Archive for the ‘பிரமாணத் திரட்டுக்கள்’ Category

ஸ்ரீ பர ப்ரஹ்ம தத்வ விளக்கம்-

June 11, 2025

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வஸிதமேதத்யத் ருக் வேதோ யஜுர் வேத : ஸாம வேதோ தர்வாங்கிரஸஹிஹாஸ: புராணம் வித்யா உபநிஷூத ”-சுக்ல யஜுர் வேத பிருஹதாாண்யகோபநிஷத்தில் 4-ம் அத்தியாயம் 4-ம் பிராம்மணம்.-இத்யாதியாகிய ப்ரமாணங்களின்படியே சர்வ நியந்தாவாயும்,
சர்வ வேதோபப்ரஹ்மணாதி நூல்களின் ப்ரதிபாத்தியனாயும்,
சர்வாந்தர்யாமியாயுமிருக்கும் சர்வேஸ்வரனது ஸங்கல்ப ஸ்வாஸமே ருக், யஜுர், ஸாமம், அதர்வண முதலாகிய வேதங்களும் இதிஹாசம், புராணம், வித்தை, உபநிஷத் முதலியன என அறுதியிட்டுள்ளபடியால், எம்பெருமானது ஜாயமான கடாக்ஷமில்லையாயின் வேதத்தின் யதார்த்தம் வெளிப்படையாய் தோன்றாதாகையால் தமது பரம க்ருபையால் தாமே தம் ப்ரஜைகளுக்கு விளக்கிக் காட்டியபடியால்
வேதங்கள் அனாதியாய் கல்பங்கள் தோரும் ப்ரஜைகளாகிய
ப்ரம்ம, ருத்ர, இந்த்ராதி தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும்,
ஸர்வேஸ்வரனால் போதிக்கப்படுவதால், அவ்வேத ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வான் பக்கலிலும், வேதத்தின் பக்கலிலுமுள்ள ஏற்றங்களை அறிந்தவர்களில் தலைமை யானவர்கள் எமதாரியர்களேயாம்.

காலக்ரமத்தில் வேதாத்யயனம் குறைவு பட்டுப்போய் வேதமானது கோர்வை யின்றி சிதரிப்
போனமையால் அதை சீர்திருத்த வேண்டி எமதருட் பெருங்கருணை யப்பன் தமது பரம க்ருபையால் “பரமேஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்” என்கிறபடியே பரமேஸ்வராயும், பரம பத நிர்வாணனனாயும், விளங்காகின்ற மஹா விஷ்ணுவினம்சமாய் “ வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ் ரூபாய விஷ்ணுவே” என்றும் “ ஸ ஹோதா வ்யாச பராசர்ய :” என்றும் “வ்யாஸய தீ திவ்யாஸ ” என்கிற யஜுர் வேதத்தில் வித்பத்யின் பிரகாரம் வேதங்களினுடைய யதார்த்தத்தை ஸ்தாபிக்கவும், அனர்த்தங்களை நிராகரிக்கவும்,கல்பங்கள் தோரும் அம்ஸாரூடராயும், பராசரர் புத்திரராயும்,விளங்கிய வேத வ்யாஸ பகவான் அவதரித்து அஹோ பாஹ்யமாய் கெம்பீரார்த்தமாய், தைத்ரியம், பௌடிகம், தலவகாரம், ஸாமம் என்று பெயர் பெற்றிருந்த வேதங்களை தமது பரம க்ருபையாலே எதிர்கால நிகக்ஷியைக் கணித்து சிற்றறிவினோர் அறிந்துய்யுமாரு ருக், யஜுர். ஸாமம், அதர்வணம் என்பதாகப் பிரித்து தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்க அவர்கள் அவ்வொவ்வொரு பாகத்தையும் அநேக பகுதிகளாகத் தொகுத்து அவ் வாறு தொகுத்த பாகங்களுக்கு வேத ஸாகைளென்று பெயராய் அதிலும் ருக்வேதத்தில் 21, யஜூர்வேதத்தில் 109, ஸாமவேதத்தில் 1000, அதர்வண வேதத்தில் 50, இப்படி 1180, ஸாகைகளாய் ஒவ்வொரு சாகைகளுக்கும் ஒவ்வொரு உபநிஷதென்று பெயராய் ஒவ்வொரு ஸாகையும் முந்தியபாகம் யஜ்ஞாதி நித்ய, நைமித்ய, கருமங்களையும், அவைகளை அனுஷ்டிக்க வேண்டிய விதிகளையும், செய்ய யோக்யதையுள்ள அதிகாரிகளையும், செய்விக்றவர்களின் யோக்யதையும், ஆராதிக்க வேண்டிய தேவதைகளையும், தத் தேவதைகளைப் பற்றிய மந்தரங்களையும்,தத்தத் கருமங்களின் பலன்களையும், கூறுகிறது.அக் காரணத்தால் இதற்கு கரும காண்டமென்றும், அவித்தை என்றும் கருதப்படுகிறது. வேதத்தில் கரும காண்டத்திற்கு அவித்தை என்னும் நிரூபணம் மைத்திராயண்ணி யுபநிஷத்தில்7, 9 கடோபநிஷத்தில் 2, 4 ஈஸாவாஹியோபநிஷத்தில் 11லும் காணலாம். உத்ர பாகமானது சர்வேஸ்வரனை உபாஸிக்கும் மார்க்கமாகிய ஸாங்கிய யோகம், நிஷ்காம கரும யோகம், தபசு, ஸகுண நிர்க்குண ப்ரஹ்மோபாசனா விதியும், ஆத்ம லக்ஷணமும், ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ ரக்ஷகத்வமும்,ஸமஸ்த்த கல்யாண குணாத் மஹத்வமும், ஸர்வ சேஷித்வமும், ஸ்ரீய:பதித்வம் முதலியவைகளையும், அவைகளுக்க அங்கோபாங்கமான விஷயங்களையும் கூறுகையாலே, ஸ்வ பாகத்திற்கு ஞான காண்டமென்றும், வித்தையென்றும், மேலே கூறிப் போந்தமைத்திராயண்ணியம், கடோபநிஷத்தும், ஈஸாவாஹியம் முதலிய ஸ்ருதிகள் கூறுகிறது இவ்வாறு விவரிக்கப்பட்ட விஷயங்களை முக்திகோபநிஷத்திலும், விஷ்ணு புராணத்திலும் விரிவாகக் காணலாம் இப்படி 1180 ஸாகைகளுடைய வேதங்களின் கில பாகங்களே தற்போது 108, உபநிஷத்துகளாக வெளியாயிருக் கின்றது இவ் 1180 ஸாகைகளையுடைய வேதங்களை வேத புருஷனால் வெளியிடப்பட்ட மீமாம்ஸா ஸாஸ்த்திரங்களன்றி வேதத்தின் யதார்த்தம் விளங்காது. அம்மீமாம்ஸா ஸாஸ்த்திரம் 20 அத்யாயங்களாயும்,அதில் பூர்வ பாகம் 14 அத்தியாயங்களையுடையதாயும், கரும நிச்சய ஸாதனமாயும், ஜைமினி முனிவரால் விளக்கப்பட்டதாயும், உத்ரபாகம் ப்ரஹ்மத்தினுடைய நிச்சயத்தின் ஸாதனமாயும், 6 -அத்யாயங்களை யுடையதாயும்,வ்யாஸ பகவானால் விளக்கப்பட்டதாயுமிருக்கும்.

யஜுர்வேத ப்ரதிபாத்யரான – வேதவ்யாஸ பகவான்« வேத ஸாஸ்த்ராத்பரம்” என்கையாலே அவ் வேதங்களை யனுசரித்தே பர தத்வ பரம் பொருளை யறிய வேண்டும்.

அந்நபூர்ணோபநீஷத்தில்
யச்சூன்யவாதிநாம் சூந்யம் ப்ரஹம ப்ரஹ்ம விதாம் சயத்
விஜ்ஞாந மாத்ரம் விஜ்ஞாந விதாம் யதமலாத்மகம்
புருஷஸ் ஸாங்கய தருஷ்டீநா மீஸ்வரோ யோகவாதிநாம்
ஸிவச்சைவா கமஸ்தாநாம் கால: காலைக வாதிநாம்
யத் ஸர்வ ஸாத்ர ஸித்தாந்தம் யத் தத்வம் ததயௌஸ்திக:”

இதன் பொருள்,
ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரனை உய்யும் வகை எண்ணிலவாயினும், சூன்யவாதி சூன்யமாகவும், ப்ரஹ்மவாதி ப்ரஹ்ம மாகவும், விஞ்ஞானமுளோன் ஆன்மாவினிடத்தில் விஞ்ஞானமாகவும், ஸாங்க்யன் புருஷனாகவும், யோகவாதி ஈஸ்வரனாகவும், ஸைவ, ஆகமி சிவனாகவும், காலைகவாதி காலமாகவு மறிகிறானாதலால், ஸர்வ ஸாஸ்த்திர சித்தாந்தங்களினு முடிந்த தத்வப் பொருளும், விகாராஹிதமான நிர்விகாசனும், கல்பங்கள்
தோரும் ப்ரம்ம, சிவ, இந்த்ராதி தேவர்களை நிக்ரஹித்து
ஹரிக்கின்றவனுமான ஸர்வேஸ்வரன் ஒருவனே யுளன்.

அதர்வசிரோபநீஷத்.
காரணாநாம் த்யாதா காரணந்து த்யேயஸ் ஸர்வைஸ்வர்ய ஸம்பநஸ் சர்வேஸ்வர’ என்கிறபடியே சராசர ப்ரபஞ்சங்களுக்கும் காரண வஸ்துவும், க்யாதாவும்.அறிபொருளும், பரவின வஸ்துவும், ஸர்வ வ்யாபகனுமான ஸர்வேஸ்வரனே யாவன். மேலே கூறியுள்ள ஈஸ்வர ஸப்தத்தால் அஸாஸ்த்ர வாதிகளும், நவீன பண்டாரங்களும் நிகண்டுகளில் கூறும் ஈஸ்வர ஸப்தங்களுக்கு ருத்ராதி தேவர்களுக்குத் தான் பொருந்துமென நம்புகின்றனர் அதற்கிணங்க சிற் சில ஆபாசமான உதாரணங்களையும்,கதைகளையும், பிதற்றுகின்றனராயிலும் ஆராயுமளவில் சில காரணத்தால் சிற் சில தேவர்களால், தங்களுக்கேற்பட்டுள்ள கடுமைகளைத் தவிர்த்து காப்பாற்றும் பொருட்டு துதித்துக் கொண்டாடப் பெற்றதாம் அதாவது கடுமையால் வருந்தும் ஒருவன் தனது போஷகத்துக்காக பிரரை வருந்திக் கொண்டாடப்பட்ட பட்டப் பெயர்களுக்கு எவ்வாறு அர்த்தம் பொருந்தாதோ அவ்வாறே பெற்றவையாம் ருத்ராதி தேவர்களின் ஈஸ்வரத்வம்.

சகல ஈஸ்வர சப்தங்களுக்கும் பிரதிபாத்யன் யாவனெனில்.
யதா ஈஸ்வர ஸப்தோயம் நாராயணோ பிரதிஷ்டதே” என்றும்,
“ யத்வா ஈஸ்வர ஸப்தோயம் ரூட்யாவத்தி ஜநார்த்தநம்” என்றும்,வசிஷ்டரும் விஸ்வாமித்ரரும் வியாகரண சூத்திரங்களினாலே ஈஸ்வர சப்தங்களுக்கு ப்ரதிபாத்யனும், அச்சப்தார்த்தங்களுக்கு அர்ஹனுமானவன் ஸ்ரீமந் நாராயண னொருவனே யாவன் என்றும், ஜீவ கோடிகளினுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை கொடுக்குமவனான ஜநார்த்த னொருவனே யாவன் என்றும் ஹிதாநு ஸாகர கர்மாநுகுண நியாமக ஸ்வரூப ரூப நாம விபூதிகளையும், பரத்வ காரணத்வாதி கல்யாண குண ஸமூஹங்களையும், வேத வேதாந்தாதிகளெல்லாம் ஒதத்தக்க அநந்த வைபவ ஸஹிதனாய் விளங்குமவனாதலால், ஸமஸ்த விலக்ஷண ப்ரமேய ப்ரமா தாக்களான சதுர்முக, பஞ்சமுக,வ்யாச பராசர, சுக செளநக, விகனச, வசிஷ்டாதி ப்ரஹ்ம வித்துக்களும், ஸ்ரீபராங்குச பாகால பட்டர்பிரரன் ஆதியான ப்ரஹ்ம விதாக்ரேசர்களும் அப்பரமேஸ்வர ஸப்த்த ப்ரதிபாத்யனான பர ப்ரஹ்மத்திற்கு நாராயணனென்ற திருநாமமே அஸாதாரண திருநாம மென்று அறிவுறுத்தினார்களிறேநாராயணோ ப்ரதிஷ்டதே” என்கிற
சப்தார்த்தமானது, ஜகஜந்மாதி காரண பூகனாய், சர்வாந்தர்யாமியாய், ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு அதீதமானவனாய்,சர்வ வேத ப்ரதிபாத்யனாய், ஜீவோத்பதியாய், பரம பாவன சச்சித்தானந்த ஸ்வரூபமாயுமுள்ளப் பரமபத நிர்வாஹனுமான,
பரமாத்மாவையே ஈஸ்வர சப்தம் ப்ரதிபாதிக்கும் என்றே சூத்திரகாரர்களும் அறுதி யிட்டனர், இதற்கிணங்கியே மீமாம்ஸர்களும், மதுவும் அருளிச் செய்தனர்.

ஜகஜ்ஜன்மாதி காரண பூதனாவது.-யஜுர்வேதம் தைத்ரியோபநிஷத்
“ யதோவா இமாநி பூதானி ஜாயந்தே யேந ஜாதாநி வந்தி யத் ப்ரயந்த்யபிஸம், விஸந்தி தத் விஜிஜ்ஞாஸ்வ ப்ரஹ்மேதி-என்கிறபடியே முன்னம் இச் சராசராத்மகமான பூத, பெளதி
ப்ரபஞ்சங்களும், அதற்குள்ளடங்கிய உடலும், உயிரும், சரப, அசரபமுமாய் காணப்படுகிற சகல வஸ்த்துக்களும் எவனிடத்திலடங்கினவோ, பிறகு அடங்கின யாவும் எவனிடத்திலிருந்து வெளிப்படுகின்றனவோ, வெளிப்பட்ட யாவும், தத்தமக்கு விதித்த காலம் வரை கடவாது நிலை பெற்று நிற்க எவனால் ரக்ஷிக்கப்படுகின்றனவோ அப்பரம் பொருளே நாராயண பர ப்ரஹ்மம் என்று அறிக –

நாராயணோபநிஷத்
நாராயணாத் ப்ரம்மா ஜாயதே, நாராயணா ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோ ஜாயதே,நாராயணாத் த்வாதச ஆதித்யா,ருத்ரா வஸ்வஸ் ஸர்வானி சந்தாம் ஹி நாராயணா தேவா ஸமுத்பத்யந்தே,நாராயணாத் ப்ரவர்த்தியந்தே, நாராயணே ப்ரலீயந்தே”
என்கிறபடியே புருஷோத்தமனாயும், ப்ரணவ மந்திரப் ப்ரதி பாத்யனாயுள்ள ஸ்ரீமந் நாராயணன் இடத்திலிருந்தே ப்ரம்மா, சிவன், இந்திரன், த்வாதசாதித்யர் முதலான பன்னிரண்டு ருத்ரர்களும்,தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும்
உண்டாயிற்றென்றும், அத் தயா பரக் கடலாகிய ஸ்ரீமந்நாராயணனாலேயே அவ் ஒவ்வொன்றும் தத்தமக்கு விதித்த நாள் வரை,நிலை பெற்று நிற்கின்றனவென்றும், பின்னர் கற்ப க்ஷயத்தில் அகில ஈஸ்வர சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் இடத்திலேயே அவையாவும் லயமாகின்றன வென்றும்

பைங்களோபநிஷத்.
” ப்ராணி கர்ம வஸாதேஷ படோயத்வத ப்ரஸாரித:
பராணி கர்ம ஷயாத் புநஸ்த்திரோ பாவயதி தஸ்மிந்
நேவாகிலம் விஸ்வம் ஸங்கோஸ்தித படவர்வர்ததே
ஈஸாதிஷ்டி தாவரண சக்திதோ ரஜோ த்ரிக்தாமஹ தாக்யா
-என்கிறபடியே ப்ரம்ம, ருத்ர, இந்தராதி தேவர்கள் முதல் ஸ்தாவரம் வரையிலுள்ள யாவும் ப்ராணிகளே யாயினும் கர்ம வசத்தினாலே மாறுதலடைவதேயாம், சுருட்டப்பட்ட சித்ரப் படம் போலே சகல ஜகத்தையும், அதிலடங்கிய ப்ரம்ம, ருத்ர, ஈசான்ய ப்ரிதிவ்யாதி பதார்த்தங்களனைத்தும் தனக்குள்ளே
லயிக்கவும், அனந்தரம் நிக்ரஹிக்கவும், பின்னர் ஹரிக்கவும், வல்லவனாகையாலே (ஹரி) என்னும் திருநாமமுண்டாயிற்றென்று வயாஸ பகவானும், ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், சங்கராசாரியரும், மத்வாசரியரும், வித்யாரண்யர் முதலானோரும் தங்கள் பாஷ்யங்களிலே ஸ்பஷ்டமாக அறுதியிட்டனர். இக் காரணத்தால் ஸர்வ நியந்தாவும், திருவஷ்டாக்ஷர ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனை ஜெகஜ் ஜன்மாதி காரண
பூதனெனத் தட்டில்லையிறே.

சர்வாந்தர்யாமித்மாவது.
நாராயணேபநிஷத்,
அந்தர்ப் பஹிச்ச நாராயண : நாராயண யேவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் நிஷ்களங்கோ நிரஞ்ஜநோ நிர்விகவ்போ நிராக்யா தச்சுத்தோ தேவ ஏகோ நாராயண : என்கிறபடியே அவித்யாதி கர்மகட்டுகளும் நாராயணன், ஊர்த்தவமும் நாராயணன், அதோங்கமும் நாராயணன், உள்ளும், புறம்பும் நாராயணன், பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான சர்வ லோகங்களிலும் அணுவிற்கணுவாயும், மேருக்கு மேர்வாயும்,
யாதொரு பூ த காலம், பவிஷ்யத்காலம், சர்வமும் நாராயணனே யாய், நிஷ்களங்கனாப், நிரஞ்சனனாய், நிர்விகல்பனாய், சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து சங்கல்பத்தால் ஆட்டி அசைப்பிக்கும் அகடித கடனா சாமர்த்தியமமைந்த பரம் பொருளன்றோ சர்வார்ந்தர்யாமியான ஸ்ரீமந் நாராயணனென்றும்,

யஜுர் வேதத்தில் தஹர வித்தையில்.
“புருஷயேவேதம் ஸர்வம் யத்பூதம் யச்சபவ்யம்-என்கிற படியே கால பரிச்சேத ரஹிதமாய், கழிந்த காலத்திருந்த ஜகத்தும், எதிர் கால நோக்குடைய ஜகத்தும், நம் முன் காணப்படுகிற ஜகத் யாவும் அதிருத்த நாராயணனின் அந்தர்யாமித்வமென்றும், இம் முக்கால நோக்குள்ள ஜகத்தும் அதிலுள்ள சேதனா சேதனங்களும் அப் பரம புருஷனுக்கு சரீரமாயமையப் பட்டவை என்றும்,
சுக்ல யஜுஸ் சுபாலோபநிஷத்.
சக்ஷ்ஷு க்ஷ த்ருஷ்டவ்யம்ஸ நாராயண: ஸ்ரோத்ரஸ் ஸ ஸ்ரோதவ்யம்ஸ நாராயண :
என்கிறபடியே சகல லோகங்களிலுமுள்ள சகல வஸ்துக்களையும் பார்க்கின்றவனும், பார்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களும் நாராயணன், கேட்க்கின்றவனும், கேட்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களிலும், சகல சப்த்தங்களிலும் அந்தர்யாமியானவன் நாராயணனே என்றும்,
அந்தச் சரீரே நிஹிதோ ஹுஹாயாம்”-ஒவ்வொரு தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி ஸ்தூல சூஷ்மாதி சரீரங்களிலும், உள்ளும், புறம்பும் வ்யாபித்துள்ளோன் நாராயணனென்றும்,=மஹாநாராயணோபநிஷத்.
“ யச்ச கிஞ்சித் ஜகத்தஸ்மிந் துர்ஷ்யதே ஸுர்யதேபிவா
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்யா நாராயண ஸ்தித
:”-என்கிறபடியே காலபரிச்சேத ரஹிதனாய், த்ரிகால நோக்குள்ள ஜகஜ் ஜீவகோடிகளின் துருஷ்டிக்குக் காணப்படுகிற மேரு த்ரணாதிகளினுள்ளும் புறம்பும் வியாபிப்பவனும், அவ்வொவ் வொன்றினின்று மெழும் சப்தங்களை கேட்கும் ஜீவகோடிகளிலும், அவ்வாறு நிகழும் சப்தங்களிலும், நிஷ்களங்கனாய், நிரஞ்சனனாய், நிர்மலனாய், அபின்னனாய், அவாங் மனோ கோசரனாய்,
தனக்குப் புறம்பிற் போகவிட்ட சிதசித்துக்களில்லாமல் அவைகளை விடாதே வளைத்துக் கொண்டு சுக சயனனாய் எழுந்தருளியிருக்கும் பரம்பொருளே ஸ்ரீமந்நாராயண னென்றும் மஹா நாராயணேபநிஷத்.
” அநந்தமவ்யயம் கவிம் சமுத்ரேந்தரம் விஸ்வசம்
பவம் பத்மகோச பிராதிகாசம் ஹிருதயம் சாப்யதோமுகம்
-என்று சகல பிரம்மாண்டங்களின் ப்ருதிவியில் வசிக்கும் ஜீவ கோடிகளின் வியாபகமின்றிக்கே சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள சப்த சமுத்ரங்களில் வசிக்கும் மச்ச குழாங்களிலும்,
அச் சமுத்ரங்களினின்றெழும் குமிழிகளிலும், அலைகளிலும்,
அவ்வலைகளினின்று சிதரும் ஜலத் துளிகளிலும், அத்துளிகளின் ஒவ்வொன்றிலும் தனித்தனியாய், உள்ளும் புறம்பும் வியாபியா நின்றவன் ஸ்ரீமந் நாராயணனே என்றும்,

கோபாலதாபன்னியூபநிஷத்.
” ஏகோ தேவஸ் ஸர்வ பூதேஷு கூடஸ் ஸர்வ வ்யாபீ mஸர்வ பூதாந்தராத்மா”
சகல பிரம்மாண்டங்களிலும், சராசர பூதங்களிலும், சகல ஜீவ கோடிகளிலும், சர்வாந்தர்யாமி யாயிருக்குமவன் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவே என்றும்,

அதர்வசிரோபநிஷத்,
அஹமேஹ பிரதமமாசம் வர்த்தாமி பவிஷ்யாமி சநாந்யய: கச்சிந் மத்தோ வியக்துருக்க: ஹிதிசோ
ந்ராந்தரம் பிராவிசத்தி சன்சாந்தரம் பிராவிஸச் சோஹம்நித்யா நித்யோஹம் பிரபஞ்ச்யோஹம் ப்ரத்யஞ்ச்யோஹம் முதஞ்ச்யோஹம் மதஞ்ச்
யோத்வா திஷத்சாஹம் த்ருஷு ஜகத் அனுஷத் சோஹம் சந்தோஹம் தியரஹம் பார்கஸ் வத்சோஹம்
-என்கையாலே சிவபிரான் தானே தெய்வ சபையில் நின்றும்,. யதார்த்தமாயும், சர்வ வேத தாத்பர்யார்த்தமாயும், சொல்வதாக நிச்சயித்து, சர்வாந்தாயாமியாயும், ஜீவோதபதியுமான,ஸ்ரீமந் நாராயணன் எனக்குள் அந்தர்யாமி யாயிருக்கையால் தான் நான் திரிலோகாதிபதி யாயிருக்கப் பெற்றேனென்றும், அவ்வேற்றத் தாலே பூத பவுஷ்ய வர்த்தமான காலங்களிலும், எனக்கீடானவ ரொருவருமில்லை என்றும் தனது சந்தோஷப் பெருக்காலே பிர சங்கித்தனரென்றும், இப்பிரமாண பெருக்கை ஸ்கந்தோப நிஷத்தும் காணலாம்.

மஹோபநிஷத்.
“பீதாபாஸ் யாத்தனுபமா தஸ்ய ஸிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித ஸ பிரம்மா ஸ ஸிவாஸ ஸிந்த்ரோக்ஷர பரம ஸ்வராட்” என்று ஒவ்வொரு ஜீவ கோடிகளின் ஹிருதய நடு நிலைமையில் இருக்கும் ஜடாக்கினியின் மத்தியில், கறு மேகத்தினை பிளவுபட ஒடி ஒளியும் மின்னல் கொடி போலும், நெல் நுனி போல் மெல்லியதாயும், ஸ்வயம் பிரகாசமாய், சமனற்றதாய், விராட் புருஷனான பரமாத்மா வியாபித்துளன் -அவ் விராட் புருஷனான ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவிற்குள்ளும், சிவனுக்குள்ளும், இந்தரனுக்குள்ளும் இவ்வாறே அந்தாயாமி யாயிருக்கிறானென்றும் அப் பரம புருஷன் மூவித பேதமற்றவனென்றும், தன்னை யொழிந்த சர்வராலும் தொழப்படு மவனென்றும், கருமத்திற்கு வசப்
படாதவனென்றும், ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல வேத வேதாந்தாதிகளும் ஸ்ரீமந்நாராயணனே சர்வாந்தர்யாமி என்றும், பர ப்ரஹ்ம மென்றும் நிச்சயிக்கப்பட்டது. இத்யாதிப் ப்ரபல
ப்ரபாவங்களைக் கொண்டே (ஹரி: ஓம்) என்று மும்முறை ஆரணங்கள் முறையிடுகின்றன.

ஸத்வ, ரஜ தமோ குணங்களுக்கு அதீதமான நிற்குணமாவது.
திருபாத் விபூதி மஹாராயணோபநிஷத்.
”ஸுத்த சத்வம் மயோலீலா க்ருஹீத நிரதிசய ஆனந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத் ஸயே வநித்ய பரிபூரண பரத விபூதி வைகுண்ட நாராயண-என்று சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்திலுள்ளவனானாலும் அச்சத்வ குண ரஹிதனாயும், மாய்கையை ஸ்வாதீனமாயுடை யவனானாலும் அம்மாய்கை ரஹிதனாயும், விளங்கும் ஸ்ரீமந் நாராயணனை தியாநிக்கின்றேனென்று இச் சுருதி உத்கோஷிக்கின்றது.

அதர்வண வேத திருபாத்விபூதி மஹா நாராயணோபநிஷத்.
நாராயணாம் ஸை:ஜோகுண ப்ரதாநை ரேகைக-ஸ்ருஷ்டி கர்த்ருபி ரதிஷ்டிதாநி விஷ்ணு மஹே ச்வராக்யைர் நாராயணாம் சைஸ் ஸத்வ தமோ குண ப்ரதாநை
ரேகைக ஸ்திதி ஸம்ஹார கர்த்ரு பியாதிஷ்டிதாநி”
என்று யாதொரு பொருளே ஆதி மத்யந்த மென்னும் பாகுபாடாக விருத்தல் போலே சர்வேஸ்வரனான நாராயணனே ஸத்வ
ரஜ தமஸ்சுக்களாகிய முக் குணங்களுக்கும் ப்ரதாநியாயும் அதீதனாயும், விஷ்ணு, ப்ரம்ம,ருத்த, யென்பவர்களின் முத் தொழிலுக்கும் ப்ரதானியாயும், அதீதனாயும் இம் மூவித தெய்வங்களைக் கடந்தவனாயும், விளங்கா நின்றவன் ஸ்ரீமந் நாராணனென்று வேதங்களிலும், ஸ்ருதியாதி உபநிஷத்துக்களிலும், நிவாச தீக்ஷித முதலான பாஷ்யங்களிலும், ப்ரஹ்ம ஸூத்ரத்தாலும் நிரூபிக்கப்பட்டது.

வேத ப்ரதிபாத்யனாவது.—வ்யாகாண ஸூத்திரம்.
“சர்வ வேதாய யத் பதம் மாமநந்தி சர்வ வேதாய
த்ரைகம்பவந்தி நதஸ்ம வசஸாம் பரதிஷ்டாவச
சாம் வாத்ஸ்ய உத்தமம் நாராயண பரோ வேத?””
-என்று சர்வ வேத வேதாந்தாதிகளும் யாதொரு பரதத்வமான பதத்தை நாடுகின்றனவோ, ஸ்ருதியாதி சகல ப்ரமாணங்ளும் யாதொரு மங்கள வஸ்துவை தியாநிக்கின்றனவோ, இதிஹாசாதி சகல சாஸ்த்திரங்களிலும் யாதொரு பரம பாவன பரம் பொருளைத் துதித்துக் கொண்டாடப்படுகின்றனவோ அவ் வுத்தம பர தத்வ பரம்பொருளே ஸ்ரீமந் நாயணனென்றும்,
ஸாஷாத் நாராயணோ தேவ: க்ருத்வா மத்திய மகீர் தனும் மகியானானுத்ரதே லோகாந் காருண்ய ஸாஸ்த்ர பாணினாம்”)-என்று யாதொரு வேத முதல்வனும் சர்வ நியந்தாவும் சகல ஜீவ கோடிகளாலும், உபாயோபேயமாக ஆஸ்ரயிக்கப்படுவதுமான பரம்பொருளை ஸ்ரீமந்நாராயணனென்றும்
நாராயண பரோ வேதோ தேவா -நாராயண நாங்கஜா” என்றும்,
” ஆலோடீயா ஸர்வ ஸாஸ்ராணி விசாரியே ஸுப் புன புன்:
யிதமேஹ ஸுநிஷ்பன்னம் த்தேயோ நாராயண சத
:”என்று சர்வ சாஸ்த்ர ஸித்தாந்த்ங்களிலும், மநுவாதி நூல்களிலும் வஸிஸ்டாதி ஸூத்ரங்களிலும், பலவாராக பரிசோதித்து நாராண நாமமுள்ளான் யாவனோ அவன்றான் சுத்த சாத்விக ப்ரஹ்மமென்றும் ஆணை யிட்டுரைத்து விட்டன வேத வேதாந்தங்க ளென்றுணரக் கடவீர்

ஜீவோத்பதியாவது,
மஹா நாராயணாதி உபநிஷத்துக்களிலும், ஈசம், கேனம்,கடகம், மஹோபநிஷத் முதலான உபநிஷத்துக்களிலும்
“நாராயணாத் ப்ராணோ ஜாயதே,-என்றும்,நாராயணாத்
ப்ரவிர்த்யந்தே, என்றும், நாராயணாத் ப்ரலீயந்தே
என்றும்,”
ஜகஜ் ஜன்மாதி சர்வ ஜீவன்களையும் நிக்ரஹிக்கவும், ரஷிக்கவும் பின்னர் ஹரிக்கவுமான அசாதாரண க்ருத்யங்களை செய்ய வல்லோனாகையால் ஸ்ரீமந் நாராயணனே ஜீவோத்பதி என சகல ப்ரமாணங்களிலும் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன –பகவத் ஸாஸ்த்ரமாகிய ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில் ஜீவோத்பதி ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் லிளக்கப்படுவதால் அதை அனுசரித்தே ஸ்ருதிகளும்
மஹோபநிஷத்
“விஸ்வமேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுப ஜீவதி-பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவ அச்சுதம் நாராயண மஹாங்கேயம்)-என்று சகல பிரம்மாண்டங்களும் அதிலுள்ள ஜீவ கோடிகளும் உஜ்ஜீவிப்பதற் குடலாய் ஆஸ்ரயிக்கப்படுமவன் எவனோ சகல
சேதனாசேதனங்களும் எவனால் நிலை பெற்று நிற்கின்றனவோ சகல ப்ரம்மாண்டங்களுக்கும் அதிலுள்ள தேவ மநுஷ்யாதி சகல பதார்த்தங்களுக்கும் (பதி) நாயகனாய் நின்றவன் எவனோ பரமேஸ்வராயும், அழிவற்றவனாயும், மங்கள ஸ்வரூபனாயும், அச்சுதனாயும் விளங்கா நின்றவன் எவனோ அவனே ஸ்ரீமந் நாரயணனென்று வேத வேதாந்தாதிகளும், இதிஹாசாதி சாஸ்திரங்களும்,வெளிப்படையாய் ஆணை யிட்டுரைத்து விட்டன-இத்யாதி ப்ரமாணங்களால் பரமாத்மாவாயும், ஜீவோத்பதியுமான ஸ்ரீமந் நாராயணன் சேஷியான தான் நவவித ஸம்மந்தத்தால் ஜீவாத்மாவை தனக்கு சேஷப்படுத்தி ரக்ஷிக்க முன் வருகிறனாகையாலும் ஜீவோபதி யென தட்டில்லையிறே.

ஸ்ரீ பாஷ்யம்.
இச்சயாயது பாதேயம் யஸ்யாதி ஸய ஸி த்தயே
உபயா நுபயைகைக ஜூஷாதெள ஸேஷ ஸேஷிணௌ”
என்றும்.
அயமே வாத்ம ஸரீர பாவ : பருதக் ஸித்தய நாஹாதாராதேயபாவ :
‘நியந்த்ரு நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்ச
” என்றும்
“பரகத அதிஸயாதா நேச்ச யோபாதேயத்வமே
வயஸ்ய ஸ்வரூபம் ஸ ஸேஷ: பரஸ் ஸேஷி
” என்றும்.
யஸ் சேதநஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா
ஸ்வார்த்தே நியந்தும் தாரயிதும் ச ஸக்யம் தச் சேஷதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய ஸரீரம்”
என்னும் ஸ்ருதி வாக்யங்களுக்கு, வேதார்த்த சங்க்ரஹத்திலும், ஸ்ரீபாஷ்யத்திலும், நியந்த்ரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று சம்மந்தத்தையும் தெளிவாய் விளக்கப் பட்டிருக்கிறது.

“யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே
நகத்யதே ஈஸ்வரேண ஜகத் ஸர்வம் யதேஷ்டமவி நியுஜ்யமத”
என்று ஸர்வ ஸேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கு சகல ஜீவ கோடிகளும் எப்போதும் எக்காலத்தும் இஷ்ட விநியோஹார்த்தமாக ஸேஷப்பட வேண்டி யிருக்கையாலும்,
” தேவகீ ஸூத கோவிந்த வாஸு தேவ ஜகத் பதி” என்றும்.
“நாராயணப் பதிம் ஸர்வ லோகாந்” என்றும்,
” நாராயணப் பதிம் ஸர்வ ஜீவாநாம் ” என்றும்.
ஸர்வ லோகங்களுக்கும், சகல ஜீவன்களுக்கும் நாயகனாயும், பர ப்ரஹ்மமாயும், தேவகீ புத்ரனாயும், கோகுல திலகமாயும், வாசு தேவனான ஸ்ரீமந்நாராயணனை தியானிக்கின்றேனென்று மஹா நாராயணோபநிஷத் முதலான ஸ்ருதிகள் உத்கோஷிக்கை யாலும்,
“ மநூநாம் ஸர்க்க மசுரோந் முக பாஹு ரூபாதது : சதுர்னாம்
பராஹ்மணாதீநாம் ஸர்க்க மகத்வாரம் ஜகத் பதி:
“என்று ஸ்ரீபாஞ்சராத்ர, விஷ்வக்ஸேந , பராசா, நாரத, அனுருத்த,பாத்மாதி முதலிய ஸம்ஹிதைகளிலும் ஜீவோத்பதி
ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் கூறுகையாலும், ப்ரம்ம ருத்ரேந்தராதி பிபீலிக்காநந்தமான சேதனாசேதன வர்க்கங்களை யெல்லாம் வளைத்துக் கொண்டு அவ்வவ் பகுதியாதிகளைத் தமது ஜாயமான கடாக்ஷத்தால் ரக்ஷித்துப் பின்னர் பஞ்ச பிரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக தம்மில் அயனப்படுத்துவோனாதலால் (ஜீவோத்பதி) ஜகஜ் ஜீவ நாயகனெனத் தட்டில்லையிறே.

சச்சிதாநத்த மயமான பரமபத நிர்வாஹனாவது.
சுக்ல யஜுஸ் நிராலம்ப உபநிஷத்.
” ப்ராணேந்தர்யா அந்த கணர்ண குணாதேஹ பர தரம் சத்சிதாநந்தமயம் ஸர்வ சாஷிஹம்
நித்ய முக்தர் ப்ரஹ்மமஸ்தாநம் பரம பதம்”
-என்று வாக்கு மனசுக்களாகிய ப்ராணேந்தர்ய வியாபாரங்களுக்கு எட்டாததும், ப்ரம்ம ருத்ரேந்தராதி தேவர்களளால் அறியத், தகாததும், த்ரிகாலத்தும் பரத்வ நிலை பெற்றதும், சத், சித்,ஆநக்த மயமானதும், சர்வ சாக்ஷியமானதும், விஷ்வக் சேநாதி நித்தியர்களும், ஸ்ரீமந் நாரணனையே உபாயோபேயமாய் ஆஸ்ரயித்துய்யும் சடகோபாதி ஜீவந் முக்தர்களும், வர்த்திக்கும் பர ப்ரஹ்ம ஸ்தானம் பரமபதம் என்றும்,
த்ருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
“ஸுத்த சத்வம் மயோ லீலா க்ருஹித நிரதிசயானந்த லக்ஷணோ மாயோபாதிகோ வைகுண்ட நாராயண-
என்று சுத்த ஸத்வமாயும், பஞ்ச பிரளயானந்தரம் பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனின் வாஸஸ்தானமாயும், நிரதிசையானந்தமயமானதும், மாயையாதி சகல விகார ரஹிதமான தாயும், நித்யமானதாயும் விளங்கியது பரமபதம் -என்றும்
அதர்வசிகை
“யந்த தேவாந்த முநயோந ஸாஹந்ந ஸ ஸங்ரஹ
ஜாநந்தி பரமே ஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்”
என்று தெய்வ சபைபில் தானே பிரம்மா, யதார்த்த பிரசங்கிதமாக தேவர்களாலும், ஜனகாதி முனீஸ்வரர்களாலும், பிரம்மாவாகிய என்னாலும், சம்ஹார காத்தர்வாகிய சங்கரனாலும், பரமேஸ்வரனாய் விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனது நிரதிசையானந்த மயமான பரம பதத்தை அறிய முடியாது என்றும்,
யஜுஸ் மண்டல ப்ரம்ம உபநிஷத்
“ தந் மனோ விலயம்யாதி தத் விஷ்ணு: பரமம் பதம் ”
என்று மஹா மேருவை ஆதாரமாய் கொண்ட கைலையாதி சத்யலோகம் முதலான லோகங்களும் பிரம்ம, சிவ , இந்தராதி சகல தேவர்களும், கற்ப க்ஷயத்தில் ஸ்ரீமந் நாராயணனால் ஹரிக்கப் பட்டு பின்னர் பரம பத நிர்வாஹநாய் விளங்குகிறானென்றும்
“பேதாபாவாத்யேத தேவ பரமதத்வம் ” என்று சச்சிதாநந்த மயமானதும்,நிர்விகாரமானதும், ஸ்வயம் பிரகாசமானதாயுமுள்ள, பரம பதமே பரமாத்மாவின் வாஸஸ்தானமான தென்றும், அப் பதமே மோக்ஷ ப்ரதானமென்றும் மிச் சுருதி ஆணை யிட்டுரைத்து விட்டது.

ஸ்ரீவிஷ்ணுபுராணம் 6-ம் அம்சம்.
“தத் ப்ராஹ்ம தத் பரந்தாம தத்யேயம் மோக்ஷகாங்ஷிபி
ஸ்ருதி வாக்யோதிதம் ஸூக்ஷ்மம் தத் விஷ்ணு: பரமம் பதம்”-
என்று யாதொரு பர ப்ரஹ்மம் இச் சராசர ப்ரபஞ்சங்களனைதையும் உண்டுமிழ்ந்து அளந்தாண்டதுமான வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து நடத்த வல்லதோ அப் பரம் பொருளே பரந்தாமனென்று ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசங்களும் ப்ரதிபாதிக்கின்றதோ அப் பொருளின் நிர்வாஹ ஸ்தானமே மோக்ஷ ஸ்தான பரமபதம் என கண்டிதமாயுரைத்து விட்டபடியால் ஸ்ரீமந் நாராயணனே பரம பத நிர்வாஹனென குறை யில்லையிறே ஆகையாலே யிறே ஜகஜ் ஜன்மாதி காரண பூதனும், சர்வாந்தர்யாமியும்,
த்ரிகுண அதீ தமானவனும், சர்வவேத ப்ரதிபாத்யனும், ஜீவோத்பதியும், சச்சிதாநந்தமயமான பரம பத நிர்வாஹனுமான ஸ்ரீமந் நாராயணனே சகல நிர்வாஹனென்றும், ப்ரஹ்ம சப்த பரதிபாத்யனென்றும், பரமேஸ்வரனென்றும், ஸர்வ ஸேஷி என்றும், வேத வேதாந்தாதிகள் பன்முறை முறையிடுகின்றன.

நீலகண்ட சிவாச்சாரியரும், சிற் சில சாஸ்த்ர பயிர்ச்சி யுள்ளோராயினும், தாம் ஓர் பாஷ்யம் செய்ய வல்லோராயினும்,வேத யதார்த்தம் விளங்காததினாலோ, அர்த்த மறியாமையினாலோ, சைவ அபிமானத்தினாலோ வேத தாத்பர்யங்களுக்கு சிவ பரமாய் வியாக்யானம் செய்யப் புகுந்த காலத்தும் மஹோபநிஷதாதி ஸ்ருதிகள் இடங்கொடாமையால் கேவல நிமித்த காரணம் சிவனென்கிற சைவ வாதத்துக்கு நேர் விருத்தமாய் ஜகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ப்ரஹ்மமென்று தமது நீலகண்ட பாஷ்யத்தில் சொல்லி யிருக்கிராறாயினும் இவரது பாஷ்யத்தை ஸ்ருதியாதி ஸாஸ்த்ரங்களும், யதார்த்தவாதிகளும், பாஷ்யகாரரென சரஸ்வதியால் பட்டப் பெயர் தரித்து மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த சத்வ குண விசிஷ்டாத்வைத மதத்தை நிலைநாட்டிய ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், இன்னும் இதர பாஷ்யகாரரும் சம்மதியாராகையால் இவரது பாஷ்யம் கண்டிக்கத் தக்கதே.

ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனாவது.
அதர்வண முண்டகோபநிஷத்,
“ யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்யஸ்ய ஜ்ஞாநமயம் தப :
தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூப மந்நம் சஜாயதே”?-
என்று யாதொரு பரமேஸ்வரன் அநந்தங்கோடி பிரம்மாண்டங்களையும் தனது வக்ஷஸ்தலத்தில் லயிக்க வல்லவனாயும், த்ரிகுண பிரதானியாயும், சர்வஞ்யத்வாதி கல்யாண குண பரிபூரணனாயுமுள்ளான் யாவனோ அவனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், “யதேதத் பரமம் பரமஹ : வேத வேதேஷு பக்ஷயதே ஸ தேவ: புண்டரீ காக்ஷ: ஸ்வயம் நாராயண ப்ரபு : என்று த்விதீயமான பர ப்ரஹ்மமாயும், சர்வ வேத பாதிபாத்யனாயும்,பர தேவதையாயும், செந் தாமரை புஷ்பமொத்த நேத்ரங்களை யுடையவனும், ப்ரபுவுமான ஸ்ரீமந் நாராயணனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், சாம வேத மஹோபநிஷத். “நாராயண பர ப்ரஹ்மத்வம் நாராயண பர:”என்று நாராயண சப்த வாச்சியனான ஸ்ரீ மந் நாராயணனே ப்ரஹ்ம
சப்த ப்ரதிபாத்யனென ஸ்ருதிகளும் ஊர்ஜிதப் படுத்தி விட்டன.

திருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
” நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர : நாராயண பரோ ஜோதி ஆத்மா நாராயண பர
:”என்று ஸ்ரீமந் நாராயணனே பர ப்ரஹ்மமென்றும், பரமாத்மா வென்றும், அந் நாராயணனே பரஞ்ஜோதி மய ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென நிலை நாட்டப்பட்டது.
ஷ உபநிஷத்
“ திசச்ச நாராயண; காலச்ச நாராயண :
கர்மாலகிலஞ்ச நாராயண : காரணாத்மகம் ஸர்வம் கார்யாத்மகம் ஸகலம் நாராயண : நாராயண பர ப்ரஹ்ம நாராயண நமோஸ்துதே
” என்று சர்வ அண்டங்களும், அதிலுள்ள சராசர சமூஹங்ககளும், ஸர்வ திசைகளும், த்ரிகாலங்களும், நாராயணன், வேதாத்யயன கருமங்களும் தத்தத் பலன்களும், தக் கருமதேவதைகளும், தத் கருமத்தை செய்பவனும் நாராயணன் சகல காரணங்களும், சகல காரியங்களும் நாராயணனே அப் பர ப்ரஹ்ம் ஸ்வரூபனும், பரமாத்மாவுமான ஸ்ரீமந் நாராயணனை நமஸ்கரிக்கின்றேனென்று ஸ்ருதி உத்கோஷிக்கின்றது.
” அதகஸ்மாதுச்சீதே யேகோ நாராயண பரப்ரஹ்ம்?” என்று ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனான நாராயணனுக்கு சகல ப்ரம்மாண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாகந்த முள்ள தேவ,
மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி பூத பௌதிக சராசர சமூகங்களும் த்ரணீகரிக்குமாறு வரம்பிடப் போகாத ஒத்தார் மிக்காரில்லை யெனக் கண்டிதமா யுறைத்து விட்டது.
ந நாராயண சமோ நாந்ய ஸர்வ லோகேஷ வித்யதே“. என்று போதாயனரும் தமது ஸூத்ரத்தில் அவ்வாறே அண்டங்களும், சர்வ தேவர்களிலும் ஸ்ரீமந் நாராயணனுக்கு
மேரு த்ரணாதியென வரம்பிடப் போகாத அளவிறந்த வேற்றத்தை யுடைய பர ப்ரஹ்மமென்று அறுதியிட்டனர்.-இத்யாதி ப்ரஹ்ம சப்த்த ப்ரதிபாத்யனும்,ஜீவோத்பதி
யும், ஜகஜன்மாதி கரரண பூதனும், சச்சிதாநந்த மய பரம்பத நிர்வாஹனுமாய் நின்றவன் ஸ்ரீமந் தாராயணனென்று வேத வேதாந்தாதிகள் ஏக கண்டமாய் ஊர்ஜிதப்படுத்தி விட்டன.

பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனேயாய் ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகலதேவ மநுஷ்யாதி வர்க்கங்களனைத்தும் ஜீவாத்மாக்களேயாயினும், சிவபிரான் பக்த சிரேஷ்டனெனல்
சுக்ல யஜுர் ப்ரஹதாரண்யோபநிஷத்
” யச்ரமாத் தப ஸோபிஜாதோ ஸித்யப்ரவித் “என்று ருதான் செய்ததவங்கள் செய்து சிவனாயினான் என்றும்
க்ருஷ்ணோபநிஷத் ” ருத்ரேபக்தேப்ரஹ்மணி ” என்று ருத்ரனான சிவன் ப்ரஹ்ம ஞ்ஞானியான மஹா பக்தனென இச்சருதி கூறுகையாலும்,
க்ருஷ்ண யஜுஸ் ஸ்வேதாஸ்வத உபநிஷத்-3-ம் அத்தியாயம் 4-வது மந்த்ரம்
“விஸ்வாதி கோருத்ரோடமஹருஷி : எ
ன்று சிவபிரான் இப்பிரபஞ்சத்தில் சிரேஷ்டமான தபசியாய் விளங்குகிறானென்றும்.
ருத்ரகீதை அகஸ்தியசம்ஹிதை, பிரம்ம புராணம் ” சாம்பேய புஷ்ப ஸஹஸ்ரை: ஆநர்ச்ச சங்கரோ ஹரிம் ” என்று சிவபிரானது பக்தியின் மிகுதியாலே ஆயிரம் சண்பசக புஷ்பங்களினால் பரமாத்மாவான ஹரியை அர்சித்து பக்திப் பெருக்கைப் பிரசித்தப்படுத்தினா ரென்றும்.

பாத்மோத்ரகாண்டம்
” கைலாஸ சிகரோம்யே விஷ்ணுமாராத் தயசங்கர : உபவிஷ்டத்ததோ போக்தும் பார்வதீம் சங்கரோப்ரவித் “
” என்று கைலாய சிகரத்தை ஸ்தானமாய்க் கொண்டு இந்நிக்ருஷ்டமான சம்ஹாரத் தொழிலிநின்றும் விடுபட்டு பரப்ரஹ்ம சாயுஜ்யமான பரமபதத்திற்சென்று பரமாத்மா வைபவாதந்தத்தை அனுபவிக்க வேண்டியே நான் ஸ்ரீ மாஹாவிஷ்ணுவை இடைவிடாது தியாநிக்கிறேனென்று தனது பத்நியும், பர்வத ராஜனின் புத்ரியுமான பார்வதியுடனே சிவபிரான் பரமாத்மாவினிடம் தனக்குள்ள அந்தரங்க பக்தியை வெளி யிட்டன ரென்றும்.

இத்யாதி ச பாகவதத்தில் ஸ்ரீ வேதவ்யாஸ பகவான்
“ஹஸ்தேக்ஷ்மாலா ஹ்ருதய ராமதத்வம் ஜி
ஹ்வாக்ரபாகேவரராம மந்த்ரம் ஸமஸ்த்தகே கேசவ பாத தீர்த்தம் ஸ்வம் மஹாபாகவதம் ஸ்மராமி ”
-என்று சிவனது ஹ்ருதயத்தில் ஸ்ரீ ராமபிரானே ஜகத்காரண வஸ்து என்ற தியானமும்,நாவில் அம் மஹாமந்தரமே உச்சரிப்பும், கரத்தில் அம்மந்தர ப்ரதானனென விளக்கப்படும் ஜப மாலிகையும்,அப்பரமாத்மாவின் ஸ்ரீபாத தீர்த்தத்தா லலங்கிருதமான
சிரசும், அப்புருஷோத்தமனுக்கே தான் அந்தரங்க பக்தனென வெளிப்படையாய் விளக்கிக் காட்டவல்ல ஜடையாதி சின்னங்களாகையால் சிவன் மஹா பக்தனே என்று நிச்சயிக்கப்பட்டது.ஸ்வாக்ருதி: பஸ்மவிகிதகாத்ரேசர்மம்பரம். பிரம்ம கபால மாலாத்ருதாக்ஷமாலாபி ருகாகநஸ்த ஜடாதராதி வசனாகிமேயம்-என்று சிவபிரானது பக்தியின் நிலைமை, திரேகமெல்லாம் பஸ்மத்தாலலங்கிருதமாயும், பிரம்ம ஹத்தியினாலே தொத்திய மண்டையோடுடைய அஸ்தமும்,ஜபமாலிகையாதி ஜடை முடி தரித்து சிரசும், புலித்தோலுடைய ஸ்மஷான நிரவாணி ஸ்வரூபமமையப்
பெற்றதுமான பக்தியின் பெருக்கை நிரூபிக்க வல்லவனென்றும்.இத்யாதி சகல ப்ரமாணங்களாலும் சிவன் பக்த சிரேஷ்டனென்றே நிரூபித்து விட்டன.

இதற்கிணங்கியே வேதபுருஷனாய் விளங்கிய திவ்யகவி அழகிய மணவாளர் அருளிச் செய்த. அஷ்ட பிரபந்தத்தில்
புகலிராமனடி கொள் பாதுகையகலு முக்கண்ணன் காமதே
திங்கள்சூழ்திருச்சித்ர கூடமேவிய யெங்கள் கோவிந்தராஜர்க்கு
தினமுமே கூத்தாடியானவன் திருச்சிற்றம்பல வணனே
” என்றும்,
கானேந்து தாமரை வாவி யுளானை கராவினயர்ந்
தூனேந்து மூல மென்றோதிய நாட் சென்றுதவுகையால்
தேனேந்து சோலை யரங்கனல்லாற் றெய்வமில்லை யென்றே
மானேந்து கையன் மழுவேந்தினானிந்த மாநிலத்தே”
என்றும்,
சர்வ சாஸ்திர நிபுணரும் வேத யதார்த்தம் நன்குணர வல்லவருமான ஸ்ரீமாந் ராமாநுஜ நாவலரும் தமது வைராக்ய சூர்யோதய மென்னும் சாத்விக க்ரந்தத்தில், பதித பாவனனான அப்பராமாத்மாவினுடைய ஸதா ஸ்ரீபாத தீர்த்த மாலாலங்காரண சேகரராம்.
கரத்திலுறுஞ் சபவடத்தை யகற்றேனென்னைக் காணு மகக்கண்ண தனைக் களையே லென்றும் சிறத்தை யுறச் சீராம நமவோ மென்னுஞ் செந்நாவை யெந்நாளுந் தெரிந்து நீக்கேல் ”என்கிறபடியே ஸ்ரீராம ராம ராமா வென்று வாய் நிறைந்து குளிரடைய, உடலம் புளகிக்க, ஜபமாலிகையோடு அவனது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஸ்ரீராமாந்தத் நாண்டவஞ் செய்து ,வர்த்தித்து வருதலில் சாம்பசிவ நடேச மஹாப் பிரபுவைப் போலே யிருக்கவேண்டும் பக்தியின் மிகுதியென்றும், சிவனது பக்தியும் பரமாத்மாவின் பிரசன்னமும்-பாத்ம புராணம் 37-வது அத்தியாயம்.’அச்யுதாநந்த கோவிந்தம் மந்த்ர மானுஷ்டுபம் சுபம் ஒந் நமஸ் ஸம்பு டீருத்வா ஜபந் விஷ ரோஹர் : என்று திருப்பாற் கடைந்ததில் நின்றும் பெருகிய விஷத்தைப்பார்த்து திடுக்கிட்டு பயந்து தன்னால் நிவர்த்திக்க சக்தி யற்ற காலத்து (அச்சுதாநந்த கோவிந்த) வென்ற திருநாமத்தை பக்தி புரஸ்சரமாகத் த்யாநிக்க,அபயஸ்தமானதும் அநந்யாரஹமானதுமான தத் பக்திக்கு பரமாத்மா பிரசன்னராகி ருக்வேதம் 8-ம் அத்தியாயம் 23- ம் வர்க்கம் ” கேச்யாக்ம் கேசி விஷம் கேசீ பிபர்த்தி ரோதஸீ கெசி விஷஸ்ய பாத்ரேன யத் ருத்ரேணா பிபத்ஸஹ” என்று ருத்ரனாகிய அச் சிவ பிரானின் பீதி யடங்கத் தான் அவ் விஷத்தைப் பக்ஷித்து உம்மையும் ரக்ஷிக்கிறேன் பயப்படாதே யென்று கேசியான ஸ்ரீமந்நாராயணன் பீதியடைந்த பிள்ளைக்கு,எவ் வஸ்துவால் அப்பிள்ளைக்குப் பீதி ஏற்பட்டதோ அவ் வஸ்துவைக் கொண்டே அப்பிள்ளையின் பீதியைப் போக்குமாப் போலே சிவபிரானை பீதியடையச் செய்த அவ்விஷத்தை அச்சிவனின் கரத்தையே அவ் விஷத்திற்குப் பாத்திரமாகக் கொண்டு விஷத்தைத் தான் பானம் செய்து ரக்ஷித்தனரென்றும்,

ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அசம் 33 ம் அத்தியாயம்
‘ க்ருஷ்ண க்ருஷ்ண ஜகநாத ஜாநேவாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாத்ம நாதிநித நம் ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத்மிகா லீலேயம் ஸர்வ பூதஸ்ய தவ சேஷ்டோப லக்ஷண
–என்று சிவபிரான் தன்னை சாணமடைந்த வாணாஸூரனை தலை
மயிர் பூ வாடாமல் ரக்ஷிக்கிறேனென்று ப்ரதிஞ்ஞை பண்ணித் தன்னை தொழுத கைகளைத் தன் முன்னே கள்ளிக் காட்டைச் சீத்தாற்போல் ஸ்ரீகண்ணபிரான் சீக்கக் கண்டு உயிரோடிருந்தால் உப்பு மாறியேனும் பிழைக்கலா மென்றெண்ணி நடுங்கி, குடும்பத்தோடு நெற்றிக் கண்ணை புதைத்துக் கொண்டு ஸர்வ சரண்யனான கிருஷ்ணனை அஞ்சவியஸ்தனாய், ஒ க்ருஷ்ண பரமாத்மா, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஆதியந்தமில்லாதவனே,லோக ரக்ஷணார்த்தம் அவதரித்தவா, இவ் வமயம் தேவரீர் மநுஷ்ய சரீரத்தை அவலம்பித்ததை அடியேனறியேன் இச் சமயம் அடியேனை ரக்ஷித்தாண்டருள வேணுமென்று பிரார்தித்து சரணமடைந்த அப்பக்திக்கு இரங்கி ரக்ஷித்தனரென்றும்,

பாத்மபுராணம் உத்ரபாகம் மஹாமஹாத்மியம் 20-ம் அத்யாயம்.
“ ப்ரக்ருதம் ச்ருணு ராஜேந்த்ர கபால பாணி
நாதத் லோகேக பாவீ பிக்ஷார்த் தீ பக்ஷமடதி சங்கா ?”-
என்று சிவன் பிரம்மஹத்தியினால் தொத்திய மண்டையோட்டுடன் லஜ்ஜை யுற்றவாைய் ஷேத்திரங்கள் தோரும் பிக்ஷை
யாசிக்கப்பட்டும், தமது பிரம்ம ஹத்தியை நிவர்தித்துக்கொள்ள யதொரு உபாயமும் காணப் பெறாமல் வருந்தினவனாய் ராமேஸ்வரமே தமக்குப் பிரதான க்ஷேத்ரமெனக் கருதி பாத்மோத்திரத்தில்,ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வராநநே-தனது தாரக மந்தரமாயுமுள்ள, ஸ்ரீராம மஹா மந்தராதி ஜப மாலிகையுடன் ஸ்ரீராமாநந்தத் தாண்டவஞ்செய்து வர்த்தித்து வரும் தத் பக்தியை,யஜுர் ராமோபநிஷத் 22-ம் ஸ்காந்தம் வேத வேத்யே பரே பும்ஸி ஜாதேத ஸரதாத்மஜே”-என்று பரமாத்மாவும், வேத ப்ரதிபாத்ய பரமபுருஷன் சக்ரவர்த்தித் திருமகனாய் வவதரித்தவனுமான ஸ்ரீ புருஷோத்தமன்-ராமோபநிஷத் பக்த்ய மந்த்ரேணா நேநமாம் ஸிவ பிரஹ்மஹத்தி யாதி பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாஸூஸ:” என்று சிவபிரானினது அகோசரமான பக்திக்குப் பிரசன்னராக சந்தோஷித்து இஸ் க்ஷேத்திரத்தில் ராம தாரக மந்திரங்களினாலே உண்மையான பக்தியுடன் என்னை தியானித்தீராகையால் யாம் கருதார்த்தாரானோம். உமது பிரம்மஹத்தியாதி பாபங்களில் நின்றும் விடுவிக்கிறோம். க்ரம க்ரமாந்திரத்தில் என்னுடைய சாயுஷ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறோம். ஓய் சிவனே பயப்படாதே யென்று அபயஸ்தம் கொடுத்து பிரம்மஹத்தியைப் போக்கிய க்ஷேத்திரமே ராமேஸ்வரமென்றும்

பிரயாஹைமஹாத்மியம் தத்ர நாராயண : ஸ்ரீமாந் மயாபிக்ஷாம் பராய ஸித விஷ்ணு ப்ரஸாதாத் ஸு ச்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ர தாஸ்புடி தம் பஹுதாயாதம் ஸவப்ந லப்தம் தநம் யதா “என்று பர்வதராஜன் புத்ரியும், எனது பத்நியுமான பார்வதியே என்னுடைய பிரம்ம ஹத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று என்னால் ஸ்ரீமந் நாராயணனிடம் பிக்ஷை யாசிக்கப்பட்டு அப்பரமாத்மாவின் பிரசாதத்தினால் யென் கையிலொட்டிய பிரம்ம கபாலமானது ஆயிரம் சுக்கலாய் தூளியாய் ஸ்வப்னத்தில் கண்ட தனமானது விழித்துப் பார்க்குமளவில் காணாதாப்போல் பறந்து போயிற்றென்று உமாதேவிக்கு யதார்த்தத்தை வெளியிட்டதுமான க்ஷேத்திரமே ராமேஸ்வரமாய் நிற்க,அதைச் சார்ந்த பாம்பன் கிராமத்தில் வசிக்கும் குமரகுரு தாஸனென்பானால் வரையப்பட்டுள்ள சைவ சமய சரபமென்னும் த்வேஷ்ப் பண்டாரச்சுவடியில்,தனது பூரண பாண்டித்வத்தைக் காட்டும் பொருட்டோ,தான் சங்கரனுக்கே அறத்தீர்ந்த பக்தனென பிறர் மெச்சும் பொருட்டோ, அல்லது சைவ எல்லப்பநாவலன், துறைமங்கலம் சிவப்பிரகாசன், கச்சியப்ப சிவாச்சாரி முதலானவர்களைப் போல் தாமும் பண்டார சமயாச்சாரியாக வேணுமென்னும் ஆவலுள்ளவனும், தன்னைத்தானே புகழ்ந்தவனுமாய்த் தான் சிவ நிஷ்டையிலிருந்ததாயும், அந்நிடை முடிந்தவுடன் பசி,தாகாதி, சோகங்களினால் இந்திர்ய மாருதலினாலோ,பித்த அபிவிரத்தியினால் திகைத்த நினைவினாலோ, தாமஸ குணனான சிவ நிஷ்டையினாலேற்பட்ட தாமஸத்தினாலோ, அல்லது அறிவின்மையினாலோ, அப் பண்டாரத் தூஷணச் சுவடியை வரைந்தன னென்றும், தாம் 108 உபநிஷத்துக்களையும், 18 ஸ்ம்ருதி,18 புராணங்களையும் நன்குணர்ந்தவனென்றும், இவ்வாறு மேல் குறித்த யாவும் கரதலமலமாக நன் குணர்ந்தோனாகையால்,அவைகளிலுள்ள அசாரங்களைத் தள்ளி சாரங்களே தாமாகக் கருதி உபநிஷத்துக்களில் 109 ஆவதாகவும் ஸ்ம்ருதிகளில் 19, ஆவதாகவும், புராணங்களில் 19, ஆவதாகவும், தனது சைவ சமய சரபமென்னும் தூஷணப் பண்டாரச்சுவடியை கல்பித்துத் தாமும், தம்மைச் சார்ந்தவர்களும், மற்ற யாவரும் மதிக்கத் தக்கதென அபிப்பிராயமேற்படுவதாலும், தமதுச் சுவடியில் ஆதியந்தமென்னும் புத்தக ரூப கோட்பாடில்லாமையாலும், வீண் நிந்தகமே புத்தக ரூபமாயிருப்பதாலும், புரட்டுகளும், அனர்த்தங்களும், அஹங்காரங்களுமான க்ரூர வசனங்களால் நிந்தித்துத் திரியும் த்ரோஹியாயிருப்பதாலும், வேத வேதாந்தாதி சகல ப்ரமாணங்களாலும், த்வேத யதார்த்தங்களாலும், அகில பாஷ்யங்களுக்கிணங்கியும், சகல ஜன சம்மதமாயும், இவனதுச் சுவடியின், புரட்டுகளை வெளிப்படையாய் கண்டிக்கவும்,அனர்த்தங்களை நிராகரித்து யதார்த்தங்களை ஸ்தாபிக்கவும்,அஹங்கார க்ரூர வசனங்களை வெட்டி யடியோடொழிக்கவும்,சகல வேத வேதாந்த்தப் பிரதிபாத்தியமான மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த ஸத்வ குண விசிஷ்டாத்வைத மதமே சத்யமென நிலை நாட்டவுமே யாம் முன் வந்தோம்.

யதார்த்தமாய் வேத சாஸ்திரங்களால் முறையிடப்படும் ஸ்ருஷ்டிக் கிரமம்.
ஸாம வேதம் சாந்தோக்ய உபநிஷத் 6-வது ப்ரபாடகம்-2-வது காண்டம் 3-வது வாக்யம்.
“ததைக்ஷத பஹுயாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோஸ்ருஜா” என்று பரமபத நிர்வானான ஸ்ரீமந்நாராயணன் பரமபதத்தை விட்டு மூலப்ரக்ருதியை யடைந்து அநந்தங்கோடி ப்ரம்மாண் டங்களையும் சங்கல்ப்பித்தார்,-ருக்வேதம் நாராயண உபநிஷத்-ஹரி ஓம் ஹத புருஷோஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ்ருஜே யேதி நாராயணாத் ப்ராணோஜாயதே, மநஸ் ஸர்வேந்திரியானிச கம் வாயுர் ஜ்யோதி ராப ப்ரதி விச்வஸ்ய தாரிணி நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே, நராயணாத் ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோஜாயதே,நாராயணாத் வாதசாதித்ய ருத்ராவஸவஸ் ஸர்வாணி சந்தாம்பி நாராயணாத் தேவாஸ் முத்பத்யந்தே, நாராயணாத் ப்ரவர்த்தந்தே நாராயணாத் பரலீயந்தே.”என்று ஆதியந்தகிதனான ஸ்ரீமந்நாராயணனது சங்கல்ப மாத்திரத்திலேயே சகல ஜீவாத்ம கோடிகளும் ஸ்ருஷ்டியாயி அவனிடத்திலிருந்தே மனஸ் ஸர்வேந்திர்யங்களும், ஆகாசம் தொடக்க மான ப்ருதிவி வரைக்குமுள்ள அநந்தங்கோடி ப்ரமமாண்டங்களும் பிரம்ம, ருத்ர, இந்த்ர, த்வாதசாதித்ய,ஏகாதச ருத்ர, அஷ்ட வசுக்களுமான தேவர்களும், சகலமும் உண்டாயினவென்று.., அவனாலேயே அவையாவும் ஜீவித்திருக்கின்றன வென்றும், பின்னர் அவனாலேயே யாவும் ஹரிக்கப்படுகின்றன வென்றும் ஸ்ருதிகள் முறை யிடுகையாலும்,

மஹா நாராயணோபநிஷத்.
ஹத புருஷோஹவை நாராயணஸ் ஸோகாமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி
ஆஸ்ருஜன் நாராயணாத் ப்ரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே,
நாராயணா திந்தரோ ஜாயதே,நாராயணா த்வாதஸாதித்யா ருத்ர வஸவ:ருஷய: ப்ரஜாதயச்ச பூர்வே தேவாஸ் ஸமுத்பத்யந்தே)
என்று பரமபுருஷனான ஸ்ரீமந் நாராயணனிடத்திருந்தே ப்ரம்மன், சிவன் இந்த்ரன், த்வாதசாதித்யர் ஏகாதச ருத்ரர்கள் அஷ்ட வசுக்கள் ஸப்த ருஷிகள், நவ ப்ராஜாபதிகள் முதலானோர் உண்டாயின ரென்றும்

யஜுர்வேதம்
” யதோர்ண நாபீஸ் ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா ஒஷதயஷ்
ஸம் பவந்தி யோசௌச யதோ விஷ்ணுஸ் ஸத்வ குண ப்ரணீதோபவத் தஸ்ய நரபேர ஜோத்மா ஸ்வயம்பூ : ததாதஸ் யப்ருவோந்த ராலாத் தமோ ருத்ர
: “என்று ஊர்நாபி என்கிற சிலந்திப் பூச்சியானது எவ்வளவு காலத்தில் நூலை ஸ்ருஷ்டித்து பின்பு கிரஹிக்கின்றதோ அவ்வாறே பரமாத்மா பருதிவ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்து,
ஸ்ருஷ்டித் தன்றே கிரஹிக்கின்றானென்றும் அன்றே என்கையாலே, அவனது நித்யத்தைச் சொன்னபடியாலும் சுத்த சத்வ குணனென்றும், அவன் தன்னை யொழிந்த சர்வராலும் தொழப் படுகிறானென்றும் அவனுடைய நாபிக் கமலத்திலிருந்து ராஜஸ குணனான ப்ரம்மா பிறந்தானென்றும், அப்பிரம்மாவின் நெற்றிப் பிரதேசத்திலிருந்து தாமஸ குணனான சிவன் பிறந்தானென்றும், கூறுகையாலும்,

அதர்வண முண்டகோபநிஷத்
“யதோர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா வோஷதயஸ் ஸம்பவந்தி யதாஸ்த புருஷாத்கேஸ லோமாநி ததா அஷராத் ஸம்பவதீஹவிஸ்வம் “
-என்று சிலந்திப் பூச்சியானது நூலை ஸ்ருஷ்டிக்கவும், பின்பு ஹரிக்கவுமான ஜாலத்தை செய்ய வல்லதோ, அவ்வாறே விராட் புருஷனான நாராயணன் அனந்தங்கோடி பிரம்மாண்டமும்,பிரம்ம, சிவ, இந்த்ராதி சகல சேதனாசேதனங்களனைத்தையும் ஸ்ருஷ்டிக்கவும், ரக்ஷிக்கவும், பின்னர் ஹரிப்பதுமான அசாதாரண க்ருத்தியங்களைச் செய்ய வல்லோனென்றும்,

யஜுர்வேதம்.–ஸப்ரஜாபதிரேக : புஷ்கர பன்னே ஸமபவத் லலாடாத் க்ரோதஜா ருத்ர: தரயக்ஷ: கண்ட பரசு: வரஜ்ஜநத் ஸம்வத்ஸரோ ஜாயத இந்த்ரோ வருண: ஸோமோ ருத்ர: பர்ஜந்யோயம்: ப்ரம்ஹண புத்ரா யஜ்யேஷ்டாய ச்ரேட்டாய புத்ராய ருத்ராய–என்று பிரம்மா ஒருவனே பரமாத்மாவின் நாபிக் கமலத்திலிருந்து உண்டாயினனென்றும், மற்ற ருத்ர, இந்திராதி தேவர்கள் அனைத்தும் ப்ரம்மனால் படைக்கப்பட்டவர்களே யென்றும்,ஆயினும் சிவனே ப்ரம்மாவின் ஸ்ரேஷ்டப் புத்திரனென்று இச் சுருதி கூறுகையாலும்,

யஜுர்வேதத்தில் 24 மந்திரங்கொண்ட தகர வித்தை.-“தஸ்மாத் விராட ஜாயதா விராஜோ ஹதிபுருஷ:ஸஜாதோ ஹத்யரிச்சதா யத்ஸ்யா பூமி மதோபுர.“-என்று விராட் புருஷனான அநிருத்த நாராயணனின் நாபிக் கமலத்திலிருந்து ஸ்வயம் பிரகாசமானதாயும், ஸ்வர்ண மயமானதாயுமுள்ள ப்ரம்மாண்ட முண்டாகி அதில் சதுர்முகப் பிரம்மா உண்டாயினர் பரம்மாண்டத்தை சரீரமா யுடைய அநிருத்த நாராயணனுடைய நாபிக் கமலத்திலுண்டான சதுர்முகப் பிரம்மா பெரிய தேஹத்தை யுடையவராய் ஸ்ருஷ்டியாதி க்ரமங்களில்
ப்ரவேசித்தாரென்றும்,
ஸாமவேதம் மஹோபநிஷத்-* ருத்ரச்ச ஸர்வாவா பூத ஜாதய: நாசமேவா
நுதா வந்திலி ஸலாநீவ பாடபம்.”
என்று வேத ப்ரதிபாத்யனான நாராயணன், ப்ரம்ம, ருத், இந்ராதி தேவர்களையும், பூதங்களையும் ஸ்ருஷ்டித்தனரென்றும்,
மநு ஸ்ம்ருதி.-” ஸோபித்யாய சரீராத் ஸ்வத்ஸ்ஸ்ரு ஸுர் விவிதா ப்ரஜ:-என்று பகவத் சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் தன் திருமேனியிலிருந்து வேறு பட்ட ஆத்மாக்களின் தத்தத் காமானுகுண சரீரங்களை சங்கல்ப்பித்தவராய் ஜலத்தைத்
தோற்றுவித்து அதில் அண்டத்தை நிர்மித்து தன் நாபிக் கமலத்தில் நின்றும் சதுர்முகனை ஸ்ருஷ்டித்து அப் பிரம்மனால் அவ்வாத்மாக்களை ஸ்ருஷ்டிக்க நியமித்தனரென்றும், மநுஸ் மருதியிலும் ஸ்பஷ்டமாய் விளக்கப்பட்டிருக்கையாலும், இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல ப்ரமாணங்களாலும் ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே பிரம்ம, சிவாதி தேவர்களும், அனந்தமான பிரம்மாண்டங்களும் உண்டாயினவென்று நிர்ணயித்துவிட்டன. –

பஞ்சப்ரளய கால சம்ஹார க்ரமம்.-ஸாம வேதம் மஹோபநிஷத்-” ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந : ந ஹிமே ப்ருதிவ்யாந நக்ஷத்ராணி “என்று பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான அகிலாண்டங்களும்,-ஒவ்வோரண்டங்களிலுமுள்ள பிரம்ம, சிவன் முதலான தேவர்களும் பஞ்ச ப்ரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக சம்ஹரிக்கப்பட்டு பின்பு நாராயணனொருவனே யிருக்கின்றானென்றும்,
ஆங்கீரஸ உபநிஷத்.
” ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரம்மா ந சங்கர: ஸமுநிர்பூத்வாஸ்
மசிந்தயத் தத ஏதேத்யா நாஜ்ஜாயந்தே விஸ்வோ ஹிரண்ய கர்ப்போக்நி, யம், வருண,ருத்ர, இந்தர
;-என்று பிரம்ம, ருத்ர, ஈசான்ய பருதிவ்யாதிப் பதார்த்தங்களனைத்தும், கற்ப ஷயத்திலழிந்து, நாராயணனொருவனே முடிவிலிருக்கின்றானென்றும், பின்பு அழிந்த யாவும் அந் நாராயணனிடத் திலிருந்தே உண்டாகின்றன என்றும் இஸ் ஸ்ருதி கூறுகையாலும்,
ஷை உபநிஷத்.” யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரம் சோபேபவத ஓதநம்“-என்று நாராயணனுக்கு பிரளய காலத்தில், ப்ரம்மனும், குரோதசநான ருத்ரனும் இரண்டு கவள அன்ன ஸ்தானமாகிறார்களென்றும்

ஷை உபநிஷத்-“ ம்ருதயுர்ஸ்யோ ஸேசநம்”என்று பரமாத்மாவான நாராயணனுக்கு, கற்பக்ஷயத்தில் அநதங்கோடி ப்ரம்மாண்டங்களும், அதிலடங்கிய தேவ, மநுஷ்ய,திரியக் ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும் அன்னஸ்தானமும் பிரம்ம, ருத்ரர், ஊர்க்காய் ஸ்தானமுமா கின்றனவென்றும்
நாராயணோபநிஷத்-“நாராயணாத் ப்ரலீயந்தே”என்கையாலே நாராயணனிடத்திலேயே, சகல அண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள யாவும் லயிக்கின்றன
வென்றும்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1-ம் அம்சம் 2-ம் அத்தியாயத்தில் ஸ்ரீமந் நாராயணன் காலாக்கினி ருத்ரனைப் போலே பிரளய காலத்தில் மேக மண்டலத்தை பெருக்காற்றடித்தது போலச் சம்ஹாரம் செய்கிறானென்றும்.சிவ ரகசியத்தில் 3-ம் அம்சம் 1-வது காண்டம் 12-வது சர்க்கத்தில் ஸ்ரீமந் நாராயணன் ப்ரளய காலத்தில் ஜலத்தைப் பெருகும்படிச் செய்து காலாக்கினி ருத்ரனைப்போலே சர்வத்தையும் சம்ஹாரம் செய்கிறானென்றும்.
இத்யாதி வேத வேதாந்தங்களிலுள்ள ஸ்ருதி ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்களாலும், சகலாண்டங்களும், பிரம்ம ருத்ராதிதேவர்களும், ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே உண்டாயின வென்றும், பின்பு அவனாலேயே ஹரிக்கப்படுகின்றன வென்றும், நிச்சயிக்கப்பட்டிருக்கிறதேஅதர்வசிகோபநிஷத்.-” ஸர்வைச்வர்ய ஸம்பந்நஸ் ஸர்வேஸ்வரச் சம்புராகாச மத்யே”என்று தியானிக்கப் படும் தியேயனும் ஸர்வேஸ்வரனும் சம்பு வும்,சர்வாந்தர்யாமியும் ஆகாச மத்தியில் வியாபித்துள்ளோனுமானவன் ஸ்ரீமந் நாராயணன் என்பதே இச் சுருதியின் கருத்து.-மஹா நாராயணோபநிஷத்.-* ஸஹஸ்ர ஸீரிஷம் தேவம் விஸ்வாக்ஷம் விஸ்வ சம்புவும் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரம ப்ரபும் விஸ்வதஹ பரமாம் நித்யம் விஸ்வம் நாராயணோ ஹரி:”,
மைத்திராயண்ணியுபநிஷத், 7-வது பிரபாடகம் “அவித்யா மஸ் ரஜத்யா சிவ மசிவ மித்யூத்தி
-என்று அவித்தையாகிய, கருமகாண்டத்தில், சொல்லும், மோசடியான சாஸ்திரத்தை அஞ்ஞானிகள் நம்பி மங்களத்தை அமங்களமென்றும்,அமங்களத்தை, மங்களமென்றும் நம்பி நரகத்துக்கு ஆளாகிறார்களென்று இச்சுருதி கூறுகிறது. ஆதலால், இச்சுருதி “ சிவ ” யென்கிற சப்தத்திற்கு மங்களமென்றும், ” மசிவ,” அமங்களமென்றும்,அர்த்தம் கொள்கிறது-மஹா நாராயணோபநிஷத்
“விஸ்வ மேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுபஜீவதி பதிம் விஸ்வஸ்
யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் சிவ அச்சுதம் நாராயண மஹாங்யேயம் விஸ்வாத்மானம் பராயணம் நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர:
“-என்று இச்சுருதியில் பலவிடங்களிலும், மேஸ்வரம், சிவ முத லான சப்தங்களால் ஸ்ரீமந் நாராயணனுடைய குண முதலான பரமாத்ம லக்ஷணங்களை அலங்கார ரூபமாய் உத்கோஷியா நின்றது அன்றோ -அதாவது மேஸ்வரம் பரமேஸ்வரனாய், ஸாஸ்வதம்-அழிவற்றவனாய், சிவம் மங்களமானவனுமாய், அச்சுதம்–ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய், நாராயண மஹாங்யேயம்-நாராயண சப்த ப்ரதிபாத்யனாயும் விளங்கிய பர ப்ரஹ்மம் நாராயண னென்று பொருள் தரும்-சிவ, சம்பு, பரப்ரஹ்ம, பரஞ்சோதி பரதத்வ பரமாத்மா முதலிய சப்தங்களால் தியானிக்கப் படும் தேவதை சொல்லப்பட்டிருப்பதால் அச் சப்தங்களுக்கும் நாராயணனே பொருளென்று ஸ்தாபித்தனர்.

க்ருஷ்ண யஜுர் ஸ்வேதாஸ்வதர உபநிஷத்.-” ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் நதஸ்மஸ்ஸாப்தி கஸ்ஸத்துர்ஸ்யதே“-என்று ஜகத் காரணனான மஹேஸ்வரனுக்கு ஒத்தார்மிக்காரில்லை யென்றும்
“யத் வேதாதவ் யீஸ்வர ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய பிரக்ருதி லீனஸ்ய: பரஸ்ய மஹேஸ்வர
:என்று வேதங்களின் ஆதியிலும், அந்தத்திலும் சொல்லப்படுகின்ற பிரணவமெதுவோ அதன் பிறப்பிடமாகிய அகாரத்தி லினமாயிருப்பவனெவனோ அவனே பானும் மஹேஸ்வரனுமான பரப்ரஹ்மமென்றும் கூறுகையாலே ப்ரணவ ப்ரதிபாத்தியனும் அகாரத்தி லீனமாயிருப்பவனுமான ஸ்ரீமந் நாராயணனே மஹேஸ்வர சப்த பிரதிபாத்திய னெனத் தட்டில்லை.
மஹா நாராயணோபநிஷத் “” அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதமாபிதாம்“-என்று மேலே விளக்கப்பட்ட சுருதியில் கூறிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமென்றும்,-நாராயணோபஷத்” ஒமிதி சர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரண ரூப அகாரம் ?என்று சர்வ வேத பாதிபாத்தியமாயுள்ள ப்ரணவம் சர்வபூதங் களுக்கும் த்யாதாவாயும், அப் பிரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமாயும் விளங்குகின்றது என்றும்,
தியாநபிந்தூபநிஷத்
” அகாரே துல்யம் ப்ராப்தே ப்ரதமே பிரணவாம்சகே
அந்தரிக்ஷம் யஜூர் வாயுர்புவோ விஷ்ணுர் ஜநார்த்தந “
என்று ப்ரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரத்திலீனமாயிருப் பவன் யாவனோ அவனே ஜனார்த்தனனென்றும் த்ரயீ யென்கிற வேதங்கள் உத்கோஷிக்கையாலும்,
முண்டகோபநிஷத்-பிரணவோ தநு ?”-என்று பிரணவமானது நாராயணனது திருக்கரத்திலுள்ள ஸ்ரீ பாஞ்ச சன்னியமே யென்றும்,
” ஒங்காரோ பகவான் விஷ்ணு : த்ரயீன வசநாம்பதி
தஸ்யோ சாரமாத்ரேண பரப்ரஹ்மாதி கச்சதி “
‘என்று, ஓங்காரத்திற்கு ப்ரதிபாத்தியன் விஷ்ணு ஒருவனே யென்றும் அவன் த்ரயீ யென்கிற வேதங்களுக்கு நாயகனென்றும் – ஜீவர்கள் ஓங்காரத்தை உச்சரித்த மாத்திரத்தி லவனையே யடைகிறார்களென்றும், அவ் ஒங்காரத்தின் பிறப்பிடமாகிய அகாரம் அவனுடைய பிரதான திருநாமமென்றும்,
‘அகாரோவிஷ்ணு: பிரதமநாமோச்சயதே” என்று அகாரமானது நாராயணனின் பிரதான திருநாமமென்றும்
நாராயணோபநிஷத்-“ஒம் பிரதிகாநந்தம் -பரம் புருஷம் ப்ரணவ ஸ்வரூபம் “ என்றும்,
ஆத்மபோதோபநிஷத்
“ஓம் பிரதிகானந்தம் பரஹ்ம புருஷம் பிரணவ ஸ்வரூபம்
அகார, உகார, மகார, இதிதானே கதாசம்பவத் ததே ததோமிதி
யமுத்வாமுச்சயதே யோகீ ஜன்ம சமசார பந்தனாத்-ஓம் நமோ நாராயணாய இதிமந்த்ரோபச ?”
என்று சர்வாந்தர்யாமியாயும், ப்ரஹ்ம புருஷனாயும், ப்ரணவ ஸ்வரூபனாயும், யோகிகளின் சம்சார பந்தத்தைத் திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தாலே போக்குமவனாயும் விளங்கிய ஸ்ரீமந் நாரா யணனை இச்சுருதி தியானிக்கையாலும்,
கீதோபநிஷத்து
”அக்ஷராணா அகாரோக்ஷரம்
“-என்று அக்ஷரங்களில் அகாரம் நானாகிறேனென்று கண்ணன் கீதையில் கூறுகையாலும்,
இத்யாதி சகல பிரமாணங்களிலும் சிவ, சம்பு, மஹேஸ்வராதி நாமங்களனைத்தும் நாராயணனது கல்யாண குணங்களைக் காண்பிக்கும் பொருப்டே” சுருதிகள் அச் சப்தங்களால் வர்ணித் துரைக்கின்றமையாலும், வேத வேதாந்தாதிகளிலுள்ள ஸர்வாக்ஷரங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களாக விருக்கு மன்றிக்கே இதரமானவர்களைச் சொன்னதே யில்லை— சொல்லிய போதிலும் விஸ்வருபனான நாராயணனுடைய சரீரங்களாக விருக்குந் தேவதைகளைச் சொன்ன வாசங்களுக்
கெல்லாம் வாஸ்ய பூதன்ஸ்ரீய பதியே யாவன்,

பைங்களோபநிஷத்
” ஸஸ்வாதீந மாயஸ் ஸர்வஜ்ஞஸ் ஸ்ருஷ்டி ஸ்திதி லயா நாமாதி கர்த்தா ஜகதங்குர ரூபோபவதி
”-என்று அநந்த கோடி பிரம்மாண்டங்களின் ஸ்ருஷ்டி, ஸ்திதி,லயங்களுக்குக் காரண பூதனான ஸ்ரீமந் நாராயணன் தனது இச்சா-சத்தியாலுண்டான மாஹா மாயை யாகிய மூலப் பிரக்ருதியை ஸ்வா தீனமாயுடையவனாய், அம்மாயயைக் கொண்டே சகல ஜகத்தையும் படைத்தனன் என்றும்,
மஹா நாராயணோபநிஷத்
“ஸுத்த ஸத்வ மயோ லீலா க்ருஹீத நிரதிசயாநந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத்”-
என்று கற்ப க்ஷயத்தில் அம் மஹா மாயையான மஹாலக்ஷிமிக்கு வாசஸ்தானமானதும், அம் மாயையின் ஸ்வாதீனனான நாராயணனது விகாரமற்றதும், சுத்த சத்வ மயமானதுமான பரமபதம் என்றும்,
ஸ்ரீஸுக்த்தம்
” அஸ்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்தீநாத ப்ரபோதநீம்
ஸ்ரீயம் தேவீ மூபாஹ்வய ஸ்ரீமார்தேவீ ஜுஷதாம்
”-என்று சராசர பிரபஞ்சங்களையும் தமது ஜாலத்தாலே நிக்ரஹிக்கவும், ஹரிக்கமுடைய ஜாலமே குதிரைகளாகவும், அப் பிரம்மாண்ட ஸ்ருஷ்டி சம்ஹாரக் கர்த்தர்களை ரதமாகவும் கொண்டு ஜகத் காரணங்களை நடத்துபவளாயும், யாவற்றிற்கும் நாயகியாகவும், ஜகத் நாயகனான ஸ்ரீமந் நாராயணனின் திரு மார்பையே வாஸஸ்தானமாய், அந்த பரமேஸ்வரனோடே நித்ய ஸம்யுக்தை
யாய், “ பூத நாயகன் புவிமகணாயகன் பொருவில், வேத நாயகன் மார்பகத்தினது வீற்றிருந்த ஆதி நாயகி ” என்றும்
” உலகம் யாவையு மீன்றளித் தழித்திட்டு மொருவன் இலக மார்பகத்திருந் துயிர்யாவையுமீன்ற, திலகவாணுதல்”-என்றும்–“ ஏக நாயகன் மார்பகத்தினது வீற்றிருக்கும் ஆதி நாயகி “-என்றும் மலரில் மணமும், கல்லில் ஒளியும் போலே ஸர்வ லோக நாதனுடைய வக்ஷஸ்தலத்தில் நிரந்தரம் அநபாயினியாய் வாஸம் பண்ணிப் போருமவளென்றும், அவ்வாறிருக்கக் கருத்தேதென்னில், எம்பெருமான் தண்டதரனாதலாலே இவ்வாத்மாக்களோ, எந்நாளும் அபராதமே வடிவமாய் அவ் வெம்பெருமான் பக்கல் நன்றியற்ற பாவிகளா யிருக்குமிவ் வாத்மகோடிகளினது குற்றங்களை நற்றமாகக் கொண்டருள் புரிய வேண்டியும், சதுர்முக, பசுபதி, மகபதி முதலானோர் கேட்டுக் கொண்ட படியும், அவனது திருமார்பை விட்டகலாதவளாயுமிறே சர்வ
லோக சுந்தரியான எமதரும் கருணைத் தாயாரிருப்பது.

ஸ்ரீ பாஞ்சாராத்ரத்தில் “‘ க்யாநாதயோ குணாரூபம் லக்ஷ்மிர் நித்யாநபாயி பூமி நீளா தயோ தேவ்யா சேநேசாத்யாச சூர்ய: ததாமபரம் காலஹ புருஷஸ் ப்ரகுருதிஸ்தா மஹதாதிதராந்தா நிசப்த சாவரணான்யபி பிரம்ம
மந்தம் ததந்தஸ்தா லோகஸ்வஸ சராஸராஹ யேவமந்தாய நந்தாநி தத் சர்வம் நாராயணமுச்சதே
-என்று ஸ்ரீமந் நாராயணனுடைய நித்யமான ஜ்ஞாந சக்தியாதி திவ்யாத்ம குணங்களும், குண ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹமும், அவ்விக்ரஹ குணமான ஸௌந்தர்யாதிகளும், அச் சௌந்தர்யாதிகளோபாதி சாத்தின கிரீட மகுடாதி திவ்யாபாணங்களும், அவ்வாபரணங்களோடே விகல்ப்பிக்கலாம்படியான சங்கச் சக்ராதி திவ்யாயுதங்களும், இவ்வளவிருந்த வேற்றத்தை யுடைய பர வாசுதேவனை, காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்தது அநு பவிக்கிற மாமாபையாகிய மஹா லஷ்மியும்,மஹருஷி வர்க்கங்களும், அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்தக் கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான நித்ய ஸூரி ஸங்கமும்,அவர்களோபாதி அடிமை செய்கிற முக்தரும், அவ்வடிமைக்கு பிரவர்த்தகமாய் பஞ்சோப நிஷண் மயமான பரமபதமும், குண த்ரயாத்மகமான மூல ப்ரக்ருதி மண்டலமும், புருஷ ஸமஷ்டியும் அஹோராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும் ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும், தத் கார்யமான அண்டங்களும், அண்டாந்தர்வர்த்திகளான தேவ, மநுஷ்ய, திர்யக் ஸ்தாவரங்களுமாக ஸ்ரீமந் நாராயணன் மஹா மாய்கையை ஸ்வாதீனமாகக் கொண்டு அண்டாதி ஜகத் காரணத்தை யாதொரு குறைவுமின்றியே நடத்துகிறானென்றும், இத்யாதிபடியே மாமாயை என்றும், பராசக்தி என்றும், இச்சா சக்தி என்றும்,-க்ரியாசக்தி என்றும், தேவீ என்றும், மஹா லஷ்மி என்றும், வேத வேதாந்தாதிகளால் முறையிடா நின்ற நமது தீன தயாளச் செல்வியார் ஸர்வாந்தர் யாமியான ஸர்வேஸ்வரனாடே தானும் அபின்னா பூதையாய் யவனை விடாது நிற்கின்றபடியால் அகாரத்திற் சொல்லுகின்ற ஸர்வ ரக்ஷகத்வ, ஸர்வசேஷித்வ,ஸமஸ்த கல்யாண குணாத்மகவாதிகளுக் கெல்லாம் ஆதார பூதையாய், ஸ்ரீ ஸூக்த ப்ரதி பாத்யையான பெரிய பிராட்டியாருடைய நித்ய ஸம்பந்த முள்ளதன்றோ ? அந்த ப்ரஹ்மமே என்று வேதங்களும், வேதோபப்ருஹ்மணங்களும் வாயோலை யிட்டு வைத்த காரணத்தாலிறே, ஸ்ரீய பதியான முகுந்தனுக்கன்றி ப்ரஹ்ம சப்த வாஸ்யனாந் தன்மை மற்றையாருக்கு மில்லை யாயிற்று, இவ்வளவேற்றமுடைய மஹா லஷ்மியாராற்றன் எந்தப் பதவிகளினு மிருக்கின்ற தேவதைகளுக்கும்,அவர்கள் தொண்டர்களுக்கும் மங்களமுண்டாக வேண்டியது-இவர் தாம் அதைக் கொடுக்க வேண்டியது எந்த மதாந்தர காமரானவர்களும் நமது லஷ்மி கடாக்ஷம் வேண்டுமென்றே கோருவார்களேயன்றி, இவருக்கெதிர்த்தட்டான ஜேஷ்டையினுடைய கடாக்ஷத்தைக் கோர மாட்டார்கள் இந்த ஸாது ஸேவ்யை யாரது கடைக் கண்ணினின்றுங் கொட்டுண்டு கிடக்கப்பட்டதிறே அணிமாதி அஷ்டசித்திகளும், அஷ்டைஸ்வர்யங்களும், ஸர்வாங்க ஸுந்தர ஸுகாநந்த ரூபியான இவர் கடாக்ஷமற்ற காலத்தில் விதி சிவ சதமகாதி சராசரங்கள் பட்ட கஷ்டங்கள் ஸகல வித்யா ஸமூஹங்களெல்லாவற்றினும் கண்டு கொள்ளலாம். இத் தாயார் கடாக்ஷித்தால் நாம் எப்போதும் ஸூமங்களைகளாய் நமது மகிழ்நரோடு கூடி அமங்களை களென்னாது ஸகல பாக்ய ஸுகத்தோடும் வாழலாமே யென்றன்றோ ? ஸதா காலமும் பாரதி, பார்வதி,சகி, அருந்ததி முதலான தேவ, மநுஷ்ய, பந்நகாதி ஸமஸ்தமான ஸ்திரீகளும், மஹா விஸ்வாஸத்தோடு சுக்ரவார முதலான தினங்களில் அதி நியமனமான விரதமிருந்து நோன்பெடுப்பது, ஸ்ரீவர லக்ஷ்மி வரத சரித்ரத்தைக் கேட்டரிவர்களாயின் பார்வதி நோற்ற நோன்பு விசதமாகும் இவ்வாறு பராசத்தியும்,ஸ்ரீமந் நாராயணனின் வல்லபையுமான மஹா லக்ஷிமியின் ஸர்வ சக்த்யாதி சகல கல்யாண குண சமூஹங்களையும் அநந்த ப்ரமாணங்களாலும் வெளிப்படையாய் விளக்கப்பட்டிருக்குமே

ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அம்சம்
க்ருஷ்ண க்ருஷ்ண ஜகந்நாத ஜாநேத்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம் காதி நித ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத் மிகாலியெம்
“-என்று வாணாசுரவதத்தில், சிவன், க்ருஷ்ணனைப் பார்த்து, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஜெகத்நாயாகா, ஆதியந்த மில்லாதவா, லோகோஜ் ஜீவநார்த்தம் அவதரித்தவர், என்று பலவாராகத் துதித்துச் சரணமடைந்ததாலும்,
மஹா நாராயணோபநிஷத்
“தேவகீ ஸூத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
-என்று தேவகி புத்ரனாயும், கோகுல நிர்வாஹனாயும், அவதரித்த வாசுதேவன் ஜகத்பதி என்று கூறுகையாலும்,
அதர்வண சிரசில்
” ப்ரஹ்மண்யோ தேவகி புத்ரோ ப்ரஹ்மண்ய மது சூதந –
என்று தேவகி புத்ரனாயவதரித்த மதுசூதனன் பரப்ரஹ்மமென்றும்,
ருகவேதம் ஆத்மபோதோபநிஷத்
“வைகுண்ட புவனங்க மிஷ்யதி ததிதமபுண்டரீகம் விஜ்ஞானகம் தஸ்மாத் கடிதாப: மாத்ரம் ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ரோ ப்ரஹ்மண்ய மதுசூதந :”
என்று யோகிகளினது ஜனனத்தை அரத்திக்கும் ஸ்ரீவைகுண்ட நாதனும், பர ப்ரஹ்மமுமான மதுசூதனன் தேவகி புத்ரனா யவதரித்தான் என்றும்,
யஜுர்வேதம் கலிசந்தாரணோபநிஷத்
*ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண ஹரே”
-என்று இச் சுருதி க்ருஷ்ண பரமாத்மாவை தியானிக்கையாலும்,

பவிஷ்யபுராணத்தில்
‘ த்ரவிடாநாய நிரதம் யோநிம் ததி ஸ்துமம் திம்பிரம்ம: பிரளய பரியந்தம் கும்பிபாகேச பச்யதே”
என்று ஸ்ரீமந் நாராயணனை உபாயோபேயமாய் ஆஸ்ரயித்து மோக்ஷ சாம்ராஜ்யமாகிய பரம பதத்தை யடையப் ப்ராப்தமாயுள்ள சகல ஜீவன்களுமெளிதில் உணரும் பொருட்டுத் தமது பரம க்ருபையால் (வியாஸ ரூபாய விஷ்ணுவே ) என்றும் (விஸ்வத் சேநோ ஜநார்தந🙂 என்றும் (சடகோபாய விஸ்வத்சே :)என்றுமித்யாதி வாக்கியங்களின் படியே வேத யதார்த்தங்களை ஸ்தாபிக்க வியாசரும், அவ் வேதார்த்தங்களை திரவிட வேதமாய் ஸ்தாபிக்கச் சடகோபருமாக, பகவான் அம்சாரூடராய் கல்பங்கள் தோரும் அவதரிக்கின்றபடியால் அவர்களிடத்தும்,அவரருளிச் செய்த திரவிடோபநிஷத்தினிடத்தும் திரி கரணங்களாலும், அத்யந்த பிரீதி யுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும், அவரையும் அவரருளிச் செயல்களையும் நிந்திப்பவர் பிரம்ம பிரளய பர்யந்தம் றௌரவாதி நரகத் துன்புறுவது திண்ணமென நிச்சயிக்கப்பட்டது.ஸ்ரீ பாஞ்சராத்ரம்-அதித்யாத்ரமிடாம் நாயம் ஸ்வசாகாத்யாய நாத் பரம் ஸ்ரமந்ந குரத்தேந்ய த்ரசோபியாதி பராங்கதிம்”-என்று வேதத்தில் அவித்தை யாகிய கரும காண்டத்தை நீக்கி வித்தை யாகிய ஞான காண்டத்தின் ரசமே திரவிடோபநிஷத்தாக கல்பங்கள் தோறும் ஸ்ரீமத் சடகோபரால் ஸ்தாபிக்கப்பட்டு அத் திரவிடோப நிஷத்தைக் கொண்டே சகல திவ்ய தேசங்களிலும் க்ரஹங்களிலும் ஈஸ்வரார்த்யயநம் – செய்ய வேண்டியதென்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

அனுருத்தசம்ஹிதா
“ ஸ்வாசாக : தரமிடாம் நாமவ் விசித்வேதேத் திரி புருஷம் யஸ்ய தஸ்மி நாவாஷாஸ் யாத்திரௌ ப்ராந்ஹம் நனாமிதி ஸ்ருதிம்”.-
என்று யாதொரு பிரம்ம வித்துக்கள் மோக்ஷத்தை யடைந்தாலும் இந்த திராவிட ஸ்ருதியைக் கொண்டே ப்ரஹ்மமேத ஸமஸ்காரம் செய்ய வேண்டிய தென்றும் திரவிட ஸ்ருதி, வேதங்களால் ஸ்தாபிக்கக் கூடரத பரம புருஷார்த்தத்தை ஸ்தாபித்துள்ளபடியால் வேத அத்யயநத்திற்கு முன் செல்ல வேண்டியதென்றும் மற்றை யாவையையும் கண்டித்து கூறுகையாலும் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்தது” பக்தாம் ருதம் விஸ்வஜநாநுமோதம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்மயம் ஸஹஸ்ர ஸாகோபநிஷத் ஸமாகம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம்”என்று 1180 ஸாகைகளை யுடைய வேதங்களின் சகல ரகஸ்யங்களையும் விவரிக்க வல்லதாயும் அஹோபாஹ்யமாய் கம்பீரார்த்தமாய் அறுபதினாயிரப்படியெனவும், முப்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஆறாயிரப்படி, மூவாயிரப்படியென பிரம்மவித்துக்களால் வியாக்யான முடையதாயும், ஈஸ்வர ஸ்வரூப, ரூப குண சேஷ்டிதங்களையே நன்குணர்த்த வல்லதுமான திரவிடவேதமென்கிற மஹா சமுத்திரத்தை ஸ்ரீமத் சடகோபரால் அருளிச் செய்யபட்டவை என்றும்,திருக்குருகைப்பிரான்” ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராத வுள்ளம் பெற” என்றும்,மணவாளமாமுனிகள்” ஏரார் வைகாசி விசாகத்தினேற்றத்தை பாரோரறியப் பகர்கின்றேன் சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்” என்றும்,மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்கள்–ஈயாடுவதோ கருடற்கெதிரே யிரவிக்கெதிர் மின்மினியாடுவதோ நாயோடுவதோ வுருமிப்புலிமுன் நரகேசரிமுன் நடையாடுவதோ பேயாடுவதோ வழகூர்வசி முன் பெருமானடி சேர் வகுளாபரணன் ஓராயிர மா மறையின் தமிழிலொரு சொற் பொருமோ வுலகிற்கவியே-என்றும்-திருவள்ளுவர்“ குருமுனிவன் முத்தமிழு மென்குறளு நங்கை சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்” என்றும்,ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த செம் பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத்-தண் குருகூர்ச் சேய்மொழியதென்பர் சிலர் யானிவ்வுலகின் தாய்மொழியதென்பன் நகைந்து” என்றும்,ஔவையாரும் “ சேய் மொழியோ தாய் மொழியோ செப்பினிரண்டுமொன்றவ் வாய் மொழியை யாருமறையென்ப-வாய்மொழி போல்-ஆய்மொழிகள் சாலவுளவெனினு மம்மொழியின் சாய்மொழிக ளென்பேன் றகைந்து” என்றும்,இத்யாதி வேதங்களை யொத்த 108 சம்மிதைகளை யுடைய ஸ்ரீ பாஞ்சராத்ர முதலான சாஸ்திரங்களாலும்,ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமான ப்ரஹ்ம விதாக்ரேசர்களாலும், ஆத்மோஜ்ஜீவனார்த்த தாரகமே, திரவிடோப நிஷத்தென்று பரமோதக்ருஷ்டமாய்க் கொண்டாடியுள்ளதாயும், சகல வேதங்களினும் முற்பட்டதென்றும், கல்பங்கள் தோறும் இதன் ஏற்றங்களையே பிரதிபாதிக்கையாலும், இத் திரவிடோபநிஷத்திற்கு வொத்த சாஸ்திரங்களுமில்லை என்றும், இதை யருளிச் செய்த சடகோபருக்கு மேம்பட்ட பரம புருஷன் எக்கல்பங்களிலும் கிடையாதெனக் கண்டிகமாய் சகல சாஸ்திரங்களாலும் ஆணை யிட்டுரைத்து விட்டன,

சாந்தோக்ய உபநிஷத், பிரதம பிரபாடகம் 6-ம் காண்டம்-” நாராயணஸ் ஸரஸிஜா ஸந்நிவிஷ்ட : கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்கசக்ர : தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ அக்ஷிணீ என்று ஸ்ரீமந் நாராயணனுடைய லக்ஷணங்களைக் கூறு மிச்சுருதி நாராயண சப்தங்களால் ஜகத் காரணத்தைச் சொல்லிற்றே-பகவத் சப்தம், பரமேஸ்வர சப்தம், ப்ரஹ்ம சப்தம் முதலான சகல சப்தங்களும் அந் நாராயண னொருவனை யுணர்த்துமே யன்றி மற்ற யாவரையும் கூறினதே யாகாது-பர்க்க சப்தத்திற்கு” பர்கோ தேவஸ்ய தீ மஹித்யோயோந ரசோதயாத்”-என்னும் பர்க சப்த வாக்யத்திற்கு வஸிஷ்டர் விஸ்வாமித்ரர் தங்கள் வியாகாண சூத்திரத்திலும் ஸ்ரீமத் ராமாநுஜர் சங்கரர், மத்வர் வித்யாரண்யர், குண்ணத்தூர் அய்யன் ஸ்வாமி, வைத்ய
நாதர், க்ருஷ்ணபட்டர், நாராயணசாமி முதலியனரும் தங்கள் பாஷ்யங்களில் பர்க்க சப்தத்திற்குப் பொருள் ஸ்ரீமந்நாராயணனே என்றே அருளிச் செய்துள்ளனர் –

யஜுர்வேதத்தில், வாகோபநிஷத் ஜீவன் முக்தி லக்ஷணத்தில்-“யஸ்மஸ்தார்த ஜாலேஷு வியவஹார்யபி ஸீதள பரார்தே ஸ்வீவா பூர்ணாத்மா ஸ ஜீவன் முக்த உச்சயதே-என்று ரிபு மஹருஷியினிடம் வராகமூர்த்தி தமது க்ருபையால் கடாக்ஷித்து ஓ! முனியே எப்பொழுது சித்தத்திலுள்ள சகல கருமங்களையும் விட்டு ஜெகஜ் ஜன்மாதிகாரண பூதனான என்னையே உபாயோபேயமாகப் பற்றுகிறானோ அப்பொழுது தானவன் ஜீவ முக்தனென்று சொல்லப்படுமென வெளியிட்டபடியாலும்.யஜுர்வேதம் இராமோபநிஷத்-பக்த்யாமந்தரேணாநேந மாம் சிவ ப்ரஹ்மஹத்யாதி-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:“என்று இராம தாரக மந்த்ரங்களாலே பக்தியுடன் தியானிக்குமுன்னை பிரஹ்ம ஹத்யாதி பாபங்களினின்றும் விடுவித்து க்ரம க்ரமாந்திரத்தில் என் சாயுஜ்யத்தைக் கொடுக்கிறேனென்று தமது பரம க்ருபையை வெளியிடுகையாலும் –பகவத்கீதை-“ ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூசா?என்று அர்ஜனா! சகல கருமங்களையும் அடியோடொழித்து அநந்த கோடி யண்டங்களுக்கும் நிர்வாணனான என்னையே சரணமாக அடைவாயாக உன்னை சகல பாபங்களினின்றும் விடுவித்து என் சாயுஜ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறேன் பயப்படாதே என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா கீதையில் வெளியிட்ட படியாலும்,இத்யாதி வராஹமூர்த்தி, ரிபுசம்வாதத்தால் வராகோப நிஷத்தும், ஸ்ரீராமபிரான் சிவன் சம்வாதத்தால் ராமோபநிஷத்தும், ஸ்ரீக்ருஷ்ணன், அர்ஜுன சம்வாதத்தால், கீதோபநிஷத்தும், ஆக இம்மூன்று சரம சுலோகங்களின் ரசங்களையும் அவைகளின் அங்கோபாங்கங்களான நியமங்களையுமே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் வெளியிட்டனர்- தைத்திரீயோபநிஷத்-” ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந ஸமாதிபி:நராணாம் ஷீண பாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே”என்கிறபடியே பஹு தர ஜந்மங்களாக, அவித்தையாதி அஞ்ஞாந கரும ஹோமாதிகளைச் செய்தே அநந்தமான ஜீவாதமாக்கள் ஷீண தசையாகிய ஜனன மரணங்களை யடைவதால், அவித்யாதி கருமங்களை முற்றும் விட்டு ஸ்ரீமந் நாராயணனையே உபாயோபேயமாக அடையும் பொருட்டே நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று பாவங்களை அடைந்தே பரமபத சாயுஜ்யத்தைப் பெற வேணுமென்று மிச் சுருதி கூறுகையாலும், சுருதி, ஸ்மருதி, சூத்ர, மீமாம்ஸா,பகவத் சாஸ்த்ராதிகளின் ரசங்களைத் திரட்டின-பரம புருஷார்த்தத்தையே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் அருளிச் செய்தனர்-ஸ்ரீமத் ராமாநுஜரது ஸ்ரீபாஷ்யம்” தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வேஹ்யாத்மாந பரமாத்மம் : நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக் ஷததைவ “-என்று ஒருவனுக்கு க்ருஹ க்ஷேத்ராதிகளும், ஸேஷமாய் ஸ்வ சரீரமும், ஸேஷமாயிருக்கச் செய்தே, க்ருஹ க்ஷேத்ராதிகள் ப்ருதக் ஸித்யாதிகளுக்கு அர்ஹமாய், ஸரீரம் அவற்றிற்கு அநர்ஹமா யிருக்கக் காண்கையாலே, இவ் வாத்மாவானது ஈஸ்வரனுக்கு சேஷமாமென்னுமிடம் தட்டில்லை யென்க,” பரகத அதிஸய ஆதாநேச்சய உபாதேயத்வமே வயஸ் யஸ்வரூபம், ஸஸேஷ : பரஸ் ஸேஷி’ என்றும்,“ இச்சயாய துபாதேயம் யஸ்யாதிஸய ஸித்தயே உபயாநுபயைகைக ஜுஷாதௌஸே ஸேஷிணௌ” என்றும்,”அயமே வாத்மா சரீர பாவ : ப்ருதக் ஸித்த்யநர்ஹா தாராதேயபாவு : நியந்த நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்??-என்று ஸ்ரீமந் நாராயணனுக்கும், ஜீவாத்மாக்களுக்குமுள்ள நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற சம்மந்தங்களால் ஜீவாத்மாக்கள் உஜ்ஜீவிக்க வேணுமென்றும் அனாதியான இச் சம்மந்தங்களைக் கொண்டே உஜ்ஜீவிப்பிக்கச் செய்கிறானாகையால் ஸ்ரீமந் நாராயணனே வோத்பதி என்றும் தமது ஸ்ரீபாஷ்பத்தில் தெளிவாய் நிரூபித்தனர்.ஸ்ரீ பாஷ்யம் “யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே நகத்யதே-ஈஸ்வரேண ஜகத் சர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே”-என்று ஸேஷ சப்தப் பொருள்களாகிய பிரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகல சேதனாசேதனங்களும் ஸேஷி சப்தப் பிரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணனுக்கு இஷ்ட விநியோஹார் மென்று-ஸ்ரீபாஷ்யத்தில் மற்ற யாவையும் கண்டித்துரைத்து விட்டனரிறே எதிகட் கிறைவனான எம் மிராமாநுஜன்,பிரம்மாண்டபுராணம்-”மந் நியோகாத் பூத புர்யாம் அஹீநாம் ஈஸ்வர : கலௌ ஸ்ரீராமாநுஜ ரூபேண ஜநிஷ்யதி ஸதாம்முதே” என்று ஸ்ரீபத்ரிகாஸ்ரமத்திலே நாராயணனுக்கும் நரனுக்கும் நடந்த சம்வாதத்தில், ஓ நரா! என்னுடைய நியோகத்தால் ஸ்ரீ பெரும்பூதூரில் ஸர்பங்களுக்கெல்லாம் ராஜனான திருவனந்த ஆழ்வான் கலியுகத்தில் ஸ்ரீமத்ராமாநுஜரென்ற ரூபத்தாலே லோக உஜ்ஜீவனார்த்தமாக அவதரிக்கப் போகின்றாரென்று திருவாய் மலர்ந்தருளினாராதலாலும்,ஸ்ரீபாஞ்சராத்ரம்-” அநந்த : ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணச் சதது: பரம்’என்று அநந்தனுடைய 4-வது அவதாரமே கலி யுகத்தில் ஸ்ரீமத் ராமாநுஜர் என்னுமோரவதார முண்டென்று கூறுகையாலும்,தாடீபஞ்சகம்-“பாஷண்ட ருமண்டதாவதஹ ச் சார்வாக சைலாசநி பெளத்தத்வாந்த நிராஸ்வாஸரபதிர் ஜைநேபகண்டீரவு:மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரைவித்ய சூடாமணி : ஸ்ரீரங்கேச ஜயத்வஜோ விஜயதே ராமாநுஜோயம் “” பாஷண்டஷண்ட கிரி கண்டந வஜ்ரத் தண்டா:ப்ரசந்த பௌத்த மகராலய மந்த தண்டா வேதாந்த ஸார ஸுக தர்சம் தீப தண்டா ராமாநுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா:-என்கிறபடி அடர்ந்த ஆரண்யங்களைப் போன்ற வேதங்களின் ரசங்களையே திரட்டி ஸ்ரீபாஷ்யமாயும், இவ் வுலகிலுள்ள சாக்ய, உலூக்க,அக்ஷபாத, சமுண, கபில்,பதஞ்சலிகளாகிய பாஹ்ய சமயங்களையும், சைவ, மாயாவாத, நியாய, வைஸேஷிக, பாட்ட ப்ரபாகராதிகளாகிய குத்ருஷ்டி சமயங்களையும்,அடியோடறுத் தெரிந்துத் தமது சுத்த சத்வ குண விஸிஷ்டாத்வைத மதமே மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த பரம வைதிக மதமென திக் விஜயம் செய்து ஸ்தாபித்து த்ரி தண்டம் தரித்தவனிறே எதிராஜன்.யதிராஜவிம்சதி”ஸ்ரீமாதவாங்கரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமாவிலாசய பராங்குச பாதபக்தம் காமாதி தோஷ ஹர மாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜஸ் யதிபதிம் பரணமாமி மூர்த்நா”-என்று இப்பிரபஞ்ச முழுமையும் பேரின்ப வெள்ளமான பரமபதத்தை பிரம்மா முதல், பிபீலிகாநந்தமுள்ள யாவும் கருதவல்ல ஞானங்களை ஊட்டி வளர்த்த எம்மிராமாநுஜனை,எதிகட்கிறைவனை தியானிக்கிறேனென்றும்,தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்ச் சடையோன் சொற் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமாநுசழனி போர்ந்த பின்னே” என்றும்,பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந் தண்டமேந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே” என்றும்,”வாழ் வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம் தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினற்கு அந்நாழற்றது நம் இராமாநுஜன் தந்த ஞானத்திலே” என்றும்,சாருவாகம் தம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட மாறுசெய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த் தற மிகுத்து மேல் வந்த பாசுபதர் சிந்தியோடும் வகைவாது செய்த எதிராஜனார் ”என்றும் ” எதிராஜோத் ஜகத் குரு” என்றும்,” ராமாநுஜோ சதுரா சதுரக்ஷரி” என்றும்,” ராமா நுஜாய நம? என்றும்,இத்யாதி அளவிறந்த ஏற்றங்களை யுடையவராயும், இவ்வுலக முதல் பரமபதம் வரை, ஸ்வாதீன முள்ளவராயும், மோக் ஷவதிகாரியானாலும், இவரது கடாக்ஷம் பெற்றே மோக்ஷமடைய வேண்டியதாலும், ஸர்வாந்தர்யாமியாயும், ஸர்வேஸ்வரனாயும், ஸர்வ வேத ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந்நாராயணனால் சாக்ஷாத்கரித்துப் பட்டங் கட்டிய ஸர்வலோக ஸரண்யனாயும் விளங்கா நின்றானிறே எம்மிராமாநுஜன்

அதர்வண மஹோபநிஷத் ப்ரஹ்ம ஸூக்த்தத்தில்-தக்ஷிணேது புஜே விப்ரோ பிப்ருயாத்வை ஸுதர்சனம் ஸவ்யேது சங்கம் பிப்ரூயாதிதி ப்ரஹ்ம விதோவிது : என்று முமுக்ஷ வானவன் வலது புஜத்தில் சுதர்சன மென்னும் சங்கத்தையும்,இடது புஜத்தில் பாஞ்சிய சந்யமென்னும் சங்கத்தையும் தரிக்கக் கடவர்களென்று பிரம்மவித்துக்களரிவர்களென்று மிச்சுருதி நிரூபிக்கையாலும்,மஹோபநிஷத் 4வது காண்டத்தில்” தேவாஸோயேந வித்ருதேந பாஹுநா ஸுதர்சநேந ப்ரயாதம் ஸ்வர்க்க மாயாந்தி தாம லோக விஸ்ருஷ்டவீ தஸ்வயந்தி ப்ரஹ்ம ணேளவேஸ் ஸர்வா வம்ஸர்வை தேவதாநாம், ஸர்வாவை விப்ராணாம் ஸர்வாவை க்ஷத்ரியாணாம் ஸர்வாவை வைச்யாநாம், சூத்ராணாமித்யக்நிநா வைஹோத்ரா, த தம் சக்ரம் த்வி புஜே தார்யே தோர்த்வபுண்ட்ர மாலிகேத் தஸ்மாத் விரேகம் பவதிபு நராகமநந்ந சேதி ப்ரஹ்மணஸ் ஸாயுஜ்யம் ஸலோகதாமாப்நோதி“-என்று பிரம்ம ருத்ரர்கள்முதல் சமஸ்த தேவர்களும், சமஸ்த பிராம்மணர்களும், சமஸ்த க்ஷத்திரியர்களும், சமஸ்த வைசி யர்களும், சமஸ்தசூத்திரர்களும், அக்னியில் தப்தம் பண்ணின சக்ராங்கிதத்தை இரண்டு புஜங்களிலும் தரிக்கக் கடவர்க ளென்றும் இடைவெளியோடு க்ஷடின ஊர்த்வ புண்டாங்களையும் தரிக்கக் கடவர்களென்றும், இவ்வநுஷ்டானமுள்ள தேவர்கள் முதல் மநுஷ்யர் வரையிலும் பரமபதமென்னும் சாம்ராஜ்யத்தைப் பெறுவர்க ளென்றும் பிரம்மாவிடைய சத்ய லோகம் போலேயும், சிவனுடைய கைலாயம் போலேயும் மீண்டும் பிறப்பதில்லை என்றும், ருக்வேதம் வாக சங்கிதையிலும், யஜுர்வேதம் முதல் பிரசனத்திலும் சாமவேதம் 6-வது அத்தியாயத்திலும், சுக்ல யஜுர் வேதம் பிரஹதாரணயோபநிஷத்திலும் கடவல்லிலும், சகடக மென்கிற சுருதி
யிலும், ஸ்பஷ்டமாய் காணலாம்.”ஸக்ராதி தாாணம் பும்சாம் பர சம்மந்த நிவேதனம் பதி வ்ரதா நிமித்தமஹி வளையாதி பூஷணம்”-இத்யாதி அநந்த ப்ரமாணங்களாலும் முமுக்ஷவான பரம்புருஷார்தத்தை பெருவதற்கே சக்ராங்கிதம் பிரதானச் சின்னமாகக் கூறா நின்றதிறே

ஸ்ரீ பாஞ்சராத்ரம் பராசரா சம்ஹிதை
“விஷ்ண்வர்ப்பிதம் ரக்த வர்ணம் ஹரித்ரா சூர்ண முக்தமம் லக்ஷ்மீ நிவாஸ ஸித்யர்த்தம் தீபாகாரந்து சூக்ஷ்மகம் ஊர்த்வ புண்டரஸ்ய மத்யேது லலாடே தாரயேத்விஜ
:”-என்று ஏ ப்ராஹ்மணா ஸ்ரீமந்நாராயணனுக்கு சமர்ப்பித்ததாய்ச் சிவந்த நிறமுள்ள உயர்ந்த ஸ்ரீ சூரணத்தைப் பிராட்டி நிலை பெறுகைக்காக தீபாகாரம் போலே மெல்லியதாய்த் திருமண் காப்பின் நடுவில் நெற்றியில் தரிக்க வேண்டுமென்று கூறுகையாலும்,
ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்ம சம்ஹிதை
“நாஸாத்வியங்குலம் பாதம் மத்யம் ஸார்த்தாங்குளம் பவேத்
பார்ச்வ மங்குள மாத்ரந்து ஸுஸ்ஸ்பஷ்டம் தாரயே த்விஜ:
-என்று இரண்டங்குலம் பாதமும் நடுவிலொன்னறை யங்குலமிடமும், விட்டு இருபக்கங்களிலும் ஓரங்குலமுமுள்ள ஊர்தவ புண்டரம் தரிக்க வேண்டியதென்றும் கூறுகையாலும்,
பாத்மபுராணம்
“ஊர்த்வ புண்டாம் மதாபூர்வ மநுஷ்டாநம் ஸமாசரேத்
.-என்று ஆசமனத்திற்குப் பிறகு ஊர்த்வ புண்டரந்தரித்துக் கொண்டு சந்தியா வந்தன முதலிய வனுஷ்டானங்களை முடிக்கக் கடவனென்றும்,
பிரம்மாண்டபுராணம்
ஊர்த்வ புண்டரம் ம்ருதா பூர்வ மநிஷ்டாய ஸமாசரேத்
-என்று பூர்வத்தில் ஊர்த்வ புண்டரம் தரித்துக்கொண்ட பிறகு அனுஷ்டானம் செய்யக் கடவனென்றும் கூறுகையாலும், இத்யாதி பரமாணங்களாலும் மோஷ காமியானவன் சக்ராங்கித ஊர்த்வ புண்டராதிகளைத் தரிக்கக் கடவனென்றும் சொல்லிற்று அன்றோ

1-இதிஹாச ஸ்ரீ மத் பாகவதம் -வேத வியாசர் அருளிச் செய்தது -18000 ஸ்லோகங்கள் -12 ஸ்கந்தங்கள் -200 அத்யாயங்கள் கொண்டது-இதற்கு வக்தா சுகமுனீந்திரர்-ஸ்ரோத பரீக்ஷித்துராஜன், புலவர் திலகராகிய ஆரியப்புலவரால் 4970-திருவிருத்தங்களாகத் தமிழில் மொழி பெயர்த் தருளப்பெற்றது இப்பாகவதமேயாம்.
2- புராண பாகவதம் -இதுவும் வேத வியாசர் அருளிச் செய்தது -இதற்கு-வக்தா நாரத பகவான் -ஸ்ரோதா, உருக்மணி பிராட்டியார்,.இதுவே அட்டாதச மகா புராணங்களுள் ஒன்றே பாகவதம்,
3- ஸம்ஹிதா பாகவதம் -வைராக்ய ரசம் நிறைந்தது -1100-அத்தியாயங்களாய் விரிந்த 18-காண்டங்களாகப்பகுக்கப்பட்டது. இதற்கு வக்தா வைசம்பாயன முனிவர் ஸ்ரோதா ஜனமேஜயன்
4- உப ஸம்ஹிதா பாகவதம்-70000-சுலோகங்களாய் 2000-அத்தியாயங்களாய்ப் பிரிக்கப் பட்டு – இதற்கு வக்தா அகஸ்திய மகரிஷி-ஸ்ரோதா, சுதர்சனர்
தா, சுதர்சனர்

5-விஷ்ணு ரகஸ்ய பாகவதம்:- தண்டங்க ளிடையிடையே கலந்த 100000-ஸ்லோகங்களுடையதாய் 1000-அங்கங்களாய் 10000- அத்தியாயங்களாய் விரிந்தது – இதற்கு தாவ ஹாரீத முனி, ஸ்ரோதா காசிபரிஷி.

6-விஷ்ணுயாமள பாகவதம் :-இது 80000 ஸ்லோகங் களை யுடையதாய் 800-அத்தியாயங்களை யுடையது இதற்கு வக்தா பராசர மகரிஷி, ஸ்ரோதா மைத்திரேயர்

7.கெளதம சம்மித பாகவதம் இது 10000-ஸ்லோகங்கள் அடங்கிய 100-அத்தியாயங்களை யுடையது. இதில் மோக்ஷமளிக்கத்தக்க க்ருஷ்ண சரித்திர மாத்திரம் சொல்லப்பட் டிருக்கின்றது.இதற்கு வக்தா கௌதம ரிஷி ஸ்ரோதா கௌசிக ரிஷி.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–ப்ரமாணத்திரட்டு –

June 7, 2025

1-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ-தை சீஷா -11-2-அகில ஜகன்மாதாவான பிராட்டியையும் அழிவற்ற தந்தையுமான அச்சுதனையும் அறியாதது அறிவித்த ஆசார்யனையும் விருந்தாகும் பெருந்தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –

2-ஆசரதீத் யாசார்ய-வ்யுத்பத்தி -ஆசரித்து -அனுஷ்டித்துக் காட்டுமவன் ஆசார்யன்

3–ஆசினோதி ஹி ஸாஸ்த் ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி -ஸ்வயம் ஆசரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத
எவன் ஒருவன் சாஸ்த்ரார்த்தங்களை சிஷ்யர்களுக்கு உபதேசித்து -அவர்களை சதாசாரத்திலே நிலை நிறுத்தி தானும் ஆசரிக்கிறானோ அவனே ஆச்சார்யன் எனப்படுமவன்

4-நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.-இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

5-தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-2-

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

6-பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||
-3

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

7-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-
5-

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

8-யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||
-6-

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.-இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

9-த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:-
ஶ்லோகம் 20 – ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

10-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

11-ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

12-கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||
-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது? யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

13-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

14-(ஸமாஷரைச் சதுர்ப்பிர்ய பாதைர் கீதோ மஹாத்மநா ஸோ அநு வ்யாஹரணாத் பூயஸ் ஸோக ஸ்லோகத்வம் ஆகத–யாதொரு சோகமானது சமமான எண்ணிக்கையுடைய அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்கள் கொண்டதாக அந்த மஹாத்மாவான வாழ்மீகியினால் பாடப்பட்டதோ அந்தப் சோகம் அடிக்கடி உச்சரிப்பதால் ஸ்லோகமாயிற்று -)-

15-அஹம் ஸ்லோக க்ருத் -பால-2-40–(நான் ஸ்ரீ மன் நாராயணன் விஷயமாக உத்தம ஸ்லோகங்களை இயற்றுபவன்

16-காவ்யம் இராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாச் சரிதம் மஹத் பவுலஸ்த்ய வதம் இத்யேவ சகார சரிதவ்ரத -பால-4-7-–விரத அனுஷ்டானமுடைய அவ்வால்மீகி சீதாதேவியின் பெரும் கதையான இராமாயணம் முழுவதையும் பவ்லஸ்ய வதம் என்றே இயற்றினார் -)எல்லாமே ஸீதா சரிதமாய் இருக்கவும் –

17-(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸம மதுரோபநதார்த்த வாக்ய பத்தம் -ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் தஸ ஸிரஸ்ச் ச வதம் நிஸா மயத்வம் –பால -2-44-தானாகவே அமைந்த ஸமாஸ ஸந்தச் சேர்க்கைகளை உடையதும் சமமாயும் மதுரமாயும் சேர்ந்து இருக்கிற அர்த்தங்களுடன் கூடிய வாக்கியங்கள் இணைக்கப் பெற்றதும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதும் ரகுவர சரிதம் என்றும் ராவண வதம் என்றும் பெயர் பெற்றதுமான கதையைக் கேட்கச் செய்யுங்கள்)

18-அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் ஸ்ரீயம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –-ஸ்ரீ ஸூக்தம் -8-ஸர்வ வ்யாபியான பகவானை முன்னிட்டு இருப்பவளும் சரீரமாகிற -அல்லது ஓங்காரமாகிற -ரதத்தின் நடுவிலே இருப்பவளும் கஜங்களின் நாதத்தாலே திருப்பள்ளி யுணருமவளுமான ஸ்ரீ தேவியை அருகில் அழைக்கிறேன் -என் விஷயத்தில் பிராட்டி ப்ரீதி அடையட்டும் 

19-நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீம் யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -விஷ்ணு பு -1-8-17–ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்குச் செல்வமாய் இருப்பவளாய் இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே -ப்ராஹ்மண உத்தமரே எப்படி பகவான் ஸர்வ வியாபியாய் இருக்கிறானோ அப்படியே இவளும் ஸர்வ வியாபிநியாய் இருக்கிறாள்

20-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

21-ஸஹஸ்ராஷஸ் ஸஹஸ்ர பாத் -பரம புருஷன் முடிகள் ஆயிரத்தையும் கண்கள் ஆயிரத்தையும் தாள்கள் ஆயிரத்தையும் யுடையவன்

22-(யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஸ்சித் வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -எவனைக் காட்டிலும் சிறியதும் பெரியதும் ஒன்றில்லையோ எவனொருவன் பரம பதத்தில் ஒப்பற்றவனாய் வணங்காத வ்ருக்ஷம் போல் எழுந்தருளி இருக்கின்றானோ அந்தப்புருஷனாலே இது அனைத்தும் நிறைந்துள்ளது -)

23-வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -வேத புருஷனாகிற நான் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போல் பிரகாசிப்பவனும் பிரக்ருதிக்கு அப்பாற் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன் -அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறான் -மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை )

24-புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் –கழிந்தவையும் இருப்பதையும் இனி வருமாவையுமாகிய எல்லாமே புருஷனே )

25-ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சா ஸாவாதித்யே ஸ ஏவம–யாவனொரு பரமாத்மா இந்த ஜீவனிடம் இருக்கிறானோ -எவனொருவன் ஆதித்யனுள் இருக்கிறானோ அவன் ஒருவனே

(26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

28-யோ மாமேவ அஸம் மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ஸ ஸர்வ வித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத –அர்ஜுன எவனொருவன் புருஷோத்தமனான என்னை மயக்கமற்றவனாய் அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் -எல்லா விதத்தாலும் அவன் என்னை பஜநம் செய்கிறான்)

29-புருஷ புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞக-(புண்டரீகாக்ஷன் என்னும் பெயரை யுடையவன் பரம புருஷன்)

(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

31-த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

32-உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-
இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

33-யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.)

34-உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக

34-ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

35-பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களா நாஞ்ச மங்களம் தைவதம் தேவதா நாஞ்ச பூதாநாம் யோ அவ்யய பிதா
எந்த பகவான் பவித்ரங்களுள் பவித்ரனாய் இருக்கிறானோ மங்களங்களுள் மங்களமாய் இருக்கிறானோ தேவதைகளுக்கும் தேவதையாய் இருக்கிறானோ எவன் ஒருவன் ஜீவராசிகளுக்கு எல்லாமே அழிவற்ற தந்தையாய் இருக்கிறானோ

36-ஸ ஹி தேவர ஸம் யுக்தோ மம பர்த்தா மஹாத்யுதி நிர்ப்பயோ வீர்யம் ஆஸ்ரித்ய ஸூந்யே வசதி தண்டகே -ஆர -58-14-
மைத்துனனான லஷ்மணனுடன் கூடியவராய் பரஞ்சோதியான என்னுடைய நாதன் வீர்யத்தைத் துணை கொண்டு பயமற்றவராய் சூன்யமான தண்டவனத்தில் வசிக்கிறார் –

37-யதா திருப்தாச்ச மாதங்க சசச்ச சஹிதோ வநே ததா திவிரவத் ராமஸ் த்வம் நீசசசவத் ஸ்ம்ருத-ஸூந்தர -22-16-
ஒரு காட்டில் மதிப்புடன் கூடிய யானையும் நரியும் சேர்ந்து இருந்தால் எப்படியோ அப்படியே யானை போன்றவர் ராமபிரான் -நீ ஒரு நரியைப் போன்றவன் –

(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

39-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யவ் -புருஷ ஸூக்தம் -பரமபுருஷனே உனக்கும் ஸ்ரீ பூ தேவிகள் பத்னிகள்

40-ஸ்ரீயப்பதி கீதாபாஷ்ய பிரவேசம் -லஷ்மீ நாதன்

41- ஆகார த்ரய ஸம்பன்நாம் அரவிந்த நிவாஸினீம் அசேஷ ஜெகதீஸித்ரீம் வந்தே வரத வல்லபாம்
சேஷித்வ புருஷகாரத்வ ப்ராப்யத்வங்களாகிற மூன்று ஆகாரங்களை யுடையவளும் தாமரையை வசிப்பவளும் எல்லாமே உலகுக்கும் ஈஸ்வரியாய் இருப்பவளும் வரதனுக்குப் பிரியையுமான தேவியை வணங்குகிறேன் –

42-ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா
–6-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

43-ஸ்ரீ நிவாஸ சப்தேந பாசுபதா திவ்யுதாஸ -ஸ்ருத பிரகாசிகை -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே என்கிற இடத்திலுள்ள ஸ்ரீ நிவாஸ ஸப்தத்தினால் பாசுபதர் முதலானோர் தள்ளப்படுகின்றனர் –

44-தயா ஸ ராஜ ரிஷி ஸூதோ அபி ராமயா ஸமேயிவ அநுத்தம ராஜ கந்யா -அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபு ஸ்ரீயா விஷ்ணுரிவா மரேஸ்வர -பால –77-30-
அழகியவளாய் உத்தம ராஜபுத்ரியான அந்த ஸீதையுடன் கூடிய ராஜ ரிஷி புத்ரனான ராமபிரான் மிகவும் விரும்பத்தக்க ஸ்ரீ தேவியுடன் கூடிய அமரர்கள் அதிபதியான விஷ்ணு பகவானைப் போலே மிகவும் விளங்கினான் –

45- ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்னுதே -யஜு காட -3-3-தேவனாகிற பகவான் ஸ்ரத்ததா ஸப்த வாஸ்யையான பிராட்டியாலேயே தேவனாக இருக்கும் தன்மையை அடைகிறான் –

46-ஸ்ருணாதி நிகிலான் தோஷாந் ஸ்ரூணாதி ச குணைர் ஜகத் ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதே ச பரம் பதம் ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண்வதீம் ஸ்ருணதீமபி -பாஞ்சராத்ரம்
ஆஸ்ரிதர்களுடைய தோஷங்களைப் போக்குகிறாள் -அவர்களுடைய அத்வேஷம் ஆபிமுக்யம் முதலான குணங்களைப் பெருக்குகிறாள் 3-அடியார்களாலே தினம் தோறும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள் -பரம பிராப்யமான பகவானை ஆஸ்ரயித்து இருக்கிறாள் -அடியாருடைய கூக்குரலைக் கேட்க்கிறாள் -அவற்றை எம்பெருமானைக் கேடப்பிக்கிறாள் -ஆகையால் பிராட்டிக்கு ஸ்ரீ எனப்படுகிறாள் –

47-பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

48-மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -பாஞ்சராத்ரம் -ஸ்ரீ தேவி எனக்கு சேஷபூதையாய் இருப்பவள் -மற்ற எல்லாருக்கும் ஈஸ்வரியாய் இருப்பவள் -எனக்குப் பிரியையாய் இருப்பவள் –

49-ௐ ப⁴க³வந்நாராயணாபி⁴மதாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்-நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம் அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1 ॥

50-ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ -யஜு -காட -3-3-உலகிற்கு ஈஸ்வரியாகவும் சர்வாதிகனுக்குப் பத்னியாகவும் இருப்பவள் –

51-ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீயம் -ஸ்ரீ ஸூக்தம் -9-ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரியாய் ஸ்ரீ தேவியான உன்னை இங்கு வரும்படி அழைக்கிறேன் –

52-(அகாரேண உச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோக ஏக ஈஸ்வரோ ஹரி -உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீர் உகாரேண உச்யதே ஸதா மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம் -ஸ்ருதி –ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் ஹரி என்றும் விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறாள் -அவர்களுக்கு மகார வாஸ்யனான ஜீவன் தாஸன் என்பதே பிரணவத்தின் பொருள் –

53-அஸ்யா மம ச சேஷா ஹா விபூதிரூபயாத்மிரா -(பஞ்ச ராத்ரம் -உபய விபூதியில் இவளுக்கும் எனக்கும் சேஷமாய் இருக்கும் )

54-அநந்ததா பவதி –என்கிறபடியே அநேக தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ விருத்தியிலும் அன்வயித்து

55-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||
-40-

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

56-ஏவம் வித் பாதேநாத் யாரோஹதி(கௌஷீதகி -1-51-இப்படியறிபவன் பகவானுடைய படுக்கையின் மேல் அடியிட்டு ஏறுகிறான் 

57-ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷோ அசேஷ ஸூ ரார்ச்சித -தஸ்ய வீர்யம் ப்ரபாவஞ்ச ஸ்வரூபம் ரூபமேவ ச -ந ஹி வர்ணயிதும் ஸக்யம் ஞாதும் வா த்ரிதஸை ரபி –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-21-எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படும் சேஷன் பாதாளத்தின் அடியிலே எழுந்தருளி இருக்கிறார் -அவருடைய வீர்யம் பெருமை ஸ்வரூபம் ரூபம் ஆகியவைகளை தேவர்களாலும் வர்ணிக்கவோ அறியவோ முடியாது 

58-பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே -அயோத்தி -31-25-நீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வாரைகளில் விளையாடுவீர் -அடியேன் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் -தூங்கும் போதும் -உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்

59-கிம் சைநாம் ப்ரதி வஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீவச் ச ஸகீவ ச -பார்யா வத் பகிநீவச் ச மாத்ருவச் ச உப திஷ்டதி -அயோத்யா -12-68-கௌசல்யா தேவி தாஸியைப் போலும் சகியைப் போலும் மனைவியைப் போலும் சஹோதரியைப் போலும் தாயைப் போலும் ஸூஸ்ருஷை செய்யும் போதெல்லாம் இப்படிப்பட்ட அநிஷ்டமான கார்யத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன்

(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

61-ஸா ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -ஸீதாம் உவாஸாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் -அயோத்யா -31-2-ரகுநந்தனாய் பெரும் கீர்த்தியினனான லஷ்மணன் தமையனின் பாதங்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டு பிராட்டியையும் ஆஸ்ரித ரக்ஷணமாகிய பெரிய விரதத்தையுடைய பெருமாளையும் பார்த்துச் சொன்னான் 

61-பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||-
-46-

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

62-ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-38-

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

63-மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை)என்று பாஷ்யகாரர்

(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

65-போக பிரியா போகவதீ போகீந்த்ர சயான ஆசானா -(ப்ராஹ்மம் ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -120-போகப்பிரியை போகவதி போகீந்த்ரனான ஆதிசேஷனைப் படுக்கையாகவும் ஆசனமாகவும் கொண்டவள்-)

66-அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீஷே ஸ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -எல்லா உலகையும் படைத்து அளித்து அழிப்பதை விளையாட்டாகக் கொண்டவனும் விசேஷமாய் பல பூத ஸமூஹங்களை ரஷிப்பதையே விரதமாகக் கொண்டவனும் வேதாந்தத்தில் விளங்குபவனுமான ஸ்ரீ நிவாஸனான ப்ரஹ்மத்தின் இடத்தில் பக்தி ரூபமான ஞானம் எனக்கு உண்டாகட்டும் –

67-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்-வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத-வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–ஸ்ரீ வேதாந்த தீப முதல் மங்கள ஸ்லோகம்–ஸ்ரீயப்பதியாய் சிறந்த கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமான சரீரத்தை யுடையவனாய் -குற்றம் ஒன்றும் அற்றவனாய் பரமபத நிலையனாய் -வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனாய் -அடியார்களின் கண்களுக்கு இலக்காமவனாய் ஆதிபுருஷனான அனந்தனுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்வதற்கு என் மனம் ஆசை கொள்ளட்டும் –

68-ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரி வ்ருத் தே ஸிரோ காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூர் வாமதேவ்யம் ப்ருஹத்ர தந்தரே பஷவ் யஞ்ஞா யஞ்ஜீயம் புச்சம் சந்தாம்ஸ் யங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.)

69-தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

70-ஸத்யஸ் ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர –ஸாத்வம் –ஸத்யன் ஸூபர்ணன் கருடன் தார்ஷ்யன் விஹகேஸ்வரன் -என்பவை பெரிய திருவடியின் வ்யூஹ ரூபங்கள்

71(69)தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

72-கருடா கருடாஸநா – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -100-கருடை என்னும் பெயரை யுடையவள் -கருடனை ஆஸனமாக யுடையவள்

73-த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||-42-

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும் பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக் கூடியவர்.

74-ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-43-* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய, உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

75-ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -என்று இவளோட்டைச் சேர்த்தியிலே இறே அசேஷ பரிஜனமும் அடிமை செய்வது-இவருடைய ஸ்ரீ ஸூக்தியின் படியே பாஷ்ய காரரும் ஸ்ரீ வல்லப என்று தொடங்கி –சேஷ சேஷாஸந ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –(ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப * நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண * ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!-சரணாகதி கத்யம் -5)என்று அனுசந்தித்து அருளினார் இறே

78-கதே புரோஹிதே ராம ஸ்நாதோ நியத மாநஸ ஸஹ பத்ந்யா விஸாலாஷ்யா நாராயண முபாகமத் -அயோத்யா -6-1-புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனதை அடக்கி பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடியவனாய் நாராயணனை ஆராதனம் செய்ய அடைந்தான் –

79-ஸைன்ய துரீண பிராண ஸஹாயாம் ஸூத்ரவதீ மாஸிஸ்ரயமம்பாம் -ஸ்ரீ பதலாஷாலாஞ்சித ஸேவா ப்ரோதல ஸத்தோர் வல்லி விலாஸம்-1-51-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால் விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும் ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன் 

80-தார்ஷ்யா பக்ஷ திவதஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே -ஹர்ஷ பாஷ்பமபி கீர்த்தி மர்த்திநாம் யந் முகேந கமலா கடாஷயேத் -1-54-ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ-ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்-ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்-இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –-ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்களைப் பூஜிக்கிறேன்-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே

(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

82-மாதவ த்வயி –அஹம் ஸிஷ்யா ச தாஸி ச பக்தா ச -(ஸ்ரீ வராஹ புராணம் -ஸ்ரீ மந் நாராயணனே பூமியாக நான் உன்னிடத்தில் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் இருப்பவள் -)என்று தான் அருளிச் செய்தாள் இறே

83-உத்புல்ல பங்கஜ தடாக மிவோபயாநி ஸ்ரீ ரெங்கராஜமிஹ தக்ஷிண ஸவ்யஸீம்நோ -லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்ஸீம் சாயாமிவாப் யுதயிநீமவ நீஞ்ச தஸ்யா -(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -63-இந்தக் கர்ப்ப க்ருஹத்தில் மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள ஸ்ரீ ரெங்கநாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன் -வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் விளையாடுகிற ராஜ அன்னப் பேடை போன்றுள்ள பெரிய பிராட்டியாரையும் மேன்மேலும் வளர்கின்றதான அவளுடைய நிழல் போல் இருக்கும் பூமிப்பிராட்டியையும் அடையக் கடவேன்)

84-அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ அநு ஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய -தைத் நா -10-5-சிவப்பு -ராஜஸம் வெளுப்பு ஸத்வம் கறுப்பு தாமஸம் நிறங்களுடன் -குணங்களுடன் -கூடியதாய் -தன் போன்ற பல பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாய் -பிறப்பற்றதுமான பிரக்ருதியாகிற ஒரு ஸ்த்ரீயைப் பிறப்பற்றவனாகிற ஒரு ஸம்ஸாரி ஜீவன் ப்ரீதியுடன் புஜிக்கிறான் -இவனைப்புஜித்த மற்றொரு முமுஷு ஜீவன் இவனை விட்டுச் செல்கிறான்

85-அநாத்மன் யாத்ம புத்திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -விஷ்ணு பு -6-7-11-ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும் தனதல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தியும் ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில் விருத்திக்கு இருவகையாக விருக்கும் விதையாகும் 

86-இவ்வர்த்தத்தை பாஷ்யகாரர் பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம் —மாம் தாரய -சரணாகதிகத்யம் -12-(பகவத் ஸ்வரூபத்தை மறைப்பதும் விபரீத ஞானத்தை உண்டாக்குவதும் தன் விஷயமாக போக்ய புத்தியை விளைப்பதுமான பிரகிருதியில் இருந்து என்னைத் தாண்டுவிப்பாயாக )என்று அருளிச் செய்தார் இறே –

87-அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே ( கௌட காரிகை -21-அநாதி மாயையாகிற பிரக்ருதியிலே கட்டுண்டு உறங்குகிற ஜீவன் எப்போது உணர்கிறானோ

88-மாயாந்து ப்ரக்ருதீம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம் -ஸ்வே -4-10-ப்ரக்ருதியை ஆச்சர்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் அந்த மாயையைத் தூண்டுபவனை மகேஸ்வரன் என்றும் அறியக் கடவன்

89-அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிம்ஸ் சாந்யோ மாயயா ஸந் நிருத்த -ஸ்வே -4-9-இந்த மாயையாகிற பிரக்ருதியிலிருந்து மாயியாகிற பகவான் இவ்வுலகைப் படைக்கிறான் -அதில் ஜீவனாகிற மற்ற ஒருவன் மாயையினால் கட்டுண்டு கிடக்கிறான் –

90-யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் 

91-ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் சேந்தரஸ் ஸோ அக்ஷர பரம ஸ்வராட் -தை நா -11-அவனே ப்ரஹ்மாவுக்கும் அந்தர்யாமி -அவனே சிவனுக்கும் அந்தர்யாமி -அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி -அவனே அழிவற்றவனாய் மேலானவனாய் கர்ம வஸ்யன் இல்லாதவனுமான முக்தனுக்கும் அந்தராத்மா-

92-ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாதஸ் பதிரேக ஆஸீத் -(முதலில் பூதங்களுக்கு எல்லாம் ஒரே பதியான ஹிரண்யகர்ப்பன் -ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுள் கொண்ட பகவான் -இருந்தான்

93-யோ தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷிஸ் ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமாநம் ஸ நோ தேவஸ் ஸூபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து -(ஸம்ஸாரமாகிற புண்ணைப் போக்கடிப்பதால் ருத்ர ஸப்த வாஸ்யனாய் -மஹா ஞானியான எந்த பகவான் தேவர்களுக்குள் முதல்வனான ஹிரண்யகர்ப்பன் ஆதியில் பிறக்கும் போது அவனைக் கடாஷிக்கிறானோ அந்தப் தேவன் நமக்கு நல்ல புத்தியை அளிக்கட்டும் –

94-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாந –தத்தேஜோ ஹிரண்யம் அண்டம் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே –த்ர்யக்ஷ ஸூலபாணி புருஷோ அஜாயத -மஹா உபநிஷத் -நாராயணன் ஒருவரே முதலில் இருந்தார் -பிரமனும் இல்லை சிவனும் இல்லை -அவரிடமிருந்து ஸூவர்ண மயமான அண்டம் யுண்டாயிற்று -அதில் நான்முகனான பிரமன் பிறந்தான் –முக்கண்ணனாய் ஸூல பாணியான புருஷன் உண்டானான்

95-அத புருஷோ ஹ வை நாராயணோ ஆகாமயந ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி -நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரோ வசவஸ் ஸர்வாணி சந்தாம்ஸி -என்றும்(நாராயண உபநிஷத் -புருஷனான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்ட்டிக்கக் கடவேன் என்று ஸங்கல்பித்தான் -நாராயணனிடம் இருந்து பிரமன் பிறந்தான் -நாராயணனிடம் இருந்து ருத்ரனும் யுண்டானான் -நாராயணனிடம் இருந்து இந்திரன் பிறந்தான்-நாராயணனிடம் இருந்து பன்னிரண்டு ஆதித்யர்களும் ருத்ரர்களும் வஸூக்களும் எல்லா வேதங்களும் தோன்றினர் –

96-கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||-14-

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்? யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

97-த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமத் வைதமதிகம் த்ரிகாதஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன் விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத ததன்யத் ப்ரூ பங்கீ பரவத்தி ஸித்தாந்தயதி யஸ் -ர ஸ்த 1-116-மும்மூர்த்திகளும் சமர் என்றும் இம்மூன்று மூர்த்திகளும் ஒன்றே என்றும் இம்மூன்றைக்காட்டிலும் மேற்பட்டதொன்றே பரதத்வம் என்றும் சொல்லும் விப்ரபத்திகளைப் போக்கடிப்பதாய் -பிரமருத்ரர்களுக்கு மூலக்கிழங்காய் இருக்கிற பெரிய பெருமாளுடைய நாபிக்கமலமானது அவனை ஒழிந்த எல்லாப்பொருள்களும் அவளுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருப்பது என்றும் நமக்கு முடிவு கட்டித்தருகின்றது-

98-ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமேகம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -ஆரண்ய பர்வம் -192-56-புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லாமே உலகங்களுக்கும் தந்தையும் தாயும் லஷ்மீ நாதனே -சரணமடையத்தகுந்த இவனை சரணமடையுங்கள்-

99-த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே மைதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத் தனம் -உத்யோக பர்வம்
அரசனே மனைவி வேலைக்காரன் பிள்ளை ஆகிய மூவரும் தனமற்றவர்கள் -அவர்கள் சம்பாதிக்கும் பொருளும் அவர்களுடைய யஜமாநர்களுக்குச் சேருகிறது –

100-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித-தை நா -11-
இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயுமிருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான் –

(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

102-மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
-என்கிறபடியே (மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் – முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம் சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும் பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது – பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன – அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் – கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன-

103-103-பஸ்யக -காஸ்யபோ பவதி -தை ஆ -1-8- ஞானி என்னும் பொருளுடைய பஸ்யக என்னும் சொல் கஸ்யப என்றும் மாறுகிறது –

104-த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-

105-ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலசர்த்தக மாம் நயேத் யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருஸம் பவேத் -ஸூந்தர -39-30-சத்ருக்களின் பலத்தை அழிப்பவரான ஸ்ரீ ராமபிரான் லங்கையை பாணங்களால் கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில் அப்படிச்செய்வது அவருக்கே தகுந்ததாகும்

106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

107-ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வா –ஸூந்தர -58-90-லஜ்ஜை நிரம்பியவளாய் கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்தவளான அப்பிராட்டி அக்கனவு உண்மையானால் உங்களுக்கு நான் அடைக்கலமாகிறேன் என்று உரைத்தாள்

108-பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63-
சேஷாசநாதி பரிஜனங்களும்-சத்ர சாமராதி பரிச் சதங்களும்-கிரீட குண்டலாதி பூஷணங்களும்-திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்-ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான சிறந்த குண கணங்களும்-பரமபதமும்-அண்டங்களும்-ஸ்வ அசாதாரண விக்ரஹமும்-திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்-ஆகிய இவை எல்லாவற்றையும்-ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

109-ததைவைகா பரா சக்தி ஸ்ரீஸ்தஸ்ய கருணாஸ்ரய ஞாநாதி ஷட் குண மயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி பரா-ஸநத்குமார ஸம்ஹிதை -கருணைக்கோர் இருப்பிடமானவளாய் ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவளாய் மேலான ப்ரக்ருதியாகச் சொல்லப்படுபவளான ஸ்ரீ தேவி அந்த பகவானுடைய மேலானதொரு சக்தியாவாள்-

110-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி ப்ரபாவிநீம்(அஹி ஸம்ஹிதை -21-9--ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு கிரணங்களையுடைய ஸ்ரீ தேவியை-

111-இதி விவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பராத்மமயம் ஸ நாதஸ்ய ப்ரதி ஸது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிரபஜந் மஜராதிகாம் ஸ சித்திம் —வி பு -6-8-64-பிறப்பற்றவனும் பழமையானவனுமான எந்த விஷ்ணுவுக்குப் பலவிதமான ப்ரக்ருதி என்ன -அதைக் காட்டிலும் மேலான திவ்ய மங்கள விக்ரஹம் என்ன-ஆத்ம ஸ்வரூபம் என்ன-இவை இம்மாதிரியாக சரீரங்களாய் இருக்கின்றனவோ -அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு இவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ ஸித்தியை அருள்வானாக –

112-மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மார்கத்தவ்யோ பகவான் ஹரி -பேராபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத்தக்கவன்-

113-அநியோஜ்யோ அப்ரமேயஸ் ச யஸ்து காம சரீர த்ருத் -மோததே பகவான் பூதைர் பால க்ரீடாநைரிவ -சபா -40-78-எதிர்த்துப் பேசப்படாதவனும் அறிய முடியாதவனும் -இஷ்டப்பட்ட உருவங்களை தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறான்-

114-ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்
–ஸ்ரீ குணரத்னகோசம் 31–மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.-இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.-ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.-ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.-இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.)

115-ந தே வர்ணயிதும் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதஸ ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாஷீ கதாசன -வி பு -1-9-133-(பிரமனின் நாவும் உன்னுடைய குணங்களை வர்ணிக்க சக்தி யுடையவனல்லன் -தாமரைக் கண்களை யுடைய பிராட்டியே அருள் புரிவாயாக -எங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டா-)

116-ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -(பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் –

117-உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.-இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்

(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

119-தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||-7

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

120-யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||-8-

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்; இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்; கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

121-யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-(அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,-அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்)

122-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-55-

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

123-அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும
 –ர ஸ் – 1-13-பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்=அப்போது அது அறியப் பட்டதாகிறது –பின்னையும் பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால் அது இகழப் பட்டதாகிறது-உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால் ஸ்துதிக்கப் பட்டதாகிறது-என்று இவ்விதமாக வேதமானது எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது-இப்படி இருக்க-அந்த ஸ்ரீ ரெங்கராஜனை அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –என்ன வென்று-ஸ்துதிக்க இழிகிறோம்–ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

124-ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் -இத்யாதி(ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் க்வா அஸி யாதவ நந்தன -இமாமவஸ்தாம் ஸம் ப்ராப்தாம நாதாம் கிமுபேஷஸே -சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத -கோவிந்த புண்டரீ காஷ ரக்ஷமாம் சரணாகதாம் –சபா பர்வம் -66-கிருஷ்ணனே -த்வாரகா வாஸியே -யாதவ குல நந்தனனே -எங்கிருக்கிறாய் -இவ்வவஸ்தையை யடைந்த அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -சங்க சக்ர கதா பாணியே -த்வாரகையிலே நிற்பவனே -அடியவரை நழுவ விடாதவனே -கோவிந்தனே -செந்தாமரைக் கண்ணா -சரணாகதையான என்னைக் காத்தருள்வாயாக – 

125-தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ மாமகா பாண்டவாஸ் சைவ கிமகுர்வத சஞ்சய-1-1-சஞ்சயனே தர்மக்ஷேத்ரமான குருஷேத்ரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாய்க் கூடின என் பிள்ளைகளான துர்யோதனாதியரும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்

126–கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா -யேஷாமர்த்தே காங்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸூகாநி ச -த இமே அவஸ்திதா யுத்தே-1-33- -என்று ராஜ்ய போக ஸூகங்களும் ஸ்வ ஜன ரக்ஷணார்த்தமாயன்றோ இருப்பது -அவர்கள் தாங்களே யுத்தத்தில் அவஸ்திதரான பின்பு அவர்களை ஹிம்ஸித்து ராஜ்ய போகங்களால் என்ன பிரயோஜனமுண்டு 

127-ந ஹி மே ஜீவிதே நார்த்த-(எனக்கு உயிரினால் பயனில்லை 

128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

129-ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:-1-47-சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்

130-ஸர்வதா அஹம் ந யோத்ஸ்யாம் இத் யுக்த்வா –உபாவிஸத் -கீதாபாஷ்யம் -1-ஒருபோதும் நான் யுத்தம் செய்ய மாட்டான் என்றும் உட்கார்ந்தான்

131-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -18-66

132-நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ-18-73-அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்-

133-சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?-இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

134-கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் புநரபி ம்ருஷ்டம் ததேவ ஸூத வசனம் ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம் ததேவபரிபக்வம் ஸூத வசனம் -எது போக்யமானது -சிசுவான குழந்தையின் மழலைச் சொல்லே போக்யமானது -மறுபடியும் இனிதாய் இருப்பது பாலனான அக்குழந்தையின் பிள்ளைப்பேச்சுக்களே -போக்யமான ஸகல பதார்த்தங்களிலும் போக்யமாயுள்ளது யுவாவான அப்பிள்ளையின் அறிவு நிரம்பிய அந்தப் வார்த்தைகளே யாகும்

135 (118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

136-ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம்
பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் –2-

பெரிய பிராட்டியாரே எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம் உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும் பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை ––உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு – நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும்-ஹே லஷ்மீ-இந்த அடியோங்களும் உம்முடைய –அமீ -என்று கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி – –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு–இலக்காகக் கடவோம்

137-ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும். ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை. அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்-இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்-இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

138-ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸ குலீநஸ் ஸ புத்திமான் ஸ குரஸ் ஸ ச விக்ராந்தோ யம் த்வம் தேவி நிரீக்ஷஸே -வி பு -1-9-131-தேவியே நீ எவளைக் கடாஷிக்கிறாயோ அவனே சிறந்தவன் -அவனே குணவான் -அவனே பாக்கியசாலி -அவனே நற்குலத்தவன் -அவனே புத்திமான் -அவனே சூரன் -அவனே பராக்ரமசாலி )

139-அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

140-யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிஸ்ஸய யோ யஸ்து நாரீ பாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா -ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே அத கிம் பஹுநோக்தேந நரநாரீ மயோ ஹரி -ஸநத் குமார ஸம்ஹிதை –உலகில் ஆண்மை காணப்படும் இடமெல்லாம் ஹரி இருக்கிறான் என்பது நிச்சயம் -பெண்மையுள்ள இடமெல்லாம் பிராட்டி இருக்கிறாள் -ப்ரக்ருதிக்கு அபிமானியாகிற பிராட்டியையும் புருஷ அபிமானியான பகவானையும் தவிர மூன்றாவது ஒன்றும் இல்லை -பல சொல்லி யென் -ஸ்த்ரீ புருஷர்கள் எல்லாமாய் இருப்பவன் ஸ்ரீ மந் நாராயணனே –

141-மூலப்பிரக்ருதிர் ஈஸாநி ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -66

142-ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–ஸ்ரீ குணரத்ன கோஸம்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.-அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே! உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

144-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-120-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள்

145-பத்மபிரியா ஸூ ப்ரஸந்நா -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமம் -48 -பத்மத்தில் பிரியமுள்ளவள் -மிகவும் பிரசன்னையாய் இருப்பவள்

146-ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

147-ஸர்வ உத்க்ருஷ்டா ஸர்வ மயீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -43- -எல்லாரையும் விட உயர்ந்தவள் -எல்லாமாய் இருப்பவள்

148-வாசஸ் பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேன் நியதஸ் ஸ்ரீயம் -ஸுநக ஸம்ஹிதை –வாக்குக்கு எட்டாத பிராட்டியின் ஸ்வரூபத்தை அடைய விரும்புமவன் நியமமாக அப்பிராட்டியை சரணம் அடையக் கடவன்

149-தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–ஸ்ரீ குணரத்ன கோஸம்-10-

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

150-நாயம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா -ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந –
இந்த ஜீவாத்மா தேவனும் அல்லன் -மிருகமும் அல்லன் -மரமும் அல்லன் -நாலுவகைப்பட்ட இந்த சரீரங்களில் இருக்கும் ஞான ஆனந்த மயமான ஆத்மா பரமாத்மாவுக்கு தாஸனாய் இருப்பவன் அன்றோ –

151-சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி -ந ஜீவேயம் ஷணமபி விநா தாமஸிதேஷணாம் –ஸூந்தர -66-10-ஸீதை ஒரு மாஸம் தரித்து இருப்பாளாகில் வெகுகாலம் பிழைத்து இருந்தவளாகிறாள் -கறுத்த கண்களையுடைய அவளைவிட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்து இருக்க மாட்டேன்

152-யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் நியாயதத்வம் ப்ரசஷ்மஹே -நாதமுனிகள் அருளிச் செய்த நியாயதத்வம் -எவனொருவன் எப்போதும் எல்லா வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் தானாகவே நேரில் அறிகிறானோ -அந்த ஹரியை வணங்கி நியாயதத்வம் என்னும் கிரந்தத்தைச் சொல்லுகிறோம்

153-(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

154-(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

155-(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தைத் ஆ -9-1-
எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –

156-யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞானமாயம் தபஸ் –முண்ட -1-1-10-
எந்தப் பரமாத்மாவானவன் எல்லாமே வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவங்களையும் அறிகிறானோ -எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாய் இருக்கின்றதோ —

157-பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்றும் அறியப்படுகிறது –

158-தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞாதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே
–ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ

159-ஸ்ரீ ரெங்கநாத மம நாத -ஸ்ரீ ரெங்ககத்யம் -7-ஸ்ரீ ரெங்க நாதனே என்னுடைய நாதனே

160- பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம -கார்யம் கருணமார்யேண ந கச்சின் நாபராத்யதி-யுத்த -116-44-
வானர பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தகுந்தவர்களாக இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் -அபராதம் செய்யாதவன் ஒருவனுமே இல்லையே –

161-காலேஷ்வபி ச சர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத்பயம் -ஜிதந்தே -1-9-
அச்யுதனே -எல்லாப் புண்ய காலங்களிலும் எல்லாத் திசைகளிலும் உள்ள புண்ணிய ஷேத்ரங்களிலும் -தர்ம சாதனமான சரீரத்திலும் சரீராந்தர கதியிலும் அடியேனுக்கு அதிகமாக பயம் உள்ளது –

162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5
–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

163-(144)-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-12-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள் —

164-பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –நாராயணம் -தைத் நா -11--உலகிற்கெல்லாம் பதியாய் இருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனாய் இருப்பவனும்

165-யத் வேதாதவ் ஸ்வரஸ் ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர -தை நா -10-24-
வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் யாதொரு ஸ்வரமானது சொல்லப்படுகிறதோ -தனக்குக் காரணமான அகாரத்தால் ஒடுங்கிய ஓங்காரமாகிய ஸ்வரத்துக்குப் பொருளாய் இருப்பவனே மகேஸ்வரன் –

166(31)த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

167–ஏகஸ் ஸ்வ தந்த்ரோ ஜகதோ பபூவ -தை -நா -11-உலகிற்கு ஒரே ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியாய் நாராயணன் விளங்கினான்

168-க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷாரத்மாநா வீஸதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது பிரக்ருதியே -அம்ருதமாகையால் அக்ஷரம் எனப்படுபவன் ஜீவனே -பிரகிருதி ஜீவர்களை ஒரு தேவன் நியமிக்கிறான்

169-ஏகஸ் ஸாஸ்தா ந த்வதீயோ அஸ்தி ஸாஸ்தா கஸ்ஸித் யோ ஹ்ருச்சயஸ் தமஹமநு ப்ரவீமி-தேநைவ யுக்தஸ் பிரவணாதி வோதகம் யதா நியுக்தோ அஸ்மி ததா வஹாமி -ஆச்வ பர்வம் -27-1-
நாராயணன் ஒருவனே நியமிப்பவன் -நியமிப்பவர் வேறு இல்லை -எந்த பகவான் ஹ்ருதயத்தில் எழுந்தருளி இருக்கிறானோ அவனையே நான் சொல்லுகிறேன் -ஜலம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலே -அவனுடன் சேர்ந்தவனாய் அவன் ஏவின வேலையைத் தாங்கிச் செல்லுகிறேன்

170-விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -யஜுர் காட -3-3–உலகிற்கு ஸ்வாமிநியாகவும் ஆதாரமாகவும் இருப்பவள்

171(146)ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

172-ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–ஸ்ரீ ஸ்தவம்-1-

எல்லா உலகங்களுக்கும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்-மற்றும் உள்ள எல்லாவற்றையும் –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்–ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில் –இந்த எம்பெருமானுக்கு –அப்பிராட்டியோடே ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக–ஆக மாட்டாது அன்றோ–அந்தப் பெரிய பிராட்டியார் நன்மையை அளிக்கக் கடவள்-

173-ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண சம ஷிதா -பால-1-26–ராமனுக்குப் பிரியபத்னியாயும் எப்போதும் அவனுடைய ப்ராணனைப் போலே நன்மையைச் செய்பவளாகவும் இருப்பவள் ஸீத்தை

174-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

175-லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே
–1-10-

ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ-ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற
தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக-

176-ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநம் குர்வந்தீநாம் பரஞ்ஞயா விதேயேநாம் ச தாஸீநாம் ந குப்யேத் வாநரோத்தம -யுத்த -116-38-
வானர ஸ்ரேஷ்டனே ராஜாவுக்குப் பரதந்த்ரர்களும் அவனுடைய ஆஜ்ஜையினால் எனக்குத் துன்பத்தைச் செய்பவர்களும் அவனுக்கு வசப்பட்டவர்களுமான தாஸிகளிடத்தில் எவன் கோபிப்பான் –

177-மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி-என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்-தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.-ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே-அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.-ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

178-ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம் வாதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -ஸூந்தர -38-35-
பூமியில் விழுந்தவனும் சரணமடைத்தவனுமான அந்தக் காகாசூரனை கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் சரணமடையத் தகுந்தவனான ராமபிரான் தன் அருளாலே ரக்ஷித்தான்

179-ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா தயா -ஸ்ரீ பாஷ்யம் -தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது –

180-தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹா துர்ப்பலா -யுத்த -116-41-
அவர்களுடைய கண்கள் கலங்கக் காணமாட்டாத துர்ப்பலையான நான் ராவணனுடைய தாசிகளாகிற இவர்களை மன்னிக்கிறேன்-

181-தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –
தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம் நன் எப்போதும் வஸிக்கிறேன் –

182-புண்யா புண்யாவீஸ்வர ப்ரீதி கோபவ் -புண்யம் பாபம் என்பது ஈஸ்வரனுடைய ப்ரீதி கோபங்களே யாகும்

183-பத்மே ஸ்திதா பத்ம வர்ணா பத்ம நாப ப்ரியா ஸூபா -ஸதா அனுக்ரஹ ஸம்பன்னா ஸா தேவீ மே ப்ரஸீதது -மங்கள ஸம்ஹிதை
தாமரையில் இருப்பவளாய் -தாமரை நிறத்தவளாய் -தாமரை யுந்தியான் மனைவியாய் -மங்கள ஆகாரையாய் எப்போதும் அருள் நிரம்பியவளான அந்தப் தேவி என்னிடம் அருள் புரியட்டும் –

184-அனுக்ரஹ பராம் ருத்தி மநகாம் ஹரிவல்லபாம் நமாமி கமலாம் காந்தாம் ஷமாம் ஷீரோதா ஸம் பவாம் -ஸ்ரீ லஷ்மீ அஷ்டோத்தர சதம்
அருள் நிரம்பியவளாய் -செல்வமாய் இருப்பவளாய் -பாபமற்றவளாய் -ஹரிக்குப் பிரியையாய் கமலையாய் காந்தையாய் பொறுமையாய் பாற்கடலில் உதித்தவளுமான பிராட்டியை நமஸ்கரிக்கிறேன் –

185-186-“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”-தேவராஜ அஷ்டகம் 7-
த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-8

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.-காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

187-ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவாந் -வி பு -1-8-16-
அம்ருத மதன காலத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீ தேவி உண்டானதாகக் கேள்விப் படுகிறேன் -ப்ருகுவுக்கு க்யாதி என்னும் பத்னியிடம் பிராட்டி யுண்டானதாகத் தாங்கள் சொல்வது எப்படி–

188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

189-த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவந த்ரயம் -வி நஷ்ட ப்ராய மபவத் த்வயேதாநீம் ஸமேதிதம் -விபு -1-9-123-
தேவியே உன்னால் கைவிடப்பட்ட மூவுலகு முழுவதும் நசித்துக் கிடந்தது -இப்போது உன் அருளாலே உஜ்ஜீவித்தது –

190-ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் ஸர்வே முநயஸ் ச தபோதநா ஏதந்தே த்வத் பதச்சாயாம் ஆஸ்ரித்ய கமலேஸ்வரி -காஸ்யபீயம்
கமலையே பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன் திருவடி நிழலை அண்டி உஜ்ஜீவிக்கிறார்கள் –

191-யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
29-

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் 

192-ப்ருதிவ்யப்ஸூ ப்ரலீயதே ஆபஸ் தேஜஸி லீயதே தேஜோ வாயவ் லீயதே வாயுர் ஆகாஸே லீயதே ஆகாஸம் இந்த்ரியேஷு இந்திரியாணி தன்மாத்ரேஷு தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே பூதாதிர் மஹதி லீயதே மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரே தேவ ஏகீ பவதி -ஸூபால -2-
பூமி ஜலத்தில் லயிக்கிறது -ஜலம் தீயில் லயிக்கிறது -தீ வாயுவில் லயிக்கிறது -வாயு ஆகாசத்தில் லயிக்கிறது -ஆகாசம் இந்த்ரியங்களுடனும் இந்திரியங்கள் சப்தாதி தன்மாத்ரையுடனும் சேருகின்றன -தன் மாத்ரம் பூதாதி என்னும் தாமஸ அஹங்காரத்தில் லயிக்கிறது –அஹங்காரம் மஹானில் லயிக்கிறது -மஹான் அவ்யக்தத்தில் லயிக்கிறது -அவ்யக்தம் தமஸ்ஸிலே லயிக்கிறது -தமஸ் மேலான தேவனிடம் ஒன்றாகிறது –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார் –

194-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் -தை ஆந -6-அந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தவன் -அந்த ப்ரஹ்மம் அதை வியாபித்தது –

195-ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷா ததி -கலா முஹூர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ–தை நா -1-8-
மின்னலைப்போன்ற உருவையுடைய புருஷனிடமிருந்து எல்லா நிமிஷங்களும் கலைகளும் முஹூர்த்தங்களும் காஷ்டைகளும் இராப்பகலும் ஆகிய கால தத்வம் எல்லாம் உண்டாயின –

196–வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீரோ நாமாநி க்ருத்வா அபி வதந் யாதாஸ்தே -புருஷ ஸூக்தம்
ஆதித்ய வர்ணனாய் ப்ரக்ருதிக்கு அப்பால் எழுந்தருளி இருப்பவனாய் ஸர்வஞ்ஞனாய் எல்லா நாம ரூபங்களையும் படைத்து அவற்றைத் உச்சரித்துக் கொண்டு எழுந்தருளி இருப்பவனான இந்த மஹா புருஷனை நான் அறிகிறேன் –

197-ஸேயம் தேவதைஷத ஹந்தாஹம் இமாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேன ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக் -6-3-2-
அப்படிப்பட்ட இந்த தேவதை நான் நெருப்பு நீர் பூமி என்னும் இந்த மூன்று தேவதைகளையும் எண்ணுருவாய் இருக்கும் ஜீவனால் வியாபித்து நாம ரூபங்களைச் செய்யக்கடவேன் -என்று ஸங்கல்பித்தது-

198-ததைஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத தத் தேஜ ஐஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தபபோ அஸ்ருஜத –தா ஆப ஐஷந்த –சாந்தோ -6-2,3,4)
அந்தப்பர ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது -அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது -தேஜஸ்ஸை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் நான் பலவாகக் ஆகக்கடவேன் என்றும் சங்கல்பித்தது -அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது -ஜலத்தை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் சங்கல்பித்தது –

199-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

———-

200-ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.-அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள். (அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.-பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).-இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!

——–

201-உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்-அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன-(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன)-இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல–இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்-(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.–இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.–பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .–மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

————

202-ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயி தவ்யா –தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் –

203 (26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

204 (27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

205-விஷ்ணோர் கடாக்ஷம் -விஷ்ணுவின் கடாக்ஷ ஸத்வ குணத்தை அளிக்க வல்லது

206-ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக–சாந்திபர்வம் -358-73
பிறக்கும் போது எவனை மது ஸூதனன் காண்கிறானோ அவன் ஸாத்விகன் என்று அறியத்தக்கவன் -அவனே மோக்ஷ புருஷார்த்தத்தைத் சிந்திப்பவன் –

206-அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ஸாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -ஸூந்தர -15-52-
தேவின் மனம் பெருமாளிடமும் அவர் மனம் அவளிடமும் நிலை நிற்கிறது

207-ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -வி பு -5-19-21-
மேலான அருளை யுடையவர்களும் ஸ்வாமியாய் இருப்பவர்களுமான இந்த ராமகிருஷ்ணர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் -நான் தன்யனானேன் -அவர்களைப் பூஜிக்கிறேன் என்று பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார் –

208/209-அநர்த்தாக்யம் தனம் ப்ராப்ய மாத்யந்துச் சைர் ந மாம் ஸ்மரேத்
அநர்த்தம் என்னும் தனத்தை அடைந்து மிகவும் மதமடைந்தவனாய் என்னை நினைப்பதில்லை

210-விஞ்ஞான சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹவான் நர-ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட-1-3-9-
எவனொருவன் நல்ல ஞானத்தை சாரதியாகவும் மனத்தை கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ அவன் ஸம்ஸாரத்துக்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறான் –

211-புண்ய ஸ்ரேயஸீ ஸூஹ்ருதம் வ்ருஷ -புண்யம் ஸ்ரேயஸ் ஸூஹ்ருதம் வ்ருக்ஷம் -தர்மம் -என்னும் நாலு பாதங்களும் ஒரே பொருளை யுடையவை

212-பத்ம யோநிரிதம் ப்ராப்ய படந் ஸ்தோத்ரம் தத பரம் திவ்யம் சாஷ்ட குணை ஐஸ்வர்யம் தத் ப்ரஸாதாச் ச லப்தவான் -ப்ரஹ்ம புராணம்
நாபிக்கமலத்தில் இருந்து உண்டான நான்முகன் இந்த ஸ்தோத்ரத்தை அடைந்து படைத்து அதன்பின் திவ்யமான எட்டுவிதச் செல்வத்தையும் அப்பிராட்டியின் அருளாலே அடைந்தான்

213-ப்ரஹ்ம அதீநாம் யதாயத்தம் வைபவம் யஸ்ய ஸா ஸ்வயம் தஸ்ய கைமுத்ய நிர்த்தார்யம் ஈஸ்வரத்வம் ஸ்ரீ ய பதே -ப்ரஹ்ம புராணம்
ப்ரஹ்மாதிகளுடைய வைபவம் எவளாலேயோ அந்தப்பிராட்டி எவனுக்கு சேஷபூதையோ அந்த ஸ்ரீ யப்பதியின் ஈஸ்வரத்வம் கிம் புநர் நியாய ஸித்தம்

214-ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?-தேவரீருடைய கடாக்ஷகந் தளிதங்களான ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

215-ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

216-அம்ருதஸ்யைஷ ஸேது -முண்ட -2-2-5-ஸம்ஸாரக்கடலின் அக்கரையான மோக்ஷத்தை அடைய இந்த பகவானே ஸேது -அணை -உபாயம் ஆவான்

217-ஸ ப்ரீதோ அலம் பலாய -த்ரமிட பாஷ்யம் -ப்ரீதியடைந்த பகவானே பலனைக் கொடுக்க சக்தன்

218-பலமத உபபத்தே -ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-27-இந்தப் பரம புருஷனிடமிருந்தே மோக்ஷ பலம் உண்டாகிறது -அதுவே பொருந்தியதாகையால்

219-ஆரோக்யம் பாஸ்கராதிச் சேத் தனமிச்சேத் ஹுதாஸநாத் ஈஸ்வராத் ஞானம் அன்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -மாத்ஸ்ய புராணம் -67-41-
ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தை விரும்பக்கடவன் -அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் -ஈஸ்வரனிடமிருந்து ஞானத்தை விரும்பக் கடவன் -ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்

220-உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்
–2-87-

ஹே ஸ்ரீ ரெங்கநாதனே -ஸ்ரீ மந் நாராயணன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி நியமனம் முதலிய காரியங்களால் சேதன அசேதனங்களைத் தனக்கேயாக ஸ்வீ கரிக்கிறான் என்றும் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன -ஆகையால் இங்கு உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கும் ஸ்வரூபன் -குணங்கள் அல்ல -இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே ––ஆகையால் உம்மை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன் -அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –

221-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேஸோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகஸ் ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச நீயதே -லஷ்மீ தந்த்ரம் -28-14-
காருண்யமே வடிவெடுத்த பிராட்டியுடன் கூடியே பகவான் ரக்ஷகன் ஆகிறான் என்றும் எல்லா சித்தாந்தங்களிலும் வேதாந்தங்களிலும் புகழப்படுகிறான்-

222-அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் ஸித்யார்த்த நிர்ணய -அர்த்தத்திலிருந்தும் பிரகரணத்திலிருந்தும் -அடையாளங்களிருந்தும் -ஒவ்சித்யத்திலிருந்தும் பொருளை நிர்ணயிக்க வேண்டும் –

223-(106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

224-ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி -அந்தராத்மா ச மே ஸூத்தஸ் தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா -ஸூந்தர -37-14-
வானரத்தலைவனே என் கணவன் விரைவிலேயே என்னை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் -என் மனம்- தன்னை ரக்ஷிக்கத் தான் முயற்சி செய்வதாகிற -அசத்தி யற்று இருக்கிறது -அவனிடம் குணங்கள் பலவுள்ளன –

225-யத்யபி ஸச் சித்தோ ந நிர்ப்புக்ண தைவதம் குண கணம் மனஸா அநு தாவேத் ததாப் யந்தர்க்குணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யம்
சத்தாகிற ப்ரஹ்மத்தை த்யானிப்பவன் தேவனாகிற அந்த ப்ரஹ்மத்தை விட்ட குண ஸமூஹத்தை மனஸ்ஸினாலே தியானிக்க முடியாவிடினும் குணங்களுடன் கூடிய தேவதையையே உபாஸிக்கிறான் -அதிலும் குணத்துடன் கூடிய தேவதையையே அடைகிறான் –

226-புவந பவந ஸ்தித்யபாய ஏக ஹேதோ லஷ்மீ பர்த்துர் நரஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ-பாகவதம்
உலகங்களைப் படைத்து அளித்து அழிக்கும் ஒரே காரண புருஷனாய் இருக்கும் ஸ்ரீயப்பதியான நரஸிம்ஹனுக்கு தாஸனுக்கும் தாஸனுக்கும் தாஸனாய் இருக்கிறேன் –

227-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

228-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் ஷிப்ர ப்ரஸாதிநீம் தேவீம் சரண்யாம் சிந்தயேதிதி -ஸ்வாயம்புவம்
எல்லா இஷ்டங்களையும் தருமவளும் அழகியவளும் ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவளும் விரைவில் அருள் செய்யுமவளுமான பிராட்டியை சரணமடையத் தகுந்தவளாக நினைக்கக் கடவன்-

229-ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –

230-ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ர பரிசோஷிணீ பவ பங்காப ஹாரிணீ பர நிர்வாணதாயிநீ -ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23
உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில –

231-ஆகிஞ்சன்ய ஏக சரணா கேசித் பாக்யாதிகா புநஸ் -மத் பதாம் போருஹ த்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா -லஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந -மத் ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபக மேவ மாம் லப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ் யந்தே மாமேவா நந்ய மாநஸா -விஷ்வக்ஸேன ஸம்ஹிதை
அழகிய முகத்தையுடைய சேநா பதியே ஒரு கைம்முதலும் அற்று இருக்கையையே பற்றாசாகக் கொண்ட சில பாக்யசாலிகளோ வென்னில் என் திருவடித்தாமரை இணையை அன்புடன் கூடிய மனத்தராய்ச் சரணடைந்து லஷ்மீ தேவியைப் புருஷகாரமாகப் பற்றி என் பொறுமைக்கு இலக்காகி என்னையே ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த க்ருதார்த்தர்களாய் வேறு ஒன்றிலுமே நெஞ்சு செல்லப் பெறாதவர்களாய் என்னையே அடைவார்கள் –

232-அஹம் மத் ப்ராப்த் யுபாயேர் வை ஸாஷால் லஷ்மீ பதி ஸ்வயம் லஷ்மீ புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ ஏதஸ்யாஸ் ச விசேஷோ அயம் நிகமாந்தேஷு ஸூப்த்யதே -பாஞ்சராத்ரம் –
லஷ்மீ பதியான நானே என்னையடைய உபாயமாவேன் -என் பிரியையான லஷ்மீ யானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவி புரிகிறாள் -புருஷகாரத்துவமாகிற இப்பெருமை இவளுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது –

233-மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமரிஷிபி -மமாபி ச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்சராத்ரம் –
ஸம்ஸாரத்தில் கீழே விழுகின்ற ஜந்துக்களுக்கு என்னை அடையும் விஷயத்தில் லஷ்மீ தேவியானவள் பரம ரிஷிகளாலே புருஷகாரத்துவத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறாள் -எனக்கும் இதுவே இஷ்டம் -வேறான உபாயத்வமாகிற ஆகாரம் இல்லை –

234-தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -ஆபஸ்தம்ப ஸூத்ரம் –தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரம் முக்கியமான பிரமாணம் வேதங்களும் பிரமாணம் –

235-யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே-3-21-

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

236-த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -ராமஸ்ய ச மந காந்தா ப்ராணேப்யோ அபி கரீயஸீ –ஸூந்தர -55-26-
பரதன் முதலான மூன்று சஹோதரர்க்கும் எந்தப்பிராட்டியானவள் தேவதையாய் இருக்கிறாளோ -ராமனுக்கும் மநோ வல்லபையாய் ப்ராணனைக் காட்டிலும் ப்ரியையாய் இருக்கிறாளோ —

237- ஸாந்தா நந்தம் சிதா நந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம் மஹா விபூதி ஸம்ஸ்த்தாநம் ஸர்வதஸ் சமதாம் கதம்-ல த-17-5-
ஆறு ஊர்மிகளும் அற்றதாய் அளவற்றதாய் ஞானானந்த மயமாய் உயர்ந்ததாய் நிலையானதாய் பெரிய விபூதிகளையும் திருமேனியையும் யுடையதாய் எங்கும் சம நிலையைப் பெற்றதான யாதொரு ப்ரஹ்ம ஸ்வரூபம் உண்டோ —

238-அஸநாயா அபி பாஸே ச சோக மோஹவ் ஜராம் ருதீ ஷடூர்மிபிர் விசுத்தா —ஸ்ருதி
பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறு ஊர்மிகள் அற்றது

239-அபஷய விநா சாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜிதா சக்யதே வக்தும் யஸ் ஸதா அஸ்தீதி கேவலம் -வி பு -1-2-11-
குறைவு படுதல் நாசமடைதல் மாறுபாடு அடைதல் வளருதல் பிறத்தல் இவைகள் அற்றவனாகவும் எப்போதும் இருக்கிறான் என்றே சொல்லப்படுபவனாகவும் இருப்பவன் பகவான்

240-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந –ஸ்வரூப -சரணாகதி கத்யம்
தாழ்வு அனைத்துக்கும் எதிர்த்தட்டாயும் மங்களங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் இருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன்-

241-யஸ் ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ அபி பாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸோந் வேஷ்டவ்ய-சாந்தோ -8-7-1-
எந்த ஆத்மாவானவன் பாபமற்றவனாகவும் கிழத்தனமற்றவனாகவும் ம்ருத்யுயற்றவனாகவும் சோகமற்றவனாகவும் பசியற்றவனாகவும் வீண் போகாத இஷ்டத்தையும் சங்கல்பத்தை யுமுடையனாகவும் இருக்கிறானோ அவன் தேடத்தக்கவன் –

242-ஞான ஆனந்தமயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந —யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–எந்தப்பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது –

243-ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ -பாதோ அஸ்ய விஸ்வ பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி -பு ஸூ -3-
இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது பரமபுருஷன் அதைக்காட்டிலும் மேலானவன் -எல்லா உலகங்களும் இவனுடைய விபூதியில் கால் பாகம் -பரம பதத்தில் இவனுடைய விபூதியில் அழிவற்ற முக்கால் பாகம் உள்ளது –

244-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோ அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி -தை ஆந -1-2-
விகாரமற்று இருப்பதால் ஸத்யமாயும் ஞானமயமாயும் அளவற்றதாய் இருப்பதால் அநந்தனாயுமுள்ள ப்ரஹ்மத்தை ஹ்ருதய குஹையில் இருப்பதாக எவன் அறிகிறானோ -அவன் ஸர்வஞ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் –

245-ஆனந்த ஆத்மா ப்ரஹ்ம -தை ஆந -5-ஆனந்த மயனான ஆத்மாவே ப்ரஹ்மம்

246-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் –தை ப்ருகு -6-ஆனந்தம் ப்ரஹ்மம் என்றும் அறிந்தார்

247-நிஷ் களங்கோ நிரஞ்ஜநோ நிர் விகல்போ நிராக்யாதஸ் ஸூத்தோ தேவ ஏகோ நாராயண — நாராயண உபநிஷத் -2-
களங்கமற்றவனாய் தோஷமற்றவனாய் ப்ராக்ருதமான பேத நாமங்கள் அற்றவனாய் சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே –

248-ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் -ஸந்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்கம் –
எந்த அறிவினால் தோஷம் அற்றதும் சுத்தமானதும் மிகவும் மலமற்றதும் ஒப்புயர்வற்றதுமான அந்தப்பரவஸ்து அறியப்படுகிறதோ பார்க்கப்படுகிறதோ அதுவே ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஞ்ஞானம் –

249-ப்ருஹத்வாத் ப்ரும்ஹணத்வாச் ச தத் ப்ரஹ்மேத் யபிதீயதே -பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது அது –

250-அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -வி பு -1-2-1-
விகாரமற்றவனாய் -ஸூத்தனாய் -நித்யனாய் -பரமாத்மாவாய் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையனாய் -எல்லாரையும் ஜெயிப்பவனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம் –

251-ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரபி ஸ்ம்ருத அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -ஹர்யஷ்டகம்
கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ –

252-த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

253-பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ரா தயோரபி வா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ
தந்தை தாய் மகன் ஸஹோதரன் மனைவி நண்பன் முதலானோர் ஒவ்வொரு பலனை அடைவதன் பொருட்டாவார்கள் -கேசவன் எல்லாப் பலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்

253(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

254-ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணமேவ ச ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி தீர்யதே -ஹர்யஷ்டகம்
பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் –

255-256-ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜாதபவஜ் ஜகத் -வி பு -5-5-14-
எவனுடைய நாபிக் கமலத்தில் இருந்து உலகம் உண்டாயிற்றோ ஸர்வ பூத காரணானான அந்த ஹரி உன்னை ரக்ஷிக்கட்டும் –

257-நராஜ் ஜாதாநி தத்தவாநி நாராணீதி ததோ விது -தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-ஆநு பர்வம் -186-7-
நரனாகிற பகவானிடமிருந்து உண்டானவை தத்துவங்கள் எல்லாம் -ஆகையாலே அவற்றை நாரங்கள் என்று அறிகின்றனர் -அவையே அவனுக்கு இருப்பிடமாயின -ஆகையால் அவன் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் –

257 (193)ஆபோ நாரா இதி ப்ரரோக்தா ஆபோ வை நர ஸூநவே தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மநு -1-10-
ஜலம் நாரம் எனப்படுகிறது -நரனாகிற பகவானிடம் இருந்து உண்டானதன்றோ அது -அந்த ஜலம் அவனுக்கு முதலில் இருப்பிடமாயிற்று -ஆகையால் அவன் நாராயணன் எண்ணப்படுகிறான் –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார்

258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

259-ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம:-
ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ-6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

260-மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.

261-சக்தயஸ் பஞ்ச விக்யாதா பஞ்ச உபநிஷ தாக்யயா -பாஞ்சராத்ரம்
பஞ்ச உபநிஷத்துக்கள் என்றும் பெயர் பெற்ற ஐந்து சக்திகள் ப்ரஸித்தி பெற்றவை –

262-பரமேஷ்டீ புமாந் விஸ்வோ நிவ்ருத்திஸ் ஸர்வ ஏவ ஹி –பரமேஷ்டீ ஸ்ம்ருதஸ் சப்தே ஸ்பர்ஸே து புரூக்ஷ ஸ்ம்ருதஸ் -விஸ்வாத்மா தேஜஸி ப்ரோக்தோ நிவ்ருத்த்யாத்மோ ரஸே ஸ்ம்ருதஸ் -ஸர்வாத்மா கதிதோ கந்தே விஷயே புருஷஸ் ஸ்ம்ருதஸ் -பாஞ்சராத்ரம்
பரமேஷ்டி புமாந் விஸ்வன் நிவ்ருத்தி ஸர்வன் என்னும் ஐந்தும் பஞ்ச உபநிஷத்துக்களாம் -பரமேஷ்டி ஸப்தத்தையும் புமாந் ஸ்பர்சத்தையும் விஸ்வன் ரூபத்தையும் நிவ்ருத்தி ரஸத்தையும் ஸர்வன் கந்தத்தையும் புருஷன் விஷயத்தையும் உடையவனாகச் சொல்லப் படுகிறது –

263-பஞ்சைதாஸ் சக்தயே ப்ரோக்தா பரஸ்ய பரமாத்மந அசேஷ ஜெகதாதாரா பதே திவ்யே வ்யவஸ்திதா -பாஞ்சராத்ரம்
இவைகளைக் காட்டிலும் மேலானவனான பரமாத்மாவுக்கு சக்திகளாகச் சொல்லப்படும் இவ்வைந்தும் பரமபதத்திலிருந்து கொண்டு எல்லா உலகையும் தாங்குகின்றன –

264-ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ அஸ்தி ஸம்பவா -வராஹ பு -34-40-
அவனுக்கு மாம்ஸம் மஜ்ஜை எலும்பு ஆகிய இவற்றாலுண்டான ப்ரக்ருதி சம்பந்தமுள்ள உடம்பு இல்லை –

265-ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந -சாந்தி -206-60-
இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையால் உண்டானதன்று –

266-பஞ்ச சக்தி மயோ தேவ-பாஞ்சராத்ரம் -ஐந்து சக்திகளை உருவாகக் கொண்ட தேவன்

267-ஸத்த்வம் விஷ்ணு ப்ரகாசகம் -ஸத்வ குணமானது விஷ்ணுவைப் பிரகாசிப்பது-

268-தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக
–ஸ்ரீ கீதை 15-6
அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.ஆரோக்யத்தை அளிப்பது-

269-ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந் யாதாய சவ்யேதரமிதர புஜம் நாக போகே நிதாய-பஸ்ஸாத் பாஹு த்வயேந ப்ரதிபட சமநே தாரயன் சங்கசக்ரே தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத –அஷ்டாக்ஷர த்யான ஸ்லோகம்
அடியார் துன்பத்தைப் போக்கும் இடது திருவடியையே நீட்டி -வலது திருவடியை மடக்கி -வலது கையை வலது முழங்காலில் பொருத்தி இடதுகையை ஆதிசேஷன் மேல் வைத்து பின்னுள்ள இரண்டு கைகளால் விரோதிகளை நிரசிக்கும் சங்கு சக்கரங்களைத் தரித்து தேவிமார் கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் முதலியவற்றால் சேவிக்கப் பெற்றவனாய் விளங்கும் வைகுண்டநாதன் உலகிற்கு ஸூகத்தை அளிப்பானாக —

270-யத்ர தூமஸ் தத்ராக்நி -தார்க்கிக்க வாக்கியம் –எங்கு புகையுள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்-

271-தத் விஷ்ணோர் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயோ -சாமவேதம் -3-18-2-4-
விஷ்ணுவினுடையதான அந்தப் பரம பதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் காண்கின்றனர்-

272-பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஞாநேந -அறிவாகிற கண்களாலே தேவனை எப்போதும் காண்கின்றனர் –

273-அஜாயமாநோ பஹுதா விஜாயதே -பு ஸூ -2-4-பிறப்பற்றவனாயினும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்

274-ஸ்ரீபகவாநுவாச–பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப–4-5-

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

275-யஸ்ய திவ்யம் ஹி தத் ரூபம் ஹீயதே வர்த்ததே ந ச –எவனுடைய அந்த திவ்ய ரூபமானது குறைவதும் வளர்வதும் இல்லை –

276-அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா-4-6-

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், தனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறான்-அவதரிக்கிறான்

277-ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-
கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டவரும் பழமையானவருமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் ராமனாகப் பிறந்தார் –

278-கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -யதாத்மகோ பகவான் -கிமாத்மகோ பகவான் -ஞாநாத் மகோ பகவான் -பாஞ்சராத்ரம்
பகவானுடைய திருமேனி எத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறானோ அத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறான் -ஞான மயனாய் இருக்கிறான் பகவான்

279-நீலதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -தை நா -11-நீல மேகம் கொண்ட மின்னல் போல் ஒளிவிடுவது திருமேனி

280-தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா சங்க சக்ர கதா தரம் -அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -வி பு -1-9-67-
சங்கு சக்ர கதாதரனாய் அபூர்வமான திருமேனியமைப்பை யுடையவனாய் உறுதியானவனாய் தேஜோ ராஸியான அந்தப் பகவானைக் கண்ட தேவர்கள் ஸ்துதிக்கத் தொடங்கினர் –

281-ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஶ்லோகம் 36 –

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

282-ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ * நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக * ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

283-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் ஸாம்யாமி பரிநிர்வாமி ஸூகம் மாமேதி கேவலம்
கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த ப்ரஹ்மத்தினுள் குடைந்தாடுகிறேன் -அதனால் சாந்தனாகிறேன் -தாபம் ஆறினவனாகிறேன் -ஸூ கத்தையே அடைகிறேன் –

284-க்வ யவ்வன உந்முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி க்வ வஜ்ர கடிநா போக சரீரோ அயம் மஹா ஸூர-மோக்ஷ -4-50
யவ்வனத்தை நோக்கி நிற்கும் ஸுகுமார்யத்துடன் கூடிய தேஹத்தை யுடைய கண்ணன் எங்கே -வஜ்ரம் போல் கடினமான சரீரத்தையுடைய இவ்வசுரன் எங்கே –

285-ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ-சாந்தோக் -3-14-2-பரமாத்மா எல்லா கந்தங்களையும் யுடையவன் -எல்லா ரசங்களையும் யுடையவன்-

286-ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம் புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –ரெங்க ராஜ சத்வம் -88-
தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின் வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும் பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம் புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று –

287-ஸ்லோகமும் பொருளும் மூலத்திலேயே உள்ளது

288-யுவா குமார -ருக்வேத –யவ்வனத்தை யுடையவனாகவும் சிறிது பாலனாகவும் இருப்பவன் -யுவா அகுமார -என்று பதச்சேதம் -அகுமார என்றவிடத்திலுள்ள நஞ் ஷத் -சிறிது என்னும் அர்த்தத்தில் பிரயோகிக்கப் பட்டுள்ளது –

289-ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அசவ் ஸ்வ ஸக்தி லேசோத்த்ருத பூத சர்க்க இச்சா க்ருஹீ தாபிமதோரு தேஹஸ் ஸம்ஸாதிதா அசேஷ ஜகத்திதோ அசவ் -வி பு -6-5-84-
இந்த பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறிய பகுதியினாலேயே தரிக்கப்பட்ட பூதங்களை யுடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் –

290-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -தை நா -12-கறுப்பும் மஞ்சளும் கலந்த உருவையுடைய புருஷன்

291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

293-கிரீட குண்டல தரம் மித்ராணாம் அபயப்ரதம் -கிரீட குண்டலங்களைத் தரித்து இருப்பவனும் நண்பர்களுக்கு அபயம் அளிப்பவனுமான பகவான்

294-ஸதா த்யேயம் -எப்போதும் நினைக்கத் தக்கது

295-ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

296-ஸ்ரீ பகவாநுவாச-
பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் –மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய்-பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

296-க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஸாமய -வி பூ -1-2-18-சிறுவனைப் போலே விளையாடும் அந்தப்பாகவானுடைய ஜகத் ஸ்ருஷ்டியாதிகளாகிற செயல்களைக் கேட்ப்பாயாக –

297-நாகாரணாத் காரணாத் வா காரணாகாரணாந் ந ச சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -வி பூ -5-1-50-ஸர்வ வியாபியே நீ சரீரத்துடன் பிறப்பது ஸூகத்தின் பொருட்டாவது துக்கத்தின் பொருட்டாவது ஸூக துக்கச் சேர்க்கையின் பொருட்டாவது ஆவதில்லை -தர்ம ரக்ஷணத்திற்காகவே உன் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது –

298-(20)-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

299-பரமாத்மா பரோ யோ அசவ் நாராயண சமாஹ்வய தஸ்ய அநபாயிநீ தேவீ தத் தர்ம தர்மிணீ -பாஞ்சராத்ரம் –
நாராயணன் என்னும் பெயரையே யுடையவனாய் மேலானவனாயுள்ள எந்தப் பரமாத்மா ஒருவன் இருக்கிறானோ அவனை விட்டுப் பிரியாத சக்தியாகவும் அவனுடைய குணங்களையே தன்னிடம் யுடையவளாகவும் இருப்பவள் லஷ்மீ தேவி –

299-(128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

300-அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸா அஹமஸ்மி ஸநாதநீ ஆத்மா ஸ ஸர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரி ஸ்ம்ருதஸ் அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாக்யோ ந ஸித்த்யதி அஹமர்த்தம் விநா அஹந்தா நிராதாரா ந ஸித்த்யதி -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-பழமையானவளான நான் ப்ரஹ்மமாகிற அந்த பகவானுக்கு அஹந்தை -நான் என்னும் தன்மை -யாயிருக்கிறேன் -ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவான ஹரியானவர் அஹம் பூதராய் இருக்கின்றார் -அஹந்தையை விட்டு அஹமர்த்தமானது பெயரற்றதாய் ஸித்திக்காது -அஹமர்த்தத்தை விட்டு அஹந்தையானது ஆதாரமற்றதாய் ஸித்திக்காது

301-(291)-291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

302-188-188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

303-ராஜ ரஜோ சிவஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோஸ் ஸத் குண ஸாலிநஸ் -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-ராஜராஜனாய் இவ்வுலகிற்கு எல்லாமே பரமேஸ்வரனாய் இருப்பவன் பகவான் -காந்தனாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் -தேவனான அந்தப் விஷ்ணுவிற்கு நான் தேவியாய் -எப்போதும் பிரியையாய் -ஞானானந்த மயியாய் எப்போதும் குற்றமற்ற குணங்களையும் தேஹத்தையும் யுடையவளாய் எப்போதும் அவனுடைய தர்மங்களையே தர்மமாக யுடையவளாய் இருப்பவள் –

304-(227)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

305-தத்ர திவ்ய வபுர் ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தந ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவஸ் ஸநாதன –அங்கு தேவதேவனாய் ஜனார்த்தனன் வாஸூ தேவனே என்னும் பெயர்களைக் யுடையவனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் பிராட்டியுடன் கூடியவனான ஸ்ரீ மன் நாராயணன் எழுந்தருளி இருக்கிறான் –

306-(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

307-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரிவம்சம் -113-52-பாற்கடலில் பள்ளிகொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே மதுராபுரிக்கு வந்திருக்கிறான் –

308(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

309-வ்யூகேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயினீ -பாஞ்சராத்ரம் -எல்லா வ்யூஹங்களிலும் எல்லா விபவங்களிலும் என்னை விட்டுப் பிரியாதவளாய் இப்பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் –

310-தைஸ் தைரநு குணைர் பாவைர் யாஹம் தேவஸ்ய சார்ங்கிண கரோமி ஸகலம் கிருத்யம் ஸர்வ பாவ அநு காமிநீ -லஷ்மீ தந்த்ரம் -17-4-
அந்தந்தத் தன்மைகளோடு கூடிய நான் சார்ங்கம் என்னும் வில்லாண்ட தேவனை எல்லாத் தன்மைகளிலும் பின் தொடர்ந்தவளாய் எல்லாக் காரியங்களையும் செய்கிறேன்

311-குணைர் விவாசை ரூபைஸ் ச ஸ்வாத்ம நா வா ஆத்ம நீஸ்வரம் நியச்சந்தீம் அகண்டாண்ட நியந்த்ரீஞ்ச ஸ்துமஸ் ஸ்ரீ யம் -பாஞ்சராத்ரம்
குணங்களாலும் செயல்களும் ரூபங்களாலும் தன்னிடத்தில் ஈஸ்வரனை அடக்கிக்கொண்டு இருப்பவளாய் எல்லா அண்டங்களையும் நியமிப்பவளான ஸ்ரீ தேவியை ஸ்துதிக்கிறோம் –

311-ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

312(174)-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

313-ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

314-அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.-இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

315-யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

315-தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

317-ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

318-யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி
–48-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

319-அநு ஜனு அநு ரூப சேஷ்டா ந யதி சமா கமம் இந்திரா அகர்ஷியத்
அசரசம் அதவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவம் அகரிஷ்யத ரங்க ராஜ நர்ம—49-

பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில் அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே-
புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் — அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்

320(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

320(199)-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

321-பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44-

ஹே வரத-பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன சேதன அசேதன ஆத்மகமான தனது திருமேனியின் ஏக தேசத்தை –தன் சங்கல்பத்தினாலேயே விசித விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு–மயில் பெடையின் எதிரே–நாநா விதமான தோகையை ஆகாசத்தை அளாவியது போலே–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்-ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு-கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

322-ஆத்மன் யாத்மா வபுஷி ச வபுர் வைபவைர் வைபவஞ்சே த்யாகாரைஸ் தைரநு குண தயா ஸர்வ பாவாநுயாதா -இச்சா ரூபாண்யபி பகவதஸ் ஸ்வா தயந்த்யாத்த ரூபா தூரீ குர்யான் நஹி மதுரதாதுக்த சிந்தோஸ் தரங்காத்
பகவத் ஸ்வரூபத்தில் தன் ஸ்வரூபமும் அவனுடைய தேஹத்தில் தன் தேஹமும் அவனுடைய விபூதிகளில் தன் வைபவமும் அடங்கும்படி இப்படிப்பட்ட ஆகாரங்களாலே அவனுக்குத் தகுந்தவளாய் அவனுடைய எல்லா நிலைகளையும் பின் தொடருமவளாய் பகவானுடைய இச்சையினால் எடுக்கப்பட்ட அவதார ரூபங்களையும் அவற்றுக்குப் பொருந்தின உருவங்களை எடுப்பதன் மூலம் இனிக்கச் செய்பவளான பிராட்டிக்கு இனிமையே வடிவாய் இருக்கும் பகவத் அனுபவமாகிற பாற்கடலின் அலைகளில் இருந்து நம்மை விலக்க மாட்டாளன்றோ –

323-வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –

324-ஏதத் ஜேயம் நித்யமேவாத்ம ஸம்ஸ்த்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித் போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் -ஸ்வே -1-12-
ஆத்மாவினுள் அந்தர்யாமியாய் இருக்கும் இந்தப் பர ப்ரஹ்மமானது என்றும் அறியத் தகுந்தது -இதைக் காட்டிலும் அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை -அனுபவிப்பவனான ஜீவனுக்கு அந்தர்யாமியாயும் அனுபவிக்கப்படும் அசித்துக்கு அந்தர்யாமியாகவும் நியமிப்பவனான தம்முடைய ஸ்வரூபத்தோடு கூடியவனாய் ஆக இப்படி ப்ரஹ்மம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது –

325/326-க்ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹரா ஷராத்மாநா வீசதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது மூலப்பிரக்ருதி யாகும் -அழிவற்றவனாய் இருக்கையாலே அக்ஷரம் எனப்படுமவன் போக்தாவான ஜீவனாவன் -அசித்தையும் ஜீவனையும் ஒரு தேவனே நியமிக்கிறான் –

327-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே -6-8-
அவனுக்கு ப்ராக்ருதமான சரீரமும் இந்திரியங்களும் இல்லை -அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படுவதில்லை -இவனுடைய மேலான சக்தியும் இயற்கையான ஞான பல கிரியைகளும் விதவிதமாகச் சொல்லப்படுகின்றன –

328-ஏஷோ அணுர் ஆத்மா சேதஸா வேதிதவ்ய -முண்ட -3-1-9-அணுவாகிற இந்த ஜீவாத்மா மனத்தாலே அறியத்தக்கவன்

329-த்ரஸ ரேணு ப்ரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா -ஞானமயமான கோடிக்கணக்கான கிரணங்களையுடைய அந்தப் ஜீவர்கள் த்ரஸ ரேணுவைப்போல் அளவுள்ளவர்கள்

330-ப்ரதீபவதா வேஸஸ் ததா ஹி தர்சயதி–ப்ரஹ்ம ஸூத்ர-4-4-15-விளக்கைப்போல் தேசாந்தரத்திலும் வியாபித்து இருத்தல் ஜீவனுக்கும் அறிவினால் முடியும் –வாலாக்ர –என்று தொடங்கும் ஸ்ருதியும் அப்படியே காண்பிக்கிறதன்றோ

331-ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத்யே ததாஹ கதம் பவான் -வி பு -1-8-16-
அம்ருதம் கடைந்த காலத்தில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ தேவி யுண்டானதாகச் சொல்லப்படுகிறது -ப்ருவுவிற்கு க்யாதி என்னும் மனைவியிடம் உண்டானதாகத் தாங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்

332-(60)புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

333-சவும்ய அஸம்யைர் ஜகத் ரூபைஸ் த்வயைதத் தேவி பூரிதம் -வி பு -1-9-121–தேவியே அழகியதும் க்ரூரமானதுமான உருவங்களால் இவ்வுலகமானது உன்னால் வியாபிக்கப் பட்டுள்ளது –

334(252)த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

335-தேவ திர்யங் மனுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி ஸ்தீரீ நாம்நீ லஷ்மீர் மைத்ரேய -நா அநயோர் வித்யதே பரம்-
மைத்ரேயரே தேவர் திர்யக் -ஊர்வன -மநுஷ்யர்கள் ஆகிய ஜீவ ராசிகளுள் ஆணாய் இருப்பது பகவான் ஹரியின் அம்சம் பெற்றது -பெண்ணாய் இருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது -இவ்விருவரைக் காட்டிலும் மேலானதில்லை –

335 (139)அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

336-ஈஸாநஸ் ஸர்வ வித்யாநாம் ஈஸ்வரன் ஸர்வ பூதாநாம் -எல்லா வித்யைகளுக்கும் ஈசன் -எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரன்

337(100)யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதஸ் -தை நா -11-இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயும் இருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்

338-அந்தப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -யஜுர் ஆர -3-11-21-ஸர்வ அந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான் –

339-யஸ் ஆத்மனி திஷ்டன் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத -ப்ருஹ் -5-7-22-
எவனொருவன் ஆத்மாவில் நின்றும் கொண்டும் ஆத்மாவின் உள்ளிருந்தும் விளங்குகிறானோ எவனை ஆத்மா அறியவில்லையோ எவனுக்கு ஆத்மா சரீரமோ எவன் ஆத்மாவை உள்ளே நுழைந்து நியமிக்கிறானோ அந்தப் பரமாத்மாவே அம்ருதமயனாய் உனக்கும் அந்தர்யாமியாய் விளங்குமவன் –

340-ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் -6-2-1-
குழந்தாய் ஆதியில் சத்தாகிற ப்ரஹ்மமாகவே இவ்வுலகம் இருந்தது -ஒன்றாகவே விளங்கிற்று -இரண்டு அற்றதாய் விளங்கிற்று -நிமித்த உபதான சஹகாரி காரணங்களாக ப்ரஹ்மமே இருந்தது என்றபடி –

341-ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-
ப்ரஹ்மம் உபாதான காரணமாகவும் ஆகிறது -அப்படி இருந்தாலேயே ஒன்றை அறிந்தால் எல்லாமே அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் ம்ருத் பிண்ட கடாதி த்ருஷ்டாந்தமும் ஓட்டுமாகையால்-

———-

342-ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாந் அப்யோ லோகேப்யஸ் -சாந்தோக்ய -3-14-3-
ஹ்ருதயத்தின் உள்ளிருக்கும் இந்த என்னுடைய ஆத்மாவானவன் பூமியைக் காட்டிலும் அந்தரிக்ஷத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் பெரியவன் –

343-யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் பிரயந்த்யபி ஸம் விஸந்தி -தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி -தை ப்ருகு -1-
எதனிடமிருந்து இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ உண்டானவை எதனால் உயிர் வாழ்கின்றனவோ பிரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே ப்ரஹ்மம் என்று அதை அறிவாயாக –

344-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -சாந்தோ -3-14-1-
அந்தப் பிரஹ்மத்தினிடமிருந்தே பிறக்கையாலும் அதிலேயே லயிக்கையாலும் அதனாலேயே உயிர் வாழ்வதாலும் இவை எல்லாமே ப்ரஹ்மம் அன்றோ என்று சாந்தனாய் உபாஸிக்கக் கடவன் –

345–காரணந்து த்யேய -அதர்வசிகை -காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது –

346-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -1-1-1-கர்மவிசாரத்தில் பிறகு அக்காரணத்தாலேயே ப்ரஹ்மத்தை அறிவதில் இச்சை உண்டாகிறது

347-ஜன்மாத் யஸ்ய யத-1-1-2-இவ்வுலகின் பிறப்பு முதலியவை எதனிடமிருந்தோ அதுவே ப்ரஹ்மம்

348-ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந -இதமேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா -ஆனுசா பர்வம்-எல்லா ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்தாலும் நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் என்னும் பொருளே நன்கு தேறி நிற்கும் ) 

349-292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

350–ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே (கை கூப்பியவனாய் நான் சரண் அடைகிறேன்)-

351-ஸ்வஸ்தி சம்பாதேஷ் வபயம்நோ அஸ்து (மங்களங்களுக்கு இடையூறு ஏற்படும்போது எங்களுக்கு பயமின்மை யுண்டாகட்டும் )

352-258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

353-வாஸூ தேவம் ஜகத் யோநிம் நவ்மி நாராயணம் ஹரிம் (வாஸூ தேவ ஹரி சப்த வாஸ்யனாய் ஜகத்காரணனான ஹரியை நமஸ்கரிக்கிறேன் )

354-ரஷிஷ்யதி ஹரி ஸ்ரீ மான் ஸ்ரீ தாநிதி நிச்சயாத்(ஸ்ரீ மானான ஹரி அடியார்களைக் காத்து அருள்வான் என்னும் நிச்சயத்தினால்

355-நாராயணாய நாதாய ஹரயே ஸ்ரீ மதே நம(ஹரி ஸப்த வாஸ்யனான ஸ்ரீ மந் நாராயணாகிற ஸ்வாமிக்கு நமஸ்காரம் 

356-(அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதி மன்யா மவிதுஷாம் -கதிர் கம்யஸ் சாஸவ் ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சவுனக முனி -பட்டர் முக்தகம் -பகவத் விஷயத்தில் அறியாமையினாலாவது நன்றாக அறிந்து இருப்பதினாலேயாவது தனது பக்தியின் ஆதிக்யத்திலாவது இவ்வுலகில் வேறு உபாயத்தை அறியாதவர்களுக்கு உபாயமும் உபேயமும் இந்த ஹரியே என்றும் ஜிதந்தே என்ற பெயரையுடைய மந்திரத்தின் ரஹஸ்யத்தை பகவான் சவுனகமுனி வெளிப்படுத்தினார் அன்றோ)-

357-358-359-(162)162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

360–ஸ்வாதயந் நிஹ ஸர்வேஷாம் த்ரயந்தார்த்தம் ஸூ துர்க்ரஹம் ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ரஸ் தம் வந்தே யாமுநாஹ்வயம் -ஆளவந்தார் தனியன்
அறியவரிதான வேதாந்தார்த்தத்தை அனைவருக்கும் ரஸிக்கச் செய்து கொண்டு ஸ்தோத்ரம் செய்தருளின யமுன முனிவரை ஸ்துதிக்கிறேன்

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா  சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை

யத் பதாம்போஜ கடிதா பிரணதிர் துர்லபாந் யபி
பதாநி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஸ்ரீ யம் ஆஸ்ரயே

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்-

April 24, 2025

ஸ்ரீ பரம புருஷனுடைய ப்ரதி வஸ்து பூர்ணத்வத்தைப் பற்றி ஸ்ரீ தேசிகன் முதலான பூருவாசாரியர்களின் திருவுள்ளத்தை விளக்கிக் காட்டவல்ல ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்

தேசிக வந்தந மாலா த்விதீய புஸ்தக விமர்ச ருபமிதம்,ஸகல விபுதாபிநந்த்யம் ஸததம் ஜேஜேது ஜகதி க்ருதி

ஸாஸ்த்ர ஜ்ஞாநம் பஹுக்லேசம் புத்தேச் சலந காரணம், உபதேசாத் ஹரிம் புத்த்வா என்று சாஸ்த்ரமே காட்டின கட்டளையிலே, தத்வ தர்சிகளான மஹா ப்ராஜ்ஞர்கள், வெண்ணெய். கடைந்து திரட்டி யெடுத்துக் கொடுக்குமா போலே லலிதமாக எடுத்துரைத்து வைக்க, அது கொண்டு உணரவே நாம் அதிகாரிகள்.

எம்பெருமான் எங்கும் நிறைந்த பரஞ்சோதி யென்று உலக மனைத்தும் உணரும். “கருதரிய உயிர்க் குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயக மென்றால் உன் பெருமைக்கு அளவாமோ? ” என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.அணுவான பதார்த்தங்களினுள்ளும் பகவான் நிறைந்துளன் என்பது வேதாந்திகளின் கொள்கை.
(1) உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டிடங்கள் பகுத்து வகுத்துக் காட்டக் கூடிய பொருள்களாயிருந்தால் அவற்றில் உள்ளேயும் புகுந்துளன் என்று ஒப்புக் கொள்ளலாம்; அணு பதார்த்தங்களுக்கு இங்ஙனே பகுத்துக் காட்டக் கூடிய நிலைமை இல்லாமையால் அப் பொருள்களில் பகவான் உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ள இயலாது – என்பது ஒரு ஆக்ஷேபம்.
(2) உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ளக் கூடிய விடத்திலும்,பகவான் தன்னுடைய ஸ்வரூபம் எவ்வளவுண்டோ அவ்வளவும் அடங்க வியாபித்துளன் என்று இசையத் தகாது ; ஏனென்றால் ஒரு வஸ்துவிலேயே பகவானது ஸ்வரூப மடங்கலும் அடங்கிப் போகுமானால் மற்றும் உலகிலுள்ள அபரிமிதங்களான வஸ்துக்களிலும் அந்த ஸ்வரூபம் வியாபித்திருக்க வேணு மல்லவா?அதற்கு அவகாச மில்லாமற் போகுமே. ஒரு உதாரன் தனக்குள்ள பொருள்களை யெல்லாம் ஒரு யாசகனுக்கே பூர்த்தியாகக் கொடுத்து விட்டால் எப்படி? மற்றுள்ள பல யாசகர்களுக்கும் கொடுக்கச் சரக்கு இருக்க வேணுமே;அது போல பகவானும் தன் ஸ்வரூபத்தை நிச் சேஷமாக ஒரு வஸ்துவிலேயே நிரப்புகிறானென்றால் இது எப்படி ஸம்பவிக்கும் ? மற்ற வஸ்துக்களுக்கு என்ன கதி? ஒவ்வொரு வஸ்துவிலும் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளானென்கை பொருந்த மாட்டாது. ஒன்றில் நிச் சேஷமாக நிரம்பி விட்டால் மற்றொன்றிலிருக்க ப்ரஸக்தி யேது? ஆகவே வஸ்து தோறும் பகவத் ஸ்வரூபம் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளதன்று கொள்ளத் தகாது என்பது மற்றொரு ஆஷேபம்.

பகவானுக்கு ஒப்புயர்வற்ற சக்தி விசேஷ முண்டென்பதைப் பொறுக்க கில்லாதவர்களே இந்தக் கக்ஷிகளைக் கிளப்ப வேண்டும். பகவான் அத்புத சக்தி யுக்தன் என்றும் அகடித கடநா ஸமர்த்தன் என்றும் பிரமாணங்கள் கூறுவதை அஞ்ஜலி பந்தத்துடன் ஏற்க வல்ல ப்ராமாணிக வேதாந்திகள் இப்படிப்பட்ட கக்ஷிகளைக் கிளப்ப ஒரு போதும் நினையார்கள்.

வஹஸி ணிமித் தத்தணம் வி அப்புய ஸத்தீ வஹஸி நிமித்தத்வமபி அத்புத சக்தி* என்றன்றோ அச்யுத சதக ஸ்லோகமுள்ளது-ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம்யஸ்ய அசிந்த்ய-அப்ரமேய-அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ப ப்ரஹ்மண -என்று ஸ்ரீ பாஷ்யகாராதிகள் அடிக்கடி அருளிச் செய்யப்படுகிறது. மேற் குறித்த வாக்யங்கள் ஸ்ரீபாஷ்ய தீப ஸாராதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் காணலாகும்.-பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே * என்பது முதலான சுடர் மிகு சுருதி வாக்கியங்கள் பலபல இவற்றால் பகவானுடைய சக்தி அத்புதமானதென்று நிரூபிக்கப்படுகிறது.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் சேராதவற்றை யெல்லாம் சேர்த்துச் சொல்லி யேத்துகிறார்.
நரகும் சுவர்க்கமுமாய், வெல் பகையும் நட்பும் விடமுமமுதமுமாய் * கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் * நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் **புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் என்றிப்படி வாய் வந்தபடி யெல்லாம் பேசி யுள்ளார். இப் பதிகத்திற்கு நம் தேசிகன் அத்புதமான ஸ்லோக மிட்டருளுகிறார் : * ஸம்பத் தாரித்ர்ய பாவாத்… அகடித கடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்றருளி யுள்ளார்.

இத் திருவாய் மொழியில்* வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய் என்பதும் (8) ஒரு பாசுரம். பகவான் தைவ ப்ரக்ருதிகளுக்கு சரண்யனாயும் ஆஸூர ப்ரருதிகளுக்கு மருத்யு வாயுமுளன் என்று இப் பாசுரத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப் பட்டிருக்கிறது. உலகில் ஒரு மனிதன் சிலர்க்கு நல்லனாயும் சிலர்க்குத் தீயனாயுமிருப்பதை எங்குங் காணா நின்றோம்.இப்படி யிருப்பதற்கு ஒரு அகடித கடநா சக்தி வேண்டிய அவசியமே யில்லை. இது போல பகவானும் நல்லார்க்கு நல்லனாய்த் தீயார்க்குத் தீயனா யிருக்கிறா னென்பதில் அகடிதத்வமென்பது சிறிதுமில்லை. சிலரிடத்திலே நல் குரவையும் சிலரிடத்திலே செல்வத்தையும் தருகிறான்;சிலர்க்கு நரக ப்ராப்தியையும் சிலர்க்கு ஸ்வர்க்க பிராப்தியையும் பண்ணி வைக்கிறான் என்றால் இதில் அஸம்பாவிதத்வ சங்கைக்கு உதயமே யில்லை யன்றே இத்திருவாய்மொழியை இப் புடையிலே நிர்வஹிப்பதில் என்ன அருமை . ஒன்றுமில்லை.எம்பெருமான் இப்படியாக வுள்ளானென்று சொல்லுவதனால் அவனுடைய அகடிதகடநா ஸாமர்த்தியம் விளங்குகைக்கு ப்ரஸக்தி யேது.சேராதவற்றைச் சேர்ப்பிக்கவல்ல சக்தி பகவானுக்குக் கிடையவே கிடையாதென்பவர்கள் இங்கே இரண்டு விஷயங்களுக்கு விடை கூறவேண்டும்- (1) * அகடிதகடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்று ஸ்வாமி தேசிகன் ஏன் அருளிச் செய்தார்?, (2) இந்தத் திருவாய் மொழியில் அகடித கடநா சக்தியைக் கொண்டு கூற வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது? வர்ஷ சதமானாலும் இவ் விரண்டு கேள்விகளுக்கும் ஆர்ஜவத்துடன் விடை யிறுக்க பகவச் சக்தி வித்வேஷிகள் அசக்தரே. இப் பதிகத்தினால் ஸர்வ நியந்த்ருத்வம் அநுபவிக்கப் பட்டதென்று அருளிய ஆறாயிரப்படி யாசிரியரான பிள்ளான் வழியிலே நின்று ஸ்லோகமிடாமல் நம் பிள்ளை திருவடிகளின் வியாக்கியானங்களை ஸேவித்து அந்த வாஸநையாலே* அகடித கடநம் ப்ராஹ * என்றருளிச் செய்த தேசிகனுடைய திரு வாக்கு இவ் விடத்தில் அநுபாதேயமே யென்று பலர் வாயில் கேட்டிருக்கிறோம்; அந்த விடையோ அதற்குப் பர்யாயமான விடையோ தவிர வேறு வெளிவர ப்ரஸக்தி யுண்டோ? உண்டெனில் அருளலாமே ; அப்போது சாஸ்த்ரார்த்த மருமங்களெல்லாம் தன்னடையே வெளி வந்து தீருமே . ப்ராஸங்கிகமான விது நிற்க.

இப்படி எம்பெருமான் திறத்துப் படுவோம் அல்லோம் -என்று இருந்த ஆழ்வார் தம்மோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காகத் திரு விண்ணகரிலே எழுந்து அருளின எம்பெருமானுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலும் ஸ்வ சம்ச்லேஷ ரஸ ஜெனிதமான அவசாதத்தாலும் நிவ்ருத்த ப்ரணய கோபராய் அவனோடே ஸம்ஸ்லேஷித்து தத் சம்ச்லேஷ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே ச சம்ப்ரமமாக அந்தத் திரு விண்ணகரிலே தாம் அவனைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த படியையும் கீழ் ப்ரஸ்துதமான ஜகத் ஐஸ்வர்யத்தையும் அசேஷ தோஷ ப்ரத்ய நீகத்வ அசங்க்யேய கல்யாண குணங்களையும் பேசுகிறார் –ஆறாயிரப்படி —

திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு –ஒன்பதினாயிரப்படி —

இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துபன்னீராயிரப்படி —

தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது –நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு
இருபத்து நாலாயிரப்படி –

இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.-‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.– பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.-ஈடு முப்பத்தாறாயிரப்படி

ஸ்வாமி தேசிகன் அருளிய அற்புதமான ஸ்லோகமொன்று * பக்தஸ்ய தாகவசிசோ : பரிபாலநாய * இத்யாதி. இதில் என்ன சொல்லப்படுகிற தென்னில் * எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்த இரணியன் தூணைப் புடைப்பதற்கு முன்னே எம்பெருமான் மூவுலகக்தினும் ஒவ்வொரு வஸ்துவிலும்-ஒவ்வோரிடத்திலும் நரஸிம்ஹ ரூபியாக ஆவேசித்து விட்டதாகவும், இரணியன் தட்டினது ஒரு தூணையே யாதலால்அந்த வொரு தூணில் நின்று மாத்திரம் ஒரு நர ஸிம்ஹம் மூர்த்தி மாத்திரமே வெளிவந்த படியால்
மற்ற ஸகல இதர தேசங்களினும் ஆவேசித்த பல கோடி நூறாயிரம் நரஸிம்ஹ மூர்த்திகள் இன்னமும் அப்படியே நித்ய வாஸஞ் செய்வதாகவும் ஸாதிக்கப் பட்டிருக்கிறது.இதை அதிவாத மென்று சொல்லி விட்டால் ஸ்வாமிக்கு அஸாதாரணமாக வுள்ள ஏற்றம் போய் விடும். ‘ ஆளவந்தார், பாஷ்யகாரர் முதலானாருங்கூட அதிவாதிகளே;நம் தேசிகனொருவரே அதிவாதி க ஏவ தேசிகர்” என்று சாற்றிய பறை இன்றாக அவத்ய மடையலாகாது. ஏற்கெனவே ஆவிர்ப்பவித்த நரஸிம்ஹ மூர்த்திக்கும், சதா ஸர்வ கர்ப்ப வாஸம் பண்ணுகிற நரஸிம்ஹ மூர்த்திகளுக்கும் வாசி யுண்டோ?

”வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி யென்று கொண்டால் மற்றோரிடத்தில் வியாபிப்பதற்கு வஸ்து வில்லையாகும் ” என்று தூஷணம் கொடுப்பதுண்டே. இது தான் வெகு ஆச்சரியம். “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி தான்; அதாவது ஓரொரு உபாத்யவச்சிந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தி யுடைத்தாயிருக்கை”என்று எழுதி வைத்தால் எவ்வளவு அழகாயிருந் திருக்கும்.

த்ருஷ்டேபஹ் நுத்யபாவாதநுமிதி விஷயே லாகவஸ்யாநபாயாத்
சாஸ்த்ரே ணைவாவஸேயே விமதி விரஹிதத நாஸ்திகத்வ ப்ரஹாணாத்|
நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம் யாமுநேய ப்ரபந்தை : த்ராதம்
ஸம்யக் யதீந்த்ரை ரித மகிலதம: கர்சநம் தர்சநம் ந:||

நாதமுநிகள் காலத்திலேயே சிறந்து விளங்கியா ஸித்தாந்தம் ஆளவந்தாரின் அரிய க்ரந்தங்களால் அழகாக வளர்ந்தது.-அவருடைய ஸ்ரீஸூக்திகளுக்கு இணையாே ஸூக்திகளோ உலகில் இல்லை எனலாம். மதுர கம்பீரமான நடை மிக்க சாஸ்திர ஆராய்ச்சிகளைச் சொற்கள் தோறும் செவ்வனே காணலாம். சாஸ்த்ர வாக்யங்கள் எல்லாம் கத்ய பத்ய ரூபங்கள். அவர் கவிதார்க்கிக ஸார்வ பௌமபர் என்பதை அவருடைய ஒவ்வொரு க்ரந்தமும் உணர்த்தும். இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஆங்காங்கு ஸ்ரீபகவத் ராமானுஜமுநிகள் தமது க்ரந்தங்களிலே இடை யிடையே அழகாக இணைத்துத் தம் க்ரந்தத்திற்கு ஒரு பெருமையைக் கருதினார்.இவர் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் என்ற சிறிய க்ரந்தம் ஓன்றைக் கண்டால்கூட இவருக்குள்ள நிஷ்கர்ஷ சக்தி நன்கு விளங்கும். ஸ்ரீபாஷ்யகாரருக்கு முன்னரே இந்த மதம் மேன்மை பெற்றிருந்தது என்பதும் எளிதில் அறியப்பெறும். பாஞ்சராத்ரம் ப்ரமாணம் என்பதை இவருடைய ஆகம ப்ராமாண்யம் என்ற க்ரந்தம் ஸ்தாபிக்கிறது. இவர் பிதாமஹரான ஸ்ரீமந் நாதமுநிகள் வெளி யிட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் இருந்து கூட பஞ்ச ஸம்ஸ்காரம், திருவஷ்டாஷர மேன்மை முதலிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் விசதமாக அறியப்படுகின்றன . அதற்கு முன்னமே அவை எல்லாம் அனுஷ்டானத்தில் இருந்தன என்பதும் அங்கே தெளியலாம்-. “தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஓற்றுண்டு நின்று குடி குடி யாட்செய்கின்றோம்”

ஆத்மநி திஷ்டன் -திண்ணையில் தீ இருக்கிறது என்றால் உழலும் வெளியும் இருப்பதைக் காட்டாதே -ஆகவே ஆத்மநி பரமாத்மந: ஸ்திதியோ வென்னில் உள்ளும் புறம்புமொக்க வாயிற்று; திலத்தில் தைலமிருப்பது போலவும் வ்யாப் தி; வேதியில் அக்நி யிருப்பது போலவும் வ்யாப்தி;இப்படிப் பட்ட விலக்ஷண வ்யாப்தியை விளங்கக் காட்டுவதற்கே ஸ்ருதி * ஆத்மநி திஷ்டந் , ஆத்மா: அந்தர :* என்று இரண்டு படியாகவும் ஓதிற்று- என்று ஸ்ருத ப்ரகாசிகையில் விவரணமுள்ளது.-அணு வஸ்துவில் அந்தர் வ்யாப்தி விஷயம் நிஷ் கல்மஷமாய்முடிவு பெற்றது.

ஜாதி வ்யக்தி தோறும் பரிமாப்ப வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியே குறை வற வியாபித்து நிற்கும் என்றும், ஜாதி வ்யக்தி தோறும் பரி ஸமாப்ய வர்த்திக்கிற தென்றால் அசேதநத்துக்கு அது கூடுமென்றிருப்பர்கள் ; பரம சேதநனாய் ஸர்வ சக்தியானவன் இங்ஙனே வர்த்திக்கிறா னென்றால் இதில் விப்ரதிபத்தி பண்ணிப் போருவர்கள்”-ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றில் பரிஸமாப்ய வர்த்தித்தால் மற்றொன்றில் அது காண முடியாதென்றே இன்னமுங் கூறுகிற இவர்களின் பிடிவாதம் ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிந்ததென்று முடிய வில்லையா? பகவானை ஸ்பர்சியாத அவர்களின் பேச்சுஒரு புறமிருக்க, ப்ரஹ்ம வாதிகளில் தலைவரான ஸ்ருத ப்ரகாசிகாசார்யருடைய ஸ்ரீஸுக்தி யன்றே நமக்குத் தலை மேலது.-ஏகஸ்மிந்நேவ வஸ்துநி ஸ்வரூபஸ்ய பூர்ண வ்ருத்தி தயா ” என்ற வாக்யமானதுபர ப்ரஹ்ம ஸ்வரூபம் வஸ்து தோறும் பூர்ண விருத்தி யென்று திடப்படுத்திற்று. அடுத்ததான * அந்யத்ர வ்ருததி அயோக்யத்வ சங்கா வ்யுதாஸ என்றதானது பஹிர் வ்யாத்திக்கு விருத்தமா மென்று வாயெடுக்கவுமாகா தென்று கெட்டியான பூட்டு போட்டு விட்டது.

ஆர்ஷம் தர்மோபைதேசஞ் ச வேத சாஸ்த்ரா விரோதிநா, யஸ் தர்க்கேணாநு ஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: * என்பது ப்ரஸித்தமாதலால் சாஸ்தரங்களோடு முரண்படாத யுக்தி வாதங்களைக் கொண்டு சாஸ்த்ரார்த்தங்களை நிஷ்கர்ஷிப் பதென்பது நிரவத்யமானது. யுக்தி வாதங்களால் சாஸ்த்ரார்த்தங்களைத் தலை கீழாக்குவதென்பது கிடையாது. பிரக்ருத விஷயத்தில் தர்க்கத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ள வேணுமானால் “பகவான் பிரதி வஸ்து பூர்ணன்” என்பதற்கு ஸாதகமான வழியில் கொண்டு அதை ஸ்தாபிக்கலாமே யல்லது வேறு செய்யத் தகாது. பிறர் செய்வது என்ன வென்றால், பிரதிவஸ்து பூர்ணத்வத்தை அபலாபம் செய்வதற்கு யுக்தி வாதத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ளப் பார்க்கிறார்கள் -அநி ஷ்டித குதர்க்க வாதிகள் ஸ்ரீ பாஷ்யாதிகளால் நிரஸ்தரானவர்கள் மாத்திரமல்ல,ஸ்ரீ வசந பூஷணாதிகளால் நிரஸ்தரானவர்களும் கூட அந்த விருது சுமப்பவர்களே யென்று அறியத்தக்கது. நையாயிகர்கள் ஈஸ்வரனை அங்கீகரியா நின்றார்களெனினும் அவர்கள் அனுமானத்தைக் கொண்டு ஈஸ்வரனை ஸாதிக்கிறபடியால் அந்த ஆநுமாநிகேஸ்வரனும் பரம வைதிகர்களுக்கு ஹேயனாயினன்.-இங்கு சாஸ்த்ர பிரதர்சநம் தவிர யுக்தி ப்ரதர்சநமென்பது அணுவளவும் கிடையாது. சாஸ்த்ரத்தினால் திருப்தி யடையக் கூடிய அதிகாரியை நோக்கியே இந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் அவதரித்தது. ஸூத்ரகாரர் காட்டின சாஸ்த்ரத்தினால் சங்கா பரிஹாரம் ஆகவில்லை யென்றால் அதோகதி தவிர வேறில்லை கிடீர்.-பரம புருஷனுக்கு ஜ்ஞாநியானவன் அத்யர்த்த ப்ரியனென்பதும் இவனைப் பெற்றுக் களிப்பதற்கு அவன் நெடுங்காலம் தவம் புரிந்தனனென்பதும் -இப்படிப்பட்ட பிரியனை ஒருகாலும் ஸம்ஸார பந்தத்திற்குத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்தரங் கொண்டே யன்றோ பாஷ்யகாரரால் இங்கு நிரூபிக்கப்பட்டன – * ய ஏவமாஹ * என்று தொடங்கி ஸ்பஷ்டமாக சாஸ்ரத்தையே யன்றோ காட்டி யருளினர்.-முக்தைஸ்வர்ய மொன்று உண்டென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அது பரம புருஷாயத்தமென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அந்த பரம புருஷன் ஸ்வதந்திரன் ஸத்ய ஸங்கல்பன் என்பதும் சாஸ்த்ர வேத்யம் இப்படியான போது அவன் முக்தனைத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்த்ரைக வேத்யமாகக் கூடியதே-

ஸ்ரீபாஷ்யத்தில் நச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிகம் லப்த்வா என்ற ஸ்ரீ ஸூக்தி அவதரித்தது எதற்காக வென்னில்,பரம புருஷனைப் பெறுவது சேதநனுக்கே புருஷார்த்த மென்றும், இவன் தானே உபாயா நுஷ்டானங்களைப் பண்ணி அவனைப் பெற வேணு மென்றும், இவனே போக்தா வென்றும்… இப்படி யெல்லாம் தலை கீழாகச் சொல்லி வருகிற ஏக தேசிகளின் வாதங்கள் ஆழ்வாரருளிச் செயலைப் பேணுங் குடியிலே தலை காட்டத் தகா என்பது நம் மிராமானுசனுடைய ஸ்வச்சமான திருவுள்ளம்
பகவானுடைய வ்யாப்தி யானது யறிக்கைக்காக – நியமநத்திற்காக. ஆகாசத்தின் வ்யாப்தி யானது அதற்காக வல்ல.ஆகவே ஆகாசம் வ்யாபிப்பது போலன்றிக்கே என்று சொல்லுவதும் வழுவற்றது.நியந்த்ருத்வா விசிஷ்ட வ்யாபகத்வம் பகவானுக்கு, தத் ரஹித வியாபகத்வம் ஆகாசாதிகளுக்கு என்று ஸாமான்யமாகச் சொல்லுகிற புடை இது.

ஸ்வாமி ந்யாய ஸித்தாஞ்சனத்தில் ஈஸ்வர பரிச்சேதத்தின் ஆரம்பத்தில் ஏழெட்டு விதமாக ஈஸ்வர லக்ஷணம் அருளிச் செய்கிறார். அங்கு ஸ்வ ஜ்ஞாந ஸ்வேதர ஸகல த்ரவ்ய சரீரகத்வம் என்பதும் ஒரு லக்ஷணமாக வுள்ளது. தன்னுடைய ஜ்ஞானமும் தானும் தவிர மற்ற ஸகல த்ரயங்களையும் சரீரமாகக் கொண்டிருக்கை லக்ஷண மென்கிறார். நரஸிம்ஹாவதாரத்தை பட்டர் அனுபவிக்குமிடத்து” விருத்தே வையக்ரீ ஸுகடித ஸமாநாதிகரணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் “‘ என்று நிஸ் ஸந்தேஹமாக அருளி யுள்ளார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விதுர நீதி-ஸ்ரீ மஹாபாரதம்-உத்யோக பர்வத்தில்–33-40 அத்தியாயங்கள்

April 21, 2025

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ்யேத்
பிபேதி அல்ப ஸ்ருதாத் வேத மாமயம் பிரதர்ஷயதி

மஹத்வம் பாரவத்யம் -மஹா பாரதம் –வேத வியாசர் உபநிஷத் கடலைக்கடைந்து அளித்த அம்ருதம்–ஸூர்ய பகவானின் புதல்வரான-யமதர்மராஜனே விதுரராக அவதாரம் -ராமோ விக்ரஹவான் தர்ம-கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் -போல் தர்மமே மனிதனாகப் பிறந்தது-பரதாழ்வான் சத்ருக்ந ஆள்வான் ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் போல் விதுர ஆழ்வான் -கண்ணனைக் கண்டவுடன் மனமுருகி -தன்னிலை மறந்து -மிக்க பரிவுடன் ஆஸனத்தில் அமர்த்திப் பழங்களைச் சமர்ப்பித்து அருளியதாலே ஆழ்வான் எனப்பட்டார் -மாண்டில்ய ரிஷியின் சாபத்தால் தர்ம ராஜாவே மனிதனாகப் பிறந்து தர்மத்தைப் போதித்ததே விதுர நீதி-

விதுர -அறிவுடையோர் -சான்றோர் என்றும் பொருள் -சந்தனு மஹாராஜருக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தார் பீஷ்மாச்சார்யார்-சந்தனுவுக்கும் மற்ற மனைவியான சத்யவதிக்கும் இரண்டு புதல்வர்கள் -விசித்திர வீர்யன் -சித்ராங்கதன் -இரண்டாமவன் இளைமையில் மாண்டான் – விசித்திரம் வீரனுக்கு அம்பிகா அம்பாலிகா -என்ற இரண்டு மனைவியர் -குழந்தைப்பேறு பெறுவதற்கு முன்பே விசித்திரம் வீர்யனும் மாண்டான் -நாட்டைக் காக்க புதல்வர்கள் வேண்டும் என்றும் வேத வ்யாஸாரை வேண்டிக் கொள்ள அம்பிகாவுக்கு கண் பார்வை அற்ற த்ருதராஷ்ட்ரனனும் அம்பாலிக்கு வெளுத்த பாண்டுவும் அம்பிகாவின் தாதிக்கு விதுரரும் பிறந்தார் -மூவரும் பீஷ்மாச்சார்யாரிடம் அனைத்து வித்யைகளும் கற்றனர் -பாண்டுவுக்கு குந்திதேவியும் த்ருதராஷ்ரனுக்கு காந்தாரியையும் விதுரருக்கு தேவக மன்னனின் மகளையும் மணம் முடித்து வைத்தார் பீஷ்மர் -பாண்டு அரசப் பொறுப்பேற்று மாண்டு போக த்ருதராஷ்ட்ரன் அரசாக விதுரர் மந்திரியானார் -காலத்தில் கோலத்தால் இவருடைய அறிவுத் திறனும் தர்ம சிந்தனையும் அரசனுக்குப் பிடிக்காமல் போனதே

அறிவொன்றும் இல்லாத – இப்போது இல்லை யாகில் விடுங்கோள்- விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த ஞானம் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை –

எதிரியின் உள்ளத்தை படிப்பவனே ஆபத்தைத் தாண்டுகிறான் கூர்மையான ஆயுதத்தை விட கொடியதை அறிந்தவனைக் கொல்ல முடியாது -நெருப்பு காட்டை அழிக்கும் ஆனால் வலையில் இருக்கும் எலியை எரிக்காது -முள்ளம் பன்றி சுரங்கத்தில் புகுந்து நெருப்பில் இருந்து தப்பிக்கும் நடந்து செல்பவன் நக்ஷத்ரங்களைப் பார்த்து வழி தெரிந்து கொள்கிறான் -புரிந்து நடந்து கொள் -மதி நுட்பத்தால் பாண்டவர்களைக் -வாரணாவதம் -இன்று பர்னாவா -அரக்கு மாளிகை நெருப்பில் இருந்து காத்த விதுரர் –

பக்திஸ் ச ஞான விசேஷ—ஸம் ஸ்ப்ருஸன் ஆஸனம் ஸுவ்ரே விதுர ஸ மஹா மதி –விதுர அன்னானி புபுஜே ஸூஸீநி குணவந்தி ச -தூய்மை சுவை என்றும் ஏற்றுக் கொண்டு அருளினவன் கண்ணன்

தன்னை விட பலசாலியுடன் பகை கொண்டவன் -தன் பொருள் அனைத்தையுமே திருட்டுக் கொடுத்தவன் -எதிலும் பேராசை கொண்டவன் -திருடன் -ஆகியோர் தூக்கம் வராமல் தவிப்பர் –

அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப-நமக்குக் கசப்பாய் இருப்பினும் நல்லதைச் சொல்பவர் கிடைப்பதும் கேட்பவர் கிடைப்பதும் அரிது -விதுரர் எந்தக் கவலையும் இல்லாமல் தர்ம ஸாஸ்த்ரம் போதிப்பதையே அறிவுரையாகக் கூறினான்

மன்னா தர்மபுத்திரர் தயை தர்ம சிந்தனை ஸத்யம் பராக்ரமம் ஆகியவை கொண்டவர் -பெரியவர்களை மதிப்பவர் -நீ அவரை காட்டுக்கு அனுப்பிவிட்டு மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறாய் -என்னை பண்டிதன் என்று புகழ்கிறாய் -யார் பண்டிதன் என்று கூறுகிறேன்

ஆத்ம ஞானம் -விடாமுயற்சி -துன்பம் சகிக்கும் சக்தி -தர்மத்தில் உறுதி -இவை இருப்பவனே பண்டிதன் -கோபம் மகிழ்ச்சி கர்வம் வெட்க்கம் பிடிவாதம் இவற்றால் பாதிக்கப்பட்டு தனது இலக்கிலிருந்து யார் மாறுவதில்லையோ அவனே பண்டிதன் -குளிர் வெட்பம் இன்பம் துன்பம் செல்வம் ஏழ்மை இவற்றால் எடுத்த காரியங்களில் தவறாமல் இருப்பவனே பண்டிதன் -அவன் கிடைக்க அரியதானவற்றை விரும்புவதில்லை -சிந்தித்து தீர்மானம் செய்த பின்பே கார்யங்களைத் தொடங்குவான் -தொடங்கிய பின்பும் இடையில் நிறுத்தாதவன் -நேரத்தை வீணாக்காதவன் -கார்யங்களை செய்யும் முறைகளை அறிந்து செய்பவன் -யாருடைய பேச்சை தடை இன்றி மதிக்கப்படுகிறதோ -நூல்களின் ஆரியத்தை சட்டென்று கூறுபவன் யாரோ -சான்றோர்களால் அறிவுரையை மீறாதவன் யாரோ -அவனே பண்டிதன் –

அறிவு ஓன்று
அத்தால் அறிய வேண்டியது செய்வன மற்றுமோர் தவிர்வன ஆகிய இரண்டு
அவற்றைத் செய்து பகைவர் நண்பர் அயலார் ஆகிய மூவரையும்
சாம தான பேத தண்டம் ஆகிய நான்கு உபாயங்களால் வெல்ல வேண்டும்
மேலும் அடக்கத்தால் உட்பகைவர்களான செவி வாய் கண் மூக்கு தோல் ஆகிய ஐவரை -சிற்றின்பத்தை -வெல்ல வேண்டும்
இணைத்தல் பிரித்தல் பெயர்ச்சி இருத்தல் இரு மனப் படுத்தல் சார்ந்து அடைதல் ஆகிய ஆறு செயல்முறைகளை அறிய வேண்டும்
பெண்ணாசை சூது கள் வேட்டை கடுஞ்சொல் கூறுதல் -கடும் தண்டனை அளித்தல் -தீய வழியில் பொருள் சேர்த்தத்தால் ஆகிய ஏழையும் தவிர்க்க வேண்டும் –
இதன்படி வாழ்பவன் மகிச்சியும் மனநிம்மதியும் அடைவானோ –

நல்லது ஒரு உணவை தனியே உண்ணலாகாது
எந்த ஒன்றையும் தனியாகத் தீர்மானிக்கலாகாது
தீர்த்த யாத்திரையில் தனியாகச் செல்லக் கூடாது
அனைவரும் தூங்கும் பொழுது ஒருவன் மட்டுமே முழித்து இருத்தல் கூடாது
மேல் உலகமடைய ஸத்யம் ஒன்றே போதும்
விஷம் பருகுமொருவனைக் கொல்லும்
அம்பு தைத்தால் ஒருவன் மடிவான்
அரசியல் புரட்சி ராஜ்யத்தை அழித்து பல்லாயிரம் மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் –
பொறுமை ஒன்றே அமைதிக்கு வழி
தர்மம் ஒன்றே அனைத்து நன்மைகளையும் அளிக்கும்
கல்வி ஒன்றே திருப்தி அளிக்கும்
அஹிம்சை ஒன்றே இன்பம் அளிக்கும்
திறமைசாலிகளுக்கு பொறுமை ஆபரணம் -பொறுமையாளிகளை கையாலாகாத்தவர் என்று உலகம் பழிக்கும் -பொறுமை ஒன்றே அனைத்தும் தரப்பினரையும் வசப்படுத்தும்
புல் இருக்கும் இடத்தில் நெருப்புப் பற்றி எரியும் -புல் இல்லாத இடத்தில் நெருப்புத் தானே அணைந்து விடும் -பொறுமை இல்லாதவன் பிறரையும் கெடுத்துத் தானம் கெடுகிறான் –

பூ மண்டலத்தில் தாழ்ந்தவர்கள் இருவர் -முயற்ச்சி இல்லாத இல்லறத்தாரும் மிகுதியாகச் செயல்படும் சன்யாசியும்
நான் யார் என்பதைத் பொறுத்துத் தான் செயல்பாடு இருக்காய் வேண்டும்
விரோதம் கொண்ட பகைவனிடமும் போர் புரியாத அரசனையும் விரோதம் கொண்டு தொண்டு செய்யாத அந்தணனையும் இவ்வுலகம் விழுங்கி விடும்
கடும் சொல் பேசாதவர் துஷ்டர்களை ஆதரிக்காதவர் இருவரையும் உலகம் கொண்டாடும்
தன்னிடம் பணமா இல்லாத போது விலை உயர்ந்த பொருளைக் ஆசை வைத்தால்-வலிமை அற்றவனாய் இருந்தும் கோபம் கொள்ளுதல் இரண்டுமே நம்மைக் குத்தும் முள்கள்
வலிமை மிக்கவனாய் இருப்பினும் பொறுமை காப்பார் -காசில்லாத வறியவனாய் இருப்பினும் இயன்ற தானம் கொடுப்பவன் -இவ்விருவரும் உலகில் புகழுடன் விளங்குவர்
நியாயமான வழியில் சம்பாதிப்பதை தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருத்தல் -தவறானவர்களுக்குக் கொடுத்தல் -இவ்விரண்டும் அடாத செயல்களாகும் –
செல்வந்தனாக இருப்பினும் தானம் செய்யாதவர் -வறியவனாக இருப்பினும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளும் தவமில்லாதவர் ஒவ்வொருவருக்கும் தண்டனை நிச்சயம்
வறுமையினும் இயன்ற வரை உதவுபவன் வினை தொலைத்து மேலுலகை அடைகிறான் -விதை நெல் கொண்டு பாகவத விருந்தளித்த விருத்தாந்தம் –

நாம் விரும்பிய கார்யம் நிறைவேற மூன்று வழிகள் -உத்தமம் -மத்யமம் -அதமம் -இடம் நேரம் நம் ஆற்றல் இவற்றைப் பொறுத்து வழியைத் தேர்ந்து எடுக்க வேண்டும் -பிறர் சொத்தை அபஹரித்தல் -பிறர் மனைவியை விரும்புதல் -நன்மை விரும்பும் நண்பனை விடுதல் ஆகிய மூன்றும் மனிதனின் ஆயுள் அறம் புகழ் ஆகிய மூன்றையும் அழிக்கும் -காமம் கோபம் பேராசை ஆகிய மூன்றும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் -இவற்றில் ஓன்று இருந்தாலும் மற்ற இரண்டுமே தானே வந்து விடும் -வைராக்கியத்துடன் ஆசையைக் கட்டுப் படுத்தினால் தான் காமத்தையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் அடக்க முடியும் -யயாதி விருத்தாந்தம் அறிவோம் -தனது பக்தன் -தன்னிடம் வேலை செய்பவர் தன்னையே தஞ்சம் என்று சரணாகதி செய்தவர் இம் மூவரையும் கை விடவே கூடாது-

எவை உடனே பலன் தருபவை என்றும் இந்திரன் கேட்க -அதற்கு தேவகுரு பிரஹஸ்பதி -தேவைதைகளின் ஸங்கல்பம் -விருப்பம் -புத்திசாலியின் ஆற்றல் -பண்டிதரின் பணிவு -நாசம் தரும் திருட்டு ஆகிய நான்கு உடனே பலன் அளிக்கும் என்றார் -ஸ்ரத்தையுடன் கற்றல் ஆர்வத்துடன் அக்னி ஹோத்ராதிகளைச் செய்தல் -கவனத்துடன் பூஜை செய்வது-மதிப்புடன் மவ்ன விரதம் கடைப்பிடித்தல் ஆகிய நான்கும் முறையுடன் கடைப்பிடித்தால் இவ்வுலக இன்பத்தையும் பின்னர் முக்தியையும் அளிக்கும் -பசுமாட்டை அடிக்க வந்தவரிடம் முனிவர் -என் கண் பார்க்கும் ஆனால் பேசத் தெரியாது -வாய் பேசும் ஆனால் அது பார்க்காது -பார்த்தவன் பேசினால் தான் அது உண்மையாக இருக்கும் -அது முடியாதபடியா மவ்னம் காத்தேன் -என்றார் -துரத்தி வந்தவன் ஒன்றுமே புரியாமல் போக பசு காப்பாற்றப் பட்டதே -கோதாவரி ராவணனுக்கு அஞ்சி மவ்னம் காத்ததே -பேசியே கார்யத்தைக் கெடுக்கலாம் -மவ்னத்தால் எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம் –

அஞ்சலி அறிந்தால் அஞ்சாமல் இருக்கலாமே
அக்ரம் நயதி இதி அக்னி -ஆராதிப்பவனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் அக்னி பகவான் -தாய் தந்தை குரு ஆத்மா அக்னி ஐவரையும் ஆராதித்தால் முன்னேறலாம் -தெவர்கள் பித்ருக்கள் மனிதர்கள் சந்யாசிகள் அதிதிகள் ஆகிய ஐவரையும் பூஜித்தால் உலகம் நிறைந்த புகழ் பெறலாம் -நாம் எங்கும் என்றாலும் நண்பர் பகைவர் உதாசீனர் -நம்மிடம் அடைக்கலம் பெறுபவர் -நமக்கு அடைக்கலம் தருபவள் ஆகிய ஐவரும் பின் தொடர்வர் -தண்ணீர் நிறைந்த பானையில் ஒரு சிறு ஓட்டை விழுந்தாலும் தண்ணீர் முழுவதும் வெளியேறுவது போல் கண் காது மூக்கு நாக்கு தோல் ஆகிய ஐந்து புலன்களில் ஓன்று பாதை மாறினாலும் மற்ற நான்கு அதைப் பின் தொடர்ந்து தவறான பாதையில் செல்லும் -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -ஸூ முகன் -பெரிய திருவடி -பசிக் கோபத்தால் பராமனையே எதிர்த்த வ்ருத்தாந்தம் -நாம் புலன்கள் எவ்வளவு கெடுக்கும் என்ற உணரவே நடத்திக் காட்டினார் –

ஆறு தெரிந்தால் ஆறி இருக்கலாம் –
உண்மை தானம் சோம்பலின்மை பொறாமையின்மை பொறுமை தைர்யம் -இவற்றை விடாதவன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் -நோயற்று இருத்தல் -நல் வெளிப்படுத்தும் மனைவி -மனத்துக்குப் பிரியமான சொற்களைப் பேசும் மனைவி-சொன்னதைக் கேட்க்கும் மகன் – செல்வத்தைக் கொடுக்கும் கல்வி -ஆகிய ஆறும் கிடைப்பதற்கு அரியவை -ஸூ தர்சனர் -பார்க்க அழகாக இருப்பவர் நல்ல வழியைக் கொடுத்து அருள்பவர் -ஜ்வாலா நேமி அரம் கும்பம் என்னும் நடு அச்சாணி -மையத்தில் இருக்கும் பகவான் -ஆகிய ஐந்து பகுதிகள் கொண்டவை -பொறாமை -அளவுக்கு மிஞ்சிய இரக்கம் கொள்பவர் -எவ்வளவு பொருள் சேர்த்து மகிழ்ச்சி இல்லாதவன் சடடென்று கோபம் கொள்பவன் -எதிலும் ஸந்தேஹப் படுபவர்-பிறரை அண்டியே பிழைப்பவர் ஆகிய அறுவரும் துயரத்தையே அடைவர் -பசுக்கள் பிறரிடம் சேவை செய்பவன் உழவு மனைவி கல்வி தனக்கும் சமமில்லாதவரிடம் நட்பு -இவற்றை மதிப்புடன் பராமரிக்க வேண்டும் -இல்லாவிடில் அழிந்து விடுவர் –

ஸப்த ஸமுத்ரங்கள் -ஸப்த கன்னிகைகள் -ஸப்த லோகங்கள் -ஸப்த ரிஷிகள் -ஸப்த மராமரங்கள் -ஏழுக்கு தனிச்சிறப்பு -சூது -கள் பெண் கொடுமை பிராணி ஹிம்ஸை பேராசை பொய்ம்மை கோபம் ஆணவம் பகைமை காமம் -இவற்றைக் கைவிடாதவன் சக்தியுள்ள அரசனாக இருந்தாலும் அழிவைத் தேடிக் கொள்வான் –
பரீக்ஷித் பத்து இடங்களை கலிக்கு ஒதுக்கினான் -அவை -பெண்களை அவமதிக்கும் இடம் -பிராணி வதை நாடாகும் இடம் -கள் குறிக்கும் இடம் -சூதாடும் இடம் -தங்கத்தில் அதிக ஆசையுள்ள இடம் -காமம் கோபம் பகை பொய்மை ஆணவம் -இவற்றின் அருகில் நாம் செல்லா விட்டால் கலியுகத்தில் வாழ்ந்தாலும் அதன் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம் -நாம் எப்படிப் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே கலியுகமும் க்ருதயுகமாகலாம் -க்ருதயுகமும் கலியுகமாகலாம் –

திக்கு எட்டும் புகழோடு வாழ -நல்ல அறிவு -நற்குடியில் பிறப்பு -புலனடக்கம் -நூல்களில் கேள்வி அறிவு -உடல் வலிமை -அதிகம் பேசாது இருத்தல் -சக்திக்குத் தக்கபடி தர்மம் செய்தல் -செய்ந்நன்றி அறிதல் -ஆகியவை கிடைத்தற்கு அறிய பண்புகள் -திருவடியை ஆலிங்கனம் செய்து பெருமாள் ஆம் பரிசு வழங்கினார் அன்றோ –

நம் வாழ்க்கை முறை -நற்பண்புகள் -ஞானம் பக்தி ஆகியவை கிரஹங்களின் பாதிப்பை நன்கு கட்டுப் படுத்தும் -நமது உடல் இரண்டு கண்கள் இரண்டு காதுகள் மூக்கு த்வாரங்கள் இரண்டு வாய் ஓன்று மலம் காலம் கழிக்கும் இரண்டு த்வாரங்கள் -ஆகிய ஒன்பது வாசல்கள் கொண்ட சரீரம் -ஒன்பது வாசல்களும் திறந்தே இருக்கிற படியால் ஆத்மா எளியேறுவது எளிது -அதற்குள் ந்தப் வீட்டில் வாழ்ந்து சாதிக்க வேண்டியவற்றை முடிக்க வேண்டும் -i-இதில் ஆத்மா ஒலி தொடு உணர்ச்சி உருவம் சுவை மணம் ஆகிய ஐந்தும் சாஷிகளோடே வசிக்கிறார் -இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்யபீதியதே ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹூ ஷேத்ரஞ்ஞ இத் தத் வித-உடல் விளை நிலம் -ஆத்மா என்னும் உழவன் இதை உணர்வது நல்ல பயிர்களை -பண்புகளை -விளைக்க வேண்டும் -இப்படி பல உடல்களும் ஆத்மாக்களும் கொண்ட இந்த ஸம்ஸாரமே ஒரு தலைகீழான அஸ்வத்த மரம் -இதைப் படைக்கும் ப்ரஹ்மா மேலே இருக்கிறபடியால் இதம் வேர் மேலே இருக்கிறது -நாமும் நம் சந்ததிகளுமாகிற கிளைகள் கீழே உள்ளன -ஸத்வம் ரஜஸ் தமஸ் முக்குணங்கள் நீராகவும் எருவாகவும் கொண்டு வளர்க்கப் படுகிறது-கர்மங்களே விதைகள் -ஸப்தாதி -வளர்க்கும் முளைகள் -வைராக்யம் என்னும் கோடாரி கொண்டு வெட்டி முக்தி அடையாளம் –

விட வேண்டிய தீய பத்து பண்புகள் -குடியினால் மதி மயங்கினவன் -கவனம் இல்லாதவன் -பைத்தியம் களைப்படைந்தவன் -கோபக்காரன் -பசி மிக்கவன் -பரபரப்பவன் -பேராசை கொண்டவன் -அச்சமுற்றவன் -காமத்துக்கு வசப்பட்டவன் -இவர்களுடன் அறிவாளர்கள் பழக மாட்டார்கள் -இப்பத்தையும் விட்டு ஒழித்தால் தர்மத்தை அறியலாம் -தாரை லஷ்மண இடமும் கிம் கோப மூலமும் மனுஜேந்த்ர புத்ர-அரசனான உனது தந்தை சக்ரவர்த்தி பரபரப்போ கோபமோ ப்பட்டிருந்தால் 60000 ஆண்டு அரசாண்டு இருக்க முடியுமா -விச்வாமித்ரரும் காமத்துக்கும் கோபத்துக்கும் வசப்பட்டாரே -இரண்டு பகைவர்களையும் வெல்ல வேண்டுமே –

பெரிய நம்பியின் பெண்ணுக்கு சீதன வெள்ளாட்டியாக முதலியாண்டான் அனுப்பிய விருத்தாந்தம் -வேதாந்த விசாரம் வர சட்டென்று பதில் கூறி ஐயம் தீர்க்க -அங்கு கூடி இருந்தவர் இவரது விநயம் கண்டு வியந்தனர் –
வங்கி புரத்து நம்பிக்கை திருவாராதனம் செய்யும் முறையை உடனே உபதேசிக்காமல் கூரத்தாழ்வான் ஹனுமந்த தாஸர் இவர்களுக்கு உபதேசிக்க வாசலில் வந்த நம்பியைக் கண்ட ராமானுஜர் அச்சமும் வெட்கமும் அடைந்த -லோக நாயகனான திருமால் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடி யசோதையிடம் பிடிபட்ட போது உண்மையில் அச்சமும் வெட்கமும் பட்டிருப்பாரோ என்ற ஐயம் வெகுநாட்களாக இருக்க இப்பொழுது உம்மைக் கண்டதும் நான் பட்டதால் புரிந்து கொண்டேன் என்றாராம் –

ராவணனை இன்று போய் நாளை வா -மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தாலும் திருந்தவில்லை-சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்-ஆழ்வார் -ஒரு செயலில் வஞ்சனையால் நிறைவேறும் என்றால் அத்தைச் செய்யக் கூடாது-செய்தாலும் அதன் பலன் நிலைக்காது -நேர்மையான வழியில் செய்தால் நிறைவேறாது என்றாலும் அத்தைச் செய்ய வேண்டும் -நாளடைவில் பயன் தரும் -அரசன் பதவி லாபம் நஷ்டம் கஜானா தேசம் தண்டனை இவற்றில் அளவை அறியவில்லையோ அவன் நிலைக்க மாட்டான் –

தேனீ தனக்கு வேண்டிய அளவு தேன் ஒரே பூவில் கிட்டும் என்றும் உறிஞ்சினால் தேனும் கிடைக்காத பூவும் பட்டுப் போகும்-பல பூக்களில் இருந்து துளித்துளியாக சேகரிக்க வேண்டும் -மாலை தொடுக்க பூக்களை மட்டும் பறிப்பான்-செடியை வெட்ட மாட்டான் -இலக்கு எதுவோ அதற்குத் தக்க செயலில் இறங்க வேண்டும் -ஒரு பொருளைக் உரியவர்க்கும் பகிராமல் நீயே கொள்ள நினைத்தால் அதை முழுவதுமாக இழப்பாய் -கிட்டாதாகில் வெட்டென மறக்க வேண்டும் -பேராசைப்பட்டு பெரு முயற்சி செய்தாலும் நிறைவேறாது -பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீ கேச தேவதத்தம் தனஞ்சய ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -இலக்கு தார்மீக முறையில் இருக்க வேண்டும் -கருத்து இலக்கில் இருக்க வேண்டும் -இலக்கை என்றும் வரை பின்னால் மறைந்து இருக்கும் ஆபத்தையும் நோக்க வேண்டும் –

செல்வம் கல்வி குடிப்பிறப்பு ஆகியவை ஆணவத்துக்கு வழி கொடுக்கும் முக்குறும்புகள் -அவற்றை அறுத்து வென்றவர் ஸ்ரீ கூரத்தாழ்வான் -பொறாமை ஆணவம் இரண்டுமே ஒழுக்கத்தைக் கெடுக்கும் -ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பட்டும் -அழகு புகழ் இவையும் குறும்புகள் -ராமானுஜரின் திருவடி இணைகளே -நமது ஆச்சார்யரே -விலை மதிப்பில்லாத தங்கம்

உடல் ஒரு தேர் -ஐம்புலன்கள் குதிரைகள் மனஸ் கடிவாளம் -ஜீவாத்மா தேரோட்டி -புலன் அடக்கம் இல்லாமையால் மற்ற சிறப்புக்களை மறைத்து விடும் -உனது புலன்களாலேயே நீ வீழ்ந்தாய் என்றாள் மண்டோதரி -மனம் தறி கெட்டு ஓடிஏ பகுத்தறிவு என்னும் அம்பு கொண்டு அடக்க வேண்டும் -புலன் அடக்கம் இல்லாதவர்களோடே சேர்ந்து மற்றையோரும் கெடுவர் -காய்ந்த விறகோடே சேர்ந்து இருக்கும் ஈர விறகும் எரியுமே -புலன்களைக் கொண்டே நல்ல கார்யங்களையுமே சாதிக்கலாம் -அடக்காமல் நாமும் வீழுவோம் –

மவ்னம் பேச்சை விட வலிவானது –லஷ்மீ வஸதி ஜிஹ்வாக்ரே -ஜிஹ்வாக்ரே மித்ர பாந்தவா -ஜிஹ்வாக்ரே பந்தனம் பிராப்தம் -ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம் -நாக்கு நுனியில் லஷ்மீ தேவி வஸிக்கிறாள் -நாக்கு நுனியில் உறவினரும் நண்பர்களும் வாழ்கிறார்கள் -நாக்கு நுனியில் தான் கட்டுக்குள் சிக்குகிறோம் -நாக்கு நுனியில் மரணம் திண்ணம் -நன்மை தீமைகளை பலவும் நாக்கு நுனியில் தான் இருக்கின்றன -ராமர் தமது நன்மையைக் கருதியே வானர முதலிகள் பேசுகின்றார்கள் என்றும் உணர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்ட பின்பும் –மமாபி ச விவிஷாஸ்தி காகித பிரதி விபீஷணம் -வேண்டுகோள் விடுக்கும் த்வனியில் பேச -அனைவரும் உருகிப் போக -பேசுவதை விட மவ்னமே கார்யங்களைச் சாதித்துத் தரும் என்றும் காட்டி அருளினார் –

கங்கையில் நீராடும் புண்ணியத்தை விட தர்மத்தில் நம்பிக்கை நேர்மை ஆகியவை சிறந்த புண்ணியத்தைத் தரும் -நாடு நிலையில் இருந்து பிறழாமல் இருப்பதே நேர்மை -மனத்தால் நினைத்ததையே பேசி-பேசினத்தையே செயல்படுத்தலாகிய ஆர்ஜ்வமே நேர்மை-யமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்திதஸ் தேந சேத விவாதஸ்தே மா கங்காம் மா குரூன் கம -மநு –தர்மத்தின் வழி நடப்பவரும் நம்பிக்கை இல்லாதவரும் -இருவருமே கங்கையை நீராட வேண்டாமே -கங்கையில் நீராடும் புண்ணியத்தை விட தர்மத்தில் நம்பிக்கை நேர்மை ஆகியவை சிறந்த புண்ணியத்தைத் தருமே –

கேஸிநீ என்னும் அரசகுமாரியின் ஸ்வயம்வரம் -ஸூதன்வா அந்தணப் பண்டிதனும் -பலசாலியான அசுரனான விரோசனனும் வர -யார் பெரியவன் போட்டி வர உயிரையே பயணம் வைக்க -ப்ரஹ்லாதனையே தீர்ப்பு சொல்லச் சொல்ல -தவறான தீர்ப்புச் சொன்னால் முதல் மனைவி இருக்கும் பொழுது -மற்ற ஒருத்தியை மணந்தால் அவளுக்கு வரும் துக்கம் போலவும் -சூதாட்டத்தில் அனைத்தும் செல்வங்களையும் இழந்தவன் துக்கம் போலவும் -துன்பம் பட வேண்டும் -ஆடு விஷயத்தில் பொய் சொன்னால் ஐந்து தலைமுறை முன்னோர்களையும் -பசு விஷயமாக பொய் சொன்னால் பத்து தலைமுறை முன்னோர்களையும் -குதிரை விஷயமாக பொய் சொன்னால் நூறு தலைமுறைகளுக்கும் -மனித விஷய பொய் சொன்னால் பின்வரும் அனைத்தும் தலைமுறைகளுக்கும் நரகத்தில் விழ வேண்டி வரும் -மகன் என்றும் பார்க்காமல் ஸூதன்வா -தான் சிறந்தவன் என்றும் தீர்ப்பு சொல்ல -அவரைப் பாராட்டி உனது மகனின் உயிர்க்கு ஒன்றுமே வாராது -அவரே கேசினியை மணந்து கொள்ளட்டும் என்றான் -அதே போல் த்ருதராஷ்ட்ரா-பிள்ளைக்காகப் பரிந்து பேசி நடுநிலை தவறினால் உங்கள் சொத்து அனைத்தையுமே இழப்பாய் -நேர்மை மாறாவிடில் எல்லாரும் வாழ்வார்கள்

அபர் யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபி ரக்க்ஷிதம் பர் யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபி ரஷிதம் -அஞ்சி துரியோதனன் வார்த்தை -தஸ்ய ஸஞ்சயன் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதா மஹா -அச்சம் போக்க பீஷ்மர் சங்கு ஊதினார் -தைர்யத்துக்கு உடல் பலம் மட்டுமே போதாது -ஆத்ம பலமும் தர்ம சிந்தனையும் வேண்டும் –

மூப்பு அழகை அழிக்கும் -ஆசை தைரியத்தையும் -மரணம் உயிரையும் அழிக்கும் -பொறாமை தர்ம வழி நடப்பதையும் கோபம் செல்வத்தையும் தீயவனுக்குத் தொண்டு செய்தல் நல்ல பண்புகளையும் -காமம் வெட்கத்தையும் அழிக்கும் -ஆணவம் எல்லாவற்றையும் அழிக்கும் -மங்களமான செயல்களால் லஷ்மீ உத்பத்தி ஆகிறாள் -தைர்யம் மற்றும் நம்பிக்கையால் செல்வம் வளர்கிறது -சாதுர்யத்தால் செல்வம் நிலை பெறுகிறது -பணிவால் செல்வம் வேரூன்றுகிறது -ஆணவம் இல்லாமல் பக்தியுடன் இருப்பவர்களுக்கு பொருத்தமான ஒளியும் பொறுமையும் திறலும் புகழும் நல்ல ஞானமும் செல்வமும் பிறக்கும் -பின் வளரும் –
லஷ்மீ கடாஷித்தால் –ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதீ ஸம்ருத்தி ஸித்தி ஸ்ரீய-
வக்த்ராப்ஜே பாக்ய லஷ்மீ
கரதல கமலே சர்வதா தான லஷ்மீ
தோர் தண்டே வீர லஷ்மீ ஹ்ருதய சரசிஜே பூத காருண்ய லஷ்மீ
கட்காக்ரே சௌர்ய லஷ்மீ நிகில குண கணாடம்பரே கீர்த்தி லஷ்மீ
சர்வாங்கே சௌம்ய லஷ்மீ மய து விஜயதாம் சர்வ சாம்ராஜ்ய லஷ்மீ

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாஸான நிஸார்த்தம் அர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந பரத்ர ஹேதோ இஹ ஜன்மநா ச
-பெரியாழ்வார் -வல்லபதேபன் பொற்கிழியை வென்ற வ்ருத்தாந்தம் -நித்தியமான ஆத்மாவின் ஆத்மாவின் இப்பொழுதே நற்செயல்களைச் செய்ய உறுதி வேண்டும் –

இனிய வாழ்க்கைக்கு இனிய பேச்சு வேணும் -அத்ரி முனிவர் அநஸூயா தேவிக்கு மகன் தத்தாத்ரேயர் -மஹா விஷ்ணுவின் கிருதயுக அவதாரம் -நம் குற்றங்களை பெருமாள் இடம் விண்ணப்பம் செய்ய நேரமில்லாததால் -நமக்குத் பதிலும் குற்றங்களைச் சொல்லுவர் மேல் க்ருதஜ்ஜை வேண்டுமே – உண்மையையே பேச வேண்டும் அதிலும் பிரியமானவற்றையே பேச வேண்டும் -அதிலும் தர்மங்களையே பேசுவது சாலச் சிறந்தது

ஆரோக்யமான மனம் ஆரோக்யமான உடலுக்குள் முக்கிய காரணம் -சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ஜீவந்த மப்யஹோ -நெருப்பு உயிர் அற்ற உடலைக் கொளுத்தும் -சிந்தை கவலை உயிருடன் இருப்பவனையே கொளுத்தும் -நல்லறிவு மட்டுமே கவலையைப் போக்கும் -பற்று குறைந்தால் கவலை நீங்கி உத்ஸாஹம் அடைவோம் -கல்வி தர்மம் யுத்தம் புண்ணியம் தவம் இவை பெரும் இன்பத்தைக் கொடுக்கும் –

தவம்- புலனடக்கம்- வேதங்களைப் பயின்று பகவானை அறிதல் -தேவபூஜை செய்தல் -சிறப்பான திருமணம் -தினம் தோறும் அன்ன தானம் -நல்ல ஒழுக்கம் -இவை எழும் இருந்தால் தான் உயர்ந்தவன் -அன்னதானம் செய்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று விதித்து திருக்கல்யாண பண்ணிக் கொண்ட வ்ருத்தாந்தம் -இதுவே உயர் குலம்

அனைவரும் அவன் உறுப்புக்கள் ஆனபடியால் யாரும் பகைவர்கள் அல்லர் -அனைவரும் நண்பர்களே -கந்தாடை தோழப்பர் -நம்பூர் வரதாச்சார்யரான நம்பிள்ளை -இருவரும் ஒருவருக்கு ஒருவரே ஷாமணம் பண்ணிக் கொண்ட வ்ருத்தாந்தம் –
உள்ளத்தில் ஓன்று வைத்துக் புறம் வேறே ஒரு மாதிரி நடந்தால் நீயே உன்னை எதிர்க்கிறாய் -அது அச்சம் அளிக்கும் -அது கவலையாக மாறும் -மன அமைதி உண்டாக்க சிறந்த கல்வி தவம் புலனடக்கம் பேராசையை ஒழித்தல் இவை தவிர வேறே வழி இல்லை -பயன் கருதாது தொண்டு செய்து ஒரே நோக்கக்கூடு செயல்பட்ட திருவடிக்கு -நடுக்கடலும் ஆழ் மணலும் போல் அமைதியாக-விருப்பு வெறுப்புக்களை இல்லாமல் மன அமைதி எளிதிலே கிட்டிற்று அந்தோ

ஒற்றுமையே வலிமை -எரிகின்ற கட்டை தனித்தனியே இருந்தால் புகை வரும் -கூட்டமாக எறிந்தாள் பற்றிக்கொண்டு எரியும் -தனிமரம் தோப்பாகாது -ஸூலபா புருஷா ராஜன் ஸததம் ப்ரிய வாதிந அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப-விபீஷணன் ராவணனுக்கு உபதேசம் -தனித்து நின்ற மரங்கள் வெள்ளத்தில் விழ கூட்டமாக இருந்தவை தப்பிற்றன -பணிவும் வணக்கமும் வேண்டும் -தாமிரபரணி வெள்ளத்தில் நாணல் நீர் வஞ்சிக்கொடி சாயாமல் இருக்க பெரிய மரங்கள் வேரற்று விழுந்தனவே

ஆணவம் தராதரம் இல்லாமல் அதிகமாக பேசுதல் த்யாஜ்யம் இல்லாமல் இருத்தல் -கோபம் கொள்ளுதல் -சுய நலத்தால் தன்னையே பேணுதல் நண்பர்களை ஏமாற்றுதல் இந்த ஆறும் மனிதனை அழித்து விடும் என்றும் யமன் சொல்லுகிறார் என்றார் விதுரர் -தியாகம் உயர்த்தி விடும் என்பதை ஓர் ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா-உண்மையாகப் புகழ்ந்தான் குகன் -த்யாகேனைகே அம்ருதத்வ மாநசு -தியாகம் ஒன்றாலேயே முக்தி அடையாளம் -வேதங்கள் பறை சாற்றுகின்றன -மருந்தும் வைத்தியமும் பிடிக்காதாகிலும் நோட் தீரக் ஆசைப்படுவர் -உனது கவலை தீர உரிய மருந்தை நான் கூறினால் உன்னால் ஏற்க முடியவில்லை -சிந்தித்துப்பார் -என்றார் விதுரர் –

உனது புதல்வர்கள் காட்டுக்கு ஒப்பு -பாண்டவர்கள் புலிக்கு ஒப்பு -புலி இருந்தால் தானே காட்டுக்குப் பாதுகாப்பு -தர்மத்தில் இருந்து செல்வம் விலகாது -செல்வமும் தர்மமும் வெவ்வேறு பாதைகள் அல்ல -அறத்தைக் கடைப்பிடித்து செல்வத்தைச் சேர்க்கவும் காக்கவும் வேண்டும் -தர்மமே செல்வத்துக்குப் பாதுகாப்பு -புத்தி குடும்பம் செல்வம் நண்பர் தோள் ஆகிய ஐந்தும் பலன்கள் -தோள் வலிமையை மட்டுமே நம்பி உன் புதல்வர்கள் ஆணவம் கொள்கிறார்கள் -கற்றது கைமண் அளவும் கல்லாதது உலகளவு என்றும் புரியாமல் உன் மகன் செய்வதும் நன்மையில் முடியாத -அளவோடு உண்பவனுக்கு ஆரோக்யம் ஆயுள் பலம் ஸூகம் மக்கட்பேறு பெரும் தீநீ உண்பவன் என்ற அவப்பெயர் நீங்குதல் ஆகிய ஆறு நன்மைகளும் உண்டாகும் –

காஷாய உடை தரிப்பதால் ஸந்நியாஸி யாக மாட்டான் -கோபமற்று -கல்லையும் பொன்னையும் சமமாக மதித்து -துயரமற்று -நட்ப்போ பகையோ பாராமல் -புகழ்ந்தாலும் இகழ்தலும் கவலை அற்று -விருப்பு வெறுப்பு அற்று -பற்றற்று -இருப்பவன் இல்லறத்தில் இருந்தாலும் ஸந்நியாஸியே -நம்பத் தக்காதவனை நம்பாதே -நம்பத் தக்கவனையும் அதிகமளவு நம்பாதே -சான்றோர்களால் மதித்து நடக்க வேண்டும்

எவன் நண்பன் இல்லையோ – எவன் நண்பனாக இருப்பினும் பண்டிதன் இல்லையோ -பண்டிதனாக இருப்பினும் மனத்தை கட்டுப் படுத்தாதவனாக இருப்பாரிடம் ரஹஸ்யங்களைப் பேசாதே -அனுபவம் மிக்கவர்களிடமே ஆலோசனை செய்ய வேண்டும் -த்ருவன் மகன் வேணன் -தீய பண்புகளுடன் மக்களைத் துன்பறுத்த பூமித்தவி அனைத்தும் செல்வங்களையும் மறைக்க -நாடே அவதிப்பட -குல குருக்கள் அவனை அழித்து அவன் உடலில் இருந்து ப்ருது என்பவனை உருவாக்க -பூமி தேவி பசுவின் உருவில் நிற்க -ரிஷிகள் தேவர்கள் பித்ருக்கள் தொடக்கமான பலரும் வேதம் அன்னம் மூலிகைகள் முதலான பல பொருள்களையும் கறந்து பெற்றார் -கல்வியால் பண்புகளால் குடிப்பிறப்பால் வயதினால் யார் பெரியவர்களாக உள்ளாரோ அவற்றைத் முட்டாள்கள் மதிக்க மாட்டார்கள் -பயனுள்ள காரியங்களில் ஈடுபட்டு பயனற்ற செயல்களில் விலகி இருப்பவன் அறிவாளி

சிலர் தானத்தாலோ இனிய பேச்சாலோ மந்திரத்தாலோ மூலிகையினாலோ பிரியவராக இருப்பர் -நிர்ஹேதுக பிரியம் நிலைத்து இருக்கும் -ஸத்யேந லோகான் ஜயதி தீநாந் தாநேந ஜயதி குரூன் ஸுஸ்ஸுரூஷயா வீர தநுஷா யுதி ஸாத்ரவாந் -ஸர்வருக்கும் ஸர்வ காலமும் மனத்துக்கு இனியான் -எந்த வளர்ச்சி பிற்காலத்தில் தீமை தருமோ அது வளர்ச்சியே அல்ல -எந்தத் தேய்தல் பிற் காலத்தில் வளர்ச்சியில் முடியுமோ அதுவே உண்மையில் வளர்ச்சி -உனது பிள்ளைகளை உண்மையான வளர்ச்சியைத் தேடச்சொல் என்றார் விதுரர் –

நீ பாண்டவர்களை அரசில் அமர்த்தியானால் இப்போதே உன் பிரஜைகளும் தெய்வமும் உன்னை மன்னிப்பர் -வல்மீகி வழிப்பறி செய்பவராக இருந்தாலும் ராம நாம ஜபத்தால் திருந்தி உலகம் புகழும் ஸ்ரீ இராமாயணம் இயற்றி அருளினார் -கடலில் விழுந்த பொருள் இழந்ததே -திரும்பக் கிடைக்காதே – சான்றோர்களிடம் அடிபணிந்து உபதேசம் பெறாதவன் பேசுவது வீண் -புலனடக்கம் இல்லாதவனின் ஸாஸ்த்ர அறிவு வீண் -எரியாத நெருப்பில் -சாம்பலில் -பண்ணப்பட்ட ஹோமம் வீண் -உன் மகன் கூடா நட்பு கொண்டு வீணாகிறான் -யார் இவருடைய மனமும் அறிவும் ரஹஸ்யங்களும் தர்மத்துக்கு விரோதம் இல்லாமல் ஒத்துப் போகிறதோ அந்த நட்பே நிலைக்கும்

நடாதூர் ஆழ்வானின் திருக்குமாரர் வாத்ஸ்ய வரதர் -திருவெள்ளறை விஷ்ணு சித்தர் என்னும் எங்கள் ஆழ்வான் இடமும் ஸ்ரீ பாஷ்யம் உபதேசம் கேட்டு வர – நான் செத்து வாரும் -அடியேன் வந்திருக்கிறேன் -நான் அஹங்கார அடையாளம் -மாறி அடியேன் -என்றதும் ஆச்சார்யர் மகிழ்ந்து ஸ்ரீ பாஷ்யம் கற்பித்து அருளினார் -கற்றபின் நிற்க அதற்குத் தக-கற்றதைப் பணிவுடன் கடைப் பிடிக்க வேண்டும் –

இங்குள்ள பகவத் தொண்டர்கள் விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுவர் -யார் தர்மத்தை மீறாமல் -மனித நேய ஒழுக்கத்தைத் தாண்டாமல் -அப்படி தெரியாமல் தாண்டினால் வெட்கப்படுபவனாய் -மென்மையான உள்ளம் கொண்டவனாய் அஹிம்சையைக் கடைப்பிடிப்பவனாய் உள்ளானோ அவன் எங்குப் பிறந்தாலும் சிறந்தவர் களே -அவனைச் சான் றோரும் போற்றுவர் -குறும்பறுத்த நம்பி -தொண்டைமான் சக்ரவர்த்தி விருத்தாந்தம் அறிவோம் -ஒருவன் எப்படிப்பட்டவன் என்றும் முதலில் நம் புத்தியால் அறிய வேண்டும் -பின் அனுபவத்தால் பலமுறை ஆராய வேண்டும் சில நல்லவர்களிடத்திலும் அவரைப் பற்றி கேட்க வேண்டும் -இறுதியில் நம் கண்ணாலே பார்த்துக் முடிவும் செய்ய வேண்டும் -எங்கு பிறந்தார் என்றும் பாராமல் அவனுடைய பண்பு ஞானம் பக்தி இவற்றையே பார்க்க வேண்டும் –

பாண்டவர்கள் வஞ்சனையால் இழந்த ராஜ்யத்தை நியாயமான வழியில் போரிட்டு மீட்க்கப் பார்க்கிறார்கள் -வெற்றி உறுதி -உன் பிள்ளைகள் நியாயமற்ற வழியில் அடைந்த அரசைத் தக்க வைக்கப் பார்க்கிறார்கள் -தோல்வி உறுதி -இந்திரன் இழந்த செல்வதை த்ரிவிக்ரமனாய் தன்னதாக்கிக் கொண்டு மீண்டும் கொடுத்து அருளினான் -இன்றும் இழந்த சொத்தை மீட்கவோ தொலைத்த பொருளைக் கண்டு பிடிக்கவோ ஸூந்தர காண்டம் பாராயணம் செய்வதும் மரபில் உள்ளது -யார் ஒருவன் கடந்த காலத்துச் செயல்களில் மிச்சம் இருப்பதைக் நினைவில் கொள்கிறானோ -நிகழ் காலத்துச் செயல்களை முடிப்பதில் உறுதியுடன் இருக்கிறானோ -வரும் காலத்து ஆபத்துக்களைப் போக்க வழிகளை அறிந்து வைத்திருக்கிறானோ அவன் செல்வத்தை இழக்கவே மாட்டான் -நடந்து முடிந்தவைகளால் அனுபவமும் -நடப்பவைகளில் ஊக்கமும் -நடக்கப் போவதில் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் –மனத்தாலும் மொழியாலும் மெய்யாலும் எதில் ஒருவன் இடைவிடாமல் ஈடுபடுகிறானோ அந்தக் காரியமே அவனைத் தன பாக்களில் இழுத்து விடும் -ஆகவே ஒருவன் நல்ல செயல்களிலேயே முக்காலத்திலும் ஈடுபட வேண்டும் -சக்தி இல்லாதவன் அனைவரிடத்திலும் பொறுமையுடன் இருப்பான் -சக்தி இருப்பவன் தர்மத்துக்காகப் பொறுமையுடன் இருப்பான் -யார் பார்வையில் வேற்றுமை இல்லையோ அவரிடம் பொறுமை காப்பதே நமக்கு நல்லது –

ஊக்கமே தவம் -தர்மத்தின் வழியில் நடந்து விடாமுயற்சியுடன் ஒரு செயலில் ஈடுபட்டால் அதற்கு தெய்வம் துணை நிற்கும் –மனத் தளர்ச்சி இல்லாமல் ஊக்கத்துடன் உழைப்பதே செல்வம் லாபம் சுபம் ஆகியவற்றுக்கு மூலமாகும் -ஒன்றி ஓன்று உலகம் படைக்கிறான் அன்றோ -தவறான வழியில் சம்பாதித்த பொருள்களைக் கொண்டு செய்யும் யாகம் ஹோமமும் பலனைத் தர மாட்டாவே -யோகிகளுக்கு தவமே வலிமை -வேதம் கற்றோருக்கு வேதமே வலிமை -கொடியவர்களுக்கு ஹிம்ஸையே வலிமை -நல்ல குணசாலிகளுக்கு பொறுமையே வலிமை –

ஆச்சார்ய தேவோ பவ -பகவான் அருளும் குரு மூலமே கிட்டும் -அறிவிலி கூட குரு பக்தியால் ஞானம் ஆயுள் புகழ் வலிமை ஆகியவை பெற்று முக்தி யடைகிறான் -மன்னா நீயும் வேத வியாஸரிடம் பக்தியுடன் இரு -அவர் சொல்லை மீறாதே -விலங்கோ மனிதனோ பறவையோ அனைவருமே ஆச்சார்யன் கடாஷித்தால் நன்மை அடைகின்றனர்

நல்லவன் பின் நின்றாலே பெரு -விபீஷணனுடன் வந்த நால்வரும் விசாரணை இல்லாமல் ஏற்கப்பட்டனர் அன்றோ -காம சுகத்தை அனுபவித்து காரணத்தை வெல்ல முடியாத -விறகுகளை மேலே மேலே போட்டு நெருப்பை அணைக்க முடியாத -தர்ம புத்ரன் இப்போதும் உங்களுக்கு நன்மையையே நினைக்கிறான் -இது புரியாத உன் பிள்ளைகள் அவனுக்குக் கெடும் நினைத்துத் தங்களுக்கே தீமை தேடிக் கொள்ளுகிறார்கள் -பூமியின் செல்வம் எல்லாமே ஒருவனே அனுபவிப்பதற்கு இல்லை என்று புரிந்தவன் நிம்மதி அடைகிறான் -இவை எல்லாமே எனக்கே என்றும் நினைப்பவன் அழிந்தே போகிறான் -வெள்ளியுடன் சேர்ந்து தங்கத்துக்கு குறை -வெண்கலம் சேர்ந்தால் வெள்ளிக்கு குறை -ஈயம் சேர்ந்தால் வெண் கலத்துக்கு குறை -ஈயத்துக்கு தன்னிடம் சேர்ந்து அழுக்காலே குறை -தலை கீழாகப் பார்த்தால் வெண் கலத்துடன் சேர்ந்து ஈயத்துக்கும் வெள்ளியுடன் சேர்ந்து வண காலத்துக்கும் -தனித்தே சேர்ந்து வெள்ளிக்கும் மதிப்பு கூடுமோ -யாருடன் சேர்கிறோமோ அதன் பலன் கிட்டும் –

த்ருதராஷ்ட்ரா -நீ அழியக்கூடிய சொத்தைப் பற்றி நினைத்து கவலைப்படுகிறாய் -அழியாத ஆத்மாவுக்கு நல்லதை நினைத்தால் உயர் கதி அடையாளம் -எவ்வளவு விறகை இட்டாலும் நெருப்புக்கும் -எவ்வளவு தண்ணீர் வந்தடைந்தாலும் கடலுக்கும் எத்தனை உயிர்களைக் கவர்ந்தாலும் யமனுக்கும் திருப்தி பிறப்பதில்லையே -போதும் என்பதை நாம் அசையும் பொருளிலோ நம் முயற்சியிலோ இல்லை நம் மனத்தில் தான் உள்ளது -இந்த ஜீவாத்மா ஒரு வற்றாத நதி -இது ஸத்யம் பரமாத்மா என்னும் மலையிலிருந்து பிறக்கிறது -புண்ணியம் இதன் தண்ணீர் -தைர்யம் இதன் கரைகள் -இரக்கம் இதன் அலைகள் -புண்யாத்மாக்கள் இதில் நீராடி ஆசை யற்றவர்களாகி தூய்மை அடைகிறார்கள்-ஆத்மா இறுதியில் கலங்காத் தன்மையை -கடலை -அடைகிறான் – அழியாததையே நினை -அழிவதை மறந்து ஒழி –
இதுகாறும் கூறிய சத்தியத்தையும் தர்மத்தையும் நன்கு ஆராய்வாய் -சரி என்றும் மனதில் படுபவனாய் கவலையை ஒழித்துக் கடைப்பிடி -என்று கூறி உபதேசத்தை முடித்தார்
த்ருதராஷ்ட்ரன் -விதுரா நீ சொல்வது அனைத்தும் உண்மை என்றும் ஏற்கிறேன் -ஆனால் விதியை வெல்ல முடியாத -துரியோதனன் பேசும் போது இவை அனைத்தும் மறந்து விடுகின்றன -ஏன் நிலையை பகவான் தான் நேர் படுத்த வேண்டும் -என்று கூறி முடித்தார் –

தர்ம புத்ரன் தானும் விதுரரும் ஒரே யம தர்மனின் சக்தியால் பிறந்தவர்கள் என்று உணர்ந்தார் -அசரீரி -தர்மபுத்திரர் மஹாத்மா விதுரர் ஸாந்தானிக லோகத்தை அடைந்தார் -அவருடைய ஸந்நியாஸ நிலையை நினைத்து சடங்குகளைச் செய் -என்று உத்தரவு விட தர்மபுத்ரன் அப்படியே செய்தான் -பின்பு வேத வியாஸர் அங்கு வந்து விதுரர் தர்மத்தின் உருவம் அவரே சநாதன தர்ம தேவன்-அவருடைய தவமும் பக்தியும் எட்டுத் திக்கிலும் நிறைந்து இருக்கும் -அவர் பரம பொருளான கண்ணனின் திருவடிகளை அடைந்தார் -அவர் உபதேசித்ததே தர்மம் -என்று கூறி மறைந்தார் –
விதுரரின் நீதி நமது செயல்களிலே தெரியட்டும் –

————————————

உத்யோக பர்வத்தில்–33-40 அத்தியாயங்கள்-மொத்தம் 8 அத்தியாயங்களில் -604-ஸ்லோகங்கள் உள்ளன

முதல் அத்யாயத்தில் இருந்து சில
ஒரே மரத்தில் இருந்து வேள்விக்கான பாத்திரங்களும் கரண்டிகளும் உருவாகும் -அதிலிருந்தே நீர்த்தொட்டியும் உடலும் உலக்கையும் உருவாகும்-ஒன்றிலிருந்தே கெட்டதும் நல்லதும் தோன்றலாம் –ஒரே குலத்தில் கவ்ரவர்களும் பாண்டவர்களும் -அறிவிலியும் அறிவாளியும் தோன்றுவது இயல்வே

ஒன்றால் இரண்டை நிர்ணயித்துக் கொண்டு மூன்றால் நான்கை வசப்படுத்துவீர் -ஐந்தை வென்று ஆறை உணர்ந்து -ஏழைத் தவிர்த்து சுகம் பெறுவீர்-1-38-
ஒன்றால் -நல்லறிவால்
இரண்டையும் –நல்லதையும் கெட்டதையும்
மூன்றால் -நண்பன் எதிரி உதாசீனன்
நான்கை -சாம தான பேத தண்டம் -மென்மையுள்ள பேச்சு -பொருள் உதவி -மிரட்டிப் பணிவித்தல் -தண்டித்துப் பணிவித்தல்
ஐந்து-புலன் உணர்வுகளில் நாட்டம்
ஆறு -சமாதானம் போர் படையெடுப்பு நல்ல தருணம் பார்த்துக் எதிர்க்கும் வரை முற்றுகை -வஞ்சித்து மனம் மாறச் செய்தல்-சரண் அடைதல் ஆகியவை ஆறும்
ஏழு -ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் ஏமாறுதல் சூதாடுதல் வேட்டையாடுதல் மது அருந்துதல் தடித்துப் பேசுதல் கொடூரமான தண்டனை பொருளாதரத்துக்கு நாசம் விளைவித்தல் -ஆகியவற்றைத் தவிர்த்து சுகம் பெறுதல்

விஷ நீர் குடித்தவனை மட்டுமே அழிக்கும் -ஆயுதம் அவனாலே அடிபட்ட ஒருவனையே மட்டுமே அழிக்கும் -அரசவையில் செய்த மந்த்ர ஆலோசனையின் தவறு அரசனை நாட்டுடன் நாட்டு மக்களையும் அழிக்கும்

சாம தான பேத தண்டங்களில் -பேதம் தாழ்ந்தது -தானம் மத்தியது -சாமம் உயர்ந்தது -இம் மூன்று உபாயங்களும் பயம் அளிக்காத போது மட்டுமே தண்டம் உபயோகிக்கத் தக்கது

தேவர்கள் பித்ருக்கள் மனிதர்கள் துறவிகள் அதிதிகள் -ஐவரையும் வழிபடுபவன் பெரும் புகழ் அடைகிறான் -நமக்குள்ளே இந்திரியங்களை -வாக்கில் அக்னியாகவும் -கண்களில் ஸூர்யனாகவும் -மனத்தில் சந்த்ரனாகவும் நின்றும் இயக்கி -வெளியில் மழை வெப்பம் காற்று முதலியவற்றைத்தந்து உதவின வாழ வைக்கும் தேவதைகள் -நமக்கு உருவளித்து ஆயுஸ் அறிவு சக்தி பொருள் தந்து உதவி-மறைந்த பின்பும் நம் நலனைக் கோரி நிற்கும் பித்ருக்கள் -நண்பனாக உறவினனாக உணவு ஆசை குடியிருப்பு போன்ற வாழும் வசதிகளைத் தரும் மனித இனம் -பற்றற்றுத் திரிந்து நல்லதையும் நலம் தருபவையையும் நமக்காக சேமித்து வைத்து அளிக்கும் துறவி -நாடோடியாக இறைவனே வருகிறான் என்னும்படி வரும் அதிதிகள் -இந்த ஐவரையும் இறைவனின் பிரதிநிதிகள் என்று எண்ணி வாழ வேண்டும்-

ஒன்பது வாயில்கள் -காதுகள் கண்கள் மூக்குத் துவாரங்கள் -வாய் -மலவழி -சிறுநீர் வழி -கொண்ட இந்த உடல் என்னும் வீட்டில் -வாயு பித்தம் கபம் என்னும் மூன்று தூண்கள் -பஞ்சபூதமாகிய ஐந்து சாட்சிகள் -ஒரு ஸ்வாமிகள் உடையவன் ஆத்மா உண்டு என்று உணர்ந்தவனே அறிஞன்

———

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன். திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது.
மகாபாரதத்தில் பகவத் கீதை ஒருவகையான தத்துவ விளக்கம் என்றால் விதுரநீதி என்பது அரசியல் சமூக பொதுநீதி மொழி எனலாம்                                                                                                                  பாண்டவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகும் துரியோதனன் அவர்களுடைய நாட்டினைத் திருப்பித் தர மறுத்ததனால் பாரதப் போர் நிகழ்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் படை திரட்ட ஆரம்பித்தனர்.
சஞ்சையன் தூது
ஆனாலும் இருதரப்பினருக்கும் பொதுவான சிலர் போரினைத் தவிர்க்க தூது முயற்சிகளிலும் ஈடுபட்டனர். திருதராடிரனே இந்தப் போரினைத் தவிர்க்க எண்ணி தர்மபுத்திரனிடம் பேசிப் பார்க்கும் படி தன்னுடைய நம்பிக்கைக்குரிய சஞ்சையனை அனுப்பி இருந்தான்.
சஞ்சையன் பாண்டவர்களிடம் பேசிப் பார்த்து அவர்கள் தரப்பிலேயே நியாயம் இருப்பதை உனர்ந்து கொண்டு, பாரதப் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதனை உணர்ந்து கொண்டு திருதராட்டிரனிடம் திரும்பினான். அப்போது இரவாகி விட்டதால் அவனிடம் தூது நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் வெறுமனே அவனைக் கடிந்து கொண்டு, மறுநாள் அரசவையில் மற்ற விவரங்களைச் சொல்வதாகக் கூறி விட்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டான்.
திருதராட்டிரன் குழப்பம்
சஞ்சையனுடைய கடும் வார்த்தைகள் அவனுடைய தூதின் விளைவினைப் பட்டவர்த்தனமாகக் காட்டி விட்டதால் குழப்பத்தில் இருந்த திருதராட்டிரனுக்கு உறக்கம் வரவில்லை. எனவே விதுரனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் தன் உறக்கமின்மையைச் சொல்லிப் புலம்பினான்.
“அரசே! வலிமை குன்றியும் யுத்த தளவாடங்கள் சரியில்லாத நிலையிலும் இருக்கும் போது வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால் உறக்கம் வராது. பொருளைப் பறி கொடுத்தவன், காமத்தோடு இருப்பவன், பிறர் பொருளில் ஆசை வைத்தவன், திருடன் ஆகியோருக்கும் உறக்கம் சாத்தியமாவதில்லை. இதில் நீங்கள் எந்த வகையில் துன்பப்படுகிறீர்கள்?” என்று கேட்கும் ஆரம்பத்திலேயே விதுரனின் புத்திக் கூர்மை தெளிவாகத் தெரிகிறது.
விதுரநீதி
அவனுக்கு நேரடியாக விடை கூற முடியாத திருதராட்டிரன், “எதையாவது சொல். என் மன ஆறுதலுக்காகச் சொல். நீ நீதிவான். நீ சொல்லும் நியாய உரைகள் எப்போதுமே கேட்க நன்றாக இருக்கும்” என்று அவனை ஊக்கிப் பேச வைக்கிறான். அன்று இரவு முழுதும், விதுரன் அவனுக்குச் சொல்லும் நீதி உரைகளின் தொகுப்பே விதுர நீதியாகும் .
இது மகாபாரதத்தில் சஞ்சையன் தூதுக்கு அடுத்த பகுதியாக உள்ளது. இது ஒரு வாழ்வியல் பாடம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விளக்கங்கள் நிறைந்துள்ள நூல் இது.
எடுத்துக்காட்டு நீதி உரைகள்                                                                                                      இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்…

1.பண்டிதன் என்பவன், தானாகப் போய் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டான்; பிறர் கேட்டல் மட்டுமே சொல்லுவான்.
2.பிறர் போற்றும் போது சந்தோஷமும் தூற்றும் போது துக்கமும் அடையாமல் இருப்பான்; தொலைந்து போனதை நினைத்து துக்கப்பட மாட்டான் பண்டிதன்.
3.அடங்கிப் போன பகையைத் தூண்டி வளர்க்கக் கூடாது.
4.வாக்கினை அடக்குவது மிகவும் கடினம். பொருட்செறிவுடனும் புதுமையாகவும் பேச வேண்டும். அதிகம் பேசுபவரால் இவ்வாறு பேச இயலாது;
6.பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை.
7.இரவில் சுகமாகக் காலம் கழிக்க வேண்டும் என்றால் அதற்குத் தக்கவைகளைப் பகலிலேயே செய்து விட வேண்டும்; மழைக்காலத்தைச் சுகமாகக் கழிக்க வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்களில் உழைத்துச் சேகரித்து வைக்க வேண்டும்; 8.முதுமையில் சுகவாசம் செய்ய வேண்டுமென்றால் இளமையிலேயே அதற்குத் தக்கவைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
8.அதிக அகந்தை, அதிகப் பேச்சு, பெரிய குற்றம், அதிக கோபம், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கைத் துரோகம் இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும்.
 8.சுக வாழ்க்கையில் ஈடுபட்டவனுக்கு அறிவு வளர்ச்சி அடையாது.
 9.மனிதன் சத்தியம், தானம், சோம்பலின்மை, பொறுமையின்மை, தைரியம் ஆகிய ஐந்து குணங்களையும் ஒருபோது எந்த நிலையிலும் விட்டுவிடக் கூடாது                                                   10.விவேகி எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்பதால் அதை மாற்ற வழியில்லை.
11. வாழ்க்கையில் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான காலம் உண்டு.
 12.தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் நற்செயல்களையும் செய்தாக வேண்டும்.
 13.ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், ஏமாளியாக இருக்கக் கூடாது.
 14.ஆகாரத்தில் விருப்பமுள்ள மீன், பூச்ச்சியால் மறைக்கப்பட்டிருக்கும் இரும்புத் தூண்டிலைக் கவனிப்பதில்லை. ஆசைப்பட்டு ஆகாரத்தைத் தின்னப் போய் அதில் மாட்டிக் கொள்கிறது. ஆசை வயப்பட்ட மனிதனின் நிலையும் இதுதான்.
 15.அளவுக்கு மிஞ்சிய தூக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், மயக்கம், எதையும் தாமதமாகச் செய்தல் எனும் ஆறு குணங்கலும் முன்னேற்றப் பாதையின் முட்டுக்கட்டைகளாகும்.
 16.அறிவிலி எனப்படுபவன், மற்றவர்கள் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் வயிறு புடைக்க உண்டு களிப்பான்.
 17.அறிவிலி எனப்படுபவன், தனக்கு அறிவு இல்லை என்பதைப் பொருட்படுத்தாமல் கர்வமாக இருப்பான்.
18. தன்னை நாடி வரும் தீயவர்களையும் நல்லவன் கைவிடமாட்டான்.
 19.மற்றவர்கள் அவமதித்தாலும், தாக்கினாலும் பழிவாங்க விரும்பாமல் அமைதியாக இருப்பதுதான் பொறுமை.
 20.அறிவிலி எனப்படுபவன் தான் அழைக்கப்படாத இடங்களுக்கும் வேண்டுமென்று செல்வான்.
 21.தன்னடக்கமில்லாதவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பு கிடைக்காது.
22. தைரியம் என்பது உடல் வலிமையுடனும், மன உறுதியுடனும் தொடர்புடையது.
 23.முதல்தரமான மனிதன் இந்த வையகம் வாழ வேண்டும் என்கிற கொள்கையை உடையவனாக இருப்பான்.
24. தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக மகிழ்ச்சி கொள்வதில்லை. அவமதித்தாலும் தாபத்தை அடைவதில்லை. கங்கையின் மடுவைப் போல் எவன் கலக்கமடையாமல் இருக்கிறானோ அவனே அறிவாளி என்று சொல்லப்படுவான்.
 25.தீயோரின் சேர்க்கை அஞ்சத்தக்கது. அது எப்படிப்பட்ட நல்லவரையும் கெடுத்து விடும். காய்ந்த கட்டையுடன் சேர்ந்த ஈர மரமும் எரிந்துவிடும்.
 26.அகங்காரம் எதையும் பொருட்படுத்தாமல் அதிகமாகப் பேசுதல், அளவுக்கு மீறிக் குற்றம் புரிதல், கோபம் கொள்ளல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று கருதுதல், நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் இந்த ஆறு தீய குணங்களும் கூர்மையான கத்தி போல ஆயுளை வெட்டுகின்றன. ஆதலால், இவையே மனிதர்களைக் கொல்லுகின்றனவல்லாமல் யமன் கொல்கிறான் என்பதில்லை.
 27.புண்ணில் வேல் பாய்ச்சுபவனாகவும், கொடுஞ்சொல் பேசுபவனாகவும் இருக்கக் கூடாது.
28. மனத்தின் ஈடுபாட்டிற்கு ஏற்ப முயற்சியில் வெற்றியின் அளவு அமைகிறது.
 29.நல்லவர் உள்ளம் நல்லவர் அறிவர்.
30. நல்லவர்களைத் திட்டுவதனால் ஒருவன் பாவம் செய்தவனாகிறான்.
31. மனிதனின் மனத்தில் தீய விசயங்கள் உள்ளன. அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.
 32.அறிவிலி எனப்படுபவன், பகைவனை நண்பன் என்று நம்பி ஏமாறுவான்.
 33.ஒன்றை விரும்பும் போது அது நம்மிடம் இருக்கிறதா, அது நமக்குத் தேவைதானா, அதைத் தவிர்க்க முடியுமா என்று சிந்திப்பது அவசியமாகும்.
 34.படிப்பு, பாவச் செயல் செய்பவனைக் காப்பாற்றாது. நற்பண்பு ஒன்றுதான் காப்பாற்றும்.

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான ஆபத்தான மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. 

ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான – யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்து கிணற்றுக்கு மேலே ஏறி ஒருவழியாக தப்பித்தான்.

அவன் மனம், ’தடக், தடக்’ என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. ’அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்!’ என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே… அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, 

கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது. அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க… கரக்… கரக்… என்று சத்தம் கேட்டது. பார்த்தால்… 

அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்… 

உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்… அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான்.

என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.

கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அது முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. 

முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். 

மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

விதுர நீதியை பின்பற்ற நாம் சத்துவ குணம் உடையவராக இருக்க வேண்டும்.

தானம் எவற்றை கொடுக்க வேண்டும்

தானம் நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது.

அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கம் படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது  என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக் கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும்.

அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. கோவிலுக்கு ஒரு விளக்கை போட்டு விட்டு அதில் இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது.

நாம் எந்த நோக்கத்தில் ஒரு காரியம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும்.  உதாரணத்திற்கு நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும்.  ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது.  (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான்தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். )

உறவினர்கள் இங்கே காப்பாற்றுகிறார்கள், உறவினர்கள் மூழ்கிவிடுகிறார்கள்

நல்ல குணமுள்ளவர்கள் இங்கே காப்பாற்றப்படுகிறார்கள், கெட்ட குணமுள்ளவர்கள் மூழ்கடிக்கப்படுகிறார்கள் [5.39.23]

“இந்த உலகில், உறவினர்கள் காப்பாற்றுகிறார்கள், உறவினர்கள் ஒருவரை மூழ்கடிக்கிறார்கள். நல்ல நடத்தையைப் பின்பற்றுபவர்கள் காப்பாற்றுகிறார்கள். தீய நடத்தையைப் பின்பற்றுபவர்கள் ஒருவரை மூழ்கடிக்கிறார்கள்.”பணிவு மற்றும் நன்னடத்தை பற்றிய விதுரரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கூறத்தக்கவை:

பணிவு உள்ளுணர்வைக் கொல்லும், வீரம் தீமையைக் கொல்லும்.

மன்னிப்பு எப்போதும் கோபத்தைக் கொல்லும், நடத்தை எப்போதும் பண்புகளைக் கொல்லும்.

“பணிவு தீய நடத்தையை அழிக்கிறது. வீரம் பாதகமான சூழ்நிலைகளை அழிக்கிறது. மன்னிப்பு எப்போதும் கோபத்தை அழிக்கிறது. நல்ல நடத்தை தீய சகுனங்களை அழிக்கிறது.”பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன் திரௌபதியிடம் மன்னிப்பின் மகத்துவத்தை, ” 

மன்னிப்பு என்பது தர்மம். மன்னிப்பு என்பது தியாகம். மன்னிப்பு என்பது வேதங்கள். மன்னிப்பு என்பது புனித நூல்கள் ” என்று கூறியிருந்தார். இந்த ஸ்லோகங்கள் இவ்வாறு தொடங்குகின்றன: மன்னிப்பு என்பது மதம், மன்னிப்பு என்பது தியாகம், மன்னிப்பு என்பது வேதங்கள், மன்னிப்பு கேட்பது [3.3.36a]. இங்கே விதுரர் மன்னிப்பு என்ற கருத்துக்கு ஒரு நேர்த்தியான நுணுக்கத்தைச் சேர்க்கிறார்: 

மன்னிக்க முடியாதவனே நீதியின் பொருட்டு அனைத்திற்கும் வல்லவன் [5.39.46அ]

“ஒரு பலவீனமான நபர் எல்லாவற்றையும் மன்னிக்க வேண்டும். ஒரு வலிமையான நபர் தர்மத்திற்காக அதைச் செய்ய வேண்டும்.”நிச்சயமாக, யுதிஷ்டிரன் அந்த வார்த்தைகளைப் பேசியபோது நிலைமை வேறுபட்டது, நிர்ப்பந்தத்தாலும், அந்த நேரத்தில் பாண்டவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான நிலையை உணர்ந்தும் அதிகமாக உச்சரித்தார், எனவே அந்த வார்த்தைகளையும், மகாபாரதத்திலிருந்து வேறு எந்த வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தத்தை உண்மையான முறையில் புரிந்துகொள்ள அவற்றின் பொருத்தமான சூழலில் வைப்பது முக்கியம்.இந்த அத்தியாயம், ஒருவர் எதற்காக வருத்தப்பட வேண்டும், வயதாவதற்கு என்ன காரணம், குறைவதற்கான காரணம் என்ன, இன்னும் பலவற்றைப் பற்றி விதுரரின் ஆலோசனையுடன் முடிகிறது.

  • கோபமின்றி கோபத்தையும், நன்மையால் தீமையையும் வெல்ல வேண்டும்.
  • தர்மத்தால் தீமையை வெல்ல வேண்டும், உண்மையால் பொய்யை வெல்ல வேண்டும்.
  • ” கோபமின்மையால் கோபத்தை வெல்ல வேண்டும்.
  • தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
  • கஞ்சத்தனத்தை பெருந்தன்மையால் வெல்ல வேண்டும்.
  • பொய்யை உண்மையால் வெல்ல வேண்டும். “
  • ஒரு அறியாமையுள்ள மனிதன் பரிதாபப்பட வேண்டும், குழந்தைகள் இல்லாத ஒரு ஜோடி பரிதாபப்பட வேண்டும்.
  • பட்டினியால் வாடும் மக்கள் துக்கப்படுகிறார்கள், ராஜா இல்லாத தேசம் துக்ககரமானது.
  • ” கல்வி இல்லாத ஒரு மனிதனைப் பற்றி ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • குழந்தை இல்லாத தம்பதியருக்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • பசியால் வாடும் குடிமக்களுக்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • ராஜா இல்லாத ஒரு ராஜ்யத்திற்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். “
  • மலைகளின் நீருக்குக் கீழே உடல்களுடன் கூடிய முதுமை
  • அஸம்போகோ ஜரா ஸ்த்ரீணம் வக்ஷாலயா மனசோ ஜரா [5.39.63]
  • ” உடல் உள்ளவர்கள் பயணங்களால் வயதாகிறார்கள். 
  • மழையால் மலைகள் வயதாகின்றன. 
  • உடலுறவு இல்லாதது பெண்களை வயதாக்குகிறது. 
  • கடுமையான வார்த்தைகள் மனதை வயதாக்குகின்றன. “
  • வேதங்கள் பெயரில்லாமல் தூய்மையற்றவை, பிராமணரின் சபதங்கள் தூய்மையற்றவை.
  • பெண்கள் ஆர்வத்தில் தூய்மையானவர்கள், புனிதமானவர்கள், நாடுகடத்தலில் தூய்மையானவர்கள்.
  • ” வேதங்கள் மீண்டும் சொல்லப்படாவிட்டால் அவை களங்கப்படுத்தப்படும்.” 
  • பிராமணர்கள் சபதம் இல்லாததால் களங்கப்படுகிறார்கள். 
  • கற்புள்ள பெண்களை ஆர்வம் கறைபடுத்துகிறது. 
  • வீட்டை விட்டு வெளியேற்றப்படுவது பெண்களை களங்கப்படுத்துகிறது. 
  • தங்கத்தின் அழுக்கு வெள்ளி, வெள்ளியின் அழுக்கு ட்ரபு.
  • டிராபுமலா ஈயம் என்று அழைக்கப்படும் ஈயத்தின் அழுக்கும் அழுக்குதான்.
  • வெள்ளி தங்கத்தை கறைபடுத்துகிறது. 
  • தகரம் வெள்ளியைக் கறைபடுத்துகிறது. 
  • ஈயம் தகரத்தை கறைபடுத்துகிறது. 
  • தூசி ஈயத்தைக் கறைபடுத்துகிறது. “
  • கனவுகளால் தூக்கத்தை வெல்லக்கூடாது, காமத்தால் பெண்ணை வெல்லக்கூடாது.
  • நெருப்பை விறகினால் வெல்லக்கூடாது, மதுவை பானத்தால் வெல்லக்கூடாது.
  • ” அதிக தூக்கத்தால் தூக்கத்தை வெல்லாதே. 
  • பெண்களை ஆசையால் வெல்லாதீர்கள். 
  • நெருப்பை மூட்டி அதை வெல்லாதீர்கள். 
  • மதுவின் மூலம் தாகத்தை வெல்லாதீர்கள். “

முடிவில், விதுரர் திருதராஷ்டிரனை ஆசையை கைவிடுமாறு அறிவுறுத்துகிறார், ஏனெனில் ” 

ஆயிரம் உள்ளவர்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளவர்களும் வாழ்கிறார்கள். ” ( 

சஹஸ்ரினோ’பி ஜீவந்தி ஜீவந்தி ஷதினஸ்ததா  – 5.39.68அ)அடுத்த அத்தியாயத்தில் விதுரர் தொடர்ந்து, ” 

நம்பிக்கை உறுதியை அழிக்கிறது. மரணம் செழிப்பை அழிக்கிறது. கோபம் செல்வத்தை அழிக்கிறது. கஞ்சத்தனம் புகழை அழிக்கிறது. பராமரிக்கத் தவறுவது விலங்குகளை அழிக்கிறது. ஓ ராஜா! கோபக்கார பிராமணர் ஒருவர் கூட ஒரு ராஜ்யத்தை அழிக்கிறார் ” என்று மன்னரிடம் கூறுகிறார்.( 

நம்பிக்கை பொறுமையைக் கொல்லும், செழிப்பை அழிக்கும்; கோபம் செல்வத்தைக் கொல்லும், புகழ் என்பது இழிவானது.)

மன்னா, அலட்சியம் கால்நடைகளைக் கொல்லும்; கோபக்கார பிராமணன் ஒருவன் தேசத்தைக் கொல்கிறான் – 5.40.7 )விதுரர், ராஜாவுக்கு அறிவுரை கூறியதன் நோக்கம், அவர் திருப்தி அடைந்து நிலையற்றதை விட்டுவிடுவதாகும் என்று கூறுகிறார். உடல் நிலையற்றது, ஒருவரின் செயல்கள் மட்டுமே அவரைப் பின்தொடர்ந்தன, இறந்தவரின் உடலை நெருப்பில் எறிந்துவிட்டு உறவினர்களும் நலம் விரும்பிகளும் திரும்புவது போல, இறந்தவரின் செயல்கள்தான் அவரைப் பின்தொடர்ந்தன. இங்கே, விதுரர் ஆன்மா, செயல்கள் மற்றும் பலவற்றின் ஒரு படத்தை முன்வைக்க துடிப்பான கற்பனையை அழைக்கிறார், மேலும் இது முழுமையாக மீண்டும் உருவாக்கத் தகுந்தது: 

ஆத்ம நதி பாரத புண்யதீர்த்தம்; சத்தியத்தின் நீர் பொறுமையின் மூலமாகவும், கட்டுப்பாட்டின் அலைகளாகவும் இருக்கிறது.

அதில் நீராடுபவன் பக்திமான்களைத் தூய்மைப்படுத்துகிறான்; புனித ஆன்மா எப்போதும் தண்ணீர்தான், தண்ணீர் தானே

ஆன்மா ஒரு நதி. தூய்மை அதன் தீர்த்தங்களைக் குறிக்கிறது. உண்மை அதன் நீர். உறுதியானது கரைகளை உருவாக்குகிறது. சுயக்கட்டுப்பாடு அலைகளைக் குறிக்கிறது. இவற்றில் குளிப்பதன் மூலம், தூய செயல்களைச் செய்பவர் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார். ஆன்மா தூய்மையாகி, நித்திய நீரில் உள்ள தண்ணீரைப் போல இருக்கிறது. மற்றும் 

காமத்தையும் கோபத்தையும் பற்றிக்கொள்ளும் ஐந்து புலன்களின் நீரின் நதி.

பொறுமையின் படகை உருவாக்கி, பிறவியின் கோட்டைகளைக் கடக்கவும்.

ஒரு நதி இருக்கிறது, அதில் ஐந்து புலன்கள் தண்ணீராகவும், ஆசை மற்றும் கோபம் முதலைகளாகவும் இருக்கின்றன. உறுதியிலிருந்து ஒரு படகை உருவாக்கி, மீண்டும் மீண்டும் பிறக்கும் கடினமான சுழல்களைக் கடக்கவும்.விதியின் முதன்மையைப் பற்றிய புலம்பலுடன் ஏழாவது அத்தியாயத்தைத் தொடங்கிய திருதராஷ்டிரன், எட்டாவது அத்தியாயத்தை மற்றொரு புலம்பலுடன் முடிக்கிறார் – ” 

விதி என்பது செயல்படுபவன் என்று நான் நினைக்கிறேன், மனித முயற்சி பயனற்றது. ” விதுர நிதியின் கடைசி அத்தியாயத்தில், திருதராஷ்டிரன் விதுரரிடம், அவர் இதுவரை பேசாத ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார். விதுரர், சனத்சுஜாத முனிவர் தான் ராஜாவுடன் பேசக்கூடியவர் என்று பதிலளித்தார். முனிவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார், விதுரர் ராஜாவின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு முனிவரைக் கேட்டார்.இத்துடன் விதுர நிதியைக் கொண்ட பிரஜாகர பர்வம் முடிகிறது .

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விதுரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு -சகல வியாக்யான பிரமாணத் திரட்டு–

February 1, 2025

ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித |
பக்திஶ்ச நியதா வீர பாவோ நன்யத்ர கச்சதி ||

ஸ்வாமியே தேவரீர் இடத்திலே எனக்கு மேலான அன்பானது எப்போதும் நிலை நிற்கிறது -வீரரே -உம்மிடத்தில் பக்தியும் நித்தியமாய் இரா நின்றது -என் நினைவு ஸ்ரீ வைகுண்ட நாதன் இடத்திலும் செல்லுகின்றதில்லை –

——-

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-

என்னுடைய வம்சத்தவர்களுக்கு எப்போதும் தாய் தந்தையரும் மாதரும் மக்களும் பெரும் செல்வமும் மற்றுமுள்ள எல்லாமுமே எந்த ஆழ்வாருடைய திருவடி இணையேயோ -நமக்கு முதல்வரும் குலபதியுமான அவருடைய மகிழ மலராலே அலங்கரிக்கப் பட்டதும் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையும் யுடையதுமான அந்தத்திருவடி இணையைத் தலையால் வணங்குகிறேன் –

———-

ஸ து மேதாவினவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ்
வேத உப ப்ராஹ்மண அர்த்தாயா தவா க்ராஹயத ப்ரபு –
பால-4-6-

அந்த வால்மீகி பகவான் மேதாவிகளாய் -வேதங்களில் தேர்ந்தவர்களான அவர்களைக் கண்டு -வேதத்தை விவரிப்பதற்காக அவர்களைச் சேர்த்துக் கொண்டார் –

———

ஸ ஜகாம வனம் வீர ப்ரதிஜ்ஞா மநு பாலயன்
பிதுர் வசன நிர்தேசாத் கைகேய்யா ப்ரிய காரணாத்
–பால -1-24-

வீரரான அந்தப் ராமர் ப்ரதிஜ்ஜையைப் பரிபாலித்துக் கொண்டு பிதாவினுடைய ஆஜ்ஜையாலும் கைகேயிக்குப் பிரியமாய் இருக்கையாலும் வனத்துக்குச் சென்றார் –

———————

அகஸ்த்ய வசநாச ச ஏவ ஜக்ராஹ இந்த்ரம் ஸராஸநம்
கட் கஞ்ச பரம ப்ரீதஸ் தூணீ சாஷய ஸாயகவ்–
5-

அகஸ்தியருடைய நியமனத்தின் பேரில் ராமபிரான் இந்திரனுடைய வில்லையும் கத்தியையும் குறையாத அம்புகளையும் யுடைய இரு தூணிகளையும் ஏற்றுக் கொண்டான்-

————

ததஸ் ஸூக்ரீவ வஸனாத் தத்வா வாலிந மாஹவே
ஸூக்ரீவம் ஏவ தத் ராஜ்யே ராகவ ப்ரத்யபாதயத்
–6-

அதற்குப் பின் ஸூக்ரீவன் சொன்னதற்கு இணங்கி வாலியைச் சண்டையில் கொன்று ஸூக்ரீவனையே அவனுடைய ராஜ்யத்திலே நிலை நிறுத்தினான் –

————-

தர்ஸ யாமாஸ சாத்மானம் ஸமுத்ர சரிராம் பதி
ஸமுத்ர வஸனாத் ச ஏவ களம் சேதும் ஆகாரயத் —
7-

நதிகளின் பதியான கடல் அரசன் ராமபிரான் முன் தோன்றினான் -அக்கடல் அரசன் சொன்னபடி நளனைக் கொண்டு அணை கட்டுவித்தான் ராமன் –

————

குருஷ்வ மாம் அநு சரம் வை தர்ம்யம் நேஹ வித்யதே
க்ருதார்த்தோ அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த ப்ரகல்பதே
-அயோத்யா -31-24—8-

அடியேனைக் கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும் -இதில் தவறு ஒன்றுமே இல்லை -இதனால் நான்முகன் தன்யனாவேன் -உம்முடைய காரியமும் நடை பெறும் –

———-

பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதச் ச தே
–பால–31-25-

நீர் வைதேஹியுடன் கூட மலைத் தாழ்வாரையில் விளையாடுவீர் -அடியேன் நீர் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் தூங்கும் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன் –

—————-

ராஜ்யம் ச தவ ரஷேயம் யஹம் வேலே வ சாகரம்
ப்ரதிஜா நாமி தே வீர மாபூவம் வீர லோக பாக் –
அயோத்யா -23-27-

வீரனே கடலுக்கு கரைப்போலே உள்ள நான் உம்முடைய அரசையும் ரஷிக்கக் கடவேன் -அப்படிச் செய்ய வில்லையாகில் உம் ராஜ்யத்திலே வாழக் கடவேன் அல்லேன் -வீரரான தசரதன் சென்ற உலகிற்குச் செல்லக் கடவேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறேன் –

————-

தம் மத்த மாதங்க விலாஸகாமீ கச்சந்த மவ்யக்ரமநா மஹாத்மா
ஸ லஷ்மணோ ராகவன் இஷ்ட சேஷ்டா ரரஷ தர்மேணே பலேந ச ஏவ
-கிஷ்கிந்தா -1-128-

மதம்கொண்ட யானையினுடையது போன்ற நடையை யுடையவனும் -ராம பிரானைத் தவிர வேறு ஒன்றில் ஈடுபடாத மனத்தை யுடையவனும் -மஹா புருஷனும் -ராம கைங்கர்யத்தை இனிதாகக் கொண்டவனுமான லஷ்மண தனக்கும் முன் செல்லும் ராமபிரானை தர்மத்தாலும் பலத்தாலும் ரக்ஷித்தான் –

——–

கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத
–அயோ -1-1-

பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –

———

பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் –சாகுந்தலம் -7-

ராஜ்யத்தைப் பரித்து-தாங்கி -நின்றதாலே பரதன் எனப்படுகிறான் –

———

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –மங்களமான -3-1-3-

பரம புருஷனை சாஷாத் கரித்தவுடன் ப்ரஹ்ம ஞானியானவன் புண்ய பாபங்களை விட்டு -ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்றவனாய் -மேலான ஸாம்யத்தை அடைகிறான் –

———-

ரூப ஒவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம் –அயோ -3-29-

வடிவழகு -வண்மை -குணங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்ணையும் நெஞ்சையும் அபஹரிக்கும் ராமனை –

———-

மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –
கீதை -10-9-

என்னிடம் நிறைந்த மனத்தை யுடையவர்களாய் -என்னிடமே தங்கள் உயிரை வைத்தவர்களாய் -என்னுடைய குணங்களை ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய் -என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் -சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள் –

—————

த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவ அர்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய சத்வஸ்தோ நிர்யோக ஷேம ஆத்மவாந்
–2-45-

அர்ஜுனா முக்குணங்களில் ஒற்றொன்றை அதிகமாக யுடைய புருஷர்களுக்காக ஏற்பட்டது வேதங்கள் -நீ ஒன்றோடு ஓன்று கலந்த முக்குணங்கள் அற்றவனாய் -ஸத்வ குணத்தையே பெருக்கிக் கொள்வாயாக – ஸூக துக்காதிகளாகிற சாம்சாரிக ஸ்வ பாபங்கள் அற்றவனாய் -எப்போதும் சத்வத்திலேயே நிலை நிற்பவனாய் -இல்லாத புறப் பொருளை அடைவது -இருப்பவற்றை ரக்ஷிப்பது என்னும் இரண்டுமே இல்லாதவனாய் -உட்ப்பொருளான ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபாடு யுடையவனாக ஆவாயாக –

———–

ப்ராஜா பத்யம் க்ருஹஸ்தாநம் ப்ரஹ்மம் ஸந்யாஸிநாம் ஸ்ம்ருதம்
யோகிநாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷி காரிணாம்
ஏகாந்திநா ஸதா ப்ரஹ்ம அத்யாயிநோ யோகிநோ ஹியே
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-37-38-

இல்லற தர்மத்தை அனுஷ்ட்டிப்பாருக்கு பிரஜாபதி லோகமும்
துறவற தர்மத்தை அனுஷ்ட்டிப்பாருக்கு பிரமனின் உலகமும்
தன் ஆத்மாவில் இனிமை காணும் கைவல்ய நிஷ்டனுக்கு அழியாத கைவல்ய ஸ்தாநமும்
எப்போதும் ப்ரஹ்மத்தைத் தியானிக்கும் ஏகாந்திகளான யோகிகளுக்கு நித்ய ஸூரிகள் எப்போதும் அனுபவிக்கும் மேலான பரமபதமாகிற ஸ்தானமும்
அடையத் தக்கதாகிறது-

———-

த்ரயோ குணாஸ் த்ரை குண்யம் ஸத்வ ரஜஸ் தமாம்ஸி
ஸத்வ ரஜஸ் தமஸ் ப்ரசுரா புருஷா த்ரை குண்ய சப்தேக உச்யந்தே
தத் விஷயா வேதா
-ஸ்ரீ கீதா பாஷ்யம் –2-45-

ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற முக்குணங்களும் த்ரை குண்யம் என்றும் சொல்லப் படுகின்றன -அம் முக் குணங்களை அதிகமாக கொண்ட புருஷர்கள் த்ரை குண்யர் எனப்படுகின்றனர் -அவர்களுக்காக இருப்பவை வேதங்கள் –

————–

கோ தர்ம ஸர்வ தர்மாணாம் பவத பரமோ மத –
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்ம அதிக தமோ மத
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச் சேந்நர ஸதா
–ஸஹஸ்ர நாம அத்யாயம்

எல்லா அறங்களினுள்ளும் எந்த அறம் மிகச் சிறந்தது என்று தேவரீர் நினைக்கிறீர்
மனிதன் பக்தியோடு தாமரைக் கண்ணனை ஸ்துதிகளால் எப்போதும் அர்ச்சிப்பதாகிய இதுவே எல்லா அறங்களினுள்ளும் மேலான அறம் என்றும் என் நினைவு –

———-

மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸ –ஸூந்தர –35-11-

உலகத்தின் வரம்புகளைச் செய்பவனும் செய்விப்பவனும் ராமபிரானே –

————

ஸ ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன
ஸீதாம் உவாஸா தியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் –
-அயோத்–31-2-

ரகுகுலத்தை உகப்பிப்பவனும் -மிகுந்த கீர்த்தியையும் யுடையனான அந்த லஷ்மண தமையனின் திருவடிகளை நன்றாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும் ஆஸ்ரித ஸம் ரக்ஷணமான விரதத்தை யுடைய ராகவனையும் பார்த்துச் சொன்னான் –

———–

நதஸ் ஸிரஸி க்ருத்வா து பாதுகே பரதஸ் ததா
ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்நேந ஸமந்வித
–அயோத்–113-1-

பிறகு சத்ருக்நனோடு கூடிய பரதன் தனது தலையிலே ராம பாதுகைகளை வைத்துக் கொண்டு மிக உகந்தவனாய் அப்போதே தேரில் ஏறினான் –

—————–

புஷ்யே ஜாதஸ்து பரதோ மீந லக்நே ப்ரஸந்நத்
ஸார்ப்பே ஜாதவ் ச ஸுவ் மித்ரீ குலீரே அப்யுதிதே ரவவ்
–பால –20-13-

தெளிந்த அறிவையுடைய பரதன் மீன லக்னத்தில் புஷ்ய நக்ஷத்திரத்தில் பிறந்தான்
சுமித்ரையின் புத்ரர்களான லஷ்மண சத்ருக்நர்கள் கடக லக்னத்தில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தனர்-

—————

அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்
சந்த்ர இவ ராஹோர் முகாத் ப்ரமுஸ்ய
தூத்வா ஸரீர மக்ருதம் க்ருதாத்மா
ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவா மீத்யபி சம்பவா மீதி
–சாந்தோக்யம் –8-13-1-

குதிரை மயிர்களை உதிர்த்து போலே பாபத்தை விட்டு ராஹுவின் வாயிலிருந்து நீண்ட சந்திரன் போல் சரீரத்தை விட்டு நித்தியமான பகவல் லோகத்தை க்ருதார்த்தனாய் இருந்து கொண்டு அடையக் கடவேன்-

———

ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய ஸ்வ அனுக்ரஹஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மா கார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –
அயோத்–40-5-

குழந்தாய் நீ வம்சத்தில் வசிப்பதற்காகவே ஸ்ருஷ்டிக்கப்பட்டு இருக்கிறாய் -உன்னுடைய ஸூஹ்ருத்தான ராமனிடம் மிகவும் அன்பு பூண்டவனாய் இருக்கிறாய் -உனது தமையனான ராமன் நடந்து செல்லுகையில் -அந்த நடை அலகிலா ஈடுபட்டு -அவனை ரக்ஷிப்பதில் கவனமில்லாமல் இருந்து விடாதே –

————

ஜக்ராஹ பரதோ ரஸ்மீன் சத்ருக்நச் சத்ரமாததே
லஷ்மணோ வ்யஜனம் தஸ்ய மூர்த்தினி சம்பர்ய வீஜயேத்
-யுத்த -131-28

ராமபிரானுடைய தெற்குதிரையின் கடிவாளங்களை பரதன் பிடித்துக் கொண்டான் -சத்ருக்கனன் ராமனுக்கு குடை பிடித்தான் -அந்த ராமபிரானுடைய திருமுடியில் லஷ்மணன் விசிறியால் வீசினான் –

————-

ராமம் ஏவ அநு சிந்தையன்

ராமனையே நினைத்துக் கொண்டு

————

ஸ்வ தந்த்ர கர்த்தா -அஷ்டாத்யாயீ -1-4-54-

ஒரு செயலில் ஸ்வா தந்தர்யம் உள்ளவனாகக் கருதப்படுபவனே கர்த்தாவாவான்-

————-

கதாந் வஹம் சமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
-ஆரண்ய -16-40-

ரகுகுலக் குழந்தாய் -மஹாத்மாவான பரதனுடனும் வீரனான சத்ருக்நனோடும் உன்னோடும் என்றும் தான் கூடி வாழப் போகிறேன் –

————-

ததஸ்ய த்ரிவிதஸ்யா அபி துக்க ஜாதஸ்ய வை மம
கரப்ப ஜென்ம ஜராத்யேஷு ஸ்தாநேஷு ப்ரபவிஷ்யத
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூக பாவ ஏக லஷணா
பேஷஜம் பகவத் ப்ராப்திர் ஏகாந்தாத் யந்திகீ மதா-
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-58-59-

கரப்பம் பிறப்பு கிழத்தனம் முதலிய அவஸ்தைகளில் உழலும் என்னுடைய ஆத்யாத்மீக ஆதிதைவீக ஆதிபவ்திக ரூபமான தாப த்ரய துக்க ஸமூஹத்துக்கு
தனக்கும் மேலில்லாத ஆனந்தரூபமான ஸூகமாய் இருக்கையை லக்ஷணமாக உடையதும் துக்கமற்றதும் முடிவற்றதுமான பகவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப் படுகிறது –

———–

தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ந கர்தவ்ய பண்டிதைர் நரை
தத் ப்ராப்தி ஹேதுர் ஞானஞ்ச கர்ம சோக்தம் மஹாமுநே
–6-5-60-

மஹா முனிவரே -கீழ்க் கூறிய காரணத்தாலேயே அந்த பகவானை அடைய அறிவாளிகளான மனிதர்களால் முயற்ச்சி செய்யப்பட வேண்டும் -அவனை அடைவதற்கு ஞானமும் கர்மமும் உபாயங்களாகச் சொல்லப் படுகின்றன –

———

மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண —ஸூபால-16-

நாராயணன் தாயாகவும் தந்தையாகவும் தன்னுடன் பிறந்தவனாகவும் தங்கும் இடமாகவும் மோக்ஷ உபாயனாகவும் நண்பனாகவும் மோக்ஷத்தில் அடையப்படு மவனாகவும் இருப்பவன் –

————-

யேந யேந வியுஜ்யந்தே ப்ரஜா ஸ்நிக்தேந பந்துநா
ஸ ஸ பாபா த்ருதே தாஸாம் துஷ்யந்த இதி குஷ்யதாம்
–சாகுந்தலம் -6-23-

குடிகள் எந்த எந்த அன்பு மிக்க உறவினரை இழக்கின்றனரோ -ஸ்திரீக்குப் பதியாய் இருக்கும் அந்தப் உறவைத் தவிர அந்தப் அந்தப் உறவினராக துஷயந்தனே இருப்பானோ என்றும் கோஷிக்கப் படட்டும் –

———–

கதிர் பர்த்தா ப்ரபுஸ் சாஷீ நிவாஸ சரணம் ஸூஹ்ருத்
ப்ரபவ பிரளய ஸ்தாநம் நிதானம் பீஜம் அவ்யயம்
–கீதை -9-18-

அசையும் இடமும் -தாங்கி நிற்பவனும் -நியமிப்பவனும் -அனைத்தையும் நேரே காண்பவனும் -இருப்பிடமும் -உபாயமும் நண்பனும் -ஒவ்வொருவருக்கும் உத்பத்திக்கும் -அழிவுக்கும் ஸ்தானமாய் இருப்பவனும் -உத்பத்திக்கும் பிரளயத்துக்கும் விஷயமாகும் வஸ்துக்களும் அழியாத காரணமும் நானே –

————-

மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ
–தைத்ரியம் சீஷா –11-2-

அகில ஜன மாதாவான பிராட்டியையும் -அழிவற்ற தந்தையான அச்சுதனையும் -அறியாதன அறிவித்த ஆச்சார்யனையும் விருந்தாகும் பெரும் தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –

——–

உபாயே க்ருஹ ரஷித்ரோச் சப்தஸ் சரணம் இத்யயம்
வர்த்ததே ஸாம் ப்ரதம் சைஷ உபாயார்த்த ஏக வாசக
–அஹிர்புத்ந்ய சம்ஹிதை -37-29-

சரணம் என்னும் இவ்வார்த்தை உபாயம் வீடு காப்பாற்றுபவன் என்னும் அர்த்தங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது -இப்போது இது உபாயம் என்னும் அர்த்தத்தையே சொல்லுவதாய் இருக்கிறது –

———–

அதிதிர் யத்ர பக்நாஸோ க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே
ஸ தஸ்மை துஷ்க்ருதம் தத்வா புண்யமாதாய கச்சதி
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-9-15-3-11-66-

யாதொரு வீட்டின் நின்றும் விருந்தாளி விருப்பம் நிறைவேறப் பெறாதவனாய்த் திரும்புகின்றானோ அந்தப் விருந்தாளி வீட்டுக்காரனுக்குத் தன் பாபத்தைக் கொடுத்து அவனுடைய புண்ணியத்தை எடுத்துக் கொண்டு செல்கிறான் –

—————

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரவ்
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா ப்ரகாஸந்தே மஹாத்மந
–ஸ்வே –6-23-

எவனுக்குப் பரமபுருஷனிடம் மேலான பக்தி உள்ளதோ -பரமனிடன் போல் ஆச்சார்யனிடமும் மேலான பக்தி உளதோ அப்படிப்பட்ட மஹாத்மாவுக்குச் சொல்லப்பட்டால் தான் இந்த அர்த்தங்கள் புலப்படும் –

————-

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே —
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-

அசேதனத்தைப் போல் அல்லாமல் விகாரம் அற்றவனாகவும் -ஸம்ஸாரி சேதனனைப் போல் அல்லாமல் அசத்தி இல்லாதவனாகவும் -முக்தாத்மாவைப் போல் அல்லாமல் நித்ய சுத்தனாகவும் -நித்ய ஸூரிகளை போல் அல்லாமல் தனக்கும் மேல் ஒருவன் அற்றவனாகவும்-எப்போதும் ஒருபப்பட்டு இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாவும் -ஸர்வ வ்யாபியாகவும் -எல்லாவற்றையும் ஜெயிப்பவனுமாயுள்ள பகவானுக்கு நமஸ்காரங்கள் –

———

ப்ரதாந க்ஷேத்ரஜ்ஞபதிர் குணேச ஸம்ஸார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது —ஸ்வே -6-16-

ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் ஸ்வாமியாய் -குணங்கள் நிறைந்தவனாய் -ஸம்ஸாரம் விடுபதற்கும் நிலை நிற்பதற்கும் கட்டுவதற்கும் காரணமாய் இருப்பவன் பரமாத்மாவே –

——–

இத் யுக்த்வாத நிஜம் கர்ம ஸ சகார குடும்பிநீ —ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-15-

துறு துறுக்கைத்தனம் யுள்ளவனே உன்னால் முடியுமானால் இப்போது போ என்று குடும்பினியான அவள் வீட்டு வேலைகளைச் செய்யலுற்றாள் –

—————–

ஸ கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம் பத்யதே
ந ச புனராவர்த்ததே ந ச புனராவர்த்ததே –
சாந்தோக்யம் -1-15-1-

அந்தப் முமுஷுவானவன் ஆயுள் முடியும் வரையில் இப்படி வாழ்ந்து ஆயுள் முடிந்த பின் ப்ரஹ்மத்தின் உழகைப் அடைகிறான் -இங்கு திரும்பி வருவதே இல்லை –

———-

ந வா அரே ஸர்வஸ்ய காமாய ஸர்வம் பிரியம் பவதி
ஆத்மநஸ்து காமாய ஸர்வம் பிரியம் பவதி
–ப்ருஹதா -6-5-6-

எல்லாப் பொருள்களில் விருப்பத்திற்காக எல்லாமே இனியவை ஆகின்றன அல்ல -ஆத்மாவின் விருப்பதற்க்கே எல்லாமே இனியவை யாகின்றன –

———

ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி கோ ஹ்யேவாந்யாத் க ப்ராண்யாத்
யதேஷ ஆகாஸோ ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ ஹ்யேவ நந்தயாதி
–தைத்-ஆனந்த -7-

ரஸ-ஆனந்த ஸ்வரூபன் அன்றோ அந்தப் பரம புருஷன் -ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்த இந்த ஜீவன் ஆனந்தத்தை உடையவனாகிறான் -பிரகாசிப்பவனும் -ஆனந்த ஸ்வரூபனுமான இப்பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள ஸூகத்தையோ மோக்ஷ ஸூகத்தையோ அடைய முடியும் -ஆகையால் இவனே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான் –

——-

வைகுண்ட சரணாம்போஜ ஸ்மரண அம்ருத ஸேவிக–

ஸ்ரீ வைகுந்தனின் திருவடித் தாமரை இணையின் நினைவாகிற அம்ருதத்தைப் பருகுமவர்கள் –

———

கச்சதாம் தூரமத்வாநம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம்
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –

நெடுவழி நடப்பவர்களும் தாஹத்தால் மயங்கிய நெஞ்சை யுடையவர்களுமான அவர்களுக்குத் தாமரைக் கண்ணனின் திருநாம சங்கீர்த்தனம் கட்டுச் சோறாகும் –

———

வாஸூ தேவோ அஸி பூர்ண

ஞாநாதி குணங்கள் ஆறும் நிறைந்த பர வாஸூ தேவனாய் இருக்கிறாய் –

———-

க்ருஷிர் பூ வாசக சப்தோ ணச்ச நிர்வ்ருதி வாசக
விஷ்ணுஸ் தத் பாவ யோகாச்ச க்ருஷ்ண இதயபீதியதே

கிருஷி சப்தம் கிருஷி விஷயமான பூமியைச் சொல்லும் சொல் -ஆனந்தத்துக்கு விளைநிலமாய் இருக்கும் அத் தன்மையை உடையவனாகையாலே விஷ்ணுவானவர் கிருஷ்ணன் என்றும் சொல்லப் படுகிறார் –

————

பக்தி க்ராஹ்யோ ஹி கேசவ

பக்திக்குக் கட்டுப்பட்டவன் கேசவன்

——–

அபங்குர பக்திபவ்ய

அசையாத பக்திக்கே வசப்படுமவன்

——-

பக்த்யா மாம் அபி ஜாநாதி யாவாந் யஸ்ஸாஸ்மி தத்த்வத
ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே தத் அநந்தரம்
–18-55-

ஸ்வரூப ஸ்வ பாவங்களில் நான் எவனோ -குண விபூதிகளில் நான் எவ்வளவு பட்டவனோ -அப்படிப்பட்ட என்னை பக்தியினால் உள்ளபடி அறிகிறான் -என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பின் பக்தியினாலேயே என்னுள் நுழைகிறான் –

————-

பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-
11-54-

அர்ஜுனா எதிரிகளை அழிப்பவனே -ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம்மாதிரியான நான் உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் நுழைவதற்கும் தக்கவன் –

—————

புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா
யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்–
8-2-

பார்த்தனே யாவன் ஒருவனுக்குள் ஸகல பூதங்களும் உள்ளனவோ -எவனால் இது எல்லாம் வியாபிக்கப் பட்டதோ அந்தப் பரம புருஷன் வேற்றிடம் செல்லாத பக்தியினாலேயே அடையத் தக்கவன்-

———–

நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ||
–கட வல்லி –1-2-23-

இந்தப்‌ பரமாத்மாவானவர்‌ -பக்தி யற்ற ஸ்ரவணம் மனனம் த்யானத்தாலும் அடையற் பாலரன்‌று; இந்தப்‌ பரமானத்மாவானவர்‌ எவனை விரும்பி வரிக் கின்றாரோ, அவனாலேயே அடையப்படுகின்றார்‌; அவனுக்கு இந்தப்‌ பரமாத்மாவானவர்‌ தமது ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டிகின்றார்‌-

———-

அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ –பரத்வாஜ ஸம்ஹிதை

வெகு சீக்கிரமாக பகவானை உகப்பிக்கும் அஞ்சலி மேலான அடையாளமாய் இருக்கிறது –

————

க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்த்ரேண அஞ்சலிம் பக்த்வா லஷ்மணஸ்ய ப்ரஸாத நாத் -கிஷ்கிந்தா
-32-17-

ராமனிடம் அபராதம் செய்த உனக்கு கைகூப்பி லஷ்மணனை உகப்பித்தைத் தவிர வேறு ப்ராயச்சித்தத்தை நான் காண்கிறேன் அல்லேன் –

———-

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத –கிஷ்கிந்தா -4-12-

நான் இவர் நினைவால் இவருக்குத் தம்பி -உண்மையில் இவருடைய குணங்களால் அடிமைப்பட்டவன் –

————-

பஞ்ச சக்தி மயே திவ்ய ஸூத்த ஸத்வே ஸூக ஆகரே த்ரிபாத் விபூதவ் பகவான் ஈஸ்வர்யா பரமேஸ்வர நித்ய முக்த ஏக போக்யோ அசவ் மோததே பகவான் ஹரி –

பஞ்ச சக்திமயமாய் -அப்ராக்ருதமாய் -ஸூத்த ஸத்வ குண மயமாய் -ஸூகத்திற்கு இருப்பிடமான பரமபதத்தில் ஈஸ்வரான பிராட்டியாரோடே கூட பரம புருஷனாய் ஞாநாதி பூர்ணனான இந்த ஹரி நித்ய முக்தர்களுக்கு அநு பாவ்யனாய் இருக்கிறான் –

———–

அசித் அவிசேஷிதான் பிரளய ஸீமநி ஸம்ஸாத கரண களேபரைர் கடயிதும் தயமாந மநா
வரத நிஜேச் சயைவ பரவா நகரோ ப்ரக்ருதிம் மஹத் அபிமான பூத கரணா வலி கோரகிணீம்
–ரெங்கராஜ ஸ்தவம் -2-41-

வரம் தரும் பெருமானே -பிரளய காலத்தில் அசேதனத்தைக் காட்டிலும் வாசி யற்றவராய் உழலுகின்ற ஜீவராசிகளை இந்த்ரியங்களோடும் சரீரங்களோடும் சேர்க்கத் திரு உள்ளம் இரங்கியவனாய் -தனது சங்கல்ப வசப்பட்டவனாய் -மூலப்பிரக்ருதியை மஹான் அஹங்காரம் பஞ்சபூதங்கள் இந்திரியங்கள் ஆகிய இவற்றில் வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி பண்ணினாய் –

———–

விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வரஸ்ய நிவேதிதம்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
–விஷ்ணு தத்வம் -6-

ப்ராஹ்மணரே கை கால் முதலியவைகளுடன் கூடியதும் விசித்திரமான தேஹமாகிற இச்செல்வம் சர்வேஸ்வரனுக்கு சமர்ப்பித்தற்காக ஆதிகாலத்திலே செய்யப்பட்டு இருக்கிறது –

—————

ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–
-ரெங்க ராஜ ஸ்தவம்-2-1-

கருணைக் கடலான எம்பெருமான் அஞ்ஞானமாகிற இருளை நீக்கிக் கொள்ளவும் -நன்மை தீமைகளை ஆராய்வதற்கும் -இருட்டைப் போக்கடிப்பதற்கும் -உள்ளவற்றையும் இல்லாதவற்றையும் ஆராய்ந்து அறிவதற்கும் சாதனமான விலக்கைப் போன்ற வேதத்தைக் கொடுத்தான் -பாக்கியவான்கள் அந்தத் திருவிளக்கைக் கொண்டு அந்த சர்வேஸ்வரனைக் கண்டு அனுபவிக்கிறார்கள் -சில சபலர்கள் அந்தப் விளக்கிலேயே வீட்டில் பூச்சியைப் போலே விழுந்து மடிகிறார்கள் –

———

உத்பத்யதே யதா லோகே துளஸீ கந்த ஸம்யுதா

எப்படி துளஸீ உலகில் வாசனையுடன் கூடவே உண்டாகிறதோ

—————

நாஹம் புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சையா வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன

நான் புருஷகாரத்தாலேயே அல்லது வேறொரு காரணத்தாலோ அல்லாமல் எனது விருப்பத்தாலேயே ஒரு சேதனனை ஒரு போது கடாஷிக்கிறேன் –

———

பால ஆஷோட சாப்தாத்து மகபாவம் கமிஷ்யசி

குழந்தையான நம்மாழவார் பதினாறு வயது வரையில் ஊமையாகவே இருப்பார்-

———–

அவ்யுச்சிந்நாஸ் ததஸ் த்வேதே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யந்த ஸம்யமா

உலகை ஆக்கல் அளித்தால் அழித்தல் என்னும் இந்த நியமங்கள் இடைவிடாமல் ஏற்படுவன-

————

1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும்
தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர்
இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-

பக்திர் அஷ்ட விதா ஹ்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே
ஸ விப்ரேந்த்ரோ முனி ஸ்ரீமான் ஸ யதி ஸ ச பண்டித
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்
–காருடம் –219-6-10-

என் பக்தர்களிடம் வாத்சல்யம் -என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல் -தானே என்னைப் பூஜித்தல் -எனது விஷயத்தில் ஆடம்பரம் அற்று இருத்தல் –எனது கதைகளைக் கேட்பதில் அன்பு -எனது கதைகளைக் கேட்க்கும் போது குரல் தழ தழத்தும் கண்ணீர் மல்கி உடம்பு மயிர்க்கூச்சு எறிந்தும் இருக்கை -எப்போதும் என்னையே நினைத்து இருக்கை -என்னிடம் வேறு ப்ரயோஜனத்தைக் கேளாது இருக்கை

இப்படி எட்டுவிதமான பக்தி யானது எந்த மிலேச்சனிடம் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஸ்ரேஷ்டன் -அவனே முனிவன் -அவனே தனவான் -அவனே பண்டிதன் -அவனுக்கு ஞானத்தை உபதேசிக்கலாம் – அவனிடமிருந்து ஞானம் உபதேசம் பெறலாம் -அவன் என்னைப்போலவே பூஜிக்கத் தக்கவன் –

————-

உதாரஸ் ஸர்வ ஏவைத ஞாநீத் வாத்மைவ மே மதம் –7-18-

இவர்கள் எல்லோரும் உதாரமானவர்களே -ஞானியோ எனக்கே ஆத்மா –தாரகன் -என்று எனது ஸித்தாந்தம் –

————–

ததோ அகில ஜகத் பத்ம போதாயாச்யுத பாநுநா
தேவகீ பூர்வ ஸந்த்யாம் ஆவிர்பூதம் மஹாத்மநா-
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1-

மஹாத்மாவாகிற அச்யுத ஸூர்யன் அனைத்தும் உலகமாகிற தாமரை மலருவதற்காக தேவகியாகிற கீழைத்திக்கில் தோன்றினான் –

————–

யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்கு சக்ர
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய
-பரங்குச அஷ்டகம்

இருளைப் போக்கும் ஸூரியனுடைய ஆயிரம் கிரணங்களைப் போலே எவருடைய ஆயிரம் திருவாய் மொழிப் பாசுரங்களும் மனிதர்களின் அகவிருளைப் போக்குகின்றனவோ
ஸூர்ய மண்டலத்தைப் போலே நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடியவனாய் இவரிடத்தில் வஸிக்கிறானோ
வேதத்தில் காணும் ஸூர்ய மண்டலத்தை வணங்குவது போல் எவருடைய பிறப்பிடமான குருகூரை -குருகூர் சடகோபன் முதலிய பாசுரங்களில் காதில் கேட்ட மாத்திரத்தில் அந்தணர்கள் வணங்குகின்றனரோ அப்படிப்பட்ட வகுள பரணரான நம்மாழ்வாராகிய ஸூர்யனுக்கு நமஸ்காரம் –

—————

தேவம் இவா ஆச்சார்யம் உபாஸீத –ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரம்

பரமாத்மாவைப் போலவே ஆச்சார்யனையும் உபாஸிக்கக் கடவன் –

——–

குரு ரேவ பர ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி
குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பரம் தனம்
குரு ரேவ பர காமோ குரு ரேவ பரா யணம்
யஸ்மாத் தத் உபதேஷ்ட அசவ் தஸ்மாத் குரு தரோ குரு
–சாத்வித ஸம்ஹிதை

குருவே மேலான ப்ரஹ்மம் -குருவே மேலான அறம் -குருவே மேலான கல்வி -குருவே மேலான பொருள் -குருவே மேலான இன்பம் -குருவே மேலான ப்ராப்யம் -அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அவனிலும் உயர்ந்தவன் –

———

ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாஷாத் சர ரூபி ந சம்சய

ஆச்சார்யனே நேரில் நடமாடும் பரம புருஷன் -இதில் ஐயமில்லை –

———

ஏஷ வை பகவான் ஸாஷாத் ப்ரதாந புருஷேஸ்வர —

ப்ரக்ருதி புருஷர்களுக்கு ஈசனான ஸாஷாத் பரமபுருஷன் இவ்வாச்சார்யனே –

———–

யோகீஸ்வரைர் விம்ருக் யாங்க்ரிம் லோகோயம் மநுதே நரம்

யோகியர் தலைவராலே தேடப்படும் பரம்பொருளை இவ்வாச்சார்யனை இவ்வுலகம் மனிதனாக நினைக்கிறது –

———-

ஸாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும்
மக்ந அநுத் தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா ஸம்ஸார பய பீருணா
-ஜ்யாக்ய ஸம்ஹிதை -சாண்டில்ய வசனம்

ஸாஷாத் பரமபுருஷனே தனது கருணையினாலேயே ஆச்சார்யனாகிற மனித உருவை எடுத்துக் கொண்டு –சாஸ்த்ரங்கள் ஆகிற கைகளால் ஸம்ஸாரக்கடலில் முழுகி இருக்கும் உலகங்களைக் கைதூக்கி விடுகிறான் -ஆகையால் சம்சாரக்கடலைக் கண்டு பயந்தவன் குருவிடம் பக்தி செய்ய வேண்டும் –

———

த்ரேதாயாம் ரகு நந்தன -த்வாபரே நந்த ஸூநுச்ச கலவ் தேவ பராங்குச –

ஈஸ்வரன் தானே க்ருத யுகத்திலே ப்ராஹ்மண உத்தமரான அத்ரி பகவானுக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்-த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்வாபர யுகத்தில் கோ ரக்ஷணாதி தர்மத்தை யுடைய சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்தகோபருக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
கலியுகத்தில் நம்மாழ்வாராய் சூத்ர வர்ணத்திலே தேவனே தோன்றுகிறான் –

க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகைஸ் கலு ஷீக்ருதே -விஷ்ணோர் அம்ச ஸம் பூதோ வேத வேதார்த்த தத்வ வித் -ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவீட்யா நிஜபாஷயா -ஜனிஷ்யதி ஸதாம் ஸ்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா –

கொடிய கலியுகம் வந்தடைந்து நாஸ்திகர்களால் உலகம் கலங்கி இருக்கையில் சர்வேஸ்வரனுடைய ஓர் அம்ச அவதாரமாய் -வேதங்களுடைய உண்மைப் பொருளை நன்கு உணர்ந்த தத்வ வித அக்ரேஸராய் லோக ஹிதார்த்தமாக திராவிட பாஷையாலே வேதாந்த அர்த்தங்களைப் பிரபந்த்தீகரிக்கைக்கு நல்லோர் தலைவரான ஸ்ரீ சடகோபர் என்கிற திருநாமத்தை யுடையராய் ஒருவர் திருவவதரிக்கப் போகிறார்

———-

கலவ் புந பாபரதா அபி பூதே ஸ உத்பவத் ஆஸ்ரித வத்சலத்வாத் -பக்தாத்மநா விஸ்வ ஜநாந் ஸூ கோப்தும் விச்வாதிகோ விஸ்வமயோ ஹி விஷ்ணு -திருக்குருகூர் மஹாத்ம்யம்

பாவிகள் விஞ்சி நிற்கும் கலியுகத்திலும் ஸர்வ ஜன ஸம் ரக்ஷணார்த்தமாக சர்வாதிகனான சர்வேஸ்வரன் அடியார்களிடம் வாத்சல்யத்தாலே பக்த ரூபேண வந்து அவதரிப்பான்

கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசிந் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிஸ-தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ -யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர -தேஷாம் நாராயணே பக்திர்ப் பூயஸீ நிருபத்ரவா -ஸ்ரீ மத் பாகவதம் -11-38-39-40-

நாராயணனையே பரம ப்ராப்யமாகக் கொண்ட ஞானாதிகரான சத்துக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களாலே பிரகாசிப்பித்து-தாமிரபரணி க்ருதமாலா பாலாறு பெரும் புகழ் பெற்ற காவேரி மேற்கு நோக்கிப் பாயும் பிரதீசி -மஹா நதி -போன்ற நதீ விசேஷங்களிலே -ஜல பானம் பண்ணுபவர்களுக்கு நாராயணனிடத்திலே தடையற்ற பக்தி அதிசயிக்கும்படியைச் சொல்லுகிறது – பிரதமத்திலே தாம்ர பர்ணீ நதீ யத்ர-என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தைச் சொல்லுகையாலே இவரே ப்ரபந்ந ஜன கூடஸ்தர் என்றதாயிற்று –

த்வதீயே பரார்த்தேஸ்மிந் திநே த்வாத்யேத சத்தமே –மந் வந்த்ரே வர்த்தமாநே த்விஷ்டா விம்ஸே சதுர் யுகே -கலே ராதவ்மாஸி ராதே காவ்ய வாரே குளீரகே -பவர்ணமாஸ்யாம் விசாகாக்யே தாரே மஹதி ஸோபநே -ப்ரஜாபதேர் ஜென்ம யோகீ சடகோப இதி ஸ்ம்ருத-மத் பக்தோஹம் பவிஷ்யாமி நேதும் த்ராவிடதாம் ஸ்ருதீ –திருக்குருகூர் மஹாத்ம்யம்

பிரமனின் இந்த இரண்டாவது பரார்த்தத்தில் சிறந்ததான முதல் தினத்தில் நடக்கும் வைவஸ்வத மன்மந்த்ரத்தில் இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் காளியின் தொடக்கத்தில் வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை கடக லக்னத்தில் பவுர்ணமி திதியில் மிக மங்களகரமான விசாக நக்ஷத்திரத்தில் காஸ்யப ப்ரஜாபதியான மறுபிறப்பான காரிக்குப் பிள்ளையான வேதம் தமிழ் செய்வதற்காக சடகோபர் என்னும் பக்தனாக நானே ஆவேன் –

———

தாம்ர பர்ணி யுத்தரே தடே தாந்த்ர க்ஷேத்ரே ஜெனிஷ்யதி

தாமிரபரணியின் வடகரையில் குற்றமற்ற ஷேத்ரத்தில் பிறப்பார்

——-

நிர் நித்ர தீந்த்ரிணீ ஸ த்வம் கத்வாத்ர புஜகாதிப -ஸர்வ அபிலாஷாந்த் ஸர்வேஷாம் நித்யமேவ ப்ரதாஸ்யதி -சடகோப முனீந்திர த்வம் ஸம் ப்ராப்ய த்ரிதஸேஸ்வர –தாம்ரபர்ணீ தடம் ப்ராப்ய ரஷிஷ்யத் யகிலான் ஜனான் -அத்ர வேதாஸ் சமஸ்தாச்ச த்ராவிடத்வம் உபாகத–வேதயிஷ்யந்தி தேவேசம் ஸகலா அபி மாதவம்

தூக்கமில்லாத திருவனந்த ஆழ்வானே -நீ சென்று திருக்குருகூரில் திருப்புளி ஆழ்வாராக எல்லாமே விருப்பங்களையும் எல்லோருக்கும் எப்போதும் அளிப்பாயாக – தேவதேவனான பரமம் சடகோபன் முனிவராகி எல்லாமே மனிதரையும் காப்பாற்றுவார் -இங்கு எல்லாமே வேதங்களும் தமிழ் பாஷையாகி அங்கங்கள் உப ப்ரஹ்மணங்களோடே கூடிய தேவதேவனான மாதவனைத் தெளிவாகத் தெரிவிக்கும் –

———–

அஸ்தி பாண்டிய மஹா தேசே குருகா நகரீ ஸூபா -தாமிரபர்ணீ நதீ தீரே சாஷாத் த்ருஷ்டோ ஹ்யதோஷஜ-

பெருமை பெற்ற பாண்டிய தேசத்திலே தாமிரபரணி நதிக்கரையில் மங்களகரமான திருக் குருகூர் உள்ளது -அங்கே பரம புருஷன் நேரே காணப் பட்டான் அன்றோ –

——–

ஸ்ரீ தரா யாதி குரவே

ஆதி குருவான ஸ்ரீதரனுக்கு

———

ஸ ச ஆச்சார்ய வம்ஸோ ஜேய ஆச்சார்யாணா மஸாவஸா விதி ஆபகவத்த -ரஹஸ்யம் நாய ப்ராஹ்மணம்

ஸ்ரீ லஷ்மீ நாதனிடம் தொடங்கி இவர் இவர் என்றும் ஒருவர் விடாமல் ஆச்சார்யர்களுடைய அந்த குரு பரம்பரை அறியத் தக்கது –

———-

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய து துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபந அர்த்தாயா ஸம்பவாமி யுகே யுகே –
-4-8-

சாதுக்களை ரக்ஷிக்கவும் தீயவர்களை அழிப்பதற்கும் வைதிக தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் யுகம் தோறும் பிறக்கிறேன் –

———–

விஷ்ணோர் அர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதி யஸ்
யோ குரவ் மனுஷம் பாவம் உபவ் நரக பாதிநவ் –
-ப்ரஹ்மாண்ட புராணம்

விஷ்ணுவின் அர்ச்சாவதாரங்களில் உலகம் என்னும் நினைவும் ஆச்சார்யனிடத்தில் மனிதன் என்னும் நினைவும் கொலுமவர்கள் இருவரும் நரகத்தில் விழுவார்கள் –

———–

அநந்த பாரம் பஹு வேதி தவ்யம் அல்பச்ச காலோ பஹுவச்ச விக்நா
யத் சார பூதம் தத் உபாஸி தவ்யம் ஹம்ஸோ யதா ஷீர மிவாம்பு மிஸ்ரம்
-உத்தர கீதை –3-1-

கரை காண ஒண்ணாத பல ஸாஸ்த்ரங்கள் அறியத்தக்கவை -காலமோ மிகக்குறைவு -இடையூறுகளோ பல -பாலுடன் கலந்த நீரில் பாலைப்பிரிக்கும் ஹம்சம் போல் சாஸ்திரங்களிலும் சாரமானவற்றை சேதனன் எடுத்துக் கொள்ள வேண்டியது –

———-

அஸாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரதாரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே ரத்நாகர இவ அம்ருதம்

ஸாஸ்திரங்களிலும் சாரமற்றதாயும் -குறைந்த சாரமுள்ளதையும் -அதைக்குறிக்கும் அதிக சாரமுள்ளதையும் விடவேண்டியது -எல்லாவற்றையும் காட்டிலும் மிக அதிக சாரமுள்ளதையே கடலில் அமுதத்தைப் போலே ஆதரிக்க வேண்டியது –

———

த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேந் முதா
உபாய உபேய பாவேந் தமேவ சரணம் வ்ரஜேத்
–ஸாத்விக சம்ஹிதை

ஆச்சர்யனை சிஷ்யன் த்யானிக்கத் கடவன் -ஜபிக்கக் கடவன் -பக்தியோடு வணங்கக் கடவன் -பஜனம் செய்யக் கடவன் -உகப்புடன் அர்ச்சிக்கக் கடவன் -அவனையே உபாயமாகவும் ப்ராப்யமாகவும் நினைத்து சரணம் அடையக் கடவன் –

——-

ஸித்திர்ப்பவதி வா நேதி ஸம்சய அச்யுதஸேநாவிம் -ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்மநாம் –சாண்டில்ய ஸ்ம்ருதி

அச்சுதனைப் பற்றினாருக்கு மோக்ஷ சித்தி உண்டோ இல்லையோ என்பதைக் ஸந்தேஹம் உண்டு -அவனுடைய பக்தர்களின் கைங்கர்யங்களில் ஈடுபட்டவர்களுக்கு மோக்ஷ ஸித்தியில் ஐயம் இல்லை –

———-

குரு மூர்த்தயா ஸ்திதஸ் சாஷாத் பகவான் புருஷோத்தம-உத்தாரயதி ஸம்சாராத் தத் உபாய ப்லவேந து

ஆச்சார்யன் உருவில் இருக்கும் பகவானேயான புருஷோத்தமன் உபாயமாய் இருக்கும் தானாகிற இடத்திலே ஸம்ஸாரிகளை ஸம்ஸாரத்திலிருந்து தாண்டுவிக்கிறான் –

———-

பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-

இந்தப் பரமாத்மாவுக்கு பல தரப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் -ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்று அறியப் படுகிறது –

——–

மநஸ் பூர்வோ வாக் உத்தர –தைத்-ஸம் -7-5-3-

முதலில் மனஸ்ஸும் அடுத்தபடியாக வாக் இந்த்ரியமும் ப்ரவர்த்திக்கின்றன –

———-

ப்ரத்யஷே குரவே ஸ்துத்யா பரோஷே மித்ர பாந்தவா
கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச ந கதாசந புத்ரகா

ஆச்சார்யர்கள் நேரே ஸ்துதிக்கத் தக்கவர்கள் -நண்பர்களும் உறவினரும் கண் காணாமல் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -அவர்கள் செய்ய வேண்டிய கார்யங்கள் முடிந்த பின்பு நமக்குக் கீழ் இருப்பவர்களும் வேலைக்காரர்களும் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -நம் பிள்ளைகள் ஓரு போதும் நம்மால் ஸ்துதிக்கத் தக்கவர் அல்லர் –

———-

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம்
||-57

ஸ்ரீ ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்ரீ ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

——–

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

———–

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||–2-

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————-

அவஸேநாபி யந் நாம்நி கீர்த்திதே ஸர்வ பாதகை
புமாந் விமுச்யதே ஸத்ய ஸிம்ஹ த்ரஸ்தைர் வ்ருகைர் இவ-
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-19-

தன் வசத்தில் இல்லாத போதும் எந்த பகவானுடைய திருநாமங்களைக் கீர்த்தித்த அளவிலே சிம்ஹத்தைக் கொண்டு பயந்த ஓநாய் களிடமிருந்து விடுபடுவது போல் மனிதன் உடனே விடுபடுகிறானோ –

——

ஸ த்வாஸக்த மதி க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரதை
ந விவேதாத்மநோ காத்ரம் தத் ஸ்ம்ருத்ய ஆஹ்லாத ஸூஸ்திதா —
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-39-

மஹா நாகங்களினால் கடிக்கப்படு பவனும் கிருஷ்ணனிடத்தில் பக்தியைச் செலுத்துமவனுமான அந்தப் ப்ரஹ்லாதன் பகவானை நினைக்கையால் உண்டான ஆனந்தினால் நிலை நின்றவனாய் தன்னுடைய உடம்பை அறியவில்லை –

———

அஹம் அஸ்ய அபராதாநாம் அவயோ அகிஞ்சநோ அகதி
த்வமே உபாய பூதோ மே பவதி பரார்த்தநா மதி
சரணாகதிர் இத் யுக்தா ஸ தேவே அஸ்மின் ப்ரயுஜ்யதாம்
-அஹிர் புத்ன்ய ஸம்ஹிதை -37-30-

நான் குற்றங்களுக்கு இருப்பிடமாய் இருக்கின்றேன் -ஓர் உபாயமும் அற்றவனாய் இருக்கின்றேன் -உன்னை ஒழிய வேறு கதி இல்லாதவனாய் இருக்கின்றேன் -நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக -என்று பிரார்த்திக்கும் புத்தியே சரணாகதி எனப்படுகிறது -அது இந்தப்பாகவான் விஷயத்தில் செய்யப்படட்டும் –

———-

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–
22-

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை; என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான், உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

———-

அநந்ய தேவத்வம் இயம் ஷமா ச பூமவ் ச சய்யா நியமச்ச தர்மே
பதி வ்ரதாத்வம் விபலம் மமேதம் க்ருதம் க்ருத்னேஷ்விவ மானுஷாணாம்

ராமபிரானைத் தவிர வேறு தெய்வம் அறியாது இருக்கை -இந்தப்பொறுமை -வெறும்தரையிலே படுக்கை -அறம் வழுவாது இருக்கை -பதிவ்ரதைத் தன்மை ஆகிய என்னுடைய குணங்கள் எல்லாமே செய்நன்றி கொன்ற மனிதர்க்குச் செய்தது போல் வீணாயின –

————-

ப்ராப்த ராஜஸ்ய ராமஸ்ய வால்மீகீர் பகவான் ரிஷி
சகார சரிரம் க்ருத்ஸ்னம் விசித்திர பதம் ஆத்மவான்
–பால -1-4-

ஞாநாதி குணங்கள் நிறைந்தவரும் நெஞ்சை அடக்கியவருமான வால்மீகி மகரிஷி ராஜ்யத்தை அடைந்த ராமபிரானுடைய சரித்திரத்தை முழுவதையும் விசித்ர பதங்களுடைய காவியமாக இயற்றினார்

————-

ஏதத் ஸாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத-தைத் ப்ருகு –10-6-

முக்தாத்மா பரமாத்மாவை அடைந்து இந்த சாமத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறான் -பரமாத்மாவுக்கு அன்னமாய் இருப்பவன் -அன்னமாய் இருப்பவன்-அன்னமாய் இருப்பவன்-நான் பரமாத்மாவின் ப்ரீதி யாகிற அன்னைத்தைப் புஜிப்பவன் -அன்னைத்தைப் புஜிப்பவன் -அன்னைத்தைப் புஜிப்பவன் –

——–

பாணவ் க்ருஹீத்வா விதுரம் ஸாத்யகிஞ்ச மஹா யஸா
ஜ்யோதீம்ஷ் யாதித்ய வத் ராஜன் குருந் ப்ரச்சாதயன் ஸ்ரீயா
–உத் –94-45-

பெரும் கீர்த்தி யுள்ள கண்ணன் விதுரனையும் சாத்யகியையும் கையிலே பிடித்துக் கொண்டு ஸூர்யன் மற்ற ஜ்யோதிகளை மழுங்கச் செய்வது போல் கௌரவர்களைத் தன் தேஜஸ்ஸாலே மழுங்கச் செய்து கொண்டு வந்தார் –

———

தருணவ் ரூப ஸம் பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ்
புண்டரீக விசாலாக்ஷவ் சீர க்ருஷ்ணாஜிநாம் பரவ்
–ஆரண்ய-19-14-

ராம லஷ்மணர்கள் வாலிபரானவர்கள் -அழகு நிறைந்தவர்கள் -ஸுகுமார்யத்தை யுடையவர்கள் -அதிகமான பலமுள்ளவர்கள் -தாமரை போன்ற அகன்று கண்களை யுடையவர்கள் -மரவுரியையும் மான் தோலையும் உடுத்தவர்கள் –

————

தேஷாம் ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஞாநிநோ அத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய –
-7-17-

என்னுடன் எப்போதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டவனும் -என்னிடம் மட்டுமே அன்பு செய்பவனுமான ஞாநீ அந்த நால்வருள் மிகச்சிறந்தவன் -நான் ஞானிக்கு மிகவும் பிரியன் அன்றோ -அப்படியே அவனும் எனக்கும் பிரியமானவன் –

———-

மம மத் பக்த பக்தேஷு ப்ரீதிர் அப் யதிகா பவேத்
தஸ்மான் மத் பக்த பக்தாச்ச பூஜாநீய விசேஷத-
-ஆச்வ பர்வம் –116-23-

எனது பக்தனிடம் பக்தி உள்ளவர்கள் இடத்தில் எனக்கு அதிகமான அன்பு உண்டு -ஆகையால் எனது பக்த்தனிடம் பக்தியுள்ள அவர்களும் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவர்களே –

——–

ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந சாஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே –
-ஜிதந்தா –1-5-

உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காக இருக்காதே -ஸ்வ தந்த்ரனான அது ஆஸ்ரிதர்களுக்குப் பரதந்த்ரமாக வன்றோ நீ ஆக்கி உள்ளாய் -திவ்ய மங்கள விக்ரஹமும் உனக்காக இராது -திவ்ய ஆயுதங்களும் உனக்காக இராதே -இருப்பிடம் ஸ்ரீ வைகுண்டமும் அப்படியே உனக்காக இராதே -இவை எல்லாமே உனது அடியார்களுக்காகவே கொண்டு உள்ளாய் – பக்தர்களுடைய உடைமையான நீ இப்படி ஆஸ்ரித பரதந்த்ரமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையவனாக இருந்த போதிலும் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட சர்வாதிகனாக இருக்கும் தன்மையுடன் விளங்குகிறாய் –

———–

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
-சாண்டில்ய ஸ்ம்ருதி -1-15-

மிருகமா மனிதனோ பஷியோ எவராய் இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவனைப் பற்றி நின்றார்களாகில் அத்தாலேயே அவர்கள் விஷ்ணுவினுடைய அந்தப் உயர்ந்த ஸ்தானத்தை அடைகின்றனர் –

————–

பூர்வ பாஷீ ப்ரஸன்ன ஆத்மா

முதலில் பேசுபவனாய் தெளிந்த மனத்தனனாய் இருப்பவன் –

———

விமல மதிரமத்ஸரஸ் ப்ரசாந்தஸ் ஸூசி சரிதோ அகில ஸத்வ மித்ர பூத
ப்ரியஹித வசநோ அஸ்தமாந மாயோ வசதி ஸதா ஹ்ருதி தஸ்ய வஸூ தேவ
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-24-

அழுக்கற்ற புத்தியை யுடையவனாய் -மாற்சரியம் அற்றவனாய் -மிகுதியான அடக்கத்தை யுடையனாய் -பரிசுத்தமான ஒழுக்கத்தை யுடையவனாய் -அனைத்து உயிர்க்கும் நண்பனாய் -இனியதும் நல்லதுமான வார்த்தை யுடையவனாய் – ப்ரக்ருதி சம்பந்தம் மறையப் பெறுகிறவனாய் உள்ளவனுடைய ஹ்ருதயத்தில் எப்போதும் வாஸூ தேவன் வஸிக்கிறான் –

——–

த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரஷாம்ஸ்ய பயாந்தி சாரய
யத் கீர்த்தநாத் ஸோத்புத ரூப கேஸரீ மமாஸ்து மங்கள்ய விவ்ருத்தயே ஹரி
–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-28-

எந்தப் புருஷனைக் கீர்த்தனம் செய்வதால் அசுரர்கள் ஓடுகின்றனரோ -தேவர்கள் வணங்குகின்றனரோ -ராக்ஷஸர்கள் அழிகின்றனரோ -எதிரிகள் புறமுதுகு காட்டுகின்றனரோ -அற்புத ரூபமுள்ள அந்தப் நரஸிம்ஹனான ஹரி என் மங்களமாவதன் பொருட்டு ஆகட்டும் –

——-

ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச் ச ஸ மஹரிஷிபிர் த்ரீன் லோகான் சாம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத-ஸூந்தர –38-33-

அந்தக் காகாசூரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனாய் மூன்று உலகங்களையும் சுற்றித் திரிந்து அந்த ராமனையே சரணம் அடைந்தான்-

———

ஸர்வேஷாம் ஏவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்சத்வம் ஏநம் சரணம் சரண்யம் புருஷ ரிஷப
-ஆசா பர்வம் -192-56-

புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லா உலகங்களுக்கும் தந்தையாயும் தாயுமாயும் ஸ்ரீ லஷ்மீ நாதனே -சரணம் அடையத் தக்க இவனை சரணம் அடையுங்கள்-

——–

பிதாஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ
வேத்யம் பவித்ரம் ஓங்கார ருக் சாம யஜுர் ஏவ ச
–9-7-

இந்த உலகிற்குத் தாயும் தந்தையும் தாதாவும் பாட்டனும் வேதத்தில் அறியப்படுவதும் பரிசுத்தப்படுத்துவதும் ப்ரணவமும் ருக் யஜுர் சாம ரூபமான வேதமும் நானே –

—————

பாஹு நாம் ஜென்மநாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லபன்-
-7-19-

பல புண்ய ஜென்மங்களுக்குப் பின்னர் ஞானியானவன் வாஸூ தேவனே எனக்கு எல்லாம் என்று என்னை உபாஸிக்கிறான் -அப்படிப்பட்ட மஹா புருஷன் மிகவும் துர்லபன் –

————

அபி சேத் ஸூ துராசாரோ பஜதே மாம் அந்ய பாக்
சாதுரேவ ஸ மந்தவ்ய சம்யக் வ்யவஸிதோ ஹி ஸ
–9-30–

மிக அதிகமான துர் நடத்தையை யுடையவனாயினும் வேறு ஒன்றிலுமே ஈடுபடாமல் என்னிடம் எவன் பக்தி செலுத்துகிறானோ -அவன் மிகச் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனாகவே எண்ணத் தக்கவன் -ஏன் எனில் நல்ல உறுதி பூண்டவன் அவன் அன்றோ –

———

மநஸா அநிஷ்ட சிந்தனம்

மனதினால் பிறருக்குத் தீமை நினைப்பது –

———–

அபகாரிஷ் வபி ஸதா சாதுஸ் சாத்வேவ வர்த்ததே —

அபகாரிகள் இடத்தும் நல்லோன் எப்போதும் நல்வனாகவே இருக்கிறான் –

———

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேந ந கச்சின் ந அபராத்யதி
–யுத்த -116-44-

வனரா -பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தக்கவர்களாய் இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேணும் -அபராதம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே-

———–

மயி த்வேஷா அநு பந்தோ அபூத் ஸம் ஸ்துதா யுத்யதே தவ
மத் பிதுஸ் தத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-21-

உன்னை ஸ்துப்பதில் ஈடுபட்ட என்னிடத்தில் உண்டான த்வேஷத்தாலே என் தந்தைக்கு ஏற்பட்ட பாபம் போகட்டும் –

———-

மயி த்வேஷா அநு பந்தோ அபூத் ஸம் ஸ்துதா யுத்யதே தவ
மத் பிதுஸ் தத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-21-

உன்னை ஸ்துப்பதில் ஈடுபட்ட என்னிடத்தில் உண்டான த்வேஷத்தாலே என் தந்தைக்கு ஏற்பட்ட பாபம் போகட்டும் –

———–

பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேதமாயான் நாஸ்த்ய க்ருத க்ருதேந
தத் விஞ்ஞாந அர்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
–முண்டக -1-2-12-

அங்கங்களோடு கூடிய வேதங்களை அத்யயனம் செய்த எவன் ஒருவன் கர்மத்தால் அடையப்பெறும் உலகங்களை ஆராய்ச்சி செய்து பார்த்து-நித்ய புருஷன் அநித்யமான கர்மத்தால் அடையப்பெற மாட்டான் – என்ற வருத்தத்தை அடைகிறான் -அவன் அப் புருஷனை அறிவதற்காக ஸமித்தைக் கையிலே கொண்டவனாய் -வேதாந்தம் அறிந்தவனும் -ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவனுமான ஆச்சார்யனையே அடையக் கடவன் –

————–

ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹ நஞ்ச
வேதைச் ச சர்வைர் அஹமேவ வேத்யோ வேதாந்தத் க்ருத் வேத விதேவ சாஹம்
–15-15-

எல்லாருடைய ஹ்ருதயத்திலும் நான் அமர்ந்து இருக்கிறேன் –என்னிடமிருந்து ஞானமும் மறதியும் உண்டாகின்றன -எல்லா வேதங்களிலும் அறியப்படுபவன் நானே -வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களைக் கொடுப்பவனும் -வேதங்களை அறிபவனும் நானே –

————-

ஹதோ அஸ்மி யதி மாமேவம் பகவான் அபி மன்யதே –அயோத்யா -90-15-

பரத்வாஜரே தேவரீரும் என்னை இப்படி நினைத்தீரானால் நான் கொல்லப்பட்டவனே ஆவேன் –

———–

அப்யேஷ மாம் கம்ஸ பரிக்ரஹேண தோஷ ஆஸ்பதீ பூதம தோஷ துஷ்டம்
கர்த்தாவ மாநோ பஹதம் திகஸ்து தஜ் ஜென்ம யத் ஸாது பஹிஷ் க்ருதம் ஸ்யாத்
—ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-17-31-

கம்சனோடு ஸம்பந்தத்தினால் தோஷத்துக்கு இருப்பிடமான என்னையும் தோஷம் இல்லாதவனாம் படி செய்வானா அந்தக் கமலக் கண்ணன் –நல்லோரால் தள்ளப்பட்டதும் அவமானத்தால் அடிக்கப்பட்டதுமான அந்தப் ஜன்மத்தைச் சுடு –

————-

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||–
56

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.-

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ – யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ-யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்

–———-

குருர் பிதா குருர் மாதா

குருவும் தந்தையும் குருவே தாயுமாவார்

———–

யோ அந்யதா சந்தமாத்மாநம் அந்யாதா பிரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாடம் சோரேணாத்ம அப ஹாரிணா
–உத் யோக பர்வம் -42-35-

பகவானுடைய உடைமையாய் இருக்கும் ஆத்மாவை எவன் ஒருவன் தனக்கு சொந்தமாக நினைக்கிறானோ -ஆத்மாவை அபஹரிப்பவனான அந்தத் திருடனால் செய்யப்படாத பாபம் ஏது —

———–

அநந்ய சாத்யே ஸ்வ அபீஷ்டே மஹா விச்வாஸ பூர்வகம்
தத் ஏக உபாயதா யாச்ஞா பிரபத்தி ஸரணாகதி —
விஷ்வக் சேந ஸம்ஹிதை

தன்னுடைய இஷ்டம் வேறு ஒன்றால் ஆகாத போது மஹா விச்வாஸத்தை முன்னிட்டு கொண்டு அவன் ஒருவனையே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பதே பிரபத்தி -அதுவே ஸரணாகதி –

————

த்ரவ்யம் குணஸ் ததா கர்ம ஜாதிச் சேதஸ் தத் ஆஸ்ரய

த்ரவ்யம் குணம் தர்மம் ஜாதி மணம் அதற்கு ஆஸ்ரயமான ஆத்மா –

————

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் ச அக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த அக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

சாஸ்திரங்களில் -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி இருக்கையாலே
ஷர புருஷன் எனப்படும் பத்த ஜீவனும் -அழியும் இயல்வு இல்லாமையால் அஷரன் எனப்படும் முக்த ஜீவனும்-ஆகிற இரண்டு வகையான இப்புருஷர்களே பிரசித்தி பெற்றவர்கள் –

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

வேதத்தில் பிரசித்தமாக சொல்லப்பட்ட அசித் பத்த முக்தன்-இவர்களில் வேறுபட்டவன் என்று நிர்தேசம்  ப்ராதான்யம் -புருஷோத்தமன் -பரமாத்மா என்று நிர்தேசம் -உத்தமத்வம் மட்டும் ஸ்தாபிக்காமல் அந்நியமானவன் என்றே ஸ்தாபிக்க வந்தது

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷

நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான
முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே
ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

——

த்ரவ்யாணி நவ தே விது

ஆத்மா தொடங்கி த்ரவ்யங்கள் ஒன்பது என்பது வைசேஷிகர்களின் முடிவு-

—–

த்ருண காஷ்ட அப ஹாரேணே யோ தோஷ பரிகீர்த்தித
ஸ்வர்ண ரத்ந அபஹாரே அபி தாவாநேவ பவேத் கதம்
கதர்யஸ்வ அப ஹாரேணே யோ தோஷ பரிகீர்த்தித
ஸ்ரோத்ரியஸ்வ அப ஹாரேபி தாவாநேவ பவேத் கதம்
ஆத்ம வஸ்து யதோ அநர்க்கம் ஆத்மே ஸஸ்து பர புமான்
தஸ்மா தஸ்ய அப ஹரேண தோஷஸ் யாந்தோ ந வித்யதே

புல் கட்டை ஆகியவைகளை அபஹரிப்பதால் யாதொரு தோஷம் உண்டாவதாகச் சொல்லப்படுகிறதோ -அதே தோஷமே தங்கம் ரத்னம் ஆகியவற்றை அபஹரிப்பதால் உண்டாகுமோ -நீசனுடைய சொத்தை திருடுவதனால் யாதொரு தோஷம் உண்டாவதாகச் சொல்லப்படுகிறதோ -அதே தோஷமே வேதம் அறிந்த ப்ராஹ்மணனின் சொத்தைத் திருடுவதாலும் உண்டாவதாக சொல்ல முடியுமோ -ஆத்மவஸ்து விலை மதிக்க ஒண்ணாதது -ஆத்மாவை உடையவனோ பரம புருஷன் -ஆகையால் இதைத் திருடும் போது தோஷத்துக்கு எல்லையில்லை –

———-

சத்யஞ்ச அநிருத்தஞ்ச சத்யமபவத் –தைத்–6-3-

விகாரம் அற்றதாகையாலே -ஸத்யம் -உள்ளது -எனப்படும் ஆத்மாவாகவும் -விகாரம் உள்ளதாகையாலே -அநிருத்தம் -இல்லாதது -எனப்படும் அசித் யாகவதாகவும் -விகாரம் அற்றதாயே வாக ப்ரஹ்மம் இருக்கிறது –

நாஸதோ வித்யதே பாவோ ந அபாவோ வித்யதே ஸத
உபயோர் அபி த்ருஷ்டோந்தஸ் த்வநயோஸ் தத்வ தர்சிபிர்
–2-16-

இல்லாதாதான தேஹம் உள்ளதாகாது -உள்ளதான ஆத்மாவுக்கு இன்மை இல்லை -தத்வ ஞானிகளால் இவ் விரண்டுக்கும் இவ் விதமாக முடிவு காணப் படுகிறது –

———

பஞ்ச பூதாத்மகம வஸ்து

ஐந்து பூதங்களான பொருள் தேஹம்

———-

ஷரம் த்வ வித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே அஸ்து ஸோ அந்ய –ஸ்வே -5-1-

அழியும் அசித் வஸ்து அவித்யை எனப்படுகிறது -அழியாத ஆத்மா வித்யை எனப்படுகிறது -வித்யையும் அவித்யையும் எவன் நியமிக்கிறானோ அவன் அவர்களிலும் வேறுபட்டவன் –

———-

ஆத்மா நமஸ்ய ஜகதோ நிரலேபம குணாமலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி
—ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-68-

பிராகிருத குணங்களும் அழுக்குகளும் அற்றவனாய் இவ்வுலகில் வியாபித்து இருக்கும் ஜீவனை பகவான் ஹரி யானவள் கௌஸ்துப மணி ரூபத்தில் தரிக்கிறார் –

————-

அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: |
|-3-

அகாரப்பொருளான அச்யுதனுக்கே நான் உடைமை -எனக்கு உரியேன் அல்லேன் -அழிவற்றவர்கள் ஆகையால் நரர்கள் எனப்படுமவர்களுக்கு அயனமாய் இருக்கிறபடியால் நாராயண பதம் எவனைச் சொல்லுகிறதோ -அவனுக்கு எல்லாக் காலமும் -எல்லா இடத்திலும் -எல்லா அவஸ்தைகளிலும் ஏன் கைங்கர்யங்கள் ஆவிர்பவிக்கக் கடவன் –

———

அ இதி ப்ரஹ்ம

அ எனப்படுவது ப்ரஹ்மம்

————

பர த்ரவ்யேஷ் வபித்யாநம்

பிறர் பொருளில் ஆசை வைப்பது

———–

ந ஜாது காம காமாநாம் உப போகநே ஸாம்யதி
ஹவிஷா க்ருஷ்ண வர்த்தமேவ பூய ஏவாபி வர்த்ததே
-ஸ்ரீ விஷ்ணு புராணம்

காமிகளுடைய காமம் அனுபவிப்பதாலேயே ஒரு போதும் சாந்தி அடைவதில்லை -ஹவிஸ்ஸாலே வளரும் அக்னி போல் மறுபடியும் வளர்கின்றது –

———–

அநாதிர் பகவான் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே —ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-2-26-

ப்ராஹ்மணரே பெருமை பொருந்தியதான காலம் அநாதியானது -இதற்கு முடிவும் கிடையாது-

———-

அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மநா
ஸ்வயைவ பிரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை
தத்ர கத்வா புநர் லோகம் ஆயந்தி பாரத
—-பாரதம் –ஆர -136-18-23–

மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்தப் ஸ்தானம் ஸூர்யனிடமும் அக்னியிடமும் உள்ள ஒளியை விஞ்சியது -அரசனே அது தன்னுடைய ஒளியாலே தேவர்களாலும் அசுரர்களாலும் காண அரிது -பரத வம்சத்தில் உதித்தவனே -அங்குபோய் மறுபடியும் இவ்வுலகிற்குத் திரும்புவதில்லை –

———

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச
–18-66-

பல சாதனமான எல்லாத் தர்மங்களையும் வாசனையுடன் விட்டு என்னையே ஒருவனையே சரணமாக அடை -நான் உன்னை எல்லாப் பாபங்களின் நின்றும் விடுவிக்கிறேன் -துக்கிக்காதே –

———-

ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாம் உஷித்வா ஸாஸ்வதீ ஸமா
ஸூஸீ நாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோ அபி ஜாயதே —

புண்ணியம் செய்தோரின் உலகை அடைந்து நெடும் காலம் வாழ்ந்து பரிசுத்தி உடையவர்களும் செலவமுடையவர்களுமான பெரியோர்களின் வீட்டில் யோகத்தில் இருந்து நழுவியவன் பிறக்கிறான் –

————

ஸமாதி பங்கஸ் தஸ்யாஸீத் தன்ம மத்வா த்ருதாத்மந
சந்த்யக்த ராஜ்ய போகர்த்தி ஸ்வ ஜநஸ் யாபி பூபதே
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-29-

அரசனே மானிடம் அஹங்காரம் கொண்ட மனத்தையுடைய அவருக்கு ராஜ்ஜியம் பெரும் செல்வம் உறவினர் ஆகிய அனைத்தையுமே விட்டவராய் இருந்த போதிலும் சமாதிக்கு இடையூறு ஏற்படுகிறது –

———-

பஹவோ துர் லபாச்சைவ யே த்வயா கீர்த்திதா குணா
முநே வஷ்யாம் யஹம் புத்தவா தைர் யுக்த ஸ்ரூயதாம் நர
-பால -1-7-

முனிவரே உம்மால் கீர்த்திக்கப்பட்ட குணங்கள் கிடைத்தற்கு அரியதாகவும் பலவுமாயும் இருக்கும் -நான் தெளிந்து நின்றும் சொல்லுகிறேன் -அந்த குணங்களோடு கூடிய மனிதரைப் பற்றிக் கேட்ப்பாயாக –

——–

ஆராப்யதே ந கலு விக்ந பயேந நீசை -ஆரப்ய விக்ந விஹதா விரமந்தி மத்யா
விக்நை புந புநரபி பிரதி ஹன்ய மாநா பிராப்தம் உத்தம குண ந பரி த்யஐந்தி
–நீதி சதகம் –72-

தாழ்ந்த குணத்தவர்கள் இடையூறுக்குப் பயந்து காரியத்தை ஆரம்பிப்பதே இல்லை -ஆரம்பித்த பின் இடையூறு வந்து தடுத்தால் காரியத்தின் நின்றும் பின் வாங்குகிறார்கள் மத்யமான குணத்தை யுடையவர்கள் -பல இடையூறுகளால் மறுபடியும் மறுபடியும் தடுக்கப்பட்டாலும் தொடங்கிய காரியத்தை உயர் குணத்தோர் கைவிடுவதே இல்லை –

———-

யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சநேதி —
தைத் -ஆ–9-1-

எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ -அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிபவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –

———

தஸ்ய புத்ரா தாயம் உபயந்தி ஸூஹ்ருதஸ் ஸாது கிருத்யம் த்விஷந்த பாப கிருத்யாம்–சாட்யாயன சாகை

மோக்ஷம் அடையும் அம் மனிதனின் சொத்தைப் பிள்ளைகள் அடைகின்றனர் -புனியத்தை அனுகூலர்கள் அடைகின்றனர் -பாபத்தை எதிரிகள் அடைகின்றனர்-

———–

போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி
-5-29-

யஜ்ஞங்களையும் தவங்களையும் புஜிப்பவனும் -எல்லா உலகங்களுக்கும் மஹேஸ்வரனும் -எல்லா ஜீவ ராசிகளுக்கும் நண்பனான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான் –

————

குரும் ப்ரகாஸயேந் நித்யம்

குருவை எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் –

———-

ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது ஸூதந
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக
-சாந்தி பர்வம் -358-73–

பிறந்து கொண்டு இருக்கும் போதே எந்தப் புருஷன் மது ஸூதனனைப் பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடையவன் என்று அறியத் தக்கவன் -அவனே மோக்ஷ பலத்தை நினைப்பவன் –

———-

முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் யச்ச வேத த்வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந
-சாந்திபர்வம் -344-15-

ஸ்வேத த்வீப வாஸிகளுக்கு எது லக்ஷணமோ அதுவே முக்தர்களுக்கும் லக்ஷணமாகும் -அதாவது எப்போதும் அஞ்சலி செய்து கொண்டே இருப்பார்கள் -அதனால் ஆனந்திப்பார்கள் -வாயால் நம என்றே சொல்லும் தன்மை யுடையவர்களாய் இருப்பார்கள் –

————–

ஸா ஹி ஸ்ரீர் அம்ருதா ஸதாம்

நல்லோர்களுக்கு வேதமே அழியாச் செல்வமாகும்

———–

சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம் உக்த்வான் ரிஷி
தத்ர சர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டநி ததோத்தரம்
–பால -1-2-

வால்மீகி ருஷி 24000 ஸ்லோகமாகவும் -500 சர்க்கமாகவும் -ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் கூடியதாக ஸ்ரீ இராமாயணம் அருளிச் செய்துள்ளார் –

————-

பாட்யே கேயே ச மதுரம் ப்ராமணைஸ் த்ரி ப்ரன்விதம் –பால -4-8-

ஸ்ரீ இராமாயணம் மூன்றுவிதமான அளவுகளுடன் கூடியதாய் படிக்கும் போதும் பாடும் போதும் இனியதாய் இருக்கிறது-

———

ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ

பரமபுருஷன் எல்லா நறு மணங்களையும் யுடையவன் -எல்லா நற் சுவைகளையும் யுடையவன்

———-

ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்த் வாந்தீ பவதி கோ ஹ்யே வான்யாத் க ப்ராண்யாத்
யதேஷ ஆகாஸோ ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ ஹ்யே வாநந்தயாதி
-சாந்தோ -3-14-2-

ரஸ -ஆனந்த ஸ்வரூபன் அன்றோ அந்த பரம புருஷன் -ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து -இந்த ஜீவன் -ஆனந்தத்தை யுடையவன் ஆகிறான் -பிரகாசிப்பவனும் ஆனந்த ஸ்வரூபனுமான இப்பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள சுகத்தையோ மோக்ஷ சுகத்தையோ அடைய முடியும் -ஆகையால் இவனே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான் –

————-

தத்தேது வ்யபதேசாச்ச–1-1-15-

ஜீவனின் ஆனந்தத்துக்கு காரணமாகப் பராமனைச் சொல்லுகையாலே பரமன் ஜீவனிலும் வேறானவனே –

———

அம்ருதஸ்ய ஹி தாதாரம் தாமஸ பாரம் தர்சயதி ஸநத்குமார –

மோக்ஷம் அளிப்பவனும் ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான பரமனை சனத்குமாரர் காண்பிப்பார் –

————-

ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ் ந ச
சாமார்த்யவாந் க்ருபா மாத்ரமநோ வ்ருத்தி ப்ரஸீதி மே
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-70-

தலைவர்களுக்கும் தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் தலைவனே -இப்படிப்பட்ட நான் உன்னுடைய ஸ்துதியிலும் அர்ச்சனம் முதலியவற்றிலும் சாமர்த்தியம் உடையவன் அல்லேன் -அருள் கூர்ந்த திரு உள்ளத்துடன் கூடியவனாய் எனக்குத் தயை புரிய வேண்டும் –

———-

துர்ப்போதா வைதிகா சப்தா

வேதத்திலுள்ள சொற்கள் பொருள் உணர அரியவை

—-

த்வம் ஹி ருத்ர மஹா பாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய
தர்சயித்வா ஆல்பம் ஆயாஸம் பலம் சீக்ரம் ப்ரதர்சய
-வராஹ புராணம் -10-36-

நீண்ட கையையுடைய ருத்ரனே நீ மயக்கம் ஆகம சாஸ்திரங்களை இயற்றுவாயாக -சிறுது சிரமத்தின் பேரிலேயே விரைவில் பலத்தைக் காண்பாயாக –

————-

ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச் ச ஸ மஹரிஷிபி
த்ரீன் லோகான் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ தம் நிபததிம் பூமவ் சரண்ய சரணாகதம்
வாதார் ஹமபி காகுத்ஸத கிருபயா பர்யபாலயத்
–ஸூந்தர –38-34-35

அந்தக்காகாசுரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனாய் மூன்று உலகங்களையும் சுற்றித்திரிந்து அந்த ராமனையே சரணம் அடைந்தான் -சரணம் அடைந்தவனும் பூமியில் விழுந்தவனுமான அவனைக் கொல்லத் தக்கவனாகவே இருந்தானே யாகிலும் சரணம் அடையத் தக்கவனாகிய ஸ்ரீ ராம பிரான் தன் அருளாலே காப்பாற்றி அருளினான்-

————–

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவதம் கேஸவாத் பரம்
-நாரதீய புராணம் -18-33-

உண்மை உண்மை முக்காலும் உண்மை என்று கைதூக்கிக் கொண்டு சொல்லுகிறேன்-வேதத்தில் உயர்ந்த ஸாஸ்த்ரம் இல்லை -கேசவனில் உயர்ந்த தெய்வம் இல்லை –

——————

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபஸ்ஸித–
வேதவாதரதா பார்த்த நாந்யதஸ்தீதி வாதிந—৷৷2.42৷৷

போகைஸ்வர்ய ப்ரஸக்தாநாம் தயாபஹ்ருத சேதஸாம்–
வ்யவஸாயாத்மிகா புத்தி ஸமாதௌ ந விதீயதே—৷৷2.44৷৷

பார்த்தனே வேதங்களில் கூறப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களை பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய் – காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் -சுவர்க்கத்தை விரும்புவர்களாய் – சுவர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த பலன் இல்லை என்று பேசுகின்றவர்களான சிற்று அறிவாளர்கள் ஸ்வர்க்காதிகளை அனுபவிப்பதாகிய செல்வத்தை அடைவது குறித்து காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது
அழகாக உள்ளதாய் -மறு பிறப்பு முதலிய கர்மங்களாகிய பலன்களை அளிப்பதாய் -பல செய்கைகளை யுடைத்தான யாதொரு வார்த்தையை மிகவும் பேசுகின்றார்களோ -அந்தப் பேச்சுக்களால் அழிக்கப் பட்ட அறிவை உடையவர்களாய் ஸ்வர்க்காதி செல்வங்களில் ஈடுபட்டவர்களான அப் புல்லறிவாளர்களுக்கு மனத்தில் ஆத்ம ஸ்வரூப நிச்சயத்தை
முன்னிட்டுக் கொண்டு இருக்கும் கர்ம யோக புத்தி உண்டாவது இல்லை –அவிபஸ்சித் -புல்லறிவாளர்கள் என்று பெயர் கொடுக்கிறான் புஷ்பிதாம் வாசம்-பூப் போல் மலர்ந்து -கொண்டாட வில்லை -பூ மாத்திரமே -காய்க்காது பழுக்காது -ராமானுஜ பாஷ்யம் –

———

த்ரைவித்யா மாம் ஸோமபா பூத பாபா–யஜ்ஞை ரிஷ்ட்வா ஸ்வர்க்கதிம் ப்ரார்தயந்தே–
தே புண்ய மாஸாத்ய ஸுரேந்த்ர லோகம்–அஸ்நந்தி திவ்யாந் திவி தேவ போகாந்—৷৷9.20৷৷

தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விஸாலம் –க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விஸந்தி.–
ஏவம் த்ரயீ தர்ம மநுப்ரபந்நா–கதாகதம் காமகாமா லபந்தே—৷৷9.21৷৷

வேதாந்தத்தில் இல்லாமல் மூன்று வேதங்களில் பூர்வ பாகத்தில் சொல்லப்பட்ட தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களாய் –
இந்த்ராதிகளைக் குறித்துச் செய்யப்பட யாகங்களின் சேஷமான சோமா ரசத்தை பருகுகின்றவர்களாய் –
ஸ்வர்க்கம் முதலானவற்றை அடையத் தடையாக இருக்கும் பாபங்களில் இருந்து நீங்கப் பெற்றவர்களாய் –
இந்த்ராதிகளை மாத்திரம் குறித்த யஜ்ஞங்களாலே -அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் இருக்கும்
என்னைக் குறித்தே உண்மையில் யாகம் செய்து -இந்த்ராதிகள் இடம் ஸ்வர்க்கத்தை வேண்டுகிறார்கள் –
அவர்கள் இவ்வுலகத் துன்பங்கள் இல்லாத தேவேந்திர லோகத்தை அடைந்து அங்குள்ள பல இடங்களில்
இவ்வுலக அனுபவங்களைக் காட்டிலும் சிறந்த தேவர்களுடைய போகங்களை அனுபவிக்கிறார்கள் –
அவர்கள் பரந்ததான அந்த ஸ்வர்க்கத்தில் உள்ள போகங்களை அனுபவித்து -அந்த அனுபவத்துக்கு காரணமான
புண்யம் அழிந்த அளவில் மறுபடியும் மனித உலகிற்கு வருகிறார்கள் –
இவ்வண்ணமாக வேதாந்த ஞானம் இல்லாமல் மூன்று வேதங்களின் பூர்வ பாகத்தில் சொன்ன யாகம் முதலிய
தர்மங்களை அனுஷ்டிப்பவர்களாய் -அவற்றில் சொன்ன விரும்பப்படும் ஸ்வர்க்காதிகளிலேயே விருப்பம் உடையவர்களாய் –
அல்பமும் அஸ்த்ரமுமான ஸ்வர்க்காதிகளையே அடைந்து மறுபடியும் மறுபடியும் திரும்பி வருகிறார்கள் –

————–

ப்ரஹ்ம விதாப்நோதி பரம் –தைத்ரியம்

ப்ரஹ்மத்தை அறிந்தவன் மேலான பலனை அடைகிறான்

——–

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹி தேவம் ஆத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதாஸ் -6-18-

எவன் பிரமனை முன் படைத்தானோ -எவன் பேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தமது விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரம புருஷனை மோக்ஷம் அடைய விரும்பும் அடியேன் சரணம் அடைகிறேன்-

———–

ப்ரஹ்மணாநாம் தனம் வேத

அந்தணர் மாடு -அருமறையே அந்தணருக்குச் செல்வமாகும்

————-

யோ தத்யாத் பகவத் ஞானம் குர்யாத் வா தர்ம தர்சனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யான் ந தத்துல்யம் கதஞ்சன
-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –70-78-

பார்வதி ஞானம் அளித்து அவனை அடைய உபாயம் அருளுபவனுக்கு பூமி முழுவதையுமே கொடுத்தாலும் அவன் அளித்ததற்கு ஒப்பு ஆகாதே-

————–

மித்ர பவ்யிகம் கர்த்தும் ராம ஸ்தானம் ப்ரீப் ஸதா
வதம் ச அநிச்சிதா கோரம் த்வயா அசவ் புருஷன் ரிஷப–யுத்த -21-19-

ராவணா நீ உனது குடியிருப்பை விரும்பினாயாகில் -கோரமான வதத்தை விரும்பாது இருந்தாயாகில் இந்த புருஷ ஸ்ரேஷ்டரான ராமபிரானை நண்பனாகக் கொள்ளத் தக்கது –

———–

யோ மா ததாதி ஸ இதேவ மாவா -தைத்ரி -பிருகு -10-6-

எவன் எனக்குப் பரமணி அளிக்கிறானோ அவனே எனக்கு ரக்ஷகன்-

————

தர்ம அர்த்தவ் யத்ர ந ஸ்யாதாம் ஸுஸ்ரூஷா வா ததாவிதா
தத்ர வித்யா ந வப்தவ்யா சுபம் பீஜமிவோஷரே –மனு ஸ்ம்ருதி -2-112-

அறமும் பொருளும் எந்த சீடனிடம் இல்லையோ -அப்படியே ஸுஸ்ரூஷையும் எவனிடம் இல்லையோ -நல்ல விதையை களர் நிலத்தில் விதைக்கக் கூடாதது போல் அவனிடம் வித்யையை விதைக்கக் கூடாது –

————–

அர்த்ததோ தர்மதஸ் ஸுஸ்ரூஷரத்யாப்ய-

பொருளை அளிப்பவனும் அறத்தை அளிப்பவனும் ஸுஸ்ரூஷை யுள்ளவனுமான சீடனே அத்யயனம் செய்யத்தக்கவன் –

———-

கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம்
ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—
৷৷2.7৷৷

மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக

—————-

ஸ்ரூயதாம் பரமார்த்தோ வை தைதேயா தநு ஜாத்மஜா
ந சாந்யதைதக் மந்தவ்யம் நாத்ர லோபாதி காரணம் —

அசுர புத்ரர்களே என்னிடமிருந்து இவ் உண்மைப் பொருளை கேளுங்கோள் -இதை வேறு விதமாக எண்ணலாகாது –இவ் விக்ஷயத்தில் ஆசை முதலியவை காரணம் அல்ல-

—————

ந அகிஞ்சித் குர்வத சேஷத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-55-

கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் இல்லை

———–

ஸா பேஷா இவ சேஷ்டத

அபேக்ஷை உள்ளவன் போல் அர்ச்சாவதாரத்தில் நடக்கிறான்

———-

ஸகே ராகவ தர்மஜ்ஞ ரிபூணாம் அபி வத்ஸல
அப்யனுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதாக்தம்
-யுத்த –50-56-

நண்பரே ரகு குலத்தில் உதித்தவரே தர்மத்தை அறிந்தவரே சத்ருக்களுக்கும் வாத்சல்யத்தை யுடையவரே -விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் -வந்தவாறே போய் விடுகிறேன் –

————

தேவாநாம் தாநவாஞ்ச சாமான்யம் அதி தைவதம்
ஸர்வதா சரண த்வந்த்வம் வரஜாமி சரணம் தவ –
-ஜிதந்தா -2-

பக்தியுடைய தேவர்களுக்கும் பக்தியில்லாத அசுரர்களுக்கும் எப்போதும் பொதுவாகப் பற்றத்தக்க தேவதையாய் இருக்கும் உனது திருவடி இணையை உபாயமாக நிச்சயிக்கிறேன்-

உதாராஸ் ஸர்வ ஏவைத ஞாநீ த்வாத்மைவ மே மதம் -7-13-

இவர்கள் அனைவருமே உதாரர்கள் -ஞானியோ என்றால் எனக்கு தாயகம் -ஆத்மா -என்பதே எனது ஸித்தாந்தம்

———-

த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷத் அன்னம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஜஸே ராஜன் மம பிராணா ஹி பாண்டவா
-உத்யோக பர்வம் –74-27-

த்வேஷிப்பவன் அன்னம் புஜிக்கத்தக்கது அன்று-த்வேஷிப்பவனை புஜிப்பிக்கவும் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -பாண்டவர்கள் எனக்கு பிராணன் அன்றோ –

————

ஆச்சார்யவான் புருஷோ வேத

ஆச்சார்யனை யுடைய புருஷனே உண்மையை அறிகிறான்

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||-
-10-

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால், இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு. எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால், நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை-

————–

சீலாதி குண ஸம் பந்ந ஸர்வ லோக ஏக வத்ஸல

சீலம் முதலிய கல்யாண குணங்களை யுடையவன் -எல்லா உலகுக்கும் வாத்சல்யம் யுடைய ஒருவனாய் இருப்பவன் –

————

விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யது ஜீவிதம் இச்சஸி –
-ஸூந்தர –21-20-

ராவணா -ஸ்ரீ ராமபிரான் தர்மத்தை அறிந்தவராகவும் -சரணம் அடைந்தவர்களிடம் வாத்சல்யம் யுடையவர் என்றும் ப்ரஸித்தமானவர் -நீ உயிர் வாழ விரும்புவாயானால் அவரிடம் நட்பு காட்ட வேண்டும் –

————

மித்ர பாவேந ஸம் பிராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்
–தத்தம் -18-3-

நண்பனாகிய பாவத்தோடு நெருங்கின இந்த விபீஷணனை ஒருபோதும் கைவிட மாட்டேன் -அவனிடம் தோஷம் இருந்தாலும் இருக்கட்டுமே -நல்லோர்களுக்கு இவனை ஸ்வீ கரிப்பது நிந்திக்கத் தக்கது அல்ல –

———–

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா
-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ-தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே-ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே-ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

————

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ
: ||–58-

கருணைக் கடலான ஸ்ரீ ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே!
வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே! நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத,
போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய
திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப்படுகிறேன்.

————

ஆஸ்ரித வாத்சல்ய ஏக மஹோ ததே —ஸ்ரீ ரெங்ககத்யம்

அடியார்களிடம் வாத்சல்யக்கடலாய் இருப்பவனே

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புத்தூர் கிருஷ்ண ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நடாதூர் அம்மாள்-ஶ்ரீவத்ஸ குல திலகை꞉ஶ்ரீமத்₃வரதா ₃சார்ய மஹா கு₃ருபி₄꞉ அநுக்₃ருஹீத꞉பிரபந்த பாரிஜாதம் –

January 31, 2025

ஊர்த்₄வவ் ஹஸ்தவ் யதீயவ் பிரதிபட த₃லநே பி₃ப்₄ரத ꞉ ஶங்க₂ சக்ரே
ஸேவ்ய அங்க்₄ரீ ஸ்கீயாவபி த த த தரோ தக்ஷிணோ யஸ்ய பாணி ꞉ ।
தாவந் மாத்ரம் ப₄வாப்₃தி₄ம் க₃மயதி ப₄ஜதா மூருகோ ₃ வாமபாணி :
ஶ்ரீவத் ஸாங்கஶ்ச லக்ஷ்மீர் யது₃ரஸி லஸதோ வேங்கடேசஸஸ் ஜீயாத் ॥

சக்ரம் ஶாஸ்தி ஸூகர்ம யோக₃கலநம், ஜ்ஞாநம் ச ஶங்க₂ஸ் ததா ₂
பாணிஶ் சாரு கடி ப்ரஸஞ்ஜி ததல꞉ஶ்ரோ ப₄க்தி யோக₃ம் ததா ₂ ।
ஶ்ரீமத் பாத₃ஸரோஜ தர்ஶ ககரோ யோக₃ம் ப்ரபத்திம் பரம்
யஸ்யாந் வர்த ₂சதுர் பு₄ஜஸ் ஸ ப₄க₃வான் ஜேஜே து லக்ஷ்மீ ஸக₂
꞉ ||

ஶ்ரீ வேங்கடாத்₃ரி நிலய꞉ கமலாகாமுக꞉ புமான் ।
அபா₄ங்கு₃ர விபூ₄திர் ꞉ ந தரங்க₃யது மங்க₃லம்

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி
–நடாதூரம்மாளின் தனியன்:

ஸம்ஸார தாபத்ரயத்தினால் எரிக்கப்பட்டு தவிக்கும் என்னை ஸ்ரீ பாஷ்யார்த்த அம்ருதத்தை அருளி பிழைக்கச் செய்தவரும் -ஸ்ரீ வத்ஸ குலத்துக்கே அலங்காரமாகவும் -வரதாச்சார்யர் என்னும் பிரசித்தி பெற்ற இவற்றை வணங்குகிறேன்

சித்திரை நக்ஷத்ரம் –நடுவில் -நடுப்பதம் விளக்கம் வல்ல -ததீய சேஷத்வம் -ஸ்ரீ வத்ஸ குலம் அவதாரம் -தாசாரதி போல்-நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு-திருக் குமாரர் -தேவராஜன் -திருக் குமாரர்-நடாதூர் அம்மாள்

திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை.
அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம்.
ஆசார்யன்: எங்களாழ்வான்.
சிஷ்யர்கள்: ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர்.
பரமபதித்த இடம்: காஞ்சிபுரம்.
அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் , கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், ப்ரபன்ன பாரிஜாதம், சரமோபாய ஸங்கிரஹம், ஸ்ரீபாஷ்ய உபன்யாசம், ப்ரமேய மாலை, எதிராஜ விஜயாபநம் மற்றும் பல.
காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது. இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.

1165-1275

கிடாம்பி அப்பிள்ளார் மருமகன் -தேசிகர்

விஷ்ணு சித்தர் -அம்மாள் ஆச்சார்யன் -எங்கள் ஆழ்வான் எம்பெருமானார் சாதித்த திருநாமம் -மிக்க மூன்றில் ஒரு பங்கு ஸ்ரீ பாஷ்யம் இவரைக்கொண்டே நிகமனம் -விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் சாதித்தவர்–ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே  இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.-சித்திரை – ரோஹிணி-எங்கள் ஆழ்வான் திருநட்சத்திரம்
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண
நோசேந் மமாபி யதிசேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய:–
நடாதூர் அம்மாள் இவருக்கு சாத்தி அருளிய தனியன் –

ஸ்ருத்யந்த த்வயம் -உபய வேதாந்தம் -நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு -நல்லான் அவர்களின் திருக் குமாரர்
இவர் திருக்குமாரர் -தேவராஜன் -இவருக்கு திருக்குமாரர் -நடாதூர் அம்மாள் –

எம்பெருமானார் 1017-1137
பிள்ளான் 1067 அவதாரமே
1097-எங்கள் ஆழ்வான் அவதாரம்
1113 நஞ்சீயர் -ஆயர் தேவு -எங்கள் ஆழ்வான் கேட்டதாக ஐதீகம்
நடதூர் அம்மாள் (கி.பி. 1165 – 1275)

இவருக்கு தேவப்பெருமாள் பிள்ளை -நான்முகன் -பேரன் -பெரும் தேவித் தாயார் -மாட்டுப்பெண்-

பிள்ளான் -குருகேஸ்வரர் -திருமலை நம்பியின் திருக்குமாரர் -எம்பெருமானார் அபிமானம் புத்திரர் –

கடாம்பு -கடத்தில் நீர் வைத்து பாகவத கைங்கர்யம் செய்த குலம் -மருவி கிடாம்பி -மடப்பிள்ளை மணம் கமழும் வம்சம்

பக்தி பிரபத்தி செய்ய அதிகாரம் இல்லாவிடில் ராமானுஜ சொன்னாலே போதும் -இவர் சாதித்து அருளினவர்

ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்ய கோடி விமானம் -பேர் அருளாளன் -வரதராஜன் -ஆச்சார்யராக பிறப்பித்து வளர்த்துக் கொடுத்த அருள் -சம்ப்ரதாயம் பரிபாலனம் -ஓம் நமோ நாராயணாய என்ற 3 பதத்தின் சாராம்சமாய் முறையே அநந்யார்ஹ சேஷத்வம், அனன்யார்ஹ சரணத்துவம், அனன்யார்ஹ போக்யத்துவம் என்ற மூன்று பண்புகளை கொண்ட தாயார். இந்த ஆச்சார்யர்கள் எல்லாம் அவள் கொடுத்து அருளியவள் –
என் தன் அளவல்ல யான் கொண்ட அன்பு –பக்தி வளர்த்து-பரிவாஹ ரூபமான ஸ்லோகங்கள் –

பிரபந்ந என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை, இதற்கு முழுமையான ‘சரணடைதல்’, ‘அர்ப்பணிப்பு’ என்று பொருள்

சமஸ்கிருதத்தில் பாரிஜாதா என்பது ‘வம்சாவளி’, ‘பிறந்தவர்’ அல்லது ‘முழு வளர்ச்சியடைந்தது’ போன்ற அர்த்தங்களை வழங்கலாம். ஆசிரியரே பின்னர் உரையில் இதை இவ்வாறு வரையறுக்கிறார்:

பிரபத்தி பற்றிய அசேஷ விஷயங்களையும் முழுமையாக சேகரித்து வைத்துக் அருளிய கிரந்தம் என்றவாறு-

400 ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம்
சரணாகதி -சரணம் -ஆகதி -உபாயத்தை வரவைப்பது

அஹம் மத் ரக்ஷண பரோ மஹா ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதிரேவ இதி ஆத்மாநம் நிஷிபேத் புத்திர்
-1- -ந்யாஸ தஸகம்

—————-

ஸ்ரீயப்பதியாய் பரம காருணிகனாய் ஸகல கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ மன் நாராயணன் -தர்மங்களுக்குக் குறைவும் அதர்மங்களுக்கு விருத்தியும் உண்டாயிருக்கும் ப்ரதிஸமயங்களிலும் மத்ஸ்ய கூர்மாதி ரூபங்களாக அநேக அவதாரங்களை எடுத்து-துஷ்ட நிக்ரஹ -இஷ்ட பரிபாலாநாதிகளைச் செய்து தர்மங்களைக் நிலை நிறுத்தியது போலவே த்வாபர யுகத்திலும் கண்ணனாக அவதரித்து கம்சாதி துஷ்டர்களை நிரசித்தும் பாண்டவர்கள் போல்வாரை ரக்ஷித்தும் தர்மங்களைக் நிலைநாட்ட அர்ஜுனனை வ்யாஜமாக்கி கீதா சாஸ்திரத்தை வெளியிட்டு அருளி
அதில் சாரதமமான சரம ஸ்லோகத்தினால்

அதில் சாரதமமான சரம ஸ்லோகத்தினால் அல்ப ஞானம் உள்ள அஸ்மாதிகளும் உஜ்ஜீவனம் அடையும் பொருட்டு பிரபத்தி சாஸ்திரத்தை வெளியிட்டு அருளினான்
இது ஸர்வாதிகாரம்
ஒருக்கால் -ஸக்ருத் -பல பிரதம் -க்ஷண கால சாத்யம் -ஆகவே உயர்ந்த தவம் -கொண்டாடத்தக்கது
இருந்தாலும் மூடர்கள் அஞ்ஞானிகள் இழந்து சம்சாரத்திலேயே மக்நராகிறார்கள்
பின்பு ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ரூபேண தானே அவதரித்து உபகரித்து அருளினான்

முதல் நான்கு ஸ்லோகங்கள் -நிர்விக்னமாக பிரபந்தம் அமைய ஆச்சார்ய பகவத் வந்தந ரூப மங்களா ஸாஸனம்-முதல் ஸ்லோகத்தால் தேஜஸ்விகளான ஆச்சார்யர்களை நம் மானஸ பத்மம் விகசிக்க திருவடிகளைப் பற்றுகிறார்

——————

1-பிரமாண பத்ததி (அவதரணிகா )

ஆச்சார்ய ஆரியமா பாதேப்யோ நமஸ்யா ததே
யதாஸங்க வஸாத் பும்ஸாம் மந பத்மம் ப்ரபுத்யதே
-1-

ஆச்சார்யர் திருவடிகளே அநேக ஸூர்ய துல்யம்
தேஜோ நிதி -பாவனத்வம் -பரப்ரகாஸத்வம் -வேதமயம் -பகவத் அதிஷ்டிதம் –

இத்தால் தமது குரு பரம்பரை
எங்கள் ஆழ்வான்
திருக்குருகைப் பிரான் பிள்ளான்
எம்பெருமானார்
பெரிய நம்பி
ஆளவந்தார்
மணக்கால் நம்பி
உய்யக்கொண்டார்
நாதமுனிகள்
நம்மாழ்வார்
விஷ்வக்சேனர்
பெரிய பிராட்டிமார்
பெரிய பெருமாள் –
இவர்கள் திருவடித் தாமரைகளைப் பற்றுகிறார்

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –மிதுனமே உத்தேச்யம்

——————

அபங்குர கலா தான ஸ்தூல லஷ்யாத் வமீயுஷே
துங்காய மஹதே தஸ்மை துரங்காய முகே நம
-2—-ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரைப் பற்றுகிறார்

கீழே சஹஸ்ர ஸூர்ய துல்யம் -இங்கு பூர்ண சந்திர துல்யம் -உபாசகர்களுக்கு அழியாத நித்ய ப்ரஹ்ம வித்யையை அளிப்பவர் –

———–

லஷ்மீ சஷு அநு த்யாநாத் தத் ஸாரூப்யம் உபேயுஷே
நமோஸ்து மீந வபுஷே வேதவேதி விபன்முஷே —
3-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வந்தனம்

மத்ஸ்ய ஹம்ஸ ஹயக்ரீவ திரு வவதாரங்கள் -வேத உபதேசம்
ஏக சேஷித்வம் -ஸ்ரீயபதி –

மையார் கருங்கண்ணி –செய்யாள் -இடைவிடாமல் பார்த்துத் தியானித்து சாரூப்பியம் பெற்ற திருமேனி

மிகவும் அழகுள்ள -அஸி தீக்ஷணை -காருண்ய ஏக ப்ரத-திருக்கண்கள் போல் மத்ஸ்ய மூர்த்தி திவ்ய மங்கள விக்ரஹம் –கடாக்ஷத்தாலே போஷித்து அருளுபவர் -பிரமனுடைய ஆபத்தைப் போக்கி அருளியதற்கு மங்களா ஸாஸனம்

———–

ரஜோ ரஜஸ் பிரசமனம் –ப்ரபந்ந பாரிஜாதாக்ய ப்ரபந்தய யதாமஹே –4-

தொண்டர் அடிப் பொடிகளே ரஜஸ் குணங்களை ஒழித்து விபரீத அஞ்ஞானங்களைப் போக்கி அருளும் என்கிறார்-இதற்காகவே இந்தப் பிரபந்தம்

ப்ரபத்யே சதா பத யோகோ

ப்ரபன்னர்களுக்கு வேண்டிய அர்த்தங்களைத் தெளிவாக வழங்குவதால் இந்தத் திரு நாம

——————

பிரபத்தே மானஸ ஸுபாஹ்யம் ஸ்வரூபம் அதிகார் யபி |
ப்ரபந்நானாம் குரவ் வ்ருத்தி ஸ்ரீம்ஸே ஸூரிஷு சத்சு ச–5

விஹிதேஷு வ்யவஸ்தாநம் வர்ஜநீயம் பலம் ததா |
ஏதே தசார்த்தே கத்யந்தே த்ரயந்தாத்ய அர்த்த ஸங்க்ரஹாத் ||
–6-

இதில் வேதாந்த சாரமாக பத்து விஷயங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன –
1-திடமான வேத பிரமாணம் உள்ள பிரபத்தி -பிரமாண பத்ததி -ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகமம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றில் உள்ள பிரமாணங்கள்
2-ப்ரபத்தியின் ஸ்வரூபம் –ஆர்த்த -திருப்த ப்ரபத்திகள் -அங்கங்கள்
3-அதிகாரி ஸ்வரூபம்
4-ப்ரபந்ந அதிகாரியின் ஆச்சார்யருக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
5- ப்ரபந்ந அதிகாரியின் ஸ்ரீயப்பதிக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்கள் -திருவாராதனம் –
6-ப்ரபந்ந அதிகாரியின் நித்ய முக்தர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
7-ப்ரபந்ந அதிகாரியின் பாகவதர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-என்னைப் போலாவாது நினைக்க வேண்டும் என்று அன்றோ அவன் வார்த்தை
8-ஸாஸ்த்ர விஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
9-ஸாஸ்த்ர நிஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
10-பல ஸ்வரூபம்

—————-

ஸ்ருத்தார்த்த மனனஸ் தேம்நே மம நேதரதா ஸ்ரம |
ஸோதவ்யம் அத்ர ஸ்கலிதம் ஸத்பிர் விஷய கௌரவாத்
||–7-

க்யாதி லாப பூஜார்த்தமாகச் செய்யப்பட வில்லை
தாம் பெற்ற உயர்ந்த ஆச்சார்ய உபதேசங்களின் சாரமே இப்பிரபந்தம்
குற்றம் குறைகளை பெரியோர் க்ஷமிக்கப் பிரார்த்திக்கிறார் இதில்

——————

ப்ரபத்தி தைத்திரீ யாணம் வேத தாவத் விதீயதே ।
ந்யாஸ அப்₄யாஸ ப்ரயோகோ ஹி வஸூரண்யே -தி மந்த்ரத
꞉ ॥ 8 ॥

தைத்ரிய உபநிஷத்தில் இந்தப் பிரபத்தி ந்யாஸம் என்ற பெயரையே யுடைத்ததாக வஸூ ரண்ய -என்று தொடங்கி ஓதப்படும் மந்திரத்தால் பிரயோகிக்கத் தக்கதாக விதிக்கப் படுகிறது –

தஸ்மாத் நியாஸம் ஏஷம் தபஸம் அதிரிக்தம் ஆஹுஹ்” – நியாஸம்
மற்ற வகை தவங்களை விட மேலானது – தைத்திரீய உபநிஷத்
ந்யாஸம் -ஒப்படைத்தல் -வைத்தல் -சரணமடைத்தல் -ஆத்மாவை பரமாத்வாவிடம் சமர்ப்பித்தல்அப்பியாசம் -திரும்ப திரும்ப சொல்வதல்

————

தத்ரோ பாஸ்யம் யதா ₂ ப்₃ரஹ்ம ஸர்வ காரண முச்யதே ।
ப்ரபத் தவ்யம் ததை வேதி விபு விஸ்வஶ்ருக்– இத்யபி
॥ 9 ॥

——————–

ஸூர்யாதிநாம் யதா பூர்வம் தேஜஸ்꞉ கல்பயிதா (அ) ஸி வசி ச ।வஸூவத்
ரமணீயோ (அ)ஸீத்யேவம் ப்₃ரஹ்ம கு₃ணை ஸ்துதிம்
॥ 10 ॥

இந்த இரண்டு ஸ்லோகங்களுக்குத் தாத்பர்யம் -அவ்வுபநிஷத்தில் ஸர்வ காரணமான பர ப்ரஹ்மம் உபாஸிக்கத் தக்கதாகச் சொல்லப்படுகிறது –
அப்படியே அப்ரஹமம் விபு என்றும் நீர் ப்ரபஞ்சங்களைப் படைக்கிறவர் என்றும் -ஸூர்யன் முதலிய தேஜஸ் பதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்கும் போதும் உன்போலவே தேஜஸ் கொடுப்பவர் நீர் என்றும் -பொன் போல் அழகிய திருமேனியைக் யுடையவர் நீர் என்றும் -ஸ்துதிக்கப்பட்டதாய் அதுவே சரணம் அடையத்தக்கது என்றும் சொல்லப்படுகிறது –

———-

ஜீவாத்மாநம் ஹவிஸ் ꞉ க்ருத்வா தச் ச₂ரீரம் மஹீயஸி ।
“ப்₃ரஹ்மாக்₃நவ் ஜுஹுயாத்” ஓமித்யநேந ஆம்நாய ரூபிணம்
॥11॥

இஜ் ஜீவனை ஒரு ஹவிஸ்ஸாகப் பாவித்து இஜ் ஜீவர்களை சரீரமாக யுடைய பர ப்ரஹ்மமாகிற அக்னியில் வேத ரூபமான ஓம் என்னும் ப்ரணவத்தால் ஹோமம் செய்ய வேண்டும் –

த்வய ரூபிணம் –பாடபேதம்-இந்த ஸ்லோகம் இந்தப் பாட பேதத்துடன் பிரமாணமாக முமுஷுப்படி வியாக்யானத்திலும் உள்ளது

—————

இதி ப்ரபத்தே ராம்நாத ꞉ ப்ரயோக₃꞉ ப்ரணவாத்மநா ।
தஸ்யைவம் விது₃ஷோ யஜ்ஞ ஶரீரே தத்ர கல்பித
꞉ || 12 ||

இப்படி பிரணவ ரூப மந்திரத்தால் பிரபத்தி பிரயோகிக்கத் தக்கதாக வேதத்தில் ஓதப்படுகின்றது -இப்படி பிரபத்தி செய்தவருடைய பிரபத்தியை ஓர் யாகமாகவும் அவர் சரீரத்தை அதற்கு சாதனமாகவும் அவ் வேதத்தில் காட்டப்பட்டு இருக்கின்றது –

மஹா நாராயண உபநிஷத்தில் உள்ள மந்த்ரம்
தஸ்யைவம் விது₃ஷோ யஜ்ஞ ஶரீரே தத்ர கல்பித -இப்படி ந்யாஸம் – பிரபத்தியை அறிந்தவன் -யஜமானனும் இவன் சரீரத்துடன் கூடியவன் -நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் -நெஞ்சு ஹோம குண்டம் -சாந்தி அடைவதே தக்ஷிணை -மனதே ப்ரமன்

உத்தேச் யத்வம் ஜநநி பஜதோ உஜ்ஜிதோபாதி கந்தம்
ப்ரத்யக் ரூபே ஹவிஷி யுவயோ ஏக சேஷித்வ யோகாத்
பத்மே பத்யுஸ் தவ ச நிகமை: நித்யமந் விஷ்யமாணோ
நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயந் மாநஸம் ந:–6-

அன்னையே அரியும் நீயும் மருவியே யுரிமை கொள்ளும்
தன்மை சாலாவி யென்னும் அவி தரும் வேள்வி தன்னில்
பின்னையும் மறைகளோரும் மகிமையின் மிகைமை தேறும்
நன்மையே கொள்ளுமுள்ளக் களி நடம் புரிவர் நாமே. — (6)

[ஜநநி! அன்னையே! ;
பத்மே! – இலக்குமியே!;
ப்ரத்யக் ரூப – ஜீவாத்மாவாகிற;
ஹவிஷி – ஹோமம் செய்யப் பெறும் த்ரவ்யத்தில், ஆத்ம ஸமர்ப்பண யக்ஞத்தில்;
உஜ்ஜிதோபாதிகந்தம் – மற்றொரு வஸ்துவை இடையிடாமல் , நேராகவே;
உத்தேச் யத்வம் – ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ளுகிறபடியை;
பஜதோ – அடையா நின்ற;
யுவயோ – தேவரீர்கள் இருவருடைய;
ஏக சேஷித்வ யோகாத் – ஒரே சேஷியாயிருக்குந் தன்மை கொண்டு;
பத்யு: — தேவரீருடைய பர்த்தாவினுடையவும், பகவானுடையவும்;
தவச: — தேவரீருடையவும்;
நித்யம் – எப்பொழுதும்;
நிகமை –வேதங்களால்;
அந்விஷ்யமாண — தேடும்படிக்குள்ள;
மஹிமா – பெருமையானது;
ந: அடியோங்களுடைய;
மாநஸம் – மநத்தை;
நர்த்தயந் – ஆச்சர்யத்தால் ஆடச் செய்து கொண்டு;
அவச்சேதம் – இவ்வளவு என்று அளவிடப்படும் தன்மையை, பிரிவை, எல்லையை;
ந பஜதி – அடைகிறதில்லை.

தாயே! லக்ஷ்மியே! தேவரீரும் பகவானும் ஜீவாத்மாவாகிற ஹவிஸ்ஸைக் குறித்து ஒரே சேஷியாதலால் காரண சேஷமேயில்லாமல் நேராக உத்தேச்யம் ஆகிறீர்கள்.
வேதாந்தங்களும் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றதும், எங்கள் மனத்தைக் கொந்தளிக்கச் செய்கின்றதுமான தேவரீருடைய பெருமைக்கு எல்லையே இல்லை.]

————

ப்ரபத்திம் தபஸாம் ஏஷாம் ந்யாசாக்யா மாஹுருதமா꞉ ।
ஆம்நாதம் கட₂ வல்லீஷு ப்ரபத்தேர் வசகம் த்₃வயம்
॥ 13-

அவ்வுபநிஷத்தில் ஸத்ய வாக்கை முதலாகத் தொடங்கிச் சொல்லப்பட்டு இருக்கும் பதினோரு தவங்களிலும் இது மேலான உயர்ந்த தவமாக ஓதப் பட்டு இருக்கிறது -கடவல்லி என்னும் உபநிஷத்தில் த்வயம் என்னும் மஹா மந்த்ரம் இப்பிரபத்தியின் ஸ்வரூபத்தைச் சொல்வதாகவும் ஓதப்படுகின்றது –

சேஷத்வ பலம் சரணாகதி -பரதந்த்ர்ய பலம் கைங்கர்யம்

————-

ப்ரமாணம் ஸூப₄க₃ம் ப்ராஹ ஶ்வேதாஶ்வர ஸம்ஹிதா ।
ப்ராஹ ச உப நிஷந் ந்யாஸே யதா ₂(அ)நுஷ்டா₂ந த₃ர்ஶிநீ ||
14-

இப்பிரபத்திக்கு ஸ்வேதர உபநிஷத்தை சிறந்த ப்ரமாணமாகச் சொல்லுகிறார்கள் -இப்பிரபத்தியின் அனுஷ்டான க்ர மத்தைக் காட்டும் இவ்வுபநிஷத் கீழ் சொல்லியபடி ஓதுகிறது

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹி தேவம் ஆத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதாஸ் -6-18-

எவன் பிரமனை முன் படைத்தானோ -எவன் பேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தமது விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரம புருஷனை மோக்ஷம் அடைய விரும்பும் அடியேன் சரணம் அடைகிறேன்

—————-

ப்₃ரஹ்மாணம் விததா₄த் யக்₃ரே ” “யஸ் தஸ்மை தி₃ஶதி ” ஶ்ருதி ꞉ ।
ஆத்ம ஜ்ஞாந ப்ரஸா தார்தம் முமுக்ஷு꞉ஶரணம் வ்ரஜேத் ॥ 15 ॥

யாதொரு பகவான் ஆதி காலத்தில் பிரமனைப் படைத்து அவருக்கு வேதங்களைக் கொடுக்கிறாரோ அந்தப்
பகவானை ப்ரஹ்ம ஞானம் பெறுவதற்காக சரணம் அடைய வேண்டும் –

———————-

அபி வத்₄யம் ப்ரபந்நம் ந ப்ரயச்ச₂ந்தி ” ஏவ மாதி₃கா꞉ ।
ப₃ஹவ ꞉ஶ்ருதயோ மாநம், ஶ்ரீ ஶாஸ்த்ரே ப₄க₃வாநபி || 16 |

—————–

ஶ்ரீமந் நாராயணாய ” இதி ப்₃ரஹ்மணே த்₃வய முக்தவான் ।
லக்ஷ்மீ தந்த்நர கமலயா ஶக்ராயைவ ப்ரபஞ்சிதம் ॥
17 ॥

கீழ் இரண்டு ஸ்லோகங்களின் தாத்பர்யம் –
சரணம் அடைந்தவன் ஒருவன் மரண தண்டனை கொடுக்கத் தக்கவனாக இருந்த போதிலும் அவனைக் கைவிடக்கூடாது என்றும் இவை முதலாக அநேக ஸ்ருதிகள் இப்பிரபத்திக்கு பிரமாணங்களாக இருக்கின்றன –
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்திலும் பகவான் இந்தப் பிரபத்தி மந்திரமான ஸ்ரீமன் நாராயண என்றும் தொடங்கிய த்வயம் என்னும் மந்த்ரத்தை ப்ரம தேவனுக்கு உபதேசிக்கிறார்
லஷ்மி தந்த்ரத்திலும் பெரிய பிராட்டியார் தேவேந்திரனுக்கு இவ்வாறு வெளியிட்டு அருளி உள்ளார் –

கிருஷ்ண யஜுர் வதம் 6-5-6-பிரமாணம் -ருத்ரன் ஆதித்யன் -ஜ்யோதிர் தேவதா மன்னித்து விட்ட விருத்தாந்தம்
நத்யஜேயம் கதஞ்சன போல் இங்கும்

————

ததா₂ஸநத் குமாரஸ்ய ஸம்ஹிதா வக்தி ஸாத₃ரம் |
ப்ரபத்திம் ஸர்வ ப₂லதா₃ம் ஸர்வ உபாய அநபேக்ஷணீம் ॥
18 ॥

அப்படியே ஸநத்குமார ஸம்ஹிதையும் இப்பிரபத்தி ஸர்வ பலன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் மற்ற ஸாதனங்களில் எதையும் இப்பிரபத்தி துணையாக வேண்டுவது இல்லை என்றும் சொல்கின்றது –

அடுத்த 5 ஸ்லோகங்கள் லஷ்மீ தந்திரத்தில் பிராட்டி அருளிச் செய்தவை
உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் அவனை பொறுக்கும்
இது மற்ற ஒன்றையும் பொறுக்காது

—————

ப்ரபத்தே ꞉ க்வசித் ₃அப்யேவம் பரா பேக்ஷா ந வித்₃யதே ।
ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வ காம ப₂ல ப்ரதா₃ ॥
19 ॥

இப்பிரபத்திக்கு ஒருக்காலும் வேறொரு துணை வேண்டியது இல்லை -எவர் எவர்கள் எந்த எந்த சமயங்களில் எந்த எந்த பலன்களைக் கோறு கின்றனரோ அவர் அவர்களுக்கு அந்த அந்தப் பயன்களைக் கொடுக்கும்

——–

ஸக்ருத் உ₃ச்சாரிதா ஹ்யேவ தஸ்ய ஸம்ஸார நாஸிநீ ।
ராக்ஷஸா நாம விஸ்த்ரம்பா₄த் ஆஞ்ஜநேயஸ்ய ப₃ந்த₄நே
॥ 20 ॥

————-

யதா ₂ விக₃லிதா ஸத்₃ய: அமோகா₄(அ)ப்யஸ்த்ர ப₃ந்த₄நா ।
ததா ₂ பும்ஸாம விஶ்வாஸாத் ப்ரபத்தி ꞉ ப்ரச்யுதா ப
₄வேத் ॥ 21 ॥

இப்பிரபத்தி ஒருக்கால் அனுஷ்டித்த அளவிலே அவர்களின் பாபங்களைப் போக்கி விடும் -ஆஞ்சநேயரை ராக்ஷஸ குமாரன் ப்ரஹ்மாஸ்திரத்தால் கட்டின போது அங்குள்ள ராக்ஷஸர்கள் அவ்வஸ்திரத்தை நம்பாமல் கயிறுகளினால் கட்ட அப்ரஹ்மாஸ்திரம் நழுவினது போல் இப்பிரபத்தியை அனுஷ்டிக்குமவர்களும் இதை நம்பார்களாகில் இப்பிரபத்தி நிஷ்பலமாய் விடும் –ஆகையால் இதை நம்புவர்களுக்கே இது மோக்ஷத்தைக் கொடுக்கும் –

———

தஸ்மாத்₃ விஸ்ரம்ப₄ யுக்தாநாம் முக்திம் தா₃ஸ்யதி ஸா (அ)சிராத் ।
ஸாதநாந்தர யுக்தாநாம் ப்ரபத்தி ꞉ஸ்வயமேவ வா ॥
22 ॥

இப்பிரபத்தி மோக்ஷத்தை விரும்புபவர்களுக்கு உபாயாந்தரமான பக்தி யோகத்துடன் சேர்ந்தும் தனித்தும் அனுஷ்டிப்பதனால் மோக்ஷத்தைக் கொடுக்கும் –
அதாவது பிரணவம் வேறொரு மந்திரத்துடன் சேர்ந்தும் தனித்தும் செய்கிறவர்களுக்கு அதன் பலத்தைக் கொடுப்பது போலாகும் -கீதையில் அங்க பிரபத்தி -பக்திக்கு அங்கம்
ரஹஸ்ய த்ரயத்தில் -தனித்தே உபாயம்-

————-

ஸாதயேத் முக்தி காமாநாம் விமுக்திம் ப்ரணவோ யதா ₂ ।
யதா ₂(ஆ)ஹ ப₄க₃வான் வ்யக்தம் விஷ்வக்ஸேநாய ஶ்ருண்வதே
॥ 23 ॥

————-

இதர உபாயதவ் ₃ஷ்கர்யாத் அதி ₄காராத் இஹாந்த ꞉|
உபாயமிஹ வக்ஷ்யாமி ப்ரபத்திம் ஸார்வ லௌகிகம் ॥ 24

கர்மயோகம் முதலிய மோக்ஷ உபாயங்களை அனுஷ்டிப்பவருக்கு சக்தி இல்லாமையாலும் அதிகாரம் இல்லாமையாலும்
சர்வருக்கும் ஸூலபமுமாய் அனுஷ்ட்டிக்கத் தக்க மோக்ஷ உபாயமாகவும் ப்ரபத்தியைச் சொல்லுகிறோம் என்று பகவத் ஸாஸ்திரத்தில் பகவான் விஷ்வக்சேனருக்கு எவ்வாறு உபதேசித்தாரோ அவற்றைச் சொல்லுகிறோம் –

———–

கால தோஷாந் மநுஷ்யாணாம் மநஶ் சாஞ்சல்ய யோக₃த் ꞉ ।
விஷயேந்த்₃ரிய ஸம் யோகா₃த் நிஷித்₃த ₄கரணாத ₃பி ॥ 25

————

விஹிதா (அ)கரணாந் நாபி ஜேதும் ஶக்யா க₃ணாதி ₄ப ! |
இந்த்₃ரியாண் இந்த்₃ரியார்தே ₂ப்₄ய꞉ ந்ருணாம் கால ஸ்வ பாவத₄ ꞉ || 26

இக்காலத்தில் கலி தோஷத்தினாலும் -மனஸ் ஓர் இடத்தில் நிலை பெறாமையாலும் -விஷய அனுபவம் செய்வதாலும் –சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யாமையாலும் -கால ஸ்வபாவத்தினாலும் மனிதர்களுக்கு விஷயங்களும் இந்திரியங்களும் ஜெயிக்க முடியாதவையாயே இருக்கின்றன –

———–

தஸ்மாத் து கர்ம யோகே ₃(அ)ஸ்மின் ந அதிகாரோ ஹி வித்₃யதே ।
விஹிதேஷு ச ஸர்வேஷு தத் அபா₄வாந் மஹா முநே ! ॥ 27 ॥

ஆகையால் சிலர்கள் இந்திரியங்களை ஜெயிக்க அசக்தர்களாய் இருப்பதாலும் -சிலர்கள் வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க ஸாஸ்திரங்களில் அதிகாரம் இல்லாதவர்களாக இருப்பதாலும் -எல்லோரும் கர்ம யோகத்தில் அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்

—————

ஜ்ஞாந யோகே₃ஷ்வ பி₄ரதி ꞉ கஸ்யசித்₃ வித்₃யதே ந ச |
தத் அ₃பா₄வாந் மயி ப்ரீதி ꞉ ந ச ப₄க்திஶ்ச ஜாயதே ॥ 28 ॥

அப்படியே ஞான யோகத்திலும் எவர்களுக்கும் ஆசை உண்டாகிறது இல்லை -ஞானம் இல்லாமையால் என்னிடத்தில் -ஸ்நேஹமாவது -பக்தியாவது -உண்டாகிறது இல்லை -ஆகையால் பக்தி யோகத்திலாவது ஞானம் யோகத்திலாவது எவருக்கும் அதிகாரம் இல்லை –

லஷ்மணன் பெருமாள் இடம் பக்தன்
சக்ரவர்த்தி பெருமாள் இடம் ஸ்நேஹம்

————-

தஸ்மாந் ந கர்ம யோகே ₃(அ)ஸ்மின் நாதி ₄காரோ ந ஸாந்யதா ₂
। தஸ்மாந் மத் பாத ₃யுக₃லம் ஐகாந்த் யாச் ச₂ரணம் வ்ரஜேத்
॥29॥

—————

ஆத்மநோ து₃ர்த₃ஶா பத்திம் விம்ருஶ்ய ச கு₃ணாந்மம ।
மத் ₃ஏக உபாய ஸம் ஸித்தி : மாம் ப்ரபந்நோ விமுச்யதே ॥ 30 ॥

ஆகையால் தனக்கு இவ்வாறு நேர்ந்திருக்கும் துர்த்தசைகளையும் இவ்வாறு அகதிகளாய் இருக்கும் அவர்களை ரக்ஷிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் என்னுடைய தயை முதலிய ஸத் குணங்களையும் நன்றாக யோஜித்து என் திருவடிகளையே ஒரே நிச்சயம் யுடையவனாய் சரணம் அடைய வேண்டும் –என்னை ஒருவனையே சரணம் அடைந்தவர் இந்த ஸம்ஸாரக் கிலேசங்களில் நின்றும் விடுவிக்கப் படுவார்கள்

புகல் ஒன்றுமே இல்லாத துர்த்தசை
ஆறு எனக்கு பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்

——————

ஆநு கூல்யஸ்ய ஸங்கல்ப꞉ ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநம் ।
ரக்ஷிஷ்ய தீதி விஶ்வாஸோ கோ₃ப்த்ருத்வ வரணம் ததா ₂ ॥ 31 ॥

—————-

ஆத்ம நிஷேப கார்பண்யே ஷட்₃ விதா ₄ஶரணாக₃தி ꞉ ।
அந்யா ச ப்ரபத்த்யா மாம் ஆகிஞ்சந்ய ஏக பூர்வகம்
॥ 32॥

பகவானுக்கு அனுகூலனாய் வர்த்திப்பதும் -பகவானுக்கு பிரதிகூலமான செயல்களை விடுவதும் -பகவான் நம்மைக் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்று நம்புவதும் -அவனையே தன்னை ரக்ஷகனாக கோறுவதும் -தன் ஆத்மாவை அவனிடம் சமர்ப்பணம் செய்தும் -தான் போக்கற்ற நிலையில் இருப்பதை நினைத்து இருப்பதுமாகிய -இவ்வாறும் சரணாகதி என்று சொல்லப்படும் –
இங்கு சொல்லப்பட்ட ஆனுகூல்ய சங்கல்பம் முதலிய ஐந்து அங்கங்களோடு கூடிய ஆத்ம நிஷேபமே ப்ரபத்தியாக கீழே சொல்லப்படுவது இவ்வங்கங்கள் பிரதானங்கள் என்று தோற்றுகைக்காக –

———–

மாம் மாதவ இதி ஜ்ஞாத்வா மாம் க₃ச்சே₂ச் ச₂ரணம் நர꞉ ।
ஏவம் மாம் ஶரணம் க₃ச்ச₂ன் க்ருத க்ருத்யோ ப₄விஷ்யதி ॥ 33 ॥

பிரபத்தி செய்யும் ஒருவர் என்னை ஸ்ரீ யப்பத்தி என்றும் அறிந்து நாம் வேறொரு கதி இல்லாமல் இருக்கிறோம் என்றும் எண்ணத்தை முன்னிட்டு மேல் சொல்லிய ப்ரபத்தியினால் என்னை சரணம் அடைய வேண்டும் என்று பகவான் அருளிச் செய்தார் –

23 ஸ்லோகம் தொடங்கி இது வரை விஷ்வக் சேனருக்கு பகவான் பஞ்ச ராத்ர சாஸ்திரத்தில் உபதேசம்

—————

ராமாயணே ச ப₄க₃வான் பா₄ரதே ச யது₃க்தவான் ।
“ஸக்ரு தேவ ப்ரபந்நாய தபா₃ஸ்மீதி ச யாசதே ॥
அப₄யம் ஸர்வ பூ₄தேப்₄யோ ததாம் ஏதத் விரதம் மம
॥34-

இவ்வாறு என்னை சரணம் அடைந்தவர் க்ருதக்ருத்யராய் விடுவர் -இதை ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ மஹா பாரதத்திலும் பகவானே அருளிச் செய்துள்ளார் –

என்னிடத்தில் ஒருக்கால் பிரபத்தி செய்தவருக்கு ஸர்வ பூதங்களில் இருந்தும் பயம் இல்லாமையைக் கொடுக்கிறேன் -இப்படி ப்ரபன்னர்களுக்கு அபய ப்ரதானம் அளிப்பது என்னுடைய விக்ரஹம்

———-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி மா ஶுச꞉ ” ॥ 35 ॥

மோக்ஷ சாதனங்களாக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மயோகம் முதலிய ப்ரவ்ருத்தி தர்மங்களையும் -பலசாதனங்களாக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் ஸர்வ கர்மங்களையும் விட்டு என்னையே ஒருவனையே ரக்ஷகனாக சரணம் அடைய வேண்டும் -மோக்ஷ சாதனமாக அனுஷ்ட்டிக்க வேண்டிய துராசையை விடுவதே வேண்டும் -பிரபதிக்கு சஹகாரியாக நினைத்து மற்ற கர்மங்களையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்-இப்படிச் செய்த ப்ரபன்னனுக்கு அனைத்தும் பாபங்களையும் பிரதிபந்தகங்களையும் நானே போக்கி அருளுகிறேன் -இவற்றைப் பற்றித் துக்கம் பட வேண்டாமே

———-

வரதா₃நாத் வசிஷ்ட₂ஸ்ய தேவதா பாரமார்த்₂ய வித் ।
பராஶர꞉ ப்ரணி ஜகௌ₃ புராணே வைஷ்ணவே ததா ₂ || 36 |
|

வசிஷ்ட மஹரிஷியின் அருளாலே -வரபலத்தினால் -பரதத்வம் பற்றி அனைத்தையுமே உள்ளபடி அறிந்த பராசர முனிவரும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பிரபத்தியின் மஹாத்ம்யத்தை அருளிச் செய்துள்ளார்

வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர் -பரம்பரை

————

தாவ தார்த்திஸ் ததா ₃ வாஞ்சா₂ தாவந் மோஹ꞉ ததா ₃(அ)ஸூக₂ம் ।
யாவந்ந யாதி சரணம் த்வாம் அசேஷாக₄நாஸநம் ॥ 37 ॥

யாவன் ஒருவன் ஸர்வ பாபங்களையும் நாசம் செய்து அருளும் உம்மை சரணம் அடையவில்லையோ அப்பொழுது அவனுக்குப் பீடைகளும் வீணாசையும் கொடு மோஹமும் கஷ்டமும் உண்டாகும் என்கிறார் பராசரர் –

ஆர்த்தி -வாஞ்சை -மோஹம் -ஸூகம் -நான்கும் இருக்கும்
அதுவரை துடிப்பு -இழந்த ஐஸ்வர்யம் கிடைக்க -சரணாகதி பண்ணினதும் போகும்
வாஞ்சை -விருப்பம் -புதிய சொத்து -அர்த்தார்த்தி -கீதை -இவன் இரண்டாம் அதிகாரி
மோஹம் -ஜிஜ்ஜாசூ -கைவல்யார்த்தி -மயக்கம்
சுகம் -ஐஸ்வர்ய கைவல்ய அனுபவம் சுகம் -தன்மையும் போகும் அன்றோ

——–

கமல நயந வாஸூ தேவ விஷ்ணோ தரணிதர அச்யுத ஶங்க₂சக்ரபாணே ।
ப₄வ ஶரணமி தீரயந்தி யே வை த்யஜ ப₄ட தூ₃ர தரேண ॥ 38 ॥

தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவரே -வாஸூ தேவரே –விஷ்ணுவே-பூமியைத் தரிப்பவரே -ஆஸ்ரிதரை நழுவ விடாத அச்யுதனே –திருக்கைகளில் திரு வாழி திருச் சங்குகளை யுடையவரே -உம்மையே ரக்ஷகராக கைவிட எவர் சரணம் அடைகிறார்களோ -அவர்களை பாபங்கள் தீண்டாமல் செய்து அருளி யமபடர்களை அவர்களை வெகு தூரத்திலே இருந்து விட்டுவிட வேண்டும் என்றும் ஆணையும் செய்து அருளுகிறாயே

அஜாமிளா உபாக்யானம் -ஸ்ரீ மத் பாகவதம் -நாராயணா கூப்பிட்டதும் -யமபடர் -தூரம் போன வ்ருத்தாந்தம் -என் பேரைச் சொன்னாய்-அடையாளம் -சங்கேதம் -பரிஹாஸம் -எதற்காக சொன்னாலும் அசேஷ குற்றங்கள் இல்லாமல் போக்கும் அன்றோ -பரிகார மது ஸூதன ப்ரபந்நான் -செவிக்கு இறைஞ்சி சாதுவராய் போம் என்றான் -நமன் தமரால் ஆராயப்படார் அன்றோ

———-

மநுரப்யாஹ ப₄க₃வான் கூ₃ட₄ம் ஸந்யாஸ வைபவம் ।
அர்சா நாராயணஸ்யேதி ப்₃ருவன் வர்ணாஶ்ரம க்ரியா꞉
॥ 39 ॥

அர்சா நாராயணஸ்-என்று பகவானுடைய ஆராதனத்தைச் சொல்லத் தொடங்கிய மனுவும் இப்பிரபத்தியின் வைபவத்தை சமத்காரமாக அருளிச் செய்துள்ளார்

ஸந்யாஸம் -சரணாகதி -பிரபத்தி -பர்யாயம்

—————

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்த வைஷ ஹ்ருதி ₃ஸ்தித₂ ꞉ ।
தேந சேத விவாத ₃ஸ்தேமா க₃ங்கா₃ம் மா குரூன் க₃ம꞉ ॥ 40 ॥

ஸர்வ பிராணிகளுக்கும் அந்தர்யாமியாகவும் -ஸூர்ய மண்டலத்தில் மத்யவர்த்தியாயும் சர்வாதிகாராயும் இருக்கும் பகவான் உன்னுடைய ஹ்ருதயத்தில் வஸிக்கிறார் -அவருடன் உனக்கு-வழக்கு இல்லாமல் -அத்வேஷம் மாத்திரமே -விலக்காமை ஒன்றே -இருந்தால் -நீ நற்கதிகளைப் பெறுவதற்கு கங்கா தீர்த்த யாத்ரைக்கோ குருஷேத்ர திவ்ய தேச யாத்ரைக்கோ போக வேண்டாமே என்று உபதேசிக்கிறார் –

கங்கை கங்கை வாசகத்தால் கடுவினை களையலாமே
யம -நியமிப்பவர்உள்ளும் புறமும் நியமிப்பவர் -ஸூர்ய மண்டத்தில் இருப்பவர் அவரே அரசன் -ஒத்துண்டாலும் ஒத்துக் கொள்ளா விட்டாலும் கங்கா ஸ்நானம் வேண்டாம்கங்கை நீர் குடைந்தாடும் வேட்க்கை என்னாவதே -திருமாலை -இதன் தமிழ் ஆக்கம்நமன் வேறு கொண்டு தம்முள் வைத்திடாமையால் -விலக்காமல் -என்னுடையவன் என்று கொண்டால் யமபடர் தீண்டார்கள் அன்றோ

———–

த₃க்ஷிணா ஶாபதே ரத்ர ந முக்₂யாஹ்ரு ₃யஸ்தி ₂ திஸ் ꞉ ।
அந்த ꞉ ப்ர விஷ்ட꞉ஶாஸ்தா யோ ஜநாநாம் யமயத்யபி ॥
41 ॥

யம –தெற்கு திக்கு அதிபதி நமனை இங்கு சொல்ல வில்லை
வியாபித்து உள்ளும் புகுந்து நியமிக்கும் ப்ரஹ்மத்தை சொன்னவாறு -எங்கும் உளன் கண்ணன்

————-

ஆத்மாந மந்தரஸ் தஸ்ய ம்ருத்யுர் ம்ருத்யோ ꞉ஹ்ருதி ₃ஸ்தி₂த ꞉ ।
தேந ஸர்வாதி ₄ராஜேந விவஸ்வத்₃பி₃ம்ப₃ வர்தி நா ॥ 4
2 ॥

ஸர்வ பிராணிகளின் உள்ளே புகுந்து நியமிப்பவன் –ஆத்மாவைப் அறிய ஒண்ணாதவன் -மிருத்யுவுக்கும் மிருத்யுவானவன் -அவனுடன் வழக்கு இல்லாமல் இருப்பதாவது அவனிடம் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவதே

———–

அவி வாத₃ஸ்து தஸ்யைவ பாத ₃யோராத்மநோ(அ)ர்பணம்।
யோந்யதா ₂ஸந்த மாத்மாநம் அந்யதா ₂ ப்ரதி பத்₃யதே ।
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா ॥43||

ஆத்மா ஸ்வ தந்த்ரன் என்றும் நினைத்து செயல்படுபவன் -பிறர் நன் பொருளை அபஹரிப்பவன் -ஸர்வ பாபங்களையும் செய்தவன் ஆகிறான்

———-

தஸ்மாத் ஸர்வ நியந்தாரம் ஸர்வேஷாம் ச ஹ்ருதி ₃ஸ்தி₂ தடம் ।
ப₄க₃வந்தம் ப்ரபந்நா யே தீர்தா₂தி ₃: தை : விஶுத்₃ த₄யதி ॥ 44 ॥

ஆகையால் ஸர்வ நியாமகனாய் ஸர்வ அந்தர்யாமியாக இருக்கும் பகவானை எவர்கள் சரணம் அடைகிறார்களோ அவர்கள் புண்ய தீர்த்தங்களையும் மிக்க பாவநமாக ஆக்கி விடுகிறார்கள்

பாத தூளி பெறுவதால் பாவனம் பெறுகிறோம் அன்றோ

————-

அர்தோ ₂(அ)யம் ப₃ஹுஶ꞉ ப்ரோக்தோ சவ்நகாத்₃யைர் மஹர் ஷிபி₄꞉ ।
“தாவத்₃க₃ச்சே₂த் து தீர்தா₂ நி ஸரிதஶ்ச சராம்ஸி ச ।
யாவந்நா பூ₄ச்ச பூ₄பால ! விஷ்ணு ப₄க்தி பரம் மந
꞉ ॥ 45 ॥

————-

ப₄வத்₃ விதா₄ பா₄க₃வதா ꞉ தீர்த ₂பூ₄தா ꞉ஸ்வயம் ப்ரபோ ₄ ! |
தீர்தி ₂குர் வந்தி தீர்தா ₂ நி ஸ்வாந்த ꞉ஸ்தேந க₃தா ₃ப்₄ருதா ॥ 46 ||

கதாதரன் -கயாவில் உள்ள பெருமாள் -இவரிடம் சரணாகதி அடைந்தவர்கள் தீர்த்த நதிகளையும் பாவனமாக்கும்-துலா மாச – -கங்கையில் புனிதமாகிய காவேரியில் வந்து-புனிதத்தன்மை பெருகும் தீர்த்த நதிகள் –

———-

ப்ரமாணமியதே ₃ வாலம் ப்ரபத்தே ꞉ வ்யாஸ சவ்நகவ் ।
பரோக்த வந்தவ் யதா ₂ஶ்ரீமத்₃ விஷ்ணு த₄ர்மே ச பா₄ரதே ॥ 47 ॥

இவ்வர்த்தம் சவுனாக மஹரிஷிகளாலும் சொல்லப்படுகின்றது -இதுவரையில் உமது மனம் விஷ்ணு பக்தியைப் பெற வில்லையோ அதுவரை புண்ய தீர்த்தங்களில் நீராட வேண்டும் -பக்திமான் களாகில் வேண்டாம் என்றும் கருத்து –

பாகவதர்கள் புண்ய தீர்த்தங்களாகிறார்கள்-அவர்கள் திரு உள்ளத்தில் தியானித்து இருக்கும் பகவானாலேயே தீர்த்தங்களையே பாவனமாக்கி அருள்கிறார்கள் –

மேலும் விஷ்ணு தர்மத்திலும் மஹா பாரதத்திலும் பல பிரமாணங்கள் உள்ளன

————–

வ்ருதை ₂ வப₄ வதோ யாதா பூ₄யஸீ ஜந்ம ஸந்ததி ꞉ ।
தஸ்யாமந்ய தமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ॥ 48 ॥

உனக்கு வீணாக அநேக ஜென்மங்கள் கழிந்தன -அவற்றுள் இதுவும் ஒரு ஜென்மமாகி விடும் என்றும் அறிந்து நீ பகவானை சரணம் அடையக் கடவாய்-

———–

அத ₂ பாதக பீ₄தஸ் த்வம் ஸர்வ பா₄வேந பா₄ரத |
விமுக்தாந்ய ஸமாரம் போ ₄ நாராயண பரோ ப₄ வ ॥ 49 ॥

தர்ம ராஜனே நீர் பாதகங்களில் நின்றும் பயந்தீராகில் எல்லாமே பிரயத்தனங்களையும் விட்டு ஸ்ரீ மன் நாராயணனையே பராயணமாகப் பற்றிப் போர வேண்டும் –

——

ப்ரத₂ம- ப்ரமாண பத்₃ததி ஸம்பூர்ணம்

————–

அத -த்வதீய -ஸ்வரூப பத்ததி

பு₃த்₃திர் ₄அத்₄யவஸா யாத்மா யாச்நா பர்யவஸாயிநீ ।
ப்ராப்யேச்சோ ₂ரநுபாயஸ்ய ப்ரபத்தே ரூபமுச்யதே ॥ 1 ॥

ஒரு பேற்றைப் பெறுவதற்கு வேறொரு கதி இல்லாமல் இருக்கும் ஒருவர் தம் இஷ்ட தேவதையை உத்தேசித்து திருட அத்யவசாயத்துடன் அப்பேற்றைப் பெறுவதற்கு அவர் செய்யும் பிரார்த்தனா ரூபமான தியானமே ப்ரபத்தியின் ஸ்வரூபம் –

பிரபத்தி -சரணாகதி இரண்டும் ஸ்த்ரீ லிங்கம்–யாசகம் -பிச்சை -இங்கு ஸ்த்ரீ லிங்கம் யாச்-ஞா -பிரபத்தி பிச்சை போல் தானே -நீதான் கொடுக்க வேண்டும் இவரே உபாயமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் -இதுவே பிரபத்திபிரபத்தி -சாமான்ய சப்தம் -சரணாகதி -விசேஷ சப்தம் -பிரபத்தி முத்தி சரணாகதி ஆகும் -பால் பால்கோவா ஆவது போல்பகவத் விஷய த்யானம் -அன்புடன் கூடிய ஞானம் பக்தி யாவது போல்

———————

அநந்ய ஸாத்யே ₄ஸ்வ அபீ₄ஷ்டே மஹா விஶ்வாஸ பூர்வகம் ।
தத் ஏக உபாய தாயாச் நா ப்ரபத்தி ꞉ஶரணாகதி ꞉
” ॥ 2 ॥

வேறொரு உபாயங்களால் பெறுவதற்கு அஸக்யமாய் இருப்பது ஒரு -தான் கோறிய பயனைப் பெறுவதற்கு மஹா விவாசத்தை முன்னிட்டு பகவான் ஒருவனையே உபாயமாகக் கோலி பிரார்த்திப்பது பிரபத்தி யாகும் -அதுவே சரணாகதி எனப்படுகிறது –

இங்கும் யாச்நா -யாசகம் –

விஸ்வ சேந சம்ஹிதை பிரமாணம் இது

————-

ஶரணாக₃தி ஶப்₃தேந ₃ப்ரபத்திஸ் து விஸேஷிதா ।
ப்ரபத்திம் ஸம் ஶ்ரயேத்₃ப₄க்த்யா ஶரணாக₃தி லக்ஷணம் ॥ 3 ॥

இங்கு பிரபத்தி சரணாகதியால் விசேஷிக்கப்பட்டு இருப்பதால் ப்ரபத்தியை சரணாகதியுடன் கூடிய பக்தியுடன் அனுஷ்ட்டிக்க வேண்டும் -தான் கோறிய பலனைக் கொடுக்கும் சுமையை பகவானிடம் சுமத்தும் பர சமர்ப்பணமே சரணாகதி யாகம் –

————-

இதி ஹ்யுக்தம் ப₄க₃வதா விஷ்வக்ஸேநாயா ஸாத₃ரம்।
ஆர்த்த ப்ரபத்திரித்யுக்தா ஸைஷா பஞ்சாங்க₃ ஸம்யுதா ॥ 4

இந்தப்பிரபத்தியை பகவான் விஷ்வக்சேனருக்கு ஆதரத்துடன் உபதேசித்து அருளி உள்ளார் -ஐந்து அங்கங்களோடு கூடிய இப்பிரபத்தி ஆர்த்த பிரபத்தி ஆகும்

———–

அஹம் அஸ்ம்யபராதாநாம் ஆலயோ (அ)கிஞ்சநோ (அ)க₃தி ꞉ ।
த்வமேவ உபாய பூ₄தோ மே பவதி ₄ ப்ரார்த₂நாமதி ꞉ ॥ 5 ॥

நான் அபராதங்களுக்கு எல்லாமே இருப்பிடம் -சக்தி இல்லாதவன் -அகதியாகவும் இருக்கிறேன் -ஆகையால் எனக்கு நீரே உபாயமாக வேண்டும் என்றும் பகவானைப் பிரார்த்திப்பதே சரணாகதி என்று சொல்லப்படும் -இச்சரணாகதி பகவான் இடத்தில் மட்டுமே செய்யத்தக்கது –

அஹிர் புத்த்ய சம்ஹிதை

உபாயமாக ஆனவனாக இரு என்று பிரார்த்திக்க வேண்டும் -அவர் எப்பொழுதும் உபாயம் உயயம் -தத்தம் ஸ்வரூபமே இது -நாம் இசைவதே வேண்டுவது -ப்ராப்யமாக இயற்க்கை -நமது மாட்டாமையால் பாயமாக்குகிறோம் கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குகிறோம்
சேஷ புதன் -சேஷத்வம் இசைந்து -கைங்கர்யம் செய்ய வேண்டுமே

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

——–

ஶரணா₃தி ரித்யுக்தா ஸா தேவே (அ)ஸ்மின் ப்ரயுஜ்யதாம் ।
ஆத்மநோ து₃ர்த₃ஶாபத்திம் விம்ருஶ்ய ச ஹரேர் கு₃ணான்॥ 6 ॥

பிரபத்தி செய்ய வேண்டும் ஒருவன் தான் அகதியாய் இருப்பதால் உண்டான துர்தசையையும் -அகதிகளை ரக்ஷிப்பதற்குப் போந்தவைகளான பகவானுடைய கல்யாண குணங்களையும் நன்றாக யோசித்து பகவான் ஒருவனையே உபாயமாக அறிந்து அவனையே சரணம் அடைகிறவன் சம்சார பந்தத்தில் இருந்து விடுபடுகிறான் –

மநோ பாவம் வேறே -புத்தி உறுதி வேறே-

———-

தத் ஏக உபாய ஸம் ஸித்தி ꞉ தம் ப்ரபந்நோ விமுச்யதே ।
வாக்யேஷ் வேதேஷு பஞ்சாங்கா₃ ப்ரபத்திர் லக்ஷ்யதே யதா ₂ ॥ 7 ॥

—————

நிஷேபா பரபர்யாயோ ந்யாஸ ꞉ பஞ்சாங்க₃ லக்ஷண : ।
ஸந்யாயஸஸ் த்யாக₃ இத் யுக்தா ꞉ஶரணா க₃தி ரித்யபி ॥ 8 ॥

மேல் சொல்லிய வாக்யங்களினால் ஐந்து அங்கங்களோடு கூடிய பிரபத்தி காட்டப்படுகின்றது -இப்பிரபத்தியே நிஷேபம் என்றும் ந்யாஸம் என்றும் பஞ்சாங்க லக்ஷணம் என்றும் சன்யாசம் என்றும் த்யாஜ்யம் என்றும் சரணாகதி என்றும் சொல்லப்படுகின்றது –

ப்ராப்யத்தில் இச்சை முதலில் வேண்டும்
உபாயம் தேடி-மற்றவற்றை எல்லாம் சவாசனமாக விட்டு – அவனே உபாயம் என்ற மஹா விசுவாசமும் வேண்டுமே-அவனையும் பிரார்த்திக்கவும் வேண்டுமே

நிஷேபம் -ந்யாஸம் -ஸந்யாஸம் -தியாகம் -சரணாகதி -பிரபத்தி பர்யாயம்
நிஷேபம்-சமர்ப்பித்தல் -ந்யாஸம்-வைத்தல்-ஸந்யாஸம்-நன்கு விட்டு விடுத்த, தியாகம்-தொலைத்தல் -சரணம் ஆகதி

பிரபத்தி -உபாய வர்ணம் -ப்ரபன்னனுக்கு விசேஷணம் இது -தாண்ட ஆசை உள்ளதால் ஓடம் ஏறுவது போல் அதிகாரி விசேஷணம் இது -ஸ்ரீ யபதியே உபாயம் என்று -வரித்து -பற்றும் பற்றும் உபாயம் அல்லவே –

————

ஆநுகூல்யஸ்ய ஸங்கல்பாத் ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநாத் ।
அங்கா₃நாம் லக்ஷ்யதே ரூபம் லக்ஷ்மீ தந்த்ர ப்ரகாரத ꞉ ॥ 9 ॥

லஷ்மி தந்திரத்தில் ஆனுகூல்ய சங்கல்பம் பிரதிகூல்ய வர்ஜனம் இவ்விரண்டு அங்கங்களினாலேயே மற்றைய மூன்று அங்கங்களின் ரூபமும் ஒரு விதமாக கட்டப்படுகின்றன -இவற்றுள் அங்கிக்குச் சொல்லப்பட்ட பலனும் இவ்வங்களுக்கும் பயன் என்று பிரிவாக இவைகளின் ரூபங்களும் காட்டப்படுகின்றன –

————–

தேஷாம் அங்க₃ப₂லத்வம் ச தத்₃ரூபம் ச விபா₄க₃ஶ꞉ ।
ஆநுகூல்யமி த₃ம் ப்ரோக்தம் ஸர்வ பூ₄த அநுகூலதா ॥ 10 ॥

பகவான் சொல்வதை அருளிச் செய்கிறார் -நான் ஸர்வ பூதங்களின் உடையவும் உட் புகுந்து இருக்கிறேன் என்ற நிச்சயித்தினால் ஸர்வ பூதங்களிடமும் அனுகூல்யமாக இருப்பதே ஆனுகூல்ய சங்கல்பம் எனப்படுகிறது –

அங்கி யான பிரதானத்துக்கு பலமே அங்கங்களும் பலம் – அங்கங்களுக்குத் தனிப்பலன் இல்லை –

———–

அந்த꞉ஸ்தி ₂தோ (அ)ஹம் ஸர்வேஷாம் பா₄வாநாமிதி நிஶ்சயாத் ।
ஏதேந வியாப்தி விஜ்ஞாநாத் ப்ரபத்தவ் யஸ்ய ஸர்வஶ꞉ ॥ 11 ॥

———–

ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப꞉ ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநம் ।
ஹிம்ஸாத்₃யபாய விரதி ꞉ உக்தா ஸர்வேஷு ஜந்துஷு ॥ 12

மேல் சொன்னபடி பகவான் ஸர்வ வ்யாபி என்றும் அறிந்து இருப்பதால் அவருக்கு நான் அனுகூலமாக வர்த்திக்க வேண்டி இருப்பதால் ஸர்வ ஜந்துக்களிடமும் ஹிம்ஸை முதலிய அபாயங்களைச் செய்வதில் நின்றும் ஒழிவது பிரதிகூல்ய வ்ரஜனம் என்ற சொல்லப்படும்

உளன் சுடர் மிகு சுருதியுள் கரந்து எங்கும் பரந்துளன்-ஆத்ம தர்சனம் —சம தர்சனம் -யோக உச்யதே -பண்டிதன் சம தரிசனமாக இருக்க வேண்டுமே -தேஹ வியுக்த ஆத்ம ஸ்வரூபம் பார்த்தாலும் -அவனே உள்ளே இருந்து நியமிக்கிறான் என்ற புத்தி வந்தாலே இதுவும் வருமே –

——–

அங்க₃ ஸாமக்₃ர்ய ஸம்பத்தே ꞉ அஶக்தேஶ்சாபி கர்மணாம் ।
அதி ₄காரஸ்ய சா(அ) ஸித்₃தே ₄꞉தே₃ஶ கால கு₃ண க்ஷயாத் ॥ 1
3 ॥

—————–

உபாயா நைவ ஸித்₃த்₄யந்தி ஹ்யபாப ஹுலாஸ் ததா ₂ ।
இதி யா க₃ர்வஹா நிஸ்து தை₃ந்யம் கார்பண்ய முச்யதே
॥ 14 ॥

பக்தி யோகம் முதலிய உபாயங்களை அனுஷ்டிப்பதற்கு அவைகளின் அங்க பூர்த்தி இல்லாமையாலும் -அவற்றை அனுஷ்ட்டிக்க சிலருக்கு அதிகாரம் இல்லாமையாலும் -தேச காலங்களின் குணங்கள் குறைவு படுவதாலும் பக்தி யோகம் முதலிய மோக்ஷ உபாயங்களை தலைக்கட்டாதுகள் என்றும் அவைகளுக்கு அபாயங்கள் மேலிட்டு இருக்கின்றன என்றும் கர்வம் அழிந்து மனம் இரங்குவது கார்ப்பண்யம் என்று சொல்லப்படும் –

கிருபணன் சாதனம் இல்லாதவன்-அசக்தன் -அதிகாரம் இல்லாதவன் -தேச காலம் சாதகம் இல்லாதவன்

————–

உபாயாந்தர தவ்ஷ்கர்யாத் தந் நிவ்ருத்திர் ஹி ஸூசிதா ।
அகிஞ்சநாதி ₄காரத்வம் ப்ரபத்தேரபி ஸூசிதம் ॥ 15 ॥

பக்தி முதலிய உபாயாந்தரங்களில் சக்தி இல்லாமையைச் சொல்லுகையாலே ப்ரபன்னர்களுக்கு உபாயாந்தரங்களில் நின்றும் ஓழிகையும் போக்கற்று நிற்கிறவர்கள் ப்ரபத்திக்கு அதிகாரிகள் என்பதும் காட்டப்படுகின்றது –

————

ஶக்தேஸ் ஸூப ஸத₃த்வாச்ச க்ருபா யோகா₃ச்ச ஶாஶ்வதாத் ।
ஈஸே ஶிதவ்ய ஸம்ப₃ந்தா₄த் அநித₃ம் ப்ரத₂மாத₃பி ॥16॥

ஸ்ரீ லஷ்மி தந்த்ர வசனம் மேற்கோள் காட்டுகிறார்

————-

ரக்ஷிஷ்யத் யநுகூலாந்ந ꞉ இதி யா ஸூத்₃ருடா₄ மதி ꞉ ।
ஸ விஶ்வாஸோ ப₄வேச்ச₂க்ர ஸர்வ து₃ஷ் க்ருத நாஸந ꞉ ॥ 17 ॥

பகவான் ப்ரபன்னர்களை ரக்ஷிப்பதற்கு சக்தனாய் இருப்பதாலும் -எல்லாருக்கும் கிட்டும்படி ஸூலபனாய் இருப்பதாலும் -எப்பொழுதும் அருள் பொருந்தியனாய் இருப்பதாலும் -பகவானுக்கும் இவ்வாத்மாவுக்கும் உண்டான அநாதி கால சேஷி சேஷ பாவ சம்பந்தத்தாலும் அனுகூலராய் இருக்கும் நன்மை பகவான் ரஷித்தே தீருவான் என்கிற உறுதியான நம்பிக்கையே மஹா விஸ்வாஸம் எனப்படுகிறது -அது ஸர்வ பாபங்களையும் போக்கி அருளும் என்று ஸ்ரீ லஷ்மீ தேவி தேவேந்திரனுக்கு உபதேசம் செய்து அருளுகிறார்

கோலத்திரு மா மகளோடு கூடி சாலப்பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -காக்கும் இயல்பினன் கண்ணபிரான்

——–

ஸ்வ ரக்ஷ அயோக்₃யதாம் ஜ்ஞாத்வா ப்ரபத்தவ்யஸ்ய யுக்தித꞉ ।
ரக்ஷிஷ்ய தீதி விஶ்வாஸாத் அபீ₄ஷ்ட உபாய கல்பநம் ॥ 18 ॥

தன்னால் சரணம் அடையத்தக்கவரான பகவான் தன்னை ரக்ஷிக்கத் திறமை யுடையவர் என்றும் அறிந்து தன்னை அவன் ரஷித்தே தீருவான் என்ற நம்பிக்கையுடன் கூடியவனாய் தான் கோறிய பயனுக்கு அவனை உபாயமாகக் கோல வேண்டும் –

————–

கருணா வாநபி வ்யக்தம் ஶக்த ஸ்வாம்யபி தே ₃ஹிநாம் ।
அப்ரார்தி ₂ தோ ந கோ₃பாயேத் இதி தத் ப்ரார்த₂நா மதி ꞉ ॥ 19 ॥

பகவான் தயை யுள்ளவராக இருந்தும் -ரக்ஷிப்பதற்கு சக்தராய் இருந்தும் -இப் பிராணிகளுக்கு ஸ்வாமியாய் இருந்தும் -நாம் பிரார்த்தனை செய்யாமல் அவர் நன்மை ரக்ஷிக்கக் கடவரலாராகையால் இங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் –

——

கோ₃பாயிதாப₄வேத்யேவம் கோ₃ப்த்ருத்வ வரணம் ஸ்ம்ருதம் ।
யாச்நா பர்யவஸாயித்வம் ப்ரபத்தேரத ₂ உச்யதே ॥ 20 ॥

ஆகையால் ரக்ஷகராக வேண்டும் என்று பகவானைப் பிரார்த்திப்பது கோப்த்ருத்வ வர்ணம் என்று சொல்லப்படுமாகையாலே தான் இப்பிரபத்தி ஒரு பிரார்த்தனையில் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது –

யாசிப்பதில் முடிய வேண்டுமே

———-

ப்ரபத்தேஸ்து ப்ரபத்தவ்ய ப்ரஸாத ₃த்₃வாரதா ததா ₂ ।
தேந ஸம் ரக்ஷ்ய மாணஸ்ய ப₂லே ஸ்வாம்ய வியுக்ததா ॥ 2
1 ॥

பலமும் அவனதே-பேற்றுக்கு உகப்பானும் அவனே-ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன்-ப்ராப்தாவும் பிராப்திக்கு உகப்பானும் ப்ராபகனும் அவனே –பற்றுவதும் சாதனம் அல்ல பலம் அனுபவத்துக்கு யோக்யதையே இவனுக்கு -எனது ஆவி தந்து ஒழிந்தேன் -எனது ஆவி யார் யான் யார் தந்த கொண்டாக்கினாயே-அசித்வத் பாரதந்தர்யம் வேண்டுமே-

———–

கேஶவார்பண பர்யந்தா ஹ்யாத்ம நிஷேப உச்யதே ।
உபாயே ச ப₂லே சைவ ஸ்வ ப்ரயத்தந நிவர்த்தநம் ॥ 22 ॥

இப்பிரபத்தி பகவானுக்கு அனுக்ரஹத்தை உண்டாக்குவது ஒழிய மோக்ஷத்துக்கு நேராக சாதனம் அன்று ஆகையாலும் இவ்வாறு ப்ரஸன்னரான பாவானால் ரக்ஷிக்கப்படும் சேதனருக்குக் கிடைக்கும் மோக்ஷ ரூபமான பயனில் இவனுடையவன் அல்லாமையாலும் மோக்ஷ சாதனமாகுகையும் மோக்ஷ ரூப பலன்கள் உடையவனாகைக்கும் பகவானிடத்தில் சுமத்துவது ஆத்ம நிஷேபம் என்று சொல்லப்படும் –

———-

ஸ்வாம்யாயத்த மிதி வ்யக்தம் நிஷேபஸ் யாங்கி₃ தா ததா ₂ ।
ஆர்த ப்ரபத்தா வித்யேஷாம் அங்கா₃நாம் சந்நிதி ₄꞉ ததா ₂ ॥ 23 ॥

உபாயத்தை அனுஷ்டிப்பதிலும் அதன் பயனை பெறுவதிலும் தனது ப்ரயத்னத்தைக் கழித்துக் கொள்வதும் பகவானுடைய அதீனம் என்பது வெளிப்படுகின்றது -ஆகையால் ஆத்ம நிஷேபம் என்பதும் அவனது அருளாலே தான் நடக்கும் என்பதும் வெளிப்படுகின்றது –

—————

த்₃ருப்த ப்ரபத்தவ் ஏதாநி ப₄விஷ்யந்த் யுத்தரோத்தரம் ।
ஆர்த த்₃ருப்த விபா₄க₃ஸ்து ஶ்ரீமத்₃ ராமாயணோதி₃ ꞉ || 24 ||

ஆர்த்த ப்ரபத்தியில் மேல் சொல்லிய ஐந்து அங்கங்களும் சேர அனுஷ்ட்டிக்கத் தக்கவைகள் -திருப்த ப்ரபத்தியில் இவ்வங்கங்கள் பின்பும் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாகும் –

தேஹ அவசான முக்தி நாம் அறிந்தது
லௌகிக சுக போகங்களை அனுபவிக்க ஆசை கொண்டு ஒவ்வொன்றும் வர வர அடுத்த அங்கம் வரும்

———-

” ஆர்தோ வா யதி வா த்₃ருப்த ꞉ பரேஷாம் ஶரணாக₃ த꞉ ।
அரி꞉ ப்ராணான் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய꞉ க்ருதாத்மநா ” ॥ 25

மேல் சொல்லியபடி ஆர்த்த ப்ரபன்னர் என்றும் திருப்த ப்ரபன்னர் என்றும் பிரிவினை ஸ்ரீ மத் ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது -அது எங்கனே என்னில் பிறர்களில் எவனாவது ஒருவன் ஆர்த்தனாகவாவது திருப்தனாகவாவது சரணம் அடைவானாகில் ஸாஸ்த்ர நிச்சயமுடைய ஒருவர் அப்படி தன்னைச் சரணம் அடைந்தவன் சத்ருவாக இருந்த போதிலும் தம்முடைய ப்ராணன்களையாவது கொடுத்து அவனை ரக்ஷிக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமன் அருளிச் செய்துள்ளார் –

பரேஷாம் –சொல்லி மீண்டும் அரி ரஜஸ் குணம் தொடர்ந்து இருந்தாலும் –
கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் இன்றி அன்றே வந்தடைந்தேன் போல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும் -ரக்ஷணம் உயர்ந்தது -பெறாப்பேறு போன்றது –

————

யஸ்ய தே₃ஹாந்தர க்ருதே ஸோகோ த்₃ருப்தஸ் ஸ உச்யதே ।
யஶ்ச ப்ராரப்₃ ததே ₃ஹே (அ)பி ஸோசத்யார்தஸ் ஸ உச்யதே ॥ 26 ॥

எவர் ஒருவர் தமக்கு மறுபடியும் ஜென்மம் உண்டாவதில்லை சோகம் உடையவராய் பிரபத்தி செய்கிறாரோ அவர் திருப்த ப்ரபன்னர் என்று சொல்லப்படுகிறார் -எவர் ஒருவர் தனக்கு இப்பொழுது உண்டாய் இருக்கும் தேஹத்திலேயே சோகமுடையவராய் பிரபத்தி செய்கிறாரோ அவர் ஆர்த்த ப்ரபன்னர் என்று சொல்லப்படுகிறார்

————

ஆர்த த்₃ருப்த விபா₄கேந₃ே ப்ரபத்திரிய முச்யதே ।
ஸாதநம் ₄ ப₄க₃வத் ப்ராப்தவ் ஸ ஏவேதி ஸ்தி₂ரா த்₃ருடா₄ || 27 ॥

மேல் சொன்னபடி பிரபன்னர்களின் பிரிவால் இப்பிரபத்தியும் ஆர்த்த பிரபத்தி என்றும் திருப்த பிரபத்தி என்றும் பிரிவுள்ளதாய் சொல்லப்படுகிறது -ஆகிலும் பகவானைப் பெறுவதில் அவரே சாதனம் என்று உறுதியான கருத்து இருக்க வேண்டும்

————-

ஸாத்₄ய ப₄க்தி : ஸ்ம்ருதா சைவ ப்ரபத்தரிதி கீ₃யதே ।
இமம் சார்த ₂மபி₄ப்ரேத்ய வாசோ பா₄க₃வதே யதா ₂ ॥ 28 ॥

இப்பிரபத்தியே -ஸாத்ய பத்தி என்றும் பிரபத்தி என்றும் சொல்லப்படுகிறது -இப்பிரபத்தியை பக்தி பாவமாக சொல்லும் உக்தியிலும் கீழ் சொல்லியபடி இரண்டு த்ருஷ்டாந்தங்கள் காட்டப்படுகின்றன –

பக்தி சாதனமாகக் கொள்ளாமல் பலமாகக் கொள்ள வேண்டும் -சாதன பக்தி உபாயாந்தர கோஷ்ட்டி -ஸ்வரூபத்துக்குச் சேராதே
ஸ்வயம் பிரயோஜனமாக ஸாத்ய பக்தி -இதுவே பலம் -அனுபவமே பிரயோஜனம் -ஆகவே பிரபத்தி போலவே இதுவும்

——————

“ப்ரபந்நஶ் சாதகோ யத்₃ வத் ப்ரபத் தவ்ய꞉ கபோதவத் ।
ரக்ஷ்ய ரக்ஷக யோரே தத் லக்ஷணம் லக்ஷ்ய மேதயோ ꞉” ॥ 29 ॥

ப்ரபன்னர் சாதக பக்ஷி போலவும் -பிரபத்தி செய்யத் தக்கவர் மாடப்புறா போன்றவும் இருக்கிறார்கள் -இவ்விரண்டு பக்ஷிகளுடைய நடவடிக்கைகளே ரக்ஷிக்கத்தக்க வரான ப்ரபன்னருக்கும் ரக்ஷகரான பிரபத்தி செய்யத்தக்கவருக்கும் லக்ஷணங்களாகக் காணத் தக்கவைகள் –
சாதக பக்ஷி தண்ணீர் குடிக்க மேகத்தையே எதிர்பார்ப்பது போல பிரபன்னர் மோக்ஷம் பெற பகவானையே எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்று கருத்து -காட்டில் வேட்டையாடிய ஒரு வேடன் காற்று மழைகளால் அலைந்து அங்கு இருக்கும் ஓர் மரத்தை இருந்த பிராணியை உத்தேசித்து சரணம் அடைய அதில் இருந்த மாடப்புறா அவ்வேடனைக் கண்டு அக்குளிரை யாத்தி தன் சரீரத்தின் மாமிசத்தை இட்டு அவன் பசியையும் தீர்த்த வ்ருத்தாந்தம் –சரணம் அடையப்பட்டவர் சரணம் அடைந்தவரின் வ்யஸனத்தை தீர்க்க வேண்டும் என்று கருத்து –

ப்ரபந்ந ஜன சாதகாம்புஜம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கபோத வியாக்யானம் சரணாகத க்ருத்யம் சொல்லுமே
பிரம்மகிரி என்ற மலையில் ஒரு கொடிய வேடன் இருந்தான். அவன் பறவைகள், மிருகங்களை மட்டுமின்றி பிராமணர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் வேட்டை ஆடிக்கொண்டே காட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான் வேடன். அவனிடம் பிடிபட்ட சில புறாக்களும், பறவைகளும் இருந்தன. இருள் சூழ்ந்தது. மழையும் பெய்ய ஆரம்பித்தது. வேடனுக்குப் பசியும், தாகமும் அதிகரித்தது. அவன் ஒரு மரத்தை அடைந்து ஒரு கிளையில் அமர்ந்து இரவைக் கழிக்க முடிவு செய்தான். ஆனால், அவன் மனமோ மனைவி, மக்களை எண்ணி வருத்தமுற்றது.
அந்த மரத்தில் பல நாட்களாக ஒரு பெண்புறாவும், ஆண் புறாவும் வாழ்ந்து வந்தன. அவற்றில் பெண் புறா வேடனால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைப்பட்டு வேடனிடம் இருந்தது. இதனை அறியாத ஆண்புறா தன் மனைவியை எண்ணி வருந்தியது. வேடன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனிடமிருந்த பெண் புறா, ஆண் புறாவின் செவிகளில் விழும்படியும், ஆண் புறா பெண் புறாவின் காதுகளில் விழும்படியும் பேசத் தொடங்கின. வேடன் உறங்குவதால் பெண் புறாவை விடுவிப்பதாக ஆண் புறா கூற பெண் புறா அதை மறுத்தது. மேலும், ஒன்று ஒன்றை அழித்து உயிர் வாழ்வது உலக இயற்கை. எனவே அந்த எண்ணத்தை விடுத்து விருந்தினனான வேடனை எண்ணி அவனுக்கு உதவுவது தமது கடன் என்று கூறிற்று.
உடனே, ஆண் புறா வேடனின் குளிரை நீக்கச் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு தீ மூட்டியது. பின்னர் அது தீயில் விழுந்து இறந்தது. பெண் புறாவும் தானும் தீயில் விழுந்து உணவாக விரும்புவதாக கூறி தீயில் குதித்தது. இவற்றை உணர்ந்த அந்த வேடன் மனம் மாறினான். அவன் அன்று முதல் வேட்டையாடுவதை நிறுத்தியதுடன் ‘இதுவரையில் செய்த கொலைகளுக்காக வருந்தி, தான் இனி செய்ய வேண்டுவது யாது?’ எனச் சிந்தித்தான். புறாக்களின் தியாகத்தைக் கண்டு விண்ணிலிருந்து வந்த விமானத்தில் புறாக்கள் ஏறி நல்லுலகை அடைந்தன. அப்போது அப்புறாக்கள் கவுதம கங்கையில் பதினைந்து நாட்கள் நீராடினால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று வேடனிடம் கூறின. இவ்வாறு புறாக்கள் தியாகம் செய்ய தீயில் விழுந்த இடம் கபோத தீர்த்தம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

————-

ப்ரபத்திரபி ஸாமாந்ய ஶாஸ்த்ரே (அ)ந்யத்ர ப்ரபஞ்சிதா ।
யத்₃யேந காம காமேந ந ஸாத்₄யம் ஸாதநாந்தரை ꞉ || 30 ॥

————–

முமுக்ஷுணா ந ஸாங்க்₂யேந யோகே₃ ந ந ச ப₄க்தி ꞉ ।
ப்ராப்யதே பரமம் தா₄ம யதோ நாவர்த்ததே புந ꞉ ॥ 31 ॥

——

தேந தேநாப்யதே தத் தந் ந்யாஸே நைவ மஹாமுநே ! ।
பரமாத்மா ச தேநைவ ஸாத்₄யதே புருஷோத்தம꞉ ॥
32 ॥

எந்த எந்த பயன்களை விரும்பும் எவர் எவர்களால் அப்பயன்களுக்கு சாதனங்களாக ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மங்களை அனுஷ்ட்டிக்க சக்தி இல்லாமையால் பெறக்கூடாதவைகளாக இருக்கின்றனவோ அவைகளும் சாங்க்ய யோகத்தைச் செய்ய சக்தி இல்லாமையால் அதனால் பெறக் கூடாததான கைவல்யமும் பக்தி யோகத்தை அனுஷ்ட்டிக்க சக்தி இல்லாமையால் அதனால் பெறக்கூடாதவைகளான புனராவ்ருத்தி இல்லாத மோக்ஷமும் பரமாத்மாவும் அவைகளைப் பெற சாதனங்களாக அனுஷ்ட்டிக்கப்படும் இப்பிரபத்தியினாலேயே சாதிக்கப்படுகின்றன என்று சாமான்ய சாஸ்திரங்களிலும் இப்பிரபத்தியின் மஹிமை விவரிக்கப்படுகின்றது –

————-

ஸாத நாந்தர து₃ஸ் ஸாத₄ம் ப்ராப்யம் யல் லோக வேதயோ ꞉ ।
ஸூகேந₂ ப்ராப்யதே யேந ஸா ப்ரபத்திரிதி ஸ்தி₂தி ꞉ ॥ 33 ॥

லோகங்களிலாவது சாஸ்த்ரங்களிலாவது சொல்லப்பட்டு இருக்கும் வேறு ஓர் உபாயங்களினால் பெறுவதற்கு அஸாத்யமாய் இருக்கும் -பயன்கள் யாவுமே இப்பிரபத்தியினால் சுகமாக ஸாதிக்கப்படும் என்பதே ஸித்தாந்தம்

————

த்விதீய -ஸ்வரூப பத்₃த₄தி ஸம் பூர்ணம்-

———

த்ருதீய -அதிகாரி பத்ததி

அநந்ய உபாய ஶக்தஸ்ய ப்ராப்யேச்சோ₂ரதி ₄காரிதா ।
ப்ரபத்தவ் ஸர்வ வர்ணஸ்ய ஸாத்த் விகத்வாதி ₃யோக₃த ꞉ ॥ 2 ॥

வேறொர் உபாயங்களைச் செய்ய சக்தி இல்லாதவர்களாய் ஓர் பேற்றைப் பெற விரும்புபவர்கள் அது விஷயத்தில் இப்பிரபத்தியை அனுஷ்ட்டிக்க அதிகாரிகள் ஆகிறார்கள் -அவ்வதிகாரம் ஸர்வ வர்ணத்தவர்களுக்கும் கூடும் -ஆனால் அவர்கள் சாத்விக குணம் முதலிய ஸத் குணங்களை மாத்ரம் உடையவர்களாக இருக்க வேண்டும் –

விஷய நியமமே உள்ளது-தேச கால அதிகாரி நியமங்கள் இல்லையே
இச்சை வேண்டும் -சாத்விகராக இருக்க வேண்டும் -சோகமுடையவன் அதிகாரி சோக நிவ்ருத்தியே பலம்
பசிக்கிறவன் உண்டு பசி தீருவது போல்-சோகமுடையவன் பிரபத்தி செய்து சோக நிவ்ருத்தி அடைகிறான்
ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமும் வேண்டும்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் வேண்டும் –

————-

ஸா ஹி ஸர்வத்ர ஸர் வேஷாம் ஸர்வ காம ப₂ல ப்ரதா ₃।
இதி ஸர்வ ப₂ல ப்ராப்தவ் ஸர் வேஷாம் விஹிதா யத ꞉ ॥ 2 ॥

இப் பிரபத்தி ஸர்வ வர்ணத்தார்களுக்கும் ஸர்வ பயன்களையும் கொடுக்கும் என்று விதிக்கப்பட்டு இருப்பதால் சர்வாதிகாரம் ஆயிற்று –

——————

ப்ரபத்தேர் வாசகோ மந்த்ர꞉ கட₂ வல்யாதி ஷு ₃ஸ்ம்ருத ꞉ ।
அயம் புராணே பாத்₃மே ச பராஶர வஸிஷ்ட₂யோ ꞉ ॥ 3 ॥

———

ஸம் வாதே ₃ ப்ரண வைகார்த ₂꞉ பஞ்சவிம்ஶதி வர்ணக꞉ ।
ருஷ்யாதி ₃ஸஹித ꞉ஸாங்க₃꞉ பூ₄யோ பூ₄ய꞉ ப்ரபஞ்ச்யதே
॥ 4 ॥

இப்பிரபத்தியின் ஸ்வரூபத்தைச் சொல்லும் த்வயம் என்னும் மந்த்ரம் கடவல்லி-என்னும் உபநிஷத்தில் ஓதப்படுகின்றது -பாத்ம புராணத்தில் பராசர வஸிஷ்ட முனிவர்களின் ஸம்வாதத்தில் இம்மந்திரம் பிரணவத்தோடு சமான அர்த்தத்தை யுடையத்தாயும் 25 அக்ஷரங்களுடன் கூடியதாகவும் சொல்லப்படுகிறது -ரிஷி சந்தஸ் முதலிய அங்கங்களோடு கூடியதாகவும் சொல்லப்படுகிறது –

—————-

தத்ர ஸர்வாதி ₄காரத்வம் ஸக்ருத் உ₃ச்சார்யதா ததா ₂ ।
விதீயதே ததா ₂(அ)ந்யத்ர ஶாஸ்த்ரே ப₄க₃ வதா (அ)பி ச ॥ 5 ॥

அந்தப் புராணத்தில் இம்மந்திரம் சர்வாதிகாரம் என்றும் ஒருக்கால் உச்சாரண மாத்திரத்தில் ஸர்வ பல ப்ரதத்வம் எனதும் விதிக்கப் படுகின்றது -அப்படியே பகவத் சாஸ்திரத்திலும் விதிக்கப் படுகின்றது –

—————–

த்ரை வர்ணி கேதரஸ்யாபி த்₃ வயே தஸ்மாத் ₃ தி₄க்ரியா ।
த₄ர்மி க்₃ராஹ கமாநேந யத் ஸித்₃ த₄ம் லோக வே ₃தயோ ꞉ ॥ 6 ॥

ஆகையால் இத்த்வத்தில் த்ரை வர்ணிகர்களாய் ஒழிந்தவர்களுக்கும் ஜபம் செய்ய அதிகாரம் உண்டு என்கிறது -மேலும் லோகத்திலும் வேதத்திலும் சாமான்ய விதியில் விசேஷத்தை அறிவிக்கும் பிரமாணங்களினால் கிடைத்திருக்கும் விசேஷ விசேஷங்களையும் சொல்லுகிறோம்

பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமும் -இல்லை-சூரணை -23-
ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று
பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம் பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வகாம பலப்ரதா -என்று பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே

விஷய நியமமே உள்ளது –சூரணை -24-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –சூரணை-29-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –சூரணை -30-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –சூரணை -32-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–சூரணை-33-

விஷய நியமம் ஆவது-
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –சூரணை -34-

ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே –சூரணை -35-

————-

யதா ₂ஹி’ரத ₂காராதே ₃꞉ அக்₃ந்யாதா ₄நாதி ₃வைதிகே ।
ஆஜ்யா வேக்ஷணாதவ் ₃ து மந்த்ரே பத்ந்யா꞉ ப்ரமாணதா ꞉ ॥ 7 ॥

தச்சர் முதலிய சிலருக்கு வைதிகமான அக்னி யாதானம் முதலிய வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் அதிகாரமும் -யஜமான பத்னிக்கு ஆஜ்யா வேஷண வைதிக மந்த்ரத்தை உச்சரிக்கும் அதிகாரமும் உண்டானது போல் வைதிகமான த்வயம் என்னும் மஹா மந்த்ரத்தை உச்சரிக்க த்ரை வர்ணிகர் ஒழிந்தவர்களுக்கும் ப்ரமாணத்தால் அதிகாரம் உண்டு என்கிறது –

——————-

யத்₃வா (ஆ)தி₄ தக்ரமாபாயாத் ஸ்வராதே₃ர்வா விலோபத ꞉ ।
த்₃வயஸ்ய ஸர்வாதி ₄க்ருதி ꞉ஸர்வேஷாம் தாந்த்ரிகம் து வா ॥ 8 ॥

இல்லாவிடில் வேதத்தில் ஓதப்படும் இம்மந்திரத்தின் கிரமத்தை குறைவு படுத்துவதனாலாவது இதன் ஸ்வரங்களை விட்டு விடுவதினாலாவது இம்மந்த்ரம் வைதிகம் ஆகாமல் த்ரை வர்ணிகர் ஒழிந்த மற்றவர்களாலும் உச்சரிக்கும் படியான தாந்த்ரிகமாகத் தக்கது அல்லது ஸர்வ வர்ணத்தவர்களுக்கும் தாந்த்ரிகமாகவே இருக்கத் தக்கது –

—————-

அஜ்ஞ ஸர்வஜ்ஞ-ப₄க்தாநாம் ப்ரபத்தாவதி ₄காரிதா ।
உபாயாந்தர விஜ்ஞாநா ஶக்தே ரஜ்ஞஸ்ய யுஜ்யதே
॥ 9 ॥

கர்ம யோகம் முதலிய உபாயங்களைச் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கும் ஞானம் யோகம் பக்தி யோகம் இவற்றில் சக்தி உள்ளவர்களாய் இருப்பவர்களுக்கும் இப்பிரபத்தியில் அதிகாரம் உண்டாகின்றது -அவற்றில் அசக்தர்களுக்கு இதர உபாயங்களை அறிய சக்தி இல்லாமையால் ப்ரபத்தியில் அதிகாரம் உண்டாகின்றது –

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –சூரணை -41-
அஞ்ஞரும் ஞானாதிகரும் பக்தி பரவசரும் —சூரணை -42-
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –சூரணை -43-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற -சூரணை -44-
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –சூரணை -45-
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு –சூரணை -46-

——————-

ஸத்₃ருஸோபாய வை து₄ர்யம் ஸாக்ஷாத்₃ ப₄க₃வதோ வித₃ன்।
ஸர்வஜ்ஞ꞉ ஶரணம் யாதி யோக₃மார்க₃பராங்முக₂꞉ ॥ 10 ॥

ஞான யோகமும் ஸித்த உபாயமான பகவானைப் போல் மோக்ஷத்துக்கு நேரான உபாயமாகாமையாலும் சுலப உபாயமாகவும் கர்ம ஞான யோகங்களை விட்டு அவ்வதிகாரியும் பகவானைச் சரணம் அடைகிறார்

——————–

ஸர்வ காலம் ப்ரேம வஶாத் ப₄ஜன் ப₄க்தோ (அ)ப்ய நந்யதீ ₄꞉ ।
உபாயம் வா (அ)ப்யுபேயம் வா க்ஷமோ (அ)ந்யம் நா வலம்பி₃தும் ॥ 11 ॥

பக்தி யோகம் செய்கிறவர் வேறொரு இடத்தில் புத்தியைச் செலுத்தாமல் மிகவும் பக்தியுடன் ஸர்வகாலமும் பகவானை உபாஸனம் செய்பவராக இருந்தும் கால விளம்பம் முதலிய தோஷங்களோடு கூடியதால் வேறொரு உபாயங்களையாவது பலன்களையாவது பெற விரும்புகிறவராய் பகவானை சரணம் அடைகின்றனர்

—————

ஜிதந்தா மந்த்ர விவ்ருதவ் சவ்நகேந யதீ ₃ரிதிம் ।
அஜ்ஞ ஸர்வஜ்ஞ ப₄க்தாநாம் க₃திர் க₃ம்யோ ப₄வேத்₃ ₄தரி꞉ ॥ 12 ॥

சவுனாக முனிவரும் ஜிதந்தா என்னும் மந்த்ர விவரண கிரந்தத்தில் கர்மயோகாதிகளில் சக்தர்களுக்கும் அசக்தர்களுக்கும் பகவான் உபாயமாகவும் உபேயமாகவும் ஆகிவிடுகிறார் என்று அருளிச் செய்கிறார் –

————–

இத₃ம் ஶரணம் அஜ்ஞாநம் இத ₃மேவ விஜாநதாம் ।
இ த₃ம் திதீர் ஷதாம் பாரம் இத ₃மாநந்த்யமிச்ச₂ தாம் ॥ 13 ॥

ஜிதந்தையில் அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -கர்மயோகத்தை அறியாதவர்களுக்கும் அதை அறிந்தோர்களுக்கும் –ஸம்ஸாரத்தை கடக்க மட்டுமே விரும்பும் கைவல்யார்த்திகளுக்கும் என்றும் அழிவில்லாத பரம புருஷார்த்தமான பகவத் ப்ராப்திக்கும் இப்பிரபத்தியே உபாயமாகும் –

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –சூரணை -49-
இம் மூன்றும் -என்றது மூன்று அதிகாரிகளையும் சொன்னவாறு –
யுக்த அர்த்தத்துக்கு பிராமண உபாதானம் பண்ணுகிறார்
அஞ்ஞான ஹேதுகத்தவ ப்ரபத்தியையும் – ஞானாதிக்க -ஹேதுக பிரபத்தி –
பக்திர் பூம்யா -பக்தி பாரவஸ்யத்துக்கு -பக்தியின் எல்லை நிலம் ஹேதுக்கவாக
அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம் அவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி –

————

இதி லக்ஷ்ம்யா ச தந்த்ரே (அ)பி ப்ரபத்தா வநு வர்ணிதம் ।
ஆஸ்திக்யாதி ₃குணோ பேதம் ஶாஸ்த்ரம் வக்த்யதி ₄காரிணம் ॥ 14 ॥

பெரிய பிராட்டியாரால் லஷ்மீதந்த்ரத்தில் ஆஸ்திக்யாதி லக்ஷணங்களோடு கூடியவர் இப்பிரபத்திக்கு அதிகாரியாக ஸாஸ்த்ரம் சொல்லுவதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது –

————–

யதா ₂(ஆ)ஹ ப₄க₃வான் ஶாஸ்த்ரே விஷ் வக் ஸேநாய ஶ்ருண் வதே ।
ய ஏவம் ஶரணம் க₃ச்சே₂த் க்ருதக்ருத்யோ ப₄விஷ்யதி ॥ 15॥

யாவன் ஒருவன் இவ்வாறு என்னை சரணம் அடைகிறானோ அவன் செய்ய வேண்டிய க்ருத்யங்கள் யாவையும் செய்தவனாவான் என்று பகவத் ஸாஸ்த்ரத்தில் பகவானே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து அருளுகிறார் –

————

ஏதத்₃ரஹஸ்யம் வேதா ₃நாம் புராணாநாம் ச ஸம்மதம் ।
கு₃ஹ்யாத்₃கு₃ஹ்ய தமம் ப்ரோக்தம் நிக₃மாந்தேஷு கீர்திதம் ॥ 16 ॥

இப்பிரபத்தி வேதங்களின் ரஹஸ்யார்த்தகம் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப் பட்டது -வேதாந்த ஸாஸ்திரங்களிலும் இப்பிரபத்தி ரஹஸ்யங்களிலும் ரஹஸ்யங்களாக ஓதப்பட்டு கொண்டாடப்படுகிறது –

———

நாதீ ₃க்ஷிதாய வக் தவ்யம் நா ப₄க்தாய கதா ₃சந ।
ந சா ஶுஶ்ரூஷவே வாச்யம் நாஸ்திகாய கதா ₃சந ।
கு₃ருப₄க்திர் ந யஸ்யாஸ்தி பீ₃ஜபிண்ட₃பதா₃தி ₃ஷு ॥ 17 ॥

இப்பிரபத்தி வித்யையை சக்ர அங்கநாதி நியமம் இல்லாதவருக்கும் -நாஸ்திகனுக்கும் -எவனுக்கு குருவிடத்திலாவது அவரது சந்நிதி வசனம் முதலியவற்றில் பக்தி இல்லையே அவர்களுக்கு உபதேஸிக்கக் கூடாது –

—————

நோப தே ₃ஶஸ்து யஸ்யாஸ்தி ந வக்தவ்யம் ஹிதார்தி ₂நா ।
இத்யுக்த வான் ஜக₃ந் நாதோ ₂ த்₃விரதா ந ந மாம் ப்ரதி ।
மயா(அ)பி தவ ப₄க்தஸ்ய கதி ₂ தம் யச்ச்₂ருதம் புரா ॥ 18 ॥

எவருக்கு இப்பிரபத்தி மந்த்ரம் உபதேசம் இல்லையோ அவருக்கும் சொல்லத்தக்க தல்ல என்றும் ஸ்ரீ ஜெகந் நாதனான பகவான் எங்களுக்கு உபதேஸித்தார்-நான் கேட்டபடி பக்தரான உமக்கும் இவ்வர்த்தகத்தை உபதேஸித்தேன் என்றும் விஷ்வக்ஸேனர் கஜானனுக்கு உபதேஸித்தார் –

————

த்ருதீயா -அதிகாரி பத்ததி ஸம் பூர்ணம்

———–

சதுர்தீ –குரு உபாஸந பத்ததி

ஸம்ஸாரோத்₃ விக்₃ந மநஸா தாபத்ரிதய பீ₄ருணா ।
விரக்தே நேஹ சா(அ)முத்ர ப₂லே க₃ம்யோ கு₃ருர் மஹான் ॥ 1 ॥

ஸம்ஸாரத்தில் நின்றும் பயந்த மனசை உடையவராய் -தாபத்ரயத்தால் பயந்தவராயும் -இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் பயன்களை வைராக்யம் யுடையவராயும் இருப்பவரால் மஹாத்மாவாய் இருக்கும் குரு ஒருவரை அடையத்தக்கவர்

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குழைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய உய்ய விரகில்லையே-முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் உபதேஸங்கள்-மந்த்ர உபதேஸம் பண்ண ஆச்சார்யர் வேண்டுமே-ஒழிக்க ஒழியாத ஒன்பது வித ஸம்பந்த ஞானம் கொடுப்பவர் ஆச்சார்யர் தானே- அதிகாரி ஸ்வரூபத்துக்கு பின் ஆச்சார்ய -பகவத் பரிசார -பகவத் பத்ததிகள் -மேல்அவ்வானவருக்கு மவ்வானவர் அடிமை உபதேஸம் -நானும் உனக்கு பழ வடிமை -உணராமல் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க -நடுவே வந்து உய்யக்கொண்ட நாதனே ஆச்சார்யர்-ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே உடைய குருவை அடைந்தக்கால்- -தானே வைகுந்தம் தரும் -சேர்ப்பார்களைப் பஷிகளாக்கி -கடகர்

————

பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் விப்ரோ நிர் விண்ண மாநஸா ꞉ ।
க்ருதேந மோஷோ நாஸ்தீதி தஜ் ஜ்ஞாநார்த₂ம் கு₃ரும் வ்ரஜேத்
॥ 2 ॥

ப்ராஹ்மணராக இருக்கும் ஒருவர் ஸ்வர்க்க லோகம் முதலிய போக ஸ்தானங்களை புண்ய கர்மங்களால் அடையப்படுபவை என்றும் அறிந்து மனம் இறக்கமுடையவராய் கர்மத்தினால் மோக்ஷம் கிடைப்பதில்லை என்றும் அறிந்து தெளிந்து அந்தப் மோக்ஷ ஞானத்தைப் பெறுவதற்கு ஓர் ஆச்சார்யரைக் கிட்ட வேண்டும் –

ஞானிகள் -தத்வ தர்சனிகள் -தத் வித்தி –பிரணி பாதேனா பரி பிரஸ்தேன -ஸேவையா –பீதக வாடைப்பிரானார் பரம குருவாக வந்து மயர்வற மதிநலம் ஆழ்வார்களுக்கு அருள -அவர்கள் ஆச்சார்யர்கள் மூலம் நமக்கு அருளுகிறார்கள் –

————

ஶ்ரோத்ரியம் ப்₃ரஹ்ம நிஷ்ணாதம் ப்ரீணயேத்₃ வஸ்துபி₄꞉ ப்ரியை ꞉ ।
தஸ்மை ப்ரஶாந்த சித்தாய ஶிஷ்யாய ப்ரணதாய ச ॥ 3॥

——–

த₃த்₃யாத் அஷ்டாக்ஷரம் ஸத்யம் ப்₃ரஹ்ம நாராயணம் பரம் ।
தாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் ப்ரவதே ₃ தி₃த்யர ₂ம் ஶ்ருதி ராஹ ஹி
|| 4 ||

ஸ்ரோத்ரியராயும் ப்ரஹ்ம ஞானம் யுடையவராய் இருக்கும் ஆச்சார்யர் ஒருவருக்கு அவர் கோறிய வஸ்துக்களைக் கொடுத்து அவரை சிஷ்யன் தன்னிடத்தில் ப்ரீதி யுள்ளவராய்ச் செய்ய வேண்டும் -அவ்வாச்சார்யரும் அவ்வாறு தமக்கு ப்ரீதியை யுண்டாக்கியவனாயும் -வணக்கம் யுடையவனாயும் -சாந்தமான மனமுடையவனுமாக இருக்கும் சிஷ்யனுக்கு என்றும் அழிவில்லாத ஸத்ய ப்ரஹ்ம ரூபியான ஸ்ரீ மந் நாராயணனை அறியத்தக்க ப்ரஹ்ம வித்யயை உபதேசிக்க வேண்டும் என்றும் இவ்வர்த்தத்தை வேதம் சொல்கிறது –

ஆத்ம குணங்கள் கை புகுந்தால் ஆச்சார்யன் கை புகுரும் -மந்த்ரம் கை புகுந்தால் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து கை புகுரும்-இதனால் வைகுந்தமும் கை புகுரும்

———–

குரோஶ் ஶிஷ்யஸ்ய வித்₃யாயா லக்ஷணம் காலமேவ ச ।
ஸாமாந்யதோ விசேஷாச்ச ப₄க₃வான் ஶாஸ்த்ர உக்தவான் ॥ 5 ॥

குருவினுடையவும் சிஷ்யனுடையவும் ப்ரஹ்ம வித்யையினுடையவும் லக்ஷணத்தையும் அவைகளுக்குத் தக்க காலத்தையும் சாமான்யமாகவும் சேஷித்தும் பகவஸ் ஸாஸ்த்ரத்தில் பகவான் அருளிச் செய்துள்ளார் –

—————–

த்ரிஷு வர்கேஷு ஸம்பூ₄தோ மாமேவ ஶரணம் க₃த ꞉ ।
நித்ய நைமித்திக பரோ மதீ ₃யா(ஆ)ராத₄நே ரத ꞉ || 6
|

பகவஸ் ஸாஸ்த்ரத்தில் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் -ப்ராமண ஷத்ரிய வைஸ்யராகிய மூன்று வர்ணங்களில் பிறந்தவராயும் -என்னையே சரணம் அடைந்தவராயும் -தம்முடையவர்களிடமும் பிறர்களிடமும் சமமான மனஸை யுடையவராயும் -நித்ய நைமித்திக கர்மங்களை மட்டுமே அனுஷ்டிப்பவராயும் -என்னுடைய ஆராதனத்தில் ஆசை யுடையவராயும் இருக்கும் ஒருவர் ஆச்சார்யர் எனச் சொல்லப்படுவார் –

—————-

ஆத்மீய பரகீயேஷு ஸமோ தே ₃ஶிக உச்யதே ।
ஆஸ்திகோ த₄ர்மஶஸீலஶ்ச ஸீலவான் வைஷ்ணவ
꞉ ஶுசி꞉ ॥ 7 ॥

————-

க₃ம்பீ₄ரஶ் சதுரோ தீ₄ர꞉ ஶிஷ்ய இத்யபி₄ தீ₄யதே ।
நாநுகூல்யம் ந ந க்ஷத்ரம் ந தீர்தா ₂ தி ₃நிஷேவணம் ॥ 8 ॥

ஆஸ்திகராயும் எப்போதும் தர்மங்களைச் செய்பவராயும் நன்னடத்தை யுள்ளவராயும் வைஷ்ணவராயும் பரிசுத்தராயும் கம்பீர ஸ்வபாவமுடையவராயும் -வல்லமை யுள்ளவராயும் –ஸாஸ்த்ரங்களில் நிலை யுள்ளவராயும் -இருக்கும் ஒருவர் சிஷ்யராகச் சொல்லப்படுவார்

இத் த்வயத்தினால் அனுஷ்ட்டிக்கும் பிரபத்தியாவது தேசம் காலம் முதலியவற்றின் நன்மைகளாவது- புண்ய தீர்த்தம் முதலியவைகளை அடைவதை யாவது -அடிக்கடி அனுஷ்ட்டிக்க வேண்டும் என்கையாவது -ஸர்வ காலமும் ஜெபம் செய்ய வேண்டும் என்கையாவது – அபேக்ஷிக்கிறது இல்லை -எவ்விடத்தாலாவது -எப்படிக்காவது -ஒருக்கால் அனுஷ்டித்த மாத்திரத்திலேயே ஸ பலமாகும் என்றும் கருத்து –

————–

ந புநஶ் சரணம் நித்யம் ஜபம் வா (அ)பேக்ஷதே ஹ்யயம் ।
நமஸ் க்ருத்ய கு₃ரூன் தீ₃ர்க₄ப்ரணாமைஸ் த்ரிபி₄ராத்₃ருத꞉ ॥ 9 ॥

மூன்று முதலாக உள்ள அநேக அஷ்டாங்க ப்ரணாமங்களினால் ஆச்சார்யரைத் தண்டம் சமர்ப்பித்து -நிதியைப் பெறும் தரித்ரனைப் போல் மிகவும் ஆசை யுடையவனாய் சிஷ்யன் இந்த மந்த்ர ராஜத்தைப் பெற வேண்டும் –

————–

க்₃ருஹ்ணீயான் மந்த்ர ராஜாநாம் நிதி ₄காங்க்ஷீவ நிர்த₄ந ꞉ ।
பரம்பராமுபதி ₃ஸேத் கு₃ரூணாம் ப்ரத₂மம் கு₃ரு꞉ ॥ 10 ॥

ஆச்சார்ய பரம்பரையை முன்பு உபதேசித்து -பின்பு த்வயத்தை உபதேசிக்க வேண்டும்-பின்பு மனஸ்ஸால் த்யானிக்கத் தக்கதான இத் த்வயத்தின் அர்த்தமான ப்ரபத்தியை உபதேசிக்க வேண்டும் –

———————-

வாசயித்வா த்₃வயம் ஸாங்க₃ம் ப்ரபதிம் மாநஸீம் தி₃ஸேத் ।
அநுகாங்க்ஷன் ஸதா ₃ ஶிஷ்யம் கு₃ருரௌரஸ புத்ரவத் ॥ 11 ॥

ஆச்சார்யரும் தன் வயிற்றில் பிறந்த பிள்ளை யினதிடத்தில் போல் சிஷ்யனிடத்தில் மிகவும் அநுக்ரஹமுடையவராய் -அம்மந்திர அர்த்தங்களைத் தெளிய அறிந்து மனஸ் சமாதானமுடையவராய் அச்சீஷ்யனுக்கு கபடமின்றி உபதேசிக்க வேண்டும் –

———————-

“வித்₃வான் ஸமாஹிதோ பூ₄த்வா க்₃ராஹயேது₃பதி₄ம் விநா ।
ததவ் பநிஷதீ₃ம் வித்₃யாம் விஶ்வாஸ ஜ்ஞாந வர்தி ₄நீம் ॥ 12 ॥

—————

அந்யாமாத்₄யாத்மிகீம் வித்₃யாம் ஶிஷ்யா வஸ்தா ₂நுரூப்யத ꞉।
தஸ்மை ப்ரஶாந்த சித்தாய க்ருபயா நிஸ்ப்ருஹோ வதே ₃த் ॥ 13 ॥

அப்படியே பக்தி ஞானங்களை அபிவிருத்தி செய்யத்தக்க த்ரவிட உபநிஷத் முதலிய வித்யைகளையும் இன்னும் வேதாந்த ஸாஸ்த்ரங்களையும் சிஷ்யனுடைய யோக்யதைக்குத் தக்கபடி அதனால் தனக்கும் ஒரு பிரயோஜனம் உண்டாக வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவனாய் சாந்த சித்தனான அச் சிஷ்யனுக்கு மிகவும் தயையுடன் குரு உபதேசிக்க வேண்டும் –

ஞானம் வந்து விசுவாசம் பிறந்து அதனால் மேலும் ஞானம் வளர்ந்து அதனால் மேலும் விசுவாசம் இப்படி சங்கிலித்தொடராக வளரும் -நித்ய அனுசந்தானம் நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் இதற்காகவே-

ஞான முத்ரை புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் -சாத்மிக்க -சாத்மிக்க உபதேசம்-

—————

த₃த்த்வா து த₃க்ஷிணாம் தஸ்மை யதா ₂ஶக்தி யதா ₂ விதி₄ ।
தமர்சயேத்₃யதா ₂காலம் ஹிதம் சாஸ்ய ஸமாசரேத் ॥ 14

சிஷ்யனும் அவ்வாச்சார்யருக்குத் தன் சக்திக்குத் தக்கபடிக்கும் ஸாஸ்த்ர விதிப்படிக்கும் ஸம்பாவனை ஸமர்ப்பித்து தகுந்த காலங்களில் அவரை ஆராதிக்க வேண்டும் -அவருக்கு ஹிதமான க்ருத்யங்களையும் செய்ய வேண்டும் –

——————

கு₃ரோர் வைப₄வ மாக்₂யாதி ஜயாக்₂யா (அ)பி ச ஸம்ஹிதா |
கு₃ருரேவ பரம் ப்₃ரஹ்ம கு₃ருரேவ பரம் த₄நம் ॥ 15 ॥

ஆகையால் அவ்வாச்சார்யருக்கு சிஷ்யன் ஒருக்காலும் த்ரோஹம் செய்யக்கூடாது –

——————

கு₃ருரேவ பரா வித்₃யா கு₃ருரேவ பராயணம் ।
கு₃ருரேவ பர꞉ காமோ கு₃ருரேவ பரா க₃தி ꞉ ॥ 16 ॥

குரு ரேவ பராகதி -என்றபடி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யம் என்கிறார் .
மேவினேன் அவன் பொன்னடி -என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும்
அதர பரத்ரசாபி -இங்கும் அங்கும் -என்று ஸ்ரீ ஆள வந்தாரும்
ஸ்ரீ ஆசார்யன் திருவடியையே ப்ராப்யமாக அறுதி இட்டார்கள் –
பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்யசாரிஷம் -என்று ஸ்ரீ ஆசார்யருக்கு நான் ஸூஸ்ருஷை பண்ணினேனோ-
அவர்களை அடையப் போகிறேன் -என்று ஸ்ரீ சபரியும் அவ்வாறே கூறினாள்-

————-

யஸ்மாத் தது₃பதே ₃ஷ்டா(அ)சவ் தஸ்மாத்₃கு₃ருதரோ கு₃ரு꞉ ।
அர்ச நீயஶ்ச வந்த ₃யஶ்ச கீர்த நீயஶ்ச ஸர்வதா ₃ ॥ 17 ॥

எண் திசையும் அறிய இயம்புவேன்-

————

த்₄யாயேஜ் ஜபேந் நமேத்₃ப₄க்த்யா ப₄ஜேத₃ப்₄யர்சயேந் முதா ₃ ।
உபாயோ பேயபா₄ வேந தமேவ ஶரணம் வ்ரஜேத் ॥ 18 ॥

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—————–66-

——————-

இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ।
ஏவம் த்₃ வயோபதே ₃ஷ்டாரம் பா₄வயேத் பு₃த்₃தி₄மான்
தி₄யா ॥ 19 ॥

இரும்பு போல் வலிய நெஞ்சம் பண்பட உபதேசம் -உள்ளம் உகந்து -உபகார ஸ்ம்ருதி வேண்டும் அன்றோ

—————–

ஶரீரம் வஸூ விஜ்ஞாநம் வாஸ ꞉ கர்ம கு₃ணாந ஸூன் ।
கு₃ர் வர்த ₂ம் தா₄ரயேத்₃ யஸ்து ஸ ஶிஷ்யோ
நேதரஸ் ஸ்ம்ருத ꞉ ॥ 20 ॥

சத்ருச ப்ரத்யுபகலாம் செய்ய இரண்டு ப்ரஹ்மமும் நான்கு விபூதிகளும் வேண்டுமே
முயல்கிறேன் அவன் மொய் கழலுக்கு என்று சொல்லிப்போம் அத்தனை

————–

நாராயணோ (அ)பி விக்ருதிம் யாதி கு₃ரோ ꞉ ப்ரச்யுதஸ்ய து₃ர்பு₃த்₃தே ₄꞉ ।
கமலம் ஜலாத ₃பேதம் ஶாேஷயதி ரவிர் ந தோஷயதி ॥21॥

தண்ணீரில் உள்ள தாமரையே உலர்த்தும் -இல்லாவிடில் உலர்த்தி விடுமே

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

——————

யோ விஷ்ணோ ꞉ ப்ரதி மாகாரே லோஹ பா₄ வம் கரோதி ச ।
யோ கு₃ரௌ மாநுஷம் பா₄வம் உபௌ₄ நரக பாதி நவ் ॥ 22 ॥

அர்ச்சாவதார லோக பாவம் -குருவை மானுஷ்ய பாவம் -நரக ஹேதுவாகுமே

—————-

ஸாமாந்யதோ விஸேஷாச்ச யஸ்மாத்₃ த₄ர்மான் ஸநாதநான் ।
ஆசிநோதி ஸ ஆசார்ய꞉ தஸ்மை த்₃ருஹ்யேத் ந கிஞ்சந ॥2
3॥

——————

கு₃’ ஶப்₃ த₃ஸ்த்வந்த₄காராக்₂யோ ‘ ‘ரு’ ஶப்₃ த₃ஸ்தந் நிரோத₄க꞉ ।
அந்த₄கார நிரோதி₄த்வாத் கு₃ருரித்யபி₄ தீ₄யதே ॥24 ॥

குரு என்னும் பதத்தில் கு என்னும் பதம் இருளையும் ரு என்னும் பதம் போக்குவதையும் சொல்லுகின்றது-அஞ்ஞானத்தைப் போக்குவதால் ஆச்சார்யர் குரு என்றும் சொல்லப்படுகிறார் –

————

மநுரப்யாஹ ப₄க₃வான் “வந்த்₃யோ பா₃லோ (அ)பி மந்த்ரத₃꞉ ।
ஜ்யைஷ்டயம் வேதா₃ந்த விஜ்ஞாநாத் விப்ராணாமிதி சோதித₃ ம் ॥25॥

பிராமணர்களுக்கு வேதாந்த ஞானத்தினால் பெரிய தனம் விதிக்கப்பட்டு இருப்பதால் பிராமணர் ஒருவரே சிறுவராக இருந்த போதிலும் மந்த்ரத்தை உபதேசித்தாராகில் அவர் வந்தனம் செய்யத்தக்கவர் என்று மனுவும் தர்ம ஸாஸ்த்ரத்தில் அருளிச் செய்துள்ளார் –

—————–

அத்₄யா பயாமாஸ பித்ரூன் ஶிஶுராங்கீ₃ரஸ ꞉ கவி ꞉ ।
புத்ரகா இதி ஹோவாச ஜ்ஞாநேந பரி க்₃ருஹ்ய தான் ॥ 26

அங்கீரஸ் என்னும் ரிஷியின் புத்திரரான சுக்ராச்சார்யாரும் தன் தகப்பன்மார்களுக்கு வேதங்களை ஓதி வைத்தார் -தம்முடைய ஞானத்தைக் கொண்டு அவர்களை புத்ரர்களாகப் பாவித்து வாரீர் பிள்ளைகளே என்று அழைத்தார் –

————–

தே தமர்த₂மப்ருச்ச₂ந்த தே ₃ வாநாக ₃ தமந்யவ ꞉ ।
தே ₃ வாஶ் சைதான் ஸமத்யோசு꞉ ந்யாய்யம் வஶ்ஶிஶு ருக்தவான் ॥ 27 ॥

சுக்கிரனுடைய பிதாக்களான இவ்விரண்டு ரிஷிகளும் கோபமுடையவர்களாய் புத்ரன் சொல்லியவற்றைப் பற்றி தேவர்களிடம் கேட்டார்கள் -அத்தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்து வாரீர் ரிஷிகளே உங்களுடைய புத்திரன் நியாயமான வார்த்தைகளைத் தான் சொல்லி இருக்கிறான் என்றார்கள்

கணபுரம் கை தொழும் பிள்ளையை-
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்

—————

பா₃லோ (அ)பி விப்ரோ வ்ருத்₃ த₄꞉ஸ்யாத் பிதா ப₄வதி மந்த்ரத₃꞉|
அஜ்ஞம்ஹி பா₃ல மித்யாஹ பிதேத்யேவ ச மந்த்ர த₃ம் ॥ 28 ॥

ப்ராஹ்மணன் பாலனாக இருந்த போதிலும் ஞானத்தினால் பெரியவரால் மந்த்ர உபதேசம் செய்தவரானால் அவர் பெரியவராகிறார் -பெரியவராக இருந்தும் ஞானம் இல்லாதவரக இருப்பாராகில் அவரை பாலர் என்றும் சிறுவராய் இருந்தபோதிலும் மந்த்ர உபதேசம் செய்தவரை பிதா என்றும் பெரியோர்கள் சொல்லுகிறார்கள் –

—————–

ந ஹாயநைர் ந பலிதை ꞉ ந ச வித்தைர்ந ப₃ந்து₄பி₄꞉ ।
ருஷ்யஶ் சக்ரிரே த₄ர்மான் யோ (அ)நூசாந ஸ நோ மஹான் ॥ 29 ॥

ரிஷிகள் வயது சென்றதனாலாவது -தலை நரைத்தானாலாவது -விசேஷித்த தனங்களினாலாவது -பந்துக்களினாலாவது -தர்மங்களைச் செய்தார்கள் இல்லை -ஸாஸ்திரங்களை அறிந்ததனால் மட்டுமே தர்மங்களைச் செய்தார்களாதல் -எவர் குருவினிடத்தில் இருந்து சாஸ்திரங்களை ஓதியவரோ அவரே நமக்குக் குருவாகத் தக்கவர்

————-

விப்ராணாம் ஜ்ஞாநதோ ஜ்யைஷ்ட்யம் க்ஷத்ரியாணாம் து வீர்யத ꞉ ।
வைஶ்யாநாம் த₄நதோ ஜ்யைஷ்ட்யம் ஶூத்₃ராணாமேவ ஜந்மத ꞉ ॥ 30 ॥

ஆகையால் ப்ராஹ்மணர்களுக்கு ஞானத்தினாலும் ஷத்ரியர்களுக்கு பலத்தாலும் வைஸ்யர்களுக்கு தனத்தாலும் ஸூத்ரர்களுக்கு வயதானாலும் மேன்மை சொல்ல வேண்டும் –

——————

கு₃ரோஶ்ச கு₃ரவஸ் ஸர்வே பூஜநீயா விஶேஷத ꞉ ।
கு₃ருதா₃ரஸூததவ் ₃ து கு₃ருவத்₃வ்ருத்தி மாசரேத் ॥ 31 ॥

ஆச்சார்யர்களின் ஆச்சார்யர்களும் விசேஷித்து பூஜிக்கத் தக்கவர்கள் -ஆச்சார்ய பத்னியிடத்திலும் புத்திரர்கள் இடத்திலும் ஆச்சார்யர் இடத்தில் போலவே வர்த்திக்க வேண்டும் –

—————-

த₄ர்ம வ்யதிக்ரமஸ் ஸ்யாச்சேத் கு₃ருர்போ₃த்₄யோ ரஹஸ்யபி ।
பதநீயம் கு₃ரோ ꞉ கர்ம யத்₃யஶக்யம போஹிதும் ॥ 32 ॥

———————

போத₃ ₄நாத்₃தை ₃ வப₄ஜநா ஸத் ஸங்க₃பரிவேஷணாத்
।ஸத்₃கு₃ரூநுபஸேவேத ஹித்வா தத ₃நுவர்தநம் ॥ 33 ॥

ஆச்சார்யரும் ஸாஸ்த்ர யுக்த தர்மங்களைக் கடந்து நடப்பாராகில் அவருக்கு ரஹஸ்யத்தில் போதிக்க வேண்டும் -அப்படிக்கு போதித்தும் அவருக்கு நல்ல ஞானம் உண்டாகும்படியாய் பகவானிடத்தில் பிரார்த்தனைகள் செய்தும் சத்துக்களைக் கொண்டு உபதேசம் செய்வித்தும் அவர் இடத்தில் உள்ள துர்நடத்தை போகாமல் இருந்தால் அவர் சேவையை விட்டு வேறு சத்ருக்களை சேவிக்க வேண்டும் – அப்பொழுது முன் ஆச்சார்யருக்கும் ஹிதத்தைக் கோறுவாராகில் ஸர்வ பாதங்களில் நின்றும் நீங்குவர் –

———-

தஸ்யாபி ஹிதாமாகாங்க்ஷன் முச்யதே நாத்ர ஸம்ஶய꞉ ।
யதி ₃ ஶிஷ்ய꞉ பதேந் மார்கா₃த் தம் ப்ரயத்நேந வாரயேத் || 34 ॥

சிஷ்யனும் ஸாஸ்த்ர யுக்த சன்மார்க்கங்களைக் கடந்து நடப்பானாகில் ஆச்சார்யர் அவனைக் கெட்ட மார்க்கத்தில் செல்லாமல் இருக்கு படியாகத் தடுக்க வேண்டும் – பகவானுடைய திருவடிகளில் அவனுக்கு ஹிதத்தைப் பிரார்த்திக்க வேண்டும் –

————–

ஶ்ரிய꞉ பத்யு꞉ பதா₃ம் போ ₄ஜே கு₃ருர்யாசேத தத்₃ தி₄ தம் ।
ப்ரஸாத ₃யேத்₃ப₄க₃வதா ஆத்மநா (அ)பித முத்₃ த₄ரேத்
॥ 35 ॥

——————–

தேந ஸம்பா₄ஷணாதீ ₃நி வர்ஜயேத ₃நிவர்தநே ।
̈ந நிஶ்வாஸமபி ₄வ்யக்தம் விஸ்ருஜேத்₃கு₃ரு ஸந்நிதவ் ₄ ॥ 36 ॥

அவனுக்கு ஞானத்தை உண்டாக்கும்படியாக பாகவதர்களைப் பிரார்த்திக்க வேண்டும் -தன்னால் கூடிய வரை அவனை படு குழியில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் -அப்படிச் செய்தும் அவன் துர்நடத்தையில் இருந்து திரும்பானாகில் அவனுடன் சம்பாஷணை முதலியவை செய்யாமல் விட்டு விட வேண்டும் –

—————–

கு₃ரோர் யத்ர பரீ வாதோ ₃ நிந்தா ₃ வா (அ)பி ப்ரவர்ததே ।
கர்ணவ் தத்ர பிதா ₄ தவ்யௌ க₃ந்தவ்யம் வா ததோ (அ)ந்யத ꞉ ॥ 37 ॥

ஆச்சார்யருடைய சமீபத்தில் தமக்கு உண்டாயிருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தக் கூடாது-ஆச்சார்யருக்கு எவ்விடத்தில் அபவாதமோ நிந்தையோ சொல்லப்படுகிறதோ அவ்விடத்தில் காதுகளையாவது மூடிக்கொள்ள வேண்டும் -அவ்விடத்தை விட்டு அப்புறம் போகவும் வேண்டும் –

——————-

ஆசார்யஸ்ய ப்ரஸாதே ₃ந மம ஸர்வமபீ₄ப்ஸிதம் ।
ப்ராப்நுயாமிதி விஶ்வாஸோ யஸ் யாஸ்தே
ஸ ஸூகீ₂ ப₄வேத் ॥ 38 ॥

ஆச்சார்யருடைய அனுக்ரஹத்தினால் யான் ஸர்வ இஷ்டங்களையும் பெறுவேன் என்ற நம்பிக்கை எவருக்கு வருகிறதோ அவர் சுகத்தை அடைவர் –

—————

யேநைவ கு₃ருணா யஸ்ய ந்யாஸ வித்₃யா ப்ரதீ ₃யதே ।
தஸ்ய வைகுண்ட₂து₃க்₃தா₄ப்₃தி ₄த்₃வாரகா꞉ஸர்வ ஏவ ஸ ꞉ ॥
39 ॥

எந்த ஆச்சார்யரால் எவருக்கு பிரபத்தி வித்யை உபதேசிக்கப் படுகிறதோ அவருக்கு இவ்வாச்சார்யாரே ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருத்துவாரகை முதலிய அனைத்து திவ்ய தேசங்களுமாகும்

பாட்டுக்கேட்க்கும் இடம் –எல்லாம் வகுத்த இடமே

——————

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் கு₃ருரஷ்டாக்ஷர ப்ரத ₃꞉ ।
இத்யேவம் யே ந மந்யந்தா த்யக்த வ்யாஸ்தே மநீஷிபி₄꞉ || 40 ॥

நமக்கு ஐஹிக ஆமுஷ்மிகங்களான அனைத்து நன்மைகளும் திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசித்த ஆச்சார்யர் தான் என்றும் எவர்கள் எண்ண வில்லையோ அவர்கள் சத்துக்கள் விடத்தக்கவர் –

———–

ஏகாக்ஷர ப்ரதா ₃ தாரமாசார்யம் யோ (அ) மந்யதே ।
ஶ்யாந யோநி ஶதம் ப்ராப்ய சண்டா₃லேஷ்வபி₄ஜாயதே ॥ 41 ॥

பிரணவத்தை யாவது ஓர் அக்ஷரத்தை யாவது உபதேசிக்கும் ஆச்சார்யர் ஒருவரை எவர் அவமானப்படுத்துகிறாரோ அவர் துர்ஜன்ம-நாய்கள் -போல் பிறந்து பிறக்கும் சண்டாளர் களில் பிறந்து உழல்வார் –

—————–

மஹா வராஹோ ப₄க₃ வாநாஹ ஜந்மாப்₃ தி₄தாரணே ।
நாவம் ந்ருதநும் ஆத்மாநம் அநுகூலா(அ)நிலம் கு₃ரும் ॥ 42 ॥

மஹா வராஹ அவதாரம் செய்த பகவானும் சம்சாரமாகிற கடலைக் கடைக்கு விஷயத்தில் மனுஷ்ய ரூபமான தன் சரீரத்தை ஓடமாகவும் ஆச்சார்யானை இவ்வோடத்தை கரை சேர்க்கும் காற்றாகவும் இவ்வாத்மாவை ஓடக்காரனாகவும் சொல்லி இவ்வாச்சார்யனால் இவ்வாத்மா சம்சாரக்கடலை தாண்ட வேண்டும் என்று அருளிச் செய்துள்ளார் –

—————-

கர்ணதா ₄ரமதோ தே ₃ஹீ கு₃ருணா ஸம்ஸ்க்ருதிம் தரேத் ।
ந்ருதே ₃ஹமாத்₃யம் ப்ரதி லப்₄ய து₃ர்லப₄ம் ப்லவம் ஸூகல்யம் கு₃ரு கர்ணதா ₄ரம் ।
மயா(அ)நுகூலேந நப₄ஸ்வதேரிதம் புமான் ப₄வாப்₃தி₄ம் ந தரேத்ஸ ஹாத்மஹா ||

முன் ஸ்லோக அர்த்தத்தையே ஈண்டும் வேறு விதமாக அருளிச் செய்து இப்பத்ததியை நிகமிக்கிறார் -சம்சாரக்கடலைக் கடத்தும் ஓர் ஓடம் போன்றதாயும் ஆச்சார்யரை ஓடக்காரனை உடையவராகவும் கிடைப்பதற்கு அரியதான இந்த மனுஷ்ய தேகத்தை காற்று ஆனால் போல் என்னாலே ஏவப்படுகின்றன -இத்தேகத்தைப் பெற்றும் எவர் ஒருவர் சம்சாரக் கடலைத் தாண்ட வில்லையோ அவர் ஆத்ம த்ரோஹி யாவார் என்றும் பகவான் அருளிச் செய்கிறார் –

சிஷ்யன் என்பது-சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும் ஆர்த்தியும்
ஆதரமும் அநசூயையும் உடையவனை –சூரணை -321-
மந்த்ரமும் -தேவதையும்- பலமும் – பல அநு பந்திகளும் -பல சாதனமும் – ஐஹிக போகமும் -எல்லாம் ஆசார்யனே என்று நினைக்க கடவன் –சூரணை -322-
மாதா பிதா யுவதய -என்கிற ஸ்லோகத்திலே இவ் அர்த்தத்தை பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –சூரணை -323-
இதுக்கடி உபகார ஸம்ருதி-சூரணை -324-
உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை – முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –சூரணை -325-
சிஷ்யனும் ஆசார்யனும் அந்யோந்யம் பிரிய ஹிதங்களை நடத்தக் கடவர்கள் –சூரணை -326-
சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் – ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் – ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –சூரணை -327-
சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –-ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –சூரணை -328-
ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய – ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை ––சூரணை -329-
நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே – இருவருக்கும் உபாதேயம் –சூரணை -330-
சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-சூரணை -331-
நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –சூரணை -332-
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –சூரணை -334-
ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –சூரணை -335–
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-
ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –சூரணை -337-
ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –சூரணை -338-
கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை -339-
கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-

4-சதுர்தீ –குரு உபாஸந பத்ததி –ஸம் பூர்ணம்

  1. அத₂ ப₄க₃வத் பரிசர்யா பத்₃த₄தி꞉ பஞ்சமீ

ஏவம் கு₃ரு ப்ரஸாதே₃ந தேஷித்வ ஜ்ஞாந பூர்வகம் ।
தே₃வோந்தர வந்நித்யம் ஸப்₃தா₃தீ₃நபி குத்ஸயன் ॥
1॥

விஷ்ணு ப்ராப்தி ப₂லாகாங்க்ஷீ விஷ்ணூபாயோ ஹி வைஷ்ணவ꞉ ।
ஏகாந்தீ து விநிஶ் வித்ய தே₃வதா விஷயாந்தரை
꞉ ॥2॥

கீழ் பத்ததியில் சொல்லிய படி ஆச்சார்ய அனுக்ரஹத்தினாலே தனக்குக் கிடைத்திருக்கும் சேஷத்வ ஞானத்தை முன்னிட்டு பகவானை ஒழிந்த வேறு தெய்வங்களைப் போலே ஸப்தாதி விஷயங்களையும் பிழை உள்ளவைகளாக அறிந்து பகவானைப் பெறும் விஷயத்தில் பக்தி யோகத்தையும் உபாயமாக யுடைய ப்ரபன்னர் வைஷ்ணவர் என்று சொல்லப்படுவார்

———

ப₄க்த் யுபாயம் ஸமம் க்ருஷ்ண ப்ராப்தவ் க்ருஷ்ண ஏக ஸாத₄ந꞉ ।
தே₃வோந்தர ஸப்₃தா₃தி₃ப₄க்தி க்ருஷ்ணாக்₂ய ஹேதுஷு
॥3॥

பக்தி யோகம் என்றும் மோக்ஷ உபாயத்தை தேவதாந்தர விஷயாந்தர ங்களோடு சமமாக நினைத்து பகவானைப் பெரும் விஷயத்தில் பகவான் ஒருவனையே உபாயமாக யுடைய ப்ரபன்னர் ஏகாந்தி எனப்படுவர் –

————

ஸாம்ய க்ருத் பரமை காந்தீ ஹரௌ ஸ்வாமீதி பு₃த்₃தி₄மான் ।
கிங்குர்வாண꞉ ஸதா ₃காலம் ப₄க₃வத் பாத₃பத்₃மயோ ꞉ ॥4॥

தேவதாந்தரங்கள் ஸப்தாதி விஷயம் பக்தி பிரபத்தி என்னும் மோக்ஷ உபாயங்கள் இவைகளை சமமாக நினைத்து பகவானிடத்தில் ஸ்வாமி என்னும் புத்தியையுடைய ப்ரபன்னர் பரமை காந்தி -உயர்ந்ததான ஒரே நிச்சயம் உடையவர் -எனப்படுவர்
இங்கு ப்ரபத்தியையும் தேவதாந்தரங்களோடு சமமாக நினைப்பதாவது அவைகளைப் போல் இப்பிரபத்தி யையும் விட வேண்டும் என்னும் அர்த்தகமாகும் -மேற்கொண்ட ஸ்வரூபத்தில் சொல்லியபடி ப்ரபத்தியை அனுஷ்டித்த ப்ரபந்நரைப் பற்றி இங்கு இவ்வர்த்தம் விதிக்கப் படுவதால் இப்பிரபன்னர் இதை விடுவதாவது -இப்பிரபத்தியில் உபாய புத்தியை விடவேண்டும் என்பதாவது -அல்லது பக்தியோகத்தைப் போல் இப்பிரபத்தியும் ஆவர்த்தி செய்யதகும் என்று நினைத்தால் அதை விட வேண்டும் என்பதாவது கருதத் தகும் –

தமக்கு உண்டாயிருக்கும் சேஷத்வத்தை அறிந்து ஸர்வ காலமும் பகவானுடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு காலத்தை சார்த்தமாகப் போக்க வேண்டும்

————

ஸேஷத்வ மாத்மநோ ஜாநன் ஸார்த₂யன் காலமாக்ஷிபேத் ।
விஜ்ஞாய மூல மந்த்ரார்த₂ம் த்₃வயைகார்த₂தயா கு₃ரோ
꞉ ॥5॥

இம்மூல மந்த்ரார்த்தத்தை த்வயார்த்தத்தோடு ஸமான அர்த்தமாக ஆச்சார்யரால் அறிந்து பகவான் ஒருவனையே சரணமாக யுடையவராய் அம்மூல மந்த்ரத்தால் பகவானை ஆராதிக்க வேண்டும் –

———–

ததே₃க ஸரணோ பூ₄த்வா ஹரிம் தேந ஸமர்சயேத் ।
த்ரை கால்ய மர்சநம் குர்யாத் மூல மந்த்ரேண ஸக்தித꞉
॥6॥

ஸர்வ வேதா₃ந்த ஸாரார்த₂꞉ ஸம் ஸாரார்ணவ தாரண꞉ ।
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ கு₃ஹ்யாநாம் கு₃ஹ்யமுத்தமம் ॥7

மூன்று காலங்களிலும் பகவானுக்கு மூல மந்திரத்தால் ஆராதனம் செய்ய வேண்டும்-இம்மூல மந்த்ரம் ஸர்வ வேதங்களினுடையவும் சாரமான அர்த்தத்தை யுடையது -ஸம்ஸாரமாகிய கடலைத் தாண்டி வைக்கத்தக்கது -மந்திரங்களில் உயர்ந்த மந்த்ரமும் ரஹஸ்யங்களுள் பரமமான ரஹஸ்யமாகவும் பரிசுத்தமான வஸ்துக்களுக்கும் பரிசுத்தியை உண்டாக்கத் தக்கது -இது அநாதியான மஹா மந்த்ரம்

நான் கண்டு கொண்டேன் நாராயணாயா என்னும் நாமம் -மந்த்ரம் அல்ல -ஸர்வாதிகாரம் இது

————-

பவித்ராணாம் பவித்ரம் ச மூல மந்த்ர꞉ ஸநாதந꞉ ।
முமுக்ஷூணாம் ஸதா ₃ ஜப்யம் பு₄க்தி முக்தி ப₂ல ப்ரத₃ம் ॥8॥

வைஷ்ணவாநாம் ஸதா ₃ ஜப்யம் ப₄க்தி ஜ்ஞாநவிவர்த₄நம் ।
மந்த்ராணாமாஶ்ரயம் தி₃வ்யம் ஸர்வ பாப ப்ரணாஸநம் ॥9॥

இம்மந்திரம் போக மோஷங்களைக் கொடுக்கத் தக்கதாக இருப்பதால் மோஷத்தை விரும்புபவர்களுக்கு சர்வகாலமும் ஜபம் செய்யத்தக்கது -பக்தி ஞானங்களை விருத்தி செய்யத்தக்கதாய் இருப்பதால் வைஷ்ணவர்களுக்கும் சர்வகாலமும் ஜபம் செய்யத்தக்கது-

————

ஸமாஹித மநா பூ₄த்வா ஜபம் குர்யாத₃ தந்த்₃ரித꞉ |
இத்த₂ம் க₃ஜாந நாதீ₃நாம் ஶ்ரீமத் ஸேநேஸ ஸாஸநாத் ॥10॥

இத்திவ்ய மந்த்ரம் ஸர்வ மந்திரங்களுக்கும் ஆஸ்ரீ யமாக இருக்கின்றது – ஸர்வ பாபங்களையும் நாசம் செய்வதாய் இருக்கின்றது -இம்மந்தத்தை சாவதான மனத்தை யுடையவராகவும் சோம்பல் இல்லாதவராகவும் ஜபம் செய்ய வேண்டும்

படு துயர் ஆயின எல்லாம் நிரந்தரம் செய்யும்

———–

[அநேந வைஷ்ணவ꞉ குர்யாத் ஹரேரர்சாதி₃கம் ஸதா ₃ ।
த்₃வயேந வார்சநம் குர்யாத் கு₃ருவந்த₃ந பூர்வகம் ॥11

மேற் சொல்லியபடி ஸ்ரீ விஷ்வக் சேனர் தன் பரிவாரங்களான கஜநநாதிகளுக்கு நியமித்து இருப்பதால் வைஷ்ணவர்கள் இம்மூல மந்ரத்தால் பகவானுக்குத் திருவாராதானாதிகள் செய்ய வேண்டும் -அல்லது த்வயத்தினாலாவது ஆராதனம் செய்ய வேண்டும் -அப்படிக்கு ஆராதனம் செய்யும் போது குரு வந்தனத்தை முன்னிட்டு வந்தனம் செய்த பின்பு ஆராதனம் செய்ய வேண்டும் –

குரு பரம்பரா பூர்வகமாக இல்லாத த்வயமும் மற்ற மந்த்ரங்களோடு ஒக்கும்

————-

க்ருத லக்ஷண ஏவாயம் அர்சயேத்₃ வைஷ்ணவோ ஹரிம் ।
] வ்யாஸஸ்து ப₄க₃வாநாஹ வர்ணைஸ்து க்ருத லக்ஷணை ꞉ ॥12॥

அர்சநீயஶ்ச ஸேவ்யஶ்ச பூஜநீயஶ்ச மாத₄வ꞉ ।
லக்ஷணம் த்₃விவித₄ம் ப்ரோக்தம் பா₃ஹ்யமாப்₄ யந்தரம் ததா ₂ ॥ 13॥

கீழ்ச் சொன்ன வைஷ்ணவ சின்னங்களோடு கூடியவராய் வைஷ்ணவர் பகவானை ஆராதிக்க வேண்டும் -வியாஸ முனிவரும் வைஷ்ணவ சின்னங்களோடு கூடிய நான்கு வர்ணத்தார்களாலும் பகவான் அர்ச்சனை செய்யத்தக்கவர் என்றும் சேவிக்கத் தக்கவர் என்றும் ஆராதனம் செய்யத்தக்கவர் என்றும் சொல்லுகிறார் –

—————-

ஸங்க₂சக்ராதி₃கம் பா₃ஹ்யம் அந்யத்₃ராகா₃த்₃யத பேததா ।
ததா ₂ச ஸர்வோபநிஷத் ஸித்₃த₄ம் சக்ராதி₃ தா₄ரணம் ॥14॥

பாஹ்யம் -வெளிப்பட்டவை -என்றும் ஆப்யந்தரம் -உள்ளிட்டவை என்றும் சின்னங்கள் இருவகைப்படும் -அவற்றுள் சங்கு சக்ராதி தாரணம் பாஹ்ய லக்ஷணங்களாகும் -வைராக்யம் சமதமாதி ஆத்ம குணங்கள் ஆப்யந்தர லக்ஷணங்களாகும் –

————–

அத₂ர்தவ உபநிஷத்₃ வ்யக்தம் வித₃தா₄தி விபஶ்சிதாம் ।
த₃க்ஷிணே து பு₄ஜே விப்ரோ பி₃ப்₄ருயாத்₃வை ஸுத₃ர்ஸநம் ॥15॥

அப்படியே ஸர்வ உபநிஷத்துக்களிலும் சித்தித்து இருக்கும் சங்கு சக்ராதி தாரணத்தை அதர்வ உபநிஷத்து ஞானிகளான வைஷ்ணவர்களுக்கு விதிக்கின்றது –

—————-

ஸவ்யே து ஸங்க₂ம் பி₃ப்₄ருயாத் இதி ப்₃ரஹ்ம விதோ₃ விது₃꞉ ।
தத்ர ஶ்ருதி த்வஸந்தே₃ ஹே கி₂ல மந்த்ரோ (அ)பி தத்ஸம꞉ ॥16॥

வலது தோளில் திருவாழியையும் இடது தோளில் திருச்சங்கையும் ப்ராஹ்மணர் தரிக்க வேண்டும் என்று ப்ரஹ்ம ஞானிகள் சொல்லுகிறார்கள் –

————–

மஹத் பரிக்₃ரஹாந் நாஸ்தி ஸந்தே₃ஹஸ் தத்ர சேத்₃ப்₄ரம꞉ ।
பாத்₃மம் புராணமாக்₃நேயம் க்ராேஸத் யுத்₃பா₃ஹு ரப்யுத ॥17॥

இப்படிக்கு சக்ராங்கனத்தை விதிக்கும் பிரமாணங்கள் வைதிகங்கள் அல்ல என்று ஸந்தேஹம் உண்டாகுமாகில் -இவ்வாறு ப்ரஸித்த வேதங்களில் காணாமல் இப்பொழுது அனுஷ்டானங்களில் உபயோகித்தது வரும் -கில மந்திரங்களும் இவ்வாறு சந்தேகிக்கத் தக்கவைகளாகும் -ஆகையால் மேற் சொல்லியவைகளை பெரியோர்கள் வைதிகங்களாக பரிக்ரஹித்து வருவதால் ஸந்தேஹிக்க வேண்டியதில்லை -இப்படிக்கு பெரியோர்கள் பரிக்ரஹிக்க இல்லை என்று பிரமம் உண்டாகில் பாத்மம் ஆக்னேயம் இவ்விரண்டு புராணங்களும் சக்ராங்கநாதிகளை வைதிகங்கள் என்றும் பெரியோர்கள் இவைகளை பரிக்ரஹித்து இருக்கிறார்கள் என்றும் கையெடுத்துக் கூவுவதால் இப்பிரமம் நீங்கி விடலாம் –

————–

பஞ்சாயுதா₄ நிதா₄ர்யாணி ப₄க்தி ஶ்ரத்₃தோ₄ப ப்₃ரும்ஹித ꞉ ।
லலாடே மூர்த்₄நி ஹ்ருத்₃வாஹ்வோ : ஏகத்ரைகம் ப்ருத₂க் ப்ருத₂க் ॥18॥

பாத்ம புராணத்தில் அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -நெற்றியிலும் சிரஸ்ஸிலும் மார்பிலும் தோள்களிலும் கதை முதலிய பஞ்ச ஆயுதங்களையும் பக்தி ஸ்ரத்தையுடன் கூடியவர்களாய் தரிக்க வேண்டும் –

த்வைத மதஸ்தர் இப்பொழுதும் பஞ்சாயுத தாரணம் கொண்டுள்ளார்கள்

———

லலாடே து க₃தா ₃ தா₄ர்யா மூர்த்₄நி சாபம் ததா ₂ பரம் ।
நந்த₃கம் சைவ ஹ்ருந் மத்₄யே ஸங்க₂ சக்ரே பு₄ஜ த்₃வயே ॥19॥

நெற்றியில் கதாயுதத்தையும் சிரஸ்ஸிலே சார்ங்கம் என்னும் வில்லையும் மார்பில் நந்தகம் என்னும் கத்தியையும் இரண்டு தோள்களிலும் திரு வாழி திருச் சங்குகளையும் தரிக்க வேண்டும்

—————-

லோஹை ரநல ஸந்தப்தை ꞉தத் தந் மந்த்ராதி₄ வாஸிதை ꞉ ।
அங்கயேத், வ்ருத்₃த₄ மநுரப்யே₃ததா ஹா (ஆ)த₃ராத்₃யதா
₂ ॥20॥

லோஹங்களினால் செய்யப்பட்டு இருக்கும் பஞ்சாயுதங்களை அக்னியில் தப்தம் செய்து அவற்றுக்கு உள்ள மந்த்ரங்களை ஜபித்து மேல் கண்ட இடங்களிலே லாஞ்சனை செய்து கொள்ள வேண்டும் -இவ்வாறே விருத்த மனுவும் சொல்லி இருக்கிறார் –

—————

ஊர்த்₄வ புண்ட்₃ரம் ததா ₂ சக்ரம் நித்யம் தா₄ரயதே நர꞉ ।
ஸூபா₄நி தஸ்ய வர்த₄ந்தே த்வஸூப₄ந்து ப்ரணஶ்யதி ॥21॥

விருத்த மனு அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -எவர் ஒருவர் ஊர்த்த புண்ட்ரம் திரு வாழி திருச்சங்கு இவைகளை நித்யம் தரிக்கிறாரோ அவருக்கு சுபங்கள் வளரும் -அசுபங்கள் நாசமடையும் –

———————–

கால உக்தோ ப₄க₃வதா ஸாஸ்த்ரே சக்ராதி₃தா₄ரணே ।
உத்தம꞉ ஷாேட ₃ஸாத₃ர்வாக் ஆபஞ்சா ஸஸ்து மத்₄யம꞉ ॥22॥

பதினாறு வயதிற்கு உட்பட்ட காலம் உத்தமம் என்றும் -அதற்கு மேல் ஐம்பது வரையில் மத்யம காலம் என்றும் பகவானால் ஸாஸ்த்ரத்தில் சக்ராதி தாரணத்திற்கு காலம் சொல்லப்பட்டு இருக்கின்றது –

———————

அத꞉ பரம் வை ஹ்யத₄ம இதி கால வ்யவஸ்தி₂தி꞉ ।
விநா து வார்ஷிகான் மாஸான் ஸர்வே மாஸாஶ் ஸூபா₄வஹா ꞉ ॥23॥

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட காலம் சக்ராங்கனம் செய்து கொள்வதற்கு அதமகாலம் என்றும் ஸாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது -மேலும் வர்ஷா காலங்கள் ஒழிய மற்ற காலங்கள் சக்ராங்கனத்திற்கு நன்மை யுண்டாக்கத் தக்கவைகள்

———

ஸ்தா₂நம் ப்ரமாணம் த்₃ரவ்யம் ச பாஞ்சராத்ரே விஸேஷத꞉ ।
விஹிதம் தத் ப்ரகாரேண தா₄ரயே தூ₃ர்த்₄வ புண்ட்₃ரகம் ॥24॥

ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பதற்கு ஸ்தானமும்-அதற்குப் பிரமாணமும் – அதற்குத் த்ரவ்யமும் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரத்தில் விசேஷமாக விதிக்கப்பட்டு இருக்கின்றது -அதன் படி ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் –

————

ப்ரஸஸ்தே பர்வதாக்₃ராதவ் ₃ ஜாதயாஶ் வேத ம்ருத்ஸ்நயா ।
ஊர்த்₄வ புண்ட்₃ரம் தத ꞉ கார்யம் வைஷ்ணவவஸ்து விஸேஷத꞉ ॥25॥

ஸாஸ்திரங்களில் கொண்டாடப்பட்டு இருக்கும் பர்வதங்களில் மேல்பாகம் முதலிய இடங்களில் உண்டாய் இருக்கும் ஸ்வேத ம்ருத்திகையினால் ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் -வைஷ்ணவர்கள் விசேஷித்து ஸ்வேத ம்ருத்திகையினாலேயே ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் –

—————–

விமலாந் யூர்த்₄வ புண்ட்₃ராணி ஸாந்தராளாநி யோ நர꞉ ।
கரோதி விமலம் தேந மந்தி₃ரம் மே கரோதி ஸ꞉ ॥26॥

ஊர்த்வ புண்டரங்களை நடுவில் வந்துள்ளவைகளாகவும் அழுக்கு இல்லாத திருமண்களினால் எவர்கள் இடுகிறார்களோ அவர்கள் அதனால் எனக்கோர் கோயில் கட்டுகிறார்கள் -என்று பகவான் அருளிச் செய்கிறார் –

———–

ராகா₃த்₃ய பேதம் ஹ்ருத₃யம் வாக₃து₃ஷ்டா (அ)ந்ருதாதி₃நா ।
ஹிம்ஸாதி₃ரஹித꞉ காய꞉ கேஸவ ஆராத₄நம் த்ரயம் ॥27॥

ஆசை முதலிய துர்குணங்களோடு கூடாத மனமும் -பொய் முதலிய தோஷங்கள் இல்லாத வாக்கும் -கொலை முதலிய பாதகங்களை செய்யாத காயமும் பகவானை ஆராதிப்பதற்குத் தகுந்த ஸாதனங்களாகும்-

நாவகாரியம் இல்லாத -நாவுக்கு அவகார்யம் கூடாதே

———-

அஹிம்ஸா ப்ரத₂மம் புஷ்பம் புஷ்ப மிந்த்₃ரிய நிக்₃ரே꞉ ।
ஸர்வபூ₄த த₃யா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விஸேஷத꞉ ॥28॥

ஜ்ஞாநம் புஷ்பம் தப꞉ புஷ்பம் த்₄யாநம் புஷ்பம் து ஸப்தமம் ।
ஸத்யமஷ்ட வித₄ம் புஷ்பம் விஷ்ணோ ꞉ ப்ரீதி கரம் ப₄வேத் ॥29॥

கொலை செய்யாமல் இருப்பது -ஐம் புலன்களையும் அடக்குவது -ஸர்வ பிராணிகளிடமும் தயையோடே கூடி இருப்பது -அபகாரம் செய்தவர்களிடங்களிலும் பொறுமையோடு கூடி இருப்பது -தத்வ ஞானம் உள்ளவனாக இருப்பது -விருத காலங்களில் காய சோஷணம் செய்வது -பகவானைத் த்யானம் செய்வது -எப்பொழுதும் ஸத்ய வாக்காய் இருப்பது -ஆகிய இந்த எட்டு குணங்களும் பகவானை ஆராதிக்கும் விஷயத்தில் எட்டு புஷ்ப்பங்களாகச் சொல்லப்பட்டு இருக்கின்றனவாகையால் இக்குணங்கள் பகவான் திரு உள்ளத்தை மிகவும் உகக்கச் செய்கின்றனவாம் –

————-

ஏவமாப்₄யந்தரைர் பா₃ஹ்யை ꞉ சிஹ்நை : பூ₄ஷித விக்₃ரஹ꞉ ।
(ஸ்நாதஸ் தீர்தே₂ஷு விதி₄வத் க்ருத தே₃வாதி₃தர்பண꞉ ॥30॥

அஷ்டோத்தர ஸதம் ஜப்த்வா மூலமந்த்ரம தந்த்₃ரித꞉ ।
ஸாம் ஸ்பர்ஶிகம் த்₃ரவ்ய ஜாதம் ததை ₂வா(ஆ)ப்₄யவ ஹாரிகம் ॥31॥

அப்யௌப சாரிகம் க்ருத்வா யாக₃பூ₄மேரளங்க்ருதிம் ।
யதீந்த்₃தரோதி₃தநித் யோக்தக்ர மேணைவ யஜேத்₃த₄ரிம் ॥32॥

இவ்வாறு மானஸீகங்களாயும் காயிகங்களாயும் பாகவத சிஹ்னங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும் தேஹத்தை யுடையவராய் -புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து -தேவரிஷி தர்ப்பணம் முதலான ஸந்த்யாவந்தனாதிகளை அனுஷ்ட்டித்து -சோம்பல் இல்லாதவராய் -மூல மந்த்ரத்தை நூற்று எட்டு ஆவர்த்தி ஜபம் செய்து -பகவான் திருமேனிக்கு சுகத்தை உண்டாக்கத்தக்க சந்தன குஸூ மாதி வஸ்துக்களையும் அமுது செய்யத்தக்க பல பக்ஷ்யாதி ஹவிஸ்ஸுக்களையும் வைத்துக் கொண்டு திருவாராதனம் செய்யும் இடத்தில் கோலமிடுவது முதலியவைகளினால் அலங்காரம் செய்து ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து இருக்கும் நித்ய கிரந்தத்தில் சொல்லியபடி பகவானை ஆராதிக்க வேண்டும் –

—————

ப்ரத₃க்ஷிண நமஸ்காரை ꞉ ஸ்தோத்ரை ரேகாந்தி ஸம்மதை ꞉ ।
யதா ₂ ப்₄ருத்யோ மஹா ராஜம் ப்ரீணயேத் ப்ரேம விஹ்வல꞉ ॥33॥

சேவகனாக இருக்கும் ஒருவன் தன் பிரபுவை எவ்வாறு அன்புடன் மனம் உகக்கச் செய்வானோ அவ்வாறு ஆத்ம ஸ்வாமியான பகவானை ப்ரபன்னன் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகளாலும் பரமை காந்தி ஸம் மதங்களான ஸ்தோத்ரங்களினாலும் திரு உள்ளம் உகக்கச் செய்ய வேண்டும் –

————

ததா ₂(ஆ)த்ம ஸ்வாமிநம் தே₃வம் ப்ரீணயேத் உபதி₄ம் விநா ।
மஹா வராஹோ ப₄க₃வான் அக₃ஸ்த்யாய யது₃க்தவான் ॥34॥

மஹா வராஹம் செய்த பெருமான் அகஸ்திய முனிவருக்கு உபதேசித்து இருக்கும் கீழ்ச் சொல்லிய பக்தி அங்கங்கள் யாவையும் அந்தவந்த காலங்களில் தவராமல் அனுஷ்ட்டிக்க வேண்டும் –

———-

ப₄க்த் யங்க₃ஜாதம் தத் குர்யாத் யதா ₂காலம் ஸமாஹித꞉ ।
மத்₃ப₄க்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாம் சாநுமாேத₃நம் ।
ஸ்வயமப்₄யர்சநம் சைவ மத₃ர்தே₂ த₃க்₃ப₄வர்ஜநம் ॥
35॥

மத் கதா ₂ஶ்ரவணே ப₄க்தி꞉ ஸ்வர நேத்ராங்க₃விக்ரியா |
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோப ஜீவதி ॥36॥

ப₄க்திரஷ்ட விதா ₄ ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்ச்₂ரே (அ)பி வர்ததே ।
ஸ விப்ரேந்த்₃ரோ முநி꞉ ஶ்ரீமான் ஸ யதி꞉ ஸ ச பண்டி₃த꞉ ॥37॥

மூன்றரை ஸ்லோகங்களினால் மேற் சொல்லிய பக்தி அங்கங்களை அருளிச் செய்கிறார்
என் பக்தி ஜனங்களில் அன்பு -அவர்கள் செய்யும் ஆராதனத்தை சந்தோஷிப்பது -தாமும் ஆராதிப்பது -என்னுடைய கைங்கர்யங்களில் டம்பத்தை விடுவது -என் கதைகளைக் கேட்பதில் பக்தி -என் கதைகளில் சொல்லப்படும் சுக துக்கங்களைக் கேட்க்கும் பொழுது கண்ணீர் விடுதல் -குரல் தழ தழுப்பது -அங்கங்கள் பூரிப்பது -எப்பொழுதும் என்னையே நினைத்து இருப்பது -இப்படிச் செய்யப்படும் பக்தியினால் என்னிடத்தில் ஐஹிக ப்ரயோஜனங்களை விரும்பாமல் இருப்பது
ஆகிய இவ்வெட்டு வித பக்திகள் இவரிடத்தில் உண்டாகின்றனவோ அவர் மிலேச்ச ஜாதியில் பிறந்திருந்த போதிலும்
வாரீர் மஹா முனிவரே
அவர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டராயும் யாதியாகவும் பண்டிதராகவும் இருக்கிறார்
ஆகையால் அவருக்குத் தானம் கொடுக்கத் தகும் -அவரிடத்தில் தானம் வாங்கத் தகும் – அவர் என்னைப் போலவே பூஜிக்கத் தக்கவராவார் –

கொடுமின் கொள்மின் -ஞானம் கொடுத்து பெறலாம்

—————–

தஸ்மை தே₃யம் ததோ க்₃ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ₂ ஹ்யஹம் ।
ஏவமர்சாவதாரம் து யஜேத் சவ்நக வாக்யத꞉ ॥38॥

ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ꞉ ப்ரஸந்நவத₃நேக்ஷணாம் ।
க்ருத்வா(ஆ)த்மந꞉ ப்ரியகரீம் ஸுவர்ண ரஜதாதி
பி₄꞉ ॥39॥

சவுனாக மஹா முனிவர் அருளிச் செய்தபடியே பகவானுடைய அர்ச்சாவதாரத்தை கீழ்ச் சொல்லிய படியே ஆராதிக்க வேண்டும் -அதாவது மிகவும் அருள் பொருந்திய திருக்கண்களோடும் அழகுள்ள திருமுக மண்டலத்தோடும் கூடியதாகவும் -அதை ஸேவிக்கும் தமக்கு மிகவும் பக்தியை யுண்டாக்கத் தக்கதாகவும் பகவானுடைய பிரதிமையை பொன் வெள்ளி முதலிய லோஹங்களினால் செய்வித்து-அதில் பகவானை ஆவாஹனம் செய்து -அவரை மனஸ்ஸால் தியானித்து -அவருடன் தன்னை ஐக்யம் அடைந்ததாகவும் தியானிக்க வேண்டும் –

—————

(தஸ்யாம் ப்₃ரஹ்ம ஸமாரோப்ய மநஸா தந் மயோ ப₄வேத் ।
தாமர்சயேத் தாம் ப்ரணமேத் தாம் ப₄ஜேதாம் விசிந்தயேத் ॥40॥
விஸத்யபாஸ்த தோ₃ஷஸ்து தாமேவ ப்₃ரஹ்ம ரூபிணீம் ।)

அர்ச்சா ரூபியான அந்த பகவானை ஆராதிக்க வேண்டும் -அவரிடத்தில் வணங்க வேண்டும் -அவரை சேவிக்க வேண்டும் -அவரைத் தியானிக்க வேண்டும் -இப்படி அனுஷ்டிப்பதால் ஸகல தோஷங்களும் அற்ற இந்த பக்தன் பர ப்ரஹ்ம ஸ்வரூபரான அந்த பகவானை அடைகிறார் –

—————–

யத் கிசித₃பி குர்வாணோ விஷ்ணோர் ஆராயதநே வஸேத் ॥
விஷ்ண்வாலயே வஸேந் நித்யம் குர்யாத் தத் கர்ம ப₄க்தித꞉ ॥41॥

எதையாவது ஓர் கைங்கர்யத்தைச் செய்து கொண்டு ப்ரபன்னர் பகவானுடைய திவ்ய தேசங்களில் வஸிக்க வேண்டும் -எப்பொழுதும் திவ்ய தேசங்களில் வஸித்துக் கொண்டு தம்முடைய சக்திக்குத் தக்கபடிக்கு பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும் –

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
ஊரிலேன் காணி இல்லேன்

—————-

யத்₃ப₃லம் மந்தி₃ரம் விஷ்ணோ : யத₃லங்காரகம் ப்ரியம் ।
போ₄கோ₃ப யுக்தம் வா கிஞ்சித் குர்யாந் நோபாய பு₃த்₃தி₄த꞉ ॥42॥

ப்ரபன்னர்கள் பகவானுக்கு ஸ்திரமாகக் கோயில் கட்டுவதும் -அவன் திரு உள்ளம் உகக்கும் படியாகத் திரு ஆபரணம் செய்வது -அவன் அமுது செய்யத்தக்க ப்ரஸாதம் முதலிய உபகாரங்களை ஸமர்ப்பிப்பது -இவை முதலிய கைங்கர்யங்களை தான் கோறிய பலன்களுக்கு சாதனங்களாக வேண்டும் என்று பிரார்த்தனையோடு செய்வது தகாது-கைங்கர்ய புத்தியுடனேயே செய்ய வேண்டும் என்று கருத்து –

————

யந் முஹுர்தம் க்ஷணம் வா(அ)பி வாஸுதே₃வோ ந சிந்த்யதே ।
ஸாஹாநி꞉ தந் மஹச் சி₂த்₃ரம் ஸா ப்₄ராந்தி꞉ ஸா ச விக்ரியா ॥43॥

ப்ரபன்னர்கள் பகவானைத் த்யானிக்காமல் ஒரு முஹூர்த்த காலத்தை யாவது அல்லது க்ஷண காலத்தை யாவது வீணாக்கப் போக்குவார்களாகில் அது தான் தங்களுக்கு ஓர் கெடுதி என்றும் அபாயம் என்றும் மதி மயக்கம் என்றும் தீங்கு என்றும் நினைக்க வேண்டும் –

—————-

ஏகஸ்மிந் நப்யதி க்ராந்தே முஹூர்தே த்₄யாந வர்ஜிதே ।
த₃ஸ்யுபி₄ர்முஷிதேநேவ யுக்த மாக்ரந்தி₃தும் ப்₄ருஸம் ॥44॥

ப்ரபன்னர்களுக்கு ஒரு முஹூர்த்த காலமாவது பகவத் த்யானம் இன்றியில் கழியுமாகில் அவர்களால் திருடர்களுக்குப் பறி கொடுத்தவர்கள் போலே மிகவும் குரல் பாய்ச்சி அழத் தகும்

————–

ஆலோட்₃ய ஸர்வ ஸாஸ்த்ராணி விசார்ய ச புந꞉ புந꞉ ।
இ₃தமேகம் ஸுநிஷ்பந்நம் த்₄யேயோ நாராயண: ஸதா ₃ ॥45

ஸர்வ ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து அடிக்கடி விசாரித்த்துப் பார்த்ததில் இது ஓன்று தான் நன்றாகத் தேறியது -அதாவது எப்பொழுதும் பகவானைத் த்யானித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே –

—-

பஞ்சமீ -பகவத் பரிசர்யா பத்ததி -ஸம் பூர்ணம்

————-

ஷஷ்டீ -பகவத் பரிஜன உபாஸந பத்ததி

அத₂ லக்ஷ்மீம் ஸமப்₄யர்ச்ய பூ₄மி நீலாதி₃பி₄ஸ்ஸஹ ।
ஸூத்ரவத்யாதி₃பி₄ஶ் சைவ ப்ரபந்நேந விஸேஷத ꞉ ॥1॥

ப்ரபன்னராக இருக்கும் ஒருவர் பூ தேவி நீளா தேவி முதலிய திவ்ய மஹிஷிகளுடனும் ஸூத்ரவதி முதலிய பரிவார மஹிஷிகளுடனும் பகவானுக்குப் பெரிய பிராட்டியாரான ஸ்ரீ மஹா லஷ்மியை ஆராதிக்க வேண்டும் –

—————

கு₃ரூணாம் விஶ்ரமஸ்தா₂நம் ஈஸாநாம் ஜக₃தோ(அ)ஸ்ய ச ।
மஹிஷீம் தே₃வதே₃வஸ்ய தி₃வ்யாம் நித்யாநபாயிநீம் ॥2॥

நமது குரு பரம்பரை முடிவதற்கு ஓர் இடமாயும் இவ்வுலகத்துக்கும் மற்ற உலகங்களுக்கும் ஈஸ்வரியாகவும் தேவதேவனான பகவானுடன் என்றும் பிரியாத திவ்ய மஹிஷியான ஸ்ரீ மஹா லஷ்மியும் ப்ரபன்னருக்கு அவஸ்யம் ஆராதிக்கத் தக்கவள் –

————

யதா ₂(ஆ)ஹ ப₄க₃வாஞ்ச்சா₂ஸ்த்ரே விஷ்வக் ஸேநாய ஶ்ருண்வதே ।
லக்ஷ்ம்யாம் மயி ச யுஷ்மாஸு ப₄க்தோ யோ பு₄வி து₃ர்லப₄꞉ ॥3॥

இவ்வாறு பகவானும் விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து அருளி உள்ளார் -அத்தை அருளிச் செய்கிறார் –
வாரீர் விஷ்வக் சேனரே -என்னிடத்திலும் மஹா லஷ்மியிடத்திலும் உங்கள் இடங்களிலும் பக்தரான ப்ரபன்னர் அரிதாக இருக்கிறார் –

—————–

அநந்தரம் ஹரேஸ்ஸர்வை ꞉ உபசாரைஸ் ஸமாஹித꞉ ।
தத்₃வத்ஸமர்சயேத்₃தே₃வீம் தே₃வ தே₃வஸ்ய வல்லபா₄ம் ॥4॥

பகவானை ஆராதித்த பின்பு தேவ தேவனான பகவானுக்கு இனிய வல்லபை யாகிய பெரிய பிராட்டியாரை ஸர்வ உபசாரங்களினால் ஜாக்கிரதையுடன் பகவானைப் போலவே ஆராதிக்க வேண்டும் –

அதிகமனம் -நோக்கிச் செல்லுதல் -அடுத்து உபகரணங்களைச் சேகரித்து ஆராதனம்-

—————-

அஸ்யா வைப₄வமாக்₂யாதி தத்த்வரத்நே யதா ₂ ஹரி꞉ ।
பரவ்யூஹாதி₃கான் பஞ்ச ப்ரகாராநாத்மநோ வித₃ன் ॥5॥

தத்வ ரத்னம் என்னும் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸம்ஹிதையில் பர வ்யூஹாதி ரூபங்களான தம்முடைய அவதார பேதங்களைச் சொல்லும் பகவான் இம்மஹா லஷ்மியின் வைபவத்தை அவ்விடத்தில் எவ்வாறு அருளிச் செய்கிறாரோ அதை அருளிச் செய்கிறோம் –

————–

ததா ₂ லக்ஷ்ம்யா꞉ ஸ்வரூபம் ச வக்ஷ்யே ஶ்ருணு ஸமாஹித꞉ ।
கு₃ணதஶ்ச ஸ்வரூபேண வ்யாப்திஸ் ஸாதாரணீ மதா ॥6॥

வாரீர் விஷ்வக் சேனரே -அப்படியே இம்மஹா லஷ்மியின் ஸ்வரூபத்தையும் சொல்லுகிறோம் -ஸாவதானமாய் இதைக் கேட்க வேண்டும் -அதாவது -குணத்தினாலும் -நியாமிகை -நியமிக்கிறவள் –
ஸ்வரூபத்தினாலும் -ஈஸ்வரி-ஆளுகிறவள்
ஸர்வ லோகங்களையும் வியாபித்து இருப்பது எங்கள் இருவருக்கும் பொதுவான தர்மமாகும் -இங்கு சொல்லிய ஸ்வரூபமாவது தீபத்தின் ஜ்வாலை போலே தேஜோ ரூபமாய் இருக்கும் ஓர் ஞான ஆஸ்ரயம் -அதன் குணமாவது தீபத்தின் ஒளி போலே ப்ரகாஸ ரூபமாய் இருக்கும் ஓர் ஞானம் -வியாபித்து இருப்பதாவது இவைகள் எங்கும் பரவி இருப்பதாகும் –

ஸ்ரீ எங்கள் ஆழ்வானுடைய ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு சி விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் ஒட்டியே இங்கு இவ்வாறு அருளிச் செய்கிறார்-

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-அணுவாக இருந்தாலும் பிராட்டிக்கு இவ்வாறு வியாப்தி உண்டே -அநபாயினியாக இருப்பதால் -ஸ்வரூப நிரூபக தர்மம் -பகவான் விபுத்வேன சர்வ கத னான விஷ்ணு -யுடைய ஸ்வ பாவம் போல் -நீக்கமற நிறைந்து இருப்பது போல் இவளும் நீக்கமற நிறைந்து உள்ளாள் -தனக்கு உள்ள சக்தியால் விசேஷ அபிமானம் வைத்து அணுவாக இருந்தாலும் சர்வ கதத்வம் இவளுக்கும் ஆக்கி வைத்துள்ளான் –

———–

மயா யதா ₂ ஜக₃த்₃வ்யாப்தம் ஸ்வரூபேண ஸ்வபா₄வத ꞉ ।
தயா வ்யாப்த மித₃ம் ஸர்வம் நியந்த்ரீ ச ததே₂ஶ்வரீ ॥7॥

மேற் சொல்லிய படி ஸ்வரூபத்தினாலும் குணத்தினாலும் என்னால் இவ்வுலகம் எவ்வாறு வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ அவ்வாறே இம்மஹா லஷ்மியினாலும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றது -என்னைப் போலவே இவளும் இவ்வுலகத்துக்கு நியாமிகையாகவும் ஈஸ்வரியாகவும் இருக்கின்றாள் –

விளக்கு -வெளிச்சம் எங்கும் பரவி குண வியாப்தி -சர்வத்வ வர்த்தமானத்தவம்
ஏகத்வ வர்த்தமானத்தவம் -விளக்கு
ப்ரஹ்மம் -ப்ரஹ்ம ஞானம் -இதே போல் -ப்ரஹ்மத்துக்கு ஸ்வரூப வியாப்தியும் உண்டு -இதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே –
நித்ய அநபாயினி என்பதால் அவளுக்கும் இவ்வாறே
ஆபாச விருத்திக்கு ஸுவ்பரி த்ருஷ்டாந்தம்

————–

மயா வ்யாப்தா ததா ₂ ஸா(அ)பி ததா ₂ வ்யாப்தோ(அ)ஹமீஶ்வர꞉ ।
மம தஸ்யாஶ்ச ஸே நேஸ ! வைலக்ஷண்யமித₃ம் ஶ்ருணு ॥8॥

வாரீர் விஷ்வக் சேனரே -என்னால் இம்மஹா லஷ்மியும் இம்மஹா லஷ்மியினால் யானும் ஒருவருக்கு ஓருவர் மேற் சொல்லிய ஸ்வரூபாதிகளினால் சூழப்பட்டு இருக்கிறோம் -ஆனால் எனக்கும் இம்மஹா லஷ்மிக்கும் பேதம் என் என்னில் அதைச் சொல்லுகிறோம் கேள்மின் -என்கிறார் –

———–

மச் சே₂ஷபூ₄தா ஸர்வேஷாமீஶ்வரீ வல்லபா₄ மம ।
தஸ்யாஶ்ச ஜக₃தஶ் சாஹமீஶ்வரோ வேத₃விஶ்ருத꞉ ॥ 9 ॥

ஸர்வர்களுக்கும் ஈஸ்வரியாகவும் எனக்கு மிகவும் இஷ்டையாகவும் இருக்கும் இம் மஹா லஷ்மி எனக்கு சேஷபூதையாய் இருக்கிறாள் -இம்மஹா லஷ்மிக்கும் இவ்வுலகங்களுக்கும் நான் ஈஸ்வரனாக வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறேன் –

————-

அஸ்யா மம ச ஸேஷம் ஹி விபூ₄தி ருப₄யாத்மிகா ।
இதி ஶ்ருதி ஶிரஸ் ஸித்₃த₄ம் மச் சா₂ஸ்த்ரேஷ்வபி மாநத₃ ॥10॥

யதா ₂ பூ₄மிஶ்ச நீலா ச தேஷபூ₄தே மதே மம ।
ததா ₂(ஆ)த்மநாஞ்ச ஸர்வேஷாம் ஜ்ஞாநதோ வ்யாப்திரிஷ்யதே ॥11॥

வாரீர் விஷ்வக் சேனரே -நித்ய விபூதி என்றும் லீலா விபூதி என்றும் விபூதிகள் இருவகைப்பட்டு இருக்கும் -இந்த உபய விபூதிகளும் எனக்கும் இம்மஹா லஷ்மிக்கும் சேஷ பூதங்கள் -யங்கள் இருவருக்கும் ஏற்றத்தைச் செய்வதற்காகவே இருப்பவர்கள் -இவ்வர்த்தம் வேதாந்த சாஸ்த்ரங்களிலும் ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்த்ரத்திலும் சொல்லப்பட்டு இருக்கின்றது -அப்படியே பூமி தேவி நீளா தேவிமார் இருவரும் எங்களுக்கு சேஷ பூதை களாக இருக்கிறார்கள் –

முக்த ஜீவர்களுக்கு எல்லாம் குணபூத ஞானத்தினால் மட்டும் வியாப்தி உண்டு -ஸ்வரூபத்தினால் வியாப்தி கிடையாது -இப்படியே பூமி தேவி நீளா தேவி இவர்களுக்கும் குண பூத ஞானத்தினால் மட்டும் வியாப்தி உண்டு ஒழிய ஸ்வரூபத்தினால் வியாப்தி கிடையாது-

விபூத்தவம் இல்லாத ஸ்வரூப வியாப்தி பெரிய பிராட்டியாருக்கு மட்டுமே -விசேஷ அபிமானத்தால் இவ்வாறு உண்டாக்கி வைத்துள்ளான் -நம்மாழ்வாருக்கு சூழ் விசும்பில் பரமபத அனுபவம் காட்டி அருளிச் செய்து வைத்தது போல் –

———————-

ஸ்வரூபதஸ்து ந தயோ ꞉ வ்யாப்திர் வேதா₃ந்த பாரக₃ ! ।
அஸ்மின் ஸாஸ்த்ரே யதா ₂(அ)ந்யத்ர ததா ₂ லக்ஷ்மீரபி ஸ்வயம் ॥12॥

ஸ்வஸ்ய நாத₂ஸ்ய ஸம்ப₃ந்த₄ம் வ்யாப்திமைஶ்வர்ய மேவ ச ।
அப்ருத₂க்₃பூ₄த ஸேஷித்வாத் ப்₃ரஹ்மாத்₃வைதம் தது₃ச்யதே ॥13॥

இந்தப் பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மி தனக்கும் தன் கணவனான பகவானுக்கும் இச் சேதன அசேதனங்களில் அடங்கவும் உண்டாயிருக்கும் சேஷ சேஷித்வ ரூப ஸம்பந்தத்தையம் -வியாப்தியையும் –ஆளுகையும்-எவ்வாறு சொல்லி இருக்கிறாளோ அவ்வாறே ஸ்ரீ ஸ்துதி ஸ்ம்ருதி சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டு இருக்கின்றது -ஆகையால் ப்ரஹ்மத்தின் சக்தி ரூபமான இம்மஹா லஷ்மி ப்ரஹ்மத்தைக் காட்டி லும் வேறுபடாமல் இருப்பதால் பஹ்மம் ஒன்றே என்று சொல்லப்படுகிறது –

—————

தஸ்ய யா பரமா ப₄க்தி: ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ₃தி₄தே꞉ ।
ஸர்வாவஸ்தா ₂க₃தா தே₃வீ ஸ்வாத்மபூ₄தா (அ)நபாயிநீ॥
அஹந்தா ப்₃ரஹ்மணஸ் தஸ்ய ஸாஹமஸ்மி ஸநாதநீ ॥14॥

மேற் சொல்லியபடி இம்மஹா லஷ்மிக்கு பகவான் வேறுபாடு இல்லாமையை அருளிச் செய்கிறார் -சந்திரனுக்கு நிலவு போன்றதான அப்பரமாத்மாவின் சக்தி எதுவோ அது தான் அப்பரமாத்மாவுடன் ஸர்வ அவஸ்தையிலும் பிரிவில்லாமலும் அப்பரமாத்மாவின் ஸ்வரூபையுமாக இம்மஹா லஷ்மி சொல்லப்படுகிறாள்

பகவத் ஸாஸ்த்ரத்தில் தன் ஸ்வரூபாதிகளைப் பற்றி இம்மஹா லஷ்மி அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் –

இம்மஹா லஷ்மி தான் பரமாத்மாவின் தன்மையாக இருக்கிறாள் என்றும் -இப்பரமாத்மா ஸர்வ பிராணிகளுக்கும் அந்தராத்மாவாய் இருப்பதால் அப்பிராணிகளைச் சொல்லும் தேவாதி பதங்கள் அப்பரமாத்மாவையும் சொல்லுகின்றது -அவ்வாறே அப்பரமாத்மாவின் தன்மையான தன்னையும் அப்பதங்கள் சொல்லும் விதத்தை இதனால் அருளிச் செய்கிறாள்

நான் அப்ப்ரஹ்மத்தின் தன்மையாக இருக்கிறேன் -அப்ப்ரஹ்மம் ஸர்வ பிராணிகளுக்கும் அந்தராத்மாவாக இருப்பதால் அந்த சர்வ பிராணிகளால் நான் என்று சொல்லத்தக்கவராக இருக்கிறார் -அது எப்படி என்னில் -ஆத்மஞானம் இல்லாத ஒருவன் தன் தேஹத்தைக் காட்டி நான் என்றால் அத்தேஹத்திற்க்கு ஆதாரமாக இருக்கும் ஆத்மாவும் அப்பதத்தில் பொருள் படுவது போலே -அவ்வாத்மாவுக்கும் ஆதாரமாக இருக்கும் இப்பரமாத்மாவும் பொருள் படுகிறார் என்பதாகும் –
இப்படிக்கு இப்பிராணிகள் இடத்தில் அடங்கி இருக்கும் அசித்து சித்து ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் வேறுபட்டு இருக்கச் செய்தேயும் இவற்றுள் அசித்தான தேஹ வாசகமான தேவன் மனிதன் என்ற பதங்களைக் கொன்டு இம்மூன்று தத்துவங்களையும் பேதம் இன்றி வ்யவஹரிக்கக் காரணம் என் என்னில்
இம்மூன்று தத்வங்களும் பிரிவின்றி ஒன்றாய்ச் சேர்ந்து வேறுபாடு தோன்றாமல் சரீரமாகவும் தேஹமாகவும் இருக்கை -இதைத்தான் விசிஷ்ட வைதிகர்கள் பிரதிதந்தரம் என்பார்கள் – பிரதிதந்தரமாவது இதர சித்தாந்திகளுக்கு இசையாததாய் தமது வேதாந்த ஸித்தாந்த மாத்திரத்தில் இசைவதாய் இருக்கும் ஓர் அர்த்தம் -அதாவது ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் இங்கு சொல்லிய சரீர ஆத்ம பாவம் இதைக்கொண்டு தான் -இம்மூன்று தத்துவங்களில் பிரதானனாயும் மற்றவர்களுக்கு தாரகனாயும் இருக்கும் இப்பரமாத்மாவைக் கொண்டு விஷ்ணுர் ஏவ ஜகத் ஸர்வம் என்றும் ப்ரஹ்ம ஏவ சகலம் ஜகத் என்றும் சில ஸாஸ்த்ரங்களிலே ப்ரஹ்மத்தையே ஸகல ப்ரபஞ்சங்களாயும் சொல்லுகிறது

ஆகையால் இப்பிராணிகள் நான் என்று வியவஹரித்தால் அதில் பரமாத்மா பொருள் படுவதால் இம்மஹா லஷ்மி யான் அதில் தோற்றும் தன்மையாக இருக்கிறேன் என்கிறாள் –

————–

ஆத்மாஸ்மி ஸர்வபூ₄தாநாம் அஹம்பூ₄தோ ஹரி꞉ ஸ்ம்ருத꞉ ॥15॥
(அஹந்தா ஸர்வ பூ₄தாநாம் ஸாஹமஸ்மி ஸநாதநீ ।)
யேந பா₄வேந ப₄வதி வாஸுதே₃வ꞉ ஸநாதந꞉ ॥16 |

பகவான் எல்லா இடங்களிலும் வஸிப்பதால் வாஸூ தேவன் என்று சொல்லப்படுகிறார் -இப்படிக்கு பகவான் எல்லா இடங்களிலும் வஸிக்கிறார் என்பதை தேச காலங்களில் குறைவு படுத்துவதற்கு யாதொரு பிரமாணமும் இல்லாமையால் அவர் ஸர்வ தேச ஸர்வ காலங்களில் உள்ளவர் என்றும் -ஆகையால் அவர் ஓர் வஸ்து என்றும் ப்ரஹ்மம் என்றும் ஏற்படுகின்றது -ஆகையால் அவர் இச்சேதனருக்கு அழியாத பேறாக இருக்கிறார் –

——–

(ப₄வத்₃பா₄வாத்மகம் ப்₃ரஹ்ம ததஸ்தச்சா₂ஶ்வதம் பத₃ம் ।)
ப₄வாந் நாராயணோ தே₃வோ பா₄வோ லக்ஷ்மீரஹம் பரா ॥17 ॥

முன் ஸ்லோகத்தில் சாமான்யமாக ப்ரஹ்ம ஸ்வரூபத்தைச் சொல்லி இந்த ஸ்லோஹத்தினால் அந்த ஸ்வரூபம் உள்ள லஷ்மி நாராயணனே பரப்ரஹ்மம் என்று சொல்லுகிறாள் –
மேற் சொல்லிய சத்தையோடு கூடியவர் -சத்தை –உண்மை -இருக்கை -ஸர்வ உத்தமனான நாராயணன் -ஸ்ரீ மஹா லஷ்மி என்றும் திருநாமத்தை யுடைய நான் மேற் சொல்லிய சத்தையாக இருக்கிறேன் –
ஆகையால் ஸ்ரீ மஹா லஷ்மியுடன் கூடிய ஸ்ரீ மன் நாராயணனே என்றும் ஆதியும் அந்தமும் இல்லாத பரப்ரஹ்மம் –

ஸர்வத்ர வஸதி வாஸூ தேவன்
பவது -இருப்பது -பாவ -இருக்கும் தன்மை -சத்தை -அவளுடன் இருப்பதாலேயே இருக்கும் தன்மை –

————

லக்ஷ்மீ நாராயணாக்₂யம் தத் ததோ ப்₃ரஹ்ம ஸநாதநம் ।
அஹந்தயா ஸமாயுக்தோ ஹ்யஹமர்த₂꞉ ப்ரஸித்₃த்₄யதி ॥18॥

வேதாந்தம் முதலிய ஸாஸ்திரங்களில் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லப்படுகின்றது -நீர் மேற் சொல்லிய ஸ்லோகத்தின் படி ஸ்ரீ லஷ்மீ நாராயணன் ப்ரஹ்மமாகில் ப்ரஹ்மம் இரண்டு என்று ஏற்படுகிறதே -அது கூடுமோ என்னில்
இம்மஹா லஷ்மி தமக்கும் பரமாத்மாவுக்கு பேதம் இல்லாமையால் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லக்கூடும் என்கிறாள் -இந்த ஸ்லோகத்தினால்
நான் என்பதற்குப் பொருள் தன்மையோடு கூடியதாகவே கிடைக்கின்றது -இத்தன்மையும் நான் என்ற பொருளில் கிடைக்கிறது -இவ்விரண்டும் ஒன்றோடு ஓன்று பிரிவின்றி சேர்ந்தே இருப்பதால்
இவ்வர்த்தங்களாக இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி பரமாத்மா ஆகிய இருவருக்கும் பேதமில்லை
ஆகையால் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லக் குறை இல்லை

மேற் சொல்லியபடி ஸ்ரீ மஹா லஷ்மியின் வைபவத்தைப் பற்றி இதர சாஸ்திரங்களிலும் சொல்லியவற்றை அருளிச் செய்கிறார் –

—————

அஹமர்த₂ ஸமுத்யா ச ஸா(அ)ஹந்தா பரிகீர்திதா ।
அந்யோந்யஸ்யா(அ)விநாபா₄வாத் அந்யோந்யேந ஸமந்வயாத் ॥19॥

தாதா ₃த்ம்யம் வித்₃தி₄ ஸம்ப₃ந்த₄ம் மம நாத₂ஸ்ய சோப₄யோ ꞉ ।
பராஸரஸ்து ப₄க₃வான் ஹைநாம் ப்₃ரஹ்ம ரூபிணீம் ॥20॥

பராசர முனிவரும் இம்மஹா லஷ்மியை பரப்ரஹ்ம ஸ்வரூபியாக ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் ஸர்வ ஜகத்துக்கும் மாதவாய் இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி நித்ய ஸ்வரூபையாகவும் பரமாத்மாவான பகவான் இடமிருந்து என்றும் பிரிவில்லாமலும் இருக்கிறாள் -பரமாத்மா ஸர்வ வ்யாபியாக இருப்பது போல் இம்மஹா லஷ்மியம் ஸர்வ வியாபியாக இருக்கிறாள் –

தாதார்த்தம் -அவனுக்காகவே இவள் -இவளுக்காகவே அவன் –

——————

நித்யைவைஷா ஜக₃ந்மாதா விஷ்ணோ ꞉ ஶ்ரீரநபாயிநீ ।
யதா ₂ ஸர்வக₃தோ விஷ்ணு꞉ ததை ₂வயம் த்₃விஜோத்தம ! ॥21॥

தே₃வ திர்யங் மநுஷ்யேஷு புந்நாமா ப₄க₃வான் ஹரி꞉ ।
ஸ்த்ரீநாம்நீ லக்ஷ்மீ மைத்ரேய ! நாநயோர் வித்₃யதே பரம்
॥22 ॥

வாரீர் மைத்ரேய முனிவரே
தேவர் பசு மிருகம் பஹ்யாதிகளான திர்யக்குகள் மனிதர்கள் இவர்களில் ஸ்த்ரீ ரூபிகளாய் இருக்கும் அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மி -புருஷ ரூபிகளாக இருக்கும் அனைவரும் பகவானது ஸ்ரீ மன் நாராயணன் என்றால் ஸ்த்ரீகள் லஷ்மி தேவியின் விபூதிகள் -புருஷர்கள் பகவானுடைய விபூதிகள் –
முன் ஸ்லோகத்தினால் இருவருமே ஸர்வ வ்யாபிகளாய்ச் சொல்லப்பட்டது -இங்கு இவ்வாறு பிரித்துச் சொல்வது எதனால் என்றால் இருவர்களும் சமானமாய் அந்தராத்மாவாய் -அந்தர்யாமிகளாய் -இருக்கச் செய்தேயும் ஸ்திரீகளை நியமிப்பதில் லஷ்மிக்கும் புருஷர்களை நியமிப்பதில் பகவானுக்கும் முயற்சி அதிகம் என்று கருத்து –

—————–

அபராதை₄க ஸக்தாநாம் அநர்ஹாணாம் சிரம் ந்ருணாம் ।
ப₄ர்துராஶ்ரயணே பூர்வம் ஸ்வயம் புருஷகாரதாம்
॥23 ॥

வால்லப்₄யே நாநுதிஷ்ட₂ந்தீம் வாத்ஸல்யாத்₃ யுப ப்₃ருஹிம்ணீம் ।
உபாயஸமயே ப₄ர்து꞉ ஜ்ஞாந ஸக்த்யாதி₃வர்தி₄நீம் ॥24॥

(முக்தாநாம் போ₄க₃வ்ருத்₃த்₄யர்த₂ம் ஸௌந்த₃ர்யாதி₃விவர்தி₄நீம் ।)
ஆகார த்ரய ஸம்பந்நாம் அரவிந்த₃ நிவாஸிநீம் ॥25 ॥

இம்மஹா லஷ்மி உபாயத்வ உபேயத்வ புருஷகாரத்வ ரூபங்களான மூன்று ஆகாரங்களோடு கூடியவள் என்பதை இதனால் அருளிச் செய்கிறார் –
எப்பொழுதும் அபராதங்களையே செய்வதில் மனமுடையவர்களான இச்சேதனர்கள் தன் பர்த்தாவான பகவானை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் பகவானுக்கு தாம் இஷ்டையாய் -வல்லபையாய் -இருப்பதால் அவனுக்கு இச்சேதனர்கள் இடத்தில் மிகவும் கிருபையை வளரச் செய்பவளாயும் -புருஷகாரம் செய்பவளாயும் –
இச்சேதனர்கள் உபாயத்தை அனுஷ்ட்டிக்கும் சமயத்தில் தம்முடைய கணவனுக்கு இச்சேதனர்களைக் காப்பதற்கு போந்தவைகளான ஞான சக்தியாதிகளை விருத்தி செய்பவளாயும்
முக்தர்களாகும் இச்சேதனர்களுக்கு பரிபூர்ண ஆனந்த அனுபவம் உண்டாகும்படி தனது வல்லபனான பகவானுக்கு தன்னுடைய சம்பந்தத்தினால் ஓர் அளவற்ற வடிவழகை யுண்டாக்கிறவளாய் இருப்பதால்
உபாயத்வ உபேயத்வ புருஷகாரத்வ ரூபங்களான மூன்று ஆகாரங்களோடு கூடியவளாகவும்
ஸர்வ லோக ஈஸ்வரியாகவும்
தம்மை அடைந்தவர்களுக்கு ஸர்வ ஐஸ்வர்யங்களையும் அளிப்பவரான -பகவானுக்கு மிகவும் இஷ்டதமையுமான தாமரை மேல் வீற்று இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மியை ஸேவிக்கிறேன் –

———–

அஸேஷ ஜக₃தீ₃ஶித்ரீம் வந்தே₃ வரத₃வல்லபா₄ம் |
ததா ₂ பூ₄மிம் ச நீலாம் ச தே₃வஶ்சாந்யா꞉ ஸஹஸ்ரஸ ꞉ ॥26 ॥

நித்ய ஸூரிப்ரோ₄நாம்ஶ்ச தத் தந் மந்த்ரை ꞉ ஸமர்சயேத் ।
யத்₃த₄ஸ்வேத்ரவஸக₃ம் ஜக₃ச்சித₃சிதா₃த்மகம் ॥27 ॥

அப்படியே பூ தேவியையும் நீளா தேவியையும் மற்றுமுள்ள அவனுடைய அநேக திவ்ய மஹிஷிகளையும் மற்றும் விஷ்வக் சேனர் முதலிய பிரதானர்களான நித்ய ஸூரிகளையும் அவர்களுக்குச் சொல்லிய மந்திரங்களினால் ஆராதிக்க வேண்டும் –

வேத்ரம் -திருப்பிரம்பின் கீழ் வளர்ந்த வஸ்து ப்ரஹ்மம்

—————-

விஷ்ணே ரமாத்யம் ஸேநேஸம் பரிவாரைஸ் ஸமர்சயேத் ।
யே நித்ய ஸூரயோ (அ)நந்த க₃ருடா₃த்₃யா꞉ ஸஹஸ்ரஸ ꞉ ॥28 ॥

சேதன அசேதன ரூபங்களான இவ்வுலகம் அனைத்தும் விஷ்வக் சேனர் திருக்கையில் பிடித்து இருக்கும் செங்கோலின் வசமாக இருப்பதால் விஷ்வக் சேனரை அவரது பரிவாரங்களோடு ஆராதிக்க வேண்டும் –

————-

பரிவாரை ꞉ ஸஹைதாம்ஶ்ச சக்ராதீ₃ந்யாயுதா ₄நி ச ।
தே₃வ்யஶ்ச ஸூத்ரவத் யாத்₃யா꞉ யா லக்ஷ்ம்யா꞉ பரிசாரிகா꞉ ॥29॥

பின்னும் அநந்த கருடாதிகளாயுள்ள அநேகம் நித்ய ஸூரிகள் எவர்களோ அவர்களையும் அவர்களின் பரிவாரங்களையும்
ஸ்ரீ ஸூதர்சனம் முதலிய திவ்ய ஆயுதங்களையும் ஸ்ரீ மஹா லஷ்மியின் பரிசாரிகளாய் இருக்கும் விஷ்வக் சேனர் முதலிய நித்ய ஸூரிகளுக்கு பத்னிமார்களான ஸூத்ரவதி முதலிய நித்ய ஸூரிகளையும் அவர்களின் பரிவாரங்களையும் அவர்களின் அந்தஸ்தின் கிரமப்படி ஆராதிக்க வேண்டும் –

————

தாஶ்ச தத் பரிவாரம் ச பூஜயேத் தத ₃நுக்ரமாத் ।
ப₄ஜந்தே யே ததா ₂ விஷ்ணோ : ஆக₃தா மந்தி₃ரே ஸுரா꞉ ॥30॥

நித்ய ஸூரிகளின் கோஷ்ட்டியில் சேராதவர்களாய் -பகவத் ஸேவார்த்திகளாய் -பகவானுடைய ஆலயத்தில் வந்திருக்கும் தேவர்கள் முமுஷுக்களான ப்ரபன்னர்களால் ஆராதிக்கத்தக்கவர்கள் அன்று

———–

விநா விதா₄நம் நித்யேஷு நோபாஸ்யா: தே முமுக்ஷுபி₄꞉ ।
ப்₃ரஹ்ம ருத்₃ரார்ஜுந வ்யாஸ ஸஹஸ்ர கர பா₄ர்க₃வா꞉ ॥31॥

ககுத்ஸா(அ)த்ரேய கபில பு₃த்₃தா₄த்₃யா யே ஸஹஸ்ரஸ ꞉ ।
ஸக்த்யா வேஸாவதாராஸ்தே விஷ்ணோஸ் தத் கால விக்₃ரஹா ꞉ ॥32॥

முமுஷு உபாஸ்யத்வம் -முக்கியமான குணம் –போற்றும் புனிதன் -ராமானுஜன் -உபாசனம் அல்ல

பிரம்மதேவன் ருத்ரன் அர்ஜுனன் வ்யாஸ முனிவர் பரசுராமன் காகுஸ்த மஹா ராஜன் தத்தாத்ரேயர் கபில மகரிஷி புத்தர் இவர்கள் முதலாக பகவானுடைய அவதாரங்களாகச் சொல்லப்படும் அநேகர் சிலகாலம் இவர்கள் இடத்தில் பகவானுடைய சக்தி அனுபிரவேசம் இருந்ததால் சக்தி ஆவேச அவதாரங்கள் என்பர் -பகவானுடைய சக்தி இருந்தவரையில் பகவானுக்கு சரீரங்களாயும் அச்சக்தி நீங்கிய பின்னர் அக்னி முதலிய தேவர்களைப் போல் இவர்களும் சாமான்யவர்களாக இருப்பதால் முமுஷுக்களான ப்ரபன்னர்களால் ஆராதிக்கப்படத் தக்கவர்கள் அல்லர்

———-

அநுபாஸ்யா முமுக்ஷூணாம் யதே₂ந்த்₃ராக்₃ந்யாதி₃தே₃வதா ꞉ ।
யதா ₂ ப₄க₃வதை வோக்தம் விஷ்வக்ஸேநாய ஶ்ருண்வதே ॥33॥

முமுஷுக்களுக்கு ஆராதிக்கத் தகாதவர்களான தேவர்கள் தம்மிடத்தில் ஸாஸ்த்ரார்த்தங்களைக் கேட்க்கும் -விஷ்வக் சேனருக்கு பகவான் எவ்வாறு உபதேசித்தாரோ -அதைச் சொல்லுகிறோம் –

——–

அநுகாலம் முமுக்ஷூணா மநுபாஸ்யா விஸேஷத꞉ ।
அநர்ச்யாநபி வக்ஷ்யாமி ப்ராது₃ர் பா₄வான் யதா ₂க்ரமம் ॥
34॥

சதுர்முக₂ஸ்து ப₄க₃வான் ஸ்ருஷ்டி கார்யே நியோஜித꞉ ।
ஸங்கராக்₂யோ மஹான் ருத்₃ர꞉ ஸம்ஹாரே விநியோஜித꞉ ॥35॥

மாேஹநார்தே₂ ததா ₂ பு₃த்₃த₄꞉ வ்யாஸஶ் சைவ மஹாந்ருஷி꞉ ।
வேதா ₃நாம் வ்யஸநே தத்ர தே₃வேந விநியோஜித꞉ ॥36॥

அர்ஜுநோ த₄ந்விநாம் ஶ்ரேஷ்தடோ ₂ ஜாமத₃க்₃ந்யோ மஹாந்ருஷி꞉ ।
வஸூநாம் பாவகஶ்சா(அ)பி வித்தேஸஶ்ச ததை ₂வ ச ॥37॥

(யத்₃யத்₃விபூ₄திமத் ஸத்த்வம் ஶ்ரீமதூ₃ர்ஜிதமேவ வா ।
தத்ததே₃வாவக₃ச்ச₂ த்வம் மம தேஜோம்(அ)ஸ ஸம்ப₄வம் ॥38 ॥)

யத்₃யத்₃விபூ₄திமத் ஸர்வம் ஶ்ரியா ஜுஷ்டம் விஸேஷத꞉ ।
ராக₃த்₃வேஷ விஹீநம் து ஸ்வதோ ப₃லவது₃ல்ப₃ணம் ॥39॥

தத்த₃ம்ஸம் விஜாநீயாத் மம கார்யார்த₂மாத₃ராத் ।
ஏவமாத்₃யாஸ்து ஸேநேஸ ! ப்ராது₃ர்பா₄வை ரதி₄ஷ்டி₂தா ꞉ ॥40 ॥

ஜீவாத்மாநஸ் ஸர்வ ஏதே நோபாஸ் யாஸ்தே முமுக்ஷுபி₄꞉ ।
ஆவிஷ்ட மாத்ராஸ்தே ஸர்வே கார்யார்த₂ம் அமிதத்₃யுதே ॥41

முமுஷுக்களுக்கு பூஜிக்கத் தகாதவர்களான என்னுடைய ஆவேச அவதாரங்களைச் சொல்லுகிறேன் –
சதுர்முகனான பிரமன் உலகங்களை ஸ்ருஷ்டிக்க என்னால் நியமிக்கப்பட்டவன்
சங்கரன் என்னும் ருத்ரன் ஸம்ஹாரம் செய்ய என்னால் நியமிக்கப்பட்டவன்
புத்தன் பாபங்களைச் செய்த பிராணிகளுக்கு மோஹத்தை உண்டாக்க என்னால் நியமிக்கப்பட்டவன்
வ்யாஸ முனிவர் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் நான்கு வேதங்களுக்கும் ருக்கு யஜுர் சாமம் அதர்வணம் என்ற பிரிவுகளைச் செய்வதற்காக என்னால் நியமிக்கப்பட்டவன்
இவர்களும் பின்னர் வில்லாளிகளில் சிறந்தவனான அர்ஜுனனும் மஹரிஷியான பரசுராமனும் அஷ்ட வசுக்களில் ஒருவனான பாகவன் என்னும் வாசுவும் குபேரன் என்னும் திக் பாலனும்
பின்னும் இவர்களைப் போல் பிரபுத்வமான ஐஸ்வர்யத்துடனும் சம்பத்து கொண்டவர்களாயும் -ராக துவேஷாதி துர்குணங்கள் இல்லாதவராயும் -பல பராக்ரமுள்ளவர்களாயும் இருக்கும் பிராணிகள் எவர்களோ அவர்கள் அனைவருமே ஓரோர் காரியத்துக்காக என்னுடைய ஓர் அம்சத்துடன் கூடியவர்களாக அறியவேண்டும் –
இப்படிக்கு என்னுடைய அம்சத்தால் அடையப்பட்டு இருக்கும் இவர்கள் ஜீவர்களாக இருப்பதால் இவர்கள் வைஷ்ணவர்களால் பூஜிக்கத் தக்கவர்கள் அல்லர் –

——–

அநர்ச்யா: ஸர்வ ஏவைதே விருத்₃த₄த்வாந் மஹாமுநே ।
அஹங்க்ருதி யுதாஶ் சைதே ஜீவமிஶ்ரா ஹ்யதி₄ஷ்டி₂தா꞉ ॥42 ॥

ஒரு கார்ய நிமித்தமாக என்னாலே அனுபிரவேசிக்கப்பட்டு இருக்கும் இஜ்ஜீவர்கள் கர்மபரவசப்பட்டு இருப்பவர்களாதலால் கர்ம பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பும் ப்ரபன்னர்களுக்கு உபாஸிக்கத் தக்கவர்கள் அல்லர் -பகவானால் அனுபிரவேசிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் ஸ்வ தந்திரம் என்னும் அஹங்காரத்துடன் கூடியவர்கள் –

———-

ப்ராது₃ர் பா₄வாஸ்து முக்₂யா யே மத₃ம் ஸத்வாத்₃ விஸேஷத꞉ ।
அஜஹத் ஸ்வ ஸ்வபா₄வா ஹி தி₃வ்யா꞉ ப்ராக்ருத விக்₃ரஹா ꞉ ॥43॥

தீ₃பாத்₃தீ₃ப இவோத்பந்நா ஜக₃தோ ரக்ஷணாய தே ।
அர்ச்யா ஏவ ஹி ஸேநேஸ ஸம் ஸ்ருத் யுத்தரணாய வை
॥44॥

விசேஷித்து என்னுடைய அம்சமாகவே இருப்பதினால் முக்கியமானவைகளாக இருக்கும் ராம கிருஷ்ண முதலிய அவதாரங்களோ என்னில் அவைகள் கர்மபந்தமில்லாத -அபஹத பாப்மா முதலிய ஸத் குணங்களோடு கூடியவைகளாயும் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹங்களோடு கூடியவைகளாயும் -தீபத்தில் இருந்து உண்டாகும் தீபங்கள் போல் இவ்வுலகோரை ரக்ஷிப்பதற்காகவே அவதரித்தவைகள் ஆகையால் இவ்வவதாரங்கள் சம்சாரத்தைக் கடப்பதற்கு ப்ரபன்னர்களால் ஆராதிக்கத் தக்கவைகளாகும்-

——————–

யதாஹ₂ப₄க₃வான் வ்யாஸ꞉ புராணே ச பராஸர꞉ ।
ப்₃ரஹ்மாணம் ஶிதிகண்ட₂ம் ச யாஶ்சாந்யா தே₃வதாஸ்து தா ꞉ ॥45 ॥

ப்ரதிபு₃த்₃தா ₄ ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் ப₂லம் ।
அந்யே து புருஷ வ்யாக்₄ர ! சேதஸா யே வ்யபாஶ்ரயா꞉ ॥46॥
அஸூத்₃தா₄ஸ்தே ஸமஸ்தாஸ்து தே₃வாத்₃யா꞉ கர்மயோநய꞉ ॥

வ்யாஸ முனிவரும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பராசர முனிவரும் எவ்வாறு அருளிச் செய்துள்ளார்களோ அவற்றை அருளிச் செய்கிறோம்
பிரமதேவன் சிவன் முதலிய பகவானை ஒழிந்த தேவர்கள் இவர்களோ அவர்கள் தங்களை அடைந்த வர்களுக்கு மோக்ஷம் ஒழிந்த ஸ்வல்ப பலன்களை கொடுப்பவர்களாகையால் முமுஷுக்கள் அவர்களை அடைவதில்லை

பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் –

வாரீர் புருஷ ஸ்ரேஷ்டரான மைத்ரேய முனிவரே -மொஸார்த்திகளினால் தியானிக்கத் தகாதவர்களான பகவானை ஒழிந்த மற்ற தேவர்கள் துஷ்க்ருத ஸூஹ்ருத ரூப கர்மங்களினால் வசப்பட்டு அசுத்தராக இருப்பவர்கள் -ஆகையால் அவர்கள் பிரபன்னர்களால் ஆராதிக்கத் தகுந்தவர்கள் அல்லர் –

—–

ஷஷ்டீ₂–ப₄க₃வத் பரிஜந உபாஸநா பத்₃த₄தி–ஸம் பூர்ணம்

————

அத₂ -ஸப்தமீ-பா₄க₃வத் உபாஸநா பத்₃த₄தி꞉

வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தஞ் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவத ஸஹ -முனிவர்களும் யோகிகளும் -குண நிஷ்டர்கள் -கைங்கர்ய நிஷ்டர்கள்-ஆச்சார்யர் -மந்த்ர ப்ரதன் -அடுத்து -பகவத் -இப்பொழுது பாகவத -ஸத்துக்கள் உபாஸனம் –-ஆச்சார்யர் வைபவம் காட்டிக்கொடுத்தவர் யாதலால் பாகவதர் ஸ்ரேஷ்டர் -கண்ணி நுண் சிறுத்தாம்பு பிரவேசம் –மற்றவரைச் சிரித்து இருப்பார் மதுரகவி ஆழ்வார் ஒருவரே -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்க்கு அடிமை -திருவாய் மொழிகளின் ப்ரமேயம் -பாகவதர்களே உபாயம் -உபேயம் -சேஷீ –

அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —விபவம்–காசை இழந்தவனை விட -அர்ச்சை -பொன்னை இழந்தவனை விட -பாகவத சமாஹம் -வைரம் இழந்தது போல் மிக்க வருத்தம்-கேசவ பக்தியை விடவே -கேசவ பக்த பக்தி ஸ்ரேஷ்டம் – வேதகப்பொன் போல் இவர்களோட்டை ஸம்பந்தம்

ஶ்ருதார்த₂ஸம்ஸ யோச்சி₂த்யை போ₃த₄நாய பரஸ்பரம் ।
ஸாத ₄வஸ்த்வபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தஸ் ஸங்க₃ஸ்ய பே₄ஷஜம் ॥1॥

வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் அர்த்தங்களிலாவது -ஆச்சார்யர்களிடம் கேட்க்கப்பட்ட அர்த்தங்களிலாவது உண்டாகும் ஸம்சயங்களைப் போக்கிக் கொள்வதற்காகவும் -ஒருவருக்கு ஒருவர் ஞானத்தை யுண்டாக்கிக் கொள்வதற்காகவும் -தங்களுக்கு உண்டாயிருக்கும் விஷய அனுபவங்களாகிய நோய்க்கு ஓர் மருந்தாக இருக்கும் சாதுக்களான ஞானிகள் ப்ரபன்னர்களினால் அடையத் தக்கவர்கள்

——————

(யதா₂ஹ ப₄க₃வான் வ்யாஸோ விஷய த்யாக₃ பே₄ஷஜம் ।
ஸங்க₃꞉ ஸர்வாத்மநா த்யாஜ்ய꞉ ஸ சேத் த்யக்தும் ந ஸக்யதே ॥2 ॥

பகவானாக வ்யாஸ முனிவர் விஷய அனுபவங்களை விடுவதற்கு ஓர் உபாயம் சொல்லி இருக்கிறார் -அதைச் சொல்லுகிறோம் -ப்ரபன்னர்கள் ஸர்வ பிரகாரத்தாலும் இவ் விஷய அனுபவங்களை விடவேண்டும் -விடுவதற்கு அஸக்யமாக இருக்குமாகில் அப்பொழுது ஸாதுக்களான ஞானிகளை ஆஸ்ரயிக்க வேண்டும் -அவர்கள் இவ்விஷய அனுபவங்களைப் போக்கும் மருந்தாக இருக்கிறார்கள் –

——————

(ஸாத₄வஸ்த்வபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தஸ் ஸங்க₃ஸ்ய பே₄ஷஜம் ।)
விசிகித்ஸா யதா ₃ து ஸ்யாதா₃த்மந꞉ கர்ம வ்ருத்தயோ ꞉ ॥3 ॥

தத்ர ஸம்மர்ஶிநோ யுக்தா யே விப்ரா꞉ ஸத்பதே₂ ஸ்தி₂தா ꞉ ।
தேஷாம் ஸமீபம் விநயாத் உபேத்யார்த₂ம் து ஶிக்ஷயேத் ॥4॥

ப்ரபன்னராய் இருக்கும் ஒருவருக்கு தாம் அனுஷ்ட்டிக்கும் கர்மங்களிலும் தம்முடைய நடத்தைகளிலும் ஸந்தேஹம் யுண்டாகில் அது விஷயத்தில் ஸாஸ்த்ர விசாரம் யுடையவராயும் -சன்மார்க்கத்தில் நிஷ்டை யுடையவராயும் -ஞானிகளுமான ப்ராஹ்மணர்களின் சமீபத்தில் சென்று அவ்வர்த்தத்தை சந்தேகமறத் தெரிந்து கொள்ள வேண்டும் –

——————-

யதா ₂ தே தத்ர வர்தேரன் ததா ₂ வர்ததே ஸாத்த்விக꞉ ।
அபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தோ யத்₃யபி குர்வந்தி நைகமுபதே₃ஸம் ।
யாஸ்தேஷாம் ஸ்வைரகதா ₂꞉ தா ஏவ ப₄வந்தி ஸாஸ்த்ராணி ॥5॥

ஞானிகளான சாதுக்களை ஆஸ்ரயித்து இருக்கும் பிரபன்னர் அவர்கள் எந்த நன்னடத்தையுடன் கூடியவர்களாக இருக்கிறார்களோ அதே நன்னடத்தையுடன் கூடியவர்களாக இருக்க வேண்டும் -அந்த ஞானிகள் தன்னை ஆஸ்ரயித்து இருக்குமவர்களுக்கு அநேகமாய் ஸத் உபதேசங்களைச் செய்யவே செய்வார்கள் -அப்படிக்கு நேரா விடினும் அவர்கள் தன்னிச்சையாய் சொல்லிக்கொண்டு இருக்கும் கதைகளும் கூட ஸாஸ்த்ரார்த்தமாகவே இருக்கும் –

கலை இலங்கு மொழியாளர் -திண்ணைப் பேச்சும் ஸ்ருதார்த்தங்களே -சொல்லும் அடு ஸ்ருதியாம்

————–

சவ்நகஸ்து யதா ₂ ப்ராஹ ஸாதூ₄நாம் த₃ர்ஸநே ததா ₂ ।
ஸுதூ₃ரமபி க₃ந்தவ்யம் யத்ர பா₄க₃வதா ꞉ ஸ்தி₂தா ꞉ ॥6॥

ப்ரயத்நே நாபி த்₃ரஷ்டவ்யா꞉ தத்ர ஸந்நிஹிதோ ஹரி꞉ ।
( இமமே வார்த₂மாஹ ஸ்ம நாரத ₃ஶ்சவ்நகாய வை ।
பாபாவஸாநமிச்ச₂த்₃பி₄꞉ நித்யம் விஷ்ணு பராயணை ꞉॥
ஸுதூ₃ரமபி க₃த்வா ச த்₃ரஷ்டவ்யா லோக பாவநா꞉ ।)
ஸாதூ₄நாம் த₃ர்ஸநம் புண்யம் தீர்த₂பூ₄தா ஹி ஸாத₄வ꞉ ॥7॥

சவ்னக முனிவர் சாதுக்களின் தர்சனத்தைப் பற்றி எவ்வாறு சொல்லி இருக்கிறாரோ அதைச் சொல்லுகிறோம் -சத்துக்களான ஞானிகள் இருக்கும் இடம் வெகு தூரமாக இருந்த போதிலும் அவ்விடத்திற்கு பிரபன்னர்கள் அவஸ்யம் போக வேண்டும் -அவ்விடத்தில் இருக்கும் தத்வ ஞானியை ப்ரயத்தனமாவது செய்து பார்க்க வேண்டும் -அந்த சாதுவினிடத்தில் பகவான் வஸிக்கிறார் –

ரகு குணன் ஸாது ஸ்ருதி தேடிச் சென்றானே -தர்ம ஸந்தேஹம் தீர்க்க –

சாதுக்களின் தர்சனம் மிகவும் புண்ணியங்களை யுண்டாக்கத் தக்கது -அவர்கள் ஒரு புண்ய தீர்த்தங்களாக இருக்கிறார்கள் -அனால் புண்ய தீர்த்தங்கள் காலம் கழிந்த பின்பே பலன்களைக் கொடுக்கும் -சாதுக்களின் ஸஹ வாஸமோ அப்படிக்கு இல்லாமல் உடனே பயன்களை அளிக்க வல்லதாகும் –

———–

காலேந ப₂லதே தீர்த₂ம் ஸத்₃ய꞉ ஸாது₄ஸமாக₃ம꞉ ।
ஸூகோ (அ)பி ப₄க₃வாநாஹ ஸதாம் து கு₃ண கீர்தநம் ॥8॥

ஸூக மஹ ரிஷியும் சாதுக்களின் குணங்களைக் கொண்டாடுவது நெடும் காலமாய்த் தான் செய்திருக்கும் புண்ணியங்களின் பலனாகச் சொல்லி இருக்கிறார் -அதையும் சொல்லுகிறோம்

—————–

சிரகாலார்ஜி தஸ்யை தத் ஶ்ருதஸ்யவ ப₂லம் யதா ₂ ।
ஶ்ருதஸ்ய பும்ஸாம் ஸுசிரஶ் ரமஸ்ய நந்வஞ்ஜஸா ஸூரிபி₄ரீரிதோ(அ)ர்த₂꞉ ।
தஸ்மாத்₃கு₃ணாநுஸ்மரணம் முகுந்த₃பாதா₃ரவிந்த₃ம் ஹ்ரு₃தயேஷு யேஷாம் ॥9॥

நெடும் காலமாய் வருத்தமடைந்து சம்பாதிக்கப்பட்டு இருக்கும் ஸாஸ்த்ர ஞானத்திற்கும் மோக்ஷ ரூபமான பலன் சீக்கிரம் கிடைப்பதில்லை -ஆகையால் அதைப் பெறுவதற்கு எப்பொழுதும் பகவானுடைய திருவடிகளை தம்முடைய ஹ்ருதயத்தில் தியானித்து இருக்கும் சத்துக்களின் குணங்களைக் கொண்டாட வேண்டும் –

———–

ஸத்₃பி₄ர் க்₃ருஹா க₃தா ꞉ ஸந்த꞉ பூஜநீயா விஸேஷத꞉ ।
ப்ரியவாக்யை ꞉ ததா ₂ர்க்₄யாத்₃யை ꞉ போ₄கை ₃ரிஷ்டைர்யதோ₂சிதை ꞉ ॥10॥

சத்துக்களாக இருக்கும் பிரபன்னர்களினால் தம்முடைய க்ரஹத்துக்கு அதிதிகளாய் வந்திருக்கும் சத்துக்களான ஸ்ரீ வைஷ்னவர்கள் குசல ப்ரஸ்னம் செய்வது முதலிய பிரியமான ஸல்லாபங்களினாலும் -அர்க்க்ய பாத்ய ஆசமநீயம் முதலிய உபசாரங்களினாலும் அவர்களுக்குத் தகுந்தவைகளாயும் இஷ்டங்களாயும் இருக்கும் உபஹாரங்களை சமர்ப்பிப்பதினாலும் பூஜிக்கத் தக்கவர்கள் –

————-

நாகாம்ஸ்யே தா₄வயேத்பாதவ் ₃ இதி ஸ்ம்ருத்யா(அ)ந்ய பா₄ஜநே ।
ம்ருண்மயாத₃வ் க்ஷாலயீத யதா₂ஹ ப₄க₃வான் ஸூக꞉ ॥11॥

வெண்கலப் பாத்திரத்தில் கால்களை அலம்பக்கூடாது என்று ஸ்ருதிகளில் சொல்லி இருப்பதால் பாகவதர்கள் திருவடிகளை மண் பாத்திரம் முதலியவை கொண்டு அலம்ப வேண்டும் -இவ் விஷயத்தில் சுக முனிவர் எவ்வாறு சொல்லி இருக்கின்றாரோ அதைச் சொல்லுகிறோம்

————

வ்யாளாலயத்₃ருமா ஹ்யேதே ஹ்யரிக்தாகி₂லஸம்பத₃꞉ ।
யே க்₃ருஹாஸ்தீர்த பாதீ₃யபாத ₃தீர்த₂ விவர்ஜிதா꞉ ॥ 12 ॥

எந்த கிரஹங்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்துக் கொள்ளத் தக்கின பாகவதர்களின் திருவடி தீர்த்தங்களைப் பெறாதவைகளோ அவைகள் குறைவற்ற பெரும் செல்வங்கள் உள்ளவைகளாக இருந்தும் சர்ப்பங்களுக்கு இருப்பிடமான சந்தன மரங்கள் போன்றவைகளாம் -அவைகள் சத்துக்களினால் கிட்டத் தக்கவைகள் அன்று –

—————–

ஸர்வேஷாமேவ பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி₄꞉ ।
வர்ணிதம் ப₄க₃வத்₃ ப₄க்ததாபாதோ₃த₃க நிஷேவணம் ) ॥13॥

பகவத் பக்தர்களின் திருவடி தீர்த்தங்களைப் பானம் செய்வது சகல பாபங்களுக்கும் பிராயச் சித்தம் என்று பண்டிதர்களினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது

—————-

தத் தீர்த₂ம் ஶிரஸா தா₄ர்யம் ததா ₂ங்கை ₃ஶ்ச க்ஷுராதி₃பி₄꞉ ।
பேய மந்தர்யதா ₂ ஸோமே தத்ர நாசமந க்ரியா ॥14॥

அந்த ஸ்ரீ பாத தீர்த்தம் சிரஸ்ஸிலும் அங்கங்களிலும் கண்களிலும் தரிக்கத் தக்கது -அப்படியே பானம் செய்து உள்ளுக்கும் உபயோகிக்கத் தக்கது -இந்த தீர்த்தத்தைப் பானம் செய்தால் ஸோம பானத்தைப் போலவே ஆசமனம் செய்ய வேண்டியதில்லை –

பகவானுடைய திருவடி தீர்த்தத்தை யாவது பாகவதர்களின் பாத தீர்த்தத்தை யாவது பானம் செய்தால் சோம பானத்தில் ஆசமனம் செய்ய வேண்டியது இல்லாமல் போனது போல் இதிலும் ஆசமனம் செய்ய வேண்டியதில்லை –

—————

பீதே பாதோ₃த₃கே விஷ்ணோ ꞉ வைஷ்ணவாநாம் ததை ₂வ ச ।
தத்ர நாசமநம் கார்யம் யதா ₂ ஸோமே த்₃விஜோத்தம ॥15॥

நாரத₃ஸ்யாதிதே₂꞉ பாதவ் ₃ ஸர்வாஸாம் மந்தி₃ரே ஸ்வயம் ।
க்ருஷ்ண꞉ ப்ரக்ஷால்ய பாணிப்₄யாம் பபௌ பாதோ₃கம் முநே ꞉ ॥ 16 ।

ஸ்ரீ கண்ணனும் தம்முடைய பதினாறாயிரம் பட்ட மஹிஷிகளின் க்ருஹங்களிலும் -அநேகம் திவ்ய ரூபங்களை எடுத்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் காலத்தில் -அவ் விடங்களில் அதிதியாக வந்த முனிவருடைய திருவடிகளை தம்முடைய கைகளினால் தாமே அலம்பி அந்த ஸ்ரீ பாத தீர்த்தத்தை கண்ணன் அமுது செய்தார் –

————-

போ₄கே₃ரிஷ்டைஶ்ச ஸாஸ்த்ரீயை ꞉ தோஷயேத்₃வைஷ்ணவான் க்₃ருஹே
த்ரிவித₄த்யாக₃பூர்வம் து ஸேஷத்வ ஜ்ஞாந வ்ருத்₃த₄யே ॥17॥

தம்முடைய க்ரஹத்தில் வந்திருக்கும் வைஷ்ணவர்களை தமக்கு சேஷத்வ ஞானம் வளருவதற்கு அவர் ப்ராப்யர் என்றும் ப்ராபகர் என்றும் சேஷீ என்றும் மூன்றுவித ஞானங்களையும் முன்னிட்டு ஸாஸ்திரங்களில் சொல்லப் பட்டவைகளாயும் -அவர்களுக்கு இஷ்டங்களாயும் இருக்கும் போக வஸ்துக்களினால் ஸந்தோஷிப்பிக்க வேண்டும் –

——————-

பு₄க்தவத்ஸு ததா ₂ தேஷு ஸேஷம் பு₄ஞ்ஜீத ஸாத்த்விக꞉ ।
யது₃ச் சி₂ஷ்டாஶி நஸ் ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி₃ஷை ꞉ ॥18॥

அந்த பாகவதர்கள் அமுது செய்த பின்பு அந்த சேஷத்தை ஸாத்விகரான ப்ரபன்னர் புசிக்க வேண்டும் -அந்த சேஷத்தை புசிக்கும் சத்துக்கள் ஸர்வ பாவங்களில் நின்றும் நீங்குவார்கள்

—————

(தே த்வத₄ம் பு₄ஞ்ஜதே பாபா꞉ யே பசந்த்யாத்ம காரணாத் ।
தைஶ்ச ஸம்பா₄ஷணாதீ₃நி ப₄க₃வான் ஸாஸ்த்ர உக்தவான் ।
(த்ரிஷு வர்ணேஷு ஸஞ்ஜாதோ மாமேவ ஸரணம் க₃த꞉ ।)
நித்ய நைமித்திக பரோ ………………………………….
வேத₃ஸாஸ்த்ர ரதா ₂ரூடா ₄꞉ ஜ்ஞாந க₂ட்₃ க₃த₄ராத்₃விஜா꞉ ।
க்ரீடா ₃ர்த₂மபி யத்₃ப்₃ரூயு꞉ ஸ த₄ர்ம꞉ பரமோ மத꞉ ॥19॥

அந்த பாகவதர்களுடன் ஸம்பாஷணை செய்வது முதலியவை ஸாஸ்த்ரார்த்தங்களாக இருக்கின்றன என்று பகவத் சாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கிறார் -அதாவது வேத சாஸ்த்ரங்களாகிய ரதத்தின் மேல் ஏறி ஞானமாகிய கத்தியை கையில் ஏந்திய ப்ராஹ்மணர்கள் விளையாட்டாகச் சொல்லும் வார்த்தைகளும் ஸாஸ்த்ரீயங்களான தர்மங்களைச் சொல்லுகின்றன என்பதாகும் –

—————

வாஸு தே₃வம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாந் யபி ।
தாந்யேவ த₄ர்ம ஸாஸ்த்ராணீத் யேவம் வேத₃விதோ₃ விது₃꞉ ॥20॥

பகவானைச் சரணம் அடைந்த ப்ரபன்னர்களின் அனுஷ்டானங்கள் எவையோ அவைகள் அனைத்தும் தர்ம சாஸ்த்ரார்த்தங்கள் என்று வேதம் அறிந்தோர் சொல்லுகிறார்கள் -தர்ம சாஸ்திரங்களில் சொல்லியவற்றையே அவர்களும் அனுஷ்டிக்கிறார்கள் என்று கருத்து –

———-

வீக்ஷணாதே₃வ ஸித்₃த₄யந்தி வைஷ்ணவாநாம் ஹி மாநவா꞉ ।
ததா ₂ ந தீர்தை ₂ஶ்ஸூத்₄யந்தி சவ்நகஸ்து யதோ
க்தவான் ॥21॥

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கடாக்ஷத்தினால் மனிதர்கள் எவ்வளவு பரிசுத்தர் ஆகிறார்களோ அவ்வளவு புண்ய தீர்த்தங்களினாலும் அடைவது இல்லை -இவ்வாறு சவுனக முனிவரும் சொல்லி உள்ளார் –

———–

ந ஸூத்₄யதி யதா ₂ ஜந்து꞉ தீர்த₂வாரிஸ தைரபி ।
லீலயைவ யதா ₂ பூ₄ப வைஷ்ணவாநாம் ஹி வீக்ஷணை ꞉ ॥22॥

சவ்னக முனிவர் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் -வாரீர் பரீக்ஷித் மஹா ராஜரே –ஸ்ரீ வைஷ்ணவர்கள் கடாக்ஷங்களினால் இப்பிராணிகள் எவ்வாறு சுத்தி அடைகிறார்களோ அவ்வாறு அநேக புண்ய தீர்த்தங்களினாலும் அடைவதில்லை –

———-

(வரம் ஹுதவ ஹஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்தி₂தி꞉ ।
ந சவ்ரி சிந்தா விமுக₂ ஜந ஸம்வாஸ
வைஸஸம் ) ॥23॥

பகவத் த்யானத்தில் விமுகர்களாக இருக்கும் ஜனங்களுடன் ஸஹவாஸம் செய்வதால் உண்டாகும் தீங்கை விட சுற்றிலும் அக்னி ஜ்வாலைகளினால் சூழப்பட்டு இருக்கும் கூண்டின் நடுவில் இருப்பது மேலானது –

——-

யே து பா₄க₃வதா நங்கை ₃꞉ ஸ்ப்ருஸந்த் யுபவிஸந்தி ச ।
பஶ்யந்த்யபி ச ஶ்ருண்வந்தி தா ₃ஸஸ் தேஷாம் மஹா முநே ॥24॥

வாரீர் மஹா முனிவரே -எவர்கள் பாகவதர்களை தங்கள் சரீரத்தினால் ஸ்பர்சிக்கிறார்களோ -அல்லது அவர்களை எழுந்த அருளி இருக்கச் செய்கிறார்களோ -அல்லது அவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்க்கிறார்களோ -அவர்களுக்கு நான் தாஸனாக இருக்கிறேன் –

————-

ஸத்₃பி₄ரேவ ஸஹா ஸீத ஸத்₃பி₄꞉ குர்வீத ஸங்க₃மம் ।
ஸத்₃பி₄ர் விவாத₃ம் மைத்ரீம் ச நாஸத்₃பி₄꞉ கிஞ்சிதா ₃சரேத் ॥25॥

சத்துக்களுடன் கூட இருக்க வேண்டும் -சத்துக்களுடன் கூட ஸஹவாஸம் செய்ய வேண்டும் -வழக்காடினாலும் ஸ்நேஹம் செய்தாலும் சத்துக்களுடனேயே செய்ய வேண்டும் அல்லது அசத்துக்களுடன் ஒரு காரியமும் செய்யத்தக்கது அன்று –

———–

யதா ₂ பதித்வா ஸந்மத்₄யே யயாதி꞉ புநராப்தவான் ।
ஸ்வபத₂ம் தத் ததா ₂ ஸத்ஸு பதிதோ ந விமுஹ்யதி ॥26॥

யயாதி மஹாராஜன் -ஸ்வர்க்க லோகத்தில் பதம் இழந்தவனாய் -அங்கிருந்து விழும் போது -அஷ்டகர் என்னும் சில சத்துக்களின் நடுவே விழுந்து அதனால் மறுபடியும் தன் பதத்தை அடைந்தது போலே சத்துக்களை சேர்ந்தவர் மோஹத்தை அடைவதில்லை –

———

ஸப்தமீ–பா₄க₃வது₃பாஸந பத்₃த₄தி꞉ ஸம் பூர்ணம்

———–

அத₂ விஹித வ்யவஸ்தா₂ந பத்₃த₄தி꞉ அஷ்டமீ

வைகுண்டேது பரே லோகே –பக்த பாகவத -முனிவர்களும் யோகிகளும்-குண அனுபவ ர்களும் -கைங்கர்ய பரர்களும் -இவ்வாறு பாகவதர்கள் இரண்டு கோஷ்ட்டிகள்
ஆச்சார்யர்கள் அனைவரும் பாகவதர்கள்-பேராளன் பேர் ஓதும் பெரியோர்கள் -ஆனால் எல்லா பாகவதர்களும் ஆச்சார்யர்களாக மாட்டார்கள் -மந்த்ர உபதேஸம் செய்து அருளினவர்கள்
ஆச்சார்யர் -பெருமாள் -பரிஜனங்கள் -பாகவதர்கள் -இவ்வாறு நான்கு பத்ததிகள் -இதில் –

விஹிதேஷு வ்யவஸ்தா ₂நம் ப்ரபந்நாநாம் ப்ரபஞ்ச்யதே ।
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி₃விஹிதம் அநுஷ்டே ₂யம் து நைத்யகம் ॥1॥

ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா இத்யாஹ லக்ஷ்மீபதிர் யத꞉ ।
ப்ரபந்நஸ்து விஸேஷேண ஸாஸ்த்ரேஷு விஹிதாந் யபி ॥2 ॥

ஸ்ருதி ஸ்ம்ருதி அனைத்தும் என்னுடைய ஆணையாக இருக்கின்றன -எவனாவது இவற்றை எனது கட்டளைகளை மீறி நடப்பார்களோ அவன் எனக்கே த்ரோஹம் செய்தவனாகிறான் -அவன் எனது பக்தனாக இருந்தாலும் வைஷ்ணவன் ஆவதில்லை –

ப்ரபன்னர்கள் விசேஷித்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் மாலை கட்டுதல் முதலிய அனுஞ்ஞா கைங்கர்யங்களையும் விடாமல் செய்ய வேண்டும் –

———–

குர்யாத் ஸ்ரக்₃ப₃ந்த₄நாதீ₃நி கர்மாணி ஶ்ரீபதேஸ் ஸதா ₃ ।
யதா ₂ லக்ஷ்ம்யா ஸ்வ தந்த்ரே (அ)பி ஸக்ரா யோக்தா து ப்ருச்ச₂தே ॥3॥

ந்யாஸ வித்யா நிஷ்டரான ப்ரபன்னருக்கு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மங்களில் வியவஸ்தை ஸ்ரீ மஹா லஷ்மியால் தேவேந்திரனுக்கு அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறோம் –

——–

ந்யாஸ வித்₃யைக நிஷ்ட₂ஸ்ய விஹிதேஷு வ்யவஸ்தி₂தி꞉ ।
உபாயாபாய ஸந்யாஸீ மத்₄யமாம் வ்ருத்திமாஶ்ரித꞉ ॥4 ॥

ரக்ஷிஷ்யதீதி நிஶ்சித்ய விக்ஷிப்ய ஸ்வ ஸ்வ கோ₃சர꞉ ।
பு₃த்₄யேத தே₃வ தே₃வம் தம் கோ₃ப்தாரம் புருஷோத்தமம் ॥5॥

பகவானிடத்தில் பர ஸமர்ப்பணம் பண்ணிய ப்ரபன்னர் கீழ்ச் சொல்லும் லக்ஷணங்கள் உள்ளவைகளான -உபாய அபாய ரூபங்களான உபாயாந்தரங்களை விட்டு நித்ய நைமித்திக கர்மங்களை விடாமல் அனுஷ்ட்டித்து தேவாதி தேவனான புருஷோத்தமனையே நமக்கு ரக்ஷகனாக அறிந்து இருக்க வேண்டும் –

————-

உபாயாபாய யோர்மத்₄யே கீத்₃ருஶீ ஸ்தி₂திரம்பி₃கே ।
உபாயாபாய தாமேவ க்ரியா꞉ ஸர்வா வளம்ப₃தே ॥6॥

மேற் சொல்லிய உபாய அபாய இரண்டு வித கர்மங்களுக்கு மத்யஸ்தனாக ப்ரபன்னர் இருக்க வேண்டும் என்றால் எவ்விதமாகும் -அனைத்து கர்மங்களுமே உபாய அபாய ரூபங்களாகவே தானே இருக்கும் –

———

ஸ்வீகாரே வ்யதிரேகே வா நிஷேத₄விதி₄ஸாஸ்த்ரயோ ꞉ ।
த்₃ருஶ்யதே கர்மணோ (அ)வ்யக்தம் உபாயாபாய ரூபதா ॥7॥

நிஷேத சாஸ்திரங்களையும் விதி சாஸ்திரங்களையும் அனுஷ்ட்டித்தாலும் அல்லது விட்டாலும் அதில் உண்டாகும் கர்மங்கள் உபாய அபாய ரூபங்களாக இருக்கும்

——————

த்ரிவிதா₄ம் பஶ்ய தே₃வேஸ கர்மணோ க₃ஹநாம் க₃திம் |
நிஷேத₄விதி₄ஸாஸ்த்ரேப்₄ய꞉ தாம் விதா₄ம் ச நிபோ₃த₄ மே ॥8॥

நிஷேத விதி சாஸ்த்ரங்களினால் உண்டான இக்கர்மங்களின் வர்க்கங்கள் மூன்று விதங்களாக இருக்கின்றன -அவைகள் மிகவும் ஸூஷ்மமானவைகள் -அவற்றைச் சொல்கிறோம் -நீர் அறிய வேண்டும் –

—————-

அநர்த₂ஸாத₄நம் கிஞ்சித் கிஞ்சிச் சாப்யார்த ₂ஸாத₄நம் ।
அநர்த ₂பரிஹாராய கிஞ்சித் கர்மோபதி₃ஶ்யதே ॥9 ॥

இக் கர்மங்களில் சில அநர்த்த சாதனங்கள்-ஸூராபாநாதிகள் – சில அர்த்த சாதனங்கள் -ஜ்யோதிஷ்ட ஹோமாதிகள் -சில அநர்த்த பரிஹாரங்கள்-சாந்த்ராயுத ரூபாதி கர்மங்கள் – இவ்வாறு மூன்று வகைப்பட்டவை –

————

த்ரை ராஶ்யம் கர்மணா மேவம் விஜ்ஜேயம் ஸாஸ்த்ர சக்ஷுஷா ।
அபாயோபாய ஸஞ்ஜ்ஞவ் து பூர்வ ராஶீ பரி த்யஜேத் ॥10॥

சாஸ்திரங்களை அறிந்தவரால் இவ்வாறு மூன்று வர்க்கங்களாக கர்மங்களைச் சொல்லி -ப்ரபன்னர் முதலில் சொல்லிய அபாய உபாய கர்மங்களை விட்டுவிட வேண்டும் –

————–

த்ருதீயோ த்₃விவிதோ₄ ராஶி꞉ அநர்த₂பரிஹாரக꞉ ।
ப்ராயஶ்சித்தாத்மக꞉ கஶ்சித் உத்பந்நா நர்த ₂நாஸந꞉ ॥11॥

மேற் சொல்லிய கர்மங்களின் மூன்று ராசிகளில் மூன்றாவது ராசியான அநர்த்த பரிஹார ரூபங்களான கர்மங்கள் இரண்டு வகைப்படும் -அவற்றுள் தாம் செய்த பாவங்களினால் உண்டாகும் அநர்த்தங்களைப் போக்கும் பிராயச்சித்த ரூபங்களான சந்தராயணாதி கர்மங்கள் முதல் வகுப்பு -இவற்றையும் ப்ரபன்னர்கள் கீழ் சொன்ன உபாய அபாய ராசிகளை விட வேண்டியது போல் விடத் தக்கவையே யாகும்-பிராயச்சித்த கர்மங்களை செய்ய சக்தி உள்ளவராக இருந்தாலும் -அவற்றால் வரும் கால விளம்பம் ஸஹியாத ஆர்த்த ப்ரபன்னர்கள் விஷயத்திலும் ஆக வேண்டும் -என்று இந்த பத்ததியில் 23 ஸ்லோகத்த்தில் சொல்லுகிறோம் –

————-

தமம் ஸம் நைவ குர்வீத் மநீஷீ பூர்வ ராஶிவத் ।
க்ரியமாணம் ந கஸ்மைசித் யத₃ர்தா₂ய ப்ரகல்பதே ॥12॥

அக்ரியாவத₃நர்தா ₂ய தத்து கர்ம ஸமாசரேத் ।
ஏஷா ஸா வைதி₃கீ நிஷ்டா ₂ ஹ்யுபாயாபாய மத்₄யமா ॥13॥

எந்த கர்மங்களை அனுஷ்ட்டித்தால் யாதொரு பயன்களும் கிடைப்பதில்லையோ ஆனால் அனுஷ்ட்டிக்கா விடில் ப்ரத்யவாதங்களை யுண்டாக்கத் தக்க வைகளாக இருக்கின்றனவோ அவ்விதமான -நித்ய நைமித்திக கர்மங்களை மாத்திரம் ப்ரபன்னர் அவஸ்யம் அனுஷ்ட்டிக்க வேண்டும் –

————————–

அஸ்யாம் ஸ்தி₂தோ ஜக₃ந் நாத₂ம் ப்ரபத்₃யேத ஜநார்த₃நம் ।
ஏதது₃க்தம் ப₄வத் யத்ர ஹிம்ஸாஸ்தேயாதி₃கம் ச யத் ॥
14॥

இது தான் மத்தியஸ்தமான வைதிக நிஷ்டை -இதில் இருப்பை யுடையவராய் ஜகத்பதியான பகவானை அடைய வேண்டு -இவற்றை ஸ்பஷ்டமாக மேல் ஸ்லோகங்களினால் அருளிச் செய்கிறார் –

—————–

அநர்த₂ஸாத₄கம் கர்ம காம்யம் த்வர்த₂ஸ்ய ஸாத₄கம் ।
சைத்யாதி₃கம் ததா ₂ கர்ம ஸாங்க்₂ய யோகா₃தி₃கம் ததா ₂ ।15॥

ப்ராயஶ் சித்தம் ததா ₂ த்₃வேதா ₄ க்ருத பாப ப்ரணாஸநம் ।
சாந்த்₃ராயணாதி₃கம் த்வேகம் அந்யத் ஸந்த்₄யார்சநாதி₃கம் ॥ 16 ।

ஸ்ரீ மஹாலஷ்மியால் லஷ்மி தந்திரத்தில் தேவேந்திரனுக்கு அருளிச் செய்த ப்ரமேயங்களை அருளிச் செய்கிறார் -கொலை முதலிய அநர்த்த கர்மங்கள் -ஐஹிக ஆமுஷ்மிக பலன்களைக் கொடுக்கும் காம்ய கர்மங்கள் -சாந்தராயணாதி பிராயச்சித்த ரூப கர்மங்களும் விடத்தக்கவையே –

ஸ்நாத்வா புஞ்சீதா -குளித்தே உண்ண வேண்டும்
பாபங்களைச் செய்திருந்தாயாகில் சாந்த்ராயணம் பண்ண வேண்டும்
முமுஷுப்படியில் உண்டே –

————

அத்ர ஹிம்ஸாத்₃யபாயம் ச காம்யம் சௌத்யாதி₃கம் ததா ₂ ।
உபாயம் கர்ம ஸாங்க்₂யாதி₃ ப்ராயஶ்சித்தாதி₃கம் ததா ₂ ॥17 ॥

சாந்த்₃ராயணாதி₃கம் கர்ம ந குர்யாச்ச கதா₃சந ।
பா₄வ்யநர்த₂ஸ்ய யத் கர்ம பரிஹாரேண கீர்திதம் ॥18 ॥

ஸந்த்₄யார்சா பஞ்ச யஜ்ஞாதி₃ தந் முமுக்ஷுபி₄ராத்₃ருதம் ।
நைமித்திகம் சாக்₃ரயணம் ஸீமந்தோந் நயநாதி₃கம் ॥19॥

ஆனால் எந்தக் கர்மங்களை அனுஷ்டியா விடில் கெடுதி சம்பாதிக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் ஸந்த்யாவந்தனாதிகள் -பஞ்ச மஹா யாஜ்ஞம் -ஆக்ரயண ஸ்தாலீபாகம் சீமந்த உன்னயநாதி களான நைமித்திக கர்மங்களும் ப்ரபன்னர்களான முமுஷுக்களுக்கு அவஸ்யம் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாகும் –

————-

அக்₃ந்யாதா ₄நாதி₃கம் கார்யம் அதி₄காரே ஸதி த்₃விஜை ꞉ ।
நிஷித்₃த₄காம்யோ பாயாக்₂ய கர்மாண்யாநி நாசரேத் ॥20 ॥

அக்ன்யா தானம் முதலிய சிலஸ்ரளத கர்மங்களும் அவற்றை அனுஷ்ட்டிக்கும் அதிகாரமும் இருக்குமாகில் ப்ராஹ்மணர்கள் இடத்தில் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாம் -கீழ்ச் சொல்லிய நிஷித்த காம்ய கர்மங்களை அனுஷ்ட்டிக்கக் கூடாது –

———–

ப்ராயஶ்சித்தம் ப்ரபந்நஸ்ய விஸேஷேண யது₃ச்யதே ।
லக்ஷ்மீ தந்த்ரே கமலயா நிமித்தே து ததா ₃சரேத் ॥21 ॥

ப்ரபன்னர்களுக்கு பிராயச்சித்தம் பண்ணிக கொள்ளும் படியான ஏதாவது நிமித்தம் உண்டாகில் லஷ்மி தந்திரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மியால் ப்ரபன்னர்களுக்கு விசேஷித்து விதிக்கப்பட்டு இருக்கும் ப்ராயச்சித்தத்தை அனுஷ்ட்டிக்க வேண்டும்

————-

ஸக்தவ் ப்ரதிபதோ₃க்தம் ஸ்யாத் அஸக்தவ் ஸரணாக₃தி꞉ ।
ப்ராயஶ்சித்த மித₃ம் ஹ்யேதத் நிர்ணீதம் து மநீஷிபி₄꞉ ॥ 22 ॥

ப்ரபன்னர்கள் உபாய அபாய ரூபமான நிஷித்த கர்மங்களைச் செய்வாராகில் ப்ரபந்ந நிஷ்டையில் குறைந்தவர்களாகி விடுவார்கள்

————————

அநந்ய ஸாத்₄யே ஸ்வாபீ₄ஷ்டே இதி ந்யாஸஸ்ய லக்ஷணாத் ।
ஸக்தவ் ப்ரதிபதோ₃க்தம் ஸ்யாத் ப்ராயஶ்சித்தம் ஹி ஸித்₃த்₄யதி ॥23॥

அந்யதா ₂(அ)திப்ரஸங்க₃ஸ் ஸ்யாத் அவைஷ்ணவ க்₃ருஹாஸநே ।
ஸரணாக₃த ஹந்துஸ் ஸ்யாத் ப்ரபத்த்யைவ பரிக்₃ரஹ꞉ ॥24॥

அப்பிராய்ச சித்தமாவது மீண்டும் சரணாகதி செய்வதே -உபாய புத்தியாகச் செய்தவற்றுக்குப் ப்ராயச்சித்தமும் இதுவே -அவற்றை 30-33 ஸ்லோகங்களில் அருளிச் செய்துள்ளார் -ப்ரபன்னர்களில் சக்தி யுள்ளவர்கள் சாந்த்ராயணாதி ப்ராயச்சித்தங்களும் அசக்தர்களும் ஆர்த்த ப்ரபன்னர்களும் புனர் பிரபத்தியையே பிராயச்சித்தமாகவும் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்பதே ஆச்சார்யர்களது திரு உள்ளம் –

————-

(ப்ராயஶ் சித்திரியம் ஸாத்ர ய꞉ புநஶ் ஸரணம் வ்ரஜேத்) ஸக்ருதே₃வ ஹி
ஸாஸ்த்ரார்த₂꞉ க்ருதோ(அ)யம் தாரயேந் நரம் ।
உபாயாபாய ஸம் யோகே ₃ நிஷ்ட ₂யா ஹீயதே(அ)நயா ॥ 25 ।

ப்ரபன்னர்களுக்கு பிராயச்சித்தம் வேண்டும்படியாய் நேர்ந்தால் தேவ தேவனான பகவானுக்கு திவ்ய மஹிஷியான என்னைச் சரணம் அடைய வேண்டும் –

———-

அபாய ஸம்ப்லவே ஸத்₃ய꞉ ப்ராயஶ் சித்தம் ஸமாசரேத் ।
ப்ராயஶ் சித்திரியம் ஸா(அ)த்ர யத் புநஶ் ஸரணம் வ்ரஜேத் ॥26॥

ப்ரபன்னர்களுக்கு புத்தி பூர்வகமாவது அபுத்தி பூர்வகமாவது உண்டாகும் பாபங்கள் அனைத்துமே இச் சரணாகதியால் போய் விடும்

———-

உபாயாநாமுபாயத்வ ஸ்வீகாரேப் யேத தே₃வ ஹி ।
ப்ராயஶ் சித்த ப்ரஸங்கே ₃ து ஸர்வபாப ஸமுத்₃ப₄வே ॥27॥

யாவன் ஒருவன் அக்ருத்யங்கள் என்று தெரிந்து இருந்தும் அவற்றைச் செய்கிறானோ அவனுக்கு இந்த சரணாகதியும் ப்ராயச்சித்தமாகாது -புத்தி பூர்வகமாக துஷ்க்ருத்யங்கள் செய்யத்தகாது என்று கருத்து –

—————–

மாமேகாம் தே₃வ தே₃வஸ்ய மஹிஷீம் ஸரணம் வ்ரஜேத் ।
தஸ்மாத் ப்ரமாதா ₃த் ப₄க்த்யா வா யத் ப்ரபந்நஸ்ய து₃ஷ்க்ருதம் ॥28 ॥

தத் ஸர்வம் ஸமயத்யாஸூ ஸரணாக₃தி ரேவ ஸா ।
ஜ்ஞாத்வா(அ)ப்யபாயே பாதித்வம் ய꞉ கரோதி விமூட ₄தீ₄꞉ ।
போ₄க₃ ஏவ ஹி தத்ர ஸ்யாத் நிஷ்க்ருதிர்நா(அ)நயா(அ)பி ஹி ॥29॥

நாம் பிரபன்னராய் விட்டதால் எந்த துஷ்க்ருத்யங்களையும் நாம் செய்ய அடுக்கும் என்னும் கர்வத்தினால் ஒருவன் அதிக துஷ்க்ருத்யங்களைச் செய்யக் கூடாது -அப்படி அறிந்து இருந்தும் அபராதங்களைச் செய்வானாகில் அவன் அதோகதியை அடைந்து விடுவான் -இவன் விஷயத்தில் பகவான் அந்தப்பிராயச்சித்த ப்ரபத்தியையும் செய்ய ஒட்டாமல் இவனுக்குத் தீங்கை வளர்த்து விடுவான் என்று கருத்து –

கர்ம பலன்களையும் கிருபா பலன்களையும் அனுபவித்தே தீர வேண்டும் –

———-

ப்ரபந்ந இதி க₃ர்வேண ந குர்யாத் புரு து₃ஷ்க்ருதம் ।
ஜ்ஞாத்வாப் யபாய கர்மாணி குர்வன் மூட ₄꞉ பதத்யத₄꞉ ॥30॥

ஞானிகளான ப்ரபன்னர் கள் ஒருக்காலும் அக்ருத்யங்களைச் செய்யார் -தெரியாமையிலாவது அஜாக்ரதையிலாவது அக்ருத்யங்களைச் செய்தாராகில் அவைகளை தம்முடைய ப்ரஹ்ம ஞானமாகிய நெருப்பிலே எரித்து விடுவார்கள் –

———-

ஜ்ஞாநிநோ ந ச குர்வந்தி யத்₃யஜ்ஞாநாத் ப்ரமாத₃த꞉ ।
தச்ச ஜ்ஞாநாக்₃நிநா ஸர்வம் த₃ஹந்தி விமலாஸயா꞉ ॥31॥

(அத்ராஹ ப₄க₃வான் க்ருஷ்ண꞉ அர்ஜுநஸ்ய து ஶ்ருண்வத꞉ ।
யதை ₂தா₄ம்ஸி ஸமித்₃தோ₄(அ)க்₃நி꞉ ப₄ஸ்ம ஸாத் குரு தே(அ)ர்ஜுந ॥32

ஜ்ஞாநாக்₃நிஸ் ஸர்வ கர்மாணி ப₄ஸ்ம ஸாத் குருதே ததா ₂ ॥33॥

இது விஷயத்தில் பகவானாக கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதா சாஸ்திரத்தில் -தீக்களினால் பரவி எரியும் அக்னி எவ்வாறு விரகுகளை பஸ்மமாய் எரித்து விடுகின்றதோ அவ்வாறே ப்ரஹ்ம ஞானமாகிற அக்னி மேற் சொல்லிய கர்மங்கள் அனைத்தையும் பஸ்மமாக எரித்து விடும் என்று அருளிச் செய்கிறான்

———

ப₄க₃வ ஜ்ஜ்ஞாந விஸ்ரம்ப₄ விஸூத்₃த₄ மநஸாம் ஸதாம் ।
ஸாஸ்த்ரோக்தம் ப₄க₃வஜ் ஜ்ஞாநம் ப்ராயஶ் சித்தம் க்ருதைநஸாம் ॥34 ॥)

பகவத் ஞானம் ஸர்வ பாபங்களையும் போக்கி விடும் என்னும் நம்பிக்கையினால் விசுத்த மனசை யுடைய ஸத்துக்களுக்கு வேதாந்த ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டு இருக்கும் உபாஸன ரூபமான பகவத் ஞானமானது அவர்களால் செய்யப்பட்டு இருக்கும் பாபங்களுக்குப் ப்ராயச்சித்தமாய் இருக்கின்றது –

———-

யஸ்ய யாவாம்ஶ்ச விஶ்வாஸ꞉ தஸ்ய ஸித்₃தி₄ஶ்ச தாவதீ ।
நைதாவா நிதி விஶ்வாஸ: ப்ரபா₄வ꞉ பரிமீயதே
॥35

பகவத் ஞானத்தில் எவ்வளவு நம்பிக்கை உண்டாகிறதோ அவ்வளவு ஸித்தியும் கிடைக்கும் -இந் நம்பிக்கையின் பிரபாவம் இவ்வளவு என்று அளவிட முடியாது -ஆகையால் உபாஸகர்களுக்கு பகவத் தியானமே ஸர்வ பாபங்களும் ப்ராயச்சித்தமாய் விடுகிறது என்று கருத்து –

————-

வேதோ₃தி₃தம் ஸதா ₃சாரம் (ஆத்₃ரியேத ஸதா ₃ ஸுதீ₄꞉ ।
அஸ்மின் தந்த்ரே யதோ₂க்தம் து வைதி₃காசாரளங்க₄நே ॥36॥

ஸாஸ்த்ர ஞானம் உள்ளவராய் இருக்கும் இப்பிரபன்னர் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் ஸத் ஆச்சாரங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் -பாஞ்சராத்ர சாஸ்திரத்தில் வேதாந்த யுக்த கர்மங்களைக் கடந்தால் என்ன வென்று அருளிச் செய்யப்பட்டுள்ளது அவற்றை அருளிச் செய்கிறோம் –

——–

அவிப்லவாய த₄ர்மாணாம் பாலநாய குலஸ்ய ச ।
ஸங்க்₃ரஹாய ச லோகாநாம் மர்யாதா ₃ஸ்தா₂பநாய ச ॥37॥

ப்ரியாய மம விஷ்ணோஶ் ச தே₃வ தே₃வஸ்ய ஸார்ங்கி₃ண꞉ ।
மநீஷீ வைதி₃காசாரம் ) மநஸா(அ)பி ந லங்க₄யேத் ॥38 ॥

வேத யுக்த தர்மங்கள் அழியாமல் இருப்பதற்கும் ப்ராஹ்மண்யாதி நான்கு வர்ணங்களையும் காப்பாற்றுவதற்காகவும்-லோகத்தார்கள் அங்கீ கரிப்பதற்கும் -தேவதேவனான பகவானுக்கும் அவர் பெரிய பிராட்டியாரான எனக்கும் இஷ்டத்தை உண்டாக்குவதற்கும் ஞானியாக இருக்கும் பிரபன்னர் வேத யுக்த தர்மங்களை மனதாலும் கடக்கக் கூடாது –

———-

யதா ₂ஹி வல்லபோ ₄ ராஜ்ஜோ நதீ₃ம் ராஜ்ஞா ப்ரவர்திதாம் ।
( லோகோ பயோகி₃நீம் ரம்யாம் ப₃ஹு ஸஸ்ய விவர்தி₄நீம் ॥39 ॥)

லங்க₄யன் ஸூல மாரோஹேத₃நபேஷோ (அ)பி தாம் ப்ரதி ।
ஏவம் விளங்க₄யன் மர்த்யோ மர்யாதா₃ம் வேத₃நிர்மிதாம் ॥40॥

ராஜனுக்கு மிகவும் இஷ்டனாக இருக்கும் ஒருவன் -அந்த ராஜாவால் லோக உபயோகத்துக்காகக் கட்டித் திருப்பப் பட்டதாயும் -அதன் தண்ணீர் பாய்வதனால் பயிர்களை விருத்தி செய்யத் தக்கதாய் இருக்கும் ஓர் நதியின் அணையை அழிப்பானாகில் -அவ்வணையால் உபயோகம் அற்றவனாக இருந்தும் அவன் சூலத்தின் மேல் ஏற்றி அவனால் தண்டிக்கத் தக்கவனாவது போலேவே வேத யுக்தமானஹத்தை மீறி நடக்கும் ப்ரபன்னனும் எனது ஆஜ்ஜையைக் கடந்தானாகில் அவன் எனக்கு இஷ்டனாக இருந்த போதிலும் -இஷ்டனாக இல்லாமல் போவதும் அதுக்கும் மேலே தண்டிக்கத் தக்கவனாவான் என்று கருத்து –

————

ப்ரியோ (அ)பி ந ப்ரியோ மே (அ)ஸௌ மதா₃ஜ்ஞாவ்யதி வர்தநாத் ।
உபாயத்வமஹம் தத்ர வர்ஜயேந் மநஸா ஸுதீ₄꞉ ॥41॥

ஸ்வ வர்ணாஶ்ரம யுக்தம் து தே₃ஸ காலாநுரூபத꞉ ।
விஸேஷ விஹிதம் யச்ச தத் குர்யாச்ச்₂ரீபதே꞉ ப்ரியம் ॥
42 ॥

ஞானியாக இருக்கும் பிரபன்னர் தான் அனுஷ்ட்டிக்கும் நித்ய நைமித்திக்க கர்மங்களில் இவைகள் மோக்ஷ உபாயங்கள் என்னும் புத்தியை விடவேண்டும்
ஆகையால் தம்முடைய வர்ணாஸ்ரம தர்மங்களோடே கூடியவராகவே வைஷ்ணவர்களுக்கு என்று விசேஷித்து ஸாஸ்திரங்களில் விதித்து இருக்கும் பகவத் கைங்கர்யங்களான கர்மங்களையும் அப்பிரபன்னர் செய்ய வேண்டும் –

அஷ்டமீ–விஹித வ்யவஸ்தா₂ந பத்₃த₄தி꞉ ஸம் பூர்ணம் –

————————

அத₂ வர்ஜநீய பத்₃த₄தி꞉ நவமீ-

வர்ஜநீயம் ப்ரபந்நாநாம் வர்ண்யதே லோக தவேத₃யோ ꞉ ।
ஸ்வாவஸ்தா ₂தே₃ஶகாலாநாம் விருத்₃த₄ம் வர்ஜயேத் ஸதா₃ ॥ 1 ॥

லௌகிக வைதிக கர்மங்களில் ப்ரபன்னர்களுக்கு விடத்தக்கவை சொல்லப்படுகின்றன -அதாவது தாம் இருக்கும் அவஸ்த்தைக்கும் தேசத்துக்கும் காலத்துக்கும் விருத்தமான கர்மங்களை ப்ரபன்னர்கள் எப்போதும் விடவேண்டும் –

—————

வர்ணாஶ்ரம விருத்₃த₄ம் யத் மந்வாத்₃யுக்தம் விஸேஷத꞉ ।
ஸ்வாதி₄கார விருத்₃த₄ம் ச ஶாஸ்த்ரோக்தம் ந ஸமாசரேத் ॥ 2 ॥

மநு தர்ம ஸாஸ்த்ரம் முதலியவைகளில் தன்னுடைய வர்ணாஸ்ரம தர்மங்களுக்குத் தகாதவைகளாகச் சொல்லப்பட்டு இருக்கும் கர்மங்களையும் -ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருந்தும் தன்னுடைய ப்ரபந்ந அதிகாரத்துக்குத் தகாதவைகளாய் இருக்கும் கீழ்ச் சொல்லும் கர்மங்களையும் ப்ரபந்நர்கள் செய்யக்கூடாது –

————-

ஸாமாந்ய ஶாஸ்த்ராநுஜ்ஞாதம் விருத்₃த₄ம் யத்₃விஸேஷத꞉ ।
சதுஷ்பத₃வநஸ்பத்யோ ꞉ மங்க₃ளாதே₃꞉ ப்ரத₃க்ஷிணம் ॥ 3 ॥

ப்ரதோ₃ஷே ஶங்கரார்சாதி₃ பாபஹாநிகரம் ந்ருணாம் ।
ந குர்யாத் பரமை காந்தீ காம்யம் லோத்₃வய ப்ரத₃ம் ॥ 4 ॥

நற் சந்தி பெரிதான வ்ருக்ஷம் மங்கள வாத்யம் முதலியவைகளான இவைகளைப் ப்ரதக்ஷிணம் செய்வது -சந்தி வேளையில் சிவா பூஜை செய்வது இவை முதலியவை மனிதர்களின் பாபங்களைப் போக்குகின்றனவாக ஸாமான்ய ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன-இவைகளையும் இஹத்திலும் புறத்திலும் நன்மை யுண்டாக்குவதாக சில ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் காம்ய கர்மங்களையும் -இன்னும் வைஷ்ணவர்களுக்கு விருத்தங்களாக இருக்கும் விபூதி தரணம் முதலிய அடையாளங்களையும் பிரபன்னர்கள் செய்யக்கூடாது –

—————–

ஸாமாந்ய ஶாஸ்த்ரவிஹிதம் விருத்₃த₄ம் சாங்கநாதி₃கம் ।
க₃திந்ருத்தாதி₃கம் யத்து விஸேஷாக₃மசோதி₃தம் ॥ 5 ॥

தத் ஸர்வம் வைஷ்ணவ꞉ குர்யாத் யதோ₂க்தவ் யம ஶௌநகௌ ।
“ஹரி கீர்திம் விநை வாந்யத் ப்₃ராஹ்மணேந நரோத்தம ।
பா₄ஷாகா₃நம் ந கா₃தவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் ॥ 6 ॥

பகவத் குணங்களை கானம் செய்வது -பகவானுக்கு எதிரில் நர்த்தனம் செய்வது இவை முதலாவதாக பகவத் ஸாஸ்திரங்களில் பாகவதர்களுக்கு விசேஷித்து விதிக்கப்பட்டு இருக்கும் கைங்கர்யங்கள் எவைகளோ அவைகளை வைஷ்ணவர்கள் -ப்ரபன்னர்கள் -அவஸ்யம் செய்ய வேண்டும் -யமதர்மராஜன் சவுனாக முனிவர் இவ்விருவர்களும் இவ்வாறு அருளிச் செய்துள்ளார்கள் –

——————-

விஷ்ணோ : கா₃நம் ச கே₃யம் ச நடநம் ச விஸேஷத꞉ ।
ப்₃ரஹ்மன் ! ப்₃ராஹ்மண ஜாதீநாம் கர்தவ்யம் நித்ய கர்மவத் ॥ 7 ॥

வாரீர் நர ஸ்ரேஷ்டரே -பகவத் குணங்களை கானம் செய்வது ஒழிய ப்ராஹ்மணானால் இதர பாஷையில் கானம் செய்யத் தகாதாகையால் நீர் அதைச் செய்தால் பாபங்களைச் செய்தீராவீர்

வாரீர் -ப்ராஹ்மணரே -ப்ராஹ்மண ஜாதியில் பிறந்தவர்களினால் பகவானுடைய கல்யாண குணங்களைப் பற்றிய கானங்களும் கீர்த்தனைகளையும் நர்த்தனங்களையும் தங்கள் நித்ய கர்மங்களைப் போலவே அவஸ்யம் செய்யத்தக்கவைகள் ஆகின்றன –

————–

ந்ருத்யதாம் ஶ்ரீபதே ரக்₃ரே கர ஸம்ஸ்போ₂ட நாதி₃பி₄꞉ ।
உட்₃டீ₃யந்தே ஶரீரஸ்தா ₂꞉ மஹா பாதக பக்ஷிண꞉ ॥ 8 ॥

பகவானுடைய எதிரில் நர்த்தனம் செய்கிற பாகவதர்களின் சரீரங்களில் இருக்கும் மஹா பாதகங்களாகிற பஷிகளானவை அவர்கள் போடும் கைத்தாளம் முதலியவைகளால் வெளியில் கிளம்பி விடுகின்றன –
மரத்தின் மேல் இருக்கும் பக்ஷிகள் கைகளைத் தட்டி ஓசைப் படுத்துவதினாலும் கிளைகளை அசைப்பதினாலும் உயர்க் கிளம்பி விடும் போலே பாகவதர்கள் பகவான் எதிரில் தாளம் போடுவதாலும் நர்த்தனம் செய்வதாலும் அவர்களின் மஹா பாதகங்களும் கழிகின்றன -என்று கருத்து –

————

ஏவம் விஸேஷ ஶாஸ்த்ரோக்தம் விஷ்ணு சக்ராங்கநாதி₃கம் ।
விஸேஷ ஶாஸ்த்ர ப்ராப₃ல்யாத் வைஷ்ணவஸ்து ந வர்ஜயேத் ॥ 9 ॥

இவ்வாறு விசேஷ ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் விஷ்ணு சக்ராங்கனம் முதலியவைகளை விதிக்கும் ஸாஸ்த்ரம் ஸாமான்ய ஸாஸ்த்ரங்களைக் காட்டிலும் பலமுள்ளதாகையாலே வைஷ்ணவர்கள் விடத்தகாது -வைஷ்ணவர்கள் அவஸ்யம் சக்ராங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று கருத்து –

————-

லோகே (அ)நுஷ்டா₂ந ஸங்கோசாத் லாக₄வாத் ப₂ ல கௌ₃ரவாத் ।
விமுக்தி ஸாத₄நத்வம் ஹி ப்ரபத்தேரவ ஜாநதே ॥ 10 ॥

அந்யதா₂ யோஜநாச்சாபி ப்ரமாணாநாம் குதர்கத꞉ ।
தேந து₃ஷ் க்ருதிநோ மூடா₄꞉ நராணாமத₄மா꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 11 ॥

உலகத்தில் ப்ரபத்தியை அனுஷ்டிப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவுற்றவராக இருப்பதாலும் -இப்பிரபத்தி லகுவான உபாயமாக இருப்பதாலும் -இதற்குக் கிடைக்கும் மோக்ஷம் மிகப்பெரிய பலனாக இருப்பதாலும் -இப்பிரபத்தி ப்ரமாணங்களான ஸாஸ்த்ரங்களுக்கு தர்க்கங்களினால் சிலர் வேறுவிதமாக அர்த்தம் செய்வதாலும் இப்பிரபத்தி மோக்ஷ உபாயம் என்பதை சிலர் அநாதரித்து வருகிறார்கள் –

————-

மாயயா(அ)பஹ்ருதஜ்ஞாம்நா꞉ ஆஸுரீம் யோநிமாஶ்ரிதா ꞉ ।
யாந்ந பஶ்யேஜ் ஜாயமாநான் பாபிநோ மது₄ஸூத₃ந꞉ || 12 |

இப்பிரபத்தி மோக்ஷ சாதனம் என்பதை அபலாபம் செய்யும் மேற் சொல்லியவர்கள் மிக்க பாபங்களைச் செய்த மூடர்கள் -மனிதர்களில் அதமர்கள் -பகவத் மாயையினால் ஞானம் இழந்தவர்கள் -அசுரர் ஸ்வ பாவத்தை அடைந்தவர்கள் –

————-

ப்₃ரஹ்மா ருத்₃ரோ (அ)த₂வா பஶ்யேத் ரஜஸா தமஸா வ்ருதான் ।
தைராளாபம் ந குர்வீத நாஸத்₃பி₄꞉ கிஞ்சிதா ₃சரேத் ॥ 13 ॥

பாபிகளாய் இருக்கும் எவர்களை பகவான் ஜனன காலத்தில் கடாக்ஷிக்க வில்லையோ அல்லது பிரம தேவனால் ருத்ரனால் அவர்களைப் பார்க்கப்பட்டதால் ரஜோ குணத்தோடும் தமோ குணத்தோடும் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடன் ப்ரபன்னர்களால் ஸல்லாபம் செய்யத்தக்கத்து அன்று -அந்த அசத்துக்களுடன் யாதொரு காரியமும் செய்யத்தக்கதன்று –

———

கௌதஸ்குதாநாம் ஶாஸ்த்ராணி தாம ஸாந்யவத₃ன் மநு꞉ |
வாங் மாத்ரேணாபி ஸம் ஸர்க₃ தைஸ் ஸாகம் து நிஷேத₄தி ॥ 14 ॥

கௌதஸ் குதர்களின் ஸாஸ்த்ரங்களை தாமஸ ஸாஸ்த்ரங்களாக மநு அருளிச் செய்துள்ளார் -ஆகையால் அவர்களுடன் ஸல்லாபம் செய்வதைக் கூட அம்மனு ஸாஸ்த்ரத்தில் நிஷேதித்து இருக்கிறார் –

————————-

யா வேத₃பா₃ஹ்யா ஸ்ம்ருதயோ யாஶ்ச காஶ்ச குத்₃ருஷ்டய꞉ |
ஸர்வாஸ்தா நிஷ்பலா ꞉ ப்ரேத்ய தமோ நிஷ்டா₂ஹி தா꞉ ஸ்ம்ருதா ꞉” ॥15॥

வேத விருத்தங்களாக இருக்கும் ஸ்ம்ருதிகள் எவைகளோ -ஸார்வாக மதம் முதலிய குத்ஸிக மதங்கள் எவைகளோ அவைகள் அனைத்தும் பர லோகத்தில் நிஷ்பலன்களாய் விடுகின்றன -அவைகள் தமோ குணத்தில் இருப்புள்ளவைகள் –

————–

பாஷண்டி₃நோ விகர்மஸ்தா₂ன் பி₃டா₃ லவ்ரதி காம்ஞ்ச₂டா₂ன் ।
ஹைதுகான் ப₃கவ்ருத்தீம்ஶ்ச வாங் மாத்ரேணாபி நார்சயேத் || 16 ||

வேத விருத்தங்களான சின்னங்களைத் தரிப்பவர்களாயும் -ஸாஸ்த்ர விருத்த கர்மங்களைச் செய்பவர்களாயும் வேதங்களை நம்பாதவர்களாயும் கபிடால விருத்திகளாயும் -வேதங்களின் பேரில் ஹேது வாதம் செய்பவர்களாயும் -பக விருத்திகளாயும் இருக்கும் அதிதிகளாய் வந்திருக்குமவர்களை பிரபன்னர்கள் வாக்கினால் கூட பூஜிக்கத்தக்கவர்கள் அன்று
பிடா விருத்திகளுக்கு லக்ஷணம்
தர்மத்வஜீ ஸதா லுப்தச் சாத்மிகோ லோக டம்பக
பைடால விருத்திக ஒக்ஜேயோகி மஸ்ரஸ ஸர்வாபி சந்தக
தான் தார்மிகன் என்று பேர் பெறுவதற்காக பலர் கூடுமிடத்தில் தர்மங்களைச் செய்து தன்னையே ஸ்துதி செய்து கொள்கிறவனாயும் -பிறர் பொருள்களில் ஆசை யுள்ளவனாயும் -கபடம் உள்ளவனாயும் -நம்பியவர்களை மோசம் செய்பவனாயும் -பிறர்களுக்குத் துன்பம் உண்டாக்குபவனாயும் -நல்லோர்களிடத்தில் பொறாமையால் தோஷங்கள் சொல்பவனாயும் இருக்குமவன் பிடால வ்ருத்தி யாவான் -பூனையின் நடவடிக்கை உள்ளவன்
பக விருத்தியின் லக்ஷணம் -கொக்கின் நடவடிக்கை உள்ளவன்
அதோ த்ருஷ்டிர்கை க்ருதிகஸ் ஸ்வார்த்த சாதன தத்பர கடோ மித்யா விநீத ச பக விருத்தி தரோ த்விஜ
எப்பொழுதும் கீழ் பார்வை யுள்ளவனாயும் கெடு நினைவு உள்ளவனாயும் பிறருக்கு கெடுதி செய்து தன் கார்யங்களை சாதித்துக் கொள்பவனாயும் துர் நடத்தை உள்ளவனாயும் கபட விநயம் உள்ளவனாயும் இருக்குமவன் பக விருத்தி உள்ளவன் என்று சொல்லப்படுகிறான் –

—————

ப்ரபத்தே꞉ ப்ரதிப₃ந்த₄ஸ்து ஜாயதே யைர்ஹி கர்மபி₄꞉ ।
ப்ரபந்நோ ந நிஷேவேத தாத்₃ருஶாநி ந கிஞ்சந ॥ 17 ॥

தே₃வதாந்த்ர ஸம் ப₄க்திம் நித்ய கர்மவிதி₄ம் விநா ।
உபாயாந்தர நிஷ்டா₂ம் ச த்₃ரோஹம் பா₄க₃வதேஷ்வபி ॥ 18 ॥

விஶ்வாஸ மாந்த்₃யம் விஷயேஷ்வதி ப்ராவண்ய மேவ ச ।
ஶ்ரீஶ்ரீஶயோ ꞉ பரிஜநே நிந்த₃நாதீ₃நி ஸர்வஶ꞉ ॥ 19 ॥

தே₃ஹாவத்₄ யநு வ்ருத்தாநி நாநுதாப யுதாநி ச ।
ப்ராயஶ்சித்த விஹீநாநி பாதகாநி மஹாந்தி ச ॥ 20 ॥

ப₃ந்த₄காநி ப்ரபந்நஸ்து ந குர்யாத்தாத்₃ருஶாந்யபி ।
தேஷ்வந்வயே ஸதி ஸதா மநுதாபோ ப₄வேத்₃யதி₃ ॥ 21 ॥

ப்ராயஶ்சித்தம் தத ꞉ குர்யாத்₃ரஹஸ்யம் ச ப்ரகாஶகம் ।
(ப்ரபந்நஸ்யாநு தப்தஸ்ய ரஹஸ்யே த்வதி₄காரிதா || 22 ||

நித்ய நைமித்திக கர்மங்களைத் தவிர மற்ற இடங்களில் தேவதாந்தர ஸம்பந்தம் பெறுவதும் -உபாயாந்தரங்களை அனுஷ்டிப்பதும் -பாகவதருக்கு த்ரோஹம் செய்வதும் -பகவத் பாகவதர்கள் இடத்தில் விச்வாஸம் குறைவு படுவதும் -ஸ்த்ரீ முதலிய விஷயாந்தரங்களில் ப்ராவண்யம் கொண்டு இருப்பதும் -பெருமாள் பிராட்டிமார்கள் பரிஜனங்கள் இவர்களை நிந்தை செய்வதும் -ஆகிய இவைகள் தேஹம் இருக்குமளவுக்கு இவனிடத்தில் உள்ளவைகளாய்- இவைகளினால் பரிதாபாத்திகளையும் உண்டாக்காதாவைகளாயும் -நின்று இருக்கும் இவ்வபதாரங்களையும் பிராயச்சித்தம் இன்றிக்கே இருக்கும் மஹா பாதகாதிகள் எவையோ அவ்விதமான ஸம்ஸாரத்தில் கிடக்கச் செய்யும் பாதகங்களையும் ப்ரபன்னர் ஒருக்காலும் செய்யத்தகாதவைகள் –

——————

ப்ராயஶ்சித்தே யதே₂ந்த்₃ராய ப்ருச்ச₂தே கமலா ஆஹ ச ।
) ரஹஸ்யம் து ப்ரபந்நஸ்ய த₃ர்ஶிேம் பூர்வ பத்₃த₄தவ் ॥ 23 ॥

ஸத்துக்களான ப்ரபன்னர்களுக்கு மேற்கண்ட பாதகங்கள் நேர்ந்து அதனால் அனுதாபம் பிறக்குமாகில் பின்பு அவர்கள் ரஹஸ்யமாகவும் ப்ரகாசகமாயும் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் –

—————

ஏத த₃ர்த₂மபி₄ப்ரேத்ய பராஶர வஸோ யதா ₂ ॥ 24 ॥
” க்ருதே பாபே (அ)நுதாபோ வை யஸ்ய பும்ஸ꞉ ப்ரஜாயதே ।
ப்ராயஶ்சித்தம் து தஸ்யைகம் ஹரி ஸம் ஸ்மரணம் பரம் ॥
(பாபே கு₃ரூணி கு₃ரூணி ஸ்வல்பாந் யல்பே ச தத்₃வித₃꞉
ப்ராயஶ்சித்தாநி மைத்ரேய ஜகு₃꞉ ஸ்வாயம்பு₄வாத₃ய꞉ ॥ 26 ॥

துஷ் க்ருதங்களைச் செய்து அதனால் அனுதாபத்தோடு கூடிய ப்ரபன்னருக்கு ரஹஸ்ய ப்ராயச்சித்தத்தில் அதிகாரம் உண்டாகிறது -இவ்வாறு தன்னிடத்தில் உபதேசம் கேட்க்கும் தேவேந்திரனுக்கு ஸ்ரீ மஹா லஷ்மி உபதேசித்து அருளி உள்ளாள்
இவ்வாறே பிராயச்சித்த பிரபத்தியைப் பற்றி பராசர முனிவர் அருளிச் செய்தவற்றை மேலும் அருளிச் செய்கிறோம் –

——————-

ப்ராயஶ் சிதாந்ய ஸேஷாணி தப꞉ கர்மாத்மகாநி வை ।
யாநி தேஷாமஸேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம் ॥ 27 ॥

எவர் ஒருவர் பாபம் செய்ததால் அனுதாபம் உண்டாகின்றது அவருக்கு பகவந் நாம ஸ்மரணமே பிராயச்சித்தம் ஆகின்றது –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே

——————-

ப்ரமாதா₃த் க்ரியதே கர்ம ப்ரச்ய வேதாத்₄வரேஷு யத் ।
ஸ்மரணாதே₃வ தத்₃விஷ்ணோ ꞉ ஸம் பூர்ணம் ஸ்யாதி₃தி ஶ்ருதி꞉ ॥ 28 ॥

வாரீர் மைத்ரேய முனிவரே ஸ்வயம்பவ மநு முதலிய ரிஷிகளானவர்கள் அதிக பாபங்களுக்கு அதிக ப்ராயச்சித்தமும் அல்ப பாபங்களுக்கு அல்ப ப்ராயச்சித்தமும் சொல்லி இருக்கிறார்கள் –

பிரஸ்ய -நழுவுதல் -த்ரவ்ய லோபம் கிரியா லோபம் மந்த்ர லோபம் -போன்ற அசேஷ லோபங்களையும் போக்க வல்லது

———–

ப₄க₃வத்₃ த்₄யாந யுக்தஸ்ய தத்₃த்₄யாநாவதி₄கா꞉ க்ரியா꞉ ।
(நாஸ்திகஸ்ய து மூர்க₂ஸ்ய யுக்தம் த்₃வாத₃ஶ வார்ஷிகம் ) ॥ 29 ॥

தபோ ரூபங்களாயும் கர்ம ரூபங்களாயும் ப்ராயச்சித்தங்கள் எவையோ அவைகள் எல்லாவற்றுக்கும் பகவந் நாம ஸ்மரணமே உயர்ந்த பிராயச்சித்தமாக இருக்கின்றது –

————–

(நாஸ்திகஸ்ய து கர்தவ்யம் யதோ₂க்தம் த₃ஶ வார்ஷிகம்) ।
ஏவம் விஷய பே₄தே₃ ந கு₃ருலத்₄வோர் ந ஸங்கர꞉ ॥ 30 ॥

யாகங்களில் அஜாக்ரதையால் பிழைகளாவது -செய்ய வேண்டியவற்றை தவரி விட்டாவது அனுஷ்ட்டிக்கப்படும் கர்மங்கள் பகவந் நாமங்களை ஸ்மரித்த மாத்திரத்தாலேயே பரிபூர்ணமாய் விடுவதாய் வேதத்தில் சொல்லப்படுகின்றது –

———-

ஷேத்ரஜ்ஞஸ் யேஶ்வரஜ்ஞாநாத் விஶுத்₃தி₄꞉ பரமா மதா ।
இத்யேவம் யாஜ்ஞவல்க்யேந ப்₃ருவதா (ஆ)த்மேஶ யோரபி ॥ 31 ॥

ஸேஷ ஸேஷித்வ விஜ்ஞாநாத் ஶுத்₃தி₄ர் ஜீவஸ்ய வர்ணிதா ।
“அதி பாப ப்ரவ்ருத்தோ(அ)பி த்₄யாயந் நிமிஷ மச்யுதம் ॥ 32 ॥

ப்ரபன்னர் அனுஷ்ட்டிக்கும் யாகாதி கர்மங்கள் அவர்களுக்கு பகவத் த்யானம் நிலைத்த உடனே முடிவாய் விடுகின்றன -பகவான் இடத்தில் நிஷ்டை இல்லாதவர்களால் பன்னிரண்டு வருஷங்களால் முடியத்தக்க யாகாதி கர்மங்கள் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாம்

மேற் சொல்லியபடி பகவத் பக்தர்கள் அல்லாதவர்கள் பல ஆண்டுகள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பகவத் பக்தர்கள் ஸ்வல்ப பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதே போதும் என்றும் ப்ராயச்சித்தங்களை விதிக்கும் ஸாஸ்த்ரங்களுக்கு வ்யவஸ்தை ஏற்படுவதால் ஒன்றுக்கு ஒண்டு விரோதம் இல்லை –

இவ்வாத்மாக்கள் பரமாத்மாவை அறிவதால் இவர்களுக்கு பரமமான பரிசுத்தி யுண்டாவதாய் யாஜ்ய வல்க்யர் என்னும் மகரிஷி சொல்வதால் -இஜ்ஜீவர்கள் தமக்கும் ஈஸ்வரனுக்கும் யுண்டாய் இருக்கும் சேஷ சேஷித்வ ஞானத்தை அறிவதாலேயே இவர்களுக்குப் பரிசுத்தி சொல்லப்பட்டதாகிறது –

———-

பூ₄யஸ் தபஸ்வீ ப₄வதி பங்க்தி பாவந பாவந꞉ ।
அபவித்ர꞉ பவித்தரோ வா ஸர்வா வஸ்தா₂ம் க₃தோ(அ)பி வா ।
ய꞉ ஸ்மரேத் புண்ட₃ரீகாக்ஷம் ஸ பா₃ஹ்யாப்₄ யந்தரஶ் ஶுசி꞉ ॥ 33 ॥

ஒருவர் அதிக பாபங்களைச் செய்தவராய் இருந்தாலும் ஒரு நிமிஷ காலமாவது பகவானைத் த்யானிப்பவராகில் அவர் மறுபடியும் தபஸ்வியாகவும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தம் செய்பவர்களாயும் ஆகிவிடுகிறார்கள் –

———–

இத்யாதி₃ ஶௌநகாத்₃ யுக்தே꞉ ப₄க₃வத்₃ ஜ்ஞாநிநாம் ந்ருணாம் ।
க்ருதே பாபே (அ)நுதப்தாநாம் தாத்₃த்₄யாநாவதி₄கா꞉ க்ரியா꞉ ॥ 34 ॥

அபரிசுத்தராக இருந்தாலும் பரிசுத்தராக இருந்தாலும் அல்லது அவர் எந்த துரவவஸ்தையை அடைந்து இருந்த போதிலும் எவர் ஒருவர் பகவானைத் தியானிக்கிறாரோ அவர் உள்ளத்திலும் புறத்திலும் பரிசுத்தர் என்று செல்லப்படுகிறார் –

இது முதலாக யுள்ள ஸுநகர் முதலிய மஹரிஷியின் வசநங்களினால் பகவத் பக்தர்களுக்கு பாபம் நேர்ந்து அதனால் அவர்கள் அனுதாபம் உள்ளவர்களாக இருப்பார்களாகில் அவர்கள் செய்யும் பகவத் த்யானத்து அளவிலேயே அந்த பாபங்கள் தீர்ந்து விடும் –

—————

தே₃வோந்தர ஸம் ஸக்தை ꞉ ஸங்க₃ம் த்யக்த்வைவ வைஷ்ணவ꞉ ।
உபாயாந்தர ஸக்தைஶ்ச ப்ரபந்நைஸ் ஸஹ ஸம் வஸேத் ॥ 35 ॥

பின்னர் வேறு தேவதைகளை அடைந்தவர்களாயும் வேறு உபாயங்களை அடைந்தவர்களாயும் இருக்குமவர்களுடன் ஸஹ வாசத்தை விட்டு ப்ரபன்னர்களுடன் வஸிக்க வேண்டும் –

————–

ந மூர்க₂மாஶ்ரயேத் ஸாது₄꞉ ந மூர்கா₂ய கு₃ருர்வதே₃த் ।
ய ஆஶ்ரயேத₃வித்₃வாம்ஸம் தாம ஸஸ்து தமோ விஸேத் ॥ 36 ॥

ஸாதுவாக இருக்கும் ஒருவர் மூர்க்கனாக இருக்கும் குருவை ஆஸ்ரயிப்பது தகாது -மூர்க்கனான சிஷ்யனுக்கு உபதேசிப்பது தகாது -யாவன் ஒருவன் மூடரான ஆசார்யனை ஆஸ்ரயிக்கிறானோ அவன் தமஸ்ஸில் இருந்து காட அந்தகாரத்தை அடைந்தவனாகிறான் –

————–

மூர்க₂த₃த்தம் து யஜ்ஜ்ஞாநம் உப்தம் பீ₃ஜமிவோஷரே ।
அந்யோந்யஸ்மை கு₃ருச்சா₂த்ரௌ ந த்₃ருஹ்யேதாம் கதா₃சந ॥ 37 ॥

மூர்க்கனிடத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஞானம் களர் பூமியில் விரைத்த விதையோடு ஒத்தது -ஆச்சார்யனும் சிஷ்யனும் ஒருவருக்கு ஒருவர் த்ரோஹம் செய்யத்தகாது -இவர்களில் எவர் த்ரோஹம் செய்கிறாரோ அவர் மோக்ஷ மார்க்கத்தை இழந்து விடுவார் –

ஓம் சஹ நாவவது சஹ நவ் புனக்து சஹ வீர்யம் கரவா-அவஹை தேஜஸ்வி நவ்-அதீ-தம்-ஆஸ்து மா விட்விச்ஸ்-ஆவஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி
எங்களுக்கு சிறந்த அறிவாற்றலைக் கொடு, ஊக்கத்துடன் பணிபுரிய சக்தியைக் கொடு, எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, மனிதர்களாகிய எங்கள் மனதிலுள்ள பேதங்களை நீக்கி எங்களுக்கு என்றென்றும் அமைதியை மட்டும் கொடுப்பீராக.

————

யோ த்₃ருஹ்யத் யநயோஸ் ஸோ(அ)யம் ப்₄ரஶ்யதே முக்தி மார்க₃த꞉ ।
அநாதி₃ஷ்டே ந கு₃ருணா மந்த்ரேண ந ஹரிம் ஶ்ரயேத் ॥ 38 ॥

கு₃ரும் ந க₃ர்ஹயேச் சி₂ஷ்யா꞉ தா₄ர்மிகம் த்வர்த₂லோப₄த꞉ ।
அநிவேத்₃ய கு₃ரோ ꞉ கிம்ஶ்சித் நோப பு₄ஞ்ஜீத பு₃த்₃தி₄மான் ॥ 39 ॥

ஆச்சார்யரால் உபதேசிக்கப்படாமல் இருக்கும் மந்திரத்தால் பகவானை ஆராதிக்கத் தகாது -தர்ம நிஷ்டராக இருக்கும் ஆசார்யரை சிஷ்யன் தனத்தின் ஆசையால் பழிக்கக் கூடாது -விசேஷ வஸ்துக்கள் தனக்கு ஏதாவது கிடைத்தால் அதில் சிலதை ஆச்சார்யருக்கு சமர்ப்பிக்காமல் சிஷ்யன் தனக்கு அதை உபயோகித்துக் கொள்ளக் கூடாது -தன் ஆச்சார்யருக்கு த்வேஷிகளாய் இருப்பவர்களை சிஷ்யன் விட்டுவிட வேண்டும் –

—————-

கு₃ருவித்₃வேஷிண: ஸர்வான் வர்ஜயேத்₃வைஷ்ணவோத்தம꞉ ।
விஷ்ண்வாலய ந குர்யாத்து நிஷ்டீ₂வநமலாதி₃கம் ॥॥ 40 ॥

பாதவ் ₃ ந ஷாலயேத் தத்ர நாந்தரா தே₃வபீட₂தயோ ꞉ ।
க₃ச்சே₂த் ப்ரபந்நோ நா(அ)த்₃வாராத் ஸம் விஸேத்₃த₄ரிமந்தி₃ரம் ॥ 41 ॥

பகவானுடைய ஆலயத்தில் காறி உமிழ்தல் -மல மூத்ராதி விஸர்ஜனம் செய்தல் -கால்களைக் கழுவுதல் -இவை முதலிய கெட்ட கார்யங்களை ப்ரபன்னர்கள் செய்யவே கூடாது -பகவான் எழுந்து அருளி இருக்கும் இடத்துக்கும் பலி பீடத்துக்கும் நடுவில் குறுக்கே போகக் கூடாது -பகவத் ஆலயத்தில் வாசல் அல்லா வழியாகப் புகுந்து போகக் கூடாது –

——————

(க்ருஷ்ணகம்ப₃ ல ஸம்வீதோ ந விஸேஜ் ஜாது வைஷ்ணவ꞉ ।
விநா தீ₃பாதி₃கம் கர்ம தந்மாலா ப₃ந்த₄நாதி₃கம்) || 42 ॥

வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் கறுப்புக் கம்பளியினால் போர்வை யுள்ளவராய் பகவத் ஆலயத்தில் பிரவேசிக்கக் கூடாது -திரு விளக்கு முதலியவைகளினால் வெளிச்சம் இல்லாத இடத்தில் பகவானுக்கு மாலை கட்டுதல் முதலான கைங்கர்யங்களைச் செய்யக் கூடாது –

—————–

அந்யத் கார்யம் ந குர்வீத வைஷ்ணவோ விஷ்ணு மந்தி₃ரே ।
நாந்யம் தே₃வம் நமஸ் குர்யாத் நாந்யம் தே₃வம் நிரீஷயேத் ॥
43 ॥

வைஷ்ணவர் பகவத் ஆலயத்தில் பகவத் கைங்கர்யம் ஒழிய வேறொரு காரியங்களையும் செய்யக் கூடாது -அங்கு இருக்கும் வேறொரு தேவாலயத்தில் புகுரக் கூடாது -வேறே ஒரு தெய்வத்தைத் தொழவும் பார்க்கவும் கூடாது –

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர
ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –
இஷ்ட சித்தி -என்பது
சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –
ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது
இத்தனை போது விளம்பித்தது என் என்ன
ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று
அருளிச் செய்து
புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளி
ஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்-

————–

நாந்யம் ப்ராஸாத₃மாரோஹேத் நாந்ய மாயதநம் வ்ரஜேத் ।
உத்₃தே₃ஶ தஸ்து த்₃வாத்ரிம்ஶத₃பசாரா ஹரே ꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 44 ॥

ஸ்ரீ வராஹ புராணத்தின் 32 பகவத் அபசாரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன -வைஷ்ணவர்கள் இவற்றில் எதையுமே செய்யக் கூடாது

———–

புராணே க₂லு வாராஹே வர்ஜயேத்₃வைஷ்ண வஸ்து தான் ।
க₃ந்த₄ம் புப்பம் ததா ₂ வாஸ꞉ பூ₄ஷணாநி பஶூன் க்₃ருஹான் ॥ 45 ॥

ததா ₂ போ₄ஜ்யாநி சாந்யாநி நாத்மார்தே₂ வைஷ்ணவோ ஹரேத் ।
கர்தவ்யா ஸேஷதா பு₃த்₃தி₄꞉ நாத்மநஸ்த நயாதி₃ஷு ॥ 46 ॥

சந்தனத்தை யாவது புஷ்ப்பங்களையாவது வஸ்திர பூஷணங்களை யாவது பின்னும் பசு க்ரஹம் முதலிய பாக்யங்களையாவது அப்படியே அமுது செய்யத்தக்க பதார்த்தங்களையாவது ப்ரபன்னர் தன ப்ரயோஜனத்துக்காக ஸம்பாதிப்பது தகாது -பகவத் ப்ரயோஜனத்திற்காக மட்டுமே ஸம்பாதிக்க வேண்டும் என்று கருத்து –

—————

விஷ்ணோர் விபூ₄தி பூ₄தேஷு மமதாம் வர்ஜயேத் ஸுதீ₄꞉ ॥ 47 ॥
ஏகாந்தீ வ்யபதே₃ஷ்டவ்யோ நைவ க்₃ராம குலாதி₃பி₄꞉ ।
விஷ்ணுநா வ்யபதே₃ஷ்டவ்ய꞉ தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி ॥ 48 ॥

ப்ரபன்னர் தமது பிள்ளைகள் முதலியவர்களை தமக்கு நியாமகர்கள் என்னும் எண்ணத்தையும் -அவர்கள் நம்முடையவர்கள் என்னும் எண்ணத்தையும் விட வேண்டும் -அவர்களும் தம்மைப்போலவே பகவானுக்கு நியாமகர்கள் என்றும் பகவானுடைய சொத்துக்கள் என்றும் நினைக்க வேண்டும் –

ஏகாந்தியாக இருக்கும் ப்ரபன்னர் கிராமம் குலம் முதலிய அடையாளங்களை இட்டு வியவஹரிக்கத் தக்கவர் அல்லர் -அவர் பகவானுடைய திரு நாமத்தாலேயே வியவஹரிக்கத் தக்கவர்-அவனுக்கு எல்லா அடையாளங்களும் பகவானாகவே இருக்கிறார்

மாம் மதீயஸ்ய சேதன அசேதன -உனது சொத்து -ஈஸ்வர ப்ரக்ருதிகளுக்கு நாம் கரைய வேண்டாமே-

————–

நத்₃யாஸ் தஸ்யைவ நாமாநி ப்ரவிஷ்டாயா யதா₂ர்ணவம் ।
ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணுமே காந்தி நஸ்ததா ₂ ॥ 49 ॥

கடலில் பிரவேசித்து இருக்கும் நதியின் ப்ரவாஹத்திற்கு அக்கடலின் பெயர் ஒழிய அந் நதியின் பெயர் இல்லாமல் போவது போலவே ஸர்வ பிரகாரத்தாலும் பகவானைச் சரணம் அடைந்த ப்ரபன்னருக்கு அந்தப் பாகவான் திரு நாமம் ஒழிய வேறு ஒரு பெயர் இல்லையாம்

——–

சா₂யா விளங்க₄ நாதீ₃நி ந குர்யாச்ச ஸதாம் ஸதா ₃ ।
ஸத்₃பி₄ஶ்ச ஸஹ வர்தேத விவாத₃ம் தேஷு வர்ஜயேத் ॥ 50 ॥

சத்துக்களின் நிழலைத் தாண்டுவது முதலிய குறைவான செயல்களைப் ப்ரபன்னர் செய்யத் தகாது -எப்பொழுதும் ஸத்துக்களுடனே ஸஹ வாஸம் செய்ய வேண்டும் -அவர்களுடன் வழக்காடுவதைத் தவிர்க்க வேண்டும் –

—————

ப்ரபந்நாநநு ஶாஸ்தீத்த₂ம் விஷ்வக் ஸேநேஶ ஸம்ஹிதா ।
நா வைஷ்ணவ க்₃ரந்த₂ரதி꞉ நா ஸச் சா₂ஸ்த்ர ரதோ ப₄வேத் ॥ 51

ஸ்ரீ விஷ்வக் சேன ஸம்ஹிதை ப்ரபன்னர்களைக் கீழ்ச் சொல்லியபடி கட்டளை இடுகின்றது -அதாவது ப்ரபன்னர் பகவானைப் பற்றியதல்லாத ஸாஸ்த்ரங்களில் ஆசை வைப்பது தகாது -அப்படியே அசத்துக்களினால் செய்யப்பட -அசத்துக்களைப் பற்றியதாக இருக்கும் கிரந்தங்களிலும் ஆசையுள்ளவராகவும் இருப்பதும் தகாது –

—————-

நாந்ருதம் ஶபத₂ம் குர்யாத் ந ச ப்ருச்சே ₂ச்சு பா₄ஶுபே ₄ ।
விஷ நிர்ஹரணம் சாபி பிஶாசாதி₃விமோசநம் ॥ 52 ॥

ஸமஸ்தவ்யாதி₄ஹரணம் ஸூத்₃ர மந்த்ரைர் ந ஸாத₄யேத் ।
ந தா₄ரயேஜ் ஜடாபா₄ரம் ப₄ஸ்ம சைவ ந தா₄ரயேத்
॥ 53 ॥

ப்ரபன்னர் பொய்யாக சபதம் கூறுவது கூடாது -ஜ்யோதிஷம் அறிந்தவர்களிடத்தில் தனக்கு நேரிடும் நன்மை தீமைகளைக் கேட்கக் கூடாது – விஷங்களை போக்குதல் -பிசாசம் முதலிய க்ரஹ விமோசனம் செய்தல் -ஸமஸ்த வியாதிகளுக்கும் சிகிச்சை செய்தல் -இவைகளை சூத்ர மந்திரங்களால் ஸாதிக்கக் கூடாது –

————-

பா₃ஹ்ய லிங்கா₃நி ஸர்வாணி ஸந்த்யஜேத்₃ யாவதா ₃யுஷம் ।
யத்ர யத்ர ஹி நீதிஸ்யாத் வைஷ்ணவீ ஶிஷ்டஸம்மிதா ।
தத்ர தத்ராவ ஸேந்நித்யம் நாந்யத்ரேதி மதிர் மம ॥ 54 ॥

சிரஸ்ஸில் சடை முடிதல் -பஸ்மம் தரித்தல்-பின்னும் வைதிக மந்திரங்களுக்கு வெளிப்பட்டவைகளான மதங்களில் இருப்போர் செய்து கொள்ளும் அடையாளங்கள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் ப்ரபன்னர் விடவேண்டும் – –

—————-

ந லோக வ்ருத்திம் வர்தேத வ்ருத்தி ஹேதோ꞉ கத₂ஞ்சந ।
ஸத்ஸம்மதா து யா வ்ருத்தி꞉ தே₃ஶகாலா நுரூபிணீ ॥ 55 ॥

எந்த எந்த இடங்களில் சிஷ்ட சம்மதங்களான வைஷ்ணவ தர்மங்கள் நடக்கின்றனவோ அந்த இடங்களிலேயே ப்ரபன்னர் வஸிக்க வேண்டும் -மற்ற இடங்களில் வஸிக்கக் கூடாது என்றும் எனக்குத் தோற்றுகிறது –

————-

தாமாஸ்தி₂தோ ந லோபே₄ந ஹீநாம் வ்ருத்திம் ஸமாஶ்ரயேத் ।
வ்யாஸஸ்து ப₄க₃வாநாஹ வர்ஜநீயம் ஸதாமிஹ ॥ 56 ॥

தன் ஜீவன நிமித்தமாக சாமான்யர்களான லோகத்தார்கள் செய்யும் ஜீவன உபாயத்தை ப்ரபன்னர் செய்யக்கூடாது -அப்போதைய தேச காலங்களுக்குத் தக்கவைகளாயும் சத்துக்களினால் ஒப்புக் கொள்ளப் பட்டவைகளாயும் இருக்கும் ஜீவன உபாயங்கள் எவைகளோ அவைகளை பிரபன்னர் அடைந்து இருக்க வேண்டும் -அர்த்த ஆசையினால் ஹீந விருத்தியை இவர்கள் செய்யத் தகாது-

ஸத்துக்களுக்கு விடத் தக்கவைகளை பகவானான வ்யாஸ முனிவர் சொல்லி இருக்கிறார் –

————————-

ந ஶப்₃த₃ஶாஸ்த்ராபி₄ரதஸ்ய மோஷோ ந சாபி ரம்யாவஸத₄ப்ரியஸ்ய ।
ந போ₄ஜநாச்சா₂த₃ந தத்பரஸ்ய ந த லோக வ்ருத்த க்₃ரஹணே ரதஸ்ய ॥ 57 ॥

ஶிஶ்நாே₃தரே தய(அ)பி₄ரதா ꞉ ஸதை₃வ ஸ்தேயாந்ருதா வாக்பருஷாஶ்ச நித்யம் ।
வ்யபேத த ₄ர்மா இதி தாந் விதி₃த்வா ………………………… ஸம்பரிவர்ஜயந்தி ॥ 58 ॥

வ்யாஸ முனிவர் அருளிச் செய்ததை அருளிச் செய்துள்ளார் -ஸப்த ஸாஸ்த்ரத்திலேயே ஊற்றம் யுடையோனுக்காகவாவது -அஸனாச் ஸாதனங்களைப் பெறுவதிலேயே நினைவு யுடையோனுக்காகவாவது-உலகத்தாரின் ஸித்தங்களை வசப்படுத்திக் கொள்வதிலேயே யத்தனம் யுடையோனுக்காகவாவது-மோக்ஷம் கிடைப்பதில்லை -ஒரே நிச்சயம் யுடையோராயும் உறுதியான உறுதியான நன்னடத்தை யுள்ளவராயும் -ஐம் புலன்களில் ஆசையைக் கழித்தவராயும் -ஒருவருக்கும் துன்பம் யுண்டாக்காதவராயும் -ப்ரஹ்ம ஞானத்தில் மனமுடையவராயும் இருக்கும் ஞானிக்கே மோக்ஷம் நிச்சயமாகக் கிடைக்கத் தக்கதாகும் –

———–

ஏகாந்த ஶீலஸ்ய த்₃ருட₄வ்ரதஸ்ய பஞ்சேந்த்₃ரிய ப்ரீதி நிவர்தகஸ்ய ।
அத்₄யாத்மவித்₃யா ரதமாநஸஸ்ய மோஷோ த்₄ருவோ நித்ய மஹிம்ஸ கஸ்ய| 59

———-

நாபி₄நந்தே₃த மரணம் நாபி₄நந்தே₃த ஜீவிதாம் |
காலமேவ ப்ரதீஷேத நிர்வேஶம் ப்₄ருதகோ யதா₂ ॥ 60 ॥

ப்ரபன்னர் தமக்கு சீக்கிரத்தில் மரணம் யுண்டாகும் என்றாவது நெடுநாள் ஜீவித்து இருப்போம் என்றாவது ஸந்தோஷிப்பது கூடாது -கூலி வேலைக்காரன் தனக்குக் கூலி கிடைக்கும் காலத்தை எதிர்பார்த்து இருப்பது போல் அவைகளின் காலத்தையே எதிர்பார்த்து இருக்க வேண்டும் –

—-

ப்ராயேண அக்ருதக்ருத்யாஸ்து ம்ருத்யோருத்₃வேஜிநா ஜநா꞉ ।
க்ருதக்ருத்யா꞉ ப்ரதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரிய மிவாதிதி₂ம் ॥ 61 ॥

உலகத்தில் உள்ளவர்கள் தமோ வஸ்யராய் செய்ய வேண்டிய மோக்ஷ உபாயத்தை செய்யாமையாலேயே அநேகமாய் மரணத்தின் நின்றும் பயப்படுகிறார்கள் -அப்படிக்கு அல்லாமல் தாம் செய்ய வேண்டிய மோக்ஷ உபாயத்தை செய்தவர்கள் தம்முடைய க்ருஹத்திற்கு வரும் அதிதிகளை எதிர்பார்ப்பது போல் மிருத்யுவையும் எதிர்பார்த்து இருப்பார்கள் –

————-

தத்பாத₃ப₄க்தி ஜ்ஞாநாப்₄யாம் ப₂லமந்யத் கதா₃சந ।
ந யாசேத் புருஷோ விஷ்ணும் யாசநாந் நஶ்யதி த்₄ருவம் ॥ 62 ॥

ப்ரபன்னர்கள் பகவானிடத்தில் அவன் திருவடிகளில் பக்தி ஞானம் இவைகள் ஒழிய வேறு ஒன்றையும் கேட்பது தகாது -அப்படிக் கேட்ப்பாராகில் ஞானம் அழிந்து விடுவார் -இது நிச்சயம் –

————–

ப்ரமாதா₃த்₃பு₃த்₃தி₄தோ வா(அ)பி யதா₃க₃꞉ க்ரியதே ஸதாம் ।
அநுதப் தஸ்து தாநேவ ஷாம யேந் நாந்யதா ₂ ஶம꞉ || 63 ||

அபுத்தி பூர்வகமாவது புத்தி பூர்வகமாவது ப்ரபன்னர்கள் ஸத்துக்களிடம் அபசாரப் படுவார்களாகில் உடனே அனுதாபம் உள்ளவராய் அவர்கள் இடத்திலேயே அபதாரத்துக்கு ஷாமணம் செய்து கொள்ள வேண்டும் -வேறு விதமாக அவ் வபதாரம் கழியாது

———-

ப₄க₃வத் யபசாரே(அ)பி நைஷா ஶாந்திர நுத்தமா ।
ஸ்த்ரீணாம் ஸ்த்ரீஸங்கி₃நாம் சைவ ஸம்ஸர்க₃ம் வர்ஜயேத் ஸுதீ₄꞉ ॥64॥

பகவானிடத்தில் அபசாரம் நேர்ந்தாலும் இப்படி க்ஷமை கொள்ளுவதே உத்தமம் -நல்ல ஞானமுடியவர் ஸ்த்ரீகள் இடத்திலும் ஸ்த்ரீகளுடன் சமசர்க்கம் செய்பர்களிடமும் ஸஹ வாஸத்தை விட வேண்டும் –

———–

தஸ்மாத் ஸர்வாத்மநா வித்₃வான் விஷயாந் விஷவத் த்யஜேத் ।
அவித்₃ய꞉ ப்ராக்ருத꞉ ப்ரோக்தோ வைத்₃யோ வைஷ்ணவ உச்யதே
॥ 65 ॥

ஆகையால் ஞானியாக இருக்கும் பிரபன்னர் ஸ்த்ரீ முதலிய விஷயாந்தரங்களை விஷத்தைப் போலே விடவேண்டும் -இவ்விஷயாந்தர அனுபவத்தினால் அஞ்ஞானம் மேலிடுகிறது -அஞ்ஞானி பிராகிருத மண்டலத்திலேயே அழுந்தி விடுவான் -ஞானியாகவே இருக்குமவர் பகவானைச் சேர்ந்து விட்டவராகவே சொல்லப்படுவார் –

———-

அவித்₃யேந ந கேநாபி வைத்₃ய꞉ கிஞ்சித் ஸமாசரேத் ।
இதி ஹ்யுக்தம் ப₄க₃வதா ஶாஸ்த்ரே மந்வாதி₃பி₄ஸ்ததா ₂ ॥ 66 ॥

ஞானியாக இருக்குமவர் அஞ்ஞானியுடன் யாதொரு காரியமும் செய்யத் தகாது -இவ்வாறு பகவத் ஸாஸ்த்ரத்தில் பகவானும் மன்வாதி சாஸ்திரங்களில் மநு முதலியவர்களாலும் அருளிச் செய்யப்படுகின்றது –

————

தஸ்மாத் ப்ராக்ருத ஸம் ஸர்க₃ம் வர்ஜயேத்₃வைஷ்ணவோத்தம꞉ ।
ஏகஶய்யாஸநம் பங்க்தி பா₄ண்ட₃ம் பக்வாந்நமிஶ்ரணம் ॥ 67 ॥

யாஜநாத்₄யாபநே யாநம் ததை ₂வ ஸஹ போ₄ஜநம் ।
நவதா ₄ ஸங்கர꞉ ப்ரோக்தோ ந கர்தவ்யோ (அ)த₄மைஸ்ஸஹ
|| 68 ॥

ஆகையால் ப்ரக்ருதி போகங்களில் ஆசை யுள்ளவர்களுடன் ஸஹ வாஸத்தை பாகவத உத்தமரான ப்ரபன்னர் விட வேண்டும் – அந்த பிராகிருத போகிகளுடன் ஒரே படுக்கையில் படுப்பது -ஒரே ஆசனத்தில் இருப்பது -ஒரே பங்க்தியிலே சேருவது -அவர்கள் உபயோகப்படுத்திய பாத்திரங்களை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்திக் கொள்வது -அவர்கள் அன்னத்தை தங்களுடைய அன்னத்தோடு கலந்து கொள்வது- அவர்களுக்கு ப்ரோஹிதர்களாய் வைதிக கர்மங்களைச் செய்விப்பது -அவர்களுக்கு வேத அத்யயனம் செய்விப்பது -அவர்களுடன் பந்துத்வம் செய்வது -அவர்களுடன் கூட புசிப்பது -ஆகிய இவ்வொன்பது விதங்களில் கலப்பு உண்டாகிறது -இவ்விதங்களில் அவர்களுடன் கலந்து இருப்பதை ப்ரபன்னர்கள் தவிர வேண்டும்-

—————

ஸல்லா பஸ் பர்ஶந ஸ்வாபவிதா ₄நா(அ)ஸநஶாயநாத் ।
யாஜநாத்₄யாபநாத்₃யாநாத் பாபம் ஸங்க்ரமதே ந்ருணாம் ॥ 69 ॥

ஸம்வத்ஸரேண பததி பதிதேந ஸமாசரன் ।
யாஜநாத்₄யாபநாத்₃யாநாத் ஸஹ ஶய்யாஸநாஶநாத் ॥ 70 ॥

ப்₃ருஹஸ்பதி மநுப்₄யாம் து ஸங்கரஸ்ய து வர்ணநம் ।
வைவித்₄யம் யாஜநாதீ₃நாம் ஸத்₃ய꞉ பாதித்ய ஹேதுநா ॥ 71 ॥

மேற் சொல்லியபடி தர்ம சாஸ்திரங்களில் சொல்லியவற்றையும் அருளிச் செய்கிறார் -பாபங்களைச் செய்த்தவர்களிடம் சம்பாஷணை செய்வது -ஸ்பர்சிப்பது -தூங்குவது -உட்க்காருவது-படுப்பது -ப்ரோஹிதம் செய்வது -வேத அத்யயனம் செய்விப்பது -பந்துத்வம் செய்வது -இவைகளினால் பாபம் செய்யாதவர்களுக்கும் அப் பாவிகளின் பாவங்கள் வந்து சேர்கின்றன –

புரோஹிதம் செய்வது வேத அத்யயனம் செய்வது -எப்பொழுதும் கூடத் திரிவது -கூடப் படுப்பது – உட்க்காருவது -புசிப்பது -இவைகளினால் பதிதனோடு ஒரு வருஷ காலம் ஸஹவாஸம் செய்தவன் அவனைப் போலவே தானும் பதிதனாகி விடுகிறான் –

ப்ருஹஸ்பதி மநு இவர்களினால் மேற் சொல்லியபடி கலந்திருக்கை பலவிதமாகச் சொல்லப்படுகின்றது -அப்பதிதர்களுக்கு புரோஹித தொழில்கள் முதலிய வைதிக கர்மங்களைச் செய்வித்தால் அவன் உடனேயே பதிதனாய் விடுவான் என்றும் சொல்லப்பட்டு உள்ளது –

—————

ந்யாஸ வித்₃யைக நிஷ்டா₂நாம் வைஷ்ணவாநாம் மஹாத்மநாம் ।
ப்ராக்ருதாபி₄ஷ்டுதிர்நிந்தா ₃ நிந்தா ₃ஸ்துதிரிதி ஸ்ம்ருதா ॥ 72 ॥

ந்யாஸ வித்யை என்னும் ப்ரபத்தியில் நிஷ்டையுடைய ப்ரபன்னர்கள் இப்பிரக்ருதி போகங்களை யுடையோர்களை ஸ்துதிப்பது அப் ப்ரபன்னர்களுக்கு பழிப்பு என்றும் அவைகளைப் பழிப்பது இவர்களுக்குப் புகழ் என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றது –

——–

அத்₃ய ப்ரப்₄ருதி ஹே லோகா யூயம் யூயம் வயம் வயம் ।
அர்த₂காம பரா யூயம் நாராயணா பரா வயம் ॥ 73 ॥

நாஸ்தி ஸங்க₃தி ரஸ்மாகம் யுஷ்மாகம் ச பரஸ்பரம் ।
வயம் து கிங்கரா விஷ்ணோ ꞉ யூய மிந்த்₃ரிய கிங்கரா꞉ ॥ 74 ॥

மேற் சொல்லியபடி ப்ரபன்னர்கள் ப்ராக்ருதர்களைப் பற்றி அருளிச் செய்ததை அருளிச் செய்கிறார் –
வாரீர் உலகத்தார்களே -இது முதல் நீங்கள் நீங்களே -நாங்கள் நாங்களே -எங்கனே ஏன் என்றால் -நீங்கள் அர்த்த காமங்களில் ஆசையை வைத்தவர்கள் -நாங்கள் ஸ்ரீ மந் நாராயணனையே அடைக்கலம் புகுந்தவர்கள் -ஆகையால் எங்களுக்கும் உங்களுக்கும் ஒரு துவக்கும் இல்லை -நாங்கள் பகவானுக்கே தாஸர்களாக இருக்கிறோம் -நீங்களோ ஜம்புவான் களுக்கு தாஸர்களாக இருக்கிறீர்கள் –

——–

9-வர்ஜநீய பத்₃த₄தி꞉ நவமீ-ஸம் பூர்ணம்

—————-

அத₂ ப₂லோத₃ய பத்₃த₄தி꞉ த₃ஶமீ

ஏவம் ப்ரபந்நா விஷ்ணோஸ்து பாத₃வ் தத் ப்ராண ஸஞ்ஜ்ஞிதான் ।
அநுவ்ரஜதி தாந் விஷ்ணு꞉ அத்யர்த₂ப்ரேம விஹ்வல
꞉ || 1 ||

இவ்வாறு பகவானுடைய திருவடிகளைச் சரணம் புகுந்தவர்களாயும் பகவானால் தன்னுடைய பிராணனாகச் சொல்லப்பட்டு இருக்கும் இப்ரபன்னர்களை பகவான் மிகுந்த திருவருளோடு கூடியவராய் பின் செல்கிறார் –

————–

ஸ்வயம் ப₄க₃வதா சோக்தம் “ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ” ।
ப₃ஹு ஜந்ம ஸஹஸ்ராந்தே தி₃ஷ்ட்யா யஸ்து ப்ரபத்₃யதே
॥ 2 ॥

“வாஸுதே₃வஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄꞉” ।
உக்தா ஶஸ்த்ரே ப₄க₃வதா ப்ரபந்நே க்ருதக்ருத்யதா ॥ 3 ॥

ஞானியாக இருக்குமவர் என் ஆத்மாவாகவே எண்ணப்படுகிறார் என்னும் இவ்வர்த்தம் பகவானால் சொல்லப்படுகின்றது -எவர் ஒருவர் அநேக ஜென்மங்கள் கடைசியில் தமக்கு உண்டாய் இருக்கும் ஸூஹ்ருத விசேஷத்தால் எனக்கு ஸர்வ பயனும் பகவானே என்று என்னிடத்தில் பிரபத்தி செய்கிறார் -அந்த மஹாத்மா உலகத்தில் அரும் பொருளாகக் கிடைக்கத் தக்கவர்-

பகவான் இடத்தில் உயர்ந்த பக்தி உள்ளவராய் இருப்பதும் பகவான் சர்வோத்தமர் என்று அறிந்து இருப்பதுமே ப்ரபன்னர்களுக்கு க்ருதக்ருதையாக ஸாஸ்த்ரத்தில் பகவானால் சொல்லப்பட்டுள்ளது –

மம பிராண பாண்டவ -ஞாநீத் ஆத்மைவ மே மதம் -அறிவார் உயிரானாய்-அறிவார்களுக்கு உயிர் போல் -சாமான்ய அர்த்தம் -அறிவார்களா உயிராகக் கொண்டவன் –என்னது உன்னாவி உன்னது என்னாவி –ஸ மஹாத்மா துர்லபம் -விரஹம் ஸஹியாத மார்த்வம் களத்தில் கூடு பூரிக்கும் –

—————-

தஸ்மிம்ஶ் சாநுத்தமா ப்ரீதி꞉ ஸ்வஸ்யாஸேஷ விஶிஷ்டதா ।
விஷ்ணூபாயோ யோ (அ)ந்யப₂ல ꞉ ஸோ (அ)த₄ம꞉ பரிகீர்தித꞉ ॥ 4 ॥

அந்யோ பாயோ விஷ்ணுப₂ ல ꞉ மத்₄யம꞉ பரிகீர்திதா ꞉ ।
மாத₄வாங்க்₄ரி த்₃வயோ பாயோ மாதா₄வாங்க்₄ரி ப்ரயோஜந꞉ ॥ 5 ॥

பகவானை உபாயமாகக் கொண்டு பகவானை ஒழிந்த வேறு பலன்களை விரும்பும் ப்ரபன்னர் அதமர் என்றும் வேறே உபாயங்களைக் கொண்டு பகவானை அடைய விரும்புபவர்கள் மத்யமர் என்றும் சொல்லப்படுவார்கள் –

அங்கு விஷ்ணு பத பிரயோகம் -இங்கு மாதவ பத பிரயோகம் -த்வயம் போலவே -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

——–

ஸ உத்தமாதி₄காரீ ஸ்யாத் க்ருதக்ருத்யோ (அ)த்₃ய ஜந்மநி ।
யா꞉ க்ரியா꞉ ஸம் ப்ரயுக்தா ꞉ ஸ்யு꞉ ஏகாந்தக₃த பு₃த்₃தி₄பி₄꞉ ॥ 6 ॥

பகவானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்டு அத் திருவடிகளையே பயனாக விரும்புபவர்கள் ப்ரபன்னர்களில் உத்தமராவார் – அவர் இஜ் ஜென்மத்திலேயே க்ருதக்ருத்யராய் செய்ய வேண்டிய அனைத்தையுமே செய்தவராகிறார்கள்

ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண -அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே | ஸதைகரூப_ ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || -புருஷோத்தமன் –

——————

தாஸ் ஸர்வா ஶிரஸா தே₃வ꞉ ப்ரதி க்₃ருஹ்ணாதி வை ஸ்வயம் ।
“ப₄க்தை ரண்வப்யுபாநீதம் ப்ரேம்ணா பூ₄ர்யேவ மே ப₄வேத் ॥ 7 ॥

பகவான் ஒருவர் இடத்திலேயே பரம நிச்சயமுடைய ப்ரபன்னர்களினால் எந்த ஆராதனங்கள் செய்யப் படுகின்றனவோ அவைகளை பகவான் தனது சிரஸ்ஸால் வஹிக்கிறார்
இவ்வாறு பகவான் பரிக்கிரஹிக்கிறார் என்பதற்கு பகவத் ஸ்ரீ ஸூக்திகளையே பிரமாணமாக அருளிச் செய்கிறார் –

குறும்பறுத்த நம்பி விருத்தாந்தம் அறிவோம்-பூரி ஜெகந்நாதப் பெருமாளுக்கு சமர்ப்பித்த புஷ்ப்பம் கனத்ததே -விதுரஸ்ய மஹா மதி –

—————

பூ₄ர்யப்ய ப₄க்தோபஹ்ருதம் ந மே தோஷாய கல்பதே” ।
ப₄க்த ஶப்₃த₃ஸ்து முக்₂யோக்யதா ப்ரபந்நே பர்யவஸ்யதி ॥ 8 ॥

எனது பக்தர்களினால் அன்புடன் எனக்கு ஸமர்ப்பிக்கப் பட்டு இருக்கும் உபஹாரம் கிஞ்சித்த்தாக இருந்தபோதிலும் அது அதிகமானதாகவே யாகி விடும் -என்னிடம் பக்தி இல்லாதவர்களால் ஸமர்ப்பிக்கப்படும் உபஹாரம் அதிகமாக இருந்த போதிலும் அது எனக்கு சந்தோஷத்தை உண்டாக்குவதில்லை –

மேற் சொல்லிய பக்த ஸப்தம் ப்ரபன்னர்கள் இடத்திலேயே முக்கியமாக முடிகிறது -இவ்வாறு விஷ்வக் சேனர் ஸம்ஹிதையில் அருளிச் செய்யப்பட்டுள்ளது –

மத் பக்தம் நயாமி பரமம் பதம் -விசேஷித்து ப்ரபன்னர் என்றே பொருள் –

———–

ஆத்மீய ஸம் ஹிதாயாம் து யதா₂ ஸேநேஶ உக்தவான் ।
“ஸேவா து ப்ரோச்யதே ஸத்₃பி₄꞉ ப₄க்தி ஶப்₃தே₃ந பூ₄யஸீ ॥ 9 ॥

ஒருவரிடத்தில் அதிகமாகச் செய்யப்படும் ஸேவை ஸத்துக்களினால் பக்தி என்று சொல்லப்படுகிறது -தனது ஸ்வாமியிடத்தில் தான் மிகவும் தாழ்ந்தவனாக இருப்பது ஸேவை எனப்படுகிறது –

எதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யுமீடே

—————-

ஸேவா சாத்யந்த நீசத்வா பதிர்ஹி ஸ்வாமிநம் ப்ரதி ।
தஸ்மாத் பரஸ்ய தா₃ஸ்யை கரஸதா ப₄க்தி ருச்யதே ॥ 10 ॥

ஆகையால் பகவானிடத்தில் தாஸனாக இருப்பதையே தனக்கு போகமாகக் கொண்டிருப்பது பக்தி என்று சொல்லப்படுகிறது –

———-

ஆகிஞ்சிந்யைக ஶரணா꞉ கேசித்₃பா₄க்₃யாதி₄கா꞉ புந꞉ ।
லக்ஷ்மீ புருஷகாரேண வ்ருத வந்தோ நரோத்தமா꞉ ॥ 11 ॥

மாமேகம் ஶரணம் ப்ராப்ய மாமேகம் ப்ராப்நுவந்தி தே ।
ஏவம் மாம் ப்ராப்ய ஶரணம் வீதஸோக ப₄யக்லமா꞉ ॥ 12 ॥

வேறொரு கதி இல்லாமல் இருப்பதையே உபாயமாகவுடைய பாக்யவான்கள் நரோத்தமர்கள் ஸ்ரீ மஹா லஷ்மியை புருஷகாரமாகக் கோலி ஸ்ரீ மஹா லஷ்மியுடன் கூடிய என்னைச் சரணம் அடைய விரும்புபவர்களாய் இவ்வாறு என்னைச் சரணடைந்து என்னையே பெறுகிறார்கள் –

———–

நிராளம்போ ₃ நிராஶஶ்ச நிர்மமோ நிரஹங்க்ருதி꞉ ।
மாமேவ ஶரணம் ப்ராப்ய தரேத் ஸம்ஸார ஸாக₃ரம் ॥ 13 ॥

என்னுடைய கைங்கர்யங்களையே செய்கிறவர்களாயும் -என்னையே பரமனாக நம்பியவராயும் -அதனால் சம்சாரத்தில் உண்டாகும் பய சோக வருத்தங்கள் தீர்ந்தவராயும் வேறொரு உபாயங்களை யுடையாதவராயும் -வேறொரு பயன்களை விரும்பாதவராயும் -அஹங்கார மமகாரங்கள் இல்லாதவராயும் என்னையே அடைந்தவர்கள் ஸம்ஸாரக் கடலைக் கடக்கிறார்கள் –

பற்றிலார் பற்ற நின்றானே -அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கம் -கைவளையும் மேகலையும் காணேன் -கண்டேன் கன வளையும் நான்கு தோளும்

—————

ஸத் கர்மநிரதா ꞉ ஶுத்₃தா ₄꞉ ஸாங்க்₂ய யோக₃வித₃ஸ்ததா ₂ ।
நார்ஹந்தி ஶரணஸ் த₂ஸ்ய கலாம் கோடிதமீமபி ॥ 14 ॥

கர்ம யோகத்தை அனுஷ்ட்டித்து அதனால் பரி சுத்தமாக இருப்பவர்களும் ஞான யோகத்தை அனுஷ்டித்தவர்களும் இச்சரணா கதியை அனுஷ்டித்த ப்ரபன்னர்களின் மஹிமையில் கோடியில் ஒரு அம்சத்தைக் கூடப் பெறத் தக்கவர்கள் ஆகார்கள் –

————-

உபாயாதி₄க்ருதஸ்யாபி ப₄வேது₃த்தர பூர்வ யோ ꞉ ।
அஶ்லேஷஶ்ச விநாஶஶ்ச புண்ய பாப மயாக₄யோ꞉ || 15 |

உபாயத்தை அனுஷ்டித்தவரான ப்ரபன்னருடைய உத்தராகங்களும் -பிரபத்தி செய்த பின் அபுத்தி பூர்வகமாகச் செய்த பாபங்களும் -பூர்வாகங்களும் நசித்து விடுகின்றன -பிரபத்தி செய்த பின்னர் புத்தி பூர்வ ஆகங்களோ என்னில் மேற் சொல்லப்பட்டு இருக்கும் ப்ராயச் சித்தங்களினால் தீர்ந்து விடுகின்றன –

புகுதறுவான் நின்றனவும் -உத்தர -அஸ்லேஷம் -தாமரை இலைத்தண்ணீர் போல் ஒட்டாமல் போகும்
போய பிழையும் -பூர்வ -விநாஸம் -தீயில் இட்ட பஞ்சு போல் ஆகும்

———

ப்ராரப்₃த₄தே₃ஹ போ₄க்₃யம் து விநா த்₃ருப்தஸ்ய நஶ்யதி ।
பூர்வாக₄முத்தராக₄ம் து மதி பூர்வம் மஹத்தரம் || 16 ||

ஆதே₃ஹ பதநாத்₃வ்ருத்தம் அநுதாப விவர்ஜிதம் ।
யத்தத்₃விநைவா(அ)ஶ்லேஷஸ் ஸ்யாத் அந்யஸ் யாக₄ஸ்ய யுக்தித꞉ ॥17॥

திருப்த ப்ரபன்னர் ஒழிந்த மற்றப் ப்ரபன்னர்களின் பூர்வாகங்களில் -பிராரப்த கர்மங்கள் ஒழிய மற்றைய கர்மங்கள் நசித்து விடுகின்றன -உத்தராகங்களில் புத்தி பூர்வமாய் செய்யப் பட்டவைகளாயும் -தேஹம் இருக்கும் அளவும் ஒழியாதவைகளாயும் -அனுதாபாதிகள் பிறவாதவைகளாய் இருக்கும் கர்மங்கள் ஒழிய மற்ற அபுத்தி பூர்வாகங்கள் கழிந்து விடுகின்றன என்று யுக்தியால் ஏற்படுகின்றது-

————-

அயமர்தோ₂ ப₄க₃வதா ஸ விஸேஷ முதீ₃ரித꞉ ।
“உபாய ப₄க்தி꞉ ப்ராரப்₃த₄ வ்யதிரிக்தாக₄ நாஶிநீ ॥ 18 ॥

ஸாத்₄ய ப₄க்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்₃த₄ஸ்யாபி பூ₄யஸீ” ।
உபாய ப₄க்தி ரித்யுக்தோ ப₄க்தியோகோ ₃ஹி ஸாங்க₃க꞉ ॥ 19 ॥

இவ்வர்த்தம் பகவானால் விவரித்துச் சொல்லப்பட்டு இருக்கின்றன –
உபாய பக்தி பிராரப்த கர்மங்களை ஒழிந்த மற்ற கர்மங்களைப் போக்கி விடும் -ஆகையால் உபாய பக்தியைக் காட்டிலும் ஸாத்ய பக்தி ஸ்ரேஷ்டம் –

பகவான் அருளிச் செய்தவற்றை இரண்டரை ஸ்லோகங்களினால் அருளிச் செய்கிறார் -சாங்கமாக இருக்கும் பக்தி யோகம் உபாய பக்தி யோகம் என்று சொல்லப் படுகின்றது -அது அநேக ஜென்மங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராரப்த கர்மங்களைப் போக்க மாட்டாது

———–

ப₃ஹு தே₃ஹ நிமித்தம் ஹி ப்ராரப்₃தா₄க₄ம் ந நாஶயேத் ।
ஸாத்₄ய ப₄க்திரிதி ப்ரோக்தா ப்ரபத்திர் மோக்ஷ ரூபிணீ ॥ 20 ॥

மோக்ஷ ரூபமாக இருக்கும் இப்பிரபத்தி ஸாத்ய பக்தி என்று சொல்லப் படுகிறது -பக்தி யோகத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமாக இருக்கும் இப்பிரபத்தி ஆர்த்த ப்ரபன்னர்களின் விஷயத்தில் பிராரப்த கர்மங்களையும் போக்கி விடும் –

————-

ஆர்தாநாம் பூ₄யஸீ ஸா(அ)பி ப்ராரப்₃த₄மபி நாஶதயத் ।
ப்ராரப்₃த₄தே₃ஹபோ₄க்₃யம் து த்₃ருப்தஸ்யாக₄ம் ந நாஶயேத் ॥ 21 ॥

இப்பிரபத்தி திருப்த ப்ரபன்னர்களின் பிராரப்த கர்மங்களுக்குப் பயனாகக் கிடைத்து இருக்கும் தேஹத்தினால் அனுபவிக்கத் தக்கவைகளான அக்கர்மங்களைப் போக்க மாட்டாது –
ஆர்த்த ப்ரபன்னர் திருப்த ப்ரபன்னர் இவர்களின் லக்ஷணங்கள் ஸ்வரூப பத்ததியில் -27-38 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளன –

————-

ஏதது₃க்தம் ப₄வத் யத்ர ப₄க்தி யோகா₃த்₃ விமுச்யதே ।
ப்ராரப்₃த₄ கர்ம நிர்மோகே ப₃ஹு ஜந்மோபபோ₄க₃த꞉ ॥ 22 ॥

மேற் சொல்லிய அர்த்தங்களுக்கு இக்கிரந்த கர்த்தா கீழ் சொல்லும் ஸ்லோகங்களினால் தமது ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
அநேக ஜன்மங்களின் அனுபவத்தால் பிராரப்த கர்மங்கள் கழிந்தால் பக்தி யோகத்தால் பக்தர்கள் ஸம்ஸார பந்தத்தின் நின்றும் விடுவிக்கப் படுகிறார்கள் –

————–

கர்மணஶ் ஸோக ஹேதோஸ் த்வாம் மாேக்ஷ யிஷ்யாமி மா ஶுச꞉ ।
ஏவம் ப₄க₃வதோக்தத்வாத் ஏதத்₃தே₃ஹே (அ)பி ஸோசநாத் ॥ 23 ॥

ஆர்தஸ்ய ஸத்₃யோ முக்தி꞉ ஸ்யாத் ப்ரபத்திர் பூ₄யஸீ யத꞉ ।
த்₃ருப்த꞉ ப்ராரப்₃த ₄தே₃ஹாத்து ந ஸோசதி யத꞉ ஸ்வயம் ॥ 24 ॥

உன் வ்யஸனத்திற்குக் காரணமாக இருக்கும் ஸர்வ கர்மங்களின் நின்றும் உன்னை விடுக்கின்றேன் என்று சரம ஸ்லோகத்தில் பகவான் அருளிச் செய்திருப்பதால் -இவ்வார்த்த ப்ரபன்னர் இப்பொழுது தமக்குக் கிடைத்திருக்கும் தேஹத்திலும் சோகமுடையவராக இருப்பதாலும் -இவர் அனுஷ்ட்டிக்கும் பிரபத்தி திருப்த ப்ரபத்தியைக் காட்டிலும் அதிக ஆர்த்தியோடு கூடியதால் ஸ்ரேஷ்டமாக இருப்பதாலும் இவ்வார்த்த ப்ரபன்னருக்கு இப்பிரபத்தியை அனுஷ்டித்த உடனே மோக்ஷம் கிடைக்கும் –

————-

தே₃ஹாந்தே முச்யதே ஸைஷா மாேக்ஷ கால வ்யவஸ்தி₂தி꞉ ।
ஸோ (அ)யம் ஶ்ரிய꞉ பத்யுரந்தர் ஹ்ருத₃யாம் போ₄ஜவாஸிந꞉ || 25 ||

திருப்த ப்ரபன்னர் இப்பொழுது தமக்குக் கிடைத்திருக்கும் தேஹத்தில் சோகம் இல்லாதவராக இருப்பதால் இவர் தேஹ அவசானத்தில் ஸம்ஸார பந்தத்தின் நின்றும் விடுவிக்கப் படுகிறார் -இது தான் திருப்த ப்ரபன்னருக்கும் ஆர்த்த ப்ரபன்னருக்கும் கிடைக்கும் மோக்ஷத்திற்கு வியவஸ்தையாக இருக்கின்றது –

————

ப்ரஸாதே₃நைவ ஸுஸுக₂ம் நாடீ₃ம் பி₄த்வா ஶதாதி₄காம் ।
ஸத்₃யஸ்த யோர்த்₄வ முத்க்ரம்ய க₃த்வா தான் ஆதி வாஹிகான் ॥ 26 ॥

அர்சிராதீ₃ன் ஸ தைர்நீத꞉ ப்ரீதியுக்தை ꞉ பதே₃பதே₃ ।
அமாநவ கர ஸ்பர்ஶாத் ஸூக்ஷ்ம தே₃ஹம் விஸ்ருஜ்ய ச ॥ 27 ॥

விரஜாம் மநஸா தீர்த்வா ப்₃ரஹ்ம க₃ந்தா₄தி₃ளாஞ்சி₂த꞉ | ஸாலோக்யமத₂
ஸாரூப்யம் ஸாமீப்யம் ச க்ரமாத்₃வ்ரஜேத் ॥ 28 ॥

ஸாயுஜ்யம் சாதி₄க₃ச்சே₂த ப்₃ரஹ்மணா ஸஹ ஸர்வஶ꞉ ।
அநு ஸஞ்சரந் நிமான் லோகான் காமாந் நீ காம ரூப்யபி ॥ 29 ॥

இப்பிரபன்னர் தமக்கு நேரும் நிர்ணய காலத்தில் தமது ஹ்ருதயத்தில் மத்யத்தில் வஸிக்கும் பகவானுடைய திருவருளால் நூற்று ஓராவது நாடியான ஸூஷும்நா நாடியைப் பிளந்து அதனால் வெளிப்புறப்பட்டு அக்னி முதலிய ஆதி வாஹிகர்களை அடைந்து மிகவும் அன்புடன் கூடிய அவர்களினால் அடிக்கடி மரியாதை செய்து அழைத்துக் கொண்டு போகப்பட்டவராய் -அமானவர் என்னும் நித்ய ஸூரியின் கர ஸ்பர்சத்தால் தமக்கு அப்பொழுது உண்டாயிருக்கும் ஸூஷ்ம தேஹத்தை கழித்து விட்டு -பிராகிருத மண்டலத்துக்கு எல்லையாய் இருக்கும் விரஜை என்னும் ஓர் நதியை தம்முடைய ஸங்கல்பத்தினால் தாண்டி பர ப்ரஹ்மத்தின் திருமேனியில் உள்ளவைகளான திவ்ய கந்தங்களை அணிந்தவராய் வரிசையாக
முதலில் ஸா லோக்யத்தையும்
பின்பு ஸா ரூப்யத்தையும்
பின்பு ஸா மீப்யத்தையும் அடைந்து
இறுதியில் ஸா யுஜ்யத்தையும்
அடைகிறார் –
இவ்வாறு அப் ப்ரஹ்மத்துடன் ஸர்வ விதத்தாலும் அவன் குணங்களைச் சேர்ந்து அனுபவித்து கைங்கர்யங்களைச் செய்து அவனைப்போலவே ப்ரீதி அடைகிறார்

ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே –ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை-அவனுடன் சேர்ந்தே அனுபவிக்கிறோம்

———

ஸாம கா₃யன் கிங்குருதே ஸூரிபி₄ஸ் ஸஹ ஸர்வதா ₃ ।
யத்₃வா(அ)ர்சிராதி₃மார்கே₃ண விளம்ப₃ மஸஹந்நிவ ॥ 30 ॥

இவ்வாறு பர ப்ரஹ்மத்துடன் ஸா யுஜ்யத்தை அடைந்த முக்தர் தாம் ப்ரஹ்ம ஆனந்த அனுபவம் யுள்ளவராய் தாம் நினைத்தபடி ஓர் ரூபத்தை எடுத்துக் கொண்டு நித்ய ஸூரிகளோடு இவ்வுலகம் எல்லாம் திரிந்து கொண்டும் ஸாம கானத்தால் பகவானுக்கு ஸர்வ காலமும் கைங்கர்யங்கள் செய்து கொண்டும் இருப்பர் –

அப்படிக்கு இல்லாமலும் பகவான் ப்ரபன்னருக்கு அர்ச்சிராதி மார்க்கத்தால் உண்டாகும் கால விளம்பத்தை ஸஹியாதவராய் அந்த மார்க்கம் அன்றியிலே அவரைத் தம் இஷ்டப்படி மோக்ஷத்தில் சேர்ப்பிக்கிறார் என்றும் வேதங்களில் சொல்லப்படுகின்றது –

————-

ப்ரபந்நம் ஹரதி க்ஷிப்ரம் யதே₂ஷ்டமிதி ச ஶ்ருதம் ।
மஹா வராஹோ ப₄க₃வா நேதத் ஸம்வாத₃கம் வச꞉ ॥ 31 ॥

மஹா வராஹ அவதாரம் செய்த பிரான் பூமிப் பிராட்டி கேட்டிருக்கும் சமயத்தில் மேற் சொல்லிய சங்கதியுடன் ஓத்ததான திரு வாக்கை அருளிச் செய்துள்ளார் –

————

யதா₃ஹ தே₃வ்யாம் ஶ்ருண் வந்த்யாம் பூ₄ம்யாம் ப்ரவத₃தாம் வர꞉ ।
ஸ்தி₂தே மநஸி ஸுஸ்வஸ்தே₂ ஶரீரே ஸதி யோ நர꞉ ।
தா₄து ஸாம்யே ஸ்தி₂தே ஸ்மர்தா விஶ்வ ரூபம் ச மாமஜம்
॥ 32 ॥

ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்ட₂பாஷாண ஸந்நிப₄ம் ।
அஹம் ஸ்மராமி மத்₃ப₄க்தம் நயாமி பரமாம் க₃திம் ॥ 33 ॥

மஹா வராஹப் பெருமான் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார்
நோய் முதலிய தேஹ பீடைகள் இல்லாமல் ஸம தாதுவான தேஹத்துடனும் -தெளிந்த மனத்துடனும் – கூடியிருக்கும் சமயத்தில் யார் ஒருவர் விஸ்வ ரூபனாயும் பிறப்பிலியாயும் இருக்கும் என்னை ஸ்மரிக்கிறாரோ -பின்பு மரணம் அடையும் ஸமயத்தில் கட்டையைப் போலும் கல்லைப் போலும் நினைப்பில்லாமல் இருக்குமவரை நான் ஸ்மரிக்கிறேன் -அவரை உத்தம கதியிலும் சேர்ப்பிக்கிறேன்

————-

யதா ₃கதா₃சித் வாதாதி₃ தா₄து ஸாம்யாத் அரோக₃த꞉ ।
மநஸ்தி₂ திஸ் ஸம்ப₄வதி ய꞉ கஶ்சித்து ததா ₃ நர꞉ || 34 ॥

ஸ்மரேத் ஸ்வாமித்வ ஸௌஶீல்ய வாத்ஸல்யாதி₃ மஹாேத₃தி₄ம் ।
அவதீர்ணம் வராஹம் மாம் ஶ்ரியா தீ₃ப்த கு₃ணைர் யுதம் ॥ 35 ॥

நாராயணம் விஶ்வரூபம் அஜம் இச்சா₂த்த விக்₃ரஹம் ।
ஶ்ரீமந் நாராயண ஸ்வாமின் ! அநந்ய ஶரணஸ்தவ ॥ 36 ॥

சரணவ் ஶரணம் யாத꞉ இதி மாம் யஸ் ஸ்மரேத் ஸக்ருத் ।
ததஸ்த மித ரோபாய வ்யவதா ₄ந விவர்ஜிதம் ॥ 37 ॥

தத ₃வஸ்த₂ம் ம்ருதி ப்ராப்தவ் காஷ்ட₂ பாஷாண ஸந்நிப₄ம் ।
காஷ்ட₂ வத்து ஸ்வதோ தே₃ஹே மநஶ் ஸேஷ்டா விவர்ஜிதம் ॥ 38 ॥

பரப்ரபோ₃தா₄ஸஜ்ஞம் து விளுப்தஹ்ருத₃யம் தத ꞉ ।
ஆத்மவத் ஸ்வய மந்யைஶ்ச ஹித ஸ்மரண வர்ஜிதம் ॥ 39 ॥

எப்பொழுதாவது ஒருக்கால் தேஹத்தில் ரோகம் முதலிய உபாதிகள் இல்லாமல் இருக்கும் போது வாத பித்தாதி தாதுக்கள் சமமாக இருக்கும் ஸமயத்தில் மனம் தெளிந்து ஸ்திரமாக இருக்கச் செய்தே யாவன் ஒருவன் ஸ்வாமியாகவும் ஸுசீல்யம் வாத்சல்யம் இவை முதலிய கல்யாண குணங்களுக்கு கடலாகவும் வராஹ ரூபியாக அவதாரம் செய்கிறான் என்றும் -ஸ்ரீ மஹா லஷ்மியினால் விளங்குபவராயும் பின்னும் அநேக மங்கள குணங்களோடு கூடியவராயும் -இப்பிரபஞ்சத்தையே ரூபமாக யுடையவராயும் -பிறப்பில்லாமல் இருக்கச் செய்தேயும் எனது இச்சையால் அநேக திவ்ய தேஹங்களோடே கூடியவராயும் இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான என்னை
வாரீர் ஸ்ரீ மன் நாராயணனே -ஸ்வாமியே -யான் வேறு ஒரு கதியில்லாதவனாக உமது திருவடிகளை சரணம் அடைந்தேன் என்று நினைக்கிறாரோ -பின்பு வேறொரு உபாயத்தினால் இன்றியிலே அப்பிரன்ன நிஷ்டையிலேயே இருப்பேன் என்றும் நினைக்கும் அவர் மரண அவஸ்தையில் காஷ்ட பாஷாணங்களோடே சமானராக இருக்கும் -கட்டை போல் மனதில் உணர்வு இல்லாதவராயும் உடலில் அசைவு இல்லாதாராகவும் -பிறர் தெரிவிக்கிலும் அறிவு இன்றியிலே மனம் இழந்தவராயும் -அப் பொழுது தம்முடைய நன்மையைத் தாம் அறியாது இருக்குமா போல் அங்கிருக்கும் சுற்றத்தார்களான பிறருக்கும் தம்முடைய நன்மை தோன்றாமல் இருக்கும் படியான துர் அவஸ்தையுடன் கூடியவராயும் இருக்கும் ஸமயத்தில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களுக்கு சித்தியை யுண்டாக்குவதற்காக விழித்து இருக்கும் நான் என் பக்தர்களை ரக்ஷிப்பதில் மனம் யுடையோன் ஆகையால் அவர்களை நான் ஸ்மரிக்கிறேன்

——————–

ஆஶ்ரிதேஷு ப்ரஸுப்தேஷு புருஷோ யோ வ்யவஸ்தி₂த꞉ ।
காமம் காமம் நிர்மமாண꞉ தேஷாம் ஜாக₃ர்தி ஸித்₃த₄யே ॥ 40 ॥

ஸோஹமாஶ்ரித தந்த்ராத்மா ஸ்மராமி ச ததா ₃ ஸ்வயம் ।
இமம் மத்₃போ₄க₃யோக்₃யம் து க்ருபா பூர ப்ரகாஶநாத் ॥ 41 ॥

நயாமி பரமம் ஸ்தா₂நம் அர்சிராதி₃க₃திம் விநா ।
க₃ருட₃ஸ்கந்த₄மாரோப்ய யதே₂ஷ்ட மநிவாரித꞉ ॥ 42 ॥

நான் அனுபவிக்கும் திவ்ய போகங்களை அனுபவிப்பதற்குத் தக்கவராய் இருக்கும் இவரை இவரிடத்தில் எனக்கு உண்டாய் இருக்கும் கிருபையை வெளிப்படுத்துவதால் அர்ச்சிராதி மார்க்கத்தால் போவதால் உண்டான கால விளம்பமும் இன்றிக்கே என் இஷ்டப்படி கருடாழ்வான் தோளில் மேல் ஏற்றி யாதொரு தடையும் இன்றிக்கே உத்தம கதியான என் பதத்தைச் சேர்ப்பிக்கிறேன்

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

———-

ஏதத் ப்ரபா₄வயுக்தஸ்ய ப்ரபந்நஸ்ய து பார்ஶ்வத꞉|
அபயாந்தி த்₃ருதம் பீ₄தா ꞉ பாஶிநோ யம கிங்கரா꞉ || 43 ||
அயம் ந கஸ்யசித்₃ப்₄ருத்ய꞉ பராஶர ஶுகௌ யதா₂ ॥ 44 ॥

இவ்விதப் ப்ரபாவத்தோடே கூடிய ப்ரபன்னர்களின் பக்கங்களிருந்து பாஸ ஆயுதங்களோடு கூடிய யம கிங்கர்கள் பயந்தவர்களாக ஓடிப் போகிறார்கள்

இப்பிரபன்னர் பகவானை ஒழிந்த வேறு ஒருவருக்கும் கீழ்ப் பணிந்தவர் அன்று
இவ்வாறே பராசர முனிவரும் சக முனிவரும் அருளிச் செய்துள்ளார்கள்

———-

ஸ்ரீ விஷ்ணுபுராணே –
ஸ்வ புருஷமபி₄வீக்ஷ்ய பாஶ ஹஸ்தம் வத₃தி யம꞉ கிலம் தஸ்ய கர்ணமூலே ।
பரி ஹர மது₄ஸூத₃ந ப்ரபந்நான் ப்ரபு₄ரஹ மந்ய ந்ருணாம் ந வைஷ்ணவாநாம்
॥ 45 ॥

யமதர்ம ராஜன் பாஸ ஆயுதத்தைக் கையில் பிடித்திருக்கும் தன்னுடைய கிங்கரர்களைப் பார்த்து அவன் செவியில் ரஹஸ்யமாகச் சொல்லுகிறான்
வாரீர் கிங்கரரே -பகவான் இடத்தில் பிரபத்தி செய்திருக்கும் பாகவதர்களைப் பரிஹரித்து விடுங்கள் -நான் வைஷ்னவர்கள் ஒழிந்த மற்றப் பிராணிகளுக்குப் பிரபுவே ஒழிய வைஷ்ணவர்களுக்கு பிரபு அன்று –

ஸத்யம் ப்₃ரவீமி மநுஜா꞉ ஸ்வய மூர்த்₄வ பா₃ஹு꞉ யோ மாம் முகுந்த₃ நரஸிம்ஹ ஜநார்த ₃நேதி ।
ஜீவோ ஜபத்யநுதி₃நம் மரணே ப்ய்ருணீவ பாஷாண காஷ்ட₂ஸத்₃ருஶாய த₃தா₃மி மாேக்ஷம் ॥

——

ஶ்ரீபா₄க₃வதே –
தே₃வர்ஷி பூ₄தாத்ம ந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜன் ।
ஸர்வாத்மநா ய꞉ ஶரணம் ஶரண்யம் நாராயணம் லோக கு₃ரும் ப்ரபந்ந
꞉ ॥46॥

ஸர்வ லோகங்களையும் ரக்ஷிக்கத் தக்கவராயும் ஸர்வ லோகங்களுக்கும் பிதாவாகவும் இருக்கும் ஸ்ரீ மந் நாராயணனை எவர் ஸர்வ பிரகாரங்களாலும் சரணம் அடைந்திருக்கிறாரோ அந்தப் பிரபன்னர் தவர்கள் ரிஷிகள் பூதாத்மாக்கள் பித்ருக்கள் இவர்களுக்கு கிங்கரரும் அன்று -கடனாளியும் அன்று

——

உப ஸம்ஹார꞉ –
த்ரை யந்த ஸ்ம்ருதி முக்₂ய ஸந்முநிவச꞉ ஶ்ரீபாஞ்சராத்ராசல ஷோதை ₃꞉
ஸங்க₄டித꞉ ப்ரபந்நசரித꞉ க்ஷீராப்₃தி₄ஸேதுர் மஹான் ।
யே வாஞ்ச₂ந்த்ய முநா பதா ₂(ஆ)ப்துமசிராத் பாரம் ப₄வாம் போ₄நிதே₄꞉
தே பூர்வோத்தர பாப கர்ம நிசயை ꞉ முக்தா விமுக்தா ꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 47 ॥

ப்ரபன்னர்களின் சரித்ரங்களாகிற பாற் கடலில் வேதாந்த ஸாஸ்திரம் ஸ்ம்ருதி முதலிய ரிஷிகளின் வசனங்கள் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரம் இவைகளாகிற மலைகளின் பொடிகளினால் -இக்கிரந்தத்த்தில் சொல்லப்பட்ட ப்ரபந்ந நிஷ்டையாகிற பெரிய அணை கட்டப்பட்டு இருக்கிறது -இவ்வணையால் எவர் ஸம்ஸாரக் கடலின் கரையை சீக்கிரத்தில் அடைய விரும்புகிறார்களோ அவர்கள் மேல் சொல்லப்பட்டு இருக்கும் பூர்வாகங்கள் -உத்தராகங்கள் இவற்றின் நின்றும் நீங்கியவராய் முக்தர்களாகி விடுவார்கள் என்று ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது –

——-

கார்பண்யாசிதப₃த்₃த₄ மூலப₂ லகா விஶ்வாஸ கீலாசிதா
யாச்நா ப₃ந்த ₄நரஜ்ஜுக்ருஷ்டி வஶகா₃ நிஷேப ஸங்ஷேபணி꞉ ।
ஸம்ஸாரார்ணவ தாரிணீ தநுப்₄ருதாம் ந்யாஸாத்மநவ் ꞉ தாமிமாம்
அர்ச்சி₂த்₃ராமத₂ பாரயிஷ்ணுமப₄யா꞉ ஸத்₃யோ (அ)தி₄ரூடா₄ ஜநா꞉ || 48 ||

பிரபத்தியை ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிக்கும் ஓடமாக நிரூபிக்கிறார் -அதாவது கார்ப்பண்யத்தோடு கூடிய -(கார்ப்பண்யம் -வேறொரு கதி இல்லாமையால் உண்டாகும் மன இரக்கத்தால் )-புத்தியாகிய அடிப்பலகைகளோடு கூடியதாகவும் -மஹா விசுவாசமாகிற ஆணிகளினால் பிணையப்பட்டதாகவும் -பிரார்த்தனை யாகிற அதில் கட்டிய கயிற்றின் வசமாய்ப் போகத் தக்கதாயும் -பர ஸமர்ப்பணமாகிற ஓர் துடுப்போடே கூடி யதாயும் இருக்கிற ந்யாஸ வித்யை என்ற பெயர் பெற்று இருக்கும் இப்பிரபத்தியாகிற ஒடமானது இப்பிராணிகளின் ஸம்ஸாரக் கடலைத் தாண்டி வைக்கத் தக்கதாக விளங்குகிறது -ஸந்தேஹம் இல்லாமல் கரை சேர்க்கத் தக்கதாயும் இருக்கிறது -இவ்வோடத்தை பயமில்லாதவர்களாய் ஸத்துக்கள் ஏறினார்கள் –

——-

அஸேஷா பேக்ஷிதம் யத்ர பரிதோ ஜாயதே ஸதாம் ।
ப்ரபந்ந பாரிஜாதாக்₂ய꞉ ப்ரப₃ந்த₄꞉ கதி₂தோ பு₄வி ॥

உலகில் ப்ரபன்னர்கள் அபேக்ஷிக்கும் ஸகல அர்த்தங்களையும் தெரிவிக்கின்ற ப்ரபந்ந பாரிஜாதம் என்னும் இக் க்ரந்தம் வரதகுரு என்னும் ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டது –

————–

இதி ஶ்ரீவாத்ஸ்ய வரதா₃சார்ய மஹா கு₃ருபி₄ரநுக்₃ருஹீதே
ப்ரபந்ந பாரிஜாதே ப₂லோத₃ய பத்₃த₄தி꞉ த₃ஶமீ ஶ்ரீமத்₃வரத₃மஹா
கு₃ரு தி₃வ்ய சரண நலிநே ஏவ ஶரணம்

—————————————————-

சுத்த குண விட்டு சித்தன் சுடர் அடியோன் வாழியே
ஸ்ருதப் பிரகாசிகையைச் சொல்லி வைத்தோன் வாழியே
தத்வ ப்ரமேயத்தின் தரம் அறிந்தோன் வாழியே
புத்தி மிகு சாரார்த்த சதுஷ்டயத்தோன் வாழியே
புகழ்ப் பாடியப் பொருளை புதர்க்களிப்போன் வாழியே
சித்திரையில் சித்திரை நாள் கச்சி வந்தோன் வாழியே
சீராரும் அம்மாள் தன் சேவடிகள் வாழியே

திங்கள் போன்ற திருமுகம் வாழியே
திருமங்கை காப்புத் திகழ் நெற்றி வாழியே
தொங்கு முப்புரி நூல் மார்பு வாழியே
தோன்று இலச்சினைத் தோள் மிக வாழியே
தனக்கு கோசம் விளங்கு கை வாழியே
தாங்கு சின் முத்ரை விரல் வாழியே
பொங்கு வத்ஸ குல வரதாரியன்
பொன் மலர்ப்பாதம் வாழியே வாழியே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

November 25, 2024

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

ப்ரோக்தா அக்ர்யாஸ்தனவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரித்யத யோ ஹ கலு வாவாஸ்ய ராஜஸோம்ஶோ ஸௌ ஸ யோ யம் ப்ரஹ்மாத யோ ஹ கலு வாவாஸ்ய தாமஸோம்ஶோஸௌ ஸ யோயம் ருத்ரோ  (மைதாரணீய உபநிஷத நிர்ணயம்-நாலாவது ப்ரபாடகம்) 

பரமாத்மாவுக்கு பிரம்மன், ருத்ரன், விஷ்ணு எனும் மூன்று சரீரங்கள் உள்ளன. பரமபுருஷனானுடைய ராஜஸாமசம பிரம்மன், ஸாத்வீகாமசம விஷ்ணு, தாமஸாமசம ருத்ரன் என ஓதப்பட்டுள்ளது ஸாத்வீக ராஜஸ தாமஸ தேவதா நிர்ணயத்திற்கு இவ்வொரு வாக்யமே போதுமானது

விஷ்ணு மஹேஸ்வராகயா நாராயணமனஸ்ஸ ஸத்வ தமோ குண பரதாநை (-த்ரிபாதவிபூதிமஹாநாராயண உபனிஷத் நிர்ணயம்52)

 நாராயணமசபூதகளாய ஸத்வ தமோ குண பரதாத்நரான விஷணு மஹேஸ்வரர்களாலே -என மறுபடியும் உத்கோஷிக்கிறது.

ராஜஸோ ப்ரஹ்மா ஸாத்வீகோ விஷ்ணு தாமஸோ ருத்ர (யோகசூடாமணி உபனிஷத்நிர்ணயம்46)

தமோமாயாத்மகோ ருத்ர: ஸாத்விகமாயாத்மகோ விஷ்ணூ ராஜஸமாயாத்மகோ ப்ரஹ்மா– பாசுபத பிரம்மோபனிஷத் நிர்ணயம்

தமோ குணத்தானவன் ருத்ரன், ஸாத்விக வடிவானவன் விஷ்ணு, ராஜஸமானவன் ப்ரஹ்மா என அடித்துரைக்கிறது-

லலாடாத கரோதஜோ ருத்ரோ ஜாயதே-ஸூபாலோபனிஷத நிர்ணயம்

பிரமனின் கோபத்தால் நெற்றியிலிருந்து  உருத்திரன் உண்டானான் என்று ஓதப்பட்டது. கோபத்தால் உண்டானது என்றதனால் ரஜஸதமோகுணமுள்ளவன் ருத்ரன் என்பது ஸித்தம். 

ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன: ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான: ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம் பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி–ந்ருசிம்ஹதாபனீ உபனிஷத்

அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய், ஒருவராலும் அவமதிக்க வொண்ணாதவனாய், ஸர்வேஷ்வரனும், ஸர்வ வியாபியாய, எப்போதும் பிரகாசிப்பவனாய், அஜ்ஞானமும் அதன் காரியமுமற்றவனாய் ஜீவாத்மாவின் ஸம்ஸார பந்தத்தை போக்குபவனாய் எப்போதும் ஒப்பற்றவனாய், ஆநந்த ரூபமாய், எல்லாவற்றிற்கும் இருப்பிடமாய், எப்போதுமுள்ளவனாய் அவித்யத்தை யெனபடும் கருமம், தமோகுணம், மயக்கமற்றவனாய் இருப்பவனான இந்த வீரனே நரசிங்கன்”
என்பதன் மூலம் தமோகுணம் அணுவளவும் அண்டாதவன் அநந்தன் என்பது ஸித்தம். 

ஸர்வவேதபடிதமாய், ஸர்வவேத ஸ்ரேஷ்டமாய், கபிலத்தவ ஸமபாவநாகநத ரஹிதமான புருஷ ஸூக்தத்திலே லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில் ‘தமஸஸ்து பாரே’, ‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது

தம தவா கருணமி தவஸமவதவயாந         க்ஷயநதமஸ ரஜஸ பராகே’-ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது  விஷ்ணுஸூக்த வாசகம்

மிகவும் முதியவனான ரஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிருக்கும் அப்படிபட்ட உன்னை அதிபாலனாம யான் ஸங்கீர்தனம் செய்கிறேன் என உறைத்தது

“பூதாநாம ச பரஜாபதிஸ ஸமவதஸராய தீக்ஷித உஷ பதநீ பூதாநாம பதீஸ ஸமவதஸேர உஷஸி ரேதோஸிஞசத ஸமவதஸரே குமாரோ ஜாயத ஸோராதீத தம ப்ரஜாபதிர பரவீதகுமார கிம ரோதிஷ யச்சரமாத தபஸோதி ஜாதோஸீதா ஸோபரவீத அநபஹதபாபமாவா  அஹமநாஹிதநாமா நாம மே ஹேதி பாபமநோ அபஹதயை தம புந ப்ரஜாபதிரபரவீத ருதரோஸீதி“[சதபதபரஹ்மானம்]

பூதங்களின் பதியின் பிரமன் ஒரு வருஷ தீக்ஷையுடனான பின் உருத்திரனை உண்டாக்கினான். அது பிறந்தவுடன் ஓயாது அழுக பிரம்மன் ஏன் அழுகிறாய் என வினவினார். அக்குழந்தை பெயரிடபடாதநான் பாபம் நீங்கபெறதவனாயுள்ளேன்;என் பாபம் நீங்கும்வகையில் நன்நாமம் தருவாயாக என்றது. அதற்கு மறுமொழியாக ” ருத்ரன் எனும் நாமம் உண்டாவதாக”என்றார். (இம் மாதிரியே பவன், சாவன், ஈசானன், பசுபதி, பீமன், உகர்ன் எனும் நாமங்கள் கொடுக்கப்பட்டன) என்று ஓதப்பட்டுள்ளது. -இதன்மூலம் ருத்ரன் பிறக்கையிலே பாவம் நிறைந்திருந்ததால் தமோ குணத்தின் ஆதிக்கமே இதன் காரணமாம். 

ஆஸீதிதமதமோபூதம……………………………………..பகவாந பரா துரோஸீத தமோநுத-மனுஸ்மிருதியின் முதலத்யாய வசனம்

தவம் புத்தி ஸஸ்தவம் க்ஷமாதமா'(யுத்தகாண்டம் 120:16)’தீர்க்க பாஹூம்மஹாஸ்தவம்'(அயோத்யாகாண்டம் 3:28)’ஸத்வயுகதா ஹி புருஷாஸ த்விதா புருஷாஷப அவிமருஸ்ய ந ரோஷஸய ஸஹஸா யாநதி வஸ்யதாம்(கிஷ்கிந்தாகாண்டம்35:11)   

ஸத்வகுணமுள்ள முன் போன்றவர்களுக்கு விசாரியாமல் சடக்கென்று கோபவசப்படமாட்டார்கள்.   

“ஸாதுரோகவிநிர்மித”(அயோத்யாகாண்டம்1:18)ராமஸஸதபுருஷோலோகே”(அயோத்யாகாண்டம்2:29)

 ‘ஸ ச சர்வகுணோபேத
(பாலகாண்டம்1:7)
‘ஸ்ரேஷ்டகுணாயுத
(அயோத்யாகாண்டம்1:31)
‘பஹவோ நரூக கல்யாண குண புத்ரஸ்ய ஸநதிதே
(அயோத்யாகாண்டம்2:26)
‘தாதூநாமிவ ஸைலேந்தரோகுணநாமாகரோமஹாந’
(கிஷ்கிந்தாகாண்டம்15:21)

  சிறந்த மலைத்தாதுகளுக்கு இருப்பிடம் போல நற்குணங்களுக்கு பெருநிதியாய் இருப்பவன் இராமன் என ஸத்வகுணத்திற்கு சான்று பகிர்கின்றது.

பாரதம் பஞ்சமோ வேத’ என புகழப்படும் ஐந்தாம் வேதமாகிய மஹாபாரதத்திலும் இவ்விஷயம் பேசப்பட்டுள்ளது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ‘ஸத்வவாந ஸாத்விக’ என்றும் ‘ஸத்வஸ்த‘ என்றும் நிருநாமங்கள் படிக்கப்படுகின்றன. இவ்விடங்களுக்கு பாஷ்யமிட்ட ஆதிசங்கரரும், ஸத்வகுணத்தை ப்ரதானமாக அதிஷ்டித்து நிற்பவன் என்றார். 

      ‘ஸத்வம் வஹதி ஸூததாதமா தேவம் நாராயணம் ப்ரபும்’ (சாந்திபர்வம்307-77)

 சுத்த ஸ்வரூபமான ஸத்வம் ஸர்வஸ்யாமிய் நிர்மலமானவனான நாராயணனை அடைவிக்கிறது என்று நாராயணனை ஸத்வநிஷ்ட பராபயனாக 
அநுஸநித்தது. 

‘ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம'(சாந்தி பர்வம் 358-73, 77)

 பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான். அவனே மோக்ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் இவன் மனம் கலங்கி நிற்கும் என பகவான் ஸத்வபரவர்தகனாகிறபடியையும் ப்ரஹ்மருத்ரர்கள் ரஜஸதம பரவர்த்தகனாகிறபடியைைும் அதிஸ்பஷ்டமாக அறிவித்தருளினார் வியாசர். ஆக இதிஹாசங்களும் ஸாத்வீகதேவதை விஷ்ணுவே என்பதும் தாமஸதேவதை ருத்ரனே என்பதும் நிர்ணயிக்கப்பட்டது. 

ஸங்கீர்ணாஸதாமஸாஸ சைவ ராஜஸாஸ ஸாத்விகாஸ ததா கல்பாஸசதுர்விதா ப்ரகோதா ப்ரஹ்மணோ தி வ்ஸாத்யயோ யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரேதேஷவேவ யோக ஸம்ஸிததா கமிக்ஷயந்தி பராம கதிம

பிரம்மனுக்கு ஒவ்வொருநாளும் ஸங்கீர்ணங்கள்,தாமஸங்கள், ராஜஸங்கள், ஸாத்வீகங்கள் என நான்கு விதமான கல்பங்கள் கூறப்படுகின்றன. ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது. அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது. ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது. ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிகபெருமை சொல்லப்படுகின்றன. 
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் என்று மாத்ஸயபுராணம் கூறிநிற்கிறது. இது கூர்மபுராணத்திலும் ஒப்புகொள்ளப்பட்டது.

ஸத்வத்யோ ந ஸந்தீயோ யதர ஹி ப்ராக்ருதோ குண| ஸ ஸூத்த ஸாவஸூத தேபய புமாநாதய பரஸீதது||’ (விஷ்ணுபுராணம்1-9-44)

 ஸத்வம், ராஜஸஸீக, தாமஸஸீ எனும் ப்ராக்ருதகுணங்கள் எந்த பகவானிடமில்லையோ  பரிசுத்தர்கள் அனைவரிலும் பரிசுத்தனான அந்த ஆதிபுருஷன் உகந்தருள்வானாகஎன பரமபுருஷனின் ஸ்வரூபத்திற்குஸாத்வீகரஜோதமோகுணங்கள் கிடையாது என்று நிலை நாட்டியது. 
ஜூஷந ரஜோகுணம் ததர ஸ்வயம் விஸ்வேஸ்வரா ஹரி|ப்ரஹ்மா பூதவாஸய ஜகதோ விஸருஷடெள ஸம்பரவாதத்தே||ஸ்ருஷ்டஞ்ச பாத்யநுகம் யாவத்கல்பவிகல்பநா|ஸத்வப்ருத பகவாந விஷ்ணுரபரமேயபராக்ரமம்|தமோதகீ ச கல்பாந்தே ருத்ரரூபீ  ஜனார்தனன|மைத்ரேயாகில பூதாநி பக்ஷயதயதிதாருண||பக்ஷயிதவா ச பூதாநி ஜகத்யேகாரணவீக்ருதே|நாகபாயங்கஸ்யநே ஸேதே ச பரமேஸ்வர||                          (விஷ்ணுபுராணம் 1-2)

ஜகத்பதியான பகவான் ஹரி பரஹமயோகியாகி ரஜோகுணம் தரித்து நின்று உலகத்தை ஸ்ருடிப்பதில் ஈடுபடுகிறார். கல்ப காலம் முடியும் வரை
யுகந்தோரும் ஸத்வகுணம் தரித்துநின்று அளவற்ற பராக்கிரமத்தை  உடைய விஷ்ணு படைக்கப்பட்ட உலகை ரக்ஷிக்கிறார். கல்ப முடிவில் ருத்ரரூபியாகி தமோகுணத்தை அதிகளவு கொண்டு அதிபயங்கரரான ஜனார்தனன் எல்லா ஜீவராசிகளையும் புசிக்கிறார். புசித்த பின் உலகம்முழுவதும் ஒரே ஜலமயமானவுடன் திருவன நதாழ்வானாகிற சயனத்தில் பரமேஸ்வரரான பகவான் சயனிக்கிறார். -என்று ஸத்வகுணத்திருமேனியை உடையவன் விஷ்ணுவெனவும் தமோகுணமுடையசரீரத்தை உடையவன்
ருத்ரன் எனவும்   காட்டுகிறது. 

ஏகேநாமஸேந ப்ராஹ்மாஸெள வாதததேஸெளரரஜோகுண|ஏகாமஸேநாஸ்தி தோ விஷ்ணு கராதி ப்ரதிபாலநம||ஸத்வம் குணம் ஸமாஸரிதய ஜகத் புருஷோத்தம|ஆஸ்ரீதய தமஸோ வ்ருத்திமந்தாகாலே ததா புந||ருத்ரஸ்வரூபோ பகவாநேகாமஸேநபவத்யஜ||                                 (விஷ்ணுபுராணம் 1-22)

ஓரம்சத்தினால் பிரம்மனாகி ரஜோகுணமுடையவனாய் ஸ்ருஷ்டிக்கிறான் பகவான். ஓரம்சத்தில் விஷ்ணுவாயிருந்துகொண்டு  புருஷோத்தமன் ஸத்வகுணத்தை எடுத்துகொண்டு உலகத்தை ரக்ஷிக்கிறான். ப்ரளயகாலத்தில் ருத்ரரூபியாய் தமோகுணத்தைகொண்டு  ஓரம்சத்தால் சம்ஹரிக்கிறான். என்று இவ்விஷயம் மற்றோர் இடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வளவால் இவ்விஷ்ணு புராணத்தில் ஸாத்வீகதாமஸ தேவதா நிர்ணயம் செய்யப்பட்டது. 

யத் ஸத்வம் ஸ ஹரிர தேவோ யோ ஹரிஸ தத பரம் பதம்|ஸத்வம் ரஜஸ தமஸசேதி த்ரியதம் சைததுசயதே ||ஸத்வேந முசயதே ஜந்துஸ ஸத்வம் நாராயணேதமகம|ரஜஸா ஸத்வயுகதேந பவேசரீரமாந யஸோதிக||தச்ச பைதாமஹம வ்ருத்தம் ஸாவஸாஸ்த்ரேஷூ படயதே|யத வேதபாஹ்யம் காம ஸயாந மாமுத்திஸயோபஸேவயதோ || தத ரெளதரமிதி விகயாதம கநிஷ்டகதிதம ந்ருணாம|யததீந்தபஸா யுக்தம் கேவலம் தாமஸம் து யத||தத துர்க்கதிபரதம் ந்ரூணாம இஹ லோகே பரதர ச|–வராஹபுராண நிர்ணயம்-அகஸ்தியருத்ர ஸம்வாதத்தில் 

தேவனான ஹரி ஸத்வகுணமானவன். ஹரியே பரமபராபயன். ஸத்வம், ராஜஸ, தாமஸம் என்று குணங்கள் மூன்றாக கூறப்படுகின்றன. ஸத்வகுணத்தால் ஜீவன் முக்தியடைகிறான். ஸத்வம் நாராயணஸ்வரூபமானது. ஸத்வகுணத்தோடு கூடிய ரஜோகுணத்தால் செல்வமுள்ளவனாகவும், பெரும்புகழாளனாகவுமாகிறன். அது பிதாமஹனுடைய குணமாக எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது. வேதத்திற்கு புறம்பான (கபாலிகம் முதலான) எந்த தாமஸம் (ருத்ரனாகிய)என்னை குறித்து அனுஷ்டிக்கப்படுகிறதோ, அதுவே ரெளத்திரம் எனப்படுவதாய மனிதர்களுக்கு கீழான கதியை அளிக்கிறது. அது தாழ்ந்த ஆஸாரங்களையுடையது, கேவலம் தாமஸமானது. இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மனிதர்களுக்கு துர்கதியைய தருவதாகும். 
என ருத்ரனே ஒப்புகொண்டான். 

ஹிரண்யகர்ப்போ  ரஜஸா  தமஸா  ஸங்கர | ஸ்வயம் ஸத்வேந  ஸர்வகோ  விஷ்ணு ஸர்வாத்மா ஸதஹந்மய||

பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன்  தமோகுணத்தோடும்,
ஸர்வாத்மாவும் சிதசித் ஸ்வரூபியும்ஆன விஷ்ணு ஸத்வத்தோடும் கூடியவர்… என்று 
பதினாலாவது அத்யாயத்திலும்,

த்வத்கோபஸம்பவோ  ருத்ரஸ்  தமஸா ச  ஸமாவ்ருத|த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா  ரஜஸா ச பிதாமஹ த்வத்ஸ்வரூபாத்  ஸ்வயம் விஷ்ணு ஸத்வேந புருஷோத்தம||

தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன்கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு
ஸத்வ குணமுடையவன் 
என்று இருபத்து நாலாவது அத்யாயத்திலும்

தமஸா ருத்ர ஸ்யாத ரஜஸா கந்காண்டஜ|ஸதவேந ஸாவகோ விஷ்ணு ஸர்வலோகநமஸ்கருத|| 

தமோகுணத்தோடு கூடியவன் ருத்ரன், ரஜோகுணத்தோடு கூடியவன் ஹிரண்யமயமான அண்டத்தில் பிறந்த 
பிரமன், ஸர்வ வியாபியாய் ஸர்வலோகநமஸ்கருதனன் விஷ்ணு ஸத்வகுணத்தோடு கூடியவன் எனவும் லிங்கபுராண வசனங்கள் ஒப்புதல் அளித்தது. 

யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா |      தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||      அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் |      ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ||      ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே |      ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே|-           மத்யஸ்யபுராண நிர்ணயம்

ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது. அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது. ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது. ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிகபெருமை சொல்லப்படுகின்றன. 
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் . 

ஸத்வம் ரஜஸ தம இதி ப்ராக்ருதோ குணஸ தைா யுகத பர புருஷ ஏக இஹாஸய தததே|ஸதிதயாதயே ஹரிவிரிஞ்சி ஹரேதி ஸமஜ்ஞாம ஸ்ரேயாமஸி ததர கலு ஸத்வதநோ நருணம ஸயு||-ஸ்ரீமத் பாகவத புராணநிர்ணயம்

ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்பவை ப்ரக்ருதியின் குணங்கள். இந்த மூன்றுகுணங்களோடு கூடிய பரமபுருஷன் ஒருவனே. ரக்ஷணம், 
ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனும் காரியங்களுக்காக ஹரி, பிரமன், ஹரன் எனும் பெயர்களை அடைகிறான். அவர்களுள் ஸத்வகுணமுடைய ஹரியிடத்தே நன்மையுண்டாகும். என்று ஸத்வகுணமுள்ளவன் ஹரியே என காட்டப்பட்டுள்ளது. 

பேஜிரே முந்யோ தாகரே பகவந்தமதோக்ஷஜம|ஸத்வம் விஸுததம க்ஷேமாய கல்பந்தேயேநு தாஹிந||முமுக்ஷவோ கோரரூபாந ஹிதவா பூதபதீநத |நாராயணகலா ஸாந்தா பஜநதி ஹயநஸுயவ||ரஜஸ்தம ப்ரருக்தய ஸமஸீலாந பஜநதி வை|பித்ருபூதபரஜேஸாதீந ஸ்ரீயைஸவாயபரஜேபஸவ||-ஸ்ரீமத் பாகவத புராணநிர்ணயம்

ஆதிகாலத்தில் முனிவாசர்கள் ஸத்வகுணதிருமேனியுடையவனும் பரிசுத்த பகவானுமான புருஷோத்தமனை பூஜித்தனர். அவர்களை அனுஸரித்து அவர்களை பூஜிப்பவர்கள் நன்மையடைபவர்கள், மோக்ஷத்தையடைவர். கோரமான உருவமுடைய பூதகணங்களுக்கு தலைவனாக இருக்கும் ருத்ராதிகளை விட்டு துவேஷமற்றவர்களாய் சாந்தியோடு கூடிய நாராயணரை உபாஸிக்கிறனர். ரஜோகுணம், தமோகுணமுடையவர்கள் அதே குணங்களையுடைய பித்ருக்களையும் பூதகணங்களுக்கு தலைவர்களான ருத்ராதிகள் பிரமன் முதலான ப்ரஜாபதிகள் வரையும் விரும்பி உபாஸிக்கின்றனர் . என்று ஸத்வகுண திருமேனியையுடைய நாராயணரையும்  தாமஸகுணமுடைய சிவனையும் காட்டித் தந்தது. 

சிவ ஸக்தியுகத ஸஸ்வத த்ரிலிங்கோ குணஸம்வருத|ஹரி ஹி நிர்க்குண ஸாக்ஷாத புருஷ ப்ரக்ருதே பர ||-ஸ்ரீமத் பாகவத புராணநிர்ணயம்

பார்வதியேிடு கூடிய சிவன் எப்போதும் ஸாத்வீகராஜஸதாமஸ ஹங்காரத்திற்கு 
வசப்பட்டவன். தமோகுணமுடையவன். ஹரியோ எனில் முக்குணங்களுமற்றவன், ப்ரகருதிக்கு மேற்பட்ட புருஷன் அவனே. இவ்வாறு நூற்றுகணக்கான இடங்களில் பகவானின் திருமேனி ஸாத்வீகமயமானது, தமோகுணம் லேசமும் அற்றதென உத்கோஷிக்கின்றன. 

பத்மபுராண உத்தரகாண்டத்தில் இருநூற்று ஐம்பத்தைந்தாவது அதிகாரத்தில் –திலீபன் சொன்னான்- வஸிஷ்டமஹரிஷியே!  ஸாமாந்யதாகவும், விசிஷ்டதாமமாகவும் எல்லா தர்மங்களும்ஜீவாத்ம  பரமாத்ம ஸ்வரூபங்களும் ஸ்வர்கமோக்ஷங்களும் அவற்றின் ஸ்வரூபங்களும்  ஒன்றுவிடாமல் தேவரீரால் கூறப்பட்டன. ஆச்சார்யரான ப்ராமணோத்தமரே! நான் தன்யனானேன். அறிவதில் விருப்பத்தால் இன்னமும் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன்,  உமக்கு  என்னிடமுள்ள வாத்சல்யப்பெருமையாலே உள்ளதை உள்ளபடியே சொல்லவேணும், முதல் பாகவதனும் திரிபுரம் எரித்தவனும் மனைவியோடு கூடிய ருத்ரன் எக்காரணத்தினால் தாழ்ந்ததொரு ரூபத்தையடைந்தான்? சிறந்தவனான அவனுக்கு லிங்கஸ்வரூபமான உருவம் எப்படி உருவாகும்? ஐந்துமுகத்தையும் முக்கண்களுமுடைய சூலபாணியாகிய அவனுக்கு இத்தாழ்ந்த உருவத்தை எப்படி அடைந்தான்? இதையெல்லாம் எனக்கு சொல்லவேணும். 
வசிஷ்டர் கூறினார்- நீ என்னை கேட்கும் விஷயத்தை வாத்சல்யத்தால் கூறுகிறேன். மந்தரமெனும் மலையில் ஸ்வயம்புவாமனு முன்னொரு காலத்தில் முனிவர்களை கொண்டு தீர்க்கஸ்தரயாகம் செய்தான். அங்கு கூடியிருந்த முனிவர்கள் விரதநிஷ்டையுடையவர்கள், பல சாஸ்திரமறிந்தவர்கள், வேதமறிந்த அந்தணர்களாவர். ஸத்ரயாகம் நடக்கும்போது பரம்பொருளை தேடுவதற்காக பின்வருமாறு பேசிகொண்டனர். “வேதமறிந்த விபரர்களுக்கு பூஜிக்கத்தக்க தகுந்த தெய்வம் யாது? ப்ரஹ்ம விஷ்ணு சிவனுள் யார் தன்னை துதிப்பவனுக்கு முக்தியையளிப்பான்? எவனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் அருந்ததக்கது? எவன் உண்டது மிகுந்த பரிசுத்தமானது? எவன் அழிவற்றவனும் பரஞ்சோதியாகவும் பழமையோனாக இருக்கிறான்? எவனுடைய தீர்த்த ப்ரஸாதங்கள் பித்ருக்களுக்கு திருப்தியை அளிக்கும்? “என்று இவ்வண்ணம் மஹரிஷிகளுள் விவாதமே உண்டாயிற்று. சில மஹரிஷிகள் ருத்ரனே பரம்பொருள் என்றனர். சில முனிஸ்ரேஷ்டர்கள் பிரமனே பூஜிக்கதக்கவன் என்றனர். சிலர் சூர்யனே பூஜயன் என்றனர். ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான அழிவற்ற தாமரைகண்ணணான வாஸுதேவனாய் ஆதியந்தமற்றவனாய் பரமேஸ்வரனான நாராயணரே பூஜிக்கதக்கவன் என சில அந்தணர்களும் உரைத்தனர். அவர்களின் விவாதம் தொடர்ந்தகொண்டிருக்கையில்ஸ்வயம்புவாமநு பின்வருமாறு கூறலானார்.  “சுத்தஸத்வனான கல்யாணகுணமுடைய ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான உபயவிபூதிசெல்வமுடைய அச்சுதனே அந்தணர்களுக்கு பூஜயன். ரஜஸ தமோ குணங்கள் கலந்த மற்றய தெய்வங்கள் அவர்களுக்கு பூஜயர்களல்ல.” என்று அவர் கூறியதை கேட்ட மஹரிஷிகள் அனைவரும் ப்ருகுமஹரிஷியை வணங்கி கோரிக்கை விடுத்தனர். “எங்கள் ஐயத்தை போக்க நீரே வல்லவர்.ப்ரம்மவிஷ்ணுருத்ரர்களுக்கு அருகில் சென்று  ஸத்வகுண சரீரம் கொண்டு ப்ராஹ்மண பூஜைகுரியவர் யார்? என்பதை அறியும் லோகோபகாரத்தை செய்வீராக” . 
இப்படி சொல்லப்பட்ட அவர் எருதுகொடியோனிருக்கும் கைலாஸத்திற்கு வாமதேவரோடு சென்றார். சங்கரனுடைய ஆலயதுவாரத்திற்கு சென்று சூலத்தையேந்திய மஹாபயங்கரனாகிய நந்தியை கண்டு பின்வருமாறு சொன்னார். “தேவனான ஹரனை காண ப்ருகுவான நான் வந்துள்ளேன், நான் வந்ததை சங்கரனிடம் தெரிவிப்பாயாக”. இதைகேட்ட நந்தி  கடுமையாக பின்வருமாறு கூறிற்று” எமது எஜமாமர் பார்வதிதேவியாரோடு தனிமையில் உள்ளார், எனவே அவரை நீர் பார்க்க இயலாது, திரும்பிசெல்”. இவ்வாறு நிராகரிக்கப்பட்டும் ருத்ராலயத்தில் பலநாட்கள் காத்துகிடந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ப்ருகுரிஷி ‘ஸ்த்ரீஸங்கமத்தில் மயங்கிய என்னை அவமதித்த இவன் லிங்கஸ்வரூபமாக ஆகுக. தாமஸத்தோடு கூடி அந்தணனான என்னைஅவமதித்ததால் ப்ராஹமண பூஜைக்கு அநாஹனாகி அந்தணரால் பூஜிக்கப்படாதவனாவான், ஆகையால் இவனுக்கு கொடுக்கும் அந்தம ஜலம், புஷ்பம், ஹவிஸ் முதலியன நிர்மாலயம் (உபயோகமில்லாதது) ஆகும். இதில் ஐயமில்லை. , பஸ்மத்தையும் லிங்கத்தையும் கபாளத்தை தரிக்கும் ருத்ரபக்தர்கள் பாஷாண்டிகளாக வேதத்திற்கு புறம்பானவராவார்”என கடுமையாக சபித்துவிட்டு ப்ரஹ்மலோகம் சென்றார். அங்கு ஸர்வலோக தேவர்களும் பிரமனை பார்த்து கைகூப்பி வணங்கி மெளனமானார். முனிவர் தலைவரான அவரை பார்த்தும் ரஜோகுணத்தால் மூடப்பட்டவனாகையால் ப்ரஹ்மா வந்திருந்த முனிவரை பூஜிக்கவில்லை, எதிர்கொண்டழைக்கவில்லை, இன்சொற் பேசவில்லை. இதனால் கோபமடைந்த ப்ருகு ரிஷி “அதிகமான ரஜோகுணமுடையவனாகிய நீ எவராலும் பூஜிக்கப்படாதவனாகுக” என்று இதுவரை லோஹபிதாவாக இருந்த பிரமனை சபித்துவிட்டு பகவானுடைய ஆலயத்திற்கு சென்றார். அங்கு ஆதிஷேஷனில் சயனித்து மலர்மகளின் மலர்கைகளால் திருவடி வருடப்பெற்றவனான கமலாபதியை கண்டார். இவனும் நம்மை அவமதிக்கும்வகையில் தூங்குகிறானே என்றெண்ணிய பிருகு விஷ்ணுவின் பரமமங்கள திருமார்பில் எட்டி உதைத்தார். (இவ்வாறு நடக்கவேண்டுமென்பதற்காகவே கள்ள நித்திரை செய்த)பகவான் உடனே எழுந்து ‘தன்யனானேன்’ என்று பேரானந்தத்தோடு அவர் பாதங்களை தன் திருகரங்களால் வருடி இன்சொல்லால் அத்திருவடிபட்டதால் பெற்ற பேற்றினை கூறி அபாக்ருதமான மாலை, சந்தனம் முதலானவற்றை கொடுத்து பூஜை செய்தார். உடனே முனிதலைவர் ஆனந்தகண்ணீர்விட்டு சிறந்த ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து தயாநிதியான பகவானை கைகூப்பி வணங்கி சொல்லலானார். அஹோ!  என்ன ரூபம்? என்ன சாந்தி? என்ன பொறுமை? ஹரியான உம் ஸத்வகுணத்தை என்னவென்பது? குணக்கடலான உன்னை தவிற பிறதேவர் எவருக்குமே ஸத்வகுணமில்லை. புருஷோத்தமனான நீயே ப்ராஹ்மண பூஜயன். உன்னை விடுத்து வேறெந்த தேவர்களை அர்சிக்கிறார்களோ அவர்கள் பாஷாண்டிகளாய் நல்லோர்களால் இகழப்படுவர். சுத்தஸத்வமுள்ள நீயே மறையவர்களால் பூஜிக்கதக்கவன். உன் ஸ்ரீ பாத தீர்தம் ஸேவிக்கதக்கது, முக்தியளிப்பது, மலத்தை நீக்குவது, நீ புசித்து மிகுந்தத தீர்த்தமே பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் ஸேவிக்கதக்கது, மற்றவர்களுடையவை நிர்மால்யம் எனப்படுவது. ஆகையால் அறிவுள்ள ப்ராஹ்மணன்  ஸனாதனனான உன்னை பூஜித்து உன் தீர்த்தத்தையும், ப்ரஸாதத்தையும் ஸேவிக்கக்கடவான். பித்ரு ஸிராத்தத்தில் உன்  தீர்த்தப்ரஸாதத்தை அந்தணன் அளிக்காவிடின் ஸிரார்தம் வீணாகிப்போய் பித்ருக்கள் நரகில் வீழ்வர். உன் ப்ரஸாதத்தை ஹோமம் செய்து பித்ருக்களுக்கு அளித்தால் தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் திருப்தியுண்டாகிறது. ஆகையால் மறையவர்கள் போற்றதகுந்தவன் நீயொருவனே!  தேவகீ புத்ரனே ப்ராஹ்மன்யன்(ப்ராஹ்மன பூஜயன்-ப்ராஹ்மனர்களால் பூஜிக்கப்படுபவன்), மதுஸுதனனே ப்ராஹ்மன்யன், புண்டரிகாக்ஷேனே ப்ராஹ்மன்யன்,அச்சுதனேப்ராஹ்மன்யன்,விஷ்ணுவே ப்ராஹ்மன்யன்,வாஸுதேவனும் அச்சுதனுமான கிருஷ்ணனே ப்ராஹ்மன்யன்,நரசிங்கனான ப்ராஹ்மன்யன்,அழிவற்ற நாராயணனேப்ராஹ்மன்யன்,ஸ்ரீ தரனே ப்ராஹ்மன்யன்,கோவிந்தனும் வாமனனானவனுமே ப்ராஹ்மன்யன்,யஜ்ஞவராஹனே ப்ராஹ்மன்யன், கேசவனான புருஷோத்தமனே ப்ராஹ்மன்யன்,திருமகளின் மணாளனும் தாமரைகண்ணனுமான ரகுகுலராமனேப்ராஹ்மன்யன், பத்மநாபனே ப்ராஹ்மன்யன்,மாதவனே ப்ராஹ்மன்யன்,தலைவனான திரிவிக்ரமனே ப்ராஹ்மன்யன்,இருடிகேசனே ப்ராஹ்மன்யன், ஜனார்தனனே ப்ராஹ்மன்யன்,ப்ராஹ்மன்யதேவனும், நாராயணனும் ஸ்ரீபதியுமான தாமரைகண்ணனான உனக்கு நமஸ்காரம், ப்ராஹ்மண்ய தேவனும் வாஸுதேவனும், விஷ்ணுவும், கல்யாணகுணபூர்ணனுமான  பரமாத்மாவுக்கு  உனக்கு நமஸ்காரம், ப்ராஹ்மண்யதேவனும் ஸர்வ தேவ ஸ்வரூபியும், வேதநாதனும், வராஹஸ்வரூபமான உனக்கு நமஸ்காரம்,ப்ராஹ்மன்யதேவனும் சேஷாசாயியும், தாமரைக்கண்ணனும், ராகவனுமான உனக்கு நமஸ்காரம். எல்லா தேவர்களும் ரிஷிகளும் உன்னுடைய பரத்வத்தை உணர்த்தும் ஸத்வத்தை அறிவதற்கே மஹரிஷிகளால் அனுப்பப்பட்டேன் கோவிந்தா! உன்னுடைய ஸெளசீல்யவாத்ஸல்ய காருண்யாதி குணங்களையறியவே உன் திருமார்பை காலால் உதைத்தேன் தயாநிதியே!  அப்பாதஹமான செயலைபொறுத்தருளவேண்டும் என மறுபடி, மறுபடியும் கைகூப்பி வணங்கிவிட்டு பூமியை அடைந்தார். வந்தடைந்த ரிஷி ருத்ர, ப்ரஹ்ம தேவர்களின் குணத்தையும் அவர்களுக்கிட்ட சாபத்தையும் கூறி பகவானின் கல்யாண குணத்தையுறைத்தார். ப்ரஹ்மமான நாராயணரே மறையறிந்தவர்களால் போற்றதகுந்தவன். கண்ணனை நினைப்பதால் பாவியும் மோக்ஷம்பெறுவான். அவனுடைய திருவடி நீரே அருந்ததக்கது, பகவத்நிவேதனமே பித்ருக்கள், அந்தணர்களுக்குரியவை. அவையே சுவர்க்கமோக்ஷமளிப்பவை. ஆகையால் மற்றயவர்களைவிட்டு பழையோனாகியவிஷ்ணுவையே உயிருள்ளவரையும் பூஜிப்பீர்களாக. என பத்மபுராணத்தில் சொல்லப்பட்டது 
மஹரிஷிசாபம் எவ்விதம் பலித்திருக்கிறது என்பதை ஆலயம்தோறும் லிங்கபூஜை நடப்பதிலிருந்தும் ப்ரஹ்மாவுக்கு தனிகோவிலில்லாதிருப்பதையும் ப்ரத்யக்ஷமாக காண்கிறோம். ருத்ரபக்தர்களான ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களும் ஹரிபூஜையை விடுவதில்லை என்பதையும் அறிகிறோம். தீவிர வைணர்கள் யாரும் இடிவிழ, காளை முட்ட வருகையிலும், ஸர்பம் துரத்துகையில் கூட வேறு தேவாலயங்களுள் நுழையாமல் “மறந்தும் புறம் தொழாதவர்களாய் வாழ்ந்தவர்கள்” என்பதையும் அறிகிறோம். எனவே பத்மபுராணமும் ஸத்வகுணஸ்வரூபன் நாரணனே என நிலை நாட்டியது.  

“பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார். 
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார். 
இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர். 
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.
இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான். 
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது. 
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது. 
கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் ஸத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள் 1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம் இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை (+வாஷிஷ்டம்,ஹாரிதம்,  வ்யாஸம, பராசர, பரத்வாஜ, காஸ்யப ஸ்மிருதிகள்)  கொடுக்கும் மற்றையவை நரகத்தையளிப்பவை. அறிவாளிகள் அவற்றை ஒதுக்கக்கடவான்”என ஆணியடித்தாற்போல் நிலைநாட்டியது. 

ஸ்கந்த புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராவது அத்யாயத்தில் ஒரு ருக்வேதமந்திரம் பின்வருமாறு உபப்ரும்ஹானம் செய்யப்பட்டுள்ளது. 

ஜைமினி சொன்னார்- இப்படி சொல்லிக்கொண்டிருக்குமவனிடம் ருக்வேதத்தில் கரைகண்டவனும் ராஜரிஷியும்,வேதறிவு பெற்ற ஒரு இருப்பிறப்பாளன் உகப்புடன் ஒரு வார்த்தை கூறினான். “உன்னுடைய பாக்யத்தை என்னவென்று கொண்டாடுவேன்? அந்த அர்சசாமூர்தியை உபாஸித்தாலே முக்தியுண்டென சுருதியே சொல்லிற்றன்றோ! புருஷனால் நிருமிக்கப்படாத யாதொரு மரம் கடற்கரையில் மிதக்கிறதோ ஆராதிக்க அரியவனான அப்பரமபுருஷனை அடையவுகரிய முக்தியை  முக்தியையடைகின்றனர்” என ப்ரஹ்மஞானநிதியான நாரதமஹரிஷி இதை சொன்னார். பரம புருஷனே வேதாந்த வாக்யங்களை விட எவை நன்கறியும்? வேதத்தையொட்டியன்றோ ஸ்ருஷ்டி, அவதாரம்  என்பவற்றை பகவான் செய்கிறார். ஸாமவேத கீதங்களில் பாடப்பட்டவனும் வேதாந்தங்களில் சொல்லப்பட்டவனுமான மனிதர்களுக்கு நன்மையளிப்பவனும் அவனே;அந்தபுருஷனை பிரதிமை என நினைக்காதே, மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும், இந்த அர்ச்சையை சொல்லும் வேதவாக்யங்கள் முற்காலத்திலிருந்தே வழங்கின”. என தாமஸகுண பரிஹாரஸாத்வீக ஸ்வரூபமாக நாராயணன் விளங்குவதை வேதத்தை கொண்டே விளக்கியது. இதே புராணத்தில் சிவன், ஸ்கந்த சம்பாஷனையில் சிவன்
ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத் பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம் மோக்ஷ -ஸ்தானம் ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி

‘சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி. அதுவே  எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது’.  என்கிறார். இவ்விதம் ஸ்கந்தபுராணமே ஸத்வரூபம் விஷ்ணுவுக்கே உரித்தது என்றது. 

ப்ராக்ருதமான ஸாத்வீகராஜஸதமோ குணங்களை கடந்தவனும் சுத்தஸத்வமயமான திருமேனியையும் ஸ்தானத்தையுமுடைய பரமபுருஷன் பகவான் ஹரி ஒருவனே என்பதை 
ஸ்ருதி, ஸ்மிருதிஇதிஹாசபுராணங்களை கொண்டு நிலைநாட்டி நிறுபவப்பட்டது. 
இவையொன்றிற்கு கூட பதில்கூற தெரியாத சில சிசுபாலர்கள் நமது பகவத்பரத்வசாக்ஷிகளை அசைக்கப்பார்த்தும், சில ஸ்ருதி, புராணவசனங்களைகொண்டு சைவாச்சார்யார்கள் எழுதிய புரட்டுக்ரந்தக்களை வைத்து பகவான் ஹரி தமோகுணத்தான், அவரது பெருமையுறைக்கும் புராணங்கள் தாமஸமானவை, சிவன் சுத்தஸாத்வீகி, சிவசம்மந்த புராணங்கள் ஸாத்வீகமானவை என பிதற்றுவர் . அவைகூட அவைதீகமானவை என்பதை நிரூபித்து மறுபடியும் விஷ்ணுசம்பந்தமுடையவை யாவும் ஸாத்வீகமானவை என்பதை கல்வெட்டுபோல நிலைநாட்டுவோம். 

ஆக்ஷேபம்-  ஆ. ஈஸ்வரமூர்த்தி பிள்ளையின் சுலோக பஞ்சக விஷயமெனும் க்ரந்தம் பின்வருமாறு பிதற்றும். 

 “ஸாத்விகீ ருத்ரே பக்தே ப்ரஹ்மணீ ராஜஸீ |
தாமஸீ தைத்ய பக்ஷேஷு மாயாத்ரேதாஹ்யுதாஹ்ருதோ ||

என்ற க்ருஷ்ணஉபனிஷத் ருத்ரனை ஸாத்வீகி, எனவும் விஷ்ணுவை தாமஸி எனவும் கூறிற்று.இது மற்றைய உபனிஷதுகளோடு முரண்படும் என தோன்றலாம். ஆனால் இதற்கு விளக்கம்
ஸுதசம்ஹிதையில் உள்ளது. 

ரஜோ குணோநஸம்  சந்தோ ப்ரஹ்மாதிஷ்டாய தம் குணம் த்ரஷ்டாப்வதி ஸர்வஸ்ய ஜகத : பண்டிதோத்தமா : குணோர்ந தமஸாச் சந்தோ விஷ்ணுஸ்  ஸத்வகுணம்புதா : அதிஷ்டாய பவேத் ஸர்வ ஜகத : பாலக :ப்ரபு : ததாஸத்வகுணச் சந்தோ ருத்ரோ விப்ராஸ்தமோ குணம் அதிஷ்டாய பவேத்தக்தாஜகதஸ்ஸத்யவாதிந

இதன் பொருள் : ராஜஸ குணத்தால் மூடப்பட்ட பிரம்மா அந்த குணத்தையே அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் சிருஷ்டி கர்த்தாவானார்.தாமச குணத்தால் மூடப்பட்ட விஷ்ணு சத்வ குணத்தை அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் ரட்சக கர்த்தாவானார்.சத்வ குணத்தால் மூடப்பட்ட ருத்ரர் தாமஸ் குணத்தை அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் சம்ஹார கர்த்தாவானார் 

ஆக,அந்த உபனிஷத்துக்களிடையே எந்த முரணும் இல்லை என்று அறியலாம்.ஆக திரிமூர்த்திகள் ஒவ்வொருவருக்கும் இருகுணம் உண்டு,ஒன்று சகஜம்(இயல்பு) மற்றொன்று அதிஷ்டானம்.ஆக,பிராம்மாவுக்கு இயல்பு மற்றும் அதிஷ்டானம் இரண்டுமே ராஜஸம்.விஷ்ணுவுக்கு இயல்பான குணம் தாமஸம்,அதிஷ்டானம் சாத்விகம்.ருத்ரருக்கு இயல்பான குணம் சாத்விகம்,அதிஷ்டானம் தாமசம்.

ஒருவன் உள்ளத்தின் குரோதமும் வெளியே நல்லவன் போல் நடித்தாலும்,அவனை குரோதி என்றே அழைப்போம்.அவனது இயல்பைக் கொண்டே அவன் குணத்தைக் கூறுவோம் அன்றி அவனது வெளி வேஷத்தை வைத்து அல்ல.அதுபோல்,விஷ்ணுவின் இயல் தாமசம்,ஆனாலும் அவருக்கு சாத்விக தொழிலான காத்தலுக்கு இறைவன் நியமித்துள்ளான்.ஆகையால்,இயற்கையாக தாமச குணம் உடைய விஷ்ணுவை அவரது தொழிலை வைத்து அவரை சாத்விகி என்பது மடைமை.அவரது சஹஜ குணத்தை வைத்தே அவர் குணத்தை குறிப்பிட வேண்டும்.அவர் சஹஜ குணம் தாமசம் ஆகையால்,விஷ்ணு தாமசியே.

ஆக,உண்மையான தாமஸி விஷ்ணு,தாமஸ புராணங்கள் வைணவப் புராணங்களாம்.சாத்விகி ருத்திரர்,சைவப்புராணங்கள் சாத்விக புராணங்களாம். 

நமது ஸமாதானம்- வேத,வேதாந்தங்களிலேயே புருஷஸூக்தத்தில் லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில் ‘தமஸஸ்து பாரே’, ‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது
 ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது  விஷ்ணுஸூக்த வாசகம்
‘தம தவா கருணமி தவஸமவதவயாந
         க்ஷயநதமஸய ரஜஸ பராகே’
மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிப்பவன் என நேரடியாகவே உறைத்தபோது அதை மறைபொருளாக பாவித்து இரட்டையர்த்தம் கற்பிப்பது அவைதீகமன்றோ. 

மற்றும் இங்கு கிருஷ்ணோபனிஷத் வாக்யத்தை கையாண்ட விதம் காண்கையில் இவருக்கு கண்ணில் கோளாறா அல்லது வடமொழி புலமை சூன்யமா எனும் ஐயம் எழக்கூடும்.
அவ்வாக்யத்தில் “மாயை எனும் வஞ்சகம் மூன்றுகுணங்களை கொண்டது
அவை ஸத்வம், ராஜஸம், தாமஸம். ஸத்வகுணம் சிவனிடமும் பிரம்மாவிடம் 
ராஜஸமும் வெளிப்படுகிறது” எனதான் கூறியதே தவிற விஷ்ணுவிற்கு தமோகுணமுண்டு என எவ்விடத்திலும் இல்லை. பகவானுடைய நாமத்திற்கு அங்கு எப்பதமுமில்லையே. 

மற்றும் அவ்வசனத்தில் சிவனை பரமஸாத்வீகி என கூறவில்லை, சிவனிடம் ஸாத்வீக குணம் வெளிப்படுத்தப்படுகிறது என்றே கூறியது. இதை நாம் ஆக்ஷேபிக்கவில்லையே. 

ஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி

”’ கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.”’ என்றல்லவோ பாகவதம் கூறிற்று. இவ்வாறு எம்பெருமாளின் பக்தபாகவதனுக்கு ஸாத்வீககுணம் ஆங்கேங்கே வெளிப்படதான் செய்யும். சிவன் தன் தமோகுணத்தை இப்படி பகவத்நிஷ்டையால் போக்கிக்கொள்கிறார் என்பதும் பொருந்தும்.

பகவான் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் ஸாத்வீகுணம் அவரை அறியும் எளியவழியென்பதாற்தான் ஸாத்வீகதிருமேனியை கொண்டருளுகின்றார் என்பதற்கும் மேலே பல ப்ரஹ்மானம் காட்டினோம். ஜட குணங்களால் மூடப்பட்டவன் எவ்விதம் ப்ரஹ்மமாக முடியும்? அங்கனம் மேற்காட்டிய ஸூதசம்ஹிதை வசனத்தால் ஜடகுணங்களுள் ஒன்றில் சிவன் மூடப்பட்டதாக உள்ளதே, ஆகையால் சிவன் சாதாரண ஜீவாத்மா என விளங்கும். ஆகையினால் மேற்காட்டிய ஸூதசம்ஹிதை வசனத்திற்கு எவ்வித ஸ்ருதி ப்ரமாணமுமில்லையென்பதால் அது நிராகரிக்கதக்கதே. 

ஆக்ஷேபம்-  கந்த புராணம்:ஸுத சம்ஹிதை:இரண்டாம் அத்யாயம்:

ருத்ரஸ்ய விக்ரஹம் ஸுகலம் க்ருஷ்ணம்
விஷ்ணோஸ்ச விக்ரஹம் |
ப்ரஹ்மணோதி விக்ரஹம் ரகதம சிந்தயேத பூதிமுகதயே||
ஸெளகலம் ஸத்வகுணஜ்ஜாதம ராகம ஜாதம ரஜோகுணத|
கார்ஷண்யம் தமோகுணஜ்ஜாதம இதி வித்யாத ஸ்மஸ்தத||

ருத்ரனுடைய சரீரத்தை வெளுப்பாகவும், விஷ்ணுவுடைய சரீரரத்தை கருப்பாகவும் பிரம்மனின் சரீரத்தை சிவப்பாகவும் பூதிமுக்தியின் பொருட்டு சிந்திக்கக்கடவான். வெளுப்பு ஸத்வகுணத்தாலுண்டாகும்; சிவப்பு ரஜோகுணத்தாலுண்டாகும்;கறுப்பு தமோகுணத்தாலுண்டானது என அறியகடவான். 

எனவே விஷ்ணுவுடைய மேனி தாமஸத்தாலுண்டானதுசிவனுடைய செம்மேனி ஸாத்வீகம். ஆகையால் சிவசம்பந்தபுராணம் ஸாத்வீகம்;விஷ்ணு சம்பந்தபுராணம் தாமஸமாகும். 

ஸமாதானம்:அப்புராண வசனத்தில் விஷ்ணுவுக்கு தமோகுணமுண்டு என சாபதமாக கூறப்படவில்லை. இதைக்கொண்டு நாம் வேதத்திலிருந்து எடுத்த மேற்கோள்களின் மூலம் பகவானுக்கு தமோகுண நாற்றமும் கிடையாது என்பதை அசைக்கவும் முடியாது என்பதை நடுநிலையாளர்க்கு புரியும். 
வெண்மை , செம்மை, கருமை ஆகிய நிறங்கள் ஸத்வ, ராஜஸ, தாமஸ குணங்களை காட்டுமென்பதெல்லாம் ப்ராக்ருதமான சரீரரங்களுக்கல்லவா? சொல்லப்படும். 

ந தஸ்ய ப்ராக்ருதா  மூர்த்திர் மாம்ஸமேதாஸ்தி ஸம்பவா (வராஹபுராணம்:14-41, வாயு புராணம் 34-40)

ந பூத ஸங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந
(பாரதம்-சாந்தி பர்வம் 206-60)

இந்த பரமாத்மாவின் தேஹம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்ததன்று. 

எனவே பரமபுருஷனின் அப்ராக்ருத திருமேனிக்கு இந்த நிற நியமம் ஏது? ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்திலே ஐந்தாமத்யாயத்தில் இருபதாம் ஸ்லோகத்தில்

க்ருதம் த்ரேதோ த்வாபரம் ச கலிரிதயேக்ஷ கேஸவ|
நாநாவாணபிதாகார நாநைவ விதிநேஜயதே ||

க்ரதம், த்ரேதா, துவாபாரம், கலி எனும் நான்கு யுகத்தில் பலவர்ணங்கள், நாமங்கள், உருவங்கள் ஆகியவற்றை உடையவனாய், பலவிதமான விதிகளால் உபாஸிக்கப்படுபவன் கேசவன் என்று கூறப்படுகிறது. 

பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்
போலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்
நீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்
மாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே.

பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
இவ்வுலகத்திலுள்ளவர்கள் திரஸ்கரித்தது என்ன ஸ்வபாவம்!

என்ற திருச்சந்த விருத்தத்திலும்(44)

நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
நான்கும்…. 

வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய். 

என்ற நான்முக அந்தாதி(24) பாடலும் மாறிமாறி வரும் வர்ணங்களுடையவை பகவானின் திருமேனி என்றதே. 
எனவே பகவான் தாமஸகுணத்தைகொண்டவர் என்பதற்கு  கறுப்பு நிறத்தை காரணம் காட்டும் இக்கந்தபுராண வசனம் பொருந்தாது என்க. 

ஆக்ஷேபம்- 

சிவமஹிமை கூறும் புராணங்கள் எல்லாம் தாமஸமென தள்ளதக்கவை எனின் ஸ்கந்த, லிங்க, மத்யஸ்த புராணங்களை  தாமசம் கருதி விருத்தம் எனத் தள்ளிவிட வேண்டியதே.மற்றும் சிவனும், உமையும் தாமஸ தெய்வம், அவர்களின் சம்பாஷணையும் தாமஸபுத்தியுடன் கூடியதாய்த் தானிருக்கும் அது  எப்படி பிரமாணமாயிற்று?
 அன்றியும் பாத்மபுராணம் பிரமனுக்குரியது, ஆகலின் ராஜஸம், அதனைப் பிரமாணமாக எடுப்பது எப்படித் தகும்? அதனைச் செய்யாமல் அப்புராண வாக்கியத்தை தன்கொள்கைக்குப் பிரமாணமாகக் கொண்டது அஃதேன்? 

ஸமாதானம்- சிவமஹிமை புராணங்களையும், பிரம்ம மஹிமை புராணங்களை தாமஸம், ராஜஸம் என கூறிவிட்டு அவற்றிலிருந்து ப்ரமாணம் எடுத்தல் கூடுமோ என்பது நியாயமான கேள்வியே. இங்கு முக்யமாக கருதவேண்டியொன்று உள்ளது. எந்தப்புராணத்தையும் முழுவதுமாக வைதீகர்கள் தள்ளமாட்டார்கள். வேதவிருத்தமான விஷயங்கள் இருந்தால் அதை தள்ளியே தீரவேண்டும். 
வேதத்திற்கு விருத்தமில்லாத விஷயமிருந்தால் அது ஸ்ந்தபுராணமானாலும், லிங்க புராணமானாலும், மத்யஸ்தபுராணமானாலும், பத்மபுராணமானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். “அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம்”
எனும் மத்யஸ்த புராணவசனமும் அக்னி, சிவமஹாத்மியத்தை சொல்லும் புராணபகுதிகள் தாமஸங்கள் என்று சொல்லிற்றே ஒழிய முழுபுராணத்தையும் கழிக்கவில்லை. ஒரு புராணம் தாமஸம், இன்னொரு புராணம் ஸாத்வீகம் இன்னொன்று ராஜஸம் என்று சொல்வது பெரும்பான்மையான தாமஸ பகுதிகளையோ அல்லது ஸாத்வீக பகுதிகளையோ அல்லது ராஜஸபகுதிகளை உடையது என்பதாலேயே ஆகும். உதாரணமாக ஸ்கந்த புராணத்தில் ‘கறுப்புநிறம் தாமஸம் என்பதால் விஷ்ணு தாமஸம்’ என்ற வசனமும்  அதே புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராம் அத்யாயத்தில் ” மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும்”என்ற வசனமும் முரண்பட்டுகொள்கிறது. இவற்றுள் விஷ்ணுவானவர் ஸாத்வீகவடிவானார், அவறுக்கு தமோகுணஸ்பரிசமும் கிடையாது என்ற வேதவசனங்களுக்கு ஒத்திருக்கும் வாக்யத்தையே அனுஸரிக்க வேண்டுமென பாலபருவ பிள்ளைக்கும் தெரிந்திருக்கும். ஆகவே எப்புராணமாயினும் அவை ஸாத்வீகபுராணத்திற்கு முரணில்லாமலும், வேதத்தை அனுஸரித்துமிருந்தால் அதை தாராளமாக ஏற்கலாம். பெரும்பகுதி விரோதிக்குமானால் அவை தள்ளதக்கவை என்பது முடிவு. 

ஆக்ஷேபம்- யாழ்பாணத்து நல்லூர் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர்

 ‘சிவபுராணம் பத்தும் சாத்துவிகங்களாம் சத்துவ
       குணம் வெண்ணிறமுடையதும் சுகத்துக்கும்
       ஞானத்துக்கும் இடமுமாம், யோகிகளுக்கு ஞானம்
       உபதேசிக்கும் சிவபெருமான் தெளிபளிங்கு வடிவி
       னராய் எங்குமுறங்காது பிராமணாதிபதியாயிருப்பர்’,

       ‘விட்டுணு புராணம் நான்கும் தாமசங்களாம், தமோ
       குணம் கருநிறமுடையதும் உதாசீனரூபமும், கூட கிருத்
       திய சமர்த்தமுமாம். நித்திரை, சோம்பு, பிரமாதம், வஞ்ச
       னம் முதலியவைகள் தாமசங்கள். விட்டுணு கரியரும்,
       சேஷசயனம் செய்வோரும் பக்தரை மோகிப்பிப்பவருமாயிருப்பர்,

       ‘பிரமபுராணம் இரண்டும் இராசசங்களாம். இரசோ
       குணம் சிவந்த நிறமுடையதும் துக்கத்துக்கிடமும்
       சஞ்சல ரூபமுமாம். பிரமாச் செந்நிறமுடையராய்ச்
       சஞ்சல ரூபியாயிருப்பர்.

       ‘அக்கினி புராணமும் சூரிய புராணமும் திரிகுணயுத்த
       மாம். அக்கினியுஞ் சூரியனும் முக்குண வடிவினராயிருப்பர்.
       ஆதலால், இப்பதினெட்டினுள்ளுஞ் சிவபுராணங்கள்
       பத்துமே உயர்ந்தனவாம். ஆகையாற் சிவனடியார்கள்
       சிவ புராணங்களையே விதிப்படி மெய்யன்போடு கேட்கக்கடவர்கள்’

என்றருளினார். 

ஸமாதானம்-சிவ புராணம் பத்து என எந்த ஸ்மிருதி, இதிஹாச, புராணமும் நிஷ்கரிகை செய்யவில்லை. பத்ம புராணமோ சிவபுராணம் ஆறு, விஷ்ணுபுராணம் ஆறு, பிரம்ம புராணம் ஆறு என நிஷ்கரிகை செய்துவிட்டது. ஆனால் சைவர்கள் பிரம்மபுராணத்தில் சில சிவமஹிமை சரிதத்தை எடுத்துகொண்டு அவையும் சிவபுராணமென பிதற்றுவர். ஆனால் பத்மபுராண நிஷ்கரிகை செய்ததை பார்கையில் பிரமபுராணங்களுள் சிவசரிதம் புகுத்தப்பட்டிருக்கும் புனைவென புரியும். குணம் நிறபேதத்தை அனுஸரிப்பது என்பது ப்ரமாணமற்ற பேச்சு என்பதை மேலே கண்டோம்

மோகிப்பது, கிருத்திய சமர்தமும் தாமஸமெனில் சிவன்  மோகிக்கப்பட்டாரெனும் புராணகதையின் மூலம் சிவன் சாதாரண ஜீவாத்மா என விளங்கவில்லையோ. நாராயணன் தூங்குகின்றதால் அவருக்கு தாமஸகுணமுடையது என்பது ப்ரமாண விருத்த பேச்சு. 

‘யோவித யயாநுபஹதோபி தஸார்த்த வ்ருத்தத்யா நிதராமுவாஹ ஜடரீக்ருதலோகயாத்ர’ (பாகவதம்-3-9-20)

பகவான் அஞ்ஞானம் தீண்டபெறாது
 நெடுங்காலம் லோகயாத்ரை பொருட்டு சிந்தித்து நித்திரையில் அமர்ந்தாரென்றும்

நயஸ்யேத  மாதமஜி  ஜகத விலயாமபுமதயே ஸேஷ தமநா நிஜஸுகாநுபவோ நிரீஹ|
யோகேந மீலித்தருகாதமநி வீதிநிதரஸ துர்யே ஸதிதோ ந து தமோ ந குணாமஸச யுங்ஷே|| (7-9-32)

இவ்வுலக்கனைத்தையும் தன் திருவயிற்றில் வைத்துகொண்டு ப்ரளய ஜலத்தில் தன் பெருமைகளில் நிலைநிற்பவனாய் தன் ஸ்வரூபஸுகாநுபவத்திலேயே ஈடுபட்டவனாய் கிரியையற்றவனாய் விழித்துகொண்டே கண்ணைமூடியிருப்பவனாய் தூக்பமற்றவனாய் ஜாகரத ஸ்வபநஸுஷுபதி ( விழிப்பு, கனவு, தூக்கம்) எனும் மூன்று நிலைக்கு அப்பாற்பட்டு நான்காம் நிலையில் நின்று 
தாமஸ ப்ராக்ருதமான மற்ற குணங்களும்
கூடியிருக்கப்பெறாதவனாய் ஆதிஷேனில் சயனித்திருக்கிறாய்

என்று ஆதிஷேஷ சயனம் யோகநித்திரை என்பதற்கு புராணம் சான்று. அது தாமஸம் என்பதற்கு புராண ப்ரமானமும் இல்லையென்பதாற் ஆறுமுகநாவலரின் பேச்சும் அபத்தமாய் முடிந்தது. 

யஸ்ய ப்ரஸாதாத தஹமச்யுதஸ்ய
பூத: ப்ரஜாஸர்க்க கரோஸந்தகாரீ|
க்ரோதாச்சா ருத்ர: ஸ்திதிஹேதுபூதோ
மத்யே ச யஸ்மாத் புருஷ: பரஸ்மாத்||

எந்த அச்சயுதனுடைய அருளாலே ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்கும் பிரமானாகிற நானும் ஸம்ஹரிக்கும் ருத்ரனும் உண்டானோமோ எந்தபுருஷன் எங்களுக்கு நடுவில்,ரக்ஷிக்கும் புருஷனாய் அவதரித்திருக்கிறானே…… என்று விஷ்ணுபுராணத்தில் இவ்வாக்யம் நாராயணபரமாக உபப்ரும்ஹணம் செய்யப்பட்டது.

ஈஸாநஸ் ஸர்வித்யாநாம் ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் பரஹ்மாதிபதிர் பர்ஹ்மணோதிபதிர் பரஹ்மா ஸிவோ மே அஸ்து ஸதாஸிவோம்’

எல்லா வித்யைகளுக்கும் ஈசனாய் ஸர்வபூதங்களுக்கும் ஈச்வரனாய்,வேதத்தில் அதிபதாய்,பர்ஹ்மாவுக்கு அதிபதியாய் ப்ரஜ்மாவுக்கு அந்தர்யாமியாய் சிவனுக்கு அந்தர்மியாய் ஓங்காரவாச்யனானவன் எனக்கு எப்போதும் மங்களத்தை தரக்கடவன் என்று ந்ருஸிம்ஹதாபநீய உபனிஷத்தில் நாற்பத்து நாலாவது அநுவாகமந்திரத்திரத்தில் எடுத்தோதியது.

கிருஷ்ணரும் ராமரும் முருகணை போல பிராக்ருத பிறப்பில் பிறக்கவில்லை.
பிதா புத்ரணே பித்ருமாந்
யோநியோநௌ நாவே
தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்”
[யஜூர் வேதம் – காடகசம்ஹிதை -3-9-55]
(அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

“ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந”
[யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
(அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

“தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்”
[புருஷ ஸூக்தம்]
(அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே”
[புருஷஸூக்தம் 2-3]
(பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

முதலிய பிரமாணங்களால் தன்னிஷ்டபடியே பரமாத்மா பிறப்பெடுப்பதாக கூறுகிறது அதன்படி நாராயணரே இப்பரமான்மா என்பது சொல்லாமலேயே விளங்கும்.

இவ்வகையில், ஸத்வ குண புராணங்கள் ஸ்ரீ விஷ்ணுவையும், தமோ குண புராணங்கள் ருத்ரனையும், ராஜஸகுண புராணங்கள் ப்ரஹ்மாவையும் பிரபலபடுத்தி புகழ்கின்றன. இவ்விதமான , ரஜோ மற்றும் தமோ குண புராணங்களில் பகார பேதங்கள் மலிந்து காணப்படும். எனவே சரியான இறைநிலையையும் , அதன் தத்துவத்தையும் புரிந்து கொள்ள ஸாதகர்கள் ஸத்வகுண புராணங்களை வழிகாட்டியாக கொண்டு ஸாதனை செய்து வர வேண்டும். அவ்வாறு செய்தால் ஒழிய மற்ற எந்த முறைகளினாலும் மோக்ஷ யோக்யர்களாக  தங்களை மேம்படுத்தி கொள்ள முடியாது என்பது முடிவு. எனினும், நாம் ஸத்வைஷ்ணவர்களாக இருந்தும் ஸத்வ புராணங்களில் தேர்ச்சியும், அதன் பயனாக நம் தெய்வமான ஸ்ரீ ஹரியானவன் ஸகல தேவோத்தமன் என்றும் அவனே அனைத்திற்கும் மூல காரணன் என அறுதியிட்டு கூற இயலாத துர்பாகியர்களாக இருக்கிறோம்.ஏனெனில் , ஸத்வ புராணங்களை கூறி அதன் தத்வ விளக்கங்களை பாமரன் முதல் பண்டிதர்கள் வரை புரிந்து கொள்ளும் வகையில் உரைப்பார் எவருமில்லை. எனவே, இனிவரும் கால கட்டங்களில் அவை அனைத்தையும் படித்து, பொருளுணர்ந்து  மற்றவர்களுக்கும் உணர்வித்து உய்ய சமய அவகாசம் முதலிய கிடைக்கா என்ற தீர்க நோக்கில், அதனை சரிபடுத்தும் பொருட்டு அப்புராணங்களின் ஸாரத்தை வழங்கி அதன் மூலமாக ஸ்ரீ ஹரியின் ஸர்வோத்தமத்தை நிலைநிறுத்திக்கொள்வோம்


————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-



ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு-

June 2, 2024

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ச்ரியை நம:
ஸ்ரீதராய நம:

ச்லோக குருபரம்பரை (ச்லோகம்)

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.

திருமந்திரம் – ஓம் நமோ நாராயணாய

த்வயம்
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே |
ஸ்ரீமதே நாராயணாய நம: ||

சரம ச்லோகம் (ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

ஸ்ரீராம சரம ச்லோகம்
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

ஓராண் வழி ஆசார்ய தனியன்கள் (https://acharyas.koyil.org/index.php/thanians/)

  • பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந:

  • பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||

  • ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||

  • நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

  • ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||

  • உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||

  • மணக்கால்நம்பி (மாசி – மகம்)

அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||

  • ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||

  • பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

  • எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

  • எம்பார் (தை – புனர்பூசம்)

ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||

  • பட்டர் (வைகாசி – அனுஷம்)

ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

  • நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||

  • நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

  • வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||

  • பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||

  • திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே ||

  • மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்
துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ச்லோகங்கள்

ஸாஷ்டாங்கமாக சேவித்துப் பின்வரும் ச்லோகங்களைச் சொல்லவும்:

அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு || (ஸ்தோத்ர ரத்நம் 48)

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே || (ஸ்தோத்ர ரத்நம் 22)

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)

தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் |
ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜ
உத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா
 நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 16)

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 23)

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 24)

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே || (புராண ச்லோகம்)

மூன்று முறை கையைத்தட்டி ஓசை செய்து, கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கவும்

அங்கண்மா ஞாலத்து அரசர்
அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 22)

ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: || (புராண ச்லோகம்)

முந்தைய நாளில் சாற்றிய புஷ்பங்களை, இப்பாசுரத்தைச் சொல்லிக்கொண்டு களையவும்

உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (திருப்பல்லாண்டு 9)

ஸ்நாநாஸநம் செய்யவும் – புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம், பெரியாழ்வார் திருமொழி வெண்ணெயளைந்த குணுங்கு பதிகம் முதலியவைகளை கால அவகாசத்து ஏற்ப அநுஸந்திக்கவும்.

அலங்காராஸநம் ஆரம்பிக்கவும்.

முதலில் இந்த ச்லோகம்/பாஸுரம் சேவிக்கவும்.

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ச்ரியம் || (ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே (திருவாய்மொழி 4.3.2)

தூபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
தூபம் ஆக்ராபயாமி (ர்க் வேதம்)

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே (திருவாய்மொழி 1.6.1)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
பரிவதில் ஈசன்படியை பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று
உரிமையுடன் ஓதியருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு (திருவாய்மொழி நூற்றந்தாதி 6)

தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச || (மஹா நாராயண உபநிஷத்)

வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் (முன்பே உள்ளது)

மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பனிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும்
குடையேறத் தாம் குவித்துக் கொண்டு (நான்முகன் திருவந்தாதி 43)

மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.  (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள் கடலுள்,
என்றும் புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும் அணையாம் திருமார்க்கு அறவு (முதல் திருவந்தாதி 53)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பெயரிட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா (உபதேச ரத்தின மாலை 38)

கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி || (ஸ்தோத்ர ரத்நம் 31)

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா || (யதிராஜ விம்சதி 1)

போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

சாற்றுமுறை சேவிக்கவும்:

பர்யங்காஸனம்

இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்தித்துக் கொண்டு கோயிலாழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்):

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: || (முகுந்த மாலா)

ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:
உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம ||

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறிவெறி நாந்தக வாளே அழகிய ஸார்ங்கமே தண்டே
இரவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் (பெரியாழ்வார் திருமொழி 5.2.9)

பனிக் கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு
ஓடி வந்து என் மனக்கடலுள் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச்சுடரே தனி உலகே என்றென்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினயே (பெரியாழ்வார் திருமொழி 5.4.9)

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சரம உபாய நிர்ணயம் -பிரமாணத் திரட்டு-

June 1, 2024

ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||
–நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபயப்ரத பாத தேஶிகோத்பவம்குருமீடே நிஜமாதரேண சாஹம் |ய இஹாகில லோக ஜீவநாதர:சரமோபாய விநிர்ணயம் சகார ||-நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

(அபயப்ரதபாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய், எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீயகாருண்ய குணேந பாதி | ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.

உம்முடைய குலத்திலே ஒருவர் இவ்வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார். அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது, இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டுகொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள, அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ்ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரிஸூநும் ஶரணம் ப்ரபத்யே || என்கிற
ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர். இவ்வர்த்தம் ஓராண்வழியாய்ப் பரமகுஹ்யமாய் வந்ததென்றும் அருளிச்செய்வர்.

இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள். முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,

ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி || 
என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வ குலத்திலே  ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால் அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக்கடவதிறே.

உத்தாரகத்வந்தான் வ்யக்தித்ரயகதமாயிருப்பது, ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது. உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான். (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) என்று உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.

ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.15. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,16. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா| உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) என்று ஸ்வவ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று. ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.

பெரியநம்பி மதுராந்தகத்து ஏரிகாத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து 17.(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் | பதிவ்ரதாநிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || ) என்றும்,(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி “நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை. ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை. ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ;  இவ்வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை. “வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உய்யக்கொண்டவீரன்” என்றும், 19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா என்றும் சொல்லுகிறபடியே, “தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர். அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார். இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச்செய்வர்.

பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே, 20. (யஶ்ச ராமம்  நபஶ்சயேத்து) என்கிற ஶ்லோகம் வந்தவாறே ஸ்வகத ஸ்வீகார பரகத ஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே, “நித்ய ஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார். பின்பு எம்பாரை உதகபூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து, “நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்; அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை  ஸம்பந்தம்  நேராகப்பெற்றதில்லை என்று ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம். ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது.  இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார். இதுவும் ஸம்ப்ரதாயம்.

உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க, ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே? ஆசார்ய ஸம்பந்தத்தாலேயன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் – தஶரதவஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராமக்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து 21 (கிங்கரௌ ஸமுபஸ்தி தௌ) என்றும் 22 (தவாஹம் தாஸபூதோ ஸ்மி கிமத்ய கரவாணி தே ) என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே, ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.

23. (விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே ) என்றும், 24. (இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா | மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || ) என்றும் சொல்லுகிறபடியே ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய், தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே , உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே அவர்களுக்குப் பேறு அவராலேயாகக்‌ குறையில்லை. இங்கு அப்படிக் கூடாதே – என்னில்  இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்- 25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய: என்றும், 26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும், “திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி உடையவரும் அவதார விசேஷமாகையாலும், பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாதஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே  இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய் ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும் நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.

 (கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து, யதுவம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே, ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே. ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க, இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று – எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும், ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது. அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜதர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.

கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே, ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து, “தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன், திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே, 12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச்செய்து, “நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதிகொண்டு அவர் தந்தோமென்றால் போய்வாரும்” என்றருளிச்செய்தார், அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி, ‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய, ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, “க்ருஷ்ணன் கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார். பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.
ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி, “உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று பட்டரை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளி, “நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்; அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை. “நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.

உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க, ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி, உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி, “நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள். நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும். நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார். அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று. தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும். இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.

மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து “மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே. தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது – பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய், பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல் தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய், கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.

உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:” என்கிறபடியே எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய், மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி, க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது. ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.

உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே. கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள, நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு, அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க, அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே. குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப் பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத் தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து, அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி, “எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன். ‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே. இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே. அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப் பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள். இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.

உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி, நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,-34. “ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி | மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம்  கதிம் ||” என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள். இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள். இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக்கொண்ட விரகெங்ஙனே? அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள, உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்; தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன, நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி, எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக்காணீரென்ன, உடையவரும்

18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்| மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் | ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய, த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய, நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில் ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும், ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே! இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து, ‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார். இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம். ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது – உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே, பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸதுர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல் வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க, “இவையிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார். பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று  சதுரராய்  கேட்க , ”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.–35. ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய| பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||” என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.

காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்து, பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத்  தேட்டமாய், தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே, எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப்பண்ண, அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண, அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி, “நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர். எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச்செய்ய, திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி, தேவியாரையும் அறத்துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக் கண்ணும் கண்ணீருமாய்க் கைகால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப்புக்கவாறே இது ஏதென்று கேட்டருள, அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய, உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீபாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை, நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழவிடத்தக்கதில்லை. நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறைவராது. ஸர்வபரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரராய் மார்விலே கைபொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் – என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.

கணியனூர் சிறியாச்சான் ஸசேலஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப் பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக்கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,–36 (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||) என்று அருளிச் செய்து “எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரிப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன், ப்ரபன்ன  குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.

ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி ப்ராப்யபூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே? ப்ராப்யம் கைபுகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில், அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு, ஆகையிறே, 38. (அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.

39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்) என்கிறபடியே ப்ராப்யபூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே, ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும், 40. (உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ) என்கிறபடியே இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்; அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளிவிஞ்சிச் செல்லா நிற்கும். மற்றையது உள்ளடங்கியிருக்கும். இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்; ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை. 37.  (உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே. இவை வடிவாகையாலேயிறே 38.  (அத்ர பரத்ர சாபி) என்றது. 37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய்யோகவ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும். அதாவது கார்யகாலத்தில் சரமபர்வம் ஸ்வவ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி. பகவத் ஸம்பந்தம் அஞ்சியிருக்க அடுக்கும்; இது நிஸ்ஸம்ஶயமிறே. அது ஸம்ஸாரபந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத்ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும். ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை. ஈஶ்வர விஷயஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி. ஆசார்ய விஷயஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூபவிகாஸத்தைப் பண்ணுவது. இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாயபூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற ப்ரதிபத்தி தத்ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.

பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி எங்ஙனேயென்னில், நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து, பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து “ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்” என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய, அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க, அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட, ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி, அதுதன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணியிருக்க, பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால் செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகாரஸ்ம்ருதி யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி, “நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ? தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை. நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு. நாதமுனிகளிடத்திலே பேற்றுக்குடலாக உபாயத்வத்தை அறுதியிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே 41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே. ஆகையாலே-41. (மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும் ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே. 38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே, அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத்ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.

பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே 42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா என்கிறபடியே நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன, ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி, ”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை. உமக்கு மெய்யே பேறு கைப்படவேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேகநிஷ்டராய் இரும். இல்லையாகில் நித்யஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார். இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல். தத்வயதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்- “இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று “இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால் பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே. இனி சரமபர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதமபர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.

ஆஸன்னமான சரமபர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதமபர்வத்தைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே. அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்தகுருவை” என்று.

சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான். ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கிபுரத்து நம்பி வார்த்தை “ததீயஶேஷத்வஜ்ஞானமில்லாதவனுக்குத் தச்சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய்விடும். பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத்ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும். ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதமபர்வத்தில் கைவையான்” என்றபடி. அன்றிக்கே, “ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத்க்ருதமான ஸ்வரூபஸங்கோசத்தை உடையனாம். ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கவேணும். சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம். இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கைவிடும். ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கைவிடும். சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை. எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கைபார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.

“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால், பின்னை அங்ஙனல்லது இராதிறே. ‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே. இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறையில்லை. இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்கவேணுமிறே. எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமலப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே. அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே” என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே. அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக்கூடாது என்றபடி. பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்லவேணுமென்கையாலே தந்நாமாநுஸந்தானம் தத்பாத கமலப்ராவண்ய (ஜநக?)மென்றபடி, இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே. “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார். “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி  ஆறொன்றுமில்லை” என்று அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால், ப்ரதமபர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது. இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக்கலசாதபடி இருக்கவேணுமென்றபடி. இல்லையாகில் இருகரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடுகநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம். ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே. இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று. ஒரு நாள் எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்தருளி, ‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள ‘வேம்பின் புழுப்போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார். அதாவது – வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதியிட்டிருப்பது தத் அபிமானத்தையொழிய வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி. ‘கரும்பின் புழு’ என்று சொல்லுகையன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில் பரமதயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத் தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும், ‘நான் உன்னையன்றியிலேன்” என்கிறபடியே ததபிமானராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி “களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று. இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரணத்ரயத்தாலும் ததேகநிஷ்டனாயிருக்கிறவன் தத்வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி. ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத்வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே. “பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ரவித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே, எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள, அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து, “உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும். உம்மையண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய, நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய, பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து, நம்பிள்ளை சரமதஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில், “எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ? அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரையவேண்டா. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்; நான் பெற்றபேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய், பரமகாருணிகராய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய் அவர் திருவடிகளையே ப்ராப்யப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள் களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி. இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில், “உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம். “இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீலகுணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே. “இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே, எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர்மிண்டரோடே ஸஹவாஸமின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி. “சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே தத்ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி. எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில் ஸ்வரூபஹானி பிறக்குமிறே. ”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி. “இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்கையாலே, எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி. “அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத்ஸ்மரணமே, அநிஷ்டநிவ்ருத்திகரம் என்றபடி தத்விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம். ‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தியிருக்கும்படி தச்சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம். “உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தாதாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரிக்ருத்யம். “இராமானுசன் திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி “செய்வன் சோர்வின்றியே” என்கையாலே எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸயுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம். எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும். “இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுகமண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய, அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம் அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்மதீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம். இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“, “இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர்தம் கழல் பிடித்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும். உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ யதிராஜ விம்சதி -ப்ரமாணத் திரட்டு–

May 31, 2024

ஸ்லோகம் -1-

பாவாம்ஸ்து சக வைதேஹ்யா கிரிஸ அநு ஷு ரம்ஸ்யதே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஸ் ச தே

பாவாம்ஸ்து -தேவரீர்
சக வைதேஹ்யா –பிராட்டியாரோடே கூட
கிரிஸ அநுஷு –மலைகளின் தாழ்வரைகளில்
ரம்ஸ்யதே -க்ரீடிக்கப் பார்க்கிறீர்
அஹம் -அடிமையாகிய நான்
ஜாக்ரத–விழித்துக் கொண்டு இருக்கும் தசையிலும்
ஸ்வ பதஸ் ச –கண் வளர்ந்து கொண்டு இருக்கும் தசையிலும்
தே –தேவரீருக்கு
சர்வம் கரிஷ்யாமி –ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்யக் கடவேன்

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வ வித கைங்கர்யங்களையும் ஸ்ரீ மன் நாராயணனுக்கே மிதுனத்தில் அடிமை செய்கையே சேஷ பூதனுக்குப் பிராப்தம் என்றபடி –

அப்படியே ஸ்ரீ ஆழ்வாரும் –
அடிமை செய்வார் திருமாலுக்கே என்றும்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட என்றும்
மிதுனமே கைங்கர்ய பிரதி சம்பந்தியாக அருளிச் செய்தார் இறே

—————

ராமானுஜம்
ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா–என்று அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –

ராமாநுஜேதி –ராமானுஜர் என்கிற
ஏஷா –இந்த
சதுரா –வேண்டும் பலன்களைத் தருவதில் ஸாமர்த்யமான
சதுர் அக்ஷரீ -நான்கு எழுத்துக்கள் கொண்ட மந்த்ரமானது
ந சேத் -இல்லாமல் போயிற்று ஆனால்
மாத்ருஸா–என்னைப் போன்ற
ஜந்தவோ-உயிர்கள்
காம் -எவ்வகையான
அவஸ்யாம் –கொடிய தசையை
பிரபத்யந்தே –அடைவார்களோ அறியேன்
ஹந்த –ஆச்சார்யம் –

————————

ஸ்லோகம் -3 -அவதாரிகை

நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

ப்ரத்யக்ஷ குரவே ஸ்துத்யா –((பரோஷா மித்ரா பாந்தவ –உறவினரை பின்பும் கார்யாந்தரே)என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபகரண ஆச்சார்யர்களை
ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்கும் யாய்த்து இவனுக்கு அடியிலே
வாங் மனஸ் காயங்களை அடியிலே உண்டாக்கிற்று –

ப்ரத்யக்ஷ -ப்ரத்யக்ஷத்தில் -கண் முன்னே எழுந்து அருளி இருக்கும்படியான
குரவே –அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை உபகரித்து அருளின ஆச்சார்யர்கள்
ஸ்துத்யா–ஸ்தோத்ரம் பண்ணத் தக்கவர்கள்-

விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதம்-(ஸ்ரீ விஷ்ணு தத்வம் )இத்யாதிப்படியே சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
அந்ய பரராய் திரிகிற இவ் விபூதியிலே பகவத் ஸமாச்ரயண மாத்திரத்தில் துவளுகை அன்றிக்கே
அத்தையும் பிரதம அவதி என்று கழித்து சரம அவதியான ஆச்சார்ய விஷயத்தில் கரண த்ரயத்தையும் விநியோகிக்கும்
படியான ஏற்றத்தை உடைய இவர்கள் சிலரே என்று வித்தராய் அவர்கள் திருவடிகளைப் பற்றுகிறார் –

விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதம்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா

ஹே ப்ரஹ்மன்–ஓ ப்ராஹ்மணரே
ஹஸ்த பாதாதி ஸம்யுதா –கை கால்களோடு கூடினதுமான
விசித்ரா –விசித்ரமாயும்
தேக சம்பத்திர் -சரீர ஸம்பத் தானது
ஈஸ்வராய –ஸர்வேஸ்வரனான ஸ்ரீ யப்பதியின் பொருட்டு
நிவேதிதம்–ஆத்மாக்களை பூஜா த்ரவ்யங்களையும் ஸமர்ப்பிக்கதற்கு
பூர்வமேவ க்ருதா –முன்பே ஸ்ருஷ்டிக்கப் பட்டது –

மந பூர்வோ வாக் உத்தர -என்கிற நியமம் இல்லையாய்த்து இவர்களுக்கு –

பூர்வ–முன்பே
மந –மனத்தினால் சிந்தனை பண்ணி
உத்தர-அதன் பிறகு
வாக் -வாயினால் சொல்ல வேண்டும்

கிருஷ்ண அநு ஸ்மரணம்

கிருஷ்ண –பூ பார நிவ்ருத்தி பண்ணுமவனான கண்ணனை
அநு ஸ்மரணம் –அடிக்கடி த்யானம் பண்ண வேண்டும்

————

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத–ஸ்லோகம்–5-
ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே -நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –
இத் அஷ்டாக்ஷரம் மனு ஸ்வசகாய த்ரீ வேதி -என்று
ஸ்ரீ திருமந்திரம் எட்டு திரு அக்ஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் என்னும் இடம் சுருதி சித்தம் –

ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே-நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –சந்தஸா – காயத்ரி ச –

ஓம் இத்ய ஏக அக்ஷரம் -ஓம் என்று ஒரு அக்ஷரமாய்
நம இதி த்வே அக்ஷரே -நம என்று இரண்டு அக்ஷரமாய்
நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –நாராயணாய என்று அஞ்சு அக்ஷரமாய்
இத் அஷ்டாக்ஷரம் –இப்படி எட்டு எழுத்துக்களாய்
சந்தஸா -சந்தஸ்ஸாய்
காயத்ரி ச -காயத்ரியுமாய் இருக்கும்-

—————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யா மோஹ தஸ் தத் இதராணி த்ருணாய மேநே அஸ்மத் குரோர் பக்வதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே

யோ –எந்த பாஷ்யகாரர்
நித்யம் –நிரந்தரம்
அச்யுத –ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவனான ஸ்ரீ யப்பதியினுடைய
பதாம்புஜ யுக்ம –பாதாரவிந்த த்வயமாகிய
ருக்ம -ஸூவர்ணத்தினிடத்தில்
வ்யா மோஹ தஸ் –விசேஷ ஆதாரத்தை யடைந்து இருக்கிறவராய்
தத் இதராணி -அந்தப் பாதாரவிந்த த்வயத்துக்கு வேறான விஷயங்களை
த்ருணாய –த்ருண ப்ராப்யமாய்
மேநே -நினைத்து அருளினாரோ
அஸ்மத் குரோர் –அப்படிப்பட்ட என்னுடைய ஆச்சார்யரும்
பக்வத–பூஜ்யரும்
தயைக ஸிந்தோ–கிருபா ஸமுத்ரமுமாகிய
அஸ்ய ராமாநுஜஸ்ய –இந்த ராமானுஜாசார்யருடைய
சரணவ் சரணம் ப்ரபத்யே –திருவடிகளை ரக்ஷகமாக ஆஸ்ரயிக்கிறேன்

————

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||–ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 62 –

-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)

————————-

புத்த்வா ச நோ ச விஹித அகரணை நிஷித்த சம் சேவனைஸ் த்வத் அபசார சதைர் அஸஹ்யை
பக்தாகசாம் அபி சதைர் பவதாபி அகண்யை ஹஸ்தீஸ வாக் தநு மனோ ஜெனிதை ஹதோஸ்மி
-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்–79-

ஹே ஹஸ்தீஸ
புத்த்வா ச –தெரிந்தும்
நோ புத்த்வா ச–தெரியாமலும்
வாக் தநு மனோ ஜெனிதை –வாக்கு என்ன சரீரம் என்ன மனஸ்ஸூ என்ன இவைகளால் உண்டாக்கப் பட்ட
பவதாபி அகண்யை –சர்வசக்தனான உன்னாலும் எண்ண முடியாத
ச விஹித அகரணை –விஹிதங்களைச் செய்யாமை யாகிற பாபங்களாலும்
நிஷித்த சம் சேவனைஸ் –ஸாஸ்த்ர நிஷித்தங்களைச் செய்கையாகிற பாபங்களாலும்
த்வத் அபசார சதைர் –உன் திறத்தில் செய்யும் பல பல அபசாரங்களாலும்
அஸஹ்யை -சர்வ ஸஹிஷ்ணுவான உன்னாலும் பொறுக்க ஒண்ணாத
பக்தாகசாம் சதைர் அபி –பல பல பாகவத அபசாரங்களாலும்
ஹதோஸ்மி -கெட்டேன்

கரண த்ரயத்தாலும் அடியேன் செய்து போரும் அபசாரங்களுக்குத் தான் ஒரு வரம்பு உண்டோ –
புத்தி பூர்வகம் ப்ரமாதிகம் அகதிகம்–த்ரிவிதமாய் இருக்குமே
இடகிலேன் ஓன்று அட்ட கில்லேன் ஐம்புலன்கள் வெல்ல கில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
அக்ருத்ய கரணத்தில் காட்டில் பகவத் அபசாரம் க்ரூரதரமாய்
அதிலும் பாகவத அபசாரம் க்ரூர தரமாய்
அது தன்னிலும் அஸஹ்ய அபசாரம் அதிமாத்ர க்ரூர தரமாய் –பகவத் நிக்ரஹம் அதிசயித்து இருக்கும்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –இருப்பினும் உனது கல்யாண குண கணங்களை எண்ணி முடித்தாலும்
என்னுடைய அபராத கணங்கள் அஸங்க்யேயங்கள்
இப்படிப்பட்ட அபராத சஹஸ்ரங்களாலே ஸ்வரூபத்தை இழந்தேன் -கெட்டேன் என்கிறார்

—————-

அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர
–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–91-

ரங்க ப்ரவண

சததம் தவ –எப்போதும் ஸ்ரீ தேவரீருடைய

அதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்

வாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்

பக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் ஸ்ரீ தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்

அபித்ருஹ்யன் -அபசாரப் படுபவனாயும்

அஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ

பவத் அஸஹநீய ஆகஸீ—-ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்

ஸஹிஷ்ணு த்வாத் –ஸ்ரீ தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்

தவ மா பூவம் அபர–ஸ்ரீ தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்

தவ பர ஏவ பவேயம் என்றபடி

சமர்த்தனான பிஷக்கின் பக்கல் ரோகியானவன் தன் அபத்யத்தை வெளியிடுமா போலே
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
ஸ்ரீ பெரிய பெருமாள் பக்கல் பிரகிருதி நிவ்ருத்த பரமாய் –
தேவர் ஆஜ்ஜா ரூபமான
ஸ்ருதி ஸ்ம்ருதி இத்யாதிகளை லஜ்ஜா பயன்கள் இன்றி பரித்யஜித்து
சர்வ பூத ஸூஹ்ருதான தேவர் பொருட்டும்-
மத் பக்த ஜன வாத்சல்யம் இத்யாதி அஷ்ட வித பக்தி உக்தனாய்
சதா தரிசனத்துக்கு அவரிடம் போக மாட்டாதே
சதா தர்சனாதி போக்யனான பாகவதம் பொருட்டும்
கரண த்ரயத்தாலும் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும் காதாசித்கமாகவும் இன்றிக்கே
ஸம்பந்த சம்பந்திகளில் அளவும் பயம் இல்லாமல் துரோகித்து
சர்வ ஸஹிஷ்ணுத்வமான ஸ்ரீ தேவருக்கும் அஸஹநீயமான அபராதத்திலும் சந்தோஷிக்கிறேன்

இப்படி அக்ருத்ய கரண க்ருத்ய அகரண
பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாரங்களைப் பண்ணிப் போருகிற நானும்
ஸஹிஷ்ணுத்வத்தாலும் நிர்தோஷ ரக்ஷணமாகில் ஸ்ரீ பரமபதத்தில் இருந்து செய்யலாய் இருக்க
ச தோஷ ரக்ஷண அர்த்தமாக ஸ்ரீ கோயில் ப்ராவண்யத்தாலும் தேவர்க்கு துர் பரனாக ஒண்ணாது என்கிறார் –

————

கீழ் சேஷத்வ காஷ்டை யான ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தார் –
இதில் சேஷத்வத்துக்குப் புறம்பான வற்றில்
அருசியைச் சொல்லி -அவற்றைத் தவிர்த்துத்
தந்து அருள வேணும்-என்கிறார் –

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத்  கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–57-

ந தேஹம் –
அஹமபிமானத்துக்கு அர்ஹமாம்படி
அந்தரங்கமான சரீரத்தையும் –
தேவர் உடைய சேஷத்வத்துக்கு புறம்பாகில் வேண்டேன் –

ந ப்ராணான் –
தேகாதிகளுக்கு தாரகமான பிராணன் களையும்
சேஷத்வ பஹிர்ப்பூதம் ஆகில் வேண்டேன் –

ந ஸ ஸூகம் –
தேஹாதிகளையும்
பிராணன் களையும்
ஆதரிப்பது ஸூகார்த்தமாக இறே –
அந்த ஸூகமும் வேண்டா –
ஸூகம் என்ற மோஷ ஸூகத்தைச் சொல்லவுமாம் –

அ சேஷாபி லஷிதம் ஸூகம் –
எல்லாரும் ஆதரிக்கும் ஸூகம் என்றுமாம் –
ஸூகம் என் என்னில்
தேவாதி சகல ஜந்துக்களும் ஆதரிக்குமது இறே
ஸூகம் என்று பிரியச் சொன்ன போது
அசேஷாபி லஷிதம் நாந்யத் கிமபி -என்று
மேல் கூடக் கடவது –
நாந்யத் கிமபி -என்கிறது புத்திர மித்ர களத்ரங்கள் -என்கிறது

ந சாத்மானம் –
கீழ்ச் சொன்ன சகலத்துக்கும் ஆஸ்ரயமாய்
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உடைய
ஆத்மாவை –

தவ சேஷத் வவிபவாத் பஹிர்ப் பூதம் –
ப்ராப்த விஷயத்தில் சேஷத்வம் ஆகிற பெருமைக்கு புறம்பு ஆனத்தை
அந்தர்ப் பூதம் ஆனவன்று
எல்லாம் உபாதேயம் -என்கை

நாத –
சேஷத்வத்துக்கு புறம்பானவை
அசஹ்யம் என்கைக்கு அடியான
அவர்ஜனீய  -விட ஒண்ணாத -சம்பந்தத்தை சொல்லுகிறது

ஷணம் அபி சஹே –
ஷண காலமும் சஹிக்க கில்லேன்
காமினிக்கு பர்த்ரு விரஹத்தில் சந்தன குஸூமாதிகள்
அசஹ்யமானாப் போலே
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே -4-8-
ந தேவ லோகா க்ரமணம் –
இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்

யாது ஸததா விநாஸ்ம் –
உரு மாய்ந்து போக வேண்டும்
அடிமைக்குப் புறம்பானவை
அசஹ்யம் ஆனாலும் போக்குகை
ஈஸ்வர கருத்தியம்
அனுகூலங்கள் ஆதரணீயமானாலும்
உண்டாக்குகை ஈஸ்வர கருத்தியம் –

தத் ஸத்யம் –
இது லோகத்திலே கேட்டு அறிவது ஓன்று அன்று
மெய்யாகக் கூடுமோ -என்ன
இது அஹ்ருதயமாக சொன்னது அன்று -மெய்

மது மதன-
திரு முன்பே பொய் சொன்னேன் ஆகில்
உமக்குப் பொய்யனான மது பட்டது படுகிறேன்
சேஷத்வத்துக்கு புறம்பானவற்றை மதுவைப் போக்கினால் போலே
போக்கி அருள வேணும் -என்னவுமாம்

விஜ்ஞாப நமிதம்
இதம் விஜ்ஞாபநம் தத் சத்யம்
ப்ராப்ய அபேஷையில் புரை குற்றம் உண்டாகிலும்
விரோதி வர்க்கத்தில் அருசியில் பொய்யில்லை –

(கீழே இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து இங்கே அநிஷ்ட நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4–8-அர்த்த ஸ்லோகம் இது
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே – அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது
சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –
விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் -)

————

நிர்க்குணம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் –கல்யாண ஏக குண ஸ்தானன் –திவ்ய குண ஸ்வரூப-என்று
கல்யாண குண விசிஷ்டமாக ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
வஸ்து நிர்குணம் என்பாருக்கு நா எடுக்க இடம் அறும்படியாக நலமுடையவன் -என்னுமா போலே
நிர்க்குணம் நிரஞ்சனம் இத்யாதிகளில் தோற்றுகிற குண சாமான்ய நிஷேபம்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் விதிக்கப்பட்ட கல்யாண குண வ்யதிரிக்த ஹேய குண விசேஷம் என்று
தோற்றுகைக்காக-திவ்ய குண ஸ்வரூப —17 ஸ்லோகம் -என்கிறார் –
இத்தால் அவனுடைய பரத்வம் சொல்லிற்று-

————-

யதா யஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈஸம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி —

யதா யஸ்ய -எந்தக் காலத்தில் ஜீவாத்மாவானவன்
ருக்ம வர்ணம் –ஸ்வர்ண ஸ்வரூபமாய் பிரகாசிக்கிற அப்ராக்ருத திவ்ய மங்கள விகிரஹத்தை யுடையவனாய்
ஈஸம் -ஜகத்துக்கு நியாமகனாய்
கர்த்தாரம் –ஜகத் கர்த்தாவாய்
ப்ரஹ்ம யோநிம் -ப்ரக்ருதிக்கு உபாதானமாயும் இருக்கிற
புருஷன் –பரம புருஷனை
பஸ்யதே–ஸாஷாத் கரிக்கிறானோ
ததா –அந்தக்காலத்தில்
வித்வான் -அந்த ப்ரஹ்ம தர்சீ
நிரஞ்சன-ப்ரக்ருதி சம்பந்தம் இல்லாதவனாய்
புண்ய பாபே விதூய –புண்ய பாபங்களை நிரஸித்து
பரமம் ஸாம்யம் உபைதி — அந்தவந்த ஸாம்யத்தை அடைகிறான் –

———–

யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞான மயம் தப தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே

யஸ் -எந்த அக்ஷர பர ப்ரஹ்மம்
ஸர்வஞ்ஞஸ் -எல்லாவற்றையும் அறிந்ததோ
யஸ் -எந்த பர ப்ரஹ்மம்
ஸர்வ வித் –எல்லா விஸேக்ஷங்களையும் அறியுமோ
யஸ்ய -எந்தப் ப்ரஹ்மத்துக்கு
தப–ஸங்கல்பமானது
ஞான மயம் -ஞானமேயோ
தஸ்மாத் -அந்தப் ப்ப்ரஹ்மத்தில் இருந்து
ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே –முன் சொன்னபடியே நாம ரூப ஆத்மகமான பிரபஞ்சம் உண்டாகிறது –

——–

பரதஸ்ய வச குர்வன் யாசமா நஸ்ய ராகவா ஆத்மாநம் நாதி வர்தே தாஸ் ஸத்ய தர்ம பராக்ரம –-அயோத்யா –111-6-

ஹே ஸத்ய தர்ம பராக்ரம–சத்தியத்தையும் தர்மத்தையும் அனுஷ்டிப்பதில் வல்லமை யுடையவனே
ராகவா–ஓ ராகவனே
யாசமா நஸ்ய–யாசிக்கும் படியான
பரதஸ்ய வச குர்வன் -பரதனுடைய வாக்யத்தைப் பூர்த்தி செய்து
ஆத்மாநம் –நீரான தன்மையை -அதாவது ஆஸ்ரித பரதந்த்ரரான தன்மையை
நாதி வர்தே தாஸ் -அதிக்ரமிக்க வேண்டாம் –

—————

அபசாரஙளைப் பொறுக்குமாறு வேண்டுவது:
மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥-10-

மநோவாக்காயைঃ * -மனம் மொழி மெய் -முக் கரணங்களாலும்
அநாதி³கால ப்ரவ்ருʼத்த -அடி தெரியாத நெடுநாள் முன்னாக விளைந்த
அநந்த-அளவிறந்த
அக்ருʼத்ய கரண–செய்யத் தகாதவற்றைச் செய்தும்
க்ருʼத்ய அகரண–செய்யத்தக்கவற்றைச் செய்யாது ஒழிந்தும்
ப⁴க³வத³பசார -எம்பெருமான் இடத்தில் அபசாரப்பட்டும்
பா⁴க³வதாபசார-பகவத் அடியார்கள் டத்தில் அபசாரப்பட்டும்
அஸஹ்யாபசார -பொறுக்க முடியாத படி அபசாரப் படுகையும்
ரூப * -இங்கனே யுள்ள
நாநாவித⁴ * அநந்த அபசாராந் * –பலவகைப்பட்ட -அபரிமிதங்களான குற்றங்களை

இதற்கு -அசேஷத க்ஷமஸ்வ -என்பதில் அந்வயம்-அஶேஷத: க்ஷமஸ்வ
அசேஷத –அணுவளவும் மிச்சம் இல்லாதபடி
க்ஷமஸ்வ–பொறுத்து அருள வேண்டும்

இவ் வபசாரங்கள் எப்படிப்பட்டவை என்னில்
ஆரப்³த⁴கார்யாந், * -இன்னமும் பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தவையாய் இருக்கும் அபசாரங்கள்
அநாரப்³த⁴கார்யாந்,-இன்னம் பலன் கொடுக்க ஆரம்பிக்காதவையாய் இருக்கும் அபசாரங்கள்

  • க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச –இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் -த்ரிகால வ்யாபிகளாய் இருக்கும் அபசாரங்கள்
    இவை அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
    ஸர்வாந் * -மநோ வாக் காய அபசாரங்கள் பிரஸித்தமாய் இருக்க
    இவற்றை இங்கு அருளிச் செய்தது
    எம்பெருமானைச் சிந்திக்கவே அமைந்த மனஸ்ஸையும்
    அவனை ஸ்துதிப்பதற்காகவே அமைந்த வாக்கையும்
    அவனுக்குப் பலவித பணிவிடைகள் செய்வதற்காகவே அமைந்த தலையம் கொண்டு
    அந்தோ வ்யபசரிக்கலாயிற்றே என்று நிர்வேதம் தோன்ற அருளிச் செய்கிறார்
    இக்குற்றங்களும் அநாதிகாலம் செயகாவை அன்றோ
    ஸம்ஸாரம் ஆனாது தானே
    பஹுநி மீ வ்யதீதாநி ஜன்மாநி தவ ச அர்ஜுனா
    அநாதி யாவதாலேயே அனந்தங்களாய் இருக்குமே

மேலே அவற்றை வகையிட்டுப் பிரித்து அருளிச் செய்கிறார்
அக்ருத்ய கரண -ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாந் போன்ற விதிகளை அதிக்ரமித்து பண்ணுகிற பிராணி பீடை
-அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை
பிறர் பொருள் தாரம் இவற்றை அபஹரிக்கை
அஸத்யம் சொல்லுகை
அபஷ்யம் -பஷிக்கத் தகாதவற்றை யதேச்சமாக பஷிக்கை
ஆக இவ்வாறு பலவகைப்பட்டு இருக்கும் அக்ருத்ய கரணங்கள்

க்ருத்ய அகரணமாவது-
ஸாஸ்த்ர விஹிதங்களாகிற வர்ணாஸ்ரம தர்மங்களை சோர்வு சோம்பல்களாலும் நாஸ்திக்யத்தாலும் அனுஷ்டியாது ஒழிகை
பகவத் அபசாரமாவது
தேவதாந்தரங்களோடு ஓக்க எம்பெருமானை நினைக்கையும்
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மானுஷ்ய ஸஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சவதாரத்தில் உபாதாந நிரூபணம் பண்ணுகையும் -முதலானவை
பாகவத அபசாரமாவது
அஹங்காரத்தாலும்
அர்த்த காமங்கள் அடியாகவும்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விரோதம்
அஸஹ்ய அபசாரமாவது
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தநம் இல்லாமல்
ஹிரண்ய கசிபுவைப் போலே
பகவத் விஷயம் பாகவத விஷயம் என்றால்
காணவும் கேட்கவும் பொறாதபடியாய் இருக்கை
ஆச்சார்ய அபராதமும் அஸஹ்ய அபசாரமாய் இருக்கும் -அதாவது
ஆச்சார்யர் அருளிச் செய்த அர்த்தத்தின் படியே அனுஷ்டியாமையும்
அவன் உபதேசித்த அர்த்தங்களையும் மந்திரங்களையும் அல்ப பிரயோஜனங்களுக்காக அநதிகாரிகளுக்கு உபதேசிக்கை முதலானவை
ஆச்சார்ய பக்தரான ஸஹ ப்ரஹ்மசாரிகளுடன் ஐக ரஸமுண்டாய் வர்த்திக்கையாய் இருக்க
அது செய்யாதே அவர்கள் திறத்தில் பண்ணும்
அஸூயையும் அவஜ்ஜையும் முதலானவையும் அஸஹ்ய அபசாரம் எனப்படும்
பாகவதர்களிடத்தில் அபசாரம் பட்டால் அது பகவத் அபசாரமாய் முடியும்
பகவான் இடத்தில் அபசாரம் பட்டால் அது பாகவத அபசாரமாய் முடியும்

எம்பெருமான் இடம் ஸம்வாதமாய் இருக்கும் இக்கிரந்தத்தில்
த்வத் அபசாரம் என்னாதே
பகவத் அபசாரம் என்பது பொருந்துமோ என்னில்
பகவத் அபசாரம் என்றே ப்ரஸித்தி பிராஸுர்யமாக இருப்பதால் குறையில்லை

இங்கு அநந்த பதம் இரண்டு பிரயோகங்கள்
முதல் பிரயோகம் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண சாமான்ய அபசாரங்களிலும்
இரண்டாவது பிரயோகம் பகவத் அபசாராதிகளிலே அந்வயிக்கும்

ஆரப்த கார்யான் -அநா ரப்த கார்யான்
கர்மங்களின் பலன் பரிபாக கிரமத்தால் தான் பலன் கொடுக்கும்
பலன் கொடுக்காத தொடங்கியவை ப்ராரப்த கர்மங்கள் என்றும் -இவையே ஆரப்த கார்யான் என்றும்
பலன் கொடுக்கத் தொடங்காதவை -ஸஞ்சித கர்மங்கள் என்றும் இவையே அநா ரப்த கார்யான் என்றும் சொல்லப்படுகின்றன –

————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்