Archive for the ‘பெரிய திரு மொழி’ Category

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –பெரிய திருமொழி வியாக்கியான அமுத துளிகள் -பாகவத சேஷத்வ போக்யத்வங்கள் –

September 4, 2018

நண்ணாத வாளவுணர்-பிரவேசம்-2-6-

பிரவேசம்-

அஹம் அச்ம்ய  அபராதா நாம் -என்றும்
சாதே தேச்மின் பிரத்யுஜ்யதாம் –
என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று
அது தன்னை
வானிலா முறுவலிலும்
தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –
அது தன்னை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும்
தொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும்
அது தன்னை அனுபாஷித்தார் –
ஆனுகூலச்ய சங்கல்ப
பிரதிகூலச்ய வர்ஜனம் -என்று
அவனுக்கு சம்பாவிதமாய்
அநந்தரம் வரும் ஸ்வபாவங்களை சொல்லுகிறது –

அவை தமக்கு பிறந்தபடி சொல்லிற்று ஆயிற்று இதில் -கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
அவை தான் இரண்டும் லஷணமாக வேண்டிற்று இல்லை
பரஸ்பர விரோதத்தாலே -த்வமே-என்று உபாய
நைரபேஷ்யத்தை சொல்லுகையாலும்
இதில் அங்கங்களோடு கூடி இருப்பதாகச் சொல்லுகையாலும் –
ஆகையால் இது லஷணமாய்
இது அவனுக்கு சம்பாவித ஸ்வ பாவமாம் இத்தனை –

பசுர் மனுஷ்ய பஷீ ரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
என்று பாகவத சமாஸ்ரயணத்தை
ஞானமும் ஞான அனுரூபமான வ்ருத்தமும் ஒழியவேயும்
பகவத் பிராப்திக்கு சாதனமாக சொல்லா நின்றது இறே-

மிருக பஷி யாதிகளையும் கூட எடுக்கிறது இறே
இவை தான் பின்னை இரண்டோ –
பாகவத சமாஸ்ரயணம் ஆவது -பகவத் சமாஸ்ரயண்த்தின் உடைய காஷ்டை அன்றோ -என்னில்
அவ்யவதாநேந பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகிறோம் என்று இருப்பது ஓன்று –
பாகவத சமாஸ்ரயணத்தாலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுமதும் ஓன்று உண்டு
இந்த முக பேதத்தைப் பற்றிச் சொல்லுகிறது –
பாகவத சமாஸ்ரயணம் ஒழிய பகவத் விஷயத்தில் இழியும் துறை இல்லை-

மாறாய -இத்யாதி –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் யார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் யார் –
இத்தை ஒரு உதாஹரன நிஷ்டமாகக் காட்டலாமோ வென்னில் –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் -சர்வேஸ்வரனைக் கண்ட அநந்தரம்-தம்மைப் பேணாதே
பகவத் சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணும் பெரியாழ்வார் போல்வார் –

மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் –
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று இருக்கும் ஆண்டாள் போல்வார் –
இனி இவர் தாம் பாகவதாராக நினைத்து இருப்பது

உகந்து அருளின நிலங்களிலே நீர்மையிலே ஈடுபட்டு இருக்கும் அவர்களை –
அபாகவதாராக நினைத்து இருப்பது அங்குத்தை வாசி அறியாதவர்களை –

ஆனுகூலச்ய சங்கல்ப -என்கிறது
ஓன்று செய்து தலைக் கட்டிற்றாய் ஓர் அளவில் மீளுமது அல்லாமையாலே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்குமது இங்கு ஓர் அளவில் மீளாதிறே-
பராதி கூலச்ய வர்ஜனம் -ப்ராப்தி அளவும் இறே நிற்பது –
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி பிறந்தால் உண்டாமதாகையாலே
ஆனுகூல்யம் பிற்பட்டது இ றே –
அந்த ப்ராதி கூல்ய நிவ்ருத்தி தமக்கு உண்டான படியைச் சொல்லுகிறார் முதல் பாட்டில் –
இது தான் உண்டாகவே அமையும் இறே –
சம்பந்தம் இன்றாக உண்டாக்க வேண்டாவா –
தானே ஏறிட்டுக் கொண்டத்தை  தவிரும் இத்தனை வேண்டுவது –

அநாதி காலம் சம்சரித்திப் போருதிற இச் சேதனர் விஷயமாக
சர்வேஸ்வரன் திரு உள்ளத்தாலே
ஸூக்ருதம் சர்வ பூதாநாம்-என்கிறபடியே பண்ணுவித்த தொரு
சௌஹார்த்தம் உண்டு இ றே –
இவனுடைய சத்கிரியைக்கு பல வ்யாப்தி உண்டாகா நின்றால்
அவனுடைய அனுக்ரகத்துக்கு பல வ்யாப்தி இன்றிக்கே இராது இறே –
ஆகையால் அது தான் ஒரு நாள் ஓர் அவகாசத்திலே
பலிக்கவும் கடவதாய் இருக்கும் இறே –
அத்தாலே இவனுக்கு ஈஸ்வரன் பக்கலிலே ஆபிமுக்யம்
பிறந்து அது அடியாக அவன் விசேஷ கடாஷம் பண்ண –
அநந்தரம் -இவனுக்கு அவன் பக்கலிலே
ருசி விச்வாசங்கள் பிறந்து
ப்ராபகனும் ப்ராப்யனும் அவனே என்று அத்யவசித்தால்
பின்பு அவன் இருக்க கடவ படியைச் சொல்லுகிறது-

இனி உபாயத்தில் வந்தால்
சர்வஞ்ஞனாய் –
சர்வ சக்தியாய் –
உபய விபூதி உக்தனாய் –
அவாப்த சமஸ்த காமனாய் –
இருக்கிற சர்வேஸ்வரனை இஸ் சம்சார சேதனன்
உபாயமாக வரித்தால் -பின்னை அவனுடைய சர்வ
பரங்களையும் தானே ஏறிட்டுக் கொண்டு நிர்வஹிப்பான் ஆகில்
அவன் செய்யுமதுவும் இவன் தானும் ஒரு தலைப் பற்ற வேண்டும்
படி இராமையால் பின்னை ஹித சேஷத்தில்
தனக்கு செய்ய வேண்டுவது ஓன்று இல்லை –

உபேயம் ஆகிறது -கர்ம நிபந்தனமாக பரிகிரஹித்த
இத் தேக சம்பந்தம் அற்று ஒரு கதி விசேஷத்தாலே போய்
ஒரு தேச விசேஷத்திலே புக்கால் பண்ணுவதொரு
வ்ருத்தி விசேஷம் ஆகையால் அது இதுவாகக் கூடாது
பிராபக அம்சத்தில் கர்தவ்ய அம்சம் இல்லை யாகில்
ப்ராப்ய அம்சத்தில் இது அந்வயித்த தாகில்
பின்னை இதுவாவது பழைய விஷய ப்ராவண்யமே
சித்தித்து விடுகிறதோ என்னில் கூடாது இறே –
ப்ராப்யம் இன்னது என்று நிஷ்கர்ஷித்து ப்ராப்ய ஸ்வீகாரம்
பண்ணுகையாலே –
அதாவது பிராப்ய ஆபாசங்களிலே ருசி நிவ்ருத்தி பூர்வகமாக இறே
ப்ராப்ய பிரதிபத்தி ஆகையாலே தூரதோ நிரஸ்தம் இறே அது -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில்
விஹித கர்மங்களும் நிஷித்த பரிஹாரார்தமாக
செய்யுமவை எல்லாம் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே
இவையும் த்யாக விஷயமாய்  அன்வயிக்கும் என்று
அர்த்த ப்ராப்தமாய் பழைய பாபங்களையே சொல்லிற்றே வராதோ -வென்னில் -வாராது இறே
உபாய ஸ்வரூபத்தாலும்
அதிகாரி ஸ்வரூபத்தாலும்
அப்படியே இருக்கிறது இதுவும் –
சரீர சமனந்தரத்திலே ப்ராப்ய சித்தியாய் இருக்கையாலும் –
இனி சமஸ்த கல்யாண குணாத்மகனை உபாயமாக வரிக்கையாலும்
இவன் தான் விதி பர தந்த்ரனாய்
சாதனா புத்யா இங்கு அனுஷ்டிப்பது ஓன்று இல்லாமையாலும்
ஜ்ஞானம் பிறந்த பின்பு செய்யுமவை எல்லாம் தான்
ஸ்வீகரித்த பிராப்யத்தோடும் ப்ராபகத்தோடும் சேர்ந்தது அல்லாது இராது –
நினைத்தார் நினைத்தபடி மூலையடியே திரிகிற
அஞ்ஞ்ரைக் காட்டில் இவனுக்கு ஒரு வ்யாவ்ருத்தி வேணும் இறே –
இன்று நாளை நீர் வருமாறு
அங்கே இங்கே சினையாறு பட்டுக் காட்டுமா போலே
மேல் தான்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் –
அவர்களோடு கூடி அனுபவிக்கும் அத்தை பேறாகச் சொல்லுகையாலே இவனுக்கு இது சரம சரீரம் ஆன பின்பு
இவை இங்கே பிறக்காக வேணும் இறே-

அவை ஆகிறவை தான் எவை என்னில்
அபாகவதர்களோடு பொருந்தாமையும்
பாகவதர்களை ஒழியச் செல்லாமையும்
இறே
அவை இரண்டும் தமக்கு உண்டான படியை அருளிச் செய்கிறார் –
பார்யைக்கு அறிவு பிறக்க பிறக்க
பர்த்தாவின் பக்கல் பாவ பந்தம் உண்டாம் -பர்த்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணுமது இறே

இவள் அவனுக்கு ஆகாது ஒழிகை ஆகிறது –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மந்தர் -என்னா நின்றது இறே –
பிரபன்னருடைய லஷணம் சொல்லுகிற போது
இப்படி சர்வேஸ்வரன் உத்தேச்யம்  என்று ஞானம் பிறக்க பிறக்க
பாகவதர் பக்கல் பாவ பந்தம் உண்டாகலாம் –
இந்த ஞான அர்த்தமாக விட வேணும் இறே அபாகவாத சம்பந்தம் –

இனி பாகவதர் ஆகிறார் –
பிரதம தசையில் ஈஸ்வரனுடைய உபாய பாவத்தை அறிவித்து –
அவ்வழி யாலே புருஷகார பூதராம் ஆவார்கள் –
இவன் தான் சேதனனாய் உபகாரம் கொண்டவன் ஆகையாலே  கிருதஞ்ஞனாய் இருக்கக் கடவன் –
இனி சரம தசையில் வந்தால் ப்ராப்யத்தில் எல்லை இவர்கள் ஆகையால் அவன் தன்னோபாதியும் உத்தேச்யராய் இருக்கக் கடவர் –
இனி நடுவு பட்ட நாள் –
இவனுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு
உடலாய் இருப்பார்கள் ஆகையால்
சர்வ அவஸ்தைகளிலும் இவர்களுக்கு உத்தேச்யம் என்னும் இடம் சொல்லிற்று –
ஆனுகூலச்ய சங்கல்ப -இத்யாதிகளால் ஆறு வகையாக இருக்கும்
சரணாகதி என்று சொல்லா நின்றது –
அஹம் அஸ்ம்ய அபராதநாம் ஆலய அகிஞ்சன அகதி
த்வமே உபாய பூதோ மே பவ -என்று
தன் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு நீயே உபாயமாக
வேணும் என்று அபேஷிக்குமத்தை சரணாகதியாக சொல்லா நின்றது –
இதில் ஒன்றை விட்டு ஒன்றை ஸ்வீகரிக்கும் அன்று
மற்றையதுக்கு அப்ராமண்யம் சித்திக்குமாய் இருந்தது –
ஆனால் இவை இரண்டும் அவிருத்தமாக அன்வயிக்கும்படி எங்கனே என்னில்
த்வமே -என்கிற இடத்தில் உபாயாந்தர நைரபேஷ்யம்
தோற்றி இருக்கையாலே சரணா கதியினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது அந்த ஸ்லோகத்தாலே-

அச் சரணா கதி புக்க இடத்தே புகக் கடவதாய் சரணா கதன்
ஆனவனுக்கு சம்பாவித ஸ்வாபாவங்களை சொல்லுகிறது
இந்த ஸ்லோகத்தாலே –
சரணா கதியினுடைய ஸ்வரூபத்தைப் பார்த்தால் வேறு ஒன்றைப் பொறாத படியாய் இருக்கும் –
இனி ஒதுங்கின ஆஸ்ரயத்தை பார்த்தால் இஸ் ஸ்வாபாவங்களோடு கூடி  அல்லாது இராது –
ஷட் சிதா சரணா கதி -என்று கொண்டு இக் குணங்களை
சரணா கதி அங்கமாக சொல்லா நிற்க
இவனுக்கு சம்பாவித ஸ்வா பாவம் என்னும்படி எங்கனே என்னில் –
பிரார்த்தனா மதி சரணா கதி -என்கிற இடத்தில் பிரார்த்தனா புத்தி இச் சேதனன் கையில் கிடக்கச் செய்தே
எங்கனே சரணா கதி லஷணம் விஷயமாய் கிடக்கிறபடி –
ஆனுகூலச்ய -என்கிற ஸ்லோகம் விதி பரதந்த்ரமாய் செய்யும் அன்று –
பல அபேஷை இல்லாத போது தவிரலுமாய் இருக்கும் –
ஸ்வரூப நிவேசியாமன்று செய்யாத போது ஸ்வரூப ஹானியே சித்திக்கும் இறே –
ஸ்வர்க்க காமனை இல்லாத போது ஜ்யோதிஷ்டோமம்
தவிரலாய் இருக்கும் -அங்கனே செய்ய ஒண்ணாதபடி யாய் இருக்கும் இறே –
இத்தலையால் ஒரு பலம் சொல்லாத நித்ய அனுஷ்டான விதிக்கும் –

இதில் முதல் பாட்டில் -அபாகவதரோடு பொருந்தாமை சொல்லுகிறது –
இவை இரண்டும் உத்தேச்யமானால் க்ரம விசேஷத்தத்துக்கு கருத்து என் என்னில் –
ஆநு கூல்யத்துக்கு அவதி இல்லாமையாலே சங்கல்பமே அமைந்தது –
இதில் முதல் அடி இட்டானாவதும்  இஸ் ஸ்வா பாவம் உண்டானால்  ஆகையாலே இத்தை முந்துறச் சொல்லுகிறது –
விரோதி த்யாக பூர்வகமாக  இறே உபாய ச்வீகாரத்தை விதிக்கிறது –
பரித்யக்யா மயா லங்கா -என்றும் –
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ தாராம்ச -என்றும் இறே
ராகவம் சரணம் கத -என்கிறது
தன்னைப் பேணாதே பிரயோஜனாந்த பரருக்காக உடம்பு நோவக்
கடல் கடைந்து அமுதத்தைக் கொடுத்த சர்வேஸ்வரன்
அந்த அம்ருத்தோ பாதியாகிலும் நம்மை விரும்புவார் சிலரைக் கிடைக்க வற்றோ என்று
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு சாய்ந்து அருள
அவனை விட்டு புறம்பே போது போக்குகிற வர்களை
நான்  ஒருவனாக புத்தி பண்ணி இரேன் என்கிறார்-

கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-
பிரயோஜனாந்த பரராய் -தன்னை உகவாது இருப்பாருக்கும்  கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று-அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற-இந்நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை-ஒரு வஸ்துவாக நினைத்து இரோம்-என்கிறார்-
நண்ணாத-
ஸ்ரீ விதுரர் பட்டது படுகிறார் ஆயிற்று –
சம்ச்புரு சந்நாசனம் சௌரேர் மஹா மதி ருபா விசத் -என்றது இ றே-
கடல் கலங்கினால் போலே கலங்கும் போலே காணும்
மஹா மதிகள் என்று துர்யோதன க்ரஹத்தில் எழுந்து அருளின போது பொய் ஆசனமும் வஞ்சனமுமாய்ப் புகுந்த
பிரமாதத்தை நினைத்து நெஞ்சு அஞ்சினபடியால் நாமும் ஒரு குலையில் காய் அன்றோ –
நாமும் சம்சாரிகளில்  ஒருவரான பின்பு நம்மைத் தான் விஸ்வசிக்க வேணுமோ என்று
தம்மை அதிசங்கை பண்ணின படியால் தாம் படுத்த படுக்கையையும் தடவிப் பார்த்தார் இறே –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் பெருமாள் எழுந்து அருளப் புக்கால் சொட்டை முட்டியில் கையை வைத்துக் கொடு சேவிப்பாராம்-
ஒருவர் இடறுதல் -பேர்தல் -செய்தது ஆகில் தம்மை முடித்துக் கொள்வாராக –
அத்தை அனுசந்தித்து நம் முதலிகள் இவரை மஹா மதிகள் என்றாம் அழைப்பது –

கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது அத்ஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர் மஹா மதிகள் என்று –

இறைப் பொழுதும் எண்ணோமே-
எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை – அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே- அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .

கடல் மல்லைத் தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே–2-6-2-
கல்லிலும் செம்பிலும் வெட்டிற்று என்னுமா போலே
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -என்று இறே தம்மைச் சொல்லுகிறது –
ஜ்ஞான ஆநந்தங்கள் அன்று காணும் இவர்க்கு நிரூபகம் -பாகவத சேஷம் ஆயிற்று-

வானவரை –
கார்ய காலத்தில் பல் காட்டி
அநந்தரம்
அவனைத் தள்ளி -ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்காக வாயிற்று –
இவனை தங்களோடு சஜாதீயனாகப் புத்தி பண்ணுதல்
அன்றிக்கே –
இவன் ஒரு மூங்கில் வளைத்த போதாக நம்மில் அதிகன் என்று இருத்தல் செய்யுமவர்கள் இறே –
இதில் இன்னும் அந்த சஜாதீய புத்தி தானே நன்று இறே –
அவ் அவுணரில் இவர்களுக்கு வ்யாவிருத்தி பெரிது அல்ல வாயிற்று –
அவர்கள் இவனுடைய ரஷ்ய வர்க்கத்தை அழியச் செய்து கொடு திரியப் புக்கார்கள் –

இவர்கள் அவன் பக்கலிலே அபேஷித்தார்கள் இத்தனை யாயிற்று வாசி –
இவர்களுக்கு கார்யம் செய்தாலும் இறே தன் ஸ்வரூபம் அழியாதபடி கார்யம் செய்யப் பெற்றோம் ஆகில் –
பெண்ணாகி –
தன்னை அழிய மாறி நிற்கச் செய்தேயும்
தூது போவது
சாரத்தியம் பண்ணுவது ஆனான் இறே
அவ்வளவு அல்லவாயிற்று –
அஹமஸ்மி மஹா பாஹோ -என்றும் –
இமௌஸ்மம் முநி சார்த்தூல கிங்கரௌ சமுபஸ் த்தி தௌ-
என்றும் ருஷிகளும் விற்றுச் செய்வானாக தன்னைத் தாழ
விட்டுத் திரிந்தவன் ஆயிற்று –
புருஷோத்தமான தன்னை இறே தன் ஸ்வரூபத்துக்கு போராதபடி அழிய மாறிற்று

கிழக்கே ஐயாற்றிலே யாதவராயர் வந்து இருக்க ஜீயர் என்னை இறையிலிக்  கார்யத்துக்காக அநேகம் ஸ்ரீ வைஷ்ணவர்களோடே
கூடப் போக விட்டார் -நான் அவன் கூடத்திலே வந்து அவசரம் பார்த்து இருக்கச் செய்தே
பலரும் வந்து என்னை அனுவர்திக்கக் கண்டவாறே அங்கே
மஹா மகேஸ்வரனாய் இருப்பான் ஒரு பையல் –
பிள்ளாய் நீர்  பொருளுக்கு கடவீர் என்று கேட்டோம்
எங்களுடைய வற்றிலே அரியல்லால் தேவு இல்லை என்று உண்டாய் இருந்தது –
அதுக்கு பொருள் சொல்ல வேணும் -என்ன
நான் இதுக்கு அதிகரித்தேன் ஒருவன் அல்லேன் -என்ன
நீ தான் தேவர்க்கு ஒரு உத்கர்ஷத்தையும்
ஈஸ்வரனுக்கு ஒரு அபகர்ஷத்தையும்
நினைத்து கேட்கிறாய் ஆகில்
புருஷோத்தமன் என்று புராணங்களில் சொல்லா நிற்க
ஆஸ்ரித அர்த்தமாக அவன் தன்னை அழிய மாறினான் என்றால்
இது அவனுக்கு குணவாயாம் அல்லது தோஷாவாயாகாது-
இனி ஆண் பிள்ளை சோறாள்வியை ஸ்திரீ என்று துடர்ந்து
திரிவாரை  போலே துடர்ந்து திரியா நின்றார் -என்று
தேவரை அஞ்ஞர் ஆக்குவதில் காட்டில் இது சொன்னவன்
அநாப்தான் அஞ்ஞன் என்று இருக்க அமையாதோ -என்று சொன்னேன் என்று அருளிச் செய்தார் –

தல சயனத்துறை கின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-

தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் -என்னும் அளவல்ல எங்களது-

கடல் மல்லைத் தல சயனம் நச்சித் தொழுவாரை நச்சென்றன்நன்னெஞ்சே–2-6-5-
ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –
ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற  தேசம் –
அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –
கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே
ஆசையின் கார்யம் தொழ வேண்டும்  என்று தோற்றும்படி இருக்கை –
திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி

கடல் மல்லைத் தல சயனம் வலங்கொள் மனத்தாரவரை வலங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-

கடல் மல்லைத் தல சயனம் நெஞ்சில் தொழு வாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே-2-6-7-
வாய்விட ஷமர் அன்றிக்கே இருக்குமவர்களை –
அந்த திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற நாயனாரையும் தேடி இராதே- தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு
ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –

கடல் மல்லைத் தல சயனம் தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே  –2-6-8-
திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம் படி யான நெஞ்சை யுடையாரை –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது –

கடல் தல  சயனம் வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-

கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான் வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி
யொலி வல்லார் முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-
கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய சூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்

——————————————–

கண் சோர வெங்குருதி -பிரவேசம் -7-4-

இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை -பாகவத சேஷத்வத்தைச் சொல்லுகிற திரு மொழி யாய்த்து –
பெரிய நம்பி  ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார் ஒருவர் திரு நாட்டுக்கு நடந்தாராய்
அவரை அநு கமனம் பண்ணி  தீர்த்த மாடாதே வந்து எழுந்து அருளி இருக்க
இத்தை எம்பெருமானார் கேட்டு அருளி
பெரிய நம்பி பாடே வந்து- மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ என்ன
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -கடலோசையோ பாதியோ
சிறிது குறைவாகிலும் ஆஸ்ரயகிக்க வேண்டாவோ என்று அருளிச் செய்தார்-
பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே மா மதலைப்  பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய
பசைந்த வளையத்திலே கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –
இத்தால் அனன்யார்ஹ சேஷத்வத்தை சொல்லிற்று ஆகிறது –
அதாகிறது
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆகை  இறே- ஓன்று இரண்டு கிரயம் சென்றால் மீளாது இறே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு   அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1
திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது –
உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன இங்கு உமக்கு ஒழியாது
வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை –

எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -7-4-2
நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன்  –

போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-
புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் –
அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே   –

தண் சேறை  எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே  -7-4-4-

தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு என் ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே -7-4-7-
ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –
அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை -அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –

தண் சேறை யம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-
கைகளின் விடாய் தீரும்படி தொழுவாரை நினைக்கும் கால் உண்ணாது  வெங்கூற்றம்- ஓவாத பாவங்கள் சேரா –

தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-
தேன் வெள்ளம் இட்டு-அதன் உடைய பரிமளமேயாய் இருக்கிற தண் சேறை எம்பெருமான் திருவடிகளை
என்றும் ஒக்க ஹிருதயத்தில் வைக்குமவர்களுக்கு -என்னுடைய ஹிருதயம் அழிகிற படி கண்டி கோளே –
இப் பேறு எனக்கு வந்த படி எங்கனேயோ -ஆத்ம சமர்ப்பணம் பண்ணி மெய்யான ஸ்நேஹத்தை உடையராய்
அவனை அநவரத பாவனை பண்ணிக் கொண்டு போருவார் பெரும் பேற்றை நான் பெற்ற படி எங்கனேயோ —

தண் சேறை அம்மான் தன்னை வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-
ஹேய ப்ரத்ய நீகமாய்- தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம்மாலையைச் சூட்டுங்கோள் –

————————————————-

தந்தை கால் பிரவேசம் –

கீழே பாகவத சேஷத்வத்தை அனுசந்தித்தார் -அது பகவத் விஷயத்துக்கு உத்தம்பகமாய் இருக்கும் இறே-
ஆகையால் அபேஷை பிறந்தது -பிறந்த அபேஷை தான் -வரில் பொகடேன்-கெடல் தேடேன் –   என்று
ஆறி இருக்கும் அளவு அன்றிக்கே இப்போதே பெற வேணும் என்னும் அளவாய் இருந்தது -அப்போதே பெறாமையால் வந்த ஆற்றாமை
ஒரு பிராட்டி தசையைப் பிறப்பிக்க
அத்தாலே அவனோடு காதா சித்கமாக சம்ச்லேஷத்தை உடையளாய் இருப்பாள் ஒருத்தி நம்மோடு நித்ய சம்ச்லேஷத்தை பிறப்பிக்கைகாக
திரு வழுந்தூரிலே  வந்து சந்நிஹிதன் ஆனான் என்று அவள் பாசுரத்தாலே அங்குத்தைப் படிகளை அனுசந்திக்கிறார்

————————————————-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-3-மன்னிலங்கு பாரதத்து த் தேரூர்ந்து மா வலியை-

கீழ்த் திரு மொழியில் -நம் பெண்மை சிந்தித்து இராது போய்த் தூமலர் நீர் கொடு தோழீ-நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில்  வண்ணரைக்  கண்களால் காணலாம் கொலோ –
என்று ஸ்வரூப விருத்தமாக அதி பிரவ்ருத்தி பண்ணி யாகிலும் காணப் பெறுவோம் என்று ஆழ்வார் கோலின அளவிலே –
இதனைப் பொறுக்க மாட்டாத எம்பெருமான் வந்து முகம் காட்டி
தன் செல்லாமை அடங்கலும் காட்டி அருள -ஆழ்வார் அதை எல்லாம் அனுசந்தித்து -தாஹித்தவன் சிறிது தண்ணீர் கிடைத்தால்
அது தாஹ சாந்திக்கு உடலாகாதே- மேலும் மேலும் விடாயை வளரச் செய்யுமா போலே விடாயைப் பிறப்பிக்க
அதனாலே மிகவும்நோவு பட்டு -அவனைக் கிட்டி நித்ய அனுபவம் பண்ணப் பெற்றிலோம் ஆகிலும்
இவ்விடாயும் பதற்றமும் இவ் விஷயத்திலே ஆகப் பெற்றோமே என்று திருப்தியுடன் பேசித் தலைக் கட்டுகிறார் –
இதுவும் நாயகி பாசுரம் -அந்தாதி தொடையில் அமைந்த பதிகம்-

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி –5-1-தொடங்கி-6-10–வரை இருபது பதிக -பலஸ்ருதி பாசுர- தாத்பர்யங்கள் —

September 4, 2018

புள்ளம் பூதங்குடி தன் மேல கலிகன்றி சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-

இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது –

————————————-

கூடலூர் மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10-

பால் குடிக்க நோவு போம் -என்பாரைப் போலே –

———————————————-

திரு வெள்ளறை அதன் மேய அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை– கலி கன்றி சொல் ஐ  இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10-

ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை- நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு- இவர்களை ஆதரியா நிற்பர்கள் –

—————————————————-

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன் வல்லவர்   தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-

உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட வடதள சாயி விஷயம்/விளைத்த -வம்பு -ராமன் விஷயம்/கலை -கஞ்சன் -கிருஷ்ண விஷயம்
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்– இப்படி நாலு இரண்டும்
பண்டு -திருக் குறளன் விஷயம்/ ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-
இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள் கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம்
பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள் –

————————————————-

திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–5-5-10-

தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-

————————————————-

ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக் காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும் தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10-

மனஸ் சஹகாரம் வேண்டாதே இத்தை ஒரு கால் நாக்கிலே இட்டால் பின்னை நா விடாதே இருக்கும் ஆய்த்து
மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க
துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம் –

—————————————-

புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல்  பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —-5-7-10-

லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார்
ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார் –

————————————————–

திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை  எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே —-5-8-10-

பால் குடிக்க நோய் தீருமா போலே இவருடைய பாசுரத்தைச் சொல்ல ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி போலே- நீடு தொல் புகழ் ஆழி வல்லானை -என்று
அஹம் சப்தத்தில் சக்தியைப் பற்றச் சொல்லுகிறது –

—————————————————

திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் — கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக- இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-

————————————————–

நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும் கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே—5-10-10–

இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம் என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய
க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம் –

—————————————————

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார் வாமனன் அடி இணை மருவுவரே—-6-1-10-

இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார் –

————————————————

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை வானாரும் மதிள் சூழ்  வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10-

அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார்  –

—————————————-

திரு விண்ணகரானைக் காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-

ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும் இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில்
கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள் போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா
அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம் –

——————————————–

நறையூர் தொழு நெஞ்சமே என்ற– கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு  ஆவரே –6-4-10-

ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள்
என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் –
என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் – அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே –

————————————————

நறையூர் மேல் காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே–6-5-10-

இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய
தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-

———————————–

திரு நறையூர் –யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10-

புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார்
யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே -மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் –
பரம பதத்திலே போய்- பதியினில் பாங்கினில் -என்கிறபடியே நித்ய சூரிகள் எதிரே வந்து தந்தாம் இருப்பிடங்களிலே
கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள் –

—————————————————-

நறையூர் நின்ற நம்பியை பாடுவார் பாடு சாரா பழ வினைகள் மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10-

சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை பரம பதத்தே போய்
நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————————————————–

நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்  தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

பரம பதத்தில் அங்கு உள்ள நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள்
வைகுந்தன் தமர் எமர் -என்று இறே  அவர்கள் சொல்லுவது -அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள் –

——————————————–

திருநறையூர் நின்றானை பாடல் இவை பத்தும் வல்லார் விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10-

பண்களின் உடைய அகமான பண்ணிலே சொன்ன இப்பாடல் பத்தும் வல்லார் -போக பூமிகளில் பிரதானமான பரம பதத்திலே போய்
நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————————————

நறையூர் நெடுமாலை– கலியன் ஒலி மாலை மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது – இவர்களை விட்டுப் போய்
பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் – த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை –

—————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி –3-1-தொடங்கி-4-10–வரை இருபது பதிக -பலஸ்ருதி பாசுர- தாத்பர்யங்கள் —

September 1, 2018

தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-

பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது
அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில் இத்தை அதிகரிக்கில்
அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –

————————————————–

சித்ர கூடத்துறை செங்கண் மாலுக்கு –பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-

ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி ஆழ்வாரைப் பெறுவர்-

——————————————

சித்திர கூடம் அமர்ந்த– ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே–3-3-10-

அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா-

———————————————————

காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-

சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்-

————————————————–

தென்னாலி யிருந்த மாயனை–வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10–

———————————-

வயலாலி கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே–3-6-10-

அவனைப் பிரிந்து நோவு பட்டு தூது விடுகைக்கு ஹேதுவான பாபங்கள் கிட்டாது –
சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா –
இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று –

———————————————————-

புனலாலி புகுவர் என்று காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10-

இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –
தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா -ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-

—————————————–

நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு –தமிழ் மாலை வல்லார் கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ்
உலகுக்கு ஒரு காவலராய் விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10-

ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து- பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய்-ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக
முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்- நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் –
ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து- அபிஷேகம் பண்ண அமையும் பாகவத சேஷம் ஆகலாம்
ஆகில் என்று காணும்- திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்-

——————————————-

வைகுந்த விண்ணகர் மேல் — இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-

உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-

——————————————–

நாங்கூர் அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை–கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-

இஹலோகத்திலே ஹர்ஷர்கள் பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே
என்னும்படி அவர்களுக்கு தலைவராய் பின்னை உம்பரும் ஆவார்கள்
திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்-

—————————————-

திருத் தேவனார் தொகை மேல் கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–4-1-10-

நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே திருவடி திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய்
நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –

——————————————–

வண் புருடோத்தமத்துள் பாடல் இப்பத்தும் வல்லார் உலகில் எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-

நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய் அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக பெறுவர்-

———————————————-

செம் பொன் செய் கோயிலினுள்ளே ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே–4-3-10-

பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்
பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்

———————————————

திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண்  விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே  –4-4-10-

கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்-
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து பரம பதத்தில் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக விளங்குவர்-

—————————————————-

நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை வாயொலிகள் வல்லார் பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10-

கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து-அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்

சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்- விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்-

————————————————

காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்
கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10-

பூமியிலே அரசராகி-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-

—————————————————-

நாங்கூர்ச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர்  வானவர் தாமே —-4-7-10-

தங்களுக்கு போய்த்தில்லை யாகிலும் -விசதமாக வாராதே போனாலும் -பிறர் போம் என்னும்படியாக
வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-

—————————————————

நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை தமிழ் பத்தும் வல்லார் ஏர் கொள்
நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே—-4-8-10-

ஒருத்தி வாய் வெருவ ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்-

——————————————————–

இந்தளூரில் எந்தை பெருமானைக் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10–

இவற்றை அப்யசித்து அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே
அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே-ஸ்வத உத்கர்ஷத்தை  உடையரான -நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர்

————————————————–

திருவெள்ளியங்குடியானை– கலியன் வாய் ஒலிகள் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள்
ஆள்வர் இக் குரை  கடல் உலகே—4-10-10-

இவற்றை ஆதரித்துக் கொண்டு அப்யசிக்க ஈடான பாக்யாதிகர் கடல் சூழ்ந்த பூமியை தாங்கள் இட்ட வழக்காம்படி ஆளப் பெறுவர் –
பரிந்து பாகவத சேஷம் ஆக்கப் பெறுகையாலே ஐஸ்வர்யத்தை  தாம் புருஷார்த்தமாக நினைத்தார்
அத்தாலே
இது கற்றாருக்கும் அப்படி கூடல் இது தானே அமையும் என்று இருந்த படியாலே ராஜ்யஸ்ரீ யைப் பெறுவார் என்கிறார்
அன்றிக்கே
இது தன்னை சர்வாதிகாரம் ஆக்குகைக்கு சொல்லிற்று ஆகவுமாம் –
ஐஸ்வர்ய காமர் இல்லை யாகில் இத்தை அதிகாரி யார்களே- அவர்கள் இழக்க ஒண்ணாது என்னு முகப்பாலே சொல்லுகிறார் –

—————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகார்த்தம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை /பெரிய திருமொழி வியாக்கியான அமுத துளிகள் – –

August 30, 2018

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

கள்வன் கொல்– பிரவேசம் –
தூது விட்டு தூதுவருக்கு சொன்ன பாசுரம்
நெஞ்சிலே ஊற்று இருந்து
அத்தை பாவித்து பாவநா பிரகர்ஷத்தாலே
அவன் தான் முன் நின்றானாகக் கொண்டு
அவனுக்கு வார்த்தை சொல்லும்படி பிறந்த தசா விசேஷம்
அவன் திரு உள்ளத்திலே பட்டு –
அது பொறுக்க மாட்டாதவன் ஆகையாலே
தானே வந்து முகம் காட்டி -இவளைக் கூட கொண்டு போக –

ஆதி வாஹிகரை வர காட்டிக் கொண்டு போம் சிலரை –
பெரிய திருவடியை வரக் காட்டிக் கொண்டு போம் சிலரை –
நயாமி -என்று தானே கொடு போம் சிலரை –
அப்படியே தானே வந்து-
அத்தவாளத் தலையாலே மறைத்துக் கொண்டு போக-

அந்தரமாக காத்துக் கொடு போந்த திருத் தாயார் வந்து
படுக்கையில் இவளைக் காணாமையாலே
போன அவள் படிகளையும்
தனக்கு அவளை ஒழியச் செல்லாமையும்
எதிர்தலை இப்படி பட வேண்டி இருக்கிற இவள் உடைய
வை லஷண்யத்தையும்
தன் இழவையும் சொல்லி கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

அவன் இவளைக் கொடு போகையாவது என் –
ஸ்வாபதேசத்தில் ஓடுகிறது என் என்னில் –
மானச அனுபவமாய் இருக்கச் செய்தே
பாஹ்ய சம்ச்லேஷம் போலே இருக்கப் பண்ணி கொடுத்த
தொரு வைச்யத்தைச் சொன்னபடி இறே-

ஸ்த்திதே மனஸி
நின்றவா நில்லா மனதும்
ஓர் இடத்திலே நிற்கப் பெற்று
அபசயாத்மகமான சரீரமும் அங்கே இங்கே சிதிலமாகாதே ஒருபடிப்பட்டு
தாதுக்களும் ஓன்று முடங்கி ஓன்று நிமிருகை அன்றிக்கே
சாம்யாவஸ்தையை பஜித்து
இப்படி சரீரத்திலே ஒரு லாகவம் பிறந்து
சத்வம் உத்ரிக்தமான சமயத்தில் ஆரேனும் ஒருவன் ஆகவுமாம்
தான் கீழ் சம்சாரியாய் நின்ற நிலையையும்
இத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாக இருப்பதொரு கைம்முதல்
தன் பக்கலில் இன்றிக்கே இருக்கிற படியையும்
அவனைப் பற்றியே கழிக்க வேண்டும்படி இருக்கிற படியையும்
இதில் நின்றும் கரை ஏற்றுக்கைக்கு ஈடான சக்தியும் பிராப்தியும்
அவன் பக்கலிலே உண்டாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து
அவன் பக்கலிலே பர ந்யாசத்தைப் பண்ணுவது
பின்னை பேற்றுக்கு இவ்வளவுமேயோ என்னில்
சரீரத்தை பற்றி இருக்குமவற்றுக்கு ஆத்மா சுக துக்கம் அனுபவம் பண்ணுமா போலே
இவற்றுக்கு வருவது தனதாம்படி விசேஷ சரீரனுமாய்
இவன் தன்னை ஒரு கால் அனுசந்தித்தால்
பின்பு இவ்னைப் போலே மறைக்கக்கு அடியான கர்ம
நிபந்தனமான கலக்கம் இன்றிக்கே இருக்குமவன்
ஆகையாலே அவ்வளவே அமையும்

இப்படி ஒரு நாள் அனுசந்தித்தவன்
பிரகிருதி வச்யனாய் -பின்பு தன் தேக யாத்ரையிலே அந்ய
பரனாய் திரிந்து பின்பு ஸ்ம்ரிக்கைக்கு கூட யோக்யதை இல்லாதபடி
காஷ்டாபாஷா சந்நிபனாய் கிடக்கும் அன்று
இவனைப் போல் ஒரு கால் ஸ்மரித்தால் பின்பு விஸ்வமரிக்குமவன்
அன்றிக்கே நான் ஸ்மரித்த படியே இருப்பன்

மத்பக்தம்
ஸ்மரிக்கைக்கு யோக்யதை இல்லாத வன்று
ஸ்மரித்திலன் என்று விடும் அத்தனை துராராதனையோ
அவன் பற்றிற்று –

அஹம் ஸ்மராமி –
ஐஸ்வர்ய காமனுக்கும் -ஆத்மப்ராப்தி காமனுக்கும் -பக்தி காமனுக்கும் அந்திம ஸ்ம்ருதி உண்டு
இவன் முதலிலே துடங்கி சர்வ பர ந்யாசம் பண்ணினவன் ஆகையாலே இவனுக்காக நான் நினைப்பன் –

நயாமி பரமம் கதம் –
இப்படி நினைத்து நானே கை தொடனாய் வந்து கொடு போவேன்
த்வயம் -எம்பெருமானுடைய சர்வ ஸ்வமும் இறே இவை –
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே வர்த்தித்த வைஷ்ணவன் அந்திம சமயத்தில்
பட்ட கிலேசத்தைக் கண்டு
பெரிய நம்பிக்கும் எம்பெருமானாருக்கும் நடந்த சம்வாதத்தை நினைப்பது
மத்பக்தம் என்கிற இடமும்
பக்திமானையே சொல்லிற்று ஆனாலோ பிரபன்னனை சொல்லிற்று ஆனாலோ
என்கைக்கு நியாமகர் யார் என்ன
அவனுக்கு அந்திம ஸ்ம்ருதி விதிக்கிற சாஸ்திரம்-

—————————————————–
வள்ளி மருங்குல் என்தன் மடமான் –
அவனைக் கொண்டு வந்த விச்வாமித்ரனை சொல்லுகிறது –
இவளுடைய அழகாயிற்று அவனை அழைப்பித்தது-

அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ -3-7-1-
இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –
மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்
அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –
லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே
உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ
இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று-

வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ-3-7-2
ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து
திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ

வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-3-
தனக்கு உபமானம் உள்ள தேசத்து ஏறப் புகுமோ- வஞ்சி கொம்பும் மூங்கிலும்

தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-
அவ் ஊரில் பூக்கள் அலர்ந்த போது தேன் வெள்ளத்தாலே வண்டுகளுக்கு இழிந்து பானம் பண்ணப் போகாது
கழிய அலர்ந்து மது வெள்ளம் அரையாறு பட்டால் ஆயிற்று- வண்டுகளுக்கு பானம் பண்ணல ஆவது
கழிய அலர்ந்த பூக்கள் தேடி வண்டுகள் மது பானம் பண்ணும் திரு வாலியிலே புகுவர் கொலோ

போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-5-
இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ-

அரங்கத்து உறையும் இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-
நிரதிசய போக்யனுமாய்- சுலபனுமாய்- ரஷகனுமானவன் உடன் கூட ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது
திரு அயோத்யை கோடித்தாற் போலே- திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே

புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-
சம்போ ஸ்தானங்கள் ஆளும் தன்னிடம் உள்ள ஊரிலே புகுவர் கொலோ-

பிறப்பிலி பின்னே நடந்து மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8-
தாயான குற்றத்தாலே எனக்கு ஒருத்திக்கும் இறே தொழ ஒண்ணாதது
அல்லாதார்க்கு எல்லாம் தொழுது பின்னே போகலாம் இறே-
தன்னை காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ
அங்கன் அன்றிக்கே
எல்லா போகங்களும் உண்டாம் படியான தேசம் என்னவுமாம்-

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்–3-7-9-
ஈஸ்வரனைக் காட்டில் பிராட்டி- அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே
பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று
இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள் –
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-
நடையாலே பிச்சேற்ற வல்லள்-நடைக்கு பிச்சேறி வ்யாமோஹிக்குமவள்
ஸூநா ஸூநி கரியைப் பண்ணி விளையாடலாம் தேசத்திலே புகுவர் கொலோ-

——————————————–

தூ விரிய -பிரவேசம் –
நஞ்சீயர் உடைய நோவிலே
பெற்றி அறியப் புகுந்து
இங்கு தமக்கு வேண்டி இருக்கிறது என்-என்று கேட்டு
தூ விரிய மலர் உழுக்கிப் பாட்டு கேட்கவும்
பெருமாள் எழுந்து அருள பின்னும் முன்னும் சுற்றும் வந்து
திருவடி தொழவும் வேண்டி இரா நின்றேன் -என்று
அருளிச் செய்து அருளினார் –
அப்போதே
வரம் தரும் பெருமாள் அரையரை அழைத்து விட்டு
பாட்டுக் கேட்டு அருளா நிற்க
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ -3-6-4-
என்னும் அளவிலே வந்தவாறே
காம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால்
பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆகாதோ
என்று அருளிச் செய்து அருளினார் –

துயிலாத கண் இணையேன் –3-6-8-
உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –
இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –

நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-

அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய
எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-

ஆக இப்பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –

நிலையாளா -என்கையாலே நித்ய கைங்கர்யம் பெறுகையே பிராப்யம் என்னும் இடம் சொல்லுகிறது –
வேண்டாயே யாகிலும் -என்கையாலே உபாய பாவமும் அவன் பக்கலிலே என்னும் இடம் சொல்லுகிறது
என் முலையாள ஒரு நாள் -என்கையாலே ருசி உடையார் படி சொல்லுகிறது
சிலையாளா -என்கையாலே சரண்யதை சொல்லிற்று
மரம் எய்த -என்கையாலே ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும்
இத்தலையில் அபேஷை குறை வற்று இருக்கிறபடியையும்
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது-

——————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-முதல் இருபது பதிகங்கள் – -பலஸ்ருதி பாசுர- தாத்பர்யங்கள் —

August 29, 2018

துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் -1-1-10-

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு -நம்முடைய பாபங்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சு-
நாராயணா என்னும் நாமம்-அநந்ய ப்ரயோஜனராய் இருப்பார்க்கு ஸ்வயம் பிரயோஜனம்- –
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணா -என்று நமக்கு இனிய திரு நாமமே பாபத்துக்கு நஞ்சு –
அல்லாதன எல்லாம் சம்சாரத்திலே வேர் பற்றுக்கைக்கு உடலாய் இருக்கும் –
இதினுடைய அர்த்த அனுசந்தானமே சம்சாரத்தை வேர் அறுப்பது என்னும் இவ் வர்த்தத்தை எல்லாரும் புத்தி பண்ணி -இருக்கலாகாதோ

———————————————————-

பிரிதி எம்பெருமானை வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே —1-2-10-

நல்லடியவர்க்கு -இத்தைப் பாடுமவர்கள் ஆயிற்று சர்வேச்வரனுக்கு அந்தரங்கர் ஆகிறார்
அரு வினை-அவர்களை பாபங்கள் கிட்டாது –
சர்பங்கள் ஆனவை மேகங்களை ஆமிஷமாக  புத்தி பண்ணி மேல் விழுமா போலே
இத்தை அப்யசித்தார்கள் பக்கல் சர்வேஸ்வரன் போக்யதா புத்தி பண்ணி அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கி
அவனாலே விஷயீ கரிக்கப் பெறுவார்கள்
இப்பாசுரங்களைச் சொன்னவர்களை அச் சொல் வழியே சர்வேஸ்வரன் அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-

——————————————————-

வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில்
நீள் விசும்பில் அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-

நீள் விசும்பில்
நீள் விசும்பு -என்கிறது- உபரிதந லோகங்களின் உடைய சமுதாயத்தை
அதில் –
அண்டம் அல்லால் -பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே
நீள் விசும்பு என்கிறது பரம பதமாய் அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –

———————————————–

வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

வானவர்—இத்யாதி —
பெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி- பின்பு- ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து
அநந்தரம் -நித்ய சூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று இவன் அபிசந்தி பண்ணின எல்லாவற்றையும் தரும் என்றபடி-

அறிவுடையார் அபுருஷார்தம் என்று காற்கடைக் கொண்ட ஐஸ்வர்யத்தை
வேண்டேன் மனை வாழ்க்கை –என்றும்
போந்தேன் -என்றும் விரக்தராய் போன இவர்
இப்போது ஐஸ்வர்யத்தை பலமாக சொல்லுவான் என் -என்று ஜீயர் பட்டரைக் -கேட்க
திருமங்கை ஆழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்துக்கு உள்ளே புக்கு போயிற்று காணும் –
ஈஸ்வரனோ ஆகவுமாம்
நித்ய சூரிகளோ ஆகவுமாம்
ராஜா ஆகவுமாம்
பிறந்து பாகவத சேஷத்வம் பெறலாம் ஆகலாம் ஆகில் -என்றாம் இவர் இருப்பது என்று அருளிச் -செய்தாராம்

———————————-

சாளக்கிராமத் தடிகளை–காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆளபேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-

அமரர் நன்னாட்டரசு ஆள -நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –
அன்றி யிவையே பிதற்றுமினே — அங்கன் இன்றிக்கே இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-

——————————————

நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

ஓத நீர் வையகம் ஆண்டு -நித்ய சூரிகளோடு ஒரு கோவையாம் அது தானே சித்தம் இறே
அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தையும் நிர்வஹித்துப் பின்னை நித்ய சூரிகள் பதத்தை பெறுவர்-

—————————————————–

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-

தீதிலரே -நரசிம்ஹம் விரோதியைப் போக்குகையாலே அவர்களுக்கு பொல்லாங்கு வாராது இறே-

—————————————–

திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே–1-8-10-

தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய்
பின்பு நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி ஆகப் பெறுவர்கள் –
இது கூடுவது ஒன்றோ என்னில் -இதில் சங்கை வேண்டா-

————————————————-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே-1-9-10-

பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகங்கள் அடங்க ஓடிப் போம் –
பாவமே செய்து பாவி ஆனேன் -என்று இவரும் சொல்லி ஈஸ்வரனும் அத்தைப் பொறுத்த பின்பு இவருக்கு பாபம் இல்லையே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை -பெருமாள் கூட்டி வர அருளிய போதே அதுக்கு விஷயமானார் கூட வந்த நால்வரும் பின்னை அவத்யர் ஆனார்கள்
அப்படியே இவருடைய பரிகரமாய் இவருடைய பிரபந்தத்தை அதிகரிக்கவே இவர்கள் பாபங்களைப் போக்கும் ஆயிற்று –

———————————————————

வில்லார் மலி வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவர் ஆகுவர் தாமே—-1-10-10-

இவற்றை அப்யசிக்க வல்லார்கள் நித்ய சூரிகள் உடைய நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் –

———————————————————-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி  இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

இடமாகும் வானுலகே -பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-

—————————————————

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார் அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-

இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் -அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ –
என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் –

————————————————
திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

நித்ய அனுபவம் பண்ணலாம் படியான நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் –

—————————————————-

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் — தமிழ் மாலை வல்லார்க்கு உடனே விடுமால் வினை
வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி
யிலங்கொலி சேர் கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-

ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் –
அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் -அன்றிக்கே
பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் சந்தரனைப் போலே இருக்கிற வெண் கொற்றக் குடைக் கீழே இருந்து
ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்

————————————–

கடல் மல்லை  தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
–திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10-

ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை  கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் -அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் –

————————————————-

கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார் முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-

முடியை உடையராய்- நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய்
நித்ய சூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்

——————————————-

இடவெந்தை யெந்தை பிரானை மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்- தாம் மோஹிப்பது- உணர்வதாக திருத்தாயார் கூப்பிடுவதாக
வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள்

—————————————–

அட்டபுயகரத்து ஆதி தன்னை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-

உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர்-

——————————————-

பரமேச்சுர விண்ணகர் மேல்– திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-

லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு – உஜ்ஜ்வலர் ஆவார்கள்
இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்
சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்
அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –
அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும படியான தேசம் இ றே-

———————————–

திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று– கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-

ஐஸ்வர்யாத்துக்காகவும்- ஆத்ம பிராப்திக்காகவும்- பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக- எங்கும் புக்கு வியாபித்து அந்யைர த்ருஷ்டனாய்
நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-

————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

August 26, 2018

வண்கை யானவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-8-5-

மாணியாய் மண் கையால் இரந்தான் –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகனேறின வடிவைக் கொண்டு சென்று –
தன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி
-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி -ஸ்ரீ பிரதிவாதி பயங்கர சம்பத் ஸ்வாமிகள் –

August 20, 2018

திருமங்கை ஆழ்வார் மங்கள ஸ்லோகங்கள்

ஸ்ரீ மதாலி ஸ்ரீ நகரீ நாதாய கலிவைரிணே
சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம்
பத்மா நியுக்த குமதவல்யா ப்ரிய சிகர்ஷயா
ஆராதித விஷ்ணு பக்தாய பரகாலாய மங்களம்
கருணாகர காஞ்சீச ஸூ கந்த புரா நாதத
நிவ்ருத்த ராஜபாதாய பரகாலாய மங்களம்
சர்வஸ்வே விநியுக்தே அபி ராஜோஸ்ர்த் தைஸ் சோரிதைரபி
பூஜி தாஸ்யுத பக்தாய பரகாலாய மங்களம்
ரங்கேச ஸும்ய ஜாமாத்ரு சகலார்த்தாப ஹாரிணே
தத் பக்த பூஜ நார்த்தம் து பரகாலாய மங்களம்
பக்தாராதன ஸூ ப்ரீதாத் ரங்க தாம்ந க்ருபாகராத்
ப்ராப்த அஷ்டாக்ஷர மந்த்ராய பரகாலாய மங்களம்
ஸுவர்ண பாஹ்ய பிம்பேண ரங்கினோ கோபுராதிகம்
ஷட் கைங்கர்யம் க்ருதவதே பரகாலாய மங்களம்
ரங்காதி திவ்ய தேசான் ஷாட் ப்ரபந்தைர் மநோரமை
பக்த்யா ஸ்து தவதே பூயாத் பரகாலாய மங்களம் –

————————–

வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-

வாலிமை -வெளுப்பு-சத்வ குணத்தால் – பெருமை
தாயில் ஏற்றம் -குலம் தரும் இத்யாதிக்கு உப லக்ஷணம்
அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல் என்பது திரு மந்த்ரத்துக்கும் மங்கையர் கோன் சொல்லுக்குமாகவுமாம் –

———————————-

வால் இமயம் வானோர் வணங்கவும் பத்தர் தம்
பால் அகலத் துன்பம் இன்பம் மிகவும் மால் சேர்
பிரீத்தி எடை நெஞ்சே என்னும் கலியன் நம் பால்
அருவினை அகற்றும் முற்றும் —

வால் -வெண்மை –

——————————————

முற்ற மெய்யின் பொய் நாசமான பாசத்தின் புன்மை
உற்ற மால் ஏற்றத்தோடு உரைத்து மூப்பு -முற்று முன்
மந்த்ரம் ஈந்தோன் சேர் வதரி வணங்கு என்னு நீலன்
சிந்தையான் ஆனான் என்னும் -3-

மந்த்ரம் ஈந்தோன் -நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -4-9-2-நீலன் சிந்தையுள் எப்பொழுதும் உள்ள ஸ்ரீ வராஹாவதாரம் -ஏனம் என்றவாறு –

———————————

ஏனமானான் உய்ய நர நாராயணனாய் எட்டு எழுத்தின்
ஞானம் ஈந்து கங்கை வதரி யுள்ளானவனை
நெஞ்சை வணங்க பரகாலன் தான் பணிக்கும்
செஞ்சொல் நாம் உய்யும் கலை–4-

ஞானப் பிரான் உலகை இடந்து -/ நர நாராயணனாய் சிங்காமை விரித்தவனும் ஞானம் அளித்து -தர்மி ஐக்கியம்
விரோதி நிரசனத்வம் -ஆஸ்ரித ரக்ஷணத்வம் -கங்கை கங்கை வாசகம் என்று கங்கையின் பெருமை பாட்டுக்கள் தோறும் உள்ள பதிகம்

————————————————-

கலைப்பெருமான் அன்பர் பண்டம் கொண்டு உகப்பான்
அலைப்பான் நண்ணாரை அரன் தன் -தலை இடர்
நீக்குவான் சேர் சாளக்கிராமம் அடை என்று உரை செய்
வாக்கு இரு வினைக்கு வாள்–5-

கலைப்பெருமான் ஒலி மிக்க பாடலை யுண்டு /
இருவினை -மாளாத பெரிய -புண்ய பாபங்கள் என்றுமாம் –

———————————————

வாணுதலார் பேணி இரந்தார்க்கு ஈயாமல் பிறர்க்குக்
கோணை செய் தீ நெறியால் சேர் பயனை –
நாணி நடுங்கி நைமிசாரண்யத்து எந்தையை மா முன்
அடைந்தான் சரண் நீலன் அங்கு –6-

மா முன் -பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
கோணை –தீங்கு–

—————————————————

அங்கம் இரணியனை ஆளரியாக் கீண்டான் சேர்
சிங்க வேள் குன்றம் செலவரிதென் -பொங்கும்
பிரிவால் பரகாலன் பா பயிலும் பத்தர்க்கு
உரிய நறவுடைக் கொங்கு -7-

வேள் –ஆசை -அபிநிவேசத்துடன் பொருந்தி உள்ள குன்றம்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா-எளிதில் யாரும் அங்கு சென்று எம்பெருமானுக்கு
தீங்கு இளைக்க முடியாது என்று பொங்கும் பிரிவால் அருளிச் செய்த பதிகம்
கொங்குடை நறவு -வாசனையுடைய தேன்–

——————————————————

கொங்கை பூ மகள் வேங்கடத்து எட்டு எழுத்து உரைப்பார்
பொங்க மாற்றார் மங்க கரந்து எங்கும் உளன் -தங்கியுளன்
தன்நெஞ்சை அ ங்கடைய சொல்லும் கலியன் நம்
தஞ்சமாம் நல் தந்தை தாய் -8-

காரார் வரைக் கொங்கை –தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா -என்பதற்கு ஏற்ப
திரு வேங்கடம் பூ -நில மகள் கொங்கையாகக் கொள்ளப்பட்டது –
மலராள் தனத்துள்ளான் போலே வேங்கடத்து தங்கி உளன் –

——————————————————–

தாய் தந்தை வேறுளர் என்றும் இன்பம் துன்பம் என்றும்
ஈயாது இரங்கா முன் தண்மை கூறி-ஆய நிலை
தேர்ந்து ஆட்செய மா முன் வேங்கடவன் தாளடையும்
சீர்க் கலியன் நந்தமக்குக் கண் -9-

முன் தண்மை –முன்னிருந்த புல்லிய தண்மை
முன் தன்மை-என்றாலும் ஒக்கும் -முன்னிருந்த ஸ்வ பாவம் என்றவாறு
ஆய நிலை தேர்ந்து –தனக்குற்ற நிலையை ஆராய்ந்து -ஆய பதார்த்த கைங்கர்ய பிரார்த்தனை –
அப்பதத்தை ஆராய்ந்து நேர்ந்து என்றவாறு
கைங்கர்ய ஸ்ரீ யுடைய கலியன்

————————————————-

கண்ணுலகுக்குக் கண்ணனாய் அடியார் கைப்பொருள்
நண்ணி நண்ணார் நலியும் வேங்கடத்து -அண்ணல் -அன்பு
தான் மிகத் தான் தனது நீங்க வேண்டும் நீலன் உள்ளம்
தான் புகுந்தான் அருள் செய்வான் -10-

தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் –
கண் உலகுக்கு -சஷூர் தேவானாம் உதமர்த்யாநாம் -சுருதி
அன்னவனே கண்ணனாய் -ஆஸ்ரிதர் ஸ்பர்ச வெண்ணெய் உகந்து அடைந்தான் -கைப்பொருள் நண்ணி
வேங்கடத்து அண்ணல் –திருவேங்கட மா மலை மேய பெருமான் –
தான் தனது நீங்க வேண்டும் நீலன் -யானே என் தனதே என்ற நிலை மாறி யானே நீ என்னுடைமையும் நீயே -என்ற நிலை எய்த
அருள் செய்வான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் -செய்வதற்காக
எந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -என் நெஞ்சினுள்ளானே –என் மனம் குடி கொண்டு இருந்தாய் –

———————————————–

வானவர் தம் சிந்தை போல் வேங்கடவன் தனக்கு
ஆன தொண்டு செய்ய சாராமல் மற்ற -ஈன மதம்
தான் இசைந்த நெஞ்சமதைக் கொண்டாடும் ஆலி நாடன்
தான் இசைந்த பா நந்தம் காசு -11-

பாஹ்ய மதங்கள் -ஈன மதம் -இவற்றைச் சாராமல் நித்ய ஸூரிகள் போலே
கைங்கர்யம் செய்பவர் விண்ணுளாரிலும் சீரியர்களே

———————————————

காசினியின் நன்மை உன்னும் மா போல் தொண்டரை
நேசிக்கும் வானோர் வாக்குக்கு எட்டான்–ஈசன்
இனியன் இன்னார் தூதன் என எவ்வுளூரில் நின்றான்
எனும் நீலன் நாமம் நவில் -12-

பாண்டவர் தூதன் -ஆஸ்ரித பக்ஷபாதி – பரதந்த்ரன் –குணத்தைப் பிரகாசிப்பிக்கும் நாமம் பெற்ற பின்பே
திரு எவ்வுளூரிலே தான் தரித்து நின்றான் –
அவன் திருநாமம் பேசும் நீலன் நாமங்களை நாம் நவில்வோம்
நீலன் நாமம் –குறையால் பிரான் -ஆலி நாடன் -மங்கை வேந்தன் -மங்கையர் கோன்-
கலியன் -பரகாலன் -கலைப்பெருமாள் -வாட் கலியன் -வேல் கலியன் -கலி கன்றி-நாலு கவிப் பெருமாள் –
அருள் மாரி-திரு மங்கை மன்னன் -இரும் தமிழ் நூல் புலவன் -முதலிய திரு நாமங்களுக்கும் உப லக்ஷணம் –

—————————————————————————

வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று–13-

சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இணையான நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –

——————————————————

அன்றி தொண்டர் துன்பம் தவிர்த்து ஆய் பூ மங்கையொடு
நின்ற நீர் வண்ணன் மலை நீர் அடைமின் -வன் சேறாம்
வேறு மதத்துள் வீழாது என்னும் நீலன் வினையைப்
பாறு பாறாக்கும் பான்மை பார் -14-

அன்றி -சீறி
பாஹ்ய குத்ருஷ்டிகள் -சேறு
பாறு பாராக்குதல் -பொடியாக்கி –பண்டை வல்வினை பற்றி அருளினான் போலே –

——————————————

பாரமாய தூறு பாற்றிப் பத்தர்க்கு எளியனாம்
பார மல்லை ஞானத்து ஒளி யுருவை ஆறு பேறாக்
கொள்ள கள்ள நூல் தள்ளச் சொல் நீலன் சொல் வல்லார்
அள்ளல் அருவினை நண்ணார் -15-

ஞானத்து ஒளி யுருவன் -ஏனத்துருவாய் நிலமங்கை எழில் கொண்டவன் அன்றோ
அள்ளல் -கள்ள நூலே அள்ளல் -/ அள்ளல் நரகம் என்றுமாம் -விடியா வெந்நரகம் சம்சாரம்
ஆறு பேறு-உபாய உபேயம் தவ தத்வம் நது குணவ்-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பார மல்லை -புகழையுடைய மல்லை -தேசாந்திர தேகாந்தர காலாந்தரம் இல்லாமல்
இங்கேயே இப்பொழுதே இத்தேகத்துடனே -சேவை அன்றோ
தூறு பற்றி -குதிரையோட்டி-போலே பெயர்ச் சொல்லாகவுமாம் –
பக்தர் வினைகளை போக்குவதே ஸ்வ பாவமாகக் கொண்டவன் அன்றோ-

—————————————————————-

நண்ணாமல் மால் அடியார் அல்லாரை சீர் மல்லையான்
தொண்டர் தம் தொண்டரையே ஆறு பேறாய் -திண்ணிதா
எண்ணு நீலன் தொண்டர் எல்லைத் தானாய்ச் சொல் இன் தமிழை
எண்ண மதி திவளும் -16-

தொண்டரை அடையாவிடிலும் தொண்டர் அல்லாரோடு கூடாமையே முக்கியம்
அடியாரையே ஆறு பேறாகக் கொள்வதே நம பத தாத்பர்ய அர்த்தம்
வாய்த்த திரு மந்திரத்தின் மத்திமம் பாதத்தின் எல்லையான பொருளை நாம் எண்ண
நம்முடைய சேஷத்வ பாரதந்தர்யங்களாம் ஸ்வரூபம் -நன்கு பிரகாசிக்கும் –
மதி திவளும் -புத்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்
சீர் -திரு மல்லைக்கும் -மல்லையானிலும் மல்லை தொண்டரிலும் -மல்லையான் தொண்டர் தம் தொண்டரிலும் அந்வயிக்கும் –

———————————————————————

திவளும் இடவெந்தையின் சீலத்தால் எழிலால்
துவள அவன் தன் நினைவே -நவை நீங்க
பாங்கு எனத் தாய்ச் சொல்லாய்ப் பரகாலன் பேசுகின்ற
தீம் தமிழில் நெஞ்சே திரி -17-

அவன் தன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று ஒரு கால் சொன்னால் போல்
ஒன்பதில் கால் சொல்லியமைக்குச் சேரும்
நாவை -துன்பம் / தீம் -இனிய /
தாய் சொல்லாய் துணிவையும் மகள் சொல்லாய் பதற்றமும் பதிகத்தில் உண்டே –
திரி -ஆழ்வாருடைய ஈரச் சொற்களில் அவகாஹித்து -சுழன்று சுழன்று கால ஷேபம்-

———————————————————————–

திரித்து எழில் பூண் மேன்மை படை அட்டபுயன்
எரித்த சுடர் உட்கண்ணால் கண்டு -பரிவால்
உரு வெளிப்பாடா உரையாடல் நிகழ்ந்தது என்று
உரை செய் நீலன் சொல்லே சொல் -18-

அட்டபுயன் -அட்டபுய அகரத்தில் உள்ளான் ஒருவன் -அட்ட புயகரத்தான்
அவனது அழகு ஆபரணம் பரத்வம் ஆயுதங்கள் -திரிகள் -எரித்த சுடர்
இந்த அருளிச் செயலே சொல் மற்றவை சொல் அல்ல – இவற்றையே சொல் என்றுமாம்
பரிவால் எரித்த சுடர்
பரிவால் வெளிப்பாடா உரையாடல் நிகழ்ந்தது என்றுமாம் –
பரிவு -ஆர்வம் -அன்பு -ஆர்வமே நெய்யாக போலே –

——————————————–

சொல் சொல்லும் காரணன் முத்தர் பத்தர்க்கு ஈடாக
நல்ல கொடுத்து அல்ல கெடுப்பான் உறையும் பல்லவர் கோன்
வந்திக்கும் கச்சி விண்ணகர் சொல் அருள் மாரி
இந்த பாருய் வான் பொழி மஞ்சாம் -19-

கச்சி விண்ணகர் -பரமேஸ்வர விண்ணகரம்
பாருய் வான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் -உய்வதற்காக என்றவாறு
அருள் மாரி என்பதால் பொழி மஞ்சாம்-ஆன்மா உயர்கதி பெற்று விளங்க அன்றோ இவருடைய அருளிச் செயல்கள்-

————————————–

மஞ்சு சேர் தீயோம்பி பலன் வேளாது நற்குணமே
விஞ்சு செஞ்சொல் வேதியர் வாழ் கோவலூருள்-விஞ்சு வலி
நீர்மை வினை நீக்கு மாலிக் கண்டு கொண்டேன் என்று நீலன்
நேர்ந்த சொல் நீக்கும் நெஞ்சு இருள் -20-

நெஞ்சு இருள் -அஞ்ஞான அந்தகாரம்
கோவலூர் –திவ்ய தேச திரு நாமமே நீர்மையை சொல்லும்பொழுது
உள்ளே உறையும் பெருமானின் நீர்மை வாய்க்கு எட்டுமோ –

—————————————————————-

இரு நிலம் இடந்து இரும் துன்பம் தொண்டர் அண்டர்க்கு
உருத்து ஆல்மேல் சேர் அடியார் மெய்யன் -பொருந்தும்
அயிந்தை சீர் உட்பொருள் உடன் சொல் கலியன்
செயரில் பா நாம் உண்னும் ஊண்–21-

உருத்து -கோபித்து -அதனால் அழித்து-/செயிர் -குற்றம் /செயரில் -குற்றம் அற்ற /
கமல நன் மலர்த் தேறல் அருந்தி இன்னிசை முயன்று எழும் அளிகுலம் பொதுளி அம் பொழில் சூடி
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு —
தேனேமலரும் திருப்பாதத்தை தேறல் அருந்தி அவன் புகழ் பாடி பின்னர்
பரமபத நாதனின் -பத்தே பரமே மத்வ உத்ஸா -பாத மலர் நறவு அருந்தச் செல்வர்
அளிகுலம் -வண்டு–ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றவாறு–

———————————————

ஊன் ஒறுத்து உண்ணாது நீர் நெருப்பு ஊடு நின்று
வானடைய நீர் வருந்த வேண்டா நம் -கோனமரும்
சித்திர கூடம் சேர் என்னும் கலியன் தாள் அடையும்
பத்தர்க்கு இங்கு இல்லை வாடல் –22-

மூவாயிரம் மறையாளர் நாளும் வணங்கும் –தில்லை மூவாயிரம் நாங்கை நாலாயிரம் –

———————————————-

வாட வேழம் மல்லர் அரவம் மருதம் மால் விடை
பாடு அழித்துப் பிள்ளை பிள்ளைக்கு அளித்தது -ஈடா நாம்
எண்ணிய செய்யும் சித்திர கூடத்தான் என் நீலன்
ஒண் கழல்கள் உன்னும் ஒருங்கு -23-

பிள்ளை-அவன் பிள்ளை ப்ரஹ்லாதன் /பின்னை -நப்பின்னைப்பிராட்டி
மருதம் -அசுராவேச நள கூபரன் -மணிக்ரீவன் –காமம் க்ரோதாதி இரட்டைகள்
உன்னும் -உள்ளுதல் -நினைத்தால் -/ ஒருங்கு முழுவதும் /
மால் விடை ஏறு ஏழும்-காமம் க்ரோதம் -லோபம் -மோஹம்–மதம் –மாத்சர்யம் -அஸூயை /
வருவான் -என்று ஒன்பதில் கால் பதிகத்தில் அருளிச் செய்தது -வீதியில் எழுந்து அருளும் போது
மங்களா சாசனம் செய்தமை தோற்றும் –

——————————————————————

ஒருவன் அயன் வாலி வாணன் இந்திரன் பொன்னன்
அரன் பெருக்கெடுத்து மலர் மங்கைக்கு -அருளுமா
போல் அருள் சீராம விண்ணகர் உள்ளான் என்னும்
வேல் கலியன் ஏத்தும் உவந்து -24-

ஒருவன் -அத்விதீயன் /
ப்ரஹ்மாவின் செருக்கை அளிக்க உரோமசர் முனிவர் விருத்தாந்தம் -வாணன் –
கற்பகாக்காவை சத்யா பாமை பிராட்டிக்கு -இவ்வாறு அஹங்காரங்கள் அழித்து
குரு மா மணிப் பூணாய்ப் பூணுதற்கு வேடிக்கை கொண்ண்டு திவ்யதேசங்களில் உகந்து எழுந்து அருளி –
வேல் கலியன் -ஞான சம்பந்தர் செருக்கு அழித்தமை –

————————————————————-

வந்து வுவந்து சிந்தை புகும் ஆலியம்மானைத் தன்னின்
சிந்தை நீங்க ஒட்டாது தொல்லடிமை -முந்துறக்
கொள்ள அறப் பதறிக் கோரும் கலியனை
உள்ளி ஏத்தும் மலர்த்தூய்–25-

தன்னின் சிந்தை -சிந்தைக்கு இனியான் அன்றோ
வந்து வந்து -சமயம் பார்த்து என்றுமாம்
உள்ளி ஏத்தும் மலர்த்தூய் -உள்ளுதல் நினைத்தல் மானஸ வியாபாரம் -ஏத்துதல் -வாக்கின் செயல் –
மலர்தூவுதல் காயிக வியாபாரம்-முக்கரணங்களும் ஒருப்பட நின்று கைங்கர்யம் –
பதற்றம் -தலைவி கார்யம் -பேற்றுக்கு த்வரிக்கையும் வேண்டுமே –

—————————————

தூவி சேர் தும்பி ஆலியான் பால் தூது விட்டு
நோவை உரைத்து அது ஆறாத் தானே யன் நோவை
உரை செய் பரகாலன் ஒப்பில் அருளால் நம்
கரையில் வினை கொள் கள்வன் -26-

கங்குகரை இல்லாப் பாவங்களை நம்முடைய இசைவு பாராது கொள்பவர் ஆழ்வார் –
தூவி -இறகுகள் –ஞானம் அனுஷ்டானங்கள் –
கள்வன் கொல்-பிராட்டி திண்ணம் அல்லவே இவர்கள் புகுவது –
திண்ணம் திருக்கோளூர் புகும் பராங்குச நாயகி போலே அல்லவே

————————————————-

கள்ளக் குறளன் நெஞ்சுள் செல்லும் தோற்றத்தை
உள்ளத்துள் தேற்றமாக்க ஓர்ந்ததனை தெள்ளி தாத்தான்
ஆலி யம்மானுக்கு அற்ற தன்மை யுரை ஆலி நாடன்
ஞாலத்து நந்தா விளக்கு -27-

கள்ளக் குறளனாய் திரு வாமநவதாரமும் திருவாலி அம்மானும் தர்மி ஐக்யத்தால் ஒருவரே
தாய் மனம் நின்று இரங்கத் தனியே பெருமாள் துணையா புனலாலி புகுந்தாள்-பல சுருதி பாசுரத்தால்
அவனுக்கே அற்றுத் தீர்ந்தமை விவஷிதம்
அர்ச்சாவதார சேவையால் இந்த லோகத்தில் ஆழ்வார் நந்தா விளக்காக நம்முடைய
அஞ்ஞான அந்தகாரங்களை அடியோடு நீக்கி அருளுகிறார் –

—————————————————–

நந்தா இன்பம் நம்ப உம்பர் களிறு காத்து
வந்த பேய் அரக்கர் மாய்த்து ஆய்ச்சியர் -தம் துகில் கொள்
பின்னை மணாளன் மணி மாடக் கோயில் அடைமின்
என்னு நீலன் காக்கும் சலம் -28-

வானோர் -குறையாத இன்பம் எமக்கு அருளாய் -என்று வந்து இறைஞ்சுவர்
சலம் -கபடமான எண்ணம்
நம்பும் -ஆசைப்படும்
வணங்கு என் மனனே என்றாலும் பரோபதேசமாக கொள்வது நன்று –

—————————————

சலத்தால் நிலம் கொண்டான் எண்ணி நைவார் காப்பு
உலகுய்க்கும் நான்கை வைகுந்தன் -நலத்தால்
அசித்தும் அடையும் ஆனந்தம் என்னும் நீலன்
கசிந்து அருள் செய் நம் திரு -29-

சலத்தால்-மூவடி நீரொடும் கொண்டதால் ஜலம் என்றும்-கபடம் என்றுமாம்
காப்பு -நைந்து உள் கரைந்து உருகும் அடியார்க்கு அரணாய் நின்று ரக்ஷிக்குமவன்
நம் திரு -ஆழ்வாரே நம் செல்வம் என்றவாறு –

——————————————————

திருமால் அடியார் அடைய தடை தீர்த்து
வரு துயர் வீழ்த்துத் தாள் அடைய -அரிமேய
விண்ணகர் மேவி யுகந்துள்ளான் என்னும் கலியன்
பண்ணில் நெஞ்சே போக்கு போது–30-

பண்–பாட்டு -ராகம் -இசையோடு கூடிய ஒலி மிக்க பாடல்-

——————————————–

போதமர் மா வானவர் வேட்ப வழங்கித் தான்
கோது அற்று எங்கும் கரந்து பாருண்டு ஆல் மீது துயில்
நான்கை தேர்வானார் தொகையான் நல்கும் அருள் என்னு நீலன்
பால் மனமே செய் சேவகம் -31-

போதமர் மா -அலர்மேல் மங்கை
கரந்து -நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் -எல்லாப் பொருளும் தன்னுள் நின்றாலும்
கோது அற்று உறைவது -வியாப்ய கத தோஷம் தட்டாமல்

————————————-

கம்பத்தின் தோன்றல் அயன் அரனைத் தோற்றுவித்து
உம்பர் இடர் நீக்க அவர் எதிர் அம்பு கோக்க
வென்று அளிக்கும் வண் புருடோத்தமனைக் கூறு நீலன்
பன்னு தமிழ் நம் பேரணி -32-

பேரணி -ஆழ்வார் ஸ்ரீ ஸூக் திகளே நமக்கு சிறந்த ஆபரணம் –

————————————————

பேரணி சீர் பால் கார் அமுதம் தேன் பான்மையான்
பேர் அறிவன் இன்பன் மாறில் மாலை -சீர் மறையோர்
செம்பொன் செய் கோயிலுள் மாவோடு கண்டுய்ந்த நீலன்
நம் பிறவியாம் வினைக்கு மாற்று -33-

நாங்கை நன்னடுவுள் உள்ள திவ்ய தேசம்
பேர் அணி சீர் -அணி அணியாகத் திரண்ட கல்யாண குணங்கள்
அவை தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமுமாய் தித்திக்கும் பான்மை -தன்மை அன்றோ
பேர் அறிவன்-சர்வஞ்ஞன்
மாறில் மால் -அவிகாராய ஸூத்தாய-சதைக ரூப ரூபாய
மாறில் ஒப்பில்லாத அத்விதீயன் என்றுமாம்
கண்டு உய்ந்தமை ஒவ் ஒரு பாட்டிலும் இறுதியில் உண்டே –

————————————————

மாற்றில் இடர் மாற்றி அடியர்க்கு மாகம் மா நிலம்
போற்ற அளித்துத் தடையாவும் பற்றி ஆட்கொள்
வான் தெற்றி யம்பலத்தான் என்றுரை மங்கையர் கோன்
தான் போக்கும் நம் பவத்தூறு -34-

மாகம் -பரமாகாசம் / மா நிலம் -வையம் //இட ஆகுபெயர் -அங்குள்ளாரை சொன்னபடி -/

————————————————

தூம்புகை மா துயர் தீர்த்துத் தொண்டர் காமுற்ற
சோம்பாது ஈந்து யாரையும் யாவையும் ஓம்புமவன்
நங்கை மணிக்கூடத்தான் என்னும் நீலன்
யாம் இன்பம் சேர தா வளம் -35-

தூம்புகை மா துயர் -தூம்பு துளை-தூம்பு காய் மா -விலங்கு -ஆனை-
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய பெரிய துயர் -யானையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-

—————————————————

தா வளந்து தான் உழலும் ஊன் குரம்பை தான் ஒழிய
காவல் தானும் பிறரும் அன்று என்று காவளம்
பாடி கண்ணன் பாதம் அடையும் பரகாலன் பாதம்
நாடி நீர் நீங்கும் இடுக்கண் –36-

தாவளந்து –தாவி அளந்து -தட்டித்திரிந்து -பல் யோனிகள் தோறும் புகுந்து ஆக்கையில் ஆப்புண்டு தடுமாறும் உயிர்
பெருமாள் திருவடி அடையும் ஆழ்வார் திருவடி அடைவதே நமக்கு கர்த்தவ்யம் –

———————————————

கண் நா நாட்டார் புகழ் அன்பார் வேதியர் வாழும்
கண் அழிவில் வண் திரு வெள்ளக் குளத்து அண்ணனைப்
பேற்றுக்கு ஆக்கை நீக்க மா முன் சரண் அடையும்
நால் கவியார் சேர்க்க வளம் –37-

கண்ணார் புகழ் -நாவார் புகழ் -நாட்டார் புகழ் -என்று அந்வயிக்கலாம்
கண் –எண் சாண் உடம்புக்கும் தலை பிரதானம் -அதற்கு கண் பிரதானம் -கண் ஞானத்தையும் குறிக்கும்
கண் இடம் -தாம் இருக்கும் இடம் புகழ் பாடும்படி யுள்ளதாய் இருத்தல் –
கண் அழிவில் -திண்ணமாக
வண்மை-திவ்ய தேசத்துக்கும் பெருமாளுக்கும் அன்வயம் –
நால் கவியார் -சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம் –
ஆசுகவி -சித்திர கவி-மதுர கவி -விஸ்தர கவி –

—————————————————-

கவளக் களிறு அரக்கர் பேய் தம் உயிரைக்
கவர்ந்தான் மறை நால் தொடர் பவன் பார்த்தன்
பள்ளி காயா வண்ணனைக் கூடாமை கூறு நீலன்
நள்ள நலம் நல்கும் நுமக்கு –38-

மறை நால் -நான்மறை என்று மாற்றிப் பொருள் –
நான் மறைகள் தேடியோடும் செல்வன் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
வேத பாராயண கோஷ்ட்டி பின் தொடருவதையும் -வேதங்கள் அவனை சொல்லி முடிக்காமையும் குறிக்கும்
காயா வண்ணன் -காமரு சீர் குவளை மேகமென்ன மேனி -வேலையன்ன கோல மேனி வண்ணன்
பார்த்தன் பள்ளிப் பெருமாளைக் கூடாமையால் வந்த துன்பத்தை கூறும் ஆழ்வாரை –
நள்ளி -அணுகி -வாழ்பவர் நல் வாழ்வைப் பெறுவர் என்றபடி–

—————————————–

நும் அடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும் அடியாரோடு ஒப்ப எண்ணுதிர் என நம் கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன இன்னாமையைத்
தன்னிலை மாறாதவனாய் -39-

தன்னிலை மாறாதவனாய் –தானான தன்மையில் ஊடுகிறார் –
பக்தானாம் தவம் ப்ரகாஸஸே-என்றதின் எதிர்த்தட்டாய் இருந்தமையால் –
தம்முடைய மார்த்தவத்தையும் வெளியிட்டு அருளுகிறார் இந்த பதிகத்தில்
எம்பெருமானைப் போல் அல்லாமல் நமக்காக எப்பொழுதும் சேவை என்பதால் நம் கலியன்
தூது விடுவதும் அணுகரிப்பதும் ஊடுவதும் அர்ச்சாவதார பெருமாள் இடம் தானே நம் கலியனுக்கு –

——————————————–

ஆய்ச்சியர் அன்பர் கைப்பொருளை உகக்கும் தான் சேரா
சேர்க்கும் அழிய மாருதி தொண்டர் இடர் தீர்க்கும்
திரு வெள்ளியங்குடியான் வாழ்த்தும் கலியன்
திரு மொழி ஏத்தும் அறிந்து -40-

அகடிதகடநா சமர்த்தன் -ஆலிலை -நரஸிம்ஹம்-போன்று
பரத்வத்தை அழிய மாறி ஸ்தாவர திர்யக் மனுஷ்ய யோனிகளில் திருவவதாரம்

—————————————–

அறிவது அரியான் அடியார் தேவிமார் உய்யத்தான்
கிறி செய்வான் தேர்வார்க்கு அமுதில் அறிவினியன்
புள்ளம் பூதங்குடியான் என்னும் பரகாலன்
உள்ளூர் உம்பர் தாம் -41-

கோலா வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்டதும்
அழகைக் காட்டி தன்பால் ஆழ்வாராதிகளின் ஆதரம் பெறுக வைப்பதும் போன்ற கிறிகள்
அறிவினியன்-அறிவதற்கே இனியவன் -அறிந்த பின்பு கண்டு அனுபவிக்க இனியவன் –
அவனைப் பற்றிய அறிவே இனிக்குமே
உம்பர் -நித்ய ஸூரி கள் என்றவாறு-

———————————————-

தாம் அறியாத் தன்னுள் புகுமவன் தன் பெருமை
தான் அரியான் தொண்டர்க்கு அறியுமாறு தான் அருளும்
கூடலூரான் ஊர் எழிலுடன் சொல் கலியனைக்
கூடி வானில் விளங்கும் வென்று -42

யாதோ வாசோ நிவர்த்தந்தே என்ற வேதம் போல் அன்றிக்கே-எம்பெருமானுடைய கல்யாண குணங்களை
அருளிச் செய்வதில் விளாக்குலை கொள்வதால்
தன் பெருமை தான் அறியா விடிலும் தன் அடியார் அறியும்படி அருளுபவன் அன்றோ –
வானில் சென்று விளங்கும் -என்றும் வானை விட வாழ்ச்சி இங்கு என்றும் கொள்ளலாம் –

————————————————-

வென்று விளங்கு வினை வீயச் செய் மாலடிக்கே
என்றும் அன்பால் ஏவல் இசைந்து ஆட்செய்ய ஓன்று நீலன்
வெள்ளறையானை வேண்டும் பாடலை உள்ளத்துள்
உள்ள உகந்து நெஞ்சே உந்து -43-

ஓன்று நீலன் -ஒருமைப்பாட்டை -இசைந்த நீலன் ஏவ மற்றமரர் ஆட் செய்வார்-என்கிறபடியே
பெருமான் சோதி வாய் திறந்து பணித்தபடியே ஆட் செய்தல் உற்றதாகும் –

———————————————

உந்தி அயன் ஓங்குவித்து வையமாக்கிக் காத்து அழித்து
எங்கும் கரந்து உறையும் மாயமுடை எந்தை தன்மை
தன் நன்மைக்கு என்று எண்ணித் தென்னரங்கம் பாடு நீலன்
சொல் மறவாமல் வாய் வெருவு -44-

மாயம் -ஆச்சர்யம் -மித்யை பொய் அன்று –
எந்தை தன்மை -எம்பெருமானுக்கு நமக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத சம்பந்தம் அறிவதற்கு மேல் ஒரு ஸூஹ்ருதம் உண்டோ
பெருமாள் அடியார்க்கு அருள் செய்தமை தனது நன்மைக்கு என்று யார் ஒருவன் எண்ணுகிறானோ
அவனே உண்மையான உத்தம ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் உடையவன் –

——————————————–

வெருவித் தான் தன்னது தன்பால் அரங்கன் அன்பை
இருத்த ஆட் செய்யா கூடாத்தன்னின் வருத்தம் போம்
ஆறு அறியாது ஆற்றாமைத் தாய்க் கூற்றாய் நீலனுரை
கூறல் வாய்க்குற்ற வகை -45-

அரங்கன் அன்பைத் தன்பால் இருத்த ஆறு அறியாமலும்
தன்னின் ஆட் செய்யா வருத்தம் போம் ஆறு அறியாமலும்
தன்னின் கூடா வருத்தம் போம் ஆறு அறியாமலும் -என்று அன்வயம் –

—————————————————-

கை கழிந்த அன்பர் முன் கை கட்டித் தான் நின்றும்
கையர் நலிந்தும் வையம் நலம் எண் ஐயன்
அரங்கனைக் கைக்கனியாய்க் காண் கலியன் பாதம்
பரவ வினைப் பாறிடுமே பண்டு -46-

கை கழிந்த அன்பார் -மிக்க பெரும் சீர் தொண்டர் என்றபடி -பரத்வம் வந்தேறி அன்றோ அரங்கனுக்கு
கையர் -கயவர்
வையம் நலம் எண் -உறங்குவான் போலே யோகு செய்யும் -வ்யூஹ ஸுஹார்த்தம் –

——————————————

பண்டைய காரணன் அண்டர் அல்லல் விண்டு ஒழித்து
தொண்டர்க்காய்த் தான் தரணியில் திண்ணம் அண்டர் கோன்
வந்து இருக்கும் கோயில் எண்ணித் தான் உய்க்கும் நீலன் தாள்
வந்தியாதார் தாம் ஏழையர் -47-

காரணன் -காரணம் ஸ்து த்யேய-
தரணி -உலகம் -திண்ணம் வந்திருக்கும் -சம்சாரம் வேரோடு கிழங்கு அறுத்தால் அன்றி பேரேன்-என்று இருக்கும் சீர் –

—————————–

ஏழைமை சூழ் பிறப்பு கூற்றத்து இழிவு ஒழிய
வாழ்வாம் ஆட் செய்வு அவன் சிந்தையதாய் -ஆழியான்
ஆராமம் சூழ் அரங்கன் ஆடகத்தான் ஆறாய்ச் சேர்
சீரார் நீலன் தொழும் என் கை -48-

சரணாகதிக்கு அபேக்ஷித்தமான ஐந்து அங்கங்களையும் அருளிச் செய்து சரண் அடைகிறார் அரங்கன் திருவடிகளில் –
அடக்கம் -பொன் -உலகம் அளந்த பொன்னடியாகையாலே-
ஆழியான் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி நீர் வண்ணன் -கருமை நிறமுடையவன் –

——————————————-

கை கூப்புவார் கூப்பாதார் இறை தாமாய் நினைவார்
ஐயன் அசோதை நப்பின்னைக்கு பொய்யிலானாம்
பேரான் உள்ளம் புகுந்த வாழ்த்தி உயு நீலன்
பேரே தீர்க்கும் நந்தம் தீது -49-

—————————————

தீதறத் தொண்டர் துயர் தீர்த்து அவர்க்கு மீளுதலாம்
ஏதமில் வான் ஈந்து கரந்து எங்கும் உறை ஏதமில்லா
நந்தி புர விண்ணகரான் நண்ண நீலன் தானுரை செய்
செந்தேன் பருகு வண்டாய் –50-

ஏதமில் வான் -ஸ்ரீ வைகுண்டம் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி
நீலன் உரை செந்தேன் பருகு வண்டாய் தேனிலும் இனிதான திருமொழி –

————————————–

வண்டாம் தெய்வத்தாளில் விஞ்சு விருப்பம் மிக்க
வண்டார் குழலார் பால் தான் வெறுப்பும் கொண்டமையை
விண்ணகரானுக்குச் செஞ்சொல்லால் கலியன் செய்
விண்ணப்பம் பொற்பே பொறு –51-

பொற்பு -அழகு / பொறு -தாங்கு /
எம்பெருமான் பால் ஆதாரஅதிசயமும் பிராக்ருத பதார்த்தங்களில் வெறுப்பும் வளர
ஓவுதல் இல்லாமல் ஆழ்வார் அருளிச் செயல்களை மனனம் செய்ய நெஞ்சை இரக்கிறார் –

—————————————–

பொறுக்க ஓணாச் சுற்றம் பொருள் புலன்கள் தம்மைத்
துறந்து விண்ணாட்டுச் சீர் நீலன் பெற மா முன்
ஆர்த்தனாய் விண்ணகரான் சீர்த்தாள் சரண் அடைந்தான்
சீர்த்தாள் சேர் மற்ற துறந்து -52-

பொறுக்க ஓணா–சுற்றம் பொருள் புலன்கள் மூன்றிலும் அன்வயம்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட -7-7-1-

———————————————-

துறக்க அரிய சிற்றின்பம் தேவல்லாரை
இறையா நினைதல் இகந்து -மறவாமல்
விண்ணகரான் எண்ணும் தனக்கு விண் வேண்டும் நீலன்
திண்ணமதா நம் களை கண் –53-

———————————————

கண்டால் பொருள் இன்பம் கொண்டாடி அற்ற காலை
கண்ட பேசி ஏசுவாராய்க் கை விட்டு தண்ணறையூர்
பற்றாத் தொழு நெஞ்சே என்னு பரகாலன் சொல்
கற்றார்க்கு இல்லை கலக்கம் -54-

அற்ற காலை –பொருள் இல்லாத போது –

———————————————-

கலங்கச் செய் துன்பம் தீர்த்து அண்டர் மா தொண்டர்
துலங்கச் செய் நம்பி நறையூர் கலங்கா வான்
ஒக்கும் எனும் மங்கை வேந்தன் பாதம் நமக்கு அளிக்கும்
இக்கரையாம் அம்பரம் -55-

இக்கரை ஏறி இளைத்து இருந்தேனே –பெரியாழ்வார் -5-3-7-இக்கரை எனப்படும் வானாடு-அம்பரம் -பரமபதம் –
திவ்ய தேசமே பரமபதத்தில் உத்தேச்யம் –
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத தன்மை தேவபிரான் அறியும் –திருவாய் -7-10-10-

————————————————

அம்பரம் தீ தானாய் அவை விழுங்கி ஆயன் அரி
அம்மீனாயத் தோன்று நம்பி சேர் நறையூர் அம்பணி செய்
செம்பியன் சீர் ஊர் எழிலுடன் செப்பும் சீர்க் கலியன்
செம் கழல் சேர்ந்து வான் ஆளும் –56-

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெறுக்கிப் புகப்
பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் –10-6-1-
வான் ஆளும் -ஆண்மின்கள் வானகம் -திருவாய் -10-9-6-
கலி wயனுடைய செம் கழல் சேர்வது வான் ஆள்வதற்கு ஒப்பாகும்
வான் செம் கழல் சேர்ந்து ஆளும் -உபய விபூதி -இங்கே இருந்து கிட்டும்-

——————————————————————–

ஆளுமவன் தான் தனக்காட் செய்யும் அறிவு அருளி
ஆளறக் கொள் நம்பி புகழ் பேறாய்த் தான் -ஆள் கொள்வான்
நன்னறையூர் நின்றான் அங்காட் செய்து உயும் என்றான்
மங்கையர் மன்னன் எம்மான் -57-

புகல்-ரக்ஷகன் /பேறு-பெரும் பலன் புருஷார்த்தம் /
சேஷிக்கு உகந்த அடிமை செய்வதே உய்வதற்கு ஆறும் பேறுமாகும்–

—————————————————

மானமுடை வானவர் தொண்டர்க்கு வாசியற
தான் அழிய மாறி அருள் நம்பியிடம் நான் உகந்த
மாற்ற வூரான் பான்மை நீலன் கண்டான் நறையூரில்
உற்ற திருவாம் பெடையோடு-58-

திருவேங்கடம் திருவாலி திருநாவாய் திரு மெய்யம் திருகி குடந்தை திரு நறையூரில் கண்டதாக அருளிச் செய்கிறார்
நரசிம்மம் கண்ணன் இராமன் தன்மைகளையும் கண்டார் –
உற்ற திரு -பகவான் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூபம் –
நமக்கு உற்ற திரு என்றுமாம் –

——————————————–

பெடையாம் பூ மங்கையோடு பத்தர் தம் பண்டம்
அடைந்து உகந்து அண்டர் தொண்டர் தம் இடையூறு
நீக்கு நிறையூர் நம்பி தாள் சரணாய் நீலன் தான்
நோக்கும் புகலாய்க் கிடந்து -59-

புகலாய்க் கிடந்து -ஒரே சொல்லாக்க கொண்டு ரக்ஷகனாகக் கொண்டு என்றபடி
சரணாய் நோக்கும் -சரணாகதி அடைகிறார் என்றவாறு
உலகம் உண்ட பெறுவான் போலே இந்த பதிகத்தில் பாசுரம் தோறும் எம்பெருமான் அடியிணை உண்டே –
பூ மங்கை -மலர்மகள் மண் மகள் இருவரையும் குறிக்கும்
பெடையாம் பூ மங்கையோடு -பூ மங்கையாம் பெடையோடு என்று மாற்றி பொருள் –

——————————————–

கிடந்த பவ்வன் நாமமுடன் நம்பி நறையூரான்
இடர் கடிவான் விண் மண் இரண்டும் கடவன் ஈசன்
மாதவன் மாயன் காரணன் சீலன் என் நீலன்
வேத சாரம் சொல் கறவை -60-

கிடந்த பவ்வன்-ஷீராப்தி நாதன்
நாமமுடன் நம்பி நறையூரான் -திருமந்த்ரார்த்தத்தை பொருளுடன் அடைவே விவரிக்கிறார்
இடர் கடிவான் -விரோதி நிரசன சீலன்
விண் மண் இரண்டும் கடவன் -உபய விபூதி நாதன் -ப்ராப்தியை யுடையவன்
ஈசன் –நியமிப்பதை ஸ்வ பாவமாக யுடையவன்
மாதவன்–திருமால் –
மாயன்–ஆச்சர்ய சேஷிடிதங்களை யுடையவன் –
காரணன்–காரணம்ஸ்து த்யேயா –
சீலன்–ஸுசீல்யன்
என் நீலன் -என்று நாராயண நாமார்த்தை அருளிச் செய்யும் கலியன்
வேத சாரம்–ஆரண சாரம்
சொல் கறவை -ஆழ்வார் பசு -ஆச்சார்யர் ஸ்தானம் –

————————————–

கறவையாய் நம்பியைத் தான் மற்ற ஊர் சீரோடு
மறவாது அழைத்துச் சிறையாம் பிறவி அற
தாய் கரும்பு வள்ளல் கதியாய்க் கலியன் காண்
மாயன் ஆனான் புள் ஏனம் -61-

தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து -7-3-2-கறவை எம்பெருமானே –
தாயாய் உலகு அளித்தும் -கரும்பின் சுவை போலே போக்யனாயும் அபேக்ஷிதங்கள் அருளும் வள்ளலாயும்-
அடையும் கதியாகவும் –
ஆக உபாய உபேயமாக இருக்கும் தன்மையைக் காட்டிக் கொடுத்து அருளுகிறான்
புள் ஏனம் ஆனான் -அன்னமாய் அருமறை பயந்து –
வென்று சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள்ளெயிற்று ஒள்ளெரித்தறு கண் பன்றியாய்
யன்று பார்மகள் பயலை தீர்த்தவனாய் -இவ்வாறு பல பல திருவவதாரங்கள் மூலம் உபகரித்து அருளுபவர்
இவற்றைக்காட்டக் கண்ட கலியன் தானே நமக்கு இவை எல்லாம் –

—————————————

புள் ஏனம் ஆம் நம்பி நெஞ்சுட் புகுந்தானைத்
தள்ளேன் வையத்து வான் இன்பம் விட மெய் உள்ளத்தோடு
சிந்தையால் எய்தி இன்புற்றேன் என் சீர்க் கலியன்
சிந்திப்பார்க்கு இல்லை சினம் -62-

விட மெய் -விடத்தக்க உடல் -நஞ்சாகிய உடல் என்றுமாம்
என் சீர்க் கலியன் -என்று அருளிச் செய்யும் ஆழ்வார் –

—————————————-

சினத்துச் செரு நீர் செற்றான் உட் புகுந்து
நனி நீங்கா தீது தீர் நம்பிக்கு மனம் செயல்
வாக்கற்றுக் கைம்மாறிலாமை சொல் வாட் கலியன்
வாக்கால் மலரும் உட் கண் -63-

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் -என்பதால் நீங்காமை சொல்லி
கண் இணைகள் க்ளிப்பைக் களித்தேன் -அன்பனை அன்று ஆதரியேன் -என் மனம் தாழ்ந்து நில்லாது
என் மனம் சிந்தை செய்யாது -பண்பலை யான்றிப் பாடல் செய்யேன் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி என் வாய் யுரையாதே –
மனம் செயல் வாக்கு எம்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தமையை அருளிச் செய்தார் –
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும்
என் மனத்தே இருக்கும் புகழ் என்றும் கைம்மாறு இல்லாமையையும் அருளிச் செய்தார் –

———————————————————-

கண் காண் விபவவித்தாம் பாற் கடல் பள்ளியானை
எண்ணும் விண்ணில் பொலி சீர் சேறையான்-தொண்டரை நீங்காது
அவர்க்கு ஆளாய் இன்பம் முப்புலன் எய்திற்று உரை செய்
காதல் நீலன் நம் தந்தை -64-

காதல் நீலன் -அன்பர்பால் ஆராத காதல் யுடைமையை தானே திருச்சேறை பதிகத்தில் அருளிச் செய்தார்
நீலன் நம் காதல் தந்தை என்று கொண்டு-ஆழ்வார் நம் பால் ஆராத அன்பால்
நன்மை செய்யும் தஞ்சமாகிய தந்தை அன்றோ ஆழ்வார்
இங்குள்ள அடியார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் தன் மேலாராக அருளிச் செய்து
மத்திய பர்வ நிஷ்ட அக்ரேஸராக விளங்குகிறார்
பாற் கடல் பள்ளியான் விபவ வித்தாம் -வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து அன்றோ –

———————————————

தந்து கனவில் கலவி ஆல் துயில் தானாம்
அந்நிலை காட்டி ஐம்புலன் கொண்டு வந்து புகும்
மாடு அழுந்தூரானைப் பகரும் கலியன் ஒலி
பாடல் உண்பார் ஒப்பார் சிங்கம் -65-

மாடு -பக்கம் -செல்வம் -பொன்-அனைய அழுந்தூரான்
ஆழ்வார் பாடல் -பரசமயப் பஞ்சுக் கனலின் பொறி –ஒலி மிக்க பாடலை யுண்டு –வலி மிக்க சீயம் –

————————————————

சிங்கம் விண்டார்க்கு அன்பன் தொண்டர்க்கு காப்பவன்
பொங்கு வித்தாய் மூவர் வாக்கு எட்டான் பூ நங்கை சேர்
ஆராவமுதை அழுந்தைக் கண்டு இன்புறும்
சீரார் நீலன் நம் திரு -66-

விண்டார் -அடியார்களுக்கு சத்ருக்கள் -/காக்கும் இயல்பினன் கண்ணபிரான் /
பொங்கும் வித்து -த்ரிவித காரணன்
மூவர் வாக்கு எட்டான் -இந்திரன் அயன் அரன்-வாக்கு எட்டான்-
யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்-

———————————

திரு வழுந்தூரான் நெடியான் நல் துணையான் தூயன்
திருவன் நிறைவறிவன் என்று திருத்த ஐவர்
செய் துயரை வேறு புகலின்றி கலிகன்றி சேர்ந்தான்
உய்ய தாளாம் செங்கமலம் -67-

ஐவர் -ஐந்து புலன்கள்
நெடியான் -தேவராய நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும்
அம்மூவரில் முதல்வனாக நிற்கும் நெடியான் -மனிசர்க்குத் தேவர் போலெ தேவர்க்கும் தேவனான தேவாதி தேவன்
நிறைவறிவன் -சர்வஞ்ஞன் –

———————————————-

செங்கண் பொன்னன் கஞ்சன் மல்லர் இலங்கையன்
மங்க மறை இந்திரன் வெள்ளம் பூ மங்கை
அளிக்கும் அழுந்தூர் அமரர் கோ அடைந்து உய்யும் என்
கலியன் கெடுக்கும் கள்ளம் -68-

—————————

கள்ள மதம் கொள்ளாச் சல சயனத்தார் தாள் நீர்
கொள்ளும் என்றும் பெண்டிர் நிரயம் தான் வெள்கி யவை
நீங்க பேறாச் சேர்ந்தான் பரகாலன் நெஞ்சே சொல்
பாங்காய் அவன் பெருமை -69-

——————————————-

பெருமான் இனியன் அழகன் தேவன் துப்பன்
திருத்தன் சேராச் சேர்ப்பன் நாதன் -விருத்தம் எனக்
கண்ணமங்கை கண்டு கலியன் சொல் அமுதப்பா
உண்ண பிறப்புக்கு நச்சிலை -70 –

தேவன் -விளங்கு சுடர்ச் சோதி/திருத்தன்-திருப்தன்-அவாப்த ஸமஸ்த காமன்
விருத்தம் -விருத்த விபூதி நாதன்-
வானவர் தன நாயகன் -மூத்தவன் –
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்

———————————–

சிலை முதலா ஐந்து பூணாச் சீராகும் சேர் பல்
கலன் கலியன் கண்டு பிரியா நிலை எய்திக்
கண்ணபுரத்தான் பால் அவா மிகுதல் தான் கூறும்
தண் தமிழ் கற்பார் தெள்ளியார் -71-

ஐந்து பூண் — ஆழி சங்கு தண்டு வாள் வில் -பஞ்சாயுதங்கள் –
திவ்யாயுதங்கள் அநுகூலருக்கு திவ்ய ஆபரணங்கள் ஆகுமே
ஆக்கம் -திரு மார்பி -திரு மேனிக்கு உப லக்ஷணம்
ஒரு காலும் பிரிகின்றலேன் என்கின்றாளால் -தாய் வார்த்தையால் –
தெள்ளியார் -தெளிந்த ஞானத்தர்–

———————————

தெள்ளிதாத் தான் கண்ணபுரம் உள்ள வெம்மை நீங்க தொழில்
உள்ள அணுக்கரித்தல் ஆறு பேறாய் கொள்வது என
இன்னாமை கூறும் இரும் தமிழ் நூல் புலவன்
தன் தாள் வானாம் இக்கரை -72-

உள்ள வெம்மை -உள்ளத்தில் தோன்றும் ஆற்றாமை
நீர் மலி வையத்து நீடு நிற்பார்கள் -பல சுருதி -அங்கே தெள்ளியார் அனுபவம் இல்லையே –

——————————————-

கரை வளை மாமை இழந்தேன் கணபுரத்தான் தன்
கரையில் செயல் எண்ணி என்று உரை செய்
பரகாலன் தான் தனது விட்டமை கூறும்
வரந்தமிழால் வாய்க்குமோ விண்-73-

கரை வளை -சப்திக்கின்ற வளை /
கரையில் செயல் /-எல்லையில்லாத சேஷ்டிதங்கள் /
வரையெடுத்து -கரி வெருவ மருப்பு ஓசித்து-விடைகள் அடர்த்து -மதி கோள் விடுத்து
புனர் மருதம் இற நடந்து/ தாய் எடுத்த சிறு கோளுக்கு உழைத்து ஓடி / தயிர் வெண்ணெய் உண்டு /
இரணியனை அணி யுகிரால் முரண் அழித்து / உண்டு உமிழ்ந்து போன்றவை
/ வரந்தமிழ் -சிறந்த தமிழ்
கலை வளை -அஹம் மம க்ருதிகள்
———————————–

விண்டு ஒழியத் தன் வாட்டம் கண்ணபுரத்தான் துளவம்
வண்டான தொண்டரை வசமத்து கொண்டூத
வேண்டி உய்யும் விரகு கூறும் பரகாலன்
வேண்டினார்க்குத் தஞ்சமாம் தந்தை –74–

அடியாரை வண்டாக /
பிராகிருத தந்தையிலும் விருத்தி தஞ்சமாகிய தந்தை -ஆத்மாவின் உஜ்ஜீவனத்துக்கு –

———————————

தன் தன்மையில் மீதி வேய் ஆ மணி தென்றல் இருள்
அன்றில் அந்தி செய்ய நலிவு ஒன்றில்
ஒருவனாய்த் தான் நீலனாய் ஆய்ச்சியர் தம் அல்லல் உற்ற
உரைப்பது எவ்வாறு தொண்டீர் -75-

வேய் -மூங்கில் ஆகுபெயர் புல்லாங்குழலைக் குறிக்கும்
உற்ற -உற்றாமையின் கடைக்குறை -ஆழ்வார் ஒருவரே சாயங்காலப் பொழுதில்
ஆய்ச்சியர் அனைவரும் அனுபவித்த அல்லலை அடைந்தமை காட்டும் –
அவ்வாறு நலிவுற்ற ஆழ்வார் பிரிவாற்றாமையை தாம் கூற வாய் திறக்க வலி உண்டோ
ஆழ்வாருடைய அவா மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது அன்றோ –

——————————————

தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கணபுரத்தான்
நண்ணார் ஒழிப்பானை ஆறாக நண்ணவும்
நண்ணா நம் மேல் வினை என்றுத் தேற்றியும் கூறும்
அண்ணலை போற்றும் வியந்து -76-

வியந்து -விருப்புற்று /
வருந்தாது இரு மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா என்றும்
மாலாய் மனமே யாரும் துயரில் வருந்தாது இரு நீ -என்றும் தேற்றிய
ஆழ்வாரை விருப்பமுடன் போற்றுவதும் மேல் ஒரு நன்மை இல்லை –

———————————————–

வியன் ஞாலத்தில் மல்கு சீரால் நாள் வானில்
நயமுடைக் கண்ணபுரம் பேறாக உயவடைக்
கூறு நீலன் சித்ர கவி தேரும் அடியார் தாம்
ஏறுவர் ஏதுமின்றி வான் –77-

நாதனும் நித்ய முக்தர்களும் இங்கே ஆசையுடன் உக்காந்து வந்து நித்யவாஸம் இருப்பதால்
இத்தையே உபாயமாகக் கொண்டு உஜ்ஜீவிக்க ஆழ்வார் உபதேசித்து அருளுகிறார்
கூற்று எழுத்துக்களைக் கொண்டே அருளிச் செய்த பதிகம் -சித்ரா கவித்துவம் பொலிய உள்ளது
நல் வான் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி –

——————————————-

வான் மண் உய்வான் தான் அவதாரம் பத்து செய்யும்
வானவனைக் கண்ணபுரத்துள் கலியன் கோனாகக்
கண்டு கொண்டேன் என்னும் சொல் உய்வார் கருத்தினில்
திண்ணமதாம் ஞானக்கை -78-

ஆழ்வாருடைய ஈரச் சொற்களே உய்ய நினைப்பார்க்கு நிச்சயமான ஞானக்கை –

—————————————

கைம்முதல் இன்றித் தன்னுள்ளத்து உற்றானாய் நோக்கி
வெம் நரகை நீக்க மிக்கானாய்க் கணபுரம் நிற்பார்க்கு
அல்லால் பிறர்க்கு இன்மை தான் பகரும் சீர்க் கலியன்
சொல் தேன் பருகு வண்டாய் -79-

நிர்ஹேதுகமாக -உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்ற முதல்வன்
உற்றான் -ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் உண்டே
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -அநந்யார்ஹத்வம் –

—————————————–

வண்டாம் தெய்வத் கண்ணபுரத்தான் பற்று ஆறு பேறாக்
கொண்டு ஏத்தி வேற்று இறை தேறுவாரை அண்டாதே
மந்திரத்தின் உட்பொருள் சொன்னான் கலியன் தான் தொண்டர்
தொண்டன் என மாலாம் வங்கர்க்கு -80-

தெய்வ வண்டு-எம்பெருமான் –
மாலாம் வங்கர்க்கு -வங்கமாம் மாலுக்கு -வங்கம்-கப்பல்
மால் -கருமை பெருமை மையல்
வைகுந்தம் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
மந்திரத்தின் உட்பொருள் -உற்றதும் உன்னடியார்க்கு அடிமை –

—————————————–

வங்கக் கடல் துயின்று இங்குப் பிறந்து தொண்டர் தாம்
பொங்காத் துயர் அகற்றி ஏதலரை மங்குவித்து
கண்ணங்குடியுள் நின்றான் புகலாய் என்னு நீலன்
பொன்னடியே நம் தமக்குப் பொன்-81-

பொங்க -நன்றாக வாழும்படி-

——————————————-

பொன்னுரு சங்காழி பல் பூண் நாகை அழகியாரின்
எண் கடந்த மேன்மை எழில் சிறப்புட் கண் கண்டும்
ஆட் செய்யா ஆற்றாமை நாயகியாய்ச் சொல் கலியன்
தாள் சேர்க்கும் சீர் வான் தன்னை -82-

சிறப்புட் கண்–சிறப்பு உட் கண்
பொன்னுரு -அழகிய -ஹிரண்ய வர்ணை அலர்மேல் மங்கை உறை மார்பன் அன்றோ –
ஹிரண்மயவபு -உபநிஷத் –

—————————————–

தன்னளவில் நைந்து நொந்து தன்னிலைக்கு அல்ல செய்து
பின்னும் தொழுது தான் புல்லாணி சென்று சேர
எண்ணியமை கூறி இன்னாமை உணர்த்தும் ஆலி நாடன்
பண் எண்ண வானோர்க்கு ஆவார் -83-

அக்ருத்ய க்ருத்யம் -ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால்
ஒளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் –
பண் -ராகம் -குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை –
செவிக்கினிய செஞ்சொல் கேட்டு வானவர் ஆரார் அன்றோ –

—————————————————

காவாமை தந்த உள் மெய் நோய் கூற புட் தூதும்
ஆவார் சொல் கேளாமை ஆழி மதி -ஓவாத
இன்னாமையும் கலியன் புல்லாணி மால் குரை சொல்
உன்ன உள்ளம் தவளமாம் -84-

எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் -11-1-9-பண்டே போல் இருந்தால்
உள்ளத்து நோய்க்கோ உடல் நோய்க்கோ வருந்த வேண்டியது இல்லையே-
தளம் -வெண்மை -சத்வகுணம் -சமதர்மம் உண்டானால் ஆச்சார்யன் கை புகுரும் –
திரு மந்த்ரம் ஈஸ்வரன் கை புகுவார்கள்
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றபடி ப்ராப்ய பூமியும் காய் புகுருமே –

———————————————–

தவத்தை வேள் சேமணி வேய் தென்றல் அன்றில் வாடை
அவற்றுடன் வேலை திங்கள் செய் நவை தீரும்
உற்றார் குறுங்குடிக்கு உய்த்தால் என்று உணர்த்து நீலன்
முற்ற வகற்றும் நம் மயக்கு -85-

மயக்கு -சம்சயம் -அஞ்ஞானம் -விபர்யயம் விஸ்ம்ருதி ஆகியவற்றுக்கும் உப லக்ஷணம்
தவத்தை -பிரபத்தியை -தன்மையை தெள்ளிதாக ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

——————————————

அக்காணி அன்பர்க்கு அகற்ற குறுங்குடியுள்
முக்காலம் முன்னிற்கும் நம்பியை தக்க தொண்டர்
தம்முடன் சென்று தொழ எண்ணும் கலிகன்றி
நம் நலம் நல்கும் தந்தை –86-

நலம் -பக்திக்கும் நல்ல வாழ்வுக்கும்
அக்கு ஆணி -எலும்பாலாகிய சரீரம் -என்பு தூண் நாட்டி
அக்காணி கழித்து –பெரிய திருமொழி -5-2-3-
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள் -என்றும்
நாறார் இண்டை நாண் மலர் கொண்டு ஆரா வன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் -என்றும்
நின்ற வினையும் துயரும் கெட சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் -என்றும்
அருளிச் செய்கிறார் அன்றோ இப்பதிகத்தில்
முக்காலம் முன் நிற்கும் -எப்பொழுதும் நமக்கு முன்னே வந்து திவ்ய தேசம் உகந்து
நித்ய வாசம் செய்வதே நமக்கு அருளுவதற்காகவே –

———————————————————–

தந்தை கிளை தன் நிலைக்கு ஆகா இன்பம் மெய்யாம் நோய்
நஞ்சு செல்வம் கள்ளச் சமயமவை தஞ்சம் அன்று
என்று கலியன் நெஞ்சை வல்ல வாழ் வல்லையாய்ச் சொல்லு
என்ற பாடல் கற்றிடவே முந்து -87-

நஞ்சு செல்வம் -நஞ்சு போன்ற செல்வம் -நஞ்சாகிய செல்வம் –
மெய்யாம் நோய் –நோய் எல்லாம் பெய்ததோர் ஆக்கை -அன்றோ

————————————————–

முந்துற ஆசை முற்ற விட்டு பற்றாய்த் தான் எவர்க்கும்
சிந்தித்தந்து துயர் சிந்துவிக்கும் எந்தை சேர்
மாலிரும் சோலை வணங்கு என்னும் மங்கை வேந்தன்
மால் ஆக்கும் மூவர் முதல் -88-

மங்கை வேந்தன் மால் -ஆழ்வார் பால் நமது பக்தியும் -நம்பால் ஆழ்வாருடைய வ்யாமோஹமும் –

————————————————–

மூவர் முதல்வன் பார் ஆக்கி உண்டும் காத்து அளந்தும்
யாவரும் வேண்டிற்று நல்கும் சோலை மலை மேயவனைக்
கூடுவனோ என்று சங்கித்துத் தெளிந்த சீராலி
நாடன் எங்கள் எம் இறை –89-

கூடுவனோ –ஒன்பது பாசுரங்களில் கொல்-என்று சங்கை –
பல சுருதி பாட்டில் ஆடல் பறைவையனை அணியாயிழை காணும் என்று -சங்கை நீங்கி
நிச்சயமாக கூடுவாள் –
ஆழ்வார் நம்முடைய கடவுள் –

—————————————————–

எங்கள் இமையோர் ஈசன் தொண்டர் எண்ணும் வண்ணத்தன்
அங்கம் அரர்க்கு உகந்து நல்கு சீலன் இங்கு அயனில்
மிக்கார் வாழ் கோட்டியூரான் என்று உரை செய் மங்கை வேந்தன்
உக்க வினை தீர்க்கும் ஒருவர் -90-

உக்க -பொடிப்பொடியாக
எண்ணும் வண்ணத்தன் -பாலின் நீர்மை இத்யாதி –
அவ்வாறான ஸ்வபாவம் யுடையவன் என்றுமாம்
தன் நிறத்தையும் ஸ்வ பாவத்தையும் அடியார் எண்ணப்படியே மாற்றி அருளுபவர்
ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும், நோக்குபவன் –

———————————————————–

ஒருத்தி வேட்டகம் புகு முன் உற்றார் சொல்வாள் போல்
திருப்பதிகள் வான் சேர் முன் கண்டு அரும் தேன் பொன்
ஆரமித்து ஆறு பேறு எம்பிரான் என்னும் கலியன்
கார் எனக் காட்டும் இரக்கம் -91-

இப்பதிகத்தில் -27-திவ்ய தேச மங்களா சாசனம் –
அரும் தேன்–சர்வ ரஸ/ பொன் -அழகும் செல்வமும் -அச்சோ ஒருவர் அழகிய வா -வைத்த மா நிதி –

————————————————

இரக்கமில் அரக்கன் சொல் கொள்ளாமல் சீதை
சிறை வைத்தும் வாயு மைந்தன் ஆற்றல் முறைப் பெண்டிர்
சேது பந்தம் பாரா பட்டான் எனத்தான் பொங்கத்தம்
ஓதும் கலியனை ஏத்து –92-

வாயு மைந்தன் ஆற்றல் பாரா -முறைப்பெண்டிர் பாரா -சேது பந்தம் பாரா -என்று அன்வயம் –

———————————————–

ஏத்து ராமன் தம்பி சுக்கிரீவன் அங்கதன் அனுமன்
கூத்தாய் குலமணி தூரமாடும் தோற்ற
அரக்கராக நீலன் இராமன் செயல் சொல் செஞ்சொல்
பொருந்தும் நம் சந்த மலர் -93-

சந்தமலர் –சந்தஸ் -ஒலி மிக்க பாடல்-அழகு வாசனை என்றும் பொருள்கள் உண்டே- கருத்து மிக்கு என்றுமாம் –

————————————————–

சந்தமலர் சேர் ஆகத்தான் கண் முன் தீம்பு செய்யும்
நந்தன் செய் வித்தகன் கண்ணனை சந்தியில் வா
அம்மம் உண்ண என்று அசோதையாய்க் கூவும் ஆலி நாடன்
செம்மலர்த்தாள் நம் சென்னிப் பூ -94-

ஆக்கம் -திரு மார்பு -ஸ்ரீ வைஜயந்தி வனமாலை திகழும்
செம்மலர்த்தாள் -செவ்வி -ஆர்ஜவம்
ஆர்ஜவமாவது -என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழல் என்றவன் தாளிணையை விட
ஆழ்வார் தம்முடைய தாளிணை -ருஜுத்வம் – மிக்கது -மோக்ஷ ஏக ஹேதுவாகையாலே –

——————————————————

பூங்குருந்து ஓசித்து சாடு உதைத்துப் பேய் நஞ்சுண்டு
தூங்குறி வெண்ணெய் கொல் தாமோதரனாம் ஆங்கு அவனை
ஆய்ச்சியாய்ச் சப்பாணி கொட்ட கூறும் ஆலி நாடன் தன்
வாய்ந்த தாள் நம் பற்று எங்கணும் -95-

இங்கும் அங்கும் நமக்கு பொருந்திய பற்று சரண் ஆழ்வார் திருவடிகளே –
சப்பாணி -ஸஹ பாணி -ஒரு கையேடு ஒரு கையைச் சேர்த்து ஒலி எழுப்புதல் –

———————————————

எங்கும் எவர்க்கும் மிக்கான் ஈசன் மிடுக்கு உடையான்
இங்கு அன்பார் பால் வேண்டற்பாடுடையான் அங்கு ஆய்ச்சி
கட்ட நீர்மையால் கட்டுண்டான் என் கலியன் நாம்
கட்கண்ணால் கான் பெருமான் -96-

மிடுக்கு -நித்ய சம்சாரிகளையும் நித்ய ஸூரி பரிஷத்தில் நிற்க வைக்கும் ஆற்றல்-

—————————————

மான வேறு ஏழ் செற்று காளியன் சகடம் பாய்ந்து உம்பர்
கோன் உண்டி கொண்டு வெண்ணெய்த் தான் விழுங்கும் கோன் செயல்
ஆய்ச்சியர் அசோதை பேச்சாய் நீலன் செய் சொல்
ஆய்வார்க்குத் துன்பம் புகாது -97-

மானம் -பெருமை -வழியிலும் உருவிலும் கோபத்திலும் பெரிதான
ஆழ்வாருடைய இன்னிசை மாலைகள் ஆராய்ந்து கற்பவர்க்கு இம்மையே இடர் இல்லை –
இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் -எனவே எங்கும் இன்பமேயாம் –

————————————————

காதலால் கண்ணன் புறம்பு கூடித் தான் முன் குறித்த
போது மறித்தான் எனத்தான் ஆயர் மாதராய்
ஊடி ஆற்றாமை சொல் குறையல் பிரான் பாடல்
பாடியாட ஒப்பர் ஓடும் புள் -98-

ஆழ்வார் அருளிச் செயல்களை–மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை -3-5-படியே
பாடி ஆடுவார் பெரிய திருவடிக்கு ஒப்பாவாரே–கைங்கர்ய நிரதராவாரே –
வேதாத்மா -தம்முள் எம்பெருமானைக் கொண்டுள்ளது போலே அடியார் தம் மனத்தில்
எம்பெருமான் எழுந்து அருளி இருப்பான் என்னவுமாம் –
ஓடும் புள்ளேறி–திருவாய் -1-8-1-

——————-

புள்ளூர்தி ஆற்றல் எழில் சீர் மிடுக்கால் ஓர் பொருளாய்
உள்ளத்து ஓராமைப் பழ மொழியால் உள்ளி மால்
பால் அன்பு மிக்கது உரைத்துத் தான் அருள் வேண்டும்
நீலன் நம் திண்ணம் திரு -99-

புள்ளூர்தி-எழுவாய் –
பிள்ளை தன் கையில் கிண்ணம் ஓக்க
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
அங்கையில் வட்டம்
தொண்டர் கைத்தண்டு
பெரு வழி நாவல் கனியிலும் எளியன்
எருக்கு இலைக்காக எழுமறி வோச்சல் கோழி வெண் முட்டைக்கு என் செய்வது குறுந்தடி
கவுள் கொண்ட நீராம்
ஆரழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் -போன்ற பழ மொழிகள்

—————————————–

திருமாலைத் தன்னுடன் கூட்டித் துன்பம் நீக்க
பரகாலன் கண்ட புட்கள் தம்மை இரந்து தான்
இன்னாமை நாயகியாய்க் கூறும் எழில் தமிழின்
இன்பமது என்றும் குன்றாது -100-

நாயகியாய் –தலைவி பாசுரமாக
செம்போத்து காக்கை குயில் கிளி கோழி இவற்றுடன் பல்லியையும் கண்டு
அவை செய்யும் நிமித்தங்களால் எம்பெருமானுடன் சேர்க்க வழி காண -மகள் பாசுரமாக –
ஆற்றாமையை வெளியிடுகிறார்
தொண்டீர் பாடுமினே -என்று இரட்டித்து -சிறு பாட்டாயும் போக்யமாகவும்
எங்கும் எப்பொழுதும் என்றும் குன்றாமல் இருப்பதில் வியப்பில்லையே –

——————————————————–

குன்றால் ஆ காத்துக் குவலயம் நோக்கும் அம்மான்
தென்றல் தொடக்கமானவை நலிகை என்று எண்ணி
ஆற்றாமைத் தான் விளைத்தான் என்னும் ஆலி நாடன் சொல்
பாற்றும் நமது பாவக் குன்று -101-

புயலுற வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை எடுய்யா நெடியவர்
குவலயம் -உலகம் / நோக்கும் ஜகத் ரக்ஷண சிந்தை /
சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே என்று அன்றோ பல சுருதி –

———————————————————–

குன்றாமல் சேராதார்க்கு இன்னல் செய் வேய் மணி
அன்றில் ஆழி வாடையால் ஆற்றாது சென்று மாலைக்
காணத் தான் முற்படும் நால் கவியார் தானிணையைப்
பேணி நிலையாக மன்னும் -102-

தாளிணையை நிலையாகப் பேணி மன்னும் என்னவுமாம் -மன்னுதல் பொருந்துதல்

——————————————

மன்னு சீர் மால் தொண்டர் அன்றிச் செல்லாமை காட்ட நீலன்
தன் பதற்றம் ஆற்றாமை மால் திறத்து சென்று அமைக்கும்
வாசிகத் தொண்டுக்கு மகிழ்ந்தான் மலர்ப்பாதம்
வாசியின்றி நம் நிலையிடம் -103-

———————————–

நிலை அழியத் தான் மாறித் தொண்டரை நோக்கும்
தலைவன் தோ ற்றங்கள் எண்ணி பொலிவு எய்திக்
கூடுமின் மால் என்று கூறும் ஆலி நாடன் ஞாலத்தார்
கூடும் எளியனாம் எம்மான் -104-

தோற்றம் -விபவ அவதாரங்கள்
நிலை அழிதல்-பரத்வமான நிலையில் இருந்து மீன் ஆமை வராஹம் அன்னம் குப்ஜா மரம் போன்ற அவதாரங்கள் –

————————————

மான மேன்மை பேசி நீர்மை ஏசி இரண்டு சீரும்
ஆன தொண்டர்க்கு என்று அங்கு உகந்து எண்ணி ஊனமற
மால் உள்ளத்து உள்ளான் என்னும் கலியன் தாளிணை
பால் செய்யும் நீர் பத்திமை -105-

மான பெருமை -ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்திலும் பெருமையை யுடையவன் அன்றோ
கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் -வியக்தமாக அருளிச் செய்கிறார்
பத்திமை -ஒரே சொல் பக்தி -பக்தி மை -பத்தி சித்தாஞ்சனம் என்றுமாம் –

————————————————–

மைப்படி மாயன் காப்பு ஈசன் உற்றான் என்றுமற்ற
தேவு என்பார் உண்டு உமிழப் பட்டாராய் கை விட்டு
ஆதியானை ஏத்தும் எனும் ஆலி நாடன் அந்தமிழை
ஓதி சேரும் மால் நீள் ஆகத்து -106-

மைப்படி -அஞ்சன மா மணி வண்ணன் -முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
உற்றான் -பிராப்தி யுடையவன் -பிதா ரக்ஷகச் சேஷீ பார்த்தா –இத்யாதி
நீள் ஆகம் –வரைபுரை திரு மார்பு -மணி மிகு மார்பிலே குரு மா மணியாய் அணையும் வஸ்து –

————————————————-

நீள் நகர் மாற்கு உற்ற காரணத்தால் புறம்பர் நீர்
நாண் இன்றி ஆட்பட்டு வீழாதே பேணி அடி
யார்க்கு இனியன் தொண்டு பூண்டு வாழும் எனும் ஆலி நாடன்
ஆர்ந்த நம் தீ வினைக்கு மாற்று -107-

தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
நச்சு நல் மா மருந்தும் ஆழ்வார் –

——————————————

மாற்ற வேண்டும் தம் பிறவிக்கு அஞ்சி ஒண்ணாது தன்னால்
மாற்ற மால் வல்லான் என்று அவன் அருளை பேற்றுக்கா
நாடும் ஆலி நாடன் தாள் நாடி என் தன் நெஞ்சமே
கூடி வாழ் நையாது வாடாது -108-

தாள் நாடி கூடி வாழ் -கொக்கு வாயும் படு கண்ணியும் போலே நமது சென்னி
ஆழ்வார் திருவடித் தாமரைகளில் சேரப் பெறுவதே வாழ்ச்சியாகும்
நையாது வாடாது கூடி வாழ்வோம்

—————————————————————-

வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-

—–

மால் நீர்மைக்கு எல்லை உகந்த ஊர் நூற்று எட்டு
சால நண்ணி யுள்ள கணக்கு இனிதாய் ஆலி நாடன்
செய்யும் திரு மொழி நூற்று எட்டும் ஓதிடுவார்
எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் சம்பத் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-8-மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்-

April 10, 2015

இத் திரு மொழியில் தனது தேக சம்பந்தத்தை அடியேனுக்கு போக்கி அருள வேணும் என்று
அவன் திருவடிகளிலே விழுந்து வேண்டுகிறார் –
பயிர் செய்பவன் பயிர் தலையிலே குடிசை கட்டிக் கொண்டு அதிலே இருந்து அப் பயிரைப் பாது காப்பது போலே
இந்நில யுலகத்திலே நித்ய சந்நிதி பண்ணி அருளி யுள்ள திவ்ய தேசங்களில்
தலைமை பெற்ற திருவரங்கமும் திருவாலியும் இத் திருமொழியிலே   எடுத்து ஆள்கிறார் –

————————————-

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்  கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

ஜீவாத்மாவுக்கும்  பரமாத்மாவுக்கும் சம்வாதம்
ஜீவாத்மா -அநேக ஜீவகோடிகள் உம்மை இழந்து பிரபஞ்சத்தில் இழிவடைய வேண்டுவது எதனால்
பரமாத்மா -விஷயங்களில் இழிந்து புண்ய பாப கர்மங்களால் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து வருந்தும் இடத்தும்
அவற்றுக்கு அஞ்சி என்னை சரண் அடையவில்லையே -இதில் என் குற்றம் ஒன்றும் இல்லையே
ஜீவாத்மா -மனமே உனது ஆதீனம் -புண்ய பாபங்கள் உனது அனுஹ்ரஹ நிக்ரஹம் அடியாகத் தானே
நிரந்குச ஸ்வாதந்த்ரன் நீ பொறுத்து அருளினால் கேட்பார் யுண்டோ -சொத்தை காப்பது ஸ்வாமி கடமை அன்றோ
பரமாத்மா -ஞானம் சக்த்யாதிகளை கொடுத்து சேதனராக ஆக்கி அருளினேனே -வீணாக என் மேல் பழி சொல்வான் என்
வாத பிரதிவாதங்களுக்கு எல்லை இல்லையே –
மாற்றம் உளவாகிலும் சொல்லுவேன் -என்கிறார்
ஆற்றங்கரை மரம் விலகி நிற்கவோ -பிறரைக் கூப்பிடவோ -எப்போதும் அபாயத்துக்கு இடமாகுமே
ஆற்றம் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே
மரத்துக்கு அபாயம் உள்ளது என்றாலும் அஞ்சுவதற்கு சேதனம் இல்லையே
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
சப்தாதி விஷயங்கள் உனது ஆதீனம் ஆனபின்பு புலன் வழியே சென்றேன் என்று குறை சொல்லக் காரணம் இல்லையே
பயக்ருத் பய நாசன -பயத்துக்கு காரணமும் பரிகாரமும் நீயே
சப்தாதி விஷயங்களுக்கு நீயே நியாமகன் –

————————————–

சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி
காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல்
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா -11-8-2-

சீற்றம்  கொள்ளும்படி அநேக பகவத் பாகவத அபசாரங்கள் யுண்டே
ஆத்மாபஹாரம் -அவதாரங்கள் கர்ம வச்யதையால் பிறக்கும் பிறப்புடன் ஒக்கும் என்ற எண்ணம்
அர்ச்சாவதாரங்களில் -கல் பொன் வெள்ளி செம்பு –  உபாதான புத்தியும்
சாஸ்த்ரங்களில் சொல்லும் செயல்களை செய்யாமையும் நிஷித்த செயல்களை செய்தும்
அன்றிக்கே
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று உன் மேல் நான் சொல்லும் குறையினாலும் -கோபம் உண்டாகுமே
ஆனாலும் செப்புவன் –
உன்னுடைய கிருபையும்
சம்சாரம் ஆர்த்தியையும்
வேறு புகல் இல்லாத அநந்ய கதித்வத்தையும் -கொண்டு விண்ணப்பம் செய்கிறேன்
ஆக -கீழ்ப் பண்ணின அபதாரங்களாலே சீற்றம் யுண்டானாலும்
இப்போது அடியேன் சொல்லப் புகுகிற வார்த்தைகளால் சீற்றம் யுண்டானாலும்
சீற்றம் உள-என்ற அனந்தரத்திலே இவ்வர்த்தத்தைத் தாமே அருளிச் செய்தார் இறே-
சீற்றம் உள என்று அறிந்தால் சொல்லும்  படி என் என்னில்
அருளும் ஆர்த்தியும் அநந்ய கதித்வமும் சொல்லப் பண்ணும்
சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம்படி இருப்பான் ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள்-

தடுத்து என்னை மீட்காமல் அனுமதி பண்ணி உதாசீனர் போலே இருந்து விடுகிறாயோ –
விலக்காமையே தோற்றுவிப்பதாக கூறப்படுகிறது
கிணற்றில் விழும் குழந்தையை தாய் எடாது இருந்தால் தாயே தள்ளினாள் என்கைக்குத்  தட்டில்லை
மரக்கலத்தில் யுள்ளாருக்கு அச்சம் வரும் –தீர்க்க சக்தி இல்லையே
பலருக்கும் யுண்டான அச்சம் இவர் ஒருவருக்கும் யுண்டானதே-தோன்ற -கலவர் -என்று பன்மையில் கூறுகிறார்
அவர்கள்  கவலை யுடம்பு அழிதல்-இவருக்கு
கலவர் மனத்திலும் மிக்கதே இவருக்கு
ஆழி வலவா -கலக்கம் தீர்க்க பரிகரம் உள்ளவனே -ஆற்றலும் யுள்ளவனே
வலவன்-வல்லவன் -வலது திருக்கையில் யுள்ளவன் என்றுமாம்-

———————————————-

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா —11-8-3-

உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -என் உள்ளம் தடுமாறாதபடி கடாஷித்து அருள வேணும்
தூங்கார் பிறவிகள் -தூங்குதல் அசைத்தல் சலித்தல் -மனம் சஞ்சலப்  படுவதற்கு ஹேதுவான சம்சாரம்
அன்றிக்கே தூங்குதல் -உறங்குதல் -தமோ குண வசத்தால் அஞ்ஞானம் மிக்க பிறப்புக்கள் என்னவுமாம்
பிறவிக்கண்-பழைமையான பாடம்-

—————————————

உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்து என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-

பிரளய ஆபத்தில் ரஷித்து அருளியவனே தம்மை சம்சார பிரளயத்தில் நின்றும் ரஷிக்க தக்கவன் என்பதால் –ஊழி முதல்வா -என்கிறார்
உரு ஆர் பிறவி -உடம்பும் உயிரும் கூடினதாயினும் உடம்பின் குணமான பேதமையே மிக்கு உயிரின் குணமான உணர்வு குன்றி
தேஹாத்மா அபிமானமே மிகுந்து ஆத்ம உஜ்ஜீவன வகையில் புகாத பிறப்பு -அச்சத்துக்கு காரணமாய் அமைந்த பிறப்பு
திரிதல் -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து இறந்து உழல்தல் -ஜன்ம மரணங்களுக்கும் நடுவே அகப்பட்டு நோவு பட்டு
எங்கும் புகலிடம் இன்றி பொறுக்கவும் மாட்டாதே படுகிற பாட்டுக்கு -இரு  பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போலே -என்கிறார்
இரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என்னுள்ளம் -திரு நாவுக்கரசு நாயனார்-

—————————————-

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா -11-8-5-

பெரு நீரில் அகப்பட்ட நரியினம் போலே ஒன்றும் தோன்றாது நிலை தளும்பிக் கிடக்கின்றேன்
பிறப்பதிலே புகுவதற்கு காரணம் ஊழ்  வினையே யாயினும் -அதனை எம்பெருமான் ஒழித்திட சமர்த்தனாய் இருந்தும்
ஒழித்திடாது இருத்தலே காரணமாக -தள்ளிப் புகப்பெய்தி   கொல் -அவன் மேல் ஏறிட்டுக் கூறுகின்றார் –
தள்ளிப் புகப்பெய்தி-எல்லாவற்றுக்கும் அவனை இன்னாதாகலாம் படி இறே பிராப்தி இருப்பது
கிணற்றிலே விழுகிற பிரஜையை வாங்காத தாயை தானே தள்ளினாள்-என்னக் கடவது இறே –
அடியிலே நீ பரிஹரியாமை அன்றோ இது அகல வேண்டிற்று –
தள்ளிப் புகப்பெய்தி   கொல் –நெருப்பிலே அகப்பட்டு-எரிகிறவனை-திரிய அதுக்குள்ளே தள்ளி ஒன்றை இட்டு அமுக்குவாரைப் போலே
நரிகள் பலவற்றுக்கும் யுண்டான பயம் இவர் ஒருவருக்கே யுண்டாயிற்றே -நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் –
ஊழி முதல்வா – நீ முன்பு  பரிஹரித்த பிரளயத்தின் அளவு அல்ல சம்சாரத்தின் பிரளயம் –
அங்கு ஒருவரும் அபேஷியாது இருக்கப் பரிஹரித்தாய் –
இங்கே நான் அபேஷிக்கச் செய்தேயும் பராமுகமாய் இருக்கிறாயே –

—————————————–

படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே  -11-8-6-

அதி சமீபஸ்தனான வயலாலி மணவாளனை
அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன்
பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே -என்றும்
அணியாலி கை தொழுது முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணம் பொன்னம் சேர்
சேவடி மேல் போதணியப் பெற்றோமே -என்றும்
ஈடுபட்டுக் கூறினவர் ஆகையாலே -எனக்கு உன் தன் அருள் அருளாய் -என்கிறார்
கலப்பை கொண்டு உழும் பொழுது இரு புறத்தும் உழு  படி செல்ல அதற்கு அறாமல்
இடை இடையே கிடக்கும் இடமும் படை எனப்படும்
தாமரைக் கொடிகள்  நீலோத்பல கொடிகள் கலைகள் -நீர் நில வளம் சொல்லும்
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி -அன்றோ
மணி கெழு நீர் மருங்கு அலரும் வயலாலி -வம்பார் பூ வயலாலி –
மணாளன் -மணவாளன் -மணம் ஆளன்-அமிருத கடவல்லி நாச்சியார் -வயலாலி எம்பெருமான் –
வலிய ஆட்கொண்டு மந்திர உபதேசம் செய்து அருளினான்
ஒரு சார் பசுமையாய் ஒரு சார் உலர்ந்து இருப்பது போலே ஞான லாபம் -பேறு கிடையாமையாலே பெறப் பெற்ற வாட்டமும் யுண்டே
வேர் பறிந்த கொடியின் மலர்களும் போட்ட இடத்திலே செவ்வி பெரும்படியான தேச விசேஷத்தில் இருந்தும்
நீ அடியேனுக்கு பூர்ண அனுபவம் அருளத் தட்டிலையே
இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து தொண்டு செய்த அடியேனுக்கு நித்ய விபூதியில்  நித்ய கைங்கர்ய செல்வம் அருளாய் –

——————————————

வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-

நான் என்ற மாத்ரம் சொன்னால் அகங்காரம்  என்பதால் அடியேன் நான் -என்கிறார்
இயற்கையாக கரும்பாய் உள்ள  நீ வேம்பாய் ஆனாலும் விட மாட்டேன் என்றால் போலே
இயற்கையான அடியேன் அடிமை மாறப் பெற்றாலும் உன்னை விடேன் என்பதாக
பின்னும் என்ற சொல்லுக்கு கருத்து உரைப்பர்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ  என்ற தொடர்
அடுத்த பாசுரத்தில் வருகிற அரங்க நகர் அப்பனைக் குறித்ததாம்
துண்ட வெண் பிறையன்-பிறையின் -துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
சந்திரனது உட்குறையைப்  போக்கி அருளின நீ என் மனக் குறையும் போக்கி அருள்வாய் -என்றவாறு
ஐ வாய்ப்பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ  -என்றது உன்னை எப்பொழுதும் சேர்ந்து இருக்க விரும்பும்
அடியவர்க்கு நிரந்தர சம்ச்லேஷத்தைத் தந்து அருள்வாய்
திரு வநந்த ஆழ்வானைப் போலே என்னையும் -அடைய அருளாய் எனக்கு உன் தன அருளே –
அவனுடைய திவ்ய தேஜஸ் ஸிலே ஈடுபட்டு பரஞ்சோதி என்கிறார் –
சூர்யன் சந்தரன் அக்னி -முச் சுடர்களிலும் மேபட்ட ஒளி என்றவாறு –

————————————————–

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8-

அரங்க நகர் அப்பா உனது அருள் அல்லது வேறு ஒன்றைப் பற்றுக் கோட்டாகக் கொள்ளேன்
அப்பன் -சேதனர்களுக்கு ஹிதம் சொல்லும் தந்தை அன்றோ நீ
மணியே -காண்பவர் இளைப்பைத் தீர்க்கும் வடிவு
மணி மாணிக்கமே -இயற்கையிலே மேன்மை உள்ளவனே
மது சூதா -விரோதி நிரசன சீலன்
நீ பின்பே பேறு தந்து அருளுவாய் என்றாலும் -தருவேன் -மாஸூச -என்றாவது வார்த்தை
சொல்லி அருளாய் -எனக்கு உய்யும் வகை பணியாய்-
பிரார்த்தனைக்கு இரங்கி அவன் சோதி வாய் திறந்து அருளும் பொழுது திரு முக மண்டலத்திலும் திரு மேனியிலும்
அருளுவதால் யுண்டான புகர் தோன்ற  பரஞ்சோதி -என்கிறார்
பரஞ்சோதி  —
பூ வலரும் போதை விகாசம் போலே
வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது –

—————————————

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —————————–11-8-9-

அவித்யாதிகளுக்கு ஒழிவு இல்லாமையாலே பிறவித் துயரம் மாறாமல் இருப்பது பற்றி நந்தா நரகம் -சம்சாரம்
இதற்கு அழிவு செய்வது எம்பெருமான் அருள் தவிர வேறு இல்லையே அழுந்தா வகை நாளும் இன்னருள் செய்வாய்
அவன் அருளைப் பெற்று வீடு பெற வேண்டுவார்க்கு அவன் திருவடிகளில் வழிபாடு அவசியம் -என்பது
தோன்ற தொண்டர் ஆனவருக்கு -என்கிறார்
கருணை மழை பொழிய மலர விழித்த திருக் கண்களில் ஈடுபட்டு -தாமரைக் கண்ணா
எந்தாய் -தந்தையாய் நீ இருக்க தரித்ரனாய் நான் இங்கே இருக்கவோ
சந்தோகன் -சந்தஸ் -வேதம் அத்தால் கானம் பண்ணப் படுபவன் -சாந்தோக்ய  உபநிஷத்துக்கு விஷயமானவன்-

—————————–

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

எல்லா வினையும் நீங்கப் பெற்று இன்புறுவர்
மன்றில் புகழ்-பழைமையான சரியான பாடம்
மன்றில் மலி புகழ் -சேராது
ஓன்று நின்ற ஒன்பது -ஒன்றோடு கூடி நின்ற ஒன்பது -ஒன்றும் நின்ற ஒன்பதும் என்னவுமாம்
மங்கை மன்னன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்
அரசாண்ட செருக்கு அற்று தமது குற்றம் குறைகளையும் உலகோர் கலி தோஷத்தையும் கடியுமாறு  
அருளிச் செய்த திரு மொழி
நல்வினையும் பிறப்புக்குக் காரணம் என்பதால் -வினையாயின சார கில்லா –
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு
எம்பெருமான் பேர் அருளால் பரம பதம் அடைவார்கள் -வல்லவர் தம் மேல் என்றும்
வினையாயின சார  கில்லா என்று எதிர் மறையாக அருளுகிறார்
விளக்கின் முன் இருள் போலே
காட்டுத் தீயின் முன் பஞ்சுத்துப் போலேயும்
இத் திருமொழி ஒதுகையாகிய ஞானத்துக்கு முன் வினைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் —

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை –
ரஷ்ய வர்க்கம் ஏதேனும் ஒரு படி நின்றாலும் ரஷணம் தான் மிறுக்கு உடைத்தான் ஆகையாலும்
ஒரு குறைகள் வாராது காணும் -என்று 
அதுக்கு உடலாகத் தான் கோவர்த்தன உத்தாரணம் பண்ணின படியைக் காட்டி அருளினான்

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்  வாசனையோடு  கழியும் படி 
அஹம் -என்று  ரஷகனான தன்னைக் காட்டி அருளினான் –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-7-நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்-

April 10, 2015

இத் திருமொழியால் கரணங்கள் பகவத் விஷயம் அவஹாகித்து உஜ்ஜீவனம் பெறவே என்று உபதேசித்து
அப்படி அவஹாகிக்காதவர்களை நிந்தித்தும் அருளுகிறார்-

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே –11-7-1-

சேவிக்கப் பெறாதவர்கள் கண்கள் கண்கள் அல்ல புண்களே ஆகும் –
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே -கண்ணிமைத்துக் கண்டார் தம் கண் என்ன கண்ணே
படுக்கைத்தலம் என்று பேணாதே பிரயோஜநாந்த   பரர்களுக்காக  -பேணான் கடைந்து
அமுதம் கொண்டு உகந்த -பிரயோஜநாந்தரம்-என்றாலும் இதைப் பெற தன்னை அண்டினான் என்று உகந்த
புள்ளூரும் பொன் மலையை -நீலமேகத் திரு வுருவனை ஹிரண்ய வர்ணாம் -நித்ய சம்ச்லேஷத்தால் பொன் மலை ஆனான்
காய்ச்சின பறவை மீதூர்ந்து பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் –
பொன் போலே விரும்பத் தக்க மலை என்னவுமாம்
கண்டாம் -கண்டோம் –

—————————————————-

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2-

எம்பெருமானுடைய திருப் புகழை -ஸ்வரூப ரூப குண விபூதி விஸ்தாரங்களை இதிஹாச புராண முகேன கேட்பதற்கே செவிகள் –
கேட்கப் பெறாத செவிகள் நிலத்தில் உள்ள பாழிகளோடு அவற்றோடு ஒரு வாசி இல்லை –
நீள் வான் குறளுருவாய் -நீள்வதற்கு என்றே  ஸ்ரீ வாமன மூர்த்தியானான் -பதுங்கி நின்று பாயும் புலி சிங்கம் போலே
சுருங்க நின்றதனையும் பெருக்க வளருகைக்கு உறுப்பாக –
தக்கணைக்கு மிக்கான் -தஷிணைக்கு மிக சிறந்தவன் -பரம பூஜ்யன் -ராஜஸூய யோகத்திலே தெளிவே
தோளாத மா மணியே -துளை இட்டு அனுபவித்து ஒளி குன்றும் மணி போலே இல்லாமல்
கேட்டாம் -கேட்டோம் –

—————————————-

தூயானைத் தூய மறையானைத் தென்னாலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது  உண்ட
வாயானை மாலை வணங்கி யவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3-

தூயான் -அந்தர்யாமியாக இருக்கச் செய்தும் தானும் பரிசுத்தன் -நம்மையும் பரிசுத்தன் ஆக்குபவன்
தூய மறையோன் -வேதைக சமைதி கம்யன் -வேதங்களுக்கு தூய்மை அபௌருஷயத்வம் -அவனை சொல்லி அல்லாமல் நிற்கை
தென்னாலி மேயான் -பிரமாணங்களால் கேட்டுப் போகை மட்டும் இன்றி பிரத்யஷமாக கண்ணாரக் காணலாய் இருக்கை
இவன் பேச்சுக்களை பேசுவதே பேச்சு மற்றவை கடலோசை போலே-

———————————————-

கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய்  மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ -11-7-4-

ஓடா அடலரி -விலஷணமான ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாய்
ப்ரஹ்மாதிகளுக்கு குடியிருப்புக் கொடுத்து அருளி சர்வ ஸ்வாமித்வத்தை நிலை நிறுத்தி அருளியவனும்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு விரோதியைப் போக்கி ரஷணத்துக்கு தனி மாலை இட்டுக் கொண்டு யுள்ளவனை
பிரேம பரவசராய்க் கொண்டு பாடுபவர்களின் பாட்டுக்களே பாடலாம்
அல்லாத பாட்டுக்கள் நரியூளை இடுதலோடே ஒக்கும்-

———————————————-

மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5-

கடல் போலே எல்லை காண ஒண்ணாததாய்
மணி மலை போலே நெஞ்சுக்கு ஆகர்ஷகமாய்
காளமேகம் போலே குளிர்ந்து விடாயைத் தீர்ப்பதாய்
குவளைப் பூவும் காயம் பூவும் போலே வைத்த கண் வாங்காதே பார்த்துக் கொண்டே இருக்கும் படியான திரு மேனியை யுடையவன்
இப்படிப் பட்ட திவ்ய மங்கள விக்ரஹத்தை திரு மெய்ய மலையிலே  ஆஸ்ரிதற்கு முற்றூட்டாக கொடுத்துக் கொண்டு அருள்பவன்
திருச் சங்கேந்தும் திருக் கையனைத் தொழும் கைகளே கைகள்
தொழாத கைகள் உலக்கை -கை தொழாக் கையல்ல -என்றது -தொழாக்கை கை யல்ல -என்று அந்வயிப்பது-

—————————————————

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்-தேன் பொருந்திய திருத் துழாயும்-அலரியும் -பில்வபத்திரத்தையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் -முட்கள் நிறைந்த தாமரைப் பூவையும் -ஆம்பல் மலரையும் –
முன் கண்டக்கால்-இவை எம்பெருமானுக்கே சாத்த உரியன என்ற அத்யவசாயம் கொள்ளாதார் நெஞ்சு நெஞ்சு அல்ல -நஞ்சே தான்
திருத் துழாய் யுடன் விஜாதீய வஸ்துக்களையும் எடுத்தது-
செண்பக மல்லிகையோடு இருவாட்சி -என்று சிறப்பித்து சொல்லும் புஷ்பங்கள் வேண்டா
பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகையின்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1-
பட்டர் -புரிவதுவும் புகை பூவே-சப்த ச்வாரச்யத்தையைத் திரு உள்ளம் கொண்டு ஏதேனும் ஒரு புகையும் பூவும் அமையும்
கண்டகாலிப் பூவும் சூட்டலாம்
ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்-சாஸ்திரம் விதித்து கையிலே முள் பாயுமே என்பதால் –
இவனது த்ரவ்யம் -பிரதானம் அன்று -சிநேக பிரதான்யம் –
ஸ்நேஹம் இல்லாதவன் இடில் திருத் துழாயும் ஆகாது -ஸ்நேஹத்தோடு இடில் அலரியும் ஆம் –
ஸ்ரீ ஜகன்னாத பெருமாள் -நீ இட்ட பூ கனத்து சுமக்க ஒண்ணாதே உள்ளது என்றாரே –

புள்ளாய்- ஏதேனும் ஒரு பஷியாகவும்
ஓர் ஏனமாய் -மிருகமாகவும்
தன்னை அமைத்துக் கொண்டவனுக்கு ஆகாதது எதுவும் இல்லை –
அவன் அவதார யோநியில் நியமம் கொள்ளாதாப் போலே உகந்து கொள்ளுகிற பதார்த்தங்களிலும் நியமம் இல்லை -என்றவாறு
உள்ளாதார் உள்ளத்தை என்றது -இவற்றை சமர்ப்பிக்க கூட வேண்டாம் மனத்தால் நினைத்தாலே போதுமே
நினைவே அமையும் செயல் மிகை -என்பர் பெரியவாச்சான் பிள்ளை-

————————————-

கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7-

கடல் கருவிளைப் பூ காயம் பூ -என்னும் இவற்றை ஒரு புடை ஒப்பாகச் சொல்லலாம் படியான திருமேனி
படைத்த எம்பெருமான் பக்கலிலே சுனைகளிலே யுள்ள புஷ்பங்களை கொணர்ந்து சமர்ப்பித்து
அடிமைத் தொழிலுக்கு இசைந்து அவனையே சிந்தித்து இருக்க மாட்டாத நெஞ்சு நெஞ்சே அன்று –
அன்பினால் ஆர்வத்தால் -அன்பாவது ஸ்நேஹம் -ஆர்வமாவது பெறாவிடில் முடியும் நிலை
சுனை ஆர் மலர் -புதிதாக புஷ்பங்களை சிருஷ்டிக்க வேண்டியது இல்லையே -இசைவு தானே வேண்டுவது
தாம் உளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது யுண்டே  -பொய்கையார்-

———————————————

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச்   செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார்  கண்டாமோ  -11-7-8-

ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யம் பெற்று பெறாப் பேறு பெற்றவனாய் வாரி அமுது செய்து அருளிய சிறு பிள்ளையை
செந்தாமரைக் கண்ணனை  -சர்வேஸ்வரனை -நினைத்து அறியாதவர்கள் –
சாஸ்திர ஞானத்தாலே சீரியர்களே யாயினும் அறிவில்லாதவர்களே ஆவார்
ஒண் தாமரையாள்  கேள்வன் ஒருவனையே நோக்கும் யுணர்வு என்பதால்
செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார்  – ஆவார் –

———————————————–

தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ்  அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர்  என்று    என் மனத்தே வைத்தேனே –11-7-9-

திருமால் இரும் சோலையிலே  நித்ய வாஸம் செய்து அருளும் எம்பெருமானுக்கு ஆட்படாதவர்கள் மனுஷ்ய யோநியிலே
பிறந்து வைத்தும் உணர்வின் பயன் பெறாதவர்கள் ஆகையாலே மானிடர் அல்லர் என்று சித்தாந்தம் செய்து கொண்டேன்
உண்டு உறங்கி விஷய போகங்களை அனுபவிக்கை மிருகங்களுக்கும் யுண்டே
என் மனத்தே வைத்தேனே -என்றதால் இது எவ்வித்ததாலும் மாற்ற முடியாத சித்தாந்தம் -என்கிறார் –

——————————————————-

மெய்நின்ற  பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும்  ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

மெய் நின்ற பாவம் -பிரக்ருதியிலே அனுபவிக்க வேண்டி நின்ற பாவங்கள்
திருமாலை சூழும் கழல் சூடி -திருமகள் கொழுநன் யுடைய -சர்வ வியாபியான திருவடிகளை -முடி மேல் கொள்ளுமவராய்
கை கழலா நேமியானாய் இருந்து  அடியார்கள் வினைகளை அகற்றி அருளும் எம்பெருமான் யுடைய
திருவடிகளைத் தலை மேல் புனைந்து பாவங்கள் தொலையப் பெற்ற கொற்ற வேல் பரகாலன் கலியன் அருளிச் செய்த
இத் திரு மொழியைப் பாடி ஆடுமின் -பாடினால் வாக்கு சபலமாகும் -ஆடினால் சரீரம் சபலமாகும் –
பாடுதலும் ஆடுதலும் மனப் பூர்வகமாகவே உண்டாக வேண்டுதலால் அர்த்தாத் அந்த கரணமும் சபலமாகும் என்று
நாட்டாருக்கு வழி காட்டி அருளினார்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-6-மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்-

April 10, 2015

இன் கனி தனி அருந்த மாட்டாரே -பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களை அனுபவித்தார் –
உபதேசிக்கப் பார்த்தார் -தேவதாந்திர பஜனம் செய்வார்களாயே திரிகின்றார்களே சம்சாரிகள்
உபதேசிப்பதையும் அந்த உபதேசம் சடக்கென பலிக்காமல்
திரு உள்ளம் நொந்து பேசுவதாயுமாய்ச் செல்கிறது இத் திரு மொழி –

————————————–

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே–11-6-1-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதீர் -திருவிருத்தம்
க்ருத்ஜ்ஞராக இருக்க உபய விபூதி நாதனையே ஏத்தப் பாருமின்
ஓர்தல் -ஆராய்ந்து அறிதல்
ஓரீர் -முன்னிலைப் பன்மை எதிர்மறை வினைமுற்று-

—————————-

நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று
எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர் களே –11-6-2-

மகா பிரளயத்தில் அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் ஏழு மால் வரை முற்றும்
மல்லாண்ட திண் தோளால் வாரிப்பிடித்து திரு வயற்றிலே புகப் பெய்து அருளின காலத்தில் எச்சில் ஆகாதார் யுண்டோ
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த-சர்வேஸ்வரன் பிரளயம் சென்று அடராத படி தன் திருக் கையாலே பரம பதத்தை
தன் கைக் கீழே இட்டுக் கொண்டு நின்ற காலம் -என்னவுமாம் –
அவன் அருளே உலகாவது -சரியான பாடம் -உலகாள்வது -பாட பேதம்

——————————————-

நெற்றி மேல்  கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3-

நெற்றி மேல்  கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும்
நீண்ட நால்வாய் ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்-
ருத்ர பிரமன் -நீண்ட தொங்குகின்ற வாயையும் துதிக்கையும் யுடைய ஐராவதம் என்கிற வெள்ளை யானைப் பாகனான இந்த்ரனும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட-
ஜெயசீலனான சமுத்திர ராஜன் பிரளயத்தில் விழுங்க ஒண்ணாத படி
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே – சூத்திர ஜனங்கள் கொடும் தன்மை இருக்கிறபடி என்னே
பகடு யானை –

—————————————

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலே  யானகாலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி  சேர்  திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4-

சர்வ ஸ்வாமி என்கிற முறையாலே திரு வயிற்றிலே வைத்து உஜ்ஜீவிப்பித்தவனும்
இப்படி ரஷித்த படியால் உகந்து திரு மேனி புகர் பெற்று களங்கனி வண்ணனுமான எம்பெருமான் ஒருவனையே
திருவடி வணங்கப் பாருமின்
களை கண் -சரணம்
முனித்தலைவன் -லோக ரஷணம்  ஒன்றேயே  சிந்தை செய்து கொண்டு அருள்பவன்
முழங்கொலி சேர் திரு வயிறு -திரு வயிற்றினுள் புகும் போது யுண்டாகக் கூடிய ஆரவாரத்தின்  மிகுதியைச் சொல்லுகிறது-

கல்லீர்களே -கற்க மாட்டீர்களோ-

————————————————

பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலே யான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

பிரளயத்தில் அனைவரையும் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளி
சர்வ ஸ்வாமித்வம் தோற்ற உலகையும் அளந்து கொண்ட உம்பர் கோமானுடைய பல்லாயிரம் திரு நாமங்களை
பேசிக் கொண்டே இருத்தலே உங்களுக்கு தக்கதாம்
பார் -எல்லா உலகங்களுக்கும் உப லஷணம்-

———————————————

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி  உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6-

பெற்ற தாய் போலே பரிந்து திரு வயிற்றிலே இருத்தி உஜ்ஜீவிப்பித்து அருளின பெருமான்
வெறுக்கும் படியாக வேறு ஒரு சூத்திர தேவதையை கொண்டாடுவது
அறிவற்ற மணை  கட்டையை வெந்நீர் ஆட்டுமா போலே
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -திரு வாசிரியம் -6-
மாட்டாத தகவு அற்றீரே -ஒருவருக்கும் எளிதில் கிட்ட முடியாத எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகாது ஒழிந்தீர்களே-

———————————————–

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே –11-6-7-

பிரளயத்தில் திரு வயிற்றினுள் அடக்கி ரஷித்து அருளியவனே அத் திருக்குணம் நன்கு விளங்க
திருக்கண்ண மங்கை திவ்ய தேசத்தில் நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
அவனையே இடைவிடாது சிந்தித்து இருப்பதே நன்றி அறிவுக்குத் தகுதி
அப்படி சிந்திக்க மாட்டாத பாவிகளை நெஞ்சிலே இட்டு எண்ணாது இருந்தால் அதுவே நமக்கு பரம போக்கியம் –
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே-என்கிறார்
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி
திவி வா புவி வா மமாஸ்து வாஸோ நரகே வா நர காந்தக ப்ரகாமம் அவதீரித
சாராதார விந்தௌ சரனௌ தே மரணேபி சிந்தயானி -முகுந்த மாலை
எம்பெருமானையும் எம்பெருமான் அடியார்களை சிந்திப்பதைக் காட்டிலும் விமுகர்களை சிந்தியாது இருக்கையே பரம புருஷார்த்தம் –
மருவினிய தண்ணார்ந்த கடன்மல்லைத் தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே –
பகவத் ஜ்ஞானமும் வேண்டா -வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா–அவைஷ்ணவர்களை நினையாத போது -இனிது என்கை- –

———————————————————

மறம் கிளர்ந்து கரும் கடல் நீர்  உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே –11-6-8-

திருவயிற்றில் வைத்து ரஷித்து அருளி அத்தாலே திரு மேனி புகர் படைத்த பரஞ்சோதி பெருமானை
நினைக்க மாட்டாத வர்களுக்கு மேலே நீசர்கள் இல்லை –

———————————————————

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே–11-6-9-

திருவயிற்றில் வைத்து ரஷித்து அருளி -பரம உதாரனன்-நீல மணி வண்ணன் நித்ய வாஸம் செய்து அருளும்
திருக் குடந்தை   நகரை பாடி ஆடுமின்
உண்டு ஒத்த திரு வயிறு -உண்ட பின்பும் முன்பு போன்ற திரு வயிறு யுடையவன்
முதல் திரு மொழியில் -சூழ்  புனல் குடந்தையே தொழுமின் -என்றார்
இங்கே தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே -என்கிறார்
தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -திரு நெடும் தாண்டகம் -தலைக் கட்டி அருளுவார் –

———————————————————

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10-

இத் திருமொழியை கற்று வல்லார்கள்
புருஷகார பூதையான பெரிய பிராட்டியார் யுடைய திரு அருளுக்கு இலக்காகப் பெற்று
நித்ய விபூதியிலே நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழப் பெறுவார்-

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .