மதுகைடபர்கள் வேதங்களை அபகரித்தது போல ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு நீண்ட நெடுங்காலமாக தர்சன நிர்வாஹகர்களான ஆசார்யர்கள் ஒருவரும் இல்லாமல் போனதாலும், மேலும் அஸுரப்ரக்ருதிகளின் சூழ்ச்சியாலும் அஜ்ஞானம் என்னும் பேரிருள் இவ்வுலகத்தை சூழ்ந்து திராவிட வேதத்தில் மக்களுக்கு கலக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவற்றை மறந்து போனார்கள். மதுரமான தமிழ் பாசுரங்கள் மறைந்தும் போயின. அச்சமயத்தில் திருக்குடந்தை ஆராவமுதனின் காரூண்யத்தால் ஆழ்வார் திருநகரி சென்றடைந்து, மதுரகவியாழ்வாரின் சிஷ்ய பரம்பரையினர் மூலம் கண்ணிநுண் சிறுத்தாம்பைப் பெற்று அதனைப் பல்லாயிரம் முறை பாராயணம் செய்து ஆழ்வாரை ஸாக்ஷாத்கரித்து தமிழ் வேதங்களை மீட்டெடுத்து அவற்றைத் திரும்பவும் உலகில் நடையாடச் செய்தவர் ஸ்ரீமந் நாதமுனிகள்.
ஆகவே இவருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவனுக்கும் ஒப்புமை அதிகம். அதனாலேயே ஸ்ரீ ஆளவந்தார், எம்பெருமானின் மற்ற அவதாரங்கள் இருக்க ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரத்தை முதலில் இவர் விஷயத்தில் அருளிச் செய்தது இங்கு நன்கு சுவைக்கத்தக்கது.“சடகோபமுனி” வழிவந்த முனி
ஜ்ஞானமும், வைராக்யமும், கண்ணனிடத்தில் கடலைப் போல கரைகாண முடியாத பக்தியும் கொண்ட ஸ்ரீமந் நாதமுனிகள், ஆழ்வார் காட்டியபடி சரணாகதியை மோக்ஷத்திற்க்காக அநுஷ்டித்தவர். ஆயினும் எம்பெருமான் அநுபவத்தில் இருக்கும் த்வரையினால் ஸ்வயம் ப்ரயோஜனமாக பக்தியோகத்தை அநுஷ்டித்து அவனை ஸாக்ஷாத்காரம் பண்ணி ஸேவித்து வந்தவர். அதனாலேயே சடகோபமுனிக்குப் பிறகு நம் ஸம்ப்ரதாயத்தில் “முநி”(நாதேந முநி)என்ற ஏற்றத்தையும் பெற்றவர் இவரே.நாதே₂ந முநிநா தேந ப₄வேயம் நாத₂வாநஹம் | யஸ்ய நைக₃மிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் க₃தம் ||-ஸ்ரீ யதிராஜசப்ததி – 5
“வேதத்தில் மறைந்து கிடந்த ஸகல ரஹஸ்யார்த்தங்களும் எம்பெருமான் மற்றும் ஆழ்வார் அநுக்ரஹத்தால் எவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் விளங்கிற்றோ அவரையே தலைவராகக் கொண்டவனாக நான் ஆகிறேன்”.
———— ஶ்லோகம் 3 – தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே, ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார். பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: | லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி யோகாய நாதமுநயே யமிநாம் வராய || பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள். அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள். ————— ஶ்லோகம் 65 – ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’ (ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும், என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும் ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க, எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான். ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார். அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் | பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா || எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும். ——– மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித் தாமரைகளை வணங்குவோம். ஆளவந்தார் அவதாரம்:- யமுனைத் துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும், மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடி மாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு “ யமுனைத் துறைவன்” என்று பெயர் சூட்டி அழைத்தனர். யமுனைத் துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம் பெற்று, ஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார். பின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார். ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:- இப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன். ஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே?’ என்று கேட்டனர் அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர். கோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’ என்று சொல்லி ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார். இவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா! இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்” என்று அழைக்கப்படுகிறது.. இன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் , அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர் என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர். இவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்க வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா?” என்று கேட்டார். அவர்களும் “ஆம்! கண்டோம்! கண்டோம்! அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், முகம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்ட மங்கலம்” என்ற ஊர். இவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கை கொண்ட சோழ புரத்தை நோக்கிச் சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காண வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா? என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் ! என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை தான் காணவில்லை என்ற ஏக்கத்தில் இருந்தார். கடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்து விடு” என்று கூறியவாறு எம்பெருமான் திருவடிகளை அடைந்தார். ஸ்ரீராமனை தேடி போனவருக்கு அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராம மிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது. ஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப் பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் திருக்கோயிலில் வணங்கிவிட்டு வரும் போது ”நாதமுனிகள் திருவரசு செல்லும் பாதை” என்ற ஒரு புதிய அறிவிப்புப் பலகையைப் பார்க்கலாம் மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம் 200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’. ஸ்ரீமந் நாதமுனிகளின் “திருவரசு ”அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் வட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊருக்கு கிழக்கே 1கி.மீ தூரத்திலுள்ள சம்போடை என்ற ஊரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னார்குடி, சிதம்பரம் மார்க்கத்தில் 12 கி.மீ தூரத்திலுள்ளது சம்போடை கிராமம். கும்பகோணம் சென்னை மார்க்கத்தில் சுமார் 30கி.மீ தூரத்துலுள்ள ஜெயங்கொண்டம் கூட்டுரோடு என்ற பிரிவிலிருந்து மேற்கே ஒரு கி.மீ சம்போடை கிராமம். நாதமுனிகளுடைய வாழி திருநாமம்: ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே ——— வைதிக மதங்கள் -வேதத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளுபவை வைணவம் சைவம் சாத்தமம் காணா பத்த்யம் ஸுரவம் கௌமாரம் வைதிக மாதமாய் இருந்தும் வேதத்தை மறைக்குமாக ஏற்றுக் கொள்ளுபவை நியாயம் வைசேஷிகம் சாங்க்யம் யோகம் மீமாம்ஸை வேதாந்தம் அவைதிக தத்வம் சாருவாகம் உலோகாயதம் புத்த ஜைன மதங்கள் ————– ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் மங்கள ஸ்லோகம் யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக ஸதா -எப்போதும் – ஸ்வத -இயல்பாகவே தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம் ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத் உவமானம் நான்காவதாக நையாயிகர் லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம் மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன் அபின்ன நிமித்த காரணம் நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள் வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா கட்டைப் போல் -நையாயிகன் தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார் நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார் ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை – கண்டிக்க ஸ்லோகங்கள் ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம் அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார் இரண்டாவது இல்லையே அஞ்ஞானம் அநிர் வசனீயம் ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும் கயிறு பாம்பு போல் ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால் ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும் ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும் இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே ப்ரஹ்மம் அனுபவம் அறிவு அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம் ஞானம் அஞ்ஞான விரோதி அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம் நாத முனி ஆதி முனி ஓதும் முனி கீதா முனி தாத முனி தூத முனி ரெங்க நாத முனி பாத முனி முனி போத முனி பேத முனி அபேத முனி மோத முனி வேத முனி ——————————————————— ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply