Archive for the ‘பெரிய திரு மொழி’ Category

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-5-மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா-

April 10, 2015

இத் திருமொழி ஒரு விலஷணமான அனுபவம் -ஏக காலத்திலே இரண்டு பிராட்டிமார் யுடைய நிலையில்
ஒருத்தி ஏசி சௌலப்ய குணத்தை பேசியும்
ஒருத்தி ஏத்தி பரத்வ குணத்தை பேசியும் -பேசி அனுபவிக்கிறார்-

என்னாதன் தேவிக்கு -பெரியாழ்வார் திருமொழி -ஒருத்தி ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும்
ஒருத்தி ஸ்ரீ ராமாவதாரத்தையும் பேசி அருளினது போலேயும்-

கதிராயிரம் தேவி -பெரியாழ்வார் -சர்வேஸ்வரனைக்  கண்ணாலே காண வேண்டும் என்பாராயும்
அவனை யுள்ளபடி கண்டார் உளர் -என்பாராயும் இரண்டு வகையாக பேசினது போலேயும்-

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியும் பட்டி மேய்ந்தோர் காரேறு திரு மொழியில் -இங்கே போதக் கண்டீரே -என்று கேட்பதும்
விருந்தாவனத்தே கண்டோமே -என்று விடை கூறுவதுமாக அருளிச் செய்தார் இறே-

ஏக காலத்திலே இரண்டு அவஸ்தைகள் -எம்பெருமான் அருளின் மிகுதியால் 
ஞானத்தில் தடை யற்றால் பொருந்தாது ஓன்று இல்லையே
நித்ய முக்தர்கள் பரமபதத்தில் ஏக காலத்திலே அவன் அருளாலே கைங்கர்யங்கள் செய்ய
அனுரூபமாக பல சரீரங்களைப் பரிஹரிப்பது போலே –

————————–

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1-

முன்னடிகளால் சௌலப்ய திருக் குணமும் பின்னடிகளால் பரதவ திருக் குணமும் வெளியிடப்படுகிறது
உபய விபூதி நாதன் ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப –
மேன்மையாக விளங்காமல் இருள் தரும் மா ஞாலத்தில் அவதரிக்க வேண்டுமோ
அரசு உரிமையை இழந்து பெண்டாட்டியையும் கூட்டிக் கொண்டு கல்லும் முள்ளுமான காட்டிலே கால் நோவ நடந்து சென்றானே
பரத்வத்துடன் கூடின இடத்தில் சௌலப்யமும் கொண்டாடத் தகுந்ததே என்பதை அறியாயோ
அப்படி நடந்த திருவடிகளையே வானவர்கள் தங்கள் சென்னிக்கு மலர்ந்த பூவாய்க் கொள்ளுகிறார்கள்
ஆஸ்ரித ரஷண  அர்த்தமாக அன்றோ நடந்தன -கை தொட்டு செய்து நிறம் பெற வேணும் என்று அன்றோ
அசூர வர்க்கம் இருந்த இடம் தேடித் திரிந்து கார்யம்

————————————————-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2-

ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்–
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –

பிறப்பிலி ஒருத்தி மகனாய் ஓர் இரவில் பிறந்து –ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –
சர்வ ரஷகனாக ஆகக் கூடுமோ –
நான்முகனை நாராயணன் படைத்தான் -அஜாயமானோ பஹூதா விஜாயதே –
மகானுபாவன் மனுஷ்ய பாவனைக்கு சேரத் தானே ஒளிந்து வளர்ந்தான்-

——————————————————-

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார்  வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார்  வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும்  உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

அவாப்த சமஸ்த காமன் தயிர் வெண்ணெய் வாரி யுண்டானே
உண்டு நிறைத்து விடுகிற திரு வயிறோ -கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானாய் இருப்பவன்
ஆஸ்ரிதர் ஹஸ்த ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லாது தரியாதவனாய் இருக்கும்
மகா குணத்தை வெளிட்டு அருள- தாழ் குழலார் வைத்த தயிர் யுண்டான் -கொண்டாடத் தக்க எளிமை அன்றோ –

————————————————-

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-

தயிர் வெண்ணெய் யுண்ட ப்ரேமமே பின்னாட்டுகிறது
அறிவு இல்லாதவர்களுக்கு உள்ளே இடையனாகி
ஆன் ஆயனாகி -மாடு மேய்க்கும் இடைக் குலத்தவனாய்
களவு செய்து யுண்டு உகந்தான்
திரு வயிற்றுக்கு கடல் சூழ்ந்த உலகங்கள் எல்லாமே போதாதது   ஆச்சர்யம் அன்றோ –

——————————————————

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு  அரியன் இமையோர்க்கும் சாழலே -11-5-5-

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு
இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -திருவாய்மொழி -1-3-1-
இமையோர் தமக்கும் -தனிப்பெரும் மூர்த்தி தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே-திருவிருத்தம் -98

—————————————————-

கன்றப் பறை கறங்கக் கண்டவர்  தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும்   சாழலே -11-5-6-

மரக்கால் கூத்து -என்பது அல்ல -மரத்தை காலிலே கட்டி ஆடினான் காண் -வியாக்யானம் – குடக் கூத்து போலே-

———————————————————

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே -11-5-7-

பாண்டவ தூதன் -சிறியாத்தான் பட்டர் சம்வாதம் -இன்னார் தூதன் என நின்றானே
அவனே பிரளயத்தில் திரு வயிற்றினுள் வைத்து நோக்கி அருளினவன்
கோதை -அரசு உரிமையை  இழந்து இருந்தாலும் பூச்சூட ஸ்வரூப யோக்யதை யுடைய பாண்டவர்களுக்காக –
சொல்லுண்டான் -பீஷ்மத் துரோணா வதிக்ரம்ய மாஞ்சைவ மது ஸூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் –
துரியோதனாலும் புண்டரீகாஷா என்று விழிக்க வேண்டும்படியான பெருமை படைத்தவன் –

—————————————————————

பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர்  மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர்  மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே–11-5-8-

ராஜாதி ராஜஸ் சர்வேஷாம்
ஆஸ்ரித ரஷண  அர்த்தமாக அசத்ய பிரதிஜ்ஞன் ஆவதும் அவனது திருக் கல்யாண குணம் –

————————————————————-

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு  ஏழ்   உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —11-5-9-

வண் தாராளான் -ஔதார்ய குணத்துக்கு தனி மாலை இட்ட மா வலி-
ஸ்ரீ வாமனனாயும்
ஸ்ரீ த்ரிவிக்ரமனாயும்-பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களைக் காட்டி அருளினான்-

——————————————————–

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

ஷீராப்தி நாதனே
திரு வேங்கடத்தானே
ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாசம் செய்து அருளி பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களைக் காட்டி அருளினவன்
இவரைப் பெறவே அங்கு எல்லாம் இருந்து வந்தவன் -பரம உத்தேச்யம்
இது சித்தித்து விட்டால் அங்கு ஆதாரம் மட்டமாய் விடுமே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன  கொல் ஏ பாவமே
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தகம் -பெரிய திருவந்தாதி
குணாநுபவம் செய்வதே பரம போக்கியம் என்பதால் பல சுருதி தனியாக அருளிச் செய்ய வில்லை-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-4-நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்-

April 9, 2015

சிஷ்ட பரிபாலன  அர்த்தமாகவே துஷ்ட  நிக்ரஹமும் -தர்ம சம்ஸ்தாபனமும்  –
சங்கல்ப மாத்ரத்திலே செய்ய வல்லனாய் இருந்தும் என் நின்ற யோனியுமாய் பிறந்து அருளினான் –
மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் -தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத   ஞானமே  படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதோ -திருவாய் -3-1-9-
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன்  பால் வாராய் –
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே –
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே –
அபேஷிதம் சங்கல்பத்தினால் தலைக் கட்டக் கூடியதோ
ஆண்களையும் பெண்ணுடை யுடுத்த வல்ல வடுவு அழகன்
மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த காணாமற் வேழம்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் என்னார் இடரை நீக்காய்
அவன் ஸ்வபாவத்தைப் பார்த்தாலும் நேராகச் சென்று ரஷித்து அல்லது தரிக்க மாட்டாதவன்  –
கோவிந்த புண்டரீகாஷ ரஷமாம் சரணாகதாம் -ருணம் ப்ரவர்த்திதம் –
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் ஆனான் –
ஆழ்வாருக்கு நினைப்பூட்டி தரிப்ப்க்கச் செய்து  அருள
பகவத் அவதாரங்களை அனுசந்தித்து  தரிக்கிறார் –

——————————————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே -11-4-1-

பிரளய ஆபத்தில் நின்றும் ரஷித்து அருளின மகா உபகாரம் -அடி தோறும் ஒற்று நீங்கலாக -23 எழுத்துக்கள்
சுந்தர பாஹு ஸ்தவத்தில் பாதம் தோறும் 23 அஷரங்கள்
நிலையிடம் எங்கும் இன்றி -நெடு வெள்ளத்திலும் இமையோரிலும் அந்வயம்
தலையிடமற்று -தலை இட மற்று -என்றும்-தலை இடம் அற்று -என்றும் -பிரிக்கலாம்
சர்வாதிகனான சர்வேஸ்வரனை —அவன் அப்படி தன்னுருக் கொடுத்து–வேற்றுருக்  கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் –
உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை–இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால்–நீ மறவாது இருக்க வேண்டாவோ –

—————————————————-

செருமிகு வாள் எயிற்ற வரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணுமுடனே
வெரு வர வெள்ளை   வெள்ளம் முழுதும்   குழம்ப இமையோர்கள் நின்று கடைய
பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து சுழலக்  கிடந்து துயிலும்
அருவரை யன்ன  தன்மை யடலாமையான திரு மால் நமக்கோர் அரணே –11-4-2-

ஆமை வடிவம் கொண்டு ஆதாரமாக எழுந்தி அருளி இருந்த திருமாலே நமக்கு நிகரற்ற ரஷகன் –
மன்னும் வடமலையை மத்தாக மா சுணத்தால் மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கொளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய மன்னும் துயர் கடிந்த வள்ளலை -பெரிய திரு மடல்-

———————————————

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர்  உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வடகுன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

சிலம்பினைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்ப திரு வாகாரம் குலுங்க
நில மடந்தை தனை  இடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய வெம் கோமான் கண்டீர் –
திருத் தெற்றி அம்பலத் திருப்பதிகத்திலும் அருள்வார்
வராகத்து எயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை அடிக்க்ளவு போந்தபடி -பொய்கையார்
ஸ்ரீ வராஹ நாயனாரே நம்மை ஆளவல்ல பிரபு -என்கிறார்-

————————————————–

தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க  வரியாகி யன்று  பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
விள வெழ  விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே –11-4-4-

குட்டம் அது -ரத்த மதுவானது
பெரு நீரிலே மும்மை பெரிது -பிரளய பெரு வெள்ளத்தில் காட்டிலும் மும்மடங்கு பெரியதாய் இருந்ததே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் கண் குளிர சேவிக்க -தலையவிழ்  கோதை மாலை இருபால் தயங்க -தோன்றி அருளினான்
தளையவிழ் -விகசித்தலைச் சொன்னபடி–
கட்டு நெகிழா நின்றுள்ள தொடை கொள் மாலை பூ மாலை என்றும்–இவை இரண்டு அருகும் அசைந்து வர-
அளவெழ வெம்மை மிக்க  அரியாகி -உலகங்கட்கு எல்லாம் உப சம்ஹாரம் விளைதிடுமோ என்று அனைவரும் அஞ்ச
பரியோன் சினங்கள் அவிழ -பகவத் பாகவத் விஷயங்களில் பலவகைப் பட்ட சீற்றங்கள் என்பதால் பன்மை பிரயோகம்
வளையுகிராளி-ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்திக்கும் இரணியனுக்கும் -வளைந்த நகங்கள் சிங்கத்துக்கும் அசுரர்க்கும் ஒக்கும்

———————————————

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு  செல வுய்த்த  பாதமது நம்மை யாளும் அரசே –11-4-5-

வெந்திறல் வாணன் -தேவர்கள் குடியிருப்பை அலிக்கு படியான மிக்க திறல் யுடைய மாவலி
வேத நாவின் முனியாகி மாவலி மெய்ம்மை யுணர -என்றபடி
முன்னடிகளால் ஸ்ரீ வாமன அனுபவம் -பின்னடிகளால் ஸ்ரீ த்ரிவிக்ரமன் அனுபவம்
ஒண் மிதியில் புனலுருவி யொருகால் நிற்ப யொருகாலும் காமருசீர் அவுணன் யுள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே -திரு நெடும் தாண்டகம்
மேல் உலகங்களை அளந்து அருளிய திருவடியைப் பேணிப் பேசுகிறார் ஆழ்வார் இங்கே
அதி மானுஷ ஸ்தவத்தில் கீழ் உலகங்களை அளந்து அருளிய திருவடியைப் பேணிப் பேசுகிறார் கூரத் ஆழ்வான்-

———————————————-

இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -11-4-6-

கோடாலிப் படையை ஏந்தினவனும்
ஸ்ரீ பூமா நீளா தேவி கொழுநனும்
திருக் கல்யாண குணங்களால் யுண்டான கீர்த்திக்கு கொள்கலமாய் இருப்பவனும்
திரு வயிற்றிலே வைத்து ரஷித்து அருளிய பெருமானே நம்மை நீடூழி அடிமை கொள்வான்-

——————————————-

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

மரண காலத்தில் மாரீசன் போட்ட கூச்சலாலே மேலே எல்லாம் நடந்து தேவர்கள் பிரார்த்தனை ஈடேறிற்று
ஸ்ரீ ராமபிரான் விஷயத்தில் மாரீசன் உபகாரகனே அன்று அபகாரகன் அல்லன் –

————————————————-

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

ஹம்சாவதரமாய் திருவவதரித்து கடலினுள் புகுந்து
அசுரர்களைத் தேடித் பிடித்து கொன்று
வேதங்களை மீட்டுக் கொணர்ந்து
ஹம்ச ரூபியாய் பிரமனுக்கு உபதேசித்து அருளினான்
அந்த பரஞ்சோதியே நம்மை அடிமை கொள்ளும் –

————————————————

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே—11-4-9-

ஸ்ரீ கிருஷ்ணனே நமது பாபங்களை வாசனையோடு போக்கி அருளுவான் என்பது திண்ணம்
வேறு ஒரு ஆஸ்ரயம் யுண்டு என்று நினைத்து இராமல் அவனை வணங்குமின்
உரவோள் -வலிய நெஞ்சு யுடையவள்
தெற்றல் -தெள்ளியவன்-

————————————————-

கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல்
ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற  தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே –11-4-10-

இத் திருமொழியை வாயாரப் பாடி உழல்கின்ற -இதுவே போது போக்காய் திரிகின்ற –
பாகவதர்கள் பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்
ஸ்ரீ கிருஷ்ண அவதாரமும் ஸ்ரீ ராம அவதாரமும் முக்ய -இனிய திரு அவதாரங்கள் என்பதால்
நிகமன  பாசுரத்திலே இவற்றை சொல்லி அருளுகிறார்
வேலை புடை சூழ் திருமங்கை -கடல் போன்ற காவேரி- -முன்பு கடல் அணித்தாக இருந்து இருக்கலாம் –
வேலை மோதும் மதில் சூழ் திருக் கண்ணபுரம் போலே  –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-3-மன்னிலங்கு பாரதத்து த் தேரூர்ந்து மா வலியைப்-

April 9, 2015

கீழ்த் திரு மொழியில் -நம் பெண்மை சிந்தித்து இராது போய்த் தூமலர் நீர் கொடு தோழீ-நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில்  வண்ணரைக்  கண்களால் காணலாம் கொலோ –
என்று ஸ்வரூப விருத்தமாக அதி பிரவ்ருத்தி பண்ணி யாகிலும் காணப் பெறுவோம் என்று ஆழ்வார் கோலின அளவிலே –
இதனைப் பொறுக்க மாட்டாத எம்பெருமான் வந்து முகம் காட்டி
தன் செல்லாமை அடங்கலும் காட்டி அருள -ஆழ்வார் அதை எல்லாம் அனுசந்தித்து -தாஹித்தவன் சிறிது தண்ணீர் கிடைத்தால்
அது தாஹ சாந்திக்கு உடலாகாதே- மேலும் மேலும் விடாயை வளரச் செய்யுமா போலே விடாயைப் பிறப்பிக்க
அதனாலே மிகவும்நோவு பட்டு -அவனைக் கிட்டி நித்ய அனுபவம் பண்ணப் பெற்றிலோம் ஆகிலும்
இவ்விடாயும் பதற்றமும் இவ் விஷயத்திலே ஆகப் பெற்றோமே என்று திருப்தியுடன் பேசித் தலைக் கட்டுகிறார் –
இதுவும் நாயகி பாசுரம் -அந்தாதி தொடையில் அமைந்த பதிகம்-

———————————

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலை வளையத்
திண் தேர் மேல் முன்னின்ற-பெரியாழ்வார்
பாதாளத்தில் சிறை வைத்து அருளியதால் -பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்து -என்கிறார்
இவனைப் பெற வேண்டி ஆசைப்பட்ட நான் பெற்ற பேறு வளை இழந்ததும் நிறம் இழந்ததுமே காணீர்-

———————————————

இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர்
பருந்தாள் களிற்றுக் கருள் செய்த செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடி யாட
வருந்தாது என் கொங்கை யொளி மன்னு மன்னே -11-3-2-

வருத்தம் தலை மடிந்து மகிழ்ச்சி தோற்ற பேசும் பாசுரம்
ஹிருதயத்திலே நித்ய வாஸம் செய்து அருளுகிறானே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருள் செய்த வாத்சல்யம் எல்லாம் திருக் கண்களிலே தோற்றும் படி எழுந்து அருளி யுள்ளானே
அவன் திரு நாமங்களை ப்ரீதிக்கு போக்குவீடாக பாடி -உடல் இருந்த இடத்தே இருக்க மாட்டாதே ஆடி –
கொங்கைகள் வருத்தம் தீர்ந்து புகர் பெற்ற படியைப் பாராய்
கறை சேர் -கறை-உதிரம் என்னும் பெயரில் -இறால் போன்ற பருத்த அடிக்க -இங்கே -உதிரம் பொருளிலும் கொள்ளத் தக்கதே-
அன்னே-பாத பூர்ணம் -தோழீ-என்னவுமாம் –

————————————————-

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3-

இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கமும் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –
என்ற தமது வாயாலே -அன்னே இவரை அறிவன் -என்கிறார் –
நெருங்க கலந்த போதாக -இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –
காதாசித்கமாக சம்ச்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –
சிருஷ்டியின் ஆரம்பத்தில் -ஒவ் ஒரு கல்பத்தின் தொடக்கத்திலும் -நான்முகனுக்கு வேதங்களை உபதேசம் செய்து அருளினவர் –
கர்த்தா இல்லை -அபௌருஷேயம் –
அப்படி அறப் பெரியவர் எனது பொன் வளையல்களிலே  ஆசை கொண்டு என் நெஞ்சிலே புகுந்து போகாதே இருக்கிறார்
இன்னம் என்ன என்ன செய்ய திரு உள்ளம் பற்றி உள்ளாரோ அறியேன்
பிரிவை யுண்டாக்கி உடலை இளைப்பித்து வளையல்கள் கழலும் படி செய்யவே மனத்துக்குள் புகுந்து போகாமல் யுள்ளார் -என்றவாறு-

—————————————————

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-

இவரை அறிவேன் என்பதே யுண்மை –
இங்கே போதும் கொலோ இன வேல் நெடும் கண் களிப்ப கொங்கார் சோலைக் குடந்தை கிடந்தமால் இங்கே போதும் கொலோ
என்று நான் மநோ ரதித்த படியே வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிய பெருமானே இங்கே எழுந்து அருளி இருக்கின்றார் –
இளம் பிராயத்தை யுடையனாய் பொய்யடி இட்டுப் போய்ப் புக்கு ஆஸ்ரிதர் யுடைய ஹஸ்த ஸ்பர்சம் யுள்ள த்ரவ்யத்தை பெற்றோமே என்று உகந்து போலே
என்னைத் தழுவி அணைத்து-தலை தடுமாறாகப் பரிமாறி
தொல்லை இன்பத்தின் இறுதி கண்ட இவரை அறியோம் என்று எங்கனே சொல்லக்  கூடும் –

————————————————

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே –11-3-5-

வணங்கி -தொழுது  -இறைஞ்சி -முக்கரணங்களாலும் நமஸ்கரித்து
தேவாந்தர பஜனம் -உபாயாந்தர சங்கம் -பிரயோஜனாந்த -போல்வனவற்றை -சிந்தையில்  கொள்ளாதவராய்
இருப்பவர்களுக்கு பரம சாம்யாபத்தியை அருளுபவன்
அவனையே இடைவிடாமால் முக் கரணங்களால்   வணங்கி சரணமாக உறுதி கொண்டேன்
தம்மையே பற்றா -பற்றாக என்றபடி -உபாயம் உபேயம் இரண்டுமே அவனாக கொண்டோம் –

————————————–

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-6-

ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்தாது மண் யென்று-சந்தரன் சூர்யன் போன்ற ஒளிப் பொருள்கள் உள்ள ஆகாசத்திலே
ஓரடி ஓங்க வைத்து மற்று ஒரு திருவடிக்கு பூமி போதாது என்று –
இமையோர் தொழுது ஏத்தி-ப்ரஹ்மாதி தேவர்கள் வணங்கித் துதித்து –
கைத்தாமரைக் குவிக்கும்-தங்களுடைய கைகளை தாமரை மொக்கு போலே அஞ்சலி செய்யப் பெற்ற
பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் யுராய் உலகளந்த நான்று வராகத்து எயிற்று அளவு
போதாவாறு என் கொலோ எந்தை அடிக்களவு போந்த படி -முதல் திருவந்தாதி -84-
என் -கண்ணன் –கண்ணனையே -எனது கண் போன்ற ஸ்ரீ கிருஷ்ணனை
அடியார் மனத்தினில் வைத்தார் – வைத்து இன்பம் உய்த்தார்  -பரம ஆனந்தத்தை பெற்றவர் ஆவார்-

——————————————–

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை   யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

நோக்கி நோக்கி யுன்னை காண்பான் யான் எனதாவியுள்ளே நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள் தோறும்
என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தின் யுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே -திருவாய் -4-7-6-
அவயவம் தோறும் இருந்தமை யுணர்ந்து கண்ணால் காண ஆசை கொண்ட நம்மாழ்வார் போலே இவரும் திருப்தி அடையாமல் வளை இழக்கிறாள்
பெண்ணானோம் பெண்மையோம் -கண்ணன் மனத்துக்கு உள்ளே நிற்கவும் வளை இழந்த நமக்கும் பெண்மைக்கும் வெகு தூரம் யுண்டு
இவ்விஷயம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்
குளிரருவி வேங்கடத்து என் கோவிந்தன்  குணம் பாடி  அழியாத மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே -நாச்சியார் -8-3-
அவன் விரும்பி யுறையும் திரு வரங்கத்தையும் திரு மலையையும் பாடுவோம் -பெண்மைக்கு கேடு வந்தால் வரட்டும்
அன்றிக்கே
பெண்ணானோம் பெண்மையோம் -பெண்ணாய்ப் பிறந்த நாம் பெண்மைக் குணத்தை வழுவாதபடி யுடையராய்க் கொண்டு
சத்தை பெற்று நிற்கும் படியாக -என்றவாறும் –

—————————————————–

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —11-3-8-

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாயா-
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –
நெஞ்சு அனுகூலித்ததாகில் அருமையானது ஒன்றுமே இல்லையே
நன்னெஞ்சே கூடக் குறிப்பாகில் -பாடோமே எந்தை பெருமானைப் பாடி
நன்னெஞ்சே கூடக் குறிப்பாகில் நின்று ஆடாமே -மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -போலே
நன்னெஞ்சே கூடக் குறிப்பாகில் ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து சூடாமே -நாமம் ஆயிரம் ஏத்த நாராயணனை சிந்தித்துக் கொண்டு –
நன்னெஞ்சே கூடக் குறிப்பாகில் சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் கூடாமோ
என்று நான்கு வாக்யார்த்தம்
குறிப்பாகில் -எம்பெருமானுக்கு திரு உள்ளம் ஆகில் -என்றுமாம் –
அரியதும் எளியதாகும் -இல்லையானால் எளியதும் அறியதாகுமே-

———————————————————

நன்னெஞ்சே நம்பெருமான் நாளும் இனிதமரும்
அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9-

ஆகாசம் பாராமல்
ஆறுமே கடவாமல்
மலையும் ஏறாமல்
நாம் இருந்த திருவாலி நாட்டிலே நித்ய சந்நிதி பண்ணி இருக்கும்படியான பாக்யம் பெற்றோமே –
கைப்பட்ட பொருளைக் கணிசியாமல் கைக்கு எட்டாப் பொருளை ஆசைப்பட்டு உடம்பு வெளுக்க வேண்டுமோ
இருந்த இடத்திலே எம்பெருமான் திருவடி மலர்களைச்   சூடி புனிதராகப் பெற்றோமே -உகப்போடே தலைக் கட்டுகிறார்
நெஞ்சு இசைந்ததனால் பெற்ற பேறு ஆகையாலே முந்துற  முன்னம் நெஞ்சைக் கொண்டாடுகிறார் –
கீழே நன்னெஞ்சே -என்றார் -அனுகூலிக்கைக்காக கொண்டாடின கொண்டாட்டம் –
இப்பாட்டில் அனுகூலித்ததற்கு கொண்டாடுகிற கொண்டாட்டம் –

——————————————————

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ்  மாலை
கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-

இத் திருமொழியை அதிகரிப்பவர்கள் இவர் தம்மைப் போலே  ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்று
ஆராத காதலை யுடையராய் இருப்பார்கள் –
இவ்வளவே அல்லாமல் முற்று உலகையும் ஆளும் செல்வச் சிறப்பையும் பெறுவார்கள்
இத் திரு மொழியைக் கற்பவருக்கு மாத்ரமே அன்று பலன்
இத்தை செவி தாழ்த்து கேட்க விரும்புவர்கட்கும் அவசியம் அனுபவித்தே அற வேண்டிய துயர்களும் தொலைந்து விடும்-

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-2-குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்-

April 9, 2015

இத் திரு மொழியும் நாயகி சமாதியால் -விரஹ வ்யசனம் மீதூர்ந்து பாதக பதார்த்தங்கள்
நோவு படுத்தும் பாட்டை பன்னி யுரைத்து அருளிச் செய்கிறார் —

——————————————

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை  பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–11-2-1-

ஆனைத் தொழில்கள்  செய்து ஆஸ்ரித ரஷணம் செய்து அருளிய பிரான் அன்றோ –
அங்கநாம் அங்கநாம் அந்தரே மாதவோ மாதவம் மாதவஞ் சாந்தரேண் அங்கனா -ராசக்க்ரீடை செய்து அருளினவன் அன்றோ
திருக் குணங்களைக் காட்டி அருளி ஈடுபடுத்தி சந்தியிலே நின்று திண்டாட வைத்தான் –
அன்றில் பறவைகளும் கூட்டிலே இருந்து தழு தழுத்த குரலிலே ஓய்வின்றி கத்துகின்றன
எம்பெருமானை தன்னுடன் கூட்டாது ஒழியினும் இவற்றை கூட்டில் இருந்து துரத்த வல்லாரையாவது கிடக்கப் பெறுமோ-
அன்றிலின் கூட்டை -உருபு  பிரித்து கூட்டி யுரைக்கப் பட்டது -அன்றில்லை கூட்டில் நின்றும் பிரிக்க வேண்டும் என்றபடி –

———————————-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே –11-2-2-

கண்ணபிரானுடைய வேய்ங்குழல் தோள் வலியைக் காட்டி நலிகின்றதே –
ஆய்ப் பெண்ணின் நிலையிலே நின்று பேசும் பாசுரம்
அசேதனமான இது மீசை முறுக்கி வர வேண்டுமோ –
சர்வ சக்தன் செய்தால் நம்மால் நெருக்குண்பது பிராப்தம் என்று ஆறி இருக்கலாம்
மங்கல நல்  வனமாலை மார்வில் இலங்க மயில் தழைப் பீலி சூடி  பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூங்கொத்து காதில் புணரப் பெய்து கொங்கு நறும் குழலார்களோடு குலைந்து குழல் இனிதூதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலினிசை போதராதே -பெருமாள் திரு மொழி -6-9-
நம்மையும் கூட்டிக் கொண்டு குழலூதுவது  எப்போதோ -என்றுமாம்-

—————————————–

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்
அல்லி மலர்த் தண் துழாயை நினைந்து இருந்தேனையே
எல்லியின் மாருதம் வந்தடும் அதுவன்றியும்
கொல்லை வல்லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே –11-2-3-

அவன் திருமேனி சம்பந்தம் பெற்ற திருத் துழாய் ஆகிலும் சிறிது கிடைக்குமோ என்று
அல்லும் பகலும் சிந்தனை செய்யா நிற்க
அதில் ஆசை வைத்ததே காரணமாக –
வாடைக் காற்றும் மாட்டின் கழுத்து மணி ஓசையும் வருத்துகின்றனவே-

———————————————–

பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் –11-2-4-

ஆஸ்ரிதர்களுக்கு விஸ்வாசம் பிறப்பித்து கார்யம் செய்து அருளிய பெருமாள் திருவடிகளே நமக்கு தஞ்சம் என்று சிந்தித்து இருக்க
வாடைக் காற்றும் சமுத்திர கோஷமும் -வாடைக்கும் நிலமங்கை யாடைக்கும் -வருந்த வேண்டி யுள்ளதே
இதற்கு இனி என் செய்கேன் -அவருடைய அருளே அரண்
திருந்து சேவடி -திரு உந்து சேவை -ஐஸ்வர்ய பிரகாசகமான திருவடிகளை
திருந்து சேவடி -ஆஸ்ரிதர்களுக்கு என்றே வாய்த்திருத்தல் –

——————————————–

அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல்
பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே –11-2-5-

பின்னை மணாளரான எம்பெருமான் திறத்திலே நெஞ்சு செலுத்தப் பெற்ற பின்பே
தாய் சீறிச் சொல்லும்படியாகவும் -நம்மை திரஸ்கரித்து விட்டு பகவத் விஷயத்தில் ஒரு நாயகனைத் தேடித் போனாளே –
அன்றிலின் குரலால் நலிவு படும்படியாகவும்
கடலோசைக்கு நோவு படும்படியாகவும்
கை வளையல்கள் கழலும்  படியாகவுமாகப் பெற்றேனே
இவை நமக்குப் பாதகமாகப் புக்கது –
பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று –
சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே-
அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை  நலிந்தால் என்-என்பாராம் –
அந்தக் காரணம் பற்றி யாகில் இவை நமக்கு உத்தேச்யமே   என்றவாறு –
சோழியர் சாமான்யர் என்று இருவகை கைங்கர்ய நிஷ்டர்கள் திரு மால் இரும் சோலை மலையில் இருந்தனராம்
அவர்களுக்குள் சந்நிதி கைங்கர்ய விஷயமாக சண்டை வர இருட்டில் ஒரு சோழியர் மற்று ஒரு சோழியரை அடிக்க
அவர் நான் சோழியன் என்ன -சாமான்யன் என்று அடித்தேன் என்று அடித்தவர் வருந்த –
இன்னமும் அடியும் சாமான்யன் என்று என்னளவு அடித்தாலும் எனக்கு உத்தேச்யமே என்றாராம் –
பகவத் விஷயத்தில் இவளுக்கு உண்டான காதலின் உறைப்பு இத்தால் சொல்லிற்று ஆயிற்று –

—————————————-

ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே –11-2-6-

ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம்-அசாதாராண லஷணங்கள் யுடன் -கூடிய சர்வேஸ்வரன்
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டவன் முகத்தன்றி விழியேன் என்று செங்கச்சுக் கொண்டு
கண்ணாடை  யார்த்து சிறு மானிடவரை கானில் நானும் கொங்கைத் தலமிவை -நாச்சியார் -12-4-
பாழிமையான கனவில்-முகப் பெரியதாய் ஸ்வப்ன துல்யமான சம்ஸ்லேஷித்தினால்
பெரிய மேன்மை உடையவர் கையைக் காலைப் பிடித்து தாழா நின்று பரிமாறின பரிமாற்றம் ஆகையாலே
அனுசந்திக்கப் புக்கால் கரை காண ஒண்ணாத படியாய் இருக்கிற
அபர்யாப்த சம்ஸ்லேஷ சுகத்தாலே நம்மைக் கூப்பிடுவித்தார் –
நானும் தோழியும் தவிர மற்றவர்கள் அந்ய பரர்களாய்  தூங்க
ஓர் இரவும்  ஏழு ஊழி யாய் செல்கிறதே-
கோழியும் கூட உறங்கிற்றே –

————————————

காமன் தனக்கு முறை யல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தான் மகன் சொல்லில்
யாமங்கள் தோறும் எரி வீசும்  என்னிளம் கொங்கைகள்
மா மணி வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே –11-2-7-

நான் கடல் வண்ணனான எம்பெருமானை மணவாளனாகக் கொண்டானோ அப்பொழுதே  
மன்மதன் எனக்கு மகனாய் விட்டான்
பெற்ற தாயையும் மகன் நலிய வேண்டுமோ -சர்வ காலத்திலும் தபிக்கிறான்
இப்படி நெருப்பை வீசச் செய்தேயும் என்னுடைய இள முலைகள் தாம் கோண்ட கொள்கையை விடுகின்றன வல்லவே –
பக்தி மிக்கு மிக்கு  செல்கின்றதே என்றவாறு –
அப்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து விம்மி வளர்கின்றனவே-

————————————-

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8-

திருமால் இரும் சோலையில் நித்ய வாஸம் செய்து அருளும் அழகர் எனது பெண்மைக்கு
உரிய அடக்கத்தை கொண்டு போயினர்
சர்வ ஸ்வபகாரம் கொண்டு செல்லத் செய்தேயும் இரக்கமும் இல்லாமல் இருக்க
ஆதித்யனும் அவர் வழி பின்சென்று இரக்கம் இல்லாமல் உள்ளானே
இந்த உடலைச் சுமந்து நாம் வருந்த வேண்டுமோ இது சிதிலமாகி முடியப் பெறுமாகில் அதுவே நமக்கு சிறந்த வழியாகும்-

நஞ்சு -நைந்து என்பதன் போலி
உடலம் -அம் சாரியை
துயின்றால் -தீர்க்க நித்ரையாகிய மரணம் அடைந்தால் என்றவாறே
அவனை அனுபவியாத சரீரம் ஒழிவதே நன்று என்றபடி –
நாகமிசைத் துயில்வான் போலுலகம் எல்லாம் நன்கொடுங்க யோகணையான் கவராத
உடம்பினால் குறைவிலமே -திருவாய்மொழி-

——————————-

காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு
பூமரு கோல நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –11-2-9-

சரீரம் இருப்பதும் முடிவதும் நம் இஷ்டத்தைப் பொறுத்து அன்றே -அவன் சங்கல்பத்தின் படியே நடக்குமது –
கண்ணாளா கடல் கடைந்தாய் உன் கழற்கே வரும் பரிசு தண்ணாவா தடியேனைப் பணி கண்டாய் சாமேறே-திருவாய் -4-9-1-
என்று பிரார்த்தித்த இடத்திலும் அது சித்தித்தது இல்லையே
இங்கேயே  வைத்து உலகக்கு பல உபகாரங்களை செய்ய திரு உள்ளம் பற்றிக் கொண்டுள்ளானே-
அவனைக் காண அபி நிவேசம் மிக்கு ஸ்வரூபம் அழிந்தாகிலும்
அதி பிரவ்ருத்தி செய்தாகிலும் அவனைக் கண்டு விடுவதே ஆகும் கொல்
பெண்மைக் குணத்தை திரச்கரித்து ஒழித்தாகிலும்  
அவன் திரு உள்ளத்துக்கு உகப்பான உபகாரகங்களைச் செய்து கண்களால் காணப் பெறுவோம்
இலக்கம் -லஷ்யம்-

—————————

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல்
என்றும் நில்லா வினை யொன்றும் சொல்லில் உலகிலே –11-2-10-

இத் திருமொழியை அனுசந்திப்பவர்கள் இடம் பாவங்கள் நில்லாத அளவுக்கும் மேலே
அவர்கள் வாழும் தேசத்திலும் பாவங்கள் ஒட்டாது –
யத் அஷ்டாஷர சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிஷா தஸ்கரா-
திரு அஷ்டாஷரம் கை புகுந்த மகான்கள் வாழும் தேசத்தில் பிணி பஞ்சம் கள்ளர் கொடுமை  அணுக மாட்டாது போலே

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-1-குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை-

April 9, 2015

ஸ்ரீ யபதியைப் பிரிந்து ஆற்றாமையாலே -அன்யாபதேசமாக வெளியிட்டு அருளுகிறார்
தென்றல் முதலிய பாதக பதார்த்தங்களால் நோவு படுகிற பிராட்டி யுடைய விரஹ வேதனையை  விளங்கக் காட்டுகிறார்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்களாலே உலகத்தை வாழ்வித்த பிரான் நம்மை இப்பாடு படுத்துவதே -என்கிறாள்-

——————————————–

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1-

குன்று எடுத்து ஆநிரை காத்து அருளிய பிரான் -பிராட்டிக்காக ராஷச ஜாதியை அழித்த பிரான் –
ரஷகத்வத்தை என்னிடத்திலே காட்டாதே
தென்றலையும் ஏவி தீ வீசும்படி செய்கிறானே இது வென் –
வில் எடுத்து அரக்கரை மடித்தவர்-இந்த்ரன் இடத்திலும் அரக்கர் இடத்திலும் காட்டிய வீரத்தை என்னிடத்திலும்
காட்ட வேண்டி இத் தென்றலை தீ வீசும்படி ஏவினார் போலும்
தீ வீசும் போதைக்கு அவருடைய சங்கல்பமே அடியாக இருக்க வேண்டுமே –
பீஷோதேதி ஸூர்ய-என்றவனைப் பின் செல்ல வேணும் இறே அவற்றுக்கு –

———————————————-

காரும் வார்பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈரவாடை தான் ஈரும் என்னையே-11-1-2-

பெய்கின்ற மழைத் துளியை துணையாகக் கொண்ட வாடைக் காற்றானது விரஹத்திலே இளைத்து இருக்கும் என் உடலை
நற்கொலையாக முடித்து விடாதே உயிர்க் கொலையாக சித்திரவதம் செய்யா நின்றதே –
அவனது திரு மார்பும் திரு மாலையுமான அழகைக் காண ஆசைப்பட்டதுவே ஹேதுவாக சிஷை என்றதாயிற்று –
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை யுகந்தது காரணமாக
என் சங்கு இழக்கும் வழக்குண்டே -நாச்சியார் –
ஈர்த்தல் -அறுத்தல்-

————————————-

சங்கும் மாமையும் தளரும் மேனி மேல்
திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்
கொங்கலர்ந்த தார் கூவும் என்னையே –11-1-3-

சந்தரன் நெருப்பு போலே தகிக்க அதற்கு மேலே கடல் வண்ணருடைய திரு மார்பில் திருத் துழாய் மாலையும்
மார்வு நெறித்து வந்து அறை கூவுகின்றதே –
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ -திருவாய்மொழி
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை யம்மான்
ஸ்த்ரீத்வத்வ அடக்கத்தைத் தள்ளி விட்டு வீதி ஏறப் புறப்பட்டாகிலும் கண்டு கழிப்பதே கருமம்   அன்றோ –
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டின்னே மாரி கையேறி அறையிடும் காலத்து -திருவிருத்தம் –
அடி ஒற்றி கூவும் என்பதற்கு கருத்து  –

—————————————-

அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கோர் தாயிருவாகி வந்தவள்
கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே -11-1-4-

பீஷோதேதி ஸூர்ய-என்றவனைப் பின் செல்ல வேணும் இறே அவற்றுக்கு –அவன் சங்கல்ப அதீனமாக
குளிர்ச்சியை இயல்பாக யுடையனான சந்தரன் இப்போது அவனது சங்கல்ப்பத்தினாலே இப்படி சுட வேண்டும்
பூதனையை உயிரோடு உறிஞ்சி யுண்ட பராக்ரமத்தை பாவியேன் இடத்திலும் காட்ட வேண்டி இப்படி சங்கல்ப்பித்தானே -ஏவினான் போலும்
அங்கு ஓர் ஆய்க்குலம் -ஒதுங்கி வளர புகலிடம் வாய்த்ததே -மகிழ்ச்சியினால் அங்கு ஓர் -என்கிறாள்
கோயின்மை -கேட்பார் அற்ற செயல் –
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை -திருவாய்மொழி –
அடிமை என்னும் அக் கோயின்மையாலே -பெரியாழ்வார்-

———————————————————

அங்கோ ரளரியாய் அவுணனைப்
பங்கமா விரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே கொலோ
பொங்கு மா கடல் புலம்புகின்றதே -11-1-5-

கடலும் புலம்ப -மா மதியை அவன் இதன் நின்றும் வாங்கி விட்டானோ
மா மதி -நல்ல புத்தி -சந்தரன்
அஸ்வா அப்சரோ விஷ ஸூ தா விது பாரிஜாத லஷ்ம்யாத்மநா பரிணதோ ஜலதிர்ப் பபூவ -அதி மானுஷ ஸ்தவம்
ஐரா வாத யானை உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை-கால கூட விஷம் -அமுதம் -கல்ப வ்ருஷம்-
லஷ்மி -உடன் மதியும் வெளிப்பட்டது இறே
நல்ல சரக்கைப் பறி கொடுத்தால்  புலம்புகை பிராப்தமே அன்றோ –
தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை வாங்குகையோ–இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது
என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும்  கூப்பிடுகின்ற்றது –  மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது –
ஒன்றுக்கும் விக்ருதையாகாத  நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததி–
இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும் –
மங்குல் -ஆகாசம் –

———————————————

சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே -11-1-6-

அன்றில் க்ரௌஞ்சம்-வாய் அலகு நெகிழ்ந்த அளவிலே பெரும் தொனியாகக் கத்துமே
பெண்ணை மேல் பின்னை அவ்வன்றில் பெடைவாய் சிறு குரலும் என்னுடைய 
நெஞ்சுக்கு ஓரீர் வாளாம் என் செய்கேன் -பெரிய திரு மடல்
ஒரு பிராட்டிக்காக உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து இலங்கை சென்று
சிலை வளைத்து அம்பு எய்து செய்த செயல்களை எல்லாம் –
என்னிடம் இரக்கம் காட்டாதே அன்றிலின் குரலை இட்டும் அடர்க்கிறார்
பரிவுக்கு இலக்காக்காதே பராக்ரமத்துக்கு இலக்காக்கினாரே
முன்றில் இல் முன்
பெண்ணை பனை மரம்
முளரிக் கூட்டகத்து -தாமரைப் பூவாலும்-தாதாலும்-தந்தாலும்-செய்த கூட்டிலே கிடக்கிற-

——————————————

பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ
வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து
ஆவியே இலக்காக எய்வதே–11-1-7-

தானாக நினையானேல் தன்னினைந்து நைவேற்கு ஓர் மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ-
திரு வாலிப் பதிகத்தில் போலே இங்கும் பேசுகிறாள்
கருடாரூடனாய் சேவிக்கப் பெற்ற பலனோ மன்மதன் கருப்பு வில்லிலே மலர் அம்புகளை
என் ஆவியை இலக்காக கொண்டு பிரயோகிப்பது
பகவத் விஷயத்தில் எடுபட்டதே காரணமாக இக்காம நோய் யுண்டாயிற்று
பூவை காயாம் பூவின் சாதி-

————————————————

மாலினம் துழாய் வரும் என்நெஞ்சகம்
மாலினந்துழாய் வந்து என்னுள் புகக்
கோல வாடையும் கொண்டு வந்ததோர்
ஆலி   வந்தது ஆல் அரிது காவலே–11-1-8-

என் நெஞ்சகம் மால் இனம் துழாய் வரும் -அந்வயம்
வ்யாமோஹத்துக்கு  தகுதியாக கவலை கொண்டு இருக்கிறது –
துழாய் -துழாவி-கடலும் மலையும் விசும்பும் துழாய் -திருவாய்மொழி
அடுத்து -மாலின் அம் துழாய் வந்து என் உள் புக -என்று அந்வயம் -நெஞ்சால் நினைத்த மாத்ரத்திலே என்றபடி
வந்து ஓர் ஆலி கோல வாடையும் கொண்டு வந்ததால் -ஆலி -சிறு துளி -மழைத் துளி -விரஹிகளுக்கு   உத்தீபகம்
இது ஏற்கனவே வந்து நலிய  நிலம் பார்த்து போயிற்று
வாடைக் காற்றைத் துணை கொண்டு வந்ததே
இனி என்னைக் காத்துக் கொள்ளுதல் எளிதன்றே –

————————————

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9-

பண்டு போலே ஒக்கும் என்னாதே பண்டு பண்டு போல் ஒக்கும் –
இப்போது விரஹ அவஸ்தை -முந்திய அவஸ்தை -சம்ச்லேஷ அவஸ்தை –
அதற்கு முந்திய அவஸ்தை பகவத் விஷய வாசனையே தெரியாமல் அந்ய பரமாய் போந்த அவஸ்தை
உண்டு உடுத்து உடம்பு புஷ்கலமாய் இருக்குமே -பகவத் வாசனை பண்ணிப் போந்தது முதலாக –
சம்யோகா விப்ரயோகாந்தா -ஷண  கால சம்ச்லேஷமும்  பல ஊழி கால விச்லேஷமும் –
எந்நிறம் –பண்டு பண்டு போல் ஒக்கும் -அவன் வாய் புலற்றும் நிறம் -அறப் பண்டு போலேயாம் –
கலக்கை யாகிறது பிரிவுக்கு அங்குரம் இ றே –
கலந்து பிரிந்து லாப அலாபங்கள் அறியாதே- பூர்ணையாய் இருக்கிற போதை நிறம் போலே யாம் –
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க யுறுதிராகில்-நாச்சியார்
மிக்க சீர்த் தொண்டர் – சூத்திர பலன்களை  விரும்பி தொண்டு செய்பவர் -தொண்டர் –
உபயாந்தரங்கள் மூலம் சிறந்த புருஷார்தத்துக்கு அடிமை செய்பவர் -சீர்த் தொண்டர்  –
ஒரு பலனும் பேணாதே ஸ்வயம் பிரயோஜனமாக அடிமை செய்பவர் மிக்க சீர்த் தொண்டர் –

————————————-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே -11-1-10-

தூது சென்று அருளியவன் புண்டரீகாஷன் தானே –
பீஷ்மத் துரோணா வதிக்ரம்ய மாஞ்சைவ மது ஸூ தன-கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம்  வருஷல போஜனம் –
அதனால் தூதனாய்ச் சென்ற செங்கண் மாலே
அந்த சௌசீல்யனைப் பற்றி அருளிச் செய்த இத் திருமொழியைக் கற்றவர்கள் எம்பெருமானைப் பிரிந்த
துன்பம் அடையார் -நித்ய அனுபவம் பெறப் பெறுவார்-

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-10-திருத்தாய் செம்போத்தே-

April 8, 2015

இத் திருமொழி பரகால நாயகி பாசுரமாகச் செல்கிறது –
செம்போத்து -காக்கை -குயில் கிளி -முதலிய பறவைகளை எம்பெருமான்
இங்கே வந்து சேரும்படியாக கூவ வேண்டிக் கொள்கிறாள் –

———————————————-

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே -10-10-1-

செம்போத்து பறவை வலமானால் நல்ல சகுனம் என்பர்
செம்போத்து வலம் வருதல் -காக்கை கூவுதல் -பல்லி கொட்டுதல் -இஷ்ட சித்திக்கு ஸூசகங்கள் –
இஷ்டங்களைப் பெறுவிப்பன வல்ல -பிரமித்து அருளிச் செய்கிறார்
மயர்வற மதி நலம் அருளப் பட்டாலும் -ப்ரமம் கர்ம நிபந்தனம் அன்று
பகவத் ப்ராவண்ய அதிசயத்தினால் விளைந்த அஜ்ஞ்ஞானம் அடிக் கழஞ்சு பெரும்
புருஷகாரம் செய்ய வல்ல பிராட்டி யுடன் இருக்க -ரஷகத்துக்கு தனி மாலை சாத்திக்கொண்டு –
ரஷித்து புகழ் படைத்து இருப்பவன் அன்றோ
மாதவன் -திருநாம க்ரஹணம்
ஆதாராதி சயத்தினால் முதல்  அடியும் ஈற்றடியும் பாசுரங்கள் தோறும் ஒன்றாய் இருக்கும்-

———————————–

கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-

உரை  ஆர் தொல் புகழ் -சொற்களில் நிரம்பிய நித்ய கீர்த்தியை யுடையவன் –
ஸ்ரீ ராமாயணம் மகா பாரதம் போன்ற நூல்களில் நிரம்பிய திருப் புகழ்கள் பலவும் யுடையவன் காண்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரனா கருளக் கொடியானே -பெரியாழ்வார் -5-1-1-
காக்கை கத்தினால் இஷ்ட ஜனத்தின் வருகை நேரும் என்பர்
காக்காய் -என்னாமல் -காக்கைப் பிள்ளாய் -கௌரவ பேச்சு -பகவத் விஷயத்தில் உபகரிப்பாரை துதித்துச் சொல்ல  வேண்டுமே
தாபம் தீரும்படியான குளிர்ந்த வடிவு காண்
அதமன் -மத்யமன் -உத்தமன் -புருஷோத்தமன்
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு -திருவாய் -7-5-2-
தான் படாதன பட்டும் அடியாரை வாழ்விக்கும் புருஷோத்தமன் அன்றோ
காக்கை கத்தின மாத்ரத்திலே எம்பெருமான் பதறி ஓடி வருவான் -உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் -கரைதல் -ஒலி செய்தல் –

———————————————

கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே -10-10-3-

மன்னு பெரும் புகழ் மாதவன் -நாச்சியார் திரு மொழி
குயில் கூவினால் எம்பெருமான் கடுக வந்திடுவான் நினைப்பு போலும்
குயில் கூவின பின்பும் வாராது ஒழிந்தால் -பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் –
நல் வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்தருள் செய்து கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே -நாச்சியார் -10-5-என்று
சீறிச் சொல்வதும் யுண்டே
கைக்கு எட்டின ஒரு மலையைத் தூக்கி ஆநிரைகளையும் கோவலரையும் ரஷித்தவன் அன்றோ
ஆஸ்ரித ரஷணத்தில்  அத்தனை கருத்துடையானை கூவவோ நீ இறாய்ப்பது
மா வாய் கீண்ட மா வாய் பிளந்த -அருளிச் செயல்களில் இத்தை குதிரை வடிவு கொண்ட கேசியினுடைய
வாயைக் கிழித்த என்றே அருளிச் செய்வர்
பகாசுரன் வாயைக் கிழித்த என்றும் சொல்லலாமாலும் முந்திய பொருளே கொள்ளக் கடவது-

——————————————————-

கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே -திருவிருத்தம்
பெண்களை வசப்படுத்துக் கொள்ள குடக் கூத்தாடினவன் அன்றோ அவன்
தானாகவே திருவடியை வைத்து உலகோரை சத்தை பெறுவிக்குமவன்  அன்றோ -நம்மை உபேஷிக்க மாட்டான் –
மாட்டார் பூங்குழல் -மா பெரிய பிராட்டிக்கும் மாதவனுக்கும் விசேஷணம்-

———————————————————

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே  —10-10-5-

விரோதிகளை இரு துண்டமாக்க பாங்கான திரு வாழி ஆழ்வானை வலத் திருக்கையிலே ஏந்தி யுள்ளான் காண்
அதுவும் மிகையாகும்படி திருத் தோள்களில் மிடுக்கை  யுடையவன்
என்னை அணைவதற்கு என்று பயணித்து திருமலையிலே நின்று அருள்கின்றான்
அன்னவனை பைங்கிளியே  இங்கே வரச் சொல்லாய்-

—————————————————-

கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால்  -10-10-6-

கோழி கூவென்னுமால்-ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று -கோழி கூவென்னுமால் -தோழி நான் என் செய்கேன்-என்று அந்வயம்
கலவி செய்ய வரும் காலமாயிற்று -முதலில் சொல்லி
பல பல ஊழி களாயிடும் அன்றியோர் நாழிகையை பல பல கூறிட்ட கூறாயிடும் -திரு விருத்தம்
விஸ்லேஷ காலம் அநேக கல்பங்கள் -சம்ச்லேஷ காலம் அதி ஸ்வல்ப காலமாகுமே
சம்ஸ்லேஷம் நடந்து முடிந்ததாகக் கொண்டு அடுத்து தோழியிடம்   சொல்கிறாள் –
கிருஷ்ணன் கோழியை மடியிலே இட்டுக் கொண்டு வரும் போலே காணும் – என்று பட்டர் அருளிச் செய்தார் -என்று பிரசித்தம் –
ஆல்-மகிழ்ச்சியும் வருத்தமும் தோன்ற நின்ற இடைச் சொல் -முதலடியில் மகிழ்ச்சி– ஈற்றடியில் வருத்தம் –

——————————————————–

காமற்கு என் கடவேன்
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை  கோத்துப் புகுந்து எய்யக்
காமற்கு என் கடவேன் —10-10-7-

வயிற்றில் பிறந்த பிள்ளை வருத்தப் படுத்துவதற்கு என்ன பிராப்தி யுண்டு
காமன் தன் தாதை அன்றோ -இங்கே ஸ்பஷ்டமாக இல்லை என்றாலும்
காமன் தனக்கு முறை யல்லேன் –எனக்குத் தானும் மகன் சொல்லில் -என்பர் மேலே -11-3-7-
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -திருவாய் -5-8-4-
அவர் வாளா இருக்க இந்த சிறு பையல் ஏதுக்காக அதிக பிரசங்கம் பண்ணுகிறான்
ஐங்கணை-மதனன் பஞ்ச பாணமாவன-முல்லை யசோகு முழு நீலம் சூதப் பூ அல்லி முளரி யோடு ஐந்தென மொழிப-

—————————————————-

இங்கே போதுங்கொலோ
இனவேல் நெடுங்கண் களிப்பக்
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ –10-10-8-

ஸ்வாமி தானே வந்து யுடைமையைக் கைக் கொள்ள வேண்டும் அன்றோ
அடியான் ஸ்வாமி தேடி அவ்விடம் செல்லுதல்  இரண்டு தலைக்கும் அவத்யம் அன்றோ
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –
அது போலே -கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ
ஏதுக்காக இங்கே வர வேணும் என்றால் -இன வேல் நெடும் கண் களிப்ப -என்கிறாள்
கண்ணாரக் காண்பதற்கு மேலே வேறு பிரயோஜனம் இல்லை என்று இருப்பார்கள் முந்துற முன்னம்
காணப் பெற்ற பின்பு அணைய வேணும் என்று இருப்பார்கள்
அணையவும் பெற்றால் இவ்விருப்பு  நித்யமாக இடையூறு இல்லாமல் செல்ல வேணும் என்று இருப்பார்கள் –
போதும்  -போதரும்-

——————————————-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

கொங்கார் சோலைக்  குடைந்தை கிடந்த மால் இங்கே போதும் கொலோ -மநோ ரதித்த பரகால நாயகிக்கு
உரு வெளிப்பாட்டாலே காட்சி தந்து அருளினான் –
ஆழியும் சார்ங்கமும் ஏந்தி வந்து  சேவை  சாதித்து அருளினான்
அசாதாராண லஷணங்களை காணா நிற்கச் செய்தேயும் இன்னார் என்று அறுதியிடக் கூடாமல்
இருக்கிற தாயிற்று அத்தலையில் வைலஷண்யம்
பெருமையைப் பார்க்கும் இடத்தில் தேவன் என்னலாய் இருந்தது
எளிமையைப் பார்க்கும் இடத்தில் மனிதரில் ஒருவன் என்னலாய் இருந்தது
ஆகவே இன்னார் என்று அறியேன் -என்கிறாள்
அன்னே -வியப்புக் குறிப்பிடைச் சொல் -அடிகள் -ஸ்வாமி-

———————————————-

தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ –10-10-10-

உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலத்தோருக்குள்-பகவத் குணங்களிலே ஈடுபட்டு தொண்டீர் -என்று
புகழ் பெற்று இருக்குமவர்களே
நீங்கள் உங்கள் ஸ்வரூபத்துக்குத் தகுதியாக  இத் திருமொழியைப் பாடித் திரிமின்
வேறு பலன் அருளிச் செய்யாமல் ஒழிந்தது இதனைப் பாடுகை தானே ஸ்வயம் பிரயோஜனம் -என்று காட்டுவதற்காக –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-9-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை-

April 8, 2015

திருத் தாயார் பாசுரமாகச் செல்கிறது இத் திரு மொழி –
பரத்வம் மேல் எல்லையில் இருந்து எனது பெண் பிள்ளையை உபேஷித்து இருப்பது முறையோ –
ஒவ் ஒரு பாசுரத்திலும் ஒரு பழ மொழியை எடுத்து உரைத்து சொல்லும்  முகத்தாலே

ஆழ்வாருடைய காதலின் மிகுதியையும் உபேஷியாமல் கடுகக் கைப் பற்றி ஆக வேணும் என்னுமத்தையும்
விண்ணப்பம் செய்கிறார்-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதீர்
ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே -திரு விருத்தம் -33-பாசுரம் ஒப்பு நோக்கத் தக்கது –

——————————————

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை   நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே –10-9-1-

சிறுபிள்ளை கவர்ந்த கிண்ணத்தை வாங்குவதில் ஸ்ரமம் இல்லையே -இவளை அப்படியே அலஷியம் செய்து உள்ளாய் என்கிறாள்
கள்ளவிழ் கோதை காதலும்-இவள் காதலை நோக்கி நீ பதறி ஓடி வந்து இவளைக் கைப் பற்ற வேணும்
எங்கள் காரிகை மாதர் கருத்தும்-வகுத்த விஷயத்தில் காதல் கொண்ட இது நன்றே என்று உகக்காமல்
பழி சொல்லை நோக்கி யாகிலும் வந்து இவளைக் கைக் கொண்டு
பழிப்பவர்களின் முகத்தை பங்கம் செய்திட வேணும் –
இரண்டையும் அலஷியம் செய்து இருக்கிறாய்
நல்ல என் தோழீ நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிடவர் நாம் செய்வது என் -நாச்சியார் -10-10- என்னும்படி
உன்னுடைய பெருமைகளைப் பாராட்டியோ இப்படி அலஷியம் செய்து இருக்கிறது
பூதனையை முடித்த பெரு மிடுக்கன்  –  இராவாணனை  முடித்த மகா வீரன் -ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராமாவதார பராக்ரமங்களை
நினைத்து செருக்கி இருக்கிறாய் போலும்
புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள என்றது மேலே சஞ்சரித்து குழந்தைகளை அனுங்கப் பண்ணும்
பறவைகள் யுண்டே -அப்படிப் பட்டவளாய் வந்தாள்
அன்றிக்கே புள்ளுருவாகி -ஹம்சமாகி செய்து அருளின செருக்கோ -என்றும் கொள்ளலாம்
ஊக்கம் -பரத்வம் -அஹங்காரம் -மிடுக்கு  –

—————————-

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே -10-9-2-

நின்ற பிரானே -திருமலையில் நின்று அருளும் பிரானே –
குடக்கூத்தாடி ஸ்திரீ ரத்னங்களை மயக்கி அருளிய செருக்கோ
ஏழு ரிஷபங்களின் வலிமையை அடக்கி நப்பின்னை பிராட்டியை திரு மணம் புரிந்து அருளிய செருக்கோ
கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து ஆ நிரைகளை காத்த நமக்கு இவளை உபேஷித்தால் என்ன
குண ஹாநி வந்து விடும் என்ற எண்ணமோ
கையிலே வளைகள்  நிற்க மாட்டாதபடி துரும்பு போலே இளைக்கப்  பண்ணி யுள்ளாயே
கோயில் வாசலிலே உள்ள மரத்திலே தேனை கவருவது போலே இவள் வளைகளைக்  கவர்ந்து அருளினாயே  –

————————————————————–

ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா  கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ
நேரிழை மாதை  நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3-

இவளை ஒரு சரக்காக மதிக்காதே -உள்ளம் கையில் உள்ள கருப்பம் கட்டி போன்றவள் -என்ற எண்ணமோ –
கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இ றே –
அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும் –
கைப்பட்ட பொருள்களிலே உபேஷை பிறக்குமே அது போலே என்றவாறே
ஆர் மலி யாழி-ஆர் -கூர்மை -ஆர் -அரங்கங்கள் –
ஆற்றலை ஆற்றல் மிகுத்து -பராக்ர்மத்தை ஆறுதல் மிகும் படி செய்தருளி –
யாற்றல் மிகுத்து -ஒரு ஜகது உபசம்ஹாரத்துக்கு போந்து இருக்கச் செய்தே கம்சன் அளவிலே யாம் படி யமைத்து –
கார் முகில் வண்ணா -ஆர் எழில் வண்ணா -இரண்டு விசேஷணங்கள் அவனுக்கு –
நேரிழை மாதை  நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-மூன்று விசேஷணங்கள் இவளுக்கு
உன்னைக் காட்டிலும் வீறு பெற்றவள் -அஸி தேஷிணா-போலே
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிர நயனம் வேண்டும் -கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் –
ஆகையால் உபேஷித்தல்  தகாது -என்கிறாள் –

————————————

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த  கரதலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4-

அணி நிறம் கொண்டு -விலஷணமான மேனி நிறத்தை அபஹரித்ததும் அன்றி
முன்னே வந்து நின்று போகே -உரு வெளிப்பாட்டாலே எப்போதும் கண் எதிரே தோற்றி புறம்பு போகிறாய் இல்லை
வ்ருஷே வ்ருஷே ச பஸ்யாமி சீர க்ருஷ்ணாஜி நாம்பரம் -மாரீசனுக்கு தோற்றினாப் போலே
எங்கனே நீர் முனிவது காண்–அங்கன் உருவெளிப்பாடா யுரைத்த தமிழ் மாறன் –
அஹங்காரியான ருத்ரனுக்கும் உடம்பு கொடுத்து அருளிய சீலத்தை நினைத்தோ  –
இவளை உபேஷிப்பது ஒரு அபகீர்த்தி யாகுமோ
நரகாசுரனை முடித்த மிடுக்குடைய திருக் கையை நினைத்தோ -பல்லாயிரம் தேவிமார் இருக்க இவள் ஒரு பொருளோ –
இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே – சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே
வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய் –

————————————————

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான  மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே -10-9-5-

பார்த்தன் தன் சிலை வளைய திண் தேர் மேல் முன்னின்று மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய
நூற்றுவரும் பட்டழியச் செய்த மிடுக்கை நினைத்தோ –
தேர் வலம் கொண்டு -தேர் காலாலே பிரதிபஷங்களை உழக்கினான் அன்றோ –
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என-எட்டா நிலத்தில் இருந்தால் அபேஷை இருக்கும்
சர்வ சாதாரண வழியில் வீழ்ந்து கிடந்தால் பொருளாகத் தோற்றாது -இறே-
குனிந்து எடுக்கவுமாம் தவிரவுமாம்-

பேசுகின்றாயே என்றது கருதுகின்றாயே என்றபடி –

—————————————————————

அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை
செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய்
எறிக்கிலைக்காக வெறி  மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே  –10-9-6-

கை வளையை கழலச் செய்தாய்
மறந்து பிழைக்க ஒட்டாமல் உரு வெளிப்பாட்டாலே நலிகின்றாய்
தன்னடியே பழுத்து நெகிழ்ந்து  விழக் கடவதான எருக்கிலையை உதிர்க்க மழுப்படை வேண்டுமோ
இவளை நலிய இத்தனை பிரயாசப் பட வேண்டுமோ
இராவணனை வென்ற வீரச் செயலை அபலை இவள் இடம் காட்ட வேண்டுமோ
அரக்கியர் ஆகம் புல்லென ராஷச மாதர்கள் தாலி இழக்கும் படி –
செருக்கழித்து-செருக்கு அழித்து என்றும் செரு கழித்து போர் களத்திலே நிரசித்து –
அமரர் பணிய முன்னின்ற-
ராவண வத அநந்தரம்-பிராட்டி எழுந்து அருளி வர
பெருமாள் முகம் கொடாதே ஒழிய
தேவ ஜாதி வந்து -பவான் நாராயணோ தேவ -என்றும்
சீதா லஷ்மீர் பவான் விஷ்ணு -என்றும் உணர்த்த –
சேவகமோ செய்ததின்று –
முகம் கொடாதே நின்ற அச்சேவகம் போலே இருந்ததி-இச் சேவகமும் –

————————————————————————

ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ
மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து  முன்னே நின்று போகாய்
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா –10-9-7-

ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம்-யுடைய -கார்த்த வீர்யார்ஜுனனை -நிரசித்த வீரத்தை இவள் இடம் காட்ட வேண்டுமோ
இவளை மாய்ப்பதற்கு இத்தனை பிரயாசம் வேண்டுமோ
தன்னடையே உடைந்து போகக் கூடிய கோழி முட்டையைத் தகர்க்க தடி வேண்டுமோ  –

———————————————————

பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற  வள்ளுகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று
பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-

பெரும் தடம் கண்ணி -தோள்கள் ஆயிரத்தாய்-விஸ்வரூபம் கொண்டு  அனுபவிக்கப் புக்காலும்
திரு மேனிப் பரப்பை எல்லாம் தனது கடைக்கண் நோக்கத்தில் ஒரு மூலையில் ஆழம் கால் படுத்த வல்லவள் –
ஆஸ்ரித வத்சலன் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஸ்ரீ ஸூக்ரீவ மகா ராஜர் திறத்தில் காட்டி அருளினாய் –
இவள் திறத்தில் இங்கனேயோ பலிக்க வேண்டும்
கபோலம் -கவுள்-என்று சிதைத்து யுள்ளது -நீரை உள்ளே இழுச்சிக்கைக்கும் கொப்பளிக்கவும் யுரித்தாய் இருக்கும் அன்றோ
பொருந்தலன் -மனம் பொருத்தம் அற்றவன் -பிரகாரன பலத்தால் இரணியனைச் சொன்னவாறு
பெரும் தகை -கம்பீர ஸ்வ பாவம் யுள்ள ஸூ க்ரீவன்-

—————————————————–

நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை  தானோ
பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே –10-9-9-

ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக –
அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே –
நின் மனத்து வைத்தாயே –
வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய் –
அலஷ்யதா  புத்தி இருக்குமா போலே என்றவாறு
பஞ்ச பூதங்களும் நாம் இட்ட வழக்காக இருக்கும் பொழுது இவள் ஒரு சரக்கா என்ற நினைவோ
வேறு புகலாவார் இல்லாமையாலே நம் கையையே எதிர்பார்த்துக் கதறித் துடிக்கட்டும் என்ற நினைவோ-

———————————————————–

வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற்  கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே—10-9-10-

பரம பக்தி தலை எடுக்கப் பெற்று -நித்ய கைங்கர்ய சாம்ராஜ்ய லஷ்மியையும் பெறுவார்கள் –
திருவோடு மிகும் -கைங்கர்ய விருப்பமே திரு –
லஷ்மண லஷ்மி சம்பன்ன -அந்தரிஷிகத ஸ்ரீ மான் -ஸ து நாகவர ஸ்ரீ மான் –
வேட்டம் -ஆசைப் பெருக்கம்
-ஸ்வயம் பிரயோஜனமாக திருவடி பணியுமவர்கள்
மெய்ம்மை நிற்றல் -சாஸ்த்வதமான நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் ஆகிய பரம புருஷார்த்தம்-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-8–காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்-

April 8, 2015

இத் திரு மொழி -புணர்ந்து பிரிந்து பிரிவாற்றாதாருடைய ஊடல் திறத்தை பேசி அனுபவிப்பதாக செல்லுகிறது –
சிறிது காலம் தாழ்ந்து வந்ததால் பிரணய ரோஷம் -மின்னிடை மடவார் -திருவாய்மொழி போலேயும்
ஏர்மலர் பூங்குழல் -பெருமாள் திருமொழி போலேயும்
ஆய்சிகளின் பாவனையில் முதிர்ந்து அனுபவித்து பேசுகிறார் —

————————————————————-

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிது வென் யிது வென்னொ –10-8-1-

கேசவ நம்பீ உன்னைக் காது குத்த ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாம் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் -என்றும்
மகரக் குழை கொண்டு வைத்தேன்  வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்-என்றும்
இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து  சுண நன்றணி முலை யுண்ணத் தருவன்
நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்றும்
சொல்லியும் குத்தாமல் பருவம் நிரம்பியவாறே பெண்டுகள்  -விடு காது அழகியார் -சுனை காது அழகியார் -என்று
பரிஹாசம் பண்ணத் தொடங்கவே காது குத்திக் கடிப்பிட்டு வரத் தொடங்கினான் –
கலிங்கம் யுடுத்து -கறுப்புத் திரு பரிவட்டம் -போர்வை  பொத்திக் கொண்டு பிறருக்குத் தெரியாமல் வந்தான்
மேல் பாட்டில் துவராடை யுடுத்து -முற்பட உடுத்ததுக்கு ஈடுபடாமையாலே அதுக்கு மேலே சிவப்பு நிறப் புடைவையை
சிமிழ்த்துக் கொண்டு வந்தான் ஆயிற்று
பிரணய ரிஷம் நீங்கிக் கடுக அனைத்துக் கொள்வாள் என்னும் விருப்பத்தாலே அலங்கரித்துக் கொண்டு வந்தான் ஆயிற்று –
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து –என்பதால் முகம் கொடுத்து பேச மாட்டிற்று இலள்
அதுவே ஹேதுவாக இவனும் விரைந்து செல்லாமல் கதவின் புறமே கவிழ்தலை இட்டு நிற்க வேண்டியவன் ஆனான்
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ-வெறும் காதே பரம போக்யமாக இருக்க
காதில் கடிப்பிடுவான் என் -இது என் –
பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்மேனியை காணப் பெரிதும் உகப்பார் நாங்களாய் இருக்க
கலிங்கம் யடுத்து அத திரு மேனி அழகை மறைப்பான் என் -இது என் –
சர்வகந்த என்கிறபடியே திருமேனி தானே பரிமள பிரசுரமாய் இருக்க திருத் துழாய் பரிமளம் ஏறிடுவான் என் –
இருந்தபடியே உகக்கிற எங்களுக்காக அலங்கரித்து வர வேண்டுமோ -ஏதுக்கு இது –
கொடும் பசி வேளையில் கிடையாத சோறு ஏதுக்கு
உம் அழகை நீரே கண்டு கொண்டு உம் உடம்பையும் நீரே தொட்டுக் கொண்டு நீரே மோந்து கொண்டு
நீரே கட்டிக் கொண்டு நீரே மகிழ்ந்து இரும்
எங்களுக்கு  ஏதுக்கு வேண்டா வேண்டா -கதவு அடைக்கிறாள் –

———————————————

துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ–10-8-2-

கையிலே பூஞ்செண்டையும் சிலுப்பிக் கொண்டு வந்தான் ஆயிற்று
கவர் ஆக முடித்து -கவர் -இரண்டாக பிரிகை -மயிரைப் பகுந்து முடித்து -அலகலகாக வாருதல்
வலிய கச்சுப் பட்டையை அறையிலே இறுக்கிக் கட்டிக் கொண்டும் ஆற்று வெள்ளத்தில் இழிவாரைப் போலே வந்தான்
ஆய்சியினுடைய முகக் குறிப்பைக் கண்டவாறே சுவரார்ந்த கதவுக்கு புறம்பே நின்றான்
அத்தை அறிந்து அவள் சொல்ல அதுவே பற்றாசாக அணுகிச் சென்று மடி பிடிக்கப் புகுந்தான் –
புகவே -இவராரிது வென் யிது வென் யிது வென்னொ –

————————————————

கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்
மருளைக் கொடு பாடி  வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது வென்னோ-10-8-3-

நீர் பெரியீர் -நாங்கள் உனக்கு லஷியமோ
இப்படி குழைச் சரக்காக நினைத்து உபேஷிக்கிற நீர் எங்களை நெஞ்சிலும் இட்டு எண்ணாதே இருந்திடல் ஆகாதோ
பெண் பிறந்தார் எல்லாரும்  நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியான பண்ணை நுணுங்கிக் கொண்டு
அபர ராத்ரியிலே இங்கு வந்து புகுந்தீரே -இது ஏதுக்கு போம் போம்
மருளைக் கொடு பாடி -பாடம் பிழை
மருள -வினையெச்சம்
கொடுபாடி -பாடிக் கொடு பாடிக் கொண்டு என்பதன் சிதைவு-

——————————————

நாமம் பலவுமுடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என்  இது என் இது என்னோ -10-8-4-

நாமம் பலவுமுடை நாரண நம்பீ -பேராயிரம் யுடைய பீடுடையீர் பொருள் அன்று இங்கே  –
இன்னாளுக்கு சேஷ பூதன் -இன்னாளுக்கு சேஷ பூதன் -என்று நீ படைத்த பேருக்கு எல்லை உண்டோ – சொல்ல வேணுமோ
நீர் ஊர் பொது அல்லீரோ நீர் நிரபேஷர் அல்லீரோ –

நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் -நாச்சியார் -4-11-எம்பார் அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூகதிகள் –
ஆய்ச்சிகளுக்கு நிறை புகழாவது கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள் –
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் என்னும் புகழ் காணும் –
வாசுதேவன் வரவு பார்த்து கூர் மழை போலே பனிக்கு ஊதல் எய்தி  கூசி நடுங்கி யமுனை யாற்றில் வார் மணல் குன்றில் புலர நிற்க
இன்னம் என் கையகத்து தீங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திரு -6-8-
அவர்கள் யுடைய தேக குணம் ஆத்ம குணம் பற்றி பட்டினி கிடப்பான் அவனும் –
இன்னாளுக்கு அடியான் இன்னாளுக்கு அடியான் என்று பெயர் பெற்றவன் –
தாமத் துளபம் மிக நாறிடுகின்றீர்-விரஹ அக்னியால் துளப மாலை கருகிப் போயிருக்க வேணுமே -இப்படி பரிமளிக்க பிரசக்தி யுண்டோ
ஏமத்து இதுவென் -ஏமம் -இரவுக்கு பெயர் -காவலுக்கும் பெயர்
கட்டுக் காவலுமான இடத்துக்கு ஏதுக்கு வந்து சேர்ந்தீர் -இரவிலே நீர் தேடி போக வேண்டிய இடம்
வேறாய் இருக்க இங்கே ஏதுக்கு வந்தீர் –

————————————————

சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது  என்னோ –10-8-5-

இரண்டாம் பாட்டில் கவராக முடித்து -வந்தும் ஈடுபடக் காணாமையாலே
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட -குழல்களைத் தாழ விட்டான்
சுரிகை -இடுப்பில் அழகுக்கு சொருகும் கத்தி -உகப்பாருக்கும் உகவாதாருக்கும் கருவி ஒன்றாயிற்று –
சத்ருக்களை இரு துண்டமாக விட்டு முடிக்கும் அனுகூலரை அழகாலே கொல்லும்-
மற்றும் பல ரத்ன பூஷணங்களையும் பொன் ஆபரணங்களையும் சாத்திக் கொண்டு வந்தீர்
முற்றத்தளவில் நின்று புன்முறுவலும் செய்தீர்-

———————————————-

ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக்
கூனாய தோர் கொற்ற  வில் ஓன்று கை ஏந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6-

வேட்டையாடப் போவது போலே பாவனையில் வில் கையில் ஏந்தி
கள்ள விழி இட்டுப் பார்த்துக் கொண்டே வந்தீர்
அது கண்டு இவ் ஊர் ஓன்று புணர்க்கின்றதே -பெரியாழ்வார் -3-4-3-என்னும் படியான விரோதிகளின் கண் வட்டத்திலே
வீண் பழியை மாத்ரம் விளைப்பதான இவ்வருகை ஏதுக்கு-
இங்கே புகாதே எழுந்து அருளீர்-ஏனோர்கள் -பிரதிகூலர்கள் –

——————————————

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-

உம்முடைய தோள்களை அணைக்க மல்லர் -முரட்டு ஆண்களே இட்டுப் பிறந்தவர்கள்
அவர்களை பொடி பண்ண வேண்டி பொருதேன் என்ன -அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை –
நினைவு ஓன்று செயல் ஓன்று -செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே
சொன்ன போதினில் வாரீர் -ஊர்ப் பொதுவான நீர் ஏதுக்கு சமயம் குறிப்பிட்டு போவது
துடிக்க வைத்து விட்டு இருக்கவே சொல்லிச் சென்றீர் தாமதமாக வந்தீர் -பேச்சுக்கும் செயலுக்கும் சேர்த்தி இல்லையே
அல் -இரவு நேற்று இரவு என்றபடி-

——————————————–

புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8-

காளியனை முடித்து அருளிய உம்முடைய மிடுக்குக்கு நாங்கள் இலக்கோ
உமக்கு நாங்கள் ஒரு சரக்கோ -தேவிமார் தக்கார் பலர் சால வுடையீர்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் நாங்கள்
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணர் அல்லீரோ
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தானே கண்டார் உளர் -என்றும்
பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் -என்றும்
மதுரம் ப்ராப்ய கோவிந்த சதம்  கோகுலமேஷ்யதி -நகர ஸ்திரீ கலாலாபமது ஸ்ரோத்ரேண பாச்யதி-
உன்னுடைய அபி நிவேசங்களை நாங்கள் அறியோமோ   –

—————————————–

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ -10-8-9-

என் சாயத்தை வெளியிட வேண்டா என்று காலைப் பற்றிக் கொள்ள
நீ ஒருவருக்கும் மெய்யன் அல்ல -கடக்க நில்
கரு மலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து புரி குழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்த்தி
அவளுக்கும் மெய்யன் அல்லை மருது இறுத்தாய் உன் வளர்தியோடே வளர்கின்றதால்
உன் தன் மாயை தானே -பெருமாள் திருமொழி
குரவை புனைதல் -ஆய்ச்சிகள் யுடன் கை கொத்தாடுதல் -ராசக் கிரீடை என்றுமாம்
இவனை உள்ளே புகவிட்ட தோழியை அன்றோ பொடிய வேண்டும்
கோமளப் பிள்ளாய் இந்த வார்த்தையும் முகத்தைப் பார்த்து சொல்ல ஒண்ணாதே –
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே -நாச்சியார் -13-9-
பெருமையாக நினைத்திடுவானே-தோழி முகத்தை பார்த்து குறை வார்த்தையும் கூறினாள்-

தருண மந்திர க்ருத்வா–துரும்பை நடுவிலே இட்டு பிராட்டி பேசினால் போலே

——————————————–

அல்லிக் கமலக் கண்ணனை  யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே -10-8-10-

அல்லிக் கமலக் கண்ணனை -பரமானந்தம் அவனுக்கு இத்தால் -காமம் புணர்தலின் ஊடல் இனிது
திரு உள்ளத்தில் ஹர்ஷம் திருக் கண்களில் புற வெள்ளம் இட்டமை தோன்றுமே
துக்கம் இன்றி இன்பமாக வாழப் பெறுவார்கள் -பலன் சொல்லித் தலைக் கட்டு அருளுகிறார்-

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-7-மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை-

April 7, 2015

ஸ்ரீ யபதி -ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு வவதரித்து வெண்ணெயும் பெண்களையும் ஒக்க  களவு செய்து
அருளிய சேஷ்டிதங்களை அனுபவிக்க இழிகிறார் –
அது தான் மகா பாரதமாய்ச் செல்லும் இறே
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றால் எறிந்தான் -என்று முறையிடுவாரும்
வளை துகில் கைக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுந்தான் என்று முறையிடுவாரும் –
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீம்புகள் செய்கின்றானே -என்று முறையிடுவாரும்
தொத்தார் பூங்குழலி கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை
புணர்ந்து வந்தான் என்று முறையிடுவாரும்
திருவாய்ப்பாடியில் முழுதும் பேர் ஆரவாரமாய்ச் செல்லும் பருவம் இறே
ஊரில் உள்ளார் அடங்கலும் முறையிட  அவை கேட்டு யசோதை பிராட்டியார் சொல்லும் பாசுரமும் முறையிடுவார் பாசுரமுமாக
அவர்கள் அவர்கள் பாவனையாகவே தாம் பேசி அனுபவிக்கிறார் இத் திரு மொழியில் –
ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள் தவிர வேறு அவதார லவலேசமும் கலசாத திரு மொழியாய்ச் செல்லுகிறது –

———————————————–

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப்  பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

அவனைத் தண்டிக்கும் வன்மை எனக்கு இல்லையே
குல மரியாதைக்கு இழுக்கு என்று பிரார்த்திக்கத் தான் முடியும்
நந்த கோபரும் வாய் விட்டுக் கண்டித்து அறியார்
கீழ் அண்டை அகத்தில் ஓர் இளம் பெண்ணுடன் உட்கார்ந்து அவளும் தானுமாக தயிர் கடைவதாகத் தெரிகிறது –
உங்கள் ஆயர் குலம் மானமுடைத்து -கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழவில்லை -பெரியாழ்வார்
உரப்பகில்லேன் – அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -நாச்சியார் -உரப்புதல் -அரட்டுதல்
நானும் உரைத்திலேன்-கீழே உரப்பகில்லேன் -என்றதன் அனுவாதமே இதுவும் –

———————————————————

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-

வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள்வரைப்பின் முன் எழுந்து கண் உறங்காதே இருந்து கடைய -பெரியாழ்வார் -3-8-9-
மோர் விற்கப் போக நடு வழியிலே கண்ணன் எதிர்பட –
வீட்டில் புகுந்து என்ன அனர்த்தம் செய்யப் போகிறானோ -சிந்தனை பண்ண
வந்து பார்த்த அளவில் வெண்ணெயும் காணோம் பத்துப் பானை பாலையும் காணோம்
நான் முறையிட்டு என்ன பலன் -தண்டிக்க கடமை பட்டவர்களே ஆணாட விட்டிட்டு இருக்க என் செய்வேன் –
வெறுத்து உரைக்கிறாள் ஒருத்தி
வெண்ணெயும் பாலையும் இழந்த வயிறு எரிச்சல் இருக்கச் செய்தேயும் மாலை நறுங்குஞ்சி
நந்தி மகன் -பரம போக்யமாகப் பேசுகிறாள்
தருனௌ ரூப சம்பன்னௌ-போலே வயிர உருக்கான வடிவு அழகு படுத்தும் பாடு
அரக்கியே அப்பாடு பட்டாள் -இங்கே பேசுவதோ இடைச்சி -பேசப் படுகிறவனோ கண்ணபிரான் –
வைய வந்த வாயாலே வாழ்த்த வேண்டி அல்லது இராதே –
மேலை யகத்து நங்காய் -யசோதை பிராட்டியை விளிக்கிறது-என்னவுமாம் –
வேறு ஒரு அயல் வீட்டு இடைச்சியை விளிக்கிறது என்னவுமாம்
நங்காய் -ஜாத்யேக வசனமாய்க் கொண்டு பன்மைப் பொருள் கொள்ளலாம் -காண்மின்கள் -என்ற பன்மை முற்று இருக்கையாலே
அன்றி
நங்காய் -ஒருத்தியை அழைத்தவாறே தீம்புகளைக் கேட்கும் ஆவலினால் பல பெண்கள் எழுந்தோடி வர –
வந்து காண்மின்கள் -என்று அவர்கள் எல்லாரையும் நோக்கிச் சொல்கிறாள் என்னவுமாம்

———————————————

தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ்   உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ –10-7-3-

யசோதை தானே முறையிட்டு பேசும் பாசுரம் இது
வெள்ளி மலை இருந்தால் போன்ற வெண்ணையை அள்ளி விழுங்கி விட்டு -ஒன்றும் அறியாதவன் போலே
உறங்குவதாக பாவனை செய்கிறான்
கழவு கற்றானே  ஒழிய கழவை   மறைக்க கற்றான் அல்லன் -கை எல்லாம் நெய்யாக இருக்கின்றதே
வாரி நின்றும் வயிறு நிரம்பின படி இல்லையே
பேதையேன் என் செய்கேன் -ஜீரணம் ஆக வேண்டுமே என்ற கவலையே –
தெள்ளியவாய்ச் சிறியான் -கண்ணுக்கு இருக்கிறபடியும் செயல் இருக்கிற படியும் காண்  –
கள்ளத் தனம் முகத்துக்கு தோற்றாமல் –
தெள்ளிய வா சிரியா -பாட பேதம் -நாளிளம் திங்களை கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தோடு யுண்ட –
திரு முத்துக்களின் ஒளி புறப்படவே அதையே கை விளக்காகக் கொண்டு வாரி விழுங்குவான்
தெள்ளியவா -தெளிவாக –சிரியா -சிரித்து என்றபடி –
முந்தின பாடமே வ்யாக்யானத்துக்குக் சேரும்
வாயிலோ கையிலோ வெண்ணெய் இருக்கக் கண்டால் அன்றோ களவு வெளிப்படும் -கையிலும் வாயிலும் இல்லாதபடி ஆக்கி
உடம்பிலே தடவிக் கொள்வானாம் -அதி மானுஷ ஸ்தவம்
இங்கு நெய்யை நக்கியும் உண்ணாமல் உடம்பிலும் தடவிக் கொள்ளாமல் கையிலே தோய வைத்துக் கொண்டு
இருப்பது மௌக்யத்திலும் மிக்க  மௌக்யம் –
என் செய்கேன் என் செய்கேனோ -அத்யாபகர்கள் இதிலும் ஓதுவார்கள் -யாப்புக்கு சேராது –

———————————————-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ -10-7-4-

கள்வம் பொதி அறை -கள்ளத் தனத்துக்கு கொள்கலமாய் இருப்பவனான இக்கண்ணபிரான்
முன்னலோர் வெள்ளிப் பருமலைக் குட்டன் -சூது வஞ்சனை கள்வம் ஒன்றும் அறியானவன் –
மை நம்பு வேற்கண் நல்லாள் -தேவகி ஆகவுமாம் –ரோகிணி -ஆகவுமாம் -மையை விரும்புகின்ற கண்களை யுடையவள்
நம்பும் மேவும் நசையாகுமே
வளை வண்ண நன் மா மேனி -வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் -என்பார் கீழும் –
வெள்ளிப் பருமலைக் குட்டன் -என்பர் பெரியாழ்வார்
நம்பி நம்பியும் -நம்பி மூத்தபிரான் -தன் நம்பி நம்பியும் -என்றதை நம்பி தன் நம்பியும் -என்று அந்வயம்
இந் நம்பி நம்பியா நம்பியால் -என்ற பாடம் மறுக்கத் தக்கது -நம்பியா -என்றது நம்பியாக -என்றபடி
நிரபேஷனான இவன்–இவனாக–இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவன் இவனாக என்றது -இவன் இப்படி தீம்பில் குறையற்றவனாக இருக்கையாலே -என்றபடி –

——————–

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ -10-7-5-

காரார் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை வாரார வீக்கி மணி மேகலை திருத்தி
ஆராரயில் வேற்கண் அஞ்சனத்தின் நீறணிந்து சீரார் செழும்  பந்து கொண்டு அடியா நின்றேன் நான் -சிறிய திரு மடல்
எந்த பெண் எங்கே தனியாக இருப்பாள் ஆராய்பவன்   அன்றோ
தீமைகளை விவரிக்க முடியாமல் படிறு செய்தான் என்றே சுருங்கச் சொல்லலாம் படி -படிறு -தகாத கார்யம் –

————————————-

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே  அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-6-

கீழ்ப் பாட்டில் சம்போக உபக்ரம மாதரம் -இது சம்போகம் தலைக் கட்டினபடி
மணமகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் -இவனுக்கு என்ன கேடு -அகாலத்திலே நம்மை நம் மனையிலே
வந்து இப்பாடு படுத்த வேணுமோ
அன்றிக்கே கண்ணனைத் தாலாட்ட தாய் சொல்லும் வார்த்தைகளை அனுவதிக்கிறார்கள்
இரவில் வந்து இலைக் குழலூதி என் மகளைக் கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமலச் செவ்வாய் வெளுப்ப
விவரணப் படுத்துவதும் தகுதியோ
அல்லிற்றான் பாடமே பொருந்தும் -குழலையும் ஊதிக் கொண்டு ராத்ரியிலே வந்த பின்னை
அல்லுற்றான் பாடம் பொருந்தாது-

————————————————-

ஆயிரம் கண்ணுடை  இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-

நல்லன பாசனம் -நல்ல பாத்ரங்களால்
பண்டிகளால் -பல பல வண்டிகளால்
அசோதை பெரிய வயிறு தாரியான ஒரு பிள்ளையைப் பெற்றாயே -என்று ஏசுவது வெளிப்படை
கோவலரையும் கோ நிரைகளையும் காத்து அருளின பெருமான் அன்றோ
தனது சௌலப்யம்   காட்டி அருள செய்த சேஷ்டிதங்களை  பழித்தல் தகுதியோ -உள்ளுறை போரில்
அதனை எல்லாம் –இரண்டாம் அடியிலும் ஈற்று அடியிலும் இரட்டிப்பு
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறுமாக திரட்டின திரளிலே
ஒரு சிறு அவிழும் மிச்சம் ஆகாதபடி அடங்கலும்- துற்றினான் என்பதைக் காட்டவே  –

—————————————————-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே–10-7-8-

இடைச்சிகள் எல்லாம் திரண்டு முறையிட்டால் நான் வருந்தாமல் இல்லை
கண்ணபிரானை தண்டிக்க முடியாதே
ஸ்தோத்ரம் பண்ணி வேண்டிக் கொள்ளத் தானே முடியும்
பூதனையை முலையுண்டு முடித்த பின்பு இவனைப் பொடிந்து ஓன்று சொல்ல அஞ்சிக்  கிடக்கின்றேன்-

—————————————————————————————————————————————————————————————————————————–

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே ———————–10-7-9-

பாலுக்கு அழுகிற பாவனையில் தன சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்து அச் சகடாசுரனை சின்னா பின்னம் ஆக்கி அருளிய பிரான்
ஈடும் வலியும் யுடைய
ஈடு -தேக பலம்
வலி -எதிரிகளை அநாயாசமாக   அடர்க்கும் வலிமை -சௌர்யம் வீரம் பராக்கிரமம் போலே
ஏழு திங்களில் சாந்திர மாந ரீதி -மிக்க சிறிய பிராயத்தில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி -இதழ் விரிகின்ற மாலையை அணிந்த இப்பிள்ளையை கண் வளரச் செய்து விட்டு  –

சேடன் -மிக்க இளைய பிள்ளையாய்

——————————————————————————————————————————————————————————————————————-

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –10-7-10-

அஞ்சுவனே என்று சொன்னது திண்ணமே
ஆயிரம் பிள்ளைகளும் களவு கொள்ளும் விதம் நீர் அறியீரோ -பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் -பூனை போலே
ஓசைப்படாமல் புகுந்து களவு செய்கிறார்கள்
உண்கின்று-அமரர் கோன் அர்ச்சிக்கின்று -திருவாய் -10-2-5- போலே -உண்ணும் போது என்றவாறு
கஞ்சனுக்கு   தீர்வை கட்டும் நாளும் வந்ததே -கறவு -கப்பம்
வருஷத்துக்கு ஒரு முறை கப்பம் கட்டுவது ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப் படுகிறதே-

————————————————————–

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர்  இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் -10-7-11-

அவன் அறியாத பொய்கை தேடி ஆய்ச்சிகள்  போக இருளன்ன மேனி அவர்கள் நிழலைப் பற்றிக் கொண்டு
முன்னமே போய்ச் சேர்ந்தான்
கோழி அழைப்பதன் முன்னம் -நாச்சியார் -திருமொழியின் சுருக்கம் இப்பாசுரம்
இருந்தாய் போலும் -தான் நேராக கண்டது இல்லையே –
அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பி என்னும்
பங்கய நீர் -தாமரைத் தடாகம்-

——————————————

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் -10-7-12-

ஆண்மையும் சேவகமும் -சௌர்யமும் வீர்யமும்
நம்பி மூத்த பிரானை கூட்டிச் செல்லாமல் தன்னுடனும் வார்த்தை சொல்லாமல் மடுவுக்கு சென்று காளிய நிரசனம் பண்ணி அருளினான்
ஆயிர வாய் நாகத்தினோடு -சில இடங்களில் ஐந்தலை நாகம் -பயங்கரம் தோற்ற
கண்ணபிரான் திருவடி ஸ்பர்சத்தால் பச்சிலை பூம்  கடம்பு ஆயிற்று-

————————————————-

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ்  கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-

ரிஷப வடிவு கொண்ட அசுரன் அரிஷ்டாசுரன்-அரிஷ்ட நேமி என்றும் பெயர் சொல்லுவர் இந்த அசுரனுக்கு
நப்பின்னை பிராட்டிக்காக ஏழு ரிஷபங்களையும் அடக்கியதும் ஆகவுமாம்
தம்பரமல்லன-தன்னாலே தாங்க முடியாதவற்றை-

————————————————————–

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய   மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே —10-7-14-

குவலயா பீட நிரசனத்தை சொல்லி நிகமிக்கிறார்
இப்பதிகம் கற்று வல்லார்க்கு துன்பம் சிறிதும் இல்லையாம்
யசோதைப் பிராட்டியைப் போலே அனுபவத்தில் குறை இல்லாத இன்பமே  அதிகரிக்கப் பெறுவார்
தொல்லை இன்பம் பெறுவார்கள் என்றபடி-

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-6-எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்-

April 7, 2015

ஸ்ரீ யபதி அநந்த கல்யாண நிதி யுடையவன்
ஜ்ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் போல்வன மேன்மை பரமான திருக் கல்யாண குணங்கள்
வாத்சல்யம் சௌலப்யம் சௌசீல்யம் போல்வன எளிமை பரமான திருக் கல்யாண குணங்கள்
குணாநுபவம் செய்பவர் பலவகைகள்  உண்டே -பரத்வம் மட்டும் -சௌலப்யம் மட்டும் -இரண்டையும் சேர்த்து அனுபவிப்பவர்கள் உண்டே
எவ்வளவு மேன்மையானவன் இப்படி எளியவன் என்பாரை அநு கரித்து செல்லும் இத் திரு மொழி
மேல் 11 பத்திலும் மானமரும் மென்னோக்கி -இது போலே யுண்டு
பரத்வத்தை முன்னே பேசி சௌலப்யத்தை பின்னே பேசுகிறது அவ்விடத்தில்
இங்கே சௌலப்யம் முன்னே பேசி பரத்வம் பின்னே பேசும்
ஒருவர் பேச்சாகவே செல்லும் இத் திரு மொழி –
அங்கே இகழ்வாரும் புகழ்வாருமாக   இருவர் பேச்சாக செல்லும்-

இத் திரு மொழியிலும் ஈற்றடியை முன்னே கொண்டு சௌலப்யம் முன்னே சொல்லி
பரத்வம் பின்னே சொல்வதாக நிர்வஹிக்க குறை இல்லை
ஆனாலும் பரத்வத்தை பூர்வ பஷமாக்கி சௌலப்யத்தை சித்தாந்தம் ஆக்கி அனுபவிப்பதே ஆழ்வாருக்கு அபிமதம்
என்று தோன்ற பாசுரம் அமைந்த படியே அனுபவிப்பதே நன்று
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யானார் என்று வெறுத்து போய் விடாமல் சௌலப்யம் கண்டு அணுகுமின்-
கற்றினம்  மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்  காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான்
பற்றி  யுரலிடை யாப்பும் யுண்டான் பாவிகாள் யுங்களுக்கு ஏச்சுக் கொலோ –
இடைச்சி கட்டின கட்டை அவிழ்க்க முடியாதவனா நம்முடைய சம்சாரக் கட்டை அவிழ்க்க போகிறான் என்று
குழைச் சரக்காக நினைத்து விடாமல் மேன்மைக் குணங்கள் யுண்டே என்று உகந்து ஆஸ்ரியுமின்
என்பதாகவும் வெளியிடுதல் இத் திருமொழிக்கு பரமார்த்தமாகும்-

——————————-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன்  காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே-10-6-1-

தொடங்கும் பொழுதே -எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே -என்ற அழகு என்னே
மேன்மையின் எல்லையில் நிற்கும் பராத்பரன் எளிமையின் எல்லையிலும் நின்று
அருளிக் காட்டுகின்றானே -என்ன கபடச் செயல் –
சீரிய சிங்காசனத்தில் வீற்று இருந்து ஆச்சார்ய பதம் செலுத்த வேண்டிய தான் தன்னை சிஷ்யனாக
ஆக்கிக் கொண்ட மாயம் -நர நாரணனாய்  –
அற நூல் சிங்காமை விரித்தவன் –வேத இதிஹாச புராணங்கள் -அர்த்த பஞ்சகத்தையும் கை இலங்கு
நெல்லிக் கனியாக காட்டி அருளும்
திரு அஷ்டாஷர மகா மந்த்ரத்தை வெளியீடு அருளினான் என்னவுமாம்
மேலும் சர்வ சம் ரஷகன் -திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளி –
தாழ் குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு இவ்  ஏழ்   உலகும் யுண்டு  இடமுடைத்தால் சாழலே –
இங்கே நெருக்கிப் புக -என்பது – என் நாம் எங்கே தவறிப் போகிறோமோ என்று புகுகிற படி
அங்காத்தல் -வாய் திறத்தல்
அளை வெண்ணெய் -அளையும் வெண்ணெயும் -தயிரும் வெண்ணெயும் -என்றபடி –
அளையப் படுகிற வெண்ணெய் என்றுமாம் -அளைத்தல் -துழாவுதல் –

—————————————

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த  பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ்  மலையேழ்   உலகேழ்  ஒழியாமை  நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே -10-6-2-

நைக வக்ரை சந்தனம் கொடுத்து அதனால் கூனை நிமிர்த்தி அருளிய ஸ்ரீ கிருஷ்ணன்
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் -திருவாய் -1-5-5-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டரங்கவோட்டி
உள் மகிழ்ந்த நாதன் -திருச்சந்த விருத்தம்

——————————————————

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வலியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே-10-6-3-

காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ் வுயிர்ப்ப 
வாய்ந்த மது கைடபரும் வயிர் உருகி மாண்டார் -மூன்றாம் திருவந்தாதி-

————————————————

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-

ஸ்ரீ நரசிம்ஹமாய் ஆஸ்ரித விரோதிகளை ஒழித்த பிரானே
உலகு அளந்த உத்தமனே  அளை வெண்ணெய் அளந்தான்

——————————————————

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ்  துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-5-

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –
அடியார் துயர் எல்லாம் தன்னடையே கழிந்து ஒழியுமாறு
திரு உள்ளம் பற்றி ஞான பக்தி விரக்திகளை வளரச் செய்து கொண்டு போந்து அவர்களை
நித்ய ஸூரி துல்யராக ஆக்கி வைக்கும் பெருமான் -இமையோர் அளவும் செல –
அன்றிக்கே ஓங்கி உலகு அளந்த சமயத்தில் நெடு வான் அளவும் நீண்டவனாகி இமையோர் அளவும்
செல்லும்படியாக திரு வடிகளை நீட்டி அருளிய பிரான்
தன்னடியார் -யமபடர் திறத்தில் -இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன தூதுவரை கூவிச் செவிக்கு –
என் தமரை நமன் தமர் வினவப் பெறுவார் அலர்-வினவுதல் தண்டனை செய்தலுக்கு பர்யாயம்
இப்படிப் பட்ட பராத்பரன் ஆய்சிகளால் கட்டுண்டு இருக்கும் எளிவு என்னே-

———————————————-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு  எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை   யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-

ஹேய புருஷார்த்தங்களில் பற்று இன்றிக்கே உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –

அத்யவசாயம் கொண்டு பணிந்து துதிக்க வல்லார்களை அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கி அருள்வான் –
கார்த்த வீர்யார்ஜூனனை நிரசித்து அருளிய சக்தன் அசக்தியை அபி நயித்து ஆப்புண்டு இருக்கிறான் –

—————————————-

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு  எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே–10-6-7-

கரண களேபரங்களைக் கொடுத்து அருளி தன்னைப் பணிந்து ஏத்த வல்லவர்களுக்கு துயர்களைத் தொலைத்து
அந்தர கிங்கரர்களாக்கி அருளுபவன்
அடியார்களுக்கு தீங்கு இழைத்த ராஷசர்களை நிரசித்து அருளியவன்
இன்று அஜ்ஞனாயும்  அசக்தனுமாய்க் கொண்டு  இடைச்சி கையிலே கட்டுண்டு கிடக்கிறான் –

——————————————————–

நெறித்திட்ட   மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-8-

பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்
பிரசித்தியை உடைத்தாய் மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –
இவ்வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே உடையனாய் -என்கிறது
அல்லன்ன வில்லேயதனை –
வல்லன்ன வில்லேயதனை –
வில்லென்ன வல்லேயதனை -பாட பேதங்கள்
அல் -என்று இருளாய் -இருண்ட வில் -வல்லென்ன -கடினமான –
இளம் கொற்றவனே -பன்னிரண்டு வருஷம் திரு அயோத்யையில் சீதா பிராட்டியுடன் போக ரசம் அனுபவித்தமை
அதற்கு மேலே கைகேயி வரம் வேண்ட கானகம் சென்று இராவணனை முடித்த வீரப் பாடுடையவன் கிடீர்
தனது பெருமை எல்லாம் ஒளித்து எளிமையைக் காட்டா நின்றான் –

——————————————————————-

சுரிந்திட்ட  செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு   இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-9-

கேசியை நிரசித்து அருளியவனும்
சூர்பணகைக்கு அங்க பங்கம் செய்து அருளினவனும்
மராமரம் ஏழும் எய்து அருளினவனும்
இங்கே வெண்ணெய் களவுக்கு கட்டுண்டு கிடக்கிறான்
கேழ் -ஒளியும் நிறமும் –
பிடரி மயிர் சுருண்டு செந்நிறம் கொண்டதால் -சுரிந்திட்ட செங்கேழ் உளை
சேஷ்டிதங்கள் க்ரம மாறாடி அனுபவம் -திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்தல் மாத்ரம் இங்கே விவஷிதம்-

——————————————————

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –10-6-10-

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்-என்பதால்
சௌலப்ய அனுபவத்திலே  ஆழ்வார் நோக்கம்
அபூர்ணரன் போலே வாரி வாரி விழுங்கி  -ஏச்சு பேச்சுக்கு சுணங்காமல் -ஆஸ்ரிதர் ஹஸ்த ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தாலே
தரிப்பு கொண்டவன் -மகா குணம் விளங்கும் –
சம்சாரிக துக்கங்களை அனுபவிக்கப் பெறார்கள் – பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
அந்தமில் பேரின்பத்தையும் அடைந்து ப்ரஹ்மாதிகள் குடி இருப்பும் பெறுவார் –

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .