Archive for the ‘நம்பிள்ளை’ Category

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -51-60–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 12, 2022

அவதாரிகை

தூரஸ்தரான அன்பரும் த்வரித்து வந்து ஆஸ்வஸிப்பிக்கும் படி ஆர்த்தரான இவர்
அதுக்கு மேலே
ஸம்ஸார கோலஹலத்தைக் கண்டு சிதிலரான பிரகாரத்தை
கடலோசைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

பாசுரம் -51-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய –
கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –
நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

பதவுரை

கடல்–கடலானது
மலை–மந்தர பர்வதத்தை
மத்து ஆ கொண்டு-மத்தாகக்கொண்டு
அரவால்–வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால்
சுழற்றிய–(தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த
மாயம்–அற்புத சக்தி வாய்ந்த
பிரான்–எம்பெருமான்
அலை கண்டு–(தன்னை) அலைத்து
கொண்ட–(தன்னிடத்தினின்று) எடுத்துக் கொண்ட
அமுதம்–அமிர்தத்தை
கொள்ளாது–(மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல்,
வேரி துழாய் துணை ஆ–பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
துலை கொண்டு–ஒத்து எதிர்வந்து
தாயம் கிளர்ந்து–பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து
பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து–நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று)
விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது.
அழைக்கின்றது,–(சண்டைக்குக்) கூப்பிடுகின்றது.

வியாக்யானம்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மந்த்ர பர்வதத்தை மத்தாகக் கொண்டு
வாஸூகி யாகிற பாம்பாலே கடைந்த ஆச்சர்யத்தை யுடைய ஸர்வேஸ்வரன்

அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்
தன்னை அலையும் படி தன் பக்கலில் நின்றும் வாங்கிக் கொண்ட அம்ருதத்தை
மீட்டுக் கொள்ள மாட்டாது கடலானது

பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
இச்சங்கங்கள் விலை வாங்கிக் கொண்டு பரதர் தந்தவை

பரதர் என்று
நுளை யருக்குப் பேர்

வேரித் துழாய் துணையா
மதுவை யுடைத்தான திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
அதாவது
திருத்துழாயில் ஆசையால் யுண்டான தளர்த்தி இவளை
நலிகைக்கு உறுப்பாகை

துலை கொண்டு
ஒத்து எதிர் ஏறி
துலைத்தல் -முடித்தலாய்
இவளை முடிக்க வேணும் என்று உட்கொண்டு என்றுமாம் –

தாயம் கிளர்ந்து
ஞாதேயம் கொண்டாடுவாரைப் போலே
மேல் எழுந்து

கொள்வான் ஒத்து
வளையை மீட்டு வாங்கிக் கொள்வாரைப் போலே

அழைக்கின்றதே
அவஷ்டம்ப (பற்றுக்கொம்பு )பலமுடையார் வியவஹாரத்துக்குத் தொடர்ந்து
அழைக்கும் கணக்கிலே
அதி கோஷம் பண்ணா நின்றது என்று
தன் ஆற்றாமை கூறினாள் ஆயிற்று –

இத்தால்

மலை கொண்டு என்று தொடங்கி -அமுதம் கொள்ளாது கடல் -என்கையாலே
ஸம்ஸார சாகர மத்யத்திலே
நிச் சலமான வியவசாய மந்த்ரத்தை நாட்டி
ப்ராப்ய ருசி யாகிற பாசத்தாலே
நித்ய மதனம் பண்ணின ஸர்வேஸ்வரன் தானே
தமருற்றார் தலைத்தலைப் பெய்து -திருவாய் -4-9-2-
நூற்றும்படி யாக்கி
அம்ருத அக்ஷர -ஸ்வேதாஸ்வர
ஸப்த வாஸ்யனான இவ்வாத்மாவை உத்தரித்துக் கொண்டு போய் புஜிப்பிக்கிற இத்தை
ஸம்ஸார சாகரம் மீட்டுக் கொள்ள மாட்டாது என்று தோற்றுகிறது –

பரதர் இத்யாதியாலே
எங்கள் கையில் யுண்டான இந்த ஸூத்த பாவமானது
தேசிகரானார் எங்களுடைய சமர்ப்பணாத் அநு விருத்தியாலே தந்தது என்று காட்டுகிறது

வேரித் துழாய் இத்யாதியாலே
பகவத் போக்யதையில் யுண்டான அபி நிவேசமானது
ஸாம்ஸாரிக கோலா ஹலத்தையும் ஸஹியாதபடி பண்ணுகையாலே
ஆற்றேன் உலகு இயற்கை -திருவாய் -4-9-3-என்கிறபடியே
இவருக்கு ஆர்த்தியை ஜெநிப்பித்தமை தோற்றுவித்தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அது பாதகமாகிற படியைச் சொல்லுகிறது –
பதினாலு ஆண்டு கூடப்போன வழியை ஒரு பகலிலே வாரா நிற்கச் செய்தே
க்ரம பிராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக்காட்டினார் இறே
அப்படியே இங்கு ஓர் ஆள் வரவிட்டால் கண்டது எல்லாம் பாதகமாம் இறே
சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யே -நார்த்தீ ஸ்வயம் பவேத் -யுத்த -128-17-
அய்யர் நியமிக்க நடுவில் ஆய்ச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் நம்மைப் பின் தொடர்ந்து வர
அவனுக்கு நாம் சொன்ன நாள் எல்லை கழிந்தால் பின்னை ஒரு க்ஷணம் தாழ்க்கில்
தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான்
இன்று சென்று நாம் கிட்டினால் பதினாலாண்டும் பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே
நீ முடி சூடு என்றால் அத்தை அல்லேன் என்னாதே இசையப் பெறுவது காண்
அய்யர் நம்மை முடி சூடிக் காணப் பெறாதே போன இழவு தீர நாம்
பிள்ளையை முடி சூடக் கண்டு வாழப் பெறுவது காண்

சநைர் ஜகாம ஸா பேஷ -அயோத்யா -19-31-
இத்தை ஸா வேஷ -என்று திருத்தி
கீழ் விழியாலே பார்த்துப் போனார் என்று பொருள் சொன்னபடியாலே
அத்தை பட்டர் கேட்டு அருளி

அது வேண்டா காண் -கீழ் நடந்த பாடம் தனக்குப் பொருள் சொல்லலாம் காண் -என்று
இவ்வுபரணங்களைக் கொண்டு பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் என்னும்
அபேஷையோடே போனார் – என்று அருளிச் செய்தார்

அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்பே கடலோசை வந்து பாதகமாகிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம் –

மலை கொண்டு மத்தா
ஒரு தாழிக்கு உட்பட்ட தயிரை ஒரு மத்தை இட்டுத் திரிக்குமா போலே
மலையை மத்தாகக் கொண்டு அசலத்தை சலிப்பிக்கும் படி பண்ணி

அரவால்
ஸர்ப்ப ஜாதிக்கு மார்த்தவம் ஸ்வ பாவம் இறே
அத்தை வலிக்கைக்கு ஈடான திண்மையை உடைய கயிறாகக் கொண்டு
பதார்த்தங்களுக்கு நியதமாய் இருபத்தொரு ஸ்வ பாவம் இல்லை
அவன் புத்தி அதீனமாய் இருக்கும் அத்தனை காண்

சுழற்றிய
அஜ்ஜலத்தை பிரமிப்பித்தான்

மாயப்பிரான்
அதுக்கு ஈடாக ஆச்சர்ய சக்தியை யுடையவன்
அன்றிக்கே
தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த வாற்றைச் சொல்லவுமாம்

அலை கண்டு கொண்ட
அப்ரமேயோ மஹோ ததி-யுத்த -19-31-என்கிறபடியே
ஒருவரால்

———–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இவர் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு
அத்தால் பாதைப்படும் நாயகியாய் அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மஹா அசலத்தை மத்தாகக் கொண்டு
அதி மிருதுவான வாஸூகி யாகிற கயிற்றால் கடலைக் கடைந்த ஆச்சர்யத்தைக் காட்டி
எனக்கு உபகரித்தவன் –

அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்
தன்னை மிகவும் அலையும்படி மதித்தது கண்டு
தன்னால் வாங்கிக் கொண்ட அம்ருதத்தைத் தான் அபஹரித்துக் கொள்ள மாட்டாது
இக்கடலானது
அவனில் அத்யந்தம் அசமர்த்தனான தான்

பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
வளைகாரரால் விலை கொடுத்துப் பெற்ற வளைகள் அன்றோ இவை

வேரித் துழாய் துணையாத்
இவைகளைத் தானே அபஹரிக்க மாட்டாமல்
ஸ்வ அபஹாரத்துக்கு வேரித் துழாயையும் துணையாக்கிக் கொண்டது என்கிறாள்

வேரித் துழாய் துணையா-என்று
அவ்வளவு அன்றிக்கே
ஓர் துர் வ்யவஹாரத்தையும் அவலம்பித்ததாய் என்னை அழையா நின்றது என்கிறாள்

துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே-என்று
அந்யாயப் படுகிறாள்

சங்கு எல்லாம் தன்னதேயாய்
பரதர் தன் தம்பிமார்களாய்
இந்த வளையிலும் தன்னினுள்ள சங்கு ஸாம்யத்தைக் கொண்டு
தன தம்பிமார்கள் அல்ப விலைக்கு இட்டார்கள் என்கிற தாயத்தைக் கொண்டு
வ்யவஹார ஸப்த உத் கோஷத்தால் விஜ் ரும்பித்ததாய் காட்டில் வழி பறிப்பார்
தன் கிட்ட வா என்று அழைப்பாரைப் போலே என்னை அழையா நின்றது
இதுக்கு நான் என் செய்கேன் -என்கிறாள் –

——————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத் பூதர்
அனுபவ யோக்ய தசையிலே அனுபவிக்கப் பெற்றிலோம்
ஆசந்ந ரானார் நித்ய அனுபவம் பண்ணப் பெறா நின்றார்கள்
நமக்கு அவனோடு உண்டான அசாதாரண சம்பந்தமும் அகிஞ்சித் கரமாயிற்றே -என்று
இவர் ஈடுபடுகிறாராக நினைத்து
நிதர்சன முகத்தாலே ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்தை ஸூசிப்பித்து ஆற்றின பிரகாரத்தை
காலம் கண்டு கலங்கின தலை மகள் ஆற்றாமையை
தோழி காலம் மறைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – 52-

பாசுரம் -52–அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே –
கால மயக்கு –
அந்தாமத் தன்பு -2-5-

பதவுரை

அழைக்கும்–(அன்போடு) அழைக்கிற
கரும் கடல்–(தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது.
வெண் திரை கை–(தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே
கொண்டு போய்–எடுத்துக் கொண்டு போக,
விண்வாய்–ஆகாயத்திலே
புலம்பி அழைத்து–(மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு
முலை மலை மேல் நின்றும்–(தனது) ஸ்தனங்களாகிய மலைகளின் மேல் நின்றும்.
அலர் வாய் மழை கண் மடந்தை–தாமரை மலரில் வாழ்பவளும் மழை போலக் குளிர்ந்த கண்களை யுடையவளுமான திருமகள்
அரவு அணை ஏற00(அப்பாற் கடலினிடையிற் பள்ளி கொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற,
(அது கண்டு)
மண் மாதர்–பூமிப்பிராட்டி
ஆறுகள் ஆய்–ஆறுகளாக பெருக விட்ட
மழை கண்ண நீர்–மழையாகிய கண்ணீரானது
திருமால் கொடியான் என்று–திருமால் கொடியவனென்று வெளியிட்டு
வார்கின்றது–பெருகுகிறது.

வியாக்யானம்

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்-மழைக் கண் மடந்தை யரவணை ஏற
பிறந்த அகவாசி தோன்ற ஆதரித்து அழைப்பாரைப் போலே அழைப்பதாய்
தன்னுள் அகவாயில் கண் வளருகிற ஸர்வேஸ்வரன் திருமேனியின் நிழலீட்டாலே
ஸ்யாமளமான கடலானது
தன்னுடைய வெளுத்த திரக் கைகளாலே எடுத்துக் கொண்டு போகப் போய்
தாமரைப்பூ இடத்திலே இருக்கிற
மழை போலே அத்யுதாரமான கண்ணை யுடையளாய்
மடப்பம் முதலான ஸ்த்ரீத்வ குணத்தாலே பூர்ணையாய் இருக்கிற பெரிய பிராட்டியார்
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏற

குளிர்ந்த கண் -என்றுமாம்

மண் மாதர்
பூமியாகிய பிராட்டி யானவள்

விண் வாய் அழைத்து புலம்பி
தானும் கிட்டு அனுபவிக்கப் பெறாத இழவாலே
ஆகாசத்திலே மேக த்வனி முகத்தால் புலம்பி அழைத்து

முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
பூமிக்கு முலையாய் இருக்கிற மலை மேல் நின்றும்
ஆறுகளாகிற பிரவாகத்தை யுடைத்ததாய்க் கொண்டு

மழைக் கண்ண நீர்
வர்ஷமான கண்ண நீரானது

திருமால் கொடியேன் என்று வார்கின்றதே
பெரிய பிராட்டியாருக்குப் பிச்சானாவான் கொடியனாய் இருந்தான் என்று
வடியா நின்றது என்று
உத் ப்ரேக்ஷையாலே காலத்தை மயக்கி உரைத்தாளாயிற்று –

இத்தால்

இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருதுக்கள்
நித்ய அநபாயினி யான பிராட்டியாரோடு ஒத்த போகத்தை யுடைய
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு
க்ஷண விஸ்லேஷத்தில் அதிசய ஆர்த்தி பிறக்கும்படி அன்றோ
(இது நாலாவது நிர்வாகம் –
கீழ் பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகத்தில் மூன்று பார்த்தோமே )
அத் தலையில்
வை லக்ஷண்யமும்
ஸ்வா தந்தர்யமும் இருக்கும்படி
நீர் அவன் செய்தது கண்டு ஆறி இருக்கை காணும் பிராப்தம் என்று
இவரை ஆஸ்வஸிப்பித்ததாயிற்று

பூமி பக்கல் யுண்டான இந்த உத் ப்ரேக்ஷை
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்துக்கு ஸூசகம் –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகன்
கார் காலத்திலே வருகிறோம் என்று போனானாய்
காலமும் வந்து
வர்ஷிப்பதும் செய்யா நின்றது என்று தலைமகள் தளர
தோழியானவள்
அக்காலம் அன்று காண் இது –
பெரிய பிராட்டியார் ஸர்வேஸ்வரனையும் கொண்டு திருவனந்த ஆழ்வான் மேலே
ஸம்ஸ்லேஷ அர்த்தமாக ப்ரவேசிக்க
அத்தைக்கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டியானவள்
இப்பரிமாற்றத்துக்கு நான் கூட்டு அன்றிக்கே ஒழிவதே -என்று அழுகிற கண்ணநீர் காண் இது
நீ நினைக்கிற வர்ஷம் அல்ல காண் இது -என்று
இங்கனே காலத்தை மயக்கி தரிப்பிக்கிறாளாய் இருக்கிறது

வியாக்யானம்

அழைக்கும்
போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலம் இங்கே யுண்டாய் இருக்க
போக்தாக்களாய் இருக்கிற நீங்கள் வாரிகளோ என்று
அழைக்கிறாப் போலே யாயிற்று
கடல் கோஷிக்கிற படி

கருங்கடல் வெண் திரைக்கே
நீர்ச்சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழ் கறுத்து அவகாசம் யுண்டாய் மேல் திரைந்து காட்டின பொது வெளுத்து இருக்கும் இறே
அபாமபி சுக்லம் -என்று ஜலத்துக்கு ஸ்வ பாவம் வெளுப்பே யாகிலும்
அந்நீர்ச் சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழே கறுத்து மேலே

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

மண் மாதர் விண் வாய் அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே –
வாய் -இடம்
ஸ்வாவதாரத்தில் அவன் பிரிவைப் பொறாத மண் மகளுக்காக
இவ்வாகாசத்தை தனக்கு இடமாகக் கொண்ட மேகங்கள்
வேங்கடவனைத் தன் முழக்கத்தால் அழைத்ததாயிற்று
அதுக்கு அவன் வாராமையாலே
அவனுக்கு இருப்பிடமாகிற முலையில் நின்றும் அவன் கேட்கத் தன் சீர் முழக்கத்தால்
தான் அவன் கொடுமைகளைப் புலம்பிக் கொண்டு மழையாகிற தன் கண்ணீர்கள்
ஆறுகளாய்ப் பெருக அழா நின்றதே
மழை -மேகம்
வார்கின்றதே -பெருகா நின்றதே –

—————–

அவதாரிகை

இப்படி பார்ஸ்வஸ்த்தரும் ஆஸ்வஸிப்பிக்க வேண்டும்படியான இவருடைய
ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்
இதுக்குப் பரிஹாரம் ஏதோ என்று கலங்கின அளவிலே
நிதானஜ்ஞரான நிரூபகர் பகவத் விஷய மூலமான ஆர்த்திக்கு (இதுவே நோய் )
தத் சம்பந்தியான பரிஹாரம் செய்ய பிராப்தம்
என்று சொன்ன பாசுரத்தை
தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோ என்று வினவின
செவிலி முதலானார்க்கு
கட்டுவிச்சி நோய் நாடி
பரிஹாரம் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –

பாசுரம் 53-வார் ஆயின முலையாள் இவள் –
கட்டுவிச்சி கூறுதல்-
வைகுந்தா மணி வண்ணனே -2-6-

பதவுரை

வாரா ஆயின முலையான–கச்சுப் பொருந்திய தனத்தை யுடையவளான
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
இது–இந்த நோயானது
வானோர் தலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய்–தேவாதி தேவனான திருமாலினது தகுதியான
திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்;
(இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;)
தெய்வம்–திய்வமான
தண்–குளிர்ந்த
அம்–அழகிய
துழாய் தார் ஆயினும்–(அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும்
தழை ஆயினும்–(அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும்
தண் கொம்பு அது ஆயினும்–குளிச்சியான (அதன்) கிளையை யாயினும்
கீழ்வேர் ஆயினும்–கீழிலுள்ள (அதன்) வேரையாயினும்
நின்ற மண் ஆயினும்–(அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும்
கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்

வியாக்யானம்

வாராயின முலையாள் இவள்
இவள் கச்சை யுடைத்தான முலையை யுடையவள் என்று
பருவத்தைச் சொல்லுகையாலே
இவள் நோய் வேறு ஒரு முகம் அல்ல என்றபடி

ஆனால் யாராலே வந்த நோய் என்னில்

வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்
நாட்டார் கொள்ளுவது அன்றியே
திவ்யமாய்
கிலேச பலம் இன்றியே
போக பலமான நோயாய் இருக்கும்

இத்தால்
நோய் முதலும்
நோயும்
நாடினாள் ஆயிற்று
மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்

தெய்வத் தண் அம் துழாய் தாராயினும்
நோய் திவ்யமானவோ பாதி
பரிஹாரமும் திவ்யமாக வேணும் என்கிறாள்

அவனோட்டை ஸ்பர்சத்தாலே
அப்ராக்ருதமாய்
செவ்வியாலும் குளிர்த்தியாலும் ஆர்த்தி சாந்த கரமாய்
நிரதிசய போக்யமான திருத்துழாயினுடைய விகஸிதமான
பூ வாகிலுமாம்

தழை யாயினும்
அதனுடைய விகாஸத்தை யுடைத்தான
இலைத் தழை யாகிலுமாம்

தண் கொம்பதாயினும்
அந்தத் தழையாலே குளிர்த்தியை யுடைத்தான
அதின் கிளை யாகிலுமாம்

கீழ் வேராயினும்
இவை எல்லாவற்றையும் தன் மேலே யாம்படி பரிணமிப்பதான
மூலம் ஆகிலுமாம்

நின்ற மண்ணாயினும்
அந்தத் திருத்துழாய்க்கு வாசஸ்தானமான பூமியின் பரப்பு ஆகிலுமாம்

கொண்டு வீசுமினே
நீங்கள் ஸ்வீ கரித்து
அதின் காற்று இவள் மேல் படும்படி வீச அமையும் என்று
ப்ரயோக பிரகாரமும் சொன்னாள் ஆயிற்று –

இத்தால்

வாராயின முலையாள் இவள் -என்கையாலே
இவளுக்கு பகவத் விஷயத்தில் பரிணதையான பக்தியானது
சங்க பாச அநு பந்தை யானமை தோற்றுகிறது
(ஸத்ஸங்க சேர்க்கை -பகவத் சங்க பாசம் )

வானோர் தலைமகனாம் சீராயின -என்கையாலே
ஸூரி போக்யனான ஸர்வேஸ்வரனுடைய குண கணங்கள்
பக்தி அபி விருத்தி ஹேது என்னும் இடம் தோற்றுகிறது

ஸ்வகல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-14-10 – விபூதி யோகம்:

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

தெய்வ நல் நோயிது-என்கையாலே
இந்த பக்தி உத் க்ருஷ்டையாய் இருந்ததே யாகிலும்
போக அலாப தசையில் ஆர்த்தியை விளைக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

தெய்வத் தண் அம் துழாய்-இத்யாதியாலே
இவ்வார்த்தி சாந்தி பகவத் சம்பந்தி பரம்பரா சம்பந்தத்தாலே
என்னும் இடம் தோற்று கிறது

அதாவது
தெய்வத் தண் அம் துழாய்-என்று
ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமானவர் ஆதரணீயர் என்றபடி

தாராயினும் -என்று
ஸுவ் மனஸ் யோத்தரான சிரோ பூதரைக் காட்டுகிறது
(பூம் கொத்து -தலையால் தாங்க
நம்மாழ்வாருக்கு மேலிட்ட முதல் ஆழ்வார் போல்வார் )

தழை யாயினும் -என்று
அந்த ஸுவ் மனஸ் யத்தாலே கந்தளிதரான பரிசர வர்த்திகளைக் காட்டுகிறது –
(மதுரகவி ஆழ்வார் போல்வார் )

தண் கொம்பதாயினும் -என்று
அந்தத் தழைப்பாலே குளிர்த்தி பெற்ற கிளைஞ்சரைக் காட்டுகிறது
( கிளைஞ்சர்-உறவினர்)

கீழ் வேராயினும் -என்று
இந்த சாகோச்ச் ராயத்துக்கு அடையக் கீழாம் படியான
தாழ்ச்சியை யுடையார்
தாழ நிற்கிற சேஷத்வ ஸ்வ பாவத்தாலே
இப் பரம்பரையை வர்த்திப்பிக்கிற மூல பூதர் என்னும்படியானவரைக் காட்டுகிறது
(நைச்ய அனுசந்தானம் பண்ணும் பூர்வர் )

நின்ற மண்ணாயினும் -என்று
ஏவம் பூதர் வர்த்திக்கிற தேச ஸம்பந்தம் அமையும் என்று காட்டுகிறது

கொண்டு வீசுமினே-என்று
ஏவம் வித பரிஹார ஹேதுவைக் கொண்டு ப்ரவர்த்திக்குமதே
உங்களுக்கு க்ருத்யம் என்றதாயிற்று

யே து பாகவதாஸ் சங்கை ஸப்ருசந்த் யுபவிசந்தி ச பஸ்யந்த்யபி ச ஸ்ருண்வந்தி
தாஸஸ் தேஷாம் அஹம் முனே-என்று
பகவத் சம்பந்தி பரம்பரா ஸம்பந்தம் உத்தேச்யமாகச் சொல்லக் கடவது இறே

(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடுவினை களையலாமே
பாகவதர்கள் ஸ்பர்ச வேதிகள் என்றவாறு )

——-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவள் இருந்து பகட்டக் கேளாது இறே அது
காலமும் அதுவேயாய் நிலை நின்று அவளும் மோஹித்தாள்
இம்மோஹத்துக்கு நிதானம் அறியாதே ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி
பந்துக்கள் கலங்கி வழி அல்லா வழியே பரிஹரிக்க இழிய
இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி
நீங்கள் செய்கிற இது கார்யம் அன்று
இவள் பிழைக்க வேணுமாகில் நான் சொல்லுகிறபடியே இங்கனே பரிஹரிக்கப் பாருங்கோள்
என்கிறாள் –

வியாக்யானம்

வாராயின முலையாள் இவள்
நீங்கள் செய்கிற இவ்வெறியாட்டம் கொண்டு பரிஹரிக்கும் பருவம் அல்ல
கால ஷேபம் பண்ணாதே கடுக சிகித்ஸித்துக் கொடு நிற்க வேண்டும்படி யன்றோ
இவள் பருவம் இருக்கிற படி

வாராயின முலையாள் இவள்
வாராலே யான முலை
வாராலே தாங்கப்பட்ட முலையை

—————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இப்படி அருளிச் செய்து அத்யார்த்தியாய்
மோஹங்காத நாயகி பாவத்தைப் பெற்றார்
இந்த மோஹத்தை மற்ற நோய்களில் ஒன்றாக்கி
இந்நோய் முதலையும்
இந்நோய் ஸ்வரூபத்தையும்
இத்துக்கு இதுதான் தணிவு என்னுமத்தையும்
அறியாதாள் ஒருத்தி எத்தையோ இதுக்குப் பரிஹாரமாகச் செய்ய நினைக்க
அது எல்லாம் அறிந்த இவள் உயிர்த் தோழியானவள்
அவளை நிராகரித்து
இது செய்யுங்கோள் என்று ஸ்வ பஹு மான்யைகளைக் குறித்து விதிக்கிறாள்

வியாக்யானம் –

வாராயின முலையாள் இவள்
இம்முலைகள் அதி மாத்ரமாய் வளரப் புக
அத்தைத் தடுக்கும் வாரால் அதில் பஹு மதி செய்தவளாய்
அத்தால் அவைகளை ஒப்பிக்கும் அவள் ஆயிற்று இவள்
இதுக்குப் பலம் பர த்ருஷ்டி பிரசரண நிவாரணம்
கொடிப்பந்தலுக்கு அணுக்கம் தீர்ப்பது போன்றதாயிற்று இவ்வார் இவளுக்கு
இவளும் பொற்கொடி இறே
உபாஸகனுக்கு ஸ்மர்த்வ்யாதபி ஸ்ம்ருதி அத்யர்த்த பிரியமானால் போலே
தத் பக்தியேயான இம்முலைகளிலே இப்படி பக்தி செய்யும் இவளுக்கு
மற்ற நோய் அப்ரஸக்தம் என்றதாயிற்று
முலைக் கச்சு உள்ளவளான இவள் என்றபடி

இந்நோய்க்கு நிதானத்தையும் சொல்லுகிறாள்
வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது
என்னை ஈர்க்கின்ற குணங்களை யுள்ளவன் இறே -நித்ய ஸூரி நிர்வாஹகன்
அந்த குணங்களின் ஈடுபட்டால் வந்த நல்ல திவ்யமான நோய் காண் இது
சீராயின நோய் பரிஹரிப்பது அன்றாகில் இனி கண் விழித்து
வார்த்தை சொல்லுமதுக்கு உபாயம் ஏது என்ன

தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
என்கிறாள்
தேச கால பேதேந ஸம்பவா ஸம்பவா பிப்ராயம் இவ்விகல்பம்

துளஸீ காந்தம் யத்ர –தத்ர சந்நிஹிதோ ஹரி -என்ற
தேவ தேவ சாந்நித்யத்தாலே
பரிமளத்தாலும்
கோமளதையாலும்
அழகியதும் குளிர்ந்ததுமான
பூத்தாருள்ள துழாயை நீங்கள் சிரஸா தரித்துக் கொண்டு வீசிப் பரிஹரிக்கவே
கண் விழிப்பள் என்றபடி

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவர் ஆர்த்தியை சமிப்பிக்கும் இடத்தில்
ஸாரஞ்ஞரான கடகராலே சமிப்பிக்க வேணும் என்று நினைத்து
அவர்களை அபேக்ஷித்த பிரகாரத்தை
வண்டுகளைத் தூதாக நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே போக விடுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –

பாசுரம்-54-வீசும் சிறகால் பறத்தீர் –
வண்டு விடு தூது –
கேசவன் தமர் -2-7-

பதவுரை

நெய்–(திருவாய்ப்பாடியிலே) நெய்யை
தொடு உண்டு–கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி–(பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும்–(மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தருளிய
எம் ஈசர்–எமது தலைவரும்
விண்ணோர் பிரானார்–(மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய
மாசு இல் மலர் அடி கீழ்–குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ்
எம்மை சேர்விக்கும்–எம்மை அடைவிக்கவல்ல
வண்டுகளே–ஓ வண்டுகளே! (நீங்கள்)
வீசும் சிறகால் பறத்தீர்–வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்ல வல்வீர்;
விண் நாடும் துங்கட்டு எளிது–(அவர் வீற்றிருக்கு மிடமான பரம பதமும் உங்களுக்குச் செல்ல) எளிது;
(எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது)
பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்
படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போக வேணும்.

வீசும் சிறகால் பறத்தீர்
அவன் தன்னைப் போலே கால் கொண்டு நடக்க வேண்டாதே
எழ வீசுகிற சிறகாலே ஆகாசத்திலே போவுதீர்

விண்ணாடு நுங்கட்கு எளிது
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாஸே பஷிணாம் கதி -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் -என்கிறபடியே
பக்ஷ பலமுடைய உங்களுக்கு பரம வ்யோம ஸப்த வாஸ்யனான திருநாடு
செல்லுகிறது எளிதாய் இருக்கும்
ஆகையால் போகைக்கு உறுப்பாகச் செய்ய வேண்டுவது இல்லை

பேசும்படி யன்ன பேசியும் போவது
அங்குச் சொல்லும்படியான அந்த வார்த்தைகளை நான் கேட்டு ஆஸ்வஸித்து
இருக்கும் படி எனக்குச் சொல்லியும் போக வேணும் –

நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர்
நெய்யைக் களவிலே அமுது செய்தயாராக ஏசும்படியான அந்தச் செயலை அனுஷ்ட்டித்து
அத்தாலே எத்திறம் -1-3-1- என்று
நான் ஈடுபடும்படி எனக்கு ஸ்வாமி யானவர் –

விண்ணோர் பிரானார்-
நித்ய ஸூரிகளுக்கு நிரந்தர போகத்தை உபகரிக்கிறவருடைய

மாசின் மலரடிக் கீழ் –
ஹேய ப்ரதிபடமாய்
நிரதிசய போக்யமான
திருவடிகளின் கீழே

எம்மை சேர்விக்கும் வண்டுகளே
என்னைச் சேர விடுவதாக உத் யுக்தங்களான வண்டுகளே
பேசும்படி அன்ன பேசியும் போவது -என்று அந்வயம்

இத்தால்
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது-என்கையாலே
ஸாரஞ்ஞரான கடகருடைய ஞான அனுஷ்டான ரூபமான பக்ஷ த்யவத்தாலே
நிரந்தர பகவத் அனுபவத்தில் யுண்டான உச்ச்ரித கதியாய் இருப்பார்க்கு
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்னும் கணக்கிலே
போக பூமி எளிது என்னும் படி தோற்றுகிறது

பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கையாலே
அப்படிப்பட்ட கடகருடைய கடிப்பிக்கைக்கு ஈடான வார்த்தை
இவ்வதிகாரிக்கு ஆஸ்வாஸ கரம் என்றபடி

நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்-என்கையாலே
ஈஸ்வரனுடைய
நீர்மையும்
மேன்மையும்
இச்சேதனனுக்கு நிரந்தர உஜ்ஜீவன ஹேது என்றபடி –

மாசின் மலரடி-என்கையாலே
ஆஸ்ரித விஷயத்திலே தாரதம்யம் ஆகிற மாசு இல்லாமையும்
ஆஸ்ரித லாபத்திலே விகாஸத்தையும் சொன்னபடி

அடிக் கீழ் -எம்மை -என்கையாலே
இரண்டு தலைக்கும் சம்பந்தம் ஸ்வ ஸ்வாமி பாவம் என்றபடி

சேர்விக்கும் வண்டுகளே-என்கையாலே
தன் வாங் மாதுர்யத்தாலே சேர விடுகை ஆச்சார்ய க்ருத்யம் என்றதாயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றாளே
வீச வேண்டுவது இல்லை
இவளுடைய யுக்தி மாத்திரத்திலே உணர்ந்தாள்
உறங்கின போது பசி பொறுக்கலாம்
உணர்ந்தால் புஜித்து அல்லது தரிக்க ஒண்ணாது இறே
மோஹம் தானே நன்றாய் விழுந்தது
அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்
இங்கு நின்றும் ஓர் ஆள் விட்டு வரவு பார்த்து தரித்தல் செய்ய வேண்டும்படி யாயிற்று
அங்கு நின்றும் ஒருவரை வரக்கண்டது இல்லை
தன் பரிகரத்தில் கால் நடை தந்து போக வல்லார் இல்லை யாயிற்று –
இனித் தன பரிசரத்திலே வர்த்திக்கிற வண்டுகளைத் தூது விடுமத்தனை
என்று தூது விடுகிறாள்

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

அவதாரிகை

அப்படி சிலர் சிரஸா தரித்து வந்து உடம்பைத் தடவவே கண் விழித்தாளாய்
ஸ்வ ஆச்சார்யர்களைக் கண்டு
ஞான கர்மங்கள் ஆகிற சிறகால் எம்மை வீசும் வண்டுகளே
அச்சிறகால் எம்மை விண்ணாடு சேர்விக்கும் வண்டுகளே
பரத்தில் சேர்விக்கும் வண்டுகளே
விண்ணாடு உங்களுக்கு எளிது -நீங்கள் பரத்திலே தூது போங்கோள்
போவதும் அங்கே நீங்கள் பேசும்படி என்ன
அத்தை ஏன் முன்னே பேசியும் போக வேணும் -என்று அவர்களைத் தூது விடுகிறாள் –

வியாக்யானம்

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது
இதுக்கு அர்த்தமும்
அந்வயமும்
சொன்னதாயிற்று

நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசின் மலரடிக் கீழ் –
சிசுபாலாதிகள் ஏசும்படி களவால் நெய் அமுது செய்ய
அத்தால்
பிரகடித ஸுசீல்ய வாத்சல்யாதிகளால் என்னைத் தாம் அடிமை கொண்டு
எண்ணில் ப்ரீத்தியையும் விளைத்து
எம் ஈஸரானவர் விண்ணோர் பிரானாரே
இத்தாலும்

மாசின் மலரடிக் கீழ்
ஸுர்யாதி தோஷ ராஹித்யத்தால் ஜகத் ஆதரணீயரானவருடைய திருவடி மலர்களுக்கு
என் தலை கீழ் பீடமாம்படி என்னைச் சேர்த்து விடும் வண்டுகள் நீங்கள் அன்றோ
இப்போதே நமக்காகத் தூது போங்கோள் -என்கிறாள்
எம்மை சேர்விக்கும் வண்டுகளே

———————————

அவதாரிகை

இப்படி நிரவதிகமாக இவருக்குப் பகவத் விஷயத்தில் பிறந்த பக்தி வைலக்ஷண்யத்தைக் கண்ட
அன்புடையார் ஸ்லாகித்து யுரைத்த பாசுரத்தை
தலைவியை நலம் பாராட்டின (கிளவித் )தலைமகன் வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

பாசுரம் -55-வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ –
நலம் பாராட்டுதல்-
சார்வே தவ நெறி -10-4-

பதவுரை

வண்டுகளோ–வண்டுகளே!
வம்மின்–வாருங்கள்;
நீர் பூ–நீரிலுண்டாகிற பூவும்
நிலம் பூ–நிலத்திலுண்டாகிற பூவும்
மரத்தின் ஒண்பூ–மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும்
உண்டு–(தேனைக்) குடித்து
களித்து–களிப்படைந்து
உழல்வீர்க்கு–(எங்கும்) திரிகிற உங்களுக்கு
ஒன்று உரைக்கியம்–(யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம்.
ஏனம் ஒன்று ஆய்–ஒப்பற்ற வொரு வராஹ மூர்த்தியாய்
நண் துகள் ஆடி–பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய
வைகுந்தம்–பரமபதத்தை
அன்னாள்–ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய
குழல்வாய்–கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள
விரைபோல்–பரிமளம்போல
விண்டு–மலர்ந்து மணம் வீசி
கள் வாரும்–தேன் பெருகப்பெற்ற
மலர்–பூக்கள்
தும் வியல் இடத்து–உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே
உளவோ–இருக்கின்றனவோ?

வியாக்யானம்

வண்டுகளோ வம்மின்
பூவின் வாசியும்
மணத்தின் வாசியும்
தேனின் வாசியும்
அறியும் நீங்கள் -புறம்பு யுண்டான உங்களுடைய ரஸத்தில் பராக்கை விட்டு
நான் சொல்லுகிற வார்த்தை கேட்க்கும்படி வாருங்கோள்

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித் துழல் வீரக்கு
எளிதாக ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத நீர்ப் பூக்களிலும்
எல்லார்க்கும் கிட்டலாம்படியான நிலத்தில் பூக்களிலும்
உயர்ந்த சாகைகள் நிற்கிற மரத்தில் பூக்களிலும்
உண்டான வாசியை அறிந்து புஜித்துக் களித்து
அத்தாலே
நிரதிசய ஆநந்திகளாய் எங்கும் ஓக்க ஸஞ்சரிக்கிற உங்களுக்கு

ஓன்று உரைக்கியம்
நீங்கள் கண்ட வாசி போல் அன்றியே
அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருபத்தொரு வை லக்ஷண்யம் சொல்லுகிறோம்

ஏனம் ஒன்றாய்
அத்விதீயமாய் இருபத்தொரு வராஹமாய்
அன்றியே
வராஹ ஜாதியோடே வேறுபாடு இல்லாதபடியான ஜாதி ஐக்யத்தை யுடையனாய்
(மானமிலா பன்றியாய் -அபிமானம் இல்லாத உப மானம் இல்லாத -இப்படி இரண்டு போல் இங்கும் )

மண்டுகளாடி
மண்ணினுடைய துகளை ஆசினவனுடைய
அதாவது
துகள் என்று
ஏக தேசமாய்
மஹா வராஹத்தினுடைய திரு வயிற்றுக்கு பிரளய ஆர்ணவ கதையான பூமி
ஒரு கஸ்தூரி பிந்துவாலே அலங்காரம் இட்டால் போலே இருக்கை
(திரு எயிற்றுக்கு -கோரைப்பல்லுக்கு என்றுமாம் )

வைகுந்த மன்னாள்
இப்படி ஆபத்து வந்து உதவ வேண்டாத படி அவனுடைய அழியாத தேசம்
போலே இருக்கிறவளுடைய

குழல்வாய் விரை போல்
புஷ்பாதியாலே வந்தேறியான பரிமளம் அன்றியே
ஸ்பா விகமான குழலின் பரிமளம் போலே
(கந்தம் கமழும் குழலீ அன்றோ இவள் )

விண்டு
எங்கும் ஒக்கப் பரம்பி

கள் வாரும்
மதுஸ் யந்தியாய்க் கொண்டு ஆனந்திப்பியா நிற்கும்

மலருளவோ நும் வியலிடத்தே
நீங்கள் ஸஞ்சரிக்கிற பரந்த தேசத்திலே இப்படிக்கொத்த பூவும் உளதோ

இத்தால்
வண்டுகளோ வம்மின்
இவ்வாழ்வாருடைய வை லக்ஷண்யத்தை அன்பரானவர்கள்
பகவத் அனுபவ தத் பரராய்த் திரிகிற ஸாரஞ்ஞரைப் பார்த்து

(பகவத் ப்ராவண்யம் – மொட்டு-பல்லவம் -பிரமம்
பாகவத சமாஹம் -மலர்ந்து -மத்யமம்
ஆச்சார்யர் அபிமானம் – பழுத்தால் போல்
சரமபர்வ நிலை அன்றோ
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் திரிந்து -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனால் போல் )

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்
ஷீராப்தி சாயியான வ்யூஹ ஸ்தலத்தின் விகாஸத்தையும்
பூதல வர்த்தியான அவதாராதி வை லக்ஷண்யத்தையும்
நாநா சாகைகளின் முடியிலே காணும் படியாய் நித்ய போக்யமான
பர தசையில் (வேதாந்த விழுப்பொருள் தானே பர வாஸூதேவன் )வை லக்ஷண்யத்தையும்
நிரந்தர அனுபவம் பண்ணி ஆநந்திகளாய்
ஸர்வ லோகங்களிலும் காம சாரிகளாய்த் திரிகிற உங்களுக்கு ஓன்று சொல்லுகிறோம்

ஏனம் ஒன்றாய் மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய அழிவற்ற தேசம் போலே
ஆஹ்லாத கரரான இவருடைய
தூராத் கந்தோ வாதி -தைத்ரியம் -2 ப்ரச்னம் -என்கிற கணக்கிலே
இவ் விகாஸமும்
யசஸ் ஸுரப்யமும்
(எண் திசையும் அறிய இயம்பிய கீர்த்தி அன்றோ ஆழ்வாரது )
நீங்கள் அனுபவித்த பகவத் சம்பந்திகளில் யுண்டோ என்று
ஸ்லா கித்து உரைத்தார் ஆயிற்று –

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தூதுக்கு வந்து –
பிரிய நினைத்து –
பிரிந்தால் வரும் தனையும் இவள் ஆறி ஜீவித்து இருக்கைக்காக
இப்படி இருக்கிறவன் அகலான் -என்று அவள் நெஞ்சிலே படுகைக்காக
நலம் பாராட்டு என்று ஒரு கிளவியாய்
அவளைக் கொண்டாடுகிறான்

குலே மஹதி ஸம்பூதே -அயோத்யா -26-21-என்று
பெருமாளும் கொண்டாடினார் இறே

வியாக்யானம்

வண்டுகளோ வம்மின்
வண்டுகாள் வாருங்கோள்

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
மூன்று வகையாதல்
நாலுவகை யாதல் சொல்லக் கடவது இறே
நிலப்பூவும் கொடிப்பூவும் என்று நிலத்திலே இரண்டாக்கி
மற்றை இரண்டையும் கூட்டி
நாலாகச் சொல்லுவாரும் உண்டு
நல்ல மலர்ப் பொழில் நாலும் நுழையீர்காள் -என்னக் கடவது இறே
பூ யுள்ள இடம் எங்கும் புக்கு
மதுபானம் பண்ணிக் கழித்து
அதுவே யாத்ரையாகத் திரிகிற உங்களுக்கு நல்லதொரு வார்த்தை சொல்லுகிறேன் வாருங்கோள்

ஏனம் ஒன்றாய்
அத்விதீயமான மஹா வராஹமாய் பூமியைத் தன்

—————————————-

அவதாரிகை

இப்படி அன்பர் ஸ்லாகிக்கும் படி பகவத் விஷயத்தில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே இவருடைய அனுபவ அலாபத்தாலே
வந்த கிலேசம் தீரும்படி
ஸர்வேஸ்வரன் ஒரு முகத்தாலே ஸம்ஸ்லேஷத்தை ப்ரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பிக்க
பார்ஸ்வஸ்த்தரனானவர் தம்முடைய முன்புத்தை ஆர்த்தி கண்டு கலங்கின
ஸூஹ்ருத்துக்களை ஆஸ்வஸிப்பித்த பாசுரத்தை
தன் ஆற்றாமைக்குக் கலங்கி இருந்த தோழியைக் குறித்துத்
தலைவி இரவிடத்துத் தலைமகன் கலந்தமையைத்
தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –

பாசுரம் -56-வியலிடம் உண்ட பிரானார் விடுத்த –
தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –
கண்கள் சிவந்து -8-8-

பதவுரை

வியல்–விசாலமான
இடம்–உலகங்களை
உண்ட–திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார்–பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த–(எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால்–சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று–உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தும்–வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம்–(இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி–வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து–ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர்–அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன்–அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனிய தேன் துளிகளை
புயலுடை நீர்மையினால்–மழை துளித்தல் போலத் துளிக்குந் தன்மை யுடையதாய்
என்–என்னுடைய
புலன்–அவயவங்களிலும்
கலன்–ஆபரணங்களிலும்
தடவிற்று–ஸ்பர்சித்தது

வியாக்யானம்

வியலிடம் உண்ட பிரானார்
விஸ்த்ருதமான தேசத்துக்கு பிரளய ஆபத்து வர
வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகர் ஆனவர்

விடுத்த திரு அருளால்
அவர் நம்மளவில் வர விட்ட சம்பத்தான அருளாலே

உயலிடம் பெற்று உய்ந்தும்
உய்கைக்கு அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தோம்

அஞ்சலம்
இனி வாடை தொடக்கமான வற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லை

தோழி
இன்னாமைக்குத் தளர்ந்த வுனக்கும் ஒக்கும் இறே பேறு

ஓர் தண் தென்றல் வந்து
நாட்டில் தென்றலோடு கூட்டலாவது ஓன்று இன்றியே
அத்விதீயமாய்
நம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி அதி சீத ஸ்பர்சமாய்
நம் பக்கல் ப்ரேமத்தாலே தாக்ஷிண்யத்தை
யுடைத்தான தென்றலானது
தன் வரத்துத் தானே ஆஸ்வாஸ கரமாம் படி வந்து

அயலிடை யாரும் அறிந்திலர்
தென்றலுக்கு இடையுமவள் தென்றல் வரவுக்கு உகந்து உரைத்தமையாலே
நாயகன் வரவு சொன்னாள் என்று அறிந்து

(நேராக நாயகன் கலந்தமை சொல்ல வில்லை
ஓர் தண் தென்றல் வந்து என்று உகந்து உரைத்ததே நாயகனுடைய வரவைச் ஸூசிப்பிக்கிறாள் )

தோழி அசல் அறியில் செய்வது என் -என்று
துணுக்கு என்ன

அயல் இடத்து ஒருவரும் அறிந்தார் இல்லை
என்கிறார்

மேல் செய்வது என் என்று கேட்க
அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
அழகிய பூந்தாரை யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற
ஸ்வ பாவத்தை யுடைத்தாய்க் கொண்டு
என்னுடைய இந்திரியங்களை ஸ்பர்சித்து ஆஸ்வஸிப்பித்தது

அன்றியே
பொலன் கலன் என்ற
பாடமான போது
பொன்னாலே சமைத்த கலன் என்று சொல்லுவர்

இத்தால்

ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக கிருபையாலே
நமக்கு உஜ்ஜீவிக்கக் குறையில்லை

பிராணஸ்ய பிராண -என்கிறபடியே
நமக்கு ஆஸ் வாஸ கரனானவன் –
லௌகிகரான ஒருவர் அறிவுக்கும் விஷயம் ஆகாத படி
தன்னுடைய நிரதிசய போக்யதையையும் பிரகாசிப்பித்து
தம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி
தம்முடைய கரணங்களையும்
ஞானாதி குண அலங்காரங்களையும்
தான் விரும்பினான்

(புலன் கலனே -இந்திரியங்கள் -ஆபரணங்கள் -என்று கொண்டு
பிரித்து அருளிச் செய்கிறார் )

நமக்கு இனி அஞ்ச வேண்டுவது இல்லை என்று
ஸூஹ்ருத் பூதரை ஆஸ்வஸி ப்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று –

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க
பிரிவாற்றாத் தலை மகளைக் கண்ட தோழி
இவளுடைய ஆற்றாமை இருந்த படி இதுவாய் இருந்தது
நாயகனையோ வரக் காண்கிறிலோம்
இனி இவள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இல்லை -இவளை இழந்தோம் ஆகாதே என்று நோவு பட
இத்தைக் கண்ட தலைமகள்
ஸந்நிதியில் யாத்ருச்சிகமாக ஒரு ஸம்ஸ்லேஷம் விருத்தமாயிற்று காண்
நீ அஞ்ச வேண்டா காண் -என்று
தலைமகள் தான் தோழிக்கு விருத்தமான ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிறாள்

வியாக்யானம்

இது யுண்டாம் போது நம் பக்கலிலே ஒரு கைம்முதல் வேணும்
அதுவும் இன்னது என்று அறிகிறிலோமே என்ன

வியலிடம் யுண்ட பிரானார்
பிரளயத்தில் பூமிக்குள்ள கைம்முதலே இறே நமக்கு யுள்ளது என்கிறாள்
ஆபத்தே காண் வேண்டுவது அவன் அருளுக்கு –
பிரளய ஆபத்தில் அவன் வயிற்றிலே வைத்து நோக்குகிற போது
பூமிக்காக ஏதேனும் கைம்முதல் யுண்டோ
அப்போது பூமிக்கு யுண்டான ஆற்றாமை இவள் ஒருத்திக்கு யுண்டு போலே காணும்

பிரானார்
உபகாரமே காண் அவர் பக்கல் உள்ளது
அவர் பண்ணும் கிருபைக்குப் பாத்ரபூதராம் இத்தனையே காணும் இத்தலைக்கு வேண்டுவது
அவர் பண்ணும் இது ஒரு ஸஹ காரியை அபேக்ஷியாது இறே

எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிற வர்கள்
தமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது என் என்று கேட்க
வங்கி புரத்து நம்பி இருந்தவர்
மூடோ யமல்ப மதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –98-93-என்கிற
க்ஷத்ர பந்துவின் வாக்கியம் அன்றோ என்ன
அது ஒண்ணாது காண்
ப்ரணதே-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -98-93-என்று ஓன்று யுண்டு
அதிலே ஸர்வஞ்ஞன் அறிய நிர்மமனாய் விழ வேணும் இறே
நம் தலையிலே ஏதேனும் ஒரு அம்சம் ஒதுங்கில் செய்து தலைக் கட்டுகையில் யுள்ள அருமையாலே
அது இழவோடே தலைக்கட்டும்படியாய் இருக்கும் காண்
இத்தலையிலே ஒரு அம்சம் ஒதுங்கில் அது அப்ரதி ஷேதத்தில் ஒதுங்கும் அத்தனை அல்லது
உபாயத்துக்கு ஸஹ காரியாகாது
நீ உபாயமாக வேணும் என்கிற ஸ்வீ காரம் அவஸ்ய அபேக்ஷிதமாய் இருக்கச் செய்தே
அத்தலையிலே உபாய பாவமாம்படி இறே இருப்பது
இவன் பக்கலிலே பரமபக்தி பர்யந்தமாக விளைந்தால்
அது ஸ்வரூப ப்ரயுக்தமான வகையில் அந்வயிக்கும் அத்தனை அல்லது
ஸ்வ தந்திரமாய் நின்று பல பிரதமாக மாட்டாதாய் இறே இருப்பது

ஆனால் பின்னை நினைத்து இருக்க வேண்டுவது என் என்ன
காளியனுடைய வார்த்தையை நினைத்து இருக்கும் அத்தனை -என்று அருளிச் செய்தார்

ஸோ அஹம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-7-
திருமேனியில் என்னுடைய உடலை இட்டுச் சுற்றி பிராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தனாகாத நான்

தேவ தேவ ச
பிராதி கூல்ய நிவ்ருத்தியே

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும்
விசேஷ பலத்தைப் பெற்று உஜ்ஜீவித்தோம்
தன் உஜ்ஜீவனமே தன் தோழிமார்க்கு எல்லாம் ஆகையாலே இந்த பஹு வசனம்

அஞ்சலம் தோழி
நீ இவ்வாடை கூடகமானவற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லையடி

ஓர் தண் தென்றல் வந்து அயலிடை யாரும் அறிந்திலர்
அயல் இடத்தாரும் அறியாத படி தன் வரவே எனக்கு ஆஸ் வாஸ கரமாம்படி
குளிர்ந்த தென்றல் வந்தபடி

வந்தது என் செய்தது என்ன

அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
என்கிறாள்
அழகிய பூந்தராய் யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற
ஸ்வ பாவத்தை உடையதாய்க் கொண்டு தடவிற்று
என் கண் முதலான இந்த்ரியங்களையும் அணி கலன்களையும்
அது செய்து போந்துள்ள ஸூகத்தை
நான் ஏது என்று சொல்லுவேனடி

—————————————

அவதாரிகை

இப்படி இவர்க்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ஞான வைலக்ஷண்யத்தை அனுபவித்து
ஈடுபட்ட அன்பரானவர்கள் தங்கள் ஈடுபாட்டைக் கண்டு
ப்ராவண்யத்தை மட்டம் செய்விக்க வேணும் என்று நியமித்த
பந்துக்களைக் குறித்துச் சொன்ன பாசுரத்தை
தலைவி கண் அழகிலே ஈடுபட்ட தலைமகனைக் குறித்துக் கழறின
பாங்கனுக்குத் தலைமகன்
கழற்று எதிர்மறையான பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57-

பாசுரம் -57-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை –
தலைவன் தோழனிடம் எதிர்வார்த்தை பேசுதல் –
முடியானே மூவுலகும் -3-8-

பதவுரை

புலம் குண்டலம்–அழகிய குண்டலங்களையுடைய
புண்டரீகத்த–தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள
போர்கெண்டை–(தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டை மீன்கள் போன்ற கண்கள்
வல்லி ஒன்றால் விலக்குண்டு–(மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு
உலாகின்று–(தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக் கொண்டு
வேல் வழிக்கின்றன–வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன.
கண்ணன்–எம்பெருமானுடைய
கையால்–திருக் கைகளால்
மலக்குண்டு–கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த–(தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல் போன்று–அலை கிளரப் பெற்ற கடல்போல
அவற்றால் கலக்குண்ட நான்று–அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது
கண்டார்–(அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள்
யாரும்–எவரும்
எம்மை–எம்மை
கழறலர்–(ஒருத்தியின் கண் பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள்.

வியாக்யானம்

புலக் குண்டலப்
புலப்படும்படி அழகிதான் குண்டலத்தை யுடைய
புலப்படுத்தல் -காணப்படுதல்

பொலக் குண்டலம் என்று பாடமாய்
பொற் குண்டலம் என்றுமாம்

புண்டரீகத்த
குண்டலத்தை யுடைய
புண்டரீகம் என்கையாலே
செவ்வியும்
அழகும்
மணமும் யுடைமையால்
புண்டரீகம் ஒப்பான முகத்தைச் சொல்லுகிறது

போர்க் கெண்டை
அப்புண்டரீகத்திலே தன் நீல முகம் ஒன்றிப் போருவது (பொருவது)
இரண்டு கெண்டையானது என்கையாலே
கண்ணைக் காட்டுகிறது

வல்லி யொன்றால் விலக்குண்டு
வல்லி ஒன்றாலே விலக்கப் பட்டு
அதாவது
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ -திருவாய் -7-7-2- என்று
கற்பகக் கோடியை மூக்குக்கு உவமையாகச் சொல்லுகையாலே
பொருகிற கெண்டை போன்ற கண்கள் மூக்காகிற கற்பகக் கொடியால்
விலக்கப் பட்டால் போன்றன என்கை

உலாகின்று
உலவா நின்று கொண்டு
விலக்கின அளவிலும் ஸ்ப்ரத்தை யாற்றாமையாலே
உலவா நின்றன என்னலாய் இருக்கை

வேல் விழிக்கின்றன
வேல் போலே கூரிய பார்வையை யுடையன -என்கையாலே
க்ரூர்யம் மாறாதன என்கை

கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணன் கைகளாலே மலங்கும்படி கடையப்பட்டு
அகவாயில் கிடந்த அம்ருதத்தைச் சுரந்த அலை எறிகிற கடல் போலே
அபரிச் சின்னையான போக்யதையை யுடைய அவற்றாலே
வெறும் கொடுமையே யன்றியே ஆஹ்லாத கரமானவை என்றபடி

கலக்குண்ட நான்று கண்டார்
அக்கடல் அவன் கையிலே பட்டது அத்தனையும் இக்கண்
என்னைப் படுத்தின நாள் கண்டவர்கள்
அதாவது
அவன் கடலைக் கலக்கி ஸாரமான அம்ருதத்தை க்ரஹித்தால் போலே
இக் கண் அகாதமான நெஞ்சைக் கலக்கி ஸாரமான அறிவை அபஹரித்தது என்கை

நான்று கண்டார் -என்கையாலே
அனுபவித்தார்க்கு அல்லது அறிய முடியாது என்கை

எம்மை யாரும் கழறலரே
இப்படி அகப்பட்டுக் கலங்கின எங்களைப் பரிவாலே நியமிக்கிற நீயே யன்றியே
விஷய விரக்தராய் அதிசயித ஞானரான சனகாதி முனிகளும்
வாசி அறிவாராகில்
(ஆழ்வார் வை லக்ஷண்யம் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பார் என்று அறிந்து )
நியமிக்க மாட்டார்கள் என்றதாயிற்று –

இத்தால்

இவருடைய ஞானமானது
1-ஸ்ரவண
2-மனன
3-சாஷாத்கார ரூபமாய்ப்
பரிணமித்த பிரகாரத்தை ஸூசிப்பிக்கிறது
எங்கனே என்னில்

புலக் குண்டலம் என்று
கர்ண ஆபரணத்தைச் சொல்லுகையாலே
1-பிரதம பாவியான ஸ்ரவணமான அலங்காரத்தைக் காட்டுகிறது
(ஸ்ரோதவ்யா
ஸ்ரவணம் -பக்தி நவ லக்ஷணம் -அங்கும் முதல் )

குண்டலப் புண்டரீகம் -என்கையாலே
2-அந்த ஸ்ரவண முதித ஹ்ருதய புண்டரீகத்தைக் காட்டுகிறது –
(வட்ட வடிவு தாமரை-கவிழ்த்தால் போல் -ஆனந்தப்பட்டு உள்ளம் )

போர்க் கெண்டை -என்கையாலே
3-அந்த ஸ்ரவண ஞானத்தை மனனம் பண்ணும் இடத்தில்
பூர்வ பக்ஷ ஸித்தாந்த யுக்தியாலே விரோதத்தை உப பாதித்துப் பண்ணும்
ஆராய்ச்சியைக் காட்டுகிறது

வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று -என்கையாலே
4-மத்யஸ்த்தை யான ஸித்தாந்த யுக்தியாலே விரோதம் சமித்து
ஸ்வ காரியத்தில் வ்யாபாரித்தமையைக் காட்டுகிறது

வேல் விழிக்கின்றன -என்கையாலே
5-இப்படி யுக்தித ப்ரதிஷ்ட அபிதமான ஞானமானது
பாவநா ஸித்தமான கூர்மையாலும்
நெடுமையாலும்
சாஷாத்கார ரூபமான ஆபரோஷ்யத்தைப் பண்ணினமையைக் காட்டிற்று
(கண் முன்னே தோற்றும்படி கூர்மையான தெளிந்த ஞானம் )

கண்ணன் கையால் மலக்குண்டு -என்கையாலே
6-இப்படி அபரோக்ஷ ரூபமான ஞானத்துக்கு த்யேய விஷய வை லக்ஷண்யத்தாலே
பிறந்த பாரவஸ்யத்தையைக் காட்டிற்று
(பக்தி ரூபா பன்ன ஞானம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -அவன் வசம் பட்டாரே )

அமுதம் சுரந்து -என்கையாலே
7-இந்த பாரவஸ்யம் அடியாக இந்த ஞானத்துக்கு அத்யந்த ப்ரீதி ரூபையான
பக்தி ரூபாபத்தியைக் காட்டிற்று
(மதி நலம் -பிரேம ரூபமான பக்தி )

மறி கடல் போன்று -என்கையாலே
8-காதல் கடல் புரைய-5-3-4-என்றும்
கடலின் மிகப் பெரிதால் -7-3-4-என்றும்
கழியப் பெரிதால் -7-3-6- என்றும்
சொல்லுகிற விகாஸ அதிசயத்தைக் காட்டிற்று –

அவற்றால் கலக்குண்ட -என்கையாலே
9-இந்த ஞானம் அனுபவ உபகாரணமாம் அளவன்றியே
பிறரையும் தன் வசமாக்கிக் கொள்ளும் படியைக் காட்டிற்று –

(கடல் போன்ற ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் ஆழ்வாருக்கு ஆனபின்பு
நம்மளவும் -இது அடுத்த நிலை நம் உள்ளமும் கலங்கிற்றே
ஆழ்வார் ஞானம் பக்தி நினைத்து நினைத்து -அம்ருதம் போன்ற பக்தி
நாமும் உருகுகிறோமே
காண்பதற்கு உதவும் -கண்டவர்களைக் கலக்குவத்துக்கும் இதே தானே )

நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – என்கையாலே
10-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய
பிறரை நியமிக்கைக்கு சக்தர் அல்லர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

என்று இருப்பார்கள் போலே காணும்
பவத பரமோ மத -ஸ்ரீ சஹஸ்ர நாம
அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது

——–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

நீ இங்கனே அவனில் தானே ஆழங்கால் பட்டு ஈடுபடா நின்றாய்
அவனில் அத்தனை பிரவணை யாவது உனக்கு உசிதமோ என்றால் போலே
உயிர்த் தோழி சில சொன்னாள்
அதுக்கு அவன் தான் நாயகன் கண் அழகுப் பார்வைகளில் தான் ஈடுபட்ட
நாயகியாய் அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன
ஒரு புண்டரீகத்துக்கு இரு புறமும்
சுடர் இலகு விலகு மகர குண்டலங்கள் -8-8-1-
தானே தானாய்ப் புறப்படும் படியான குண்டலங்களால் அலங்க்ருதமான புண்டரீகத்திலே
பரஸ்பர ஸ்பர்தையால் பொருகிற கெண்டை மீன்களானவை
வல்லி ஒன்றால் தடுக்கப் பட்டு ஸ்பர்தை தீராமையாலே உலவா நின்று கொண்டு
வேல் போலே ஒன்றுக்கு ஓன்று கூரிய பார்வையை உடையனவாயிற்று

அவைகள் எது போன்றன வென்று கேட்டாள் தோழி
அதுக்கு

கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்று -என்கிறாள்
கிருஷ்ணன் கைகளால் கலங்கும்படி கடையப்பட்டதாய் அகவாயில் அம்ருதத்தைச் சுரந்த மறுக்கத்தால்
அலை எறிகிற கடலைப் போன்றன காண் அவை என்றான்

அவற்றால் உனக்கு என் என்றான்
அதுக்கு

அ வற்றால் கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே -என்கிறாள்
என் அகாதமான நெஞ்சாகிற கடலானது அவைகளால் கலங்கினதாயிற்று என்றாள்

கலங்கிற்றோ என்ன

அந்நாள் அவைகளை நீ கண்டாயாகில் நீயும் என்னைப் போல்வாய் காண் –
அவ்வழகையும் ஆகர்ஷணத்தையும் கண்டவர்கள் என்னை யாராகிலும் கழறலாய் இருக்குமோ
இராது கிடாய்
நீ அத்தைக்கு காணாதவளாகையாலே இங்கனே சில என்னில் சொன்னாயாளாய் என்று
இங்கனே சொன்ன தோழியை ஒக்கும் எண்பித்தாள் ஆயிற்று

இவ்வளவும் அருளிச் செய்ய மாட்டாத பட்டர்
விதோ பத்தஸ் பர்த்த ஸ்புரித சபரத் வந்த் வவளிதே-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-99-
த்ருஸவ் தே -ஸ்ரீ குணரத்ன -9-என்று அருளிச் செய்தார் –

—————

அவதாரிகை

இப்படி விலக்ஷணமான ஞான பாகத்தை யுடைய இவர்
ஈஸ்வரன் தம்மைத் தனக்கே யாம்படி பண்ணிக் கொள்ளுகைக்கு
விளம்பம் என் என்று தளும்ப

அவனுடைய ஸர்வ சக்தி யோகத்தை பிரகாசிப்பித்து
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரத்தை

தன்னை வரைந்து கொள்ளாமையாலே தளர்ந்த தலைவியைக் குறித்து
உன்னுடைய நாயகனான ஈஸ்வரனுக்குச் செய்யப்படாதது யுண்டோ என்று தோழி
தலைவன் தலைமையை யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

பாசுரம் -58-கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று –
தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –
திண்ணன் வீடு -2-2-

பதவுரை

ஒன்றே–ஒரு திருவடியிடமே
ஆயிற்று–பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது;
மற்றொரு திருவடி
முழுதாயிற்று–(பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர்–உலகுங்செல்ல வல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய்–ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்
உயர்ந்தோரே இல்லா–(தன்னிலும்) மேற்பட்டவரை யுடையவனல்லாதவனும்
நிழல் தர–நிழலைச் செய்யும்படி
எல்லா விசும்பும்–ஆகாசாவகாம் முழுவதிலும்
நிறைந்தது–வியாபித்தது
நீண்ட அண்டத்து–அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும்
அழறு அவர் தாமரைக் கண்ணன்–சேற்றில் மலர்ந்த செவ்வி மாறாத செந்தாமரை மலர் போன்ற
திருக்கண்களை யுடையவனுமான திருமால்.
இங்கு அளக்கின்றது என்னோ–இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ?

வியாக்யானம்

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று
ஒரு அடித்தலமே பூமி அடையாத தானாயிற்று

ஒரு கழல் போய்
ஒரு திருவடி பூமியில் இடம் இல்லாமையாலே போய்

நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது
சேஷத்வமாகிற நிழலைக் கொடுக்கைக்காக
ஊர்த்வ லோகம் எல்லாவற்றிலும் நிறைந்தது

ஈஸ்வரரான ப்ரஹ்ம ருத்ரர்களும் –
ஒருவன் திருவடியை விளக்க –
ஒருவன் தீர்த்தத்தைச் சுமக்கும் படியான நிழலை இறே
அவர்களுக்குள் கொடுத்தது

நீண்ட வண்டத்து
அபரிச்சின்னமாய்
பரம ஆகாஸ ஸப்த வாஸ்யமான
பரமபதத்திலே

உழறலர் ஞான சுடர் விளக்காய்
உழன்று சஞ்சரிப்பதால்
அலர்ந்து
விகஸிதமான
ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்

இத்தாலே
ஈஸ்வரனுடைய ஞானமும்
அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் -திருவாய் -4-1-8-என்கிற
கணக்கிலே ஸகல வியாபார மூலமாய்
ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும்
ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும்
என்றும் சொல்லிற்று ஆயிற்று

உயர்ந்தோரே இல்லா
தன்னில் உயர்ந்தவர்களை உடையவன் அல்லாதவன்

இத்தாலே
உயர்வற உயர்நலம் யுடையவன் -1-1-1- என்னும்படி
ஆனந்த வல்லி ப்ரக்ரியையாலே சத குண உத்தரிதமாய் வளர்ந்து வளர்ந்து
யதோ வாசோ நிவர்த்தந்தே -தைத்ரியம் என்கிறபடியே
வாக்குக்கும் மனஸ்ஸுக்கும் நிலம் அல்லாத ஆனந்தத்தை யுடையவன் என்றபடி

அழறலர் தாமரைக் கண்ணன்
இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்
அழறு என்று அளறு
நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து
செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி

என்னோ விங்களக்கின்றதே
இப்படி நித்ய விபூதி லோகத்தையும்
நிரதிசய ஞான ஆனந்த யோகத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் யுடையவன்
ஒரு திருவடியாலே பூமியை அநந்யார்ஹமாக்கி
ஒரு திருவடியாலே ஊர்த்வ லோகத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டவனுக்கு
இவ்விபூதியில் அளக்க வேண்டுவது உண்டோ

அளப்பது நின்ற இடம் ஒழிய மாறி இட வேண்டும் இடம் யுண்டாகில் இறே
நிலமும் விசும்பும் இரண்டு திருவடிகளுக்கு இடமாயின இத்தனையே இறே -என்று
அவன் பெருமை உரைத்தாள் ஆயிற்று –

இத்தால்
விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று
உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று
அவனுடைய ஸம்பந்தத்தையும்
ஸக்தியையும்
பிரகாசிப்பித்து
ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

விபூதி த்வய வ்யாப்த ஞான ப்ரபர் அநேகர் உளர்

இப்படிக் கொத்தவன்
அழறலர் தாமரைக் கண்ணன்
அதிகர்தம ஸூத்த ஜவாப்த் யுத்பூத ரவி கர விகஸித தாமரை போன்ற
கண்ணுள்ள கண்ணன்
அழறு -சேறு

என்னோ விங்களக்கின்றதே –
எந்தப்பிரகாரமாக இங்கு அளந்தானோ
அளப்பது நின்ற இடம் ஒழியவாம்
நிலமும் விசும்பும் இரண்டும் திருவடிகளுக்கு இடமான வித்தனை
ஸ்ருதியும் த்ரிணீ பாத்தா வி சக்ரமே -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் என்றது
இவன் எங்கனே மூட்டியோ தாள் அளந்தான்
சொல்லாய் நீ தான் தோழி –

—————-

அவதாரிகை

இப்படி சக்தனான ஸர்வேஸ்வரன் விளம்பிக்கையாலே
இவருக்குப் பிறந்த ஆர்த்தியைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
நொந்து யுரைத்த பாசுரத்தை
இரவு நீடுதலுக்கு ஆற்றாளாய்த் தலை மகள் ஈடுபாடு கண்டு
பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –

பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல் –
இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –
முந்நீர் ஞாலம் -3-2-

பதவுரை

வல்வினையேன்–கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை–முல்லை யரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல் வரிசையை யுடைய
சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களை யுடையவளாகிய இப்பெண்பிள்ளை
(என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய–“அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி–கற்பங்களினும்
அம்–அழகிய (நீண்ட)
கங்குல்–இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன்–அழகிய குளிர்ந்த திருத்துழாய் விஷயமாக
(என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன்–உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன்-மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும்–என்று வாய்விட்டுச் சொல்லி யலற்றுகிறாள்.

வியாக்யானம்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்
அளவிட வரிதாம் படியான ஸ்வ பாவத்தை யுடைத்தான கல்பங்களில் காட்டில்
அழகிய கங்குலானவை

கங்குலுக்கு அழகாவது
கல்பத்திலும் நெடிதாய் இருக்கை

அந் தண் அம் துழாய்க்கு உளப் பெரும் காதலின் நீளிய வாயுள
அழகிய குளிர்ந்த திருத்துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே
நீளிய வாயுள்ளன

காதலுக்கு முடிவு காணாதவோ பாதி
கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை
(கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன்
உயர்ந்த முந்நீரை யுடைத்தாய் வளப்பத்தையும் யுடைத்தான
பெரிய நாட்டை யுடையவன் என்கையாலே
லோகம் கடல் விழுங்காமல் நோக்குமவன் என்றபடி

மது சூதன்
அந்த லோகத்துக்கு ஆஸூர ப்ரக்ருதிகளால் வந்த
நலிவு தீர்த்துக் கொடுக்குமவன்

என்னும்
1-இப்படிக் கங்குலின் நெடுமையையும்
2-ரக்ஷகத்வத்தையும்
3-விரோதி நிவர்த்தகத்வத்தையும்
வாய் விட்டுச் சொல்லா நிற்கும்

வல் வினையேன்
கங்குலைக் குறுக்குதல்
அவனைக் காட்டுதல் செய்ய மாட்டாத
மஹா பாபத்தை யுடையேனான என்னுடைய

தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
அவன் தன்னை ஓர் ஒன்றிலே எழுதிக் கொள்ள வல்லவான
அவயவ வை லக்ஷண்யத்தை யுடையவள்

தளம் என்று முல்லை
முல்லை யரும்பின அளவான பெருமையையும்
நீட்சியையும் யுடைத்தான முறுவலையும்
(போக்யதையில் நீட்சி )

இங்கு முறுவல் என்பது
தந்த பங்க்தியை

செய்ய வாய்
முறுவலுக்குப் பரபாகமாய் சிவந்த வாய் அழகையும்

தடமுலை
பெரிய முலைகளையும் யுடையவள்
என்னும் -என்று கீழோடே அந்வயம்

இத்தால்
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன்
விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்க சக்தனாய் இருக்க
விளம்பிக்கையாலே இவ்வாழ்வாருக்கு
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகித் தோற்றுகையாலே
ஆர்த்தி பிறந்தமை சொல்லிற்று ஆயிற்று

தளப் பெரும் இத்யாதியாலே
1-பரிஸூத்தமான இவருடைய அந்தர் விகாஸத்தையும் (வெளுப்பு)
(அதரத்துக்கு அந்தர் தந்தபந்தி-செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்போல் )
2-ராகோத்தரமான வாக் விகாஸத்தையும் (சிகப்பு-பக்தியின் நிறம் )
3-நிரதிசயையான பக்தி அபி விருத்தியையும் காட்டுகிறது
(முலை வளர்ந்து கொண்டே இருக்குமே -அவா -காதல் நீண்டு கொண்டே போகுமே )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே
அவதரித்து ஸூலபனானான் -என்றவாறே நாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார்
அங்கே இருந்து இழக்கை யன்றிக்கே
இங்கே வந்து கிட்டச் செய்தே பெறா விட்டவாறே அவசன்னரானார்
அவ்வவஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்தது
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ஸம்பந்தம் யுண்டாய் இருக்க
போக யோக்யமான இருளிலே வந்து உதவக் காணாமையாலே
இருள் பாதகமாக நின்றது என்று சொல்லா நின்றாள் என்று
அவள் பாசுரத்தைத் திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்
ஊழியான ராத்ரி யானவை
அளக்க அரியத்தை அளந்து கொண்டவன் திருவடிகளாலும் அளக்கப் போகிறது இல்லை
அளக்கலாமாகில் வந்து தோற்றானோ
அளக்க வரிதாகையை ஸ்வ பாவமாக யுடையதான

ஊழி யங்கங்குல்
ஊழி யாகிற ஆகாரமே காணும் நிரூபகமாய் இருக்கிறது
ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாதோ என்ன

அந் தண் அம் துழாய்க்குஉளப் பெரும் காதலின் நீளிய வாயுள
அதனில் பெரிய என் அவா -10-10-10-
பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை
பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா
பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று
இவற்றைப் பரிச்சேதிக்கப் புக்காலும்
நேதி நேதி -ப்ரஹதாரண்யம் என்கிறபடியே
இது அன்று இது அன்று என்னும் அத்தனை போக்கி இப்படி என்று
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

அம் தண் துழாய் யுண்டு -அவன் தோளில் இட்ட மாலை
அதுக்கு என்னுள்ளத்தில் யுண்டான சர்வாதிகத்வத்தையும்
விளாக்குலை கொள்ள வற்றாது காதலிலும் பெருத்து இருப்பனவாயுள்ளன

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும்
அவன் எல்லைக்குப் புறம்பே இருந்து நோவு படுகிறேனோ
கடல் சூழ்ந்து இருப்பதாய் வளப்பத்தை யுடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை யுடையவன்
ரஷ்ய வர்க்கத்துக்குக் களையான மதுவை நிரசித்தவன்
சம்பந்தம் இல்லாமையே
விரோதி நிரசன சீலன் அல்லாமையோ நான் இங்கனே படுகிறது

வல்வினையேன்
இவன் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுகைக்கு ஓரடி இல்லை
அத்தலை இத்தலையாய் அவன் படக்கடவதை இவள் படா நின்றாள்
இதுக்கடி இவள் வடிவு அழகில் ஏதேனும் குறை யுண்டோ
மத பாபம் ஏவ -என்கிறாள்
இவள் படுகிற

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

போக்கினவள் -என்றும் இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுமதே கார்யமாய் இரா நின்றாள்

வல்வினையேன்
வலியதான வெவ்வினையால் இறே
நான் இவள் அவஸாதத்தைக் காணவும் கேட்கவுமாயிற்று
தன் அழகில் ஈடுபடுத்தி அவனை இங்கனே கூப்பிடப் பண்ண வல்லவள் தான்
இப்படிக் கூப்பிடா நின்றாள் என்கிறாள்

தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
தளவு என்று முல்லை
அதில் பெருத்த அரும்பு போன்ற தந்த பங்க்தியாய் உத் பவித்த
நீண்ட வெண் மின்னல் போன்ற புன்சிரிப்புள்ளவள்
சிவந்த திருவதரத்தை யுடையவன்
அவனுடைய ஸந்தாபத்தைத் தீர்க்கவும் ஆசா பூர்த்தியைச் செய்யவும் வல்ல
முலைகளை யுள்ளவள் என்னும் என்றத்தோடே
இதுக்கு அந்வயம் –

—————

அவதாரிகை

இப்படி பார்ஸ்வஸ்தரும் ஈடுபடும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட
பரிவரானவர்கள்
ஈஸ்வரனுடைய அநந்ய ஸாத்யத்வத்தை அறியாதே
அவனை லபிக்கைக்கு உபாயமான பக்த்யாதிகள் பூர்ணம் அன்றியே இருக்க
நடக்கிற த்வரையானது என்னாய் இருக்கிறது என்று சொல்லுகிற பாசுரத்தை

(ஈஸ்வரனுடைய அநந்ய சாத்யத்வம் இரக்கமே உபாயம்
இவளுக்கு சாதனம் இல்லையே-முலை இத்யாதி -பக்த்யாதிகள் என்று பார்ஸ்த்வத்தார்
அவன் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி யடைந்து திருவேங்கடம் வந்தது
மயர்வற மதிநலம் அருளினதை அறியாமல் பேசுகிறார்கள் என்றபடி )

தலைவி ஈடுபாடு கண்ட தோழி
அறத்தோடு நின்று யுறைக்கக் கேட்ட செவிலி
பேதைப் பருவத்தாளான இவளுக்குத் தலைவன் இடம் வினாவும்படியான புணர்ச்சி யறிவு
வந்தவாறு என்னாய் இருந்தது என்று சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-

பாசுரம் -60-முலையோ முழு முற்றும் போந்தில –
தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –
அறுக்கும் வினையாயின -9-8-

பதவுரை

முலையோ–ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில–மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல்–அடர்ந்த மென்மையான தலை மயிர்கள்
குறிய–(முடிகூடாமல்) குட்டையாய் யுள்ளன;
கலையோ–ஆடையோ வென்னில்
அரை இல்லை–இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ–நாக்கோவென்னில்
குழறும்–(திருத்தமாக வார்த்தை சொல்ல மாட்டாமல்) குதலைச்சொல் பேசுகின்றது.
கண்–கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என–கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப் பொருளோ வென்று சொல்லும்படி
மிளிரும்–(ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்.–‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ?
என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள் பரமே–(இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.

வியாக்யானம்

முலையோ முழு முற்றும் போந்தில
யவ்வன ஸூ சகமான முலைகளானாவை மிகவும் முழுக்கத் தோற்றிற்றன இல்லை
முழு முற்றும் என்று மீமிசையாய் மிகுதியைக் காட்டுகிறது

மொய் பூம் குழல் குறிய
செறிந்த பூவை யுடைத்தான குழல்
பூக்களைச் செறியச் சொருகும் அளவு ஒழிய
முடி கூடின வில்லை

கலையோ அரையில்லை
பரிவட்டமானது அறையில் பொருந்த வுடுக்கும் அளவன்று

நாவோ குழறும்
நாவானது வார்த்தையைத் திருந்தச் சொல்லாது

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
கடல் சூழ்ந்த பூமியும்
மற்றும் யுள்ள லோகங்களும் இவற்றுக்குத் தகுதியோ
என்னும் படி கண்கள் மிளிரா நிற்கும்

இவள் பரமே
இப்படிப் பேதைப் பருவத்தை யுடையளான இவளுக்குத்
தலைவருமதே (கை வருமோ என்றபடி –

நாயகனை வசீகரித்து
முலை அழகாலே யாதல்
மயிர் முடி அழகாலே யாதல்
உடை அழகாலே யாதல்
உக்தி சாதுர்யத்தால் யாதல்
ஸா பிப்ராயமாக கடைக் கணிக்கும் பார்வையின் வைஷம்யத்தாலே யாதலாய் இருக்க

(இந்த நான்கும் நாயகனை வசீகரிக்காது போல்
கண் பார்வையாலும் அவனை வசீகரிக்காதே
இவர் பார்வையில் சமத்துவம் தான் தெரியும்
வை ஷம்யம் இல்லையே )

முலையும் அரும்பாதே
குழலும் முடி கூடாதே
பரிவட்டமும் செவ்வனே உடுக்க அறியாதே
சொல்லும் மழலையாய்
கண்ணும் ஒதுக்கிப் பாராமல் செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு
இப்படித் தலைவன் இடம் வினாவுதல் யுண்டானவாறு என் கொல்
என்று அதிசயப்பட்டாள் ஆயிற்று

பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
ஸ்வாமியானவனுடைய மலையோ திருவேங்கடம் என்று சந்தை சொல்வாரைப் போலே
பலகாலும் அப்யஸிக்கிற பாசுரம் இவள் தலையிலே கிடப்பது ஒன்றே என்றாள் ஆயிற்று

இத்தால்

பரிவரானவர்கள் –
பகவத் பிராப்தி சாதனங்களான பக்த்யாதிகள் இன்றியே இருக்க
இவ்வாழ்வார் அவனுடைய தேசத்தைப் பிராபிக்கத் த்வரிக்கிறது என்னோ என்று
பரிவாலே கலங்கி உரைத்தார்களாய் இருக்கிறது

முலையானது
போக உபகரணமான பக்திக்கு ஸூசகமாகையாலே –
அந்த பக்தியானது
பிராப்தி சாதனமான பரமபக்தியாம்படி பரிணமித்தது இல்லை என்றபடி

குழல் குறிய -என்று
முடி அழகில்லை என்றபடியாலே
நமஸ் யந்தஸ் ச -கீதை -9-14-என்கிறபடியே
தலையாலே வசீகரிக்கிற பிராணாமம் இல்லை என்றபடி

உடை அழகில்லை என்கையாலே
பந்த பரிகரஸ் தஸ்ய -ஹர்யஷ்டகம் -என்னுமா போலே
யதந்தச்ச த்ருட வ்ரதா -கீதை -9-14-என்று சொல்லுகிற நிரந்தர கீர்த்தமாம் இல்லை என்றபடி

(ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:
நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே-கீதை-9-14-

த்ருடவ்ரதா:-திடவிரதத்துடன்,
ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்,
யதந்த: ச-முயற்சி புரிவோராகவும்,
நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய்,
நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால்
வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது;
எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை
பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள் )

மிளிரும் கண் -என்கையாலே
ஸ்வரூபாதி ஸமஸ்த அர்த்த அவகாஹியான ஸ்வாபாவிக ஞானம் ஒழிய
ஒதுக்கிப் பார்க்கும் த்யான ரூப ஞானம் இல்லை என்றபடி

இவள் பரமே -என்கையாலே
கேவலமான ஸ்வரூப பாரதந்தர்யம் யுடையாருக்கு
சாதனம் இல்லாமல்
த்வரையைத் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமோ என்று
வ்யதிரேகம் சொன்னபடி

பெருமான் மலை -இத்யாதியாலே
அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1-என்கிறபடியே
அவன் எழுந்து அருளி நிற்கிற (இருக்கிற) திருமலையே போகஸ்த்தானம் என்றதாயிற்று
(கைங்கர்ய ஸ்தானம் என்றவாறு )

—–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தளப் பெரு நீண் முறுவல் செய்ய வாய தடமுலை வளப்பெரு நாடன் மது ஸூதனன் என்றாளே
ப்ராப்த யவ்வனையாய் -பருவம் நிரம்பின பின்பு இது சொல்லக் கேட்க வேணுமோ
அடியே பிடித்தும் இவளுக்கு இதுவே யன்றோ யாத்திரை என்கிறாள்

வியாக்யானம்

வியாக்யானம்

முலையோ முழு முற்றும் போந்தில
இவை எல்லாம் பருவம் நிரம்பினவாறே பிராப்தம்
முலைகள் சமைய வளர்ந்தவில்லை என்னும் அளவல்ல
முலை எழும் எல்லை இன்னவிடம் என்று கொண்டைக்கோல் நாட்டிற்றும் இல்லை

மொய் பூம் குழல் குறிய
செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்களை அவன் பேணி சூழி யஞ்சுற்றினால்
இவள் வினை கேட்டாலே குலைத்தால் அவன் அதுக்குக் காலைப் பிடிக்கும் அளவல்ல

கலையோ அரையில்லை
தாய்மார் உடுத்தினால் அது அப்படியே இருக்குமதுக்கு அவ்வருகு தான்
திரஸ்கரிக்கும் இது இன்னவிடம் என்று அறியும் விவேகம் தான் நெஞ்சில் நடையாடிற்று இல்லை

நாவோ குழறும்
சொல் தெளிவு யுண்டாய்ப் பொருள் யுடைத்தான சப்தங்களைச் சொல்லி
அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்டு ஐயர் ஆய்ச்சி என்று சிலவற்றைக் கற்ப்பிப்பார்கள் இறே
அவர்கள் தெளிந்த சொல் தான் குற்றமாம் படி இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும் இறே

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
இத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க
எல்லா அவயவங்களுடைய நிரம்பாமையைச் சொல்லி
இவற்றினுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாய் இராதோ என்று

இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம் –

முலையோ முழு முற்றும் போந்தில
முழு முற்றும் –
எவ்வளவும் முலையைச் சொல்லுவேனோ எவ்வளவும் உத் பவித்தது இல்லை

மொய் பூம் குழல் குறிய
செறிந்த குழலுக்கு வாரிப்பூ முடிக்க உரியள்ன் அல்லள்

கலையோ அரையில்லை
கலை -பரிவட்டம்
அரையில் பரிவட்டம் நிற்கும்படி உடுக்க அறியாள்

நாவோ குழறும்
நாக்கால் குழறு மதான மழலைச் சொல்லே

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
இவள் முழித்தலுக்குக் கடல்கள் எல்லாம் சூழ்ந்த மண் விலையாமோ
என்னும்படியான கண் பார்வையள்-

இவள் பரமே பெருமான்மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –
என்னை யாளும் யவன் மலையோ திருவேங்கடமே என்பதாய்
அப்போது சொல்லும் வாக்யமாவிது

இவள் பரமே
இவளுக்குத் தக்கதோ

இத்தால்
அவளுக்கு அவனில் அதி ப்ரணதையும்
பிரிவில் அத்யாவசன்னதையும்
ஒவ்த் பத்திகம் என்றதாயிற்று
இதுக்கு வல் வினையேன் என்று
நொந்து கொள்வான் என் என்று இவள் தாயைத் தேற்றுகிறாள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -41-50–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 2, 2022

அவதாரிகை

இப்படி ப்ராப்ய த்வரை நடவா நிற்கச் செய்தே
அவிளம்பேந பிராப்தி ஸித்தியாமையாலே
பதார்த்தாந்தர ஸந்நிதியும்( வாடைக்காற்றும் )பாதகமாய்
நலிகிற பிரகாரத்தை
வாடைக்கு வருந்தின தலைமகள் வார்த்தையால் அருளிச் செய்கிறார்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் –
வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –
நீராய் நிலனாய் -6-9-

பதவுரை

என்றும்–எப்பொழுதும்
புன்–கொடுமை செய்கிற
வாடை இது–இந்த வாடையை
கண்டு அறிதும்–கண்டறிவோம்!
இவ்வாறு வெம்மை உருவம்–இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும்–குறிப்பையும்-பிரகாரத்தையும்
ஒன்றும்–ஒருவிதத்தாலும்
தெரியிலம்–அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர்–வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்றும் வகை–அழியும்படி
புள்ளை–கருடப் பறவையை
ஊர்வான்–ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இந் நாள்–இக் காலத்திலே
வன் காற்று–வலிய வாடையானது
என்னை–என்னை
மன்றில் நிறை பழி–வெளியிலே பரவி நிறைகிற பழிப்பை
தூற்றி–அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும்–அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது

வியாக்யானம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்

இவ்வாறு வெம்மை
இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது

ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்
ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம்
அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை
அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான்
உத்துங்கரான ஆஸூர ப்ரக்ருதிகள் மங்கும்படி
பெரிய திருவடியை நடத்துகிறவன்

அருள் அருளாத இந் நாள்
தன் கிருபையை உபகரியாத இக்காலத்திலே

மன்றில் நிறை பழி தூற்றி
மன்றிலே நிறைந்த பழியை
அயலாரை இட்டுத் தூற்றுவித்து

நின்று
போகாமல் நின்று

எம்மை
பிரதி கிரியை பண்ண மாட்டாத என்னை

வன் காற்று அடுமே–
பலவானான வாடைக் காற்றானது
அடியா நின்றது என்கிறாள்

இத்தால்
பூர்வ அநு பூத துக்க பரம்பரைகள்
தண்ணீர்ப் பந்தல் என்னும்படி
பகவத் அலாப ஜனிதமாய்க் கொண்டு
லோகோபக்ரோசகரமான -லோக உப கோசாரமாக
தாதாத்விக துக்கத்தினுடைய அதிசயத்தை ஸூசிப்பித்ததாயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நெடுநாள் வாடை வந்து போகா நிற்கச் செய்தே
இப்போது இதன் கீழ் ஜீவிக்க அரிதாய் இரா நின்றது என்று
இங்கனே தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாள்
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று
நமக்கு ரக்ஷகர் ஆவார் ஆரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரக்ஷிக்கிற படி
சத்தா தாரகமானது தானே பாதகமாம் படி

வியாக்யானம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
இதுக்கு முன்பு கலவி ஒரு நாளும் இல்லை போலே
என்றும் விஸ்லேஷத்தோடே போந்தது அத்தனை
இவ்வாடை பாதகமாம் போது கலவி உண்டாக வேணும் இறே என்று
இது கண்டதுண்டு என்று அறியும் அத்தனை

புன்வாடை
மந்தமாருதம்

இது கண்டறிதும்
இத்தோடு ஸஜாதீயமானவை எல்லாம்
அனுபவித்தோம் இறே

இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்
இப்படி வெம்மை உருவும் சுவடும் ஒன்றும் தெரியிலம்
பிரிந்தாருக்குச் சுடுவது அக்னியாதிகள் அல்ல
வாடை
லௌகிக வியுத் பத்தியாலே சொல்லுகிறாள் –

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்

ஸர்வேஸ்வரன் என்கிற அறிவு இவர்களுக்கு இல்லாமையாலே
வளர்ந்து இருந்துள்ள அஸூர வர்க்கமானது முடியும்படிக்கு ஈடாகப்
பெரிய திருவடியை நடத்தா நின்று உள்ளவனுடைய ஸ்வரூப ப்ரயுக்தமான
அருளும் மறுத்த படி

வாதார்ஹம் அபி –ஸூந்தர -38-35-
அல்லாதாராபாதி –
பெருமாள் –

மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே

————————–

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான அளவிலே
ஈஸ்வரன்
தன்னுடைய ஸீலாதிசயத்தை இவருக்குப் பிரகாசிப்பித்துப்
பரிபூர்ண கடாக்ஷம் பண்ணின பிரகாரத்தை
பாவனையாலே (மாநஸமாக)அனுபவித்து
அருளுகிறார் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-

பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து –
தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –
பொரு மா நீள் படை -1-10-

பதவுரை

எம் பிரான்–எம்பெருமானுடைய
கட கண்கன்–பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும்–மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு–எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின்–இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து–என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த–மேலுலகை நோக்கி வளர்ந்த
தன்–தன்னுடைய
கால்–திருவடிகளை
பணிந்த–வணங்கின
என்பால்–என்னிடத்து.
வன் காற்று அறைய–பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த–ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால்–மெல்லிய நாளத்தை யுடைய
கமலம் தடம்போல்–தாமரைத் தடாகம் போல
பொலிந்தன–அழகு மிக்கு விளங்கின-

வியாக்யானம்

வன் காற்றறைய
வலிய காற்றானது
சலியாமல் நிற்க ஒட்டாமல் அடிக்க

வொருங்கே மறிந்து
ஓர் இடத்திலே சேரப் புரிந்து

கிடந்தலர்ந்த
கிடைப்பாட்டிலே விகஸிதமான

மென் கால்
ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில்
மார்த்தவத்தை யுடைய

கமலத் தடம் போல்
தாமரைத் தடாகம் போலே

பொலிந்தன
அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –

இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது
அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –
(தடங்கல் இல்லாத
சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )

ஒருங்கே மறிகை யாவது
ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை

கிடந்து அலரு கையாவது
இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை

மென் காலாவது
இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்
கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)

கமலத் தடம் என்று
நிறத்தாலும்
குளிர்த்தியாலும்
பரப்பாலும்
போக்யமாய் இருக்கை

பொலிவாவது
காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப்
போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –
(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )

மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
பூமியும் -ஊர்த்தவ லோகங்களும்
என் காலுக்கு அளவு போராது
நீங்கள் காணுங்கோள் என்று
தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே
ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம்
என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து

விண்ணும் மண்ணும் -என்றும்
பாட பேதம் சொல்லுவார்

தன் பால் பணிந்த என் பால்
தன் திருவடிகளில் வணங்கின என்னிடத்து

தன்பால் என்ற
பாடமான போது
தன்னிடத்து என்றும் சொல்லுவர்

எம்பிரான் தடக் கண்களே
த்ரை விக்ரம அபதானத்தாலே
அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய
பெரிய திருக்கண்கள்

இப்பாட்டு
நாயகனான ஈஸ்வரனுடைய நோக்கிலே துவக்குண்ட
நாயகி வியந்து உரைத்தலுமாகவுமாம் –

—-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
வாடையின் கீழே ஜீவிக்க அரிது என்று
இனி முடியும் அத்தனை என்று வார்த்தை சொன்னவாறே
குளிர நோக்கினான் –

வியாக்யானம்

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன
மென் கால் கமலமாவது
மிருதுவான காற்றும் கூடப் பொறாத படியான
மெல்லிய தாளை யுடைத்தான கமலமானது

இதிலே வன் காற்றாவது
அது தான்
தன்னைப் பாராதே
அறைவது

ஒருங்கே
ஏகதோமுகமாக

மறிந்து கிடந்தது அலர்ந்த
மற்றை அருகே புரியில்
தரமிலோபம்

மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே

—————————-

அவதாரிகை
இப்படிக் கண் அழகை அனுசந்தித்தவர்
அவ் வழியாலே
அவயாந்தர சோபையையும்
வடிவழகையும்
அனுசந்தித்து
இவ்வாழ்வாருக்கும்
அதிசயித ஸ்வ பாவரானவர்க்கும்
பரிச்சேதித்து நினைக்க அரிது என்று அருளிச் செய்கிறார்

இது
நாயகன் உரு எழில் உரைத்த தலைவி வார்த்தையால்
சொல்லப் பட்டதாகவுமாம் –

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-

பாசுரம் -43-கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே –
தலைவனின் வடிவ அழகு பற்றித் தலைவி கூறல் –
உயர்வற உயர் நலம் -1-1-

பதவுரை

கண்ணும்–திருக்கண்களும்
செந்தாமரை–செந்தாமரைப் பூவையொப்ப
கையும்–திருக்கைகளும்
அவை–அத்தாமரைப் பூவை யொப்ப
அடியோ–திருவடிகளும்
மதி விகற்பால்–ஞானத்தின் மிகுதியால்
விண்ணும் கடந்து–ஸ்வர்க்க லோகத்தாரை மேலிட்டு
உம்பர் அப்பால் மிக்கு–அதன் மேலிடத்துள்ள ஸத்ய லோகத்தார்க்கும் அப்பாற்சென்று.
அவையே–அத்தாமரைப் பூக்களையே யொப்ப.
எம்பிரானது–எம்பெருமானுடைய
எழில் நிறம்–அழகிய திருமேனி விளக்கம்
வண்ணம் கரியது ஓர் மால் வரைபோன்று–நிறத்தில் கறுத்ததான வொரு பெரிய மலையையொத்து
மற்ற எப்பால் யவர்க்கும்–அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்
எண்ணும் இடத்துவோ–(இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று)

கண்ணும் செம் தாமரை
நிரங்குச ஐஸ்வர்யத்துக்கும்
வாத்சல்யத்துக்கும்
ஸூ சகமான திருக் கண்களும் தாமரை

கையும் அவை அடியோ அவையே
திருக்கைகளுக்கும்
திருவடிகளுக்கும்
அவை (தாமரை) ஒழிய ஒப்பில்லை

ஓ -என்ற அசை
தாமரை முற்று உவமை அல்லாமையைக் காட்டுகிறது –
(தாவி வையம் கொண்ட தடம் தாமரை -முற்று உவமை அங்கு )

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று
திருமேனி நிறம்
நீலமான அத்விதீயமான பெரிய வரை போலே இரா நின்றது
அவயவங்கள் சிகப்புக்குத் திரு மேனி பரபாக சோபையைக் கொடுத்த படி

மதி விகற்பால்
மதியினுடைய வேறுபாட்டால் -மிகுதியால்

விண்ணும் கடந்தும்
மனுஷ்யாதிகளில் காட்டில் ஞானாதிகரான தேவர்கள்
வர்த்திக்கிற ஸ்வர்க்கத்தையும் கடந்து

உம்பர் அப்பால் மிக்கு
மேலுண்டான ஸநகாதிகள்
ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வருகே போய்

மற்று எப்பால் யவர்க்கும்
இவர்களில் வியாவ்ருத்தராய்
எங்கும் ஓக்க வியாப்தமான ஞானாதி குணங்களை யுடைய ஸூரிகளுக்கும்

எண்ணும் இடத்ததுவோ
தங்கள் (மதி )வைஷம்யங்களாலே
பரிச்சேதிக்கலாம் படியான நிலத்திலே நிற்கிறதோ

எம்பிரானது எழில் நிறமே –
இவ்வழகை முற்றும் எனக்கு உபகரித்தவனுடைய
ஸுந்தர்ய சோபை யானது

ஆக
உபய விபூதியிலும்
இவ்வழகு பரிச்சேதிக்க அரிது என்றதாயிற்று –

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை

நோக்கின அக்கண் வழியே
திருமேனியில் அழகை அடைய அனுபவித்து
இவ் விஷயத்தைக் கிட்டின இத்தால்
ஒரு பலம் இல்லையாய் இரா நின்றதீ -என்கிறாள்

வியாக்யானம்

கண்ணும் செந்தாமரை
நோக்குக்கு இலக்கான நிலைமை மாற்றி
அவயவாந்தரத்தோடே சேர்த்து அனுபவித்த பின்பாயிற்றுப் பேசலாயிற்று

முதல் உறவு பண்ணின கண்களும் செந்தாமரை போலே இருந்தன

கையும் அவையே
நோக்கின அநந்தரம்
ஸ்பர்சத்திலே அபேக்ஷை பிறக்கும் இறே
அணைத்த கைகளும் தாமரை

அடியோ அவையே
ஸ்பர்சத்தாலே துவக்குண்டு விழும்
துறையான திருவடிகளும் அவையே

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று

—————-

அவதாரிகை

இப்படி அபரிச்சேத்யம் என்று சொல்லப் போமோ
ஈஸ்வரனுடைய ரூப வேஷ நாம விக்ரஹங்களை நிஷ்கர்ஷித்து
அவ்வவ ஸாஸ்த்ர சமயங்களிலே நிற்கிறவர்கள்
சொல்லுகிறார்கள் அன்றோ என்னில்
அவர்களும் அவன் பெருமையை முடியக் காணப் பெற்றார் இல்லை என்கிறார்

இதுவும்
தலைவி தலைமகன் பெருமையை யுரைத்தல் யாகிற கிளவியாம்

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-
துறையடைவு -தலைவி தலைவன் பெருமை கூறுதல் –
பத்துடை அடியவர் -1-3-

பதவுரை

நிறம்–திருமேனி நிறமும்
உயர் கோலமும்–சிறந்த அலங்காரமும்
பேரும்–திருநாமமும்
உருவும்–வடிவமும்
இவை இவை என்று இனனின்னவையென்று
அங்கு அங்கு எல்லாம்–கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி–மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால்
சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும்–தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய
வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை–எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை–ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.

வியாக்யானம்

நிறமுயர் கோலமும்
திருமேனி நிறம் தான் மிகைத்துத் தோற்றும்படியான ஒப்பனையும்

அன்றியே
நிறத்தோடு சேருகையாலே உயர்த்தி பெற்ற
ஒப்பனையும் என்றுமாம்

பேருமுருவமும்
இவ்வழகிலே அகப் பட்டார் பாசுரமிட்டு ஸ்துதிக்கைக்கு ஈடான திரு நாமங்களும்
இவ்வழகுக்கு ஆஸ்ரயமான விக்ரஹங்களும்

இவை இவை என்று
கால பேதத்தாலும்
குண பேதத்தாலும் உண்டான
அதிகாரி பேதத்தாலே
தத் தத் நியதமாக அநு சந்தேயமான ரூபாதி பேதங்களை நிஷ்கர்ஷித்து

அற முயல் ஞானச் சமயிகள் பேசிலும்
தர்ம மார்க்கத்தாலே முயன்று பெற்ற ஞானத்தை யுடையரான
வைதிக ஸாஸ்த்ர ஸமய நிஷ்டரானவர்கள் ஸ்ரோத்தாக்களுக்குப் பாசுரம் இட்டுப் பேசிலும்

அற முயல்
மிகவும் முயல் என்றுமாம்

அங்கு அங்கு எல்லாம்
அந்த அந்த
ரூப
வேஷ
நாம
விக்ரஹங்கள் எல்லாவற்றிலும்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி
அவற்றிலே சிறக்க உயர்ந்து வருகின்ற ஞானமாகிற
தீபத்தாலே விளக்கத்தைப் பெற்று நின்றது ஒழிய

யொன்றும் பெற முயன்றார் இல்லையால்
ஒரு பிரகாரத்தையும் பரிச்சேதிக்கப் பெறும் படி
யத்னம் பண்ணினார் இல்லை

எம்பிரான் பெருமையே
இவை எல்லாவற்றையும் எனக்கு ப்ரகாசிப்பித்த மஹா உபகாரகனுடைய
நிரதிசய மஹாத்ம்யத்தை -என்று
தமக்கு அவன் அருளாலே
இவ் வபரிச்சித்த மஹாத்ம்யம் பிரகாசித்த படியை
அருளிச் செய்தார் யாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
இவ்வாசிகளும் யுண்டாய்ச்
சிலர் அறிந்தார் களுமாய்
அவர்களுக்கு அறியாதாரில் காட்டில் ஓர் ஏற்றம் யுண்டாய்ப் போரா நிற்க
எப்பால் எவர்க்கும் எண்ணும் இடத்து -என்றத்துக்குக்
கருத்து என் என்னில்
அவர்கள் அறிந்தாரான நிலை இது அன்றோ என்று
அதுக்கு உத்தரம் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை

இதம் இத்தம் என்று
தத் தத் ஸமய நிஷ்டர்களால் அறியலாகாதோ என்ன
வாசா சொன்ன மாத்ரமே
அங்கனே அறியப் போகாது என்று அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

நிறமுயர் கோலமும்
திருமேனி நிறத்துக்கு மேல் தோன்றும்
ஓர் ஓர் அழகும்

பேரும்
திருநாமங்களும்

உருவமும்
திவ்ய மங்கள விக்ரஹங்களும்

இவை இவை என்று
பேர்கள் இவை
உருவங்கள் இவை
என்று தனித் தனியே நிஷ்கர்ஷித்து

அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும்
தர்ம த்வய லீதரிநாப நிவிஷ்டராய்
த்வே வித்யே வேதீ தவ்ய-முண்டக -1-1-4-
என்னப்பட்ட
பரோக்ஷ அபரோக்ஷ ஞானாவாந்தர பெத்த நிஷ்கர்ஷண ப்ரவ்ருத்தர்கள்
சிஷ்யர்களுக்கு ஸப்தத்தால் நிரூபித்துச் சொல்லிலும்

அங்கு அங்கு எல்லாம்
அங்கு அங்காகப் பேசும் இடங்கள் எல்லாம்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி
விசாரிக்க விசாரிக்க அஞ்ஞாத அம்சமே மேல் மேல் விஞ்சி
விபூதி த்வய நித்ய வ்யாப்த ஞான ப்ரப ஆஸ்ரய ஞான ஸ்வரூபமாய்
பர ப்ரகாசமுமாய்
ப்ரகாசாந்தர நிரபேஷ ப்ரகாசமாய் நிலைக்கு நின்றது அன்றி

யொன்றும் பெற முயன்றார் இல்லையால்
இதம் இத்தம் என்று பரிச்சேதிக்க யத்னப்படுவார்
என்றும்
எங்கும்
இல்லையே

சரி -எத்தை -என்ன
எம்பிரான் பெருமையே
இத்தை எல்லாம் எனக்கு அறிவித்து
என்னை அடிமை கொண்டு உபகரித்தவனுடைய
ஸர்வ உத்க்ருஷ்ட ஸ்வரூபாதிகளை ஒன்றும் பெற முயல்வார் இல்லை
என்று அந்வயம்

—————————-

அவதாரிகை

இப்படித் தமக்கு ஈஸ்வரன் தன் மஹாத்ம்யத்தைப் பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து
ஸந்துஷ்டாரான அளவிலே –

இவர் திரு உள்ளமானது
ஸம்ஸார ஆர்ணவ மத்யஸ்தரான நமக்கு
பாரித்தால் போலே அவன் உபகரித்தான் என்று
ஹ்ருஷ்டராகா நின்றீர்
சம்சாரத்தில் நின்றும் உத்தீர்ணரானவர்கள் பெறக் கடவ பேறானது
நமக்கு நிலை நிற்கக் கூடுமோ என்று
திரு உள்ளத்துக்கு கருத்தாக

அவன் பூர்ண கடாக்ஷம் பெற்ற நமக்கு குறையில்லை காண்
என்று அருளிச் செய்கிறார் –

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்-
தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –
ஊனில் வாழ் உயிரே -2-3-

பதவுரை

மட நெஞ்சமே–பேதை நெஞ்சமே!
பெரும் கேழலார்–(பிரளய வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹா வராஹ ரூபியானவனர்
இ அகாலம்–(ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம்–தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம்–பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல்–நம் பக்கலில்
ஒருங்கே பிறழ வைத்தார்–ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார்.
நம் போல் வரும் கேழ்பவர்–(அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர்.
ஒருவர் உளரே–வேறொருத்தர் உண்டோ? (இல்லை)
தொல்லை வாழியம்–(அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்;
(அப்படிப்பட்ட நமக்கு)
சூழ் பிறப்பு–விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள்
மருங்கே வர பெறுமே–அருகிலும் வரக்கூடுமோ?
சொல்லு–சொல்லாய்;
வாழி–(கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக.

வியாக்யானம்

பெரும் கேழலார்
பிரளய ஆர்ணவத்திலே புக்கு அழுந்தின பூமியை எடுக்கைக்கு
அந்த பிரளய ஜலம் கீழ் வலிற்றன வாம் படி
மஹா வராஹமானவர்
ஜலார்த்த ருஷேர் மஹா வராஹஸ்ய –
(தண்ணீரால் நனைந்த அடிவயிறு கொண்டவர் )–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-4-24- என்னக் கடவது இறே

தம் பெரும் கண் மலர் புண்டரீகம்
மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-20- என்கிறபடியே
பிரளயத்திலே மூழ்கி
ஸ்ரீ பூமிப்பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே
விகஸிதமான கண் அழகு இருந்தபடி

நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார்
அவளை அன்று பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்குப் பாரித்தால் போலே
நம்மையும் இஸ் ஸம்ஸார ஆர்ணவத்தில் நின்றும் எடுப்பதாக நம் பக்கலிலே
ஒருபடிப்பட மிளிரும்படி வைத்தார்

இவ்வகாலம்
இக்காலத்தில்

ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே
இக்கடாக்ஷ விஷய பூதரான நம்மைப் போலே
அவனோடே கேழ் முதலைப் பெற்று இருப்பார் ஒருவர் உளரோ

பிரளய ஆர்ணவமும்
ஸம்ஸார ஆர்ணவமுமான
ஆபத்தின் வாசி போரும் இறே
ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கலிலும்
நம் பக்கலிலும் யுண்டான உறவின் வாசி

தொல்லை யாழியம்
(தொல்லை வாழியம் )
இக் கேழ் முதல் யுண்டான உறவு அளவே அன்றியே
பழையதாய்
ஸ்வரூப ப்ரயுக்தமான
வாழ்வு யுடையோம் ஆவோம்

வாழ்வு என்று
அனுபவத்தை நினைக்கிறது
(மிக்க இறை நிலையும் வாழ் வினையும் -ப்ராப்யம் )

சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே
நம்மைச் சூழ்ந்த பிறப்பும்
நம் பரிசரங்களிலே வரவற்றோ

சொல்லு
பகவத் கடாக்ஷம் யுண்டால்
அனுபவம் பெற்றாருக்கு
ஜென்ம சம்பந்தம் யுண்டு என்று கேட்டு அறிவது யுண்டா
சொல்லிக் காண் –

வாழி
உன் கலக்கம் அற்றுத் தெளிந்து வாழ்வாயாக

(ஜாயமான புருஷ -மது ஸூதன கடாக்ஷம்
கண்ணாவான் -அமலங்களாக விழிக்கும்
கருவிலே திருவுடையார் அன்றோ )

மட நெஞ்சமே
ஒடுக்கமுடைய நெஞ்சமே
உன் அறிவில் சங்கோசம் இறே நீ இப்படி சங்கித்தந்து என்று
திரு உள்ளத்தைத் தெளிவித்தார் ஆயிற்று

இப்பாட்டு
கிளவியாம் இடத்து
நாயகனான ஈஸ்வரனுடைய நீருடை (நீரிடை )யுதவியை நினைத்து
உரைத்தது ஆகவுமாம்
அவ்விடத்து
சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்ற இடம்
பிரிந்தார் படும் துயர் நமக்கு யுண்டாகாது என்று கருத்து –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்படி ஸ்வ யத்ன சாத்யமல்லாத வஸ்துவை
ஒரு ஹேது இன்றிக்கே இருக்கப்
பெற்றுக் கொடு நின்றேன்
இப்படி இருக்கிற எனக்கு ஒப்பாவார் புறம்பு யுண்டோ
ஸம்ஸார துரிதம் தான் என்னைப் பின்னாட்ட வற்றோ -என்கிறார் –

வியாக்யானம்

பெரும் கேழலார் 
ரஷ்யத்தினுடைய ரக்ஷணத்துக்குத் தன்னை அழிய மாறுமவர்
மஹா வராஹா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-
ரஷ்யமான பூமியின் அளவல்ல வாயிற்று ரக்ஷகனான தன்னைப் பாரித்த படி

தம் பெரும் கண் மலர் புண்டரீகம்
ஸ்புட பத்ம லோசன

நம் மேல்
குளப்படியிலே கடலைத் தேக்குமா போலே
நம் சிறுமை பாராதே
ஸ்ரீ பூமிப்பிராட்டி பரிகரம் என்ற இது ஒன்றையுமே பார்த்த இத்தனை –

ஒருங்கே
நம் மேல் வைத்த கடாக்ஷத்தை மாற்றிப் பிராட்டி தன் பக்கலிலே வைக்க வென்றால்
அதுவும் அரிதாம் படியாயிற்று
த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம -யுத்த -41-4-
இங்குக் கிஞ்சித் ஸமா பத்தியும் பொறுக்கப் போகாது
அங்கே தர்மியை விட்டுப் பிடிக்கிலுமாம்
நீர் மஹா ராஜரான தரம் குலைய உம்மை ஒரு வார்த்தையைப் பையல் சொன்னான் ஆகில்
நீர் தேடிப்போகிற சரக்கு நமக்கு என் செய்ய

பிறழ
மிகுதியைச் சொல்லவுமாம்
கடாக்ஷம் நம்முடம்பிலே மிளிரும்படியாக என்னவுமாம்

வைத்தார்
இதுக்கு நம் பக்கல் ஓர் அடி இல்லை
அவன் இப்படிக்கு கடாக்ஷிக்கக் கண்டது அத்தனை
ஆகிலும் ஒரு

இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே

————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

வியாக்யானம்

பெற்றதாயிற்று
அப்போது மஹா கிருபா பரித கடாக்ஷ பிரசுரமான அந்தத் திருக்கண்களை

நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்
இக்காலத்தில்
நமக்கு உபாயம் நிறைவேறின காலத்திலேயே தானே என்றபடி
யா –ஸ்மர்த்தா –தம் -அஹம் -ஸ்மராமி–நயாமி பரமாம் கதிம் –என்றுள்ள திருவருளாலே
நம்மில் உள்ள புண்ய பாபங்கள் எல்லாம் ஒருமிக்க அங்க அங்காகாச் சாயாவும் –
அவைகளுக்கு நம்மில் ஒட்டு அறவும்
ஸ்வத் யாகும் பபரீத கடாக்ஷங்களை ஒருமிக்க பிரசரிப்பித்து
அதுகளே நம்மைக் கழலப் பிறழும்படி அக்கண்களால் கடாஷித்தவர்வ்

ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே
யாரேனும் ஒருவர் நம்மைப் போலே உபாயம் பெற்று இருப்பாரும்
வரும் நன்மை யுடையாரும் யுண்டோ

தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே
அநாதியாய் வருந்தனை வாழ்ச்சியும்
யோனிகள் தோறும் பிறப்பும்
நம்மைப் பற்றி இருப்பார்க்கு வருமோ

சொல்லு வாழி மட நெஞ்சமே
உன் அதிசங்கை நீங்கி
அவனோடே வாழக் கடவாய்
எனக்குப் பவ்யமான நெஞ்சமே –

—————————————————

அவதாரிகை

இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு
பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம்மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில்
அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் தாறும் திரிகின்றதே -46-

பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் –
நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –
அருள் பெறுவார் அடியார் -10-6-

பதவுரை

மடம் நெஞ்சம் என்றும்–பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும்
தமது என்றும்–நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி–ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார்–மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர்
விடவோ அமையும்–அத்துணிவை விட்டொழிதல் தகுதி;
(ஏனெனில்)
அ பொன் பெயரோன்–அந்த (கொடிய) இரணியனுடைய
தட நெஞ்சம்–பெரிய மார்பை
கீண்ட–எளிதிற் பிளந்தருளி
பிரானார் தமது–பராக்ரமசாலியான எமபெருமானுடைய
அடிக்கீழ்–திருவடிகளிலே
விட–(யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட (அது)
போய்–விரைவாகச் சென்று
திடம் நெஞ்சம் ஆய்–உறுதியான கருத்துள்ளதாய்
எம்மை நீத்து–(தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு
இன்று தாறும்–இன்று வரையில்
திரிகின்றது–(அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது.

வியாக்யானம்

மட நெஞ்சம் என்றும்
மடப்பத்தால் தமக்கு விதேயமாகப் போந்த நெஞ்சு என்றும்

தமது என்றும்
விதேயத்வ மாத்ரம் அன்றிக்கே
கரணத்வ ப்ரயுக்தமான சேஷத்வ ஸம்பந்தம் யுண்டு என்றும்

ஓர் கருமம் கருதி
இது புறம்புள்ளாரைக் கொண்டு கொள்ளும் கார்யம் இன்றியே
அந்தரங்க பூதரைக் கொண்டு கொள்ளுவதொரு கார்யம் என்று நினைத்து

விட நெஞ்சை உற்றார்
நெஞ்சைப் போக விடுவதாக அறுதி இட்டவர்கள்

விடவோ அமையும்
அந்த அறுதிப்பாட்டைத் தவிர அமையும்

ஓ -என்று
இழவைக் காட்டுகிறது

நெஞ்சிலும் அண்ணியாரும் யுண்டோ
(அருகிலே உள்ளார் உண்டோ )
தவிருகிறது என் என்னில்

அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்
துர்மானத்தாலும்
பகவத் பாகவத ப்ரத்வேஷத்தாலும் ப்ரஸித்தனாய்
பொன்னுக்குப் பர்யாயமான ஹிரண்யன் என்னும் பேரை யுடையவனுடைய
அஹங்காரம் குடி கொண்ட இடமுடைய ஹிருதயத்தை
அநாயாஸேந பிளந்த மஹா உபாகாரகனான
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே போகவிட

இத்தால்
ஆஸ்ரயித்தவர்களுக்கு பிரபல விரோதிகள் யுண்டாகிலும்
அநாயாஸேந கழித்துக் கொடுக்குமவன் ஆகையாலே
நெஞ்சைப் போக விடுகைக்கு பற்றாசாகாச் சொன்ன படி

போய்த் திட நெஞ்சமாய்
விட்டதே பற்றாசாக
விஷய வை லக்ஷண்யத்தாலே சடக்கெனப் போய்
த்ருட அத்யவசாய யுக்தமாய்

இவ்விடத்தில்
நெஞ்சு என்றது
வியவசாயத்தை

எம்மை நீத்து
கார்யம் கொள்ளப் போக விட்ட
எங்களை நினையாமல் விட்டு

இன்று தாறும் திரிகின்றதே –
இன்று அளவும் முக்தரைப் போலே
அனுபவமே யாத்ரையாய்
அநு ஸஞ்சரணம் பண்ணித் திரியா நின்றது –

இத்தால்
தம்முடைய திரு உள்ளம் மீட்க அரிதாம் படி
பகவத் விஷயத்திலே அவஹாகித்தமையை
அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் –
ஸர்வேஸ்வரன் மேல் விழுவதற்கும்
அல்லேன் என்னாதே ஆபி முக்யத்தைப் பண்ணித் தமக்கு உடன்பட்டது
என்று நெஞ்சைக் கொண்டாடினார்
இப்போது
நெஞ்சை இன்னாதாகிறார்
அது என் என்னில்

ஆசை கரை புரளும்படு அதுக்குத் தான் கிருஷி பண்ணி
அவ்வாசைக்கு இரை இட்டு
இனி பிராப்தியால் அல்லது நடவாத ஸமயத்தில் அதுக்கு ஸஹ கரியாதே
தன்னைக் கொண்டு அகல நின்றது என்று
இன்னாதாகிறார் –

இது ஸஹ கரிக்கையாவது என் என்னில்
பந்த ஹேதுவானவோ பாதி மோக்ஷ ஹேதுவாவும் இறே
ர ரஷே தர்மேண பாவேந சைவ -கிஷ்கிந்த-1-128-என்கிறபடியே
பிராப்தி அளவும் செல்ல முகம் காட்டி ஓக்க நின்று
நீ பட்டது எல்லாம் நான் பாட்டன் -என்ன வேணும் இறே

அவனை உபாயம் என்கிறது
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி
நிஷ்கர்ஷித்துச் சொல்லும் வார்த்தை இறே

அவனே உபாயமாக நிற்கச் செய்தே இத்தலையில் வருவதும் யுண்டு இறே
அவை தான் தனித்து நின்று பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே
ஒன்றாகச் சொல்ல மாட்டாது ஒழிகிறது அத்தனை

இத்தலையால் வருமவை தான் எவை என் என்னில்
பேற்றுக்குச் சேதனன் தான் உளனாக வேணுமே
தான் உளன் என்னா உபாயத்தில் அந்வயியான் இறே
புருஷார்த்தத்தை அறிந்து ஸ்வீ கரிக்கைக்கு நெஞ்சு வேணும் இறே

ஈத்ருசங்கள் சில யுண்டு இறே -இத்தலையிலே வருவன
இவை தான் உண்டாகா நிற்கச் செய்தேயும்
தான் உபாய சரீரத்திலே நிவேசியாதே ஸந்நிதி மாத்ரத்தாலே உபகாரகங்களாய் நிற்க்க கடவது

அவன் உபாயமாய்
ஸித்த ஸ்வரூபனுமாய் இருக்கச் செய்தே
இவனுக்கு சம்சாரம் அநு வர்த்திக்கிறதுக்கு ஹேது ஈத்ருசங்கள் இல்லாமை இறே
இப்படி பிராப்தி அளவும் நின்று முகம் காட்டித் தரிப்பிக்க வேண்டி இருக்க
அது செய்யாமையாலே நெஞ்சை இன்னாதாகிறார் –

இன்று தாறும் தாறும் திரிகின்றதே

வியாக்யானம்
மட நெஞ்சம் என்றும் தமது என்றும்
நாட்டிலே இங்கனேயும் பிரமம் யுண்டு-தம் தாம் நெஞ்சு தம் தனக்கு பவ்யம் என்று
சேதனன் தான் புருஷார்த்தத்தை சாதித்துக் கொள்ளுகைக்கு உறுப்பாக ஸர்வேஸ்வரன்
இவற்றை இவனோடு கையடைப்பாக்கி வைக்கையாலே இவற்றைத் தம் தாம் என்று இருப்பார்கள் இறே
இச்சரீரத்தைக் கொடுத்தவோ பாதி
சரீர ஏக தேசமான னென்கையும் புருஷார்த்தை யறிந்து ருசி பண்ணுகைக்காகக் கொடுத்தான்

அங்கே புக்கவாறே அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது
பிராட்டியுடைய இரண்டாம் பிரிவு போலே
அவன் தான் போகிற போது இவன் தாழ்க்க மாட்டான் என்று இறே போயிற்று

அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரம் சொன்னதோடு சேர்த்தி என் என்னில்
அங்கு உபகாரத்தைப் பற்றிச் சொல்லிற்று
இங்கு இவ்வாற்றாமையாலே முகம் காட்டாமையான அத்தைப் பற்றிச் சொல்லிற்று

எம்மை நீத்து
என்னை ஸந்யசித்தது

இன்று தாறும் தாறும் திரிகின்றதே
நம்மை யல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டுப் போந்தோம் என்னும் அனுதாபத்தோடே
ஓர் இடத்தே இழந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றதாகிலுமாம் இறே
தான் நினைத்த படி இன்று அளவும் ஸஞ்சரியா நின்றது –

————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இந்நெஞ்சையே அவர் வரவுக்கு தூது திடீர் என்றவர்களுக்கு
இதில் ஸ்வ பாவத்தை அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும்
தங்கள் நெஞ்சு தங்களுக்கு விதேயம் என்றும்
நெஞ்சு தான் தங்களது என்றும்
அத்யவசித்து
இதுவும் மிகவும் அந்தரங்கர் செய்யுமது என்று எண்ணி நெஞ்சை அதுக்காக விட நினைத்தார்
அந்த நினைவை விடத்தக்கதே

அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்
நான் அந்தப் பொன் பெயர் உள்ளவனுடைய பகவத் பாகவத த்வித அத்வேஷங்களால்
அகன்ற மார்வை விதாரணம் செய்த
மஹா உபகாரகருடைய திருவடிகளில் என் நெஞ்சைப் போக விட

போய்திட நெஞ்சமாய்
சடக்கெனப் போய்
என்னை விடுமத்திலும்
அவரையே தொடர்வதிலும்
அத்யவசாய தார்ட்யம் யுடையதாய்

எம்மை நீத்து
என்னை நிராகரித்து

இன்று தாறும் தாறும் திரிகின்றதே
தோளில் இட்ட திருத்துழாய் தாரும்
தானுமாய்
அவரோடே இன்றும் அநு சஞ்சரண ஸீலமாய் இரா நின்றதே

ஆகையால் ஆர்க்கும் தன் நரேஞ்சு என்று தூது விடலாகாது என்று –

————–

அவதாரிகை

இப்படி மானஸ அனுபவம் நடக்க
பாஹ்ய அனுபவம் ஸித்தியாமையாலே வந்த தளர்த்தியாலே
லௌகிக பதார்த்த தர்சனம் ஸ்மாரகமாய்க் கொண்டு
இவரை ஈடுபடுத்தின படியைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை
வாடைக்கும் மதிக்கும் ஆற்றாது
வளை இழந்த தலை மகளைக் கண்டு
பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–

பாசுரம் -47-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ –
பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –
நாங்கள் வரி வளை -8-2-

பதவுரை

வட மாருதம்–வாடைக் காற்று
திரிகின்றது–உலாவுகிறது;
திங்கள்–(குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம் தீ–கொடிய நெருப்பை
முகந்து சொரிகின்றது–வாரி யிறைக்கின்றது:
அதுவும் அது–முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது;
கண்ணன்–கண்ண பிரானுடைய
விண் ஊர்–பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை
தொழவே–இடைவிடாது தொழுது அநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே
சங்கம்–(கையிலணிந்துள்ள) சங்கு வளை.
சரிகின்றது–கழன்று விழுகின்றது;
தண் அம் துழாய்க்கு–(அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால்
(ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே)
முழு மெய்யும்–உடம்பு முழுவதிலும்
வண்ணம் பயலை விரிகின்றது?–(இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம் பரப்புகின்றது (இனி)
என் மெல்லியற்கு–மென்மையான தன்மையை யுடைய என் மகளுக்கு
என் ஆம் கொல்–யாதாய் முடியுமோ.

வியாக்யானம்
திரிகின்றது வடமாருதம்
வாடைக்காற்று உலவா நின்றது –
கொல்லும் யானை திரிகின்றது -என்னுமா போலே

திங்கள் வெந்தீ முகத்து சொரிகின்றது
பூர்ண சந்த்ரனானது
லௌகிக அக்னி தண்ணீர் என்னும்படியான கொடிய நெருப்பைக் குடத்தை இட்டு
முகந்து சொரிவாரைப் போலே சொரியா நின்றது

அதுவுமது ,
முன்பு திரிகிற வடமாருதமும் அப்படியே

கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்
கிருஷ்ணனுடைய பரம வ்யோம ஸப்த வாஸ்யமான பரமபதத்தை
நித்ய அஞ்சலி பந்தம் -மோக்ஷ தர்மம் -1-64-
பண்ணி அனுபவிக்க வேணும் என்கிற மெலிவாலே வளை சரியா நின்றது

சரிகின்றன -என்றும்
சொல்லுவர்

தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழு மெய்யும்
முழு மதியாலும்
வாடையாலும்
யுண்டான வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில்
அபி நிவேசத்தாலே ஸ்வா பாவிகமான நிறத்தை அமுக்கி
பயலை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது –

என்னாம் கொல் என் மெல்லியற்கே
ஆற்ற மாட்டாத ம்ருது ஸ்வ பாவையாய்
எனக்குத் துணையான இவளுக்கு என்னாய் முடியுமோ
என்று வெறுத்தாள் ஆயிற்று –

இத்தால்
வாடையும் திங்களும் வெந்தீயும் சொரியும் என்கையாலே
ஆஸ்வாஸ கரருமாய்
ப்ரகாஸ கரருமாய்க் கொண்டு
லோக உபகாரகரான சீதள ஸ்வ பாவரும்
பகவத் விஸ்லேஷ தசையில் தாப ஹேதுவாவர் என்ற படி

கண்ணன் -இத்யாதியாலே
ப்ராப்ய தேசத்தில் அபி நிவேசம் பிறந்தால் தன் கையில் யுண்டான
மினுக்கமும் குலைந்து
(கை வளையும் மேகலையும் காணேன் )
அத்தலையில் போக்யதையில் யுண்டான ப்ராவண்யத்தாலே
அசாதாரண ஆகாரமும் அந்யதா பாவிக்கும் படியான
ஆர்த்தி அதிசயத்தைச் சொல்லுகிறது

என்னாம் கொல் -இத்யாதியாலே
தங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவானவருக்குப் பிறந்த ஆர்த்தி என்னாய் முடிகிறதோ என்று
ஸூஹ்ருத பூதர் வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்ட திருத்தாயார்
பாதகங்களின் பெருமையையும்
இவள் மார்த்வத்தையும் அநு சந்தித்து
என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள்

வியாக்யானம்

திரிகின்றது வட மாருதம்
மத்த கஜமானது ஆளைக் கணிசித்து உலாவுமாப் போலே உலவா நின்றது –
நாயகனுடைய தண்ணளி அற்ற ஸமயம் பார்த்து நலிவதாகத் திரியா நின்றது –

அன்றிக்கே
வாடையானது குளிரக் கடவது இறே
அந்த சைத்யம் மாறாடிச் சுடா நின்றது –

திங்கள் இத்யாதி
இதில் ஸ்வ பாவம் அனுபவித்த வாறே நாம் தான் பேசாது இருக்கிறது என் என்று
சந்திரனும் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான்

வெம் தீ
நெருப்புச் சுடுமாப் போல் அன்று இறே நீர் கொதித்தால் சுடுவது

முகந்து சொரிகின்றது
அங்குக் குறைவற்றுக் கிடந்த படி

அதுவுமது
வாடையோ பாதியும்
சந்திரனோ பாதியும்
பாதகமாவன சில யுண்டு இறே
ஒரு கடலோசை
அன்றில் -என்றால் போலே

———–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள்

குளிர்ந்து அழகிய திருத்துழாயைப் பெற அபி நிவேசத்தாலே
விண்ணில் யுள்ள அவனால் பெற்ற வர்ணத்தை அமுக்கிப்
பசுமை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது

என்னாம் கொல் என் மெல்லியற்க்கே
ம்ருது ஸ்வ பாவையான என் மகளுக்கு என்னாய் முடியுமோ –

———————————–

அவதாரிகை

இப்படி ஸூஹ்ருத பூதரும் வெறுக்கும் படி ஆர்த்தி விஞ்சின படியைக் கண்ட
பார்ஸ்வஸ்தரானவர்கள்
பரமபத அனுபவத்தில் த்வரிக்கக் கடவீரோ
உம்மைக் கொண்டு லோகத்தைத் திருத்துகைக்காகக் கவி பாடுவித்துக் கொள்ளுகைக்கு
ஒரு முகத்தாலே ஈஸ்வரன் வைத்தான் இத்தனை காணும் -என்று
இவரை ஆஸ்வஸிப்பிக்க
அவர்களைக் குறித்து ஸ்வ நிகர்ஷாதிகளை அருளிச் செய்கிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –

பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி -நன்னிமித்தம் கண்டு -பல்லிக்குரல் கேட்டதை –
தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –
என்றைக்கும் என்னை -7-9–

பதவுரை

மெல் இயல்–மென்மையான தன்மையையுடைய
ஆக்கை–உடம்பை யுடைத்தான
கிருமி–புழுவானது
குருவில்–புண்ணிலே
மிளிர் தந்து–வெளிப்பட்டு
அதுவே–அவ்விடத்திலேயே
செல்லிய–நடமாடும்படியான
செல்கைத்து–ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும்–உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
(அறியமாட்டாது; அதுபோல)
என்னாலும்–என்னைக் கொண்டும்.
தன்னைச் சொல்லிய–தன்னைப் பாடுவித்த
சூழல்–சூழ்ச்சியை யுடைய
திருமாலவன்–ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி–புகழுரையை
யாது கற்றேன்–(யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும்–பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ–(பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு–மிக வெகு காலமாகவுள்ளது

வியாக்யானம்

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே செல்லியசெல் கைத்துலகை என் காணும்
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைத்தான கிரிமியானது
புண்னிலே கிளர்ந்து
அவ்விடத்திலே நடத்தக் கடவதான ஸமஸ்த வியாபாரத்தையும் யுடைத்தானது
லோக வியாபாரத்தை எங்கனே அறியும் படி

இத்தால்
அல்ப ஞான சக்திகனான நான்
லோகத்தைத் திருத்துகையாவது என் -என்கிறார் ஆயிற்று

ஆனாலும் உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளா நின்றானே என்ன
என்னாலும்
இப்படி அத்யந்த அபக்ருஷ்டமான
ஜன்ம
வித்யா
விருத்தங்களை யுடைய என்னாலும்

தன்னைச்
அத்யந்த விலக்ஷணமாய்
அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை உடையவனை

சொல்லிய சூழல்
சொல்லிக் கொண்ட சூழ்கையை (சாமர்த்தியத்தை) யுடைய
அதாவது
தத்வமான தான் சொல்லுமதிலும்
தத்வ தர்சிகள் சொன்னால் பரிக்ரஹம் யுண்டாம் என்கிற விரகு யுடையவன் -என்கை

(வேதம் பெருகின சம்த்ராம்பு போல் இவர் வாயாதனவாறே
லஷ்மீ நாதாயோ சிந்து ஸ்வாதந்ரியம் போக்கி -நாதமுனிகள் மலை –
காட்டாறு -ராமானுஜர் காட்டும் ஏரி -சிம்ஹாசனபதிகள் மூலம் நம்மிடம் –
மண் குடம் போல் அல்லவே பொன் குடம்
ஐஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழி யுண்ணுமே )

திருமால்
அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-18-என்கிறபடியே
ஸப்த அர்த்தங்கள் இரண்டும் அவளும் தானுமான ஸ்ரீ லஷ்மீ பதியானவன் –

அவன் கவி
அவனுடைய கவி
ஸப்த அர்த்தங்கள் தான் ஆனவோ பாதி
கவி பாட்டுண்டானும் தானேயாய் இருக்கை

யாது கற்றேன்
அது நான் கற்றேன் அத்தனை
என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2- என்கிறபடியே
அவன் முன்னுருச் சொல்ல
பின்னுருச் சொன்னேன் அத்தனை –

ஆனால் என்
நீர் பாடின கவி என்று ஈஸ்வர ஹ்ருதயத்திலும் யுண்டாய்
லோக பரிக்ரஹமும் பிறந்து நடவா நின்றதே என்ன

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு
ஷூத்ர ஜந்துவினுடையதாய் இருபத்தொரு ஸ்வைர ஸப்தத்தையும்
தம் தம்முடைய பெரிய நன்மைக்கு ஸூசகமாக லோகத்திலே கொண்டு போகிற இது யுண்டே

பண்டு பண்டே-
இது அநாதியாய்ப் போருகிற மரியாதை இறே என்று
தம்முடைய நிகர்ஷத்தைப் பாராதே
தம்மை ஈஸ்வரன் அங்கீ கரித்து
பாரதந்த்ர்யமே பற்றாசாக வாசிக கைங்கர்யத்தைக் கொண்டபடி
அருளிச் செய்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இஸ் ஸம்ஸாரத்திலே வைத்தச இதுக்கு ஹேது என் என்று இறே
கீழ் நொந்தது
இவருக்கு இவ்விடம் நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கில் இறே
அங்கன் இன்றிக்கே
நமக்காக இருக்கிறோம் -என்னும் இடத்தை அறிவிக்கவே இவரைத் தரிப்பிக்கலாம்
மேல் இவர் போய்ப் பெற இருக்கிற ஸ்வரூபமும் அதுவே இறே என்று பார்த்தாராய்

ஆழ்வீர் நீர் வாரீர்
உமக்கு இங்கே ஒரு ஸம்பந்தம் யுண்டாய் இருக்கிறீர் அல்லீர்
நமக்காகவே இருக்கிறீர் அத்தனை
நாமும் ரசித்து
நம்முடையாரும் ரசிக்கும்படியாக உம்மைக் கொண்டு சில பிரபந்தம் தலைக் கட்டுவதாகப் பார்த்தோம் –
அதுக்காக வைத்தோம் அத்தனை காணும் -என்று அறிவிக்க

ஆனால் தட்டு என்
நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததுமாய் -நாமும் பெற இருக்கிறதுவுமாகில் அதில் குறை என்
ஆனாலும் நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இதுக்கு ஈடான ஞானமாதல் -மற்றும் வேண்டும் உபகரணங்களாதல் ஒன்றும் இன்றிக்கே இருக்க
நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இது ஒரு நீர்மையே என்று ஸர்வேஸ்வரன் தம்மை
விஷயீ கரித்த படியைக் கண்டு விஸ்மிதராய் விஷயீ காரத்தைப் பேசுகிறார் –

வியாக்யானம்

மெல்லியல் ஆக்கை
இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் என்னுடைய ஞானத்துக்கு விஷயமாவது
ஏக தேசம் கிடீர் நான் அறிவது ஒன்றும் இல்லை –
இப்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தைத் தலைக்கட்டிற்று என்கிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிருமி
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைய கிருமியானது
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றுப்படப் பொறாதே
முடியும்படி மிருதுவான சரீரத்தை யுடைய ஒன்றாக எண்ணப் படாதே ஷூத்ர ஜந்துவானது

குருவில் மிளிர்ந்தது
அந்த க்ரந்தியிலே மிளிர்ந்து
உத்பத்தியும் விநாசமுமேயாய்
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே தோற்றி மாயும்படியாலே மிளிர்ந்து என்கிறது –
பஞ்சாக்னி வித்யையிலே சொல்லுகிறபடியே
புருஷார்த்த உபயோகியாய் இருபத்தொரு சரீரம் பரிக்ரஹிக்கில் இறே பிறந்தது என்னாலாவது

ஆங்கே
அந்தக் கிரந்தியிலே

செல்லிய செல் கைத்து
செல்லுகிற செல்கையை யுடைத்து
நடக்கிற யாத்திரையை யுடைத்து
உத்பத்தியும் ஜீவனமும் நடுவுபட்ட நாளில் பரிபவமும் விநாசமும்
இது அடைய அங்கேயாய் இருக்கும் இறே
அங்கே இறே அழகு செண்டேறுவது
அந்தக்கிரந்தியிலே தன் வியாபாரம் எல்லாம் ராஜ மார்க்கத்தில் போலே நிராபாதமாய் நடப்பது என்றபடி

செண்டேறுகை யாவது
ராஜ மார்க்கத்தில் ஸஞ்சரிக்கை
நெல் காய்க்கும் மரம் ஏது -என்று இருக்குமா போலே -அந்தக் கிரந்திக்கு அவ்வருகு அறியாத இது –

உலகை என் காணும்
லோக விருத்தாந்தத்தை ஒன்றை அறியவற்றோ
இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை

ஏது உண்டு
அத்தை அவனே எனக்குச் சொல்ல
அத்தைச் சொல்லப் பெற்றேன் காண்

இப்படி நீர் சொன்னத்தை பிராமண தர்மமாக நாங்கள் கொள்ளா நின்றோமே என்ன

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே
பல்லி சொன்னாலும் முன் முற்காலத்திலும்
அபிஞ்ஞர் ஸ்வ ஸ்வ உத்தேஸ்ய ஸித்தியிலே அத்தை பிராமணத்வேந கைக் கொள்ளுவது யுண்டே –
இது இன்று முதலோ –

———–

அவதாரிகை

இப்படி பூர்வ உபகாரத்தைப் பேசினவர்
தமக்கு முன்பு அநு விருத்தமான அனுபவ அலாப கிலேசத்தாலே
தமக்குப் பிறந்த மோஹ அந்தகாரத்தின் மிகுதியை
ஸூஹ்ருத பூதருக்கு அருளிச் செய்த பாசுரத்தை
இருளுக்கு ஆற்றாத் தலைமகள் பாங்கிக்கு யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –
தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –
ஊரெல்லாம் துஞ்சி -5-4-

பதவுரை

காள வண்ணம்–கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய்–வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான்–ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன்–மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
உண்டும்–(பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும்–(பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய–பாதுகாக்கப் பெற்ற
மண்–பூமியினுடைய
ஏர்–அழகை
அன்ன–ஒத்த
ஒள் நுதலே–ஒளிபொருந்திய நெற்றியை யுடையவளே!
பண்டும்–முன்பும்
பலபல–மிகப்பலவான
வீங்கு இருள்–பெரிய இருட்பொழுதுகளை
காண்டும்–பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல்–இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம்–யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.

வியாக்யானம்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்
முற்காலத்திலும் பஹு விதமான பெரிய இருள் கண்டு அறிவுதோம்

இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்
இந்தப் பரந்த இருள் போலே நாங்கள்
கண்டதுவும் இல்லை
அறிவதும் இல்லை
கேட்பதுவும் இல்லை

காள வண்ண வண்டுந்துழாய் பெருமான்
கறுத்த வண்ணத்தை யுடையவனாய்
வண்டு மது பானம் பண்ணுகிற திருத்துழாயை யுடையவன் ஆகையால்
ஸர்வ சேஷியானவன்
(திருத் துளஸீ மாலாதாரான் தானே ஸர்வ சேஷீ )

காள வண்ண வண்டு -என்று
வண்டின் நிறம் ஆகவுமாம்

மதுசூதனன்
மதுவை நிரசிகையாலே ஆஸ்ரித விரோதிகளை போக்குமவன்

தாமோதரன்
ஆஸ்ரித பவ்யனானவன்

உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே
பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்
அநந்தரத்திலே உமிழ்ந்தும்
ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு
ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே

(மண்ணேர் அன்ன
நேர் அழகு
அன்ன -நிகரான )

கடாய -என்று
நடத்துதலாய் நிர்வஹிக்கை
அதாவது ரஷிக்கை

அன்றியே
கடாய் என்று
கடத்தலாய்
அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம் –

இத்தால்
முன்பு யுண்டான விஸ்லேஷ ஜெனிதமான மோஹ பரம்பரைகள் அளவன்றியிலே
இப்போது அதிசயிதமான மோஹ அந்தகாரம் போலே
ஸ்ரவணத்துக்கும்
மனனத்துக்கும்
அபரோஷிக்கைக்கும்
விஷயமாய் இருப்பது ஓன்று முன்பு கண்டு அறிவது இல்லை என்று
வெறுத்து யுரைத்தார் ஆயிற்று –

காள -என்று தொடங்கி
மண்ணேர் அன்ன ஒண் நுதலே -என்கையாலே
விலக்ஷண விக்ரஹத்தையும் -(காள வண்ண )
போக்யத்தையும் -(வண்டுந்துழாய் )
சேஷித்வத்தையும் -(பெருமான் )
விரோதி நிவர்த்தகத்வத்தையும் -(மது ஸூதனன் )
சீல அதிசயத்தையும்-(தாமோதரன் )
யுடைய ஸர்வேஸ்வரன்
ஸர்வ பிரகார ரக்ஷணம் பண்ணின விபூதியும் போலி என்னும் படியான
அதிசயித வை லக்ஷண்யத்தை ஸூசிப்பிக்கிற படி

ஒள்ளிய நுதலுக்கு
மண்ணேர் ஒத்தது என்கையாலே
ஊர்த்வ புண்ட்ர ரூபமான திலக ஸுந்தர்யம்
நெற்றிக்குத் தகுதியாய் இருந்தது என்றுமாம் –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணிற்றிலனோ -என்று இருந்தார்
பண்ணினான் என்று நிர்ப்பரராய் இருந்தார்
முன் அவன் விசேஷ கடாக்ஷம் பண்ணினான் என்று தோற்றின பின்பு
இது காதாசித்கமுமாய்
அனுபவ விச்சேத்யத்தையும் பண்ணுவதான
ஸம்ஸாரத்திலே நம்மை வைப்பதே -என்னும் ஆற்றாமை ஒரு பிராட்டி தசையை விளைத்தது –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்ரி வியசனத்தாலே
தான் நோவுபடுகிற படியைத் தானே சொல்லுகிறாள் ஆதல்
தோழி வார்த்தை யாதல் –

வியாக்யானம்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள் ஒருத்தி காணும் இவள் தான்
மார்க்கண்டேய பகவான் அநேகம் ப்ரளயங்கள் நீஞ்சிக் கரை கண்டால் போலே
இதுக்கு முன்பும் அநேக ராத்திரி வியஸனங்களும் அனுபவித்து அவற்றுக்கு ஒரு அவசானமும் கண்டு போந்தோம் இறே

வீங்கிருள் காண்டும்
முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டோம்

இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்
இப்படிப் பரந்த இருள் போலே இருப்பது ஓன்று கண்டு அறியோம்
இவ் விருளைத் தப்பி ஒதுங்க நிழல் இல்லாதபடி பிரளயம் பரந்தால் போலே கண்டவிடம் எங்கும் தானே பரந்தது –
இதைப் போலே இருப்பது ஒன்றும் கண்டறியோம்
நம்மோடு சகோதரிகளாய் ராத்திரி வியாசனத்துக்கு ஆடல் கொடுத்துப் போந்த –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போல்வார் தானும்
இப்படி இருப்பது ஒன்றை அனுபவித்துப் போந்தார்களாகக் கேட்டு அறிவதும் இல்லை –
முன்பு சம்சாரியாய் நின்ற நிலையிலே அனுபவித்தனவும் அநேகம் ராத்ரிகள்
ஞானம் பிறந்த பின்பும் அநேகம் ராத்திரிகள் அலைத்துப் போந்தன
இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

ராமம் இத்யாதி -அயோத்யா -42-34
ஓர் ஆண் -சக்ரவர்த்தி -முன்னடி தோற்றாதே பட்ட விஷயத்துக்குப் பெண்ணான இவள் படச் சொல்ல வேண்டா விறே
நல்லதின் பின் போனதைத் தண்ணியதையைக் காட்டி மீட்க்குமதன்றே
மே த்ருஷ்டி
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் -ஆரண்ய -3-29-
நாட்டாரோபாதி அல்ல கிடீர் என்பாடு

மே ராமம்
இவனுக்கு கிரய விக்ரய அர்ஹமான படி
ததவ் குசிக புத்ராய -பாலா -22-13-என்று

அத்யாபி ந நிவர்த்ததே
கடல் கொண்டத்தைக் குளப்படியைக் காட்டி மீட்க ஒண்ணாதே
ந த்வா பஸ்யாமி
பெருமாளைக் காணப் பெறா விட்டால்
அவரைப் பெற்ற ஸுபாக்யமுடைய உன்னைக் காணப் பெறுகிறிலேன்
கைகேயி கொட்டில் நின்றும் என்னை எடுத்துக் கொண்டு போங்கோள்-என்றான் இறே

நத்வா பஸ்யாமி -என்கையாலே

போக்குமவன்
தன்னில் வ்யாமுக்தரால் கட்டுப்படுமவன்
அவனால் இஷ்ட ஸர்வ சேஷ்டா விஷயமாகி
கடாய
கொள்ளப்பட்ட மண் மகள் போலே ஒள்ளிய முதலை யுடையவளே
கேட்டதும் யாமிலம் -என்றத்தோடு இதுக்கு அந்வயம்
காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே

———————

அவதாரிகை

இப்படி பகவத் அலாப ஜெனிதமான இவருடைய ஆர்த்தியைக் கேட்டு
தேசாந்தரஸ்தரான அன்புடைய பாகவதர்
ஸத்வரராய்க் கொண்டு இவரைக் காண வேண்டும் என்று வந்த பிரகாரத்தை

பொருள் வயிற் பிரிந்து
வினை முற்றி
மீண்ட தலைமகன்
தலை மகள் ஆற்றாமை நினைத்து
பாகனைத் தேரை விரைந்து நடத்தச் சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(யத்ர ராம ச லஷ்மண -பெருமாள் இருந்த இடத்துக்கு விபீஷணன் வந்தான் போல்
அவன் இருக்கும் இடமே திவ்ய தேசமே உத்தேச்யம் )

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –
தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –
கிளரொளி இளைமை -2-10-

பதவுரை

வலவ–பாகனே!
ஒண் நுதல்–அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி–மேனி நல் நிறத்தின் விளக்கம்
பயவாமை–பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர்–நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும்–துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
(எவ்வித்திற்கு? என்றால்)
தேன் நவின்ற–வண்டுகள் பாடப் பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி–பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய்–வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண் முதல் சேர்வுற்ற–(முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி–நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும்–செய்து நிற்கிற
மா மலைக்கு–பெரிய திருமலைக்கு
இன்று கடாக–இப்பொழுது (தேரை)நடத்துவாயாக

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை
அழகிய நுதலை யுடையவளுடைய நல்ல நிறத்தின் ஒளி
பயப்பு எய்தாமல்

விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும்
நம்முடைய தேரானது
சடக்கெனக் கிட்ட வேண்டும்

வலவ கடா கின்று
தேர் நடத்த வல்லவனே -தேரைக் கடாவுவாயாக

கடாவுக்கா இன்று என்று
இன்று நடந்துக்க என்றுமாம்

தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
விண்ணுக்கு முதல் நாயகனானவனுடைய
தேன் நவிலும்படியான நீண் முடியிலே வண்டு படும்படியான பெரிய திருமுடியில்
வெளுத்த முத்து வாசிகை போலே

மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே
பூமி ப்ரதேசமான மலையடியிலே சேரும்படியான
அருவியைப் பண்ணா நிற்கிற பெரிய திருமலையிலே
நண்ணுதல் வேண்டும்
என்று அந்வயம்

இத்தால்
ஆழ்வாருடைய ஊர்த்வ புண்ட்ர உஜ்வலமான திரு நெற்றியை நினைத்து
இவருக்குப் பகவத் பாகவத விஸ்லேஷ ஜனிதமான வியசனத்தைப் பற்றி ஆஸ்வசிப்பிப்பார்
தம் மநோரத ஆரூடரான அன்பர் மநோ ரத நிர்வஹணத்தில் சமர்த்தமான நெஞ்சை
த்வரிப்பித்த பிரகாரமாய் இருக்கிறது –

இவ்விடத்தில்
மா மலைக்கே -என்கிற இடம்
ஆழ்வாருக்கு ஆஸன்னமான தெற்குத் திருமலை ஆகவுமாம் –
(கிளர் ஒளி இளமை க்கு பொருந்தி இருக்குமே )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இதுக்கு முன்பு இங்கனே இருபத்தொரு ராத்திரி வியசனம் அனுபவித்து அறியோம்
என்னும்படி அவசாதம் பிறந்தவாறே
போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9- பண்ணி
இவளை ஆஸ்வஸிப்பிக்கைக்காகத் தலைமகன் வருகிறான்
வினை முற்றி மீண்ட தலைமகன்
பதினாலு ஆண்டும் கூடப்போன

நம் அவ்வுத்ஸவத்துக்குக் கோலம் கொண்டு
நம் அவ்வுத்ஸவத்துக்கு எதிர்பார்த்து நிற்குமதாயிற்று
அப்பெருமலை எல்லாம்
அம்மலைக்கு -வலவ விரைந்து தேர் காடாகின்று
என்று அந்வயம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -31-40–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 25, 2022

அவதாரிகை
பகவத் விஷயத்தில் அவகாஹித்த இவருடைய நெஞ்சை அகல்விக்கும் இடத்தில்
ஸர்வ ஸக்தியான அவன் தனக்கும் ஸக்யம் இன்றிக்கே இருக்க
நம்மாலே செய்யலாமோ என்று
அவர்கள் விஹஸ்தரான (கை ஓய்ந்து ) படியை அறிந்து

திருமலையை நோக்கி உத்யுக்தராய்ப் போருகிறார்
சில உதார ஸ்வ பாவரைக் கண்டு
இவர்கள் நமக்கு கடகராகக் கூடுமே என்கிற அபி சந்தியை
மேகங்களைத் தூதாக விடத் தேடுகிற
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார் –

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –
தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் கானல் அகம் கழிவாய் -9-7-

பதவுரை

அம்பொன்–அழகிய பொன்னும்
மா மணிகள்–சிறந்த ரத்னங்களும்
திசை–திக்குகள் தோறும்
மின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து–திருவேங்கட மலையினது
மேகங்கள்–மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட–பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
தூத வார்த்தை சொல்லுங்கோள் என்று சொன்னால்
அனுமதி பண்ணக் காணகிறிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -திருவாய் -9-7-1-என்கிறபடியே
தலை மேல் சஞ்சரியுங்கோள் -என்று அபேக்ஷித்தால்
அது தான் செய்யக்கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான பொன்னும்
மஹார்க்கமான ரத்னங்களும்
திக்குகள் தோறும் ஒளியை மிளிரா நிற்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசை
வலிதான் அடி யுரத்தை யுடைத்தான சிகரத்தை நோக்கி

மின் மிளிரிய
மின்னைப் ப்ரகாசிப்பவனாய்
போவான் வழிக் கொண்ட
போகைக்கு வழிப்பட்ட

மேகங்களே
உபகார ஸ்வ பாவமான மேகங்களானவை

போவான் வழிக் கொண்ட மிளிரிய மேகங்கள்-என்று
அன்வயம்

இத்தால்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
கடகத்வத்தை நீங்கள் இசையை வேணும் என்றால்
இசையைக் கண்டிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நம்முடைய அபேக்ஷை தோன்ற
சிரஸா வஹித்து அனுவர்த்தித்தால்
அனுமதி பண்ணக் கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான ஸ்வரூபமும்
மஹார்க்கமான குண ரத்னங்களும்
ஸர்வோதிக்தமாகப் பிரகாசிக்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -திருவாய் -6-10-11- என்கிறபடியே
ஆஸ்ரயணீயமான திண் கழலை யுடைய
வண் புகழ் நாரணனாகிற -திருவாய் -1-2-10-
அஞ்சன சிகரத்தை நோக்கி உத்யுக்தராய்
உஜ்வலமான தீப்தியை யுடையரான
(போகும் பாகவதர்கள் ஞான ஒளி -மின்னல் )
உதார ஸ்வா பாவமானவர்கள்
(எங்கும் தீர்த்தகரராய் திரிந்து அருளுபவர் )
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இசையிலம் -என்ற ஒரு பாடம்
இசைவலம் -என்ற ஒரு பாடம்

இசைவலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்களே
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
இப்படி நான் சொன்னால் இசையுமோ என்று அவற்றுக்குச் சொல்லும்படியை
ஸ்வ கதமாகச் சொல்லுகிறாள்

அங்கன் அன்றிக்கே
இசையிலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்கள் -என்று தேற்றமாக்கி
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
இசைகிறவன வில்லை
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்த்தால் இத்தைச் செய்ய வற்றே

வியாக்யானம்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
திருமலையைக் குறித்துப் போகையிலே ஓருப்பட்டுள்ள மேகங்களானவை
என்னுடைய தூத வாக்கியத்தை நீங்கள் போய்ச சொல்ல வேணும் என்று
நான் கால் கட்டினால்
அத்தைச் செய்கிறவன வில்லை

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்ந்தால்
திருமலையைக் குறித்துப் போகையில் ஓருப்பட்ட நீங்கள்
அப்படி என் தலையிலே உங்கள் காலை
நீங்கள் வையுங்கோள் என்று நான் சொன்னால் அப்படிச் செய்யலாம்
ஸ்வ கார்யம் செய்யாதாருக்கும்
பர ஹிதம் செய்ய வேண்டி இருக்கும் இறே
என் ஆர்த்தையைச் சென்று அறிவித்து
அவனையும் என்னையும் சேர்க்கை இறே கார்யம்
அங்கன்

———–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பிறக்கும்படி
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டி
வைகுந்தவனோடே என் நெஞ்சினாரைக் கண்டால் -என்று
பரமபத நிலையன் அளவும் சென்றபடியால்
ஸத் வரராய் (துடிப்புடன்)
பரம ஸாம்யா பன்னரானாரை
பாவனையால் அபரோக்ஷித்துச் சொன்ன பாசுரத்தைப்
(முக்தர்களை )போலி கண்டு யுரைத்த
(ஆழ்வார் நெஞ்சு அங்கேயே முன்னமே சென்றதே )
தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-

பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –
வைகல் பூம் கழிவாய் -6-1-

பதவுரை

மேகங்களே–ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர்–சொல்லுங்கள்;
உயிர்–உயிர்களை
அளிப்பான்–பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம்–உங்களுடைய
ஆகங்கள் நோவ–உடம்புகள் நோகும்படி
வருந்தும்–(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம்–தபஸ்ஸோ
அருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.

வியாக்யானம்

மேகங்களோ
கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -திருவாய் -4-4-9- என்கிறபடியே
பிரிவு போலி கண்டு பதறப் பண்ணும் இறே
ஆகையால் மேகங்களை ஸம்போதிக்கிறாள்

உரையீர்
நான் கேட்கிற வார்த்தைக்கு மறு மாற்றம் சொல்லு கிறி லீர்

வார்த்தை கேட்பதற்கு முன்னே மறு மாற்றம் சொல்லும் வகை என் என்னில்
திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்
ஸ்ரீ ராமனோடு திருமேனியோடு ஸாரூப்யம் பெறும்படியான
உபாயங்கள் காற்று வளத்திலே திரிகிற உங்களுக்கு
எப்பிராகாரத்தாலே லபிக்கப் பட்டது
உரையீர் என்று அந்வயம்
உரையுங்கோள் என்றுமாம்

உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
பிராணிகளை ரஷிக்கைக்காகப்
பெரிய ஆகாசம் எல்லாம் ஸஞ்சரித்து

நன்னீர்கள் சுமந்து
ஸர்வ உப ஜீவ்யமாம் படி சரஸமான
ஜல ஸம்ருத்தியைத் தரித்து

நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
பர உபகார யுக்தமான உங்களுடைய காய கிலேசத்தையும் பாராதே
ஆயாஸிப்பித்த தபஸ்ஸாம் இத்தனை இறே
ஸாம்ய ஆகார பிரதமனானவனுடைய அருளைப் பெற்றது –

இத்தால்
ஸாம்யா பன்னரைக் குறித்து
உபாய ப்ரஸ்னம் பண்ணின விடத்து
மறு மாற்றம் பெறாமையாலே

பகவத் விபூதி பூதரான ஆத்மாக்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-என்கிறபடியே
(ஸ்வா தந்தர்ய லேசமும் இல்லாத
நெறி
நன்னெறி
தீதில் நன்னெறி )

ஸர்வ ப்ரதேசத்திலும் ஸஞ்சரித்து
சீலாதி குண ரஸ பூரத்தைத் தரித்து
ஸ்வ சரீர கிலேசம் பாராதே பரார்த்தமாக ஆயாஸித்த
பரம தபஸ்ஸூ இறே
பல ப்ரதமான அருளைப் பெறுவித்தது என்று
பாவநை யாலே பல சாதன பாவத்தைக் கல்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
வ்யாபார சீலருக்கு ஒழிய ஒரு பலம் கிடையாது
நிர் வ்யாபாரராய் இருப்பவருக்கு ஸித்தியாதோ என்று
விஷண்ணரானமை தோற்றுகிறது –

(மேம்பொருள் போக விட்டு –வாழும் சாம்பாரை அகத்தி போலும் என்பது பொய்யாயிற்றோ
தாபம் செய்தால் தான் ஸாரூப்யம் ஸித்திக்குமோ
உபாயம் என்றால் உழைப்பு இல்லை
கைங்கர்யம் என்றால் ஒய்வு இல்லை
இதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யும் ஈடே – )

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

————

அவதாரிகை
இப்படி இவருடைய விபாகத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
விஷாத ஹேதுவான ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்த பாசுரத்தை
நாயகி ஆற்றாமைக்கு உதவாத நாயகனான ஈஸ்வரனை நோக்கி
பாங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33

பாசுரம் -33-அருள ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் –
தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-
ஏறாளும் இறையோனும் -4-8-

பதவுரை

அரவு அணையீர்–ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால்–கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும்–பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும்–மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட–இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி
(துஷ்ட நிக்ரஹஞ் செய்து)
செங்கோல் கடாவுதீர்–உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர்.
(அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
மாமை–மேனி நிறத்தை
சிதைக்கின்றது–அழிப்பதானது
ஈங்கு–‘இவ்வுலகத்தில்
ஓர் பெண்பால்–ஒரு பெண்ணைக் காப்பது
பொருளோ எனும்–புருஷோத்தமோ’ என்கிற
இகழ்வோ–அவதாரமோ?
(அல்லது)
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ–(உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண் மண்ணுலகங்களுக்கு
உள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?
தெருளோம்–அறிகின்றிலோம்

வியாக்யானம்

அருளார் திருச் சக்கரத்தால்
ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான கிருபையாலே
பரிபூர்ணனான திருவாழி ஆழ்வானாலே

அகல் விசும்பும் நிலனும்
பரந்த விசும்பும் நிலனும்

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி
ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற் புதீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு அபலையை ரஷிக்கை புருஷார்த்தமோ என்கிற அநாதரமோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரக்ஷணீய விபூதிக்குப் புறம்பாய் இருப்பாள் ஒருத்தி என்கிற நினைவோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்கிற நீர்

இவள் மாமை சிதைக்கின்றதே –
இவளுக்கு இடம் கொடாமல்
இவள் நிறத்தை அழிக்கின்றது என்று வெறுக்கிறாள் –

இத்தால்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
ஸங்கல்ப மயமான திருவாழியாலே
விபூதி த்வயத்தையும் இருள் அகல நிர்வஹிக்கும் என்கையாலே
நித்ய விபூதியில்
அனுபவ விச்சேத ரூபமான இருள் நடையாடாதபடி பண்ணுகையும்
லீலா விபூதியில்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய் -2-9- 3- என்கிறபடியே
அவித்யா காரிதமான விபரீத விருத்தம் நடையாடாமல் நோக்குகையும் தோற்றுகிறது

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் என்றதையே
இருளார் வினை )

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு விபூதி ஏக தேசத்தில் ஸ்வ காரியத்தில் அசக்தராய் பரதந்த்ரராய் இருப்பார்
ஒருவரை ரஷிக்கையில் சரக்கு அறுதியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
இந்த விபூதியிலும்
அந்த விபூதியிலும்
அந்தர்பவியாமல் இருக்கையாலே புறம்பு என்று நினைத்ததோ
(இங்குற்றேன் அல்லேன் அங்குற்றேன் அல்லேன் )

இது நிஷ்கரிஷிக்கலாய் இருக்கிறது இல்லை
அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு அல்லாமையாலும்
விபூதி த்வய வ்யாவ்ருத்தி வை லக்ஷண்யத்துக்கு உறுப்பாகையாலும்
அங்கீ கார ஹேது யுண்டு என்றபடி

அரவணையீர் -என்கையாலே
அந்த விபூதியில் உள்ளவரோடு
நித்ய ஸம்ஸ்லேஷம் நடக்கிறபடி சொல்லுகிறது

இவள் மாமை சிதைக்கின்றதே -என்கையாலே
அவிளம்பேந ஆதரியாமையாலே
அசாதாரண ஆகாரமும் குலையும் படியாகா நின்றது

இதுக்கு ஹேது அறிகிலோம் என்று
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து உரைத்த பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
போலி கண்டு தரிக்க ஒண்ணாத படி மேகங்களும் மறைந்தன
ஜீவனத்துக்கு எத்தனை யேலும் அவசாதம் வந்தாலும்
அவனுக்கு அறியாமைக்கு மேல் இல்லையே

ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ் விடையாட்டம் ஒன்றும் ஆராயா திருக்கிறது என்?’ என்ன,
பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ?
நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு, என்ன,
பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போக விட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திரு வுள்ளமாக,
இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய
எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்;
பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து நீர் வார்த்துக் கொடுத்தார்கள்.

காதுகன் செய்தவற்றை செய்தாய் 0மேக சஞ்சாரத்தையும் மாற்றி மோகம் பண்ணினாய்
திருத்தாயார் கங்குலும் பகலும் திருவாய் மொழி போல் –
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் என்கிறாள்

அருளார் திருச்சக்கரத்து
உபய விபூதியில் -உமக்கும் செல்லாதோர் மூலை உண்டாய் இவளுக்கு ரக்ஷணம்
நீர் செய்ய முடியாமல் இருந்ததோ
வேறே ஒருவர் ரஷணம் ஆவார் என்று ஆறி இருக்கவோ
உபய விபூதியிலும் உமது ஆஜ்ஜை அன்றோ நடக்கிறது
இவள் ஸ்த்ரீ மாத்ரம்-என்று இவளை ரக்ஷிப்பது நமக்கு பிரயோஜனம் அன்று என்று இருந்தாயோ
நமது எல்லைக்கு புறம்பு இவள் என்று இருந்தாயோ

ரக்ஷணத்துக்கு உமக்கு பரிகரம் இல்லாமல் போனதே என்று தான் ஆறி இருக்கவோ
அநாஸ்ரிதர் விஷயத்தில் திருவாழி ஆழ்வானுக்கு த்வேஷம் உறைத்து இருக்கும்
சமோஹம் சர்வ பூதேஷூ என்று அன்றோ அவன் இருப்பது
ஹிரண்யன் நெஞ்ஜையும் துழாவிப் பார்ப்பான் அவன் -அனுகூல்ய லேசம் உள்ளதோ என்று
அதே போல் ஆஸ்ரித விஷயத்தில் இவன் கை விட்டாலும் ஆழ்வான் கை விட்டு விட மாட்டான்
ஆச்ரித விஷயத்தில் அனுக்ரஹமும் அதிகம்

பிராட்டியை விடவும் இவனுக்கு ஊற்றம் அதிகம் உண்டே
அவளுக்கு ஒரு நிர்பந்தம் உண்டே
அவரது திரு உள்ளம் படியே நடக்க வேண்டுமே – -ஸஹ தர்ம சாரிணி அன்றோ
ராமஸ்ய விவசாயம் சங்கல்பம் -அறிபவள் அன்றோ
லஷ்மணஸ்ய தீ மான் அதுவும் இவள் அறிபவள்

இவர் பண்ணி இருபத்தொரு விவசாயம் -ரஷித்தே தீருவேன்
உன்னை விட்டாலும்
லஷ்மணனை விட்டாலும்
உயிரை விட்டாலும்
ப்ராஹ்மணர் ரக்ஷணம் விட மாட்டேன்
எவர்களை –
ப்ரஹ்மணேப்யோ –விசேஷித்த இவர்களுக்கு
அளவன்றிக்கே
ரஷக அபேக்ஷை உடையவர் பக்கலில் பற்று வைத்து இருப்பார்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் வளை வாய் நேமிப் படையாய்
கர்ப்ப பூதாஸ் தபோ -உன்னுடைய கர்ப்பத்துக்குள் உள்ளோம்
தபஸ் -சக்தி இருந்தாலும் -பிராப்தி இல்லையே
ஸ்வ ரக்ஷண சக்தரானாலும்
கர்ப்ப பூதர் -என்று இவனையே எதிர்பார்த்து இருக்கும் தண்டகாரண்ய ரிஷிகள் போல்வாரை
ரஷித்தே தீருவேன் என்ற விவசாயம் கொண்டவர் அன்றோ பெருமாள் –

விசுவாமித்திரர் சக்ரவர்த்தி இடம் -வார்த்தை சொல்லும் இடத்தில்
சாபம்-அம்பு பூண்ட பெருமாள் வேண்டும் -என்னால் சாபம் கொடுத்து அழிக்க முடியும்
யஜ்ஜம் செய்வதால் சாபம் கொடுக்கும் சக்தியைப் பயன் படுத்த மாட்டேன்
அதே அர்த்தம் இங்கும்
மாரீசன் ஸூபாஹூ வந்தாலும் நான் சாபம் பிரயோகிக்க மாட்டேன்
பிராண ஹானியாக இருந்தாலும் அனுஷ்டானம் மாறாதே
ரக்ஷணத்துக்கு சக்தி இருந்தாலும் -ரக்ஷகன் கையையே பார்த்து இருப்பேன்
ஜனனி தான் கைப்போடு புளிப்பு தவிருவாள்

இந்த ராமர் விரதம் அறிவாள்
அபயம் சர்வ பூதானாம் ஏதத் விரதம்
சர்வ பூதேப்யோ -என்று ராவணன் இடத்தில் மட்டும் ரக்ஷணம் அல்ல
யாரேனும் யாகிலும் ரஷிப்பேன்
இத்தனை வருஷம் அநாதி காலம் இருந்து கற்றவள் -நித்யைவேஷா -அந பாயிநி அன்றோ

லஷ்மணன் -விவசாயமும் அறிந்தவள் அன்றோ
பெருமாள் குழைச் சரக்கு -பிராட்டிக்காக எத்தையும் செய்பவராய் -அந்நிய பரராய் இருப்பார்
சீதாபிராட்டி அபிமதம் செய்ய மாரீச மாயமான் பின்னே போவார்
ராக்ஷஸ மாயை என்று அறிந்து அப்போதும் யுணர்ந்து நோக்குவார் இளைய பெருமாள் ஒருவரே அன்றோ
ராமனே விட்டாலும் -அப்போதும் ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலை லஷ்மணம் புண்ய லக்ஷணம் -வடிவிலே தெரியும்

ஆற்றாமைக்கு அனுரூபமாக பிராட்டி தளர்ந்து போக மாட்டாள்
பெருமாளை விட்டுப் பிரிந்தாலும் -முடியாமலும் -கலங்காமலும் -விவசாயம் அறிந்தவள்
தானே தெளிவாக இருப்பவள் மாயா சிரஸ்ஸால் கலங்க மாட்டாள்

இப்படி இளைய பெருமாளை நினைத்து இருப்பது போல்
அருளார் திருச் சக்கரம் நம்மை விட்டுக் கொடுக்காது என்று இருக்கும் பராங்குச நாயகி
ஆசிலே வைத்த கையும் சக்கரமும் கொண்டே ரஷிப்பான்
சங்கல்பத்தாலே ரஷிக்கும் சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும்
திருச்சக்கரத்தான்
ஈஸ்வர பிடாரி அஹங்காரம் ஒன்றே போதும்
அநாயாசேந ரஷிக்கும் சக்தன்
இருந்தாலும் கையார் சக்கரம் கை கழலா நேமியான்
தொட்ட படை எட்டும் தோலாத வீரன் அன்றோ –

உபய விபூதியையும் திருச்சக்கரமும் கையுமாய் இருந்தே நோக்கி அருளுபவன்
அசேதன கிரியா கலாபங்களால் -உபாயாந்தர பரர் இருக்க
சர்வ சக்தியின் -ரக்ஷண தீஷித உறைப்பைக் கொண்டு பிரபன்ன நிஷ்டர்கள்

அகல் விசும்பும்
திரிபாத் விபூதி அன்றோ –
நிலனும்
லீலா விபூதியும்
அந்நிய பரரோடு அநந்ய பரரோடு வாசி இல்லையே ரஷிக்கும் இடத்தில்
உபய விபூதியிலும் அஞ்ஞானம் போக்கி அருளும் திருச்சக்கரம்
தமஸ் அங்கு உண்டோ -என்னில்
அங்கு அதிசங்கை உண்டே
நித்ய கைங்கர்யத்துக்கு க்ஷணம் விச்சேதம் வந்து விடுமோ கலங்குவார்
பிராக பாவத்தால் அங்கு
இங்கு ப்ரத்வம்ச பாவம்
அழகைக் காட்டி அங்கு
‘இங்கு பிரதிகூத்தில நிரசனம் செய்து ரஷிப்பார்

அப்படி இருக்க அன்றோ இவள் விஷயத்தில் இங்கே ஸ்த்ரீ வதம் பிராப்தம் ஆயிற்றே
இவள் மாமை சிதைக்கின்றது
யாது ஓன்று உபேக்ஷிக்காமல் இருக்க ஹேதுவோ அதுவே சிஷிக்கக் காரணம் ஆகுமோ
அநந்ய கதியாயும் அபலை யாயும் இருந்தும் ரக்ஷிக்காமல் கை விட்டீரே
பெண்ணை ரஷித்து என்ன பிரயோஜனம் என்றோ
புறம்பாய் உள்ளாள் இவள் – அங்குள்ளார் நோக்கட்டும் என்று உள்ளீரோ
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் என்று அன்றோ விருதூதித் திரிகிறீர்
இவளுடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே
உம்முடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே

ஸ்ரீ கீதை -10-39- ஸ்லோகத்தில் லோக்கத்துக்கு பீஜம் நான்
என்னைத் தவிர்த்து யாரும் எங்கும் இல்லையே –

உன்னாலாயே அனைத்தும் ரஷிக்கபட இருக்க
உன்னால் ரக்ஷிக்கப் படா விட்டால் அது சூன்யம் ஆகுமே -வஸ்துவாகவே மாட்டாதே
இருக்கு என்றாலே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஆளாய் இருக்க வேண்டுமே

உம்முடைய சத்தையும் ஸ்வரூபமும் சர்வ ரக்ஷணம் அன்றோ
நெருப்பினால் நனைக்க முடியுமோ

திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ

இனி திரௌபதி பரிபவம்
இங்கு உள்ளார் யாரும் சரக்கு அல்ல
சா அஹம்
கேச க்ரஹம் ப்ராப்தனானேன் -பரிபவம் ப்ராப்தனானேன்
நீ இல்லை போலும் -கண்ணன் நீ இந்த விபூதியிலேயே இருக்க அன்றோ இவ்வாறு பட்டேன்
இதுக்கு என்ன சேர்த்தி உண்டு என்கிறாள்

என்னைப் போலே கையும் வளையலுமாயோ நீ உள்ளாய்
புருஷோத்தமன் அன்றோ ‘
உன்னுடைய புருஷோத்தமத்வம் சரணாகத ரக்ஷணத்துக்காக அன்றோ
சரணாகதை நான்
நீயோ சங்கு சக்ர கதா பாணி -என்கிறாள் திரௌபதி
அருளார் திருச்சக்கரத்தால் இங்கு

சங்க சக்ர -எப்பொழுதும் கை கழலா நேமியான் -ஆபரண மாத்திரமோ -ஆயுதம் அன்றோ

துவாரகா நிலையா –
பரமபதத்தில் உள்ளேன் என்று சொல்லிட்டு தப்ப முடியாதே
அவதரித்து சமீபத்தில் சன்னிஹிதனாய் இருக்க அந்நியனாய் மீளவும் போனாயோ

அச்யுத –
சன்னஹித்தனாய் இருந்து ஆஸ்ரிதரை எங்கு நழுவ விட்டாய்

கோவிந்தா
பசுக்களை ரஷிக்க மாட்டேன் -வசிஷ்டாதிகளை மட்டுமே ரஷிப்பேன் என்று இருந்தாயோ
குறைய நின்றார் ரக்ஷணத்துக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொண்டாயே

புண்டரீகாஷ
விடாயாருக்கு நோக்காமல் நித்ய ஸூரிகளுக்கு –
விண்ணோர் பரவும் தாமரைக் கண்ணனாய் மட்டுமே இருந்தாயோ
ஏலம் இட்ட தண்ணீரை தாகம் உள்ளாருக்கு அருளால்
கடாக்ஷம் கொண்டு நித்ய ஸூரிகளை மட்டுமே காப்பாயோ

மாம் ரக்ஷணம்
என்னுடைய ரக்ஷணத்துக்கு நீ என்று நான் அறிவித்த பின்பும் –
மாம் வ்ரஜ -என்னைப் பற்று என்றாயே
என்னைக் காப்பாத்து இவள் வார்த்தை

தீஷித்து உள்ள எனது பார்த்தாக்களும் உன்னால் ரக்ஷிக்கப் படுபவர்கள் அன்றோ
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலாயா கிருஷ்ண நாதாய என்று அன்றோ இருக்கிறோம்
இவர்களைக் கூப்பிடவில்லையே

ஆனாலும் கண்ணன் வாளா இருக்க
சரணாகதம் என்று சொல்லி
அவன் உருகின துயிலை நீயும் ஒரு கையால் பிடித்தாய் அன்றோ என்று அவன் நினைவாக
இரு கையும் விட்டேனா திரௌபதியைப் போலே

தன்னை வியாவர்த்திக்கிறது
நானும் ரக்ஷகன் அகில

தனித்தனியே நூற்றுவரும் சுழற்ற வல்ல பார்த்தா இருக்க
இங்கு இவனைக் கூப்பிட்டது என் என்று வினவ ஆளவந்தார்
பண்டே உபதேசம் பெற்றாளே
ஸ்மர்தவ்ய பகவான் ஹரி -பெரும் ஆபத்து வரும் பொழுது நினை என்று -வசிஷ்டர் சொல்லி வைத்து உள்ளார்
குறை ஒன்றுமே இல்லாத அக்காலத்திலும் குறை வந்தால் ஹரியை நினை என்று சொல்லி வைத்த மஹாநுபாவர்
மஹத் ஆபத்து வந்தால் தன்னோட்டை உள்ளார் போல்
ஞானாதி பூர்ணனான அவனை நினைக்க அடுக்கும் ஸ்ம்ருதி மட்டுமே கார்யகரம் ஆகும் என்றாரே
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -ஆழ்வார்

பிரார்த்தனா மதி சரணாகதி
உம்முடைய ஸ்வரூபம் -ஹேது கண்டிலோம்
இவள் ஆற்றாமை சொல்ல வந்த இடத்தில் உபய விபூதி நாதத்வம் சொல்வான் என் என்னில்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – திரு விருத்தம் 75-

நித்ய சித்தர் -முமுஷு போல் தவிக்கிறார்

அரவணையீர்
இவளை ரஷிக்காமல் உமக்கு படுக்கை பொருந்துவதே
உம்முடைய ஜீவனத்தை அன்றோ நீர் இழக்க உள்ளீர்
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இவளை பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளி
உண்டியிட்டாய் இனி உண்டு ஒழியாய்
இவளை மீளவும் உண்டாக்கலாம் என்று உள்ளீரோ
யதா பூர்வம் கல்பயத் -போல் இவளை போல் உருவாக்க முடியாதே
சங்கல்பத்தால் உண்டாக்க வல்லவள் அன்றே

இவளை சிதைக்கின்றது
இவளை நோவுபட வைத்து
பகுதியாக தான் காண முடியும்
ரஷ்யம் நோவு படுவது உமக்கு அவத்யமாம் என்று
பார்ஸ்வத்தர் பாசுரத்தால் அவனுக்கு அறிவிக்கிறான்

——————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
வியாக்யானம்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
ஆஸ்ரிதரில் பூர்ண கிருபை யுள்ள
திருவாழியாலே
அவ்விபூதியையும் நிர்வஹிக்கும் படி

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார மயமான இங்குள்ள பாப பரங்கள் போம்படி
திவ்ய ஆஜ்ஞா ப்ரவர்த்தகரான நீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
இவ்விடத்தில் உள்ள ஓர் அபலையை ரக்ஷிப்பது
நமக்கு ஒரு புருஷார்த்தமோ
என்று அநாதரித்த படியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரஷ்ய வஸ்து பஹிர் பூதை
இவள் என்று நினைத்தீரோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
இப்போதும் வாய்த்த படுக்கையிலே
கண் வளரா நின்றீர்

இவள் மாமை சிதைக்கின்றதே
இவள் அவசாதம் -இவள் நிறத்தை அழித்து விடா நின்றதே
நான் இத்தைப் பார்ப்பது எங்கனே என்று கூப்பிடுகிறாள் –

————-

அவதாரிகை
இப்படி அவசன்னரான இவர்
பகவத் ஸம்ஸ்லேஷம் உண்டாகைக்கு இத்தலையாலே கூடுவதொரு
ஹேது யுண்டோ என்று பார்த்து
அது கூடாமையாலே
பின்னும் ஸம்ஸ்லேஷ த்வரையாலே கிலேசிக்கிற பிரகாரத்தைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் கலங்கி யுரைத்த பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனைக் கூடுகைக்கு
கூடல் இழைத்து அது கலங்குகையாலே ஈடுபடுகிற
நாயகியைக் கண்டு
தோழி கலங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-

பதவுரை

மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது-கடலை என்று நம்பிள்ளை நிர்வாகம்
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய் பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யத்தக்கவை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.

வியாக்யானம்
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி
ஆழி என்று கூடல் வட்டம்
கூடல் வட்டமானது கார்யத்தைச் சிதையா நின்றது என்று
அந்த ஆழியை வெறுத்து

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடும்
தன்னுடைய சீரிய அடியாலே அழிக்கிற
மேனாணிப்போடும்

சீரடி என்று
சிவந்த அடி -என்றுமாம்
சீறடி -என்றும் சொல்வர்

மாலே
பெரியவனே
இவள் ஆவி அழித்த பெருமை
பெரிய நீ காணத் தகும் என்று கருத்து

அன்றியே
மாலே உனது தண்டார்-தண் தார் -என்று
மேலோடே கூட்டி
நீ தன் பக்கல் பண்ணின வ்யாமோஹம் அறிந்தவள் ஆகையாலே
உன் மாலையிலே நசை பண்ணினாள் என்றுமாம் –

உனது தண் தார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
உன்னுடைய செவ்வி மாறாத பூ தழைக்கிற
குளிர்ந்த
தர்ச நீயமான திருத்துழாயைச் சூடுகைக்கு
அதிலே நிரந்தர சித்தையாய்க் கொண்டு

தார் என்று
மாலை ஆகவுமாம்

பதைக்கின்ற
கிடந்த இடத்தில் கிடக்க மாட்டாமல்
கிலேசிக்கிற

கூடலைக் காலிட்டு அழிக்க வல்லவளாய் இருக்க
மாட்டு கிறிலள்

மாதின் திறத்து
கிலேச சஹமல்லாத மார்த்வத்தை யுடைய இவள் பக்கல்

அறியேன் செயற் பால் அதுவே
செய்யத் தக்கது அறிகிறிலேன்

இவளைப் பதைப்பிக்கிற நீயே
பரிஹாரம் அறியுமத்தனை என்று கருத்து –

இத்தால்
சிதைக்கின்ற தாழி என்று
தன் கையில் வியாபாரம்
ப்ராப்ய லாப ஹேதுவாகை அரிது என்றபடி

ஆழியை சீறி -என்று
ஸாத்ய உபாயத்தில் அனுபாதேயத்வ புத்தி பிறந்தபடி

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு -என்று
அனுபாதேயத்வ புத்தி பிறந்தால்
அவ் வுபாயங்களைக் காற்கடைக் கொண்டு பரித்யஜிக்கும் இடத்தில்
இவ்வதிகாரியினுடைய ஸாமர்த்யம் சொல்லுகிறது

அதாவது
ஸ வாஸன தியாக ஸாமர்த்யம்

மாலே -என்று
விட்டுப் பற்றும் விஷயத்தினுடைய
வாத்சல்யாதியாயும்
ஞான சக்தியாதியாயும் யுள்ள
குணங்களின் பெருமை சொல்லுகிறது –

(மாமின் அர்த்தமும் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள்
அஹமின் அர்த்தமும் -ஆச்ரித கார்ய ஆபாத குணங்கள் )

உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் -என்று
இப்படி அவிளம்ப உபாய பரிக்ரஹத்துக்கு அடியான த்வரையை ஜநிப்பிக்கும்
விஷய போக்யதா அதிசயம் சொல்லுகிறது –

அதுவே மனமாய் பதைக்கின்ற -என்று
போக்ய விஷயத்தில் ப்ராவண்யம் விளம்பத்தைப் பாராமல்
ஆர்த்தியை ஜெநிப்பிக்கும் என்கிறது

மாதின் திறத்து -என்று
ஆர்த்தி விஞ்சினாலும்
ஸ்வரூபம் ப்ரவ்ருத்தி யோக்யம் அன்று என்றபடி

அறியேன் செயற் பால் அதுவே -என்று
ஏவம் விதமான அதிகாரம் யுடையாருக்கு
ஸாத்ய உபாயத்தில் ஞானமே பிடித்தில்லை என்றதாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழில் திருத்தாயார் வார்த்தையாகச் சொன்னதுவும்
ஆழ்வார் தமக்குப் பிறந்ததோர் விசேஷம் இறே
அவன் ரக்ஷகன் என்னும் இடம் தோற்றச் சொன்ன வார்த்தை இறே
இது தான்
அவனுடைய ரக்ஷகத்வத்தில் கண்ணழிவு அற்று இருக்க
அப்போதே வந்து உதவாமையாலே
இவருக்குப் பிறந்த பதற்றத்தைச் சொல்லுகிறது

கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரவு தாழ்த்து
ஆற்றாமை மீதூர்ந்து
பிரிந்தார் ஒதுங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே
கடற்கரையிலே இருந்து கூடல் இழைக்க பலகால் இழையா நின்றால்
ஒரு கால் அல்லா ஒரு கால் சிதறும் இறே

ததா கதாம் தாம் வ்யதிதா மனிந்தி தாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீன மானஸாம்
ஸூபாம் நிமித்தானி ஸூபானி பேஜிரே நரம் ஸ்ரியா ஜூச்ட மிவோ பஜீவின–ஸ்ரீ ஸூந்தர -29-1-
தன் தபஸ்ஸால் வந்த வெளிச்சிறப்பை யுடையனாய்
ப்ரஹ்மாவின் பக்கலிலே லப்த ஞானானுமாய்
அர்த்த தத்வம் இருந்தபடி பேசுவதாகப் புகுந்தவனுக்கும்
இன்னபடி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது
அவற்றால் ஐயத்தை இல்லாததும் ஐயத்தை சொல்லப் போகாது இறே
ஓடுகிற ஆற்றாமைக்கு எல்லாம் ஆஸ்ரயம் இல்லை
கருமுகை மாலையை வெய்யிலில் இட்டால் போலே இவளுக்கு இவ்வாற்றாமை

வ்யதிதாம் -ஆரண்ய -29-1-
இப்படிச் சொல்லிச் சொல்லும் அத்தனை

அநிந்திதாம்
அத்தலையால் வரில் வரும் அத்தனை
அவனை அறிந்தால் இருக்கக் கடவ படியிலே இருந்தாள்

வ்யபேத ஹர்ஷாம்
சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தால் போலே
இதுக்கு முன்பு ஹர்ஷம் புகுந்து போனமையும் இல்லையோ –

——–

அவதாரிகை
இப்படி அனுபவ த்வரையாலே ஆர்த்தரான இவருக்கு
அனுபவ யோக்ய காலம் ஆர்த்தி அதிசய ஜனகமாய்க் கொண்டு
ஸந்நிஹிதமான அளவிலே
ஸ்மாரகமான லௌகிக பதார்த்தம் பாதகத்வேந ஸஞ்சரிக்கிற படியைக் கண்டு ஈடுபட்டு
அனுசந்தித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாமையின் மேலே
வாடைக்கு இரங்கின தலைமகள் பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார்

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-

பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –
மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –
வாயும் திரையுகளும் -2-1-

பதவுரை

பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம்
பிறைச் சந்திரனாகிய பால் மாறத வாயையுடைய (தனது) இளங் குழந் தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனை யிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப் பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பனி வாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிய பால்வாய்ப் பிள்ளையைப் பக்கத்திலே கொண்டு
பகலாகிற நிர்வாஹகனை இழந்த மேலை இடத்து யுண்டான திக்காகிற பெண்
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்புதலை உற்றது
என்னலாம் படியான மாலைக் காலமானது

பால்வாய்ப் பிறைப்பிள்ளை என்று
தன்னிடத்து வாய்ந்த பிறைப்பிள்ளை என்றுமாம்

பிள்ளை ஓக்கலைக் கொண்டு என்று
பிள்ளையாகிய சுற்றத்தைக் கொண்டு என்றும் சொல்வர்

ஓக்கலாவது –
சுற்றம்

பகல் என்று
ஆதித்யனைச் சொல்லிற்றாகவுமாம்

இத்தால்
மாலைக் காலமானது நாயகனைப் பிரிந்த பெண் பிறந்தாரை வருத்தும் என்று
தோற்றுவித்ததாயிற்று

உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
தன்னதான லோகத்தை பராபிமான கிலேசம் புகுராமல்
எல்லை நடந்து
தன் கால் கீழே இட்டுக் காய்ந்த பெரியவனிடத்து
சேஷித்வ ஸூசகமான திருத் துழாய்க்கு ஆசைப்பட்ட நெஞ்சை யுடையவருக்கு
மாலை யுபகரித்த சத்தா மாத்ரத்தை ஒன்றும் சோராத படி

சோல்வான் புகுந்து
கொள்ளுவதாகப் புகுந்து

இது வோர் பனி வாடை
முன்பு வந்த வாடைகள் போல் அன்றியே
பெண் பிறந்தாரை நடுங்குவிக்கைக்கு அத்விதீயமாய் இருபத்தொரு வாடை –

துழா கின்றதே
துழாகின்றது

சத்தை கிடந்த இடம் தேடித் தடவா நின்றது என்று இரங்கி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
பால்வாய் -என்று தொடங்கி
மாலை -என்று காலத்தைச் சொல்லுகையாலே
அனுபவ யோக்ய காலம் ஸந்நிஹிதமானால்
தன் பக்கல் தோற்றின ஞான ஏக தேசமே அவசேஷிக்கும் படி
மஹா ப்ரகாசகமான விவேகமும் குலைந்து மேலான திக்காய் இருக்கிற
பாரதந்தர்யம் யுடையாருக்கும் ஆர்த்தி அதிசயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

(பிள்ளை கையில் -கொஞ்சம் ஞானம் இவளுக்கு மிச்சம்
மேலைத்திக்கு -பாரதந்தர்யம் அறிந்த
விவேக ஞானம் குலைந்து புலம்புகிறாள் )

உலகளந்த என்று மேலுக்கு
அசாதாரண சர்வ சேஷியானவனுடைய போக்யதையிலே ஈடுபட்டார்க்கு
போக யோக்ய கால ஸந்நிதியால் வந்த ஆர்த்திக்கு மேலே
ஸ்மா ரகமான பாதக ஸந்நிதி சத்தையையும்
குலைக்கப் ப்ரவர்த்தியா நிற்கும் என்றதாயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
இங்கே சேஷித்துக் கிடந்ததாகத் தான் இது இப்படிப் படுகிறது
தவிர்ப்பதற்காக வந்து புகுந்தது

இதுவோர் பனிவாடை
இதுவோர் சந்த்ர உதயமும் ஒரு ஸந்த்யையும் ஒரு சமுத்திர கோஷமும் இத்தனை சமுதாயம் வேணுமோ
இது அடையச் செய்தது என் என்று வந்து புகுந்தது

துழா கின்றதே
இங்கு ஏதேனும் தொங்கிற்று யுண்டோ என்று
துழாவிக் கொண்டு வாரா நின்றது

ஸ்வா பதேசம்
இத்தால்
சந்த்ர உதயம்
அத்தால் வந்த பரிச்சேதம்
இவற்றை யுடைத்தான இந்நிலத்திலே பொருந்தாதே
இது இல்லாத அகால கால்யமான தேசத்தில் அல்லது பொருந்தாத படியைச் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
மாலையும் வந்தது மாயன் வாரான் -திருவாய் -9-9-9-என்று
மாலைக்கு ஆற்றாமைப்படும் மகளைப் பரிதபிக்கிற வாடையால்
நலிவு படுகிற இவளைக் கண்ட
திருத்தாயார் பயப்படுகிறான்

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிற பிள்ளை பால்வாய்ப் பிள்ளை யாயிற்று
மேற்புறமான திக்கானது
பகலாகிற பர்த்தாவை இழந்த ஸ்திரீயானாள்
இவள் தனது முலைப்பால் உண்கிற பிறப்பிள்ளையைத் தன் ஒக்கலிலே வைத்துக் கொண்டவளாய்
தாத் காலிக பக்ஷி ஸமுத்ர கோஷத்தாலே புலம்பா நின்றாள்
என்னாலான மாலை -ஸந்த்யா காலம் நல்கிற்றை எல்லாம் என்று அந்வயம்

ஆர்க்கு என்ன
உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு
என்று அந்வயம்
உலகு எல்லாம் எனக்கே சேஷம் என்கிற வ்யாமோஹத்தாலே
அத்தைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்
இடத்தில் யுள்ள துழாய் வேணும் என்கிற மனஸ்ஸூ யுள்ளாருக்கு என்றபடி

இவர்கட்க்கு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
உபகரித்தது களை எல்லாம் அபஹரிக்குமதாய்

மாலை வந்த போதே மாயனும் வருவான் என்று பிராணங்களை தரிக்கவும்
கண் விழிக்கவும் பெற்றாள்
இத்தை அபஹரிக்குமதாய்

புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
முன்பு வந்த வாடை போல் அன்றிக்கே
பனி யாகிற நஞ்சோடே கலந்த வாடை
இவள் பிராணங்களை அபஹரிக்க வேணும் என்றே அதுகளுக்கு
இருப்பிடத்தை எல்லாம் தேடித்தடவா நின்றது என்று
அத்தைத் தான் பொறாமல் பயப்படுகிறாள் –

———–

அவதாரிகை
இப்படி கால சந்நிதியிலும்
போக ஸந்நிதி இல்லாமையாலே
மோஹ ஜனகமான விளம்ப அஷமத்வத்தால் உண்டான இவருடைய
ஆர்த்தி அதிசயத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
ஈஸ்வரனுடைய நைர் க்ருண்ய சங்கையைப் பண்ணி வெறுத்த பிரகாரத்தை
இருளுக்கு ஈடுபட்ட தலைமகள் ஆற்றாமை கண்ட தோழி
தலைமகனான ஈஸ்வரனுடைய கொடுமை கூறின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் –
துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –
ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

பதவுரை

துழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட
வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும்–இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக
(துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக் கொண்டு)
வழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ–அந்தோ!
இலங்கை–இலங்காபுரியிலுள்ள
குழாம்–கூட்டமான
நெடுமாடம்–பெரிய மாளிகைகளை
இடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார்–தலைவருடைய
கொடுமைகளே–கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவும்படி கண்ணிட்டுப் பதார்த்தம் காண ஒண்ணாத படியான
முடிவின்றியே சூழ்ந்த இருள் என்று சொல்லப்படுவதாய்

தம் தண் தராது பெயரா
தன்னுடைய குளிர்ந்த மாலையைப் பேரிட்டுக் கொண்டு வியாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
இதுக்கு முன்பு தோற்றி அறியாத கல்பம் தோற்றின
இவ்வளவிலும்

ஈங்கு இவள்
இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாத இவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வழுவாத பெரிய துன்பத்தை உடையவள் என்று

இரங்கார்
பர துக்கம் பொறுக்க மாட்டாத இரக்கத்தைப் பண்ணுகிறிலர்

அம்மனோ
என்று கொடுமைக்கு அஞ்சி உரைத்தல்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
அரணை யுடைத்தான லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்தலாலே
பெண் பிறந்த ஜாதிக்காக உபகாரகராய் இருக்க
இவை சில கொடுமைகள் இருந்தபடி என் என்கிறது

நெடிய இருள் இறே என்றும்
இருள் பொறுக்க மாட்டாள் என்றும்
துக்கம் கனவிது என்றும்
இரங்குகைக்கு ஹேது பஹுளமாய் இருக்க
இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்றபடி –

இத்தால்
ப்ராப்ய விஷயத்தில் போக்யதையை வ்யாஜமாகக் கொண்டு
மோஹ அந்தகாரமாய் முழுக்க நடக்கும்படியான விளம்ப அஷமத் வத்தால் வந்த
கால தைர்க்யம் விஞ்சின அளவிலும்
இப்படி இருள் தரும் மா ஞாலத்திலே ஸ்வ துக்க நிவர்த்தனத்தில் அஸக்தரான இவர்
அலாப நிபந்தனை துக்கத்தாலே ஈடுபடுவர் என்று கிருபை பண்ணு கிறிலர்

தேவ்யா காருண்ய ரூபயா லஷ்ம்யா சஹா -ஸ்ரீ லஷ்மி தந்திரம் –28-14-என்று
கிருபை தனக்கு வருகிற துக்கமும் போக்கக் கடவ அவர்
இரங்காக் கொடுமைகள் இருந்தபடி என்
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

(கிருபை என்னும் பெயர் கொண்ட சீதாப் பிராட்டிக்கு –
காருண்யமே ரூபமாக வந்த பிராட்டி –
அவன் கிருபையையையே தூண்டுமவள் அன்றோ )

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழ்
ஸந்த்யா காலமும் வாடையும் நெளிந்தபடி சொல்லிற்று
அதுக்கும் மேலே
இருளும் வந்து தோற்றிற்று

வியாக்யானம்
துழா
இதுக்குத் தேடிப்பிடித்து நலிகைக்கு ஒரு ஸம்பந்தம் இல்லையீ
ப்ராணன்களோடே ஒரு ஸம்பந்தம் உண்டு இறே வாடைக்கு

நெடும் சூழ் இருள் என்று
எல்லை காண ஒண்ணாத படி இருப்பதாய்ப் பரந்து வருகிற இருள் என்று
ஒரு பேரையிட்டு
தார்மிக வேஷத்தைக் கொண்டு நலிவாரைப் போலே

ராத்ரியினுடைய வேஷம் தார்மிக வேஷமோ என்னில்
அதுக்கானால் ஒரு அவதி உண்டு இறே

வேறு ஒன்றினுடைய வடிவைக் கொண்டு நம்மை நலிகைக்கு நாம் செய்வது என் என்னில்
தன் தண் தராது பெயரா
வழி போவாரை யடைய
நீ காண் குதிரை கொண்டு போந்தாய் -என்று
சகர புத்திரர்கள் நலியத் தொடங்கினால் போலே

ஸ்வபாவமான படி என் -என்கிறாள்
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
அபிமத விஷயத்துக்காக அவ்வரணை அழித்து உள்ளே புக்கு உபகரித்தவர் இப்போது
பிறர் நோவு தமக்குப் போது போக்காகப் புத்தி பண்ணி இருந்தாராகாதே -என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்யும் படி

அங்கன் அன்றிக்கே
வர பலத்தாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை யுடைத்தான
லங்கையை அழித்தது ஒருத்திக்காக என்று இருந்தோம்
அது அங்கன் அன்றிக்கே
இங்கனே கட்டளைப்பட்டு தர்ச நீயமாய் இருக்கிறது என் என்னும் பொறாமையாலே
அழித்தார் இத்தனை
அப்படி நம்முடைய ஸ்த்ரீத்வத்தால் வந்த அரணை அழிக்கைக்காக வல்லது
நம்மோடே ஸ்நேஹம் யுண்டாய் அல்ல -என்று
ஸ்ரீ திருமலை நம்பி வார்த்தை

ஸ்வாபதேசம்
இத்தால்
போக்ய யோக்கியமான காலமும் ஸம்ஸ்லேஷ சமயத்தில் அனுகூலமாமவை
அப்போது அனுகூல ஆகாரத்தாலே இப்போது பிரதிகூலமாய் நலிய நலிவு பட்டு
ஏதேனும் திசையிலும் குலையாத பகவத் பக்தியில் யுண்டான ரக்ஷகத்வ விஸ்ரம்பமும் குலைந்து
ஆற்றாமை கரை புரண்ட படியைச் சொல்லுகிறது –

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியுள்ள இவளுடைய ஆர்த்தி அதிசயத்துக்கு மேல்
இருளும் ராத்திரியும் இவளை
நலியுமது கண்டும் இவர் இரங்கிற்றிலர்
இவர் கொடுமைகளுக்கு நான் எத்தைச் செய்வேன் என்று
திருத்தாயார் வெறுப்பால் இன்னாதாகிறாள்

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவிப் கொண்டும்
முடிவும் இல்லாததாய்ச் சூழ்த்துக் கொண்டு வந்த இருள் என்று சொல்லப்படுமதாய்

தம் தண் தராது பெயரா
தன் தோளில் இட்ட திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டதே வ்யாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
என்றும் இங்கனே எழுச்சியும் வளர்ச்சியும் இல்லாமலும்
இன்று உள்ளதான கல்பமாய் இக்காலம் தோற்றின வளவிலும்

ஈங்கு இவள்
இங்கனே தனிமை பொறாமல்
அத்யா பன்னை யானவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வலுவாத பெரிய துக்கத்தை யுடையவன் என்று

இரங்கார்
இரக்கத்தைப் பானு கிறிலர்

அம்மனோ
புலியைக் கண்டு அஞ்சினால் போல் இது
இந்தக்கொடுமை யுண்டோ இன்று என்கிறாள்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்து உபகரித்தாருடைய
கொடுமைகள் இருந்தபடி என்

ஏக தாரா வ்ரதர் படி இங்கனே யாகாதே என்பதான வெறுப்பு இதில் –

———

அவதாரிகை
இப்படி ஆப்தரான இவ்வாழ்வார்
பகவத் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நவையான பக்தி தசையைத்
தம்முடைய ஞான தசையாலே அநு சந்தித்து
துர்க்கதமான ஸம்ஸார மார்க்கத்தில் இந்த ப்ரேம தசையானது நடந்ததாகை
அரிது என்று நொந்த பிரகாரத்தை
புணர்ந்ததுடன் போன தலைமகளுடைய கரத்தருமை நினைந்து
நற்றாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-

பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் –
நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –
மண்ணை யிருந்து துழாவி -4-4-

பதவுரை

அரு வினையேன்–அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும்–வெகு காலம்
கண்ணன்–கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம்–நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி–வழிபட்டு
பெற்ற–அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான்–தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்
இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற–நடந்துபோன
சூழ்கடம்–பரந்த பாலை நிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர்–வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர்–பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய–கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால்–நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர்–இளைய வீரர்களது
துடி–பறைகள்
படும்–ஒலித்தலாகிற
கவ்வைத்து–ஆரவாரமுடையது.

வியாக்யானம்

கொடும் காற் சிலையர்
கொடிதான கோலை யுடைத்தான சிலையை யுடையவர்கள்
கோடுதல்-வளைதல்
கால் என்று சிலைக்கோடி
கோடிய காற் சிலையர் -என்றுமாம்

நிரை கோள் உழவர்
நிரை கொள்ளுகையை உழவாக யுடையவர்கள்
நிரை என்று -காலித்திரள்
உழவானது -இதுவே க்ருஷியாய் இருக்கை

கொலையில் வெய்ய கடுங்கால்
மாற்றார் எதிர்ப்பட்ட விடத்து கொலைத் தொழிலில் வெவ்வியரான கடிய காலை யுடையவர்கள்
அதாவது
சீக்ர காமிகளாய் எதிரிகளை அழியச் செய்கை

விளைஞர்
இந்த ஸுர்யாதிகளுக்கு ஈடான
பருவத்தின் இளமையை யுடையவர்கள்

துடி படுங்கவ் வைத்து
இவர்கள் பறை அறைவால் யுண்டான ஆரவாரத்தை யுடைத்து

அருவினையேன் நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணனுடைய ஸர்வ சமாஸ்ரயணீயமாய்
நிரதிசய போக்யமான திருவடிகளைக் கீர்த்த நாதி முகத்தாலே
ஆஸ்ரயித்துப் பெறப்பட்ட

தொடுங்கால் ஓசியும் இடை
தொடும் அளவில் முறியும் என்னும்படி
மெல்லிதான இடையை யுடைய

இள மான்
பருவத்தாலும்
தனிமையால் யுண்டான நோக்காலும்
முக்தமான மான் போலே இருக்கிறவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடக்கிற சூழ்ச்சியை யுடைய வழியானது

சூழ்ச்சியாவது
வெம்மையால் துயரை விளைத்தல் –

இத்தால்
இளமான் -என்று
பருவத்தையும்
ஸ்த்ரீத்வத்தையும் சொல்லுகையாலே
அபி நவையாய்
தாஸ்ய ப்ரீதி ரூபையான பக்தியை ஸூசிப்பித்த படி

தொடுங்கால் ஓசியும் இடை -என்கையாலே
பக்தி கார்யமான வைராக்யத்தின் முதிர்ச்சியைத் தோற்றுவிக்கிறது
அன்றியே
அந்நிய ஸ்பர்சம் யுண்டாகில்
மத்யே அவிச்சின்னமாம் படி யான
பக்தியின் மேன்மை சொல்லிற்றாகவுமாம்

நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-என்கையாலே
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான ஸமாதிபிர் நராணாம் ஷீண பாபாநாம்
கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கிறபடியே
பக்தி பிறக்கைக்கு உடலான அருமை தோற்றுகிறது

சென்ற சூழ் கடமே –என்று
இந்த பக்தி வர்த்திக்கிறது
ஸம்ஸார காந்தார மார்க்கத்திலே என்றபடி

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய-என்று
இம் மார்க்கத்தினுடைய விரோதி பூயஸ்தையைச் சொல்லுகிறது –
இவ் விடத்து பக்திக்கு விரோதிகளாவன விஷய அர்த்திகளான இந்திரியங்கள்

கொடுங்கால் சிலையார் என்கையாலே
பாதக ஸாதனத்தினுடைய ஸாமர்த்யத்தைச் சொன்னபடி

இதில்
கால் கொடுத்தலாவது
அபிராப்த விஷய அவகாஹநம் ஆகிற வக்ர கதி

கொடுமையான போது
இந்த்ரியங்களினுடைய அநர்த்தா வஹத்வம்

நிரை கோள் உழவர் -என்று
இந்த்ரியங்களுக்குப் பிரதி நியதமாய்க் கொண்டு நிரை நிரையான
ஸப்தாதி விஷயங்களை
கிரஹிக்கையே வ்ருத்தியாய் இருக்கை

கொலையில் வெய்ய-என்கையாலே
இச் சேதனனை பகவத் விஷயத்தை விஸ்லேஷிப்பித்து நலியும் இடத்தில்
க்ரூரங்களாய் இருக்கை

கடுங்கால் என்று
சீக்ர காரிகளாய் இருக்கை

இளைஞர்-என்று
நலியும் இடத்தில் சக்தி குன்றாது இருக்கை

துடி படுங் கவ்வைத்து-என்கையாலே
பலவா திந்த்ரியக்ராவோ வித்வாம் ஸமபி கர்ஷதி -என்று
பறை அறைவாரைப் போலே உண்டான பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது

ஆக
இந்திரிய பலாக்ராந்தமான ஸம்ஸார மார்க்கத்திலே
பகவத் பக்தி தசையானது நடக்க அரிது என்னும் இடத்துக்கு
நொந்து அருளிச் செய்தார் ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரும் அளவும் தரித்து இருக்க மாட்டாதே
ஆற்றாமை மிகுகையாலே தனி வழியே புறப்பட்டு குரூரமான காட்டிலே
துஷ்ட ஸத்வங்களும் –
துர்த்வனிகளும்
துர்க்கதியுமான
தேசத்திலே போனாளாய்
அவளைத் திருத்தாயார் படுக்கையிலே காணாமையாலே
எல்லாப் படியாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே போன இவள் என் செய்கிறாளோ என்று
இவள் போன வழியைப் பார்த்து சோகிக்கிறாள்
திருக்கோளூரிலே புக்க பெண் பிள்ளையுடைய திருத்தாயாரைப் போலே
ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே அவளிலும் இவளுக்கு சோகம் அதிசயித்து இருக்கும் –
அன்றிக்கே
புணர்ந்ததுடன் போக்கிலே இவளுக்கு இரங்குகிறாள் ஆகவுமாம்
இவளுடைய ஸுகுமார்யத்தையும்
இவள் தான் ஸ்லாக்யையாய் இருக்கிற பொடியையும்
வழியில் அருமையையும்
அது தனக்கு ஓர் எல்லை இன்றிக்கே இருக்கிற பொடியையும் சொல்லிக் கூப்பிடுகிறாள்

வியாக்யானம்
கொடும் காற் சிலையர்
அவ்வழி தான் இருக்கிற படியைச் சொல்லுகிறது

கொடும் காற் சிலையர்
கொடிதான காலை யுடைத்தான சிலையை யுடையராய் இருப்பர்கள்
எப்போதும் ஓக்கக் கால் வளைந்த படியே இருந்துள்ள வில்லை யுடையராய் இருப்பர்கள்
பர ஹிம்ஸா த்வரையாலே போஜன சமயத்தோடு நித்ரா சமயத்தோடு வாசியற
எப்போதும் ஓக்க நாண் ஏறிட்ட படியேயாய் இருக்குமாயிற்று வில்லு

இப்படி ஏறிட்ட நாணி இழிய விடாதே இருந்துள்ள வில்லைக் கொண்டு இவர்கள்
கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்
நிரை கோள் உழவர்
நிரை கோள் உண்டு -கோ க்ரஹணம்
அதுவே யாத்ரையாய் இருப்பர்கள்
ரக்ஷகனாய் இருக்குமவன் கோ ப்ராஹ்மண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-25-
ஹிதனாய் இருக்குமா போலே
இவர்கள் இவற்றின் ஹிம்சையே தங்களுக்கு வெள்ளாண்மை யாய் இருப்பர்கள்

கொடுங்கால்
நான் ஏறிடுகையாலே வளைந்து இருக்கை

சிலையர்
அது நிரூபகமாய் இறுக்கியபடி
அவன் கையும் திருவாழியுமாய் இருக்கிறாப் போலே இறே
எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கும் இறே -பெரிய திரு -87-
அவன் பர ரக்ஷகனாய் இறே இருப்பது
நா ஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம்ஸ்ரிதா -அயோத்யா -60-20-என்னுமா போலே
பயம் கெட்டு இருக்கிறது அன்று இறே இங்கு

என்னும்படி நாயகனும் தொடக் கூசும்படியான இடையாள்
மிகவும் இளமை யுள்ளவள்
இளமான் போல் காதராஷி யானவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடந்து போன பெரும் காடு இவ்வகையாக ஆயிற்று
அதிலே இப்படி போனாள் என்று சோகிக்கிறாள் –

——–

அவதாரிகை
இப்படி ஸம்ஸாரத்தின் துர்கதியை அனுசந்தித்து அருளினவர்
ஆஸ்ரித விஷயத்தில் ஸாம்யாபத்தி ப்ரதனாய்
ஸர்வ ஸமாஸ்ரயணீயனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மையை அனுசந்தித்து
நாம் அவனை ஆஸ்ரயித்து இருக்கையாலே
நாம் அவனோடு பரம ஸாம்யா பன்னராகைக்குக் குறையில்லை என்று நினைத்த பிரகாரத்தை
தலைமகனான ஸர்வேஸ்வரனுடைய திரு நிறத்தில் போலி கண்ட -நெய்தலைக் கண்ட –
தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(போலி கண்டு அழிதல் என்றும் மகிழ்தல் என்றும் கொள்ளலாம் )

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-

பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன கால் வன்மையால் –
தலைவனைப் பிரிந்த தலைவி போலி
கண்டு மகிழ்தல் -சொன்னால் விரோதம் இது -3-9-

பதவுரை

கடன் ஆயினகள் கழித்து–காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு–தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால்–தமது கால்களின் வலிமையால்
பல நாள்–அனேக காலம்
நீர் நிலை நின்ற–நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல்–இத் தவத்தினாலேயோ
நீலங்கள்–நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி–(கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும்
(த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும்–இந்த மண்ணுவகமும்
விண்ணும்–விண்ணுலகமும்
குலுங்க–நெகிழும்படி
உலகு–உலகங்களை
அளந்து–அளவிட்டு
நடம் ஆடிய–(இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான்–எம்பெருமானுடைய
உரு ஒத்தன–திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.
இம் மண்ணும் விண்ணும் குலுங்க–இந்த பூ லோகமும் ஊர்த்வ லோகமும் ஆச்சர்யப்பட்டு அசையும்படியாக
குடமாடி -ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் குடக் கூத்தாடியும்
வுலகளந்த-லோகங்களை த்ரிவிக்ரம அவதாரத்தில் ஆக்ரமித்தும்
நடமாடிய பிரான் உரு ஒத்தன -சஞ்சரித்த சர்வேஸ்வரனுடைய திரு மேனியோடே சாம்யம் உடைத்தாய் இருக்கின்றன
இது -இதற்குக் காரணம்
கடமாயினகள் கழித்து -தேவ பித்ரு ருஷி ருணங்கள் நிறைவேற்றி
தன் கால் வன்மையால் -தனது காலின் உரத்தினால்
பல நாள் தடமாயின -அநேக காலம் தடாகம் என்ற பேர் பெற்றவைகளில்
புக்கு நீர் நிலை நின்ற தவம் கொல்-பிரவேசித்து ஜலத்தில் சிரகாலம் வாஸம் பண்ணின தபஸ்ஸாய் இருக்கலாம்

வியாக்யானம்

கடமாயினகள் கழித்து
தனக்கு அனுபவித்து அற வேண்டும்படியான பாபங்களைக் கழித்து

தன் கால் வன்மையால்
தான் நின்ற அடி யுரத்தாலே

பல நாள்
அநந்த காலம்
பலம் பெறும் அளவும் என்றபடி

தடமாயின புக்கு
அகாதமான தடாகங்களிலே அவகாஹித்து

நீர் நிலை நின்ற
நீரிலே நித்ய வாஸம் பண்ணின

தவமிது கொல்
இது தபஸ்ஸாகக் கூடும் இறே

குடமாடி
பஞ்ச லக்ஷம் குடியில் பிறந்த கோப கோபீ ஜனங்கள் எல்லாம்
காணும்படி குடக் கூத்தாடி

யிம் மண்ணும் விண்ணும் குலுங்க
இந்த பூமியோடு
தேவ லோகத்தோடு
வாசி யற
தன் செயலிலே வ்யாகுலமாம் படியாக

இது கீழோடே சேரவுமாம்

வுலகளந்த நடமாடிய
அளக்கிற இடத்திலே
அநாயாசத்தாலே வல்லார் ஆடினால் போலே இருக்கை

பெருமான்
அந்நிய சேஷத்வத்தையும்
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தையும்
கழித்துக் கொடுக்கையாலே ஸர்வாதிக சேஷி யானவனுடைய

பெருமான் உரு
ரூபமேவாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே -யஜுர் -5-1-4-என்கிறபடியே
பெருமை சொல்லுவதாக நிறம்

ஒத்தன நீலங்களே
நீலங்களானவை அவன் திரு நிறத்தோடு ஒத்தன

ஆக
இந் நிலத்துக்கு ஸாம்யம் உண்டாயிற்று
தன்னுடைய உத்பத்தி ஸ்தானமான தேசத்திலே
நித்ய வாஸம் தானே தபஸ்ஸூ ஆகையால் என்றதாயிற்று

(திருஅயோத்யையில் இருந்ததே ஹேதுவாக அன்று
சராசரங்களை வைகுந்தம் ஏற்றி அருளினாரே பெருமாள்
தவம் க்ஷேத்ர வாசமே )

இதுக்கு கடங்கள் கழிக்கை யாவது –
தபஸ்ஸூ பாபத்தைப் போக்கும் என்கிற ஸாம் யத்தாலே

இத்தால்
யாவத்த்ரியதே ஸா தீஷா -தைத்ரியம் -என்கிறபடியே
அநந்ய ஸாதனனாகிற அதிகாரிக்கு சரீர ஸ்திதி தானே
சாதன அனுஷ்டானம் என்னலாம் படி இருக்கை

அதில் கடமாயின கழித்து -என்கையாலே
கடம் என்று ருணமாய்
நாயம் ருணீ -பாகவதம் -என்கிறபடியே
இவ் வதிகாரியினுடைய ருண த்ரய அபகரணம் சொல்லுகிறது

தன் கால் வன்மையால் -என்கையாலே
வ்யவசாய சக்தியை ஸூசிப்பித்த படி

பல நாள் தடமாயின புக்கு -என்கையாலே
சீதமிவஹ்ரதம் -மோக்ஷ -4-50- என்கிறபடியே
வாசத் தடமான பகவத் விக்ரஹங்களிலே அவகாஹித்து என்றபடி
(நீராடப் போதுவீர் -)

நீர் நிலை நின்ற -என்கையாலே
ஸ்வ பாவமான நீர்மையிலே நிலை நிற்கை

தவமிது கொல் -என்கையாலே
அநு பாவ்யம் தானே பல ஸாதனம் என்னும்படி
அவிசேஷிதமாய் இருக்கை

குடமாடி இத்யாதியாலே
கிருஷ்ணனுக்கும்
த்ரிவிக்ரமனுக்கும் யுண்டான ஸர்வ ஸமாஸ்ரயணீயதையாலே
வந்த நீர்மையின் ஐக்யம் தோற்றுகிறது

உரு வொத்தன நீலங்கள் -என்கையாலே
ஸாம்யா பன்னரானவர்கள்
புஷ்பவத் ஸ்லாக்ய ஸ்வ ரூபர் என்கை யாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நெடுநாள் ஸம்ஸாரத்திலே இருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்திலேயே அவகாஹித்த படி இறே
கீழ்ச் சொல்லிற்று

இப்பாட்டில்
பகவத் விஷயத்தில் அவகாஹித்த நெஞ்சு மீண்டு தரிக்கைக்காக லோக யாத்திரையை அனுசந்திக்கப் புக்கார்
அதுவும் பகவத் விஷயத்துக்கே உடலாய் இருக்கும் இறே
ஸம்ஸாரிகளானவர்கள் இங்குத்தை வாஸனையாலே அத்தை இங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்
இவர்கள் பகவத் விஷய வாஸனையாலே இத்தையும் அங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்

நோ பஜனம் ஸ்மரந் -சாந்தோக்யம் -8-1-2- என்கிற
முக்தனில் காட்டில் முமுஷுவுக்கு வாசி இது விறே –

ஸம்ஸார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நிற்கச் செய்தே அதுவும் பகவத் அனுபவத்துக்கு உடலாய் இருக்கும்
முதலிலே இது தன்னில் ஸ்ம்ருதி தானும் பிள்ளையாய் இருக்கும் முக்தனுக்கு

குருகைக் காவல் அப்பனை
ஜகத் ஈஸ்வரர்களுக்கு ஸம்பந்தம் இருக்கும் படி என் என்று கேட்க
எஜ்ஜகத்துக்கும் எவ்வீஸ்வரனுக்கும் நீ கேட்க்கிறது -என்றான்
சரீரம் யாதவாப்நோதி யச்சாப் யுத்த க்ராம தீஸ்வர -ஸ்ரீ கீதை -15-8-என்று
இந்திரியாதிகளோடே கூடி உபசயாத்மகமாய் இருந்துள்ள இச்சரீரம் ஆகிற இஜ்ஜகத்துக்கு
ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லா நின்றது இறே
இச்சரீரத்துக்கும் ஈஸ்வரனான ஆத்மாவுக்கும் யுண்டான ஸம்பந்தம் யாதொன்று அப்படி
இச் சரீர சரீரீ பாவம் ஜகத் ஈஸ்வரர்களுடைய சம்பந்தம் என்று உத்தரம் சொன்னான்

அவன் தானே -எனக்கு எம்பெருமானை ஸ்மரிக்கைக்கு விரகு சொல்ல வேணும் என்ன
நான் உனக்கு அது சொல்லுகிறேன்
நீ எனக்கு மறக்க விரகு சொல் என்றான்

ஆவது என் என்னில்
ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதனுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன்
அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கு இல்லை இறே
விசேஷண அம்சம் தோற்றா நிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே என்றபடி

இப்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்து இருக்கிற இவர் லோக யாத்திரையில் கண் வைத்தார்
சில நீரிலே நிற்கிற நீலங்கள் வந்து கண்ணுக்கு இலக்காயிற்று
இவை அவனோடு ரூப ஸாம்யத்தை யுடையனவாய் இரா நின்றன
இவை நெடுநாள் நீரிலே நின்று பண்ணின தபஸ்ஸூ யுடைய பலமாகாதே -என்கிறார் –

குடக்கூத்தாடி ஸஹர்ஷ சீர கம்பம் பண்ணும்படியாக சர்வ லோக க்ரஹணத்தைப் பண்ணி
நடந்து அருளின பெருமை யுள்ளவருடைய திருமேனி போன்றி கோள் நிறத்தால்

நீலங்களே
கரு நெய்தல் பூக்கள்

——–

அவதாரிகை
இப்படி அதிகார சம்பத்தியான பல ஸித்தியை அனுசந்தித்தவர்
இதுக்கு அடியான
பகவத் கடாக்ஷத்தையும் அனுசந்தித்து
அவ்வனுசந்தானத்தின் முதிர்த்தியாலே ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண் அழகானது
ஏழையர் ஆவி -யில் போலே
உரு வெளிப்பாடாம் படி பிரகாசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் –
தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –
ஏழை யாராவி -7-7-

பதவுரை

நீலம்–நீலமணி மயமான
தடவரை மேல்–பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து–பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும்–எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை
(எவையென்னில்)
பொங்கு முந்நீர்–கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான்–விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான்–மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான்–திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான்–எம்பெருமானுடைய
கண்ணின்–திருக்கண்களினுடைய
கோலங்களே–அழகுகளேயாம்.

வியாக்யானம்
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல
நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே
தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே

பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி
அழகு விஞ்சி

எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்
கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்

இத்தால்
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல்
முந்நீர் ஆனால் போலே
அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு
தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி

விசும்புக்கும் பிரான்
வெளி நாடான நித்ய விபூதிக்கும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே
தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

மற்றும் நல்லோர் பிரான்
முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே
நித்ய விபூதியிலும் புகப் பெறாதே
தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு
பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே
தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்

கோலம் கரிய பிரான்
இக் கண் அழகுக்குப் பரபாக ரஸத்தை யுண்டாக்கக் கடவதான
திரு மேனியில் கருமையாலே உபகாரகனானவன்

எம்பிரான்
இக் கண் அழகையும்
வடிவு அழகையும்
காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய

கண்ணின் கோலங்களே –
கண்களின் அழகுகள் ஆனவை
அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்
தொடக்கமானவை

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள்
நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து
எமக்கு எல்லா விடத்தவும்
என்று அந்வயம்

இப்பாட்டு
கிளவி மர்யாதையில் நாயகனான ஈஸ்வரனுடைய உரு வெளிப்பாட்டைத்
தோழிமார் தொடக்கமானார்க்கு நாயகி உரைத்ததாகையாலே
இவ்வாழ்வாருடைய ஸ்வ அனுசந்தானம் இன்றியே
ஸூஹ்ருத்துக்களை நோக்கிச் சொன்னதாகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சில நீலங்களைக் கண்டு
இவை பண்ணின தபஸ்ஸுக்குப் பலம் பெற்றன போலே இரா நின்றன
நம்முடைய விரஹ தாபத்துக்கே யாகாதே பலம் இன்றிக்கே ஒழிகிறது
என்று அவ்வழியாலே அவற்றோடு போலியான வடிவை நினைத்து
அவ்வழியாலே திரு முகத்திலே அழகை அனுசந்தித்து
அது தான் போய்
ப்ரத்யக்ஷ சாமானாகரமாய்
அத்தாலே அணைக்கக் கணிசித்துக்
கைக்கு எட்டாமையாலே நோவு பாடவும்
அவ்வழகு ஸ்ம்ருதி விஷயமாய் உரு வெளிப்பாடாய்
நோவு பட்டுக் கிடக்கிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

நீல இத்யாதி
ஒரு நீல கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது
ராம கமல பத்ராஷ -ஸூந்தர -35-8-
பெரு வெள்ளத்தில் சில சுழிகள் போலே யாயிற்று திருக்கண்கள்
ஸர்வாங்க ஸூந்தரராய் இறே இருப்பது
அதன் மேலே இறே கண் அழகு
விகாசம் செவ்வி குளிர்த்தி தண்ணளி இவற்றாலே தாமரை போலே யாயிற்று இருப்பது
கண் அழகுக்கு எல்லை எவ்வளவு என்னில்
ஸர்வ ஸத்வ மநோ ஹர -ஸூந்தர -35-8-
இடக்கை வலக்கை அறியாத திர்யக் ஜாதியிலே பிறந்த நாங்களும் அகப்படும் படியாயிற்று இதில் அழகு

எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -திருவாய் -3-3-5- என்றார் இறே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த -திருவாய் -3-3-4- என்னக் கடவது இறே
என்னில் குறைந்தார் இல்லை
நான் அகப்படத் தொழுதேன் என்று இருக்கிறேன்
நான் அகப்பட்ட பின்பு இனி யார் தான் என்று இருக்கிறார்
ரூப தாக்ஷிண்ய சம்பன்ன -ஸூந்தர -35-8-
அதுக்கு அவ்வருகு சில சுழிகளாய் ஆயிற்று இவை
வடிவு அழகும்
ஆனு கூல்யமும்
போக்தாக்கள் இல்லாமையாலே குமர் இருந்து போம் இத்தனை
ஸர்வ ஸத்வ மநோ ஹரத்வம் கண் அழகோடே அற்றது இறே

ஸம்பன்ன
இவை கூடு பூரித்துக் கிடக்கும் அத்தனை

ஸம்பன்ன ப்ரஸூத
இவை தான் ஒவ் பத்திகமாய் இருக்கை

பெருமாள் வடிவு அழகைக் கழியப் பேசினாய்
இன்னம் இப்படி இருபத்தொரு ஆஸ்ரயம் யுண்டோ இல்லையோ என்ன
ஓன்று உண்டு
ஜனகாத்மஜே
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய் -10-10-6-என்கிறபடியே
தேவரீரும் உண்டு

எமக்கு எல்லா விடத்தவும்
இக்கண் அழகின் கீழே நாடு ஜீவித்துக் கிடவா நின்றது இறே
நமக்கே இறே பாதகம் ஆகிறது
கண்டு அனுபவிக்க இழிந்தால்
ப்ரத்யக்ஷ சாமானா காரமாய் அவ்வருகே சில பரிமாற்றத்தைக் கணிசித்துக் கை நீட்டுவது

முதலானவைகளில் பரபாக ஸ்ரீ யை உண்டாக்கி அவைகளை அனுபவிப்பிக்கும் உபகாரகன் –

எம் பிரான்
இவ்வெல்லா வகையிலும் என்னை அனுபவிப்பித்து என்னை அடிமை கொண்ட உபகாரகன்

ஏவம் பூதகனுடைய கண்ணின் கோலங்களே எமக்கு எல்லா விடத்த்வும் என்று
அந்வயம்
திருக்கண்களினுடைய அலகுகள் இப்போது எங்கும் அனுபாவ்யமாகா நின்றது –

———-

அவதாரிகை
இப்படி உரு வெளிப்பாட்டாலே வடிவு அழகை அனுபவித்தவர்
நேரே அனுபவிக்கப் பெறாமையாலே
தம்முடைய ப்ரகாஸம் அடையக் குலைந்து மோஹ அந்தகாரம் மேலிடும் அளவான படியாலே
இவ்வவஸ்தையில் ஆஸன்னரானார் தம்மை அத்தலைக்கு ப்ரஸாத பாத்ரமாக்கி
ஸமர்ப்பியாதே விளம்பிப்பதே என்று
ஸூஹ்ருத பூதரைக் குறித்து அருளிச் செய்த பாத்திரத்தை
பகல் பொழுது கழிந்து இருள் கண்டு இரங்கின தலைமகள்
உற்றார் விரைந்து கொடுப்பது என்றோ என்று
பாங்கிமாருக்கு உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –
இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மானேய் நோக்கு -5-9-

பதவுரை

கோலம்–அலங்காரத்தை யுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிறைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
துவர் அணித்தால் போலே செக்கர் கோலத்தை யுடைத்தான ஆதித்யனாகிற களிறானது
அஸ்தமய பர்வதமாகிற கல்லிலே வாங்க

புய்த்தால்-வாங்குதல்
போக என்றபடி

இவ்விடத்து ஆதித்யனைக் களிறு என்றது
மேனாணிப்பாலும்
புகர் யுடைமையாலும்

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன
திரளாகப் பரந்த
நீல நிறத்தை யுடைத்தான
ராத்திரிகள் ஆகிற
ஆனை கள் எல்லாம் எதிர்பட்டன

கங்குழைக் களிறு என்றது
இருட்சியாலும்
திரட்சியாலும்

நேரிழையீர்
தகுதியான ஆபரணத்தை உடைத்தானவர்களே
மெல்லிய ஆபரணம் என்றுமாம்

ஞால பொன் மாதின் மணாளன்
ஞால மாதினுக்கும்
பொன் மாதினுக்கும்
மணாளன்

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து
திருத் துழாய் மாலையை நம்முடைய செறிந்த குழலிலே முற்படவே சூட்டி
தகுதியாகச் சூட்டி என்றுமாம்

என்னைமார்
என்னைமார் என்று மூத்தவர்களை சொன்னபடி

எம்மை நோக்குவது என்று கொலோ
எம்மை ரக்ஷிப்பது என்றாய் இருக்கிறது என்று
வரவை விரைவித்தல் வேண்டி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய -என்கையாலே
ராகோத்தரமான விவேக ப்ரகாஸம் மறையும்படியாக என்றபடி
(பக்தி பாரவஸ்யத்தாலே வந்த அஞ்ஞானம் -பேற்றுக்குத் த்வரிக்கப் பண்ணுமே )

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்-என்கையாலே
மோஹ அந்தகாரம் மேலிட்டமை தோற்றுகிறது

ஞால பொன் மாதின் மணாளன் -என்கையாலே
நாய்ச்சிமாரோபாதி
ஸம்பந்தம் அசாதாரணம் என்கிறது

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து -என்கையாலே
அத் தலையில் பிரசாத்துக்கு யோக்யமாய் இருக்கும் ஸ்வரூபம் என்கிறது

என்னைமார் எமமை நோக்குவது -என்கையாலே
பிரதமஜரான கௌரவ்யரே கடிப்பிப்பர் என்கிறது

என்று கொலோ -என்கையாலே
தத் விஷயமான அபேக்ஷையே இவ் வதிகாரிக்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று

(விருப்பமே நாம் செய்ய வேண்டியது
அடைவிப்பவன் அவனே
பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )

இவ்விடத்தில்
நேரிழையீர் என்று
ஸூஹ்ருத் பூதருடைய ஆத்ம குண யோகத்தை ஸூசிப்பிக்கிறது –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
உரு வெளிப்பாடாய் நோவு படா நிற்கச் செய்தே
பகலும் கழிந்து ராத்திரியுமாய்
அது தான் அநேகம் வடிவுகளைக் கொண்டு நலிய நலிவுண்டு
நம்முடைய தசையைக் கண்ட பந்து வர்க்கத்தில் உள்ளார் நம்மை நோக்குவது என்றோ என்கிறாள்

இது பாங்கியரோடே கூடின தலைமகள் வார்த்தை யாதல்
அன்றிக்கே
தோழி வார்த்தை யாதல்
இவளுடைய தயநீய தசை இருந்தபடி ஒரு பகலை இரந்து கவிபாடும்படி யாயிற்று –

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
தர்ச நீயமான ஆதித்யனாகிற களிறு கல்லிலே போய்ப் புக
அஸ்தா சலத்திலே போய்ப்புக
வீர பத்நீ இறே
அவன் இருப்பில் புக்கிருந்து
த்வம் நீச -ஸூந்தர -21-16-என்னுமவள்
ராத்திரியிலே வந்தால் ஸர்வ இந்த்ரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே
வியசனம் அதிசயித்து ஆற்ற அரிதாய் இருக்கும்
பகலில் வந்தால் இந்திரியங்கள் பாளி பாய்கையாலே ஆற்றாமை ஆற்ற எளிதாய் இருக்கும் இறே

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம்
பகல் அனுகூலமாகையாலே ஒன்றாகச் சொல்லிற்று
ராத்திரி பாதகாதவத்தாலே அநேகமாகத் தோற்றா நின்றது இறே
ராக்ஷஸருக்கு ராம ஸஹஸ்ரமாய்த் தோற்றுமா போலே
குழாம் குழாமாகத் திரண்டு நீலமான நிறத்தை யுடைத்தான
கங்குல் யாகிற களிறு எல்லாம் எங்கும் பரம்பிற்றன
தான் என்னை யானை போலே விரும்பி வந்து இத்தனை யானைக்கு
இரையாக்கி இட்டு வைத்துப் போவதே –

நிறைந்தன நேரிழையீர்
இந்த ராத்திரி வியஸனத்துக்குத் தப்பி ஒப்பனை அழியாமை இருக்க
நினைத்து இருக்கிறார் நாலு மூன்று அபலைகள் ஆயிற்று
அதாவது என் எண்ணில்
மேலே எம்மை நோக்குவது என்று கொலோ -என்னா நின்றது இறே

இழை -என்று
ஆபரணமாய்
விலக்ஷணமான ஆபரணத்தை யுடையீர்

ஞால பொன் மாதின் மணாளன்
குற்றம் பொறுப்பிப்பார் இன்றிக்கே குற்றம் அறியாதார் வேணும் ஆயிற்று
இவளுக்கு இப்போது ஸா பராதராய் வர நின்றாரை ரக்ஷிக்கும் ஈஸ்வரன்
ஒரு ரக்ஷகனும் வேணும் இறே
ஒன்றும் கைம்முதல் இல்லாதாராயும் ரக்ஷிக்கும் பிராட்டி
குற்றம் கண்டு பொறுப்பிக்கும்
அதுவும் இல்லையாயிற்று இவளுக்கு
ஞாலம் ஆகிற ஸ்லாக்யமான நிருபாதிக ஸ்த்ரீத்வம்

மணாளன்
இக்குணங்களை யுடைய ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஓலக்கம் கொடுக்கும் போது தான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -21-30–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 17, 2022

அவதாரிகை

இப்படி அவசன்னரான இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக
(வேலன் வந்ததால் சிதிலம் ஆன ஆழ்வாரை )
ஒரு விபூதியாக நம்மை ஆதரியா நிற்கச் செய்தே
(நீதி வானவர் அன்றோ-இங்கு அநீதி மன்னவர் )
நீர் இருந்த தேசத்திலே வந்து -(லீலா விபூதியில் )
நீர் அபிமானித்த வஸ்துக்களை ஆதரித்து விரும்புகைக்காகவும்-
ஸர்வஞ்ஞன்-ஆழ்வாருக்குப் பிடித்த ஈட்டிய வெண்ணெய் உண்ண
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி உம்மை அனுபவிப்பைக்காகவும் அன்றோ இங்கு வந்தது

(ஏழு ரிஷபங்கள் அடக்கி
நப்பின்னையைச் சொன்னது ஆழ்வாரையும் நம்மையும் சொன்னதற்காகவே
பரித்ராணாய ஸாதூ நாம் -ஆழ்வாரை அணைத்தல்
துஷ்க்ருதாம் வி நாஸநம் -ஏழு ரிஷபங்கள் அடக்கி
தர்ம சமஸ்தானம் -வெண்ணெய் உண்டது -அஹம் ஹி போக்தா -யஜ்ஜமாகவும் -பிரபு எவச –
செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வான்நின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-கர்த்தாவாகவும் போக்தாவாகவும் )

என்ற சர்வேஸ்வரன் திரு உள்ளத்தைக் கருத்தை ஆவிஷ்கரிக்க
ஒக்கும் இறே என்று ஸந்துஷ்டாராய்
ஆசன்னரான கிருஷ்ண -(பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே )
மானஸ அனுபவ ஸந்நிஹிதனான -(முன்னால் நிற்கும் கிருஷ்ணனை -ஆடினை கூத்து முன்னிலை பிரயோகம் )
(ஆழ்வார் காலத்தில் இல்லையே யாயினும் அக்காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டி அருளினான் அன்றோ )
அவன் இடம் விண்ணப்பம் செய்கிறார் –

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

பாசுரம் -21-சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி -எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –
வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-
முதல் பாசுரம் இதுவும் இறுதி பாசுரமும் தாமான தன்மை —
அகத்துறை சொல்ல வேண்டாம் என்றும் சொல்வர் சிலர் –

பதவுரை

அங்கு–பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள்–நித்ய ஸூரிகள்
நல் நீர் ஆட்டி–நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க–அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க,
(அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால்–(உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து–(இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள் தோறும் கடைந்து)
சேர்ந்த வெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி–பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்க அழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு–வலிமையை யுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்ற மகளான
நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில்-முசுப்பையுடைய
ஏறு–(ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை–வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை–கூத்தாடி யருளினாய்.

சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்
(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )

மாலைக்கு நன்மை யாவது
அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை
அனுரூபமாய்
புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )

சூட்டு -திருமுடி சாத்தாய்
மாலை -தோளுக்கு விடுவதாகவும்
(மூன்று முடிக்கு உரிய அரசு
பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே
வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்
அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்

தூயன
புஷ்பத்துக்குத் தூய்மையாவது
த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்
(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் (

ஏந்தி
பாரதந்தர்யத்தால்
யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை
(கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )

விண்ணோர்கள்
பரம வ்யோம வாசிகளான அப்ராக்ருத புருஷர்கள்

நன்னீர் ஆட்டி
அன்பினானால் ஞான நீர் கொண்டு
அன்பும் ஞானமும் கலந்து -பரிசுத்த பக்தி ரூபா பன்ன ஞானதாலே திருமஞ்சனம் ஆட்டி
(திருக்குறும் தாண்டகம் -இதுவும் ஸ்நாநாசனம் போது அனுசந்திக்கிறோமே )

அம் தூபம் தரா நிற்கவே
அலங்கார அந்தர பாவியாய்
சர்வ கந்த வஸ்துவுக்கும் அதி வாசனை கரமாகையாலே ஊட்ட-அழகிய தூபம் தாரா நிற்கவே
(வகையால் மனம் ஒன்றி மாதவனை -நாளும் புகையால் விளக்கால் நீரால்
சுமந்து மா மலர் –நீர் சுடர் தூபம் கொண்டு -இத்யாதி
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வேங்கடத்து வந்தாலும் அவர்களும் வந்து ஆராதிப்பார்களே )

அங்கு
அந்த நித்ய விபூதியில்

விண்ணோர்கள் -நன்னீராட்டி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நிற்கவே -என்று அன்வயம்
ஸ்நாநாசனமும் அலங்காரசனமும் ஆன பின்பு
அங்கே சென்ற பின்பு
போஜ்யாசனத்துக்குப் போந்த படி
(காலத்துக்கு வேலை இல்லை அங்கு என்றாலும் அடுத்து அடுத்து இவை உண்டே )

ஓர் மாயையினால்
அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே
அத்விதீயமான
தனது அபிநிவேச சங்கல்பத்தினாலே
மாயா வாயுனம் ஞானம்

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து
திருவாய்ப்பாடியில் நாள் தோறும் கடைந்து ஈட்டிய வெண்ணெயை அபஹரித்து

இமிலேற்று வன் கூன் கூட்டிடை ஆடின கூத்து
ககுத்துக்களை யுடைய எருதுகளின்
வலித்தாய்
வளைந்த கொம்புகளின் நடுவே
வல்லார் ஆடினால் போலே வியாபாரித்தாய்

அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –
பிரபலரான கோப குலத்தில் பிறந்த
நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது

ஆகையால்
அந்த விபூதியில் ஆராதனம் செய்து கொண்டே இருக்கும் போது
(சம்சாரி -முமுஷு முக்தன் -தசை மாறி வர வேண்டுமே
தயிர் பால் சம்சாரி
வெண்ணெய் முமுஷு
நெய் முக்தன் )
இந்த விபூதியில் சம்பந்த ஞானம் உடையார் -மதி மந்தானம் -புத்தியான மத்து
முமுஷுக்கள் உடன் கலந்து பரிமாறி
ஸம்ஸாரம் பிடிக்காமல் உபேக்ஷித்து –
ருசி விளைத்து மேலே மேலே கூட்டிப் போக

உபநிஷத் கடலைக் கடைந்து -மஹாபாரதம் சந்திரன் –
அதே போல் பக்தாம்ருதம் திருவாய் மொழி
நாள் தோறும் இடது வலது -மனன மதனம் பண்ணி ஈட்டுகை
பால் மாறி -நெய் வராமல்-அந்தரேவ- நடுவே நிற்கும் வெண்ணெய் போல்

சம்சாரம் கழித்து –
உண்டியே உடையே உகந்து திரியாமல்
அவஸ்தையைக் கழித்து
ஆகதோ பரமபதம் புகப் பெறாமல்
ஆந்தராளிகர் இடைப்பட்ட முமுஷுக்களை அனுபவிக்க
இவர்கள் எதிர்பாராமல் -ஈட்டிய வெண்ணெய் –
எப்போது திருவடி சேர்ப்பார் எதிர்பார்த்தே இருக்க வேண்டுமே

அபிநிவேசத்தால் -பேராசை கொண்டு போந்து
கோட்டிடை இத்யாதி-
ரஜோ தமோ குண பிரதிபந்தங்களைப் போக்கி
செருக்கை யுடைய சரீரம்
அவஸ்தா சப்தகம் போக்கி
கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வனம் விருத்தம் -மரணம் -ஏழு தசைகளிலும் இரண்டு கொம்புகள்
பிரபலமாய் -கர்மங்கள் -குத்திப் போக்கும்

அநாயாசன போக்கி ஆட்டம் பார்த்தாலே தெரியுமே
நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே போகும்

பாரதந்தர்ய ஏவ ஸ்வரூபம் நிரூபணம்
ஸ்வ ரக்ஷணம் ஸ்வ அந்வயம் இல்லாத நப்பின்னை -அடலாயர் கொம்பு
அநந்ய ரஷ்யம் – அநந்ய போக்யம் -கொம்புக்கு இரண்டும் உண்டே
இதே தான் முமுஷுக்குவுக்கும் இருக்க வேண்டும்
என் நான் செய்கேன் -யாரே களை கண் -இத்யாதி
இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவை நீ புஜிக்க குறை யுண்டோ என்று விண்ணப்பம் செய்தார் ஆயிற்று

————–

அவதாரிகை

இப்படி ஈஸ்வரனுக்கு அபிமத விஷயராய் இருக்கிற இவர் பக்கலிலே
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த வித்வத் அபிமானி ஜனங்களைக் குறித்து
உங்கள் படிகள் பரஸ்பர அசங்கதங்களாய் இருந்தன வென்று
பார்ஸ்வத்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
மதி யுடன்படுவதற்குக் களிறு வினவி வந்து
குறையுற்ற தலைமகனை
தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-

பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம் -தோழி தலைவனைக் கேலி செய்தல் –
நல்குரவும் செல்வமும் -6-3-

பதவுரை

ஐயர்–இப்பெயரிவருடைய
கை–கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை–மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம்–(இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்)
தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு–(இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை–வேட்டையாம்;
வினவுவது–(இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு–(எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்;
(இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன–கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினது
உரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென–தமக்குள் ஒன்றொடொன்று பொருத்த மில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ–புதுமை மிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை–நம்மை
இவ் வான்புனத்தே வைத்தது–இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைத்தது?

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை
கைக்குப் பரிகரம் ஆயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே
சிறிய நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை
நாட்டுக்கு வார்த்தை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே யானை போந்ததோ
என்று வினவா நிற்பது

ஐயர் ,
ஐயர் -இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இராய் நின்றது

புள் ளூரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன
பெரிய திருவடியை மேற்கொண்டு
எதிரி அறியாமல் ஜகத்தை ரஷித்துக் கொண்டு திரிகிற
ஈஸ்வரனுடைய விபூதியிலே
எக் காலத்திலும் நடை யாடாததான

தம்மிற் கூடாதன
தன்னில் தான் சேர்த்தி அற்றன

வம்பார் வினாச் சொல்லவோ
நிஷ் ப்ரயோஜனமாகக் கேட்ட வார்த்தைகளுக்கு மறு மாற்றம் சொல்லவோ

வம்பார் வினா -என்று
புதுமையால் மிக்க வினா என்னலுமாம்

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களைப் பெரிய புனத்திலே உடையவர்கள் வைத்தது –

(இந்திரியங்கள் -தந்தியான யானை
ஞானம் என்ற அம்பு கொண்டு அடக்கப் பார்த்தோம் –
கையிலே இருக்கும் தழையை வில்லாகக் கொண்டு அடக்கவோ )

இத்தால்
கொம்பார் தழை கை -என்கையாலே
விஷய ப்ரவாஹங்கள்
கை விட்டதில்லை -என்றபடி

சிறு நாண் எறிவிலம் -என்கையாலே
ப்ரணவ தநுர் விஷ்பாரித ஸ்வர
மாத்ரமும் இல்லை என்றபடி –

(பிரணவம் தனுஷ் -ப்ரஹ்மம் லஷ்யம் -ஞானம் கொண்டு விட வேண்டுமே
ஆத்மா அம்பு -மூன்று மாத்திரை உள் அட வாங்கி விட வேண்டுமே
மூன்றரை மாத்திரை ஸ்வரமும் இல்லையே
ஸ்வரூப ஞானத்துக்கு பிரணவ தனுஸ் வேணுமே )

வேட்டை கொண்டாடு-என்கையாலே
ஸம்ஸார அந்தகாரத்திலே -பாலைவனத்தில் –
துஷ்ட ஸத்வமான
ராக த்வேஷ
லோப மோஹாதிகளுடைய
நிரஸனத்திலே ஒருப்பட்டோம் நாங்கள் என்கிற கொண்டாட்டமே உள்ளது என்றபடி

அம்பார் களிறு வினவுவது -என்கையாலே
ஞான சர வித்தமாய் இருக்கச் செய்தே
இந்த்ரிய தந்தியானது விஷய அடாவீ வித்ருதமாயிற்று
என்று தத் அநுயானம் பண்ணிற்று என்கிறது

(தத் அநுயானம் பண்ணிற்று -இந்திரியங்கள் போன வழியிலே போகிறோமே
சதுர் தந்து -நான்கு கொம்பு உள்ள மிருகங்கள் -ராமாயணம் சொல்லுமே
சம்சாரம் மரம் தலை கீழ் -படைக்கும் பிரம்மா மேல் இருப்பதால்
இத்தை வெட்டிச் சாய்க்க
அஸங்கம்-பற்றின்மை வைத்தே வெட்ட வேண்டும் -திடமான வைராக்யம் வேணும் )

ஐயர் ,-என்று
ஞாத்ருத்வ உத்கர்ஷத்தாலே வந்த கௌரவ்யதை இருந்தபடி என்கிறது

புள் ளூரும் கள்வர் –
வேத மயமான பெரிய திருவடியை நடத்துகையாலே
ப்ராமண கதி ப்ரவர்த்தகனாய்
(வேதம் நான்காய் -வேதம் தந்தவனும்
வேதத்தால் சொல்லப்படுபவனும் அவனே )
யமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22-என்கிறபடியே
கள்வர்-
முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கிற ஸர்வேஸ்வரனுடைய

தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன –
ஸ்வாதந்த்ர கடினையான பூமியிலே ஒரு காலத்திலும் நடையாடாதே
பரஸ்பர சங்கதி அற்று ப்ரயோஜன பர்யவசாயி அன்றியிலே

வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
அபி நவமான ப்ரஸ்னத்துக்கு பிரதி வசனம் பண்ணுகைக்காகவோ
ஈஸ்வரன் தனக்கு போக சக்திக்கு உறுப்பாகத் திருத்தி நோக்குகின்ற
இத் தேசத்திலே
(புனம் காத்து -நம்மைத் திருத்தி – இசைவித்து நின் கண் வேட்க்கை எழுவிக்க )
தனக்கு நிர்தேச காரிகளாய் இருக்கிற எங்களை நியமித்து வைத்தது என்று
ஞாத்ருத்வ ஆபாஸத்தாலே துர் அபிமானிகளான புருஷர்களைத் திருத்துக்கைக்காக
பார்ஸ்வத்தரான ஸூஹ்ருத்துக்கள் சொன்ன ஹித வசனத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –
அவதாரிகை
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ண விஷயத்திலே ஈடு பட்டு இருக்கிற படியைக் கண்ட பாகவதர்கள்
தடுமாறுகிற படியைச் சொல்லுகிறது
கலந்து பிரிந்த தலைமகள் தோழிமாருடனே புனம் நோக்கி இருந்த இடத்தே
கையிலே தழையைக் கொண்டு சென்று
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரிக்க அவனை நிஷேதிப்பாரைப் போலே
இடம் கொடுத்து வார்த்தை சொல்லுகிறாள் –

வியாக்யானம்
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் சுண்ணாம்பு என்பாரைப் போலே
தழையை முறித்துப் பிடித்துக் கொண்டு இவர்கள் இருந்த புனத்தே சென்று
இங்கனே ஓர் ஆனை அம்போடே போந்ததோ என்று கேட்டான்
கொம்பார் தழை கை
கையிலே தழையைக் கொண்டு சென்றான் தன் ஆற்றாமையை அறிவிக்கைக்காக –
நீர் ஒன்றை நினைத்து இருந்தீர்
அது விபரீத பலத்தைப் பலியா நின்றது
ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே உங்களைப் பிரிந்து நான் உறாவினேன் -என்கைக்காகக் கொடு நின்றான் இவன் –
அது உன் கையிலே ஸ்பர்சத்தாலே தளிரும் முறியுமாய் சத சாகமாகா நின்றது
பாவியேன் உம்முடைய ஆற்றாமை காட்டுகைக்காகக் கொடு வந்தீராகில் கொம்பிலே காட்ட மாட்டு கிறீலிரே –
பிறர் இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் உள்ளது
உம்முடைய கைப்பட்டாருக்கு வாட்டம் யுண்டோ
கொம்பாய் உம்முடைய கையிலே இருந்தோம் அல்லோம்
கொடியாய் உம்முடைய தோளில் அணைந்தோம் அல்லோம்
நாங்கள் என்ன இருப்பு இருக்கிறோம் தான் –

வேட்டை கொண்டாடு
வேட்டைக்குப் போந்தானாக வாயிற்றுச் சொல்லுகிறது
வில்லோ என்றவாறே தழையைக் காட்டா நின்றான்
கையைப் பார்த்தவாறே நாண் தோய்ந்த தழும்பும் கூட இன்றியே இரா நின்றது

சிறு நாண் எறிவிலம்
இப்போது கையிலே வில் இல்லாமையே அன்றிக்கே முன்பு விற் பிடித்த தழும்பு கூடக் கண்டிலோமீ
இவர்கள் தான் வீர பத்னிகள் யாகையாலே கையைக் கண்டபோதே அறிவார்கள் ஆயிற்று
அன்றியே
சிறு நாண் எய்யப்படுவதான வில்லை யுடையீர் அல்லீர் என்று

ஒரு கதிர் போகில் ஜகத் உப ஸம்ஹாரமாம் படி யன்றோ எங்கள் நிலை

இவ்வான் புனம்
அவனுடைய உபய விபூதியோ பாதியும் பரப்புப் போராதோ எங்கள் புனம்
எங்களுக்குக் கிட்டாருக்குத் தான் உத்தரம் சொல்லுகைக்கு அவசரம் யுண்டோ
எங்கள் கார்யமே போரும் காணும் என்கிறார்கள்

இத்தால்
ஸம்ஸார ஜன்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது
பகவத் பிரவணர் படியைக் காண்கையே இறே –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி கண்ணனுக்கு அபிமத விஷயமாய் இருக்கிற இவரில்
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த ஆபாஸ வித்வஜ் ஜனங்களைக் குறித்து
உங்கள் படி பரஸ்பர அசங்க தங்களாய் இருந்தன என்று ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
உடன் படுத்தக்
களிறு வினவ வந்து குறையுற்ற தலைவனைத் தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வியாக்யானம்
ஒரு வியாஜத்தால் அபிமத விஷயத்தைக் கிட்டுவாரைப் போலே தளிருள்ள தழையை முறித்துப் பிடித்து
இங்கு ஓர் ஆனை போந்ததோ என்று வினவிக் கொண்டு நின்றான்
அவனைப் பரிஹஸித்துக் கொண்டு சொல்லுகிறாள் –

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை கைக்குப் பரிகரமாயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே சிறு நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே ஓர் யானை வந்ததோ
என்று வினவப் பாரித்தது

ஐயர்
இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இரா நின்றது

புள்ளூரும் கள்வர் தம் பாரகத்து என்றும் ஆடாதனர்
புள்ளூர்ந்து வஞ்சித்துத் திரிகிற ஈசுவரனுடைய விபூதியில் நடையாடுமது அல்ல

தம்மில் கூடாதன
தம்மில் தான் சேர்ந்தன அல்ல

வம்பார் வினாச் சொல்லவோ
ஆரோ கேட்ட உடனே நிஷ் பிரயோஜனமாக மறு மாற்றம் சொல்லவோ

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களை இந்தப் பெரிய புனத்திலே வைத்தது
நமக்குள்ள சேஷிகள் –

————-

அவதாரிகை
இப்படி ஹித வசனம் கேட்டுத் திருந்தின ஞாதாக்கள்
ஆழ்வார் பக்கலிலே நெஞ்சம் துவக்குண்டு சொல்லுகிற பாசுரத்தை
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைமகன் குறைவற உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-

பாசுரம் -23-புனமோ புனத்து அயலே -தலைவன் குறை யுற உரைத்தல் –
கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

பதவுரை

மகளிர்–பெண்களே!
நும் காவல்–உங்கள் காவலுக்கு உரிய பொருள்
புனமோ–இந்தத் தினைப்புனமோ? (அல்லது)
புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ–இப் புனத்தினருகிலே வழிச்
செல்லுகிற பாவியேனான என்னுடைய நெஞ்சமோ?
சொல்லீர்–சொல்லுங்கள்;
புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான்–செந்தாமரை மலரின் அழகிய ஒளியை யுடைய காட்டை
ஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய
கண்ணன்–கண்ணபிரானது
வான் காடு–பரமபதத்திலே
அமரும்–வாஸம் பண்ணுகிற
தெய்வத்து இனம்–நித்யஸூரி வர்க்கத்தினர்
ஓர் அனையீர்கள் ஆய்–ஒருபுடை ஒத்தவர்களாய்
நும் இயல்புகள்–நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள்
இவையோ–அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ?

புனமோ
உங்கள் வேலிக்குள்ளே அகப்பட்டுத் திருத்துண்டு
விளைந்து கிடக்கிற புனமோ

புனத் தயலே வழி போகும்
அப்புனத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
அகப்பட்டால் தப்ப மாட்டாத பாபத்தைப் பண்ணின என்னுடைய நெஞ்சமோ

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நீளமான பிறவி அழகை யுடைய
உங்கள் காவலுக்கு விஷயம் சொல்ல வேணும்
புனம் விட்டு அகலாதவோ பாதி
என் நெஞ்சம் விட்டு அகலுகிறிலீர் என்று கருத்து

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை
சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –

(கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –73-)

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக விபூதியான நாட்டிலே நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத் தினம் ஓர் அனையீர் களாய்,
திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீராய் இருக்கை

இவையோ நும் இயல்வுகளே
பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று
தன் குறையற யுரைத்தானாயிற்று

இத்தால்
புனமோ என்று
உம்முடைய அநந்ய சாதனத்வாதி மர்யாதைக்கு உட்பட்டு போக
உன்முகமாம் படி திருத்துண்ட இவ்விபூதி ப்ரதேசமோ என்றபடி

புனத்தயலே என்று தொடங்கி
இதனுடைய பரிசர வர்த்தியான சாதன சரணியாலே நடக்கும்
எங்கள் நெஞ்சோ என்றபடி –

(மனசால் தியானித்து -உபாயாந்தரங்கள் ஆகிய வழியிலே
புனம் -சிந்தை அற்று -நெஞ்சு -சிந்தனை அன்றோ
அஜடமாய் இருந்தால் தானே கார்யகரம் ஆகும் )

இவ்விடத்தில் அருவினை -என்றது
விடமாட்டாத பாவ பந்தத்தை

மகளிர் என்று தொடங்கி
பாரதந்த்ர ஏக நிரூ பணீயமான ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடைய
உங்களுக்கு நியாம்யம் ஏது என்று அருளிச் செய்ய வேணும் என்றபடி

புண்டரீகம் இத்யாதி
ஸ்வாமித்வ
வாத்ஸல்ய
ஸூ சகமான கண் அழகை யுடையவனாய்
(செவ்வரியோடும் அந்த நீண்ட பெரியவாய கண்கள் இவற்றைக்காட்டுமே )
உத்துங்க லளிதனான கிருஷ்ணனுடைய அப்ராக்ருத பரம வ்யோம வாசிகளான
ஸாத்ய தேவர்களுடைய சங்கத்தோடே சாத்ருஸ்யம் சொல்லலாம்படி
விண்ணுளாரிலும் சீரியராய் வைத்து
மார்க்க அந்தர காமிகளையும் வர வலித்துக் கொள்ளும்படியான
வியாபார வை லக்ஷண்யம் இருந்தபடி என் என்று
திருந்தின விலக்ஷணர் பண்ணின நிந்தா ஸ்துதியை அருளிச் செய்தாராயிற்று –

(நிந்தா ஸ்துதி -நேராக ஸ்தோத்ரம் பண்ணவில்லையே –
கிளைவித் தலைமகன் ஆழ்வாரைப் புகழ்ந்த படி )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இவனை நோக்கி இவர்கள் சில வக்ர யுக்திகளைச் சொல்ல
இவன் தானும் இவர்களைச் சில வக்ர உக்திகளைச் சொன்னான்
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ்வான் புனத்தே -என்றார்கள்
அழகிது -இது சொல்ல ஒண்ணாதாகில் நீங்கள் பூனம் நோக்கி இருக்கிறி கோளோ
வழி போவார் மனம் நோக்கி இருக்கிறி கோளோ -என்கிறான் –

வியாக்யானம்
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -79-என்னக் கடவது இறே இவர்களை

இவையோ நும் இயல்வுகளே
நான் உங்களை இங்கன் அன்று நினைத்து இருந்த படி
நாநா பவநம் பெற்று அநேக சரீர பரிக்ரஹத்தைப் பண்ணி அனுபவிக்கக் கோலி வர
உள்ள நெஞ்சையும் கூடக் கைக்கொண்டு வாய் திறவாதே இருப்பதே
அழகிதாக போதயந்த பரஸ்பரம் -கீதை -10-9- பண்ண வந்தேன்

இதுக்கு ஸ்வாபதேசம்
ஆழ்வார் பகவத் அலாபத்தாலே வந்த ஆற்றாமையுடனே
நல்லார் நவில் குருகூர் நகரான் –திரு விருத்தம் -100- என்கிற படியே
ஸத்வ நிஷ்டர்கள் அடங்கலும் திரண்டு படுகாடு கிடைக்கும் படி இருக்கிற இருப்பைக் கண்ட
அவர்களுடைய சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமாகிற படியைச் சொல்கிறது –

தென் ஆனாய்
நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்
பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்
சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்
வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததுக்கு

நம்பிள்ளை ஈட்டில்
ஆப்பான் திருவழுந்தூர் அரையர்
மச்சிலே
பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க
ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க
திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
சீலாதி குணம் அளவு இல்லையே
குண வித்தர் படி

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்டியுள்ள ஹித வசனத்தைக் கேட்டுத் திருத்தப்பட்ட பரம ஏகாந்தி பண்ணும் நிந்தா ஸ்துதியைப்
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைவன் குறை யுரைத்த பாசுரத்தாலே
காட்டுகிறார் இதில்

வியாக்யானம்
புனமோ
இது உங்கள் வேலிக்குள் அகப்பட்ட புனமோ என்பது ஹர்ஷ யுக்தி இங்கு

புனத் தயலே வழி போகும்
உங்கள் புனத்திலே புகுந்தோம் அல்லோமே
புணத்துக்கு அருகே அல்லது வழி இல்லை இறே நமக்கு
புணத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
ஈஷத் அநு ரக்தரிலும் அநு ரக்திக்க்கும் படியான பாபத்தைப் பண்ணின என் மனம் தான்

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நிலமான பிறவியையுடைய
உங்கள் காவலுக்கு உட்பட்ட புனம் தானோ சொல்லுங்கோள்

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்தினுடைய அழகிய ஸ்ரீ யை யுடைத்தான வனத்தோடே ஒரு போலியே சொல்லும்படியான
கண்களை யுடைய

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக பூமியான நாட்டிலே
நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,
நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீர் களாய் இருக்கிறீகோளே

இவையோ நும் இயல்வுகளே
ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய்
ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே
உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த
ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்

புனம் -இவர்கள் இருக்கும் தேசம்
யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று –

———-

அவதாரிகை
இப்படி பாகவதர் ஈடுபடும்படியான இவருடைய வை லக்ஷண்யம்
பகவத் ப்ராவண்ய அதிசயம் ஆகையால்
அந்த ப்ராவண்ய அனுரூபமாக பிராப்தி சித்தி யாகையாலே
தமக்குப் பிறந்த ஸைதில்யத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரத்தைத்
தலைமகன் பிரிவு ஆற்றாளாய் தலைவி ஈடுபாடு கண்ட தோழி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(நாட்டைத் திருத்தவும்
நச்சுப் பொய்கை யாகாமைக்கும்
ஆர்த்தி அதிகார பூர்த்திக்காகவே ஆழ்வாரை இங்கே வைத்து இருந்தார் )

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–

பாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு -உலாவும் -பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –
கரு மாணிக்க மலை -8-9-

பதவுரை

இயல்பு ஆயின–இயற்கையானதும்
வஞ்சம்–பிறரறியாதபடியுள்ளதுமான
நோய்–காதல் நோயை
கொண்டு–உடையவையாய்
உலாவும்-(ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும்–ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்
கயல்மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய்–(முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால்–கோவர்ததன மலையினால்
இனம் நிரைகாத்த–பசுக்கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி–கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய்–தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல்–பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு–மனத்தோடும்
எம் கோல் வளைக்கு–அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல் = (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்
ஸ்வா பாவிகமாய் பிறர் அறியாத படியான காதல் நோயைக் கொண்டு
ஆர்த்தி அதிசயத்தாலே யாதாயாதம் பண்ணா நிற்பனவாய்
(யாதாயாதம் பண்ணா நிற்பனவாய் -உலாவி-கண்கள் உலவுவதாக இங்கு –
ஆழ்வார் உலவுவதாக மேலே சொல்வார் )

ஒரோ குடங்கைக் கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,
ஒரோ சிறாங்கை போலே பெருத்து நீண்ட கயலானது நிரம்பின கயத்திலே பாயுமா போலே
கண்ணீர் வெள்ளத்திலே அலமருகிற கண்களோடும்

கண்கள் தன்னோடும் என்றும் சொல்வர்

குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி
கண்டதொரு மலையாலே
பெரு மழையில் ஈடுபடாமல்
கோகுலங்களைக் காப்பானுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனான கிருஷ்ணனுடைய

கள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு
மதுஸ்யந்தியான திருத் துழாயினுடைய கொயல் வாய்ந்த மலரிலே அபி நிவிஷ்டமான நெஞ்சோடும் கூட –

என் னான்கொல் எம் கோல வளைக்கே
கையும் வளையுமான என் தலைவிக்கு ஏதாய் முடியுமோ

கோல் வளை -என்று
மழுக்கான வளை என்றபடி
(அழகிய வளை என்றும் வளைந்த வளை என்றும் )

என்னாம் கொல் என்று
கண் கலக்கமும்
நெஞ்சு அழிவுமான
அளவன்றியிலே இனி ஏதாய் முடியுமோ என்று
வளைக்கும் அஞ்சி உரைத்தாள் யாயிற்று

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் எம் கோல் வளை -என்று
அந்வயமாகவுமாம்
(உலாவும் இங்கு ஆழ்வாருக்கு )

இத்தால்
ஸ்வாபாவிக ஆகாரமாய் –
ஸ்வ ஸம் வேத்யமான பக்தி யோகத்தை யுடைத்தாய்க் கொண்டு –
ஒரு நிலை நில்லாமல் வியாபரிப்பதாய்-
சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி தர்சநீய ஸம் ஸ்தானத்தை உடைத்தாய்
ஆர்த்தி ஜெனிதமான அஸ்ரு வெள்ளத்திலே அலமருகிற பாஹ்ய கரணத்தோடும்

ஆர்த்த விஷயத்தில் யரும் தொழில் செய்து நோக்க வல்லனாய்
த்வராயை நம -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-57-என்னும்படி
அதி த்வரித காமியானவனுடைய
அதிசயித போக்யமான மாலை அழகை அனுபவிக்கையிலே
அபி நிவிஷ்டமான அந்தக் கரணத்தோடும்

ஈடுபடுகிற இவர் கையிலே
நமக்குத் தஞ்சமான
(ஆழ்வார் இடம் உள்ள பாரதந்தர்யமே நமக்குத் தஞ்சம் )
பாரதந்தர்ய லக்ஷணம் பிரியப்படுகிறதோ என்று நொந்த
ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை அருளிச் செய்தார் யாயிற்று

(சீதாபிராட்டி இளைய பெருமாள் இடம் -என்னை நான் அழித்துக் கொள்ள முடியாது
என்று பாரதந்தர்யம் காட்டி அருளினாள் அன்றோ )

இங்கும் வஞ்ச நோய் கொண்டு உலாவும் என்று ஆழ்வாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
வியாக்யானம்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு

கண்டதோர் மாலையாலே மஹா மேக வர்ஷத்திலே அகப்படுவனவான கோ ஸமூஹங்களைக் காத்தவனுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனுமானவனுடைய
மது ஸ்யந்தியான திருத்துழாயின் கொய்தல் வாய்ந்த மலர் மேல் அபி நிவிஷ்டமான மனத்தோடும்
நோய் கொண்டு உலாவும் என்று அந்வயம்

என் னான்கொல் எம் கோல வளைக்கே –
அழகிய கையும் வளையுமான
என் மக்களுக்கு ஏதாய் முடியுமோ –

—————–

இப்படி ஸூஹ்ருத்துக்களும் ஈடுபடும்படி ஈஸ்வரனுடைய போக்யதையிலே ஈடுபட்டவர்
அந்த போக்யதையினுடைய அதி ப்ரவ்ருத்தியை
அவன் உகந்த திருத்துழாயிலே ஈடுபட்ட தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

பாசுரம் -25-எம் கோல் வளை முதலா -தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –
மாயக் கூத்தா வாமனா -8-5-

பதவுரை

திறல் சேர்–வலிமை பொருந்திய
அமரர் தம்–தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய–தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்–தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன்–பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்–(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்–விரும்பித் தரித்துள்ள
துழாய்–திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ–எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்–அப்பெருமானது உபய விபூதியையும்
பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி–இங்ஙனமான பின்பு,
நானிலத்து–இவ்வுலகத்தில்
என் செய்யாது–(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
எங்கள் கையிலே
கோல் வளை படியாக

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன்
லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
பிரபலரான லோக பாலாதி தேவர்களுக்கும் நிர்வாஹகனான ப்ரஹ்மாவுக்கும்
அசாதாரண ஸ்வாமி யானவன்

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும்
நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இந்த மேன்மையாலே நம்மை அடிமை கொண்ட ஸர்வேஸ்வரன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7- என்கிறபடியே
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைத்தான திருத்துழாயானது

என் செய்யாது இனி நால் நிலத்தே –
குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் என்று நாலு வகைப்பட்ட பூமியிலே
இனி எது செய்யாது என்றதாயிற்று
(பாலை -ஐந்தாவது -மக்கள் வாழ மாட்டார்கள் அன்றோ )

எம் கோல் வளை -என்று
தலைமகளைச் சொல்லிற்று ஆயிற்று

தலைமகள் ஈடுபாட்டுக்கு
தோழி ஆற்றாது உரைத்தலாகவுமாம்

இத்தால்
எம் கோல் வளை இத்யாதி
நம் கையிலே மினுங்கித் தோற்றுகிற பாரதந்தர்ய லக்ஷணம் அடியாக
உபய விபூதியையும் நிர்வஹிக்கிற
பகவத் சங்கல்பத்தை அநு விதானம் பண்ணி
ஆறி இருக்க ஒட்டாதபடி த்வரையை விளைக்கையாலே
பகவத் ஆஜ்ஜா பங்கத்தைப் பண்ணுவதாய் இரா நின்றது

நிர்வாஹ்யமான விபூதி த்வயத்துக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
அகில ஜகத் ஸ்வாமியாய்
அஸ்மத் ஸ்வாமி யானவனுக்கும் அபிமதம் ஆகையிலே
அதிசயித வை லக்ஷண்யத்தை யுடைத்தான போக்யதையினுடைய
அதி பிரவிருத்தி யானது
இரண்டு விபூதியையும் விளாக்குலை கொள்ளுகையாலே
பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான ஜகத்தில்
இனி ஏது செய்யாது என்று தம்முடைய ஸைதில்யத்தை அருளிச் செய்தாராயிற்று

(பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான-
ஸூஷ்ம ரூப ப்ரக்ருதி -புருஷ -ஸ்தூல ரூப -காலம் -இப்படி நான்கும் –
அந்திம ஷட்கம் ஸங்க்ரஹ ஸ்லோகம்-இப்பத பிரயோகங்கள் உண்டே
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.)

அன்றியே
எம் கோல் வளை -என்று
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஆழ்வாருடைய ஸ்வரூபத்தை உத்தேசித்து பார்ஸ்வத்சரான
ஸூஹ்ருத்துக்கள் சொன்ன வார்த்தை யாகவுமாம்

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ஸர்வேஸ்வரன் அபலையானவள் நிமித்தமாகத் தன்னுடைய ஆஜ்ஜையை நெகிழப் பண்ணா நின்றான்
அவன் நினைவு அறிந்து கார்யம் செய்யும் திருத்துழாய் எத்தைச் செய்யாது என்னுதல்
அன்றிக்கே
உபக்ரமத்தில் அவனுடைய ஆஜ்ஜையையும் கூட அழிக்கிற இது
இனி எல்லாம் செய்தது அன்றோ என்று
இத் திரு துழாய் தன்னையே சொல்லிற்றாதால்
திருத் தாயார் வார்த்தை யாகவுமாம்

வியாக்யானம்
எங்கோல் வளை முதலா
எனக்கு எல்லா வழியாலும் உஜ்ஜீவன ஹேதுவான இவள் நிமித்தமாக
பகவத் ஸ்பர்சம்
க்லேசமாகப் புக்கது
இவளைத் தொடங்கிக் கிடீர்

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-மூன்றாம் திரு அந்தாதி -27-என்னக் கடவது இறே

அவஸ்யம் அநு போக்த்வயம் -என்கிறபடியே
அனுபவ விநாஸ்யமான பாபத்தைப் பண்ணின
பகவத் ப்ரத்யாஸன்னரில் அப் பாப பலம் அனுபவித்தார் யார்

அவன் தானும்
ந மே பக்த ப்ரணஸ்யதி-ஸ்ரீ கீதை -9-31-என்றான் இறே

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

க்ஷிப்ரம் = வெகு விரைவில்
ப⁴வதி = அடைகிறார்கள்
த⁴ர்மாத்மா = தர்மத்தின் வழியில்
ஸ²ஸ்²வச்சா²ந்திம் = நிரந்தர அமைதி
நிக³ச்ச²தி = அடைகிறார்கள்
கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரதி ஜாநீஹி = நான் உறுதி அளிக்கிறேன்
ந = இல்லை
மே = என்னை
ப⁴க்த: = பக்தன்
ப்ரணஸ்²யதி = அழிவது

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –
இப்படிப் பட்ட அநந்ய பக்தனுக்கு ரஜஸ் தமஸூக்கள் வாசனை ருசி உடன் கழன்று போகும் –
என்னையே நினைந்து பிரதி பந்தகங்கள் போக்கப் பெற்று என்னை அடைகிறான் –
ரஜஸ் தமஸ் ஒழித்து துராசாரம் போகும் -என்னை பற்றி நினைத்தவனுக்கு -கிரமத்தால் பக்தன் ஆவான்
இதை நீயே ப்ரதிஞ்ஜை பண்ணப் போகிறாய் –
நான் ஏலா பொய்கள் உரைப்பான் என்பர் -நீ சொன்னால் நம்புவார்கள் -ஷத்ரியன் ராஜா அன்றோ –
அஷ்ட வித பக்தி -எனக்கு சமமாக நினைக்கத் தக்கவன் –
மிலேச்சனாக இருந்தாலும் -கருட புராணம்- நின்னொடு ஓக்க -திருமாலை
மத் பக்த ஜன வாத்சல்யம் -பூஜா ஆமோதித்து ஆனந்தம் ஸ்வயம் பூஜா பண்ணி
மத் கதா ஸ்ரவணா ப்ரீதி -கொள்மின் கொடுமின் ஞானம் கொடுத்து பெறலாம் –

ந வாஸூ தேவ பக்தா நாம சுபம் வித்யதே க்வசித் -ஸ்ரீ ஸஹஸ்ரநாம அத்யாயம்
ஸர்வேஸ்வரன் பக்கலிலே ப்ரேமத்தைப் பண்ணி இருக்கையும்
பொல்லாங்குகள் உண்டாகுகையும்
அக்னி நாஸிஞ்சேத் -போலே கூடாதது ஓன்று இறே

இவன்
தான் போக்கிக் கொள்ளப் பார்த்தல்
அவனுக்கு அசத்தி உண்டாதல் செய்யில் இறே
இது உண்டாவது

ந வாஸூ தேவம் ப்ரணிபத்ய ஸீததி –என்றும்
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந-என்றும் -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-இத்யாதியாலே கண்டோம்

சர்வ பிரகாரங்களாலும் தோஷமே யாகிலும் ஞானத்துக்கு மேல் அவ்வருக்கு நன்மை இல்லையாகிலும்
பக்தி நெருப்பு இவன் இடம் இல்லை யாகிலும்
இனி இவனை நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ண வேண்டுகிறது என்ன ஹேது கொண்டு என் என்னில்
ப்ரபாவாத் பரமாத்மந -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-
இத் தோஷங்களோடே பகவத் விஷயத்திலேயும் கை வைக்கும்
பின்னை இத்தையே-தோஷத்தையே- பார்த்து இருக்கும் அத்தனை போக்கி இவனைக் குறைய நினைத்ததாகில்
பகவத் ப்ரபாவத்தைக் குறைய நினைத்தானாம் இத்தனை –
எலி எலும்பனான இவனைப் பார்த்து குறைய நினைக்கிறது
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்து இவனை நிர்தோஷனாகப் பிரதிபத்தி பண்ணுகிறது –
புரா -பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு இறே தோஷம் இருப்பது

பின்பு அவன் பக்கலில் நெஞ்சு வைக்கவும் பொல்லாங்கு உண்டாகையும் கூடாது
அவன் தானும் ஷிப்ரம் பவதி என்றான் இறே
பண்டு உய்யக் கொண்டார் பக்கலிலே -இவர் நாதமுனி சிஷ்யர் அல்லர்
சாதனாந்தர நிஷ்டர் வேறே உய்யக் கொண்டார் ராமானுஜர் காலம் அவரும் இல்லை
நான்காம் வர்ணம் பாகவத பிரபாவம் அறிந்தவர்
இவர் இடம் உசாவி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாசர் இருவரும் சங்கை
அவரைக் கண்டு தான் இருந்த இடத்தை அவருக்கு கொடுத்து கடக்க நிற்க

தாசரும் தனது தன்மை அறிந்தவர்
எல்லாரும் தாசர் என்று அறிந்து இருப்பார்க்களே என்ன

என்னால் உம்மை அறியப்போமோ
பகவான் நிர்ஹேதுகமாக கிருபையால் படைத்து -ஜகத்காரணம் இவனே என்று அறிந்தவன்
தேவர்கள் கூட அந்த பாகவதர் பெருமையை அறியவே மாட்டார்கள் பாரதம்
பிரானே உம்முடைய பெருமை தெரியாது என்று சொல்ல தேவர்கள் வேணும் -நான் யார் சொல்ல

என் கோல் வளை
எனது ஜீவனம் அழித்தோ தனது ஸ்வாதந்த்ரம் நடத்தப் பார்ப்பது
இளைத்து கை வளை இழந்த ஆழ்வார் அழகு -மிக்கு இருக்குமே
ஆகிலும் இக் குறையும் வராதே இவர் இருக்க வேண்டும்
அம்ருத சாகரத்தில் ஆழ்ந்து அங்கு -சம்சாரம் அப்படி இல்லையே

உண்ணும் சோறு –கண்கள் நீர் மல்கி இருப்பவரையே நமக்குப் பிடிக்கும் -இப்படி இருந்தாலும்
அவனை அன்றி வேறே ஒன்றை நினையாத -ஏங்குதலே அழகு
கண் எச்சில் படாமைக்கு இவை வேண்டாம் -த்ருஷ்ட்டி தோஷம் வரக் கூடாது
தாயார் ஆகையால் இப்படித்தானே நினைப்பாள்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு பார்ப்பது அழகு தான் இருந்தாலும்

தன்னை அழிய மாறி ஆஸ்ரித வத்ஸலனான கண்ணன் கூட இப்படி பண்ணுவானோ
தனது ஆணையை அழித்து
அகர்மவஸ்யனாய்
தேவகி வயிற்றில் பிறந்து வந்து சொல்கிறான்
ஜாதோசி தேவ தேவ
ஜாதோஹம் -அவன் சொன்னதைத் திரும்பி ரிஷிகள்

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
ஈரக்கையால் தடவி ரக்ஷிக்கும் செங்கோல்
அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற திருவரங்கச் செல்வனார்
ஆணை -அதுக்கு வளைவு -உண்டாக்கலாமோ
திருத் துழாய் ஆணையை வளைத்து விடடாதே
ரஷ்ய வர்க்கத்தில் ஒருத்தி விட்டாலும் ஸர்வ ரக்ஷகத்வம் கொத்தை ஆகுமே –
அதுதானே ராம ராஜ்ஜியம்

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இவரை இழந்தால் -இனிக் கிடையாது என்னில்
உபய விபூதியும் இழந்தது ஆகுமே அவனுக்கு

பக்தி பிரியர் என்பார் ஒருவர்
இவர் விரகம் அனுசந்தித்து
ஆழ்வீர் என் பட்டீர் என்று திரிவாராம்
வியாசர் -சம்சார வாசனை கனத்து புத்ர வியோகத்தில் மலையில் இருந்து விழுந்து சாயா சுகரை வைத்து தரித்தார்
பகவத் விஷயத்தில் இழிவாருக்கு-இவர் திருவாய் மொழி கொண்டே
கதிர் பொருக்கி தர்ம வீர்ய ஞானம் பெற்றவர்கள் போல் இல்லாமல்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
அத்தால் கூட தானே செங்கோல் -கூட வளைவிப்பானோ

திறல் சேர் அமரர்
சம்சாரிகள் ஸூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டார்கள்
நித்ய ஸூரிகள் அவனை அனுபவித்து -மேலும் அனுபவிக்க நிரந்தரமாக திறமை கொண்டவர்கள்
சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்க போக்த்ருத்வ சக்தி உடையவர்கள்
விஷ்வக்சேனருக்கும் கோன்
தேவர்கள் கோன் ப்ரஹ்மாதிகளுக்கும் கோன்
உகக்கும் துழாய்
ராஜ குலா மஹாத்ம்யம்

இவன் தான் செங்கோல் வளைத்தாவது ஆழ்வாரை துன்பம் கொடுக்க சங்கல்பிக்க
திருத்துழாயும் சஹகரித்து
ஒரு பிரபு ஆயிரம் காசு கொண்டு வரச் சொல்ல இவன் மூன்று மடங்கு பண்ணி அவன் ப்ரீதிக்கு விஷயம் ஆக்குமே
அழியாத விபூதியையும் அளிக்கப் பார்க்கும் இது லீலா விபூதியை அளிக்க சொல்ல வேணுமோ

சீதா பிராட்டி துக்கம் கண்டு-தெப்பம் முழுகினால் போல் துன்பம்
புருஷகாரம் செய்து நம்மை சேர்ப்பிக்க இவளும் துக்கம் பட்டால்
காலத்தின் கொடுமை என்ன சொல்வது திருவடி வார்த்தை சுந்தர காண்டம்
காலம் என்பது -கால சக்கரத்தாய் -அழிக்கிற வஸ்துவில் நான் காலம் என்றானே கீதாச்சார்யன்
அகால தேசத்திலும் துன்பம் கொடுக்கும் காலம் அவன் தானே
நீர்மைக்கு அவ்வருக்காய் இருப்பார் இப்பாட்டு படா நின்றால் என் செய்யாது

இவளோ முடியா நின்றாள்
இனி யாரை அழிக்க என்று வத்யம் தேடித் திரியும்
திருத்துழாய் போக்யத்தை குமர் இருந்து போம் அத்தனை
காய்ந்து சருகாய் போக வேண்டுமே
ஹேய மான தேசத்தில் என்ன செய்யாது

இத்தால் சொல்லிற்று
நான்கு நிலமும் -வாசி இல்லாமல் ஏக ரூபமாய் துன்பம்
நெடியானே என்று கிடைக்கும் நெஞ்சமே
காணக் கருதும் கண்ணும்
பாஹ்ய அந்தக்கரணம் அனைத்தும் ஈடுபட்டதுக்கு பிரமாணம்

ஆற்றாமை கைவிஞ்சி இருப்பு கண்ட பாகவதர்கள்
இவர் ஸம்ஸாரிகளுடைய அன்ன பானாதிகளால் தரிக்குமவர் அல்லராய் இரா நின்றார்
தம்முடைய உத்தேச்யம் கைப் புக்கு இருக்கிறது இல்லை
இனி இவ் விருப்பு அவருக்கு எவ்வளவாகக் கடவதோ
இவர் ஜீவிப்பாரோ ஜீவியாரோ என்று சம்ஸயம் பண்ண வேண்டும்படியான தசை
விளைந்த படியைச் சொல்லிற்று கீழ்

இதில் இவர் ஜீவிக்க மாட்டார் -சம்ஸயம் இல்லை
ஈஸ்வரன் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக்கட்டுவதாகக் கோரி இருந்தான்
இனி அவன் சங்கல்பமும் அழிந்ததாகாதே என்று நிர்ணயிக்க வேண்டும்படியான
தசை பிறந்த படியைச் சொல்கிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி எனக்கு அதி போக்யமும்
எங்கோன் உகக்குமதுமான இத்திருத்துழாய்
ஸர்வ ரக்ஷகனும் ஸர்வாதிகாரி நிர்வாஹகனுமானவனதான
பெண்ணீர்மை ஈடழிக்க வல்ல திவ்ய ஆஜ்ஜையினுடைய ஸர்வ தேசா க்ரமணத்தை விஜ் ரும்பியா நின்றதே
இனி இந்நான்னிலத்து இது எத்தைச் செய்யாதது என்று
அதின் கொடுமைகளிலும்
போக்யதையிலும் தலைமகள் ஈடுபடுகிறாள்

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
என்னுடைய கையில் வளை முதல் கொண்டு

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனுடைய லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
ஆஜ்ஜையினுடைய தேச சதுஷ்டய வ்யாபனத்தை சத சாகமாக விளைவியா நின்றதே

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
சமர்த்தகளான லோக பாலாதி தேவர்களுக்கு நிர்வாஹகானான ப்ரஹ்மாவுக்கும் அசாதாரண ஸ்வாமி யான

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூ ரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும் நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இம்மாலை போலே எங்களை அடிமை கொண்டவன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7-என்னும்படி
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைய திருத்துழாயானது

என் செய்யாது இனி
என்னை எந்தப்பாடு படுத்தாது –
உபய விபூதியும் படாத படிகளை எல்லாம் படுத்தாதோ

நால் நிலத்தே –
பாலை மருதம் நெய்தல் குறிஞ்சி என்றுள்ள நாலு வகையான நிலத்திலுள்ள
தன்னை ஆசைப்பட்டாரையும் கழல் வளை ஆக்காமல் விடுமோ –
அவளவள் தோழிமார்களையும் தாய்மார்களையும் அங்கனே புலம்பப் பண்ணாமல் விடுமோ
என்று தலைமகள் அவசன்னை யாகிறாள் –

————–

அவதாரிகை
இப்படி ஈடுபட்ட இவரைக் கண்ட அபிமதரான பாகவதர்
இவர் ஸம்ஸார மார்க்கத்தைக் கழித்த பிரகாரத்தையும்
அர்ச்சாவதாரத்தின் அதிசயித போக்யதையையும் இவருக்குப் பிரகாசிப்பித்து
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை உணர்ந்து
உடன் போன தலைமகன்
நடந்து இளைத்த தலைவியைக் குறித்து
இடம் தலைப்பெய்தமை சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்
திரு வெக்கா -பெருமாள் கோயில் )

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-

பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் -நகர் காட்டல் –
மாலை நண்ணி -9-10-

பதவுரை

நால்நிலம்–(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு–(தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அறமென்று–ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட–அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன்–வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ்–உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை–பாலை நிலத்தை
கடந்த-தாண்டி வந்த
பொன்னே–பொன் போன்றவளே!.
விண்ணோர்–மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும்–(நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படி
இங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா–கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது–அடுத்துள்ளது.
அம் பூ தேன்–அழகிய பூவையும் தேனையுமுடைய
இள–இளமை மாறாத
சோலை–சோலையானது
அப்பாலது–அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது–(எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.

வியாக்யானம்
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
முல்லை முதலான நாலு நிலத்தையும் தன் கிரண முகத்தாலே க்ரஸித்து
சார அம்சமான நீர்ப்பசை அற ஆராய்ந்து புஜித்துக் கோதான அம்சம் இது என்று அறிந்து

வேனிலம் செல்வன்
கோடைக்காலத்தில் ப்ரபவ ஐஸ்வர்யத்தை யுடைய ஆதித்யன்

சுவைத் துமிழ் பாலை
பசை யறுதி கண்ட வழற்றியாலே உமிழ்ந்த பாலை நிலத்தை

கடந்த பொன்னே
நெருப்பிலே நடப்பாரைப் போலே
இந்நிலத்திலே நடக்கச் செய்தே ஓட வைத்த பொன்னே போலே
ஒளி விடுகிறவனே

கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்
இப்படிக் கால் பொருந்தாது இருக்கை அன்றிக்கே
பரம வ்யோம வாசிகளும் இங்கே வந்து
கால் பொருந்தி அனுபவிக்கும் படியான

கண்ணன் வெக்காவுதம்
ஆஸ்ரித ஸுலப்யத்தாலே
சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான
கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது
அடுத்து அணித்தாயிற்று

பூம்தேன் அலம் சோலை அப்பாலது
அழகிய பூவையும் தேனையும் யுடைத்தாய் நித்ய வஸந்தமாய் இளகித் தோற்றுகிற
சோலை அவ்விடத்தது –

எப் பாலைக்கும் சேமத்ததே —
இது நமக்கு எல்லா அவஸ்தை களுக்கும் ஷேம கரமாய் இருப்பதோர் இடம்

இத்தால்
நானிலம் என்று தொடங்கி
சேதனருடைய ஸ்வரூப ரூப குண விபவங்கள் ஆகிற நாலு வகைப்பட்ட போக ஸ்தலத்தையும்
தன் ஸங்கல்ப முகத்தாலே அந்தர் பவிப்பித்து சார அம்சத்தை மிகவும் புஜித்து
நிஸ் சாரமான அம்சம் இது என்று திரு உள்ளம் பற்றி

கர்ம தாரதம்ய அனுரூப பல பிரதானத்தால் உண்டான ஸ்வா தந்தர்யத்தாலே
பிரதாபோஷ் மளனான ஸ்ரீ யபதியானவன்

(செல்வன் ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி செல்வ நாரணன்
கிரணம் -சங்கல்பம்
ஆத்மாவின் ஸ்வரூபம் சேஷத்வம்
ரூபம் வணக்கம்
குணம் -அடியேன்
வைபவம் -கைங்கர்யம்
சார அம்சம் புஜித்து )

பகவத் ஞானப் ப்ரஸங்கம் இல்லாப் பசை அறுதி கண்டு
அஹங்காராதி ரூபமான அழல் விஞ்சி இருக்கையாலே
ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19- என்று கை விட்ட
ஸம்ஸார ஸ்தலத்தைக் கடந்து

அத்யுஜ்வலமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுடையரான உமக்கு
நித்ய ஸூரிகள் பொருந்தி வர்த்திக்கும் படி
நிரதிசய ஸுலப்ய விஸிஷ்டனான
ஸர்வேஸ்வரனுடைய அர்ச்சாவதார ஸ்தலம்
அதூர வர்த்தியாய்
அதிசயித போக்ய போக உபகரணாதி ஸம்ருத்தமாய் இரா நின்றது

இது வன்றோ நமக்கு உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற
ஷேம கரமான புகலிடம் என்கிற
அபிமத பாகவத வசனத்தை வெளியிட்டு அருளினார் யாயிற்று –

————-

அவதாரிகை
இப்படி தமக்குப் பிறந்த ஆஸ்வாசத்தாலே முன்பு பாதகமான லௌகிக பதார்த்தங்களும்
அனுகூலித்த படியை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கையாலே
முன்பு நலிந்து போந்த வாடை தணிந்த படியை நாயகி உட் கொண்டு
உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-

பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –
தலைவி மாலை பெற்று மகிழ்தல் –
எல்லியும் காலையும்–8-6-

பதவுரை

செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்
வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நி ஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மை மொழியின் படியே,
அ வாடை–அந்தக்காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய
குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோ வந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.

வியாக்யானம்

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ரக்ஷகமானது

செருவாரும் நட்பாகுவர் என்று
அப்போது பாதகராவாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம் பெற
தஞ்சமாக விஸ்வசிக்கலாம் படி

வையம் சொல்லும் ,மெய்யே
நாடு மெய்யாகச் சொல்லா நிற்கும்

எங்கனே என்னில்
பண்டு எல்லாம் மறை கூய்
முன்பு எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
ஜாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –
அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று
தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன்
இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

இத்தால்
சேமம் என்று தொடங்கி
நிருபாதிக சேஷியான ஈசுவரனுடைய கிருபையே ரக்ஷகமானால்
தத் விபூதி பூதரும் அனுகூலிப்பார்கள் என்று ஷேம உத்தரமாம் படி லோகம் ஸத்யம் சொல்லா நிற்கும்
எங்கே கண்டோம் என்னில்

முன்பு ஸ்மா ரகமாய்க் கொண்டு காலம் தோறும் தாப ஹேது வானது
ஸர்வ ஸூலபனான சர்வேஸ்வரனுடைய விஷயீ காரம் யுண்டான அளவிலே
அந்தப் பதார்த்தம் தானே அனுகூலித்து ஆஸ்வாஸகரமாயிற்று என்று
அபரோஷித்து அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பகவத் அலாபத்தாலும் சம்சாரத்தில் யுண்டான தாபத் த்ரயத்திலுமாக இவர் நொந்து இருக்கச் செய்தே
நெடுநாள் பாதகமாய்ப் போந்த வாடையானது இப்போது ஒரு ஸம்ஸ்லேஷ விசேஷத்தாலே
வந்து அனுகூலமான படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

ஸ்ரீ கீதை -8-12- உண்டானவாறே பூர்வ அனுபவ ஸ்ம்ருதி இன்றிக்கே ஒழிவது –
அங்கன் அன்றிக்கே
ஸம்ஸாரத்திலே இருந்து ஞான லாபம் பிறந்தது இரண்டு ஆகாரமும் தோற்றும் இறே
இது போக்யமாய்த்தோ இல்லையாகில் ஆகையாலே ஞானம் பிறந்தது இல்லையாம்
இது பிரதிகூலமாய்த் தோற்றிற்று இல்லையே யாகில் அப்ராப்தியே யாம் –
இரண்டுக்கும் நடுவில் அவஸ்தை இறே இது –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
அபிமத அன்வயத்தால் ஆஸ்வஸ்தையான தலைவி முன் பிரதிகூலித்தது எல்லாம்
இப்போது அனுகூலமாயிற்று என்று தலைவனோடு சொல்லுமதாய் அருளிச் செய்கிறார்
முக்தனுக்கு இந்தப் ப்ரக்ருதியும் அனுகூலமேயாம் என்பதை ஸூசபிக்கைக்காக –

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ஸூக கரமானது –

செருவாரும் நட்பாகுவர் என்று
முன்பு பாதிப்பாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம்பெற
பழகினும்

வையம் சொல்லும் ,மெய்யே
லௌகிகமான பழம் சொல்லும் மெய்யே
எங்கனே என்னில்

பண்டு எல்லாம் மறை கூய்
முற் காலம் எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
யாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து
அவ்வாடையே இப்போதாக வந்ததாய்

தண் என்றதே
ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

—————-

அவதாரிகை
இப்படி பாவநா ஸித்தமான
பகவத் அங்கீ காரமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே ஆர்த்திக்கு உறுப்பாகையாலே

பாதக ஸந்நிதியில் ஈடுபட்டு
ரக்ஷக அபேக்ஷை பிறந்து ப்ரலாப வசனத்தை
வாடையாலே நோவு பட்டு நாயகனான எம்பெருமானை நோக்கி
நாயகி தன்னில் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள்வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-

பாசுரம் -28-தண் அம் துழாய் வளை கொள்வது –
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குலும் பகலும் -7-2-

பதவுரை

வள்வாய் அலகால்–கூர்மையான வாயின் நுனியினால்
புள்–பறவைகள்
நந்து உழாமே– (தன்னிடத்துள்ள) சங்கைக் கோர்த்தாதபடி-ஹிம்ஸியாதபடி
பொரு–அலை மோதுகிற
வளை கொள்வது–(எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம்–(உன் பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம்–வளையை இழக்கிறோம்; (இப்படி யிருக்க)
ஓர் வாடை–(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே–இடையே பிரவேசித்து
நீர்–காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா–ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும்–(எமது) மாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக் கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய்–(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.
எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ-முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?

வியாக்யானம்

தண் அம் துழாய் வளை கொள்வது
அத்தலையில் ஆஸக்தியால் உண்டான ராஜ குலத்தாலே
குளிர்த்தியும்
அழகும் யுடைத்தான
திருத் துழாய் வளைவைக் கொள்ளப் பிராப்தம் –

நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
இதில் ஒரு துவக்கற்று
பீஷாஸ் மாத் வாத பவதே -தைத்ரியம்
உமக்கு அஞ்சி நாட்டிலே திரிகிற ஒரு வாடையானது
நிறத்தைத் தடவி எடுப்பதாக உலாவா நின்றது

வள்வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த வாய் அலகாலே வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைத் தகராத படி பொருகிற நீரை யுடைத்தான
கோயிலுக்கு நிர்வாஹகன் ஆனவனே

அருளாய்
நீ அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நஞ்சம் தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டும் செய்தன யுளவோ என்று
இரங்கி உரைத்தார் யாயிற்று

இத்தால்
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
சீதள ஸ்வ பாவராய்
தர்ச நீயரான
பகவத் ப்ரத்யா ஸன்னர் எங்கள் கையில் மினுக்கும் கொள்ளவுமாம்
தங்கள் இழக்கவுமாம்
ஆசன்னன் அன்றியே ஆஜ்ஜா அநு வர்த்தகம் பண்ணித் திரிகிற
லௌகிக பதார்த்தம் ரூப விபர்யாஸ கரமாகா நிற்கும்

வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
கர்ம முகத்தாலே வஞ்சகையான ப்ரக்ருதியானது
ஸூப்ர ஸ்வ பாவனான ஆத்மாவை நோவுபடுத்தாமல்
(உன்) உள் -நீர்மையாலே நோக்குமவனே
என்கையை ஸூ சிப்பிக்கிறது

அருளாய்-என்று
ஏவம் வித ஸ்வ பாவமான தேசத்திலே வர்த்திக்கிற
நீ இரங்கக் காண்கிறிலோம் –

எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
ஆர்த்தியாலே நெஞ்சு தடுமாறுகிற அவஸ்தையிலும்
இரங்காது இருந்த விஷயங்கள்
முற் காலத்திலும் யுளவோ
இல்லை என்றபடி

ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்
திரௌபதி
ஸ்ரீ கஜேந்திரன்
தொடக்கமானர் அளவிலே கண்டிலோமே
இது எனக்கே கூறு பட்டது அத்தனை இறே என்று வெறுக்கிறார்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
மானஸ அனுபவ மாத்ரத்திலே வந்த களிப்பு இறே கீழ் –
அந்வயத்தில் போன்றது இறே வ்யதிரேகத்தில் இழவாவது
தண்ணம் துழாய்த் தாமம் புனைய -என்று அந்வயத்திலே போக்யமானது
இப்போது வியதிரேகத்திலே பாதகம் ஆக்கிரப்படியைச் சொல்கிறது –
லாபத்தில் தன்னுடைய ப்ராப்யதை எவ்வளவு யுண்டு அவ்வளவு பாதகத்வம் யுண்டு இறே
அலாபத்தில் ஸம்ஸாரிகளுக்கு பாஹ்ய விஷயத்தில் பேறு இழவுகள் இரண்டும் ஒத்து இருக்கையாலே
அவை பெறவும் இழக்கவுமாய் இருக்கும்
அவ்வளவு அல்ல இறே இது
ஸ்வா பாவிகமான ஸ்வ பாவமும் சங்குசிதமாய்
ஆத்ம ஸ்வரூபமும் திரோஹிதமாய் இருக்கிற இருப்பு இவருக்கு இழவாகச் சொல்லுகிறது
ஸம்ஸார தசையிலும் அநு வார்த்தைக்கும் இறே அயோக்யதை
ஆக
ஞான லாபத்தைப் பேறு என்கிறது
ப்ராப்தியை இழவு என்கிறது –

வியாக்யானம்
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்
இதுக்கும் இவருக்கு இங்கனே இருபத்தொரு சம்பந்தம் உண்டு
ஸம்ஸாரிகளுக்குப் பேறு இழவு புறம்பாய்

இதுவான பின்பு
பரம சேதனனுமாய்
ரக்ஷகனுமாய்
அண்ணியனுமாய்
இருக்கிற உனக்கு என் செய்ய வேணும்
ஏதத் விரதம் மம -யுத்த -18-33-என்று
இருக்குமது இல்லை இறே நீருக்கு

திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
முதன்மைக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கும் இடமோ
இவ்விடம் இவ்வருகு வர நின்ற அம்சத்துக்கு பிரயோஜனம் அருளுகை அன்றோ
எங்களுக்கு எங்கள் அநு பாவ்யங்கள் அனுபவிக்க வேணுமாகில் நீ உன் அருளுக்கு விஷயம் தேடி எங்கு ஏறப் போவாய்
மயர்வற மதிநலம் அருளின பின்பு
தொழுது எழு -திருவாய் -1-1-1-என்னும்படி
த்வரை விளைவதுக்கும் ஒரு கால் அருள வேண்டிற்று இறே
அப்படியேயோ
அருளாலே இறே இவ்வாடை தான் பிரதிகூலமாயிற்று —

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
இப்படி பாவநா ஸித்த பகவல் லாபமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே
ஆர்த்திக்கு உறுப்பாய்
அரங்கா அருளாய் -முன்போல் இன்னம் பாதிப்பது உண்டோ -என்று கூப்பிடுகிறார் –
இப்பாசுரத்தில்

வியாக்யானம்
தண் அம் துழாய் வளை கொள்வது
அத் தலையில் நலிகையாலே உன் அழகிய குளிர்ந்த திருத்துழாய் தாரானது
என் வளையைக் கொள்வது பிராப்தம்
நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
உன் பீத்யா ஸஞ்சரிக்கும் காற்றானது நிறத்தைத் தடாவிடக் கொண்டு
எடுப்பதாகா உலவா நின்றது –

வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த சஞ்சூ புடத்தை யுள்ள வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைக் குத்தாத படி திரையால் பொருகிற நீரை யுடைத்தான
ஸ்தலத்துக்கு நிர்வாஹகனானவனே

அருளாய்
அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நெஞ்சு தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டு செய்தன இன்னம் உளவே –

————

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தன்னுடைய ஆர்த்தியை கடக முகத்தாலே அறிவிக்க என்று நினைத்து
தான் அபேக்ஷித்த (உபேக்ஷித்த) இடத்திலும் கடகராய் இருப்பார் ஒருவரைப் பெறாமையாலே
ஸ்வ கார்ய பரராய் ப்ரவர்த்திக்கச் செய்தேயும்
நம் கார்யம் செய்யலாகாது இருக்கிற படியோ என்று சங்கித்து
வெறுக்கிற பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே தூதாக அபேக்ஷிக்கச் செய்தேயும்
அது செய்யாதன சில அன்னங்களைக் குறித்து வெறுத்துச் சொல்லுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-

பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு –
தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-

பதவுரை

குடிசீர்மை இல்–உயர் குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வன்னப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய் வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்த கதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன–மின்னல்போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?

வியாக்யானம்
இன்னன்ன தூது
இப்படிப்பட்ட தூது
நம்மைப் போக விடுகிறது ஸர்வ உத்க்ருஷ்டமான
பகவத் விஷயத்துக்குத் தூதாக வன்றோ

எம்மை
கார்ய உபயுக்தமான கரண பாடவத்தை யுடைய
நம்மை அன்றோ
(வீசும் சிறகால் பரப்பீர் )

ஆள் அற்ற பட்டு
வேறு தனக்கு ஆள் இல்லாமை யன்றோ
அபேக்ஷிக்கிறது

இரந்தாள்
அமோகமான அப்யர்த்தனத்தை அன்றோ பண்ணிற்று

இவள்
தன் வை லஷண்யம் எல்லாம் கிடக்க அன்றோ
அபேக்ஷித்தது

என்று
1-விஷயம் உத்க்ருஷ்டம் ஆகையாலும்
2-நமக்கு யோக்யதை யுண்டாகையாலும்
3-தன் ஆள் அறுதியாலும்
4-தன் பெண்மை பாராதே
நம்மை இரந்தாள் என்று நினைத்து

அன்னன்ன சொல்லாப்
அப்படிப்பட்ட கார்யத்தைப் பற்ற ஒரு வார்த்தை சொல்லாது

பெடையொடும் போய் வரும்
ஸ்வ அபிமத விஷயத்தோடே கூட கத்யாகதி பண்ணித் திரியா நின்ற

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில்
நீல தோயதத்தை விழுங்கின வித்யுத்லேகை போலே
ஸ்யா மளத்வ
ஹிரண்மயத்வங்கள்
கலசின வடிவை யுடைய ஸர்வேஸ்வரனுடைய லோகத்தில்

பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ?
பெண் பிறந்தாருக்குத் தூது செல்லக் கடவோம் அல்லோம் என்கிற
ஸ்வ பாவத்தை யுடையனவாய் இருக்கின்றனவோ
முன்பு பெண் தூது போனார் இல்லை இறே என்று
ராகவ பாண்டவ தூத வ்ருத்தாந்தத்தைத் தனக்கு ஸ்வ பாவமாக நினைத்து இருக்கின்றனவோ

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிப் பிறப்பால் வந்த சீர்மை

அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி
குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி

இத்தால்
இன்னன்ன தூது -என்று தொடங்கி
1-ப்ராப்ய விஷயம் நிரதிசய உத்க்ருஷ்டமாகையாலும்
2-தனக்கு ஞான பிரேமாதிகள் ஆகிற கடகத்வ உத்பத்தி உண்டு என்று இருக்கையாலும்
3-தன்னுடைய அநந்ய கதித்வத்தாலும் இறே
4-தத் ஏக ரஷ்யத்வ பாரதந்தர்யத்தையும் பாராதே
நம் பக்கலிலேயும் பிரார்த்தனா ரூபமான ப்ரவ்ருத்தியைப் பண்ணிற்று என்று
தங்கள் அபிசந்தி தோன்ற ஒரு வார்த்தை சொல்லாதே

ஸ்வ அநு வர்த்திகளான அபிமத விஷயத்தோடே அனுபவ பரராய்க் கொண்டு
யாதாயாதம் பண்ணா நின்றார்கள்

உபாஸ்யத்வ
போக்யத்வ
ப்ரகாஸகத்வமாம் படி
வேதாந்த வேத்யமான பர விக்ரஹத்தை யுடைய ஸர்வேஸ்வர விபூதியில்
பரதந்த்ரராய் இருப்பாரைச் சேர விடலாகாது என்கிற இது ஸ்வ பாவமாய் இருக்கிறதோ –
இவர்கள் ஆபி ஜாத் யத்தால் வந்த சீர்மையும் கண்டிலோம்

(நீலம் உண்ட மின்னன்ன மேனி
உபாஸ்யத்வம்
போக்யத்வம்
ப்ரகாஸகத்வம்
மூன்றுமே உண்டே )

ஸ்வ பாவ ஸுத்தியும்
ஸ்ரைஷ்ட்யமும்
அகிஞ்சித் கரமாய் இருந்ததீ என்று சடக்கென பிரவர்த்தியாமையாலே
அதி சங்கை பண்ணி வெறுத்து அருளினார் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
அருளாய் என்ற அநந்தரம்
அருளக் கண்டது இல்லை
அருளாய் என்று வடிம்பு இட வேண்டாத படி எல்லாருக்கும் ஓக்க
ஓலக்கம் கொடுத்து இருக்கிற இடத்திலே

(நம்பிள்ளை ஈட்டில்
அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு
ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்
சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம் )

வியாக்யானம்
பெறாமையாலே பரவஸையாய் இருந்த அளவானாள் என்று

அன்னன்ன சொல்லாப்
அந்த அன்னமானது சொல்லுமது அல்ல

பெடையொடும் போய் வரும்
தங்கள் பிரிவால் வரும் வியஸனம் இல்லாமையாலும்
போய்வருமது யுண்டாயும்
என் தசையை இவை சொல்லா
என்று அந்வயம்

சொல்லாது என்பதில் ஹேதுவை உத் ப்ரேஷிக்கிறாள்
நீலம் –இத்யாதியாலே

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான்
நீல மேகம் உள் கொண்ட மின்னல் போன்றவளாய்
குளிர்ந்த திரு மேனி யுள்ள பெருமை யுடையவரில்

உலகில் பெண் தூது செல்லா
பெண் பிரிவால் வியஸனம் உள்ளவரில் பெண் தூது
அது இல்லாதவரில் லோகத்தில் பெண் தூது கார்யகரம் அல்ல

அன்னன்ன நீர்மை கொலோ?
என்பதான பரமம் உள்ளவையே ஸ்வ பாவத்தால் இவை

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிச் சீர்மையாவது
அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை
அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ
அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு
என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே
என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

————–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பண்ணினவர்களுடைய கார்ய அபி முக்யத்தைத் கண்டு
சொல்லி விடுகிற வார்த்தையை -அன்னம் தொடக்கமான வற்றை
நாயகன் பின் சென்று தன்னை அகன்ற நெஞ்சை நோக்கித் தூது விடுகிற நாயகி
வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –
பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –
அஞ்சிறைய மட நாராய் -1-4-

பதவுரை

அன்னம் செல்வீரும்–(வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப் பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்–(அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன்–யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்
(என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ–உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு–கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால்–(முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி–(அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ–அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ–இது தகுதியோ?
என்று இசைமின்கள்–என்று சொல்லுங்கள்-

வியாக்யானம் –

அன்னம் செல்வீரும்
பிரதானமாய்ப் போகிற அன்னங்களும்

வண்டானம் செல்வீரும்
அவை போன வழியிலே கூடப் போகிற வண்டான குருகுகளும்

அன்னம்
வண்டானம்
என்கிற ஒருமை
சொல்லீர் என்கிற பன்மையாலே
ஜாதி பரம் –

தொழுது இரந்தேன்
பத்தாஞ்சலி புடம் -யுத்த -18-27-என்கிறபடி
ஷிப்ர ப்ரஸாதமான அஞ்சலி பந்தத்தையும் பண்ண
யாசந்தம் -யுத்த -18-27- என்கிறபடியே
வாசகமான பிரார்த்தனையும் பண்ணினேன்

யத்தி மனஸா த்யாய -என்கிற நியாயத்தாலே
வாசிக காயிகங்களுக்கு மானஸம் அர்த்தாத் ஸித்தமாய்க் கொண்டு
பூர்வ பாவியாம் இறே

ஆக
கரண த்ரய யுக்தமான பூர்ண பிரபதனத்தைப் பண்ணினேன் என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
உங்களில் குண பிரதான பாவம் இல்லை
முற்பட்டாரில் கார்யம் மறவாது ஒழிவதே வேண்டுவது

ஏது என்ன
கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் நீர்மையைக் காட்டி என் நெஞ்சை அபஹரித்த
சேணுயர் வானத்து இருக்கிற -திருவாய் -5-3-9-
ஸ்ரீ வைகுண்ட நாதனோடே எனக்குக் கரணமாகையாலே பரதந்த்ரமாய்ப் போன நெஞ்சைக் கண்டால்

நெஞ்சினாரை
அத் தலையில் ஆஸக்தியால் யுண்டான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்கிறாள்

ஸதா தர்சன விஷயமானவரைக் காணலாம்
ஆஸ்ரித பலத்தால் யுண்டான செருக்காலே அந்தரங்க பரிகாரமாக நெஞ்சைக் காண்கையும்
அரிது என்றபடி

என்னைச் சொல்லி
என்னோடு யுண்டான
சம்பந்தத்தையும்
பூர்த்தியையும்
தனிமையும் தோன்றச் சொல்லி

அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
நீர் போருகிற போதை யாபத்திலே விஞ்சி இருக்கிறவர் பக்கலிலே
அவருக்குக் கரண பூதரான எங்களையும் அகப்பட வரவிடும்படி
இன்னமும் போகாது ஒழிவதே

அவர் என்று
உத்க்ருஷ்ட நாயக சம்பந்தம் அடியாக கடகர் தங்கள் சொல்லும் பாசுரத்தாலே சொல்லுகிறாள்
தன்னோபாதி நெஞ்சை உபசரிக்கும்படி சொல்லுகிறாள்

இதுவோ தகவு
ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஸ்வ பாவம்
இருக்கும்படி இதுவோ

என்று இசைமின்களே –
இப்படிப் பலருமாகச் சொல்லுங்கோள்
சிஷ்டர் பலரும் கர்ஹித்துச் சொல்லுகை மீளுகைக்கு உறுப்பாம் இறே –

இத்தால்
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும்
கடகத்வத்தில் உன்முகராய்த் தோன்றினவர்களைக் குறித்து
நடையாலும்
பேச்சாலும்
புத்தி யோகத்தால்
ஸ்ரேஷ்டராய்க் கொண்டு ப்ராப்ய தேச அபி முகரான நீரும்
பிரதான
புருஷ
அநு ஸாதகராய் தத் ஸமான தேச உன்முகரானவருமான
உங்களைக் குறித்து என்றபடி –

தொழுது இரந்தேன்-என்கையாலே
த்வர அதிசயத்தாலே கடக விஷயத்தில் அநு விருத்தியும்
ஓர் அளவில் நில்லாது என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,–என்று
ஆர்த்தியினுடைய அதிசயத்தாலே
முற்பட அறிவிக்கையை வேண்டுவது
பிரதான நியமமும் இல்லை -என்றபடி

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
சீலத்தாலே அபஹ்ருதமாய்
திவ்ய போகத்திலே மூண்ட நெஞ்சைக் கண்டால்
என் அவஸ்தையை அறிவித்து

இதுவோ தகவு என்று இசைமின்களே –
இப்படி அசஹாயாரானவர் பக்கல் இன்னம் போகாது ஒழிவதே
இதுவோ ஸ்வாமி கார்யம் செய்து தலைக் கட்டின படி என்று சொல்லுங்கோள் என்கையாலே
நெஞ்சை மீட்டு வரக் காட்ட வேணும் என்கையில் தாத்பர்யம்

அதாவது
அநு ஸ்மரணம் நடக்கச் செய்தே
அனுபவம் பெறாமையால் யுண்டான ஆர்த்தியைக் காட்டில்
விஸ்மரணமே அமையும் என்கிற வெறுப்பு இருந்தபடி

கடகரானவர்கள் நெஞ்சை மீட்க்குமோ பாதி
மீண்டும் வரக் காட்டவும் வல்லவர்கள் என்று இருக்கிறார் –

(சாம்சாரிக விஷயத்தில் இருந்து மீளச் செல்ல வல்ல ஆச்சார்யர்களால்
ஏது செய்ய முடியாது என்றவாறு )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சிலரைப் போக விட்டோமாகில் அவர்கள் க்ரமத்தாலே கார்யம் தலைக் கட்டிக் கொண்டு
வருகிறார்கள் என்று க்ரம பிராப்தி பார்த்து
அவ்வளவும் சூது சதுரங்களாலே போது போக்கி ஆறி இருக்கலாம் விஷயம் அன்று ஆகையாலே
யாம் கபீ நாம் ஸஹஸ்ராணி ஸூப ஹுந்ய யுதாநி ச
திஷு ஸர்வாஸூ மார்க்கந்தே –

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
ஷணமும் அவன் பிரிவைப் பொறாதவள் ஆகையாலே கண்ணால் கண்டாரை எல்லாம்
தூது விடவும்
இரக்கவும் செய்து
தம் தூதாக முன்பு போன நெஞ்சுக்கு என் தசையை ஸ்மரிப்பித்து
இவனோடு அவன் ஸ்தானத்தில் நின்ற உமக்கு இன்னம் அத்ருப்தியோ என்று
அப்பெருமையுள்ள என் நெஞ்சுக்கு அவர் முன்னே சொல்லி
உம்முடைய அருளும் இத்தோடு ரமிப்பதாயிற்றோ என்று அவர் இசையும் படி
விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –

வியாக்யானம்
அன்னம் செல்வீரும்
அன்னமாய்ப் போமவர்களும்

வண்டானம் செல்வீரும்
குருகாய் போமவர்களும்

தொழுது இரந்தேன்
கேளுங்கோள் என் யாசனத்தை
காணுங்கோள் நான் உங்களைத் தொழுது இரந்தத்தை என்று

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
முன்னாகச் சென்றவர்கள் என்னை மறவாதே கொள்ளுங்கோள்
முன்னாகத் தூது விட்ட என் நெஞ்சு என்னை மறந்ததே
நீங்களும் அப்படி செய்யாதே கொள்ளுங்கோள்

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் ஸுலப்யத்தால் என் நெஞ்சை அபஹரித்து
சேணுயர் வானத்து இருந்த ஸ்ரீ வைகுண்ட நாதனோடு
ரமண சீலமானவராய்
எனக்கும் காரண பூதரானவராய்
அவருக்குப் பூசும் சாந்தானவரைக் கண்டால்

அவரை நீங்கள் வேறுபாட்டுக் காண்பதே துர்லபம்
காணப்பெற்றால்

என்னை சொல்லி
எனது இவ்வாற்றாமையை
அவருக்கு அறிவித்து

அவர் இடை
என்னோடு கலந்து என்னைப் பிரிந்த
என் நாதரான என் நெஞ்சினாரோடே ரமிக்கும்
புருஷ ரிஷபரிடை

நீர் இன்னும் செல்லீரோ
இன்னம் அவகாஹியா நின்றீரோ

இதுவோ தகவு என்று
அவனுடைய அருளும் இவ்வளவேயோ
என் நெஞ்சினாருக்கு உள்ள தாகவும் இவ்வளவேயோ
என்னா நின்றாள்

என்று இசைமின்களே –
என்றுமாகச் சொல்லி
என் நெஞ்சுக்கும்
அவருக்கும்
நாம் அயுக்தம் செய்தோம் என்று இசையப் பண்ணுங்கோள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–பத்தாவது பத்து விவரணம்- –

February 16, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-——-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-

தாள தாமரையில்
நிருபாதிகமாக பரம பதத்துக்கு ஏறக் கொண்டு போய் விடக்கடவ பரம ஆப்தன்
காளமேகன் என்று நிச்சயித்துக் காளமேகத்தை வழித்துணையாகப் பற்றுகிறார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது-எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அர்ச்சிராதி கதிக்கு
உசாத்துணை யாவார் யுண்டோ என்று பார்த்த இடத்து
ஸ்வர்க்காதி லோகங்களுக்குப் போவார் ஒழிய இதுக்கான துணை அற்று இருந்தது

உயர்நலமுடையவனாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் மரணமான மஹா பயத்துக்கு
விரோதி நிரசன சீலனான காளமேகம் அல்லது துணையில்லை என்று
அவனை வழித்துணையாகப் பற்றுகிறார்

தாள தாமரை
மலையைச் சுமக்குமா போலே பூவின் பெருமை பொறுக்க வல்ல தாளை யுடைத்தான தாமரை
சேற்றின் நன்மையாலே உயர்ந்த தாளையுடைய தாமரை என்கை
இப்படி ஸம்ஸாரமாகிற வன் சேற்று அள்ளலிலே ஹ்ருத் புண்டரீகம் மலருகை அவன் பிரஸாதத்தாலே

தடமணி
தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திலே உபய விபூதிக்கும் ஏக ஸூர்யனானவன்
கருணையாகிற கிரணம் பட்டு அலறுவது ஹ்ருதய கமலம் இறே
தடத்துக்கு அவயவங்கள் ஆகிற பூக்களாலே அலங்கரித்தால் போல் இருக்குமாய்த்து தடம்

உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த செவ்வடி போல் உயர்ந்து காட்டின ப்ரகாசத்தாலே மயர்வு அற
ஹ்ருதயக் கமலமானது வன் சேற்று அள்ளலில் நின்றும் மயர்வற மதிநலம் அருளுகையாலே
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழு தரும்
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்றும்
மதியாகிற ஞானத்தாலே திரு உலகளந்த திருவடிகள் போலே அதுக்குப் போலியாக உயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச் செந்நெல்
தடமணி வயலிலே கதிர்ச் செந்நெலானது வரம்புற்றுத் தாள் சாய்த்து தலை வணங்கும்

திரு வுலகு அளக்கிற போது -லங்கைஸ் ஸூராணாம் என்கிறபடியே தேவர்கள் திரண்டு
காலை நீட்டித் தலையை வணங்கக் கை கூப்பித் தெண்டன் இட்டால் போலே
இரா நின்றதாய்த்து செந்நெல்கள் ஆனவை விழுந்து தலை சாய்ந்து கிடக்கிற போது

இப்படிப்பட்ட தடங்களையும் வயலையும் யுடைத்தான திரு மோகூர் –
ஊரில் போக்யதை அடைய வயலில் காணும் அத்தனை

நாளும் மேவி
நாள் தோறும் அத்யாதரத்தைப் பண்ணி
அவ் ஊரில் விடிந்த விடிவுகள் எல்லாம் இவனுக்கு ஸூப்ரபாதா ச மே நிசா -என்னும்படி யாய்த்து இருப்பது
அவ்வூரில் வாஸம் ஒழிய வேறே ப்ரயோஜனத்தைக் கணிசியாதே இது தானே ப்ரயோஜனமாய் நின்று

அசூரர் இத்யாதி
ஆஸூர சங்கத்தைத் துணித்து அடக்கி விரோதியைப் போக்கி கொடு போக வல்லன் என்று தோன்றும் படி –

தோள் இத்யாதி
இவர் இப்போது அறிந்த படி என் என்னில்
விடு காதானாலும் தோடிட்டு வளர்ந்த காது என்று தெரியும் இறே
அப்படியே உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் –
ஞான ப்ரதனாய் -நித்ய முக்த அநுபாவ்யனாய் -சதுர் புஜனாய் -சங்கு சக்ர கதா தரனாய்
கேசவ கிலேச நாசன என்கிறபடியே மை வண்ண நறும் குஞ்சியை யுடையவனாய் -புண்டரீகாக்ஷனாய் –
சிவந்த கனிந்த வாயை யுடையனாய் -திவ்ய ஸுந்தர்ய உபேதனாய் -மேக ஸ்யாமளமான நிறத்தை யுடையவனாய்
இருக்குமவன் துயர் அறு சுடர் ஆதி தொழுது எழும்படி நாளும் மேவிற்று என்கிறார் –

சுரி குழல் கமலக் கண் கனி வாய்
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட ஸகல தானங்களும் ஆறும்படி இருக்குமாய்த்து
பின்னே போகிறவனுக்கு முன்னே போகிறவன் ஒருக்கால் திருக்குழலைக் குலைத்து -நொழுந்த -நுழுந்த –
கேசவ கிலேச நாசகனாய் இறே இருப்பது –

கமலம் இத்யாதி
ஷூத்ர விஷயங்களினுடைய பொய்யான நோக்கிலும் பொய்யான முறுவலிலும் அகப்பட்ட நெஞ்சாரல் தீரும்படி
மெய்யான நோக்கும் மெய்யான முறுவலும் இருக்கும்படி சொல்லுகிறது –

காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
ராஜாக்கள் போம்போது முன்னே மகம் நீர் விடுமா போலே முன்னே காளமேகம் ஸுந்தர்ய ஸுகந்த்ய
கல்யாண அம்ருத வ்ருஷ்டி வர்ஷித்துக் கொண்டு போக
பின்னே குளிர்ந்த வாசத்தை அனுபவித்துக் கொண்டு போகலாய் இருக்குமாய்த்து

அவன் அடி நிழல் தடம் ஒழிய -யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
காள மேகத்தை ஒழிய வேறே வழித்துணை மனமே யுடையோம் அல்லோம் என்கிறார் –

————

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

கெடும் இடரிலே
ப்ராப்ய பூமியான பரமபதத்திலே போனால் செய்யும் அடிமையைத்
திருவனந்த புர வ்யாஜத்தாலே மநோ ரதித்தார் –

———–——–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

உயர்வற -என்கிற பாட்டை விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஒருவருக்கு ஒருவர்
சேஷ வ்ருத்தி பண்ணி அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து அத பதித்துப் போக
அங்கன் அன்றிக்கே
ப்ராப்த விஷயமான உயர்நலம் யுடையவன் எவன் அவன் திருவனந்த புரத்திலே ஸந்நிஹிதனானான்
அங்கே ஆஸ்ரயிக்குமவர்கள் நித்ய ஸூரிகளாவார்கள் -அங்கே நீங்களும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவன் பராத்பரன் இங்கே சன்னிஹிதனாகப்
புண்ணியம் செய்து
ஸ்நேஹம் ஆகிற புண்யத்தைப் பண்ணி
புண்ணியம்
வர்ணாஸ்ரம தர்மங்களை இதி கர்த்தவ்யதையாக உடைத்தாய் இருக்கும் இறே

ஆக ஸத் கர்ம பலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை நினைக்கிறது -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற படி
மத் பக்தோ மன் மநா பவ -என்னக் கடவது இறே

மயர்வற
அவித்யாதிகளைப் போக்கி மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் எவன் அவனுக்கு
நல்ல புனலொடு மலர்கள் தூவி
நல்ல புனலோடே கூடின மலர்களை ப்ரேம பரவசராய்க் கொண்டு பரிமாறி
இத்தால் அர்ச்சனாதிகளைச் சொல்கிறது
மத் யாஜீ மாம் நமஸ்குரு -என்னக் கடவது இறே

எண்ணுமின் எந்தை நாமம்
தியானித்து -ஸததம் கீர்த்த யந்த -என்னா நின்றது இறே
எந்தை நாமம்
இடறினவன் அம்மே என்னுமா போலே திரு நாமம் சொல்லும் போது அதிகாரி சம்பத்து தேட வேண்டா என்ன

ஜீயர் பட்டரைத் திரு நாமம் சொல்லும் போது ப்ரயதனாய்க் கொண்டு சொல்ல வேணுமோ என்ன
கங்கையிலே முழுகப் போனவனுக்கு வேறொரு உவர்க்குழியிலே முழுகிப் போக வேணுமோ
மேலுண்டான நன்மையைத் தருமது அதிகாரி சம்பத்தியைத் தர மாட்டாதோ என்று அருளிச் செய்தார்

தகிரு நாமம் சொல்லுகைக்கு ருசியே யாய்த்து வேண்டுவது -ருசித்தவர்களே அதிகாரிகள்

இப்பிறப்பு அறுக்கும்
கண்டது இறே இத்தினுடைய இழை ஈடு
கவிழ்ந்து பார்க்க இதினிடைய அக்வாயைக் கண்டால் தன்னடையே விரக்தி பிறக்கும் இறே

இப்படி ப்ரத்யஷிக்கச் செய்தேயும் கார்யகரம் ஆகாது இருக்கிறது இறே வாசனையின் கனம்
மம மாயா துரத்யயா -என்னும்
மாயான் தரந்தி தே -என்னும் சொல்கிறபடியே
பாக்யவான்களுக்கே இதனுடைய தோஷ தர்சனத்தைப் பண்ணிக் கழற்றிக் கொள்ளுகைக்கும்
பாக்ய ஹீனருக்கு இதிலே போக்யதா புத்தி பண்ணி அநர்த்தப் படலாம் படி
கர்ம அனுகுணமாக இத்தை இடை எடுத்துக் காணும் ஈஸ்வரன் பண்ணிற்று –

அந்த ஈஸ்வரன் மயர்வற மதிநலம் அருளுகையாலே அதின் அல்ப அஸ்திரத்வாதிகள்
இதுக்கு நிலை நின்ற ஸ்வ பாவம்

இப்பிறப்பு அறுக்கும்
இப்படி ஹேயதயா ஞாதவ்யமான இத்தேஹ ஸம்பந்தத்தை அறுக்கும்

என் செய்தால் என்னில்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் நித்ய விபூதியிலும் போந்து
செறி பொழில் அனந்த புரத்திலே நித்ய வாஸம் பண்ணி அருளுகிற அண்ணல்
செறிந்த சோலையை யுடைத்தான திருவனந்த புரத்திலே வந்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்வாமியுடைய கமல பாதம் அணுகித் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

கமல பாதம் என்றது
போக்யமான திருவடிகளைக் கிட்டுமவர்களுக்குத் துயர் அறுக்கும் -பிறவி அறுக்கும் என்றபடி –
சுடர் அடியானது அப்பால் அமரருக்கும் அமரர் ஆனவர்களுக்கும் இப்பிறப்பு அறுக்கும் என்ன வேண்டாதே
தேஹத்தைப் பரிகரித்து அடிமை செய்கிறவர்களுக்கும்
திருவனந்த புரத்திலே நித்யர் முக்தர் முதலானோரும் அடிமை செய்யக் கண் வளர்ந்து அருளுகிறவன்
துயர் அறு சுடர் அடிகளை அணுகுவார் –

ஆஸ்ரயித்தவர்கள்
அமரர் ஆவார்–
அமருக்கும் அமரர் ஆவார்

திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
அவனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நாம்
தேஹாத்ம அபிமானிகளாகிற நீங்களும் அறியும்படி உங்கள் அநர்த்தத்தைத் பார்த்துச் சொன்னோம்

அண்ணலார் கமலபாதம் அணுகுமவர் அமரர் ஆவார்

——–——–

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

வேய் மரு தோளிணையிலே
மநோ ரதித்த போதே ப்ராப்ய தேசத்திலே புகப் பெறாமையாலே இன்னமும் இச் சரீரத்திலே
வைக்கில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
ஸர்வேஸ்வரன் தெளிவிக்க அதி சங்கை தீர்ந்தார் –

——–————–

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அர்த்த காம உபேதராய்
அத பதித்தார்கள்
அதிலே தமக்கு பகவத் கடாக்ஷத்தாலே பகவத் அனுபவம் மிகுந்தது –

பணி மொழி
ப்ரமாணங்களோ ஆஸ்ரித பரதந்த்ரர் என்னா நின்றது
இதுக்கு விஸ்லேஷம் வரில் செய்வது என் என்று தன் விஸ்லேஷ பீருத்வத்தை
அவன் தனக்கே அருளிச் செய்கிறார் –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் ஸுலப்யாதி குண பூர்ணனானவன் ஸந்நிஹிதனாய் இருக்க
இப்படிப்படுகிறது என் என்ன

நீ பசு மேய்க்கக் கடவையான பின்பு நீயும் போனாயே
நீ போனால் நலியக்கடவ ஸந்த்யாதி பதார்த்தங்களாலே நலிவு படுகிற என்னை
ஆஸ்வசிப்பித்து அருள வேணும் என்கிறாள் –

உயர்வற உயர்நலம் யுடையவனான நீ –
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
நீ பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே
உன்னைப் பிரியாமைக்காகச் சொல்லும் வார்த்தை அல்ல
உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்
இது அனுபவத்துக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகிறதாகையாலே மெய் என்ன

நான் போனேனோ -என்ன

பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய்
கண்ணா
என்று சம்போதித்து வைத்து -அவன் தனக்கே நீ போனாய் என்கிறாள் இறே
மேய்க்கிய -மேய்க்கப் போனாய்

நீர் இது அறிந்த படி என் என்ன
நீ மயர்வற மதி நலம் அருளினாயே -அத்தாலே அவித்யாதிகள் நசித்தது
ஸ ஹேதுகம் அல்லாமையாலே அந்த அருள் பக்தி புரஸ் சரமான ஸம்சயத்தைத்
தீர்க்க வேண்டாவோ

என்னைப்
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
நீ போனால் பாதகமாகக் கடவ மல்லிகை கமழ் தென்றல் தொடக்கமானவை மறுவலிடுகையாலே
நீ போனது அநுசிதம் என்கிறாள்

கட்டவிழ்கிற மல்லிகையினுடைய மணத்தை வாடையானது தூவா நின்றது
ராவணன் ஸந்யாஸி வேஷத்தைக் கொண்டு வந்து தோற்றினால் போலே வாடையானது
குளிர்க் காற்றாய் வந்து நலியா நின்றது –

பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்ட
மத்தகஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே வாடையை முன் நடக்கவிட்டுக்
கொண்டாயித்து மாலை வருவது
இவளை மதிப்பதால் கூட்டுப்படையாய் வாரா நின்றதாய்த்து

வந்தின்றாலோ
வந்தது கிடாய் -உடம்பிலே பட்டு ஒழிந்தது கிடாய்
பகதத்தன் விட்ட அஸ்த்ரத்துக்கு அர்ஜுனனைப் பின்னே இட்டு உன் மார்பிலே ஏற்றால் போலே
நடுவே புகுந்து வந்து கட்டிக்கொள் என்கிறார் –

பெரிய கிளர்த்தியுடைய மலையானது வரும் என்று அஞ்சுகிறதில்லை -வந்தது

ஆனால் செய்ய அடுப்பது என் என்ன

நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி -அயர்வற்று அனுபவிப்பார்க்கு அபர்யாப்த்த அம்ருதனான
நீ தான் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனான
யுன்
மணி மிகு மார்பினில்
ஸ்ரீ கௌஸ்துபம் மணி நிறம் பெறும்படியான மார்பு என்னுதல்
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்திலே புகரேயாம் படி இருக்கும் என்னுதல்
கலவியில் கழற்ற வேண்டாதபடி இரே ஸ்ரீ கௌஸ்துபம் இருப்பது
நிரதிசய ஸூக ஸ்பர்சன் என்னக் கடவது இறே

இவளுடைய ஸ்த்ரீத்வத்துக்கு ஸ்தனம் போலே யாய்த்து அவனுடைய மார்பில் கௌஸ்துபம் –
புருஷோத்தமத்வ லக்ஷணம் இறே
அம்மார்பில் முல்லை மாலையால் என்னுடைய அழகிய முலையை பரிமளிதமாக்கி –
ஸ்ரீ கௌஸ்துபத்தோடே தோளில் மாலையோடே வாசி இன்றிக்கே போக உபகரணமாய்த்து

தோளில் முல்லை மாலையின் பரிமளத்தை என் முலைக்கு ஆக்க வேணும் என்கையாலே
அக்ராம்யமாகக் கலவியைச் சொன்ன படி
குளித்துப் பூச்சூட இருப்பாரைப் போலே யாய்த்து இம்முலைகள்
இவை பிரம்மச்சாரி முலையாகாமே அம்மாலையிலே பரிமளத்தாலே இவற்றை வாசிதமாக்காய் –

அம்மலையில் பரிமளம் இங்கு உற்று ஓங்குவதாகப் பண்ண வேணும்
அம்மாலையின் பரிமளம் முலையிலே யாம்போது கலவியை ஒழிக்கக் கூடாது இறே
கிம் ஸூகம் வனமாலா ஸம் மஹ்ய -என்றால் போலே

உன் வாய் அமுதம் தந்து
சம்ஸ்லேஷ ரஸம் உன்மஸ்தகமாக மிக்க வாறே தாரண அர்த்தமாகச் சில பேச்சு உண்டு இறே
பேசுவது -அப்பேச்சாதல்
அன்றிக்கே வாக் அம்ருதத்தைச் சொல்லவுமாம்
பேச்சு என்று நிர்வகித்துப் போருவது

அணி மிகு தாமரைக் கையை யந்தோ
உன் போக்கை நினைந்து நா நீர் வருகிறது இல்லை
அதுக்குப் பரிஹாரமாகவும் -நான் துயர் அறு சுடர் அடி தொழுது எழும் படியும்
என் நெஞ்சுக்கு இனிமை பிறக்கும் படிக்கும்
ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளையே தொழுது வர்த்தி என்று
உன் பயஹஸ்தமான

அணி மிகு தாமரைக் கையை யாய்
திவ்ய பூஷண அலங்க்ருதமாய் நிரதிசய போக்யமாய் இருந்துள்ள திருக்கைகளை
என் தலையிலே வைக்க வல்லையே
நா நீர் வருகைக்கும் இவர்களுடைய முந்தி கைப்பழம் இருக்கிற படி –

அணி மிகு தாமரைக் கை
ஆபரணம் மிகையாம்படி
சர்வ பூஷண பூஷார்ஹா என்கிறபடியே தனக்குத் தானே ஆபரணமாக கை
பசு மேய்க்கப் போன நீ வரும் அளவும் எனக்குத் தாரகமாக யுன் கையில் ஆபரணத்தைத் தர வேணும்
என்றவர்களுக்காய்த்து வாங்கி இட்டு வைக்கும் இறே
பசு மேய்க்கப் போகைக்குத் தான் ஒப்பித்த படியைச் சொன்னாள் ஆகவுமாம்
அத்தைச் செய்து அவன் போகப் புக்கவாறே சிதிலை யாகிறாள் இறே

தாமரைக் கையை யந்தோ-அடிச்சியோம் தலை மிசை யணியாய்-
குளிர்ந்த தண்ணீர் விடாய்த்தாருக்கு வாராய் என்று சொல்ல வேண்டுவதே யுனக்கு

அடிச்சியோம்
உன் துயர் அறு சுடர் அடி தொழுகையே நிரூபகமான அடியோம்
உன் அழகுக்குத் தோற்ற தோல்வி சொல்லுகிறாள்

தலை மிசை நீ அணியாய்
ஆபரணத்துக்கு ஆபரணம் போலே யாய்த்து இவள் தலைக்கும்
பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்பது

தாமரைக் கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
என்பதாய்க் காலைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார் –
மதீய மூர்த்நாம் அலங்க்ரிஷ்யதி -என்று இறே இவர்கள் இருப்பது

இந் நிர்பந்தங்கள் எல்லாம் ஆர் அறிவார் -வேனுமாகில் எடுத்து வைத்துக் கொள்ளாய் என்ன
காலன் கொண்டு மோதிரம் இடுவாரைப் போலே என் பேற்றுக்கு நான் யத்னம் பண்ணுமவளோ
நீயே மேல் விழுந்ததாகக் கொள்ளுமவள் அன்றோ
நான் என்றும் அத்தலையால் பெறும் இருக்குமவள் இறே இவள் தான் –

அணியாய்
ஆற்றாமை மிக்கது என்னா அல் வழக்குச் செய்யோம் என்ன
நீ அஞ்சல் என்ற கையாலே நிர்ப்பயனாக்கிச் சுடர் அடி தொழுது எழப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

———-——–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

பத்துடை அடியவரில் சொன்ன பக்தி ஸ்வ ஸாத்யத்தோடே பொருந்தின படியை அருளிச் செய்கிறார்
உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக -சாதனாந்தரங்களாலே
ப்ருஹ்மாதிகள் ப்ரயோஜனாந்தரங்களாலே உயர்வு தாழ்வுமாய் அற்றார்கள் –

அவர்களிலும் தாழ்வான இவர் -ப்ராப்ய பிராபகங்கள் -உயர்வற உயர்நலமுடைய
ஸர்வ ஸ்மாத் பரனே என்று இருக்கிற இவர்
உயர் நலமுடையவனைப் பற்றிப் பிரிய நினைவு இன்றிக்கே இருக்கப் பிரிந்தானாக அதி சங்கை பண்ணி
உம்மை ஒரு நாளும் பிரியோம் காணும் என்றவன் ஆஸ்வசிப்பிக்க -அத்தாலே தரித்து ப்ரீதரானார் –

உபய விபூதி யுக்தனாய் இருந்து வைத்து ஆஸ்ரித ஸூலபனானவன் திருவடிகள் பக்தி யோக லப்யன் என்கிறார் –
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
உயர்நலம் –ஞான ஆனந்த ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
சார்வே தவநெறி என்றும்
பத்துடை அடியவருக்கு எளியவன் என்றும்
எளிவரும் இயல்வினன் என்றும் சொன்னவன் திருவடிகளே சார்வு என்கிறார்
சார்வு -ப்ராப்யம்
அங்கு அவன் சார்வு என்கிறார்
இங்கே சார்வே என்று அவதாரணத்துடன் அருளிச் செய்கிறார்

தவ நெறிக்கு -பக்தி மார்க்கத்துக்கு -தபோ மார்க்கம் -என்றபடி –
வணக்குடைத் தவ நெறி என்றாரே அங்கே -அத்தைச் சொல்கிறார்
நமஸ் யந்தச்ச மாம் -என்று நமஸ்ஸைக் கரண சரீரமாக யுடைத்தாய் இருக்கும் இறே பக்தி

தவ நெறி என்னும் காட்டில் பக்தியைச் சொல்லித்தாமோ என்னில்
யஸ்ய ஞான மயந்தப -என்றும் ஞான விசேஷமான பக்தியைத் தபஸ் என்றும் சொல்கிறது –

அன்றிக்கே
இவன் ஒரு ப்ரணாமத்தைப் பண்ணினால் -இவன் நம்மை நோக்காக குவாலாக வருந்தினான்
என்று இது தன்னைப் பெரிய காயக் கிலேசமாக
நினைத்து இருக்கும் அவன் கருத்தால் சொல்லிற்று ஆகவுமாம்

தாமோதரன் தாள்கள்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்றதைச் சொல்லுகிறார் இங்கு
யசோதாதிகள் கையிலே கட்டுண்டு தழும்பு சுமந்ததுவே திரு நாமமாய் இருக்குமவன் இறே

யசோதாதிகள் கட்டுண்பான் ஒருவனான பின்பு அவனை யுகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை

அப்படிப்பட்டவன் ஸூ லபனாகிறான் எவன் அவன் என்னில் மயர்வற மதி நலம் அருளினவன் எவன் அவன்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
தன்னுடைய மேக ஸ்யாமமான குளிர்ந்த வடிவையும் கடாக்ஷ அம்ருத வ்ருஷ்டியை வர்ஷிக்கிற
விகஸிதமான திருக்கண்களையும் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே விசதமாகக் காட்டின படி
விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் உபய விபூதி நாதன் என்கிறார்

கார்மேக வண்ணன்
இந்த பக்தி விளையும் படி கிருஷி பண்ணியும் வர்ஷித்து ருசிக்கு உத்பாதகனாய் இன்பத்தை வளர்த்து
அது பக்குவமானால் பர ஞானத்துக்கு ப்ராப்யமுமான வடிவை யுடையவன்

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி இறே
கார் காலத்து மேகம் என்னுதல்
கறுத்த மேகம் என்னுதல்
புயல் கறுத்த நிறத்தனன் என்றத்தைச் சொல்லுகிறார்

கமல நயனத்தன்
அவ்வடிவுக்குப் பரபாகமாய் அகவாயில் வாத்சல்ய ப்ரகாசகமான குணங்களுக்கு ப்ரகாசகம் இறே திருக்கண்கள்
அனுக்ரஹம் அடையத் தோற்றுவது கண் வழியே இறே
வாத்சல்ய ப்ரகாசகமான வடிவு அழகு அன்றிக்கே மேன்மை கண்டு மேல் விழ வேண்டுமவனாய்த்து

அயர்வறும் அமரர்கள் அதிபதி -தத் வியதிரிக்தங்களிலே வாசனையும் இல்லாத நித்ய முக்தர்களை சந்த
அனுவ்ருத்தி கொள்ளுகிறவன் எவன் அவன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
விக்ரஹ வை லக்ஷண்யமே அன்றிக்கே ஸ்வரூப வை லக்ஷண்யத்தைச் சொல்லுகிறது
யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் என்றத்தைச் சொல்லுகிறது என்று நிகமிக்கிறார் –

பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் சொன்ன இத்தாலே
அவற்றின் கார்யமான தேவாதி விசேஷங்களையும் நினைக்கிறது
இத்தால் லீலா விபூதியைச் சொல்கிறது

நேமியான்
கையும் திருவாழியுமாய் நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை அயர்வறும் அமரர்கள்
அபர்யாப்த்த அம்ருத தாசிகளுக்குப் போக்யமான வனுக்கு அடையாளமும் -அதுவே நிரூபகமும் –

இப்படி உபய விபூதி யுக்தனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–
இவ்வருகில் ஆக்கனான தேவாதிகள் அன்றிக்கே அவ்வருகில் பெருமக்கள் ஏத்தும்படியான
பெருமையை யுடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

எனக்கு கரணமான நெஞ்சே -வானவர்கள் பேர் பிதற்றும் பெருமையனைத் தொழுது எழு
இங்கும் ருசியுடையாரும் பிதற்றும் அத்தனை

கார் மேக வண்ணனாய் கமல நயனத்தனாய் -நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியனாய்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையை யுடையனாய் இருந்து வைத்துத்
தாமோதரனானவன் திருவடிகள் தவநெறிக்குச் சார்வே
இது நிச்சிதம் –

—————–

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

கண்ணன் கழலிணையில்
வீடுமின் முற்றத்திலே
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் என்று தொடங்கின படியை
அருளிச் செய்து தலைக்கட்டி
பக்தியினுடைய பிரகாரம் இருக்கும் படியை அருளிச் செய்து
பர உபதேசத்தைத் தலைக்கட்டு அருளுகிறார் –

—————–———

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும் மோக்ஷ சாதனங்களாக
கர்ம ஞானாதிகளை அனுஷ்ட்டிப்பாரும் பக்தி பிரபக்திகளை அனுஷ்ட்டிப்பாருமாகையாலே
கால விளம்பமாய் அதில் எவ்வளவு குறையிலும் பழிப்பது இல்லை

தமக்கு பக்தி ஆர்ஜித்த பக்தியும் அன்றிக்கே -அர்த்தித்துப் பெற்ற பக்தியும் அன்றிக்கே
அருளின பக்தி யாகையாலே
உயர் நலமுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி குணங்களாலே பரிபூர்ணனான ஸர்வேஸ்வரன்
நாளேல் அறியேன் எனக்குள்ளன நாள் என்ற இவருக்கு மரணமானால் என்று இறே
நாளிட்டுக் கொடுத்தது

அத்தனை க்ரமம் பொறுக்க மாட்டாதே ஈஸ்வரன் தன்னைக் கொண்டு போகையிலே
த்வரிக்கிற படியைக் கண்டு
மரணமானால் என்ற அளவும் பொறுக்கிறிலன் –
நெடுநாளாய்த் தோற்றி ஈஸ்வரன் செய்கிறபடி தமக்குத் தவிராததாய் இருந்தது
இனி இவர்கள் இந்த பிரபத்தி மார்க்கத்தை இழக்க ஒண்ணாது -இத்தை உபதேசிப்போம் என்று
தமக்கு ஒன்றும் பிறருக்கும் ஒன்றும் ஆகாதே த்வயத்தை உபதேசிக்கிறார் –

உயர்வற உயர்நலமுடையவன் எவன் அவன்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
உயர்நலமுடையவன் எவன் அவன் -மாதவன் -ஸ்ரீ யபதியானவனை ப்ரீதி பிரேரிதரராய் ஆஸ்ரயிக்கவும்
இனிமையோடு திரு நாமம் சொல்லவும் மாட்டாதார்
அந்தப்புர பரிகரமான வார்த்தையைச் சொல்லவே பூர்ண உபாசனத்தில் பலம் ஸித்திக்கும் என்கிறார்

ஞான ஆனந்த ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் இருந்துள்ள ஸ்ரீ யபதியானவனை
மாதவன் என்று த்வயமாக்கி
நாராயண சப்தத்தோடு இத்தைச் சேர்த்துச் சொல்லப் பாருங்கோள்

நாரணம் என்றாரே கீழே
தமக்கு ஈஸ்வரன் மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் மாதவன் -ஸ்ரீ யபதியான நாராயணன்
தமக்கு பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளி சரணாகதி வழியிலே நிறுத்தினான்

ஓத வல்லீரேல்
உங்களுக்கு ருசி இல்லையாகிலும் பர பிரேரிதரராய்க் கொண்டு ஓதி நிரந்தரமாகச் சொல்ல வல்லீராகில்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் யாவன் ஒருவன் அவன் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் பரிசர்யை பண்ண
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்பக் கண்ட சதிர்
மாதவன் என்று என்றே ஓதுகையே மா சதிர்

தீது ஒன்றும் அடையா
உத்தர ஆகத்துக்கு நெஞ்சு செல்லாது
துயர் அறு சுடர் அடி தொழுகையாலே பூர்வாகம் அற்றது

ஏதம் சாராது
என்கையாலே உத்தர ஆகத்துக்கு அஸ்லேஷமே யாம்
ஏதம் சாராவே
பூர்வ ஆகத்தை விஸ்மரிக்கும்
உத்தர ஆகத்துக்கு நெஞ்சு செல்லாது
தொழுது எழு என் மனனே

கீழ்ச் சொன்ன திருமந்திரமும்
இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும்
தனித்தனியே பக்தி பிரதிபத்திகளுக்கு வாசகம் ஆகையாலே
பேற்றுக்கு அபர்யாப்த்த அர்த்தமாய் நிரதிசய போக்யமான பின்பு
இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்குப் பேறு சொல்ல வேண்டா இறே என்று
தன் திரு உள்ளம் போல்வாருக்கு உபதேசித்து அனுபவிக்கிறார் –

——–———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அருள் பெறுவாரிலே
தம்மை விக்ரஹத்தோடே திருநாட்டிலே கொண்டு போகைக்காக அவன் வந்து த்வரித்து
அவஸர ப்ரதீஷனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
தேவதாந்த்ர சாத்தனாந்தர ப்ரயோஜனாந்தரங்களிலே போயிற்று
இவர்களிலும் தண்ணியரான இவர் பெற்ற பேறு சொல்கிறது –

உயர்வற உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் இவருக்குப் பொய் நின்ற ஞானம் தொடங்கி
இவ்வளவும் வர -ஈஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்தபடி சொல்லிற்று
இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேஸ்வரன் பின் தொடருகிற படி சொல்கிறது

உயர் நலம் யுடையவனுடைய அருள் பெறுவார் அடியார்
ஈஸ்வரன் நம்மை விஷயீ கரிக்கையிலே ஒருப்படா நின்றான்
அது தானும் தாம் விதித்தபடி செய்வதாக இரா நின்றான்

உயர்நலம் யுடையவன் -அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு
ஹேது தான் இருக்கிற படி
ஸர்வேஸ்வரன் பண்ணும் ப்ரஸாத அதிசயத்துக்கு விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு –
அவர்கள் நமக்கு ஸ்வாமிகள்
அவர்கள் பக்கல் அவன் பண்ணின அருள் நம்மளவும் வர வெள்ளம் கோத்தது காண் என்கிறார் –

எல்லாரும் அடியார் அன்றோ என்னில்
தான ஹந் த்விஷத -என்று பிரஜை தீம்பிலே கை வைத்தால் மாற்றைக் கொண்டு
வாய் வாய் என்பாரைப் போலே அவன் தானே சீற வேண்டும்படி இருப்பார் சிலர் உண்டு –

அவர்களைப் போல் அன்றியே -ததாமி -என்று அவனுடைய அருளுக்கு விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு –
அவர்கள் பண்ணும் அருளை -அவர்கள் பக்கல் பண்ணும் அருளை நம் பக்கலிலே மயர்வற மதிநலம் அருளினன்
அவித்யாதிகள் சவாசனமாகப் போயிற்று தன் நிர்ஹேதுக கிருபையாலே

அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்
ராஜாவுக்குப் புறம்பே நாடு முறையில் செல்லா நிற்கத் தன்னையும் தன் ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் இறே
மஹிஷி விஷயத்தில்
அப்படியே அவன் தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அனுபவிப்பித்தான் –
பாரதந்த்ர ஏக பரராய் இருப்பார் சிலர் உண்டு -அவர்கள் பக்கல் பண்ணும் அருளை என் பக்கலிலே பண்ணினான்

அவர்கள் யார் என்னில்
மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே

காணும்
நீக்கமிலா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் -என்றும்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க-என்றும் சொன்ன வார்த்தையை நினைத்து இருந்தான் –

ஸர்வேஸ்வரன் நம் பக்கலில் முழு நோக்காக ப்ரஸாதத்தைப் பண்ணினான்
திருவாழியை ஒரு கண்ணாலும் இவரை ஒரு கண்ணாலும் பார்ப்பதாகா நின்றான்
விடலில் இத்யாதி
கையில் திருவாழியை விடில் அன்றோ உம்மை விடுவது என்னா நின்றான்

ஆழியான் என்றே நிரூபகம்
அஸ்மாபிஸ் துல்யோ பவது -என்று அவர்கள் பக்கல் பண்ணும் அருளை என் ஒருவன்
பக்கலிலேயும் பண்ணா நின்றான்
அவர்கள் அருள் பெறுவார் அடியார் ஆய்த்து
இவனும் அருள் தருவானாய் அமைகின்றன ஆய்த்து

அமைமின்றான்
பாதி சம்வாதம் குறைவற்றது
அருளின காரியமும் குறைவரத் தருவதாகப் பாரித்து நின்றான்

அவன் பிரசாத அதிசயத்தைப் பண்ணுவதாக பாரியா நின்றானாகில் -அவன் தான் ஸர்வேஸ்வரன் ஆகில்
பின்னைக் கண் அழிவு என் என்னில்

அது நமது விதி வகையே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அயர் -அசர்வு -அது இல்லாமல்
பூர்வே ஸாத்யர்களால் ஆராதிதனானவன் யாவன் ஒருவன் அவன் நித்ய சம்சாரியாய்ப் போந்த என்னைத்
தன் நித்ய விபூதியிலே கொண்டு போய் அனுபவிக்க வேணும் என்று பாரித்துக் கொடு வந்து புகுந்து
ஆஸ்ரித பரதந்த்ரன் ஆகையாலே நாம் விதித்த படியே செய்வானாகப் பாரா நின்றான்
அது செய்யும் இடத்து நான் சொன்னபடி செய்வானாக வேண்டி இரா நின்றான்
அது நம்முடைய பாக்ய அனுகுணமாக இறே என்று பூர்வர்கள் நிர்வாஹம்

எம்பெருமானார் கேட்டருளி இத்திருவாய் மொழியிலே மேலோடுகிற ரஸத்தோடே சேராதே
நாம் விதித்தபடியே செய்வானாக இருந்தான் என்கிறார் என்று அருளிச் செய்தார்

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று பாரித்துப் போந்தவர் தாமே க்ரியதாம் இதி மாம் வத எனப்
பார்த்து இருந்தால் போலே இவர் சொன்னபடி செய்வானாய் இரா நின்றான்

நமது சொல்வகை என்னாதே விதிவகை என்பான் என் என்னில்
விதி அதிக்ரமத்தில் ப்ரத்யவாயத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
தான் நினைத்தபடி செய்கைக்குத் தன் பக்கலில் குறைவற்றாலும் இத்தலையில்
இச்சை ஒழியக் கொடு போகாதே யவன் -புருஷோத்தமன் அபும்ஸ்த்வம் வரும்படி செய்யான் –
நமது விதி வகையே
தத அநு ஜா நந்தம் உதார வீக்ஷணை -என்று கடாஷிக்குமவன் கிடீர்
இவன் விதிக்க வேண்டி இருக்கிறான்
அருளுகிறார் ஸர்வேஸ்வரன் ஆகில் அது தான் நாம் விதித்த படி செய்வானாய் இருந்தானாகில்
இனி கண் அழிவு என் என்ன

இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
இனி நீயும் இசையுமத்தனையே வேண்டுவது இதுவே கண்ணழிவும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவர்களும் தானுமாய் இவனை அணையில் வைத்து
ஆதரிக்கைக்காக வந்து நம் அனுமதி பார்த்து இருந்தான்

மருள் ஒழி நீ மட நெஞ்சே
நான் அவன் வழியே போவதாகப் பார்த்தேன் -நீயும் அவன் வழியே போவதாகப் பாராய்
உமக்குத் தான் அவன் வழியே போக வேண்டுகிறது என் என்ன
இருள் தரும் மா ஞாலமாய் இருந்தது -ஸம்ஸாரம் ஆகிறது இருக்க இருக்க அஞ்ஞானத்தைத் தருவது ஒன்றாய் இருந்தது
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆள்வானையும் எதிரிடப் பண்ணிற்றே

மருள் ஒழி
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை நரகம் எதில் என் என்று இருந்ததோர் பிரமம் உண்டே முன்பு –
இப்போது அத்தைத் தவிர்ந்தேன்

அது தான் தவிர வேண்டுவான் என் என்னில்
ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாஸத்துக்கு உடலாய் இருக்கையாலும்
உகந்து அருளின நிலங்களில் உண்டான ஆதார அதிசயத்தாலும் இறே
இங்கே இருக்கில் என் -அங்கு போய் இருக்கில் என் அவன் எல்லைக்குள்ளே கிடக்கும் அத்தனை இறே
வேண்டுவது இருந்தோம்
அதுவே யாகப்பெறாதே மற்றைப்படிக்கு உடலாய் இருந்தது –

ப்ரக்ருதி வஸ்யனாக்கி சப்தாதி விஷயங்களிலே கொண்டு மூட்டும் ஸம்ஸார ஸ்வ பாவத்தை
அனுசந்தித்த பின்பு விடுவதாகத் துணிந்தேன்

யான் வேண்டேன்
என் புத்தியால் விட்டேன்- அவன் இருத்தில் செய்யலாவது இல்லையே

ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
மருள் ஒழி நீ
உனக்கு ஒரு நினைவுண்டு -அத்தைத் தவிர்ப்பார்

தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால் –திருவாறன் விளை யதனை மேவி
வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே என்று
விரோதி கழிந்து போம் வழி எல்லாம் போய்
இது பரமபதத்துக்குப் போம் வழி -இது திருவாறன் விளைக்குப் போம் வழி என்றால்
ப்ராப்ய வஸ்து தான் இங்கேயே வந்து கிட்டிற்றாகில் இங்கேயே அடிமை செய்ய அமையாது
என்று பிரமித்து ஓன்று உண்டு -அத்தைத் தவிர்ப்பார்
மருள் என்று இனி பிரமத்துக்குப் பெயர்

மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் -அவன் வாட்டாற்றான்
ஆஸ்ரிதரை அருளப்பாடிட்டு நிற்கிறவன் அடி வணங்கித் தொழுது எழு என் மனனே என்கிறார்

வணங்கு என் தன் மட நெஞ்சே
ஸாது நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே –
உத்தேச்ய வசித்து ஸந்நிஹிதமாய்த்து என்று இத்தனை பார்க்கிற அத்தனை போக்கி
நம்மையும் பார்க்க வேண்டாவோ

வாட்டாற்றான் அடி வணங்கே
நமக்கு ஹித காமனாய் வந்திருக்கிறவன் வழியே போய் அவனை
அனுபவிக்கப் பார்க்க வேண்டாவோ

உகந்து அருளின நிலங்களில் வந்து நிற்கிறது நம்மை
அங்கே கொண்டு போகைக்காகவே இருக்கும்
நீயும் அவன் நினைவிலேயே போகப் பாராய்

சுடர் அடி தொழுது வணங்கே
அடி வணங்குகை யாவது ஈர் அரசு தவிருகையே இறே –

———–———

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

செஞ்சொல் கவியில்
தம்மைத் திரு மேனியுடன் கொண்டு போக வேணும் என்று த்வரிக்க
மங்க ஒட்டு -என்று அவனை சரணம் புக்கு ப்ரக்ருதி சம்பந்தத்தை
அறுத்துக் கொண்ட படியை அருளிச் செய்கிறார் –

————–——–

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் கர்ம அனுகுணமான சரீரங்களாலே
ஸ்வர்க்க நரகங்களுக்கு ஹேதுவாய் இருக்க
அதிலே ஒருவரான இவரை இத்திருமேனியோடே கொடு போகைக்கு ஆசைப்படுகிறான் ஈஸ்வரன் –

ப்ரம்மாதிகள் தொடங்கி தத் தத் காதைகள்-ஸ்லோகங்கள் – ஆனவை என்ன -நாலு வேதம் என்ன –
ஆறு ஸாஸ்த்ரம் -சிஷா வ்யாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -போல்வன என்ன –
அஷ்டாதச புராணம் என்ன -சதுஷ் ஷஷ்ட்டி கலைகள் என்ன –
மற்றும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திவ்ய ஸூ க்திகள் என்ன – இவைகள் எல்லாம் பகவானை ஸ்துதிக்கக் கேட்டு
உகந்து இருந்தால் போலே அன்று இறே நம்மாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தாலே
த்வய விவரணமான சரணாகதியை அருளிச் செய்த காதையைக் கேட்ட ஸர்வேஸ்வரன்

உயர்வற உயர்நலம் யுடையவனாய் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனானவனை இந்த திவ்ய கானத்தைக்
கேட்டு மட்டுக்கட்டி அனுபவிக்க மாட்டாதே அத்தாலே வந்த ஆனந்தத்துக்குப் போக்கு விட்டுத்
தென்னா தெனா வென்று ஆளத்தி வையா நின்றான்

இந்தத் திருவாய் மொழி தான் -பக்த்தாம்ருதம் விஸ்வ ஜன அனு மோதனம் சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம் என்கிறபடியே

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப-விறே இதனுடைய வைபவம் தான் இருப்பது –

உயர் நலமுடையவன் தான் இருப்பது -தம்மோடே கலந்து தம் வாயால் திருவாய் மொழி கேட்ட
ப்ரீதி உள் அடங்காமல் ஆனந்தித்து ஆளத்தி வையா நின்றான் -என்கிறார் –

நன்கு என்னுடலம் கைவிடான் என்னும் அளவன்றிக்கே
என்னுக்தி மாத்ரத்திலே களியா நின்றான் என்கிறார் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப வாய்த்துத் திருவாய் மொழி தான் அவதரித்தது

ஸ்துத்யனுடைய அவதாரம் போலே யாய்த்து ஸ்துதியினுடைய அவதாரமும்
பரித்ராணாய ஸாதூநாம் -இத்யாதி போலே
அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநு நா -என்னுமா போலே

நண்ணா -இத்யாதி
பிரதிகூல நிரசனத்துக்கு வேறொரு கருவி எடுக்க வேண்டாதே –
அனுகூல ரக்ஷணத்துக்கும் வேறொன்றும் வேண்டாதே
அநந்ய ப்ரயோஜனராய் இருப்பார்க்கு ஸ்வயம் ப்ரயோஜனமுமாய் இருக்குமாய்த்து

நண்ணா வசுரர் நலிவெய்த
அவ்யபதேசனுக்கு அநந்தரத்தில் அவன்
தன்னப்பன் செய்தவற்றைக் கேட்டு -இவன் என் செய்தானான் -என்று கர்ஹித்தான்
ஒரு மதிலை வாங்கும் காட்டில் அத்தர்சனம் குலைந்ததோ
திருவாய் மொழி என்றும் ஸ்ரீ ராமாயணம் என்றும் வலியான மஹா பிரபந்தங்கள்
இரண்டு உண்டாய் இருக்க -என்றான் ஆய்த்து

இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான ப்ரபந்தமாய்த்து
விபரீதஸ் ததா ஸூர –என்னக் கடவது இறே
பொருந்தாமை யுடைய அஸூர வர்க்கமானது மண் உண்ணும் படியாக சம்பந்தம் இல்லை
என்ன ஒண்ணாதே
பொருந்தோம் என்கை இறே உள்ளது –

நல்ல அமரர் பொலிவு எய்த
விஷ்ணு பக்தி பரோ தைவ -என்னக் கடவது இறே
அனுகூலமாய் இருக்குமவர்கள் உண்ணாதே தடிக்க -இவர்களுக்கு நன்மையாவது பகவத் பக்தராய் இருக்கை
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்னக் கடவது இறே

இது யுமக்குப் பிறந்தபடி என் என்ன –
ஸ்துத்யன் ஆனவன் தன்னை ஸ்துதிக்கும் படி மயர்வற மதிநலம் அருளினான் –

வேதங்களைப் போலே -அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீளுகை அன்றிக்கே
நின் கண் வேட்கை எழுவிப்பேனே -என்று நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
ஒண் சுடர்க் கொழுந்தாய் -பரம பக்தியாய்க் கொழுந்து விட்டு வளரா நின்றது
அது பொங்கி வழிந்த சொல் பண்ணார் பாடல் இன்கவி யாயிற்று

எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
புறம்பு ஓருவர் எண்ணாதன சிலவற்றை எண்ணுவார் உண்டாயிற்று
ஸர்வேஸ்வரன் ரக்ஷகன் -அவனை ஒழிந்த அடங்கலும் அரஷகம் என்று இருக்கை அன்றிக்கே
உபய விபூதி யுக்தனுக்கும் இன்னும் சில விபூதி வேணும் என்றும்
ஸர்வ குண ஸம்பன்னனுக்கும் இன்னம் சில குணங்கள் வேணும் என்றும்
இப்புடைகளிலே எண்ணுவார் யுண்டாய்த்து

நன் முனிவர்
அவனுடைய ஸம்ருத்தியையே மனனம் பண்ணும் ஸ்வ பாவராய் இருக்கை
ஈஸ்வரன் அடியாகத் தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர்
அத்தலைக்கே ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நன் முனிவர்

அவர்கள் இன்பம் தலை சிறப்ப
திருவாய் மொழி அவதரித்த பின்பு அவனுக்குக் குண விபூதி போராது என்று இருந்த
இழவு தீர்ந்து அத்தாலே நிரதிசய ஆனந்த யுக்தரானார்கள் –

அன்றிக்கே
திருவாய் மொழியை ஒழிய வேறொரு ஸம்பத்தும் வேண்டா வென்று இதுவே
மனனம் பண்ணி ஹ்ருஷ்டராம் படியாகவுமாம்

அன்றிக்கே
நல்ல அமரர் -என்றும் நன் முனிவர் என்றும் அயர்வறும் அமரர்கள் ஆகவுமாம்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்னக் கடவது இறே

அயர்வு அறுகை யாவது
அபர்யாப்த்த அம்ருதத்தில் ரஸம் அல்பமாய் பக்தாம்ருதமான திருவாய் மொழியைப்
பானம் பண்ணுகிறவர்கள் அல்லர்

இன்பம் தலை சிறப்பப் பண்ணார் பாடல் இன் கவிகள்
பண்ணோடே சேர்ந்த பாடல் -புஷ்ப்பமானது பரிமளத்தோடே அலருமா போலே
திரு அஷ்டாக்ஷரமானது தளிரும் முறியும் மணமும் மதுவும் யுண்டாமாப் போலே
இதுவும் பண் மிகுந்து இருக்குமாய்த்து

இன் கவிகள்
இசையும் பண்ணும் ஒழிய தோல் களைந்த சுளை போலே கவி தானே இனிதாய் இருக்குமாய்த்து

யானாய்த் தன்னைத் தான் பாடி
என் பேரை இட்டுத் தன்னைத் தான் பாடி
பிதாவானவன் புத்திரனுக்கு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே
தான் நீர் ஏற்றுப் பசுவை பெறுமா போலேயும்
ஸூதனை வார்த்தை கற்பித்து அவன் சொல்லக் கேட்டு அவன் இனியனாம் போலேயும்

தானே பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடே ஒத்துப் போமே
பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் என்று இவர் அங்கீ காரத்தாலே
அந்த கீதை தானும் வீறு பெற்றது இறே

தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
தென்னா என்னும் -செருக்கால் தென்னா தென்னா என்று ஆளத்தி வைக்குமாய்த்து
திருவாய் மொழியாகிய தேனைக் குடித்துத் தெய்வ வந்து ஆளத்தி வைக்கிற படி

சம்சாரி சேதனனுக்கு பகவல் லாபம் உண்டானால்
ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று ஸாம கானம் பண்ணுமா போலே
அவாக்ய அநாதர என்னும் படி வாய் திறவாமல் இருக்கும் பர ப்ரஹ்மம் –
தைர்ய பங்கம் பிறந்து பாடா நிற்குமாய்த்து

என்னம்மான்
ஸூத வசனம் இனிதாம் போது பிராப்தி யுண்டாக வேணும் இறே
அதுக்கடியான ப்ராப்தியைச் சொல்லுகிறதாய்த்து

திருமாலிருஞ்சோலை யானே
இவரைப் பாடுவித்த முக்கோட்டை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ணபுரத்துறை அம்மானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டை இறே இது

தாம் பாடின கவிகள் இனிதானமையை அனுசந்தித்தார் –
இவை தாம் அடியாகப் பிறந்தது என்று சொல்லலாய் இருந்தார் இல்லை –
இதுக்கடி என் என்று பார்த்தார் -அவன் இவர் நெஞ்சிலே புகுந்து பாடுவித்தான் ஆய்த்து

கணபுரத்துறை யம்மான் திருமாலிருஞ்சோலையான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதுக்குப் பிரத்யுபகாரம் இல்லையே வணங்கிப் பிழை என்கிறார் –

—–———–

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

திருமாலிருஞ்சோலையிலே
இப்படி ஆதரிக்கிற தேவர் அநாதி காலம் என்னை யுபேஷிக்க வேண்டுவான் என்
இன்று என்னை விஷயீ கரிக்க வேண்டுவான் என் என்று கேட்க
அவன் நிருத்தரனாய்ப் பேசாதே இருக்க
நிர்ஹேதுகமாகாதே என்று நிருத்தரானார் –

——————

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும்
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கமாத் மகமான சரீரங்களிலே
ஓரொன்றிலே அளவிறந்த ஜென்மங்களில் பிறந்த வஸ்துவாய் அன்றோ போயிற்று
நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி யுபேஷித்து விஸ்மரித்து இருந்த நீ
இன்று என்னை விஷயீ கரிக்கைக்கும் முன்பு என்னை யுபேஷிக்கைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் ஸர்வேஸ்வரனான நீ
என்னைப் பரமபதத்தில் கொண்டு போவதாக விரைகிறபடி கண்டனுக்கு
இன்று என் அளவு அல்லாதபடி த்வரிக்கிற நீர் இதுக்கு முன்பு நெடு நாள் விட்டு ஆறி இருக்கக் கூடாது

இதுக்கடி ஏது என்ன
நத்வாமி ஹஸ்தாம் ஜாநீதே -என்று நடுவே சிலர் சொல்ல வேண்டும்படி யாய்த்து –
எழுந்து அருளி இருந்த இடம் அறியாமையாலே யாறி இருந்தார் அத்தனை போக்கி
அறிந்தால் ஒரு க்ஷணம் ஆறி இருப்பாரோ

இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேணுமோ
கமல லோஷண -உன்னுடைய கண் அழகு அன்றோ பிரமாணம்
ராம -அவரை அறியாது ஒழிய வேணுமோ
ந ஜீவேயம் க்ஷணம் அபி விநா தம் அஸி தேஷிணம் என்று க்ஷணம் அபி என்று இறே அவர் இருப்பது
ராம கமல லோஷண -அன்றிக்கே யார் எதிராகக் கண்ணிலே சிவப்பும் சீற்றமும் எல்லாம் என்னுதல்

உயர்வற உயர்நலம் யுடையவனான நீ –
இன்று என்னைப் பொருளாக்கி
அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்துவாம் படிப் பண்ணி
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றார் இறே

தன்னை
சத்துக்களுக்கு ஸ்ப்ருஹ ணீயனான தன்னை

என்னுள் வைத்தான்
தன்னைப் பிறருக்கு அவகாசம் இல்லாதபடி பண்ணி –
பொருள் இல்லாத என்னைப் பொருளாக்கினான் என்றார் இறே
நித்ய ஸூரி ஸேவ்யனான தன்னை முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான்

இது நீர் அறிந்தபடி என் என்ன -மயர்வற மதிநலம் அருள -அத்தாலே அறிந்தேன் –
என்னுடைய அவித்யாதி கர்மங்கள் வாஸனா ருசி பிரகிருதி சம்பந்தத்தால் வரும் புண்ய பாப கர்மங்கள்
ஸவாசனமாகப் போய் உன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானமானது அதி பிரகாசமாக உன்னைக் காட்டக் கண்டேன்

அத்யந்தம் ஸூலபனாய் ஞான சாஷாத்காரமானது ப்ரத்யக்ஷம் போலே தோற்றுகையாலே மடி பிடித்துக் கேட்கிறார்

அன்று -என்கிறது
விசேஷ கடாக்ஷம் பெறுவதற்கு முன்புள்ள நாள் எல்லாவற்றையும் சொல்கிறார் –
இன்று -என்கிறது
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவதற்குப் பின்பு யுண்டான காலத்தை –

என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
பரதந்த்ரனான என்னைப் புறம் போகப் பண்ணிற்று என் செய்க்கைக்காக –
பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை
இழந்த நாள் இழந்ததும் அவனாலே என்கிறார் –
பரதந்த்ர வஸ்து செல்ல வற்றதோ வர வற்றதோ

நீயோ அயர்வறும் அமரர்கள் அதிபதி -சற்றும் அசாரம் அமலம் அனுபவிப்பார் த்ரிபாத் விபூதியாய்
அவ்வளவு அன்றிக்கே
லீலா விபூதிக்கு நிர்வாஹகரான தேவர் த்ருதீய விபூதியான குன்று எனத் திகழ் மாடங்கள் சூழ்
திருப்பேரனாக எழுந்து அருளிற்றும் எனக்காகவே அன்றோ –

மலைகளைச் சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள மாடங்கள் சூழ்ந்த திருப்பேரரான
அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
அத்யந்தம் ஸூ லபனாய்க் கொண்டு திருப்பேரிலே எழுந்து அருளினது

இப்படி மதிப்பனான உனது துயர் அறு சுடர் அடி தொழுது
உணர்த்தலுற்றேன்
உன் திரு உள்ளக் கருத்தைக் கேட்கலுற்றேன்
என் மனஸ் ஸூ தெளியும்படி
ஓன்று எனக்கு அருள் செய்ய
முன்பு கைவிட்டதற்கு ஹேது சொல்லவுமாம்
இன்று என்னை விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்லவுமாம்

உணர்த்தலுற்றேன்
இதுக்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளத்திலே படும்படி
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன் -என்ன

இது நாம் சொல்ல வேணுமோ -நீரே அறியீரோ என்றான்

அடியேன் அறியேன் சர்வஞ்ஞரான தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்கிறார்

ஆனால் நாம் உம்முடைய நெஞ்சுள் புகுந்த இடத்தில் சம்மதித்து இருந்தீர் -அத்தாலே காணும் என்றான்

அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலேன் -என்கிறார்

அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு என்னை ஆதரித்தீரே என்றான்

மருவித் தொழும் மனமே தந்தாய் -என்று அதுவும் தேவரீரே மயர்வற மதி நலம் அருளிச் செய்தது
அத்தனை அன்றோ என்றார்

ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மோடே ஓக்க விஷயாந்தரங்களிலும் விரும்பாது இருந்தீரே என்றான்

என்னைத் தீ மனம் கெடுத்தாய் என்று அதுவும் தேவரே அன்றோ என்றார்

இவை ஒன்றுமே இல்லையே யாகிலும் நாம் கொடுத்த மதி நலத்தை வளர்த்துக் கொடு போந்தீரே என்றான்

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்று அதுவும் தேவரே அன்றோ என்றார்

இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான்

இதற்கு ஈஸ்வரன் சொன்ன உத்தரம் ஏது என்று பட்டரை ஜீயர் கேட்க
காலாலே தரையைக் கீறிக் கவிழ்ந்து நிற்கும் அத்தனை போக்கி வேறே உத்தரம் உண்டோ
என்று அருளிச் செய்தார்

அதாவது
முன்பு ருசி இல்லாமையாலே என்ன மாட்டான்
இப்போது சாதன அனுஷ்டானம் பண்ணுகையாலே என்ன மாட்டான்

ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு வைஷம்யாதிகள் வரிலோ
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரிலோ -என்ன
வாராது
அத்வேஷமும்
இச்சையும்
பிறக்கைக்குத் தான் கிருஷி பண்ணி அது பக்குவமாம் அளவும் பார்த்து இருந்தவனாகையாலே –

அவன் கேட்டதுக்கு ஒரு மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே அறிந்தோம் இதற்கு
இங்கனே யாக வேணும் என்று பார்த்தார்
தன்னுடைய ஸ்பர்சம் பிரதிகூலமாகை தவிர்ந்து விலக்காத சமயம் பார்த்து இருந்தானாதல் –
தன்னை ஒழிந்தவற்றில் சாதன புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆதலாக அடுக்கும் என்று பார்த்தார் –

ஆனால் இது தன்னை அவனுக்கு உத்தரமாக அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில்
சைதன்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷத்தை ஸாதனம் என்ன மாட்டானே
சைதன்ய ப்ரயுக்தமான ருசி தானும் ஸ்வரூப அதிரேகி அன்றோ –

உபாய பாவம் தன் தலையிலே யாயிற்றே
நெடுநாள் இவர் தலையிலே பழியிட்டு இழந்த நாம் எத்தைச் சொல்லுவது என்று பேசாதே இருந்தான்
ஹ்ரீரேஷா ஹி மமாதுலா என்று ஆரண்ய காண்டத்தில் ரிஷிகள் முன்பு பெருமாள் வெட்கித் தலை
குனிந்தால் போலே பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து நிற்குமவன் இறே
இவர் தாமே எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி யாயிற்று இவன் நிலை

உம்முடைய ப்ராப்யம் பெற்றீராகில் உமக்கு இந்த வழி ஆராய வேணுமோ
அதுவே அமையாது என்ன

அதுவே அமையும் என்கிறார்
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்து அன்று இறே விடாய்த்தவன் இளநீர் குடிப்பது என்ன
உகந்து துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

———-———

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

இதில்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போம்படியையும்
அங்கு உண்டான ஸத் காரங்களையும்
அவ்வழியாலே போய்ப்புக்கு அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு
அடியார் குழாங்களுடனே இருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார் –

——–——–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

உயர்வற என்கிற பாட்டை இப் பாட்டு விவரிக்கிறது -அது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் சாதனாந்தரங்களை அனுஷ்ட்டித்து
ப்ரயோஜனாந்தரங்களிலே சுவர்க்கம் நரகாதிகளுக்குப் போகிற
யாம்ய கதிகளாலே புக்கு அனுபவித்து புக்கு மீண்டும் மீண்டும் இப்படித் திரியா நிற்க

அவர்களிலும் கடை கெட்ட கூவிலும் கை கழிந்த என்னைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே
அபுனரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைத் தந்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்ப் புகுகையும் அங்குள்ளார் ஸத்கரிக்கப் போய்
அங்கு அடியாரோடே இருந்தமையும்
உயர்நலம் யுடையவன் எவன் அவன் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவிக்கிறார்

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் நித்ய ஸூரிகளுடைய திரளிலே சேர்ந்து
அவர்களுக்குப் பிரியகரராய் இருப்பார்கள் என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -மயர்வற மதிநலம் அருளினான் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -வந்தவர் எதிர் கொள்ள
ஞானானந்த ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன் பிராட்டிமாரொடும் நித்ய முக்தரோடும் கூட வந்து எதிர் கொள்ள

ப்ராக்ருதனானவன் அப்ராக்ருதனாய் வருகிற படியே என்று அத்யாச்சர்யத்துடன் வந்து
எதிர் கொண்டு அழைத்துச் சென்று

மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே

அந்தமில் பேரின்பத்து அடியாரோடு
யாவதாத்மபாவியாய் நிரதிசய ஆனந்த யுக்த்ராய்க் கொண்டு இருப்பார்கள்

அநந்த கிலேச பாஜனமான சம்சாரத்திலே ஸூகம் என்று பிரமிக்கும் அத்தனை -துக்கமே யுள்ளது –
பாண்டு ஒருவன் மேல் அம்பை விட -சம்சாரத்தில் ஆயிரம் கூற்றில் ஒரு க்ஷணம் ஆயிற்று ஸூகம் யுள்ளது –
அத்தைப் புசிக்க ஒட்டிற்று இல்லையே என்றான் இறே

அடியாரோடு இருந்தமை –கொந்தலர் இத்யாதி
நித்ய வசந்தமான சோலையை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த
போக்கிலே ஒருப்பட்டவாறே திரு நகரி தொடங்கி நித்ய விபூதி அளவும் சோலை செய்தது

சந்தங்கள் ஆயிரத்தும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்று சரணாகதியானது
ஆயிரம் சாகைகளாய் கொண்டு ரஷிக்க

சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார்
சந்தஸ்ஸூக்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல்
சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல்

இவை வல்லார் முனிவரே
இத்தை அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண ஏக தாரகராய் அனுபவித்துக் கொண்டு
அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்கள் போலே ஆவார்கள் –

——————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

கீழில் பிறந்தது ஞான அனுசந்தான மாத்ரமாய்ப் பின்பும் இவ்வுடம்புடனே கூடி இருக்கையாலே
பிரிவாற்றாமை யோடே கூப்பிட்டுத்
திருவாணை இட்டுத் தடுத்துப்
பர பக்தி தலை எடுத்துச்
சரணம் புக்கு
தம்முடைய பிரகிருதி சம்பந்தத்தம் அற்று
எம்பெருமானைப் பெற்று க்ருதார்த்தராய் அருளிச் செய்கிறார் –

———–——–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

உயர்வற என்கிற பாதத்தை இதுவும் விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் காம்ய பலங்களைப்
புஜித்து ஸம்ஸரிப்பார்கள்-
இவர் அங்கன் அன்றிக்கே நிர்ஹேதுகமாக அருளப்பெற்றவர் ஆகையால் ஞான ஆனந்தங்களாலே
உயர்நலமுடைய எம்பெருமானுக்கு இவ்வபேஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்துப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட
இவர் பிரார்த்தித்த படியாகவே பரிபூர்ணனாகக் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அபரிச்சேத்யமான ப்ரக்ருதி ரஹத்வத்திலும் ஆத்ம தத்துவத்திலும் உன்னுடைய ஸங்கல்ப ஞான ரூபத்திலும்
பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒருபடி முடியப் பெற்றேன்

இனி இல்லை என்னும்படி என்னை விடாய்ப்பித்து அதுக்கு அவ்வருகான விடாயை யுடையையாய்க் கொண்டு
என்னோடே கலந்து உன்னுடைய விடாயும் ஒருபடி கெட்டதே என்கிறார்

உயர்வற உயர் நலம் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
இப்போது ப்ரக்ருதி புருஷர்களைச் சொல்லுகிறது -தம்முடைய அபி நிவேசம் பெரியவற்றிலும் பெரிது என்கைக்காக –

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற வத்தாலே மேல் மேல் என பரபக்தி பரஞான பரமபக்திகளாய்ப் பெருகி வருகிறபடி
அவற்றுக்கு ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லாமையால் அவ்வளவும் சொல்லுகிறது

ஸ்வ கார்யமான மஹதாதிகளைப் பத்து திக்கிலும் புக்கு எங்கும் ஓக்க வியாபித்து நித்யமாய் அபரிச்சேத் யமாய்
சேதனருக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நீளமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மா வானவனே

அருளினது பக்தி ரூபா பன்ன ஞானம் ஆகையால்
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
அத்தையும் வியாபித்து அதில் காட்டில் பெரியதாய் -அதுக்கு நியாந்தாவாகையாலே மேலாய்
விகாராதிகள் இல்லாமையாலே அபரிமாணமாய் நிரவதிக தேஜோ ரூபமான ஆத்மவஸ்துவுக்கு ஆத்மா ஆனவனே

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-
அவை இரண்டையும் வியாபித்து -அவற்றுக்கு நிர்வாஹகமாய் -ஸங்கல்ப ரூபமாய் -விசத தமமாய்
விசததமம் ஆகையாவது யுகபத் ஏவ சாஷாத்கார ரூபமாய் இருக்கை
இப்படி ஸூக ரூபமான ஞானத்தை யுடையவனே -என்று ஸங்கல்ப ஞான ரூபத்தைச் சொல்லுதல்

சுடர் ஞான இன்பம் என்று
ஸூக ரூபனாய் பிரகாச ரூபனுமாய் ஆனவனே என்று எம்பெருமானைச் சொன்னதாகவுமாம்

இப்படித் தத்வ த்வயத்துக்கும் அவ்வருகான உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனஸ்ஸினுடைய அவாவானது
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
தத்வ த்ரயத்தையும் விளாக்குலைக் கொண்டு அவை குளப்படியாம் படியான
என்னுடைய அபிநிவேசத்தையே –
அதிலும் பெரிய உன்னுடைய அபிநிவேசத்தைக் காட்டி வந்து ஸம்ஸ் லேஷித்தாயே
என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஓயும்படி பண்ணிற்றே

அங்கே -பரதம் ஆரோப்யே முதித பரிஷஸ்வஜே என்று நீ மீண்டும் புகுந்து ஸ்ரீ பரதாழ்வானை
மடியில் வைத்து உச்சியை மோந்து உகந்து அணைத்தால் போலே யாயிற்று
இவருடைய விடாய் கெடும்படி கலந்து –

——-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

உயர்வற என்கிற பாட்டை இதுவும் விவரித்து நிகமிக்கிறது –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை கதான -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் –
உயர்வற உயர்நலம் யுடையவனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
ஸுந்தர்யாதி விசிஷ்டமான நித்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய் –
அபரிமித திவ்ய பூஷண பூஷிதனாய் -ஸர்வ அவயவ உபேதனாய்
சர்வ ஆயுத தரனாய் -லஷ்மீ பூமி நீளா நாயகனாய் –
அஸ்தானே பய சங்கிகளான அநந்த கருட விஷ்வக் சேனாதிகளாலே அனவரத பரிசர்யமாண சரண நளினனாய்
ஸ்ரீ வைகுண்ட ஸர்வேஸ்வரனாய் நித்ய முக்த அநுபாவ்யனாய் இருக்கிறவன்
ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்மாதிகளுக்கு அந்தராத்மாவாய் -தன்னைக்காண வேணும் என்று விடாய்த்து
ஆஸ்ரயித்தார் களுடைய விடாய் தீர ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் காண வேணும்
என்று விடாய்த்துக் கூப்பிட்டு -அவனைப் பெற்று நிர்த்துக்கராய் நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகரான
ஆழ்வாருடைய பக்தி பலாத்கார பூர்வகமாகப் பிறந்த ஆயிரம் திருவாய் மொழியும்

அவற்றிலே வைத்துக் கொண்டு கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரமபக்தியாலே பிறந்த
அந்தாதியான இத்திருவாய் மொழி வல்லார் ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே
அயர்வறும் அமரர்களோடே ஒப்பர் என்கிறார்

உயர்வற என்கிறது அவாவற என்கிறது
உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவாவறச் சூழ் அரி
ஞான ஆனந்தாதி கல்யாண குண விசிஷ்டனாய்
தத் வியதிரிக்தங்களுக்கு ஸ்வாமியாய்
ஸர்வ அபேக்ஷித ப்ரதனான ஸர்வேஸ்வரனைத் தம்முடைய அபிநிவேசம் கெட வந்து கலந்த படியால்
வேறொரு விசேஷணம் இடாதே அது தன்னையே சொல்லுகிறார்

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -அவா வறச் சூழ் அரி என்று திரு நாமம் ஆயிற்று

உயர்வற என்றது -அயனை அரணை
ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாத்மாவாய் மறைந்து நின்றவன்
யாவன் ஒருவன் யவன் அவன்

இப்படி விபூதிமானான உயர் நலம் யுடையவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவனை அவாவறச் சூழ்
அரி என்றது தானே ரூபகமாய்த்து

இப்படிச் செய்கைக்கு ஹேது என் என்னில்
மயர்வற மதி நலம் அருளினன்
திரிமூர்த்தி சாம்யக் கூழ்ப்பை அறப்பண்ணி தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன
ஞானம் மிகுந்த அவாவாய் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகு யாயிற்று

அவா வறச் சூழ்கை யாவது
தன்னைக்காண வேணும் என்று விடாய்த்த ஆஸ்ரிதருடைய விடாய் தீர ஸம்ஸ் லேஷிக்கை

அயனை அரனை
என்கிற இஸ் ஸாமா நாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாதிகள் பக்கல் ஈஸ்வரத்வ சங்கையை அறுக்கிறார்
அவர்களுடைய சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனமாகையாலே அவர்களுக்கு
பாரதந்தர்யமே ஸ்வரூபம் –
நிர்வாஹகத்வம் கர்மாதீனமாய் வந்தது அத்தனை

இஸ் ஸாமா நாதி கரண்யத்தில் ஞானம் இன்றியே எளியராய் இருப்பார்க்கு நிர்வஹிப்பதும் சில புடைகள் உண்டு
அயனை அரனை யவாவற்று யரியை யலற்றி யவா வற்று வீடு பெற்ற என்னுதல்

அயனை அரனை அவா வறச் சூழ் அரியை அலற்றி அவா வற்று வீடு பெற்ற என்னுதல்

அரியை அலற்றி யவா வற்று வீடு பெற்ற என்னுதல்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
அலற்றுதல் ஆகிற அயர்வற -அவா வற -அமரர்களான நித்ய ஸூரிகளாகிற அடியார்கள் குழாங்களாகிற
நித்ய ஸூரிகள் திரளிலே வைத்து
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -என்கிற படியே

வீடு பெற்ற
கூப்பிட்டு அவனைப் பெற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராகையாலே நிர்த் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும்
இவருடைய ஸ்ரீ மைத்ரேய பகவான் அவா -உபாத் யாயராக நடத்த நடந்த ஆயிரம்

ஆழ்வாருக்குப் பின்பு நூறு ஆயிரம் கவிகள் போர யுண்டாயித்து
அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசி அற்றது
அவற்றை விட்டு இவற்றைப் பற்றித் துவளுகைக்கு அடி இவருடைய அபி நிவேசம் வழிந்து புறப்பட்ட சொல்லாகை இறே

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி மயர்வற மதி நலம் அருளின பக்தி ப்ரேம அதிசயத்தாலே
பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலே இப்பத்தும்

முடிந்த அவாவில் இப்பத்து அறிந்தார்
இவர் அவாவால் தரிக்க ஒண்ணாமையாலே பொங்கி வழிந்தது
அனுபவம் பொங்கி வழிந்த சொல்லாய்த்து இப்பிரபந்தம்

இவ்வவாவுக்கு உதவிற்றிலன் ஆகில் ஈஸ்வரனும் சேதனன் இன்றிக்கே ஒழியும்

சூழ் விசும்பு அணி முகிலுக்குக் கீழே பரபக்தி யாலே சென்றது
சூழ் விசும்பு அணி முகில் பர ஞானத்தாலே
இத்திருவாய் மொழி பரம பக்தியாலே
பகவத் ப்ரஸாதம் பாதியும் தங்கள் பாதியுமாகச் சொல்லும் அவர்களுக்கு சரீர அவசானத்திலே
இப் பரபக்த்யாதிகள் யுண்டாம் –

இவர் அடியிலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே எழுந்து அருளி இருக்கச் செய்தே யுண்டாய்த்தன
கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தியினுடைய ஸ்தானத்திலே
சர்வேஸ்வரனை அருளின அருள் அடியாகப் பிறந்த பரபக்த்யாதிகள் இறே இவரது

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
இத்தை அறிந்தவர்கள் ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்

பிறந்தே உயர்ந்தார்
ஸர்வேஸ்வரனுடைய அவதாரத்தோ பாதி இவர்கள் பிறப்பும்

—-

அஸ்மத் குருப்யோ நம
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சந்திரகிரி ஐயன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மன் நாராயண ஐயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

ஆங்கீரஸ வருஷம் மார்கழி மாதம் 26 தேதி
உயர்வற உயர்நலம் யுடையவன் என்கிற முதல் பாட்டின் விவரண சதகம் என்று
திரு நாமமான வாசக மாலையை
அபர் யாப்தன் திருவடிகளிலே ஸந்தர்ப்பமான மாலையைச் செய்து
அடிமை செய்து அருளினான் திருக்கோனேரி தாஸ்யை
என்று இவர் தாமே அருளிச் செய்து நிகமிக்கிறார் –

——-———–————————

பத்தாவது பத்து விவரணம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ​மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஒன்பதாவது பத்து விவரணம்- –

February 14, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

கொண்ட பெண்டீரிலே
ஸோ பாதிக பந்துக்களை விட்டுத் தன்னைப் பற்றினாரையும் ததீய சேஷத்வத்தில் நிறுத்துமவன்
நிருபாதிக பந்துவான ஸர்வேஸ்வரனைப் பற்றுங்கோள் என்று அருளிச் செய்கிறார் –

—————

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறார் -எங்கனே என்னில் –
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக பார்யா புத்ராதிகளோடே வாழ்வும்
சாதன அனுஷ்டானங்கள் பண்ணி ஸ்வர்க்காதி போக்யங்கள் புஜிப்பாருக்கும்
ஸர்வேஸ்வரனையே ஆஸ்ரயித்துப் பெற வேண்டும்
பெற்றாலும் அல்ப அஸ்திரம் யாகையாலே நிலையற்று இருக்கும் –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் –
ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனான ஸர்வேஸ்வரன் தான்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
தானே உபாயம் என்னும் அர்த்தத்தை ப்ரதிஷ்டிப்பைக்காக அவதரித்த கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
கிருஷ்ணனை ஒழிய வேறு சரணமாவார் இல்லை -என்னும் இவ்வர்த்தம் நிலை நிற்கைக்காக
இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் அதுக்கு உறுப்பாக

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
பூ பாரத்தைப் போக்குகைக்காகவும் -திரு அவதாரம் பண்ணினான்

ஆனபின்பு நீங்களும்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
நும் உடைமை என்று நினைந்து இருந்தன யுண்டாகில்
கடுக அவன் திருவடிகளில் சேஷத்வேந த்ருடமாக சமர்ப்பியுங்கோள் –

உண்டேல் -என்றது ஸ்வ பக்ஷத்தில் இல்லை
அவர்களுடைய அந்யதா பிரதிபத்தியாலே வந்தன யுண்டாகில் -என்கை

நீர் இல்லை என்று சொல்லுகிறவை என் கொண்டு என்ன
ஸ்ருதி ப்ரதிபாத்யனான கிருஷ்ணன் மயர்வற மதிநலம் அருளினன்
அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ப்ரத்யக்ஷ ஸமா நாகாரமாய் நின்று –
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று அருளிச் செய்து
தன்னைத் தொட்டுக் காட்டக் கண்டு சொல்கிறேன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரி ஸேவ்யனானவன்
நித்ய ஸம்ஸாரிகளும் உஜ்ஜீவிப்பைக்காக ஸாத்ய உபாயங்களை சவாசநமாக விட்டு
ஸித்த உபாய பூதனான என்னை ஒருவனுமையே பற்றி நிர்ப்பரனாய் இரு என்றால் அதுவே இறே செய்வது –

எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி
இது தான் அவனுடையதோ நம்முடையதோ -என்று விசாரிக்க வேண்டா
உங்களோடு உங்கள் உடைமையோடு வாசியற அவனுக்கு சேஷம்

மற்று இல்லையே–
அவன் அன்றி மற்று இல்லையே
உங்களுடைய பாரத்தில் கர்த்தவ்ய அம்சம் அடைய உங்கள் தலையிலே கிடக்கிறது இல்லை –
எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கிறது என்னுதல்

மற்றில்லை
பல ஸித்திக்கு உடலான ஸாதனம் -அவனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது எழுகை தவிர வேறு இல்லை
உங்களுடைய ஆத்மாத்மீயங்களிலே மமதா புத்தி தவிருகையே அவனுக்குத் துயர் தீர்ந்தானாய் விளங்குவது
சமிதை பாதி சாவித்ரி பாதி யாக நீங்களும் ஒரு தலை கூட்டுப்பட வேண்டியது இல்லை
அசேதனக் கிரியைகளோ பர ப்ரஹ்மத்துக்குக் கூட்டுப்படுவது என்று அறிந்து
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று
தம் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்தார் யாய்த்து –

——–——-

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

பண்டை நாளில்
திருப்புளிங்குடியிலே சென்று புக்கு அவனைக் கண்டு எல்லா பந்து க்ருத்யமும்
பண்ண வேணும் என்று அவனை இரந்தார்

————————

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உயர்வற
தேவர்கள் காலிலே குனிந்து அந்நிய சேஷ பூதராய் உயர்வு அற்றார்கள்

அவர்களில் நானும் ஒருவனாய் இருக்க எனக்கு உயர்நலம் யுடையவன் எவன் அவன்
பரம ஆனந்த ஸ்வரூபனாய் வேதாந்த வேத்யனாய் ஸ்ரீ யபதியானவன் நிரதிசய போக்யமான
திருவடிகளிலே நானும் வந்து அடைந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல் நீ இங்கே வருதல் செய்ய வேணும் என்று
அர்த்திக்கும் படி யானேன் என்கிறார் –

உயர் நலம் யுடையவன் -கொடு வினைப் படைக்கு அளவனான -உனக்கு சேஷமாய் வைத்து
பிரதிகூலித்தவர்கள் பக்கல் நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறி ஆயுதம் எடுக்க வல்லையாய்
அவன் மாட்டாதது சிலரை அழியச் செய்கை யாய்த்து
யதிவா ராவண ஸ்வயம் என்னுமவன் இறே

கடலை அணை செய்து ஊரைச் சூழப் போந்து பின்னை அங்கதப் பெருமாளைப் போகவிட்டு
கையிலே வந்து அகப்பட்டவனை போக விட்டு
கச்ச அநு ஜாநாமி -என்று தப்ப விட்டது இன்னும் ஒருக்கால் அநு கூலிக்குமோ என்று
நாம் முடிந்தே போம் அத்தனை -என்றதிலே முதிர நின்ற பின்பும் –
கண்ணும் கண்ணீருமாய் இறே நின்று கொன்றது
இவர்கள் பண்ணும் ப்ராதிகூல்யத்தாலே அழியச் செய்யும் அத்தனை போக்கித்
தானாக அழியச் செய்ய மாட்டானாய்த்து

அமரர் இத்யாதி
அசூரர்களாலே தேவர்களுக்கு உண்டான துக்கம் தீரும்படி அசூரர்களுக்குத் துக்கத்தை விளைக்கும்
கருவினை நஞ்சே -என்னுடை அமுதே

கர்ம விஷம் கலந்த உமக்கு ரஸித்தபடி என் என்ன ஹேது சொல்கிறார்
மயர்வற மதிநலம் அருளினன்-இதர விஷயங்களில் எப்பேர்ப்பட்ட ருசியில் மயர்வு அற்று
அபர்யாப்த்த அம்ருதமான போக்யத்தையே ரசிக்கும்படி பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிறப்பித்து
இப்படி நிர்ஹேதுகமாக அருளுகையாலே அறிந்தேன்

கடு வினை நஞ்சே
அப்போது சடக்கென முடிக்க வற்றாய் ப்ரத்ய ஒவ்ஷதம் இல்லாத நஞ்சானவனே
அந்நஞ்சு தானே இவருக்கு அம்ருதமாய் இருக்கிறபடி
தேவர்களுடைய உப்புச்சாறு அன்று
அயர்வறும் அமரர்களுக்கும் அபர்யாப்த்த அம்ருதமானவனே இவருக்கும்
அதிசய அம்ருதமாய் இருக்கிற படி

இப்படி அவர்களுக்கு ரசிகனானவனே
கலி வயல் திருப்புளிங்குடியிலே –சந்நிஹிதனாய்த்து
இவ் வம்ருதத்துக்குக் கடல் கடைதல் ஸ்வர்க்கத்துக்குப் போதல் செய்ய வேண்டா
திருப்புளிங்குடியிலே சந்நிஹிதனாய்த்து இவ்வம்ருதம்

கலி வயல் -சம்ருத்தமான வயல் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அத்தை விஸ்மரிக்கும் படி பரமபதத்தில் சம்ருத்தமான தேசம்

எம்மிடர் கடிவானுடைய துயர் அறு சுடர் அடி
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றும் நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
ஒப்பு இன்றிக்கே இருக்கும் பகவத் தத்துவமும் ஒப்பன்று
அஸி தேக்ஷிணா -என்று ஏற்றமாகவே இருக்கும்
மற்றை நிலமகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை

அவர்கள் பிடிக்கும் மெல்லடியை
அவர்களும் திருவடியைப் பிடிக்கப் புக்கால் பூத்தொடுவாரைப் போலே கன்றுகிறதோ என்று
கூசித் தொட வேண்டும் படி யாய்த்து ஸுகுமார்யம் இருப்பது

அப்படிப்பட்ட திருவடிகளைக் கொடுவினையேனும் பிடிக்க
கண்கள் சிவந்து -க்குப்பின் இவருக்கு நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே
அவர்களும் ஸந்நிஹிதராய் -பிராப்தியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே என்று
பாவியேன் என்பாரைப் போலே கொடு வினையேன் -என்கிறார்

நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான உன் துயர் அறு சுடர் அடி தொழுது திருவடி வருடி இருக்கும்படி
கூவுதல் வருதல் செய்து என் சத்தையை நோக்குகை
ஒரு நாள் அங்கே அழைத்தல் இங்கே வருதல் செய்து அருள வேணும் –

முற்பட வருதல் என்றலர் ஆயிற்று ஸமுதாயத்தைக் கலைக்க ஒண்ணாதே -என்று
என் மனஸும் நானுமாக அபேக்ஷை யுண்டாய் இருக்க
அவனும் அபேக்ஷை யுண்டார் பக்கல் விட்டு இருக்க மாட்டாதவன் ஆகையால்
அவர்களையும் கூட்டிக்கொண்டு வருவாய் என்னும் அத்தைப் பற்றச் சொல்கிறார் –

————–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

ஓர் ஆயிரத்தில்
உம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்கிறோம்
நான் நாராயணன் -ஸர்வ ஸக்தி யுக்தன் -என்று தன்னோடு உண்டான சம்பந்தத்தைக் காட்டக் கண்டு
அவனுடைய சீல வத்யையிலே ஆழங்கால் படுகிறார் –

——-———–

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தத்து அளவாக முன்னை வினை பின்னை பிராப்தம்
என்கிற ஆத்ம க்ஷய ரோகத்துக்கு
எருத்துக் கொடியுடையோனும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் மருந்து அறியாது
இருக்குமவர்கள் ஆகையாலே உயர்வற்று இருப்பார்கள் -உயர்வற என்றது

உயர்நலமுடையவன் எவன் அவன் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –
ஞான ஆனந்தாதிகளாலேயும் ஞான சக்திகளாலேயும் சீலாதி குணங்களாலேயும்
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்றும்

பெரும் தேவர் -நித்ய ஸூரிகள் அனுபவிக்கிற அபர்யாப்த்த அம்ருதம் சாத்மிக்கைக்காக
மருந்தும் பொருளும் அமுதமும் தானே யானவன்
விஷ பூரணமான ஸம்ஸார ஸகாரத்துக்கு மாற்று மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
பஜஸ்வமாம் என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ என்றும் விதித்த பேஷஜங்கள் காட்டின ஸர்வேஸ்வரன்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
நம்மையும் அவர்கள் நடுவே வைக்குமவனான மருத்துவன் ஆனவனை விடாதே கிடாய் என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

மருந்தே -உன்னுடைய அனுபவத்தாலே கண்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு வர்த்தகனானவனே

இப்படிச் சொல்கிறது தான் எத்தாலே என் என்ன –நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே
உன்னைப் பெறுகைக்கும் ஸம்ஸாரமாகிற மஹா ரோஹம் அறுகைக்குமாக
நீ அருளினை பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறிந்தேன்

பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -பரன் என்றது
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகள் திரள் திரளாகக் கூடி
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே யாய்த்து அனுபவிக்க இழிவது

பிதற்றும் ஜ்வர ஸந்நிபதிதரைப் போலே அக்ரமமாக கூப்பிடா நிற்பர்கள் -அதாவது
அவர்களுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்த உபகாரகன் –

கருந்தேவன் -காள மேக நிபாஸ்யாம மாய் திவ்யமான வடிவை யுடையவன் -எவன் அவன்
கருந்தேவன் எம்மான்
அவ்வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
நித்ய முக்தருக்குப் படி விடும் வடிவைக்கிடீர் எனக்கு உபகரித்தது
அதற்கும் மேலே ஒரு பதம் அருளினான் -துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி
மருந்து -அமுதமும் தானேயாம்படி என்னையும் என் நெஞ்சையும் விஷயீ கரித்தவன்

கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–
முன்பு பெற்றதற்கு மேலே பரமமான பதம் தந்து அருளினான் -தொழுது எழும்படி பண்ணினான்

தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–
அடியேன் அடைந்தேன் முதல் முதல் முன்னமே

கண்ணன் -தன் நிலை குலையாமல் நின்று உபகரிக்கை அன்றிக்கே அவதரித்து
மாமேகம் சரணம் வ்ரஜ என்று அபகரித்து அருளினவன் –

அவன் தன்னுடைச் சோதியான விண்ணுலகமான பரம பாதத்தையும்
வானவர் நாட்டையும் கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்று உககைக்கும்
அனுபவிக்கைக்குமாக பரவசமான வ்யாமோஹத்தாலே சோரேல் கண்டாய் மனமே

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -அவனை உடம்பு வெளுக்கப் பண்ணாதே
அவனுக்கு பூசும் சாந்தில் படியே அவன் உகப்பே செய்து இரு என்கிறார் –

———-——-

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

மையார் கருங்கண்ணியில்
இப்படி சீலவானன் ஆனவன் தானே வந்து முகம் காட்டாமையாலே பெரிய பிராட்டியாரும் தானுமாய்
இருக்கிற இருப்பை அனுசந்தித்துப் பெரு மிடறு செய்து கூப்பிட
ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு வந்து உதவினால் போலே நடுவே வந்து தன்னைக் காட்டி
அருளைக் கண்டு க்ருதார்த்தரானார் –

——–

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஸ்ரீ யபதியாய்
ஆனந்தாதி கல்யாண குண பூஷிதனானவனைப்
பெண்ணுளான் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணறா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவனை நான் அழைத்துக் கூப்பிட்ட
விடாய் எல்லாம் கெடக் காணப் பெற்றேன்

என் கண்ணிணை யார
காணக் கருதும் கண்ணே -என்ற கண்களின் விடாய் கெடக் கண்ணிணை யாரக் கண்டு கொண்டது –
கலியர் வயிறார யுண்டே என்னுமா போலே கண்ணின் பசி தீர்ந்த படி

நீர் கண்ட படி என் என்ன -அவன் மயர்வற மதிநலம் அருளினவன் -அந்த ஞான ப்ரேமாத்மகமான
என் கண்கள் இரண்டும் களித்து
இந்த ஸ்வரூப ஞானம் அடியாக மயர்வற பண்டை வினையாயின பற்றோடே அறுத்து மறுகின நெஞ்சு களித்து
பண்டை வினை -ப்ராரப்தமான கர்மங்களை ஸவாசனமாகப் போக்கி இவ்வுகப்பிற்கு இடைச்சுவரான
அஹங்காராதி ஸமஸ்த விரோதிகளையும் ஸவாசனமாகப் போக்கினவன்

பரமபதத்திலே அயர்வறும் அமரர்கள் அதிபதி யான பிராப்ய பூதனுக்கு –
அண்டத்து அமரர் பெருமான் அடியனாகப் பெற்றேன்
ப்ராப்ய பூதனானவன் துயர் அறு சுடர் அடி தொழுது அடியனாயத் தொண்டருக்கு
அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன்
என்னளவின்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்

பெற்ற பேற்றின் கனம்-நானும் என் பரிகரமும் ஜீவித்து விருந்தும் இட்டேன் என்பாரைப் போலே
சொல்மாலைகள் சொன்னேன்
ஸப்த ஸந்தர்ப ரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணப் பெற்றேன்
ததீய சேஷத்வ பர்யந்தமான பேற்றைப் பெற்றேன்

பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியாலே தாமதியாக வந்தது ஓன்று அல்ல
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே
ஸர்வேஸ்வரனாலே விஷயீ க்ருதனானேன் -தொழுது எழு என் மனனே என்கிறார் –

———–———

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

இன்னுயிர்ச் சேவலிலே
கீழ் பிறந்தது ஞான ஸாஷாத் காரமாய் பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அது கிடையாமையாலே அவசன்னராய்
ஸ்மாரக பதார்த்தங்களாலே நலிவு படுகிறபடியை அருளிச் செய்தார் –

———–———

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் இதர விஷய ப்ராவண்யங்களாலே
உயர்வு அற்றார்கள்
இப்படி அவர்கள் வ்யாமோஹித்துப் படுகிற அலமாப்பைக் கண்டு தமக்கு அவற்றில் ப்ராவண்யம் அற்றாலும்
பகவத் பிராப்தி பிறவாமையாலே இன்னம் மறுவலிடில் செய்வது என் என்று
உங்கள் வ்யாமோஹத்தைக் காட்டி நலியாதே கிடி கோள் என்று அவற்றை நிஷேதிக்கிறாள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -நித்ய ஆனந்த ஸ்வரூபனானவன் –
என் ஆத்மாத்மீயங்களை அபஹரித்தான் ஆனபின்பு நீங்கள் நலிகிறது என்

இன்னுயிர்ச் சேவலின் தன்னினமாய் இருந்து நலிகிற வற்றைக் குறித்து
அவன் தான் என்னை முடிகைக்கு நல் விரகு பார்த்தான்
அந்தரம் நின்று உழல்கின்ற பூவைகாள் இனி யுங்களுக்கு இங்கு விஷயம் இல்லை கிடி கோள் என்ன

என்ன தான் என்ன
எனக்கு மயர்வற மதிநலம் அருளப்பெற்றதாய் இருக்க நலியப்போமோ
பக்தி ரூபா பன்ன ஞானத்தை உங்களால் குலைக்கப் போமோ
அந்தரம் நின்று உழல்கின்ற உங்களுக்கு இங்கு நலிய விஷயம் இல்லை யாய் இருக்க
நடுவே நின்று என்னை கிலேசப்படுத்து கிறிகோள் அத்தனை

யானுடைப் பூவை காள்
சர்வ சாதாரணமாய் இருப்பார் செய்வதைச் சிலருக்கு ஸ்வம்மாய் இருப்பார் செய்யக் கடவதோ
நான் எனக்கு என்ன அமையுமாகாதே பாதிக்கைக்கு –அவனும் என்னுடையவனாகை இறே நலிந்தது

பக்தி ரூபா பன்ன ஞானம் அருளினவனை அன்றி
நும் திறத்து ஏதுமிடையில்லை குழறேன் மினோ
உங்கள் இடையாட்டத்தில் என்னை நலிகைக்கு ஓர் அவகாசம் இல்லை என்னவுமாம்
உங்கள் பாரிப்புக்கு என் பக்கலிலே ஓர் அவகாசமும் இல்லை –

குழறேன் மினோ
அநஷர ரஸமான பேச்சைக் காட்டி முடியாதே கொள்ளுங்கோள்
அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் யாவன் ஒருவன் அவன் தான் அதிகரித்த கார்யத்திலே
நெகிழ நின்றானாகில் அன்றோ நீங்கள் இப்படி முதிர நிற்க வேண்டுவது –
அதுக்கு உங்களுக்கு அவகாசம் வைக்கிறானோ

இந்திர ஞாலங்கள் காட்டி
கண்டாருக்கு விட ஒண்ணாத தன் வடிவைக் காட்டியும் -சீலத்தையும் சேஷ்டிதத்தையும் காட்டி
இவை நிலம் அல்லாமையாலே பொய் என்கிறாள்
இந்த்ர ஞாலம் என்றும் பொய் என்றும் பர்யாயம்

ஏழு உலகும் கொண்ட
பிறருடைய வஸ்துவை அபஹரிக்கப் புக்கால் அவர்களுக்கு ஓன்று சேஷியாதபடி அபஹரிக்குமவன் –

சேஷ்டித ப்ரணயித்வத்தால் வந்த பிரஸித்தியை எனக்கு காட்டினவன் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன் -என் திரு மார்பன்
பிராட்டியோடும் நித்ய ஸூரிகளோடும் பழகிற்று பிரணயியாய் அன்று -இந்த்ர ஞாலத்தைக் காட்டிற்று –
கண்டாரை அகப்படுத்த சில பொய்களைக் காட்டி பூமியைக் கொண்டால் போலே
என் திரு மார்பன் துயர் அறு சுடர் அடி தொழுத அன்று தொடங்கி கலந்து பரிமாறுகிறான் என்று
தோற்றும்படி சில பொய்களைச் செய்து விஸ்லேஷிக்கை -என்னை முடிக்கைக்கு உபாயம் இது என்று
என் மனமும் என் ஆவியும் உண்ண நன்கு எண்ணினான் -நம்மை முடிக்கைக்கு நல் விரகு பார்த்தான்

உங்களுக்கு இங்கு அவகாசம் இல்லை யானுடைப் பூவை காள் -என் மனனே –
ஸர்வ சக்தி உத்யோகித்த கார்யத்தில் குறை கிடைப்பதாய் அதிலே நீங்கள் ஸஹ கரிக்கிறிகோளோ
நம்மை முடிக்கப் பார்த்த பார்வை அழகிதாகப் பார்த்தான் ஏன் நெஞ்சே தொழுது எழு என்று நொந்து
தன்னிலே நொந்து சொல்லுகிறாள் என்றுமாம் –

———-————

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

உருகுமாலில்
ஸ்மாரக பதார்த்தங்கள் ஸ்மர்யமாண விஷயங்களிலே முட்டிக் கடக்க நிற்க
எம்பெருமானுடன் பண்டு ஸம்ஸ்லேஷித்த படியை அனுசந்தித்து
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் பண்ணி யருளினார்

————–

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தம் அளவாக இதர போகங்களைப் புஜித்து
ஸ்வரூப ஹானிகளாய்த்து –
அதிலே நானும் ஒருவனாய் இருக்கச் செய்தே உயர்நலம் யுடையவன் எவன்
அவன் விஷயத்திலே என்னுயிர் பட்டால் போலே ஆர் உயிர் பட்டது -என்ன

நீரேயோ இப்படிப் பட்டீர் -குண அனுபவமே யாத்ரையான நித்ய ஸூரிகளும் படும்பாடு இது அன்றோ -என்ன
அவர்கள் தான் நான் பட்டது பட்டார்களோ என்கிறார் –

உயர்வற உயர்நலம் யுடையவன் பக்கலிலே நான் பட்டது போலே ஆர் உயிர் பட்டது –
நித்ய ஸூரிகளிலே தான் பட்டார் உண்டோ –
பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற ஸம்ஸாரத்திலே நான் பட்ட பாட்டை
நித்ய விபூதியில் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவனை அயர்வின்றி
அனுபவியா நின்றுள்ளவர்கள் தான் என் பட்டார்கள் என்ன

நீர் இப்படி விண்ணுள்ளாரிலும் சீரியராய்ப் படுகைக்கு ஹேது என் என்ன

மயர்வற மதிநலம் அருளுகையாலே அருளின பக்தி ரூபா பன்ன ஞானம் படுத்தின பாடு
அங்கு யார் உயிர் பட்டது இங்கு எனது உயிர் பட்டது -என்கிறார் என்று
எம்பெருமானார் அருளிச் செய்ய கேழ்க்கும் படி

எல்லாரும் குண அனுபவம் பண்ணுகிறதாகில் இவருக்கு இவ்வாசி கூடினபடி என் என்று கேழ்க்க
நாவோடையான ஸ்த்ரீக்கு பர்த்தாவினுடைய கர ஸ்பர்சம் பட்டவாறே வேர்ப்பது விடுவதாமா போலே
இவர் பகவத் அனுபவத்தில் புதியர் யாகையாலே வருகிறது காணும் என்று அருளிச் செய்தார்

உயிரை அழித்த ஹேதுக்களைச் சொல்லுகிறது மேல்
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயதோர்
பெரிய இதழை யுடைய தாமரை போல் இருந்துள்ள கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய்
திருக்காட்கரையை யுடையவனாய்

கார் எழில் மேகத்து என் காட்கரைக் கோயில் கொள்
கறுத்த எழிலை யுடைய மேகம் போலே வடிவை யுடையவனாய்
திருக்காட்கரையைக் கோயிலாக யுடையவனாய்

சீர் எழில் நால் தடம் தோள்
வீர ஸ்ரீ யையும் எழிலையும் யுடைத்தாய் கல்பக தரு பணைத்தால் போலே –
நாலாய் சுற்று யுடைத்தான தோள்களை யுடைய

தெய்வ வாரிக்கு
தெய்வங்கள் படும் கடலுக்கு
வாரி -கடல்
தெய்வங்களுக்கு உத்பாதகன் ஆனவனுக்கு

என் மனனே -துயர் அறு சுடர் அடி தொழுது எழு
எனக்கு பவ்யமான நெஞ்சே -ஹேய ப்ரதிபடமான திருவடிகளைத் தொழுது எழு -வர்த்தி

தெய்வ வாரி
துர் அபிமான தெய்வங்களுக்கு உத்பாதகன் ஆனவன்
அபிமான சூன்யமான என்னை அழித்தான்
வடிவு அழகையும் அவ்வூரில் இருப்பையும் காட்டி யாய்த்து இவரை அழித்தது –

—————–

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எங்கானலில்
இவ்வநுஸந்தானமும் கலங்கி அவனுடைய அழகை அனுசந்தித்துப் பிரிவால்
வந்த ஆற்றாமையோடே -அவ்வழகு பற்றாசாகத் தூது விட்டார்

————–

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் இதர விஷயத்தின்
ரூப லாவண்யங்களைப் பற்றி பகவத் பிராவண்யம் அற்றார்கள் –

தமக்கும் இதர ப்ராவண்யம் விஞ்சி இருக்க உயர்நலமுடையவன் எவன்
ஸுந்தர்ய சீலாதிகளாலே பரிபூர்ணன் ஆனவனுக்கு

எனக்கு ஓன்று பணியீர்காள்-
என்று சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்குத்தைக்குப் பயப்பட வேண்டாதபடி
ஸ்வ ரஷிதமான தேசத்திலே இருக்கப் பெற்றோம் இறே
இனி என் ஆர்த்தியை அறிவியுங்கோள் என்கிறாள்

உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் -ஸ்வரூப ரூபாதிகளால் ஸ்ருதிக்கு அடங்காதவன் ஸந்நிதியில்
எனக்கு ஓன்று பணியீர்கள்
நீங்கள் ஒரு வார்த்தை சொல்லா விடில் முடியும் தசை அன்றோ என் தசை இருக்கிற படி

இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
பரந்த சோலையிடம் எங்கும் புக்கு இரை தேடி

மனக்கு இன்பம் பட மேவும்-
மனஸ்ஸிலே இனிமை பிறக்கும்படி அன்றோ நீங்கள் கலக்கும் படி –
உங்களை போலே மதுபான மத்தமாய் ரசிக்கும் படியோ நான் மயர்வற மதிநலம் அருளப் பெற்றது –
பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அபர்யாப்த்த அம்ருத பானம் பண்ணி தேஹாத்ம அபிமானம் அற்று
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்தாலே அம்ருத ஸ்வரூபனானவனை அடைந்து
அனவரத பரிசர்யை பண்ணத் தேடுகிறது
விரஹத்தாலே வரும் கிலேசம் பலியாதபடியாகக் கலவா நின்றீர் கோள்
பிரிவிலும் வற்றாத ஆனந்தம் உண்டாம்படி கலவா நின்றதாய்த்து

நான் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அவனை வேத சாகையிலே பூத்த பூவிலே மது பானம் பண்ணும்
ஸ்ரீ யபதியாகிற தெய்வ வண்டோடே சேர்ந்த நான் விஸ்லேஷித்துத் துவளலாமோ –

கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அபர்யாப்த்த அம்ருதமாய் அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்கக் கடவ அவன்
என்னைப் பிரிந்து தரிக்க மாட்டாமே -அவர்களைப் பிரிந்து திண்ணியதான மதிள் சுற்றுச் சூழ்ந்து இருந்து
திருமூழிக் களத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற அவருக்கு
அத்தலையில் ஸுந்தர்யத்தை அனுசந்தித்தால் ரக்ஷை தேட்டமாய் இறே இருப்பது –
ஆகையால் மங்களா ஸாஸனம் ஆகிற மதிலை இறே இவள் இடுவது

புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று
அவனோடே கிட்டிக் கலக்கப் பெறாமையாலே வருவது ஓர் ஆற்றாமையாலே மோஹம் உண்டு
அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்னும் ஓர் ஆற்றாமை உண்டு
அதிலே ஓன்று தீரப் பெற்றது முந்துற முன்னம்

புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-
தன்னிலத்திலே காயாவின் நிறம் போலே யாய்த்து நிறம் இருப்பது –
அவ்வடிவு அழகுக்கு மேலே ஹேய ப்ரதிபடமாய் அவ்வழகுக்கும் ஸ்வாமித்வ ஸூ சகமான
ஒப்பனை அழகையும் யுடையவன்
அதுக்கும் மேலே ஹேய ப்ரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான துயர் அறு சுடர் அடிகளிலே தொழுது
பரிசர்யை பண்ணும்படி நிர்ஹேதுகமாக அருளினவன் தனக்கு உரை

வடிவு அழகு அது -ஒப்பனை அழகு அது -துயர் அறு சுடர் அடி அது –
இவற்றை எல்லாம் தாமே தம்மை அனுபவித்து இருக்கையோ -கேவலரைப் போலே
பக்தாநாம் என்றது பொய்யோ -என்று ஒரு வார்த்தையைச் சொல்லுங்கோள் -என்கிறாள் –

——-———

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அறுக்கும் வினையில்
விட்ட தூதர் அத்தலைப்பட்டு அது அறிவித்து வரப் பற்றாமையாலே அலமந்து துடித்து அவன் இருந்த
திரு நாவாயிலே செல்ல வேணும் என்று த்வரிக்கிற படியை அருளிச் செய்கிறார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -அறுக்கும் வினை
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் புண்ய பாப ரூப கர்மங்களாலே
உயர்வும் தாழ்வுமாய் இருப்பார்கள்
அங்கன் அன்றிக்கே உயர்நலம் யுடையவன் எவன் அவன் -அவன் அனுக்ரஹத்தாலே வந்ததாகையாலே
பெற்று அன்று தரியாத படி ப்ராப்ய த்வரை விஞ்சின படியாலே அலமருகுகிறார்

அறுக்கும் வினையாயின
வினை என்று பேர் பெற்றவை எல்லாம் போக்கும்
ருசி விரோதி உபாய விரோதி ப்ராப்யத்தைப் பிராபிக்கும் இடத்தில் வரும் விரோதிகள்
வர்த்தமான தேஹத்து அளவில் பர்யவசிக்கை அன்றிக்கே பிராரப்த சேஷமாய் நின்ற
அவ்வருகேயும் போம்படி விளம்பிக்கக் கடவ அவை நின்ற நின்ற நிலைகள் தோறும்
உண்டாய் இருக்கும் இறே விரோதிகள்

புதுப்புடவை அழுக்குக் கழற்றும் போது க்ரமத்தாலே போக்க வேண்டுவது தான் போக்கும் அன்று இறே
பகவத் ப்ரஸாதத்தால் போமன்று ஒருக்காலே போமிறே
மேரு மந்த்ர மாத் ரோபி
ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிறபடியே யாகக் கடவது இறே

ப்ரம்மஹத்யைக்கு பிராயச்சித்தம் பண்ணினால் கோ ஹத்யைக்கு பிராயச்சித்தம் பண்ண வேண்டி வரும் இறே
அங்கன் வேண்டா இறே பகவத் அனுக்ரஹம் தன்னில் -மயர்வற மதிநலம் அருளின
அருள் கொண்டு கார்யம் கொள்ளும் இடத்தில் –

ஆருக்குத் தான் இப்படிச் செய்வது என்னில்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் யுடைய இவருக்கு
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவனை
ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
பூர்வாகாதிகளைப் போக்கி -பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையால் அருளினவனை
தன் ஹ்ருதயத்திலே அவனை நிறுத்த வேணும் என்னும் அத்யவசாயத்திலே ஒருமைப்பட்ட
மநோ ரதத்தை யுடையாருக்கு

அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் அவனை -அயராமல் அநிமிஷராய்க் கொண்டு
அடிமை செய்ய வீற்று இருக்குமவன் அத்தை விட்டு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை

குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –
கொடிய வினையேற்கு
வினையைப் போக்காதே வர்த்திப்பிக்கையிலும் விட ஒண்ணாதாய்த்து தேசம் இருப்பது
பரிமளத்தை யுடைத்தாய்
ஸ்ரமஹரமாய்
நித்ய வசந்தமான சோலைகளாலே சூழப்பட்ட திரு நாவாய்

நாவாய் யுறைகின்ற நாரணன் நம்பி துயர் அறு சுடர் அடி தொழுது எழு
திரு நாவாய் குறுக்கும் வகை யுண்டு கொலோ
குறுகப் பண்ணும் விரகு ஏதோ என்னுதல்

குறுக்கும் என்று அந்த தேச பாஷை
எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
எதிரே வருவாரை -திரு நாவாய் எத்தனை தூரம் உண்டு என்று கேழ்க்க
குறுக்கும் என்றார்களாய்
அத்தைக்கேட்டு ஆழ்வார் பாஷையால் அருளிச் செய்வதே என்று போர வித்தராய் அருளினார்

கொடியேற்கே
திரு நாவாயில் நாரணன் நம்பி துயர் அறு சுடர் அடி தொழுது எழு
என் மனமும் நானும் பொந்தின் போதே திருநாவாயிலே புகப் பெறுவோமோ
ஹேய ப்ரத்யநீகமாய் பரஞ்சோதியான திருவடிகளைக் கொடியேற்கு குறுக்கும் வகை யுண்டாகுமோ

ஆசா லேசமும் யுடையாருக்கும் ப்ராபிக்கலாம் தேசமாய் இருக்க
ஆசையும் கண்ணழிவு அற்றுப் புகப் பெறாதே நோவு படுக்கைக்கு அடியான பாபத்தைப் பண்ணின எனக்கு
ஆகத்தவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையனாய்-ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான
திருவடிகளைத் தொழுது எழுகைக்கு என் மனனே
கொடியேற்குக் குறுக்கும் வகை யுண்டு கொலோ என்கிறார் ஆயிற்று –

—————–

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

மல்லிகை கமழ் தென்றலில்
நாளேல் அறியேன் என்று நித்ய கைங்கர்யம் பண்ணுகைக்கு அடைத்த நாள்
எப்போதோ என்று கேழ்க்க
அவன் அருளிச் செய்ய பற்றாமையாலே அருளிச் செய்கிறார் –

———-———-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
இதர விஷய ப்ரவணராய் இருக்கையாலே
தத் தத் போகங்கள் அல்ப அஸ்த்ரங்களாய் ரஸ்யத்தையும் தனித்தனியே பலவாகையாலே
ரஸ்யதை அல்பமாய் அஸ்திரமாய்த்து

அங்கன் அன்றியே அவர்கள் ஒருவனான இவர் -உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன்
ஸர்வ ரஸ ஸர்வ கந்த என்று அவன் ஸ்ருதி ப்ரஸித்தனாய் அவனைத்தான்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தையிலும் ஸர்வ வித போக்யமும் அவனே என்று
அநந்யார்ஹ சேஷ தயா அனுபவிக்கிற பிராட்டிமார் தசையாய் அவர்கள் பாசுரத்தாலே
அருளிச் செய்து அனுபவிக்கிறார் –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ -என்று கீழ்ப் பிறந்த பாதகம் லௌகிகம் ஆகையால் அல்பமாய்த்து
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
இடைப்பெண்கள் நடுவே இவன் குழலூதுகிற போது நடுவே தன் ஆற்றாமையினாலே சில தன்
யுக்திகள் சேஷ்டிதங் களாலே வ்யாமோஹங்களைச் சொல்லா நின்று கொண்டு ஊதுகிற படும் பாட்டை
நினைத்து ஒன்றும் தரிக்க மாட்டேன் என்கிறார்

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அவன் மயர்வற அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் -அவன் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் எல்லாம்
கரதல அமலகமாகக் காட்டக் கண்டு அனுபவிக்கையாலே தரித்து நின்று அனுபவிக்கப் போகிறதில்லை

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
கீழில் அவை மிகை என்னும்படியே குழலோசையே பாதகம் ஆகிறபடி
தேவ திர்யக் மனுஷ்ய சங்கம ஸ்தாவரங்களுக்கு தத் தத் வசீகருத்தமான பாஷைகளாலே வசீகருத்தமாம் படி
ஊதும் வகைகள் அல்லவே இறே கோபிகளுக்கு ஊதுவது

இடையிடை அது மொழிந்து
பிரிந்தேன் ஆற்றோம் என்றால் போலே சொல்லுகிற நீச பாஷணங்கள் இடையிடையே சொல்லி யாய்த்துப் பாடுவது
தாழ்ந்த செயலும் பேச்சும் தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அது என்கிறாள்

எம்பார் இவ்விடத்தே வந்தவாறே
மோர் உள்ளதனையும் சோறேயோ -தேசிகரும் கூடப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாதே அது என்னா நிற்க
மத்யஸ்தருமான நாம் இதுக்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது என்று அருளிச் செய்தாராம்

அன்றிக்கே
அது மொழிந்து -அது தவிர்ந்து
நடுவே நடுவே பாடுகிற பாட்டை விட்டு என்றுமாம்

தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தனக்குத் தானே ஆபரணமாய்
தன் கருத்தை அவர்களுக்கு அறிவிக்க வல்ல திருக்கண்கள்
அயர்வறு அமரர்கள் அதிபதி யானவனை -ஜிதந்தே புண்டரிகாஷ என்று அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான
நித்ய ஸூரிகள் திருக்கண்களுக்குத் தோற்று
துயர் அறு சுடர் அடி தொழுது தரித்து நின்று அனுபவிக்க மாட்டாமல்
ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளில் விழுந்து கிடைக்குமா போலே

தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி
பெண்கள் நெஞ்சில் மறத்தாலே கிட்டக் காட்டுவோம் அல்லோம் என்று இருக்கிறவர்களுடைய
கல்லான மனசைக் கலக்கிக் காளை சென்று பிடியா நிற்கும் கண்கள் என்கை
நம்பி மூத்த பிரான் செய்யுமத்தை அடையச் செய்யா நின்றதாய்த்து

குழலூதுகையிலே மூண்டு மீண்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையாலே
வாக் வியாபாரத்தை ஏறிட்டுக் கொள்ளுமாய்த்து
பேச்சால் பிறக்கும் ஸ்பஷ்டதை நோக்கால் பிறக்கை

மயர்வற மதிநலம் அருளினான் -அத்தாலே நான் தன்னை உள்ளபடி அறிய வல்லனாம்படி
கடாக்ஷித்து அருளினால் போலே
தன் கடாக்ஷத்தாலே என்னையும் உள்ளபடியே தான் அறிந்தான்

தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
அழகிய பேச்சோடு கூடின இசை கொண்டு ஓன்று நோக்கி
அழகிய இசைகளாலே கண்ணாக நோக்கி ஈடுபடுத்துமா போலே ஈடுபடுத்துகிற இசையோடு கூடச் செய்தேயும்
இயலும் தெரிந்து இருக்கைக்கு அடி மயர்வற்ற ஞான பக்தியை அருளி இப்படிப்படுத்தினான் –

வாக் வ்யவஹாரமும் நேத்ர விருத்தியும் மாறாடின படியே
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
கேழ்க்கிறவர்களிலும் தன் செவி அணித்தாகையாலே நாம் ஈடுபடுகிற படி கண்டால் அபலைகளான
பெண்கள் என் படு கிறார்களோ என்று மிகவும் நோவு பட்டான்

அயர்வறும் அமரர்கள் துயர் அறு சுடர் அடி தொழுது அவர்கள் பாடு -படு கிற பாட்டைப்
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
பெண்களுடைய நெஞ்சு ஊடலை அற மறந்து வந்து பொருந்தும் படி பாடுகிற பாட்டை

யாதும் ஒன்றும் அறிகிலம்
என் மனனே அது பாதகமாம் படி எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை

அம்ம அம்மமாலையும் வந்தது
மிகவும் பயவாஹமாம் படி ராத்திரியும் வந்தது
உயர்வற -மயர்வற -அயர்வற -என்கிறவை அறுகை அன்றிக்கே
எல்லாம் ஓக்க உண்டாகத் துயர்கள் தொடரவாய்த்து மோஹாந்த காரம் வந்தபடி

என் மனனே
இனி இருந்து கிலேஸிக்க வேண்டாத படி இது முடித்தே விடும் போலே இருந்தது

மாயன் வாரான்–
தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும் படி தான் இழவாளனாய் வந்து காலைப் பிடிக்கும் படிக்கும்
ஆச்சர்ய பூதன் வருகிறிலன் என்கிறார் –

———-———

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

மாலை நண்ணியில்
சரீர அவசா நத்திலே உம்மை அடிமை கொள்ளக் கடவோம் என்று ஸுரிப்பெருமாள்
அருளிச் செய்ய க்ருதார்த்தராய்
எல்லாரும் திருக்கண்ண புரத்திலே ஸர்வேஸ்வரனாய் ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானை
ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்று ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும் மோக்ஷத்தில் இச்சை
யுடையவர்களுக்கு கர்ம ஞானாதிகளாலே பாப நாசம் பிறந்த பின்பு கர்ம அவசானத்திலே மோக்ஷமாய் இருக்கும் –
சாதனாந்தர பரராகையாலே விளம்பிக்கும்

ஸாத்ய உபாய நிஷ்டருக்கும் ஸித்த உபாய நிஷ்டருக்கும் நெடு வாசி யுண்டு
ஸித்த உபாய நிஷ்டருக்கு சரீர அவசானத்திலே மோக்ஷமாகையாலே தத் க்ஷணமாய் இருக்கும் –
தாம் உயர் நலம் யுடையவனைப் பற்றுகையாலே சரீர அவசானத்தே பெற்றார்
உயர்நலமுடையவன் நிர்ஹேதுக கிருபையினாலே அகிஞ்சனனான அநந்ய கதியான தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் –

பக்தி யோகம் கர்மா யோக ஸஹ க்ருத மாகையாலே இவருக்கு த்ரை வர்ணிக அதிகாரமாகையாலும்
தாம் அதுக்கு ஷமர் அல்லாமையாலே
தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்து அருளும்படியை அருளிச் செய்கிறார்

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன்

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
ஞான ஆனந்தாதி கல்யாண குண பூர்ணன் ஆனவன் ஜென்ம வ்ருத்த ஜனங்களால் குறைய நின்றார்களே
யாகிலும் தன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகனாம்

கீழ் மூன்று பட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்
இதில் சொன்ன பிரபத்தி ஸர்வாதிகாரம் என்கிறது
ஸமோஹம் ஸர்வ பூதேஷூ என்னக் கடவது இறே
பகவத் விஷயம் இறே ஸ்பர்ச வேதியாய் இருக்கும் இறே

கைசிகத்தில் பகவத் சம்பந்தம் உடையான் ஒரு சண்டாளனோட்டை ஸம்பாஷணம் ப்ராமணனுடைய
ஆசார வை கல்யத்துக்குப் பரிகரமாய்த்து
அவ்விடத்தில் எல்லாரும் சொல்லுகிற அர்த்தம் இதுவேயாய்த்து –

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
இவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணினவன்று தொடங்கி இவனை ஒழியத் தனக்கு
செல்லாமை யுண்டாய் இருக்கச் செய்தேயும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் த்ரிபாத் விபூதியும் லீலா விபூதியும் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
இவனுடைய ருசியை அனுவர்த்தித்து சரீர விஸ்லேஷத்து அளவும் அவஸர ப்ரதீஷனாய் நின்று பின்னை
இது உண்டானால் பரமபதத்தைக் கொடுக்கும் உபகாரகன் –

எவன் அவன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்றவன் –
தன் திருவடிகளை பற்றின வன்றே தான் இருக்கிற இடத்திலே அவனைக் கொண்டு போய்ச்
சேர வைத்துக் கொள்ள வேண்டி இருக்கச் செய்தே
நடுவு இவன் இருக்கும் நாலு நாளும் இவனுக்கு ஒட்டு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கையாலே
மரணமானால் என்கிறது –
தனக்கு சக்தி இல்லை
இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை
இவன் ருசியைக் கடாக்ஷித்து நிட்கிற அத்தனை

இப்பாட்டில் மரணமானால் -என்றதைக் கொண்டு இறே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம்

அரண் அமைந்த மதில் சூழ்
அயர்வறும் அமரர்களான நித்ய முக்தர் பரிய இருக்கிறவன் இங்கே வந்து நின்றான்
அவனுக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாதபடி இருக்கை

தரணியாளன்
பூமிக்கு நிர்வாஹகன்
ஹேய ப்ரத்ய நீகராய் அப்ராப்ய அம்ருத தாஸிகளான நித்ய ஸூரி நிர்வாஹகனானவன்
நித்ய ஸம்ஸாரிகளுக்கு ரக்ஷகன் என்கை

இப்படி உபய விபூதி நிர்வாஹகன் யாவன் ஒருவன் அவன் துயர் அறு சுடர் அடி
சரணாகதன் துயர் அற
அவன் தன் துயர் அற்றபடி
சுடர் அடியும்
அடியானைப் பெற்ற பின்பே பரமமான சுடர் அடி யாய்த்து –

தொழுது எழு என் மனனே
அவன் தனது அன்பர்க்கு அன்பாகுமே
தனக்கு ஸ்நேஹி களானவர்கள் பக்கலிலே அதி ப்ரவணமானவன்

தனது அன்பருக்கு அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிறவன் துயர் அறு சுடர் அடி

தொழுது எழு என் மனனே
தொழுது வர்த்தி என்கிறார் –

——————-

ஒன்பதாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–எட்டாவது பத்து விவரணம்- –

February 12, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

தேவி மாரில்
பாரித்த படியே -திருவாறன் விளையிலே போய்ப் புகப் பெறாமையாலே -மிகவும் அவசன்னராய்
ஆஸ்ரித பரதந்த்ரன் என்றும் ஸர்வ நிர்வாஹகன் என்றும் சொல்லுகிற இது பொய்யோ என்று அதி சங்கை பண்ண
அவனும் தன் படிகளைக் காட்டக் கண்டு அதி சங்கை தீர்ந்தார் –

——-

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது – அது எங்கனே என்னில்
கீழில் பாட்டுக்களில் காணுமாறு அருளாய் என்றீர்-அப்படியே காணக் கடவீர் -அதில் ஒரு குறையில்லை
ஸாஸ்த்ர பலம் ப்ரயோக்தரீ -என்று பேறு உமதானால்
சாதனமும் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன
நான் எத்னம் பண்ணி வந்து காண என்ற ஒரு பொருள் இல்லை காண் என்கிறா

உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவரவர்கள்
சாதன அனுஷ்டானம் பண்ணி ப்ரயோஜனாந்தரத்தைக் கொண்டு போகையாலே உயர்வு அற்றார்கள்

உயர் நலமுடைய உன்னை -அரிய உயிரான உன்னைப் பெற்றார் உண்டோ –
பரமமான ஞான ஆனந்த ஸ்வரூபனுக்கு ஓக்க ஒரு பொருள் இல்லை -அதுக்குத் தக்க சாதனம் உண்டோ –
நான் ஒரு யத்னம் பண்ணி காண என்ற ஒரு பொருள் இல்லை காண் என்கிறார் –

எவன் அவன் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –ஆர் உயிரேயோ
உயிர் நீயாய் இருக்க -சரீரமான நான் என்ன என்ன சாதன அனுஷ்டானம் பண்ணுவேன்
உன்னை வந்து கிட்டும் வகை என்
சரீர ரக்ஷணம் சரீரியது அன்றோ -சரீரம் தான் தன்னை ரஷித்துக் கொள்ளவோ –
ஸம்பந்தமேயோ -அனுஷ்டானம் இல்லையோ –

அனுஷ்டானம் ஏது என்ன
மயர்வற மதிநலம் அருளித்து இல்லையோ -என் அவித்யா கர்மா வாஸனா ருசிகளைப் போக்கி
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை விசதமாகக் காணும்படி
பக்தி ரூபா பன்ன ஞானத்தை உன் நிர்ஹேதுக கிருபையாலே அருளித்து இல்லையோ –

அந்த கிருபை தான் என் அளவேயோ
அகலிடம் முழுதும் படைத்து -பஹுஸ் யாம் என்று பூமிப்பரப்படைய ஸ்ருஷ்டித்து
இடந்து -பிரளயத்தில் நோவு படாதே மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி
உண்டு -திரிய பிரளயம் வர வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து -உள்ளே கிடந்தது தளராதபடி வெளிநாடு காண உமிழ்ந்து
கடந்து -மஹா பலியாலே அபஹ்ருதமான தசையில் எல்லை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி வந்த துர்த்தசைகளிலே அபேஷா நிரபேஷமாக உணர்ந்து நோக்கின நீயே
இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாவோ

இப்படி ஸர்வ வித ரக்ஷகனானவன் எவன் அவன் -அவன் யார் என்ன –
பேர் உயிரான அயர்வறும் அமரர்கள் அதிபதி – அயர்வில்லாத பூர்வே ஸாத்யர்கள் ஆனவர்களுக்கு நிர்வாஹகனான –
பேர் உயிரேயோ -என்று பெரியோன் -என்றபடி –

வேதைக சமதி கம்யனான பெருமையை யுடைய நீ பெரிய நீர் படைத்து –
ஸர்வ விஷயமாகப் பண்ணும் வியாபாரத்தோடே பிராட்டிக்காகப் பண்ணும் வியாபாரத்தோடே
வாசி அற்று இருக்கும் படி சொல்கிறது

பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து
ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து ஸ்ருஷ்ட்டி அர்த்தமாக அதிலே கண் வளர்ந்து
அது கடைந்து -கடல் என்கிற ஸமாதியாலே அருளிச் செய்கிறார்
அத்தைக் கடைந்து மற்றக் கடலை அடைத்தும் அது உடைத்தும்
பிராட்டியை லபிக்கைக்காக அவற்றைக் கடைந்து அவளோட்டை ஸம்ஸ்லேஷத்துக்காக
அத்தை அடைத்து அவ்வருகு உண்டான ராக்ஷசர் வந்து ஆஸ்ரிதரை நலியாதபடி அது உடைத்து

இப்படியான செயலைச் செய்தவன் யாவன் ஒருவன் அவன் சீர் ஆர் உயிரானவன் –
நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியோடு நித்ய முக்தரோடு அல்லாதாரோடு வாசி யற விஷயீ கரிக்கும் சீர்மை யுடையவனே

மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ வென்று ஐஸ்வர்யத்தாலும் கௌரவ்யனாகை இறே
மநுஷ்யர்களில் காட்டில் தேவர்கள் அதிசயித்து இருக்குமா போலே யாய்த்து
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகானாய் இருக்கும் படி –

இப்படி இருக்குமவன் யாவன் ஒருவன் அவன் ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் –
கேவல சரீரமோ ஆத்மாவோ ஹித சிந்தை பண்ணுவார் யார்

இப்படி இருக்கிற உன்னை நான் எங்கு வந்து உறுகோ -உன் துயர் அறு சுடர் அடி தொழுகைக்கு
சாதன அனுஷ்டானம் பண்ணுகிறேனோ
அப்போது எனக்குத் துயர் உண்டாமது ஒழிய துயர் அறாது கிடாய்

ஹேய ப்ரதிபடமான திருவடிகளே உபாயமாகவும் அது தானே உபேயமாகவும் காண் தத்வம் இருப்பது
இப்படி இருபத்தொரு தத்வாந்தரம் உண்டாகில் சொல்லிக் காணாய்

இப்படி உபய விபூதிக்கும் ஓர் உயிராய் இருக்கிற உன்னை சரீர பூதனான என் ஆத்மாவும் ஆத்மீயமும்
உனக்குச் சரீரமான பின் என்ன சாதனாந்தரத்தைப் பண்ணி வந்து கிட்டுவேன்
ஆத்மா சரீரத்துக்கு ஹித சிந்தை பண்ணுவது ஒழிய சரீரம் ஸ்வ ரக்ஷணம் பண்ண என்பது ஓன்று உண்டோ

ஆதார ஆதேய -நியந்தரு நியாம்ய -பாவங்களால் சரீர லக்ஷணம் இதுக்கும் உண்டான பின்பு –
அல்ப சைதன்யமும் உன்னாலேயாய்
சேஷபூதன் சேஷியிடத்தில் தொழுது எழும் அத்தனை ஒழிய
ஸ்வ யத்ன ஸாத்யம் யுண்டோ எனக்கும் நெஞ்சுக்கும் என்கிறார் –

——

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரி வளையில்
பின்னையும் தம் அபேக்ஷிதம் கிடையாமையாலே -இதுக்கு அடி தாம் அறியாததாய் –
எம்பெருமான் அறிந்ததாய்
ஸம்ஸாரத்திலே ஏதேனும் நசை யுண்டாக வேணும் என்று பார்த்தான் அத்தனை என்று
தமக்கு ஆத்மாத்மீயங்களிலே நசையற்ற படியை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

——–

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

உயர்வற என்கிற பாட்டைத் தொல்லை யஞ்சோதி என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே -என்னில் –
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் ஆத்மாத்மீயங்களிலே
நசை யுண்டானவர்களாகையாலே உயர்வற்று இருப்பார்கள் –

நாமும் அவர்களிலே ஒருவனான பின்பு நமக்கும் அவை உண்டு என்று இராமல்
ஆத்மாத்மீயங்களிலே நசை அற்று உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
தொல்லை யஞ்சோதி நினைக்கும் கால் என் சொல் அளவன்று
அவன் அருளே எனக்கு ஆத்மாத்மீயங்களிலே நசையறப் பண்ணி
அருளே -ஆத்மாத்மீயம் என்று அறியும்படி மயர்வற மதிநலம் அருளின படி –

உயர் நலமுடையவன் -என்று சொல்லுகிறவன் எளியன் அல்லன் -ஸ்ருதி ப்ரஸித்தனாகையாலே
தொல்லை யஞ்சோதியாலே துர் லபன்
அவன் ஸூ லபனாகிலும் துர் லபனாகிலும் தன்னை ஒழியச் செல்லாத படி நம்மைக் கடாக்ஷித்துத்
தன் திருவடிகளில் புகுர நிறுத்தியவன் வாசலிலே கூப்பிடாதே சம்பந்தம் இல்லாதார் வாசலிலேயே கூப்பிடுவது -என்கிறார்

ஆக உயர்நலம் யுடையவன் எவன் அவன் -தொல்லை யஞ்சோதி நினைக்கும் கால்
ஆனந்தாதி கல்யாண குண பூர்ணனாய் ஆதியஞ்சோதி யானவனை
நினைக்கில் -ஆராயப் புக்கால்
இதர விஸஜாதீயமான விக்ரஹம் -அபர்யாப்த்த அம்ருதமான அவன் மயர்வான ஆத்மாத்மீயங்களிலே
நசையறப் பண்ணி
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே வளர்த்துக் கொண்டு
போருகிறவனைச் சொல்லப் புகில் என் சொல்லி நிற்பன்

என் சொல் அளவன்று
அபர்யாப்த்த அம்ருதத்தின் வை லக்ஷண்யம் என் பேச்சுக்கு அளவாமோ
நான் ஒரு அபலை இருந்து சொல்லும் அளவோ அவன் பெருமை

இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்-இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அவன்
வேதங்களும் -அப்ராப்யா -மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை —
அயராதே -இமையாதே–கண்ணாலே பார்த்து அனுபவிக்க மாட்டாதார்க்கும் -அபர்யாப்த்த அம்ருத தாஸியாக்கி
அனுபவிக்க அனுபவிக்க எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
எத்தனையேனும் அதிசயித ஞானரேனாலும் அளவிறந்த ஸம்சயத்தைப் பண்ணா நிற்கும்

யந் நாயம் பகவான் பிரம்மா ஜாநாதி புருஷோத்தமம்
ந க்ராஹ்யா கேநசித் க்வசித் -என்று நித்ய ஸூரிகள்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி நிற்க தானீட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போரும் படியாகவும் –

அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
இப்படி ஸமஸ்த கல்யாண குணங்களை யுடையவன்
என்னோடே இட்டீடு கொண்டு அல்லது தரியாதானாய் -நம்முடைய நிறத்தைக் கொண்டான்
தன்னுடைய வை லஷண்யத்தைப் பாராதே யன்றோ இட்டீடு கொண்டது

தன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று நம் சங்கா நிவ்ருத்தம் ஆக்கித்
தான் தேஜோ ராஸியாய் விளங்கா நிற்கிற
திருவடிகளைத் தொழுது எழு என்று -பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்றும்
‘நானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் என்றும்
ஆத்மாத்மீயங்களிலே நசையற்ற பின்பும்

அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
நம் நிறத்தைக் கொண்டால் தன்னோடு ஸ்பர்சம் உள்ளது ஒன்றைத் தந்து நம்மை உஜ்ஜீவிப்பிக்கலாம் இறே
அதுவும் செய்கிறிலன்
அது செய்தானாகில் பூவுக்கு இட்டோம் போலே என்று இருக்கலாம்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
நாம் துயர் அறு சுடர் அடி தொழுதால் அத் திறம் நிற்க நம் மாமைக் கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
தாதும் அல்லியும் மலரும் குளிர்ந்து அழகிய திருத்துழாயும் தாரான்

வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மால் அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கு இடுவதோ இனிப் பூசல் சொல்லீர்
நம்மை நலிந்தவன் வாசலிலே கூப்பிடாதே யார் வாசலிலே கூப்பிடுவோம் சொல்லி கோள்

பரத்வாதிகளில் அல்ல -பூங்கொடி படர்ந்த சோலையும் -விளைவதான வயல்களும் சூழ்ந்த
திருக்குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற ஸர்வேஸ்வரன்
மா மலர்க்கண் -ஜிதந்தே -என்று உபய விபூதியையும் தோற்பித்த கண்
ப்ராப்தனானவன் மலர்ந்த தாமரைப்பூ போலே இருக்கிற கண் என் அளவிலே அலரக் காண்கிறிலேன் -என்கை

கூக்குரல் கேழ்க்கைக்கு ஸந்நிஹிதனாய் இருக்க ஆர்த்த நாதம் கேளாமை அன்றே
கேட்டும் கேளாதது போலே இருந்தால் ஆர்க்கு இடுகோ -இனிப் பூசல் சொல்லீர்

தொல்லை யஞ்சோதி யுடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது ஆர்க்கு இடுகோ -இனிப் பூசல் சொல்லீர் – என்று
தோழியையும் கூட்டிப் பூசலிட்டு ஆர் வாசலில் கூப்பிடுவது என்கிறாள் –

———–

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அங்கும் இங்கும் -இதிலே
எம்பெருமானுடைய தனிமையை அனுசந்தித்து அங்குத்தைக்குப் பரிவர் இல்லை என்று அஞ்ச
எம்பெருமான் நமக்குப் பலர் பரிவார் உண்டு என்று காட்டிக் கொடுக்கக் கண்டு பயம் தீர்ந்தார்

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறார் இதில் -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உன் ஸுகுமார்யம் பார்த்துப் பரிவார் இல்லை –
தாம் பரியும் பரிவு போராது என்றும் -ஸம்ஸாரிகளையும் மற்றும் எல்லாரையும் பார்த்தார்
ஸம்ஸாரிகள் சப்தாதிகளிலே மண்டி அந்நிய பரர்
பிரம்ம ஈஸா நாதிகள் தங்களுக்காக நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்பர்கள்
அவனை அம்புக்கு இலக்கு ஆக்குவார்கள் ஆகையால் பரிவற்று இருப்பார்கள்

அங்கும் இங்கும் வானவர் தானவர் -உபரிதன லோகங்களிலும் பூமியிலும்
எங்கும் -அநுக்தமான பாதாளாதிகளிலும்
வானவர் -அனுகூலர்
தானவர் -பிரதிகூலர்
யாவரும் -இரண்டு வகையான மனுஷ்யாதிகள்
இனையை என்று யுன்னை -உயர்நலம் யுடையவனான உன்னை –

ஆனந்தாதி குணம் என்ன ஸுகுமார்யாதி குணம் என்ன இவை அறிந்து பரியமாட்டாமல் உயர்வற்றவர்கள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் யாவன் ஒருவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
ஸர்வ சேஷி என்று அறிந்து பரியும்படியான யுன்னை உன் ஸுகுமார்யாதிகளைப் பார்த்தால்
கருமுகை மாலையைப் போல் இருக்கிற யுன்னை
உன் படிகள் ஒன்றும் அறியாதே அவர்கள் இருக்க -எனக்கு மயர்வற மதி நலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உன் ஸுகுமார்யம் ஒழிய வேறு ஒன்றில் போகிற மயர்வை அறுத்து
உன் ஸுகுமார்யமே என் மனசிலூன்றிப் பரிகைக்கு ஒருவனாய் ஆனேன்

எவன் அவன் -இந்த ஸுகுமார்யத்தை யுடையவன் யாவன் ஒருவன் -அறிய கிலாது –
பரிய அறியாமைக்கு அனுகூலரான தேவர்களோடு பிரதிகூலரான அஸூரர்களோடு
இரண்டும் கூட மநுஷ்யர்களோடே வாசியில்லை
உன்னைக் கண்டவர்கள் எல்லாரும் பரிய வேண்டும் என்று இருக்கிறார் யாய்த்து இவர்

ஆழ்வீர் -வாரீர் நமக்குத் பரிகைக்கு த்ரிபாத் விபூதியாக உண்டே என்ன

அயர்வறும் அமரர்கள் -என்னா உன் ஸுகுமார்யம் அளவிடப்போமோ –
கண்ணாஞ்சுழலை இட்டு மங்களா ஸாஸனம் பண்ண அறியார்கள்
சந்த அனுவிருத்தியாய் இருப்பார்கள் நித்யரும் முக்தரும்
முமுஷுக்கள் மோக்ஷத்தில் இச்சை யுடையராய் இருப்பார்கள்
பத்தர் ஸம்ஸார யாத்திரையே பேறாக இருப்பார்கள்
ஆகையால் எனக்கு கூட்டு யாவார் யார் என்கிறார் –

அலற்றி
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித் -என்றும்
பராஸ்ய சக்திர் விவிதை ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியாச -என்றும்
போன்ற வசனத்தைப் படியா நிற்பார்கள் –
தங்கள் ரக்ஷணத்துக்கு அடியான வசனங்களை படித்து கதறா நிற்பார்கள்
உன்னை ரஷ்யம் என்று இரார்கள்

அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -மங்களா சாசனம் ஒழிய வேறு ஒன்றில் அயராத நித்ய ஸூரிகளுக்கு
ஸுகுமார்யம் ஒழிய வேறு ஒரு போக்யதை அறியாமல் அனுபவிப்பக்கப்படுகிற உனக்கு –
போக்ய பூதைகளான பிராட்டிமார் தங்களுக்கும் புருஷகார பூதராகக் கொள்ளுமவர்கள் –
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்று
அச்சேர்த்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவார் இல்லை –

சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இரார்கள்
சங்கு சக்கரக்கை என்று கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பார் இல்லை –
நம் விரோதியைத் துண்டிப்பதற்குக் கையிலே திவ்ய ஆயுதங்கள் யுடைத்து என்பார்கள்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்னார்கள்

சரணம் என்பர்
அபிமத ஸாதனம் என்பார்கள்
ஹேய ப்ரதிபடமாய் தேஜோமயமான திருவடிகளே ப்ராப்யம் என்று இரார்கள்
ஸூ குமாரமான விக்ரஹம் என்று அறியார்கள் -தம் தாம் அபிமதங்களைப் பெற்றுப் போவார்கள் –

அங்கன் அன்றிக்கே -என் மனனே –
அச்சேர்த்திக்கும் அழகுக்கும் ஸுகுமார்யத்துக்கும் மங்களா ஸாசனம் பண்ணி
வர்த்திக்கப் பாராய் என்கிறார் –

——————–

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
ப்ரயோஜனாந்தர பரராய்க் கொண்டு போனார்கள் ஆகையால்
பிரயோஜனம் ஷயித்தால் தங்கள் க்ஷயிப்பார்கள் ஆகையால் உயர்வற்றார்கள் –
உயர்நலம் உடையவன் எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனாய் பராத்பரனைப் பரிய அறியார்கள்

நீர் இங்கனே கிடந்தது படுகிறது என் -அவன் ஸர்வ ரக்ஷகன் அன்றோ என்ன –

மயர்வற மதிநலம் அருளி பக்தி ரூபா பன்ன ஞானத்தை தன் நிர்ஹேதுக கிருபையினால்
காட்டி அருளுகையாலே அவன் ஸுகுமார்யாதி குணங்களுக்குப் பரிவர் யாய்த்து

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அயர்வறும் அமரர்கள் பணியா அமரர் -வேறே சிலரைப் பணியும் அயர்வு இல்லாத அமரர்
முன்பு அஸேவ்ய ஸேவை பண்ணி ஒரு நாள் வரையிலே அனுகூலித்த முக்தர் பரிய-
இப்படிக் கொத்தவர்கள் பரிய இருக்கக் கடவன் அவன்
ஸம்ஸாரத்தில் திவ்யமாய் இருக்கும் வடிவோடே வந்து உலாவா நின்றால் நான் இப்படிப்படாதே செய்வது என்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
பணிவும் பண்பும் தாமேயாம்
பணியா அமரர் பணிவுக்கும் பண்புக்கும் -செக்ஷத்வாதி குணங்களுக்கும் -தாமே விஷயமாய் இருக்குமவர்

அணியாராழியும் சங்கமுமேந்துமவர்
ஸர்வ ஆபரணமும் தானேயாகப் போரும் படியான திவ்விய ஆயுதங்களைத் தரித்து
நித்ய முக்தருக்குக் காட்ஷி கொடுத்தால்
அவர்களும் அஸ்தானே பய சங்கிகளாய்க் கொண்டு -இவ்வடிவுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று
மங்களா ஸாஸனம் பண்ணும்படி யாயிற்று இருப்பது
அவர்களுக்கு நான் பட்டது பட வேணுமோ

அவர் காண்மின்
ஸுகுமார் யாதிகளை யுடையவன் கிடீர் பய ஸ்தானத்தில் வர்த்திக்கிறார் –

தனக்கு ஒரு பிரயோஜனத்துக்குத் தான் வருகிறானோ
தணியா வெந்நோய் உலகில் தவிர-வருவார்
ஒரு நாளும் முடியாத தாப த்ரயாதிகள் தீரத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–
நீல மணி போலே ஸ்ரம ஹரமாய் ஸூ குமாரமான வடிவோடே ஸம்ஸாரத்திலே வந்து உலாவுகிறார்

இங்கு வர வேண்டினால் அவ்வடிவோடே வர வேணுமோ –
என் மனம் சூழ
அந்த ஸுகுமார்யம் அறிந்த என் மனம் சூழ வருவான்
சுழன்று வரும்படி வருகிறவர் துயர் அறு சுடர் அடி தொழுது எழு

ஹேய பிரதிபடமான திருவடிகளைத் தொழுது எழ மாட்டாமல் மனஸ் ஸூ சுழலா நின்றது –
ஹேய ப்ரதிபடம் என் அளவில் காணோம்
எனக்குக் கரணம் ஆகையாலே என்னையும் கூட்டிக் கொண்டு சுழலாமல் தரித்து நின்று
தொழுது வர்த்தி என்று அருளிச் செய்கிறார் –

———-———

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

வார் கடா வருவியில்
பின்னையும் ஸர்வேஸ்வரன் சம்சாரிகளுடைய அபேக்ஷையே ஆலம்பனமாக வந்து அவதரித்து உலாவா நிற்கும்
நித்யரும் முக்தரும் இங்கு இல்லை
அல்லாதார் புறம்பே அந்நிய பரராக என் புகுகிறதோ என்று அஞ்சினார்

அவனும் தான் பெரு மிடுக்கனாய் இருக்கிறபடியும்
தனக்குப் பரிவார் சாப அனுக்ரஹ ஸமர்த்தராய் தன்னோடு ஒத்த ப்ராஹ்மணர் மூவாயிரம் பேர்
திருச் செங்குன்றூரிலே பரிய நின்று அருளின படியைக்
காட்டிக் கொடுக்கப் பயம் தீர்ந்து அவனுடைய ஸுகுமார்யாதிகளை அனுபவித்துப் ப்ரீதரானார் –

—————–

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1-

மாயக்கூத்தனில்
திருச் செங்குன்றூரிலே நின்று அருளினவனை இப்போதே போய்ப் புக்கு
அனுபவிக்கப் பெறாத இழவாலே
காண வேணும் என்று திருக் கடித்தானத்திலே புறவீடு செய்து இருந்த படியை
அருளிச் செய்கிறார் –

——-——–

கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் பகவத் வியதிரிக்தங்களிலே அழகு காண்பாருக்கு
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களாய் விரூபங்களாலே உயர்த்தி அற்றது –
இவர் கருவிலே திருவுடையாராகையாலே உயர்நலம் உடையவன் எவன் அவன்
கொண்டல் வண்ணன்
ஸுந்தர்யாதி குண கண விபூஷிதனான ஸர்வேஸ்வரன் யாவன் ஒருவன் அவன்
கொண்டல் வண்ணன் –
காணவே விடாய் அறும்படியான வடிவை யுடையவனே

குடக்கூத்தா -மநோ ஹாரியான சேஷடிதத்தை யுடையவனே
வினையேன் -இப்படி அலற்றும் படிக்கு
மயர்வற மதிநலம் அருளும்படிக்கு நிர்ஹேதுக கிருபையை யுடையவனே
நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்துக்குப் பிரயோஜனம்
என் கண்ணா -என்று அலற்றுகையோ

தத் வியதிரிக்தங்களிலே மனஸ் ஸூ பொருந்தாமையைப் பண்ணிய உன்னை ஒழியச் செல்லாதபடி
மதிநலம் அருளி
திவ்யம் ததாமி தே சஷுஸ் -என்கிறபடி எனக்கு த்ருஷ்டி பூதனான கிருஷ்ணனே
இப்படி சஷுஷி திஷ்டன் ஆனவன் யாவன் ஒருவன் என் கண்ணன் ஆனவன் –

வினையேன்
கண்ணை இழந்து இருக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவனை நித்ய ஸூரிகள் அநிமிஷாராய்க் கொண்டு
ஸதா அனுபவம் பண்ணும் சர்வாதிகன்
கோபாலனாய் வந்து அவதரித்து இருக்க நான்

அண்ட வாணா வென்று என்னை
விஷயீ கரிக்கைக்காக அண்டாதிபதி யானவன்
கல்யாண குண யோகம் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்குமா போலே விபூதி யோகமும்
தனக்காகவே என்று இருக்கிறார்

என் அண்ட வாணன் -என்கையாலே
உபய விபூதி நிர்வாஹகமும் தமக்காகவே என்று இருக்கிறார்
இங்கே மயர்வற மதிநலம் அருளி அங்கே தம்மைக் கொண்டு போய் வைத்துத்
தன்னை அனுபவிக்கைக்காக உபய விபூதியும் கண்டது என்று இருக்கிறார்

என்னை ஆள –
ஒரு ப்ரயோஜநாந்த்ரத்துக்காக அழைக்கிறேனோ
என்னை நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று அன்றோ அழைக்கிறது

கூப்பிட்டு அழைத்தக்கால்
க்ரம பிராப்தி ஸஹிக்க வல்லேனாயத் தாழ்க்கிறாயோ
என் ஆர்த்தி நாதம் கேட்டால் கிரமத்தில் வருகிறோம் என்று ஆறி இருக்கலாய் இருந்ததோ

அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ
விண் தன்மேல் தான்
பரமபதத்தில் இருக்கிற இப்போதே வந்து தோற்றவுமாம்

மண் மேல்தான்
அவதரித்தாள் காட்டவுமாம்

விரி நீர்க் கடல் தான்
ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளுகிறபடியே தோற்றவுமாம்

மற்றுத் தான்
தூணிலே வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்
ஆணைக்கு வந்து உதவினால் போலே யாதல் வந்து தோற்ற நிற்க வேணும்

உன் தொண்டனேன் உன் கழல் காண
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று ஆசைப்பட்ட படியே
உன் திருவடிகளில் கைங்கர்யத்திலே சபலனான அடியேன் உன் கழல் காண

துயர் அறு சுடர் அடி
என் ஆசை தீர பரஞ்சோதியான திருவடிகள்
எனக்கு உஜ்ஜீவனமான யூன் கழல் காண

ஒரு நாள் வந்து தோன்றாயே-
ஒரு நாள் வந்து தோன்றி அருள வேணும் என்கிறார் –

———–——-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

எல்லியும் காலையிலே
இவர் இப்படிக்கு கூப்பிடும்படி தான் பிற்பாடாரானோமே -என்று லஜ்ஜித்து வந்து தான்
இவருக்குப் பேச்சுக்கு நிலம் நிலம் இன்றிக்கே தான் சாலப் பெரு விடானாய்
நேர் கொடு நேர் செல்லில் ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே முடிவர் என்று இவரை
அகஞ்சுரிப்படுத்திப் பின்னைக் கிட்டுவோம் என்று பார்த்துத் தான் நிற்கிற நிலையைக்
காட்டிக் கொடுக்கக் கண்டு
திருக் கடித்தானத்தோடே கூட என் நெஞ்சில் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார்

———-———

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாடல் விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவர்களைக் காம்ய பலங்களிலே
பரவசராக்கித் -தன் ஆனந்தாதி குணங்கள் எல்லாம் கிடக்க
ஆஸ்ரிதனான என் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
திருக்கடித்தானத்தோடே கூட அசாதாரணமான கோயிலாகக் கொண்டான்

உயர்நலமுடையவன் என் மனம் கோயில் கொண்டான்
பரத்வாதிகள் முதலான திவ்யதேசங்கள் கோயில்கள் எல்லாம் கிடக்க ஹேயமான என் ஹ்ருதயத்தை
திவ்யமான கோயிலாகக் கொண்டான் என்ன
அதுகளை விட்டோ என்னோ -விட்டிலன்

செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப்போலே யாக ஒண்ணாது என்று அவைகளுக்கு எல்லாம்
பிரதானமான திருக்கடித்தானத்தோடே கூட வந்து என் நெஞ்சில் புகுந்து அருளி
எனக்கு மயர்வற மதிநலம் அருளி அஞ்ஞான அந்தகாரம் நீங்க மதி நலமான
சந்த்ர ஸூர்யர்கள் உதித்தால் போலே பரஞ்ஞான பர பக்திகளைப் பிறப்பித்து
அதிலே பரஞ்சோதியான நீ என் நெஞ்சை நாடும் நகரமுமாக்கி
விஷ்ணு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்கிறபடியே கோயில் கொண்டான்

அதனொடும் என் நெஞ்சகம் கோயில் கொண்டான்
அயர்வறும் அமரர்களான அநந்த வைநதேயாதிகள்-கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ
வீற்று இருக்குமவன் -என் நெஞ்சம் கோயில் கொண்டான் –

திருவடி திருவனந்த ஆழ்வான் முதலானோர் தொழுது பரிசர்யை பண்ண எழுந்து இருக்கக் கடவ தத்வம்
தனக்குத் தகுதியான ஸ்ரீ வைகுண்டத்தைக் கோயிலாகக் கொண்டவன்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்துகிற ஸர்வேஸ்வரன் கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
குடக்கூத்தாடியவன் வைகுந்தநாதன் திருக்கடித்தானத்தைக் கோயிலாகக் கொண்டான்

என் நெஞ்சகம் கோயில் கோயில் கொண்டவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
திவ்ய தேசம் எல்லாம் ஹேயமாய் என் நெஞ்சே போக்யமாம் படி கோயில் கொண்டான் –

என்னுடைய அவித்யாதிகள் அற்று அவனுக்கு வாசஸ்தானமான நெஞ்சே தொழுது எழு
அரவத்து அமளியின் படியே திருக்கடித்தானத்தின் நிலை என்னைப் பெறுகைக்கு யாகையாலே
ஸாத்யம் கைப்பட்டால் ஸாதனத்தில் இழிவார் இல்லையாய் இருக்க
என்னைப் பெற்றது அத்தேசத்திலே என்று அத்தோடு வந்து புகுந்தான் அதன் இடத்திலே
உபகார ஸ்ம்ருதியாலே -என்கிறார் –

——————

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

இருத்தும் வியந்தில்
இவருடைய மநோ ரதத்தை எம்பெருமான் தான் கைக்கொண்டு இவருடனே ஸம்ஸலேஷித்துப்
பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற படியைக் கண்டு ப்ரீதரானார் –

———–——–

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஈஸ்வரனுக்கு
போக்ய பூதர் ஆகாமல் ப்ரயோஜனாந்தர பரராய்த்தது
உயர்நலம் உடையவன் எவன் அவன் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
அவாப்த ஸமஸ்த காமனான ஸர்வேஸ்வரன் தம் பக்கல் இப்படி வ்யாமோஹம் பண்ணக் கூடுமோ –
என்று அதிசங்கை பண்ணி
இவ்வனுபவம் இருந்தபடி என் என்று அதி சங்கை பண்ணுகிறார் –

அருள் தான் இனி யான் அறியேன்
என்னுடைய இந்திரிய வஸ்தையைத் தவிர்த்த இது தன்னையும் இப்போது ஒன்றாக நினைத்து இரேன்

எத்தைப் பற்ற என்ன
உயர்நலம் யுடையவன் -ஆனந்தாதி கல்யாண குண பூர்ணன் ஆனவன்
அவன் என்னுள் இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
அவன் என்னுடைய ஹ்ருதயத்திலே அஞ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி
பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற படி இரா நின்றான்

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் -மயர்வாகிற இருள் தீர்த்து
மதிநலமாகிற சந்த்ர ஸூர்யர்களைப் போலே இருக்கிற ஞான பக்திகளைத் தன் நிர்ஹேதுக கிருபையால் செய்தான்
என் உள் இருள் தான் அற வீற்று இருந்தான் இது வல்லால் இனி எனக்கு வேறே ஓன்று தோற்றமோ

இது அல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
இதுக்குத் திருமலை ஆண்டான் பணிக்கும் படி
நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாகச் சொல்லுவது த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை இறே
அதுவும் எனக்கு ஓர் சரக்கு அல்ல என்கிறார் என்ன

அழகு இது என்று எம்பெருமானார் அருளிச் செய்யும்படி
என் ஹ்ருதயத்தில் புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
சந்த அனுவர்த்தி பண்ண அவர்களுக்கு அபர்யாப்த்த அம்ருதமான போகத்தைக் கொடுத்து
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்தி இருக்கும் இருப்பையும் தனக்கு ஐஸ்வர்யமாக
நினைத்து இருக்குமோ என்று பார்த்தால் -அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கிறிலன் என்று
இதுவே ப்ரகரணத்துக்குச் சேருமது –

மருள் தானீதோ
ஒரு ஸம்ஸாரி சேதனனைப் பெற்று ஈஸ்வரன் இப்படி இருந்தான் என்றால் அது கூடுமது ஓன்று அன்று
இது என் அறிவுக்கேட்டாலே சொல்லுகிறேனோ

மாய மயக்கு மயக்கே–
அன்றிக்கே அவன் தன்னுடைய ஆச்சர்யமான பிரம சாதனங்களை இட்டு ப்ரமிப்பித்தானோ
நெடுநாள் பிரக்ருதியை இட்டு அறிவு கெடுத்தான்
இப்போது தன் வ்யாமோஹத்தாலே பிரமிப்பித்தான்

ஏதாகில் என் மனனே நீ ஸ்வரூப விருத்திக்காக துயர் அறு சுடர் அடி தொழுது எழு-
அஞ்சலி அன்றோ உனக்கு அடுப்பது
ப்ரம்மம் ஆகிற ஹேயம் போம்
தொழுது எழு என் மனனே என்று கிருபை யாகவுமாம்

——–——–

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-

கண்கள் சிவந்தில்
இஸ் ஸம்ஸ்லேஷம் நிலை நிற்கைக்காக ஆத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தை
ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கக் கண்டு அத்தை அனுசந்தித்துத்
தனக்குத் தகுதியான பிரகாரம் இருந்தபடி என் என்று இனியராகிறார்

————-

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாத்மகமான
சரீர பூதரான அவர்கள் சரீராத்ம பாவம் அறியாமல் தேஹாத்ம அபிமானிகளாய் உயர்வு அற்றார்கள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடையனானவன்
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் -என்கிறபடியே
சரீர சரீரியாய்க் கொண்டு யாவன் ஒருவன் இருக்கிறான் -அவன் மயர்வற மதிநலம் அருளினன்

மயர்வாகிற
தெருளும் மருளும் மாய்த்துத்
ப்ரம்மாவின் ராஜஸம் அடியாக வந்த ஷூத்ர த்ருஷ்டி ஞானமானதும் –
ருத்ரனுடைய தாமஸ ஞானமான ஆகமாதி பாஹ்ய ஞானமான அஞ்ஞானமும் மாய்த்து

ஸ்வ அனுபவ விரோதியான பிராகிருத விஷய அஞ்ஞானங்களை வாசனையோடு போக்கி
மயர்வற மதிநலம் அருளி -தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தந்து
என் ஆத்மாவை தனக்கு சேஷதயா சரீரமாய் இருக்கிறபடியைக் காட்டி அருளினான் –
அவன் யாவனொருவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
ப்ருதக் ஸ்திதியாகிற அயர்வு அன்றிக்கே -ப்ரகார -ப்ரகாரியாய் -நியந்தாவாய் -நியாம்யனாய் –ஸ்வாமி யானவன் –

சுடர் அடி
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
ஆஸ்ரிதரை வேறொரு காலின் கீழே குனிய விடாததாய் ஸ்ப்ருஹ ணீயமான வீரக்கழலை யுடைத்தான
திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளும்

வீரக்கழல் –
பிராட்டி முன்னாக ஆஸ்ரிதரைத் தன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக்கழல்

அருளி இருத்தும் அம்மானாம்
கேவல கிருபையாலே இருத்தும் -அயர்வறும் அமரர்கள் அதிபதி யான அம்மனானவன் –

அயனாம் சிவனாம் திருமாலால்
ராஜசர் ஆஸ்ரயிக்கும் ப்ரம்மாவாய் -தாமஸர் ஆஸ்ரயிக்கும் ருத்ரனாய் –
இப்படி பிரகார பிரகாரி தயா ஸர்வ ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனாய்
இப்படி ஸர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே மயர்வற மதிநலம் அருளப்பட்ட

திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
அருளுக்கு விஷயமான ஆழ்வார் -அருளுக்கு வாய்த்தலை -காரணம் –பிராட்டி என்கை –

ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–
ஸர்வ நிர்வாஹகனானவன் -துயர் அறு சுடர் அடியாய் -ஸ்ப்ருஹணீயமாய் -வடிவு அழகேயாய் –
குணங்களேயாய் -பூர்ணனான ஸர்வேஸ்வரன் தானே தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளும்

இத்திருவாய் மொழி அப்யசித்தார்க்குத் தாம் தொழுது எழு என் மனனே என்றது –
தம் பிரபந்தம் அப்யஸித்தார்க்குத் தாம் தொழுததே அமையும்
இது கற்றாருக்கும் அதுவே பேறு என்கிறார் –

—————-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

கரு மாணிக்க மலையிலே
இவ்வாத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்திக்கிறார்

—————–

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

உயர்வற என்கிற பாட்டை -இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
அநந்யார்ஹை யான நாயகியுடைய பருவம் அறிந்து மாதா பிதாக்கள் இவள் நினைவு அறியாமல்
ராஜ லோகத்தார் ஸ்வயம் வரத்துக்கு வருவது என்று மண முரசு அறைவிக்க
அத்தைக் கேட்ட தோழியானவள் இவள் திருப்புலியூர் நாயனாருக்கே அநந்யார்ஹை யானாள் –
இனி நீங்கள் இது செய்கிறது தர்ம ஹானி என்று மணம் விலக்குகிறது -ஆய்த்து –

ஆனால் இவளுடைய ஆபி ஜாத்யாதிகள் அவனுக்கு உண்டாக வேண்டாவோ என்ன

நீங்கள் சொன்னவை எல்லாம் உண்டு -என்று அவயவ சோபை -ஆபரண சோபை -ஸுர்யாதிகள்
ப்ரணயித்வம்-ஐஸ்வர்யாதிகளால் குறைவின்றிக்கே இருக்கிற படி

ஐஸ்வர்யம் போருமோ -உதாரராக வேண்டாவோ -என்ன

அவனுடைய ஒவ்தார்ய குணத்திலே அகப்பட்டு ஸம்ஸ்லேஷித்தமைக்கு அடையாளம்
வியக்தமாக உண்டு என்கிறாள்

உயர்வற என்கிற பாட்டில் மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அந்நிய சேஷத்வத்தாலே மிஞ்சின உயர்வு அற்றார்கள்

அவர்களில் இவரும் ஒருவராய் இருக்க -இவர் பகவத் அநந்யார்ஹ சேஷபூதராய் –
உயர்நலமுடையவன் -எவன் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து

திருவருள் மூழ்கி வைகலும்
வைகலும் திருவருள் மூழ்கி -அநேகம் காலம் அவன் பிரஸாதத்திலே அவகாஹித்து நான் கண்ட இத்தை அறியும் அத்தனை இறே

எதிர் சூழல் புக்கு இவளுக்கு மயர்வற மதிநலம் அருளி இப்படிப் பரிமாறித் திரிகிறது எத்தனை காலம் உண்டு என்று அறிந்தோமோ

செழு நீர் கண்ண பிரான்
ஞான ஆனந்தாதி முதலான ஸுந்தர்ய ஸுலப்யங்களைக் காட்டிக் காணும் இவளை இப்படி அகப்படுத்திற்று

இப்படி அகப்படுத்தினவன் எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
அவனுடைய மயர்வற மதிநலம் அருளினவற்றால் -பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பரமபக்தி முதலானவை பூர்ண கடாக்ஷத்தாலே இவ்வாச்சர்யம் ஒன்றிலும் வந்து சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த யுள
அவன் விஷயீ காரம் பெற்றமைக்கு அடையாளம் திருந்த வியக்தமாக உள

நீ இது என் கொண்டு அறிந்தாய் என்ன -அயர்வறும் அமரர்கள் அதிபதி தன்னைப்பிரியில் மூச்சு அடங்கும்படி யானவர்களுக்கு அப்ராப்ய அம்ருதமாய்க் கொண்டு அனுபவிப்பிக்குமவன் திருவருளால்

குணாகுண நிரூபணம் பண்ணாதே விஷயீ கரிக்கை யாகிற ஸ்வ பாவத்தை யுபகரிக்கைக்கத் -திருவருள் அருளுகைக்காக
அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
கலங்கா பெரு நகரம் கலவி இருக்கை யாய் இருக்க யன்றோ -அவன் இங்கு வந்து சந்நிஹிதனாய்த்து –

இவளும் அந்நீர்மைக்குத் தோற்று அநன்யார்ஹையாய் – அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று தன்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் தோற்ற த்ரிவித காரணங்களாலும் தனக்கு அந்நிய சேஷத்வமாகிற ஹேயத்தைப் போக்கின பின்பு துயர் அற்று தானும் அநந்யார்ஹ சேஷியாய் விளங்கினவன் சேர்ந்தமைக்கு அடையாளம் இவள் வாய் சிவந்து கனிந்த படி பாரி கோளே –

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–
திருவருள் கமுகு என்று சில உண்டு -அது நீராலே வளருகை அன்றியே
பெரிய பிராட்டியாரும் ஸர்வேஸ்வரனுமாகக் கடாக்ஷிக்க அத்தாலே வளருவன சில

அதனுடைய அழகிய பழம் போலே இரா நின்றது -மிருதுபாவையான இவளுடைய அதரம்
இவ்வாயிலே அறியலாய் அன்றோ இருக்கிறது என்றார் ஆயிற்று –

——-——————————————

நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

நெடுமாற்கு அடிமையிலே
ஸர்வேஸ்வரனுடைய வடிவு அழகிலும் குணங்களிலும் ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திருவடிகளிலே சேஷத்வமே நிரதிசய புருஷார்த்தம் என்று அருளிச் செய்தார்
ப்ரணவத்திலே மத்யம பதத்தாலும் நமஸ்ஸாலும் சொன்ன அர்த்தத்தைச் சொன்னது கீழ்
அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ததீய சேஷத்வ பர்யந்தமாகை இறே
எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -என்று இறே இருப்பது –

——–———–

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

உயர்வற என்கிற பாட்டை -இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக தேவதாந்த்ர பரருக்குச்
சேஷமாய் உயர்வு அற்றார்கள்
அதில் இவரும் ஒருவராய் இருக்கத் தமக்குப் பிறப்பித்தது –
உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வ ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆஸ்ரயித்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் ஸஹ வாஸம் தான் வேணுமோ
அவர்களுடைய சேஷத்வத்திலே முடிந்த நிலமாக அமையும் என்கிறாள்

உயர் நலம் யுடையனாவது –
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிரை இறே நலமுடையன் என்றது –
சதிர் மூர்த்தி
ஸுர்ய வீர்ய பராக்கிரமமான விக்ரஹத்தையே சதிர் மூர்த்தி என்கிறது
விரோதி நிரசனத்தால் வந்த ஸ்வாமித்வம் சொன்னபடி –

தமர்கள் கூட்ட வல்வினையை
தமர்களுடைய கூட்டமான வலிய வினையை -திரண்ட வலிய பாபங்களை
நசிப்பிக்கும் -நாசம் செய்யும் -என்னவுமாம்
தமர்களுடைய கூட்டமான வினை நசிக்கும் என்னவுமாம்

அன்றிக்கே
தமர்கள் வினையைக் கூட்டக் கூட்ட அவற்றை நசிப்பிக்கும் என்னவுமாம்
இவனுக்கு கூட்டுகையே ஸ்வ பாவம் ஆனால் போலே அவனுக்கும் கழிக்கையே யாத்ரையாய் இருக்கிற படி

சதிர் மூர்த்தி
விரோதி போக்குகைக்கு ஏகாந்தமான பல வடிவுகளையும் கொள்ளா நிற்கும்
இவர்கள் கைங்கர்யத்துக்குப் பல வடிவு கொள்ளுமா போலே யாயிற்று
அவனும் ரக்ஷணார்த்தமாக பல வடிவு கொள்ளும் படி –

இப்படி யுமைக்கு அறிகைக்கு ஹேது என் என்ன -மயர்வற மதிநலம் அருளினன்
அவன் தந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே விசதமாக வந்து கண்டு கொண்டேன்
அவனது ஆஸ்ரித பக்ஷ பாதத்தை

அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன்
விரோதி நிரசனத்துக்கு உறுப்பாக யுத்த உன்முகமான திருவாழி தொடக்கமான
திவ்ய ஆயுதத்தை யுடையவன்

இப்படி சங்கு சக்ர கதா தரனானவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி யாய் –
அஸ்தானே பய சங்கிகளாய் அத்ருப்த அம்ருத போகரானவர்களை
சந்த அனு விருத்தி கொள்ளுகிற குமரன் -யுவாவாய் இருக்கும்

கோல வைங்கணை வேள் தாதை
பஞ்ச பாணனான காமனுக்கு உத்பாதகன் ஆனவன்
அழகுக்கு அவனுக்கு மேல் இல்லாதவன் என்று இருக்கும் காமனுக்கும் அழகுக்கு
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தமர்களாம்
அப்பருவத்துக்கும் அழகுக்கும் தோற்றுத் -துயர் அறு சுடர் அடி தொழுது –
அதுக்குத் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையில் முடிந்த நிலமாக வேணும் என்கிறார் –

சதிரே வாய்க்க
இந்த நிரதிசய புருஷார்த்தம் என்றும் ஓக்க வாய்க்க வேணும்

தமியேற்கே–
என் மனனே பூத காலத்திலும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானைத் தேடிப்பிடிக்க வேண்டுகையாலே
வர்த்தமான காலத்திலும் தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை

கீழே நங்கட்கு என்றார் –
கேசவன் தமருக்குப் பின்பு தனியர் இல்லாமையாலே

இங்கு தமியேற்கு என்கிறார் –
சம்சாரிகளில் தமக்கு உபமானவர் இல்லாமையாலும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தமக்கு ஸ்வாமியாகையாலும் தமியேன் என்கிறார் –

——–———-——–——–————————————

எட்டாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஏழாவது பத்து விவரணம்- –

February 11, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

உண்ணிலாவியில்
இப்படி சரணம் புக்க இடத்திலும் இவர் கார்யம் செய்யாமையாலே மிகவும் அவசன்னராய்
விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே என்னை வைத்த போதே
கைவிடப் பார்த்தானாக வேணும் -என்று நிச்சயித்து
அவன் குணங்களை சொல்லி என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்று கூப்பிட்டார் –

———

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-

உயர்வற என்கிற பாட்டை -இன்னமுது எனத் தோன்றி -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இன்னமுது எனத் தோன்றி -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
சப்தாதி விஷயங்களே போக்யமாகப் புத்தி பண்ணி
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே மூட்ட புஜிக்கும்படி இருக்கிற இது தான்
தம் தாம் ஸூஹ்ருத்தத்தாலேயாய் உச்சாரயம் அற்றது

உயர்நலம் யுடையவனான நீ-நித்ய ஆனந்த யுக்தனாய் இருக்க –
எவன் அவன் -நைவேன் என்னை -இந்திரிய வஸ்யனான என்னை

இன்னமுது எனத் தோன்றிய
சப்தாதிகளே பரம போக்யமாம்படி ஸ்ம்ருதிக்கு விஷயமாய் அற்றது

அது தான் விபாகத்தில் பலிக்குமது முகப்பிலே யாகப் பெற்றேனாகில் கை விடலாம் கிடீர்
அக்ரே யத் அம்ருதம் இவ இறே
பரிணாமத்தில் விஷம் இறே
விபாகத்திலே பலிக்குமது முகப்பிலேயாகப் பெற்றேனாகில் கை விடலாம்

உபக்ரமத்தில் தோற்றிற்று ஆகில் மேல் விழாது ஒழியல் யாய்த்தே
பழியும் தர்ம ஹானியுமாய் மேல் நரகமானாலும் விடப் போகாது இருக்கை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு இங்கனே ஒரு தண்மை உண்டு

ஓர் ஐவர்
தனித்தனியே பிரபலமாய் அத்விதீயமான சப்தாதி விஷயங்கள் ஐந்தும்

யாவரையும் மயக்க
ஷூத்ரரான மனுஷ்யரோடு -அளவுடைய ப்ரஹ்மாதிகளோடு வாசியற
அறிவு கெடுக்கும்படிக்கு ஈடாக வாய்த்து அவை தான் இருப்பது

இவற்றின் அடைவு உமக்குத் தெரிந்தபடி என் என்ன -நீ மயர்வற மதி நலம் அருளுகையாலே
மயக்க நீ வைத்த
நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அவை விஷமாகத் தோற்றிற்று

எவன் -யாவன் ஒருவன் -அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன்
மயர்வற -மயங்கப் பெறா நிற்கிற
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து
அநாதியான ஸம்ஸாரத்தை எல்லாம் ஊசி வேரோடே போம் படி ஸ வாஸனமாகப் போக்கி

என்னை
ஸம்ஸார பய பீதனான என்னை
செய்த அம்சமே திருப்தனாய் இருக்குமே அவன்
ஞான லாபம் பண்ணிக் கொடுத்தோமே என்று இறே அவன் இருக்கிறது –
அது போதாது இறே
ஸம்ஸாரத்தை ஸ வாசனமாகப் போக்க வேண்டி இருக்கும் இறே இவருக்கு

நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -உன் சின்னமும் திரு மூர்த்தியும் –
அயர்வறும் அமரர்கள் பிரகிருதி பரவசர் அல்லாதவர்கள்
பரமபதனைப் பரிசர்யை பண்ணி
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும் சொல்லுகிற படியே
திவ்ய ஆயுதங்களையும் திவ்ய அவயவங்களையும் அவற்றுக்கு ஸத்ருசமான திருமேனியையும்

சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு
இவற்றை நெஞ்சாலே நினைத்தும் உள் அடங்காமல் வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி
பின்னை திருவடிகளிலே விழும்படிக்கு ஈடாக அருள வேணும் –
வாயாலே ஓன்று சொல்லா நிற்க -நெஞ்சு வேறே ஒன்றை நினைத்தால் உனக்கு சேஷம் என்று
வேறே ஓர் இடத்திலே தொழில் செய்தல் அன்றிக்கே
மநோ வாக் காயங்கள் மூன்றும் உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும் படி
ஹேய பிரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளிலே ப்ரவணமாம் படி பண்ணி யருள வேணும்

என்னம்மா
எனக்குத் தாய் போலே பரிவனனானவனே

என் கண்ணா
அந்தப் பரிவை அர்த்த க்ரியா கார்யம் ஆக்கினவனே

இமையோர் தம் குல முதலே
ஒரு நாடாக உன்னைக் கொடுத்து அனுபவிக்கும் படி இருக்கிறவன் அல்லையோ –
அநேகர் ஆசைப்பாடு ஒருவனுக்கு உண்டானால் கொடுக்கலாகாதோ

என் மனனே -என் அம்மா -என் கண்ணா -இமையோர் தம் குல முதலே
த்ரிவித கரணமும் உன் வச வர்த்தி அன்றோ
இத்தை அவன் மேல் வைத்திரு

என் அம்மா இத்யாதி
இம்மூன்றையும் உன் மேலே வைத்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

——–—————

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

கங்குலும் பகலிலே
இவர் தசையை அனுசந்தித்த ஈஸ்வரன் -தான் நினைத்த கார்யம் தலைக்கட்டும் அளவும்
இவரைத் தரிப்பிக்கும் வழி ஏதோ என்று சிந்தியா நிற்க
அது பற்றாமை மோஹங்கதையாக -இவள் தசையைக் கண்ட திருத்தாயார் -இவளைப்
பெரிய பெருமாள் திருவடிகளிலே பொகட்டு -இவள் இடையாட்டம் பற்றி நீர் செய்ய நினைத்து இருக்கிறது என்
என்று கேழ்க்கிற பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டைக் -கங்குலும் பகலும் -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
ஸ்ரீ பர ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தங்களும் அஸ்திரமாய் அல்பமாய் அற்றது
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளுகையாலே
பரபக்தி பர்யந்தமாகப் பிறந்தது

தர்சனம் பரபக்தி ஸ்யாத் பர ஞானந்து சங்கமம் -புனர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்கிறபடியே
பரபக்தியாலே தர்சனம் உண்டாய் -பர ஞானத்தாலே சங்கத்தை ஆசைப்பட்டு பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அணைக்காகக் கையை நீட்ட ஞான சாஷாத்காரம் ஆகையாலே கைக்கு எட்டாமல் மோஹங்கதராக
பரிவரான பாகவதர்கள் பெரிய பெருமாள் ஸந்நிதியில் கொணர்ந்து விட்டு
இவர் தசையை அறிவிக்கிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உயர்வற -கங்குலும் பகலும் -என்றபடி
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக –
திவா ராத்ர விபாகமாய் இருக்கையாலே -கங்குலும் பகலும் -என்கிறது –
அற என்றது -திவா ராத்ர விபாகம் அற கண் துயில் அறியாள் -என்கிறபடி

இத்தால் -லீலா விபூதியில் உள்ளார் ஊணும் உறக்கமுமாகக் களிக்க இவளுக்கு இது இல்லை என்றபடி –
உயர்வற என்று லீலா விபூதியைச் சொல்லிற்று
உயர் நலமுடையவன் என்று நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
கங்குலும் பகலும் என்கிறது –
கங்குல் லீலா விபூதி -பகல் -நித்ய விபூதி

கண் துயில் அறியாள் -என்கையாலே
இவருக்கு உபய விபூதியும் ஒரு பகலாய் இருக்கிற படி –
காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை
கண்டால் ஸதா பஸ்யந்தி யாகையாலே உறக்கம் இல்லை என்றபடி

எவன் அவன் என்று திவ்ய ஆத்ம ஸ்வரூபம் எப்போதும் பிரகாசிக்கிற படி
அதுக்கு மேலே மதிநலம் அருளுகையாலே பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமல்
ஹர்ஷ சோகங்கள் இரண்டாலும் கண்கள் நீர் பெருகத் தொடங்கிற்று
இந்த மதி நலம் அருளினவனைக் காண ஆசைப்பட்டு -இந்த ஆர்த்தியே செப்பேடாக வரும் என்று பார்த்து
கண்ண நீர் மறையாமைக்காக கைகளால் இறையா நிற்கும்
ஊற்று மாறாமையாலே இறைக்கையே யாத்ரையாய் ஆய்த்து –

எவன் இந்த அதிகாரி -அவன் பிரதம பரிஸ் பந்தமே தொடங்கிக் காண வேணும் என்று ஆசைப்பட்டு –
கண்ண நீர் கைகளால் இறைத்து சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
சங்கு சக்கரங்கள் யுடையவன் எவன் அவன் என் ஆர்த்தி தீர்க்க வந்ததோ என்று
உபகார ஸ்ம்ருதியாலே கை கூப்பும்

மயர்வற்ற மதி நலத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே வந்த வெளிச் சிறப்பாலே கை கூப்பும்
மனஸ்ஸுக்குத் திருவாழி யாழ்வான் அதிஷ்டான தேவதை யாகையாலே
ஆழ்வான் ப்ரகாஸமும் ஞானப் ப்ரகாசமுமாய் அதி ப்ரகாசமாய்த்து
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்று அஞ்சலி பண்ணிப் பார்த்துக் கொண்டு இரா நின்றாள் –

எவன் மயர்வு அற்றவன் -அவன் அருளின அந்த
தாமரைக் கண் என்றே தளரும்
ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற கண்
ஆழ்வார்களை விடிலும் உம்மை விடேன் என்று நோக்கினான் –

தாமரைக் கண்களால் நோக்காய் -என்றபடியே அருளினன்

கண் என்றே தளரும்
அங்கனே வந்து தோன்றக் காணாமையாலே தளருமாய்த்து

அயர்வறும் அமரர்கள் அதிபதியான
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -என்னும்
அயர்வு -தரியாமை –
விஸ்லேஷியாமல் அனுபவிக்கிற நித்யரோபாதியும் போராதோ இவள் தரியாமை
எவன் -உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -என்றவன் அவன் அதிபதியாய்
உபய விபூதி நிர்வாஹகனாய் இருக்க நான் இழந்து இருப்பதே என்கிறாள்

சுடர் அடி தொழுது எழ நினைத்து இது லபிக்குமோ லபியாதோ என்று அங்கலாய்ப்பாலே
இரு நிலம் கை துழாவி இருக்கும்
விபூதி த்வயமும் இவர் கைக்கு உள்ளே அடங்கி ஆராயும்படி ஆய்த்து

தரியாமையாலே தரை துழாவா நின்றாள் –
ஒரு பீங்கான் உள்பட்ட சந்தனம் பட்டது பூமியும் படா நின்றது –
துயர் அற்றும் இரு நிலம் கை தொழா நிற்கும்

செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே
துயர் அறு -ஆர்த்தியாகிற துயர் தீர்க்க வன்றோ திருவரங்கத்தே வந்து சாய்ந்து அருளிற்று
திருவரங்கத்தாய் யுன் சுடர் அடி -அத்யந்தம் ஸூ லபனான உன்னுடைய
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளைத் தொழுது எழு என் மனனே
எனக்கு பவ்யமான நெஞ்சே தொழுது எழு என்னா நின்றாள்

ஏக தேச வாசிகளாய் ஸாரூப்யம் பெற்று அவன் நீர்மையே தாரகமாய்
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ்-என்று இருக்கிறவர்களைப் போல் அன்றோ இவளும்
செங்கயல் -முஹூர்த்தம் அபி ஜீவாவா -என்னும் அளவல்லவே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்கிற இவள் திறத்து என் செய்கின்றாயே

ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து கோயிலிலே ஸாலா ப்ரவேஸம் (யாக சாலையில் போவது) பண்ணி
உன் சீலாதி குண விசிஷ்டரான சிரௌதிகளோடே சரணாகத ரக்ஷணம் பண்ண இருக்கிற உமக்கு
ஆர்த்தருமாய் சரணாகதருமான இவள் திறத்து என் செய்கின்றாய்

பரத்வமும் வ்யூஹமும் தேச விப்ரக்ருஷ்டம்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டம்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தையிலும் பண்ணி அனுபவிக்கலாவது
கோயிலிலே அணித்தாய் வந்து இருக்கிற உன்னை விட்டு எங்கனே தரிப்பது

ஊணாலும் உறக்கத்தாலும் -சூது சதுரங்கத்தாலும் பொழுது போக்குமவளோ இவள்
உன்னடிமையாலேயே தரிக்கப் பார்க்கும் இவள் திறத்து என் செய்கின்றாய்
தொழுது எழும்படி பார்க்கிறாயா
கைவிடப் பார்க்கிறாயா என்கிறாள்

ஆர்த்தையான இவள் திறத்து என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறாள்
நித்ய விபூதியை விட்டு ரக்ஷணத்திலே த்வரிதனாய் வந்து இருக்கிற உன் ஸ்வரூபம் எது -விளம்பம் எது –
விளம்பம் பொறாதாரொடு விளையாட்டு உண்டோ

என் செய்கின்றாயே
தொழுகை ஸ்வரூபம் என்று இருக்கிறாயோ
குற்றம் என்று கை விடுகிறாயோ -என்கிறாள் –

———————–

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரி சங்கில்
இப்படி மோஹித்துக் கிடந்தவர் திரு நாம ப்ரசங்கத்தாலே மோஹம் தெளிந்து
தென் திருப்பேரையிலே எழுந்து அருளி இருக்கிற
மகர நெடும் குழைக்காதர் பக்கலிலே அபஹ்ருத சித்தரானபடியை அருளிச் செய்கிறார்

உயர்வற -என்கிற பாட்டை -வெள்ளைச் சுரி சங்கு -பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தம் தாம் ப்ராப்ய பிராப்பகங்களுக்குத்
தகுதியான ப்ரமாணங்களைத் தம் தாம் நெஞ்சங்களிலே கொண்டு நடத்தா நிற்பார்கள்
அது தான் அல்ப அஸ்த்ரங்களாய் இருக்கையாலே உயர்வு அற்று இருக்கும்

உயர்நலம் உடையவன் எவன் அவன் வேத ப்ரதிபாத்யனாகையாலே அந்த வேதமானது
ஆனந்தாதி குணங்களை அளவிடுவோம் என்று பேசப்புக்கு
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட மாட்டாமல் மீண்டது இறே

அப்படிப்பட்ட பரமமான ப்ரஹ்மம் எனக்கு மயர்வற மதிநலம் அருளிக் காட்டக் கண்டேன்
கண்டபடி என் என்னில்
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
நான் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே கண்டால் போலே யார் காண வல்லார் என்ன
நீர் தான் கண்டபடி சொல்லீர் என்ன

வெள்ளைச் சுரிசங்கு
ஸூ த்த ஸத்வ மயமாய் -ப்ரணவ ஆகாரமாய் -திருமந்திர பூரிதமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
மந்த்ரார்த்தை நடத்துகிற அருளார் திருச்சக்கரமும்
திருக்கையிலே பூ ஏந்தினால் போலே ஏந்திக் கொண்டு

தாமரைக்கண்ணன்
ஜிதந்தே புண்டரிகாஷன் -என்னும் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் –
அவர்களைக் கண் அழகாலே தோற்ப்பிக்குமா போலே என்னைத் தோற்ப்பித்து

என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற -அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே த்ரிபாத் விபூதியில் அடங்காமல்
வானவர் நாடு என்னுமா போலே நெஞ்சை நாடு என்னும்படி
மஹா நகரமாக்கி

புள்ளைக் காடாகின்ற
வேதமயமான பெரிய திருவடியை மேல் கொண்டு வேதாந்த வேத்யனானவன் தன்னையே என் நெஞ்சு
பிராமண புரஸ்சரமாக பின்செல்லும் படி கடாக்ஷித்து
புள்ளைக்காடாகின்ற வாற்றை -நெஞ்ச மா நகரிலே உலாவி அருளா நின்றான் –

ஆற்றைக் காணீர்
கண்கள் காதுகள் முதலான கரணங்கள் உஜ்ஜீவிக்கும்படி காண மாட்டீகோளோ என்ன

நீ கண்டபடி சொல்லிக் காண் -நீ தானே அனுபவியாதே என்ன –

என் சொல்லிச் சொல்லுகேன்
ஹம்ஸ சக்ரவாகங்கள் போலே ஆழ்வார்களும்
காடு படர அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்ய அவயவங்களும்
தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியும்
அத்தை மனத்துக்கு இனிய இருக்கிறதொரு மஹா மேரு தரித்தால் போலே இருக்கிற
பெரிய திருவடி யோடே கூட நித்ய முக்தர்கள் மங்களா ஸாஸனம் பண்ண இவர் திரு உள்ளத்திலே உலாவுகிற படி
இப்படி இறே அனுகூலரோடே பரிமாறும் படி

அன்னைமீர்காள்!
செந்தாமரைக் கண்ணன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுமினோ
அஞ்ஞான அந்தகாரம் நீங்க வேதாந்த வேத்யனைச் சுடர் அடி தொழுங்கோள் என்ன

எங்கே போய்த் தொழுவது என்ன

வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும் பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானும் என் மனனும்
நீங்களும் என்னை நிஷேதியாதே கூடச் செல்லுங்கோள்

வெள்ளைச் சுகம்
பிரிவிலும் அரையாறு படாதபடி அவன் கலவியில் தேற்றிக் கொண்ட ஸூக அதிசயம் இருக்கும் படி

அவன் வீற்று இருந்த
நான் இட்ட கால் இட்ட கையாய் இருக்கிறது
அவ்விடம் வேத ஒலியும் விழா ஒலியாய் இருக்கிறது –
அவன் நெஞ்சு உகந்து தன் புணர்ப்பு சொல்லக் கேளா நின்றான்

விழா ஒலியும்
இவளைத் தோற்பித்த வெற்றி மாலை கேட்டு நெய் ஆடலா நின்றான்
நித்ய உத்சவம் நடக்கும்படி காணும் அவன் இருக்கிறது
நான் இருக்கும் இடம் இறே வெறும் வீச்சாகக் கடக்கிறது

பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா
பருவம் நிரம்பாத பாலர்கள் எல்லாம் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கிறது
பாலா அபி க்ரீடா மாநா க்ருஹ த்வாரேஷு ஸர்வஸ –இத்யாதிப்படியேயாய் இருக்கிற
திருப்பேரையிலே சேர்வன் -நானும் நெஞ்சும்

அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுவோம்-நீங்களும் போருங்கோள் என்கிறாள் –

——————

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆழி எழ -வில்
ஸர்வேஸ்வரன் இவருக்கு உண்டான ஆற்றாமை தீர்க்கைக்காகத் தன்னுடைய விஜய பரம்பரையை
பத்தும் புத்தாக்க காட்டிக் கொடுக்கக் கண்டு
அவனுடைய விஜய பரம்பரையை அனுஷ்ட்டித்து ஹ்ருஷ்டராகிறார் –

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே உயர்வு அற்று இருந்தார்கள்
அவற்றை மாற்றாத திரு உள்ளம் பற்றி வாமன அவதாரம் பண்ணி அவற்றை அறும் படி பண்ணினான்
எங்கனே என்னில்
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் வாமனனாய் மாவலி பக்கலிலே சென்று மூவடி மண் இன்றே தா என்ன
உதக பூர்வகமாகக் கொடுக்க வாங்கின போது மூவடி மண் கொண்டு அளக்க த்ரிவிக்ரமனாய் கிளற
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்று நமுசி பிரப்ருதிகள் வளர ஒட்டாமல் தகைந்து கொள்ள

அப்பொழுது -ஆழி எழ
தேவா ஸ்வ ஸ்தானம் ஆயந்தி நிஹதா தைத்ய தானவா ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்
என்கிறபடியே தனக்காக்கிக் கொண்ட செயல் இறே
ராவணாதிகளைப் போலே தலை அறதே குண லாபம் உண்டாகையாலே நின்ற நிலையில் தோற்ப்பித்துக் கொண்ட படி
நாயகனுக்கு அடியார் இறே வென்று கொடுப்பார்

நலமுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி குண பூர்த்தியாலே ஸ்ருதி ப்ரஸித்தன் ஆனவன்
என்னுடைய ஜகதாகாரதையைப் பாருங்கோள் என்று
மயர்வற மதிநலம் அருளித் தான் திரு உலகு அளக்கப் புக்கவாறே –

ஆழி எழச் சங்கும் எழ
ஸ்வாமியுடைய உத்யோகம் அறிந்து ஆயுதங்கள் முற்பட்ட படி
காட்டுக்கு முற்பட்ட இளைய பெருமாளைப் போலே யாய்த்து முற்பட்ட படி
த்ரும சீரைர் அலங்க்ருத -என்று முற்கோலினால் போலே யாய்த்து
தோற்றத்திலே அரசு போராயிற்று -ஹேதி ராஜன் இறே

ஆழி எழ
ஆயிரம் காதம் பறப்பதின் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகடிக் கொள்ளுமா போலே
உத்யோகத்திலே ஈஸ்வரனைப் பார்க்க விஞ்சின படி

சங்கும் வில்லும் எழ
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கையிலே ஏறினார்கள்
இரை பெறாத இடத்தே இருந்து -சீறு பாறு -என்னக் கடவ வர்கள்
இரை யுள்ள இடத்திலே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் இறே

இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்பரிக்கா நின்று அடங்காரை ஒடுங்கு வித்த ஆழி
அரவணை மேல் தோன்றல் திசை அளப்ப பூவாரடி நிமிர்த்த போது
இவர்கள் இப்படி பொருத படி காண்கைக்கு
அவன் மயர்வற மதிநலம் அருளுகையாலே கண்டு

திசை வாழி எழ
ஜகதாகாரத்தைக் கண்டு இவ்வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
திவ்ய ஆயுதங்களுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
பல்லாண்டு ஒலி எழா நிற்கும்

திசை வாழி எழ
திக்குகள் தோறும் அனுகூலருடைய வாழி வாழி என்ற மங்களா ஸாஸன த்வனி கிளர
ஏத்த ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் இறே

தண்டும் வாளும் எழ
தூசித் தலையிலே -ஸ்ரீ கதை ஆழ்வானும் -ஸ்ரீ நந்தக ஆழ்வானும்
நாம் இருக்கத் திருவாழி ஆழ்வான் முதலானாரோ பொருவதுவும் வெற்றி கொள்வதுவும் – என்று
போர் புரப் பாய்த்துப் பொருகிற படி

நமுசி வந்து -என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னிய வண்ணமே கொண்டு அளவாய் -என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றி எறிந்தவன்

அன்று
பிறந்த அன்றே செய்த வியாபாரம் இறே

அண்டம் மோழை எழ
இந்திரனுக்காக த்ரை லோக்யம் அத்தனையும் அளக்க வேண்டிய வியாஜத்தாலே
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பண்ணிற்று
அவ்வளவில் நில்லாதே
அண்ட அவகாசம் உள்ள இடம் எங்கும் சென்று அளந்து -அண்ட கடாஹத்திலே திருவடிகள் சென்று
ஒண் மிதியும் புனலுருவி ஒருகால் நிற்ப -என்று
கீழில் அண்ட கடாஹத்தை யுருவிற்று ஒரு திருவடிகள்
அது பிளந்து ஆவரண ஜலம் மேலே எழ -ஆவரண ஜலத்துக்கு நடுவே
ஒரு கழக் கோடி மிதக்குமா போலே மிதக்கும் இறே அண்டம்

முடி பாதம் எழ
திரு அபிஷேகத்து அளவும் திருவடிகள் கிளர
அப்பன் ஊழி எழ
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியானவன் ஜகதாகாரனாய் நின்ற நிலையை உபகரித்தவன்
அப்பன் -ஸ்வாமி யானவன்

ஜகதாகாரதையைக் கண்டு -இதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின அச்சம் தீர்ந்து
முக்தரும் மங்களா ஸாஸனம் பண்ணித் துயர் அறு சுடர் அடி தொழுதார்கள்
துயர் அறுகை உபய விபூதிக்கும் ஈஸ்வரனுக்கு ஒக்கும் இறே

அப்பன் ஊழி எழ
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாய்ச் சென்ற காலம் போய்
பகவச் சேஷத்வ பாரதந்த்ய பரா காஷ்டையாலே நல்லடிக் காலம் ஆய்த்து

அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே
மஹா உபகாரகனான ஸர்வேஸ்வரன் உலகு அளந்த பிரகாரத்திலே பொன்னடி
அந்நிய சேஷத்வமாகிற ஹேயப் ப்ரத்ய நீகமாய் அத்யுஜ்ஜ்வலமான திருவடிகளை
என் மனனே தொழுது ஏழு -என்கிறார் –

————-

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

கற்பார் இராமனில்
இவ் விஜயத்துக்கு அடியாக அவன் விபவ குணங்களை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்
படுக்கைக்கு கீழே நிதி கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இக்குணங்களும் நடையாடா நிற்க ஸம்ஸாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவுக்கு வெறுத்தார்

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் வேத சாஸ்த்ராதிகளாலே ப்ரதிபாதிக்கிறது
உபாய உபேயங்கள் பலவாய் இருக்கும்
அது தான் ஒன்றுக்கு ஓன்று உயர்வாயும் தாழ்வாயும் இருக்கையாலே ஏற்றம் அற்று இருக்கும் –

உயர்நலம் உடையவன் எவன் அவன் என்று சக்கரவர்த்தி திருமகனை இறே சொல்கிறது
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
உயர்நலமான ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடைய இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ

நீர் எத்தாலே அறிந்து சொல்லுகிறீர் என்ன
ஸ்ருதி ப்ரஸித்தன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதிநலம் அருளின
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
பரத்வமே பிடித்து அவதாராதிகளை ஆராய்ந்து பார்த்த இடத்து இந் நேர் காணாமையாலே
பதர் கூட்டிக் கழிக்கவும் பற்றாது –

இவ்விஷயத்தைக் கழிந்த கற்கும் கல்வி எல்லாம்
தத் ஞானம் அஞ்ஞானம் அத் அன்யத் யுக்தம் -என்றும்
வித்ய அந்நிய சில்ப நைபுணம் -என்றார்கள் இறே
பகவத் லாபத்துக்கு உடலான ஞானமே ஞானம் ஆகிறது -அல்லாதது அஞ்ஞானம் ஆய்த்து

ஆகையால் கற்பார் -ஒருவன் ஒன்றைக் கற்பது அப்போதைக்கு இனிது என்றாதல் –
பின்பு நன்மையை விளைக்கும் என்றாதல் -என்றாய்த்து கற்பது
அவை இரண்டும் இவ்விஷயத்தில் ஒழிய இல்லை என்கை

இவருக்கு அதிசயம் ஏது என்ன
புற்பா முதலாப் புல்
பா என்று படர்த்தியாய் படருகிற புல் என்னுதல்
தூர்வாதி ஸ்தாவராந்தமாக என்றபடி

எறும்பாதி ஒன்று இன்றியே
ஜங்கமங்களிலே கடையான எறும்பு தொடக்கமாக
பிரம்மாவை எண்ணினால் அநந்தரம் நிற்கக் கடவது இறே பிபீலிகை

புற்பா முதலாக -என்று
இவற்றுக்கு ஒரு ப்ரதான்யம் சொல்லுகிறார் அல்லர்
ராம விஷயீ காரத்துக்கு முற்பட்டார் இவைகள் என்கிறார்
வெள்ளமானது தாழ்ந்த இடத்தே ஓடுமாப் போலே

ஸ்தாவரங்களிலே தண்ணியது புல்லு
ஜங்கமங்களிலே தண்ணியது எறும்பு
இவை இரண்டையும் ஓக்க எடுக்கையாலே -ஞான பலம் மோக்ஷம் -என்கிறவத்தைத் தவிர்க்கிறது
சைதன்யம் உண்டாகையும் இல்லையாகையும் அப்ரயோஜம் -நலமுடைய பெருமாள் கிருபைக்கு என்கிறது
இவற்றினுடைய கர்ம தாரதம்யங்கள் அப்ரயோஜம் என்கிறது

நிருபாதிக சேஷி பக்கல் அப்ரதிஷேதமே பேற்றுக்கு வேண்டுவது
அபி வ்ருஷா பரிம் லாநா
உபதப் தோத காநாத்ய -இத்யாதிப்படியே
ராம விரஹத்தாலே கொதித்தனவே

ஓன்று இன்றியே
தன் நிர்ஹேதுக கிருபையாலே

ஓன்று இன்றியே
பேற்றுக்கு ஈடாக இருபத்தொரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே -என்றபடி
தன் சிறுமையும் பேற்றின் பெருமையும் பார்த்தால் தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் இறே
இனி அங்கீகார ஹேது அயோத்யா வாஸமே இறே

அயர்வறும் அமரர்கள் -அயராதே ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ண வீற்று இருந்து ஆளும் அவன்
அயோத்யா வாஸம் பண்ணுகையாலே
நற்பால் அயோத்தியில்-நல்ல இடத்தை யுடைத்தான திரு அயோத்தியிலே
இத்தால் நல மிகுதியே ராம பக்தியை விளைவிக்கை
தேசோயம் ஸர்வ காம துக் -என்னக் கடவது இறே

அயோத்தியில் வாழும்
வர்த்திக்கும் என்னாதே வாழும் என்றது -அத்தேச வாஸமே வாழ்வு -என்கைக்காகவே

வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்
நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம்
ப்ராப்ய தேசத்திலே வர்த்தகம் தானே ப்ராப்யம் -ப்ராபகன் அவன் ஆகையால்
நமக்கு கர்ம சம்பந்தத்தால் குறைந்து தோற்றுகிறது -தர்மி ஐக்யத்தாலே எங்கும் ஒத்து இருக்கும் இறே

ஆகையால் சுடர் அடி தொழுது எழும்படி
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–
நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி செலுத்தினான்
அதாவது
இவற்றினுடைய கர்ம தாரதம் யத்தாலே வரில் இறே அவ்வோர் அவ்வோர் அளவுகளுக்கு ஈடாக இருப்பது
அவனாலே வந்தது ஆகையால் எல்லாருக்கும் ஓக்க நன்மை விளைந்தது

மயாத்வம் சமனுஞ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் என்று இங்கு உண்டான பற்று அற்று
ஒரு தேச விசேஷத்திலே சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக்
கொடுக்க வல்லவன் இங்கு தன்னை ஒழிய செல்லாமை விளைக்கை பணி யுடைத்து அன்று இறே

நற்பாலுக்கு உய்த்தனன்
நலமுடையவன் -நலம் அருளின நற்பாலுக்கு உய்த்தனன் –
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப ஸ்வராட் பவதி என்கிற இடத்தில் உற்றபடி –

ராஜா ஒருவனுக்கு ஒரு நாடு கொடுத்தால் அவனுடையவர் ஸ்வ தீனமாய் அவன் ஆணையும் ஆஜ்ஜையுமாக
அவனுடைய ஸ்வா தந்தர்யத்தையே நடக்கும்படி பண்ணிக் கொடுக்குமா போலே
சம்சாரி சேதனனுக்குத் தலையான சதுர்முகனுக்கு கையடைப்பான நாட்டுக்குள்ளே அவன் ஸ்வா தந்தர்யத்தையும் தவிர்த்து
இவற்றினுடைய கர்ம பாரதந்தர்யத்தையும் தன் குணத்தால் பதம் செய்து
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்

ஆனபின்பு அவன் சுடர் அடி தொழுது எழு என் மனனே
வெறும் சிலவற்றைக் கற்பரோ

—————-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –

உயர்வற -பாட்டை -இதுவும் விவரிக்கிறது -எங்கனே என்னில்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தஞ் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா
பக்தைர் பாகவத ஸஹ -என்கிறபடியே
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனான ஸர்வேஸ்வரன்
திரு உள்ளத்தில் நினைந்த படி

ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளுக்கு ப்ரஹ்மாதிகளை அமைத்தோம்
வேத ஸாஸ்த்ர ப்ரவர்த்தனங்களுக்கு மன்வாதிகளையும் வியாச பராசர பாராசார்ய
போதா யநாதிகளையும் அமைத்தோம்

மோக்ஷ சாஸ்த்ரங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் தாத்பர்யங்களை அறிந்து அதில் சாரமான
மந்த்ர த்ரயத்தாலே சரணாகதி வழியை நடத்துகைக்காக
ஆழ்வார்களை அவதரிப்பித்து -அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளி
அவர்கள் முகேந ஜகத்தைத் திருத்திக் கைக்கொண்ட படி சொல்கிறது

இதில் ஆழ்வார்களைக் கரண பூதராக யுடைய நம்மாழ்வார் திருவாய் மொழி முகத்தால்
சரணாகதியை அருளிச் செய்தார்
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் மயர்வற்று ஜகத்தைத் திருத்தப் பார்த்த இடத்து தம்மை முந்துறப் பார்த்தார்
தம்மைப் பார்க்கவே தம் திரு உள்ளம் -ஒண் டொடியாள் கேள்வன் ஒருவனையே நோக்கும்
உணர்வு உண்டாய்த் தமக்கு முந்துற்ற நெஞ்சாய் இருந்தது –

அத்தைக்குறித்து மேல் மேல் என உபதேசித்து ஈஸ்வரன் தமக்கு மயர்வற மதிநலம் அருளினால் போலே
தம் திரு உள்ளத்துக்குத் தாமே கரணி யாகையாலே கரணமான நெஞ்சைக் கொண்டாடுகிறார் –

எங்கனே என்னில் -உயர்வற -வார்த்தை அறிபவர் –
பஞ்சம வேதமான மஹா பாரதத்தில் உபநிஷத் பாகமான ஸ்ரீ கீதையில் 18 அத்தியாயத்திலும்
தத்வ விவேக முதலான ஸர்வ தர்மங்களும் -பாரதத்திலும் வ்யாஸாதிகள் சொன்ன ஸகல தர்மங்களும்
ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் -மாம் -என்று தன்னைத் தொட்டுக் காட்டின
மாம் ஏகம் என்கிற ஸ நாதன தர்மமானதும்
எல்லாவற்றையும் கூட வார்த்தை என்கிறது

ப்ரயோஜனவத்தானது இறே -மாம் ஏகம் -என்று பலவத்தானது இது இறே –
இத்தை இறே உயர்வற உயர்நலம் -என்கிற பாட்டு விவரிக்கிறது

உயர்வு -ஸர்வ தர்மான் -வார்த்தை அறிபவர் -என்றது
சாதனாந்தரங்களையும் வார்த்தை என்றது –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ரபாகாந்தரங்களிலே ஒருவருக்கு ஒருவர்
உயர்வும் தாழ்வும் ஆகையால் உயர்த்தி அற்று இருப்பார் ஆகையால் உயர்வற என்கிறது

ஸர்வ தர்மான் என்று மோக்ஷ பல சாதனங்கள் எல்லாம் கூடாது தர்மம் என்றபடி
வார்த்தை என்றது தர்ம சப்தங்களை
பரித்யஜ்ய -உயர்வற வார்த்தை அறிபவர் -தர்மவத்தான வார்த்தை அறிபவர் –
த்யாஜ்ய உபா தேயமான வார்த்தை அறிபவர் என்கிறது

பாரத கீதைகளில் தர்ம சப்தமான வார்த்தைகள் பந்த மோக்ஷங்களுக்குப் பொதுவாய் இருக்கையாலே த்யாஜ்யம்
மாம் ஏகம் என்றது மோக்ஷத்துக்கே ஹேதுவாகையாலே உபா தேயம் என்கிறது
வார்த்தை அறிபவர் -இப்படி அறிபவர்

மாம் என்றது உயர்நலம் உடையவன் என்றபடி
மாயவன் என்றதும் மாம் ஏகம் என்றபடி மாயா வயுநம் ஞானம்
மாம் என்று சர்வஞ்ஞத்வ சர்வசக்தித்வ ஸுலப்யங்கள்
உயர்நலம் உடையவன் என்றது ஆனந்தாதி குணங்கள்
ஆக இவைகளால் ஸர்வ குண ஸம் பூர்ணன் என்றபடி

ஏகம் சரண் -யவன் அவன் –மாயவற்கு ஆள் -ஏகம் சரண் என்று
ஸஹ காரி நிரபேஷமான ஸ நாதந தர்மத்தைக் காட்டுகிறது –
எவன் அவன் -ஸ நாதன தர்மமான ஷாட் குண்ய விக்ரஹம் –
ஸ்வரூப ப்ரகாசகமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டுகிறது
இப்படிப்பட்ட ஸுலப்யாதி குண விசிஷ்டனை மாயவன் என்கிறது

வ்ரஜ -மயர்வற -ஆளன்றி –
வ்ரஜ -ஸ்வீகரி -மயர்வற -ஸ்வீ கார வஸ்துவை விஸ்மரியாதே -ஆளன்றி -கூழுக்கு ஆள்படாதே
தேவதாந்தரம் சாதனாந்தரம் ப்ரயோஜனாந்தரங்கள் -ஆகிய கூழுகளுக்கு ஆள் படாதே

அஹம் த்வா -மயர்வற மதிநலம் அருளினன் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ –
அஹந்த்வா -ஸர்வஞ்ஞனாய் –ஸர்வ சக்தனான -நான்
அஞ்ஞனாய் அசக்தனான யுன்னை -மயர்வற மதி நலம் அருளி -சாதனாந்தர புத்தியைத் தவிர்த்து –
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ஸநாதன தர்மத்தை அடைவித்து
மாயவற்கு ஆளன்றி ஆவரோ -என்கிறபடியே நித்ய கிங்கர ஸ்வ பாவனாக்கினான்

நானே -ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று அருளினவன் -எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்குமவன் –

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கின படி
ஸர்வ பாபேப்யோ -என்றது
மோக்ஷயிஷ்யாமி -அயராமல் அடிமை செய்கிற நித்ய முக்தரிலும் அதிசயிதமான
போக்ய வஸ்துவாக உம்மைக் கொண்ட படி
உமக்கு ஜரா மரணாதிகள் ஆகிற பாபங்கள் ஸவாசனமாகப் போச்சுது
ஆத்மாபிராப்தியாகிற மஹா துக்கம் போச்சுது
மாஸூச -பயப்படாதே
ஸர்வ நியாந்தாவான நான் யுன்னை அனுக்ரஹித்தால் பாபங்கள் நிற்க வற்றோ

யிஷ்யாமி -ணிச்சாலே
நீயும் வேண்டா நானும் வேண்டா -உன்னுடைய ராஜ குல மஹாத்ம்யத்தாலே
அவை தன்னடையே விட்டுப் போம்
மாஸூச –சங்கையை விட்டு இரு

துயர் அறு சுடர் அடி தொழுத யுனக்கு சங்கை பயன்கள் யுண்டோ –
தன் தாளின் கீழ் சேர்த்தவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று இரு
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளிலே சேர்த்து -உன்னைப் பெற்ற என் துக்கமும் தீர்ந்து
உனக்கு ரக்ஷையே செய்கிற இத்தை எண்ணி மனஸ்ஸூ நிர்மலமாய்
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
நிர்ப்பரோ நிர்ப்பரோஸ்மி என்று இரு என் மனனே -என்கிறார் –

————————–

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

பாமரு மூவுலகில்
அவன் குணங்களையும் அழகையும் பெருமையையும் அனுசந்தித்து இப்போதே காண வேணும்
என்று பெரு மிடறு செய்து கூப்பிட்டார் –
உயர்வற என்கிற பாட்டை -பாமரு மூவுலகு -விவரிக்கிறது –எங்கனே என்னில்
உயர்வற -ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தத்து அளவும் தனித்தனியே
கார்யம் காரணங்களாய் இருப்பார்கள் ஆகையால் உயர்வறும்

உயர்வற உயர் நலமுடையவன் -பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபன்
ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடையவனாகையாலே இக்குணங்களுக்கு அடியான காரண குணனானவன் என்கிறது –
பாமரு மூவுலகம்
பா என்று பதார்த்த வாசகமாய் பா மருவி இருந்துள்ள -பதார்த்தங்களினுடைய நெருக்கத்தை யுடைத்தான
மூ விலகும் படைத்த பற்ப நாபன் -உயர்வற உயர்நலம் யுடையவன் –

ஆக ஜகத் காரண பூதனாய் ஆனந்தாதி கல்யாண குண உபேதனான ஸர்வேஸ்வரன்
எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் யுடையவன் –

மூ வுலகும் படைத்த பற்பநாபன்
கீழும் மேலும் நடுவுமான லோகங்களை மூவுலகு என்கிறது
இவற்றை யுண்டாக்கின ஜகத் காரணமான கமலத்தை நாபியிலே யுடையவனே
யுனக்கு என் காரணத்வம் தெரிந்தபடி என் என்ன
நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்தேன்
பக்தி ரூபா பன்ன ஞானமான வெளிச் செறிப்பாலே அறிந்தேன்

மதிநலம் அருளின நீ பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதனான நீ தாய் போலே இத்தை யுண்டாக்கி அதுக்கு முலை கொடுத்து வளர்க்குமா போலே
உன் தேனே மலரும் திருப்பாதத்தை அவர்கள் சிரஸ்ஸிலே வைத்தது –
மஹாபலி பக்கலிலே இரந்து பெற்றுத் திரு வுலகு அளக்கிற வ்யாஜத்தாலே ஜகதாகாரதையை எனக்கு காட்டித் தந்தவனே

தேவ திர்யக் மனுஷ்ய ஜங்கம ஸ்தாவரங்களுக்கு எல்லாம்
ஓர் தனி வித்தாய் -முதலில் சிதையாமையும் மூவர் தனி முதலான நீ
மாவலி வ்யாஜத்தாலே ஜகதாகாரதயைக் காட்டி
மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ

படிக்கு அளவாக நிமிர்த்த பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்ற
ஆசையுடைய நான் இருக்க இச்சையும் இல்லாதார் தலையிலே திருவடிகளை வைப்பதே என்ன

அது செய்தமை யுண்டு -உமக்கு அபேக்ஷிதம் ஏது என்ன

மதிநலம் அருளின தாமரைக் கண்ணாவோ
புண்டரீகாக்ஷனான நீ -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து திரு உலகு அளந்த வியாஜத்தாலே
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களை மாற்றி யுன் கால் கீழ் இட்டுக் கொண்டிலையோ

அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரானவர்களுக்கு எதிர் விழி கொடுக்கும் கண்ணை யுடையவனே
நான் -தாமரைக் கண்ணாவோ தனியேன் தனி ஆளாவோ -என்று
முறையிட வேணுமோ
ஜகத் உத்பத்தியும் வளர்க்கையும் ஜீவனம் இடுகையும் உன் பக்கலிலேயாய் இருக்க
லோக மரியாதையும் வேண்டாவோ

எனக்கும் -அவலோகன தானேன பூயோ மாம் பாலய -என்னுமா போலே –
திருக்கண்களால் குளிர நோக்காய் என்று திருக்கண்களின் அழகை அனுசந்தித்தார் –

அக்கண் அழகையே ஜீவனமாய் இருக்கும் நித்ய ஸூரிகளின் திரளிலே இருக்கக் கண்டிலர்
அத்தாலே தனியேன் என்கிறார்

தனியேன் தனியாளாவோ
ஸ்த்ரீகளினுடைய நோக்கே தாரகமாய் இருக்குமவர்களுடைய திரளுக்கும் கூட்டு இன்றிக்கே
உபய விபூதியிலும் கூடாதே என்னை மூன்றாம் விபூதியாக்கி அருளுகிறவனே –

அன்றிக்கே -உன் கிருபையையே தாரகமாய் இருக்கிற என்னை –
உன் கிருபைக்கு வேறு விஷயம் என்னை ஒழிய உண்டோ
என்னை ஆளுகிற உன் கிருபையையே அன்றோ

இப்படி ஆளுகிறவன் யாவன் ஒருவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என் தனிமை யாகிற ஹேயத்தைத் தீர்த்து பரஞ்சோதி சுடர் அடியைத் தொழுது விழுந்து இருக்கிற என்னை

தாமரைக் கையாவோ
திருவடிகளிலே அநந்ய கதியாய் -அகிஞ்சனனாய் விழுந்து இருக்கிற என்னை
உன் தாமரைக் கண்ணாலே நோக்கி தாமரைக் கையாலே எடுத்து அணைக்க வேண்டாவோ –

அக்ரூரனை அணைத்திலையோ -அவ்வளவு போரேனோ
ஸோப்யேநம் –இத்யாதி -திருக்கையில் அடையாளம் அத்தனையும் இலைச்சினப் படியே அவன் உடம்பில்
காணலாம்படி அவனை ஸ்பர்சித்து அவன் அந்த ஸ்பர்சத்தாலே ஸ்தப்தனாய் நிற்க
கையைப் பிடித்து ஏறிட்டுப் பின்னை அணைக்கையாலே இருவருக்கும் ஒன்றாய்க் கண்டது அத்தனை

கரேண மிருதுநா தேவ பாபாந் நிர்மோசயன் ஹரி என்கிறபடியே
உன்னை என்று கொல் சேர்வதுவே
பூர்ணே சதுர் தசே வர்ஷே பஞ்சம்யாம்-என்று நாள் இட்டுக் கொடுக்கலாவது தம்பி யார்க்கோ
அசாதாரண அடியாரானால் இன்ன நாள் பெறக் கடவது என்று நாள் இட்டுக் கொடுக்கலாகாதோ

சேஷ பூதனாகில் சேஷி கொடுத்த நாள் பெறக் கடவன் என்று ஆறி இருக்க மாட்டு கிறிலேன்
தனியேன் உன்னை என்று கொல் சேர்வது என்பான் என்
நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாளும் இல்லையே
இனிச் சேருகையாவது அடியார்கள் குழாங்களை யுடன் கூடுகை இறே

உன்னை என்னா நிற்கச் சேரும்படி என் என்ன
ஒண் டொடியாள் திரு மக்களும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கையாலே
உன்னைத் சேர்ந்து என் மனனும் நானும் தொழுது எழ வேணும் என்கிறார் –

———–———-

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

ஏழையர் ஆவியில்
இவ்வழகு மறக்க ஒண்ணாத படி மனஸ்ஸிலே உரு வெளிப்பாடாய் நலிய நோவு பட்டபடியை
அருளிச் செய்கிறார்
இது உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது -எங்கனே என்னில்

உயர்வற உயர் நலமுடையவன் ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தம் தாம் அபிமத சாதனங்கள் பெறுகைக்கு
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாள் பகவான் கடாக்ஷிப்பது கண்ணைச் செம்பளித்து யாய்த்து கடாக்ஷிப்பது

ஆகையாலே சாதன பலங்கள் அல்ப அஸ்திரமாய் இருக்கையாலே கடாக்ஷமும் அல்பமாய்த்து
ஆகையால் உயர்வு அற்று இருக்கும்
தமக்கு ஆகிஞ்சன்யமும் கண்டு தம்மிடத்தில் தயை மிக்கு இரண்டு திருக்கண் மலர்களும் விகஸிதமாய்
தயா விஷயம் கிடைக்கையாலே கிருபா ப்ரவாஹம் பெருகப் புக்கது
நீஞ்சியும் அனுபவிக்க மாட்டாமை படுகிற பாட்டை அன்பருக்கு பரிவருக்கும் சொல்லித் தரிக்கப் பார்க்கிறார்

நலமுடையவன் ஏழையர் ஆவி உண்ணும்
லீலா விபூதியில் உள்ளாரைக் கர்ம பலங்களைக் கொண்டு நலிகிறது
அதில் ஒன்றும் இல்லாத ஏழையாய் -பகவத் சேஷமாய் -பரதந்த்ர ஏக பரையாய் இருக்கையாலே நலியா நின்றது

இதர விஷய ப்ராவண்யரை நலியலாகாதோ –
தன்னிடத்தில் ப்ரேமத்தால் அபலையான என்னாவியை யுண்ணா நின்றது
ம்ருத்யு போலே பிராணனை வாங்கா நின்றது

பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கு அன்றியே -இது ஆகாது -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கிற
தாய்மார் தோழிமாருக்கும் இன்றிக்கே அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ

தன் கண் அழகு தான் அறிந்திலனே -கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ -கண்டானாகில் வாரானோ –
ராம சரம் போலே ஒப்பனை அழியாதே முடிக்கிற படி

அறியேன்
அறியேன் என்பான் என் -அறிந்தது அன்றோ சொல்கிறாய் என்ன
உயர் நலம் என்று ஆனந்தாதிகளும் சவுந்தர்யாதிகளும் யுடைய புண்டரீகாக்ஷன் நிர்ஹேதுகமாக
மயர்வற மதிநலம் அருளினன்

எவன் அவன் -ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
மயர்வற -மாதரார் கயற்கண் என்னும் வலையை அறுத்து
காரத் தண் கமலக் கண் என்றும் நெடும் கயிறு பிடித்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடுகிற ஈசன்
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -பரதந்த்ரையை அழியச் செய்கைக்குச் சொல்ல வேணுமோ

ஆழி யம் கண் -அம்ருதக்கடல் என் மேல் பொங்கி அலை எறிகிற படி
பிரான் -மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை -அந்த அம்ருத சாகரத்தை அலை மேல் யலையாய்
வந்து என் நெஞ்சிலே தேக்குகிற மஹா உபகாரகன்
அம்ருதமானது ஜீவிக்கப் பண்ணுமோ முடிக்குமோ

எவன் அறியேன் -இதுக்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக்கண்கள் பாதகம் என்று வ்யுத்பத்தி இல்லை –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் என்று இரே கேட்டு இருப்பது
இது தான் எனக்கு கூற்றம் ஆக வேணுமோ
லோகத்துக்குத் தாரகமான கண் பாதகமாவதே

ஆனால் தப்பினால் என்ன
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன்
த்ரிபாத் விபூதியாக சூழ்ந்து இருந்து -ஜிதந்தே புண்டரீகாஷ என்று தோற்பிக்கும் கண்

அயர்வறும் அமரர்கள் -அக்கண் அழகுக்குத் தோற்று கடாக்ஷ அம்ருத பானத்தாலே நித்யரானவர்கள்
அவசமாய் நம இத்யேவ வாதிந -என்னும்படி தோற்பித்தவன்

சூழவும் இத்யாதி
மூல பலத்தின் அன்று பார்த்த பார்த்த இடம் எல்லாம் பெருமாளே யானால் போலே ராமசரத்துக்கு ராக்ஷசர்
தப்பினாலாயத்து இக்கண் அழகுக்கு அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது

ஸர்ப்ப யாகம் போலே அபலைகள் அடைய இக்கண் அழகுக்கு துவக்குண்டு திருவடிகளிலே விழும்படியாய் இருந்தது
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்னும்படியாய் இருக்கை

தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
ப்ரத்யக்ஷத்திலும் அத்தலையால் வரவு ஆனால் போலே உரு வெளிப்பாட்டிலும்
அத்தலையாலே வந்து தோன்றவாய்த்து தான் அறிகிறது –

துயர் அறு சுடர் அடி வந்து தோன்றும் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!
உங்களுக்கு அது தோற்றுகிறது இல்லையோ
சிலருக்குச் சொல்லி சிலருக்கு மறைக்கும் படி யன்று இவளுக்குப் பிறந்த தசா விசேஷம்

என் செய்கேன் துயராட்டியேனே.–
இத்தைத் தப்பப் பார்ப்பதோ
அனுபவிக்கப் பார்ப்பதோ
எத்தைச் செய்வேன் துயராட்டியேன்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேத குதச்சன -என்று இருக்க வேண்டி இருக்க -அங்கன் அன்றிக்கே
அவசியம் அநுபோக்தவ்யம் -என்கிறபடியே
பழைய விஸ்லேஷமே ஸித்திக்கும் படியாயிற்று என்கிறாள் –

——–——–

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

மாயா வாமனனிலே
இப்படி உருவெளிப்பாட்டால் நோவு பட்ட இடத்தில் முடியாதபடியாகப் பண்ணின வைசித்ரியைக் கண்டு
அவனுடைய விசித்திர ஜகதாகாரதையை அருளிச் செய்கிறார் –

————

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -பாசங்கள் நீக்கி –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் நாநா விதமான கர்ம பாசங்களாலே
பந்தகங்களான அவர்களுடைய உயர்வும் தாழ்வுமாய் வருகிறவர்கள் புஜித்து அறும்
பாசங்கள் நீக்கி
பல செய்வினை வன் கயிற்றால் சூழ்த்துக் கொண்ட அவித்யாதிகளை நீக்கி

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -உன் நலமான ஆனந்தாதி குணங்களாலே
அளவிட ஒண்ணாத உன் நலம் பாராதே
ஹேயமான என்னை யுனக்கே அறக்கொண்டிட்டு மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்

எத்தைக்காட்டி என்னில் -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் ஒருவன் அவன் –
வாச மலர்த் தண் துழாய் முடியைக் காட்டி வசீகரித்தான்

பாசங்கள் நீக்கி -மயர்வற மதிநலம் அருளி என்னை யுனக்கே அறக்கொண்டிட்ட மாயவன்
ஆதி ராஜஸ்ய ஸூசகமான மாலையையும் முடியையும் காட்டி யாய்த்து புறம்பு உண்டான பற்று அறுத்தது

துயர் அறு -தூக்கமே வடிவான -காயமும் ஜீவனுமாய் ஜென்ம ஜரா மரணாதிகள் ஆகிற துயர் அறுத்து

கழிவாய்ப் பிறப்பாய் -போவது வருவதாகிற ஜென்மத்தை சவாசனமாகப் போக்கி –

பின்னும் நீ உன் சுடர் அடி தொழது எழப் பண்ணி பின்னும் மாயங்கள் செய்து
ஹேயமான என் மனஸ்ஸை மயர்வற மதி நலம் அருளி சுடர் அடி தொழுது எழப் பண்ணி
இச் சரீரத்தில் தானே

மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குகளே
நீ அங்கீ கரித்தாயோ என்று இருந்தேன்
இங்கே வைக்கையாலே கைவிடப் பார்த்தாயா என்று இரா நின்றேன்
என் பிரமம் தீர ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்

உயர் நலம் யுடையனான நீ -மதி நலம் அருளி -பாசங்கள் நீக்கி -என்னை யுனக்கே அறக்கொண்டிட்டு
அயர்வறும் அமரர்கள் முன்பாக ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி அவர்களை முன்னிட்டுச்
சுடர் அடி தொழுது எழப் பண்ணி சரீரத்தில் இட்டு வைத்தாலாமோ

சுடர் அடி தொழுதார்களை துயர் இருக்கிறதோ -துயரில் மூட்டுவதோ –
மாயவன் அருளாய்
இந்த ஆச்சர்யத்தை ஆச்சர்ய யுக்தனான நீயே அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

—————

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

என்றைக்கும் என்னை -யில்
உன்னால் அல்லது செல்லாத என்னை இஸ் ஸம்ஸாரத்திலே வைத்த போதே
இதுக்குப் பிரயோஜனம் என் என்று கேழ்க்க
எனக்கும் என்னுடையாருக்கும் அனுபவிக்கும் படிக்கு ஈடாக உம்மை வைத்துக் கொண்டு
திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் என்று சொல்ல
தனக்கு சில கவி பாடுவிக்க வேண்டினால் அதுக்கு ஈடான ஞான சக்த்யாதிகளை யுடையரான
முதல் ஆழ்வார்களைக் கொண்டு பாடுவியாதே
என்னைக் கொண்டு பாடுவிப்பதாகச் சொன்ன வார்த்தையின் நீர்மை இருந்தபடியே என்று
தம் பக்கல் அவன் பண்ணி அருளும் உபகாரத்துக்குப் பிரதி உபகாரம் காணாமல் தடுமாறினார்
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஆர்த்த ரக்ஷணம் பண்ணி ரஷித்த படி இது

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -என்றைக்கும் என்னை –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் என்றைக்கும் என்று
அநந்தமான காலம் தோறும் ஸர்வேஸ்வரன்
ஆள் பார்த்து உழி தருவான் -என்கிறபடியே ஆள் தேடிக் கிடையாமல் சிந்திக்கிற படி –
ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அமைந்தார்கள்
வ்யாஸாதிகள் புராணாதிகளிலே அமைந்தார்கள்
பத்தர் கர்ம அனுகுணமாக ஸ்வர்க்க நரகாதிகளுக்கு அமைந்தார்கள்
முமுஸுக்களில் சிலர் கைவல்ய மோக்ஷத்துக்கு அமைத்தார்கள் –
சிலர் பகவத் அனுபவத்துக்கு அமைந்தார்கள்
நித்யரும் முக்தரும் பகவத் ஆனந்தாவஹராய் ஸாம கானத்திலே அமைத்தார்கள்

இனித் திருவாய் மொழி முதலான செஞ்சொற் கவி பாடுவிக்கைக்கு ஆழ்வாரைத் தேடி எதிர் சூழல் புக்கு
எனத்தோர் பிறப்பும் எனக்கே அருள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –என்கிறபடியே
தேடிப் பார்த்த இடத்தில் -அசன்னேவ-என்று அஸத் கல்பனான என்னை -சந்தமேனம் ததோ விது -என்னும்படி
மயர்வற மதிநலம் அருளிக் கவி பாடுவித்துக் கொண்டான் என்கிறார்

உயர்வற என்றைக்கும் என்னை
உயர்வற கீழ்ச் சொன்னவர்கள் பதங்களிலே புகாதபடி ப்ருதக்காக்கி
உயர்நலம் யுடையவன் -என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு -எவன் அதிகாரி யானவன் -அவன் உய்யக் கொண்டவன் –
ஆ முதல்வன் இவன் என்று தேற்றி நான் உய்யும் படியும் தான் உளனாம்படி யுமாகத் தேற்றி
நான் உய்யும்படியும் தான் உளனாம்படியுமாகத் தேற்றித் திரு உள்ளம் பற்றி

மயர்வற போகிய அன்றைக்கன்று -காலம் தோறும் காலம் தோறும் மயர்வற -அஞ்ஞான அசக்திகள் அற
மதிநலம் அருளினன் எவன் அவன் என்னைத் தன்னாக்கி தன்னைப் போலே ஞான சக்திகள் யுண்டாம்படி பண்ணி

எவன் -மயர்வற்றவன் -அவன் மயர்வு அறுத்தவன்
என்னால் -தனக்குத் தக்கக் கவி பாடச் சக்தனான என்னால்
தன்னை -என்னை ஸ்வரூப ஞானத்திலே நிறுத்தி
தன்னை -அயர்வறும் அமரர்கள் அதிபதியான தன்னை -எவன் கவி பாடினவன் -அவன் -இன் தமிழ் பாடிய ஈசன் –
அயராமல் ஸாம கானம் பண்ணுமவர்கள் அபர்யாப்த்த அம்ருத தாஸிகள் போல் அன்றிக்கே அதிலும் இனிதான
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்தம் ஸ்ரீ சடகோபன் வாங்மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமா கமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹர-மான புகழ்
வண் தீம் கவி பாடின ஸ்வாமியை

எவன் -பாட்டு கற்கிறவர் -அவன் -ஆதியாய் நின்ற என் சோதியைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

என் சொல்லி நிற்பனோ
ப்ரஹ்மாதிகள் முதலானோர் கவிகள் அல்ல
தான் பாடின கீதை அல்ல
என்னைக் கொண்டு பாடுவித்த கவி உபய விபூதியிலும் அடங்காததாய் இருந்தது
என் சொல்லி நிற்பன்
இதுக்கு ஒரு உபகார ஸ்ம்ருதியும் காண்கிறிலேன் -என்கிறார் –

—-

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

உயர்வற என்கிற பாட்டை இதுவும் விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -வைகுண்ட நாதன் என்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ரஹ்மாதிகள் முதலானோரைக் கொண்டு
வேதம் முதலானவற்றைப் பாடுவித்துக் கொண்ட இடத்தில்
இப்படி வாய்க்காதே ஐஹிக ஆமுஷ்மி காதிகளிலே மண்டி விழுந்தார்கள் ஆகையால் உயர்வற என்றது

உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஆனந்தாதி கல்யாண குண பரிபூர்ணன ஸர்வேஸ்வரன்
பரம உதாரமான இனிய கவியை என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்ட
மஹா உபகாரத்துக்கு இவனைக் கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் ஆர்வேனோ என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் வைகுண்ட நாதன் எனக்குப் பரிகரித்தவன்
என்னோடு இணைய நின்றான் ஒருவனாய்த் தான் ஆறி இருக்கிறேனோ
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று வேதங்களாலும் அளவிட ஒண்ணாத பராத்பரனானவன் –
வைகுண்ட நாதன்
குந்தம் என்று தள்ளுகையாய் -வைகுந்தா என்று தள்ளா வான பதத்துக்கு நாதன் என்றபடி –
ஆக இத்தால் ஆனந்த ஸ்வரூபன் என்றபடி

இப்படி உபய விபூதி நாதனானவன் -வைகுண்ட நாதன் என் -என்று என்னைத் தனக்கு நாதனாக எண்ணினான்
ஒரு ஸம்ஸாரி சேதனனை மேல் விழுந்து உகவா நின்றால் நான் எங்கனே ஆறி இருப்பேன்

இப்படி அவன் உகக்கக் கூடுமோ என்னில்
லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்ற அதுக்கும் அவ்வருகாய் இருந்தது இதுவும்
அவரை நாதனாக உடையாராகைக்கு யோக்யதை ஸம்பாதிக்கிற படியாய்த்து முன்பு லோக நாதரானது –
பெறுவார் பெறாது ஒழிவார் -இச்சியா நின்றார் -கிடையாதா அதில் தான் இறே இச்சை தான் செல்வது
சரா மோவா நரேந்திரஸ்ய ப்ரஸாதம் அபி காங்ஷதே -என்றால் போலே யாய்த்து
அவன் என்னை வேண்டி வந்து நின்றபடி –

வைகுண்ட நாதன் என் –
என்னை ஸ்வ தந்திரனாக்கித் தான் ஆஸ்ரித பரதந்த்ரனாய் இரா நின்றான் -இதுக்கு ஹேது
என் ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் கண்டு இவனே வைகுண்ட நாதன் என் –
நமக்கும் நம்முடையாருக்கும் நாதன் என்று திரு உள்ளம் பற்றி இரா நின்றான்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று சமர்ப்பியா நின்றான்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நுன்னிலை இடம் -என்று கொண்டாட நின்றான்
என்னை அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசா க்கித் தான் அவர் இளவரசு வைகுந்தக் குட்டனாய் இருந்தான்

மஹா ராஜர் தாம் நாதனான வாசி தோற்ற முதலைகளும் தாமுமாகப் பிராட்டியைத் தேடிக்கொண்டு –
ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளித் திரு அயோத்யையிலே திரு அபிஷேகம் பண்ணின
பின்பு இறே க்ருத்யக்ருத்ரானார் இறே

அப்படியே இவரும் அறிய ஒண்ணாத படி ஸம்ஸார காந்தராந்தத்திலே துர்க த்ரயமான மிஸ்ர ஸத்வம் ஆகிற
லங்கையில் புக்கு அஹங்காராதிகள் ஆகிற ராஷஸிகளால் நோவு பட
ஆச்சார்யனாகிற திருவடி திருமந்திரம் ஆகிற திருவாழி மோதிரம் கொடுத்துத் தெளிவிக்கத் தெளிந்து
தச இந்த்ரியாநநம் கோரம் எம்ங்கிற ராவணனாகிற இந்திரிய ஜயத்தைப் பண்ணி சரீரமாகிய லங்கையில் நின்றும்
ப்ரஹ்ம ரந்தரம் என்கிற தலைவாசல் திறந்து கொண்டு புறப்பட்டு அயோத்தியை அபராஜிதை என்று சொல்லப்படும்
ஏர்கொள் வைகுந்தம் ஆகிற காற்றிலே ப்ரைவசிப்பித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
வீடு கொடுக்கும் படி அருளினான் ஆகையால் வைகுண்ட நாதன் என் -என்று இதுவும் ஒரு த்ருஷ்டாந்தம்

இப்படி நாதனாகப் பற்றினவன் -வல்வினை மாய்ந்தற –
வினை பின்பு செய்தது என் என்ன -வினை போக்யமாம் படி தான் மயர்வற மதிநலம் அருளினவன்
எவன் அவன் -வல்வினை மாய்ந்தற -வல்வினை -ஸர்வ சக்தனானாலும் போக்க ஒண்ணாத வழிய பாபங்கள்
மாய்ந்தற -போன இடம் தெரியாமல் போக –
எவன் அவன் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே தன் வசமாக என்னை ஆக்கிக் கொண்டு
செய்குந்தன்
என் விரோதியைப் போக்கின சுத்தி யோகத்தை யுடையவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும்
அமரர்கள் அதிபதி

எவன் அவன் -ஹேய ப்ரதிபடரான நித்யருக்கு நாதனானவன் என்னை நாதனாக்கி
நின் அடியாருக்கு என் செய்வன் என்றே இருத்தி -நின் அடியாருக்குத் தீர்த்த அசுரருக்குத் தீமைகள் செய்குந்தா -என்னக் கடவது இறே
ஆஸ்ரிதருடைய பாபங்களை அநாஸ்ரிதர் பக்கல் விடும்படியான சுத்தியை யுடையவன் என்கை
குந்தன் என்று திருநாமம் ஆகவுமாம் -முகுந்த குந்தர குந்த -என்றது

அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்னைத் தன்னாக்கி
வல்வினையே ஸ்வரூபமான என்னை -தன் சுத்தியை எனக்கு உண்டாக்கி ஞான சக்த்யாதிகளால்
தன்னோடே ஒக்கப் பண்ணி-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை

அஞ்ஞான அசக்திகள் இல்லாத நித்ய ஸூரி ஸேவ்யனானவன் வேதங்களும்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை -என்று வைகுந்தனானப் புகழ வண் தீம் கவி
நான் புகழ்ந்ததால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ஸர்வ ஸ்வாமியாய் பரஞ்சோதி யாகா நின்றான்

பிதா புத்திரனுக்கு நீர் வார்த்துப் பசுவைக் கொடுத்துத் திரும்பவும் வாங்குமா போலே இதுவும் நித்ய விபூதி இறே
இவர் புகழ்ந்தவாறே நித்ய விபூதி யாயத்ததாக நினைத்து இருந்தான்

உயர்வற உயர்நலம் தொடங்கி இவ்வளவும் வர வரப் புகர் ஏறி வாரா நின்றது இறே
எங்கனே என்னில்
ஆத்ம வஸ்துவும் நித்யமாய் இருக்கச் செய்தே -அசன்னேவ-என்றும்
சந்தமேனம்-என்றும் சொல்லுகிறவோ பாதியாய்த்து இதுவும்
இவன் உளனாகத் தானும் உளனான படி

செய் குந்தம் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இவரைக் கொண்டு கவி பாடின பின்பு தான் துயர் அற்ற படி
இவர் துயர் அறத் துயர் அற்ற படி -சரீரத்துக்கு வந்த துயர் சரிரீ தானே அனுபவிப்பான்
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித போலே இறே படுவது
தத் வியதிரிக்த ப்ரேமம் இறே நோயாவது -அது தீருகை இறே நோய் தீருகை அப்போது இறே இவனும் துயர் அற்றது

செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ
அவன் பண்ணின உபகாரம் கனத்து இரா நின்றது
உபகார ஸ்ம்ருதிற்கு காலம் போருகிறது இல்லை
நான் என் செய்வேன் என்கிறார்

சரீர விஸ்லேஷத்தில் வாய் புகும் நீராகையாலே அனுசந்திக்க அவசரம் இல்லை
இங்கு இருந்த நாள் காலம் போருகிறது இல்லை
பண்ணின உபகாரமோ கனத்து இரா நின்றது
என் மனனே தொழுது எழு என்கிறார்

கரண பிரதானம் தொடங்கி இன்கவி சொல்ல வல்லேனாம் படி பண்ணின உபகாரத்துக்கு ப்ரத் யுபகாரம் உண்டோ
உன் ஸ்வரூப அனுரூபமான அஞ்சலியைப் பண்ணு என்கிறார் –

———-——–

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

இன்பம் பயக்க -லில்
இப்படி மஹா உபகாரகனான ஸர்வேஸ்வரனை திருவாறன் விளையிலே
பெரிய பிராட்டியாரும் தானுமாக எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியிலே கண்டு
அநுகூல வ்ருத்திகளைப் பண்ண என்று மநோ ரதித்தார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
எம்பெருமான் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளித் திருவாய் மொழி ஓதுவித்து
அந்த அத்புதமான கானத்தை சர்வரும் கூடின ஸ்தலத்திலே இருந்து கேழ்க்கத் திரு உள்ளமாய்த்
தானும் பிராட்டியாருமாக இருந்து நித்யரும் முக்தரும் புத்தரும் முமுஷுக்களும் கூடத்
திருவாறன் விளையிலே எழுந்து அருளி இருந்து ஆழ்வாரை அருளப்பாடிட்டு
பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திக்கிறபடி சொல்கிறது

உயர்வற உயர் நலம் இன்பம் பயக்க
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அம்ருத சாஹரத்தில் திவலை போலே
இவர்கள் ஆனந்தம் தோன்றாது ஆய்த்து
ஸூர்ய ப்ரகாஸத்தில் மின்மினி போலே ப்ரகாஸம் அறும் படி பர ப்ரஹ்ம ஆனந்தம் நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும்
ஆகையால் அவர்களும் அவர்களை சொல்லும் கானமும் உயர்வு அற்று இருக்கும்

உயர் நலம் என்றும் -இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் என்றும் –
உயர் நலம் -உகார வாஸ்யையான பிராட்டியுடைய ஆனந்தமும் நலமுடையவன் என்று எம்பெருமானுடைய
ஆனந்தமுமாக இவருடைய ஆனந்தமும் ஸ்ருதி ப்ரஸித்தம் இறே

இப்படி ஆனந்தாதி குண பூர்த்தியை யுடையவன் யாவன் ஒருவன்
அவன் இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன்
வீற்று இருந்த ஆள்கின்ற எங்கள் பிரான்

ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளித் திருவாய் மொழி ஓதுவித்து இருவரும் கூட இருந்து
இவரைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திக்கிற ஆனந்தம் திராவிட வேத சக்கரத்தின் திவலை
என்னும்படி கான அம்ருத சாகரம் கொந்தளிக்கிற படி –

எவன் மூ வுலகு இன்பம் பயக்கப் பாடுகிறவர்
அவன் கானம் கேட்க்கிறவர்
எவன் அவன் -வக்தாவான ஆழ்வாரும் ஸ்ரோதாவான ஸ்ரீ யபதியும் மயர்வற மதிநலம் பெற்று
ஏழு உலகும் இன்பம் பயக்க -திருவாய் மொழி கேட்டார்கள் -எல்லாம் இன்பம் பயக்க இருந்தார்கள் –

இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அனு மோதனமான இன்பக்கவி பாடுவித்தோன்
இந்திரையோடு மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பகவத் கிருபா அம்ருத வ்ருஷ்டி மஹா பிரளயம்
உடைந்து பெருகுமா போலே ஸஹஸ்ர முகமாய் கங்காதி தரங்கங்கள் போலே
சரணாகதியும் ஆன்ற தமிழ் மறை ஆயிரமுமாய் ப்ரவஹியா நின்றது -அது பொங்கிப் பாட்டாய்த் தலைக்கட்டிற்று

இப்படி அருளினவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி -நிர்ஹேதுகமாக அருளின பாட்டுக் கேட்டு
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன் விளையிலே
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்னும் படி இனிதான படி –
திருவாறன் விளையும் தளிரும் முறியுமாகக் கொந்தளித்தது –
அபி வ்ருஷா பரிம் லாநா -இத்யாதிப்படியே யாய்த்து

எவன் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினவர்
அவன் -என்னால் தன்னைப் பாடிய ஈசன்
என்னோடே கூடத் தென்னா தெனா வென்று -ஆளத்தி வைக்கிறவன் யாவன் ஒருவன் -அவன் எங்கள் பிரான் –
திருவாறன் விளையிலே ஆழ்வார் திருவாய் மொழி பாடக் கேழ்க்கலாம் தேசம் என்று
அன்புற்று அமரர் வலம் செய்து –
அந்நித்ய விபூதியை மறந்து இங்கே அன்புற்று அமர்ந்து உறைகின்றான்
நித்யர் முக்தர்கள் சாமகானம் பண்ணத் தான் அவாக்ய அநாதர-என்று இருக்கிற ஸ்வாமி யானவன்
கேட்டு ஆரார் -என்கிறபடியே இனிது ஆராமையாய் -தானும் கூட ப்ரீதி பிரேரிதனாய்க் கொண்டு பாடத் தொடங்கினான்
அந்தாமத்து அன்பு செய்து -இத்யாதிப்படியே யுகந்து இரா நின்றான்

நீயும் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழும் நாள்களும் ஆகும் கொலோ
திருவடிகளுக்குத் துயர் அறுகையாவது -நித்ய விபூதியில் நித்யர் முக்தர் பாடுகிற சாமகானம்
நித்ய விபூதி அளவிலே யாகையாலே ப்ரீதி பிறந்தது இல்லை –
ஆழ்வார் இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் வுலகை இன்பம் பயக்கப் பாடின
திருவாய் மொழி கேட்டு ஆரார் வானவர்கள் -என்று உபய விபூதியும் தளிரும் முறியுமாகக் கொந்தளித்த படியும்
இந்த லீலா விபூதியில் உள்ளாரில் கடையரான தம்மைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்து
அது பாடக் கேட்ட படியால் துயர் அற்று இன்பம் பயக்கப் பார்த்து இருந்தான் –

அப்போது ஆழ்வார் ஞான முத்திரையும் கையும் கான உச்சாரணமான திருப்பவளப் பூரிப்பும்
அர்த்த ஸ்ம்ருதியாலே பிறந்த முக விகாஸமும் ஆனந்த அஸ்ரூ பனிக்கிற திரு நயனங்களும்
கான ஆனந்த மக்நரான புளகித காத்ரமும் கண்டு உபய விபூதியும் ஈஸ்வரனும் பிராட்டியும் ஆனந்தாவஹர் ஆனார்கள்

அன்புற்று அமர்ந்து உறைகின்ற -நூராண்டு -பதினோராயிரம் ஆண்டு என்கிற அவதி அன்றிக்கே
நித்ய விபூதியும் அநித்யம் என்னும்படி அமைந்து உறைகின்ற
திருவாறன் விளை தீர்த்தனுக்கு உற்ற பின் துயர் அறு சுடர் அடி தொழுது
வலம் செய்து வர்த்திக்கப் பாராய் என்கிறார் –

———-——–——–————————————

ஏழாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஆறாவது பத்து விவரணம்- –

February 9, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

வைகல் பூங்கழிவாயில்
இப்படிச் சரண் புக்க இடத்திலும் வந்து முகம் காட்டாமையாலே
திரு வண் வண்டூரில் ஸம்ருத்தியிலே அகப்பட்டு நம்மை மறந்தான் அத்தனை –
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து இருக்குமவன்
ஆகையால் நம் ஆர்த்தியை அறிவிக்க வரும்
ஆன பின்பு அங்கே என் தசையை அறிவியுங்கோள் என்று தூது விட்டார் –

———-

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

உயர்வற என்கிற பாட்டை -காதல் மென் பெடையோடு -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
தம்பதிகளுக்குள் காதல்கள் ஏற்றமும் குறைச்சலுமாய்த்து இருப்பது
உயர்நாகம் யுடையவன் அவன் இடத்தில் காமம் அளவிறந்து இருக்கும் இறே

அப்படியே
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவனுக்கு என் ஆர்த்தியை அறிவிக்க வரும்
அருவி என்று ஒரு நாரையை இரக்கிறாள்

காதல் மென் பெடையோடு
முன்பு போக விட்டவர்கள் கொண்டு வருகிறார்கள் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்றே
அங்கனே யாம் அன்று முன்பு பண்ணின ப்ரபத்தியே அமையும்

உடன் மேயும்
ஊர்த்வம் மாஸான் ந ஜீவிஷ்யே -என்றிலன்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்பாரும் உண்டாகாதே
ஸர்வஞ்ஞரோடு கலவாது ஒழி யும் படியான பாக்யத்தைப் பண்ணுவதே நீங்கள்

பின்பு கூடுகை தவிராதாகில் பிரிந்தால் என் செய்ய வேணும் என்று இருப்பார்கள் இறே அவர்கள்
அத்தனை காரியப்பாடு இல்லை இறே இவற்றுக்கு

மென்பெடையோடு
கலக்கவும் பொறாத மார்த்வத்தை யுடைத்தாய் இருக்கை

உடன் மேயும் கரும் நாராய்
பிரிவில் தரியாதாய்க் கூடாது திரியும் அத்தனை
உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது-இது சுத்தம் இது இனிமை – என்கிறபடியே காணும் இவை திரிகிறது

பேடையின் நினைவு அறிந்து புஜிப்பிக்கும் சேவலும் உண்டாகாதே
தன் ஆர்த்த த்வனி செவிப்பட்டால் அவற்றுக்கு மிடற்றுக்குக் கீழே இழியாது என்று இருக்கிறாள்

கரு நாராய்
பிரியாதாருக்கு உடம்பு வேளாதே -மிகவும் நிறவாதோ
தன் உடம்பு விவர்ணமான படியைக் காட்டுகிறாள் –

அவன் பிரிவுக்கு ஹேது ஏது என்ன -மயர்வற மதி நலம் அருளி -தத் வியதிரிக்தங்களிலே நெஞ்சு செல்லாதே
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே காதலை விளைவித்தவன் அகன்றான் –
நான் விஸ்லேஷ அசஹை யானேன் -என்ன

இப்படி யுன்னை விட்டு எங்கே போனான் என்ன
அவன் போய் இருந்த இடம் சொல்லுகிறாள்
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன்
வேத கோஷமும் -வைதிக கிரியா கோஷமும் கண்டு -தன் நாயகன் கால் தாழ்ந்து வாராது இருக்கிறது
உங்களுக்கு அறிவிக்கையை இறே வேண்டுவது

தான யஜ்ஞவிவாஹ ஸ்தலங்களிலே இறே -அது ஸா ங்கம் ஆகைக்கு எழுந்து அருளி இருப்பது
ஸமா ஜே ஜூ மஹத் ஸூச -தீர்க்க சத்ராதிகளிலே இருப்பவர் –

ந த்ரஷ்யாம புனர் ஜாது -அவரை அவ்வோர் இடங்களிலே காணலாம்
தார்மிகம் ராம மந்த்ரா -இத்யாதிப்படியே கண்டு கொள்வது

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அ வன் –திரு வண் வண்டூர் நாதன் –
ஸ்ரீ வைகுண்ட நாதனின் காட்டில் ஏற்றம் சொல்கிறது
இவ்விடம் எளியாரை வலியார் அடிக்க அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்க் கோயிலில் சாந்து பூசி இருக்கும்
அது ஓர் ஏற்றமோ அன்று இறே

ஞாலம் எல்லாம் உண்ட –
அந்த ஆபத் சகன் இறே
தளர்ந்தார் தாவளமான நம்பெருமானைக் கண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து
பாதங்கள் மேல் அணி பூந்தொழ
என்றும் பாதம் கை தொழுது பணிவீர்

ஹேய ப்ரதிபடமான சுடர் அடிகள் -ஆஸ்ரிதரைக் கண்டால் நிரவதிக தேஜோ மயமான
திருவடிகளைக் கைகளால் ஆரத் தொழுது எழு என் மனனே

தொழுதார்க்கு நிற்க ஒண்ணாது –தெண்டன் இடு –
உண்ணா நிற்க மிடற்றைப் பிடிப்பாரைப் போலே ஆகாமே திருவடிகளில் தெண்டம் ஸமர்ப்பியாய்

பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே
கடகரை உபகரித்துச் சொல்ல வேணும் இறே

அடியேன்
உங்களைக் கொண்டு அழைப்பித்துக் கொள்ள இருக்கிற அவனுக்கு அன்று
அவனால் வந்த இழவு பரிகரிக்கிற உங்களுக்கு அடியேன்
நித்யம் -யதீய சரணவ் சரணம் மதீயம் –என்கிறபடியே

அடியேன் திறமே
என் திறம் சொல்லில் ஒரு மஹா பாரதத்துக்கு உண்டு
திரு உள்ளமான படி செய்யுங்கோள் என்கிறாள் –

—————–

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

மின்னிடை மடவாரில்
இவள் விட்ட ஆள் சென்று -அத்தலைப்பட்டு அறிவித்து -அவனும் வாரா நிற்க –
அவ்வளவு பற்றாதே துடித்து அலமர்க்க
அவன் வரவை நிச்சயித்து -கீழ்ப்பட்ட கிலேசத்தாலே -இனி அவன் வந்தாலும் அவனோடே ஸம்ஸ்லேஷிப்போம் அல்லோம் –
விஸ்லேஷித்து முடியும் அத்தனை -என்று முகம் மாறி வைத்து இருக்க
அவனும் தன் அழகையும் செல்லாமையும் காட்டி ஊடலைத் துறந்து அவர்களுடனே ஸம்ஸ்லேஷித்த படியை
அருளிச் செய்தார் –

——-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

உயர்வற என்கிற பாட்டை -உகவையால் நெஞ்சம் உள்ளுருகி -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற உகவையால் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
சாதன பலங்களாலே உயர்த்தி அற்று இருப்பர்கள்

உயர்நலம் உடையவன் இடத்தில் உகவை அளவிறந்த இருக்கும் –
அவர்கள் உகவை அல்பமாகையாலே துக்கமேயாய் இருக்கும்
உன்னிடத்தில் உகவை -அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட ஒண்ணாத ஸூகமேயாய் இருக்கும்
ஆகையாலே உகவையாலே நெஞ்சு உள்ளுருகுகிறது –

வாராய் உன் ப்ரவ்ருத்தி வியர்த்தம் காண்
பிரித்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய நீ பண்ண இறே பார்த்தது
அது செய்யப் போகாது என்ன

அது ஏது என்ன -உன் தாமரைத் தடம் கண் விழிகள் -மயர்வற மதி நலம் அருளி –
கருண அம்ருத வ்ருஷ்டிகளாலே பிறந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உகவையால்
நெஞ்சம் உள்ளுருகப் பண்ணி உன் அகவலைப்படுத்தாய்

தாமரை போல் பரிமளம் செவ்வி குளிர்த்திகளை யுடைத்தாய் போக்தாக்களால் உண்டு அறுக்க ஒண்ணாத
போக்யதா பிரகார்ஷத்தை யுடைய திருக்கண்கள் நோக்காகிற வலையுளே அகப்படுத்தி –
கண்ணியிலே அகப்பட்டாலே ஜ்வர ஸந்நி பதிதரைப் போலே பிதற்றும் அத்தனை இறே

இனி அகப்பட்ட பின் செய்வது என் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
தகவு செய்திலை -என்ன

தகாதது என் என்ன

அரதி கந்த ரஹிதராய் நித்ய ஆனந்த மக்நரான ஸூரி ஸேவ்யரான உன்னுடைய
துயர் அறு சுடர் அடியாய் இருக்கிற திருவடிகளாலே அழித்தாய்
துக்க கந்த ரஹிதமாய் போக்யமே தேஜஸ்ஸான திருவடிகளாலே அழித்தாய் என்ன

எத்தை அழித்தோம் என்ன
எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–
ஸங்கல்பத்தால் அழிக்கலாவது உன் சிற்றில் இறே
இவருடைய சிற்றில் ஸ்பர்சித்து அழிக்க வேண்டுமே

ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது ஸங்கல்பத்தாலே இறே
சேஷபூதனுக்குத் திருவடிகள் உத்தேச்யமானோ பாதி
பிரணயிகளுக்கும் திருவடிகள் உத்தேச்யமாயே இறே இருப்பது –

வெறும் சிற்றிலே என்று காணும் நீ அழித்தது -எங்கள் அகவாயையும் அழித்தாய் காண் –
காலாலே எங்கள் சிற்றிலை அழித்துக் கண்ணாலே எங்கள் அபி சந்தியைக் குலைத்தாய்

உன் ஸ்ருஷ்டியைப் போலே நெருப்பும் நீருமாய் அன்று காண் எங்கள் சிற்றில்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்கையால் ஸ்ரமப்பட்டோம்
உபாதேய தமம் எங்கள் சிற்றில் -உன்னுடைய ஸ்ருஷ்ட்டி அனுபாதேயம்

யாமடு சிறு சோறும் கண்டு நீ அடுகிற சிறு சோறு நிர்மால்யத்தோபாதி புறம்புள்ளாருக்கு ஆகாது –
நீயே புஜிக்கும் அத்தனை
யாமடு சிறு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து உண்ணும் சோறு

கண்டு,நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–
கண் படைத்த பிரயோஜனம் இவற்றைப் பார்த்து ப்ரீதி பிரேரிதனாய் -ப்ரஸன்ன ஆதித்ய வர்சசம் -என்கிற
முக ஒளி திகழும் முறுவல் மந்தஸ்மிதம் பண்ணி நின்றிலையே

அழித்தாய் என்று இன்னாப்பு இன்று உகந்து அணைந்து கொண்டு சொல்கிறாள் –

——–

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல் குரவில்
ப்ரணய ரோஷத்தால் கிட்டோம் என்று இருந்த தம்மைப் பொருந்தப் பண்ணின
வைசித்ரித்யத்தாலே
விருத்த விபூதி யுக்தனான படியை அநுஸந்தித்தார் –

——–

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

உயர்வற என்கிற பாட்டை -பரஞ்சுடர் உடம்பு -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -உயர்வற
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
உயர்வற அழுக்குப் பதித்த உடம்பாய்
உயர்நலமாவது பரஞ்சுடர் உடம்பாய்
ஆக உயர்வற உயர் நலம் யுடையவன் என்றபடி

பரஞ்சுடர் உடம்பாவது
சுத்த ஸத்வமான அசாதாரண திவ்ய விக்ரஹத்தை யுடையவனாய்
தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்-என்றபடி

அழுக்குப் பதித்த உடம்பாய்
குணத்ரய வஸ்யமான ஜகத் சரீரனாய் நின்றபடி

நீர் இது அறிந்தபடி என் என்ன
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் -அவித்யாதிகளை அறுத்து பக்தி ரூபா பன்ன ஞானத்தை
நிர்ஹேதுகமாக அருளியவன் தானே தன்னைக் காட்டக் கண்டேன்

எவன் அவன் அழுக்குப் படிந்த உடம்பிலே கரந்தும் -பரஞ்சுடர் உடம்பிலே தோன்றியும்
நின்றும்
இவற்றுக்கு அந்தர்யாத்மாவாய் புக்கு நின்றும்
இப்படி நிற்கச் செய்தே
யம் ஆத்ம ந வேத -என்று இவற்றுக்குத் தோற்றாதபடி நின்று இவற்றின் சத்தியை நோக்கியும் –

எவன் அவன் -காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பாருக்குக் காணலாம் படி
ராம கிருஷ்ண அவதாரங்களைப் பண்ணியும் நூறாண்டு பதினோராயிரம் ஆண்டு நின்றும்

அவ்விடங்களில் கை தவங்கள் செய்தும்
க்ருத்ரிமத்தைப் பண்ணியும் -அதாவது
அவதரித்து நிற்கச் செய்தேயும் தன் படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும்
ஆஸ்ரிதற்குத் தோற்றியும் -இப்படி இருக்குமவன் –

எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -ராஜஸ தாமஸ ரஹிதரான நித்ய ஸூரிகளுக்கு
நிர்வாஹகனானவனை

விண்ணோர் சிரங்களால் வணங்கும்
ப்ரஹ்மாதிகள் தலை படைத்த பிரயோஜனம் பெற்றோமே என்று வணங்கும் படியும்

ஸுசீல்யாதிகளும் ஸுலப்யாதி குணங்களும் கண்டு அனுபவிக்க -அயர்வறும் பாமரர்களும் வணங்கும் படியும்
திரு விண்ணகரிலே வந்து நிற்கிற உபகாரகன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

பிரான்
உபயாந்தரங்களிலே புகல் அறுத்து -உபேயாந்தரங்களை விஸ்மரித்துத்
தானே உபாய உபேயமான ரக்ஷணங்களைப் ப்ரகாசியா நின்ற சுடர் அடி

வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–
தொழுது எழு என் மனனே
அநேகம் காலம் அஸேவ்யனாய்ப் போந்த நீ ஸேவ்யன் பக்கலிலே ஸேவியாய்

வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–
எத்தனையேனும் தண்ணியரும் வந்து கிட்டலாம் படி ஸ்ரேஷ்டமான திருவடிகள் அல்லது

யாவருக்கும் –
எத்தனையேனும் தண்ணியருக்கும்
ப்ரஹ்மாதிகள் ஸநகாதிகள் முமுஷுக்கள் முக்தர் நித்யர் முதலானோர்க்கும்
அதிலும் பக்தருக்கு முற்பாடானாய் வந்து புகுகைக்கு வலிய புகல் இல்லை
அவனை ஒழிந்த சரண்யர் அடங்கலும் இவனைக் கொண்டு ஸம்ஸாரத்திலே முழுக்குகிற பேர்

இவனைக் கொண்டு கரை ஏற்ற வல்ல வலிய புகல் -எவன் அவன் -திருவடிகள் அல்லது இல்லை
அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்கும் அத்தனை அல்லது யாகையாலே
சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

————-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரில்
கிட்டி அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீரக் கிருஷ்ண குண சேஷ்டிதங்களைக்
கிட்டித் தரித்து அனுபவிக்கப் பெற்றேன் என்று உகக்கிறார் –

——–

மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

உயர்வற என்கிற பாட்டை -மண் மிசைப் பெரும் பாரம் நீங்க -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தத்தில் -அஹங்கார மமகாரங்களாலும் -காம க்ரோதங்களாலும் மிகுந்த
பாரம் பொறாமல் பூமிப்பிராட்டி ஸர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்ய –
பூ பார நிவாரண அர்த்தமாக அவதரித்து மண் மிசைப் பெரும் பாரம் நீங்க
விஸ்வம் பரை-என்றும்
ஷமை-என்றும்
புரை -என்றும் பேரை யுடைத்தாய்
பரிக்கக் கடவளான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி இறே துர்வர்க்கம் திரண்ட படி –

த்ரிபாத் விபூதியில் -யத்ர பூர்வே ஸாத்யா –என்கிற பூர்வ ஸாத்ய ஆராதனர் உண்டாய்
இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இறே -அஹங்கார ஸ்பர்சம் யுடையார் இல்லாமையால்
தங்கள் பரத்தை அவன் பக்கலிலே வைத்து இருக்கும் அவர்களே இறே அவர்கள்
இப்படி உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவன்
ஆனந்தாதி கல்யாண குணங்களுக்கு அடியான அபராத ஸஹனானவன்

ஓர் பாரதமாய்ப் பெரும் போர் பண்ணி அத்விதீயமான மஹா பாரதமாகிற மஹா யுத்தத்திலே
அர்ஜுனன் பந்து வதம் ஆகாது என்று வில்லை விழ விட்டு சோகிக்க
அவன் சோகம் ஆகிற மயர்வு அற மதிநலம் அருளினன்
அதாவது -பகவத் கீதை -18 அத்தியாயத்தில் -தர்ம அதர்மங்களை அருளிச் செய்து –
சோக நிவ்ருத்தியைப் பண்ணி யுத்தத்தில் மூட்டி

மாயங்கள் செய்து –
பகலை இரவாக்குவது -ஆயுதம் எடேன் என்று -ஆயுதம் எடுப்பது –
எதிரியுடைய மர்மத்தைக் காட்டிக் கொடுப்பது -அவற்றைச் செய்து மயர்வற மதிநலம் அருளினன்

மாயங்கள் ஆவன -மாயா வயுநம் ஞானம் -பிறப்பித்த பின்பு –

சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
சேனையை வெறும் தரையாம்படி மந்திரித்து முடித்திட்டுப் போய்

விண் மிசைத் தன தாமமே புக
அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தது –
பிரதிகூலரை நிரஸித்ததற்கு மேலே அவர்கள் இருந்த இடத்திலே இராதே
பரமபதத்தே போய்ப் புகப்பெற்ற படியே என்று உகக்கிறார்

மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
கிருஷ்ணனுடைய துயர் அறு சுடர் அடி -ஆஸ்ரிதர் கார்யம் தலைக்கட்டுகையாலே
துயர் அற்று வீர ஸ்ரீ யாலே தேஜோ ரூபமாய் விளங்கா நின்ற திருவடிகள் –

அதுக்கு மேலே நித்யர் முக்தர் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று
இருந்த இடத்திலே நண்ணி நான் வணங்கப் பெற்றேன்

எனக்கார் பிறர் நாயகரே-
க்ருத்வா பர அவதரணம் ப்ருதிவ்யாம் ப்ருது லோசன -மோஹயித்வா ஜகத் ஸர்வம் -என்கிறபடியே
பிரதிகூலரை அடங்கலும் உளவுகோலாலே விழ விட்டு
அனுகூலரை அடங்கலும் கண்ணாலே விழவிட்டுப் போனான்

கத ஸ்வ ஸ்தானம் உத்தமம்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
எனக்கு யார் தான் நிகர் என்கிறார் –

—————-

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

துவளில் மா மணியில்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர தமக்கு
பகவத் விஷயத்தில் உண்டான அதி ப்ராவண்யத்தைச் சொல்லுகிறதாகையாலே
தம் படியை அருளிச் செய்கிறார் –

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

உயர்வற என்கிற பாட்டை -பின்னை கொல் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வு மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
பகவத் வ்யதிரிக்த காமங்களில் ப்ரேம பரவசராய் இந்த லீலா விபூதியில் உயர்வும் தாழ்வுமாய் அற்றுப் போக
இவளுக்கு உயர்நலம் உடையவன் எவன் அவன் அவனால் அல்லது செல்லாத ப்ராவண்ய அதிசயத்தைக் கண்டு
பிராட்டிமாரில் ஒருத்தியே என்று தோழி சங்கித்ததாகச் சொல்லுகிறது ஆகையால் தன் முகம் –
தம் படியை அருளிச் செய்கிறார்

உயர்நலம் உடையவன் எவன் அவன் -பின்னை கொல் இத்யாதி
உகார வாஸ்யை யான பிராட்டி -அவளுக்கு நிழல் போல்வரான மற்றப் பிராட்டிமாரும் –
இம்மூவரும் கூடி வந்து ஒருத்தியாக அவதரித்தார்களோ
ஞான ஆனந்த ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனுடைய போக மஹிஷியான நப்பின்னைப் பிராட்டி பிறந்திட்டாளோ
அன்றிக்கே எல்லாருக்கும் இவ்வேற்றத்தைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ
ஸர்வேஸ்வரனுடைய ஸம்பத் ஆனவளோ -அது விளையும் பூமியோ அதின் பல ரூபம் ஆனவளே பிறந்தாளோ
அப்படி அன்று இவள் படி -பிராட்டி மூவருக்கும் இவள் படி இல்லாமையாலே
அவர் அவர்களுக்கு உள்ள ஏற்றம் எல்லாம் இங்கே காணலாகையாலே அவர்கள் ஒப்பு அன்று
லோகம் எல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தியும் பிறந்திட்டாளோ என்றுமாம் –

விஷ்ணு நா சத்ருஸோ வீர்யே -என்றால் போலே –
உபமானம் அசேஷணாம் ஸாதூனாம் யஸ் ஸதா பவத் -என்கிறபடியே
இவரை எல்லாருக்கும் ஒப்பாகச் சொல்லலாம் இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை காணும்
இதுக்கடி என் என்ன
மயர்வற மதிநலம் அருளினன் -என்ன மாயம் கொலோ
மாயா வவுனம் ஞானம்
மயர்வற -பகவத் விபூதியில் அவித்யாதிகளைப் போக்கி
மதி நலம் -பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிறப்பித்து அருளினால் கூடாதது இல்லை யாகாதே

என்ன மாயம் கொலோ
இது என்ன ஆச்சர்யம் தான்
எவன் அவன் -இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
தன் பிச்சைக் கால் கடைக் கொண்டு அவன் பிச்சைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள்
மால் என்று பெரியோன் -அதாவது அயர்வறும் அமரர்கள் அமரர்கள்
தெளிவுற்று வீவின்றி நிற்கும் அமரர்கள் அதிபதி யானவன்
நெடுமால் -பராத்பரன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்ன

அவனை நம்மால் கிட்ட விரகுண்டோ என்ன
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்-
பராத்பரனானவன் நம்மைப் பெறுகைக்கு எளிதாகத் திருத் தொலை வில்லி மங்கலத்திலே
எழுந்து அருளி நிற்பதாகிய கிருஷி பண்ணினபடி

இப்படி அவன் முற்பாடானாய் வந்த உபகாரகத்துத் தோற்று
சென்னியால் வணங்கீத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளைத் தொழுது

அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–
திரு நாமம் கேழ்க்க செவி தாழ்க்க இதுவே இவளுக்கு மநோ ரதம்

இவள் அவ்வூர் என்கிறது
பெண் பிள்ளை சொன்னால் போலே இராமையாலே அவ்வூர் என்கிறாள்
ஸர்வ காரணங்களாலும் தொலை வில்லி மங்கலத்தை அனுபவிக்கிறாள்

—————–

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

மாலுக்கு -பதிகத்தில்
வையத்திலேயே பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து அது பெறாமையாலே அவசன்னராய்
ஏறாளும் இறையோனில் -உடமாயிவர் வேண்டா என்கிறவை எல்லாம்
தன்னடையே போகிறபடியை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -மாலுக்கு வையம் -என்கிற பாட்டை விவரிக்கிறது
உயர்வற மனுஷ்யம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பண்ணுகிறது
உயர் நலமுடையவன் -மாலுக்கு வையம் அளந்த மணாளன்
ஆனந்தாதி குண விசிஷ்டனாய் -ஸ்ருதி ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வரனுக்கு

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
மால் என்று பெரியோன் என்றபடி
ஜெகதாகாரனானவன் ஜகத்துக்கு அந்நிய சேஷத்வத்தை ஒரு திருவடியாலே போக்கி –
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தை ஒரு திருவடிகளாலே போக்கினை படியைச் சொல்லுகிறது

வையம் அளந்த மணாளற்கு
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
கௌசல்யா லோக பர்த்தாரம் என்றும் சொல்லுவாருக்கு –

யுகாவாதாரை விடமாட்டாதவன் வ்யாமோஹம் -அழித்தாய் உன் திருவடியால் -உகந்த இவளை விடுமோ
இவளைத் தன் கால் கீழே இட்டுக் கொண்ட அச்செயலுக்குத் தோற்றுத் தன்னை எழுதிக் கொடுத்தாள்
இவள் ஒருத்தியுமே இறே
இவளுக்குப் ப்ரேமம் விளைந்தபடி என் என்னில்

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் -நீலக் கரு நிற மேக நியாயற்கு –
மயர்வற -தத் வ்யதிரிக்தங்களில் ஆசை அறுத்துத் தன் விஷயமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளுகையாலே
அத்யந்தம் ப்ரேம பாரவஸ்யத்தாலே நெய்த்துக் கருத்த நிறத்தை யுடைய மேக ஸ்வ பாவற்கு

ப்ரயோஜன நிரபேஷமாகக் கொடுக்கையும்
கொடாத போது உடம்பு வெளுக்கையும்
வ்யாமோஹம் இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஓவ்தார்யமும் இருக்கிற
இவ்வழகுக்குப் பிச்சேறின படி

அதன் மேலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
கோலச் செந்தாமரைக் கண்ணன்
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -என்று
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்யரைக் தன் கண் அழகாலே தோற்பித்தால் போலே
தன் மேன்மையையும் கண் அழகையும் காட்டி யாயிற்று இவளை வசீகரித்தது

கோலச் செந் தாமரைக் கண்ணற்கு
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்று
என் ஏலக் குழலி இழந்தது சங்கே.–
தர்ச நீயமாய் வாத்சல்யத்தாலே விகாசாதிகளையும் உடைத்தான திருக்கண்களையும் யுடையவனுக்கு
தாமரைத் தடம் கண் விழிகளில் அகவலைப் படுத்தினவனுக்கு

என் ஏலக் குழலி
ஏலம் பரிமளிதமான திருவடிகளை சிரஸா வஹிக்கையாலும் -ஸர்வ கந்த -ஸர்வ ரஸ -என்கிறபடியே
என் கொங்கு ஏலக் குழலி -என்று நிரூபகமாய்த்து –

மது ஸ்யந்தியா நின்றுள்ள பூவை யுடைத்தாய் -நறு நாற்றத்தையும் யுடைத்தாய் இருக்கிற -இவள்
மயிர் முடி ஒன்றுக்கும் தோற்றுக் குமிழி நீர் உண்ணுமவன் கிடீர்
ஒன்றுக்கு ஒன்பது அபதானம் கிட்டி இவளை மயக்கிக் கலலாத வளையை அபஹரித்தான்

இழந்தது சங்கே.–
தனக்கு அடிமையாய்த் தொழுத கை வளையைக் கொள்வது தக்கதோ என்கிறாள் –

————

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

உண்ணும் சோற்றில்
கீழில் திருவாய் மொழியிலே மோஹங்கதையான இவள் தசையைக் கண்ட திருத்தாயார்
இவள் வளையாதிகள் இழந்தபடியைச் சொல்லிக் கூப்பிட்டுத் தானும் மோஹிக்க
அவ்வளவில் பெண் பிள்ளை உணர்ந்து இங்குத்தைத் தரிப்பற்று அவன் எழுந்து அருளி இருந்த தேசமான
திருக்கோளூர் ஏறப் போனாள் என்று திருத்தாயார் சொல்லுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை உண்ணும் சோறு என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
அன்ன பானாதி முதலானவை தாரக போஷக போக்யங்களாய் இருக்கையாலே அல்ப அஸ்த்ரமாய் அற்றது –

உயர் நலம் யுடையவனே இவளுக்கு
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் இறே
தத் வ்யதிரிக்தங்கள் அறியாள்

கொள்ள மாளா இன்ப வெள்ளத்துக்கு மேல் யுண்டாய் இவள் அவ்வருகு
ஒரு தாரகாதிகள் உண்டாய்த் தேடப் போனாளோ

உயர் நலம் யுடையவன் எவன் அவனே
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க
உயர் நலமான ஆனந்தாதி குண பரிபூர்ணனாய் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் யாவன் ஒருவன்
அவனே எம்பெருமான் ஆகிறான்
என்று இந்த ஸ்ம்ருதியே யாத்ரையாய் -அத்தாலே -ஆனந்த அஸ்ருவாய் -மல்க இருக்கிற இதுக்கு ஹேது –
அவன் மயர்வற மதி நலம் அருளினவன் –

எவன் தன்னுடைய ஞான பக்தி களே தாரகாதிகளாகப் போய்
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
லௌகிகரைப் போலே அன்ன பானாதிகளாலே தரித்து அங்கே புக்கு அவனாலே தரிக்கப் போனாளோ
அஹம் அன்னம் அஹம் அந்நாத -என்று இருப்பவருக்கும் அவ்வருகு போக வேணுமோ –

எல்லாம் கண்ணன் என்று இருக்கும் அவளுக்கு வேறு ஓன்று வேணுமோ
கணை நாணின் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக யுண்
என்றும் இறே இருப்பது

கண்கள் நீர்கள் மல்கும் கண்ணும் அவள் முக விகாஸமும் அன்றோ எனக்குத் தாரகம்
என் ஜீவனத்தையும் கொண்டு போனாளே
அழுநீர் துளும்ப அலமர்கின்றனவோ வாழியரோ என்று மங்களா ஸாஸனம் பண்ணுகை இறே ப்ராப்தம்

மண்ணினுள்
விண்ணில் உள்ள-அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன்னுடைய அம்ருத ஆனந்தத்தை
அசராமல் புஜிக்கிற நித்ய முக்தருக்கு ஸ்வாமி யானவன்
மண்ணுனுள் புகுமூர் திருக்கோளூரே

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -இவள் இடையாட்டமாக அவன் நினைத்து இருப்பது –
விண்ணுளாரில் சீரியளான இவளை லபிக்கைக்காக வந்து இருக்கிறவன்
மண்ணினுள் புகுமூர்த் திருக்கோளூரே

அவன் -சீர் வளமிக்கவனூர் வினவி – லௌகிகர் எல்லாரும் யாவதாயுஷம் தாரகாதிகள்
ஸம்பாதிக்குமா போலே இவளும் அவன் சீரே யாவதாத்மபாவியாக தாரகாதிகளாகவும்
நிரவதிக ஸம்பத்து வைத்த மா நிதியாகவும் அவன் ப்ரஸாதமே பேறாகவும் போனாள்

சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்று
அவனோடு அவன் குணங்களோடு வாசி யற ப்ராப்யம் ஆகிறவோபாதி அவன் விரும்பின தேசமும்
ப்ராப்ய அந்தர் கதம் இறே

அவன் சீர் யாவதாத்மபாவி தாரகாதிகளானால் போலே துயர் அறு சுடர் அடி தொழுது எழுகையும்
போஷகாதிகளும் பூஷணாதிகளும் ஆய்த்து

வளம் மிக்கவனூர்
பரமபதம் கலவிருக்கையோ பாதி உகந்த விஷயத்தைப் பெறும் இடம் இறே ஊராகிறது

அயர்வறும் அமரர்கள் இருந்த இடத்திலே சென்று அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுகைக்கு என் மனனே
திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே –என்கிறாள் —

———–

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

பொன்னுலகு ஆளீரோ -வில்
திருக்கோளூர் ஏறப் போனவள் முடியப் போய்த் தலைக்கட்ட மாட்டாதே
நகர உபவனத்திலே விழுந்து கிடந்தது ஆர்த்தராய் ஏக ரஸம் பற்றாசாகத் தூது விடுகிறார்

—-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-

உயர்வற என்கிற பாட்டை -பாசற -என்கிற பாட்டு விவரிக்கிறது-எங்கனே என்னில்

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஸம்ஸரித்துக் கர்ம பாசங்களாலே பத்தராய்
பசலும் குட்டிகளுமாகக் வாழா நிற்கச் செய்தே கர்மம் மாண்டு வாழ்வற்று நிற்கும்

உயர் நலம் உடையவன் என்று நித்ய ஆனந்த ஸ்வரூப னோடே நித்யர் முக்தர் களித்து ஆனந்தித்து இருக்க
அடியேன் ஒருவரோடும் கூட்டு அற்று இருப்பேனோ

பாசற எய்தி
என்னுடம்பில் பசுமை போய் வை வர்ணயம் மிகவும் பரந்தது
இன்னும் சில காலம் கழித்தால் அறிவிக்கிறோம் என்னும் அளவாய் இருந்ததோ என் தசை

இன்னே
என்னைக் கண்ட உங்களுக்குச் சொல்ல வேண்டா இறே
விஷயம் சாவதியாகில் இறே இது அளவுபட்டு இருப்பது –
இதுக்கு ஒரு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது இறே -உடம்பைக் காட்டும் அத்தனை –

வினையேன் எனை யூழி நைவேன்
விஸ்லேஷமும் ஸம்ஸ்லேஷத்தோ பாதி யாகப் பெற்றிலேன்
அது காதா சித்கமாய் இது நித்தியமாய் இருக்கிற படி –

இதுக்கு ஹேது என் என்ன
நித்ய ஆனந்த ஸ்வரூபனாவான் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்
தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளினது –

அன்று முதல் எத்தனை யூழி நைவேன் -ஸைதில்யத்தோடே எத்தனை கல்பம் சென்றது

ஆசறு தூவி வெள்ளைக் குருகே
பழிப்பற்ற சிறகை யுடைத்தாய் பர துக்க அஸஹிஷ்ணு தைக்கு உறுப்பாய்
மநோ நைர்மல்யத்தை யுடைத்தாய் இருக்கிற படி

மதி நலம் அருளினவன் எவன் ஒருவனான கிருஷ்ணன் பிரிகைக்குப்
புறம்பு போல் உள்ளும் கரியான் ஆனால் போலே நீங்களும் கூட்டுகைக்கு உள்ளும் புறமும் நிர்மலமாய் இறுக்கியபடி

அவன் மதிநலம் அருளினது பிரிந்து துடிக்கைக்கு ஹேதுவானால் போலே யாகாதே
ஆசறு சோதி வெள்ளைக் குருகே அருள் செய்து ஒரு நாள்
ஒரு போது கிருபை பண்ணி அருளினிகோளே

ஆர்த்தியால் அலைகிற சமயத்திலே அஞ்சாதே என்று அருளப் பெற்றேன் என்ன

உமக்கு என் செய்ய வேணும் என்ன

அயர்வறும் அமரர்கள் அதிபதி -விஸ்லேஷ கந்த ரஹிதரான நித்ய ஸூரிகளுக்குப் போக்ய பூதனாய்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோன்
பழிப்பற்று நெய்த்து இருந்துள்ள மயிர் முடியை
அநந்த வைனதேயாதிகள் பேண இருக்கிறவனைக் கண்டு
துயர் அறு சுடர் ஆதி தொழுது எழுந்து இருந்து ஒரு விண்ணப்பம் செய்ய வேணும் என்ன

விண்ணப்பம் ஏது என்ன

ஏசறும்
ஒரு நீர்ச் சாவியிலே க்ருப அம்ருத வ்ருஷ்டியை வர்ஷியாதே கடலிலே வர்ஷிக்கிறாப் போலே
நித்ய விபூதியாரோ பெறுவது
லீலா விபூதியார் நிர்க்குணன் என்னாமே ப்ரஸாதத்தைப் பண்ண வேணும் என்றும்

நும்மை யல்லால் மறு நோக்கு இலள்
உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை
விழிக்கும் கண்ணிலே நின் கண் மற்று அல்லால் வ்ருத்த கீர்த்தனத்துக்கு உம்மை ஒழிய
வேறு ஒருவரை யுடையள் அல்லள்

குண கீர்த்தனத்தால் தரிக்குமவள் அல்லள் -என் மனம் போலே இருக்கிற நீங்கள்
இவ்வளவும் அருளிச் செய்யுங்கோள் என்று குருகை இரக்கிறாள் –

————————-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

நீராய் நிலனில்
தம் தசையைக் கண்டு தம் பரிசரத்தில் கால் எழுந்து போவார் இல்லை -என்று அறுதியிட்டு
ஈஸ்வரனுக்கு முகம் காட்டி அல்லது நித்ய விபூதியில் இருப்பு அரிதாம் படி
ஆர்த்தியாலே நிரம்பித்தது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
பெரு மிடறு செய்து கூப்பிட்டார் –

———–

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

உயர்வற என்கிற பாட்டை -ஞாலத்தூடே என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
ஆர்த்த ப்ரபன்னன் -நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமான அகாரத்தாலே அர்த்த பஞ்சகத்தை விவரிக்கிறது

உயர்வற-ஞாலத்தூடே
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தைப் போக்குகைக்காக
த்ரிவிக்ரம அபதானத்தாலே எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்து நடந்தால் போலே
என் முன்னேயும் நடக்க வேணும் என்ன

அது உமக்கு காட்டுவது ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்க் காட்டுவோம் என்ன
அது தன்னை இங்கேயோ காட்டித்து இல்லையோ என்கிறார் –

அது ஒரு நாள் காதாசித்கமாகச் செய்தோம் என்ன

உயர் நலம் உடையவனான நீ யுகம் தோறும் ராம கிருஷ்ணாதிகள் அவதாரங்களைப் பண்ணி ரஷிக்கை
உனக்கு ஸ்வ பாவமாய் இருக்க -நான் நோவு படக் கடவனோ என்கிறார் –

ஞாலத்தூடே நடந்து
ஸதா தர்சனம் பண்ணுவார் முன்னே நடக்கக் கடவ நடையைக் காதாசித்கமாக வந்தாலும்
பாராதார் முன்னே கிடீர் நடந்தது
அந்தகன் முன் நடக்குமா போலே
அக்ரத ப்ரயயவ் ராம -என்று நடந்தும்

நின்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் தததர்ச தனு ரூர்ஜ்ஜிதம் ராமம் ரா
மானுஜஞ்ச சைவ பர்த்துச் சைவானுஜம் சுபா -என்று
தாரை உகந்து சொன்னபடியே ஆகர்ஷமாய் நின்றபடி

கிடந்தும்
பாஹும் புஜங்க போகாபம் உபதாயாரி ஸூதன -என்று
கடலை அனுவர்த்திக் கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும் படி இருக்கை

இருந்தும்
உபவிஷ்டம் ஸ்வ லங்க்ருதம்
உடஜே ராமமாஸீ நம் -என்று சொல்லுகிறபடியே இருக்கை

நீர் அறிந்தபடி என் என்ன
நீர் மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்து கண்டேன்

சாலப் பல நாள்
உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ
யுகம் தோறும் -ஸம்பவாமி யுகே யுகே -என்னுமா போலே

உயிர்கள்
அயர்வறும் அமரர்களான திருவடி திருவனந்த ஆழ்வான் பிராட்டி -இவர்களுக்காக அன்று கிடீர்
ஸர்வாத்ம ஸம் ரக்ஷணம் பண்ணுவது அன்றோ யுன்னது
அமரர்கள் அதிபதி என்று ஸ்ருதி ப்ரசித்தனானவன் யாவன் ஒருவன் அவன் காப்பானே
இவர்களுக்கு அழித்துக் கொள்ளுகை பணியானால் போலே இறே அவனுக்கு நோக்குகை பணியானபடி

அகாரத்தில் அவ ரக்ஷணே -என்கிற தாதுவாலே ஸர்வ வித ரக்ஷகத்வம் சொல்லிற்று
நான் கை வாங்கினேன்
இனிக் காவல் சோர்வு படாதபடி வேணுமாகில் நோக்கிக் கொள்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் யாவன் ஒருவன்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரானவர்கள் பரிசர்யை பண்ண இருக்கிற கோலத் திரு மா மகளோடு
உன்னைக் கூடி இருக்குமவர்கள் உன் துயர் அறு சுடர் அடி தொழ
அடியேனும் அப்படித் தொழுது எழாதே

தாயும் தம்மப்பனும் சேர இருக்கக் கிட்டப் பெறாதே ஸ்தநந்த்ய ப்ரஜை
நாக்கு ஒட்டிக் கிடந்தது கிடைக்குமா போலே இருக்கிறது காணும்
இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்ய இறே இவருக்குப் ப்ராப்யம்

சாலப் பல நாள் இன்னம் தளர்வேனோ
முன்பு அநாதி காலம் இழந்தால் இன்னும் இழக்க வேணுமோ

இன்னம்
மயர்வற மதிநலம் அருளின உனக்கு அடியேனான பின்பும் தளர்வேனோ

துயர் அறு சுடர் அடி தொழுது எழ என்ற அடியேனும்
என் மனனும் சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ

இப்பாட்டில் அகார அர்த்தத்தை ஸ க்ரமமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –
அவ ரக்ஷணே -இறே தாது
ரக்ஷிக்கும் இடத்தில் ஸர்வ பிரகாரமாக ரக்ஷிக்க வேணும்
அது தானும் ஸர்வ காலமும் ரக்ஷிக்க வேணும்
அப்படி ரக்ஷிக்கும் இடத்தில் ஸர்வ ரக்ஷகனாக வேணும்

இப்படி வரை அறாதே ரக்ஷிக்கும் இடத்தில்
ந கச்சன் ந அபராத்யதி -என்னும் அவளும்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவனும் கூடவாயிற்று
ஆகையால் இறே அகாரம் மிதுனத்துக்கு வாசகம் ஆகிறது –

உயர்வற ஞாலத்தூடே -இத்யாதியாலே
ஸர்வ பிரகார ரக்ஷகத்வம் சொல்லிற்று
உயர் நலமுடையவன் மயர்வற –சாலப் பல நாள் இத்யாதியாலே ஸர்வ கால ரக்ஷகத்வம் சொல்லிற்று
அயர்வறும் அமரர்கள் அதிபதி -கோலத் திரு மா மகளோடு உன்னை -என்கையாலே
ஸ்ரீ யபதியே ப்ராப்யம் என்கிறது
அகார விவரணமான திரு மந்த்ரார்த்தம் சொல்கிறது

உயர் நலமுடையவன் -கோலத்திருமா மகளோடு உன்னை -என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லுகிறது
அடியேன் -என் மனனே -என்கையாலே ப்ரத்யகாத்ம ஸ்வரூபம் சொல்கிறது
அருளினன் -உயிர்கள் காப்பான் -என்கையாலே உபாய ஸ்வரூபம் சொல்கிறது
சுடர் அடி தொழ –உன்னைக்கூட -என்கையாலே பலம் சொல்லிற்று
மயர்வற –உன்னைக் கூடாதே தளர்வேனோ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று

ஆர்த்த ப்ரபந்ந அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது
அகாரத்தை விவரிக்கிறது உயர்வற உயர் நலம் உடையவன் -என்கிற பாட்டு

உயர்வற உயர் நலத்தை விவரிக்கிறது ஞாலத்தூடே என்கிற பாட்டு
எங்கனே என்னில்
அகாரத்திலே நாராயண பதம் விவரணம் ஆகையாலே ஸர்வவித பந்துவாய் ரக்ஷிக்கும் என்கிறது
இந்த ஸர்வவித ரக்ஷகத்வத்தால் அவன் உயர்த்தி சொல்கிறது

உயர்வு என்றது மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவர் என்கிறது
ஒருவரைப் பார்க்க ஒருவர் உச்சாரயம் என்கிறது -அந்த அர்த்தனத்தை உட்க்கொண்டு
ஞாலத்தூடே நடந்த என்கிறது

நடந்த -ஓங்கி உலகு அளந்தபடி
உயர்வற என்றது அந்நிய சேஷத்வம் ஸ்வ ஸ்வா தந்தர்யம் தவிர்த்த படி
ஆகையாலே ஸர்வ சேஷியானவனே ரக்ஷகன் என்றபடி

உயர் நலம் -ஆனந்தம் -அகாரத்திலே ஸர்வ வித ரக்ஷகத்வம் அவ ரக்ஷணே -என்கிற தாதுவாலே –
ரக்ஷகத்வமே ஸ்வரூபம் என்கிறது -அதாவது
த்ரிவிக்ரம அபதானத்தாலே ஜெகதாகாரதையை நடத்திக்காட்டி ஞாலத்தில் உள்ளார் எல்லாம்
அன்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் ஆகிற அஞ்ஞான அந்தகாரங்கள் -கட்க்கண்ணும் உட் கண்ணும் குருடாய்
அத்தை வெளிச் சிறப்பிக்கைக்காக உடையவன் ஆகையால் நடந்து நின்றும் –
நடந்த போது அவர்கள் எதிர் அம்பு கோர்த்தும்
நின்று சத்ரு நிரசனம் பண்ணி நின்ற போதும் ஸஜாதீய புத்தி பண்ணி அகன்றும்

எவன் அஞ்ஞரான சேதனர்களை அறிவில்லாமையைக் கண்டு கிடந்தும்
பாற் கடல் பள்ளி கொண்டு அருளும் இடத்து
நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்று கூக்குரல் கேட்டு புறப்பட்டு அம்புக்கு இரையாக்கியும்
அவன் -அனந்த சாயியானவன் எழுந்து வந்து இருந்தும் நூறாண்டு பதினோராயிரம் ஆண்டு இருந்தும்
ஸர்வவித ரக்ஷணம் பண்ணிய இடத்து
வையத்து நின்னை வல்லவர் பழித்து இன் நடவாலே குருடு நீங்கிற்று இல்லை யாகையாலே
அகாரத்தாலே ஸர்வ அவஸ்தையிலும் ரக்ஷிக்கும் என்கிறது

ஆக அகார விவரணமான நாராயண பதத்தில் சொன்ன ஸர்வவித ரக்ஷகத்வத்தை
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -இப்படி லீலா விபூதியை நடத்துகிற ஸ்வாமியானவன்
எனக்கு மயர்வற மதிநலம் அருளினன் என்பதையே சாலப்பல நாள் என்கிறது
அகாரத்தில் ஸர்வ கால ரக்ஷகத்வத்தைச் சொல்லுகிறது

சோம்பாது பல்லுருவை எல்லாம் படர்வித்த என்கிறபடியே அகாரத்தில் பிரதம சதுர்த்தியாலே
சேஷத்வ ஞானம் பிறந்தவன் மதிநலம் ஆகிற பக்தி ரூபா பன்ன ஞானம் –
அகாரத்தில் கல்யாண குணங்களைச் சொல்லுகையாலே சர்வ குணங்களுக்கும் கிருபை காரணமாய் அற்றது

அகாரம் ஸர்வ சப்தத்துக்கும் காரணம் ஆகையால் தயமானவாய் ஸ்ருஷ்டிக்கையாலே
ஸ்ருஷ்டிக்கும் தயையே ப்ரேரகம் -கிருபையே காரணமாயிற்று

எவன் அவன் யுகங்கள் தோறும் காப்பானே -என்று கிருபா பாத்திரமான ஜீவ கோடிகளை சொல்கிறது –
காப்பான் என்று எதிர் சூழல் புக்கு இத்யாதிப்படியே காத்து ரக்ஷிக்கும் என்கிறது

ஆக அகாரத்தில் சதுர்த்தியாலும் -மயர்வற மதிநலம் அருளுகையாலும் -உயிர்கள் காப்பான் என்கையாலும்
சேதனருக்கு உட் கண்ணும் குருடும் தீர்ந்து தன்னைக்கண்டு அனுபவிக்கும் படி ஞான சஷுஸ்ஸை யும் கொடுத்து அருளி
ப்ரபாகாந்தரங்களிலே போகாத படி காத்து அருளிய படி
அகாரத்தில் சொன்ன ரஷய வர்க்கத்தை எவன் என்கிறது -அநந்ய கதியான அதிகாரி அகார வாஸ்யன் –
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தான் அவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
கடலில் அம்ருத தாஸிகள் அன்று
அமுதினில் வரும் பெண் அமுதுக்கு ஆராவமுதம் ஆனவனை அருந்தும் அமரர்கள்

கோலத் திரு மா மகளோடு உன்னை
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷிதரான கோலம் -அகாரத்திலே லஷ்மீ ஸம்பந்தம் சொல்லுகையாலே
அகாரோ விஷ்ணு வாசக அர்த்தே லஷ்மீ வாசக -என்கையாலே உன்னைக் கூட என்கிறது

இனி வரும் ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து -அத்தனையும் சரணாகதியிலே தீஷிப்பித்து
அத்தை பிராப்தி பர்யந்தமாக நடத்தி விரஜையிலே அவப்ருதம் ஆட்டி செய்த வேள்வியனைத்
திருவடிக்கீழ் குற்றேவல் செய்து இருக்கும் படி அருளினவன் யாவன் ஒருவன் அகார வாஸ்யனான
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அகாரத்தில் சொன்ன ஸர்வவித பல பிரதத்வம் சொல்கிறது -ஆர்த்தி ஹரத்வம் சொல்கிறது
நித்யர் முக்தர் பத்தர் முமுஷுக்கள் -அனைவருக்கும் ஸர்வவித பல பிரதானம் பண்ணி ஆர்த்தியைத் தீர்க்குமவன்
யாவன் ஒருவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
சுடர் அடி -ஆர்த்தி ஹரமாய் மநோ ஹரமாய் தேஜோ மயமான திருவடிகளை யுடைய உன்னைக் கூடாதே

கோலத்திருமா மகளோடு உன்னைக்கூடாதே
இச்சேர்த்தியிலே சேரப்பெறாதே -அகார விவரணமான ஸ்ரீ மன் நாராயணனைக் கூடாதே
துயர் அறு சுடர் அடி தொழாதே -துயர் துக்கம் பிரயாசம் -பிரயாசப்படாதே துயர் அறு
ஸூகரமான திருவடிகளை லபிக்கப் பெறாதே

சாலப்பல நாள்
கீழ் கழிந்த காலம் எல்லாம் போராமல் என் மனனே வாள்களாகி நாள்கள் செல்லக் கழிந்த காலம் போராதோ
அகார விவரணமான சரம சதுர்த்தியிலே சொன்ன சேஷ விருத்தியின் படியே தொழுது எழவன்றோ பிராப்தம்
அஞ்சலி பரமா முத்ரா என்று ஆர்த்த அதிகாரி லக்ஷணம் சொல்லா நிற்க
அது லபியாமல் அடியேன் இன்னம் தளர்வேனோ

அநாதி காலம் அஸேவ்ய சேவை பண்ணித் திரிந்தது போராதோ -இன்னம் தளர வேணுமோ
கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தி பிறந்து அகன்று போகாமே துயர் அறு சுடர் அடி தொழுது
என் மனனே -என்று அருளிச் செய்து அருளினார் ஆயிற்று

உயர்வற என்றும் -ஞாலத்தூடே நடந்து உகந்து உயிர்கள் காப்பான் என்றும் -விரோதி ஸ்வரூபமும்
மது நலம் என்றும் உயிர்கள் காப்பான் என்றும் உபாய ஸ்வரூபமும்
அமரர்கள் அதிபதி -கோலத் திருமாமகளோடே உன்னை -என்று பர ஸ்வரூபமும்
தொழுது எழு என் மனனே -அடியேன் என்று ஸ்வ ஸ்வரூபமும்
உன்னைக் கூடாதே -தொழுது எழு -என்று ப்ராப்ய ஸ்வரூபமாக
அர்த்த பஞ்சகமும் சொல்லிற்று ஆய்த்து —

—————————–

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

உலகமுண்ட பெரு வாயனில்
இப்படிக் கூப்பிட்ட இடத்திலும் முகம் காட்டாமையாலே அநந்ய கதிகராய்க் கொண்டு
பெரிய பிராட்டியார் புருஷகாரமாகத்
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

————-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

உயர்வற என்கிற பாட்டை -அகலகில்லேன் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -அகலகில்லேன் -கீழே தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஸித்திக்கைக்காக
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்

ஆக ஒன்பது பட்டாலும் சரண்யன் ஸ்வரூபத்தைச் சொன்னார்
இதில் தம்முடைய ஸ்வரூபத்தைச் சொல்லி சரணம் புகுகிறார்

கீழே அடியேன் என்றும் அருவினையேன் என்றும் தன்னுடைய ஆகிஞ்சன்யத்தையும் சேஷத்வத்தையும்
அவனுடைய சரண்யத்வத்தையும் அதுக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார்
இங்கே அது சென்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லி சரணம் புகுகிறார்

இப்பாட்டில் பதங்களை த்வயத்தில் பதங்களோடு ஓக்க யோஜித்துக் கொண்டு தலைக்கட்டக் கடவது

அதில் அர்த்த ப்ராப்தமான அஹம் அர்த்தத்தை இங்கு அடியேன் என்கிறது
இது பாட்டுப் பிரவேசம்

ஸ்ரீ உயர்வற அகலகில்லேன் -ஸ்ரீ மன் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
ஒன்றுக்கு ஓன்று உயர்வும் தாழ்வுமாய் இருக்குமா போலே
உயர்வு என்று -உகார வாஸ்யையான பிராட்டிக்கு உயர்வும் தாழ்வுமாவது
அது அறுகை யாவது -உயர்வான மிதிலை குண்டின புரம் ஷீராப்தி அம்ருதம் தாமரைப்பூ இவைகள்
அதிசயமான பிறந்தகமாக இருக்க -அதில் ஸ்மரணையும் அற்று அவற்றை அகன்று விட்டு –
உயர் நலம் அகலகில்லேன் என்று இறையும் –

ஸ்ரீ -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -இதுக்கு அர்த்தம்
ஸ்ரீ யதே -தத் வ்யதிரிக்தங்களுக்கு ஸ்வாமிநி ஆகையாலே வந்த ஏற்றம் –
ஸ்ரயதே -என்கையாலே -சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரிதையாய் சேஷமாய்
பரதந்த்ர ஏக பரையாகையாலே உயர்த்தி அற்ற படி –

உயர்நலம் என்கிறதும் அகலகில்லேன் என்கிறதும் ஸ்ரயதே என்கிறதும் –
பிறந்த அகங்களை விட்டுத் திரு மார்பை அகலகில்லேன் என்கிறாள் –

அகலகில்லேன் என்கிறவள் தான் யார் என்னில் –
நலமுடையவன் -ஸ்ரீ மன் -அலர்மேல் மங்கை உறை மார்பன் -என்று சொல்லப்பட்ட நலம்
அதாவது பூவில் மிருதுவும் மதுவும் மணமும் கிண் கிணி வாய்ச் செய்த பருவமும் செவ்வியும் கூட்டி
ஒரு பெண்ணாக வகுத்தால் போலே இருக்கிறவன் அகலகில்லேன் என்கிறாள்

ஸ்ரீ மன் நாராயணன் -நலமுடையவன் -மங்கை உறை மார்பன் -நித்ய அநபாயினி யான பிராட்டி
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே என்கிற போக்யதையைப் பற்றச் சொல்கிறாள்

ஸர்வ கந்தஸ் -ஸர்வ ரஸ -என்கிற போக்யதையைப் பற்ற அகலகில்லேன் அகலகில்லேன் -என்கிறாள்

தாமரைகளுக்குள்ளே ஸுகந்தியாதிகளின் அளவு இறே –
அவனது ஸர்வ காந்தத்துக்கும் ஸர்வ ரஸத்துக்கும் நேர் நிற்க வற்றோ –
ஆகையாலே -இறையும் அகலகில்லேன் -என்கிறாள் –

எவன் அவன் என்று திவ்யாத்ம ஸ்வரூபம் சொல்கிறது –
வ்யாபகமும் ஸ்ரீ யபதியாயே வியாபிப்பது

ஆகையாலே உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
எனக்கு மயர்வற மதிநலம் அருளி -சரணவ் சரணம் ப்ரபத்யே -என்று பற்றும்படி

நிகரில் புகழாய் -என்கிற வாக்யங்களாலே
புருஷகார சாபேஷனான அதிகாரியைச் சொல்கிறது –
புருஷகார சாபேஷமும் அதிகாரி சாபேஷமும் ஆனவன் என்று சரண்யனைச் சொல்கிறது –

புருஷகாரமுமாய் ப்ரபாயையுமாய் இருக்கும் என்று பிராட்டியைச் சொல்கிறது –
சரணவ்-திருவடிகளை
சரணம் -உபாயமாக
ப்ரபத்யே -பற்றுகிறேன்
என்றது அதிகாரி ஸ்வரூபம்

மயர்வற மதிநலம் அருளினன் என்றது -பக்தி ரூபா பன்ன ஞானமுடைய அதிகாரி

நிகரில் புகழாய் யுலகம் மூன்று யுடையாய் என்னை ஆள்வானே – என்ற அதிகாரி –

நிகரில் புகழாய் -என்றது ஸாத்ய உபாயங்கள் -ஸித்த உபாய பூதனானவனுக்கு ஸஹாயமாக வேண்டா என்கிறது –

நிகரில் -தத் ஏக உபாயமானவனே -என்றபடி
இந்த புகழை யுடையவன் யாவன் ஒருவன் அவன் மயர்வற மதிநலம் அருளினான்

உபாயாந்தரங்களை ஸ வாசனமாக விடுவித்து -அவனே உபாய உபேயம் -என்கிற ஞான ப்ரேமங்களை நிர்ஹேதுகமாக அருளினவற்றை இறே
நிகரில் புகழாய் -என்றது -அதாவது
சரணவ் சரணம் என்கிற தத் ஏக உபாயத்வம்

நிகரில் புகழாவது -நித்ய விபூதியில் நித்ய முக்தருக்கும் அதிபதியாய் இருக்குமதும்
ஸ்வேத தீப வாசிகள் ஸேவிக்க இருக்குமதும்
அயோத்யா வாசிகளுக்கு அபி ராமனாய் வசிஷ்டாதிகள் நடுவே இருக்குமதும்
த்வாரகையிலே யாதவர்கள் ஸேவிக்க இருக்குமதும்
நிகரில் புகழ் அல்ல

அந்தர்யாமித்வமும் கண் கொண்டு காண ஒண்ணாது -பிரமாண ப்ரஸித்தி அத்தனை
அவை ஒன்றுக்கு ஓன்று அதிசயமாகையாலே நிகராக இருக்கும்

இவர் நிகரில் புகழாய் என்றது
காகமும் வானரமும் வேடுமானவர்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலை

அதிலும் அவஸ்துவான எனக்கும் நிர்ஹேதுகமான அருளினை அருளுக்கு ஸத்ருசம் உண்டோ என்கிறார்
காகமும் வானரமும் நித்ய ஸூரி கோடியிலே யாம்படி யன்றோ என் நிலை
அவற்றுக்கு முகம் கொடுத்தது புகழ்
எனக்கு அருளினது நிகரில் புகழ்

கிருபா குணத்துக்கு வாத்சல்யாதிகள் நேர் ஆக மாட்டாது
எங்கனே என்னில்
கிருபை தானே ஸர்வ குணங்களுக்கும் காரணமுமாய் ப்ரேரமுமாகையாலே அருளினன் என்கிறதையே நிகரில் புகழாய் என்கிறது

ஆக
கிருபா பிரேரிகை பிராட்டி
கிருபா ப்ரேர்யன் எம்பெருமான்
கிருபா பாத்ரம் அடியேன்
ஆகையால் பகவானுக்கு வாத்சல் யாதிகள் புகழ் அல்ல
கிருபையே அடியவருக்குப் புகல் ஆகையாலே
நிகரில் புகழாய் என்றது காருண்யா ரூபயா என்றதையே –

ப்ரபத்யே -எவன் அவன் -உலகம் மூன்று யுடையாய் -என்னை ஆள்வானே –
இப்படி இருக்கிறவன் யாவன் ஒருவன் அவன் கிருபையாலே
வாத்சல் யாதி குண ப்ரவாஹம் ப்ரவஹிகையாலே மூன்று உலகமும் நிறைந்தது
என் அளவும் பூரித்தது

லோக்யத இதி லோகே -என்றதில் தாமும் ஒருவனாய் இருக்க
என்னை ஆள்வானே -என்றது
த்ரிவித சேதனரையும் அதிகார அனுகுணமாக நியமித்து
இவரை கிருபா அனுகுணமாக நியமித்தது
அத்யந்தம் பாரதந்தர்ய பரா காஷ்டையான -பூசும் சாணத்தில் படியே
தனக்குப் போக்யமாகக் கொண்டு அருளுகிறபடி

பத்தர் -லீலைக்கும்
முக்தர் கிருபைக்கும்
நித்யர் கைங்கர்யத்துக்கும் ஆனால் போலே
இவர் போக்யதைக்கே வடிவானவர்
ஆகையால் தன் உகப்பில் வருவார் இவர் ஒருவரே ஆகையாலே
என்னை ஆள்வானே -என்று அவனுக்கு நிரூபகம் ஆய்த்து –

உத்தர வாக்கியம் -ஸ்ரீ மதே நாராயணாய நம –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே

ஸ்ரீ மதே -பெரிய பிராட்டியாரோடே கூட இருந்தவனுக்கு – அயர்வற -அசர்வு அற்ற அமரர்கள் –
அம்ருத ஆனந்த மக்நரானவர்கள் பரிசர்யை பண்ண வீற்று இருக்கும்
ஒண் டொடியாள் திருமகளும் நீயும் நிலா நிற்ப

நிகரில் அமரர்
ப்ரஹ்மாதிகள் அமரத்துவம் கர்மம் அடியாக வாகையாலே நிகர் உண்டு
இவருக்கு பகவத் அனுபவத்தால் வந்த அமரத்துவம் ஆகையால் நிகர் அற்று இருக்கும் –

முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை
கடலில் அம்ருத தாசிகள் அன்று
நிகரில் அமரராவார் -அமுத்தினால் வரும் பெண்ணமுத்துக்கும் ஆராவமுத தாஸிகளான அமரர்

முனி முக்தர்
கணங்கள் பத்தர்
உயர்வற மயர்வற அயர்வற துயரற -என்று நித்யர் முக்தர் பத்தர் ஈஸ்வரன் இவர்கள் அடைப்பிலே துயர் தீர்ந்தது
உபய விபூதி நாதனான தனக்குத் திரு வேங்கட முடையானான பின்பு எல்லார் கடன்களும் வெந்தாய்த்து

ஆகையால் ருணம் ப்ரவர்த்தம் இவ என்றவன் ஆகையால் திருவேங்கடத்தானே என்று நிரூபகமாய்த்து

திரு வென்றது சீரிய நிதியாயும் அஹம் அந்நமாயும் விரும்பும் திருவேங்கடத்தானை
உலக்கங்களுக்கு எல்லாம் ஓர் உயிர் ஆனவனே

ஸ்ரீ மதே நாராயணாயா -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை

நம -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தானே

நம தொழுது எழு -உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உடைய சேஷ பூதன் துயர் அறு சுடர் அடி யான் அது அடைய
அசரண்ய சரண்யனான உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ப்ராப்யமும் அவன் ஆகையாலே மனனே தொழுது வர்த்தி என்கிறார்

————————————

ஆறாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஐந்தாம் பத்து விவரணம்-

February 7, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

கையார் சக்கரத்தில்
ஸம்ஸாரிகளிலே அந்நிய தமனான என்னை அவர்களையும் திருத்த வல்லேனாம்படி
நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பதே என்று அவர் தம் பக்கலிலே பண்ணின உபகாரத்தை
அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

உயர்வற என்கிற பாட்டை -கையார் சக்கரம் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவதாந்தரங்களைப் புகழா நிற்க –
அவை அற்று
உயர்நலம் உடையவனைக்
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்று
உயர்நலம் யுடையவனுடைய ஞான ஆனந்தங்களோ பாதி
அவன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏற்றினவன் அல்லேன்

உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்

பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
அஹ்ருதயமான சொன்ன வசனத்தை ஸஹ்ருதயமாகச் சொன்னோமாகக் கொண்டு
மயர்வு -அஹ்ருதயம்
புத்தி பூர்வகமாகச் சொன்னேன் அல்லேன்

மதி நலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை -அத்தாலே பிறந்த வ்யாமோஹம்
இதர விஷய விரக்தியைப் பிறப்பித்தது
பகவத் விஷயத்தில் ப்ரேமம் விளையும்படி -நிர்ஹேதுகமாக -விளையும் படி அருளினான் -எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -எவன் அவன் -அவனாலே பெற்று ஒழிந்தேன்

அஞ்ஞான கந்த ரஹிதரான நித்ய ஸூரி ஸேவ்யன் முன்னே
அஞ்ஞான கார்யமான -பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
கைம்மை -மெய் கலவாத சுத்தப் பொய்
இத்தால் -பிறரைப் பகட்டுகிற பொய் அன்று -ஸர்வஞ்ஞனையும் பகட்டுகிற பொய் இறே சொல்லிற்று –

மயர்வற மதிநலம் அருளின கிருபை பெருகி -அஹ்ருதயமான யுக்தியை ஸஹ்ருதயமாக்கி
என் பக்கலிலே கிருபையை வர்ஷித்தான்
மயர்வற மதி நலம் பெறுகையாலே சப்தாதிகளைப் புறம் என்று பூர்வ விருத்தத்தைப் பார்த்துச் சொன்ன படி –

பரிபூர்ண விஷயத்துக்குத் தக்கதாகத் தமக்குப் போராமையாலே பொய் என்கிறார்
பரமபதத்துக்குப் போனாலும் இப்பேற்றை அசை இட்டு இருக்கும் அத்தனை

இனி இதில் காட்டில் ஏற்றம் செய்வது இல்லை என்ன
இதுக்கு ஹேது வில்லை என்னா நின்றீர்
பேறோ தான் கனத்து இரா நின்றது -இதுக்கு அடி என் என்ன

விதி வாய்க்கின்று
பகவத் கிருபை கரை புரளப் பெருகி துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணா நின்றால்
நம்மால் செய்யலாவது உண்டோ –

துயர் அறு சுடர் அடி -பொய் சேர் -என்கிற துக்க கந்த ரஹிதமாய் -மெய்யான பரஞ்சோதி யானவன் –
தன் திருவடி தொழுது எழும்படி பரமமான கிருபை பெருகப் புக்கால் -அத்தைத் தகைவார் உண்டோ –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
வாய்க்கின்ற கிருபை மஹா ப்ரவாஹமாகப் பெருக்கு எடுத்த படி
விதி என்கிறார் பகவத் கிருபையை -விதியைத் தப்ப ஒண்ணாமையாலே –
வாய்க்கின்ற கிருபை பெருகி அடியேனை இழுக்கக் காப்பார் யார் –
என் மனனே -ஸ்வ தந்த்ரன் கிருபை காப்பார் யார்

ஏன் காக்க ஒண்ணாதோ என்ன
காப்பார் யார் என்றீரே -எதிர் சூழல் புகுத்தி திரிந்த இடத்தினும் தப்பின நீர் தான் காக்க மாட்டீரோ
நாம் தாம் ஸ்வ தந்திரம் அல்லோமோ -நம் கிருபையைத் தகைய சக்தி இல்லையோ
நம் மார்பில் இருக்கிறவன் இதைக் குறைக்கில் என்ன

ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–
கிருபா ஜநகை யாகையாலும்
கிருபா பரதந்த்ரனான உன்னாலும்
கிருபா பரவசனான என்னாலும் –காக்க முடியாது

இந்த கிருபா ப்ரவாஹத்தை -பல போக்தாவான என்னாலும் -பல ப்ரதனான உன்னாலும் –
பல வர்த்திகையான அவளாலும் தகைய ஒண்ணாது
தகைத்து தான் பார்க்கலாகாதோ என்கிறார்

மித்ர பாவேந என்கிற உனக்கு அஞ்ஞானம் -இவன் தோஷத்திலே விஸ்ம்ருதியும்
ஸர்வ சக்திக்கு இவனை விடும் இடத்தில் அசக்தியும் யுடைய கண்ணபிரானைத்
தொழுது எழு என் மனனே —

ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–என்று
ஹர்ஷத்தாலே உபகார சீலனைப் பார்த்து விண்ணப்பம் செய்து
தன் திரு உள்ளத்தைக் குறித்து உபகார ஸ்ம்ருதியாலே தொழுது எழு என்று உபதேசிக்கிறார் –

———-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

பொலிக பொலிக வில்
ஒன்றும் தேவு -கேட்டுத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணியும்
திருந்தாரைத் திருத்தியும் சொல்கிறார்

ஒன்றும் தேவிலே தான் திருத்திய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யைக் காண்கைக்காக
நித்ய ஸூரிகள் இங்கே வர
அவர்களையும் வ்யூஹ விபவ ஸ்தானீயரையும் கண்டு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார்

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

உயர்வற என்கிற பாட்டை -திரியும் கலியுகம் என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் தேவதாந்தரத்தாலே வந்த உயர்த்தி அற்று
கலி தோஷத்தாலே தேவதாந்தரம் பண்ணித் திரிகிற உயர்த்தி அற்று

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -மயர்வற மதிநலம் அருளி ஆழ்வாரைக் கொண்டு
ஜகத்தைத் திருத்த
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காண
தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்

உயர்நலம் யுடைய ஞான ஆனந்த ஸ்வரூபனாய் ஞான குணகனாய் வேதைக சமைதி கம்யனாலே
மயர்வற மதிநலம் அருள வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பர உபதேசம் பண்ண –

அத்தாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஆழ்வாருமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யைக் காண
வந்து புகுந்து அவர்களோடே கலந்து ஆதி கிருதயுகம் போலே பர ப்ரஹ்ம ஆனந்தம் பெருகும்படியாக
யாவன் ஒருவன் அருளினான் அவன் பொருட்டு அவர்களுக்கு
பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் பண்ணி உகக்கிறார்

அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனோடும் கூடி
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப்
அஸ்ப்ருஷ்ட கந்தரான நித்யரான வைகுந்தன் பூதங்களும்
தடம் கடல் பள்ளிப் பெருமாள் தன்னுடைப் பூதங்களும்
மாதவன் பூதங்களும்
கடல் வண்ணன் பூதங்களான நேமிப்பிரான் தமர் போந்தார்

இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
ஸர்வ துக்க கந்த ரஹிதமாய் தேஜோ ரூபமான பகவானுடைய திருவடிகளான
சடகோபனை சிரஸா வஹித்து
அந்த சடகோபன் திரு நாமமே உனக்கு தாஸ்ய நாமமாக வஹித்து இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சுடர் அடி தொழுது எழு

அந்தப் ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடி ப்ரேம பாரவஸ்யம் இருந்த இடத்தே இருக்க
ஒட்டாமல் ஆடி எங்கும் இடம் கொண்டனவே

என் மனமே தொழுது எழு வர்த்தி
இஸ் ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணி சூழ்ந்து இருந்து ஏத்தப் பார் –

—————–

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

மாசறு சோதியில்
நண்ணாதார் முறுவலிப்ப -லிலே -ஸம்ஸாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து
அதுக்குப் பரிகாரமாக பகவத் பாகவத ஞானத்தை உபதேசித்துத் திருத்தி
அதுக்கு உபகார ஸ்ம்ருதி பண்ணி
அநந்தரம் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணி
இப்படி ஸம்ஸாரிகள் பேறு தலைக்கட்டின வாறே
ஏறாளும் இறையோனில் இழவு தலையெடுத்து
வழி அல்லா வழியில் மடலூர்ந்தாகிலும் கிட்டும் அத்தனை என்று கலங்கின படியைப் பேசினார்

கீழே பாகவத ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணினார்
மலியும் சுடர் ஒளி மூர்த்தியை -என்று வடிவு அழகையும் குணங்களையும் யுடையவனை
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து கையை நீட்டாக கைக்கு எட்டாமையாலே கலங்கி
மடல் எடுக்கையில் உபமிக்கிறார் –

இந்த உத்யோகத்தைக் கண்டா தோழியானவள் வந்து
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ உனக்கு சத்ருசம் அன்று
ஆஸ்ரித ரக்ஷணத்திலே தீஷிதனாய் இருக்கிற உன் நாயகனுக்கும் சத்ருசம் அன்று
நம் குடிக்கும் சேராது
மாசாய் விளையும் காண் -என்று
மடல் எடுக்கையை நிஷேதிக்கறதாய் இருக்கிறது

இத்தைத் தோழி சொல்ல அவளைப்பார்த்து நாயகி சொல்கிறாள்

உயர்வற என்கிற பாட்டை மாசறு சோதி விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் சாதனாந்தரங்களால் வந்த
தேவாதி சரீரங்கள் புண்ய ஷயம் ஆனவுடனே உயர்வு அறும்

உயர்நலம் உடையவன் எவன் அவன் மாசறு சோதியாய் ஞான ஆனந்த ஸ்வரூபனாய் வேதாந்த வேத்யனாய் சவுந்தர்யாதி குண சேஷ்டிதங்கள் எல்லாம் மாசு அற்றதாக இருக்கும் –

ஹேய பிரதிபடமானவன் –
என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
சிவந்த வாயோடே கூட அசலமானதொரு நீலகிரி போன்ற வடிவை யுடையவன் –

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -மாசறு சீலனான ஆதி மூர்த்தியானவன் –
மயர்வற மதி நலம் அருளுகையாலே வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தால் பிறந்த ஆசையாலே
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே பாசற வெய்தி
என்னே வினையேன் எனை யூழி நைவேன்

அவன் நான் மடல் எடுக்க உத்யோகிக்க உத்யோகிக்க ஆக்கம் முற்றி
அவனுடைய வை லக்ஷண்யம் ப்ரகாசிக்கிறபடியாலே
எனக்கு அது தானே ஹேதுவாக அறிவு கலங்கி வருகிறபடியும் பாராய்

அவ்வளவு ஹேய ப்ரத்ய நீகன் காண் –
நான் மடல் எடாது இருக்கை அவ்வடிவுக்கு ஹேயம் காண்
அவ்வடிவை உக்காந்தார்க்குக் கொடான் என்னும் பழியையத் துடைக்கக் காண்
நான் பார்க்கிறது –

பக்தானாம் என்கிற வடிவைத் தனக்கு என்று இருக்கை மாசு இறே -என்ன
ஊரார் பழி சொல்லி ஏசுகை எல்லாருக்கும் குடிப்பழி யன்றோ என்று
மடல் எடாமல் தோழி நிஷேதிக்க

நான் அயர்வறும் அமரர்கள் அதிபதியான அந்த மாசறு சோதியிலே மாலாய் ஆசைப்பட்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து
ஆதி மூர்த்தியை நாடியே என் மனமும் நானும்
பாசற வெய்தி அறிவிழந்தோம்

ஏசறும் ஊரவர் கவ்வை தோழி என் செய்யுமே
ஊரவர் கவ்வை எரு விட்டு -இத்யாதிப்படியே
எனக்கு அது தான் அன்றோ மடல் எடுக்கைக்கு ஹேது என்கிறாள் –

—————-

ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1-

ஊரெல்லாம் துஞ்சி யில் —
பாரித்த படியே மடலூர ஒண்ணாத படி அஸ்தமித்தவாறே உசாத்துணையும் இன்றிக்கே
ராத்ரியில் விசனம் அனுபவித்தார் –

—-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

உயர்வற என்கிற பாட்டை -வெஞ்சுடரில் தானடுமால்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக –
திவா ராத்ரி விபாகம் அற ஊணும் உறக்கமுமாய் இருக்க
எனக்கு ஒருத்திக்குமே விடியாத இருளாயிற்றே

அது தானும் ஊழியாய்
வீங்கிருளின் நுண் துளியாய்
விரஹ அக்னியால் தஹிக்கிறது
அதனாலே இருளும் குளிர்ந்த பனியும் தஹியா நின்றது

லௌகிகர்க்கு திவா ராத்ரி விபாகமாய் காலம் கழிந்து உயர்வு அற்றது
எனக்கு உயர் நலம் யுடையவனைப் பற்றி இருக்கையாலே
இருளும் மோஹ அந்தகாரம் நெடுகா நின்றது –

உயர் நலமுடையவன் எவன் அவன் -அவன் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபன் ஆனவன் –
எனக்கு மயர்வற மதிநலம் அருளினவற்றால் வந்த பரபக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
யதா ஸூர்யஸ் ததா ஞானம் ஸந்த்ரோதய சமம் -என்று சொல்லுகிறபடியே

அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
தன்னுடைய தோற்றரவிலே துக்க நிவ்ருத்தி உண்டாம்படியான
அழகிய சுடரை யுடைய ஆதித்யனும் வருகிறிலன்

பிரளயத்தை நீஞ்சுவாரைப் போலே ராத்ரியையும் இருளையும் நீஞ்சிக்
கரை காணாமல் படுகிற படி

ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் போலே அயர்வரும் அமரர்கள் அதிபதி
மோஹ அந்தகார ரஹிதமான நித்ய ஸூரிகளுக்கும் நித்ய ஸூர்யனாய்
ஹேய ப்ரதிபடனானவன் எவன் அவன் ஸூர்ய மண்டல வர்த்தியான
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ யப்பதியும் வருகிறிலன்

சிவந்த புகரை யுடைய தாமரை போன்ற கண்களை யுடைய ஸ்ரீ மானும் வருகிறிலன்

ஆதித்யன் வருகிறிலன் –ஆதித்யன் வந்தாலும் இருள் வர சம்பாவனை உண்டு இறே –
அஸ்தமிதியாத ஆதித்யனும் வருகிறிலன்
ஸூர்ய பிரகாசம் ப்ராதேசிகமாய் இருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நித்ய ஸூரி சேவிதமான ஸூர்யன்
உபய விபூதிக்கும் ப்ரகாசத்தைப் பண்ணுகிற ஆதித்யன் இறே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னக் கடவது இறே

ஸ்ரீ மானான நாராயணன் சுடர் அடி -துயர் அறு சுடர் அடி தொழுது எழாமல் இருந்த என் மனனே –
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–
ஆந்தரமான மநோ துக்க அந்தகாரத்தைப் போக்குவார் யார்
பாஹ்ய அந்தகாரம் போக்கும் ஆதித்யனும் வருகிறிலன்

ஆந்தரமான துக்க அந்தகாரம் வைரம் பற்றின இருள் இறே
அத்தைப் போக்கும் போது நிலவனுமாய் அந்தரங்கமானவனே வேணும்
ஞானமாகி ஞாயிறாகி -என்னக் கடவது இறே

நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயம் உருக்க உருகுகிறது
தர்மி லோபம் பிறக்கவும் ஒட்டாது இறே
இன்னமும் ஒருக்கால் காணலாமோ என்கிற ஆசையாலே இழவு ஜீவிக்க ஒட்டாது என்கிறார் –

——–

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-

எங்கனேயோ வில் –
இங்கன் அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது என்று நிஷேதிக்கிற தாய்மாரைக் குறித்து
உங்கள் ஹித வசனம் கேட்க ஒண்ணாத படி பண்ணா நின்றது -நம்பியுடைய வடிவு அழகு என்று
பண்டு அனுபவித்த நம்பியுடைய அழகு மறக்க ஒண்ணாத படி நெஞ்சிலே கிடைக்கையாலும்
இப்போது அனுபவிக்கப் பெறாமையாலும் -ப்ரீதி அப்ரீதி சமமாகச் செல்கிறது

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

உயர்வற என்கிற பாட்டை கழிய மிக்கதோர் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவாக
காதல் அளவு பட்டு இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
உயர் நலம் யுடையவன் இடத்தில் காமம் பகவத் ஆனந்தாதிகளிலும்
கழிய மிக்கதோர் காதல் -இதர விஸஜாதீயமான காதல்

அன்றிக்கே
நாள் கழிய கழியப் பெருகி வருகிற காதல்

சோ கச்ச கில காலேந கச்ச தாஹ்யப கச்சதி மம சா பஸ்யத காந்தாம் அஹன்யஹநி வர்த்ததே

நாட்டார் அபிமத விஷயத்தைப் பிரிந்த நாள் ஒரு படியும் பின்பு ஒரு படியாய் மறந்து போகா நிற்பர்கள்
அங்கன் இன்றிக்கே -நாள் செல்ல செல்ல சோகம் பெருகி வாரா நின்றது –
அன்னை காணக் கொடாள்
இவள் ஒரு விஷயத்திலே காதல் பண்ணக் கண்டேனாக வல்லேனோ என்று
இருக்கிறவளும் காண ஒட்டு கிறிலள்

ஆனால் இப்போது இங்கன் படுகிறது என் என்னில்
தர்மி லோபம் வரும்படி பிரவணையாக ஒட்டார்களே
ஆச்சர்யம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பார்களே –
காண்கை யாவது அனுசந்திக்கை
நெஞ்சு என்னும் உள் கண் -என்னக் கடவது இறே
நெஞ்சையும் கூட வாய் கட்டா நின்றாள் என்ன

உனக்கு இக்காதல் விளைந்தபடி என் என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
உங்கள் இடத்தில் ஆசையான மயர்வை அறுத்து
ஆனந்தாதி குண விசிஷ்டனைப் பற்றின காதல் மிக்கது

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -மதிநலம் அருளினவன் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை
மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானம் அருளப் பெற்ற நான் கண்ட பின்

வழுவில் கீர்த்தி -குறைவற்ற கீர்த்தி
அக்கீர்த்திக்கும் அவனுக்கும் பிரிய ஸ்திதி இல்லாதால் போலே
அவனை ஒழிய ஸ்திதி இல்லாத நான் கண்ட பின்

அயர்வறும் அமரர்கள் அதிபதியை
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபர்யாப்த்த அம்ருத தாஸிகளான
குழுமித் தேவர்கள் கூட்டம் கூட்டமாய் திரள் திரள அவர்கள்
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கை கோர்த்துக் கொண்டு சவுந்தர்ய அம்ருத சாகரத்தில் இழிவார்கள்

அவயவ சோபை -ஆயுத சோபை -ஆபரண சோபை -ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஆகிற சுழிகளிலே
அமிழ்ந்து நீந்தி நீந்தி சேஷ வ்ருத்திகளைப் பண்ண இருக்கிறவன்
திருக்குறுங்குடியிலே ஸகல குண ஸம்பூர்ணனாய் வந்து நின்ற நம்பியை அபூரணனான நான் கண்டபின் –

துயர் அறு சுடர் அடி தொழுது எழுகை
தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு
ஹேய பிரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளிலே கைகள் ஆரத் தொழுது எழு என் மனனே என்று
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–
நித்ய ஸூரிகள் நடுவே தோன்றுமா போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது

ஆர்க்கும் அறிவு அரிதே
எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே ஆயிற்று –
ஸ்வ யத்னத்தாலே அறிவாருக்கு அறிய ஒண்ணாது இருக்கிற படி என்கிறார்

————–

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கடல் ஞாலத்தில்
அப்ரீதி அம்சமே தலையெடுத்து ஆற்றாமையால் அணுகரித்துத் தயாரிக்கிறார் –

——–

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

உயர்வற என்கிற பாட்டை கூந்தல் மலர் மங்கைக்கும் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஸ்வர்க்காதி லோகங்கள் -உத்க்ருஷ்டமான ரத்நாதிகள் –
ரஸவத் பதார்த்தங்கள் -வேத சாஸ்த்ராதிகள் -பிரம ருத்ராதிகளான தேவர்கள்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் எல்லாம் நானே செய்தேனே என்று தன்னை
ஜகத் காரணனான ஸர்வேஸ்வரனாக அநு கரித்து இருக்கக் கண்ட
திருத்தாயாய் வினவ வந்தாருக்குச் சொல்கிறாள்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்-குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
கூந்தல் மலர் மங்கைக்கும் –சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்துக்கு ஹேது பூதையாய் இருக்கும் -பெரிய பிராட்டியார்
மண் மடந்தைக்கும்-அதுக்கு விளை பூமியாய் இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
குல ஆயர் கொழுந்துக்கும் -அதனுடைய பல ரூபையாய் இருக்கும் நப்பின்னை பிராட்டியார்
கேள்வன் தன்னை–ஆக உகார வாஸ்யைகளான இவர்களை யுடையன் என்கிறது –
இவர்களுக்குப் பதியாய் உள்ளவனை

இத்தால் ஓர் அவதாரம் மாத்ரம் அன்றிக்கே
உபய விபூதி நாதனான பூர்ண விஷயத்திலே அநு கரிக்கிறாள் என்று தோற்றி இருக்கும் படி –

இதற்கு ஹேது
உயர்வற உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன் ஆகையால்
வாய்ந்த வழுதி வளநாடன்
மயர்வற -அவித்யாதிகள் வாஸனையோடே அற்று
மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அனுகரித்துத் தரிக்கப் பார்த்துக் கிட்டின படி
அதாவது
பாவநா ப்ரகர் ஷத்தாலே ஸாஷாத் கரிக்கை

மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்த
அமரர்கள் அதிபதி துயர் அறு சுடர் அடி தொழுது
நித்ய ஸூரி நிர்வாஹகனானவன் வரையாதே ஸர்வ ஸமாஸ்ரயணீயமான திருவடிகளை ஆஸ்ரயித்து
இருக்கும் அடியாரைப் பூசிக்க நோற்றார்களே

இந்த லோகத்திலே எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய்
ஸ்ரீ மத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவார்கள்

ஆழ்வார் பகவத் பாகவதர்களை ஆராதித்த படி இவர் அனுகாரத்தாலே ஸ்ரீ யபதிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்
பிரியமாகத் தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னபடி
இது கற்றவர்களுக்கும் பகவத் பாகவதருக்கு பிரியமான வ்ருத்தி பண்ணி இருக்கப் பெற்றவர்கள்

இப்பத்தைக் கற்றவர்கள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இருக்கப் பெறுவார்கள் –
இப்படி அனுகரித்து அனுபவிக்கிறார்

கர க்ருதம் அபராதம் ஷந்தும் அர்ஹந்தி சந்த –

————

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

நோற்ற நோன்பிலே
இப்படி அனுகரித்த அளவிலும் வந்து முகம் காட்டாமையாலே
தானே உபாய அனுஷ்டானம் பண்ணி வருகிறாள் என்று இருந்தவனாக வேணும் என்று நினைத்து
தம்முடைய உபாய சூன்யதையேச் சொல்லி
வான மா மலை திருவடிகளில் வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புக்கார் –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

உயர்வற என்கிற பாட்டை -ஏனமாய் நிலம் கீண்ட-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
ஸாஸ்த்ர பலம் ப்ரயோத்த்ரி -என்று தம் தாம் உபாய அனுஷ்டானத்தாலே பலம் பெறா நிற்க
உமக்கு இப்படி உபாயம் உண்டோ என்ன

உன்னுடைய உயர் நலத்துக்குத் தக்க உபாயம் உண்டோ -என்கிறார்
உயர் நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவனே எனக்கு உபாய உபேயங்கள் இரண்டும் என்கிறார்
நோற்ற நோன்பிலேன் -என்று உபாய சூன்யத்தை அருளிச் செய்து
இங்கே கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
ஆபன்னரானார் -அறிவிக்கையும் மிகையாம் படி அன்றோ உன் படி இருப்பது
ரக்ஷணம் ஒரு தலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!
மஹா வராஹமாய் -பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாய்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
ஸம்ஸார பிரளயம் கொண்ட என்னை எடுத்து
மயர்வற மதிநலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உன் படியை அறிவித்து

பிரளயம் கதையான பூமிக்கு உதவியது
தமக்கு உபகரித்ததாய் இருக்கிற படி

என் அப்பனே கண்ணா
என்னுடைய ரக்ஷணத்துக்கு ஏதேனும் முகம் பண்ண வேணுமோ
என்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு கோலம் கொள்ள வேணுமோ
கண்ணன் கோள் இழை வாள் குணம் இறே இவருக்கு ரக்ஷகம்

என்றும் என்னை ஆளுடை வான நாயகனே
மயர்வற மதிநலம் அருளினவன் யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
தனக்கு ஈடானரோடு இருக்கும் போது இவர் இடையாட்டமாய்த்து ஆராய்ந்து போருவது

இவர் சத்தத்தையே தொடங்கி கைக்கொண்டு நோக்கிக் கொண்டாய்த்து போருவது

மணி மாணிக்கச் சுடரே
இவர் உளரான பின்பு ஓர் ஏற்றம் பண்ணிக் கொடுக்கை அன்றிக்கே
அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து
மயர்வற மதி நலம் அருளி
இச்சை பிறந்தவாறே -அவ்வளவிலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
நித்ய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவருக்கு விட்டான்

மணி மாணிக்கச் சுடரே
ரத்ன ஸ்ரேஷ்டம் என்னுதல்
மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் தேஜஸ்ஸை யுடைத்தாய் இருக்கை என்றுமாம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ
தேனை யுடைத்தான -மாம் பொழிலை யுடைத்தாய் -ஸ்ரம ஹரமான ஸ்ரீ வர மங்கலத்தில் உள்ளார்

அடிமை செய்ய வீற்று இருக்கிற
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைச் செய்ய எழுந்து அருளி இருக்கிற வான மா மலையே
உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழ -வான மா மலை யத்ருப்த அம்ருத ரூபரான நித்ய ஸூரிகளை
அடிமை கொண்டு இருக்கிற வேண்டப்பட்டு போலே காணும் இங்குள்ளார் அடிமை செய்ய இருக்கிற இருப்பும்

வான மா மலையே உன் துயர் அறு சுடர் அடி அடியேன் தொழுது எழும்படி வந்து அருளே

விஸ்லேஷ கந்த ரஹிதமாய் -ஸம்ச்லேஷ வர்த்தகமாய் நிரவதிக தேஜஸ்ஸை யுடைய திருவடிகளிலே
சேஷபூதனான நான் அடிமை செய்து வாழும்படிக்கு ஈடாக என் முன்னே நாலடி நடந்து வர வேணும்

அடிமை செய்கையாவது
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்னுமா போலே
அந்நடை அழகு கண்டு மங்களா ஸாஸனம் பண்ணுகை

வந்து அருளே
என் கண் வட்டத்திலே உலாவி நின்று அடிமை கொள்ள வேணும் என்கிறார் –

———-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

ஆராவமுதில்
அங்கு சரணம் புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெறாமையாலே திருக்குடந்தை அளவும் வந்து –
ஆராவமுத ஆழ்வார் திருவடிகளிலே விழுந்து கூப்பிட்ட இடத்திலும்
இவரைக் குளிரக் கடாக்ஷித்தல் வினவுதல் செய்யக் காணாமையாலே
இன்னும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்று அவாப்தியோடே தலைக்கட்டினார்

உயர்வற என்கிற பாட்டை ஆராவமுது விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்நலமுடையவன் எவன் அவன்
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன்
செத்தனர் இடத்திலே ஒரு கிருபை ஜனித்துத் திரு உள்ளம் பற்றுகிறபடி

நாம் அம்ருத ஸ்வரூபனாய் இருக்க -சேதனரும் அம்ருத ஸப்த வாஸ்யராய் இருக்க –
அம்ருதந்திவி -என்று நித்ய விபூதியும் அம்ருதம் என்ற பேராய் இருக்க
நாம் அம்ருத ப்ரதானாராய் இருக்கிற இருப்பை நித்ய முக்தர்கள் அனுபவித்து அம்ருத மக்நராய் இருக்க

லீலா விபூதியார் இழக்க ஒண்ணாது என்று -அவர்களைத் திருத்திக் கரை மரம் சேர்த்து
அவர்களும் அவர்யாப்த அம்ருதத்தைப் புஜிக்கத் தக்கதாக ஒருவரை உண்டாக்குவோம் என்று பார்த்து
ஆழ்வார் இடத்திலே திரு உள்ளம் பற்றி அவருக்கு மயர்வற மதிநலம் அருளி
ஆழ்வாரும் மயர்வற மதி நலம் அருளப் பெற்று அபர்யாப்த்த அம்ருதத்தை அனுபவித்து –
அனுபவ கர்ப்ப உபதேசம் பண்ணுகிறார்

உயர்வற உயர் நலம் என்பது –ஆராவமுதே -என்றபடி
உயர்வு -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக
ஒருவர் ஆனந்தம் ஒருவருக்கு இன்றிக்கே இருக்கும் –
அதுவும் அல்பம் ஆய்த்து -ஆகையாலே பர ப்ரஹ்ம ஆனந்தத்தை ஆராவமுது என்கிறது –

எவன் அவன் ஆராவமுதே -என்கிறவன் -உன் அழகாலே என்னை உருக்குகிற உன்னைக் கண் வளரக் கண்டேன்
குளிர நோக்குதல் -அணைத்து அருளுதல் -செய்யக் காண்கிறிலேன் -என்கிறார்

ஆராவமுதே
அனுபவியா நின்றாலும் க்ரம பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்கனே ஆறி இருக்கும் படி
முற்பட தர்சனமாய்
அநந்தரத்திலே அணுகிப்
பின்னை ஸ்பர்சமாய் –இப்படி இறே அனுபவ பிரகாரங்கள் –
அத்தனை க்ரமம் பார்த்து இருக்க ஒண்ணாத படியாய் இருக்கை

நலமுடையவன் என்று -ஆனந்த குண நிரூபகம் -ஆராவமுதே என்று நிரூபகம்
உயர் நலம் என்றும் அபர்யாப்த்த அம்ருதம் என்றபடி

எவன் அவன் -ஆராவமுது
கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்குத் தேவ யோனியிலே பிறக்க வேணும் -ப்ரஹ்ம சர்யம் அனுஷ்ட்டிக்க வேணும் –
இத்தனையும் பட்டால் ஸக்ருத் ஸேவையாய் இருக்கும்

இது அங்கன் அன்றிக்கே ஸர்வாதிகாரமாய் -ஸதா ஸேவ்யமுமாய் –
ப்ரஹ்மசர்யாதி வைகல்யம் உண்டானவையும் தானே பரிக்ரஹிக்கக் கடவதாய் இருக்கும்

அடியேன் எவன் அவன் -சுருதி பிரசித்தமான திவ்யாத்ம ஸ்வரூபனாய்
அபார்யாப்த்த ஆனந்த ஸ்வரூபவனானவனுக்கு -அடியேன் -சேஷபூதன் –
சேஷத்வ அம்ருத வாஸ்யனான அடியேன் –

ஆராவமுதே -என்று சம்போதிக்கையாலே அம்ருத ஆனந்த ஸ்வரூபனான சேஷி யானவன்
இவனை மேல் மேல் என பர்யாப்தி பிறவாத படி திருஷ்ணையை விளைவிக்கிற படி –
அபர்யாப்த்த அம்ருதம் என்றால் பரியாப்தி பிறவாது இறே தனக்கும் தன் தன்மை அறிவரியான் இறே

ஆராவமுதே -இத்திருவாய் மொழியிலே இவருக்கு உண்டான ஆற்றாமைக்கு எல்லாம் பீஜம் இப்பதமாய்த்து

அடியேன் -மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்
போக்யதைக்குத் தோற்றுப் புல் கவ்விக் சொல்கிறார்
பரவாநஸ்மி -என்கிறவர்
குணைர் தாஸ்யம் உபாகத -என்றாப் போலே

உடலும் நின்பால் அன்பாய
சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் தேகம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்து
அஹம் என்று இருக்கக் கடவ இவர் தாம் அடியேன் என்றது விஷயத்தினுடைய போக்யதா அதிசயம் இறே

அப்படியே சரீரமும் விஷயாதீனமாக அழிந்த படி
உடலும் -என்கிற அபி சப்தத்தாலே அடியேன் சேதனன் ஆகையாலும்
மயர்வற மதிநலம் அருளுகையாலும் அருளின பக்தியாலும் –
பக்தி ரூபா பன்ன ஞானமானது -பெருகுமால் வேட்க்கையாலும் -உருக அடுக்கும்
உடலும் -அசேதனமான சரீரமும் உருகின படி

அப்படி அருளினவன் யவன் ஆராவமுதான நின்பால் அன்பாயே
அன்பு தான் வடிவு கொண்டால் போலே யாய்த்து
சேஷத்வ ஆகாரனான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து அதன் வழியே தான் ஒழுகா நின்றது

ஆக
ஞான மயமான ஆத்மாவாதல்
அதற்குத் தோள் தீண்டியான ஞான பிரசர த்வாரமான மனஸ்ஸாதல் அன்றிக்கே
அவற்றுக்கு அவ்வருகான த்வங்மாம்ஸமேதோஸ்தி மயமான சரீரமும் அழியும்படி யாய்த்து –

நின் பால் அன்பாயே
சேதன அசேதன விபாகம் அற உருக்க வல்ல உன் பக்கலிலே அன்புக்கு ஆஸ்ரயமாகிறது தவிர்ந்து
அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இரா நின்றது வஸ்து வை லக்ஷண்யத்தாலே ஆராமை மிக்க படி
சந்த்ரகாந்தம் உருகிற்று என்றால் அங்கு சைதன்யம் இல்லை இறே

அப்படியே மதி நலம் அருளின நின்பால் அன்பாய
அன்பு தான் நீராய் அலைந்து ஸமுத்ர தரங்கம் போலே அலை எறியா நிற்கச் செய்தே
ஆரா உடல் அன்பாய் -அன்பு நீராய் -நீர் தான் பொங்கி அலை எறியா நின்றது -மதி நலம் பெருகுகிறபடி

ஸ்ரவண மனனாதிகளாலே வருகிறது அன்றே -விஷயம் அழிக்க அழிகிறது அத்தனை
அனுபவ பரிவாக ரூபமான தசா விசேஷங்கள் மேல் மேல் எனக் கிளர்ந்து வாரா நின்றது –
அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தினுடைய பரிவாஹம் இருக்கிற படி

ஆரா -கரைய -நீர் தன் பக்கலிலே அகப்பட்டதைக் கரைத்து தான் கரையாது இருக்கு மாய்த்து
இது அங்கன் அன்றிக்கே நீர் தானாயத்துக் கரைகிறது -அன்பு நீரானால் நீர் தான் கரையத் தட்டில்லை இறே

இத்தலை அளவு இது ஆனால் அத்தலை செய்கிறது என் என்னில்
உருக்குகின்ற
கீழ் உருக்கின கிரமம் சொல்லிற்று
மேல் உருக்குகிறது சொல்லுக்கு அடங்காது இறே
ஆகையால் உருக்குகின்ற -என்றது

அழிக்கைக்கு அடி இட்டது அத்தனை யாய்த்து
அழிப்பாளானவன் ஆபரணாதிகள் என்று பாராதே உருக்கி அழிக்குமா போலே காணும் அவன் தனக்கு
தேசமான அணிகலனும் என் கை கூப்பிச் செய்கை -என்கிறது இறே

ஆழ்வாருக்கு உள்ள உடலை உருக்கி அழிக்கும் அத்தனையோ என்னில்
நெடுமாலே
இவரது மால்
அவனது நெடுமால்
எதிர்த்தலையில் அழிவு கண்ட பின்பு இறே இத்தலையில் அழிவு

அவனுடைய வ்யாமோஹம் பார்க்கும் போது இவரது ஒன்றும் போராத படியாய் இருக்கும்
இவருக்கு ஸாத் மிக்க ஸாத் மிக்கப் பிறந்த அவஸ்தா விசேஷம்

அவன் அயர்வற அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
ஆறும் இல்லாதவன் ஒருவனைப் பெற்றால் போலே ஆழ்வார் அவனுக்கு ஆராவமுதமான படி

ஆழ்வாருக்கு நாக்குக்கு மாதரம் ரசித்தது
மதிநலம் பெற்ற இவர் அவனுக்கு ஸர்வ வித போக்யமுமான படி
நெடு மாலுக்குப்
பூசும் சாந்து
புனையும் கண்ணி
வாசகம் செய் மாலை
வான் பட்டாடை
தேசமான அணிகலன்
உருவும் ஆர் உயிரும் உடனே உண்டான்
தான் என்னை முற்றப் பருகினான்
என்கிற அஹம் அன்னம் முதலிய போக்யங்கள் எல்லாம் ஆகையாலே அனுபவங்களை
வாசா சொல்லி முடியாதாகையாலே
நெடுமால் -என்னும் அத்தனை இறே

அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னிலே வந்து வைகி வாழச் செய்த எம்பிரான் என்கிறார்
மால் -என்று பெரியோன் என்றபடி

இப்படி இருக்கிறவன் யாவன் ஒருவன்
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார்
மால் என்று உபய விபூதி நாதத்வம் சொல்கிறது
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனானவன் மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அயர்வு -திருப்தி
திருப்தி பிறவாமல் அபர்யாப்தி அம்ருதத்தைப் பானம் பண்ணி அதிசயிதரான நித்யர் முக்தருக்கு அதிபதியானவன்
ஆழ்வாரை அனுபவித்து ஆராமையாலே அத்யந்தம் வ்யாமோஹமாய் கிடக்கிற வ்யாமோஹம் தெளியும் படி

சீரார் செந்நெல் கவரி வீசும்
மிக்க கனத்தை யுடைத்தான செந்நெல் கதிர்களானவை விடாய்த்துக் கண் வளர்ந்து அருளுகிற
அழகைக் கண்டு பரிசர்யை பண்ணுவாரைப் போலே அமையா நிற்கும்

செந்நெலுக்கு சீர்மை யாவது
ஆராவமுதாழ்வாருக்கு அமுது படியாகிற சீர்மை ஆகவுமாம்
அப்போது அஹம் அன்னம் என்கிற சீர்மை

கவரி வீசும்
நித்யரும் முக்தரும் பரிசர்யை பண்ணுமா போலே செந்நெலானது சிசிர உபசாரம் பண்ணுகிற படி
அகால பலிநோ வ்ருஷா என்னுமா போலே
அறுத்து நட வேண்டாம் போலே காணும்

கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே -சேஷ வஸ்துவின் வியாபாரம் அடைய
சேஷி தனக்கு அடிமையாய் நினைத்து இருக்கிற படி –

அமரர்கள் செழு நீரான நாங்கள் பரிசர்யை பண்ண அதிபதியாய்த் திருக்குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிற ஸுகுமார்யத்துக்குப் போரும் படி ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
திருக்குடந்தையிலே

ஏரார் கோலம் -அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி கண் வளர்ந்து அருளினாய்

நித்ய விபூதியில் இருப்பு -அந்தப்புரத்தில் இருப்பு போலே -திரு மந்திரத்தில் படி
திருக்குடந்தையில் வாசஸ்தானம் த்வயத்தில் படி

திருமந்திரத்தில் உபாய உபேயங்கள் பிரகாசிப்பது இங்கே இறே
திருவடி பார்ஸ்வத்திலே ஒரு பிராட்டி புருஷகார பூதையாய்க் கொண்டு
சரணவ் சரணம் என்று திருவடிகளையே உபாயமாகப் பற்றுவிக்கிறாள்
திருமுடி பார்ஸ்வத்திலே ஒரு பிராட்டி இருந்து -இச் சேர்த்தியிலே அடிமை செய் –
என்று அடிமை கொள்கிறாள்

முக்த ப்ராப்ய போகமாம் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே திரு மார்பிலே நாச்சியாரோடே கூட
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேனே
பிரம ருத்ராதிகள் சூழ்ந்து சேவிக்கக் கண் வளருகிறவன் எவன் இப்படி ஸாஷாத் கரித்தவன்
அவன் எம்மான்
இப்படி ப்ராப்யமும் ப்ராபகமும் தானே யானவன்

ஏரார் கோலம்
அபர்யாப்த்த அம்ருதமான கோலம்
ஆஸ்ரிதன் எழுந்து இருந்து பேசு என்ன -எழுந்து இருக்க –
அந்த உத்யோகத்துக்கு வாழி செய்த உத்யோகத்தில் அமைந்த கோலம் –

மாம் ஏகம் -என்றும்
சரணம் வ்ரஜ என்றும்
அருளிச் செய்த வாக்யத்தைத் தலைக்கட்டி
ஸத்ய ப்ரதிஜ்ஜன் ஆகைக்காக
அந்தத் திருத்தேரோடே வந்து சாய்ந்து அருளின கோலமாகையாலே
மந்த்ர த்ரயமும் ப்ரகாசிக்கிற கோலம் –

ஸ மயா போதித ஸ்ரீ மான்
கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை
கிடந்தாய் கண்டேன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டும்

கண்டேன் அம்மானே
கிடை அழகைக் கண்டேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் –
எழுந்து இருத்தல் இருத்தல் உலாவுதல் என் செய்தாய் என்னுதல்
அணைத்தல் செய்யப் பெறுகிறிலேன்

எம்மானே
இதுவும் நமது என்று இராது ஒழியப் பெற்றேன் ஆகில் ஆறி இருக்கலாயிற்றே
ஆழ்வார் ஆற்றாமை யாகிற ஆழ் கடலிலே மூழ்கி -முக்கவர் முத்துக்கடலிலே மூழ்கி
முத்து வருமா போலே
வ்யாமோஹத்தின் ஸாகரத்திலே
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் -என்கிறார்

என் மனனே -என்று பெருக்காற்றில் இழிவர் துணைத்தேட்டமாம் போலே நெஞ்சையும்
கூட்டிக் கொண்டு இழிகிறார்

எம்மானே என்று ஸம்போதித்து உன் வடிவோடே ஓக்க ப்ராப்தியை இட்டு
என்னை நலிய வேணுமோ என்கிறார்

எம்மானே சுடர் அடி தொழுது எழு என் மனனே
ஆழ்வாரை லபிக்கையாலே வந்த ப்ரீதியாலே துயர் அறு சுடர் அடி யாயிற்று

என் மனனே
அபர்யாப்த்த அம்ருத பானத்தாலே களித்து ஆனந்தியாதே சேஷ வ்ருத்தியான
அஞ்சலியைப் பண்ணி வர்த்தி
என் வ்யாமோஹமும் உன் வ்யாமோஹமும் அவன் வ்யாமோஹத்தில் குளப்படி யாயிற்று
அத்தைக்கண்டு இறுமாதே தொழுது வர்த்தி என்கிறார்

அபசாரான் இமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம –

———

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

மானேய் நோக்கில்
திருவல்ல வாழி லே -தம் அபேக்ஷிதம் கிடைக்கும் என்று புறப்பட்டுப் போய்
அங்குத்தை போக்யதையிலே நலிவு பட்டு
முடியவும் போகவும் மாட்டாதே புறச்சோலையிலே விழுந்து கிடந்தது கூப்பிட்டார் –

——

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவனுடைய
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவரவர் அபீஷ்டங்களை
தயமானமனா -என்கிறபடியே
பகவத் கிருபையாலே லபிக்கச் செய்தேயும் காம்ய பலங்கள் ஆகையால்
உயர்வும் தாழ்வுமாய் அறுகை யாலே த்யாஜ்யங்கள்

உயர் நலமுடையவன் நம்மிடத்தில் பண்ணின தொல் அருள் –
என்றுளன் ஈசன் உயிரும் அன்றே யுண்டு கரண ப்ரதானம் பண்ணின ஸ்வ பாவிகமான அருளாலே
கழல் வளை பூரிப்ப யாம்

நல் வினையால்
அதாவது -அவனைக் காணப் பெற்று அப் ப்ரீதியாலே சொல்லக் கூட வற்றோ –
அன்றிக்கே
ஸ்வா பாவிக கிருபையாகிற ஸூஹ்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை
சொல்ல வற்றோ என்னுதல்

நா நீர் அற்று இருக்கையாலே ஆராவமுது ஊறும் இறே
அவன் மயர்வற மதிநலம் அருளின தொல் அருளாலே
நா வரண்ட பாபம் போய் -நா நீர் உண்டாய் திரு நாமங்களை சொல்லலாமோ என்று
அம்மங்கி அம்மாள் வாக்யார்த்தமாக அருளிச் செய்வர்

இப்படி அருள் அகல இராதே -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
தன்னுடைய கண்ணழிவு அற்ற கிருபையை ஸம்ஸாரத்தில் உள்ளாரும் நித்ய விபூதியில் உள்ளாரும்
தொழ நின்ற மஹா நகரம்
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகளும் நித்ய ஸம்ஸாரிகளும் கூடத் தொழும்படி
ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்

நல்லருள் ஆயிரவர்
எம்பெருமானிலும் பிரஜை ரக்ஷணத்தில் அனுக்ரஹ சீலராய் இருக்கிறவர்கள்

நலனேந்தும் திருவல்லவாழ்
அவனுடைய உயர் நலமான கல்யாண குணங்களை உயரா நின்ற நலம் என்று கொண்டாடி
வர்த்திக்கும் ஊர் என்னுதல் ஆகையாலே

நல்லருள் நம் பெருமான் நாராயணன்
துயர் அறு சுடர் அடி தொழுது

நாமங்களே.–
திரு நாம உச்சாரணம் பண்ணித் தொழுது ஸ்துதித்து என் மனனே எழு

நல்லருளை யுடையவனாய் -நமக்கு ஸ்வாமியானவன் -நாராயணன் –
நல்லருள் ஆகிறது வாத்சல்யாதிகள்

நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்து பின்னை சப்தத்தை அருளிச் செய்கிறார்
நாராயணன் –
ஹேய ப்ரதிபடமான திருவடிகளை -துயர் அறு சுடர் அடி யாகையாலே அவித்யாதிகள் அற்றது
தேஜோ மயமான திருவடிகளைத் தொழுது எழு என் மனனே
திரு நாம உச்சாரணத்தைப் பண்ணி வர்த்தி

நாராயண ஸப்தம் தர்மி நிர்தேசம்
இஸ் ஸ்வபாவங்களாலே நிரூபித வஸ்துவுக்கு உண்டான குணங்களுக்கு வாசகம்
அல்லாத திரு நாமங்களாகை

என் மனஸ்ஸூக்கு ஒத்த தோழிமீர் திரு நாம உச்சாரணம்
பண்ண வல்லோமோ என்கிறார் –

————–

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

பிறந்தவாற்றில்
நாமங்களை சொல்லித் தரிக்க பார்த்த இடத்தில்
அது ஸைதில்யத்தை விளைக்க
தரித்து நின்று திருநாம உச்சாரணம் பண்ண வல்லேனாம் படி அருள வேணும்
என்று சரணம் புக்கார் –

—-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

உயர்வற என்கிற பாட்டை -நாகணை மிசை நம்பிரான் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
நாகணை மிசை நம்பிரான் -உயர்வற உயர் நலம் என்கிறவன் யாவன் ஒருவன்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
உபாய உபேயங்களில் தாரதம்யம் உண்டாகையாலே உயர்வு அற்று இருக்கும் –
உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவனே தனக்கு உபாயம் உபேயம் என்கிறார் –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்றும்
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வேஸ்வரனுடைய ஆனந்தாதி கல்யாண குண
பரிபூர்ணனான அநந்த ஸாயித்த்வம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே
அவனே சரண்யன் என்கிறது

நமக்கும்
திருவனந்த ஆழ்வானுடையபுருஷகாரம் சொல்கிறது

இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்தில் உள்ளார் ஆகை இறே
படுக்கை கிடப்பது அந்தப்புரத்தில் இறே

நம்பிரான் -மயர்வற மதி நலம் அருளுகையாலே நம் பிரான் -நமக்கு உபகாரகன் –
ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன்

மதி நலம் அருளினவன் எவன் அவன்
சரணே சரண் நமக்கு என்று
அவதாரணத்தாலே உபாய நைர பேஷ்யம் சொல்லுகிறது –

சாம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படியே அடிக்கழிவு சொல்லுவார் ஒருவர் அல்லரோ இவர்
இது ஒழிய வேறே ஒன்றில் கால் தொழாது ஒழிகை மஹா விச்வாஸம் ஆகிறது
இத்தால் ஏக -பதார்த்தம் சொல்லிற்று

பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
நாள் தொறும் ஏக சிந்தையனாய்
மதி நலத்தால் வந்த த்ருட அத்யவசாயம் -புறம்பு உண்டான சிந்தனை போய்
இவ் விஷயத்தில் ஏக ஆகார மநோ ரதம் யுடையராய்

அர்த்தஅர்ஜனம் பண்ணப் போவார் ஒரு சிராயை விஸ்வஸித்து நாலாண்டு பத்தாண்டு
கடலிலே இழியா நின்றார்கள் இறே
இப் பேற்றின் சீர்மையைப் பார்த்தால் இவ்வளவாகிலும் வேண்டாவோ
இவ் விஷயத்தில் சம்சார ஸ்வ பாவத்தால் வ்யஸன பரம்பரைகள் வந்தாலும்
வியவசாயம் குலையாமே போருமது இறே ஸ்வரூபம் ஆவது

எவன் -குருகூர் சடகோபன் மாறன்
அது எல்லாத்துக்கும் அடியான பிறப்பு இருக்கிற படி

அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -உபாயாந்தரம் அறியாத நித்ய ஸூரிகளுக்குத்
தானே ஸர்வவித போக்யமானவன் விஷயமாக

நூற்ற அந்தாதி
தாம் உளராகைக்காகச் சொன்ன அந்தாதி

ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து .
மஹா ஆகாசம் என்று பேரை யுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே

வைகலும் மகிழ்வு எய்துவரே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த ரஹிதரான நித்ய ஸூரி ஸேவ்யனானவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

வைகலும் மகிழ்வு எய்துவரே
ஹேய ப்ரதிபடமான -நிர வதிக தேஜோ ரூபமாய் -ப்ராப்ய ப்ராபகமான திருவடிகளைக்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய அனுபவம் பண்ணி யாவதாத்மபாவி வாழலாம் என் மனமே தொழுது எழு

அனுசந்தானத்துக்கு விச்சேதம் வராத படி பண்ணி அருள வேண்டும் என்று
பிரார்த்திக்க வேண்டும்படியான சம்சாரத்தை விட்டு
பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் ஒரு நாளும் இல்லாத பரம பதத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவர்

மா என்று மஹத்தை
கம் என்று ஆகாசம்
ஆக மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –

———–

ஐந்தாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-