ஸ்ரீ பரம புருஷனுடைய ப்ரதி வஸ்து பூர்ணத்வத்தைப் பற்றி ஸ்ரீ தேசிகன் முதலான பூருவாசாரியர்களின் திருவுள்ளத்தை விளக்கிக் காட்டவல்ல ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்
தேசிக வந்தந மாலா த்விதீய புஸ்தக விமர்ச ருபமிதம்,ஸகல விபுதாபிநந்த்யம் ஸததம் ஜேஜேது ஜகதி க்ருதி
ஸாஸ்த்ர ஜ்ஞாநம் பஹுக்லேசம் புத்தேச் சலந காரணம், உபதேசாத் ஹரிம் புத்த்வா என்று சாஸ்த்ரமே காட்டின கட்டளையிலே, தத்வ தர்சிகளான மஹா ப்ராஜ்ஞர்கள், வெண்ணெய். கடைந்து திரட்டி யெடுத்துக் கொடுக்குமா போலே லலிதமாக எடுத்துரைத்து வைக்க, அது கொண்டு உணரவே நாம் அதிகாரிகள்.
எம்பெருமான் எங்கும் நிறைந்த பரஞ்சோதி யென்று உலக மனைத்தும் உணரும். “கருதரிய உயிர்க் குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயக மென்றால் உன் பெருமைக்கு அளவாமோ? ” என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.அணுவான பதார்த்தங்களினுள்ளும் பகவான் நிறைந்துளன் என்பது வேதாந்திகளின் கொள்கை.
(1) உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டிடங்கள் பகுத்து வகுத்துக் காட்டக் கூடிய பொருள்களாயிருந்தால் அவற்றில் உள்ளேயும் புகுந்துளன் என்று ஒப்புக் கொள்ளலாம்; அணு பதார்த்தங்களுக்கு இங்ஙனே பகுத்துக் காட்டக் கூடிய நிலைமை இல்லாமையால் அப் பொருள்களில் பகவான் உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ள இயலாது – என்பது ஒரு ஆக்ஷேபம்.
(2) உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ளக் கூடிய விடத்திலும்,பகவான் தன்னுடைய ஸ்வரூபம் எவ்வளவுண்டோ அவ்வளவும் அடங்க வியாபித்துளன் என்று இசையத் தகாது ; ஏனென்றால் ஒரு வஸ்துவிலேயே பகவானது ஸ்வரூப மடங்கலும் அடங்கிப் போகுமானால் மற்றும் உலகிலுள்ள அபரிமிதங்களான வஸ்துக்களிலும் அந்த ஸ்வரூபம் வியாபித்திருக்க வேணு மல்லவா?அதற்கு அவகாச மில்லாமற் போகுமே. ஒரு உதாரன் தனக்குள்ள பொருள்களை யெல்லாம் ஒரு யாசகனுக்கே பூர்த்தியாகக் கொடுத்து விட்டால் எப்படி? மற்றுள்ள பல யாசகர்களுக்கும் கொடுக்கச் சரக்கு இருக்க வேணுமே;அது போல பகவானும் தன் ஸ்வரூபத்தை நிச் சேஷமாக ஒரு வஸ்துவிலேயே நிரப்புகிறானென்றால் இது எப்படி ஸம்பவிக்கும் ? மற்ற வஸ்துக்களுக்கு என்ன கதி? ஒவ்வொரு வஸ்துவிலும் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளானென்கை பொருந்த மாட்டாது. ஒன்றில் நிச் சேஷமாக நிரம்பி விட்டால் மற்றொன்றிலிருக்க ப்ரஸக்தி யேது? ஆகவே வஸ்து தோறும் பகவத் ஸ்வரூபம் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளதன்று கொள்ளத் தகாது என்பது மற்றொரு ஆஷேபம்.
பகவானுக்கு ஒப்புயர்வற்ற சக்தி விசேஷ முண்டென்பதைப் பொறுக்க கில்லாதவர்களே இந்தக் கக்ஷிகளைக் கிளப்ப வேண்டும். பகவான் அத்புத சக்தி யுக்தன் என்றும் அகடித கடநா ஸமர்த்தன் என்றும் பிரமாணங்கள் கூறுவதை அஞ்ஜலி பந்தத்துடன் ஏற்க வல்ல ப்ராமாணிக வேதாந்திகள் இப்படிப்பட்ட கக்ஷிகளைக் கிளப்ப ஒரு போதும் நினையார்கள்.
வஹஸி ணிமித் தத்தணம் வி அப்புய ஸத்தீ வஹஸி நிமித்தத்வமபி அத்புத சக்தி* என்றன்றோ அச்யுத சதக ஸ்லோகமுள்ளது-ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம்யஸ்ய அசிந்த்ய-அப்ரமேய-அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ப ப்ரஹ்மண -என்று ஸ்ரீ பாஷ்யகாராதிகள் அடிக்கடி அருளிச் செய்யப்படுகிறது. மேற் குறித்த வாக்யங்கள் ஸ்ரீபாஷ்ய தீப ஸாராதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் காணலாகும்.-பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே * என்பது முதலான சுடர் மிகு சுருதி வாக்கியங்கள் பலபல இவற்றால் பகவானுடைய சக்தி அத்புதமானதென்று நிரூபிக்கப்படுகிறது.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் சேராதவற்றை யெல்லாம் சேர்த்துச் சொல்லி யேத்துகிறார்.
நரகும் சுவர்க்கமுமாய், வெல் பகையும் நட்பும் விடமுமமுதமுமாய் * கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் * நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் **புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் என்றிப்படி வாய் வந்தபடி யெல்லாம் பேசி யுள்ளார். இப் பதிகத்திற்கு நம் தேசிகன் அத்புதமான ஸ்லோக மிட்டருளுகிறார் : * ஸம்பத் தாரித்ர்ய பாவாத்… அகடித கடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்றருளி யுள்ளார்.
இத் திருவாய் மொழியில்* வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய் என்பதும் (8) ஒரு பாசுரம். பகவான் தைவ ப்ரக்ருதிகளுக்கு சரண்யனாயும் ஆஸூர ப்ரருதிகளுக்கு மருத்யு வாயுமுளன் என்று இப் பாசுரத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப் பட்டிருக்கிறது. உலகில் ஒரு மனிதன் சிலர்க்கு நல்லனாயும் சிலர்க்குத் தீயனாயுமிருப்பதை எங்குங் காணா நின்றோம்.இப்படி யிருப்பதற்கு ஒரு அகடித கடநா சக்தி வேண்டிய அவசியமே யில்லை. இது போல பகவானும் நல்லார்க்கு நல்லனாய்த் தீயார்க்குத் தீயனா யிருக்கிறா னென்பதில் அகடிதத்வமென்பது சிறிதுமில்லை. சிலரிடத்திலே நல் குரவையும் சிலரிடத்திலே செல்வத்தையும் தருகிறான்;சிலர்க்கு நரக ப்ராப்தியையும் சிலர்க்கு ஸ்வர்க்க பிராப்தியையும் பண்ணி வைக்கிறான் என்றால் இதில் அஸம்பாவிதத்வ சங்கைக்கு உதயமே யில்லை யன்றே இத்திருவாய்மொழியை இப் புடையிலே நிர்வஹிப்பதில் என்ன அருமை . ஒன்றுமில்லை.எம்பெருமான் இப்படியாக வுள்ளானென்று சொல்லுவதனால் அவனுடைய அகடிதகடநா ஸாமர்த்தியம் விளங்குகைக்கு ப்ரஸக்தி யேது.சேராதவற்றைச் சேர்ப்பிக்கவல்ல சக்தி பகவானுக்குக் கிடையவே கிடையாதென்பவர்கள் இங்கே இரண்டு விஷயங்களுக்கு விடை கூறவேண்டும்- (1) * அகடிதகடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்று ஸ்வாமி தேசிகன் ஏன் அருளிச் செய்தார்?, (2) இந்தத் திருவாய் மொழியில் அகடித கடநா சக்தியைக் கொண்டு கூற வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது? வர்ஷ சதமானாலும் இவ் விரண்டு கேள்விகளுக்கும் ஆர்ஜவத்துடன் விடை யிறுக்க பகவச் சக்தி வித்வேஷிகள் அசக்தரே. இப் பதிகத்தினால் ஸர்வ நியந்த்ருத்வம் அநுபவிக்கப் பட்டதென்று அருளிய ஆறாயிரப்படி யாசிரியரான பிள்ளான் வழியிலே நின்று ஸ்லோகமிடாமல் நம் பிள்ளை திருவடிகளின் வியாக்கியானங்களை ஸேவித்து அந்த வாஸநையாலே* அகடித கடநம் ப்ராஹ * என்றருளிச் செய்த தேசிகனுடைய திரு வாக்கு இவ் விடத்தில் அநுபாதேயமே யென்று பலர் வாயில் கேட்டிருக்கிறோம்; அந்த விடையோ அதற்குப் பர்யாயமான விடையோ தவிர வேறு வெளிவர ப்ரஸக்தி யுண்டோ? உண்டெனில் அருளலாமே ; அப்போது சாஸ்த்ரார்த்த மருமங்களெல்லாம் தன்னடையே வெளி வந்து தீருமே . ப்ராஸங்கிகமான விது நிற்க.
இப்படி எம்பெருமான் திறத்துப் படுவோம் அல்லோம் -என்று இருந்த ஆழ்வார் தம்மோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காகத் திரு விண்ணகரிலே எழுந்து அருளின எம்பெருமானுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலும் ஸ்வ சம்ச்லேஷ ரஸ ஜெனிதமான அவசாதத்தாலும் நிவ்ருத்த ப்ரணய கோபராய் அவனோடே ஸம்ஸ்லேஷித்து தத் சம்ச்லேஷ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே ச சம்ப்ரமமாக அந்தத் திரு விண்ணகரிலே தாம் அவனைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த படியையும் கீழ் ப்ரஸ்துதமான ஜகத் ஐஸ்வர்யத்தையும் அசேஷ தோஷ ப்ரத்ய நீகத்வ அசங்க்யேய கல்யாண குணங்களையும் பேசுகிறார் –ஆறாயிரப்படி —
திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு –ஒன்பதினாயிரப்படி —
இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்து–பன்னீராயிரப்படி —
தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது –நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு –இருபத்து நாலாயிரப்படி –
இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.-‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.– பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.-ஈடு முப்பத்தாறாயிரப்படி
ஸ்வாமி தேசிகன் அருளிய அற்புதமான ஸ்லோகமொன்று * பக்தஸ்ய தாகவசிசோ : பரிபாலநாய * இத்யாதி. இதில் என்ன சொல்லப்படுகிற தென்னில் * எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்த இரணியன் தூணைப் புடைப்பதற்கு முன்னே எம்பெருமான் மூவுலகக்தினும் ஒவ்வொரு வஸ்துவிலும்-ஒவ்வோரிடத்திலும் நரஸிம்ஹ ரூபியாக ஆவேசித்து விட்டதாகவும், இரணியன் தட்டினது ஒரு தூணையே யாதலால்அந்த வொரு தூணில் நின்று மாத்திரம் ஒரு நர ஸிம்ஹம் மூர்த்தி மாத்திரமே வெளிவந்த படியால்
மற்ற ஸகல இதர தேசங்களினும் ஆவேசித்த பல கோடி நூறாயிரம் நரஸிம்ஹ மூர்த்திகள் இன்னமும் அப்படியே நித்ய வாஸஞ் செய்வதாகவும் ஸாதிக்கப் பட்டிருக்கிறது.இதை அதிவாத மென்று சொல்லி விட்டால் ஸ்வாமிக்கு அஸாதாரணமாக வுள்ள ஏற்றம் போய் விடும். ‘ ஆளவந்தார், பாஷ்யகாரர் முதலானாருங்கூட அதிவாதிகளே;நம் தேசிகனொருவரே அதிவாதி க ஏவ தேசிகர்” என்று சாற்றிய பறை இன்றாக அவத்ய மடையலாகாது. ஏற்கெனவே ஆவிர்ப்பவித்த நரஸிம்ஹ மூர்த்திக்கும், சதா ஸர்வ கர்ப்ப வாஸம் பண்ணுகிற நரஸிம்ஹ மூர்த்திகளுக்கும் வாசி யுண்டோ?
”வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி யென்று கொண்டால் மற்றோரிடத்தில் வியாபிப்பதற்கு வஸ்து வில்லையாகும் ” என்று தூஷணம் கொடுப்பதுண்டே. இது தான் வெகு ஆச்சரியம். “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி தான்; அதாவது ஓரொரு உபாத்யவச்சிந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தி யுடைத்தாயிருக்கை”என்று எழுதி வைத்தால் எவ்வளவு அழகாயிருந் திருக்கும்.
த்ருஷ்டேபஹ் நுத்யபாவாதநுமிதி விஷயே லாகவஸ்யாநபாயாத்
சாஸ்த்ரே ணைவாவஸேயே விமதி விரஹிதத நாஸ்திகத்வ ப்ரஹாணாத்|
நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம் யாமுநேய ப்ரபந்தை : த்ராதம்
ஸம்யக் யதீந்த்ரை ரித மகிலதம: கர்சநம் தர்சநம் ந:||
நாதமுநிகள் காலத்திலேயே சிறந்து விளங்கியா ஸித்தாந்தம் ஆளவந்தாரின் அரிய க்ரந்தங்களால் அழகாக வளர்ந்தது.-அவருடைய ஸ்ரீஸூக்திகளுக்கு இணையாே ஸூக்திகளோ உலகில் இல்லை எனலாம். மதுர கம்பீரமான நடை மிக்க சாஸ்திர ஆராய்ச்சிகளைச் சொற்கள் தோறும் செவ்வனே காணலாம். சாஸ்த்ர வாக்யங்கள் எல்லாம் கத்ய பத்ய ரூபங்கள். அவர் கவிதார்க்கிக ஸார்வ பௌமபர் என்பதை அவருடைய ஒவ்வொரு க்ரந்தமும் உணர்த்தும். இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஆங்காங்கு ஸ்ரீபகவத் ராமானுஜமுநிகள் தமது க்ரந்தங்களிலே இடை யிடையே அழகாக இணைத்துத் தம் க்ரந்தத்திற்கு ஒரு பெருமையைக் கருதினார்.இவர் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் என்ற சிறிய க்ரந்தம் ஓன்றைக் கண்டால்கூட இவருக்குள்ள நிஷ்கர்ஷ சக்தி நன்கு விளங்கும். ஸ்ரீபாஷ்யகாரருக்கு முன்னரே இந்த மதம் மேன்மை பெற்றிருந்தது என்பதும் எளிதில் அறியப்பெறும். பாஞ்சராத்ரம் ப்ரமாணம் என்பதை இவருடைய ஆகம ப்ராமாண்யம் என்ற க்ரந்தம் ஸ்தாபிக்கிறது. இவர் பிதாமஹரான ஸ்ரீமந் நாதமுநிகள் வெளி யிட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் இருந்து கூட பஞ்ச ஸம்ஸ்காரம், திருவஷ்டாஷர மேன்மை முதலிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் விசதமாக அறியப்படுகின்றன . அதற்கு முன்னமே அவை எல்லாம் அனுஷ்டானத்தில் இருந்தன என்பதும் அங்கே தெளியலாம்-. “தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஓற்றுண்டு நின்று குடி குடி யாட்செய்கின்றோம்”
ஆத்மநி திஷ்டன் -திண்ணையில் தீ இருக்கிறது என்றால் உழலும் வெளியும் இருப்பதைக் காட்டாதே -ஆகவே ஆத்மநி பரமாத்மந: ஸ்திதியோ வென்னில் உள்ளும் புறம்புமொக்க வாயிற்று; திலத்தில் தைலமிருப்பது போலவும் வ்யாப் தி; வேதியில் அக்நி யிருப்பது போலவும் வ்யாப்தி;இப்படிப் பட்ட விலக்ஷண வ்யாப்தியை விளங்கக் காட்டுவதற்கே ஸ்ருதி * ஆத்மநி திஷ்டந் , ஆத்மா: அந்தர :* என்று இரண்டு படியாகவும் ஓதிற்று- என்று ஸ்ருத ப்ரகாசிகையில் விவரணமுள்ளது.-அணு வஸ்துவில் அந்தர் வ்யாப்தி விஷயம் நிஷ் கல்மஷமாய்முடிவு பெற்றது.
ஜாதி வ்யக்தி தோறும் பரிமாப்ப வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியே குறை வற வியாபித்து நிற்கும் என்றும், ஜாதி வ்யக்தி தோறும் பரி ஸமாப்ய வர்த்திக்கிற தென்றால் அசேதநத்துக்கு அது கூடுமென்றிருப்பர்கள் ; பரம சேதநனாய் ஸர்வ சக்தியானவன் இங்ஙனே வர்த்திக்கிறா னென்றால் இதில் விப்ரதிபத்தி பண்ணிப் போருவர்கள்”-ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றில் பரிஸமாப்ய வர்த்தித்தால் மற்றொன்றில் அது காண முடியாதென்றே இன்னமுங் கூறுகிற இவர்களின் பிடிவாதம் ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிந்ததென்று முடிய வில்லையா? பகவானை ஸ்பர்சியாத அவர்களின் பேச்சுஒரு புறமிருக்க, ப்ரஹ்ம வாதிகளில் தலைவரான ஸ்ருத ப்ரகாசிகாசார்யருடைய ஸ்ரீஸுக்தி யன்றே நமக்குத் தலை மேலது.-ஏகஸ்மிந்நேவ வஸ்துநி ஸ்வரூபஸ்ய பூர்ண வ்ருத்தி தயா ” என்ற வாக்யமானதுபர ப்ரஹ்ம ஸ்வரூபம் வஸ்து தோறும் பூர்ண விருத்தி யென்று திடப்படுத்திற்று. அடுத்ததான * அந்யத்ர வ்ருததி அயோக்யத்வ சங்கா வ்யுதாஸ என்றதானது பஹிர் வ்யாத்திக்கு விருத்தமா மென்று வாயெடுக்கவுமாகா தென்று கெட்டியான பூட்டு போட்டு விட்டது.
ஆர்ஷம் தர்மோபைதேசஞ் ச வேத சாஸ்த்ரா விரோதிநா, யஸ் தர்க்கேணாநு ஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: * என்பது ப்ரஸித்தமாதலால் சாஸ்தரங்களோடு முரண்படாத யுக்தி வாதங்களைக் கொண்டு சாஸ்த்ரார்த்தங்களை நிஷ்கர்ஷிப் பதென்பது நிரவத்யமானது. யுக்தி வாதங்களால் சாஸ்த்ரார்த்தங்களைத் தலை கீழாக்குவதென்பது கிடையாது. பிரக்ருத விஷயத்தில் தர்க்கத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ள வேணுமானால் “பகவான் பிரதி வஸ்து பூர்ணன்” என்பதற்கு ஸாதகமான வழியில் கொண்டு அதை ஸ்தாபிக்கலாமே யல்லது வேறு செய்யத் தகாது. பிறர் செய்வது என்ன வென்றால், பிரதிவஸ்து பூர்ணத்வத்தை அபலாபம் செய்வதற்கு யுக்தி வாதத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ளப் பார்க்கிறார்கள் -அநி ஷ்டித குதர்க்க வாதிகள் ஸ்ரீ பாஷ்யாதிகளால் நிரஸ்தரானவர்கள் மாத்திரமல்ல,ஸ்ரீ வசந பூஷணாதிகளால் நிரஸ்தரானவர்களும் கூட அந்த விருது சுமப்பவர்களே யென்று அறியத்தக்கது. நையாயிகர்கள் ஈஸ்வரனை அங்கீகரியா நின்றார்களெனினும் அவர்கள் அனுமானத்தைக் கொண்டு ஈஸ்வரனை ஸாதிக்கிறபடியால் அந்த ஆநுமாநிகேஸ்வரனும் பரம வைதிகர்களுக்கு ஹேயனாயினன்.-இங்கு சாஸ்த்ர பிரதர்சநம் தவிர யுக்தி ப்ரதர்சநமென்பது அணுவளவும் கிடையாது. சாஸ்த்ரத்தினால் திருப்தி யடையக் கூடிய அதிகாரியை நோக்கியே இந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் அவதரித்தது. ஸூத்ரகாரர் காட்டின சாஸ்த்ரத்தினால் சங்கா பரிஹாரம் ஆகவில்லை யென்றால் அதோகதி தவிர வேறில்லை கிடீர்.-பரம புருஷனுக்கு ஜ்ஞாநியானவன் அத்யர்த்த ப்ரியனென்பதும் இவனைப் பெற்றுக் களிப்பதற்கு அவன் நெடுங்காலம் தவம் புரிந்தனனென்பதும் -இப்படிப்பட்ட பிரியனை ஒருகாலும் ஸம்ஸார பந்தத்திற்குத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்தரங் கொண்டே யன்றோ பாஷ்யகாரரால் இங்கு நிரூபிக்கப்பட்டன – * ய ஏவமாஹ * என்று தொடங்கி ஸ்பஷ்டமாக சாஸ்ரத்தையே யன்றோ காட்டி யருளினர்.-முக்தைஸ்வர்ய மொன்று உண்டென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அது பரம புருஷாயத்தமென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அந்த பரம புருஷன் ஸ்வதந்திரன் ஸத்ய ஸங்கல்பன் என்பதும் சாஸ்த்ர வேத்யம் இப்படியான போது அவன் முக்தனைத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்த்ரைக வேத்யமாகக் கூடியதே-
ஸ்ரீபாஷ்யத்தில் நச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிகம் லப்த்வா என்ற ஸ்ரீ ஸூக்தி அவதரித்தது எதற்காக வென்னில்,பரம புருஷனைப் பெறுவது சேதநனுக்கே புருஷார்த்த மென்றும், இவன் தானே உபாயா நுஷ்டானங்களைப் பண்ணி அவனைப் பெற வேணு மென்றும், இவனே போக்தா வென்றும்… இப்படி யெல்லாம் தலை கீழாகச் சொல்லி வருகிற ஏக தேசிகளின் வாதங்கள் ஆழ்வாரருளிச் செயலைப் பேணுங் குடியிலே தலை காட்டத் தகா என்பது நம் மிராமானுசனுடைய ஸ்வச்சமான திருவுள்ளம்
பகவானுடைய வ்யாப்தி யானது யறிக்கைக்காக – நியமநத்திற்காக. ஆகாசத்தின் வ்யாப்தி யானது அதற்காக வல்ல.ஆகவே ஆகாசம் வ்யாபிப்பது போலன்றிக்கே என்று சொல்லுவதும் வழுவற்றது.நியந்த்ருத்வா விசிஷ்ட வ்யாபகத்வம் பகவானுக்கு, தத் ரஹித வியாபகத்வம் ஆகாசாதிகளுக்கு என்று ஸாமான்யமாகச் சொல்லுகிற புடை இது.
ஸ்வாமி ந்யாய ஸித்தாஞ்சனத்தில் ஈஸ்வர பரிச்சேதத்தின் ஆரம்பத்தில் ஏழெட்டு விதமாக ஈஸ்வர லக்ஷணம் அருளிச் செய்கிறார். அங்கு ஸ்வ ஜ்ஞாந ஸ்வேதர ஸகல த்ரவ்ய சரீரகத்வம் என்பதும் ஒரு லக்ஷணமாக வுள்ளது. தன்னுடைய ஜ்ஞானமும் தானும் தவிர மற்ற ஸகல த்ரயங்களையும் சரீரமாகக் கொண்டிருக்கை லக்ஷண மென்கிறார். நரஸிம்ஹாவதாரத்தை பட்டர் அனுபவிக்குமிடத்து” விருத்தே வையக்ரீ ஸுகடித ஸமாநாதிகரணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் “‘ என்று நிஸ் ஸந்தேஹமாக அருளி யுள்ளார்.
——————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply