யாதிகாரம்), “தன் குருவின் றாளிணைகள் தன்னிலன் பொன்றில்லாதார்”- (உபதேசரத்தினமாலை. 60), “மருளாமிருளோட மத்தகத்துத் தன்றாளருளாலே வைத்தவராய், தனக்கு வகுத்த விஷயமான ஆசார்யனுடைய அங்கிரி யுகளந் தன்னிலே யாய்த்து ப்ரபத்திபண்ண ப்ராப்தம்.” “அவன் றாளிணையே யுன்னுவதே சாலவுறும் என்றிறே இருப்பது.” “ஞான மநுட்டான மிவை நன்றகவேயுடைய,னான குருவை யடைந்தக்கால்”-(உபதேசரத்தினமாலை. 61. அஜ்ஞாந நிவர்த்தகனாய் ஆசாரப்ரவர்த்தகனாயிருக்கிற ஆசாரியனை உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்” என்கிறபடியே தனக்கு ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவும் அத்யவஸித்து ஆச்ரயித்தக்கால். அடைந்தக்கால் – கெடுமரக்கலம் கரைசேர்ந்தாற் போலே அஞ்சினான் புகலிடமான ஆசார்யாபிமாநத்தை அவன் ப்ரஸாதத்தாலே ப்ராபிக்கப் பெற்றால், தங்களுக்காகச் சரண வரணம் பண்ணி ரக்ஷிக்குமவனைத் தாங்கள் சரணமாக அடைந்தக்கால் ; குருவை யடைந்தக்கால் – குருரேவ பரம்ப்ரஹ்மம் என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் சொல்லுகிறபடியே குருதரனான குருவை ஆச்ரயித்தக் கால். இப்படி அலப்யலாபமானது லபிக்கப்பெற்றால், அந்த ஆச்ரயண ராஜகுல மாஹாத்ம்யத்தாலே ஸ்ரீய:பதியானவன், ஸ்வப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்கும்.) ; தாய் – அண்ணன் றேவி, ஊட்டுந்தாய், குருவின்றேவி, செவிலித்தாய், தன்றேவியை யீன்றாள், நற்றாய், பாராட்டுந்தாய்; தாயின் சகோதரிக்கும் பெயர் கூறுவர்; புனல் – நீர்; தொல் – பழமை ; தூய்மறை – “தொல் வகை காட்டுந் துணிந்ததூ மறையே”- (தேசிகமாலை. மும்மணிக்கோவை. 4), “தூமறையி னுள்ளம்.”- (௸. ௸. 5.); கோப்பு – பலதிறப்பட்ட பாங்கு.

27. கோப்பு உடையோம்
குருவுங் குலத்தரசுங் குற்றமிலாச் சுற்றந்
தருமமுந் தாய்தகப்ப னாரும் – வருபுனல்சூழ்
தூப்புல்வருந் தூய்மறையோன் றொல்லருளே யென்றிந்தக்
கோப்புடையோம் யாமென்றே கூறு. (27)

(பொழி.) (மனமே) ஓடிவருகின்ற ஆற்றுநீர் சூழ்ந்த தூப்புல் நகரில் அவதரித்த, தூய்மையான வேதம் கற்ற தேசிகரே தமது இயல்பான பழமையைக் கொண்ட திருவருளாலே, ஞான ஒளி காட்டும் குருவாகவும், எங்கள் வைணவக் குலத்துக்குத் தலைவராகவும், குற்றம் இல்லாத உறவினராகவும், நல்வழிப்படுத்தும் அறத்தினராகவும், பெற்றெடுத்த தாய் தகப்பனாராகவும் அமைந்துள்ளார் என்று சொல்லும் இந்த உபாயத்தை நாங்கள் உடையோம் என்று உலகினர் அறியக் கூறுவாய்.

(27) குரு – “குருப்யஸ்தத்குருப்யச்ச நமோவாக மதீமஹே, வ்ருணிமஹேச தத்ராத்யெள தம்பதி ஜகதாம்பதீ.”- (ஸ்ரீகுரு பரம்பராஸாரம், ஆசார்யர்களின் பொருட்டும், அவர்களின் ஆசார்யர்களின் பொருட்டும், நம: என்கிற வார்த்தையை அடிக்கடி சொல்லுகிறோம். அந்த ஆசார்யபரம்பரையில் எல்லாவற்றிற்கும் காரணமாகிய லோகங்களுக்கு சேஷிகளான பிராட்டியும் எம்பெருமானுமாகிய தம்பதிகளை ஆச்ரயிக்கிறோம்.) “தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்”- (பா. ஸ. 41-21. ஸஹாதேவன் வார்த்தை. அப்படிப்பட்ட இந்த அக்ரபூஜையை அடைவதற்குத் தகுந்த ஸர்வாகாரங்களினாலும் பூர்ணரான ப்ரும்ம வித்யையை உபதேசம் செய்தவராயும் தகப்பனாராயும் வேதாத்ய யனம் செய்வித்தவராயும் இருக்கிற), “மமாப்யகில லோகாநாம் குருர் நாராயணோ குரு:”-(வி.பு.5-1-14. எல்லா லோகங்களுக்கும் ஆசார்யனாகிய நாராயணன் எனக்கும் ஆசார்யன்), “த்வமேவ பந்துச்ச குருஸ்த்வமேவ ” (நீரே பந்துவும் நீரே ஆசார்யனும்) “இவர்கள் தேஹேந்திரியாதி வ்யதிரிக்தனாய் நித்யனாயிருப்பானொரு ஆத்மாவுண்டு. இச்சேதநா சேதநங்களிரண்டுமொழிய விவற்றுக்கந்தர்யாமியாய் சேஷியா யிருப்பானொரு பரமாத்மாவுண்டு. இப்பரமாத்மாவையொழிய விவ்வாத்மாவுக்குத் தானும் பிறரும் ரக்ஷகராக மாட்டாரென்ற தத்வத்தையும், அநாதிகால மந்தாதியாக ஸம்ஸரித்துப் போந்தவடியேனுக்கு இனியொரு கர்ப்பவாஸாதிக்லேசம் வாராதபடி திருவடிகளைத் தந்து ரக்ஷித்தருளவேணுமென்று ஆசார்யன் ப்ரஸாதித்த குருபரம்பரா பூர்வக த்வயத்தாலே ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை சரணமாகப் பற்றி ஆத்மாத்மீயங்களையும் அவற்றைப் பற்றவருஞ் சுமைகளையும் அங்கே ஸமர்ப்பிப்ப தென்று ஹிதத்தையும், ஸதாசார்யன் காட்டிக்கொடுக்கக் கைக்கொண்ட வெம்பெருமானினி நம்மை யொருபடிக்குங் கைவிடானென்கிற தேற்றத்தோடே யிங்கிருந்த காலம் அபவர்க்க பூர்வாங்கமான நிரபராதாநுகூல வ்ருத்தியோடே நடப்பதென்று உத்தரக்ருத்யத்தையும் ஸங்கிரஹருசிகளுக்குச் சுருங்கவருளிச் செய்வார்கள்.”- (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். ஆசார்ய க்ருத்யாதிகாரம்), “தன் குருவின் றாளிணைகள் தன்னிலன் பொன்றில்லாதார்”- (உபதேசரத்தினமாலை. 60), “மருளாமிருளோட மத்தகத்துத் தன்றாளருளாலே வைத்தவராய், தனக்கு வகுத்த விஷயமான ஆசார்யனுடைய அங்கிரி யுகளந் தன்னிலே யாய்த்து ப்ரபத்திபண்ண ப்ராப்தம்.” “அவன் றாளிணையே யுன்னுவதே சாலவுறும் என்றிறே இருப்பது.” “ஞான மநுட்டான மிவை நன்றகவேயுடைய,னான குருவை யடைந்தக்கால்”-(உபதேசரத்தினமாலை. 61. அஜ்ஞாந நிவர்த்தகனாய் ஆசாரப்ரவர்த்தகனாயிருக்கிற ஆசாரியனை உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்” என்கிறபடியே தனக்கு ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவும் அத்யவஸித்து ஆச்ரயித்தக்கால். அடைந்தக்கால் – கெடுமரக்கலம் கரைசேர்ந்தாற் போலே அஞ்சினான் புகலிடமான ஆசார்யாபிமாநத்தை அவன் ப்ரஸாதத்தாலே ப்ராபிக்கப் பெற்றால், தங்களுக்காகச் சரண வரணம் பண்ணி ரக்ஷிக்குமவனைத் தாங்கள் சரணமாக அடைந்தக்கால் ; குருவை யடைந்தக்கால் – குருரேவ பரம்ப்ரஹ்மம் என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் சொல்லுகிறபடியே குருதரனான குருவை ஆச்ரயித்தக் கால். இப்படி அலப்யலாபமானது லபிக்கப்பெற்றால், அந்த ஆச்ரயண ராஜகுல மாஹாத்ம்யத்தாலே ஸ்ரீய:பதியானவன், ஸ்வப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்கும்.) ; தாய் – அண்ணன் றேவி, ஊட்டுந்தாய், குருவின்றேவி, செவிலித்தாய், தன்றேவியை யீன்றாள், நற்றாய், பாராட்டுந்தாய்; தாயின் சகோதரிக்கும் பெயர் கூறுவர்; புனல் – நீர்; தொல் – பழமை ; தூய்மறை – “தொல் வகை காட்டுந் துணிந்ததூ மறையே”- (தேசிகமாலை. மும்மணிக்கோவை. 4), “தூமறையி னுள்ளம்.”- (௸. ௸. 5.); கோப்பு – பலதிறப்பட்ட பாங்கு.

28. மூப்பு வருமுன்னமே பற்று.

கூறி முடியாக் குணத்தனைநன் னெஞ்சமே
நாறு துழாயானை நண்ணுமோர் – வீறுடைய
தூப்புலனந் தாரியனார் தொல்புகழ்சேர் மைந்தனைநீ
மூப்புவரு முன்னமே பற்று. _(28)

(பொழி.) நல்ல மனமே! நீ, நமக்கு முதுமைக் காலம் வருவதற்கு முன்னதாகவே, மணம் வீசும் திருத்துழாய் மாலையணிந்த நாராயணனை அடைந்த, வேறு ஒன்றுக்கும் இல்லாத சிறப்பினை உடைய, ஒரு தூப்புல் நகரில் வாழ்ந்த அனந்தசூரி என்ற திருநாமத்தினருடைய பழைய புகழ் சேர்ந்த திருக்குமாரனும், சொல்லி முடியாத அளவற்ற உயர்ந்த குணங்களை உடையவனுமாகிய சுவாமி தேசிகனைப் பற்றிக் கொள்.

(28) கூறிமுடியாக்குணத்தன் — எண்பெருக்கந்நலத்தினன், “ திசையனைத்தும், ஏறும்குணன்” (இராமாநுச நூற்றந்தாதி. 46) “ஏரார்குணத்தெம்மிராமாநுசன்.” -௸. 74); நாறுதுழாயான் – “நாற்றத்துழாய்முடி நாராயணன்”- (திருப்பாவை. 10.) “எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்ப், புரிமலர்த் துழாஅய் மேவன் மார்பினோய்” – (பரிபாடல் 13, 59-60. “நிறத்தால் எரியை யொத்த வெட்சிமலரை யிடையிட்டுக் கட்டின புரிமலர் நறுந்தார்த்துழாயை மேவலையுடைய மார்பினோய்.”), “நக்கலர் துழாஅய் நாறினர்க் கண்ணியை.” -(பரிபாடல். 4, 53. * பிணிவிட்டலர்ந்த துழாயது நாறிணராற் றொடுத்த கண்ணியையுடையை.”), “நாறிணர்த் துழாயோ னல்கி னல்லதை, ஏறுத லெளிதோ வீறுபெறு துறக்கம், அரிதிற் பெறுதுறக்க மாலிருங் குன்றம், எளிதிற் பெறலுரிமை யேத்துகஞ் சிலம்ப” – (பரிபாடல். 15. 15-18. துழாய் மாலையை யுடைய திருமால் அருள் புரிந்தாலல்லாமல் துறக்கம் அடைதல் எளியதாகுமோ ? அரிதிற் பெறுந்துறக்கத்தை எளிதிற்பெறச் செய்வதனால் திருமாலிருஞ்சோலை மலையை ஏத்தக்கடவேம்); நண்ணும் – நெருங்கும், அடையும், பொருந்தும், எதிர்ப்படும், சேரும் ; விறு – உயர்ச்சி, சிறப்பு பெருமை, பொலிவு, வெற்றி, வேறொன்றற்கில்லாவழகு, “அகிற், சேற ணிந்த முலைத்திரு மங்கைதன் வீற ணிந்தவன்.” – (இராமாவதாரம். பால காண்டம். ஆற்றுப்படலம், 2); தூப்புல் அநந்தாரியனார் தொல்புகழ் சேர்மைந்தன் – “வேங்கடேச கண்டாம்சரான இவர் கலி 4370-க்கு மேல் சுக்ல ௵ புரட்டாசிமீ ஞாயிற்றுக் கிழமை திருவோண நக்ஷத்திரம் சுக்ல ஏகாதசியில் ஸ்ரீ காஞ்சியில் அநந்தசூரிகளுக்குத் தோதாரம்மன் திருவயிற்றில் பன்னிரண்டு வருஷம் இருந்து அவதரித்தவர். இவரைப் புதன்கிழமையில் அவதரித்தவர் என்று சிலர் கூறுவர்.” – (அபிதாநசிந்தாமணி); “பிதா யஸ்யாநந்தஸூரி: புண்டரீகாக்ஷயஜ்வந: பெளத்ரோ யஸ்தநய ஸ்தோதாரம்பாயாஸ்தஸ்ய மங்கலம்.”- (ஸ்ரீநயினாராசார்யர் அருளிச்செய்த வேதாந்த தேசிகமங்களம். 3. அநந்தஸூரி என்கிற ஸ்வாமிக்கும் தோதாரம்மை யென்கிற தத்திவ்ய மஹிஷிக்கும் திருக்குமாரராயும் புண்டரீகாக்ஷ ஸோமயாஜிகளுக்குத் திருப்பேரனாராயும் திருவவதரித்தருளின ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் வாழ்க, யதிராஜ மாஹாநஸிகரான கிடாம்பியாச்சானுடைய ப்ரபெளத்ரியாய், ராமாநுஜாசார்யர் என்பவருடைய பெளத்ரியாய், ஸ்ரீரங்கராஜப் பிள்ளான் என்கிற பத்மநாபாசார்யருடைய புத்ரியாய், வாதிஹம்ஸாம்புவாஹாசார்யர் என்கிற கிடாம்பியப் புள்ளாருடைய ஸஹோதரியுமான மங்கை தோதாரம்மை); மைந்தனை – திருமகனை ; மூப்பு – முதுமை முன்னம் – முன்பே ; பற்று – பிடி அநந்தாரியர் – அநந்த சூரிகள், “புண்டரீகாக்ஷயஜ்வாவின் குமரர். தோதாரம்மன் புருஷர். திருவேங்கடமுடையான் கட்டளைப்படி திருவேங்கடஞ் சென்றிருக்கையில் சுவப்பனத்தில் திருவேங்கடமுடையான் பிராமணப் பிள்ளைபோல் வந்து திருமணி தர அதனை வாங்கி மனைவியிடந் தந்து அதனால் வேதாந்த தேசிகரைப் பெற்றவர். — (அபிதான சிந்தாமணி)

29. முத்தி அருளும்.

பற்றியடியிணையைப் பாவித்து நல்வடிவைச்
சுற்றிக் குணங்களையே சொல்லிப் – பத்தியுடன்
நிற்றியே னீமனமே நீள்வயல்சூழ் தூப்புலிறை
முத்தி யருளு முயன்று. (29)

(பொழி.) மனமே! நீ, பெரிய வயல்கள் சூழ்ந்துள்ள தூப்புல் நகர்த் தெய்வமாகிய தேசிகரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டும், அவரது திரு உருவை மனத்தால் தியானித்துக் கொண்டும், அவரது திருக்குணங்களையே, ஓயாது சொல்லிக் கொண்டும், பக்தியோடு வருந்தி, நிலையாக நிற்பாயேயானால், அந்த ஆசாரியப் பெருமான் நமக்குப் பரமபதத்தை அருளுவார்.

(29) பாவித்து– தியாநித்து, அநுஸந்தித்து; நல்வடிவு – திவ்யதிருமேனி, ‘ வடிவழ கார்ந்த வண் துப்புல்வள்ளல்’ – (பிள்ளையந்தாதி. 20), திருமேனிவருணனை – வெண்பா – ’வேண்டுவீ ரன்புபெறு வீரேப வக்கடலைத், தாண்டுவீர் ஞானத் தனிவிளக்கைத்-தூண்டுவீர், தானிவர்ண னையுரைக்குஞ் சாந்த வேதாந்தகுரு, மேனிவர்ணனையுரைக்க வே. தரு – இராகம் – முகாரி தாளம் சாப்பு – கண்ணிகள். (1) கதிர்வீசு மிரவிபோற் காந்தி சேருந்திவ்ய கள விக்கிரக வேதாந்ததேசிகரே, புதுமலர்ச்சியாகிய செந்தாமரை மலரைப் போன்ற பொன்னடியுள்ள – தேசிகரே. (2) களங்கமில்லாமல் மனோகரங்களாகிய திருக்கணைக்கால்களு மிலங்குந் – தேசிகரே, விளங்கி நிற்கிற நல்ல முழந்தாளுடைய திருவேங்கடநாதார்ய – தேசிகரே. (3) திருவரையுமதிற் சார்த்தின திருப்பரிவட்டச் சேர்த்தியாலும் விளங்குந் – தேசிகரே, திருநாபிக்கமலமுந் திருவுத்தரியச் சேர்வும் சிறந்து விளங்குமெங்கள் – தேசிகரே. (4) மருவுமுந்நூலுந் திருமணிவடத்துடன் கூடும் மார்பினணிதுலங்குந் – தேசிகரே, திருவாழி திருச்சங்குந்திகழ் புஜங்களுடனே செழிப்பான நிகமாந்த – தேசிகரே. (5) பவித்ரங்களையணிந்த பங்கஜகர தீர்க்க பாணியுகம் பொருந்துந் -தேசிகரே, குவித்தே திருமந்திரமுங் கெண்டதுவய முச்சரிக் குந்திருப்பவளவாய்த் – தேசிகரே, (6) கிருபைக்குள்ளாய்க் கடாக்ஷிக்கிற திருக்கண்களென்றே கீர்த்திக்கவே வளருந் – தேசிகரே, உருகித் தற்காலங்கண்டு சார்த்தின பனிரண்டு ஊர்த்துவ புண்ட்ரங்களேற்குந் – தேசிகரே. (7) மண்டலந்தனிற் புகழ்கொண்ட கண்டாவதாரர் மவுலிமூடத் துலங்குந் – தேசிகரே, தொண்டர்கள் மனத்தன்பு கொண்டிடுஞ் சர்வதந்திர சுவந்தராரியரெங்கள் – தேசிகரே. கட்டளைக்கலித் துறை. வடத்தேறு கண்டுயில் கொண்டான் மடுவின் மணியரவின் படத்தேறு தாண்மிதித்தாடியங் கோவியர் பாரமுலைக் குடத்தேறு மார்பர்தங் கண்டாவதாரரைக் கூப்புகையர், கடத்தேறுவார்கள் கவிவாதிசிங்கவரைக் கண்டவரே.” – (ஸ்ரீமத் வேதாந்த தேசிகவைபவப்பிரகாசிகைக் கீர்த்தனை); நிற்றியேல் – நிலைநிற்பாயாகில் முயன்று – வருந்தி; முத்தி – “இது சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என நான்கு. இவற்றுள் முதற்கூறிய மூன்றும் பதமுத்தி, மற்றது உண்மை முத்தி. இவற்றுள் சாலோகம் அவ்வுலகமடைந்து நித்தியசுகம் அநுபவித்தல். சாமீபம் இறைவனுக்கு அருகிலிருந்து சேவித் திருத்தல். சாரூபம் அவனது உருவத்தையடைந்து ஆநந்த மடைதல். சாயுச்சியம் அவ்விறைவனுடன் கலந்துங் கலவாமலும் பரமானந்தமனுபவித்தல். இவற்றை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானத்தில் முதிர்ச்சிபெற்றவர் அடைவர்” -(அபிதான சிந்தாமணி), மோக்ஷம். “முத்திக்கு அருள்சூட” – (தேசிக மாலை. அமிருதரஞ்சனி 3. மோக்ஷத்திற்குக் காரணமான பகவானுடைய கிருபையைப் பெறுவதற்கு) “பத்தருக்கு நிஷித்தகாம்ய கர்த்ருத்வம் ஸம்ஸாரஹேது. தத்வஞ்ஞாநமூல நிவ்ருத்தி தர்மகர்த்ருத்வம் மோக்ஷஹேது. பத்தன் முன்பு பண்ணின பந்தங்களுக்கெல்லாம் தன்னதிகாராநுகுணமாக ப்ரபத்யாதி ப்ராயச்சித்தம் பண்ணி, மேலபராதம் பண்ணாதே ப்ராப்தகர்மத்தையும் ஒருவழியாலே கழித்து முக்தனாம்.” – (தத்வ பதவி), “முத்திதரும், மூல மறையின் முடிசேர் முகில்வண்ணன்” – (தேசிகமாலை, அமிருதரஞ்சனி. 7), “முத்தி வழி தந்தார்” – (தேசிகமாலை. அமிருதரஞ்சனி. 9), “முத்திதரு மெதிராசர் பொன்னடி.” – (தேசிகமாலை, பிரபந்தசாரம். 16).

30. பயம் போகும்.

முயன்று முகுந்தன் மலரடிமே லன்பால்
பயந்துறந்தார் பார்த்திருக்க முன்னம் – உயர்ந்த
துணிவான் மணிமாடத் தூப்புல்வந்த சோதி
பணிவோம்யாம் போமே பயம். (30)

(பொழி.) நாங்கள் உயரமும், ஒளியும், சிறப்பும், அழகும் கொண்ட மாளிகைகள் நிறைந்த தூப்புல் நகரில் அவதரித்த ஒளியாகிய வேதாந்த தேசிகரை வணங்குவோம். (அதனால்) நாராயணனது தாமரை மலர்போன்ற திருவடிகளில், அன்பால் முயற்சி செய்து, தமது அச்சத்தைத் துறந்த ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்க வணங்குவதற்கு முன்னமே, எங்களது அச்சம் போய்விடும்.

30) முகுந்தன் – விட்டுணு. “முகுந்தன் வாசகங் கேட்பதன் முன்னமே” – (பாரத படையெழுச்சி. 2) துணிவு – ஆண்மை, தெளிவு, நிச்சயம், மறங்கலங்காமை; சோதி – தேஜஸ்வி. “திருமழிசை வந்த சோதி”. – (தேசிகமாலை, அதிகார சங்கிரகம். 1.) பணிவோம் – வணங்குவோம். பயம் – அச்சம்; போம் – போகும்.

31. சிந்தித்தலின் நன்மைகள்.

பயமாயினமாயும் பாவங்கள் வீயுஞ்
சயமனத்துந் தாமேகை கூடும் – துயரொன்றும்
வாராது வண்மையால் வாதிசிங்க மிங்குதித்த
சீரொன்று சிந்திப்ப ரேல்      (31).

(பொழி.) தமது வள்ளல் தன்மையால் இம்மண்ணுலகத்தில் வந்து அவதரித்த கவிவாதி சிங்கமாகிய வேதாந்த தேசிகரது சிறந்த உபதேச மொழிகளில் ஏதேனும் ஒன்றை மனத்தில் வைத்துச் சிந்திப்பார்களேயானால், அவரது அச்சம் அனைத்தும் அகலும். அவர் அறியாது செய்த பாபங்கள் எல்லாம் அழிந்துவிடும். அவருக்குக் கிடைக்க வேண்டிய வெற்றிகள் அனைத்தும், எந்தவித முயற்சியும் இன்றி, தாமாகவே வந்து சேரும். துன்பம் எதுவும் வராது.

31) மாயும் – அழியும்; பாவம் – அக்கிரமம், விலக்கப்பட்ட தீவினை வடிவமாய்த் துக்க சாதனமாயிருப்பது; வீயும் – கெடும்; துயர் – கிலேசம், துன்பம்.

32. உள்ளத்து உறையும்.

சிந்தித்து வாதிசிங்கத் தேசிகர் தம்வடிவை

வந்தித்தவர்மலர்ப் பாதத்தை -புந்தியில்வைத்

துள்ளுவர ருள்ளத் துறையுமே யும்பர்கோன்

தெள்ளியார் சிந்திக்குந் தேசு.   (32)

(பொழி.) தேவர்கள் தலைவனாகிய இந்திரனும், ஞானிகளும், மனத்தில் வைத்து தியானிக்கும் திருமால், கவிவாதி சிங்கமாகிய தேசிகரது திருவடிவைத் தியானித்து அவரது மலர் போன்ற திருவடிகளை வணங்கி மனத்தில் வைத்து நினைத்துக் கொண்டிருப்பவர்களது நெஞ்சில் நிலையாக வந்து தங்கிக் கொள்வார்.

(32) வந்தித்து – வணங்கி, வழிபாடு செய்து; புந்தி – மனம், புத்தி, அறிவு; தெள்ளியார் – அறிவுடையார், “திருவேறு தெள்ளியராதலும் வேறு” (திருக்குறள், ஊழ். 4. ஆதலாற் செல்வமுடையவராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு.) “உள்ளுவார் உள்ளத் துறையுமேயும்பர்கோன், தெள்ளியார் உள்ளுவாருள்ளத்து உளன் கண்டாய்” – (மூன்றாம் திருவந்தாதி 40), “உள்ளுதலுள்ளி யுரைத்த லுரைத்ததனைத் தெள்ளுத லன்றே செயற்பால” – (திருவள்ளுவமாலை 17. ஆதலால், நாம் இந்நூலைக் குறித்துச் செயக்கடவன நாம் இதன் பொருளைச் சிந்தித்துக் கொள்ளுதலும், சிந்தித்துப் பிறருக்கு அதனைச் சொல்லுதலும், பிறராலே சொல்லப்பட்ட அதனைத் தெளிதலும் அன்றே. உள்ளுதல் எனவே கேட்டலும், தெளிதலெனவே அவ்வாறொழுகலும் அடங்கின.) “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார், வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்” – (தையொருதிங்கட்பாமாலை. 4-1.) தேசு – ஞானம், பெருமை.

33. கண் காணக் கருதும்

தேசுடைய வாழியுஞ் சங்கமுங் கையேந்தி

வாச மலர்த்துழாய் வாழ்மார்பன் – காசினியிற்

காணநின் றாலுங் கவிவாதி சிங்கனையே

காணக் கருதுமென் கண்.  (33)

(பொழி) ஒளியை உடைய சக்கராயுதத்தையும், வலம்புரிச் சங்கத்தையும் கையில் ஏந்தியுள்ள மணமான மலர்த்துழாய் தங்கிய திருமார்பினனாகிய நாராயணன், இந்த மண்ணுலகத்தில் யாவரும் பார்க்குமாறு நின்றாலும், எனது கண், கவிவாதி சிங்கமாகிய வேதாந்த தேசிகரையே கண்டு மகிழ்வதற்கு ஆசைப்படும்.

(33) வாசம் –வாசனை; காசினி – பூமி. “காசினிமேல் வாதியரை வென்ற ரங்கர் கதியாக வாழ்ந்தருளு மெதிரா சா” – (தேசிகமாலை, பிரபந்தசாரம் 14) “கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் உன்தன், மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்” (இராமாநுச நூற்றந்தாதி 104); கருதும் – ஆசைப்படும். “கண்கருதிடுங்காண” – (இராமாநுச நூற்றந்தாதி 102)

  1. காட்சியும் கேள்வியும்

கண்ணவரை யேகாணும் காதவர்சீ ரேகேட்கும்

எண்ணமவர் தொல்புக ழேயெண்ணும் – திண்ணம்

கவிவாதி சிங்கக் கடவுளையே நண்ணி

அவியாத காதலடைந்து. (34)

(பொழி.) கவிவாதி சிங்கம் என்று போற்றப்படுகிற தெய்வமாகிய தேசிகரையே சேர்ந்து தணியாத பக்தியுடன் கலந்து, எனது கண் அந்த ஆசாரியரது திருவுருவத்தையே கண்டுகொண்டிருக்கும். எனது செவி அவரது சிறப்பையே கேட்டுக்கொண்டிருக்கும். மனம் பழமையான புகழையே நினைத்துக் கொண்டிருக்கும். இது எனது உறுதியாகும்.

(34) கண்ணவரையே ………… எண்ணும் —  “வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி ……. தொல்லைமால்தன்னை, வழாவண் கைகூப்பி மதித்து.” (நான்முகன் திருவந்தாதி. 11); காதல் – பக்தி.

  1. வாழ்க்கை

அடைந்து மடநெஞ்சே யன்பா லவனைக்

கிடந்து மலரடியின் கீழே – தொடர்ந்தென்றும்

தூயமலர்ச் சோலைசூழ் தூப்புனகர் வந்துதித்த

மாயவனை யேவணங்கி வாழ்.      (35)

(பொழி.) இளமைத் தன்மை வாய்ந்த மனமே! தூய்மையான மலர்களைக் கொண்ட சோலைகள் சுற்றியுள்ள தூப்புல் நகரில் வந்து அவதரித்த வேதாந்த தேசிகரையே எல்லாக் காலமும் தொடர்ந்து சென்று, அன்பால் ஆசாரியரைச் சேர்ந்தும், அவரது மலர் போன்ற திருவடிகளின்கீழ் அசையாமல் கிடந்தும், அவரையே வணங்கி வழிபாடு செய்தும் வாழ்வாய். அதுதான் சிறந்த வாழ்க்கையாகும்.

(35) அன்பாலவனை – “அன்பு ஆழியானை அணுகென்னும் நா அவன்தன், பண்பாழித்தோள் பரவியேத் தென்னும் – முன்பூழி, காணானைக் காணென்னும் கண் செவிகேளென்னும், பூணாரம் பூண்டான் புகழ்.” (முதல் திருவந்தாதி 72); அடைந்து மடநெஞ்சே யன்பாலவனை – “என்றும் விடலாழி நெஞ்சமே! வேண்டினேன் கண்டாய், அடலாழி கொண்டான் மாட்டு அன்பு.” – (முதல் திருவந்தாதி .71); மாயவன் – “மாயவனுந்தம்முனும்” – (திணைமாலை நூற்றைம்பது 58)

  1. காழ்ச்சி

வாழ்ச்சி யிதுநெஞ்சே வாதிசிங்கத் தேசிகர்தம்

காழ்ச்சியுணக் குண்டா மேற்கன்மந் – தாழ்ச்சியொன்றும்

சாரா வகைதீருஞ் சன்மதி துயர்தொலையும்

சீரார் சிரீதரனைச் சேர்ந்து.     (36)

(பொழி.) மனமே! உனக்கு, வாதி சிங்கமாகிய தேசிகரிடத்து வைராக்கியம் (உறுதி) ஏற்படுமானால், நாம் செய்த தீய கர்மாக்கள் அனைத்தும் தவறு எதுவும் சேராவகையில் நீங்கிவிடும். பிறவியாகிய துன்பமும் அழிந்துவிடும். இது சிறப்புமிக்க திருமகள்வாழ் மார்பினனாகிய நாராயணனை அடைந்த வாழ்க்கையாகும்.

(36) வாழ்ச்சி – வாழ்நாள் ; இதுநெஞ்சே – “வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும்.” – (தேவார. திருநாவுக். தனித் திருத். 7); காழ்ச்சி – வன்மை; தாழ்ச்சி – தவறு, தாழ்வு நீட்டிப்பு; சிரீதரன் – லக்ஷ்மியைத் திருமார்பில் தரிப்பவன். “617. ஸ்ரீதர: – மணிக்கு ஒளிபோலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்துக்குச் சுவை போலவும் இயற்கையாகவுள்ள ஸம்பந்தத்தினால் எப்பொழுதும் லக்ஷ்மியைச் சேர்ந்திருப்பவர். “யோக்யனாயிருப்பவன் கீர்த்தியை எப்படி விடமுடியாதோ அப்படித்தான் இந்தப் பிராட்டியை விட முடியாது” (நஹிஹாதுமியம் சக்யா கீர்த்தி ராத்மவதோயதா) என்பது ஸ்ரீமத் ராமாயணம்.” – (ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாம பாஷ்யம்.)

(37) வாழ்த்து
சேரும் புகழோன் றிருவத்தி யூர்வரதன்
காரொத்த வண்ணம் கழலிணையைத் – தார்மன்னுஞ்
சென்னியில் வைத்தென்றுஞ் சிறக்கு மணிதூப்புல் :
மன்னனையென் னெஞ்சமே வாழ்த்து. (37)

(பொழி.) எனது மனமே! திருஅத்தி ஊர் என்று சொல்லப்படுகிற காஞ்சிபுரத்தை அடைந்த பெரும் புகழுடையவனும் கேட்டார்க்குக் கேட்ட வரங்களைத் தருபவனும், மேகத்தை ஒத்த நீல நிறத்தை உடையவனுமாகிய நாராயணனது திருவடிகளை எல்லாக் காலத்திலும், தமது, மாலை நிறைந்த தூப்புல் நகர் அரசனான தேசிகனை தேசிகனை வாயார வாழ்த்துவாய்.
(37) திருவத்தியூர் வரதன் – “உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்” – (இரண்டாந்திருவந்தாதி 95), “அத்தியூரான் புள்ளையூர் வான்” – (இரண்டாந்திருவந்தாதி. 96), “அத்திகிரி, யிடமுடைய வருளாளர்.” – (தேசிகமாலை, அடைக்கலப் பத்து. 2); “சீர்அத்திகிரித்திருமால்” – (தேசிகமாலை. அருத்த பஞ்சகம். 3); “திருமால் திருவத்தி நகரானே” – (௸ ௸. 6) வரதன் கழலிணையை…. மன்னன்– “உத்தரவேதியுள் வந்துதித்த செய்யவண் மேவிய சீரருளாளரைச் சிந்தை செய்யும் மெய்யவன் எந்தை தூப்புற்பிள்ளை” – (பிள்ளையந்தாதி. 4).

(38) நல்வினை
வாழ்த்திக் கவிவாதி சிங்கன் மலரடியைத்
தாழ்த்தித் தலையையதன் கீழே – சூழ்த்தென்றும்
தொல்புகழே சிந்திப்பார் சூழ்வினையை மாற்றுவரே
நல்வினையா.நானிலத்தி லீது. (38)

(பொழி.) கவிவாதி சிங்கம் என்று பலராலும் போற்றப்படுகின்ற தேசிகரது தாமரை மலர் போன்ற திருவடியை வாயார வாழ்த்தியும் அந்தத் திருவடியின் கீழே தலையைத் தாழ்த்தியும், எல்லாக் காலத்தும் அவரை வலம் செய்தும் பழைமையான புகழையே சிந்தித்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்கள், தீவினையை இல்லாதபடி மாற்றிவிடுவார்கள். இதுவே, இந்த உலகத்தில் ஆசாரிய அடியார்கள் பெறும் நல்வினையாகும்.
(38) நானிலம் – நால்வகை நிலம்; அவை: குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலென்பன. இப்பகுப்புப்பற்றிப் பூமிக்கு நானிலம் எனப்பெயர் கூறுவர் ; ஈது – இது.

(39) உபாயம்

ஈதே யுயிர்க்கிதமு மெத்தவமும் மெப்பொருளும்
ஈதேபே ரின்ப மிகுவீடும் — தீதறுசீர்த்
தூப்புனகர் வந்துதித்த தொல்புகழ்சே ராரியன்பேர்
கோப்புடனே கூறுவதா முற்று.    (39)

(பொழி.) குற்றம் இல்லாத சிறப்பினை உடைய தூப்புல் நகரில் வந்து தோன்றிய பழம் புகழ் நிறைந்த ஆசாரியன் திருப்பெயரை உபாயமாகக் கொண்டு, அந்த ஆசாரியனோடு பொருந்தி நின்று கூறுவது. இதுவே, உயிர்க்கு நன்மையும் எவ்வகையான தவமும், எல்லா விதமான பொருளுமாகும். பேரின்பம் மிக்க பரமபதமும் இதுவேயாகும்.

(39) இதம் – ஹிதம், மோக்ஷத்திற்கு ஸாதநமாக அநுட்டிக்கப் பெறும் உபாயம் ; பேரின்பமிகுவீடு – அந்தமில் பேரின்பமளிக்கும் மோக்ஷம்.

 

(40) நண்ணுவார்.

உற்றுநின் சேவடியை யுய்வதோர் காரணத்தால்
பற்றொன்று மின்றிப் பவக்கடலின் – தொத்தறுப்பார்
வேதமுடித் தேசிகனே வேத விழுப்பொருளாம்
மாதவனை நண்ணுவரே மன்.        (40)

(பொழி.) வேதங்களை உன் திருமுடியில் ஏற்றிக்கொண்ட ஆசாரியப் பெருமானே! பிழைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் , உனது செம்மையான திருவடிகளைச் சேர்ந்து ஒருவிதமான உலகப் பற்றும் இல்லாமல் பிறவியாகிய கடலின் தொடர்பினை நீக்கியவர், வேதங்களின் விழுப்பொருளாக விளங்கும் மாதவனாகிய நாராயணனை அடைவார்கள். இஃது உறுதி.

(40) உற்று – அடைந்து, பொருந்தி; சேவடி – சிவந்த திருப்பாதம்; உய்வது – உஜ்ஜீவிப்பது; பற்று – ஆசை, கதி, உரிமை, உபாயம்; பவக்கடல் – ஸம்ஸாரஸாகரம், பிறவிப் பெருங்கடல்; தொத்து – ஸம்பந்தம், தொடர்ச்சி, சார்பு;  விழுப்பொருள் – சிறந்தநுண்பொருள்; வேதவிழுப் பொருளாம் மாதவன் – “வேதாந்தவிழுப்பொருளில் மேலிருந்தவிளக்கை.” – (பெரியாழ்வார் திருமொழி 4-3-11); மாதவன் – திருமால், 73. ஸ்ரீதேவியின்கணவர். திருமகள் தம்மைவிட்டு என்றும் அகலாமல் இருக்கப்பெற்றவர். ஞானம், சக்தி, பலம் ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்களும் சேர்ந்து உருவெடுத்திருப்பவளும், பகவானுடைய எல்லாச்சக்திகளுக்கும் தலைமையாக உலகங்களை நடத்தும் பராசக்தியும், பகவானுடைய மற்றச்சக்திகளை நடத்திக்கொண்டு சராசரங்கள் அடங்கிய உலகமனைத்தையும் வ்யாபித்திருப்பதனால் அனந்தையென்று சொல்லப் படுகிறவளும், தயாமூர்த்தியுமாகிய திருமகளுக்கும் ஸ்வாமி யென்பது. 169. “மா” எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் ; மெளனம், த்யானம், யோகம் இம்மூன்றும் பொருந்தினவர். 741, லக்ஷ்மிக்குக்கணவர். உலகங்களுக்கு லக்ஷ்மி தாயும் தாம் தந்தையுமாக உறவாயிருப்பவர் என்பது; மதுவென்னும் யாதவகுலத்தில் அவதரித்தவர் ; மெளனம், தியானம் யோகம் இம்மூன்றும் உடையவர். “பாரதனே! மெளனத்தினாலும் தியானத்தினாலும் யோகத்தினாலும் நான் மாதவனாகிறேன்” என்று ஸ்ரீமஹாபாரதம், உத்தியோகபர்வத்தில் சொல்லப்படுகிறது.”- (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்); நண்ணுவரே – கிட்டுவர், பொருந்துவர்; மன் – அசைநிலை, திடம், மிகுதி

  1. வம்பு கற்றார்.

மன்னு மறையனைத்து மாகுருவின் பாற்கேட்டாங்
குன்னியதனுட்பொருள்க ளத்தனையுந் -துன்னுபுகழ்
பெற்றலுந் தூப்புற் பெருமானை நண்ணாதார்
கற்றாரே காசினியில் வம்பு.           (41)

(பொழி.) நிலையான வேதங்கள் எல்லாவற்றையும் தமது சிறந்த குருவினிடத்தில் காதாரக் கேட்டு, அதன் உள்ளடங்கிய பொருள்கள் முழுவதையும் மனத்தில் நினைத்து, நெருங்கிய புகழைப் பெற்றிருந்தாலும், தூப்புல் நகரில் அவதாரம் செய்த ஆசாரியப் பெருமகனாகிய வேதாந்த தேசிகரை, ஒன்றிக் கலவாதவர், இந்த உலகத்தில் பயனற்றவற்றைக் கற்றவரேயாவர்.

(41) மன்னு – திடமான, நிலைபெற்ற, பொருந்தின; மாகுரு – மாதேசிகன்; உன்னி –நினைத்து; துன்னு – பொருந்திய, மிகுதியான; நண்ணாதார் – அடையாநவர், ஒன்றிக்கலவாதவர்; வம்பு –வஞ்சனை, வீம்பு; “வய்யம் சுமப்பதே வம்பு.”

 

  1. அடிமை அருள்வான்.

வம்பார் குழன்மாதர் வான்கலவி யாசைதன்னால்
அம்பாய பட்டலைந்து நின்றேனைத் – தன்பாத
தாமரைமேற் காதலையே தந்தடிமை கொண்டருள்வான்
தூயமனன் றுாப்புலவ னின்று.      (42)

(பொழி.) வாசனை நிறைந்த கூந்தலை உடைய பெண்களது சிறந்த கலவியாகிய ஆசையினால், மன்மதனது மலராகிய அம்பு பாயப்பட்டு, வீணாகத் துன்பத்தில் அலைந்து திரிந்து கொண்டு நின்ற என்னை, இன்றைய தினம், தூய்மையான மனத்தை உடையவனும், தூப்புல் நகரில் தோன்றியவனுமாகிய சுவாமி தேசிகன் தனது திருவடிகளாகிய தாமரை மலரின்மேல் பக்தி கொள்ளச் செய்து, என்னைத் தனது அடிமையாக ஏற்றுக்கொண்டு அருளினான்.

(42) வம்பு –வாசனை; வம்பார்குழன்மாதர் – “வம்புலாம் கூந்தல் மனைவி” – (பெரிய திருமொழி 1-6-4); வான் – வலிமையான; கலவி –கலத்தல்; காதல் – ஆசை.

  1. எண்ணேன்

இன்றுமுதல் யாவரையு மெண்ணே னிறையென்று
சென்றுசே ணாடர் மிகப்போற்றக் – குன்றெடுத்த
வேங்கடமால் வித்தகத்தால் வேதாந்த தேசிகனாய்
ஈங்குதித்த வேற்ற மறிந்து.             (43)

(பொழி.) உயர்ந்த வான் நாட்டவரான தேவர்களும் போற்றிப் புகழுமாறு, ஆயர்பாடிக்குச் சென்று, கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்த, திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் திருமால், தமது ஞானத்தால் வேதாந்த தேசிகனாக இந்த உலகத்தில் அவதரித்த உயர்வை அறிந்து கொண்ட நான் வேறு யாரையும் இன்றுமுதல் பரமாத்மாவாக எண்ணமாட்டேன்.

(43) இன்றுமுதல் – “இன்று முதலாக என் நெஞ்சே.” – (முதல் திருவந்தாதி, 40) இறை – பரமாத்மா; சேண் – உயர்ச்சி, தூரம்; வித்தகம் –ஆச்சர்யமான குணசேஷ்டிதம்; உதித்த – அவதரித்த; ஏற்றம் – தகுதியாயிருக்குந்தன்மை.

  1. என்றும் காப்பார்.

அறிந்தறிந்து நற்கலைக ளாய்ந்தப் பொருளிற்
செறிந்தபெருஞ் சிந்தையராய்ச் செவ்வே – சிறந்தபுகழ்த்
தூப்புனகர் வந்துதித்த தூய்மனத்தன் பாதமே
காப்பென்பார் காப்பரென் றும்.    (44)

(பொழி.) நல்ல ஆன்மிக ஞானம் நிறைந்த கலைகளை, நன்றாகத் தெரிந்துகொண்டு, அதன் உட்பொருளை ஆராய்ந்து, அந்தப் பொருளில் பொருந்திய பெருமை நிறைந்த மனத்தவராக நின்று, நேர்மையாக, சிறந்த புகழுடைய தூப்புல் நகரில் வந்து தோன்றிய தூய்மையான மனத்தை உடைய தேசிகரது திருவடியே, தமக்குப் பாதுகாப்பு என்று சொல்லும் அன்பர்கள், அந்த ஆசாரியரால் எல்லாக் காலத்தும் பாதுகாக்கப் படுவார்கள்.

(44) செறிந்த – பொருந்திய, நிறைந்த; சிந்தை – மனம், நினைவு; செவ்வே – நேர்மையாக; காப்பு – பாதுகாவல், ரக்ஷை.  

  1. இன்பக் கதி.

என்று மினியெமக்கோ ரின்பக் கதியிதுவே
குன்ற மெடுத்தபிரான் குற்றமில்சீர் – நன்றாக
வேத்துங் கவிவாதி சிங்கரையே யெப்பொழுதும்
நாத்தழும்ப நாமுரைப்போ நன்று.  (45)

(பொழி.) கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிய குற்றம் இல்லாத சிறப்பை நன்றாகப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் கவிவாதி சிங்கராகிய வேதாந்த தேசிகரையே எப்பொழுதும் நாம் சிறப்பாக, நா, தழும்பு ஏறும் அளவுக்குப் பேசுவோம். இந்த நற்செயலே, இனி, எக்காலத்தும் எங்களுக்குப் பேரின்பம் அளிக்கும் பரமபத வாழ்வாகும்.

(45) கதி – உபாயம், பலன், வழி, ப்ரகாரம் ; பிரான் – ஸ்வாமி, உபகாரி நாத்தழும்ப – “நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால், ஏத்த” –(பெரியதிருமொழி. 1-7-8)

 

  1. இப்போது பெற்றது

நன்றிதுவாந் தீததுவா மென்றொன்று நன்கறியா
தின்றறுதி யாகவே யென்னெஞ்சம் – வென்றிமிகும்
வேதமுடித் தேசிகனை வேறாக வேத்தியபின்
தீதில்மதி பெற்றதிப்போ தீது.    (46)

(பொழி.) எனது மனம், நல்லது இதுதான் என்றும், தீமையானது அதுதான் என்றும், இன்றைய தினம் உறுதியாகவே நன்றாகத் தெளியாது. ஆனால், வெற்றி மிகுந்த, வேதமுடித் தேசிகனாகிய ஆசாரியரை உயர்ந்தவராகக் கொண்டு போற்றிப் புகழ்ந்த பிறகு, தீமையில்லாத தெளிந்த அறிவைப் பெற்றுக் கொண்டுவிட்டது. இந்த்த் தெளிவு இப்பொழுது நான் பெற்றுக் கொண்டதாகும்.

(46) உறுதி – உறைப்பு ; வென்றிமிகும் வேதமுடித் தேசிகன் – “வென்றிப் புகழ்த்திரு வேங்கடநாத னெனுங் குரு” -(பிள்ளையந்தாதி. 5); தீதில்மதி – “துய்யமதி” – (உபதேசரத்தின மாலை. 12); மதி – ஞானம், புத்தி.  “உன்னைப் பிறரறியார் என்மதிக்கு, விண்னெல்லாமுண்டோவிலை” – (நான்முகன் திருவந்தாதி. 51)

  1. நிலத்தேவர்

ஈதேயாம் வேண்டும் பயனிதுவே சாதனமும்
ஈதேமற் றெல்லா மெமக்கென்று – சாதுவராய்த்
தண்புனல்சூழ் தூப்புற்கோன் றாளிணையே நண்ணுவார்
மண்மிசைவாழ் வானவரே மற்று.     (47)

(பொழி.) நாம் விரும்பும் பலன் இதுவே. விரும்பும் உபாயமும் இதுவே. மற்றைய எல்லாமும் எங்களுக்கு இதுவேயாகும் என்று எண்ணிக்கொண்டு சாந்தமான குணமுடையவராய், குளிர்ந்த நீர் சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய தலைவனாகிய தேசிகரது திருவடிகளைச் சேர்ந்தவர் இந்த மண்ணுலகத்தில் வாழும் தேவரேயாவர்.

(47) சாதனம் – உபாயம்; சாதுவராய் –  “சாதுவராய்ப் போதுமின்கள்” – (நான்முகன் திருவந்தாதி. 68); மண் மிசைவாழ்வானவர் – பூசுரர்; மற்று – அசைநிலை.

  1. வினை தோற்றாது.

மற்றொன்றும் யான்வேண்டேன் மானிடர்காண் மாநிலத்துக்
குற்றமில்சீர்த் தூப்புனகர்க் கோமான்றன் – எத்திசையும்
கொண்டாடி யேத்துங் குணங்களுக்கே யெஞ்ஞான்றுந்
தொண்டானேன் றோற்றா வினை .                 (48)

(பொழி.) மக்களே! இந்தப் பெரிய நில உலகத்தில் மற்று எதையும் நான் விரும்ப மாட்டேன். குற்றம் இல்லாத சிறப்புடைய தூப்புல் நகரில் அவதரித்த தலைவனாகிய சுவாமி தேசிகனது, எல்லாத் திக்குகளிலும் கொண்டாடிப் போற்றுகின்ற குணங்களுக்கே, எல்லாக் காலத்திலும் தொண்டனாக ஆனேன். அதனால் எனக்குத் தீவினைகள் (பாவம்) எதுவும் தோன்றாது.

(48) மற்றொன்றும் யான்வேண்டேன் –  “மற்றொன்றும் வேண்டாமனமே ” – (திருமாலைத்தனியன்) ; தொண்டு – அடிமை;  “குணங்களுக்கே யெஞ்ஞான்றுந் தொண்டானேன் –  “உயர்வறவுயர் நலமுடையவன் துயரறுசுடரடிதொழு தெழப்பாராயென்கிறார்” ;  “அஹமஸ்யாவரோப்ராதா குணர் தாஸ்யமுபாகத” என்னுமாபோலே : இளையபெருமாளை ‘நீர் இவர்க்கு என்னாவீர்?’ என்ன,  ‘பெருமாளும் ஒருபடி நினைத்திருப்பர், நானும் ஒருபடி நினைத்திருப்பேன்” என்றார் ; “அவர் நினைத்திருக்கும்படியென் ? நீர் நினைத்திருக்கும்படியென் ?” என்ன, ‘அவர் தம்பின்பிறந்தவனென்றிருப்பார்; நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாயிருப்பன்’  என்றாரிறே அப்படியே இவரும் “உயர்வற வுயர்நல முடையவன் துயரறு சுடரடி தொழுதெழப்பாராய் நெஞ்சே!” என்கிறார். இவர் தாம் முற்படக்குணங்களிலே யிழிவானென்? என்னில் தாம் அகப் பட்டதுறை அதுவாகையாலே இவரைக் குணத்தையிட்டாயிற்று வணங்குவித்தது.” – (திருவாய்மொழி 1-1-1, ஈடு.)

  1. சேர்த்தார் பெறும் பயன்.

வினையனைத்துந் தீருமே வேமே துயரம்
மனைமனைவி யாசையுமா ளும்மே – தனையுணர்ந்து
செங்கமல நாபனையும் சேரலா மேவாதி
சிங்கரைத்தன் சிந்தைதனிற் சேர்த்து.              (49)

(பொழி.) வாதம் செய்யும் எதிரிகளுக்குச் சிங்கமாகத் தோன்றும் வேதாந்த தேசிகரைத் தனது மனத்தில் வைத்து, தியானித்தால், கர்மங்கள் எல்லாம் ஒழியும், துன்பங்கள் யாவும் வெந்துவிடும்; வீட்டில் உள்ள மனைவிமேல் கொண்டுள்ள ஆசையும் இல்லாமல் போகும்; தன்னை நன்றாக உணர்ந்து, செந்தாமரைமலர் போன்ற திருஉந்தியை (தொப்பூழ்) உடைய நாராயணனையும் அடையலாம்.

(49) வினை – கருமம்; தீரும் – ஒழியும் நீங்கும்; துயரம் – துன்பம்; வேமே – எரிந்து போம்; மனை – வீடு, இரண்டாயிரத்து நானூறு குழிகொண்ட நிலமென்றும், பதினாறரைக்காற் குழிகொண்ட நிலமென்றுங் கூறுவர். மனைவி – நாயகி; மனை மனைவியாசை – மண்ணாசை, பெண்ணாசை; மாளும் – இறந்துபடும்; தனையுணர்ந்து — சேதநன் நித்யனாய் அணுவாய் ஜ்ஞாநாநந்தவிலக்ஷணனாய் ஜ்ஞாநகுணகனாய் ஏகரூபனாய் பகவத் சேஷபூதனாயிருக்கும் இயல்பை நன்கு தெளிந்து;  செங்கமல நாபன் – பத்மநாபன், பற்பநாபன், விஷ்ணு. பத்மநாப:– 48. பிரம்மதேவருக்கும் பிறப்பிடமான காலரூபமான கமலத்தை நாபியில் உடையவர்; பகவானுடைய நாபியில் புஷ்கரமுண்டாகிறது; “புஷ்கரம், புண்டரீகம், பத்மம், சக்ரம் என்னப்படுவது காலம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 198. நாபியில் பத்மத்தையுடையவர்; மேற்சொல்லிய பொன்மயமான கமலத்தை நாபியில் உடையவர். “யோகநித்ரை செய்துகொண்டிருந்த அந்தப் பகவானுடைய நாபியில் பூமிரூபமான சிறந்ததும் அற்புதமுமான அஷ்டதளபத்மம் ஒருகால் ஸங்கல்பமாத்திரத்தினால் உண்டாயிற்று. மேருமலையானது அதன் பொன்மயமான காயென்று சொல்லப்படுகின்றது” என்று கூறப்பட்டுள்ளது. 347. பதுமம்போன்ற நாபியை உடையவர் – (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம்); சிந்தை – மனம்.

 

  1. வைப்பார்

சேர்ப்பரேற் றந்நெஞ்சிற் சிக்கெனவே சீராருந்
தூப்புனகர் வந்துதித்த தூயவனைக் – காப்பரவர்
காசினியி லுள்ளாரைக் கன்ம மறுத்திட்டு
மாசில்மன மெய்தவும்வைப் பார்.                 (50)

(பொழி.) தமது மனத்தில், சிறப்பு நிறைந்த தூப்புல் நகரில் அவதாரம் செய்த தூய்மையான மனம் பெற்ற தேசிகரை நன்றாகச் சேர்த்து வைத்தால், அவரை, அந்த ஆசாரியர் பாதுகாப்பார். மேலும், இந்த மண்ணுலகத்தில் உள்ள மக்களது கருமங்களை ஒழித்து, அவர்களைக் குற்றம் இல்லாத மனத்தை அடையவும் வைப்பார்.

(50) காப்பர் – ரக்ஷிப்பர்; மாசில் மனம் – குற்றமற்ற மனம்,  “மாசில் மனந்தெளி முனிவர்” – (தேசிக மாலை. அமிருதாசு வாதினி 27).

  1. அற்புதம்

வைப்பார் மனந்தன்னின் மாநிலத்து மாதவத்தோர்
எப்பொழுது மெங்கள் பெருமானை –அற்புதமாந்
தேசுடைய வேதாந்த தேசிகனைச் சீர்மிகுந்த
மாசின் மதியுடையோர் வாழ்வு.          (51)

(பொழி.) சிறந்த தவத்தை உடைய ஞானிகள், இந்த உலகத்தில், தமது மனத்தில் எக்காலத்திலும், எங்கள் இறைவன் ஆகிய நாராயணனை வைத்துக்கொள்வார்கள். (ஆனால்) ஒளி மிகுந்த வேதாந்த தேசிகனே, சிறப்பு நிறைந்த குற்றம் இல்லாத அறிவு பெற்றவர்களுக்கு நல்வாழ்வாக அமைவான். இஃது ஓர் ஆச்சரியமாம்.

(51) மாதவத்தோர் – சரணாகதி நிஷ்டர்; தேசு – அழகு, ஒளி, கீர்த்தி, ஞாநம் பெருமை; மாசின்மதி – “துய்யமதி” (உபதேசரத்தின மாலை 12); மதி – நுண்ணறிவு.

  1. இதுவே வாழ்வு.

வாழ்விதுவே யுந்தமக்கு வம்மி னுலகத்தீர்
தாழ்வெங்கும் வாரா தளர்ச்சிநில்லா – சூழ்வினைகள்
சேரச்சி தைந்திடுமே திண்ணமிது வாழ்த்துமினோ
ஆரணத் தேசிகரை யாய்ந்து.             (52)

(பொழி.) உலகத்தில் வாழும் மக்களே! இங்கே வாருங்கள். வேதம் கற்ற ஆசாரியரை (இவரே நமக்கு நன்மை செய்வார் என்று) ஆராய்ந்து தெளிந்து வாழ்த்துங்கள். அதனால் உங்களுக்குத் தவறு எதுவும் வராது. உடலிலோ உள்ளத்திலோ சோர்வு என்பது நிற்காது. உம்மைச் சூழ்ந்துள்ள தீவினைகள் அனைத்தும் ஒருசேர அழிந்துவிடும். இந்த நன்மைகள் கிட்டுவது உறுதி. ஆகவே, இதுவே உங்களுக்கு நல்வாழ்வாகும். (முறைமை)

(52) வாழ்வு – சீவிதம்; வம்மின் – வாரீர்; ஆரணம் – வேதம்.

  1. ஓதமுடியா

ஆய்ந்துரைக்க லாமணிக ளாழ்கடலு ளித்தனையென்
றாய்ந்துரைக்க லாமமரர் கோன்புகழும் – ஏய்ந்தசீர்
வேதமுடித் தேசிகனார் வீறுடைய வண்குணங்கள்
ஓதமுடியா வெவர்க்கு மோர்ந்து.     (53)

(பொழி.) ஆழமான கடலுள் மூழ்கி, அங்கள்ள இரத்தினங்கள், இத்தனை உள்ளன என்று எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடலாம். (ஆனால்)எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும், நிறைந்த சிறப்பினரான வேதமுடித் தேசிகனாரது பெருமை உடைய, வள்ளன்மை பொருந்திய குணங்கள், ஆராய்ந்து பார்த்துக் கூற இயலாதவைகளாகும்.

(53) மணி – இரத்தினம்; ஏய்ந்தசீர் –  “ஏற்கும் பெரும் புகழ்வான வரீசன்” என்னுமாபோலே அங்குத்தைக்கு அநுரூபமாய்ப் பொருந்தியிருக்கிற அனந்த கல்யாண குணங்களையுடைய; ஒர்ந்து – ஆராய்ந்தறிந்து

  1. பாட்டினைப் பாடுவார்

ஒரா ரறத்தை யுணரார் பெரும்பொருளைப்
பாரார் பயனான வின்பத்தைச் – சீராரும்
வீட்டையும் வேண்டாரே வேதாந்த தேசிகர்தம்
பாட்டினைப் பாடு மவர்.              (54)

(பொழி.) வேதாந்த தேசிகருடைய உபதேசப் பாசுரங்களைப் பாடும் அன்பர்கள், அறத்தை ஆராய மாட்டார்கள். பெருமைக்குரிய பொருளையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். பயன்தரும் இன்பத்தையும் வேண்டும் என்று பார்க்க மாட்டார்கள். சிறப்புப் பொருந்திய மோட்சத்தையும் விரும்பமாட்டார்கள். (ஆக, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் தேசிகரது பாசுரங்களிலேயே அனுபவிப்பார்கள், அதனைப் பாடுவார்கள்.)

(54) அறத்தை……வீட்டை – இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமி லின்பத்தழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா னெடுக்கப் பட்ட பொருள் நான்கு: அவை அறம், பொருள், இன்பம், வீடென்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ்செல்லா நிலைமைத்தாகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமே யாம்”; பாட்டினை – பெருமையை; பாடுமவர் – அநுபவிப்பவர்.

  1. மேவுவார்

அவரவர் தந்த மறிவளவின் மாலைத்  
தவநெறிக ளால்வணங்கிச் சார்வார் – எவரேலும்
தூயமறை யோர்வணங்குந் தூப்புனகர்க் கோமானை
மேயறிவான் மேவுவரே யிங்கு.     (55)

(பொழி.) திருமாலை,அவரவர்கள் தத்தமது அறிவின் அளவைக் கொண்டு தவம் செய்யும் வழிகளில் வழிபாடு செய்து சேர்வார்கள். ஆனால், இம்மண்ணுலகத்தில் யாராகவிருந்தாலும், தூய்மையான வேதங்களைக் கற்ற பெரியோர்கள் வணங்கக்கூடிய தூப்புல் கோமானாகிய சுவாமி தேசிகனையே வந்து சேர்வார்கள்(பொருந்துவார்கள்).

(55) தவம் – பிரபத்தி, “தஸ்மாந்ந்யாஸ மேஷாம்தபஸா மதிரிக் தமாஹு:” – (தைத்ரீயம் 2); தவநெறி – யோகமார்க்கம், – பக்தி மார்க்கம். “சார்வேதவநெறி’’ – (திருவாய்மொழி 10-6-9) ‘’தவமாவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலியன”; மேயம் – ஞேயம், அறியத்தக்கது; மேவுவர் – பொருந்துவர்.

56. இங்கு இருந்தால் ஏன்?

  1. இங்கிருந்தா லேதமென்னெந்தமக்கு வாதிசிங்கர்
    செங்கமல பாதமுஞ் சீர்வடிவும்-அங்கமலக்
    கைகளும் வாயுங் கருணைமிகு கண்ணிணையும்
    கைகனி போற்காணக் கூடில். (56)

(பொழி.) வாதம் செய்பவர்க்குச் சிங்கமாகத் தோன்றக்கூடிய தேசிகரது செம்மையான தாமரை மலர் திருவடிகளும், சிறப்பான திருவுருவும், அழகிய தாமரை மலர் போன்ற திருக்கைகளும் பொருந்திய அருள் மிகுந்த கண்களும், உள்ளங்கை நெல்லிக்கனி போல் எமக்குக் காணுமாறு கிடைத்துவிட்டால், நாம் இந்த மண்ணுலகத்தில் இருந்தால் வரும் குற்றம் என்ன? (ஒன்றும் இல்லை)

(56) ஏதம் – குற்றம், துன்பம்; செங்கமல……..கண்ணிணையும் – “கேட்டுரைக்கில் தாமரை நின் கண்பாதம் கையொவ்வா, சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி யொளியொவ்வாது” -(திருவாய் மொழி 3-1-2); கைகனிபோற் காண – “கையில் கனி யென்னவே”-(இராமாநுச நூற்றந்தாதி. 103)

 

  1. பதம் எய்தலாம்

கூடி லவர்குணத்தைக் கூறவே யெந்தமக்குத்
தேடி லவர்பதத்தைச் சென்னிதனிற் – சூடத்
துலங்கொளிசேர் தூப்புல்வருந் தூயோ னருளால்
வலங்கொள்பத மெய்தலாம் வான். (57)

(பொழி.) எங்களுக்கு, அந்த ஆசாரிய,து பெருங்குணங்களை எடுத்துப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால், அவரது திருவடிகளை, முடியில் அணிந்துகொள்ள, தேடிக்கொண்டால், விளங்குகின்ற ஒளி சேர்ந்த தூப்புல் நகரில் அவதரித்த தூய்மை உடையவனான தேசிகனது திருவருளால், நாங்கள், வெற்றிகொண்ட பரமபதம் எய்தலாம்.

(57) கூடில் – பெற்றால், சேர்ந்தால்; துலங்கு – பிரகாசித்து; வான் – பரமபதம்.

  1. தோன்றினவோ

வானிற் றிகழு மதியோ கதிரவனோ
ஊனமிலா வோமத் தொளியழலோ – மாநிலத்தில்
சோதியவை மூன்றுமொன்றாய்த் தோன்றினவோ தூப்புனகர்
வாதிசிங்கத் தேசிகராய் வந்து. (58)

(பொழி.) ஆகாயத்தில் விளங்குகின்ற சந்திரனோ, அல்லது சூரியனோ, அல்லது குற்றம் இல்லாத யாகத்தில் உள்ள ஒளிமிக்க நெருப்போ, அல்லது ஒளியோடு கூடிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்தோ, இந்த மண்ணுலகத்தில் வந்து, தூப்புல் நகர் வாதிசிங்கர் எனப் போற்றப்படுகின்ற வேதாந்த தேசிகராய் உதித்தனவோ?

(58) வான் – ஆகாசம்; மதி – சந்திரன்; கதிரவன் – சூரியன்; அழல் – ஒமாக்னி; சோதியவை மூன்று – முச்சுடர் மூன்று சுடர். அவை அக்கிநி ஆதித்தன், சந்திரன் என்பர்.

 

  1. தாங்கியவை

வந்து கருணையால் வானவர்கோன் வன்படைகள்
ஐந்து மனைத்துலகு முய்யவே – செந்தார்க்
கவிவாதி சிங்கராய்க் காசினியைத் தேசிற்
றவிவின்றித் தாங்கின தாம். (59)

(பொழி.) இந்த மண்ணுலக மக்கள் உய்வு பெறுவதற்காகவே, அமர்ர்க்கு அதிபதியாகிய நாராயணனது வலிமை நிறைந்த ஆயுதங்கள் ஐந்தும், திருவருளால், செம்மையான மாலை அணிந்த, கவிவாதி சிங்கராகிய தேசிகராக வந்து, இந்த உலகத்தை நிரந்தரமான ஒளியோடு (இடையீடு இல்லாமல்) தாங்கிக் கொண்டு விட்டன.

(59) வானவர்கோன் – அமரர்கட்கதிபதி; வன்படைகள் ஐந்து – பஞ்சாயுதங்கள்: சங்கு சக்கரம், தண்டு, வாள், வில் என்பன,  “அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் கையாழி யென்னும், படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும், புடையார்புரி சங்கமும் இந்தப் பூதலங்காப்பதற்கென்று, இடையே இராமாநுச முனியாயின இந்நிலத்தே,” – (இராமாநுச நூற்றந்தாதி 33.)

 

  1. சிங்கராயினான்.

தாங்கி யுலகனைத்துந் தானருவாய் நின்றபிரான்

ஓங்குபுகழ் வேங்கடக்கோ னுந்தமக்குத் – தீங்கேதும்
வாராத வண்ணமிவ் வாதிசிங்க ராயினான்
பாருலகீர் பாங்குடனே வந்து. (60)

(பொழி.) பரந்த உலகத்து மக்களே! தான் அருவாக நிற்கின்ற தலைவனும் புகழ் ஓங்கிய திருவேங்கடமலையைத் தங்கும் இடமாகக் கொண்டவனுமாகிய நாராயணன் உங்களுக்குத் தீமை எதுவும் வராதபடி, உலகம் முழுவதையும் தான் தாங்கிக் கொண்டு, பக்கவமாக வந்து இந்தக் கவிவாதி சிங்கராகக் காட்சி அளித்தான்.

(60) தானருவாய் நின்ற பிரான் – “உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவம் இவ் வருவுகள், உளனென இலனென இவை குணமுடைமையில், உளனிரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே.” – (திருவாய் மொழி 1-19); வேங்கடக்கோன் வாதி சிங்கராயினான் –  “அன்றிவ்வுலகினை யாக்கி யரும்பொரு ணுால் விரித்து, நின்று தன் னீள்புகழ் வேங்கடமாமலை மேவியும்பின், வென்றிப் புகழ்த் திரு வேங்கடநாத னெனுங் குருவாய், நின்று திகழ்ந்துமண் மேனின்ற நோய்க டவிர்த்தனனே” – (பிள்ளையந்தாதி 5) ; வண்ணம்  — விதம்; பாங்கு – அழகு, உரிமை, உறவு, நற்குணம், யோக்கியம்.

  1. காண்பன்

வந்தென்றன் வன்னெஞ்சின் மன்னி யிருந்தானை
எந்தையெதி ராச ரிணையடியைக் – கொந்தலரும்
சோலைசூழ் தூப்புனகர் வந்துதித்த தூயவனைக்
காலமெலாங் காண்பன் களித்து. (61)

(பொழி.) எனது வலிமையான மனத்தில் வந்து நிலை பெற்றிருந்தவனும், எனது ஆசாரியத் தலைவராகிய இராமாநுசரது திருவடியாக விளங்குபவனும், கொத்தாக மலர்ந்த மலர்களைக் கொண்ட சோலைகள் சுற்றியுள்ள தூப்புல் நகரில் வந்து தோன்றிய தூயவனுமாகிய சுவாமி தேசிகனை என் ஆயுள் காலம் முழுவதும் இன்பம் பெருகக் காண்பேன்.

(61) வன்னெஞ்சம் – கடினமான நெஞ்சு, வலியநெஞ்சு: எதிராசர் – ஸ்ரீபாஷ்யகாரர். “ மாறன் றுணையடிக்கீழ், வாழ்வை யுகக்கு மிராமா நுசமுனி வண்மை போற்றுஞ், சீர்மைய னெங் கடூப் புற்பிள்ளை.” – (பிள்ளையந்தாதி 1); கொந்து-கொத்து; கொந்தலரும் சோலை —  “கொந்தலர் பொழில் குருகூர்”  -(திருவாய்மொழி 10-9-11); தூயவன் – பரிசுத்தன்; காண்பன் – பார்ப்பேன்.

 

  1. என்று கொல் களிப்பது

களிக்கும தென்றுகொலோ கண்களாற் கண்டு
துளிக்கு நறுந்துழாய்க் கண்ணி – ஒளிக்கொளும்
அண்டர்கோ னென்ன வடியார்க் கருள்புரியும்
கொண்டலார் தூப்புற்கோ வை. (62)

(பொழி.) துளிர்விட்டு வளர்ந்துள்ள நல்ல மணம் வீசுகின்ற திருத்துழாய் மாலை அணிந்த, ஒளி நிறைந்த, தேவர்கள் தலைவனாகிய நாராயணன் போன்று, தமது அடியவர்களுக்குத் திருவருள் புரியும் மேகம் நிறைந்த தூப்புல் நகரத்துத் தேசிகரை, கண்களால் பார்த்துக் களிப்படைகின்ற அந்த நாள் என்றைக்கு அமையுமோ?

(62) கண்களால் – கண்கள் படைத்த பயனாகக் கண்டு; கண்ணி – மாலை, “கண்ணி பறித்து” – (பரிபாடல் 7-45), “கண்ணியோச்சித் தடுமாறுவார்” – (பரிபாடல் 9-45), “கல்லகாரப் பூவாற் கண்ணி தொடுத்தாளை” – (பரிபாடல் 11-103), “அடிமே லடிமே லொதுங்கித் தொடிமுன்கைக், காரிகை யாகத் தன் கண்ணி திருத்தினாள்.” – (பரிபாடல் 12.90-91), “கண்ணி எனதுயிர்” – (திருவாய்மொழி 4-3-5), “கண்ணியர் தாரர் கமழ் நறுங் கோதையர்” – (பரிபாடல் 16. 50.); ஒளி – ப்ரகாசம், ஜ்ஞானம்; அண்டர் – நித்திய சூரிகள், இடையர்;  “அண்டர் கோன் – இடையர்க்கு நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி அண்டாதிபதியான ப்ரஹ்மா முதலாக மற்றும் அண்டாந்தர்வர்த்திகளான தேவாதிகளை யெல்லாம் ஸ்வாதீநராக்கி வைத்திருக்கிற ஸ்வாமித்வ ஸ்வாதந்த்ரியாதிகளை யுடையவன். “கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டானாகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கு” – (பெரிய திருமொழி 11-5-5) என்கிறராகவுமாம்.” -(முநிவாஹந போகம்) ;‘அடியார்க்கு – ’அடியார்’ என்கிற இத்தாலே த்ருதீயாக்ஷரத்திலே சொன்ன ஜீவவர்க்கமும், ஜீவர்களுக்கு ஈச்வரனைக் காட்டில் வேறுபாடும், அந்யோந்யம் பிரிவும் காட்டப்படுகிறது. ’அடியார்’ என்றால் ஸர்வ ஸாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை யெல்லாம் காட்டிற்றேயாகிலும், இங்கு ’அடியார்’ என்கிறது “யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவோ அபி நதம் விது:” என்னும்படி அபரிச்சேத்ய மாஹாத்மியரான சேஷத்வ ஜ்ஞாநரஸிகரை.” – (முநிவாஹந போகம்); அருள் புரியும் கொண்டலார் –  “கொண்ட லாரருண் மாரிபொ ழிந்திடக் கொண்ட தோருயர் கூர்மதி யன்பினாற், பண்டை நான்மறை மெளலிப டிந்தயான் பாரின் மெய்விர தக்கவி பாடினேன்” .-(தேசிகமாலை. மெய் விரத நன்னிலத்து மேன்மை); கொண்டல் – மேகம், “ஜங்கமஸ்த்தாவரங்களெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜலஸ்தல விபாகமற காருண்யரஸத்தை வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வபாவத்தை உடையவர்.”; அருள்புரியும் –  “நின்குண மெதிர்கொண்டோ றரங்கொண்டோ ரல்லதை மன்குண முடையோர் மாதவர் வணங் கியோ ரல்லதை செறுதீ நெஞ்சத்துச் சின நீடி னோரும் சேரா வறத்துச் சீரிலோரும், அழிதவப் படிவத் தயரி யோரும், மறு பிறப்பில்லெனு மடவோருஞ் சேரார், நின்னிழ லன்னோ ரல்ல தின்னோர், சேர்வா ராதலின் யாஅ மிரப்பவை, பொருளும் பொன்னும்  போகமுமல்ல நின்பால், அருளு மன்பு மறனு மூன்றும் உருளிணர்க் கடம்பி னொலிதா ரோ யே.”- (பரிபாடல் 5. 71-81. “நினது குணத்தை ஏற்றுக் கொண்டோராகிய அறங் கொண்டோரல்லது வீடு பெறுங்குணமுடையோராகிய மாதவரால் வணங்கப்பட்டோரல்லது உயிர்களைச் செறுகின்ற தீய நெஞ்சத்துச் சினத்தையுடையோரும் அறத்தின்கட் சேராத புகழில்லோரும் கூடா வொழுக்கத்தால் அழிந்த தவ விரதத்தையுடையோரும் இப்பிறப்பின் நுகர்ச்சியேயுள்ளது மறு பிறப்பு இல்லை யென்னும் மடவோருமாகிய இவர் நின் தாள் நிழலை அடையார்; அத்தன்மை யோரல்லது இத்தன்மையோர் நின் தாள்நிழலை அடைவர்; ஆதலான், நின்னையாம் இரப்பவை நுகரப்படும் பொருள்களும் அவற்றை உளவாக்கும் பொன்னும் அவ்விரண்டானும் நுகரும் நுகர்ச்சியுமல்ல; எமக்கு வீடு பயக்கும் நின்னருளும் அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும் அவ்விரண் டானும் வரும் அறனுமாகிய இம்மூன்றுமே.”); கோ – ஸ்வாமி.

  1. காணார்

கோவைக் கனியொத்த வாயுங் குளிர்விழியும்
தாவந் தவிர்க்கு முறுவலும் – பாவந்தீர்
வேதமுடித் தேசிகன்றன் மெய்யொளியு மேவாதார்
சாதுவரைக் காணார் தளர்ந்து. (63)

(பொழி.) பாவத்தை நீக்கக்கூடிய வேதமுடித் தேசிகனாகிய ஆசாரியரது திருமேனியின் ஒளியும், கோவைப் பழத்தை ஒத்து சிவந்த திருவாயும், அருள் நிறைந்த திருக்கண்களும், பக்தர்களது ஆன்ம தாகத்தைப் போக்கக்கூடிய புன்முறுவலும், பொருந்தப் பெறாதவர், தளர்ச்சியால், ஸ்ரீவைஷ்ணவர்களைக் காணப் பெறாதவர்களாவர்.

(63) கோவைக் கனியொத்தவாய் – கோவைப் பழம் போல சிவந்த அதரம். ‘ “கோவை வாயாள் பொருட்டு” – (திருவாய்மொழி 4-3-1); விழி — கண் ; தாவம் – வெப்பம்; தவிர்க்கும் – தீர்க்கும், போக்கடிக்கும்; முறுவல் – சிரிப்பு மெல்ல நகுதல்; தீர் – நீங்கிய; மெய் – உண்மையான, சத்தியமான ; ஒளி – ஒழுங்கு ; சாதுவர் – சாதுக்கள்; தளர்ந்து – சோர்ந்து.

  1. பேச்சு

தளர்த்திமற் றொன்றத் தரித்துநீ நெஞ்சே
கிளர்த்தியுடன் கேடில்சீ ரானை – அளத்தற்
கரியானை யம்மானை யன்புடனே தூப்புற்
பெரியானை யெப்பொழுதும் பேசு.    (64)

(பொழி.) மனமே! நீ, உன்னை, நெகிழ்த்திக்கொண்டு, உன்னில் பொருந்தும் வண்ணம் தாங்கிக் கொண்டு, எழுச்சியோடு, அழிவு இல்லாத சிறப்பினை உடையவனும், அளந்து காண்பதற்கு அரியவனும், நமது தலைவனும், தூப்புல் நகரில் தோன்றிய மேம்பாடு உடையவனுமாகிய சுவாமி தேசிகனை, பக்தியுடன் எல்லாக் காலத்திலும் பேசிக் கொண்டே இரு.

(64) தரித்து – தாங்கி; கிளர்த்தி – எழுச்சி ; கேடில் – அழிவில்லாத, “கேடில் விழுச்செல்வங் கல்வி” – (திருக்குறள், கல்வி. 10. அழிவில்லாத சீரிய செல்வமாவது கல்வி.); அம்மான் — ஸ்வாமி, “அம்மான் ஆழிப்பிரான்” – (திருவாய் மொழி. 5-1-7. “ஸர்வேச்வரன். கையும் திருவாழியுமான அழகை நித்ய ஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் அவன்” – ஈடு); பெரியான் – மேம்பாடுடையவன்; பேசு – சொல்லு.

  1. தோற்றார்.

பேசுமினே கூச்சமின்றிப் பேரின்பம் வேண்டினீர்
தேசுடைய செந்தா மரையடியைப் – பாசமொன்றும்
நில்லாது தூப்பு னிமலனையே நாடோறும்
சொல்லாதார் சூழ்வினை தோற்றார்.    (65)

(பொழி.) பேரின்பத்தை விரும்புகின்றவர்களே! நீங்கள் எல்லாம், கூச்சம் எதுவும் இல்லாமல் (ஆசாரியர் புகழைப்) பேசுங்கள். (அதனால்) உலகப் பற்று எதுவும் நில்லாமல் நீங்கிவிடும். ஒளி பொருந்திய செந்தாமரை மலர் போன்ற திருவடியை உடையவனும், தூப்புல் நகர் தூயவனுமாகிய தேசிகனை, தினந்தோறும் சொல்லாதவர்கள், தங்களது சூழ்வினைக்குத் தோற்றவர்களேயாவார்.

(65) கூச்சம் – பயம்; பேரின்பம் – மோக்ஷம் ; வேண்டினீர் – விரும்புவோர்; பாசம் – அவிச்சை; நிமலன் – குற்றமற்றவன், சுத்தன், “விரையார்பொழில் வேங்கடவன் – பரிமளம் வடிவு கொண்டாற்போல இருக்கிற திருச்சோலைகளையுடைய திரு மலையிலே “கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு”  -(திருவாய்மொழி 1-8-3) என்கிறபடியே எல்லாருக்கும் ஆச்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி “இருள் தருமா ஞாலத்துள்” – (திருவாய்மொழி 10-6-1) குன்றத்திட்ட விளக்காய் நிற்கிறவன்” ; நாடோறும் – பிரதிதினமும்.

  1. வீட்டின் சிறப்பு

தோற்றா தவர்க்கேதுந் தொல்வினை யெஞ்ஞான்றும்
மேற்றான் வருவது மொன்றுண்டோ – ஆற்றாத
ஆர்வத்தால் வேதமுடி யாரியனைப் பற்றுகையே
சீருற்ற வீட்டிற் சிறப்பு.      (66)

(பொழி.) ஞானம் தோன்றாத அறிவிலிகளுக்கு எதுவும் பழைய தொந்தரவாகவே அமையும். எப்பொழுதும், அதிகமாக வருவதாகிய நல்வினை ஒன்று உண்டோ? இல்லை. (ஆனால்) தணியாத அன்பால் வேதமுடி ஆரியனாகிய சுவாமி தேசிகனைச் சரணாகப் பற்றிக் கொள்ளுதலே, சிறப்புமிக்க பரமபதத்தின் பெருமையாகும்.

(66) தொல் – அநாதியான ; தொல்வினை – பழவினை; மேல் – அதிகமாக;  வருவது – வளர்வது; ஆற்றாத – தணிதலில்லாத ; ஆர்வம் – அன்பு; பற்றுகை – அன்பு செய்தல், பிடித்துக்கொள்ளுதல், பொருந்துதல், மனத்துக்கொள்ளுதல்; வீடு – மோக்கம். “சென்றாங்கின்பதுன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே” – (திருவாய்மொழி. 8-8-6) ; சிறப்பு – மேன்மை,  “எனக்கே கண்ணனையான் கொள்சிறப்பே” – (திருவாய்மொழி 2-9-4 சிறப்பே – பலகால்வேண்டா, ஒருகால் அமையும்; அது தன்னிலும், திருவாசலைத் திருக்காப்புக்கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாகிறது – ஏற்றம். அதாவது – புருஷார்த்தம். ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருளவேணு மென்றபடி. சிறப்பாவது – முக்தியும், ஸம்பத்தும், நன்றியும். இவற்றில், நான் உன் பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே. உன்பக்கல் நான் கொள்ளும் ஸம்பத்தென்னவுமாம். நன்றியென்னவுமாம்.” – ஈடு.  “சிறப்பில் வீடு சுவர்க்க நரகம்” – (திருவாய்மொழி 2-9-5.  “சிறப்பில் வீடு – நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவன் நித்ய ஸூரிகளுடைய அநுபவத்தைப் பெற்று அநுபவிக்கக் கடவதாகச் சொல்லுகிற மோக்ஷம்.” – ஈடு.)

 

  1. சென்னியில் சேர்க்கும் செவ்வு

சிறப்பு முயிர்க்கிதுவே சேமமு மீதே
அறப்பொருளு மாம்வீடு மீதே – மறப்பின்றி
மன்னியசீர் தூப்புல்வரு மாமறையோன் பாதத்தைச்
சென்னிதனிற் சேர்ப்பதுவே செவ்வி.     (67)

(பொழி.) உலகத்து மனித உயிர்களுக்குச் சிறப்பாக அமைவது இதுவே ஆகும். பாதுகாப்பாக இருப்பதும் இதுவே. அறமும் பொருளும் ஆகும் இதுவே மோட்சமும் ஆகும். நிலைபெற்ற சிறப்பினை உடைய தூப்புல் நகரில் அவதரித்த சிறந்த வேதங்களைக் கற்ற சுவாமி தேசிகனது திருவடிகளை மறதி இல்லாமல் தலையில் தாங்குவதே செம்மையானதாகும். (நேர்மை)

(67) சேமம் – ரக்ஷகம், க்ஷேமம், இன்பம்; மறப்பின்றி – மறவாதே.  “மறப்பொன்றின்றி யென்று மகிழ்வனே” – (திருவாய்மொழி 2-9-5 மறப்பொன்றின்றி – இத்தலையிலுள்ளதெல்லாம் மறக்கலாம், அத்தலையிலுள்ள தெல்லாம் நழுவவொண்ணாது. என்றும் மகிழ்வேனே – மகிழ்ச்சியென்றும், அநுபவமென்றும் – பர்யாயம். அநுபவிப்பேனென்கிறார். ஆக, இத்தாலே – ஸ்வரூபமும் வெளியிடுகிறார். பெருமானென்கையாலே — தம் முடைய சேஷத்வமும், மறப்பொன்றின்றி – என்கையாலே – ஜ்ஞாத்ருத்வமும், என்றுமென்கையாலே – நித்யத்வமும், மகிழ்வு என்கையாலே – போக்த்ருத்வமும்,” – ஈடு) ; மாமறையோன் பாதத்தைச், சென்னிதனிற் சேர்ப்பதுவே செவ்வி –  “தூப்புற்பிள்ளை பாதமென் சென்னியதே.” – (பிள்ளை யந்தாதி. 1); சென்னி – முடி, தலை;  செவ்வி – அழகு, நேர்மை.

  1. அந்தம் இல் வீட்டு இன்பம்

செவ்வியராய்ச் செங்கண்மால் சேவடியைச் சேவிப்பார்
அவ்வப் பயனை யடைந்திடுவார் – அவ்வாறு
சிந்தைதனிற் றுாப்புல்வந்த தேசிகனை நண்ணுவரேல்
அந்தமில்வீட் டின்பமவர்க் காம்.      (68)

(பொழி.) நேர்மை உடையவர்களாக, சிவந்த கண்களை உடைய திருமாலுடைய செம்மையான திருவடிகளை வணங்குபவர், அந்தந்த நற்பயனைப் பெற்றிடுவார். அந்த வகையில் தூப்புல் நகரில் அவதரித்த தேசிக ஆணாரியரை மனத்தில் வைத்து தியானிப்பார்களானால், அவர்களுக்கு, அதுவே, முடிவு இல்லாத பரமபதத்து இன்பம் ஆகும்.

(68) செங்கண்மால் – சிவந்தகண்களையுடைய திருமால், “குன்றெடுத்தாயர் மாதர்குரவை கொண்டொரு விளாவிற், கன்றெடுத்தெறிந்து வெய்ய காளியற் கிருதாணல்கி, யன்றெடுத்திறுத்த வில்லேயனைய வில்விழவு காண்பான், சென்றெடுத்திறுத்து நின்ற செங்கண்மாலெங்கள் கோவே.” – (மகாபாரதம். உத்தியோக பருவம் – களப்பலியூட்டு சருக்கம். 1)  “எங்கணான் மறைக்குந் தேவ ரறிவிற்கும் பிறர்க்கு மெட்டாச், செங்கண்மால்.” – (இராமாவதாரம், பாலகாண்டம், வேள்விப் படலம், 16), “செயிர்தீர் செங்கட் செல்வ.” (பரிபாடல். 4-10).  “செங்கட் காரி” – (பரிபாடல். 3-81) ; சேவிப்பார் – வணங்குவார்; அந்தமில் வீட்டின்பம் –  “அந்தமில் பேரின்பத்து” – (திருவாய்மொழி 10-9-11); சிந்தைதனில் நண்ணுவரேல் – மனத்தால் நினைப்பரேல்; இன்பம் – “இன்பந் தலைப்பெய்து எங்குந்தழைத்த” – (திருவாய்மொழி 9-5-11)

  1. அவம்

அவர்க்காந் தெளிவிசும்பி லந்தமில்பேரின்பம்
எவர்க்கேனுமித்துணிவுண் டாகில் – எவர்க்கும்
கவிவாதி சிங்கரல்லாற் காப்பார்மற் றில்லை
அவமாமற் றோர்பேசுஞ் சொல்.     (69)

(பொழி.) தேசிகரைச் சிந்தித்தல், அந்த அடியார்களுக்கு, தெளிந்த ஆகாயத்தில் உள்ள முடிவு இல்லாத பெரிய இன்பம் நல்கும் பரமபதம் ஆகும். இந்த உறுதி, யாவர்க்காயினும் தோன்றுமானால், கவிவாதி சிங்கராகிய தேசிகரைச் சென்று சேரவேண்டும். அவர் அல்லாமல், காப்பவர் வேறு யாரும் இல்லை. மற்றவர்கள் காப்பார் என்று சொல்லுவது எவர்க்காயிருந்தாலும் அஃது அவத்தமே. (வீணான தாகும்)

(69) தெளிவிசும்பு – பரமபதம், “தெளிவிசும்பு கடிதோடித் தீவளைத்து மின்னிலகும், ஒளிமுகில்காள்! திருமூழிக்களத்துறையும் ஒண்சுடர்க்கு, தெளிவிசும்பு திருநாடாத்தீவினையேன் மனத் துறையும், துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே.” – (திருவாய்மொழி 9-7-5. தெளிவிசும்பித்யாதி – பரம பதத்திற் பண்ணும் வ்யாமோஹத்தை என்னெஞ்சிலே பண்ணி வர்த்தியா நின்றான்” – ஈடு),  “தகவிலைதகவிலையே நீ கண்ணா ! தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்காரா? சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அதுகனவென நீங்கி யாங்கே.”- (திருவாய்மொழி 10-3-2.  “விசும்பு இத்யாதி – ஸர்வபதார்த்தங்களையும் தன்னுள்ளே வைத்துக் கொண்டிருக்குமதிறே ஆகாசமாகிறது. அது தன்னைக்குளப்படியாக்கி, மயர்வற மதிநலம் அருளப்பெற்ற அறிவையும் விளாக்கொலை கொள்ளா நின்றதாய்த்து, அன்றிக்கே, விசும்பென்று – பரமபதமாய், – *தாமரைக் கண்ணாணுலகு” என்னக் கடவதிறே. ஸுகாதிசயத்துக்கு – “விசும்பிறந்து” என்றதுக்கர்த்தாந்தரம் – அன்றிக்கே இத்யாதி. மோக்ஷஸுகத்தைப் பற்றவும் ஸம்ச்லேஷஸுகம் விஞ்சி யிருக்குமோ வென்ன – தாமரை இத்யாதி. அதாவது – அத்யந்த விஷயாஸக்தனாயிருப்பா னொருவனை மீட்கைக்காக “காம புருஷார்த்தம் அல்பாஸ்திரத்வாதி தோஷதுஷ்டம், மோக்ஷ ஸுகமேகாண் அநஸ்த்திரபலம்” என்ன, விஷயாஸக்தன் சொல்லுகிறான் –  “தாம் வீழ்வார் மென்றோட்டுயிலி னினிதுகொல், தாமரைக்கண்ணாணுலகு” என்று; : தாமரைக்கண்ணா ணுலகுண்டு மோக்ஷஸுகம்; அது, தாங்களே விழுந்து ஆசைப்படும் ஸ்த்ரீகளுடைய ம்ருதுவான தோளிலே யுறங்குகிறதிற் காட்டில் இனிது கொல்? அன்றே யென்றபடி “தாமரைக் கண்ணாணுலகு – இனிது கொல்” என்றந்வயம்.” – சீயர் அரும்பதவுரை.  “தாம் வீழ்வார்” என்பது திருக்குறள் காமத்துப்பால் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்துள்ள மூன்றாவது குறட்பா. அதற்குப் பரிமேலழகர் உரை வருமாறு :-  “நிரதிசயவின்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கின்னையாதல் தகாதென்ற பாங்கற்குச் சொல்லியது. ஐம்புலன்களையு நுகர்வார்க்குத் தாம் விரும்புமகளிர் மெல்லிய தோளின்கட்டுயிலுந் துயில்போல வருந்தாமலெய்த லாமோ அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்துஞ் செங்கண் மாலுலகம். ஐம்புலன்களையு நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாயதுயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்தவேண்டுதலின், எம்மனோர்க்காகாதென்னுங் கருத்தால் இனிது கொலென்றான். இந்திரனுலகென்றுரைப்பாருமுளர். தாமரைக்கண்ணானென்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃதுரையன்மை யறிக.” ஆக – த்ரிபாதி விபூதியையும் விஞ்சி, உபயவிபூதியையும் தன்னுள்ளே யாம்படியிருக்கிற அறிவையும் மேலிடும்படியாய்த் திருக்கிறது.” – ஈடு.); கவிவாதிசிங்க ரல்லாற் காப்பார் மற்றில்லை –  “கண்ணனல்லால் இல்லை கண்டீர், அவனன்றி மற்றில்லை”. -(திருவாய்மொழி 9-1-10), “ஆதுமில்லை மற்றவனில் என்றதுவே துணிந்து”.-(திருவாய் மொழி 9-1-11); அவம் – வீண், அவத்தம்.

  1. காட்டில் நிலவு

சொல்லார் சுருதிமுடித் தேசிகன் றொல்புகழை
எல்லா விடத்திலு மெப்பொழுதும் – நல்லார்கள்
கோட்டிதனிற் கூட்டீரேற் கோதின்மனத் தீரும்மைக்
காட்டினில வாக்குவதே கா.          (70)

(பொழி.) நல்லவர்கள், வேதத்தை முடியில் தாங்கிய தேசிகரது பழைய புகழை எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் சொல்ல மாட்டார்கள். (தகுதியான இடத்தில் தக்க சமயத்தில் சொல்வார்கள்). குற்றம் இல்லாத மனத்தை உடையவர்களே! உங்களை, அத்தகைய நல்லவர்களது கூட்டத்தில் சேர்ப்பிக்கவில்லை என்றால், அது காட்டில் நிலவாக உங்களை ஆக்கியது ஆகும். அந்தக் குற்றம் உங்களை விட்டு நீங்காது.

(70) சுருதி – வேதம். “புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து, சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி எரியுரு ககிலோ டாரமுங் கமழும், செருவேற் றானைச் செல்வநின்னடி யுறை, உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே,” (பரிபாடல். 18-51-56, “ செருவேற்றானைச்செல்வ! நின் பூசைக் கட்புரிதலுற்ற நரம்பினது ஒலியும் புலவர் பாடிய இயற்பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் உபசாரமாகிய பூவும் தீபமுங் கூடி எரியின்கண் உருகுமகிலும் சந்தனமும் தூபமாய்க் கமழா நிற்கும் நின் அடியின்கண் உறைதலை எமக்கு உரித்தாக உறையும் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு கூடியாம் பிரியாதிருப்போமாக.”)  “சுருதிநினை விவையறியுந் துணிவுடையார் தூமொழிகள், பரிதிமதி யாசிரியர்.” – (தேசிகமாலை. அடைக்கலப்பத்து. 9),  “சொல்லுமவிடு சுருதியாம்” – (ஞானஸாரம்),  “ப்ரத்யக்ஷாதிப்ரமாணங்களிற் காட்டிலும்’’வேதாச்சாஸ்திரம் பரம்நாஸ்தி’” இத்யாதிகளிற்படியே “மற்றுள்ள சாஸ்திரங்களிற் காட்டிலும் பாரலெளகிக புருஷார்த்தததுபாயங்களை யதாவஸ்த்திதமாகக் காட்டுகிற வேதம் ப்ரதாநம். அதில் பராவரதத்வஹித புருஷார்த்தங்களில் அந்யதாஸித்த ப்ரமாணாந்தரங்களால் வரும் கலக்கங்களை யெல்லாம் தீர்க்கவல்ல வேதாந்தம் ப்ரதாநம்.”- (ப்ரதாநசதகம்); நல்லார் – அறிஞர், உத்தமர். “நல்லாரைக்காண் பதுவுநன்றே – (வாக்குண்டாம் 8) ; கோட்டி – சபை. “கோட்டியுட் கொம்பர் குவிமுலை நோக்குவோன், ஒட்டை மனவனுரமிலி யென்மரும்.” – (பரிபாடல் 12-50-51. அவைக்கண்ணே நின்று கொம்பரொப்பாளுடைய குவிமுலையை நோக்குகின்றவன் இளநெஞ்சன், திண்மையிலனென்பாரும்.) கூட்டு –  “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே” – (திருவாய்மொழி 4-99); கோது – குற்றம்; நிலவு – நிலா, ஒளி, சந்திரப் பிரபை.

  1. பரிவுடனே பாவித்தல்.

காரீரும் மாருயிரைக் கைகுழிந்து போகாமே
பாரி ருலகியலைப் பாங்குடனே – வாரீர்
சுருதிமுடித் தேசிகனைத் தூய்மனத்த ராகிப்
பரிவுடனே பாவித் திரும்.            (71)

(பொழி.) மக்களே! உங்களது பெறுதற்கு அருமையான உயிர் உங்களை விட்டு, உரிமை நீங்கிப் போகாதபடி, அதனைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். உலகத்தின் நடைமுறைச் செயலைப் பக்குவத்தோடு கவனியுங்கள். இங்கே வாருங்கள். சுருதிமுடித் தேசிகனாகிய ஆசாரியப் பெருமானை, தூய்மையான மனத்தவராக நின்று அன்போடு தியானித்துக் கொண்டிருங்கள்.

(71) காரீர் – காப்பாற்றுங்கள்; ஆருயிர் – அருமையாகிய உயிர்; பாரீர் – பாருங்கள்; பாங்கு – பிரீதி, உரிமை ; பரிவு – அன்பு, “பாகனைய சொல்லியொடு தம்பி பரிவிற் பின்போக” – (இராமாவதாரம், அகத்தியப் படலம். 56.); பாவித்து – தியாநித்து.

  1. சேமம்

இரும்பொழில்சூழ் தூப்புல் வருமெம் பெருமானை
அரும்பெறலா வானைமாற் றார்க்கு – விரும்புவார்க்
காரா வமுதை யனைத்துலகும் போற்றிசெயும்
சீரானைச் செப்புதல்சே மம்.                 (72)

(பொழி.) பெரிய சோலைகள் சூழ்ந்துள்ள தூப்புல் நகரில் அவதரித்த எமது சுவாமியும், பகைவர்க்குப் பெறுவதற்கு அருமை உடையவனும், தன்னை ஆசைப்படுபவர்க்கு, தெவிட்டாத அமுதமாக இருப்பவனும், எல்லா உலகமும் புகழ்ந்து துதித்தலைச் செய்யும் சிறப்பினை உடையவனுமாகிய தேசிக ஆசாரியப் பெருமானைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பது நல்வாழ்வாகும்.

(72) பெறல் – பெறுதல்; மாற்றார் – மாற்றலர், பகைவர்; விரும்புவார் – ஆசையுடையோர்; ஆராஅமுதை – தெவிட்டாத, பரமபோக்யமான அமிருதத்தை. “ஆராவமுதே” – (திருவாய்மொழி. 5-8-1.  “ஆராவமுதே – அநுபவியா நின்றாலும் க்ரமப்ராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறியிருக்கும்படி, முற்பட தர்சநமாய், அநந்தரத்திலே அணுகி, பின்னை ஸ்பர்சமாய், இப்படியேயிறே அநுபவப்ரகாரங்கள்; அத்தனை க்ரமம் பார்த்திருக்க வொண்ணாதபடியாயிருக்கை. ஆராவமுதே – கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்கு தேவயோநியிலே பிறக்கவேணும், ப்ரஹ்மசர்யமனுஷ்டிக்க வேண்டிய இத்தனை பட்டால் ஸக்ருதி ஸேவ்யமாயிருக்கும்; இது அங்ஙனன்றிக்கே ஸர்வாதி காரமுமாய், ஸதாஸேவ்யமுமாய், ப்ரஹ்மசர்யாதி வைகல்யமுண்டானவையும் தானே பரிக்ஹரிக்கக் கடவதாயிருக்கும். உத்தர பூமியிலே லோகஸாரங்க மஹாமுநிகள் வர்த்தியாநிற்க, இங்குத்தையானொருவன் அங்கேறச் செல்ல, “பிள்ளாய், தக்ஷிணபூமியில் விசேஷமென்?” என்று கேட்க, “திருவாய்மொழி என்றொரு ப்ரபந்தமவதரித்து, சிஷ்டர்கள் பரிக்ரஹித்துப் போரக் கொண்டாடிக் கொடுபோகா நின்றார்கள்”என்ன, “அதிலே உனக்குப் போவதொரு சந்தை சொல்லிக் காணாய்” என்ன, “ஆராவமுதே” என்கிற வித்தனையும் எனக்குப்போம்” என்ன, “நாராயணாதி நாமங்கள் கிடக்க, இங்ஙனேயுமொரு நிர்த்தேச முண்டாவதே” என்று அத்ருப்தராய், “இச் சொல்லு நடையாடுகிற தேசத்தேறப் போவோம்” என்று அப்போதே புறப்பட்டுப் போந்தார். ஆராவமுதே –“ஸஹபத்ந்யா”- ஆழங்காலிலே யிழிபவர் ஒரு கொம்பைக் கொடியைப் பிடித்து இழியுமாபோலே. “பத்ந்யா – ஸஹ” – கிண்ணகத்திலிழிவார் தேசிகரைக் கைப்பிடித்துக் கொண்டிழியுமாபோலே, பெருமாள் பெரிய பெருமாளை யநுபவிக்கும்போது, பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்றிழிவது.  “விசாலாக்ஷ்யா” – இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கலுண்டான ப்ரேமாதிசயத்தைக் கண்டு, தன்னை யணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பெல்லாம் கண்ணானபடி.” “நாராயணமுபாகமத்”  – இவர் நியதியிருக்கிறபடி, இக்கண்ணுக் கிலக்காய் ஆழங்காற் படாதே அவ்வருகு பட்டார். இத்தால் சொல்லிற்றாயிற்று. தான்தன்னை யநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படி யாயிற்று ஆராமை யிருக்கும்படி யென்கிறது. “ஆராவமுதே” – இத்திருவாய்மொழியில் இவர்க்குண்டான ஆற்றாமைக் கெல்லாம் பீஜம் இப்பதமாயிற்று,” – ஈடு); போற்றி – துதிக்கும், வணங்கும், “எதிர்கால வினைமுற்றாய் நீ காத்தல் செய்யென்னும் பொருளிலும், தொழிற் பெயர் முற்றாய் நின்று செயப்பாட்டு வினையாய்ப் போற்றப்படுவது என்னும் பொருளிலும் வியங்கோட் பொருளிலும் வருமொரு மொழி. விரும்பி என்னும் வினையெச்சப் பொருளிலும் வரும்.”; சீரான் – நற்குணநிதி; செப்புதல் – அநுஸந்தித்தல் சேமம் – க்ஷேமம், ரக்ஷகம், இன்பம்.

  1. பெரும் பாரம்

சேமங்கொ டூப்புற் றிருவேங் கடமுடையான்
தாமன்பி னாற்சமைத்த நற்கலைகள் – ஆமென்
றறிந்தா ரறிவா ரறியாதா ரிங்குப்
பிறந்தார் பெரும்பார மாய்.                  (73)

(பொழி.) பாதுகாப்புக் கொண்ட தூப்புல் நகரில் தோன்றிய திருவேங்கடமுடையாராகிய தேசிகர், தமது அன்புள்ளத்தோடு செய்த நல்ல ஞானக் கலைகள் நமக்கு ஞானம் பெறுவதற்கு ஆகும் என்று அறிந்தவர்கள் அறிஞர்கள் ஆவர். இந்த உண்மையை அறியாதவர்கள் மண்ணுலகுக்குப் பெரிய பாரமாகப் பிறந்தவர்களாவர்.

73) கலை சாஸ்திரம் ; சமைத்த இயற்றியருளிய பாரம் – சுமை

  1. நமக்குச் சார்வு

பெரும்பாரம் பூமிக்குப் போக வுதித்திங்
கரும்பாவ மெந்தமக்குத் தீர்த்த – சுரும்பாரும்
நீள்சோலைத் தூப்பு னிமலனார் தம்முடைய
தாளே நமக்கென்றுஞ் சார்வு.              (74)

(பொழி.) இந்த உலகத்துக்குப் பெரிய சுமையாக உள்ள தீவினையைப் போக்குவதற்காக, இம்மண்ணுலகத்தில் தோன்றி, எங்களுக்குத் தீர்ப்பதற்கு அரிய பாவங்களைப் போக்கிய, வண்டுகள் ஒலிக்கும் பெரிய சோலை சூழ்ந்த தூப்புல்நகரத்துக் குற்றமற்ற தேசிகரது திருவடிகளே, எல்லாக் காலத்தும் நமக்குப் பற்றுக்கோடு ஆகும்.

 

74) உதித்து – தோன்றி, அவதரித்து; தீர்த்த – நீக்கிய; சுரும்பு – வண்டு  நிமலனார் – பரிசுத்தர், அழுக்கற்றவர் ; தாளே – திருவடிகளே ; சார்வு – துணை, “கெட்டார்க்குச் சார்வாய்” – (திருக்குறள். வான்சிறப்பு. 5.), பிராப்யம், உபாயம்.

  1. சாதிகள் ஒன்றிலும் கூடார்

சார்வு நமக்கென்று சாதுசனந் தாமேத்துஞ்
சோர்விறோ தாரம்மை மைந்தனாஞ் – சீர்மிகுந்த
வாதிசிங்கத் தேசிகனை வாழ்த்தாத மானிடரே
சாதிகளி லொன்றிலுங்கூ டார்.         (75)

(பொழி.)  பரம வைணவர்கள் நமக்குப் பற்றுக்கோடு என்று புகழக்கூடிய, தளர்ச்சியில்லாத, தோதாரம்மை என்ற திருப்பெயர் கொண்ட அம்மையாருக்கு, திருமைந்தனாகிய சிறப்பு மிகுந்த வாதிசிங்கத் தேசிகனாகிய ஆசாரியப் பெருமானை வாயார வாழ்த்தாத மனிதர்களே சாதிகள் எதிலும் சேராதவர் ஆவர்.

(75) சாதுசனம் —  சாதுக்கள்; பரம வைணவர்கள் ; தோதாரம்மை – தோத்தாரம்மன், கிடாம்பி இராமாநுசப் பிள்ளான்குமரி, அப்புள்ளார் சகோதரி, தூப்புல்வேதாந்த தேசிகரின் திருத்தாயார் மானிடர் – மனிதர் சாதிகள் – “குலந் தாங்கு சாதிகள் நாலிலும்”- (திருவாய்மொழி. 3-7-9. 48 குலம் இத்யாதி-க்ரமவிவாஹத்தாலும் அநூலோம ப்ரதிலோம விவாஹத்தாலுமுள்ள குலங்களை தரிப்பதான ப்ராஹ்மணாதியான நாலு ஜன்மத்திலும்” – ஈடு. “க்ரமவிவாஹமாவது – ப்ரஹ்மக்ஷத்ர வைச்யசூத்ரர்கள் ஸ்வஸ்வ ஜாதியிலே பண்ணும் விவாஹம்.  அநூலோம விவாஹமாவது – ப்ராஹ்மணன் உத்தரவர்ணத்ரயத்திலும், க்ஷத்ரியன் உத்தர வர்ணத்வயத்திலும், வைசியன் சூத்ர வர்ணத்திலும் பண்ணும் விவாஹம். ப்ரதிலோம விவாஹமாவது – சூத்ரன் பூர்வவர்ணத்ரயத்திலும், வைசியன் பூர்வவர்ணத்வயத்திலும், க்ஷத்ரியன் பூர்வவர்ணத்திலும் பண்ணும் விவாஹம். இது ருஷ்யசிருங்கன் பக்கலிலும் யயாதி பக்கலிலும் காணலாம். தாங்கு – தரித்திருக்கிற சாதிகள் – ப்ராஹ்மணாதிவர்ணங்கள். – (சீயர் அரும்பதவுரை.)

 

  1. பாங்கொரு வாழ்வார்

கூடார் வினைகளுடன் கொண்டிரார் துன்பத்தைத்
தேடார் சிரீதரனை யன்றியே – நாடாரே
சீர்மல்கு வேதாந்த தேசிகனைப் போற்றியே
பாருலகிற் பாங்கொடுவாழ் வார்.      (76)

(பொழி.) சிறப்பு நிறைந்த வேதாந்த தேசிகனைத் துதித்துக்கொண்டு இந்த நில உலகத்தில் பக்குவமாக வாழும் பக்தர்கள், தீய கர்மங்களுடன் சேரமாட்டார்கள். துன்பத்தைக் கொள்ளமாட்டார்கள். இலக்குமிவாழ் மார்பினனாகிய நாராயணனை அன்றி வேறு யாரையும் தெய்வமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவைகளைத் தவிர வேறு எந்த உலகியல் பொருள்களையும் தமக்கு வேண்டும் என்று தேடமாட்டார்கள்.

(76) தேடார் – விசாரியார், நாடார்; சிரீதரன் – ஸ்ரீதரன். “சீரார் சிரீதரனாய்ச்சிவன் றிக்கு மிடப்புயமு, மேரா ரிடங்கொண் டிலங்குவெண் டாமரை மேனியனாய்ப் பாராய பட்டய மீரிரண் டாலும் பயமறுக்கு மாரா வமுதத்தி மாமலை மேனின்ற வச்சுதனே.” –(தேசிகமாலை. பன்னிருநாமம். 9); நாடார் – தேடார்; பாருலகு – பூலோகம்; பாங்கு யோக்கியம்.

  1. போக்குவார்

வாழ்வாரவரெங்கும் வையகத் தார்போற்றத்
தாழ்வொன்று மின்றித் தளர்ச்சியாச் – சூழ்வினைகள்
வேருடனே போக்குவரே வேதாந்த தேசிகன்பேர்
சீருடனே சிந்திப்பரேல்.                    (77)

(பொழி.)  வேதாந்த தேசிகனது திருப்பெயரை, அதன் சிறப்போடு தியானிப்பார்களானால்,அவர், எல்லா இடத்திலும், உலக மக்கள் போற்றிப் புகழும் வண்ணம் வாழ்வார்கள். மேலும், அவர், குறைவு எதுவும் இல்லாமல், நெகிழ்ச்சியோடு, தம்மைச் சூழ்ந்துள்ள தீவினைகள் அனைத்தையும் அடியோடு அழிப்பார்கள்.

(77) வையகம் – பூமி, “வையகமெல்லாங்கழனியாய்” – (விசாக. யாப்.35); வேருடனே  – அடியோடே ; ” நீர்நும தென்றிவை, வேர்முதல்மாய்த்து” -(திருவாய்மொழி. 1-2-3); போக்குவர் .  அழிப்பர்; சிந்திப்பரேல் – எண்ணினால், “மற்றோன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பேயமையும்” -(திருவாய்மொழி.9-1-7. மற்றொன்றில்லை – இத்தோடொக்க வேறு எண்ணலாவதில்லையென்னுதல், இப்போது இதீதைச் சொல்லி வேறொருபோது வேறொன்றைச் சொல்லுகின்றா னென்றிருக்க வேண்டா வென்னுதல். சுருங்கச் சொன்னோம் – இது தன்னைப் பரப்பறச் சொன்னோம். ப்ரதிபத்திக்கு அவிஷயமாம்படி சொல்லுகை யன்றிக்கே, ஸுக்ரஹமாகச் சொன்னோம். மாநிலத்து – இதுக்கு அதிகாரிகள் ஸம்ஸாரத்திலே. இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரம பதத்திலுள்ளாராகிலும் உபதேசத்துக்கதிகாரிகள் ஸம்ஸாரத்தி லுள்ளா ரென்க: எவ்வுயிர்க்கும் – இது அதிக்ருதாதிகாரமன்று ஸர்வாதி காரம். சிற்றவேண்டா – ஆயாஸிக்க வேண்டா. சிற்றுதல் – சிதறுதலாய், பரக்கவேண்டா வென்கை. ஒருவ்யாபாரம் வேண்டாவென்றபடி, சிந்திப்பேயமையும் உக்திநிரபேக்ஷமான சிந்தா மாத்திரமே யமையும்.” – ஈடு)

  1. அடங்குமோ

சிந்தித் தடங்குமோ செங்கமலப் பூவுதித்த
அந்தமில்சீர் மங்கை தனக்கன்பன் – கந்தமிகு
தண்டுழாய்த் தார்மார்பன் போலத் தமர்க்கென்றும்
கொண்டல்கவி வாதிசிங்கக் கோ.       (78)

(பொழி.) செந்தாமரை மலரில் தோன்றிய, முடிவில்லாத சிறப்பினை உடைய, இலக்குமிக்கு அன்பனும், வாசனை நிறைந்த குளிர்ந்த திருத்துழாய் மாலை அணிந்த திருமார்பினனுமாகிய நாராயணனைப்போல், மேகம் போன்று அருள் மழை பொழியும், கவிவாதி சிங்கமாகிய தேசிகரது அளவு கடந்த பெருமை, தம்முடைய பக்தர்களுக்கு எப்பொழுதும் அவர்களது சிந்தனையுள் அடங்குமா? அடங்காது.

(78) செங்கமலப் பூவுதித்த அந்தமில்சீர் மங்கை,  தனக்கன்பன் -தாமரையாள் கேள்வன், “உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கன்பாகிய என்னன்பேயோ” -(திருவாய்மொழி. 10-10-6. “உனக்கேற்கும் – இவனோ பாதி வாசாவிமர்த் திக்கைக்கும் பெறாத ஸெளகுமார்யத்தையுடையவள். இப்படிப் பட்ட உனக்கு ஸத்ருசமான அழகையுடையளாய், புஷ்பத்தில் பரிமளத்தை வடித்து வகுத்தாற்போலே யிருக்கிற பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே! உனக்கேற்கும் கோலமென்று – அவ்வழகையிங்கே யதிதேசிக்கிறர். ந்யாயாதிதேசம் பண்ணுகிருர், கோல மலர்ப்பாவைக்கு அன்பா ! என்னன்பேயோ! – அவள் பக்கலன்பனென்று தோற்றியிரா நின்றது; தம்முடைய பக்கல் அன்பென்றும் அது உடையனென்றும், தெரிக்கப் போகிறதில்லை; ஜ்ஞாதாவை ஜ்ஞாநமென்னு மாபோலே. தத்குண ஸாரத்வாத்து தத்வ்யபதேச:” – ஈடு.  “அதிதேசிக்கிருர் — ஏறிடுகிறர். அதிதேசிப்பது ஸர்வதாஸாம்யமுண்டான விடத்திலே யன்றோ, காளமேக நிபச்யாமமான நிறம் முதலானவற்றை ஹிரண்ய வர்ணையான இவளிடத்திலே யதிதேசிக்கக் கூடுமோவென்ன – ந்யாயாதி தேசம் இத்யாதி. அதாவது – ஸ்வரூபாதி தேசம் பண்ணுகிறதன்று. அவனைப் போல இவளும் அழகுடையவளென்கிற தென்றபடி, ஸ்வரூபாதிதேசமென்றும், ந்யாயாதிதேசமென்றும் இரண்டு. ஸ்வரூபாதி தேசமாவது-ஸர்வதா ஸாம்யம் கொள்ளுகை. ந்யாயாதி தேசமாவது – அதுபோல இதுவும் ச்லாக்யமா யிருக்கு மென்கை.” – சீயர் அரும்பதவுரை) தமர் – அடியார் ; கொண்டல் – மேகம் ; கோ – ஸ்வாமி.

  1. அளிப்பான்

கோவாகி வானவர்க்கு குற்றமிலாத் தொல்லருளால்
ஓவாது வேங்கடத்தி லோங்கிநின் – றாவாவென்
றெம்மை யளிப்பா னிரும்பொழில்சூழ் தூப்புல்வரு
செம்மையுடை வாதிசிங்கத் தேவு.        (79)

(பொழி.) பெரிய சோலை சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய நேர்மை உடைய கவிவாதி சிங்கமாகிய தேசிகத் தெய்வம், தேவர்களுக்குத் தலைவனாக விளங்கி, குற்றம் இல்லாத பழம்பெரும் திருவருளால், இடையீடு இல்லாது திருவேங்கடத்தில் உயர்ந்து நின்று, “ஆ!ஆ!” என்று எங்கள்மேல் இரக்கம் கொண்டு எங்களைப் பாதுகாப்பான்.

(79) ஒவாது – ஒழியாது; ஓங்கி – உயர்ந்து, எழுந்து;  செம்மை – ருஜூத்தன்மை.

  1. திருமணி காக்கும்

தேவ ரசுரர்களுந் தேசுடைய வானவரும்
பூவுலகிற் புண்ணியரும் போற்றிசெய – மூவுலகுக்
கீசனெழில் வேங்கடக்கோ னேரார் திருமணியிக்
காசினியைக் காக்குமே வந்து.            (80)

(பொழி.)  மூன்று உலகுக்கும் இறைவனாக இருப்பவனும், அழகிய திருவேங்கடமலையில் வீற்றிருப்பவனுமாகிய எம்பெருமானது அழகு நிறைந்த செல்வமணி, தேவர்களும், அசுரர்களும், ஒளி உடைய நித்திய சூரிகளும், மண்ணுலகத்தில் வாழும் புண்ணியம் செய்த நல்லோர்களும் புகழும் வண்ணம் இங்கு வந்து இந்த உலகத்தைப் பாதுகாக்கிறது.

80) மூவுலகுக்கீசன் – “நிகரில்புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை யாள்வானே.” – (திருவாய்மொழி. 6-10-10); வேங்கடக்கோனேரார் திருமணி – “திருமலைமால் திருமணியாய்ச் சிறக்கவந்தோன்”

ஈசன் பிறந்தான்

கார்க்குமென்று மெம்மைக் கருக்குழியில் வீழாமே
தீர்க்கும் வினையனைத்துஞ் சேராமே – ஏற்கும்
பெரும்புகழோ னீசன் பிறந்தான் சிறந்த
சுரும்பமருஞ் சோலைசூழ்தூப் புல். (81)

(பொழி.) நிறைந்த பெரும் புகழுடையவனான இறைவன், சிறப்புடைய வண்டுகள் அமர்ந்துள்ள சோலை சுற்றியுள்ள தூப்புல் நகரில் தேசிகராகத் தோன்றினான். அப்படித் தோன்றி எங்களைக் கருக்குழியில் மறுபடியும் வீழாதபடி, எல்லாக் காலத்தும் பாதுகாப்பான். மேலும், தீவினைகள் ஏதும் எங்களைச் சேராதபடி, அதனை ஒழிப்பான்.

(81) கருக்குழியில்விழாமே — “கருவிருத்தக்குழிநீத்தபின் காமக்கடுங்குழி வீழ்ந்து, ஒரு விருத்தம் புக்குழலுறுவீர்! உயிரின்பொருள்கட்கு. ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த திருவிருத்தத்து ஓரடிகற்றீர் திருநாட்டகத்தே” – (திருவிருத்தம் தனியன்)

82. துன்பம் தொலையும்

தூப்புனகர் நாதன் றுலங்கொளிசேர் சேவடியே
காப்பென்னக் கன்மங் கழியுமே – மூப்பில்லா
இன்பம் பெருகுமே யிப்புவியி லெவ்வுயிர்க்கும்
துன்ப மதுதொலையு மே. (82)

(பொழி.) தூப்புல் நகரில் அவதரித்த தலைவனாகிய சுவாமி தேசிகனது, விளங்குகின்ற ஒளி சேர்ந்த செம்மையான திருவடியே, எமக்குப் பாதுகாப்பு என்று சொல்ல, அதனால், இந்த உலகத்தில் எல்லா உயிர்களுக்கும், கருமங்கள் நீங்கும்; முதுமைத் தொல்லை இல்லாத இன்பம் வளரும்; துன்பமாகிய அதுவும் அழிந்துவிடும்.

(82) தூப்புனகர்………. காப்பு – தூப்புல்வேதாந்ததேசிகன் திருவடிகளே சரணம்; துலங்கு – பிரகாசிக்கின்ற பெருகும் – விருத்தியாகும் ; துன்பம் வருத்தம். ‘”துன்பத்திற்கிடங் கொடேல்”- (ஆத்திசூடி); தொலையுமே நீங்குமே “துதித்திடுவோர்தங்கள் பாவந்தொலையுந்தானே.”

83. சிலையால் சிதைக்கவற்றோ

தொலையாத தொல்வினைகள் சூழ்பவ வாழி
சிலையாற் சிதைக்கவற்றோ விங்கு – துலையில்லாக்
கோதில்புக ழாரியர்கள் கூறுங் குணமிக்க
வாதிசிங்கர் மன்னருளா லன்று. (83)

(பொழி.) ஒப்பு இல்லாத குற்றம் இல்லாத புகழை உடைய மேலோர்கள் கூறக்கூடிய குணம் மிக்க வாதிசிங்கராகிய தேசிகரது நிலையான திருவருளால் அல்லாமல் ஒழியாத பழைய தீவினைகள் சூழ்ந்த பிறவிக்கடலை, வில்லால் அழிக்க முடியுமா? முடியாது.

(83) தொலையாத – ஒழியாத, நீங்காத; பவவாழி – ஸம்ஸார ஸாகரம், பிறவிப்பெருங்கடல் ; சிலை வில், கல்; சிதைக்க – அழிக்க; துலை – ஒப்பு, உபமானம்; “அலையற்ற வாரமு தக்கட லக்கடலுண்டமுகில், விலையற்ற நன்மணி வெற்பு வெயினில வோங்குபக, றுலையுற் றனவென்பர் தூமறை சூடுந் துழாய்முடியாற், கிலையொத் தனவவன் பாதம் பணிந்தவர்க் கெண்ணுதற்கே.” -(தேசிகமாலை, அமிருதரஞ்சனி, 6.)

84. அருமை

மன்னருளால் வாதிசிங்க ரிங்குரைத்த நற்கலைகள்
உன்னி யுணர்ந்திட வல்லவர்கள் – துன்னுஞ்
சுருதிமுடி யுட்பொருளைச் சோரா தறிவர்
அருமையா மற்றோ ரறிவு. (84)

(பொழி.) வாதிசிங்கர் எனப் புகழப்படுகிற வேதாந்த தேசிகர், இவ்வுலகில் இயற்றி அருளிய நல்ல வைணவச் சாத்திர நூல்களை, அவரது நிலையான திருவருளால், நினைத்து உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள், நெருங்கிய வேதங்களின் முடிவாக விளக்கும் விழுப் பொருளை, மறப்பின்றி அறிந்து கொள்வார்கள். மற்றையோரது அறிவு, அந்த உட்புருளை அறிவது அருமையாகும்.

(84) கலைகள் – கிரந்தங்கள்; உன்னி – நினைத்து; வல்லவர் – ஸமர்த்தர். “வல்லான் வகுத்ததே வாய்க்கால்”; துன்னும் – சேரும் ; சுருதிமுடியுட்பொருள் – “மிக்கவேதியர் வேதத்தி னுட்பொருள்.” — (கண்ணிநுண்சிறுத்தாம்பு, 9); சோராது – மறப்பின்றி; அருமை – இன்மை. “மனக்கவலை மாற்றல் அரிது.” -(திருக்குறள். கடவுள் வாழ்த்து. 7, “ஈண்டு அருமை இன்மை மேனின்றது” – பரிமேலழகருரை.)

85. ஓதி உணராதவர்

அறிவரோ வாழ்வா ரருமறையின் சீரை
நெறிதா னினைந்திடவல் லாரோ – சிறியராய்
வேதமுடித் தேசிகன்றன் வீறுடைய நற்கலைகள்
ஓதி யுணராத வர். (85)

(பொழி.) வேதங்களைத் தம் திருமுடியில் தரித்த தேசிகன் செய்த பெரும் சிறப்பு உடைய நல்ல வைணவச் சாத்திர நூல்களை அனுசந்தானம் செய்து, அதன் கருத்துக்களை உணர்ந்து தெளியாதவர்கள், சிறுமைக் குணத்தினராக நின்று, ஆழ்வார்களது அருளிச் செயலாகிய தமிழ் வேதத்தின் சிறப்பை அறிவார்களோ? மேலும் அந்தத் தமிழ்மறை கூறும் தீதில் நன்னெறியை எண்ணுவதற்கு வல்லவரோ? இல்லை.

(85) ஆழ்வார் – மாலுகந்தவாசிரியர், எம்பெருமானுடைய திவ்யமங்கள குணகணங்களாகிய அமுதவெள்ளத்திலே ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவராகிய பரமபாகவதர், திருமாலின் அபிநவ தசாவதாரம் எனக்கொண்டாடப் பெறுபவர். “ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல்வாழி”- (உபதேசரத்தினமாலை. 3); நெறி – மார்க்கம்; வீறு – உயர்ச்சி, சிறப்பு, பெருமை, பொலிவு வெற்றி, வேறொன்றற்கில்லா வழகு.

மாற்றம் அறியா மனிசர்

உணரார் மறைப்பொருளை யுத்தமரைச் சேரார்
பணவா ளரவணைப் பள்ளி – புணர்வானைப்
போற்றியெ ழாரந்தோ புல்லியராய் வாதிசிங்கர்
மாற்றமறி யாமனிசர் மாய்ந்து. (86)

(பொழி.) வாதிசிங்கராகிய தேசிகரது உபதேச மொழிகளைத் தெரிந்து கொள்ளாத மனிதர்கள், மறந்து, கீழ் மக்களாய் நின்று, வேதத்தின் உட்பொருளை இன்னது என்று உணர்ந்து கொள்ளமாட்டார்கள். உயர்ந்தவர்களாகிய உத்தமர்களை அடைய மாட்டார்கள். படத்தை உடைய ஒளி பொருந்திய ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு, அதனைச் சேர்ந்து உள்ள பரந்தாமனாகிய நாராயணனைப் போற்றிப் புகழ்ந்து பேசமாட்டார்கள். அதனால் அவர்கள் அந்தோ என்று இரக்கப்படுவதற்கு உரியவர்களாகின்றார்கள்.

(86) பணம் – பாம்பின்படம்; வாள் – ஒளி ; பள்ளி – படுக்கை ; புணர்வோன் – சேர்வோன் ; போற்றியெழார் – “துயரறுசுடரடிதொழுதெழு ” – (திருவாய்மொழி 1-1-1); புல்லியர் – கீழ்மக்கள்; மாற்றம் – சொல். “ மாற்றங்களாய்ந்து கொண்டு” -(திருவாய்மொழி 6-8-11, “சுரமேறுவாரைப் போலே, பக்திபரவ சராயிருப்பார்க்கு அடைவுபடப்பாசுரமிட்டுச் சொல்லப்போகாதிறே; இவ்வளவிலும் சொற்கள் நேர்பட்டபடி: நல்ல சொற்களைத் தெரிந்துகொண்டு”-ஈடு.)

87. பாதகங்கள் ஓடும்

மாய்ந்துமாய்ந் திவ்வுலகின் மன்னிய பல்பிறப்பிற்
றோய்ந்துழல்வீர் சொல்லுகேன் வம்மினோ –  ஆய்ந்தொருகால்
வேதமுடித் தேசிகனார் மெய்யுரையை நண்ணினால்
பாதகங்க ளோடும் பறந்து. (87)

(பொழி.) மறைந்து மறைந்து இந்த உலகின் நிலைபெற்ற பலவிதமான பிறப்பில் படிந்து துன்புறும் மக்களே! இங்கு வாருங்கள். உமக்கு ஒரு நல்ல செய்தி சொல்கின்றேன். வேதமுடித் தேசிகனார் அருளிச் செய்த உண்மை வார்த்தைகளை ஒருமுறை ஆராய்ந்து பார்த்து, அதனை எண்ணினால், உங்களது துரோகங்கள் எல்லாம், இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.

(87) மாய்ந்து மாய்ந்து – “வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குகளின் மாய்ந்து மாய்ந்து, ஆழ்ந்தா ரென்றல்லால் அன்றுமுதலின்றறுதியா, வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை நிற்குறில், ஆழ்ந்தார்கடற்பள்ளி அண்ணலடியவராமினோ” – (திருவாய்மொழி 4-1-6) வம்மின் – வாருங்கள் மெய்யுரை – பொய்யில்பாடல்; நண்ணினால் – அநுஸந்தித்தால்; பாதகம் – துரோகம்.

88. கோதில் குணம்

பறக்குமே பாவம் பவக்கடலும் வற்றும்
இறக்குமே இவ்வுலகிற் றுன்பம் – மறப்பின்றி
வாதிசிங்கர் வார்த்தைகளை வைப்பரேற்
றந்நெஞ்சிற் கோதில்குணங் கொண்டிருக்கலாம். (88)

(பொழி.) வாதிசிங்கராகிய தேசிகரது உபதேச நன்மொழிகளைத் தமது மனத்தில் வைத்துக் கொள்வரானால், அவரது பாவம் விரைந்தோடும். பிறவிக் கடலும் வற்றிவிடும். இந்த உலகத்தில் துன்பம் எதுவும் இல்லாமல் அழிந்துவிடும். மேலும், அவர்கள், குற்றம் இல்லாத குணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.

(88) பறக்கும் விரைந்தோடும் ; வற்றும் – வடியும்; இறக்கும் – போம்; வார்த்தை – வசனம்.

89. வீற்றிருக்கலாம்

கொண்டிருக்கலாமே குறைகடல்சூழ் வையகத்தை
விண்டலத்தில் வீற்றிருக்க லாமேதான் – தொண்டுபட்டுத்
தொல்புகழ்சேர் தூப்புல்வந்த தூய்மறையோன் செய்தகலை
அல்லும் பகலு மறிந்து. (89)

(பொழி.) பழைய புகழ் சேர்ந்த தூப்புல் வந்த, தூய வேதங்களைக் கற்ற தேசிகர் அருளிச் செய்த நற்கலைகளை அடிமை உணர்வுடன் இரவும் பகலுமாக அறிந்து தெளிந்தவர்கள் ஒலிக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தை ஆச்ணு கொண்டிருக்கலாம், பரமபதத்தில் வீற்றிருக்கலாம்.

(89) தொண்டு – அடிமை ; அல் – இராத்திரி, “அல்லும் பகலுமனவரதமும் நினைத்தாற், கல்லுஞ் சொல்லாதோ கவி.”

90. புறம் தொழார்

அறிந்து மறையோ ராரணத்தின் பொருளைச்
சிறந்த மனத்திற் சேமித்துப் – புறந்தொழார்
வண்பொழில்சூழ் தூப்புனகர் வந்துதித்த வாதிசிங்கர்
எண்பெரிய சீர்மொழிகண் டார். (90)

(பொழி.) வளமையான சோலைகள் சூழ்ந்த தூப்புல் நகரில் வந்து தோன்றிய வாதிசிங்கர் எனப் போற்றப்படுகின்ற வேதாந்த தேசிகரது மிகப் பெரிய சிறப்பினை உடைய அருள்மொழிகளைக் கண்டவர்கள், வேதியர்களின் வேதங்கள் கூறும் உட்பொருளை அறிந்து, அதனைச் சிறந்த மனத்தில் தங்கவைத்துத் தேசிகருக்குப் புறமாக இருக்கிற வேறு யாரையும் வணங்கமாட்டார்கள்.

(90) மறையோராரணம் – “அந்தணரருமறை”- (பரி பாடல் 1-13, 210-57, 3-14, 4-65.); சேமித்து – சேர்த்து; புறம் – அயல், வெளி, வேறு, பிறமதம் ; எண்பெரியசீர் – * எண்பெருக்கந்நலம் 9 – (திருவாய்மொழி 1-2-10)

சிந்தித்தவர்

கண்டார் கரையைக் கடந்தார் பவக்கடலை
அண்டாத வார்வ மடைந்திட்டார் – வண்டாரும்
கொந்தலர்பூந் தூப்புல்வருங் குற்றமில்சீர் வாதிசிங்கர்
செந்தமிழ்நூல் சிந்தித்தவர். (91)

(பொழி.) வண்டுகள் நிறைந்த, கொத்தாக மலர்ந்த மலர்களைக் கொண்ட, சோலை சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய, குற்றம் இல்லாத வாதிசிங்கராகிய தேசிகர் அருளிச் செய்த செந்தமிழ் நூலாகிய தேசிகமாலையை நன்கு மனத்தில் வைத்துக் கொண்டவர்கள், துன்பக் கடலின் எல்லையைத் தாண்டியவராவார். பிறவிக் கடலைக் கடந்தவராவர். நிறைவான பக்தியை அடைந்தவராவர்.

(91) ஆர்வம் – அன்பு ; செந்தமிழ்நூல் – தேசிகமாலை,

92. களித்தோம்

சிந்தித் தவர்மொழியைச் சிந்தாதே நாடோறும்
வந்தித் தவர்மலர்ப் பாதத்தை – அந்தமில்சீர்
தூப்புனகர் வந்துதித்த தூய்மறையோர்  தொல்லருளால்
கோப்புடனே யாங்களித்தோ மின்று. (92)

(பொழி.) முடிவு இல்லாத சிறப்பினை உடைய தூப்புல் நகரில் வந்து அவதரித்த தூய்மையான வேதங்களைக் கற்ற தேசிகரது பழம்பெரும் திருவருளால் நாம் இன்று, அவர் கூறியுள்ள உபதேச மொழிகளை மனதில் சிந்தித்தும், அவரது தாமரை மலர் போன்ற திருவடிகளை தினம் தோறும் மனம் சிதறாமல் (ஒருமை மனத்துடன்) வணங்கியும் (வழிபாடு செய்தும்) அடியார் கூட்டத்தோடு இன்பம் அடைந்தோம்.

(92) வந்தித்து — வணங்கி, வழிபாடுசெய்து; களித்தோம் – இன்பமடைந்தோம்.

93. நாளும் நல்குவது

இன்றறிந்தோ மெந்தமக்கோ ரின்பமிலை யீதன்றி
இன்றறிந்தோ மெய்த்தவமு மீதென்றே – குன்றாத
தொல்புகழ்சேர் தூப்புல்வாழ் தூயன் மலர்ப்பதத்தை
நல்குவதே நாளும் பிற. (93)

(பொழி.) (ஆசாரிய அடியார்களின் திருக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்வதாகிய) இஃது அல்லாமல், எமக்கு இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை என்று இன்று அறிந்துகொண்டோம். இதுவே உண்மையான தவமும் ஆகும் என்றும் இன்று அறிந்துகொண்டோம். (இந்தப் பேரின்பமே) குறையாத பழம்புகழ் நிறைந்த தூப்புல் நகரில் வாழும் தூயவனான சுவாமி தேசிகனின் தாமரை மலர் போன்ற திருவடிகளையும், (ஆன்மீக வாழ்வுக்கு ஏற்ற) பிறவற்றையும் நாள்தோறும் கொடுக்கும்.

(93) குன்றா – குறையாத; நல்குவது – ஈவது, உண்டு பண்ணுவது.

(94) சொல்பவர் பெரிது

பிறவித் துயரறும் பேரின்பஞ் சேரும்
குறையொன்று மில்லாக் குணத்து – மறையவர்கள்
போற்றுமிந்த வாதிசிங்கப் புண்ணியரை யல்லாது
தோத்திரித்துச் சொல்லா தவர்க்கு. (94)

(பொழி.) குறை எதுவும் இல்லாத குணத்தையுடைய, வேதியர்கள் புகழக்கூடிய இந்த வாதிசிங்க நல்லவராகிய வேதாந்த தேசிகரை அல்லாமல், வேறு யாரையும் துதிபாடிப் புகழாதவர்க்கு பிறவியினால் ஏற்படும் துன்பம் நீங்கும். பேரின்பம் வளரும்.

(94) பிறவித்துயர் – “பிறவித்துயரற ஞானத்துள் நின்று துறவிச்சுடர் விளக்கம் தலைப்பெய்வார், அறவனை ஆழிப்படை அந்தணனை, மறவியை யன்றி மனத்து வைப்பாரே.” – (திருவாய்மொழி 1-7-1); குறையொன்றுமில்லா – “குறை வொன்றுமில்லாத கோவிந்தா” – (திருப்பாவை, 28); தோத்திரித்து – துதித்து.

95. செம்மை செய்
சொல்வதுமுன் னாமந் தொழுவதுமுன் பாதமலர்
நல்குவது முன்னுடைய நற்குணமே – தொல்லருளுக்
கெம்மையிலக் காக்கி யீனமா மெம்பரிசு
செம்மைசெய் தேசிகனே யின்று. (95)

(பொழி.) சுவாமி தேசிகனே! நாங்கள் பேசிக் கொண்டிருப்பதும் உம்முடைய திருப்பெயர்தான்; வணங்குவதும் உம்முடைய திருவடி மலர்தான். விரும்புவதும் உம்முடைய நல்குணங்களையே. (அதனால்) எம்மை உமது பழம்பெரும் திருவருளுக்குக் குறிக்கோளாக்கி, குறைபாடான எமது தன்மையை, இன்று நல்ல கொடைப் பொருள் (காணிக்கை) ஆகுமாறு செய்தருளுக.

(95) தொல் – அநாதி; இலக்கு — லக்ஷ்யம் ; ஈனம் – தாழ்வு; பரிசு – வெகுமதி, விதம்

மனம் பெற்ற விதம்

இன்றென்றன் பாக்கியமோ வேரார் வரதகுரு
நன்றன தொல்லருளோ நாரணன்றன் – குன்றாத
நன்னினைவோ நானின்று வாதிசிங்கர் நல்லடியை
மன்னுமணம் பெற்றவி தம். (96)

(பொழி.) நான், இன்றைக்கு வாதிசிங்கராகிய தேசிகரது நல்ல திருவடியைச் சேரும் மனத்தைப் பெற்றுக் கொண்ட விதம், இன்று எனக்குக் கிடைத்த செல்வமோ? அழகு நிறைந்த வரதாரிய குருவினது நல்ல பழம் பெரும் திருவருளோ? நாராயணனது குறையாத நல்ல தியானமோ? (என்ன என்று சொல்வது?)

(96) பாக்கியம் — செல்வம், புண்ணியம், “பாக்கியம் புரிந்திலாப்பரதன்”-(இராமாவதாரம், அயோத்தியா காண்டம், மந்தரைசூழ்ச்சிப் படலம், 59), “பாக்கியம்மெனக் குளதென நினைவுறும் பான்மை” – (இராமாவ தாரம், பாலகாண்டம், வேள்விப்படலம் 57. பொருளல்லாத என்னை நீ ஒரு பொருளாக மதித்துவந்து உன்னால் வேள்வி காக்கப்படுதற்கு ஏதுவானதொரு நல்வினைதனக்கு யிருந்ததென்று யான் எண்ணுகின்ற அத்தன்மை); ஏரார்வரதகுரு – “சீரா கியவர தாரியன் பாதந் துணைநமக்கே.” – (பிள்ளையந் தாதி, தனியன்) “நயினராசாரியர் தேசிகர்குமரர், இவர்க்கு வரதாசார்யர் என்றும் பெயர். இவரும் தந்தையைப் போல் பலரிடத்தில் வாதஞ்செய்து திவ்யதேச யாத்திரை செய்து வருகையில் கேரளதேசம் சென்று மடைப்பள்ளி பரிசனங்களுக்குத் தலைச்சுமையாய் கூடி க்ஷூத்ரர் ஏவியகல்லை அவர்களுக்கே திருப்பி அவர்கள் வேண்ட அதைப்போக்கிச் சாகல்லியமல்லன் விட்ட பூதத்தைப் பல்லக்குச் சுமப்பித்துத் தாஸராசாவென்கிற பிராமணனை ஸ்ரீவைஷ்ணவனாக்கித் தம்மிடம் வாதத்திற்கு வந்த மாயசந்நியாசியை அண்ணனைக்கொண்டு வெல்வித்துத் தம்மை யாச்ரயித்த முதலிகளுக்குப் பாஷ்ய காலக்ஷேபாதிகளைச் செய்து 69 வருஷமிருந்து திருநாட்டிற்கெழுந்தருளினர்.”-(அபிதான சிந்தாமணி) விதம் – வகை. “வரதகுரு நன்றான தொல்லருளோ” என்பதால் இவ்வந்தாதி வாசிரியர் நயினாராசாரி யாரிடம் ஆச்ரயித்தவர் என்று கொள்ள இடந்தருகின்றது.

97. அருள்வீர்

தம்மை வணங்கினர்க் கெஞ்ஞான்றுந் தம்முடைய
தன்மை யளிக்குமிரா மாநுசர்போல் – உம்மை
வணங்கு மடியேற்கு வாதிசிங்க ரேநீர்
இணங்கும் வகையருள்வீ ரின்று. (97)

(பொழி.) தம்மை வழிபாடு செய்த அன்பர்களுக்கு, எப்பொழுதும் தமது அருளைக் கொடுக்கக் கூடிய எம்பெருமானாரைப்போல, வாதிசிங்கராகிய தேசிகரே! உம்மை வழிபாடு செய்கின்ற அடியவனாகிய எனக்கும் இன்றைக்கு, நீங்கள், நான் வந்து உங்களோடு சேர்ந்து கொள்ளும் முறையை அருள் செய்யுங்கள்.

(97) இராமாநுசர் — எம்பெருமானர்; தம்முடைய தன்மையளிக்கும் – “தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்.”

98. நீ தேவு

என்று மெனக்குநீ யீன்றெடுத்த தாய்தந்தை
நன்றளிக்கு நற்குருவு நற்கதியுங் – குன்றெடுத்த
மாயனைப்போன் மற்று மறைமகுட தேசிகனே
தூயமனத் தோர்க்குநீ தேவு. (98)

(பொழி.) வேதங்களை உனது திருமுடியில் கொண்ட தேசிகனே! எனக்கு நீ எப்பொழுதும் எம்மைப் பெற்றெடுத்த தாய், தந்தையாக விளங்குகின்றாய். மேலும், நல்ல ஞானத்தைக் கொடுக்கக் கூடிய நல்ல ஆசாரியராகவும், நல்ல அடைக்கலப் பொருளாகவும் அமைந்துள்ளாய். அப்படிப்பட்ட நீ, தூய்மையான உள்ளத்தை உடைய பக்தர்களுக்கு கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிய ஆச்சரியமான செயலைச் செய்யும் கண்ணபிரானைப் போலத் தெய்வமாகக் காட்சி அளிக்கின்றாய்.

(98) என்றுமெனக்கு……..கதியும் – “சேலேய் கண்ணி யரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையு மவரே யினியாவாரே” – (திருவாய்மொழி 5-1-8); தேவு – “தேவும் எப்பொருளும் படைக்க, பூவில் நான்முகனைப் படைத்த, தேவன் எம்பெருமானுக்கல்லால், பூவும் பூசனையும் தகுமே?” (திருவாய்மொழி 2-2-4 தேவும் எப்பொருளும் படைக்க – தேவஜாதியையும் ஸகல பதார்த்தங்களை யும் உண்டாக்குகைக்காக, ஒரு பூவிலே நாலுபூப் பூத்தாற்போலே சதுர்முகனை யுண்டாக்கினவன். இத்தால் ஜ்ஞாநத்திற் காட்டில் வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது. ஈடு), தெய்வம், தேவாந்தன்மை

99. அருளாய்

தேவ ரொடுமுனிவர் தேசுடைய யோகியரு
மேவி யடிபரவு மெய்த்தவனே – காவிமலர்க்
கண்ணார் மயக்கிற் கலங்கா வகையருளாய்
கண்ணாளா தூப்புற் கனி. (99)

(பொழி.) விண்ணில் உள்ள தேவர்களோடு, துறவிகள், ஒளி உடைய யோகம் செய்பவர்களும், மனம் பொருந்தி, உனது திருவடிகளைத் துதிக்கின்ற உண்மையான தவச்செல்வனாக விளங்குபவனே! உலகத்து உயிர்களுக்குக் கண்களாக இருந்து, ஒளி கொடுப்பவனே! தூப்புல் நகரில் உதித்து, அடியார்களுக்குத் தித்திப்பைக் கொடுக்கும் பழமாக இருப்பவனே! நீலோற்பல மலர் போன்ற நீல நிறக் கண்களை உடைய பெண்களது காம மயக்கத்தில் நான் கலங்கி விழாத வண்ணம் என்னைக் காத்தருள்வாய்.

(99) தேவர் — சுரர்; முனிவர் – மநநசீலர் ; யோகி – யோகமுடையவர்; மேவி – பொருந்தி; அடி – பாதம்; பரவு — துதிக்கும்; மெய்த்தவன் – உண்மையான தவமுடையவன்; காவி – நீலோற்பலம்; கலங்கா – கலங்காத

100. வீறுடைத்து
கனிவாய்க் கவிவாதி சிங்கரிப் பார்க்கோர்
நுனியார் திகிரிபோ னுாக்கப் – பனிபோலக்
கூறாயிற் றன்றே குமதிகடங் கோதுகுலம்
வீறுடைத்தே வேத முடி. (100)

(பொழி.) பழம் போன்ற சிவந்த மென்மையான வாயை உடைய கவிவாதி சிங்கராகிய வேதாந்த தேசிகர், இந்த உலகத்தை, ஒரு கூர்மை மிக்க சக்கரத்தைப் போன்று தள்ள, அதனால், பிறழ்ந்த அறிவுடைய அறிவிலிகளின் மகிழ்ச்சி, பிளவுபட்டது! ஆகவே, வேதத்தின் முடி பெரும் சிறப்புப் பெற்றது. (வேறு ஒன்றுக்கும் இல்லாத சிறப்பு வேதத்திற்குக் கிடைத்தது)

(100) நுனியார் — கூர்மைமிக்க, “பொழிலேழுமேன மொன்ருய், நுனியார்கோட்டில் வைத்தாய்!” – (திருவாய்மொழி 2-3-5) “பொழில் இத்யாதி – தனிமையிலே வந்து உதவும் படியைச் சொல்லுகிறது அத்விதீய மஹாவராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து, ப்ரளயங்கொண்ட புவநங்களேழையுமெடுத்து.” நுனியார்கோட்டில்வைத்தாய் – நுனியென்று – கூர்மை. ஆர்கை – மிகுதி. கூர்மை மிக்க கோட்டிலே வைத்தாயென்றபடி இத்தால் ரக்ஷ்யவர்க்கத்தினளவல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பைச் சொல்லுகிறது.” – ஈடு); திகிரி – சக்கரம்; நூக்க – தள்ள; கோது குலம் – கெளதுாகலம், மிக்க சந்தோஷம், “கோதுகுலமுடைய பாவாய்” – (திருப்பாவை. 8).

———————————–

கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலினே ।
ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ॥

வாதி³த்³விபஶிரோப⁴ங்க³பஞ்சானனபராக்ரம: ।
ஶ்ரீமான் வேங்கடனாதா²ர்ய: சிரம் விஜயதாம் பு⁴வி ॥

ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகஞாய நம: ।

——————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ந‌யினாராசாரியாரின் சிஷ்ய‌ரான‌ ஸ்ரீ க‌ந்தாடை ம‌ன்ன‌ப்ப‌ங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Posted in ஸப்த காதை, Desihan | 1 Comment »

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ॥ ஸப்ததி ரத்ன மாலிகா ॥

February 19, 2023

ஸ்ரீ க்ருஷ்ணாய பர ப்ரம்ஹணே நமஹ–

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:—

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந் வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்–ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள்   தனியன் :

திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம்

அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே)

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: தமது திருக் குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

அருளிச்செயல்கள்:

  • ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள்.
  • பராசர பட்டரின் அஷ்ட ஸ்லோகீ வ்யாக்யானம்
  • மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களாசாசனம் –
  • வரவரமுனி சதகம் (மாமுனிகளை மேன்மைப்படுத்தி 100 ஸம்ஸ்க்ருத ச்லோகங்கள் )
  • வரவரமுனி மங்களம்
  • வரவரமுனி ஸுப்ரபாதம் –
  • மாமுனிகளின் வாழி திருநாமமாகிய “செய்ய தாமரைத் தாளினை வாழியே…” (அருளிச்செயல் கோஷ்டியில் இறுதியில் சேவிக்கப்படும்)
  • மற்றும் பல ச்லோகங்கங்கள் — ஸ்தோத்ர க்ரந்தங்கள்.

முடும்பை நம்பி திருவம்சத்தில் “ஹஸ்திகிரிநாதர்” என்னும் திருநாமம் கொண்டு அவதரித்தார். இவரை அண்ணா என்றும் அழைப்பார்கள். ப்ரதிவாதி பயங்கரர் என்றும் பிரபலமாக அறியப்பட்டார்.

எப்படி கூரத்தாழ்வான் எம்பெருமானாருக்கு முற்பட்டு அவதாரம் செய்திருந்தாலும் எம்பெருமானாருடைய ப்ரியமான சிஷ்யரானாரோ, அதேபோல் அண்ணாவும் மாமுனிகளுக்கு முற்பட்டு அவதாரம் பண்ணியிருந்தாலும் மாமுனிகளுக்கு இவர் ப்ரியமான சிஷ்யரானார். இவர் மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் (மாமுனிகளின் எட்டு முக்கிய சிஷ்யர்கள்) ஒருவருமாவார்.

தமது சிறு ப்ராயத்தில் அண்ணா காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வேதாந்தாசார்யரின் அருளுக்குப் பாத்திரமானார். வேதாந்தாசார்யரின் திருக்குமாரரான நாயனாராசார்யரிடம் சம்ப்ரதாயம் பயின்றார். அண்ணா ஸம்ப்ரதாயத்தில் சிறந்து திகழ்ந்து மாற்று ஸம்ப்ரதாய வல்லுனர்களை   தன் வாதத் திறமையினால் வென்றார். மாற்று ஸம்ப்ரதாயத்தில் இருந்து தன்னை வாதத்திற்கு அழைப்பவர்களின் மனதில் அண்ணா ஒரு பயங்கரமாகவே திகழ்ந்தார். அதோடு வாதத்தைத் தெளிவாக நிறுவும் திறன் கொண்டிருந்தார். இதை விளம்பும் வகையில் அனைவரும் இவரை ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா எனத் திருநாமம் சாத்தினர்.

க்ருஹஸ்தாச்ரமம் ஏற்று அண்ணா திருமலை (திருவேங்கடம்) சென்று திருவேங்கடமுடையானுக்குக் கைங்கர்யம் செய்தார். அவரது தர்மபத்னியும் அண்ணாவிற்குச் சரிசமமாக சாஸ்த்ரங்களில் தேர்ந்தவர். கூரத்தாழ்வானின் தர்மபத்னியான ஆண்டாளுக்கு நிகராய் (ஆழ்வானின் தர்மபத்னியான ஆண்டாள் என்பார் சாஸ்த்ரங்களில் சிறந்தும், எல்லாப் பெண்டிர்க்கும் பகவானிடத்திலும் பாகவதர்களிடத்தும் பூரணமாய் ஆஸ்ரயித்திருக்கத்   தாமே சிறந்ததோர் எடுத்துக்காட்டாய்த் திகழ்தார்) பாண்டித்யம்-வைராக்கியம் ஆகியவை கொண்ட அவர் மூன்று திருக்குமாரர்களை ஈன்றார். அவர்களும் மிகுந்த பாண்டித்யம் பெற்றவர்களாய் வளர்ந்தார்கள்.

உலக விஷயங்களிலே ஈடுபாடின்றி அண்ணா திருவேங்கடமுடையானிடத்தே சென்று வழுவிலா கைங்கர்யத்தைப் பிரார்த்தித்தார் (ஆழ்வார் திருவாய்மொழி 3.3 யில் “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் ப்ரார்த்தித்ததைப் போலே). இதற்குத் திருச்செவி சாய்த்த திருவேங்கடமுடையான், தோழப்பர் (திருவேங்கடத்தில் இருந்த ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்) முகமாக  அண்ணாவிற்கு திருமஞ்சனத்திற்கும், திருவாராதனத்திற்கும் தீர்த்தம் பூரிக்கும் கைங்கர்யத்தை நியமித்தார். தோழப்பர் அண்ணாவிடத்தில், எம்பெருமான் எளிதில் அகமகிழ்வான் என்றும், நித்யப்படி தீர்த்தம் ஸமர்ப்பிப்பதினாலேயே எம்பெருமான் மிகவும் ப்ரீதியடைவான் என்றும் கூறினார். தோழப்பர் அண்ணாவிடம் ஒரு வெள்ளிக் குடத்தை ஸமர்ப்பித்து ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம் பூரித்து, அர்ச்சகரிடத்தில் திருவாராதனத்திற்காக ஸமர்ப்பிக்கு முன் தீர்த்தத்தில் தீர்த்தப் பரிமளம் (ஏலக்காய், கிராம்பு முதலியன) சேர்க்குமாறு  ஆணை யிட்டார். அண்ணா இதனை ஆனந்தத்துடன் சிர மேற் கொண்டு இந்தக் கைங்கர்யத்தை மிகுந்த அன்புடனும் பகவானிடத்தில் கைங்கர்ய ச்ரத்தைக்கு எடுத்துக்காட்டாய் செய்து வந்தார்.

ஒரு நாள் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீரங்கத்திலிருந்து திருமலைக்கு எழுந்தருளினார். அண்ணா அவரை எம்பெருமான் முன்னிறுத்தி சேவை செய்து வைத்தார். பிறகு அந்த ஸ்ரீவைஷ்ணவர் மூலமாக ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் ஆகியோருக்கு நடக்கும் மேன்மையான கைங்கர்யங்கள் குறித்துக் கேட்கலானார். அதற்கு மேலாக ஸ்ரீரங்கத்தில் மணவாள மாமுனிகளின் மேன்மை மற்றும் தெய்வீக அனுஷ்டானங்கள் பற்றியும் கேட்கலானார். கேட்ட மாத்திரத்தில் மணவாள மாமுனிகளின் கருணை மற்றும் புலமை குறித்து அண்ணா மிகுந்த ஈடுபாடு கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தன்னுடைய கைங்கர்யத்தை முன்னிட்டு ஆகாச கங்கைக்கு அழைத்துச் சென்றார்.

அந்தப் பாதையில் செல்லும்போதும் திரும்பி வரும் போதும் அண்ணா அந்த ஸ்ரீவைஷ்ணவர் மூலம் மாமுனிகளின் அனுபவத்திலே ஆழ்ந்து இருந்தார். இதனாலே தீர்த்தத்தில் தீர்த்தப் பரிமளம் சேர்க்க மறந்து விட்டார். இதை உணர்ந்தவுடன் அதை சரி செய்ய முற்பட்டார். இதனிடையில் ஒரு ஏகாங்கி (பரிபூர்ணமாக பகவத் கைங்கர்யத்தில் தன்னை அற்பணித்துக்கொண்டவர்) திருவாராதனத்திற்கு நேரமாகவே தீர்த்தக் குடத்தை எழுந்தருளப் பண்ணி விட்டார். அண்ணா பரிமளம் சேர்க்காததை சொன்ன போது ஏகாங்கி அதனைக் கேட்க வில்லை. ஆகவே பதட்டத்துடன் சந்நிதிக்குச் சென்றார்.

அங்கே திருவாரதனம் தொடங்கிவிட்டதைக் கண்டார். அர்ச்சகரிடம் தீர்த்தப் பரிமளத்தை ஸமர்ப்பித்தார். ஆனால் அர்ச்சகர், “இன்று தான் தீர்த்தம் மிகவும் பரிமளத்துடன் விளங்குகின்றது” என அண்ணாவிடம் கூறினார். அண்ணாவிற்கு விஷயம் புரிந்து விட்டது. தான் மாமுனிகளின் வைபவத்தை ஆழ்ந்து கேட்டமையால் பகவானும் உகப்பில் அகமகிழ்ந்து, தீர்த்தப் பரிமளம் சேர்க்காமலேயே பகவானின் கருணையினால் தீர்த்தமும் பரிமளத்துடன் விளங்கியது. அண்ணா அந்த ஸ்ரீவைஷ்ணவருக்கு இனிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக மிகவும் நன்றி தெரிவித்து, தான் மாமுனிகளை விரைவில் தரிசிக்க வேண்டுமென தெரிவித்தார். சில நாட்கள் கழித்து திருவேங்கடமுடையானிடம் நியமனம் பெற்றுத் தன் குடும்பத்துடன் மாமுனிகளிடம் தஞ்சம் புக ஸ்ரீரங்கம் சென்றடைந்தார்.

ஸ்ரீரங்கம் அடைந்து ஸன்னிதிக்குச் சென்ற அண்ணா, முறைப்படி சேவிக்கலானார் (ஆண்டாள், எம்பெருமானார், சேனைமுதலியார் என முறைப்படி சேவித்து இறுதியில் பெரியபெருமாளும் பெரியபிராட்டியாரும்). பெரியபெருமாளை சேவிக்கும் முன்னர்,  மாமுனிகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழி 4.10 பதிகம் – ஒன்றும் தேவும் – காலக்ஷேபம் செய்துகொண்டிருப்பதை அண்ணா கண்டார்.  அர்ச்சாவதாரத்தில் முக்கியமாக ஆழ்வார்திருநகரி எம்பெருமான் ஆதிநாதனிடத்தில் பகவானின்  பரத்வத்தை ஆழ்வார் இதில் நிர்ணயிக்கிறார். அண்ணா கோஷ்டி முன்பே தண்டன் (சாஷ்டாங்கமாக திருமேனி பூமியில் படுமாறு சேவித்தல்) சமர்ப்பித்தார். மாமுனிகள் மிக்க மகிழ்ச்சியுடன் அண்ணாவைத் தழுவிக்கொண்டு அண்ணாவின் நலம் கேட்டறிந்தார். அண்ணாவை சந்திப்பதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என மாமுனிகள் தெரிவித்தார். மாமுனிகள் பதிகத்தில் முதல் மூன்று பாசுரங்களை காலக்ஷேபம் செய்து நிறுத்திக் கொண்டார்.

மாமுனிகளின் உபய வேதாந்த (ஸம்ஸ்க்ருத வேதாந்தமும் திராவிட வேதாந்தமும்) நிபுணத்துவத்தைக் கண்டு களிப்படைந்த அண்ணா , தான் மாமுனிகளின் சிஷ்யரானாலொழிய மாமுனிகளின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப்   பெறமுடியாது என்றும், எம்பெருமானின் அர்ச்சாவதார நிலையில் உள்ள கல்யாண குணங்களை அனுபவிக்க முடியாது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார். மாமுனிகள் தன் காலக்ஷேபத்தை நிறுத்திக்கொண்டு அண்ணாவை பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்றார்.

பெரிய பெருமாள் அண்ணாவை அனுக்ரஹித்து தீர்த்தம், ஸ்ரீ சடகோபம், புஷ்பம் முதலியன அருளி, அர்ச்சகர் வாயிலாக திருவாய் மலர்ந்து அருளினான்: “ப்ரதிவாதி பயங்கராசாரியரே! நினைவிருக்கிறதா, ஒருமுறை நீர் திருமலையில் மாமுனிகளின் வைபவத்தில் மூழ்கியதால் ஆகாச கங்கையிலிருந்து பூரித்த தீர்த்தம் தானாகவே பரிமளம் கமழ்ந்தது. இப்போது நீர் இங்கு வந்திருப்பது எம்மை மகிழ்விக்கிறது. இனி நீர் மாமுனிகளுடன் சிறந்ததோர் சம்பந்தியாய் வாய்க்கப் பெற்றீர்” என மாமுனிகளை சுட்டிக் காட்டினான். இதையடுத்து பெரிய ஜீயர் தன் மடத்திற்கு எழுந்தருளினார்.

அண்ணா மிகவும் அகமகிழ்ந்து கந்தாடை அண்ணன் திருமாளிகையை அடைய அண்ணாவும் கந்தாடை அண்ணனும் ஒருவரை ஒருவர் தண்டன் சமர்ப்பித்துகொள்கின்றனர் (இது ஸ்ரீவைஷ்ணவர்களிடையே இயல்பான வழக்கமாதலால்). “வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் ப்ரணமேத் புவி” என்கிறது சாஸ்த்ரம் – ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மற்றோர் ஸ்ரீவைஷ்ணவரை தரிசித்தால் பரஸ்பரம் தண்டன் சமர்ப்பிக்க வேண்டும். இருவரும் தத்தம் ஆத்ம க்ஷேம லாபங்களைக் குறித்து விசாரித்து , கந்தாடை அண்ணன் திருமாளிகை உள்ளே சென்றனர். தற்செயலாக  பொன்னடிக்கால் (வானமாமலை) ஜீயரும் அங்கே எழுந்தருளியிருந்தார்.

அண்ணா பொன்னடிக்கால் ஜீயருக்கு “அருள்கொண்டாடும் அடியவர்” (கண்ணிணுன்சிறுத்தாம்பு – 7) என்று பல்லாண்டு பாடினார் – அதாவது மனவாள மாமுனிகளின் வைபவத்தைப் பொன்னடிக்கால் ஜீயர் அனுபவித்தும், போற்றியும் வருவதை அனுசந்தித்தார். பிறகு பொன்னடிக்கால் ஜீயருக்கு தண்டன் சமர்ப்பித்தார். பொன்னடிக்கால் ஜீயர் அண்ணாவை அரவணைத்து, யதி புனரவதார (ராமானுசர் மாமுனிகளாக அவதரித்தமை) விசேஷங்களை அருளினார். அண்ணா தனது திருமேனி சம்பந்திகளோடே (தர்மபத்தினியார் – குழந்தைகள்) பொன்னடிக்கால் ஜீயர் மற்றும் கந்தாடை அண்ணன் உதவியோடு பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். எல்லோரும் ஜீயரிடம் பஞ்சசம்ஸ்காரம் பெற்று, ஜீயரே ஒரே புகல் என ஏற்றுக் கொண்டனர். அண்ணா மாமுனிகளிடமிருந்து ஸ்ரீபாத தீர்த்தமும் ப்ரசாதமும் பெற்றார்.

மாமுனிகள் அண்ணாவை நோக்கி “நீரோ ப்ரதிவாதி பயங்கராசார்யர். நீர் எவ்வாறு  எம்மை ஆசார்யனாக ஏற்பீர் ? ” என வினவினார். அதற்கு அண்ணா மிகுந்த பணிவுடன், தாம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்திற்கு புறம்பானவர்களுக்கு மட்டுமே ப்ரதிவாதி பயங்கராசார்யர் என்றும், ஆனால் ஸ்ரீவைஷ்ணவர்களின் பாதாரவிந்தங்களில் தொண்டன்  என்றும் பதிலளித்தார். மாமுனிகள் இதுகேட்டு மிகவும் அகமகிழ்ந்து அண்ணாவிற்கு “ஸ்ரீவைஷ்ணவ தாசன்” எனத் திருநாமம் சாத்தினார்.

எப்போழுதும் ஆசார்ய நிஷ்டையில் மூழ்கியிருந்ததால் அண்ணா தன் திருநக்ஷத்ரங்கள் முழுக்க மாமுனிகளையே ஆஸ்ரயித்திருந்தார். கூரத்தாழ்வான் எம்பெருமானாருக்கு சித்தாந்தத்தை ஸ்திரப்படுத்த உதவியது போலவே அண்ணா தம் வாழ்நாள் முழுவதும் மாமுனிகளுக்கு சத் சம்பிரதாய சித்தாந்தத்தை ஸ்திரப்படுத்த உதவினார்.

மாமுனிகள் காஞ்சிபுரம், சோளசிம்ஹபுரம், எறும்பி முதலான திவ்ய தேசங்கள் வழியாக திருமலைக்கு செல்ல முற்பட்டார். அண்ணாவும் யாத்திரையில் சேர்ந்து கொண்டார். திருமலையில் திருவேங்கடமுடையானுக்கு ஸுப்ரபாதம் இல்லாததை உணர்ந்து மாமுனிகள் அண்ணாவை எம்பெருமானுக்கு ஸுப்ரபாதம் சாதித்து அருளும்படி ஆணையிட்டார். அண்ணா ஆசார்யனை நோக்கித் த்யானித்து, ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம், பிரபத்தி, மற்றும் மங்கல ஸ்லோகங்களை சாதித்தார். மாமுனிகள் அண்ணாவின் பாண்டித்யம் கண்டு மிகவும் அகமகிழ்ந்து, இந்த ஸ்தோத்ரங்களை இனி தினமும் திருமலையில் திருவேங்கடமுடையானின் ப்ரீதிக்காக சேவிக்கும் படி ஆணையிட்டார்.

ஸ்ரீரங்கத்திற்கு திரும்பிய பிறகு, மாமுனிகள் ஒரு நாள் அண்ணாவை அழைத்து ஸ்ரீ பாஷ்யத்தைக் கந்தாடை அண்ணன், போரேற்று நாயனார், ஆனந்தய்யனப்பை, எம்பெருமானார் ஜீயர் நாயனார், கந்தாடை நாயன்  மற்றும் பலருக்கு உபதேசிக்கும்படி ஆணை யிட்டார். மாமுனிகள் பிறகு அண்ணாவிற்கு “ஸ்ரீபாஷ்யாசார்யர்” என பட்டம் சாற்றி, அண்ணாவை ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனத்திற்குத் தலைவராக உயர்த்தினார்.

அண்ணா மாமுனிகள் விஷயமாக பல கிரந்தங்களை அனுக்ரஹித்தார். “செய்யதாமரைத் தாழிணை வாழியே .. ” என்பது இவருடைய மாமுனிகளின் வடிவழகும், எல்லையில்லா கருணையையும் விளம்பும் ஸ்ரீஸூக்தியாகும். இதுபோல் மாமுனிகள் விஷயமாக பல அழகான கிரந்தங்களை அருளியிருக்கிறார். இப்போது நாம் அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:

ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (ஸ்லோகம் 15)

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம்புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந
ஸௌம்யோபயந்த்ரு முநிநா மம தர்ஷிதௌ தே
ஸ்ரீவேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே

தனது அளவிலாக் கருணையினால் மணவாள மாமுனிகள் காட்டி அருளிய ஸ்ரீ வேங்கடேசனின் பாதாரவிந்தத்தில் நான் சரணம் அடைகிறேன். பரம சாத்விகர்கள் தமது தூய ஹ்ருதயத்தினால் மாமுனிகளை வணங்குகின்றனர். அப்படிப்பட்ட மாமுனிகள் எம்பெருமானுடைய இந்தத் திருப்பாதங்கள் தான் சம்சாரத்திலிருந்து நம்மை உயர்த்தி பரமபதத்தில் வைக்கும் எனக் காட்டி யருளினார்.

ஸ்ரீ வேங்கடேச மங்களம் :

 ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

எல்லா மங்கலங்களும் சர்வ வ்யாபகனான திருவேங்கடமுடையானிடம்  மேம்படட்டும், அப்படிப்பட்ட அவன் திருமார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குடி கொண்டிருப்பாள், மேலும் அவனே என்றென்றும் மணவாள மாமுனிகளின் ஹ்ருதயத்தில் தங்கி யிருக்கிறான்.

—————-

ஸ்ரீ மத் த்ரயல்மகு தேசிக பத பத்ம ப்ருங் காயமான வரதார்ய தயைக பாத்ரம்
தத் ஸூக்தி லேச விபவ அத்த ஸமஸ்த தத்வம் பக்த பஜாமி பரவாதி பயங்கரார்யம்

———–

ஜீவனம் ஜகதாம் ஜ்யாத் கிமப்யபகத ஸ்ப்ருஹம்
ஸ்வ தந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷு வேங்கடேசஹ் வயம் மஹா ||1||-

ஸ்வாமி தேசிகன் ஸமஸ்த ஜீவ ஸ்திதி
விஷயாந்தர வைராக்ய நிதி
ஸமஸ்த ஞானம் உடையவர்
இப்படிப்பற்ற பரஞ்சோதி யாவரையும் வென்று பல்லாண்டு வாழட்டும்

—————

சவ் ஸூர்யமாண யத் ஸப்தம் கவி தார்க்கிக குஞ்சரா
ஸ்வப்னே ப்ரசுஸ்ருவ நித்யம் ஸிம்ஹம் காமபி தம் பஜே-||2||-

ஸ்ரேஷ்டரான கவிகளும் தார்க்கீகர்களும் -யானை போல் கர்ஜித்து இருந்தாலும்
நம் ஸ்வாமி கதிதார்க்கிக ஸிம்ஹமான தேசிகருடைய ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்ட மாத்ரத்தில் நித்யமாக ஸ்வப்னத்திலும் நடுங்குவார்கள் அன்றோ

—————–

ஸ்ரீ மதாம் ஹரி தாஸாநாம் பாத ரக்ஷ அவலம்பினா
தேந வேங்கட அநாதேந சந்ததா ஸூகிநோ வயம் ||3||-

ஸ்வாமி தேசிகன் பகவத் தாஸரான மாறன் திருவடியே பணிந்து உயந்த ராமானுஜராதி ஹரி பக்தர்கள் திருவடியே புகலிடமாகக் கொண்டு இருக்கிறார் -அவரை ஸ்வாமியாகக் கொண்ட அடியோங்கள் இங்கேயே இவ்வுடலுடனே உஜ்ஜீவனம் அடைந்து அந்தமில் பேரின்பம் பெறுகிறோம்

—————

வேதாந்த தேசிக பதம் யஸ்மை ஸ்ரீ ரெங்க ஸாயினே
தத்தம் தஸ்மை நமஸ் குர்ணோ வேங்கடேச விபச்சித ||4||-

வேதாந்தச்சார்யன் விருது ஸம்மானம் ஸ்ரீ ரெங்க நாதனே அருளி உள்ளான்
இந்த கவி தார்க்கிக ஸிம்ஹத்தை ஆஸ்ரயிப்போம்

—————

தக்ஷிண உத்தர தேசீய வரத தேசிகா
யஸ்மாத் ஞானி சோதர்ய தஸ்மா அநந்ய கதிர் மம ||5||-

ஸ்வாமி தேசிகருடைய ஸ்ரீ ஸூக்திகள் தமிழும் ஸமஸ்க்ருதத்திலும் -உபய மொழிகளிலும் உண்டே
ஸ்வாமி குமார வரத தேசிகரையும் நமக்கு அளித்து அருளினார்
அநந்ய கதியான அஸ்மத் போன்றாருக்காகவே இவற்றையும் இவரையும் நமக்கு அருளிச் செய்துள்ளார் –

——————-

ஞானம் து விநயோ பக்தி ஸம்பத்திர் விதாரகதா
ஆரோக்யம் யஸ்ய தஸ்யாஸ்மி தாஸோ வேதாந்த ஸத் குரவ் ||6||-

ஞானம் விநயம் பக்தி ஸமஸ்த கல்யாண குண கணங்கள் அனைத்துமே ஸ்வாமியிடம் குடி புகுந்தன
அடியோம் இந்த ஸ்ரேஷ்ட ஸ்வாமியின் தாஸ பூதர்கள்

————-

யஸ்மின் அநந்ய அஸாமான்ய வேதாந்தச்சார்யத குரவ்
யதா புருஷத விஷ்ணவ் தஸ்மின் ந்யஸ்த பரவ் அஸ்மி அஹம் ||7||-

அடியேன் ஸ்வாமியின் திருவடித் தாமரைகளில் ஆத்ம ரக்ஷண பர ஸமர்ப்பணம் பண்ணினேன்
புருஷ பத ப்ரயோகம் ஸ்ரீ மன் நாராயணனுக்கே அசாதாரணம்
அதே போல் வேதாந்தசார்ய பத பிரயோகமும் ஸ்வாமிக்கே அசாதாரணம் –

————

ஸர்வ தந்த்ர ஸ்வா தந்த்ர வாத் ஸாஸ்த்ர தீப பிரதானதா
ஸ்ரீ வேங்கட த்ரிநாத அசவ் ஸாஷாத் வேதாந்த தேசிகா ||8||-

காருணிகமான எம்பெருமான் பகவத் ஸாஸ்த்ர விளக்கு நமக்காக அருளி பிரகாசிப்பித்தான்

காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி- பிறங்கு இருள் நீங்கி மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்–ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூர்ணிகை 1..

ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–ஸ்ரீ பட்டர்–-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத் 1

இந்த வித்யைகளை அனைத்தையும் தாமும் அதிகரித்து
நாமும் – தத்வ த்ரய ரஹஸ்ய த்ரயங்களை விசத தமமாக அறிந்து உஜ்ஜீவிக்கும்படியாக ஸ்ரீ ஸூக்திகளையும் அருளிச் செய்துள்ளார் அன்றோ

———–

ஆவீர் பூதித் யஸ்ய வம்ஸாதநர்காத் வைஸ்வ மித்ராத் விஷ்ணு கண்ட அம்ஸாஸ்ய
ஸ்ரீ மான் சோயம் ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ர வக்தா வியாக்ய ஸார்வ பவ்ம விபாதி ||9||-

ஸ்வாமி மேன்மை மிக்க விஸ்வாமித்ர குலத் தோன்றல்
திருவேங்கட திருக் கண்ட அம்ச அவதாரம் -திருமாலின் திருமணி திரு அவதாரம்
ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரர் என்று ப்ரஸித்தமானவர்
காலக்ஷேப அதிகாரி -பூர்வாச்சார்யர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளுக்கு எல்லாம் -வியாக்கியான சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தவர்

—————–

பா⁴த்³ரபத³ மாஸக³த விஷ்ணு விமலர்க்ஷே
வேங்கட மஹீத்⁴ரபதி தீர்த²தி³ன பூ⁴தே ।
ப்ராது³ரப⁴வஜ் ஜக³தி தை³த்யரிபு க⁴ண்டா
ஹந்த கவிதார்கிக ம்ரு’கே³ந்த்³ர கு³ருமூர்த்யா ॥ (ஶ்லோகம் – 10)–

கவி தார்க்கிக ஸிம்ஹமான ஸ்வாமி வேங்கடேச கவியாக புரட்டாசி சரவண நக்ஷத்திரத்தில்
திருமலை திருமணி அம்சமாகவே திரு அவதரித்து பர புற சமயிகளை வென்று அருளினார்

————————–

தமிமாம் ஸ்ரீ மத் வேங்கட நாதாசர்யம் வேதாந்தி கில ஸந்தா
ஸ்ரீ வேங்கடாத்ரி நாதம் ஸதா ஸத் குண ராஸி யோக ஹானிப்யாம் ||11||-

ஸாத்விகர் ஸ்வாமியை ஸ்ரீ வேங்கட நாதனே திரு அவதரித்து அருளியதாகச் சொல்வர்
இவரும் கல்யாண குண கணங்களுக்கு நிதியாகவும் – அகில ஹேய ப்ரத்ய நீகனாயும் இருக்கிறார் அன்றோ –

———–

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிகசிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : ||12||-
ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் , பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலைபெறவேண்டும் என்கிற க்ருபையால்,
அந்த ஸ்ரீ எம்பெருமானாரே மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று,
முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்(250 சம்வத்சரங்களுக்குப் பின்னர்)

ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரிய வேங்கடேச குர்வங் க்ர்யுபாயா வயமே வதன்யாஃ

———————

அவநாய சடம் அஸத் குண பிரபலதோப நிபர்த்த நாய ச
அபி வைஷ்ணவ தர்ம விருத்தயே ஞானம் ஸ்ரீ நிகமாந்த ஸத் குரவ்  ||13||-

ஸாதுக்களை ரக்ஷிக்கவும் பிரதிகூலர்களை நிரசிக்கவும் ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களை நிலை நாட்டவுமே
ஸ்வாமியின் திரு அவதாரம் -ஸ்ரீ கீதாச்சார்யன் அவதார ரஹஸ்யம் சாதித்த படியே –

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

———

யத்யாயம் ஹி கவிதார்க்கிக ஸிம்ஹ ந பவிஷ்யத் இஹ புவயத்ரி நா
தர்க்கி பாஹ்ய குத்ரு குததா பஷை மேதினி பரிவ்ருத்த ஹி அபவிஷ்யத் ||14||-

கவி தார்க்கிக ஸிம்ஹமான நம் ஸ்வாமி இங்கே திரு அவதரித்து இல்லை யாகில்
பர புற மத வாதிகள் மலிந்து அஞ்ஞானமாகிற இல்லை பரப்பி இருப்பார்கள் –

————–

வேங்கடேஸ்வர விபஸ் ஸிதி ஜாதே நிஸ் ஸப்தம் அபவாத் கில பாஷ்யம்
தத்வம் ப்ரதி ஹதம் ச ததாசித் யேந மோக்ஷ பதவி ஸூ கலப்ய ||15||-

ஸ்வாமி தேசிகன் மண் மிசை தோன்றிய பின் ஸ்ரீ பாஷ்யத்துக்கு எதிரிகள் யாவருமே இல்லை
மோக்ஷம் அளிக்கும் பரமாத்ம தத்வ ஞானம் எளிதாக புவனம் எல்லாம் பரவிற்றே

————-

புத்ரோ அநந்தார்ய ஸூரே புருஷ ஸமா குணா புண்டரீ காஷ்ய யஜ்வீ பவ்த்ர
தோதாத்ரபிக்யா ஸ்ருத வரஜானனி கர்ப்ப வாராஸி சந்த்ர வாதிஹம் சம்புவத்
விஸ்வா மித்ர அன்வயோ வரத குரு பிதா ஆச்சார்ய தாப்த
ஸாஸ்த்ரோ வரத குரு மதா ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ர ||16||-

நம் பிரசித்த ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரரான ஸ்வாமி தேசிகன் அனந்த ஸூரி -தோத்தாத்ரி அம்மாள் தம்பதிக்கு திரு புத்ரனாகவும்
புண்டரீகாக்ஷ பஜ்வாவுக்கு திருப்பேரனாகவும் திருவவதரித்து
திருக் கல்யாண குண பூஷிதராய் கர்ப்பம் ஆகிய பாற் கடலில் இருந்து எழும் பூர்ண சந்திரன் போலவும்
விஸ்வா மித்ரக் குலக் கொழுந்தாகவும்
நாயனார் வரதாச்சார்யருக்குத் திருத் தகப்பனாராகவும்
வாதி ஹம்ஸ அம்புவாகரான ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிக்கு மறுமகனாயும் சிஷ்யராயும்
மிக ஸ்ரேஷ்ட ஆச்சார்யரான நடாதூர் அம்மாள் அவர்களால் சிறந்த ஆச்சார்யராக ஆவதற்கு கடாக்ஷிக்கப் பெற்று
குன்றின் மேல் இருக்கும் விளக்கு போல் சநாதந தர்ம ஒளியை பரப்பி அருளினார் –

———-

அனந்த ஸூரி ஸூனவே அபி⁴நந்த்³ யமானவை ப⁴வாத்³
தி³க³ந்த வாதி³ ஹம்ஸ ஜைத்ர காலமேக⁴ தே³ஶிகாத் ।
உபாத்த ஸர்வ ஶாஸனாய ஹந்த வர்ஷ விம்ஶதௌ
புன:புனர் நமஸ் க்ரியா அஸ்து வேங்கடேஶ ஸூரயே ॥ (ஶ்லோகம் – 17)

மீண்டும் மீண்டும் ஸ்வாமிக்கு நமஸ்காரங்கள்
அனந்த ஸூரி ஸ்வாமிக்குத் திருக் குமாரராயும் கொண்டாடத் தக்க சிறந்த வைபவம் மிக்கவராயும்
அனைத்து ஸாஸ்த்ரங்களையும் 20 திரு நக்ஷத்ரங்களுக்குள் அதிகரித்தவராயும்
தமது மாவான ஆர்த்ரேய ராமானுஜ ஸ்வாமிகளால் புற சமயிகளை அழிக்கும் காள மேகம் போலவும் விளங்கினார்

————-

வேதாந்த ஆச்சார்ய வர்யோ விதித பஹு குணோ வீத ராக அக்ரேயே
வித்வான் வித்ய நிஷத்ய விரசித விவிதா நேக திவ்ய பிரபந்தா
விஷ்ணோ விஷ்ணவாஸ்ரிதேஷு ப்ரக தீத விநய ப்ரேம சேஷத்வ விருத்தி
விக்யாதா ஸ்ரேயஸே ஸ்யாத் விஷய ஜிதிஹா நோ வேங்கடாச்சார்ய வரய ||18||-

ஸ்ரீ வேதாந்தச்சார்ய ஸ்வாமிகள் கல்யாண குண கண நிதி –
வைராக்ய சாலிகளில் அக்ரேஸர்
அனைத்து ஸாஸ்த்ரங்களையும் அதிகரித்தவர்
பல ஸ்ரீ ஸூ க்திகளை அருளிச் செய்தவர்
ஸ்ரீ மன் நாராயணனின் அடியார்களுக்கு சரம பர்வத்தில் அநந்யார்ஹ பக்தராக நிலை நின்றவர்
அனைத்து இந்திரியங்களையும் வென்று அருளியவர்
இந்த உபய வேதாந்த ஆச்சார்யர் நம் மேல் அருள் கடாக்ஷங்களை வீசி அருளட்டும் –

———–

யஸ் ஸம்ஸ்க்ருத கவிதாயாம் ப்ரவ் திம்நான் வேதி கூரேந்த்ர ஸூதம்
திராவிட -த்ரமிட -கவிதாம் அக்ரே பர காலம் வா அதி பக்தி ஸாரம் வா ||19||-

ஸம்ஸ்க்ருத ஸ்ரீ ஸூ க்திகளிலே ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கு ஓக்கவும்
திராவிட ஸ்ரீ ஸூ க்திகளில் கலியனுடையதும் திருமழிசைப் பிரானுடையவதும் ஒக்கும் –

————-

பர சதம் வாபி பர ஸஹஸ்ரம் ஸ்ரீ வேங்கடாச்சார்ய க்ருத ப்ரபந்த
தத்ரால் மேக கலு புக்தி முஃத்யோ கார்த்ஸ்யேந கஸ்தான் கணா யேத் ஸமஸ்தான்

ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்தவை நூற்றுக் கணக்கான -ஆயிரக் கணக்கானவை
அவற்றுள் ஒவ்வொன்றுமே மனத்தெளிவை உண்டாக்கி ஸம்ஸாரம் தாண்டுவித்து அந்தமில் பேர் இன்பம் பெறுவிக்குமே
சீரொன்று தூப்புல் தனியன் லோக உஜ்ஜீவனமான இவரின் கிரந்தத்தின் ஏற்றத்தை கூறுகிறது.

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

————-

யத்ல்ய சரிதம் சதம் ஸூ சரிதா வ்யவஸ்தா பகம்
யத்ல்ய வசனம் பரம் ஸகல ஸம்சய உன்மூலனம்
யத்ல்ய கருணா கதிர் ஸகல தர்ம ஸூன் யாத்மாநம்
ஸ ந சரணாம் அஸ்த வஸவ் ஸகல தந்த்ர நிவாஹக ||21||-

ஸர்வ தந்த்ர ஸ்வ தந்தரரான நம் ஸ்வாமி தேசிகன் நமக்கு எல்லாம் ஒரே புகலிடம்
அவருடைய அனுஷ்டானங்க்களே நமக்கு கைவிளக்காக வழி காட்டுமவை
அவர் ஸ்ரீ ஸூ க்திகள் நமது ஸமஸ்த சங்கைகளையும் போக்கி அருளும் .
தர்ம நெறியில் நடக்க மாட்டாத நம் போல்வாருக்கு ஸ்வாமியின் கருணையே ஒரே புகல் இடம் –
————-

தாந்தி ஷாந்தி ஸூஸித்வம் விஷய அவிஜயிதா திரதா நிஷ் ஸ்ப்ருஹத்வம்
சேஷத்வம் ஸ்ரீ ஸத் அஸத் தாஸ ஜன விஷயாகம் பர தந்தர்யம் ச தத்ர –||22||-

ஸ்வாமி தேசிகன் திரு அவதரித்த போதே -திருத்துழாய் முளைத்த போதே மணக்குமா போல் -கல்யாண குண பரிபூர்ணராய் இருந்தார்
ஸூத்தி -பாவனத்வம் -விஷயாந்தர ஸூகங்களில் இருந்து ஜயம் -காமாதி விஷயாந்தர வைராக்யம்
தைரியம் -பாகவத சேஷத்வ பாரதந்தர்யங்கள் மன கலக்கம் இன்மை -ஆழ்ந்த ஸாஸ்த்ரீய ஞானம் அஸூயை இன்மை
சம தர்சனம் ஸுசீல்யம் ஸுலப்யம் போன்றவை நிறைந்து விளங்கினார்
————

கல்யே ஸததம் கருணா ஜலர்தி⁴ம்
கருணா விஷயம் கமலாதி⁴பதே: ।
கலி வைரி ஶடா²ரிவசோ ரஸிகம்
கவிதார்கிக கேஸரி ஸூரி கு³ரும் ॥ (ஶ்லோகம் – 23)

கவிதார்கிக ஸிம்ஹமான ஸ்வாமிக்கு நமஸ்காரங்கள்
தயா ஸாகரமானவர் -பகவத் கருணா கடாஷா மழைக்கு ஏக பாத்ரம்
பராங்குச பரகால திவ்ய பிரபந்த அம்ருதங்களை நன்கு அறிந்து உபதேசித்து அருளுபவர்
————-

ஸரோ பூத வேதாள சார ஸ்வ தானம் ஸடாரி கலி த்வம்ஸி முகயோதி தானம்
அவிச்சின்ன ஸத் ஸம் ப்ரதாயா அர்த்த வேதி குரு வேங்கடேஸோ குருக்திஷ்வ துல்ய – ||124||-

ஸ்வாமி தேசிகன் அருளிச் செயல்களின் ஸாராம்சங்களை –
பொய்கையார் -பூதத்தார் -பேயாழ்வார் -நம்மாழ்வார் -அனைத்து ஆழ்வார்களின் ஸ்ரீ ஸூ க்திகளின்
ஆழ்ந்த ஸாராம்சங்களை ஆச்சார்ய முகேந-தானும் அறிந்து -பிறருக்கும் அறிவித்து அருளினார்

———–

யுக்த அலூக்ஷ அபி தர்ம காம சம்மர்ஸினோ யுக்தி ஸமான் விதாச்ச
ஸத் ப்ரஹ்மணா வேத சிரஸ் ப்ரஸித்த ஸ்ரீ வேங்கடாசார்ய முக ஹி நூநம் ||25||-

வேத வேதாந்த ஸாஸ்த்ர விஹித அனுஷ்டானம் கொண்டவர்களும் காமம் கோபம் பேராசை போன்ற துர் குணங்கள் அற்றவர்களும்
தர்ம ஸாஸ்த்ர ஆழ்ந்த நுண் பொருள்களை அறிந்து அனுஷ்ட்டிக்க அபி நிவேசம் மிக்கவர்களும்
தர்ம பரிபாலனம் பண்ண ஆசை மிக்கு பண்ணுபவர்களும்
ஸ்வாமியைப் போலவே மகாத்மாக்கள் ஆவார்கள்

———-

ஜடா வர்ண சர்க்க அத்யாநேக பிரகாரத்ரயேல் லக்ஷணோ க்ராணே வ்யாஸ கல்ப
தத கல்ப ஸூத்ர ப்ரயோக அத்யபிஜ்னோ ஜயத் அன்வாஹம் ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ர -||26||-

வேத மந்த்ர உச்சாரண முறைகள் -ஜாடை ஞானம் வர்ண க்ரமம் போல பலவும் உண்டே
இவற்றை சரிவர அனுஷ்ட்டித்து நம்மையும் அனுஷ்ட்டிக்கச் செய்து அருளினார் நம் ஸ்வாமி
கல்ப யாக ஸூத்ரங்களை அறிவித்த வேத வியாசர் போல்
கல்ப ஸூத்ர ப்ரயோக ஸூத்ரங்களையும் முறைகளையும்
கற்ப்பித்து ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரராக ஒளி விட்டு விளங்குகிறார்

——–

பரத்வாஜர் சாண்டில்யர் ஹாரீதர் முக்யா ஸ்ம்ருதிஸ்தோம ஸூஷ்மார்த்தம் நிர்ணீதி தஷா
புராண ஆகம தீஷ்வ ஸாதாரண ஸ்ரீ ஸூதோ பாதி லோகேஷ்வ அநந்தார்ய ஸூரே ||27||-

ஸ்வாமி தேசிகன் பரத்வாஜ சாண்டில்ய ஹாரீதாதி ஸ்ம்ருதிகளின் ஆழ்ந்த உள் பொருள்களை அறிந்தவர்
புராணங்கள் ஆகமங்கள் தாத்பர்யங்களையும் உபதேசிக்கப் பெற்றவர்
விஸ்வா மித்ர குலக் கொழுந்தாக அனந்தார்ய திருக் குமாரராக அனைத்தையும் அறிந்து விளங்கியவர்

———–

ஜ்யோதிஷம் சந்தஸ் ஸப்த ஸாஸ்த்ரம் ப்ரவிணா காவ்ய ஸ்ரேண நாடக அலங்க்ரிதி ஞான
மீமாம்ஸையம் ப்ரஹ்ம கர்ம அனுக்யம் ஸ்ரேஷ்ட ஸாஷாத் ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர -||28||-

ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரரான ஸ்வாமி தேசிகன் ஜ்யோதிஷம் பாராம்பர்ய காவியங்கள் நாடகங்கள் அலங்கார ஸாஸ்த்ரங்கள் வியாகரணம்
கவி ஸாமர்த்யம் போன்ற அனைத்திலும் வல்லமை பெற்று விளங்கினார்
கர்ம ப்ரஹ்ம உபய விசாரங்களான மீமாம்ஸையிலும் வல்லமை பெற்று ஜைமினி வியாசர் பகவான் போல் விளங்கினார்
—————-

சாங்க்யே யோகே பாதாதந்த்ரே குருக்தே சைவே ஜைனே சங்கரே பாஸ்கரே ச
ஸாஸ்த்ரே பவ்த்தே யாதவே கர்விதா நாம் ப்ரத்யா க்யாத ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர -||29||-

ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரரான நம் ஸ்வாமி தேசிகன் தமது ஸ்ரீ ஸூக்திகளால் பர மத நிரஸனத்தில்
சாங்க்ய யோகம் பாட்ட மதம் ப்ரபாகர மதம் -இரண்டுவித மீமாம்சீகர்
சைவம் ஜைனம் சங்கர பாஸ்கர யாதவ மதங்கள் -புத்த மதங்கள் போன்ற
நம் ராமானுஜ தரிசனத்துக்கு புறம்பான அனைத்தையும் நிரஸித்து அருளினார்

———-

ஸர்வ உஜ்ஜீவன சிந்தய காதகதா பாவேந தநாத் கிருதி ஷ்ரேஷ்டாணாம் பஹு ஸா தத் உத்தாரணதா த்ரயந்த ஸம் ரக்ஷணாத்
ஸ்ரீ மத் ஸ்ரீ சடகோப முக்யா திவி ஷண்ணாதார்ய ராமானுஜாச்சார்யன் அப்யனுயாதி ஹந்த நிகமாந்தாச்சார்ய சூடாமணி -||30||–

ஸ்வாமி தேசிகன் அசாதாரண கைங்கர்யங்களைப் பண்ணி அருளி -ஸம்ஸார த்தில் இருந்து
உஜ்ஜீவித்து ஸர்வேஸ்வரனை கிட்டி அனைவரும் பரம புருஷார்த்தமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யங்களை பண்ணணும்படி செய்து அருளினார் -தம்முடைய ஸ்ரீ ஸூ க்திகளாலே –
அவற்றுள் சில
1-தத்வபரமாகவும் ரஹஸ்ய பரமாகவுமான ஸ்ரீ ஸூக்திகள்
2-ஸ்ரீ பாஷ்யாதி காலக்ஷேபங்களை ஸாதிப்பது
3- பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள் ரக்ஷணம்

————–

இஹ ரெங்க பதி ப்ரஸாதாத் லப்த உபய வேதாந்த துரந்தரத்வ கீர்த்தி
அபி தத் ஸஹ தர்மிணி க்ருபாத அகில தந்த்ர ப்ரபுத்தாக ஏஷ ஸூரி ||–31

ஸ்வாமி -உபய வேதாந்தாச்சார்யார் என்ற விருதை அரங்க நாதன் மூலமும்
ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் விருதுவை பெரிய பிராட்டியாராலும் பெறப் பெற்றவர்

—————–

அகில தந்த்ர துரந்தராத் ஹரே த்வயி து வேங்கடாந்த குரவ் ஸ்தித
விதி சிவாதி ஜனேஷ் விதரீஹு வா  க்வசிதப்ல்ஹ ந ஸ பரீத்ஸ்யாதே ||–32

ஸ்ரீ ஹயக்ரீவர் எம்பெருமான் -ஸகல வித்யா பிரதன் -நம் ஸ்வாமிக்கு மட்டுமே அருளி
ப்ரஹ்மாதிகளுக்கும் எட்டாத கிருபை பெறப் பெற்றார்

————–

க்ஷமாயாம் ஹி யஸ்ய உபமானம் முகுந்தா ஸ்ருதோ தஸ்ய தல்போ மதவ் தேவ மந்த்ரி
ஐயே வைரிணாம் தைத்ய ஸம்ஹா ராகரி ஸ ஜ்யாத் சிரம் ஸர்வ தந்த்ர ஸ்வா தந்த்ரர் ||–33-

பொறுமைக்கு முகுந்தனை ஓப்பார் -ஸாஸ்த்ர ஞானத்துக்கு ஆதி சேஷனை ஒப்பார்
ஞானத்தில் ப்ரஹஸ்பதிக்கு ஒப்பார்-புற மத வாதி நிராசனத்தில் ஸ்ரீ ஸூதர்சனத்துக்கு ஒப்பார்

———–

ஆச்சார்ய உப யுக்த முனி கணாகதி தேசிகை ஸ்வேந கோக்தா ஸர்வே பத்ரா
குணா ஸ்யு ஸமுத்திதா விபவ ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ர ||–34-

ஸ்வாமி தேசிகன் முன்புள்ள முனிவர்கள் போல் ஆச்சார்யர் சிஷ்யர் இவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களை நன்கு காட்டி அருளினார்
சதாச்சார்யர் இருக்க வேண்டிய முறைக்கு சிறந்த த்ருஷ்டாந்தமாகவே இருந்தார்
கூரத்தாழ்வான் ஆச்சார்ய சிஷ்ய லக்ஷண பரிபூர்ணராக இருந்தவர் போல் ஸ்வாமியும் இருந்தார்

——————–

யதிபதி ஸம்ப்ரதாய பரி போஷகஸ்ய ஸததம் நிகமாந்த குரவ் அதிபதி அம்ருத சராசத குணேந ஸூ மனஸ் சரஜோ ம்ருத்தரா
அதி கத லக்ஷணா விமல ஸூ க்திரார்த்தி சாமனி வி பஷா மதாநி கலயது ந ஸூபாநி பகவதால்ய யதிராஜ ஹர்ஷ ஞானாநி ||–35

ஸ்வாமி தேசிகருடைய ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானார் தரிசனத்தை வளர்த்து அதில் உள்ள அமுத ஸாரமாகவே இருக்கும்
அன்று அலர்ந்த தாமரை மலர் போல் மணம் மிக்கதாய் இருக்கும் –
ஏதமில்லாத ஸ்ரீ ஸூக்திகளாய் இருக்கும்
ஸம்ஸார தாபத் த்ரயங்களைப் போக்கி அருளுபவையாய் இருக்கும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸித்து அழிக்க வல்லவையாய் இருக்கும்
எம்பெருமானாருக்கும் அவர் அடியாருக்கும் திரு உள்ளம் உகப்பாய் இருக்கும்
ஸர்வ மங்களங்களையும் அளிப்பவையாய் இருக்கும் –

—————

அபி ச பவாஹி தஷ்த பரி மூர்ச்சி தஸ்ய பாவிந ப்ரபோதாநகாரி சம தம தோஷாப்தி பகவத் ததீய ஜந பக்தி முக்தி ஜனானி
விஷய பரதத்வ கோப மத மோஹ லோப ச ததாதி தோஷ சமநீ புவி ஸத் த்ருஸீ தராஸி ந ஹி ஸூ க்தி ரத்ய நிகமாந்த தேசிக கிறா ||–36

ஸம்ஸார விஷ பாம்பில் சிக்குண்ட நமக்கு உஜ்ஜீவனம் அளிப்பதாய் அன்றோ ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் இருக்கும்
இவை நம்மை விஷயாந்தர ப்ராவண்யத்தில் இருந்து விடுவித்து -பாபங்களைப் பற்றிய பயன்களையும் அறிய வைக்கும்
பகவத் பாகவத பக்தியையும் வளர்த்து ஸம்ஸார தளைகளை விடுவித்து மோக்ஷமும் அளிக்க வல்லவையாயும் இருக்கும்
விஷய சுகங்கள் காமம் கோபம் லோபம் பேராசை அஸூயை போன்ற ஸகல துர் குணசங்களையும் போக்கி அருளும்
நல்ல அனுஷ்டானங்களையும் வளர்த்துக் கொள்ள உதவும்

—————-

கர்ம விஜிகித்ச வ்ருத்த விஜிகித்ச ஸர்வ விஜிகித்ச ஸாம்யதி ஹி நூனம்
ஸர்வ புருஷாணாம் வேங்கட விபசித் வாக் விலாஸி தேந ||–37

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் அக்னி ஹோத்ராதி கர்மங்களை செய்வது பற்றியும்
மந்த்ர பிரயோகங்களைப் பற்றியும் எழும் சங்கைகளைப் போக்கி அருளும்
ஸத்துக்களின் அனுஷ்டானங்களை காட்டி அருளும்
ஸநாதன தர்ம நெறிகளையும் காட்டி அருளும்
ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களின் தாத்பர்யங்களையும் தெளிவாக அறிய உதவும்
—————–

யத் உக்தயோ யதிபதி தந்த்ர தீபிகா ச லக்ஷணா ஸரஸ் ஸதாம் சதம் மகா
ஸமத் சரை அபி ஸததம் பரோ ஷத ப்ரஸம் சிதா பரி காலயத் ச ந ஸ்ரீ யம் ||–38

ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானார் தரிசனத்தை விளக்கும் கை விளக்காய் இருக்கும்
அவை இலக்கண முறை தப்பாமல் இருக்கும் -பெருமை மிக்கதாய் இருக்கும்
நமக்கு மங்களங்களையும் அளிப்பதாய் இருக்கும்

————–

வாணி யஸ்ய த்ரமிதி ஸம்ஸ்க்ரிதி ச ப்ராய ப்ராஸாமாஸய அநந்வாதித்
அர்வாஸாம் அப்யாஸ வையாத்ய மூலம் ஜ்யாத் சோயம் ஸர்வ தந்த்ர ஸ்வாதந்த்ரர் ||–39-

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் -த்ராமிட ஸம்ஸ்க்ருத -இரண்டிலும் -பூர்வாச்சார்யர்
திரு உள்ளக் கருத்துக்களையே ஒட்டி அவற்றை விளக்குபவையாய் இருக்கும்
இவை இவரது வழித் தோன்றலான நமக்கு தெளிவைப் பிறப்பிக்குமே
ஸ்வாமிக்கும் அவர்கள் சிஷ்யர்களுக்கு பல்லாண்டு

—————-

யத்ல்ய க்ரிதுஷு க்ஷணம் பரிசிதி சதம் சதுரிம் தநோதி பஹு வத்ஸர ஸ்ரம மனுஸ்த்துதம் அந்யதா
தமத்ய யதி பூபதி பிரதித சந் மதோ தாரகம் பஜே கவிகதாரத த்வி ரத ப்ருந்த கண்டீரவம் ||–40-

கவிகள் தார்க்கீகர்கள் போன்ற யானைகளுக்கு ஸிம்ஹம் போன்றவர்
ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகள் மூலம் பகவத் ராமானுஜ சித்தாந்தம் பற்றி ஆழ்ந்த தாத்பர்யங்களை அறியலாம்
அவற்றாலேயே புற மத வாதிகள் நிரஸனம் எளிதாக செய்யலாம்
மற்ற கிரந்தங்கள் மூலம் கடினமாக அறிவதை ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள் மூலம் எளிதாக அறியலாம்

—————-

கவி வாதி காரி ஸிம்ஹ க்ருதி ரத்ன திலகம் யதி ராஜ வர சப்ததிம் இமாம் அனு தினம்
ப்ரவதந்தி பரவாதி திமி ரவுக மிஹிரா த இமே ஹி யதிராஜ கருணைக விஷயா ||–41

ஸ்ரீ எதிராஜ ஸப்ததி திவ்ய பிரபந்தம் ஸ்வாமி அருளியவற்றுக்கு எல்லாம் திலகமாக ஸ்ரேஷ்டமாக அமைந்துள்ளது
இதை அநு தினம் அனுசந்திப்பார் தாமே பர மாத வாதி இருளை அகற்றும் ஒளி மிக்க பாஸ்கரன் போல் ஆவார்
அவர்கள் ராமானுஜ திவாகரனின் கருணா கடாக்ஷத்துக்குப் பாத்திரமும் ஆவார்

————–

வேங்கடேச விதுஷ ரசிதாநாம் ஞானயதே ந கணாபி கீர்த்தனம்
தத்ர காபி ந ஹி ரெங்க பதி ஸ்ரீ பாதுகா ஸ்துதி ஸஹஸ்ர ஸாமான்ய ||–42-

ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் எண்ணிறந்தவை –
அவற்றுள் ஸ்ரீ ரெங்கநாத பாதுகா ஸஹஸ்ரத்துக்கு இணை ஒன்றுமே இல்லை

—————-

வேங்கடேச குரு கிரதிதம் யே பாதுகா ஸ்துதி ஸஹஸ்ரம் அஜஸ்ரம்
சார்த்த போதம் அநு சந்தாதே தே சம்யமீன்தர மத் ஆசார விதா ஸூ ய ||–43-

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் நித்யம் அனுசந்தித்து அதன் ஒவ்வொரு ஸ்லோகத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை உணர்ந்தோர்
ஸ்ரீ மத் ராமானுஜ தர்சனத்தின் ஸாராம்சம் உணர்ந்து ரக்ஷிப்பவர் ஆவார் –

——————

அநந்ய ஸாதாரண சாதுரி ச காவ்யா திஷு ப்ரஹ்ம வித அக்ர நீத்வம்
ததாஷ் த பாஷா கவிதா ப துத்வம் ஸங்கல்ப ஸூர்யோத த்ரிஸ மஸ்ய ||–44-

ஸ்வாமி தேசிகன் அசாதாரண திறமையுடன் ஸ்ரீ ஹம்ஸ ஸந்தேஸம் ஸ்ரீ யாதவாப்யுதம்
போன்ற காவ்யங்களைப் படைத்து அருளி உள்ளார்
பகவத் ஸ்வரூபம் ஸ்வ பாவம் அறிந்த ஸத் கோஷ்ட்டியில் அக்ரேஸர் இவரே
அஷ்ட மொழிகளிலும் இவரது ஸ்ரீ ஸூக்திகள் அமைத்ததாய் உள்ளன
ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதய நாடகம் இதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும் –
.

————

தூஷணாதியவ் தார்க்கிக அக்ரேஸரத்வம் ஸ்பஷ்டம் ஸ்ரீ மத் வேங்கடேச அஸ்ய ஸூரே
அ நியால்ப்ய சதுரி பத்ய கும்பே ஸர்வஞ்ஞத்வம் தத்வ முக்த கலாபே ||–45-

சத தூஷிணி திவ்ய கிரந்தத்தில் திருமலை திருமணி திரு அவதாரமான
ஸ்வாமி யுடைய தார்க்கிக ஸிம்ஹத்வத்தைப் பார்க்கிறோம்
தத்வ முக்த கலாப திவ்ய கிரந்தத்தில் ஸ்வாமியுடைய கவி ஸிம்ஹத்வத்வம் தார்க்கிக ஸிம்ஹத்வம்
ஆச்சார்ய ஸ்ரேஷ்டத்வம்-ஸ்வ மத ஸ்தாபனத்வம் பர புற மத நிரசனத்வம் போன்ற சேர்க்கையைப் பார்க்கிறோம்
—————

கலயா தாம் கவி தார்க்கிக கேஸரி ப்ரகதிதம் சத தூஷணி கம் ஹ்ருதி
ம ஸாகா வத் ஸுஜயா கலு மாயிநா பிர நிபாதணி பரம் பதயோர் முஹூ ||–46

சத தூஷிணி திவ்ய கிரந்தத்தில் ஸ்வாமி அருளிச் செய்த வாதங்களை ஆழ்ந்து அனுபவிப்பவர்
மாயாவாதிகளாகிய கொசு வர்க்கங்களை அடியோடு ஒழித்திடுவர்
தோற்கடிக்கப்பட்ட புற மத வாதிகள் இவர்கள் திருவடிகளில் விழுந்து கிடப்பார்கள்

—————-

அஹ ஹா சங்கர யாதவ பாஸ்கர க்ரதித துர் மத துர் மத வாதிநாம்
கல கலா கவி தார்க்கிக கேஸரி ப்ரதித தூஷணிக ஸ்ரவண வாதீ ||–47

சங்கர யாதவ பாஸ்கர ப்ரதிவாத மதங்கள் அனைத்துமே சதா தூஷிணி யில் ஸ்வாமி அருளிச் செய்தவற்றைக் கேட்டதுவுமே சாய்ந்து பாறிப் போகுமே

—————-

ஸர்வார்த்த ஸித்தி சத தூஷிணி ச த்வே கேத ஸாஸ்த்ர கதா க்ரஹ ஞானம்
அத்யேன தத்ர க்ரியேத ஸ்வ ரஷா ப்ரத்யார்த்தி பங்க கலகே அந்யதா ஸ்யாத் ||–48

புற மத நிரஸனத்தில் இழிந்தார்களில் அக்ரேஸரான வர்களுக்கு ஸ்வாமி அருளிச் செய்த
ஸர்வார்த்த ஸித்தி -சத தூஷிணி இரண்டு திவ்ய பிரபந்தங்களும் கேடயமும் வாளும் போல்
பர மத நிரசனத்துக்கும் ஸ்வ மத ரக்ஷணத்துக்கும் உதவும்

—————-

அத ஏவ ஸர்வே ஜகதாம் ச குரவ் யதி சக்ரவர்த்தி மத மத்த திக் கஜம்
கவி தார்க்கிக த்வி ரத பஞ்ச முகோ ஹ்யத ஊர்ஜிதம் ஹ்யாக்ருத பாஷ்யாமிதம் ||–49-

கவிதார்க்கிக ஸிம்ஹமான ஸ்வாமி தேசிகன் திக் கஜங்கள் போல் ஜகத் உத்தாரணம் செய்து அருளுகிறார்
ஸ்வாமி பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யார்த்தங்களை ஜகத்தில் நிலை நிறுத்தி அருளினார்
இந்த கைங்கர்யத்தாலேயே ஸமஸ்த ஜெகதாச்சார்யராக விளங்கினார்
———————

ஸ்ருதி ஸ்ரீஷா தேசிகா சிரோமணிநா ஜனகேன ஏந ஹி ஸூ சிஷிததி
வரதோ குரு ச யதிராஜ மத பிரதிவாதி கோடி சதகோ திரபூத் -50-

ஸ்ரீ குமார வரதாச்சார்யர் தமது தந்தையும் ஆச்சார்யருமான ஸ்வாமி தேசிகன் இடம் ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களையும்
அதிகரித்து ராமானுஜ சித்தாந்தத்துக்கு புற மத வாதிகளின் நிரஸனத்தில் ஈடுபட்டார்
ஒவ்வொரு கொடு புற மத வாதிகளுக்கும் இவரே கோடி ரூபம் கொண்டு வாதங்களை முறியடித்தார் –

————

ஸர்வ தந்த்ர துர் வஹஸ்ய வேங்கடேச தீ மத குர் வதே அவமானாம் து கேகனா துணோத் பவ
ஹந்த ஹந்த ராம கிருஷ்ண தூஷண அபி தயினாம் கின்னு சித்ர மத்ர கைத்திய ராவணா நுஸ் ஸரினாம் ||–51

அல்ப புத்திஸ்த்தர் ஸ்வாமியின் பெருமையை உணராமல் தங்களையே ச்ரவஸ்வதந்த்ரராக கருதி இழந்தே போகிறார்கள்
சிசுபாலன் ராவணாதிகள் கிருஷ்ணனையும் ராமனையும் மதிக்காமல் இழந்தே போனார்கள் போலவே இவர்களும்

—————

அபி காம மத லோப ச ததாதி ரஹிதா அபி நீதி த்ருதி ஷாந்தி மதி தாந்தி சஹிதா
யதிராஜ மத துர்ய பத பத்மம் விமூக அவலோக நதி மன நுதி பாஹ்ய விஷயா ||-52

வீர பராக்ரமம் ஷாந்தி தீ மதி அடக்கம் அனைத்துமே இறுக்கப் பெற்று
விஷயாந்தர ப்ராவண்யங்களும் ஏமாற்றும் புத்திகளும் கஞ்சத்தனம் காம கோபங்கள் இல்லாமலும் இருந்தாலும்
ஸ்வாமி இடம் பக்தியுடன் ஆஸ்ரயிக்காமல் இருப்பார்கள் உடன் ஸஹ வாஸமோ அவர்களைக் கொண்டாடவோ கூடாது

—————–

விமதிரத்தவா தேஷாம் யுக்த யதீஸ்வர ஜீவேன கவி கதக பஞ்சாஸ்ய தேவ சதம் ச துரந்தர
பரி சிதிரகோ தன் மஹாத்ம்ய ப்ரகாசக தத் க்ரிதிஷு அபி லவ மித்ர ஸ்வப்னே பியேஷம் யதோ ந ஹி வித்யதே ||–53

ஸ்வாமி தேசிகன் ஸ்வாமி ராமானுஜருக்கு பிராணன் போல் இருந்து
தத்வ த்ரயங்களையும் ரஹஸ்ய த்ரயங்களையும் அழகாக அறிந்து உபதேசித்து அருளினார்
அவர் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளை அறிந்தவர் அனைவரும் அவரை விரும்பி ஆஸ்ரயிக்க
அறியாதார் அவர் பெருமைகளை அறியாமல் இகழ்வதில் என்ன அதிசயம் உள்ளது –

—————–

ந த்ரஷ் தாரோ வைபவஸ் யஸ்ய ஸாஷாத் நை வாப்யஸா தத் க்ரிதிஷ் வஸ்தி ஏஷாம்
ஏஷாம் நித்யம் மாநஸம் சாப்யஸூயம் தேஷாம் பக்திர் ஸ்யாத் கதம் வேங்கடேச ||–54-

ஸார்வ பவ்மரான ஸ்வாமியின் வைபவம் அறியாதவர் -அவரது ஸ்ரீ ஸூக்திகளை அதிகரிக்காதவர்
அவர் மேல் அஸூயை கொண்டவர்-அவர் மேல் பக்தி கொள்ளாமல் இருந்து இழந்தே போகிறார்கள்

———–

கு³ரௌ வாதி³ஹம்ஸாம்பு³தா³சார்யஶிஷ்யே
ஜனா ப⁴க்திஹீனா யதீந்த்³ராப்ரியா: ஸ்யு: ।
யதீந்த்³ராப்ரியா: விஷ்ணு காருண்யதூ³ரா:
குதோ முக்திவார்தா ஹி தாத்³ரு’க்³விதா⁴நாம் ॥ (ஶ்லோகம் – 55)

ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்-வாதி ஹம்ஸாம்புகர் – ஸ்வாமியின் ஸ்ரேஷ்ட ஸிஷ்யரான
ஸ்வாமி தேசிகன் இடம் மதிப்பும் பக்தியும் இல்லாதார் இடம்
எம்பெருமானார் அபிமானம் வைக்க மாட்டார்
அதனால் மாதவனும் அவர்களுக்கு மோக்ஷம் அளிக்க மாட்டான்

——————–

நிஸ் ஸ்ரேயஸம் யே அபில ஷாந்தி தஸ்ய மூலம் க்ருபம் சபி ரமா ஸஹஸ்ய
தயாம் யதீந்த்ரஸ்ய ச தைரவஸ்யாம் கார்ய ஹி பக்தி கவிவாதி ஸிம்ஹ ||–56

எம்பெருமானார் அபிமானம் பெற்று எம்பெருமானால் மோக்ஷம் பெற வேண்டி இருக்கும் முமுஷுக்கள்
அனைவரும் ஸ்வாமி தேசிகன் இடம் மதிப்பு யுடன் பக்தி செய்து ஆஸ்ரயிக்க வேண்டும்

——————–

ஸேவா விஷ்ணோ வைஷ்ணவ ஆராதனந்தா தத் வாத் ஸேவா ஸ்வாமின ஸம் யமினாம்
வேதாந்தசார்ய அங்க்ரி பத்ம அர்ச்சனாந்த யஸ்மாத் ஆத்ம வேங்கடேச அஸ்ய ஸூரே ||–57-

ஸ்ரீ பகவத் ஆராதனம் முழுமை பெறுவது பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆனபின்பே
அதே போல் எம்பெருமானாருக்கு ஆராதனம் முழுமை பெறுவது ஸ்வாமி தேசிகன் திருவடிகளில் ஆராதனம் செய்த பின்பே
ஏன் எனில் எம்பெருமானார் ஸ்வாமிக்கு அந்தராத்மாவாக உள்ளார் அன்றோ –

—————–

கர்மாதி உபாயா இஹ கேசந ஸ்யு கேசிக லஷ்மி ரமணா அங்க்ரி உபாய
ஸ்ரீ மத் யதீந்த்ர ப்ரியா வேங்கடேச குரு அங்க்ர உபாய வயமேவ தனியா ||–58-

உபாயாந்தர பரர்கள் கர்மா யோகாதிகள் மூலம் மோக்ஷம் அடைய பார்க்கிறார்கள்
வேறு சிலர் ஸ்ரீ யபதியின் திருவடித் தாமரைகளை சரணம் அடைந்து பெறப் பார்க்கிறார்கள்
நமக்கு பாக்ய வசத்தால் எம்பெருமானார் உகந்த ஸ்வாமி தேசிகன் உடைய திருவடித் தாமரைகள் உபாயமாகப் பெற்றோம் –

———

ஸஶங்க²சக்ர லாஞ்ச²ன: ஸதூ³ர்த்⁴வ புண்ட்³ர மண்டி³த:
ஸகண்ட²லக்³னஸத்துலஸ்யனர்க⁴ பத்³ம மாலிக: ।
ஸிதாந்தரீய ஸூத்தரீய யஜ்ஞ ஸூத்ர ஶோபி⁴த:
மமாவிரஸ்து மானஸே கு³ரு: ஸ வேங்கடேஶ்வர: ॥ (ஶ்லோகம் – 59)

ஸ்வாமி தேசிகன் சங்கு சக்ர லாஞ்சனை தரித்த திருத்தோள்களுடனும்
பன்னிரு திரு நாமங்களை அணிந்த திரு மேனியுடனும்
திருத் துளசி திருத்தாமரை மாலைகள் அணிந்த திரு மார்புடனும்
திரு யஞ்ஞாபவதீயம் அணிந்தவருமாக
அடியேன் திருக்கண்களுக்கு ஸதா தர்சனம் தந்து அருள வேண்டும்

——————————–

நிகமாந்த தேசிக பதாம்புஜ த்வயம் நிரஸூய வைஷ்ணவ ஜன பிரியம் தனம்
குல தைவதம் மம குத்ருஷ்டி மஸ்தக ஷிதி ப்ரதிவாதி குலிஸ் ஆயுதாயிதம் ||–60

ஸ்வாமியின் திருவடித் தாமரைகள் நமக்கு குல தைவம்
இவையே அஸூயை அற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தனமுமாகும்
இவையே புற மத வாத நிராசனத்துக்கு வஜ்ராயுதம் போன்றவை
இவற்றால் பர மத வாதிகளான மதம் பிடித்த யானையின் மஸ்தகங்களைப் பிளக்க உதவும்

—————

மஹோத் பாலாயித பத யுகளம் ரதி ப்ரியே ஷூத்தி பிரதி ரோதி ஸூ ஜங்கிகம்
ககுத் ஸமான ஸூ ஜானுக மஞ்சித ஸ்ப்ருத்க தி விலசாத் பரி தாங்கம் || 61-62||

நமது ஹ்ருதய புண்டரீகத்தில் சாமுத்ரா லக்ஷணங்களுடன் வீற்று இருந்து அருளுகிறார்
திருவடித் தாமரை -மன்மத பாணங்கள் போல் முழங்கால்கள் –
எருதுகளின் ககுஸ்த்துக்கள் போன்ற மூட்டுப் பகுதிகள் -கொப்பூழில் எழு கமலப்பூ
திருத் துழசி மாலைகள் திருத் தாமரை மாலைகள் அணிந்த திரு மார்பு
திரு பீதாம்பரம் -மந்தஹாசம் திகழும் அதரம்
ஸ்வாமியின் திருமேனி அழகை சேவிக்கப் பெற்ற நமக்கு நிகர் யாரும் இல்லையே

———————-

ப்ரபுத்த தாமரஸாபா விலோசனம் ப்ரஸித்த ஸிஷ்ய ஜனை பரிவாரிதம்
ப்ரபுத்த ராகதமம் ப்ரபுத்த சேதஸாம் அர்த்த ஸமர்த்தன || 63||

ஸ ரத்ன கம்பள பீதா பரி கிரஹம் ஸாமர்த்த முத்ஹித ஸம்சய நோதனே
விரக்த ஸஜ் ஜன சங்க ஸிரோ மணிம் பஜாமி வேங்கடாந்த விபசிதம் || 64||

பறந்து விரிந்த தடம் தாமரைக் கண்கள்
ஸச் ஸிஷ்ய குழாம் சூழ்ந்து இருப்பவர்
ஆச்சார்ய பக்தி நிறைந்தவர்
தத்வ ரஹஸ்ய தாத்பர்ய ஆழ்ந்த ஞானம் உள்ளவர்
ரத்ன கம்பளம் விரிக்கப்பட்ட ஆச்சார்ய சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பவர்
வைராக்ய சாலிகளில் ஸ்ரேஷ்டர்
ஸச் சம்பிரதாய சங்கைகள் எல்லாவற்றையும் போக்கி அருள்பவர்

———–

கவிதார்கிக கலப⁴வ்ரஜ கப³லீ க்ரு’தி ஸிம்ஹம்
கமலாபதி கருணா ரஸ பரிவர்தி⁴ தபோ³த⁴ம் ।
யதினாயக பத³பங்கஜ யுக³லீ பர தந்த்ரம்
ப⁴ஜ மானஸ பு³த⁴வேங்கடபதி தே³ஶிகமனிஶம் ॥ (ஶ்லோகம் – 65)

நெஞ்சே ஸ்வாமியின் கீர்த்திதனையே பாடிப் புகழ்வோம்
தர்க வாதி யானைக் கூட்டங்களை மொத்தமாக விழுங்கும் ஸிம்ஹமாக திகழ்ந்தார் நம் ஸ்வாமி
ஸ்ரீயப்பதி அருளால் ஆச்சார்ய முகேந நம் சம்பிரதாய அர்த்தங்களைப் பெற்றவர்
ஸ்வாமி ராமானுஜர் கைங்கர்யங்களையே போது போக்காகக் கொண்டவர்
ஸ்ரீ பாஷ்ய ப்ரவசனம் சம்பிரதாய பூர்வாச்சார்ய கிரந்த நிர்மாணங்களைப் பண்ணி அருளினார்
—————-

யதி பதி பத கமல ஸகல வித்யா பந்தும் கவி சிகரி பதி நகர ஸூசிர க்ருதவாஸம்
பஜ ஹ்ருதய கவிகதக ஹரிம் அபி ரெங்க ஷிதி ரமணா சரண யுக சதத க்ருத வாஸம் ||–66-

ஸ்வாமி பாஷ்யகாரர் திருவடித் தாமரைகளையே ஸகலமாகக் கொண்ட நம் ஸ்வாமி தேசிகன்
கீர்த்தியை நெஞ்சே அனுதினமும் எண் திசையும் பாடிப் பரவு
ஸ்வாமி பாக்கியத்தில் பேர் அருளாளன் திருவடித் தாமரைகளிலே இருந்து
ஸ்ரீ ரெங்கநாதன் திருவடித் தாமரைகளில் கைங்கர்யங்களையே வாழ் நாள் முழுவதும் செய்து அருளினார்

—————

அதி ம்ருதுல மாநஸம் அதி விபுல ஸூப நேத்ரம் அதி சதுரம் அதிக குண யதீந்த்ர பதி பாஷ்யே
உப கரணா பரமணிசாம் அப கரணா சிலேஷு அபி கலய மம ஹ்ருதய கவி தார்க்கிக ஸிம்ஹம் ||–67

நெஞ்சே தயாளுவான ஸ்வாமி தேசிகர் திருவடித் தாமரைகளை விடாதே பற்றிக்கொள்
பிரதிகூலர்கள் இடமும் தயாளுவானவர் நம் ஸ்வாமி
ஸ்ரீ பாஷ்யத்தை நன்றாக தாமும் அதிகரித்து கால ஷேப முகமாக
நமக்கும் பல முறைகள் ஸாதித்து அருளுபவர்
தயை நிறைந்த பரந்து விரிந்த திருக் கண்களால் நம்மை கடாக்ஷித்து அருளுபவர் –

——————-

போ நிகமா மௌலி யுக தேசிகா -தயா அம்ருத ஸமுத்ரா -பகவான் மாம காமிதம் வசனா மதீய ஸ்ருணு நாத கவி தார்கிக ஹரே
ஸ அஹம் அதி கிண்ணாம் இஹ வீக்ஷய ஜனமாத்ர பவத் அங்கரி விமுகம் த்வாம் ச குரு தாவக பாதாம்புஜ யுக ப்ரவணாம் அத்ய கிருபயா ||–68

ஓ உபய வேதாந்த கவி தார்க்கிக ஸிம்ஹ குருவே – தயா சிந்துவே -ஸ்வாமி
அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டு அருளாய்
தேவரீர் திருவடித் தாமரைகளில் சரண் அடையாமல் சம்சாரத்தில் உழன்று இருக்கும் மானிடர்களுக்காக
தேவரீர் உமது கடாக்ஷ வீக்ஷணங்களால் அவர்களையும் திருத்தி உமக்கு ஆட்கொண்டு அருள வேண்டும்

————

கிம் ச மம மானஸா மிதம் ச சமுதஞ்சித மிஹான்ய விஷ யே ஷு அங்கதி ந ஜாது கவிவாதிகாரி பஞ்ச முக தாவக பதம்
வஞ்சன பரம் ச தாம் அகிஞ்சன ஜன பிரிய ச பஞ்ச சரஜம் கங்கலாமிதம் புனர கங்கலா தரம் குரு பவ சரண்யோ ||–69

ஸ்ரீ கவி தார்க்கிக ஸிம்ஹமே
நாங்கள் விஷயாந்தங்களிலே மண்டி உமது திருவடித்த தாமரைகளிலே ஆஸ்ரயிக்காமல் உழன்று இருக்கிறோம்
அநந்ய கதிகளான எங்களுக்கு ஒரே புகலிடம் தேவரீர்
ஸநாதன தர்மங்களில் ஈடுபாட்டை வளர்த்து அருளி விஷயாந்தர ப்ராவண்யங்களைத் தவிர்த்து
அடியோங்களை இசைவித்து உமது தாளிணைக் கீழ் இருத்தி அருள வேண்டும்

—————-

ஸ்ரீ வேங்கடேசஸ்ய குரவ் பாதாப்ஐயோ ஸமர்பித ஸப்ததி ரத்னமாலிகா
த்ருத ஸூதீப்பி ஹ்ருதயே விமத்சரை புஷ்ணாதி சோபம் புருஷார்த்த நிர்ப்பாரம் ||–70-

ஸ்வாமி தேசிகருடைய திருவடித் தாமரைகளில் இந்த ரத்ன மாலையை ஸமர்ப்பிக்கிறேன்
பொறாமை அற்ற ஆஸ்திகர்கள் இந்த மாலையை திரு உள்ளத்தில் தரிக்கவே அனைத்து புருஷார்த்தங்களையும் பெற்று
பரஞ்சோதியாகவே விளங்கப் பெறுவர் –

—————-

வேதாந்தச்சார்ய சப்தத்யா குண வத்யா பரிஷ் க்ருதா
வேதாந்த வேத்ய ஸ்ரீ பாஷ்ய கார கருணயா கோசார ||–71

இந்த திவ்ய பிரபந்தம் ஸ்வாமி தேசிகருடைய அநந்த கல்யாண குணங்களையும் எடுத்துக் காட்டும்
இந்த ஸப்ததி மாலையை சூடுவார் எம்பெருமானுடையவும் எம்பெருமானாருடையவும் பேர் அருளுக்கு இலாக்காவார்
—————-

வீத ராக விஸிஷ்டார்த்த வேதாந்த சார்ய ஸப்ததி
வைஷ்ணவை சாதரம் க்ராஹ்ய வித்வத்பி வீதமாதசர்யை ||–72

ஸ்ரீ வைஷ்ணவ குழாங்களை பொறாமை இல்லாமல் ஆதாரத்துடன் இந்த பிரபந்தத்தை
அங்கீ கரித்து ஆழ்ந்த ஸப்தார்த்தங்களை அறிந்து உஜ்ஜீவிக்க வேண்டுகிறேன்

————–

பிரதிவாதி பயங்கரேநா ஸா ஸூதியா ஸப்ததி ரத்ன மாலிகா
நிகமாந்த குரவ் ஸமர்ப்பிதா ஹ்ருதயே தத் பஜதாம் ஸ்வய தீய ||–73

இந்த ஸப்ததி ரத்ன மாலிகா என்னும் திவ்ய பிரபந்தம் ஸ்வாமி பிரதிவாதி பயங்கர அண்ணன் அவர்களால்
ஸ்வாமி தேசிகன் மேல் அருளிச் செய்யப்பட்டு
தேசிக அடியார்களுக்கு ஸாஸ்த்ரீய ஞானம் வளரவும் ஸார்வ பவ்மரான ஸ்வாமியை ஆஸ்ரயிக்கவும் உதவும்

——————-

வேதே³ ஸஞ்ஜாதகே²தே³ முனிஜனவசனே ப்ராப்தனித்யாவமானே
ஸம்கீர்ணே ஸர்வவர்ணே ஸதி தத³னுகு³ணே நிஷ்ப்ரமாணே புராணே ।
மாயாவாதே³ ஸமோதே³ கலிகலுஷவஶாச்சூ²ன்யவாதே³ऽவிவாதே³
த⁴ர்மத்ராணாய யோऽபூ⁴த் ஸ ஜயதி ப⁴க³வான் விஷ்ணு க⁴ண்டாவதார: ॥

—————

வேதங்களில் கூறியபடி அநுஷ்டிக்கப்படும் வேள்விக்குப் பயனை அளிப்பவன் எம்பெருமானே என்பதை मयैव विहितान् हि तान् என்றதுபோல் वेदान्तकृद् वेदविदेव चाहम् என்ற இடத்திலும் வேதாந்தக்ருத் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வதுபோல் வேதாந்த விழுப்பொருளைக் காட்டிக் கொடுத்தவர் எம்பெருமான் என்கிற பொருளும் கூடும்.

எம்பெருமான் ஒருவருக்கே வேதாந்தாசார்யர் என்ற பெயர். இதை ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீ ஸ்வாமி தேசிகனுக்கு அருளினார்.

தன்னிடமுள்ள மிக உயர்ந்த பொருளை வேண்டியவர்களுக்கு அவர்கள் செயலை மெச்சி மஹான்கள் வழங்குவது இன்றும் கண்கூடு.‌ இதைத் தமக்கு எம்பெருமான் வழங்கியதை स्वकमिति हरिदत्तं यामुनस्तोत्रवृत्त्या व्यवृणुत निगमान्ताचार्यकं वेङकटेश: என்று ஸ்தோத்ர பாஷ்யத்தில் தாமே அருளினார்.

மேலும் அதிகரணஸாராவளியிலும் विश्वस्मिन् नामरूपाण्यनुविहितवता तेन देवेन दत्तां वेदान्ताचार्यसंज्ञाम् अवहितबहुवित्सार्थम् अन्वर्थयामि என்று இதையே குறித்தருளினார். இது ஈரரசு படாமல் இன்றளவும் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஒருவருக்கே அமைந்த பிருதமாகும்.

வேதங்களை வகைதொகையாய் வகுத்துப் பிரித்தபடியாலும், வேதத்தின் பெருமையை நிலைநாட்டியபடியாலும், வேதங்களின் அந்தமான முடிவுபாகமான உபநிஷத்துக்களின் பொருளை விளக்க வேதாந்த ஸூத்ரங்களை இயற்றியவருமான ஸ்ரீவேத வ்யாஸ முனிவருக்கு வேதாசார்யர் என்ற பெயருண்டு. அதற்கு அடுத்தபடியாக நம் ஸ்வாமி ஸ்ரீ தேசிகனுக்கே இப்பெயர் பொருத்தமாய் அமைந்தது. वेदान्ताचार्यक श्रीबहुमत ர் அன்றோ இவர்!

———————————–

கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலினே ।
ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ॥

வாதி³த்³விபஶிரோப⁴ங்க³பஞ்சானனபராக்ரம: ।
ஶ்ரீமான் வேங்கடனாதா²ர்ய: சிரம் விஜயதாம் பு⁴வி ॥

ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகஞாய நம: ।

——————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Posted in ஸப்த காதை, ஸ்தவம், Desihan | Leave a Comment »

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த முக்த போகா வலீ —

January 25, 2023

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

(வியாக்கியான சக்ரவர்த்தி பரம காருண்யர் -ஆவணி ரோஹிணி கண்ணன் போல் இவரும் –
சங்க நல்லூரில் திரு அவதாரம்
1167 தொடங்கி -95 திரு நக்ஷத்திரங்கள் –1262 வரை
நம்பிள்ளை சிஷ்யர்
யாமுனாச்சார்யர் திருக்குமாரர்-ஆளவந்தார் பெயரே இவர் தந்தைக்கும்
ஸ்ரீ தரன் கடாக்ஷம் எளிதில் கிட்டும் -வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
இவர் சகோதரி திருக் குமாரர் -சுந்தர வரதாச்சார்யர் இயல் பெயர் –அழகிய மணவாள பெருமாள் நாயனார் -சுவீகாரம் –
இவர் பிள்ளை லோகாச்சார்யார் தம்பி அல்ல
பெயரில் குழப்பம் வரக்கூடாது -என்பதால் நாயனார் ஆச்சான் பிள்ளை என்ற பெயர் மாற்றம் செய்தார்கள்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த கிரந்தங்கள் என்று சொல்லுவதால் பெரியவாச்சான் பிள்ளை -நாயனார் ஆச்சான் பிள்ளை இருவருக்கும் பொருந்தும்
இவர் சிஷ்யர் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
இவர் சிஷ்யர் -திருமாலை ஆண்டான் வம்சத்தில் வந்த யாமுனாச்சார்யர்- ப்ரமேய ரத்னம் கிரந்தம் முன்பே பார்த்தோம்)

ஸ்ருத் யர்த்த சார ஜனகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்ல ஸத் பகவத் அங்க்ரி புராண பந்தும்
ஞானாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த தனியன்

(வேதப் பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு -மலர வைக்கும் -இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் -தாமரை இணை அடிகள் -பழைய உறவினராய்,-திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
ஞானங்களுக்கு -அதி ராஜம் -பேரரசராய்,
அபய ப்ரத ராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான-பரம காருணிகம்-பெரியவாச்சான் பிள்ளையைப் போலவே
இவரும் பரம காருணிகர் என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

(ஸ்ரீ க்ருஷ்ண த்வைபாயனர் ஆதிகாலத்தில் பாற்கடல் கடைந்து வேதத்தை எடுத்துக் கொடுத்தவர்.
மஹாபாரதம் என்ற அமுதத்தை எடுத்துக் கொடுத்தவர்.
வேத நூல் கடலைக் கடைந்து ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர அமுதத்தையும் அளித்தவர் –
ஸ்ரீபாஷ்ய மங்கள ஸ்லோகத்தை அனுசந்தித்து ப்ராசார்யன் வாக்கே ஸீதா என்ற அமுதம்.
கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவமான நம்மாழ்வார் 3வது அமுதம்.
நாக்கு என்ற மந்திர பர்வத்தை கடைந்து திருவாய் மொழி என்ற பக்தாம்ருதத்தை கடைந்து கொடுத்தார்.
பாற்கடலில் உள்ள 4 உபநிஷத்துக்களையும் நன்கு மந்திர பூர்வமாக கடைந்து எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த ஸ்வாமி
ஸ்ம்ருதி களுக்கு எல்லாம் பால ஸூரியம் -அவை எல்லாம் ஆனந்தப்படுகிறது.
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் என்றபடி மிதுன சேஷிகளின் திருவடி தாமரைகளுக்கு பழைய உறவினராக இருக்கிறார்.
பலப் பல ஞானாதிகளுக்கு அரசராய் அபய வரதராஜன். பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரர்
அடியேனுக்கு ஆச்சார்யனாய் இருந்தவரை வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.)

அபய ப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||

யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாம முடைய அப் பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

அபய ப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத் ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||

(அபயப்ரத பாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய்,
எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை
இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

அஸ்மஜ் ஜநக் காருணய ஸுதாஸந்துஷி தாத்மவான் |
கரோமி சரமோபாய நிர்ணயம் மத்பிதா யதா ||

அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||

உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

(பக்தி உழவனின் உபகார பரம்பரைகள் -அவற்றால் பெரும் பேற்றை விளக்கும்

இரவு கழிந்து பகல் ஆரம்பிக்கும் முன் இடைப்பட்ட பிராயஸ் சந்தி காலம் -இருள் தொலைந்தது மட்டும் –
அஞ்ஞானம் தொலைந்து
நித்ய பகவத் அனுபவம் கிட்டாத போது
கூவிக் கொள்ளும் காலம் குருகாதோ
முமுஷு -இவன் -முக்தன் ஆவதற்கு முன்
ஸம்ஸாரிகள் -பத்தாத்மாக்கள் –
முமுஷுவுக்கு ஸஹ வாசம் சம்பாஷணம் ஸஹ போஜனம் த்யாஜ்ய உபா தேயங்கள் நடைமுறைகள் பல கிரந்தங்கள் சொல்லும்
ஸ்ரீ கீதை அருளிச் செயல்கள் ரஹஸ்ய த்ரயங்கள் இவற்றை விவரிக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தில் உத்க்ராந்தி விளக்கும் பாதம் – பிரயாணம் கதி பற்றி பாதம் -அங்கு சென்ற பின்பு கிடைக்கும் அனுபவம்
சாம்யா பத்தி -ஸாலோக்யம் ஸாமீப்யம் -ஸாரூப்யம் -ஸாயுஜ்யம் -பலவும் உண்டே)

(ஒவ்வொன்றுமே நிரதிசய அனுபவம் தானே -முக்தானாம் போக ஆவலீ -அனுபவ வரிசைகளை விளக்கும் கிரந்தம்
இனிமையான பரம போக்யம் –
பேற்றுக்குத் தவரிக்கப் பண்ணும்
அர்ச்சிராதி கதி கிரந்தம் போலே இதுவும்)

இவரும் சங்க நல்லூரில் 1192 திரு அவதாரம்-இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்
ஞான வர்ணவம்
தத்வ த்ரய விவரணம்
அணுக்த புருஷகாரஸ் ச சமர்த்தனம்
சரம உபாய நிர்ணயம்
சதுஸ் ஸ்லோகி பாஷ்யம்
தத்வ ஸங்க்ரஹம்
பரம ரஹஸ்ய த்ரயம்
முக்த போகா வலீ

(பரந்த ரஹஸ்யம் -மாணிக்க மாலை -இரண்டும்
நாயனார் ஆச்சான் பிள்ளை இவர் குமாரர் அருளிச் செய்தவையே – காஞ்சி ஸ்வாமிகள்
இவரே -தான் என்பர் -புத்தூர் ஸ்வாமிகள் பெரியவாச்சான் பிள்ளை – )

இவர் சிஷ்யர் பரம்பரை

வாதி கேசரி மணவாள ஜீயர்
பரகால தாசர்
ஸ்ரீ ரெங்காச்சார்யார் -(இவருக்கு சிஷ்யருக்கு சிஷ்யர் ஆதி வண் சடகோப ஜீயர்)

இந்த கிரந்தம் சிறு வயதிலே எழுதி தந்தை இடம் காட்டியதாக ஐதிகம் உண்டாம்
எனக்கு சரமத்திலே பிறந்த ஞானம் உனக்கு பிரதமத்திலே உண்டாயிற்று
இளைய வயசில் -ஆச்சார்ய விஷய ஞானம் உனக்கு பகவத் விஷயத்தில் உண்டானதே என்று
ஆனாலும் ஸ்ரீ வைஷ்ணத்வம் என்னிடம் கற்றுக் கொள் என்றாராம்

அர்ச்சிராதி கதி நான்கு பிரகரணங்கள் போல்
1-சம்சாரத்தில் படும் பாடு முதலில் -ஸம்ஸாரம் ரோகம் அறிந்து தானே போகம் ரசிக்கும்
2-உத்க்ராந்தி-உத் கிரமணம் -அடுத்து -கிளம்புவது
3-அர்ச்சிராதி கதி மூன்றாவது
4-போக விவரணம் அங்கு சென்று அனுபவிப்பதை
இது ஒரே நூலாக -பிரிவுகளைக் காட்டாமல் -கத்யமாகவே உள்ளது

—————

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா ப்ருத்வீ ந நக்ஷத்ராணி(மஹா உபநிஷத்)
(ஸத் ஏவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லா அன்று-ஏகாகீ ந ரமேத-திரிபாதி விபூதியில் உண்டது உருக்காட்டாதே – –சம்சாரிகள் பக்கலிலே குடி போய் )

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 
குன்றம் போல் மணிமாடம் நீடு*   திருக் குருகூர் அதனுள்,* 
நின்ற ஆதிப் பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. 

மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரத் ஏவ ஏகீ பவதி(ஸூ பால உபநிஷத் )

(பிருத்வீ அப்பிலே தொடக்கி -ஆகாசம் அஹங்காரத்தில் மஹான் அவ்யக்தத்தில் சேர்ந்து
அது அக்ஷரத்தில் -அது தமஸ்ஸில் -அது ப்ரஹ்மத்துடன் சேர்ந்தே இருக்கும்
ஐந்து நிலைகள் -மஹான் தொடங்கி–அவ்யக்தம் -அக்ஷரம் -விபக்த தமஸ் -அவிபக்த தமஸ்
விதை -முதல் அவிபக்த தமஸ் -பூதலுத்துக்குள் –
மேல் மண்ணில் இருந்து வெளியில் வர தயார் விபக்த தமஸ்
அடுத்து அக்ஷரம் -தண்ணீரை உறிஞ்சி பெருத்து வெடிக்கத் தயார் நிலை –
நான்காவது -பெருத்து வெடித்த நிலை
முளை விட்டது மஹான் -இதுவே பிரதம தத்வம் -தத்வ த்ரய வியாக்யானத்தில் பார்த்துள்ளோம் -)

தம ஆஸீத் தமஸா கூடம் அக்ரே

(ஸூஷ்ம ப்ரக்ருதி மட்டுமே -அஞ்ஞானம் மூடி -மொத்த ஆத்ம சமஷ்டியும் உள்ளே-ஜடமாய் ஒட்டிக் கொண்டு சிக்கிக் கொண்டு இருக்கும்)

நாஸத் ஆஸீத் (ந அஸத் ஆஸீத் ந ஸத் ஆஸீத் )-என்கிறபடியே

(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்)

(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்–ஆச்சார்ய ஹ்ருதயம் -1-)

கரண களேபர விதுரராய் –அசித் அவிசேஷிதராய் -தன் பக்கலிலே சுவறிக் (ஒடுங்கிக் )கிடந்த ஸம்ஸாரி சேதனரரைப் பார்த்து
ஸூரிகளோபாதி ஸதா பஸ்யந்தி பண்ணி ஆனந்த நிர் பரராகைக்கு இட்டுப் பிறந்த இச் சேதனர் இறகு ஒடிந்த பக்ஷி போலே
கரண களேபரங்களை இழந்து போக மோக்ஷ ஸூன்யராய் இங்கனே கிலேசிக்க ஒண்ணாது என்று தயாமான மநாவாய்
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வ மேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்தா பாதாதி ஸம்யுதா -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )என்று
தன் திருவடிகளிலே அபிமுகீ கரித்துக் கரை மரம் சேருகைக்காகத் தத் உப கரணங்களான கரண களேபரங்களை ஈஸ்வரன் கொடுக்க

(முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்று)

(தத் விஷ்ணோ : பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : திவீவ சக்ஷூராததம் தத் விப்ராஸோ விபந்யவோ )
(த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் – இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் – கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய்
முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று –
விடாதே சத்தையை  நோக்கி உடன் கேடனாய்—ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-381-
(ஜிஹ்வே கேசவன் கீர்த்திதம் –முகுந்த மாலை)
அவற்றைக் கொண்டு

1-ஸ்வே தேஹ போஷண பரர் ஆவாரும்
2-இந்திரியங்களுக்கு இரை தேடி இடுகையிலே யத்னம் பண்ணுவாரும்
3-பர ஹிம்ஸையிலே விநியோகம் கொள்ளுவாரும்
4-தேவதாந்தரங்களுக்கு இழி தொழில் செய்வாரும்
5-பகவத் பாகவத நிந்தைக்கு பரிகரம் ஆக்குவாரும்
6-ஸ்வரூப அநனுரூபமான (பொருந்தாத )ஷூத்ர புருஷார்த்தங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுவாரும்
7-முமூர்ஷு க்களாய் அபேத ப்ரவ்ருத்தர் ஆவாரும்(முமூர்ஷு–ம்ருதும் இச்சை- இறக்க இச்சைப்பட்டு – அத்தை நோக்கியே போவான் -அபதம் தப்பான பாதை)
8-விதவ அலங்கார கல்பமான கைவல்யத்திலே யத்னம் பண்ணுவாருமாய்

இப்படி அந்ய பரராய்ப் போருகிற ஸம்ஸாரிகள்(தங்களையும் மறந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் )நடுவே
இச் சேதனரோட்டை நிருபாதிக ஸம்பந்தமே ஹேதுவாக
நெடுநாள் ஸ்ருஷ்டிப்பது(உன்னி உன்னி உலகம் படைத்து–சோம்பாது )
அவதரிப்பதாய்(மன்னிடை யோனிகள் தோறும் பிறந்தும் காண கில்லா )
இவை படுகிற நோவைக் கண்டு -ப்ருசம் பவதி துக்கித (ஸ்ரீ ராமாயணம் )–என்று திரு உள்ளம் நோவு பட்டுப் போந்த(அவஜா நந்தி மாம் மூடா )

(வ்யஸநேஷ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித : உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி )
ஈஸ்வரனுடைய பாக்ய வைபவத்தாலே

(நமக்கு அனுக்ரஹம் கிட்டி மோக்ஷம் இச்சை வருவது இதனாலேயே -கோர மா தவம் செய்தனன் கொல்
பொருப்பிடையே நின்றும் –நீர் வேண்டா -நானே பண்ணுகிறேன்

பொருப்பிடையே நின்றும்*  புனல் குளித்தும்,*  ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* – விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை*  மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால்,* 
அஃகாவே தீ வினைகள் ஆய்ந்து.)

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தாநாம் கஸ்சித் மாம் வேத்தி தத்வத –ஸ்ரீ கீதை -7-3-என்று
எங்கேனும் ஒருவன் பராக் அர்த்தங்களிலே (வெளி விஷயங்களிலே )பரகு பரகு என்கை தவிர்ந்து
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து வாடினேன் -என்கிறபடியே
த்யாஜ்ய உபா தேயங்களுக்கு நிர்ணாயக ப்ரமாணமான தத் ஸ்வரூப யாதாத்ம்ய (ஆச்சார்ய பர்யந்தம் யாதாத்ம்ய-யதா வஸ்து ஸ்திதி )நிரூபணத்திலே இழிந்து(பர ஸ்வரூபம் இத்யாதி அர்த்த பஞ்சக யாதாத்ம்ய ஞானம் அறிந்து )

(மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—ஸ்ரீ கீதை-7.3৷৷

சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே
பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –
பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில்
ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்)

(வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (1-1-1)

தேஹ இந்த்ரிய மன ப்ராண தீப்ய (தீ புத்தி )அந்யனாய்
ஞான ஆனந்த லஷணனாய் (அடையாளம் )
ஞான குணகனாய்(ஞான மயமாயும் ஞானம் உடையவனாயும் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டுமே உண்டே )
நித்யத்வாதி குண யுக்தனான
ஆத்மாவை

யஸ்யாஸ்மி ந அந்தர்யேமி-(யஜுர்வேதம் நான் யாருடையவனோ அவனை தாண்ட மாட்டேன் )
தாஸ பூத (ஸ்வத ஸர்வே -இதைத் தவிர வேறே அடையாளம் இல்லை -பந்தத்திலும் மோக்ஷத்திலும் -ஹாரீத ஸ்ம்ருதி)
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய(கோசலேந்த்ரஸ்ய -ராமாயணம் )
பரவா நஸ்மி -என்கிறபடியே
பகவத் அநந்யார்ஹ சேஷ பூதன் (தீர்ந்த அடிமை) என்று அறிந்து

(தாஸபூதா: ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பாமாத்மந!
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்!!
இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர்.
அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.)

(தீர்த்தனுக்கு அற்றபின் மற்றுஓர் சரணில்லை என்றுஎண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும் வல்லார்களைத் தேவர்வைகல்
தீர்த்தங் களேஎன்று பூசித்து நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.–7-10-11)

அத்தாலே
தேஹ ஆத்ம அபிமானம் என்ன
ஸ்வ ஸ்வா தந்தர்யம் என்ன
அந்ய சேஷத்வம் என்ன
ப்ரயோஜனாந்தர சம்பந்தம் என்ன
இவை இத்தனையும் குடநீர் வழிந்து

விஷய விஷ தர வ்ரஜ (சப்தாதி ஐந்து தலை பாம்பு சரப்பக் கூட்டம் )வ்யாகுலமாய்
ஜனன மரண சக்ர நக்ர ஆஸ்பதமாய்(முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்)
ஸ்வ பர ஸ்வரூப திரேதாந கரமாய்(கத்யத்ரயம் )
விபரீத விருத்த ப்ரவர்த்தகமாய்
அநந்த க்லேச பாஜனமான ஸம்ஸாரத்தில் பயமும்

(விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே
அகதிர் அசரணோ பவாப்தவ் லுடந் வரத சரணம் இத்யஹம் த்வாம் வ்ருணே –ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -82-

வரத
விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே –சப்தாதி விஷயங்கள் ஆகிற சர்ப்ப சமூகங்களால் நிபிடமாயும்
ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே –பிறப்பு இறப்பு ஆகிற முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்
பவாப்தவ் லுடந் அஹம் –சம்சாரக் கடலில் புரளா நின்ற அடியேன்
அகதிர் அசரணோ இதி –உபேயாந்த்ர ஸூந்யன் உபாயாந்தர ஸூந்யன் என்கிற காரணங்களால்
த்வாம் சரணம் வ்ருணே -உன்னை சரணம் புகுகின்றேன்)

(இரண்டு விபூதியும் நித்யம் -நித்ய விபூதி ஸ்வரூபத்தாலே நித்யம் -லீலா விபூதி ஸ்வ பாவத்தால் நித்யம் -ப்ரவாஹத்வேன நித்யம்
இங்கும் கைங்கர்யம் நித்தியமாக இருந்து இருந்தால் அங்கே போக த்வரிக்க வேண்டாம்)

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -அஞ்ஞானமும் அது அடியாக தீய அனுஷ்டானங்களும் –
அது அடியாக ப்ராக்ருதத்தில் அழுந்தி இருப்பதால்-சம்சாரத்தில் பயமும் பரம ப்ராப்யத்தில் ருசியும் வர வேண்டுமே )

ஸம்ஸாரத்தில் பயமும் –நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணமான பகவத் கைங்கர்யம்
ஆகிற பரம ப்ராப்யத்தில் ருசியையும் யுடையனாய் (அள்ள அள்ளக் குறையாத -ஸூகம் ஒன்றே -ஆஹ்லாத கரம் )

(கீழ் எல்லாம் ஞான தசை -இனி சாதன தசை-அறிந்த பின் அனுஷ்டானம் வேண்டுமே )

அஸ் ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமான பரம ப்ராப்ய ஸித்திக்கு
தர்மேண பாபம் அப நுததி(மஹா நாராயண உப நிஷத் )
யஜ்ஜேன தானேந தபஸா நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-(ப்ரஹதாரண்யம்உப நிஷத்  )என்கிறபடியே

த்ரிவித பரி த்யாக பூர்வகமாக அனுஷ்டிதமான கர்ம யோகத்தாலே(நெஞ்சை நிலை நிருத்த கர்ம யோகம் வேண்டுமே )
த்ருதே பாதாதி வோதகம் -(தண்ணீர் ஒழுகிப் போமா போல் )என்று
துருத்தி மூக்குப் போலே ஞான ப்ரசரண த்வாரமான நெஞ்சை ( பட்டி மேயாதபடி )அடைத்து
அந்யதா ஞான விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸூக்களை
மனனகம் மலமறக் கழுவி -என்கிறபடியே
மறுவல் இடாதபடி ஷீணமாக்கி

(பிராகிருத சரீரம் என்பதால் -பட்டி மேயாதபடி அடைத்ததுக்கும் மேல் -மிஸ்ர ஸத்வம் மாற்றி –
பெருமாளை நோக்கித் திருப்ப ஸூத்த ஸத்வம் வேண்டுமே
தீ மனம் கெடுத்ததுக்கும் மேல்
மருவித் தொழும் மனமும் வேண்டுமே-மூன்றினில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று)

அம் மிஸ்ர ஸத்வத்தை அறுத்து
ஸத்வாத் சஞ்சாயதே ஞானம்
ஸத்வம் விஷ்ணு ப்ரகாசகம் -என்று
யதாவத் ஞான சாதனமான அந்த ஸத்வத்தாலே
ஆகார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தவ் ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி (சாந்தோக்யம் )-என்கிறபடியே
சாஷாத்கார பர்யந்தையான அநவரத பாவனை பிறந்து அது

(யதாவத் ஞான-உள்ளபடி அறிய ஸத்வம் –
ஞான அனுதயம் அறியாமலே போகவும் –
குணங்களையும் பொருளையும் மாற்றி அறியவும்-அந்யதா விபரீத ஞானம் வர ரஜஸ் தமஸ்ஸூக்கள்)

(ஞானம் பக்தியாக மாற அன்பு -ஸ்நேஹம் -காதல் -வேட்க்கை வேண்டுமே-த்ருவா ஸ்ம்ருதி தானே த்யானம் –
வேதனம் த்யானம் -அறிகை தியானம்-சிந்தனை – இடைவீடு இல்லாமல் தொடர்ந்து-அநு த்யானம் -இத்துடன் அன்பு ஸ்நேஹம் கலந்து )

ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி -என்கிற
பக்தி ரூபா பன்னையாய்
அதனுடைய விபாக தசையாய்
அந்த பக்தி -பகவத் ஸம்ஸ்லேஷ வியோக ஏக ஸூக துக்கனாம் படி பண்ணக் கடவதாய்

(பரபக்தி நிலை -அவன் இடம் மட்டுமே -கூடி இருந்தால் சுகம் பிரிந்தால் துக்கம்)

யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய(நாயமாத்மா ஸ்ருதி -முண்டகம் -காட்டவே காணலாம் )
பக்த்யா மாம் அபி ஜாநாதி-(18-55)
பக்த்யா த்வந் அந்யயா சக்ய–(11-54)
மத் பக்திம் லபதே பராம் –(18-54)என்று
சாதன தயா ஸாஸ்த்ர ஸித்தமான பரபக்தியை ஸாதித்தல்

(நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ
ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன ।
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴ய-
ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் -முண்டக॥ 3॥)

(இந்த மூன்றில் கீழ் இரண்டும் கீதா ஸ்லோகங்கள் ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் உண்டே-)

(ஸ்ரீ சரணாகதி கத்யம்–சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பரபக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் )

புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே பக்தி ஒன்றாலே முடியும் –

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷–(பர பக்திக்கு ஆத்ம தர்சனம் தேவை -அதுக்கு த்யான நிஷ்டை )

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.)

பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.)

அங்கன் அன்றிக்கே
ஸாத்யமான ஸகல ஸாதனங்களையும் ஸ அங்கமாகவும் ஸ வாசனமாகவும் விட்டு
துஷ்கரத்வாதி தோஷ தூரமாய்
ஸ்வரூப அநு ரூபமாய்
(கண்ணனே சாதனம் என்பதால் )வாத்சல்யாதி குண விசிஷ்டமாய்
நித்ய அநபாயினியான பிராட்டியையும் ஸஹ காரியாக ஸஹியாத படி நிரபேஷமாய்
தஸ்மாந் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதி ரிக்தம் தபஸ் ஸ்ருதம்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்
பாவநஸ் ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன -என்று
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸித்தமான ஸித்த ஸாதனத்தை ஸ்வீ கரித்தல் செய்து

(யாஜ்ஞிகீயமான உபநிஷத்தில்
சத்யம் தபோ தம சமோ தானம் தம ப்ரஜனனம் அக்னய
அக்னி ஹோத்ரம் யஜ்ஞோ மானசம் நயாசோ த்வாதச -என்று
ஒன்றுக்கு ஓன்று உத்க்ருஷ்டமாக சொல்லிப் போந்து-12 தபஸ்ஸுக்கள் நியாஸமே உயர்ந்தது –
ப்ரபத்தியும் கண்ணனும் ஒன்றே என்று கொண்டு அருளிச் செய்கிறார்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்-ஒரே வேற்றுமையில் இங்கு
பக்தியே கண்ணன் சொல்ல மாட்டோம் -அவன் இடம் பக்தி பண்ணி அடைய வேண்டும்)

———-

(சாதனங்களை அருளிச் செய்து மேல் கர்மங்கள் போவதை பற்றி விளக்கி அருள்கிறார்)

(பக்திக்கு சஞ்சித கர்மங்களை அவன் தொலைத்து பிராரப்த கர்மாக்களை நாமே தொலைக்க வேண்டும்
ப்ரபத்திக்கு இரண்டுமே அவனே தொலைத்து சரீர அவசானத்தில் பேறு-கால விளம்பம் இதுக்கு இல்லையே )

(போய பிழையும் புகு தருவான் நின்றனவும் -தீயில் இட்ட பஞ்சு போலவும் தாமரை இலைத் தண்ணீர் போலவும்)

ஆக இப்படி ஸித்த ஸாத்ய ரூபமான சாதன த்வய அவ லம்பநத்தாலே
ஏவம் விதி பாபம் கர்ம நஸ் லிஷ்யதே
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே
தத் ஸூஹ்ருத துஷ் க்ருதே தூ நுதே
ஸூஹ்ருதஸ் ஸாது க்ருத்யாம் த்விஷந்த பாப க்ருத்யாம்
தஸ்ய ப்ரியா ஞாதாயஸ் ஸூ ஹ்ருதம் உப யந்தி அப்ரியா துஷ் க்ருதம்
அஸ்ய இவ ரோமாணி விதூய பாபம்(சாந்தோக்யம் )
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று(கீழ் பிரமாணங்கள் பக்திக்கும் இது பிரபத்திக்கும் )
புண்ய பாப ரூபமான பூர்வாகத்தை ஸூ ஹ்ருத்துக்கள் பக்கலிலும் துஷ் க்ருதுகள் பக்கலிலும் பகிர்ந்து ஏறிட்டு
ப்ரமாதிகமாய் (கவனக் குறைவால் ) புகுந்த உத்தராகம் ஈஸ்வரன் திரு உள்ளத்தில் படாமையாலே கழன்று

ஆக
இப்படி பூர்வாக உத்தராகங்களினுடைய
அஸ்லேஷ விஸ்லேஷ ரூபமான விமோசனம் பிறந்து

(போய பிழையும் புகு தருவான் நின்றனவும் –
தீயில் இட்ட பஞ்சு -அஸ்லேஷ ரூபமான போலவும்
தாமரை இலைத் தண்ணீர் – விஸ்லேஷ ரூபமானபோலவும்)

(ஸ்ரீ பாஷ்யம் நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-ஆவ்ருத்தி முதல் பாதம் –
அடுத்து -இரண்டாம் பாதம் -உத் க்ராந்தி பாதம் -அத்தை இங்கு விளக்கி அருள்கிறார்-கதி பாதம் முக்தி பாதம் அடுத்தவை )

(4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

சாந்தோக்யம் -4-14-1-தத்யதா புஷ்கர பலாசா அபோ ந ச்லிஷ்யந்தே ஏவம் ஏவம் விதி பாவம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று-தாமரை இல்லை மேல் நீர் ஒட்டாது போலே ஒட்டாது என்றும்

ப்ருஹத் -4-14-23-தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேந-என்று ஆத்மாவை அறிந்தவனை கர்மங்கள் தீண்டாதுஎன்றும் –ஒட்டாதவற்றையும்

சாந்தோக்யம் -5-24-3-தத்யதா இஷீக தூலம் அக்னௌ ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –துடப்பத்தின் நுனியில் பஞ்சு போன்ற பகுதி தீயில் அழிவது போலே ப்ரஹ்ம உபாசகனின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும்

ஷீயந்தே ஸ அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கண்டதும் இவனது பாவ கர்மங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன -என்றும் சொல்லிற்றே)

போகே ந த்விதரே ஷபயித்வாதா ஸம் பத்யதே -என்கிறபடியே
ஆரப்த கர்ம அவசானத்திலே யாதல்(ஜன்மாந்த ஸஹஸ்ரங்கள் ஆகலாம் பக்தனுக்கு )
யன் மரணம் தத வப்ருதா(அவப்ருத ஸ்நானம் போல் )
மரணமானால் (மரணம் ஆக்கி அல்ல )–என்கிறபடியே
ஆரப்த சரீர அவசானத்திலே யாதல்(இந்த சரீரம் முடிவிலேயே )

இம் முமுஷு சேதனன் இஸ் ஸரீரத்தை விட்டுப் போம் போது
அதி ப்ரபுத்தோ மாமேவ அவலோகயந் (ஸ்ரீ வைகுண்ட கத்யம் )-என்கிறபடி தான் ஈஸ்வரன் என்று இருத்தல்
காஷ்ட பாஷாணா ஸந் நிபம் அஹம் ஸ்மராமி மத் பக்தம் என்றும்
மாம் அநு ஸ்மரணம் ப்ராப்ய -என்கிறபடியே

(அஹம் மனு -நானே ஈஸ்வரன் ப்ரஹ்லாதன் போல் -பக்தி நிஷ்டன்
அவனே நினைவில் வைத்து -பேற்றுக்கு நினைவு அவன் உபாயம்
இரண்டையும் அருளிச் செய்கிறார் )

(வேதாந்தங்களில் மகா பதமாக சொல்லுகிற பக்தியைக் காட்டில் இப் பிரபத்திக்கு ஏற்றம் என் என்னில்
அது 1-அதி க்ருதாதிகாரமுமாய்
2-துஷ்கரமுமாய்
3-விளம்ப பல பிரதமுமாய்
4-பிரமாத சம்பாவனை யுள்ளதுமாய்
5-சாத்யமுமாய்
6-ஸ்வரூப அநனு ரூபமுமாய்
7-பிராப்யத்துக்கு விசத்ருசமுமாய் இருக்கும் -8-அந்திம ஸ்ம்ருதி வேண்டும்

இதுவோ என்றால்
அதுக்கு எதிர்த் தட்டாம்படி 1-சர்வாதிகாரமுமாய்
2-ஸூ கரமுமாய்
3-அவிளம்ப பல பிரதமுமாய்
4-பிரமாத சம்பாவனையும் இன்றிக்கே–5-சித்தமுமாய்
6-ஸ்வரூப அனுரூபமுமாய் -7-பிராப்யத்துக்கு சத்ருசமுமாய் இருக்கும் -8-அஹம் ஸ்மராமி -அந்திம ஸ்ம்ருதி வேண்டாம் )

ஸ்திதே மனஸி ஸூஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

ஈஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாதல் செய்து
அஸ்ய ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங் மனஸி ஸம் பத்யதே(ஹஸ்தே புஸ்தகம் போல் ஸம்யோகம் -வாக்கு மனசில் சம்யோகம் -லயம் )
இந்த்ரியைர் மனஸி ஸம்பத்யதே மாநை
அத ஏவ ஸர்வாண்யநு(4-2-2) –என்கிறபடியே வாக் இந்த்ரியமும் அல்லாத கரணங்களும் லயித்து(ஸம்யோக மாத்திரம் )

(பின் ஆகாரம் கார்யம் அழிந்து முன் காரண அவஸ்தையில் ஒன்றுதல்
மண் -நீராகி -அக்னியாகி லயம்
மனஸ் வாக்கு சம்யோகம் தானே கார்ய காரண பாவம் இல்லையே)

மந ப்ராணே
தந் மந ப்ராண உத்தராத் -(4-2-3)என்று
ஸர்வ இந்த்ரிய ஸம் யுதமான மநஸ்ஸூ ப்ராணன் பக்கலிலே ஏகீ பவித்து
ஸோத் யஷே(சஹா அத்யக்ஷ ஜீவன் இடம் )
ஏவமேவம மா மாத்மாநம் அ ந்தகாலே ஸர்வே ப்ராணா அபி ஸமா யந்தி -என்கிறபடியே

பிராணன் ஜீவனோடே கூடி
ப்ராணஸ் தேஜஸி -லீயந்தி என்று
ஜீவ ஸம் யுக்தனான பிராணன் பூத ஸூஷ்மத்திலே லயித்து
பூத ஸூஷ்மம்- தான்
தேஜஸ் பரஸ்யாம் தேவதாயாம் (4-2-1 விஷய வாக்கியம் )-என்கிறபடியே
பர தேவதை பக்கலிலே ஏகீ பவிக்கும் –

(பாற்கடல் கடைந்து கிருஷ்ணன் -அமுதமும் பெண் அமுதமும்
மதி மந்தான-வியாசர் மஹா பாரதம் -க்ருஷ்ண த்வைபாயனர்
பாராசூரர் வாக் அமுதம் -உபநிஷத் பாற்கடல்-நூல் கடல் -ப்ரஹ்ம ஸூத்ரம்
மறை பாற் கடலை -திரு நாவின் மந்திரத்தால் கடைந்து பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போல்
இங்கும் நூல் பாற்கடல் -உபநிஷத் கடைந்து -கௌஷீகம் சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் கட உபநிஷத்துக்கள் சாரம் –
ஸ்ம்ருதி கீதை ராமாயணம் சாரார்த்தம் -தாமரைக்கு இளம் ஸூர்யன்-கிருஷ்ண ஸூனு -அபய பிரத ராஜ புத்திரர் )

ஆக இப்படி சாதாரணமான உத் க்ராந்தி யுண்டாய்(பொதுவான உத் கிராந்தி இது வரை
அர்ச்சிராதி கதிக்கும் தூ மாதி கதிக்கும் இப்படியே )
சதஞ்ச ஏகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸாம் மூர்த்தாநம் அபி நிஸ் ஸ்ருதைகா தய ஊர்த்வம் ஆயந் அம்ருதத்வ மேதி -(கட உபநிஷத்-அம்ருதம் -ப்ரஹ்மம் அறிந்து ம்ருத்யு தாண்டி அம்ருதத்வம் ஆப் நோதி )
ஊர்த்வம் ஏகா ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா ஸூர்ய மண்டலம் -ப்ரஹ்ம லோகம் அதி க்ரம்ய தேந யாதி பராம் கதிம்-(தேந -ஸூர்ய கிரணங்களால் )-என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
ஹ்ருதய கமல அவ லம்பிகளான (பற்றுக் கொம்பாகக் கொண்டு )நூற்றொரு நாடிகளில் தலையில்
ஊர்த்வ கபால வலம்பியான நூற்றோராம் நாடியாலே(ஸூஷ்ம்நா நாடி மூலம் அர்ச்சிராதி கதி 4-2-16)

ததோ கோக்ர ஜ்வலநம்(4-2-16-)

(ததோ கோக அக்ர ஜ்வலநம் தத் பிரகாசித த்வாரோ வித்யா சாமர்த்யாத் தத் தேஷ கஸ் யநு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்த அநு க்ருஹீதஸ் ஸதாதி கயா

ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச -அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான ஸூ ஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்
இந்த சிறப்பான உத்க்ராந்தி கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ் ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது மிகவும் நுண்ணியமான நாடி –
ய நு ஸ்ம்ருதி-அர்ச்சிராதி மார்க்க சிந்தனையால் அவனுக்கு ப்ரீதி -சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-)

தத் ப்ரகாஸி தத்வாரோ வித்யா ஸாமர்த்யாத் தச் சேஷகத்யனு ஸ்ம்ருதி யோகாச் ச ஹார்த்த அநு க்ருஹீதஸ் ஸதாதி கயா -என்கிறபடியே
இவன் தன்னை ஆஸ்ரயிக்கையினாலும்
அர்ச்சிராதி கதி சிந்தனையினாலும்
அதி ப்ரீதனாய் –
ஹ்ருதய குஹா கதனான ஈஸ்வரனுடைய ப்ரஸாத விசேஷத்தாலே ப்ரகாசித த்வாரனாய்க் கொண்டு
ய ஏஷ ஸ்தந இவா லம்பதே சேந்த்ர யோநி (தைத்ரியம்-இந்த்ர யோநி-ஆத்ம ஸ்தானம் )-என்று
முலை போலே நாலுகிற ஹ்ருதய குஹையினின்றும் புறப்பட்டு உச்சந்தலை அளவும் சென்று

வ்ய போஹ்ய ஸீர்ஷ கபாலே -என்று தலை யோட்டைப் பிட்டு(ரந்தரம் -தலை ஓட்டை )
அத யத்ரைத தஸ்மாச் சரீரா துத் க்ரமாதி(அத ஏதத் ரத அஸ்மாச் சரீர உத் க்ரமாதி)
அத தைரேவ ரஸ்மிபிர் ஊர்த்வமா க்ரமதே(அத தைரேவ ரஸ்மிபிர் ஊர்த்வம் அக்ரமதே)
ரஸ்ம்ய அநு சாரீ (4-2-17)-என்கிறபடியே
அந்நாடியோடே பிடையுண்டு கிடக்கிற (பிணைக்கப்பட்டு உள்ள ஜீவன் )ஆதித்ய ரஸ்மி விசேஷத்தாலே
அஸ்யைவ ச உப பத்தே ரூஷ்மா (4-2-11-)
ஸூஷ்மம் ப்ராமண தஸ்ச ததா உப லப்தோ –(4-2-9)என்கிறபடியே
ஊஷ்ம லக்ஷணையான ஸூஷ்ம ப்ரக்ருதியோடே புறப்பட்டு போம் போது

(ஸூஷ்மம் ப்ராமண தஸ்ச ததா உப லப்தோ –(4-2-9)

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது -அர்ச்சிராதி மார்க்கம் வலி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்
கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது -சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்)

(4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது -அர்ச்சிராதி மார்க்கம் வலி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்
கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது -சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்)

(அஸ்யைவ ச உப பத்தே ரூஷ்மா (4-2-11-)

ப்ரஹ்ம உபாசகனுக்கு ஸூஷ்ம உடல் உஷ்ணம் இருப்பதால் ப்ரஹ்ம உபாசகனுக்கும் உக்ராந்தி உண்டு என்கிறது –)

(ரஸ்ம்ய அநு சாரீ (4-2-17)

சாந்தோக்யம் -8-6-5-அத யத்ர தஸ்மாத் சரீராத் உத்க்ராமதி அதி ஏதைரவி ரச்மிபி ஊர்த்வமாக்ரமதே -என்று
ஏவகாரத்தால் சூர்ய கிரணங்கள் வழியாகவே செல்கிறான் -இரவிலும் சூர்ய கிரணங்கள் உண்டே
நாடிகளுக்கும் சூர்ய கிரணங்களுக்கும் தொடர்பு -சாந்தோக்யம் -8-6-2-தத் யதா மஹா பத ஆத்த –உபௌ க்ராமௌ கச்சதி இமம் ச அமும் ச ஏவ மேவைத ஆதித்யச்ய ரச்மய உபௌ லோகு கச்சந்தி
இமம் ச அமும் ச அமுஷ்மாத் ஆதித்யான் ப்ரதா யந்தே தா ஆஸூ நாடீஷூ ஸ்ருப்தா
ஆப்யோ நாடீப்யோ ப்ரதா யந்தே தி அமுஷ்மின் ஆஹித்யே ஸ்ருப்தா -என்று சொல்லிற்று –)

அர்ச்சிஷ மேவ அபி ஸம் பந்தே
அர்ச்சிஷ அஹ அஹ்ந ஆபூர்ய மாண பஷம் ஆபூர்ய மாண பஷாத் யாந் ஷட்  உதங்கேதி மா ஸாம் ஸ்தாந்
மா ஸேப்யஸ் ஸம் வத்சரம் ஸம்வத்ஸர ஆதித்யம் ஆதித்யாத் சந்த்ர மஸம் சந்த்ர மஸோ வித்யுதம்
தத் புருஷோ

அமாநவ ஸ ஏதாந் ப்ரஹ்ம கமயதீத் (வித்யுதம் தத் புருஷோ-இவனே கூட்டிச் செல்கிறான் )யேஷ தேவ பதோ ப்ரஹ்ம பத ஏதேந ப்ரதிபத்ய மாநா இமம் மாநவம் ஆவர்த்தம் நா வர்த்தந்தே நா வர்த்தந்த இதி

ஸ ஏதம் தேவ யாநம் பந்தாநம் ஆ பத்ய அக்நி லோகம் ஆகச்சதி ஸ வாயு லோகம் ஸ வருண லோகம் ஸ ஆதித்ய லோகம்
ச இந்த்ர லோகம் ச ப்ரஜாபதி லோகம் ஸ ப்ரஹ்ம லோகம்(கௌஷீதகி -அக்னி லோகம் வார்த்தையில்அர்ச்சிஸ் -ஆதித்ய சந்த்ர லோகம் விட்டு வருண லோகம் )

(12 லோகங்கள் மூன்று உபநிஷத்துக்களும் வேறே வேறே பேராகவும் சொல்லும்
சாந்தோக்யம் கௌஷீதகம் கட-இவற்றை சமன்வயப்படுத்து நம் போவார்கள் காட்டி அருளி உள்ளார்

முதல் ஆறும் -அர்ச்சிஸ் -பகல் -ஆபூர்ய மாண பஷம்-(சுக்ல பக்ஷம்)- உத்தராயணம்- சம்வத்சரம் -வாயு
7-ஸூர்ய 8- சந்திரன்-9-மின்னல்-10-வருண 11 இந்திர 12ப்ரஜாபதி

ஸர்வ சாகா நியாயம்
தத்வ சார ஸ்லோகம் -நடாதூர் அம்மாள் வாயு வருண இந்திர பிரஜாபதி லோகம்
ஆதி வாஹிஹா அதிகரணம் இத்தை விவரிக்கும் –)

அக்னிர் ஜ்யோதிர் அஹஸ் ஸூக்லஷ் ஷண் மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா –என்று

(அக்நிர் ஜ்யோதிர் அஹஸ் ஷுக்ல ஷண் மாஸா உத்தராயணம்.–
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா—৷৷8.24৷৷)

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே பிரதமத்திலே
அர்ச்சிஸ் என்றும்
அஹஸ் என்றும்
ஸூக்ல பக்ஷம் என்றும்
உத்தராயணம் என்றும்
சம்வத்சரம் என்றும்
இவ்வோ சப்தங்களால் சொல்லப்படுகிற தத் தத் அபிமான தேவதா பூதரான ஆதி வாஹகரும்(தாண்டி அழைத்து போகிறவர்கள் )

அதுக்கு மேலே
வாயும்  அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்(4-3-2)என்று
வாயு வாக்யனான ஆதி வாஹகனும்
இவ்வளவிலே தம் தாமுடைய எல்லை அளவிலே வழி விட
ஆதித்யன் அளவிலே வந்து

(4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும் ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது
வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி -என்றது
சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் -தேவ லோகம் என்பதும் வாயுவைக் குறிக்கும்
வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும் யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ -வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-)

அநந்தரம்
பித்வா ஸூர்ய மண்டலம்
தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -(சிறிய திருமடல்)என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தைக் கீண்டு
அவ்வருகே புறப்பட்டு சந்திரன் அளவும் சென்று

(ஆரா வமுதம் அங்கு எய்தி -இங்கு -அளப்பரிய ஆரமித்து அரங்க மேய அந்தணன் இருக்க எதனால்
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போக வேண்டும் -திருமங்கை ஆழ்வார்)

இதுக்கு அவ்வருகே வித்யுத் அபிமானியான அமானவன் அளவும் சென்று அவனோடே கூடி
தடித் அதி வருணஸ் சம்பந்தாத்-(4-3-3) என்று மேலே(தடித் -மின்னல் -இதுக்கும் மேல் மூன்று லோகங்கள் உண்டே )
வருண இந்த்ர பிரஜாபதி லோகங்களிலே
தத் தத் அபிமான தேவதைகளாலே ஸத் க்ருதானாய்க் கொண்டு போய்

(4-3-3-தடித்- அதி வருண -சம்பந்தாத் —

மின்னலுக்கு பின் வருணன் -தொடர்பு உள்ளதால் -கௌஷீதகீ-1-3- -அக்னி வாயு வருண ஆதித்ய இந்திர பிரஜாபதி ப்ரஹ்ம லோகங்கள் என்று வரிசைப் படுத்தியது
ஆனால் ப்ருஹத் -6-2-15-தேவ லோகம் ஆதித்யன் மின்னல்
வருணன் வாயுவின் பின்னாலா மின்னலின் பின்னாலா
மின்னலுக்கு பின்பே வருணன் -என்கிறது சித்தாந்தம் தொடர்பு உள்ளதால்
அமானவன் வித்யுத் புருஷன் ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறான் -அமானவனுக்கும் ப்ரஹ்மதுக்கும் இடையே வருணன் இந்த்ரன் பிரஜாபதி -என்று கொள்ள வேண்டும் –)

அண்டம் பி நத்தி அவ்யக்தம் பி நத்தி தமோ பி நத்தி – என்றபடி
அண்ட கபாலத்தைப் பிட்டு -அவ்வருகே புறப்பட்டு
வாரி(நீர்) -வஹ்நி -அநல -அநில(காற்று) -ஆகாச -மஹத் அஹங்கார ரூபமாய்
ஒன்றுக்கு ஓன்று தசோத்தரமான ஆவரணங்களைக் கடந்து
இத்தனையும் தனக்குள் வாயிலே அடங்கி

அநந்தஸ்ய ந தஸ்ய அந்தஸ் சங்க்யாநம் வாபி வித்யதே -என்றும்
முடிவில் பெரும் பாழ் -என்றும் சொல்லுகிற
ப்ரவ்ருத்தி தத்வத்தைக் கடந்து

ஆக இப்படி சிறை என்கிற கூட்டத்தின் நின்றும் புறப்பட்டுப் போமா போலே
இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையைக் கழித்து
ஒருபடி வெளிநாடு கண்டு

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-11-)

(காட்டி நீ கரந்து உமிழும்*  நிலம் நீர் தீ விசும்பு கால்,* 
ஈட்டி நீ வைத்து அமைத்த*  இமையோர் வாழ் தனி முட்டைக்,* 
கோட்டையினில் கழித்து*  என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,* 
கூட்டு அரிய திருவடிக்கள்*  எஞ்ஞான்று கூட்டுதியே?   )
(ஸ்ரீ வைகுண்ட கத்யம்–சூரணை-3-அவதாரிகை –

இவ் உபாயம் கை வந்தவன் அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்
பிராபிக்கும் நித்ய விபூதியையும்
அங்கு உள்ள பிரகாரங்களையும் சொல்லுகிறது -மேல் –
சதுரத் தஸ புவ நாத்மகம் -இத்யாதியாலே –

சதுர தஸ புவ நாத்மகம்
அண்டம்
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம்
சமஸ்தம்
கார்ய காரண ஜாதம்
அதீத்ய –

சதுர தஸ புவ நாத்மகம் –
பூம் யந்தரி ஷாதி யான உபரிதன லோகங்கள் ஏழும்
அதல விதலாதிகள் ஆகிற பாதாள லோகங்கள் ஏழும் ஆகிற பதினாலு லோகங்களு மாய் இருக்கை –
இப்படி இருக்கிறது தான் எது என்னில்
அண்டம் –
இப்படிப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணமாய் இருக்கிற அண்டம் –
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம் –
உத்தர உத்தர தஸ குணிதம்
ஓர் ஆவரணத்துக்கு ஓர் ஆவரணம் தஸ குணிதமாய்
தஸ குணிதமான அவ் வாரணத்துக்கு அவ்வருகில் ஆவரணம் அதில் தஸ குணிதமாய்
இப்படி உகத க்ரமத்தாலே உத்தர உத்தர தஸ குணிதமான ஏழு ஆவரணங்களை உடைத்தாய் –
ஆவரண ச்ப்தகம் ஆவது -வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை –
சமஸ்தம் –
ஓர் அண்டம் இ றே இப்படி இருப்பது
அண்டா நாந்து சஹஸ்ராணாம் சஹஸ்ராணய யுதானி ச
ஈத்ரு ஸாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27-என்றும்
விண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் -எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீதி யன்ற புறவண்டத்தாய் எனதாவி
உள் மீதாடி உருக்காட்டாதே ஒழிப்பாயோ -திருவாய் மொழி -6-9-5- என்கிறபடியே
ஈத்ருசமான சமஸ்த லோகங்களையும்
கார்ய காரண ஜாதம் –
ஒன்றினாலே உத்பாத்யமாயும் -ஒன்றை உண்டாக்க கடவதாயும் உள்ள வஸ்து சமூஹத்தை
அதீத்ய –
ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்த்தி நோஅர்ஜூன
மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே -ஸ்ரீ கீதை -8-16-என்கிறபடியே
கர்ம சேஷம் உள்ளவர்கள் மீண்டு திரியும் படியான ப்ராக்ருத மண்டலத்தை
அபுநா வ்ருத்தி  ப்ராப்தியாகக் கழித்து)

————-

(நித்ய விபூதி த்ரிபாத் விபூதி -மேல் எல்லை இல்லாதது -லீலா விபூதி கீழ் எல்லை இல்லாதது -)

மூன்று மடங்கு என்பது அல்ல -மஹத் -மிகப் பெரியது என்று சொல்ல வந்ததே-

சதுர் புவனம் கீழ் ஏழு மேல் ஏழு -ஸத்ய லோகம் -மேலே இருப்பதையே
ஏழாவது மேல் லோகம்-அர்ச்சிராதி கதியில் 12 வைத்து ஸ்தானம்

50 கோடி யோஜனை தூரம் கீழ் உள்ள லோகம் தொடங்கி ஸத்ய லோகம் உள்ளது
பரணி மேல் இருப்பது போல் பரமபதம் இருக்கும் தூரம் பார்க்கும் பொழுது

மஹான் அஹங்காரம் -கார்யமாகவும் காரணமாகவும் இருக்கும்-பிரக்ருதி கார்யமாகவும் இருக்கும்
14 லோகங்களும் காரணமாகவே இருக்கும்-இவை எல்லாம் தாண்டி மேல் ஆவரணங்கள் -10 மடங்கு பெரிய
வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை சமஸ்தம் –
அதுக்கும் மேல் முடிவில் -பெரும் பாழ் -சூழ்ந்து அகன்று ஆழ்ந்த -ஆறு பரிமாணங்கள் தாண்டிப் போகிறான்

(பிராகிருத வாசனை கழியாமல் போகும் இந்த ஜீவனுக்குத் தான் ஸத் காரம் பண்ணி ஆதி வாஹிகர்கள் மேல் கூட்டிச் செல்கிறார்கள்
அர்ச்சிராதி கதி செல்பவன் எல்லாரும் திரும்ப வருதல் இல்லை
ப்ரம்மா அங்கு செல்ல் அர்ச்சிராதி கதியில் போக வேண்டிய அவஸ்யம் இல்லையே)

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் -உபதேசரத்னமாலை -74-

இரண்டு தடவை அரிசி களைவது போல் -விரஜை நீராடி -ஸூஷ்ம சரீரம் தொலைந்து -ருசி வாசனைகள் கழிந்து –
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -அப்ராக்ருத சரீரம் பெறுவது -மூன்று கார்யங்கள் -த்ரய சம்ப்ரதாயம் -அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே -)

(போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத் கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே—-ஆர்த்தி பிரபந்தம் -20-)

(இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–ஆர்த்தி பிரபந்தம்-23-)

———

ஸ ஆ கச்சதி விரஜாம் நதீம் -என்கிறபடி
ஸம்ஸார பரம பதங்களுக்கு எல்லையாய்
அம்ருத மயமாய்
விரஜாக்யையான ஆற்றங்கரை அளவிலே வந்தவாறே

சந்த்ர இவ ராஹோர் முகாத் ப்ரமுஸ்ய தூத்வா ஸரீரம் (ஸூஷ்ம சரீரம் துரந்து )-என்கிறபடியே
ராஹு முகத்துக்கு இரையான சந்த்ரன் ராஹு முகத்தின் நின்றும் புறப்பட்டுப் போமாப் போலே
நெடுநாள் ஸ்வரூபம் கரை ஏறும்படி விழுங்கி விடாய்த்துக் கிடக்கிற  ஸூஷ்மப் ப்ரக்ருதியை விட்டுப் புறப்பட்டவாறே
கரிப் பானையாலே கவிழ்த்து ப்ரபா  ப்ரஸரம் இன்றியிலே திரோஹித ஸ்வரூபமான தீபம்
அதைத் தகர்த்தவாறே கண்ட இடம் எங்கும் தன் ஒளியாமோ பாதி இவனுக்கும்

பரம் ஜோதிர்  உப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே(சாந்தோக்யம் 8-12-2)
நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபைதி -(முண்டகம் -அபஹத பாப்மத்வாதிகள் அஷ்ட குணங்களில் ஸாம்யம் )என்று
ஞான ஆனந்த ஸ்வரூப லக்ஷணமாய்(நானே ஞானி -நானே ஞானம் -தர்மி ஞானமும் தர்ம பூத ஞானமும் உண்டே )
ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்(அஸ்திர பூஷண அத்யாயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சத்தில் இறுதி அத்யாயம் )
ஸ்ரீ ஸ்தனம் போலேயும்
ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹாஸ்பதமாம் படி
அத்யந்த விலக்ஷண ஸ்வரூபமும்
ஸ்வரூப ஆஸ்ரயமான அபஹத பாப்மத்வாதி குணங்களும்(விளங்கும் -உருவாவது இல்லை )

(நாராயண பர ப்ரஹ்ம -நாராயண பர மாத்மா -நாராயண பரஞ்சோதி-நாராயண பராயணம்)

(அபஹத பாப்ம–விஜூர-விம்ருத்யு -விசோக -விஜிகித்சா -அபிப்யாஸ – ஸத்ய காம -ஸத்ய ஸங்கல்ப)

(கௌஸ்துபம் ஸ்வஸ்தி தீபம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ வத்சம் பிரகிருதிக்கு பிரதி நிதி -கௌஸ்துபம் ஆத்ம சமூகத்துக்கு பிரதி நிதி)

யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மல ப்ரஷாலநாத் மணே
தோஷ ப்ரஹரணாத் ந ஞான ஆத்மந க்ரியதே ததா
யதா உதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம்
ஸ தேவ நீயதே வ்யக்ம் அஸதஸ் ஸம்பவ குத
ததா ஹேய குண த்வம்சாத் அவபோதா தயோ குணா
ப்ரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே –(ஸ்ரீவிஷ்ணு தர்மம்-ஸுநக பகவான் அருளிச் செய்தது ) என்கிறபடியே

(உதபாந கரணாத்)கிணற்றைக் கல்லினால் உள் வாயிலே கிடக்கிற ஜல ஆகாசங்கள் (ஜலாம்பரம்)ப்ரகாசிக்குமா போலேயும்
மல யோகத்தாலே மழுங்கின மாணிக்கத்தை நேர் சாணையிலே இட்டுத் தெளியக் கடைந்தால்
தன்னடையே தத் கதமான ஒளி பிரகாசிக்குமா போலேயும்
இவனுக்கும் தன்னடையே பிரகாசிக்கும் –

முக்தாத்மா ஸ்வபாவ ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது-

(அஸதஸ் ஸம்பவ குத -இல்லாததால் இருந்து ஸத் உண்டாக்காதே -ஸத் கார்யவாதம்)

(இயற்க்கை விளங்கப் பெறுகிறான் -உண்டாகப் பெறுகிறான் அல்ல -அதனால் ஸ்வேந பத பிரயோகம்)

(4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —

சாந்தோக்யம் -8-112-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-)

(4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —

விடு பட்ட ஸ்வரூபமே -இப்படியே உறுதியாகிறது – ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே என்று
கர்மத்தின் தொடர்பு காரணமாக மறைவாக இருந்த ஸ்வரூபம் வெளிப்பட்டதுஎன்று உறுதி படக் கூறியது –)

ஆக இப்படி ப்ரகாசித ஸ்வரூப ஸ்வ பாவனாய்(ஞான ஆனந்தம் ஸ்வரூபம் -அபஹத பாப்மத்வாதிகள் ஸ்வ பாவம் )
ஸர்வத பாணி பதம் தத் ஸர்வ தோஷி ஸிரோ முகம்
ஸர்வதஸ் ஸ்ருதி மல் லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி-(ஸ்ரீ கீதை -13-14ஸ்லோகம் )என்கிறபடியே
ஸ்வ ஸங்கல்ப மாத்ரத்தாலேயே கர சரணாதி அவயவங்களால் கொள்ளும் கார்யங்களைக் கொள்ளும் ஷமனாகையாலே
தாம் மனஸைவ அத்யாதி -(மனஸ்ஸாலேயே கடந்து விடுகிறான் )-என்கிறபடியே
அவ் விரஜையாக்யையான சரித்தை (ஆற்றை)ஸ்வ ஸங்கல்பத்தாலே கடந்து

(ஸர்வத பாணி பாதம் தத் ஸர்வ தோக்ஷி ஸிரோமுகம்–
ஸர்வத ஸ்ருதி மல்லோகே ஸர்வ மாவ்ருத்ய திஷ்டதி–৷৷13.14৷৷

அந்த சுத்தமான ஆத்ம வஸ்து எங்கும் கையும் காலும் இருந்தால் என்ன செய்யலாமோ அதைச் செய்ய வல்லது –
எங்கும் கண் தலை வாய் இவற்றின் காரியம் செய்யும் -எங்கும் செவியின் காரியத்தைச் செய்யும் –யாவற்றையும் சூழ்ந்து உள்ளது)

ஸ அத் வநபாரம் ஆப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்(கட உபநிஷத்-தேர் குதிரை கடிவாளம் -இத்யாதி )
ஸதா பஸ்யந்தி ஸூரயா
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத் வை பஸ்யந்தி ஸூரய -என்கிறபடியே
ப்ராப்ய பூமியாக ஸ்ருதமாய்

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதயோம் அக்னி (கட உபநிஷத்-முண்டகமும் சொல்லும் )-என்றும்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந-என்கிறபடியே(கதிர் ஆயிரம் கலந்தால் ஒத்த )
ப்ராக்ருத தேஜோ பதார்த்தங்களை கத்யோதக் கல்பமாக்கக் கடவதாய்(கத்யோத-மின் மின் பூச்சி-இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ )

காலம் ஸ பசதே தத்ர ந காலஸ் தத்ர வை ப்ரபு -என்கிறபடியே -அகால கால்யமாய்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந -என்று
அபரிமித புண்ய ஸாத்யமான பிரம்ம லோகாதிகளை யமன் குழியாக்கும் வை லக்ஷண்யத்தை யுடையதாய்
தமஸ பரஸ் தாத்
ரஜஸ பராகே
தெளி விசும்பு(9-7-5-கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லையே )
நலம் அந்த மில்லதோர் நாடு(2-8-4) -என்கிறபடியே
அநந்த க்லேச பாஜனமான இருள் தரும் மா ஞாலத்துக்கு எதிர் தட்டாய்
பரம யோகி வாங் மனஸா அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வ பாவமான பரம பதத்திலே

(தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-)

(புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-)

(மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் என்னும்)

அநேக ஜென்ம ஸாஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜன்
மோஹாச் ஸ்ரமம் ப்ரயாதோசவ் வாஸநா ரேணு குண்டித -என்றும்
பெரும் காற்றில் தூறல் போலே அநாதி காலம் கர்ம வஸ்யனாய்
ஸ்ருஷ்டனாவது
ஸம் ஹ்ருதனாவது
ப்ரஹ்ம லோகஸ்தனாவது
பாதாளஸ்தனாவது
தேவனாவது
ஸ்தாவரமாவது
ஸ்த்ரீ யாவது
புருஷனாவது
ப்ராஹ்மணானாவது
சண்டாளனாவது
பாலனாவது
வ்ருத்தனாவதாய்

ஒரு நிலையிலே நிற்கப் பெறாதவனாய்
காலிலே சீலை கட்டி ஜங்காலனாய்
கண்டிடம் எங்கும் தட்டித் திரிந்தவன்
மீட்டுத் தட்ட வேண்டாத படி

அத் வந பாரமான தேசத்திலே வந்து புகுந்து
ஸா லோக்யம் பெற்று(இங்கும் ஸா லோக்யம் இருந்தாலும் ஞானம் மழுங்கியதால் அறியாமல் இருக்கிறோம் -அங்கே தானே உணர்கிறோம் )

1-ப்ராக்ருதமாய்
2-குண த்ரயாத்மகமாய்
3-மாம்ஸாஸ்ருகாதி மயமாய்
4-பரிணாம ஆஸ்பதமாய்
5-கர்ம ஹேதுகமாய்
6-அஸ்வா தீனமாய்
7-ஸ்வரூப திரோதான ஆகரமாய்
8-துக்க அனுபவ உப கரணமான உடம்பின் கையிலே அநாதி காலம் பட்டுப் போந்த பழிப்பு அடையத் தீரும் படி

1-அப்ராக்ருதமாய்
2-ஸூத்த சத்வாத்மகமாய்(தூ மணி துவளில் மணி இல்லையே )
3-பஞ்ச உப நிஷத் மயமாய்
4-ஏக ரூபமாய்
5-பகவத் ப்ரஸாத ஹேதுகமாய்
6-ஸ்வ அதீனமாய்(ச ஏகதா பவதி கொள்ளலாமே )
7-ஸ்வரூப ப்ரகாசகமாய்
8-கைங்கர்ய ஸூப அனுபவ உப கரணமாய்
திவ்ய மங்கள விக்ரஹ ஸ ஜாதீயமான உடம்பைப் பெற்று
இப்படி லப்த ஸ்வரூபனாய்

———–

(திவ்யம் -அப்ராக்ருதம்-பஞ்ச உபநிஷத் -சக்தி-மயம் – பரமேஷ்டி புமான் விஸ்வக நிவ்ருதக சர்வக
மங்கள-கல்யாணம் ஸூ பாஸ்ரயம் -பரம பத த்யான சோபானம் -படிக்கட்டுக்கள் திருவடி தொடங்கி
ஸாலோக்யம்- ஸாம்யா பத்தி -ஸா ரூப்யம்- ஸாமீப்யம்- ஸாயுஜ்யம் -நித்ய யுக்தன் -உடன் சேர்ந்து அனுபவிப்பது
காவேரி விரஜை -சந்த்ர புஷ்கரணி போல் இங்கும்

ஜரம் மதீயம் ஸரஸ்-புஷ் கரணி -அஸ்வத்த மரம் –ஸ்தல நதி ஸ்தல தீர்த்தம் ஸ்தல வ்ருஷம் ஸ்ரீ ரெங்கம் ப்ரத்யக்ஷமாக நாம் காண்கிறோம்

கௌஷீகி பர்யங்க வித்யை போல் சூழ் விசும்பு -வந்தவர் எதிர் கொள்ள -தர்சனத்தால் காட்டி அருளினார் அன்றோ
பராவரர்கள் சூட்டும் ஆத்ம அலங்காரம் -சூடகமே போல் )

ஜரம் மதீயம் ஸரஸ் -என்கிற திவ்ய ஸரஸ்ஸிலே அஸ்வத்தளவும் சென்றவாறே
தம் பஞ்ச சத அந்யப் சரஸஸ் ப்ரதிதா வந்தி சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சன ஹஸ்தா
சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாஸோ ஹஸ்தா சதம் பணா ஹஸ்தா (சிகை அலங்காரம் )என்கிறபடி
ஐந் நூறு அப்சரஸ் ஸூக்கள் வந்து எதிர் கொள்ள
பர்த்ரு க்ரஹத்துக்கு வரும் பெண்களை அவ்வூர்க் குளக்கரையிலே குளிப்பாட்டி
ஒப்பித்துக் கொண்டு போகும் பந்துக்களைப் போலே
தம் ப்ரஹ்மா அலங்காரேணால் அங்குர்வந்தி -(கௌஷீகி)என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாத னுக்கு சத்ருஸமாக ஒப்பித்துக் கொண்டு போம் போது(சூடகமே இத்யாதி ஆத்ம பூஷணங்கள் பராவரர் சூட்டும் )

தம் ப்ரஹ்ம கந்த ப்ரவசதி
தம் ப்ரஹ்ம ரஸ ப்ரவசதி
தம் ப்ரஹ்ம தேஜஸ் ப்ரவசதி
ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ
பரஞ்சோதி -என்கிறபடியே -சர்வேஸ்வரனுடைய
திவ்ய பரிமளத்தையும்-திவ்ய போக்யதையும்
திவ்ய தேஜஸ்ஸையும் யுடையவனாய்

(ஸூர்ய கோடி ப்ரதீகாச -என்கிறபடியே -அநேகம் ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
கண் கொண்டு காண ஒண்ணாத படி நிரவதிக தேஜஸ்சை யுடையனாய்-கந்தம் மூக்குக்கு -ரஸம் நாவுக்கு -தேஜஸ் கண்ணுக்கு )

பரம பதத்தில் நாட்டு எல்லையைக் கழித்து
ஸ ஆ கச்ச தீந்த்ர பிரஜாபதி த்வார கோபவ் (காவலர்கள் )-என்றும்
கொடி யணி நெடும் தோள் கோபுரம் குறுகினர் -என்கிறபடி
அபராஜிதா ப்ரஹ்மண என்று
அபராஜி தாக்யையான (பேர் பெற்ற )ப்ரஹ்ம புரத் த்வார கோபுரத்து அளவும் வந்து

(யோஜூம் அசக்த்யா -அபராஜி தாக்யையா-ஜெயிக்க முடியாத -அயோத்யா)

அநாதி காலம் இந்திரியங்கள் கையிலும்
மஹதாதிகள் கையிலும்
எளிவரவு பட்டுப் போந்த இவன்
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்கிறபடியே
தேசாந்திர கதனான ராஜ புத்ரன் வரும் போது ராஜ பரிகரம் புறப்பட்டு தம் தாம் தரத்திலே எதிர் கொள்ளுமா போலே
த்ரிபாத் விபூதியில் உள்ள ஸூரி வர்க்கம் அடைய
வ மஞ்சியாக -(அமஞ்சி -கூலி இல்லாத வேலை-காதலுடன் விரும்பி செய்தல் )திரண்டு எதிர் கொள்ள
அவர்களோடே கூட ஒரு பெரிய திரு நாள் போலே ஸ ஸம் ப்ரமமாக உள்ளே புக்கு
ராஜ மார்க்கத்தாலே போய்ப் ப்ரஹ்ம வேஸ்மத்திலே சென்று

(ஓடுவார் -விழுவார் உகந்து ஆலிப்பார் -நாடுவார் நம்பிரான் எங்குற்றார் என்பார் -என்றும் –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்பராய்க் கொண்டு
பெரிய ஆர்ப்பரத்தைப் பண்ணித் திரள் திரளாகப் புறப்பட்டு வருகிற நித்ய முக்தருடைய
ஆனந்த களகளத்தைக் கண்டு அனுபவித்துக் கொண்டு –பெரிய ப்ரீதியோடு போகிற வளவிலே)

(காவேரிக்கு உள்பட்ட நாடு ஸ்ரீ ரெங்கம் -சப்த பிரகாரம் -சந்த்ர புஷ்கரணி -புன்னை மரம் ஆஸ்தானம் -திரு மா மணி மண்டபம்
காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரங்க மந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேசய  பிரத்யட்சம் பரமம் பதம்”

விமாநம் பிரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம்
ஸ்ரீ ரங்க சாயி பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:

பர வாஸூ தேவன் -விமானத்தில் சம பிரதானம்- வ்யூஹ ஸுஹார்த்தம் பெரிய பெருமாள் பிரதானம்)

(சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்ய தேசே ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்க ராஜம் பஜேஹம் —1)

தீர்த்தம் -காவேரி விராஜா
ஐரம் வாதம் -சந்த்ர புஷ்கரணி
காலஜ்யம் பட்டணம் -ஸ்ரீ ரெங்கம்
அபராஜிதா -சப்த பிரகாரம் நடுவில் கோயில்

அஸ்வத்த வ்ருஷம் வெளியில் பார்த்தோம்  உள்ளே -இல்லியம் வ்ருஷம் போல் புன்னை மரம்
விபு ஸபா ஸ்தலம் -அழகிய மணவாளன் திரு மண்டபம்
விஷக்ஷணம்-வேதிகை -பெரிய மேடை முத்துப் பந்தல் மேல் கட்டி -சேர பாண்டியன்
அமிதவ்ஜஸம் பர்யங்கம்-அமிதவ்ஜஸ் பர்யங்கம்
திருக் கார்த்திகை -ஸாஸனம் -ஸாஸ்வதம் -புறப்பட்டு -கார்த்திகை கார்த்திகை அன்று எழுந்து அருளி -திருக்கைத்தலம் ஸேவை
செங்கழுநீர் திரு வாசல் மண்டபம்-சஹஸ்ர தூணா மண்டபம் அங்கு ஆயிரம் கால் மண்டபம் இங்கு
ஏதத் த்ரைலோக்ய நிர்மாணம் -பிராண ஸம்ஹார காரணம் -ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்கநாத ஸாஸனம் சாஸ்வதம் பரம் ஸ்லோகம் சொல்லி
அழகிய மணவாளன் திரு மண்டபம்-சேர பாண்டியன் ஸிம்ஹாஸனம் சுத்த பாண்டியன் முத்துப்பந்தல் –
ஹரிஹர ராயன் திருப் பள்ளிக் கட்டின் கீழ் -கலியன் பாட்டை கேளா நிற்கச் செய்தே
நான்கும் போல் இங்கும் பட்டணம் வீடு சபா ஸ்தலம் வேதிகை பள்ளிக்கட்டு)

ஸ ஆ கச்சதி விசஷணாம் ஆ சந்தீம் –என்றும்
ப்ரஜாபதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே (சாந்தோக்யம் -8-14-1–ப்ரஹ்ம ஸூத்ரம் -4-3-13)–என்கிறபடி
மணி மயமாய்
அநேகம் ஆயிரம் மாணிக்க ஸ்தம்பங்களாலே
அநேகம் ஆயிரம் ஆதித்ய சங்கங்களை உருக்கி வார்த்து வகுத்தால் போலே
அபரிதமான தேஜஸ்ஸை யுடையதாய்

அவ்வாதித்ய சங்கம் போலே எரிந்து இருக்கை அன்றியிலே
புக்காரை அடைய ஆனந்த நிர்ப்பரர் ஆக்கும்படி ஆனந்த மயமாய்
மஹா அவகாசமான திரு மா மணி மண்டபத்திலே ஏறி

ஸூரி சங்க சங்குலமான நடுவில் நாயக விருத்தியில் சென்று புக்கு(நாயக லக்ஷணம் )
பிரஞ்ஞயா ஹி விபஸ்யதி ஸ ஆகச்ச த்யமிதவ்ஜஸம் பர்யங்கம் சதம் ப்ராணஸ் தஸ்ய பூதம்
சப விஷயச்ச பூர்வவ் பாதவ் -(அமிதவ்ஜஸம்-பர்யங்கத்தின் பெயர் )இத்யாதிகளில் சொல்லுகிற படியே
அநேக தேவதா மயமாய்
அபரிமித விவித விசித்ரித திவ்ய ஸிம்ஹாஸனமாய்

(அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்-சூரணை -176–
அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-)

அதுக்கு மேலே ஆயிரம் தளகமாய்
எப்பொழுதும் ஓக்க அலர்ந்து அழுக்கு அற உருக்கி ஒப்பமிட்ட மேரு போலே
ஓங்கின கர்ணிகை யுடைத்தான திவ்ய கமலமாய்

அதின் மேலே அம்ருத பேந படல பாண்டரனாய்(பேந-நுரை -நெற்றியில் -பணா மண்டலம் -வெள்ளை வெள்ளத்து அரவணை )
ஸ்வ ஸாஹஸ்ர ஸிரோந் யஸ்த ஸ்வஸ்திகா அமல பூஷண(ஸ்வஸ்திகா-துதங்கள் ஆர்த்த )
பணா மணி ஸஹஸ்ரேண யஸ்ஸ வித்யோ தயந்தி ஸ -என்றும்
பண மணி ஸஹஸ்ராட்யம் -என்றும்
பணா மணி வ்ராத மயூக மண்டல ப்ரகாஸ மாநோதர திவ்ய தாமநி(ஸ்தோத்ர ரத்னம் )
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த -என்கிறபடியே
பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே விரிகிற பணா ஸஹஸ்ரங்களில் இள வெய்யில் விளங்குகிற ஆதித்ய நிவஹம் போலே
அம் மண்டலத்தோடே மாளிகையோடே வாசி யறத் தன்னுடைய அருணமாகிற கிரணங்களாலே(மேல்கட்டியாகி)
வழி வார்க்கிற மாணிக்ய மண்டலங்களை யுடையவனாய்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலன்களுக்கு ஏக தாமனாய்
ஸகல கைங்கர்ய ஸாம்ராஜ்ய தீஷிதனான திருவனந்த ஆழ்வானாய்(சென்றால் குடையாம் )

(வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த* வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்* மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை* கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மாயோனை மணத்தூணே பற்றி நின்று* என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!)

(கூர்மாதின் திவ்ய லோகான் ததுமணி மண்டவம் தத்தரு சேஷம் தஸ்மின்
தஸ்மின் தர்மாதி பீடம் சதுமரி கமலம் க்ராஹஹ க்ராஹஹநிம்ச
விஷ்ணும் தே விபூஷா ஷினாதே வைனதேயம்
சேநேசத் துவார பாலன் விஷ்ணு முகதான் பிரபத்தியே !!)

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாந பலைக தாமநி |
பணா மணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்ய தாமநி ||–ஶ்லோகம் 39 –

ஆதி சேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணா மணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளி விடும் திரு மடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி யிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப் பட்ட திருவனந்தாழானின் திரு மேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–)

(அங்கு ஸ்ரீ வைகுண்டநாதன் இருந்த திருக்கோலம் மேல்)

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-)

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு-முதல் திருவந்தாதி )

தஸ்மிந் ப்ரஹ்மாஸ்தே
தஸ்ய உத் சங்கே -என்கிறபடியே
அவன் மடியிலே
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா(காள மேகத்தில் மின்னல் ரேகை )
நீலமுண்ட மின்னன்ன மேனி (மின்னல் மேனி காள மேகம் உண்டால் போல் )-என்கிறபடியே
மஹா மேருவை உருக்கித் தேக்கினால் போலே புற வாய் அடையப் புகர்த்து
அத்தை நீக்கிப் பார்த்தவாறே

(“நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணுபமா…
தஸ்யா ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ பிரம்ம ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட் ”
தைத்திரிய ஆரண்யகத்தில்’ உள்ள ‘நாராயண ஸூக்தம்’

“கரு மேகத்தின் நடுவே திடீரென ஒளி வீசுகின்ற மின்னல் கீற்றைப் போலவும், நெல்லின் முளை போன்று மிகவும் மெல்லியதாகவும்,
பொன்னைப் போன்ற நிறத்துடன், அணுவிலும் நுண்ணியதாகவும், அந்த ஆன்மாவானது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது…..

அந்த சுடரின் நடுவே, இறைவன் பரமாத்வாக, அந்தர்யாமியாக வீற்றிருக்கிறார்…!
அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு, அவரே இந்திரன்…! அவர் அழிவில்லாதவர்…! ஸ்வயம் பிரகாசத்துடன் விளங்குபவர்…!
தனக்கு ஒப்பாகவோ, மேலாகவோ யாரும் இல்லாதவர்…! ” என்று பொருள்.
வானமாமலை ஸ்ரீ தோத்தாத்திரிநாத பெருமாள் சாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள்.
நீல தோயத மத்யஸ்தா என்பதில் தோயத என்றால் மேகம், ககனம், வானம் என்றெல்லாம் பொருள். அதாவது நீலமேகம்.

பெருமாளை நீலமேகப் பெருமாள் என்று அழைப்பதில் இருக்கும் சுவை அலாதியானது. இந்த நீலமேகம் மலைமாதிரி
அதாவது, அத்ரி மாதிரி இருக்கிறானாம். அதுதான் தோயதாத்ரி இரண்டு சொற்களையும் இப்போது சேர்த்துப் பார்த்தால் .
தோயத+ அத்ரி; அதாவது தோயதாத்ரி என்று வரும். இதைத்தான், எல்லோரும் தோதாத்ரி என்று மாற்றி விட்டார்கள்’)

(இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-)

கண்டார் கண்களை அடைய விரித்து அஞ்ஐனம் எழுதினால் போலே இருண்டு
கரு மாணிக்க மலை மேல் மணித்தடம் தாமரைக் காடுகள் போலே திரு மார்வு வாய் கை கண் யுந்தி காலுடை ஆடைகள் செய்ய பிரான்(8-9)
கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் (திரு நெடும் தாண்டகம் -18)என்கிறபடி
காலமேக நிபாஸ்யாமமான திரு மேனிக்குப் பரபாகம் ஆகும்படி
கண்ட இடம் எங்கும் சிதற அலர்ந்த தாமரைக்காடு போலே சிவந்த கர சரணாதி அவயவ விசேஷங்களாலே
உத் புல்ல பங்கஜ தடாக ஸீதலனாய்(எழுந்து நின்ற தாமரைத் தடாகம் போல் நம் பெருமாள் பட்டர் )
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பவ்வம் மண்டி யுண்டதொரு காளமேகத்தில் கண்ட இடம் எங்கும்
மின் கொடி படர்ந்தால் போல் கிரீட மகுடாதி திவ்ய பூஷிதனாய்

(இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட*
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்-
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!)

யுவா குமாரா
அரும்பினை அலரை (7-10-1)–என்கிறபடியே
அப் பால்யத்தோடே தோள் தீண்டியான யவ்வனத்தை யுடையனாய்
ஸர்வ கந்தா -என்கிற
திவ்ய அங்க பரிமளத்தாலே த்ரிபாத் விபூதியைத் தேக்கி
ஸர்வ ரஸா -என்கிற
ஸர்வ ரஸ சாரஸ்யத்தாலும் ஸூரி சங்கங்களை விஹ்வலராக்கி

ஆதித்யாதி தேஜஸ் பதார்த்தங்களைக் கரிக் கொள்ளி யாக்குகிற தன்னுடைய திவ்ய தேஜஸ்ஸாலே
ஸோபயந் தண்ட காரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா -(ஸ்ரீ ராமாயணம் )என்கிறபடியே
பரமபதத்தை மயில் கழுத்துச் சாயலாக்கி
பொற் குப்பியில் மாணிக்கம் புறம்பு ஒசிந்து காட்டுமா போலே
உள் வாயிலே நிழல் எழுகிற ஞான ஸக்த்யாதி குணங்களையும்

அக் குணங்களுக்கும் ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும்
யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
செந்தாமரைத் தடம் கண் -என்று
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைத் தடாகம் போலே
நிரங்குச ஐஸ்வர்யத்தாலும்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலும்-
குதறிச் சிவந்து திருச் செவி அளவும் அலை எறிகிற திருக் கண்களையும்

உள்ளே வெண் பல் இலகு சுடர் என்று -திரு முகத்திலே பால சந்த்ரிகையைச் சொரிகிற மந்த ஸ்மிதத்தையும்
திருக் கழுத்து அடியிலே ஸ்நிக்த நீலமாய் அலை எறிகிற திருக்குழல் கற்றையும்
திரு விளையாடு திண் தோள் (நாச்சியார் 9-3)என்கிறபடியே
பெரிய பிராட்டியார்க்கு லீலா கல்பக உத்யோனமாய்
சார்ங்க ஜ்யாகிண கர்க்க ஸமமான நாலு திருத்தோள்களையும்
இவை தொடக்கமான திவ்ய அவயவ சோபையையும்-(ஸுந்தர்யம் )
ஆ பாத ஸூடம் பெருக்காறு போலே அலை எறிகிற திவ்ய லாவண்ய சிந்துவையையும்

நாச்சிமாரும் நித்ய ஸூரிகளும் அனுபவித்து அனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம் ஸஸ் சமிந்ததே –என்கிறபடியே
பெரும் கடல் இரைக்குமாப் போலே பெரிய கிளர்த்தியோடே வாயாரப் புகழ்வாரும்
பிணங்கி அமரர் பிதற்றும் குணம்(1-6-4)
கோதில வண் புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் (4-2)-என்கிறபடியே
ஸ்வ அநு பூதமான குணங்களினுடைய தாரதம்யத்தைச் சொல்லி சரஸ விவாத கோலா ஹலம் பண்ணுவாரும்
ஸ ஸம் ப்ரஹ்ம ந்ருத்தம் பண்ணுவாருமாய்
நித்ய ஸூரிகள் திரளாக மொய்த்துக் கொண்டு அப்பெரிய போக ஸம் ப்ரமங்களைப் பண்ணும்
இவர்களுடைய ஒவ்வொரு குண சீகரங்களிலே குமிழ் நீருண்டு(குண சாகரத்தில் திவலையிலே ஆழ்ந்து )

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

—————

(சம்சார தோஷங்கள் -உத் கிராந்தி -அர்ச்சிராதி கதி -முக்த போகம் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம்-அம்ருத சாகராந்த நிபக்நம் –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -பரம புருஷார்த்தம் -நான்கு பகுதிகள்)

(வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-)

தான் நிஸ் தரங்க ஜலதி போலே
அவாக்யீ அநாதர -என்கிறபடியே

ஸ்வ அனுபவ ஆனந்த வைபவத்தாலே அவிக்ருதனாய்(ஸ்தைமித்ய)
நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு பன்னெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பான் மதி ஏந்தி
ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -என்கிறபடியே

(ஸ்வரூபம் நினைத்து ஆனந்திக்கும் நித்யோதித தசை —
ஸ்வ பாவம் குணங்கள் நினைத்து ஆனந்திக்கும் தசை சாந்தோதித தசை-நடுக்கடலில் திகைத்து இருக்குமா போல் -)

(பிரசாந்த அநந்த ஆத்ம அநுபவ ஜ மஹா ஆனந்த மஹிம
ப்ரசக்த ஸ்தைமித்ய அநு க்ருத விதரங்க அர்ணவ தசம்
பரம் யத் தே ரூபம் ஸ்வ சத்ருச தரித்ரம் வரத தத்
த்ரயீ பிஸ் ப்ரஷந்தீ பர நிரஸநே ஸ்ராம்யதி பரம் –வரதராஜ ஸ்தவம் 13-)

(என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10)

ஒரு மரகத கிரி (பச்சை மா மலை )தன் கொடி முடித் தலையிலே சந்த்ர ஸூர்யர்களைக் கவ்வி இருக்குமா போலே
எதிர் மடித்த திருத் தோள்களிலே ஆழ்வார்களை ஏந்தி(நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு)
ஒரு திருக் கையைத் திருவனந்த ஆழ்வான் மடியிலே ஊன்றி
ஒரு பக்கத்திலே மின் குழாம் சேர்ந்தால் போல் ஸர்வ ஆபரண பூஷிதையாய்
ஸ்வ வைஸ்வ ரூப்ய வைபவத்தை யுடையளாய்(யதா ஸர்வ கதா விஷ்ணு -அபிமத அனுரூப மிதுனம் )
ஈஸ்வரனை வாய்க் கரையிலே அமிழ்த்தும் படியான ஸீல சரிதங்களை யுடையாளாய்(நங்கையைக் காணும் தோறும் நம்பிக்கும் ஆயிரம் கண்கள் வேணுமே அஸி தேக்ஷிணா இவள் கண் விழி விழிக்க ஒண்ணாதே இவனால் )
உபய விபூதி நாயகியாய்
ஈஸ்வர ஸ்வரூப குண விபூதிகளுக்கு நிரூபக பூதையாய்
ஸ்வ ஸம்பந்தத்தாலே ஈஸ்வரனுடைய சேஷித்வ போக்யத்வங்களைப் பூரிக்கக் கடவளான பிராட்டியோடும்

(நாக போக நிதாய பாஹு த்வேன தாரயன்னு சங்கு சக்ர ஜனயாதி ஜெகதாம் வைகுண்ட நாத-
தேவிமார் உடன் மங்களம் அளிக்கட்டும் பிரார்த்திக்கும் ஸ்லோகம்
சுவையன் திருவின் மணாளான்-)

இடப் பக்கத்தில் இம் மிதுன போகைகளாய் அவளோடு ஒத்த சவுந்தர்யாதிகளை யுடையரான ஸ்ரீ பூமி நீளை களோடும்
ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பதிர் ஆஸ்தே
தயா ஸஹ ஆஸீநம்(அனந்த போகிநி கத்யம் )
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் (இரண்டு ச காரம் பூமி நீளா தேவிகளை -உபநிஷத் )–என்கிறபடியே
கூட எழுந்து அருளி இருந்து

நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுகிற ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு
கண்ட போதே ப்ரீதி ப்ரகர்ஷம் பிடரி பிடித்துத் தள்ள
வேர் அற்ற மரம் போலே விழுவது எழுவதாய்(தண்டவத் ப்ரணாமம் உத்தாய ப்ரணாமம் -தலை விழுந்த இடம் மீண்டும் காலை வைத்து )
ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்கிறபடியே
க்ரம விவஷை இன்றியிலே தாய் நாடு கன்றே போல் ஸத்வரனாய்க் கொண்டு
ஆனந்த மயம் ஆத்மாநம் உப ஸங்க்ராமதி (தைத்ரியம் )-என்கிறபடி சமீபஸ்தனாய்(ஸாமீப்யம் )
இத்தம் வித் பாதேந இவ அத்ய  ஆரோஹதி -என்று
பாத பீடத்திலே காலை இட்டுப் படுக்கையைத் துகைத்து மடியிலே சென்று ஏறும்

அவனும் நெடு நாள் தேசாந்தரம் போன ப்ரஜை சாவாதே (ஆத்ம ஸ்வரூபம் கெடாமல் )வந்தால் பெற்ற தகப்பன் கண் வாங்காதே பார்த்துக் கொண்டு இருக்குமா போலே(இருக்கும் வியந்து -இருந்தான் கண்டு கொண்டே -மூன்று தத்துக்குப் பிழைத்த ஆழ்வாரை பார்த்துக் கொண்டே இருக்குமா போல் )
ஸம்ஸார தாப அனுபவத்தால் வந்த விடாய் எல்லாம் ஆறும்படி அழகிய கடாக்ஷ அம்ருத தாரைகளாலே
குளிர வழிய வார்த்து
ஸம் ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ் வஜே (ஸ்ரீ விஷ்ணு புராணம் அக்ரூரரை கைப் பிடித்து இழுத்து ஆலிங்கனம் )–என்கிறபடியே
தன் நாலு திருத் தோள்களாலும் அரவணைத்து உச்சி மோந்து இவன் நீர்ப் பண்டமாம் படி சில சாந்த்வந உக்திகளைப் பண்ணும்

(வசஸாம் சாந்தயேத்வநம் -வாக்கால் சாந்தனவம் பண்ணி -கடாக்ஷத்தாலும் பேச்சாலும் உருகி நின்ற விபீஷணனை பருகினார் பெருமாள்)

அவனும் ததீய ஸ்பர்ச ஸூகத்தாலே உடம்பு அடைய மயிர் எரிந்து(அங்கும் விகாரம் உண்டோ என்னில் -கர்ம வசத்தால் அல்ல -கிருபை -அனுபவத்தால் ஏற்படுமே)
ரஸம் ஹ்யேவாயம் லப்த்வ ஆனந்தீ பவதி -என்று பரம ஆனந்தியாய்
அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி(சாந்தோக்யம் -8-13-க்ருதாத்மா-செய்த வேள்வியர் -அடியேன் அடைகிறேன் )
ப்ரஜாபதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே யசோஹம் பவாமி ப்ரஹ்மணா நாம் யசோ ராஜ்ஜாம் யசோர் விசாம் யசோ -(அனைவருக்கும் ஆத்மாவாக இருக்கிறேன் -சாம்யா பத்தியால் சொல்லிக் கொள்ளலாமே )என்றும்
புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம்(ஸ்ரீ விஷ்ணு புராணம்- 5-17)-என்றும்
கதா அனு ஸாஷாத் கரவாணி சஷுஷா என்றும்
உன் கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே(4-9-8)-என்றும்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அப்யேஷ ப்ருஷ்டே மம பத்ம ஹஸ்தே கரம் கரிஷ்யதி -என்றும் சொல்லுகிறபடியே

(காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-)

(களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்புஅற்று
ஒளிகொண்ட 2சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ
துளிக்கின்ற வான்இந்நிலம் சுடர்ஆழி சங்குஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.–2-3-10-)

அத் தேச விசேஷத்திலே சென்று பெறக் கடவோமே
திரு மா மணி மண்டபத்திலே சென்று ஏறக் கடவோமே
நித்ய ஸூரிகளோடே அந்ய தமராகக் கடவோமே
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் காணக் கடவோமே
அவன் திருவடிகளிலே சென்று விழக் கடவோமே-
அணி மிகு தாமரைக் கையால் நம் தலையை அலங்கரிக்கக் கடவோமே –
நம்மைக் கண்டால் இன்னான் என்று திரு உள்ளமாகக் கடவோமே -என்றால் போலே
தன் ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்துக்கு அநந்தரம் பண்ணிப் போந்த மநோ ரதங்கள் அடைய
வயிறு நிரம்பிக் கண்டவிடம் எங்கும் திறந்து பாய்கிற பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

(பக்தி ரூபா பன்ன ஞானம் -ஸாதனம் அல்லவே ஸாத்யமே -அதனால் தானே கத்யத்தில் இத்தை புருஷார்த்தமாகப் பிரார்த்தித்தார்)

(அபி பாகேந த்ருஷ்டத்வாத் -ஸாயுஜ்யம்
ஸஹ ப்ரஹ்மணா -கூடி அனுபவம்
கல்யாண குணங்களோடு கூடிய ப்ரஹ்மத்தை ஜீவன் அனுபவம் என்று அந்வயிக்காமல்
சாந்தோக்ய தசை -அவனும் நாமும் சேர்ந்து கல்யாண குணங்களை அனுபவிப்போமே)

(அதிகரணம் -2-அவி பாகேந த்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு )

(ஸ்ரீ வைகுண்டம்- குடி பிரதி தாதே-என்ற தாது அடியாக -தடுக்கும் –
இந்தத் தடங்கல் -ஏஷாம் விஹத -யார் இடம் இருந்து ஓடி விட்டதோ
தடங்கலே இல்லாதவர் வாழும் இடம் ஸ்ரீ வைகுண்டம்-வைகும் தம் சிந்தை )

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-)

(விஜரா –விரஜா -ஜரை ரஜம்-மூப்புக்கும் ரஜஸ்ஸுக்கும் இரண்டுக்கும் விரோதி -அதனால் இரண்டு பெயரும் உண்டே
ஞான சுருக்கம் தடங்கல் இல்லை என்பதால் ஸ்ரீ வைகுண்டம்)

ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் ஸ்வரூப ரூப குணங்களில் ஒன்றும் பிரி கதிர் பட மாட்டாதே
அப்ராப்தமாய்
அபோக்யமாய்
அஸ்திரமாய்
அதி ஷூத்ரமான
துர் விஷயங்களைக் கவ்வி அநாதி காலம் பட்ட வெறுப்பு அடையத் தீரும் படி
அதற்கு எதிர் தட்டான இவ்  விஷயத்தை அனுபவித்து
அவ் வனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷம் ஒரு பக்கத்திலே கடை வெட்டி விட வேண்டும் படி அணைத் தேங்கலாகத் தேங்கின வாறே

இதுக்குப் பரிவாஹ ரூபமாக
ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–என்றால் போலே
ஜ்வர சந்நி பதிதரைப் போலே வாயாரப் புகழ்ந்து

(போக்யமாகவே முதலில் -அவன் ஆனந்தம் பார்த்து நாமும் ஆனந்தம் அடைந்து போக்த்ருத்வம்
படியாய்க் கிடந்து பவள வாய் காண்போமே)

அத்தால் ஆராமையாலே
விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி –என்கிறபடியே அடிமை செய்வது
அது தனக்கும் ஓன்று இரண்டு பால் ஆராமையாலே
ஸ ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி ஸஹஸ்ரதா பவ தி -என்று
அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி அடிமை செய்வது

(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் -நீ எழுந்து அருளும் அவதாரங்கள் தோறும் நானும் வந்து கைங்கர்யம் பண்ண வேண்டுமே -)

த்ரிபாத் விபூதியில் பண்ணும் அடிமையால் ஆராமையாலே
ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி –
இமான் லோகான் காமான் நீ காம ரூப்ய அநு சஞ்சரன் -என்று
லீலா விபூதியிலும் தொடர்ந்து அடிமை செய்வதாய்
அப்படி
ஸர்வ தேசங்களிலும்
ஸர்வ காலங்களிலும்
உசிதமான ஸர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி(ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் )
இக் கைங்கர்யத்தால் ஈஸ்வரனுக்குப் பிறந்த முக மலர்த்தியை (அவாக்யீ அநாதர நிலை தவிர்ந்து )அனுபவியா நின்று கொண்டு
நோ பஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -பண்ணி
ந ச புனரா வர்த்ததே -என்கிறபடியே(மீளுதலாம் ஏதம் இலா விண்ணுலகு )
யாவதாத்ம பாவி ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும்

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –ஸ்தோத்ரம் -40–உசிதமான கைங்கர்யங்களையும்

அபய ப்ரதான மிஸ்ராணாம் ஸூனுநா ஸ்வாது நிர்மிதாம்
முக்த போகா வலீம் ஏநாம் ஸேவந்தம் ஸாத்விகா ஜனா

ஸாத்விகா ஜனா-பதினெட்டு நாடர் பெரும் கூட்டம்–ஸேவந்தம்-பருகிக் களிக்கட்டும்

ஸ்ரீ வைகுண்ட த்யானம்
கூர்மாதீன் திவ்ய லோகம் ததநு மணி மயம் மண்டபம் தத்ரக்ஷம்
தஸ்மின் தர்மாதி பீடம் தது பரி கமலம் சாமர க்ராஹிணீ
விஷ்ணும் தேவீ விபூஷாயுத கண முரகம் பாதுகே வைந தேயம்
ஸேநேம் த்வார பாலான் குமுத முக கணான் விஷ்ணு பக்தான் ப்ரபத்யே

திருமந்திர த்யான ஸ்லோகம்
ஸ்வயம் பாதம் ப்ரஸார்ய ஸ்ரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சு யித்வா
ஜானுந் யாதாய ஸவ்யேதரம் இதர புஜம் நாக போகே நிதாயா
பச்சாத் பாஹு த்வயேந ப்ரதிபட ஷமனே தாரயன் சங்கு சக்ரே
தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத

————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Posted in Ashtaadasa Rahayangal, ஸப்த காதை, Sri Vaishna Concepts | Leave a Comment »

« Older Entries
Newer Entries »
  • You are currently browsing the archives for the ஸப்த காதை category.

  • Archives

    • June 2026
    • May 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    • November 2022
    • October 2022
    • September 2022
    • August 2022
    • July 2022
    • June 2022
    • May 2022
    • April 2022
    • March 2022
    • February 2022
    • January 2022
    • December 2021
    • November 2021
    • October 2021
    • September 2021
    • August 2021
    • July 2021
    • June 2021
    • May 2021
    • April 2021
    • March 2021
    • February 2021
    • January 2021
    • December 2020
    • November 2020
    • October 2020
    • September 2020
    • August 2020
    • July 2020
    • June 2020
    • May 2020
    • April 2020
    • March 2020
    • February 2020
    • January 2020
    • December 2019
    • November 2019
    • October 2019
    • September 2019
    • August 2019
    • July 2019
    • June 2019
    • May 2019
    • April 2019
    • March 2019
    • February 2019
    • January 2019
    • December 2018
    • November 2018
    • October 2018
    • September 2018
    • August 2018
    • July 2018
    • June 2018
    • May 2018
    • April 2018
    • March 2018
    • February 2018
    • January 2018
    • December 2017
    • November 2017
    • October 2017
    • September 2017
    • August 2017
    • July 2017
    • June 2017
    • May 2017
    • April 2017
    • March 2017
    • February 2017
    • January 2017
    • December 2016
    • November 2016
    • October 2016
    • September 2016
    • August 2016
    • July 2016
    • June 2016
    • May 2016
    • April 2016
    • March 2016
    • February 2016
    • January 2016
    • December 2015
    • November 2015
    • October 2015
    • September 2015
    • August 2015
    • July 2015
    • June 2015
    • May 2015
    • April 2015
    • March 2015
    • February 2015
    • January 2015
    • December 2014
    • November 2014
    • October 2014
    • September 2014
    • August 2014
    • July 2014
    • June 2014
    • May 2014
    • April 2014
    • March 2014
    • February 2014
    • January 2014
    • December 2013
    • November 2013
    • October 2013
    • September 2013
    • August 2013
    • July 2013
    • June 2013
    • May 2013
    • April 2013
    • March 2013
    • February 2013
    • January 2013
    • December 2012
    • November 2012
    • October 2012
    • September 2012
    • August 2012
    • July 2012
    • June 2012
    • May 2012
    • April 2012
    • March 2012
    • February 2012
    • January 2012
    • December 2011
    • November 2011
    • October 2011
    • September 2011
    • August 2011
    • July 2011
    • March 2011
    • February 2011
    • January 2011
    • December 2010
    • November 2010
    • October 2010
    • September 2010
    • August 2010
    • July 2010
    • June 2010
    • January 2010
    • December 2009
    • November 2009
    • October 2009
    • September 2009
    • July 2009
    • June 2009
    • May 2009
    • April 2009
    • March 2009
    • February 2009
    • January 2009
    • December 2008
    • November 2008
    • October 2008
    • September 2008
    • August 2008
    • July 2008
    • June 2008
    • May 2008
    • March 2008
    • February 2008
    • January 2008
    • December 2007
    • November 2007
    • October 2007
    • September 2007
  • Categories

    • -திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,408)
    • Aandaal (604)
    • Abimana Desam (47)
    • Acharyarkall (4,274)
    • Ashtaadasa Rahayangal (432)
    • அமலனாதி பிரான் . (43)
    • அருளிச் செயலில் அமுத விருந்து – (368)
    • அஷ்ட பிரபங்கள் (122)
    • அஷ்டோத்ரம் (98)
    • ஆச்சார்ய ஹிருதயம் (166)
    • ஆர்த்தி பிரபந்தம் (11)
    • இரண்டாம் திருவந்தாதி (63)
    • இராமானுச நூற்றந்தாதி (314)
    • உபதேச ரத்ன மாலை (29)
    • கண்ணி நுண் சிறு தாம்பு (76)
    • கதய த்ரயம் (28)
    • கம்பராமாயணம் (288)
    • கிருஷ்ணன் கதை அமுதம் (80)
    • சிறிய திரு மடல் (27)
    • ஞான சாரம் (22)
    • தத்வ த்ரயம் (59)
    • தனி ஸ்லோக வியாக்யானம் (91)
    • தனியன் வ்யாக்யானம் (131)
    • திரு எழு கூற்று இருக்கை (15)
    • திரு நெடும் தாண்டகம் (77)
    • திரு பல்லாண்டு (41)
    • திரு மாலை (117)
    • திரு வாய் மொழி (4,714)
    • திரு விருத்தம் (258)
    • திரு வேங்கடம் உடையான் (44)
    • திருக் குறும் தாண்டகம் (48)
    • திருச்சந்த விருத்தம் (42)
    • திருப்பள்ளி எழுச்சி (27)
    • திருப்பாவை (509)
    • திருமங்கை ஆழ்வார் (516)
    • திருவாசிரியம் (27)
    • நம்பிள்ளை (1,950)
    • நாச்சியார் திருமொழி (62)
    • நான் முகன் திரு அந்தாதி (42)
    • நான்முகன் திரு அந்தாதி (42)
    • பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (29)
    • பிரமாணத் திரட்டுக்கள் (36)
    • பிரமேய சாரம் (11)
    • பெரிய ஆழ்வார் திரு மொழி (165)
    • பெரிய திரு அந்தாதி – (27)
    • பெரிய திரு மடல் (14)
    • பெரிய திரு மொழி (481)
    • பெரியவாச்சான் பிள்ளை (2,113)
    • பெருமாள் திருமொழி (62)
    • முதல் திரு அந்தாதி (157)
    • முதல் திருவந்தாதி (148)
    • முமுஷுபடி – (63)
    • மூன்றாம் திரு அந்தாதி (137)
    • மூன்றாம் திருவந்தாதி (134)
    • ராமானுஜ நூற்றந்தாதி (287)
    • வார்த்தா மாலை (101)
    • ஸப்த காதை (111)
    • ஸ்தவம் (273)
    • ஸ்ரீ அஹோபிலம் (1)
    • ஸ்ரீ ஈடு (4,124)
    • ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (25)
    • ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி (109)
    • ஸ்ரீ நம் ஆழ்வார் (3,420)
    • ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (36)
    • ஸ்ரீ பாஷ்யம் (262)
    • ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (253)
    • ஸ்ரீ மணவாள மா முனிகள் (3,352)
    • ஸ்ரீ மஹாபாரதம் (102)
    • ஸ்ரீ யதிராஜ விம்சதி (68)
    • ஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (297)
    • ஸ்ரீ ராமானுஜர் (333)
    • ஸ்ரீ வசன பூஷணம் (130)
    • ஸ்ரீ விஷ்ணு புராணம் (35)
    • ஸ்ரீ விஷ்ணு புராணம் – (35)
    • ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (47)
      • ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (46)
    • ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (35)
    • ஸ்ரீ ஹரி வம்சம் (177)
    • ஸ்ரீ.வில்லிபாரதம் (89)
    • Boothath Aalvaar (44)
    • Boothath Aazlvaar (68)
    • Desihan (298)
    • Divya desams (554)
    • Divya Names (110)
    • favorite sites (4)
    • Geetha Saaram (327)
    • Kannan (99)
    • Krishnan kathai amutham (126)
    • Kulesekara Aazlvaar (50)
    • Madurakavi Aazlvaar (79)
    • Manna vaallla Maa munikall (3,232)
    • Namm Aazlvaar (3,530)
    • Narasimhar (26)
    • Periaazlvaar (191)
    • Peyaazlvaar (151)
    • Poyhai Aazlvaar (160)
    • Prabandha Amudhu (3,972)
    • Puraanankal (172)
    • Raamaanujar (382)
    • Ramayannam (215)
    • Sri Baagavatha saaram (897)
    • Sri Baashyam (243)
    • Sri Bhashyam (240)
    • Sri Vaishna Concepts (1,912)
    • SRi Valimiki Raamaayanam (918)
    • Srirengam (105)
    • Stotrams/Slokams (273)
    • Tamizl (147)
    • Thirumangai Aazlvaar (746)
    • Thirumazlisai Aazlvaar (95)
    • Thiruppaan Aazlvaar (44)
    • Thondar -adi-podi Aazlvaar (144)
    • ubanishads (126)
    • Uncategorized (71)
    • Vaazlvum Vaakkum (9)
    • Vetham (92)
    • Vishnu Sahasranama Stotrams (230)
    • you tube vaishnava links (1)

Powered by WordPress.com.
Entries (RSS) and Comments (RSS).

Loading Comments...