ஸ்ரீ ஆதி சேஷன் -ஸ்ரீ இளைய பெருமாள் பகவத் கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
முதல் பிரதான சிஷ்யர் -அஷ்ட திக் கஜங்களில் பிரதானம்
பாதுகா சில சமயம் பிரியலாம் –
பாதுகா சாயா -சில சமயம் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம் –
பாத ரேகா இவர் என்பர்
பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே
இவர் கால் வைத்த காரணத்தால் சிஷ்ய ஸம்பத் பெருகியதால் பொன்னடிக்கால் ஜீயர் -செம் பொன் கழல் அடி -பொன்னடிக்கால் ஜீயர்
இவருக்கு அஷ்ட திக் கஜங்கள்
ஸ்ரீ சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
ஸ்ரீ சமரபுங்கவாசார்யர்,
ஸ்ரீ சுத்தசத்வம் அண்ணா,
ஸ்ரீ ஞானக்கண்ணாத்தான்,
ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை ,
ஸ்ரீ பள்ளக்கால் சித்தர்,
ஸ்ரீ கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா.
—————-
ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் அருளிய முக்யமான சம்ஸ்க்ருத அருளிச் செயல்கள்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் மங்களாசாஸனம்
இதற்கான மூலமும் மற்றும்
அதற்கான ஸ்ரீ தென்திருப்பேரை உ.வே. அரவிந்த லோசனன் ஸ்வாமி அவர்களின் எளிய தமிழ் மொழி பெயர்ப்பும் காண்போம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி
முதல் 11 ஸ்லோகங்களில் சரண் அடைந்து
அடுத்து 3 ஸ்லோகங்கள் இவரே சரண் அடையத்தக்கவர்
——–
ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–1-
அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
——–
காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வாநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே–2-
ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
——–
தாராத்மஜாதி ஜநிதம் ஸூகமை ஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–3–
மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.
——–
ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–4–
முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.
———-
வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்ய மாரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வரம் வரஸ்ய யதீஸி துஸ்தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-
யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.
——–
பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதி ஸது தாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-
செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
—————
யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–7–
யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
———–
பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–8–
எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
———–
யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–
புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்கவல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
———
வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--10–
வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
————
ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம் நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--11–
நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)
——-
வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு
ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக
இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!
————
கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர–13-
ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ்வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே
ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே
சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.
———
சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-
முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.
———————————–
பொன்னடிக்கால் ஜீயரின் பூர்வாச்ரமப் பெயர் “அழகிய வரதர்”.
வானமாமலை ஜீயர், வானாத்ரி யோகி, ராமாநுஜ ஜீயர், ராமாநுஜமுனி என்று இவருக்கு பல திருநாமங்கள் உண்டு.
இவர் அழகிய மணவாள மாமுனிகளின் முதல் சிஷ்யர் மட்டுமல்லாது ப்ரதான சிஷ்யருமாவார்.
அழகிய வரதரான இவர் அழகிய மணவாள மாமுனிகளுக்கு க்ருஹஸ்தராய்
எழுந்தருளியிருந்த காலத்தே சிஷ்யரானார். முதல் சிஷ்யரும் இவர்தான்.
அழகிய வரதர் உடனே சந்யாஸாச்ரமம் ஏற்று வெகுகாலம் மாமுனிகளோடே தங்கி, கைங்கர்யம் செய்து வந்தார்.
மாமுனிகளின் சிறந்த சிஷ்ய செல்வத்துக்கு இவர் முதலடி இட்டமையால் இவருக்கு
பொன்னடிக்கால் ஜீயர் என்ற திருநாமம் வழங்கலாயிற்று.
இவர் பாரத தேசம் முழுவதும் பல இடங்களில் தோதாத்ரி மடங்களை நிறுவி நம் சம்பிரதாயத்தை விஸ்தாரம் செய்தார்.
மாமுனிகள் திருமலை திவ்யதேசத்து யாத்திரைக்கு முதல் முறையாக செல்ல,
அப்போது பெரிய கேள்வியப்பன் ஜீயர் ஸ்வப்னத்தில் ஒரு க்ருஹஸ்தர் சயனித்திருக்க
அவர் திருவடி நிலையில் ஒரு சந்யாசியையும் கண்டார்.
உடனே கேள்வியப்பன் ஜீயர் இது குறித்து விசாரிக்க, அதற்கு அங்கிருந்தோர்கள்
“ஈட்டுப் பெருக்கர்” என்கிற அழகிய மனவாளாப்பெருமாள் நாயனார் மற்றும் பொன்னடிக்கால் ஜீயர் என்று கூறினர்.
பல ஆசார்யர்கள் மாமுனிகளை தரிசிக்கப் பொன்னடிக்கால் ஜீயரே புருஷகரமாக இருந்தார்.
பல ஸ்ரீவைஷ்ணவர்கள் பொன்னடிக்கால் ஜீயரின் புருஷகாரத்தாலேயே மாமுனிகளை தர்சிக்க ,
பொன்னடிக்கால் ஜீயரும் மகிழ்வோடு அவர்களை ஆதரித்து, கைங்கர்யத்தையும் தந்து அருளினார்.
கந்தாடை அண்ணனும் அவர் திருமேனி சம்பந்திகளும் மாமுனிகளுக்குச் சிஷ்யர்கள் ஆன பின்னே ,
பொன்னடிக்கால் ஜீயரைத் தன் “ப்ராண ஸுக்ருத்” என்றும்,
தனக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருளினார்.
அப்பாச்சியாரண்ணா மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட,
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அவரை அமரச்செய்து ,
தன் திருவாழி – திருச் சக்கரத்தையும் (திருச் சங்கு – திருச் சக்கரம்) கொடுத்து
அப்பாச்சியாரண்ணாவுக்கு திருவிலச்சினை (சமாச்ரயணம்) செய்யுமாறு கட்டளை இட்டார் .
முதலில் பொன்னடிக்கால் ஜீயர் சங்கோஜத்துடன் இதை மறுத்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து மாமுனிகள் வலியுறுத்த அவ்வாரே அப்பாச்சியாரண்ணாவுக்கும்
அவருடன் வந்துருந்த சிலருக்கும் சமாச்ரயணம் செய்து மாமுனிகள் கட்டளையை பூர்த்தி செய்துவித்தார்.
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.
அவர்கள் –
சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
சமரபுங்கவாசார்யர்,
சுத்தசத்வம் அண்ணா,
ஞானக்கண்ணாத்தான்,
ராமானுஜம் பிள்ளை ,
பள்ளக்கால் சித்தர்,
கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் அப்பாச்சியாரண்ணா.
மாமுனிகள் அப்பாச்சியாரண்ணாவை ஸ்ரீரங்கத்தை விட்டுக் காஞ்சிபுரம் செல்லுமாறு பணிக்க,
அதைக் கேட்டு அவர் மனம் நொந்தார்.
உடனே மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயர் ஆராதித்த தன் பழைய ராமாநுஜனை
(தீர்த்த சொம்புக்கு நம் சம்ப்ரதாயத்தில் வழங்கப்படும் சொல்)
அப்பாச்சியாரண்ணாவை ஏற்கச்செய்து, தன்னைப்போல் இரண்டு அர்ச்சா திருமேனிகளை செய்து
ஒன்றை ஆசார்யரான பொன்னடிக்கால் ஜீயருக்கும்
மற்றொன்றை சிஷ்யரான அப்பாச்சியாரண்ணாவுக்கும் தந்தருளினார்.
பிறகு தெய்வ நாயகன் எம்பெருமான் (வானமாமலை) சேனை முதலியார் வாயிலாக
“பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலை எழுந்தருளி கைங்கர்யம் செய்ய வேண்டும்” என்று
ஒரு ஸ்ரீமுகத்தை மாமுனிகளுக்கு விண்ணப்பித்தார்.
உடனே இதை பொன்னடிக்கால் ஜீயருக்கு மாமுனிகள் தெரிவித்தார்.
அதன் பிறகு தன் முதலிகள் எல்லோரையும் (பொன்னடிக்கால் ஜீயர் உட்பட)
பெரிய பெருமாள் முன்னிலையில் தினம் 100 பாசுர க்ரமமாக 4000 திவ்யப்ரபந்தத்தை அந்வயிக்குமாறு பணிக்க,
அவ்வாறே பெரிய பெருமாள் திருச்செவி சாற்றுகிறார்
(பெரிய பெருமாள் கேட்கிறார்). “அணியார் பொழில் சூள் அரங்கநகரப்பா” என்று முதலிகள் (சிஷ்யர்கள்)
சேவிப்பதைக் கேட்டு பெருமான் மனம் குளிர தன் சந்நிதியிலிருந்து
அரங்கநகரப்பனை (ஸ்ரீ லக்ஷ்மிநாராயண விக்ரஹம்) பொன்னடிக்கால் ஜீயருக்கு வழங்கி
வானமாமலை எழுந்தருளப்பண்ணுமாரு பணித்தார்.
மேலும் பொன்னடிக்கால் ஜீயருக்கு தனிப்ரசாதமும், ஸ்ரீசடகோபமும் அளித்தார்.
மாமுனிகள் மேற்கொண்டு பொன்னடிக்கால் ஜீயரை மடத்துக்கு வரச்செய்து
விசேஷ ததியாராதனை செய்து வானமாமலைக்கு வழி யனுப்பி வைக்கிறார்.
பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலையில் தங்கிப் பல கைங்கர்யங்களை செய்து வந்தது மட்டுமின்றி
அருகிலிருக்கும் நவ திருப்பதி, திருக்குறுங்குடி கைங்கர்யங்களையும் ஏற்றார்.
மேலும் பதரீகாச்ரமத்திற்கும் யாத்திரை சென்றார்.
இந்த மார்க்கத்தில் இவருக்கு பல சிஷ்யர்கள் கிடைத்து
அவர்களுக்கு காலக்ஷேபமும், கைங்கர்யங்களையும் நல்கினார்.
பொன்னடிக்கால் ஜீயர் மேலும் ஒரு நெடிய வடதேச யாத்திரை மேற்கொண்டார்.
அப்பொழுது மாமுனிகள் இந்த நில உலகைத் துறந்து பரமபதம் சென்று திருநாடு அலங்கரித்தார்.
பொன்னடிக்கால் ஜீயர் யாத்திரை முடித்துக் கொண்டு திரும்புகையில் திருமலையை அடைந்தபோது
விஷயம் தெரிந்து மிகவும் கலக்கமுற்றார்.
அதனால் சில காலம் திருமலையிலேயே தங்கி இருந்தார்.
மேலும் அங்கிருந்து தான் யாத்திரையின் பொது சேகரித்த செல்வங்களோடு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
அங்கு ஜீயர் நாயனாரையும் (பூர்வாச்ரமத்தில் மாமுனிகளின் திருப்பேரனார் ) சில ஸ்ரீவைஷ்னவர்களையும்
தண்டன் சமர்ப்பித்து தன் ஆசார்யனை பிரிந்து தான் வாடும் சோகத்தை பகிர்ந்துகொண்டார்.
அப்பொழுது மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம் (தன் தண்டத்தின் மீதம்),
திருவாழி மோதிரம் மற்றும் பாதுகைகளும் பொன்னடிக்கால் ஜீயரிடம் சமர்ப்பிக்க பட்டன.
இப்பொழுதும் வானமாமலை ஜீயர்கள் உற்சவ காலங்களில்
மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிகிறார்கள்.
அதன் பிறகு வானமாமலையில் தொடர்ந்து கைங்கர்யங்களை மேற் கொண்டார்.
அக்காலத்தில் வானமாமலையில் ஸ்ரீவரமங்கை நாச்சியாருக்கு
உற்சவ விக்ரஹம் எழுந்தருளப் பண்ணவில்லை.
ஒரு முறை தெய்வநாயகன் பொன்னடிக்கால் ஜீயரின் ஸ்வப்பனத்தில் எழுந்தருளி
திருமலையிலிருந்து நாச்சியாரை எழுந்தருளப்பண்ணுமாறு ஆணையிட்டார்.
எனவே பொன்னடிக்கால் ஜீயர் திருமலைக்கு யாத்திரை புறப்பட்டு அடைந்தார்.
அப்பொழுது திருமலை நாச்சியார் ஸ்வப்பனத்தில் எழுந்தருளி
“அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளப்பண்ணி தெய்வநாயகனோடு திருக்கல்யாணம் செய்து வெய்யும்”
என தன் சங்கல்பத்தை தெரிவித்தாள்.
இதே போல் திருமலை ஜீயர்களின் ஸ்வப்பனத்திலும் எழுந்தருளினாள்.
இதையேற்ற ஜீயர்கள் அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம் அர்ச்சா திருமேனியை ஒப்படைத்தனர்.
பொன்னடிக்கால் ஜீயர் தானே தாயாரை எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார்.
தெய்வ நாயகனும் பொன்னடிக்கால் ஜீயரை பெரியாழ்வாரைப்போலே “மாமனாராக” கொள்கிறார்.
இன்றும் இந்த வைபவம் வானமாமலையில் கொண்டாடப்படுகின்றது.
இதன் பிறகு பல திருநக்ஷத்ரங்கள் வாழ்ந்து பல சத்தான உபதேசங்களை எல்லோருக்கும் நல்கி ,
பொன்னடிக்கால் ஜீயர் தன் ஆசார்யரான அழகிய மணவாளமாமுனிகளை த்யானித்து
தன் சரம திருமேனியைத் துறந்து திருநாடு அலங்கரித்தார் (பரமபதம் அடைந்தார்).
அவர் நியமித்த அடுத்த ஜீயர் ஸ்வாமிகளைத் தொடர்ந்து இன்றுவரை வானமாமலையில்
ஆசார்ய பரம்பரை தொடர்ந்து வருகிறது.
நாமும் பொன்னடிக்கால் ஜீயரின் திருவடியை இதேபோல் எம்பெருமான்
மற்றும் ஆசார்ய சம்பந்தத்துக்காகப் பிரார்த்திப்போம்!!!
மாமுனிகள் முதல்முறையாக திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்றபோது,
பொன்னடிக்கால் ஜீயரும் உடன் சென்றார்.
இருவரும் அடிவாரத்தில் (அலிப்ரி) தங்கியிருந்தனர்.
அன்றிரவு திருப்பதி கோயில் ஜீயர் சுவாமியான பெரிய கேள்வியப்பன் ஜீயரின் கனவில், ஒரு குடும்பஸ்தர் படுத்திருக்க,
அவரது திருவடியில் ஒரு சந்நியாசி அமர்ந்திருப்பது போன்று கண்டார்.
மறுநாள், கேள்வியப்பன் ஜீயர் இது குறித்து விசாரிக்க, மணவாள மாமுனிகளும், பொன்னடிக்கால் ஜீயரும்
திருமலைக்கு வந்திருப்பது தெரியவந்தது.
தனக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும்’
என்று, தமது சீடர்களிடம் மாமுனிகள் அருள்வது வழக்கம்.
அப்பாச்சியாரண்ணா என்பவர் மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட,
மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அமரச்செய்து,
அப்பாச்சியாரண்ணாவுக்கு சமாச்ரயணம் (பஞ்ச சம்ஸ்காரம்) செய்யுமாறு கட்டளை இட்டார்.
அதனை, பொன்னடிக்கால் ஜீயரும் பூர்த்தி செய்தார்.
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் கைங்கர்யத்துக்காக,
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து ஜீயர் புறப்பட எண்ணினார்.
அப்போது, பொன்னடிக்கால் ஜீயர் உட்பட மாமுனி களின் சீடர்கள் தினம் 100 பாசுரங்களாக, திவ்ய பிரபந்தத்தை சேவித்தனர்.
“அணியார் பொழில் சூழ் அரங்கநகரப்பா” என்று அவர்கள் சேவிப்பதைக்கேட்டு
ஸ்ரீ ரங்கநாதபெருமான் மனம் குளிர்ந்து, தனது சந்நிதியில் இருந்த அரங்க நகரப்பனை ( ஸ்ரீ லக்ஷ்மிநாராயண விக்ரஹம்),
பொன்னடிக்கால் ஜீயருக்கு வழங்கி, அதனை நாங்குநேரிக்கு எழுந்தருளச் செய்யுமாறு பணித்தார்.
இந்த விக்கிரகத்தையும் இப்போது நாங்குநேரி வானமாமலை மடத்தில் தரிசிக்கலாம்.
வானமாமலையில் மட்டுமின்றி, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருக்குறுங்குடி மற்றும் நவ திருப்பதிகளிலும்
பல்வேறு கைங்கர்யங்களை ஏற்றார்.
பொன்னடிக்கால் ஜீயர் வடதேச யாத்திரை சென்றிருந்தபோது, மாமுனிகள் இந்த நில உலகைத் துறந்தார்.
இதையறிந்து பொன்னடிக்கால் ஜீயர் மிகவும் கலக்கமுற்றார்.
மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம் (தன் தண்டத்தின் மீதம்), திருவாழி மோதிரம்
மற்றும் பாதுகைகள் பொன்னடிக்கால் ஜீயரிடம் வழங்கப்பட்டன.
வானமாமலை மடத்து ஜீயர்கள் உற்சவ காலங்களில் மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிவது
இப்போதும் வழக்கமாக இருக்கிறது.
கனவில் வந்த நாச்சியார்
அக்காலத்தில் வானமாமலையில் வரமங்கை நாச்சியாருக்கு உற்சவ விக்கிரகம் இல்லை.
பொன்னடிக்கால் ஜீயர், திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்தார்.
அப்போது, திருமலை நாச்சியார் அவர் கனவில் தோன்றி,
“அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளச் செய்து, அத்தலத்து எம்பெருமானான
தெய்வநாயகனோடு திருக்கல்யாணம் செய்து வையும்” என தெரிவித்தாள்.
இதேபோல் திருமலைக் கோயில் ஜீயர்களின் கனவிலும் கூறினாள்.
இதையேற்ற ஜீயர்கள், அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம், நாச்சியாரின் விக்கிரகத்தை ஒப்படைத்தனர்.
பொன்னடிக்கால் ஜீயர் தானே நாச்சியாரை, எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.
தெய்வநாயகனும் பொன்னடிக்கால் ஜீயரை பெரியாழ்வாரைப்போல “மாமனாராக” கொள்கிறார்.
இன்றும் இந்த வைபவம் வானமாமலையில் கொண்டாடப்படுகிறது.
ஏராளமான உபதேசங்களை அருளிய, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியின் திருவரசை நாங்குநேரியில் தரிசிக்கலாம்.
அவர் நியமித்தபடி வானமாமலையில் ஆச்சார்ய பரம்பரை தொடர்ந்து வருகிறது.
தற்போது, 31ஆவது பட்டம் ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், வானமாமலை மடத்தை நிர்வகிக்கிறார்.
——————-
ஸ்ரீ வானமாமலை முதலாவது ஸ்வாமி விஷயமான மங்களாசாஸநம், ப்ரபத்ததி
[“* மஹார்யர் ?” என்ற தொட்டயாசார்யர் அருளியவை-
பண்டித ரத்னம், திருக்கண்ணபுரம் செள. ஸ்ரீநிவாஸாசார்யர் (சிரோமணி) இயற்றிய உரையுடன்
ஸ்ரீவரமஹாசலயோகி மங்களாசாஸகம் ”, *
*ஸ்ரீவரமஹாசல யோக ப்ரபத்தி.” என்ற இரு, ஸ்தோத்திரங்களையும் அருளிச் செய்துள்ளார்
இவை இரண்டும் அக்காலம் முதலே வானமாமலை மடத்தில் நித்ய ததியாரதன காலங்களில் முதலில் அநுஸந்திக்கப்பட்டுப்
பிறகு .ஸ்ரீ மணவாளமாமுனிகளின் தினசர்யை முதலியன அநுஸந்திக்கப்படுகின்றன.
மேலும் .ஸ்ரீ அரங்கநகரப்பன் டோலோத்ஸவ காலங்களி.லும் இவை யிரண்டும் அநுஸக்திக்கப்படுகின்றன.
எனவே .ஸ்ரீவானமாமலை மடத்து ஸம்ப்ரதாயத்தை அநுஸரித்து வருமவர்களுக்கு, நித்யம் அநுஸந்தேயங்கள் இவை.
இவ,ற்றுக்கு ஸம்ஸ்கிருத பாஷையிலோ இதர -பரஷைகளிலோ இதுவரையில் வ்யாக்யானம் ஒருவரும் எழுதியதாய்த் தெரியவீல்லை.
ஆகையால் மடத்து ஸம்ப்ரதாயமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களுள் ஸம்ஸ்க்ருத. பாஷையில் அதிகம் பரிசயமில்லாதவர்களுக்கும்
ஸ்த்ரீ பரலர்களுக்கும் ௮.நுஸந்தானம் செய்யும் போதே எளிதில் அதன் அர்த்தத்தை அறிந்து அ.நுஸந்திப்பதற்கு
அநுகுணமாக வர்த்தமான ஸ்வாமியின் திருவுள்ளத்தைப் பின் சென்று அடியேன் இரண்டு கீரந்தங்களுக்கும்
எளிய நடையில் தமிழில் பதவுரையும்,
சில ஸ்லோகங்களில் தாத்பர்யம் துரவஹமாயிருப்பதால் அதை நன்கு விளக்கும் கருத்துரையுமாகச் சேர்த்து உரையை எழுதினேன்.
தற்பொழுது ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸ்ரீமதுபய வேதாந்தாசார்யரான வர்த்தமான ஸ்வாமி ஸ்ரீவானமாமலை ராமாநுஜ ஸ்வாமியின் நியமனத்தாலும் ஆதரவாலும் இந்த உரை மடத்து வெளியீடுகளில் ஒன்றாய் வெளியிடப்பட்டிருக்கறது.
இந்த தொட்டய்யங்கார் ஸ்வாமி தமது ஸ்வாமி விஷயமாய் தினசர்யை என்ற கரந்தமும் அருளிச் செய்திருப்பதாய்த் தெரிகிறது.
ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்ரப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முதிம் |
ரம்யஜாமாத்ருயோகீந்த்ர – பாதரேகாமயம் ஸதா |
ததாயத்தாத்மஸத்தாதிம் ராமாநுஜமுநிம் பஜே |
ஸ்ரீ வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை பற்றிய மங்களாசாஸனம் –
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான ஸ்ரீ தொட்டையங்கார் அப்பை என்னும் மஹாசார்யர் அருளிச்செய்தது
அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக்கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையவராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
அவதாரிகை
ஸ்ரீமத் வாதூலகுல திலகராய் ஸ்ரீநிவாஸார்யர் என்ற
அபர: நாமத்தையுடைய மஹார்யர், கோயிலில்
ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க விருப்பமுற்று எழுந்தருள, ஸ்ரீ மாமுநிகளும் இவரைத் தமது ப்ரதம சிஷ்பரான
ஸ்ரீ வானமாமலை ராமாநுஐ ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி. பணித்தார்.
அவரும் அவ்வாறே ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்த மந்த்ர மந்த்ரார்த்த ரஹஸ்யாதி கிரந்தங்களையும் ஸ்ரீபாஷ்ய பகவத்: விஷயாதிகளையும் அவரிடம் அதிகரித்துச் சிறந்த. ஞானமுடையராய் ஸ்வாசார்ய சுச்ரூஷா பரராய் எழுந்தருளி யிருந்தார்.
பிறகு மாமுனிகள் தமக்குண்டான அதிசய மெல்லாம் வானமாமலை ஜீயருக்கும் உண்டாகவேண்டு மென்று இருக்குமவராகையாலே,
தம்மைப் போலவே அவருக்கும், அவர் திருவடிகளில் ஆஸ்ரயித்து முதிர்ந்த ஞானமுடையவர்களில் சிறந்த சிலரை ௮ஷ்ட திக் கஜங்களாகக் கல்பித்தருளினார்.
அவ்வெண்மர் திருநாமங்களும் “:ஸ்ரீமத் மஹார்ய ரண புங்கவ” என்ற ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.
மாமுனிகள் ஒரு காளல் தமது திக்கஜங்களோடு’ தம்மை ஸேவித்து நிற்கும் வானமாமலை ஜீயரையும்
அவருடைய ஸம்ருத்தியையும் கடாக்ஷித்து அதிஸந்துஷ்டராய் எழுந்தருளியிருந்து,
மஹார்யரைக் குறித்து, “*உமது ஆசார்யன் விஷயமாய் ஒரு ஸ்லோகம் சொல்லிக் காணும்” என்ன, அவரும் அவசராய்,
“* ரம்ய ஜாமத்ரு…முநிம் பஜே ” என்று அருளிச் செய்ய அது தமது அபிமதத்திற்கு இசைந்து இருந்தபடி யாலே ஸந்தோஷிக்க,
மற்ற சிஷ்யர்களும் இந்த ஸ்லோகத்தைக் கேட்டு மாமுனிகளைப் பார்த்து,
“*அடி.யோங்களுக்கு இற்றைக்கு ஓர் மஹா நிதி ப்ராப்தமாயிற்று”’ என்று: கொண்டாட,
மாமுனிகளும் தமது ஸ்ரீசைலேச தயாபாத்ரத் தனியனோடு இந்த ** ரம்யஜாமாத்ரு யோ$ந்த்ர”” என்னும் தனியனையும்
நியதமாகச் சேர்த்து அநுஸந்திக்கும்படி.நியமித்துத் தமது அம்சாவதாரமே வானமாமலை ராமாநுஜ ஜீயர் என்று
அவர் வைபவத்தை ப்ரகாசப்படுத்தினார்.
பிறகு அந்த மஹார்யர், மணவாளமுனிகளால் அநேக ஸமயங்களில் ஸூஸிப்பிக்கப்பட்ட தமது ஆசார்யன் வைபவத்தையும்,
உபய வேதாந்த மந்த்ர ரஹஸ்யாதி விஷயமான ஸ்ரீ ஸுக்திகளையும்
ஞானத்தையும், ஸெளலப்யம், ஸெளசில்யம், பக்தி, வைராக்யம் முதலிய அவரது குணகணங்களையும் கண்டு அதிசயித்து,
அக்குணங்களில் ஆழ்ந்து பக்திபரவசராய், மெய்மறந்து பல்லாண்டு பாடியல்லது நிற்கவொண்ணாத நிலையை எய்தி,
அவரது மங்களாசாஸநஈத்திலே ப்ரவ்ருத்தராகிறார் இந்த கிரந்தத்திலே..
இந்த ராமாநுஜ முனி விஷயமான ப்ரபத்தி கிரந்தத்தை ‘ அருளிச்செய்தவரும் இவரேயாவர்.
இவருக்குத் தொட்டை அய்யங்கார் அப்பை என்ற திருநாமமும் உண்டு.
ரம்யோ பயந்த்ரு முநி வர்ய தயாநிவாஸம்
கருணாம்ருதாப்திம் ஆத்மவக்தம் ஆஜக்மஸித்த
பரிபூத சரித்ர போதம் மகோஜ்ஞவரதாஹ்வயம்
யதிபதம் ராமாநுஜம் வந்தே -1-
பதவுரை:–
ரம்யோ பயந்த்ரு முநி வர்ய-அழகிய மணவாள மாமுனிகளது,
தயாநிவாஸம்-கருணைக்கு இருப்பிடமாயும்,
கருணாம்ருதாப்திம்-கருணையென்னும் அம்ருதத்திற்கு உறை விடமான கடல்போன்றவரும்,
ஆத்மவக்தம்-தைர்யத்தை.யுடையவரும், (ஆஜக்மஸித்த…போதம்) ஆஜக்மஸித்த -பிறப்பு முதலேயுண்டாகிய,
பரிபூத – மிகவும் புனிதமான,
சரித்ர-ஆசரணையையும்,
போதம்-ஞானத்தையும் உடையவரும், மகோஜ்ஞவரதாஹ்வயம்-தமது பிதாவினால் அழகிய வரதர் என்ற திருபாமம் சாற்றப் பெற்றவரும்,
யதிபதம்-யதிகட்கு இறைவருமான,
ராமாநுஜம் – வாராசல ராமாநுஜ முனிவரரை,
வந்தே – வணங்குகின்றேன்.
அழகிய மணவாள மாமுனிகளின் தயையால் பெறப்பட்ட நற்குணக் கூட்டங்களுக்கு கடல்போல் இருப்பவரும், முனிவர்களுக்குத் தலைவரும், எங்கள் குலத்திற்கு நாதருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமிக்கு எப்பொழுதும் வணக்கம் உரித்தாகுக.
இந்த வாநாசல ராமாநுஜ முநிவர், ஸ்ரீமணவாள் மாமுனிகள் கிரஹஸ்த தாமத்தை அநுஷ்டித்துத்
திருக்குருகூரில் எழுந்தருளியிருந்த காலத்திலேயே அவரது திருவடி.களில் முதலில் ஆஸ்ரயித்த முதலாவது சிஷ்யராவார்.
ஆகையால் அவரது தயைக்கு இவரே உறைவிடமாயினர்.
இவர் ஆத்மவானும் ஆவர். அதாவது ஓரிடத்திலும் மழுங்காத தைர்யமென்னும் குணத்தை உடையவர்.
இத்தால் தம்மை ஆஸ்ரயித்தவர்களை உய்விக்க இவர் யத்னம் செய்தால் அது விஷயத்தில் தளர்வை எய்தார் ‘எனக் கூறப்பட்டதாகும்.
ஸ்ரீ ராமாயணத்தில் ‘* ஆத்மவாந் கோ ஜிதக்ரோத: ” என்னுமிடத்தில் இப் பதத்திற்ரு தைர்யவான்
என்ற அர்த்தமே கோவிந்தராஜரால் கூறப்பட்டுள்ளது காண்க.
அல்லது ஆத்ம சப்தம் ஸ்வபாவத்தைக் கூறுமாகையால் தமக்கு அபிமுகனான சேதநனை ரக்ஷிக்கும்
ஆசார்ய ஸ்வபாவத்தைக் கூறி, அத்தகைய ரக்ஷண ஸ்வபாவம் வாய்ந்தவர் என்றுமாம்.
அல்லது ஆத்ம சப்தம் மனதைக் கூறுமாகையால் தமக்கு அதிஈமாய் தம வசத்திலாய மனத்தையுடையவர் என்றுமாம்.
இத்தால் இவரது வைராக்யமுடைமை கூறப்பட்டதாகும்.
இவர் கருணை யாகிய அம்ருதம் நிறைந்த கடல் போன்றவர்.
இவரைக் கடலாகக் கூறியதால் கடலில் தண்ணீரை ஒருவராலும் வற்றச் செய்ய முடியாதாப் போலவே
இவர் கருணையையும் வற்றச் செய்ய இயலாது என்பது ஸூஸிதமாம்.
கருணையை அம்ருதமாகக் கூறியதால், அம்ருதம் தன்னை அருந்தியவருக்கு அமரத் தன்மை யளிப்பது போலவே,
இவரது கருணையும் தமக்கு விஷயமானவர்களுக்கு அமரத்வத்தை(நித்பத்வத்தை) அளிக்குமென்பது தேறுகிறது.
நிற்க இப் பொழுது இவர் நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸத்தை எய்தி ராமாநுஜ முனி என்று திருநாமம் உடையராயினும்,
தமது பால்யத்தில் தமது பிதாவால் மிகுந்த அழகு வாய்ந்துஇருந்தமை காரணமாக, இவர் அழகிய வரதரென்று அழைக்கப்பட்டவரா யிருப்பர்.
பிறப்புடனே கூட உண்டாகிய மிகப் பரிசுத்தமான அநுஷ்டானங்களையும் ஞானத்தையும் உடையவர் இவர்.
இத்தகைய பெருமை வாய்ந்த யதித் தலைவரான ராமாநுஜ முனியை வணங்குகின்றேன்
————
அவதாரிகை.–
முதல் ஸ்லோகத்தில் இந்த ராமாநுஜ முநிவர் மணவாளமாமூனிகளின் தயைக்குப் பாத்ரமானவர்என்றார்.
இதில் இவருக்கு உண்டாகிய வாத்ஸல்ய ஸெளலப்ய ஸெளஸீல்யாதி குணங்களுக்கு ஊற்றுவாய் மாமுனிகள் எனக் கூறி,
இவரே எனது குலத்திற்கு நாதன்” எனவும் கூறி வணங்குகின்றார்
ரம்யோ பயந்த்ரு, முநிவர்ய தயாநுபாவ
ஸம்ஸித்த-சன்ய ஸத்குணகண, ஓக
மஹார்ணவாய , யமிரர்ம் வராய மாமக குலஸ்ய நாதாய
ராமாநுஜாய முநயே நம: அஸ்து -2-
பதவுரை:–
ரம்யோபயந்த்ரு…மஹார்ணவாய) ரம்யோ பயந்த்ரு- அழகிய மணவாளனென்னும்,
முநிவர்ய – யதித் தலைவனது,
தயாநுபாவ -.கருணையின் ப்ரபாவத்தினால்,
ஸம்ஸித்த-சன்ய் ஸித்திக்கப்பெற்ற,
ஸத்குணகண-சிறந்த குணங்களின் திரளாகிற,
ஓக-ப்ரவாஹத்திற்கு,
மஹார்ணவாய – புகலிடமாகிய ஸமுத்ரம் போன்றவரும், யமிரர்ம்-மனதை அடக்கியாளும் யோகிகளுள்
வராய – தலைசிறந்தவரும்,
மாமக குலஸ்ய-எனது குலத்திற்கு,
நாதாய-யஜமானரும்,
ராமாநுஜாய – இராமாநுசன் எனப் பெயர்பூண்டவருமான; முநயே – முநிவரின் பொருட்டு,
நம: – எனது நமஸ்காரம்,
அஸ்து – ஆயிடுக.
இந்த வாநாத்ரி முநிவர் பிறப்பே தொடங்கி உண்டாகிய ஸதாசாரம், ஞானம் இவைகளையுடையராயும்
மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்த பின்னர், அவரது கருணையின் மஹிமையால் உண்டாகிய வாத்ஸல்ய
ஸெளசில்ய ளெளலப்யாதி குணத் திரள் ப்ரவாஹமாகச் சென்று சேரும் பெருங்கடலாயினர்.
இவரை குணக் கட.லாகக் கூறியதால், குணங்கள் வற்றாத ஆகரம் இவர் என்றதாயிற்று
இவர் இந்த்ரியங்களை அடக்கி .மனதைத் தம் நிலையிலே நிறுத்தும் யோகிகளுள் சிறந்த தலைவர்.
எனது குலத்தை நிர்வஹித்து ஈடத்திப்போரும் நாதனுமாவார்-
இப் பெருமை வாய்ந்த இவ்வாநாசல முனிவருக்கு நித்யமாக எனது நமஸ்காரம் உரித்தாகுக
———–
அவதாரிகை:–
கீழ் ஸ்லோகத்தில் இந்த ராமாநுஜ முநிவருக்கு உண்டாகிய ஸத்குணங்கள் மணவாள மாமுனிகளின் தயா ப்ரபாவத்தாகே என்றார்.
இதில் இவருக்கு தாரக போஷகாதிகளும் மாமுனிகளின் திருவடித் தாமரைகளே எனக் கூறி,
இவர்;தமது குலத்திற்கு நாதரானமையை விளக்கிக் கூறுகிறார்.
ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர பாதகம் ஜாத
ப்ருங்கம் கருணாந்தரங்கம் மதீய ஹ்ருத்
சந்த்ர காந்கோபல பூர்ண சந்தரம்
ராமாநுஜம் முநிம் கெளமி -3-
பதவுரை:–
ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்,
பாத – திருவடிகளாகிற,
கம்ஜாத – தாமரை மலர்களில் படியும்,
ப்ருங்கம் – வண்டு போன்றவரும்,
கருணாந்தரங்கம்- கருணையுடன் கூடிய மனதை உடையவரும்,
மதீய- என்னுடையதான,
ஹ்ருத் – மனதாகிற,
சந்த்ர காந்கோபல – சந்த்ர காந்தக் கல்லுக்கு,
பூர்ண சந்தரம் – கலைகள் நிறைந்த சந்த்ரன் போன்றவருமான,
ராமாநுஜம் முநிம் – ராமாநுஜன் என்னும் முநிவரை,
கெளமி – ஸ்துதிக்கின்றேன்.
அழகிய மணவாள மாமுனிகளுடைய திருவடித்தாமரைகளில் வண்டுபோல் இருப்பவரும், கருணை நிறைந்த மனதுடையவரும், அடியேனுடைய மனதாகிற சந்த்ரகாந்தக்கல்லுக்கு முழுமதி போன்றவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.
இவ்விராமா நுஜ முநிவர் மணவாள மாமுனிகளினுடைய திருவடித் தாமரைகளில் படிந்த
வண்டு போன்றவர் என்பதால் அத்திருவடி. மலர்களையே . தமக்கு தாரக போஷகங்களாகக் கொண்டவர் எனக் கூறியவாறு
வண்டுகளுக்கு மலரே தாரக போஷகங்களல்ஃவா?
இவர் கருணையோடு கூடிய மனது வாய்ந்தவர்,
மேலும் எனது மனதாகிற சந்த்ரகாந்தக் கல்.லுக்கு கலாபூர்ணனான சந்திரன் போன்றவர்.
இவரைச் சந்திரனாகவும் மனதைக் கல்லாகவும் கூறியதால், கல்லையும் உருகச் செய்யும் சக்தி வாய்ந்தவர்
இம் முனிவர் என்றும், அக்கல் சந்திரனுக்கன்றி மற்றொன்றைக் கண்டு உருகமாட்டாதது போலவே,
எனது கல் கெஞ்சம் அவருக்கன்றி மற்றையோருக்குக் கரையாது என்றும்,
கலாபூர்ண னான சந்த்ரனென்று ரூபகமாகக் கூறியதால் இவரும் ௮ச் சந்த்ரனைப் போலவே கலா பூர்ணர் (வித்யைகள் நிரம்பியவர் )
என்றும் கூறப்பட்டதாகும். இதனால் இவர் கல்வியின் பெருமை காரணமாகத் தம் நெஞ்சம் உருகியதாகக் கூறப் பட்டதாகும்.
கல்வி காரணமாகத் தமது குலத்துக்கு நாதர் என்று கீழில் ஸ்லோகத்திற்கு இது விவரணமுமாகும்.
இவ் வாறு சிறப்பு வாய்ந்த இராமாநுச முநியைத் துதிக் கின்றேன்
அவதாரிகை:–
இந்த ஸ்லோகத்தில் இம் முனிவரது கல்யாண குணங்களில் சிலவற்றைக் கூறி, இவர்
அழகிய மணவாள மாமுனிகளுக்கு அந்தரங்கராய்
**பஹி: சர: ப்ராண:”’ என்னுமா போலே அம்முனிவரின் ப்ராண ஸ்தாந ருமாவார் என்கிறார்.
வாத்ஸல்ய ஸெளசீல்ய ஞான ஆதி குண ஸாகரம்
ரம்ய ஜாமாத்ரு முநி ஜீவிதம் ரமாநுஜ முநிம் வந்தே -4-
பதவுரை :–
வாத்ஸல்ய -வாத்ஸல்ய குணமென்ன,
ஸெளசீல்ய – ஸெளசீல்ய குணமென்ன,
ஞான- ஞானமென்ன,
ஆதி – இவை முதலாய,
குண – குணங்கட்கு,
ஸாகரம் – கடல் போன் றவரும்
ரம்ய ஜாமாத்ரு முநி – அழகிய மணவாள மாமுனிகட்கு,
ஜீவிதம் – ப்ராணன் போன்றவருமான,
ரமாநுஜமுகிம் – ராமாநுஜ முனியை,
வந்தே – வணங்குகின்றேன்:
வாத்சல்யம், சீலம், ஞானம் முதலான நற்குணங்களுக்கு கடல் போன்று இருப்பவரும்,
அழகிய மாமுனிகளை தனக்கு ப்ராணனாக கொண்டிருப்பவருமான ராமாநுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்
வாத்ஸல்யமென்பது – தன்னை ஆஸ்ரயித்தவர்கள் இழைத்த குற்றங்களைக் குணமாகக் கொள்ளும்
மிகப் பெரியோரின் ௮ற்புத குணமாம். இக் குணம் எமது குற்றங்களைக் கண்டும் அஞ்சாது அப்பெரியோரை நாம் அணுகு வதற்கு உறுப்பாகும்.
செய்த குற்றம் நற்றமாகவே கொள்ளுதல் பெரியோரின் இயல்பு.
ஸெளசீல்யமென்பது.. தான் எவ்வளவு பெருமை யுடையவனாயினும் தன் மேன்மையைக் கொஞ்சமும்
தன் மனத்தால் நினையாது மிகத் தாழ்ந்தோருடனும் புரையறக் கலக்கும் குண விசேஷமாகும்.
இஃது நாம் கிட்ட விரும்பும் பெரியோரின் பெருமையைக்
கண்டு நாம் அகல வேண்டாமைக்மு உரித்தாய குணம்,
ஞானமென்பது தன்னை ஆஸ்ரயித்தவர்களின் அபே
க்ஷையை அறிய ஹேதுவாய குணம்.
ஆதி சப்தத்தால் ஸ்வாமித்வம், ப்ராப்தி-பூர்த்தி முதலிய குணங்களும் கூறப் பட்டனவாகும்.
இக்குணங்கட்கு இவரைக் கடலெனக் கூறியதால் இவைகள் வற்றாது நிரம்பி இருக்குமிடமென்று: கூறியதாகும்.
நிற்க இம்முனிவரை மாமுனிகளுக்கு ப்ராணன் எனக் கூறியதால் இவரை க்ஷண காலமும் விட்டுப் :
பிரிந்து
மாமுனிகள் தரிக்கவல்லரல்லர் என்றதும்,
(ஸ்ரீராம பிரானுக்கு இளைய பெருமாள் போல் ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்
எல்லா விதக் கைங்கர்யங்களையும் செய்யும் அந்தரங்கர் என்ற அம்சமும் தோற்றுகின்றன.
இத்தகைய பெருமை வாய்ந்தவரை வணங்குகின்றேன்.
———————–
அந்தராளாஸ்ரம த்வயம் யத் அகாதர ஸம்வரீடம் –
வாந மஹாசைல ராமாநுஜ மஹாமுமிம் வந்தே-5-
அந்தராளாஸ்ரம த்வயம் – ப்ரும்ஹசர்யத்திற்கும் ஸந்யாஸத்திற்கும் மத்தியிலுள்ள கார்ஹஸ்த்யம்,
வாநப்ரஸதம் என்னும் ஆஸ்ரமங்களிரண்டும்,
யத்-எந்த முனிவரது,
அகாதர – ஆதரவின்மையாலே,
ஸம்வரீடம் – மிமுந்த லஜ்ஜையை உடையதாக,
(ஆயிற்றோ)
வாந மஹாசைல- (அந்த) வானமாமாலை,
ராமாநுஜ மஹாமுமிம் – ராமானுஜர் என்னும் மாமுனியை, வந்தே-நமஸ்கரிக்கின்றேன்.
எவருடைய அனாதரத்தால் பிரம்மச்சர்ய சந்யாஸாச்ராமங்களுக்கு நடுவிலுருக்கும்
மற்ற இரண்டு ஆச்ரமங்களும் வெட்கத்தை அடைந்தனவோ,
அந்த வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.
(வானமாமலை ஜீயர் ஸ்வாமி பிரம்மச்சர்ய ஆச்ரமத்திலிருந்து நேரே சந்யாஸாச்ரமத்திற்கு ச்வீகாரம் செய்தவர்.
எனவே நடுவில் இருக்கும் ஆஸ்ரமங்கள் வெட்கம் அடைந்தனவாம். )
இங்கு “*வாந மஹாசைல ‘* எனக் கூறியது எம்பெருமானை. ** வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே ‘*
என்று நம்மாழ்வார் அவனையே கூறியுள்ளார்,
அந்த வானமாமலை என்ற தழிழ்ப் பதமே ஸம்ஸ்க்ருத பதமாக ** வாந மஹாசைல ”? என்று மஹார்யரால் கூறப்பட்ட தாகும்.
எனவே அவ்வெம்பெருமானுக்கு உரிமை பூண்டவராய் அவருடைய கல்யாண குணங்களையே அநவரதம்
அநு ஸந்தாநம் செய்யுமவராகையாலே, **மஹா முநிம்’” என்றார்-
இந்த ஸ்லோகத்தின் பீற் பகுதியால் இவரது சிறந்த வைராக்யம் என்னும் குணம், மிகுந்த சமத்காரத்துடன் கூறப்படுகிறது
அதாவது, இந்த ராமாநுஜ முநிவர் தமது பிதாவால் உபநயன ஸம்ஸ்காரம் பெற்று ப்ரும்ஹ சர்யத்துடன்
வேத வேதாங்கங்களை நன்கு கற்றறிந்து வைராக்.யத்தை எய்தி, அதன் மேலீட்டால் ப்ரும்ஹசர்யத்திற்கும்
ஸந்யாஸத்திற்கும் நடுவிலுள்௪ கார்ஹஸ்யம், வான ப்ரஸ்தம் என்ற இரண்டு ஆஸ்ரமங்களையும் கண்ணெடுத்தும் பாராது
இவர் அநாதரவு செய்ததால் அவைகள் மிகுந்த வெட்கத்தை எய்தின என்கிறார், மஹார்யர் ரஸோக் தியாலே,
வைகுண்ட என்றும் சப்தம் எம்பெருமானையும், அவருக்கு வாஸ ஸ்தானமான பரமபதத்தையும் கூறுவதுபோல
இங்கும் வாநாசல என்ற பதம் எம்பெருமானையும் அவருடைய திருப்பதியான ஸ்ரீ வரமங்கல நகரையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
தற்காலத்தில் வ்யவஹாராமம் இவ்வாறே உண்டாயிருக்கலாம்.
“தேசிக சிகாமணிகளான எம்பெருமானார் மணவாளமாமுனிகள் போன்றவரும் சிறிது காலம்
தர்மங்களை அதுஷ்டி.த்து நம்மை ஆதரித்திருக்க, அந்தோ நம்மை இவர் கண்ணெடுத்து ஏற இறங்கவும்
பார்க்கவில்லையே” என்று இவரால் ஏற்கப்படாத கீருஹஸ் தாஸ்ரமம் வெட்கமுற்றதாம்.
இது வாநப்ரஸ்தத் திற்கும் உபலஷணம்.
இத்தால் அவ்விருவரிலும் காட்டிலும் வைராக்ய விஷயத்தில் இவர் சிறப்புற்றவர் எனக் கூறப் பட்டதாகும்.
மணவாள மாமுனி கருஹஸ்த தர்மங்களை அநுஷ்டித்து வரும் காலத்திலேயே அவரது ஸம்பந்தம் பெற்ற இவர்,
தமது வைராக்யத்தின் மேலீட்டால் . ஸம் ஸாஸ்ரமத்தை எய்தினார் என்பதை யதிந்தர ப்ரவண ப்ரபாவம், ககநகிரிமுநி சரிதம் முதலியவற்றில் காணலாம்.
இச் சிறந்த வைராக்யம் பூண்ட இராமாநுஐ முநியை வணங்குகிறேன் என்கிறார்-
——————
அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில் அழகிய மணவாள மா முனிகளின் திருவடிகளில் முதலிலேயே இவர் ஆஸ்ரயித்து,
அவருடைய கருணை பாயும் முதல் இடமாயுமானவர் இவர் என்று கூறுகிறார்.
அதாவது இவரே அவரது முதல் சிஷ்யர். இவரது கால் நலத்தாலே மற்றெல்லா சிஷ்யர்களும்
தம்மை ஆஸ்ரயித்துத் தாம் பெருமை எய்தியதாக
மாமுனிகளும் நினைத்தன்றோ இவருக்கு “*பொன்னடிக்கால் ஜீயர் ‘” என்று திருநாமம் சாற்றியதும்.
எனவே அவர் கருணைக்கு முதல் இலக்கு இவர். மேலும் காமம், குரோதம் என்ற தீக்குணங்கள் தம்மிடம் இல்லாததோடு
தம்மை ஆஸ்ரயித்த மற்றையாரின் தீய குணங்களையும் அகற்றுமவர் இவர், என்ற பெருமையையும் கூறுகிறார்.
ரம்ய ஜாமாத்ரு யோந்த்ர ப்ரஸாத ப்ரதமாஸ்பதம்
காமாதி துரிதாபஹம் ராமாநுஜ முநிம் வந்தே–6-
பதவுரை :-
ரம்ய ஜாமாத்ரு யோந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின், :
ப்ரஸாத -அருளுக்கு,
ப்ரதமாஸ்பதம் – முதலாவது ஸ்தானமாகியவரும்,
காமாதி துரிதாபஹம் – காமம் முதலான பாபங்களை அகற்றுமவருமான,
ராமாநுஜ முநிம் – வாநாத்ரி ராமாநுஜ முநிவரை,
வந்தே-வணங்குகின்றேன்.
அழகிய மணவாளமாமுனிகளின் அருளுக்கு முதல் இலக்கானவரும்,
காமம் முதலிய தோஷங்களைக் களைபவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்.
மற்றைய சிஷ்யர்கள் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருமையை உணர்ந்து அவரை ஆஸ்ரயிப்பதற்கு
வெகுகாலம் முன்னமேயே அவர் கிருஹஸ்தாஸ்ரமத்தை யுடையராய் திரு நகரியில் எழுந்தருளியிருன்த போதே,
இந்த ராமாநுஜ முனிவர் அவர் திருவடிகளில் ஆஸ்ரயித்து அவரது கருணைக்கு முதல் பாத்திரமாய்
அவர் பாதரேகா ஸமராயிருந்து, பின்பு (மாமுனிகளை) ஆஸ்ரயித்த அண்ணன், அப்பிள்ளை, அப்பிள்ளார்
முதலியோருக்கு ஆஸ்ரயணத்தில் இவர் புருஷகார மாயிருந்தமையாலும் அவருடைய கருணைக்கு முதல் விஷயம் இவரே.
மேலும் இவர் வைராக்யசாலி யாகையால் காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் என்று சொல்லப்படும்
உடன் பிறந்த சத்ருக்களாகிய ஆறு தீய குணங்களையும் தாம் அகற்றியதோடு தம்மைச் சார்ந்தோரையும்
அத் தீய குணங்கள் சாரா வண்ணம் நீக்கும் சக்தி வாய்க்தவர்.
**காமாத் தீரோதோபிஜாயதே க்ரோதாத் பவதி ஸம்மோஹ :’” இத்யாதிகளாலே காமாதிகளின் கொடுமை ஸ்ரீ கீதையில்
கண்ணனால் அருளிச் செய்யப்பட்டது. இவைகளைப் பாப வாசகமான துரித சப்தத்தாலே கூறியது,
அப் பாபத்துக்கு இத் தீய குணங்கள் காரணமாகையாலே. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ராமானுஜ முகியை வணங்குகின்றேன்.
————-
அவதாரிகை:–
கீழ் ஸ்லோகத்தில் இவர் ராக த்வேஷாதிகள் அற்றவரெனக் கூறினார்.
இந்த ஸ்லோகத்தில் ராக த்வேஷங்களே, நமக்கு நிலமன்று; நாம் இங்கிருக்க இயலாது?” என்று
இவரை விட்டுத் தாங்களே கை வாங்கிள்’ என்றும், இவர் அழகிய குணங்களுக்கு உறைவிடமென்றும்,
உத்தம புருஷ லக்ஷணம் வாய்ந்தவரென்றும் அருளிச் செய்கிறார் –
ரமணிய குணாகரம் ராக த்வேஷ விநிர் முக்தம்
ராஜீவ லோசனம் ராமாநுஜ முநிம் வந்தே–7-
பதவுரை:–
ரமணிய குணாகரம் – அழகிய குணங்களுக்கு உற்பத்தி ஸ்தாநமாயும்,
ராக த்வேஷ விநிர் முக்தம் – ராக த்வேஷங்களால் விடப் பெற்றவரும்,
ராஜீவ லோசனம் – தாமரைப் பூவின் இதழ் போல் அழகிய நீண்ட கண்களை யுடையவருமான,
ராமாநுஜ முநிம் – ராமாநுஜ யோகியை,
வந்தே – வணங்குகிறேன்.
நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், விருப்பு வெறுப்பு ஆகியவைகளிலிருந்து விடுபட்டவரும்,
தாமரை இதழ் போன்ற திருக் கண்களை யுடையவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்.
இம் முனிவர் அனைத்து நற்குணங்கள் உற்பவிக்கும் கனியாவார். -ராக த்வேஷங்களால் விடப்பெற்றவர்.
அதாவது ௮வை இவரிடம் முன்பிருந்து இவருடைய முயற்சியால் அகற்றப்பட்டவையல்ல;
அவைகளே இவரைக் கண்டு பயந்து ஓடுங்க, **இவர் நமக்கு நிலமன்று” என்று இவரை விட்டு நீங்க.
இத்தால் இவர் ராக த்வேஷங்களின் வாஸனையும் அற்றவர் எனக் கூறப்பட்ட.தாகும்.
தாமரை இதழ் போன்ற அழகிய . திருக் கண்களை யுடையவர் எனக் கூறியதால் இவரது மஹாபுருஷ லக்ஷண மும்,
அழகிய வரதர் என்ற திரு நாமத்துக்குக் காரணமான இவரது அழகும் கூறப்பட்டனவாகும்.
இத்தகைய ராமாநுஜ முநியை: வணங்குகின்றேன்.
——————
அவதாரிகை:–
கீழ் ஸ்லோகத்தில் இவரது தோஷ.மின்மையும் கல்யாணகுணங்களும் ஸெளந்தர்யமுமாகி’யவை கூறப்பட்டன.
இதில் இவரது வைராக்யத்தின் பெருமை விஸ்தரிக்கப்படுகிறது.
ய வைராக்ய ஸம்பத் பவ்காத்மஜே புரா உத்பத்திம் அலபத
தத: ய சாந்தே – சாந்தரவே ஸம்ருத்தாம் ருத்திம் மிரந்தரம் ௮காத்
ஸா இயம் யம் ஸமேத்ய புவநே நைகதா வித்யோததே ,
குரு வரம் தம் ராமாநுஐயோகீம் வயம் சச்வத் பஸ்பேம—-8-
பதவுரை:–
ய – எந்த,
வைராக்ய ஸம்பத் – வைராக்யமென்னும் ஐஸ்வர்யம், பவ்காத்மஜே – வாயுவின் புத்திரனான அநுமானிடம்,
புரா – முற்காலத்தில்,
உத்பத்திம் – உற்பத்தியை,
அலபத – அடைந்ததோ,
தத: – அதன் பிறகு,
ய–எந்த வைராக்யமென்னும் ஐஸ்வர்யம்,
சாந்தே – அடக்கப் பட்ட மனதையுடைய,
சாந்தரவே – சந்தநு மஹாராஜனின் புதல்வனான பீஷ்மரிடம்,
ஸம்ருத்தாம் – பூர்ணமான,
ருத்திம் – ஸம்ருத்தியை,
மிரந்தரம் – இடைவிடாது, நித்யமாக என்றபடி,
௮காத் – அடைந்ததோ,
ஸா – அப்படிப் பட்ட,
இயம் – இந்த வைராக்யம் என்னும் ஐஸ்வர்யம்,
யம் -எந்த ராமானுஜ முநியை,
ஸமேத்ய – அடைந்து,
புவநே -உலகில்,
நைகதா- அநேக விதமாக,
வித்யோததே – ப்ரகாசிக்கின்றதோ,
குரு வரம் – ஆசார்யர்களுள் சிறந்தவரான,
தம் -அந்த,
ராமாநுஐயோகீம் – இராமானுஜ முநியை,
வயம் -நாம்,
சச்வத் – அடிக்கடி,
பஸ்பேம-பார்க்கக் கடவோம்,–கண்டு களிக்கக் கடவோம் என்றவாறு.
வைராக்கியமாகிற செல்வமானது வாயுகுமாரனிடத்தில் உற்பத்தியை அடைந்தது. பின்பு அது சந்தனு புத்ரரான பீஷ்மரிடம் நன்கு வளர்ச்சியை அடைந்து அது இப்பொழுது வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை அடைந்து பலவிதமாகப் பிரகாசிக்கிறது. அந்த ஜீயர் ஸ்வாமியை நாம் எப்பொழுதும் கண்களால் கண்டு களிப்போம்
வைராக்யம் என்பது உலகில் மிகச் சிறந்த ஓர் ஐஸ்வர்யமாகும் ; அது எல்லோருக்கும் கிடைத்த லரிது.
அவ்வைஸ்வர்யம் முதலில் வாயு புத்ரனாகிய அநுமானிடமே. உண்டாயிற்று.
அதன் பிறகு மனச் சாந்தி பெற்ற சந்தநு மஹாராஜனின் குமாரனாகிய பீஷ்மரிடம் நிரந்தரமாக மிக விருத்தியைப் பெற்றது.
இவ் விருவரை யொழிந்த மற்றையோருக்கு இவ் வைஸ்வர்யம் இருந்ததில்லை என்பதை
*:௮கீயத்ர பீஷ்மாத் காங்கேயா தர்யத்ரச ஹ.நூமத: | ஹறிணீ குர மாத்ரேண சர்மண மோஹிதம்:ஐகத் ‘” என்ற வசனத்தால் அறிகிறோம். :
இந்த ஸ்லோகத்தின் கருத்து ** கங்கா புத்திரனான பீஷ்மனையும் அநுமானையும் தவீர்த்து மற்றைய உலகம்
மானின் குளப்படி போன்ற ஸ்திரீகளின் அவயவ விசேஷத்தாலே மோஹ முற்றதே யாகும்”’ என்பதாம்.
பீஷ்மரின் வைராக்யம் அநுமானது வைராக்யத்தை விடச் சிறந்ததாகும். ஏனெனில்,
மிகுந்த வீர்யத்தையும் ஐஸ்வர்யத்தையும் உடையராய் எல்லா போக்யங்களையும் அனுபவிக்கத் தகுதி வாய்ந்த அரசிளங் குமாரரல்லவா அவர்?
அத்தகையவர் தமது பிதாவின் விருப்பத்தை உணர்ந்து மேலும் பிதா காம போகங்களை அநுபவிக்க வேண்டியதற்காகவே
தமது யெளவனப் பருவத்திலும் தமது போகத்தை சபத பூர்வமாகத் துறந்து உலகறி யச்செய்து உயிருள்ளளவும்
ப்ரும்ஹசர்யத்தையே அநுஷ்டித்துப் போந்த மஹா வைராக்யசாலி யாயிற்றே அவர்,
மேலும் தமது ப்ராதாவான விசித்ர வீர்யன் நிமித்தமாக ஸ்வயம்வரத்தில் பலாத்காரத்தால் கொண்டு வரப்பட்ட
காசி ராஜன் மகள் அம்பா என்பவள், தான் ஏற்கனவே ஸால்வராஜனை வரித்திருப்பதாயும்
தனது மனம் அவனையே விரும்புவதாகவும் சொல்ல, பீஷ்மரும் விசித்ர .வீர்யனும் அவளை அவள் விருப்பப்படி. செய்ய அநுமதித்தார்கள்.
ஆனால் அவள் ஸால்வனைச் சந்தித்து தன்னை மணக்கும்படி கேட்க **பிஷ்மரால் பலாத்கரித்து வீர்யத்தால் கொண்டு போகப்பட்ட
உன்னை நான் விவாஹம் செய்து கொள்ள மாட்டேன்”” என்று திரஸ்கரித்து விட்டான்.
பிற்கு அவள் பீஷ்மரிடம் வந்து, “*“ஸால்வன் நிராகரித்து விட்டபடியா லும் நீரே வீர்யத்தால் என்னைக் கொண்டுவந்தபடியாலும்
நீரா வது என்னை விவாகம் செய்துகொள்ள வேண்டும்; இல்லையேல் தவம் செய்தாவது உமது உயிரை மாய்க்கும்
உபா யத்தைக் கைக்கொள்வேன்”” என்று சபதம் பண்ணினவிடத்திலும் உயிரையும் மதியாது தாம் முன்
பண்ணிய சபதத்தின்படி ப்ரும்ஹசர்யத்தைப் பேணிப் போந்த மஹாநுபாவருமாவர் அவர்.
இப்படி அவ்விருவரிடமும் காணப்பட்ட வைராக்யம், இக் கலி காலத்திலும் விரக்தர்களில் தலைவரான
இவரிடம் காணப்படுவதால் மிகவும் ப்ரகாசிக்கிறது என்றார்.
காமக்ரோதாதி தோஷமே நிறைந்த இக். கலியிலும் ஒருவரிட.ம் அந்த வைராக்ய மிருந்ததால் அது அபிவருத்
தியை யடைந்து ப்ரகாசிக்கின்றது எனக் கூறப்பட்டது.
அத்தகைய வைராக்யம் பூண்ட ராமாநுஐ முநிவரை அடிக்கடி காணக்கடவோம்; கண்டு களிப்பெய்தக் கடவோம் – என ப்ரார்த்திக்கிறார்.
இக்காலத்தில் அத்தகைய வைராக்யம் ‘வாய்ந்தவரை தர்சிப்பதும், அதிலும் அடிக்கடி தர்சிப்பதும்
கிடைக்கக் கூடிய தல்லவாகையால் அதை ப்ரார்த்திக்கிரார்
—————
அவதாரிகை:–
கீழ் ஸ்லோகத்தில் இவரது வைராக்யத்தின் பெருமை கூறப்பெற்றது.
இதில் சிறந்த பண்டிதர்களாலும் மெச்சப்படும் இவரது கரந்த வ்யாக்யான சக்தியும்
மிகவும் தூய்மையான ஆசாரமும் கூறப்படுகின்றன
யஸ்ய வ்யாகீயா விதக்த ஸுரி பரிஷத் சித்த அபஹார ,க்ஷமா யத் தைநந்தின ,
ஸத்க்ரியா யதிவராதி ஆசார ஸக்மாத்ருகா ப்வகந்தி ஸெளம்ய வரேச யோக
சரண த்வந்த அரவிந்த ஆஸ்ரயம் அமலம் ஞாநாதி பூர்ண
(ஆசயம்) தம் ராமாநுஜயோவர்யம் வந்தே–9-
பதவுரை:–
யஸ்ய – எந்த ராமாநுஜ முனிவருடைய,
வ்யாகீயா – உபய வேதாந்த கிரந்தங்களுக்கும் மந்த்ர மந்த்ரார்த்தங்களுக்கும் கூறப்படும் தெளிவுரை வ்யாக்யானம்,
விதக்த – மிகவும் ஸமர்த்தர்களான,
ஸுரி பரிஷத் – பண்டித கோஷ்டியின்,
சித்த – மனத்தை,
அபஹார – கவர்வதில்,
க்ஷமா – தகுதி வாய்ந்ததாக ஆகிறதோ,
யத் – எவரது,
தைநந்தின -ப்ரதி தினம் அதுஷ்டிக்கப்பட வேண்டடிய, ஸத்க்ரியா-சிறந்த அதுஷ்டாநங்கள்,
யதிவராதி- எம்பெருமானார் மூதலானாருடைய,
ஆசார-அநுஷ்டானங்களை
ஸக்மாத்ருகா:- ஸ்லாக்யமான மூல ப்ரமாணமாகக் கொண்டனவாக,
ப்வகந்தி-ஆகின்றனவோ,
ஸெளம்ய வரேச யோக – அழகிய மணவாள மாமுனிகளின்,
சரண த்வந்த – இரு திருவடி. களாகிற,
அரவிந்த – தாமரை மலரை,
ஆஸ்ரயம் – தமக்குப் பற்றாசாகக் கொண டவரும்,
அமலம்-தோஷங்களற்றவரும்,
ஞாநாதி -ஞாநம் பக்தி முதலியவற்றால்,
பூர்ண – நிறைந்த,
(ஆசயம்) மனத்தை யுடையவருமான,
தம் – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜயோவர்யம் – ராமானுஜ முனிவரை,
வந்தே -. நமஸ்கரிக்கின்றேன்.
யாருடைய வ்யாக்யானமானது வித்வத் ஜனங்களின் மனதை கவர்ந்திழுக்கக்கூடியதோ, யாருடைய நித்யானுஷ்டேயங்களான நற்கிரிசைகள் மற்ற யதிவரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனவோ, அத்தகையவரும், குற்றமற்றவரும், ஞானம் முதலிய நற்குணங்கள் நிறைந்தவரும், அழகிய மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரையினை ஆச்ரயித்தவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியை ஸேவிக்கிறேன்.
ஸ்ரீ பாஷ்ய, ‘ பகவத் விஷய, மந்த்ரார்த்த ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு இம் முனிவர் அருளிச் செய்யும்
தெளி பொருள் விளக்கம் (வ்யாகீயானம்),
மிகவும் பாண்டித் யம் பெற்ற பண்டித ஸமூகங்களின் மனதையும் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தது.
இது இந்த கரந்தகாரருக்கும் மற்றும் இவரைப் போன்ற மற்ற மஹா வித்வான்௧ளான அஷ்டதிக்கஜங்களுக்கும்
நேரே அநுபவ விஷயமாதலால் இவ்வாறு கூறினார். இவரது ஆசரணைகள்,யதிகட்சிறைவனான ஸ்ரீ ராமானுலமுநி முதலிய பெரியோர்களின் அநுஷ்டாகங்களை த் தமக்கு மூல ப்ரமாண (க்ரந்த) மாகக் கொண்டவை யாகும்.
மாத்ருகா. என்பது முதலில் ஒருவரால் எழுதப்பட்ட (மூலபூதமான) முதலாவதான சுவடி;
அதுவே பின்னர் பல சுவடிகளாக வெளிவருவதற்குக் காரணமா யிருப்பதால் அது அவ்வாறு மாத்ருகா எனக் கூறப்படும்.
அதுபோலவே முன்னர் எம்பெருமானார் முதலிய யதிகள் அனுஷ்டித்த அநுஷ்டானங்களே இவரது
ஸத்கர்மா நுஷ்டாகங்களுக்கு மூலங்களாகும்.
எனவே இவர் பெரியோர்களின் அநுஷ்டானங்களில் எள்ளளவும் பிற்ழாதவர்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருப்பாத மலர்களையே தமக்குப் பற்றாசாகக் கொண்டவர்.
எனவே தோஷங்கள ற்றவர். ஞானம், பக்தி, விரக்தி என்னும் குணங்கள் நிறைந்த மனதையுடையயவர்.
இப்படிப் பெருமை வாய்ந்து ப்ரஸித்தி பெற்ற ராமாநுஐ முநிவரை வணங்குகின்றேன்.
——————
அவதாரிகை:–
கீழ் ஸ்லோகத்தில் எல்லா க்ரந்தங்களுக்கும் இவர் அருளிச் செய்யும் பொருள் விளக்கம் பண்டிதர்களின் மனதையும் கவரும் தன்மையது;
அநுஷ்டானமும் பெரியோர்களின் அநுஷ்டாநங்களில் நின்றும் கொஞ்சமும் நழுவாதது என்றார்.
இதில் இவரது தெளிபொருள் விளக்கத்தால் இவரது கோஷ்டியின் பக்கத்திலிருந்து இதைக் கேட்டுக்
கொண்டிருக்கும் பக்ஷிகளும், ** பரதத்வம் ஸ்ரீமந்நாரா யணனே ” என்று விளங்கச் சொல்லும் சக்தி
வாய்ந்தன வாகின்றன என்று தாம் ஆச்சர்யமுறுகிறார்.
யத் கோஷ்டி ஸவித ஸ்திதா சகுநா:௪- பரம்ஜ்யோதி: –
பரம் தத்வம் வேத ரஹஸ்ய ஸார படிதம்
ஸ்ரீபதி நாராயண:- ம்ச சதுராககாதி விபுதா ததீ சேஷ பூதா
இதி பரஸ்பரம் வ்யாகுர்வந்தி தம் ராமாநுஜம் பஜே–10-
பதவுரை:–
யத் – ஏந்த ராமாநுஜ முனிவருடைய,
கோஷ்டி – காலக்ஷேப கோஷ்டியின்,
ஸவித – பக்கங்களிலே,
ஸ்திதா:- இருக்கின்ற,
சகுநா:௪-பக்ஷிகளும்,
பரம்ஜ்யோதி: – பரஞ்சோதியென்றும்,
பரம் தத்வம்-பர தத்வமென்றும்,
வேத ரஹஸ்ய -வேதங்களில் ரஹஸ்யங்களான உ.பநிஷத்துக்களின்
ஸார – ஸாரமான நாராயணாநுவாகத்தில்,
படிதம் -:**நாராயண பரம் ப்ரஹ்ம’” என்றும்,
** நாராயண பரோஜ்யோதி என்றும், :
**தத்வம் த்வம் நாராயண: பர:? என்றும், *,
சிவமச்யுதம்?” என்றும் படிக்கப்பட்ட பொருள்,
ஸ்ரீபதி:- லக்ஷ்மீ வல்லபனான,
நாராயண:- நாராயணனே ஆவான்,
ம்ச — மேலும்,
சதுராககாதி-பிரமன் முதலிய,
விபுதா:- தேவர்கள்,
ததீ—அந்த நாராயணனுக்கு,
சேஷ பூதா:- சரீரமாய்க் கொண்டு சேஷப் பட்டவர்கள்,
இதி – என்று,
பரஸ்பரம் – ஒன்றுக் கொன்று,
வ்யாகுர்வந்தி – வ்யாக்யானம் செய்கின்றனவோ,
தம் – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜம் – ராமாநுஜ முனியை,
பஜே – ஸேவிக்கிறேன்-
யாருடைய கோஷ்டியில் அருகில் இருக்கும் பக்ஷிகளானது “ஸ்ரீயப்பதியான நாராயணனே வேதாந்தப் பிரதிபாத்யன்,
பரம் ஜ்யோதி, பரம் தத்த்வம், எப்பொழுதுமுள்ளவன்” என்றும்,
“மற்ற நான்முகன் தொடக்கமான தேவர்கள் அவனுக்கு சேஷபூதர்கள்” என்று ஒன்றுக்கொன்று பேசுகின்றனவோ,
அந்த ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்
இந்த ராமாநுஜ முநிவர் வைதிக வாக் யங்களில்
“*ஸதேவஸோம்ய இதமக்ர ஆஸீத்”,
ஆத்மாவா இதமக்ர ஆஸீத்”,
““ப்ரம்ஹவா இதமக்ர ஆஸீத்” என்று ஸாதாரணங்களான “ஸத், ஆத்ம, ப்ருஹ்ம” சப்தங்களாலும்
,விசேஷமான நாராயண சப்தத்தாலும் காரண வஸ்துவை கூறிக், “காரணந்து த்யேய:” என்று அதையே
தத்வம் எனக் கூறுவதால்,
இவை வெவ்வேறு தத்வங்களா? அல்லது ஓன்றேயா? . என விசாரிக்கும்போது
வேதங்களின் ஸாரங்களான உபகிஷத்துக்களிலும் ஸார
மாகக் கொள்ளப்படும் நாராயணாநுவாகத்தில்
** ஆத்ம, ப்ரஹ்ம, ஜ்யோதி” முதலான சப்தங்களை நாராயண பதத்தோடு ஸமாகவிபக்தி (வேற்றுமை) கமாய்
** நாராயண பரம் ப்ருஹ்ம தத்வம் நாராயண: பர: | நாராயண பரோஜ்யோதிராத்மா நாராயண: பர:”” இத்யாதி வாக்யங்களால்
படிக்கப் பட்டிருப்பதால் ஸாமாந்ய விசேஷ ந்யாயத்தாலே ஐகத்துக்குக் காரணமான பர தத்வம் லக்ஷ்மீபதியாகிய நாராயணனே;
மற்றய ப்ரும்ஹ ருத்ரா திகள் பரதத்வமன்று; அவர்கள்
ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து உண்டானவர்கள்,
அவனுக்கு சரீரமாய்க் கொண்டு சேஷ பூதர்கள் என்று உபநிஷத்து வாக்கயங்களை விளங்கக் கூறி பரதத்வ ஸ்தாபனம் செய்வது: அவரது வழக்கமாகலால்,
அவரது கோஷ்டியின் பக்கங்களிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும், ஞானத்திற்கு அடை வல்லாத பக்ஷிஜாதிகளும், அந்த வாக்கியங்களைச் சொல்லி
பரதத்வ’ஸ்தாபனம் பண்ணாகின் றன” என்கிறார். இதனால் ஞானத்திற்கு இட்டுப் பிறவாத பகஷிகளும் நன்கு அறிந்து கொள்ளும்படி விஷயங்களைக் கற்பிக்கும் விஷயத்தில்
இவ ருக்குள்ள ஆற்றல் நன்கு . வெளியிடப்பட்டது.
இங்கு“* பரஸ்பரம் வ்யாகுர்வந்தி ” எனக் கூறியதால் அப்பஷிகளிலும் ஒருவர்க்கொருவர் ஞானத்தில் குறைந்தவர்கள் இல்லை;
ஆயினும் ‘*போதயந்த: பரஸ்பரம்” என்ற’ கணக்கலே’
“ஒன்றுக்கொன்று போதிக்கின்றன என்று கூறப்பட்டதாகும்.
ஸாமாந்ய விசேஷ பர்யவச மாவது *நிர்விசேஷம்.
ஸாமாந்யம் ‘” என்கிறபடியே ஒரு ஸாமான்ய பதத்தை
விசேஷ போதக சப்தத்தைக் கொண்டு விசேஷ விஷயமாக
இப் பொருள்கொள்வது.
** பசுமா யஜேத ”’ என்று விதிவரக் யத்தில் நாற்கால் ஐந்துக்கள் எல்லாவற்றையும் கூறும் பசு சப்தத்திற்கு
**ச்சாகஸ்ய வபாயா:”” என்ற மந்த்ரத்தைக் கொண்டு ௮ப்பசு என்பது **ஆடு” என நாமிர்த்தாரணம் செய்வதாகும்.
இவ்வாறு ஞானஹீகர்களையும் ஞாநவான்களாக்கும்
ராமாநுஜ முனிவரை வணங்குகின்றேன்.
—————–
அவதாரிகை:–
கீழ் ஸ்லோகத்தில் ஸமீபத்தில் இருக்கும் பக்ஷிகளுக்கும் வ்யாக்யானம் செய்யும்படி, சக்தியை விளைவித்து
இருக்கும் இவரது ஞானத்தின் பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில் இவருடைய உபந்யாஸ கோஷ்டியில்’சேரவும் வேண்டா; பக்கத்திலிருக்கவும் வேண்டா.
இவரது கருணை அலை யெறியும் கடைக் கண்ணால்’கடாக்ஷிக்கப் பெற்றவர்களே
அர்த்த பஞ்சக ஞானம் பெற்றவருள் சிறந்தவர்கள் என்ற அதிசயத்தைக் கூறி,
வானமாமலை எம்பெருமானுக்கு இவர் செய்த சாஸ்வதமான கைங்கர்யங்களாலும்
இவர் அதிகம் பெருமை வாய்ந்தவர் என்கிறார்
யேகே௫ித் யத் காருண்ய ஸுதா தரங்க விலஸத் நேத்ராஞ்சல
ப்ரேக்ஷிதா தே இமே அர்த்த பஞ்சக விதாம் ஸங்கீயாவதாம் முக்யா
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய மஹிதை த்ருவை கைங்கர்ய ஜாதை ,
பூயாச் ஆஸ்ரித கல்பக அயம் ராமாநுஜ முநி விஜயதே-11-
பதவுரை:–
யேகே௫ித் – எந்தச் சில மனிதர்கள்,
யத் – எந்த முனிவரின்,
காருண்ய – கருணை யாகிற,
ஸுதா – அம்ருதத்தின்,
தரங்க – அலைகளாலே,
விலஸத் – விளங்குகின்ற,
நேத்ராஞ்சல – கண்ணின் கடையினாலே,
ப்ரேக்ஷிதா: – பார்க்கப்பட்டனரோ,
தே – அப்படி.பாக்யம் பெற்ற,
இமே- இம் மனிதர்கள்,
அர்த்த பஞ்சக விதாம்-ஐந்து அர்த்தங்களையும் நன்கறிந்த, ஸங்கீயாவதாம் -பண்டிதர்களுள்,
முக்யா: – தலை சிறந்தவர்கள் ஆகிறார்கள்,
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய – ஸ்ரீ வானமாமலை எம்பெரு
மானுக்குச் செய்தவையும்,
மஹிதை:-கொண்டாடத்தக்கவையும்,
த்ருவை:-சாச்வதங்களுமான,
கைங்கர்ய ஜாதை:-கைங்கர்யங்களின் ஸமூகத்தினால், பூயாச்-சிறப்பு வாய்ந்தவரும்,
ஆஸ்ரித கல்பக: – தன்னை ஆஸ்யரயித்தவருக்கு கல்பக வ்ருக்ஷம் போல் அபேக்ஷிதங்களைக் கொடுக்குமவருமான,
அயம்-இந்த,.
ராமாநுஜ: – ராமானுஜன் என்னும்,
முநி :-முனிவர்,
விஜயதே – மற்றெல்லோரிலும் சிறந்து விளங்குகின்றார்.
.
காருண்யமாகிற அம்ருத அலைகள் விளங்காநிற்கும் எவருடைய கடைக்கண் பார்வைக்கு இலக்கானவர்கள்
அர்த்தபஞ்சக ஞானம் பெற்ற வித்வான்களில் தலைவராக ஆவாரோ,
அத்தகைய ராமானுஜ ஜீயர் ஸ்வாமி, சிஷ்யர்களுக்கு கற்பகவ்ருக்ஷம் போன்றும்,
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்குச் சிறந்த பல கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் சிறந்து விளங்குகின்றார்.
அர்த்த பஞ்சகமாவது:-
1) ஸ்வஸ்வரூபம் எனப்படுவது, ஜீவாத்மாவின் ஸ்வரூபம்,
(2) பரஸ்வரூபம் எனப்படுவது, பரமாத்மாவின் ஸ்வரூபம்,
(8) புருஷார்த்த ஸ்வரூபமெனப்படுவது, முமுக்ஷுக்களின் விருப்பத்திற்கு விஷயமான மோக்ஷஸ்வரூபம்,
(4) உபாய ஸ்வரூபமெனப்படுவது, அம் மோகஷத்தை அடைய சாஸ்த்ரங்களால் ஸாதனமாகக் கூறப்பட்டவை,
(5) விரோதி ஸ்வரூபமெனப்படுவது மோக்ஷத்தைப். பெற விரோதியாய் இடைமறித்து நிற்கின்ற அவித்யை, கர்மா வாஸநா ப்ரக்ருதி ஸம்பந்தங்கள் முதலியனவாகும்.
இவ்வர்த்த பஞ்சகத்தையே ஸகல வேத சாஸ்த்ர புராணங்களும் கூறுகின்றன.
இவ்வர்த்த பஞ்சக ஞானமின்றி உஜ்ஜீவனமில்லை.
இத்தகைய அர்த்த பஞ்சக ஞாநமும் வெகு கிலேசப்பட்டு சாஸ்த்ராப்யாஸங்களால் ஸாதிக்கப்பட வேண்டி யிருக்க,
இந்த ராமாநுஜ முனிவருடைய கருணா பூர்ணமான கடாக்ஷ லேசத்தினாலே உண்டாகிறது. நிற்க
இவரது கருணா பூர்ணமான கடாக்ஷம் தனக்கு விஷயமானவர்களை அர்த்த பஞ்சகங்களை
நன்குணர்ந்த பண்டிதர்களுள் ப்ரதாநர்களாகவும் ஆக்குகிறது என்று இவருடைய பெருமை கூறப்பட்டது.
இங்கு தாம் நேரில். கண்டறிந்ததுடன் மற்றவருக்கும் ப்ரத்யக்ஷிக்கலாம் எனத் தோற்றும்படி
“*இமே”” எனக் கூறுவதால், இதில் அர்த்தவாதமில்லை என்கிறார்.
மேலும் இந்த ஸ்வாமி ஸ்ரீ வானமாமலை எம்பெருமானுக்குச் செய்துள்ள பல சாஸ்வதமான கைங்கர்யங்களாலும் போற்றத்தக்கவர்
தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு கல்பக விருக்ஷம்போல் அபேக்ஷிதங்களை அளிக்கவல்ல பெரியவர்.
எனவே இந்த வானமாமலை ராமாநுஐ முனிவர் மற்றையோர்களில் சிறப்புடையராய் விளங்குகின்றார்.
————–
அவதாரிகை:–
கீழ் ஸ்லோகத்தில் இம் முனிவரின் கடாக்ஷம் முக்தி ஸாதநமான அர்த்தபஞ்சக ஞானத்தை எல்லோருக்கும்
அளிக்க வல்லதென்று பொதுவாகக் கூறியவர், இதில் மிகவும் தண்ணியனாய்,
அஹங்கார மமகாரங்கள் நிறைந்தவனான என்னை. உஜ்ஜீவிப்பிக்க முயற்சிக்கும் பெரியோரிடித்திலும்
விமுகனாய்த் திரிகின்ற மேட்டு மடையான என்னிடமும் இக் கருணை பாலிபாயா நின்றது என்கிறார்.
அஸ்தி ஸ்காயு வஸா வபை மாம்ஸ நி௫தே அநித்யே விகாராஸ்பதே
அகஹமி தேஹே அஹம்மதிகரே – சப்தாதி ஸேவாப்ரே
ஸ்ரீமத் வைஷ்ணவ மத்பர ஆர்ய விமுகே மயி அபி ய தயாம் அகார்ஷீத்
வ்யோம மஹா௫ரே: மூல த்ரவ்யம் தம் ராமாநுஜம் பஜே – 12-
பதவுரை:–
அஸ்தி – எலும்பு என்ன,
ஸ்காயு – சிறு நரம்புகள் என்ன,
வஸா-வபை என்ன,
௮ஸ்ரஃரகீதமென்னடி
மாம்ஸ – மாம்ஸமென்ன,
நி௫தே – இவைகள் செறிந்ததும்,
அநித்யே – அநித்யமானதும்,
விகாராஸ்பதே – பால்யம் பெளவனம்,பருப்பது,இளைப்பது முதலிய வேறுபாடுகளுக்கு உறைவிடமாயும்,
அகஹமி – உண்மையில் அஹம் என்னும் பதத்திற்கு அர்த்தமல்லாததுமான,
தேஹே – சரீரத்திலே,
அஹம்மதிகரே – நானென்று அஹம்புத்தியைப் பண்ணுமவனும்,
(ஆதலால்)
சப்தாதி ஸேவாப்ரே-சப்தாதி விஷயங்களில் ப்ராவண்யத்தால் அவைகளை அனுபவித்துப் போருமவனும்,
(ஸ்ரீமத் விமுகே) ஸ்ரீமத் வைஷ்ணவ – பரம ஸாத்’விகர்களாய் பகவத் ஸம்பக்தத்திலே மூட்டும் அடியார்களி டத்திலும்,
மத்பர – ஆர்ய – என்னை உஜ்ஜீவிப்ப திலேயே நோக்குள்ள ஆசார்யர்களிடத்திலும்,
விமுகே – வைமுக்யத்தை யுடையனான,
மயி அபி- என்னிடத்திலும்,
ய:-எந்த முனிவர்,
தயாம்-தயையை,
அகார்ஷீத் – செய்தாரோ”
வ்யோம மஹா௫ரே: – வானமாமலை அப்பனுக்கு, பரிபணம்-
மூல த்ரவ்யம், முதல்- போன்ற,
தம் ராமாநுஜம் – அந்த ராமாநுஜ முனிவரை,
பஜே – ஸேவிக்கின்றேன்.
எலும்பு. நரம்பு, கொழுப்பு, உதிரம், சதை இவற்றின் கூட்டுரவானதும், மாறுபாடுடையதும், அழியக்கூடியதுமான, இந்த நான் அல்லாத உடம்பில், நான் என்ற எண்ணத்தை உடையவனும், தன்னை நோக்கிக்கொண்டு போரும் ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் பாராமுகமாக இருப்பவனுமாகிய அடியேன் இடத்திலும் எவர் அருள்புரிந்தாரோ, அத்தகைய வானமாமலை திவ்ய க்ஷேத்தரத்திற்கு நிதியான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்
இந்த ஸ்லோகத்தின் மூன்று பாதங்களாலும் தமது தண்மையைக் கூறி,
நான்காவதால். தம்மிடமும் இம் முனிவரது கருணை ஏறிப் பாய்ந்தது என்கிறார். அதாவது
நான் எலும்பும் சிறிய நரம்புகளும் வபையும் ரத்தமும் மாம்ஸமுமாய்ச் செறிந்தும்,
அநித்யமாயும், . அடிக்கடி பருப்பது இளைப்பது முதலிய வேறுபாட்டுக்கு உறை விடமாயும்,
அஹம் என்ற பதத்திற்கு அர்த்தமான ஆத்மா வல்லாததுமான சரீரத்தில் ஆத்ம புத்தியைப் பண்ணும் ப்ரமத்தை யுடையவன்.
நிற்க இத்தகைய ப்ராந்த்தியால் இந்த்ரியங்களுக்கு எப்பொழுதும் இரை யிட்டுக்கொண்டு
ஹேயமான சப்தாதி விஷயங்களைக் கொண்டே பொழுது போக்குமவன்.
ஸ்ரீ. வைஷ்ணவ ஸம்பத்து நித்யமாய்ச் செல்லும் பரம பாகவதர்களைக் கண்டால் முகத்தை மாறவைத்துச் செல்லுமவன்.
அதிகம் சொல்லி என்? என்னை அங்கீ கரித்து உஜ்ஜீவிப்பிக்க வேணுமென்று ப்ரயத்கம் செய்யும்
ஆசார்யர்களைக் காணிலும் அவர்களைக் கண்ணெடுத்தும் ஸேவிக்கப் பெருத பாக்யஹீநனான தண்ணியன்.
இப்படிப்பட்ட என்னிடத்தும் இவர் தயையைச் செய்து என்னைத் திருத்தி ஆட்கொண்டவர்.
இவரை வானமாமலை எம்பெருமானது மூலதனம் (முதல்) எனக் கொள்ளவேண்டும். ஏனெனில் ?
மூலதனம் உடையவன் அந்த தநத்தைக் கொண்டு தொழில்
வியாபாரம் முதலியவற்றைச் செய்து தனத்தைப் பெருக்கிக்கொள்ளுவது வழக்கமல்லவா?
அதுபோலவே எம்பெருமானும் இவரை அவதரிப்பித்து அம்முனிவராகிற மூலத்தனத்தைக் கொண்டு அகேக ஜீவாத்மாக்களை
நல்வழிப்படுத்தி அவர்களைப் பெறுகிறானாகையால், அவ்வீசனது (பரிபணம்) ‘* மூலதனம் ‘*, இம் முனிவரர் என்று கூறக் குறையில்லை.
இப்படிக் கூறியதால் **சேதந லாபம் ஈஸ்வரனுக்கு” எனப்படும் ஸார தமமான ஸம்ப்ரதாயார்த்தம் வெளியிடப்பட்டதாகும்.
இப்படி ஈஸ்வரனுடைய லாபத்திற்கும் காரணமான இம் முனிவரை ஸேவிக்கின்றேன்.
————
அவதாரிகை:–
கீழ் ஸ்லோகத்தில் இம் முனிவரது கருணை தம்மிடமும் ஏறிப் பாய்ந்தது எனக் கூறினார்.
இதில் இம் முனிவரிடம் காணப்படும் சிறந்த கல்வி, விரக்தி, மற்றுமுள்ள ஸெளலப்ய ஸெளஸீல்யாதிகள்,
பெரியோர் வகுத்த வழியைப் பேணிக் காக்கும் தன்மை, பகவத் விஷயத் திலுள்ள ப்ராவண்யம்,
இவைகளை விரித்து அருள்கிறார்
வித்யாகேளிக்குஹம் விரக்தி லதிகா விச்ராந்தி கல்பத்ருமம்
ப்ரோக்மீலத் குண திவ்ய ரத்ன படலீ நிக்ஷேப மஞ்ஜு5ஷிகாம்
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய பதவீ ரக்ஷைக தீக்ஷா குரும்
ஸ்ரீமத்வான மஹாசலேச நிரதம் ராமாநுஜார்யம் ஸ்ரயே .–13-
வித்யை விளையாடுமிடமாக இருப்பவரும், வைராக்யமாகிற கொடியானது ஓய்வெடுக்கும் கல்பகவ்ருக்ஷம் போன்றும், உயர்ந்த காந்தி பொருந்திய குணங்களாகிற் ரத்னங்களை வைக்கும் பெட்டி போன்றும் இருப்பவரும், எம்பெருமானால் நியமிக்கப்பட்ட ஆசார்ய பீடத்தை நிர்வஹிப்பதிலும் உறுதிபூண்டவரும், ஸ்ரீ வானமாமலை எம்பெருமானிடத்தில் எப்பொழுதும் ஈடுப்பட்டு இருப்பவருமான வானமாமலை எம்பெருமானிடத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியை ஆஸ்ரயிக்கிரேன்.
தன்னைப் பேணி ஆதரித்த முனிவரின் ப்ரபா வத்தைச் சுருங்கக் கூறுகின்றார் இதில்.
இந்த ராமாநுஜ முனிவர் *வித்யாஹ்யேதா: சதுர்தச” என்ற பதினான்கு வித்யைகளையும் கரை கண்டவராகையாலே,
அவைகள் இவரிடம் களிநடம் புரிகின்றன என்கிறார்.
இவர் அவை களுக்கு ரங்கஸ்தலம் (நடனமாடுமிடம்) போலும்,
மிகுந்த வைராக்ய முடையவராதலால் கொடி. மரத்தைப் பற்றிப் படர்வதுபோல் இவரது வைராக்யமென்னும் கொடி
தன்னிஷ்டப்படி மூடப் படர்ந்து விஸ்ராந்தியைப் பெற்று
இளைப்பாறும் கற்பக வருக்ஷம் போன்றவர் இவர்.
மேலும் ஆத்ம குணங்களாகிற சிறந்த ரத்நக் குவியலை வைத்துப் பூட்டிக் காப்பாற்றும் பேழை போன்றவர்.
இத்தால் இவர் எண்ணிறந்த குணங்களுக்கு உறைவிடமென்பது கூறப்பட்டது.
எம்பெருமானாராலே ஸ்தாபிக்கப்பட்ட விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை ரக்ஷிக்கையாகிற முக்ய
தீக்ஷையில் ஆசார்யனாய் வழிகாட்டுமவர் இவர். இப்படி இந்த தர்சனத்திற்கு வழிகாட்டியா யிருப்பது மாத்திரமன்றி
அவ்வழியே ஒழுகி எப்பொழுதும் வானமாமலை தெய்வ
நாயகனிடம் நிரதிசய ப்ரீதி ரூபாபந்நமான பக்தி பூண்டவருமாவர்.
இத்தகைய குணக் கடலான ராமாநுஜ முனிவரெனப்படும் எனது ஆசார்யனை ஸேவிக்கின்றேன்.
—————
அவதாரிகை :–
வாநா மஹாத்திரி ராமாநுஜயோகி மங்களாசாஸமென்னும் ப்ரபந்தத்தின் கடைசியான இந்த ஸ்லோகத்தில்
வாநாசல ராமாநுஜ மூனிவரின் பெருமைகள் கீழ்க் கூறியவை எல்லாம் திரட்டிக் கூறப்படுகின்றன
காந்தோபயந்த்ரு முநிவர்ய தயா நிவாஸம்
வைராக்ய முக்ய மஹநீய குண ௮ம்புராசிம்
ஸ்ரீதேவநாயக ,பத ப்ரணய ப்ரவீணம் யதிபதிம்
ராமாநுஜம் நித்யம் ப்ரணமாமி–14-
பதவுரை:–
காந்தோபயந்த்ரு முநிவர்ய – அழகிய மணவாள மாமுனிகளின்,
தயா-கருணைக்கு,
நிவாஸம் – உறைவிடமாயும்,
வைராக்ய முக்ய- வைராக்யம் முதலிய,
மஹநீய-கொண்டாடத் தகுந்த,
குண – குணங்கட்கு,
௮ம்புராசிம் – கடலாயும்,
ஸ்ரீதேவநாயக – வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகனுடைய,
பத – திருவடிகளில்,
ப்ரணய – ப்ரீதி செய்யும் விஷயத்தில்,
ப்ரவீணம் – சிறந்தவரும்,
யதிபதிம் – யதித் தலைவருமாகிய,
ராமாநுஜம் – ராமாநுஜ முனிவரை, .
நித்யம்- எப்’பொழுதும்,
ப்ரணமாமி – நன்கு வணங்குகின்றேன். ‘
அழகிய மனவாளமாமுனிகளின் தயைக்கு இருப்பிடமானவரும், வைராக்கியம் முதலிய நற்குணங்களுக்கு கடல் போன்றிருப்பவரும், ஸ்ரீதெய்வனாயகப்பெருமானுடய திருவடிகளில் மிகுந்த அன்புடயவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை எப்பொழுதும் வணங்குகின்றேன்.
இந்த ஸ்லோகத்தின் முதல் பாதத்தால் ஸ்ரீமத்-வரவரமுநிகளின் கருணைக்கு வாஸஸ்தான மென்று இவரது பெருமையை யறிவித்தார்.
அவ்வாசார்யனுடைய கடாக்ஷத்தால் இவர் வைராக்யம் முதலிய நற்குணங்கள் ஒருங்குகேரும் குணக்கடலாயினர் என்றார்;
இரண்டாம் பாதத்தால். ‘ கடலாக ரூபித்ததால் வைராக்யாதி குணங்கள் ஒரு நாளும் இவரிடம் குறைந்து காட்டிய தில்லை என்பது தேறும்…
மூன்றாமடியால் இவ்வாத்ம குணங்களடியாக உண்டாகும்
ஸர்வேஸ்வரன் விஷயமான இவரது நிரதிசய ப்ரீதியை நிரூபித்தார்.
நான்காமடியால் கீழ்க் கூறியபடி மாமுனிகளின்
கருணைக்குப் பாத்திரமாய்
அதடியாக உண்டாகிய வைராக்யாதி குணங்களையுடையராய்,
அதடியாக உண்டாகிய பகவத் ப்ரேமத்தை யுடையராகையாலே
யதிகட்கிறைவரானார் என்று இவரது ப்ரபாவங்களைப் பணித்து,
இத்தகைய பெருமை வாய்ந்த வானமஹாத்ரி யோகியாகிய ராமானுஜ. முனியை ப்ரதி தினம்
வணங்குகின்றேன் எனக் கூறி மங்களா
சாஸநத்தை முடிக்கிறார்.
இங்கு **ப்ரணமாமி’” என்ற வர்த்தமானத்தால் தமது அதிகார மாந்த்யத்தைப் பார்த்துத் தான்
கலங்கியபோதெல்லாம் ஆசார்யன் திருவடிகளை இவர்:
வணங்குகின்றார் என்று தேறுகிறது.
“ப்ர’? என்ற உபஸர்க்கத்தால் வணக்கத்தில் மநோ வாக் காயம் என்ற கரணங்களின் பூர்த்தி கூறப்பட்டது.
நித்யம் என்பது ப்ரதி தினமும் என்பதாகும்.
இந்த கிரந்தம் மஙகளாசாஸநம் என்ற பெயரால்
வழங்கப்பட்டு வருகிறதே;
இதில் *’ஸ்வஸ்தி- பத்ரம்-மங்களம் என்பவை போன்ற பதங்கள் காணப்படவில்லையே யென்று சிலர் ஐயமுறலாம்.
எனினும் “*நம:- ஜிதந்தே,தோற்றோம், போற்றி, பல்லாண்டு ” என்னும் இவை -பர்யாயம் என்ற பெரியவாச்சான் பிள்ளை
ஸ்ரீஸூக்தியை நன்கு உற்று அநுஸந்திக்குமவர்கள் இந்த நூல் மங்களாசாஸந ரூபந்தான் என்று எளிதில் உணரலாகும்.
இக்ரந்தத்திலும் இம் முனிவரது குணங்கட்கு தோற்று, வந்தே, நமோஸ்து, கெளமி, விஜயதே என்ற ஸ்வரூப
வாசியான பதங்களை மஹார்யர் ப்ரயோகித்திருப்பதும் காணத் தக்கது.
———–
ஸ்ரீ தொட்டை அய்யங்கார் அப்பை எனப்படும் மஹார்யர் அருளிய ஸ்ரீ வானமஹாசலயோகி ப்ரபத்தி தமிழ் உரையுடன்
அவதாரிகை:–ஸ்ரீமத் வானமாமலை ராமாநுஐ முனிவ”ரின் அஷ்ட திக்கஜங்களில் ஒருவராகிய தொட்டையங்கார்’
அப்பை எனப்படும் மஹார்யர், தமது ஆசார்யராகிய ராமாநுஜ முனிவரது கல்யாண குணங்களிலும் விக்ரஹ ஸெளக்தர் யத்திலும் ஆழ்ந்தார்.
அவர் பூர்வாச்ரமத்தில் அழகிய வரதரிறே; எனவே முந்துற மங்களாசாஸகத்இல் இழிந்தார்..
தாம் ஸ்வாமியின் கடாக்ஷ விஷயீகாரத்தைப் பெற _,அவர் திருவடிகளிலே சரணம் புகுகிறார், இப் ப்ரபத்தியில்,
ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--1-
பதவுரை :–
‘
ஸத்ய: – அப்பொழுதே,
ப்ரபுத்த- நன்றாக மலர்ந்த,
ஸரஸீருஹ – தாமரைப் பூவோடு,
துல்ய – ஒப்பான,
சோபெள – காந்தியை யுடை யதுகளும்,
ஸம்பச்யதாம் – நன்றாய் ஸேவிப்பவர்களுடைய,
தயநயோ: – கண்களுக்கு,
முதம்-சந்தோஷத்தை,
ஆததாகெள – உண்டு பண்ணுமவைகளாயும்,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
ஸாகர-ஸமுத்ரத்திலிருந்து,
ஸமுத்தரண – கரையேற்றுவதில்,
ப்ரவீணெள-மிக சாமர்த்யம் வாய்ந்தவைகளுமான,
வாநாத்ரியோகி சரணெள–வானமாமலை ராமாநுஜ முனிவரின் திருவடிகளை,
சரணம்- உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்.
அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
வாநாத்ரி ராமாநுஐ முனிவரின் திருவடிகளைப் பற்றும் மஹார்யர் அதன் பெருமைகளை விளக்குகிறார் மூன்று பாதங்களாலே.
முதல் பாதத்தில் அப் பொழுதே முழுதும் அலர்ந்த செவ்வித் தாமரை மலர்களோடொத்த சோபையை உடையன அத்திருவடிகள் என்கிறார்
இதனால் ம்ருதுத் தன்மை, ஸ்கந்தம், குளிர்த்தி இவைகளை யுடையது அத்திருவடிகள் என்று அதன் போக்யதை உணர்த்தப்பட்டது.
இரண்டாம் பாதத்தில் அத்.திருவடி௧ளை நன்கு ஸேவிக்குமவர்களின் கண்களுக்குக் களிப்பூட்டுமவை அவையென்கிறார்.
இதனால் அவற்றின் அழகு கூறப்பட்டதாகும்.
மூன்றாவது பாதத்தில் அவை ஸம்ஸாரமென்னும் ஸமுத்ரத்தில் ஆழ்ந்து கடக்கும் ஸம்ஸாரிகளை
அவற்றில் நின்றும் கரையேற்றுவதில் மிகுந்த ஸாமர்த்ய்ம் பெற்றவை என்றார்.
இத்தால் மென்மை, குளிர்த்தி, நாற்றம், அழகு போன்.ற குணங்களை யுடையனவாய்
இம்மையில் போக்யதையால் களிப்பூட்டுவது மாத்திரமின்றி
மறுமையில் மோக்ஷத்தையும் அளிக்கும் பெருமை வாய்ந்தவைஅவை யெனக் கூறி,
அவைகளைத் தமக்கு உபாயமாகப் பற்றுகிறேன் என்றார்.
இங்குக் கூறப்பட்ட பற்றுதல் மாந ஸீகமே யாயினும் அமையும் கார்யகரமாகைக்கு.
————–
அவதாரிகை:–
முன் ஸ்லோகத்தில் ராமாநுஜ: முனிவரது ஸம்ஸார உத்தாரகத்வம் கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்” அதற்குக் காரணமாகிய காம க்ரோதாதி: துஷ்ட குணங்களில்லாமை,
சத் குணங்களுக்கு உறைவிடமாயிருத்தல் முதலிய பெருமையையும்,
ஸ்ரீ மணவாள மாமுனிவரின் இன்னருளால் அப்பெருமையை இவர் பெ.ற்றமையையும் கூறி,
இத்தகைய ப்ரபாவம் வாய்ந்த ராமாநுஜ முனிவ:ரின் திருவடிகள்,
தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்குக் கல்பக வ்ருஷம் போன்றவை எனக் கூறி
அவைகளைச் சரணம். புகுகிறார்.
காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே--2-
பதவுரை:–
காந்தோ பயந்தருமுநி வர்ய – அழகிய மண:வாள மாமுனிவரின்,
தயா – கருணையினால்,
ஆத்த பூம்ந- பெறப் பட்ட பெருமையை யுடையவரும்,
காமாதி- காமம் க்ரோதம் முதலியவற்றை,
நிக்ரஹ கரஸ்ய- அடக்குமவரும்,
குணாம்பு ராசே: – சற் குணங்களுக்குக் கடல் போன்றவருமான,
வநாத்ரி லக்ஷ்மண முநே : – வான மாமலை ராமாநுஜ முனிவரது
நத லோக –தன்னை. வணங்கும் ஜனங்களுக்கு,
கல்ப வ்ருஷாயமாண் -கற்பக வ்ருக்ஷம் போல் ஆசரிக்கின்ற,
சரணெள – திருவடிகளை,
சரணம்- உபாயமாக,
ப்ரபத்யே- பற்றுகிறேன்
ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
இந்த ஸ்லோகத்தின் முதலடியில் -இம்முனிவர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் கருணைக்குப் பாத்திரமாய்
அதனால் பெற்ற அதிசயத்தை உடையவர் என்றார்.
இரண்டாமடியில் காமம், க்ரோதம், லோபம், *மோஹம், மதம், மாத்ஸர்யம் என்று கூறப்படும் ஸஹஜ சத்ருக்களையும்
அடக்குமவரென்றும், சற் குணங்கள் நிறைந்த கடல் போன்றவர் என்வும் கூறினார்.
இங்கு காமாதிகள் சேரா வண்ணம் துறத்துமவர் எனப் பொதுவாசுக் கூறியதனால் –
தம்மை ஆஸ்ரயித்த பிறருடைய காமாதிகளையும் துறத்தும் ஆற்றல் வாய்ந்தவர் எனக் கூறப்பட்டதாகும்.
சற்குணங்களுக்குக் கடலென்றதனால் ஒரு நாளும் வற்ருத சற்குண ஸம்பத்தர் இவர் என்றதாயிற்று.
இனி ஸ்லோகத்தின் பிற்பகுதியால் இப்படிப் பெருமை வாய்க்த வநாசல ராமாநுஜ முனிவரது,
தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குக் கற்பக வ்ருக்ஷம் போன்றதான திருவடிகளைச் சரணம் புகுகிறார்.
இதில் -நத லோக–தம்மை வணங்கிய ஜனங்களுக்கு”’ எனப் பொதுவாகக் கூறியதால்
தம்மை வணங்கியவரின் பெருமை சிறுமைகளைப் பார்த்துக் கொடுக்கும் புன்மை
திருவடிகளுக்கில்லாமை கூறப்பட்டதாகும்.
கற்பக வ்ருஷமென அவைகளைக் கூறியதால் நினைத்த மாத்திரத்திலே இம்மை மறுமைப் பயன்களை
அர்த்தித்தார் அர்த்தித்தபடியே கொடுக்கும் பெருமையும் கூறப்பட்டதாகும்.
——–
அவதாரிகை:–
இம் முனிவர் மா முனிகளின் கருணைக்குப் பாத்திரமாய், அதனால் இவர் பெற்ற மிகச் சிறந்த
வைராக்ய . குணத்தை விரித்துக் கூறுகிறார், இந்த ஸ்லோகத்தில்.
தாராத்மஜாதி ஜநிதம் ஸூக மைஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--3–
பதவுரை:–
தாராத்மஜாதி-பெண்டிர் மக்கள் முதலியோரால்,
ஐநிதம்-உண்டு பண்ணப் பெற்றதும்;
ஐஹிகம் – இம்மையில் அநுபவிக்க வேண்டுமதான,
ஸுகம் – சுகத்தை,
ய:-எந்த ராமாநுஜ முனிவர்
காராக்ருஹ – சிறைக் கூடத்தில்,
ப்ரபவ – உண்டாகிய,
து:க ஸமம்-துக்கத்தோடு ஓத்ததாக,
விசார்ய-நிர்ணயம் செய்து,
ஸெளம்யோ பயந்த்ரு முநி — அழகிய மணவாள முனிவரின்,
பாத யுகம்-இரு பாதங்களையும்,
சரித: – ஆஸ்ரயித்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வநாசல ராமாநுஐ முனிவரது திருவடி.களை,
சரணம் – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்.
மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.
இவ் வுலகில் மற்றையோர் ஸுகங்களென ப்ரமித்துக் களிக்கும், மனைவி மக்கள் முதலியோரால்
உண்டாகக் கூடிய ஸுகங்கள் சிறைக் கூடத்திலனுபவிக்கும் துன்பத்தோ டொப்பானவை
என இம் முனிவர் தீர்மானித்து, மாமுனிகளின் திருவடிகளைச் சரணம் புக்கார் என்கிறார்.
அது எவ்வாறு எனில்
சிறைக் கூடமென்பது ஓருவன் செய்த தீச் செயலுக்குத் தக்கவாறு அரசனால் சிக்ஷை விதிக்கப் பெற்று
அடைத்து வைத்திருக்கு மிடமாகும்.
அது போலவே ஸம்ஸாரமமும் சிறைக்கூடமே யென்னத் தட்டில்லை. எப்படி. எனில்
அவ்வவ ஜீவன் முன்பிறவிகளில் செய்த கன்ம: பலங்களை யநுபவிக்க வேண்டியே ஈசஸ்வரனும்
ஸம்ஸாரத்தில் பிறக்கும்படி. செய்யப்படுவதால் :-அதுவும் சிறைக்கூடமே.
ஸம்ஸாரத்திலும் சிலர் நெடு நாள் சுகவான்களாயும் ஆரோக்யாதிகளை யுடையராயும் ஸ்வதக்தரர்களாயும் காணப்படவில்லையா ?
எனவே எவ்வாறு இது சிறையாகுமெனில், நன்கு ஆராய்ந்தால் அதன் உண்மை புலனாகும்.
நாம் ஸம்ஸாரத்தில் சிறிது சகம் பெற்றாலும் அது அற்பமும் அஸ்திரமுமாகையாலும், அதுவே மேலும்.
பல பிறகளாகிய -சிறைகளுக்குக் காரணமாவதாலும்,
அது மேலெழப் பார்ப்பவர்களுக்கு ஸு கமாகத் தோன்றினாலும் உண்மையில் துக்கமேயாகும்.
எனவே தான் நிரூபணத்தில் இழிந்த ஆழ்வார்கள்
“*பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு” என்றும்,
* ஒரு நாயகமாய் ஒட உலகுடனாண்டவர்…பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் ‘” என்றும்
ஸம்ஸார ஸுகம் துக்கமென் பதையும்,
ஐச்வர்யம் ௮ஸ் திரமாகையால் துக்காஸ்பதமென்பதையும் கூறியுள்ளனர்.
சிறைக்கூடத்திலும் அரசன் உதாரனா யிருந்தால் சிறிது ஸுகமெய்தலா மல்லவா?
அது போலவே தான் . ஸம்ஸார ஸுகமும் என்னத் தட்டில்லை.
இப்படித் தீர்மானித்த இம் முனிவர் செய்தது என் என்னில்?’
ஸாஸ்வதமான சுகத்தைப் பெற அழகிய மணவாளமுனிவரின் திருவடியைச் சரணமாகப் பற்றினார்.
அது போலவே யானும் மாமுனியைச் சரணம் புக்க, இம் முனிவரது திருவடிகளிலே:
எனது தலையை மடுக்கிறேன் என்கிறார்.
——–
அவதாரிகை :–
கீழ் ஸ்லோகத்தில் ஸம்ஸாரத்தில் இவருக்கு உண்டாகிய விரக்தி கூறப்பட்டதல்லவா ?
இந்த.ஸ்லோகத்தில் அந்த விரக்தி என்னும் குணமானது கிளைத்துத் தழைத்துப் படர்ந்ததும்,இம்முனிவரிடமே எனக் கூறப் படுகிறது
ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--4–
பதவுரை :–
ஆதெள – முதலிலே,
ஹநூமதி – ஆஞ்ச நேயரிடத்தல்,
ப்ரஸுூதா – உண்டானதும்,
பச்சாத் -பிறகு,
குரு ப்ரவரம் – குரு வம்சத்தில் பிறந்தவருள் சிறந்தவரான பிஷ்மரை ,
ஏத்ய- அடைந்து,
விவ்ருத்திம் – மிகுந்த விருத்தி ,
ஆப்தா – ௮டைந்ததுமான,
விரக்தி லதா –விரக்தி யென்னும் கொடியானது,
யம்-எந்த ராமாநுஜ முனிவரை,
உபேத்ய – கட்டி யடைந்து,
சாகா ஸஹஸ்ரருசிராய முபேத்ய- ஆயிரக்கணக்கான =அகேகம் மனதைக் கவர்வதாக இருக்கிறதோ,
தாத்ருக் – அப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி – வானகிரி முநிவரின்,
சரணெள – திருவடிகளை,
சரணம் – உபாயமாக,.
ப்ரபத்யே – பற்றுகிறேன்.
முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.
விரக்தி என்பது: செவி, வாய், கண், மூக்கு உடலெனப்படும் இந்திரியங்களுக்கு விஷயங்களாகிய,
சப்த ரஸ ரூப கந்த ஸ்பர்சங்களில், அவ்விந்த்ரியங்கள் புகாமல் காத்தலே யாகும்.
இந்த விரக்தியை ஓர் கொடியாக நிரூ பணம் செய்கிறார் மஹார்யர்.
ஓரு கொடி முதலில் விதையிவிருந்து உண்டாகிக் கொள் கொம்பில் படர்ந்து பின் பெரிய மரத்தைச் சார்ந்து
பூர்ணமாகப் படர்வது போல், இக்த விரக்திக் கொடியும் இம் முநிவரைப் பற்றி அநேகக் கிளைகளுடன்
பூர்ணமாகப் படர்ந்து இலங்குகின்றது என்கிறார்.
இக் கொடி முன்பு த்ரேதாயுகத்தில் அநுமானிடம் முளைத்தது;
பின்னர் குருவம்சத் தரசனாகிய பீஷ்மரிடம் விருத்தியை யடைந்தது.
இக் கலியுகத்தில் இந்த ராமானுஜ முனியிடம் நன்கு படர்ந்து அகேகம் கிளைகளோடு கூடியதாய்
கண்டவர் மனதையும் ஆகர்ஷிக்குமதாய் இருக்கிறது என்கிறார்.
அனுமானையுங் காட்டில் பீஷ்மரிடம் வைராக்யம் அதிகம் என்பது, தமது உயிரையும் த்ருணமாக மதித்து
அவர் ப்ரும்ஹசர்யத்தைப் போற்றி வந்ததாலாகு மென்பது கீழ் மங்களாசார்ஸந உரையில் விரிவாய்க் கூறப்பட்டிருக்கிறது.
அந்த பீஷ்மரைக் காட்டி.லும் ஸ்வாமி ராமாநுஐ முனிவரிடம் ௮ந்த வைராக்யம் அதிகம் என்பது எவ்வாறு என்னில்?
காம க்ரோதாதிகளே நிறைந்த இக் கலி காலத்திலும் காமப் பயனைப் பெறுவிக்கும் கிரஹஸ்தாஸ்ரமத்தை பீஷ்மர்
தமது தந்தையின் சுகாநுபவத்துச்காகத் துறந்தது போலல்லாமல்,
**இல்லறம் தமது ஆசார்யா நுவர்த்தன கைங்கர்யாதி களுக்கு விரோதி ‘ என்று ஒரு நிர்ப்பந்தமுமின்றி
தாமே அதைத் துறந்து விரக்த்தியை ஏறிட்டுக் கொண்டதாலாகும்.
இங்கு “சாகர ஸஹஸ்ரருசரா ”’ என்று பல கிளைகளாய்க் கிளைத்ததாலும் இங்கு அது பூர்ணம். அதாவது
இவரது விரக்தியின் ‘பெருமையைக் கண்டு கிரஹஸ்தர்களான இவரது சிஷ்யர்களும் மிகுந்த வைராக்ய சாலிகளானார்கள் என்பது வரமங்கைமுனி வைபவத்தில் காணலாம்.
ஸ்வாமி யின் ஞான புத்ரனான ராமானுஜம் பிள்ளான் மிகுந்த வைராக்ய முள்ளவராதலால் ஓரு கால்
அவருடைய பத்னீ ஸர்வபூஷணா லங்க்ருதையாய் எதிரில் நிற்க,
**நீ எனக்கு ப்ரதி கூலையாகா நின்றாய்; பதிவ்ரதைக்குச் சீலமன்றோ: பூஷணம். இந்த பூஷணங்களால் ஆவது என்?’” என்று க்ஷேபிக்க,
அவளும் கடுகடுங்கி தனது ஆபரணங்களை யெல்லாம் களைந்து பர்த்தாவிடம் கொடுத்தாள்.
அவரும் எல்லாவற்றையும் வாங்கி உருக்கி வானமாமலை தெய்வ நாய்கப் பெருமாளுக்குத் திருமார்பு லக்ஷ்மியாய் ஏறி யருளப் பண்ணி,
தமது ஸ்வாமியின் அநுமதியின் பேரில் ப்ரதிஷ்.டி.ப்பித்துச் சாத்தியருளினர்” என்றதனால்
பல சிஷ்யர்கள் இவரது வைராக்யத்தையே கடைப்பிடித்தனர் என்பதும்: இதுக்குத் தக்க சான்றாகுமல்லவா ?
ஆதலால் அகேகங் கினைகளு டன் படர்ந்தது எனக் கூறினர். நிற்க
௮ந்த வானமாமலை ராமாநுஜ முனிவரிடம் அக் காலத்தில் ஸந்யாஸம் பெற்ற: வைராக்யசாலிகள் சிலரும்,
பிறகு காலதுவரையில் அந்தப் பட்டத்தை அலங்கரித்து வரும் ஸ்வாமிகள் பலரும் வைராக்ய பூர்ணராய்
ஸந்யஸித்து அவரது கைங்கர்யங்களை அநுஷ்டித்து வருவது அவர் மூலமே யாகையாலும்
அவ் வைராக்யம் அவரை யாஸ்ரயித்துப் பல கிளைகளுடன் படர்ந்தது என்னக் குறையில்லை.
இத்தகைய வைராக்யம் வாய்ந்த முனிவரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகிறேன் என்கிறார். –
———-
அவதாரிகை:-
இந்த ஸ்லோகத்தில், முன் கூறப்பட்ட.
சிறந்த வைராக்ய ஸ்ரீ மாத்திரமின்றி
பகவத் கைங்கர்ய ஸ்ரீயும் இம்முனிவரிடம் குடி கொண்டது என்கிறார்,
வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்யம் ஆரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வர வரஸ்ய யதீஸிதுஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-
பதவுரை:–
யதீஸிதுஸ் – யதிகட்கு இறைவனாகிய,
வரவரஸ்ய ஸ்ரீவரவரமுனிவரது,
ப்ரீத்யை பரம்-ப்ரீதியை உத்தேசித்தே,
ய: – எந்த வாகாசல முனிவர்,
பணி நாதவத் – ஆதி சேஷனைப் போலே,
வாநாசலஸ்ய – வானமாமலையான எம் பெருமானுக்கு,
வர மண்டப – சிறந்த. மண்டபங்களென்ன,
கோபுர – கோபுரங்களென்ன,
ஆதி-.இவை முதலியவற்றின்,
கைங்கர்யம் – திருப்பணியை,
ஆரசி தவான் – செய்தனரோ,
தத் – அந்த,
வாநாத்ரி யோகி – வாநாசல முநிவரின்,
சரணெள- திருவடிகளை.
சரணம் – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்.
யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.
இதில் இம் முனிவர் யதிகட்கிறை யாகிய.ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தைப் பின் சென்று
அவரது ப்ரீதிக்காகவே “*வானமாமலையே அடியேன்.தொழ வந்தருளே” என்ற ஆழ்வார் பாசுரப்படியே
வான மா மலை எம்பெருமானுக்கு சிறந்த மண்டபங்கள், கோபுரங்கள்,
ஆதி சப்தத்தால் ப்ராகார வாஹநாதிகள் என்ற. பலவற்றையும் உண்டாக்கி,
பரமபத நாதனுக்கு அங்குப் பரமபதத்தில் சேஷன் என்று கூறப்படும் ஆதிசேஷன்
**சென்றால் குடையாம்” என்கிற பாசுரப்படி அநேக கைங் கர்யங்களையும் செய்யுமாபோலே,
இவரும் இங்கு அநேகம் கைங்கர்யங்களைச் செய்துள்ளார் என்று இவருடைய அநந்த அவதாரத்தை ஸூஸிப்பிக்கிருர்.
இங்கு **ப்ரீத்யை பரம் வரவரஸ்ய ” எனக் கூறியதால் இவர் இந்த கைங்கர்யங்களுக்காக மா முனிகளைப் பிரிய மனமில்லாவிட்டாலும்
அவருடைய உகப்புக்காக வானமாமலை எம்பெருமானின் கைங்கர்யங்களைச் செய்து அருளிய
ஞான பரிபூர்ணர் என்று இதில் கொண்டாடுகிறார்.
——–
பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதிஸத் உதாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-
பதவுரை:–
பாஷாந்தரேண – வேறு பாஷையான திராவிட பாஷையாக,
பரிணாவத ஆகமாகாம் – மாறுபாட்டை யடைந்த வேதங்களாயும்,
ஸ்ரவண அம்ருதாகாம்- காதுகளுக்கு அமுதம் போன்றவைகளுமான,
ஸ்ரீ சடாரி வசஸாம் அர்தான்- ஸ்ரீ சட கோபனின் திருவாக்குக்களான திருவாய்மொழி முதலியவற்றின் அர்த்தங்களை,
உதாரதர:-மிக உதாரரான,
ய:-எந்த முனிவர்,
ஸதாம் – ஸாத்விகர்களுக்கு,
உபாதி ஸத்-உபதேஸித்தனரோ,
தத் – அப்படிப் பட்ட,
வாநாத்ரி யோகி-வாநாத்ரி முனிவரது,
சரணெள – திரு வடிகளை,
சரணம் – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்..
செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
வேத வேத்யனான பரம புருஷன் ஜீவ ராசிகளை உஜ்ஜிீவிப்பிக்க விரும்பி, தனது பெருமையைச்
சிறிதும் பாராது-தன்னை ௮ழியமாறி மானீட சாதியிலும் மற்றும் திர்யக் ஸ்தாவர ஜாதிகளிலும் அவதரித்தது போலவே,
அவனை ப்ரதி பாதிக்கின்ற வேதமும், சிலருக்கே ‘அதிகாரமுடையதாகையாலும்,,
அதன் அர்த்தங்களும் அநேக சாஸ்த்ர ஞாநா பேக்ஷமாய் கிலேசப் பட்டே அறிய. வேண்டும்படி யிருக்கையாலும்,
தன்னால் உலகைத் திருத்த இயலவில்லையே என்று வருந்தி, வ்யாஸ பராசராதிகள் பக்கலில்
“* வேத: ப்ராசேத ஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா ” என்கிறபடியே இதிஹாஸ புராணாதிகளாக அவதரித்தாப் போலே,
ஸம்ஸ்கிருத பாஷையை யறியாதாரும் உஜ்ஜீவிக்க வேணு மென்ற க்ருபா அதிசயத்தாலே,
திராவிட வேதமாகவும் பரிணாமத்தை யடைந்தது.
இப்படி மாறுபாட்டுடன் உதித்தவை ஸ்ரீநடகோபன் அருளிச் செய்த திரு வாய்மொழி முதலியனவாம்..
இது மற்றய ஆழ்வார்களின்.ப்ரபந்தங்களுக்கும் உபலக்ஷணமாகும்.
அவையும் நாதமுனி களுக்காக ஸ்ரீ சடகோபன் முகமாக வெளி வந்தவையே.
இவற்றை ** ஸ்ரவண அம்ருதாநாம். ” எனக் கூறியது “*செவிக்கினிய செஞ்சொல்லே’? என்றதை அடி யொற்றிய படி.
அம்ருதம் எனக் கூறியதால், இப்ரபந்தங்களே
**உள்ளத்தை மாசறுத்து”,
“*இருவினைப் பாசங்கள் நீக்கி”,
**வீடும் தரும்”* என்ற விஷயம் ஸூஸிப்பிக்கப் பெற்றது.
இப்படிப் பட்ட அர்த்த விசேஷங்களை ஸத்துக்களுக்கு உபதஸித்த உதாரர் இம் முனிவர்.
இங்கு ஸத்துக்களாகிறுர் **ஸந்த மேநம் ததோ விது:” என்று கூறப்பட்ட வேதாந்த ஞான முடைய பெரியோர்கள்.
அப்படிப்பட்ட பெரியோர்களுக்கும் இப் ப்ரபந்தார்த்தங்களில் உண்டாகக் கூடிய
ஸம்சய விபர்யங் களைத் தமது உபதேசத்தால் அறவே நீக்கும் சிறந்த ஞானி இவர் எனக் கூறப்பட்டதாகும்.
இங்கு உதார : என்னாதே “உ தார தர:”” எனக் கூறியதால், பாசுரங்கள் அருளிச் செய்த ஆழ்வாருடையதும்
அதற்குப் பாஷ்யமாக ஈடு முத லிய வ்யாக்யானங்களை அருளிச் செய்த ஆசார்யர்களுடையதுமான, ஓளதார்யங்களைக் காட்டிலும்,
அந்த ஈடு முதலிய வ்யாக்யானங்களில் நேராக அறிய முடியாத அர்த்தங்கள் தெளிவு பெறும்படி.
அருளிச் செய்யும் ஆற்றல் வாய்ந்த ஆசார்யர்கள் இல்லாதிருந்த காலத்திலே இவர் எல்லாருக்கும்
உப தேசிக்கையாலே இவர் சிறந்த ஓளதார்யமுடையவர் எனக் கூறினார்.
இப்படிப்பட்ட அதிகாரி துர்லபமாயிருத்த படியால்தான் திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளைப்
பகவத் விஷயத்தையே பேணிப் போரும்படி. நியமித்ததும்.
ஆகையல்“*உதாரதர:” என்னத் தட்டி.ல்லை.
இங்ஙகனன்றியே தமது பீடத்தை உண்டாக்கித் தமது பரம்பரையிலே இன்றளவும் அலங்கரிக்கும் முனிவர்களை
யாவரையும் ஸாதுக்களுக்கு உபதேகிக்கும்படி நித்யமாய் நியமித்த ஒளதார்ய விசேஷத்தாலே ** உதாரதர:” எனக் கூறினர் எனவும் கொள்ளலாம்.
ஆக இவ்வாறு உதாரரான வானமாமலை மூனிவரின் சரணங்களைச் சரணடைகின்றேன்:
—————
அவதாரிகை:–
கீழில் இம்முனிவரின் ஒளதார்யம் பரக்கப் பேசப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில், இவருடைய ** ராமானுஜன் ” என்னும் திரு நாமமே விஷத்தைப் பேர்க்கும் மந்த்ரம் போலே
ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின் விஷத்தைப் போக்க வல்லது என்றும்,
தன்னை உச்சரிப்பவர்களுக்கு பரம புருஷனோடு பரம ஸாம்யத்தையும் (முக்தியையும் ) தரவல்லது என்றும்
திரு நாமத்தின் பெருமையைக் கூறி, இவர் திருவடிகளில் சரணம் புகுகிறார்.
யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--7–
பதவுரை :–
ஆர்யா: – பெரியோர்,
அநு க்ஷணம் .-ஷணந்தோறும் செய்யப்படும்,
யத்-எந்த முனிவரது,
நாம கீர்த்தனம் – திரு நாம ஸங்கீர்த்தனத்தை,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
போகி – ஸர்பத்தினுடைய,
விஷ- விஷத்தை,
நிர் ஹரணாய -போக்குவதன் பொருட்டாக
மந்த்ரம்-மந்தரமாக,
ஆஹு:-சொல்லுகிறார்களோ,
பும்ஸாம் – புருஷர்களுக்கு,
பரேண -பராத் பரனான,
புருஷேண ௪ – புருஷனோடும்,
ஸாம்யதம் – ஸாம்யத்தை கொடுக்கவற்றோ, (
தத்-௮ப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி-வாநாத்ரி முனிவரின்,
சரணெள-திருவடிகளை;
சரணம் – உபாயமாக,
ப்ரபத்யே–பற்றுகிறேன்.
யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
இம்முனிவரது ராமானுஜன் என்னும் திரு நாமம் ப்ரதி ஷணமும் செய்யப்படுமானால். அது ஒரு மந்த்ரத்தின் கார்யத்தைச் செய்ய வல்லது.
அடிக்கடி ஜபித்து அதன் ஸித்திக்கு உறுப்பாகச் செய்ய வேண்டிய எண்ணிக்கையோடு கூடி ஸித்தியைத் தரும்
கருட மந்த்ரமானது, ஸ்மரண மாத்ரத்தாலே எப்படி ஸர்ப்பாதி துஷ்ட ஜந்துக்களின் விஷத்தை நீக்குமோ
அது போலவே அநவரதம் சிந்திக்கப்படும் இந்த ராமாநுஜன் என்லும் இவர் திருநாமம்,
ஸம்ஸாரமாகிற. ஸர்ப்பத்தின் விஷத்தைப் போக்கும்.
அது மாத்திரமேயன்றி பரம புருஷனான ஸ்ரீ மந் நாராயணனோடு ஸாம்யத்தையும் அளிக்கும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.
இங்கு ஸம்ஸாரத்தை ஸர்ப்பமாகக் கூறியதால் பாம்பு போலவே ஸம்ஸாரமும் வக்ர கதியை உடையது என்வும்,
அப் பாம்பால் தீண்டப்பட்டவன் மூர்ச்சை யுறுவது போலவே இந்த ஸம்ஸார ஸ்பர்சம் பெற்றவனும்
உண்மையை உணராது மயங்குகிறான் என்றும்
அதை நீக்கும் கருட மந்த்ரம்போல் ஸம்ஸார ஸ்பர்சத்தால் வந்த மயக்கத்தை நீக்கி உண்மை;உணர்வை அளிப்பது,
அடிக்கடி. உச்சரிக்கப்படும் இந்த முனிவரது திரு நாமமே யாகையால் அதை.மந்த்ரமாகக் கூறுவர்
ஞானவான்களான பெரியோர். “* மந்தாரம் த்ராயத இதி மந்த்ர:’” என்ற வயுத்பத்திப்படி தன்னை அநுஸந்திப்பவனைக் காப்பாற்றுவது மந்தரம்அல்லவா? நிற்க
இத் திருநாமம் நான்கே அக்ஷ்ரமுள்ளதாயினும் திருவஷ்டாரம் போலவே பரம புருஷனாகிய ஸ்ரீ மந் நாராயணனோடு
**பரமம் ஸாம்யம் உபைதி”என வேதத்தால் கூறப்படும் பரம ஸாம்யத்தையும் தர வல்லது.
**நமோ நாராயண திரு மந்த்ரோயாளக:, வைமுண்டபுவமம் சமிஷ்யதீதி” என்ற ப்ரமாணத்தின்டடியே
அஷ்டாஷர மஹா மந்த்ரம் ஸ்ரீவைகுண்டத்தைக் கொடுத்து
பரமனோடு பரம ஸாம்யத்தையும் கொடுட்பது போலவே இத் திருநாமமும் என்று பணிப்பர் பெரியோர்.
அப்படிப் பெருமை வாய்ந்த திரு நாமத்தை யுடையவரான வானாத்ரி முநிவரின் திருவடிகளைச் சரணம் புகுகிறேன்
———–
அவதாரிகை :–
கீழ் ஸ்லோகங்களில் ஞான வைராக்யாதிகளாலும் திரு நாம ப்ரபாவத்தாலும் வந்த இம் முனிவரது பெருமையைக் கூறி, திருவடிகளில் சரணம் புக்கார்.
இனி மேல் நான்கு ஸ்லோகங்களில் ஸாஷாத்தாகத் திருவடிகளின் ப்ரபாவத்தையே கூறி, அவற்றைச் சரணம் புகுகிறார்..
அதிலும் இந்த முதல் ஸ்லோகத்தில் ஸ்வாமியின் திருவடிகள் கேவல ஸ்மரணத்தாலே ஜந்மாந்தரத்தில் உண்டான
பாப ஸமூஹத்தையும் நசிப்பிக்கும் பெருமை வாய்ந்ததெனக் கூறிச் சரணம் புகுகிறார்.
பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--8–
பதவுரை :–
பும்ஸாம் – மனிதர்களுடைய,
புராதந -பழைமையான,
பவ-ஐன்மங்களில்,
ஆர்ஜித-ஸம்பாதிக்கப்பட்ட,
பாப ராசி:, பாபங்களின் திரளானது,
யயோ: – எந்தத் திருவடிகளினுடைய,
ஸக்ருத்-ஏக மாவகவே செய்யப்படும்,
ஸம்ருத்யா ௮பி-௮நுஸந்தானத்தாலும்,
ப்ரளயம்-நாசத்தை,
ப்ரயாதி-௮டைகிறதோ,
ஸத்வந்திதெள-பெரியோர்களால் ஈமஸ்கரிக்கப் பெற்றதும்,
பரம-மிகச் சிறந்த,
பாவந-பரி சுத்தத் தன்மையையே,
ஏக வேஷெள-முக்கிய ஸ்வரூபமாயுடையதுமான,
வாநாத்ரி யோகி சரணெள-வாநாத்ரி முனிவரின் திரு வடிகளை,
சரணம்-உபாயமாக,
ப்ரபத்யே- பற்றுகிறேன்.
எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
இம் முனிவரின் திருவடிகள் புராதனமான அநேக ஜன்மங்களில் ஸம்பாதித்து மனிதர்களால் கூடு பூரிக்கப்பட்ட
பாப ஸமூஹங்களையும் ஒருக்கால் ஸ்மரித்த மாத்திரத்திலேயே நசிக்கும்படி. செய்கின்றது”என்கிறார்.
**மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகு தருவான் நின்றனவும் -என்று ஆண்டாளருளிச் செய்ததை
இவர் தமக்கு வகுத்த விஷயத்திலே யாக்கி யருளுகிறார்.
பும்ஸாம் என்றது ஸ்த்ரிகளுக்கும் உபலக்ஷணம்.-ஆசார்ய சரணாரவிந்த சிந்தனத்தில் அதிகார நியமம் யில்லை யிறே.
“*பும்ஸாம்” எனக் கூறியதால் வர்ணாசஸ்ரமாதி அதிகார நியதியில்லாமை கூறப்பட்டது.
இது ஸர்வே பரப்மாந: ப்ர.தூயந்தே ‘* என்ற உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுகிறது.
மேலும் இத்திருவடிகள் **ஸந்த மேநம் ததோ-விது:’” என்று கூறப்படும் ப்ரும்ஹ ஞானிகளான
அப்பாச்சியாரண்ணா, ராமானுஜம் பிள்ளான் போன்றவர்களால் வணங்கப் படுமவை,
மிகுந்த புனிதத் தன்மையையே தமக்கு ஸ்வரூபமாகக் கொண்டவை.
இத்தால் நித்ய ஸித்தமான அபஹதபாப்மத்வாதி கல்யாண குணங்களை யுடையவனே தன்னை ஆஸ்ரயித்தவனுக்கு
அக் குணாஷ்டக ப்ராதுர்பாவத்தைச் செய்விக்கச் சக்தனாமாம் போலே
இத் திருவடிகள் ஸ்மரித்தவர்களின் பா பங்களையும் போக்குவிக்கும் சக்தி வாய்ந்தவை யாயின என்று
முற்கூறியதற்குக் காரணமும் இத்தால் ஸூஸிப்பிக்கப் பட்டதாகும்.
** பரமபாவந தைகவாஸெள *’ என்று பாடங் கொண்டால் “புனிதத் தன்மைக்கு முக்கியமான உறைவிடம் ” என்பதாகும்.
தாத்பர்யத்தில் அதிக பேதமில்லை. இத்தகைய திருவடிகளைச் சரணம் புகுகிறேன்.
———–
அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில் இத் திரு வடிகள் தான் வேண்டுமோ?
இவைகளின் ஸம்பந்தம் பெற்ற ஸ்ரீபாத தீர்த்தமே।தாப த்ரயமாகிற அக்னியை ௮ணைக்க வல்லது;
இவைகளின் சம்பந்தம் பெற்று உதிரும் திருவடித் துகளும், உள்ளே உண்டாகும் ரஜோ குணங்களையும் சமகம் ‘செய்யு மவையல்லவா ?
இத்தகைய பெருமை வாய்ந்த இம் முனிவரின் திருவடிகளில் சரணம் புகுகன்றேன் என்கிறார்.
யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–
பதவுரை :–
யத் தீர்த்த வாரி – எந்தத் திருவடிகளில் நின்றும் கிரஹிக்கப்பட்ட ஸ்ரீபாததீர்த்தம்,
விமலம் – பரி சுத்தமானதாய்க் கொண்டு,
கலிகால -கலியுகமாகிற,
ஸமீரண – காற்றினாலே,
உத்த – வ்ருத்தி யடைந்த,
தாப த்ரய – ஆத்யாத்மித ஆதிபெளதிக ஆதி தைவங்கள் என்னும் தாபங்கள் மூன்றாகிற,
௮க்நி -நெருப்பை,
சமகம் – அணைக்கத் தகுந்ததோ,
யத் ரேணு: – எந்தத் திருவடிகளின் ஸம்பந்தம் பெற்ற ஸ்ரீபாததுளி,
அந்தர – மனதில் உண்டாகும்,
ரஜ: – ரஜோகுணத்தை,
ப்ரசமாய ௪ – நீக்குவதன் பொருட்டு ஆகிறதோ,
ஏத்த் வாநாத்ரி யோகு சரணெள – இத்தகைய சக்தி வாய்ந்த
வாநாத்ரி முனிவரது இத் திருவடிகளை,
சரணம்-உபாயமாக,
ட்ரபத்யே – பற்றுகிறேன்-
புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்க வல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
கல்மஷ மற்று பரிசுத்தமான, இம்முனிவரின் திருவடிகளின் ஸம்பந்தம் பெற்ற ஸ்ரீபாததீர்த்தம்
கலி யுகமாகிய காற்றின் ஸஹாயத்தினால் அபிவ்ருத்தி யடையும்,
ஆத்யாத்மிகம் ஆதி பெளதிகம் ஆதி தைவிகம் என்னும் அக்நியை அணைக்கும் சக்தி வாய்க்தது.
ஆத்யாத்மிகமென்பது சரீரதீதிலுண்டாகும் நோய்களாலான துன்பங்களும் நாசமும்.
ஆதிபெளதிகமென்பது கரடி. புலி காளை முதலியவற்றால் ஏற்படும் துன்பம் நாசம் முதலியன.
ஆதி தைவிகமென்பது இடி. மின்னல் முதலியவற்றால் தெய்வீகமாய் ஏற்படும் துக்கங்களும் நாசங்களுமாகும்.
இவைகளை அக்நி யாக நிரூப ணம் செய்ததால் அக்நி தனக்கு ஆதாரமான விறகுகளையும் அழிப்பது போல்
இதுவும் ஆஸ்ரயத்தை அழித்தே தீருமென்பதைக் தெரிவிக்கிறது.
கலி காலத்தை வாயுவாகக் கூறியதால் அக்நிக்கு அநுகூலமாய் அதை வ்ருத்தி செய்விக்கும் வாயுவைப் போல்
கலிகாலம் அந்தத் தாப த்ரயங்களுக்கும் அநுகூலமாய் அவற்றை வ்ருத்தி செய்கிறது என்ற அம்சம் கூறப்பட்ட தாகும்.
தாப த்ரயத்தை அக்நியாய்க் கூறியதால் இது சீக்கிரம் பரவும் ஸ்வபாவமுடையது என்றும்
தாமதித்தால் அணைக்கக் கூடாதவை எனவும் தோற்றுகிறது.
எனவே அத்தகைய தீயை யணைக்கும் தன்மை வாய்ந்தது இந்த முனிவ:ரின் ஸ்ரீபாத தீர்த்தம்.
இப்படி ப்ரபாவம் வாய்த்த ஸ்ரீபாத தீர்த்தம் இன்றளவும் நாம் பெறும்படி யிருப்பதும் நமது பாக்ய வசமேயாகும். நிற்க
இத் திருவடிகளின் துகளும் மனிதனின் உள்ளத்து உண்டாகும் ரஜோ குணத்தைப் “போக்கும் தன்மை பெற்றதாயிருக்கிறது.
ஒரு ரஜஸ்௭ு மற்றொரு ரஜஸ்ஸைப் போக்குிறபடி என்னே?
இப்படிப் பெருமை வாய்ந்த இத் திருவடிகளைச் சரண் புகுகின்றேன்.
———
அவதாரிகை :–
கீழ் திருவடிகளின் ஸ்மரண ப்ரபாவமும் தீர்த்த ப்ரபாவமும் ரஜஸ் ப்ரபாவமும் கூறப்பட்டன.
இந்த ஸ்லோகத்தில் பெரியோர்களும் இந்தத் திரு
வடி.களில் வந்து ஆஸ்ரயிப்பதால் வந்த பெருமையைப் பேசி அவற்றைச் சரண் புகுகிறார்.
வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–10–
பதவுரை
வாதூல வம்ச திலக: – வாதூல குலத்திற்கு அலங்காரமான: திலகம் போன்றவரும்,
வாத்ஸல்ய ஸிந்து: – வாத்ஸல்யமென்னும் குணத்திற்கு கடல் போன்றவரும்,
அகில ஆத்ம குண சமதமாதி களான எல்லா ஆத்ம குணாங்களாலும்,
உபபந்ந; – நிறைந்த தாயும் இருக்கிற,
வரதார்யவர்ய : –வரதாசர்ர்யர் என்று திருநாமமுள்ள அப்பாச்சி யாரண்ணா என்பவர்,
யயோ : – எந்தத் திரு வடிகளில்,
சகலம் – எல்லாவிதமான,
நிஜ பரம்-“தம்முடைய பாரத்தை,
நிக்ஷிப்தவான் – வைத்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வானமாமலை முனிவரின் திருவடிகளை,
சரணம் – உபாயமாக,
ப்ரபத்யே –
வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
கந்தாடைத் திருவம்சத்திற்குத் திலகம் போன்றவரும்,
கோயிலண்ணனின் சிறிய தகப்பனார் குமாரரூம்,
திருமஞ்சனம் அப்பா என்பவருக்கு தெளஹித்தராயும்
ஆய்ச்சியின் குமாரருமாய், -வாத்ஸல்யமென் னும் குணத்திற்குக் கடல்போன்றவரும்
சமதமாதி அநந்தாத்ம குண பரிபூர்ணருமான அப்பாச்சியா ரண்ணா என்று வழங்கும் திருநாமமுடையவருமான் வரதாசார்யர் என்பவர்,
இம் முனிவரது திருவடிகளையே பற்றி அவைகளிலே தமது பரத்தை எல்லாம் ஸமர்ப்பித்து நியஸ்த பரராயிருந்தார்.
அதாவது ஆகிஞ்சந்யம் அநந்ய கதித்வம் இவைகளை முன்னிட்டு இந்த ராமாநுஜ முனிவரின் திருவடிகளையே உபாயமாகப் பற்றிப் பின்பு
ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயமின்றி ஓடத்தில் ஏறியவன், தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை ஓடக்காரனிடம் விட்டு விட்டுக்
கரை சேரும் காலத்தையே சிந்தித்துக் கொண்டிருப்பதுபோல் இத் திரு வடி.களிலே தமது பொறுப்பை ஓப்புவித்தபடியால்,
**கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ ”” என்று இருந்தார்.
ஆசார்யரும் ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்தி அப்புறப்படுத்துமவனாகையால் ஓடக்காரனாகவே கொள்ளப்படலாம்.
எனவே சிறந்த குடிப் பிறப்பும் ஆத்மகுணமும் நிறைந்த பெரியோரும் தமது பாரத்தை ஒப்புவிக்கும் பெருமையை யுடையரான வாநாத்ரி முனிவரின்
திருவடிகளைச் சரணம் புகுகிறேன்.
————
அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில், போரேற்று நாயனார் என்று சொல்லப்படும் ஸமரபுங்க வாசாரியர் என்ற
மற்றொரு பெரியோரால் அர்ச்சிக்கப்பட்டது இம்முனி
வரின் திருவடி என்று .அதன் பெருமையைக் கூறி,
அத்திருவடிகளையே சரணம் புகுகிறார்.
ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம்நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–11–
பதவுரை
ஸத்வருத்த – சிறந்த ஸதாசாரங்களுக்கு,
ஸம்பவபுவா – உத்பத்தி ஸ்தானமாயும்,
சம – மன அடக்கத்திற்கும்,
தாந்தி – மற்றைய இந்த்ரியங்களின் அடக்கத்திற்கும்,
ஸீம்நா – எல்லை நிலமாயும்,
ஸத்வந் தீதே – ஸாதுக்களால் வணங்கப் பெற்றவரும், நிகமாஞ்சல-வேதாந்தங்களின்,
ஸார–ஸாரார்த்தங்களால், (அறிந்தமையால்-வந்த)
பூம்நா – பெருமையை யுடையவருமாயிருக்கிற,
ஸமர புங்கவ தேசிகேக – ஸமர புங்கவர் என்னும் ஆசார்யனாலே,
ஸம் பூஜஷிதெள -நன்கு! பூஜிக்கப்பட்ட,
வாநாத்ரி யோகி சரணெள – வாநாசல முநிவரின் திருவடிகளை,
சரணம் – உபாயமாக,
ப்ரபத்யே -பற்றுகிறேன்.
நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)
போரேற்று நாயனார் எனப்படும் ஸமர புங்கவாசார்யர், சிஷ்டர்களின் மிகச் சிறந்த ஆசாரங்களுக்கு விளையும் பூமி எனப் போற்றப்படுமவர்.
மனதை அடக்கி யாளுகையாகிற :*: சம’”மென்னும் குணத்திற்கும்,
மற்றய கண் முதலிய வெளி இந்த்ரியங்களை அடக்க யாளுகையாகிற.** தமம் ” எனப்படும் குணத்திற்கும்
எல்லை நிலமென்றும் மெச்சப்படுமவர்;
ஞானிகளான ஸாதுக்களும் வணங்கும் பெருமை வாய்ந்தவர்.
** வேதாந்த வாக்யங்களின் ஸாரார்த்தங்களையும் நன்கு உணர்ந்தவர் ‘” ஏன்னும் அதிசயம் வாய்க்கப் பெற்றவர்.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஸமர புங்கவராலும் இம்முனிவரது திருவடிகள் நன்கு பூஜிக்கப் பெற்றன என்றால்
இதனில் மிக்க பெருமையும் உண்டோ ?’
அப்படிப்பட்ட இம்முனிவரின் திருவடிகளை அடைக்கல மாகப் பற்றுகிறேன்.
ஸதாசாரங்களும் சமதமாதி குணங்களும் ஞானிகள் வணங்கும் பெருமையும் வாய்ந்து,
வேதாந்த.ஸாரார்த்த ஞானமு முடைய ஸமரபுங்கவரும் இவர் திருவடி.களை ஆஸ்ரயித்து அவற்றை பூஜிப்பர் என்றால்,
இம்முனிவரிடம் ஸதாசார ஞான வைராக்யாதி குணங்கள் எவ்வளவு பூர்ணமாக இருக்க வேண்டுமென்பது,
கைமுதிக நியாயத்தாலே ஸித்தமான தொன்றன்றோ?
இத்தால் “ஒப்பற்ற ஞான வைராக்யாதிகளை யுடைவர் இத்த ராமாநுஜ முனிவர்’” என்றது ஸூஸிப்பிக்கப் பட்டதாகும்.
——-
அவதாரிகை:–
இப்படித் திருவடிகளின் ப்ரபாவத்தைக் கூறிப் பின்னும் இந்த வாநாத்ரி முனிவரின் வைராக்யம் பக்தி ஞானம் என்ற குணங்களில்
ஓவ்வொரு குண விஷயத்திலும் ஒருவரிருவரை உபமானமாகக் கூறி
**இவருக்கு ஓப்பாமவர் உலகில் ஒருவரும் இலர்” என்கிறார்.
வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-
பதவுரை:–
வாநாத்ரி லஷ்மணமுநே –வாநாத்ரி ராமாநுஐ முனிவரது,
வைராக்யம் – வைராக்யம் என்னும் குணம்,
யதி(வர்ண்யதே)-நிரூபணம் செய்யப்படுமேயாலால்,
வாயு – வாயு தேவனுடையவும்,
சந்தனு- சந்தனு மஹாராஜனுடையவும்,
ஸுத-புத்ரர்களான அறுமானை
எம்பெருமானார், மணவாள மாமுனிகள் இவர்களின் ஞாநத்தின் ரீதியை இவரது ஞானம் உடையதாக ஆகும்.
பூர்வாசார்யர்களின் ஞானத்தோடொத்த ‘ ஞானத்தை: உடையவர் எனத் தேறிற்று.
இப்படிப்பட்ட ஞான பக்தி வைராக்யங்களை யுடையராய் இருப்பதால் உலகில் இம்.முனிவர்க்கு ஓப்பாவார் ஒருவருமில்லை என்கிறார்.
இங்கு.கீழே ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஓவ்வொன்றுக்கும் உபமானமாக சிலரைக் கூறியிருக்க
கோவாஜகத்யா ம்ஸம:–உலகில் ஓப்பாவார் மார்? எனக் கேட்பது அஸம்பாவித மன்றோ?
எனச் சிலர்க்கு சங்கை பிறக்கக்கூடுமல்லவா ? அதற்குப் பரிஹாரம் என்? என்னில்,.
வைராக்யத்திற்கு அனுமான் பீஷ்மர் இருவரையும்,
பக்திக்கு நம்மாழ்வார் “முதலிய பல ஆழ்வார்களையும்,
ஞானத்திற்கு நாதமுனிகள் முதலிய பல ஆசார்யர்களையும் இவர் உபமானமாகக் கூறிய தால்,
ஓவ்வொரு குணத்திற்கே இவர் குணப் பெருமையால் பலரை உபமானமாகக் கொள்ளவேண்டி. யிருப்பது தெளிவு…
எனவே எல்லா குணங்களும் சேர்ந்து திரண்டு இருக்கும் இவரைப் போன்ற அக் குணங்களுக்கு ஆஸ்ரய மில்லாமை.
ஸித்திப்பதால் இவருக்கு ஓப்பாவார் யார் என்றார்.
௮ன்றியே
இவரது வைராக்ய பக்தி ஞானங்களுக்கு தெய்வாம்சம். பகவதாஞ்ஞையால் ஆழ்வார்களும் ஆசார்யர்களுமாய்
அவதரித்த நித்ய ஸூரிகளும் ஒப்பாமதொழிய-இவ் வுலகில் கர்மமடியாகப் பிறந்தார் ஓப்பாவரோ? என்றுமாம்.
அல்லது ௮க்காலத்திலுள்ளார் ஒப்பாமதொழிய இக்.காலத்தவர் ஒருவராவது இவரோடு ஓப்பாமவர் உளரோ என்றுமாம்.
** ஐகத்யாம்”” (இவ்வுலகில்) எனக் கூறிய தால், அவ்வுலகில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளவர் ஒப்பாவர் எனத் தேறுகிறதல்லவா ?
எனவே கீழ்க் கூறியவாறு ஆழ்வார்கள் ஆசார்யர்கள் உபமானமாசக் கொள்ளப்படுவதில் ஆக்ஷேபம் ஏதுமில்லை என்பதும் உணரத் தக்கது.
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!
————
அவதாரிகை :–
கீழ் ஸ்லோகத்தில் இவரது ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஒப்பாவார் ஒருவருமில்லை என்றார்.
‘இந்த ஸ்லோகத்தில் பகவத் கைங்கர்ய விஷயத்திலும், பகவத் பஜந விஷயத்திலும், பாகவத ஸேவா விஷயத்திலும்
ஆசார்ய சரண கமலார்ச்சன விஷயத்திலும் ஓவ்வொன்றுக்கும் ஓரொருவரை உபமானமாகக் கூறி,
இவரது ஒப்பற்ற தன்மையை நிரூபணம் செய்து, இவரே சிறந்த குணங்கட்கெல்லாம் முக்கியமான உறைவிடம் என்கிறார்.
கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர--13-
பதவுரை :–
௮ஸ்ய-இந்த முநிவருடையதாய் ,- முனிவர் செய்த என்றபடி,
வானசைல – வானமாமலை என்ற திருநாமமுள்ள,
கமலாகாந்தஸ்ய -லக்ஷ்மீ வல்லப விஷயமான,
கைங்கர்யம் – மண்டப ப்ராகாராதி நிர்மாண ரூபமான திருப் பணிகள்,
நிரூப்யதே யதி ..ஆராயப்படுமாயின்,
சேஷக்ரமாத் – ஆதிசேஷனுடைய**சென்றால்குடையாம்” என்ற கைங்கர்ய க்ரமத்தை அதுஸரித்ததாக,
ஸ்யாத் – ஆகும்.
பஜே – அநத எம்பெருமானை பஜிக்கும் விஷயத்திலும்,
தத் பக்த பூஜாவிதெள-அவ் வெம்பெருமானிடம் பக்தி பூண்ட பாகவதர்களை ஆராதிக்கும் விஷயத்திலும்,
அஸ்ய – இம்முனிவரது,
ப்ரீதி: -சந்தோஷமானது,
நிரூப்யதே சேத்-ஆராயப்படின்,
குலசேகரஸ்ய (இவ) குலசேகர ஆழ்வாருடையது (போல),
ஸ்யாத்-ஆகும்,
அஸ்ய – இம்முனிவரது,
(சார்ய) -ஆசார்யனுடைய,
அங்கரிஸசரோருஹ – தாமரை போன்ற திருவடிகளின்,
அர்ச்சகவீதெள-அர்ச்சு ப்ரகாரத்தில்,
உஜ்வலா : – நன்கு விளங்குகின்ற,
தா : தா:-அந்தந்த
ப்ரக்ரியா : – ப்ரகாரங்கள், அநுஷ்டானங்களென்றப்டி,
யதி நிரூப்யக்தே – ஆராயப்படுமானால்,
மஞ்ஜுகவே:((இவ)-ஸ்ரீமதுரகவிகளுடையது போன்றதாக, (ஸ்யாத்)ஆகும்,
(ஆகையால்) வாநாத்ரியோகீஸ்வர : – வாநாசல முநிவர், குணைகஸதகம்-குணங்கட்கொல்லாம் முக்யமான உறை விடமாக
ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ் வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.
இம்முனிவர் வானமாமலை எனத் திருநாமம் பூண்ட ஸ்ரீ ய :பதிக்குச் செய்தருளிய பலவித கைங்கர்யங்களையும் ஆராயின்,
அவை பலவாகையாலே, **சென்றால்.குடையாம்”, “நிவாஸசையாஸநக” என்கிற வசனங்களின் படி
பல கைங்கர்யங்களையும் செய்து போரும் ஆதிசேஷ.னுடைய ரீதியை(கிரமத்தை) அநுஸரித்ததாகக் கூறலாம்..
அவ்வானமாமலை எம்பெருமானை பஜிக்கும் விஷயத்திலும் அவனது பக்தர்களை பூஜிக்கும் விஷயத்திலும்
இவரது ஆர்வத்தை ஆராய்ந்தால் குலசேகர ஆழ்வாருடைய ஆர்வத்தை யொத்ததாகக் கூறலாம்.
ஆசார்ய சரணாரவிந்தத்தை அர்ச்சிக்கும் கிரமத்தில் ஒப்புயர்வற்ற இம் முனி’வரின் அந்தந்த ப்ரகார விசேஷங்கள்
ஆராயப்படுமானால்: அவ்வவ அநுஷ்டானங்கள் ஸ்ரீமதுரகவி யாழ்வாருடையன: போன்றனவாகும்.
எனவே இம்முனிவர் சிறந்த குணங்களுக்குக் கொள்கலமாவார் என்கிறார்.
இங்கு **வாநசைல கமலா:- காந்தஸ்ய ‘? என்ற இடத்தில் வானசைல என்று ஊரைச் சொல்லி,
“*கமலாகாந்தஸ்ய’” என்று அங்கு எழுந்தருளி யிருக்கும் எம்பெருமான் எனக் கொள்வது
**வானமா மலையே”” என்று எம்பெருமானையும் ** சிரீவரமங்கலககர் ‘? சிரீவரமங்கை என்று திருப்பதியையுங் கூறிய ஸ்ரீ ஸூக்திகளோடு பொருந்தாது.
அன்றியே இந்த சப்தம் * வைகுண்டோவிஷ்டரஸ்ரவா :” என்று எம்பெருமானுக்கும்,
* வைகுண்டேது பரே லோகே ?’ என்று: ஸ்தானத்திற்கும் பேராகக் கொள்ளப் படுமா போலே
அத் திருப்பதிக்கும்: பேராகக் கொள்ளப்படினும் குற்றமில்லை-
இந்த ந்யாயத்தைக் கொண்டுதான் வானமா மலை என்று அவ்வூருக்கும் பேராகத் தற்காலம் எல்லோரா லும் வழங்கப்
பெற்று வருகிறது என்பது உணரத்தகும்.
இவ்விராமானுஐ .முனி பல சைங்கர்யங்களைச் செய்ததால், ஆதிசேஷனின் கைங்கர்யத்தை யநுஸரித்தது இவரது கைங்கர்யம் என்கிறார்.
சேஷக்ரமாத்” என்பதற்கு “*சேஷக்ரம மநுஸ்ருத்ய ‘”என்று “ல்யப்லோபே பஞ்சமீ” எனக் கொண்டு அர்த்தம்கூறப்பட்டது.
பகவத் பஜனத்திலும் ஸ்ரீவைஷ்ணவ பூஜா விஷயத்திலும் மற்றை ஆழ்வார்களை விட்டு ஸ்ரீகுலசேகரரை
இவர் உபமானமாகக் கொள்வான் என்? என்னில்,
அவ்வாழ்வாருடைய பஜந ப்ரகாரம் விலக்ஷண்மல்லவா? பகவத் ஸம்பத்தம் பெற்ற தேசமே அமையும்-;
அத்தேசத்திலும் ஞானத்திற்கு அடைவில்லாத திர்யக் ஸ்தாவர ஜங்கமங்களும் அமையும் என்று நினைத்து
** குருகாய்ப் பிறப்பேன்,” *மீனாய்ப் பிறக்கும் விதியுடையனாவேன் ‘?,
“*தம்பகமாய் நிற்கும் தவ முூடையேன் ஆவேன் ,
“படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேன் ”’ என்றாரல்லவா?
அது போலவே ‘இம்முனிவரும் அவனுகந்த திருப்பதியில் “ஏதேனுமாவேன்”என்ற அத்யவஸாயம் பெற்றவர் என்றபடி.
பாகவதர்களை ஆராதிக்கும் விஷயத்திலும் ““ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரெனக் குடப்பாம்பில் கையிட்ட” ஸ்ரீகுலசேகராழ்வாரைப் போலே
ஸ்ரீவைஷ்ணவ விஷயத்தில் கூறப்படும் தோஷலே சத்தையும் ஸஹியாது பரிந்து அவர்களை பூஜிக்குமவர் என்று தோற்று கைக்காக இந்த உபமானம்
இனி இம் முனிவர் தமது ஆசார்யனான மணவாளமாமுனிகளின் திருவடிகளை அர்ச்சிக்கும் க்ரமங்களும்,
அந்தந்த ப்ரகாரங்களும் மதுரகவி நிலையை ஓத்ததாகும். அதாவது–
அவர் **தேவுமற்றறியேன் ” என்று ஆழ்வாரையே தெய்வமாகப் பற்றினாப் போலே
இவரும் “*ஆசார்யதேவோ பவ” என்கிறபடியே ஆசார்ய ப்ரபத்தி யையே தேவனாகக் கொண்டு அர்ச்சிக்கும் நிலையாகும்,
ஆயின் இவருக்கு பகவத் கைங்கர்யத்தில் ப்ரவ்ருத்தி சேருவது எங்கனே என்னில் ?
ஆசார்ய முகோல்லா ஸார்த்தமாகச் செய்கையாலே சேரும்.
இதுதான் **ப்ரீத்யை பரம் வர வரஸ்ய’” என்றவிடத்தே கூறப்பட்டதாகும்.
கவி :’” என்றது மதுரகவி என்றபடியாம்.
———
அவதாரிகை :–
ஆக இவ்வளவும் வர வாநாத்ரி முனிவரது ஞானம், பக்தி, வைராக்யம், பகவத் கைங்கர்யம்,
பகவத் பாகவத ப்ராவண்யம், ஆசார்ய பாதார்ச்சனம் முதலியவற்றை உபமான முகத்தாலே சிறப்பித்துக் கூறி
அவ்வழியாலே இவர் ப்ரபாவத்தைக் கூறியவர் எம்பெருமானே நர நாரணனாய் உலகத்தறநூல் சிங்காமை விரித்தாப் போலே,
ஞானப்ரதானம் செய்து உலகினை உய்விக்க விரும்பிய ஆதிசேஷனே அநேகாவதாரம் செய்தவர் என்றும்
ஸ்ரீமந் மணவாள மாமுனிகளாகவும் அவரது சிஷ்யரான வானமா மலை ராமானுஜ முநிவராயும் அவரித்தவரும் அவரே என்றும்
இவரது அநந்தாவதாரத்வத்தை அருளிச் செய்து அவ்வழியாலே
அவரது ஓப்புயர்வில்லாப் பெருமையை உணர்த்துகிறார் இந்தக் கடைசி ஸ்லோகத்தால்.
சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-
முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.
லக்ஷ்மீபதி: – லக்ஷ்மீ வல்லபனான எம்பெருமான்,
ஆத்மாகம்-தன்னை (ப்ராயேண்) –
அநேகம் தடவை, சிஷ்யாசார்யதநுத்வயம் -சிஷ்பனென்னும் ஆசார்யனென்னும் இரு
சரீரங்களையுடையவனாக,
நிரபஜத் – பகுத்தான்,
ஏக: – அவ் விருவரில் ஒருவன்,
புரா – முற்காலத்தில்
கரஸம்ஞக: –
நர நாராயணன், நரநாராயணர்களென்கிற சிஷ்யாசார்யர்களாக அவதரித்தது போலவே
திருவநந்தாழ்வான் மாமுனிகளும் வானமாமலை “ ராமனுஜ முனிவருமாய்க்கொண்டு
சிஷ்யாசார்யர்களாக அவதரித்தார் எனக் கொள்வதே
தகுதியுடையதாகும்.
ஸ்ரீ மணவாளமாமூனிகளையும். இந்த ராமானுஜ முனிவரையும் ஈச்வராம்சமாகச் சொல்லுமிடங்
களில்
““ஸாக்ஷ£ந் நாராயணோதேவ:”’ என்று ஆசார்ய
ஸாமாந்யத்தையும் பகவதம்சமாகக் கூறும் ஸாமாந்ய வசனத்தைக் கொண்டே. சொன்னதாகக் கொள்ள வேண்டும்.
இல்லாவிடில் எம்பெருமானார் முதலியோருக்குக் கூறப்படும் சேஷாவதாரத்வம் ஸித்தியாது.
இந்த மஹார்யரென்றும் தொட்டை ஐயங்கார் அப்பை, இந்த “*மங்களாசாஸசம் ப்ரபத்தி என்ற இரு கரந்தங்கள் போலவே
தமது ஆசார்யரான வானமாமலை ராமானுஜ ஜீயர் விஷயமான *: தினசர்யை ‘” என்னும் கீரந்தமும் அருளிச் செய்திருக்கிறார்
என்பது ஸ்ரீ வரமங்கைமுகி வைபவத்தால் அறியப்படுகிறது.
இந்த ப்ரபந்தங்களை ராமானுஜம் பிள்ளான் அருளிச்செய்ததாகவும் சிலர் கூறுவர்.
————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply