ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித |
பக்திஶ்ச நியதா வீர பாவோ நன்யத்ர கச்சதி ||
ஸ்வாமியே தேவரீர் இடத்திலே எனக்கு மேலான அன்பானது எப்போதும் நிலை நிற்கிறது -வீரரே -உம்மிடத்தில் பக்தியும் நித்தியமாய் இரா நின்றது -என் நினைவு ஸ்ரீ வைகுண்ட நாதன் இடத்திலும் செல்லுகின்றதில்லை –
——-
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-
என்னுடைய வம்சத்தவர்களுக்கு எப்போதும் தாய் தந்தையரும் மாதரும் மக்களும் பெரும் செல்வமும் மற்றுமுள்ள எல்லாமுமே எந்த ஆழ்வாருடைய திருவடி இணையேயோ -நமக்கு முதல்வரும் குலபதியுமான அவருடைய மகிழ மலராலே அலங்கரிக்கப் பட்டதும் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையும் யுடையதுமான அந்தத்திருவடி இணையைத் தலையால் வணங்குகிறேன் –
———-
ஸ து மேதாவினவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ்
வேத உப ப்ராஹ்மண அர்த்தாயா தவா க்ராஹயத ப்ரபு –பால-4-6-
அந்த வால்மீகி பகவான் மேதாவிகளாய் -வேதங்களில் தேர்ந்தவர்களான அவர்களைக் கண்டு -வேதத்தை விவரிப்பதற்காக அவர்களைச் சேர்த்துக் கொண்டார் –
———
ஸ ஜகாம வனம் வீர ப்ரதிஜ்ஞா மநு பாலயன்
பிதுர் வசன நிர்தேசாத் கைகேய்யா ப்ரிய காரணாத் –பால -1-24-
வீரரான அந்தப் ராமர் ப்ரதிஜ்ஜையைப் பரிபாலித்துக் கொண்டு பிதாவினுடைய ஆஜ்ஜையாலும் கைகேயிக்குப் பிரியமாய் இருக்கையாலும் வனத்துக்குச் சென்றார் –
———————
அகஸ்த்ய வசநாச ச ஏவ ஜக்ராஹ இந்த்ரம் ஸராஸநம்
கட் கஞ்ச பரம ப்ரீதஸ் தூணீ சாஷய ஸாயகவ்–5-
அகஸ்தியருடைய நியமனத்தின் பேரில் ராமபிரான் இந்திரனுடைய வில்லையும் கத்தியையும் குறையாத அம்புகளையும் யுடைய இரு தூணிகளையும் ஏற்றுக் கொண்டான்-
————
ததஸ் ஸூக்ரீவ வஸனாத் தத்வா வாலிந மாஹவே
ஸூக்ரீவம் ஏவ தத் ராஜ்யே ராகவ ப்ரத்யபாதயத் –6-
அதற்குப் பின் ஸூக்ரீவன் சொன்னதற்கு இணங்கி வாலியைச் சண்டையில் கொன்று ஸூக்ரீவனையே அவனுடைய ராஜ்யத்திலே நிலை நிறுத்தினான் –
————-
தர்ஸ யாமாஸ சாத்மானம் ஸமுத்ர சரிராம் பதி
ஸமுத்ர வஸனாத் ச ஏவ களம் சேதும் ஆகாரயத் —7-
நதிகளின் பதியான கடல் அரசன் ராமபிரான் முன் தோன்றினான் -அக்கடல் அரசன் சொன்னபடி நளனைக் கொண்டு அணை கட்டுவித்தான் ராமன் –
————
குருஷ்வ மாம் அநு சரம் வை தர்ம்யம் நேஹ வித்யதே
க்ருதார்த்தோ அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த ப்ரகல்பதே -அயோத்யா -31-24—8-
அடியேனைக் கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும் -இதில் தவறு ஒன்றுமே இல்லை -இதனால் நான்முகன் தன்யனாவேன் -உம்முடைய காரியமும் நடை பெறும் –
———-
பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதச் ச தே –பால–31-25-
நீர் வைதேஹியுடன் கூட மலைத் தாழ்வாரையில் விளையாடுவீர் -அடியேன் நீர் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் தூங்கும் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன் –
—————-
ராஜ்யம் ச தவ ரஷேயம் யஹம் வேலே வ சாகரம்
ப்ரதிஜா நாமி தே வீர மாபூவம் வீர லோக பாக் –அயோத்யா -23-27-
வீரனே கடலுக்கு கரைப்போலே உள்ள நான் உம்முடைய அரசையும் ரஷிக்கக் கடவேன் -அப்படிச் செய்ய வில்லையாகில் உம் ராஜ்யத்திலே வாழக் கடவேன் அல்லேன் -வீரரான தசரதன் சென்ற உலகிற்குச் செல்லக் கடவேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறேன் –
————-
தம் மத்த மாதங்க விலாஸகாமீ கச்சந்த மவ்யக்ரமநா மஹாத்மா
ஸ லஷ்மணோ ராகவன் இஷ்ட சேஷ்டா ரரஷ தர்மேணே பலேந ச ஏவ-கிஷ்கிந்தா -1-128-
மதம்கொண்ட யானையினுடையது போன்ற நடையை யுடையவனும் -ராம பிரானைத் தவிர வேறு ஒன்றில் ஈடுபடாத மனத்தை யுடையவனும் -மஹா புருஷனும் -ராம கைங்கர்யத்தை இனிதாகக் கொண்டவனுமான லஷ்மண தனக்கும் முன் செல்லும் ராமபிரானை தர்மத்தாலும் பலத்தாலும் ரக்ஷித்தான் –
——–
கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத –அயோ -1-1-
பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –
———
பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் –சாகுந்தலம் -7-
ராஜ்யத்தைப் பரித்து-தாங்கி -நின்றதாலே பரதன் எனப்படுகிறான் –
———
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –மங்களமான -3-1-3-
பரம புருஷனை சாஷாத் கரித்தவுடன் ப்ரஹ்ம ஞானியானவன் புண்ய பாபங்களை விட்டு -ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்றவனாய் -மேலான ஸாம்யத்தை அடைகிறான் –
———-
ரூப ஒவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம் –அயோ -3-29-
வடிவழகு -வண்மை -குணங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்ணையும் நெஞ்சையும் அபஹரிக்கும் ராமனை –
———-
மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –கீதை -10-9-
என்னிடம் நிறைந்த மனத்தை யுடையவர்களாய் -என்னிடமே தங்கள் உயிரை வைத்தவர்களாய் -என்னுடைய குணங்களை ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய் -என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் -சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள் –
—————
த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவ அர்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய சத்வஸ்தோ நிர்யோக ஷேம ஆத்மவாந் –2-45-
அர்ஜுனா முக்குணங்களில் ஒற்றொன்றை அதிகமாக யுடைய புருஷர்களுக்காக ஏற்பட்டது வேதங்கள் -நீ ஒன்றோடு ஓன்று கலந்த முக்குணங்கள் அற்றவனாய் -ஸத்வ குணத்தையே பெருக்கிக் கொள்வாயாக – ஸூக துக்காதிகளாகிற சாம்சாரிக ஸ்வ பாபங்கள் அற்றவனாய் -எப்போதும் சத்வத்திலேயே நிலை நிற்பவனாய் -இல்லாத புறப் பொருளை அடைவது -இருப்பவற்றை ரக்ஷிப்பது என்னும் இரண்டுமே இல்லாதவனாய் -உட்ப்பொருளான ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபாடு யுடையவனாக ஆவாயாக –
———–
ப்ராஜா பத்யம் க்ருஹஸ்தாநம் ப்ரஹ்மம் ஸந்யாஸிநாம் ஸ்ம்ருதம்
யோகிநாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷி காரிணாம்
ஏகாந்திநா ஸதா ப்ரஹ்ம அத்யாயிநோ யோகிநோ ஹியே
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-37-38-
இல்லற தர்மத்தை அனுஷ்ட்டிப்பாருக்கு பிரஜாபதி லோகமும்
துறவற தர்மத்தை அனுஷ்ட்டிப்பாருக்கு பிரமனின் உலகமும்
தன் ஆத்மாவில் இனிமை காணும் கைவல்ய நிஷ்டனுக்கு அழியாத கைவல்ய ஸ்தாநமும்
எப்போதும் ப்ரஹ்மத்தைத் தியானிக்கும் ஏகாந்திகளான யோகிகளுக்கு நித்ய ஸூரிகள் எப்போதும் அனுபவிக்கும் மேலான பரமபதமாகிற ஸ்தானமும்
அடையத் தக்கதாகிறது-
———-
த்ரயோ குணாஸ் த்ரை குண்யம் ஸத்வ ரஜஸ் தமாம்ஸி
ஸத்வ ரஜஸ் தமஸ் ப்ரசுரா புருஷா த்ரை குண்ய சப்தேக உச்யந்தே
தத் விஷயா வேதா -ஸ்ரீ கீதா பாஷ்யம் –2-45-
ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற முக்குணங்களும் த்ரை குண்யம் என்றும் சொல்லப் படுகின்றன -அம் முக் குணங்களை அதிகமாக கொண்ட புருஷர்கள் த்ரை குண்யர் எனப்படுகின்றனர் -அவர்களுக்காக இருப்பவை வேதங்கள் –
————–
கோ தர்ம ஸர்வ தர்மாணாம் பவத பரமோ மத –
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்ம அதிக தமோ மத
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச் சேந்நர ஸதா –ஸஹஸ்ர நாம அத்யாயம்
எல்லா அறங்களினுள்ளும் எந்த அறம் மிகச் சிறந்தது என்று தேவரீர் நினைக்கிறீர்
மனிதன் பக்தியோடு தாமரைக் கண்ணனை ஸ்துதிகளால் எப்போதும் அர்ச்சிப்பதாகிய இதுவே எல்லா அறங்களினுள்ளும் மேலான அறம் என்றும் என் நினைவு –
———-
மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸ –ஸூந்தர –35-11-
உலகத்தின் வரம்புகளைச் செய்பவனும் செய்விப்பவனும் ராமபிரானே –
————
ஸ ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன
ஸீதாம் உவாஸா தியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் –-அயோத்–31-2-
ரகுகுலத்தை உகப்பிப்பவனும் -மிகுந்த கீர்த்தியையும் யுடையனான அந்த லஷ்மண தமையனின் திருவடிகளை நன்றாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும் ஆஸ்ரித ஸம் ரக்ஷணமான விரதத்தை யுடைய ராகவனையும் பார்த்துச் சொன்னான் –
———–
நதஸ் ஸிரஸி க்ருத்வா து பாதுகே பரதஸ் ததா
ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்நேந ஸமந்வித –அயோத்–113-1-
பிறகு சத்ருக்நனோடு கூடிய பரதன் தனது தலையிலே ராம பாதுகைகளை வைத்துக் கொண்டு மிக உகந்தவனாய் அப்போதே தேரில் ஏறினான் –
—————–
புஷ்யே ஜாதஸ்து பரதோ மீந லக்நே ப்ரஸந்நத்
ஸார்ப்பே ஜாதவ் ச ஸுவ் மித்ரீ குலீரே அப்யுதிதே ரவவ் –பால –20-13-
தெளிந்த அறிவையுடைய பரதன் மீன லக்னத்தில் புஷ்ய நக்ஷத்திரத்தில் பிறந்தான்
சுமித்ரையின் புத்ரர்களான லஷ்மண சத்ருக்நர்கள் கடக லக்னத்தில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தனர்-
—————
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்
சந்த்ர இவ ராஹோர் முகாத் ப்ரமுஸ்ய
தூத்வா ஸரீர மக்ருதம் க்ருதாத்மா
ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவா மீத்யபி சம்பவா மீதி –சாந்தோக்யம் –8-13-1-
குதிரை மயிர்களை உதிர்த்து போலே பாபத்தை விட்டு ராஹுவின் வாயிலிருந்து நீண்ட சந்திரன் போல் சரீரத்தை விட்டு நித்தியமான பகவல் லோகத்தை க்ருதார்த்தனாய் இருந்து கொண்டு அடையக் கடவேன்-
———
ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய ஸ்வ அனுக்ரஹஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மா கார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –அயோத்–40-5-
குழந்தாய் நீ வம்சத்தில் வசிப்பதற்காகவே ஸ்ருஷ்டிக்கப்பட்டு இருக்கிறாய் -உன்னுடைய ஸூஹ்ருத்தான ராமனிடம் மிகவும் அன்பு பூண்டவனாய் இருக்கிறாய் -உனது தமையனான ராமன் நடந்து செல்லுகையில் -அந்த நடை அலகிலா ஈடுபட்டு -அவனை ரக்ஷிப்பதில் கவனமில்லாமல் இருந்து விடாதே –
————
ஜக்ராஹ பரதோ ரஸ்மீன் சத்ருக்நச் சத்ரமாததே
லஷ்மணோ வ்யஜனம் தஸ்ய மூர்த்தினி சம்பர்ய வீஜயேத் -யுத்த -131-28
ராமபிரானுடைய தெற்குதிரையின் கடிவாளங்களை பரதன் பிடித்துக் கொண்டான் -சத்ருக்கனன் ராமனுக்கு குடை பிடித்தான் -அந்த ராமபிரானுடைய திருமுடியில் லஷ்மணன் விசிறியால் வீசினான் –
————-
ராமம் ஏவ அநு சிந்தையன்
ராமனையே நினைத்துக் கொண்டு
————
ஸ்வ தந்த்ர கர்த்தா -அஷ்டாத்யாயீ -1-4-54-
ஒரு செயலில் ஸ்வா தந்தர்யம் உள்ளவனாகக் கருதப்படுபவனே கர்த்தாவாவான்-
————-
கதாந் வஹம் சமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயா ச ரகு நந்தன –-ஆரண்ய -16-40-
ரகுகுலக் குழந்தாய் -மஹாத்மாவான பரதனுடனும் வீரனான சத்ருக்நனோடும் உன்னோடும் என்றும் தான் கூடி வாழப் போகிறேன் –
————-
ததஸ்ய த்ரிவிதஸ்யா அபி துக்க ஜாதஸ்ய வை மம
கரப்ப ஜென்ம ஜராத்யேஷு ஸ்தாநேஷு ப்ரபவிஷ்யத
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூக பாவ ஏக லஷணா
பேஷஜம் பகவத் ப்ராப்திர் ஏகாந்தாத் யந்திகீ மதா--ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-58-59-
கரப்பம் பிறப்பு கிழத்தனம் முதலிய அவஸ்தைகளில் உழலும் என்னுடைய ஆத்யாத்மீக ஆதிதைவீக ஆதிபவ்திக ரூபமான தாப த்ரய துக்க ஸமூஹத்துக்கு
தனக்கும் மேலில்லாத ஆனந்தரூபமான ஸூகமாய் இருக்கையை லக்ஷணமாக உடையதும் துக்கமற்றதும் முடிவற்றதுமான பகவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப் படுகிறது –
———–
தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ந கர்தவ்ய பண்டிதைர் நரை
தத் ப்ராப்தி ஹேதுர் ஞானஞ்ச கர்ம சோக்தம் மஹாமுநே –6-5-60-
மஹா முனிவரே -கீழ்க் கூறிய காரணத்தாலேயே அந்த பகவானை அடைய அறிவாளிகளான மனிதர்களால் முயற்ச்சி செய்யப்பட வேண்டும் -அவனை அடைவதற்கு ஞானமும் கர்மமும் உபாயங்களாகச் சொல்லப் படுகின்றன –
———
மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண —ஸூபால-16-
நாராயணன் தாயாகவும் தந்தையாகவும் தன்னுடன் பிறந்தவனாகவும் தங்கும் இடமாகவும் மோக்ஷ உபாயனாகவும் நண்பனாகவும் மோக்ஷத்தில் அடையப்படு மவனாகவும் இருப்பவன் –
————-
யேந யேந வியுஜ்யந்தே ப்ரஜா ஸ்நிக்தேந பந்துநா
ஸ ஸ பாபா த்ருதே தாஸாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் –சாகுந்தலம் -6-23-
குடிகள் எந்த எந்த அன்பு மிக்க உறவினரை இழக்கின்றனரோ -ஸ்திரீக்குப் பதியாய் இருக்கும் அந்தப் உறவைத் தவிர அந்தப் அந்தப் உறவினராக துஷயந்தனே இருப்பானோ என்றும் கோஷிக்கப் படட்டும் –
———–
கதிர் பர்த்தா ப்ரபுஸ் சாஷீ நிவாஸ சரணம் ஸூஹ்ருத்
ப்ரபவ பிரளய ஸ்தாநம் நிதானம் பீஜம் அவ்யயம் –கீதை -9-18-
அசையும் இடமும் -தாங்கி நிற்பவனும் -நியமிப்பவனும் -அனைத்தையும் நேரே காண்பவனும் -இருப்பிடமும் -உபாயமும் நண்பனும் -ஒவ்வொருவருக்கும் உத்பத்திக்கும் -அழிவுக்கும் ஸ்தானமாய் இருப்பவனும் -உத்பத்திக்கும் பிரளயத்துக்கும் விஷயமாகும் வஸ்துக்களும் அழியாத காரணமும் நானே –
————-
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ –தைத்ரியம் சீஷா –11-2-
அகில ஜன மாதாவான பிராட்டியையும் -அழிவற்ற தந்தையான அச்சுதனையும் -அறியாதன அறிவித்த ஆச்சார்யனையும் விருந்தாகும் பெரும் தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –
——–
உபாயே க்ருஹ ரஷித்ரோச் சப்தஸ் சரணம் இத்யயம்
வர்த்ததே ஸாம் ப்ரதம் சைஷ உபாயார்த்த ஏக வாசக –அஹிர்புத்ந்ய சம்ஹிதை -37-29-
சரணம் என்னும் இவ்வார்த்தை உபாயம் வீடு காப்பாற்றுபவன் என்னும் அர்த்தங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது -இப்போது இது உபாயம் என்னும் அர்த்தத்தையே சொல்லுவதாய் இருக்கிறது –
———–
அதிதிர் யத்ர பக்நாஸோ க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே
ஸ தஸ்மை துஷ்க்ருதம் தத்வா புண்யமாதாய கச்சதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-9-15-3-11-66-
யாதொரு வீட்டின் நின்றும் விருந்தாளி விருப்பம் நிறைவேறப் பெறாதவனாய்த் திரும்புகின்றானோ அந்தப் விருந்தாளி வீட்டுக்காரனுக்குத் தன் பாபத்தைக் கொடுத்து அவனுடைய புண்ணியத்தை எடுத்துக் கொண்டு செல்கிறான் –
—————
யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரவ்
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா ப்ரகாஸந்தே மஹாத்மந–ஸ்வே –6-23-
எவனுக்குப் பரமபுருஷனிடம் மேலான பக்தி உள்ளதோ -பரமனிடன் போல் ஆச்சார்யனிடமும் மேலான பக்தி உளதோ அப்படிப்பட்ட மஹாத்மாவுக்குச் சொல்லப்பட்டால் தான் இந்த அர்த்தங்கள் புலப்படும் –
————-
அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-
அசேதனத்தைப் போல் அல்லாமல் விகாரம் அற்றவனாகவும் -ஸம்ஸாரி சேதனனைப் போல் அல்லாமல் அசத்தி இல்லாதவனாகவும் -முக்தாத்மாவைப் போல் அல்லாமல் நித்ய சுத்தனாகவும் -நித்ய ஸூரிகளை போல் அல்லாமல் தனக்கும் மேல் ஒருவன் அற்றவனாகவும்-எப்போதும் ஒருபப்பட்டு இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாவும் -ஸர்வ வ்யாபியாகவும் -எல்லாவற்றையும் ஜெயிப்பவனுமாயுள்ள பகவானுக்கு நமஸ்காரங்கள் –
———
ப்ரதாந க்ஷேத்ரஜ்ஞபதிர் குணேச ஸம்ஸார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது —ஸ்வே -6-16-
ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் ஸ்வாமியாய் -குணங்கள் நிறைந்தவனாய் -ஸம்ஸாரம் விடுபதற்கும் நிலை நிற்பதற்கும் கட்டுவதற்கும் காரணமாய் இருப்பவன் பரமாத்மாவே –
——–
இத் யுக்த்வாத நிஜம் கர்ம ஸ சகார குடும்பிநீ —ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-15-
துறு துறுக்கைத்தனம் யுள்ளவனே உன்னால் முடியுமானால் இப்போது போ என்று குடும்பினியான அவள் வீட்டு வேலைகளைச் செய்யலுற்றாள் –
—————–
ஸ கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம் பத்யதே
ந ச புனராவர்த்ததே ந ச புனராவர்த்ததே –சாந்தோக்யம் -1-15-1-
அந்தப் முமுஷுவானவன் ஆயுள் முடியும் வரையில் இப்படி வாழ்ந்து ஆயுள் முடிந்த பின் ப்ரஹ்மத்தின் உழகைப் அடைகிறான் -இங்கு திரும்பி வருவதே இல்லை –
———-
ந வா அரே ஸர்வஸ்ய காமாய ஸர்வம் பிரியம் பவதி
ஆத்மநஸ்து காமாய ஸர்வம் பிரியம் பவதி –ப்ருஹதா -6-5-6-
எல்லாப் பொருள்களில் விருப்பத்திற்காக எல்லாமே இனியவை ஆகின்றன அல்ல -ஆத்மாவின் விருப்பதற்க்கே எல்லாமே இனியவை யாகின்றன –
———
ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி கோ ஹ்யேவாந்யாத் க ப்ராண்யாத்
யதேஷ ஆகாஸோ ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ ஹ்யேவ ஆநந்தயாதி –தைத்-ஆனந்த -7-
ரஸ-ஆனந்த ஸ்வரூபன் அன்றோ அந்தப் பரம புருஷன் -ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்த இந்த ஜீவன் ஆனந்தத்தை உடையவனாகிறான் -பிரகாசிப்பவனும் -ஆனந்த ஸ்வரூபனுமான இப்பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள ஸூகத்தையோ மோக்ஷ ஸூகத்தையோ அடைய முடியும் -ஆகையால் இவனே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான் –
——-
வைகுண்ட சரணாம்போஜ ஸ்மரண அம்ருத ஸேவிக–
ஸ்ரீ வைகுந்தனின் திருவடித் தாமரை இணையின் நினைவாகிற அம்ருதத்தைப் பருகுமவர்கள் –
———
கச்சதாம் தூரமத்வாநம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம்
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –
நெடுவழி நடப்பவர்களும் தாஹத்தால் மயங்கிய நெஞ்சை யுடையவர்களுமான அவர்களுக்குத் தாமரைக் கண்ணனின் திருநாம சங்கீர்த்தனம் கட்டுச் சோறாகும் –
———
வாஸூ தேவோ அஸி பூர்ண
ஞாநாதி குணங்கள் ஆறும் நிறைந்த பர வாஸூ தேவனாய் இருக்கிறாய் –
———-
க்ருஷிர் பூ வாசக சப்தோ ணச்ச நிர்வ்ருதி வாசக
விஷ்ணுஸ் தத் பாவ யோகாச்ச க்ருஷ்ண இதயபீதியதே —
கிருஷி சப்தம் கிருஷி விஷயமான பூமியைச் சொல்லும் சொல் -ஆனந்தத்துக்கு விளைநிலமாய் இருக்கும் அத் தன்மையை உடையவனாகையாலே விஷ்ணுவானவர் கிருஷ்ணன் என்றும் சொல்லப் படுகிறார் –
————
பக்தி க்ராஹ்யோ ஹி கேசவ
பக்திக்குக் கட்டுப்பட்டவன் கேசவன்
——–
அபங்குர பக்திபவ்ய
அசையாத பக்திக்கே வசப்படுமவன்
——-
பக்த்யா மாம் அபி ஜாநாதி யாவாந் யஸ்ஸாஸ்மி தத்த்வத
ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே தத் அநந்தரம் –18-55-
ஸ்வரூப ஸ்வ பாவங்களில் நான் எவனோ -குண விபூதிகளில் நான் எவ்வளவு பட்டவனோ -அப்படிப்பட்ட என்னை பக்தியினால் உள்ளபடி அறிகிறான் -என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பின் பக்தியினாலேயே என்னுள் நுழைகிறான் –
————-
பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-11-54-
அர்ஜுனா எதிரிகளை அழிப்பவனே -ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம்மாதிரியான நான் உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் நுழைவதற்கும் தக்கவன் –
—————
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா
யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்–8-2-
பார்த்தனே யாவன் ஒருவனுக்குள் ஸகல பூதங்களும் உள்ளனவோ -எவனால் இது எல்லாம் வியாபிக்கப் பட்டதோ அந்தப் பரம புருஷன் வேற்றிடம் செல்லாத பக்தியினாலேயே அடையத் தக்கவன்-
———–
நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ||–கட வல்லி –1-2-23-
இந்தப் பரமாத்மாவானவர் -பக்தி யற்ற ஸ்ரவணம் மனனம் த்யானத்தாலும் அடையற் பாலரன்று; இந்தப் பரமானத்மாவானவர் எவனை விரும்பி வரிக் கின்றாரோ, அவனாலேயே அடையப்படுகின்றார்; அவனுக்கு இந்தப் பரமாத்மாவானவர் தமது ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டிகின்றார்-
———-
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ –பரத்வாஜ ஸம்ஹிதை
வெகு சீக்கிரமாக பகவானை உகப்பிக்கும் அஞ்சலி மேலான அடையாளமாய் இருக்கிறது –
————
க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்த்ரேண அஞ்சலிம் பக்த்வா லஷ்மணஸ்ய ப்ரஸாத நாத் -கிஷ்கிந்தா -32-17-
ராமனிடம் அபராதம் செய்த உனக்கு கைகூப்பி லஷ்மணனை உகப்பித்தைத் தவிர வேறு ப்ராயச்சித்தத்தை நான் காண்கிறேன் அல்லேன் –
———-
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத –கிஷ்கிந்தா -4-12-
நான் இவர் நினைவால் இவருக்குத் தம்பி -உண்மையில் இவருடைய குணங்களால் அடிமைப்பட்டவன் –
————-
பஞ்ச சக்தி மயே திவ்ய ஸூத்த ஸத்வே ஸூக ஆகரே த்ரிபாத் விபூதவ் பகவான் ஈஸ்வர்யா பரமேஸ்வர நித்ய முக்த ஏக போக்யோ அசவ் மோததே பகவான் ஹரி –
பஞ்ச சக்திமயமாய் -அப்ராக்ருதமாய் -ஸூத்த ஸத்வ குண மயமாய் -ஸூகத்திற்கு இருப்பிடமான பரமபதத்தில் ஈஸ்வரான பிராட்டியாரோடே கூட பரம புருஷனாய் ஞாநாதி பூர்ணனான இந்த ஹரி நித்ய முக்தர்களுக்கு அநு பாவ்யனாய் இருக்கிறான் –
———–
அசித் அவிசேஷிதான் பிரளய ஸீமநி ஸம்ஸாத கரண களேபரைர் கடயிதும் தயமாந மநா
வரத நிஜேச் சயைவ பரவா நகரோ ப்ரக்ருதிம் மஹத் அபிமான பூத கரணா வலி கோரகிணீம் –ரெங்கராஜ ஸ்தவம் -2-41-
வரம் தரும் பெருமானே -பிரளய காலத்தில் அசேதனத்தைக் காட்டிலும் வாசி யற்றவராய் உழலுகின்ற ஜீவராசிகளை இந்த்ரியங்களோடும் சரீரங்களோடும் சேர்க்கத் திரு உள்ளம் இரங்கியவனாய் -தனது சங்கல்ப வசப்பட்டவனாய் -மூலப்பிரக்ருதியை மஹான் அஹங்காரம் பஞ்சபூதங்கள் இந்திரியங்கள் ஆகிய இவற்றில் வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி பண்ணினாய் –
———–
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வரஸ்ய நிவேதிதம்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா –விஷ்ணு தத்வம் -6-
ப்ராஹ்மணரே கை கால் முதலியவைகளுடன் கூடியதும் விசித்திரமான தேஹமாகிற இச்செல்வம் சர்வேஸ்வரனுக்கு சமர்ப்பித்தற்காக ஆதிகாலத்திலே செய்யப்பட்டு இருக்கிறது –
—————
ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–-ரெங்க ராஜ ஸ்தவம்-2-1-
கருணைக் கடலான எம்பெருமான் அஞ்ஞானமாகிற இருளை நீக்கிக் கொள்ளவும் -நன்மை தீமைகளை ஆராய்வதற்கும் -இருட்டைப் போக்கடிப்பதற்கும் -உள்ளவற்றையும் இல்லாதவற்றையும் ஆராய்ந்து அறிவதற்கும் சாதனமான விலக்கைப் போன்ற வேதத்தைக் கொடுத்தான் -பாக்கியவான்கள் அந்தத் திருவிளக்கைக் கொண்டு அந்த சர்வேஸ்வரனைக் கண்டு அனுபவிக்கிறார்கள் -சில சபலர்கள் அந்தப் விளக்கிலேயே வீட்டில் பூச்சியைப் போலே விழுந்து மடிகிறார்கள் –
———
உத்பத்யதே யதா லோகே துளஸீ கந்த ஸம்யுதா
எப்படி துளஸீ உலகில் வாசனையுடன் கூடவே உண்டாகிறதோ
—————
நாஹம் புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சையா வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன
நான் புருஷகாரத்தாலேயே அல்லது வேறொரு காரணத்தாலோ அல்லாமல் எனது விருப்பத்தாலேயே ஒரு சேதனனை ஒரு போது கடாஷிக்கிறேன் –
———
பால ஆஷோட சாப்தாத்து மகபாவம் கமிஷ்யசி
குழந்தையான நம்மாழவார் பதினாறு வயது வரையில் ஊமையாகவே இருப்பார்-
———–
அவ்யுச்சிந்நாஸ் ததஸ் த்வேதே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யந்த ஸம்யமா
உலகை ஆக்கல் அளித்தால் அழித்தல் என்னும் இந்த நியமங்கள் இடைவிடாமல் ஏற்படுவன-
————
1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும்
தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர்
இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-
பக்திர் அஷ்ட விதா ஹ்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே
ஸ விப்ரேந்த்ரோ முனி ஸ்ரீமான் ஸ யதி ஸ ச பண்டித
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம் –காருடம் –219-6-10-
என் பக்தர்களிடம் வாத்சல்யம் -என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல் -தானே என்னைப் பூஜித்தல் -எனது விஷயத்தில் ஆடம்பரம் அற்று இருத்தல் –எனது கதைகளைக் கேட்பதில் அன்பு -எனது கதைகளைக் கேட்க்கும் போது குரல் தழ தழத்தும் கண்ணீர் மல்கி உடம்பு மயிர்க்கூச்சு எறிந்தும் இருக்கை -எப்போதும் என்னையே நினைத்து இருக்கை -என்னிடம் வேறு ப்ரயோஜனத்தைக் கேளாது இருக்கை
இப்படி எட்டுவிதமான பக்தி யானது எந்த மிலேச்சனிடம் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஸ்ரேஷ்டன் -அவனே முனிவன் -அவனே தனவான் -அவனே பண்டிதன் -அவனுக்கு ஞானத்தை உபதேசிக்கலாம் – அவனிடமிருந்து ஞானம் உபதேசம் பெறலாம் -அவன் என்னைப்போலவே பூஜிக்கத் தக்கவன் –
————-
உதாரஸ் ஸர்வ ஏவைத ஞாநீத் வாத்மைவ மே மதம் –7-18-
இவர்கள் எல்லோரும் உதாரமானவர்களே -ஞானியோ எனக்கே ஆத்மா –தாரகன் -என்று எனது ஸித்தாந்தம் –
————–
ததோ அகில ஜகத் பத்ம போதாயாச்யுத பாநுநா
தேவகீ பூர்வ ஸந்த்யாம் ஆவிர்பூதம் மஹாத்மநா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1-
மஹாத்மாவாகிற அச்யுத ஸூர்யன் அனைத்தும் உலகமாகிற தாமரை மலருவதற்காக தேவகியாகிற கீழைத்திக்கில் தோன்றினான் –
————–
யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்கு சக்ர
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய -பரங்குச அஷ்டகம்
இருளைப் போக்கும் ஸூரியனுடைய ஆயிரம் கிரணங்களைப் போலே எவருடைய ஆயிரம் திருவாய் மொழிப் பாசுரங்களும் மனிதர்களின் அகவிருளைப் போக்குகின்றனவோ
ஸூர்ய மண்டலத்தைப் போலே நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடியவனாய் இவரிடத்தில் வஸிக்கிறானோ
வேதத்தில் காணும் ஸூர்ய மண்டலத்தை வணங்குவது போல் எவருடைய பிறப்பிடமான குருகூரை -குருகூர் சடகோபன் முதலிய பாசுரங்களில் காதில் கேட்ட மாத்திரத்தில் அந்தணர்கள் வணங்குகின்றனரோ அப்படிப்பட்ட வகுள பரணரான நம்மாழ்வாராகிய ஸூர்யனுக்கு நமஸ்காரம் –
—————
தேவம் இவா ஆச்சார்யம் உபாஸீத –ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரம்
பரமாத்மாவைப் போலவே ஆச்சார்யனையும் உபாஸிக்கக் கடவன் –
——–
குரு ரேவ பர ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி
குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பரம் தனம்
குரு ரேவ பர காமோ குரு ரேவ பரா யணம்
யஸ்மாத் தத் உபதேஷ்ட அசவ் தஸ்மாத் குரு தரோ குரு –சாத்வித ஸம்ஹிதை
குருவே மேலான ப்ரஹ்மம் -குருவே மேலான அறம் -குருவே மேலான கல்வி -குருவே மேலான பொருள் -குருவே மேலான இன்பம் -குருவே மேலான ப்ராப்யம் -அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அவனிலும் உயர்ந்தவன் –
———
ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாஷாத் சர ரூபி ந சம்சய
ஆச்சார்யனே நேரில் நடமாடும் பரம புருஷன் -இதில் ஐயமில்லை –
———
ஏஷ வை பகவான் ஸாஷாத் ப்ரதாந புருஷேஸ்வர —
ப்ரக்ருதி புருஷர்களுக்கு ஈசனான ஸாஷாத் பரமபுருஷன் இவ்வாச்சார்யனே –
———–
யோகீஸ்வரைர் விம்ருக் யாங்க்ரிம் லோகோயம் மநுதே நரம்
யோகியர் தலைவராலே தேடப்படும் பரம்பொருளை இவ்வாச்சார்யனை இவ்வுலகம் மனிதனாக நினைக்கிறது –
———-
ஸாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும்
மக்ந அநுத் தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா ஸம்ஸார பய பீருணா -ஜ்யாக்ய ஸம்ஹிதை -சாண்டில்ய வசனம்
ஸாஷாத் பரமபுருஷனே தனது கருணையினாலேயே ஆச்சார்யனாகிற மனித உருவை எடுத்துக் கொண்டு –சாஸ்த்ரங்கள் ஆகிற கைகளால் ஸம்ஸாரக்கடலில் முழுகி இருக்கும் உலகங்களைக் கைதூக்கி விடுகிறான் -ஆகையால் சம்சாரக்கடலைக் கண்டு பயந்தவன் குருவிடம் பக்தி செய்ய வேண்டும் –
———
த்ரேதாயாம் ரகு நந்தன -த்வாபரே நந்த ஸூநுச்ச கலவ் தேவ பராங்குச –
ஈஸ்வரன் தானே க்ருத யுகத்திலே ப்ராஹ்மண உத்தமரான அத்ரி பகவானுக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்-த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்வாபர யுகத்தில் கோ ரக்ஷணாதி தர்மத்தை யுடைய சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்தகோபருக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
கலியுகத்தில் நம்மாழ்வாராய் சூத்ர வர்ணத்திலே தேவனே தோன்றுகிறான் –
க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகைஸ் கலு ஷீக்ருதே -விஷ்ணோர் அம்ச ஸம் பூதோ வேத வேதார்த்த தத்வ வித் -ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவீட்யா நிஜபாஷயா -ஜனிஷ்யதி ஸதாம் ஸ்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா –
கொடிய கலியுகம் வந்தடைந்து நாஸ்திகர்களால் உலகம் கலங்கி இருக்கையில் சர்வேஸ்வரனுடைய ஓர் அம்ச அவதாரமாய் -வேதங்களுடைய உண்மைப் பொருளை நன்கு உணர்ந்த தத்வ வித அக்ரேஸராய் லோக ஹிதார்த்தமாக திராவிட பாஷையாலே வேதாந்த அர்த்தங்களைப் பிரபந்த்தீகரிக்கைக்கு நல்லோர் தலைவரான ஸ்ரீ சடகோபர் என்கிற திருநாமத்தை யுடையராய் ஒருவர் திருவவதரிக்கப் போகிறார்
———-
கலவ் புந பாபரதா அபி பூதே ஸ உத்பவத் ஆஸ்ரித வத்சலத்வாத் -பக்தாத்மநா விஸ்வ ஜநாந் ஸூ கோப்தும் விச்வாதிகோ விஸ்வமயோ ஹி விஷ்ணு -திருக்குருகூர் மஹாத்ம்யம்
பாவிகள் விஞ்சி நிற்கும் கலியுகத்திலும் ஸர்வ ஜன ஸம் ரக்ஷணார்த்தமாக சர்வாதிகனான சர்வேஸ்வரன் அடியார்களிடம் வாத்சல்யத்தாலே பக்த ரூபேண வந்து அவதரிப்பான்
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசிந் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிஸ-தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ -யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர -தேஷாம் நாராயணே பக்திர்ப் பூயஸீ நிருபத்ரவா -ஸ்ரீ மத் பாகவதம் -11-38-39-40-
நாராயணனையே பரம ப்ராப்யமாகக் கொண்ட ஞானாதிகரான சத்துக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களாலே பிரகாசிப்பித்து-தாமிரபரணி க்ருதமாலா பாலாறு பெரும் புகழ் பெற்ற காவேரி மேற்கு நோக்கிப் பாயும் பிரதீசி -மஹா நதி -போன்ற நதீ விசேஷங்களிலே -ஜல பானம் பண்ணுபவர்களுக்கு நாராயணனிடத்திலே தடையற்ற பக்தி அதிசயிக்கும்படியைச் சொல்லுகிறது – பிரதமத்திலே தாம்ர பர்ணீ நதீ யத்ர-என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தைச் சொல்லுகையாலே இவரே ப்ரபந்ந ஜன கூடஸ்தர் என்றதாயிற்று –
த்வதீயே பரார்த்தேஸ்மிந் திநே த்வாத்யேத சத்தமே –மந் வந்த்ரே வர்த்தமாநே த்விஷ்டா விம்ஸே சதுர் யுகே -கலே ராதவ்மாஸி ராதே காவ்ய வாரே குளீரகே -பவர்ணமாஸ்யாம் விசாகாக்யே தாரே மஹதி ஸோபநே -ப்ரஜாபதேர் ஜென்ம யோகீ சடகோப இதி ஸ்ம்ருத-மத் பக்தோஹம் பவிஷ்யாமி நேதும் த்ராவிடதாம் ஸ்ருதீ –திருக்குருகூர் மஹாத்ம்யம்
பிரமனின் இந்த இரண்டாவது பரார்த்தத்தில் சிறந்ததான முதல் தினத்தில் நடக்கும் வைவஸ்வத மன்மந்த்ரத்தில் இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் காளியின் தொடக்கத்தில் வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை கடக லக்னத்தில் பவுர்ணமி திதியில் மிக மங்களகரமான விசாக நக்ஷத்திரத்தில் காஸ்யப ப்ரஜாபதியான மறுபிறப்பான காரிக்குப் பிள்ளையான வேதம் தமிழ் செய்வதற்காக சடகோபர் என்னும் பக்தனாக நானே ஆவேன் –
———
தாம்ர பர்ணி யுத்தரே தடே தாந்த்ர க்ஷேத்ரே ஜெனிஷ்யதி
தாமிரபரணியின் வடகரையில் குற்றமற்ற ஷேத்ரத்தில் பிறப்பார்
——-
நிர் நித்ர தீந்த்ரிணீ ஸ த்வம் கத்வாத்ர புஜகாதிப -ஸர்வ அபிலாஷாந்த் ஸர்வேஷாம் நித்யமேவ ப்ரதாஸ்யதி -சடகோப முனீந்திர த்வம் ஸம் ப்ராப்ய த்ரிதஸேஸ்வர –தாம்ரபர்ணீ தடம் ப்ராப்ய ரஷிஷ்யத் யகிலான் ஜனான் -அத்ர வேதாஸ் சமஸ்தாச்ச த்ராவிடத்வம் உபாகத–வேதயிஷ்யந்தி தேவேசம் ஸகலா அபி மாதவம்
தூக்கமில்லாத திருவனந்த ஆழ்வானே -நீ சென்று திருக்குருகூரில் திருப்புளி ஆழ்வாராக எல்லாமே விருப்பங்களையும் எல்லோருக்கும் எப்போதும் அளிப்பாயாக – தேவதேவனான பரமம் சடகோபன் முனிவராகி எல்லாமே மனிதரையும் காப்பாற்றுவார் -இங்கு எல்லாமே வேதங்களும் தமிழ் பாஷையாகி அங்கங்கள் உப ப்ரஹ்மணங்களோடே கூடிய தேவதேவனான மாதவனைத் தெளிவாகத் தெரிவிக்கும் –
———–
அஸ்தி பாண்டிய மஹா தேசே குருகா நகரீ ஸூபா -தாமிரபர்ணீ நதீ தீரே சாஷாத் த்ருஷ்டோ ஹ்யதோஷஜ-
பெருமை பெற்ற பாண்டிய தேசத்திலே தாமிரபரணி நதிக்கரையில் மங்களகரமான திருக் குருகூர் உள்ளது -அங்கே பரம புருஷன் நேரே காணப் பட்டான் அன்றோ –
——–
ஸ்ரீ தரா யாதி குரவே
ஆதி குருவான ஸ்ரீதரனுக்கு
———
ஸ ச ஆச்சார்ய வம்ஸோ ஜேய ஆச்சார்யாணா மஸாவஸா விதி ஆபகவத்த -ரஹஸ்யம் நாய ப்ராஹ்மணம்
ஸ்ரீ லஷ்மீ நாதனிடம் தொடங்கி இவர் இவர் என்றும் ஒருவர் விடாமல் ஆச்சார்யர்களுடைய அந்த குரு பரம்பரை அறியத் தக்கது –
———-
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய து துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபந அர்த்தாயா ஸம்பவாமி யுகே யுகே –-4-8-
சாதுக்களை ரக்ஷிக்கவும் தீயவர்களை அழிப்பதற்கும் வைதிக தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் யுகம் தோறும் பிறக்கிறேன் –
———–
விஷ்ணோர் அர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதி யஸ்
யோ குரவ் மனுஷம் பாவம் உபவ் நரக பாதிநவ் –-ப்ரஹ்மாண்ட புராணம்
விஷ்ணுவின் அர்ச்சாவதாரங்களில் உலகம் என்னும் நினைவும் ஆச்சார்யனிடத்தில் மனிதன் என்னும் நினைவும் கொலுமவர்கள் இருவரும் நரகத்தில் விழுவார்கள் –
———–
அநந்த பாரம் பஹு வேதி தவ்யம் அல்பச்ச காலோ பஹுவச்ச விக்நா
யத் சார பூதம் தத் உபாஸி தவ்யம் ஹம்ஸோ யதா ஷீர மிவாம்பு மிஸ்ரம் -உத்தர கீதை –3-1-
கரை காண ஒண்ணாத பல ஸாஸ்த்ரங்கள் அறியத்தக்கவை -காலமோ மிகக்குறைவு -இடையூறுகளோ பல -பாலுடன் கலந்த நீரில் பாலைப்பிரிக்கும் ஹம்சம் போல் சாஸ்திரங்களிலும் சாரமானவற்றை சேதனன் எடுத்துக் கொள்ள வேண்டியது –
———-
அஸாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரதாரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே ரத்நாகர இவ அம்ருதம் —
ஸாஸ்திரங்களிலும் சாரமற்றதாயும் -குறைந்த சாரமுள்ளதையும் -அதைக்குறிக்கும் அதிக சாரமுள்ளதையும் விடவேண்டியது -எல்லாவற்றையும் காட்டிலும் மிக அதிக சாரமுள்ளதையே கடலில் அமுதத்தைப் போலே ஆதரிக்க வேண்டியது –
———
த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேந் முதா
உபாய உபேய பாவேந் தமேவ சரணம் வ்ரஜேத் –ஸாத்விக சம்ஹிதை
ஆச்சர்யனை சிஷ்யன் த்யானிக்கத் கடவன் -ஜபிக்கக் கடவன் -பக்தியோடு வணங்கக் கடவன் -பஜனம் செய்யக் கடவன் -உகப்புடன் அர்ச்சிக்கக் கடவன் -அவனையே உபாயமாகவும் ப்ராப்யமாகவும் நினைத்து சரணம் அடையக் கடவன் –
——-
ஸித்திர்ப்பவதி வா நேதி ஸம்சய அச்யுதஸேநாவிம் -ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்மநாம் –சாண்டில்ய ஸ்ம்ருதி
அச்சுதனைப் பற்றினாருக்கு மோக்ஷ சித்தி உண்டோ இல்லையோ என்பதைக் ஸந்தேஹம் உண்டு -அவனுடைய பக்தர்களின் கைங்கர்யங்களில் ஈடுபட்டவர்களுக்கு மோக்ஷ ஸித்தியில் ஐயம் இல்லை –
———-
குரு மூர்த்தயா ஸ்திதஸ் சாஷாத் பகவான் புருஷோத்தம-உத்தாரயதி ஸம்சாராத் தத் உபாய ப்லவேந து
ஆச்சார்யன் உருவில் இருக்கும் பகவானேயான புருஷோத்தமன் உபாயமாய் இருக்கும் தானாகிற இடத்திலே ஸம்ஸாரிகளை ஸம்ஸாரத்திலிருந்து தாண்டுவிக்கிறான் –
———-
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-
இந்தப் பரமாத்மாவுக்கு பல தரப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் -ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்று அறியப் படுகிறது –
——–
மநஸ் பூர்வோ வாக் உத்தர –தைத்-ஸம் -7-5-3-
முதலில் மனஸ்ஸும் அடுத்தபடியாக வாக் இந்த்ரியமும் ப்ரவர்த்திக்கின்றன –
———-
ப்ரத்யஷே குரவே ஸ்துத்யா பரோஷே மித்ர பாந்தவா
கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச ந கதாசந புத்ரகா
ஆச்சார்யர்கள் நேரே ஸ்துதிக்கத் தக்கவர்கள் -நண்பர்களும் உறவினரும் கண் காணாமல் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -அவர்கள் செய்ய வேண்டிய கார்யங்கள் முடிந்த பின்பு நமக்குக் கீழ் இருப்பவர்களும் வேலைக்காரர்களும் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -நம் பிள்ளைகள் ஓரு போதும் நம்மால் ஸ்துதிக்கத் தக்கவர் அல்லர் –
———-
ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||-57
ஸ்ரீ ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்ரீ ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.
——–
தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
———–
தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||–2-
மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.
————-
அவஸேநாபி யந் நாம்நி கீர்த்திதே ஸர்வ பாதகை
புமாந் விமுச்யதே ஸத்ய ஸிம்ஹ த்ரஸ்தைர் வ்ருகைர் இவ--ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-19-
தன் வசத்தில் இல்லாத போதும் எந்த பகவானுடைய திருநாமங்களைக் கீர்த்தித்த அளவிலே சிம்ஹத்தைக் கொண்டு பயந்த ஓநாய் களிடமிருந்து விடுபடுவது போல் மனிதன் உடனே விடுபடுகிறானோ –
——
ஸ த்வாஸக்த மதி க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரதை
ந விவேதாத்மநோ காத்ரம் தத் ஸ்ம்ருத்ய ஆஹ்லாத ஸூஸ்திதா —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-39-
மஹா நாகங்களினால் கடிக்கப்படு பவனும் கிருஷ்ணனிடத்தில் பக்தியைச் செலுத்துமவனுமான அந்தப் ப்ரஹ்லாதன் பகவானை நினைக்கையால் உண்டான ஆனந்தினால் நிலை நின்றவனாய் தன்னுடைய உடம்பை அறியவில்லை –
———
அஹம் அஸ்ய அபராதாநாம் அவயோ அகிஞ்சநோ அகதி
த்வமே உபாய பூதோ மே பவதி பரார்த்தநா மதி
சரணாகதிர் இத் யுக்தா ஸ தேவே அஸ்மின் ப்ரயுஜ்யதாம் -அஹிர் புத்ன்ய ஸம்ஹிதை -37-30-
நான் குற்றங்களுக்கு இருப்பிடமாய் இருக்கின்றேன் -ஓர் உபாயமும் அற்றவனாய் இருக்கின்றேன் -உன்னை ஒழிய வேறு கதி இல்லாதவனாய் இருக்கின்றேன் -நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக -என்று பிரார்த்திக்கும் புத்தியே சரணாகதி எனப்படுகிறது -அது இந்தப்பாகவான் விஷயத்தில் செய்யப்படட்டும் –
———-
ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–22-
சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை; என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான், உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.
———-
அநந்ய தேவத்வம் இயம் ஷமா ச பூமவ் ச சய்யா நியமச்ச தர்மே
பதி வ்ரதாத்வம் விபலம் மமேதம் க்ருதம் க்ருத்னேஷ்விவ மானுஷாணாம்
ராமபிரானைத் தவிர வேறு தெய்வம் அறியாது இருக்கை -இந்தப்பொறுமை -வெறும்தரையிலே படுக்கை -அறம் வழுவாது இருக்கை -பதிவ்ரதைத் தன்மை ஆகிய என்னுடைய குணங்கள் எல்லாமே செய்நன்றி கொன்ற மனிதர்க்குச் செய்தது போல் வீணாயின –
————-
ப்ராப்த ராஜஸ்ய ராமஸ்ய வால்மீகீர் பகவான் ரிஷி
சகார சரிரம் க்ருத்ஸ்னம் விசித்திர பதம் ஆத்மவான் –பால -1-4-
ஞாநாதி குணங்கள் நிறைந்தவரும் நெஞ்சை அடக்கியவருமான வால்மீகி மகரிஷி ராஜ்யத்தை அடைந்த ராமபிரானுடைய சரித்திரத்தை முழுவதையும் விசித்ர பதங்களுடைய காவியமாக இயற்றினார்
————-
ஏதத் ஸாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத-தைத் ப்ருகு –10-6-
முக்தாத்மா பரமாத்மாவை அடைந்து இந்த சாமத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறான் -பரமாத்மாவுக்கு அன்னமாய் இருப்பவன் -அன்னமாய் இருப்பவன்-அன்னமாய் இருப்பவன்-நான் பரமாத்மாவின் ப்ரீதி யாகிற அன்னைத்தைப் புஜிப்பவன் -அன்னைத்தைப் புஜிப்பவன் -அன்னைத்தைப் புஜிப்பவன் –
——–
பாணவ் க்ருஹீத்வா விதுரம் ஸாத்யகிஞ்ச மஹா யஸா
ஜ்யோதீம்ஷ் யாதித்ய வத் ராஜன் குருந் ப்ரச்சாதயன் ஸ்ரீயா –உத் –94-45-
பெரும் கீர்த்தி யுள்ள கண்ணன் விதுரனையும் சாத்யகியையும் கையிலே பிடித்துக் கொண்டு ஸூர்யன் மற்ற ஜ்யோதிகளை மழுங்கச் செய்வது போல் கௌரவர்களைத் தன் தேஜஸ்ஸாலே மழுங்கச் செய்து கொண்டு வந்தார் –
———
தருணவ் ரூப ஸம் பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ்
புண்டரீக விசாலாக்ஷவ் சீர க்ருஷ்ணாஜிநாம் பரவ் –ஆரண்ய-19-14-
ராம லஷ்மணர்கள் வாலிபரானவர்கள் -அழகு நிறைந்தவர்கள் -ஸுகுமார்யத்தை யுடையவர்கள் -அதிகமான பலமுள்ளவர்கள் -தாமரை போன்ற அகன்று கண்களை யுடையவர்கள் -மரவுரியையும் மான் தோலையும் உடுத்தவர்கள் –
————
தேஷாம் ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஞாநிநோ அத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய –-7-17-
என்னுடன் எப்போதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டவனும் -என்னிடம் மட்டுமே அன்பு செய்பவனுமான ஞாநீ அந்த நால்வருள் மிகச்சிறந்தவன் -நான் ஞானிக்கு மிகவும் பிரியன் அன்றோ -அப்படியே அவனும் எனக்கும் பிரியமானவன் –
———-
மம மத் பக்த பக்தேஷு ப்ரீதிர் அப் யதிகா பவேத்
தஸ்மான் மத் பக்த பக்தாச்ச பூஜாநீய விசேஷத--ஆச்வ பர்வம் –116-23-
எனது பக்தனிடம் பக்தி உள்ளவர்கள் இடத்தில் எனக்கு அதிகமான அன்பு உண்டு -ஆகையால் எனது பக்த்தனிடம் பக்தியுள்ள அவர்களும் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவர்களே –
——–
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந சாஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே –-ஜிதந்தா –1-5-
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காக இருக்காதே -ஸ்வ தந்த்ரனான அது ஆஸ்ரிதர்களுக்குப் பரதந்த்ரமாக வன்றோ நீ ஆக்கி உள்ளாய் -திவ்ய மங்கள விக்ரஹமும் உனக்காக இராது -திவ்ய ஆயுதங்களும் உனக்காக இராதே -இருப்பிடம் ஸ்ரீ வைகுண்டமும் அப்படியே உனக்காக இராதே -இவை எல்லாமே உனது அடியார்களுக்காகவே கொண்டு உள்ளாய் – பக்தர்களுடைய உடைமையான நீ இப்படி ஆஸ்ரித பரதந்த்ரமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையவனாக இருந்த போதிலும் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட சர்வாதிகனாக இருக்கும் தன்மையுடன் விளங்குகிறாய் –
———–
பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –-சாண்டில்ய ஸ்ம்ருதி -1-15-
மிருகமா மனிதனோ பஷியோ எவராய் இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவனைப் பற்றி நின்றார்களாகில் அத்தாலேயே அவர்கள் விஷ்ணுவினுடைய அந்தப் உயர்ந்த ஸ்தானத்தை அடைகின்றனர் –
————–
பூர்வ பாஷீ ப்ரஸன்ன ஆத்மா
முதலில் பேசுபவனாய் தெளிந்த மனத்தனனாய் இருப்பவன் –
———
விமல மதிரமத்ஸரஸ் ப்ரசாந்தஸ் ஸூசி சரிதோ அகில ஸத்வ மித்ர பூத
ப்ரியஹித வசநோ அஸ்தமாந மாயோ வசதி ஸதா ஹ்ருதி தஸ்ய வஸூ தேவ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-24-
அழுக்கற்ற புத்தியை யுடையவனாய் -மாற்சரியம் அற்றவனாய் -மிகுதியான அடக்கத்தை யுடையனாய் -பரிசுத்தமான ஒழுக்கத்தை யுடையவனாய் -அனைத்து உயிர்க்கும் நண்பனாய் -இனியதும் நல்லதுமான வார்த்தை யுடையவனாய் – ப்ரக்ருதி சம்பந்தம் மறையப் பெறுகிறவனாய் உள்ளவனுடைய ஹ்ருதயத்தில் எப்போதும் வாஸூ தேவன் வஸிக்கிறான் –
——–
த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரஷாம்ஸ்ய பயாந்தி சாரய
யத் கீர்த்தநாத் ஸோத்புத ரூப கேஸரீ மமாஸ்து மங்கள்ய விவ்ருத்தயே ஹரி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-28-
எந்தப் புருஷனைக் கீர்த்தனம் செய்வதால் அசுரர்கள் ஓடுகின்றனரோ -தேவர்கள் வணங்குகின்றனரோ -ராக்ஷஸர்கள் அழிகின்றனரோ -எதிரிகள் புறமுதுகு காட்டுகின்றனரோ -அற்புத ரூபமுள்ள அந்தப் நரஸிம்ஹனான ஹரி என் மங்களமாவதன் பொருட்டு ஆகட்டும் –
——-
ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச் ச ஸ மஹரிஷிபிர் த்ரீன் லோகான் சாம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத-ஸூந்தர –38-33-
அந்தக் காகாசூரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனாய் மூன்று உலகங்களையும் சுற்றித் திரிந்து அந்த ராமனையே சரணம் அடைந்தான்-
———
ஸர்வேஷாம் ஏவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்சத்வம் ஏநம் சரணம் சரண்யம் புருஷ ரிஷப -ஆசா பர்வம் -192-56-
புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லா உலகங்களுக்கும் தந்தையாயும் தாயுமாயும் ஸ்ரீ லஷ்மீ நாதனே -சரணம் அடையத் தக்க இவனை சரணம் அடையுங்கள்-
——–
பிதாஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ
வேத்யம் பவித்ரம் ஓங்கார ருக் சாம யஜுர் ஏவ ச –9-7-
இந்த உலகிற்குத் தாயும் தந்தையும் தாதாவும் பாட்டனும் வேதத்தில் அறியப்படுவதும் பரிசுத்தப்படுத்துவதும் ப்ரணவமும் ருக் யஜுர் சாம ரூபமான வேதமும் நானே –
—————
பாஹு நாம் ஜென்மநாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லபன்--7-19-
பல புண்ய ஜென்மங்களுக்குப் பின்னர் ஞானியானவன் வாஸூ தேவனே எனக்கு எல்லாம் என்று என்னை உபாஸிக்கிறான் -அப்படிப்பட்ட மஹா புருஷன் மிகவும் துர்லபன் –
————
அபி சேத் ஸூ துராசாரோ பஜதே மாம் அந்ய பாக்
சாதுரேவ ஸ மந்தவ்ய சம்யக் வ்யவஸிதோ ஹி ஸ –9-30–
மிக அதிகமான துர் நடத்தையை யுடையவனாயினும் வேறு ஒன்றிலுமே ஈடுபடாமல் என்னிடம் எவன் பக்தி செலுத்துகிறானோ -அவன் மிகச் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனாகவே எண்ணத் தக்கவன் -ஏன் எனில் நல்ல உறுதி பூண்டவன் அவன் அன்றோ –
———
மநஸா அநிஷ்ட சிந்தனம்
மனதினால் பிறருக்குத் தீமை நினைப்பது –
———–
அபகாரிஷ் வபி ஸதா சாதுஸ் சாத்வேவ வர்த்ததே —
அபகாரிகள் இடத்தும் நல்லோன் எப்போதும் நல்வனாகவே இருக்கிறான் –
———
பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேந ந கச்சின் ந அபராத்யதி –யுத்த -116-44-
வனரா -பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தக்கவர்களாய் இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேணும் -அபராதம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே-
———–
மயி த்வேஷா அநு பந்தோ அபூத் ஸம் ஸ்துதா யுத்யதே தவ
மத் பிதுஸ் தத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-21-
உன்னை ஸ்துப்பதில் ஈடுபட்ட என்னிடத்தில் உண்டான த்வேஷத்தாலே என் தந்தைக்கு ஏற்பட்ட பாபம் போகட்டும் –
———-
மயி த்வேஷா அநு பந்தோ அபூத் ஸம் ஸ்துதா யுத்யதே தவ
மத் பிதுஸ் தத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-21-
உன்னை ஸ்துப்பதில் ஈடுபட்ட என்னிடத்தில் உண்டான த்வேஷத்தாலே என் தந்தைக்கு ஏற்பட்ட பாபம் போகட்டும் –
———–
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேதமாயான் நாஸ்த்ய க்ருத க்ருதேந
தத் விஞ்ஞாந அர்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் –முண்டக -1-2-12-
அங்கங்களோடு கூடிய வேதங்களை அத்யயனம் செய்த எவன் ஒருவன் கர்மத்தால் அடையப்பெறும் உலகங்களை ஆராய்ச்சி செய்து பார்த்து-நித்ய புருஷன் அநித்யமான கர்மத்தால் அடையப்பெற மாட்டான் – என்ற வருத்தத்தை அடைகிறான் -அவன் அப் புருஷனை அறிவதற்காக ஸமித்தைக் கையிலே கொண்டவனாய் -வேதாந்தம் அறிந்தவனும் -ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவனுமான ஆச்சார்யனையே அடையக் கடவன் –
————–
ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹ நஞ்ச
வேதைச் ச சர்வைர் அஹமேவ வேத்யோ வேதாந்தத் க்ருத் வேத விதேவ சாஹம் –15-15-
எல்லாருடைய ஹ்ருதயத்திலும் நான் அமர்ந்து இருக்கிறேன் –என்னிடமிருந்து ஞானமும் மறதியும் உண்டாகின்றன -எல்லா வேதங்களிலும் அறியப்படுபவன் நானே -வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களைக் கொடுப்பவனும் -வேதங்களை அறிபவனும் நானே –
————-
ஹதோ அஸ்மி யதி மாமேவம் பகவான் அபி மன்யதே –அயோத்யா -90-15-
பரத்வாஜரே தேவரீரும் என்னை இப்படி நினைத்தீரானால் நான் கொல்லப்பட்டவனே ஆவேன் –
———–
அப்யேஷ மாம் கம்ஸ பரிக்ரஹேண தோஷ ஆஸ்பதீ பூதம தோஷ துஷ்டம்
கர்த்தாவ மாநோ பஹதம் திகஸ்து தஜ் ஜென்ம யத் ஸாது பஹிஷ் க்ருதம் ஸ்யாத் —ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-17-31-
கம்சனோடு ஸம்பந்தத்தினால் தோஷத்துக்கு இருப்பிடமான என்னையும் தோஷம் இல்லாதவனாம் படி செய்வானா அந்தக் கமலக் கண்ணன் –நல்லோரால் தள்ளப்பட்டதும் அவமானத்தால் அடிக்கப்பட்டதுமான அந்தப் ஜன்மத்தைச் சுடு –
————-
ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||–56
உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.-
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -2-
யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ – யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ-யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்
–———-
குருர் பிதா குருர் மாதா
குருவும் தந்தையும் குருவே தாயுமாவார்
———–
யோ அந்யதா சந்தமாத்மாநம் அந்யாதா பிரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாடம் சோரேணாத்ம அப ஹாரிணா –உத் யோக பர்வம் -42-35-
பகவானுடைய உடைமையாய் இருக்கும் ஆத்மாவை எவன் ஒருவன் தனக்கு சொந்தமாக நினைக்கிறானோ -ஆத்மாவை அபஹரிப்பவனான அந்தத் திருடனால் செய்யப்படாத பாபம் ஏது —
———–
அநந்ய சாத்யே ஸ்வ அபீஷ்டே மஹா விச்வாஸ பூர்வகம்
தத் ஏக உபாயதா யாச்ஞா பிரபத்தி ஸரணாகதி —விஷ்வக் சேந ஸம்ஹிதை
தன்னுடைய இஷ்டம் வேறு ஒன்றால் ஆகாத போது மஹா விச்வாஸத்தை முன்னிட்டு கொண்டு அவன் ஒருவனையே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பதே பிரபத்தி -அதுவே ஸரணாகதி –
————
த்ரவ்யம் குணஸ் ததா கர்ம ஜாதிச் சேதஸ் தத் ஆஸ்ரய
த்ரவ்யம் குணம் தர்மம் ஜாதி மணம் அதற்கு ஆஸ்ரயமான ஆத்மா –
————
த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் ச அக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த அக்ஷர உச்யதே–৷৷15.16৷৷
சாஸ்திரங்களில் -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி இருக்கையாலே
ஷர புருஷன் எனப்படும் பத்த ஜீவனும் -அழியும் இயல்வு இல்லாமையால் அஷரன் எனப்படும் முக்த ஜீவனும்-ஆகிற இரண்டு வகையான இப்புருஷர்களே பிரசித்தி பெற்றவர்கள் –
உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷
வேதத்தில் பிரசித்தமாக சொல்லப்பட்ட அசித் பத்த முக்தன்-இவர்களில் வேறுபட்டவன் என்று நிர்தேசம் ப்ராதான்யம் -புருஷோத்தமன் -பரமாத்மா என்று நிர்தேசம் -உத்தமத்வம் மட்டும் ஸ்தாபிக்காமல் அந்நியமானவன் என்றே ஸ்தாபிக்க வந்தது
யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷
நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான
முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே
ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்
——
த்ரவ்யாணி நவ தே விது
ஆத்மா தொடங்கி த்ரவ்யங்கள் ஒன்பது என்பது வைசேஷிகர்களின் முடிவு-
—–
த்ருண காஷ்ட அப ஹாரேணே யோ தோஷ பரிகீர்த்தித
ஸ்வர்ண ரத்ந அபஹாரே அபி தாவாநேவ பவேத் கதம்
கதர்யஸ்வ அப ஹாரேணே யோ தோஷ பரிகீர்த்தித
ஸ்ரோத்ரியஸ்வ அப ஹாரேபி தாவாநேவ பவேத் கதம்
ஆத்ம வஸ்து யதோ அநர்க்கம் ஆத்மே ஸஸ்து பர புமான்
தஸ்மா தஸ்ய அப ஹரேண தோஷஸ் யாந்தோ ந வித்யதே
புல் கட்டை ஆகியவைகளை அபஹரிப்பதால் யாதொரு தோஷம் உண்டாவதாகச் சொல்லப்படுகிறதோ -அதே தோஷமே தங்கம் ரத்னம் ஆகியவற்றை அபஹரிப்பதால் உண்டாகுமோ -நீசனுடைய சொத்தை திருடுவதனால் யாதொரு தோஷம் உண்டாவதாகச் சொல்லப்படுகிறதோ -அதே தோஷமே வேதம் அறிந்த ப்ராஹ்மணனின் சொத்தைத் திருடுவதாலும் உண்டாவதாக சொல்ல முடியுமோ -ஆத்மவஸ்து விலை மதிக்க ஒண்ணாதது -ஆத்மாவை உடையவனோ பரம புருஷன் -ஆகையால் இதைத் திருடும் போது தோஷத்துக்கு எல்லையில்லை –
———-
சத்யஞ்ச அநிருத்தஞ்ச சத்யமபவத் –தைத்–6-3-
விகாரம் அற்றதாகையாலே -ஸத்யம் -உள்ளது -எனப்படும் ஆத்மாவாகவும் -விகாரம் உள்ளதாகையாலே -அநிருத்தம் -இல்லாதது -எனப்படும் அசித் யாகவதாகவும் -விகாரம் அற்றதாயே வாக ப்ரஹ்மம் இருக்கிறது –
—
நாஸதோ வித்யதே பாவோ ந அபாவோ வித்யதே ஸத
உபயோர் அபி த்ருஷ்டோந்தஸ் த்வநயோஸ் தத்வ தர்சிபிர் –2-16-
இல்லாதாதான தேஹம் உள்ளதாகாது -உள்ளதான ஆத்மாவுக்கு இன்மை இல்லை -தத்வ ஞானிகளால் இவ் விரண்டுக்கும் இவ் விதமாக முடிவு காணப் படுகிறது –
———
பஞ்ச பூதாத்மகம வஸ்து
ஐந்து பூதங்களான பொருள் தேஹம்
———-
ஷரம் த்வ வித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே அஸ்து ஸோ அந்ய –ஸ்வே -5-1-
அழியும் அசித் வஸ்து அவித்யை எனப்படுகிறது -அழியாத ஆத்மா வித்யை எனப்படுகிறது -வித்யையும் அவித்யையும் எவன் நியமிக்கிறானோ அவன் அவர்களிலும் வேறுபட்டவன் –
———-
ஆத்மா நமஸ்ய ஜகதோ நிரலேபம குணாமலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-68-
பிராகிருத குணங்களும் அழுக்குகளும் அற்றவனாய் இவ்வுலகில் வியாபித்து இருக்கும் ஜீவனை பகவான் ஹரி யானவள் கௌஸ்துப மணி ரூபத்தில் தரிக்கிறார் –
————-
அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: ||-3-
அகாரப்பொருளான அச்யுதனுக்கே நான் உடைமை -எனக்கு உரியேன் அல்லேன் -அழிவற்றவர்கள் ஆகையால் நரர்கள் எனப்படுமவர்களுக்கு அயனமாய் இருக்கிறபடியால் நாராயண பதம் எவனைச் சொல்லுகிறதோ -அவனுக்கு எல்லாக் காலமும் -எல்லா இடத்திலும் -எல்லா அவஸ்தைகளிலும் ஏன் கைங்கர்யங்கள் ஆவிர்பவிக்கக் கடவன் –
———
அ இதி ப்ரஹ்ம
அ எனப்படுவது ப்ரஹ்மம்
————
பர த்ரவ்யேஷ் வபித்யாநம்
பிறர் பொருளில் ஆசை வைப்பது
———–
ந ஜாது காம காமாநாம் உப போகநே ஸாம்யதி
ஹவிஷா க்ருஷ்ண வர்த்தமேவ பூய ஏவாபி வர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம்
காமிகளுடைய காமம் அனுபவிப்பதாலேயே ஒரு போதும் சாந்தி அடைவதில்லை -ஹவிஸ்ஸாலே வளரும் அக்னி போல் மறுபடியும் வளர்கின்றது –
———–
அநாதிர் பகவான் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே —ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-2-26-
ப்ராஹ்மணரே பெருமை பொருந்தியதான காலம் அநாதியானது -இதற்கு முடிவும் கிடையாது-
———-
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மநா
ஸ்வயைவ பிரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை
தத்ர கத்வா புநர் லோகம் ஆயந்தி பாரத —-பாரதம் –ஆர -136-18-23–
மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்தப் ஸ்தானம் ஸூர்யனிடமும் அக்னியிடமும் உள்ள ஒளியை விஞ்சியது -அரசனே அது தன்னுடைய ஒளியாலே தேவர்களாலும் அசுரர்களாலும் காண அரிது -பரத வம்சத்தில் உதித்தவனே -அங்குபோய் மறுபடியும் இவ்வுலகிற்குத் திரும்புவதில்லை –
———
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச –18-66-
பல சாதனமான எல்லாத் தர்மங்களையும் வாசனையுடன் விட்டு என்னையே ஒருவனையே சரணமாக அடை -நான் உன்னை எல்லாப் பாபங்களின் நின்றும் விடுவிக்கிறேன் -துக்கிக்காதே –
———-
ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாம் உஷித்வா ஸாஸ்வதீ ஸமா
ஸூஸீ நாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோ அபி ஜாயதே —
புண்ணியம் செய்தோரின் உலகை அடைந்து நெடும் காலம் வாழ்ந்து பரிசுத்தி உடையவர்களும் செலவமுடையவர்களுமான பெரியோர்களின் வீட்டில் யோகத்தில் இருந்து நழுவியவன் பிறக்கிறான் –
————
ஸமாதி பங்கஸ் தஸ்யாஸீத் தன்ம மத்வா த்ருதாத்மந
சந்த்யக்த ராஜ்ய போகர்த்தி ஸ்வ ஜநஸ் யாபி பூபதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-29-
அரசனே மானிடம் அஹங்காரம் கொண்ட மனத்தையுடைய அவருக்கு ராஜ்ஜியம் பெரும் செல்வம் உறவினர் ஆகிய அனைத்தையுமே விட்டவராய் இருந்த போதிலும் சமாதிக்கு இடையூறு ஏற்படுகிறது –
———-
பஹவோ துர் லபாச்சைவ யே த்வயா கீர்த்திதா குணா
முநே வஷ்யாம் யஹம் புத்தவா தைர் யுக்த ஸ்ரூயதாம் நர-பால -1-7-
முனிவரே உம்மால் கீர்த்திக்கப்பட்ட குணங்கள் கிடைத்தற்கு அரியதாகவும் பலவுமாயும் இருக்கும் -நான் தெளிந்து நின்றும் சொல்லுகிறேன் -அந்த குணங்களோடு கூடிய மனிதரைப் பற்றிக் கேட்ப்பாயாக –
——–
ஆராப்யதே ந கலு விக்ந பயேந நீசை -ஆரப்ய விக்ந விஹதா விரமந்தி மத்யா
விக்நை புந புநரபி பிரதி ஹன்ய மாநா பிராப்தம் உத்தம குண ந பரி த்யஐந்தி –நீதி சதகம் –72-
தாழ்ந்த குணத்தவர்கள் இடையூறுக்குப் பயந்து காரியத்தை ஆரம்பிப்பதே இல்லை -ஆரம்பித்த பின் இடையூறு வந்து தடுத்தால் காரியத்தின் நின்றும் பின் வாங்குகிறார்கள் மத்யமான குணத்தை யுடையவர்கள் -பல இடையூறுகளால் மறுபடியும் மறுபடியும் தடுக்கப்பட்டாலும் தொடங்கிய காரியத்தை உயர் குணத்தோர் கைவிடுவதே இல்லை –
———-
யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சநேதி —தைத் -ஆ–9-1-
எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ -அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிபவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –
———
தஸ்ய புத்ரா தாயம் உபயந்தி ஸூஹ்ருதஸ் ஸாது கிருத்யம் த்விஷந்த பாப கிருத்யாம்–சாட்யாயன சாகை
மோக்ஷம் அடையும் அம் மனிதனின் சொத்தைப் பிள்ளைகள் அடைகின்றனர் -புனியத்தை அனுகூலர்கள் அடைகின்றனர் -பாபத்தை எதிரிகள் அடைகின்றனர்-
———–
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி -5-29-
யஜ்ஞங்களையும் தவங்களையும் புஜிப்பவனும் -எல்லா உலகங்களுக்கும் மஹேஸ்வரனும் -எல்லா ஜீவ ராசிகளுக்கும் நண்பனான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான் –
————
குரும் ப்ரகாஸயேந் நித்யம்
குருவை எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் –
———-
ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது ஸூதந
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக-சாந்தி பர்வம் -358-73–
பிறந்து கொண்டு இருக்கும் போதே எந்தப் புருஷன் மது ஸூதனனைப் பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடையவன் என்று அறியத் தக்கவன் -அவனே மோக்ஷ பலத்தை நினைப்பவன் –
———-
முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் யச்ச வேத த்வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -சாந்திபர்வம் -344-15-
ஸ்வேத த்வீப வாஸிகளுக்கு எது லக்ஷணமோ அதுவே முக்தர்களுக்கும் லக்ஷணமாகும் -அதாவது எப்போதும் அஞ்சலி செய்து கொண்டே இருப்பார்கள் -அதனால் ஆனந்திப்பார்கள் -வாயால் நம என்றே சொல்லும் தன்மை யுடையவர்களாய் இருப்பார்கள் –
————–
ஸா ஹி ஸ்ரீர் அம்ருதா ஸதாம்
நல்லோர்களுக்கு வேதமே அழியாச் செல்வமாகும்
———–
சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம் உக்த்வான் ரிஷி
தத்ர சர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டநி ததோத்தரம் –பால -1-2-
வால்மீகி ருஷி 24000 ஸ்லோகமாகவும் -500 சர்க்கமாகவும் -ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் கூடியதாக ஸ்ரீ இராமாயணம் அருளிச் செய்துள்ளார் –
————-
பாட்யே கேயே ச மதுரம் ப்ராமணைஸ் த்ரி ப்ரன்விதம் –பால -4-8-
ஸ்ரீ இராமாயணம் மூன்றுவிதமான அளவுகளுடன் கூடியதாய் படிக்கும் போதும் பாடும் போதும் இனியதாய் இருக்கிறது-
———
ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ
பரமபுருஷன் எல்லா நறு மணங்களையும் யுடையவன் -எல்லா நற் சுவைகளையும் யுடையவன்
———-
ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்த் வாந்தீ பவதி கோ ஹ்யே வான்யாத் க ப்ராண்யாத்
யதேஷ ஆகாஸோ ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ ஹ்யே வாநந்தயாதி -சாந்தோ -3-14-2-
ரஸ -ஆனந்த ஸ்வரூபன் அன்றோ அந்த பரம புருஷன் -ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து -இந்த ஜீவன் -ஆனந்தத்தை யுடையவன் ஆகிறான் -பிரகாசிப்பவனும் ஆனந்த ஸ்வரூபனுமான இப்பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள சுகத்தையோ மோக்ஷ சுகத்தையோ அடைய முடியும் -ஆகையால் இவனே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான் –
————-
தத்தேது வ்யபதேசாச்ச–1-1-15-
ஜீவனின் ஆனந்தத்துக்கு காரணமாகப் பராமனைச் சொல்லுகையாலே பரமன் ஜீவனிலும் வேறானவனே –
———
அம்ருதஸ்ய ஹி தாதாரம் தாமஸ பாரம் தர்சயதி ஸநத்குமார –
மோக்ஷம் அளிப்பவனும் ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான பரமனை சனத்குமாரர் காண்பிப்பார் –
————-
ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ் ந ச
சாமார்த்யவாந் க்ருபா மாத்ரமநோ வ்ருத்தி ப்ரஸீதி மே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-70-
தலைவர்களுக்கும் தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் தலைவனே -இப்படிப்பட்ட நான் உன்னுடைய ஸ்துதியிலும் அர்ச்சனம் முதலியவற்றிலும் சாமர்த்தியம் உடையவன் அல்லேன் -அருள் கூர்ந்த திரு உள்ளத்துடன் கூடியவனாய் எனக்குத் தயை புரிய வேண்டும் –
———-
துர்ப்போதா வைதிகா சப்தா
வேதத்திலுள்ள சொற்கள் பொருள் உணர அரியவை
—-
த்வம் ஹி ருத்ர மஹா பாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய
தர்சயித்வா ஆல்பம் ஆயாஸம் பலம் சீக்ரம் ப்ரதர்சய -வராஹ புராணம் -10-36-
நீண்ட கையையுடைய ருத்ரனே நீ மயக்கம் ஆகம சாஸ்திரங்களை இயற்றுவாயாக -சிறுது சிரமத்தின் பேரிலேயே விரைவில் பலத்தைக் காண்பாயாக –
————-
ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச் ச ஸ மஹரிஷிபி
த்ரீன் லோகான் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ தம் நிபததிம் பூமவ் சரண்ய சரணாகதம்
வாதார் ஹமபி காகுத்ஸத கிருபயா பர்யபாலயத் –ஸூந்தர –38-34-35
அந்தக்காகாசுரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனாய் மூன்று உலகங்களையும் சுற்றித்திரிந்து அந்த ராமனையே சரணம் அடைந்தான் -சரணம் அடைந்தவனும் பூமியில் விழுந்தவனுமான அவனைக் கொல்லத் தக்கவனாகவே இருந்தானே யாகிலும் சரணம் அடையத் தக்கவனாகிய ஸ்ரீ ராம பிரான் தன் அருளாலே காப்பாற்றி அருளினான்-
————–
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவதம் கேஸவாத் பரம் -நாரதீய புராணம் -18-33-
உண்மை உண்மை முக்காலும் உண்மை என்று கைதூக்கிக் கொண்டு சொல்லுகிறேன்-வேதத்தில் உயர்ந்த ஸாஸ்த்ரம் இல்லை -கேசவனில் உயர்ந்த தெய்வம் இல்லை –
——————
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபஸ்ஸித–
வேதவாதரதா பார்த்த நாந்யதஸ்தீதி வாதிந—৷৷2.42৷৷
போகைஸ்வர்ய ப்ரஸக்தாநாம் தயாபஹ்ருத சேதஸாம்–
வ்யவஸாயாத்மிகா புத்தி ஸமாதௌ ந விதீயதே—৷৷2.44৷৷
பார்த்தனே வேதங்களில் கூறப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களை பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய் – காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் -சுவர்க்கத்தை விரும்புவர்களாய் – சுவர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த பலன் இல்லை என்று பேசுகின்றவர்களான சிற்று அறிவாளர்கள் ஸ்வர்க்காதிகளை அனுபவிப்பதாகிய செல்வத்தை அடைவது குறித்து காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது
அழகாக உள்ளதாய் -மறு பிறப்பு முதலிய கர்மங்களாகிய பலன்களை அளிப்பதாய் -பல செய்கைகளை யுடைத்தான யாதொரு வார்த்தையை மிகவும் பேசுகின்றார்களோ -அந்தப் பேச்சுக்களால் அழிக்கப் பட்ட அறிவை உடையவர்களாய் ஸ்வர்க்காதி செல்வங்களில் ஈடுபட்டவர்களான அப் புல்லறிவாளர்களுக்கு மனத்தில் ஆத்ம ஸ்வரூப நிச்சயத்தை
முன்னிட்டுக் கொண்டு இருக்கும் கர்ம யோக புத்தி உண்டாவது இல்லை –அவிபஸ்சித் -புல்லறிவாளர்கள் என்று பெயர் கொடுக்கிறான் புஷ்பிதாம் வாசம்-பூப் போல் மலர்ந்து -கொண்டாட வில்லை -பூ மாத்திரமே -காய்க்காது பழுக்காது -ராமானுஜ பாஷ்யம் –
———
த்ரைவித்யா மாம் ஸோமபா பூத பாபா–யஜ்ஞை ரிஷ்ட்வா ஸ்வர்க்கதிம் ப்ரார்தயந்தே–
தே புண்ய மாஸாத்ய ஸுரேந்த்ர லோகம்–அஸ்நந்தி திவ்யாந் திவி தேவ போகாந்—৷৷9.20৷৷
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விஸாலம் –க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விஸந்தி.–
ஏவம் த்ரயீ தர்ம மநுப்ரபந்நா–கதாகதம் காமகாமா லபந்தே—৷৷9.21৷৷
வேதாந்தத்தில் இல்லாமல் மூன்று வேதங்களில் பூர்வ பாகத்தில் சொல்லப்பட்ட தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களாய் –
இந்த்ராதிகளைக் குறித்துச் செய்யப்பட யாகங்களின் சேஷமான சோமா ரசத்தை பருகுகின்றவர்களாய் –
ஸ்வர்க்கம் முதலானவற்றை அடையத் தடையாக இருக்கும் பாபங்களில் இருந்து நீங்கப் பெற்றவர்களாய் –
இந்த்ராதிகளை மாத்திரம் குறித்த யஜ்ஞங்களாலே -அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் இருக்கும்
என்னைக் குறித்தே உண்மையில் யாகம் செய்து -இந்த்ராதிகள் இடம் ஸ்வர்க்கத்தை வேண்டுகிறார்கள் –
அவர்கள் இவ்வுலகத் துன்பங்கள் இல்லாத தேவேந்திர லோகத்தை அடைந்து அங்குள்ள பல இடங்களில்
இவ்வுலக அனுபவங்களைக் காட்டிலும் சிறந்த தேவர்களுடைய போகங்களை அனுபவிக்கிறார்கள் –
அவர்கள் பரந்ததான அந்த ஸ்வர்க்கத்தில் உள்ள போகங்களை அனுபவித்து -அந்த அனுபவத்துக்கு காரணமான
புண்யம் அழிந்த அளவில் மறுபடியும் மனித உலகிற்கு வருகிறார்கள் –
இவ்வண்ணமாக வேதாந்த ஞானம் இல்லாமல் மூன்று வேதங்களின் பூர்வ பாகத்தில் சொன்ன யாகம் முதலிய
தர்மங்களை அனுஷ்டிப்பவர்களாய் -அவற்றில் சொன்ன விரும்பப்படும் ஸ்வர்க்காதிகளிலேயே விருப்பம் உடையவர்களாய் –
அல்பமும் அஸ்த்ரமுமான ஸ்வர்க்காதிகளையே அடைந்து மறுபடியும் மறுபடியும் திரும்பி வருகிறார்கள் –
————–
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் –தைத்ரியம்
ப்ரஹ்மத்தை அறிந்தவன் மேலான பலனை அடைகிறான்
——–
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹி தேவம் ஆத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதாஸ் -6-18-
எவன் பிரமனை முன் படைத்தானோ -எவன் பேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தமது விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரம புருஷனை மோக்ஷம் அடைய விரும்பும் அடியேன் சரணம் அடைகிறேன்-
———–
ப்ரஹ்மணாநாம் தனம் வேத
அந்தணர் மாடு -அருமறையே அந்தணருக்குச் செல்வமாகும்
————-
யோ தத்யாத் பகவத் ஞானம் குர்யாத் வா தர்ம தர்சனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யான் ந தத்துல்யம் கதஞ்சன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –70-78-
பார்வதி ஞானம் அளித்து அவனை அடைய உபாயம் அருளுபவனுக்கு பூமி முழுவதையுமே கொடுத்தாலும் அவன் அளித்ததற்கு ஒப்பு ஆகாதே-
————–
மித்ர பவ்யிகம் கர்த்தும் ராம ஸ்தானம் ப்ரீப் ஸதா
வதம் ச அநிச்சிதா கோரம் த்வயா அசவ் புருஷன் ரிஷப–யுத்த -21-19-
ராவணா நீ உனது குடியிருப்பை விரும்பினாயாகில் -கோரமான வதத்தை விரும்பாது இருந்தாயாகில் இந்த புருஷ ஸ்ரேஷ்டரான ராமபிரானை நண்பனாகக் கொள்ளத் தக்கது –
———–
யோ மா ததாதி ஸ இதேவ மாவா -தைத்ரி -பிருகு -10-6-
எவன் எனக்குப் பரமணி அளிக்கிறானோ அவனே எனக்கு ரக்ஷகன்-
————
தர்ம அர்த்தவ் யத்ர ந ஸ்யாதாம் ஸுஸ்ரூஷா வா ததாவிதா
தத்ர வித்யா ந வப்தவ்யா சுபம் பீஜமிவோஷரே –மனு ஸ்ம்ருதி -2-112-
அறமும் பொருளும் எந்த சீடனிடம் இல்லையோ -அப்படியே ஸுஸ்ரூஷையும் எவனிடம் இல்லையோ -நல்ல விதையை களர் நிலத்தில் விதைக்கக் கூடாதது போல் அவனிடம் வித்யையை விதைக்கக் கூடாது –
————–
அர்த்ததோ தர்மதஸ் ஸுஸ்ரூஷரத்யாப்ய-
பொருளை அளிப்பவனும் அறத்தை அளிப்பவனும் ஸுஸ்ரூஷை யுள்ளவனுமான சீடனே அத்யயனம் செய்யத்தக்கவன் –
———-
கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம்
ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—৷৷2.7৷৷
மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக
—————-
ஸ்ரூயதாம் பரமார்த்தோ வை தைதேயா தநு ஜாத்மஜா
ந சாந்யதைதக் மந்தவ்யம் நாத்ர லோபாதி காரணம் —
அசுர புத்ரர்களே என்னிடமிருந்து இவ் உண்மைப் பொருளை கேளுங்கோள் -இதை வேறு விதமாக எண்ணலாகாது –இவ் விக்ஷயத்தில் ஆசை முதலியவை காரணம் அல்ல-
—————
ந அகிஞ்சித் குர்வத சேஷத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-55-
கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் இல்லை
———–
ஸா பேஷா இவ சேஷ்டத
அபேக்ஷை உள்ளவன் போல் அர்ச்சாவதாரத்தில் நடக்கிறான்
———-
ஸகே ராகவ தர்மஜ்ஞ ரிபூணாம் அபி வத்ஸல
அப்யனுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதாக்தம் -யுத்த –50-56-
நண்பரே ரகு குலத்தில் உதித்தவரே தர்மத்தை அறிந்தவரே சத்ருக்களுக்கும் வாத்சல்யத்தை யுடையவரே -விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் -வந்தவாறே போய் விடுகிறேன் –
————
தேவாநாம் தாநவாஞ்ச சாமான்யம் அதி தைவதம்
ஸர்வதா சரண த்வந்த்வம் வரஜாமி சரணம் தவ –-ஜிதந்தா -2-
பக்தியுடைய தேவர்களுக்கும் பக்தியில்லாத அசுரர்களுக்கும் எப்போதும் பொதுவாகப் பற்றத்தக்க தேவதையாய் இருக்கும் உனது திருவடி இணையை உபாயமாக நிச்சயிக்கிறேன்-
—
உதாராஸ் ஸர்வ ஏவைத ஞாநீ த்வாத்மைவ மே மதம் -7-13-
இவர்கள் அனைவருமே உதாரர்கள் -ஞானியோ என்றால் எனக்கு தாயகம் -ஆத்மா -என்பதே எனது ஸித்தாந்தம்
———-
த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷத் அன்னம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஜஸே ராஜன் மம பிராணா ஹி பாண்டவா -உத்யோக பர்வம் –74-27-
த்வேஷிப்பவன் அன்னம் புஜிக்கத்தக்கது அன்று-த்வேஷிப்பவனை புஜிப்பிக்கவும் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -பாண்டவர்கள் எனக்கு பிராணன் அன்றோ –
————
ஆச்சார்யவான் புருஷோ வேத
ஆச்சார்யனை யுடைய புருஷனே உண்மையை அறிகிறான்
—
நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||--10-
எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால், இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு. எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால், நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை-
————–
சீலாதி குண ஸம் பந்ந ஸர்வ லோக ஏக வத்ஸல
சீலம் முதலிய கல்யாண குணங்களை யுடையவன் -எல்லா உலகுக்கும் வாத்சல்யம் யுடைய ஒருவனாய் இருப்பவன் –
————
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யது ஜீவிதம் இச்சஸி –-ஸூந்தர –21-20-
ராவணா -ஸ்ரீ ராமபிரான் தர்மத்தை அறிந்தவராகவும் -சரணம் அடைந்தவர்களிடம் வாத்சல்யம் யுடையவர் என்றும் ப்ரஸித்தமானவர் -நீ உயிர் வாழ விரும்புவாயானால் அவரிடம் நட்பு காட்ட வேண்டும் –
————
மித்ர பாவேந ஸம் பிராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம் –தத்தம் -18-3-
நண்பனாகிய பாவத்தோடு நெருங்கின இந்த விபீஷணனை ஒருபோதும் கைவிட மாட்டேன் -அவனிடம் தோஷம் இருந்தாலும் இருக்கட்டுமே -நல்லோர்களுக்கு இவனை ஸ்வீ கரிப்பது நிந்திக்கத் தக்கது அல்ல –
———–
ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-
ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ-தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே-ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே-ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-
————
துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||–58-
கருணைக் கடலான ஸ்ரீ ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே!
வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே! நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத,
போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய
திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப்படுகிறேன்.
————
ஆஸ்ரித வாத்சல்ய ஏக மஹோ ததே —ஸ்ரீ ரெங்ககத்யம்
அடியார்களிடம் வாத்சல்யக்கடலாய் இருப்பவனே
—————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புத்தூர் கிருஷ்ண ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply