ஸ்ரீ யபதி அநந்த கல்யாண நிதி யுடையவன்
ஜ்ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் போல்வன மேன்மை பரமான திருக் கல்யாண குணங்கள்
வாத்சல்யம் சௌலப்யம் சௌசீல்யம் போல்வன எளிமை பரமான திருக் கல்யாண குணங்கள்
குணாநுபவம் செய்பவர் பலவகைகள் உண்டே -பரத்வம் மட்டும் -சௌலப்யம் மட்டும் -இரண்டையும் சேர்த்து அனுபவிப்பவர்கள் உண்டே
எவ்வளவு மேன்மையானவன் இப்படி எளியவன் என்பாரை அநு கரித்து செல்லும் இத் திரு மொழி
மேல் 11 பத்திலும் மானமரும் மென்னோக்கி -இது போலே யுண்டு
பரத்வத்தை முன்னே பேசி சௌலப்யத்தை பின்னே பேசுகிறது அவ்விடத்தில்
இங்கே சௌலப்யம் முன்னே பேசி பரத்வம் பின்னே பேசும்
ஒருவர் பேச்சாகவே செல்லும் இத் திரு மொழி –
அங்கே இகழ்வாரும் புகழ்வாருமாக இருவர் பேச்சாக செல்லும்-
இத் திரு மொழியிலும் ஈற்றடியை முன்னே கொண்டு சௌலப்யம் முன்னே சொல்லி
பரத்வம் பின்னே சொல்வதாக நிர்வஹிக்க குறை இல்லை
ஆனாலும் பரத்வத்தை பூர்வ பஷமாக்கி சௌலப்யத்தை சித்தாந்தம் ஆக்கி அனுபவிப்பதே ஆழ்வாருக்கு அபிமதம்
என்று தோன்ற பாசுரம் அமைந்த படியே அனுபவிப்பதே நன்று
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யானார் என்று வெறுத்து போய் விடாமல் சௌலப்யம் கண்டு அணுகுமின்-
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான்
பற்றி யுரலிடை யாப்பும் யுண்டான் பாவிகாள் யுங்களுக்கு ஏச்சுக் கொலோ –
இடைச்சி கட்டின கட்டை அவிழ்க்க முடியாதவனா நம்முடைய சம்சாரக் கட்டை அவிழ்க்க போகிறான் என்று
குழைச் சரக்காக நினைத்து விடாமல் மேன்மைக் குணங்கள் யுண்டே என்று உகந்து ஆஸ்ரியுமின்
என்பதாகவும் வெளியிடுதல் இத் திருமொழிக்கு பரமார்த்தமாகும்-
——————————-
எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே-10-6-1-
தொடங்கும் பொழுதே -எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே -என்ற அழகு என்னே
மேன்மையின் எல்லையில் நிற்கும் பராத்பரன் எளிமையின் எல்லையிலும் நின்று
அருளிக் காட்டுகின்றானே -என்ன கபடச் செயல் –
சீரிய சிங்காசனத்தில் வீற்று இருந்து ஆச்சார்ய பதம் செலுத்த வேண்டிய தான் தன்னை சிஷ்யனாக
ஆக்கிக் கொண்ட மாயம் -நர நாரணனாய் –
அற நூல் சிங்காமை விரித்தவன் –வேத இதிஹாச புராணங்கள் -அர்த்த பஞ்சகத்தையும் கை இலங்கு
நெல்லிக் கனியாக காட்டி அருளும்
திரு அஷ்டாஷர மகா மந்த்ரத்தை வெளியீடு அருளினான் என்னவுமாம்
மேலும் சர்வ சம் ரஷகன் -திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளி –
தாழ் குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு இவ் ஏழ் உலகும் யுண்டு இடமுடைத்தால் சாழலே –
இங்கே நெருக்கிப் புக -என்பது – என் நாம் எங்கே தவறிப் போகிறோமோ என்று புகுகிற படி
அங்காத்தல் -வாய் திறத்தல்
அளை வெண்ணெய் -அளையும் வெண்ணெயும் -தயிரும் வெண்ணெயும் -என்றபடி –
அளையப் படுகிற வெண்ணெய் என்றுமாம் -அளைத்தல் -துழாவுதல் –
—————————————
குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே -10-6-2-
நைக வக்ரை சந்தனம் கொடுத்து அதனால் கூனை நிமிர்த்தி அருளிய ஸ்ரீ கிருஷ்ணன்
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் -திருவாய் -1-5-5-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டரங்கவோட்டி
உள் மகிழ்ந்த நாதன் -திருச்சந்த விருத்தம்
——————————————————
உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வலியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே-10-6-3-
காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ் வுயிர்ப்ப
வாய்ந்த மது கைடபரும் வயிர் உருகி மாண்டார் -மூன்றாம் திருவந்தாதி-
————————————————
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-
ஸ்ரீ நரசிம்ஹமாய் ஆஸ்ரித விரோதிகளை ஒழித்த பிரானே
உலகு அளந்த உத்தமனே அளை வெண்ணெய் அளந்தான்
——————————————————
நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-5-
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –
அடியார் துயர் எல்லாம் தன்னடையே கழிந்து ஒழியுமாறு
திரு உள்ளம் பற்றி ஞான பக்தி விரக்திகளை வளரச் செய்து கொண்டு போந்து அவர்களை
நித்ய ஸூரி துல்யராக ஆக்கி வைக்கும் பெருமான் -இமையோர் அளவும் செல –
அன்றிக்கே ஓங்கி உலகு அளந்த சமயத்தில் நெடு வான் அளவும் நீண்டவனாகி இமையோர் அளவும்
செல்லும்படியாக திரு வடிகளை நீட்டி அருளிய பிரான்
தன்னடியார் -யமபடர் திறத்தில் -இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன தூதுவரை கூவிச் செவிக்கு –
என் தமரை நமன் தமர் வினவப் பெறுவார் அலர்-வினவுதல் தண்டனை செய்தலுக்கு பர்யாயம்
இப்படிப் பட்ட பராத்பரன் ஆய்சிகளால் கட்டுண்டு இருக்கும் எளிவு என்னே-
———————————————-
பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-
ஹேய புருஷார்த்தங்களில் பற்று இன்றிக்கே உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
அத்யவசாயம் கொண்டு பணிந்து துதிக்க வல்லார்களை அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கி அருள்வான் –
கார்த்த வீர்யார்ஜூனனை நிரசித்து அருளிய சக்தன் அசக்தியை அபி நயித்து ஆப்புண்டு இருக்கிறான் –
—————————————-
படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே–10-6-7-
கரண களேபரங்களைக் கொடுத்து அருளி தன்னைப் பணிந்து ஏத்த வல்லவர்களுக்கு துயர்களைத் தொலைத்து
அந்தர கிங்கரர்களாக்கி அருளுபவன்
அடியார்களுக்கு தீங்கு இழைத்த ராஷசர்களை நிரசித்து அருளியவன்
இன்று அஜ்ஞனாயும் அசக்தனுமாய்க் கொண்டு இடைச்சி கையிலே கட்டுண்டு கிடக்கிறான் –
——————————————————–
நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-8-
பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்
பிரசித்தியை உடைத்தாய் மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –
இவ்வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே உடையனாய் -என்கிறது
அல்லன்ன வில்லேயதனை –
வல்லன்ன வில்லேயதனை –
வில்லென்ன வல்லேயதனை -பாட பேதங்கள்
அல் -என்று இருளாய் -இருண்ட வில் -வல்லென்ன -கடினமான –
இளம் கொற்றவனே -பன்னிரண்டு வருஷம் திரு அயோத்யையில் சீதா பிராட்டியுடன் போக ரசம் அனுபவித்தமை
அதற்கு மேலே கைகேயி வரம் வேண்ட கானகம் சென்று இராவணனை முடித்த வீரப் பாடுடையவன் கிடீர்
தனது பெருமை எல்லாம் ஒளித்து எளிமையைக் காட்டா நின்றான் –
——————————————————————-
சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-9-
கேசியை நிரசித்து அருளியவனும்
சூர்பணகைக்கு அங்க பங்கம் செய்து அருளினவனும்
மராமரம் ஏழும் எய்து அருளினவனும்
இங்கே வெண்ணெய் களவுக்கு கட்டுண்டு கிடக்கிறான்
கேழ் -ஒளியும் நிறமும் –
பிடரி மயிர் சுருண்டு செந்நிறம் கொண்டதால் -சுரிந்திட்ட செங்கேழ் உளை
சேஷ்டிதங்கள் க்ரம மாறாடி அனுபவம் -திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்தல் மாத்ரம் இங்கே விவஷிதம்-
——————————————————
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –10-6-10-
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்-என்பதால்
சௌலப்ய அனுபவத்திலே ஆழ்வார் நோக்கம்
அபூர்ணரன் போலே வாரி வாரி விழுங்கி -ஏச்சு பேச்சுக்கு சுணங்காமல் -ஆஸ்ரிதர் ஹஸ்த ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தாலே
தரிப்பு கொண்டவன் -மகா குணம் விளங்கும் –
சம்சாரிக துக்கங்களை அனுபவிக்கப் பெறார்கள் – பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
அந்தமில் பேரின்பத்தையும் அடைந்து ப்ரஹ்மாதிகள் குடி இருப்பும் பெறுவார் –
———————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
–
Leave a Reply