1- ப்ருந்தாவநம் பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா
ஸூபேந மநஸா த்யாதம் கவாம் வ்ருத்திமபீப்ஸீதா.–ஸ்ரீ விஷ்ணு புராணம்
பகவான்’ என்னும் திருநாமத்தையுடையவனும், எக்காரியங்களையும் வருத்தம் இன்றிப் பயனுடன் முடியும்படி செய்கின்றவனும், பசுக்களின் வளர்ச்சியை விரும்புகின்றவனும் ஆன கண்ணபிரான், தனது தூய்மையான மனத்தினால்
2. உத்பந்ந நவஸஷ்பாட்யா ஸக்ரகோபாஸ்த்ருதாமஹீ
ஸ்தலீமாரதகீவாஸீத் பத்மராக க்ருதாந்தரா.-ஸ்ரீ விஷ்ணு புராணம்
‘பிருந்தாவனம் புற்கள் நிறைந்த காடாக மாறல்வேண்டும்,’ என்று நினைந்த அளவில், 4தோன்றிய புற்களாலே நிரம்பி, இந்திர கோபம் என்னும் பட்டுப்பூச்சிகள் பரவப் பெற்ற பூமியானது, இடையிடையே பதுமராகக் கற்கள் பதித்த மரகதமணி மயமானது ஓர் இடத்தைப் போலத் தோன்றியது,’ என்னலாம்படி மாறியது போன்று, இவரும் உண்மைப் பொருள்களை உள்ளவாறு 5விளக்கமாக அறிய வல்லவரானார்.
3. “ப்ரதாநக்ஷேத்ரஜ்ஞபதி: குணேஸ:
ஸம்ஸாரபந்த ஸ்திதிமோக்ஷஹேது:”- சுவேதாஸ்வதர உபநிடதம், அத். 6.
சம்சாரத்தில் கட்டுப்பட்டு இருப்பதற்கும் விடுபட்டு மோக்ஷத்தை அடைவதற்கும் காரணமாக நிற்கின்றான் சர்வேஸ்வரன்,’
4. தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம்ஏதாம் தாந்தி தே.– ஸ்ரீ கீதை 7 : 14.
என்னுடைய முக்குண ரூபமான இந்தப் பிரகிருதியானது என்னால் உண்டுபண்ணப்பட்டது; ஒருவராலும் கடக்க முடியாதது; ஆயின், என்னையே சரணமாக அடைகின்றவர்கள் இதனைத் தாண்டுகிறார்கள்,’
5. ஜராமரணமோக்ஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே
தே பிரஸ்ம தத்விது: க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்மச அகிலம்-ஸ்ரீ கீதை. 7 : 29.
முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும்பொருட்டு என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’
6. ஸம்ஜ்ஞாயதே யேந தத்அஸ்ததோஷம் சுத்தம் பரம் நிர்மலம் ஏகரூபம்
ஸம்த்ருச்யதே வாபி அதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 ; 87.
பகவானை அறிகிற அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லப்படும்; ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானவை எல்லாம் அஞ்ஞானமாகச் சொல்லப்பட்டன,’
7. தத்கர்ம யந்நபந்தாய ஸா வித்யா யாவி முக்தயே
ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அந்யா ஸில்பநைபுணம்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19: 41.
பந்தத்தை உண்டாக்காத தொழிலே தொழில்; மோக்ஷத்தை உண்டாக்கும் கல்வியே கல்வி; மற்றைத் தொழில்கள் எல்லாம் வருத்தத்தை
8. கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம்
நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்ட உபஹதா ஜநா:–ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 41.
ஓ மைத்திரேயரே, கலியுகத்தில், உலகத்திற்குத் தலைவனும் எங்கும் நிறைந்திருப்பவனும் எல்லாரையும் படைத்தவனும் ஈஸ்வரன் என்ற பெயரை உடையவனும் ஆன திருமாலை பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் வழிபடுகின்றார்கள் இலர்
9. துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:
தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரியதர்ஸநம்.
மனிதசரீரம் கிடைத்தல் அரிது; கிடைப்பினும், கிடைத்த அச்சரீரமும் கணநேரத்தில் அழியுந்தன்மையது; அழியாதிருப்பினும், ஸ்ரீ வைகுண்டநாதனே நமக்குப் பற்றுக்கோடு என்னும் ஞானம் உண்டாதல் மிகவும் அரிது என்று நான் நினைக்கிறேன்,’
‘மானிடராக வரலரி தோர்மண் டலத்தினெறி
மானிடராக மிலாதவ ராதன் மலரயனார்
மானிடராகமத் தாலன்ப ராய அரங்கத்துளெம்
மானிடராக மலரடிக் காட்படும் வாழ்வரிதே.’– என்ற திவ்விய கவியின் திருவாக்கு
10. மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித் யததி ஸித்தயே
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்வத:–ஸ்ரீகீதை. 7: 3.
மனிதர்களில் ஆயிரவருள் ஒருவன் சித்தியின்பொருட்டு முயல்கின்றான்; அங்ஙனம் முயல்கிற ஞானிகள் ஆயிரவருள் ஒருவன் என்னை அறிகிறான்; இது உண்மை,’ என்று சர்வேஸ்வரன் தானும் அருளிச் செய்தான்.
11. தத: அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா
தேவகீபூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா.– ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3: 2.
தேவகி கருத்தரித்த பிறகு எல்லா உலகங்களாகிற தாமரையை மலர்த்துவதற்காக, தேவகியாகிற கீழைச்சந்தியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’
12. ஹஸிதம் பாஷிதம் சைவ கதி: யா யச்ச சேஷ்டிதம்
தத்ஸர்வம் தர்மவீர்யேண யதாவத் ஸம்ப்ரபஸ்யதி:-ஸ்ரீராமா. பால. 3 : 4.
ஸ்ரீ ராமபிரானுடைய நகையினையும் பேச்சையும் நடையினையும் செயல்களையும் மற்றும் உண்டான எல்லாவற்றையும் என் சங்கற்பத்தால் அருளப்பெற்ற தவ வலிமையால் உண்மையாக நன்கு அறிவாய்,’ என்கிறபடியே, பிரமனுடைய திரு அருளால் ஸ்ரீ வான்மீகி பகவான் எல்லாவற்றையும் அறிந்தது போன்று,
13. உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்
ஆஸ்தித: ஸஹியுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம்.–. ஸ்ரீகீதை. 7 : 18.
ஐஸ்வரியம் ஆத்மலாபம் ஏதேனும் ஒரு புருஷார்த்தம் ஆகவுமாம். அவற்றை நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதாரர்; ஞானியானவன் எனக்குத் தாரகன்,’ என்று சர்வேஸ்வரன் அருளிச்செய்த ஞானிகளுக்கு முதன்மை பெற்றவராய் இருப்பர்.
14. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த: லக்ஷ்மணோலக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ–ஸ்ரீராமா. பால. 18 : 27.
கைங்கர்யத்தை வளர்த்துப் போருமவனான இலக்குமணன் இளமைப்பருவம் தொடங்கி ஸ்ரீ ராமபிரானிடத்தில் பரம சிநேகிதனாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே, இளமைப்பருவந்தொடங்கிப் பெருமாள் திருத்தொட்டிலோடு அணையத் திருத்தொட்டில் இடாதபோது பள்ளி கொள்ளாத இளைய பெருமாளைப் போன்று, அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’
15-நசஸீதா த்வயாஹீநா நசஅஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ.–ஸ்ரீராமா. அயோத். 53 : 31.
இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்; நானும் பிழைக்க மாட்டேன்,’ என்பது இளைய பெருமாள் திருவார்த்தை
தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன், நீர் நசை அறும் அளவும் பிழைத்து இருக்குமாறு போன்று, நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திருவுள்ளத்திலே உண்டு என்று அறியும் அளவுங்காணும் நாங்கள் பிழைப்பது; ஆதலால், உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இலள்; யானும் இலன்; பிழைத்து இருப்போமாயின், ஒரு முகூர்த்த நேரமே பிழைத்திருப்போம்,’ என்றார் இளைய பெருமாள்.
:
16. நதேவலோக ஆக்ரமணம் ந அமரத்வம் அஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா.-ஸ்ரீராமா, அயோத். 31 : 5
வானவர் நாடு. என்கிற பரமபதம், ஆத்மலாபம், உலகங்களின் ஐஸ்வரியம் இவை இத்தனையும், உமக்குப் புறம்பாக வரும் அன்று வேண்டேன்,’ என்ற இளைய பெருமாளைப் போன்று, இவரும்
17. அஹம்தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபலக்ஷயே
ப்ராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:
நான் சக்கரவர்த்தியிடத்தில் தமப்பன் முறையைப் பார்க்கின்றிலேன்; எனக்கு ஸ்ரீ ராம பிரானே தமையனும் சுவாமியும் உறவும் தமப்பனுமாக இருக்கின்றான்
18. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸாநுஷூ ரம்ஸ்யதே
அஹம்ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.
நான் இரவு பகல் எந்நேரத்திலும் எல்லா அடிமைகளையும் உமக்குச் செய்வேன்; நீரோ, பிராட்டியோடு மலை அடிவாரங்களில் இன்புற்றிரும்,’ என்று இளைய பெருமாள் எவ்வகைத் தொண்டுகளையும் செய்து அல்லது தரியாதது போன்று; இவரு
19. விஸ்தரேண ஆத்மநோ யோகம் விபூதிஞ்ச ஜநார்த்தன
பூய: கதய த்ருப்தி: ஹி ஸ்ருண்வதோ நாஸ்திமே அம்ருதம்
ஓ ஜனார்த்தனரே, உம்முடைய கல்யாண குணங்களின் சேர்க்கையையும், விபூதி நியமனத்தையும் மீண்டும் விரிவாகக் கூறுக; ஏன் என்றால், உம்முடைய மாகாத்மியமாகிய அமிருதத்தைக் கேட்கும் எனக்குத் திருப்தி கிடையாது,’ என்று கூறிய அருச்சுனனைப் போலவும்
20. கர்மாபிதப்தா: பர்ஜந்யம் ஹ்லாதயந்தமிவ ப்ரஜா:
நததர்ப ஸமாயாந்தம் பஸ்யமாநோ நராதிப:
சமீபத்தில் வருகிற ஸ்ரீ ராமபிரானைப் பார்த்துக்கொண்டேயிருந்தும் தசரத சக்கரவர்த்தி திருப்தி அடைந்திலன்,’ என்று கூறப்படுகின்ற தசரத சக்கரவர்த்தியைப் போலவும்,
21. தர்மாத்மா ஸத்யஸௌசாதி குணாநாம் ஆகர: ததா
உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம்ய: ஸதாபவத்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 15 : 15.
அறத்தின் உருவமாயும் சத்தியம் ஒழுக்கம் முதலியவற்றிற்குக் கொள்கலமாயும் சாதுக்களுக்கு எல்லாம் உவமானமாகச் சொல்லத் தக்கவனாயும் எவனொரு பிரகலாதன் இருந்தான்’ என்று பிரகலாதனைச் சாதுக்களுக்கு எல்லாம் உவமைக்கு எல்லையாகச் சொல்லுவது போன்று, இவரும்
22. அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:
க்ருதஞ்ஜஸ்ய பஹூஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாம நாமத:.-ஸ்ரீராமா கிஷ். 4 : 12.
நான் பின் பிறந்த தம்பி; அவருடைய குணங்களால் அடிமையை அடைந்துள்ளேன்.’ என்று குணங்களுக்குத் தோற்று அடிமை புக்க இளைய பெருமாளைப் போன்று, இவரும் பகவானுடைய குணங்களிலே தோற்று. 3‘உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே,’ என்கிறார்.
23. மாநிஷாத பாதிஷ்டாம் த்வமகம: ஸரஸ்வதீ: ஸமா:
யத்க்ரௌஞ்சமிதுநாத் ஏகம் அவதீ: காமமோஹிதம்.
நிஷாத – ஓ வேடனே,
த்வம் – நீ,
யத் – யாதொரு காரணத்தால்,
கிரௌஞ்ச மிதுநாத் – இரண்டாகக் கூடியிருந்த அன்றிற்
பறவைகளில்,
காமமோஹிதம் – காமத்தால் மோகத்தையடைந்த,
ஏகம் – ஓர் ஆண் பறவையை,
அவதீ: – கொன்றாயோ, (அதனால்)
ஸாஸ்வதீ: – நிலைத்திருக்கிற,
ஸமா: – வருஷங்களில்
பிரதிஷ்டாம் – இருப்பை,
மாகம: – அடையமாட்டாய்’ என்றவாறு.
‘மா நிஷாத – ஸ்ரீநிவாசனே, த்வம் – நீ, யத் – யாதொரு காரணத்தால், கிரௌஞ்ச மிதுநாத் – இருவராகக் கூடியிருந்த
இராக்கதர்களான இராவண மண்டோதரி என்னும் இவர்களில், காம மோஹிதம் – ஆசையால் பீடிக்கப்பட்ட, ஏகம் – ஒருவனை (இராவணணை),
அவதீ: – கொன்றாயோ, (அதனால்) ஸாஸ்வதீ: ஸமா: – நிலைத்துள்ள வருஷங்களில், பிரதிஷ்டாம் – இருப்பை, அகம: – அடையக்கடவாய்’ என்பது.
24. மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம.
ஹே பிரஹமந் – ஓ முனிவனே,
இயம் ஸாஸ்வதீ – ‘மாநிஷாத’ என்னும் இந்த ஸ்லோகமானது,
மசசந்தா தேவ – என்னுடைய திருவருளால்,
தேப்ரவிருத்தா – உனக்கு உண்டாயிற்று,
ஹே ருஷி ஸத்தம – முனிபுங்கவனே,
த்வம் – நீ,
ஸர்வம் ராம சரிதம் – இராமசரிதம் எல்லாவற்றையும்,
குரு – செய்வாய்.
25. ஹரிகீர்த்திம் விநாஏவ அந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம
பாஷாகாநம் நகாதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயாக்ருதம்.-மச்ச புராணம்.
மக்களுள் உயர்ச்சி பெற்ற அரசனே, பிராமணன், திருமாலின் புகழினைத் தவிர, ஏனையோர் புகழை வேறு மொழியில் பாடக் கூடாது; அங்ஙனம் இருக்கவும், வேறு மொழியில் பாடியதைக் கொண்டு அவனை வெளியே போகச் செய்த காரணத்தால் நீ பாவம் செய்தவன் ஆனாய், என்று இயமன் கூறியதாக மச்சபுராணத்திலே கூறப்படுகின்றது
26. பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி
ஸர்வைஷணா விநிர்முக்த: ஸபைக்ஷம் போக்தும் அர்ஹதி.-பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
எவன் ஒருவன் இறைவனிடத்தில் மிக்க பக்தியினையுடையவனாக இருக்கின்றானோ அவன் மற்றைப் பொருள்களில் வைராக்கியத்தை உடையவனாக இருக்கின்றான்
27. அகுத்ஸிதே கர்மணி ய: ப்ரவர்த்ததே
நிவ்ருத்த ராகஸ்யக்ருஹம் தபோவநம்.–இதிகாச சமுச்சயம்
ஆசை இல்லாதவனுக்குத் தான் வசிக்கும் வீடே தவம் செய்வதற்கு உரிய வனமாம்,’ என்கிறபடியே, ஆசை நீக்கியவனுக்குத் தான் இருந்த தேசமே தவம் செய்வதற்கு ஏகாந்தத் தலம் என்பது போதரும். ‘
28. ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகாத்மந:
ப்ராப்தி உபாயம் பலம் ப்ராப்தே: ததாப்ராதிவிரோதிச
வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா:
முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:
ஆக, இவ்வைம்பொருள்களுமே திருவாய்மொழியால் சொல்லப்படுகின்றன. அல்லாதவை ஆநுஷங்கிக சித்தமாய் வந்தன இத்தனை(இடையிலே வந்தவை’ என்றபடி.). ‘யங்ஙனம்?’ என்னில், பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணன் என்றும், அநந்யார்ஹ சேஷத்துவமே சொரூபம் என்றும், இறைவனுடைய குணங்களை அநுபவிப்பதால் உண்டாகும் பிரீதியால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்றும், அகங்கார மமகாரங்கள் அதற்கு விரோதி என்றும், அவை நீங்குதற்கும் கைங்கரிய சித்திக்கும் சர்வ சுலபனான சர்வேஸ்வரன் திருவடிகளே உபாயம் என்றும், ஐம்பொறிகளையும் அடக்கல் தொடக்கமாகக் கைங்கரியம் முடிவாக உள்ளவை அவ்வுபாயத்திற்குப் பலம் என்றும் சொல்லப்பட்டன.
அடையத் தகுந்த பரம்பொருளின் சொரூபத்தையும், அடைகின்ற ஆத்துமாவின் சொரூபத்தையும், அடையும் உபாயத்தையும், அடைவதற்குப் பலத்தையும், அப்படியே அடைவதற்கு விரோதியையும் இதிகாச புராணங்களுடன் கூடின எல்லா வேதங்களும் கூறுகின்றன; மகாத்துமாக்களும் வேதங்கள் வேதங்களின் பொருள்கள் இவற்றை அறிந்தவர்களுமான முனிவர்களும் சொல்லுகிறார்கள்,’ என்பதை விவரிக்கும் முறையில் எல்லா வேதங்களினுடைய கருத்து இவ்வைம்பொருள்களுமே என்றும், இவ்வைம்பொருள்களும் திருவாய்மொழிக்கு வாக்கியார்த்தமாக அமைந்துள்ளன என்றும் பெரியவங்கிப் புரத்து நம்பி அருளிச்செய்தார்.
29. உத்திஷ்ட உத்திஷ்ட கிம்ஸேஷே ராஜந் புத்ரமஹாயஸ:
த்வத்விதா நஹி ஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸத்தமா:.. ஸ்ரீராமா. அயோத்.
தமையனாராகிய ஸ்ரீ ராமபிரானுக்கு அவர் மனம் உவக்கும் அடிமைகளைச் செய்யவேண்டும் என்ற வேணவாவோடு வந்து சேர, கைகேயி 4‘ராஜந்’ என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரதாழ்வான் பட்டபாடு போலே இருக்கிறது, திருவிருத்தத்தில் நிலை; திருச்சித்திரகூட மலையிலே பெருமாள் எழுந்தருளியிருந்தார்
30. ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
ப்ராது:ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹஸி.-ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்கமாட்டாதவர் இத்தனை பேர் ஆற்றாமை கண்டால் மீளாது ஒழிவரோ? எனக்கு விருப்பமான காரியங்களைத் தம் தலையாலே இரந்து செய்யக்கடவ அவர், நான் என் தலையாலே இரந்த காரியத்தை மறுப்பரோ? நான் தம் பின் பிறந்தவன் அல்லனோ? பின் பிறந்தவன்
31. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருஸன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.-ஸ்ரீராமா. பாலகா. 1 : 38.
ஸ்ரீ ராமபிரான் வருவார் என்ற பேரவாவோடு நந்திக்கிராமத்தில் இருந்து அரசை நடத்திக்கொண்டிருந்தார்’ என்கிறபடியே, பதினான்கு ஆண்டும் ஆசையை வளர்த்துக்கொண்டிருந்தாற்போலே இருக்கிறது – பெரிய திருவந்தாதியில்; மீண்டு எழுந்தருளித் திருவபிஷேகம் செய்து கொள்ள, ஸ்ரீ பரதாழ்வானும் 4சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெற்றாற்போல இருக்கிறது, இவர்க்குத் திருமொழியில் பேறு.
32. ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவ அதர்வணாநிச
ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் யச்ச அந்யதபி வாங்கமயம்.–பாஞ்சராத்திர ஆகமம்.
இருக்கு யஜூர் சாமவேதங்களும், அப்படியே அதர்வணமும், மற்றும் ஒலி உருவமாக உள்ளவை அனைத்தும், எட்டு எழுத்துக்களையுடைய திருமந்திரத்திற்குள் அடங்கி இருப்பனவாம்’ என்கிறபடியே, நான்கு வேதங்களின் சுருக்கம் திருமந்திரமாய், அதனுடைய சுருக்கம் பிரணவமாய், அதனுடைய சுருக்கம் 6அகரம் ஆயினாற்போன்று, திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பதிகம்; முதல் திருப்பதிகத்தின் சுருக்கம் முதல் மூன்று திருப்பாசுரங்கள்; முதல் மூன்று திருப்பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பாசுரம்; முதல் திருப்பாசுரத்தின் சுருக்கம், முதல் அடி. 7மற்றும், ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் முதலானவைகளைச் செய்த முனி புங்கவர்களும் சுருக்கியும் விவரித்தும் செய்து போந்தமை அவ்வந்நூல்களால் தெளிக.
33. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சநேதி. – தைத்திரீ. ஆன. 9 : 1.
அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே மீண்டன; இவ்வாறு மீண்டமையும் ஆனந்தகுணம் ஒன்றைப் பற்றியேயாம்; குணங்கள் எல்லாம் இப்படியே அன்றோ இருப்பன
34. ஸர்வே க்ஷயாந்தாநிசயா: பதநாந்தா: முச்சரயா:
ஸம்யோகா விப்ரயோகாந்தா மரணாந்தஞ்ச ஜீவிதம்.-ஸ்ரீராமா. அயோத். 105.16.
செல்வம், அழிதலை முடிவாகவுடையன; உயர்வு, இறங்குதலை முடிவாகவுடையன; சேர்க்கை, பிரிதலை முடிவாகவுடையன; வாழ்தல், சாதலை முடிவாகவுடையன
35. ஸமஸ்த கல்யாண குணாத்மக: அஸௌ.-ஸ்ரீ விஷ்ணுபு. 6. 5 : 84.
அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்
36. வர்ஷாயுதை: யஸ்யகுணா நஸக்யா வக்தும் ஸமேதைரபி
ஸர்வலோகை:
மஹாத்மந: ஸங்கசக்ராஸி பாணே: விஷ்ணோர்ஜிஷ்ணோர்
வஸூதேவாத்மஜஸ்ய.-வியாசபார. வீடுமபருவம்.
எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;’
37. ஜ்ஞாந விஜ்ஞாந ஸம்பந்ந: நிதேசே நிரத: பிது:
தாதுநாமிவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்.-ஸ்ரீ ராமா. கிஷ். 15 : 20.
மகாத்துமாவாகிய ஸ்ரீ ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று, எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கின்றான்’
38. தே தம்ஊசு: மஹாத்மாநம் பௌர ஜாநபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே.-ஸ்ரீ ராமா. அயோத். 2 : 26.
அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள் இருக்கின்றன,’ என வருவனவற்றை இங்கு உணர்தல்தகும்
39. ஸ்வாபாவிகாநவதிகாதிஸயாஸங்க்யேய கல்யாண குணகண:–ஸ்தோத்திரரத்தினம். 11.
இயற்கையில் அமைந்தனவாய், எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.
40. யதா ஸைந்தவகந: அநந்தர: அபாஹ்ய: க்ருத்ஸ்ந:
ரஸ கநஏவ, ஏவம்வா அரே அயமாத்மா அநந்தர:
அபாஹ்ய: க்ருத்ஸ்ந: ப்ரஜ்ஞாந கநஏவ.–பிரஹதா. உபரி. 6. 5 : 23.
உப்புக்கட்டி உள்ளும் புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று, இறைவன் உள்ளும் புறமும் ஞானமயமாய் இருக்கின்றான்,’
41. தம் அக்ரதும் பஸ்யதி வீதஸோக: தாது: ப்ரஸாதாத் மஹிமாநம் ஈஸம்.-தைத். நாராயண. 6 : 10.
மிக்க பெருமையோடு கூடியவனும் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனுமான
42. வ்யஸநேஷூமநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி.-ஸ்ரீராமா. அயோத். 2 : 42.
ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’ என்று கூறுகின்றது ஸ்ரீராமாயணம்; இதனால், துன்பத்தை நீக்குதலும் அவனதாக இருக்கும் என்பதும், மக்கள் இன்புறுங் காலத்துத் தானும் இன்புறுகின்றான் என்பதும் பெறப்படும். அது போன்று, இவர் துயர் அறத்தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை. இத்தால், 6இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வ
43. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதிவேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதிசேத வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.-தைத்திரீய. ஆன : 6.
கடவுளை உள்ளபடி அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்,’ என்னும் நிலை கழிந்து, ‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்,’ என்கிறவர்கள் கோட்டியிலே எண்ணலாம்படியாக நன்னெறியில் செல்லப் பார்ப்பாய்
44. மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் மந:–ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.
மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும், உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ என்கிறபடியே, நெடுநாள் பிறப்பிற்குக் காரணமாகப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.
45. நம: புரஸ்தாத் அத ப்ருஷ்டத: தே நம: அஸ்துதே ஸர்வத ஏவ ஸர்வ
அநந்தவீர்ய அமிதவிக்ரம: த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி தத: அஸிஸர்வ:–பகவத்கீதை. 11 : 40.
கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’ என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியதுபோன்று, இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க.
46. யதோவா இமாநிபூதாநி ஜாயந்தே யேநஜாதாநி ஜீவந்தி
யத்ப்ரயந்தி அபிஸம்விஸந்தி தத்விஜிஞ்ஜாஸஸ்வ தத் ப்ரஹ்ம.- தைத்திரிய. பிருகு. 1.
எவனிடத்திலிருந்து இந்தப் பொருள்களெல்லாம் உண்டாகின்றனவோ, எவனால் உண்டானவை பிழைக்கின்றனவோ, அழிவினை அடைந்து பிரளயத்தில் எவனை அடைகின்றனவோ அவனை அறிவாய்; அவன்தான் பரம்பொருள்,’
47. ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபிவாசா, மநாஸாது விஸூத்தேந,–வேதவாக்கியம்
மிக்க தூய்மையோடு கூடிய மனத்தால் அறியப்படுகிறான் இறைவன்
48. அதாத ஆதேச: நேதிநேதி நஹி ஏதஸ்மாத் இதிநேதி அந்யத்பரம் அஸ்தி.- பிரஹதாரண். 4. 6 : 62.
இவ்வளவு மாத்திரமும் அல்லன்; இப்படிப்பட்ட பொருள் வேறு இல்லை,’ என்று அறிந்தால் அறியலாமன்றி, இப்படிப் பட்டது, இவ்வளவினையுடையது’ என்று அளவிட்டு அறிய முடியாது
49. யம் ஆத்மா நவேத, யம் ப்ருதிவீ நவேத.தைத்திரீய. பிருகு. 6 : 1.
50. ஆநந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத்.
ஆனந்தமே இறைவன்,’ ‘ஆனந்தமயமானவன்’
51. ப்ரஹித: ப்ரதநாய மாதவாந் அஹம் ஆகாரயிதும் மஹீப்ருதா
நபரேஷூ மஹௌஜஸ: சலாதபகுர்வந்தி மலிம்லுசா இவ.-ஸ்வேதாஸ்வதர உபநிடதம்.
இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’ என்பது போன்று, இவரும் ‘இனன் இலன், மிகுநரை இலன்’ என்று அருளிச் செய்கிறார்.
52. நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத் ஸமஸ்ச அபி அதிகஸ்ச த்ருஸ்யதே,
பராஸ்யஸக்தி: விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ- ஜ்ஞாநபல க்ரியாச.
53. ஸஉத்தம:புருஷ: ஸதத்ர பர்யேதிஜக்ஷத் க்ரீடன்
ரமமாண: ஸ்தீரிபி: வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜநம் ஸ்மரந் இதம்ஸரீரம்.-சாந்தோக்யம், 7 : 26.
முத்தன் ஆனவன் எல்லாப்பொருள்களையும் பார்க்கின்றான்,’ என்கிறபடியே, ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகாநின்றது முத்தனுக்கு.
54. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம்.– தைத்திரீயநாரா. 11 : 8.-தைத்திரீ. நாரா. 6. 1 : 11
உலகத்திற்குத்தலைவன்’ என்னுமித்தனை
55. யச்சகிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஸ்யதே ஸ்ரூயதேபிவா,
அந்தர் பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8.
உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்
56. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்யஸ்ச்ச த்யச்ச அபவத்.-தைத்திரீயம்.
57. அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா.-தைத்திரீயம்.
பொருள்களை. இவற்றை உண்டாக்கி, உயிர் வழியாக அநுப்பிரவேசித்துப் பின்னர் இவற்றிற்குப் பொருளாகை, பெயர் பெறுகை என்னும் இவை உண்டாம்படி செய்து, 4‘எல்லாச் சேதநர்களுடைய உள்ளத்திலும் பிரவேசித்து நியாமகனாய்ச் சர்வர்க்கும் ஆத்துமாவாய் இருக்கும் படியை’ ‘ஓடு’ என்பது காட்டுகிறது. ‘
58. த்வாஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம்
பரிஷஸ்வஜாதே, தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாகஸீதி–இருக்கு வேதம்.
தான் எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராய் நின்றால், சரீரத்தினுடைய வளர்தல் தேய்தல் முதலிய நிலை மாறுபாடோ, உயிர்களுடைய இன்பதுன்பங்களோ தன்னையும் பொருந்தும்படி இருக்கின்றானோ?’ என்னில், புலன் அலன் – தான் ஒட்டு அற்று நின்று விளங்காநிற்பவன்; 5அவ்வப்பொருள்களினுடைய தன்மைவேறுபாடுகளும் இன்பதுன்பங்களும் தன்னைத் தீண்டாவண்ணம் இருப்பான் என்பதாம். 6‘பரமான்மா சீவான்மா என்று கூறப்படும் இருவர், சிறந்த ஞானரூபமான சிறகுகளையுடையவர்களாய், ஒத்த குணங்களையுடையவர்களாய்,
59. கிம்நு ஸ்யாத் சித்தமோஹ: அயம்பவேத் வாதகதி: துஇயம்
உந்மாதஜ: விகாரோவா ஸ்யாத்இயம் ம்ருகத்ருஷ்ணிகா.–ஸ்ரீராமா. சுந். 34. 23.
அந்நலனுடை ஒருவனை’ என்கிறார். நணுகினம் – ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – இது, பொய்யோ? 1‘இது ஏதேனும் மயக்கம் ஸ்வப்பனம் முதலியவைகளோ?’ என்று பிராட்டி நினைந்தாற்போன்று, இவரும் ‘நணுகினம் நாமே’ என்கிறார்
60. கச்சித் நதுஷ்டோவ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம்தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவமே–ஸ்ரீராமா. அயோத். 85 : 7.
அஹம் என்றால் இறைவன் அளவிலே சென்று முடிய வேண்டும்படியாக இருக்க, தேகத்து அளவிலே ஆகும் படியன்றோ முன்பு போந்தது? கைகேயி, ‘அரசனே!’ என்று விளிக்கும்படியாகப் பிறந்து, 3‘அவள் மகனாய்க் கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ?’ என்று எண்ணும்படியான நிலையில் நின்ற நான்– கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ – கீழ்வயிற்றில் எழுந்த கட்டியைப்போன்று துன்புறுத்த வருகின்றானோ என்றபடி.
61. சத்ருக்நஞ்ச அப்ரவீத் ஹ்ருஷ்ட: தாநமாத்யாம்ஸ்ச ஸர்வஸ:
மந்யே ப்ராப்தாஸ்ஸ்ம தம்தேஸம் பரத்வாஜ:யம் அப்ரவீத்-ஸ்ரீராமா. அயோத். 99 : 8 – 9.
அப்பரத்துவாச பகவான் சொன்ன ஆச்சிரமத்தை அடைந்தேனோ என்று ஐயப்படுகிறேன்!’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான்
62. க்வதே ராமேண ஸம்ஸர்க்க: கதம் ஜாநாஸி லக்ஷ்மணம்
வாநராணாம் நராணாஞ்ச கதம் ஆஸீத ஸமாகம:.-ஸ்ரீராமா. சுந்த. 35 : 2.
காட்டிலே வசிக்கின்ற குரங்குகளுக்கும் நாகரிகரான சக்கரவர்த்தி பிள்ளைகளுக்கும் ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே?’ என்று
63. ஸர்வர்க்ஷ ஹரிஸைந்யாநாம் ஸூக்ரீவம் அகரோத் பதிம்
ராம ஸூக்ரீவயோ: ஐக்யம் தேவிஏவம் ஸமஜாயத.-ஸ்ரீராமா. சுந்த. 35 : 31.
பெருமாளும் மகாராஜரும் சேர்ந்த சேர்த்தி, பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க, அடியேன் அந்தப்புரக் காரியத்திற்கு வரும்படியாக அன்றோ? நானும் 2இங்ஙனே கூடிக் கொண்டு நிற்கக்கண்டேனித்தனை,’ என்றான் சிறிய திருவடி. இறைவனுடைய அனுபவத்துக்குப் புறம்பான நாம், அன்றி, இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் என்பார் ‘நாமே’ என்கிறார் எனினுமாம்.
(
64. ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத.-சாந்தோக்யம். 3. 4.
இவை எல்லாம் பிரஹ்மம் அல்லவா
65. தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேதகேதோ.-சாந்தோக்யம். 6. 12.
இது நீயாய் இருக்கிறாய்
ஆய்நின்ற’ என்னுஞ்சோல், பொருள்களைக் காட்டுவதோடு அமையாமல், இறைவன் அளவுஞ்சொல்லும்படி என்?’ என்ன,உடலும், உடலை விரும்பி நிற்கின்ற உயிரும், உயிருக்குள் தங்கி இருக்கின்ற இறைவனும் ஆன இக்கூட்டம் இத்தனைக்கும் வாசகமாக நிற்கிறது இச்சொல். ‘அவர்’ என்றது ‘இவையாகி நிற்கிறார் அவர்’ என்றபடி
66. நஹிபாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவத்யந்யஸ்ய கஸ்யசித்.-ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.
காப்பாற்றுந்திறன் விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவர்க்கும் இன்று
67. யத்வேதாதௌ ஸ்வர: பரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதிலீ நஸ்ய ய: பர: ஸமஹேஸ்வர:-தைத்திரிய நாராய. 6. : 10.
செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று வேதங்களைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் கூறப்படுகின்ற பீஜாக்ஷரம் யாது ஒன்றோ-அந்தப் பிரணவத்துக்குள் மறைந்துள்ளது அகரம். அது காக்கும் இறைவனைக் காட்டுவது ஒன்று; அதற்குப் பொருளாக உள்ளவன் யாவன் ஒருவன்? அவன் சர்வேஸ்வரன்,’
68. அஞ்சலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ.-பரத்துவாச சம்ஹிதை.
இரு கைகளையும் குவித்துச் செய்கிற ஓர் அஞ்சலி என்னும் மேலான முத்திரையானது, இறைவனுடைய திருவருளை விரைவிலே உண்டாக்கக் கூடியதாக இருக்கின்றது,
69. க்ருதாபரா தஸ்யஹிதே நாந்யத் பஸ்யாமி அஹம்க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத்.ஸ்ரீராமா. கிஷ்.
இளையபெருமாளுடைய நாண் ஒலியினைக் கேட்ட மகாராஜர், கழுத்தில் அணிந்திருந்த மாலையினை அறுத்து எறிந்து, குரங்குகள் இயற்கையாகச் செய்கின்ற தொழில்கள் சிலவற்றைச் செய்துகொண்டு அருகே நின்ற திருவடியைப் பார்த்து, ‘இச்சமயத்தில் நாம் செய்யத்தக்கன யாவை?’ என்று கேட்க, ‘அபராத காலத்தில் அநுதாபம் பிறந்து மீண்டோம் என்று நினைப்பதற்கு எளியன் அல்லோம்; சில செய்வோம்; தீரக் கழிய அபராதம் பண்ணினோம்; செய்த பின்னர் இனி, ஓர் அஞ்சலி நேராமற் போகாது,’ என்ற கருத்து அமைய, 2‘செய்யப்பட்ட பாவங்களையுடைய உனக்கு இலக்குமணனைக் கண்டு இரு கைகளையும் கூப்பி வணங்கி, அதன் திருவருளைப் பெறுதல் தவிர, அவனைப் பொறுப்பிக்கைக்கு வேறு வழி ஒன்றையுங் காணேன்,’ என்றான் திருவடி என்று கூறும் ஸ்ரீ ராமாயணமும் இங்கு அறிதல் தகும்.
70. யோயோ யாம் யாம் தநும்பக்த: ஸ்ரத்தயார்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்.–பகவத்கீதை. 7 : 21.
எவன் எவன் பத்தியுள்ளவனாகி எவ்வெத்தேவர்களை வணங்குவதற்கு விரும்புகின்றானோ, அவன் அவனுக்கு அவ்வத்தேவர்களை வணங்குதற்கு உரிய பத்தியினை நான் கொடுக்கிறேன்
71. ஸதயாஸ்ரத்தயா யுக்த: தஸ்யாராதநமீஹதே
லபதேசத்த: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்
72. அருணயா பிங்காக்ஷ்யா ஸோமங்க்ரீணாதி.
நின்றனர்’ முதலிய சொற்களின் பன்மைகளால், இறைவனுக்கு வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் தொழில் செய்தல், செய்யாமைகளைச் சொல்லுகிறார். ஆகிருதியினைச் சொல்லுகின்ற சொல்லானது வடிவிலே சென்று முடிந்து நிற்குமாறு போன்று, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்களும் அபர்யவசான விருத்தியால் இறைவனளவும் சென்று அல்லது நில்லா. இனி, ‘பொன்னிறக் கண்களையுடைய செந்நிறப் பொருளால் சோமம் என்னும் கொடியினை வாங்கக் கடவன்’ என்ற இடத்தில். (ஆகிருதி – சாதி; ‘சாதியினைக் காட்டும் ஒரு சொல், அச்சாதியினையுடைய
பொருள்களைக் காட்டுவது போன்று’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
அதாவது, ‘அரசச் சாதி’ என்று கூறின் அச்சொல் தனியே நில்லாது அச்சாதியினையுடைய ஒரு மனிதனையே காட்டி நிற்குமாறு போன்று
என்பது கருத்து. அபர்யவசான விருத்தியாவது – ஒரு சொல் தனக்குரிய பொருள்களைக் காட்டி அவ்வளவில் முடிவு பெறாது, தொடர்ந்து மேலும்
செல்வது.)2குணத்தோடு கூடிய பொருள் தோன்றா நிற்கவும் செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று, தொழில் செய்தல் செய்யாமைகட்கு நிலைக்களமான பொருள்கள் அவன் அதீநம் என்று 3முன் சொல்லுகையாலே, இங்குத் தொழில் செய்தல் செய்யாமைகளில் நோக்கு என்று கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின், 4சாமாநாதிகரண்யம் சித்தியாது. ஆக, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக்களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங்காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன.
73. அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி.–சாந்தோக்யம், 6 : 3
இந்த உயிர்களை எல்லாம் உடலாகக் கொண்டு இருக்கிற நான், உயிர்களுக்குள் உயிராகப் புகுந்து இவற்றிற்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’
74. யஸ்யாத்மா ஸரீரம். . .யஸ்யப்ருதிவீ ஸரீரம்.–தைத்திரீயம்
உயிர்களுக்குள் வியாபித்து அவ்வுயிர்களைக் கட்டளை இடுமவனாய், எல்லா வுயிர்கட்கும் ஆத்துமாவாய்,’ இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று 2‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ 3‘எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போகின்றான் என்று மேல் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார்.
தாரகன் – தரித்துக்கொண்டிருப்பவன். நியாமகன் – ஏவுகின்றவன். சேஷி – தன் விருப்பின்படி விநியோகங்கொள்ளுகின்றவன்.
தார்யமாவது, உயிர்ப்பொருள் உயிரல்பொருள் ஆகிய அனைத்தையும் இறைவன் தன் சொரூபத்தாலும் சங்கற்பத்தாலும் தரிக்கின்றான்; அவனுடைய
திவ்வியாத்தும சொரூபத்தையும் நித்தியசங்கற்பத்தையும் நீங்கின போது, தம்முடைய சத்துக்குக் கேடு பிறக்கும்படி இருக்கும் பொருள். நியாம்யமாவது,
சரீரத்தினுடைய எல்லா வியாபாரங்களும் ஆத்துமாவினுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுமாறு போன்று, ஆத்துமாவினுடைய எல்லா
வியாபாரங்களும் இறைவனுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுதல். சேஷமாவது, சந்தனம் மலர் தாம்பூலம் முதலியவைகளைப் போன்று,
இறைவனுக்கு விருப்பின்படி விநியோகங்கொள்ளுதற்குத் தகுதியாய் இருத்தல்.
75. ஆத்மந ஆகாஸ: ஸம்பூத:, ஆகாஸாத்வாயு:-தைத்திரீ. ஆனந். 1.
திடம் விசும்பு எரி வளி நீர் நிலம் – திடம் என்பதனைப் பிரித்து ‘எரி’ முதலிய ஏனைய நான்கு பூதங்கட்கும் கூட்டுக. இனி, 6‘பரம்பொருளிடத்திலிருந்து ஆகாயம் உண்டாயிற்று,’ என்கிறபடியே, ஏனைய நான்கு பூதங்கட்கும் முன்னே தோன்றி, அவை அழிந்தாலும் சில நாள் நின்று பின் அழியக்கூடியது ஆகையாலே விசும்பிற்குத் திடம் என்ற அடை புணர்த்து ஓதினார் எனக்கோடலுமாம். இனி, 1‘காரணமான பூதங்கள், காற்றுத் தீ நீர் மண் என்னும் நான்கேயாம்,’ என்கிற (பார்ஹஸ்யபத்திய சூத்)அருகமதத்தாரை மறுக்கும் பொருட்டு, விசும்பிற்குத் ‘திடம்’ என்ற அடையினைத் தந்து அருளிச்செய்தார் என்றலும் ஒன்று. ஆக, ஐம்பூதங்களையும் அருளிச்செய்கிறா
76. சத்வார்யேவ பூதாநி மிதஸ்ஸம்பத்தாநி.
77. பஹூயாம் ப்ரஜாயேயேதி. தைத்திரீய. ஆன. 6. 3.
பல பொருள்களாக விரிகின்றேன்’ என்கிற தனது மலர்ச்சியே உலகமாதலின், வைதிக நிர்த்தேசம்-மறைமொழி.- இருக்கிறபடி
78. யமாத்மா ந வேத.–. பிரஹதாரண்யம்.
எவன் ஒருவன் உயிர்களால் அறிய முடியாதவனோ’ என்கிறபடியே, பிறர்களால் காண முடியாதவனாய் இருப்பான். எங்கும் பரந்து உள்ளும் புறமும் நிறைந்து ‘இதற்குப் பிரமாணம் என்?’ என்னில், உளன் சுடர்மிகு சுருதியுள் – புருஷனால் செய்யப்படாததாய், குற்றம் இல்லாததாய் இருக்கிற வேதங்களால் சொல்லப்பட்டவன். பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் போன்று வேறு காரணங்களால் கழித்துத் தள்ள ஒண்ணாதபடி இருத்தலின், ‘சுடர்மிகு’ என்றும், முன்னர் உள்ள பெரியோர்கள் கூறி வந்த முறையைப் பின்பற்றியே பின் வருகின்றவர்களும் கூறிக்கொண்டு வருகின்றமையின், ‘சுருதி’ என்றும் அருளிச்செய்கிறார்.
79. அக்ஷரம் அம்பராந்த த்ருதே:-பிரஹதாரண்யம், 5 : 8.
80. கஸ்மிந்நு கலு ஆகாஸ ஓதஸ்ச ப்ரேரதஸ்ச.
ஆகாயம் என்று கூறப்படுகின்ற மூலப்பகுதியானது எவனிடத்தில் குறும்பாவாகவும் நெடும்பாவாகவும் கோத்துக் கொண்டு கிடக்கிறது?’ என்று உபநிடதத்தில் கார்க்கி வித்தையில் ஆகாச சப்தத்தால் மூலப்பகுதியைச் சொல்லுகையாலே இவரும் ‘விண்’ என்ற சொல்லால் மூலப்பகுதியினை அருளிச்செய்கிறர்
ஆகாயம்’ என்ற சொல் மூலப்பகுதியைத்தான் காட்டுகிறது என்று கொள்ளுமாறு யாங்ஙனம்?’ எனின், 3ஆகாயத்திற்குக் காரணமான மூலப்பகுதியைத் தரித்திருப்பதனால் அக்ஷரம் என்று சொல்லப்படுமவன் பரம்பொருளே,’ என்பது பிரம சூத்திரம் ஆதலின், (சாரீரக மீமாம்சை, சூ. 9.)மூலப்பகுதியின் காரியமான ஆகாயத்தைக் காட்டுகிற ‘விண்’ என்ற சொல்லால் காரணமான மூலப்பகுதியை உபசாரத்தால் அருளிச்செய்கிறார்
81. யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரஞ்ச உபேபவத ஓதந;
ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் கஇத்தா வேத யத்ர ஸ:-கடவல்லி. 1 : 2.
யாவன் ஒருவனுக்குப் பிராமண க்ஷத்திரிய சாதிகள் இரண்டும் உணவாக இருக்கின்றன? யாவன் ஒருவனுக்கு யமதருமன் ஊறுகாய் நிலையிலே இருக்கின்றான்? அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவருக்கு அறிய நிலமோ?’
இங்ஙனம் உணவாகக் கூறப் படுதலின், இவரும், உணவின் தொழிலாகிய ‘ அவை முழுது உண்ட’ என்னும் சொல்லால் அழித்தலை அருளிச் செய்கிறார்
82. பர: பராணாம் பரம: பரமாத்மா ஆத்மஸம்ஸ்தித:
ரூபவர்ணாதி நிர்த்தேஸ விஸேஷண விவர்ஜித:-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 10.
உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவன் இறைவன்,’ என்கிறபடியே, அவர்கள்தங்களுக்கும் மேலானவனாய் இருக்குமவன். 3‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா, ‘என்பது திருவாய், 8. 1 : 5.)
83. விஷ்ணு: ஆத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:-பாரதம்
மிக்க ஒளியினையுடைய உருத்திர பகவானுக்குத் திருமால் உயிராக இருக்கின்றார்; ஆதலால், அந்தச் சிவபெருமான் வில்லினுடைய நாணினைத் தொடும் ஆற்றலையடைந்தான்’ என்றார் அடி அறியும் வியாசர்
84. யோ ப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்
யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை.–சுவேதாஸ்வதரம்.
நாராயணன் உலகங்களை எல்லாம் படைப்பதற்கு முன்னர்ப், பிரமனை முதலில் படைத்தான்; அப்பிரமனுக்கு வேதங்களைக் கற்பித்தான்,’ என்கிறபடியே, அதற்கும் இறைவன் அடியாக இருப்பான்.
85. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரெஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்மிருதௌ
ததா தர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.–பாரதம். சாந்தி பர். 169.
அரன் என உலகு அழித்து உளன் அயன் என உலகு அமைத்து உளன் – ‘அரன் செய்தான்; அயன் செய்தான்’ என்ன உலகையழித்தும் அமைத்தும் உளன். பிரமன் சிவன் என்னும் இவர்கள் இருவரும் தேவர்களுக்குள் தலைமை பெற்றவர்கள்; இறைவன் தெளிந்திருந்த காலத்தும் கோபத்துடன் இருந்த காலத்தும் உண்டானவர்களாக எண்ணப்படுகிறார்கள்; இவர்கள், அவ்விறைவனாலே காட்டப்பட்ட வழிகளையுடையவர்களாய், படைத்தல் அழித்தல்களாகிய காரியங்களைச் செய்கிறார்கள்,’ என்று இவ்வாறு பிரமாணங்கள் உள்ளபடியால் படைப்பில் ஒரு பகுதியும் அழிப்பில் ஒரு பகுதியுமே அவர்களுக்கு உள்ளவை; அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன். ஆகையாலே, சொன்னேன் அத்தனை; ஒருவனிடத்திலே பக்ஷபாதத்தாலே சொன்னேன் அல்லேன்,’ என்று குத்ருஷ்டிகளை மறுக்கிறார்.
86. ஏஷம ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா:–சாந்தோக்கிய உபநிடதம்.
நீர் தொறும்–ஈண்டு நீர் என்றது நீரின் பரமாணுக்களை. 2‘ஆகாயத்திலும் பெரியன் என்று கூறப்படுகின்ற பரம்பொருள், தண்ணீரின் பரமாணுக்களில் நிறைந்து நிற்பின், சிறிய இடத்தில் இருப்பவனாய் நெருக்குப்பட்டு இருப்பானோ?’ என்னில், பரந்த அண்டம் இது எனப் பரந்து உளன் – அந்த ஒவ்வொரு பரமாணுவும் பரந்த அண்டம் இது என்னும்படி அதற்குள் பரந்திருப்பன். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பன்
87. அத்ர க்ருத்ர: பததி.
88. ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகி: பகவாந்ருஷி:-ஸ்ரீராமா. பா. 4 : 1.
இறைவனுடைய திருவடிகளின்மேல். குருகூர்ச் சடகோபன் சொல்- 3‘வால் மீகிர்ப் பகவான் ருஷி:’ என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச்செய்கிறார்.
89. பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை: த்ரிபி: அந்விதம்
ஜாதிபி: ஸ்ம்தபி: பத்தம் தந்த்ரீலய ஸமந்விதம்.
90. பாதபத்த: அக்ஷரஸம: தந்திரீலய ஸமமவித:-ஸ்ரீராமா. பா. 2 : 18.
91. காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஈத்ருஸை: கரவாணி அஹம்.
நிரன் நிறை’ என்று கொண்டு நேரே நிறுத்தப்படுகை. அதாவது- நான்கு அடிகளோடு கூடியதாயும், ஒவ்வோர் அடியும் எழுத்துகளால் ஒத்ததாயும், வீணையின் நரம்பு தாளங்கள் அவற்றிற்கு ஒத்ததாயும் இருக்கின்ற ஸ்ரீராமாயணம்,’ என்பது போன்று, இங்கும் செய்யுள் இலக்கணத்திற்குறையாமல் எழுத்து அசை சீர் தளை அடிகளும் பொருளும் அந்தாதியும் முறையாக நிறுத்தப்படுதல் என்னுதல்
92. உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்யைகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்ய:–ஆத்தும சித்தி.
பத்தி என்பது ‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’ என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப்பட்ட மனத்தினையுடையவனுக்கு உண்டாவது அன்றோ?
93. நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்.-முண்டக உபநிடதம், 1. 2 : 13.
-ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன் அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.–வீடுமின்’ என்று பலரைக் குறித்துப் பரோபதேசம் செய்கையாலே ‘ஒரு வருடம்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
94. ஸோஹம் பருஷிதஸ்தேந தாஸவச்ச அவமாநித:
த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:-ஸ்ரீராமா. யுத். 17 : 14.
95. பரித்யக்தா மயா லங்கா மித்ராணிச தநாநிச
பவத்கதம்மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிச.–ஸ்ரீராமா. யுத். 19 : 5.
புத்திரர்களையும் மனைவியையும் விட்டுவிட்டு ஸ்ரீராகவனைச் சரணமாக அடைகிறேன்,’ என்றும், 2‘என்னால் விடப்பட்டது இலங்கை’ என்றும் விடுகை முன்னாக அன்றோ முன்பு பற்றினவர்களும்-விபீஷணன் முதலியோர்.- பற்றினார்கள்? ‘
96. யமோ வைவஸ்வதோ ராஜா ய: தவஏஷஹ்ருதிஸ்தித:
தேந சேதவிவாதஸ்தே மா கங்காம் மா குரூந் கம:-பிரஹதாரண்யம்.
உம் உயிர் வீடு உடையானிடை – எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில். அன்றி, இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக உடையவனிடத்தில்’என்றும், ‘உம்உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ என்றும், (ஈண்டு, விடுதல் – சமர்ப்பித்தல்)உம் உயிரை வீட்டினை (அதாவது – மோக்ஷத்தினை) உடையவனிடத்தில்’ என்றும் பொருள் கூறலும் ஆம். ‘அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ? நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’ என்பார், ‘உயிர்’ என்றும், ‘அதுதானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ என்பார், ‘உம் உயிர்’ என்றும் அருளிச்செய்கிறார். பொதுவிலே ‘உடையானிடை’ என்கிறார்; சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால் 1‘வண்புகழ் நாரணன்’ என்கைக்காக.
97. அநாத்மநி ஆத்மபுத்தி: யா அஸ்வே ஸ்வமிதி யா மதி:
அவித்யா தருஸம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்-ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.
98. அச்யுத அஹம் தவஅஸ்மி இதி ஸைவ ஸம்ஸார பேஷஜம்.–ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.
உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும், அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, எனப் பிறப்பு ஈனும் வித்து இன்னது என்றும், 2‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய் இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’, என அதனை நீக்குதற்கு வழி இன்னது என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகின்றது. ஆதலால், அளிக்குமவன் ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.
99. ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநாநஅந்யத் கிஞ்சித் அஸ்திபராயணம்.-விஷ்ணு தர்மம், 122.
பிறப்பாகிய பெருங்கடலில் மூழ்கினவர்களாய் ஐம்புலன்களாகிற நீர் வாழ் பிராணிகளால் இழுக்கப்படுகின்றவர்களாய் உள்ள மக்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கிற விஷ்ணுவாகிற ஓடத்தினைத் தவிர, சிறந்த வேறே பாராயணம் இல்லையே
100. ஜ்யோதீம்ஷிவிஷ்ணு: புவநாநிவிஷ்ணு: வநாநிவிஷ்ணு: கிரயோதிஸஸ்ச
நத்ய: ஸமுத்ராஸ்ச ஸஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்திச விப்ரவர்ய.–ஸ்ரீ விஷ்ணு. புரா. 2. 21 : 93.
101. ஸத்யஞ்ச அந்ருதஞ்ச ஸத்யம் அபவத்.–தைத்திரீயம். 6.
‘உள்ளது என்று கூறப்படும் உயிரும் இல்லது என்று கூறப்படும் உடலும்’ என்று விஷ்ணு புராணமும், 5‘சத்தியம் என்ற சொல்லால் கூறப்படும் உயிர்களும், பொய்மை என்ற சொல்லால் கூறப்படும் உடலும்’ என்று தைத்திரீய உபநிடதமும் கூறுதல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.
102. ப்ரஸாத பரமௌ நாதௌ மம கேஹம் உபாகதௌ
தந்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்யோபஜீவந:– ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 16 : 21.
‘பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூவிற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ‘மாலாகாரர்’ தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது. மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை; ‘இரண்டும் அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க, தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில், சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள், ‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும்
103. ஸமோஹம் ஸர்வபூதேஷூநமேத்வேஷ்ய: அஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி துமாம் பக்த்யா மயிதே தேஷூ சாப்யஹம்.-ஸ்ரீ கீதை. 9 : 24.
முற்றவும் நின்றனன் – ‘எல்லாப் பிராணிகளுக்கும் நான் ஒத்தவன்; எனக்கு எவனும் பகைவன் இலன்; அன்பனும் இலன்; எவர்கள் என்னைப் பத்தியால் அடைகின்றார்களோ, அவர்கள் போலவே நானும் அவர்களிடத்தில் அன்புடன் வசிக்கின்றேன்,’ என்கிறபடியே அடையும் திறத்தில் ஒத்தவனாய் இருந்தான்.
கடுநவையுண்டாக வருத்தும் வெகுளியும் அருளும் கோட்டமும் செப்பமும் ஆகிய மறமும் அறமும் உடையாரிடத்து
உடையையாய் இல்லாரிடத்து இல்லாயாய் இருத்தல் அல்லது மாற்றாருயிரின் கண்ணும் கேளிருயிரின் கண்ணும் அதனை மாற்று
தற்றொழிலும் அதற்கு எமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை; நினக்கு மாற்றோரும் கேளிரும் இலராதலான். என்றது, குற்றமாகிய மறமுடையாரிடத்து இல்லையாதலும், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும் செம்மையுமுடையையாய் அஃதில்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப் பகையாயினாருயிரின்கண் அதனை மாற்றுதற்றொழிலும் நினக்குக் கேளிராயினாருயிரின்கண் அதற்கு ஏமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை; அவ்விரு திறத்தாரும் நினக்கு இன்மையான் என்றவாறு,’ என்ற பரிபாடல் உரைப்பகுதி ஒப்பு நோக்கல் தகும்.
104. வாஸூதேவோஸி பூர்ண:
105. இதாநீம் மாக்ருதா வீர ஏவம் விதம் அசிந்திதம்
த்வயி கிஞ்சித் ஸமாபன்னே கிம்கார்யம் ஸீதயாமம.-ஸ்ரீராமா யுத். 41 : 4.
இங்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே ‘அடியவர்’ என்கிறார். 1உனக்கு நலிவு சிறிது வந்து இருப்பின், சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ என்று, இன்று கிட்டிற்று ஒரு குரங்கை, (சுக்கிரீவனை.)என்றும் தன்னையே அடைந்திருக்கிற பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் அன்றோ! ஆதலால், இறைவனுக்கு அடியவர்களாய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள் ஒரு திருவடி, ஒரு திருவனந்தாழ்வான் அல்லர்; இங்கு, இவ்விலக்காமையினை யுடையவர்களேயாவர். ‘காரணம் என்னே?’ எனின், அவர்கள் உள்ள குணத்தை அனுபவித்திருப்பவர்கள், அத்தனையே யாம்; குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலில் அன்றே!-
106. பஹூநாம் ஜந்மநாம் அந்தேஜ்ஞாநவாந் மாம்ப்ரபத்யதே
வாஸூதேவ: ஸ்ர்வம் இதி ஸ மஹாத்மா ஸூதுர்லப:
107. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹருத்கதி: நாராயண:
108. பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தாரமித்ரா தயோபிவா
ஏகைக பலலாபாய ஸர்வலாபாய கேஸவ:
109. ப்ராயஸ: பாபகாரித்வாத் ம்ருத்யோ: உத்விஜதே ஜந:
க்ருதக்ருத்யா: பாதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரியம் இவ அதிதிம்.
110. ஸர்வே வேதா: ஸர்வ வேத்யா: ஸஸ்ஸ்த்ரா:
ஸர்வேயஜ்ஞா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே
தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாபதா:
111. நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண:பர:
நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண:பர:.-தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8.
உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,’ 4‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,
112. நித்யம் த்வதேக பரதந்த்ர நிஐஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸனம் ந:–ஸ்ரீ வைகுண்டராஜ ஸ்தவம், 35.
‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன
113. பித்யதே ஹ்ருதய க்ரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஸயா:
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே- முண்டக உபநிடதம்.
‘நம்மைக்காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய இறைவனைப் பரபத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன,’
114. ததோமாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்.– ஸ்ரீ கீதை, 18 : 55.
பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்
115. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜூந
தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப.-ஸ்ரீ கீதை, 4 : 5.
பகைவர்களை அழியச் செய்கின்ற அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன; உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள் பலவற்றையும் யான் அறிகின்றேன்; அவற்றை நீ அறியாய்,’ என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் கிருஷ்ணன்; அருச்சுனன் பிறந்தது பொய் அன்று; ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.
116. ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-ஸ்ரீ கீதை, 4 : 9.
அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே; இது தன்னை அவதார ரஹஸ்யத்தில் தானும் அருளிச் செய்தான் அன்றே, ‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும் தெய்வத் தன்மை வாய்ந்தவை,’ என்று? அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும். 6நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்; 7அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;
117. மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந
தோஷோ யத்யபிதஸ்ய சியாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம்.ஸ்ரீ ராமா. யுத். 18 : 3.
நண்பன் என்ற பாவனையைக்கொண்டு வந்த இவ்விபீடணனை நான் ஏற்றுக்கொள்ளாது விடமாட்டேன்,’ என்னுமவன்
118. அப்ரவீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதோ விபீஷண:
அந்தரிக்ஷ கத:ஸ்ரீமாந் ப்ராதாவை ராக்ஷஸாதியம்.-ஸ்ரீராமா. யுத். 16. 17.
119. லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-ஸ்ரீராமா. பால. 18 28.
இராவண பவனத்தை விட்டு ஆகாசத்தில் கிளம்பின போதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடி கொண்டபடியினால் அன்றோ, 7விபீடணனை, ‘ஆகாயத்தை அடைந்த ஸ்ரீமான்’ என்றார்? 8‘இலக்குமணன் லக்ஷ்மியால் நிறையப் பெற்றவன்’ என்றார் இளைய பெருமாளை. இது அன்றோ இவனுக்கு நிலை நின்ற ஐசுவரியம்; இத்தைப் பற்ற ‘உடை’ என்கிறார்.
120. இமௌ ஸ்ம முநிஸார்த்தூல கிங்கரௌ ஸமுபஸ்திதௌ
ஆக்ஞாபய யதேஷ்டம் வை ஸாஸநம் கரவாவகிம்.-ஸ்ரீராமா. பாலகா. 34 : 4.
விஸ்வாமித்திர முனிவரே, உம்மைச் சேர்ந்து சரணம் அடைந்தவர்களாய் இருக்கிறோம் நாங்கள்; ஆணை இட்ட காரியங்களைச் செய்தோம்; இனி எந்தக் காரியங்களைச் செய்யவேண்டும்? விரும்பும் காரியத்தைக் கட்டளை இடுங்கள்,’ என்கிறபடியே, ‘நான் உங்கள் அடியான்; என்னை வேண்டினபடி ஏவிக் காரியங்கொள்ளுங்கள்,’ என்று நிற்பான் என்றபடி
121. பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்
புருஷம் ஸாஸ்வதம் திவ்யம் ஆதிதேவம் அஜம் விபும்.–ஸ்ரீகீதை. 10 : 12.
122. பக்த்யாது அநந்யயா ஸக்ய: அஹமேவம் வித: அர்ஜூந
ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்த்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப,-ஸ்ரீகீதை. 11 : 54.
மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன், ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’ என்று இவை முதலாக இறைவனைப் பற்றி வீடுமன் முதலியோர் கூறிக்கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின், ‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க, 5‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன்
123. ப்ராம்யதாம் அதர ஸம்ஸாரே நராணாம் கர்மதுர்கமே
ஹஸ்தாவலம்பநோஹ்யேகோ பக்தி கரீதோ ஜநார்தந:–வைஷ்ணவ தர்மம்.
உலகங்களை எல்லாம் ஆளும் அரசபுத்திரன் ஒருவன், ஒரு கால விசேடத்தில் சிறிய பொருளுக்காக அடிமைப்படுவானாயின், பின், தன் செல்வக்கிடப்புக் காட்டி மீள ஒண்ணாதது போன்று, சர்வேஸ்வரனும் பத்தியில் நிலை நின்றவனுக்குத் தன்னை அறவிலை செய்து கொடுத்தால், பின்னை, மேன்மை காட்டி அகலமாட்டான்; கழுத்திலே ஓலைக்கட்டித் ‘தூதுபோ’ என்னலாம்படி தன்னைக் கையாள் ஆக்கி வைப்பான். 1‘மக்கள் செய்யும் பத்தியினால், அவர்கட்குத் தன்னை அறவிலை செய்து கொடுக்கின்றான் இறைவன்; அவ்விறைவனாகிய ஜனார்த்தனனே அவர்கட்கு எப்பொழுதும் கையாளாக இருக்கின்றான்,’ என வருதலும் இங்கு ஓர்தல் தகும்.
124. ஹிமவாந் மந்தரோ மேரு: த்ரைலோக்யம் வா ஸஹாமரை:
ஸகயம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந ஸங்க்யே பரதாநுஜ:ஸ்ரீராமா. யுத். 59 : 111.
125. வாயு ஸூநோ: ஸூஹ்ருத்த்வேந பக்த்யா பரமயா ச ஸ:
ஸத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வம் அகமத் கபே:ஸ்ரீராமா. யுத். 59 : 120
இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற பொருள்களோடு மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்; போர்க்களத்தில் பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’ 4‘இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ என்பன ஸ்ரீராமாயணம்
உள்ளி வெம்பிணத் துதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி யங்கைக ளிருபதும் பற்றிப்பண் டான்மா
வெள்ளி யங்கிரி எடுத்தனன் வெள்கினா னென்ன
எள்ளிப் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.
‘அடுத்த நல்லுணர் வொழிந்தில னம்பரஞ் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கிவெண் பொருப்போடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக் கிளையான்.’
‘தொகவொ ருங்கிய ஞானமென் றெவரினுந் தூயான்
தகவு கொண்டதோ ரன்பெனுந் தனித்துணை யல்லால்
அகவு காதலால் ஆண்டகை என்னினு மனுமன்
மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்.’ — என்னும் கம்பராமாயணச் செய்யுள்கள் நோக்கல் தகும்.
126. அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே.–ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.
‘ஜனகனுடைய குலத்தில் பிறந்த சீதை விரும்பும் கணவனாக எவன் இருக்கிறானோ, அவனுடைய திறல் வலி அளி முதலிய குணங்கள் அளவிட்டு அறிய முடியாதன,’
127. ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ.
உனக்கு பூதேவியும் ஸ்ரீதேவியும் என மனைவியர் இருவர்’ எனக் கூறப்பட்டுள்ளது அன்றே? அங்குக்கூறிய அந்த இலட்சுமி சம்பந்தத்தைத் தாம் அங்கீகரித்தமை தோன்ற, ‘மலர் மகள் விரும்பும் நம் அடிகள்’ என்கிறார் இங்கு.
128. தாம்நா சைவோதரே பத்வா-ப்ரத்ய பத்நாத் உலூகலே
க்ருஷ்ணம் அக்லிஷட கர்மாணம் ஆஹச இதம் அமர்ஷிதா.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 14-
129. யதி ஸக்நோஷி கச்ச த்வம் அதிசஞ்சல சேஷ்டித
இதி உக்த்வா அதநிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 15-
‘யசோதையானவள், தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓர் உரலோடே அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தினாள்; பொத்தி, ‘துரு துருக்கைத் தனம் அடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க்காணாய்!’ என்று உறுக்கிவிட்டால் போகமாட்டாதே இருந்தான்
இப்படிப்பட்ட இறைவனுடைய சீரிய சக்தி பல படியாகக் கேட்கப்படுகின்றது’ என்று ஓதப்படும் பொருள், இவளுக்கு எளியதான படியினால் சொல்லுகிறாள்
130. மந்யே ஸாபரணா ஸூப்தா ஸீதா அஸமிந் ஸயநோத்தமே
தத்ர தத்ர ஹி த்ருஸ்யந்தே ஸக்தா: கநக பிந்தவ:
131. ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:
பரிஷ்வஜ்ய ருரோத உச்சை: விஸம்ஜஞ: ஸோக கர்ஸித:
132. ஸாதம் ஸமீக்ஷ்யைவ ப்ருஸம் விஸம்ஜ்ஞா கதாஸூ கல்பேவ பபூவ ஸீதா.
சிரேண ஸம்ஜ்ஞாம் ப்ரதிலப்யசைவ விசிந்தயாமாஸ விஸாலநேத்ரா.–ஸ்ரீராமா. சுந். 38 : 8.
பெருமாளும் பிராட்டியும் துயின்ற இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் காவல் புரிந்திருந்தார் என்பது ஸ்ரீ ராமாயணத்திற்கூறப்படவில்லையே?’ எனின்,
‘பொருந்திக் கிடக்கிற பொன்னின் துகள் அங்கே அங்கே காணப்படுகின்றனவே! ஆதலால், பிராட்டி ஆபரணங்களைக் கழற்றாமல்
இச்சிறந்த படுக்கையில் துயின்றிருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்,’ (அயோத். 88. 14.) என்று ஸ்ரீ பரதாழ்வான் கூறுகின்றான். பெருமாள், ஸ்ரீ
குகப்பெருமாள் ஆச்சிரமத்தினின்று நீங்கிச் சென்றதற்கும், ஸ்ரீ பரதாழ்வான் வந்ததற்கும் இடையே இருபத்திரண்டு நாள்கள் கழிந்தன; பொன்னிள் துகள்
மறைவுபடாமல் இத்துனை நாள்களும் அங்கே இருக்க வேண்டுமாயின், சிறந்த காவல் செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆதலால், காவல் புரிந்தமை பெறுவதும்.
எத்திறம்’ என்ற ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ? இவர் மோஹித்துக் கிடக்க, 1பெருமாளும் பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று, ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும் பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக்கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள். பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப்பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக்கொண்டிருந்த இடத்தைகாட்ட, அவ்விடத்தைக் கண்டவாறே ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் என்னும்படி இங்கு,மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர், விசாலமான கண்களை யுடைய பிராட்டி பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’ என்பது போன்று பெரியோர்களுடைய நல்வினைப் பயனால் காலம் உணர்த்த உணர்ந்து, ‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார்.
காரெனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லில்
வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான்;
வார்மணிப் புனலால் மண்ணை மண்ணுநீ ராட்டுங் கண்ணான்.’– என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைத்தல் தகும்.
133. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.
பல பிறப்பாய்-தெளிவுடைய தான் சொல்லும் போதும் 2பல பிறவி’ என்பன்; உண்மையினைக் கூறும் வேதங்கள் கூறும்போதும் பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ என்று கூறும்; அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார், பல பிறப்பு’ என்பர். பிறருக்காகத் தாழ நின்றோம் என்ற நினைவு சிறிதும் இன்றி, அவ்வப் பிறவியின் தன்மைக்குத் தக்கவாறு இருந்தான் ஆதலின், ‘பிறந்து’ என்னாது ‘பிறவியாய்’ என்கிறார்.
134. ஆத்மாநம் மாநுஷம் மந்யேராமம் த ரதாத்மஜம்
யோஹம் யஸ்ய யத: ச அஹம் பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே.-ஸ்ரீராமா. யுத். 120 : 11.
135. ந அஹம் தேவோ ந கர்தர்வோ நயக்ஷோ நசதாநவ:
அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோந்யதா.-ஸ்ரீ விஷ்ணு புராணம். (5. 13 : 12.)
பரத்துவ நினைவு சிறிதும் இன்றி இருந்தான் என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், என்னை நான் மனிதனாகவே நினைக்கின்றேன்;’ என்ற ஸ்ரீ ராமன் வார்த்தையாலும், -நான் தேவன் அலன், கந்தருவன் அலன், இயக்கன் அலன் அசுரனும் அலன். நான் உங்களுக்குச் சுற்றத்தானாய்த் தோன்றி யிருக்கிறேன்; இப்படித் தோன்றி யிருப்பதனால் வேறு விதமாக நினைக்கத்தக்கவன் அல்லன்,- என்ற ஸ்ரீகிருஷ்ணன் வார்த்தையாலும் அறிதல் தகும்
136. யுவா ஸூவாஸா: பரிவீத ஆகாத் ஸ உ ஸ்ரேயாந் பவதி ஜாயமாந:-யஜூர் வேதம். 3. 6 : 9.
இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின், 1‘அவன் பிறந்தவனாய் நன்மையுடையவனாகவே இருக்கின்றான்,’ என்கிறபடியே, கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்; திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாராநிற்கும். அவ்விறைவனே புகழையுடையான்
137. நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே
நமோநம: அநந்த மஹா விபூதயே
நமோநம: அநந்த தயைக ஸித்தவே.-ஸ்தோத்திர ரத்தினம், 21.
எம்பெருமான்’ என்ற சொல்லால், ‘அடியார்க்கு எளியனாய் அடியர் அல்லாதார்க்கு அரியனான என் 2நாயன் நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக்கொடுக்கிறார். 3‘மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகாத உனக்கு வணக்கம் வணக்கம்; மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகின்ற உனக்கு வணக்கம் வணக்கம்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.
138. ஸஹஸ்ர பாஹூ: ஸர்வஜ்ஞோ தேவோநாம ஸஹஸ்ரவாந்.
139. நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவாதௌ தேவாதீநாம் சகார ஸ:–பாரதம்.
பேரும் ஓர் ஆயிரம் – அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திருநாமங்களையுடையவனாய் இருக்கை. குணம் பற்றி வருவனவும், சொரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார். 4‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன,’ எனப் புகலும் பாரதம்
140. அநேக ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி:
பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின், ‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணினான்’ என்றும். பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’ என்றும் பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின்; ஈண்டுப் ‘பிற’ என்பது 7திருமேனியைக் காட்டும்
141. தத்ர பூஜ்யபதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
ஸப்த: அபயம் ந உபசாரேணஹி அந்யத்ரஹி உபசாரத:
142. நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே.- ஸ்ரீகீதை, 9 : 14.
143. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு.-ஸ்ரீகீதை, 9 : 34.
வணக்குடைத் தவநெறி வழி நின்று-வனக்கத்தையுடைய பத்திமார்க்கமாகிற வழியிலே நின்று; பகவத்கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில் ‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ என்று கூறி, பின்னர், என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால், இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவநெறி’ என்கிறார்
பகவான் என்பதற்கு ஆறு குணங்களை யுடையவன் என்பது பொருளாதலின், குணங்களை யுடையான் பக்கல் செலுத்தம் பத்தி இன்பமயமாக
இருக்குமாதலின், ‘காதலியோடு கலக்கும் கலவி போன்று இன்ப மயமாக இருக்கும்’ என அருளிச் செய்கிறார்.
144. ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநம்யம் தப:-முண்டகோபநிடதம் 1. 1 : 10.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் அதனைச் சொல்லுகிறார்; அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’ என்கிற நியாயத்தாலேயாதல், இவனுடைய அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலேயாதல்.
தவநெறி’ என்பதற்குப் பத்தி மார்க்கம், பிரபத்தி மார்க்கம் என்னும் இரண்டனையும் பொருளாகக் கொள்க.
145. ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே.ஸ்ரீகீதை, 2 : 59.
ருசி வாசனைகளும் நீங்குகின்றன,’
146. மத்யே விரிஞ்ச கிரிஸம் ப்ரதமாவதார:-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், 2 : 8.
பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ என்கிறபடியே, பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;
147 ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:-சுபால உபநிடதம்.
நன்று எழில் நாரணன் – ‘நன்று’ என்பதனால், அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார். ‘எழில்’ என்பதனால், ‘நீங்கின குற்றங்களையுடையவனும் மோக்ஷத்தையுடையவனும் ஒளி உருவனும் ஒருவனேயானவனும் ஆன நாராயணன்’ என்கிற புகரை நினைக்கிறார். இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு, வடிவின் அழகினைப் பார்த்தவாறே, ‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, ‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும் நன்றான அழகு என்று கூறலுமாம். திருப்பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க்கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின், ‘நாரணன்’ என்கிறார்.
148. ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணுஸிவாத்மிகாம்
ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவாநேகஏவ ஜநார்த்தந:–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 23.
படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கிற பிரமன் விஷ்ணு சிவன் என்னும் பெயர்களை, பகவான் என்ற பெயரையுடைய ஜனார்த்தனன் ஒருவனே அடைகிறான்,’ என்கிறபடியே, பெயர்களில் ஒக்க எடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பரியாயமான ஜனார்த்தன
149. நந்தந்தி உதிக ஆதித்யே நந்தந்தி அஸ்தமிதே ரவௌ
ஆத்மநோ நாவபுத்யந்தே மநுஷ்யா ஜீவிதக்ஷயம்.-ஸ்ரீராமா. அயோத். 105 : 24.
நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ்நாளின் நிலையினை அறிந்தபடி என்?’ என்னில், முன்னர், மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே? ‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம் மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும். இனி, ‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியாநின்றால், ‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், ‘நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.
‘நம்முடை நாளே’ என்பதற்கு இரண்டு வகையில் விசேடம் அருளிச்செய்கிறார். முதல் வகை, வாழ்நாளின் நிலை இன்மையைக் குறித்தது;
இரண்டாம் வகை, கேட்டின் மிகுதியைக் குறித்தது.
150. ஸூக்ருத: ஸாதுக்ருத்யாம் த்விஷந்த: பாபக்ருத்யாம்–சாட்யாயன சாகை.
151. அபூத பூர்வம் மமபாவி கிம்வா ஸர்வம் ஸஹேமே ஸஹஜம் ஹி துக்கம்
கிம்து த்வதக்ரே ஸரணாகதாநாம் பராபவோ நாத ந தேநுரூப:-ஸ்தோத்திர ரத்தினம், 25.
நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு, உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால், (காலம் அறியப்படாமல் வருகின்றமையை நோக்கி ‘உடல்களின் சேர்க்கையும் நித்தியம்’ என்கிறா)அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார். நம. ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும், பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ என்கிறபடியே. அசல் பிளந்தேறிட வந்தன அல்ல; நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை. அதாவது, 5எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? எல்லாம் பொறுக்க வல்லேன்; தன் காய் பொறாத கொம்பு உண்டோ? என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம்
பழமை-அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை. அம்-கொடுமையை நினைந்து சொல்லுகிறார். கொடுவினை-அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள்
152. யதா இஷீகதூலம் அக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத.
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே.-சாந்தோக்ய உபநிடதம், 5. 2
உடே்ன மாளும்-பற்றின காலத்திலே அழியும். ‘6தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ,அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன
இங்கு, ‘தாயைக் குடல் விளக்கஞ்செய்த தாமோதரனைத், தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது, வாயினால்
பாடி மனத்தினால் சிந்திக்கப், போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்,’ என்ற திருப்பாவை ஒப்பு நோக்கல் தகும்.
153. மேரு மந்தர மாத்ரோபி ராஸி: பாபஸ்ய கர்மண:
கேஸவம் வைத்யம் ஆஸாத்ய துர்வியாதிரிவ நஸ்யதி.-விஷ்ணு தர்மம். 78.
பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேருமலை மந்தரமலை இவற்றின் அளவாக இருந்தாலும், கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன,
154. க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் திகச்சதி
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி– ஸ்ரீ கீதை, 9 : 81.
ஓர் குறைவு இல்லை – ‘மேல் ஒரு குறையும் வாராது. இனி, விரும்பியவை அனைத்தும் எய்தும்,’ எனலும் ஆம் ‘அருச்சுனா, இவ்வர்த்தத்தில் நம்மை நம்பிச் சூளுறவு செய்வாய்; நம்மைப் பற்றினவர்களுக்குக் கேடு வாராதுகாண்; பகவானை அடைவதற்கும் வினை கிடக்கைக்கும் ‘தீயால் நனைப்பது’ போன்று, என்ன சேர்த்தி உண்டு? அது பொருத்தம் அற்றது,’ என்பது பகவான் திருவாக்கு
155. துராசாரோபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக: புரா
ஸமாஸ்ரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா ஸரணம்யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்ந:பாரதம் சாந்தி பர்வம்.
156. ந வாஸூதேவ பக்தாநாம் அஸூபம் வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் வாப்யுபஜாயதே.பாரதம் அநுசாசன பர்வம்.
தீய ஒழுக்கமுடைமை, உண்ணத் தகாதனவற்றை உண்டல், நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தல், வேதநெறியினை இல்லை என்றல் ஆகிய இவற்றைப் பல காலம் செய்து போந்தவனான ஒருவன் ‘இவன் அனுகூலன் ஆவது எப்போதோ!’ என்று காலம் பார்த்திருக்கும் இறைவனைச் சென்று பற்றுவானாயின், பற்றிய அவனை, பின்னர்க் குற்றம் அற்றவனாக நினைத்தல் வேண்டும்; ‘எதற்காக?’ என்னில், இவனைக் குறைய நினைக்கையாவது, பகவானுடைய பெருமையைக் குறைய நினைக்கையேயாம்,’ என்றும், 4‘வாசுதேவனுடைய அடியார்களுக்கு ஒரு பொழுதும் கேடுகள் இல்லை,’ என்றும் கூறும் பாரதத்தையும் இங்கு உணர்க.
ஆதலால், இனி, நீங்கள் செய்யவேண்டுவது ஒன்று உண்டு; மனன் அகம் மலம் அறக் கழுவி – சர்வேஸ்வரன், பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவில் கலந்து நின்றால், ‘இவனோ கடவான், மற்றையவர்களோ!’ என்று ஐயப்படுமது தவிர்ந்து, ‘சர்வேஸ்வரனே கடவான்’ என்கிற மனத்தின் தூய்மை உண்டாக வேண்டும். ‘
157. த்விதா பஜ்யேயம் அப்யேவம் நநமேயம்து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:.ஸ்ரீ ராமா. யுத். 36 : 11.
மாளும் ஓரிடத்திலும்-முடிகின்ற ஒரு கணத்திலும். வணக்கொடு மாள்வது வலம்-–இரண்டு துண்டுகளாக வெட்டப்படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கேன்,’ என்னாது கிடக்கிற சீரைப்பாயைக் (சீரையாகிய பாயையும்.)கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும். இறைவனையும் பற்றி வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராமல், முடிகிற சமயத்திலே அடையவே பின்னைப் பெற்றோடே தலைக்கட்டும் ஆதலின், ‘மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலம்’ என்கிறார். இதனால், பிறந்தது முதலாக அடைந்தாலும் பலன் இல்லை, இறைவனுக்கு வேறுபட்ட தேவர்கள் பக்கல்; இறைவன் விஷயத்தில் அடைவதிலே தொடங்கி உடனே முடிந்தாலும் பலன் தப்பாது என்கிறார்
158. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாயச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே.ரீ கீதை. 4 : 8
பிரமன் முதலியோர்கட்கும் காரணனாய் அவர்களுக்கு இரட்சகனான சர்வேஸ்வரன், அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின், 1பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும்-பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காக’ என்றது, ‘நல்லார்கள் தம்மை நலம் புரிந்து காத்தல்’ என்றதன் பொருள். ‘ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காக’ என்றது, ‘எல்லாம் முந்தை அறம் நாட்டம் உய்த்தற்கு’ என்றதன் பொருள். ‘ஆயின், ‘பொல்லாரைப் போக்கல்’ என்றது என்னை?’ எனின், ‘பொல்லாரைப்போன்று நெறி போக்கல் அதனுடைய பலமாய் வருமதுவே’ என்ற வாக்கியத்தால் அது அமுக்கியம் என்கிறார்.
அது, சங்கற்பமாத்திரத்தாலே செய்யலாம் ஆகையாலே, பிரதானம் அன்று என்றபடி. விரைவும் ருசியும் நேரிற் கண்டால் அல்லது உண்டாகா; ஆதலால்,
அவற்றிற்கே பிராதாந்யம்.
159. பஸ்ய ஏகாதஸ மே ருத்ராந் தக்ஷிணம் பார்ஸ்வம் ஆஸ்ரிதாந்.-மோக்ஷ தர்மம், 36, 11.
160. ப்ரஹ்மாணம் ஈஸம் கமலாஸநஸ்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாந் உரகாம்ஸ்ச திவ்யாந்.ஸ்ரீ கீதை, 11 : 15.
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் – ஆறு ஏழாம் பாசுரங்களில் கூறிய பொருளைத் தொடர்ந்து பேசுகிறார். முப்புரங்களையும் எரித்ததால் அபிமானங்கொண்டுள்ள சிவன், திருமேனியில் வலப்பாகத்தைப் பெற்றுச் சொரூபத்தை அடைந்தவனாய் இருப்பன். 1‘எனது வலப்பாகத்தில் தங்கியிருக்கின்ற உருத்திரர் பதினொருவரையும் பார்ப்பாய்,’ என்பது மோட்ச தர்மம். ஏழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் இடம்பெறத் துந்தித்தலத்து – எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த உலகமும் தானும் இடத்தாற் குறைவு இன்றித் திருநாபிக் கமலத்தில் இருப்பான். ‘உந்தி’ என்பதும், ‘துந்தி’ என்பதும் திருநாபிக்குப் பெயர். 2‘கமலமாகிய ஆசனத்தில் தங்கியிருக்கின்ற தலைவனாகிய பிரமனையும் பார்க்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதையில் அருச்சுனன் கூற்று. இங்குக் கூறிய இவை, இவர்களுடைய எல்லா வகையான காத்தலுக்கும் உபலக்ஷணம்.
161. அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா.–ஸ்ரீ கீதை.
162. த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி.-ஸ்தோத்திர ரத்தினம், 31.
தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும்படி செய்தான் என்றபடி. 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின், ‘நல்லடிப்போது’ என்கிறார். 2‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். செவ்விப்பூச்சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க.
163. ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே.-ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 2.
அயர்ப்பிலன்-மறவேன். அலற்றுவன்-முறை இன்றிப் பேசுவேன். தழுவுவன்-மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்பது போன்று, தழுவுவேன். வணங்குவன் – செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன். அமர்ந்து – வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.
164. தத் விப்ராஸ: விபந்யவ: ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே விஷ்ணோ: யத் பரமம்பதம்.-இருக்கு வேதம்.
சடகோபன் குற்றேவல்கள் – இத்திரு நகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொற்களைக்கொண்டு அடிமை செய்தபடியாயிற்று இவைதாம். ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின், எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே! -அப்பரமபதத்தில் இருக்கிற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, நித்தியசூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ?
165. அயம் அபர: காரக நியம:-இது ‘மகாபாஷ்ய வாக்கியம்’ என்பர் அரும்பதவுரைகாரர்.
166. ஆத்மாவா அரேத்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:-பிரஹதாரண்யம். 6. 5 : 6.
மேல் மூன்று திருவாய்மொழிகளால், இறைவனுடைய முதன்மையினையும் அவனை வழிபடுந்தன்மையினையும் அவனுடைய எளிமையினையும் அனுபவித்து மகிழ்ந்தவராய்த்தாமான தன்மையில் நின்று பேசினார்; இத்திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது. ‘இது மற்றொரு காரகம்’ என்னுமாறு போன்று, (வேற்றுமைகள் வினை கொண்டு முடியின் அதனைக் ‘காரகம்’ என்பர். இங்கு,)மேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு. முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்று அற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன,’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத்திருவாய்மொழி வந்த அளவில், ‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; 3இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன், பார்க்கத் தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.
167. ஆர்த்தோ வா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா.-ஸ்ரீ ராமா. யுத். 18 : 28
ஆர்த்தன் – பேறு பெறுவதற்கு விரைகின்றவன். திருப்தன் – ‘பெறுகின்ற காலத்தில் பெறுவோம்,’ என்று இருப்பவன்.
ஆர்த்தன் – அமிதவாதி. திருப்தன் – மிதவாதி.
ஆயின், ‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி, அவன் இரட்சிக்கத் தக்கவன்,’ என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப் பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று, மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்;
168. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர பலார்த்தந:
மாம்நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.- ஸ்ரீராமா. சுந். 9 : 30.
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-மதி கலங்கி, அறிவு அழிந்தாள் என்மின். தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்; அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி. மதி எல்லாங் கலங்கி-‘தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப்பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்; அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி. ‘மேல் எழச்சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?
169. ஹம்ஸகா ரண்டவாகீர்ணாம் வந்தே கோதாவரீம் நதீம்
க்ஷீப்ரம் ராமாய ஸம்ஸத்வம் ஸீதாம் ஹரதி ராவண:ஸ்ரீராமா. ஆரண். 49 : 32.
170. ஆஸோக ஸோகாபநுத ஸோக உபஹத சேதஸம்
த்வந்நாமாநம் குருக்ஷிப்ரம் ப்ரியாஸந்தர்ஸநேந மாம்.ஸ்ரீராமா. ஆரண். 6 : 17.
பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின், அன்னங்களும் நீர்க்காகங்களும் நிறைந்திருக்கின்ற கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்; ‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு செல்கிறான்,’ என்று நீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று பிராட்டியும், ‘சோகத்தினை நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும் எனக்குப் பிராட்டி இருக்கும் இடத்தினைத் தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ என்று பெருமாளும் கூறுதலால், தூது விடல் பண்டைய மரபேயாம்.
171. ஸபர்யாபூஜித: ஸம்யக் ராமோ தஸரதாத்மஜ:
பம்பாதீரே ஹநுமதா ஸங்கதோ வாநரேணஹ,-ஸ்ரீராமா. பால. 1 : 57
இச்சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின், பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், 2‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ என்பதாம். அச்சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது என்றபடி.வழி பறிப்பார் கையில் அகப்படுகையாவது-பிராட்டியினுடைய கண்ணிற்கும் முகத்திற்கும் போலியான நீலம் தாமரை முதலானவற்றால்
நெஞ்சு பறியுண்கை
172. ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம்உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்.-ஸ்ரீராமா. அயோத். 31. 12.
இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும் இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’ என்கிறபடியே, என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் காரியங்கொள்வது
173. ஏஹபஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதாவநே.ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.
முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட தங்களுடைய சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்.
174. விக்ராந்த: த்வம் ஸமர்த்த: த்வம் ப்ராஜ்ஞ: த்வம் வாநரோத்தம
யேநஇதம் ராக்ஷஸபதம் த்வய ப்ரதர்ஷிதம்.-ஸ்ரீராமா. சுந். 36 : 7.
இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, “வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது.
175. ததாவித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி.-முண்டக உபநிடதம். 3. 1 : 3.
பிரகிருதி சம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம சாம்யத்தையடைகிறான்” என்கிறபடியே, பரமபதத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்? நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம் என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல்வார்த்தை சொல்லுகிறாள்: வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு – அவர்கள் எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப் பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
176. அக்ரூர: க்ரூர ஹ்ருதய: ஸீக்ரம் ப்ரேரயதே ஹயாந்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 3. 18 : 19.
அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே, 1தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று. புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;
177. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
ஸ்வயந்துருசிரே தேஸே க்ரியதாம் இதி மாம் வத.-ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
இதனைச் செய் என்று நியமிக்கவேண்டும்’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று, ‘நான் ஏவ அன்றே, நீங்கள் போகின்றீர்கள்?’ என்பாள் ‘விடு தூதாய்’ என்றாள். சென்றக்கால் ‘பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே உங்களுக்கு அன்றோ பலன் சித்திக்கப் புகுகிறது? (இறைவனை நேரிற் கண்டு மகிழ்தல்.)என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள். இனி, ‘பிறர்க்காகத் தூது போதலால் உங்கள் போக்கு அடிக்கழஞ்சு பெறாதோ?’ (அடிக்கழஞ்சு : அடி – ஈண்டுப் பாதத்தைப் பெயர்த்து வைத்தல்; கழஞ்சு – பொன் ; அதாவது – மேன்மை பெறுதல் என்றபடி.)என்பாள், அங்ஙனம் கூறுகிறாள் எனலுமாம். வன்சிறையில்-காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால், ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங்கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல். ‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின், அரச குமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாதபோது (வெற்றிலை கொடாதபோது.)அவர்கள் வருந்துவார்கள் : அது போன்று, இவைகட்கும் முகங்கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்; அதனையே ஈண்டுச் சிறை என்றாள்
178. ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:
மயாகாலம் இமம் ப்ராப்ய தத்த்: தஸ்ய மஹாத்மந:ஸ்ரீராமா. அயோத். 2 : 42.
மனிதர்களுக்குத் துன்பம் வந்த போது அவர்கள் அடையும் துன்பத்தைக்காட்டிலும் சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள். இனி, ‘அவனோடே கலந்து பிரிந்து, ‘கண்ணாலே காணப்பெறுவது என்று காண்’ என்னும் விருப்பத்தோடே இருக்கிற எனக்கு,’ என்று பொருள் கூறலுமாம். அருளி – இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.
179. லோகே த்வந் முக ஸத்ருஸம் க்வாபிந த்ருஷ்டம் இதி மயி வததி ராகாத்
ஹரி ஹரி குபி தாஸா அபூத் அந்யத் உபக்ராந்தம் அந்யத் ஆபதிதம்.–ஸ்ரீராமா. சுந். 36 : 7.
இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, “வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது
180. ஸா ப்ரஸ்கலந்தீ மதவிஹ்வலாக்ஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸலக்ஷணா லக்ஷ்மண ஸந்நிதாநம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி:–ஸ்ரீராமா. கிஷ். 33 : 37-
ஸா-ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகையுடையவள்.
ப்ரஸ்க்கலந்தீ-புணர்ச்சியாலுண்டான துவட்சியால் தடுமாறி, அடிமேல் அடியாக இட்டு வந்தாள்.
மதவிஹ்வலாக்ஷீ-மது பானம் முதலிய வைகளால் தழுதழுத்த நோக்கையுடைவளாய் இருந்தாள்.
ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம சூத்ரா-அரை தூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையிற்கிடந்தபடிய பேணாதே வந்தாள்.
ஸலக்ஷணா – புணர்ச்சிக்குறிகள் காணலாம்படி வந்தாள்.
லக்ஷ்மண சந்நிதாநம் ஐகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்.
தாரா – தாரையானவள்.
நமிதாங்கயஷ்டி: உருகு பதத்தில் வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போல இத்துவட்சி நிரூபகம் இவளுக்க என்று தோற்றும்படி இருந்தாள்.
அப்படிப்பட்ட நடையழகாலே அவரைத் துவக்கிக் காரியங்கொள்ளவற்று இவையும் என்று இருக்கிறாள்.
இளையபெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர், மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு, ‘இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், 1கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள், பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும். ‘ஆயின், பட்டத்துத்தேவியை முன்னிடலாமோ?’ எனின், 2இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்றவேண்டிற்றுக்காணும் இருந்தது.
181. கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்.– ஸ்ரீராமா. யுத். 21 : 77.
ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே, கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு. இதனால், தலைவர் கால தூர தர்சி (மிக்க தூரத்திலுள்ளவற்றை எல்லாம் அறிகிறவர்)என்பதனைத் தெரிவிக்கிறாள். கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
182. தத்சித்த விமலாஹ்லாத க்ஷீணபுண்யசயா ததா
ததப்ராப்தி மஹாதுக்கவிலீநா ஸேஷபாதகா.
சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்வாஸ தயாமுக்திம் கதாஅந்யா கோபகந்யகா.
183. அதவாகிம் ததாலாபை: அபராக்ரியதாம் கதா.
அப்யஸௌ மாதரம் த்ரஷ்டும் ஸக்ருத்அபி ஆகமிஷ்யதி–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 15.
ஆசையின் மிகுதியினாலே, ‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்:
184. நசாஸ்ய மாதா நபிதா நசாந்ய:
ஸ்நேஹாத் விசிஷ்ட: அஸ்தி மயா ஸமோவா
தாவத்த்யஹம்தூத ஜிஜீவிஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய.-ஸ்ரீராமா. சுந். 36 : 30.
பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச் செய்தவாறே ‘நாமோ தாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன ‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் 2பாலி பாயக் கூடியதான அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடைசெய்து போந்தார்; அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர, விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றைதாள் இருந்தேனாகில்காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.
ஊணிலா யாக்கை பேணி உயர்புகழ் சூடாது உன்முன்
நாணிலாது இருந்தேன் அல்லேன்; நவையறு குணங்கள் என்னும்
பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்.’கம்ப. யுத். 1603.
185. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத்விரதம் மம.-ஸ்ரீராமா. யுத்த. 18 : 33.
அருளாத நீர்-‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர். 3‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேடம் என்று அறிகிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்
186. ஜீவந்தீம் மாம் யதாராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்
தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசாதர்மம் அவாப்நுஹி.-ஸ்ரீராமா. சுந். 3 : 10
கீர்த்தியை யுடைய இராமன் என்னைப் பிழைத்து இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’ என்றாள் பிராட்டியும். ‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது? அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன, ‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப்புள்-அருட்கடலான பறவை. ‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே ‘அருளாழிப்புள்’ என்கிறாள்
187. பத்ம ஸௌகந்திகவஹம் ஸிவம் ஸோகவிநாஸநம்
தந்யா லக்ஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம்.–ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 105,
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-எலும்பினைத் தொளைத்து அதிலே கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது. எலும்பும் நரம்புமேயாம்படி உடல்தான் மிகவும் இளைத்தது ஆதலின், உடல் என்னாது ‘என்பு’ என்கிறாள். 1‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று, இருக்கிறதுகாணும் இவ்வாடை இவளுக்கு
நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே, அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே-ஆகாயத்தில் உண்டாகிற காற்றாலே. ‘தாழ்ந்த
சாதியின் கால்களிலே’ என்பது தொனிப் பொருள்.
188. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு: விதாதா க்ருதலக்ஷண:-ஸஹஸ்ரநாமம்.
189. பாபாநாம்வா ஸூபாநாம்வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சிந்ந அபராத்யதி.-ஸ்ரீராமா. யுத்த. 116 : 45.
நான் படுகிற துன்பம் போராது என்று கீழாண்டைச்சிகை (பழங்கணக்குகளிலே நிற்கிற நிலுவை.)வாசியா நின்றார். அதாவது, அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை தவிர்ந்து, ‘கணக்கு அற்ற ஞானங்களையுடையவர்’ என்கிறபடியே, இப்போது குற்றங்களை அறிவதில் முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி, அருளாத திருமாலார்க்கு-இதற்குக் ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ‘நான் இப்படி நோவு படுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகை
190. ஸகுருஷ்வ மாஹாத்ஸாஹ க்ருபாம் மயி நரர்ஷப
ஆந்ருஸம்ஸ்யம் பரோதர்ம: த்வத்தஏவ மயாஸ்ருத:–ஸ்ரீராமா. சந். 40 : 41.
பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.
191. கிம்கோபமூலம் மநுஜேந்தரபுத்ர கஸ்தேந ஸந்திஷ்டதி வாங்கிநிதேஸே
கஸ்ஸூஷ்க வ்ருக்ஷம்வநம் ஆபதந்தம் தவாக்நிம் ஆஸீததி நிர்விஸங்க:–ஸ்ரீராமா. கிஷ்கிந். 33 : 40.
கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்-மநுஜேந்த்ரபுத்ர – அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டுகொண்டு போந்தார் உங்கள் தமப்பனார்; அவர் வயிற்றிலே பிறந்து, குற்றம் செய்தோம் என்று தலையறுக்க வந்து நின்றீர் நீர்; அழகிதாயிருந்தது உம்முடைப் போக்கு? கஸ்தேந ஸந்திஷ்ட திவாஙநிதேஸே – சாஸ்திரவஸ்யமன்றிக்கே கண்டதிலே கடுகச் சாபலத்தைப் பண்ணி மீளமாட்டாத விலங்குளை நீரே ‘இழந்த போகங்களை புஜிப்பது’ என்று சேர்த்துவிட்டு. நீர் சொன்னவற்றைச் செய்தன என்று தலையறுக்க வந்து நின்றீர்; இப்படிச் சொல்லாம்படியன்றே இவர்
பொறையிருப்பது?’ என்பது அச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்.
192. லௌகிகம் வைதிகம் வாபிததா ஆத்யாத்மிகம் ஏவ வா
ஆத்தீத யதோஜ்ஞாநம் தம்பூர்வம் அபிவாதயேத்.
193. ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம்புவி
ததர்ஸராமோ துர்தர்ஸம்யுகாந்தே பாஸ்கரம்யதா.–ஸ்ரீராமா. அயோத். 100 : 1.)
ஜடிலம்-நல்ல மாலை வத்தால் ‘பிள்ளை பரதன் மயிருக்காயிருந்தது’ என்றாயிற்றுச் சக்கரவர்த்தி கூறுவது; அவனாயிற்றுச் சடை புனைந்திருக்கிறான்.
சீரவஸநம்-நல்ல வஸ்திரம் கண்டால் ‘இது பிள்ளைக்கு ஆம்’ என்று கூறுவர்; அவனன்றோ மரவுரி உடுத்திருக்கிறான்’ ப்ராஞ்ஜலிம்-அவர்கள் இரந்து கொடுக்கப் பெறுமவன், தன் விருப்பத்துக்குத் தான் இரப்பாளனாயிருந்தான்.
பதிதம் புவி – ‘படுக்கையுறுத்தும்’ என்று மடியில் கண் வளருமவனாயிற்றுத் தரைக் கிடை கிடக்கிறான்.
ததர்ச ராமோ துர்த் தர்சம்- வத்த கண் வாங்காதே கண்டு கொண்டிருக்கும் பெருமாளுக்கும் கண் வைக்க ஒண்ணாதபடி இருக்கிறவனை.
யுகாந்தேபாஸ்கரம் யதா–பெருமாள் ஒருவர்க்கும் கண் வைக்க ஒண்ணாமையே யன்றி ‘உலகமே அழியப் புகுகின்றதோ!’ என்னும்படி யிருந்தான்’
சாதுர்த்திகம் – இது ஒரு முறை ஜூரம்; நான்கு நாள்களுக்கு ஒரு முறை வருவது; உடலிலுள்ள நீர் இரத்தம் சதை எலும்பு இவற்றைப் பற்றி வருவது.
‘சாதுர்த்திகமாயிராதது போன்று’ என்றது, ஸ்ரீராமபிரானைப் பிரிந்ததால் உளதாய விரஹதாபமாகிய நோய் விட்டு நீங்குதல் இன்றி, என்றும்
நிலைபெற்று நின்று ஸ்ரீ பரதாழ்வானை வருத்தியதாதலின், உலகமக்கட்கு விட்டுவிட்டு வருகின்ற முறை ஜூரம் முதலிய நோய்களைப் போன்றது
அன்று ஸ்ரீ பரதாழ்வானுடைய நோய் என்றபடி.
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் – ‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்; ‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் 1சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள். ‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல். தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும், அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.
வெயர்த்த மேனியன் விழிபொழி மழையன்மூ வினையைச்
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்துழந்து அழிவான்
அயிர்த்து நோக்கினும் தென்றிசை அன்றிவேறு அறியான்
பயத்த துன்பமே உருவுகொண்டு என்னலாம் படியான்.’– என்ற கம்பராமாயணச் செய்யுளை ஈண்டு நினைவு கூர்க.
194. ஸ்ருஷ்ட: த்வம் வநவாஸாய ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி.- ஸ்ரீராமா. அயோத். 40 : 5.
நீ காட்டில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று இளையபெருமாளைப் பார்த்துச் சுமித்திராதேவி கூறியது போன்று, இவளும் ‘வைக்கவே வகுக்கின்று’ என்கிறாள். ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய், எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான் என்றபடி. ‘ஆயின், தொண்டு செய்வதால் உயிர்களுக்குச் சொரூப லாபம் ஒழிய இறைவனுக்கு இத் தொண்டுகளால் பயன் இல்லை யாதலின், அவதாரிகையில் ‘நிதி உண்டு’ என்ற எடுத்துக்காட்டுச் சேராதே?’ எனின், அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் சொரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக்கொண்டு அன்றோ சொரூப சித்தி?
195. அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸூவீர்யம் அபாஸ்ருஜத்.
எல்லாப் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே, தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள்.
ஆழி நீர் கடல் தோன்றி- 2‘அப்பரம்பொருள் முதன்முதலில் தண்ணீரையே படைத்தார்’ என்கிறபடியே, மிக்க தண்ணீரையுடைய ஏகார்ணவத்தை உண்டாக்கி. அதனுள்ளே கண்வளரும்-இவ்வருகு உண்டான படைத்தல் முதலியவற்றிற்காக அங்கே வந்து கண்வளர்ந்தருளும்
196. வாஹிவாதயத: காந்தா தாம்ஸ்ப்ருஷ்ட்வா மாமபிஸ்ப்ருஸ
த்வயி மே காத்ரஸ்ம்ஸ்பர்ஸ: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:- ஸ்ரீராமா. யுத். 5 : 9.
சீதா பிராட்டியால் பார்க்கப்பட்ட சந்திரனை நான் பார்க்கிறேன்; ஆதலால், கண்ணின் கலவி உண்டாயிற்று’ என்பது போன்று, கண்டாரைக் காணும் இத்தனை அன்றோ தனக்கு
197. விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா.ஸ்ரீ விஷ்ணு தத்துவம்.
இது சொல்லி-‘வைக்கவே வகுக்கின்று’ என்கிற வார்த்தையைச் சொல்லி. இனி, ‘இறைவனை நிவேதிக்கும் பொருட்டே கைகால் முதலிய உறுப்புகளையுடைய விசித்திரமான இச்சரீரமானது முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘தேவர் திருவடிகளிலே எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்காக அன்றோ இதனை உண்டாக்கினாய்?’ என்னும் இதனைச் சொல்லி என்று கூறலும்
198. அகாலபலிநோ வ்ருக்ஷா: ஸர்வேசாபி மதுஸ்ரவா:
பவந்து மார்க்கே பகவந்நயோத்யாம் ப்ரதி கச்சத:ஸ்ரீராமா. யுத். 127, 17.
வளம் வயல் – ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ என்கிறபடியே, திருநகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று. வாய்ந்து
கண்ணனை – இவ்வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே அடியார்க்கு எளியவன் ஆனான். இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் கிருஷ்ணன் என்னவும் ஆம். இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்பியமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.
கண்ணன்’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார். முதற்பொருள், கண்ணுக்கு விஷயமானான் என்பது; இப்பொருளில், குறிப்பு
வினையாலணையும் பெயர்; இரண்டாவது பொருளில் பெயர்ச்சொல்.
‘வீதிவாய்ச் செல்கின் றான்போல் விழித்துஇமை யாது நின்ற
மாதரார் கண்க ளூடே வாவுமான் தேரிற் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத்தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்.’–என்ற கம்பராமாயணச் செய்யுள்
199. யதிப்ரீதி: மஹாராஜ யதி அநுக்ராஹயதா மயி
ஜஹிமாம் நிர்விஸங்க: த்வம் ப்ரதிஜ்ஞாம் அநுபாலய.-ஸ்ரீராமா. உத்தர. 106 : 4.
200. நகலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீஜலே
த்யஜேயம் ராகவம் வம்ஸே பர்த்து: மாபரிஹாஸ்யதி.-ஸ்ரீராமா. உத்தர. 48 : 4.
தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்தியஸூரிகளுக்கு நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார். ‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே. ‘ஆயின், அகலுவான் என்?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தத்தம் அழிவினைப்பாரார்கள் அன்றே? பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன, இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, ‘அரசர்க்கு அரசரே, உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில், யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்? மேலும், இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல் இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக்கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ என்று விடை கொண்டாள் அன்றே பிராட்டி? (நான் உயிரை விட்டால் பெருமாளை உலகம் பழிக்கும்; பெருமாளுக்குப் பழியினை உண்டுபண்ணலாகாது என்று நான் பிழைத்திருக்கிறேன்,’ என்பது கருத்து. இங்குப் பிழைத்திருத்தலே பிராட்டிக்கு அழிவு.)அப்படியே, இவரும், ‘ஊருணியிலே (ஊருணி-குளம். ‘ஊரிலுள்ள மக்களால் தண்ணீர் உண்ணப்படுவது’ என்பது
பொருள்.)கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும், அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும். நித்திய ஸூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப் புக்கார்-
201. நஷ்டோமோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத் மயா அச்யுத
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யேவசநம்தவ.-ஸ்ரீகீதை. 18 : 73.
உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, ‘கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று; ஐயவுணர்வும் நீங்கினவள் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,
202. க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதஸ்ச பாண்டவா:
க்ருஷ்ண: பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா:-பாரதம், துரோணபர்வம், 183 : 24.
வல் ஆன் ஆயர் தலைவனாய் – ‘பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்தவர்கள்; அவனையே வலிமையாக உடையவர்கள்; அவனையே தலைவனாக உடையவர்கள்,’ என்பது போன்று, கிருஷ்ணனைத் துணையாகக்கொண்டு நாட்டினை அழித்துத் திரியும் மிடுக்கைப்பற்ற ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்
203. ஹேஸூந்தர ஏகதரஜந்மநி க்ருஷ்ணபாவே
த்வௌ மாதரௌச பிதரௌச குலேஅபித்வே
ஏகக்ஷணாத் அநுக்ரஹீதவத: பலம்தே
நீளாகுலேந ஸத்ருஸீகில ருக்மணீச.–சுத்தரபாஹூ ஸ்தவம், 7.
வாரீர் அழகரே, உம்முடைய கிருஷ்ணாவதாரத்தில் இரண்டு தாய்மாரையும் இரண்டு தமப்பன்மாரையும் இரண்டு குலத்தையும் ஒரு கணத்தில் ஏற்றுக் கொண்ட உமக்குப் பலன், குலத்தோடு ஒத்திருக்கிற நப்பின்னைப் பிராட்டியும் உருக்குமிணிப் பிராட்டியும்’ என்றார் கூரத்தாழ்வானும். இத்தால் – ‘ஆயர்குலத்தினன் ஆகையாலே நப்பின்னைப்பிராட்டியை ஏற்றாய்; அரசகுலத்தினன் ஆகையாலே உருக்குமிணிப்பிராட்டியை ஏற்றாய்’ என்றபடி
வல் ஆன் ஆயர் தலைவனாய்–அவ் வன்மையாவது, தலையிருக்க உடம்பு குளித்தும், 1உடம்பு இருக்கத் தலை குளித்தும் அன்றே அவர்கள் திரிவார்கள்? எல்லாரும் கார்த்திகை புதியதற்குக் குளித்தார்களாகில் இவன் அதுவும் செய்யாதே இடைத்தனத்தில் ஊன்றி இருத்தல். ‘இவன் இவ்வாறு இருத்தற்குப் பயன் யாது?’ எனின், இப்படி இருக்கில் அல்லது அவ்வாயர்கள் பெண் கொடார்கள் அன்றே? ஆதலால், பெண் கோடலே பயன்.
204. துல்யஸீலவயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சஇயம் அஸிதேஷணா.– ஸ்ரீராமா. சுந் 16 : 5.
தக்க வயதினையும் ஒழுக்கத்தினையும் குலத்தினையும் உடைய பிராட்டிக்குத் தக்கவர் அந்த ஸ்ரீராமபிரான்; கறுத்த கண்களையுடைய பிராட்டியும் அந்த ஸ்ரீராமனுக்குத்தக்கவள்,’ என்கிறபடியே, ஈண்டும், கிருஷ்ணனும் நப்பின்னைப்பிராட்டியும் ஒத்தவர்களாய் இருந்தும், எருதுகளை முன்னிட்டு அவற்றைத் தழுவச் செய்தனர் ஆதலின், ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்’ எனலும் ஒன்று. இளஏறு ஏழும் தழுவிய – யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் 4ஊட்டியாக ஒருக்காலே தழுவினான்
205. ஸ: அவதீர்ணோ ஜகர்யத்தே மாம் அக்ரூரேதி வக்ஷ்யதி.- ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17 : 12.
நினைந்து நைந்து வணங்கினால் – பிரமன் முதலிய தேவர்கள், திருவாராதனத்திற்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான உபகரணங்களைச் சமைத்துக்கொண்டாயிற்று இழிவது. நாம் இவற்றைக்கொண்டு சென்றால் நம்மைக் குளிர நோக்குவனே; ‘ஸ்ரீ கிருஷ்ணர் என்னைப் பார்த்துக் ‘குற்றம் அற்ற அக்குரூரனே’ என்று அழைத்துப் பேசுவார்,’ என்று, கம்ஸன் ஏவலால் கிருஷ்ணனை அழைக்கச் சென்ற அக்குரூரன் நினைத்துச் சென்றது போன்று, ‘நம்மை வினவக்கடவனே’ என்று இங்ஙனே முந்துற நினைப்பார்கள்; பின்னர், தரித்திருக்க மாட்டாதே கட்டுக் குலைந்த மனமுடையவர்கள் ஆவார்கள். உள் கரைந்து உருகி – நையுமது தூலம் என்னும்படி உள்கரைவர்கள்; பின்னர், ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாதபடி மங்குவார்கள். ‘இப்படிப் படுகின்றவர்கள்தாம் யார்?’ என்றால், இமையோர் பலரும் முனிவரும் – பிரமன் முதலான தேவர்களும், சனகன் முதலான முனிவர்களும், ‘ஆயின், இச்செயல் முனிவர்களுக்குப் பொருந்தும்; செருக்கினைக்கொண்ட தேவர்களுக்குப் பொருந்துமோ?’ எனின், இராசத தாமத குணங்களால் மேலிடப்பட்ட போது செருக்குக் கனத்து இருக்குமாறு போன்றே, சத்துவம் தலை எடுத்த போது பகவானுடைய குணங்களை அனுபவித்துக் கட்டுக்குலைந்து உருகுகிறபடியும் கனத்திருக்கும். புனைந்த கண்ணிநீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் – இப்படி அவர்கள் அன்பே மிக்கு இருப்பவர்கள்
206. ஸதேவ ஸோம்யஇதம் அகர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்.
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று 3சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து 4‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச்செய்கிறார். இனி, நினைத்தல் – கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு, ‘‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’
தான் ஓர் உருவே தனி வித்தாய்-‘சோமபானம் செய்தற்குரிய சுவதே கேதுவே, காணப்படுகிற இவ்வுலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்து’ என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத்தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது,’ என்கிறபடியே 3இங்கும், இரண்டு இன்மையைக் காட்டுகிற ‘தான் ஓர் தனி’ என்னும் பதங்கள் மூன்று உண்டாய் இருந்தன; ‘இச்சொற்களுக்குப் பயன் யாது?’ எனின், படைத்தலை அருளிச் செய்வதனால் காரண விஷயமாகக் கிடக்கின்றன. மூன்று காரணங்களும் தானே என்கை. ‘தான்’ என்கிற இதனால், முதற்காரணம் வேறு இல்லை என்கை. ‘ஓர்’ என்கிற இதனால் துணைக்காரணம் வேறு இல்லை என்கை. ‘தனி’ என்கிற இதனால், நிமித்த காரணம் வேறு இல்லை என்கை
தன்னுளே ஆகியும்-‘இவையும் அவையும்’ என்று இங்ஙனம் பிரித்துப் பேச ஒண்ணாதபடி. அவன் ஒருவனே’ என்கிறபடியே, தான் என்கிற சொல்லுக்குள்ளே ஆகும்படி தன் மேலே ஏறிட்டுக்கொண்டு தரித்து இருந்தபடியைச் சொல்லுகிறார்
207. ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட்.- நாராயண அநுவாகம்.
இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும், பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, 1தனது உருவமாய் நின்று அளித்தலைச் செய்து, அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க. இனி, தன்னின் மூவர் முதலாய-பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம். 2இந்திரனோடு கூட’ என்று புகலும் உபநிடதமும்.
முன்னுரு வாயினை நின்திரு நாபியின் முளரியின் வாழ்முனிவன்
தன்னுரு வாகி இருந்து படைத்தனை பலசக தண்டமுநீ
நின்னுரு வாகி யளித்திடு கின்றனை நித்த விபூதியினால்
என்னுரு வாகி யழிக்கவும் நின்றனை ஏதமில் மாதவனே!’– என்று சிவபிரான், கண்ணபிரானை நோக்கிக் கூறிய கூற்று ஈண்டு
நினைக்கத் தகும். வில்லி பா. 13-ஆம் போர். 220.
208. தயா அவலோகிதா தேவா விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தயா
லக்ஷ்ம்யா மைத்ரேய ஸஹஸா பராம் நிர்விடுதிமாகதா:–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 104.
மார்பிற் கொண்டாய் மாதவா-6‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார்’ என்கிறபடியே, அவள், திருமார்பில் நித்தியவாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தையுடையவனே
209. நதேரூபம் நச ஆகாரோ ந ஆயுதாநி நசாஸ்பதம்
ததரபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.-ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.
வான் ஆர் சோதி மணி வண்ணா-குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத் விபூதியிலும் அடங்காதே விம்மும்படியான புகழ் படைத்த வடிவையுடையவனே! இதனால், ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார்
210. ததஸ்ய ப்ரியம் அபிபாதோ அஸ்யாம் நரோயத்ர தேவயவ: மதந்தி
உருக்ரமஸ்ய ஸஹிபந்து: இத்தா விஷ்ணோ: பதேபரமே மத்வ உத்ஸ:-விஷ்ணு சூக்தம்.
உன் தேனே மலரும் திருப்பாதம்’ என்று அதனையே விரும்புகிறார் என்று கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால், தேனே மலரும் திருப்பாதம் என்பதற்கு, 2‘திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்த இறைவனுடைய திருவடிகளினின்று அமிர்தவெள்ளம் உண்டாகிறது’ என்கிறபடியே, தேன் போன்று இனிய கங்கையானது தோன்றுகின்ற திருவடிகள் என்று பொருள் கொள்க.
211. க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம்தவாங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.
கேசவா-(என்று பிரம ருத்திரர்களுக்கு உத்பாதகனான பிரத்யும்நனைச் சொல்லுகிறார்.)‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்; எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்; நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்; ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்
212. ஸ்துத: அஹம் யஸ்ந்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்யதே
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாதோஹம் யத்தவ உதரரத்.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 8 : 14.
213. ப்ராதுர்ப்பவதி லோகாநாம் பாலநார்த்தம் ஸ்வலீலயா
ந ஏஷ கர்ப்பத்வம் ஆபேதே ந யோந்யாம் அவஸத் ப்ரபு:பாரதம்.
முன்னமே உலகு ஏழ் உண்டாய்-முன்பு ஒரு காலத்திலே உலகங்கள் ஏழனையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய். உமிழ்ந்து-பின்னர் அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்து. மாயையால் புக்கு வெண்ணெய் உண்டாய் – இச்சையால் புக்கு வெண்ணெய் உண்டாய். ஈண்டு ‘மாயை’ என்றது, 2‘மாயா வயுநம் ஞானம்’ என்கிறபடியே, இச்சா பரியாயமான ஞானத்தை. அது செய்யுமிடத்தில் சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே? ஆதலால், சிறு மனிசர், உவலை யாக்கை நிலை எய்தி – சிறிய மனிதர்களுடைய தாழ்ந்த சரீரத்தினுடைய நிலையைப் பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனிக்கு உண்டாக்கிக்கொண்டு வந்து இப்படிச் செய்தாய். ‘கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழிகோல்கை, சறையினார்’ என்னும் நிலையுள்ள ஆயர்கள் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி வெண்ணெய் அமுதுசெய்தான் என்றபடி. ‘தேவகியே நீ முற்பிறவியிற்செய்த நல்வினையானது இப்பொழுது பலத்தைத் தந்திருக்கின்றது; நான் எக்காரணத்தால் உன்னுடைய உதரத்தின் வழியால் உண்டானேனோ’ என்பதனால் கர்ப்பவாசம் சொல்லியிருந்தும், ‘இந்தக் கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோநியிலும் வசிக்க இல்லை,
214. தஸ்யா: ஸ்தநம் பபௌ க்ருஷண: ப்ராணை: ஸஹநநாதச
ஸ்தந்யம் தத் விஷ ஸம்மிஸ்ரம் ஆஸீத் ஜகத் குரோ:ஹரி வம்ஸம். 53.
தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய-‘பூதனையை முடித்து உலகத்துக்கு ஒரு தலைவனைத் தந்த உலக குருவான கிருஷ்ணனுக்கு விஷத்தோடு கூடிய அம் முலைப்பால் சுவையுடையதாயிற்று,’ என்கிறபடியே, உலகத்துக்கு வேர்ப்பற்றானவனை ‘முடிக்கப் பார்த்த நெஞ்சில் தீமையை யுடையளாய், யசோதைப் பிராட்டியைப் போன்று அன்பு தோற்றப் பலவாறு பேசிக்கொண்டு வருகின்றவளாய், தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனையுடையவளான பூதனை முடியும்படியாக தூய குழவியாய்-ஐஸ்வரியமான மேன்மையும் நடையாடாநிற்கவும், அது தோற்றாதபடி கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தையுடையனாய். ‘இவனுக்குப் பிள்ளைத்தனத்தில் குறை இல்லையாகில், அதன் காரியம் காணாது ஒழிவான் என்?’ என்னில், விடப்பால் அமுதா அமுது செய்திட்ட-விஷம் அமிருதாம் முகூர்த்தத்திலேயாயிற்றுப் பிறந்தது. ‘ஆயின், அவள் இறக்கும்படி எங்ஙனம்?’ எனின், தர்மியை வேறு ஒன்று ஆக்க ஒண்ணாமையாலே விரோதித்த அசுரக் கூட்டங்கள் இறந்தார்கள் இத்தனை மாயன் – விஷம் அமிருதாம்படி புசித்துத் தன்னைத் தந்து நன்மை உண்டாக்கின ஆச்சரியத்தை யுடையவன்.
அவள் பால் உயிர் – அவளுடைய தாழ்ந்த சரீரத்தைப் பற்றி நிற்கிற உயிர். பால்-ஏழனுருபு. செக-முடியும்படி. இனி, ‘அவள் பால் உயிர் செக’ என்பதற்கு, ‘அவள் பாலும் உயிரும் முடியும்படி என்று கோடலும் ஆம். ‘முலையூடு உயிரை, வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே,’ என்றார் திருமங்கை மன்னனும். ‘முலை உண்டான்’ என்றால் ‘முலைப்பால் உண்டான்’ என்று பொருள் படுமாறு போன்று, ‘முலையூடு’ என்ற இடத்தும் ‘முலை’ என்றது முலைப்பாலை. உண்ட பெருமான் – ‘முலையின் வழியே வருகின்ற விஷம் கலந்த பாலைக் குடித்து, அவளை முடித்து, உலகிற்கு எல்லாம் குருவாகிய தன்னைத் தந்தவன்’ என்கிறபடியே, அவள் முலை உண்டு அவளை முடித்து, உலகிற்கு ஒரு சேஷியைத் தந்தவன்.
215. திலதைலவத் தாருவஹ்நிவத் துர் விவேச த்ருகுண க்ஷண க்ஷரண ஸ்வபாவ அசேதந
ப்ரக்ருதிவ்யாப்திரூப துரத்யய பகவந் மாயா திரோஹித ஸ்வப்ரகாஸ:–ஸ்ரீ ரங்க கத்யம்.
சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து – ‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து. சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார்,
216. த்வதங்க்ரி முத்திஸ்ய கதாபி கேநசித் யதா ததாவாபி ஸக்ருத்க்ருத: அஞ்ஜலி:
ததைவ முஷ்ணாத்யஸூபாந்யஸேஷத: ஸூபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே.-ஸ்தோத்திர ரத்தினம்
உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடி விடுகின்றன; மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம். இங்கு, ‘உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும் இறைவனுக்கு உண்டான வேற்றுமையும், இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச்செய்தாராவார். மேலும், ‘ஒரு காலத்தில்’ என்றதனால், இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும், ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும், ‘அஞ்சலி’ என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும், ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அழியாமலிருக்கின்றது’ என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும் அருளிச்செய்திருத்தல் நோக்கல் தகும். மற்றும், ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், 1சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே, பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும், ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி, அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்.
217. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்ய ப்ரயச்சதி
ததஹம் பத்தியுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்மந:.- ஸ்ரீகீதை.
பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.
218. அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜநாத்
அந்யத் குஸல ஸம்ப்ரஹ்நாத் நசஇச்சதி ஜநார்த்தந:பாரதம்.
பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.
219. யா: க்ரியா: ஸம்ப்ரயுக்தா: ஸ்யு: ஏகாந்தகத புத்திபி:
தா: ஸர்வா: ஸிரஸா தேவ: ப்ரதி க்ருஹ்ணாதி வை ஸ்வயம்.–பாரதம், மோக்ஷ தர்மம்.
ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ண கும்பத்தைக் காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்; அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’ என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று. இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும். ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால் தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும், தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக்கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம். இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும், அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும், செவ்வக்கிடப்பு உண்டாயினும் 5மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ்வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.
இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும். ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
220. ஏதத் ஸாமகாயந் ஆஸ்தே.–தைத்திரீ. பிரு. 10.
பாடி – சர்வேஸ்வரனைக் கிட்டினால் வாக்கு நியதியோடே நிற்கையின்றி, மகிழ்ச்சிக்குப் போக்கு விட்டுப் பாடி. விரிவது மேவல் உறுவீர். ‘மேற் சொல்லப் படுகின்ற சாம வேதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே, பாடி
221. ந கண்டகாரிகா புஷபம் தேவாய விநிவேதயேத்.
புகை பூவே – அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் ‘செதுகை(கூளம்; பதர்.)யிட்டுப் புகைக்க அமையும்; கண்டகாலி இடவும் அமையும்,’ என்று அருளிச்செய்வர்.
222. ஸாஸ்த்ர யோநித்வாத். உத்தர மீமாம்சை, 1. 1 : 3.
வேத முதல்வன் என்பது, ‘வேதவாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்டவன்’ என்கிறபடியே, வேதங்களால் சொல்லப்பட்டவன் என்கை
223. தேவாநாம் மாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்
ஸர்வதா சரணத்வந்த்வம் வ்ரஜாமி ஸரணம்தவ.-ஜிதந்தா. 1 : 2.
ஈடும் எடுப்பும் இல் ஈசன்–சிலரை வெறுத்தல், சிலரை ஏற்றுக்கோடல் செய்யாத சர்வேஸ்வரன். இறைவனுக்கு ஆத்துமாக்கள் பக்கல் உண்டான சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப்போகாது அன்றே? 4‘தேவர்கட்கும் தானவர்கட்கும் நீயே தெய்வம்’ என்கிறபடியே, ஏற்றுக் கொள்ளுமவன் பக்கலுள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு ஆதலின், ‘ஈடும் எடுப்பும் இல் ஈசன் என்கிறார் =
224. ஸகலுஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்மலோகமபி
ஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே.-சாந்தோக். உபநிட. 8 : 15.
வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ்வாத்துமாவுக்குச் சொரூபத்தோடு கட்டுப்பட்டதோ என்னும்படி பொருந்தியிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி. இனி, ‘வழிநின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று, பகவானை அடைதலைத் தடை செய்கிற கர்மங்கள்’ என்று பொருள் கூறலுமாம். –அழிவு இன்றி ஆக்கம் தரும் – ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தருவான்.
225. ஏஷஹிஏவ ஆநந்தயாதி.-ஆனந்தவல்லி, 7.
மேல் திருவாய்மொழியில் ‘எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவன் இறைவன்,’ என்றார்; ‘அவ்வாராதனையானது இன்ப மயமாய் இருக்கும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 1திருமகள் கேள்வனாய், எல்லா நற்குணங்கட்கும் கொள்கலனாய், எல்லா ஆத்துமாக்களுக்கும் சேஷியாய், எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவனாய் ‘மேற்கூறிய இறைவன் தன்னைக் கிட்டினாரையுந் தான் சந்தோஷிப்பிக்கிறான்,’ என்கிறபடியே, தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் இறைவன் ஆதலின், அவனுடைய ஆராதனையானது இன்ப மயமாக இருக்கும் என்கிறார்.
226. அஸ்ரத்ததாநா: புருஷா: தர்மஸ்ய அஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு ஸம்ஸாரவர்த்மநி.-ஸ்ரீ கீதை. 9 : 3.
இறைவனுடைய ஆராதனையானது அவனாலும் விரும்பப் படும் தகையது என்பதற்குக் காட்டப்படும் மேற்கோள்கள்.‘பகைவர்களை அழிக்கின்ற அருச்சுனா, வழிபட்டு வணங்குதலாகிய இந்தத் தர்மத்தில் அன்புடன் கூடின முயற்சி இல்லாதவர்கள் செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்து அவர்களை நல் வழியிற் செலுத்துகின்ற என்னை யடையாது, அழிவினை உண்டு பண்ணுகிற சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகின்றார்கள்,
227. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம்.ஸ்ரீகீதை, 9-2.
இந்த ஞானமானது எல்லா வித்தைகளுக்குள்ளும் உயர்ந்தது; இரகஸ்யங்களுக்கு எல்லாம் தலையாயது; உத்தமமானது; பரிசுத்தமானது; நேராக என்னைக் காட்ட வல்லது; மோட்சத்திற்குச் சாதனமானது; செய்வதற்கு இனிமையாய் இருப்பது; என்றும் அழிவற்றது,’ என்றும் பகவான் தானும் அருளிச்செய்தான். ஆக, இப்படி வழிபடுதலே தொடங்கி, மோட்சத்தை அடைதல் ஈறாக, அவன் சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் இன்பமயமாகவே இருக்கவும், அவனை விட்டு மிகச்சிறிய பயனைக்கொண்டு அகலுவதே!’ என்று கேவலரை நிந்தித்துக்கொண்டு,(இத்திருவாய்மொழியில் முதல் திருப்பாசுரத்தை நோக்கி.) இதனை ஒழியில் தாம் உளர் ஆகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே இவ்வழிபாட்டின் இனிமையைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.என்னுள், இரான் எனில் பின்னை யான் ஓட்டுவேனோ?’ என்றதனை
நோக்கித் ‘தாமுளராகாதபடி’ என்கிறார்
228. சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸூக்ருதிந: அர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப.ஸ்ரீ கீதை, 7 : 16
அருச்சுனா, நீங்கின செல்வத்தை மீண்டும் அடைய விரும்புகின்றவன், புதிய செல்வத்தை விரும்புகின்றவன், கேவலன், இறைவனையே அடைய வேண்டும் என்று விரும்புகின்றவன் என்னும் இந் நால் வகைப்பட்ட நல் வினைகளை யுடைய மக்கள் என்னை வணங்குகிறார்கள்’ என்பது இறைவன் திருவாக்கு.(நல்வினைகளையுடைய மக்கள்’ என்றதனால், நல்வினையின் தாரதம்மியம் சித்தம் என்று கொள்க, )ஆக, அவரவர்களுடைய நல்வினைகளுக்குத் தகுதியாகப் புருஷார்த்தங்களில் ருசி உண்டாகும்; ருசிக்குத் தகுதியாக வழிபாடு உண்டாகும்; வழிபாட்டிற்குத் தகுதியாகப் பலம் இருக்கும் என்று அறிதல் தகும்.
229. ய ஆத்மதா பலதா.வேத மொழி
வைப்பாம் – ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று, ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார். இதனால், பிராப்யத்வம் கூறியபடி. மருந்தாம் – ‘ஆயினும், சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ்வுயிர்கட்கு அன்றோ சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்? இவன் அவ்விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில், அக்குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தியோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின்(உண்டறுத்தல்ஜீர்ணமாக்கிக்கோடல்.)‘மருந்தாம்’ என்கிறார். இதனால், 3பிராபகத்வம் கூறியபடி. ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ்விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர். 4‘இறைவன் தன்னைக் கொடுக்கிறான்; தன்னை அனுபவிப்பதற்குத் தக்க வலிமையையுங் கொடுக்கிறான்,’ என்பது வேத மொழி. ‘இப்படிச் செய்வது யார்க்கு?’ என்னில், அடியரை-5‘வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு, இனி, இதற்கு, ‘அவனைப்பற்றி வேறு ஒரு பயனைக் கொண்டு அகலாமல், அவன்தன்னையே பற்றி அவன் 7படிவிடப் பிழைக்கின் அடியார்கள்’ என்று பொருள் கூறலுமாம்
230. தம்த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 68.
ஒண் சுடர்க்கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இராநின்றான்’ என்கிறார். இனி, இதனால், தம்மை வசீகரித்த அழகை அருளிச்செய்கின்றார் என்று கூறலுமாம். ‘வலிமை பெற்ற ஒளியின் தொகுதி போன்றவன்’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம். ‘இப்படித் தன் பேறாக உபகரித்தவன், தன் உபகாரங்கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில், அயர்வு இல் அமரர்கள் ஆதிக்கொழுந்தை-
231. அத்யமே மரணம் வாபி தரணம் ஸாகரஸ்யவா.–ஸ்ரீராமா. யுத். 21 : 8.
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் – நான் இசைந்து ‘என்னுடைய மனத்தில் இருத்துவேன்’ என்றிலேன். ‘இசைவு என்னால் வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னால் வந்ததாவது?’ என்றபடி. தான் ஒட்டி வந்து ‘இக்கடலை முடித்தல், அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை,’ என்றது போன்று சூளுறவு செய்து வந்து புகுந்தான். ‘ஆழ்வீர்! உம்முடைய பக்கல் இருப்போம்’ என்றால், ‘ஒட்டேன்’ என்பரே? ‘ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், ‘தான் ஒட்டி’ என்கிறார். என் தனி நெஞ்சை-இறைவனாலும் திருத்த ஒண்ணாதபடி தனக்குத்தானே உரியதாய், பிறர்க்கு உரியது அல்லாததாய் இருந்த நெஞ்சை. வஞ்சித்து – தன்னுடைய சீலம் முதலிய குணங்களாலும் வடிவழகாலும் தனக்கு உரியதாம்படி செய்து. ‘பின்னைச் செய்தது என்?’ என்னில், ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து இதற்குச் ‘சரீரத்தைப் பற்றி நிற்கிற என் உயிரிலே கலந்து என்கிறார்,’ என்பாரும் உளர்; அவ்வாறு அன்றி, ‘காதலி மாட்டு அழுக்கு உகப்பாரைப் போலே என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று, பின்னர் என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
232. யத்ர ருஷய: ப்ரதமாஜா யே புராணா:யஜூர் வேதம்.
முன்னை அமரர் முழு முதலான்– ‘ஞானவான்களும் முன்னர்த் தோன்றியவர்களும் ஆதிமுதற்கொண்டே முதியராய் இருந்தும் புதியராய்த் தோன்றுகிறவர்களுமான நித்தியசூரிகள் எங்கு உள்ளார்களோ, அந்தப் பரமபதத்தில்’ என்கிறபடியே, பழையராய் இருந்துள்ள நித்தியசூரிகளுடைய சொரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவன்
233. ராமேண ஹி ப்ரதிஜ்ஞாதம் ஹர்யர்க்ஷ கண ஸந்நிதௌ
உத்ஸாதநம் அமித்ராணாம் ஸீதா யை: பரிவஞ்சிதா.ஸ்ரீராமா. சுந். 5. 11 : 32.
முதுமை நிறைந்த வானரங்களின் கூட்டத்தில் சூளுறவு செய்தான்’ என்கிறபடியே, நித்திய சூரிகள் முன்னிலையில் சூளுறவு செய்தான்
234. ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா
விபீஷணோவா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்.ஸ்ரீராமா. யுத். 18 : 34.
235. ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலாபலம்.ஸ்ரீராமா. யுத். 19 : 6.
அகலில் அகலும்-விபீஷணனே ஆயினும், அன்றி, இராவணன் தானே ஆயினும், இவனை அழைத்துக்கொண்டுவா,’ என்கிற ஆசை உள்ளே கிடக்கவும் கண்ண நீரோடே கைவாங்கும். அதாவது, ‘நான் இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்பொழுதும் வணங்க மாட்டேன்,’ என்னும் உறுதியோடே நிற்கில் முடித்துவிடுவான் என்பதாம். அணுகில் அணுகும் – தன் பக்கலில் எதிர் முகம் ஆனால், ‘இராக்கதர்களுடைய பலாபலத்தை உள்ளவாறு எனக்குச் சொல்லுவாய்,’ என்பான். அதாவது, இளையபெருமாள் நிற்க, நால் அடி வர நின்றவனான விபிஷணனை அன்றோ
236. யத்ர க்ருஷ்ணௌ ச க்ருஷ்ணாச ஸத்யபாமாச பாமிநீ
நச அபிமந்யு: நயமௌ தம் தேஸம் அபிஜக்மது:பாரதம், உத்தியோகபர். 49.
பொரு அல்லன் – அடியார்கள் தன்னைக் கிட்டுமிடத்தில் தடையுடையன் அல்லன். பொரு என்று ஒப்பாய், ஒப்பாவது நேர்நிற்குமதாய், அத்தால் தடையைச் சொல்லிற்றாய், தடையையுடையன் அல்லன் என்றபடி. 1‘கிருஷ்ணனும் அருச்சுனனும் திரௌபதியும் அழகுள்ள சத்தியபாமையும் எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அந்த இடத்தில்’ புத்திரர்களும் புக ஒண்ணாத சமயத்திலே அன்றே சஞ்சயனை அழைத்துக் காட்சி அளித்தது?
237. வஸீ வதாந்ய: குணவாந் ருஜூ: ஸூசி: ம்ருது: தயாளு: மதுர: ஸ்திர: ஸம:—ஸ்ரீ ஸ்தோத்திர ரத்தினம், 18.
மேல் திருவாய்மொழியில் ‘இறைவன் எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; 1அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில்.(ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’, ‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி ‘ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறார்இத்திருவாய்மொழியில்’ என்கிறார். )‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில் ஆர்ஜவகுணத்தை அருளிச்செய்தார்; இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின், சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாகவுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர் நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை. சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழ விட்டோமே!’ என்று தன் திருவுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை. ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு தான் 2பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. ‘சௌசீல்யம், ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப்படினும், வேறு வேறு என்பதே நம் பெரியோர்களுடைய திருவுள்ளம். ஸ்ரீ ஆளவந்தார் 3‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச்செய்து, பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச்செய்தார்.
238. உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க ஸோபிநா.–ஸ்ரீ ஸ்தோத்திர ரத்நம், 41.
மனைவியை அணைதல் மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று, தன்மேல் இறைவன் எழுந்தருளி இருத்தல் விருப்பமாய் இருக்கும் வாகனத்துக்கு. ‘ஆயின், பெரிய திருவடியின்மேல் எழுந்தருளல் அங்கு உள்ளார்க்குக் காட்சி கொடுத்தற்காக அன்றோ?’ எனின், பெரிய திருவடியை மேற்கொள்ளுமதுதான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய சொரூப லாபத்துக்காகவும் இருக்கும். மற்றும், காமத்தில் இச்சையுடைய ஒரு பெண்ணிற்குப் போக சின்னங்கள் தாரகமாய் இருத்தல் போன்று, திருவடிகள் உறுத்துகையால் வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாக இருக்கும். ‘திருவடிகளால் நெருக்கி அழுத்தின தழும்பு தன்மேல் இருக்கக் கண்டு மகிழ்ந்து’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.
239. ஸ்ரக் வஸ்த்ராபரணை: யுக்தம் ஸ்வாநு ரூபை: அநுபமை:
சிந்மயை: ஸ்வப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை:- பௌஷ்கர சம்ஹிதை
சூடும் தண் துழாய் – திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும் அளவில் அப்போதே பறித்துத் திருக்குழலிலே வைப்பன். ‘ஆயின், துழாய்க்கு அறிவு உண்டோ?’ எனின், 3‘மலர்மாலைகள், பீதாம்பரம், ஆபரணங்கள் முதலானவைகள் திருமாலினுடைய திருமேனிக்குத் தக்கவைகளாகவும், ஒப்பு அற்றவைகளாகவும் ஞானத்தோடு கூடினவைகளாகவும், வேறு ஒன்றன் துணையின்றித் தாமே பிரகாசிக்கின்றவைகளாகவும் இருக்கின்றன,’ என்னும் பௌஷ்கர சம்ஹிதை இங்கு அறிதல் தகும். ‘ஆயின், நித்யசூரிகள் தாவரம் திரியக்குகளாய் இருப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், ஒரு சிலர், துழாயாயும் புள்ளாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வசிக்கிறார்கள். ‘
அங்ஙனமாயின், தாவரம் முதலியவற்றிற்கு உரிய அறிவு இன்மை முதலிய தன்மைகள் இவற்றிற்கும் இருக்கவேண்டாவோ?’ எனின், 4அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள அறிவுத்தன்மையே கழியப் பெறுவர். அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி. ஆயின், தடையாகவுள்ள அறிவுகள் மட்டும் இருத்தல் கூடுவதாமோ?’ எனின், கர்மம் காரணமாக வந்த சரீரங்கள் அல்லவே? இச்சையாலே மேற்கொண்டவைகள் ஆதலின், கூடுவதாம். ‘ஆயின், இச்சையாலே, விரும்பிய சரீரங்களைக் கோடல் கூடுமோ?’ எனின், இவ்வுலகத்தில் திரியக்குத் தாவரம் ஆமவை கர்மத்தாலேயாய் இருப்பனவாம்; பரமபதத்தில் மேற்கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.
240. சக்ஷ்ர்தேவாநாமுத மர்த்யாநாம்.– யஜூர் வேதம். 4. 6 : 8.
கண்ணாவான் – ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற கருதி அர்த்தத்தை அருளிச்செய்கிறார். கண்ணாமவன் என்றபடி. இனி, இதற்குக் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம். மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் – இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்துகொள்ள மாட்டாமைக்கு, நித்திய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்தியசூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்.
தண்ணார் வேங்கடம் – இறைவனுக்குக் காத்தற்கு உரிய பொருள்கள் கிடையாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி, இவ்வுயிர்கட்குப் பாதுகாப்பவனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி இரு திறத்தார்க்கும் குளிர்ச்சியை உண்டாக்க வல்லது ஆதலின், ‘தண்ணார் வேங்கடம்’ என்கிறார். ‘குளிர் அருவி வேங்கடம்’ என்பர் ஸ்ரீ ஆண்டாள். விண்ணோர் வெற்பன்-‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார். கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து, ‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார்.
241. நது மாம் ஸக்ஷ்யஸே த்ருஷ்டும் அநேகஏவ ஸ்வசக்ஷூஷா
திவ்யம் ததாமி தேசக்ஷூ: பஸ்ய மே யோகம் ஐஸ்வரம்.- ஸ்ரீ கீதை. 11 : 8.
அருச்சுனன், ‘விபூதி சிரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காணவேண்டும்’ என்று விரும்ப, ‘அதற்கு உறுப்பாக 3உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே, திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று, இவ்வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடாயைப் பிறப்பித்துப் (பத்தி ரூபாபந்ந ஞானத்தை விளங்கச் செய்து.)பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக்கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான். அதாவது, பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே; திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே; திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே. இப்படி அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர்(மூன்றாம் பாசுரத்தின் ‘ஒரு கதியின் சுவை தந்திட்டு’)ஒருவரோடு பரிமாறுகிறானாய், அதுதன்னையும் குளப்படியிலே (மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)கடலை மடுத்தாற்போன்று அன்றி, பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,(என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்கிறார்- ஆதலின் ‘பொறுக்கப் பொறுக்க’ என்கிறார்.) இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து, (என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார், ‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)அந்நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப்பேசி அனுபவிக்கிறார்.
242. யஸ்ய ப்ரஸாத ஸததம் ப்ரஸீதேயு: இமா: ப்ரஜா:
ஸ ராமோ வாநரேந்த்ரஸ்ய ப்ரஸாதம் அபிகாங்க்ஷதே.-ஸ்ரீ ராமா. கிஷ், 4 : 21.
243. ஏஷ தத்வாச வித்தாநி ப்ராப்யச அநுத்தமம் யஸ:
லோகநாத: புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி.–ஸ்ரீ ராமா. கிஷ். 4 : 18.
பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான். ‘எந்த இராமனுடைய திருவருளால் இம்மக்கள் எப்பொழுதும் தெளிந்த மனத்தையுடையவர்களாய் இருக்கின்றார்களோ, அப்படிப்பட்ட இராமன் சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்துடன் விரும்புகிறான்,’ என்றும், ‘தம்மை ஒழிந்தார்க்கு எல்லாம் நாதனாய் இருக்கும் ஸ்ரீராமர், சுக்கிரீவனை நாதனாக விரும்புகிறார்’ என்றும், கூறப்படுகின்றவாறே, ‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார், ‘என்னுடைச்சூழலுளானே’ என்கிறார்.
244. ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹராக்ஷஸை:
ராக்ஷஸோப்யேதி: பஸயத்வம் அஸ்மாந் ஹந்தும் ந ஸம்ஸய:–ஸ்ரீராமா. யுத். 17 : 5.
ஒக்கலை வைத்து – பரிவுடைய யசோதைப்பிராட்டியைப் போன்று தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து. முலைப்பால் உண் என்று தந்திட – ‘முலைக்கண் நெரித்து வருத்தப்படா நின்றேன்; உண்,’ என்று அதட்டிக் கொடுக்க; ‘இராமனைக் கொல்ல வருகின்றான்’ என்று கூறவேண்டிய இடத்தில், அவரைக் கொல்லுதலைத் தங்களைக் கொல்லும் கொலையாக நினைத்து, ‘நம்மைக் கொல்ல வருகிறான்’ என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று, ஈண்டும், கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று இருத்தலால் ‘தந்திட’ என்கிறார். இனி, தருகை, கொடுக்கையாய் வழங்குகையாலே ‘தந்திட’ என்றார் எனலுமாம். வாங்கி – அவள் முலை கொடாவிடில் தரியாதாளாய்க் கொடுத்தாற்போன்று, இவனும் முலை உண்ணாவிடில் தரியாதானாய் உண்டான் ஆதலின், ‘வாங்கி’ என்கிறார்.
245. யோ வாசி திஷ்டன் வாச: அந்தர: யம் வாக் நவேத யஸ்ய வாக் சரீரம்.
என்னுடை நாவினுளான் – என்னுடைய துதிக்கு விஷயமானான். இனி இதற்கு ‘வாக்கில் இருந்துகொண்டு வாக்கின் உள் இருக்கிறான்,’ என்கிற படியே, ‘வாக்கு இந்திரியத்துக்கு அந்தர்யாமியாய் உள்ளவன்’ என்று கூறலும் ஒன்று.
246. அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ அஹமந்நாத:.தைத்திரீய உபநிடதம், பிரு. 10.
இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி – அங்ஙனம் ஆர்ப்பதற்கு அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’ என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை– திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச் செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச் செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும் ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: – நான் பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.) ‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல் திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப் புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம் படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’ (இரண்டாந்திருவந். 71.)
247. வத்யதா மேஷ தண்டேந தீவ்ரேண ஸ்சிவைஸ்ஸஹ
ராவணஸ்ய ந்ருஸம்ஸஸ்ய ப்ராதா ஹிஏஷ விபீஷண:-ஸ்ரீராமா. யுத். 17 : 27.
248. பரதஸ்ய வதே தோஷம் ந அஹம் பஸ்யாமி ராகவ
பூர்வாபகாரிணாம் த்யாகோ நஹி அதர்மோ விதீயதே.ஸ்ரீராமா. அயோத். 96 : 24.
249. அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீநி ஆயுதாநி தம்
ரக்ஷந்தி ஸகலாபதப்ய: யேநவிஷ்ணு: உபாஸித:.–விஷ்ணு தர்மம், அத் : 78.
அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. ‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? ‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா – அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், ‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே, சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.திருவாழியாழ்வானும், இஷீகாஸ்திரமும், தூர்வாசரையும் காகத்தையும் மெள்ளமெள்ளப் பின் தொடர்ந்தமை இங்கு நினைவு கூர்க. அவ்வாறு தொடர்ந்தமையாலன்றோ அவர்கட்குச் சரணாகதிக்கு அவகாசம் கிடைத்தது.-நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார்
250. ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம் கந்தும் அர்ஹதி.-ஸ்ரீராமா. யுத். 19 : 31.
இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க, 1அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீவிபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை; ‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள் இக்ஷவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா, அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்’, என்று அருளிச்செய்தார். பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன்ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்: ‘கேவலம் கிரியாமாத்திரத்துக்கே பலத்தைக்கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு ‘இப்பொருள் பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.
251. தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷூ நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரம் அஸூபாந் ஆஸூரீஷ்வேவயோநிஷூ-ஸ்ரீ கீதை, 16 : 19.
எம்பிரானை-மேல் பாசுரத்திற்கூறிய அவன் நீர்மையை நினைத்து ‘என் நாயன் ஆனவனை’ என்கிறார், எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை – தம்மளவிலேயாய் அடியற்று இருக்கையன்றியே, தம் குடிக்கு நாயகன் ஆனவனை என்கிறார். இவர் இப்படித் துதித்தவாறே, பிரயோஜநாந்தரபரருடைய பாசுரத்துக்கும் அநந்யப் பிரயோஜனருடைய பாசுரத்துக்கும் வேற்றுமை அறியுமவன் ஆதலின், ‘இப்படித் துதிக்கிறவர் யாவர்?’ என்று குளிர நோக்கினான். ‘தண் தாமரைக் கண்ணனை’ என்கிறார். ‘ஆயின், 6என்னை வைக்கின்றவர்களையும், வெறுக்கின்றவர்களையும். கொடிய தன்மைகளை யுடையவர்களையும், தூய்மை அற்றவர்களையும், மனிதர்களுள் தாழ்ந்தவர்களையும் நான் சம்சாரத்தில் தள்ளுகிறேன்,’ என்னுமவன் இப்படிக் குளிர நோக்குகைக்குக் காரணம் என்?’ என்று பார்த்தார்; குளிர் நோக்கும்படி செய்கின்றவர் அருகே இருக்கக் கண்டார்; கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை கொம்பு போலவும் பாம்புபோலவும் இருப்பதாய், அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையையுடைய பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே யுடையவனை என்கிறா
252. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
நசாஸூஸ்ரூஷவே வாச்யம் நசமாம் ய: அப்யஸூயதி.–ஸ்ரீ கீதை, 18 : 67.
நெஞ்சமே சொன்னேன் – ‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று போலேகாணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு ‘இந்தக் கீதையின் பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார். ‘ஏன்? முதல் முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று ‘பதண் பதண்’ என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணிவண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று.
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply