பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-4-நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்-

சிஷ்ட பரிபாலன  அர்த்தமாகவே துஷ்ட  நிக்ரஹமும் -தர்ம சம்ஸ்தாபனமும்  –
சங்கல்ப மாத்ரத்திலே செய்ய வல்லனாய் இருந்தும் என் நின்ற யோனியுமாய் பிறந்து அருளினான் –
மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் -தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத   ஞானமே  படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதோ -திருவாய் -3-1-9-
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன்  பால் வாராய் –
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே –
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே –
அபேஷிதம் சங்கல்பத்தினால் தலைக் கட்டக் கூடியதோ
ஆண்களையும் பெண்ணுடை யுடுத்த வல்ல வடுவு அழகன்
மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த காணாமற் வேழம்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் என்னார் இடரை நீக்காய்
அவன் ஸ்வபாவத்தைப் பார்த்தாலும் நேராகச் சென்று ரஷித்து அல்லது தரிக்க மாட்டாதவன்  –
கோவிந்த புண்டரீகாஷ ரஷமாம் சரணாகதாம் -ருணம் ப்ரவர்த்திதம் –
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் ஆனான் –
ஆழ்வாருக்கு நினைப்பூட்டி தரிப்ப்க்கச் செய்து  அருள
பகவத் அவதாரங்களை அனுசந்தித்து  தரிக்கிறார் –

——————————————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே -11-4-1-

பிரளய ஆபத்தில் நின்றும் ரஷித்து அருளின மகா உபகாரம் -அடி தோறும் ஒற்று நீங்கலாக -23 எழுத்துக்கள்
சுந்தர பாஹு ஸ்தவத்தில் பாதம் தோறும் 23 அஷரங்கள்
நிலையிடம் எங்கும் இன்றி -நெடு வெள்ளத்திலும் இமையோரிலும் அந்வயம்
தலையிடமற்று -தலை இட மற்று -என்றும்-தலை இடம் அற்று -என்றும் -பிரிக்கலாம்
சர்வாதிகனான சர்வேஸ்வரனை —அவன் அப்படி தன்னுருக் கொடுத்து–வேற்றுருக்  கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் –
உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை–இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால்–நீ மறவாது இருக்க வேண்டாவோ –

—————————————————-

செருமிகு வாள் எயிற்ற வரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணுமுடனே
வெரு வர வெள்ளை   வெள்ளம் முழுதும்   குழம்ப இமையோர்கள் நின்று கடைய
பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து சுழலக்  கிடந்து துயிலும்
அருவரை யன்ன  தன்மை யடலாமையான திரு மால் நமக்கோர் அரணே –11-4-2-

ஆமை வடிவம் கொண்டு ஆதாரமாக எழுந்தி அருளி இருந்த திருமாலே நமக்கு நிகரற்ற ரஷகன் –
மன்னும் வடமலையை மத்தாக மா சுணத்தால் மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கொளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய மன்னும் துயர் கடிந்த வள்ளலை -பெரிய திரு மடல்-

———————————————

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர்  உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வடகுன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

சிலம்பினைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்ப திரு வாகாரம் குலுங்க
நில மடந்தை தனை  இடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய வெம் கோமான் கண்டீர் –
திருத் தெற்றி அம்பலத் திருப்பதிகத்திலும் அருள்வார்
வராகத்து எயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை அடிக்க்ளவு போந்தபடி -பொய்கையார்
ஸ்ரீ வராஹ நாயனாரே நம்மை ஆளவல்ல பிரபு -என்கிறார்-

————————————————–

தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க  வரியாகி யன்று  பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
விள வெழ  விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே –11-4-4-

குட்டம் அது -ரத்த மதுவானது
பெரு நீரிலே மும்மை பெரிது -பிரளய பெரு வெள்ளத்தில் காட்டிலும் மும்மடங்கு பெரியதாய் இருந்ததே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் கண் குளிர சேவிக்க -தலையவிழ்  கோதை மாலை இருபால் தயங்க -தோன்றி அருளினான்
தளையவிழ் -விகசித்தலைச் சொன்னபடி–
கட்டு நெகிழா நின்றுள்ள தொடை கொள் மாலை பூ மாலை என்றும்–இவை இரண்டு அருகும் அசைந்து வர-
அளவெழ வெம்மை மிக்க  அரியாகி -உலகங்கட்கு எல்லாம் உப சம்ஹாரம் விளைதிடுமோ என்று அனைவரும் அஞ்ச
பரியோன் சினங்கள் அவிழ -பகவத் பாகவத் விஷயங்களில் பலவகைப் பட்ட சீற்றங்கள் என்பதால் பன்மை பிரயோகம்
வளையுகிராளி-ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்திக்கும் இரணியனுக்கும் -வளைந்த நகங்கள் சிங்கத்துக்கும் அசுரர்க்கும் ஒக்கும்

———————————————

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு  செல வுய்த்த  பாதமது நம்மை யாளும் அரசே –11-4-5-

வெந்திறல் வாணன் -தேவர்கள் குடியிருப்பை அலிக்கு படியான மிக்க திறல் யுடைய மாவலி
வேத நாவின் முனியாகி மாவலி மெய்ம்மை யுணர -என்றபடி
முன்னடிகளால் ஸ்ரீ வாமன அனுபவம் -பின்னடிகளால் ஸ்ரீ த்ரிவிக்ரமன் அனுபவம்
ஒண் மிதியில் புனலுருவி யொருகால் நிற்ப யொருகாலும் காமருசீர் அவுணன் யுள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே -திரு நெடும் தாண்டகம்
மேல் உலகங்களை அளந்து அருளிய திருவடியைப் பேணிப் பேசுகிறார் ஆழ்வார் இங்கே
அதி மானுஷ ஸ்தவத்தில் கீழ் உலகங்களை அளந்து அருளிய திருவடியைப் பேணிப் பேசுகிறார் கூரத் ஆழ்வான்-

———————————————-

இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -11-4-6-

கோடாலிப் படையை ஏந்தினவனும்
ஸ்ரீ பூமா நீளா தேவி கொழுநனும்
திருக் கல்யாண குணங்களால் யுண்டான கீர்த்திக்கு கொள்கலமாய் இருப்பவனும்
திரு வயிற்றிலே வைத்து ரஷித்து அருளிய பெருமானே நம்மை நீடூழி அடிமை கொள்வான்-

——————————————-

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

மரண காலத்தில் மாரீசன் போட்ட கூச்சலாலே மேலே எல்லாம் நடந்து தேவர்கள் பிரார்த்தனை ஈடேறிற்று
ஸ்ரீ ராமபிரான் விஷயத்தில் மாரீசன் உபகாரகனே அன்று அபகாரகன் அல்லன் –

————————————————-

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

ஹம்சாவதரமாய் திருவவதரித்து கடலினுள் புகுந்து
அசுரர்களைத் தேடித் பிடித்து கொன்று
வேதங்களை மீட்டுக் கொணர்ந்து
ஹம்ச ரூபியாய் பிரமனுக்கு உபதேசித்து அருளினான்
அந்த பரஞ்சோதியே நம்மை அடிமை கொள்ளும் –

————————————————

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே—11-4-9-

ஸ்ரீ கிருஷ்ணனே நமது பாபங்களை வாசனையோடு போக்கி அருளுவான் என்பது திண்ணம்
வேறு ஒரு ஆஸ்ரயம் யுண்டு என்று நினைத்து இராமல் அவனை வணங்குமின்
உரவோள் -வலிய நெஞ்சு யுடையவள்
தெற்றல் -தெள்ளியவன்-

————————————————-

கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல்
ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற  தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே –11-4-10-

இத் திருமொழியை வாயாரப் பாடி உழல்கின்ற -இதுவே போது போக்காய் திரிகின்ற –
பாகவதர்கள் பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்
ஸ்ரீ கிருஷ்ண அவதாரமும் ஸ்ரீ ராம அவதாரமும் முக்ய -இனிய திரு அவதாரங்கள் என்பதால்
நிகமன  பாசுரத்திலே இவற்றை சொல்லி அருளுகிறார்
வேலை புடை சூழ் திருமங்கை -கடல் போன்ற காவேரி- -முன்பு கடல் அணித்தாக இருந்து இருக்கலாம் –
வேலை மோதும் மதில் சூழ் திருக் கண்ணபுரம் போலே  –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading