ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||–நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்
வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)
அபயப்ரத பாத தேஶிகோத்பவம்குருமீடே நிஜமாதரேண சாஹம் |ய இஹாகில லோக ஜீவநாதர:சரமோபாய விநிர்ணயம் சகார ||-நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்
(அபயப்ரதபாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய், எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)
யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீயகாருண்ய குணேந பாதி | ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ்வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார். அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது, இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டுகொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள, அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.
யஸ்ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரிஸூநும் ஶரணம் ப்ரபத்யே || என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர். இவ்வர்த்தம் ஓராண்வழியாய்ப் பரமகுஹ்யமாய் வந்ததென்றும் அருளிச்செய்வர்.
இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள். முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,
ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி || என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வ குலத்திலே ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால் அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக்கடவதிறே.
உத்தாரகத்வந்தான் வ்யக்தித்ரயகதமாயிருப்பது, ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது. உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான். (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) என்று உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.
ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.15. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,16. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா| உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) என்று ஸ்வவ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று. ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.
பெரியநம்பி மதுராந்தகத்து ஏரிகாத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து 17.(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் | பதிவ்ரதாநிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || ) என்றும்,(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி “நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை. ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை. ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ; இவ்வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை. “வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உய்யக்கொண்டவீரன்” என்றும், 19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா என்றும் சொல்லுகிறபடியே, “தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர். அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார். இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச்செய்வர்.
பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே, 20. (யஶ்ச ராமம் நபஶ்சயேத்து) என்கிற ஶ்லோகம் வந்தவாறே ஸ்வகத ஸ்வீகார பரகத ஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே, “நித்ய ஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார். பின்பு எம்பாரை உதகபூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து, “நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்; அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை ஸம்பந்தம் நேராகப்பெற்றதில்லை என்று ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம். ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது. இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார். இதுவும் ஸம்ப்ரதாயம்.
உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க, ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே? ஆசார்ய ஸம்பந்தத்தாலேயன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் – தஶரதவஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராமக்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து 21 (கிங்கரௌ ஸமுபஸ்தி தௌ) என்றும் 22 (தவாஹம் தாஸபூதோ ஸ்மி கிமத்ய கரவாணி தே ) என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே, ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.
23. (விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே ) என்றும், 24. (இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா | மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || ) என்றும் சொல்லுகிறபடியே ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய், தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே , உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே அவர்களுக்குப் பேறு அவராலேயாகக் குறையில்லை. இங்கு அப்படிக் கூடாதே – என்னில் இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்- 25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய: என்றும், 26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும், “திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி உடையவரும் அவதார விசேஷமாகையாலும், பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாதஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய் ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும் நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.
(கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து, யதுவம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே, ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே. ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க, இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று – எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும், ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது. அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜதர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.
கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே, ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து, “தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன், திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே, 12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச்செய்து, “நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதிகொண்டு அவர் தந்தோமென்றால் போய்வாரும்” என்றருளிச்செய்தார், அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி, ‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய, ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, “க்ருஷ்ணன் கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார். பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.
ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி, “உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று பட்டரை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளி, “நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்; அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை. “நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.
உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க, ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி, உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி, “நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள். நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும். நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார். அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று. தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும். இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.
மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து “மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே. தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது – பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய், பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல் தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய், கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.
உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:” என்கிறபடியே எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய், மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி, க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது. ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.
உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே. கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள, நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு, அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க, அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே. குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப் பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத் தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து, அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி, “எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன். ‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே. இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே. அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப் பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள். இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.
உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி, நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,-34. “ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி | மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||” என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள். இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள். இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக்கொண்ட விரகெங்ஙனே? அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள, உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்; தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன, நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி, எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக்காணீரென்ன, உடையவரும்
18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்| மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் | ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய, த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய, நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில் ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும், ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே! இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து, ‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார். இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம். ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது – உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.
நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே, பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸதுர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல் வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க, “இவையிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார். பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று சதுரராய் கேட்க , ”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.–35. ““ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷய| பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||” என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.
காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்து, பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத் தேட்டமாய், தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே, எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப்பண்ண, அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண, அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி, “நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர். எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச்செய்ய, திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி, தேவியாரையும் அறத்துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக் கண்ணும் கண்ணீருமாய்க் கைகால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப்புக்கவாறே இது ஏதென்று கேட்டருள, அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய, உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீபாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை, நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழவிடத்தக்கதில்லை. நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறைவராது. ஸர்வபரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரராய் மார்விலே கைபொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் – என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.
கணியனூர் சிறியாச்சான் ஸசேலஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப் பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக்கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,–36 “(ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||) என்று அருளிச் செய்து “எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரிப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன், ப்ரபன்ன குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.
ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி ப்ராப்யபூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே? ப்ராப்யம் கைபுகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில், அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு, ஆகையிறே, 38. (அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.
39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்) என்கிறபடியே ப்ராப்யபூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே, ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும், 40. (உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ) என்கிறபடியே இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்; அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளிவிஞ்சிச் செல்லா நிற்கும். மற்றையது உள்ளடங்கியிருக்கும். இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்; ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை. 37. (உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே. இவை வடிவாகையாலேயிறே 38. (அத்ர பரத்ர சாபி) என்றது. 37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய்யோகவ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும். அதாவது கார்யகாலத்தில் சரமபர்வம் ஸ்வவ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி. பகவத் ஸம்பந்தம் அஞ்சியிருக்க அடுக்கும்; இது நிஸ்ஸம்ஶயமிறே. அது ஸம்ஸாரபந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத்ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும். ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை. ஈஶ்வர விஷயஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி. ஆசார்ய விஷயஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூபவிகாஸத்தைப் பண்ணுவது. இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாயபூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற ப்ரதிபத்தி தத்ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.
பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி எங்ஙனேயென்னில், நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து, பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து “ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்” என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய, அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க, அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட, ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி, அதுதன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணியிருக்க, பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால் செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகாரஸ்ம்ருதி யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி, “நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ? தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை. நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு. நாதமுனிகளிடத்திலே பேற்றுக்குடலாக உபாயத்வத்தை அறுதியிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே 41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே. ஆகையாலே-41. (மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும் ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே. 38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே, அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத்ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.
பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே 42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா என்கிறபடியே நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன, ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி, ”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை. உமக்கு மெய்யே பேறு கைப்படவேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேகநிஷ்டராய் இரும். இல்லையாகில் நித்யஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார். இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல். தத்வயதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்- “இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று “இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால் பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே. இனி சரமபர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதமபர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.
ஆஸன்னமான சரமபர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதமபர்வத்தைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே. அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்தகுருவை” என்று.
“சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான். ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கிபுரத்து நம்பி வார்த்தை “ததீயஶேஷத்வஜ்ஞானமில்லாதவனுக்குத் தச்சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய்விடும். பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத்ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும். ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதமபர்வத்தில் கைவையான்” என்றபடி. அன்றிக்கே, “ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத்க்ருதமான ஸ்வரூபஸங்கோசத்தை உடையனாம். ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கவேணும். சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம். இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கைவிடும். ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கைவிடும். சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை. எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கைபார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.
“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால், பின்னை அங்ஙனல்லது இராதிறே. ‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே. இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறையில்லை. இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.
எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்கவேணுமிறே. எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமலப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே. அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே” என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே. அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக்கூடாது என்றபடி. பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்லவேணுமென்கையாலே தந்நாமாநுஸந்தானம் தத்பாத கமலப்ராவண்ய (ஜநக?)மென்றபடி, இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே. “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார். “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி ஆறொன்றுமில்லை” என்று அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால், ப்ரதமபர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது. இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக்கலசாதபடி இருக்கவேணுமென்றபடி. இல்லையாகில் இருகரையர் என்னுமிடம் சொல்லப்படும்.
வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடுகநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம். ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே. இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று. ஒரு நாள் எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்தருளி, ‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள ‘வேம்பின் புழுப்போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார். அதாவது – வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதியிட்டிருப்பது தத் அபிமானத்தையொழிய வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி. ‘கரும்பின் புழு’ என்று சொல்லுகையன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில் பரமதயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத் தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும், ‘நான் உன்னையன்றியிலேன்” என்கிறபடியே ததபிமானராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி “களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று. இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரணத்ரயத்தாலும் ததேகநிஷ்டனாயிருக்கிறவன் தத்வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி. ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத்வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே. “பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ரவித்தமரான அமுதனார்.
நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே, எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள, அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து, “உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும். உம்மையண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய, நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய, பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து, நம்பிள்ளை சரமதஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில், “எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ? அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரையவேண்டா. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்; நான் பெற்றபேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.
இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய், பரமகாருணிகராய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய் அவர் திருவடிகளையே ப்ராப்யப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள் களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி. இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில், “உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம். “இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீலகுணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே. “இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே, எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர்மிண்டரோடே ஸஹவாஸமின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி. “சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே தத்ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி. எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில் ஸ்வரூபஹானி பிறக்குமிறே. ”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி. “இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்கையாலே, எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி. “அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத்ஸ்மரணமே, அநிஷ்டநிவ்ருத்திகரம் என்றபடி தத்விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம். ‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தியிருக்கும்படி தச்சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம். “உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தாதாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரிக்ருத்யம். “இராமானுசன் திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி “செய்வன் சோர்வின்றியே” என்கையாலே எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸயுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம். எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும். “இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.
இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுகமண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய, அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம் அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்மதீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம். இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“, “இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர்தம் கழல் பிடித்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும். உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply