Archive for the ‘பிரமாணத் திரட்டுக்கள்’ Category

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –இரண்டாம் பத்து –

November 30, 2023

1. விஷயதே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா:
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா: ஸபுஷ்பாங்குர கோரகா: ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன

———


2. உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸூஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச. –ஸ்ரீராமா. அயோத். 59 : 5.

ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளையுடையன ஆயின்

இவையெல்லாம் தம்மைப்போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு 1ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

———


3. ஸீதே ம்ருத: தேஸ்வஸூர: பிதராஹீந: அஸி லஷ்மண. –ஸ்ரீராமா. அயோத். 102 : 4

ஸ்ரீராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு.

——–


4. நசஸீதா த்வயாஹீநா நசாஹம் அபிராகவ
முகூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவோத் த்ருதௌ.–ஸ்ரீராமா, அயோத். 53 : 31.

இத்திருவாய்மொழியில், இளைய பெருமாளைக்காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், 3மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்; இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமையற, பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்.

———


5. கிரயோ வர்ஷதாராபி: ஹந்யமாநா ந விவ்யது:
அபி பூயமாநா: வ்யஸநை: யதாதோக்ஷஜ சேதஸ:. – பாகவதம். 10. 20 : 15.

சர்வேஸ்வரன் காப்பவன் என்று இருப்பார், மூவகைத் துன்பங்களாலும் வருகின்ற இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று, மலைகள் போன்ற அலைகள் மேலே தாவிச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே!

———-


6. பதிஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத : பாரம்நாஸஸாத ஆப்லவோயதா. –ஸ்ரீராமா, அயோத். 119 : 36

பின்பு, நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு கண்ணுறங்காது; ‘ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி. அப்படியே அன்றோ இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.

——–


7. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந:
மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.–ஸ்ரீராமா. சுந். 9 : 30.

 

பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே-என்கிறாள்.

———


8. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.–தைத்திரீய நாராய. 11 : 8.

 

இறைவன் உயிர்கட்கெல்லாம் ஈஸ்வரனாயும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாதவனாயும் இருக்கிறான்,’

——–


9. யஸ்ய அஸ்மி. 

இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்

————


10. தௌ வநாநி கிரீம்ஸ்சைவ ஸரிதஸ்ச ஸராம்ஸிச
நிகிலேந விசிந்வாநௌ ஸீதாம் தஸரதாத்மஜௌ.  ஸ்ரீராமா. ஆரண். 61 : 20.

கடலும் மலையும் விசும்பும் துழாய்’ என்பதற்கு, ‘சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராம இலக்குமணர்கள் வனங்களிலும் மலைகளிலும் நதிகளிலும் தடாகங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக் கொண்டு திரிந்தார்கள்,’ என்கிறபடியே, இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று, வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது,’ என்று பொருள் கூறலுமாம்.

தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆகையாலே, தேடப் பிறந்தவர்கள் அல்லர்’  என்றும்,
சீதாம்’என்றதனாலே, ‘தேடிக்கண்டிலோம் என்று ஆறியிருக்கலாம் விஷயமன்று’ என்றும்,
‘இத்தால், அவர்கள் ஜீவிக்கை என்று ஒரு பொருளுண்டோ? ஜீவித்தல் சக்கியமன்று’
என்றும் உரையாசிரியர் அச்சுலோகத்திற்கு விசேடப்பொருள் அருளிச் செய்வர்.

——-


11. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம.–ஸ்ரீராமா. யுத் 18 : 33.

 

அடல்கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் – ‘மிடுக்கை யுடைத்தான படையாகிற திருவாழியைக் கையிலேயுடைய, சர்வேஸ்வரனையோ நீயும் காண ஆசைப்பட்டாய்? ‘என்னை அடைந்தவர்களை எல்லாத் துன்பத்தினின்றும் நீக்கிப் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு’ என்று கூறிய வார்த்தை-இது எனக்கு நோன்பு’ என்னும் நிலை தவிர்ந்து, (ஆயின், அவ்வார்த்தை பொய்யோ?’ எனின், இப்பொழுது தனக்கு உதவாமையாலே பொய் என்று இருக்கின்றாள். ‘ஆயின், பொய் என்று இருக்கின்றவள் மெய்ந்நீர்மை தோற்கக் கூடுமோ?’ எனின், இராமாவதாரத்தில் மெய்யும் 1கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.-ஆயுதம் எடேன்’ என்ற சூளுறவைப் பொய்யாக்கின கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்  என்றபடி-)பாரதப்போரில் மூன்றாம் நாள் அருச்சுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, செய்த சூளுறவையும் அழித்துத் திருவாழியைக்கொண்டு ஸ்ரீவீடுமரைத் தொடர்ந்தான்; ஆதலால், செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல்கொள் படையாழி அம்மான்’ என்கிறாள். அடல் கொள் படை அடல் என்றது மிடுக்கு. எதிரிகள் மிடுககைக் கொள்ளும் படை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாய் இருக்கும் படை என்னுதல்.

———

12. ஏஹிஏஹி புல்லாம்புஜபத்ர நேத்ர
நமோஸ்துதே தேவவர அப்ரமேய.
ப்ரஸ்ஹ்ய மாம் பாதய லோகநாத
   ரதோத்த மாத் பூத ஸரண்ய ஸங்க்ஸேய.-(பார. பீஷ்ம.  59 : 98)

ஏஹ்யேஹி – கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று ‘எங்கள் அம்மை நாயனார் மாறி   மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என்? புல்லாம் புஜபத்ர நேத்ர-என்றும் ஆணை  மறுத்தால் சேதம் என்? சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால். பிரஸஹ்ய மாம்  பாதய – ‘ஆயுதமெடேன்’ என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம்  இருக்கிற வரையில் தோலேன்; ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையறுத்தருளீர்,’
லோக நாத-உமக்கும் வீரத்துக்கும் தோலோன்; முதன்மைக்குத் தோற்பன்’ என்பது   அவ்விடத்துப் பாரதச் சுலோகத்துக்கு உரைகாரர் அருளிச் செய்த பொருள்.

  ‘ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழி யிடைத்துயிலும்
  காரண சிற்குண ரூப மலர்க்கொடி காதல் மனத்துறையும்
  நாரண அற்புத வானவ ருக்கொரு நாயக நிற்பணியும்
  வாரண முத்தி விசால தலத்திடை வாழ்வுற வைத்தவனே.’-  என வீடுமன் துதித்தலை, வில்லி பாரதம் மூன்றாம் போர்ச்சருக்கத்து 14 முதல் 20 முடிய
உள்ள செய்யுள்

———


13. ஸபங்காம் அநலங்காராம் விபத்மாம் இவ பத்மிநீம்
வ்ரீளிதாம் துக்க ஸந்தப்தாம் பரிம்லாநாம் தபஸ்விநீம். –ஸ்ரீராமா. சுந். 15 : 22.

14. அவ்யக்தலேகாம் இவ சந்த்ரலேகாம்
    பாம்ஸூ ப்ரதிக்தாம்இவ ஹேமலேகாம்
    க்ஷதப்ர்ரூடாம்இவ பாணலேகாம்
    வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம்

நைவாய எம்மே போல் -நைவையுடைய எங்களைப் போன்று. இனி, ‘நைவு தான் ஒரு வடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற எங்களைப் போன்று’ என்று கூறலுமாம்; ‘பூமியினின்றும் தோன்றினவளைப் போன்றிருந்தவளும், அதனை அழித்து அலங்காரம் செய்கின்றவர்கள் இன்மையின் ஒப்பனை அழிந்திருந்தவளும், பெருமாள் வரினும் ‘இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது’ என்னும்படி முதலிலே தாமரை குடி போன பொய்கை போன்றிருந்தவளும் போய்த் தேய்ந்தற்ற படிக்கும் பசலைக்கும் நிதரிசனமாகச் சொல்லும்படி இருந்தவளும், ‘நற்சரக்குக்கு வந்த அழுக்கு’ என்று தோற்ற இருந்தவளும், அம்பு வாய் (அம்பு பட்ட புண்.)உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற்போலே ‘அகவாயில் இழவு பெரிது’ என்று தோற்ற இருந்தவளும், பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேகதுண்டங்கள் போல இருந்தவளும், (பெருமாளுடைய திருமேனியிற் பிரிக்கப்பட்ட ஏகதேசம் என்று தோற்ற இருந்தாள்  என்றபடி.)ஆன சீதை’ என்றார் வால்மீகி பகவானும்.

——–


15. பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸிதேக்ஷணா
ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களாநி அபிதத்நுஷீ. 

——–


16. ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹதா ஜ்வலதா நித்யம் அக்நிநேவாக்நிபர்வதா:. –ஸ்ரீராமா. சுந்த. 35 : 44.


17. அந்தர்தாஹேந தஹந: ஸந்தாபயதி ராகவம்
வந தாஹாபிஸந்தப்தம் கூடோக்நிரிவ பாதபம். –ஸ்ரீராமா. அயோத். 85 : 17

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான்

ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி. மெல் ஆவி உள் உலர்த்த – சரீரத்தில் உண்டான மிருதுத்தன்மை இவட்கு ஆத்துமாவிலும் உண்டாய் இருத்தலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.

—————


18. ஸாரதீம் ரஜநீஞ்சைவ த்ருஷ்ட்வா ஜ்யோத்ஸ்நாநு லேபநாம்
காமவ்ருத்தஞ்ச ஸூக்ரீவம் நஷ்டாஞ்ச ஜனகாத்மஜாம்
   புத்த்வா காலமதீதஞ்ச முமோஹ பரமாதுர:.–  ஸ்ரீராமா, கிக்ஷ்கிந். 30 : 3.

கழிந்து போன காலத்தைக் குறித்துத் துக்கத்தால் பீடிக்கபட்டவராகிச் சோகிக்கிறார்’ என்கிறபடியே, முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும்

———


19. ந மே துக்கம் ப்ரியாதூரே ந மே துக்கம் ஹ்ருதேதிவா
   ஏததேவ அநுஸோசாமி வய: அஸ்யா: ஹி அதிவர்த்ததே.-ஸ்ரீராமா. யுத்த 5 : 5.

போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி ‘இப்படிச் சோகித்தார் உளரோ? எனின், 4‘என்னுடைய காதலியானவள் தூரத்திலிருக்கிறாள் என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; பிரிவு வந்து என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; அது அவன் தலையினை அறுக்கத் தீரும்;இது ஒன்றுமே எனக்குச் சோகத்திற்குக் காரணம்; 1போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாதே!’ என்றார் ஸ்ரீராமபிரான்.

——–   


20. அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
    க்ருதக்ருத்ய: ததாராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ. –சங்க்ஷேப ராமாயணம். 

விபீஷணனுக்கு முடி சூட்டிய பின்னர்ச் செய்து முடிக்க
வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தவராய் நடுக்கமும் தீர்ந்து மகிழ்ந்தவர் ஆனார்’

இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு குறைவுபட்ட ஞானத்தை உடையவனாய் இவரோடே கலந்த பின்பு மலர்ந்த ஞான வெள்ளத்தையும் உடையவன் ஆனான்; திவ்விய மங்கள விக்கிரஹமும் புகர் பெற்றது இப்போது என்றபடி. துளக்கு அறுதலாவது, ‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் உண்டான 1ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்தல் 2‘நடுக்கமற்றவனானான்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. இனி, துளக்கு அறுதலாவது, ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்கிற உள் நடுக்கமும் தீர்ந்தான் இப்போது

————-


21. க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிச அப்யய:
   க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம். -மஹாபாரதம். பீஷ்ம பர்வம்.

 சர்வ ரக்ஷகனான கிருஷ்ணனே உலகத்துக்குக் கண். 3‘உலகங்களுடைய தோற்றமும் கிருஷ்ணனே; காணப்படுகிற சராசரங்களாகிற எல்லாம் கிருஷ்ணன் பொருட்டாகவே இருக்கின்றன; இது பிரசித்தம்’ என்கிற பிரமாணப் பிரசித்தி இருக்கிறபடி.

———-


22. ஸ்தயம் ஸத்யம் புநஸ்ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
   வேத ஸாஸ்த்ராத் பரம் நாஸ்தி நதைவம் கேஸவாத் பரம்.

அல்லது இல்லை ஓர் கண்’ என்கிறார். ‘ஆயின், மற்றைத் தேவர்களும் காப்பவர்களாகக் கூறப்படுகின்றனரே?’ எனின், மாலைக்கண் என்று இருப்பார்க்கு அல்லாதவை எல்லாம் மாலைக்கண்ணாகத் தோற்றும். திண்ணம் – இது திடம். 2‘சத்தியம் சத்தியம்; மீண்டும் சத்தியம்; கைகளை மேலே தூக்கிச் சொல்லுகிறேன்; வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் இல்லை; அது போன்று கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறு இல்லை’ என்றார் ஸ்ரீ வியாச பகவான். ஆதலின், இவரும் ‘திண்ணம்’ என்கிறார்.

    ‘நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.  

————

23. அத்யத்புதம். இதம் வாக்யம் தவ ராம ஸூபாக்ஷரம்
     பாவந: ஸர்வலோகாநாம் த்வமேவ ரகுநந்தந, –ஸ்ரீராமா. உத்தர. 82 : 9.

அளிப்பார் ஆர் – இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே ‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும் இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்

—————


24. நஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.

 

காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,

மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.

————


25. தத: கரோத பரீதேந ஸம்ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேணச்சிந்நம் தஸ்ய ஸிரோமயா.–மத்ஸபுராணம்

தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட – 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.

——–
26. ஸஏஷ ப்ருது தீர்க்காக்ஷ: ஸம்பந்தீ தே ஜநார்த்தந: – பாரதம்.

27. தம்இமம் ஸர்வஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்
அர்ச்யம் அர்ச்சிதும் இச்சாம: ஸர்வே ஸம்மந்தும் அர்ஹத.–பாரதம், ராஜசூய

பெரியதாயும் விசாலமானதாயும் நீண்டதாயும் இருக்கிற திருக்கண்களையுடையவன்காண், உங்களுக்கு மைத்துனனாகப் புகுந்திருக்கிற கிருஷ்ணன்,’ என்று அவ்விறமைத் தன்மையினைக் கிருஷ்ணன்மேல் மாட்டெறிந்தான், தத்துவ ஞானியான வீடுமன். அவ்வாறு மாட்டெறிந்து முதன்மையினை அறுதியிட்ட வீடுமனுக்கு ஒரு சிறப்பும் செய்திலர் தேவர்கள், 6‘கிருஷ்ண பரமாத்துமாவை, இந்த இராய சூய யாகத்தில் பூசிக்கத் தக்கவராக நாங்கள் விரும்புகிறோம்; இச்சபையில் இருக்கிற நீங்கள் எல்லோரும்.அவரைப் பூசிப்பத்தற்கு உங்கள் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தக்கவர்களாய் இருக்கின்றீர்கள்,’ என்று சகாதேவன் கூறித் தனது வைராக்கியத்தைத் தெரிவித்த காலத்தில், அவன் வைராக்கியத்தைக் கண்ட தேவர்கள், அவன் தலையில் மலர் மாரியைப் பெய்து அவனை வாழ்த்தினார்கள்.

இதனால், ஒருதலையாக வேண்டற் பாலது ஞானத்தைக் காட்டிலும் வைராக்கியமே என்பது புலப்படும். ஆதலால். இவரும், ‘அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும், ‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், ‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும், ‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும் அவ்வைராக்கியத்தையே அருளிச்செய்தார்.

———–


28. பஹூஸ்யாம் பிரஜாயேயேதி. பக். –தைத்திரீய. ஆனந். 6 : 3.

நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள்

  ஜ்ரும்பிதம் தத்தநு: த்ருஷ்ட்வா ஸைவம் விஷ்ணு பராக்ரமை:
அதிகம் மேநிரே விஷ்ணும் தேவா: ஸர்ஷிகணா: ததா. – ஸ்ரீராமா. பால. 75 : 19.

மிகும் தேவும் – தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான (சந்தேகம் கொள்ளும்படி)தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

—–


29. ராம: கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர:
ரூபதாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே. –ஸ்ரீராமா. சுந். 53 : 8

தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார்.

ராம சர்வாங்க சுந்தரராய் இருக்கை. கமலபத்ராக்ஷ – அதிலே ஒரு சுழியாயிற்று-  அமிழ்ந்துவராக்கு வேண்டுவது. ‘அக்கண் அழகுக்கு எல்லை என்?’ என்னில், ஸர்வ  ஸத்வ மநோஹர:- திர்யக் ஜாதியனாய்ப் பணையோடு பணை தத்தித் திரிகிற என்  நெஞ்சையும் அபஹரித்தன்றோ? ரூப தாக்ஷிண்ய ஸம்பந்த ப்ரஸூத; – தேக  குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றதுதான் ஒளத்பத்திகமாயிருக்கும்.  ஜநகாத்மஜே -‘அற விஞ்சச் சொன்னாய்; இனி, இங்ஙன் சொல்லலாவார் உண்டோ, இல்லையோ?’ என்று பிராட்டிக்குக் கருத்தாக, பின்னை உம்மைச் சொல்லலாம், நீரும்  உண்டு’ என்கிறான்திருவடி

——-

30. ஏஷ ஸம்ப்ரஸாதா: அஸ்மாத் ஸமுத்தாய பரஞ்ஜ்யோதி:
உபஸம்பத்ய ஸ்வேநரூபேண அபிநிஷ்பத்யதே. –சாந்தோக்கியம்.

31. நாராயண பரோஜ்யோதி:. –தைத்திரீய நாரா, அநு. 11.

32. ஸ்வாபாவிக அநவதிகாரிஸய ஈஸித்ருத்வம்
நாராயண த்வயி நம்ருஷ்யதி வைதிக: க:. –தோத்திர ரத்நம், 11.

பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். மேல் அறிவார் எவரே – இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய் இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ –1எந்த வைதிகன்?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.

உனக்கே உரியதான நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன் உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி

————


33. விஷ்ணுபக்தி விஹீந: ய: ஸர்வ ஸாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய நபவேத் தஸ்ய உத்பத்தி: நிரூப்யதாம்.-பத்மபுராணம்.

பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்மபுராணம்.

நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின் கண் ஐயப் படும்.’

——–
34. யச்ச கிஞ்சித் மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவர ஜங்கமம்
தத் அபஸ்யம் அஹம் ஸர்வம் தஸ்யகுகௌ மஹாத் மந:.–பாரதம், ஆரண்ய.

தன்னுள் ஒடுங்க நின்ற1‘உலகத்தில் சராசரங்களாக என்னால் பார்க்கப்பட்டவை எத்துணை உண்டோ, அவை எல்லாவற்றையும் நான் விஷ்ணுவினுடைய திருவயிற்றில் பார்த்தேன்,’ என்கிறபடியே, 2தன்னுள் அடங்க நின்ற(இது அவாந்தர சம்ஹாரத்தைக் குறித்தது.). இனி ‘தன்னுள்’ என்பதற்கு, 3‘தன்னுடைய சங்கல்பத்தின் ஏகதேசத்தில்’ என்று பொருள் கூறலுமாம்(இது மஹாசம்ஹாரத்தைக் குறித்தது. இப்பொருளில் ‘கவர் வின்றி’ என்பதற்கு, ‘ஒன்றும்
தப்பாமல்’ என்று பொருள் கொள்க.)

————

35. நஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே.
ஸமர்த்தோ த்ரூஸ்யதே கஸ்சித் தம்விநா புருஷோத்தமம்.

காக்கும் இயல்வினன் – 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் – காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து – அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே – தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் – பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்  விரிகமல உந்தியுடை விண்ணவனை’-  என்றார் இளங்கோவடிகள்.

—————-

36. அந்யம் தேஹி வரம் தேவ ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷூ
மர்த்யோ பூத்வா பவாநேவ மாம் ஆராதய கேஸவ. 

கள்வா1சர்வேஸ்வரன் பக்கலிலே வந்து வரம் கொள்கிற இடத்திலே, ‘தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.; நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்றுப் போகவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ள ‘அப்படியே செய்கிறோம்’ என்று விட்டு, ‘உருக்குமிணிப் பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேண்டும்’ என்று சென்று நின்று, ‘நமோ கண்டாய கர்ணாய’ என்றாற்போல ஏத்த

——-

37. தேவகார்யாவதாரேஷூ மநுஷ்யத்வம் உபேயிவாந்
     த்வாமேவ ஆராதயிஷ்யாமி ஹரத்வம் வரதோபவ. –ஹரி வம்ஸம்.கைலாச யாத்திரை.

38. அஞ்ஜலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணும் உத்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தமீஸாநோ மாஹாத்ம்யம் வக்தும் ஐஹத.

நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் 4‘மெய்’ என்றிருப்பார்களோ? ‘கள்வா’ என்பர்கள். ஈண்டுக் களவாவது, தன் ஸ்தவதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை. கைலாச யாத்திரியிலே 5‘நமோ கண்டாய கர்ணாய நம:’ என்று துதி செய்த அறியாத வாயானபடியால் 6மீன் துடிக்கிறபடி பாராய்’ (மீன் துடித்தல் போல நாக்குத் துடிக்கிறபடி’)என்றான். 7நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த’ என்கிறபடியே, துதி செய்து நாத்தழும்புபட்டுக் கிடப்பது அவர்களுக்கு அன்றோ?

———–

39. ஸங்கை: ஸூராணாம் திவி பூதலஸ்தை:
ததா மநுஷ்யை: ககநேச கேசரை:
ஸ்துத: க்ரமாந்ய: ப்ரசகார ஸர்வதா
மம அஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி–
. விஷ்ணு தர்மம்.

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட – 1‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும், அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ, அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு எனக்கு எப் பொழுதும் அருள் புரியவேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தித் துதிக்க, அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட

——

40. ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஐஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தக்கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:

இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி, பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி 3கலந்த கலவியைப் போன்று இருந்தது.

ராமஸ்து – பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச்  சொல்லுகிறது. ‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார், தேவ  சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது: இப்படிப் போந்த  இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’  என்னும்படி வேறுபட்டார். சீதயா ஸார்த்தம் 5 பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும்  பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார். விஜஹார – இப்படிப்  பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர். பஹூந் ருதூந் –  ‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த  போக உபகரணங்களைக்கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக. மனஸ்வீ –  ஸம்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார். தத் கத:-  தஸ்யாம் கத: – சாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்  இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. தஸ்யா நித்யம் ஹ்ருதி  ஸமர்ப்பித : – இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே ‘அப்பெரியவன்  இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’  என்று கிடக்கு மாயிற்று. அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

——–

41. மநஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் –ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.

ஆயின், மனத்தை ‘உயிர் ‘ என்பான் என்?’ எனின், உயிருக்கு 1தர்ம பூத ஞானம் நித்தியமாய் இருக்கவும், 2’மனிதனுக்கு மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனமே,’ என்கிற பிரபதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்துமாவை விளிக்குமாறு போன்று விளிக்கிறார். 3‘நல்லை போ – நல்லை வா’ என்றபடி. இனி, ‘நல்லை நல்லை!’ என்று கொண்டாடுகிறார் என்று கோடலுமாம். அன்றி ‘போ’ என்பது, விளியாகவுமாம்.

———


42. ஸர்வகந்த: ஸர்வரஸ:. –சாந். உபநிட 2 : 14.

‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை.

————
நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே நதத் ஸம:ச அப்யதிகஸ்ச த்ருஸ்யதே. -அதிமா நுஷ ஸ்தவம், 15.

எப்பொருட்கும் ஒத்து வருவதற்குக் காரணம் என்னை?’ எனின், மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்; தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்; ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான். 2‘ஒத்தாரை இல்லாதவனாய் ஒளியுருவனாய் உள்ள இறைவனுக்கு, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்ற ஒரு எண்ணிக்கையும், பன்னிரண்டு சூரியர்களுள் விஷ்ணு என்ற ஓர் எண்ணிக்கையும், அதிதிக்குப் புத்திரனாய் இருக்கும் ஒரு சம்பந்தத்தால் 3உபேந்திர அவதாரமும், இராமகிருஷ்ணர்களாய் வந்து அவதரிப்பதுமான மேற்கூறிய இவைகள் போற்றத் தக்கவைகளாய் இருக்கின்றன, என்றார் கூரத்தாழ்வான்

———-

43. ப்ரஹ்மேஸமத்ய கணநா கணநார்க்க பங்க்தௌ
இந்த்ராநுஜத்வம் அதிதே: தநயத்வயோகாத்
இக்ஷ்வாகுவம்ஸ யதுவம்ஸ ஜநிஸ்ச ஹந்த
ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந:  பக். 65.

————-

44. யஸ்மாத் தர்மாந் ஆசிநோதி ஸ ஆசார்ய:
தஸ்மை நத்ருஹ்யேத் கதாசந
ஸஹி வித்யாத: தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜன்ம
ஸரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: –ஆபஸ்தம்ப தர்ம சூத்

தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசாரியன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச்செய்கிறார்.

———–

45. ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் விரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸச:ஸ்ரீ கீதை. 18 : 66

46. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹ்ருத் கதி:  நாராயண: 

இறைவன் ஆசாரியன் ஆவனோ?’ எனின், 3‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள்.-(ஸ்ரீராமா, யுத். 33 : 18) 4‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ என்றான் ஸ்ரீகண்ணபிரான். 5‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் வசிக்கும் இடமும் பற்றுக்கோடும் நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே,’ என்பது சுபாலோபநிடதம்.. 6’பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ என்பது  பெரிய திருவந். 5

——————-

47. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:.

48. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸா நூஷூரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.

 

49. குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மியம் நேஹ வித்யதே
க்ருதார்த்த: அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்ப்யதே.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து – ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, அறிவு நடையாடாத பருவத்திலே 3‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்தியசூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னைச் சேர்த்தாய்? ‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, 4‘என்னை உடன் வருகின்றவனாகச் செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே. பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’ என்கிறார். அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற அடியேனை வைத்தாய். ‘பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார், ‘அடியேனை’ என்கிறார். ‘வைத்தாயால்’ என்ற சொற்போக்கால், ‘இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயே’ என்ற தொனிப்பொருள் தோன்றும்.

முலையோ முழுமுற்றும் போந்தில; மொய்பூங் குழல்குறிய;
கலையோ அரையில்லை;நாவோ குழறும் ‘கடல்மண்ணெல்லாம்
விலையோ!’ எனமிளிரும்கண் இவள்பர மேபெருமான் மலையோ திருவேங் கடமென்று
கற்கின்ற வாசகமே?’–திருவிருத்தம். 60

——–

50. க்ரயஸ்ச பரிவ்ருத்திஸ்ச விபாகஸ்ச ஸமே யதி
ஆதஸாஹாத் நிவர்த்தந்தே விஷமே நவ வத்ஸராத். –.

51. வபுராதிஷூ யோபிகோபி வா குணத: அஸாநியதா ததாவித:
தத் அயம் தவ பாதபத்மயோ: அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித:.–ஸ்தோத்திர ரத்நம், 52.

52. மமநாத யத் அஸ்தி யோஸ்மி அஹம் ஸகலம் தத் ஹி தவைவ மாதவ

நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ: அதவா கிந்நு ஸமர்ப் பயாமி தே.–ஸ்தோத்திர ரத்நம், 53.

மயங்கிக்கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக்கடவன் அல்லன். 2‘தேவரீருடைய திருவடித்தாமரைகளில் எனதுஉயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும், 3‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீஆளவந்தார் திருவாக்குகளை ஈண்டு உணர்தல் தகும்.  

———                          

53. இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா
நித்யம் ப்ரியாஸ்தவது கேசந தேபி நித்யா:
நித்யம் த்வ தேகக பரதந்த்ர நிஜஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸநம் ந: –ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், 36.

எனது ஆவி யார் யான் ஆர்  – ‘கொடுக்கப்படுகின்ற பொருள் யாருடையது கொடுக்கின்றவன் யாருடையவன்? ஆதலால், நான் என் ஆத்துமாவை உன்னிடத்தில் சேர்த்தேன் என்னத் தக்கவனோ? அல்லன்,’ என்றபடி. தந்த நீ கொண்டாக்கினையே – ஆதியில் இதனை உண்டாக்கின நீயே கொண்டாய் ஆனாய். ‘ஆயின் நித்தியமான ஆத்துமாக்களை ‘உண்டாக்கினை’ என்ற என்?’ என்னில், 4‘தேவரீருடைய நித்தியமான இச்சையினாலேயே, எல்லாப் பொருள்களினுடையவும் உளதாந்தன்மை’ என்கிறபடியே, இவ்வாத்துமாக்கள் நித்தியமாக இருத்தல், இறைவனுடைய நித்தியமான இச்சையினாலோயாம்.

————

54. த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்
ஏஷமே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவோ துரதிக்ரம:. –ஸ்ரீராமா. யுத். 36 : 11.

சேர்ந்தார் – 1‘இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்படி வெட்டுப்பட்ட போதிலும் ஒருவனுக்கு வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் இல்லாதவர்கள்; ‘இவர்களைச் ‘சேர்ந்தார்’ என்கிறது என்?’ எனில், அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்

————

55. ந அஹம் ஆராதயாமி த்வாம் தவபத்த: அயம் அஞ்சலி:
வரார்த்திநாந்த்வம் வரத ப்ரயச்ச அபிமதாந் வரான். –விஷ்ணு தர்மம்.

அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக்கொண்டு சென்று, 5‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன,நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன்காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போகவல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான். ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன் என்பதாம்.

தீர்ந்தார்தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 1‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்: ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே, தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே, அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை. இனி, தீர்ந்தார் -உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –2பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்; அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்று கூறலுமாம்

————

56. அமர்ஷீ துர்ஜயோ ஜேதா விக்ராந்தோ புத்திமாந் பலீ
ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: நித்யம் பிராணோ பஹிஸ்சர:.–ஸ்ரீராமா. ஆரண் 34 : 14.

மூக்கை அறுத்தவன் ஸ்ரீராமனோ?’ எனில், ஆம்; கையாலே அறுக்க வேண்டுமே? 3‘ஸ்ரீராமபிரானுக்கு இலக்குமணன் வலத்தோள்’ எனப் புகலும் ஸ்ரீராமாயணம்.

நீருள எனின்உள் மீனும் நீலமும்
பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளு வாய்’ என்றான்.–
  என்ற கம்பராமாயணச் செய்யுள்


57. யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹகச்சதி.

பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய் -‘இறைவன் எவ்வெவ் வழியில் செல்லுகின்றான்? இவ்வுயிரும் அவ்வவ்வழியெல்லாம் கூடவே செல்லுகிறது’ என்கிறபடியே,2 அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய். இதனால், ‘தவம் எய்தினன்’ என்கிற பலத்தைச் சொல்லுகிறாராதல். ‘பின் நெறி’ என்பது, ‘பிரபத்தியை’ எனலுமாம். பின் நெறி – 3பின்னே சொன்னவழி என்றபடி.

58. ஸ: அஸ்துதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணாவிபஸ்சிதா.–ஆனந்தவல்லி, 1 : 2.

இவ்வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற்குணங்களை அவ்விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே, தம்முடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி ‘இறைவனை அனுபவிக்கப்பெற்றேன்’ என்று மகிழ்கிறார்.

 

59. ஆகர்ண பூர்ணை: இஷூபி: ஜீவலோகம் துராஸதை:
கரிஷ்யே மைதிலீஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம் –ஸ்ரீராமா. ஆரண் 64 : 66

 குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை – 2’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால் இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின இராக்கதனுடைய சாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

60. கதாநு அஹம் ஸமேஷ்யாமி பரதேந பஹாத்மநா
ஸத்ருக்நேந ச வீரேண த்வயாச ரகுநந்தந.–ஸ்ரீராமா. ஆரண். 16 : 10.

61. குஹேந ஸஹிதோ ராம: லக்ஷ்மணேந ச ஸீதயா. –ஸ்ரீராமா. பால. 1 : 29

இலக்குமணா! மகாத்துவமாவான பரதனோடும், வீரனான சத்துருக்கனனோடும், உன்னோடும் எப்பொழுது சேர்வேன்?’ என்கிறார் பெருமாள். இங்கு, ஸ்ரீபரதாழ்வானோடும் சத்துருக்கனாழ்வானோடும் கூடப்பெறாத 3கிழிக்குறையாலே, (கிழிக்குறை – நிறைந்திராமல் குறைந்திருக்கிற பணப்பை. கிழி – பணப்பை. ‘வேண்டிய,  வேதங்கள் ஒதி விரைந்து ‘கிழி அறுத்தான்’ என்ற இடத்துக் ‘கிழி’ என்பது இப்பொருட்டு.)கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோன்றவில்லை பெருமாளுக்கு; 4‘ஸ்ரீராபிரான், குகனைச் சேர்ந்தார்; அதனால், இலக்குமணனோடும் பிராட்டியோடும் சேர்ந்தவரானார்’ என்கிறார் வால்மீகி. இங்கு, கூடப்போன இளையபெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய்த் தோன்றியது, 5ஸ்ரீகுகப்பெருமாளோடு கூடின பின்பு அன்றோ? இப்படியே அன்றோ இறைவன் தனக்கும் 6அந்வய வியதிரேகங்கள் இருக்கும்படி. ஆக, அடியார்களுடைய சேர்க்கையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவு, பெற்ற பகவானுடைய சேர்க்கையையும் இழந்து அடியே பிடித்துப் பிரார்த்திக்க வேண்டும் படியாய் வந்து விழுந்தது எனக் கோடலுமாம்.

62. ராமலக்ஷமண ஸீதார்த்தம் ஸ்ரவந்தீம் வாரிநேத்ரஜம்
அஸக்ருத் ப்ரைக்ஷத ததா ந்ருத்யந்தீமிவ மாதரம். –ஸ்ரீராமா. அயோத். 40 : 25.

63. ஸூபாம் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே
நரம் ஸ்ரியாஜூஷ்டம் இவ உபஜீவிந:.–ஸ்ரீராமா. சுந். 29 : 1 .

ஸ்ரீகௌசல்யையார் பெருமாளைப் பிரிந்து துடிக்கிற துடிப்பை 1‘ஸ்ரீராமன், தாயை நர்த்தனஞ் செய்கின்றவளைப் போன்று பார்த்தான்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி பகவான். ஆதலால், வடிவழகியார் செய்யும் வியாபாரங்கள் எல்லாம் கண்ணுக்கு இனியவாகவே இருக்கும். அன்றியும் பிராட்டி, பிரிந்து அழகு அழிந்திருக்கிற சமயத்திலேதான் 2‘மங்கள சொரூபியாய் இருந்தாள்’ என்று ஸ்ரீவால்மீகி கூறுகிறார். ஆதலால், அழகியார், என்றும் வடிவழகியாரேயாவர்.

64. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருசன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.–ஸ்ரீராமா. பால. 1 : 38.

ஆடி-முதலில் ‘ஆடி’ என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? முடிந்தாலோ?’ எனின், 4குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; 5‘ஸ்ரீ பரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்வாராம பிரானுடைய முகத்தில் விழ்க்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் அன்றோ?

 

65. மந: பூர்வோ வாக் உத்தர:.

இசை பாடிப் பாடி – ‘மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும்’ என்கிற நியதி இல்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிறதிததனை.

66. மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ
மத்விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வ மே. –ஸ்ரீராமா. சுந். 64 : 15.

பண்ணை வென்ற இன்சொல் மங்கை’ (திருச்சந். 105.)ஆதலின், ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது. 2‘அழகானவளும் மதுரமான வார்த்தையுடையவளும்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி. ‘பாடிப்பாடி’என்ற அடுக்கு, முதல் கூப்பீடுபோல அன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்ததிருத்தலையும் தெரிவிக்கும்.

67. கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி ஸோகஜம்
புண்டரீக பலாஸாப்யாம் விப்ரகீர்ணம் இவ உதகம். –ஸ்ரீராமா. சுந். 33 : 4.

 கண்ணீர் மல்கி – உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணநீராய்ப் பெருகுகிறபடி. 3நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ணீரே அன்றோ? (முடியானே’ என்ற திருவாய்மொழியின்  பொருளை ஈண்டு நினைத்தல் தகும்.)மங்குதல் – மிகுதல். 4‘தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீர் போன்று, ஆனந்தக்கண்ணீர் பெருகும் படியான கண்களில் துக்கக் கண்ணீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்றார் ஸ்ரீவால்மீகி. இங்கு ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியான கண்களிலே சோகக் கண்ணீர் பெருகிறது 5யார் குடி வேர் அற?’ (இராவணன் குடி வேர் பறியவோ, இராக்காதர்கள் என்று
சொல்லப்படுகிற எல்லாருடைய குடிகளும் வேர் பறியவோ?’)என்று பட்டர் அருளிச்செய்வர். 6‘யாரைச் சேதநராகக் கொண்டு?’என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர். 7‘பாவியேன், யான் வந்த இவ்வரவு, உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லையே!’ என்று இரங்குகிறான் திருவடி.

யாரைச் சேதநராகக் கொண்டு?’ என்றது, ‘யாருடைய இன்பத்திற்காக?’ என்றபடி.  சேதநன் -இன்பத்தை நுகர்கின்றவன். ‘தாமரை இதழிலே முத்துப்பட்டாற்போன்று  இருக்கிற இந்த அழகினை அனுபவித்தற்குத் தக்கவரான பெருமாள் அருகில்  இல்லாதிருக்க, இக் கண்ணீருக்குப் பயன் யாது?’ என்பது கருத்து.

68. ஸாதிர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாத் நிரீக்ஷ மாணாம் அசிந்த்யபுத்திம்

ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யம் இவ உதயஸ்தம்.–ஸ்ரீராமா. சுந். 31 : 119.

எங்கும் நாடி நாடி – தன் ஆபத்தே செப்பேடாக, வருதற்கு உரித்து அல்லாத திக்குகளையும் பார்க்கிறாள். நினைவின்றியே இருக்கச் செய்தேயும், வாராத் திருநாமம் செவிப்பட்டவாறே 1‘விலங்கப் பார்ப்பது, மேலே பார்ப்பது, கீழே பார்ப்பது ஆனாள்’ என்றார் ஸ்ரீவால்மீகி. ‘ஆயின், வருவதற்கு உரித்து அல்லாத திக்கிலும் தேடுவான் என்?’ என்னில், சம்பாவனை இல்லாத திக்கிலும் வந்து தோற்றுமவன் ஆகையாலே, தேடுகிறாள். ‘ஆயின், பரத்துவம் முதலிய நிலைகளை விட்டு, இவர் அவதாரத்தையே பேசுவான் என்?’ எனில், 2‘பத்துடை அடியவர்க்குப் பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போகமாட்டார். இனி, ‘எங்கும் நாடி நாடி’ என்பதற்கு, தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள்’ என்று பட்டர் அருளிச்செய்வர். ‘அதற்குக் கருத்து என்?’ என்னில், 3‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்கிறபடியே, அவன் இருந்த இடமாகையாலே

கீழே பார்த்ததற்குக் கருத்து என்?’ என்னில், பூமியைப் பிளந்து  கொண்டு புறப்பட்டு ஒருவன் திருநாமம் சொல்லச் சம்பாவனையுண்டாகில், அல்லாத
திக்கிலும் உள்ளது என்று பார்த்தாள்; அன்றிக்கே, ‘மாஸோபவாசிகள், ‘சோறு’ என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள்,’ என்னுதல்; அங்ஙனன்றிக்கே, ‘சிம்சுபா  விருக்ஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள்’ என்னுதல். யூம சிந்த்ய புத்தம் ததர்ஸ் – அவன்  வடிவு காண்பதற்கு முன்னே அகவாயையாயிற்றுப் பரிசோதித்தது; ‘இந்நிலத்திலே புகுந்து  இடங்கொண்டு நாம் இருந்த இடந்துருவி நிலை குத்த வல்ல நெஞ்சையுடைய  வனன்றோ?’ என்று. பிங்காதிபதேரமாத்யம் – ‘இவன் ஸ்வதந்த்ரல்லன்; இராஜ கார்யம்  இவன் கையிலே உண்டு’ என்று அறிந்தாள். வாதாத்மஜம் – பெருமாளுக்குப் பிராணஹேதுவான பிராட்டிக்குப் பிராணனைக் கொடுக்கையாலே ‘இவன் சர்வர்க்கும்  பிராணஹேதுவானு வாயுபுத்திரன்’ என்று தோன்ற இருந்தான். சூர்யமிவோதயஸ்த்தம் –  இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது. பெருமாளாகிற ஆதித்திய உதயத்துக்கு  அருணோதயம் என்னலாம்படி இருந்தான்; ஆகையிறே, இலங்கை நாலுமதிளுக்கு நடுவு  ‘ஹரி ஹரி’ என்கிறபடியே இருக்கிறது.’

69. மத்த: ஸர்வம் அஹம் ஸ்ரவம் ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே
அஹமேவ அவ்யய: அநந்த: பரமாத்மா ஆத்மஸம்ஸ்ரய:.– ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19 : 85.

என்னிடமிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன; எல்லாம் என்னிடத்தில் லயம் அடைகின்றன; எல்லாப் பொருள்களும் நானாகவே இருக்கிறேன்’ என்னும் தெளிவுடையவனுக்குத் தோன்றினவன், கலங்கின 1அபலைக்குத் தோன்றானோ!’ என்று வாடுகிறாள் என்கிறாள் என்றபடி. 


70. தாதா யதாபூாவம் அகல்பயத்.–தைத்திரீய நாராயண் உபநிடதம்.

இவ்வாணுதலே – ஒளியுடன் கூடின நுதலையுடைய இவள். ‘இவ்வழகுக்கு இலக்கானார் படுமதனை இவள் படுவதே!’ என்பாள், ‘வாடும் இவ்வாணுதல்’ என்கிறாள். ‘இவள் முடிந்தால் 6‘பிரமன் முன் காலத்தில் இருந்தபடியே படைத்தான்’ என்பது போன்று, உம்முடைய மேன்மையாலே ‘இன்னம் இப்படிப்பட்டது ஒரு வடிவத்தை உண்டாக்கலாம்’ என்று இருக்கிறீரோ?’ என்பது திருத்தாயாருடைய உடகோள். ‘நன்று; இந்நிலையில்  இவளை ‘வாணுதல்’ என்னக் கூடுமோ?’ என்னில், 7‘ஊனில் வாழுயிரில்’ கலவியால் உண்டான புகர் இன்னம் அழிந்தது இல்லை ஆதலின், கூறுகிறாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாதலின், குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம்  முகத்தின் எழிலிலே தெரியாநின்றது என்றபடி.

70a. இயம் ஸீதா மம ஸூதா ஸஹதர்மசரீ தவ
       ப்ரதீச்சசைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா.–ஸ்ரீராமா. பால. 73 : 24.

ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, 1‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று, பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்     

71. துஷ்கரம் க்ருதவாந் ராம்: ஹீநோ யத் அநயா ப்ரபு:
    தாரயதி ஆத்மநோ தேஹம் ந ஸோகேநாவஸீத்தி. –ஸ்ரீராமா. சுந். 15 : 53

இப்பெண்பிள்ளை நிலையைக்கண்ட திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார், இவளைப் பிரிந்து  தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் செய்தார்; 2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை. மால்ய வானில் பெருமாள் இருந்த போது கார் காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு, ‘வசிஷ்ட சிஷ்யன், ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான் விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. ‘இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி.

72. துல்ய ஸீல வயோ வருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
    ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சேயம் அஸிதேக்ஷணா.–ஸ்ரீராமா. சுந். 16 : 5.

சக்கரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த சீலம், வயது, ஒழுக்கம், ஒத்த குலம், இராஜ இலக்கணம் இவற்றையுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு, பெருமாள் தகுந்தவர்; கறுத்த கண்களை  உடையளான இப்பிராட்டியும் பெருமாளுக்குத் தகுந்தவர்’ என்னும் படி காணும் இருக்கிறது. உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – ‘விஷயத்திற்குத் தகுதியாக அன்றோ ஆசையும் இருப்பது? உம்மை அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் அருமைப்படுத்து வீரோ?’ என்பாள், ‘காணும் ஆசை’ என்கிறாள். 1‘ஆசை என்னும் கடல்’ (பெரிய திருமொழி, 4. 9 : 3.)என்கிறபடியே,’ ஆசையாகிய கடலிலே அழுந்தாநின்றாள்’ என்பாள், ‘ஆசையுள்’ என்கிறாள். நைகின்றாள்’ என்பதில், 4இவளைத் தரிப்பிக்க வேண்டா; அடியில் நிலையிலே நிறுத்த அமையும்’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இதனால், ‘வாடுகை தான் தேட்டமாம்படி ஆயிற்று என்கிறாள்’ என்றயடி..

73. நைவ தம்ஸந் ந மஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந். –ஸ்ரீராமா. சுந். 36 : 42.

நீர் இரக்கம் இலீர்6‘தன் சரீரத்தின்மேல் தங்கி இருந்த காட்டு ஈக்களையும் கொசுக்களையும் பாம்புகளையும் ஓட்டமாட்டார்’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த துன்பத்தால், மற்றைப் பிராணிகளால் உண்டாகும் துன்பத்தையும் அறியாதிருந்த நீர், இப்பொழுது நோவுபடுகை தவிர்ந்தால், சாமான்யமான இரக்கமும் போகவேண்டுமோ? ‘ஆயின், நீரே இரங்கல் வேண்டும்; நீர் இரங்கும்படி செய்யத் தக்க சாதனம் இவளிடத்து இன்று என்று கூறுவது போன்று, ‘நீர் இரக்கமிலீர்’ என்று கூறுவது எற்றிற்கு? ‘நைகின்றாள்’ என்று திருத்தாயார் கூறியது, இறைவன் இரக்கத்திற்குச் சாதனம் ஆகாதோ?’ எனின், ‘இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது. ‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின், ‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம், அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்

74. நாயம் ஆத்மா ப்ரவசநேந லப்யோ நமேதயா ந பஹூநா ஸ்ருதேந

யம் ஏவ ஏஷ வ்ருணுதே தேநலப்ப: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருதே தநூம் ஸ்வாம்.–முண்டகோபநிடதம். 3. 2 : 3

இப்பரம்பொருள், மனத்தாலும் நிதித்தியாசனத்தாலும் மிகுந்த கேள்வியாலும் அடையத்தக்கவன் அல்லன்; இறைவன் எவனை வரிக்கின்றானோ, அவனால் அடையத் தக்கவன்,’ என்கிறபடியே, தானே காட்டாக காணும் இத்தனையே.

இவ்வுபநிடத வாக்கியத்தின் பொருளோடு ‘வீட்டிற்கு நிமித்த காரணமாய் முதற்பொருளை   உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவணை என்பன: அவற்றுள்  கேள்வி இதனாற்கூறப்பட்டது,’ என்னும் (கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப் படுவர் மற்றீண்டு வாரா நெறி.-குறள். 356)பரிமேலழகருரை ஒரு புடை ஒப்பு நோக்கத்தகும்                        

75. விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:–ஸ்ரீராமா. பால. 1 : 18.

சக்தியில் விஷ்ணுவைப் போன்றவர்; பார்க்கத் தகும் தன்மையில் சந்திரனைப் போன்றவர்’ என்கிறபடியே, பல பொருள்களையும் இவளுடைய படிக்கித் திருஷ்டாந்தமாகக் கூறக் கூடியவாறு இவள்தன் நிலை இருக்கிறது

76. தஹந்தீமிவ நிஸ்வாஸை: வ்ருக்ஷாந் பல்லவதாரிண:
ஸங்காதமிவ ஸோகாநாம் துக்கஸ்ய ஊர்மிமிவ ஸ்திதாம்.–ஸ்ரீராமா. 17 : 29.

உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி? இவளே – 4அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.  

 

மகளிர், தெளிந்திருக்கும் காலத்துக் கணவனது அன்பைப் பெறுவதற்கு அவனை  வணங்கமாட்டார்’ என்பது கருத்து. ‘ஞானிகள் இறைவனுடைய திருவருளைப் பெறுதல்  நிமித்தம். அவனை வணங்கமாட்டார்கள்’ என்ற விசேடப்பொருளும் தோன்றும்.
அடியேன் நான் முயற்சியின்றி நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே’ என்றார்  திவ்வியகவி.

77. அநித்ர: ஸததம் ராம: ஸூப்தோபிச நரோத்தம:
ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபுத்யதே.–ஸ்ரீராமா. சுந். 38 : 48 

சீதேதி மதுராம் வாணீம் வியாகரந் ப்ரதிபுத்யதே’ என்று வாய்வெருவுவான்  அவன் கிடீர். அநித்ரஸ் ஸததம் ராம: – நித்திரையோடே காலக்ஷேபம் பண்ணவேண்டும்  செலவுடையவர், ஸந்ததம் அநித்ரராயிருப்பர். சுப்தோபிச – ஸததம் நித்ர : என்று  வைத்து, ஸூப்தோ பிச என்கிறது, பராகர்த்த அநுசந்தான அபாவத்தைப் பற்ற.  நரோத்தம: – அபிமத விஸ்லேஷத்தில் இங்ஙனே இருக்கைபோலே – புருஷோத்தமத்தமாவது.’

இவள் இராப்பகல் வாய் வெரீஇ – 2‘ஆடவர் திலகனான ஸ்ரீராம்பிரான் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராக இருக்கிறார்; ஒருகால் உறங்கினராயினும், ‘சீதா’ என்கிற மதுரமான வார்த்தையினைச் சொல்லிக் கொண்டு விழித்துக் கொள்ளுகிறார்’ என்கிறபடியே, ‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் *கவனம், ஞாபகம்.)பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின், வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.

78. மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத்அஹ்தி நஸம்ஸய:
ஸமர்த்தாவபி தௌ யந்மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ.
பக். 106.

79. அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அசோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசல: அயம் ஸநாதந: –ஸ்ரீகீதை. 2 : 24.

உள்உள் ஆவி உலர்ந்து – உள்ளே இருக்கும் மனத்திற்குத் தாரகமான ஆத்துமா சருகாய் வருகிறபடி. 2‘இவ்வாத்துமா வெட்ட முடியாதவன், கொளுத்த முடியாதவன், நனைக்க முடியாதவன், உலர்த்த முடியாதவன்’ என்று சொல்லப்படுகிற இத்தன்மையும் போயிற்று என்கிறாள். ‘ஆயின், உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், 3பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே -வேவாரா வேட்கை நோயாகையாலே -அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று

80. அந்தகாரே அதி தீவ்ரேச நரஸிம்ஹம் அநுஸ்மரேத்
     தரதி அகிலதுக்காநி தாபார்த்தோ ஜலஸாயிநம்
    கருடத்வஜ அநுஸ்மரணாத் விஷவீர்யம் ப்ரஸாம்யதி.–விஷ்ணு தர்மம். அத், 40.

வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் -‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும். 4‘தாபத்தாலே பீடிக்கப்பட்டவன் தண்ணீரில் சயனித்திருக்கிற நாராயணனை நினைக்கக் கடவன்’ என்பது விஷ்ணு தர்மம்.   

81. சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம். ஸ்ரீராமா. சுந். 66 : 10.

தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?

அளவுபடை-சிறுபடை; இங்கு, நாயகன். பெரும்படை – நாயகி. கண்ணழகு  முதலியவற்றையுடையவளாதலின், நாயகியைப் ‘பெரும்படை’ என்றார்.

82. ததோ மலிந ஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம்
உபவாஸ க்ருஸாம் தீ நாம் நிஸ்வஸந்தீம் புந: புந: –ஸ்ரீராமா. சுந். 15 : 18

இந்தச் சுலோகம், பலகாலும் பெருமூச்சு விடுதற்கு மேற்கோள்.–பின் அழுக்குப் புடைவையை உடுத்தவளும் அரக்கியரால் சூழப்பட்டவளும் பட்டினியால் இளைத்தவளும் எளியவளும் அடிக்கடி பெருமூச்சு எறிகின்றவளுமான பிராட்டி’ என்கிறார். ஸ்ரீவால்மீகியும். 3உள்ளம் மலங்க’ (திருவாய். 2. 4 : 4)என்ற இடம், வெட்டி விழுந்த படி சொல்லிற்று. 4உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ (திருவாய். 2. 4 : 7)என்ற இடம், உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கு, ‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே, நெருப்புப் பற்றி எரிகிறபடி சொல்லுகிறது.

83. ஸஹி தேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷணு: ஸநாதந:.–ஸ்ரீராமா. அயோத். 1 : 7.

கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் – கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில் இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால், 2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ (இலங்கையை அடியோடு அழித்தது போன்று, இவளையும் அழியாதே  கொள்ளும்)என்ற தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் – இவளுடைய இளமை பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து போகிறாள்? நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், 3உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும், என்பாள்,(உம்முடைய ஜீவனம்’ என்றது, ‘மணநோக்கம் உண்டானே’ (பெரியதிரு. 8. 10 : 1.)  என்றதனை நோக்கி;) ‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

84. உதார வ்ருத்தார்த்த பதை: மநோரமை:
ததாஸ்ய ராமஸ்ய சகார கீர்த்திமாந்
ஸமாக்ஷரை:ஸ்லோகஸதை: யஸஸ்விந:
யஸஸ் கரம் காவ்யம் உதாரதீ: முநி: — ஸ்ரீராமா. பால. 2 : 42.

வண்சடகோபன் சொல் –2‘உதாரகுணத்தையுடையவரும் மனனசீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் சுலோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே, மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின், ‘வண்சடகோபர்’ என்கிறார்.

85. கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ: ஆகர்ஷதே ஜலே
தயோ: த்வந்த்வ ஸமம் யுத்தம் திவ்யம் வர்ஷ ஸஹஸ்ரகம்.– விஷ்ணு தர்மம், 68.

கஐந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’ 2என்றதனைப் போன்றது ஒன்றாம், மேல் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த துக்கம்;-பிரிவால் உண்டாகிய துன்பம் முடிக்கத் தேட,  நசையானது முடிக்க ஒட்டாமல் ஜீவிப்பிக்க, இப்படியே, மேல் ‘ஆடிஆடி’ என்ற  திருவாய்மொழியில் ஆழ்வாருடைய நிலை சென்றது என்றபடி.

 

86. அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தமஸ்வீக்ருத
ப்ரணீத மணிபாதுகம் கிமிதிச ஆகுலாந்த: புரம்
அவாஹந பரிஷ்க்ரியம் பதகராஜம் ஆரோஹத:
கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம: –ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், உத். 59.

87. ஸ்தலஸ்தம் தாரயாமாஸ க்ராஹம் சக்ரேண மாதவ:

அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக, 4‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’ என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே, மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் முறைபிறழத் தரித்துக் கொண்டு, மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில்  முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’(திருவாய். 2. : 4. 4)

88. ஸ ஏகாகீ ந ரமேத. -மஹோபநிடதம்.

அந்த ஸ்ரீமந்நாராயணன் தனியராக மகிழ்ச்சி அடைந்திலர்’

89. அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைகரூப ரூபாய விஷ்ணுவே ஸர்வஜிஷ்ணவே. -ஸ்ரீ விஷ்ணு புரா. 1 . 2 : 1

செந்தாமரைத்தடம் கண் – துன்பமெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடே கலந்த பின்பு ஆயிற்றுத் திருக்கண்கள் செவ்வி பெற்றதும், மலர்ச்சி பெற்றதும். 2‘ஒரே தன்மையையுடையனவற்றுக்கு எல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே! ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ?’ எனின், அங்குக் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிற இத்தனையேயாம்

90. ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்
ருக்மாபம் ஸ்வப்ந தீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்.-மனு ஸ்மிருதி. 12 : 122.

செந்தாமரை அடிகள் – நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகள். செம்பொன் திரு உடம்பே – திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி; இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான் 4‘ஓட வைத்த பொன்னின் நிறத்தையுடையவன் இறைவன்’ என்னும்படி ஆயிற்று.

 ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க்  கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக்  கூட்டியும், எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி  சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ்முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்  ஆனவனுக்குச் செந்தாமரைத்தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள் கொள்க.

91. இச்சாக்ருஹீத அபிமதோருதேஹ:
ஸம்ஸாதி தாஸேஷ ஜகத்திதோஸௌ. — ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 84.

92. ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹ நூமத:
மயா காலம் இமம் ப்ராப்ய தத்த: தஸ்ய மஹாத்மந:–ஸ்ரீ ராமா. யுத். 1 : 13.

விக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர். ‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ?’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ? (இதனால், இவர் அனுபவ பரவாஹ ரூபமான ஸ்ரீசூக்தியும் பரமப் பிரமாணம் என்றபடி)அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்? 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும், 3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார்.

93. தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதா தரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம். –ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63

வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின், ‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின் கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம் ஆகையைச் சுட்டியேயாம்.-பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.

94. பஸ்பர்ஸாங்கம் ததா விஷ்ணு: பிஸாசஸ்யாபி ஸர்வத:
கரேண ம்ருதுநா தேவ: பாபாந்நிர்மோசயந் ஹரி:–ஹரி வம்ஸம்.

கை கமலம் – 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்?’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார்.

95. யச்சாபி ஸர்வ பூதாநாம் பீஜம் ததஹம் அர்ஜூந
நததஸ்தி விநா யத்ஸ்யாத் மயா பூதம் சராசரம். –ஸ்ரீ கீதை. 10 : 39.

தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு, ‘இறைவன் உருவமாக இல்லாத பொருள் தான் இல்லை என்று பொருள் கூறலுமாம். 2‘இயங்கியற்பொருளும் நிலையிற்பொருளுமாகக் காணப்படுகின்றவை எவையோ, அவை எல்லாம் என்னை அன்றி இல்லை’ என்பது ஸ்ரீ கீதை. உலகத்துப் பொருள்கள், இறைவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, சொரூபத்தாலே; இறைவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது, காதலாகிய பண்பாலே.

தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு இரண்டு கருத்து  அருளிச்செய்கிறார். முன்னையது, சங்கல்பாஸ்ரிதம்; உள் – உள்ளம். இரண்டாவது,  சொரூபாஸ்ரிதம்; தன்னுள் – தன்னிடத்தில். ஸ்ரீகீதையின் சுலோகம், சொரூபாஸ்ரிதத்திற்கு  மேற்கோள்.

96. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.– தைத்தீரிய ஆனந். 9 : 1

தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காணமாட்டாது 3‘வாக்கிற்கு அப்பாற்பட்டவனே’ என்று மீளும்படி இருப்பானாய் இருக்கின்ற தண்துழாய் மாலையனை. எல்லை காண வொண்ணாத பரம்பொருளுக்குத் திருத்துழாய் மாலை அடையாளம் ஆதலின், ‘தன் முடிவு ஒன்று இல்லாத தண்துழாய் மாலையனை’ என்கிறார்.

 

97. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸூ: விதாதா க்ருத லக்ஷண:–ஸ்ரீ சஹஸ்ரநாமம்.

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – 4அறியாதவராக இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் 5செம்பளித்து (மூடிக்கொண்டு.)வந்து கலந்தான். இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று, இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி. இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் ‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக, அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து ஒரு கணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை. இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்று கூறலுமாம்.
கண்செம் பளித்திருந்து கைத்துருத்தி நீர்தூவி அம்புதத்தைப் பார்த்திருப்பான் அற்று.’–ஞானசாரம், 33

98. நைநம் வாசா ஸ்த்ரியம் ப்ருவந் நைநம் அஸ்த்ரீபுமாந் ப்ருவந்
புமாம்ஸம் நப்ருவந் நைநம் வதந் வததி கஸ்சந  அ இதி ப்ரஹ்ம.–
2. ருக்வேதம், ஆர. 2 : 2.

99. ஸவை ந தேவாஸூர மர்த்யதிர்யங்
ஸ்த்ரீந ஷண்டோ ந புமாந் நஜந்து:
ந அயம் குண: கர்மந ஸத் ந ச அஸத்
நிஷேத ஸேஷோ ஜயதாதஸேஷ: —
3. பாகவதம், 8. 3 : 24.

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாட்டில் காண்கிற ஆண்களின்படியும் அல்லன், பெண்களின்படியும் அல்லன், உபயோகத்திற்குத் தகுதியில்லாத அலியின்படியும் அல்லன். பட்டர் இவ்விடத்தில், 2‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை; ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை. அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; 3‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை; ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை; கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ என்னும் இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச்செய்தவாறே, அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘சுவாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில், சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க, பட்டர், 4‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே! (4. இயலறிவுக்கு – சொல் இலக்கணத்துக்கு. ‘அர்த்தஞானமே அன்றிச் சப்த ஞானமும்  இல்லையே!’ என்றபடி.)‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின் ‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார்.

100. ஸ்துத: அஹம் யத்தவயா பூர்வம் புத்ரார்த்திந்யா தத் அத்யதே.
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாத: அஹம் யத்தவ உதராத்.

காணலும் ஆகான் -ஆண் பெண் அலி என்னும் இவற்றைக் காண்கிற பிரமாணங்களால் காணப்படாதவன். இத்தால், 2ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்கை. உளன் அல்லன் அல்லாதார்க்கு. இல்லை அல்லன், அடியார்கட்கு. இவற்றை விரிக்கிறார் மேல்: பேணுங்கால் பேணும் உருவாகும் –3‘தேவீ, நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானேஉனக்குப் புத்திரனாய்த் தோன்றவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானே உனக்குப் புத்திரனாய்த் தோன்றிவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான். இனி, இதற்குத் 4‘தன்னை அர்த்திக்குங் காட்டில் அன்போடு தன்னைப் பேணி மறைக்கவேண்டும்படி வந்து அவதரிப்பான்’ என்று கூறலுமாம்      

பேணுங்கால் பேணும் உருவாகும்’ என்பதற்கு, இரு பொருள் அருளிச்செய்கிறார்:
முன்னையது, ‘அடியார்கள் ஆசைப்பட்ட வடிவோடே அவதரிக்கும்’ என்பது;  பின்னையது, ‘மங்களாசாசனம் செய்ய வேண்டும்படியான விக்கிரகத்தையுடையவனாய்  அவதரிக்கும்’ என்பது. முதற்பொருளில், பேணுதல் – விரும்புதல். இரண்டாவது  பொருளில், பேணுதல் – பரிவு.

101. மஹாத்மந: ஸங்க சக்ராஸிபாணே:
    விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸூதேவாத்மஜஸ்ய.  பாரதம், கர்ண பர்வம்.

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானை – தன்படிகளைப் பேசப் புக்கால், 3ஆனந்தவல்லியிற்சொல்லுகிறபடியே, (யாதோ வாசோ நிவர்த்தந்தே’ என்பது. (தைத்தீரிய ஆனந். 9 : 1) அந்த ஆனந்த  குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன’)பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை. அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று. 4‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும், ஜெயசீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ணபிரானுடைய நற்குணங்கள் உலகங்கள் அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்

102. வைதேஹி ரமஸே கச்சித் சித்ரகூடே மயா ஸஹ
     பஸ்யந்தீ விவிதாந் பாவாந் மநோ வாக்காய ஸம்யதா.-ஸ்ரீராமா. அயோத். 94 : 18

இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று 2ஐயங்கொண்டு, அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் ஐயத்தை நீக்கி, அவனை உளன் ஆக்குகிறார். 3‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடுகூட இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றாற்போலே ஆயிற்று இதில் சுவையும்; 4‘மைதிலி, உன்னை அறிந்தாயே நம்மை அறிந்தாயே, கலக்கிற தேசம் அறிந்தாயே! என்கிறார் என்றபடி.

சம்ஸ்லேஷ ரசாதிசயத்துக்கும், அத்தாலே  ஐயங்கொண்டதற்கும் மேற்கோள், ‘விதேககுலத்தில்’ என்று தொடங்கும் பொருளையுடைய  சுலோகம். ரமியாநிற்கச்செய்தே ‘ரமஸேகச்சித்’ என்கையாலே, நீர் வாய்ப்பும் நிழல்  வாய்ப்புமான சித்திரகூட பரிசரத்தில் அழகையும், தங்கள் சேர்த்தியழகையும் கண்டு, ‘இது  தொங்கப் புகுகிறதோ!’ என்று ஐயங்கொண்டது தோன்றுகிறது. அப்படிப் பெருமாள்  ஐயங்கொண்டது போன்று, இங்கும், ஆழ்வார் விஷயத்தில் இறைவனுக்கும் ஐயம்  உண்டாயிற்று என்றபடி.

103. குமுத: குந்தர: குந்த:–சஹஸ்ரநாமம்.

செய் குந்தா வரும் தீமை – செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்குந்தீமை. இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை எனப்பொருள் கூறலுமாம். உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா – உன் பக்கலிலே 3நிக்ஷிப்தபரராய் இருப்பார்க்கு வாராதபடி நீக்கி, அசுரத்தன்மையுடையவர்கள் மேலே போகடும்படியான சுத்தியையுடையவனே! குந்தம் – குருந்தம் என்ற சொல்லின் விகாரம்; அது ஆகுபெயராய் அதன் மலருக்கு ஆயிற்று; அதன் மலர் வெளுத்து இருக்குமாதலின், அவ்வழியாலே பரிசுத்தத்தை நினைக்கிறது. இனி, ‘குந்தன்’ என்பதனை இறைவனுடைய திருபெயர்களில் ஒன்றாகக் கோடலும் அமையும், 4குமுத, குந்தா, குந்த’ என வருதல் காண்க.

104. விஸ்ருஷ்டம் பகதத்தேந ததஸ்த்ரம் ஸர்வ காதுகம்
உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸஞ்சாத்ய மாதவ: —பாரதம்.

 முன் பிராதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே, பின்னர் அவர்கள் பகைவர்கள் மேலே போகடுவான் என்பதனைத் தெரிவித்தபடி. கடலுக்குத் தொடுத்த அம்பை, அவன் முகங்காட்டினவாறே மருகாந்தாரத்தில் அசுரர்கள் மேலே தொடுத்தமையை 5ஸ்ரீராமாயத்தால் உணர்க. அங்ஙனம் ஒரு போக்கடி கண்டிலனாகில், 6‘பகதத்தனால் விடப்பட்டதும் எல்லாப் பொருள்களையும் அழிக்கக் கூடியதுமான அந்தச் சத்தி என்னும் பாணத்தைக், கிருஷ்ணன் அருச்சுனனை மறைத்துத் தன் மார்பிலே ஏற்றுக்கொண்டான்’ என்கிறபடியே, 1பகதத்தன் விட்ட சத்தியை, அருச்சுனனைத் தள்ளித் தன் 2அந்தப்புரத்திலே (மார்பு.)ஏற்றாற்போலே, தாம் ஏறிட்டுக்கொண்டு அனுபவித்தல் செய்யுமித்தனை. 3பாவங்கள்தாம் – அசேதனமாய் இருப்பன சில கிரியா விசேடங்களாய் அவை செய்தபோதே நசிக்கும்; செய்தவன் அறிவில்லாதவன் ஆகையாலே செய்ததை மறப்பான்; முற்றறிவினனான சர்வேஸ்வரன் உணர்ந்திருந்து பலத்தை நுகர்விக்க நுகர்வான் இத்தனை. அவன் மார்பிலே ஏற்றுக்கொள்கையாவது. ‘பொறுத்தேன்’ எனத் தீர்தல். 4‘அபூர்வங்காண், சத்திகாண், பலாநுபவம் பண்ணுவிக்கிறது’ என்று கூறுவதைக் காட்டிலும், முற்றறிவினனான இறைவன் செய்விக்கிறான் என்கை அழகிதே அன்றோ?

105. ஸ்ருத அயமர்த்த: ராமஸ்ய ஜாமதக்ந்யஸ்ய ஜல்பத:– பாரதம், மோக்ஷதர்மம்
பக் 153.

106. நிரவத்ய: பர: ப்ராப்தே: நிரதிஷ்ட: அக்ஷர: கிரம:
ஸர்வேஸ்வர பராதார தாம்நாம் தாமாத்மகாக்ஷய –ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 48.

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை – ஒருகால் திருக்கண்களாலே குளிர நோக்கினால் அதிலே தோற்றுச் சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று 1அடைவு கெட ஏத்தாநிற்பர்கள் ஆயிற்று நித்தியசூரிகள். 2‘ஜமதக்நியின் புதல்வரும் அடைவு கெடப் பேசுகிறவருமான பரசுராமரிடத்தில் இப்பொருள் கேட்கப்பட்டது’ என்பது பாரதம். தலை மகனை – இவர்கள் ஏத்தாநின்றாலும் 3‘குற்றம் இல்லாதவர், அடைவதற்கு முடியாதவர்’ என்கிறபடியே, அவன் பரன் ஆகவே இருப்பான்

துழாய் விரை பூமருவு கண்ணி எம்பிரானை – விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க்கண்ணி எம்பிரானை. நித்தியசூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்; இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான். அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’ என்றபடி

107. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.–உபநிடதம்.

கடவுள் உளன் என்று நினைத்தால் இவனும் உள்ளவன் ஆகின்றான்’ என்கிறபடியே உய்வு பெற்று. போந்து -சம்சாரிகளைக்காட்டிலும் வேறுபட்டவனாய். இருந்து – பாரம் இல்லாதவனாய் இருந்து. ‘வள்ளலே! மதுசூதனா! உன்னை எங்ஙனம் விடுகேன்?’ என்க

 

108. ஆத்ம மாயாமயீம் திவ்யாம் யோகநித்ராம் ஸமாஸ்ரித:
ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயந் மதுஸூதந:–ஸ்ரீவிஷ்ணு புரா. 6.4 : 6.

ஐந்து பைந்தலை ஆடு அரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய் – பெருவெள்ளத்துக்குப் பல 3வாய்த்தலைகள் (வாய்க்கால்கள்.)போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் பல தலைகளை உடையவனாய், கட்குடியரைப் போலே ஆடுகின்றவனாய், 4சைத்திய சௌகுமார்ய சௌகந்தியங்களை உடையனான திருவனந்தாழ்வான்மேலே, திருப்பாற்கடலிலே, ‘எல்லாப்பிராணிகளும் கரைமரம் சேர்ந்தாம் விரகு என்?’ என்று யோகநித்திரையில் திருவுள்ளம் செய்த என் நாயன் ஆனவனே! யோகநித்திரை – 5‘பரமபுருஷன் வாசுதேவன் என்ற தன்னைச் சிந்தித்துக் கொண்டு தனது மாயாரூபமான பிரகிருதி சம்பந்தம் இல்லாத யோக நித்திரையை அடைந்தார்’ என்கிறபடியே, தன்னை நினைத்தல். எந்தாய் – நீர்மையைக் காட்டி என்னை உனக்கே உரிமை ஆக்கினவனே! ‘உன்னைச் சிந்தை செய்து செய்து – நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம் உண்டோ?’ என மேலே கூட்டுக.

109. ஆத்மாவா அரே த்ர்ஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய:
மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய: — பிருகதாரண்ய உபநிடதம். 4 : 5.

 உன்னைச் சிந்தை செய்து செய்து – இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாமல் நினைத்து. உன்னை – இனியனுமாய் அடையத் தகுந்தவனுமான உன்னை. சிந்தை செய்து செய்து – 2‘தியானம் செய்யத் தக்கவன்’ என்கிற ஒரு விதியினாலே தூண்டப்பட்டவனாயல்லாமல், இனிமையாலே விடமாட்டாமல் எப்பொழுதும் நினைத்து.

110.  உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.–நரசிம்ஹ அநுஷ்டுப்

என் முன்னைக் கோள் அரியே– 4நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்; அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி. கோளரி‘மஹாவிஷ்ணும்’ என்கிற 5மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.(மிடுக்காவது, சர்வலோக வியாபன சக்தி.) 6ஜ்வலந்தம்’ என்கிற ஒளியையுடைய சிங்கம் என்னுதல். முடியாதது என் எனக்கே – நீ சூளுறவு செய்த அக்காலத்திலேயே தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?     

111. ஸபித்ராச பரித்யக்த: ஸூரைஸ்ச ஸமஹர்ஷிபி:
    த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம் கத: –ஸ்ரீராமா. சுந்த. 38 : 33.

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ – முக்காலத்திலும், பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதத்தைச் செய்கின்ற தமப்பன் செய்வதும் செய்து, 2‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் விடப்பட்டான்’ என்கிறபடியே. அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி 3எல்லா வகையாலும் அடையத் தக்கவனுமாய், உபகாரத்தைச் செய்கிறவனுமாய் உள்ள உன்னை, உதவியை நினையாநின்ற நான் கிட்டப் பெற்று வைத்து, விடக் காரணம் உண்டோ

112. விதித: ஸஹிதர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:
     தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி. — ஸ்ரீராமா. சுந்த. 21 : 20.

பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே– பரம்பி இருப்பதாய், 4இயல்பிலே அமைந்த (தொன்மை – பழமை; அதனால் பலித்த பொருள், ‘இயல்பிலேயமைந்த’ என்பது.)நற்குணங்களையுடையையாய், மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகன் ஆனவனே! 5‘பெருமாள் தர்மத்தையுடையவர்; சரணாகதி புகுந்தவனிடத்தில் அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர்; ஆகையால், பிழைத்திருப்பதற்கு நீ விரும்புவாயேயானால் உனக்கு அவ்விராமனோடு நட்பு உண்டாகவேண்டும்’ என்கிறபடியே, பகைவர்கள் கூட்டத்திலும் பிரசித்தமாம்படி பரந்திருத்தலின் ‘பாகின்ற புகழ்’ என்கிறார்.

113. மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந: ப்ரயோஜநம்
      க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்கார: மமஅபிஏஷ யதா தவ.–ஸ்ரீராமா. யுத். 114 : 101

‘சர்வேஸ்வரன் ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் (எமர் கீழ் மேல் எழு பிறப்பும்)அங்கீகரிப்பான் என்?’ எனின், சர்வேஸ்வரன் ஒருவனை அங்கீகரித்தால், அது பின்னை அவன் அளவிலே நில்லாதே அன்றோ? 2‘இருடிகள் குடியிருப்பை அழித்தான்; மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே ஸ்ரீஜடாயு மஹாராஜரை நலிந்தான். இவை எல்லாம் செய்யமாட்டானே இவன் இனி; இவன் ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவதுகாண்’ என்று இருந்தோம்; அது அந்நாளில் பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்க வேண்டுமோ? வேண்டுவன செய்யப் பாரும்; நீர் இறாய்தது   இருந்தீராகில், 1குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனை அன்றோ? நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர் கட்ட நில்லீர்’ என்றார் பெருமாள். இங்கு ஸ்ரீவிபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது – ஸ்ரீவிபீஷ்ணாழ்வானைப் பெருமாள் தமக்கு உடன் பிறந்தவனாகக் கொண்டார்  ஆகையாலே, அவனுக்குத் தமையனான இராவணனும் உடன் பிறந்தவன் ஆவன்;  ஆதலின், தம்மைக் ‘குடல் தொடக்குடையாரிலே ஒருவன்’ என்கிறார்

கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்  மாற்றே மாற்றல் இலையே; நினக்கு
மாற்றோ ரும்இலர் கேளிரும் இலர்எனும்  வேற்றுமை இன்று;அது போற்றுநர்ப் பெறினே.’–(பரிபா. 4)

உயிர்களது இயல்பான் நினக்குப் பகையும் நட்பும்  உளபோலத் தோன்றுவதல்லது நின் இயல்பான் அவை உளவல்ல என்றவாறாம்’

 ‘அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கித்
  தன்னதோ ளிணையை நோக்கி, ‘வீடணா! தக்க தன்றால்;
  என்னதோ இறந்து ளார்மேல் வயிர்த்தல்?நீ இவனுக்கு ஈண்டு
  சொன்னதோர் விதியி னாலே கடன்செயத் துணிதி’ என்றான்.’ 
  என்றார் கம்பநாடரும்.

114. இத்யேவம் ஆர்த்தஸ்ய ரகுப்ரவீர: ஸ்ருத்வாவசோ     வாலி ஜகந்யஜஸ்ய
    ஸம்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம்  விமநா பபூவ. –ஸ்ரீராமா. கிஷ்கிந். 23 : 24.

115. தர்மே மநஸ்ச தே பத்ர ஸர்வகாலம் பவிஷ்யதி
    யுஷ்மத் ஸந்ததி ஜாதாநாம் தீர்க்கம்ஆயு: பவிஷ்யதி. –ஸ்ரீவிஷ்ணு புரா 5. 19 : 27.

‘மகாராஜர்க்குப் பகைவன்’ என்று வாலியைக் கொன்ற பின்னர், மகாராஜர் கண்ண நீர் பொறுக்கமாட்டாமல் 3‘விடப்பட்ட கண்ணநீரை உடையவர் ஆனார்’ என்கிறபடியே, தாமும் கண்ணநீர் விழ விட்டார். 4‘மங்கள குணமுள்ள மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது!’ என்கிறபடியே, ஸ்ரீமாலாகாரர் பக்கல் அங்கீகாரம் அவன் சந்தானத்தளவும் சென்றது. ஸ்ரீகண்டாகர்ணன் பக்கல் பண்ணின அங்கீகாரம் அவன் தம்பி அளவும் சென்று, ‘நீ அவனுக்கு நல்லையாகில் 5‘அவன் முன்னாகப் போ’ என்று அருளிச்செய்தான். ஆக, இன்னோர் அன்ன சரிதைகளால் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்தல் உணர்தல் தகும்.

எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ்ரீவைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பராம். ஸ்ரீ வைஷ்ணவத்வ அடையாளம் அன்றோ திருத்துவாதச நாமங்கள்? நெடுமாற்கு அடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் என இரு வகைப்படும். அவற்றுள், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத்திருவாய்மொழி.

நெடுமாற்கடிமை’  என்றது, அடியார்கள் அளவும் செல்லும் பிரேமத்தை. இந்தப் பிரேமம் ஆழ்வார்க்குச்  சொரூபத்தோடு கூடியது; எம்பெருமானுக்கு வேட்கையால் உண்டாயது.

116. க இதி ப்ாஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
     ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.

கேசவன் தமர் – பிரசஸ்தகேசனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள். என்றது, அவனுடைய அவயவங்களின் அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றபடி. அன்றிக்கே, பகைவர்களை அழிக்கும் பண்பிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்; அன்றிக்கே, 1‘க என்பது பிரமனுடைய பெயர்; நான் எல்லாப் பொருளையும் நியமிக்கிற சிவன் ஆகின்றேன்; நாங்கள் இருவரும் தேவரீர் திருமேனியில் உண்டானோம். ஆதலால், ‘கேசவன்’     

கேசவன் என்பதற்கு மூன்று பொருள் அருளிச்செய்கிறார்; கேசத்தை யுடையவன்; கேசம்  – மயிர் முடி. ‘கேசி’ என்னும் அசுரனைக் கொன்றவன் கேசவன்; பிரமனையும்  சிவனையும் தன் திருமேனியிலே வைத்திருப்பவன் கேசவன். பிரசஸ்தகேசன் – நீண்ட  மயிர் முடியை உடையவன்.

117. ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ்தம் உதகம் குரு
    குலம் தாரயதே தாத ஸப்த ஸப்தச ஸப்த ச. –மஹாபாரதம்.

118. தஸபூர்வாந் தஸ அபராந் ஆத்மாநம்ச. –போதாயனதர்மம்:

சர்வேஸ்வரன் உடையார்’ என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது; ‘எமர்’ என்கிற ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது. இத்தால் இறைவன் அங்கீகரிப்பதற்கு ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது என்றபடி. எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும் கேசவன் தமர் ஆனார்கள் என்க. 1‘குழந்தாய்! தருமபுத்திரா! வாராய்; ஒரு நாளாகிலும் பூமியில் தண்ணீரை விடு; அவ்வாறு விடும் தண்ணீர் வமிசத்தை மூ ஏழ் தலைமுறை கரை ஏற்றுகிறது’ என்றும், 2‘கழிந்து போன பத்துப் பிறவிகளையும், இனி வருகின்ற பத்துப் பிறவிகளையும், தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும் வரும் பிரமாணங்களைக் காண்க.

உன்னைஇங்கு உயிர்த்த ஆற்றால் உரைக்கும்நின் குலத்து மூவேழ்
  என்னும்நன் மரபு ளோரும் இயைந்தனர் புனிதம் என்றால்
  அன்னவன் புனிதன் ஆதற்கு ஐயம்என்? அவனுக்கு ஈமம்
  மன்னுநல் வினைசெய் கென்ன மைந்தன்அவ் வினைசெய் தானால்.’-
  என்னும் பாகவதச் செய்யுள் . 7-ஆம் ஸ்கந்தம். இரணியனைக்  கொன்ற அத். 107.

119. நாராயண பரம்பிரஹ்ம தத்வம் நாராயண; பர:
    நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயணபர:

நாரணன் – ‘இதற்குப் பொருள் என்?’ என்னில், முழு ஏழ் உலகுக்கும் நாதன் -சர்வ ஸ்வாமி. ‘இவ்வர்த்தத்தில் பிரமாணம் என்?’ என்னில், வேத மயன் -‘நாராயண பரப்பிரஹ்ம’ என்று இது போன்று பிரமாணங்களால் ‘சர்வ ஸ்வாமி’ என்று ஓதப்படுகிறவன். காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் – தன்உலகத்தில் (மண் ஆதியான) காரணமாயும், (குடம் முதலான) காரியமாயும், (தண்ணீர்கொண்டு வரலாகிற) பலமாயும் வரக் கூடியதான இவற்றுக்கு 1நியந்தாவாக உள்ளவன். (காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்’ என்ற இதனால்,  ஐம்பெரும்பூதங்களையும், அவற்றின் காரியமான அண்டம் முதலானவற்றையும் அவற்றில்  வசிக்கிற ஆத்துமாக்களின் செயல்களையும் கூறியபடி.)-இனி, 2‘கிரியா சாதனம், அது அடியாக வரும் கிரியை, அதனால் சாதிக்கப்படுகிற காரியம், இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன்’ என்றும் ஆம்

கிரிதா சாதனம் – மட்பிண்டம். தண்டசக்கரங்கள் முதலானவைகள். கிரியை  – தொழில்.  அதனால் சாதிக்கப்படுகிற காரியம், குடம் முதலான காரியங்கள். இங்குக் கூறிய  இரண்டாவது பொருளால், நிமித்தகாரணம் முதற்காரணம் துணைக்காரணங்களையும்,  அவற்றின் காரியமான படைத்தல் முதலான காரியங்களையும், அவற்றால் உண்டான  தேவர்கள் முதலான பதார்த்தங்களையும் தெரிவித்தபடி.

120. ஸ்தலஸ்தஸ்ய ச ராமஸ்ய ரதஸ்தஸ்ய ச ராக்ஷஸ:
     நஸமம் யுத்தம் இதி ஆஹூ: தேவ கந்தர்வ தாநவா:–ஸ்ரீவிஷ்ணு புரா.

சீர் அணங்கு அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று வாரணம் மருப்பு ஒசித்த பிரான் – சேஷத்வத்திற்குத் தகுதியான ஆத்தும குணங்களைத் தரிக்கின்றவர்களாய்ப் பிரகிருதி சம்பந்தம் இல்லாத தன்மையரான நித்தியசூரிகள், இவ்வருகு உண்டான சம்சாரிகள்,இப்படி, ‘சிறியார் பெரியார்’ என்னும் வாசி இன்றிக்கே, எல்லாரும் 3எழுத்து வாங்கி ஏத்தும்படியாக நின்று, 4குவலயாபீடத்தின் கொம்பை வருத்தம் இன்றி முரித்த உபகாரகன். 5‘தரையில் இருக்கும் இராமனுக்கும் தேரில் இருக்கும் அரக்கனுக்கும் சண்டை தகுந்தது அன்று என்று தேவர்கள் கந்தருவர்கள் தானவர்கள் ஆகிய இவர்கள் கூறினார்கள்’ என்பது போன்று, ‘அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று’ என்கிறார்    

அகாரத்தின் விவரணமான நாராயண சப்தத்திலே ‘அவ ரக்ஷண’ என்கிற ரக்ஷகத்வமும் அர்த்தசித்தமாகையாலே, ‘வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்’ என்று அரிஷ்ட  நிவர்த்தியையும் இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

121. மாதர் லக்ஷ்மி யதைவ மைதிலஜந: தேநாத்வநா: தேவயம்
     த்வத் தாஸ்யைகரஸ அபிமாந ஸூபகை: பாவை: ஹரிம் [ இஹ  அமுத்ரச
     ஜாமாதா தயித:தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா
      பஸ்யேம ப்ரதியாம யாமச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேம ச.–குணரத்நகோசம் 52-ஆம் சுலோகம்

மா சதிர் இது பெற்று’ என்றார்; ‘இந்நன்மைக்கு அடி என்?’ என்ன, ‘நினைவு இன்றியே அந்தப்புரவாசிகள் சொல்லும் வார்த்தையைச் சொன்னேன்’ என்கிறார்(மாதவன் என்றதே கொண்டு – நான் ‘மாதவன்’ என்று கூறிய சொல்மாத்திரத்தையே கொண்டு; ‘). ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன் என்ற சம்பந்தத்தைக் கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச் செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகின்றோம்’ என்று அருளிச்செய்தார் அன்றே பட்டர்?    

அல்லாத திருநாமங்களுக்கும் இதற்கும் வாசி அறிவதே!’ என்று இதனையே குவாலாகக் கொண்டான் ஆதலின், ‘மாதவன் என்றதே கொண்டு’ என்கிறார். என்னை – மற்றைத் திருப்பெயர்கட்கும் இதற்கும் வாசி அறியாத என்னை. 

122. காமவ்ருத்தம்ச ஸூக்ரீவம் நஷ்டாம்ச ஜநகாத்மஜாம்
      புத்வா காலமதீதம்ச முமோஹ பரமாதுர: ஸ்ரீராமா. கிஷ்கிந். 30 : 3.

முன்பு கழிந்த காலம் கழிந்துவிட்டது அன்றோ? இதனால், மேலுள்ள காலம் மிகச் சிறிய காலமாகத் தோன்றாநின்ற தாயிற்று ஈஸ்வரனுக்கு! 1‘பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன், அரவணைமேல் கண்டு தொழுதேன்’ என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருப்பைத் தான் என்பக்கலிலே கொண்டுள்ளான் என்கிறார். ‘சுக்கிரீவன் சொன்ன தவணைக் காலம் கடந்துவிட்டது என்று கருதி மூர்ச்சித்தார்’ என்கிறபடியே, இராநின்றான் என்றபடி.

123. கோக்நே சைவ ஸூராபேச சோரே பக்நவ்ரதே ததா
      நிஷ்க்ருதி: விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்ருதி:.ஸ்ரீராமா. கிஷ். 33 : 12. 

தீது அவம் கெடுக்கும்தீதாவது, பொய்ந்நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த பாவங்கள்; அவமாவது, ஞானம் பிறந்த பின்பு தம்மை அறியாமல் நேர்ந்தவைகள் ஆக, இவ்விரண்டாலும் பகவானை அடைவதற்குத் தடையாக இருந்த கர்மங்களைச் சொல்லுகிறது. அன்றியே, 2‘பசு வதை செய்தவன் விஷயத்திலும், சுராபானம் செய்பவன் விஷயத்திலும், திருடன் விஷயத்திலும், விரதங்களை நியமம் தவறி நடத்தினவன் விஷயத்திலும், பிராயச் சித்தம் பெரியோர்களால் சொல்லப்பட்டது; நன்றி கெட்டவன் விஷயத்தில் பிராயச்சித்தம் சொல்லப்படவில்லை’ என்கிறபடியே, பிராயச்சித்தம் உள்ள பாவங்களையும் அஃது இல்லாத பாவங்களையும் சொல்லிற்றாகவுமாம். ‘இவற்றைக் கெடுப்பது கஷாயத்தைக் குடிக்கச் செய்தோ?’ என்னில், அமுதம் – தன்னுடைய இனிமையை அனுபவிப்பித்ததாயிற்று.

124. வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ்வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி. -ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

செந்தாமரைக்கண் குன்றம் – வாக்கு இத்திரியத்திற்கே அன்றிக் கண்ணுக்கும் இனியனாய் இருக்கை. இத்தலையில் தீதும் அவமும் போக்கினானாய் இருக்கை அன்றியே, 1‘தனக்கு உண்டாய்க் கழிந்தது’ என்று தோன்றும்படி வடிவில் பிறந்த பேரொளியோடு விளங்குகிறான் ஆதலின், செந்தாமரைக் கண் குன்றம்’ என்கிறார். 2‘மனிதர்கட்குத் துன்பம் வரும் காலத்தில் அவர்கள் படும் துன்பத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான துன்பத்தைத் தான் அடைகின்றான்’ என்கிறபடியே இருக்குமவனன்றோ இறைவன்

125. அவாக்யநாதர: -சாந். உபநிட. 3 : 14.

குடக்கூத்தாவது. 2‘எல்லாம் நிறைந்தவனாதலின், ஒன்றிலும் விருப்பம் இல்லாதவன்; ஆதலால், மௌனமாக இருக்கிறான்,’ என்கிறபடியே, இருக்கக் கூடிய பொருள், 3தைரிய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச்சாவி வெட்டி ஆடினபடி இது.

126. பரதஸ்ய வச: குர்வந் யாசமாநஸ்ய ராகவ
ஆத்மாநம் நாதிவர்த்தேதா: ஸத்ய தர்ம பராக்ரம.

தேவும் என்றது, இறைமைத் தன்மையினை. தன்னை என்கிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் தன்மையை; அது அன்றோ 1தானான தன்மை? ‘ஆத்மாநம் நாதி வர்த்தேதா: – நீரான தன்மையை இழவாதே கொள்ளும்’ என்றார் வசிஷ்ட பகவானும். இச்சுலோகத்திலுள்ள ‘ஆத்மாநம்’ என்பதனை ஸ்ரீ பரதாழ்வானுக்கு அடைமொழியாக்கி, ‘ஆத்துமாவைப் போன்ற பரதனை இழவாதே கொள்ளும்’ என்று இதற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவர் சிலர். ‘நீரான தன்மையாகிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவராய் இருத்தல்; ‘உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து, நீரான தன்மையை இழவாதே கொள்ளும் 2என்கிறான்’ என்று பொருள் அருளிச்செய்வர் பட்டர். பாடி ஆடத் திருத்தி – தரிசு கிடந்த நிலத்தைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போன்று, நித்திய சூரிகள் யாத்திரையே யாத்திரையாம்படி திருத்தி. ‘ஆயின், மேல் அடியில், ‘என்று என்றே குனித்து’ என்றதற்கும், இங்குப் ‘பாடி ஆடி’ என்பதற்கும் வேற்றுமை என்?’ என்னில், மேலிடம், 3சௌலப்யத்திலே நோக்கு; இங்கு, இறைமை,

தானான தன்மை – தன்னுடைய சுவபாவம்; அதாவது, இறைவனுக்கு இயற்கைத்  தன்மையாவது, அடியார்கட்குப் பரதந்திரனாய் இருத்தல் என்பதாம். ‘அப்படி ஆஸ்ரித  பாரதந்தர்யமே தானான தன்மையாக இருக்குமோ?’ எனின், அதற்கு, ‘ஆத்மாநம்  நாதிவர்த்தேதா:’ என்னும் ஸ்ரீராமாயணச் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்.

சத்தியம் தர்மம் பராக்கிரமம் இவற்றையுடைய இராகவனே! யாசிக்கின்ற  பரதனுடைய வார்த்தையை மறுத்து நீரான தன்மையை (ஆஸ்ரித பாரதந்தர்யத்தை)  இழவாதே கொள்ளும்’ என்கிறான்

சௌலப்யத்திலே நோக்கு’ என்றது, ‘கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன்’ என  வருகின்றவற்றை நோக்கி. ‘இங்கு, இறைமை சௌலப்யம் இரண்டிலும் நோக்கு’ என்றது,  ‘தேவும் தன்னையும்’ என்றதனை நோக்கி. தேவு என்றதில் இறைமைத்தன்மை; தன்னை  என்றதில் சௌலப்யத் தன்மை, சௌலப்யத்தை, அநுசந்தித்த காரணத்தால் வந்த  கூத்தைச் சொல்லுகிறது; இறைமைத்தன்மையினையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்த  காரணத்தால் வந்த பாடுதல் ஆடுதல்களைச் சொல்லுகிறது என்றபடி.

127. விஸோதித ஐட : ஸ்நாத: சித்ர மால்யாநுலேபந:
      மஹார்ஹ வஸந: ராம: தஸ்தௌ தத்ர ஸ்ரியா ஜ்வலந்.–(ஸ்ரீராமா. யுத்.  131 : 15.)

திருமலையாண்டானிடத்தில் எம்பெருமானார் திருவாய்மொழி கேட்டருளுகிற காலத்தில் பாசுரந்தோறும் சில வார்த்தைகளை அருளிச்செய்து, ‘இது அர்த்தம் ஆனாலோ?’ என்றால், ‘இது விஸ்வாமித்திர சிருஷ்டி; ஆளவந்தார் அருளிச்செய்யக் கேட்டறியேன்’ என்று பணிக்குமாம் ஆண்டான். ஆண்டான் ‘இப்பாசுரத்திற்கு விஸ்வாமித்திர் சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ’ என்ன, எம்பெருமானார் 1இப்பாசுரத்தால், தன் அவயவ சௌந்தர்யத்தால் என்னைத் தனக்கு ஆக்கினான் என்கிறார்’ என்று அருளிச்செய்தனராம். அதுவும் கிடக்க, பட்டர், ‘ஆழ்வாரையும் ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்ததனால் திருமேனியிற்பிறந்த பேரொளியைச் சொல்லுகிறது’ என்று அருளிச்செய்வர்; ‘நீராட்டம் முடிந்த பின் பல வித மலர்களால் கட்டப்பட்ட மாலை, கலவைச் சந்தனம் இவற்றை அணிந்திருப்பவரும், மிக உயர்ந்த பீதாம்பரத்தைத் தரித்திருப்பவருமான ஸ்ரீராமர், சுத்தமான திருக்குழலை உடையவராய் அந்தச் சிம்மாசனத்தில் அலங்கார இலக்குமியோடு பிரகாசித்தவராய் நின்றார்,’ என்றார் ஸ்ரீ வால்மீகியார்.      

சபரிகரமாகத் தம்மை அங்கீகரித்தது எத்தாலே?’ என்னில், ‘தன்னுடைய அவயவ  சௌந்தர்யத்தாலே என்கிறார்’ என்பது எம்பெருமானாருடைய திருவுள்ளம். ‘எமர்  ஏழெழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கின குணத்துக்குத் தோற்று, ‘விட்டிலங்கு’  என்று இன்னோரன்ன விசேஷணங்களை இட்டு ஏத்துகிறார்,’ என்பது  திருமாலையாண்டான் நிர்வாஹம்.

128. ஸோபயந் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா
அத்ருஸ்யத ததா ராம: பால சந்த்ர இவோ தித: –ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.

விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு 1‘இராமர் தமது திருமேனியின் ஒளியாலே தண்டகவனத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரன் போன்று காணப்பட்டார்’ என்னுமாறு போன்று இராநின்றது வடிவழகு; தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி.

129. தேஹி மே ததாமி தே. –யஜூர்வே. 1 : 8. ‘

துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும் – கல்பந்தோறும் கல்பந்தோறும் துதி செய்த பாடல்களைக்கொண்டு பாடுவது ஆடுவதாம்படி பண்ணினான். துதி சூழ்ந்த பாடல் – துதி உருவமான பாடல்கள் என்னுதல்; துதிக்கப்படுகிற குணங்களை விளாக்கொலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல். ‘நின்று’ என்கிறார், 2‘எனக்குக்கொடு’ என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை இன்றியே இருத்தலின்.

எனக்கு நீ ஒரு பலனைக் கொடு; நான் உனக்கு ஒருபலனைக்  கொடுக்கிறேன்’ என்று வேறு பிரயோசனங்களைக் கொண்டு நீங்காமல் என்றபடி.

130. ஸதம் நிபதிதம் பூமௌ ஸரண்ய: ஸரணாகதம்
      வதார்ஹம்அபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத். –ஸ்ரீராமா. சுந். 38 : 34.

தங்களிலும் (தங்கட்குக் கேடுவரினும் கிருபையே மிகுந்து  என்றபடி.)திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்; கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் 2கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான்.

ககுஸ்த வம்ஸத்தில் பிறந்த சரண்யரான அவ்விராமபிரான்,  பூமியில் விழுந்தவனும் சரணம் அடைந்தவனுமான அந்தக் காகாசுரன் கொல்லத்  தக்கவனாயிருந்தும், பரமகிருபையால் அவனைக் காப்பாற்றினார்’

எந்தை நின்சர ணம்சரண் என்றஇ தன்னால்
முந்தை நின்குறை யும்பொறை தந்தனம்; முந்துன்
சந்தம் ஒன்று கொடித்திரன் கண்கள் தமக்கே
வந்தொர் நன்மணி நிற்கென வைத்ததும் வைப்பாய்.’ –கம்பரா. சுந். சூடா. 82)

சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டுஎறிய அனைத்துலகும் திரிந்தோடி
‘வித்தகனே! இராமாவோ! நின்னபயம்!’ என்றுஅழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓர் அடையாளம்–(பெரியாழ். 3. 10 : 6)

131. சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
     தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்.–ஸ்ரீ கீதை. 6 : 34.

மருவித் தொழும் மனமே தந்தாய் – கல்பந்தோறும் கல்பந்தோறும் பரம போக்யமான உனது திருவடிகளையே 4அநந்யப் பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனத்தினைத் தந்தாய். இனி, மற்றைய விஷயங்கள் நிலையற்றவை ஆகையாலும், இனியன அல்லாதவை ஆகையாலும், ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை ஆகையாலே, மனம் 5‘சஞ்சலம் அடைந்துகொண்டே இருக்கும் மனம்’ என்கிறபடியே, சஞ்சலம் அடைந்துகொண்டே அன்றோ இருப்பது? அப்படி இன்றியே நித்தியமுமாய் எல்லை இல்லாத போக்கியமுமாய் இருக்கையாலே ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்கிறார்   -அளவே அன்றி, 1கருவூலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய்’ எனலுமாம்

132. நது மாம் ஸக்ஷ்யஸே தர்ஷ்டும் அநேநைவ ஸ்வ சக்ஷூஷா
திவ்யம் ததாமி தே சக்ஷூ: பஸ்ய மே யோகம் ஜஸ்வரம்.– ஸ்ரீ கீதை, 11 : 18.

உனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்தேன்’ என்பது போன்று. ‘பழைய மனம் இது’ என்று 3பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாதபடி இராநின்றது என்றபடி

என் வாமனனே வல்லைகாண் – வாமன வேடத்தைக் காட்டி என் மனத்தினைத் திருத்தித் தந்தாய்; அவ்வடிவழகாலே, மஹாபலி ‘என்னது’ என்று இருந்த பூமியை அபகரித்தாய்; ஆதலால், கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்குப் பரிகரம் ஒன்றேயோ?’ என்கிறார். வல்லைகாண் – உகப்பின் மிகுதி.           

133. ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜாம்.
      வக்ஷஸ்தலேந ஸ்ரியம் உத்வஹந் விபு:
      விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசநோ
      மமாஸ்து மங்கள்ய விவிருத்தயே ஹரி;–விஷ்ணு தர்மம்.

சிரீதரன் – பெரியபிராட்டியாரைத் திருமார்விலே உடையவன். செய்ய தாமரைக் கண்ணன்1‘பிராட்டியைத் திருமார்விலே தரித்துக்கொண்டு இருப்பவரும், எங்கும் நிறைந்தவரும் விசாலமான தாமரை இதழ் போன்ற திருக்கண்களை உடையவரும்’ என்கிறபடியே, நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமாறு போன்று, பிராட்டி மார்வில் இருக்கையாலே குளிர்ந்த கண்ணழகினையுடையவன்

134. ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்.–சாந்தோக்கிய உபநிடதம். 6. 2 : 1. 

தனி முதல்வனை –3‘சத் என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத் தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது’ என்கிறபடியே மூன்று விதக் காரணமும் தானேயாய் இருக்கிற இருப்பை அறியப்போமோ?

 

135. த்யக்த்வா காமம் பயம் குரோதம் லோபம் மோஹம்ச மத்ஸரம்
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்.–பாரதம், மோக்ஷ தர்மம். 4 : 50.

மூவகைத் துன்பங்களாலே நொந்த சம்சாரி சேதனன், 3‘கோடைக்காலத்தில் குளிர்ந்த தடாகத்தை அடைவது போன்று, பரம்பொருளை அடைந்தவனாய் இருக்கிறான்’ என்கிறபடியே, அப்பெரிய மடுவிலே வீழ்ந்து தன் தாபம் எல்லாம் ஆறுமாறு போன்று, முதலிலே, 4இவை இல்லாதவன் திருவனந்தாழ்வான்மேலே அணைந்து, இவை உண்டாய்க் கழிந்தாரைப் போன்று இருக்கின்றான் ஆதலின், ‘அணைவது’ என்கிறார். விடாயர் மடுவிலே விழுமாறு போலே ஆயிற்று அணைவது. 5சேஷபூதன் அடிமை செய்து அல்லது தரியாதது போன்று, சேஷியும் சேஷபூதனோடே அணைந்தல்லது தரியாதானாய் இருக்கிறபடி    

136. ரம்யம் ஆவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய:–சங்க்ஷேபராமாயணம்.

 பூம்பாவை ஆகம் புணர்வது2இன்பமே ஒரு வடிவுகொண்டவளாய் ஒரு காரணத்தால் வந்த பெண்மையினையுடையள் அல்லாதவளாய் உள்ள பெரிய பிராட்டியாரோடே கலந்து ஒழுகுவது. ஆகம் புணர்வது என்றதனால், 3ஆத்ம குணங்கள் குமரி இருந்து போமித்தனை. 4மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே ‘அணைவது, புணர்வது’ என்கிறார்.

ஆத்ம குணங்கள் குமர் இருந்துபோம் இத்தனை’ என்பதற்கு, பரமரசிகனான  சர்வேஸ்வரன் பிராட்டியினுடைய திருமேனியின் சௌந்தர்யம் முதலிய குணங்களில்  ஈடுபட்டதனால் ஆத்ம குணங்கள் பர்யந்தம் சென்றிலன் என்பதும், அதனால்,  பிராட்டியின் ஆத்ம குணங்கள் பயன் அற்றுக் கிடக்கின்றன என்பதும் கருத்து

மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே’ என்றது, அக்ர்யப் பிராய நியாயத்தாலே,  பிராட்டியோடே கூட எடுக்கையாலே இவ்விருவர்க்கும் பிறக்கும் ரசம், சேர்த்தியைக்  கண்டு அனுபவிக்கையாலே திருவனந்தாழ்வானுக்கும் உண்டு என்பதாம். இதற்கு  மேற்கோள் காட்டுகிறார், ‘காட்டில் கட்டிய ஆசிரமத்தில்’ என்று தொடங்கி, இச்சுலோகம்,  சங்க்ஷேபராமாயணம். இதற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்: – ரம்யமா வசதம்  கிருத்வா – அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்குத்  தகுதியாகச் சமைத்த மாளிகைகளிலும் திருவுள்ளத்துக்குப் பொருந்தி அழகியதாய்  இருந்தது காட்டிலே இளைய பெருமாள் சமைத்த ஆசிரமமாயிற்று. த்ரயோ ரமமாணா: –  நாயகரான பெருமாள் ரசம் அன்றே பிராட்டியது? பிராட்டிக்குப் பிறக்கும் ரசம் அன்றே  பெருமாளது? அப்படியே, அச்சேர்த்தி கண்டு உகக்குமவரன்றோ இளையபெருமாள்?  வநே -‘படைவீடர் காட்டிலே வசித்தார்கள்’ என்று தோற்றாமல், காடர் காட்டிலே  வசித்தாற்போலே பொருந்தி இருந்தபடி. படைவீடர் – படைவீட்டிலே இருப்பவர்கள்;  படைவீடு – நகரம். அக்ர்யப் பிராயம் – முதன்மை பெற்றவர்கள் வகுப்பிலே சேர்த்தல்.  இது ஒரு நியாயம்.

பிராட்டி, இளையபெருமாள் ஆகய மூவரும் களிக்கின்றவர்களாய் வாழ்ந்தார்கள்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. ஆக, சொல்லிற்றாயிற்று, சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாகத் திருவனந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை, முக்தப் பிராப்பியபோகம் என்றபடி

137. தஸ்யா: ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித:
     ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்தர: ஸ: அக்ஷர: பரம: ஸ்வராட்.–தைத்திரீயநாரா. உப. 11. 

138. ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர்வ்யஸ்திதா:
      ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வஸவர்த்திந: -விஷ்ணு தர்மம்

இங்கு ‘முதல்’ என்கையாலே, இவ்வுலகத்தில் காரிய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும், இதுதான் ஆவது அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது. இதனால், பிரமனும் சிவனும் 2சம்சார பத்தர்கள் என்னுமிடமும், சர்வேஸ்வரனே மோக்ஷத்தைக் கொடுக்கவல்லான் என்னுமிடமும் சொல்லுகிறது. ஆக, அடையத் தக்கவன் அவனே; பிரமனும் சிவனும் அடையத் தக்கவர்களல்லர் என்கை. 3‘பிரமன் முதல் புழு இறுதியாக உள்ள இவ்வுலகத்துப் பொருள்கள் புண்ணிய பாவ ரூப கருமங்களால் உண்டு பண்ணப்பட்ட சம்சாரத்துக்கு உட்பட்டவைகள்’ என்னாநின்றது அன்றோ? ஆக, இப்படிப் பிரஹ்ம ருத்திரர்களுக்கும் காரணனாய் இருக்கையாலே வந்த மேன்மை உடையவன்.    

139. ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
      த்வாமேவ ஸரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: –ஜிதந்தா ஸ்தோத்திரம்.

140. ஸ்ம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
     விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்.

புணைவன்’ என்பதற்கு, ‘புணையாமவன்’ என்றும், ‘சர்வபர நிர்வாஹகனாமவன்’ என்றும் பொருள் கோடலுமாம். 2‘ஞானிகள் தேவரீரையே சரணமாக அடைந்து, கொடியதாயும் எல்லை இல்லாத துக்கத்துக்கு இருப்பிடமாயும் இருக்கிற சம்சாரமாகிற கடலைத் தாண்டுகிறார்கள்,’ என்றது காண்க. ‘விஷ்ணு போதம்’ என்று கூறப்பட்டுள்ளது அன்றே? (விஷ்ணுவாகிற ஓடம். இது, விஷ்ணு தர்மம்.)இதனால், ஓர் இடத்தைப் பற்றி நிற்கை அன்றிக்கே, அக்கரையும் இக்கரையுமாய் நிற்கும் ஓடம் என்பது போதரும்.

பனிநின்ற பெரும்பிறவிக் கடல்கடக்கும் படிபற்றி நனிநின்ற சமயத்தோர் எல்லோரும் நன்றுஎன்னத்
தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீயாகில்  இனிநின்ற முதல்தேவர் என்கொண்டுஎன் செய்வாரே?’    –விராதன் வதைப். 52)   —    

141. முக்தி: மோக்ஷோ மஹாநந்த:

142. நிரஸ்த ஆதிஸயாஹ்லாத ஸூக பாவைக லக்ஷணா
     பேஷஜம் பகவத் ப்ராப்தி: ஏகாந்தாத்யந்திநீமதா. —

மேற்பாசுரத்தில் ‘பிறவிக்கடல் நீந்துவார்க்கு’ என்ற அதனுடைய விவரணமாய் இருக்கின்றது இப்பாசுரம். நீந்தும் துயர்ப்பிறவி உட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் – கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான பிறப்புத் தொடக்கமான மற்றும் உண்டான 1அபக்ஷயகேடு முதலானவைகளையும் (உண்டாதல், பிறத்தல், பரிணமித்தல், வளர்தல்,  குறைதல், மரணம் என்பனவற்றை அபக்ஷயம்-குறைதல்.)கடத்தும். ‘கடக்க அரிது’ என்பது போதர ‘நீந்தும்’ என நிகழ்காலச் சொல்லால் அருளிச்செய்கிறார். துயர் இல்லா வீடு முதலாம் -துக்கத்தின் வாசனையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம். இனி, இதனை ஒரு தொடராகக் கொண்டு, ‘கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான பிறவி தொடக்கமாக நீந்தும் துயரான மற்றும் எவ்வெவையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம்’ என்று பொருள் கோடலுமாம். 2இப் பொருளில், இரண்டாம் அடியிலுள்ள ‘நீந்தும்’ என்பதும் பெயரெச்சம். இவர் ’வீடு’ என்கிறது, பிறவி நீங்குதல் மாத்திரத்தை அன்று; சுகமாக இருத்தலையே இலக்கணமாகவுடைய பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுகிறது. ‘ஆயின், வீடு என்ற சொல் பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுமோ?’ எனின், 3‘முக்திர் மோக்ஷா மஹாநந்த’ என்பது நிகண்டு.

முதல் இரண்டு அடிகட்கு, இரண்டு வகையாகப் பொருள்  அருளிச்செய்கிறார். முதற்பொருள், அநிஷ்ட நிவர்த்தி பூர்வமாக இஷ்டப் பிராப்தியைச்  சொல்லுகிறது. இரண்டாவது பொருள், கேவலம் இஷ்டப் பிராப்தியைச் சொல்லுகிறது.

முத்தி என்பதும், மோக்ஷம் என்பதும், பெரிய ஆனந்தம் என்பது ஒரு பொருளன’  என்பது பொருளாம். இங்கு மோஷத்திற்கு ‘மஹானந்தம்’ என்ற பெயர் இருத்தல்  கருதத்தக்கது.

143. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்ம்ருதௌ
     ததாதர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.–பாரதம், சாந்தி பர்வம், 169.

144. உத்பாத்ய ப்ருதிவீம் ஸம்பயக் ஸ்தாபயித்வா யதாபுரம்
     ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாம் ஆவிஸ்ய ப்ரஜாபதே.-விஷ்ணு தர்மம்.

புணர்க்கும் அயன் ஆம் – இவற்றைப் படைத்தலையே தொழிலாகக் கொண்டிருக்கிற பிரமனும் ஆம். அழிக்கும் அரன் ஆம் – சுடுதடி போலே இவற்றை அடைய அழித்துக் கொண்டிருக்கிற சிவனும் ஆம். 2‘அந்த நாராயணனால் நன்கு காண்பிக்கப்பட்ட படைத்தல் அழித்தல் என்னும் தொழில்களை உடையவர்களாய்ப் படைத்தல் அழித்தல்களைச் செய்கிறார்கள்’ என்றும், 3‘பிரமனே! உன்னிடத்தில் அந்தாரத்துமாவாய் நின்று சிருஷ்டியைச் செய்யப்போகிறேன்’ என்றும் வருகிறபடியே, அவன் அந்தராத்துமாவாய் நின்று நடத்துவிக்க இவற்றைச் செய்கிறார்கள். புணர்த்த தன் உந்தியோடு மன்னிப் புணர்க்கும் அயன் ஆம் ஆகத்து மன்னி அழிக்கும் அரன் ஆம் – இவைதாம் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றி இருந்த போதாயிற்று;    பால் குடிக்கும் குழந்தை வாயில் முலை வாங்கினால் தரியாதது போன்று, இவர்களும் திருமேனியை விட்டு விலகின், ஆற்றல் இல்லாதவர்கள் ஆவர்கள் என்றபடி. 1இத்தால், சாமாநாதிகர்ணயத்தாலே அந்தர்யாமித்துவம் சொல்லிற்று. ‘புணர்த்த தன் உந்தி’ என்கையாலே, 2காரணத்துவம் சொல்லிற்று; ‘ஆகத்து மன்னி’ என்கையாலே, திருமேனியைப் பற்றிப் பெற்ற சொரூபத்தினை உடையவர் என்னுமிடம் சொல்லிற்று.

145. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்திரமிதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யபயம்.–ஸ்ரீ கீதை, 9 : 2.

பலம் முந்து சீரில் படிமின் – அவனுடைய பலம் முற்பட்டிருக்கின கல்யாணகுணங்களிலே அன்புடையர் ஆகுங்கோள். 5‘செய்வதற்குச் சுக ரூபமாக இருக்கும், நினைத்த பலன்களைக் கொடுத்துத் தான் அழிவில்லாமல் இருக்கும்’ என்னும்படி அறுதி செய்யப்பட்ட விஷய 6சாரஸ்யத்தாலே, சாதன தசையே தொடங்கி இனியதாய் இருத்தலின் ‘பலம் முந்து சீர்’ என்கிறார். ஓவாதே – ‘பௌர்ணமி அல்லாத மற்றை நாள்களில் கடல் தீண்டலாகாது’ என்னுமாறு போன்று ஒரு நியதி இலை இதற்கு    

146. மர்யாதாநாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ: –ஸ்ரீராமா. சுந். 35 : 11

அந்த இராகவன் உலகினுடைய மரியாதையைச் செய்கிறவன், செய்விக்கிறவன்’ என்றார் ஸ்ரீ வால்மீகி

ஒழுக்கத்தை அநுஷ்டித்துக் காட்ட வந்த அவதாரங்கள்

அறந்தலை நிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித்
திறந்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தி”–கம்பர்

147. யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத்ததேவ இதரோ ஜந:
      ஸயத் ப்ரமாணம் குருதே லோக: ததநுவர்த்ததே. –ஸ்ரீ கீதை, 3 : 21.

பெரியவன் எதனை எதனைச் செய்கிறானோ, அதனையே மற்றை மக்களும் செய்கிறார்கள்; அப் பெரியவன்  எதனைப் பிரமாணமாக வேண்டுமென்று செய்கிறானோ, அதனையே உலகமும் அநுசரிக்கிறது’, என்பது ஸ்ரீ கீதை.

இப்படித் தாழவிட்டு அவதரிக்கிறவன்தான் யார்?’ என்னில், தேவாதி தேவபெருமான் – மனித மணம் பொறாத தேவ மணம் பொறாத நித்திய குரிகட்கு அவ்வருகானவன்.

148. வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
     ஆபத் விமோசந மஹேஷ்ட பலப்ரதாநை:
      க: அந்ய: ப்ரஜாபஸூபதீ பரிபாதி கஸ்ய
      பாத உதகேந ஸஸிவ: ஸ்வஸிரோத்ருதேந.–ஸ்தோத்திர ரத்தினம்.

149. ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார ஸிரஸா ஹர:
பாவநார்த்தம் ஜடாமத்யே யோக்ய: அஸ்மி இதிஅவதாரணாத்– ஈஸ்வர சம்ஹிதை.

 தீர்த்தன்1‘தன் தலையிலே தரிக்கப்பட்டிருக்கிற எவருடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையினால் அச்சிவன் பரிசுத்தன் ஆனான்?’ என்றும், 2‘நான் தக்கோன் ஆனேன்’ என்னும் நிச்சயக் கருத்தால் பரிசுத்தத்திற்காகத் தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தான் என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகள் தீண்டுதலாலே அசுத்தரையும் சுத்தர் ஆக்க வல்ல சுத்தியை உடையவன். ‘இது எப்பொழுது செய்தது?’ என்னும் அபேக்ஷையிலே, ‘உலகு அளந்த காலத்திலே’ என்று அதனை நிரூபிக்கிறார் மேல்.

குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
  மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் – கறைகொண்ட
  கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
  அண்டத்தான் சேவடியை ஆங்கு-நான்முகன் திருவந். 9

குறைகொண்டு – தன்னுடைய செல்லாமையை முன்னிட்டுக்கொண்டு. நான்முகன்  குண்டிகைநீர் பெய்து – அருகே நின்ற தர்ம தத்துவம் ஜலமாய் இவன் குண்டிகையிலே  பிரவேசித்தது, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷசூக்தாதிகளைக் கொண்டு துதித்து. கறை கொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் -‘யுக்தாயுக்த  நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கைவளராநின்றான்; அது போக  வேணும்’ என்று இவன் ஜடையிலே ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்;ஸ்ரீபாததீர்த்தம் கொண்டு துஷ்புத்திரர்கள் தலைகளிலே தெளிக்குமாறு போன்று’ என்பன
மேல் பாசுரத்துக்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்.

 ‘புவிஅளந்தவன் பொன்னடித் தாமரை   
  தவழும் கங்கைஅம் தண்புனல் பொன்னென
  அவிர்ச டாமுடி மீதுவைத் தன்றுகொல்
  சிவனும் ஓர்சிவ னாகித் திகழ்ந்தனன்-பாகவதம், 3-ஆம் ஸ்கந்தம், கபிலர் தத்துவம் உரைத்த அத். செய். 51)

தேனந்து சோலை அரங்கேசர் சேவடி மேல்விசயன்
  தானந்த நாளையிற் சார்த்திய மாலையும் தாள்விளக்கும்
  வானம் தரும்கங்கை நன்னீரும் சென்னியில் வைக்கப்பெற்ற
  ஆனந்தத் தான்அல்ல வோமுக்க ணான்மன்றுள் ஆடுவதே?’–திருவரங்கக்கலம். 45.

150. பார்த்தோ விஜேதா மதுஸூதநஸ்ய
      பாதாரவிந்த அர்பபித சித்ரபுஷ்பம்
      ததர்ஸ கங்காதர மௌளிமத்யே
      பபூவவீர: க்ருத நிஸ்சயார்த்த: -ஸ்ரீகீதை, 11 : 40

151. நம: புரஸ்தாத் அத பருஷ்டத: தே. 

பார்த்தன் தெளிந்து ஒழிந்த – இறைவன் சாரதியாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய இறைமைத்தன்மையில் கலங்காமல், ‘அந்தப் பார்த்தன் பெரிய ஞானத்தையுடையவன்’ என்கிறபடியே பேரறிஞனான அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்து, 2‘தேவரீருக்கு முன் பக்கத்திலும் வணக்கம், பின் பக்கத்திலும் வணக்கம்,’ என்று கூறிப் பின் பற்றிய. பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே – அறப்பெரிய முதன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையையுடைய சர்வேஸ்வரனுடைய பரத்துவம், இன்று அறிவு கேடர் சிலரால் 3செல்லவிட்டு ஆராயுமளவாய் இருந்ததோ?

152. தத: ஸாகர வேலாயாம் தர்ப்பாந் ஆஸ்தீர்ய ராகவ:
     அஞ்ஜலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹூம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந: –ஸ்ரீராமா. யுத். 21 : 1.

 கிடந்து -திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்

பாஹூம்புஜகபோகாபம் – திருவனந்தாழ்வான் மேலே  சாய்ந்தாற்போலேயாயிற்றுத் திருக்கையை மடித்துச்சாய்ந்தால் இருக்கும்படி. அரிஸூதந:
கிடந்த கிடையிலே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை –பிரதிஸிஸ்யே  மஹேததே:- ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பரிசித்துச் சாய்ந்தாற்போலே இருக்கை’

153. உடஜே ராமம் ஆஸீநம் ஜடாமண்டல தாரிணம். ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

 கிடந்து -திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்; இருந்து – பரமபதத்திலே இருந்தபடியாதல்; 2‘பர்ணசாலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீராமர்’ என்கிறபடியே, இருடிகள் ஆஸ்ரமங்களிலே இருந்தபடியாதல்

154. அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ஸதநு: ஊர்ஜிதம்
       ராமம் ராமாநுஜம் சைவ பர்த்து: சைவ அநுஜம் ஸூபா.–ஸ்ரீராமா. கிஷ்கிந். 19 : 25.
நின்று – திருமலையிலே நின்ற படியாதல்; இராவணனைக் கொன்ற பின்னர்க் கையும் வில்லுமாய் இலங்கையிலே நின்றபடியாதல்; 3‘வலிய வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீராமனையும் இலக்குமணனையும், தன் கணவனுக்குத் தம்பியான சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே வாலியைக் கொன்று நின்ற நிலையாதல்

155. தவஸ: பரமோதாதா ஸங்க சக்ர கதாதர:
     ஸ்ரீ வத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வதோ த்ருவ:.–ஸ்ரீராமா. யுத். 114 : 15. இது மண்டோதரியின் கூற்று.

அவர்களுடைய பெண்கள் பக்கலிலே கேட்குமித்தனையே அன்றோ இவனுடைய பரத்துவம்? 4‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலே இருக்கிற ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், கொடுக்கிறவர், ஸ்ரீவத்சம் என்னும் மறுவைத் திருமார்விலுடையவர், பிரியாமல் இருக்கிற பெரிய பிராட்டியாரையுடையவர், ஒருவராலும் வெல்ல முடியாதவர்,   

156. த்வம் அப்ரமேய: ச துராஸதஸ்ச ஜிதேந்த்ரிய: ச உத்தம     தார்மிக: ச
     அக்ஷயகீர்த்தி: ச விசக்ஷண: ச க்ஷிதிக்ஷமாவாந்   க்ஷதஜோபமாக்ஷ:–ஸ்ரீராமா. கிஷ்கிந். 24 : 31. இது தாரையின் கூற்று.

தேவரீர் வேதங்களாலும் அளவிட முடியாதவர்; அணுக முடியாதவர்; இந்திரியங்களை வென்றவர்; உயர்ந்த தார்மிகர்; அழிவற்ற கீர்த்தியினை உடையவர்; பூதேவி போன்ற பொறுமை உடையவர்; இரத்தம் போன்ற திருக்கண்களையுடையவர்’ என்னுதல் சொல்லாநிற்பர்கள் அன்றே?

செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
  கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
  ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
  ஊழி யாவரும் உணரா
  ஆழி முதல்வ!நின் பேணுதும் தொழுது.’ –(பரி. 2 : 15  -19

காலவீட்டம் கழிந்த பின் உயிர்கள் உளவாதற்பொருட்டு  அந்நிலத்தினை எடுத்திட்ட கேழல் கோலத்தால், திகழ்வரப் பெயர் பெற்ற இவ்வராக
கற்பம் நின் செயல்களுள் ஒரு செயலின் பெயராமதனை உணர்த்துதலின், அச்செயல்கள்  பலவற்றையும் செய்கின்ற நின் முதுமைக்குள்ள கற்பங்கள் யாவரானும் அறியப்படாத’-  என்ற அதன் உரை

157. மயாததம் இதம் ஸர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்திநா
     மத்ஸ்தாநி ஸர்வபூதாநி நசாஹம் தேஷூ அவஸ்தித:–ஸ்ரீ கீதை, 9 : 4.

கண்ணன் எங்கும் உளன் – இது ஆயிற்று அவன் சொன்ன தப்பு; ‘சர்வேஸ்வரன் எங்கும் உள்ளவன்’ என்றான். 1‘இவ்வுலகம் எல்லாம் என்னால் வியாபிக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், 2‘யாது ஒன்று இருக்கின்றது, அது என்னை அன்றி இல்லை,’ (ஸ்ரீ கீதை, 10 : 39)என்றும் அவ்விறைவன் தான் சொன்னவார்த்தை ஆயிற்று இவன் தான் சொல்லிற்று   

158. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்ய
     ஸச்ச த்யச்சாபவத். –தைத்திரீய ஆனந். : 6.

 வேர் முதலாய் வித்தாய்2மூன்றுவித காரணமும் தானேயாய். பரந்து –3‘உயிர்களைப் படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்; பிரவேசித்து, அறிவுடைப்பொருள், அறிவில் பொருள்கள் ஆனார்’ என்கிறபடியே, முந்துற இவற்றை அடைய உண்டாக்கி, பின்னர்ப் பொருளாதல் பெயரடைதல்களுக்காக அவற்றுள் அநுப்பிரவேசித்து, இப்படி உலகமே உருவமாய் நின்று. தனி நின்ற கார்முகில்போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேன்-‘இப்படி, உலகமே உருவமாய் நின்ற அளவே அன்றி, தன்னுடைய சிறப்புத் தோன்றும்படி ஸ்ரீவைகுண்டத்திலே மழை பெய்யும் மேகம் போலே இருக்கிற அழகிய திருமேனியையுடையனாய் இருந்தும், கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாள் ஆனவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்கிறார்.

முதல் துணை நிமித்த காரணங்கள். வேர் –  துணைக் காரணம்; முதல் – நிமித்த காரணம்; வித்து – முதற் காரணம்.
ஞானசத்தியாதிகளோடு கூடிய வேஷத்தால் துணைக் காரணமும், சங்கல்பத்தோடு கூடிய  வேஷத்தால் நிமித்த காரணமும், சூஷ்ம சித்து அசித்துகளோடு கூடின தன்மையால்  முதற் காரணமும் கொள்க.

159. அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே
நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயாந்

ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி ஸமநுப்ரவிஷ்ட:
ப்ரஜாபதி: சரதி கர்ப்பே அந்த:

160. உத்திஷ்ட உத்திஷ்ட கிம் ஸேஷே ராஜந் புத்ர மஹாபஸ:
த்வத்விதா ந ஹிஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸம்மதா:–ஸ்ரீராமா. அயோத். 72 : 24.

கைகேயி 1‘ராஜந்’ என்ற சொல் பொறுக்கமாட்டாமல் இராஜசபையிலே கூப்பிட்டான் அன்றோ      

161. ஸபாஷ்பகலயா வாசா கலஹம் ஸஸ்வரோ யுவா
    விலலாப ஸபா மத்யே ஜகர்ஹேச புரோஹிதம்.
    ராஜ்யம்சஅஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹஸி
    ததம் தஸரதாத் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக. –ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 11.

162. ஏகஸ்மிந்நபி அதிக்ராந்தே முஹூர்த்தே த்யாந வர்ஜ்ஜிதே
தஸ்யுபி: முஷிதேநேவ யுக்தம் ஆக்ரந்திதும் ப்ருஸம்.
     

163. நியமாதிக்ரமம் ரஹஸி போதயேத். 

அன்னத்தின் குரல் போன்று குரலையுடைய யுவாவாகிய அந்தப் பரதாழ்வான், கண்ணீர்   அடைப்பினால் தெளிவில்லாத வார்த்தைகளால் சபை மத்தியில் கதறினான்;  புரோகிதனான வசிஷ்டனையும் குறை கூறினான்; இராஜ்யமும்  நானும் இராம்பிரானுடைய  சொத்து; இந்த விஷயத்தில் தர்மத்தைச் சொல்லக்கடவீர்; தசரதரிடமிருந்து பிறந்தவன்  ராஜ்யத்தை அபஹரித்துக்கொள்ளுகின்றவனாக எப்படி ஆகக்கூடும்?

விலலாப சபா மத்யே – ஒரு திரளாய் இருந்து என்னுடைய சேஷத்துவத்தைக் கொள்ளை கொள்வதே! திருடர்களாலே திருடப்பட்டவன் போன்று வாய்விட்டு இரைந்து அழுதற்குத் தகும்’ என்கிறபடியே, இழந்த பொருளுக்குத் தக்கபடியாக இருக்கும் அன்றோ கூப்பீடும்? ஜகர்ஹேச – சந்தியாவந்தனத்திற்குப் பிற்பாடரைச் 3சிஷ்டகர்ஹை பண்ணுவாரைப் போலே பழித்தான். புரோஹிதம் – அழகியதாக இக்குடிக்கு முன்னோடி இதம் பார்த்தாய். சபா மத்யே புரோஹிதம் ஜகர்ஹே – சபையின் மத்தியிலே புரோஹிதராகிய வசிஷ்டரை நிந்தித்தான்; 4‘ஆசாரியன் விதிகளை மீறுவானேயாயின் அதனை அவனிடத்தில் ஏகாந்தத்தில் கூறல் வேண்டும்’ என்கிற நிலையையும் பார்த்திலன். ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய – ஒருவனுக்கு இரண்டு பொருள்கள் அடிமை ஆனால் ஒன்றை ஒன்று நிர்வஹிக்குமோ? அப்படியாயின், ராஜ்யந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி -‘பெருமாள் காடு ஏறப்போனார்; சக்கரவர்த்தி துஞ்சினான்; நாடு அரசன் இன்றி இருத்தல் ஆகாது; நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்கவேண்டும்’ என்று பார்த்தாய் இத்தனை போக்கி, இதற்கு விஷயமாக இருக்கிற என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்றில்லை. கதம் தசரதாத் ஜாதோபவேத் ராஜ்ய அபஹாரக: – 5அவர் போகட்டுப் போன ராஜ்யத்தை  அபகரித்து, அவரைப் பிரிந்த அந்தக் கணத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்?’ என்பது ஸ்ரீபரதாழ்வான் திருவார்த்தை.

  ‘தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும்
பள்ளம்எனும் தகையானைப் பரதன்எனும் பெயரானை’–கம்பநாட்டடிகள் திருவாக்கு

குருஷ்வ மாம் அநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே
  கிருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த! ப்ரகல்பதே.’

சேஷபூதனான என்னைப் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருள வேண்டும்  என்னைக் கூட்டிக்கொண்டு போவதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்க இல்லை;  தேவரீருக்கே பயன் சித்திக்கிறது; நான் தேவரீருக்குக் கைங்கர்யத்தைச் செய்து அத்தால்  வந்த கைங்கர்ய பலத்தை  அடைந்தவனாகப் போகிறேன்

ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத் தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி.

164. ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷமண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம்வசநம் அப்ரவீத்.

165. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
     ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாம்இதி மாம் வத.

பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே கிரியதாமிதி மாம் வத.’(ஸ்ரீராமா. ஆரண். 15 : 7. )

 ‘ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! தேவரீர் பல வருஷங்களாக இருக்கும் போதும்  நான் பரதந்திரனாகவே இருக்கிறேன்; தேவரீரே மனோகரமான ஓர் இடத்தைப் பார்த்து,  ‘இந்த இடத்தில் பர்ணசாலை கட்டுக’ என்று என்னை நியமித்தருளவேண்டும்.

மேலும், 4பரவா நஸ்மி – (ஸ்ரீராமா. ஆரண். 15 : 7. )உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்றார் இளையபெருமாள். இத்தகைய பராதந்திரியத்தை ஆயிற்று இவர் ஆசைப்படுகிறது.

‘இதுதான் ஒருவர் விரும்புவதும் அன்று; விரும்புவார் இன்மை யான் நான் கொடுத்துப் போருமதுவும் அன்று; அவ்வழி புல் எழுந்து போயிற்றுக் காணும்’ என்று இறைவன் அநாதரித்திருக்க, ‘புருஷன் அர்த்திக்க வருமது அன்றோ புருஷார்த்தமாவது? இப்பேறு இத்தனையும் நான் பெற்றேனாக வேண்டும்’ என்று இவர் விரும்ப, 1அவனுந் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.

பரவாநஸ்மி – பரதந்திரனாக இருக்கிறேன். நான் பரதந்திரனாக  இருக்கிறேன் என்றதனால் நீர் ஸ்வதந்திரராக இருக்கின்றீர் என்பது போதருதலின்,
அதனையே, ‘உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்று அருளிச் செய்கிறார். அஸ்மி – ஆகிறேன்; ஆகிறேன் ஆகுந்தன்மை – அஸ்மிதை.

நீருள எனின்உள் மீனும் நீலமும்;
  பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
  நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
  யாருளர் எனின்உளேம்? அருளுவாய்’ என்றான். -கம்ப. நகர் நீங். 157
   

166. யாவந்ந சரணௌ ப்ராது: பாரத்திவ வ்யஞ்ஜநாந்விதௌ
ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி.–ஸ்ரீராமா. அயோத். 98 : 8.

பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்றார்கள்; ‘பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான். மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போன்று, இவரும் ஈறு இல் இன்பத்து இருவெள்ளத்திலே முழுகிப் பூச்சூட இருக்கின்றார் ஆதலின், ‘பற்புத்ததலை சேர்த்து’ என்கிறார்.

இராஜ லஷணம் பொருந்திய தமையனாரான ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளை  என் தலையில் எதுவரையிலும் தரிக்கமாட்டேனோ’ அது வரையிலும் எனக்குச்  சாந்தியானது உண்டாகமாட்டாது. -. இது, ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ  சத்ருக்நாழ்வானிடம் கூறியதானாலும், ஸ்ரீகௌசல்யையார் முதலாயினாரோடும்  கூறியதாகவும் கோடல் தகும்.

167. பரமாபதம் ஆபந்ந: மநஸா அசிந்தயத் ஹரிம்
     ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பாராயண: –விஷ்ணு தர்மம். 68.

கைம்மா துன்பம் கடிந்த பிரானே – நீ விரைந்து வந்து விழுந்தபடி அறியாயோ? 3பெரிய ஆபத்தை அடைந்தது, கூப்பிடுதற்கும் ஆற்றல் அற்று மனத்தினாலே நினைந்தது’ என்கிறபடியே, சர்வேஸ்வரனாகிய நீயும் உன்றன்னைப் பேணாமல் வந்து விழும்படியான ஆபத்தே அன்றோ?’ என்றபடியாம். யானையும் தன் அளவிலே படும் துன்பம் என்பார், ‘கைம்மாத் துன்பம்’ என்கிறார், இனி, துதிக்கை ஒழிய முழுகிற்று’ என்பார், ‘கைம் மா’ என்கிறார்’ எனலுமாம். ‘அப்படி, உமக்கு ஆபத்து உண்டோ?’ என்ன, ‘அங்கு முதலை ஒன்று; எனக்கு முதலை ஐந்து: அங்கு ஆயிரம் தெய்வ யாண்டு; இங்கு அநாதிகாலம்; அங்கு ஒரு சிறு குழி; இங்குப் பிறவி என்னும் பெருங்கடல்;அதற்குச் சரீர நாசம்; எனக்கு ஆத்தும நாசம்; அங்கு யானையின் காலை முதலை பற்றியது; இங்கு என்னுடைய நெஞ்சை அன்றோ அருவித் தின்றிடுகிறது? ஆதலால், அதற்கும் இதற்கும் உள்ள வாசி பாராய். கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கின அதுவும் தமக்குப் போக்கியது என்று இருக்கின்றார் ஆதலின் ‘பிரானே’ என்கிறார். ‘அதற்கு உதவினமை உண்டு; உமக்கு என்?’ என்ன, அம்மா -‘அதற்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரீருடைய சம்பந்தம்? நீர் சுவாமி அன்றோ?’ ‘நீர் யார்?’ என்ன, அடியேன்-நான் அடியவன். ‘நன்று; இவருடைய சொரூபத்தையும் பற்றித் ‘தவிர ஒண்ணாது’ என்று விரும்புகிறீரோ?’ என்ன, வேண்டுவது – வேண்டிப் பெறத்தக்கது. ‘இதுவாகில் வேண்டுவது, இது செய்கிறோம்; இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான். இஃதே – 1நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்ற இதுவே’ என்கிறார்.

168. துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோரத:
யதி நாஸம் நவிந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா. –ஜிதந்தா ஸ்தோத்திரம்.

துன்பத்தை நீக்க வேண்டும்’ என்கிறேன். அல்லேன்; 2‘துன்பம் வந்த காலத்திலும், உன்னை அடைந்திருக்கிற என்னுடைய எண்ணமானது கேட்டை அடையாமல் இருந்ததே ஆனால், அதைக்கொண்டு எப்பொழுதும் பேறு பெற்றவனாக இருக்கிறேன்’ என்கிறபடியே, ‘ஏதேனும் 3உத்கிரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும்படி செய்தருளவேண்டும்’ என்றபடி

169. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
      தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம். –யஜூர்வேதம் ஆ. பிர. 3. 8 : 17.

பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை – பிறத்தற்குக் காரணமான கர்மம் இல்லாதிருக்கவும், கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறவாத பிறவிகளிலே பிறக்க வல்ல, எல்லார்க்கும் தலைவனை. 2‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமல் இருக்கிற சர்வேஸ்வரன் இச்சை அடியாகப் பல விதமாக அவதரிக்கிறான்; அதன் காரணத்தைப் பெரியோர்கள் அறிவார்கள்,

170. யத்ரருஷய: ப்ரதமஜாயே புராணா:

மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக்கனியே அன்றோ?’ என்கிறார்; அதாவது, பகவானுடைய அனுபவத்தில் மிக்காராய், ‘எல்லாவற்றையும் அறிந்தவர்கள், பழையராய் இருந்தும் புதியராகவே காணப்படுகின்றவர்கள்’ என்கிறபடியே, வேதத்திலே குற்றமற்றவர்களாகச் சொல்லப்பட்டுள்ள நித்திய சூரிகள் அனுபவிக்கின்ற அக்காரம் போலவும், கனி போலவும் உள்ள உன்னுடைய இனிமையின் மிகுதியை எனக்குப் பிரகாசிப்பித்தவனே! அன்றோ?’ என்கிறார்.

நான் எல்லாத் தொண்டுகளையும் செய்வேன்’ என்கைக்குச் சம்பந்தம் உண்டாய் இருக்க, ஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று கையொழிந்திருந்தேன்; ‘முடிந்தேன்’ என்றது போன்று இருக்கின்றது; ஒரு நாளை இழவே போந்ததாக இருக்க, அநாதிகாலம் இழந்து போந்தேன் என்பார், ‘ஒழிந்தேன்’ என்கிறார்.

171. தத்ஹி ஏதத் பஸ்யந்ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே
அஹம் மநு: அபவம் ஸ்ூர்யஸ்ச.–ஸ்ரீராமா. அயோத். 31 : 25.

பொருளின் உண்மை அங்ஙனம் அன்றோ?’ என்ன, யானே நீ – யானும் நீயே. 3முத்தர்கள், 4‘நான் மநு ஆகிறேன், நான் சூரியனும் ஆகிறேன்’ என்னாநிற்பர்; சம்சாரத்தில் தெளிவுடையார் 5‘எல்லாப் பொருள்களும் என்னிடத்திலிருந்து உண்டாயின.’ எல்லாப் பொருள்களும் நானே’ என்னாநிற்பர்; இங்ஙனம் கூறுகைக்குக் காரணம் என்னை?’ எனின், ‘அஹம் பிரஹ்ம அஸ்மி – நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே – 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘

172. ஏகம் ஸதைகம் பரம: பரேஸ:
     ஸவாஸூதேவோ நயத: அந்யத் அஸ்தி. –பிருகதாரண்ய உபநிடதம், 3.

173. த்ரய ஏவாதநா ராஜந் பார்யா தாஸ: ததா ஸூத:
     யத்தே ஸமதிகச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம். -ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 85.

அஹம் பிரஹ்ம அஸ்மி – நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே – 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘இது எங்கே நிகழக்கண்டு சொல்லும் வார்த்தை?’ என்ன, ‘நித்தியசூரிகள் முழுதும் இப்படி அன்றோ உன்னை அனுபவிப்பது?’ என்கிறார்

174. அஹோ வீர்யம் அஹோ தைர்யம் அஹோஸத்வம்  அஹோத்யுதி: –ஸ்ரீராமா. சுந். 49 : 17.

175. பபூவ புத்திஸ்து ஹரீஸ்வரஸ்ய யத் ஈத்ருஸீ ராகவ தர்மபத்நீ
இமாயதா ராக்ஷஸ ராஜபார்யா: ஸீஜாதம்அஸ்யேதி ஹி  ஸாதுபுத்தே: — ஸ்ரீராமா. சுந். 9 : 12.

ஏர் கொள் இலங்கையை – காட்சிக்கு இனியதாய்க் கட்டுடைத்தான இலங்கையை. 2‘இது என்ன வீரியம்! இது என்ன தைரியம்! இராக்ஷச அரசனான இராவணனுக்கு எல்லா இலக்கணங்களும் பொருந்தி இருப்பது ஆச்சரியம்’ என்றும், 1‘இராவணனும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைக் கண்டவாறே, ‘பையல், தானும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைப் பெருமாளும் பிராட்டியுமாய் இருக்கச் சம்மதித்தானாகில், இந்த ஐஸ்வரியம் குலையாதிருக்குமே!’ என்றும் நினைத்தான், ‘பகைவர்கட்கும் நன்மை வேண்டும்’ என்று இருக்கும் புத்தியையுடைய அனுமான்; தானும் ஒரு கூட்டத்துக்குத் தலைவன் ஆகையாலே இங்ஙனே இருப்பது ஒரு புத்தி பிறந்தது’ என்றும் கூறப்படுகின்றபடியே, திருவடி மதிக்கும்படியான இலங்கை ஆதலின், ‘ஏர் கொள் இலங்கை’ என்கிறார்.

176. பால்யே க்ரீடநகா ஸக்தா: யௌவநே விஷயோந்முகா:
177. தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயஸே ஸதா. –ஸ்ரீ விஷ்ணு புரா. 17. 74 : 75. இது பிரஹ்லாதாழ்வான் கூற்று.

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் – ‘கிளர் ஒளி இளமை’ என்றது, 1‘மனத்தில் உண்டாகும் சிரத்தையாய், பிறந்த இச் சிரத்தை இதினின்றும் மாறி வேறு விஷயங்களில் பிறப்பதற்கு முன்னே’ என்றபடி. என்றது, ‘ஒருவனுக்கு ஒரு விஷயத்தில் ஒரு கால் சிரத்தை பிறக்கும்; அவனதனக்கே அவ்விஷயத்திலே சிரத்தை இன்மையும் பிறக்கக் கூடியதாய் இருக்கும். ஆக, பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே’ என்றவாறு. ‘கிளர் ஒளி இளமை’ என்பதற்கு, ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்பது பொருள். ஒளி என்றது, ஞானத்தை; அது ஈண்டு இச்சைக்கு ஆயிற்று. ‘இளமை’ என்றது, அவ்விச்சை உண்டாகும் ஆரம்ப நிலையைக் குறித்தது. அந்த இச்சை தோன்றுவது மனத்திலே ஆகையாலே ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்று பொருள் அருளிச்செய்கிறார்

இனி, ‘கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்’ என்பதற்கு,  ‘அடையத் தக்கது’ என்னும் நினைவு பிறந்தாலும், 2‘கரணபாடவம் இல்லையே!’ (கரணங்கள் தத்தம் காரியங்களைச் செய்வதற்குத் தக்க ஆற்றலுடன் சேர்ந்திருத்தல்.)என்று கை வாங்க வேண்டாதபடி கரணபாடவம் உள்ள போதே என்று பொருள் கூறலுமாம். உயர்வு பற்றி ‘ இளமை கெடுவதன் முன்னம்’ என்றாராயினும், இனம் பற்றிப் பால்ய யௌவன பருவங்களையும் கொள்க. 3‘பாலியத்தில் விளையாட்டில் ஆசையுள்ளவர்களாகவும், யௌவன காலத்தில் விஷயங்களை அனுபவித்தலில் பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று கூறி, ‘ஆகையாலே, பால்யத்திலே அறிவோடு கூடினவனாய் எக்காலத்திலும் புகழின்பொருட்டு முயற்சி செய்தல் வேண்டும்’ என்றும் கூறுதல் காண்க.

178. யத் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூதேவோ நசிந்த்யதே
ஸாஹாநி: தத் மஹத் சித்ரம் ஸாப்ராந்தி: ஸாசவிக்ரியா.

தளர்வு இலர் ஆகில் – ‘முகூர்த்தகாலமாயினும் ஒரு கண நேரமாயினும் வாசுதேவனைச் சிந்திக்க இல்லை என்பது யாது ஒன்று உண்டு? அது பெரிய இழிவு; பெரிய கெடுதி’ என்கிறபடியே, 1‘திருமலையைக் கிட்டாமையால் வருகின்ற எவ்வகையான துக்கமும் இல்லாமல் இருக்க வேண்டில். இனி, ‘திருமலையே அடையத்தக்கது’ என்னும் புத்தி பிறந்து அதனை அடைவதற்கு விரோதியாய் வருகின்ற 2அனர்த்தபாகிகள் (கேட்டினையடைகின்றவர்கள்.)அல்லாதாராய் ஒழிய வேண்டில் எனலுமாம்

தளர்விலராகில்’ என்பதற்கு, இருவகைப் பொருள் அருளிக் செய்கிறார்; முன்னையது, ‘திருமலையைச் சாராமையாகிற துக்கம் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது ஸ்ரீ  ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள். பின்னையது, ‘திருமலையைக்  கிட்டுகைக்கு விரோதியான பாவங்கள் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது  எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள் 

179. நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நா சாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.

பக்தா நாம்’ என்கிறபடியே, பிறர்களுக்கு உரியதாய் நிரதிசய போக்கியமாய் இருக்கும்  விஷயம் அன்று; ஆதலின், ‘மதியாது’ என்கிறார்

பணிமின் திருவருள் என்னும்அம் சீதப் பைம்பூம் பள்ளி
  அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்’–திருவாய். 4. 4. 5.

பாண்தேன் வண்டுஅறையும் குழலார்கள்பல் லாண்டுஇசைப்ப
  ஆண்டார் வையமெல்லாம் அரசாகிமுன் ஆண்டவரே
  மாண்டார் என்றுவந்தார் அந்தோமனை வாழ்க்கைதன்னை
  வேண்டேன் நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!’–பெரிய திருமொழி. 6. 2 : 5

180. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்திரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம்.–ஸ்ரீகீதை.
    

181. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
    தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்தாய ஸ்ம்பவாமி யுகே யுகே. –ஸ்ரீகீதை. 4 : 8.

182. தத: தக்கோகுலம் ஸர்வம் கோ கோபீஜந ஸங்குலம்
அதீவார்த்தம் ஹரி: த்ருஷ்ட்வா மைத்ரேய அசிந்தயத்ததா.–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 11 : 13.

பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்2‘பசுக்கள் ஆயர்கள் ஆயச்சிகள் எல்லாரும் வருந்திக் கொண்டிருக்கிற அந்தக் கோகுலம் முழுதையும் கிருஷ்ணன் பார்த்து அப்போது சிந்தித்தான்’ என்கிறபடியே, ஆயர்களும் ஆய்ச்சிகளும் நோவுபட ஒரு மலையை எடுத்து நோக்கினவன், அந்த ஐஸ்வர்யத்தோடு வந்து நித்தியவாசம் செய்யுங்கோயில். இதனால், அரியன செய்தும் அடைந்தவர்களைப் பாதுகாப்பவன் என்பதனைத் தெரிவித்தபடி. ஐந்து லட்சம் குடிகளும் நிழலிலே ஒதுங்கலாம்படி மலையின் பரப்பு இருந்தது ஆதலின், ‘பெருமலை’ என்கிறார். பீடு – பெருமை; என்றது, ஆபத்திற்குத் துணையாதல் முதலாயினவற்றை. ‘பெரு மலை எடுத்தான் பீடு உறை கோயில்’ என்றதனால், ‘ஒரு மலையை 3ஆதேயமாகக் கொண்டு ரஷித்தவன், ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு காப்பாற்றுகின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி. ‘ஆயின், திருமலையில் நிற்றல் காத்தலுக்கோ?’ எனின், 4‘சாதுக்களைக் காத்தற்காகவும், துஷ்டர்களை அழித்தற்காகவும், தர்மங்களை நிலைநிறுத்துதற்காகவும், யுகந்தோறும் பிறக்கிறேன்’ என்கிறபடியே, விரோதிகளைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கை அன்றோ 5அவதாரங்களுக்குப் பிரயோஜனம்?

183. ஸமுத்வஹந்த: ஸலிலாதிபாரம் பலாகிநோ வாரிதரா நதந்த:
மஹத்ஸூ ஸ்ருங்கேஷூ மஹீதராணாம் விஸ்ரம்ய விஸ்ரம்ய
புந: ப்ரயாந்தி. -ஸ்ரீராமா. கிஷ். 28 : 22.

நின்ற இடத்தே நின்று பெய்வது ஒரு மேகமும், போவதும் வருவதுமாய் இருந்து பெய்வது ஒரு மேகமும் என ஊர்க்கு மேகம் இரண்டாதலின்’ ‘வருமழை தவழும்’ என்கிறார். ‘ஆயின், இறைவன் மேகமோ?’ எனின், ‘புயல் மழை வண்ணர்’ என்றாரே முன்னர்

மிக அதிகமான தண்ணீரைத் தாங்குவனவும், கொக்குகளின் வரிசையையுடையனவும், ஒலிப்பனவுமான மேகங்கள், மலைகளின் பெரிய கொடுமுடிகளில் இளைப்பாறி இளைப்பாறி மீண்டும் செல்கின்றன’ என்பவாகலின், ‘மழை தவழும்’ என்கிறார்.

184. ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்யச தீமத:
     ந அத்யர்த்தம் க்ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே.-ஸ்ரீராமா. சுந். 16 : 4

அறம் முயல் ஆழ்ப்படையவன் கோயில்3‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறபடியே, (இங்கு, பெருமாளைக் காட்டிலும் அடியார்களைக் காப்பதில்
சிரத்தையுள்ளவன் இலக்குமணன் என்பதனைக் காட்டுவதற்காக ‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறார்.)அடியார்
களைப் பாதுகாத்தலிலே முயலாநின்றுள்ள திரு ஆழியை ஆயுதமாக உடையவன் வந்து வாழ்கிற தேசம். 1சர்வேஸ்வரன் கடைக்கணித்துவிட அரைக்கணத்திலே வாராணசியை எரித்து வந்து நின்றவன் ஆதலின், ‘அறம் முயல் ஆழி’ என்கிறார்.

185. அகர்த்தமம் இதம் தீர்த்தம் பரத்வாஜ நிஸாமய
ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந் மநுஷ்ய மநோ யதா. –ஸ்ரீராமா. பால. 2.

மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை புற மலை சாரப் போவது கிறியே – 2‘பெரியோர்களுடைய மனத்தைப் போன்று தெளிந்த தண்ணீரையுடையது’ என்கிறபடியே, மறு அற்று, ஆழ்வார் திருவுள்ளம் போன்று தெளிவையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போகும் இதுவே பகவானை அடைதலை வேண்டியிருப்பார்க்கு வருத்தம் அற அடையக்கூடிய நல்விரகு.

186. ய: த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க: நிரயோ ய: த்வயா விநா
இதிஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மாய ஸஹ. –ஸ்ரீராமா. அயோத். 30 : 18.

187. யதி த்வம் ப்ரஸ்திதோ துர்க்கம் வநம் அத்யைவ ராகவ
    அக்ரத: தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸகண்டகாந். –ஸ்ரீராமா. அயோத். 27 : 9.

188. நச ஸீதா த்வயா ஹீநா ந சாஹம் அபி ராகவ
     முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ.–ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

நரகு அழுந்தாதே – பிரிவால் வரும் துன்பத்தை நுகராமல். ‘ஆயின், ‘நரகு’ என்பது, பிரிவுத் துன்பத்தைக் காட்டுமோ?’ எனின், நரகங்களும் இவர்களுக்கு முடிவு செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பது? ‘காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?     

189. ய ஆத்மதா பலதா.– யஜூர் வேதம், காண்டம், 7, 5 : 36.

வலஞ்செய்து நாளும் வலம் கழியாதே – சர்வேஸ்வரன் தன்னை அடைகைக்கு உறுப்பாகத் தந்த மனித சரீரத்தைக் கொண்டு வலிமையை உண்டாக்கிப் பின்னை அவனை அடையாமல் இதர விஷயத்தில் ஈடுபடுகைக்கு உடலாக்கிக் கெடாமல். ஆய மாயவன் வலம் செயும் கோயில் – திருச்சித்திரகூடமலையின் பக்கத்தில் பிராட்டியையுங் கூடக் கையைப் பிடித்துக்கொண்டு 1உலாவினாற்போன்று, பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதரத்தோடே சஞ்சரிக்கிற தேசம். இனி, ‘வலஞ்செயும் மாயவன்’ என்பதற்கு, 2‘எவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவித்தற்குத் தக்க பலத்தையும் கொடுப்பவனோ’ என்கிறபடியே, 3‘தன்னையும் கொடுத்து, தன்னை நுகர்வதற்குத் தகுதியான சத்தியையும் கொடுக்கும் ஆச்சரியத்தையுடைய கிருஷ்ணன்’ என்று பொருள் கூறலுமாம்.   (வலம் செய்தல் – வலிமையை உண்டாக்குதல்; ‘வலம்’ பலம் என்ற சொல்லின் சிதைவு.  முதற்பொருளில், வலஞ்செயல் – வலம் வருதல்.)

வானோர் வலம் செயும் மாலிருஞ்சோலை – பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிற போது இலக்குமணபரதர்கள் பின் தொடர்ந்தது போன்று, சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே நித்தியசூரிகளும் போந்து வலஞ்செய்கிற மாலிருஞ்சோலை. உகந்தருளின மற்றைத் திவ்விய தேசங்கள் எல்லாம் கிடக்க, திருவேங்கடத்தை 4‘விண்ணோர் வெற்பன்’ (திருவாய். 1. 8 : 3.)என்றார் மேல்; இங்கே இதனை ‘வானோர் மாலிருஞ்சோலை’ என்கிறார்; ‘இதற்கு நினைவு என்?’ எனின், ‘குழந்தைக்குத் தாயினுடைய உறுப்புகள் எல்லாம் கிடக்க முலைக்கண்ணிலே அன்றோ வாய் வைக்கலாகாவது? அப்படியே இங்குத் 5‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையாவடிவு அமைந்த, அன்ன நடைய அணங்கு’ (பெரிய திருமடல், 6,7.)என்கிறபடியே, அவை இரண்டும் முலைகள் ஆகையாலே, அவர்களுக்கேயாகி இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார்

190. ய: அந்யதாஸந்தம் ஆத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே
     கிம் தேந நக்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா.–பாரதம் உத்தியோக பர்வம். இது திருதராஷ்டிரனைப் பார்த்து சனத்ஸூஜாதன் கூறுவது.

 சூது என்று களவும் சூதும் செய்யாதே-நமக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது என்று சூதும் களவும் செய்யாமல். 2நூல்கள் ‘செய்தல் ஆகாது’ என்று இவ்விரண்டனையும் விலக்குகின்றமையால், ‘சூதும் களவும் செய்யாதே’ என்கிறார். இனி, களவாவது, 3‘ஆத்துமாவைத் திருடின திருடன்’ என்கிறபடியே, ஆத்துமாவைத் திருடுதல் என்றும்; சூதாவது, ஸாத்விகனாய்ப் பிராமாணிகனாய் இருப்பான் ஒருவன், ‘சர்வேஸ்வரன் இரட்சகன்’ என்று நம்பி இருந்தால், ‘காண்கிற சரீரத்துக்கு அப்பால் ஓர் ஈஸ்வரனாவது என்? ஆத்துமா வாவது என்?’ என்று காணக் காணக் கொள்ளை கொள்ளுதல் என்றும் 4கூறலுமாம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –முதல் பத்து –

November 29, 2023

1- ப்ருந்தாவநம் பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா
ஸூபேந மநஸா த்யாதம் கவாம் வ்ருத்திமபீப்ஸீதா.–ஸ்ரீ விஷ்ணு புராணம்

பகவான்’ என்னும் திருநாமத்தையுடையவனும், எக்காரியங்களையும் வருத்தம் இன்றிப் பயனுடன் முடியும்படி செய்கின்றவனும், பசுக்களின் வளர்ச்சியை விரும்புகின்றவனும் ஆன கண்ணபிரான், தனது தூய்மையான மனத்தினால்

2. உத்பந்ந நவஸஷ்பாட்யா ஸக்ரகோபாஸ்த்ருதாமஹீ
ஸ்தலீமாரதகீவாஸீத் பத்மராக க்ருதாந்தரா.-ஸ்ரீ விஷ்ணு புராணம்

‘பிருந்தாவனம் புற்கள் நிறைந்த காடாக மாறல்வேண்டும்,’ என்று நினைந்த அளவில், 4தோன்றிய புற்களாலே நிரம்பி, இந்திர கோபம் என்னும் பட்டுப்பூச்சிகள் பரவப் பெற்ற பூமியானது, இடையிடையே பதுமராகக் கற்கள் பதித்த மரகதமணி மயமானது ஓர் இடத்தைப் போலத் தோன்றியது,’ என்னலாம்படி மாறியது போன்று, இவரும் உண்மைப் பொருள்களை உள்ளவாறு 5விளக்கமாக அறிய வல்லவரானார்.

3. “ப்ரதாநக்ஷேத்ரஜ்ஞபதி: குணேஸ:
ஸம்ஸாரபந்த ஸ்திதிமோக்ஷஹேது:”- சுவேதாஸ்வதர உபநிடதம், அத். 6.

சம்சாரத்தில் கட்டுப்பட்டு இருப்பதற்கும் விடுபட்டு மோக்ஷத்தை அடைவதற்கும் காரணமாக நிற்கின்றான் சர்வேஸ்வரன்,’

4. தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம்ஏதாம் தாந்தி தே.– ஸ்ரீ கீதை 7 : 14.

என்னுடைய முக்குண ரூபமான இந்தப் பிரகிருதியானது என்னால் உண்டுபண்ணப்பட்டது; ஒருவராலும் கடக்க முடியாதது; ஆயின், என்னையே சரணமாக அடைகின்றவர்கள் இதனைத் தாண்டுகிறார்கள்,’

5. ஜராமரணமோக்ஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே
தே பிரஸ்ம தத்விது: க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்மச அகிலம்-ஸ்ரீ கீதை. 7 : 29.

முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும்பொருட்டு என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’

6. ஸம்ஜ்ஞாயதே யேந தத்அஸ்ததோஷம் சுத்தம் பரம்  நிர்மலம் ஏகரூபம்

ஸம்த்ருச்யதே வாபி அதிகம்யதே வா தத் ஜ்ஞாநம்   அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 ; 87.

பகவானை அறிகிற அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லப்படும்; ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானவை எல்லாம் அஞ்ஞானமாகச் சொல்லப்பட்டன,’

7. தத்கர்ம யந்நபந்தாய ஸா வித்யா யாவி முக்தயே
ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அந்யா ஸில்பநைபுணம்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19: 41.

பந்தத்தை உண்டாக்காத தொழிலே தொழில்; மோக்ஷத்தை உண்டாக்கும் கல்வியே கல்வி; மற்றைத் தொழில்கள் எல்லாம் வருத்தத்தை

8. கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம்
நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்ட உபஹதா ஜநா:–ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 41.

ஓ மைத்திரேயரே, கலியுகத்தில், உலகத்திற்குத் தலைவனும் எங்கும் நிறைந்திருப்பவனும் எல்லாரையும் படைத்தவனும் ஈஸ்வரன் என்ற பெயரை உடையவனும் ஆன திருமாலை பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் வழிபடுகின்றார்கள் இலர்

9. துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:
தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரியதர்ஸநம்.

மனிதசரீரம் கிடைத்தல் அரிது; கிடைப்பினும், கிடைத்த அச்சரீரமும் கணநேரத்தில் அழியுந்தன்மையது; அழியாதிருப்பினும், ஸ்ரீ வைகுண்டநாதனே நமக்குப் பற்றுக்கோடு என்னும் ஞானம் உண்டாதல் மிகவும் அரிது என்று நான் நினைக்கிறேன்,’

மானிடராக வரலரி தோர்மண் டலத்தினெறி
  மானிடராக மிலாதவ ராதன் மலரயனார்
  மானிடராகமத் தாலன்ப ராய அரங்கத்துளெம்
  மானிடராக மலரடிக் காட்படும் வாழ்வரிதே.’– என்ற திவ்விய கவியின் திருவாக்கு

10. மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித் யததி ஸித்தயே
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்வத:–ஸ்ரீகீதை. 7: 3.

மனிதர்களில் ஆயிரவருள் ஒருவன் சித்தியின்பொருட்டு முயல்கின்றான்; அங்ஙனம் முயல்கிற ஞானிகள் ஆயிரவருள் ஒருவன் என்னை அறிகிறான்; இது உண்மை,’ என்று சர்வேஸ்வரன் தானும் அருளிச் செய்தான்.

11. தத: அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா
தேவகீபூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா.– ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3: 2.

தேவகி கருத்தரித்த பிறகு எல்லா உலகங்களாகிற தாமரையை மலர்த்துவதற்காக, தேவகியாகிற கீழைச்சந்தியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’

12. ஹஸிதம் பாஷிதம் சைவ கதி: யா யச்ச சேஷ்டிதம்
தத்ஸர்வம் தர்மவீர்யேண யதாவத் ஸம்ப்ரபஸ்யதி:-ஸ்ரீராமா. பால. 3 : 4.

ஸ்ரீ ராமபிரானுடைய நகையினையும் பேச்சையும் நடையினையும் செயல்களையும் மற்றும் உண்டான எல்லாவற்றையும் என் சங்கற்பத்தால் அருளப்பெற்ற தவ வலிமையால் உண்மையாக நன்கு அறிவாய்,’ என்கிறபடியே, பிரமனுடைய திரு அருளால் ஸ்ரீ வான்மீகி பகவான் எல்லாவற்றையும் அறிந்தது போன்று,

13. உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்
ஆஸ்தித: ஸஹியுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம்.–. ஸ்ரீகீதை. 7 : 18.

ஐஸ்வரியம் ஆத்மலாபம் ஏதேனும் ஒரு புருஷார்த்தம் ஆகவுமாம். அவற்றை நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதாரர்; ஞானியானவன் எனக்குத் தாரகன்,’ என்று சர்வேஸ்வரன் அருளிச்செய்த ஞானிகளுக்கு முதன்மை பெற்றவராய் இருப்பர்.

14. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த: லக்ஷ்மணோலக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ–ஸ்ரீராமா. பால. 18 : 27.

கைங்கர்யத்தை வளர்த்துப் போருமவனான இலக்குமணன் இளமைப்பருவம் தொடங்கி ஸ்ரீ ராமபிரானிடத்தில் பரம சிநேகிதனாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே, இளமைப்பருவந்தொடங்கிப் பெருமாள் திருத்தொட்டிலோடு அணையத் திருத்தொட்டில் இடாதபோது பள்ளி கொள்ளாத இளைய பெருமாளைப் போன்று, அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’

15-நசஸீதா த்வயாஹீநா நசஅஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவ   உத்த்ருதௌ.–ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்; நானும் பிழைக்க மாட்டேன்,’ என்பது இளைய பெருமாள் திருவார்த்தை

தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன், நீர் நசை அறும் அளவும் பிழைத்து இருக்குமாறு போன்று, நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திருவுள்ளத்திலே உண்டு என்று அறியும் அளவுங்காணும் நாங்கள் பிழைப்பது; ஆதலால், உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இலள்; யானும் இலன்; பிழைத்து இருப்போமாயின், ஒரு முகூர்த்த நேரமே பிழைத்திருப்போம்,’ என்றார் இளைய பெருமாள்.

:

16. நதேவலோக ஆக்ரமணம் ந அமரத்வம் அஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா.-ஸ்ரீராமா, அயோத். 31 : 5

வானவர் நாடு. என்கிற பரமபதம், ஆத்மலாபம், உலகங்களின் ஐஸ்வரியம் இவை இத்தனையும், உமக்குப் புறம்பாக வரும் அன்று வேண்டேன்,’ என்ற இளைய பெருமாளைப் போன்று, இவரும்

17. அஹம்தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபலக்ஷயே
ப்ராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:

நான் சக்கரவர்த்தியிடத்தில் தமப்பன் முறையைப் பார்க்கின்றிலேன்; எனக்கு ஸ்ரீ ராம பிரானே தமையனும் சுவாமியும் உறவும் தமப்பனுமாக இருக்கின்றான்

(21)

18. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸாநுஷூ ரம்ஸ்யதே
அஹம்ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.

நான் இரவு பகல் எந்நேரத்திலும் எல்லா அடிமைகளையும் உமக்குச் செய்வேன்; நீரோ, பிராட்டியோடு மலை அடிவாரங்களில் இன்புற்றிரும்,’ என்று இளைய பெருமாள் எவ்வகைத் தொண்டுகளையும் செய்து அல்லது தரியாதது போன்று; இவரு

19. விஸ்தரேண ஆத்மநோ யோகம் விபூதிஞ்ச ஜநார்த்தன
பூய: கதய த்ருப்தி: ஹி ஸ்ருண்வதோ நாஸ்திமே அம்ருதம்

ஓ ஜனார்த்தனரே, உம்முடைய கல்யாண குணங்களின் சேர்க்கையையும், விபூதி நியமனத்தையும் மீண்டும் விரிவாகக் கூறுக; ஏன் என்றால், உம்முடைய மாகாத்மியமாகிய அமிருதத்தைக் கேட்கும் எனக்குத் திருப்தி கிடையாது,’ என்று கூறிய அருச்சுனனைப் போலவும்

20. கர்மாபிதப்தா: பர்ஜந்யம் ஹ்லாதயந்தமிவ ப்ரஜா:
நததர்ப ஸமாயாந்தம் பஸ்யமாநோ நராதிப:

சமீபத்தில் வருகிற ஸ்ரீ ராமபிரானைப் பார்த்துக்கொண்டேயிருந்தும் தசரத சக்கரவர்த்தி திருப்தி அடைந்திலன்,’ என்று கூறப்படுகின்ற தசரத சக்கரவர்த்தியைப் போலவும்,

21. தர்மாத்மா ஸத்யஸௌசாதி குணாநாம் ஆகர: ததா
உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம்ய: ஸதாபவத்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 15 : 15.

அறத்தின் உருவமாயும் சத்தியம் ஒழுக்கம் முதலியவற்றிற்குக் கொள்கலமாயும் சாதுக்களுக்கு எல்லாம் உவமானமாகச் சொல்லத் தக்கவனாயும் எவனொரு பிரகலாதன் இருந்தான்’ என்று பிரகலாதனைச் சாதுக்களுக்கு எல்லாம் உவமைக்கு எல்லையாகச் சொல்லுவது போன்று, இவரும்

22. அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:
க்ருதஞ்ஜஸ்ய பஹூஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாம நாமத:.-ஸ்ரீராமா கிஷ். 4 : 12.

நான் பின் பிறந்த தம்பி; அவருடைய குணங்களால் அடிமையை அடைந்துள்ளேன்.’ என்று குணங்களுக்குத் தோற்று அடிமை புக்க இளைய பெருமாளைப் போன்று, இவரும் பகவானுடைய குணங்களிலே தோற்று. 3‘உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே,’ என்கிறார்.

                                   

23. மாநிஷாத பாதிஷ்டாம் த்வமகம: ஸரஸ்வதீ: ஸமா:
யத்க்ரௌஞ்சமிதுநாத் ஏகம் அவதீ: காமமோஹிதம்.

நிஷாத – ஓ வேடனே,
த்வம் – நீ,
யத் – யாதொரு  காரணத்தால்,
கிரௌஞ்ச மிதுநாத் – இரண்டாகக் கூடியிருந்த அன்றிற்
பறவைகளில்,
காமமோஹிதம் – காமத்தால் மோகத்தையடைந்த,
ஏகம் – ஓர்  ஆண் பறவையை,
அவதீ: – கொன்றாயோ, (அதனால்)
ஸாஸ்வதீ: –  நிலைத்திருக்கிற,
ஸமா: – வருஷங்களில்
பிரதிஷ்டாம் – இருப்பை,
மாகம: –  அடையமாட்டாய்’ என்றவாறு.

‘மா நிஷாத – ஸ்ரீநிவாசனே, த்வம் – நீ, யத் – யாதொரு காரணத்தால், கிரௌஞ்ச மிதுநாத் – இருவராகக் கூடியிருந்த
இராக்கதர்களான இராவண மண்டோதரி என்னும் இவர்களில், காம  மோஹிதம் – ஆசையால் பீடிக்கப்பட்ட, ஏகம் – ஒருவனை (இராவணணை),
அவதீ: – கொன்றாயோ, (அதனால்) ஸாஸ்வதீ: ஸமா: – நிலைத்துள்ள  வருஷங்களில், பிரதிஷ்டாம் – இருப்பை, அகம: – அடையக்கடவாய்’ என்பது.

24. மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம.

ஹே பிரஹமந் – ஓ முனிவனே,
இயம் ஸாஸ்வதீ – ‘மாநிஷாத’ என்னும் இந்த ஸ்லோகமானது,
மசசந்தா தேவ – என்னுடைய திருவருளால்,
தேப்ரவிருத்தா – உனக்கு உண்டாயிற்று,
ஹே ருஷி ஸத்தம – முனிபுங்கவனே,
த்வம் – நீ,
ஸர்வம் ராம சரிதம் – இராமசரிதம் எல்லாவற்றையும்,
குரு – செய்வாய்.

25. ஹரிகீர்த்திம் விநாஏவ அந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம
பாஷாகாநம் நகாதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயாக்ருதம்.-மச்ச புராணம்.

மக்களுள் உயர்ச்சி பெற்ற அரசனே, பிராமணன், திருமாலின் புகழினைத் தவிர, ஏனையோர் புகழை வேறு மொழியில் பாடக் கூடாது; அங்ஙனம் இருக்கவும், வேறு மொழியில் பாடியதைக் கொண்டு அவனை வெளியே போகச் செய்த காரணத்தால் நீ பாவம் செய்தவன் ஆனாய், என்று இயமன் கூறியதாக மச்சபுராணத்திலே கூறப்படுகின்றது

26. பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி
ஸர்வைஷணா விநிர்முக்த: ஸபைக்ஷம் போக்தும் அர்ஹதி.-பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.

எவன் ஒருவன் இறைவனிடத்தில் மிக்க பக்தியினையுடையவனாக இருக்கின்றானோ அவன் மற்றைப் பொருள்களில் வைராக்கியத்தை உடையவனாக இருக்கின்றான்

27. அகுத்ஸிதே கர்மணி ய: ப்ரவர்த்ததே
நிவ்ருத்த ராகஸ்யக்ருஹம் தபோவநம்.–இதிகாச சமுச்சயம்

ஆசை இல்லாதவனுக்குத் தான் வசிக்கும் வீடே தவம் செய்வதற்கு உரிய வனமாம்,’ என்கிறபடியே, ஆசை நீக்கியவனுக்குத் தான் இருந்த தேசமே தவம் செய்வதற்கு ஏகாந்தத் தலம் என்பது போதரும். ‘

28. ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகாத்மந:
ப்ராப்தி உபாயம் பலம் ப்ராப்தே: ததாப்ராதிவிரோதிச
வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா:
முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

ஆக, இவ்வைம்பொருள்களுமே திருவாய்மொழியால் சொல்லப்படுகின்றன. அல்லாதவை ஆநுஷங்கிக சித்தமாய் வந்தன இத்தனை(இடையிலே வந்தவை’ என்றபடி.). ‘யங்ஙனம்?’ என்னில், பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணன் என்றும், அநந்யார்ஹ சேஷத்துவமே சொரூபம் என்றும், இறைவனுடைய குணங்களை அநுபவிப்பதால் உண்டாகும் பிரீதியால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்றும், அகங்கார மமகாரங்கள் அதற்கு விரோதி என்றும், அவை நீங்குதற்கும் கைங்கரிய சித்திக்கும் சர்வ சுலபனான சர்வேஸ்வரன் திருவடிகளே உபாயம் என்றும், ஐம்பொறிகளையும் அடக்கல் தொடக்கமாகக் கைங்கரியம் முடிவாக உள்ளவை அவ்வுபாயத்திற்குப் பலம் என்றும் சொல்லப்பட்டன.

அடையத் தகுந்த பரம்பொருளின் சொரூபத்தையும், அடைகின்ற ஆத்துமாவின் சொரூபத்தையும், அடையும் உபாயத்தையும், அடைவதற்குப் பலத்தையும், அப்படியே அடைவதற்கு விரோதியையும் இதிகாச புராணங்களுடன் கூடின எல்லா வேதங்களும் கூறுகின்றன; மகாத்துமாக்களும் வேதங்கள் வேதங்களின் பொருள்கள் இவற்றை அறிந்தவர்களுமான முனிவர்களும் சொல்லுகிறார்கள்,’ என்பதை விவரிக்கும் முறையில் எல்லா வேதங்களினுடைய கருத்து இவ்வைம்பொருள்களுமே என்றும், இவ்வைம்பொருள்களும் திருவாய்மொழிக்கு வாக்கியார்த்தமாக அமைந்துள்ளன என்றும் பெரியவங்கிப் புரத்து நம்பி அருளிச்செய்தார்.

29. உத்திஷ்ட உத்திஷ்ட கிம்ஸேஷே ராஜந் புத்ரமஹாயஸ:
த்வத்விதா நஹி ஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸத்தமா:.. ஸ்ரீராமா. அயோத்.

தமையனாராகிய ஸ்ரீ ராமபிரானுக்கு அவர் மனம் உவக்கும் அடிமைகளைச் செய்யவேண்டும் என்ற வேணவாவோடு வந்து சேர, கைகேயி 4‘ராஜந்’ என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரதாழ்வான் பட்டபாடு போலே இருக்கிறது, திருவிருத்தத்தில் நிலை; திருச்சித்திரகூட மலையிலே பெருமாள் எழுந்தருளியிருந்தார்

30. ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
ப்ராது:ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹஸி.-ஸ்ரீராமா. அயோத். 101 : 12.

என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்கமாட்டாதவர் இத்தனை பேர் ஆற்றாமை கண்டால் மீளாது ஒழிவரோ? எனக்கு விருப்பமான காரியங்களைத் தம் தலையாலே இரந்து செய்யக்கடவ அவர், நான் என் தலையாலே இரந்த காரியத்தை மறுப்பரோ? நான் தம் பின் பிறந்தவன் அல்லனோ? பின் பிறந்தவன்

31. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருஸன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.-ஸ்ரீராமா. பாலகா. 1 : 38.

ஸ்ரீ ராமபிரான் வருவார் என்ற பேரவாவோடு நந்திக்கிராமத்தில் இருந்து அரசை நடத்திக்கொண்டிருந்தார்’ என்கிறபடியே, பதினான்கு ஆண்டும் ஆசையை வளர்த்துக்கொண்டிருந்தாற்போலே இருக்கிறது – பெரிய திருவந்தாதியில்; மீண்டு எழுந்தருளித் திருவபிஷேகம் செய்து கொள்ள, ஸ்ரீ பரதாழ்வானும் 4சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெற்றாற்போல இருக்கிறது, இவர்க்குத் திருமொழியில் பேறு.

32. ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவ அதர்வணாநிச
ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் யச்ச அந்யதபி வாங்கமயம்.–பாஞ்சராத்திர ஆகமம்.

இருக்கு யஜூர் சாமவேதங்களும், அப்படியே அதர்வணமும், மற்றும் ஒலி உருவமாக உள்ளவை அனைத்தும், எட்டு எழுத்துக்களையுடைய திருமந்திரத்திற்குள் அடங்கி இருப்பனவாம்’ என்கிறபடியே, நான்கு வேதங்களின் சுருக்கம் திருமந்திரமாய், அதனுடைய சுருக்கம் பிரணவமாய், அதனுடைய சுருக்கம் 6அகரம் ஆயினாற்போன்று, திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பதிகம்; முதல் திருப்பதிகத்தின் சுருக்கம் முதல் மூன்று திருப்பாசுரங்கள்; முதல் மூன்று திருப்பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பாசுரம்; முதல் திருப்பாசுரத்தின் சுருக்கம், முதல் அடி. 7மற்றும், ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் முதலானவைகளைச் செய்த முனி புங்கவர்களும் சுருக்கியும் விவரித்தும் செய்து போந்தமை அவ்வந்நூல்களால் தெளிக.

33. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சநேதி. – தைத்திரீ. ஆன. 9 : 1.

அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே மீண்டன; இவ்வாறு மீண்டமையும் ஆனந்தகுணம் ஒன்றைப் பற்றியேயாம்; குணங்கள் எல்லாம் இப்படியே அன்றோ இருப்பன

34. ஸர்வே க்ஷயாந்தாநிசயா: பதநாந்தா: முச்சரயா:
ஸம்யோகா விப்ரயோகாந்தா மரணாந்தஞ்ச ஜீவிதம்.-ஸ்ரீராமா. அயோத். 105.16.

செல்வம், அழிதலை முடிவாகவுடையன; உயர்வு, இறங்குதலை முடிவாகவுடையன; சேர்க்கை, பிரிதலை முடிவாகவுடையன; வாழ்தல், சாதலை முடிவாகவுடையன

35. ஸமஸ்த கல்யாண குணாத்மக: அஸௌ.-ஸ்ரீ விஷ்ணுபு. 6. 5 : 84.

அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்

36. வர்ஷாயுதை: யஸ்யகுணா நஸக்யா வக்தும் ஸமேதைரபி
ஸர்வலோகை:
மஹாத்மந: ஸங்கசக்ராஸி பாணே: விஷ்ணோர்ஜிஷ்ணோர்
வஸூதேவாத்மஜஸ்ய.-வியாசபார. வீடுமபருவம்.

எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;’

37. ஜ்ஞாந விஜ்ஞாந ஸம்பந்ந: நிதேசே நிரத: பிது:
தாதுநாமிவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்.-ஸ்ரீ ராமா. கிஷ். 15 : 20.

மகாத்துமாவாகிய ஸ்ரீ ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று, எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கின்றான்’

38. தே தம்ஊசு: மஹாத்மாநம் பௌர ஜாநபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே.-ஸ்ரீ ராமா. அயோத். 2 : 26.

அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள் இருக்கின்றன,’ என வருவனவற்றை இங்கு உணர்தல்தகும்

39. ஸ்வாபாவிகாநவதிகாதிஸயாஸங்க்யேய கல்யாண குணகண:–ஸ்தோத்திரரத்தினம். 11.

இயற்கையில் அமைந்தனவாய், எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

40. யதா ஸைந்தவகந: அநந்தர: அபாஹ்ய: க்ருத்ஸ்ந:
ரஸ கநஏவ, ஏவம்வா அரே அயமாத்மா அநந்தர:

அபாஹ்ய: க்ருத்ஸ்ந: ப்ரஜ்ஞாந கநஏவ.–பிரஹதா. உபரி. 6. 5 : 23.

உப்புக்கட்டி உள்ளும் புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று, இறைவன் உள்ளும் புறமும் ஞானமயமாய் இருக்கின்றான்,’

41. தம் அக்ரதும் பஸ்யதி வீதஸோக: தாது: ப்ரஸாதாத் மஹிமாநம் ஈஸம்.-தைத். நாராயண. 6 : 10.

மிக்க பெருமையோடு கூடியவனும் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனுமான

42. வ்யஸநேஷூமநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி.-ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’ என்று கூறுகின்றது ஸ்ரீராமாயணம்; இதனால், துன்பத்தை நீக்குதலும் அவனதாக இருக்கும் என்பதும், மக்கள் இன்புறுங் காலத்துத் தானும் இன்புறுகின்றான் என்பதும் பெறப்படும். அது போன்று, இவர் துயர் அறத்தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை. இத்தால், 6இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வ

 

43. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதிவேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதிசேத வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.-தைத்திரீய. ஆன : 6.

கடவுளை உள்ளபடி அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்,’ என்னும் நிலை கழிந்து, ‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்,’ என்கிறவர்கள் கோட்டியிலே எண்ணலாம்படியாக நன்னெறியில் செல்லப் பார்ப்பாய்

44. மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் மந:–ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.

மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும், உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ என்கிறபடியே, நெடுநாள் பிறப்பிற்குக் காரணமாகப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

45. நம: புரஸ்தாத் அத ப்ருஷ்டத: தே நம: அஸ்துதே ஸர்வத ஏவ ஸர்வ
அநந்தவீர்ய அமிதவிக்ரம: த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி தத: அஸிஸர்வ:–பகவத்கீதை. 11 : 40.

கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’ என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியதுபோன்று, இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க.

46. யதோவா இமாநிபூதாநி ஜாயந்தே யேநஜாதாநி ஜீவந்தி
யத்ப்ரயந்தி அபிஸம்விஸந்தி தத்விஜிஞ்ஜாஸஸ்வ தத் ப்ரஹ்ம.- தைத்திரிய. பிருகு. 1.

எவனிடத்திலிருந்து இந்தப் பொருள்களெல்லாம் உண்டாகின்றனவோ, எவனால் உண்டானவை பிழைக்கின்றனவோ, அழிவினை அடைந்து பிரளயத்தில் எவனை அடைகின்றனவோ அவனை அறிவாய்; அவன்தான் பரம்பொருள்,’

47. ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபிவாசா, மநாஸாது விஸூத்தேந,–வேதவாக்கியம்

மிக்க தூய்மையோடு கூடிய மனத்தால் அறியப்படுகிறான் இறைவன்

48. அதாத ஆதேச: நேதிநேதி நஹி ஏதஸ்மாத் இதிநேதி அந்யத்பரம் அஸ்தி.- பிரஹதாரண். 4. 6 : 62.

இவ்வளவு மாத்திரமும் அல்லன்; இப்படிப்பட்ட பொருள் வேறு இல்லை,’ என்று அறிந்தால் அறியலாமன்றி, இப்படிப் பட்டது, இவ்வளவினையுடையது’ என்று அளவிட்டு அறிய முடியாது

49. யம் ஆத்மா நவேத, யம் ப்ருதிவீ நவேத.தைத்திரீய. பிருகு. 6 : 1.

50. ஆநந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத்.

ஆனந்தமே இறைவன்,’ ‘ஆனந்தமயமானவன்’

51. ப்ரஹித: ப்ரதநாய மாதவாந் அஹம் ஆகாரயிதும் மஹீப்ருதா
நபரேஷூ மஹௌஜஸ: சலாதபகுர்வந்தி மலிம்லுசா இவ.-ஸ்வேதாஸ்வதர உபநிடதம்.

இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’ என்பது போன்று, இவரும் ‘இனன் இலன், மிகுநரை இலன்’ என்று அருளிச் செய்கிறார்.

52. நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத் ஸமஸ்ச அபி அதிகஸ்ச த்ருஸ்யதே,
பராஸ்யஸக்தி: விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ- ஜ்ஞாநபல க்ரியாச.

53. ஸஉத்தம:புருஷ: ஸதத்ர பர்யேதிஜக்ஷத் க்ரீடன்
ரமமாண: ஸ்தீரிபி: வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜநம் ஸ்மரந் இதம்ஸரீரம்.-
சாந்தோக்யம், 7 : 26.

முத்தன் ஆனவன் எல்லாப்பொருள்களையும் பார்க்கின்றான்,’ என்கிறபடியே, ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகாநின்றது முத்தனுக்கு.

54. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம்.– தைத்திரீயநாரா. 11 : 8.-தைத்திரீ. நாரா. 6. 1 : 11

உலகத்திற்குத்தலைவன்’ என்னுமித்தனை

55. யச்சகிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஸ்யதே ஸ்ரூயதேபிவா,
அந்தர் பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:
தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8.

உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்

56. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்யஸ்ச்ச த்யச்ச அபவத்.-தைத்திரீயம்.

57. அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா.-தைத்திரீயம்.

பொருள்களை. இவற்றை உண்டாக்கி, உயிர் வழியாக அநுப்பிரவேசித்துப் பின்னர் இவற்றிற்குப் பொருளாகை, பெயர் பெறுகை என்னும் இவை உண்டாம்படி செய்து, 4‘எல்லாச் சேதநர்களுடைய உள்ளத்திலும் பிரவேசித்து நியாமகனாய்ச் சர்வர்க்கும் ஆத்துமாவாய் இருக்கும் படியை’ ‘ஓடு’ என்பது காட்டுகிறது. ‘

58. த்வாஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம்
பரிஷஸ்வஜாதே, தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாகஸீதி–இருக்கு வேதம்.

தான் எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராய் நின்றால், சரீரத்தினுடைய வளர்தல் தேய்தல் முதலிய நிலை மாறுபாடோ, உயிர்களுடைய இன்பதுன்பங்களோ தன்னையும் பொருந்தும்படி இருக்கின்றானோ?’ என்னில், புலன் அலன் – தான் ஒட்டு அற்று நின்று விளங்காநிற்பவன்; 5அவ்வப்பொருள்களினுடைய தன்மைவேறுபாடுகளும் இன்பதுன்பங்களும் தன்னைத் தீண்டாவண்ணம் இருப்பான் என்பதாம். 6‘பரமான்மா சீவான்மா என்று கூறப்படும் இருவர், சிறந்த ஞானரூபமான சிறகுகளையுடையவர்களாய், ஒத்த குணங்களையுடையவர்களாய்,

59. கிம்நு ஸ்யாத் சித்தமோஹ: அயம்பவேத் வாதகதி: துஇயம்
உந்மாதஜ: விகாரோவா ஸ்யாத்இயம் ம்ருகத்ருஷ்ணிகா.–ஸ்ரீராமா. சுந். 34. 23.

அந்நலனுடை ஒருவனை’ என்கிறார். நணுகினம் – ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – இது, பொய்யோ? 1‘இது ஏதேனும் மயக்கம் ஸ்வப்பனம் முதலியவைகளோ?’ என்று பிராட்டி நினைந்தாற்போன்று, இவரும் ‘நணுகினம் நாமே’ என்கிறார்

60. கச்சித் நதுஷ்டோவ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம்தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவமே–ஸ்ரீராமா. அயோத். 85 : 7.

 அஹம் என்றால் இறைவன் அளவிலே சென்று முடிய வேண்டும்படியாக இருக்க, தேகத்து அளவிலே ஆகும் படியன்றோ முன்பு போந்தது? கைகேயி, ‘அரசனே!’ என்று விளிக்கும்படியாகப் பிறந்து, 3‘அவள் மகனாய்க் கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ?’ என்று எண்ணும்படியான நிலையில் நின்ற நான்– கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ – கீழ்வயிற்றில் எழுந்த  கட்டியைப்போன்று துன்புறுத்த வருகின்றானோ என்றபடி.

61. சத்ருக்நஞ்ச அப்ரவீத் ஹ்ருஷ்ட: தாநமாத்யாம்ஸ்ச ஸர்வஸ:
மந்யே ப்ராப்தாஸ்ஸ்ம தம்தேஸம் பரத்வாஜ:யம் அப்ரவீத்-ஸ்ரீராமா. அயோத். 99 : 8 – 9.

அப்பரத்துவாச பகவான் சொன்ன ஆச்சிரமத்தை அடைந்தேனோ என்று ஐயப்படுகிறேன்!’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான்

62. க்வதே ராமேண ஸம்ஸர்க்க: கதம் ஜாநாஸி லக்ஷ்மணம்
வாநராணாம் நராணாஞ்ச கதம் ஆஸீத ஸமாகம:.-ஸ்ரீராமா. சுந்த. 35 : 2.

காட்டிலே வசிக்கின்ற குரங்குகளுக்கும் நாகரிகரான சக்கரவர்த்தி பிள்ளைகளுக்கும் ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே?’ என்று

63. ஸர்வர்க்ஷ ஹரிஸைந்யாநாம் ஸூக்ரீவம் அகரோத் பதிம்
ராம ஸூக்ரீவயோ: ஐக்யம் தேவிஏவம் ஸமஜாயத.-ஸ்ரீராமா. சுந்த. 35 : 31.

பெருமாளும் மகாராஜரும் சேர்ந்த சேர்த்தி, பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க, அடியேன் அந்தப்புரக் காரியத்திற்கு வரும்படியாக அன்றோ? நானும் 2இங்ஙனே கூடிக் கொண்டு நிற்கக்கண்டேனித்தனை,’ என்றான் சிறிய திருவடி. இறைவனுடைய அனுபவத்துக்குப் புறம்பான நாம், அன்றி, இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் என்பார் ‘நாமே’ என்கிறார் எனினுமாம்.

(

64. ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத.-சாந்தோக்யம். 3. 4.

இவை எல்லாம் பிரஹ்மம் அல்லவா

65. தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேதகேதோ.-சாந்தோக்யம். 6. 12.

இது நீயாய் இருக்கிறாய்

ஆய்நின்ற’ என்னுஞ்சோல், பொருள்களைக் காட்டுவதோடு அமையாமல், இறைவன் அளவுஞ்சொல்லும்படி என்?’ என்ன,உடலும், உடலை விரும்பி நிற்கின்ற உயிரும், உயிருக்குள் தங்கி இருக்கின்ற இறைவனும் ஆன இக்கூட்டம் இத்தனைக்கும் வாசகமாக நிற்கிறது இச்சொல். ‘அவர்’ என்றது ‘இவையாகி நிற்கிறார் அவர்’ என்றபடி

66. நஹிபாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவத்யந்யஸ்ய கஸ்யசித்.-ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.

காப்பாற்றுந்திறன் விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவர்க்கும் இன்று

67. யத்வேதாதௌ ஸ்வர: பரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதிலீ நஸ்ய ய: பர: ஸமஹேஸ்வர:-தைத்திரிய நாராய. 6. : 10.

செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று வேதங்களைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் கூறப்படுகின்ற பீஜாக்ஷரம் யாது ஒன்றோ-அந்தப் பிரணவத்துக்குள் மறைந்துள்ளது அகரம். அது காக்கும் இறைவனைக் காட்டுவது ஒன்று; அதற்குப் பொருளாக உள்ளவன் யாவன் ஒருவன்? அவன் சர்வேஸ்வரன்,’

68. அஞ்சலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ.-பரத்துவாச சம்ஹிதை.

இரு கைகளையும் குவித்துச் செய்கிற ஓர் அஞ்சலி என்னும் மேலான முத்திரையானது, இறைவனுடைய திருவருளை விரைவிலே உண்டாக்கக் கூடியதாக இருக்கின்றது,

69. க்ருதாபரா தஸ்யஹிதே நாந்யத் பஸ்யாமி அஹம்க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத்.
ஸ்ரீராமா. கிஷ்.

இளையபெருமாளுடைய நாண் ஒலியினைக் கேட்ட மகாராஜர், கழுத்தில் அணிந்திருந்த மாலையினை அறுத்து எறிந்து, குரங்குகள் இயற்கையாகச் செய்கின்ற தொழில்கள் சிலவற்றைச் செய்துகொண்டு அருகே நின்ற திருவடியைப் பார்த்து, ‘இச்சமயத்தில் நாம் செய்யத்தக்கன யாவை?’ என்று கேட்க, ‘அபராத காலத்தில் அநுதாபம் பிறந்து மீண்டோம் என்று நினைப்பதற்கு எளியன் அல்லோம்; சில செய்வோம்; தீரக் கழிய அபராதம் பண்ணினோம்; செய்த பின்னர் இனி, ஓர் அஞ்சலி நேராமற் போகாது,’ என்ற கருத்து அமைய, 2‘செய்யப்பட்ட பாவங்களையுடைய உனக்கு இலக்குமணனைக் கண்டு இரு கைகளையும் கூப்பி வணங்கி, அதன் திருவருளைப் பெறுதல் தவிர, அவனைப் பொறுப்பிக்கைக்கு வேறு வழி ஒன்றையுங் காணேன்,’ என்றான் திருவடி என்று கூறும் ஸ்ரீ ராமாயணமும் இங்கு அறிதல் தகும்.

70. யோயோ யாம் யாம் தநும்பக்த: ஸ்ரத்தயார்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்.–பகவத்கீதை. 7 : 21.

எவன் எவன் பத்தியுள்ளவனாகி எவ்வெத்தேவர்களை வணங்குவதற்கு விரும்புகின்றானோ, அவன் அவனுக்கு அவ்வத்தேவர்களை வணங்குதற்கு உரிய பத்தியினை நான் கொடுக்கிறேன்

71. ஸதயாஸ்ரத்தயா யுக்த: தஸ்யாராதநமீஹதே
லபதேசத்த: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்

72. அருணயா பிங்காக்ஷ்யா ஸோமங்க்ரீணாதி.

நின்றனர்’ முதலிய சொற்களின் பன்மைகளால், இறைவனுக்கு வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் தொழில் செய்தல், செய்யாமைகளைச் சொல்லுகிறார். ஆகிருதியினைச் சொல்லுகின்ற சொல்லானது வடிவிலே சென்று முடிந்து நிற்குமாறு போன்று, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்களும் அபர்யவசான விருத்தியால் இறைவனளவும் சென்று அல்லது நில்லா. இனி, ‘பொன்னிறக் கண்களையுடைய செந்நிறப் பொருளால் சோமம் என்னும் கொடியினை வாங்கக் கடவன்’ என்ற இடத்தில். (ஆகிருதி – சாதி; ‘சாதியினைக் காட்டும் ஒரு சொல், அச்சாதியினையுடைய
பொருள்களைக் காட்டுவது போன்று’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
அதாவது, ‘அரசச் சாதி’ என்று கூறின் அச்சொல் தனியே நில்லாது   அச்சாதியினையுடைய ஒரு மனிதனையே காட்டி நிற்குமாறு போன்று
என்பது கருத்து. அபர்யவசான விருத்தியாவது – ஒரு சொல் தனக்குரிய   பொருள்களைக் காட்டி அவ்வளவில் முடிவு பெறாது, தொடர்ந்து மேலும்
செல்வது.)2குணத்தோடு கூடிய பொருள் தோன்றா நிற்கவும் செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று, தொழில் செய்தல் செய்யாமைகட்கு நிலைக்களமான பொருள்கள் அவன் அதீநம் என்று 3முன் சொல்லுகையாலே, இங்குத் தொழில் செய்தல் செய்யாமைகளில் நோக்கு என்று கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின், 4சாமாநாதிகரண்யம் சித்தியாது. ஆக, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக்களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங்காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன.

73. அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி.–சாந்தோக்யம், 6 : 3

இந்த உயிர்களை எல்லாம் உடலாகக் கொண்டு இருக்கிற நான், உயிர்களுக்குள் உயிராகப் புகுந்து இவற்றிற்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’

74. யஸ்யாத்மா ஸரீரம். . .யஸ்யப்ருதிவீ ஸரீரம்.–தைத்திரீயம்

உயிர்களுக்குள் வியாபித்து அவ்வுயிர்களைக் கட்டளை இடுமவனாய், எல்லா வுயிர்கட்கும் ஆத்துமாவாய்,’ இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று 2‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ 3‘எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போகின்றான் என்று மேல் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார்.

தாரகன் – தரித்துக்கொண்டிருப்பவன். நியாமகன் – ஏவுகின்றவன். சேஷி –  தன் விருப்பின்படி விநியோகங்கொள்ளுகின்றவன்.

தார்யமாவது, உயிர்ப்பொருள் உயிரல்பொருள் ஆகிய அனைத்தையும் இறைவன் தன் சொரூபத்தாலும் சங்கற்பத்தாலும் தரிக்கின்றான்; அவனுடைய
திவ்வியாத்தும சொரூபத்தையும் நித்தியசங்கற்பத்தையும் நீங்கின போது, தம்முடைய சத்துக்குக் கேடு பிறக்கும்படி இருக்கும் பொருள். நியாம்யமாவது,
சரீரத்தினுடைய எல்லா வியாபாரங்களும் ஆத்துமாவினுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுமாறு போன்று, ஆத்துமாவினுடைய எல்லா
வியாபாரங்களும் இறைவனுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுதல்.  சேஷமாவது, சந்தனம் மலர் தாம்பூலம் முதலியவைகளைப் போன்று,
இறைவனுக்கு விருப்பின்படி விநியோகங்கொள்ளுதற்குத் தகுதியாய் இருத்தல்.

75. ஆத்மந ஆகாஸ: ஸம்பூத:, ஆகாஸாத்வாயு:-தைத்திரீ. ஆனந். 1.

திடம் விசும்பு எரி வளி நீர் நிலம் – திடம் என்பதனைப் பிரித்து ‘எரி’ முதலிய ஏனைய நான்கு பூதங்கட்கும் கூட்டுக. இனி, 6‘பரம்பொருளிடத்திலிருந்து ஆகாயம் உண்டாயிற்று,’ என்கிறபடியே, ஏனைய நான்கு பூதங்கட்கும் முன்னே தோன்றி, அவை அழிந்தாலும் சில நாள் நின்று பின் அழியக்கூடியது ஆகையாலே விசும்பிற்குத் திடம் என்ற அடை புணர்த்து ஓதினார் எனக்கோடலுமாம். இனி, 1‘காரணமான பூதங்கள், காற்றுத் தீ நீர் மண் என்னும் நான்கேயாம்,’ என்கிற (பார்ஹஸ்யபத்திய சூத்)அருகமதத்தாரை மறுக்கும் பொருட்டு, விசும்பிற்குத் ‘திடம்’ என்ற அடையினைத் தந்து அருளிச்செய்தார் என்றலும் ஒன்று. ஆக, ஐம்பூதங்களையும் அருளிச்செய்கிறா

76. சத்வார்யேவ பூதாநி மிதஸ்ஸம்பத்தாநி. 

77. பஹூயாம் ப்ரஜாயேயேதி. தைத்திரீய. ஆன. 6. 3.

பல பொருள்களாக விரிகின்றேன்’ என்கிற தனது மலர்ச்சியே உலகமாதலின், வைதிக நிர்த்தேசம்-மறைமொழி.-  இருக்கிறபடி

78. யமாத்மா ந வேத.–. பிரஹதாரண்யம்.

எவன் ஒருவன் உயிர்களால் அறிய முடியாதவனோ’ என்கிறபடியே, பிறர்களால் காண முடியாதவனாய் இருப்பான். எங்கும் பரந்து உள்ளும் புறமும் நிறைந்து ‘இதற்குப் பிரமாணம் என்?’ என்னில், உளன் சுடர்மிகு சுருதியுள் – புருஷனால் செய்யப்படாததாய், குற்றம் இல்லாததாய் இருக்கிற வேதங்களால் சொல்லப்பட்டவன். பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் போன்று வேறு காரணங்களால் கழித்துத் தள்ள ஒண்ணாதபடி இருத்தலின், ‘சுடர்மிகு’ என்றும், முன்னர் உள்ள பெரியோர்கள் கூறி வந்த முறையைப் பின்பற்றியே பின் வருகின்றவர்களும் கூறிக்கொண்டு வருகின்றமையின், ‘சுருதி’ என்றும் அருளிச்செய்கிறார்.

79. அக்ஷரம் அம்பராந்த த்ருதே:-பிரஹதாரண்யம், 5 : 8.

80. கஸ்மிந்நு கலு ஆகாஸ ஓதஸ்ச ப்ரேரதஸ்ச.

ஆகாயம் என்று கூறப்படுகின்ற மூலப்பகுதியானது எவனிடத்தில் குறும்பாவாகவும் நெடும்பாவாகவும் கோத்துக் கொண்டு கிடக்கிறது?’ என்று உபநிடதத்தில் கார்க்கி வித்தையில் ஆகாச சப்தத்தால் மூலப்பகுதியைச் சொல்லுகையாலே இவரும் ‘விண்’ என்ற சொல்லால் மூலப்பகுதியினை அருளிச்செய்கிறர்

ஆகாயம்’ என்ற சொல் மூலப்பகுதியைத்தான் காட்டுகிறது என்று கொள்ளுமாறு யாங்ஙனம்?’ எனின், 3ஆகாயத்திற்குக் காரணமான மூலப்பகுதியைத் தரித்திருப்பதனால் அக்ஷரம் என்று சொல்லப்படுமவன் பரம்பொருளே,’ என்பது பிரம சூத்திரம் ஆதலின், (சாரீரக மீமாம்சை, சூ. 9.)மூலப்பகுதியின் காரியமான ஆகாயத்தைக் காட்டுகிற ‘விண்’ என்ற சொல்லால் காரணமான மூலப்பகுதியை உபசாரத்தால் அருளிச்செய்கிறார்

81. யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரஞ்ச உபேபவத ஓதந;
ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் கஇத்தா வேத யத்ர ஸ:-கடவல்லி. 1 : 2.

யாவன் ஒருவனுக்குப் பிராமண க்ஷத்திரிய சாதிகள் இரண்டும் உணவாக இருக்கின்றன? யாவன் ஒருவனுக்கு யமதருமன் ஊறுகாய் நிலையிலே இருக்கின்றான்? அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவருக்கு அறிய நிலமோ?’

இங்ஙனம் உணவாகக் கூறப் படுதலின், இவரும், உணவின் தொழிலாகிய ‘  அவை முழுது உண்ட’ என்னும் சொல்லால் அழித்தலை அருளிச் செய்கிறார்

82. பர: பராணாம் பரம: பரமாத்மா ஆத்மஸம்ஸ்தித:
ரூபவர்ணாதி நிர்த்தேஸ விஸேஷண விவர்ஜித:-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 10.

உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவன் இறைவன்,’ என்கிறபடியே, அவர்கள்தங்களுக்கும் மேலானவனாய் இருக்குமவன். 3‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா, ‘என்பது திருவாய், 8. 1 : 5.)

83. விஷ்ணு: ஆத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:-பாரதம்

மிக்க ஒளியினையுடைய உருத்திர பகவானுக்குத் திருமால் உயிராக இருக்கின்றார்; ஆதலால், அந்தச் சிவபெருமான் வில்லினுடைய நாணினைத் தொடும் ஆற்றலையடைந்தான்’ என்றார் அடி அறியும் வியாசர்

84. யோ ப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்
யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை.–சுவேதாஸ்வதரம்.

நாராயணன் உலகங்களை எல்லாம் படைப்பதற்கு முன்னர்ப், பிரமனை முதலில் படைத்தான்; அப்பிரமனுக்கு வேதங்களைக் கற்பித்தான்,’ என்கிறபடியே, அதற்கும் இறைவன் அடியாக இருப்பான்.

85. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரெஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்மிருதௌ
ததா தர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.–பாரதம். சாந்தி பர். 169.

அரன் என உலகு அழித்து உளன் அயன் என உலகு அமைத்து உளன் – ‘அரன் செய்தான்; அயன் செய்தான்’ என்ன உலகையழித்தும் அமைத்தும் உளன். பிரமன் சிவன் என்னும் இவர்கள் இருவரும் தேவர்களுக்குள் தலைமை பெற்றவர்கள்; இறைவன் தெளிந்திருந்த காலத்தும் கோபத்துடன் இருந்த காலத்தும் உண்டானவர்களாக எண்ணப்படுகிறார்கள்; இவர்கள், அவ்விறைவனாலே காட்டப்பட்ட வழிகளையுடையவர்களாய், படைத்தல் அழித்தல்களாகிய காரியங்களைச் செய்கிறார்கள்,’ என்று இவ்வாறு பிரமாணங்கள் உள்ளபடியால் படைப்பில் ஒரு பகுதியும் அழிப்பில் ஒரு பகுதியுமே அவர்களுக்கு உள்ளவை; அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன். ஆகையாலே, சொன்னேன் அத்தனை; ஒருவனிடத்திலே பக்ஷபாதத்தாலே சொன்னேன் அல்லேன்,’ என்று குத்ருஷ்டிகளை மறுக்கிறார்.

86. ஏஷம ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா:–சாந்தோக்கிய உபநிடதம்.

நீர் தொறும்–ஈண்டு நீர் என்றது நீரின் பரமாணுக்களை. 2‘ஆகாயத்திலும் பெரியன் என்று கூறப்படுகின்ற பரம்பொருள், தண்ணீரின் பரமாணுக்களில் நிறைந்து நிற்பின், சிறிய இடத்தில் இருப்பவனாய் நெருக்குப்பட்டு இருப்பானோ?’ என்னில், பரந்த அண்டம் இது எனப் பரந்து உளன் – அந்த ஒவ்வொரு பரமாணுவும் பரந்த அண்டம் இது என்னும்படி அதற்குள் பரந்திருப்பன். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பன்

87. அத்ர க்ருத்ர: பததி.

88. ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகி: பகவாந்ருஷி:-ஸ்ரீராமா. பா. 4 : 1.

இறைவனுடைய திருவடிகளின்மேல். குருகூர்ச் சடகோபன் சொல்- 3‘வால் மீகிர்ப் பகவான் ருஷி:’ என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச்செய்கிறார்.

89. பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை: த்ரிபி: அந்விதம்
ஜாதிபி: ஸ்ம்தபி: பத்தம் தந்த்ரீலய ஸமந்விதம்.

90. பாதபத்த: அக்ஷரஸம: தந்திரீலய ஸமமவித:-ஸ்ரீராமா. பா. 2 : 18.

91. காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஈத்ருஸை: கரவாணி அஹம்.

நிரன் நிறை’ என்று கொண்டு நேரே நிறுத்தப்படுகை. அதாவது- நான்கு அடிகளோடு கூடியதாயும், ஒவ்வோர் அடியும் எழுத்துகளால் ஒத்ததாயும், வீணையின் நரம்பு தாளங்கள் அவற்றிற்கு ஒத்ததாயும் இருக்கின்ற ஸ்ரீராமாயணம்,’ என்பது போன்று, இங்கும் செய்யுள் இலக்கணத்திற்குறையாமல் எழுத்து அசை சீர் தளை அடிகளும் பொருளும் அந்தாதியும் முறையாக நிறுத்தப்படுதல் என்னுதல்

92. உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்யைகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்ய:–ஆத்தும சித்தி.

பத்தி என்பது ‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’ என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப்பட்ட மனத்தினையுடையவனுக்கு உண்டாவது அன்றோ?

93. நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்.-முண்டக உபநிடதம், 1. 2 : 13.

-ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன் அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.–வீடுமின்’ என்று பலரைக் குறித்துப் பரோபதேசம் செய்கையாலே ‘ஒரு  வருடம்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

94. ஸோஹம் பருஷிதஸ்தேந தாஸவச்ச அவமாநித:
த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:-ஸ்ரீராமா. யுத். 17 : 14.

95. பரித்யக்தா மயா லங்கா மித்ராணிச தநாநிச
பவத்கதம்மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிச.–ஸ்ரீராமா. யுத். 19 : 5.

புத்திரர்களையும் மனைவியையும் விட்டுவிட்டு ஸ்ரீராகவனைச் சரணமாக அடைகிறேன்,’ என்றும், 2‘என்னால் விடப்பட்டது இலங்கை’ என்றும் விடுகை முன்னாக அன்றோ முன்பு பற்றினவர்களும்-விபீஷணன் முதலியோர்.- பற்றினார்கள்? ‘

96. யமோ வைவஸ்வதோ ராஜா ய: தவஏஷஹ்ருதிஸ்தித:
தேந சேதவிவாதஸ்தே மா கங்காம் மா குரூந் கம:-பிரஹதாரண்யம்.

 உம் உயிர் வீடு உடையானிடை – எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில். அன்றி, இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக உடையவனிடத்தில்’என்றும், ‘உம்உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ என்றும்,  (ஈண்டு, விடுதல் – சமர்ப்பித்தல்)உம் உயிரை வீட்டினை (அதாவது – மோக்ஷத்தினை) உடையவனிடத்தில்’ என்றும் பொருள் கூறலும் ஆம். ‘அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ? நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’ என்பார், ‘உயிர்’ என்றும், ‘அதுதானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ என்பார், ‘உம் உயிர்’ என்றும் அருளிச்செய்கிறார். பொதுவிலே ‘உடையானிடை’ என்கிறார்; சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால் 1வண்புகழ் நாரணன்’ என்கைக்காக.

97. அநாத்மநி ஆத்மபுத்தி: யா அஸ்வே ஸ்வமிதி யா மதி:
அவித்யா தருஸம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்-ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.

98. அச்யுத அஹம் தவஅஸ்மி இதி ஸைவ ஸம்ஸார பேஷஜம்.–ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.

உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும், அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, எனப் பிறப்பு ஈனும் வித்து இன்னது என்றும், 2‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய் இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’, என அதனை நீக்குதற்கு வழி இன்னது என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகின்றது. ஆதலால், அளிக்குமவன் ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.

99. ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநாநஅந்யத் கிஞ்சித் அஸ்திபராயணம்.-விஷ்ணு தர்மம், 122.

பிறப்பாகிய பெருங்கடலில் மூழ்கினவர்களாய் ஐம்புலன்களாகிற நீர் வாழ் பிராணிகளால் இழுக்கப்படுகின்றவர்களாய் உள்ள மக்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கிற விஷ்ணுவாகிற ஓடத்தினைத் தவிர, சிறந்த வேறே பாராயணம் இல்லையே

100. ஜ்யோதீம்ஷிவிஷ்ணு: புவநாநிவிஷ்ணு: வநாநிவிஷ்ணு: கிரயோதிஸஸ்ச
நத்ய: ஸமுத்ராஸ்ச ஸஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்திச விப்ரவர்ய.–ஸ்ரீ விஷ்ணு. புரா. 2. 21 : 93.

101. ஸத்யஞ்ச அந்ருதஞ்ச ஸத்யம் அபவத்.–தைத்திரீயம். 6.

‘உள்ளது என்று கூறப்படும் உயிரும் இல்லது என்று கூறப்படும் உடலும்’ என்று விஷ்ணு புராணமும்5‘சத்தியம் என்ற சொல்லால் கூறப்படும் உயிர்களும், பொய்மை என்ற சொல்லால் கூறப்படும் உடலும்’ என்று தைத்திரீய உபநிடதமும் கூறுதல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.

102. ப்ரஸாத பரமௌ நாதௌ மம கேஹம் உபாகதௌ
தந்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்யோபஜீவந:– ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 16 : 21.

‘பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூவிற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ‘மாலாகாரர்’ தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது. மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை; ‘இரண்டும் அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க, தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில், சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள், ‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும்

103. ஸமோஹம் ஸர்வபூதேஷூநமேத்வேஷ்ய: அஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி துமாம் பக்த்யா மயிதே தேஷூ சாப்யஹம்.-ஸ்ரீ கீதை. 9 : 24.

 முற்றவும் நின்றனன் – ‘எல்லாப் பிராணிகளுக்கும் நான் ஒத்தவன்; எனக்கு எவனும் பகைவன் இலன்; அன்பனும் இலன்; எவர்கள் என்னைப் பத்தியால் அடைகின்றார்களோ, அவர்கள் போலவே நானும் அவர்களிடத்தில் அன்புடன் வசிக்கின்றேன்,’ என்கிறபடியே அடையும் திறத்தில் ஒத்தவனாய் இருந்தான்.

கடுநவையுண்டாக வருத்தும் வெகுளியும் அருளும்  கோட்டமும் செப்பமும் ஆகிய மறமும் அறமும் உடையாரிடத்து
உடையையாய் இல்லாரிடத்து இல்லாயாய் இருத்தல் அல்லது  மாற்றாருயிரின் கண்ணும் கேளிருயிரின் கண்ணும் அதனை மாற்று
தற்றொழிலும் அதற்கு எமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை; நினக்கு  மாற்றோரும் கேளிரும் இலராதலான். என்றது, குற்றமாகிய மறமுடையாரிடத்து  இல்லையாதலும், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும்  செம்மையுமுடையையாய் அஃதில்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப்  பகையாயினாருயிரின்கண் அதனை மாற்றுதற்றொழிலும் நினக்குக் கேளிராயினாருயிரின்கண் அதற்கு ஏமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை;  அவ்விரு திறத்தாரும் நினக்கு இன்மையான் என்றவாறு,’ என்ற பரிபாடல்  உரைப்பகுதி ஒப்பு நோக்கல் தகும்.

104. வாஸூதேவோஸி பூர்ண:

105. இதாநீம் மாக்ருதா வீர ஏவம் விதம் அசிந்திதம்
த்வயி கிஞ்சித் ஸமாபன்னே கிம்கார்யம் ஸீதயாமம.-ஸ்ரீராமா யுத். 41 : 4.

இங்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே ‘அடியவர்’ என்கிறார். 1உனக்கு நலிவு சிறிது வந்து இருப்பின், சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ என்று, இன்று கிட்டிற்று ஒரு குரங்கை, (சுக்கிரீவனை.)என்றும் தன்னையே அடைந்திருக்கிற பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் அன்றோ! ஆதலால், இறைவனுக்கு அடியவர்களாய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள் ஒரு திருவடி, ஒரு திருவனந்தாழ்வான் அல்லர்; இங்கு, இவ்விலக்காமையினை யுடையவர்களேயாவர். ‘காரணம் என்னே?’ எனின், அவர்கள் உள்ள குணத்தை அனுபவித்திருப்பவர்கள், அத்தனையே யாம்; குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலில் அன்றே!-

106. பஹூநாம் ஜந்மநாம் அந்தேஜ்ஞாநவாந் மாம்ப்ரபத்யதே
வாஸூதேவ: ஸ்ர்வம் இதி ஸ மஹாத்மா ஸூதுர்லப:

107. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹருத்கதி: நாராயண:

108. பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தாரமித்ரா தயோபிவா
ஏகைக பலலாபாய ஸர்வலாபாய கேஸவ:

109. ப்ராயஸ: பாபகாரித்வாத் ம்ருத்யோ: உத்விஜதே ஜந:
க்ருதக்ருத்யா: பாதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரியம் இவ அதிதிம்.

110. ஸர்வே வேதா: ஸர்வ வேத்யா: ஸஸ்ஸ்த்ரா:
ஸர்வேயஜ்ஞா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே
தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாபதா:

111. நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண:பர:
நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண:பர:.-தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8. 

உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,’ 4‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,

112. நித்யம் த்வதேக பரதந்த்ர நிஐஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸனம் ந:–ஸ்ரீ வைகுண்டராஜ ஸ்தவம், 35.

‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன

113. பித்யதே ஹ்ருதய க்ரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஸயா:
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே- முண்டக உபநிடதம்.

‘நம்மைக்காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய இறைவனைப் பரபத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன,’

114. ததோமாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்.– ஸ்ரீ கீதை, 18 : 55.

பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்

115. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜூந
தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப.-ஸ்ரீ கீதை, 4 : 5.

பகைவர்களை அழியச் செய்கின்ற அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன; உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள் பலவற்றையும் யான் அறிகின்றேன்; அவற்றை நீ அறியாய்,’ என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் கிருஷ்ணன்; அருச்சுனன் பிறந்தது பொய் அன்று; ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.

116. ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-ஸ்ரீ கீதை, 4 : 9.

அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே; இது தன்னை அவதார ரஹஸ்யத்தில் தானும் அருளிச் செய்தான் அன்றே,  ‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும் தெய்வத் தன்மை வாய்ந்தவை,’ என்று? அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும். 6நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்; 7அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;

117. மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந
தோஷோ யத்யபிதஸ்ய சியாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம்.ஸ்ரீ ராமா. யுத். 18 : 3.

நண்பன் என்ற பாவனையைக்கொண்டு வந்த இவ்விபீடணனை நான் ஏற்றுக்கொள்ளாது விடமாட்டேன்,’ என்னுமவன்

118. அப்ரவீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதோ விபீஷண:
அந்தரிக்ஷ கத:ஸ்ரீமாந் ப்ராதாவை ராக்ஷஸாதியம்.-ஸ்ரீராமா. யுத். 16. 17.

119. லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-ஸ்ரீராமா. பால. 18 28.

இராவண பவனத்தை விட்டு ஆகாசத்தில் கிளம்பின போதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடி கொண்டபடியினால் அன்றோ, 7விபீடணனை, ‘ஆகாயத்தை அடைந்த ஸ்ரீமான்’ என்றார்? 8‘இலக்குமணன் லக்ஷ்மியால் நிறையப் பெற்றவன்’ என்றார் இளைய பெருமாளை. இது அன்றோ இவனுக்கு நிலை நின்ற ஐசுவரியம்; இத்தைப் பற்ற ‘உடை’ என்கிறார்.

120. இமௌ ஸ்ம முநிஸார்த்தூல கிங்கரௌ ஸமுபஸ்திதௌ
ஆக்ஞாபய யதேஷ்டம் வை ஸாஸநம் கரவாவகிம்.-ஸ்ரீராமா. பாலகா. 34 : 4.

விஸ்வாமித்திர முனிவரே, உம்மைச் சேர்ந்து சரணம் அடைந்தவர்களாய் இருக்கிறோம் நாங்கள்; ஆணை இட்ட காரியங்களைச் செய்தோம்; இனி எந்தக் காரியங்களைச் செய்யவேண்டும்? விரும்பும் காரியத்தைக் கட்டளை இடுங்கள்,’ என்கிறபடியே, ‘நான் உங்கள் அடியான்; என்னை வேண்டினபடி ஏவிக் காரியங்கொள்ளுங்கள்,’ என்று நிற்பான் என்றபடி

121. பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்
புருஷம் ஸாஸ்வதம் திவ்யம் ஆதிதேவம் அஜம் விபும்.–ஸ்ரீகீதை. 10 : 12.

122. பக்த்யாது அநந்யயா ஸக்ய: அஹமேவம் வித: அர்ஜூந
ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்த்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப,-ஸ்ரீகீதை. 11 : 54.

மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன், ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’ என்று இவை முதலாக இறைவனைப் பற்றி வீடுமன் முதலியோர் கூறிக்கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின், ‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க, 5‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன்

123. ப்ராம்யதாம் அதர ஸம்ஸாரே நராணாம் கர்மதுர்கமே
ஹஸ்தாவலம்பநோஹ்யேகோ பக்தி கரீதோ ஜநார்தந:–வைஷ்ணவ தர்மம்.

உலகங்களை எல்லாம் ஆளும் அரசபுத்திரன் ஒருவன், ஒரு கால விசேடத்தில் சிறிய பொருளுக்காக அடிமைப்படுவானாயின், பின், தன் செல்வக்கிடப்புக் காட்டி மீள ஒண்ணாதது போன்று, சர்வேஸ்வரனும் பத்தியில் நிலை நின்றவனுக்குத் தன்னை அறவிலை செய்து கொடுத்தால், பின்னை, மேன்மை காட்டி அகலமாட்டான்; கழுத்திலே ஓலைக்கட்டித் ‘தூதுபோ’ என்னலாம்படி தன்னைக் கையாள் ஆக்கி வைப்பான். 1‘மக்கள் செய்யும் பத்தியினால், அவர்கட்குத் தன்னை அறவிலை செய்து கொடுக்கின்றான் இறைவன்; அவ்விறைவனாகிய ஜனார்த்தனனே அவர்கட்கு எப்பொழுதும் கையாளாக இருக்கின்றான்,’ என வருதலும் இங்கு ஓர்தல் தகும்.

124. ஹிமவாந் மந்தரோ மேரு: த்ரைலோக்யம் வா ஸஹாமரை:
ஸகயம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந ஸங்க்யே பரதாநுஜ:ஸ்ரீராமா. யுத். 59 : 111.

125. வாயு ஸூநோ: ஸூஹ்ருத்த்வேந பக்த்யா பரமயா ச ஸ:
ஸத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வம் அகமத் கபே:ஸ்ரீராமா. யுத். 59 : 120

இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற பொருள்களோடு மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்; போர்க்களத்தில் பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’ 4‘இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ என்பன ஸ்ரீராமாயணம்

உள்ளி வெம்பிணத் துதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி யங்கைக ளிருபதும் பற்றிப்பண் டான்மா
வெள்ளி யங்கிரி எடுத்தனன் வெள்கினா னென்ன
எள்ளிப் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.
‘அடுத்த நல்லுணர் வொழிந்தில னம்பரஞ் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கிவெண் பொருப்போடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக் கிளையான்.’
‘தொகவொ ருங்கிய ஞானமென் றெவரினுந் தூயான்
தகவு கொண்டதோ ரன்பெனுந் தனித்துணை யல்லால்
அகவு காதலால் ஆண்டகை என்னினு மனுமன்
மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்.’ —  
என்னும் கம்பராமாயணச் செய்யுள்கள் நோக்கல் தகும்.

126. அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே.–ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.

‘ஜனகனுடைய குலத்தில் பிறந்த சீதை விரும்பும் கணவனாக எவன் இருக்கிறானோ, அவனுடைய திறல் வலி அளி முதலிய குணங்கள் அளவிட்டு அறிய முடியாதன,’

127. ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ.

உனக்கு பூதேவியும் ஸ்ரீதேவியும் என மனைவியர் இருவர்’ எனக் கூறப்பட்டுள்ளது அன்றே? அங்குக்கூறிய அந்த இலட்சுமி சம்பந்தத்தைத் தாம் அங்கீகரித்தமை தோன்ற, ‘மலர் மகள் விரும்பும் நம் அடிகள்’ என்கிறார் இங்கு.

128. தாம்நா சைவோதரே பத்வா-ப்ரத்ய பத்நாத் உலூகலே
க்ருஷ்ணம் அக்லிஷட கர்மாணம் ஆஹச இதம் அமர்ஷிதா.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 14-

129. யதி ஸக்நோஷி கச்ச த்வம் அதிசஞ்சல சேஷ்டித
இதி உக்த்வா அதநிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 15-

‘யசோதையானவள், தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓர் உரலோடே அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தினாள்; பொத்தி, ‘துரு துருக்கைத் தனம் அடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க்காணாய்!’ என்று உறுக்கிவிட்டால் போகமாட்டாதே இருந்தான்

இப்படிப்பட்ட இறைவனுடைய சீரிய சக்தி பல படியாகக் கேட்கப்படுகின்றது’ என்று ஓதப்படும் பொருள், இவளுக்கு எளியதான படியினால் சொல்லுகிறாள்

130. மந்யே ஸாபரணா ஸூப்தா ஸீதா அஸமிந் ஸயநோத்தமே
தத்ர தத்ர ஹி த்ருஸ்யந்தே ஸக்தா: கநக பிந்தவ:

131. ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:
பரிஷ்வஜ்ய ருரோத உச்சை: விஸம்ஜஞ: ஸோக கர்ஸித:

132. ஸாதம் ஸமீக்ஷ்யைவ ப்ருஸம் விஸம்ஜ்ஞா கதாஸூ கல்பேவ பபூவ ஸீதா.
சிரேண ஸம்ஜ்ஞாம் ப்ரதிலப்யசைவ விசிந்தயாமாஸ விஸாலநேத்ரா.–ஸ்ரீராமா. சுந். 38 : 8.

பெருமாளும் பிராட்டியும் துயின்ற இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் காவல்  புரிந்திருந்தார் என்பது ஸ்ரீ ராமாயணத்திற்கூறப்படவில்லையே?’ எனின்,
‘பொருந்திக் கிடக்கிற பொன்னின் துகள் அங்கே அங்கே  காணப்படுகின்றனவே! ஆதலால், பிராட்டி ஆபரணங்களைக் கழற்றாமல்
இச்சிறந்த படுக்கையில் துயின்றிருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்,’  (அயோத். 88.  14.) என்று ஸ்ரீ பரதாழ்வான் கூறுகின்றான். பெருமாள், ஸ்ரீ
குகப்பெருமாள் ஆச்சிரமத்தினின்று நீங்கிச் சென்றதற்கும், ஸ்ரீ பரதாழ்வான்  வந்ததற்கும் இடையே இருபத்திரண்டு நாள்கள் கழிந்தன; பொன்னிள் துகள்
மறைவுபடாமல் இத்துனை நாள்களும் அங்கே இருக்க வேண்டுமாயின்,  சிறந்த காவல் செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆதலால், காவல் புரிந்தமை பெறுவதும்.

எத்திறம்’ என்ற ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ? இவர் மோஹித்துக் கிடக்க, 1பெருமாளும் பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று, ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும் பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக்கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள். பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப்பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக்கொண்டிருந்த இடத்தைகாட்ட, அவ்விடத்தைக் கண்டவாறே ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் என்னும்படி இங்கு,மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர், விசாலமான கண்களை யுடைய பிராட்டி பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’ என்பது போன்று பெரியோர்களுடைய நல்வினைப் பயனால் காலம் உணர்த்த உணர்ந்து, ‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார்.

காரெனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லில்
வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான்;
வார்மணிப் புனலால் மண்ணை மண்ணுநீ ராட்டுங் கண்ணான்.’–  என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைத்தல் தகும்.

133. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.

 பல பிறப்பாய்-தெளிவுடைய தான் சொல்லும் போதும் 2பல பிறவி’ என்பன்; உண்மையினைக் கூறும் வேதங்கள் கூறும்போதும் பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ என்று கூறும்; அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார், பல பிறப்பு’ என்பர். பிறருக்காகத் தாழ நின்றோம் என்ற நினைவு சிறிதும் இன்றி, அவ்வப் பிறவியின் தன்மைக்குத் தக்கவாறு இருந்தான் ஆதலின், ‘பிறந்து’ என்னாது ‘பிறவியாய்’ என்கிறார்.

134. ஆத்மாநம் மாநுஷம் மந்யேராமம் த ரதாத்மஜம்
யோஹம் யஸ்ய யத: ச அஹம் பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே.-ஸ்ரீராமா. யுத். 120 : 11.

135. ந அஹம் தேவோ ந கர்தர்வோ நயக்ஷோ நசதாநவ:
அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோந்யதா.-ஸ்ரீ விஷ்ணு புராணம். (5. 13 : 12.)

பரத்துவ நினைவு சிறிதும் இன்றி இருந்தான் என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், என்னை நான் மனிதனாகவே நினைக்கின்றேன்;’ என்ற ஸ்ரீ ராமன் வார்த்தையாலும், -நான் தேவன் அலன், கந்தருவன் அலன், இயக்கன் அலன் அசுரனும்  அலன். நான் உங்களுக்குச் சுற்றத்தானாய்த் தோன்றி யிருக்கிறேன்; இப்படித்  தோன்றி யிருப்பதனால் வேறு விதமாக நினைக்கத்தக்கவன் அல்லன்,- என்ற ஸ்ரீகிருஷ்ணன் வார்த்தையாலும் அறிதல் தகும்

136. யுவா ஸூவாஸா: பரிவீத ஆகாத் ஸ உ ஸ்ரேயாந் பவதி ஜாயமாந:-யஜூர் வேதம். 3. 6 : 9.

 இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின், 1‘அவன் பிறந்தவனாய் நன்மையுடையவனாகவே இருக்கின்றான்,’ என்கிறபடியே, கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்; திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாராநிற்கும். அவ்விறைவனே புகழையுடையான்

137. நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே
நமோநம: அநந்த மஹா விபூதயே
நமோநம: அநந்த தயைக ஸித்தவே.-ஸ்தோத்திர ரத்தினம், 21.

எம்பெருமான்’ என்ற சொல்லால், ‘அடியார்க்கு எளியனாய் அடியர் அல்லாதார்க்கு அரியனான என் 2நாயன் நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக்கொடுக்கிறார். 3‘மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகாத உனக்கு வணக்கம் வணக்கம்; மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகின்ற உனக்கு வணக்கம் வணக்கம்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

138. ஸஹஸ்ர பாஹூ: ஸர்வஜ்ஞோ தேவோநாம ஸஹஸ்ரவாந்.

139. நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவாதௌ தேவாதீநாம் சகார ஸ:–பாரதம்.

பேரும் ஓர் ஆயிரம் – அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திருநாமங்களையுடையவனாய் இருக்கை. குணம் பற்றி வருவனவும், சொரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார். 4‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன,’ எனப் புகலும் பாரதம்

140. அநேக ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி:

பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின், ‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணினான்’ என்றும். பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’ என்றும் பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின்; ஈண்டுப் ‘பிற’ என்பது 7திருமேனியைக் காட்டும்

141. தத்ர பூஜ்யபதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
ஸப்த: அபயம் ந உபசாரேணஹி அந்யத்ரஹி உபசாரத:

142. நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே.- ஸ்ரீகீதை, 9 : 14.

143. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு.-ஸ்ரீகீதை, 9 : 34. 

வணக்குடைத் தவநெறி வழி நின்று-வனக்கத்தையுடைய பத்திமார்க்கமாகிற வழியிலே நின்று; பகவத்கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில் ‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ என்று கூறி, பின்னர், என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால், இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவநெறி’ என்கிறார்

பகவான் என்பதற்கு ஆறு குணங்களை யுடையவன் என்பது பொருளாதலின்,  குணங்களை யுடையான் பக்கல் செலுத்தம் பத்தி இன்பமயமாக
இருக்குமாதலின், ‘காதலியோடு கலக்கும் கலவி போன்று இன்ப மயமாக  இருக்கும்’ என அருளிச் செய்கிறார்.

144. ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநம்யம் தப:-முண்டகோபநிடதம் 1. 1 : 10.

பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் அதனைச் சொல்லுகிறார்; அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’ என்கிற நியாயத்தாலேயாதல், இவனுடைய அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலேயாதல்.

தவநெறி’ என்பதற்குப் பத்தி  மார்க்கம், பிரபத்தி மார்க்கம் என்னும் இரண்டனையும் பொருளாகக் கொள்க.

145. ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே.ஸ்ரீகீதை, 2 : 59.

ருசி வாசனைகளும் நீங்குகின்றன,’

146. மத்யே விரிஞ்ச கிரிஸம் ப்ரதமாவதார:-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், 2 : 8.

பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ என்கிறபடியே, பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;

147 ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:-சுபால உபநிடதம்.

நன்று எழில் நாரணன் – ‘நன்று’ என்பதனால், அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார். ‘எழில்’ என்பதனால், ‘நீங்கின குற்றங்களையுடையவனும் மோக்ஷத்தையுடையவனும் ஒளி உருவனும் ஒருவனேயானவனும் ஆன நாராயணன்’ என்கிற புகரை நினைக்கிறார். இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு, வடிவின் அழகினைப் பார்த்தவாறே, ‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, ‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும் நன்றான அழகு என்று கூறலுமாம். திருப்பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க்கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின், ‘நாரணன்’ என்கிறார்.

148. ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணுஸிவாத்மிகாம்
ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவாநேகஏவ ஜநார்த்தந:–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 23.

படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கிற பிரமன் விஷ்ணு சிவன் என்னும் பெயர்களை, பகவான் என்ற பெயரையுடைய ஜனார்த்தனன் ஒருவனே அடைகிறான்,’ என்கிறபடியே, பெயர்களில் ஒக்க எடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பரியாயமான ஜனார்த்தன

149. நந்தந்தி உதிக ஆதித்யே நந்தந்தி அஸ்தமிதே ரவௌ
ஆத்மநோ நாவபுத்யந்தே மநுஷ்யா ஜீவிதக்ஷயம்.-ஸ்ரீராமா. அயோத். 105 : 24.

நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ்நாளின் நிலையினை அறிந்தபடி என்?’ என்னில், முன்னர், மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே? ‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம் மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும். இனி, ‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியாநின்றால், ‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், ‘நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.

நம்முடை நாளே’ என்பதற்கு இரண்டு வகையில் விசேடம்  அருளிச்செய்கிறார். முதல் வகை, வாழ்நாளின் நிலை இன்மையைக் குறித்தது;
இரண்டாம் வகை, கேட்டின் மிகுதியைக் குறித்தது.

150. ஸூக்ருத: ஸாதுக்ருத்யாம் த்விஷந்த: பாபக்ருத்யாம்–சாட்யாயன சாகை.

151. அபூத பூர்வம் மமபாவி கிம்வா ஸர்வம் ஸஹேமே ஸஹஜம் ஹி துக்கம்
கிம்து த்வதக்ரே ஸரணாகதாநாம் பராபவோ நாத ந தேநுரூப:-ஸ்தோத்திர ரத்தினம், 25.

நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு, உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால், (காலம் அறியப்படாமல் வருகின்றமையை நோக்கி ‘உடல்களின் சேர்க்கையும்  நித்தியம்’ என்கிறா)அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார். நம. ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும், பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ என்கிறபடியே. அசல் பிளந்தேறிட வந்தன அல்ல; நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை. அதாவது, 5எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? எல்லாம் பொறுக்க வல்லேன்; தன் காய் பொறாத கொம்பு உண்டோ? என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம்

பழமை-அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை. அம்-கொடுமையை நினைந்து சொல்லுகிறார். கொடுவினை-அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள்

152. யதா இஷீகதூலம் அக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத.
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே.-சாந்தோக்ய உபநிடதம், 5. 2

உடே்ன மாளும்-பற்றின காலத்திலே அழியும். ‘6தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ,அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன

இங்கு, ‘தாயைக் குடல் விளக்கஞ்செய்த  தாமோதரனைத், தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது, வாயினால்
பாடி மனத்தினால் சிந்திக்கப், போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்,’ என்ற திருப்பாவை ஒப்பு நோக்கல் தகும்.

153. மேரு மந்தர மாத்ரோபி ராஸி: பாபஸ்ய கர்மண:
கேஸவம் வைத்யம் ஆஸாத்ய துர்வியாதிரிவ நஸ்யதி.-விஷ்ணு தர்மம். 78.

பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேருமலை மந்தரமலை இவற்றின் அளவாக இருந்தாலும், கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன,

154. க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் திகச்சதி
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி– ஸ்ரீ கீதை, 9 : 81.

ஓர் குறைவு இல்லை – ‘மேல் ஒரு குறையும் வாராது. இனி, விரும்பியவை அனைத்தும் எய்தும்,’ எனலும் ஆம் ‘அருச்சுனா, இவ்வர்த்தத்தில் நம்மை நம்பிச் சூளுறவு செய்வாய்; நம்மைப் பற்றினவர்களுக்குக் கேடு வாராதுகாண்; பகவானை அடைவதற்கும் வினை கிடக்கைக்கும் ‘தீயால் நனைப்பது’ போன்று, என்ன சேர்த்தி உண்டு? அது பொருத்தம் அற்றது,’ என்பது பகவான் திருவாக்கு

155. துராசாரோபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக: புரா
ஸமாஸ்ரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா ஸரணம்யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்ந:பாரதம் சாந்தி பர்வம்.

156. ந வாஸூதேவ பக்தாநாம் அஸூபம் வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் வாப்யுபஜாயதே.பாரதம் அநுசாசன பர்வம்.

தீய ஒழுக்கமுடைமை, உண்ணத் தகாதனவற்றை உண்டல், நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தல், வேதநெறியினை இல்லை என்றல் ஆகிய இவற்றைப் பல காலம் செய்து போந்தவனான ஒருவன் ‘இவன் அனுகூலன் ஆவது எப்போதோ!’ என்று காலம் பார்த்திருக்கும் இறைவனைச் சென்று பற்றுவானாயின், பற்றிய அவனை, பின்னர்க் குற்றம் அற்றவனாக நினைத்தல் வேண்டும்; ‘எதற்காக?’ என்னில், இவனைக் குறைய நினைக்கையாவது, பகவானுடைய பெருமையைக் குறைய நினைக்கையேயாம்,’ என்றும், 4‘வாசுதேவனுடைய அடியார்களுக்கு ஒரு பொழுதும் கேடுகள் இல்லை,’ என்றும் கூறும் பாரதத்தையும் இங்கு உணர்க.

ஆதலால், இனி, நீங்கள் செய்யவேண்டுவது ஒன்று உண்டு; மனன் அகம் மலம் அறக் கழுவி – சர்வேஸ்வரன், பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவில் கலந்து நின்றால், ‘இவனோ கடவான், மற்றையவர்களோ!’ என்று ஐயப்படுமது தவிர்ந்து, ‘சர்வேஸ்வரனே கடவான்’ என்கிற மனத்தின் தூய்மை உண்டாக வேண்டும். ‘

157. த்விதா பஜ்யேயம் அப்யேவம் நநமேயம்து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:.ஸ்ரீ ராமா. யுத். 36 : 11.

மாளும் ஓரிடத்திலும்-முடிகின்ற ஒரு கணத்திலும். வணக்கொடு மாள்வது வலம்-இரண்டு துண்டுகளாக வெட்டப்படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கேன்,’ என்னாது கிடக்கிற சீரைப்பாயைக் (சீரையாகிய பாயையும்.)கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும். இறைவனையும் பற்றி வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராமல், முடிகிற சமயத்திலே அடையவே பின்னைப் பெற்றோடே தலைக்கட்டும் ஆதலின், ‘மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலம்’ என்கிறார். இதனால், பிறந்தது முதலாக அடைந்தாலும் பலன் இல்லை, இறைவனுக்கு வேறுபட்ட தேவர்கள் பக்கல்; இறைவன் விஷயத்தில் அடைவதிலே தொடங்கி உடனே முடிந்தாலும் பலன் தப்பாது என்கிறார்

158. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாயச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே.ரீ கீதை. 4 : 8

 பிரமன் முதலியோர்கட்கும் காரணனாய் அவர்களுக்கு இரட்சகனான சர்வேஸ்வரன், அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின், 1பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும்-பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காக’ என்றது,  ‘நல்லார்கள் தம்மை நலம் புரிந்து காத்தல்’ என்றதன் பொருள். ‘ருசியைத்   தோற்றுவிப்பவன் ஆகைக்காக’ என்றது, ‘எல்லாம் முந்தை அறம் நாட்டம்  உய்த்தற்கு’ என்றதன் பொருள். ‘ஆயின், ‘பொல்லாரைப் போக்கல்’ என்றது  என்னை?’ எனின், ‘பொல்லாரைப்போன்று நெறி போக்கல் அதனுடைய  பலமாய் வருமதுவே’ என்ற வாக்கியத்தால் அது அமுக்கியம் என்கிறார்.
அது, சங்கற்பமாத்திரத்தாலே செய்யலாம் ஆகையாலே, பிரதானம் அன்று  என்றபடி. விரைவும் ருசியும் நேரிற் கண்டால் அல்லது உண்டாகா; ஆதலால்,
அவற்றிற்கே பிராதாந்யம்.

159. பஸ்ய ஏகாதஸ மே ருத்ராந் தக்ஷிணம் பார்ஸ்வம் ஆஸ்ரிதாந்.-மோக்ஷ தர்மம், 36, 11.

160. ப்ரஹ்மாணம் ஈஸம் கமலாஸநஸ்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாந் உரகாம்ஸ்ச திவ்யாந்.ஸ்ரீ கீதை, 11 : 15.

 வலத்தனன் திரிபுரம் எரித்தவன் – ஆறு ஏழாம் பாசுரங்களில் கூறிய பொருளைத் தொடர்ந்து பேசுகிறார். முப்புரங்களையும் எரித்ததால் அபிமானங்கொண்டுள்ள சிவன், திருமேனியில் வலப்பாகத்தைப் பெற்றுச் சொரூபத்தை அடைந்தவனாய் இருப்பன். 1‘எனது வலப்பாகத்தில் தங்கியிருக்கின்ற உருத்திரர் பதினொருவரையும் பார்ப்பாய்,’ என்பது மோட்ச தர்மம். ஏழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் இடம்பெறத் துந்தித்தலத்து – எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த உலகமும் தானும் இடத்தாற் குறைவு இன்றித் திருநாபிக் கமலத்தில் இருப்பான். ‘உந்தி’ என்பதும், ‘துந்தி’ என்பதும் திருநாபிக்குப் பெயர். 2‘கமலமாகிய ஆசனத்தில் தங்கியிருக்கின்ற தலைவனாகிய பிரமனையும் பார்க்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதையில் அருச்சுனன் கூற்று. இங்குக் கூறிய இவை, இவர்களுடைய எல்லா வகையான காத்தலுக்கும் உபலக்ஷணம்.

161. அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா.–ஸ்ரீ கீதை.

162. த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி.-ஸ்தோத்திர ரத்தினம், 31.

தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும்படி செய்தான் என்றபடி. 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின், ‘நல்லடிப்போது’ என்கிறார். 2‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். செவ்விப்பூச்சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க.

163. ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே.-ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 2.

அயர்ப்பிலன்-மறவேன். அலற்றுவன்-முறை இன்றிப் பேசுவேன். தழுவுவன்-மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்பது போன்று, தழுவுவேன். வணங்குவன் – செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன். அமர்ந்து – வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.

164. தத் விப்ராஸ: விபந்யவ: ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே விஷ்ணோ: யத் பரமம்பதம்.-இருக்கு வேதம்.

சடகோபன் குற்றேவல்கள் – இத்திரு நகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொற்களைக்கொண்டு அடிமை செய்தபடியாயிற்று இவைதாம். ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின், எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே! -அப்பரமபதத்தில் இருக்கிற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, நித்தியசூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ?

165. அயம் அபர: காரக நியம:-இது ‘மகாபாஷ்ய வாக்கியம்’ என்பர் அரும்பதவுரைகாரர். 

166. ஆத்மாவா அரேத்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:-பிரஹதாரண்யம். 6. 5 : 6.

மேல் மூன்று திருவாய்மொழிகளால், இறைவனுடைய முதன்மையினையும் அவனை வழிபடுந்தன்மையினையும் அவனுடைய எளிமையினையும் அனுபவித்து மகிழ்ந்தவராய்த்தாமான தன்மையில் நின்று பேசினார்; இத்திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது. ‘இது மற்றொரு காரகம்’ என்னுமாறு போன்று, (வேற்றுமைகள்  வினை கொண்டு முடியின் அதனைக் ‘காரகம்’ என்பர். இங்கு,)மேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு. முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்று அற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன,’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத்திருவாய்மொழி வந்த அளவில், ‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; 3இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன், பார்க்கத் தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.

167. ஆர்த்தோ வா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா.-ஸ்ரீ ராமா. யுத். 18 : 28

ஆர்த்தன் – பேறு பெறுவதற்கு விரைகின்றவன்.  திருப்தன் – ‘பெறுகின்ற காலத்தில் பெறுவோம்,’ என்று இருப்பவன்.
ஆர்த்தன் – அமிதவாதி. திருப்தன் – மிதவாதி.

ஆயின், ‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி, அவன் இரட்சிக்கத் தக்கவன்,’ என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப் பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று, மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்;

168. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர பலார்த்தந:
மாம்நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.- ஸ்ரீராமா. சுந். 9 : 30.

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-மதி கலங்கி, அறிவு அழிந்தாள் என்மின். தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்; அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி. மதி எல்லாங் கலங்கி-‘தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப்பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்; அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி. ‘மேல் எழச்சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?

169. ஹம்ஸகா ரண்டவாகீர்ணாம் வந்தே கோதாவரீம் நதீம்
க்ஷீப்ரம் ராமாய ஸம்ஸத்வம் ஸீதாம் ஹரதி ராவண:ஸ்ரீராமா. ஆரண். 49 : 32.

170. ஆஸோக ஸோகாபநுத ஸோக உபஹத சேதஸம்
த்வந்நாமாநம் குருக்ஷிப்ரம் ப்ரியாஸந்தர்ஸநேந மாம்.ஸ்ரீராமா. ஆரண். 6 : 17.

பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின், அன்னங்களும் நீர்க்காகங்களும் நிறைந்திருக்கின்ற கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்; ‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு செல்கிறான்,’ என்று நீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று பிராட்டியும், ‘சோகத்தினை நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும் எனக்குப் பிராட்டி இருக்கும் இடத்தினைத் தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ என்று பெருமாளும் கூறுதலால், தூது விடல் பண்டைய மரபேயாம்.

171. ஸபர்யாபூஜித: ஸம்யக் ராமோ தஸரதாத்மஜ:
பம்பாதீரே ஹநுமதா ஸங்கதோ வாநரேணஹ,-ஸ்ரீராமா. பால. 1 : 57

இச்சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின், பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், 2‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ என்பதாம். அச்சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது என்றபடி.வழி பறிப்பார் கையில் அகப்படுகையாவது-பிராட்டியினுடைய  கண்ணிற்கும் முகத்திற்கும் போலியான நீலம் தாமரை முதலானவற்றால்
நெஞ்சு பறியுண்கை

172. ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம்உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்.-ஸ்ரீராமா. அயோத். 31. 12.

இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும் இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’ என்கிறபடியே, என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் காரியங்கொள்வது

173. ஏஹபஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதாவநே.ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.

முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட தங்களுடைய சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்.

174. விக்ராந்த: த்வம் ஸமர்த்த: த்வம் ப்ராஜ்ஞ: த்வம் வாநரோத்தம
யேநஇதம் ராக்ஷஸபதம் த்வய ப்ரதர்ஷிதம்.-ஸ்ரீராமா. சுந். 36 : 7.

இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, “வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது.

175. ததாவித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி.-முண்டக உபநிடதம். 3. 1 : 3.

பிரகிருதி சம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம சாம்யத்தையடைகிறான்” என்கிறபடியே, பரமபதத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்? நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம் என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல்வார்த்தை சொல்லுகிறாள்: வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு – அவர்கள் எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப் பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.

176. அக்ரூர: க்ரூர ஹ்ருதய: ஸீக்ரம் ப்ரேரயதே ஹயாந்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 3. 18 : 19.

அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே, 1தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று. புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;

177. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
ஸ்வயந்துருசிரே தேஸே க்ரியதாம் இதி மாம் வத.-ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

இதனைச் செய் என்று நியமிக்கவேண்டும்’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று, ‘நான் ஏவ அன்றே, நீங்கள் போகின்றீர்கள்?’ என்பாள் ‘விடு தூதாய்’ என்றாள். சென்றக்கால் ‘பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே உங்களுக்கு அன்றோ பலன் சித்திக்கப் புகுகிறது? (இறைவனை நேரிற் கண்டு மகிழ்தல்.)என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள். இனி, ‘பிறர்க்காகத் தூது போதலால் உங்கள் போக்கு அடிக்கழஞ்சு பெறாதோ?’ (அடிக்கழஞ்சு : அடி – ஈண்டுப் பாதத்தைப் பெயர்த்து வைத்தல்; கழஞ்சு –  பொன் ; அதாவது – மேன்மை பெறுதல் என்றபடி.)என்பாள், அங்ஙனம் கூறுகிறாள் எனலுமாம். வன்சிறையில்-காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால், ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங்கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல். ‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின், அரச குமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாதபோது (வெற்றிலை கொடாதபோது.)அவர்கள் வருந்துவார்கள் : அது போன்று, இவைகட்கும் முகங்கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்; அதனையே ஈண்டுச் சிறை என்றாள்

178. ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:
மயாகாலம் இமம் ப்ராப்ய தத்த்: தஸ்ய மஹாத்மந:ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

மனிதர்களுக்குத் துன்பம் வந்த போது அவர்கள் அடையும் துன்பத்தைக்காட்டிலும் சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள். இனி, ‘அவனோடே கலந்து பிரிந்து, ‘கண்ணாலே காணப்பெறுவது என்று காண்’ என்னும் விருப்பத்தோடே இருக்கிற எனக்கு,’ என்று பொருள் கூறலுமாம். அருளி – இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

179. லோகே த்வந் முக ஸத்ருஸம் க்வாபிந த்ருஷ்டம் இதி மயி வததி ராகாத்
ஹரி ஹரி குபி தாஸா அபூத் அந்யத் உபக்ராந்தம் அந்யத் ஆபதிதம்.–ஸ்ரீராமா. சுந். 36 : 7.

இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, “வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது

180. ஸா ப்ரஸ்கலந்தீ மதவிஹ்வலாக்ஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸலக்ஷணா லக்ஷ்மண ஸந்நிதாநம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி:–ஸ்ரீராமா. கிஷ். 33 : 37-

ஸா-ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகையுடையவள்.
ப்ரஸ்க்கலந்தீ-புணர்ச்சியாலுண்டான துவட்சியால் தடுமாறி, அடிமேல் அடியாக இட்டு வந்தாள்.
மதவிஹ்வலாக்ஷீ-மது பானம் முதலிய வைகளால் தழுதழுத்த நோக்கையுடைவளாய் இருந்தாள்.
ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம சூத்ரா-அரை தூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையிற்கிடந்தபடிய பேணாதே வந்தாள்.
ஸலக்ஷணா – புணர்ச்சிக்குறிகள் காணலாம்படி வந்தாள்.
லக்ஷ்மண சந்நிதாநம் ஐகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்.
தாரா – தாரையானவள்.
நமிதாங்கயஷ்டி: உருகு பதத்தில் வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போல இத்துவட்சி நிரூபகம் இவளுக்க என்று தோற்றும்படி இருந்தாள்.
அப்படிப்பட்ட நடையழகாலே அவரைத் துவக்கிக் காரியங்கொள்ளவற்று இவையும் என்று இருக்கிறாள்.

இளையபெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர், மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு, ‘இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், 1கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள், பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும். ‘ஆயின், பட்டத்துத்தேவியை முன்னிடலாமோ?’ எனின், 2இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்றவேண்டிற்றுக்காணும் இருந்தது.

181. கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்.– ஸ்ரீராமா. யுத். 21 : 77.

ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே, கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு. இதனால், தலைவர் கால தூர தர்சி (மிக்க தூரத்திலுள்ளவற்றை எல்லாம் அறிகிறவர்)என்பதனைத் தெரிவிக்கிறாள். கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.

182. தத்சித்த விமலாஹ்லாத க்ஷீணபுண்யசயா ததா
ததப்ராப்தி மஹாதுக்கவிலீநா ஸேஷபாதகா.
சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்வாஸ தயாமுக்திம் கதாஅந்யா கோபகந்யகா.

183. அதவாகிம் ததாலாபை: அபராக்ரியதாம் கதா.
அப்யஸௌ மாதரம் த்ரஷ்டும் ஸக்ருத்அபி ஆகமிஷ்யதி–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 15.

ஆசையின் மிகுதியினாலே, ‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்:

184. நசாஸ்ய மாதா நபிதா நசாந்ய:
ஸ்நேஹாத் விசிஷ்ட: அஸ்தி மயா ஸமோவா
தாவத்த்யஹம்தூத ஜிஜீவிஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய.-ஸ்ரீராமா. சுந். 36 : 30.

பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச் செய்தவாறே ‘நாமோ தாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன ‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் 2பாலி பாயக் கூடியதான அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடைசெய்து போந்தார்; அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர, விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றைதாள் இருந்தேனாகில்காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.

ஊணிலா யாக்கை பேணி உயர்புகழ் சூடாது உன்முன்
நாணிலாது இருந்தேன் அல்லேன்; நவையறு குணங்கள் என்னும்
பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்.’கம்ப. யுத். 1603.

185. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத்விரதம் மம.-ஸ்ரீராமா. யுத்த. 18 : 33.

அருளாத நீர்-‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர். 3‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேடம் என்று அறிகிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்

186. ஜீவந்தீம் மாம் யதாராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்
தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசாதர்மம் அவாப்நுஹி.-ஸ்ரீராமா. சுந். 3 : 10

கீர்த்தியை யுடைய இராமன் என்னைப் பிழைத்து இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’ என்றாள் பிராட்டியும். ‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது? அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன, ‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப்புள்-அருட்கடலான பறவை. ‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே ‘அருளாழிப்புள்’ என்கிறாள்

187. பத்ம ஸௌகந்திகவஹம் ஸிவம் ஸோகவிநாஸநம்
தந்யா லக்ஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம்.–ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 105,

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-எலும்பினைத் தொளைத்து அதிலே கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது. எலும்பும் நரம்புமேயாம்படி உடல்தான் மிகவும் இளைத்தது ஆதலின், உடல் என்னாது ‘என்பு’ என்கிறாள். 1‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று, இருக்கிறதுகாணும் இவ்வாடை இவளுக்கு

நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே, அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே-ஆகாயத்தில் உண்டாகிற காற்றாலே. ‘தாழ்ந்த
சாதியின் கால்களிலே’ என்பது தொனிப் பொருள்.

188. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு: விதாதா க்ருதலக்ஷண:-ஸஹஸ்ரநாமம்.

189. பாபாநாம்வா ஸூபாநாம்வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சிந்ந அபராத்யதி.-ஸ்ரீராமா. யுத்த. 116 : 45.

நான் படுகிற துன்பம் போராது என்று கீழாண்டைச்சிகை (பழங்கணக்குகளிலே நிற்கிற நிலுவை.)வாசியா நின்றார். அதாவது, அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை தவிர்ந்து, ‘கணக்கு அற்ற ஞானங்களையுடையவர்’ என்கிறபடியே, இப்போது குற்றங்களை அறிவதில் முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி, அருளாத திருமாலார்க்கு-இதற்குக் ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ‘நான் இப்படி நோவு படுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகை

190. ஸகுருஷ்வ மாஹாத்ஸாஹ க்ருபாம் மயி நரர்ஷப
ஆந்ருஸம்ஸ்யம் பரோதர்ம: த்வத்தஏவ மயாஸ்ருத:–ஸ்ரீராமா. சந். 40 : 41.

பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.

191. கிம்கோபமூலம் மநுஜேந்தரபுத்ர கஸ்தேந ஸந்திஷ்டதி வாங்கிநிதேஸே
கஸ்ஸூஷ்க வ்ருக்ஷம்வநம் ஆபதந்தம் தவாக்நிம் ஆஸீததி நிர்விஸங்க:–ஸ்ரீராமா. கிஷ்கிந். 33 : 40.

கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்-மநுஜேந்த்ரபுத்ர – அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த  குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டுகொண்டு போந்தார் உங்கள்  தமப்பனார்; அவர் வயிற்றிலே பிறந்து, குற்றம் செய்தோம் என்று தலையறுக்க வந்து நின்றீர் நீர்; அழகிதாயிருந்தது உம்முடைப் போக்கு? கஸ்தேந  ஸந்திஷ்ட திவாஙநிதேஸே – சாஸ்திரவஸ்யமன்றிக்கே கண்டதிலே கடுகச் சாபலத்தைப் பண்ணி மீளமாட்டாத விலங்குளை நீரே ‘இழந்த போகங்களை புஜிப்பது’ என்று சேர்த்துவிட்டு. நீர் சொன்னவற்றைச் செய்தன என்று தலையறுக்க வந்து நின்றீர்; இப்படிச் சொல்லாம்படியன்றே இவர்
பொறையிருப்பது?’ என்பது அச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த  பொருள்.

192. லௌகிகம் வைதிகம் வாபிததா ஆத்யாத்மிகம் ஏவ வா
ஆத்தீத யதோஜ்ஞாநம் தம்பூர்வம் அபிவாதயேத்.

193. ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம்புவி
ததர்ஸராமோ துர்தர்ஸம்யுகாந்தே பாஸ்கரம்யதா.–ஸ்ரீராமா. அயோத். 100 : 1.)

ஜடிலம்-நல்ல மாலை வத்தால் ‘பிள்ளை பரதன் மயிருக்காயிருந்தது’ என்றாயிற்றுச் சக்கரவர்த்தி கூறுவது; அவனாயிற்றுச் சடை புனைந்திருக்கிறான்.
சீரவஸநம்-நல்ல வஸ்திரம் கண்டால் ‘இது பிள்ளைக்கு ஆம்’ என்று கூறுவர்; அவனன்றோ மரவுரி உடுத்திருக்கிறான்’ ப்ராஞ்ஜலிம்-அவர்கள் இரந்து கொடுக்கப் பெறுமவன், தன் விருப்பத்துக்குத் தான் இரப்பாளனாயிருந்தான்.
பதிதம் புவி – ‘படுக்கையுறுத்தும்’ என்று மடியில் கண் வளருமவனாயிற்றுத் தரைக் கிடை கிடக்கிறான்.
ததர்ச ராமோ துர்த் தர்சம்- வத்த கண் வாங்காதே கண்டு கொண்டிருக்கும் பெருமாளுக்கும் கண் வைக்க ஒண்ணாதபடி இருக்கிறவனை.
யுகாந்தேபாஸ்கரம் யதா–பெருமாள் ஒருவர்க்கும் கண் வைக்க ஒண்ணாமையே யன்றி ‘உலகமே அழியப் புகுகின்றதோ!’ என்னும்படி யிருந்தான்’

சாதுர்த்திகம் – இது ஒரு முறை ஜூரம்; நான்கு நாள்களுக்கு ஒரு முறை  வருவது; உடலிலுள்ள நீர் இரத்தம் சதை எலும்பு இவற்றைப் பற்றி வருவது.
‘சாதுர்த்திகமாயிராதது போன்று’ என்றது, ஸ்ரீராமபிரானைப் பிரிந்ததால்  உளதாய விரஹதாபமாகிய நோய் விட்டு நீங்குதல் இன்றி, என்றும்
நிலைபெற்று நின்று ஸ்ரீ பரதாழ்வானை வருத்தியதாதலின், உலகமக்கட்கு விட்டுவிட்டு வருகின்ற முறை ஜூரம் முதலிய நோய்களைப் போன்றது
அன்று ஸ்ரீ பரதாழ்வானுடைய நோய் என்றபடி.

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் – ‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்; ‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் 1சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள். ‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல். தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும், அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.

வெயர்த்த மேனியன் விழிபொழி மழையன்மூ வினையைச்
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்துழந்து அழிவான்
அயிர்த்து நோக்கினும் தென்றிசை அன்றிவேறு அறியான்
பயத்த துன்பமே உருவுகொண்டு என்னலாம் படியான்.’–
  என்ற கம்பராமாயணச் செய்யுளை ஈண்டு நினைவு கூர்க.

194. ஸ்ருஷ்ட: த்வம் வநவாஸாய ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி.- ஸ்ரீராமா. அயோத். 40 : 5.

நீ காட்டில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று இளையபெருமாளைப் பார்த்துச் சுமித்திராதேவி கூறியது போன்று, இவளும் ‘வைக்கவே வகுக்கின்று’ என்கிறாள். ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய், எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான் என்றபடி. ‘ஆயின், தொண்டு செய்வதால் உயிர்களுக்குச் சொரூப லாபம் ஒழிய இறைவனுக்கு இத் தொண்டுகளால் பயன் இல்லை யாதலின், அவதாரிகையில் ‘நிதி உண்டு’ என்ற எடுத்துக்காட்டுச் சேராதே?’ எனின், அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் சொரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக்கொண்டு அன்றோ சொரூப சித்தி?

195. அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸூவீர்யம் அபாஸ்ருஜத்.

எல்லாப் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே, தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள்.
ஆழி நீர் கடல் தோன்றி- 2‘அப்பரம்பொருள் முதன்முதலில் தண்ணீரையே படைத்தார்’ என்கிறபடியே, மிக்க தண்ணீரையுடைய ஏகார்ணவத்தை உண்டாக்கி. அதனுள்ளே கண்வளரும்-இவ்வருகு உண்டான படைத்தல் முதலியவற்றிற்காக அங்கே வந்து கண்வளர்ந்தருளும்

196. வாஹிவாதயத: காந்தா தாம்ஸ்ப்ருஷ்ட்வா மாமபிஸ்ப்ருஸ
த்வயி மே காத்ரஸ்ம்ஸ்பர்ஸ: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:- ஸ்ரீராமா. யுத். 5 : 9.

சீதா பிராட்டியால் பார்க்கப்பட்ட சந்திரனை நான் பார்க்கிறேன்; ஆதலால், கண்ணின் கலவி உண்டாயிற்று’ என்பது போன்று, கண்டாரைக் காணும் இத்தனை அன்றோ தனக்கு

197. விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா.ஸ்ரீ விஷ்ணு தத்துவம்.

இது சொல்லி-‘வைக்கவே வகுக்கின்று’ என்கிற வார்த்தையைச் சொல்லி. இனி, ‘இறைவனை நிவேதிக்கும் பொருட்டே கைகால் முதலிய உறுப்புகளையுடைய விசித்திரமான இச்சரீரமானது முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘தேவர் திருவடிகளிலே எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்காக அன்றோ இதனை உண்டாக்கினாய்?’ என்னும் இதனைச் சொல்லி என்று கூறலும்

198. அகாலபலிநோ வ்ருக்ஷா: ஸர்வேசாபி மதுஸ்ரவா:
பவந்து மார்க்கே பகவந்நயோத்யாம் ப்ரதி கச்சத:ஸ்ரீராமா. யுத். 127, 17.

வளம் வயல் – ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ என்கிறபடியே, திருநகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று. வாய்ந்து

கண்ணனை – இவ்வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே அடியார்க்கு எளியவன் ஆனான். இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் கிருஷ்ணன் என்னவும் ஆம். இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்பியமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

கண்ணன்’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார். முதற்பொருள்,  கண்ணுக்கு விஷயமானான் என்பது; இப்பொருளில், குறிப்பு
வினையாலணையும் பெயர்; இரண்டாவது பொருளில் பெயர்ச்சொல்.

‘வீதிவாய்ச் செல்கின் றான்போல் விழித்துஇமை யாது நின்ற
மாதரார் கண்க ளூடே வாவுமான் தேரிற் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத்தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்.’–என்ற கம்பராமாயணச் செய்யுள்

 199. யதிப்ரீதி: மஹாராஜ யதி அநுக்ராஹயதா மயி
ஜஹிமாம் நிர்விஸங்க: த்வம் ப்ரதிஜ்ஞாம் அநுபாலய.-ஸ்ரீராமா. உத்தர. 106 : 4.

200. நகலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீஜலே
த்யஜேயம் ராகவம் வம்ஸே பர்த்து: மாபரிஹாஸ்யதி.-ஸ்ரீராமா. உத்தர. 48 : 4.

தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்தியஸூரிகளுக்கு நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார். ‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே. ‘ஆயின், அகலுவான் என்?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தத்தம் அழிவினைப்பாரார்கள் அன்றே? பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன, இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, ‘அரசர்க்கு அரசரே, உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில், யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்? மேலும்,  இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல் இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக்கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ என்று விடை கொண்டாள் அன்றே  பிராட்டி? (நான் உயிரை விட்டால் பெருமாளை உலகம் பழிக்கும்; பெருமாளுக்குப்  பழியினை உண்டுபண்ணலாகாது என்று நான் பிழைத்திருக்கிறேன்,’ என்பது கருத்து. இங்குப் பிழைத்திருத்தலே பிராட்டிக்கு அழிவு.)அப்படியே, இவரும், ‘ஊருணியிலே (ஊருணி-குளம். ‘ஊரிலுள்ள மக்களால் தண்ணீர் உண்ணப்படுவது’ என்பது
பொருள்.)கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும், அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும். நித்திய ஸூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப் புக்கார்-

201. நஷ்டோமோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத் மயா அச்யுத
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யேவசநம்தவ.-ஸ்ரீகீதை. 18 : 73.

உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, ‘கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று; ஐயவுணர்வும் நீங்கினவள் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,

202. க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதஸ்ச பாண்டவா:
க்ருஷ்ண: பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா:-பாரதம், துரோணபர்வம், 183 : 24.

வல் ஆன் ஆயர் தலைவனாய் – ‘பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்தவர்கள்; அவனையே வலிமையாக உடையவர்கள்; அவனையே தலைவனாக உடையவர்கள்,’ என்பது போன்று, கிருஷ்ணனைத் துணையாகக்கொண்டு நாட்டினை அழித்துத் திரியும் மிடுக்கைப்பற்ற ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்

203. ஹேஸூந்தர ஏகதரஜந்மநி க்ருஷ்ணபாவே
த்வௌ மாதரௌச பிதரௌச குலேஅபித்வே
ஏகக்ஷணாத் அநுக்ரஹீதவத: பலம்தே
நீளாகுலேந ஸத்ருஸீகில ருக்மணீச.–சுத்தரபாஹூ ஸ்தவம், 7.

வாரீர் அழகரே, உம்முடைய கிருஷ்ணாவதாரத்தில் இரண்டு தாய்மாரையும் இரண்டு தமப்பன்மாரையும் இரண்டு குலத்தையும் ஒரு கணத்தில் ஏற்றுக் கொண்ட உமக்குப் பலன், குலத்தோடு ஒத்திருக்கிற நப்பின்னைப் பிராட்டியும் உருக்குமிணிப் பிராட்டியும்’ என்றார் கூரத்தாழ்வானும். இத்தால் – ‘ஆயர்குலத்தினன் ஆகையாலே நப்பின்னைப்பிராட்டியை ஏற்றாய்; அரசகுலத்தினன் ஆகையாலே உருக்குமிணிப்பிராட்டியை ஏற்றாய்’ என்றபடி

வல் ஆன் ஆயர் தலைவனாய்–அவ் வன்மையாவது, தலையிருக்க உடம்பு குளித்தும், 1உடம்பு இருக்கத் தலை குளித்தும் அன்றே அவர்கள் திரிவார்கள்? எல்லாரும் கார்த்திகை புதியதற்குக் குளித்தார்களாகில் இவன் அதுவும் செய்யாதே இடைத்தனத்தில் ஊன்றி இருத்தல். ‘இவன் இவ்வாறு இருத்தற்குப் பயன் யாது?’ எனின், இப்படி இருக்கில் அல்லது அவ்வாயர்கள் பெண் கொடார்கள் அன்றே? ஆதலால், பெண் கோடலே பயன்.

204. துல்யஸீலவயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சஇயம் அஸிதேஷணா.– ஸ்ரீராமா. சுந் 16 : 5.

தக்க வயதினையும் ஒழுக்கத்தினையும் குலத்தினையும் உடைய பிராட்டிக்குத் தக்கவர் அந்த ஸ்ரீராமபிரான்; கறுத்த கண்களையுடைய பிராட்டியும் அந்த ஸ்ரீராமனுக்குத்தக்கவள்,’ என்கிறபடியே, ஈண்டும், கிருஷ்ணனும் நப்பின்னைப்பிராட்டியும் ஒத்தவர்களாய் இருந்தும், எருதுகளை முன்னிட்டு அவற்றைத் தழுவச் செய்தனர் ஆதலின், ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்’ எனலும் ஒன்று.    இளஏறு ஏழும் தழுவிய – யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் 4ஊட்டியாக ஒருக்காலே தழுவினான்

205. ஸ: அவதீர்ணோ ஜகர்யத்தே மாம் அக்ரூரேதி வக்ஷ்யதி.- ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17 : 12.

நினைந்து நைந்து வணங்கினால் – பிரமன் முதலிய தேவர்கள், திருவாராதனத்திற்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான உபகரணங்களைச் சமைத்துக்கொண்டாயிற்று இழிவது. நாம் இவற்றைக்கொண்டு சென்றால் நம்மைக் குளிர நோக்குவனே; ‘ஸ்ரீ கிருஷ்ணர் என்னைப் பார்த்துக் ‘குற்றம் அற்ற அக்குரூரனே’ என்று அழைத்துப் பேசுவார்,’ என்று, கம்ஸன் ஏவலால் கிருஷ்ணனை அழைக்கச் சென்ற அக்குரூரன் நினைத்துச் சென்றது போன்று, ‘நம்மை வினவக்கடவனே’ என்று இங்ஙனே முந்துற நினைப்பார்கள்; பின்னர், தரித்திருக்க மாட்டாதே கட்டுக் குலைந்த மனமுடையவர்கள் ஆவார்கள். உள் கரைந்து உருகி – நையுமது தூலம் என்னும்படி உள்கரைவர்கள்; பின்னர், ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாதபடி மங்குவார்கள். ‘இப்படிப் படுகின்றவர்கள்தாம் யார்?’ என்றால், இமையோர் பலரும் முனிவரும் – பிரமன் முதலான தேவர்களும், சனகன் முதலான முனிவர்களும், ‘ஆயின், இச்செயல் முனிவர்களுக்குப் பொருந்தும்; செருக்கினைக்கொண்ட தேவர்களுக்குப் பொருந்துமோ?’ எனின், இராசத தாமத குணங்களால் மேலிடப்பட்ட போது செருக்குக் கனத்து இருக்குமாறு போன்றே, சத்துவம் தலை எடுத்த போது பகவானுடைய குணங்களை அனுபவித்துக் கட்டுக்குலைந்து உருகுகிறபடியும் கனத்திருக்கும். புனைந்த கண்ணிநீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் – இப்படி அவர்கள் அன்பே மிக்கு இருப்பவர்கள்

206. ஸதேவ ஸோம்யஇதம் அகர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்.

 நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று 3சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து 4‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச்செய்கிறார். இனி, நினைத்தல் – கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு, ‘‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’

தான் ஓர் உருவே தனி வித்தாய்-‘சோமபானம் செய்தற்குரிய சுவதே கேதுவே, காணப்படுகிற இவ்வுலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்து’ என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத்தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது,’ என்கிறபடியே 3இங்கும், இரண்டு இன்மையைக் காட்டுகிற ‘தான் ஓர் தனி’ என்னும் பதங்கள் மூன்று உண்டாய் இருந்தன; ‘இச்சொற்களுக்குப் பயன் யாது?’ எனின், படைத்தலை அருளிச் செய்வதனால் காரண விஷயமாகக் கிடக்கின்றன. மூன்று காரணங்களும் தானே என்கை. ‘தான்’ என்கிற இதனால், முதற்காரணம் வேறு இல்லை என்கை. ‘ஓர்’ என்கிற இதனால் துணைக்காரணம் வேறு இல்லை என்கை. ‘தனி’ என்கிற இதனால், நிமித்த காரணம் வேறு இல்லை என்கை

தன்னுளே ஆகியும்-‘இவையும் அவையும்’ என்று இங்ஙனம் பிரித்துப் பேச ஒண்ணாதபடி. அவன் ஒருவனே’ என்கிறபடியே, தான் என்கிற சொல்லுக்குள்ளே ஆகும்படி தன் மேலே ஏறிட்டுக்கொண்டு தரித்து இருந்தபடியைச் சொல்லுகிறார்

207. ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட்.- நாராயண அநுவாகம்.

இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும், பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, 1தனது உருவமாய் நின்று அளித்தலைச் செய்து, அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க. இனி, தன்னின் மூவர் முதலாய-பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம். 2இந்திரனோடு கூட’ என்று புகலும் உபநிடதமும்.

முன்னுரு வாயினை நின்திரு நாபியின் முளரியின் வாழ்முனிவன்
தன்னுரு வாகி இருந்து படைத்தனை பலசக தண்டமுநீ
நின்னுரு வாகி யளித்திடு கின்றனை நித்த விபூதியினால்
என்னுரு வாகி யழிக்கவும் நின்றனை ஏதமில் மாதவனே!’–  என்று சிவபிரான், கண்ணபிரானை நோக்கிக் கூறிய கூற்று ஈண்டு
நினைக்கத் தகும். வில்லி பா. 13-ஆம் போர். 220.

208. தயா அவலோகிதா தேவா விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தயா
லக்ஷ்ம்யா மைத்ரேய ஸஹஸா பராம் நிர்விடுதிமாகதா:–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 104.

மார்பிற் கொண்டாய் மாதவா-6‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார்’ என்கிறபடியே, அவள், திருமார்பில் நித்தியவாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தையுடையவனே

209. நதேரூபம் நச ஆகாரோ ந ஆயுதாநி நசாஸ்பதம்
ததரபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.-ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.

வான் ஆர் சோதி மணி வண்ணா-குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத் விபூதியிலும் அடங்காதே விம்மும்படியான புகழ் படைத்த வடிவையுடையவனே! இதனால், ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார்

210. ததஸ்ய ப்ரியம் அபிபாதோ அஸ்யாம் நரோயத்ர தேவயவ: மதந்தி
உருக்ரமஸ்ய ஸஹிபந்து: இத்தா விஷ்ணோ: பதேபரமே மத்வ உத்ஸ:-விஷ்ணு சூக்தம்.

உன் தேனே மலரும் திருப்பாதம்’ என்று அதனையே விரும்புகிறார் என்று கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால், தேனே மலரும் திருப்பாதம் என்பதற்கு, 2‘திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்த இறைவனுடைய திருவடிகளினின்று அமிர்தவெள்ளம் உண்டாகிறது’ என்கிறபடியே, தேன் போன்று இனிய கங்கையானது தோன்றுகின்ற திருவடிகள் என்று பொருள் கொள்க.

211. க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம்தவாங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.

கேசவா-(என்று பிரம ருத்திரர்களுக்கு உத்பாதகனான பிரத்யும்நனைச் சொல்லுகிறார்.)‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்; எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்; நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்; ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்

212. ஸ்துத: அஹம் யஸ்ந்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்யதே
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாதோஹம் யத்தவ உதரரத்.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 8 : 14.

213. ப்ராதுர்ப்பவதி லோகாநாம் பாலநார்த்தம் ஸ்வலீலயா
ந ஏஷ கர்ப்பத்வம் ஆபேதே ந யோந்யாம் அவஸத் ப்ரபு:பாரதம்.

முன்னமே உலகு ஏழ் உண்டாய்-முன்பு ஒரு காலத்திலே உலகங்கள் ஏழனையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய். உமிழ்ந்து-பின்னர் அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்து. மாயையால் புக்கு வெண்ணெய் உண்டாய் – இச்சையால் புக்கு வெண்ணெய் உண்டாய். ஈண்டு ‘மாயை’ என்றது, 2மாயா வயுநம் ஞானம்’ என்கிறபடியே, இச்சா பரியாயமான ஞானத்தை. அது செய்யுமிடத்தில் சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே? ஆதலால், சிறு மனிசர், உவலை யாக்கை நிலை எய்தி – சிறிய மனிதர்களுடைய தாழ்ந்த சரீரத்தினுடைய நிலையைப் பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனிக்கு உண்டாக்கிக்கொண்டு வந்து இப்படிச் செய்தாய். ‘கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழிகோல்கை, சறையினார்’ என்னும் நிலையுள்ள ஆயர்கள் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி வெண்ணெய் அமுதுசெய்தான் என்றபடி. ‘தேவகியே நீ முற்பிறவியிற்செய்த நல்வினையானது இப்பொழுது பலத்தைத் தந்திருக்கின்றது; நான் எக்காரணத்தால் உன்னுடைய உதரத்தின் வழியால் உண்டானேனோ’ என்பதனால் கர்ப்பவாசம் சொல்லியிருந்தும், ‘இந்தக் கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோநியிலும் வசிக்க இல்லை,

214. தஸ்யா: ஸ்தநம் பபௌ க்ருஷண: ப்ராணை: ஸஹநநாதச
ஸ்தந்யம் தத் விஷ ஸம்மிஸ்ரம் ஆஸீத் ஜகத் குரோ:ஹரி வம்ஸம். 53.

தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய-‘பூதனையை முடித்து உலகத்துக்கு ஒரு தலைவனைத் தந்த உலக குருவான கிருஷ்ணனுக்கு விஷத்தோடு கூடிய அம் முலைப்பால் சுவையுடையதாயிற்று,’ என்கிறபடியே, உலகத்துக்கு வேர்ப்பற்றானவனை ‘முடிக்கப் பார்த்த நெஞ்சில் தீமையை யுடையளாய், யசோதைப் பிராட்டியைப் போன்று அன்பு தோற்றப் பலவாறு பேசிக்கொண்டு வருகின்றவளாய், தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனையுடையவளான பூதனை முடியும்படியாக  தூய குழவியாய்-ஐஸ்வரியமான மேன்மையும் நடையாடாநிற்கவும், அது தோற்றாதபடி கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தையுடையனாய். ‘இவனுக்குப் பிள்ளைத்தனத்தில் குறை இல்லையாகில், அதன் காரியம் காணாது ஒழிவான் என்?’ என்னில், விடப்பால் அமுதா அமுது செய்திட்ட-விஷம் அமிருதாம் முகூர்த்தத்திலேயாயிற்றுப் பிறந்தது. ‘ஆயின், அவள் இறக்கும்படி எங்ஙனம்?’ எனின், தர்மியை வேறு ஒன்று ஆக்க ஒண்ணாமையாலே விரோதித்த அசுரக் கூட்டங்கள் இறந்தார்கள் இத்தனை மாயன் – விஷம் அமிருதாம்படி புசித்துத் தன்னைத் தந்து நன்மை உண்டாக்கின ஆச்சரியத்தை யுடையவன்.

அவள் பால் உயிர் – அவளுடைய தாழ்ந்த சரீரத்தைப் பற்றி நிற்கிற உயிர். பால்-ஏழனுருபு. செக-முடியும்படி. இனி, ‘அவள் பால் உயிர் செக’ என்பதற்கு, ‘அவள் பாலும் உயிரும் முடியும்படி என்று கோடலும் ஆம். ‘முலையூடு உயிரை, வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே,’ என்றார் திருமங்கை மன்னனும். ‘முலை உண்டான்’ என்றால் ‘முலைப்பால் உண்டான்’ என்று பொருள் படுமாறு போன்று, ‘முலையூடு’ என்ற இடத்தும் ‘முலை’ என்றது முலைப்பாலை. உண்ட பெருமான் – ‘முலையின் வழியே வருகின்ற விஷம் கலந்த பாலைக் குடித்து, அவளை முடித்து, உலகிற்கு எல்லாம் குருவாகிய தன்னைத் தந்தவன்’ என்கிறபடியே, அவள் முலை உண்டு அவளை முடித்து, உலகிற்கு ஒரு சேஷியைத் தந்தவன்.

215. திலதைலவத் தாருவஹ்நிவத் துர் விவேச த்ருகுண க்ஷண க்ஷரண ஸ்வபாவ அசேதந
ப்ரக்ருதிவ்யாப்திரூப துரத்யய பகவந் மாயா திரோஹித ஸ்வப்ரகாஸ:–ஸ்ரீ ரங்க கத்யம்.

சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து – ‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து. சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார்,

216. த்வதங்க்ரி முத்திஸ்ய கதாபி கேநசித் யதா ததாவாபி ஸக்ருத்க்ருத: அஞ்ஜலி:
ததைவ முஷ்ணாத்யஸூபாந்யஸேஷத: ஸூபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே.-ஸ்தோத்திர ரத்தினம்

உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடி விடுகின்றன; மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம். இங்கு, ‘உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும் இறைவனுக்கு உண்டான வேற்றுமையும், இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச்செய்தாராவார். மேலும், ‘ஒரு காலத்தில்’ என்றதனால், இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும், ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும், ‘அஞ்சலி’ என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும், ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அழியாமலிருக்கின்றது’ என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும் அருளிச்செய்திருத்தல் நோக்கல் தகும். மற்றும், ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், 1சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே, பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும், ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி, அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்.

217. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்ய ப்ரயச்சதி
ததஹம் பத்தியுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்மந:.- ஸ்ரீகீதை.

பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

218. அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜநாத்
அந்யத் குஸல ஸம்ப்ரஹ்நாத் நசஇச்சதி ஜநார்த்தந:பாரதம்.

பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

219. யா: க்ரியா: ஸம்ப்ரயுக்தா: ஸ்யு: ஏகாந்தகத புத்திபி:
தா: ஸர்வா: ஸிரஸா தேவ: ப்ரதி க்ருஹ்ணாதி வை ஸ்வயம்.–பாரதம், மோக்ஷ தர்மம். 

ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ண கும்பத்தைக் காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்; அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’ என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று. இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும். ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால் தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும், தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக்கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம். இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும், அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும், செவ்வக்கிடப்பு உண்டாயினும் 5மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ்வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும். ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

220. ஏதத் ஸாமகாயந் ஆஸ்தே.–தைத்திரீ. பிரு. 10.

பாடி – சர்வேஸ்வரனைக் கிட்டினால் வாக்கு நியதியோடே நிற்கையின்றி, மகிழ்ச்சிக்குப் போக்கு விட்டுப் பாடி. விரிவது மேவல் உறுவீர். ‘மேற் சொல்லப் படுகின்ற சாம வேதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே, பாடி

221. ந கண்டகாரிகா புஷபம் தேவாய விநிவேதயேத்.

புகை பூவே – அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் ‘செதுகை(கூளம்; பதர்.)யிட்டுப் புகைக்க அமையும்; கண்டகாலி இடவும் அமையும்,’ என்று அருளிச்செய்வர்.

222. ஸாஸ்த்ர யோநித்வாத். உத்தர மீமாம்சை, 1. 1 : 3.

வேத முதல்வன் என்பது, ‘வேதவாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்டவன்’ என்கிறபடியே, வேதங்களால் சொல்லப்பட்டவன் என்கை

223. தேவாநாம் மாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்
ஸர்வதா சரணத்வந்த்வம் வ்ரஜாமி ஸரணம்தவ.-ஜிதந்தா. 1 : 2.

 ஈடும் எடுப்பும் இல் ஈசன்–சிலரை வெறுத்தல், சிலரை ஏற்றுக்கோடல் செய்யாத சர்வேஸ்வரன். இறைவனுக்கு ஆத்துமாக்கள் பக்கல் உண்டான சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப்போகாது அன்றே? 4‘தேவர்கட்கும் தானவர்கட்கும் நீயே தெய்வம்’ என்கிறபடியே, ஏற்றுக் கொள்ளுமவன் பக்கலுள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு ஆதலின், ‘ஈடும் எடுப்பும் இல் ஈசன் என்கிறார் =

224. ஸகலுஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்மலோகமபி
ஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே.-சாந்தோக். உபநிட. 8 : 15.

வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ்வாத்துமாவுக்குச் சொரூபத்தோடு கட்டுப்பட்டதோ என்னும்படி பொருந்தியிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி. இனி, ‘வழிநின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று, பகவானை அடைதலைத் தடை செய்கிற கர்மங்கள்’ என்று பொருள் கூறலுமாம். –அழிவு இன்றி ஆக்கம் தரும் – ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தருவான்.

225. ஏஷஹிஏவ ஆநந்தயாதி.-ஆனந்தவல்லி, 7.

மேல் திருவாய்மொழியில் ‘எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவன் இறைவன்,’ என்றார்; ‘அவ்வாராதனையானது இன்ப மயமாய் இருக்கும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 1திருமகள் கேள்வனாய், எல்லா நற்குணங்கட்கும் கொள்கலனாய், எல்லா ஆத்துமாக்களுக்கும் சேஷியாய், எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவனாய் ‘மேற்கூறிய இறைவன் தன்னைக் கிட்டினாரையுந் தான் சந்தோஷிப்பிக்கிறான்,’ என்கிறபடியே, தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் இறைவன் ஆதலின், அவனுடைய ஆராதனையானது இன்ப மயமாக இருக்கும் என்கிறார்.

226. அஸ்ரத்ததாநா: புருஷா: தர்மஸ்ய அஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு ஸம்ஸாரவர்த்மநி.-ஸ்ரீ கீதை. 9 : 3.

இறைவனுடைய ஆராதனையானது அவனாலும் விரும்பப் படும்  தகையது என்பதற்குக் காட்டப்படும் மேற்கோள்கள்.‘பகைவர்களை அழிக்கின்ற அருச்சுனா, வழிபட்டு வணங்குதலாகிய இந்தத் தர்மத்தில் அன்புடன் கூடின முயற்சி இல்லாதவர்கள் செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்து அவர்களை நல் வழியிற் செலுத்துகின்ற என்னை யடையாது, அழிவினை உண்டு பண்ணுகிற சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகின்றார்கள்,

227. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம்.ஸ்ரீகீதை, 9-2.

இந்த ஞானமானது எல்லா வித்தைகளுக்குள்ளும் உயர்ந்தது; இரகஸ்யங்களுக்கு எல்லாம் தலையாயது; உத்தமமானது; பரிசுத்தமானது; நேராக என்னைக் காட்ட வல்லது; மோட்சத்திற்குச் சாதனமானது; செய்வதற்கு இனிமையாய் இருப்பது; என்றும் அழிவற்றது,’ என்றும் பகவான் தானும் அருளிச்செய்தான். ஆக, இப்படி வழிபடுதலே தொடங்கி, மோட்சத்தை அடைதல் ஈறாக, அவன் சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் இன்பமயமாகவே இருக்கவும், அவனை விட்டு மிகச்சிறிய பயனைக்கொண்டு அகலுவதே!’ என்று கேவலரை நிந்தித்துக்கொண்டு,(இத்திருவாய்மொழியில் முதல்  திருப்பாசுரத்தை நோக்கி.) இதனை ஒழியில் தாம் உளர் ஆகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே இவ்வழிபாட்டின் இனிமையைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.என்னுள், இரான் எனில் பின்னை யான் ஓட்டுவேனோ?’ என்றதனை
நோக்கித் ‘தாமுளராகாதபடி’ என்கிறார்

228. சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸூக்ருதிந: அர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப.ஸ்ரீ கீதை, 7 : 16

அருச்சுனா, நீங்கின செல்வத்தை மீண்டும் அடைய விரும்புகின்றவன், புதிய செல்வத்தை விரும்புகின்றவன், கேவலன், இறைவனையே அடைய வேண்டும் என்று விரும்புகின்றவன் என்னும் இந் நால் வகைப்பட்ட நல் வினைகளை யுடைய மக்கள் என்னை வணங்குகிறார்கள்’ என்பது இறைவன் திருவாக்கு.(நல்வினைகளையுடைய மக்கள்’  என்றதனால், நல்வினையின் தாரதம்மியம் சித்தம் என்று கொள்க, )ஆக, அவரவர்களுடைய நல்வினைகளுக்குத் தகுதியாகப் புருஷார்த்தங்களில் ருசி உண்டாகும்; ருசிக்குத் தகுதியாக வழிபாடு உண்டாகும்; வழிபாட்டிற்குத் தகுதியாகப் பலம் இருக்கும் என்று அறிதல் தகும்.

229. ய ஆத்மதா பலதா.வேத மொழி

வைப்பாம் – ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று, ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார். இதனால், பிராப்யத்வம் கூறியபடி. மருந்தாம் – ‘ஆயினும், சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ்வுயிர்கட்கு அன்றோ சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்? இவன் அவ்விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில், அக்குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தியோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின்(உண்டறுத்தல்ஜீர்ணமாக்கிக்கோடல்.)‘மருந்தாம்’ என்கிறார். இதனால், 3பிராபகத்வம் கூறியபடி. ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ்விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர். 4‘இறைவன் தன்னைக் கொடுக்கிறான்; தன்னை அனுபவிப்பதற்குத் தக்க வலிமையையுங் கொடுக்கிறான்,’ என்பது வேத மொழி. ‘இப்படிச் செய்வது யார்க்கு?’ என்னில், அடியரை-5‘வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு, இனி, இதற்கு, ‘அவனைப்பற்றி வேறு ஒரு பயனைக் கொண்டு அகலாமல், அவன்தன்னையே பற்றி அவன் 7படிவிடப் பிழைக்கின் அடியார்கள்’ என்று பொருள் கூறலுமாம்

230. தம்த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 68.

ஒண் சுடர்க்கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இராநின்றான்’ என்கிறார். இனி, இதனால், தம்மை வசீகரித்த அழகை அருளிச்செய்கின்றார் என்று கூறலுமாம். ‘வலிமை பெற்ற ஒளியின் தொகுதி போன்றவன்’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம். ‘இப்படித் தன் பேறாக உபகரித்தவன், தன் உபகாரங்கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில், அயர்வு இல் அமரர்கள் ஆதிக்கொழுந்தை-

231. அத்யமே மரணம் வாபி தரணம் ஸாகரஸ்யவா.–ஸ்ரீராமா. யுத். 21 : 8.

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் – நான் இசைந்து ‘என்னுடைய மனத்தில் இருத்துவேன்’ என்றிலேன். ‘இசைவு என்னால் வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னால் வந்ததாவது?’ என்றபடி. தான் ஒட்டி வந்து ‘இக்கடலை முடித்தல், அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை,’ என்றது போன்று சூளுறவு செய்து வந்து புகுந்தான். ‘ஆழ்வீர்! உம்முடைய பக்கல் இருப்போம்’ என்றால், ‘ஒட்டேன்’ என்பரே? ‘ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், ‘தான் ஒட்டி’ என்கிறார். என் தனி நெஞ்சை-இறைவனாலும் திருத்த ஒண்ணாதபடி தனக்குத்தானே உரியதாய், பிறர்க்கு உரியது அல்லாததாய் இருந்த நெஞ்சை. வஞ்சித்து – தன்னுடைய சீலம் முதலிய குணங்களாலும் வடிவழகாலும் தனக்கு உரியதாம்படி செய்து. ‘பின்னைச் செய்தது என்?’ என்னில், ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து இதற்குச் ‘சரீரத்தைப் பற்றி நிற்கிற என் உயிரிலே கலந்து என்கிறார்,’ என்பாரும் உளர்; அவ்வாறு அன்றி, ‘காதலி மாட்டு அழுக்கு உகப்பாரைப் போலே என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று, பின்னர் என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

232. யத்ர ருஷய: ப்ரதமாஜா யே புராணா:யஜூர் வேதம்.

முன்னை அமரர் முழு முதலான்– ‘ஞானவான்களும் முன்னர்த் தோன்றியவர்களும் ஆதிமுதற்கொண்டே முதியராய் இருந்தும் புதியராய்த் தோன்றுகிறவர்களுமான நித்தியசூரிகள் எங்கு உள்ளார்களோ, அந்தப் பரமபதத்தில்’ என்கிறபடியே, பழையராய் இருந்துள்ள நித்தியசூரிகளுடைய சொரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவன்

233. ராமேண ஹி ப்ரதிஜ்ஞாதம் ஹர்யர்க்ஷ கண ஸந்நிதௌ
உத்ஸாதநம் அமித்ராணாம் ஸீதா யை: பரிவஞ்சிதா.ஸ்ரீராமா. சுந். 5. 11 : 32.

முதுமை நிறைந்த வானரங்களின் கூட்டத்தில் சூளுறவு செய்தான்’ என்கிறபடியே, நித்திய சூரிகள் முன்னிலையில் சூளுறவு செய்தான்

234. ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா
விபீஷணோவா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்.ஸ்ரீராமா. யுத். 18 : 34.

235. ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலாபலம்.ஸ்ரீராமா. யுத். 19 : 6.

அகலில் அகலும்-விபீஷணனே ஆயினும், அன்றி, இராவணன் தானே ஆயினும், இவனை அழைத்துக்கொண்டுவா,’ என்கிற ஆசை உள்ளே கிடக்கவும் கண்ண நீரோடே கைவாங்கும். அதாவது, ‘நான் இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்பொழுதும் வணங்க மாட்டேன்,’ என்னும் உறுதியோடே நிற்கில் முடித்துவிடுவான் என்பதாம். அணுகில் அணுகும் – தன் பக்கலில் எதிர் முகம் ஆனால், ‘இராக்கதர்களுடைய பலாபலத்தை உள்ளவாறு எனக்குச் சொல்லுவாய்,’ என்பான். அதாவது, இளையபெருமாள் நிற்க, நால் அடி வர நின்றவனான விபிஷணனை அன்றோ

236. யத்ர க்ருஷ்ணௌ ச க்ருஷ்ணாச ஸத்யபாமாச பாமிநீ
நச அபிமந்யு: நயமௌ தம் தேஸம் அபிஜக்மது:பாரதம், உத்தியோகபர். 49.

பொரு அல்லன் – அடியார்கள் தன்னைக் கிட்டுமிடத்தில் தடையுடையன் அல்லன். பொரு என்று ஒப்பாய், ஒப்பாவது நேர்நிற்குமதாய், அத்தால் தடையைச் சொல்லிற்றாய், தடையையுடையன் அல்லன் என்றபடி. 1‘கிருஷ்ணனும் அருச்சுனனும் திரௌபதியும் அழகுள்ள சத்தியபாமையும் எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அந்த இடத்தில்’ புத்திரர்களும் புக ஒண்ணாத சமயத்திலே அன்றே சஞ்சயனை அழைத்துக் காட்சி அளித்தது?

237. வஸீ வதாந்ய: குணவாந் ருஜூ: ஸூசி: ம்ருது: தயாளு: மதுர: ஸ்திர: ஸம:—ஸ்ரீ ஸ்தோத்திர ரத்தினம், 18.

மேல் திருவாய்மொழியில் ‘இறைவன் எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; 1அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில்.(ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,  ‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி ‘ஆர்ஜவ  குணத்தைச் சொல்லுகிறார்இத்திருவாய்மொழியில்’ என்கிறார். )‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில் ஆர்ஜவகுணத்தை அருளிச்செய்தார்; இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின், சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாகவுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர் நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை. சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழ விட்டோமே!’ என்று தன் திருவுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை. ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு தான் 2பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. ‘சௌசீல்யம், ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப்படினும், வேறு வேறு என்பதே நம் பெரியோர்களுடைய திருவுள்ளம். ஸ்ரீ ஆளவந்தார் 3‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச்செய்து, பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச்செய்தார்.

238. உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க ஸோபிநா.–ஸ்ரீ ஸ்தோத்திர ரத்நம், 41.

மனைவியை அணைதல் மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று, தன்மேல் இறைவன் எழுந்தருளி இருத்தல் விருப்பமாய் இருக்கும் வாகனத்துக்கு. ‘ஆயின், பெரிய திருவடியின்மேல் எழுந்தருளல் அங்கு உள்ளார்க்குக் காட்சி கொடுத்தற்காக அன்றோ?’ எனின், பெரிய திருவடியை மேற்கொள்ளுமதுதான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய சொரூப லாபத்துக்காகவும் இருக்கும். மற்றும், காமத்தில் இச்சையுடைய ஒரு பெண்ணிற்குப் போக சின்னங்கள் தாரகமாய் இருத்தல் போன்று, திருவடிகள் உறுத்துகையால் வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாக இருக்கும். ‘திருவடிகளால் நெருக்கி அழுத்தின தழும்பு தன்மேல் இருக்கக் கண்டு மகிழ்ந்து’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

239. ஸ்ரக் வஸ்த்ராபரணை: யுக்தம் ஸ்வாநு ரூபை: அநுபமை:
சிந்மயை: ஸ்வப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை:- பௌஷ்கர சம்ஹிதை

 சூடும் தண் துழாய் – திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும் அளவில் அப்போதே பறித்துத் திருக்குழலிலே வைப்பன். ‘ஆயின், துழாய்க்கு அறிவு உண்டோ?’ எனின், 3‘மலர்மாலைகள், பீதாம்பரம், ஆபரணங்கள் முதலானவைகள் திருமாலினுடைய திருமேனிக்குத் தக்கவைகளாகவும், ஒப்பு அற்றவைகளாகவும் ஞானத்தோடு கூடினவைகளாகவும், வேறு ஒன்றன் துணையின்றித் தாமே பிரகாசிக்கின்றவைகளாகவும் இருக்கின்றன,’ என்னும் பௌஷ்கர சம்ஹிதை இங்கு அறிதல் தகும். ‘ஆயின், நித்யசூரிகள் தாவரம் திரியக்குகளாய் இருப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், ஒரு சிலர், துழாயாயும் புள்ளாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வசிக்கிறார்கள். ‘

அங்ஙனமாயின், தாவரம் முதலியவற்றிற்கு உரிய அறிவு இன்மை முதலிய தன்மைகள் இவற்றிற்கும் இருக்கவேண்டாவோ?’ எனின், 4அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள அறிவுத்தன்மையே கழியப் பெறுவர். அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி. ஆயின், தடையாகவுள்ள அறிவுகள் மட்டும் இருத்தல் கூடுவதாமோ?’ எனின், கர்மம் காரணமாக வந்த சரீரங்கள் அல்லவே? இச்சையாலே மேற்கொண்டவைகள் ஆதலின், கூடுவதாம். ‘ஆயின், இச்சையாலே, விரும்பிய சரீரங்களைக் கோடல் கூடுமோ?’ எனின், இவ்வுலகத்தில் திரியக்குத் தாவரம் ஆமவை கர்மத்தாலேயாய் இருப்பனவாம்; பரமபதத்தில் மேற்கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.

240. சக்ஷ்ர்தேவாநாமுத மர்த்யாநாம்.– யஜூர் வேதம். 4. 6 : 8.

 கண்ணாவான் – ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற கருதி அர்த்தத்தை அருளிச்செய்கிறார். கண்ணாமவன் என்றபடி. இனி, இதற்குக் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம். மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் – இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்துகொள்ள மாட்டாமைக்கு, நித்திய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்தியசூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்.

தண்ணார் வேங்கடம் – இறைவனுக்குக் காத்தற்கு உரிய பொருள்கள் கிடையாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி, இவ்வுயிர்கட்குப் பாதுகாப்பவனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி இரு திறத்தார்க்கும் குளிர்ச்சியை உண்டாக்க வல்லது ஆதலின், ‘தண்ணார் வேங்கடம்’ என்கிறார். ‘குளிர் அருவி வேங்கடம்’ என்பர் ஸ்ரீ ஆண்டாள். விண்ணோர் வெற்பன்-‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார். கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து, ‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார்.

241. நது மாம் ஸக்ஷ்யஸே த்ருஷ்டும் அநேகஏவ ஸ்வசக்ஷூஷா
திவ்யம் ததாமி தேசக்ஷூ: பஸ்ய மே யோகம் ஐஸ்வரம்.- ஸ்ரீ கீதை. 11 : 8.

அருச்சுனன், ‘விபூதி சிரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காணவேண்டும்’ என்று விரும்ப, ‘அதற்கு உறுப்பாக 3உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே, திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று, இவ்வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடாயைப் பிறப்பித்துப் (பத்தி ரூபாபந்ந ஞானத்தை விளங்கச் செய்து.)பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக்கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான். அதாவது, பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே; திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே; திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே. இப்படி அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர்(மூன்றாம் பாசுரத்தின் ‘ஒரு கதியின் சுவை தந்திட்டு’)ஒருவரோடு பரிமாறுகிறானாய், அதுதன்னையும் குளப்படியிலே (மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)கடலை மடுத்தாற்போன்று அன்றி, பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,(என்னுடைச்  சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்கிறார்-  ஆதலின் ‘பொறுக்கப் பொறுக்க’ என்கிறார்.) இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து, (என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா  இந்திரியங்களாலும்’ என்கிறார், ‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை  நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)அந்நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப்பேசி அனுபவிக்கிறார்.

242. யஸ்ய ப்ரஸாத ஸததம் ப்ரஸீதேயு: இமா: ப்ரஜா:
ஸ ராமோ வாநரேந்த்ரஸ்ய ப்ரஸாதம் அபிகாங்க்ஷதே.-ஸ்ரீ ராமா. கிஷ், 4 : 21.

243. ஏஷ தத்வாச வித்தாநி ப்ராப்யச அநுத்தமம் யஸ:
லோகநாத: புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி.–ஸ்ரீ ராமா. கிஷ். 4 : 18.

பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான். ‘எந்த இராமனுடைய திருவருளால் இம்மக்கள் எப்பொழுதும் தெளிந்த மனத்தையுடையவர்களாய் இருக்கின்றார்களோ, அப்படிப்பட்ட இராமன் சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்துடன் விரும்புகிறான்,’ என்றும், ‘தம்மை ஒழிந்தார்க்கு எல்லாம் நாதனாய் இருக்கும் ஸ்ரீராமர், சுக்கிரீவனை நாதனாக விரும்புகிறார்’ என்றும், கூறப்படுகின்றவாறே, ‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார், ‘என்னுடைச்சூழலுளானே’ என்கிறார்.

244. ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹராக்ஷஸை:
ராக்ஷஸோப்யேதி: பஸயத்வம் அஸ்மாந் ஹந்தும் ந ஸம்ஸய:–ஸ்ரீராமா. யுத். 17 : 5.

ஒக்கலை வைத்து – பரிவுடைய யசோதைப்பிராட்டியைப் போன்று தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து. முலைப்பால் உண் என்று தந்திட – ‘முலைக்கண் நெரித்து வருத்தப்படா நின்றேன்; உண்,’ என்று அதட்டிக் கொடுக்க; ‘இராமனைக் கொல்ல வருகின்றான்’ என்று கூறவேண்டிய இடத்தில், அவரைக் கொல்லுதலைத் தங்களைக் கொல்லும் கொலையாக நினைத்து, ‘நம்மைக் கொல்ல வருகிறான்’ என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று, ஈண்டும், கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று இருத்தலால் ‘தந்திட’ என்கிறார். இனி, தருகை, கொடுக்கையாய் வழங்குகையாலே ‘தந்திட’ என்றார் எனலுமாம். வாங்கி – அவள் முலை கொடாவிடில் தரியாதாளாய்க் கொடுத்தாற்போன்று, இவனும் முலை உண்ணாவிடில் தரியாதானாய் உண்டான் ஆதலின், ‘வாங்கி’ என்கிறார்.

245. யோ வாசி திஷ்டன் வாச: அந்தர: யம் வாக் நவேத யஸ்ய வாக் சரீரம்.

என்னுடை நாவினுளான் – என்னுடைய துதிக்கு விஷயமானான். இனி இதற்கு ‘வாக்கில் இருந்துகொண்டு வாக்கின் உள் இருக்கிறான்,’ என்கிற படியே, ‘வாக்கு இந்திரியத்துக்கு அந்தர்யாமியாய் உள்ளவன்’ என்று கூறலும் ஒன்று.

246. அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ அஹமந்நாத:.தைத்திரீய உபநிடதம், பிரு. 10.

இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது  அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி – அங்ஙனம் ஆர்ப்பதற்கு  அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’ என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை–  திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து  நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும்  பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச்  செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச்  செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம்  அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும்  ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: – நான்   பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)   ‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது  கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி  அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்  திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்  புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்  படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’  (இரண்டாந்திருவந். 71.)

247. வத்யதா மேஷ தண்டேந தீவ்ரேண ஸ்சிவைஸ்ஸஹ
ராவணஸ்ய ந்ருஸம்ஸஸ்ய ப்ராதா ஹிஏஷ விபீஷண:-ஸ்ரீராமா. யுத். 17 : 27.

248. பரதஸ்ய வதே தோஷம் ந அஹம் பஸ்யாமி ராகவ
பூர்வாபகாரிணாம் த்யாகோ நஹி அதர்மோ விதீயதே.ஸ்ரீராமா. அயோத். 96 : 24.

249. அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீநி ஆயுதாநி தம்
ரக்ஷந்தி ஸகலாபதப்ய: யேநவிஷ்ணு: உபாஸித:.–விஷ்ணு தர்மம், அத் : 78.

அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. ‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? ‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா – அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், ‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே, சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.திருவாழியாழ்வானும், இஷீகாஸ்திரமும், தூர்வாசரையும் காகத்தையும்  மெள்ளமெள்ளப் பின் தொடர்ந்தமை இங்கு நினைவு கூர்க. அவ்வாறு  தொடர்ந்தமையாலன்றோ அவர்கட்குச் சரணாகதிக்கு அவகாசம் கிடைத்தது.-நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார்

250. ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம் கந்தும் அர்ஹதி.-ஸ்ரீராமா. யுத். 19 : 31.

இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க, 1அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீவிபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை; ‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள் இக்ஷவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா, அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்’, என்று அருளிச்செய்தார். பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன்ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்: ‘கேவலம் கிரியாமாத்திரத்துக்கே பலத்தைக்கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு ‘இப்பொருள் பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.

251. தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷூ நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரம் அஸூபாந் ஆஸூரீஷ்வேவயோநிஷூ-ஸ்ரீ கீதை, 16 : 19.

எம்பிரானை-மேல் பாசுரத்திற்கூறிய அவன் நீர்மையை நினைத்து ‘என் நாயன் ஆனவனை’ என்கிறார், எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை – தம்மளவிலேயாய் அடியற்று இருக்கையன்றியே, தம் குடிக்கு நாயகன் ஆனவனை என்கிறார். இவர் இப்படித் துதித்தவாறே, பிரயோஜநாந்தரபரருடைய பாசுரத்துக்கும் அநந்யப் பிரயோஜனருடைய பாசுரத்துக்கும் வேற்றுமை அறியுமவன் ஆதலின், ‘இப்படித் துதிக்கிறவர் யாவர்?’ என்று குளிர நோக்கினான். ‘தண் தாமரைக் கண்ணனை’ என்கிறார். ‘ஆயின், 6என்னை வைக்கின்றவர்களையும், வெறுக்கின்றவர்களையும். கொடிய தன்மைகளை யுடையவர்களையும், தூய்மை அற்றவர்களையும், மனிதர்களுள் தாழ்ந்தவர்களையும் நான் சம்சாரத்தில் தள்ளுகிறேன்,’ என்னுமவன் இப்படிக் குளிர நோக்குகைக்குக் காரணம் என்?’ என்று பார்த்தார்; குளிர் நோக்கும்படி செய்கின்றவர் அருகே இருக்கக் கண்டார்; கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை கொம்பு போலவும் பாம்புபோலவும் இருப்பதாய், அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையையுடைய பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே யுடையவனை என்கிறா

252. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
நசாஸூஸ்ரூஷவே வாச்யம் நசமாம் ய: அப்யஸூயதி.–ஸ்ரீ கீதை, 18 : 67.

நெஞ்சமே சொன்னேன் – ‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று போலேகாணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு ‘இந்தக் கீதையின் பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார். ‘ஏன்? முதல் முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று ‘பதண் பதண்’ என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணிவண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத் திரட்டு

January 17, 2022

1,2,3,4 நாயனாராச்சான் பிள்ளை யருளிய உபோத்காத காரிகைகள்

1-அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||
யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

2-அஸ்மஜ் ஜநக்காருணயஸுதாஸந்து ஷிதாத்மவான் |
கரோமி சரமோபாயநிர்ணயம் மத்பிதா யதா ||
அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

3-அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||
உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

4-பூர்வாபரகு ரூகதைஶச ஸ்வப்நவ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||
எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

5. பெரியவாச்சான் பிள்ளையருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுபகுண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத்குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||
[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனியாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

6. ஸ ச ஆசார்ய வம்சோ ஜ்ஞேயோ பவதி I
ஆசார்யாணாம் அஸாவஸா வித்யா பகவத்த: II

[பகவானிடமிருந்து தொடங்கி ‘இவர் இவர்’ என்று குருபரம்பரை முழுவதும் அறியப்பட வேண்டும்.]

7. அர்வாஞ்சோ யத்பத ஸரசிஜ த்வந்த்வ மாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வய முபகதா தேசிக முக்திமாபு: I
ஸோயம் ராமாநுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாத் அமனுத கதம் வர்ண்யதே கூர நாத: II

[பின்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருவடித் தாமரையிணையோடு ஸம்பந்தம் பெற்றும்,
முன்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருமுடியோடு ஸம்பந்தம் பெற்றும் மோக்ஷம் அடைந்தனரோ,
அந்த ராமாநுஜ முனிவரே எவருடைய ஸம்பந்தத்தாலே தனக்கு மோக்ஷம் கைப்பட்டதாகக் கருதினாரோ
அத்தகைய கூரத்தாழ்வான் எப்படி வர்ணிக்கப்படுவார்.]

8-யாவரொரு ஆசார்யர் தம் அடியடைந்தவர்களைத் தன் கருணையினாலேயே ரக்ஷிக்கிறாரோ,
அவரே அளத்தற்கரிய முக்யாசார்யராவார். நல்லோர்களால் அப்படியே சொல்லப்படுகிறதன்றோ.
(ஸோமாசியாண்டான் அருளிய குருகுணாவளி)

9-இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)

10-எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)

11-ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி ||
‘வைஷ்ணவன் நம் குலத்தில் பிறந்துவிட்டான்; நம்மைக் கரையேற்றுவான்’ என்று பித்ருக்கள்
கைகொட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்; பிதாமஹர்கள் நடனமாடுகிறார்கள். (வராஹ புராணம்)

12-வைகுண்டம் என்னும் மேலான உலகில், உலகின் தலைவனாய் அளவிட்டறியமுடியாதவனாய்,
(குணநிஷ்டர்களான) பக்தர்களோடும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களோடும் கூடியவனாய்,
பெரிய பிராட்டியாருடன் சேர்ந்த நாராயணன் எழுந்தருளியிருக்கிறான்.

13-மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம் பயாச்சநஞ்சைவ மதர்தே டம்ப வர்ஜநம்||
மத் கதா ஶ்ரவணே பக்தி: ஸ்வரநேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யஶ்ச மாம் நோபஜீவதி ||
பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் மிலேச்சேபி வாத்ததே |
ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி:ஸ ச பண்டித:
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜயோ யதாஹ்யஹம் ||
1. என் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம்
2. என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல்
3. தானே என்னைப் பூஜித்ததால் 4. என் விஷயத்தில் ஆடம்பரமற்றிருத்தல்
5. என் கதைகளைக் கேட்பதில் அன்பு,
6. (என் கதைகளைக் கேட்கும் போது) குரல் தழதழத்தும், கண்ணீர் மல்கியும், உடம்பு மயிர்க்கூச்செறிந்து கொண்டுமிருக்கை
7. எப்போதும் என்னை நினைத்திருக்கை,
8. என்னிடம் வேறு ஒரு ப்ரயோஜனத்தையும் கேளாதிருக்கை,
என்னும் இந்த எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஶ்ரேஷ்டன்,
அவனே முனிவன், அவனே தனவான், அவனே இந்திரிய நியமனம் செய்தவன், அவனே பண்டிதன்,
அவனுக்கு ஞானத்தை உபதேஶிக்கலாம், அவனிடமிருந்து ஞானோபதேஶமும் பெறலாம்.
அவன் என்னைப்போல் பூஜிக்கத்தக்கவன் ] (காருடம் 219 6-9)

14(அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா)-(விஷ்வக்ஸேந ஸம்ஹிதை)
-உபய விபூதியும் இவளுக்கும் எனக்கும் ஶேஷமயிருப்பது.

15-(யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )(கீதை 2-7)
எனக்கு எது நல்லது என்று உன்னால் நிஶ்சயிக்கப் படுகிறதோ, அதை எனக்குச் சொல்லுவாயாக.
நான் உனக்கு ஶிஷ்யன். உன்னை ஶரணமடைந்த என்னை நியமிப்பாயாக. (கீதை 2-7)

16-(தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) (கீதை 4-34)
ஞானிகளை வணங்குவதாலும் நேரே குறிப்பிடாமல் கேட்பதாலும், ஶுஶ்ருஷை செய்வதாலும்
ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவாயாக.
உண்மையைக் கண்ட ஞானிகள் உனக்கு அவ்வறிவை உபதேஶிப்பார்கள்.

17-(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் |
பதிவ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || )
சக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது.
வளை முதலிய ஆபரணங்கள் பதி வ்ரதைக்கு அடையாளங்களன்றோ.

18-தன் வலது புறத்தில் அடக்கத்துடனும் அஞ்ஜலியோடும் கூடிய சீடனை இருத்தி,
ஞானத்தைத் தரவல்ல தன் வலதுகையை சீடனின் சிரத்தில் வைத்து,
தன் இடது கையைச் சீடனின் மார்பில் வைத்து, தன் ஆசார்யனை இருதயத்தில் தியானித்து,
குருபரம்பரையை ஜபித்து இவ்வகையாக எம்பெருமானை சரணமடைந்து ரிஷிசந்தஸ் தேவதைகளுடன் கூடிய
மூலமந்த்ரத்தைத் தானே கருணையால் சீடனுக்கு உபதேசம் செய்யக்கடவன்.

19-ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா (ரா-பா 67.22)
ஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள்.

20-யஶ்ச ராமம் ந பஶ்யேத்து யஞ்ச ராமோ ந பஶ்யதி|
நிந்தித: ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே||(ரா-அ 17-14)
[எவனொருவன் ராமனைக் காணாதிருப்பானோ, எவனை ராமனும் காணாதிருக்கிறாரோ அவன் உலகில்
நிந்திக்கப்பட்டவனாய் வாழ்வான்; தன் ஆத்மாவும் இவனை இகழும்]

21-இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
22-ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||(ரா -பா 31-4)
[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம்.
(தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிடவேண்டும்;
(தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ]

23-.(விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே )
விஷ்ணுவானவர் மனித வுருவுடன் பூமியில் ஸஞ்சரித்தார். (பாரதம் – வனபர்வம்)

24.(இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா |
மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || )
கோவிந்தனே! இப்போதும் உலகங்களுக்கு நன்மைக்காக மனித வுருக்கொண்டு த்வாரகையில் நிற்கிறாய்

25-ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய:
ஆசார்யனே நேரே நடமாடும் பரம புருஷன்: இதில் ஐயமில்லை.

26. குருரேவ பரம் ப்ரஹ்ம –,குருவே மேலான ப்ரஹ்மம்; குருவே மேலான தனம்; குருவே மேலான காமம்;
குருவே மேலான ப்ராப்யம்; குருவே மேலான கல்வி; குருவே மேலான ப்ராபகம்;
அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

27.அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விஶாரதை|
கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப் யுத்த ரிஷ்யதி||(வி-பு. 5-20-49)

[புராணப் பொருள்களிலே பண்டிதர்களான பேரறிவாளர்களாலே அவனே கோபாலனென்று கொண்டாடப்படுகிறான்.
தாழ்ந்து கிடந்த யதுகுலத்தைக் கைதூக்கிவிடப் போகிறான் இவன்]

28-(அனந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் |
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி || )
திருவனந்தாழ்வான் முதல் மூர்த்தியாவான். லக்ஷ்மணன் அவனுடைய அடுத்ததான அவதாரமாவான்.
பலராமன் அவனுடைய மூன்றாவது மூர்த்தியாவான்,
நாலாவது மூர்த்தியாகக் கலியுகத்தில் ஒரு மஹாபுருஷர் அவதரிக்கப் போகிறார்.

29. ந தர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதி நபக்திமாந் த்வச்சரணாரவிந்தே|
அகிஞ்சநோஅநந்யகதி: ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே||

[கர்மயோகத்தில் நிலைநிற்பவனல்லேன், ஆத்மஜ்ஞானமுமில்லாதவன்,
உன் திருவடித் தாமரையில் பக்தி யோகமும் இல்லை, கைமுதலற்றவன், வேறு புகலற்றவன்,
ஶரணமடையத்தக்கவனே! உன் திருவடியை ஶரணமடைகின்றேன்]

30-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்யமய: புருஷோத்ருச்யதே ஹிரண்யசமச்ருர்
ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: I
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவக்ஷிணீ II

ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரமபுருஷன் காணப்படுகிறானோ,
அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேசங்களையும்,நகம் முதலிய எல்லா அவையங்களையுமுடையவன்.
அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்ற இருகண்கள் உள.

31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:”
காருண்யத்தால் ஆசார்யகளுள் சிறந்தவர் எதிராஜர்.

32. அழிவற்ற செல்வம்.

33. “பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி
அர்ஜுனா! உனக்குப்போலே எனக்கும் பல பிறப்புகள் கடந்துவிட்டன.
(ஆயினும் யான் அவற்றை அறிவேன்; நீ அறிய மாட்டாய்.)

34.“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி |
மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||”
அர்ஜுனா! அஸுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து ஜன்மந்தோறும் மூடர்களாய்
என்னை அடையாமலே அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.

35. “ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய|
பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||”
தன் சரம காலத்தில் தன் திருவடிவாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள்
‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று உபதேஶித்தார்.

36. (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||)
முக்காலும் சத்யம் செய்து கூறுகிறேன்; யதிராஜரே உலக குருவாவர். எல்லாவற்றையும் உய்விக்க செய்ய வல்லவர் அவரே.

37. (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்)
உபாயமாகவும், உபேயமாகவும் ஆசார்யனையே ஶரணமடைய வேண்டும்.

38. தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜதத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஶீம்நே|
நாதாய நாதமுநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||(ஸ்தோத்ர ரத்னம் 2)

[இவ்வுலகிலும் மேலுலகிலும் எப்போதும் எந்த ஶ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடிகள் எனக்குப் புகலிடமோ
மதுவை அழித்த எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளைப் பற்றிய உண்மையறிவினுடையவும் அன்பினுடையவும்
பெருமேன்மையின் முடிவே எல்லையாயிருப்பவரும், எனக்கு நாதராயிருப்பவருமான அந்த நாதமுனிகட்கு நமஸ்காரம்.]

39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்)
ஸாத்யமில்லாவிடில் ஸாதனங்களால் என்ன பயன்? (வி-பு. 1-19.36)

40. உபாதத்தே ஸத்தாஸ்திதிநியமநாத்யைஶ் சிதசிதௌ
ஸ்வமுத்திஶ்ய ஶ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ|
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணௌ
அதஸ்த்வாம் ஶ்ரீரங்கேஶய ஶரணமவ்யாஜம்பஜம் ||(ர-ஸ்த 2-88)

[ஹே ஶ்ரீரங்கநாதனே! ‘ஶ்ரீ மந்நாராயணன் – ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால்
சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத் வாக்யமானது சொல்லுகிறது.
ஆகையால் இவ்விஷயத்தில் உபயத்வமும் உபேயத்வம் உனக்கு முக்யம்; கௌணமல்ல.
ஆகையால் உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.]

41-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||(ஸ்தோ – ர 5)
[என் வம்ஶத்தவர்களுக்கு எப்போதும் தாயும், தந்தையும், மாதரும், மக்களும், பெருஞ்செல்வமும்,
மற்றுமுள்ள எல்லாமும் எப்போதும் எந்த ஆழ்வாருடைய திருவடியிணையேயோ, நமக்கு முதல்வரும்,
குலபதியுமான அவருடைய, மகிழமலராலே அலங்கரிக்கப்பட்டதும், வைணவச் செல்வமுடையதுமான
அத்திருவடியிணையைத் தலையால் வணங்குகிறேன்.]

42-ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா-ஆசார்யர்கள் நேரில் துதிக்கத் தக்கவர்கள்.

சரமோபாய நிர்ணய ப்ரமாணத் திரட்டு முற்றிற்று.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நாராயணனின் ஸாத்விகம் பற்றிய பிரமாணங்கள்

November 8, 2021

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

மைதாரணீய உபநிஷத நிர்ணயம் (ஸ்ரீ வேதாந்த தேசிகர் முதலான பூர்வாச்சார்யர்களால் கையாளப்பட்டது)

ப்ரோக்தா அக்ர்யாஸ்தனவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரித்யத யோ ஹ கலு வாவாஸ்ய
ராஜஸோம்ஶோ ஸௌ ஸ யோ யம் ப்ரஹ்மாத யோ ஹ கலு வாவாஸ்ய
தாமஸோம்ஶோஸௌ ஸ யோயம் ருத்ரோ (நாலாவது ப்ரபாடகம்)

பரமாத்மா விக்கு பிரம்மன், ருத்ரன், விஷ்ணு எனும் மூன்று சரீரங்கள் உள்ளன.
பரம புருஷனானுடைய ராஜஸாமசம் பிரம்மன், ஸாத்வீகாமசம் விஷ்ணு, தாமஸாமசம் ருத்ரன் -என ஓதப்பட்டுள்ளது
ஸாத்வீக ராஜஸ தாமஸ தேவதா நிர்ணயத்திற்கு இவ்வொரு வாக்யமே போதுமானது

———-

லலாடாத கரோதஜோ ருத்ரோ ஜாயதே–ஸூபாலோபனிஷத நிர்ணயம்

பிரமனின் கோபத்தால் நெற்றியிலிருந்து உருத்திரன் உண்டானான் என்று ஓதப்பட்டது.
கோபத்தால் உண்டானது என்றதனால் ரஜஸதமோகுணமுள்ளவன் ருத்ரன் என்பது ஸித்தம்.

———-

ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன:
ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான:
ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம்
பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி–ந்ருசிம்ஹதாபனீ உபனிஷத்

அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய், ஒருவராலும் அவமதிக்கவொண்ணாதவனாய்,
ஸர்வேஷ்வரனும், ஸர்வவியாபியாய, எப்போதும் பிரகாசிப்பவனாய், அஜ்ஞானமும் அதன் காரியமுமற்றவனாய்
ஜீவாத்மாவின் ஸம்ஸாரபந்தத்தை போக்குபவனாய் எப்போதும் ஒப்பற்றவனாய், ஆநந்தரூபமாய்,
எல்லாவற்றிற்கும் இருப்பிடமாய், எப்போதுமுள்ளவனாய் அவித்யத்தை யெனபடும் கருமம்,
தமோகுணம், மயக்கமற்றவனாய் இருப்பவனான இந்த வீரனே நரசிங்கன்”
என்பதன் மூலம் தமோ குணம் அணுவளவும் அண்டாதவன் அநந்தன் என்பது ஸித்தம்.

—————

புருஷ,விஷ்ணு ஸூக்தவிநிர்ணயம்

ஸாவவேதபடிதமாய், ஸாவவேதச்ரேஷ்டமாய், கபிலத்தவ ஸமபாவநாகநதரஹிதமான புருஷஸூக்தத்திலே
லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில்
‘தமஸஸ்து பாரே’, ‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது

————–

ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது விஷ்ணுஸூக்த வாசகம்

‘தம தவா கருணமி தவஸமவதவயாந க்ஷயநதமஸ ரஜஸ பராகே’

மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிருக்கும் அப்படிபட்ட உன்னை
அதிபாலனாம யான் ஸங்கீர்தனம் செய்கிறேன் என உறைத்தது

————

‘தவம் புத்தி ஸஸ்தவம் க்ஷமாதமா'(யுத்தகாண்டம் 120:16)
‘தீர்க்க பாஹூம்மஹாஸ்தவம்'(அயோத்யாகாண்டம் 3:28)
‘ஸத்வயுகதா ஹி புருஷாஸ த்விதா புருஷாஷப அவிமருஸ்ய ந ரோஷஸய ஸஹஸா யாநதி வஸ்யதாம்(கிஷ்கிந்தாகாண்டம்35:11)
ஸத்வ குணமுள்ள முன்போன்றவர்களுக்கு விசாரியாமல் சடக்கென்று கோபவசப்படமாட்டார்கள்.
“ஸாதுரோகவிநிர்மித”(அயோத்யாகாண்டம்1:18)
ராமஸஸதபுருஷோலோகே” (அயோத்யாகாண்டம்2:29)

‘ஸ ச சர்வகுணோபேத (பாலகாண்டம்1:7)
‘ஸ்ரேஷ்டகுணாயுத (அயோத்யாகாண்டம்1:31)
‘பஹவோ நரூக கல்யாண குண புத்ரஸ்ய ஸநதிதே (அயோத்யாகாண்டம்2:26)
‘தாதூநாமிவ ஸைலேந்தரோகுணநாமாகரோமஹாந’ (கிஷ்கிந்தாகாண்டம்15:21)

சிறந்த மலைத் தாதுகளுக்கு இருப்பிடம் போல நற்குணங்களுக்கு பெருநிதியாய் இருப்பவன் இராமன்
என ஸத்வகுணத்திற்கு சான்று பகிர்கின்றது.

————–

‘ஸத்வம் வஹதி ஸூததாதமா தேவம் நாராயணம் ப்ரபும்’ (சாந்திபர்வம்307-77)

சுத்த ஸ்வரூபமான ஸத்வம் ஸர்வஸ்யாமிய் நிர்மலமானவனான நாராயணனை அடைவிக்கிறது என்று
நாராயணனை ஸத்வநிஷ்ட பராபயனாக அநுஸநித்தது.

‘ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக
பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம'(சாந்தி பர்வம் 358-73, 77)

பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான்.
அவனே மோக்ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;
பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும்
இவன் மனம் கலங்கி நிற்கும் என பகவான் ஸத்வபரவர்தகனாகிறபடியையும் ப்ரஹ்மருத்ரர்கள் ரஜஸதம பரவர்த்தகனாகிறபடியைைும்
அதிஸ்பஷ்டமாக அறிவித்தருளினார் வியாசர்.

ஆக இதிஹாசங்களும் ஸாத்வீகதேவதை விஷ்ணுவே என்பதும் தாமஸதேவதை ருத்ரனே என்பதும் நிர்ணயிக்கப்பட்டது.

————

ஸத்வத்யோ ந ஸந்தீயோ யதர ஹி ப்ராக்ருதோ குண| ஸ ஸூத்த ஸாவஸூத தேபய புமாநாதய பரஸீதது||’ (விஷ்ணுபுராணம்1-9-44)

ஸத்வம், ராஜஸஸீக, தாமஸஸீ எனும் ப்ராக்ருதகுணங்கள் எந்த பகவானிடமில்லையோ பரிசுத்தர்கள் அனைவரிலும் பரிசுத்தனான
அந்த ஆதிபுருஷன் உகந்தருள்வானாகஎன பரமபுருஷனின் ஸ்வரூபத்திற்குஸாத்வீகரஜோதமோகுணங்கள் கிடையாது என்று நிலை நாட்டியது.

ஜூஷந ரஜோகுணம் ததர ஸ்வயம் விஸ்வேஸ்வரா ஹரி|ப்ரஹ்மா பூதவாஸய ஜகதோ விஸருஷடெள ஸம்பரவாதத்தே||
ஸ்ருஷ்டஞ்ச பாத்யநுகம் யாவத்கல்பவிகல்பநா|ஸத்வப்ருத பகவாந விஷ்ணுரபரமேயபராக்ரமம்|
தமோதகீ ச கல்பாந்தே ருத்ரரூபீ ஜனார்தனன|மைத்ரேயாகில பூதாநி பக்ஷயதயதிதாருண||
பக்ஷயிதவா ச பூதாநி ஜகத்யேகாரணவீக்ருதே|நாகபாயங்கஸ்யநே ஸேதே ச பரமேஸ்வர|| (விஷ்ணுபுராணம் 1-2)

ஜகத் பதியான பகவான் ஹரி பரஹமயோகியாகி ரஜோகுணம் தரித்து நின்று உலகத்தை ஸ்ருடிப்பதில் ஈடுபடுகிறார்.
கல்ப காலம் முடியும் வரை யுகந்தோரும் ஸத்வகுணம் தரித்துநின்று அளவற்ற பராக்கிரமத்தை உடைய
விஷ்ணு படைக்கப்பட்ட உலகை ரக்ஷிக்கிறார். கல்ப முடிவில் ருத்ரரூபியாகி தமோகுணத்தை அதிகளவு கொண்டு
அதிபயங்கரரான ஜனார்தனன் எல்லா ஜீவராசிகளையும் புசிக்கிறார்.
புசித்த பின் உலகம் முழுவதும் ஒரே ஜலமயமானவுடன் திருவன நதாழ்வானாகிற சயனத்தில் பரமேஸ்வரரான பகவான் சயனிக்கிறார்.
என்று ஸத்வகுணத்திருமேனியை உடையவன் விஷ்ணுவெனவும் தமோகுணமுடையசரீரத்தை உடையவன் ருத்ரன் எனவும் காட்டுகிறது.

ஏகேநாமஸேந ப்ராஹ்மாஸெள வாதததேஸெளரரஜோகுண|ஏகாமஸேநாஸ்தி தோ விஷ்ணு கராதி ப்ரதிபாலநம||
ஸத்வம் குணம் ஸமாஸரிதய ஜகத் புருஷோத்தம|ஆஸ்ரீதய தமஸோ வ்ருத்திமந்தாகாலே ததா புந||
ருத்ரஸ்வரூபோ பகவாநேகாமஸேநபவத்யஜ|| (விஷ்ணுபுராணம் 1-22)

ஓரம்சத்தினால் பிரம்மனாகி ரஜோகுணமுடையவனாய் ஸ்ருஷ்டிக்கிறான் பகவான்.
ஓரம்சத்தில் விஷ்ணுவாயிருந்துகொண்டு புருஷோத்தமன் ஸத்வகுணத்தை எடுத்துகொண்டு உலகத்தை ரக்ஷிக்கிறான்.
ப்ரளயகாலத்தில் ருத்ரரூபியாய் தமோ குணத்தைகொண்டு ஓரம்சத்தால் சம்ஹரிக்கிறான். என்று
இவ்விஷயம் மற்றோர் இடத்தில் காட்டப்பட்டுள்ளது.
இவ்வளவால் இவ்விஷ்ணு புராணத்தில் ஸாத்வீகதாமஸ தேவதா நிர்ணயம் செய்யப்பட்டது.

——————

யத் ஸத்வம் ஸ ஹரிர தேவோ யோ ஹரிஸ தத பரம் பதம்|ஸத்வம் ரஜஸ தமஸசேதி த்ரியதம் சைததுசயதே ||
ஸத்வேந முசயதே ஜந்துஸ ஸத்வம் நாராயணேதமகம|ரஜஸா ஸத்வயுகதேந பவேசரீரமாந யஸோதிக||
தச்ச பைதாமஹம வ்ருத்தம் ஸாவஸாஸ்த்ரேஷூ படயதே|யத வேதபாஹ்யம் காம ஸயாந மாமுத்திஸயோபஸேவயதோ ||
தத ரெளதரமிதி விகயாதம கநிஷ்டகதிதம ந்ருணாம|யததீந்தபஸா யுக்தம் கேவலம் தாமஸம் து யத||
தத துர்க்கதிபரதம் ந்ரூணாம இஹ லோகே பரதர ச|–வராஹபுராண நிர்ணயம்

தேவனான ஹரி ஸத்வகுணமானவன். ஹரியே பரமபராபயன். ஸத்வம், ராஜஸ, தாமஸம் என்று குணங்கள் மூன்றாக கூறப்படுகின்றன.
ஸத்வகுணத்தால் ஜீவன் முக்தியடைகிறான். ஸத்வம் நாராயணஸ்வரூபமானது.
ஸத்வகுணத்தோடு கூடிய ரஜோகுணத்தால் செல்வமுள்ளவனாகவும், பெரும்புகழாளனாகவுமாகிறன்.
அது பிதாமஹனுடைய குணமாக எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது.
வேதத்திற்கு புறம்பான (கபாலிகம் முதலான) எந்த தாமஸம் (ருத்ரனாகிய)என்னை குறித்து அனுஷ்டிக்கப்படுகிறதோ,
அதுவே ரெளத்திரம் எனப்படுவதாய மனிதர்களுக்கு கீழான கதியை அளிக்கிறது. அது தாழ்ந்த ஆஸாரங்களையுடையது,
கேவலம் தாமஸமானது. இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மனிதர்களுக்கு துர்கதியைய தருவதாகும். என ருத்ரனே ஒப்புகொண்டான்.

——————-

லிங்கபுராண நிர்ணயம்

இலிங்கதிட்ட புராணம் என ஆழ்வார்களாலும் பேசப்பட்ட சைவபுராணமே இவ்விஷயத்தை ஒப்புகொண்டதை காண்போம்.

ஹிரண்யகர்ப்போ ரஜஸா தமஸா ஸங்கர | ஸ்வயம் ஸத்வேந ஸர்வகோ விஷ்ணு ஸர்வாத்மா ஸதஹந்மய||

பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன் தமோகுணத்தோடும்,ஸர்வாத்மாவும் சிதசித் ஸ்வரூபியும் ஆன விஷ்ணு ஸத்வத்தோடும் கூடியவர்
என்று பதினாலாவது அத்யாயத்திலும்,

த்வத்கோபஸம்பவோ ருத்ரஸ் தமஸா ச ஸமாவ்ருத|த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா
ரஜஸா ச பிதாமஹ த்வத்ஸ்வரூபாத் ஸ்வயம் விஷ்ணு ஸத்வேந புருஷோத்தம||

தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன் கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு ஸத்வ குணமுடையவன்
என்று இருபத்து நாலாவது அத்யாயத்திலும்

தமஸா ருத்ர ஸ்யாத ரஜஸா கந்காண்டஜ|ஸதவேந ஸாவகோ விஷ்ணு ஸர்வலோகநமஸ்கருத||

தமோகுணத்தோடு கூடியவன் ருத்ரன், ரஜோகுணத்தோடு கூடியவன் ஹிரண்யமயமான அண்டத்தில் பிறந்த
பிரமன், ஸர்வ வியாபியாய் ஸர்வலோக நமஸ்கருதனன் விஷ்ணு ஸத்வகுணத்தோடு கூடியவன் எனவும்
லிங்கபுராண வசனங்கள் ஒப்புதல் அளித்தது.

———————

மத்யஸ்யபுராண நிர்ணயம்

யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா | தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||
அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் | ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ||
ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே | ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே|

ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது.
அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது.
ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது.
ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிக பெருமை சொல்லப்படுகின்றன.
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் .

—————

ஸ்ரீமத் பாகவத புராண நிர்ணயம்

அநேக திவ்ய சரித்திரங்கள், அநேக மத விஷயங்களைப் பற்றிய ஆராய்வு, பகவானின் கல்யாண குணங்கள்,
பகவானில் பக்தி செலுத்த மனிதன் உண்மையான நிர்குண நிலையை அடைவதற்கும் பரமபதமெனும் முக்தியை அடையும்
நோக்கு எனும் அரிய விஷயங்களைப் பற்றி இப்புராணம் அடிக்கடி வசனிக்கிறது.
இதனாலேயே இதை “பரம ஹம்ஸ ஸம்ஹிதை” என்று பெயர் பெற்றது.
இதை வேதவியாஸர் இயற்றிய காரணம், இதை வெளியிட்டதனால் அவருக்குண்டான சாந்தியையும் இதை அப்யஸித்து
ஆனந்தித்த சுகபிரம்மத்தின் பெருமையும், மரணவாயில் சிக்கிய பரிக்ஷித்தை இது கரையேற்றிய விதம் என்பவற்றை
ஆராய்வோருக்கு இதன் மேன்மைவிளங்கும். இப்புராணத்தில் சரமாரியாய் பலவிடத்தும் ஸாத்வீகதாமஸ தேவதை பற்றி பேசுகிறது.

ஸத்வம் ரஜஸ தம இதி ப்ராக்ருதோ குணஸ தைா யுகத பர புருஷ ஏக இஹாஸய தததே|
ஸதிதயாதயே ஹரிவிரிஞ்சி ஹரேதி ஸமஜ்ஞாம ஸ்ரேயாமஸி ததர கலு ஸத்வதநோ நருணம ஸயு||

ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்பவை ப்ரக்ருதியின் குணங்கள். இந்த மூன்று குணங்களோடு கூடிய பரமபுருஷன் ஒருவனே.
ரக்ஷணம், ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனும் காரியங்களுக்காக ஹரி, பிரமன், ஹரன் எனும் பெயர்களை அடைகிறான்.
அவர்களுள் ஸத்வகுணமுடைய ஹரியிடத்தே நன்மையுண்டாகும். என்று ஸத்வகுணமுள்ளவன் ஹரியே என காட்டப்பட்டுள்ளது.

பேஜிரே முந்யோ தாகரே பகவந்தமதோக்ஷஜம|ஸத்வம் விஸுததம க்ஷேமாய கல்பந்தேயேநு தாஹிந||
முமுக்ஷவோ கோரரூபாந ஹிதவா பூதபதீநத |நாராயணகலா ஸாந்தா பஜநதி ஹயநஸுயவ||
ரஜஸ்தம ப்ரருக்தய ஸமஸீலாந பஜநதி வை|பித்ருபூதபரஜேஸாதீந ஸ்ரீயைஸவாயபரஜேபஸவ||

ஆதி காலத்தில் முனிவாசர்கள் ஸத்வகுண திருமேனியுடையவனும் பரிசுத்த பகவானுமான புருஷோத்தமனை பூஜித்தனர்.
அவர்களை அனுஸரித்து அவர்களை பூஜிப்பவர்கள் நன்மையடைபவர்கள், மோக்ஷத்தையடைவர்.
கோரமான உருவமுடைய பூதகணங்களுக்கு தலைவனாக இருக்கும் ருத்ராதிகளை விட்டு துவேஷமற்றவர்களாய்
சாந்தியோடு கூடிய நாராயணரை உபாஸிக்கிறனர்.
ரஜோகுணம், தமோகுணமுடையவர்கள் அதே குணங்களையுடைய பித்ருக்களையும் பூதகணங்களுக்கு தலைவர்களான
ருத்ராதிகள் பிரமன் முதலான ப்ரஜாபதிகள் வரையும் விரும்பி உபாஸிக்கின்றனர்
என்று ஸத்வகுண திருமேனியையுடைய நாராயணரையும் தாமஸகுணமுடைய சிவனையும் காட்டித் தந்தது.

சிவ ஸக்தியுகத ஸஸ்வத த்ரிலிங்கோ குணஸம்வருத|ஹரி ஹி நிர்க்குண ஸாக்ஷாத புருஷ ப்ரக்ருதே பர ||

பார்வதியேிடு கூடிய சிவன் எப்போதும் ஸாத்வீகராஜஸதாமஸ ஹங்காரத்திற்கு வசப்பட்டவன். தமோகுணமுடையவன்.
ஹரியோ எனில் முக்குணங்களுமற்றவன், ப்ரகருதிக்கு மேற்பட்ட புருஷன் அவனே.
இவ்வாறு நூற்றுகணக்கான இடங்களில் பகவானின் திருமேனி ஸாத்வீகமயமானது,
தமோகுணம் லேசமும் அற்றதென உத்கோஷிக்கின்றன.

——————-

பத்மபுராண நிர்ணயம்

ப்ருகு மஹரிஷி ஸாத்வீக பரம்பொருள் யார் என்பதை யறிய மூவுலகம் சென்று முடிவெடுத்த விஷயம்
பாகவத, பத்ம, நாரதீய புராணங்களில் பேசப்படுகிறது.
பத்மபுராண உத்தரகாண்டத்தில் இருநூற்று ஐம்பத்தைந்தாவது அதிகாரத்தில் இவ்விஷயம் விவரிக்கப்பட்டுள்ளதை காண்போம்.

திலீபன் சொன்னான்- வஸிஷ்டமஹரிஷியே! ஸாமாந்யதாகவும், விசிஷ்டதாமமாகவும் எல்லா தர்மங்களும்
ஜீவாத்ம பரமாத்ம ஸ்வரூபங்களும் ஸ்வர்கமோக்ஷங்களும் அவற்றின் ஸ்வரூபங்களும் ஒன்றுவிடாமல் தேவரீரால் கூறப்பட்டன.
ஆச்சார்யரான ப்ராமணோத்தமரே! நான் தன்யனானேன். அறிவதில் விருப்பத்தால் இன்னமும் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன்,
உமக்கு என்னிடமுள்ள வாத்சல்யப் பெருமையாலே உள்ளதை உள்ளபடியே சொல்ல வேணும்,
முதல் பாகவதனும் திரிபுரம் எரித்தவனும் மனைவியோடு கூடிய ருத்ரன் எக்காரணத்தினால் தாழ்ந்ததொரு ரூபத்தையடைந்தான்?
சிறந்தவனான அவனுக்கு லிங்கஸ்வரூபமான உருவம் எப்படி உருவாகும்?
ஐந்து முகத்தையும் முக்கண்களுமுடைய சூலபாணியாகிய அவனுக்கு இத்தாழ்ந்த உருவத்தை எப்படி அடைந்தான்?
இதையெல்லாம் எனக்கு சொல்லவேணும்.

வசிஷ்டர் கூறினார்- நீ என்னை கேட்கும் விஷயத்தை வாத்சல்யத்தால் கூறுகிறேன்.
மந்தரமெனும் மலையில் ஸ்வயம்புவா மனு முன்னொரு காலத்தில் முனிவர்களை கொண்டு தீர்க்கஸ்தரயாகம் செய்தான்.
அங்கு கூடியிருந்த முனிவர்கள் விரதநிஷ்டையுடையவர்கள், பல சாஸ்திரமறிந்தவர்கள், வேதமறிந்த அந்தணர்களாவர்.
ஸத்ரயாகம் நடக்கும் போது பரம் பொருளை தேடுவதற்காக பின்வருமாறு பேசிகொண்டனர்.
“வேதமறிந்த விபரர்களுக்கு பூஜிக்கத்தக்க தகுந்த தெய்வம் யாது?
ப்ரஹ்ம விஷ்ணு சிவனுள் யார் தன்னை துதிப்பவனுக்கு முக்தியையளிப்பான்?
எவனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் அருந்ததக்கது? எவன் உண்டது மிகுந்த பரிசுத்தமானது?
எவன் அழிவற்றவனும் பரஞ்சோதியாகவும் பழமையோனாக இருக்கிறான்?
எவனுடைய தீர்த்த ப்ரஸாதங்கள் பித்ருக்களுக்கு திருப்தியை அளிக்கும்? “என்று இவ் வண்ணம் மஹரிஷிகளுள் விவாதமே உண்டாயிற்று.

சில மஹரிஷிகள் ருத்ரனே பரம்பொருள் என்றனர். சில முனிஸ்ரேஷ்டர்கள் பிரமனே பூஜிக்கதக்கவன் என்றனர்.
சிலர் சூர்யனே பூஜயன் என்றனர். ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான
அழிவற்ற தாமரை கண்ணணான வாஸுதேவனாய் ஆதியந்தமற்றவனாய் பரமேஸ்வரனான நாராயணரே
பூஜிக்கதக்கவன் என சில அந்தணர்களும் உரைத்தனர்.
அவர்களின் விவாதம் தொடர்ந்த கொண்டிருக்கையில் ஸ்வயம்புவாமநு பின்வருமாறு கூறலானார்.
“சுத்தஸத்வனான கல்யாணகுணமுடைய ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான
உபயவிபூதிசெல்வமுடைய அச்சுதனே அந்தணர்களுக்கு பூஜயன்.
ரஜஸ தமோ குணங்கள் கலந்த மற்றய தெய்வங்கள் அவர்களுக்கு பூஜயர்களல்ல.” என்று அவர் கூறியதை கேட்ட
மஹரிஷிகள் அனைவரும் ப்ருகுமஹரிஷியை வணங்கி கோரிக்கை விடுத்தனர்.

“எங்கள் ஐயத்தை போக்க நீரே வல்லவர்.ப்ரம்ம விஷ்ணு ருத்ரர்களுக்கு அருகில் சென்று ஸத்வகுண சரீரம் கொண்டு
ப்ராஹ்மண பூஜைகுரியவர் யார்? என்பதை அறியும் லோகோபகாரத்தை செய்வீராக” .
இப்படி சொல்லப்பட்ட அவர் எருதுகொடியோனிருக்கும் கைலாஸத்திற்கு வாமதேவரோடு சென்றார்.
சங்கரனுடைய ஆலயதுவாரத்திற்கு சென்று சூலத்தையேந்திய மஹாபயங்கரனாகிய நந்தியை கண்டு பின்வருமாறு சொன்னார்.
“தேவனான ஹரனை காண ப்ருகுவான நான் வந்துள்ளேன், நான் வந்ததை சங்கரனிடம் தெரிவிப்பாயாக”.
இதைகேட்ட நந்தி கடுமையாக பின்வருமாறு கூறிற்று” எமது எஜமாமர் பார்வதிதேவியாரோடு தனிமையில் உள்ளார்,
எனவே அவரை நீர் பார்க்க இயலாது, திரும்பிசெல்”.

இவ்வாறு நிராகரிக்கப்பட்டும் ருத்ராலயத்தில் பலநாட்கள் காத்துகிடந்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ப்ருகுரிஷி ‘ஸ்த்ரீஸங்கமத்தில் மயங்கிய என்னை அவமதித்த இவன் லிங்க ஸ்வரூபமாக ஆகுக.
தாமஸத்தோடு கூடி அந்தணனான என்னை அவமதித்ததால் ப்ராஹமண பூஜைக்கு அநாஹனாகி அந்தணரால் பூஜிக்கப்படாதவனாவான்,
ஆகையால் இவனுக்கு கொடுக்கும் அந்தம ஜலம், புஷ்பம், ஹவிஸ் முதலியன நிர்மாலயம் (உபயோகமில்லாதது) ஆகும்.
இதில் ஐயமில்லை. , பஸ்மத்தையும் லிங்கத்தையும் கபாளத்தை தரிக்கும் ருத்ரபக்தர்கள் பாஷாண்டிகளாக
வேதத்திற்கு புறம்பானவராவார்”என கடுமையாக சபித்துவிட்டு ப்ரஹ்மலோகம் சென்றார்.

அங்கு ஸர்வலோக தேவர்களும் பிரமனை பார்த்து கைகூப்பி வணங்கி மெளனமானார்.
முனிவர் தலைவரான அவரை பார்த்தும் ரஜோகுணத்தால் மூடப்பட்டவனாகையால் ப்ரஹ்மா வந்திருந்த முனிவரை பூஜிக்கவில்லை,
எதிர்கொண்டழைக்கவில்லை, இன்சொற் பேசவில்லை.
இதனால் கோபமடைந்த ப்ருகு ரிஷி “அதிகமான ரஜோகுணமுடையவனாகிய நீ எவராலும் பூஜிக்கப்படாதவனாகுக” என்று
இதுவரை லோஹபிதாவாக இருந்த பிரமனை சபித்துவிட்டு பகவானுடைய ஆலயத்திற்கு சென்றார்.

அங்கு ஆதிஷேஷனில் சயனித்து மலர்மகளின் மலர்கைகளால் திருவடி வருடப்பெற்றவனான கமலாபதியை கண்டார்.
இவனும் நம்மை அவமதிக்கும்வகையில் தூங்குகிறானே என்றெண்ணிய பிருகு விஷ்ணுவின் பரமமங்கள திருமார்பில் எட்டி உதைத்தார்.
(இவ்வாறு நடக்க வேண்டுமென்பதற்காகவே கள்ள நித்திரை செய்த)பகவான் உடனே எழுந்து ‘தன்யனானேன்’ என்று பேரானந்தத்தோடு
அவர் பாதங்களை தன் திருகரங்களால் வருடி இன்சொல்லால் அத்திருவடிபட்டதால் பெற்ற பேற்றினை கூறி
அபாக்ருதமான மாலை, சந்தனம் முதலானவற்றை கொடுத்து பூஜை செய்தார்.
உடனே முனிதலைவர் ஆனந்தகண்ணீர்விட்டு சிறந்த ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து தயாநிதியான பகவானை கைகூப்பி
வணங்கி சொல்லலானார். அஹோ! என்ன ரூபம்? என்ன சாந்தி? என்ன பொறுமை? ஹரியான உம் ஸத்வகுணத்தை என்னவென்பது?
குணக்கடலான உன்னை தவிற பிறதேவர் எவருக்குமே ஸத்வகுணமில்லை. புருஷோத்தமனான நீயே ப்ராஹ்மண பூஜயன்.
உன்னை விடுத்து வேறெந்த தேவர்களை அர்சிக்கிறார்களோ அவர்கள் பாஷாண்டிகளாய் நல்லோர்களால் இகழப்படுவர்.
சுத்த ஸத்வமுள்ள நீயே மறையவர்களால் பூஜிக்கதக்கவன். உன் ஸ்ரீ பாத தீர்தம் ஸேவிக்கதக்கது, முக்தியளிப்பது, மலத்தை நீக்குவது,

நீ புசித்து மிகுந்தத தீர்த்தமே பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் ஸேவிக்கதக்கது,
மற்றவர்களுடையவை நிர்மால்யம் எனப்படுவது. ஆகையால் அறிவுள்ள ப்ராஹ்மணன் ஸனாதனனான உன்னை பூஜித்து
உன் தீர்த்தத்தையும், ப்ரஸாதத்தையும் ஸேவிக்கக்கடவான்.
பித்ரு ஸிராத்தத்தில் உன் தீர்த்தப்ரஸாதத்தை அந்தணன் அளிக்காவிடின் ஸிரார்தம் வீணாகிப்போய் பித்ருக்கள் நரகில் வீழ்வர்.
உன் ப்ரஸாதத்தை ஹோமம் செய்து பித்ருக்களுக்கு அளித்தால் தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் திருப்தியுண்டாகிறது.
ஆகையால் மறையவர்கள் போற்றதகுந்தவன் நீயொருவனே! தேவகீ புத்ரனே ப்ராஹ்மன்யன்(ப்ராஹ்மன பூஜயன்-ப்ராஹ்மனர்களால் பூஜிக்கப்படுபவன்),
மதுஸுதனனே ப்ராஹ்மன்யன், புண்டரிகாக்ஷேனே ப்ராஹ்மன்யன்,அச்சுதனேப்ராஹ்மன்யன்,விஷ்ணுவே ப்ராஹ்மன்யன்,
வாஸுதேவனும் அச்சுதனுமான கிருஷ்ணனே ப்ராஹ்மன்யன்,நரசிங்கனான ப்ராஹ்மன்யன்,அழிவற்ற நாராயணனே ப்ராஹ்மன்யன்,
ஸ்ரீ தரனே ப்ராஹ்மன்யன்,கோவிந்தனும் வாமனனானவனுமே ப்ராஹ்மன்யன்,யஜ்ஞவராஹனே ப்ராஹ்மன்யன்,
கேசவனான புருஷோத்தமனே ப்ராஹ்மன்யன்,திருமகளின் மணாளனும் தாமரைகண்ணனுமான ரகுகுலராமனே
ப்ராஹ்மன்யன், பத்மநாபனே ப்ராஹ்மன்யன்,மாதவனே ப்ராஹ்மன்யன்,தலைவனான திரிவிக்ரமனே ப்ராஹ்மன்யன்,
இருடிகேசனே ப்ராஹ்மன்யன், ஜனார்தனனே ப்ராஹ்மன்யன்,ப்ராஹ்மன்யதேவனும், நாராயணனும்
ஸ்ரீபதியுமான தாமரைகண்ணனான உனக்கு நமஸ்காரம்,

ப்ராஹ்மண்ய தேவனும் வாஸுதேவனும், விஷ்ணுவும், கல்யாணகுணபூர்ணனுமான பரமாத்மாவுக்கு உனக்கு நமஸ்காரம்,
ப்ராஹ்மண்யதேவனும் ஸர்வ தேவ ஸ்வரூபியும், வேதநாதனும், வராஹஸ்வரூபமான உனக்கு நமஸ்காரம்,
ப்ராஹ்மன்யதேவனும் சேஷாசாயியும், தாமரைக்கண்ணனும், ராகவனுமான உனக்கு நமஸ்காரம்.
எல்லா தேவர்களும் ரிஷிகளும் உன்னுடைய பரத்வத்தை உணர்த்தும் ஸத்வத்தை அறிவதற்கே மஹரிஷிகளால் அனுப்பப்பட்டேன் கோவிந்தா!
உன்னுடைய ஸெளசீல்யவாத்ஸல்ய காருண்யாதி குணங்களையறியவே உன் திருமார்பை காலால் உதைத்தேன் தயாநிதியே!
அப்பாதஹமான செயலை பொறுத்தருள வேண்டும் என மறுபடி, மறுபடியும் கைகூப்பி வணங்கிவிட்டு பூமியை அடைந்தார்.

வந்தடைந்த ரிஷி ருத்ர, ப்ரஹ்ம தேவர்களின் குணத்தையும் அவர்களுக்கிட்ட சாபத்தையும் கூறி பகவானின் கல்யாண குணத்தை யுறைத்தார்.
ப்ரஹ்மமான நாராயணரே மறையறிந்தவர்களால் போற்றதகுந்தவன். கண்ணனை நினைப்பதால் பாவியும் மோக்ஷம் பெறுவான்.
அவனுடைய திருவடி நீரே அருந்ததக்கது, பகவத் நிவேதனமே பித்ருக்கள், அந்தணர்களுக்குரியவை. அவையே சுவர்க்கமோக்ஷமளிப்பவை.
ஆகையால் மற்றயவர்களை விட்டு பழையோனாகிய விஷ்ணுவையே உயிருள்ளவரையும் பூஜிப்பீர்களாக. என பத்மபுராணத்தில் சொல்லப்பட்டது

மஹரிஷிசாபம் எவ்விதம் பலித்திருக்கிறது என்பதை ஆலயம்தோறும் லிங்கபூஜை நடப்பதிலிருந்தும்
ப்ரஹ்மாவுக்கு தனிகோவிலில்லாதிருப்பதையும் ப்ரத்யக்ஷமாக காண்கிறோம்.
ருத்ர பக்தர்களான ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களும் ஹரிபூஜையை விடுவதில்லை என்பதையும் அறிகிறோம்.
தீவிர வைணர்கள் யாரும் இடிவிழ, காளை முட்ட வருகையிலும், ஸர்பம் துரத்துகையில் கூட வேறு தேவாலயங்களுள் நுழையாமல்
“மறந்தும் புறம் தொழாதவர்களாய் வாழ்ந்தவர்கள்” என்பதையும் அறிகிறோம்.
எனவே பத்மபுராணமும் ஸத்வகுணஸ்வரூபன் நாரணனே என நிலை நாட்டியது.

இதே புராண வாயிலாகவே புராண நிர்ணயமும் பார்வதி பரமேஸ்வரனின் சம்பாஷனையினூடே தெளிவுற விவரிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டத்திலே 263ம் அத்யாயத்தில்
“பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர்.
அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள்.
அதற்கு சிவப்பிரான் சென்னார்.
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ,
அவருக்கு சமமாக ப்ரஹ்ம ருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ,
கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை
யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ
சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.

இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான
அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச் சென்று
நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேத தர்ம நிஷ்டர்களாய்
விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர்.
அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும்
என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும்
பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க
இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க
தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும்.
ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால்
உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.

இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற
தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய்.
இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன.
என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள்.

வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது.
இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன.
கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது.
தேவ குருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது.
திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய
பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது.
கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது.
வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும்.
அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும்.
அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது.
ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது.

கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம்
வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது.
நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் ஸத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள்
1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம்
ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள்
1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம்
4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம்
தாமஸ குண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள்
1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம்
இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை
(+வாஷிஷ்டம்,ஹாரிதம், வ்யாஸம, பராசர, பரத்வாஜ, காஸ்யப ஸ்மிருதிகள்) கொடுக்கும்
மற்றையவை நரகத்தையளிப்பவை. அறிவாளிகள் அவற்றை ஒதுக்கக்கடவான்”என ஆணியடித்தாற்போல் நிலைநாட்டியது.

——————————-

ஸ்கந்தபுராண நிர்ணயம்

சைவர்களால் சிவ, லிங்க புராணங்களுக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் புராணம் ஸ்கந்தபுராணமே;
அப்புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராவது அத்யாயத்தில் ஒரு ருக்வேதமந்திரம் பின்வருமாறு
உபப்ரும்ஹானம் செய்யப்பட்டுள்ளது.

ஜைமினி சொன்னார்-
இப்படி சொல்லிக்கொண்டிருக்குமவனிடம் ருக்வேதத்தில் கரைகண்டவனும் ராஜரிஷியும்,
வேதறிவு பெற்ற ஒரு இருப்பிறப்பாளன் உகப்புடன் ஒரு வார்த்தை கூறினான்.
“உன்னுடைய பாக்யத்தை என்னவென்று கொண்டாடுவேன்?
அந்த அர்சசாமூர்தியை உபாஸித்தாலே முக்தி யுண்டென சுருதியே சொல்லிற்றன்றோ!
புருஷனால் நிருமிக்கப்படாத யாதொரு மரம் கடற்கரையில் மிதக்கிறதோ
ஆராதிக்க அரியவனான அப்பரமபுருஷனை அடையவுகரிய முக்தியை முக்தியையடைகின்றனர்” என
ப்ரஹ்ம ஞானநிதியான நாரதமஹரிஷி இதை சொன்னார்.

பரம புருஷனே வேதாந்த வாக்யங்களை விட எவை நன்கறியும்?
வேதத்தையொட்டியன்றோ ஸ்ருஷ்டி, அவதாரம் என்பவற்றை பகவான் செய்கிறார்.
ஸாமவேத கீதங்களில் பாடப்பட்டவனும் வேதாந்தங்களில் சொல்லப்பட்டவனுமான மனிதர்களுக்கு நன்மையளிப்பவனும் அவனே;
அந்த புருஷனை பிரதிமை என நினைக்காதே, மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும்,
இந்த அர்ச்சையை சொல்லும் வேதவாக்யங்கள் முற்காலத்திலிருந்தே வழங்கின”. என
தாமஸ குண பரிஹாரஸாத்வீக ஸ்வரூபமாக நாராயணன் விளங்குவதை வேதத்தை கொண்டே விளக்கியது.

இதே புராணத்தில் சிவன், ஸ்கந்த சம்பாஷனையில் சிவன்
ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத் பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம்
மோக்ஷ -ஸ்தானம் ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி

‘சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி.
அதுவே எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது’. என்கிறார்.
இவ்விதம் ஸ்கந்தபுராணமே ஸத்வரூபம் விஷ்ணுவுக்கே உரித்தது என்றது.

————-

‘யஸ்ய ப்ரஸாதாத தஹமச்யுதஸ்ய பூத: ப்ரஜாஸர்க்க கரோஸந்தகாரீ|
க்ரோதாச்சா ருத்ர: ஸ்திதிஹேதுபூதோ மத்யே ச யஸ்மாத் புருஷ: பரஸ்மாத்||

எந்த அச்சயுதனுடைய அருளாலே ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்கும் பிரமானாகிற நானும் ஸம்ஹரிக்கும் ருத்ரனும் உண்டானோமோ
எந்தபுருஷன் எங்களுக்கு நடுவில்,ரக்ஷிக்கும் புருஷனாய் அவதரித்திருக்கிறானே
என்று விஷ்ணுபுராணத்தில் இவ்வாக்யம் நாராய பரமாக உபப்ரும்ஹணம் செய்யப்பட்டது.

—————–

‘ஈஸாநஸ் ஸர்வித்யாநாம் ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் பரஹ்மாதிபதிர்
பர்ஹ்மணோதிபதிர் பரஹ்மா ஸிவோ மே அஸ்து ஸதாஸிவோம்’

எல்லா வித்யைகளுக்கும் ஈசனாய் ஸர்வபூதங்களுக்கும் ஈச்வரனாய்,வேதத்தில் அதிபதாய்,பர்ஹ்மாவுக்கு அதிபதியாய்
ப்ரஜ்மாவுக்கு அந்தர்யாமியாய் சிவனுக்கு அந்தர்மியாய் ஓங்காரவாச்யனானவன் எனக்கு எப்போதும் மங்களத்தை தரக்கடவன்
என்று ந்ருஸிம்ஹதாபநீய உபனிஷத்தில் நாற்பத்து நாலாவது அநுவாகமந்திரத்திரத்தில் எடுத்தோதியது.

———————–

பிதா புத்ரணே பித்ருமாந் யோநியோநௌ நாவே தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்” [யஜூர் வேதம் – காடகசம்ஹிதை -3-9-55]
(அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

“ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந” [யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
(அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

“தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்” [புருஷ ஸூக்தம்]
(அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” [புருஷஸூக்தம் 2-3]
(பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

————

ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதாஸ்தி ஸம்பவா (வராஹபுராணம்:14-41, வாயு புராணம் 34-40)

ந பூத ஸங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந (பாரதம்-சாந்தி பர்வம் 206-60)

இந்த பரமாத்மாவின் தேஹம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்ததன்று.
எனவே பரமபுருஷனின் அப்ராக்ருத திருமேனிக்கு இந்த நிற நியமம் ஏது?

ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்திலே ஐந்தாமத்யாயத்தில் இருபதாம் ஸ்லோகத்தில்

க்ருதம் த்ரேதோ த்வாபரம் ச கலிரிதயேக்ஷ கேஸவ| நாநாவாணபிதாகார நாநைவ விதிநேஜயதே ||

க்ரதம், த்ரேதா, துவாபாரம், கலி எனும் நான்கு யுகத்தில் பலவர்ணங்கள், நாமங்கள், உருவங்கள் ஆகியவற்றை உடையவனாய்,
பலவிதமான விதிகளால் உபாஸிக்கப்படுபவன் கேசவன் என்று கூறப்படுகிறது.

————————-

ருத்ரன் தானே பசுபதியாகிற வரத்தை தேவர்களிடம் பெற்றானென்பது
‘ஸோப்ரவீத் வரம்வ்ருணா அஹமேவ பஸூநாமதி பதிரஸாநீதி| தஸ்மாத் ருத்ர பஸூநா மதிபதி|

( இதைக்கேட்ட ருத்ரன் தேவர்களே! நான் உங்களிடம் ஒருவரத்தை கேட்கிறேன்.நானே பசுக்களுக்கு அதிபதியாக வேண்டும்”
என்று உரைத்தனன்.தேவர்களும் அவ்வரத்தை அருளினர்.) கிருஷ்ணயஜுர் வேதத்து (6:2) வாக்யத்தால்

‘விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமிததேஜஸ| தஸ்மாத்தநுர்ஜ்யா ஸம்ஸர்க்கம்ஸ விஷேஹே மஹேஸ்வர||

அளவற்ற தேஜஸ்ஸையுடையவரான பகவான் சிவனுக்கு விஷ்ணுவானவர் ஆத்மாவாயிருந்ததனாலேயே வில்லை நாணேற்றுவதை
மஹேஸ்வரரான அவருக்கு பொறுக்கமுடிந்தது என்னும் கர்ணபர்வத்து (35-50) வசனமும்
திரிபுரசம்ஹாரம் திகிரியானாளேயே ருத்ரனுக்கு சாத்யமானதென்பதை சாதித்தவழி காண்க.

இவ்வர்தத்தை உணர்ந்த சங்கச் சான்றோரும்
‘….பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக் கல் உயர் வென்னி இமயவில் நாணாகித்
தொல் புகழ் தந்தாரும் தாம் (பரிபாடல்) என்று பாடி வைத்தனர்

——————-

‘ ந து நாராயணாதீதாம் நாம்நாமந்யத்ர ஸம்பவ| அந்யநாம்நாம் கதிர் விஷ்ணுரேக ஏவ ப்ரகீர்த்தித|
ருதே நாராயணாதீநீ நாமிநி புருஷோத்தம:| ப்ராதாததந்யத்ர பகவான்…‌…..‌.

நாராயணன் முதலிய பெயர்கள் மற்ற தெய்வங்களை குறிக்கமாட்டா,மற்ற தெய்வங்களினன் பெயருக்கு
விஷ்ணு ஒருவனே சேருமிடமாக கீர்த்திபெற்றிருக்கிறான்.
நாராயண நாமத்தை தவிற பிறபெயர்களை அவனே பிறதேவதைகளுக்கு கொடுத்தான் என்கிற வாமனபுராண வசனம்

—————

ப்ராக்ருதமான ஸாத்வீகராஜஸதமோ குணங்களை கடந்தவனும் சுத்தஸத்வமயமான திருமேனியையும் ஸ்தானத்தையுமுடைய
பரமபுருஷன் பகவான் ஹரி ஒருவனே என்பதை
ஸ்ருதி, ஸ்மிருதி இதிஹாச புராணங்களை கொண்டு நிலைநாட்டி நிறுபவப்பட்டது.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஆகம ப்ராமாண்யம்

November 8, 2021

யத்பதாம்போருஹ த்யாந வித்வஸ்தாஸேஷகல்மஷ |
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் | (“கீதாபாஷ்ய மங்களம்”)

எவருடைய திருவடித்தாமரைகளை தியானிப்பதால் எல்லா தோஷங்களும் நீங்கப்பெற்று யான் ஒரு பொருளாக ஆனேனோ,
அத்தகைய யமுனைத்துறைவரை வணங்குகிறேன்.

——–

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்தம் ஸுதுர்க்ரஹம்|
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர தம் வந்தே யாமுநாஹ்வயம்||

[யதிகளுக்குத் தலைவரும், மறை பொருளின் உயரிய அர்த்தங்களை எல்லோருக்கும் புரியும்படியாக
ஶ்லோகங்களாக அருளிச் செய்தவருமான ஸ்வாமி யாமுந முநியை வணங்குகிறேன்.]

—–

நிதியைப் பொழியும் முகிலென்று நீசர்தம் வாசல்பற்றி
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனி தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய, இராமானுசன் என்னைக் காத்தனனே

“ராமானுஜாங்க்ரிஸராணோஸ்மி குலப்ரீதீபஸன்
வாஸீத் ஸ யாமுனமுனேஸ் ஸச நாதவம்ஸ்ய |
வஸ்ஸ்ய பராங்குஸமுநேஸ்ஸ ச ஸோ தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய: ||-(கூரத்தாழ்வான் அருளிய “வரதராஜஸ்தவம்” ஸ்லோகம் 102).

எம்பெருமானாரின் (இராமானுசர்) திருவடிகளை உபாயமாக உடையவனாகிறேன்.
அந்த எம்பெருமானார் யாமுநமுனியின் (ஆளவந்தார்) குலவிளக்காக இருக்கிறார்.
அந்த யாமுநமுனியாகிற ஆளவந்தார் நாதமுனிகள் திருவம்சத்தவர். அந்நாதமுனிகள் நம்மாழ்வாரின் வழி வந்தவர்.
அந்த நம்மாழ்வாரும் பெரியபிராட்டியின் (ஸ்ரீரங்க நாச்சியார்) திருவருள் பெற்றவர்.
வரதராஜரே! இவ்விதம் தேவரீருக்கு (உமக்கு) வழிவழித் தொண்டன் அடியேன் என்று
கடாக்ஷத்துக்குப் பாத்திரமாக இருக்கக் கடவேன் ஆகிறேன் என்று உரைக்கிறார் கூரத்தாழ்வான்.

விதாய வைதிகம் மார்க்கம் அகெளதஸ்குதகண்டகம் |
நேதாரம் பகவத்பக்தேர் யாமுநம் மநவாமஹை || ( ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவம், ஸ்லோ.1.4)

ஏன் ஏன் என்று கேட்டு விதண்டாவாதம் செய்யும் வாதியராம் இல்லாததாக வைதிக நெறியைச் செய்து (அதில்),
அழைத்துச் செல்பவராய் பகவானிடம் தழைத்தோங்கச் செய்பவரான ஆளவந்தாரை தியானிப்போமாக.

ஆகம ப்ராமாண்யம் என்னும் நூலை எழுதியதற்குக் காரணம் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமங்கள் இறைவனால் வெளிவந்தவை என்றும்,
பாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும் வேதம் போல் அபௌருஷேயமானதும் ஒப்புயர்வற்ற அதிகார பூர்வமாகக் கொள்ளத்தக்கது
(வேதங்களோடு ஒக்க ப்ரமாணங்களாகக் கொள்ளத்தக்கது) என்றும் விக்ரஹ ஆராதனை வேத மூல ப்ராமணமானது என்றும்
அர்ச்சாவதாரமாகிய திரு உருவங்களில் பகவானுடைய சாந்நித்யம் பூர்ணமாக உண்டு என்றும் ஸ்தாபிப்பதற்காகவே ஆகும்.

மேலும் அதிகார பூர்வமான ஓர் ரக்ஷை பாஞ்சராத்ரத்திற்கு அமைக்கா விட்டால் பரம வைதிகமானதும் எம்பெருமானாலேயே
தோற்றுவிக்கப் பட்டதுமான மகோன்னதையை பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் இழந்துவிடக் கூடும் என்பதாலே
ஆகம ப்ராமாண்யம் என்ற நூலை தம் ஸம்பூர்ண ப்ராஜ்ஞத்வத்தினால் அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

————-

மங்கள ஸ்லோகம்
ஜகத் ஜென்ம ஸ்திதி த்வம்ஸ மஹா ஆனந்த ஏக ஹேதவே
கர அமல விஸ்வம் பஸ்யதே விஷ்ணவே நம –

வைகானஸம் பாஞ்ச ராத்ரம்

வைகானஸ ஆகமம் மகாவிஷ்ணுவால் சொல்லப்பட்டது என்பது ஐதீகம்.
வைகானஸ ஆகமத்தின் மூலமந்திரங்கள், ரகசிய விவரங்கள் ஆகியவற்றை விஷ்ணு உபதேசிக்க, விகனச முனிவர் எழுதி வைத்தார்.
வைகானஸ ஆகமத்துக்கு ‘பகவத் சாஸ்திரம்’ என்ற பெயரும் உண்டு.
பாஞ்சராத்ர ஆகமமும் விஷ்ணு வழிபாட்டின் சிறப்புகளையும் முறைகளையும் விவரிக்கிறது.

உட்பிரிவுகள்

சைவ ஆகமங்களுள் காமிகம், காரணம் என்ற இரண்டும் முக்கியமானவை ஆகும்.
ஆலயம் அமைப்பதற்கு கச்சிதமான இடத்தை தேர்ந்தெடுத்தல், கட்டிடம் நிர்மாணிக்கும் முறை,
சிற்பிகள் மற்றும் அர்ச்சகர் ஆகியோரது தகுதி நிலைகள், கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்வது
போன்ற தகவல்களை இவை விரிவாக தருகின்றன.

—————-

ஆகம ப்ராமாண்யம் என்னும் நூலை எழுதியதற்குக் காரணம் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமங்கள் இறைவனால் வெளிவந்தவை என்றும்,
பாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும் வேதம் போல் அபௌருஷேயமானதும் ஒப்புயர்வற்ற அதிகார பூர்வமாகக் கொள்ளத்தக்கது
(வேதங்களோடு ஒக்க ப்ரமாணங்களாகக் கொள்ளத்தக்கது) என்றும்
விக்ரஹ ஆராதனை வேத மூல ப்ராமணமானது என்றும்
அர்ச்சாவதாரமாகிய திரு உருவங்களில் பகவானுடைய சாந்நித்யம் பூர்ணமாக உண்டு என்றும் ஸ்தாபிப்பதற்காகவே ஆகும்.

மேலும் அதிகார பூர்வமான ஓர் ரக்ஷை பாஞ்சராத்ரத்திற்கு அமைக்காவிட்டால் பரமவைதிகமானதும் எம்பெருமானாலேயே
தோற்றுவிக்கப் பட்டதுமான மகோன்னதையை பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் இழந்துவிடக்கூடும் என்பதாலே
ஆகம ப்ராமாண்யம் என்ற நூலை தம் ஸம்பூர்ண ப்ராஜ்ஞத்வத்தினால் அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

ஸ்ரீ ஆளவந்தாருக்கு முன்னர் குமரில பட்டர் என்ற மீமாம்சகர் இந்த ஆகமங்கள் வேதத்திற்கு புறம்பானவை என்றும்,
ஆதிசங்கரர் இவைகள் வேதாந்தங்களுக்கு முரண்பட்ட சில கருத்துக்களைக் கொண்டவை என்றும் தெரிவிக்கின்றனர்.
இக் கருத்துக்களைக் களைந்து பரம காருணிகரும், ஸர்வஜ்ஞனுமான ஸ்ரீ வாசுதேவன் வாயிலாக அவதரித்த
பாஞ்சராத்ர சாஸ்திரங்கள் வேத துல்யமானது என்று ஸ்தாபித்து மேலும்
பாட்ட, பிரபாகர, நையாயிக, அத்வைத மத வாதங்களையும் கண்டித்திருக்கிறார்.

——————————————————-

நிகமம் -வேதம் அங்கு போகும் வழியைச் சொல்லும்
ஆகமம் -அவன் இங்கு வந்து நம்மை அனுக்ரஹிக்கும் வழி
ஆகமம் (ஆ+ கமம்) என்பது தூய தமிழ் சொல்.
ஆ என்பது உயிர்களை குறிக்கிறது. எனவே உயிர்கள் கடை சேருவதற்காக அருளப்பட்டது.

மார்க்கண்டேய சம்ஹிதை
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை
அறியாமை இருளைப் போக்கும்
ஐந்து இரவில்
பவ்ஷ்கார சம்ஹிதை – வேதம் வேதாந்தம் புராணம் சாங்க்யம் யோகம் ஐந்து சாரம்
விஸ்மித்ர சம்ஹிதை -ஐம்புலன்களில் இருந்து காக்கும்
அஹிர்புத்யை சம்ஹிதை -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை சொல்லும்

வக்தா நாராயண ஸ்வயம் -வேதத்துடன் தொடர்பு இல்லை என்று சிலர் தயங்கி பிரமாணம் இல்லை என்பர்
வைகானச ஆகமம் யஜுர் வேத பகுதி
மீமாம்சகர் -குமாரில பட்டர் பாட்டர் -பிரபாகரர் -இரண்டு வகை -எதிர்க்கிறார்கள்
நையாயிகர்-நியாய மதம் – முழுமையாக எதிர்க்க வில்லை
அத்வைதிகள் நால்வரும் பூர்வ பக்ஷிகள்

மங்கள ஸ்லோகம்
ஜகத் ஜென்ம ஸ்திதி த்வம்ஸ மஹா ஆனந்த ஏக ஹேதவே
கர அமல விஸ்வம் பஸ்யதே விஷ்ணவே நம

முழுவதும் உடல் மிசை உயிர் எங்கும் கரந்து பரந்துள்ள -விஷ்ணு-
எல்லாவற்றையும் கை இலங்கு நெல்லிக்கனி போல் உள்ளபடி காணும் அவனுக்கு -அவனுக்கு நமஸ்காரம்
(அந்தமில் பேர் இன்பம் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலா
விநத விரத பூத வ்ரத ரக்ஷைக தீஷே -மோக்ஷ பிரதம் தனியாக ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் )
உள்ளபடி கண்டே பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் அருளி உள்ளான் என்று காட்டுகிறார்
விஷ் -உள்ளே நுழைந்து -வியாபித்து -அவனுக்கு நமஸ்காரம்

தூரமான கம்பீரா சாராசாரா -விவேகம் அறிந்தவர் புகழ்வார் -பொறாமை இல்லாதவர்
சமயச -சமகாலத்தில் உள்ளவர் நான் சொல்லும் நல்ல வார்த்தைகளில் குறை
பழிக்கில் புகழ்

தத்வ விசாரம்
பாட்ட பிரபாகர் நையாயிக அத்வைதி மற்றும் வேறே சிலர் -ஐவர் -ஆளவந்தார் மறுத்து சாதிக்கிறார்
பாட்ட மீமாம்சகர் -வேதம் மட்டுமே பிரமாணம் -உபநிஷத் கூட ஒத்துக் கொள்ளார் -முழுக்கவே பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை
பிரபாகர் -முன் பாக வேதம் -இதில் கட்டளை வாக்கியம் மட்டும் கொள்வார் -இவரும் பிரமாணம் இல்லை என்பர் –
நையாயிகர்-logic – அக்ஷபாதர் நியாயமதம் -ஏற்றுக் கொள்பவர்
வேதமும் மனிதனால் கொடுக்கப் பட்டது என்பர்
வேதாந்த க்ருத் -என்று கண்ணன் கீதை அருளியதை -வேத க்ருத் இல்லை -புருஷனால் செய்யப்பட்டது இல்லையே
அனுமானத்தால் ஏற்றுக் கொள்பவர் இவர்
நிர்விசேஷ அத்வைதி –
அபிகமனம் போன்றவற்றை எதிர்க்க வில்லை –
தத்வ ரீதியான -வாசுதேவன் இடம் சங்கர்ஷணம் பிறந்தான் போன்றவற்றையும்
கைங்கர்யம் போன்றவற்றையும் மட்டும் எதிர்ப்பார்
வேறே ஆகம வாதி தங்கள் ஆகமமே பிரமாணம்
இப்படி ஐவர் பூர்வ பக்ஷம் –

கர்மம் செயலே பலன் கொடுக்குமா -அபூர்வம் கல்பித்து பாட்ட மதம் -இறைவன் கொண்டு வர வேண்டாம்
வேதமே ஸ்வயம் பிரமாணம் –
பாஞ்சராத்ரம் ஒருவரால் கொடுக்கப் பட்டதால் பிரமாணம் இல்லை
தீக்ஷை எடுத்துக் கொண்டு ஆராதனம் பண்ணி முக்தி ஒத்துக் கொள்ள முடியாதே
ப்ரத்யக்ஷம் இல்லையே என்பர்

நையாயிகர் எழுந்து -ஒருவர் சொல்வதாலேயே தப்பு ஆகுமா
ஒரு பகுதி பூமி பார்க்கிறோம்
பறவை முழுவதும் பார்க்கும்
பார்க்காத ஒன்றை ஒருவர் சொல்வதால் பொய் ஆகுமோ
microscope பார்த்து சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம்
அதிகமான சக்தன் -ஞானம் உள்ளவன்-பார்த்து -சொல்வதை தப்பு என்னலாமோ
இவர்கள் பர ப்ரஹ்மம் ஒத்துக் கொள்ளாதவர்

இதுக்கு பாட்ட மீமாம்சார் -இப்படிப்பட்ட ஒன்றை ப்ரத்யக்ஷமாக காண்பது ஸாத்யம் இல்லை –
அப்படி உள்ளவர் என்பதே வலிமை இல்லாத வாதம் என்பர்
அனுமானத்துக்கும் விரோதம் என்பர் -முன்பே பார்த்து இருந்தால் தானே யூகிக்க முடியும்
புகை நெருப்பு பார்க்காமல் அனுமானிக்க முடியாது
வேதத்துக்கே எதிரானது என்பர் -தனி மனிதன் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதே

அடுத்து -உபமானத்துக்கும் விரோதம் -உவமை சொல்லி விளக்க முடியாதே –
அர்த்தா பத்தி -சந்தர்ப்பத்தால் அறியும் அறிவு
தேவதத்தன் குண்டாய் உள்ளான் -பகலில் உண்ண மாட்டான்
என்றால் இரவில் உண்பான் என்று சொல்வது அர்த்தா பத்தி
நான் இத்தை தனியாக கொள்ளாமல் அனுமானத்தின் உள்ளே சொல்வோம்

நையாயிகர்-எழுந்து பேசுகிறான் -மனு ஸ்ம்ருதி -வேதம் இல்லாவிட்டாலும் கொள்கிறோம் அன்றோ –
மனு சொல்வது வேதத்துக்கு சமம் -தத் பேஷஜம் -நாமும் சொல்கிறோமே

இதுக்கு ஆறாவது வாதம் பாட்ட மீமாம்சகர் -மனு ஸ்ம்ருதிக்கு வேதத்துக்கு தொடர்பு உண்டு
இதுக்கு இல்லை –
ஜைமினி கர்ம மீமாம்ஸா ஸூத்ரம் -மனு ஸ்ம்ருதியும் வேதத்துக்கு நிகர் –
ஸ்ருதி ஸ்ம்ருதி -ஸுர்தா ஸ்மார்த்த –
பாகவதர்கள் என்று பிரித்து -ஒதுக்கி -வேதியர் கோஷ்ட்டியில் கொள்ளாமல் –
ஸம்ஸ்காரங்கள் –40-க்கு மேல் உண்டே -வேதியர் என்று கொள்ள முடியாது என்பர் –
விக்ரஹம் உடுத்துக் களைந்த மாலை அணிய மாட்டார் -பிரசாதம் கொள்ள மாட்டார்
சாண்டில்யர் -நான்கு வேதம் படித்தும் பலன் பெறாமல் பாஞ்ச ராத்ரம் பெற்று பலன் -வேத நிந்தனை என்றும் வாதம்
உப நயனம் -மட்டும் போதாது தீக்ஷை கொள்ள வேண்டும் என்று அதிகமாக
14-வித்யா ஸ்தானங்களில் இது இல்லையே
உத்பத்தி அசம்பவாத் வியாசர் தாமே ஒத்துக் கொள்ள வில்லை என்பர்

நையாயிகர் அடுத்து
வேதம் அடிப்படை இல்லை என்பதுக்காக எதுக்கு நிராகரிக்க வேண்டும்
இதை அனுக்ரகிக்காவிடில் வேதத்தையே நிராகரிக்க வேண்டும்
இரண்டும் சக்திமான் ஒருவனால் தந்தவை
அனுமான வாதிகள் -காரியம் இருக்க காரணம் இருக்க வேண்டும்
அபூர்வம் ஜடம் படைக்க முடியாதே -நன்கு அறிந்த சேதனன் தானே படைக்க முடியும்

பாட்ட மீமாம்சகன் -எழுந்து வேதத்துக்கு கர்த்தா இல்லை -சொல்லி இருந்தால் மனிதன் -கர்ம வஸ்யன்
எங்கு இருந்து கொடுத்தார் –
உலகைப் படைக்க தர்மம் தெரிய வேண்டாமே
குயவனுக்கு தண்ணீர் மண் chemical அறிவு வேண்டாமே
சரீரத்துடன் கூடி விருப்பத்துடன் உள்ளவன் தானே கார்யம் செய்வான்
தானே விளையும் வயலில் புல் -அதே போல் ஸ்ருஷ்ட்டி
எதைக்கொண்டு எங்கு இருந்து படைக்கிறான்
கருணை உடன் படைத்தால் துக்கம் சுகம் எதற்கு
பாப புண்யம் அடியாக என்றால் அது இவனை விட உயர்ந்ததா -இல்லை என்னலாம் என்கிறான்

ஆளவந்தார் –
சாஸ்த்ர யோநித்வாத் -ஸ்ருதி சிரஸ்ஸில் உள்ளவன் -சத ஸ்ருதி வாக்கியங்கள் உண்டே
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை -சாரத்தை விட்டு சக்கையைப் பற்றுவார்களோ என்றார்

பிரபாகரர்
கர்ம மீமாம்ஸையிலும் சிலவற்றையே கொள்வார்
புல் பச்சை என்றால் ஒத்துக் கொள்ள வேண்டுமோ
மஞ்சளாக உலர்ந்து இருந்தால்
கண்ணால் பார்ப்பதில் கண் முக்கியம்
ப்ரத்யக்ஷம் போல் வேதம் சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் நம் கொள்கை
கட்டளை வாக்கியங்களை மட்டும் கொள்ள வேண்டும் என்பர்
பசு கொண்டு வா -சொல்ல கொண்டு வருதைப்பார்க்கும் குழந்தை பசு என்ன அறியும்
ஆத்மாவால் த்ரஷ்டவ்ய-ஸ்ரோதவ்வய மந்தவ்ய நிதித்யாசிதவ்ய -விதி வாக்கியம்
கொள்ள முடியாது என்பர்
யூப ஸ்தம்பம் ஸூர்யன் -அர்த்தவாதம் சுருதி சொல்லும்
உயர்வு நவிற்று அணி –
சொந்த விருப்பு உடன் சொல்லி இருக்கலாம்

ஆளவந்தார்
முழுவதாக உபன்யாசம்
பரம பிரமாணம்
ஜ்யோதி ஷ்டோ ஹோமம் சுவர்க்கம் தரும் போல் இதையும் நம்ப வேண்டும்
நையாயினரை முதலில் நிரஸித்து
வேதத்துக்கு புறம்பானது எது கேள்வி –
ஸப்த வடிவு -ஆப்த வாக்கியம்
பாஞ்ச ராத்ரம் பர ப்ரஹ்மம் பற்றியும் சொல்லும் -அதுக்கு அடிப்படை வேதம் தானே
வேத அடிப்படை இதுக்கும் உண்டு

அடுத்து மீமாம்சகர்கள் இருவரையும் நிரசிக்கிறார்
இதம் மஹ உபநிஷத் கொண்டாடி உள்ளார்கள் ரிஷிகள்
தர்க்க ரீதியிலும்-விரோதம் இல்லை
வார்த்தையிலே முரண் -வாழ் நாள் முழுவதும் மௌன விரோதம் இருப்பேன் பேசுவது போல்
தர்மி யுக்த விரோதம் மலடியான தாய் போல் இல்லை
உலகங்கள் இல்ல எல்லா வாக்கியமும் பொய் -என்றால் இதுவும் பொய்யா உண்மையா
அஹிம்சா சர்வ பூதானாம்
யாகத்தில் பலி
இரண்டுமே வேதத்தில் உண்டு
சாமான்ய விதி -விசேஷ விதி என்று கொள்ள வேண்டும்

பேச்சு மூலம் வந்தாலே குற்றம் இல்லை
எல்லா வார்த்தைகளும் தமக்கு உள்ள அர்த்ததைக் கொடுக்கும்
பசு மாட்டைப் பார்த்தேன்
எருமை மாட்டைப்பார்த்து சொன்னாலும் அதே அர்த்தம் -சொல்லுவன் குற்றம் தானே
இங்கு ஸர்வஞ்ஞன்-காருணிகன் -சர்வ சேஷி -குற்றம் வராதே –

உனக்கு ஒரு பிள்ளை பிறந்து உள்ளான் -கட்டளை வாக்கியம் இல்லை -ஆனாலும் கேட்டு மகிழ்கிறோமே
பாதி கிழவி பாதி குமரி சொல்வது போல் கட்டளை வாக்கியம் மட்டுமே கொள்வது
மந்த்ர சக்தியால் நெருப்பு சுடாமல் இருக்கும் -எங்கும் சுடாது சொல்ல கூடாதே
சிப்பி பார்த்து வெள்ளி -கண்ணில் கோளாறு -என்று கொள்ளக் கூடாது
ஏதோ ஒரு சமயம் பிரமம் வரலாமே
வார்த்தை பொருள் சம்பந்தம் அறிந்தால் -அத்தனை வார்த்தைகளும் அர்த்தம் கொடுக்கும்

ப்ரத்யக்ஷத்துக்கு விரோதமும் இல்லை –
நம் கண்ணுக்குத் தெரியாது
கண் இல்லாமல் பார்க்கிறான் -அவன் பார்வைக்கு இலக்கு ஆகுமே
அதுவே மங்கள ஸ்லோகத்தில் பஸ்யதே விஸ்வம் என்றார்

அர்த்த வாதம் -சில இருக்கலாம் -யூப ஸ்தம்பம் ஸூர்யன்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நாராயணனே பரஞ்சோதி பரமாத்மா
ஞானத்தால் அறிந்து அருளிய ஸாஸ்த்ரம்
முக்தி அடைய நல்ல வழி -ஆராதனம் செய்து உஜ்ஜீவிக்க –

மற்ற ஆகமம் -கொடுத்தவர்கள் சம்சாரிகள் -குற்றம் வருமே
இங்கு சங்கை கொள்ள வேண்டாமே
ப்ரஹ்மஹத்தியும் அஸ்வமேதம் ஒன்றாகாதே
லகு உபாயம்

வேத நிந்தனை -சாண்டில்யர் -வேதம் கற்று பலன் கிடைக்க வில்லை -இதனால் உஜ்ஜீவித்தேன்
நஹி நிந்தா நியாயம் இது –
பூமா வித்யா -சாந்தோக்யம் -பெருமை சொல்வது போல்
மஹா பாரதம் -தட்டில் வேதங்களை வைக்க இது உயர்ந்தது சொல்வது போல்
தத்வ ஞானம் சொல்வதில் வேதாந்தம் போல் இல்லை என்று பாஞ்சராத்ரமே சொல்லுகிறது
தெளியாத மறை நிலங்கள் தெளிந்தோமே போல்

உப நயனம் வைதிக சம்ஸ்காரம் -basic qualification

14 வித்யா ஸ்தானம் -ப்ரஹ்ம ஸூத்ரம் ராமாயணம் இவையும் இல்லையே

வியாசர் -2-2-39-உத்பத்தி அசம்பவாத்
ஜீவாத்மா தோன்றுவது சொல்லுவதால் அத்வைதி
நிராகாரத்துக்கு சொல்ல வில்லை
உத்பத்தி சொல்ல வில்லை
வாசுதேவன் -சங்கர்ஷணன் ஜீவன் -இதில் இருந்து -தோன்றி -ப்ரத்யும்னன் மனஸ் –
அநிருத்தினான் அஹங்காரம் தோன்றினான் சொல்லி
தத்துவத்துக்கு அதிபதி என்பதால் ஜீவ சப்தம்

விசித்ர தேக சம்பந்தி
தண்ணீரில் இருந்து ஜீவாத்மா படைத்தான் வேதம் சொல்லும் -வெளிப்படுத்தும்
சரீரம் எடுத்துக் கொள்வதையே தோன்றுவது

2-2-41-ஜீவன் இடம் -திவ்ய
அத்வைதி -நால்வரும் ஸ்வ தந்தரரா -சமமா -ஒரே ஒருவர் நான்கு வடிவா
ஏக வாஸூதேவ -லீலைக்காக பல வடிவம்
ராமன் நால்வராக
பலராமன் கண்ணன் இருவராக வந்தார்
விரோதம் இல்லை
அடுத்து வேறு விதமாக ஆளவந்தார்
இந்த அதிகரணம்
முதல் இரண்டு பூர்வ பக்ஷம்
அடுத்த இரண்டு சித்தாந்தம்
வியாசர் பதில் விஞ்ஞானாதி இரண்டும் ப்ரஹ்மத்தை குறிக்கும் ஆதி யாகவும் விஞ்ஞானமாகவும்
அவனே நான்கு வடிவமாக கொள்ளும் பொழுது விரோதம் இல்லையே
விப்ரதிஷேதாத் -நீங்கள் வைத்த எதிர்ப்பு முரண்பட்டு உள்ளது
கர்த்தா கருவி -வராதா அரிவாள் தானே பண்ணி வெட்டலாம்
விஞ்ஞானம் -அவனைப்பற்றிய ஞானம் -ஆதி அதுக்கு மூல காரணம் பாஞ்ச ராத்ரம்
நாராயணன் கொள்கைக்கு முரண்பாடு இல்லை
இன்னும் ஒரு வியாக்யானம்
ஞானத்தின் உத்பத்தி வராது
கர்த்தா இடம் வராது பூர்வ பக்ஷம்
விஞ்ஞானம் அறிவுக்கு ஆதி மூல காரணம் நாராயணனே இருக்கிறான்
மயக்க அருள வில்லை விப்ரதிஷேதாத் -கருணையே வடிவானவன்
தீய சக்திகளைத் தான் மயக்குவான்
ஏமாற்ற கொடுக்க வில்லை

பரத்வாஜர் நாரதர் போல்வார் பாஞ்ச ராத்ரம் பின் பெற்ற
பாகவதர் -சாஸ்ஸ்த்ரஞ்ஞர் -வாசி
சத்வ குணம் -சாத்விகர்
பாகவதர் -விசேஷித்து சொல்வதால் முரண்பாடு இல்லை

——–

உபபத்ய சம்பவாதி கரணம்
ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
-ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப் பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்

ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்

இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-41-

வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –

அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிராமண தமம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை

இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரமபுருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –

ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச –42-
இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது

அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று

பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை

கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து
ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்

பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுகத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்
இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம் அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து

—————-

விக்ரஹ பூஜையால் ஜீவனம் நடத்தக் கூடாதே இன்னும் ஒரு வாதம்
பிரார்த்தனைக்காகவே பூஜிக்கிறார்கள்
அர்ச்சகர் -சம்பாவனை -பூஜை நிறைவு பெறவே வாங்கிக் கொள்கிறார் –
ஹோதாவுக்கு தக்ஷிணை கொடுத்தால் தான் யாகம் நிறைவு பெரும்

உடுத்துக் களைந்த -பிரசாதம் கொள்ளக் கூடாது
என்றால் நீங்களே ஒத்துக் கொண்டீர்கள்
தேவதைகள் குடி இருப்பதை ஒத்துக்கொண்டே இந்த வாதம்
ஆவாஹனம் சத்யம்
நிர்மால்யம்-அவசியம் பிரசாதம் கொள்ள வேண்டும்
அடியார்கள்
மூர்க்கர்களுக்குக் கொடுக்கக் கூடாது
பாவனங்களுக்கு பாவானத்வம் கொடுக்கும் பிரசாதம்
தேவதாந்த்ர நிர்மால்யம் தான் தவிர்க்க வேண்டும்
பிராண அக்னி ஹோத்தரம் போல் விஷ்ணு பிரசாதம் –

ஸ்ரீ நாதமுனிக்கு இது ஆனந்தம் கொடுக்கும் என்றும்
அவர் அருளாலே இந்த கத்ய பத்யம் வந்தது என்றும் அருளிச் செய்து நிகமிக்கிறார் –

————–

வைகானஸ ஆகம பிரமாணம்

ஸ்ரீமத்யாயதநே விஷ்ணோஃ சிச்யே நரவராத்மஜஃ
வாக்யதஃ ஸஹ வைதேஹ்யா பூத்வா நியதமாநஸஃ என,
மேலும் வேதத்தில் கூறப்பட்ட யாக மார்கத்தை ஆச்வலாயன ரிஷி முதலானவர்கள் ச்ரௌத ஸூத்ரமாக உபதேசித்தது போல்
வேதத்தில் கூறப்பட்ட தேவபிம்பபூஜையை ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரப்ரவர்தகரான ஸ்ரீவிகனஸ மஹர்ஷியு்ம்
அவருடய சிஷ்யர்களான ப்ருகு, அத்ரி, கச்யப, மரீசி மஹரிஷிகள் உபதேசித்தபடியால் இதுவும் ப்ரமாணமாகும்,
மேலும் ஆச்வலாயனரிஷி முதலானவர்கள் அமூர்தமான பூஜாநடைமுறையை மட்டும் ச்ரௌத ஸூத்ரங்களால் விளக்கினார்கள்,

ஸ்ரீவிகநஸ மஹரிஷியோவெனில் ச்ரௌதத்துடன் நிற்காமல் தர்ம க்ருஹ்ய ஸூத்ரங்களையும் உபதேசித்து
மற்றவர்களால் விடப்பட்ட ஸர்வலோகத்துக்கும் க்ஷேமத்தை பண்ணுகிற மூர்தியுடன் கூடிய பகவதாராதநத்தையும்
உபதேசித்து லோகத்ததுக்கு மஹோபகாரத்தை செய்தவராவார், ஆதலால் பிம்பத்தை பூஜிப்பது வேதத்தில் கூறப்பட்டதால் ப்ராமாணிகமாகும்.

ஆயினும் சிலரின் ஆக்ஷேபம் வருமறு,
ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஸ்ரீவ்யாசமஹரிஷி பாஞ்சராத்ராகமம் ப்ரமாணம் என ஸ்தாபித்தார்,
ஸ்ரீவைகானஸத்தை குறிப்பிடவில்லை, அதுவும் ப்ரமாணமாகில் குறிப்பட்டிருப்பார்,
இது போல் ஸ்ரீயாமுனாசார்யரும் ஸ்ரீபாஞ்சராத்ராகமம் ப்ரமாணமென ஆகமப்ராமாண்யம் என்ற கரந்தத்தால் ஸாதித்தார்,
அவரும் ஸ்ரீவைகானஸத்தை குறிப்பிவில்லை ப்ரமாணமாகில் அதை உபேக்ஷிக்க காரணமென் என.

இதின் வாஸ்தவமான ஸமாதானம்,பாஞ்சராத்ராகமம் ப்ரமாணமில்லை என கூறுவதில் அநேக காரணஙகள் இருந்தன ,
அவையாவன,
நிர்மூலம்,
அஸத்பரிக்ரஹம்,
அவைதிக ஸம்ஸ்கார விதானம் . வித்யா ஸ்தானத்தில் உள் படுத்தாது ,
வைதிகஸம்ஸ்காரத்தை விட்டது, என,

ஆதலால் மந்தபுத்தியை உடையவர்கள் அதை ப்ரமாணமில்லை என கூற அவைகளுக்கு ஸமாதானம் கூறி
அதை ப்ரமாணம் என ஸாதிக்க வேண்டியிருந்தது,
அதுபோல் ஸ்ரீவைகைநஸம் ப்ரமாணமில்லை என ஆக்ஷேபம் இல்லாததால் ஸமாதானம் கூற ஆவச்யகமி்ல்லை ,
ஆதலால் அவர் அதை குறிப்பிடவில்லை,

ஆயினும் ஸ்ரீயாமுனமுனியானவர் ஸ்ரீபாஞ்சராத்ராகமத்துக்கு ப்ராமாண்யம் கூறியது போல்
ஸ்ரீவைகாநஸத்துக்கு ப்ராமாண்யம் கூறாததால் இது ப்ரமாணமில்லை என கூறுவர் என்று நினைத்தே
ஸ்வாமி தேசிகன் ந்யாய பரிசுத்தி எனும் நூலில் ஸ்ரீவைகாநஸ சாஸ்த்ரத்தை குறித்து
1,வேதாவிருத்தத்வாத்,
2.வைதிகமந்த்ரைரேவ ஸகலகர்மவிதாநாத்,
3,ஸூத்ராந்தராணாமபி குண்டஸம்நிவேசலகேஷணாதிஷு க்வசித் க்வசித் ததுபஜீவநாத்,
4.வர்ணாச்ரமதர்மாணாமனுகூலம் நாராயாணபரத்வப்ரதிபாதநாதேரபி
5.ஸத்வமூலத்வேன
6..ப்ராமாண்யைகஹேதுத்வாத்.
இந்த பகவத் சாஸ்த்ரம் வேத விருத்தமல்லாததால், வைதிக மந்த்ரங்களாலேயே எல்லா கர்மாக்களையும் அனுஷ்டிப்பதால் ,
மற்ற ஸூத்ரங்களிலும்,குண்டங்களை நிர்மாணம் செய்வதில் சிலவிடங்களில் ஸ்ரீவைகாநஸத்தை அனுஸரிப்பதால்,
வர்ணாச்ரம தர்மங்களுக்கனுகுணமாக நாராயணனே பரதேவதை என உரைப்பதால்
ஸத்வமூலமுமானபடியால் ப்ரமாணமென்பதில் மாத்ரம் இது காரணமானபடியால் இது ப்ரமாணமாகும் என,

மேலும் ஸ்ரீவைகாநஸானுஸாரிகளை குறித்து
த்ருச்யந்தே ஹி ஏதே வம்சபரம்பரயா வேதமதீயாநாஃ , வைகாநஸஸூத்ரோக்தவைதிகஸகலஸம்ஸ்காரசாலிநஃ,,
வர்ணாச்ரமதர்மகர்மடாஃ , பகவதேகாந்தா, ப்ராஹ்மணாஃ..
ஸ்ரீவைகாநஸர்கள் வம்ச பரம்பரயாய் வேதாத்யயனம் செய்தவர்களாய், வைகாந ஸஸூத்ரத்தில் கூறியபடி
எல்லா வைதிக ஸமஸ்காரங்களை உடையவர்களாய் வர்ணாச்ரம தர்ம கர்மாக்களை அனுஷ்டிப்பவர்களாய்
பகவானிடத்தில் மாத்ரம் பக்தியை உடைய ப்ராஹ்மணர்களாக காணப்படுகிறார்களல்லவா என ஸாதிக்கிறார்,

ஸ்ரீபாஷயகாரருக்கு பின்பு ஸ்ரீவைகாநஸம் ப்ரமாணமில்லை என எழுந்த ஆக்ஷேபத்தை பரிஹரித்து
ஸ்ரீவைகானஸாகமத்தை ஸம்ரக்ஷித்தவர் ஸ்வாமி தேசிகனானபடியாலேயே
ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரானுயாயிகளான ஸ்ரீவைகாநஸ பட்டாசார்யர்கள் அனைவரும்,
க்ருதக்நே நிஷ்க்ருதிர் நாஸ்தி என சாஸ்த்ரம் கூறியபடி ஸ்வாமி தேசிகனின் அவதாலஸ்தலமான ஸ்
ரீதூப்புலில் கைங்கர்யம் செய்துவரும் பட்டாசார்யர்களைப்போல்,
ஸ்வாமி தேசிகனிடத்தில் பக்தி ச்ரத்தையுடன் க்ருதஞதையுடன் இருக்க ப்ராப்தம் என்பதாகிறது.

ஸ்ரீவைகாநஸாகமமானது சதுர்தச வித்யாஸ்தானத்தி்ல் ஒன்றான தர்ம சாஸ்த்ரத்தி்ல் சேர்ந்ததாகும்,
ஸ்வாமி தேசிகன் ந்யாய பரிசுத்தியில் மன்வத்ரிபார்கவாதிவத், மனு, அத்ரி, ப்ருகு முதலானவைகள் கூறியதும்
தர்மசாஸ்த்ரமாகும் என ஸாதித்தார்,
ஸ்ரீமத்பாகவதத்தில் வைதிகஸ்தாந்த்ரிகோ மிச்ர இதி மே த்ரிவிதோ மகஃ என்பதால்
ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரத்தில் கூறியபடி செய்யும் ஆராதனமே வைதிகமாகும்–
பாஞ்சராத்ரோக்தாராதனம் தாந்த்ரிகமாகும்,மற்றது மிச்ரமாகும்,
மூர்தயஜனம் ஆமூர்தயஜனம் என்று இரண்டுவிதமான பகவதாராதனத்தில் ஸமூர்தமான ஆராதனத்தை குறிப்பிடும்

வைகாநஸாகமத்தில் அமூர்தமான யாகத்தில் உள்ள ஸாம்யம் வருமாறு,
எல்லா வைதிககர்மாக்களுக்கும் மூலம் அக்ந்யாதாநமாகும், அதாவது,ஓரிடத்தி்ல் அக்னியை ப்ரதிஷ்டை செய்வது,
1,அக்ந்யாயதனங்களில் ஹிரண்யத்தை வைக்க வேணும், அது போல் பிம்பத்தி்ன் பீடத்தில் ரத்னாதிகளை வைக்கிறார்கள்,,
2,யாகத்தில் அக்னி, கார்ஹபத்யம், ஆஹவனீயம், அன்வாஹார்யம்,ஸப்யம், ஆவஸத்யம் என ஐந்து விதமாகும்,
ஆகமத்தில் த்ருவபேரம், கௌதுகபேரம், உத்ஸவபேரம்,ஸ்நபநபேரம், பலிபேரமென ஐந்து வகை உள்ளது,
3.ச்ரௌதத்தில் கார்ஹபத்யத்தில் நின்றும் ஆஹவநீயத்தை எடுப்பதுபோல்
த்ருவ பேரத்தில் நின்றும் மற்ற பேரங்களில் ஆவாஹனம் செய்யப்பட்டு ஆராதநம் செய்யப்படுகிறது,
4, ச்ரௌதத்தில் சில இடங்களில் த்ரேதாக்னி ப்ரஸித்தம்,
அதுபோல் ஆலயத்திலும் சிலவிடங்களில் மூன்று பேரத்தை மாத்ரம் ஸேவிக்கலாம்,
5.ச்ரௌதத்ததில் நித்யாக்நிஹோத்ரம் போல் ஆலயத்தில் நித்யாராதனமாகும்,
தர்சபூர்ணமாஸ இஷ்டிபோல் ஸ்நபநம் , பஞ்சபர்வோத்ஸவங்கள்,
6.நித்யாக்நிஹோத்ரமும் நித்யாராதனமும் வைதீக மந்த்ரத்தால் நடைபெறுகிறதுகள், மேலும் மற்றுமுள்ள ஸாம்யம்
7.அமூர்தயாகத்தின் துல்யமான பலனும் வைதீக மந்த்ரவத்தான விக்ரஹாராதனத்தால் கிடைக்கும்,

மரீசிமஹரிஷி ஸாதிப்பது-
க்ருஹே தேவாயதனேவா பக்த்யா நாராயணமர்சயேத்,

கச்யபர் ஸாதிப்பது,
தஸ்மாதலயே நித்யம் விதிநா விஷ்ணோரர்சனம், அநாஹிதாக்நீநாமக்நிஹோத்ரஸமம்
யஸ்மாதேதச்சாக்நிஹோத்ரபலம் ததாதி,

ஆனபடியால் ஆலயத்தில் நித்யம் விதியுடன் கூடிய பகவதாராதனம் என்பது
ஆஹிதாக்னியல்லாதவர்களுக்கு அக்னி ஹோத்ர ஸமமாகும், காரணம் கூறுகிறார்
ஆராதனமானது அக்நி ஹோத்ரபலத்தை கொடுக்கும் என,

காம்ய பலத்தை விரும்பும் ஆஹிதாக்னியல்லாதவர்கள் பல ஸாதனநமான கர்மாக்களை ஆஹிதாக்னியான தீக்ஷிதன்
மூலமாக செய்வித்து அதின் பயனை அடைவதுபோல்,
உதாஹரணமாக
மழையை வேண்டி காரீரி இஷ்டி செய்வதால் நடத்தியவர்களுக்கும் பயனை காண்கிறோம்
அது போல் ஆலயத்தில் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய தகுதியற்ற மற்றவர்கள்
ஸ்ரீவைகாநஸ அர்சகர்கள் மூலமாக ஆராதனம் மற்றும் உத்ஸவாதிகளை நடத்தி ஆராதனாதிகளை செய்வதின் பயனால்
அவரவர்களின் விருப்பத்தை பெறுகிறார்கள்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் வேத ப்ரதிபாதிதமான யாகத்ததை செய்வதில்லை,
யாகனுஷ்டான பரம்மபரை மிகவும் குறைவு என சிலர் குறை கூறுகிறார்கள்.
ஸ்ரீபாஷ்யகாரரின் பிதா கேசவஸோமயாஜீ , ஆயினும் ஸ்ரீபாஷ்யகாரர் ஸம்ஸாரத்தில் விரக்ராய்
ஸந்யாஸம் ஸ்வீகரித்தபடியால் யாகானுஷ்டானத்தில் அவகாசமில்லை,

ஸ்வாமி தேசிகன் காலத்தில், தற்சமயம் பாரத தேசத்துக்கு சீனா ,பாகிஸ்தான் முதலிய அண்டை நாடுகளின் உபத்ரவம் போல்
ஸம்ப்தாயத்துக்கு அத்வைதிகளாலும் ஏகதேசிகளாலும் அபாயம் ஏற்பட
அதை ஸம்ரக்ஷிக்கவேண்டிய நிர்பந்தம் .வாதம் செய்வதும் பரமத நிரஸநார்தமாக க்ரந்தம் அனுக்ரஹிக்க வேண்டிவந்ததாலும்
பரமத நிரஸந பூர்வகமாக ஆலயங்களில் யாக ரூபமான திருவாராதனத்தை நடத்தி வைத்த படியால்,
பிதாமஹன் புண்டரீகாக்ஷயஜ்வாவானபடியாலும் யாகம் செய்யாவிடினும் தோஷமில்லை என்பதாலும்
யாகானுஷ்டானம் செய்ததாக ப்ரமாணம் காணவில்லை எனலாம்,
ஆயினும் சிலர் ஸ்வாமி யாகமனுஷ்டித்ததாக கூறுகிறார்கள்.
சிலர் ஸ்ரீதேசிகனுக்குப்போல் விரக்தியில்லாதபோதும் யாகம் செய்யாததில் தேசிகனே யாகம் செய்யவில்லை என்பார்கள்.

வைகாநஸர்கள், வைஷ்ணவர்களே அல்ல,
பஞ்சஸம்ஸ்காரத்தில் சேர்ந்த தப்த சங்க சக்ர தாரணத்தை- ஸமாச்ரயணம் செய்தவர்களே வைஷ்ணவர்கள்,
வைகாநஸர்களுக்கு தப்தசங்கசக்ரதாரணரூபமான கர்மா கிடையாதே என கேள்விக்கு
ஸ்வாமிதேசிகன் சரணாகதி தீபிகையில் ஸாதிக்கும் ஸமாதானம்,
த்வாம் பாஞ்சராத்ரகநயேந ப்ருதக்விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாராஃ ஸம்ஞாவிசேஷநியமேந
ஸமர்சயந்தஃப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தந்யாஃ ப்ருதக்விதேந,
நியத என்கிற பதப்ரயோகத்தால் தப்தசங்கசக்ரதாரணம் இல்லாமலே வைகாநஸர்களுக்கு
பகவதாராதனத்தில் அதிகாரம் உள்ளது என்பதை குறிப்பிட்டதாகும்,
நியதாதிகாரமென்பது அவரவர்களின் சாஸ்த்ரத்தில் கூறிய ப்ரகாரம் அதிகாரமுள்ளவர்கள்,
ஆகையால் அவர்களுக்கு பகவாதாராதனம் செய்ய யோக்யதையை பெற தீக்ஷை இல்லை.
தீக்ஷை யில்லாததே பாஞ்சராத்ரத்தை விட வேறுபட்டதாகும்,
தீக்ஷைஷயிலேயே பஞ்சஸம்ஸ்காரமும் சேருவதால் தீக்ஷையில்லாதவர்களுக்கு பஞ்சஸம்ஸ்காரமும் தேவையில்லை என்பதாம்.

அவர்களின் சாஸ்த்ரத்தில்
கர்பே மாஸி அஷ்டமே விஷ்ணுபலிம் குர்யாத்யதாவிதி
தஸ்மின் திநே ப்ரவிஷ்டோஹம் கர்பே தஸ்யாஃ சிசும் ப்ரதி,
மத்கரேஷுஸ்திதம் சக்ரம் சங்கம் சைவ ததைவ ச
மத்கரேணைவ குர்வந்தி கர்பே தஸ்யாஃ சிசோர்புஜே.
வைகாநஸாதிசாஸ்த்ரேண ஸய்தயம் கர்பவைஷ்ணவஃ
கர்பத்தின் எட்டாவது மாதத்தில் விஷ்ணு பலி என்கிற கர்மாவை அனுஷ்டிப்பதால் அந்த தினத்தில்
நான் கர்பத்தில் ப்ரவேசிப்பதால், என்கையிலுள்ள சங்க சக்ரத்தாலேயே சங்கசக்ரதாரணத்தை செய்கிறார்கள் என்பதால்
அவர்களுக்கு தப்தசங்கசக்ரதாரணம் தேவையில்லை, இதனால் சில ஆலயங்களில் தப்த சங்க சக்ர தாரணம்
செய்த வைகாநஸர்களே ஆராதனம் செய்யவேணுமென்பது அவர்களின் சாஸ்தரத்துக்கு விருத்தமாம்.

வைகாநஸரிஷி முதலாக இதுநாள் வரையில் அவர்களின் வம்சத்தில் ஜனித்தவர்களான வைஷ்ணவர்களே
ஆலயத்தில் வைகாநஸாகமப்ரகாரம் ஆராதனம் செய்யத்தகுந்தவர்கள்,
போதாயன ஸூத்ரகாரர்கள் ஆபஸ்தம்பஸூத்ரப்ரகாரம் வைதீககர்மாவை அனுஷ்டிக்க முடியாதது போல்
வைகாநஸரல்லாதவர்கள் வைகாநஸமுறைப்படி வைகாமஸஸூத்ரப்ரகாரம் ஆராதநம் செய்ய அதிகாரிகளல்ல.

ஸ்ரீவைகாநஸ ஆகமப்ரகாரம் திருவாராதனம் நடைபெறுவதில் திருவேங்கடமாகிற திவ்யதேசம் ப்ரதானமாகும்,
பிற்காலத்தில் ஸ்ரீவைகாநஸத்தை ப்ரமாணமாக்கி ஸம்ரக்ஷித்தபடியாலேயே ஸ்வாமி தேசிகனின் அவதாரஸ்தலமான ஸ்ரீதூப்புலிலும்,
மற்றும் ஸ்வாமி உகந்தருளின திருவஹீந்திரபுரம், திருவிண்ணகர் முதலிய திவ்யதேசங்களிலும்
ஸ்வாமிக்கு ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரோக்தப்ரகாரம் நித்யபடி திருவாராதனம் மற்றும் உத்ஸவாதிகளும் நடைபெறுகிறது எனலாம்.

வைகாநஸாகமத்தில் அமூர்தமான யாகத்தின் ஸாம்யம் உள்ளதுபோல்
திருமலைக்கும் ஸ்வாமிதேசிகனின் அவதார ஸ்தலத்துக்கும் பல ஸாம்யங்கள் உள்ளன,
1.திருமங்கையாழ்வார் ,பொன்னை மாமனியை –வேங்கடத்து உச்சியில்–காணும் தண்காவிலே என மங்களாசாஸநம் செய்கிறார்,
இதனால் இங்கு ஸ்வாமிதேசிகனின் அவதாரம் ஸூசிதம்,
2..இருவருக்கும் ஸ்ரீவேங்கடேசன் என திருநாமம்
3.இரண்டு ஸ்தலத்திலும் வைகாநஸ பகவத் சாஸ்த்ரோக்தப்ரகாரம் திருவாரதனம் நடைபெறுகிறது,
4.இரண்டு இடத்திலும் ஒரே காலத்தில் வார்ஷீக உத்ஸவம் நடைபெறுகிறது,
5.இரண்டு ஸ்தலத்திலும் திருவாராதனத்துக்கு த்ரவ்யம் அடியார்களால் ஸமர்ப்பிக்கப்படுகிறது,
ஸம்யகாசாரயுக்தாம் என ஸ்வாமிதேசிகனால் கொண்டாடப்பட்ட திருமலையில் திருவாராதனத்தில் வைகல்யில்லாததால்
ஸம்வத்ஸரப்ராயச்சித்தரூபமான பவித்ரரோத்ஸவம் ஸமீபகாலம் வரையில் நடைபெறவில்லை.,
6.இரண்டு ஸ்தலத்திலும் திருமலை நம்பி வம்சத்தை சேர்ந்தவர்கள் திருவாராதனத்தில் ப்ரதானமான பாராயணத்தையும்
மந்த்ர புஷ்ப கைங்கர்யத்தையும் செய்து வருகிறார்கள்,

காம்ய பலத்தை விரும்பும் ஆஹிதாக்னியல்லாதவர்கள் பலஸாதனநமான கர்மாக்களை ஆஹிதாக்னியான தீக்ஷிதன்
மூலமாக செய்வித்து அதின் பயனை அடைவது போல் ஆலயத்தில் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய தகுதியற்ற மற்றவர்கள்
ஸ்ரீவைகாநஸஅர்சகர்கள் மூலமாக ஆராதனம் மற்றும் உத்ஸவாதிகளை நடத்தி ஆராதனாதிகளை செய்வதின் பயனாக
அவரவர்களின் விருப்பத்தை பெறுகிறார்கள் என்பதாக பகவத் சாஸ்த்ரம் கூறுகிறபடியால்
இந்த திருத்தண்கா திவ்யதேசத்தில் நடைபெறும் நித்ய திருவாராதன
கைங்கர்யத்தில் இதுவரை அன்வயிக்காதவர்கள் ஸ்ரீதேசிகனடியார்கள் யதாசக்தி அன்வயித்தாலும்
எம்பெருமான் மற்றும் ஆசார்ய ச்ரேஷ்டரின் அனுக்ரஹத்தால் அவரவர்களின் இஷ்டங்களை பெறலாம் என்பது திண்ணம்,

————–

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:

——–

ஸ்ரீ ஆளவந்தார் வாழித்திருநாமம் :

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறைநான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழி
கச்சிநகர் மாயன் இருகழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக்குக் காலுதித்தான் வாழியே
அச்சமர மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபாஞ்சராத்ரம்–ஸ்ரீ ரெங்க பங்கஜம் –ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்–

December 25, 2020

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும், ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்
ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ரபாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.
இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய
ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே.
நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும்,
இவனல்லால் வேறு தெய்வமில்லை..! இந்த பரமபருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது
மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்! உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்!
ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து, தம் நிலை தாழநின்று தன்னைப் பற்றினார்காக
தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

———-

“ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”.
பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது
நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

——-

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
“சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

——–

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள்,
உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும், பொதுவாக ஆகமம் என்பது
வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

——-

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்–ஸ்ரீரகஸ்யத்ரய ஸாரம்-

மூலம் – அப்போது,
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும்,
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும்
சொல்லுகிறபடியே ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே
ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும் ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

பௌஷ்கர ஸம்ஹிதை –
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –
எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும்,
அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை –
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர்,
அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை –
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) –
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின்
அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும், இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா –
என்பதன் மூலம் அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) –
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் – மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும்
எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும் அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு,
தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவு தடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் – என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில்
என்னை அமைக்கின்றனரோ, அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும்
கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக அவனது அர்ச்சா ரூபத்தில்
உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும். அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத் தன்மை
ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) –
ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) –
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய்
என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) –
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ,
அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும். இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை
மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் –
தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

ஸர்வசக்தி படைத்த அவன் சக்தியேயில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர் பார்த்திருப்பது தான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே-விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது அந்த
பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும்,
சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என்னில் முன்னம் பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே -திருவாய்மொழி 9-6-10

———

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்னத்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்யதேசத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும், ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும், காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”
என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).
குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).
இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

——–

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனு தினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும், சாங்க்ய சித்தாந்தத்தில்
(இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும், யோக சித்தாந்தாத்தில்
(இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் * ஏற வீற்றிருந்தாய்!
உன்னை எங்கெய்த கூவுவனே”-திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில் பிரும்மாவினுடைய
புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த
பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!
தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய்
சாண்டில்யர் விளங்கக் கண்டார். அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற
ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது
வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..! எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.!
சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை
அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான். ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!)
நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது. நாரதருடன் கூட
ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய
எட்டு மஹரிஷிகளும் இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது.
இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.
இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!
இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!
எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை
இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!
இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன், இதில் சொல்லப்பட்டுள்ள
மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவை எவை யென்று இந்த
பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும்
கடைத்தேற வேண்டி இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம்
மட்டிலும் கொண்ட மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யசூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய
ஞான காண்டம் மறைந்து விட்டது (ஸ்ரீநாராயண சூரியின் வியாக்யானம் எவரிடமாவது உள்ளதா..? என்று தெரியவில்லை..!)
1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

—-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.
படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச” என்று
மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும் (முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளே சொல்லக் கூடாது.
உரத்த குரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார்.
புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

—–

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!
இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!
இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?
கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!
இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!
நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் பாய்கின்றது. அதில் நம் பூர்வாச்சார்யர்கள்
அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!)
சதுர்வேதி மங்கலத்தில் அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

———-

தியான ஸ்நானம்
மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

——

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்…..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வபுண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

———

நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ளவேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும் ஊர்த்வபுண்டரம் இன்றி
செய்வோமாயின் பலனற்றதாகிவிடும். ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான
ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்கவேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிரவிரலில் பவித்ரம் தரித்துக் கொள்ளவேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ரமோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்). பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட
ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

———-

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.

சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.

சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.

த்வாரம் அருகே சென்று தசதிக்பந்தனம்
(8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம்,
நமஸ்ஸூக்களாலே புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக்கதவுகளைத் திறக்கவேண்டும்.

——-

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“

(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி

(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது. கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம்

இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.

கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை

பிங்களா – சிகப்பு

காந்தாரி – மஞ்சள்

ஹஸ்திஜிஹ்வா – கருப்பு

பூஷா – கருமஞ்சள்

யஸஸ்வினி – பச்சை

அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)

குஹூ – இளஞ் சிகப்பு

கோசினி – கருப்பு

இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்

பிங்களா – அபானன்

அலம்புஸா – சமானன்

குஹூ – வ்யானன்

சுழும்னா – உதானன்

பிங்களா – நாகன்

பூஷா – கூர்மன்

யஸஸ்வினி – க்ருகரன்

ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்

கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்

கூர்மன், அபானன் – இந்திர கோபன்

சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்

தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்

தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

———

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.

சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.

வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.

உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.

இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகவேகமாக சுவாசத்தினை
உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும் ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி
நிதானமாக சுவாசிக்கின்றோமோ ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும்,
ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?

இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.

இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக
உங்கள் கைவிரல்களால் ஒரு சொடுக்குப்போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம் குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம்
“அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.

அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் -வேதம் -மறையோர்- சப்த பிரயோகம் —

January 20, 2020

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்,
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்……என் நெஞ்சுள் நிறுத்தினான் (கண்ணினுண் சிறுத்தாம்பு 8-9)
“நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்” (மதுரகவியாழ்வார்)
மிக்கார் வேதிவிமலர்” (திருவாய்மொழி 2-9-8)
“வேதநூல் ஓதுகின்றது உண்மை அல்லதில்லை மற்று உரைக்கின்றேன் “ என்று திருமழிசைப்பிரான் (72)

பெரிய ஜீயரும் ஆத்யஸ்யந: குலபதே; என்ற ஸ்ரீஸூக்திக்கு “வைதிக ஸந்தான கூடஸ்தர்

ஆழ்வார்கள் வேதங்களை செஞ்சொல்லாகக் குறிப்பிடுகிறார்கள்.

(யதோ வாசோ நிவர்தந்தே) ஆழ்வார்களும் இந்த வழியில் நின்றே இறைநிலை உணர்வரிது என்று கூறுகிறார்கள்

திருமங்கை ஆழ்வாரும் நான்மறையும் தொடராத பாலகனாய் என்றும் (4-1-8)
நான்மறைகளும் தேடிக் காணமாட்டாச் செல்வன் (4-8-7) என்று குறிப்பிடுகிறார்.

சுடர்மிகு சுருதி–“அநாதியானது” “அபௌருஷேயமானது” -எம்பெருமான் வேத விளக்கு
பல இடங்களில் ஆழ்வார்கள் வேதத்தையும் விளக்காகக் கூறுகிறார்கள்.
மறையாய் விரிந்த விளக்கை (8-9-4) வேத நல்விளக்கை (4-3-8) (திருமங்கை மன்னன் )–
வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (பெரியாழ்வார் 4-3-11)
நந்தா விளக்கு என்ற சொற்றொடர் வேதத்தைக் குறிப்பிடுவதாக பெரிய ஜீயர் உள்ளிட ஆசார்யர்கள்
திருவுள்ளம் பற்றுவதற்கு எம்பெருமான் வேதவிளக்காக விளங்குவதே காரணம்.

ஹம்சமாயும் ஹயக்ரீவனாயும் அவதாரம் பண்ணி வேதத்தை உபதேசம் பண்ணுகிறான்
(அன்னமாய் அங்கு அன்று அருமறை பயந்தான் [பெரியதிருமொழி 5-7-3]
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை [112-1-107])
“பன்னு கலை நால் வேதப் பொருளை யெல்லாம் பரி முகமாய் அருளிய எம்பெருமான் காண்மின்” பெரியதிருமொழி -7-8-2.)

வேத சம்பந்தத்தை முன்னிட்டுக் கொண்டு ஸ்ருஷ்டியை அநுபவிப்பதையும் பார்க்கிறோம்.
(பன்னு நான்மறை பலப் பொருளாகிய 3-1-2,
எழில் வேதப் பொருள்களுமாய் 4-1-2) என்று திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார்

எம்பெருமான் மறையின் பெரும் பொருள் என்று பேசுகிறார்கள்.
ஏலுமறைப் பொருளே (பெரியாழ்வார் 1-9 வேதப் பொருளே 2-9)
நான் மறையின் பொருளாய் (நாச்சியார் திருமொழி 1-4-10),
சாம வேத கீதன் சக்கரபாணி (14) வேதகீதன் (117) (திருமழிசைப்பிரான்),
நங்கோது நால்வேதத்திலுள்ளான் (மூன்றாம் திருவந்தாதி11) நால்வேதத்திலுள்ளான்(31)
மறைப் பெரும் பொருளை (திருமங்கை ஆழ்வார் 4-3-2)
அங்கமாறு வேத நான்குமாகி நின்று அவற்றுளே தங்குகின்ற தன்மையாக (15 திருச்சந்த விருத்தம்)
மறையாய நால் வேதத்திலுள்ள மலர் சுடரே (திருவாய்மொழி 3-1-10).
இவ்விதம் எம்பெருமானை வேதப் பிரதிபாத்யனாகச் சொல்லி ஆழ்வார்கள் அநுபவிப்பதைப் பார்க்கிறோம்.

(ப்ரதமஜா ருதஸ்ய) இதையும் ஆழ்வார்கள் மனதிற்கொண்டு வேத முதல்வன் என்று எம்பெருமானை அநுபவிக்கிறார்கள்.
வேத முதல்வனை (திருவாய்மொழி 3-5-5) வேத முதல்வர் (நாச்சியார் திருமொழி 1-10-2).

(ரஸோ வை ஸ:)-(ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தீ பவதி
அருங்கரும்பினை கனியை, அமுதப் பொதியின் சுவையும் (பெரிய திருமொழி 7-10-1),
பாலும் தேனும் கன்னலும் அமுதுமாகி (திருவாய்மொழி 4-3-10) என்றும் எம்பெருமானை அனுபவிக்கிறார்கள்.
அம்ருதமாக எம்பெருமானை அனுபவிக்கும் ஆழ்வார்கள் வேத சம்பந்தத்தோடு அந்த அமிருதத்தை அனுபவிக்கிறார்கள்.
வேதியர் முழுவேதத் தமிர்தத்தை (நம்மாழ்வார் 2-5-4),
அந்தணர்தம் அமிர்தத்தினை (பெரியாழ்வார் 5-4-11),
நால்வேதக் கடல் அமுதத்தை (பெரியாழ்வார் 4-3-11) என்று வேத சம்பந்தத்தோடு எம்பெருமானை அமிருதமாக அனுபவிக்கின்றனர்

வேதம் எம்பெருமானே! (வேதமாகி, வேள்வியாகி, [திருச்சந்தவிருத்தம்]
விஷ்ணு புராணத்தில் பகவான் வேதமாகவும் வேள்வியாகவும் அவதாரம் செய்கிறான் என்று பராசர பகவான் ஸ்பஷ்டமாக கூறுகிறார்.
[வேத யஜ்ஞமயம், ரூபம் அசேஷ ஸ்திதௌ ஜகத:]
இதைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும் பகவானை வேதமாகி நிற்கிறான் என்று அருளிச் செய்கிறார்கள்.
“நான்மறையாய் வேள்வியாய்” (பெரியாழ்வார் திருமொழி 4-9-5)
“மறையானான்” (பெருமாள் திருமொழி 1-4-8),
“ வேத நான்குமாகி” (திருமழிசைப்பிரான் 15), “ வேதமாகி வேள்வியாகி (34), “இருக்கலந்த வேத நீதியாகி நின்ற நிர்மலா” (103),
“வேதத்தை” ( திருமங்கை மன்னன் 2-3-2) “ அருமறையும் அவையுமானாய் (4-6-9), நான்மறையானவனே (6-1-6),
“ ஓதல் செய் நான்மறை ஆகியும்” (6-1-9), “ வேதமும் வேள்வியும் ஆனான் “ (9-4-9),
“வேத நான்காய்” (திருநெடுந்தாண்டகம்) மன்னு மறையும் நான்குமானானை

எம்பெருமான் வேதியன்
[பிரும்ம பிராஹ்மண ஆத்மநா ஏதேவை தேவா: ப்ரத்யக்ஷம்” ஆழ்வார்களும் “நிலத்தேவர்” என்று குறிப்பிடுவார்கள்.
சிறுமறையோன் (குலசேகரர் 1-10-9),
வேங்கட வேதியனை (திருமங்கை மன்னன் 1-9-10), புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கடவேதியனை (9-9-9),
வெண்புரி நூலனை (திருவிருத்தம் 79), தாமரைக்கண்ணும் வைதிகரே (திருவிருத்தம் 94), வெறிகொண்ட தண்டுழாய்வேதியனை (திருவிருத்தம் 95),
மெய்ஞான வேதியனை (திருவாய்மொழி 3-1-11), மறைவாணனை (திருவாய்மொழி 4-6-10), வினயேனுடை வேதியனே (திருவாய்மொழி 7-1-2)
என்பது போன்ற இடங்களில் ஆழ்வார்கள் பகவானை வேதியனாகவே அனுபவிக்கிறார்கள்.
வேதியர்கள் பகவானிடம் பக்தியுள்ளவர்களே .
தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு பக்தி இல்லை அருள் வேண்டும் என்று யாசிக்கும் காலத்தில் நைச்யாநு ஸந்தானம் பண்ணுகிறார்.
அப்பொழுது “குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொளந்தணமை தன்னை ஒளித்திட்டேன் “ (திருமாலை 25) என்று
அருளிச் செய்வது மறைமுகமாக ப்ராஹ்மண்யத்தின் பெருமையை விளக்குகிறது.

வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுவதே பூர்ணமானது.
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை
ஓவாதே ‘நமோநாரணா!’ என்று
எண்ணாநாளும் இருக்கெசுச்சாம
வேத நான்மலர் கொண்டுன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்றெ னக்கவை பட்டினி நாளே. (5-1-6)

இங்கு திருவஷ்டாக்ஷரத்தையும் வேத மந்திரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பேசுவது
அவைகள் மூலம் ஏற்படக்கூடிய அனுபவ பிரகாரத்தை பற்றியது.
திருவஷ்டாக்ஷரத்தால் சிறிய அளவில் பகவதனுபவம் ஏற்படுகிறது என்று திருவுள்ளம் பற்றுவது கவனிக்கத் தக்கது.
இங்கு பெரிய ஜீயர் செய்யும் விவரணம் மிகவும் அழகாக அமைந்துள்ளது.
“திருமந்திரம் சங்க்ரஹமும் வேதம் விவரணமாயிறே இருப்பது” என்று அருளிச் செய்கிறார்.
அதுமட்டுமல்ல, “நமோ நாரண என்றது போராமே பெரும் திருப்பாவாடையிலே மண்டுகிறார்” என்று அருளிச் செய்வதும் கவனிக்கத் தக்கது.
அரும்பதக்காரர் திருநாமம் சிறிய திருப்பாவாடை வேதம் பெரிய திருப்பாவாடை என்று வர்ணிக்கிறார்.
உலகத்தில் பசிக்குத் தகுந்தாற்போல் உணவை உட்கொள்வதைப் பார்க்கிறோம்.
சிறிய அளவில் பசி உள்ளவன் சிறிய திருப்பாவாடையில் உள்ள உணவை உட்கொண்டு திருப்தி யடைகிறான்.
பெரிய பசி உள்ளவன் பெரிய திருப்பாவாடையில் உள்ள உணவை உட்கொண்டு திருப்தியடைகிறான்.
பெரிய ஆசை உள்ளவன் பெரிய திருப்பாவாடையில் உள்ளதை அனுபவித்து உத்ஸாஹத்துடன் ஈடுபடுகிறான்
என்பதைக் கண்டார்கள் மண்டுகிறார் என்று கூறப் படுகிறது.
இதனால் சிறிய அளவில் பகவதனுபவம் பண்ண நினைப்பவர்களுக்கு திருநாமம் போதுமானதென்றும்
பெரிய அளவில் பகவதனுபவம் பண்ண வேதங்களையே நாட வேண்டும் என்றும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றுவது வெளியாகிறது.

( இருக்கார் மொழியால் நெறி இழக்காமை உலகளந்த திருத்தாளிணை நிலத்தேவர் வணங்குவர்.
யாமும் அவா உருக்கா வினையோடும் எம்மோடும் நொந்து கனியின்மையில் கருக்காய் கடிப்பார் போல்
திருநாமச் சொல் கற்றனமே” (திருவிருத்தம் 64)
இங்கு ஆழ்வார் ரிகாதி வேதமந்திரங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுவதை பழத்தை புஜிப்பதோடும்
திருநாமம் கற்று பகவதனுபவம் பண்ணுவதை கருக்காய் கடிப்பதோடும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
ஸ்வத:ப்ரமாணமாயும், எம்பெருமானின் ஸ்வரூபாதிகளை நேரிலேயே காட்டித் தரவல்ல விலக்ஷண ப்ரமாணமாயும்
வேதம் இருப்பதால் வேத மந்திரங்களைக் கொண்டு பகவதநுபவம் பண்ணுவது பழத்தைப் புஜிப்பது போலாகிறது.
திருநாமம் பகவத் வாசகமானாலும் ஸர்வவர்ண ஸாதாரணமான அது வேத வாக்யமாக ஆக முடியாததால்
வேதம் போல் திருநாமம் நேருக்கு நேராக பகவதநுபவத்தை உண்டு பண்ண முடியாது.
அதனால் அது காலக்ரமத்தில் பழுத்து ரஸானுபவத்தை உண்டு பண்ண வேண்டிய கருக்காய் ஸ்தானத்தில் இருந்து வருகிறது.

“அறிவென்றும் தாள் கொளுவியைம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி
மறை என்றும் நன்கோதி நன்குணர்வார்கள் காண்பரே நாடோறும் பைங்கோதவண்ணன்படி” (மூன்றாம் திருவந்தாதி 12)
எப்பொழுதும் வேதத்தை செவ்வையாய் அத்யயனம் செய்து ஞானமாகிற பூட்டை தொடுத்து ஐவகையான இந்திரியங்களைத் தொடுத்து
தமக்குள் அடக்குகையாகிற வலிய கதவை அடைத்து நன்றாய் பகவானை அறிய வல்லவர்கள்
அழகிய கடல் நிறத்தனான ஸர்வேச்வரன் வகையை பிரதி தினமும் அறிவார்கள்”

(“மேவித் தொழுதுய்ம்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி
பிழையாமே பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழு மடியாரும் பகவரும் மிக்கதுலகே” திருவாய்மொழி 5-2-9)
நாம் ஆச்ரயிக்க வேண்டிய பெரியோர்கள் வேதங்களைக் கொண்டு பகவதாராதனம் செய்பவர்களாக
இருக்க வேண்டுமென்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுவது வெளியாகுகிறது.

ஸ்ரீ ஆழ்வார் திருவிருத்தத்தில் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்.
(“ மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் மைப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் எப்படி
யூராமிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்றும் அப்படி யானும் சொன்னேன், அடியேன் மற்று யாதென்பனே 94 “
“வைதிகரே அஞ்சனத்தின் ஸ்வபாவமுடைய உன் திருமேனியையும், உன் செந்தாமரைக் கண்களையும் ஸேவித்து
உன் திருவடியை உள்ளபடியே சூடும் ஸ்வபாவமுள்ளவர்கள். ஊருக்கு வெளியில் மேய்ந்து திரும்பும் காலத்தில்
மாட்டு மந்தையிலுள்ள கண்ணுள்ள பசுக்கள் ஊரைக் கண்டதும் கனைக்க அதைக் கேட்டு குருட்டுப் பசுவும் எப்படி கனைக்குமோ,
அப்படியே யானும் சொன்னேன். அடியேன் மற்று எதைச் சொல்லுவேன்” )
வைதிக ஸமூக அமைப்பில் பிராம்மணன் தலைமை ஸ்தானத்திலிருப்பதையே வேதங்களும் ஸ்ம்ருதிகளும் அறுதியிட்டுச் சொல்லுகின்றன.
தலைமையான ஸ்தானத்தை பிராம்மணன் வஹிப்பதற்கு வேதம் அவனிடமிருப்பதே காரணம்.

“நால்வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவர் மிக்க வேதியராதிகாலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலோடும் வாழ்வார்
சீல மாதவத்தர் சிந்தையாளி என் சிந்தையானே!–பெரிய திருமொழி 5-9-9-

(பண்ணி நின் மொழியாய் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயுமிடங் கொண்டான்
கொண்டபின் மறையோர் மனந் தன்னுள் விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும்
கடல் வண்ணன் மாமணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாயுரையாதே) திருமொழி 7-3-7

செல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க,
ஆடரவமளியில் அரிதுயில் அமர்ந்த பரம திருவெழுகூற்றிருக்கை
இங்கு திருக்குடந்தை எம்பெருமான் ஜகத் ரக்ஷணத்தில் அவஹிதனாய்க் கொண்டு திருக்கண் வளருவதற்கு
அங்குள்ள பிராம்மணர்கள் வேத மந்திர மொழிகளால் அவனை வணங்குவதே காரணம் என்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுகிறார்.

(பொருளால் அமருலகம் புக்கியலாகாது, அருளாலரமருளுமன்றோ நீ மறவேல் நெஞ்சே நினை — இரண்டாம் திருவந்தாதி 4)

நீரழலாய் நெடுநிதனாய் நின்னை, அன்று அக்க
னூரழாலுண்டானைக் கண்டார் பின் காணாமே
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையேர் மந்திரத்தின்
ஆரழ லாலுண்டானைக் கண்டது தென்னரங்கத்தே.–பெரிய திருமொழி 5-6-5-

காலை யெழுந்துலகம் கற்பனவும் கற்றுணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும்
வேலைக்கண் ஓராழியானடியே யோதுவது
மோற்பனவும் பேராழிக் கொண்டான் பெயர்.–முதல் திருவந்தாதி (66)

“வேதவாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லிபுத்தூர்” நாச்சியார் திருமொழி 1-2-10)

(“பண்ணூறு நான்மறையோர் புதுவை” 1-5-11)

(“வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்து”…. 1-6-7)

(“அந்தணர்கள் ஒரு மூவாயிரவரேத்த அணிமணி யாஸனத்தில் இருந்தவம்மான்”-பெருமாள் திருமொழி- 1-10-2)

(துணை நூல் மார்வினை அந்தணரும் அண்டா எமக்கு அருளாய் என்று அணையும்-பெரிய திருமொழி- 1-5-9) -ஸாளக்ராமத்தில்

(“தூய நான் மறையாளர் ஸோமம் செய்ய செஞ்சாலி வினை வயலூர் –பெரிய திருமொழி-2-10-1)- திருக்கோவலூரில்

(வந்தனை செய்திசை ஏழாரங்கம் ஐந்து வளர் வேள்வி நான் மறைகள் மூன்று தீயும் சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வ 2-10-2)

(மாடம்தோறும் மறை வளர, புகழ் வளர, மண்டபமுண்டு ஒளியனைத்தும் வாரம் ஓத 2-10-5)
(சீரேறு மறையாளர் நிறைந்த செல்வம் 2-10-8) (சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வ 2-10-10)

(“எழில் விளங்கு மறையும் ஏழிசையும் கேழ்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் மண்ணில் மிகு மறையவர்கள் மலிவெய்து “3-9-2)
“மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து” 3-9-5)-
“உண்மைமிகு மறையோடு நற்கலைகள் நிறை பொறைகள் உதவுகொடை என்றவற்றி னொழிவில்லாப்
பெரிய வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து” 3-9-6)திருநாங்கூர் வைகுந்த விண்ணகரத்தில்

“பெரும்புகழ் வேதியர் வாழ்” 3-10-1)
(“என்றுமிகு பெருஞ்செல்வத்தெழில் விளங்கு மறையோர் ஏழிசையும் கேழ்விகளும் இயன்ற பெருங்குணத்தோர்
அன்றுலகம் படைத்தவனே அனையவர்கள்” 3-10-2)-
அண்டமுறும் முழவு ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் அண்ட முறுமலை கடலின் ஒலிதிகழும்” 3-10-5)
(“நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதமைந்து வேள்வி யோடா றங்கம் நவின்றுக் கலை பயின்றங்கா
மனத்து மறையவர்கள் பயிலுமணி” 3-10-7-
“சாலைகள் தூமறையோர் தொக்கிண்டித் தொழுதியோடு” 3-10-8)
(“மாமறையோர் மாமலர்கள் தூவி அஞ்சலித் தங்கு அரிசரண் என்றிறைஞ்சும்” 3-10-9) திரு அரிமேயவிண்ணகரத்தில்

ஏராரும் பெரும் செல்வத்தெழில் மறையோர்” 4-1-8–திருத்தேவனார்தொகையில்

நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடாறங்கம் வல்ல அந்தணர் மல்கிய” 4-2-2)-திருவண் புருஷோத்தமத்தில்

“ சிறப்புடை மறையோர் நாங்கை” 4-3-2)
“பங்கயத்த அயன் அவனனையத் திடமொழி மறையோர் நாங்கை” 4-3-3)
“செல்வ நான்மறையோர் நாங்கை” 4-3-6)
(“செஞ்சொல் நான்மறையோர் நாங்கை” 4-3-7)
(“இலங்கிய நான் மறையனைத்தும் அங்கமாறு மேழிசையும் எண்டிக்கெங்கும்” 4-4-8-
ஊழிதோறு மூழிதோறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறையனைத்துந் தாங்கும்” 4-4-9–திருநாங்கூரில்-

செஞ்சொல் மறையவர்சேர் புதுவை –பெரியாழ்வார்-1-3-10-
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர் 3-5-11 –
திருவிற் பொலி மறைவாணன் பட்டர் பிரான் 4-1-10-
“தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் “ 4-4-1-
திருந்து நான் மறையோர் இராப்பகல் ஒத்தி வாழ் 4-4—7-
வேள்வி ஐந்து … ஏதம் ஒன்றில்லாத 4-4-6-
நிறைநிறையாக நெடியன யூப நிரந்தரமொழுக்க விட்டு இரண்டு கரை புறை
வேள்வி புகை கமழ் கங்கை கண்டமென்னும் கடிநகர் 4-7-8-
தோதவதித் தூய் மறையோர் 4-8-1-
மறைப் பெரும் தீ வளர்த்திருப்பார் …. மறையவர் வாழ் திருவரங்கம் 4-8-2-

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு, தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற–ஸ்ரீ திருவாய் மொழி–4-2-3-

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,––4-6-8-

அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதோர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே -8-6-10–

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

——————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சித்த விஜயம் -வேத வேதாந்த நிர்ணயத்தில் சாரம் –

January 19, 2019

ஸ்ரீ வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கே ஸ்ரீ வாஸூதேவன் –

ஸ்ரீ மன் நாராயணனே பர ப்ரஹ்மம்

பரத்வ நிர்ணயம் வேத புருஷனே பண்ணி அருளினான்
ப்ரஹ்மா சம்பு குபேர -இவர்களும் பாகவத கோஷ்டியிலே-ஸ்ரீ கேஸவனே காரண வஸ்து என்று காட்டி அருளியதால் அன்றோ –
ஸ்ரீ பராசர மகரிஷி ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ வால்மீகி மகரிஷி ஸ்ரீ ராமாயணத்திலும்
ஸ்ரீ வேத வியாச மகரிஷி ஸ்ரீ மத் பாகவதம் ஸ்ரீ மஹா பாரதம் ஸ்ரீ ஹரி வம்சம் இத்யாதிகளிலும்
ஸ்ரீ பிருகு மகரிஷி -பிரம புத்ரர் -பரிஷீத்து பாத கமலங்களால் புடைத்து நாராயணனே பரன் என்பதை சாதித்தார்-
அவஜாநந்தி மாம் மூடா மானுஷீம் தநும் ஆஸ்ரிதம் – என்று வெறுப்புற்ற ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ விஷ்ணு சித்த ஸ்ரீ விப்ர நாராயண ஸ்ரீ பக்திசார ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பரகாலாதிகளை அவதரிப்பித்து அருளி
அருளிச் செயல்கள் மூலம் பரத்வத்தை பிரகாசப்படுத்தினார்

ஸ்ரீ விஷ்ணு சித்தர் குருமுகமாக அத்யயனம் செய்த நான்கு வேதங்களையும் –
அநந்தா வை வேதா -என்று அத்யயனம் பண்ணாத எல்லா வேதங்களையும் ஓன்று விடாமல்
பிராஹ வேதான் அசேஷான் -என்கிறபடியே
வேண்டிய வேதங்கள் ஓதி பரத்வ நிர்ணயம் செய்து அருளி பொங்கும் பரிவாலே மங்களா சாசனம் செய்து ஸ்ரீ பெரியாழ்வார் ஆனார்
மறந்தும் புறம் தொழா மாந்தர்கள் மனத்தே மறைந்து மன்னி உறைகின்ற மாதவன் விஜயமே ஸ்ரீ விஷ்ணு சித்த விஜயமாகும்

அஹமேவ பரம் தத்வம் -ஆறு வார்த்தையுள் பிரதானம் –
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரே-
வணங்கும் துறைகள் பல பலவாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பலவாக்கி அவை அவை தோறும்
அங்கும் பலபலவாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் -என்றபடி நாட்டினான் தெய்வம் எங்கும்
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்காரம் கேஸவம் பிரதி கச்சதி –
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்குச் சேருமே –

சாக்கியம் கற்றோம் சமண் கற்றோம் சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் -பாக்கியத்தால்
செங்கட் கரியானைச் சேர்ந்து யாம் தீதிலோம் எங்கட்க்கு அறியாது ஓன்று இல் –ஸ்ரீ திரு மழிசைப் பிரான்
நான்முகனை நாராயணன் படைத்தான் -நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் –
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயண பர
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிஸ்த
தத் சர்வம் வ்யாபியா நாராயண ஸ்தித -தைத்ரியம் –

ப்ருஹத்வாத் ப்ரும்ஹணத்வாத் ச தத் ப்ரஹமேத்யபி தீயதே

ப்ரஹ்ம சப்தேந ச ஸ்வபாவதோ நிரஸ்த நிகில தோஷ -அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண
புருஷோத்தம அபிதீயதே – ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள்

ப்ருஹத்வம் ச ஸ்வரூபேண குணை ச யத்ர அனவதிக அதிசயம் ச அஸ்ய முக்ய அர்த்த சச சர்வேஸ்வர ஏவ
அதோ ப்ரஹ்ம சப்த தத்ரைவ முக்ய வ்ருத்த தஸ்மாத் அந்யத்ர தத் குண லேச யோகாத் ஒவ்பசாரிக –பகவச் சப்தவத்

ச விஷ்ணு ஆஹா ஹி
தம் ப்ரஹ்மேத்யா சஷதே தம் ப்ரஹ்மேத் யா சஷதே

நாராயணாய வித்மஹே வா ஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஸ்வரூபத தர்மதேவா அந்யாதாத்வம் கச்சத் போக்ய போக்த்ரு ரூபம் வஸ்து ஜாதம் —

யா ஆத்ம நி திஷ்டன் –ஆத்மந அந்தர –திலே தைலம் திஷ்டதி போலே -அணுவினைச் சதகூறிட்ட கோணிலும் உளன் –

—————————-

ஸ்ரீ மன் நாராயணனே சர்வ காரண புருஷன் –

யதோ வா இமானி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி சம்விசந்தி
தத் விஜிஜ்ஞா ஸஸ்வ தத் ப்ரஹ்மேதி–தைத்ரீயம் -வருணன் தன் குமாரன் பிருகுவுக்கு உபதேசம்
பிரயந்தி -லயம் / யபி சம்விசந்தி-மோக்ஷத்தில் எவன் இடம் சென்று சேருமோ /

ஸர்வதா சர்வ க்ருத சர்வ பரமாத் மேத்யுதாஹ்ருத-மஹா உபநிஷத்

அதாகோ வேத யத ஆப பூவ இயம் விஸ் ருஷ்டிர் யத ஆப பூவ யதி வா ததே யதி வா ந யோ அஸ்யாத்

யஷ பரமே வ்யோமன் சோ அங்க வேதி யதிவா ந வேத -கிம் ஸ்வித் வநம் க உ ச வ்ருஷ ஆஸீத்
யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு மனீஷீனோ மனசா ப்ருச்ச தேது தத்
யத் அத்ய திஷ்டத் புவநாநி தாரயன் ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் –ப்ரஹமாத் யதிஷ்டத் புவநாநி தாரயன் —
ப்ரஹ்மமே வனம் வ்ருக்ஷம் -தரித்து -நியமித்து -ரக்ஷித்து போஷித்து -ஆனால் அறிய முடியாமல்

யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ச அவிஞ்ஞாதம் விஜாநதாம் விஞ்ஞாதம் அவிஜாநதாம்

விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும் விஸ்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம்
விஸ்மேவதம் புருஷஸ் தத் விஸ்வம் உப ஜீவதி –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய
சர்வம் விஷ்ணுமயம் ஜகத்
பஹுஸ்யாம் ப்ரஜாயேய
ஆஜீவ்யஸ் சர்வ பூதா நாம் ப்ரஹ்ம வ்ருஷஸ் சநாதந ஏதத் ப்ரஹ்ம வனம் சைவ ப்ரஹ்ம வ்ருஷஸ்ய
தஸ்ய தத் -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் –

அத புருஷோ ஹ வை நாராயணோ அகாமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி நாராயணாத் ப்ரானோ ஜாயதே
மனஸ் ஸர்வேந்த்ரியானி ச கம் வாயுர் ஜ்யோதிர் ஆப ப்ருத்வீ விஸ்வஸ்ய தாரிணீ
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே
நாராயணாத் பிரஜாபதி ப்ரஜாயதே
நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரா வசவஸ் சர்வாணி சந்தாம்ஸி
நாராயணா தேவ ஸமுத்பத்யந்தே நாராயணாத் ப்ரவர்த்தந்தே
நாராயணே பிரலீ யந்தே
ஏதத் ருக்வேத சிரோதீதே—சர்வ பூதஸ்த மேகம் வை நாராயணம் காரண புருஷம் அகாரணம் பரம் ப்ரஹ்மோம்
ஏதத் அதர்வ சிரோதீதே –ஸ்ரீ நாராயண உபநிஷத்

விரூபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய சாந்தோக்யம்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே

அத புநரேவ நாராயணஸ் சோந்யத் காமோ மனசா தியாயத தஸ்ய த்யாநாந் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் தா இமா
ப்ரததா ஆப தத் தேஜோ ஹிரண்ய மண்டம் தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே –ஸ்ரீ மஹா உபநிஷத்
புநரேவ நாராயணஸ் சோந்யத் காமோ மனசா தியாயத தஸ்ய த்யாநாந் தஸ்ய
லலாடாத் த்ர்யஷச் சூல பாணி புருஷோ ஜாயதே -ஸ்ரீ மஹா உபநிஷத்
இச்சாமாத்ரம் ப்ரபோஸ் ஸ்ருஷ்ட்டி

ஏகோ ஹா வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாநோ நாபோ நாக் நீஷோமவ் நேமே த்யாவா ப்ருத்வீ
ந நக்ஷத்ராணீ ந ஸூர்யோ ந சந்த்ரமா ச ஏகாகீ நரமேத –

லோகாவத்து லீலா கைவல்யம்

சிவ ஏவ ஸ்வயம் சாஷாத் அயம் ப்ரஹ்ம விதுத்தம -ப்ரஹ்ம ஞானி சிவன் என்றவாறு

நைவேஹ கிஞ்சன அக்ர ஆஸீத் அமூலம் அநாதாரா இமா பிரஜா ப்ரஜாயந்தே திவ்யோ தேவ ஏகோ நாராயண -ஸூ பால உபநிஷத்

பால்யே ச திஷ்டா சேத் பாலஸ்ய பாவ அசங்க நிரவத்யோ மவ்நேந பாண்டித்யேந நிரதிகார தயா உபலப்யதே–என்று
ஞானி பாலனைப் போலே -சங்கம் இல்லாமல் குற்றம் இல்லாமல் மௌனியாகவும் பண்டிதனாகவும் மற்றவர்களை
அதிகாரம் செய்யாதவனாகவும் இருப்பான் ஆலினிலை பாலகனாக -பர ப்ரஹ்மத்தை பற்றியே உபதேசிப்பதால் ஸூ பால உபநிஷத்
பீஜ ப்ரஹ்மம் -சகலத்துக்கும் சகல வித காரணன்

சதேவ சோம்ய இதம் ஆக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்–சத்விதியை

ததாஹு கிந்தத் ஆஸீத் தஸ்மை ஹோவாச ந சன்னா சன்ன சத சதிதி தஸ்மாத் தமஸ் சஞ்ஜாயதே
தமஸோ பூதாதி பூதாதே ராகாசம் ஆகாசாத் வாயு வாயோர் அக்னி அக்நேராப அத்ப்ய ப்ருத்வீ
ததண்டம் சமபவத் சம்வத்சர மாத்ர முஷித்வா த்விதா அகரோத்
அதஸ்தாத் பூமிம் உபரிஷ்டாத் ஆகாசம் மத்யே புருஷோ திவ்ய சஹஸ்ர சீர்ஷா புருஷஸ் சஹஸ்ராக்ஷஸ் சஹஸ்ர பாத்
சஹஸ்ர பாஹுரிதி சோக்ரே பூதா நாம் ம்ருத்யும் அஸ்ருஜத் த்ரயக்ஷரம் த்ரி சிரஸ்கம் த்ரி பாதம் கண்ட பரசும் தஸ்ய
ப்ரஹ்மாபி பீதி –அபி வததி —லலாடாத் க்ரோதஜோ ருத்ரோ ஜாயதே -புருஷ ஸூ க்த ஸ்ரீ ஸூ க்தி ஸூ பால உபநிஷத்தில்

தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண –உத்பவஸ் சம்பவோ திவ்யோ ஏகோ நாராயண
மாதா பிதா பிராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண
தாதா–தரிப்பவன் -மம யோநிர் மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்ப்பம் ததாம் யஹம் -ஸ்ரீ கீதை

கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கொற்றப் போர் ஆழியான்
குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்

விதாதா -விதிப்பவன் -கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்ட்டியை விதிப்பவன்
விசித்ரா தேஹ சம்பந்தி
கர்த்தா காரயிதா சைவ ப்ரேரகச் ச அநுமோ -செய்பவன் -செய்விப்பவன் -தூண்டுபவன் -ஆமோதிப்பவன் -நான்கும்

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட-ஸ்ரீ கீதை
அந்தப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் –

தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும் மனமே தந்தாய்
விகர்த்தா -விகாரம் அடையச் செய்பவன்
விகாரம் அடைபவன் -அவிகாராய என்றாலும் ஆஸ்ரிதர் துக்கம் கண்டு -பர துக்க துக்கித்வம் உண்டே
வ்யஸநேஷூ மநுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கிதா
விகர்த்தா-கோப ரூபமான விகாரம் -காலாக்னி சத்ருச க்ரோத – கோபம் ஆஹாரயத் தீவிரம் -கோபஸ்ய வசம் ஆவான்-
அவதரித்துச் செய்த ஆனைத் தோழிகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையே

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றை யாராவாரும் நீ
தாய் தந்தை எவ்வுயிக்கும் தான்
பித்ரு மாத்ரு ஸூ தா ப்ராத்ரு தாரா மித்திராத யோபி வா ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் ஸகீன் குரூன் ரத்நாநி தந தான்யானி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாம்ஸ் ச ஸந்த்யஜ்ய சர்வ காமம்ஸ் ச ச அக்ஷரான் லோக விக்ராந்த சரணவ் சரணம் தே வ்ரஜம் விபோ
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துச் ச குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ தேவ
த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவோ ஹரி பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று இருக்க இவனை மாதா என்பது
ஜகத் வியாபார வர்ஜம் -படியே
தன் இச்சையால் மாத்ருத் வத்தை அவளுக்கு அளிக்கிறான்
ஆகவே ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -அஸ்யேசாநா

பிராதாவின் ஏற்றத்தை -ஜ்யேஷ்டஸ் பிராது பிதுஸ் சம
தேசே தேசே களத்ராணி தேசே தேசே ச பாந்தவா தம் து தேசம் ந பச்யாமி யத்ர பிராதா சகோதர
அஹம் தாவன் மஹாராஜே பித்ருத்வம் நோப லக்ஷயே பிராதா பர்த்தா ச பந்துச்ச பிதா ச மம ராகவ -இளைய பெருமாள் வார்த்தை
இதற்கு கோவிந்தராஜர் வியாக்யானம்
ஏதே ந பரமை காந்திபி ப்ராக்ருத பித்ராதய பரித்யாஜ்யா பகவான் ஏவ நிருபாதிக பிதா பர்த்தா பந்துஸ் சேத் யுக்தம் -என்பர்

நிவாஸ –ஸர்வத்ர அசவ் சமஸ்தம்ச வஸத்யத்ரேதி வை யதி ததஸ் ச வாஸூ தேவேதி வித்வத்பி பரிபட்யதே
வாச நாத் வாஸூ தேவஸ்ய வாசிதம் தே ஜெகத்ரயம் சர்வ பூத நிவாசோஸி வாஸூ தேவ நமஸ்துதே -ஸ்ரீ விஷ்ணு புராணம்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
த்வா ஸூபர்ணா சயுஜா சகாய சமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாத தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்யோ அபிசாகதீதி

நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக
நாராயணேதி மந்த்ரோஸ்தி வாக் அஸ்தி வசவர்த்தி நீ ததாபி நரகே கோரே பதந்தீதி கிம் அத்புதம்
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம்
ஸூஹ்ருத் -மம ப்ராணா ஹி பாண்டவா –யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருத் சைவ ஜனார்த்தன –

கதி -நற்கதி -அர்ச்சிராதிகதி -கதிம் இச்சேத் ஜனார்த்தன -இடறினவன் அம்மே என்னுமா போலே அன்றோ –
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம்

ததேவ லக்னம் ஸூதி நம் ததேவ தாரா பலம் சந்த்ர பலம் ததேவ வித்யா பலம் தைவ பலம் ததேவ லஷ்மீ பதேர் அங்க்ரி யுகம் ஸ்மராமி
இதுவே ஆத்மாம்ருதம் -அம்ருதத்வம் அஸ்நுதே -நச புநர் ஆவர்த்ததே-ஸ்ராவண மனன அனுசந்தான தசைகளில் ஆராவமுதம்

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ
யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுப வேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹ க்ஷணார்த்தே–
அரை க்ஷணத்தில் ப்ரஹ்ம கல்பங்கள் அனுபவித்தும் நசிக்க முடியாத பாபங்கள் பண்ணுகிறோம்

ந கிஞ்சித் பர்வதா பாரம் ந பாரம் சப்த சாகரம் ஸ்வாமி த்ரோஹம் இதம் பாரம் பாரம் விச்வாஸகாதகம்
தாந் ம்ருதா நபி க்ரவ்யாதா க்ருதக்நாந் நோப புஞ்சதே -செய்ந்நன்றி மறந்தவர்கள் –
கழுகும் உண்ணாமல் -புள் கவ்வ கிடக்கின்றார்களே
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின்னீரே
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவ புத்த்யந்தே மனுஷ்யா ஜீவித ஷயம் –ஸ்ரீ ராமாயணம் –

மேரு மந்த்ர மாத்ரோபி ராசி பாபஸ்ய கர்மண கேஸவம் வைத்யம் ஆசாத்ய துர் வியாதிரிவ நஸ்யதி -பாப ஸமூஹம் அழியும்
குலம் தரும் செல்வம் தந்திடும் –நாராயணா என்னும் நாமம் –
கிருஷ்ண கிருஷ்ண ஜெகந்நாத ஜானே த்வாம் புருஷோத்தமன் -ருத்ரன் வாணன் கை கழித்த பின்பே உணர்ந்தான்
ந ஹி பாலன ஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்

———————–

புருஷ ஸூக்தம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை வ்யாப்தியும் சொல்லுமே
சஹஸ்ர சீர்ஷா -சிரஸ் ஞானம் -போதன -மனன -ஸ்ரவண -ஸ்பர்சன -தர்சன-ரசன -க்ராண –
ஞானாநி -ஸ்ருதாநி -பவந்தீத்யத சிரஸ் -அபரிமித அறிவு சர்வஞ்ஞான் -அனந்தன் என்றவாறு
சஹஸ்ர பாத -கர்மேந்த்ரியங்களுக்கு உப லக்ஷணம் -சர்வ சக்தன் -அச்யுதன்-என்றவாறு
பராஸ்ய சக்திர் விவிதை வஸ் ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச —
சகல பிராணிகள் அவயங்களும் தனக்கு சேஷம் என்றுமாம் -ஹ்ருஷீ கேசன் -நியமிப்பவன் –

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா –
பேய் முலை நஞ்சு ஊணாக உண்டான் உருவோடு பேர் அல்லால் கானா கண் கேளா செவி
அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்

பகவான் இதி சப்தோயம் ததா புருஷ இத்யபி நிருபாதீ ச வர்த்ததே வாஸூதேவே சநாதாநே
ச ஏவ வாஸூதேவோ சவ் சாஷாத் புருஷ உச்யதே ஸ்த்ரீ பிராயம் இதரத் சர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் சரம் -பாத்ம புராணம்
யஸ்மாத் ஷரமதீ தோஹம் அக்ஷராதபி சோத்தம தஸ்மாத் வேதே ச லோகே ச பிரதித புருஷோத்தம –ஸ்ரீ கீதை

ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா தாசங்குலம்-அவன் ஸ்வரூபத்தில் ஏக தேசத்தில் ப்ரஹ்மாண்டங்கள் -இத்தால் தேச அபரிச்சேத்யம்
இதம் சர்வம் -வஸ்து அபரிச்சேத்யம்
த்விதீயயா சாஸ்ய விஷ்ணோ காலதோ வ்யாப்தி ருச்யதே -கால அபரிச்சேத்யம்
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்ய பஞ்ச விம்சக தத் ஸ் தத்வாதநு பஸ்யந்தி ஹ்யேக ஏவேதி சாத்வ -மோக்ஷ தர்மம்
சர்வம் சமாப் நோஷி ததோசி சர்வ -கீதை
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே

வருங்காலம் நிகழ்காலம் கழி காலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய்
உதாம்ருதத் வஸ்ய ஈஸாந -மோக்ஷப்ரதனும் அவனே -அம்ருதத்வம் அஸ்நுதே-ஸ்ருதி
புருஷோ நாராயண பூதம் பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ச ஏஷ ஸர்வேஷாம் மோக்ஷ தச்ச ஆஸீத் -முத்கல உபநிஷத்
அத்யர்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந —ஆக்ரமித்த தேஜஸ் அன்றோ –
ச ச ஸர்வஸ்மாந் மஹிம்நோ ஜ்யாயாந் தஸ்மாந் ந கோபி ஜ்யாயாந் –முத்கல உபநிஷத்-
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

த்ரிபாத் ஊர்த்வ -வ்யூஹம்
உதைத் -ரஷிக்கக் கடவேன் சங்கல்பித்து
புருஷ பாதோஸ்யே -அஸ்ய பாத -அவதாரமான அநிருத்தன்
இஹ அபவாத் புந -மறுபடியும் விஷ்ணுவாக திருப் பாற் கடலில் அவதரித்தார்
ததோ விஷ்வங் வ்யக்ராமத் -எண்ணிறந்த அவதாரங்கள் -ராம கிருஷ்ணாதி விபவங்கள் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் போன்ற அர்ச்சாவதாரங்கள் மூலம் வ்யக்ராமத்-வியாப்தி
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தாய்
அஜாயமானோ பஹுதா விஜாயதே
சாஸநா ந சநே அபி -உணவு அருந்தும் தேவ மனுஷ்யாதிகள் -அருந்தாத பாறைகள் –
புல் பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நல் பால் உய்வான்

யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை
போதனம் ரக்ஷணம் போஷணம் சேவகம் -நான்குக்கும் நான்கு வர்ணங்கள்
வேதஹா மேதம் புருஷம் மஹாந்தம் –அஹம் வேதமி மஹாத்மானம் ராமம் சத்யா பராக்ரமம்
வேத -ந சஷூஷா க்ருஹ்யதே –மனசா து விசுத்தே ந –
நேதி நேதி -ப்ரஹ்ம ருத்ர இந்த்ர பூதா நாம் மனசா மப்யகோசரம் -தனக்கும் தண் தன்மை அறிவரியானை –
அங்குஷ்ட மாத்ர புருஷ அந்தராத்மா சதா ஜநா நாம் ஹ்ருதயே சந்நிவிஷ்ட
மஹாந்தம் -ஸ்வரூப ரூப குண விபவங்களில் மஹத் -யாதோ வாசோ நிவர்த்தந்தே
மாசூணாச் சுடருடம்பாய் -மலர் கதிரின் சுடர் உடம்பாய் -ஆதித்ய வர்ணாம்

நாயமாத்மா ப்ரவசநேந லப்ய ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்
ந கர்மணா ந ப்ரஜயா தநேந த்யாகேந ஏகேந அம்ருதத்வமா நசு
நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா சக்ய ஏவம் விதோ த்ரஷ்டும் த்ருஷ்ட வா நஸி மாம் யதா
பக்த்யா த்வந் அந்யயா ஸக்ய அஹம் ஏவம் விதோர்ஜுன -கீதை

அத புந ரேவ நாராயணஸ் சோந்யம் காமம் மனசா த்யாயீதா தஸ்ய த்யாநாந்தஸ் தஸ்ய லலாடத்
ஸ்வேதோபதத் தா இமா ஆப தத் ஹிரண்மய மண்டம பவத் –மஹா உபநிஷத்
அப ஏவ ச சர்ஜாதவ் –தத் அண்டம் அபவத் ஹைமம் -மனு ஸ்ம்ருதி
தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மஹான் ஈஸ்வரம் தம் விஜா நீம ச பிதா ச பிரஜாபதி –மஹா பாரதம் –
பிரஜாபதி சப்தத்தால் விஷ்ணு
யுவா ஸூவாசா பரிவீத ஆகாத் ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந தம் தீராசா கவய உ ந் நயந்தி-ஸ்ருதி -அவதரித்த பின்பே உஜ்ஜ்வலம்
ஜென்ம கர்ம ச மே திவ்யம்
தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம்-அவதார ரஹஸ்யம் தீரர்கள் அறிவார்கள் -பராங்குச பரகால யதிவராதிகள்
இத்தை விட்டு பரத்வமும் விரும்பாத -பாவோ நான்யத்ர கச்சதி -அச்சுவை பெறினும் வேண்டேன் -மற்று ஒன்றும் வேண்டேன் –
பக்தா நாம் த்வம் ப்ரகாஸசே

———————

நாராயண ஸூக்த நிர்ணயம்
விச்வதச் சஷூருத விஸ்வதோ முகோ விஸ்வதோ ஹஸ்த யூத விஸ்வதஸ் பாத் –
சஷூர் தேவானாம் உத மர்த்யாநாம்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
விஸ்வ சம்புவம் -சகலருக்கும் சகலத்தையும்-மோக்ஷ புருஷார்த்தம் சேர்த்து – அளிப்பதால்
இவனே சம்பு -சர்வ ரக்ஷகத்வம் இவனுக்கே தான்
ந ஹி பாலன ஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
அழகன் அன்பன் அமலன் அச்யுதன் அக்ஷரம்
பரமம் ப்ரபும் நாராயணம் -மால் தனில் மிக்கதோர் தேவும் உளதே
ந தத் சமச்ச அப்யதி கச்ச த்ருச்யதே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

விஸ்வத பரமம் -சேதன அசேதன விலக்ஷணன்-இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்ய பஞ்ச விம்சக -மஹா பாரதம்
விஸ்வத பரமம் விஸ்வம் -இப்படி விலக்ஷணமாக இருந்தாலும் எல்லாமாயும் இருப்பானே
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை –
நாராயணம் -வியாபித்தும் தரித்தும் -சர்வம் ஸமாப்நோஷி ததோசி சர்வ –
கிம் தத்ர பஹுபிர் மந்த்ரை கிம் தத்ர பஹுபிர் வ்ரதை நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக —
நாராயணம் ஹரிம் -சர்வ காரணன் -சர்வ ரக்ஷகன் -சர்வ சம்ஹாரகன் இவனே

ஹரீர் ஹரதி பாபாநி ஜன்மாந்தர க்ருதாநி ச -குமாரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனார்
விஸ்வரூபம் ஹரிணம்-ப்ரஸ்ன உபநிஷத்
விஸ்வம் வேதம் புருஷ -பூர்ணத்வாத் புருஷ -எங்கும் நிறைந்து –
தானே யாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யான் என்பானாகி
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான்
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே –
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும்
மணம் கூடியும் கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான்

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம் –
விஞ்ஞான சாரதிர் யஸ்து மன ப்ராக்ரவாந் நர சோத்வந பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பரம் -கடவல்லி–
புத்தி சாரதி மனஸ் கடிவாளம் இந்திரியங்கள் குதிரைகள் -சரீரம் ரதம்
விஸ்வரூபம் ஹரிணம் ஜாத வேதசம் பாராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம் -ப்ரஸ்ன உபநிஷத்
ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாம் அநுஸ்மரந் ய ப்ரயாதி த்யஜன் தேஹம் ச யாதி பரமாம் கதிம் –
கங்கா ஸ்நான ஸஹஸ்ரேஷு புஷ்கார ஸ்நான கோடிஷு யத்பாபம் விலயம் யாதி ஸ்ம்ருதே நஸ்யதி தத் ஹரவ்

ஸ்துத்வா விஷ்ணும் வாஸூ தேவம் விபாவோ ஜாயதே நர விஷ்ணோ சம்பூஜ நாந் நித்யம் சர்வ பாபம் விநஸ்யதி

அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி
சமநுப்ரவிஷ்ட ப்ரஜாபதிஸ் சரதி கர்ப்பே அந்த -நாராயண வல்லி
அம்பஸ்ய பாரே -ஷீராப்தி/ பிரளய மஹார்ணவம் என்றுமாம் / வ்யூஹம்
புவநஸ்ய மத்யே -ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி /ராம கிருஷ்ணாதி கோயில் திருமலை பெருமாள் கோயிலாதி அவதாரங்கள்
நாகஸ்ய ப்ருஷ்டே -ஸ்ரீ வைகுண்ட நாதன் கம் -ஸூகம் /அகம் -துக்கம் / ந அகம் -அஹில ஹேய ப்ரத்ய நீகம்
மஹதோ மஹீயான் ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி சமநுப்ரவிஷ்ட ப்ரஜாபதிஸ் சரதி கர்ப்பே அந்த -அந்தர்யாமி

யஸ்மாத் பரதரம் நாஸ்தி புருஷாத் பரமேஷ்டிந ந ஜ்யாயோ அஸ்தி ந சாணீயஸ் சது நாராயணோ ஹரி
யேநேதம் அகிலம் பூர்ணம் புருஷேண மஹவ்ஜசா ச து நாராயணோ தேவ இதீயம் வைத்திகீ ஸ்ருதி –பார்க்கவ புராண வசனம்

சாந்தோக்யம் –
அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே —
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்பதை
அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் செஞ்சுடர் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
ஹிரண்மய புருஷ -செம்பொன்னே திகழும் திரு மூர்த்தி
கப்யாசம் -கம் பிபதி இதி கபி-என்று சூரியனை சொல்லி
கபிநா அஸ்யதே இதி கப்யாசம் -சூரியனால் உணர்த்தப்படும் தாமரை
கபிர் நாளம் தஸ்மிந் ஆஸ்தே இதி கப்யாசம் என்று கபி -தாமரைத் தண்டை சொல்லி அதில் உள்ள தாமரை
அன்றிக்கே கே ஜலே அப்யாஸ்தே இதி கப்யாசம் -ஜலத்தில் இருப்பது தாமரை
இம் மூன்று பொருளையும்
கம்பீ ராம்பஸ் ஸமுத்பூத ஸூம்ருஷ்ட நாள ரவிகர விகசித புண்டரீக தள அமலாய தேஷணே
ஆழ்ந்த நீரிலே உண்டாய் -பருத்த தண்டை யுடைத்தாய் -சூர்ய கிரணங்களால் மலர்த்தப் பட்டதான
தாமரை இதழைப் போலே நிர்மலமாகவும் நீண்டும் இருக்கும் திருக் கண்ககள்
புண்டரீகம் சிதாம் புஜம் -அமர கோசம் -வெள்ளைத்தாமரை அன்றோ
செந்தாமரைக் கண்களுக்கு எவ்வாறு உவமானம் என்னில்
இங்கு வெளுப்பு கருப்பு சிவப்பு மூன்றுமே உண்டே
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் அன்றோ
த்யேயஸ் சதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணஸ் சரஸிஜாஸனா சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர

தஸ்ய உதிதி நாம -ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித-அகில ஹேயபிரத்ய நீகன்-என்றபடி
உதேதி ஹை வை சர்வேப்ய பாபமப்யோ ய ஏவம் வேத -யார் இத்தை அறிகிறானோ
அவனுக்கும் அனைத்து பாபங்களும் போகுமே
தஸ்ய உதிதி நாம –பாபமப்ய உதித –பாபமாஸ்ரமாய் உள்ளாரிலும் உத்க்ருஷ்டன் இவன் என்றுமாம்
புருஷோத்தம -உத்தம -என்பதையே உத் -என்றதாகும்
உததி நாம -திருநாமத்தின் சீர்மை சொன்னவாறு
யன் நாம சங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோஷ மாப்நோதி ந சம்சயம் நர
அத ய ஏஷோ அந்தர் அக்ஷிணீ புருஷோ த்ருஸ்யதி
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்காரம் கேஸவம் பிரதி கச்சதி
தஜ்ஜலான் -தஜ் ஜத்வாத் -தல் லத்வாத் -தத் அந்த்வாத்
நாராயணா தேவ ஸமுத்பத்யந்தே -நாராயணா ப்ரவர்த்தந்தே -நாராயணா ப்ரலீ யந்தே
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
ஜெகதாத்ம்யம் இதம் சர்வம்
சகலம் இதம் அஹம்
தத் த்வம் அஸி
சர்வ பூதாத்மகே தாத ஜெகந்நாத ஜகன்மய பரமாத்மனி கோவிந்தே மித்ர அ மித்ர கதா குத்த -ப்ரஹ்லாதன் தந்தையிடம் கேட்டான்
சகலம் இதம் அஹம் ச வா ஸூ தேவ பரம புமாந் பரமேஸ்வரஸ் ச ஏக -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
க்ருஷிர் பூ வாசக ஸப்தோ ணஸ் ச நிர்வ்ருதி வாசக விஷ்ணுஸ் தத் பாவ யோகாச்ச க்ருஷ்ண
இத்யபிதீயதே-என்று உபய விபூதி நாதன் கிருஷ்ணன் என்றவாறு
ஆனந்தபூமியாய் இருப்பவன் பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் -கரியான் ஒரு காளை
ஏஷ ஹ்யேவாநந்தயாதி –

ஆக சர்வ காரண பூதன் இவனே என்று நிரூபணம்

ஸ்ரீ விஷ்ணு சித்தருடைய பிரிய சிஷ்யர் –
கஸ்த்வம் தத்வவிதஸ்மி வஸ்து பரம் கிம் தர்ஹி விஷ்ணு கதம் தத்த் வேதம் பர தைத்திரீயக முக
த்ரய்யந்த சந்தர்சநாத் அந்யாஸ் தர்ஹி கிரஸ் கதம் குண வசா தத் ராஹ ருத்ர கதம் ததத் ருஷ்ட்யா
கதமுத் பவத்யவதரத் யன்யத் கதம் நீயாதம் —நடாதூர் அம்மாள் தத்வ சாரம் ஸ்லோகம் –

கஸ்த்வம் -நீர் யார்
தத்வவிதஸ்மி வஸ்து -தத்வ த்ரயம் அறிந்தவன்
பரம் கிம் தர்ஹி -பரதத்வம் யார் –
விஷ்ணு -விஷ்ணுவே
கதம் -எவ்வாறு நிரூபணம்
தத்த் வேதம் பர தைத்திரீயக முக த்ரய்யந்த சந்தர்சநாத்-தைத்ரீய நாராயண அநுவாகம்-நாராயண உபநிஷத் –
மஹா உபநிஷத் -புருஷ ஸூக்தம் -விதி சிவாதிகளின் பிறப்பைச் சொல்லும் பல ஸ்ருதி வாக்கியங்கள் –
பல பல உபநிஷத் வாக்கியங்கள் -இருப்பதால்
அந்யாஸ் தர்ஹி கிரஸ் கதம் ராஹ ருத்ர –ருத்ரனுக்கும் வாக்கியங்கள் உண்டே
குண வசா தத்-இவனது குணங்களில் லேசம் உள்ளதால் -உபசார பிரயோகம்
ஆபோ வா இதம் சர்வம் -இவை எல்லாம் ஜலமே போலே -சர்வோ வை ருத்ர போன்றவை
அத்ராஹ ருத்ர கதம் -நான் ஆதிகாலத்தில் இருந்த அருமறைப் பொருள் என்று
அதர்வ சிரஸ் உபநிஷத்தில் சொன்னது எப்படி
ததத் ருஷ்ட்யா -அந்தர்யாமியாக பரப்ரஹ்மம் விருப்பத்தை நினைத்து பாவனா பிரகர்ஷத்தாலே –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா உபதேசோ வாமதேவவத் –
இந்திரனும் மாம் உபாஸ்ஸ்வ / பிரஹலாதன் மத்தஸ் சர்வம் அஹம் சர்வம்
ஆழ்வார் -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கதமுத் பவதி -விஷ்ணுவுக்கு பிறப்பை சொல்லும் ஸ்ருதி வாக்யங்களுடன் இது எப்படி பொருந்தும்
யவதரதி -அவதார ரூபமாய் இருப்பதால் பொருந்தும் -அஜாயமானோ பஹுதா விஜாயதே
யன்யத் கதம் -சிவ ருத்ராதி சப்தங்களால் சொல்லப்படுபவனே பரமாத்மா காரண புருஷன் என்பது எப்படி
நீயாதம் -இரண்டு பரமாத்மா இருக்க முடியாது என்று ஸ்ருதி சொல்வதாலும்-
அர்த்தத்தில் சப்தத்திலும் நாராயண சப்தம் பிரபலம் ஆகையாலும்
இந்த சப்தங்கள் அவனையே குறிக்கும் –
எனக்கே நாராயணனே சர்வ காரண பரம் புருஷன் என்று நிரூபணம் –

—————————————

ரக்ஷகத்வமும் இவனதே -அஜ -பிறப்பற்றவன் –ஏக-அத்விதீயன் – -நித்ய –
யஸ்ய ப்ருத்வீ சரீரம் -அனைத்தும் இவனுக்கு சரீரம் –
பதிம் விஸ்வஸ் ஆத்மேஸ்வரம் -ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டித

ப்ரஹ்ம பிந்து உபநிஷத் -ப்ரஹ்ம விது உபநிஷத் என்றும் சொல்வர் -ஈட்டில் -8-5-10-
ததஸ்ம் யஹம் வாஸூ தேவ இதி -வாஸூ தேவனே சர்வ அந்தர்யாமி என்று விளக்கும்
கவாம் அநேக வர்ணாநாம் ஷீரஸ்ய த்வேக வர்ணதா ஷீரவத் பச்யதி ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதம் இவ பயசி நிகூடம் பூதே பூதே ச வசதி விஞ்ஞானம் சததம் மந்தே தவ்யம் மனசா மந்தேன பூதேன
ஞானேந்த்ரம் சமாதாய சோத்தரேத் வந்ஹி வத் பரம்
நிஷ்கலம் நிஸ்ஸலம் சாந்தம் தத் ப்ரஹ்மா ஹமிதி ஸ்ம்ருதம் சர்வ பூதாதி வாஸஞ்ச யத் பூதேஷு வசத்யபி
சர்வ அனுக்ராஹ கத்வேன தத ஸ்ம்யஹம் வாஸூ தேவஸ் தத ஸ்ம்யஹம் வாஸூ தேவ இத் உபநிஷத்

விஞ்ஞானம் விபுவான ஞான ஸ்வரூபன் -பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வபாவிகீ ஞான பல க்ரியா ச
அனைத்தையும் தரித்தும் வியாபித்தும் கிருபையே வடிவாக கொண்டவன் –
சத்தையை நோக்கி சர்வ அபேக்ஷிதங்களையும் அளிப்பவன்
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
ஸ்வரூப வியாபகத்வமும் ரூப வியாபகத்வமும் இரண்டு வகை அந்தர்யாமித்வம்
இந்தீவர ஸ்யாம ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித /
வெள்ளைச் சுரி சங்கோடு தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற வாற்றைக் காணீர்

உத்கீத உப ஸ்ரீ -ஸ்ரீ ர் உபபர்ஹணம் -தஸ்மிந் ப்ரஹ்ம ஆஸ்தே -தமித்தம் வித் பாதே நைவ அக்ர ஆரோஹதி
உத்கீத உப ஸ்ரீ -உத்கீதம் படுக்கை விரிப்பு
ஸ்ரீ ர் உபபர்ஹணம் -ஸ்ரீ தேவி திருவடிக்கு அணையாக இருக்க -இவளுக்கும் சேஷத்வமே ஸ்வரூபம்
தஸ்மிந் ப்ரஹ்ம ஆஸ்தே -ஆதிசேஷனின் மேல் கண் வளரும் பர ப்ரஹ்மம்
தமித்தம் வித் பாதே நைவ அக்ர ஆரோஹதி -ஞானியானவன் தாய் மடியில் குழந்தை ஏறுவது போலே
திருவடிகளை பிடித்துக் கொண்டு ஏறுகிறான்

ஸ்ரீ ஸ்துதி –
ஜாத வேத -மறை முன் ஓதியவன் இடம் -ஸ்ரீ தேவையை நம் நெஞ்சில் நிலை நிறுத்த பிரார்த்தனை
ஹிரண்ய மய புருஷனுக்கு துல்யமாக இவளும் ஹிரண்ய வர்ணாம் -ஓம் ஹிரண்ய வர்ணாய நம -நவ அக்ஷர மந்த்ரம்

ஹரிணீம் -மான் போலே நீண்ட திருக் கண்கள் -மான் தோல் விரிப்பு -ஹரியால் ஆலிங்கனம் செய்த இடை –
ஹரிம் நயனீதி ஹரிணீ-அவனை தூண்டுபவள் அன்றோ
ஹரினா நீயதே இதி ஹரிணீ -அனைத்து செயல்களிலும் அழைத்துக் கொள்ளப்படுபவள்
ஆதித்யன் -பத்மை / பரசுராமன் -தரணி/ ராமன் சீதை / கிருஷ்ணன் -ருக்மிணி /
வாமனனும் மான் தோல் வைத்து மறைத்து போக வேண்டிற்றே
ஹரிம் நயதி -நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பிரேமத்தால் இவளுக்கு பரதந்த்ரன் -அவளோ ஸ்வரூபத்தால் பரதந்த்ரன்
ஹாரிணீ ஏவ ஹரிணீ -துக்கங்களை போக்குபவள் -செடியாய வல்வினைகள் தீர்க்கும் திரு மாலே
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-அஞ்ஞாத நிக்ரஹ -கோபமே அறியாதவள் பிராட்டி
மஞ்சள் நிறம் கொண்டவள் என்றுமாம் –
ஓம் ஹரிண்யை நாம -ஆறு அக்ஷரங்கள்-மான் போன்ற என்பதே பிரதானம் –
மானமரும் மென்னொக்கி வைதேவீ / மாழை மான் மட நோக்கி உன் தோழீ /

ஸ்வர்ண ரஜதஸ்ரஜாம் / ஸ்வர்ணஸ் ரஜாம் – ரஜதஸ் ரஜாம்
பொற்றாமரையாள்-பெரிய திருமொழி -5-1-10-/ திவ்யமால்யாம் பரதரா-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
அப்ராக்ருத மாலைகளால் விராஜமானமான -விளங்கா நிற்கும் மாலைகள் –
சோபமான வர்ணங்கள் -ப்ராஹ்மணாதி வர்ணங்கள் என்றும் -சப்தங்களை என்றுமாம் -ஸ்ருஷ்டிக்கிறவள் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா உபதேசம் -அவன் அந்தர்யாமியாக இருந்து என்றபடி
ரஜோ குணம் உள்ளவர்களை -ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்ட்டி என்றுமாம்
சந்த்ராம் -சஞ்சரித்து -சேதனர் ஹ்ருதயத்தில் அவன் உடன் இருந்து புருஷகாரமும் பாப நிபர்ஹணம்
ஓம் சந்த்ராய நாம -ஆறு அக்ஷரம் –
ஹிரண்மயீம் -பொன்மயமான பரமபதம் திருமால் வைகுந்தம் -மாதவன் வைகுந்தம்
ஸூர்ய மண்டலம் என்றுமாம் / ஞானப் பொன் மாதின் மணாளன் -திரு விருத்தம் -40-
ஹிரண்மய புருஷனுக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை -ஓம் ஹிரண்மய்யை நம -ஏழு அக்ஷரங்கள்

லஷ்மீம் -லஷ்யதீதி லஷ்மீ -லக்ஷ தர்சனே லக்ஷ ஆலோசன -சிந்தித்து அருள்
லஷ்மீஸ் சாஸ்மி ஹரேர் நித்யம் -ஹரிக்கு நித்ய செல்வம் -ஸ்வதா ஸ்ரீஸ்த்வம் –
அசித்வத் பரதந்த்ரை ஸ்வரூபம் -ஸ்ரீர் உபபர்ஹணம் -திருவடிக்கு அணை என்று ஸ்ருதியும் சொல்லுமே

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் பேறு
வடிவிணை இல்லா நிலமகள் மற்றை மலர் மகள் பிடிக்கும் மெல்லடியை
மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை
லஷ்யம் சர்வம் இதரேஹம்-எல்லா அறிவுகளுக்கும் லஷ்யம்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
லஷ்மீ -ல -தானே -ஐஸ்வர்யம் அக்ஷரம் கதிம் -/ ஷிப-ப்ரேரணே–தூண்டுபவள் –
பக்த முக்த நித்யர்களை -மநோ வாக் காயங்களை -/ ம -மந ஞானே-ஞான ஸ்வரூபை
லகாரம் லயத்தையும் -ஷி -நிவாஸே ஸ்திதியையும் /மகாரம் நிர்மாணம் ஆகிய ஸ்ருஷ்ட்டி
ஓம் லஷ்ம்யை நம -ஐந்து அக்ஷரம்

தாம் ம ஆவஹ ஜாத வேத -உனக்கு சொத்து அவள் -கோல விளக்கை அளிக்க பிரார்த்தனை உண்டே
அநபகாமிநீம் -அகலகில்லேன் இரையும் -பாஸ்கரேண பிரபை /
அவகாமிநீ -பிரதிகூலர் -திருத்தி இவனையும் அவள் இட்ட வழக்காக்குபவள்
ஓம் அநபகாமிந்யை நாம -ஒன்பது அக்ஷரம்
யஸ்யம் ஹிரண்யம் விந்தேயம் காமசிவம் புருஷா நாம் -முமுஷுக்களுக்கும்
ஐஸ்வர்யாதிகள் கைங்கர்யத்துக்கு -பகவத் பாகவத ஆராதனங்களுக்கு

அஸ்வ பூர்வாம் -ஹ்ருதய புரத்தை இழுக்கும் அஸ்வம் /
புத்தி பிராணன் சரீரம் இவற்றையும் புரமாகக் கொண்டு நியமித்தும்
ரத மத்யாம்-யோக நடுநிலையில் ரத த்வநி
போலே சபதித்து
ஹஸ்தி நாத ப்ரபோதி நீம் -பிடியைப் போலே இறுதியில் பிளிறுபவள்
அஸ்வ சப்தம் சர்வ வியாபியான சர்வேஸ்வரன் -ஆஸ்ரித ரக்ஷணாதிகளில் முன் நிற்பவள் -கருணா குணம்
அஸ்வ பூர்வோ யஸ்யாஸ் வா -சர்வேஸ்வரனை முதலில் கொண்டவள் என்றுமாம் -பாரதந்தர்ய ஸ்வரூபம் இத்தால்
ரதம் என்று சர்வேஸ்வரனுடைய அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அதன் நடுவில் ஏறி -ப்ரணவத்தில் உகாரமாக –

ஹஸ்தி நாத ப்ரபோதி நீம் -பத்மத்தில் இருந்து அதில் ப்ரீதி கொண்ட யானைகளின் நாதத்தால் உணருபவள் -என்றுமாம் –
ஓம் அஸ்வ பூர்வாய நம / ஓம் ரத மத்யாய நம -இரண்டும் அஷ்டாக்ஷரம் / ஓம் ஹஸ்தி நாத ப்ரபோதிந்யை நம -11-அக்ஷரங்கள்

ஸ்ரீ யம் தேவம் –
ஸ்ருனோதி நிகிலான் தோஷான் ஸ்ரூணிதி ச குணைர் ஜகத்
ஸ்ரீ யதே ச அகிலைர் நித்யம் ஸ்ரேயதே ச பரம் பதம்
ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண் வதீம் ஸ்ருணதீமபி –
ஸ்ரீ யம் -ஸ்ரியம் -சக்னோமி-சக்தி பிராப்தி /ஸ்ருணோதீதி-ஸ்ராவயதீதி/
மா மார்பில் இருந்து -எல்லாவற்றையும் அளந்து -வேதங்களால் கோஷிக்கப்பட்டு
ஓம் மாயை நாம -பஞ்ச அக்ஷரம்
தர்ப்பயந்தீம்–தான் திருப்தி அடையும் அளவியோ -சேதனனை ஸ்வாமியிடம் சேர்ப்பித்து சேதனனையும்
பரம சேதனனையும் திருப்தி செய்விக்குமவள்
பஞ்சிய மெல்லடியினாலும் / கலையிலங்கு பட்டரவேர் அகல் அல்குலாலும் / மின்னொத்த நுண் இடையாலும் /
முற்றாரா வார் அணைந்த முலைகளாலும் / சங்கு தங்கு முன் கையினாலும் / காந்தள் முகிழ் விரல்களாலும் /
வேய் போலும் எழில் பணை நெடும் தோள்களாலும் / திவளும் வெண் மதி போல் திரு முகத்தாலும் /
பவளச் செவ்வாயினாலும் / பண்ணுலாவு மென் மொழியினாலும் / பண்ணை வென்ற பாலாம் இன் சொற்களாலும் /
கதிர் முத்த வெண் நகையாலும் /வாய் அமுதத்தாலும் /கனம் குழைகளாலும்/
செவ்வரி நல் கறு நெடும் பிணை நெடும் வேல் நெடும் கண்களாலும் / மானமரும் மென் நோக்கினாலும் /
வில்லேர் நுதலினாலும் /மட்டவிழும் மைத்தகுமா நெரிந்த கரும் குழல்களாலும்
ஆக இப்படிப் பாதாதி கேசாந்தமான தன் திவ்ய மங்கள திரு மேனியாலும்
ஸ்வரூப குண விபவங்களாலும் போக மயக்குகளாலும் சர்வேஸ்வரனைத் திருப்தி செய்பவள்
ஓம் தர்ப்பயந்த்யை நம -சப்த அக்ஷரம்-

பத்மே ஸ்திதாம் -தாமரையாள் -கமலப்பாவை -வேரி மாறாத பூ மேல் இருப்பாள் -மலர் மங்கை –
பத்ம வர்ணாம் -காயம் பூ வண்ணனுக்கு பரபாக ரசம் –
சந்த்ராம் -சதி ஆஹ்லாத நே-தேனாகிப் பாலாம் திரு மாலே -ஆனந்தமயமான ஸ்வரூப ரூப குணங்கள்
சந்திரனுக்கு சகோதரி /ப்ரபாஸாம் -சந்திரனின் அளவு இல்லாமல் -மிக்க ஒளியை யுடையவன்
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –
யஸஸாம் -உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் / மன்னு பெரும் புகழ் மாதவன் –
ஜ்வலந்தீம் -தேவ -ஜூஷ்டாம்-பரம் வ்யூஹம் வைபவம் அந்தர்யாமி அர்ச்சை –
எல்லா அவஸ்தைகளிலும் அகலகில்லேன் இறையும் என்று இருப்பவள்

திருமால் வைகுந்தமே-மாதவன் வைகுந்தம் -/ வடிவுடை மாதவன் வைகுந்தம் /வானிடை மாதவா -என்று பரத்வத்திலும்

திருமால் திருப் பாற் கடலே / அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் -என்று
வியூஹ அவஸ்தையிலும்

மைதிலி தன் மணாளா / திரு மலிந்து திகழ் மார்பு / ஆயர் குல முதலே மாதவா மரா மரங்கள் ஏழும் எய்தாய் /
அடல் ஆமையான திரு மால் / வாமனன் மாதவன் -என்று விபவங்களிலும் -ஆமையாகவும் ப்ரஹ்மச்சாரியுமான அவஸ்தைகளிலும் கூட –

அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து / மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் /திருமாலை பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை
பாவை பூ மகள் தன்னொடும் உடனே வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன்
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் -என்று அந்தர்யாமி நிலையிலும்

திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் / திருவாளன் திருப்பதி /
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடம் / திருவாளன் இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கம்
வேங்கடத்து என் திருமால் / வேங்கடத்துத் தன்னாகத் திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா –திருவேங்கடத்தானே
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி
திருக்கோட்டியூர் திருமாலவன்
திருமால் திருமங்கை யோடாடு தில்லைத் திருச் சித்ர கூடம்
திருமால் தன் கோயில் அரிமேய விண்ணகரம்
மலர் மகள் காதல் செய் கண புரம் அடிகள் தம் இடம்
திருத் தண் கால் வெஃகாவில் திருமால்
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக் கேணியான் -இப்படி அர்ச்சா அவஸ்தைகளிலும் –

தேவ ஜூஷ்டாம் -ப்ரஹ்மாதிகள் நித்ய ஸூ ரிகளால் சேவிக்கப்படுபவள்
திருமாற்கு அரவு –சென்றால் குடையாம் / அணைவது அரவணை மேல் பூம் பாவை ஆகம் புணர்வது
நாகணையில் துயில்வானே திரு மாலே /சுடர் பாம்பணை நம் பரனைத் திருமாலை /
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் /
மலிந்து திரு இருந்த மார்பன் -பொலிந்து கருடன் மேல் கொண்ட கரியான்
தேவிமாராவார் திரு மகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் -என்று அநந்த கருடாதி நித்ய ஸூரிகளும்
நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திருமால்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் வண்ண மலர் ஏந்தி வைகலும் –திருமாலைக் கை தொழுவர் சென்று –

குற்றம் செய்யாதவர் இல்லை ஸ்ரீ தேவி -குற்றத்தை கண்டு பொறுக்க வேண்டும் பூமா தேவி –
குற்றம் காண்பான் என் பொறுப்பான என் என்று காணாக் கண் இட்டு இருப்பாள் நீளா தேவி
அவனுக்கு சேஷ பூதை ஸ்ரீ தேவி –
மிதுன சேஷ பூதை பூமா தேவி -இருவருக்கும் சேஷ பூதை நீளா தேவி
பெருமை மிக்கவள் பூ மகள் -பொறுமை மிக்கவள் பூ தேவி –
குணம் மிக்கவள் பூ மகள் -மணம் மிக்கவள் பூ தேவி –
கோஷிப்பவள் பூ மகள் -போஷிப்பவள் பூண் தேவி
அழகுடையவள் பூ மகள் -புகழுடையவள் பூ தேவி –
ஆதரமுடையவள் அலர் மேல் மங்கை -ஆதாரமானவள் அவனியாள்

பூமா தேவி -சமுத்ராவதீ -சமுத்ராம்பரா -கண்ணார் கடல் உடுக்கை –
ஸாவித்ரீ -சூரியனை திலகமாக கொண்டவள் -சீரார் சுடர் சுட்டி -சவிதா என்று சர்வ சிரேஷ்டாவின் பத்னி என்பதாலும் ஸாவித்ரீ
வாயுமதீ -மூச்சு காற்று / ஜலசய நீ -ஆவரண நீர்ப்படுக்கை -நீராரா வேலி நிலமங்கை
ஸ்ரீ யம்தாரா -சம்பத் ரூபமான ஸ்ரீ தேவியை கர்ப்பத்தில் தரித்து -திருவுக்கும் விளை நிலம் -சீதா தேவியை கர்ப்பத்தில் தரித்தவள் அன்றோ
மாதவ ப்ரியாம் -லஷ்மீ ப்ரிய சகீம் -அச்யுத வல்லபாம்-காந்தஸ்தே புருஷோத்தமே -அரவிந்த லோசனை மன காந்தா –
ஓம் தநுர்த்ராய வித்மஹே சர்வ ஸித்த்யை ச தீ மஹி தந்நோ தாரா ப்ரசோதயாத் -ஸ்ரீ பூமா தேவி காயத்ரி மந்த்ரம்
ஸ்ரோணாம்-ஸ்ரவண நக்ஷத்ரத்துக்கு அபிமானி
இரண்டு அடியால் அளந்தத்தையே நாம் அறிவோம் -மூன்றாம் அடியால் அளந்தத்தை அவனே அறிவான் –
உதாரா-என்று தண் திரு உள்ளத்தால் கொண்டாடும் மஹா பலியின் தலை மேல் வைத்த அடியை
மூன்றாவதாக -பக்தன் தலையையும் கீழ் லோகங்களோடும் மேல் லோகங்களோடும் ஓக்க என்னைக் கூடியவன் அன்றோ -பட்டர்
நித்ய விபூதியையும் அளந்தான் என்றுமாம் –
த்ருதீயம் அஸ்ய ந கிரா ததாஷதி வயசனன விசவதோ வ்ருத்வா அத்ய திஷ்டத் தஸ் அங்குலம் –
ஜாத வேத -என்று மறைத்து பேசிய ஸ்ரீ ஸூ க்தம் போலே பூ ஸூ க்தியில் முற்பகுதியில் பிதா என்றாலும்
பிற்பகுதியில் விஷ்ணு பத்னீம்– மாதவ ப்ரியாம் -அச்யுதா வல்லபாம் -என்று ஸ்பஷ்டமாக பேசும் –

கும்பன்-யசோதை தம்பி -இவன் மனைவி -தர்மதை -இவர்களுக்கு ஸ்ரீ தாமா -நீளா -இவளே நப்பின்னை
கோவலர் மடப்பாவை -ஆய் மகள் அன்பன்–குலவாயர் கொழுந்து –
குற்றம் என்று ஒரு பொருள் இருப்பதையே அறியாதவள் -ஷமையே வடிவாக இருப்பாள்
பெரிய பிராட்டியார் சம்பத் -பூமிப பிராட்டி விளையும் தரை –
அவனையும் -அந்த செல்வத்தையும் -விளை நிலத்தையும் -சேர்ந்து அனுபவிக்கும் போக்தா இவள் –
பொன்னுக்கு அதி தேவதை ஸ்ரீ தேவி / மண்ணுக்கு பூமா தேவி -ஆனந்தத்துக்கு இவள் –
சேதனனுக்கும் மட்டும் அல்ல அவனுக்கும் பேர் ஆனந்தம் அளிக்கும் பெரும் தேவி இவள்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர் –பெரிய திருமொழி -11-4-6-
நீளா தேவி புலன் மங்கை இந்திரியங்களை அபகரிக்க வல்லவள் அன்றோ –
ஈஸ்வரனுடைய சர்வ இந்த்ரியங்களையும் அபகரிக்க வல்லவள் -யஸ்ய சா -என்னும்படி
இவளை யுடையவர் என்னும் பெரும் புகழை யுடையவர் -பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

சதுர்ப்பிஸ் சாஹம் -94-அவயவங்கள் -கால சக்கரத்தாய் –வருடம் ஓன்று –அவயவீ-
அவயங்கள் -அயனங்கள் -2- -ருதுக்கள்-6- -மாதங்கள் -12-பக்ஷங்கள்-24-நாள்கள் -30-யாமங்கள் -8-லக்னங்கள் -12-
அரும்பினை அலரை -யுவா குமாரா -இரண்டு அவஸ்தையும் ஒரு காலே சூழ்த்துக் கொடுக்கலாம் படி
மலராது குவியாது -ஏக காலத்தில் இரண்டு அவஸ்தைகளும் -யுவதிஸ்ஸ குமாரிணி
அச்யுத அநந்த கோவிந்த நாம உச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரேகா
சத்யம் சத்யம் வஹாம் யஹம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
பிரயோஜனாந்தர பராக்கு பிரயோஜனத்தைக் கொடுக்கும்
உபாயாந்தர நிஷ்டருக்கு பாவனமாய் இருக்கும்
ப்ரபன்னர்க்கு ஸ்வயம் ப்ரயோஜனமாய் தேக யாத்ர ஷேமமாய் இருக்கும்
பக்தியோகத்துடைய துஷ்கரதையோபாதி பிரபத்தி நிஷ்டா ஹேதுவான மஹா விசுவாசமும் கிட்டுகை அரிதாகையாலே
இதில் இழியக் கூசினவர்களுக்கு சர்வாதிகாரமான யாதிருச்சிக பகவத் நாம சங்கீர்த்தனமே
சேதனருடைய பாபத்தைப் போக்கி ஸூஹ்ருத அனுகூலமாகக் கர்ம யோகாதிகளிலே மூட்டுதல்
ப்ரபத்தியிலே மூட்டுதல் விரோதியைப் போக்கி பிரபத்தியை கொடுக்கைக்குத் தானே நிர்வாஹமாதலாம் படியான
வைபவத்தை யுடைத்தாயாய்த்து திரு நாம வைபவம் இருப்பது –

த்யாயேன க்ருதே யஜந யஜ்ஜ ச த்ரேதாயாம் த்வாபர அர்ச்சயந
யதாப நோதி ததாப நோதி கலவ் சங்கீர்த்தய கேசவம

சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உதத்ருதய புஜமுச்யதே வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம் –
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி
அதிகம மே நி ரே விஷ்ணு தேவாச சாஷி கணாச ததா

சே வல அம் கொடியோய் நின் வல வயின நிறுத்தும் ஏவல உழந்தமை கூறும்
நாவல அந்தணர் ஆறு மறைப் பொருளே –பரிபாடல் -1-
இருவர் தாதை இலங்கு பூண மால தெருள நின் வரவு அறிதல் மருள ஆறு தோச்சி முனிவருக்கும் அரிதே
அனன மரபின் அனையாய் நின்னை இனனன என உரைதல் எமக்கு எவன் எளிது -பரிபாடல் -1-

பர தெய்வம் -வல்லப தேவன் -பொற்  கிளி -கூடல் அழகர் சேவை சாதிக்க கருட வாகனத்தில் –
திரு பல்லாண்டு அருளினார் அறிவோம் -எப்படி ஸ்தாபித்தார் என்பதை பார்க்க கூடி இருக்கிறோம்..-

வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான்..ஆனி சுவாதி விடை ஆற்று உத்சவத்தில் பார்ப்போம்..
ஐந்து நாளாக பார்க்க இருக்கிறோம்.

.காரண வஸ்துவை தியானம் பண்ணு..வேதம் சொல்ல -சத்து தான் ஜகத் காரணம் -ஆத்மா தான் .என்று விரித்து பின்பு -.
ப்ரஹ்மம் பெரிசு தான் காரணம் –பெரியது–தன்னை அண்டியவர்களை பெரியவராக ஆக்குவதால் ப்ரஹ்மம் என்று பெயர்..
இந்த்ரனே/சிவனே/ஹிரண்ய கற்பன்/நாராயணனன் என்றும் சொல்லும் வேதம்..–
சூர்ய பக்தன் 7 ஜன்மம் -இருந்தால் சூர்யன் அனுக்ரகத்தால் ருத்ர பக்தன்  ஆகிறான்
அவனும் 7 ஜன்மம் இருந்தால்  ருத்ரன் அனுக்ரகத்தால் விஷ்ணு பக்தனாக ஆகிறான் —
ஸ்ரீ வைஷ்ணவன் பிறந்தும் மறந்து இருக்கிறார்கள் -திரும்ப வர ஸ்ரீபெரிய ஆழ்வார் அருளி செய்தது–

சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வன் கேண்மினோ -தேவதாந்திர பஜனம்–கூடாது —
பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை..–விஷ்ணு பரத்வம் ஒத்து கொள்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவன்..
வேத புருஷன் ஸ்தாபித்த விஷயம் இது முதலில்..பண்டை நான் மறையும் -தொன்மையான வேதங்கள்–அநாதி —
வேள்வியும் -யாக பலன் கொடுப்பவனும்–கேள்வி பதங்களும் -இலக்கணமும் யாப்பு -எழுத்து பதம் வாக்கியம்-அவனே–
நர்த்தனம் பண்ண உடுக்கை சப்தம் குறிக்க படுபவன் ஸ்ரீமன் நாராயணன் -பதங்களின் பொருள்களும் அவனே–

ஆதி ஓம்காரம்-அந்த பிரணவம் அ காரத்தில் சேர –அந்த அ காரத்தாலே சொல்ல படும் வாச்யன் அவன் ..
வேதம் பெற்றவர் அடுத்து பேச -பிரம்மா–புராணம் கல்பித்தார்–ரஜோ தமோ சத்யம் குணம் 6 புராணங்கள் ..18 மொத்தம் —
இடை செருகல் பல பல 108 வரை வளர்த்தார்கள் ..
சத்வ குணத்தோடு பேசியதை உண்மை  என்று சத்வ குணத்தோடு பேசிய புராணத்தில் வைத்தார்..–
அவர் பிள்ளை சங்கரனார் -சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர் அவர்..கபாலியாக -பார்வதி தேவி உடன் பல சொல்லி-
ராம நாதன்-ராமனை நாதனாக கொண்டவர்-அவன் வணங்கினதாக புரளி–ச்வாயம்புவ மனு-மனு ஸ்மிர்த்தி -சொல்லும்

இதிகாச புராணங்களின் காலம்-பிரகலாதன் -அசுரர் கோஷ்டியில் இருந்தும் -கிருஷ்ணா பக்தி மாறாமல் எங்கும் உளன் கண்ணன் —
மக ரிஷிகள்-ஸ்ரீ வால்மீகி-ஸ்ரீ ராமாயணம்-விஷ்ணு சனாதனன் –
ஸ்ரீ பராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம்–ஸ்ரீ புராண ரத்னம்-ஸ்ரீ பாராசர்யர் வியாசர்-
சத்யம் சத்யம் சத்யம்  ஸ்ரீ கேசவனை விட வேற தெய்வம் இல்லை–ஸ்ரீ ப்ரஹ்மம சூத்திரம்-ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீ ப்ருகு மக ரிஷி-பரிட்ஷை பண்ணி அறுதி இட்டு காட்டினார்..மயக்கமும் துயக்கமும் மாறாமல் இருந்ததால் ஸ்ரீ ஆழ்வார்கள் தோன்ற —
ஸ்ரீ பெரியாழ்வார் -ஆச்சார்யர்கள் பலரும் -தேசிகர் பலரும் ஸ்தாபிக்க -சிவ வாக்யர் பெயர் -ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் ஆனார் பின்பு —
உடன் சாக்கியம் கற்றோம் செம் கண் கரியானை சேர்ந்து –தர்க்க சமணரும்-
அவன் பாக்கியம் பண்ணி ஸ்ரீ திரு மழிசை ஆழ்வாரை கொண்டானாம் –
அறியார் சமணர் அயர்ந்தார் புத்தர் சிறியார் சிவப்பட்டார்–சமணர் சப்த பங்கி வாதம்-எல்லாம் சர்வ சூன்ய வாதம் புத்தர் —
பாக்யத்தால் செம் கண் கரியானை சேர்ந்து-உள்ளம் கை கொணர்ந்த நாயனார் ஸ்ரீ கோவிந்த பட்டர்–ஸ்ரீ திரு மலை நம்பியால் –
ஸ்ரீ எம்பார்-மகா புருஷ நிர்ணயம்-
ஸ்ரீ ஆளவந்தார் தத்வ சாரம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள்..–தாத்பர்ய சந்திரிகை
ஸ்ரீ சங்கரர் ஸ்ரீ மாதவரும் ஸ்ரீமன் நாராயணனே பர தெய்வம் என்ற கொள்கை கொண்டவர்-
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்..ஸ்ரீ கீதா பாஷ்யம்-.ஸ்ரீ ப்ரஹ்ம சூத்திரம் வியாக்யானம் பார்த்தாலே தெரியும்–
கொள்கை வேறு மதம் வேறு–அனைவரும் ஒரே மதம் சமயம் -எப்படி பட்டவர் எப்படி அடைவது என்பதில் தான் வாசி
ஸ்ரீ ஈஸ்வரன் .ஸ்ரீ நாராயணன் தான் -.ஸ்ரீ நாராயண ஸ்மிர்த்தி வாயால் நாராயணா சொல்வார் இன்றும்–

ஸ்ரீ கண்ட பாஷ்யம் 400 வருஷம் முன்பு -அப்பைய தீஷிதர் வியாக்யானம் கொள்கை மட்டும் இருந்த சந்தேகம் சமயம் மாறுதலாக தோன்றியது..–
மாறுபட ஆரம்பித்தார்கள் ஊர்த்த புண்டரம் தான் முன்பு தரித்து இருந்தார்கள் திர்யக் குன்றம் மாற்றி கொண்டார்கள்–
ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்ரம் எழுதி ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்தம் ஒத்து கொண்டார் .ஸ்ரீ அப்பைய தீஷிதரும்..
ஸ்ரீ லலிதா சகரநாமம் சங்கரர் அருளியது இல்லை..முன்னோடி கை விளக்கு .ஸ்ரீ பெரியாழ்வார் அருளியது–
திரு மாலே பர தெய்வம்–கீதையிலும் அந்ய தேவதை 7 -20ஸ்லோஹம்–27 ஸ்லோஹம் வரை பிரகிருதி உடன் கூடி இருப்பதால்-
முக் குணம் சேர்க்கை -ஆசை ஏற்பட -ஞானம் தொலைந்து -கண்ணை மறைக்க -பிரபத்யந்தே அந்ய தேவதை-
அதற்க்கு தக்க வேஷம் கொண்டு நியமம் கொண்டு–
சரீர பூதம்  என்பதால் இவர்களை ஸ்ரைதையாக  ஆஸ்ரிப்பவர்களின் ஸ்ரத்தையை வளர்த்து விடுவேன்–
லோகோ பின்ன ருசி என்பதால் -என்கிறான் .ஸ்ரீ கண்ணன் —

அவர் அவர் தமது தமது அறிவு அறிவு வகை வகை –அவர் அவர் இறையவர் என அடி அடைந்தனர்
அவரவர் இறையவர் குறை இலர் -கேட்க்கும் பலத்தை கொடுக்ககுறை இல்லாதவர்  –
இறையவர் -.ஸ்ரீ திருமால்-அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே —
நாட்டினான் தெய்வம் எங்கும்–பந்தலில் கொடி ஏற்றும் போல்– 96 திரு விருத்தம் ஸ்ரீ ஆழ்வார்-
ஒன்றும் தேவும் பதிக்க சுருக்கம்-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்–பிணங்கும் சமயங்கள் பல பல ஆக்கி —
அணங்கும் பல பல ஆக்கி -உன் மூர்த்தி பரத்தி வைத்தாய் இணங்கும்… நின் கண் வேட்கை எழுவிப்பனே —
ஆராதனம் அவனை வந்து அடையும் பலனும் இவனே அந்தர் ஆத்மா வாக இருந்து கொடுக்கிறான் –

ஸ்ரீ பெரிய நம்பி  உடலைவிட்டு ஸ்ரீ கூரத் ஆழ்வான் தர்சனம் இழந்தார் தார்சனம் காக்க —
பர ப்ரஹ்ம சப்த வாக்கியம்/ஜகத் காரணன்/ அந்தர்யாமி ரஷகன்/ மயக்கம் நீக்கி –
ஸ்ரீ புத்தூர் சுவாமி அருளிய புஸ்தகம் துணையாக பார்ப்போம்..
ஸ்ரீ முகில் வண்ணன் ஸ்ரீ விஷ்ணு சித்தர் மனத்தே கோவில் கொண்டான் ..
ஆகாசம் நீர் கடலில் சேருவது போல் கேசவம் பதிதம் கச்சதி–
ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அனந்தம்-வேதம்-சீஷ  ஆனந்த ப்ருகி வல்லி நாராயண அனுவாகம் தைத்ரிய உபநிஷத் —
ஆனந்த மயம் ப்ரஹ்மம்–சத்யம் ஞான அனந்த ஸ்வரூபம் அழிவு இல்லை  ஞானத்துடன் அளவிட முடியாது ..
கால தேச வஸ்து அபரிசின்னம் –லஷணம்– நித்யம் விபும் எங்கும் பரந்து சர்வ கதம் உள் புகுந்து ஸூஷ்மமாய் இருக்கும் —
சிறு மா மனிசர் மூர்த்தியாலும் வயசாலும் சிறுமை கீர்த்தியாலும் பெருமையிலும் மா மனிசர் போல் —
நித்யா நித்யானாம் –ஸ்வரூப நிருபக தர்மம் நிரூபித்த பின் விசேஷணம் பல -நிரூபித ஸ்வரூப விசேஷண-
விபும்  ப்ருஹதி -பெரியவனாய் இருந்து அண்டியவரை பெரியவனாய் ஆக்கும் பரம சாம்யம் –

அமலன் ஆதி பிரான் -தோஷ ரகிதன் மட்டும் இல்லை ஆச்ரயிதவர் தோஷம் போக்குபவன் ..
பிணங்கு சமயம்-வணங்கும் துறைகள் பல பல மதி விகற்ப்பால்-நிரஸ்த நிகில தோஷன்–ஒழிக்க பட்ட ஓன்று விடாத தோஷம்-
அனவதிக அதிசய அசந்கேய அளவு இறந்த ஆச்சர்யமான எண்ண முடியாத கல்யாண குணங்கள் கொண்ட ஸ்ரீ புருஷோத்தமன் –
ஸ்ரீ பர ப்ரஹ்மம் — உயர்வற உயர் நலம் உடையவன் அவன்..ஸ்ரீ புண்டரீகாட்ஷன் தான் ஸ்ரீ புருஷோத்தமன்-
சகஸ்ர சீர்ஷா புருஷ –புருஷ ஏவதம் சர்வம்–நாராயண வித்மகி வாசு தேவாயா தீமகி தன்னோ விஷ்ணு ஸ்ரீ புருஷோத்தமன் —
புரு -வாரி வழங்குபவன் ஸ்ரீ புருஷோத்தமன்–தன் அடியாருக்கு தான் தாழ்த்தி கொண்டு வழங்கும்–

ஸ்ரீ ராமோ விக்ரகவான் தர்ம -மங்களானாம் மங்கள -வேத அபகார குரு பாதக தைத்ய பீடாபதி–
ஸ்ரீ மத்ஸ்ய ஸ்ரீ ஹம்ச அவதாரம் எடுத்து மீட்டு கொடுத்து வியர்வையால் போக்கி இரந்து மீட்டு கொடுப்பவன் —
ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் – –மார்க்கண்டேயரும் கரியே–நக்க பிரானும் அருள் பெற்றான்..
நேர் செறிந்தான்-பாணனை ஈர் ஐநூறு தோள் துணித்தான் –அண்ட கோசம் 14 லோகமும் பிரளயத்தில் அழியும் –
நித்ய மண்டலம் மூன்று மடங்கு பெரியது -தஸ்மாத் பகவத் சப்தம் குணம் லேசம்-
நாரத பகவான் வால்மீகி பகவான் போல் -நிறைய பகவான் -ஒரு பகுதி குணம் இருந்தாலும்
ப்ரஹ்மம் என்று சொல்லும் சுக ப்ரஹ்மம் சொல்வது போல்–பர ப்ரஹ்மம் ஒருவனே —

நாராயண வல்லி-நாராயண பர ப்ரஹ்மா –தத்வம் நாராயண பர நாராயண பர ஜோதி ஆத்மா நாராயண பர –
நான்கு தடவை பர அடை மொழி சேர்த்து -மற்றவர் அபரர் என்று சொல்ல —
அந்தர் பகிஸ்த தத் சர்வம் –சர்வ வேதாந்த பிரத்ய நியாயம் -ஸ்ரீ நாராயணனை விட பர ப்ரஹ்மம் உண்டு சொல்ல பார்த்தார் அப்பைய தீஷிதர் —
நாராயண ஹ பர ப்ரஹ்மா சொல்லி இருந்தால் இந்த மயக்கம் வராது
ஸ்ரீ ஆளவந்தார் இதனால் அவனே ஸ்ரீ பர ப்ரஹ்மம் என்று ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தில் அருளினார் ..
தத்வங்களில் மேம்பட்டவன் பர ப்ரஹ்மம்-அத்வைதம் ஹானி ஒன்றே -என்பதால் –
பர ஜோதி- விளக்கு ஞானம் -இரண்டு அர்த்தம் ஞானம் கொடுப்பவன்-வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு –
மலை மேல் சேவை- குன்றத்தில் விளக்கு–ஸ்ரீ வைகுண்டமே பர ஜோதி–சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒவ்வாது —
வெளி இருட்டு போக்கும்-ஒண் தாமரையாள் கேள்வனை ஒருவனையே நோக்கும் உணர்வு -ஞானம் பர ஜோதி–
ஆத்மா நாராயண பர -பரமாத்மா நாராயணா ஒருவனே —

விரோசனன் இந்த்ரன் இருவரும் பிரம இடம் கேட்க கொப்பாரையில் பார்த்து தானே ஆத்மா விரோசனன்-
சரீரமே ஆத்மா சந்தேகம் இந்த்ரன் மீண்டும் சத்ய லோகம் -அன்னம் பிராணன் மனோ விஞ்ஞானம் ஆனந்த மயன் —
பரமாத்மா தான் அனைத்திலும் அளவிட முடியாமல் -கண்ணால் பார்ப்பதிலும் –
உள்ளும் புறமும் வியாபித்து நிற்கிற படியால் நாராயண சர்வ கதம்–தாரகன் நியாமகன் –புருஷோத்தமன் தான் சுவாமி–
ச விஷ்ணு ஆகதி- ப்ரஹ்ம தேவதா காண்டம்–பல பிரதத்வம் விஷ்ணு ஒருவனே –பவித்ரம் பர தாம பர ப்ரஹ்மம்
உன்னை காட்டு அர்ஜுனன் -கையில் பிடித்த சிறு வாய் கயிறும்-சேனா தூளி திரு குழலும் சாரத்திய வேஷத்துடன் —

சாமான்ய சப்தம் விசேஷ சப்தத்துடன் சேர்த்து-பர்யவசித்து -ஆக வேண்டும்..
சம்பு சிவா ருத்ர -சப்தம் நாராயண சப்தத்தில் பர்வசிக்கும் –நத்வ சந்த்ரிகை –
நார அயன நாராயண ..பாணினி சூத்திரம் ஒரு தேவதைக்கு தான் குறிக்கும்.–

நாராயணனே ஜகத் காரணம் இனி பார்ப்போம்….வைகுண்ட பரே லோகே –பாகவதர் பக்தை கி பாகவதை சக —
அடியார் குழாம் கூட பகல் ஓலக்கம் இருக்கிறான் -லிங்க புராண ஸ்லோஹம்–வாக்கு வீண் பிராய சித்தம் செய்ய இதை சொன்னார்கள் —
தைத்ரியம் உபநிஷத் -அறிய ஆசை யுடன் தெரிந்து கொள்ள -ப்ருகு -வருணன்-வார்த்தை–
எவன் இடத்தில் இருந்து பிறகின்றனவோ-எவனால் ரட்சிக்க படு கின்றனவோ -எவன் இடத்தில் அனைத்தும் சேருமோ-
எவனால் மோட்ஷம் பெறுமோ–மேல் ஒரு வியாபாரம் -அதுவே ப்ரஹ்மம்–அவைகள் ப்ரஹ்மம் இல்லை
மூன்றும் வெவ்வேற இல்லை மூன்றுமே ஒரே ப்ரஹ்மம்–முதாலாம் திரு உருவம் மூன்று என்பர் -ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் —
தது ப்ரஹ்மேதி-அதுவே ப்ரஹ்மம் என்பதால்–சாந்தோக்ய உபநிஷத் –சத் வித்யா பிரகரணம் —
எந்த ஒன்றை அறிந்தால் அறியாதது எல்லாம் அறிந்து கொண்டாயோ-அனைத்தையும் பார்த்தது ஆகுமோ—
சத் காரணம்-சத்தை உபாதான காரணமாக கொண்டு இருந்தது -ப்ரஹ்ம சப்தமும் சத் சப்தமும் மகோ உபநிஷத் சொல்லும்–
குறிக்க படுபவன் நாராயணனே –அனைத்தையும் சிருஷ்டித்தான்

பிரம்மாவும் ஜீவாத்மா தான் பரம சிவனும் ஜீவாத்மா தான் பிறப்பு உடையவர்கள் இவர்கள் –
விஷ்ணு  விச்வம் வஷட்காரா –அஷரம் பரமம் பிர்பும்-மேம் பட்டவன் -அவனே விச்வம்–விச்வம் உப ஜீவதி ரஷிக்கிறான் —
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரன்- இவனே அனைத்தைக்கும் ஈஸ்வரன் –தனக்கு ஈஸ்வரன் இல்லை
நாராயணன் –சிவன் அச்சுதன் -நடுவில் சிவன் -மங்களம் சுகம் கொடுக்கிறவன் சாஸ்வதம் சிவம் அசுத்தம் அவனையே குறிக்கும்
பஹுஸ்யாம் -பலவாக ஆக சங்கல்பித்து கொண்டான் – பிரணோ ஜாயதா மனசு இந்திரியம் – இவை படைக்க பட்ட பின்பு தான் —
பிரம சிவன் இந்த்ரன் பிரஜாபதி-நால்வரையும் சொல்லி -தேவர்கள் -ரஷிக்க பட்டு லயம்-உபநிஷத் ..

நீராய் நிலனாய் -சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் ஆழ்வார் –பஞ்ச பூதம் முதலில் படைத்து-பஞ்சீகரணம் பண்ணி
உருண்டை-அடுத்து பிரம -ஜீவாத்மா தேர்ந்து எடுத்து புகுத்தி இவனும் புகுந்து நியமனம் பண்ணி –அனைவரும் நாரயனனாலே –
எவன் இடத்தில் தோன்றுமோ தத்ரிய உபநிஷத் உடன் சேர்த்து -கொண்டு கூட்டு பொருள் கொள்ள வேண்டும்..
ப்ரஹ்மம்  சொன்னதே இங்கு நாராயணம் -ஏதோ வா -பிரசித்தம் தெரிந்த சொல் என்பதால் வேதம் இப்படி சொன்னது–
மகோ உபநிஷத்தும் சங்கல்பித்து கொண்டு நெற்றில் வேர்வை -ஜலம்- சிருஷ்டித்து –
நான் முகன் நெற்றியில் இருந்து முக்கண்ணன் சூலம் கொண்டு தோன்றினான் —
மோட்ஷ பல விருத்தி பரியாய சப்தம்-முக்தி-ருத்ரன் வேற சிவன் வேறு சொல்ல முயன்றார் அப்பைய தீஷிதர் –ஒன்றே —
ஏகேகவை நாராயண ஆஸீத் ந பிரம ந ஈசா ந அப்பு-அவன் ஒருவனே இருக்க பிரம சிவன் தண்ணீர் ஏதும் இல்லை
ஐந்து பூதங்களும் கூட அவன் இடம் ஒட்டிக் கொண்டு இருக்கும் -ந சூர்யா ந சந்திர -ச ஏகாதி -தனியனாக ஆனந்த பட மாட்டான்-
அதனால் தான் சிருஷ்டி பஹுஸ்யாம்–விடாமல் வேதாந்தம் சொல்லும் -சேர்த்து பார்த்தால் அர்த்தம் புலப் படும்..சுபால  உபநிஷத்–
நல்ல குழந்தை–பண்டித பாலன் போல் -ஆல் இல்லை பாலகன் தான் சுபாலன் அவனின் பெருமை பேசும்–ஆரம்பித்தில் எதுவுமே இல்லை

ந இக -திவ்யக தேவ ஏக நாராயண –தேவ சப்தமும் நாராயணனை குறிக்கும் –
ப்ரஹ்மம் /சத்/ தேவ /புருஷ பொது சொல்கள் –இவை எல்லாம் நாராயணனை குறிக்கும் —
தேவக நாராயணக –யார் சிருஷ்டித்து வேதம் உபதேசித்த தேவனோ அவனே நாராயணன்–
தாங்கி நியமித்து செய்து உரு மாற்றுகிரவன் -மாதா பிதா -கதி நாராயண சுபால உபநிஷத் —
தாதா கர்பத்தில் வைத்து தரிக்கிறான்-எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள்–நியமிக்கிறான்-
பீஷாத்மா – அக்னி இந்த்ரன் சூர்யன் -மிர்த்யு தேவதை பிரித்து நியமிக்கிறான்–
புறப்பாடு மேல் படி நவ கிரகங்கள் தலையில் வைத்து நம் பெருமாள்–

விகர்த்தா -மாற்றுவது அபசாரம் பண்ண வைப்பது -மாதா பிராதா பிராதா -மாத்ரு தேவோ பவ-
தெய்வம் பண்ணும் கார்யம் மாத பண்ணுகிறாள்-வாத்சல்யம் -கொண்டவன்–
பிதா நாராயணனன் ஹிதம் நடத்துவான் –தேவ தேவ சர்வம்-அர்ஜுனன் கிஷ்ணன் -தேவ சப்த நாராயணன் குறிக்கும்–
நக்க பிரானும் உய்ய கண்டது நாராயணன் அருளே –
நிவாசம் நாராயண இருப்பிடம் அனைவருக்கும் அர்ஜுன அனைவரையும் –
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் –
சமோஹம் சர்வ பூதோஷாம் –ஆழ்வார் பிராட்டிக்கு கொடுத்த இடத்திலா இவர்களுக்கும்
யோக நித்தரை-சம்கரித்து விட்டு யோக நித்தரை ரகு வம்சம் காளி தாசர்-
பிரமாவை நாபி கமலத்தில் படைத்து சிருஷ்டித்து என்கிறார் காளி தாசரும்-பரமசிவ பக்தர்- இவர்களை கொண்டு அவனே பண்ணுகிறான் —

பிரமச சத்ரஞ்ச -விசய சூத்திர ஓதனம் அன்னம்–மிற்துயு தஸ்ய ச உபசேசனம் –ஊருகாய் போல்–சம்கரிகிறான் —
தோன்றினார் -சொல்லும் பொழுதே அழிகிறார்-பிரம்மாவும் சிவனும் ஜீவாத்மா -பிறப்பித்து அழிகிறவரே திருமால்  —
ஹவிர்பாவம் கொடுக்க கிருஷ்ணா யஜுர் வேத வாக்கியம்–வாங்கி கொள்ள ருத்ரன் வர –
மறுத்ததும் கொல்ல பயம் உறுத்த அவர்கள்  அஸ்வினி தேவர் சரண்-அடைய காத்து கொடுத்தார் —
கோபமும் தாபமும் உண்டு பசியும் உண்டு தேவர் கொல்ல முடியாது சம்கர்தா சொலலாமா —
தான் பூட்டின நாணி தன கழுத்தை  அறுத்து கொண்டு போகாத பொழுது தான் சிவன் அந்தர் ஆத்மா ஆவான் -ஈடு—

சிவன் துன்புறுத்த வர –இந்த்ரன் கரையான் பூச்சி இடம் ஒத்தாசை கேடு- வாய் வைத்து கடித்தால் ஜலம் நிரம்பும்–
கரையான் நாணை-தேவர் களை கொல்ல ஆரம்பித்ததும் விஷ்ணு சக்தி போக -நாணை அறுத்ததும் நுனி மேலே போக
கழுத்தை அறுத்து போக -இவர் தலை போனதும் அஸ்வினி தேவர் மருத்துவர் ஒட்டுவித்தார்கள் –
இவரே முடிகிறவர் சம்கரிக்கும் கடவுளாக இருக்க முடியாது–

பரி பாடல்-மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவின் உள் பிறந்தோன்-
சிவன் மட்டும் இருந்தான்-சொல்லும் வார்த்தை-.சுருதி லிங்க அடையாளம் வாக்கியம் –
சமாக்யா பெயர் பிர பலம் அர்த்தம் கொள்ள வேண்டும்..வேதம் சொன்னதே -அடுத்தது லிங்கம்-அடையாளம்-
ஊகித்து அறிய வேண்டும்–சந்தேகத்துக்கு இடம் உண்டு – வாக்கியம்-அடுத்து ஸ்தானம்-பிரகரணம்-சமாக்யா -பெயர் –
இது கொண்டு அவன் சம்கர்தா கொள்ள கூடாது –உபக்கிரம அதிகரணம் -முதலில் சொன்ன வார்த்தை –
அவனுக்கு அவனுக்கு பின் சொன்னால் முதலில் சொன்ன நாராயணனை குறிக்கும்..
பசு கொண்டு யக்ஜம் பண்ணு-நாலு கால் பிராணி–புலி சிங்கம் இல்லை–அஜாபுத்ரம்பலி ஆட்டுக்குட்டி தான்-ஆடு அர்த்தம் சப்தம் பசு–

சிவ ஏவ கேவல -மங்களம் கொடுப்பவன்–இந்த்ரனை பார்த்து உபாசிக்க என்னையே -உனக்கு மேம்பட்டவன் இல்லை
விருதராசுரனை கொன்ற இந்த்ரனே -விஷம் குடித்த சிவன் போல்– அந்தர்யாமி என்று கொள்ள வேண்டும்-இதில் –
செலுத்துபவன் அவன் தான் –வேண்டாத கதைகள் பல -நரசிம்கன்-சரபம்-ருத்ரன் என்பர்-அபார கோபம் -கட்டு கதைகள்–
இளங்கோ அடிகள் கம்பரோ வள்ளுவரோ இதைப் பற்றி சொல்ல வில்லை–
மிருது மிருத்யு நரசிம்கன்-மிற்துயு பயம் முடிப்பவன் நரசிம்கன் –சர்வ சம்கார சமர்த்தன்-
நரசிம்கன் ருத்ரன் சரபம் அவதாரம் எடுத்து ஹிரண்யனை கொள்ள முயன்றதாம் -முடிய வில்லை–
விளக்கில் எரிய பட்ட விட்டில் பூச்சி போல் முடிந்தான் -அழல் சரபம் பிளந்த சிங்க வேள் குன்றம் —
அப்பைய தீஷிதர் இதை சொல்ல வில்லை–இவர்களே இட்டு கட்டி -பிராமண்யம் புதுசாக கற்ப்பித்து –
சிவன் மேல் பரம சிவன் என்பார்கள்–மூவரும்-மூன்று மதத்தவரும்- ஒத்து கொண்டவை தான் உபநிஷத்–

பரி பாடலும் கேள்வியில் நடு ஆகியும் -அந்தணர் அரு மறை பொருளே –ஐந்தலை .முருகன் பிறப்பு-
மண் மிசை புள் மிசை கொடியோனும் -பதராகி நின்ற திரு பரம் குன்றம்-தேவரும் காணா முருகன் -மூவரும் -பரிமேல் அழகர்-
நின்னை கண்டல்-பார்ப்பதற்கு என்பதை சேவிக்க என்று அர்த்தம் கொண்டு–பேரனை காண தாத்தா வந்தார் பரனே வந்து நின்ற பரம் குன்றம் —
பராசரர் விஷ்ணு புராணம்-மைத்ரேயர் -கேட்க -கோபத்தால் பிறந்த ருத்ரன் -அழ ஆரம்பிக்க -அழுத படியால் ருத்ரன் பெயர் -வைத்தார்–
லலாடம் -நெற்றியில் இருந்து பிரித்தார்–தேவர் ரிஷி போட்டி-ஹும்காரம்-ஸ்தம்பித்து விட வில் முறிய
அதிகம் மேனிரே விஷ்ணும் அறிந்து கொண்டார்கள் ஸ்ரீ ராமயாணம்–மகா விஷ்ணு ஜனார்தனால் கடாஷிக்க பட்டவன்
மோஷம் பெருகிறான் சத்வ குணம் கொண்டவன் ஆவான் –இதிகாசம் ரிஷிகள் அருளியதால் புராணம் விட சிறந்ததாக கொள்வார்கள்–

வால்மீகி வியாசர்-புராணமோ -கல்பம் பிரம்மா குணம் மாற மாற அக்னி சிவன் தாமச -ரஜோ தன பெருமை சத்வ ஹரி மகாத்மயம்–
சத்வ குணத்தாலே மோஷம் சித்திக்கும்..அரன் அதிகன் உலகு அளந்த ஹரி அதிகன்  அதிகன் என்று பேசும் அறிவிலிகள் கம்பர்–
உலகு அளந்த அடை மொழியால் சிவனையும் சேர்த்து அளந்தான் —
அகத்தியர் ருத்ரர் பேச்சு வராக புராணம்-எது சத்வமோ அது தான் ஹரி எது ஹரியோ அதுவே பரம பதம் —
ரஜஸ் கலந்தால் -பிரம்மா சேர்ந்தது-வேதம் புறம்பான கர்மாவால் உபாசிக்க கீழ் கதி அடைவான் தாமச குணத்துடன் —
துர் கதி அடையாமல் இருக்க ஹரி கொள்ள வேண்டும்-ருத்ரன் அருளினார்–ர்லிங்க புராணமும் சத்வ குணம் சர்வாத்மா –
கோப சம்பவோ ருத்ரன் தமோ குணம்-பிரசாதத்தால் பிரம்மா ரஜஸ் குணம் ..–

பாத்ம புராணம்-தீலிபன் வசிஷ்டர் பேச்சு–ப்ருகு மக ரிஷி–மூவர் இடமும் போக –
ஆராதனம் இன்றி யோனி லிங்க சொரூபத்தாலே ஆராதிக்க படுவாய் சாபம்–
ஜலமோ அன்னமோ பிரசாதமாக வாங்கி மாட்டார்கள்-உபயோக படாது —
பிரமா ரஜோ–குணத்தால் அரசை பண்ண வில்லை கோவில் கட்டி பூஜை இல்லை சாபம்–
நக பர்யங்கே கமலா பதி இருக்க –மெல் அடி பிடிக்க யோக நித்தரை —
தன்யோஸ்மி-உதைத்ததும் பாகவத ஸ்ரீ பாதம் பட சயனித்தால் போல் இருக்க–
அபாரா சமுத்திர சாகரம் கடக்க பாகவத திரு அடி-பிரசாதம் வேண்டும் –ஸ்ரார்த்தம் பொழுது இன்றும் சொல்கிறோம்–
கல்யாண குண சாகரம் அமுத கடல் ச ஏவ பூஜா-பூஜிக்க பட இவன் ஒருவனே —
தொல்லை முதல் முனிவர் சொல் உரை தொகை நின்ற ஐயம் தொலைத்து இலையோ–

நாராயணன் ஹரி அனந்தன் பல பல வாக்யங்களால் கூற பட்டவனே பரம் பொருள் –
திரி புரம்-எரித்த கதை-விஷ்ணு அம்பில்–க்ரூரர் ருத்ரன்-அம்பை விட சொல்ல தேவர்கள்–
விடுவேன் வரம் வேண்டும் பசுக்களுக்கு அதிபதி பட்டம் வேண்டும்-பசுபதி–தானும் வரம் வாங்கி கொண்டவர்–
வில்லுக்கும் அம்புக்கும் பரம சிவனுக்கும் தேருக்கும் குதிரைக்கும் அந்தர் ஆத்மா இருந்ததால் தான் தூக்க முடிந்தது-
பெரியவர் -எண்ணம்- வர திரி புரம் எரித்தால் -சண்டை-விஷ்ணுவே பெரியவன்-முன்பு பார்த்தோம்-பிரமா தலை கிள்ளி கபாலி–
வேர்வையால் போக்கினான்–உலகு எழும் சுற்றி திரியும் பெரியோன் –இடர்கெடுத்த திரு வாளன் திரு அடியே அடை நெஞ்சே–
ஆலஹால விஷம்-ரிக்வேத மந்த்ரம்–மோகினி வடிவம்-கேசி-தானே குடித்தான் சிவன் என்ற பாத்ரம் கொண்டு குடித்தான் —
சாஸ்திர வாக்கியம்–பகவானே எனக்கும் பிரம்மாவுக்கும் கடவுள் சிவனே சொல்ல–
வரம்  கேட்டு தாத்தா பேரன் இடம் கைலாச யாத்ரை போக –கள்வா எம்மையும் எழ உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா —
அவதரிக்கும் காலத்தில் நீ வரம் கேட்க்க வேண்டும் என்ற வரம் கேட்டான்–
கேசவ -கே ஈச வ -பிரம்மாவையும் என்னையும் நியமிக்கிற்வன்–
கேனோ பார்வதி கேட்க -ஸ்ரீ ராம ராமேதி -சிறந்த திரு நாம ஊர்த்த புண்டரம் தரித்து மோட்ஷம் போகிறான்
ஹரே  திரு அடி தாமரை -சத்யம்  சத்யம் புனஸ் சத்யம் –கேசவனே பர பிரமம்-
வேண்டிய வேதங்கள் ஒதிவிரைந்து கிளி அறுத்தான் –
இருப்பதை சொல்லி பெருமை பெற்றேனே-சாதிக்க வேண்டியது இல்லை சித்த புண்யம்

ப்ரஹ்மஜ்ஞானி ஜிஜ்ஞாஸு ஸம்வாதம்.

||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||

“சர்வம் விஷ்ணு மயம் ஜகத்”

ஜிஜ்ஞாஸு:- கஸ்த்வம்?– நீர் யார்?
ஞானி:- தத்வவித,ஸ்மி-சித், அசித்,ஈச்வரன் என்னும் மூன்று தத்துவங்களையும் தெளிவாக அறிந்தவன் யான்.

ஜிஜ்ஞாஸு:- வஸ்து பரமம் கிம் தர்ஹி? — அப்படியாகில் பரதத்துவமாய் — மேலான உண்மையாய் — இருப்பது எது?

ஞானி:- விஷ்ணு:- விஷ்ணுவே பரதத்துவமாவான்.

ஜிஜ்ஞாஸு:- கதம்? — விஷ்ணுவே பரதத்துவம் என்று நீர் சொல்லுவது எப்படி பொருந்தும்?

ஞானி:- தத்வேதம்பர தைத்திரீயகமுக த்ரய்யந்த ஸந்தர்ஸநாத் — பரதத்துவத்தை நிர்ணயிப்பதற்காகவே வந்த தைத்திரீயக நாராயணாநுவாகம், நாராயணோபநிஷத், மஹோபநிஷத், புருஷஸூக்தம், விதிசிவாதிகளுக்குப் பிறப்பைச் சொல்லும் பற்பல வேதவாக்கியங் கள், ந்ருஸிம்ஹதாபிந்யுபநிஷத், தசோபநிஷத்துக்கள் முதலான பற்பல வேதாந்த பாகங்களிலே யுள்ளவையான…..;

“நாராயண பரம்ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:| நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர|| யச்ச கிஞ்சித் ஐகத்யஸ்மிந் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா| அந்ததர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:||

“நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே| நாராயணாத் ருத்ரோ ஜாயதே”

“ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந:… தத்ர ப்ரஹ்மா சதுர்முகோஜாயத …லலாடாத் தர்யக்ஷ: ஸூலபாணி: புருஷோஜாயத”

“லலாடாத் க்ரோதஜோ ருத்ரோ ஜாயதே”

“தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண …உத்பவஸ் ஸம்பவோ திவ்யோ தேவ ஏக நாராயண:, மாதா பிதா ப்ராதாநிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:”  

“ஸஹஸ் ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்”

“புருஷ ஏவேதம் ஸர்வம்
உதாம்ருதத்வஸ்யேஸாந:”

“தஸ்மாத் விராடஜாயத”

“புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம்”

“ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ”

“விஸ்வம் நாராயணம்….பரமம் ப்ரபும் விஸ்வத: பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம் | பதிம் விஸ்வஸ்யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவ மச்யுதம் நாராயணம் மஹாஜ்ஞேயம் விஸ்வாத்மாநம் பராயணம்”

“ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் ஸேந்த்ர:”

“பரம் ப்ரஹ்ம புருஷம்”

“ப்ரஹ்மா தேவாநாம் ப்ரதமஸ் ஸம்பபூவ”

“புருஷம் ப்ரஹ்ம யோநிம்”

“யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்”

“தேவத்ரா க்ஷத்ராணி இந்த்ரோ வருணஸ் ஸோமோ ருத்ர: பர்ஜந்யோ யமோ ம்ருத்யூரீஸாந இதி”

“ஸதஸீர்ஷா ருத்ரஸ்ஸமபவத்”

“ப்ரஜாபதிர் வை ப்ரஜாகாமஸ் தபோதப்யத | சமஸமகரோத்…. தஸ்மிந்ரேதஸ் ஸமஸிஞ்சத்| தத உததிஷ்டத் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்| ஸ ஏஷோஷ்டநாமா அஷ்டதா விஹிதோ மஹாேதேவ:”

“பூதாநாம் ச ப்ரஜாபதிஸ் ஸம்பவத்ஸராய தீக்ஷித: உஷ: பத்நீ| பூதாநாம் பதிஸ் ஸம்வத்ஸர உஷஸி ரேதோஸிஞ்சத் | ஸம்வத்ஸரே குமாரோஜாயத | ஸோரோதீத் | தம் ப்ரஜாபதிரப்ரவீத் | குமார கிம் ரோதிஷி | யச்ச்ரமாத் தபஸோதி ஜாதோஸீதி | ஸோப்ரவீத் | அநபஹதபாப்மா வாஹம் அநாஹிதநாமா | நாம மே தேஹி பாப்மநோ அபஹத்யை | தம் புந: ப்ரஜாபதிரப்ரவீத் | ருத்ரோஸீதி||”

“யதோ ஜஜ்ஞே உக்ரஸ் த்வேஷ ந்ரும்ண:”

“ஸ ப்ரஜாபதிரேக: புஷ்கரபர்ணே ஸம்பவத்”

“தத் விஷ்ணோ: பரமம் பதம்”

“புருஷாந்ந பரம் கிஞ்சித்”

“விஷ்வரூபம் ஹரிணம் ஜாதவேதஸம் பராயணம் ஜ்யோதிேரேகம் தபந்தம்”

“பராத்பரம் புரிஸயம் புருஷமீக்ஷதே”

“திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண”

“புருஷோ மநோமய:…. கேஸாந்தோ விவர்த்தே”

“அநந்தம் ப்ரஹ்ம”

“விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா”

“உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந”

“ஹிரண்யகர்ப்பம் பஸ்யத ஜாயமாநம்”

“உத்திஷ்ட புருஷ ஹரீ லோஹிதபிங்களாக்ஷி”

“அம் பஸ்யபாரே”

“யமந்தஸ் ஸமுதரே கவயோ வயந்தி”

“ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷோ த்ருஷ்யேதே….தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”

“க்ருஷ்ணாய தேவகீபுத்ராய”

“ய ஏஷோக்ஷிணி புருஷோ த்ருஸ்யதே….ஏஷ உ ஏவ வாமநீ .:”

“ஆத்மைவேதமக்ர ஆஸீத் புருஷவித:”

“ஸ யத் பூர்வோஸ்மாத் ஸர்வஸ்மாத் ஸர்வாந் பாப்மந ஔஷத் தஸ்மாத் புருஷ:”

“புருஷோவ அக்ஷிதி:”

“அயம் வை ஹரய:

“வாமேக்ஷிணி புருஷரூபம் ஏஷாஸ்ய பத்நீ விராட்”

“விராடஸி ப்ருஹதீ ஸ்ரீரஸி இந்த்ரபத்நீ தர்மபத்நீ”

“ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் தத ஏதே வ்யஜாயந்த் | விஸ்வே ஹிரண்யகர்ப்போக்நிர் வருணவிஷ்ணுருத்ரேந்த்ரா: “

“அஷ்டபாதம் ஸுசிம் ஹம்ஸம் த்ரி ஸூத்ரமணுமவ்யயம்”

“த்யாநக்ரியாப்யாம் பகவாந் புங்க்தே”

“புருஷம் நிர்க்குணம் ஸாங்க்யம்” * முதலான நூற்றுக்கணக்கான வேதாந்த வாக்கியங்களிலே நாராயணன் ஒருவனே பிரமன் உருத்திரன் முதலிய அனைவருக்கும் காரணணமாயிருப்பவன் என்று காணப்படுவதால்தான் விஷ்ணுவே பரதத்துவம் என்று நான் கூறினேன்.

ஜிஜ்ஞாஸு:- அந்யாஸ் தர்ஹி கிர: கதம் — “ஸர்வோ வை ருத்ர:” [எல்லாம் ருத்ரனே) என்றாப் போலே சிவனுக்கு பெருமையைச் சொல்லும் மற்ற வாக்கியங்கள் என்னாவது?

ஞானி:- குணவஸாத் — வ்யாபகத்வம் முதலிய பரமாத்ம குணத்தில் ஒரு சிறு பகுதி ருத்ராதி களிடத்திலும் காணப்படுவதால் அவ்வாக்கியங்கள் பொருளுடைய வையாகின்றன. “தத்ர பூஜ்யபதார்த் தோக்தி பரிபாஷாஸமந்வித: ஸப்தோயம் நோபசாரேண அந்யத்ர ஹ்யுபசாரத:” [பூஜ்யபதார்த்தத்தைச் சொல்லும் வழக்குடன் கூடிய இந்த பகவச்சப்தம் அந்த பகவத் விஷயத்திலேயே ஔபசாரிகமல் லாமலிருக்கிறது. மற்றவிடங்களில் உபசாரமாகவே பிரயோகிக்கப்படு கிறது.] என்றாப்போலே வ்யாபகத் வாதி குணலேஸயோகத்தாலே “ஆபோ வா இதம் ஸர்வம்” [இவையெல்லாம் ஜலமே] என்றதுபோன்ற பிரயோகங்களும் வேதத்தில் காண்பதுபோலே “ஸர்வோ வை ருத்ர:” முதலிய பிரயோகங்களையும் நிர்வஹித்து விடலாம்.

ஜிஜ்ஞாஸு:- அத்ராஹ ருத்ர: கதம் — நானே ஆதிகாலததிலிருந்த அருமறைப் பொருள் என்று ருத்ரன் உரைத்தது எப்படி ஒட்டும்? அதர்வசிரஸ் என்னும் உபனிஷத்திலே “தேவா ஹ வை ஸ்வர்க்கம் லோகமகமந் தே தேவா ருத்ரமப்ருச்சந் கோ பவாநிதி ஸோப்ர வீத் அஹமேக: ப்ரதமமாஸம் வர்த்தாமி ச பவிஷ்யாமி ச நாந்ய: கஸ்சிந்மத்தோ வ்யதிரிக்த இதி ஸோந்தராதந்தரம் ப்ராவிஸத் திஸஸ்சாந்தரம் ப்ராவிஸத் ஸோஹம் நித்யாநித்ய:…” [தேவர்கள் ஸ்வர்க்கலோகத்திற்குச் சென்றனர். அவர்கள் “தாங்கள் யார்” என்று ருத்ரனைக் கேட்டனர். அவர் பின்வருமாறு பதிலுரைத்தார்:– “நான் ஒருவனே முதலில் இருந்தேன். இப்போது இருக்கிறேன். இனியும் இருப்பேன். என்னைக்காட்டிலும் வேறானவன் ஒருவனுமில்லை.” என்று அவர் ஸூக்ஷ்மத்தைக்காட்டிலும் ஸூக்ஷ்மத்தில் பிரவேசித்தார். திக்குகளினுள்ளிருக்கும் வஸ்துவில் பிரவேசித்தார். “அப்படிப்பட்ட நான் நித்யாநித்ய வஸ்துக்களாயிருக்கிறேன்”] என்று தொடங்கி சிவன் தானே ஸர்வகாரணன் என்றும் ஸர்வாந் தர்யாமியென்றும் உரைத்தது விஷ்ணுவே பரதத்துவம் என்றுரை க்கும் உம்முடைய பக்ஷத்திலே எப்படி ஒட்டும்?

ஞானி:- தத்த்ருஷ்ட்யா — தனக்கு அந்தர்யாமியாயிருக்கும் பரமாத் மாவை நினைத்து சிவன் அப்படிப் பேசியிருக்கிறாராகையாலே விரோதமில்லை. பரமாத்மவிஷய மான பாவநாப்ரகர்ஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே) அப்படிப் பேசுவதாகவும் கொள்ளலாம் இப்படிப் பேசினார் பலர் உளர். “தத்தைதத் பஸ்யந் ரிஷிர் வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்யஸ்ச” [பரமாத்மாவின் ஸர்வாத்மபாவத்தை அறிந்த வாமதேவ ரிஷியானவர், நானே மனுவாகவும் ஸூர்மனாகவும் ஆகிறேன் என்றுரைத்தார்.] என்கிற படியே வேதத்திலும் வாமதேவர் என்னும் ரிஷியானவர் பரமாத்மாவின் ஸர்வாத்மபாவத்தைத் தன்னிட முள்ளதாகப் பேசினார் என்பது ப்ரஸித்தம். இதையே “ஸாஸ்த்ரத்ருஷ்ட்யா தூபதேஸோ வாமதேவவத்” [வாமதேவரைப் போலே சாஸ்த்ரத்ருஷ்டியினாலே இங்கு உபதேசம் செய்யப்படுகிறது.] என்று ஸூத்ர காரரும் ஸித்தாந்தம் செய்தார். இந்திரனும் “மாமுபாஸ்ஸ்வ” [என்னை — (அதாவது:– என்னை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை) – உபாஸிப்பாயாக] என்றான். “மத்தஸ் ஸர்வமஹம் ஸர்வம்” [என்னிடமிருந்து எல்லா முண்டாகிறது. நானே உலகெல்லாம்.] என்றான் ப்ரஹ்லாதன். திருவாய்ப்பாடியில் பெண்களும் பாவநா ப்ரகர்ஷத்தாலே தங்களை க்ருஷ்ணனாக அனுகரித்தார்கள். “கடல் ஞாலம் செய்தேனும் யானேயென்னும்” என்றார் ஆழ்வார். ப்ரஹ்லாதனுக்கும், கோபிகளுக்கும்,நம்மாழ்வாருக்கும், வாமதேவரிஷிக்கும்,இந்திரனுக் கும் மேலே கண்ட வாக்கியங்களி லிருந்து பரமாத்மத்வமும் ஸர்வ காரணத்வமும் உண்டாகில், சிவனுக்கும் இந்த வாக்கியத்தி லிருந்து பரமாத்மத்வமும் காரணத் வமும் ஏற்படலாம். “ஸோந்தராதந்தரம் ப்ராவிஸத்” என்னும் வாக்கியத்தினால் வேதமே, இங்கு ருத்ரனின் பேச்சு பரமாத்மத்ருஷ்டியினாலே ஏற்பட்டது என்பதை விளக்குகிறது. ஆகையாலே அதர்வசிரஸ்ஸி லுள்ள ருத்ரவாக்யத்தாலும் ருத்ர பரத்வம் ஸித்திக்க வழியில்லை.

ஜிஜ்ஞாஸு:- கதமுத்பவதி ? — விஷ்ணுவுக்குப் பிறப்பைச் சொல்லும் வாக்கியம் விஷ்ணு பரத்வத்துடன் எப்படி ஒட்டும்.? அதர்வஸிகை என்னும் உபநிஷத்திலே “த்யாயீதேஸாநம் ப்ரத்யாயிதவ்யம் | ஸர்வ மிதம் ப்ரஹ்மவிஷ்ணு ருத்ரேந்த்ராஸ் தே ஸர்வே ஸம்பரஸூயந்தே ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹ பூதை:| ந காரணம் காரணாநாம் தாதாத்யதா” [தியானிக்கத்தகுந்த வனான ஈசானனை தியானிக்க வேண்டும். இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் ப்ரஹ்மவிஷ்ணு ருத்ரே ந்திரர்களும் ஆகிய இவையெல்லாம் பிறப்புடையவை யாகின்றன. தாதாவாகிற பிரமனும், த்யாதா எனப்பட்ட ருத்ர னும் காரணபூதராயிருந்த போதிலும் காரணகாரணரல்லர்.] என்று விஷ்ணுவுக்கு ப்ரஹ்மருத் ரேந்தர பூதேந்த்ரியங்களோடு கூடப் பிறப்பைச் சொல்லியிருப்பது எப்படி பொருந்தும்?

ஞானி:- அவதரதி — விஷ்ணுவுக்கு ச்சொல்லப்படும் பிறப்பு அவதார ரூபமாயிருக்கையால் பொருந்தும். ஈஸான பரமாத்மஸப்தவாச்யனான பரமபுருஷனை தியானிக்க வேண்டும் என்னும் விதிவாக்கிய த்தில் சொல்லப்பட்ட அர்த்தம் பொருத்தமுள்ளதே என்பதை இதர வேத வாக்கியங்களில் ஸுப்ரஸித்தமான சில அர்த்தங்ளைச்சொல்லி நிரூபிப்ப தற்காகத் தோன்றியது “ஸர்வமிதம் ப்ரஹ்மவிஷ்ணுருத்ரேந்த்ராஸ் தே ஸர்வே ஸம்ப்ரஸூயந்தே” என்னும் அர்த்தவாதவாக்கியம். ஆகையாலே இவ்வேதவாக்கியத் தை மற்ற வேதவாக்கியங்களைத் துணைகொண்டே பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, “நாராணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே” முதலான வாக்கி யங்களில் ப்ரஹ்மருத்ராதிகளுக்கு நாராயணனிடமிருந்து பிறவியும், தாழ்ச்சியும், “அஜாயமாநோ பஹுதா விஜாயதே” [பிறப்பற்ற வனாகயிருந்தும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்] முதலான வாக்கியங்களிலே புருஷோத்தமனுக்கு அவதார ரூபமானதேயாக வேண்டும். ஆகையால், “ப்ரஹ்மருத்ராதிகள் தாழ்வான பிறப்பை உடையவர்க ளாகையாலே உபாஸிக்கத்தக்க வர்களல்லர்; பரமாத்மா விஷ்ணு வாகிற அவதாரரூபமான பிறப்பை யடைந்து ஸுலபனாயிருக்கிறா னாகையாலே உபாஸிக்கத்தகுந்த வனாகிறான்” என்பதே இவ்வாக்கி யத்தின் திரண்ட பொருளாகும். “ந காரணம் காரணாநாம் தாதா த்யாதா” என்னும் அடுத்த வாக்கிய த்தில் ப்ரஹ்மருத்ரர்கள் இருவரை மட்டும் எடுத்துக் காரணகாரணர் களல்லர் என்று சொல்லியி ருப்பதும் இவ்வர்த்தத்தையே வலியுறுத்துகின்றது.

ஜிஜ்ஞாஸு:- அந்யத் கதம்:- சிவருத்ராதி ஸப்தங்களால் சொல்லப்படுபவனே பரமாத்மாவென்றும், காரணபுருஷ னென்றும் வேதத்திலே பலவிடங் களில் ஓதியிருப்பதை எப்படி நிர்வஹிப்பது.? “ஸிவ ஏகோ த்யேய: ஸங்கரஸ் ஸர்வமந்யத் பரித்யஜய” “ஸர்வைஸ்வர்ய ஸம்பந்ந: ஸர்வேஸ்வர: ஸம்புராகாஸமத்யே த்யேய:” “ஏகோஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து:” “விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி: ஹிரண்யகர்ப்பம் ஜநயாமாஸ” “தஸ்மாத் ஸர்வகத: ஸிவ:” மாயிநம் து மஹேஸ்வரம்” “ஜ்ஞாத்வா ஸிவம் ஸாந்திமத்யந்தமேதி” “ஸிவம் ஸர்வபூதேஷு கூடம்” “ஸிவ ஏவ கேவல:” “ஈஸஸ் ஸர்வாதிபத்பம் குருதே” “பாவாபாவகரம் ஸிவம்” முதலான வாக்கியங்களில் பரமாத்மாவுக்கேயுள்ள தர்மங்கள் சிவனிடமுள்ளதாகச் சொல்லி யிருப்பது எப்படிப் பொருந்தும்?

ஞானி:- நீயதாம் — பரமாத்மாக்கள் இருவர் இருக்கமுடியா தாகையாலும், வேதத்தில் படிக்கப்படும் நாரயணாதி நாமங்கள் சிவாதி நாமங்களைக் காட்டிலும் அர்த்தத்திலும் ஸப்தத்தி லும் ப்ரபலமானவை யாகையாலும் இந்த சிவாதி ஸப்தங்கள் நாராயணனைச் சொல்லுவதாகவே கொள்ள வேண்டும். சிற்சிலவிடங்களில் சிவாதிகளைக் குறிப்பதற்காகவே ஏற்பட்டாலும், அர்களுக்கு அந்தர் யாமியான நாராயணபர்யந்தம் பொருள்கொண்டால்தான் ஸர்வ வேத வாக்கியங்களும் பொருந்தி யிருக்கும். ஆகையால் ஒரு விரோதமுமில்லை.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

ஆதாரம்:-[புத்தூர் ஸ்வாமியின் “விஷ்ணு சித்த விஜயம்”. என்னும் உன்னத படைப்பிலிருந்து]

——————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ விஷ்ணு சித்தர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கூரத் ஆழ்வான்-வைபவம் -ஸ்ரீ கூரேச விஷயம்-விஜயம் —

December 18, 2014

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதி மஹே
யதுக்த்யஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம் –

ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் சாங்கம் உபாஸ்மஹே
அக்ரயம் யதீந்திர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம்

வ்யக்தி குர்வன் நிகம சிரசாமர்த்த மந்தர் நிகூடம்
ஸ்ரீ வைகுண்ட ஸ்துதி மக்ருத யஸ் ஸ்ரேயசே சஜ்ஜநாநாம்
கூராதீசம் குருதரதயா துக்த சிந்தும் தமீடே
ஸ்ரீ வத் சாங்கம் ஸ்ருதி மத குருச்சாத்ர சீலை கதாம

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் தாழ்வான்-

வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்யா கூராதி நாத  –

அர்வாஞ்சோ யத்பத சரசிஜத் வந்தவம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யா நவயம் உபகதா தேசிகாம் உக்திமாபு
சோயம் ராமானுஜ முநி ரபி ச்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் சம்பந்தாதம நுத கதம் வர்ண்யதே கூர நாத

ஜாதோ லஷ்மண மிஸ்ரா சம்ஸ்ரயத நாத்
ஸ்ரீ வத்ஸ சிஸ் நாத்ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித
ஸ்ரீ ரங்க பர்த்ரா ஸ்வயம்

ஆழ்வான் எங்கள் பூர்வர்கள் தேவதாந்தர பஜனம் பண்ணாமையாலே என்றானாம் -செய்யாதன செய்யோம்

தேவதைகள் தான் ஸ்ரீ வைஷ்ணவர்களை அநுவர்த்தியாது ஒழிவது ஏன் -என்று கேளாய் -என்பார் ஆழ்வான்

ஒரு பண்டாரத்தின் நீறு நமது உடலில் படிந்துள்ள இக்குறையில் இருந்து மீண்டு தூய்மை பெறுவது எப்படி -பட்டர் ஆண்டாள் இடம் கேட்க
ஆயிரம் முழுக்கு இட்டாலும் போகாது –மாதவன் தமர் அடிப் பொடி கொண்டு பூசி அவர் ஸ்ரீ பாத தீர்த்ததைப் பருகினால் இப்பாபம் தொலையும்

—————————————————————————————————————————————–

பிரமோதூத ஆண்டு -தை -ஹஸ்தம் -திருவவதாரம் -ஸ்ரீ வத் சாங்கன் –

கூரத் தாழ்வார் ஓர் அளவிலே நங்கைமார் திருவடி சார்ந்த வாறே
இன்னமமும் ஒரு விவாஹம் பண்ணுவோமோ என்று விசாரித்து
இது தான் க்ரமத்தாலே  வந்து ஆழ்வானுக்கு விரோதமாய்த் தலைக்கட்டும் –
இனித் தான் அநாஸ்ராமே நதிஷ்டேத்-என்று சாஸ்திரம் சொல்லா நின்றது
இஸ் சாச்த்ரார்த்தை அனுஷ்டிப்போமோ
பாகவத பரிசர்யை பண்ணுவோமோ -என்று விமரிசியா
அஸ் சாமான்ய தர்மத்தைக் காட்டில் இவ் விசேஷ தர்மமே  பிரபலம் -என்று தவிர்த்தார்

பொன்  வட்டில் தனை ஒழிந்த புகழுடையோன் வாழியே

பதக்கு ஆத்ம சம்பந்தம் இருப்பினும் ஸ்வாமி யுடன் உழக்கு தேக சம்பந்தம் இல்லையே -என்று ஆழ்வான் மனக்குறைபட்டு அருளுவாராம்

உச்சி வெய்யிலில் ஆழ்வான் அமுது செய்து இருக்கிற அளவில் மாம் ஏகம் அர்த்தம் எம்பெருமானார் அருளிச் செய்தார்

இங்கே விண்ணப்பம் செய்யவோ இரண்டு ஆற்றின் நடுவே விண்ணப்பம் செய்யவோ

தன் நெஞ்சில் படாதே சாயை போலே என்னைப் பின் செல்வான் ஒருவனாக வேணும் -அதுக்காவார் –
ஆழ்வானைப் போக விடலாகாதோ -பெரிய நம்பி

சிவாத் பரதரம் நாஸ்தி
த்ரோணம் அஸ்தி தத பரம் –
சிவம் -குரணி–த்ரோணம் -பதக்கு

ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் வைஷ்ணவனுக்கு கிஞ்சித் கரிக்க இருக்க
வைஷ்ணவனுமாய் அறவையுமாய் -துணை அற்ற அநாதையாய் -இருப்பான் ஒருவனை நீங்கள் எங்கள் தேடுவிகோள்
அநாத பிரேத சம்ஸ்காரம் -அஸ்வமேத யாக பலம் கிட்டும்

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளாதல் -கூரத் ஆழ்வான் ஆதல்
ஆன்ரு சம்சய பிரதானாராகை
கார்யம் கருண மார்யேண-
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும்

அடைவில்லாத திரு நாட்டில் ஒரு அடைவு தேடுவதே –பெரியோர்கள் வரவை எதிர் கொள்ளுவார்களே
உடையவர் முன்னமே திரு நாட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு கேட்டு பெற்றார்
கற்பூரம் நுகராத போது ராஜபுத்ரருக்கு நெஞ்சு வரலும் -த்வயம் காதில் உபதேசித்து அருளி –
ஒரு மகள் தன்னை யுடையேன் –உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போலே வளர்த்தேன் -செங்கண் மால் தான் கொண்டு போனான்

ஆழ்வானை அரவ வாய்க் கோட்பட்ட மண்டுக வொலி  கேட்டு மதி எல்லாம் உள்  கலங்கி மயங்கி நின்ற பெருமானார்

பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் -மனம் மொழி மெய் இவை எதனாலும் பாகவத அபசாரம் பண்ணாமல் வாழக் கடவேன் என்று நம் கையில் நீர் வார்த்து தானம் பண்ணிக் கொடும்
மனத்தினால் பண்ணிய அபசாரத்துக்கு மிகுந்த அனுதாபம் யுண்டாய் இருக்க ஈஸ்வரன் மன்னித்து அக்குற்றமே படாமல்
ரஷித்து அருள்வான் -காயிகமான அபசாரம் ராஜ தண்டனை வரும் என்ற பயத்தினால் நேராது
வாக்கினால் யாரையும் வைத்து பேசாமல் பாது காத்து இரும் –நல்வார்த்தை அருளிச் செய்தார் –
வீர ஸூ ந்தரன் மரணம் அடைய ஆண்டாள் அனுதாபம் -ஆழ்வான் திருவடி சம்பந்தம் பெற்ற பலன்
கலையறக் கற்ற மாந்தர் -கூரத் ஆழ்வார் சிரசில் அணிவித்து செய்து அருளினார்

—————————————————————————————–

கூரத்தாழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருளியது –124- திரு நக்ஷத்திரத்தில் –கி பி 1133-
அதற்கு ஆறு மாதங்களுக்கு பின் முதலியாண்டான்-தமது 106 திருநக்ஷத்ரத்தில் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
அதே ஆண்டு சில நாள்கள் கழித்து பிள்ளை உறங்கா வல்லி தாசரும் பொன்னாச்சி அம்மையாரும் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்கள்
கலி 4239-கிபி 1137-பிங்கல வருஷம் மாசித்திருவாதிரை வளர்பிறை தசமி சனிக்கிழமை நண் பகலில்
உடையவர் தமது 120 திரு நக்ஷத்திரத்தில் திருநாடு அலங்கரித்தார்
கி பி 1140 எம்பார் தமது 115 திருநக்ஷத்ரத்தில் திருநாடு அலங்கரித்தார்

அபிகமன சாரம்
புருஷ ஸூக்த பாஷ்யம்
சாரீரிக சாரம்
சரம ஸ்லோக வியாக்யானம்
கூரேச விஜயம்
நித்ய கிரந்தம் –இவற்றையும்
பஞ்ச ஸ்தவங்களையும் சாதித்து உள்ளார்

காஷாய  சோபி கம நீய சிகா நிவேசம்
தண்டத்ரேய உஜ்வல  கரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்ல சத் ஊர்த்தவ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே

————————————————————————————————————————–

யதிராஜ வேஷத்தால் க்ரிமிகண்டன் சபை நடுவில் சென்று வென்ற விடாய் தீரவோ
எள்ளவும் அஞ்சாமல் த்ரோணம் அஸ்தி தத பரம் -என்று எழுத்திட்ட ஸ்ரமம் தீரவோ
தர்சனத்தை உத்தரித்து தர்சனம் கட்கு அழிவின்றி வரம் பெற்ற விடாய் தீரவோ
தயையுடனே நாலூரான் பிழை பொறுத்து தன் கதியை அவர்க்கு அளித்த ஸ்ரமம் தீரவோ
கூரேச விஜயத்தால் குத்ர்ட்டிகளை குடியோட்டி வெற்றி பெற்ற வேர்வை யாரவோ
குலகுருவாம் எதிராசர் விரகத்தால் நெடும் காலம் நொந்து இருந்த இளைப்பாரவோ
ஸ்ரீ பாஷ்யம் இடும்போது ப்ரஹ்ம ஸூ த்த்ரம் வ்ருத்தி எல்லாம் தரித்து உரைத்த விடாய் தீரவோ
ஸ்ரீ யபதியின் சேஷத்வம் ஜீவாத்மா லஷணம் என்று அறிவித்த விடாய் தீரவோ
ஸ்ரீ கூர குல பிரபவ தர்சன ஸ்தாபன ஆச்சர்ய
ஸ்ரீ கூர நகர் தழைக்கவே ஜகம் ஏழும் குளிர நின்று
திருமஞ்சனம் கொண்டு கண்டு அருளவே ஜய விஜயீ பவ-

———————————————————————————————————————————-

சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தான் வாழியே
தென்னரங்கர் சீரருளை சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின்   உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்திங்கு உதித்தான் வாழியே
எழில் கூரத் தாழ்வான் தன் இணையடிகள் வாழியே-

பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே
பொன் வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே
மருள் விரிக்கும் முக் குறும்பை மாற்ற வந்தான் வாழியே
மயர்வறவே மெய்ஞ் ஞானம் விளங்கிடுவான் வாழியே
இருள் விரிக்கும் சிவம் எதிரிட்டு எழுத்திட்டோன்   வாழியே
ஏதமற வெவ்வுயிர்க்கும் இதமளித்தோன் வாழியே
அருள் விரிக்கும் அரங்கத்தான் அடியிணைகள் வாழியே
அழகாரும் கூரத் தாழ்வான் அடியிணைகள் வாழியே-

மட்டவிழும் பொழில் சூழ் குருகேசர் மறைத் தமிழ் வாழ்ந்திடு நாள்
மண்ணுலகில் ஸ்ரீ பாஷ்யம் விளங்கிட வந்து பிறந்தவர் நாள்
எட்டும் இரண்டும் இசைந்த சுலோகம் இசைத்திட வந்தவர் நாள்
இல்லை எனச் சிவமென்றே எதிரிட்டு எழுத்திட வந்தவர் நாள்
துட்ட குதிர்ட்டிகள் மாயிகள் வாழ்வைத் துரத்திட வந்தவர் நாள்
சூரிய பூமியர் ஆரியர் என்று துதித்திட வந்தவர் நாள்
அட்ட திசைக்கும் நிறைந்த புகழ் அந்தணர் வாழ கூரத் ஆழ்வான்
வந்தருளிய தையில் விளங்கிடு அத்தமது நன்னாளே–
அத்தமது எனு  நாளே –என்றும் பாடம்   –

—————————————————————————————————————————–

நம்பி ஸ்ரீ கோவிந்த தாசர் -அர்ஜுனன் பிரச்னம் பண்ண சர்வஜ்ஞ்ஞனும் சர்வ  சக்தனுமாய் இருக்கிறவன்
பண்டு போல் சொல்ல மாட்டேன் என்றது ஏன்
என்று கூரத் ஆழ்வானைக் கேட்க
த்ரௌபதி குழல் முடித்த பின்பு பண்டு போலே அவன் வாய் புறப்படுமோ -என்று திரு வுள்ளக் கருத்து
என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ வார்த்தா மாலை-114-

பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு -ஆச்சார்ய லஷணம் இருக்கும் படி என்  -என்று விண்ணப்பம் செய்ய
ஆழ்வான் அருளிச் செய்யும் படி –சிஷ்யன் விஷயத்தில் ஆச்சார்யன் பர்த்ரு சமனுமாய்
சரீரி சமனுமாய்
தரமி சமனுமாய்
இருக்கக்கடவன்
அதாவது
ஏவிக் கொள்ளுகையும் எடுத்து இடுவிக்கையும்
அசேதனத்தைக் கொண்டு நினைத்த படி விநியோகம் கொள்ளுமா போலே
விநியோகம் கொள்ளுகையும் எடுத்துக் கொள்ளுகையும் என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ வார்த்தா மாலை –168-

எம்பெருமானாரிலும் ஆளவந்தாரிலும் வாசி யார்க்குண்டு -என்று முதலிகள் ஆழ்வானைக் கேட்க
பெருமாளிலும் பெரிய பிராட்டியாயிலும் வாசி யார்க்குண்டு -என்றார் –
நத்யஜேயம் -என்றார் பெருமாள்
ந கச்சின் ந அபராத்யதி -என்றாள் பிராட்டி
இப்படி இருவர்க்கும் வாசி -என்று அருளிச் செய்தார் –ஸ்ரீ வார்த்தா மாலை –184-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கூரேச விஜயம் -வெள்ளை சாத்துப்படி -6 நாள் உத்சவம்
திருமஞ்சனம் ஆனபின்பு ஸ்ரீ பெரும்பூதூர் சந்நிதியில் ஸ்வாமி திரு முன்பே சேவிக்கப் படுகிறது

சர்வ வேத யத்பதமாம நந்தி -வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய –
வைதிக சங்கல்பம் –ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த -ஸ்ரீ விஷ்ணோர் ஆஜ்ஞ்ஞயா –
வேத அத்யயனம் –ஹரி ஓம் -ஆரம்பித்து -ஹரி ஓம் -என்று முடிக்கிறார்கள்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி -சவித்ரு மண்டல மத்ய வர்த்தியான நாராயணன் உடைய திவ்ய  தேஜஸ் சிந்திக்கப் படுகையாலும்
பிரணவார்த்தம் ஸ்ரீ மன் நாராயணனே ஆகையாலும்
ரஷண கிரியை -பரம சத்வ சமாஸ்ரயனான     இவனுக்கே  அசாதாராணம் ஆகையாலும் –
சர்வ தேவ நமஸ்கார கேசவம் பிரதி கச்சதி -என்கையாலும்
பிராயச் சித்தான்ய சேஷாணி –கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்கையாலும்
ருத்ர ஆஹூதியில் அப உப ச்ப்ருச்ய-அசுக்தி பரிஹார அர்த்தமாக அபாமுபாஸ் பர்சனம் விதிக்கையாலும்
குறை கொண்டு நான்முகன்  குண்டிகை  நீர் பெய்து
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் -நான் முகன் -9—புனிதனாகையாலும்-

சக்கரவர்த்தி திருமகனார் சிவ பூஜை செய்தார் -என்னும் இடம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை
தாமச புராணங்களில் சொல்லிற்று அநாதரணீயம்
காசியில் ருத்ரன் ஸ்ரீ  ராம நாமத்தை ஜபித்து உய்த்தது -பிரசித்தம்
ராமேஸ்வரம் –ஸ்ரீ ஹனுமானுடைய -ரோமேச்வரம்
சேது ரஷண அர்த்தமாக தனது சேவகர்களில் ஒருவனான ருத்ரனை நிறுத்தினான்
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும் முண்டியான் சாபம் தீர்த்த -திருக் குறும் தாண்டகம் -19-
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் பணிந்து ஏத்துவரே -திருவாய் -2-2-10-

வராஹ புராணம் -வரப் பிரார்த்தனையும் வரப்ரதானத்தையும் மெய்ப்பிக்க வேண்டி கண்ணன் சிவனை வணங்கிற்று
க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் சர்வ தேஹி நாம் ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவாத் –
சிவனுடைய அபராவதாரமான அச்வத்தாமாவின் அபாண்டவாஸ்த்ரத்தினால் மாண்ட பரீஷித்தை
தன் திருவடி ஸ்பர்சத்தினால் பிழைப்பூட்டிய பெருமான் –

சிவன் சூலம் சக்கரத்தில் நின்றும் யுண்டானதாக அகஸ்த்ய சம்ஹிதை சொல்லும்
சிவபுரியான காசி சக்கரப் படையினால் எரியுண்டது புராண பிரசித்தம்
திரிபுரம் தஹனம் பகவத் சக்தி விசேஷ பிரயுக்தம் -வேதம் சொல்லும்
அர்ஜுனன் திவ்ய சஷூஸ் பெற்று சூத்திர கிரிமி கீடங்களோபாதி சிவனும் ஒரு வ்யக்தியாக நின்று ஒழிந்தமை கண்டான் –

வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் –
ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே சஹச்ர நாம தத் துல்யம் ராம நாம வரா நனே-
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மோ நே ஸாந –
காணில் உருப் பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பேணிலும்  வரம் தர மிடுக்கிலாத தேவர்
திருவில்லாத் தேவரைத் தேரேன் மின் தேவு
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கி –

ஸ்வாமி திருவடி நிழலில் -இந்த அர்த்த விசேஷங்களை எல்லாம் -இருந்து கேட்டருளி
கூரத் ஆழ்வான் தாழாதே சார்ங்கம் யுதைத்த சர மழை போலவும்
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கது வாய்ப்பட நீர் முகந்தேறி எங்கும்
குடவாய்ப்பட நின்று மழை பொழிந்தால் ஒப்பவும் ராஜ சபையில் உபன்யாசித்து அருளி தர்சன உத்தாரகராக எழுந்து அருளி இருந்தபடி-

—————————————————————————————————————————————-

மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்ஜய -ஸ்ரீ கீதை -7-7-
அஹமேவ பரம் தத்வம் –
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை தம் ஹ தேவம்
ஆத்ம புத்தி பிரகாசம் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -கடோப நிஷத்
மாமேகம் சரணம் வ்ரஜ
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு
உளன் சுடர் மிகு சுருதியுள் –
நீராய் நிலனாய்த் தீயைத் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனாய் –திருவாய் -6-9-1-
ச ப்ரஹ்மா சசிவாஸ் சேந்திர சோஷர  பரம்ஸ்வராட் -அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாம் -திருவாய் -9-3-2-
ஒத்தாரும் மிக்காரும் இலையாய மா மாயா ஒத்தே எப்பொருட்கும் உயிராய் –திருவாய் -2-3-2-

—————————————————————————————————————————————–

அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் செங்கண் மால் –பெரிய புராணம்
மா அயோயே மா அயோயே-மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி -என்றும்
வேதத்து மறை நீ பூதத்து முதல் நீ-வெஞ்சுடர் ஒளியு நீ திங்களுள்ளி நீ -என்றும்
பிறவாய் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே -என்றும் பரிபாடல் பேசும்
த்ரீணீ பதா விசக்ரமே விஷ்ணு -வேதம்
இருநிலம் கடந்த திரு மார்பினன் -பெரும் பாணாற்றுப் படை
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும் -சிலப்பதிகாரம்
மடியிலா மன்னவன் எய்தும் அடி யளந்தான் தா அயது எல்லாம் ஒருங்கு -திருக் குறள்
தாம் வீழ்வார் மன்றோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு –திருக்குறள்

—————————————————————————————————————————————–

உயர் -திண்-அணை-ஓன்று -பரத்வம் நிர்ணயம் பண்ணி அருளும்
உயர்வற உயர் நலம் யுடையவன் –அமரர்கள் அதிபதி -அவனே தேவாதி தேவன் சர்வ ஸ்வாமி
அவனே மோஷ ப்ரதன்-வேர் முதல் வித்தாய் -சகல காரணங்களும்   அவனே-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே -திருவாய் –2-8-6-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனில் மிக்குமோர் தேவுமுளதே–திருவாய் -2-2-3-

வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து  ஏத்துவரே-

ஒரு எருதை தேடிக் கொண்டு கைக்கொள் ஆண்டிகளைப் போலே இறுமாந்து இருக்கும்
பூவில் பிறந்ததால் பிறரைப் போலே பிறவாதவன் -என்று நான்முகன் இறுமாந்து இருப்பன்
ராஜ சூய யாகம் –சகா தேவன் கண்ணனே பரமாத்மா –அக்ர பூஜை அவனுக்கே -இசையாதவன் தலையில் என் காலை வைக்கிறேன்
என்றதும் புஷ்ப மழை பொழிந்தது –

ஒன்றும் தேவும் -அர்ச்சாவதார பரத்வம்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -4-10-1-
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர் புகழ் ஆதிப் பிரான் –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே
கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்

நீங்கள் ஈச்வரர்களாக சங்கித்தவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டதே
ஒருவன் தலை கெட்டு
ஒருவன் ஓடு கொண்டு பிராயச் சித்தியாய் நின்றான்

ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய்  உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் -உங்களில் பெரும் குறைவாளரையோ பற்றுவது –
பாதகியாய் பிஷை புக்குத் திரிந்தான்-என்று நீங்களே சொல்லி வைத்து அவனுக்குப் பரத்வத்தைச் சொல்லவோ –
ஒருவனுடைய ஈச்வரத்வம் அவன் தலையோடு போயிற்று
மற்றவனுடைய ஈச்வரத்வம் அவன் கையோடுபோயிற்றுஈட்டு ஸ்ரீ ஸூக்த்திகள்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்தாம் அன்றோ யாயிற்று  அவ்வவோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி யுள்ளது –

ஒன்றும் தேவும் பிரவேசத்தில் எம்பார் வார்த்தை -ஈட்டில்-
சகல வேத சாஸ்திரங்களையும் அதிகரித்து வைத்து
பர தத்வம் இன்னது -என்று அறுதியிட மாட்டாதே கண்டவிடம் எங்கும் புக்குத் தலை சாய்த்துத் தடுமாறித் திரியா நிற்க
எம்பருமானார் தர்ச்னஸ் தரில் எத்தனையேனும் கல்வி யறிவில்லாத ஸ்திரீ ப்ராயரும் தேவதாந்தரங்களை
அடிப்பிடு கல்லோபாதியாக நினைத்து இருக்கிறது –
இவ்வொன்றும் தேவும் -இப்பஷத்தாலே உண்டாகை இறே-

நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்தி-சம்சாரியாய் இருக்கைக்கு மூலம் இதர தேவதைகள் பக்கம் ப்ராவண்யமும்
பகவத் பரத்வ ஜ்ஞானம் இல்லாமையுமாய் இருந்தது
அதற்க்கு உறுப்பாக பரத்வ ஜ்ஞானத்தை ஆழ்வார் உபதேசிக்கிறார்
நாடாக திருந்த -பொலிக பொலிக பொலிக என்று அருளிச் செய்தாரே  மேலே-

திரிபுரா தேவியார் -அகலங்காப் பிரம்ம ராயன் என்னும் அரசனனின் மனைவி –
எம்பெருமானார் காழிச்சால் மூலையில் தேவதையை ஆஸ்ரயித்தார் ஆகில்  அதுவே எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக் கடவது

ஸ்ருதி ஸிரசி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே பவது மம பரச்மின் சேஷமுஷீ பக்தி ரூபா

வாசுதேவம் பரித்யஜ்ய யோ அன்யம் தேவமுபாசதே
தேஷாம் கதிம் ப்ரபத்யே வை யத்யஹம் நாகமே புன
நாராயணம் தான்யஸ்து தேவஸ் துல்யம் கரோதி ய
தஸ்ய பாபேன லிபயேஹம் யத்யஹம் நாகமே புன–நம்பாடுவான் சபதம் -ப்ரஹ்ம ரஜஸ் விஸ்வசிக்க –

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –

—————————————————————————————————————————————–

பரோ பன்யச்த பூர்வ பஷ ஸ்லோகங்கள்–

காயத்ரீ போதி தத்வாத் தசரத நயஸ்தாபி ராதி தத்வாத்
சௌரே கைலாச யாத்ராவ்ர முதி ததயா பீஷ்ட சந்தாநதாத்
நேத்ரேண ஸ்வேநசாகம் தச சத கமலை விஷ்ணு நா பூஜிதத்வாத்
தஸ்மை சக்ரப்தா நாதபி ச பஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட–1-

கந்தர் பத்வம் சகத்வாத் கரலக பல நாத் கால கரவா பகத்வாத்
திதே யாவாஸ பூமித்ரிபுர விதல நாத் தஷ யாகே ஜயித்வாத்
பார்த்தச்ய ஸ்வாஸ் த்ரதா நாத்  நரஹரி விஜயாத் மாதவே ஸ்திரீ சரீரே
சாஸ்து சம்பாத கத்வா தபி ச ப ஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட–2-

பூமௌ லோகைர நேகை சத்த விரசி தாரா நத்வாத மீஷாம்
அஷ்டைஸ்வர்ய ப்ரதத்வாத் தச விதவ புஷா கேசவே நார்ச்சி தத்வாத்
ஹம்ச்க்ரோடாங்கதாரி த்ருஹிணி முரஹராத்ருஷ்டசீர் ஷாங்க்ரி கதவைத்
ஜன்மத்வம்சாத்ய பாவாதபி ச ப ஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட–3

வாரண்ஸ்யாம் ச பாரா சரி நியம புஜ ஸ்தம்ப நாத் ப்ராக் புராணாம்
வித்வம்சே கேசவே நாஸ்ரி தவ்ருஷவ புஷா தாரி தஷ்மா தலத்வாத்
அஸ்தோக ப்ரஹ்மசீர்ஷா ஸ்தய நிசக்ருதகலா லங்க்ரியா பூஷி தத்வாத்
தா னாச்ச ஞான முக்த்யோரபி ச பஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட-4-

வைசிஷ்ட்யே யோ நி பீடாயித நரகரி புஸ்லிஷ்ட பாவேன சம்போ
ஸ்வ ஸ்யை கார்த்த ப்ரதீகாயித ஹரவ புஷாஸ் லிங்கிதத் வேன யத்வா
அப்ராதான்யாத் விசிஷ்டாத்வய சமதிகமே தாநவா நாமராதே
சம்போ ப்ராதான்ய யோகாதபி ச ப ஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட -5-

———————————————————————————————————-

25 வார்த்தைகள் பூர்வ பஷம் இந்த ஐந்து மூலம்
1-காயத்ரி மகா மந்த்ரத்தில் சிவனே வணங்கப்படுகிறான்
2-தசரதத்மஜன் -ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்க த்தை பிரதிஷ்டை பண்ணி ஆராதித்தான்
3-வேதத்தில் நமக சமகப் பகுதிகள் சிவனே பரதத்வம் என்று பேசும்
4-சௌரியான கிருஷ்ணன் கைலாச யாத்ரை -விரதம் அனுஷ்டித்து -சிவனை மகிழ்வித்து பிள்ளை வரம் பெற்றான்
5-விஷ்ணு தன் கண் சக்ராயுதத்தை வரமாக பெற்றான்-

6-மன்மதனை சிவன் தன் கோபத்தால் எரித்து விட்டான்
7-சிவன் ஆலகால விஷத்தை பருகித் தன் நெஞ்சிலே நிறுத்திக் கொண்டான்
8-யமனுடைய செருக்கை சிவன் அழித்தான்
9-தஷ ப்ரஜாபதியின் யாகத்தை அழித்து அவன் தலையை அறுத்து வெற்றி கொண்டான்
10-சிவன் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்த்ரத்தைக் கொடுத்தான் –

11-அசுரர்கள் திரிபுரத்தை சிவன் எரித்து ஒழித்தான்
12-நரசிங்கத்தை சிவன் சரப ரூபியாய் வெற்றி கொண்டான்
13-விஷ்ணு மோகினி பெண்ணாய் ரூபம் எடுத்து சிவன் அவளைப் புணர்ந்து சாஸ்தா பிறந்தான்
14-பெரும்பாலோர்  சிவனையே பூஜிக்கிறார்கள்
15-அணிமா போன்ற அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தன்னை பூஜிப்பாருக்கு சிவன் வழங்குகிறான் –

16-கேசவன் தான் எடுக்கும் அவதாரங்களில் எல்லாம் சிவனைப் பூஜிக்கிறான்
17-பிரமனும் விஷ்ணுவும் ஹம்சமாகவும் வராஹமாகவும் சிவனுடைய அடி முடிகளை தேடி காண முடிய வில்லை
18-சிவனுக்கு பிறப்பு இறப்பு இல்லை
19-வாரணாசியில் பராசர புத்ரரான வியாசரின் புஜங்களை சிவன் ஸ்தம்பிக்கச் செய்தான்
20-திரிபுர சம்ஹாரத்தின் போது கேசவன் விருஷப ரூபியாக சிவனது தேரை தாங்கினான் –

21-சிவன் பிரமனது தலைகளை கபால மாலையாக அணிந்துள்ளான்
22-சிவனே ஜனங்களுக்கு ஞான மோஷங்களை தருபவன்
23-சிவ லிங்கத்தை விஷ்ணு யோனியாக இருந்து தரிக்கிறார்
24-சிவன் தனது உடலில் பாதியை நாராயணனுக்கு கொடுத்து சங்கர நாராயணனாக  காட்சி  அளிக்கிறார்
25-அந்த ரூபத்தில் சிவனுக்கே பிரதான்யம்-விஷ்ணுவுக்கு அல்ல –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கூரத் ஆழ்வான் 32 ஸ்லோகங்களால் சித்தாந்தத்தை ஸ்தாபிக்கிறார்

காயத்ரீ பூர்வ க்ருத்யா சமந  விதி புரஸ் காரங்கல்ப கார்யே
கோவிந்தாக்யா பிரயோகாத் ஹரிரிதி கத நாத் ஸ்ருத்ய தீத்யாதி காலே
பர்க்கஸ் சப்தச்யஸூ ர்யாத்மாக ஹரி மஹசோ வாசகத்வாத் புரஸ்தாத்
ஓங்கார ராக்யேய பாவாத் அவநநிஜ குணாத் சுத்த சத்வாச்ரயத்வாத்  –1-

பிரக்யாத சேஷ தேவ பிரமாண விஷயத்வாத் தபோ யஜ்ஞகர்ம
ச்தோமன்யூநாதிகத்வ பிரசமபடி மவத்திவ்ய நாமஸ் ம்ருதத்வாத்
ப்ரஹ்மணயத்வாத்   க்ரீசாஹூதி விதிஷூ ஜல ஸ்பர்ச நாத் விஷ்ணு பாதாம்
போஜதாம் போத ரத்வாதபி ச ந பசபதிர் விஷ்ணுரேவ ப்ரக்ருஷ்ட –2

வால்மீக்ய ப்ரோதிதத்வாத் கிரிஸ நுதிகிராம் தாம சத்வாச்ச காச்யாம்
ராமாக்யா மந்திர ஜாபாதபி  ச ஹநுமத புச்சரோமேஸ் வரத்வாத்
சேதுத் ராணாய யத்வா பரிஜந விதையா ஸ்தாபநா தப்தி தீரே
ரஷோ ஹத்யா மதோஷாத் கிரிஸ நிஜக்ருத ப்ரஹ்ம ஹத்யா நிராசாத் –3

கண்டூர் நாங்கூர் பிரயாகாதிக நகர மகா பாப நாசாதி தேசாதி ஷூ
ஈசா நேன ஹத்யா நிவஹ நிஹா தயே சதாபி தாராதி தத்வாத்
கௌரி சேஷ்வாச பங்கா ததரகுபதி சந்தர்சிதாத் வைஸ்வ ரூப்யாத்
காசா கிருஷ்னேந தா நாதபி பஸூ பத்திர விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –4-

வித்யாரண் யோஜ்ஜிதத்வாத் நமக சமகயோ வேத பாஷ்யே ததர்த்த
வியாக்யா நாத் தஷ யாகே ஹரசகித ஸூரோ தீரி தைஸ்தத் ஸ்துத்திவாத்
விஷ்ணு வாம் நாயா வாசாமாபி சகலகிராம் முக்ய வ்ருத்தேச்ச தஸ்மின்
சம்போர் நாமா பிரயோகாத் க்வசிதபி சமகே விஷ்ணு சப்த பிரயோகாத் –5

தேநைவ ந்யாயரீத்யா சபரிகரஹரே பிரார்த்ய பாவாபிதா நாத்
பாஹூ ல் யாதேவ மாத்யைர நக ரகுபதேரேவ சம்சேவ்ய தோக்தே
மா ஹிம்சி முன்ச தன்வேத்யபி நமககிரா   கோர ரூபச்ய சம்போ
மன்யோஸ் துல்யோக்தி சித்தே அபி ந ப ஸூ பதி விஷ்ணுரேவ ப்ரக்ருஷ்ட–6-

கண்டாகர்ணாக நாஸாத் ஸூ மஹதி ஹரிவம்சே விரிஞ்சிஸ் மராரி
ஸ்கந்தா நாம் சௌரி வம்சே க்ரமஜகத நாத் கேசவஸ் தோத்ர மத்யே
தாஜ்ஜாதஸ் வாபிதா நாத் தத நு புரபிதா தத்பதாம் போஜ பாம்சோ
மௌ லௌ சந்தாரி தத்வாத் ஸூ தவரபாஜா நா யோகா பாவாச்ச பௌ த்ராத்-7-

வாராஹாத் யுக்த ரீத்யா ஸ்வகலித வர நிர்வாஹ ஹேதோ ததைவா
நுஷ்டா நாத் வ்ருத்த தேவார்ச்ச நவி திஷூ மனுஷ்யாவதா ரேஷ்வ   தோஷாத்
தாதருக் பாதாப்ஜ தாலீ பரண ஜூ ஷி ஹரே மூலபூதே முகுந்த
ச்யாத்யாதிக்யாத நாதேரபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–8-

பூர்வம் சக்ரச்ய சத்வாத் ஹரி பஜ நக்ருதா ஹேம புஷ்பை சஹஸ்ரை
ஸூ லார் த்தம் ஸூ லி நைக பிரசவ சம நிஜச்சி ந்நா  சார்ச்சி தத்வாத்
சக்ராத் ஸூ லாயுதாப் தேரேபி மயகரதோ கஸ்த்ய சத் சம் ஹி தோக்த்யா
சக்ரத்ராசாத் த்ருதத்வாத் அபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–9-

புஷ்பேஷ் வாஸ ப்ரணீதாதபி ச பிறப்பித்த பௌருஷார்தாவ சேஷாத்
கீர்த்தி ஸ்ரீ காம காமாது ரஹரவிகலத் பார தௌகப்ரவாஹாத்
தம்பத்யோராத் மதாசாயிதப்ருகு விஹிதாத் லிங்க விச்சேத நாச்ச
அனந்கப் பரத்வச்த பாவாதபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–10-

ஸ்தோத்ர ப்ரீதாதி ஸூ  ப்ராக்ருதித நுஜபி துச்சிஷ்ட ஹாலாஹலாணு
சவீ காரஸ்யாம பாவாத் கிரிசகலபுவ கேசவே நைவ பூர்வம்
அஸ்தோ கஷ்வேல புக்தே அகில நிஜவபு கிருஷ்ண தாஸூ சிதத்வாத்
தார்ஷ்யத்வா நோபா யுக்தா தபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட-11-

காலச்யா நஸ்வரத்வாத்அத ஜகதி யமஸ்யாது நாபி ஸ்திதத்வாத்
ஆரண்யாத்யா நுவாகே ஹரவதகத நாத் அஷ்டமாத்யா நுவாகே
காலாத் ஸ்வராட் சஹாயாத் ப்ருதகபி நித நக்யாப நாத் தஸ்ய மூர்த்ந
சத்ரேஸ் விப்யாம் ச சந்தேரபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட-12

கீர்வாண் ச்தோமதத்த ஸ்வ ப ஸூ பதி வராத் சித்த தாத்ருக்க்ற சார்த்தம்
கொரூபத் வாச்ச விஷ்ணோ சிவகளித்த ஜடா ஹோமதோ பௌ த்த வேஷாத்
தைத்யாறேர் முக்யஹேதூபவதி ஷூ கல நாத் விஷ்ணு சத் பக்ஞ்சரச்ய
பிரகீசே நாஸ்ரிதத்வாத் அபி ந ப ஸூ பதி விஷ்ணுரேவ ப்ரக்ருஷ்ட–13

தஸ்மின் யஜ்ஞ்ஞே முகுந்தாகம பறிபவயோ ஸ்ரீ ஸூ காப்ரோதி தத்வாத்
அந்யத் ரோக்தோத் தரத்வாதபி ஹரபரசோ கண்ட நாத் தத் ப்ராணா மாத்
தாத்ரே சாஷாத் பிரசாதாத் அனுத நுஜ பித க்ருஷ்ணதோ விஷ்ணு மூர்த்தே
கைலாசே சஸ்ய பங்கா தபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட  –14-

அஸ்வத்தாமா வதா ரேச்வர பரிபவ நாத் சர்வ சக்த்யாஸ்ரயத்வாத
சௌ ரே பாத்தாரா விந்தார்ப்பித்த கு ஸூ மசயோ லோக நாதீச மௌ லௌ
காமாரே கௌர வார்த்தாத் சரண விரச நாத் ஸ்ரீ நருசிம்ஹேன பூர்வம்
தஸ்யாஸ் த்ரச்ய க்ரசித்வாதபி ந ப ஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட–15-

பிரக்யாதாம் நாய பாஷ்யாதி ஷூ ஹரிமிதி வாக்யச்ய விஷ்ணு ப்ரகர்ஷ
வியாக்யா நாத் ப்ரஹ்ம ருத்ராதிக ஸூ ரஹரனோ தீரணாத் தன்நிருக்தோ
ஆக் நேய  தாத்ரா பாதமே சரப பரிபவாத் காருடே நார சிம்ஹே
கௌர்மே மாத்ச்யே புராணே பஹூ முககதி தாத் பார்வதீ பிராத்தி தத்வாத் -16-

சௌ ரே ரன்யத்ர பாதமே த்ரிபுரஹர சிரோ நூபுரத்வாபிதா நாத்
வைகுண்டே நாகதே நாத ச நரஹரிணா அநேக ஹேமா ஸூ ராணாம்
த்வம்சாத் காலா குதைத்ய ப்ரமத நகத நாத் ச்வேச்சயா சக்ர பாணே
பூய ஸ்வ ஸ்தாநாயா நாதபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –17

பாஹ்யே ஸ்திரீ வேஷ வத்வே நடவத விஜஹன்மோஹ நத்வாத நாதே
பும்சோ யோ நேரபாவாத் ஹரகிரி ஸூ தையோ சின்ன லிங்கத் வசித்தே
கௌ ரீ ரூபாவலோகஸ் கலித விதி பவத் வாழ கிலியா பிரதாவத்
சாஸ்து ச்சை சா நரேத ஸ்ஸ்திருதி சஹித பதாங்குஷ்ட தேசோத்ப வத்வாத்–18-

துர்வார்த்தா சம்சி வக்த்ரோபமித விரசிதாஸ் லேஷ காமார்யா பாநே
சாஸ்தா துர் ஜன்மோ பபத்தே ரபி கில சதா சாஹச்ர சத்சம்ஹிதாயாம்
பூதேசப் ரார்த்திதாஜ ப்ரஹித ஸூமஹிதாகார மாயா க்ருத ஸ்திரீ
வ்ருத்தாந்தஸ் யாபி தாநாதபி ந ப ஸூ பதிர் விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–19-

காஸீ கேதார தில்லி கடக பதரிகா த்வாரகா முக்யதேச ஷூ
ஆக்யா சிஹ் நாதி கத்வாததிக ஜனபதேஷ் வச்யுதச்ய பிரசித்தே
பா ஹூல் யாதேவ சைலேஷ் வபடு கரணப்ருத் ஷூத்ர காபாலிகா நாம்
சங்கே சாத் யேஷூ யத்வாஸ் அசது நிக நர குலே ஸ்ரேயசாமஸ் திரத்வாத்-20-

சம்போ சர்மாஸ்தி பாஜ புநரிஹ ச  பரத்ராத்ம சாரூப்யதா நாத்
பக்தா நாம் பூமி லஷ்மீ பதி விநதிக்ருதாம்  ஸ்வ ஸ்வரூப ப்ரதத்வாத்
நாநா லோக பிரசித்த த்ருவத சவத நப்ராத்ரு சம்பத் ஸ்திரத்வாத்
நா விஷ்ணோ பூபதித்வாதபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட  -21-

கூர்மாதீ நாம நந்தாவதர சாயா ஜூ ஷாம் யோ நிஜன்மோ ஜ்ஜிதா நாம்
சத்வாத் அத்யாபி சாவிர்பவ நநிகதநாத் யோநிஜாநாம் ந சாபாத்
தத் சத்த்வாதேவ சம்போ ப்ருகு முநிசப நவ்யர்த்த பாவாச்ச யத்வா
நாநாரூபாவதார ஸ்திதி ஷூ விவிதாதா தந் நிமித்தோ பலம்பாத்–22–

விஷ்ணோர் நாநாவதார ஸ்திதி கதக புரானேஷூகாமாரி பூஜா
க்ருத்யஸ்யா நுக்தபாவாத் ததிதரகதி தச்யாச்ய தத்தோத்தரத்வாத்
நாநா தேச ப்ரதீஷிதி பத்தி நிஜ நாம பிரதிஷ்டோபபத்தே
மத்ச்யேசாதி பிரசித்தோபி ந ப ஸூ பதிர் விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –23

ஸ்ரீ கூர்மா ஹீந்த்ரதம் ஷ்ட்ர்யாக்ருதிதர பகவத்தாரித ஷ்மாதலாதோ
தேசச்தே சாங்க்ர்யத்க்ருஷ்டேர நுசிதக நாத் கேதகீ வீஷி தஸ்ய
தந் மூர்த்னஸ் தஸ்ய பித்ரா சரசிருஹ புவா தர்ச நாசம்ப வோக்தே
அத்யந்தம் ஹாச்யபாவாதபி நபஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட  -24-

துர்வாசோத் ரௌணிவதாத்ம பவமய ஸூ கைகாத ஸாபி க்யருத்ரா
தீநாம் வேதே புரானேஷ் வபி நிகதநதோ யோநி ஜாயோ நிசா நாம்
நேசா நேத்யாதி வாகை நிகமகத நதோ அப்யாதி ருத்ரஸ்ய தேஷாம்
சௌரே சர்வாதிகத்வாதபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட-25-

பாத்மே லைங்கே புரானே யஜூஷி ச நிகமே பாரதே ஸ்ரீ ஸூ கோக் தௌ
கா ஸீச ப்ரஹ்ம முக்யைரகுவர பரதத்வ பிரகர்ஷா பிதா நாத்
தேஷாம் ஜிஹ்வாநி ரோதே அப்யசிதி முநி புஜ ஸ்தம்ப  நா யோக்யபாவாத்
ஸ்ரீ சக்யாதித்வ ஜத்வாதபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –26-

பூம் யாத்யம் சாஸ்ரிதத்வாத் ஸ்வ ரத முக சமித் ஸாத நா நாம் ச தேஷாம்
விஷ்ணோர் நை சர்கிகத்வாத் ஷிதி பரண விதே வாஹ நத்வாத்ய யோகாத்
சாஷாத் ச்வாங்கே ஸூமித்ராத நுபவஹநாத் நீல கண்டாவதார
பிரக்யாதே வாத ஸூ நோரபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட  –27-

அப்ரஹ்மண்யா ஸூசித்வாத் அனவரதமபி ப்ரஹ்ம ஸீர்ஷாஸ்தி யோகாத்
ச்ப்ரஷ்டும் ஸ்வஸ்யா ப்ராயாதும் ந சம்சிததயா நித்யதா ஹேய பாவாத்
தஷாதி ப்ரஹ்ம ஹத்யாமயவி  புலக பாலாவ்ருதக்ரீவ பாவாத்
தத்பூஷா நித்ய யோகாதபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–28-

சம்போ ஞான பிரதத்வே அபி ச சுகவபுஷா தாம சத்வ ஸ்வ பாவாத்
ஸூ த்த ஞான ரகுவரம நுதா நே அபி காசீஸ்வரஸ்ய
ஸ்வா ஹந்தா கர்ப்பிதத்வாத் ஸ்வ பதகதி விலம்பேன சத்யோ முமுஷோ
அப்ரார்த்யத்வாத் ரவீந்தூபமித க்ருத நிஜ பத ஸ்தா நதா நாதி காராத்-29-

மோஷா பேஷான் விதா நாம்பி ச யதிபதே திவ்ய நாராயணாக்யா
சம்பத்தே ரேவ லோகே ஸ்திர பரமபத ப்ராபகத்வ பிரசித்தே
ஸ்வா கர்த்ருத்வேன முக்தே கிரிசநி கதிதாத் கேசவச்யைவ   ரூடாத்
சாஷாத் மோஷ பிரத்வாதபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –30-

ப்ராலே யாத்ரீந்திர கன்யாவயவிலச நாத் யோநீ பீடஸ்ய பும்ஸ
தாத்ரூப்யா யோக்யபாவாதபி ச ப்ருதக ஸ்தான யோக்யத்வ சித்தே
நித்யம் வைசிஷ்டைய ரூபாத்வய மதவச நாயுக்த பாவாத் விசிஷ்டா
த்வை தஸ்ய ஸ்வாங்க லிங்கா விரத யுததயா சக்ரிணோ  யுக்த்ய யுக்தே –31–

யத்வா சுவாங்காரத்ததா நாத் ஹிமகிரிது ஹிது கேசவச்யா விசேஷ
சுவாங்கார்த்த் தஸ்ய ப்ரதாநாத் மனஸி ஜவிமத ஸயா சரீரத்வ சித்தே
வைசிஷ்ட்யச்யா பிரசங்காத் பவத உபயத சித் விவாதத்தா பவர்க்கா
யுக்தத் வாதேவ சக்தேரபி ந ப ஸூ பதி வ்ஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –32-

கூரேந்த்ரேணேதி சார்தை சதசி சதவிதை தூஷணைசப்தார்த்தம்
வாத ஷிப்தா விபஷா பிரதி வசன ஜாடா விஸ்மயாத்  மௌ ந மாபு
தத்க்ருஷ்ட்வா ஜைத்ரகோஷம் வ்யதநுத சமகா பூர்ண நாமார்ய வர்ய
ச்ருத்வா சைதத் ததா நீம் சமஜனி விமநா சோழ பூப ச மந்த்ரீ —

ஸ்ரீ கூரேச விஜயம் சம்பூர்ணம்

——————————————————————————————————————————-

ஸ்ரீ மன் மகா பூதபுரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்தி மத்யாம் பிரஸூதாய யதிராஜாய மங்களம்

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –