Archive for the ‘நம்பிள்ளை’ Category

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–நான்காம் பத்து விவரணம்-

February 5, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

ஒரு நாயகத்தின்
பின்னும் தன் செல்லாமையாலே -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டமான
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி நிற்கிற ஸம்ஸாரிகளைப் பார்த்து –
அவற்றை விட்டு
ஸ்ரீ யபதியைப் பற்றுகையே நிரவதிக ஸூக ரூப புருஷார்த்தம்
என்று உபதேசிக்கிறார் –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

உயர்வற என்கிற பாட்டை குறுக மிக -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவும் ஐஸ்வர்ய கைவல்யங்களைச் சொல்கிறது –

உயர்வற -குறுக மிக
ஐஸ்வர்யாதிகள் நிலை நில்லாது என்ன
லீலா விபூதியில் ஐஸ்வர்யம் நிலையில்லை யாகிறது
அவை போல் அன்றிக்கே ஆத்ம லாபம் நிலை நின்ற புருஷார்த்தம் அன்றோ என்னில்
கீழ்ச் சொன்னவற்றைக் குறித்து ஒரு நன்மை யுண்டே யாகிலும்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்துக்கு ஏற்றம் உண்டாம் போலே
பகவத் ஆனந்தத்தைப் பற்ற ஆத்ம அனுபவம் தண்ணிது –ஆனபின்பு அவனைப் பற்றப் பாருங்கோள்

உயர் நலம் யுடையவன் எவன் அவன்
கல்யாண குணங்களால் பூர்ணனான -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் -அவனைப்பற்றி
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி-

முதலிலே ப்ரத்ய அஹ்ருத இந்த்ரயினுக்கே இறே -ஆத்ம ப்ராப்தியில் அதிகாரம் உள்ளது

பாஹ்ய விஷயங்களிலே தூரப் போய் க்ரஹிக்கும் மனஸ்ஸை ப்ரத்யக் விஷயமாக்கி
அதாவது
கண்ணை இட்டுக் கண்ணைப் பார்ப்பது போலே இருப்பது ஓன்று இறே
ஆகையால் குறுக -என்றது –

இந்த இந்திரிய நிக்ரஹம் ஸர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளுகையாலே வந்தது –
பாஹ்யங்களிலே போன மயர்வை அறுத்துத் தர
ஸ்வ ஸ்வரூப விஷயத்திலே யாம்படி மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
மிக யுணர்வத்தோடு நோக்கி
சிரகாலம் பாஹ்ய விஷயத்திலே பண்ணிப்போந்த வாஸனை யடைய ஆத்மாவிலே யாம்படி பண்ணி விசதமாக அனுசந்தித்து
எல்லாம் விட்டு
ஸ்ரீயப்பதி தோளும் தோள் மாலையுமாய் -கருட வாஹனனுமாய் வந்து நிற்க
அந்த போக்யதையைப் பாராதே சுத்தி யோகத்தையே பார்த்தது –

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
அயர்வற்ற நித்ய ஸூரி ஸேவ்யனாய் ஸ்ரீ யபதியான அவனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பாராதே
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும்
அணுவான ஆத்ம அனுபவத்தை மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்ம ஞானிக்கும்

அப்பயன் இல்லையேல்,
பகவத் அனுபவம் ஆகிற மோக்ஷ ஸூகம் இல்லை என்கிறார் இவர்
அவ்வருகு உண்டான போக்யம் கண்டவர் ஆகையாலே அத்தை ஸங்கோசம் என்கிறார்

பகவத் உபாஸனத்துக்காகச் சுடர் அடி தொழுது ஆத்ம பிராப்தி பெற வேண்டுவ
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
அவித்யாதிகளானவை வாஸனையாலே வருமாகில் பின்னும் வீடு இல்லை

மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே
ஸர்வ வாஸனையாலே பற்றாமல் ஸூத்தி யோகத்தையே பார்த்துப் பற்றி விடாமல் இருக்கில் அது ஸித்திக்கும்
விடில் அது ஸித்தியாது

வீடு அஃதே
ஸர்வ பாப விமோசகனானவனைப் பற்றி விடா விடில் -கீழ்ச் சொன்ன இந்திரிய ஜயம் முதலாக
பகவத் உபாஸநத்தைப் பண்ணி கர்ம ஷயம் பிறப்பித்து ஆத்மாவை லபிக்கப் பார்க்கும் அவனுக்கு
அந்திம ஸ்ம்ருதி பண்ணி சரீரத்தை விடப் பார்ப்பானாகில் -அந்த மோக்ஷம் இல்லை –

அஃதே
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ-என்றும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்னும் நான் சொல்கிற அதுவே புருஷார்த்தம் –

ஆகையாலே -தொழுது எழு என் மனனே -என்று
தன் திரு உள்ளத்துக்கு உபதேசித்துத் தன் திரு உள்ளம் போல்வாருக்கும் உபதேசித்து
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———–

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

பாலன் ஆய், ஏழ் உலகில்
மூன்று களையும் பறித்துச் ஸங்காயம் வாரின பயிர் -ஸதசாகமாகப் பணைத்த விளையுமாய் போலே
அபிநிவேசம் ஸதசாகமாய் விளைந்து
தேச கால விப்ரக்ருஷ்டமான பதார்த்தங்களையும் தத் தத் தேச கால விசிஷ்டமாகப் பெற்று
அனுபவிக்க வேணும் என்று விடாய்த்தார் –

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

உயர்வற என்கிற பாட்டை -பாவியல் வேத -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி -மனுஷ்ய ஆனந்தம் அளவாக
காலோசிதமான பதார்த்தங்களை தத் தத் தேச காலங்களிலே அனுபவிப்பார் அனுபவிக்கப் பெறாதே
வந்த இழவாலே ஸூகம் அற்றார்கள் –தத் வ்யதிரிக்தங்கள் ஆகையாலே

இவர் அங்கன் அன்றிக்கே பகவத் ப்ரேமத்தாலே பூத காலத்தில் உள்ளதும் பவிஷ்யத் காலத்தில் உள்ளதும் –
வர்த்தமான காலத்தில் போலே
உயர்நலம் உடையவன் எவன் அவன் –திருவடிகளிலே அத்திருத் துழாய் பெற ஆசைப்படுகிறார் –

உயர் நலம் யுடையவனைப்
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
ஒரு ஊருக்காக உதவினதுவே அன்றிக்கே ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல்
உள்ளது பெறத் தட்டு என் என்னா நின்றாள் என்கிறாள்

பாவியல் வேதம்
பாவாலே இயற்றப்பட்ட வேதம் –சந்தஸ்ஸுக்களால் சொல்லப்பட்ட வேதம்
அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ சந்தஸ் -என்றும் சொல்லப்பட்டவைகளை யுடைத்தான வேதம்
சொல்லிற்று என் என்னில்

உயர்வற உயர்நலம் உடையவன் என்றும் அவன் ஆனந்தாதி குணங்களை சொல்லப் புக்கு எவன் அவன் என்று
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட முடியாமல் மீண்ட இத்தை
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
அதன் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு

ஸர்வே வேதா யத்பதம் ஆமநந்தி வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய -என்கிறபடியே
அல்லாத இடங்களுக்குப் பிரதிபாத்யன் அவனே யாகிலும்
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு வாசகமானவற்றைக் கொண்டு

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆகையால் –
அவர் அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே வேதாந்த வேத்யனை சாஷாத்கரித்து
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்ய ஸூரி சேவ்யனானவனை

தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
தேவர்களும்
ஸ்லாக்யமான ஸநகாதிகளும் -என்றுமாம்

சேவடி மேல் அணி
துயர் அறு சுடர் அடி -ஆஸ்ரிதருடைய கிட்டப் பெறாத இலவு தீர்த்த சுடர் அடியான

சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே
சேவடி -சுடர் அடி
சங்கைஸ் ஸூராணாம் -என்கிறபடி ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கத் திரு உலகு அளந்து நின்ற
சேவடி மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி -என்கிறபடி
தலையிலே பூப் போலே வந்து இருக்கிற போது -மேலே பார்த்தவாறே
அனுபாவ்யமாய் இருந்த சிவப்பை யுடைத்தாய் இருக்கை
அடியிலே ராகம் இறே இப்படி ஆக்கிற்று இவளை –

அன்றியே
செவ்விய அடி -செவ்வையான அடி -ஆஸ்ரிதருக்கு செவ்வையாயே இருக்கும்
அநாஸ்ரிதருக்கு குடிலமாய் இருக்கும்

செவ்வடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால்
ஸ்ப்ருஹணீயமான திருத்துழாய் என்றே கூவும்

சொல்லி மாலேறும் கோள்வினை யாட்டியேன் கோதையே.
முடித்து அல்லது விடாதே பாபத்தைப் பண்ணின நான்
என்னுடைய கோதை
தன் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமத்தைத் தான் படுவதே –

——————-

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

கோவை வாயாளில்
இவர் ஆசைப்பட்ட படியே எல்லாம் பெற்றாராம் படி
தன் ப்ரணயித்வ குணங்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ஹ்ருஷ்டரானார் —

——-

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

உயர்வற என்கிற பாட்டை -உரைக்க வல்லேன் அல்லேன் – என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஒருவருக்கு ஒருவர் புகழ் உண்டாய் இருக்கும்
அதுவும் அல்ப அஸ்திரமாய் உயர்வற்றதாய் இருக்கும்
இந்த உயர்வற உயர்நலம் உடையவன் எவன் ஒருவன் அவன் ஆனந்தாதி குணங்களுக்கு
அவதி இல்லாமையால் உரைக்க வல்லேன் அல்லேன் –

வேதங்களும் அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை
உன் ஆனந்தாதி குணங்கள் எல்லாம் கூடினாலும்
உன் ப்ரணயித்வ ப்ரகர்ஷம் என்னுடைய பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறார்

இந்த ப்ரணயித்வ குணங்களை யுடையவன் யாவன் ஒருவன் –
அவனை உரைக்க வல்லேன் அல்லேன் –
உனக்கு என்னுடைய மநோ வாக் காயங்கள் முதலானவற்றை
அங்க ராகங்கள் முதலான போக வஸ்துவாகக் கொண்ட போக்ய பூதனான நீ
உன்னுடைய ப்ரணயித்வ குணத்தை அனுசந்தித்து அனுபவித்துக்
குமிழி நீர் உண்டு போம் அத்தனை போக்கி பேசித் தலைக்கட்ட மாட்டு கிறிலேன்

எல்லாம் பேச ஒண்ணாதாகில் பேசலாம் அம்சம் பேசினாலோ என்னில்
நீ மயர்வற மதிநலம் அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் வந்த பலம் கொண்டு பேசப்புக்கால்
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
உன்னுடைய முடிவில்லாத பிரணயித்வத்தால் வந்த கீர்த்தி சாகரத்தினுடைய
கரையில் தான் என்னால் சொல்லப் போமோ

இப்படிக் கரை அருகிலும் செல்ல அறிய விஷயத்தை நீர் பேசுவதாக உத்யோகிப்பான் என் என்ன

நீ அருளினை பக்தி ரூபா பன்ன ஞானத்தினாலே
காதல் மையல் ஏறினேன்;
என் ப்ரேமத்தாலே மிக்க கலக்கத்தை உடையேன் ஆனேன்
பிச்சு ஏறினாரை
நீ இப்படிச் செய்வான் என் என்னக் கடவதோ -என்ன

இவ்விஷயத்தில் நீர் பிரமிப்பான என்
பிரமிப்பாருக்கு ஓர் ஆலம்பனம் வேண்டாவோ என்ன

அயர்வறும் அமரர்களான நித்ய ஸூரிகள் பித்தேறி ஏத்தக் கண்டேன் –
அத்தாலே செய்தேன் என்கிறார்

அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த நித்யரோடு -நித்ய ஸம்ஸாரியான இவரோடு -அவன் தன்னோடு
வாசி அற்று இறே ப்ரணயித்வ குணம் -இவ்விஷயத்தில் ப்ரணயித்வ பிரபாவம் இருப்பது
ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் தான் அறியப் புக்காலும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் இறே இருப்பது
தன்னை அறியப்புக்க வேதங்கள் படும் அத்தனை தானும் படுவது

புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
நீ ஸர்வ சமாதி பரனாய் இருப்பில் புரை இல்லாதாப் போலே
என்னோட்டை கலவியால் வந்த வடிவில் பிறந்த புகரிலும் புரை அன்றிக்கே இருக்கிறவனே

அன்றிக்கே
நிரவதிகமான ப்ரணயித்வ குண ஸத்பாவத்தில் கண் அழிவு இல்லாதாப் போலே
என்னோட்டைக் கலவியிலும் பொய் அன்றிக்கே
அத்தாலே வந்த புகர் வடிவிலே தோன்ற இருக்கிறவனே என்னுதல்

இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.
பரமபக்தி யுக்தரானவர்கள் துயர் அறு சுடர் அடி தொழுது
எழுந்து
கடல் கிளர்ந்தால் போலே இரைத்துக் கொண்டு ஏத்தக் காண்கையாலே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்று யானும் ஏத்தினேன் அல்லது நான் சக்தனாய் ஏத்தினேனோ
ஹேய ப்ரதிபடமான திருவடிகளும் -பிராட்டியும் -நீயும் விடிலும்
திருவடிகளை விடாத திண் கழலைப் பேசித் தலைக்கட்டப் போமோ என்கிறார் –

——————–

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

மண்ணை இருந்து துழாவி யில்
கீழ்ப் பிறந்த ப்ரணயித்வ குண அனுபவம் சாத்மிக்கைக்காக எம்பெருமான் பேர நிற்க அவனோடே
ஸத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனாகவே பிரமித்து நோவு பட்டார்

உயர்வற என்கிற பாட்டை -மண்ணை இருந்து துழாவி-விவரிக்கிறது -எங்கனே என்னில்
ஆழ்வார் தம்முடைய உபாய அத்யாவசாய ஞானத்தில் நின்று தம்முடைய திரு உள்ளத்தைப் பார்க்கும் போது
அது மயர்வற மதிநலம் அருளப் பெற்று –
அத்தாலே பகவான் இடத்திலே த்வரை விஞ்சிச் செல்கிற ப்ரேம தசையைப் பார்த்து
இது அத்புத கார்யங்களாய் இருந்தது இது ஏது என்று கேழ்க்கிற அவர்களுக்கு
அதுக்கு உத்தரமாக மானஸ த்வரை செல்லுமத்தை -வினவி வந்தவர்களுக்கு
உபாய அத்யவசாய தசையில் நின்று ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

உயர்வற -மண்ணையிருந்து துழாவி –
மண்ணுக்கு உயர்வாவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாதிகளாலே நிறைந்து பஞ்சா சத்கோடி விஸ்தீர்ணமான
பூமியாகையாலே உயர்வு என்கிறது

இருந்து துழாவி
பகவத் வ்யதிரிக்தங்களைக் காரணமாகவும் காரியமாகவும் சொல்லா நின்றார்கள்
இத்தை அறிவோம் என்று ஆராய்ந்து பார்க்க அவை அஸ்திரமாக இருக்கையாலே உயர்வற என்கிறார் –

அவை எல்லாம் இவர் கைக்குள்ளே அடங்கி ஸர்வ கதத்வத்தை கரதல அமலமாகக் கண்டார்
துழாவிப் பார்த்தார்-
அதுக்கு அப்பாலும் உயர் நலம் போகையாலே வந்த பரம ஆனந்தத்தைப் பார்த்து
உயர்நலம் உடையவன் எவன் அவன் வாமனன் என்கிறார்

கீழ்ச் சொன்ன ஜகத்து அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாய் இருந்தது தவிரும்படி
வாமனனாய் மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று தன்னதாக்கின
வாமனன் மண் இது என்னும்

நலமுடையவன் யாவன் ஒருவன் அவன் வாமனன் மண் இது என்னும் –
த்ரி விக்ரம ரூபத்தாலே ஜகதாகாரனாய் நின்றபடி
வாமனன் மண் இது என்னும்

அடியிலே பிறந்தவனுடைய கந்தவதீ பிருத்வீ இறே
பத்ப்யாம் பூமி யாகையாலே ஸர்வ கந்தமும் தோற்றின படி –

யவன் இது என்னும்
மஞ்சா க்ரோசந்தி போலே பூமியில் உள்ளாரைச் சொல்கிறது –

அவன் -இப்படிப்பட்ட பூமியை யுடையவன் –காரண பூதனான தன் ஜகதா காரதையைக் காட்டி
ஒரு திருவடிகள் அந்நிய சேஷத்வ நிவ்ருத்தியைப் பண்ண
மற்றத் திருவடிகள் ஸ்வ ஸ்வா தந்தர்யத்தைத் தவிர்த்து ஸர்வ சேஷியாய் நின்ற நிலையைக் காட்டினான் ஆயிற்று –

இவருக்கு இந்த ப்ரேமத்துக்கு அடி என் என்ன –
மயர்வற மதி நலம் அருளின வத்தாலே வந்த ஞானத்தாலே அறிந்த படி

கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘
அவர தேவதா பிரதிபத்தியை நீக்கி -பராத்பரனைக் காணும் படி
திவ்யம் ததாமி தே சஷுஸ் -என்றும்
தக்க ஞானக் கண்கள் என்றும் –
சொல்லுகிற ஞானச் சஷுஸ்ஸூ க்களைக் கொடுத்தபடி
அருளின பக்தியாலே ஆனந்தாவஹமாய் ஆனந்த அஸ்ரு குடி கொண்ட படி –

எவன் -இப்படி அருளப் பட்ட சடகோபன் -ஸ ஹேதுகமாகில் தாழ்வு படும்
நிர்ஹேதுகமாகையாலே நிரவதிகமாய்ப் பொங்கி வருகிறபடியாலே
அருளப்பட்ட சடகோபன் என்கிறது –

அவன்
கடல் வண்ணன்’
ஜகதாகாரனைப் போலே ஸகல வஸ்துவையும் தன்னுள்ளே கொண்டு நோக்குகிற படி

என்னும்;
இது என்ன ஆச்சர்யம்
ஜகதா காரதையை கரதல அமலகமாகக் கண்டும்
அதற்கும் மேலே அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண் உண்டு -பரமபதம் -அதற்குப் போலியான ஆகாசத்தைக் காட்டி

அவன் மேவும் வைகுந்தம் என்னா நின்றாள்
அயர்வறும் அமரர்கள் சந்த அணுவிருத்தி பண்ண -அவர்கள் நடுவே
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்துமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
அவன் மேவு வைகுந்தமான விண்ணைத் தொழுது துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –

எனதுள் ஞானம் ஆகிற
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!
பெரு மையல் -பகவத் ஆனந்தத்தில் புக்கு அழிந்த மையல் –
இத்தை விளைவிக்கிற வேதாந்த வேத்யனுக்கு என் செய்கேன்
இது ஸ்வ யத்ன ஸாத்யம் அல்லவே

பெய் வளையீரே
நீங்கள் ஸ்வரூபம் குலையாது இருக்க
இவள் தொழுது எழு என்னவும் தெரியாதே பித்தேறி பிரமிப்பதே
இது என்ன ஆச்சர்யம் என்கிறாள் —

————-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து ஏழுலகில்
கீழ் இவருக்குப் போலி கண்டு பிரமித்த விடாய் எல்லாம் தீர்க்கும்படி
நித்ய விபூதி யுடையனாய் இருக்கிற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொடு வந்து
காட்டிக் கொடுத்துக் கண்டீரே நாம் இருக்கிற படி
இந்த ஐஸ்வர்யம் எல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டித்து
நீர் உம்முடைய வாக்காலே ஒரு சொல்லு சொன்னால் காணும் என்று இவர் கைத்தாளத்தைக் கொடுக்க
அவ்விருப்புக்கு மங்களா ஸாசானம் பண்ணி அருளினார் –

ஸ்ரீ யபதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் உபய விபூதி யுக்தனான ஸர்வேஸ்வரன்
கீழே போலி கண்டு பிரமித்த இழவு எல்லாம் போம்படி
நித்ய விபூதியையும் லீலா விபூதியையும் உடையவனான படியைக் காட்டிக் கொடுத்துக்
கண்டீரே – நாம் இருக்கும் இருப்பு -இந்த ஐஸ்வர்யம் எல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டித்தாம் –
நீர் உம்முடைய வாக்காலே ஒரு சொல்லு சொன்னால் காணும் என்று
இவர் கையில் தாளத்தைக் கொடுக்க அவ்விருப்புக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –

உயர்வற என்கிற பாட்டை -வீற்றிருந்து -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உயர்வும் தாழ்வுமாய்
வருகையாலே உயர்வற என்கிறது
லீலா விபூதியை வீற்றிருந்து ஏழுலகும் -என்றபடி

உயர் நலம் என்றது -நித்ய விபூதியை யுடையவன் என்று -உபய விபூதி யுக்தன் என்றபடி –
எவன் அவன் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன்
தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு சேஷமாய்த் தான் சேஷியாகையாலே
வந்த வ்யாவ்ருத்தி தோற்ற நியாந்தாவான சீர் தோற்ற வீற்று இருக்கை

இங்கன் அன்றாகில் பரஸ்பர வ்யாவ்ருத்தி எல்லாருக்கும் உண்டு இறே
ஸகல ஆத்மாக்களுக்கும் ஞான ஏக ஆகார தயா ஸாம்யம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
விபுத்வ சேஷித்வ நியந்த்ருத்வங்கள் ஆகிற இவை அவ்வாஸ்ரயம் ஒன்றிலுமே கிடக்கும் அத்தனை இறே

இப்படி ஸர்வ கதனாய் வியாபித்து நிற்குமது நியமன அர்த்தமாகவே இறே
இப்படி நீர் அறிந்தபடி எத்தாலே என்ன
தன் நலமுடைய ஆனந்தத்தால் மயர்வற மதிநலம் அருளினான் -அத்தாலே அறிந்தேன்

எவன் அவன் -ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –
ஆற்றல் -என் மயர்வு -அக மமதையால் வந்த மயர்வு அற
ஆற்றல் பொறுமை -லோகத்தாரோடே என் ஆஜ்ஜா அதி லங்கனமான அபராதத்தைப் பொறுத்து
அற -ஆற்றல் மிக்கு ஆளும்
தஹ -பச -என்னாமல் பொறுத்து –

ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான்
யாவன் ஒருவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து ஆளும்
சுற்றுப் பயணம் வந்து ஜகன் நிர்வஹனம் பண்ணுகை அன்றிக்கே
நித்ய விபூதியில் இருந்த இருப்பிலே லோகங்கள் அடைய தன் செங்கோல் செல்லும்படி ஆளும்

மதி நலம் அருளினன் என்று
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கு அனுரூபமான
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே அருளினான் –

அம்மான்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்வாமி -அவன்
இந்திரியாணி ஹயானி என்கிற தேஜிக் குதிரை போலே ஓடுகிற மனஸ்ஸை யுடையவனை
அவன் -வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன்
இருடீகேசன் ஆகையாலே நியமித்தான்
இந்த க்ருதஜ்ஜை தோற்றப் போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
அயர்வின்றிக்கே அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரானராய் ஆனந்திக்க
அத்தாலே அவன் ஆனந்திக்க -அது கண்டு இவர்கள் ஆனந்திக்க –
இப்படி அநந்யோன்யம் ஆனந்திக்கிற படியைக் கண்டு இவர் ஆனந்திக்கிற
இவர் ஆனந்தம் உபய விபூதியிலும் மிக்கது –

இப்படி -ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துக்கம் -அதாவது -ப்ரயாஸம் –
பிரயாசமான சாதனாந்தரங்களால் வந்த துயர் அன்றிக்கே நிர்ஹேதுகமாக அளவிறந்த சுடர் அடி தொழு

ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான சுடர் அடிகளைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு இனி என்ன குறை எழுமையுமே –
திருக்குழலிலே ஏறும்படியாக -க்ருண்ணாதி சிரஸா ஸ்வயம் –என்கிறபடியே
நோற்றேற்கு இவர் இப்போது நோற்றது
மண்ணை இருந்து துழாவியிலே –ஆர்த்தியை ஜநிப்பித்த -கிருபையை இனி என்ன குறை எழுமையுமே –
நித்ய விபூதியில் அனுபவத்தை இங்கே லபித்தால் எனக்கு குறை உண்டோ
விண்ணுளாரிலும் சீரியரே
எனக்கு ஆர் நிகர் அகல் வானத்தே -என்று
பகவத் அனுபவத்தாலே நித்ய ஆனந்த மக்நனான எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார் –

—————

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

தீர்ப்பாரை யாம் இனியில்
கீழ்ப் பிறந்தது மானஸ அனுசந்தான மாத்ரமாய் -பாஹ்ய சம்ஸ்லேஷ யோக்யம் இல்லாமையாலே –
மோஹித்து அந்யாபதேசமாய்ப் பேசினார்

தீர்ப்பாரை யாம் இனியில்
மோஹித்தவருக்குப் பரிஹாரமாக தேவதாந்த்ர்யாமி பரமாக ஆஸ்வசிப்பிக்கலாமோ
என்று பரிவர் பார்க்க-அவர்களைக் குறித்து
அன்பர் விலக்கின பாசுரத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

——–

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

உயர்வற என்கிற பாட்டை -உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்,-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவர் உயர்வற உன்னித்து
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உற்று உற்றுப் பார்க்க
ஒன்றுக்கு ஓன்று தொழுவாரும் தொழுவித்துக் கொள்வாருமாய் அற்றது –

உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் -வண் துவராபதி மன்னன் -அவனை அன்றி
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
உயர்நலமான பர ப்ரஹ்ம ஆனந்தத்தை யுடையவன் எவன் அவன் -அவன்
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னன்
ஸ்ருதி ப்ரஸித்தனாய் ஸூ லபனானவனை ஒழிய மற்ற ஒரு தேவதையைத் தொழும் அவளோ இவள்

எனக்கு அவன் அடியிலே மயர்வற மதிநலம் அருளிற்றிலன் ஆகில் அன்றோ தேவதாந்த்ர பஜநம் பண்ணுவது
பக்தி ரூபா பன்ன ஞானம் பெற்றவர் இதர தேவதையும் உண்டு என்று அறிவரோ

நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மயர்வற மதிநலம் பெற்று இருக்கிற எனக்குத் தோற்றினார் தோற்றின படி சொல்லி
அணங்கு ஆடுகைக்குப் பிரயோஜனம் என்ன –

எவன் இந்த மதிநலம் பெற்றாராய் இருக்கிறவர் அவன் நிர்ஹேதுகமாக அருளினன்
அவன் யாவன் ஒருவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
மன்னப்படு மறை வாணன்
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்ய முக்தராலே ஸேவ்யராய்
அபவ் ருஷேயமான வேத ப்ரதிபாத்யனானவன் எவன் அவன் வண் துவராபதி மன்னன்

துயர் அறு சுடர் அடி தொழுது ஏத்துமின்!ஏத்துதலும்,தொழுது ஆடுமே.
தொழுது எழு என்று அன்பார் பரிவரைக் குறித்து வெறி விலக்கின பாசுரத்தைத்
தோழி தாயாரை வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

—————-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

சீலம் இல்லாச் சிறிய–னில்
வண் துவாராபதி மன்னன் என்கிற திரு நாம ப்ரசங்கத்தாலே மோஹம் தெளிந்து
அது தான் பேற்றுக்கு உடல் அல்லாமையாலே கூப்பிடுகிறார் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

உயர்வற என்கிற பாட்டை –அறிந்து அறிந்து-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக பராத்பரன் ஆர் என்று பார்த்து
உயர்நலம் உடையவனே பராத்பரன் என்று
அறிந்து அறிந்து, தேறித் தேறித் தெளிந்து

பரத்வம்
பஜநீயத்வம்
ஸுலப்யம்
அபராத ஸஹத்வம்
தொடக்கமாக அறிந்து அறிந்து, தேறித் தேறி

ஓரொரு குணங்களை அனுபவிக்க மாட்டாமை -மோஹமும் தெளிவுமாய் என்னுதல்

யவன்- யான் அவன் -எனது ஆவியுள்ளே-எனது ஆவியாவியும் நீ என்று சொல்லப் பட்டவன்

எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன்
நிறைந்த ஞான மூர்த்தி யானவன் –
அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி ஞானப் பிரகாசத்தைப் பண்ணித் தந்தவன் –

எவன் -நின்மலமாக வைத்தவன் -நின்மலமானவன் -அவன் நிர்ஹேதுகமாக அருளினவன் –
நிர்மலமாக வைத்து -அயர்வறுகை -நிர்மலமாகை –

அயர்வில்லாத அமரர்கள் அதிபதி
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்த்தவன் எவன் அவன்
ஒழிந்தேன் என்னும்படி ஜனன மரணாதிகளை ஒழித்தவன்
நறுந் துழாயின் கண்ணி அம்மான்
துயர் அறு சுடர் அடி தொழுது -ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ மயமான திருவடிகளைத் தொழுது –

நறுந் துழாயின் கண்ணி
பரிமள ப்ரசுரமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதமான ஸ்வாமியைக் கண்டு கொண்டு
ஞான சாஷாத்காரமாகக் கண்டு கொண்டு
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –

—————

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

ஏறு ஆளும் இறையோனில்
இப்படிக் கூப்பிட்ட இடத்தில் வந்து முகம் காட்டாமையாலே
அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத் மீயங்களில் நசையற்றபடியைச் சொன்னார்

——

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

உயர்வற என்கிற பாட்டை மணி மாமை குறையில்லா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக தம் தாம் கரணங்களும் தாங்களுமாக
இதர விஷயத்தில் சப்தாதி போக்யங்களைப் புஜிக்க
இவர் அங்கன் அன்றிக்கே பகவானுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்களை விடுகிறார்

உயர்வற உயர் நல –மணி மாமை குறையில்லா மலர் மாதர்-
உயர் நலம் என்று
உகார வாஸ்யையான பிராட்டிக்கு உயர்வு அறுகை யாவது
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற உயர்த்தி அற -என்றது –

விஷ்ணு பத்னியாகையாலே அவனுக்கு சேஷ பூதையாய் தாழ்ந்து இருக்கும்
ஆகையால் உயர்வற உயர் நலம் என்றது –
ஆகையாலே பிராட்டிக்கும் சேஷித்வமும் சேஷத்வமும் ஸ்வ பாவமாகையாலே சொல்லிற்று –

ஆக தத் வ்யதிரிக்தங்களுக்கு ஸ்வாமிநியாய் அவனுக்கு ஸ்வம்மாய் இருக்கையாலே
ஸ்ரீயதே ஸ்ரயதே என்றது –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
பூவில் காட்டில் ரமணீயதையும் -நிறமும் -குளிர்ச்சியும் -மேன்மையும் -மணமும் -மதுவும் -ஸுகுமார்யமுமாக
எல்லாவற்றையும் கட்டி ஒரு பெண்ணாக வகுத்தால் போலே இருக்கிற உயர்நலத்தை யுடையவன்
உறை மார்பன் -அவள் அகலகில்லேன் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற மார்பை யுடையவன்

எவன் அவன் -ஸ்ரீ யபதியானவன் -எனக்கு மயர்வற மதிநலம் அருளினன் -எவன் அவன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
மயர்வற
சாதனாந்தர -ப்ரயோஜனாந்தரமாகிற மயர்வு அன்றிக்கே
மதிநலம் என்றது பக்தி ரூபா பன்ன ஞானத்தால் தானே உபாயம் உபேயம் என்னும்படி மதி நலத்தை அருளின
அணி மானத் தடைவரைத் தோள்
அணி -அலங்காரம்
மானம் -அளவில்லாமை
அலங்காரத்தாலும் அழகாலும் அளவில்லை என்றபடி –

அடல் ஆழித் தடக்கையன்
அடலாழி -அவித்யாதிகளான கர்மங்களையும்
பாஹ்ய விரோதிகளையும் நிரஸித்து
அலம் புரிந்த நெடும் தடக்கையாகையாலே போரும் போரும் எனக்கொடுத்த ஞான பக்தி முதலா மோக்ஷம்
அதன் பலமான கைங்கர்ய சாம்ராஜ்யத்தையும் தருகிற அடலாழித் தடக்கையன்
இப்படி நிர்ஹேதுகமாக அருளினவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயராதே -சோம்பாதே
நித்ய அம்ருத தாஸிகளானவருக்கு ஸ்வாமி யானவன் –

பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
பணி என்றது கைங்கர்யம்
மானம் -அளவு
அதில் ஓர் அளவும் குறையாதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே
அடியேனைப் பணி கொண்ட
கிரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளை அடிமை கொண்டால் போலே
இருவரும் கூட இருந்து காணும் அடிமை கொண்டது –

இப்படி அடிமை கொண்டவன் எவன் அவன் -மணி மாயன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மணி மாயன்
நீல ரத்னம் போன்ற வடிவு அழகைக் காட்டி
துக்க கந்த ரஹிதமான நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளைத் தொழப் பண்ணி
ஸ்வ யத்னத்தால் வரும் ப்ரயாஸம் அன்றிக்கே பரஞ்சோதியான பாத பங்கயங்களைத் தொழுது எழு
என் மனனே -எனக்கு பவ்யமான நெஞ்சே

அன்றிக்கே
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–
ரமணீயமான விக்ரஹத்தையும்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களையும் யுடையவன்
விரும்பாத பவ்யமான நெஞ்சாலே எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு

பிராட்டியும் பெருமாளுமான சேர்த்தியிலே தொழுது எழும்படி அருளினானாகில்
என் மனனே -என் மட நெஞ்சமே -என்று உன்னாலே என்ன பிரயோஜனம் உண்டு
அவனுக்கு வேண்டாத என் நெஞ்சமும் எனக்கு வேண்டா என்கிறார் –

——————-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

நண்ணாதார் முறுவலிப்ப, -லில்
இப்படி உடம்பு வேண்டா உயிர் வேண்டா என்ற இடத்திலும் போதாமையால் முடிகைக்கும்
உன் தரவு வேண்டி இருந்தது -முடித்துத் தர வேண்டும் என்று இவர் அபேக்ஷிக்க
ஸம்ஸாரிகளில் தமக்கு உண்டான வ்யாவ்ருத்தியையும்
நித்ய விபூதியில் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்கிற இருப்பையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
தரித்த படியை அருளிச் செய்கிறார் –

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

உயர்வற -என்கிற பாட்டை -கூட்டுதி நின் குரை கழல்கள்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் -அவர்கள் தாரதம்யம் பாராதே
நீ யுகந்தாரைத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதீ
பிரமாதிகளே ஆகிலும் நீ நினையாதார் உன்னை வந்து கிட்டப்படாதே பண்ணி அலைப்பு தீ
ஆகையால் உயர்வு அற்றார்கள்

உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -வேதைக ஸமதி கம்யனான நீ

ஆட்டுதீ -மயர்வு
ஆட்டுகை -உன் லீலைக்கு விஷயம் ஆக்குகை
மதி நலம் பெற்ற அடியேனும் அது அறிவேன்
சேஷசாயியான உன் படியை சேஷ பூதனான நான் நாராயணன் -என்கிற வத்தை அறிவேன் –

நீர் அறிந்தபடி என் என்ன
நீ தந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே –அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ –
ஷீராப்தியிலே சேஷசாயியாகக் கண் வளர்ந்து அருளும் படியை அடியேன் அஃது அறிவேன்

என் வேட்கை எலாம் விடுத்து
என்னையும் ஏக மனசரான இவருடைய சம்சார அனுசந்தானத்தாலே வந்த விசனம் எல்லாம் தீர்க்கும்படி
திரு நாட்டில் இருந்த இருப்பைக் காட்டி அருளக் கண்டு
அனுபவிக்கப் பெற்று ஒழிந்தவையாம் அத்தனை அன்றோ வேண்டுவது ஆசைப்படுகைக்கு

உன் விபூதியில் நான் எனக்கு என்னாதது உண்டோ
நீ மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்பு யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் சுடர் அடியான உன் திருவடியே சுமந்து உழலக்
துயர் அறு -பாஹ்ய விஷய ப்ராவண்யம் அற
சுடர் அடி -பரமமான சுடர் அடி தொழுது எழு

உன் திருவடியே சுமந்து உழலக்
இதர விஷயங்களிலே நசை அற்று -நிரந்தரம் உன் பக்கலிலேயாய் –
உன் திருவடிகளையே சிரஸா வஹித்து அதுவே யாத்ரையாய்ச செல்லும்படிக்காகக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே

துயர் அறு சுடர் அடி –கூட்டரிய துயர் அற்று -திருவடியைக் கூட்டினை நான் கண்டேனே
என் மனமே நீயும் தொழுது எழு

யாவர் சிலருக்கும் தம் தம்மால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும் படி பண்ணினான்
இது தான் கேட்டார் வாய் கேட்டுச் சொல்லுகிறேன் அல்லேன்
சுடர் அடி தொழுது வர்த்தி என்கிறார் –

———–

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

ஒன்றும் தேவில்
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கை விட்ட ஸம்ஸாரத்தை
பகவத் பரத்வ ஞானத்தை உபதேசித்துத் திருத்தின படியை அருளிச் செய்தார்

கீழ் நண்ணாதார் முறுவலிப்பலிலே சம்சாரிகள் படுகிற கிலேசம் பொறுக்க மாட்டாமையாலே
அவர்களைத் திருத்துவதாக நினைத்து
நீங்கள் தேவதாந்த்ர பஜனத்தாலே ஸம்ஸரிக்கிறி கோளே இத்தனை –
பராத்பரனான ஸர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஸம்ஸார பந்தத்தை அறுக்கப் பாருங்கோள் -என்று
பர உபதேச ப்ரவ்ருத்தர் ஆகிறார் –

—-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

உயர்வற என்கிற பாட்டை -நாடி நீர் வணங்கும் தெய்வமும் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக உயர்வாக தேவதாந்தர்யத்தை ஆஸ்ரயிப்பாரும் நீங்கள் ஆஸ்ரயணீயருமாய் இறே இருப்பது
ஆகையால் உயர்வும் தாழ்வுமாய் இறே லீலா விபூதி இருப்பது இருப்பது –

உயர்நலம் யுடையவன் எவன் ஒருவன் -அவன்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
ஆஸ்ரயிக்கிற உங்களோடு
ஆஸ்ரயணீயரான அவர்களோடு வாசி யற
மற்றும் யாதும் இல்லா அன்று, நான்முகன் தன்னொடு
தேவர் முதலானவை உண்டாக்கினான்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
யாவன் ஒருவன் அவன் மதிநலம் அருளினன்

எவன் அவன் தேவதாந்த்ர போஜனம் ஆகிற மயர்வை அறுத்து அவர்கள் பக்கலிலே
பரத்வ சங்கையையும் அறுத்தான்
அவனே பராத்பரன் -என்கிற மதி நலத்தை அருளினான்

எவன் அவன் -வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான்-அவன்
நீங்கள் ஸேவை புரிகிற தேவதைகள் ஐஸ்வர்யத்துக்கு அடியான கர்மம் நசிக்க நசிக்கும்

வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நித்தியமான கல்யாண குண பூர்ணனான -காரணமான -புருஷோத்தமனான -உபகாரகன் –
காரணந்து த்யேய
த்யேயா நாராயணஸ் ஸதா
என்று அனுபவிக்கிற நித்யருக்கு ஸேவ்யனானவன் நம் எல்லாருக்கும்
மோக்ஷ பிரதானம் பண்ணுகைக்காக த்வரிதனாய் வந்து திருக்குருகூரிலே
அவன் மேவி உறை கோயில்,
இங்கே யாய்த்து திரு உள்ளம் பொருந்திற்று

நித்ய விபூதி இங்கேயாய் -மஹா நகரமும் -மாட மாளிகைகளுமாய் அற்றது
தஸ்மின் யதந்தஸ் தத் உபாஸி தவ்யம் -என்கிறபடியே
அவனோபாதி அவன் குண விபூதிகளும் உபாஸ்யம் என்னும் இடம் சொல்கிறது

புகழ் -எல்லாரையும் ரக்ஷித்து மோக்ஷம் கொடுக்க வந்த புகழ்

ஸுலப்யமான -வீடில் சீர்ப் புகழ்-யுடையவன் -ஆஸ்ரயணீயன் நித்ய வாஸம் பண்ணுகிற
திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே

துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து ஆடிப்பாடிப் பல்லுலகீர்! பரவிச் சென்மின்கள்
துயர் இளைப்பு -அறு -அன்றிக்கே -சுடர் அடி -மோக்ஷ ஆனந்த ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய
திருவடிகளைத் தொழுது எழு என் மனனே என்றும்
லௌகீகர்க்குமாகப் பர உபதேசம் பண்ணுகிறார் –

———–

நான்காம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–மூன்றாம் பத்து விவரணம்-

February 4, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச் சோதியிலே
அத்தேகத்தோடே சம்பந்தித்து நின்று அழகரோடே போக்யதையை அனுபவித்தார்

கீழே
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் -என்று
அவன் கல்யாண குண விஷயமாக அஞ்ஞானம் இல்லை என்கிறார் –
அந்த குணாதிக்ய விஷயத்திலே அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற படி சொல்லுகிறார் இதில் –

—-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

உயர்வற என்கிற பாட்டை -மாசூணாச் சுடருடம்பா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஹேய சரீரங்களாலே
எடுத்த தேவாதிகளாகப் பிரித்தால்
அது மிஸ்ர சத்வம் ஆகையால் மாசாயே இருக்கும்

இது அங்கன் அன்றிக்கே
ஸ்வரூப ரூப குணங்களாலும்
ஹேய ப்ரத்யநீக ஸூத்த ஸத்வமாய் -நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையையாய்
யுவா குமாரா
அரும்பினை அலரை –என்கிறபடியே
ஏக காலத்திலேயே இரண்டு அவஸ்தையையும் சொல்லலாய் இருக்குமவன் யாவன் ஒருவன்
அவன் மயர்வற மதிநலம் அருளினான்

மாசூணா ஞானமாய்
ஸாஸ்த்ர ஜன்ய ஞானங்களுக்கும் -ஸ்வ யத்ன சா பேஷமான மாசு உண்டு
அந்த மயர்வற பக்தி ரூபா பன்ன ஞானத்தை நிர்ஹேதுகமாக அருளுகையாலே
மாசூணா ஞானமாயிற்று –

ஸ ஹேதுகமாக அருளுமாகில் ஞானத்துக்கு மாசு இறே
ஆகையால் உபயருடைய ஞானத்துக்கும் மாசு அற்றது
ஸம்ஸாரிகளைப் போலே ஸ்வரூப அந்யதா பாவம் இல்லை

அவன் திருமேனிக்கும்
ஞானத்துக்கும்
மாசு இல்லாமையைச் சொல்லிற்று

முழுதுமாய் முழுதியன்றாய்
அனுக்தமான குணங்களை யுடையனாய்
வரம்பு இன்றி முழுதியன்றாய்

இப்படி எல்லாவற்றையும் நிர்வஹிக்கிறவன் எவன் அவன்
அமரர்கள் அதிபதி
ப்ரஹ்மாதிகளைப் போலே ஸ்வா தந்தர்யம் இல்லாத நித்ய ஸூ ரிகள் ஸேவ்யனானவனை

மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
கேவலம் ப்ரஹ்ம பாவனை யாகிற கோலத்தமரர் கோனை உண்டாக்கினாலும்
அவனும் மாசூணாமல் ஏத்தினால் அவத்யமாம் அத்தனை அல்லது
உன்னுடைய உயர் நலத்தைக் கரை காண வல்லனோ –

உன் துயர் அறு சுடர் அடி
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–
ஹேய ப்ரதிபடமாய் பரஞ்சோதியான யுன் பாதம் விகஸிதமான தேஜஸ்ஸூ மழுங்காதோ
அப்ராப்யா மனஸா ஸஹ -என்று வேதமே மீண்ட விஷயத்தை
இவன் ஏத்தின அளவாய் மட்டுப்பட்டதாம் இறே

ஆகையால் அவன் நிரவதிகமான பரஞ்சோதியை நம்மாலே ஏத்தலாய் இருந்ததோ
என்று கை வாங்காதே
என் மனமே
வல்லதோர் வண்ணம் சொன்னால்
அதுவே உனக்காம் வண்ணம் என்று தொழுது
த்ரிவித கரணங்களாலும் வந்த சம்சயம் அற்று வர்த்தித்து வாழ்வாய் என்கிறார் –

——–

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

முன்னீர் ஞாலத்தில்
அழகருடைய போக்யதையை அனுபவிக்கப் புக்க இடத்திலே பரிச்சேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே
கலங்கி
விஷய துர்பலத்தாலே வந்தது என்று அறியாதே
தம் கரண சங்கோசத்தினால் வந்தது என்று அனுசந்தித்து
அதுக்கு அடியான
ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேணும் என்று கூப்பிட்டார் –

——

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

உயர்வற என்கிற பாட்டை -கிற்பன் கில்லேன்-என்கிற பாட்டை விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கிற்பன் கில்லேன்-
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ராப்ய ப்ராபகங்கள் எல்லாம்
அநித்யம் என்று விட்டு இதர விஷயங்களில் ஸாதனம் மஹா ஆயாஸம் –
பலமும் அல்ப அஸ்த்ரங்களாய் இருக்கும் –

இது பகவத் விஷயத்தில் வந்தால் -இச்சைக்கு மேற்பட்டது ஓர் ஆயாஸம் அன்றிக்கே
பேற்றில் வந்தால் உயர் நலம் உடையவன் யாவன் ஒருவன்
அவனதாய் புனரா வ்ருத்தி இல்லாத விலக்ஷண மோக்ஷமாய் இருக்கும்

அதுக்கு ஈடாக ஒன்றைச் செய்ய வல்லீரோ என்ன
அது செய்கிறோம் என்று இலம்

அல்ப அஸ்திரமான இதர விஷயத்தைத் தவிர வல்லீரோ என்ன
அதுவும் தவிர்க்கிறேன் என்று இலம்

கிற்பன் கில்லேன்-என்கிறவன் எவன்
முன நாளால் அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தவன்

இப்படி விஹிதத்தைச் செய்யாமையும்
அவிஹிதத்தைச் செய்கையும் என்று தொடங்கி
என்றவன் கேழ்க்க

முன நாளால்
கால தத்வம் உள்ளதனையும் இதுவே அன்றோ எனக்கு யாத்திரை

புறம்பே நம்மை ஒழியவும் துவக்க வற்றதாகவும் உண்டோ என்ன
அல்ப சாரங்கள் அவை
உன் பக்கல் வராதபடி தகைய வேண்டுவது உண்டு
அவற்றின் பக்கல் உள்ளது முள்ளிப் பூ ரஸம் போலே அற்பமாய்
பல பல விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து ஸர்வ சக்தியான தேவரை அகன்று ஒழிந்தேன்

இப்படி நீர் கை கழிந்ததாகில் நம்மைச் செய்யச் சொல்வது என் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ மயர்வற மதி நலம் அருளினபின்பு
தத் வியதிரிக்த போகங்கள் எல்லாம் அல்ப அஸ்த்ரங்களாய்த் தோற்றிற்று

அபர்யாப்த்த அம்ருதாசிகளான -நித்ய ஸூ ரிகள் ஸேவ்யனான நீ
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா
உயிர் செய்கையாவது
சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
ஸ்திதி கமன சயனாதிகளுக்கு யோக்யமாம் படி பதார்த்தங்களை யுண்டாக்குகை

இத்தைச் செய்தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி
நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே
உபய விபூதி நாதனான உன்னுடைய
ஹேய பிரதிபடமாய்
அனவதிக தேஜோ ரூபமாய்
அத்யந்தம் ஸ்ப்ருஹணீயமான
திருவடிகளை நானும் என் மனமும் இசைந்து வந்து பற்றித் தொழுது வர்த்திப்பது என்று கொலோ
இதுக்கு ஒரு குணாதிக்யம் உண்டாக்கி உன்னைக் கிட்டுக்கைக்கு அவதி நாள் இட்டுத் தர வேணும் என்கிறார் –

————

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஒழிவு இல் காலத்தில்
நீர் கரண சங்கோசத்தை அனுசந்தித்து ஈடுபட வேண்டா
இது விஷய ஸ்வ பாவம் காணும்
நித்ய ஸூரிகளும் நம்மை அனுபவிக்கப் புக்கால் இப்படியே காணும் படுவது –

ஆனபின்பு இவ்வுடம்போடே உம்மை அடிமை கொள்ளுகைக்கு திருமலையில் வந்து நின்றோமே
என்று அங்கே நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
அங்கே அடிமை செய்யப் பாரித்தார்

உயர்வற என்கிற பாட்டை -ஒழிவு இல் காலம் -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில் –

திருமந்திரத்தில் சரம சதுர்த்தியில் சொன்ன புருஷார்த்தத்தை
திருவாய் மொழியிலே முதல் பாட்டாலே விவரிக்கிறார்
அந்த அர்த்தத்தை ஒழிவில் காலம் என்கிற பாட்டாலே விவரிக்கிறார்
எங்கனே என்னில்

உயர்வற -ஒழி வில்
உயர்வானது மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
கலா காஷ்டாதி ரூபமாக அநேக கல்ப அவசானமான பூத பவிஷ்யத் வர்த்தமான
காலங்கள் எல்லாம் என்றபடி

உயர்வற ஒழிவில் காலம்
ஒருவரைப் பார்க்க ஒருவர் உயர்வதும் தாழ்வதுமாகையாலே காலமும் அதுக்கு அனுரூபமாய்
கலா காஷ்டாதிகளுமாய் உயர்வது மாறுவதுமாய்

காலமும் அற -இல் -என்கிறது
இல்லாமையைச் சொல்கிறது

உயர் நலம் -ஒழிவில் காலம்
அகால கால்யமான -நலம் அந்தம் இல்லதோர் நாடாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியினுடைய பரம ஆனந்தத்தைச் சொல்கிறது

உடையவன்
உபய விபூதியை யுடையனாய் யாவன் ஒருவன் அவன்
உடனாய்
உபய விபூதி நாதனை உடனாய் மன்னி
யவன் அவன்
திவ்யாத்ம ஸ்வரூப ப்ரகாசகமான
கல்யாண குண விசிஷ்டமான
திவ்ய மங்கள விக்ரஹத்தோடே கூடி இருக்கிற
ஸ்வாமியோடே கூட
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -என்கிற
பிராட்டியைப் போலே உடனாய் மன்னி

காலம் எல்லாம் -என்று
சர்வ காலமும் என்றது

மன்னி -என்றது
ஸர்வ அவஸ்தையிலும் என்றபடி

விண் மீது இருப்பாய் -இத்யாதிப்படியே
பரத்வாதிகள் ஐந்திலும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் –

அவன் ப்ராப்ய அதிகாரி
அவன் ப்ராப்யமான திரு வேங்கடமுடையான் –

மற்றும் இப்படி நீர் அறிந்தபடி என் என்னில்
மயர்வற வழு விலா அடிமை
ப்ராப்யத்தில் மதி மயங்காமல் -ஒன்றும் நழுவாமல்
அற -இல்லா
ப்ராப்யாந்தரத்தில் ருசி இல்லாமல் அறுத்து மதி நலம் அருளினான் –

அடிமை செய்கைக்கு உறுப்பாக -ஞான சக்தி ப்ரேமங்களாய்க் கொண்டு
ஸர்வ வித கைங்கர்யங்களும் செய்யும் படிக்கு அருளினான்

அடிமை செய்யும் வேண்டும் நாமே
யவன் -கிருபா பாத்ர பூதனான நாம்
அவன் அருளினவன்

ஆர்ஜித்து வந்தது அன்று
அர்த்தித்து வந்தது அன்று
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமுமே பற்றாசாக அருளின பக்தியை யுடையவன் –

அவன் கிருபா ப்ரவாஹமுடையவனான அயர்வறும் அமரர்கள் அதிபதி
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி

அயர் -அசர்வு
அசராமல் ப்ராப்ய அனுபவம் பண்ணுமவர்கள்
தெழி குரல் அருவி
நாரங்களாய் நித்ய ஸூரிகள் அடிமை செய்கிறபடி
அருவிகள் ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு வாசா கைங்கர்யமான ஸாம கானமான
செஞ்சொல் கவி பாட வாருங்கோள் என்று அழைப்பாரைப் போலே
தெழி குரல் அருவி சோரா நின்றது

தெள்ளருவி கொழிக்கும் திரு வேங்கட மா மலை இறே
அதிபதி -எழில் கொள் சோதி
காலோசிதமாக அடிமை கொள்ளுமவன் எவன் அவன்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தவனை
க்ரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக் கொள்ளுமவன்

திருவேங்கடத்து எழில் கொள் சோதி -துயர் அறு சுடர் அடி
இப்படிப்பட்ட அதிகாரிக்குத் துயராவது
ருண த்ரயமும் -தேவ ரிஷி பித்ரு கடன்கள் –
அபசார த்ரயமும் -பகவத் பாகவத் அஸஹ்ய அபசாரங்கள்
வேங்கடங்கள் என்கையாலே
மெய்ம்மேல் வினை முற்றவும் வேம்

வேங்கடத்து எழில் கொள் சோதி சுடர் அடி தொழுது எழு
வானார் சோதி
நீராழிச் சோதி
தம் தாமமே மேவிய சோதி
ஞானச் சுடர் விளக்கு -என்கிற ஜோதிகளில் வ்யாவ்ருத்தி

வானார் சோதி -பகல் விளக்குப் பட்டு இருக்கும்
நீராழிச் சோதி -நீர் பட்ட விளக்காய் இருக்கும்
நீராழிச் சோதி தம் தாமமே மேவிய சோதி -அணையும் விளக்காய் இருக்கும்
ஞானச் சுடர் விளக்கு -குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும்
வேங்கடத்து எழில் கொள் சோதி -குன்றில் இட்ட விளக்காய் இருக்கும்

எந்தை தந்தை தந்தைக்கே
இப்படிப்பட்ட ஸ்வாமி யானவன்
சுடர் அடி தொழுது எழு என் மனனே
எந்தை தந்தை தந்தைக்கே
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று மனஸ்ஸை ஸம்போதிக்கிறார்

நான் கரணியும்
நீ காரணமும்
ஆனால்போலே
நமக்கு அவன்
ஸ்வாமியுமாய் -ஸர்வ வித பந்துவுமானவன்
அவனுக்கு வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று
ப்ராப்யத்தைத் அர்த்தித்துப் பெறுகிறார் –

———-

புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவனில்
இவர் பாரிப்புக்கு ஈடாகத்
தன்னையும்
தன் விபூதியையும்
தன் ஸர்வாத்ம பாவத்தையும் காட்டிக் கொடுக்கக்
கண்டு ஹ்ருஷ்டராய் பாரித்த படியே வாசகமாக அடிமை செய்து தலைக்கட்டினார்

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10-

உயர்வற -என்கிற பாட்டை -யாவையும் எவரும் தானாய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற யாவையும் எவரும் -என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
பூதங்கள் பவ் கிதங்கள் -ஸ்லாக்யமான ரத்நாதிகள் -ரஸவத் பதார்த்தங்கள் -கானாதிகள்
பகவத் ஸ்வரூப குணங்களாய் உள்ள யாவை -யவரும் -தானாய் நிற்கையாலே
ஒன்றுக்கு ஓன்று உயர்வும் தாழ்வுமாய் இருக்கையாலே

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
சேதன அசேதனங்களில் வியாபித்து நீ நின்றால்
தத் கத தோஷைர் அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கும்
சேதன அசேதனங்கள் அடங்க தானே என்ற சொல்லுக்குள்ளேயாய்
பிரகாரப் பிரகாரியாய் இருக்கும் அத்தனை –

சேதனருடைய ஸூ கித்வ துக்கித்வங்கள்
அசேதனங்களுடைய பரிணாமாதிகள் தட்டாது இருக்கிற படி

அவர் அவர் சமயந் தோறும் தோய்வு இலன்;
சேதன அசேதனங்களை தானே என்னும் சொல்லுக்குள் அடங்கும்படி அவற்றோடு கலந்து நீ நிற்கச் செய்தேயும்
அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கலில் தட்டாத படி நிற்கும் –

சேதனனுக்கு அசித் கதமான பரிணாமாதிகள் இல்லையே யாகிலும் அந்த அசித் சம்சாரக்கத்தாலே
ஸூக துக்கங்கள் உண்டாகா நின்றது இறே
அப்படியே இவனுக்கும் தட்டாது என்னத் தட்டாது -ப்ரவேஸ அனுகுணத்தாலே

இப்படி என் கொண்டு அறிந்தீர் என்ன
விபூதிமானாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்தேன்
பகவத் நிர்ஹேதுக கிருபையால் பிரகாசித்தது

தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்;
இந்த்ரியங்களாலும் அறியப் போகாதவன்

யாவன் ஒருவன் -அவன் அமரர்கள் அதிபதி
சற்றும் விஸ்ம்ருதி அற்று அனுபவிக்கிற நித்ய முக்தருக்கும்
உணர்வின் மூர்த்தி;
ஞான ஆனந்தங்களாலே ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் யுடையவன்

யவன் அவன் -ஆவி சேர் உயிரின் உள்ளான் -யாதுமோர் பற்று இல்லாதான்
ஆவி யுண்டு
பிராண ஆஸ்ரயமான சரீரம் -அத்தோடு சேர்ந்த உயிர் உண்டு -ஆத்மா
அதுக்கு அசித் ஸம்பந்தத்தாலே பால்யாதிகள் உண்டாகிறது போல்
பரமாத்மாவுக்கு தத்கத தோஷங்கள் தட்டாவோ என்னில்
ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில்,
அவன் பக்கல் பக்தி உண்டாகில்
அவனையும் கூட லாமே.–என் மனனே -தொழுது எழு
என்று நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கையில்
அவனுடைய சவுந்தர்யாதிகளில் ஈடுபட்டு இருக்குமவர்களைக் கொண்டாடியும்
அது இல்லாதாரை நிந்தித்து
முகமை தலை மத்திடை இட்டுச் சொல்லுகிறார் –

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

உயர்வற என்கிற பாட்டை கருமமும் கரும பலனும்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கருமமும் கரும பலனும் ஆகிறது
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
கர்ம ஞானங்களாலும் -தத் சாதன பலன்களாலும் உயர்வும் தாழ்வும் ஆயிற்று –

அதில் விஞ்சின கைவல்யமாகிற படு குழியிலே விழாமல் ரக்ஷிக்கிறவன் யவன் அவன்
கருமமும் கரும பலனும் ஆகிய காரண மாணவன் எவன் ஒருவன்
அவன் மயர்வற மதி நலம் அருளினான்

மயர்வாவது
அவித்யாதிகளால் வரும் காம்ய பலன்களைப் போக்கித் தன்னையே ப்ராப்ய பிராபகங்களாக அறியும் படி
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே அருளினவன் யாவன் ஒருவன்
அவன் கருமமும் கரும பலனாக காரணனும்
அனுஷ்டாதாகவும் நியாமகனும் பல ப்ரதனும் அவன்

ஆகையாலே
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
இப்படி உபாசகருக்கு பல ப்ரதானவன்
ஸ்ரீ யபதியாய்
காந்தி மிக்கு இருந்துள்ள நீல ரத்னம் போன்ற திரு மேனியையும்
அகவாயில் வாத்சல்யம் தோன்றும் திருக்கண்கள்
கருணை அம்ருதம் பொழிகிற செங்கண் மாலினை

தேவர்களுக்கு உபகாரகனான -அயர்வறும் அமரர்கள் அதிபதியை –
அநிமிஷரான நித்யருக்கு அதிபதி யானவனை

ஒருமை மனத்தினுள் வைத்து
நித்ய ஸூரிகளைப் போலே என்னையும் மனனும் இவனும் ஸதா அனுபவம் பண்ணும்படி
அனுபவிப்பித்து எனக்கும் உபகாரகன் ஆனவனை

ஒருமை மனத்தினுள் வைத்து துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–
ஹேயபிரதிபடமான சுடர் அடியைத் தொழுது
ஒரு பிரயோஜனத்துக்காக இன்றிக்கே
நெஞ்சிலே ஒருமிக்க வைத்து
அத்தாலே சிதிலமாய்
இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே ஆடிப்
பெருமையையும் லஜ்ஜையையும் விட்டு அடைவு கெட ஏத்துங்கோள்
அதுவே உங்களுக்குத் புருஷார்த்தம் என்று நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும்
உபதேசித்து அனுபவிக்கிறார் –

———

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக்கண்ணனில்
பகவத் குண ஞானம் இல்லாமையாலே ஈஸ்வரனுடைய விஷயீ காரத்துக்கு உறுப்பாகி
அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்ய காஷ்டையை ஸம்சாரிகளுக்கு உபதேஸிக்கிறார் –

——

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

உயர்வற என்கிற பாட்டை -தஞ்சமாகிய -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவதாந்த்ர பஜனத்தால் உயர்வு அற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன்
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய்
அங்கன் அன்றிக்கே
உயர்வற உயர் நலம் உடையவன் என்று
விண் மீது இத்யாதிப்படியே பரத்வமே பிடித்து அவதாரத்து குணத்து அளவும் உபதேசித்தார்
அத்தாலே உயர்வு அற்றார்கள்

பரத்வம் வாஸா மகோசரமாய் எட்டா நிலமாய் இருந்தது
அவதாரத்துக்குப் பிற்பாடாரானோம்
நாங்கள் எங்கே யாரை ஆஸ்ரயிப்போம் என்ன

நீங்கள் உகந்தபடியே உகந்தவற்றைத் திருமேனியாகக் கொண்டு இருக்க
நீங்களும் அவற்றை திவ்ய ஸம்ஸ்தாபனாக விரும்பி ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

உயர்வற உயர் நலமுடையவன் -தஞ்சமாகிய தந்தை தாய் இத்யாதி
லோகத்திலே ஒருவரை ஒருவர் தாய் தகப்பனாகக் கொண்டு
உயர்வும் தாழ்வுமாய் இருக்குமா போலே அன்று இறே
உயர்வற உயர் நலமுடையவன் தஞ்சமாகிய தந்தை தாயோடு தானும் ஆனான் –

அவர்கள் இவனுக்கு ஓர் இடர்கள் வந்தால் விட்டுப் போவார்கள்
இவர்களோடு உண்டான பந்தம் தான் கர்மம் அடியாக வந்ததாகையாலே கர்மம் க்ஷயிக்க க்ஷயிக்கும்

இங்கன் அன்றிக்கே பூதாநாம் யோவ்யய பிதா -சத்தா யோகீ -ஸகல பதார்த்தங்களும் பிதாவாய் இருக்கும்

யவன் அவன் தானு மாய்
மாதா பிதாக்கள் பொகட்டுப் போனாலும் நாம் ஜீவிக்க வேணும் என்று இறே
தனக்கு நன்மை பார்ப்பது

அவை அல்லனுமாய்
கீழ்ச் சொன்னவர்கள் அல்லனுமாய்
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ -என்கிறபடியே
ஸர்வ வித பந்து மாத்ரம் அன்றிக்கே
ஞான ப்ரதனனான ஆச்சார்யனாய் மயர்வற மதி நலம் அருளினான் –

சரீரமேவ மாதா பிதரவ் ஜநயத-என்கிறவர்கள் அல்லர்

ஸஹி வித்யாதஸ் தஞ்ஜநயதி– ஸ்ரேஷ்டம் ஜன்ம –என்கிறபடியே
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ஸர்வ பந்துவும் தானே -என்கிற மதிநலம் அருளினான் –

எவன் அவன் -அடர்வரும் அமரர்கள் அதிபதி -எஞ்சல் இல் அமரர் குல முதல்-
இப்படி இருக்கிறவன் யார் என்னில்
நித்ய ஸூரிகளுக்கு உஜ்ஜீவன ஹேது வானவன்
எஞ்சல் -சுருக்கம் -அயர்வும் அப்படியே
இரண்டாலும் பகவத் அனுபவத்தில் ஸங்கோசம் இல்லாத அமரர் குலம் உண்டு -நித்ய ஸூரிகள் திரள்

அதற்கு நிர்வாஹகன் யாவன் ஒருவன் அவன் -மூவர் தம் உள்ளும் ஆதியை
த்யேய வஸ்துவை -காரணந்து த்யேய -இறே

அன்றியே
ப்ரஹ்ம ருத் ராதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை

அன்றியே
மூவர் தம் உள்ளும் ஆதியை-என்று
அநந்த கருட விஷ்வக் சேனர்கள் -முதலானவர்களுக்கு
த்யேயா நாராயணஸ் ஸதா -என்று அவர்கள் தியானத்துக்கு ஆதியான காரணனை

ஆக
ஸர்வ காரணன் என்றபடி

அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
கீழ்ச் சொன்னவை எல்லாம் அச்சத்துக்கு உடல் இறே

ஜகத் காரண பூதனாய்
நித்ய முக்த அனுபாவ்யனாய்
ப்ரம்ம ருத்ராதிகளுக்கு நியாந்தாவானவன்
விபூதி த்வயத்தில் உள்ளார் எல்லாருக்கும் ஓக்க ஸர்வ பந்துவானவனை
நம்மாலே கிட்டப் போமோ -என்று இங்கனே
அஞ்சி நீர் உலகத்தில் உள்ளீர்கள்
லௌகிகரான நீங்கள்
அஞ்சி அவன் இவன் என்று கூழேன்மின்;

அவன் ஆகிறான்
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னனாய்
உயர்வற உயர்நலம் உடையவனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் –

தேவதாந்த்ர பிரதிபத்தி யாகிற மயர்வற மதி நலம் அருளி
பரத்வாதிகளிலே அருமையை நினைத்து அஞ்சின அச்சம் தீர நாம் உகந்ததொரு
த்ரவ்யத்தைத் திருமேனியாகக் கொண்டு
இவன் என்று
ஸுலப்யம் தோற்ற நம் புத்தி அதீனமாய் இருப்பான் ஒருவன் ஆனபின்பு
அவன் அபரிச்சின்னன்
இவன் பரிச்சின்னன் -என்றும்
இங்கனே சம்சயியாதே மாந்தராகாதே கொள்ளுங்கோள்

நீள்கடல் வண்ணனே.
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
பராத்பரனே -அர்ச்சாவதார ஸூ லபனாய் இருக்க சம்சயித்துப் பயப்பட வேண்டா

சுடர் அடி -பரஞ்சோதி நீ பரமாய் -என்று குண பூர்த்தி உள்ளது –
அர்ச்சாவதாரத்திலே ஆகையாலே
அவன் இவன் என்று கூழேன்மின்;
அர்ச்சாவதாரத்தினுடைய திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் –

பரத்வாதிகளைப் போலே கிட்ட அரிதே என்கிற ஹேயமும் இல்லை
அர்ச்சாவதார ஸர்வ ஸூலபமுமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயுமாய் -இருக்கிற
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்

இவ்விடத்தை நித்ய விபூதியிலும் அதிசயமாகக் கொண்டு இருக்கிறவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும்
உபதேசித்து உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பயிலும் சுடர் ஒளியில்
இப்படி உபதேசிக்கச் செய்தேயும் நெஞ்சு நெகிழ்ச்சி அன்றிக்கே இருந்த
ஸம்ஸாரிகளைக் கண்டு நோவு பட
நீர் ஏன் இவற்றில் நோவு படுகிறீர் -திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பாரீர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய்
அவர்கள் எனக்கு நாதர்
அவர்களுடைய சேஷத்வத்தினுடைய எல்லை நிலமாக வேணும் என்கிறார் –

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

உயர்வற என்கிற பாட்டை -சன்ம சன்மாந்தரம் காத்து-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஜன்ம ஜன்மாந்தரமாவது –
பஞ்சாக்கினி வித்யையில் -சொல்லுகிறபடி ஜீவனானவன் மேகத்திலே புக்கு
வர்ஷ ரூபத்தாலே பூ கதமாய் வ்ரீஹியிலே புக்கு அன்ன ரூபத்தாலே புருஷன் பக்கலிலே புக்கு
பின்பு பஞ்சமியான ஆஹுதியிலே புக்க பின்பு இறே கர்ப்பமாவது –

இப்படி வருகிற ஜென்ம பரம்பரைகள் ஆகிற உயர்வற்று வேர் அறுத்து
வர்த்தமான ஜன்மத்திலே யாக்கி
காத்து
பின்பு ஒரு தேகத்திலே புகாதபடி பண்ணி
உயர்நலம் உடையவன் எவன் அவன்
அடியார்களைக் கொண்டு போய்
ஆனந்தாதி கல்யாண குண பூர்ண னானவன் தன்னிடத்திலே ஸர்வ பர
ந்யாஸம் பண்ணி இருக்கிற அடியார்களை

நலமுடையவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பாரதந்தர்ய ஸ்வரூபரான அடியார்களை

மதிநலம் அருளினவன் யவன் அவன் வேதைக சமதி கம்யனாகையாலே நிர்ஹேதுகமான
அனுக்ரஹத்தாலே கொண்டு போய்
மரண சமயத்து அளவும் பார்த்திருந்து பக்தியும் அந்திம ஸ்ம்ருதியும் தேவையாக்காதே
அஹம் ஸ்மாரமி என்று தான் நினைத்து இருந்தபடியே
ப்ரம்மந்த்ரம் வழி தெரியாதே இருக்கிற இவனுக்கு சதாதிகையான நாடியாலே
ஹார்த்த அநுக்ரூஹித -என்கிறபடியே தான் கூடக்கொண்டு புறப்பட்டு
இவனுக்கு இளைப்புத்தீர பரம ப்ரவேசத்தைப் பண்ணுவித்து
மேல் வழி போகைக்கும் தரிப்பு உண்டாகும் படி பண்ணி

உயிர் கொண்டு உடல் ஒழிய -இத்யாதிப்படியே
கர்ம சம்பந்தம் அறச் செய்தேயும் வித்யா மஹாத்ம்யத்தாலே விரஜை அளவும்
ஸூஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி

அர்ச்சிராதி கணங்களோடே ஓக்க ஆள் இட்டு இராதே -நயாமி -என்கிறபடியே
மாதவன் தன் துணையா நடந்தான் -என்கிறபடியே
வழியில் உள்ளார் சிரஸா வஹித்துக் கொண்டு பரமபதத்திலே கொண்டு போய்
அயர்வறும் அமரர்கள் உடன் கூட்டின அதிபதி யானவன்
தன்மை பெறுத்தி
ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -என்கிறபடியே
ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்க –

அயர்வற்ற நித்யரைப் போலே யன்றிக்கே பின்னையும் அதிசயிதமான பாத உபதானமாகத்
தன் தாளிணைக் கீழ் கொண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணி
இவன் துயரான சரீர சம்பந்தம் அற்ற அளவிலே துயர் அற்ற அடியாயிற்று –

இது தான் இவனுக்கு உபகரித்தானாக அன்றிக்கே
தன் பேறாக -நினைத்து இருக்கும் மஹா உபகாரகனை
ஸா யுஜ்யம் ப்ரதி பன்னாய -என்கிறபடியே
தன்மை பெறுத்திய அப்பனை
இப்படிச் செய்த உபகாரகனைத் தொன்மை பிதற்ற வல்லார்
ஸ்வா பாவிகமான ஒவ்தார்ய குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாகப் புகழுமவர்களை

பிதற்றுமவர் கண்டீர் –பயிலும் திருவுடையார்–நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.
பகவத் சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வ சம்பந்தத்தை யுண்டாக்கி —
நமக்கு அவன் திருவடிகளிலே கைங்கர்யத்தை யாவதாத்ம பாவி நடத்தக்கடவ விஸ்வசனீயன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
ததீய சேஷத்வ பிரதிபத்தி உடையதாய்க் கொண்டு வர்த்தி என்கிறார் –

——————–

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர்
அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

முடியானே யில்
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்கள் -என்று
இவர் ஆசைப்பட்ட படியே கிடையாமையாலும்
ஸ்மாரக ஸந்நிதியாலும் ஆற்றாமை மீதூர்ந்து
தாமும் தம்முடைய கரண க்ராமங்களும் பெரு விடாய்ப்பட்டு அவற்றின் உடனே கூப்பிடுகிறார் –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம்
நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன்
ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

உயர்வற என்கிற பாட்டை -வாசகமே ஏத்த -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
முடியானேயில்
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் -என்று விடாய்த்த இவருக்கு
நிழலும் அடிதாறுமான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காட்டிக் கொடுக்கக் கொண்டு அனுபவித்து
அவர்கள் எனக்கு நாதர் என்று திருவடிகளிலே -விழுந்தார்

பாகவத விஷயம் பகவத் விஷயத்திலே மூட்டிற்று
அத்தாலே அபி நிவேசம் தலையெடுத்துக் கரை புரண்டு
என்று கொல் கண்கள் காண்பது என்னும் அளவு அன்றிக்கே
மற்ற இந்திரியங்களும் விடாய்த்து
ஒன்றின் விருத்தியை ஓன்று ஆசைப்பட்டு
எல்லா இந்திரியங்களின் விருத்தியைத் தாம் ஆசைப்பட்டுத் தன் கரணங்களும் தாமுமாகக் கூப்பிடுகிறார் –

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அவரவர் கரணங்கள் அந்நியமாய்ப் போகையாலே உயர்வு அற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -வாசகமே ஏற்ற அருள் செய்யும்
ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனானவன் யாவன் ஒருவன் -மயர்வற மதி நலம் அருளினவத்தால்
வாசகமே ஏத்த அருள் செய்தார் –
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
மன பூர்வோ வாக் உத்தர -என்கிறபடியே
மனஸ்ஸூ அனுபவிக்க -அந்த அனுபவத்தை வாக்கு ஸ்துதித்து அனுபவிக்கையும்
மனத்தைப் போலே ஸ்மரிக்கவும் வாய் வந்தால் போலே ஸ்துதிக்கவும்
தத் தத் விரோதியான ஆலிங்கனம் பண்ணும் படியும் ஆசைப்பட்டு
இவ்வாசகமே ஏத்திப் போவதோ — நானும் ஒருக்கால் ஸ்மரித்து ஏத்தல் ஆகாதோ -என்னா நின்றது
விபந் யவ -என்று
நித்ய ஸூரிகள் ஏத்த இருக்கிற வுனக்கு நானும் ஒருக்கால் ஏத்தினால் ஆகாதோ –

அயர்வறும் அமரர்கள் -நம இத்யேவ வாதிந -நமஸ் ஸப்தம் ப்ரயுஞ்ஐதே -என்பாராய்
ஆக -அயர்வற்ற
வானவர் தம் நாயகனே –
ஸ்வாமியான நீ என்னையும் வாசகமே ஏத்தப் பண்ணினால் ஆகாதோ என்று
கை -தன் விருத்தியையும் செய்ய ஆசைப்பட்டு வாக்கு விருத்தியையும் ஆசைப்படா நின்றது

நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட
ஆன் ஆயர் தாயவனே!என்று தடவும் என் கைகளே
வேயகம் -மூங்கில் அகம்
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு இருட்டு அரை ஆகையாலே
பசு வெண்ணெய் களவு காணப்புக்கு தடவிக்கொண்டு வரா நிற்கச் செய்தே
கையிலே உரி தாக்கினவாறே ஸ்மிதம் பண்ணினான்
அதுவே கை விளக்காக அரை இருட்டும் தன் உடம்பு இருளும் குழல் இருளும் நீங்கிற்று –

அப்போது ஆழ்வார் தம் அபேக்ஷிதம் பெறுகைக்காக அவன் பின்னோடே நுழைந்து சென்று
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் துயர் அறு சுடர் அடி தொழுது
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்று தடவும் என் கைகள்
என்று தடவிப் பிடித்துக் கொண்டு அர்த்திக்கிறார்

எம் மநோ வாக் காயங்கள் உனக்கு ஏதேனும் பச்சை இட்டது உண்டோ -இல்லையே
மநோ விருத்தியான நினைவும்
வாக்கின் விருத்தியான ஸ்துதியும்
கையின் விருத்தியான ஆலிங்கனமும்
உண்டாக வேணும் என்று தடவா நின்றது

ஆனாயர் தாயவனே
ஆனாயருக்குத் தாய் போலே பரிவனான வனே என்று தடவும் என் கைகளே

அயர்வறும் அமரர்கள் அதிபதியை
அப்ராப்ய மனஸா சஹ -என்று வேதத்தாலே எட்டாதவனை
படலை படைத்து உள்ளே புக்குக் கொண்டியிலே பிடிக்கக் காணும் தேடுகிறது

நவநீத சவுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்தவாறே அத்தாலே வந்த ப்ரேமத்தாலே
இரண்டு கைகளுக்கு கண் தோற்றுகிறது இல்லை இறே
கைகள் ஆரத் தொழுது என்றதை மறந்தார்
ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே-என்று ஈடுபடுகிறார் –

—————————

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதத்திலே
ஊனில் வாழ் உயிரிலே அனுபவித்ததற்குத் துணைத் தேட்டமான வோபாதி
இழவுக்கும் துணை யார் யுண்டோ என்று பார்த்த இடத்தே
அவர்கள் புறம்பே அந்நிய பரராய் இருக்க
அவர்களை அதிலே நின்று மீட்கலாமோ என்று பார்த்து உபதேசித்த இடத்து
அவர்கள் அதில் நின்றும் மீளாமையாலே அவர்களை போல் அன்றிக்கே
நான் அநந்யார்ஹ கரணன் ஆகப்பெற்றேன் என்று உகந்தார் –

——

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

உயர்வற என்கிற பாட்டை -வாய் கொண்டு மானிடம் பாட வந்த -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
உயர்வும் தாழ்வுமாய் இருக்கிறவர்களை
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;

விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் என்று இருக்கிற
கரணங்களைக் கொண்டு பாட வல்லேனோ
அதில் ப்ரதானமான மநோ வாக் காயங்களைக் கொண்டு ஷூத்ரரைக்
கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன் –

ஸ்ருஷ்டத்வம் வனவாஸாய -என்றால் போலெ இறே என் வாயும் பிறந்தபடி –
நான் பிறரைக் கவி பாடினால் என்னை அவன் ஸ்ருஷ்டித்ததற்கு பிரயோஜனம்
அவன் பெற்றானாம் படி எங்கனே
உயர் நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன் பராத்பரன் –
அவனைப் பாட வந்த கவி என்கிறார் –

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
ஆய் கொண்ட சீர் வள்ளல்
நீர் அவனைக்கவி பாடக் கடவோம் என்று இருந்தாலும்
வேதங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீளுகிற விஷயத்தைக்
கவி பாடப் போமோ உம்மால் என்ன

மயர்வற மதிநலம் அருளினன்
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
எவன் அவன்
பக்தானாம் என்கிறபடியே தன்னை எனக்காக்கி வைத்தால் எனக்கு கவி பாடக் குறை யுண்டோ
மயர்வாகிற மதி மயக்கத்தை அறுத்து மதி நலம் அருளினன்
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுகமான கிருபையால் அருளின
ஆய் கொண்ட சீர் வள்ளல்
ஹேய ப்ரதிபடமான கல்யாண குணங்களை யுடையவன் யாவன் ஒருவன்

அவன் வள்ளல் தனமாவது ஒவ் கார்யம் -யவன் -ஆழி
அத்யந்தம் சேஷ பூதனானவன் -அவன் பிரான் – சேஷியான உபகாரகன் –

எனக்கே யுளன்
என் பக்கலிலே விசேஷ கடாக்ஷம் பண்ணினவன்
கையும் திருவாழியுமான சேர்த்தி அழகைக் காட்டிக் கவிக்கு விஷயமாக்கிப் பாடுவித்துக் கொண்டபடி

யவன் அவன் -சாய் கொண்ட இம்மையும் சாதித்து –
இம்மையிலேயே மோக்ஷ ஸூகத்தையும் தந்து
சாய் -சாயல் -அதாவது பரமானந்தமான உயர் நலம்
அந்த பரமானந்த ஸூகத்தை இம்மையிலேயே சாதித்து

அதிலும் இது அத்யந்த ஸூகமாம் படி அருளி
தானே உபாய உபேயமாம் படி
யாவதாத்ம பாவியாய் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணி

அயர்வரும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் -அவன்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
அயர்வில்லாமல் ஆராவமுத தர்ஸிகள் தனக்கும் அபர்யாப்த்த அம்ருதம் ஆனவன்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று கொடுக்கும் படி
வான் இளவரசு வைகுந்தக்குட்டன் வாஸூ தேவன் ஆகையாலே

அதிலே தம்மோடு இருப்பாம் அத்தனை
அத்தேசம் நித்ய ஸூரிகளதாய் இருக்கும்
பவத் விஷய வாஸிந என்றதும் அவன் தன் பக்கலிலேயதாய் இருக்கிறது
யவன் முமுஷுவானவன் -அவன் -வீடு தருமவன்

வீடும் தரும் -என்று அபி ஸப்தத்தாலே
இம்மையில் சாய் கொண்ட ஸாம்ய போகமும்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் –

க்ருதன் தச குணம் மயா -என்று பெருமாள் மீண்டு எழுந்து அருளின போது
ஸ்ரீ பரதாழ்வான் பண்டாரத்தை வளர்த்து பதின்மடங்காக காட்டி ஒப்பினால் போலே இவனும்
பூர்வே ஸாத்யாளோடு இவர் தம்மோடும் வாசி இல்லை காணும் இவனுக்கு

அன்று ஈன்ற கன்றின் மேல் தாய் இரங்குமா போலே
த்வயி கிஞ்சித் ஸமா பன்னே கிம் கார்யம் சீதயா மம என்றபடியே
நீயும் அத்தைக் கண்டு கொண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் அறு சுடர் அடி -ஹேய ப்ரத்ய நீகம் -என்றபடி
இவனைப் பரிசுத்தனாக்கித் தான் சுத்தமான படி

வீடும் தரும் நின்று நின்று
இப்படிக் கொடுத்து இருக்கச் செய்தேயும்
ஒன்றுமே கொடுத்திலேனாகக் கடன் பட்டவன் போலே இரா நின்றான்

அன்றிக்கே
நின்று நின்றே தரும்
அதாவது
முதல் தன்னிலே ஐஹிகத்திலே அனுபவிப்பித்துப்
பின்பு ஒரு தேச விசேஷத்திலே ஏறக் கொண்டு போய் வைத்துப்
பின் கைங்கர்ய ஸூகத்தைக் கொடுக்கும் –
ஆக
சாத் மிக்க சாத் மிக்கத் தரும் –தொழுது எழு என் மனனே

ஆக
அந்நிய ஸ்தோத்ரத்தையும்
அஸேவ்ய சேவையையும் விட்டு
ப்ராப்த விஷயத்தைத் தொழுது ஆடிப்பாடி வர்த்தி என்று
தன் திரு உள்ளத்தோடு லௌகிகரோடு வாசி யற உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் ஆயிற்று –

———-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

சன்மம் பல பல வில்
இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணனான மாத்ரமேயோ
பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணனாகவும் பெற்றேன் என்று உகக்கிறார் –

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

உயர்வற –இடர் இன்றியே
விபூதியில் ஈஸ்வரன் ஆஸ்ரிதருடைய அபீஷ்ட பிரதானத்தின் ஒரு வகையை அருளிச் செய்கிறார்
அவை எவை என்னில்
வைதிக புத்ர ஆ நயனத்தை அனுசந்தித்து இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் உண்டோ –
இல்லை என்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -இடர் இன்றியே -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக
உயர்வு -வருத்தம் –
எல்லாருக்கும் வருத்தம் உண்டாய் உயர வேணும் –
அற
உயர்வு இன்றியே -ப்ரயாஸம் இன்றியே
இடர் இன்றியே -இடர் -துக்கம்
ப்ரயாஸம் இன்றியே உயர் நலம் உடையவன் -உயரா நிற்கிற நலம் யுடையவன் –

கிருஷ்ணனானவான் -ஒரு நாள் ஒரு பொழுதில் -ஏகாஹம் -என்கிற க்ரதுவில் தீஷித்து இருக்கும் போது
ப்ராதஸ் ஸ்வனம் தலைக்கட்டி மாத்யந்தின ஸ்வனத்துக்கு
தக்ஷிண சமயத்தில் ஒரு வைதிகர் வந்து ஸ்துதித்து –
நாலாம் புத்ரன் இது -முன்பு மூன்று புத்ரனை இழந்தேன் –
நாலாம் புத்ரனை யாகிலும் ரக்ஷித்துத் தர வேணும் என்ன

மேலே ஓலைச் சுவடி முறிந்து போனதால் எழுத்துக்கள் தெரியவில்லையாம்

எவன் அவன்
எல்லா உலகும் கழியப் படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
எல்லா உலகும் கழிய
மனுஷ்ய லோகம் தொடங்கி ப்ரஹ்ம லோகம் கடந்த அப்பாலே தேரை நடத்தி
எனக்கு மயர்வற மதிநலம் அருளினவன்

அவர்களுக்கும் மயர்வற மதி நலம் அருளின கிருஷ்ணனும் -படர்ப் புகழ் பார்த்தனும் வைதிகனும்
உடன் ஏறினவர்களுக்கு
மயர்வற
அவர்கள் துக்கம் தீர

திண் தேர் கடவி
மதி நலமான -ஞான பக்தியை -அருளிச் செய்து கொண்டு –
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருத் சைவ ஜனார்த்தன
என்று கீதா உபநிஷத் வாக்கியங்களையும்
மாம் ஏகம் -என்கிற வாக்கியங்களையும்
உசாவிக்கொண்டு
திண் தேர் கடவி–
எவன் அவன் வைதிகனுக்குப் பிரியம் தரும் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –

எவன் அவன் -கிருஷ்ணனாய் அவதரித்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
புகும் போது படர்ப் புகழ் பார்த்தனுக்கு அபகீர்த்தி வாராமல்
தமஸ் அளவிலே அவர்களை நிறுத்தி ஸகல ஸாஸ்த்ர வித்தமனான வைதிகன்
புத்ரார்த்தியாய் வந்தவனுக்கு புத்ர லாபம் உண்டாம்படிக்கும்
கலக்க ஏழ் கடல் ஏழ்-இத்யாதிப்படியே சமபூமியிலே நடக்குமா போல் நடத்தி
காரணமான மூல ப்ரக்ருதியில் செல்லாமல் அவ்வளவும் அவர் காரியமாக தேரோடே அவர்களை நிறுத்தி
தேருக்கும் இவர்களுக்கும் திண்மையைக் கொடுத்து நிறுத்தி –

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
நிரவதிக தேஜோ ரூபமாய் நின்ற -நித்தியமாய் –
தேஜோ ரூபமாய் நின்ற தன்னுடைச் ஜோதி -தனக்கு அசாதாரணமான ஜோதி

அத்யர்க்க அநல தீப்தன் தத் தானம் விஷ்ணோர் மஹாத் மன -என்று
ஆயிரம் கோடி ஸூர்ய அக்னிகளுடைய தேஜஸ்ஸை ஓட வைத்த தொரு தேஜஸ்ஸாக
வகுத்தால் போலே இருக்கையாலே இவர்களுக்கு கண் கொண்டு காண ஒண்ணாது
ஆகையாலே தமஸ்ஸிலே நிறுத்தி -தன்னுடைச் சோதி ஆகையாலே தானே போய்ப் புக்கான்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
தொழுது எழு என் மனனே

உடலோடும் கொணர்ந்து கொடுத்தபடி யாவது
நாச்சியார் கிருஷ்ண அவதாரம் சேவிக்க வேண்டி பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்கள்
அந்தப்படியே கொணர்ந்து கொடுத்தவன்

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் அறுகை யாவது
வைதிகன் துக்கம் தீரத் தன் திருவடிகள் துயரம் தீர்ந்து சுடர் ஒளியாயிற்று

வைதிகனுக்குப் புத்ர சோகம்
அர்ஜுனனுக்கு அபவாதம்
நீக்க சாமர்த்தியம் எல்லாம் தானாயிற்று
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
இப்படிப்போன பிள்ளைகளை மீட்டுக் கொடுத்த கிருஷ்ணன் திருவடிகளை பற்றின
எனக்கு துயரம் உண்டோ என்று இனியராகிறார் –

———–

மூன்றாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–இரண்டாம் பத்து விவரணம்-

February 3, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளில் –
விலக்ஷணம் ஆகையாலே கலங்கி ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
கண்ணால் கண்ட பதார்த்தங்கள் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகின்றனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு படுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கீழில் திருவாய் மொழியிலே
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை -என்று
ஸுலப்யமும் -மேன்மையும்-வடிவு அழகும் -ஆகிற ஆகார த்ரயமும்
மேல் விழுகைக்கு உடலாகயாலே இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று
பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பண்ண —

அனுபவம் பெறாமையாலே பிறந்த அவஸா அதிசயத்தாலே ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
ஆற்றாமை கை கொடுக்கத் தன் லீல உத்யானத்திலே சென்று இருந்து
அங்கே வர்த்திக்கிற பதார்த்தங்களைக் கண்டு
அவை எல்லாம் தன்னைப் போலவே நோவு படுகின்றனவாகக் கொண்டு
தான் அவற்றுக்குமாக நோவு பட

அப்போது ஸர்வ ஸக்தனானவன்
இவர் அவஸாதம் எல்லாம் தீர வந்து ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானைக் குறித்து
இனி ஒரு நாளும் என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்கிறார் –

———-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

உயர்வற -என்கிற பாட்டை -வேவாரா வேட்கை நோய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -வேவாரா -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி -ப்ரஹ்மானந்தது அளவும் -லீலா விபூதியாய் -அதில் வர்த்திக்கிற பத்தரைச் சொல்கிறது –
அவர்கள் அர்த்த காமங்களிலே ஈடுபடா நிற்கையாலே ஸம்ஸார மக்நர் ஆனார்கள்

உயர் நலம் என்று
நித்ய விபூதியையாய் -அதில் வர்த்திக்கிற நித்யரைச் சொல்கிறது –
அவர்கள் ஸம்ஸ்லேஷ ஏக போகராகையாலே நித்ய ஆனந்த மக்நர் ஆனார்கள் –

இவர்
அங்கன் அன்றிக்கே –
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த-
தாம் இரண்டு கோடியிலும் கூட்டு அற்று
பகவத் காமமானது அதாஹ்யமான ஆத்மாவைக் குருத்து வற்றாம்படி வேவா நின்றது –
லௌகிக அக்னிக்கு தஹிக்கக் கூடாத ஆத்மாவை ப்ரேமம் ஆகிற அக்னி தஹிப்பது ஆவியை இறே

இது எங்கனே அறிந்தீர் என்ன
மயர்வற மதி நலம் அருளுகையாலே அறிந்தேன் என்ன

அறிந்த படி என் என்ன –

மயர்வற மதி நலம் அருளின யுன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

முன்பு சொன்ன ஸம்ஸாரிகள் உண்டு உடுத்து திவா ராத்ர விபாகம் பாராமல் திரிய
நித்யரும் முக்தரும் பகவத் அனுபவமே யாத்ரியாய் இருக்க
உபய விபூதியில் உள்ளார் படி அன்றிக்கே
வேவாரா வேட்க்கை நோயாலே
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தேன்

மெல்லாவியை –அல்பப்ப்ராணனை –வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
கூடோக்நிர் இவ பாதபம் -உள்ளேயே குமுறுகிற நெருப்பு மரத்தை எரிக்குமா போலே
உள்ளே பிடித்துப் புறம்பே வேவா நின்றது –

ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
அகப்பட்டாருக்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய் –
இப்படி யாக்கின நீ ஒருவரும் இல்லாதான் ஒருவனோ –

உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா
சற்றும் அயர்வில்லாமல் ஆனந்த அம்ருத பானம் பண்ணும் நித்ய முக்தர் அனுபாவ்யமான நீ
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து கேசியை ஸம்ஹரித்து
யாமளார்ஜுனங்கள் நடுவே தவழ்ந்து போய்
மகா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –

இப்படி உபகாரங்களைப் பண்ணினவான உன்னுடைய
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணின
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
இத்தனைக்கும் காரணனான நீ
சுடர் அடி தொழுது எழப் பண்ணின நீ
சோர விடாதே கொள்

கீழ் ஒன்பது பாட்டிலும்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே என்று சம துக்கிகளைக் கட்டிக் கொண்டு அழக் கண்ட திருமால்
சகிக்க மாட்டாமல் வந்து அரதி யாற்றி சாந்தவதானம் பண்ணி

மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த எந்தாய்
புத்வா காலமதீதஞ்ச முமோஹ பரமா துர -பகவானைக் கண்டு அவனுக்கு அடிமை செய்யாமையாலே
ஏராளமான காலம் கடந்து விட்டது -அது தெரிந்தவாறே வருத்தம் தாங்காமல் மூர்ச்சை அடைந்தார் -என்க –
சீதா பிராட்டி பிரிவால் பெருமாள் மோஹித்தத்தை சொல்லும் ஸ்லோகம்
இதே போல் முன்புள்ள காலம் இழந்தாலும் மேல் உள்ள காலம் கை விடாதே கொள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -நீயும் மூவா முதல்வனைச் சோரேல் -கிடாய் என்கிறார் –

——–

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீட்டில்
பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப்பண்ணுமோ பாதி
கூடினாலும் மறக்கும் படி பண்ணும் என்கிறார்

உயர்வற உயர்நலம் என்கிற பாட்டைத் திண்ணன் வீடு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கீழில் திருவாய் மொழியிலே இவருக்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே

கடல் வெதும்பினால் விளாவ நீர் இல்லை -என்னுமா போலே ஆற்றாமையோடே முடியப் புக்கவாறே
அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர் –

இதுக்கு அடி என் என்று ஆராயப் பார்த்தவாறே
இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவல்லாத விஷய வை லக்ஷண்யமாய் இருந்தது –

இதுக்கு அடி என் என்று பார்த்தார்
ஸமஸ்த கல்யாண குணாத் மகனாகையாய் இருந்தது –

இது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே -ஸர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது –

உயர்வற உயர் நலம் உடையவன் என்றால் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இறே தோன்றுவது
இப்படி அறியும்படி மயர்வற மதி நலம் அருளினன் என்றது –

ஆக இங்கனே ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான ஸர்வேஸ்வரத்வத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –

கீழே மூவா முதல்வா -என்று
காரணத்வம் ப்ரஸ்துதமானவாறே
அந்தக் காரணத்தை உபபாதிக்கிறார் என்று பிள்ளான் பணிப்பர் –

உயர்வற உயர் நலம் யுடையவன் யவன் அவன் என்று சொல்லிற்று இல்லையோ
ஸர்வேஸ்வரத்வம் என்னில் ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லவர் அல்லர் இறே

ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது
இனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாயவாகாது
ஒரு குணத்தையே எல்லாக் காலத்திலும் அனுபவிக்க வல்லார் இவர்

மயர்வற மதிநலம் அருளுகையாலே ஒரு குணம் தன்னையே இதுக்கு முன் அனுபவித்தது என்று தோற்றாத படி
க்ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து அபர்யாப்த்த அம்ருதம் -ஆராவமுதம் -ஆனவன் -இவனே இறே
பயிலா நிற்கச் செய்தே இறே -பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் என்பது –

ஆகையாலே -உயர் நலம் உடையவனே காரணம் என்று -ஸ்ருதிப் பிரசித்தன் –
ப்ரமாதிகளைக் காரணம் என்கிறவர்களைக் குறித்து வெந்நரகில் விழாதே கிடி கோள்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீராடாதே கிடி கோள்

உயர் நலம் யுடையவன் எவன் அவன் -திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
ஆனந்தாதி கல்யாண குணங்களிலே வைத்துக் கொண்டு ஒவ் தார்ய குணம் சொல்கிறார்

திண்ணன் வீடு
திருத்தமான வீடு -என்று ஆவிர்ப்பவாதிகளான கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை என்கை
இத்தால்
திண்ணம் என்று நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் யுடையவன் அவன் யவன் அவன்
மோக்ஷப் ப்ரப்ருத்-அசேஷ -புருஷார்த்த பிரதனனாவான் ஆகையாலே மயர்வற மதிநலம் அருளினன்

பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறியலாம் என்று பார்த்தாலும்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று
எண்ணுக்கும் எல்லை கடந்து இருக்கும் என்கை

ஓரோர் குணங்கள் வகையற எண்ணிறந்து இருக்கும் –
ஆக
அஸங்கயேயமான கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் தன் குண விபூதிகளைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
அயர்வறும் அமரர்கள் -சற்றும் அயர்வு அல்லாமல் கைங்கர்யமே தாரகமான நித்ய முகத்திற்கு
அனுபாவ்யமானவன் யாவன் ஒருவன் அவன்
மண்ணும்
லீலா விபூதியில் பூமி அந்தரிக்ஷ முதலான லோகங்கள் எல்லாம் ஒருக்காலே அமுது செய்த
என் கிருஷ்ணனை அல்லது இல்லை –

எல்லா வகைகளாலும் நிர்வாஹகன் அவன் ஒழிய வேறு நிர்வாஹகர் யாரும் இல்லாத தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் திரு உள்ளத்தைக் குறித்தும்
தம் நெஞ்சு போல்வாருக்கும் –
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -ஆகையால்
ஹேய ப்ரத்ய நீகமான -வீடு முதலான ஸகல பல தோஹி விஷ்ணு -என்று
ஸர்வ பல ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய திருவடிகளைத் தொழுது
தாப த்ரயங்களும் மாறும் படி
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
தொழுது வர்த்தியுங்கோள் என்று
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———

ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

ஊனில் வாழ் உயிரிலே
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷம் உள்ளளவு பட்டிராமையாலே
இப்பேற்றுக்கு உஸாத் துணை யாவார் யார் என்று பார்த்த இடத்தில்
ஸம்ஸாரிகளில் இல்லாமையாலே
அவன் தன்னோடே ஓக்க ப்ராப்யமருமாய்
அவனை நித்ய அனுபவம் பண்ணா நிற்பாருமாய்
பகவத் அனுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப்புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கப் பெறுவது எப்போதோ என்று
அநா வாப்தியோடே தலைக்கட்டினார்

வாயும் திரை யுகளில் -ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிற இத்திருவாய் மொழி
நடுவு ப்ராசங்கிகமாக பரஸ்துததாம் அத்தனை

ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளானவற்றை
நீயும் நான் பட்டது பட்டாயோ என்று அவற்றைக் கட்டிக் கொண்டு அழுதார் அங்கு

இங்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நை சர்க்கிகமான-இயற்கையாகவே உள்ள –
நித்ய ஸூரிகளை உஸாத் துணையாகத் தேடுகிறார்

———-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

உயர்வற பாட்டை -இனியார் ஞானங்களால்-பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இனியார் ஞானங்களால்-
ப்ரஹ்மானந்தம் தொடங்கி மனுஷ்யானந்தம் அளவும்
யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
எத்தனையேனும் அதிசயித ஞானர் ஆனவர்களுடைய-ஞான விசேஷங்களாலும்
ஸ்வ யத்னத்தால் எடுப்பாருக்கும் அன்று
பேர்க்கப் போகாதே இருக்கிற என்னாயன் எவன் ஒருவன் அவன் மதி நலம் அருளினன்

கனிவார் வீட்டின்பம்
அஞ்ஞான கந்த ரஹிதமான பக்தி ரூபா பன்ன ஞானருடைய ஹ்ருதயங்களிலே வஸியா நிற்கிற

கடற்படா அமுதே!
அபர்யாப்த்த அம்ருதம் ஆனவனே
அன்றியே
அவர்கள் இருப்பிடங்களில் வந்து அவர்களுக்குப் போக்யமானவனே

இப்படி போக்யமானவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
தனியேன் வாழ் முதலே
அசர்வு இல்லாத நித்யருக்கு போக்யனானவன்
அமரர்க்கு இன்பத்தை விளைக்குமவன்
அல்லாதாருக்கு அறிய ஒண்ணாதவன்
இவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாது இருக்கிற எனக்கு அயத்ன ஸித்தமான போக்யனானவனே

தனியேன் வாழ் முதலே!
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ -தனியேன் வாழ் முதலாய் -மயர்வை அறுத்து –
மதி நலத்தை அருளின பின்பு
உபய விபூதியிலும் கூட்டு அற்றுத் தனியேனாய் நான் இருக்கக் கைமுதல் ஆனவனே

எனக்குப் பிரதான ஸூஹ்ருதம் ஆனவனே
ஏகாஷி ஏக கர்ணிகள் நடுவே இருப்பதற்கு அஸஹ்யமான படி இருக்கிற
எனக்கு வாழ் முதலானவனே

இப்படி ச நாதன தர்ம – அயர்வரும் அமரர்கள் அதிபதி
உபாய உபேயமும் தானே யாய் –
பகவத் அனந்தைக பரருக்கும் நித்ய முக்தருக்கும் போக்யனான

பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய்
நீ தான் தனிமையில் வந்து உதவிற்று இல்லையோ
வராஹ ரூபியாய் பிரளயங்கதமான புவனங்கள் ஏழையும் எடுத்து –

நுனியார் கோட்டில் வைத்தாய்
கூர்மை மிக்க கோட்டு இடையிலே வைத்து ரக்ஷித்தாய்
இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு சொல்லுகிறது –

இப்படி தனிமையிலே உதவி ரக்ஷிக்குமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய பிரதிபடமாய் தேஜோ ரூபமான திருவடிகளான யுன் பாதம் சேர்ந்தேனே -என் மனனே

இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி
நீ அறிவு தந்த போதே உன் திருப்பாதம் சேர்ந்தேனே யன்றோ
அடியார்கள் குழாங்களுடன் இனி சுடர் அடி தொழுது உஜ்ஜீவிக்கும்
அத்தனை அன்றோ என்று உகக்கிறார்

———–

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடியில் ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிட்டார்

கீழில் திருவாய் மொழியிலே
பருகிக் களித்தேனே என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை
பாகவதர்களோடே உசாவித் தரிக்க வேணும் என்று பார்த்து
அதற்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி -அனுபவிக்கக் கோலி நினைத்த போதே அத்திரளிலே புகப் பெறாமையாலே
மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வ கீயரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
எம்பெருமானுக்கு அறிவிக்கிற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

உயர்வற என்கிற பாட்டை -வாட்டமில் புகழ் -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில் –
உயர்வற -வாட்டமில் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்து அளவாக வருகிற உயர்த்தி அற்ற வாட்டமில் புகழ் வாமனன் –

உயர்நலம் உடையவனுக்கு வாட்டமாவது
இந்த விபூதி அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே விஞ்சி
ஈஸ்வரோஹம் என்று இருக்கையாலே ஈஸ்வரத்தினுடைய வாட்டமாம்

சேஷித்வமும் ஸ்வா தந்தர்யமும் வாட்டம் உண்டாய் வருகையாலே -அது வாராமைக்காக
தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளானாய் மகா பலி பக்கலிலே மண்ணை இரந்தவாறே
அது பெற்ற பின்பு வாட்டமில் புகழ் வாமனன் என்கிறது அல்ல

என் ஆர்த்தியில் ஓதுத்திலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வரும் என்று
இவ்வளவிலே வந்து முகம் காட்டுகையாலே வாட்டமில் புகழ் வாமனன் என்கிறார்

ஒன்றிலே ஓன்று கண் நழுவாமல் வந்து இரந்து அளந்து கொண்டவன் என்கிறார் –
நீர் இது அறிந்தபடி என் என்ன
அவன் மதிநலம் அருளப் பெற்றவத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறிந்தேன்

இசை கூட்டி வண் சடகோபன் சொல்
இசை கூட்டி –
ஸாம ரஸ உத் கானமானது -சடகோப வாங் மயம் என்று -ஸஹஸ்ர ஸாக உபநிஷத் -ஸமா கமமான
ஈர் ஐந்தினுடைய
இசை கூட்டி வண் சடகோபன் சொல் -என்று
லோகங்கள் எல்லாம் பிரசித்தமாம் படி மதி நலம் அருளினவன் யாவன் ஒருவன்
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்யரானவர்கள்
ஏதத் ஸாம காயானாஸ்தே -என்று சாமத்தின் இசை கூட்டி ஸஹஸ்ர சாகையை
அமை பாட்டோராயிரத்து இப்பத்து –
அமைந்த படி

மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே
வாசகமாகி
நாட்டை வாழ்வித்த ஒவ்தார்யம் இது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அடி சூட்ட ஸாம கணத்தில் இசை சற்று நாவறுதல் அற
ரஸ அனுபவத்தில் வந்த நித்ய முக்தருக்கு உத் கீதார்த்த ரச ஞானம் உடையவனான அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே
ஹேய ப்ரத்ய நீகமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயமுமான திருவடிகளிலே
சாமசாகர்த்த மான ரசங்களாலே அமையப்பட்ட ஆயிரம் பாட்டுக்களிலும் வைத்துக் கொண்டு
இப்பத்துப் பாட்டையும் அதிகரிக்க வல்லார்க்கு
இச்செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்
பண்ணப் பெறுவர் -என் மனனே

அடி சூட்டலாகுமே அந்தாமமே
வாசக மாலையை அடி சூட்டலாகுமே அந்தாமமே
பித்ரு தனம் புத்திரனுக்கு அனுபாவ்யமாம் போலே அனுபாவ்யமாம்
ஆழ்வார் கிலேசம் வேண்டா -அவர் பேறே இறே கற்றாருக்கும் பேறு
அடியார்கள் குழாங்களை உடன் கூடி அங்கு
அடியவரோடு இருந்து அனுபவிக்கப் பெறுவர் என்கிறார் –

———–

அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம் பொன் திருவுடம்பே –2-5-1-

ஆடியாடியிலே ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிடுகிறார் –

கீழ் ஆடியாடியிலே ஆழ்வாருக்குப் பிறந்த வியசனம் எல்லாம் மாறும் படியாக
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் —
ஆர்த்த ரக்ஷணத்துக்காக பகவான் த்வரை யுடன் எழுந்து அருளும் பொழுது சேனை முதலியார்
தாங்கும் நிமித்தமாக காண்பிக்கப்பட்ட கையைக் கவனிக்காமல் -பெரிய த்வரையுடன் –
ஆயுத ஆபரணங்களை அக்ரமமாக -அரை குலைய தலை குலையத் தரித்துக் கொண்டு வந்து
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து உதவினால் போலே

இவரும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் -என்று கூப்பிடட ஆர்த்த நாதம் செவிப்பட்டு
அழகியதாக ஜகன் நிர்வஹிணம் பண்ணினோம் என்று பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களுக்கு ஒப்பவைகளான ஆயுத ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியோடே
வந்து ஸம்ஸ்லேஷிக்கக் கண்டு ஹ்ருஷ்டராய் பெற்ற பேற்றை உகந்து அனுபவிக்கிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லி மலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

உயர்வற என்கிற பாட்டை -சொல்லீர் என் அம்மானை-என்கிற இப்பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்

மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவும் அவரவர்கள் பிரயாசத்தாலே ஆர்ஜிக்கிற
போக்யதா அனுபவங்களை எல்லாம் அல்பமாய் அஸ்திரமாய் அற்றது
ஆகையால் உயர்வற என்கிறது

இத்தை நீங்கள் அறிந்து கொண்டு
உயர் நலம் யுடையவன் என்னோடே வந்து -அந்தாமத்து அன்பு செய்து –
தனக்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாம் என் அவயவங்களிலே யாம்படி கொண்டு அருளி
உயர்வற உயர் நலம் உடையவனாய் விளங்குகிற படியை

சொல்லீர் என் அம்மானை-
ஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அதுக்குப் பாசுரம் இட்டுக் கவி சொல்லி
இருக்கிற நீங்கள் சொல்ல வல்லீர்களோ

எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை–என் அம்மானை–
தன் குண சேஷ்டிதங்களாலே எனக்கு மயர்வற மதி நலம் அருளி
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே என்னை சேஷத்வ முறையிலே நிறுத்தினவன் –

மயர்வற
அஞ்ஞான கந்த ரஹிதமான ஞான பக்திகளாலே ஆத்ம பரமாத்ம விவேக ஞானத்தை யுண்டாக்குகையாலே
என்னாவி யாவி தனை
என் ஆத்மாவுக்கு அந்தராத்மா வானவனை –

மதி நலம் அருளினன் என்று
கிருபா குண விசிஷ்டமான குணங்கள் கல்யாண குணைக தானமாகையாலேயும்
சவுந்தர்யாதி குண விசிஷ்டமான திவ்ய மங்கள விக்ரஹமும் புதுக்கணித்து தேஜோ மயமாயிற்று

யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயர்வில்லாத நித்ய முக்தருக்குப் போக்ய பூதனானவன் யாவன் ஒருவன்
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
என்னோடே கலந்த பின் புகர் பெற்றானாய் இருக்கிற படி

நல்ல வமுதம்
அப்ராக்ருத போக்யங்களில் தலையான அம்ருதம் -அபர்யாப்த அம்ருதம் -ஆரா வமுதம்

பெறர்க்கு அரிய வீடுமாய்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத மோக்ஷ புருஷார்த்தமும் ஆனவன் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதர விஷயங்களில் போக ருசி அற்று –

நிரவதிக தேஜோ ரூபமான
அல்லிமலர் விரையொத்த
திருவடிகளை யுடையவன்

ஆண் அல்லன்
இதர புருஷ ஸஜாதீயன் அல்லன்

பெண் அல்லனே
அதுவும் அப்படியே யாகையாலே
உபய விஷய ஸஜாதீயன் அல்லன் என்றபடி

அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———-

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

அந்தாமத்து அன்பில் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொல் என்ற இவர் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தான் என்கிறார்
ஆடியாடியில்
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த படி சொல்லித்து அந்தாமத்து அன்பு
அந்த ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது
வைகுந்தா மணி வண்ணனில் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

உயர்வற -என்கிற பாட்டைச் -சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் அல்பமான
காம்ய ரசங்களைப் புசித்து உயர்வு ஏற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஸர்வ ரஸ -என்கிறவன்
ஸர்வ ரசிகத்வமும் ஆழ்வாரோடே அனுபவிக்கைக்கு -இவ்விடத்தில் ஸர்வ ரக்ஷகத்வமும் செய்து இருந்தால்
இவரோடு ஐக ரஸ்யம் ஸித்தியாதே என்று அவற்றை எல்லாம் ஸ்வ ரஷிதமாக வைத்து
பின்னை அனுபவிப்போம் என்று பார்த்து
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி
ஆழ்வார் திரு உள்ளத்திலே
சிக்கெனைப் புகுந்தான் –

ஜகத் ரக்ஷணத்துக்கு வேண்டுமாவை எல்லாம் தன்னுள்ளே யாக்கி அநந்ய பரனாய் அனுபவித்துப் போக மாட்டாதே இருந்தான்

இவர் திரு உள்ளத்திலே இருந்து செய்தது என் என்னில்
இப்படிவரும் ஜகத்துக்கு ஸர்வ ரக்ஷகத்வங்களும் இவர் இடத்திலே யாக வேணும் என்று
இவருக்கு மயர்வற மதி நலம் அருளினன்

பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய்
மயர்வற இவருக்கு அந்யதா ஞான விபரீத ஞானங்கள் ஆகிற இருளைப் போக்குகைக்கு பக்தி ரூபா பன்ன மாகிற
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்கை
நந்தா விளக்காகப் பிரகாசிப்பித்து -அத்தாலே தானும் விகஸித ஸகஜ ஸர்வஞ்ஞனாய்
விஜ்வரனுமாயிற்று
விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது ஆயிற்று –

ஆழ்வாரை அனுபவித்து -இப்படி விளங்கினவன் -யாவன் ஒருவன் -அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அஞ்ஞானம் அசக்திகள் இல்லாத அமரர்கள் -அநந்த வைனதே யாதி ப்ரப்ருதிகள் –
த்ரிபாத் விபூதியும் அடங்காதவர்கள் பரிசர்யை பண்ண இருக்கும் ஸ்வாமி யானவன் –

துளக்கற்ற அமுதமாய்
அபர்யாய அம்ருதமாய்
ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர்ந்தான் தானாய் இரா நின்றான் –

இனி இவர் வள வேழுலகு தலையெடுத்து இவர் நம்மை விடில் செய்வது என்
என்று உள் நடுக்கம் தீர்ந்தது இப்போது ஆயிற்று –

துளக்கற்ற அமுதமாய்
அவன் இவரை அபர்யாப்த அம்ருதமாய் -பிரமுமோதஹ -என்கிறபடியே
அவன் தம்மை விரும்பி போக்யமாக நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிற படி –

இப்படி போக்ய பூதனானவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துளக்கம்
அற -அற்ற
அமுதமான சுடர் அடிகளைத் தொழுது உத்ஸாஹி –

அவன் நம்மைப் பார்த்தவருக்கு
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
எங்கும் பக்க நோக்கு அறியான்
அயர்வறும் அமரர்கள் -அநிமிஷராய் அபர்யாப்த அம்ருதம் அல்லது அனுபவியாதர்களையும் நோக்கு அறியான் –

ஆழ்வார் பக்கல் ப்ராவண்யத்தைத் தவிர்க்கலாமோ பார்ப்போம் என்று
நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டிற்று இலன்

என் பைந்தாமரைக் கண்ணன்
என் பக்கல் ப்ரீதியாலே விகசிதமான திருக்கண்களை யுடையவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

———-

அவதாரிகை

வைகுந்தா மணி வண்ணனில்
தன்னை இவர் பிரியில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
மாஸூச -என்றும்
சங்கையைத் தீர்த்து அவனை உளன் ஆக்கினார்

இவர் ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர
கேசவன் தமரில் –
இவ்வாழ்வார் உடன் கலைக்கையால் வந்த ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் இன்றிக்கே
இவரோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிறபடியை அருளிச் செய்கிறார் –

வந்து கலந்தபடி சொல்லி
அந்தாமத்து அன்பிலே
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது -வைகுந்தா மணி வண்ணனிலே
அந்தப் ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் அன்றிக்கே இவர் ஸம்பந்த சம்பந்திகள் அளவிலும்
வெள்ளம் இட்டுப் பெருகுகிற படி சொல்லுகிறது -கேசவன் தமரிலே -என்று கண்டு கொள்வது –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

உயர்வற என்கிற பாட்டைக் -கேசவன் தமர் -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஆழ்வார் உபதேசத்தால்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தாலே வந்த உயர்த்தி அற்று
சம்பந்த ஞானம் பிறந்து
கேசவன் தமர் ஆனார்கள் –

ஈஸ்வரனும் உயர்வற உயர் நலம் உடையவன் ஆனான்
தத கேசவ நாமா வான் என்கிறபடியே ஸர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள் -என்னுதல்

ஸர்வேஸ்வரன் உடையார் என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புவது

எமர் என்று -ஆழ்வார் சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புவது

இத்தாலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானமே வேண்டுவது அவன் விஷயீ கரிக்கைக்கு என்றபடி –

கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்
இப்படி அவர் திருத்துகைக்கு அடி என் என்னில்
கேசவ கிலேச நாசநன் -என்கிறவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளுகையாலே
முன்னை வினை
பின்னை வினை
ப்ராரப்தங்கள்
தாப த்ரயங்களும் எல்லாம் நசித்தது
பக்தி ரூபா பன்ன ஞானம் பிறந்து பர உபதேசம் பண்ணித் நிறுத்தின படி

குலம் தாரயதே தாத ஸப்த ஸப்த ச ஸப்த ச -என்கிறபடியே
இப்படிச் சொன்னவன் யாவன் ஒருவன் அவன் பிரஸாதத்தாலே லோகமானது திருந்தப் பெற்றது

மா சதிர்
பகவத் கிருபை -மகத்தான சதிர்
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்றுக் கேசவன் தமர் ஆனார்கள் –

மா சதிர்
இந்த சதிர் தம்மளவு அன்றிக்கே
தம்மோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிற படி
மயர்வற மதி நலம் அருளுகையாலே -மா சதிர் இது பெற்று

தன் தலையாலே வந்ததாகில் இறே -ஸா வதி யாவது

இது பெற்று -ஞான பக்திகளைப் பெற்று

எவன் அவன் மேல் மேல் என இவர்களை சிரஸா வஹிக்கிற படி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து வாய்க்கிற படி

எழு படி கால் என்ற அளவில்லை
தொட்டாரைத் தொட்டு இருபத்தொரு படி கால்
இன்னும் நம் அளவும் வருகிற படி

இப்படி உம் மக்களுக்கு அருளினவன் ஆர் என்ன
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
ததீய சேஷத்வத்தில் அளவில்லாத வைகுந்தத்து அமரரும் முனிவரும்
மங்களா ஸாஸனம் பண்ண இருக்குமவன்

ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்
இப்படி விஷயீ கரித்ததற்கு ஹேது
ஸ்வாமி யாகையாலே -வடிவு அழகாலும் கண் அழகாலும் – என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
மா சதிர் பெற்றுத்
துயர் அடி தொழுது எழு என் மனனே

நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நித்ய ஸூரி ஸேவ்யனானவன் -நமக்கு ஸ்வாமியான உபகாரகன் ஆனவன் –
ஸர்வ சமாஸ்ரயணீயன் ஆனவன் திருவடிகளைத் தொழுது
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்கிறபடியே
கேசவன் தமரோடே வர்த்தி என்கிறார் –

———-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணையில்
அவனுடைய முக்த மோக்ஷ ப்ரதத்வத்தை அருளிச் செய்கிறார்

அணைவது அரவணையில்
நம்மோடே ஸம்பந்தமே ஹேதுவாக அவன் விஷயீ கரிப்பதான பின்பு
சம்சாரிகளுக்கு நம்மோடே ஒரு சம்பந்தம் உண்டாக்கி
அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் என்று பார்த்து
அவர்களுக்கு மோக்ஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை
அணைவது அரவணை-விவரிக்கிறது -அது எங்கனே என்னில் –
உயர்வற
மனஷ்யாநந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஐஹிக ஆமுஷ்மிக போகமே உத்தேச்யம் என்று புஜிக்கிறவர்கள் ஆகையாலே உயர்வு அற்றார்கள்

உயர் நலம் என்று பர ப்ரஹ்மானந்தம் உடையவன் எவன் அவன் மோக்ஷ பிரதன் ஆனவன்

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது
முக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூடி இருந்து
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே எழுந்து அருளி இருக்க இச் சேதனன் முக்தனாய்ச் சென்று கிட்டினால்
ஈஸ்வரன் கோசி என்றால்
அஹம் ப்ரஹ்மாஸ்மி– நான் ராஜ புத்ரன் -ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன்

ஆகில் இங்கனே போராய் என்று அவன் அங்கீ காரம் பெற்று
மாதா பிதாக்கள் இருந்த படுக்கையிலே பிரஜை சென்று ஏறுமா போலே
பாதே நான்ய ஆரோஹதி -என்று ஏறக் கடவன் என்கிறது –

அணைவது
தாபத்ரயங்கள் எல்லாம் ஆறும்படி அணைவது
புணர்வது-என்கிறது மூவருக்கும் ஒக்கும் படி பரிமாறினது

ஆக
சர்வேஸ்வரனும் பிராட்டியுமாக திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏறி இருக்க
இவனும் அனுமதியால் ஏற
அணைத்து மடியில் வைத்து உகந்து
கிரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக்கொள்ள அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகம் ஆகிறது

இவருக்கு இப் ப்ராப்யத்துக்கு சாதகம் ஏது என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
இவருடைய துர்க்கதி கண்டு -தன் நிர்ஹேதுக கிருபையாலே
பக்தி ரூபா பன்ன ஞானத்தைக் கொடுத்தது இதற்கு ஹேது

இப்படிப்பட்டவன் எவன் அவன்
இருவரவர் முதலும் தானே
ப்ரமாதிகளுக்கு காரணமாய் இருக்க
ஸ ப்ரம்மா ஸ சிவஸ் ஸேந்த்ர -என்கிற பிரஸித்தியாலே சொல்லுகிறார்
இவ்விபூதி கார்ய காரண ரூபத்தாலே சம்பந்தம் சொல்லிற்று
அவ்விபூதி போக பூமியாய் நித்தியமாய் இருக்கும் என்று சொல்லிற்று
இப்படி உபய விபூதிக்கும் நாயகனானவன் யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

ப்ரம்ம ருத்ராதிகளைப் போலே ஸம்ஸார பந்தகம் அல்லாமையாலே
அம்ருத ஸப்த வாசிகளாய் -அம்ருதம் திவி -வாசிகளாய் -அபர்யாப்த அம்ருத போகிகளாய்
இருக்கிற நித்ய ஸூ ரிகளாலே ஸேவ்யமானவன் மோக்ஷ பிரதன்

ப்ரம்ம ருத்ராதிகளுக்குக் காரணபூதனாய் நிர்வஹிக்கிறான் யாவன் ஒருவன் அவன்
எப்பொருட்கும்-இணைவனாம்
தேவாதி பதார்த்தங்கள் தோறும் ஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
எந்நின்ற யோனியுமாய் பிறக்கும்

இப்படி
ப்ரம்ம ருத்ராதிகள் நடுவே விஷ்ணு நாமாவாயும் உபேந்த்ரனாயும்
சக்கரவர்த்தி திருமகனாயும் வஸூ தேவ புத்ரனாயும்
மஹா வராஹமாயும் குப்ஜா மரமாயும்
தாம் பிறக்கிறது எதுக்காக என்னில்
உயிர் அளிப்பான்
வீடு முதலாம்
மோக்ஷ பிரதனாகைக்காகவே அன்றோ

பஷி பிசாசம் முதலானோருக்கும் மோக்ஷம் கொடுத்து ரஷிக்கைக்காக -என்ன
ஆனால் எல்லாரும் முக்தராக வேண்டாவோ பின்னை என்ன –

துயர் அறு சுடர் அடி தொழுது
பிறவிக்கடல் நீந்துவார்க்குப் புணைவன்
தேவதாந்த்ர பஜனாதிகளான துயர் அற்று மோக்ஷ ப்ரதனான ஸர்வ ஸ்மாத் பரனானவன் திருவடிகளை
என் மனனே
உனக்கு மயர்வற மதி நலம் அருளி மோக்ஷத்தையும் தன் நிர்ஹேதுக கிருபையால் தந்த உபகாரகனைத் தொழுது
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலை -அது யாராலும் கடக்கப் போகாதே –
பிரபலமான நீயே கடத்தித் தர வேணும் என்று பர ந்யாஸம் பண்ணி இருப்பார்க்கு
ப்ரதிபூவாய் நின்று கடத்திக் கொடுக்கும்

புணைவன்
புணையாம் அவன்
ஸர்வ பர நிர்வாஹகன் -ஆனவன்
என் மனனே தொழு

ஸம்ஸார சாகரம் கோரம் அநந்த கிலேச பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ் தரந்தி மநீஷண
விஷ்ணு போதாஸ்ர யந்மே மன –என்னக் கடவது இறே
அக்கரையும் இக்கரையும் ஒன்றாய் நின்று கடத்தும் ஓடம் இறே –

———

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டில்
ஸர்வேஸ்வரன் இவனுக்கு மோக்ஷம் கொடுப்பானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
அங்கே போகவுமாம் -இங்கே இருக்கவுமாம்
ஏதேனுமாக எனக்காக இருக்கும் இருப்புத் தவிர்த்து உனக்கே உறுப்பாம் படி
அதுவே எனக்கு வடிவாம்படி தந்து அருள வேணும் என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ் கர்ஷித்தார்

கீழே அணைவது அரவணையிலே
வீடு முதலாம் என்று தானும் அனுசந்தித்து
நலம் அந்தமில்லதோர் நாடு புகுவீர் -என்று பிறருக்கும் உபதேசிக்கக் கண்டு
ஸர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரங்களுக்கும் மோக்ஷம் கொடுப்பதாகப் பாரிப்பதைக் கண்டு
தேவரீர் எனக்கு மோக்ஷம் தரப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –

அதாகிறது
உனக்கு மோக்ஷம் கொள் என்று எனக்காகத் தருகை அன்றிக்கே
நமக்காகக் கொள் என்று -தேவரீர்க்கே ஆம்படி
ஸ்ரக் சந்த நாதிகளாக தேவர் கொள்ளும்படியாகத் தர வேணும் என்று
தான் நினைத்து இருந்தபடியைப் பிரார்திக்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -எம்மா வீடு விவரிக்கிறது -எங்கனே என்னில்

உயர்வற உயர் நலம் எம்மா வீடு
ஐஹிக ஆமுஷ்மிகாதிகள் அன்று
உயர் நலமான வீடு கொள்ளும் என்றான் ஈஸ்வரன்
வேண்டா என்றார்
மா வீடு -வி லக்ஷணமான மோக்ஷம் கிடீர் -என்றான்
அதுவும் வேண்டா -என்கிறார்
எம்மா வீடு கிடீர் -ஐஸ்வர்ய கைவல்யாதிகள் -என்று இருக்க வேண்டா –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம் என்றான் –
அதுவும் வேண்டா என்றார்
இவைகள் எல்லாம் எம்மா வீட்டுத் திறங்கள்

செப்பம் -செப்போம்
எவ் வகையாலும் உயர்நலம் உண்டே யாகிலும் எனக்கு வேண்டா

செப்போம் -செல்லோம் —
நீயும் ப்ரசங்கிக்க வேண்டாம்
நானும் நிஷேதிக்க வேண்டா

எம்மா வீட்டுத் திறமாவது
ஸா லோக்ய ஸா ரூப்ய ஸா மீப்ய ஸா யுஜ்யம் என்ற இவைகள்

உமக்கு இப்படி அறியும்படி உபதேசித்தார் யார் என்ன
உயர் நலம் உடையவன் எவன் அவன் -எனக்கு மதிநலம் அருளினன் –
எனக்கு -என்கிற
மயர்வு அறுத்து
அத்யந்தம் பரதந்த்ரனாம் படி அருளினன்

ஆகில் உமக்கு வேண்டுவது என் என்ன
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து
அகவாய் சிவந்து புறவாய் கறுத்து
மஹத்தாய்
மணத்து மலர்ந்த திருவடித் தாமரைகளை அடியேன் தலையிலே வைக்க வேணும் –
நீ நிர்ஹேதுகமாக அருளின பக்தியைப் பெறுகையாலே இதுவே அமையும் –

எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நிமிஷமும் விஸ்லேஷிக்கப் பொறாத நித்யருக்கு நிர்வாஹகனானவன்
துயர் அறு சுடர் அடியான பாத பற்பை
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உள்ளவனான என் சிரஸ்ஸையே அலங்கரிக்கையை

ஒல்லை
இந்த அர்த்தித்தவம் இப்போதே செய்து அருள வேணும் –

நாம் இப்படி சீக்கிரமாக யாருக்குச் செய்தோம் என்ன
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -என்று
பதறிக் கொண்டு வந்து தோன்றி யானையின் துயரம் தீர்த்தவன்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை யிலே அருள வேணும்

கொக்குவாயும் பிடி கண்ணியும் இட்டால் போலே
கழற்றாமல் ஆதரிக்க வேணும் –

அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
ஸ்வாமியான உன் துயர் அறு சுடர் அடி
துக்க அந்தகாரமான காள ராத்ரிக்கு அவிவேக கந அந்த திங் முகத்திலே
பிரளய காலத்திலே ஸூர்யனைப் போலே என் ஹ்ருதயத்திலே உதித்தும்
போக்கும் திருவடிகளைத் தொழுது எழு என்று
அனுபவ கர்ப்ப உபதேசம் பண்ணுகிறார் –

——–

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

கிளர் ஒளி இளமையில்
எம்மா வீட்டில் நிஷ் கர்ஷித்த ப்ராப்யம் பெறுகைக்குத் திருமலையை ஆஸ்ரயித்தார்

—–

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

உயர்வற என்கிற பாட்டைச் -சதிரிள மடவார்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது-
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் சதிராவது –
ப்ரம்ம பாவன நிஷ்டரையும் தங்கள் வசம் ஆக்குகை

பருவத்தால் வந்த இளைமையாலும் மோஹிப்பிக்கை –
பவ்யர்களாய் இருந்து வஸீ கரிக்கிற சதிராகையாலே உயர்வற என்கிறது –

மடவார்கள் தாழ்ச்சியை மதியாதே
அவர்கள் தங்கள் ஆகிஞ்சன்யம் தோன்ற வணங்கி ஒடுங்கி யாயிற்று வஸீ கரிப்பது
அவர்கள் பக்கல் மனஸ்ஸை வைக்காதே –
இது நெடு நாளவற்று உயர்த்தி கொளே இனி யமையும்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
சவுந்தர்ய சீலாதி குணங்களை யுடையவனானவன் பக்கலிலே மனஸ்ஸை
வைமின் என்ன

அவன் உங்களுக்கும் மயர்வற மதிநலம் அருளுகைக்காகாவே திருமலையிலே
வந்து நிற்கிறவன் –

அதிர்குரல் சங்கத்து அழகர்
மயர்வு பிறப்பிக்கும்
மடவார் தாழ்ச்சியை மதியாதே என்றும்
மதியிலே நலமான ஞான பக்தி வைராக்யம் பிறக்கும் படி
அதிர்குரல் சங்கத்து அழகர்
ஊதுகிற குழல் போலே சங்கம் முழங்குகிற படி –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
அதிர்குரல் சங்கத்து அழகர்

சவுந்தர்யாதிகளிலே கண் வைக்காதே -அடிமை செய்து இருக்கும் படிக்கு –
நித்யர்
முக்தர்
முமுஷுக்கள்
பத்தர்
கர்ம பாவநா நிஷ்டர்
ப்ரஹ்ம பாவநா நிஷ்டர்
ஐஸ்வர்யார்த்திகள்
கைவல்யார்த்திகள்
எல்லாரும் அவரவர் பேறு பெறுகைக்காக –

மதி தவழ் குடுமி மாலிரும் சோலை பதியது வேத்தி எழுவது பயனே
துயர் அறு சுடர் அடி தொழுது எழுவது பயனே
சந்திரன் தவழும்படி ஓங்கின கொடி முடியை யுடைய
மாலிருஞ்சோலை மலையை
பருத்து உயர்ந்த சோலையை யுடைய மலையையே

பதியதி ஏத்தி
அழகர் நித்ய வாஸம் செய்கிற பதியான கோயிலிலே
நலம் திகழ் நாரணன் துயர் அறு சுடர் அடி
ஸர்வ ஸமாஸ்ரயணீயமான திருவடிகளைத் தொழுது

என் மனனே
எழுவது பயனே -என்று
தம் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———–

இரண்டாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–முதல் பத்து விவரணம்–

February 1, 2022

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை நூலை இயற்றியவர் ஒரு வைணவப் பெண்மணி.
இவரது பெயர் ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை. காலம் 13 ஆம் நூற்றாண்டு.
ஸ்ரீ திருவாய்மொழிப் பாடல்கள் சிலவற்றிற்கு எழுதப்பட்டுள்ள விவரண சதகம்.

பொதுவாகச் சைவ, வைணவ மரபுகளில் சமய ஆசாரியருடைய நூல்களே செல்வாக்குப் பெறுவது வழக்கம்.
அல்லாதார் நூல்கள் மக்களிடம் அவ்வளவாகப் பரவுவது இல்லை. அவ்வாறு பரவாமல் போன நூல்களில் இதுவும் ஒன்று.

நம்மாழ்வார் திருவாய்மொழி 1102 பாடல்களைக் கொண்டது. அதில் 164 பாடல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு
அவற்றிற்கான விரிவுரை கூறுவது இந்த நூல்.
திருவாய்மொழியில் 10 அல்லது 11 பாடல்களைக் கொண்ட பகுதி ஒரு பதிகம். 10 பதிகங்களைக் கொண்டது ஒரு பத்து.
இவ்வாறு 10 பத்துக்கள் சேர்ந்ததே திருவாய்மொழி.
இவ்வாறு அமைந்துள்ள திருவாய்மொழி நூலிலிருந்து ஒவ்வொரு பதிகத்திலிருந்தும் முதல்-பாடல் அல்லது முதல்-இரண்டு-பாடல்
விரிவுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்களே 146.
இந்தப் பாடல்களுக்கு விவரண சதகம் பாடும்போது அந்தந்த பதிகத்தில் அடங்கியுள்ள பாடல்கள்
அனைத்துக்குமான தொகுப்புப் பொருளையும் இந்த நூல் குறிப்பிட்டு மணிப்பிரவாள நடையில் கூறுகிறது.

———-

பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து -பாண்டிய நாட்டின் ஒரு பகுதி -வழுதி நாடு -தலைநகர் -திருக்குருகூர்
கோவிந்தன் தனக்கே குடி அடியாரான வேளாள குல மன்னர் -திருவழுதி வள நாடர்
இவர் திருக்குமாரர் -அறம் தாங்கியார் -செந்நெறிச் செல்வர்
இவர் திருக்குமாரர் சக்ரபாணியார்
இவர் திருக்குமாரர் -அச்சுதர்
இவருக்கு செந்தாமரைக் கண்ணர் என்றும் பொற் காரியர்
இருவரும் திருக்குமாரர்கள்
பொற் காரியாரது திருக்குமாரர் காரியார்
இவரே நம்மாழ்வாரைத் தோற்றுவித்து உலகை உய்வித்த புண்ணிய புருஷர் –

திரு வண் பரிசாரம் திருப்பதியில் -திருவாழ் மார்பணிந் செல்வப்புதல்வியார் -உடைய நங்கையார் -ஆழ்வாரது திருத்தாயார்

திருக்குறுங்குடி நம்பி நாமே உங்களுக்கு புதல்வராவோம் என்று அருளிச் செய்து ஆழ்வார் திரு அவதாரம்

ஆதி சேஷன் முன்னமே திருப்புளிய மரமாக திரு அவதரித்தார்
கலியுகம் –43 நாள் -வைகாசி -விசாகம் -இவர் திரு அவதாரம் -சேனை முதலியார் அம்சம் –
உலகு இயல்புக்கு மாறாக இருக்க மாறன் என்று திரு நாமம் சாத்தினார்கள்

மதுரகவி ஆழ்வார் -செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் -கேள்வி
அத்தைத் தின்று அங்கே கிடைக்கும் -பதில்

அசேதனத்தில் ஆத்மா புகுந்து மாறி மாறி பிறவி சூழலில் உழன்று இருக்கும் என்றும்
அஞ்ஞானத்தில் உழன்று தேகம் போன்ற ஆத்மாவுக்கு கொஞ்சம் ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற
இதுக்கும் -அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்

திவ்ய தேச எம்பெருமான்கள் தங்கள் பரிவாரங்களுடன் திருப்புளிய மரத்தில் காட்சி கொடுத்து பாடல்கள் பெற்று மகிழ்ந்தனர் –

———

அர்த்தபஞ்சகம் -ஒவ்வொன்றுக்கும் இரண்டு பதிகங்கள் திருவாய் மொழி என்றும் உண்டே

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -முதல் இரண்டு பத்துக்கள்
உணர் முழு நலம் -முழு உணர் முழு நலம் -ஞான ஆனந்த ஸ்வரூபம்
ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந -அடுத்த இரண்டு பத்தும் –
ப்ராப்த் யுபாயம் -அடுத்த இரண்டு பத்தும்
பிராப்தி விரோதி அடுத்த இரண்டு பத்தும்
பலம் ப்ராப்தோ -கடைசி இரண்டு பத்தும் –

த்வயார்த்தமே திருவாய் மொழி -தீர்க்க சரணாகதி -சார ஸங்க்ரஹம்

தோன்றா உபநிஷத் பொருள் தோன்றலுற்றார் தமக்கும் சான்றாம் இவை –

ஆயிர மா மறைக்கும் அலங்காரம் யாரும் தமிழுக்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்க்கு எல்லாம்
தாய் இரு நால் திசைக்கும் தனித்தீபம் தண்ணம் குருகூர்ச்
சேய் இரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே

ஆரா வமுதம் கவி யாயிரம்
என்று எல்லாம் கம்ப நாட்டாழ்வார் சடகோபர் அந்தாதி

—————

தேசிகரும் –
தமிழ் வாதம் அறிந்த பகவர்களே
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே
சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு
ஸூர்யனால் மலரப் பெற்ற தாமரைக்காடுகள் -அவன் திருக்கண்கள் -ரகுவீர கத்யத்தில் -ஆழ்வார் பாசுரங்கள் கொண்டே –
புண்டரீகத்து அங்கேழ் வனமோர் அனைய கண்ணான் -23–திரு விருத்தப் பாசுரம்

முதல் -23-பாசுரங்கள் கொண்டே ஸ்ரீ பாஷ்யார்த்தம் –

——-

வேதம் தமிழ் செய்த மாறன் –

ஸ்வரூப பரமான அருளிச் செயல்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -1-1-1–ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஆனந்தோ ப்ரஹ்ம -தைத்ரியம்
இனன் உணர் முழு நலம் -1-1-2-விஞ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ப்ருஹதாரண்யம்
மிகுநர் இலனே -1-1-2- ந தத் ஸமஸ் ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -ஸ்வேதா
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -3-7-1-நாராயண பரஞ்சோதி -தைத்ரியம்
பரஞ்சோதீ –3-1-2-பரம் ஜோதி ரூப ஸம்பத்ய –சாந்தோக்யம்

பங்கயக்கண்ணனை -3-7-1-யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம்
செம் பொன் திரு உடம்பே -2-5-1-ஆ ப்ராணதாத் ஸர்வ ஏவ ஸூ வர்ண -சாந்தோக்யம்
எண்ணின் மீதியன் எம்பெருமான் –2-2-1-அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம்
சொல் அளவன்று -8-2-6- யதோ வாஸோ நிவர்த்தந்தே
இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் -8-2-6-யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத
ஸ அவிஞ்ஞாதம் விஜா நதாம் விஞ்ஞாதம் அவிஜா நதாம் -கேனோ
என் வல் வினை மாய்ந்தறச் செய்குந்தன் –7-9-7-ஸர்வே பாப்மாந பர தூயந்தே -சாந்தோக்யம்
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1- யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ச பூமா -சாந்தோக்யம்

காரண பரமான அருளிச் செயல்கள்

முதல் தனி வித்தேயோ -10-10-8–ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -மஹா உபநிஷத்
தானோர் உருவே தனி வித்தாய் –1-5-4-ப்ரஹ்ம வா இதம் ஏக மேவ அக்ர ஆஸீத் -ப்ருஹதாரண்யம்
மூவாத் தனி முதலாய் –2-8-5—ஆத்மா வா இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -ப்ருஹதாரண்யம்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –1-5-2–ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -சாந்தோக்யம் –

ஸ்ருஷ்டி வாக்யங்கள்

பாமரு மூ வுலகும் படைத்த –7-6-1- தத் ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி –சாந்தோக்யம்
தானே உலகு எல்லாம் தானே படைத்து –10-5-3-இதம் ஸர்வம் ஸ்ருஜத -தைத்ரியம்
எல்லா உலகும் உயிரும் தானேயாய் –10-7-2-ஸத் ச த்யச்சா பவத் -தைத்ரியம்
யாவையும் எவையும் தானாய் –3-4-10-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் –

காரண கார்ய நிபந்தன சாமாநாதி கரண்யம்

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-நாராயணாத் பிரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே

ஆத்ம சரீரபாவ நிபந்த சாமா நாதி கரண்யம்

ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் –8-1-5—அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் —1-1-10-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மிந்
த்ருஸ்யதே ஸ்ரூயதே பிவா அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –தைத்ரியம் –
தானேயாகி நிறைந்து –10-7-2–தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -தைத்ரியம்
முதலில் சிதையாமே –1-5-2-பூர்ணம் ஏவா வஸிஷ்யதே –ஸ்வேதாஸ்வரம்
பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து –8-1-5–ஆபோ வா இதம் அக்ரே சலிலம் ஆஸீத் தஸ்மிந் ப்ரஜாபதிர் வாயுர் பூத்வா சரத் –தைத்ரியம்

ஏனமாய் நிலம் கீண்ட –5-7-6-தாம் வராஹோ பூத்வா ஹரத்
வன் மா வையம் அளந்த எம் வாமனா –3-3-2-விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் -புருஷ ஸூக்தம்
எல்லையில் சீர் -2-5-9-விபூதீ நாம் நாஸ்த்யந்தோ விஸ்தரஸ் யமே -கீதை
தானே யாள்வானே –10-5-3-அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம்
அயனாம் சிவநாம திருமாலால் -8-8-11
அரியை அயனை அரனை அலற்றி -10-10-11-

அவனே அவனும் அவனும் அவனும் -9-3-2—ச ப்ரம்மா ச சிவ சேந்த்ர -தைத்ரியம்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –5-6-1—தத் ஹைதத் பஸ்யன் ருஷி வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்யச்ச
தன்மை பெறுத்தி -3-7-7–ஸ்வேந ரூபேணே அபி நிஷ்பத்யதே -சாந்தோக்யம் –
நல்ல வமுதம் –2-5-9-இதம் அம்ருதம் -ப்ருஹதாரண்யம்
இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து –8-8-8—ஞாதய பர்யுபாஸதே ஜாநா ஸிமாம் ஜாநாஸி மாமிதி –சாந்தோக்யம்

இனிப்பிறவி யான் வேண்டேன் –10-6-1—லிந்து மாபிகாம் –சாந்தோக்யம்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –5-10-11- தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய-தைத்ரியம் –
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ –8-1-5–தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்
ஆர் உயிரேயோ –8-1-5–பிராணஸ்ய ப்ராணா –கேந உபநிஷத்
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் –9-1-1–ததேதத் ப்ரேயஸ் புத்ராத் பிரேயோ மித்ராத் ப்ரேயோ வித்தாத் –ப்ருஹதாரண்யம்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11-நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி -முண்டகம் –

சந்தங்கள் ஆயிரத்து –10-9-11-தத் சந்தஸாம் சந்தஸ்த்வம் ப்ரஹ்மவை சந்தாம்ஸி -தைத்ரியம்
பொறி யுணர்வு அவை இலன் –1-1-2-யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் –முண்டகம்
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் –3-4-10-ஏகஸ் ததா ஸர்வ பூத அந்தராத்மா ந லிப்யதே லோக துக்கேந பாஹ்ய -கட
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –4-1-1–ஸ்வோபாவா மர்த்யஸ்ய யதந்த கைதத் –கட
தோற்றங்கள் ஆயிரத்துள் –6-8-11–வாசா விரூப நித்யயா -தைத்ரியம்

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-2-ப்ரஹ்ம தம் பராதாத் –ப்ருஹதாரண்யம்
இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –10-7-5–ஏதஸ் யை வைதாநி ஸர்வாணி நிச்வஸிதாநி –ப்ருஹதாரண்யம் –
பல பிறப்பாய் –1-3-2—பஹுதா விஜாயதே -புருஷ ஸூக்தம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1–வாஸூ தேவம் ஸர்வம் இதி –கீதை –

————–

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் –

நிர்ஹேதுகமாக ஸ்வரூப ரூப குணங்களையும் நித்ய ஸூரிகள் அதிபதியாயும்-நிர்வாஹகானாயும் –
இருக்கும் இருப்பையும் காட்டிக் கொடுக்க –
ப்ரத்யக்ஷமாக அனுபவித்த ஆழ்வார் -அனுபவ ஜெனித ப்ரீதி உந்த -இன்ப வெள்ளத்தை
வாயினால் பாடி அல்லது தரிக்க மாட்டாமல் பேசுகிறார் –

உயர்வு அற -வருத்தம் இல்லாமல்
மற்றவர்கள் உயர்வு அறும் படி -இல்லாமல் போகும்படி –
ஸூர்யன் ப்ரகாஸத்தால் நக்ஷத்திரங்கள் இருந்தும் இல்லாதவை போல் இருக்குமா போல் –

உயர் –
அளவிடமுடியாத -எல்லை காண முடியாமல் உயர்ந்து கொண்டே இருக்குமே
தொல்லை யஞ்சோதி நினைக்குங்கால் என் சொல் அளவு அன்று -இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் –
நலம் -ஆனந்த குணம் -எண்ணற்ற கல்யாண குணங்கள் –
ஸமஸ்த சேதன அசேதன விஸிஷ்ட விபூதிகள் -மூன்று அர்த்தங்களும் உண்டு –

யவன் -அவன் என்பதால்
இந்த கல்யாண குணங்கள் அவனை அடைந்து நிறம் பெறுகின்றன

ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்தோ -(தைத்ரியம் )
ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே -(ஸ்வேதாஸ்வரம் )
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணா (ஸ்ரீ விஷ்ணு புராணம் )

கோந் வஸ்மின் ஸாம் பிரதம் லோகே குணவான் (ஸ்ரீ மத் ராமாயணம் )
குணவான் என்றதே இங்கு நலமுடையவன்

த மேவம் குண ஸம் பன்ன மகா மயதமேதி நீ
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்திதே
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத (ஸ்ரீ மத் ராமாயணம் )

கேவல அனுபவ ஆனந்த ஸ்வரூப பரம ஸ்வராட் (ஸ்ரீ மத் பாகவதம் )

ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முர மதந குணஸ் தோம கர்ப்பம் முனீந்திர -தேசிகன்

மனுஷ்ய- -கந்தர்வ -சிரலோக பித்ருக்கள் -ஆஜானஜ தேவர் -கர்மதேவர் -தேவர் –
இந்திரன் -ப்ருஹஸ்பதி -பிரஜாபதி -ப்ரஹ்மானந்தம் -சொல்லி
மீண்டும் கீழே வந்து -இப்படி பல மடங்குகள்

உபர் யுபர் யப்ஜபுவோபி பூரு ஷாந் பிரகல்ப்ய தேயே சதம் இத் யனு க்ரமாத் க்ரஸ்த்வ
தேகைக குணாவ தீப்ஸயா ஸதாஸ்திதா நோத்யமதோதி சேரதே

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ

சுடரடி -திவ்ய மங்கள விக்ரஹம் உப லக்ஷணம்
சுடர் ஒளி மூர்த்தியை
மாசூணாச் சுடர் உடம்பாய்

அர்த்த பஞ்சகமும் இதில் உண்டே
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பர ஸ்வரூபம்
என் மனனே -அதிகாரி ஸ்வரூபம்
மயர்வு -விரோதி ஸ்வரூபம்
அருளினன் -உபாய ஸ்வரூபம்
தொழுது எழு -ப்ராப்ய ஸ்வரூபம்
உபதேச கர்ப்ப அனுபவம் -அனுபவ கர்ப்ப உபதேசம் –

——–

எம்பெருமானார் -அடுத்தபடி
சந்திரிகிரி ஐயன்
ஸ்ரீ மன் நாராயண ஐயர்
திருக்கோஷ்டியூர் ஜீயர்
என்று மூவரையும் குறிப்பிட்டு பின்பு
வடக்குத் திருவீதிப்பிள்ளை பற்றியும் – குறிப்பிடுகிறார்

எனவே
இப்பிரபந்த கர்த்தா -பெண்பிள்ளை -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஸ்வாமிகளுடைய சிஷ்யை-
ஸர்வஜித் வருஷம் இவர் திரு அவதாரம்
அதுக்கு அடுத்த ஆங்கீ ரஸ வருஷம் இவரது
கலி யுகாதி -சக வருஷங்கள் எண் குறிப்பிட வில்லை
ஆங்கீர வருஷம் -மார்கழி -26-தேதி இப்பிரபந்தம் வெளியிட்டதாகக் குறிப்பிடுகிறார் –

நிர்ப்பரோ நிர்பயோஸ்மி -ந்யாஸ விம்சதி கடைசி ஸ்லோகத்தை இவர் காட்டி உள்ளதால்
தேசிகருக்குப் பிற்பாடாராக இருக்க வேண்டும் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாமம் இந்த நூலில் இல்லை
ஆகவே அவருக்கு முன் திரு அவதரித்தவராக இருக்க வேண்டும்
ஆகவே 1270-1370-காலத்துக்குள் இவர் அவதாரம்

ஈட்டில் உள்ள ஸ்ரீ ஸூக்திகளையே கொண்டு வந்துள்ளது இப்பிரபந்தம் –
இவ் வுரை நூறு பாட்டுக்களுக்கே உள்ளது
தஞ்சை ஸரஸ்வதி மஹாலில் உள்ள ஒரே சுவடு -ஆசிரியர் தமது கையாலேயே எழுதப்பட்டது –

ஸரஸ்வதி மஹால் ஓலைச்சுவடிகள் 700 வருஷங்கள் பழைமை என்பதால்
இது இவரே எழுதின ஓலைச் சுவடியாக இருக்க முடியாது –

இணைவனாம் எப்பொருட்க்கும் -என்கிறபடி -முதல் பாசுரம் மற்ற எல்லா பாசுரங்களுடன் இணைக்கப் பட்டு
அவற்றுடன் பொருள் ஒன்றி இருப்பதை நன்கு விளக்குகிறது இந்நூல்
வருந்தி நான் வாசகமாலை கொண்டு -என்ற ஆழ்வார் அருளிச் செயலுக்கு ஏற்ப
திருவாய் மொழிச் செய்யுள்களையே வசன நடையில் தொகுத்தால் போலே அமைந்துள்ள இந்நூலுக்கு
திருவாய் மொழி வாசக மாலை என்று பெயர் இடப்பட்டுள்ளது –

உயர்வற உயர் நலம் உடையவன் கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்று சேர்த்து
உயர்வற -உயர்த்தி அற்ற லீலா விபூதியை -ஈர் ஏழு லோகங்களை –
உயர் நலம் உடையவன் -அவ்வெம்பெருமான் இருப்பிடமாகிய நித்ய விபூதியைச் சொல்லும்
கங்குல் -இரவு -பகல் -இருள் தரும் மா ஞாலம் -நித்ய விபூதி -பகல் -இவற்றை உடையவன் உயர் நலம் உடையவன் –
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
இப்படி ஸ்வா பதேச அர்த்தங்களையே இவ்வாறு இணைத்து அருளிச் செய்கிறார் –

இதே போல் ஆழி எழ பாதிக்கத்துக்கு உயர்வற உயர் நலம் உடையவனே வாமனன் என்று
கொண்டு பொருத்திப் பொருள் விளக்குகிறார் –

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———

இந்த ஏட்டில் மூன்று சித்ரங்கள் வரையப்பட்டுள்ளன
தமிழ் மறை தந்து அருளிய -ஆராவமுதாழ்வார் -பாம்பணையில் பள்ளி கொண்டு அருள
நடுவில் பராங்குச நாயகி -ஞான முத்ரையுடனும்
வலப்புறம் கண்ணன் யசோதா பிராட்டியால் உரலினோடு இணைத்துக் கட்டப்பட்டு -இரண்டு மருத மரங்களும்
இவ்வாறு ஒலை யிலே சித்திரம் வரைவதும் சகஜம் போல் அன்று இருந்தது போலும்

——–

அவதாரிகை
ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்
இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஓடி ஓடிப் பல பிறவிகளிலும் தோன்றித் தோன்றி
எல்லையற்ற துன்பங்களை அனுபவித்துத் தன் உண்மையான ஸ்வரூபத்தை மறந்து தவிக்கும்
எண்ணற்ற ஜீவாத்மாக்களை உய்வித்து நற்கதியை அடைவிப்பதற்காகத் தோற்றுவித்த
தத்துவ உபதேச திவ்ய பிரந்தங்களுக்குள்
திருவாய் மொழி எனப்படும் செஞ்சொல் கவிகள் ஆயிரமும் ஒன்றாகும் –

இது மதிநலம் அருளப்பெற்ற -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம் பெருமான்
என்று இருந்த நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட அந்தாதித் தொடையில் அமைந்த சரம பிரபந்தம்

ஆழ்வார் அவனுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டித விபூதியை யாதாத்ம்யமாக காட்டப்பட்டு அறிந்து
அருளிச் செய்த -பொய்யில் பாடல்கள் -தேனினும் இனிய தமிழ் பாசுரங்கள்
ஆழ்வாரை வியாஜமாக எம்பெருமானே -தானே தன்னைப் பாடிய வாய் முதல் அப்பன் –

இவற்றில் நூறு பாடல்களுக்கே இந்த உரை -விவரண சதகம் என்று தாமே திருநாமம் சூட்டி அருளுகிறார்
இதில் முதல் 13 ஏடுகளும் -15-16- ஏடுகளும் லுப்தம்
இப்பொழுது கிடைத்த ஏடுகளில் 1-6 -தொடங்கி உள்ளது –

————-

பரிவதில் யீசனைப் பாடி விரிவதில் மேவலுறுவீர்
பிரிவகை யின்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகைப் பூவே –1-6-1-

தத் ஆஸ்ரயணீயன் யார் என்ன -மயர்வற மதிநலம் அருளினன்
அத்தாலே
தேவதாந்தர பஜனம் அற்று
அருளின பக்தியால்
ஸூகரமாக
பகவத் சமாஸ்ரயணம் பண்ணப் பெற்றேன்

நீங்களும்
விரிவது மேவலுறுவீர்
அயர்வரும் அமரர்கள் அதிபதியானவனை ஆஸ்ரயித்து
விஸ்த்ருதராக-விரிந்த -மழுங்காத ஞானம் உடையராய் – வேண்டி இருப்பீர்

பிரிவகை யின்றி நன்னீர் தூவி
சற்றும் அசராமல் ஆஸ்ரயிக்கிற
நித்யருக்கு அதிபதியாய்
நியாந்தா வானவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது

பிரிவகை யின்றி -அயோக்யன் என்று அகலாதே
நன்னீர் தூய்ப் -ஏலாதி ஸம்ஸ்காரங்கள் வேண்டா
துயர் அறு சுடர் அடிகள் ஆகையாலே
புரிவதுவும் புகைப் பூவே -ஏதேனும் புகையும் பூவும் அமையும்
கள்ளார் துழாயும் -இத்யாதி

சுடர் அடி தொழுது எழு என் மனனே
இப்படி
ஸூலபமுமாய் –
ஸூ கரமான திருவடிகளைத் தொழுது வர்த்தி -என்கிறார் –

———–

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயரில்
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயம் தான் போக ரூபமாய் இருக்கும் என்கிறார் –
இப்படி போக்யனானவனை விட்டுப் ப்ரயோஜனாந்தரத்தைக் கொண்டு அகலுவதே -என்று
கேவலரை நிந்திக்கிறார்

உயர்வற என்கிற பாட்டைப் பிறவித் துயர் என்கிற பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
காம்ய பலன்களையும்
அதுக்கும் அவ்வருகான கைவல்யத்தையும் பெறுவதே என்று கேவலரை நிந்திக்கிறார் –

உயர்வு அற
பிறவித துயர் அற
ஸ்வர்க்காதிகளில் கைவல்யத்தில் உயர்த்தி யுண்டோ என்ன
அவற்றுக்கு ஒரு வகையாலும் உயர்வு இல்லை என்கிறது -பரமானந்தத்தைப் பற்றச் சொல்கிறது –

அற ஞானத்துள் நின்ற
உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஞான ஆனந்தாதி ஸ்வரூபம் ஆனவன்
மயர்வற மதிநலம் அருளினன்
பரமானந்த ஸ்வரூபத்தைப் பற்றி
ஜரா மரண மோஷாயா -என்றதை அறிந்து
ஆத்ம அனுபவ ஞானத்தில் ஞானம் முற்றி இருக்கை –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனை நோக்குகிற மதி நலம் அருள பெற்று அவனாலே

துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
பிரகிருதி விநிர் முக்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பிராபிக்க வேண்டி இருப்பார்

அறவனை
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன்
அவன் ஆழிப்படை அந்தணனை
அசர்வற்று
அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரான நித்ய ஸூரி சேவ்யனை அகன்று
ஆத்ம அனுபவத்திலே மூளத் தேடுவதே
ஏதேனும் ஒன்றைத் தேடிப் பெறும் போது அவனை ஆஸ்ரயித்துப் பெற வேண்டும்படி இருக்கிற
இது -என்ன தார்மிகனோ -என்கிறார் –

ஆழிப் படை அந்தணனை
துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஆத்ம அனுபவ விரோதியைப் போக்கிக் கொள்வதே -சுத்தி குண விசிஷ்டன் என்றதாயிற்று
அவர்கள் பற்றுற்றும் என் மனனே
சுடர் அடி தொழுது எழப் பெற்றோமே

ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –
அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் பழைய ஸம்ஸாரமே ஸித்திக்கும் என்கிறார் –

———–

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
பூர்ணனுமாய் இருக்கிறவன் -யாவன் ஒருவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அமரர்கள் ஆதி முதல்வனானவன் –
அக்குணங்களை நித்ய ஸூரிகள் அனுபவிப்பிக்க –அவர்கள் தம் அதீனமாம் படி இருக்கிறவன் –

மயர்வற மதிநலம் அருளினன்
அஞ்ஞான கந்த ரஹிதமான -பக்தி ரூபா பன்ன ஞானத்தை
தன் நிர்ஹேதுக கடாக்ஷத்தினாலேயே பூரித்தவன் யாவன் ஒருவன்
தன்னோடு ஏக ரஸம் அனுபவிக்கும் படி பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் –

கருகிய நீல நன்மேனி வண்ணன்
தம்மோடு உண்டான அவயவ அனுபவம் பண்ணினவற்றால் வந்த திருமேனியில் புகர்
கருத்து நெய்த்துப் பேசுகைக்க விஷயமாம் படி யாயிற்று –

செந்தாமரைக் கண்ணன்
அகவாயில் குணங்களுக்குப் பிரகாசகமான திருக்கண்களை யுடையவன்
எனக்கு மயர்வான அவித்யாதிகளைப் போக்கி
ஞான பக்தியாதிகளாலே தன்னோடு ஐக ரஸ்யம் பிறந்து அனுபவிக்கும் படி
பண்ணினவற்றால் வந்த என்னவா
தன்னதாம் படி
திருமேனியும் திருக்கண்களும் செவ்வி பெற்று விகஸிதமாய் யுகக்கிறவன்
யாவன் ஒருவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
சற்றும் அசராதே ஏக ரஸ அனுபவ மக்நரானவர்களும் ரசிக்கிற ஸ்வாமி யானவன் –

பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஸர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற் கொள்ளுவதாகக் கடாக்ஷித்தால்
அவனுடைய அங்கீ காரம் பெற்றால்
அந்த ஹர்ஷத்தால் பெருக்காறு சுழித்தால் போல்
தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையவனாய்க் கொண்டு யாயிற்று த் தோற்றுவது –

இன்னம் -அவனை மேற்கொள்ளப் பெற்றோம் இறே -என்று திரு உள்ளத்திலே ப்ரீதியோடே யாயிற்று மேற் கொள்ளுவது –

பூ மகளார் தனிக்கேள்வன்
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய்
போக்யதை ஏக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால்
இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதவனாய் யாவன் ஒருவன் இருக்கிறான்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

அவன் பண்ணின மஹா உபகாரம் மட்டில்லை என்ன
அது ஏது என்ன
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்
திருவனந்த ஆழ்வானுக்குப் படுக்கையால் வந்த முறை
திருவடிக்கு வாகனமான முறை
பிராட்டிமாருக்கு மஹிஷியான முறை
ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வானுக்கு செங்கோல் செலுத்தின முறை
இப்படித் தனித்தனியே முக்தர் நித்யருக்கு முறை முறையால் வரும் கைங்கர்யங்கள் எல்லாம்
அவர் அவர்களோடே பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவருக்கு ஒரு வழியால் வந்தது அன்றிக்கே
சர்வ வித ரஸத்தையும் தந்து விடுகிறிலன்
என் அளவில் நித்ய முக்தர்கள் எல்லார் அளவிலும் பண்ணும் ஆதரத்தை
என் பக்கலிலே பண்ணா நின்றான் –

ஒழிவிலன் என்னோடு உடனே
இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறான் –
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கேயே இருந்து கேட்க்கும் அத்தனை

தண் தாமம் செய்தது என்று நித்ய விபூதியில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணினார் என்றார்
கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளார் உடன் பரிமாறும் படியை என் ஒருவன் இடம் பரிமாறா நின்றான் என்கிறார் –

பூசும் சாந்திலே -இவர் அவயவங்களை சந்தன புஷ்ப்பமாகக் கொண்டான்
இதில் போக வஸ்துக்களாயும் போக ஸ்தானங்களாயும் கொண்டான்

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
நீயும் ஓர் அனுபவம் குறையாமல் துயர் அறு சுடர் அடி தொழுது அனுபவித்து எழு
என் மனனே -என்கிறார் உபகார ஸ்ம்ருதியாலே –

—————

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படையில்
இப்படிப்பட்ட பேற்றுக்கு இத்தலையில் ஒன்றும் செய்ய வேண்டாத படி
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி தொடக்கமாக -பரமபக்தி பர்யந்தமாகத் தானே பிறப்பித்து
நித்ய ஸூரிகள் பேற்றையும் தந்தான் என்கிறார் –

கீழில் திருமொழியில் பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அநுஸந்தித்து உச்சி யுள்ளே நிற்கும் என்று இறே கீழ் நின்றது
பேற்றில் இனி இதுக்கு அவ்வருகே ஏற்றமாகச் செய்து கொடுக்களாவது இல்லை என்று நிர் வ்ருத்தராகிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி –
நிர் வ்ருத்தி என்று ஸூ கமாக ஸூ கிக்கிறார் என்றபடி

கீழே பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அனுசந்தித்துச் சொல்லுவது ஓர் ஏற்றம் உண்டு
உச்சியுள்ளே நிற்கும் என்று இறே -கீழ் இதுக்கும் மேல் ஏற்றமாக –பண்ணிக் கொடுக்கிறான் என்று பட்டர் அருளிச் செய்தார்

நீர் தாம் இங்கனே கிடந்தது படுகிறது என்
மறந்து பிழைக்கலாகாதோ என்ன
எத்தைச் சொல்லி மறப்பேன் என்கிறார் –

———–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக லீலா விபூதி யோகம் சொல்லுகிறது
உயர் நலம் உடையவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
யவன் அவன் என்று –
உபய விபூதியிலும் அதிசயிதமான த்ருதீய விபூதிக்கும் நிர்வாஹகனான நம்பியை
பூர்ணமானவனை
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி-என்கிறது –

இப்படிப் பரிபூர்ணமானவன் எனக்கு மயர்வற மதி நலம் அருளித் தன் ஸ்லாக்யமான
பரத்வாதிகளில் காட்டில்
அர்ச்சக பராதீனமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டிப் பரத்வாதிகளிலே
மனஸூ போகிற மயக்கத்தை அறுத்து

அர்ச்சாவதாரத்திலும் திருக்குறுங்குடி நம்பியை ஒழியப் போகாமல்
மனன் அக மலம் அறும் படி பண்ணி
இப்படி மயர்வற மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -என்றும்

உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
இப்படி நித்ய ஸூரி ஸேவ்யனாய்
ஆதி காரணமான பரஞ்சோதியை மறப்பது என்
அஞ்ஞான கந்த ரஹிதரான மேலாத் தேவர்களுக்கும் நிலத் தேவர்களுக்கும்
காரணமானவனை மறக்க விரகு உண்டோ –
இப்படி உபகாரகனானவனை மறக்க விரகு உண்டோ –

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மறக்க ஒட்டாத் திருவடிகள்
உன் மறப்பாகிற துயர் அறுக்கும்
அஞ்ஞான அந்தகாரம் நீக்கி -ஞானப் ப்ரகாஸம் ஆகிற பரஞ்ஜோதிஸ்ஸூ
உனக்கு விளக்காகக் காட்டும் திருவடிகளைத் தொழுது எழப் பண்ணின
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ

அபூர்ணன் என்று மறக்கவோ
அஸந்நிஹிதன் என்று மறக்கவோ
வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
மேன்மை இல்லை என்று மறக்கவோ
எனக்கு உபகாரன் அல்லன் என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பேன் -என்கிறார் –

முதல் பத்து விவரணம் முற்றிற்று –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 18, 2021

கீழ்ப்பாட்டில் நரஸிம்ஹாவதார ப்ரஸ்தாவத்தினால் அவ்வவதாரத்திற்கு முந்தின வராஹாவதாரம்
ஸ்மரிக்கப் பட்டதாகி அதனைப் பேசி யநுபவிக்கிறார்.

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

பதவுரை

ஊனக் குரம்பையின்–மாம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு–உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி–(நினைக்கிற அஜ்ஞாநமாகிற) இருட்டைப் போக்கி
ஞானம்–தத்வ ஜ்ஞாநமாகிற
சுdடர்–விளக்கை
கொளீஇ–ஏற்றி
ஏனத்து உரு ஆய்–வராஹ ரூபியாகி
உலகு இடந்த–(பிரளயங்கொண்ட) பூமியைக் குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
நாள் தோறும்–எப்போதும்
மருவாதார்க்கு–ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ–பரம பதம் கிடைக்குமோ?[கிடைக்க மாட்டாது.]

“ஊனக்குரம்பையினுள்புக்கு” என்றது-
“தீண்டா வழும்புஞ் செந்நீருஞ் சீயு நரம்புஞ் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்” என்று
பரம ஹேயமாகச் சொல்லப்பட்டும் காணப்பட்டும் இருக்கின்ற சரீரத்தின் தோஷங்களை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து என்றபடி.
இருள் நீக்கி-சரீரமே போக்யமென்று நினைக்கிற அஜ்ஞாநத்தை இங்கு இருளென்றார்;
சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற்படியவே இந்த அஜ்ஞாநம் நீங்குமென்க.
அஜ்ஞாநவிருள் நீங்கிற்றென்றால் ஞானச்சுடர் தன்னடையே கொழுந்துவிட்டோங்குமாதலால் அதனை இரண்டாமடியிலருளிச்செய்தார்.
ஆக, சரீரத்தைப்பற்றின அஜ்ஞாநம் தொலைந்து ஆத்மாவைப் பற்றின ஸத்ஜ்ஞாநம் திகழ்ந்து
ஞானப் பிரானது திருவடிகளை யடைந்தது வாழுமவர்கட்கே வானுலகம் எய்தலாகும்;
மற்றையோர்க்கு அஃதில்லை என்றதாயிற்று. சுடர் கொளீ இ-சுடர் கொளுவி; சொல்லிசையளபெடை.
உலகமெல்லா மழிந்த யுகாந்த காலத்திலும் தான் இவற்றை ஸத்தை யழியாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவன்
என்னுங் காரணத்தினால் எம்பெருமானுக்க்கு ஊழியானென்று பெயராயிற்று.

————–

உலகமுண்ட பெருவாயனான யுனக்கு ஓரிடைச்சி கடைந்து வைத்திருந்த வெண்ணெயை வாரி விழுங்கி யுண்டவளவால்
பசி தீர்ந்ததாகுமோ? என்றவிதன் கருத்து யாதெனில்;
அவாப்த ஸமஸ்த காமனானவுனக்குப் பசி என்பதில்லை; வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டதெல்லாம்
பசி நீங்கி வயிறு நிறைவதற்காக வன்று; ஆச்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற வஸ்துவை உட்கொண்டாலன்றித்
தரிக்க முடியாமையினால் உண்டாயத்தனை என வெளியிட்டபடியாம்.

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

“வானாகி… மாருதமாய்” என்று இங்கே நான்கு பூதங்களைச் சொன்னது ஐந்தாவது பூதத்துக்கும் உபலக்ஷணம்;
இத்தால், பஞ்ச பூதங்களாற் சமைந்த இவ்வண்டத்திற்குள்ளிருக்கும் பதார்த்தங்கட்கு நிர்வாஹகனானவனே! என்றதாயிற்று.

தேனாகிப் பாலாந்திருமாலே! என்றது-பரமபோக்யனான உன்னை ஞனிகள் உட்கொள்ளக் கருதா நிற்க
நீ வேறொரு வஸ்துவை போக்யமாக நினைத்து உட்கொள்ளுவது என்னோ? என்ற குறிப்பு.

———–

புஷ்பத்தைக் காட்டிலும் மிகவும் ஸுகுமாரமான திருக்கையினால் முரட்டுடம்பனான இரணியனைத்தொட்டுப் பிடித்திழுத்து
ஆச்ரிதர்கட்கு ப்ராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக்கொண்டு மார்வைப் பிளந்தொழித்த பின்பும் பிரானே!
நீ உனது பற்கள் வெளித்தெரியும்படி நாவை மடித்துக்கொண்டிருந்தது ஏதுக்காக?
ஆச்ரித விரோதி முடிந்துபோன பின்பும் வெகு நாழிகை வரையில் சீற்றம் மாறாதேயிருந்தது ஏன்! என்று
கேட்கிறவிதன் கருத்து யாதெனில்;
எம்பெருமான் ஆச்ரித விரோதிகளின் மீது கொள்ளும் கோபமே சாணகதர்க்குத் தஞ்சமாவது என்ற அர்த்தத்தை காட்டினபடியாம்.

திருமங்கையாழ்வாரும் “கொடியவாய் விலங்கினுயிர் மலங்கக் கொண்ட சீற்றமொன்றுண்டுளதறிந்து
உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேனணி பொழில் திருவரங்கத் தம்மானே!” என்றருளிச்செய்தது காண்க:

அவ்விடத்து வியாக்யானத்திலே “தரித்ரனானவன் தநிகனையடையுமாபோலே ‘ சீற்றமுண்டு’ என்றாய்த்து இவர் பற்றுகிறது–
விரோதி நிரசநத்துக்குப் பரிகரமிறே சீற்றம்” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்துள்ளதும் குறிக்கொள்ளத்தக்கது.

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று ——–93-

பதவுரை

பூ வடிவை ஈடு அழித்த–புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையை யுடையவனே!
வயிறு அழல–(என்ன தீங்கு நேருமோ வென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை–வாளை உருவிக்கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச–(அவன் உன் வடிவத்தைக் கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்–உனது திருவடிகளின் மேலே
(போட்டுக்கொண்டு)
பொறி உகிரால்–நாநா வர்ணமான நகங்களினால்
ஈடழிய செற்று–கட்டுக் குலைந்து போம்படி கொன்று
(பின்னையும் சீற்றம் மாறாமையால்)
எயிறு இலக–பற்கள் வெளித்தெரியும்படி
நீ வாய் மடித்தது–நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்–ஏதுக்காக?.

எயிறிலகவாய்மடித்ததென்? என்ற இக்கேள்விக்கு வாய்த்த உத்தரம்:-
ஆச்ரித விரோதி விஷயதிலுண்டான இப்படிப்பட்ட அளவு கடந்த சீற்றமே உலகட்கெல்லாம் தஞ்சமென்று
மற்றும் பல பக்தர்களுக்குக் காட்டுதற்காகவாம் என்பது.

“பொன்னாழிக் கையால்” என்றும் பாடமாம்.

————-

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-

பதவுரை

எழுந்து–(அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெருமுயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து–(உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும்–இவ் வுலகங்களை யெல்லாம்
செற்று–அழித்து
மற்று–பின்பு
இவை–“பிரளயத்தில் அழித்த இப் பதார்த்தங்கள்
சென்ற–(என்னிடத்து) அடங்கிக் கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து–ஆ வென்று வாயைத் திறந்து
முற்றும்–ஸகல ஜகத்தையும்
மறையவற்கு–வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய–(முன் போலவே யிருப்பதைக்) காட்டி யருளிய
மாயவனை அல்லால்–ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
(வேறொருவனை)
என் நா–எனது நாவானது
இறையேனும்–சிறிது
ஏத்தாது–துதிக்க மாட்டாது

கால கதியைக் கடந்து என்றும் பதினாறாக நீடூழி வாழும்படி நீண்ட ஆயுள்பெற்ற மார்கண்டேய முனிவன்
பத்திர நதிக்கரையில் தவம்புரிந்து நரநாராயணரது ஸேவையைப் பெற்று
‘யான் பிரளயக் காட்சியைக் காணுமாறு அருள்புரிய வேண்டும்’ என்று பிரார்த்திக்க,
அவ்வாறே அவர்கள் அநுக்ரஹித்துச் சென்ற பின்பு, மாயவன் மாயையால் மஹாப்ரளயந் தோன்ற,
அப்பிரளயப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு வருந்திய மார்க்கண்டேயன் அவ்வெள்ளத்தில்
ஆலிலையின் மீது ஒரு குழந்தை வடிவமாய் அறிதுயிலமர்கிற ஸ்ரீமந் நாராயணனைக் கண்டு
அப்பெருமானது திருவயிற்றினுட்புகுந்து அங்கிருந்த உலகங்களையும் ஸகல சராசரங்களையும் கண்டு
பெருவியப்புக்கொண்டனன் என்ற இதிஹாசம் அறியத்தக்கது.

பிள்ளைப்பெருமாளையங்கார் திருவரங்கத்தந்தாதியுலும் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியிலும் “
எய்த்த மார்க்கண்டன் கண்டிடவமலைக்கு முலகழியாதுள்ளிருந்த தென்னே” என்றும்
“ஆலத்திலை சேர்ந்தழியுலகை யுட்புகுந்த காலத்திலெவ்வகை நீ காட்டினாய்… வேதியற்கு மீண்டு” என்றும் பேசினவை காண்க

யுகந்த காலத்திலே உலகத்திலே அக்ரமம் விஞ்சி அதனால் எம்பெருமான் உக்கிரங்கொண்டு இவ்வுலகங்களை யெல்லாம்
அழித்துத் தன்னிடத்திலே யடக்கிக் கொள்வனென்னும் நூற்கொள்கை காட்டப்பட்டது முதலடியில்,
சென்ற- சென்றன என்றபடி; அன்சாரியை பெறாத வினைமுற்று.

————–

இவ்வுலகில் எல்லாருமே நற்கதி பெறுதற்கு யாதொரு தடையுமில்லை;
எளிதில் அநுஸந்திக்கக்கூடிய திருவஷ்டாக்ஷரம் ஸித்தமாயிருக்கின்றது;
அதைச் சொல்லுவதற்குக் கருவியான நாவும் கடவுளால் படைக்கப்பட்டிருக்கின்றது;
இப்படி இம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக் கொண்டு எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நானக் கொண்டு
எம்பெருமானை ஏத்தாதே உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுகைக்கு இதை கருவியாகக்கொண்டு
உலகத்தார் அநர்த்தப்படுகின்றார்களே! இஃது என்ன ஆச்சரியம்! என்று ஆழ்வார் வியக்கின்றார்.
“நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்திநீ, ததாபி நரகே கோரே பத்ந்தீதி கிமத்புதம்,” என்ற
புராண ச்லோகத்தின் பொருளை இப்பாட்டால் அநுஸந்தித்தாராயிற்று

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

பதவுரை

நா–(ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
(ச்ரமப்பட்டுத் தேடவேண்டாதபடி )
வாயில் உண்டே–ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப்பட்டிருக்கின்றதே;
ஓவாது–(ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம்போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும்–( எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக்கூடிய
நமோ நாரணாய என்று உரை–திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே–ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத–கிழத்தன்மையற்ற [திரும்பிவருதலில்லாத]
மா கதிக்கண்–பரமப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகையுண்டே–சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
(இப்படியிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்)
தீக்கதிக்கண்–விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என்–போய் விழுகிறபடி என்னோ!.

முதலடியில் “நமோ நாரணா வென்று “ என்றே பெரும்பான்மையான நவீந பாடம் வழங்கிவரக் காண்கிறது;
இப்பாடத்தில் வெண்டளை பிறழ்தலால் “நமோ நாரணாய வென்று” என்ற ப்ராசீன பாடமே கொள்ளத்தகும்.
இனி நவீந பாடத்தையும் பொருந்தவிடலாம்; ‘நாரணா வென்றோவாதுரைக்கும்’ என்று ஸந்தியாக்காமல்
‘ந்மோநாரணாவென்று ஓவாது ’ என்று ஸந்தியாக்குக: குற்றியலுகரத்துக்கு முன் உடம்படுமெய் வந்த்தாகக் கொள்க.

ஓவாது உரைக்கும் உரை- ஸஹஸ்ரரக்ஷரீமாலா மந்த்ரத்தைச் சொல்லவேணுமானால் இடையில் மூச்சுவிடவும் முடியாதே;
நெடுமுயற்சிகொண்டும் ஓய்ந்து ஓய்ந்து சொல்லவேண்டிய அருமை யுண்டு; திருவஷ்டாக்ஷரம் அப்படியன்று;
இடையில் ஓய்வை அபேக்ஷியாமல் ஒரு காலே சொல்லி இளைப்பாறலாம் படியான மந்த்ரமிது.
இவ்வளவு ஸுலபமான மந்த்ரம் கைப்பட்டிருக்கவும் அந்தோ! சிலர் இழக்கிறார்களே! என்ன கொடுமை!

—————–

அந்தோ! சிலர் அநியாயமாக நரகவழி நோக்குகின்றனரே! என்று கீழ்ப்பாட்டில் உலகத்தாரைப் பற்றிக் கவலையுற்ற ஆழ்வார்,
இப்பாட்டில், அவர்கள் எங்ஙனே கெட்டொழிந்தாலும் ஒழிக;
நெஞ்சே! நீ மாத்திரம் ஸர்வநிர்வாஹகன் அப்பெருமானொருவனே யென்று நான் சொல்லுவதில் ஒரு போதும்
விப்ரதிபத்தி கொள்ளாமல் இதுவே பரமார்த்த மென்று உறுதிகொண்டிரு-என்று திருவுள்ளத்தை நோக்கி உபதேசிக்கின்றனர்.

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான்–புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம்மண் தான்–இந்தப்பூமியும்
மறி கடல் தான்–அலையெறிகிற கடலும்
மாருதம் தான்–வாயுவும்
வான்–ஆகாசமும்
புறம் தான்–இவை தவிரவுள்ள மஹாந்முதலிய தத்துவங்களும்
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்)
தானே கண்டாய்–அந்தத் திருமாலேயாவன்;
கடைக்கண்–முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
(இதுவே உண்மையென்பதை)
திறம்பாது–தவறாமல்
பிடி–உறுதியாகக்கொள்.

————–

கீழ்ப்பாட்டில் “ அறம்பாவ மென்றிரண்டு மாவான்” என்றருளிச் செய்ததற்கு விவரணம் போலும் இப்பாட்டு.
புண்யமும் பாபமும் அவனிட்ட வழக்காயிருக்குமென்றிறே கீழ்ப்பாட்டிற்சொல்லிற்று; அப்படி எங்கே கண்டோமென்ன,
இரண்டுக்கும் இரண்டு வ்ருத்தாந்தங்கள் காட்டுகிறாரிதில்;

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பதவுரை

பிடிசேர் களிறு–பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த–காத்தருளின
பேராளா–மஹாநுபாவனே!
பொடி சேர்–(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்–அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல்–ஒளிபொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த–(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்–ஜலமயமான
கங்கை என்னும் பேர்–கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்–சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து–உன்னுடைய திருவடிகளைக்கிட்டி
அருள் பெற்றாள் அன்றே–(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

ஸ்ரீ கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம்.
அக்களிறு பூர்வஜந்மவாஸநையினால் பகவத்பக்தி மாறாதிருக்கப் பெற்றாலும் மற்றுள்ள காட்டானைகள் போலே
விஷயப்ரவணமுமாய்த் திரிந்துக்கொண்டிருந்தமை பற்றிப் பிடிசேர்களிறு என்றார். [பிடி- யானையின்பேடை.]
சாபத்தின் பலனாகப் பாபயோநியிற் பிறவிபெற்ற அவ்யானைக்கும் அருள் செய்யக் காண்கையாலே
பாபம் அவனிட்ட வழகாயிருக்குமென்பது பெறப்பட்டது.

பாபிஷ்டர்களையும் பரிசுத்தராக்குந் தன்மை கங்கைக்கு எம்பெருமானருளாலே வந்த தென்கையாலே
புண்யம் அவனிட்ட வழக்காயிருக்குமென்பது பெறப்பட்டது.
“ஆனின் மேயவைந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ” [ சுத்தியை விளைக்கக்கூடிய பதார்த்தங்களுள்
முதன்மையாகக் கூறப்படுகிற ’பஞ்சகவ்யமும் பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது] என்றார் திருமழிசைப்பிரான்;
‘பஞ்சகவ்யம் பரிசுத்திகரமாகக் கடவது’ என்று ஸங்கல்பித்தது போலே
‘ கங்கை பரிசுத்திகரமாகக் கடவது’ என்றும் ஸக்கல்பித்து வைத்திருக்கையாலே புண்யம் நீயிட்ட வழக்கென்கிறது

————

கீழ்ப்பாட்டில், எம்பெருமானது திருவடியில் தோன்றிய கங்கையைச் சடைமேலே தரித்துக் கொண்டதனாலே
ருத்ரன் பாதகம் நீங்கிப் பரிசுத்தனாயினானென்றது; இப்படி ஏன் சொல்லவேண்டும்?
இதனால் ருத்ரனுக்கொருகுறை சொல்லலாமோ? அவனும் ஒரு ஸம்ஹாரக் கடவுளென்று பேர்பேற்று ஈச்வரனென்று
நாட்டில் கெளரவிக்கப் படவில்லையா? என்றொரு கேள்வி பிறக்க,
அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமானுக்கு சரீர பூதனாகையாலே வந்ததித்தனையொழிய
இயற்கையாக இல்லையென்பதை மூதலிக்கக் கருதி இப்பாட்டருளிச் செய்கிறார்.

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-

பதவுரை

பொன் திகழும் மேனி–பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை–பின்னின சடைமுடியை யுமுடையவனாய்
அம்–அழகிய,
புண்ணியனும்–(ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தை யுமுடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும்–நின்று உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஸர்வேச்வரனும்
என்றும்–எக் காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும்–இருவராகி வெவ்வெறு வடிவத்தைக் கொண்டு இருந்தார்களே யானாலும்
ஒருவன்–சடை புனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து–நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும்–எப்போதும்
உளன்–ஸத்தை பெற்றிருப்பன்.

அரியும் அரனும் தனித்தனி இரண்டு சரீரங்களை யுடையவராய்த் திரியா நின்றாலும்
அரனானவன் அரியினது திருமேனியின் ஒருபுறத்திலே யொதுங்கி ஒரு வஸ்துவாக ஸத்தை பெறுகிறான் என்றதாயிற்று.
“ பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே” என்றார் நம்மாழ்வாரும்.

“புரிசடையம்புண்ணியன்” என்ற தொடரில் இவனுடைய வேஷமே இவன் ஈச்வரனல்ல னென்பதைக் காட்டுமென்ற கருத்தும்,
“ நின்றுலகம் தாயநெடுமாலும் “ என்ற தொடரில், ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசியற
எல்லார் தலையிலுமாகத் தனது தாளை நீட்டியவனென்பதால்
அவனே ஸர்வேச்வரனென்ற கருத்தும் ஸ்பஷ்டமாக விளங்குதல் காண்க

ஒருவன் ஒருவனங்கதென்றுமுளன் – “வலத்தனன் திரிபுரமெரித்தவன் “ என்ற திருவாய்மொழியுங் காண்க.
“ஒருவனங்கத்து” என்பதற்கு. –ஸ்ரீமந் நாராயணனாகிய ஒருவனுடைய சரீரத்தின் ஏகதேசத்திலே என்றும்,
சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்வர்.

———–

தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார். திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய இடங்கள் எம்பெருமானுக்கு
வாஸஸ்தலங்களாயினும் அவ்விடங்களில் எம்பெருமான் வஸிப்பதானது
ஸமயம் பார்த்து ஞானிகளின் மனத்திலே புகுவதற் காகவேயாம்.
ஸ்ரீவாநபூஷனத்தில்— “திருமாலிருஞ்சோலைமலையே என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைத் தேகத்திலே பன்ணும்; அங்குத்தை வாஸம் ஸாதாநம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம்;
‘கல்லுங் கனைகடலும்’ என்கிறபடியே இதுஸித்தித்தால் அவற்றிலாதரம் மட்டமாயிருக்கும்” என்ற ஸ்ரீஸூக்திகள் காண்க.

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன்–நித்யவாளம்
கண்டாய்–பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும்–திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும்–திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று–இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்யவாஸம் பண்ணுகிறானென்று
ஓர்–தெரிந்துகொள்.

நெஞ்சே! ஸர்வரக்ஷகனான ஸர்வேச்வரன் திருப்பாற்கடல் திருமலை முதலிய இடங்களில் வந்து தங்கினது
விலக்காதார் நெஞ்சில் வந்து புகுவதற்காகவேயாதலால் அவன் இப்போது நம்முடைய நெஞ்சில்
ஆதரவோடு நித்யவாஸம் பண்ணலானான், இதனை நீ அறிந்து உவந்திரு என்கிறார்.

இதோ, நன்னெஞ்சே! என்று நெஞ்சை விளித்து ‘உள்ளத்தினுள்ளா னென்றோர்’ என்றது எங்ஙனே பொருந்தும்?
நெஞ்சமும் உள்ளமும் ஒன்றுதானே; நெஞ்சுக்கும் ஒரு உள்ளமிருப்பதுபோலச் சொல்லியிருக்கிறதே, இஃது ஏன்? என்னில்;
இது மிகச் சிறிய கேள்வி; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத்தி விளிப்பது
அதைத் தனிப்பட்ட வொரு வ்யக்தியாக ஆரோபணம் செய்துகொண்டேயாதலால் இதுவும் ஒரு ஆரோபணமேயாம்.
நெஞ்சு தவிர உசாத்துணையாவார் வேறொருவரு மில்லாமையால் நெஞ்சை விளித்துச் சொல்லுகிறதித்தனை.

————

எம்பெருமானுடைய திருவடிகளை நாம் ஸாக்ஷாத்கரிக்கப் பெறவேண்டில்
அதற்கு அவனையே உபாயமாகக் கொள்ள வேணுமென்கிறது.
“மாயவனையே மனத்து வை” என்றது எம்பெருமானொருவனையே உபாயமாகக் குறிக்கொள் என்றபடி.
அப்படி அவனையே உபாயமாகக் கொண்டால் அவனுடைய உபய பாதங்களையும் ஸேவிக்கப் பெறுகை நமக்கு எளிதாம் என்றாராயிற்று.

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
ஓர் அடியின்–(தனது) ஒப்பற்ற அடி வைப்பினாலே
தாயவனை–லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை–கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய் மாலை சேர்–குளிர்ந்த திருத்துழாய் மாலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே–எம்பெருமானையே
மனத்து வை–மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதி கொண்டால்)
ஓர் அடியும்–உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும்–சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம்–இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப் பெறலாங்காண்

இப்பாட்டின் முதலிலுள்ள ‘ஓரடியும்’என்பதற்கு ‘உலகளந்த ஒரு திருவடியும்’ என்று பொருளுரைத்தது-
மேலே “ஓரடியின் தாயவனை” என்பதற்கேற்ப. கீழும் மேலும் பரவி இரண்டு திருவடிகளுமே உலகளந்தன வாதலால்
அத்திருவடியிணையை யெடுத்துக்கூறாது சகடாஸுரனை யுதைத்துத் தள்ளின திருவடியைக் கூட்டிக்கொண்டதென் னென்னில்;
விரோதி நிரஸநஞ் செய்யும் வல்லமையுடைமை தோற்றுதற்காக வென்க.
உலகளந்த திருவடியானது எல்லார் தலையிலும் ஏறி வீற்றிருந்து இஷ்டப்ராப்தி செய்வித்தது;
சாடுதைத்த திருவடியானது சகடாஸுரனுடைய வஞ்சனையில் நின்றும் (கண்ணபிரானாகிய ) தன்னைத் தப்புவித்த முகத்தால்
அநிஷ்ட நிவ்ருத்தி செய்வித்தது;
ஆகவே இஷ்டத்தை நிறைவேற்றுவித்து அநிஷ்ட்த்தை ஒழித்திடவல்ல திருவடிகளையுடையன் எம்பெருமான் என்று காட்டினாராயிற்று.

எம்பெருமானுடைய அவதாரங்கள் பலவற்றினுள்ளும் த்ரிவிக்ரமாவதாரமும் க்ருஷ்ணாவதாரமுமே இவ்வாழ்வார் தாம்
மிகவும் ஈடுபட்ட துறைகள் என்பதை விளக்குதற்கே உலகளந்த திருவடியையும் சாடுதைத்த திருவடியையும் பேசிப்
பிரபந்த்த்தை முடித்தருளினாரென்று பெரியோர் நிர்வஹிக்கும்படி.
பின்னடியிலும் “தாயவனைக் கேசவனை” என்றது காண்க.

உபாயமும் உபேயமும் எம்பெருமானே;
சைதந்ய கார்யமான இந்த அத்யவஸாயமொன்றே நமக்கு வேண்டியது-என்று அருளிச்செய்து
தலைக்கட்டினாராயிற்று.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 17, 2021

ப்ரயோஜநாந்தர பரர்கட்குங்கூடத் தன் திருமேனி நோவக் கடல் கடைந்து அமுதத்தை யெடுத்துக் கொடுத்து
அத்தேவர்கட்கு அஸுரஜாதியால் யாதொரு தீங்கும் நேரிடாதபடி ரஷித்தருளு மெம்பெருமானுடைய
திருநாமமே ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் உத்தாரகம் என்கிறார்.

ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

பதவுரை

ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக்கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.

கடல்கடையுங்காலம் தேவாஸுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியுங்காலமா யிருந்ததனால்
“ஆளமர் வென்றியடு களத்துள்” எனப்பட்டது;
“ஆராத போரி லசுரர்களுந் தானுமாய்க், காரார் வரை நட்டு நாகங்கயிறாகப், பேராமல் தாங்கிக் கடைந்தான்” என்று
சிறிய திருமடலிலுமருளிச் செய்யப்பட்டுளது.

நரகு என்றது ஸம்ஸாரத்தை.

———–

பெண் பிறந்தாரும் அநாயாஸமாக ஆச்ரயிக்கும்படி எம்பெருமான் திருமலையிலே
நித்ய வாஸம் பண்ணுகிறபடியை அநுஸந்திக்கிறார்.

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசியன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

திருமலையில் நாள்தோறும் நானாவகை யடியவர்கள் வந்து ஆச்ரயியா நிற்க,
‘படையாரும் வாள் கண்ணார்’ என்று ஸ்த்ரீகளை மாத்திரமும்
‘பாரசிநாள்’ என்று த்வாதசீ தினத்தை மாத்திரமும் விசேஷித்து எடுத்துச் சொன்னதன் கருத்து யாதெனில்;
அறிவொன்று மில்லாத பெண்களுங்கூட வந்து பணியுமாறு ஸர்வ ஸமாச்ரயணீயனாக இருக்குமிருப்பு விளங்குதற்காகப்
படையாரும் வாள் கண்ணர்’ என்றார்;
சிற்றஞ் சிறுகாலையில் தானே பாரணை செய்யும்படி விடிவதற்கு முன்னே வைஷ்ணவர் யாவரும் தொழுவதற்கு ஏற்ற
நாளாதல் பற்றி ஸத்வோத்தரமான த்வாதசிநாளை யெடுத்தருளிச் செய்தனர்.

‘த்வாதசீ’ என்னும் வடசொல் பாரசியெனச் சிதைந்தது. தூபம் – வடசொல்.

திருவாராதந உபகரணமான தூபத்தின் கமழ்ச்சியே திருமலையெங்கும் பரவிக் கிடக்கின்றதென்பது மூன்றாமடியின் கருத்து

————

ஆழ்வார் எம்பெருமானது ஆச்ரித பாரதந்திரியத்திலீடுபட்டுப் பேசினரென்க.

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக்கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும் அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத்தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்
செற்றவா  றேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

எம்பெருமானே! ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதும் ஆச்ரித விரோதிகளை சிக்ஷிப்பதுமாகிய இரண்டு காரியங்கள் உனக்கு உண்டு;
ஆச்ரித விரோதிகளை சிக்ஷிப்பது தானே ஆச்ரித ரக்ஷணமாகத் தேறுமாதலால் விரோதிகளைத் தொலைப்ப தென்கிற
ஒரு காரியமே போதுமாயிருக்கின்றது; அக்காரியஞ் செய்ய உனக்கு முக்கியமான ஸாதநம் திருவாழி;
அத்திருவாழியைக் கொண்டே ஆச்ரித விரோதிகளைப் பொடிபடுத்துகின்றாய்;
மதுகைடபர் முதலிய துஷ்ட வர்க்கங்களைப் பொடிபடுத்தின அவ்வாயுதம் கையிலேயிருக்கவும்,
ஆநிரையைக் காக்க மலையை யெடுப்பதும் நப்பின்னையைக் காக்க விடையேழடர்ப்பதும் முதலியனவாக
உடம்பு நோவக் காரியஞ்செய்த்து என்னோ?
திருவாழியை ஏவினால் இந்திரனது தலை அறுபடுமே; கல்மழை ஓயுமே; ஆயர்களும் ஆநிரைகளும் இனிது வாழ்ந்து போமே;
மலையை யெடுத்துப் பரிச்ரமப் பட்டிருக்க வேண்டாவே;
இங்ஙனமே, நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்கு விரோதியாயிருந்த எருதுகளின் மேலும்
திருவாழியைப் பிரயோகித்திருந்தால் உனக்கொரு சிரமமின்றியே காரியம் இனிது நிறைவேறி யிருக்குமே;
இப்படி அநாயாஸமாக ஆச்ரித விரோதிகளை நிரஸிக்கும் முகத்தாலேயே ஆச்ரித ரக்ஷணத்தை மிக எளிதாகச்
செய்யலாமாயிருக்கவும் நீ உடம்புநோவக் காரியஞ்செய்தது வெறுமனேயோ?
ஆச்ரித பாரதந்திரியத்தால் அவர்கள் காரியத்தைச் செய்வதைப் பெறாப்பேறாக நினைப்பதனாலன்றோ? – என்று
ஆழ்வார் எம்பெருமானது ஆச்ரித பாரதந்திரியத்திலீடுபட்டுப் பேசினரென்க.

மூன்றாமடியில் ‘நேரான’ என்றிருக்க வேண்டிய பெயரெச்சம் ‘நேரா’ என்றிருக்கிறது.

‘நிசாசரர்’- வடசொல்; இரவில் திரிகின்றவர்கள் என்று காரணக்குறி.

————

எம்பெருமானே ‘நீ பெரிய வடிவு கொண்டு உலகளந்த காலத்து மிக விசாலமான அத் திருவடிக்குப் பர்யாப்தமாயிருந்த
பூமியானது வராஹாவதார காலத்தில் எயிற்றின் ஏக தேசத்திலும் அடங்காதிருந்ததென்று
புராணம் வல்லார் வாய்க் கேள்விப்படுகின்றோம்; இப்படியிருத்தற்கு ஹேதுவான உனது பெருமை
ஸர்வஜ்ஞனான உன்னால் தான் அறியமுடியுமோ முடியாதோவென்று ஸந்தேஹிக்கும்படியா யிராநின்றதே யன்றி
உன்பெருமை ஒருவராலு மறியக்கூடியதா யில்லை காண் என்றாராயிற்று.
உன்னால் முயர்வற மதிநலமருளப் பெற்ற என் போல்வார் உன் பெருமையை ஒருகால் கண்டறியக் கூடுமல்லாமல்
ஸ்வ யத்நத்தாலுணர விரும்புவார்க்கு ஒருநாளும் காணமுடியாதென்று கூறுதலும் உள்ளுறையுமென்ப.

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

பதவுரை

பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை

இரண்டாமடியில், உராய்-உலாய் [உலாவி] என்றபடி;
ரகர லகரங்கட்கு அபேதங்கொள்ளும் மரபினால் இவ்வாறு பொருள் கூறுதல் பொருந்தும்.
சிறிதும் சிரமமின்றி என்று கருத்து. இது பட்டருடைய நிர்வாஹம்.
இனி, ‘உரையாய்’ என்னும் முன்னிலையே வலொருமை வினைமுற்று ‘உராய்’ எனத் திரிந்திருப்பதாகக் கொள்ளலாமென்றான் ஒரு தமிழன்; ‘
சொல்லு’ என்று ‘பொருளாம்; அது வேண்டா. உராய்- உரோசிக் கொண்டு; எல்லாரோடும் தீண்டிக் கொண்டு என்றுமாம்.

————

கீழ்ப்பாட்டில் “பிரானுன் பெருமை பிறராரறிவார்” என்று ஆழ்வார்ருளி செய்யவே,
அவரது நெஞ்சானது “பிறராரறிவாரென்று சொல்லுவானேன்? நானறிந்திருக்கிறேனே:” யென்று அபிப்ராயங்காட்ட;
நெஞ்சே! நீயும் இந்திரியங்களை வென்று ஆச்ரயணத்திலே இழிந்தாயத்தனை யல்லது இன்னமும் அவன் படிகளை
ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றாயில்லையே; அப்படி ஸாக்ஷாத் கரித்திருப்பாயேல்,
அப்பெருமான் பெரிய திருவடியாகிற த்வஜத்தை யெடுத்துப் பிடித்துக்கொண்டு ஆச்ரித ரக்ஷணார்த்தமாக
எழுந்தருளும்படியை ஸேவிக்கப் பெற்றாயோ? அன்றி,
அவன் திருவனந்தாழ்வா நநுபவிக்குபடி தனது திருமேனியைத் தந்த வண்ணமாக யோக நித்திரை
செய்தருளும்படியை ஸேவிக்கப்பெற்றாயோ? ஏதேனும் ஸேவிக்கப்பெற்ற துண்டாகில் சொல்லிக்காண் என்கிறார்.

இதனால், எம்பெருமான் கருடாரூடனாயும் சேஷசயனனாயும் ஸேவை ஸாதிக்கப் பெறுதலில்
தமக்கு ஆசை கரை புரண்டிருக்கும் படியை வெளியிட்டாராகிறார்.

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேயவொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆச்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு

—————-

“பாவருந்தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாலிரவின், மூவருநெருக்கி
மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு” என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார்கள் [பொய்கையார், பூதத்தார், பேயார்]
மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் திருக்கோவலூர் என்பது ப்ரஸித்தம்.
இவ்வரலாற்றுக்கு மூலமாயிருக்கும் இப்பாட்டு.

பிரானே! நானும் மற்றையாழ்வார்க ளிருவரும் ஓடித் திரியும் யோகிகளாய் க்ராமைக ராத்ரமாய் ஸஞ்சரித்துப் போருகையில்
உனது ஸங்கல்பத்தாலே திருக்கோவலூரில் நெருக்கமானதொரு இடைகழியிலே வந்து சேர,
அங்கே நீ திருமகளோடு வந்து புகுந்து நெருங்கினாயே இஃது என்ன திருவருள்! என்று ஈடுபடுகின்றார்.

திருக்கோவலிடைகழியில் நெருக்குண்ட முதலாழ்வார்கள் மூவரும் ஸ்ரீமந்நாராயணனுடைய நீலமேக ச்யாமலமான திருமேனியையும்
காளமேகத்தில் மின்னற்கொடி பரந்தாற்போன்ற திருமகளாரையும் நெஞ்சென்னு முட்கண்ணாலே கண்டு அநுபவித்தபடியை
இவ்வாழ்வார் இங்கு வெளியிட்டருளினராயிற்று. [இவ்வரலாற்றின் விரிவு இவரது சரித்திரத்திற் காணத்தக்கது]

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தமது திருவுள்ளத்தைக் குறித்து ‘நீ அவனை சாக்ஷாத்கரித்து அநுபவிக்கப் பெற்றாயில்லை’ என்று
சொன்னது பொறுக்க மாட்டாமல்
இவரிருந்த விடத்திலே எம்பெருமான் பிராட்டியுந் தானுமாகவந்து நெருக்க,
அதைக் கண்டு அனுபவிக்கிறார் என்று இப்பாட்டுக்கு அவதாரிகை கூறுதல் பரம ரஸம்,
“ இவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து ‘ஸாக்ஷாத் கரித்திலையிறே’ என்னைத் தரியானிறே அவன்” என்ற
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதையும் அநுபவிக்கத்தக்கது.
முன்னே நடந்த திருக்கோவலிடை கழி நெருக்கத்தை எம்பெருமான் மீண்டும் அநுபவிப்பித் தருளினன் போலும்.

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திருவாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

குன்றெடுத்துப் பாயும்பனிமறுத்த பண்பாளா! = கல்மழை காக்கக் கோவர்த்தனமெடுத்து நின்ற வக்காலத்து
இடையரிடைச்சிகளோடும் பசுக் கூட்டங்களோடும் நெருக்குண்டு நின்றாற்போலே யன்றோ
எம்மோடு நெருக்குண்டிருந்தாயென்ற குறிப்பு. ‘பனி மறைத்த’ என்றும் சிலர் பாடமோதுவர்.

வடமொழியில் ‘தேஹளீ’ என்னப்பட்டும், உலக வழக்கில் ‘ரேழி’ என்னப் பட்டும் வருகிற ஸ்தானமே
இடை கழிக்கு வெளியிலே ஸம்ஸாரிகளும், உள்ளே உபாஸகனான ரிஷியுமா யிருக்கையாலே
அநந்ய ப்ரயோஜநரான இவ்வாழ்வார்கள் மூவரும் நின்றவிடமே எம்பெருமான் தான் உவந்து சாருமிடமாகப் பற்றினானென்ப.

———–

கீழ்ப்பாட்டில் ஆழ்வாருடைய திருவுள்ளம் ஆநந்த்த்தின் எல்லையிலே நின்றது;
திருக்கோவலூரிடை கழியிலே பெருமானோடும் பிராட்டியோடும் நெருக்குண்டிருக்கும் நிலைமையிலேயே
இருப்பதாகத் தம்மை யநுஸந்தித்தார்;
இனித் தாம் உலகத்தாரை யெல்லாம் உபதேசங்களாலே நன்கு திருத்திப் பணி கொள்ளலாமென நிச்சயித்தார்.
அப்படியே எல்லாரும் திருந்தி எம்பெருமான் திருவடிகட்கு ஆட்பட்டுவிட்ட்தாகவும் பாவநா ப்ரகர்ஷத்தாலே அநுஸந்தித்தார்;
இனி எல்லாரும் ஈடேறி விட்டதாகவும் நரகத்துக்குச் செல்ல ஆள் கிடையாதாகவுங்கருதி
“நமன் தமர்காள்! நீங்கள் நரகவாசலை யடைத்துவிட்டு ஓடிபோகலாம்; இனி உங்கள் நாட்டுக்கு அதிதிகளாக வருவாராருமில்லை;
உங்கட்கும் காரிய மொன்றுமில்லை; இங்ஙனே உண்மையை எடுதுரைக்கின்ற என்மேல் நீங்கள் கோபங் கொள்ளவேண்டா”
என்று யம பரர்களை நோக்கி அதி கம்பீரமாக அருளிச் செய்கிறார்.

ஆழ்வாரருளிச் செயல்கள் நடமாடும் இந்த ஜம்பூத்வீபமே நாடு; மற்ற இடம் காடு என்ற பொருள் இதில் தொனிக்கும்.

” பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கி யாதொன்றுமில்லை”
என்ற திருவாய்மொழிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத் தகும்.

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித் தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேச்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனிமேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யமகிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்கமுடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்.

ஈற்றடியில், அறிந்த- அன்சாரியை பெறாத வினைமுற்று; அறிந்தன என்றபடி.
நாட்டிலுள்ளவர்கட்கெல்லாம் இனி விரைவில் பகவத் விஷய ஜ்ஞாநம் உண்டாகியே விடும் என்ற நம்பிக்கையினால்
எதிர்காலச் செய்தியை இறந்த காலச் செய்தியாகவே கூறிவிட்டாரென்க.

எழுநரகம்- நரகங்கள் பல பல கிடக்கின்றனவே; ஏழுதானோவுள்ளது என்னில்;
கொடிய நரக வகைகளைப்பற்றி எழுநரகமென்றது;
அவை “ பெருங்களிற்று வட்டம் பெருமணல் வட்டம், எரியின் வட்டம் பூகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம்,
அரிபடை வட்டமென எழுவகை நரகம்” என ஓரிடத்திலும்,
“கூட சாலங் கும்பீ பாகம், அள்ளலதோகதி யார்வம்பூ, செந்துவென்றேழுந் தீநரகப்பெயர்” என வேறோரிடத்திலும்
இன்னும் வரிவகையாகவும் தமிழ் நூல்களிற் கூறப்பட்டுள்ளன.
இனி, ரெளரவம், மஹாரெளரவம், தமச், நித்ருந்தநம், அப்ரதிஷ்டம், அஸிபத்ரம், தப்தகும்பம் என்று கூறுவாரும்
வேறுவகையாகக் கூறுவாரு முலர்.
இனி, “எழுநரகம்” என்ற இத்தொடர்க்கு-
எழுகிற நரகம் = சம்ஸாரிக லடங்கலும் சென்று புகுகிற நரகம் என்றும்,
கிளர்த்தியையுடைய நரகமென்றும் பொருள் கூறுதலுமுண்டு.

முனியாது – நரக வாசலில் எப்போதும் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தாங்கள் கை சலிக்க நலியுமாறு
எந்தப் பாவி வரப் போகிறானென்று எதிர்பார்த்த வண்ணமா யிருக்கின்ற யம படர்களை நோக்கி
“ மூரித்தாள் கோமின் = கதவுகளைக் கெட்டியாகப் பூட்டிக்கொண்டுஒழிந்து போங்கள்” என்றால்
அவர்களுக்குக் கோபம் உண்டாவதற்கு ப்ரஸக்தியுள்ளதனால் ’முனியாது’ என்கிறார்.
உண்மை யுரைப்பவன் மீது கோபங்கொள்ளலாகா தென்கை.
மூரித்தாள் — மிக்க வலிமையுள்ள தாழ்ப்பாள். கோமின் என்ற வினைமுற்றில், கோ- வினைப்பகுதி;- தொடுத்தல்.

நாவல் நாடு – ஜம்பூத்வீபம்; அதிலுள்ள பிராணிகட்கு இடவாகு பெயர்.

————–

கீழ்ப் பாட்டில் “இனியார் புகுவாரெழுநரக வாசல்“ என்று கம்பீரமாக அருளிச் செய்து விட்டாலும்,
உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்தவர்கள் திருந்தி உய்வதென்பது எளிதன்றே;
அநாதி துர் வாஸநையை அற்ப காலத்தில் அகற்றப்போமோ?

நரகத்துக்கு ஆளில்லாமற் போகும்படி எம்பெருமான் அருகேயுள்ள திருக்கோவலூரி லெழுந்தருளி யிருக்கவும்
அவனைப் பற்றாமல் நரகத்துக்கு ஆளாகும்படி ஸம்ஸாரிகள் சப்தாதி விஷயங்களிலேயே மண்டித் திரிகிறபடியைக் கண்டாராழ்வார்;
தாமும் அவர்களைப் போல ஆகாதபடி தமது மநோ வாக் காயமென்னும் த்ரிகரணங்களும் அவ்வெம்பெருமான் விஷயத்திலேயே
ஊன்றி இருக்குமாற்றை உவந்து நினைந்து
’நாட்டில் உள்ளார் இவனை பெற்றாலென்? பெறாவிடிலென்? நான் நல்லபடியே ஈடேறலானேனே!’ என்று சொல்லி
தம் நிலைமைக்கு தாம் மகிழ்கிறார்.

“ நாடிலும் நின்னடியே நாடுவன்” என்றதானால் மநோவ்ருத்தியும்,
“பாடிலும் நின் புகழே பாடுவன்” என்றதனால் வாக்வ்ருத்தியும்
“சூடிலும் பொன்னாலியேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு” என்றதனால் சரீர வ்ருத்தியும் சொல்லப்பட்டனவாதலால்,
தமது மன மொழி மெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே அவகாஹித்தபடியை அருளிச் செய்தாராயிற்று.

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

ஈற்றடியில் “என் ஆகில்” என்பதற்கு- எனது கரண த்ரயமும் எம்பெருமானைப் பற்றின பின்பு நான்
இங்கு இருந்தால்தான் என்ன? பரமபதத்திற்கு போனால்தா னென்ன?
எல்லாம் எனக்கு ஒன்றே-என்பதாகக் கருத்துரைதலுமாம்.

‘சூடுவேற்கு’ என்பதே சூடுகின்ற எனக்கு ‘ என்று பொருள்பட விருந்தாலும்
ஈற்றடியில் “எனக்கு’ என்று தனியே பிரயோகித்துள்ளதனால்
சூடுவேற்கென்பது விசேஷணமாக மாத்திரம் பொருள்பட்டு நிற்கக் கடவது: சூடுகின்ற என்று பொருள்.
இங்ஙனமே பலகவிகளும் பிரயோகிப்பதுண்டு.

———–

இப்பாட்டும் கீழ்ப்பாட்டிற்கு சேஷபூதம். கீழ்ப்பாட்டில் ஓடின மகிழ்ச்சிப் பெருக்கே இதனிலும் பொலியும்.
த்ரிகரணங்களும் எம்பெருமான் திறத்தி லீடுபட்டு அடிமைச் சுவையைப் பூர்ணமாக அறிந்த தமக்கு
ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்கிறார். தமக்குண்டான ஏற்றத்தைப் பின்னடிகளிற் பேசுகிறார்;-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் –89-

பதவுரை

எனக்கு–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திர பூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்?
[எவருமில்லை;]
எம்பெருமான்–அந்த ஸர்வேச்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று–அவன் தானும் எனக்கு ஒப்பாக வல்லனோ?
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்)
புனம் காயா பூமேனி–தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம்பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப் பூ–காணக் காணக் கட்டவிழா நிற்கும் பூவைப் பூவின் நிறமும்
வரம்–சிறந்ததான
மா மேனி–(அவனது) கரிய திருமேனியை
காட்டும்–எனக்குக் காட்டா நிற்கும்.
[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற
எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]

காயாம்பூ, பூவைப்பூ முதலியவற்றைக் கண்டால் ஸாமாந்ய ஜனங்கள்
‘இவை சிலகாட்டுபூக்கள்’ என்று எண்ணி யொழிகின்றனர்;
அப்புஷ்பங்களை நான் கண்டாலோ அப்படி எண்ணுவதில்லை;
‘ இவை ஸாக்ஷாத் எம்பெருமானது திருவுருவம்’ என்றே நினைக்கின்றேன்;
ஆகவே, இப்படி போலியான பொருள்களைக் கண்டவளவிலும் அப்பெருமானையே கண்டதாக நினைந்து களிக்கின்ற எனக்கு
இவ்விபூதியில் நிகராவார் ஆருமில்லையே;
எம்பெருமானும் தனக்கு தான் நிகரானவனேயன்றி எனக்கு நிகரல்லன் – என்றாராயிற்று.

இப்படி எம்பெருமானது அடிமையி லீடுபட்டு அதன் மூலமான செருக்கைக் கொல்லுதல் அடிக்கழஞ்சு பெறுதலால்தான்
“ எனக்கினியார் நிகர் நீணிலத்தே” என்றும்
“எனக்காரும் நிகரில்லையே என்றும் மற்றையோரு மருளிச்செய்வது.
இவ்வஹங்காரம் ஹேயமன்று ; உபாதேயமேயாம்.

“பூவையுங் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவிமலரென்றுங் காண்டோறும்,
பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவே யென்று” என்ற
பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தகும்

—————-

எம்பெருமான் தன்னளவிலே ஆஸுர ப்ரக்ருதிகள் எத்தனை அபசாரப் பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீற மாட்டான்;
தன்னடியவர் பக்கல் அபசாரப் படுமளவில் அவ்வபராதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் – என்கிற அர்த்தம்
இப்பாட்டிலருளிச் செய்யப் படுகிறது
“மாதவனே!, நீ இரணியனை ஊனிடந்ததானது (அவன்) நின் பாதம் சிரத்தால் வணங்கானா மென்றே?” என்ற வினாவினால் –
இரணியன் உன் பக்கலிலே விமுகனாய்க் கிடந்தானென்னுங் காரணத்தினால் அவனை நீ கொன்றொழித்தாயல்லை;
பரம பாகவதனான ப்ரஹ்லாதன் திறத்திலே அவன் பொறுகொணாக் கொடுமைகளைப் புரிந்தானென்பது பற்றியே
அவனை யொழித்தாய் என்ற ஸமாதாநம் வெளியிடப்பட்டதாகும்.

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை யென்று ஜீயரருளிச் செய்வர்”
என்று ஸ்ரீவசநபூஷணத்திற் பாசுரம். அதாவது-
ஸங்கல்ப மாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்க வல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன்
தன்னை யழிய மாறி இதர ஸஜாதீயனா யவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூபமான
அதிமாநுஷ க்ருத்யங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வவர் பண்ணின
அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சீயரருளிசெய்வராம். இவ்வர்த்தமே இப்பாட்டி லருளிச்செய்யப்படுகிறது.

எம்பெருமான் தன்னளவிலே தீரக்கழிய அபராதப் படுமவர்களைபற்றி ஒன்றும் கணிசியான்;
ஆச்ரிதர் விஷயத்தில் ஸ்வல்பாபராகம் பண்ணுவானுண்டாகிலும் அவனை அப்போதே தலையறுத்துப்
பொகடுவானென்பது இதிஹாஸ புராண ப்ரஸித்தம்

[”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயாமம”] இராமபிரான் எழுந்தருளி நிற்கச்செய்தே
இராவணன் கோபுர சிகரத்திலே வந்து தோற்றினவாறே ‘ராஜத்ரோஹியான இப்பயல் பெருமாள் திருமுன்பே நிற்கையாவதென்? ‘
என்று ஸுக்ரீவ மஹாராஜர் அவன்மேலே பாய்ந்து வென்று வந்தபோது அவரை நோக்கிப் பெருமாள் இங்ஙனே அருளிச்செய்கிறார்;—
நீர் மஹாராஜரான தரம்குலைய [உம்மைத் திரஸ்கரித்து] அந்த ராக்ஷஸப்பயல் ஒருவார்த்தை சொன்னானாகிற் பிறகு
ஸீதைதானும் எனக்கு ஏதுக்கு?, என்றார்.
ஆச்ரித விஷயத்திலே; எம்பெருமானுடைய பக்ஷபாதம் இப்படியன்றோ இருப்பது.

தன் உயிர்நிலையான பாகவதர்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், தனக்குத் தீங்குநேரும்போது பிறக்கும் சீற்றம்
அற்பமென்னும்படி சீற்றம் பெருகிச்செல்லும். தான் ஸமுத்ரராஜனை சரணம் புகச்செய்தேயும் அவன் முகங்காட்டிற்றில்லனாக,
“ கோபமாஹாரயத் தீவ்ரம்” என்னும்படி சீற்றத்தை வரவழைத்துக் கொண்டார் பெருமாள்;
பின்பு இராவணனாலே அனுமான் நோவுபட்டபோது
“ததோ ராமோ மஹாதேஜா: ராவனேநக்ருதவ்ரணம் – த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபஸ்ய வசமேயிவாந்.” என்னும்படி
கோபமிட்ட வழக்கானார். இங்ஙனேயிறே பாகவத விஷயத்திலே எம்பெருமானுக்குள்ள பரிவின் மிகுதியிருப்பது-

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

இரணியன் எம்பெருமான் திறத்திலே நேராக அபசாரப்பட்டுத் திரிந்த நாள்கள் எண்ணிறந்தவை யுண்டு;
அந் நாட்களிலே எம்பெருமானுடைய திருவுள்ளம் அவ்வரக்கனளவிலே சிறிதும் விகாரப்படவில்லை;
பள்ளியிலோதி வந்த தன் சிறுவன் வாயிலோராயிர நாமம் ஒள்ளிய வாகிப் போத ஆங்கதனுக்கு ஒன்றுமோர்
பொறுப்பிலனாகிப் பிள்ளையைச் சீறிவெகுண்டு நலிந்தானென்று அறிந்தவாறே
“நம்மளவிலே எத்தனை தீம்பனயிருந்தாலும் பொறுத்திருப்போம்;
நம்முடையனான சிறுக்கனை நலிந்தபின்பும் பொறுத்திருக்கவோ” என்று ஆறியிருக்க மாட்டாதே
அப்போதே வந்துதோன்றிப் புடைத்தானாயிற்று .

இப் பாட்டில் வினா மாத்திரமே யுள்ளது; விடை யில்லை; அதனை வரதராஜஸ்தவத்தில் கூரத்தாழ்வான் வெளியிட்டருளினர்.
“யதபராதஸஹஸ்ரம்” என்ற அறுபதெட்டாம் ச்லோகம் இப் பாசுரத்திகே விவரணமாக அவரித்ததென்க.

”வரத்தால் வலி நினைந்து” என்ற தொடரில் –இரணியன் தனக்கு வரங்கிடைத்ததைப் பெரிதாக நினைத்தானே யல்லாமல்
வரங்கொடுதவர்களின் சக்தி ஸ்ரீமந்நாராயணனுடைய அதீநம் என்பதை நினைத்தானில்லை- என்ற கருத்துத் தோன்றும் .
ஈர் அரி-பெரிய சத்ரு என்றுமாம்.
ஓர் அரி-ஓர்தல்-தியானித்தல்;
(பக்தர்களால்) தியானிக்கப்படுகின்ற நரசிங்கம் என்னவுமாம்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -71-80 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 17, 2021

பகவத் விஷய வாஸநையே யறியாத நாட்டார்க்கு உபதேசித்தார் கீழ்ப் பாட்டில்;
அரஸிகர்களான உலகத்தவர்க்கு உபதேசிப்பதைவிட பகவத் விஷய ரஸமறிந்த நமது நெஞ்சுக்கு உபதேசிப்பது நன்று
என்று கொண்ட ஆழ்வார் இப்பாட்டில் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.

பரமைஸ்வர்யமாயினும் கைவல்ய மோக்ஷமாயினும் அல்லது அவ்விரண்டுமே யாயினும் உனக்குக் கிடைப்பதாயிருந்தாலும்
அவற்றை நீ உதறித் தள்ளி விட்டு நம்முடைய விரோதிகளைப் போக்கி ந்ம்மைப் பாதுகாப்பதற்காகவே
எப்போதும் கையந்திருவாழி யுமாயிருக்கிற எம்பெருமானை மறவாமல் அவனிடத்தில் அன்பை உறுதியாகக்கொள் என்று
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப்போலே தமது நெஞ்சை வேண்டுகின்றார்.

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பதவுரை

ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்) ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழிகொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.

பிணி மூப்புக் கையகற்றி – பிணியையும் மூப்பையுஞ் சொன்னது மரணத்துக்கும் உபலஷணம்;
“ஜராமரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் சொல்லியிருப்பது காண்க.
பிறப்பதும் பிணிகளால் வருந்துவதும் கிழத்தனமடைவதும் இறப்பதுமாகிய ஸம்ஸார ஸ்வபாவங்கள்
கைவல்ய நிஷ்டனுக்குக் கழிந்து போகிற படியால் இப்பாட்டின் முதலடியில் கைவல்ய மோக்ஷம் விவக்ஷிதம்.
அந்த மோக்ஷம் உனக்குக் கிடைத்தாலும் அது பகவதநுபவ ஆநந்தத்தில் மிகச் சிறிதென்றுகொண்டு அதனை விட்டுத்தொலை என்றபடி.
பரமைச்வரியம் கிடைத்தாலும் அது அஸ்திரமென்று அதனையும் விட்டுதொலை என்கிறார் இரண்டாமடியில்.
இவ்விரண்டும் பகவானை மறப்பதற்குக் காரணமாதல்லால் அவற்றை வெறுக்கச்சொல்லுகிறாரென்க.

‘ ஆண்டாலும் ‘ என்ற உம்மையில், அவற்றில் தமக்கு விறுப்பமில்லை யென்பதும் தொனிக்கும்.
விடல் எதிர்மறை வினைமுற்று.
ஆழி நெஞ்சமே! = இந்தப் பிரார்த்தனையை உனக்கு நான் பண்ண வேண்டியதில்லை; நீயே பகவதநுபவத்தில் ஆழ்ந்தவன்;
ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தேன் என்பது கருத்து.

கண்டாய் – முன்னிலை யசைச்சொல்.

————

ஆசார்ய சிஷ்ய க்ரமம் மாறாடுகிறது இப்பாட்டில்.
கீழ்ப்பாட்டில் ‘நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்‘ என்று ஆழ்வார் தாம் நெஞ்சுக்கு ஆசார்யராய் நின்று உபதேசித்தார்.
இவர் உபதேசிப்பதற்கு முன்னமே இவருடைய ஸகல கரணங்களும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருந்தமையால்
அவை தாமே தனித்தனி ஆசார்யபதம் நிர்வஹிக்கக் கடவனவாய் இவர் தமக்கு உபதேசிக்க முற்பட்டபடியைப் பேசிகிறாரிதில்.

அன்பாழி  யானை   யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-

பதவுரை

அன்பு—பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது
ஆழியானை–ஸர்வேச்வரனை
அணுகு என்னும்–கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா–வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும்–அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத் தோள்களைப் பேசித் துதி என்று உபதேசிக்கின்றது;
கண்–கண்களானவை;
முன்பு ஊழி காணானை காண் என்னும்–நாம் தன்னை வந்து ஆச்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள
விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானை ஸேவி என்று உபதேசிக்கின்றன;
செவி–காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும்–‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற
அப்பெருமானுயைய திருக் குணங்களைக் கேள்’ என்று தூண்டுகின்றன.

அன்பு ஆழியானையணுகென்னும் – இங்கு ‘அன்பு’ என்ற சொல்லால் நெஞ்சைக் குறித்தனர்;
அன்பு என்பது வேறொரு வஸ்துவாகவும் அதனையுடைய நெஞ்சு என்பது வேறொரு வஸ்துவாகவும் தோன்றாமல்
அன்பு தானே நெஞ்சாக வடிவெடுத்து வந்திருக்கின்றதென்னலாம்படி யிருத்தலால் நெஞ்சுக்கு ‘அன்பு’ என்றே வாசகமிடுகிறார்.

பண்பாழித்தோள் – பண்பு ஆழி என்றும், பண் பாழி என்றும் பிரிக்கலாம்.
பண்பு என்று அழகுக்குப் பெயர்; அழகுக்குக் கடல் போன்ற தோள் என்றும்,
பண் –அழகையும் பாழி- வலிமையையு முடைய, தோள் என்றும் உரைக்க.

முன்பூழிகாணானை –ஊழி என்று காலத்துக்குப்பெயர்: முன்புள்ள காலத்தைக் காணாதவனென்றால் என்ன தாற்பரியம்?
மஹாபராதியான ஒரு சேதநன் வந்து தன்ளை ஆச்ரயித்தால், நேற்று வரையில் அவன் எப்படியிருந்தான்,
என்னென்ன பாபங்கள் பண்ணினான் என்று முற்கால நிலைமைகளைச் சிறிதும் ஆராயாதவன் எம்பெருமான் என்று தாற்பரியம்.

————-

“சஞ்சலம் ஹி மந:கிருஷ்ண!” என்றும்
“நின்றவா ரில்லாநெஞ்சு” என்றுஞ்சொல்லுகிறபடியே நெஞ்சின் நிலைமை மாறி மாறி கொண்டே யிருக்குமென்பதை நினைத்த ஆழ்வார்,
‘நெஞ்சே! நீ எப்போதும் ஒரே நிலையாயிருந்து எம்பெருமானைப் புகழ்வதும் ஆதரிப்பதுமாயிருந்தாலும் சரி;
நிலைமாறிச் சிசுபாலாதிகளைப்போலே அவனைப் பழிப்பதும் அநாதரிப்பதுமாயிருந்தாலும் சரி;
நீ எது செய்தாலும் அவனுடைய பெரு மேன்மைக்குக் குறைவு நிறைவுகள் வாராது காண்’ என்று
தம்முடைய உறுதியைத் தெரிவிக்கிறார் பின்னடிகளில்,

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா  யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-

பதவுரை

நெஞ்சே–(நல்லது கெட்டதுகளை ஆராயக்கூடிய ) மனமே!
நீ–நீ
பூந்துழாயானை–அழகிய திருத்துழாய் மாலை யணிந்த பெருமானை
புகழ்வாய்–ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
(அன்றியே)
பழிப்பாய்–நிந்திப்பதானாலும் நிந்தி;
(அன்றியே)
இகழ்வாய்–அநாதரித்தாலும் அநாதரி;
(அன்றியே).
கருதுவாய்–ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும்–விளங்குகின்ற ஜலபூர்த்தியையுடைய ஸமுத்ரமும்,
மலையும்–பர்வதங்களும்
இரு விசும்பும்–பரம்பிய ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
உடலும்–(தேவாதி) சரீரங்களும்
உயிரும்–(அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )
ஏற்றான்–தரித்துக் கொண்டிருப்பவன் அவ் வெம்பெருமானே காண்.

எம்பெருமான் கார்ய காரண ரூபங்களான ஸகல பதார்த்தங்களையும் தரித்துக் கொண்டிருப்பவன் என்று அவனுடைய
ஸர்வ தாரகத்வத்தை சொன்னதானது நம்முடைய புகழ்வு மிகழ்வுமெல்லாம் அவனுக்கு அப்ரயோஜகம் என்கைக்காகவென்க.
ஏற்றான் – எல்லாம் தானென்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி எல்லாவற்றையும் தனக்கு விசேஷணமாகக் கொண்டுள்ளான் என்றுரைப்பதுமுண்டு.

இரண்டாமடியில் “கருதுவாய் என் நெஞ்ச்சே!” என்றும் பாடமோதுவர்;தளைபிறழாது.

————-

எல்லாப் பதார்த்தங்களையும் தரிப்பவன் ஸ்ரீமந்நாராயண னென்றார் கீழ்ப்பாட்டில்:
ருத்ரனை அப்படிப்பட்டவனாகச் சிலர் சொல்லுகின்றார்களே! அஃது என்ன? என்று கேள்வி பிறக்க,
ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தையும் சிவனுடைய அபரத்வத்தையுஞ் சொல்லி,
சிவனும் எம்பெருமானுடைய ஆளுகையிலே அடங்கினவனே யென்றார்.

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு  —-74-

பதவுரை

ஏற்றான்–ரிஷபத்தை வாஹனமாக வுடையவனும்
எயில் எரித்தான்–த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான்–சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவனும்
கூறு ஒருபால் மங்கையான்–தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும்
வார் சடையான்–நீண்ட ஜடையைத் தரித்துள்ளவனும்.
கங்கையான்–(அச்சடை முடியில்) கங்கையைத் தாங்கிக் கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான்–கருடனை வாஹநமாக வுடையவனும்
மார்வு இடந்தான்–இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான்–நீல ரத்நம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனும்
பூ மகளான்–பெரிய பிராட்டியைத்திவ்ய மஹிஷியாக வுடையவனும்
நீள் முடியான்–நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான்–நீண்ட திருவடிகளை யுடையவனுமான சர்வேச்வரனுடைய
காப்பு–ரக்ஷணத்தில் அடங்கினவன்.

ஏற்றானாயும் எயிலெரித்தானாயும் நீற்றனாயும் கூற்றொருபால் மங்கையானாயும் வார்சடையானாயும்
கங்கையானாயு மிருக்கிறரு ருத்ரன் –
புள்ளூர்ந்தானாயும் பார்விடந்தானாயும் நிழல்மணி வண்ணத்தானாயும் பூமகளானாயும் நீண்முடியானாயும்
நீள்கழலானாயு மிருக்கிற எம்பெருமானுடைய, காப்பு என்று அந்வயிப்பது.
காப்பு- ரக்ஷ்ய வர்க்கத்திற் சேர்ந்தவன் என்றபடி.

சிவனுடைய விசேஷணங்களை வரிசையாக இட்டு, பிறகு எம்பெருமானுடைய, விசேஷணங்களை வரிசையாக இட்டு,
இன்னான் இன்னானுடைய காப்பு- என்று அடைவுபடச் சொல்லலாமாயிருக்க ,
அப்படிச் சொல்லாமல் விஷ்ணு ருத்ரர்களை மாறி மாறித் தொடுத்திருப்பது இருவர்க்குமுள்ள வாசி உடனுக்குடனே தெரிய வேணுமென்பதற்காக.

தமோ குணமே வடிவெடுத்ததாயும் மூடர்களுக்கு உவமையாக எடுக்கக்கூடியதாயு முள்ள ரிஷபத்தை வாஹநமாக வுடையவன் அவன்;
வேதஸ்வரூபியான பெரிய திருவடியை வாஹநமாகவுடையவன் இவன்;
தன்னை ஆச்ரயித்தவர்களின் குடியிருப்பான திரிபுரத்தைச் சுட்டெரித்தவன் அவன்;
ஆச்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு விரோதியான இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனிவன்;
தான் ப்ராயச்சித்தியென்று தோற்றும்படி நீறுபூசின ஸர்வாங்கத்தையு முடையான் அவன்;
ச்ரம ஹரமான நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவை யுடையவன் இவன்.
தன் உடலின் பாதி பாகத்தை ஸ்த்ரீரூபமாக ஆக்கிக்கொண்டவன் அவன்;
உலகுக்கெல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாகவுடையவன் இவன்;
தன் குறையைத் தீர்த்துக்கொள்ளும் வண்ணம் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவது எல்லர்க்குந் தெரியும்படி சடை புனைந்தவன் அவன்;
ஸர்வேச்வரத்வ ஸூசகமான திருவபிஷேகத்தையுடையவன் இவன்;
தான் பரிசுத்தனாவதற்குக் கங்கையைத் தரிப்பவன் அவன்;
அந்தக் கங்கைக்கு உத்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் இவன் – என்று சொல்லுமழகு காண்மின்.

எயில் – மதிள்; த்ரிபுரத்துக்கு இலக்கணை.

—————–

திருமாலே! ஸர்வ ரக்ஷகனான வுன்னை அநுஸந்திப்பவர்களுக்கு எல்லாப் பிரதிபந்தகங்களும் நீங்கிப்
பிரகிருதி ஸம்பந்தமும் நீங்கி திவ்ய லோக ப்ராப்தியும் வாய்க்கு மென்கிறார்.
பகவத் ஸம்பந்தத்தை யுணர்ந்தவர்கள் கர்ம வச்யராகாரெபந்தை முன்னடிகளாலும்,
பரமசாம்யா புத்தியை அடைவார்களென்பதைப் பின்னடிகளாலும் அருளிச் செய்கிறார்.

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

பதவுரை

திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.

முதலடியில், காப்பு என்பதற்குப் ‘பிரதிபந்தகம்’ என்று பொருள் கூறப்பட்டது; காவல் என்பதற்குத் ‘தடை’ என்று பொருலாதலால் .
அன்றியே, பாபஸாக்ஷியாக எம்பெருமானால் நியமிக்கப்பட்டுள்ள பதினால்வர் என்று கொள்ளவுமாம்.
அவராவார் – ஸூர்யன் சந்திரன் வாயு அக்நி த்யுலோகம் பூமி ஜலம் ஹ்ருதயம் யமன்
அஹஸ்ராத்ரி இரண்டு ஸந்த்யைகள் தர்மதேவதை என்ற இவராவர்.
*“ஆதித்ய சந்த்ராவநிலோநலச்ச த்யெளர்ப் பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச- அஹச்ச ராத்ரிச்ச உபேச ஸந்த்யே
தர்மச்ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம்.“ என்ற மஹாபாரத ச்லோகமுங் காண்க.
உன்னை யநுஸந்திப்பவர்கள் செய்யுங்கருமங்களை எம்பெருமானா லேற்படுத்தப்பட்டுள்ள கர்ம ஸாக்ஷிகளும் ஆராயக் கடவரல்லர் என்றவாறு.

வழி காண்பர்- நரகத்தை போலே பொல்லாததான வழியைக் காணுதலின்றியே நித்ய விபூதிக்கிப் போம் வழியைக் காண்பரென்றவாறு

——————–

எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய திருமலை தானே தன்னைப் பற்றினார்க்கு நற்கதியைத் தரும் வல்லமை யுடையதாயிருக்கையில்,
எம்பெருமானைத் தொழுமவர்கள் நற்கதி பெறுவாரென்று நாம் பெரிதாக எடுத்துச் சொல்லவேணுமோ? என்கிறார்.
கைமுதிக நியாயம் தோற்றப் பேசின பாசுரம் இது.

மண்ணளந்த சீரானுடைய திருவேங்கடமே பழுதொன்றும் வராத வண்ணம் விண் கொடுக்குமதாயிருக்க,
நின்னை வழிநின்று தொழுமவர்கள் வழுவாமொழி நின்ற மூர்த்தியராவரென்பது விசேஷித்துச் சொல்ல வேண்டிய விஷயமோ என்றவாறு.

எம்பார் இப்பாசுரத்தை நாடோறும் சிற்றஞ் சிறுகாலையில் அநுஸந்திப்பது வழக்கமாம்.
“எம்பார் விடிவோறே அநுஸந்திக்கும் பாட்டு” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வருளிச்செயல்

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -76-

பதவுரை

வழி நின்று–பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார்–உன்னை ஆச்ரயிக்கு மவர்கள்
வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர்–உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;
(இதைப் பற்றிச் சொல்ல வேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம்–உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளி யிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே–ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும்–(ஆச்ரிதர்களுக்கு) மோஷமளிக்கக் காண்கிறோமன்றோ.

———-

எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளி யிருக்கிறபடிகளை நாம் அநுஸந்தித்தால்
நமது இடரெல்லாம் நீங்கிவிடுமென்கிறார்.
அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதுமான படிகளை நாம் சொல்ல,
நாம் நின்றுமிருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்களெல்லாம் தன்னடையே போகுமென்றபடி.

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ———77-

பதவுரை

வேங்கடமும்–திருமலையும்
விண்ணகரும்–வைகுந்த மா நகரும்
வெஃகாவும்–திரு வெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்–பூ மாறாத நீர் நிலைகளை யுடைய சிறந்த திருக் கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
(ஆகிய)
நான்கு இடத்தும்–நான்கு திருப்பதிகளிலும்
(வரிசைக் கிரமமாக)
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால்–(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளி கொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர்–துக்கங்களெல்லாம்
கெடும் ஆம்–விட்டோடிப் போய் விடும்

நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பரம பதமும் ஒன்றாதலால் இங்கு ‘விண்ணகரும்’ என்று அத்திருநாடு கூறப்பட்டது.
உப்பிலியப்பன் ஸந்நிதி யென்கிற திருவிண்ணகரைச் சொல்லுவதாகக் கொண்டால்
அங்கு வீற்றிருந்த திருக்கோலமில்லையாதலால் மிடிபடும்.
கச்சிமாநகரிலுள்ள பரமேச்சுர விண்ணகரைச் சொல்லுவதாகக் கொள்ளினும் குறையில்லை.
உலகளந்த திருக்கோலமாக ஸேவை ஸாதிக்குமிடத்தை நடந்த கோலத் திருப்பதியாக அநுஸந்திப்பதுண்டாதலால்
‘பூங்கோவல் நடந்தான்’ என்றார்.

———

எம்பெருமான் நமக்காகச் செய்த செயல்களை நாம் அநுஸந்திபோமாகில் அவனது திருவடிகளில் அடிமை செய்தே
நிற்க வேண்டியதாகுமே யன்றி ஒரு நொடிப் பொழுதும் வெறுமனிருக்க முடியாது;
நாம் அப்பெருமானை ஆச்ரயிக்கவே துக்கங்களெல்லாம் தொலைந்து போம்; துக்கப்படுகைக்கு ஆளில்லை;
ஒருகால் நமக்கு துக்கம் வந்தாலும் அது கஜேந்திராழ்வானைத் தொடர்ந்த முதலை பட்டது படும் என்றாராயிற்று.

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு -78-

பதவுரை

நெஞ்சே–மனமே!
வேழம் தொடர்–கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்து வந்த
வான்–பெரிய
கொடு–(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை–முதலையை
சூழ்ந்த–(தப்பிப் போகாதபடி) எண்ணி கொன்றவனும்
படம் உடைய பைநாகம் பள்ளியான்–படத்தையும் பசுமை நிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வுடையனுமான எம்பெருமானது
பாதம்–திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு–கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக் கொண்டு
கை தொழுதும்–தொழுவோம்;
எழு–எழுந்திரு;
(அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
இடர்–துக்கத்தை
படுவார் ஆர்–அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)

இரண்டாமடியில், சூழ்ந்த என்ற பெயரெச்சம் பள்ளியா நென்பதைக் கொண்டு முடியும்.

முதலையை முடித்து கஜேந்திரனைக் காத்த கதை ப்ரஸித்தம்.

ஈற்றடியில், நாகம் ‘ புந்நாகம்’ என்ற வடசொற்சிதைவு.

————-

எம்பெருமான் ஆச்ரித ரக்ஷணத்திற்காகத் தன் ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டும் காரியம் செய்பவன்
என்பதை மூதலிக்க வேண்டி, மஹாபலியினிடத்தில் வாமநனாய்ச் சென்று மூவடி மண் வேண்டிப் பெற்றுத்
திரிவிக்கிரமனாகித் தன் விபூதியை அப்பெருமான் மீட்டுக் கொண்டதை உதாஹரணமாகக் காட்டி,
இப்படி ஆச்ரிதர்கள் பொருட்டாக அப்பரமன் அரும்பாடுபட்டும் அதனை யறியவல்லார் ஸம்ஸாரத்தில்
ஒருவருமில்லாத்து பற்றிக் கவலைப் படுகிறாரிப்பாட்டால்.

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து  -79-

பதவுரை

மண் தா என மாவலியை இரந்து–(‘மூவடி) நிலத்தை எனக்குத் தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
(அவனும் மறுக்க மாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க)
ஒண் தாரை நீர்–அழகிய அந்த நீர்த் தாரை
அம் கை==(தனது) அழகிய திருக்கையிலே
தோய–வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார்–பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை–அழகிய கைகள்
தோய்–ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே–கடுக ஓங்கி வளர வில்லையோ?
(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறிவந்து)
கொண்டானை–தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால்–பழிக்கிறார்களே யன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார்–(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த
அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)

மாவலியானவன் தன்னதல்லாத்தைத் தன்னதென்று அபிமாநித்துக் கொண்டு செருக்குற்றிருந்ததற்காக இராவணனை போலவே
அவனையுங்கொல்ல வேண்டியிருந்தும் அவனிடத்தில் ஒளதாரியமென்ற ஒரு சிறந்தகுண மிருந்ததனால்
தன்னதான விபூதியை அவனது போலவே பாவித்துச் சென்று யாசித்து நீரேற்று வாங்கிக் கொண்ட மஹாகுணம் பொருந்தியவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட மஹாகுணத்தில் யாராவது ஈடுபடுவாருண்டோ?
வஞ்சனென்றும், ஸர்வஸ்வாபஹாரியென்றும், தனக்கு தானஞ்செய்தவனைப் பாதாளத்திலே தள்ளினவனென்றும்
சில பழிச்சொற்களைச் சொல்லி அப்பெருமானை உலக மடங்கலும் பழிக்கின்றதேயன்றி,
தன்னதல்லாததைத் தான் தந்ததாக நினைக்கிற மாவலியை பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும்
அஹங்காரியென்றும் ஆஸுரப்ரகிருதியென்றும் அவனுடைய குற்றங்களையிட்டுச் சொல்லுவார் இந்த ஸம்ஸாரத்தில் யாருமில்லையே!;
குற்றத்தைக் குணமாக்கியும், குணத்தைக் குற்றமாக்கியுஞ் சொல்லும்படியன்றோ ஸம்ஸாரிகளின் ஸ்வபாவமிருபதென்பது ‘
கொண்டானையல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்?’ என்பதன் கருத்து.

தோய- செயவெனெச்சம் உடனிகழ்ச்சிப் பொருளது.
நீர் கைதோய நீள்விசும்பிலார் அங்கை தோய அடுத்து நிமிர்ந்திலையே – மாவலி தாரைவார்த்த உதகமும்

ப்ரஹ்மாதிகள் திருவடிவிளக்கின உதகமும் ஏகோதகமென்னலாம்படி அத்தனை விரைவாக நீ வளரவில்லையோ? என்றபடி.

‘நீள்விசும்பிலார் அங்கை தோய” என்பதற்கு- விசும்பிலுள்ள தேவர்கள் (எனது) திருத்தோளிலே வந்து அணையும்படியாக என்றும்,
“ நீள்விசும்பில் ஆரம் கைதோய” என்றெடுத்து, பரந்த விசும்பிலே (உனது திருமார்பிலணிந்திருந்த
முக்தாஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி (ஓங்கி) என்றும் பொருள் கொள்ளலாம்.

———–

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் -80-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 17, 2021

கீழ்ப் பாட்டில், அவ்வெம்பெருமானைத் தவிர்த்து உயிர்களெல்லாம் தாமே தமக்கு வேண்டிய நன்மையைத்
தேடவறியாது என்றருளிச்செய்த ஆழ்வார், இப்பாட்டில் அவை தமக்குவேண்டிய நன்மையைத் தேட அறியாதிருக்கையிலும்
எம்பெருமானே நன்மையைத் தேடுகிறதற்குக் காரணம் இச்சராசரங்களை யெல்லாம் அப்பெருமான் பேரருள் கொண்டு
தன் ஸங்கல்பத்தினால் படைத்த ரக்த ஸம்பந்தமேயாகு மென்கிறார். பெற்றவனை யொழிய வளர்ப்பவரில்லை யென்றதாயிற்று.

சேதநங்கள் இறகொடிந்த பக்ஷிபோல மூலப்ரக்ருதியிலேயே லயித்துக் கிடவாமல் தன்னை யடைந்து உஜ்ஜீவிக்குமாறு
நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்தினால் அப்பரமன் கரசரணாதி அவயவங்களையும்,
தன்னை யுணருமாறு சாஸ்தரங்களையும் கொடுத்தருளின னென்பது நூற்கொள்கை.
இவையறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே இப்போது உபாயமறிவானும் அவனே யென்று
கீழ்ப் பாட்டோடே சேர்த்துப் பொருள் பெறுத்திக் கொள்க.

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

பதவுரை

உலகும்–பூமி முதலிய லோகங்களும்
உலகு இறந்த ஊழியும்–இவ்வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும்
ஒண் கேழ் விலகு–அழகிய நிறத்தோடு அலை யெறிகிற
கரு கடலும்–கரு நிறத்ததான ஸமுத்ரமும்
வெற்பும்–மலைகளும்.
உலகினில் செம் தீயும்–இவ்வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும்
மாருதமும்-காற்றும்
வானும்–ஆகாயமும்
(ஆகிய இவையாவும்)
திருமால் தன்–லக்ஷ்மீபதியான எம்பெருமானுடைய
புந்தியில்–ஸங்கல்ப ஞானத்திலால்
ஆய–படைக்கப்பட்ட
புணர்ப்பு–படைப்புக்களாம்.

————

கீழ்ப்பாட்டில், சராசரங்கள் யாவும் எம்பெருமானுடைய படைப்பு என்றார்,
இப்படி உலகங்களை யெல்லாம் உண்டாக்கின பின்பு தான் தூரஸ்தனாய் நின்று விடாமல் உலகுக்கு உண்டாகின்ற
களைகளைப் பிடுங்கிப் பாதுகாப்பதும் செய்கிறானென்பதை இப்பாட்டில் வெளியிடுகின்றார்.

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன் கணையான் தோள் ——-62-

பதவுரை

புணர் மருதின் ஊடு போய்–ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
[பின் பொருகாலத்தில்]
பூங்குருந்தம் சாய்த்து–(இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
(மற்றுமொரு காலத்தில்)
மணம் மருவ–(நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று–பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
(இன்னமொரு காலத்தில்)
கணம் வெருவ–எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும்–மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும்–எட்டுத் திக்குக்களிலும் போய்ப் பரவியவையும்.
[எவையென்றால்]
சூழ் அரவம் பொங்கு அனையான் தோள்–(பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை
சிறந்த படுக்கையாகவுடையனான ஸர்வேச்வரனது திருத்தோள்களேயாம்.

இதில் தோள் என்றது திருக்கைகளை இரட்டை மருதமரத்தினிடையே தவழ்ந்து சென்ற போது
கைகளைத் தரையிலே ஊன்றித் தவழ்ந்ததனால் மருதம் முறிந்ததைக் கைகளின் மே லேற்றிக் கூறினரென்க.
மருதினூடுபோய் என்றது மருதமரங்களை முறித்துத் தள்ளினமையைச் சொன்னபடி.
கூட்டமென்னும் பொருளதான வடசொல் கணமெனத் திரிந்தது:
அநுகூலர் பிரதிகூலர் என்கிற வேறுபாடின்றி எல்லாப் பிராணிகளும் என்கை.

“சூழரவப் பொங்கணையான் தோள்” என்ற சொல்லாற்றலால், பரிமளம் குளிர்த்தி முதலிய குணங்களுக்கெல்லாம்
எல்லை நிலமாயிருக்கிற திருவனந்தாழ்வானாகிற படுக்கையையும் பொறாத ஸெளகுமார்யத்தையுடைய
அப்பெருமான் அப்படுக்கையில் கண்வளரப் பெறாமல் இப்படி அல்லாடித் திரிவது பற்றி வயிறெரிகின்ற
இவ்வாழ்வாரது பொங்கும்பரிவு விளங்கும்.
பிரஜைகளைப் பாதுகாப்பதில் கருத்தூன்றியவர்கள் ஓரிடத்தில் தங்கியிருக்கப் பெறாமல் அலைந்து திரிவர்களன்றோ.
இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டுள்ள சரித்திரங்களெல்லாவற்றிலும் எம்பெருமானுடைய தோள் வலிமையே
தெற்றென விளங்குமென்றுகொண்டு தோளின் மேலேயே எல்லா செயலையும் ஏற்றிக் கூறினரென்க….

————

தம்முடைய எல்லா இந்திரியங்களும் எம்பெருமான் பக்கலிலேயே ஊன்ற பெற்ற படியை அருளிச்செய்கிறார்.

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

பதவுரை

தோள்–(எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா–(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானை யல்லது வேறு எவரையும் வணங்க மாட்டா;
என்செவி இரண்டும்–எனது காதுகளிரண்டும்
கேள் அவனது–ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன்மொழியே–இனிய பேச்சுக்களையே
கேட்டு இருக்கும்–கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;
என் நா–என்னுடைய நாவானது
நாளும்–நாள்தோறும்
கோள் நாக அணையான்–மிடுக்கை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய அப்பெருமானது
குரை கழலே–ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே
கூறுவது–சொல்லா நிற்கிறது
(இப்படியான பின்பு)
நயம்–சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன்–வெட்கப்படாமல் விரும்பு வாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரைத் தொழும்படி நான் சொன்னாலும் என் கைகள் தொழமாட்டோமென்கின்றன;
இதர சப்தங்களைக் கேட்போமென்று நான் பாரித்தாலும் எனது காதுகளானவை பகவத் கதைகளைத் தவிர்த்து
வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோமென்கின்றன!
நாவினால் விஷயாந்தரங்களைப் பேசுவோமென்று நாம் பார்த்தாலும் பகவத் பாதாரப்விந்தத்தையன்றி
மற்றும் எதையும் னச நா எழுகின்றதில்லை;
இப்படி எனது இந்திரியங்களெல்லாம் ஒரே உறுதியாயிருக்கவே, நானும் நாணங்கொண்டு
இதர விஷயங்களைக் காறியுமிழ்ந்தேன் என்றாராயிற்று.

இரண்டாமடியில், கேள்- உறவு;
“ சேலேய் கண்ணியரும் பெருஞ் செலவமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
ஸகலவித பந்துவுமான எம்பெருமானுடைய என்றபடி
இன்மொழி-கீர்த்தி நாகஅணை, ‘நாகவணை’ என வரவேண்டுவது நாகணை யென வந்தது தொகுத்தல் விகாரம்.
குரைகழல்—வினைத் தொகையன் மொழி என்னலாம்: நாணாமை – எதிர்மறை வினையெச்சம்.
நயம் – நயக்கப்படுவது நயம்; ஆசைப்படத் தக்க விஷயாந்தரங்கள்.
“நயந்தரு பேரின்பமெல்லாம்” என்ற இராமாநுச நூற்றந்தாதித் தனியன் பிரயோகமுங் காண்க.

————

கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தமக்கும் தம்முடைய இந்திரியங்கட்கும் விஷபாந்தரங்களைக் கண்ணெடுத்துப் பாராதபடி
எம்பெருமானிடத்தில் ஊற்றமுண்டானபடியை அருளிச் செய்யவே
விஷயாந்தரங்கள் துரவாஸநையால் வந்து மேல்விழுந்து உம்மை இழுத்து க்கொண்டு சென்றால் என்ன செய்வீர்?’
என்று ஒரு கேள்வி பிறக்க ,
எம்பெருமானுடைய அநுக்ரஹத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறேனாதலால் அப்படி நிகழ ஹேது வில்லை யென்கிறார்.

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

பதவுரை

பிறர் பொருளை–பரம புருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன்–(என்னுடையதென்று) விரும்ப மாட்டேன்;
கீழாரோடு–ஸம்ஸாரிகளோடு
நள்ளேன்–ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால்–சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உய்வேன்–காலக்ஷேபம் பண்ணமாட்டேன்.
திருமாலை அல்லது–எம்பெருமானை யன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன்–தெய்வமாகக் கொண்டு துதிக்க மாட்டேன்;
வியவேன்-(இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வ குணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
(இப்படியான அறிமாட்டார்கள். பின்பு)
என் மேல்–எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என் மேலே
வினை–அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம்
வரும் ஆறு என்–வரும் விதம் ஏது? [வரமாட்டாது]

பிறர் பொருளை= “உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேதி உதஹ்ருத:” என்னும் பிரமாணத்தை அடி யொற்றி
இங்கு எம்பெருமானை ‘பிறர்’ என்ற சொல்லால் குறித்தனர் சேதநாசேதநங்களிற்காட்டில் விலக்ஷணன் என்றபடி.
அவனுடைய பொருள் ஆத்ம வஸ்து
(கண்ணிநுண் சிறுத்தாம்பில் “ நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்” என்ற விடத்திற்கு வியாக்கியானமுங் காண்க.)
ஸர்வேச்வரனுக்குக் கெளஸ்துபஸ்தாநீயமாகி அப்பெருமான் ‘தன்னது’ என்று அபிமாநித்திருக்கும் இவ்வாத்ம வஸ்துவை
’என்னது’ என்று நினைத்தல் இராவணனது செயலோடொக்கு மாதலால் “நயவேன் பிறர்பொருளை” என்றார்.
இராவணனுடைய செய்கைக்குத் துணையாயிருந்த மாரீசன் போல்வாரோடு நட்புக் கொள்ள மாட்டேனென்பது ‘நள்ளேன் கீழாரோடு’ என்றதன் கருத்து.

”திருமாலையல்லது வியவேன் “ என்று கூட்டி – திருமாலைக் கண்டாலன்றி ( தேவதாந்தரங்களைக் கண்டால் அதனால்)
மநஸ்ஸில் சிறிதும் மகிழ்ச்சிகொள்ள மாட்டேன் என்பதாக உரைத்தலுமாம்.

வருமாறென் என்மேல் வினை? = “அவச்யமநுபோக்தவ்யம் க்ருதம் கர்மகபாசுபம்”
[ அவரவர்கள் செய்த நல்வினை தீவினைகளின் பலன்களை அவரவர் அநுபவித்தே தீரவேணும் ] என்கிற
சாஸ்த்ரம் பகவத் பக்தர்கள் விஷய்த்தில் விலைச்செல்ல மாட்டாதென்று காட்டுகிறபடி.

“வருமாறென் நம் மேல்வினை” என்ற பாடமுமுண்டு;
அப்போது, கீழெல்லாம் நயவேன், நள்ளேன், உயவேன், வியவேன். ஏத்தேன், என்று ஒருமையாகவந்து இங்கே
நம் என்று பன்மையாக வந்தது- ஒருமையிர் பன்மைவந்த வழுவமைதி யென்னவேண்டும் .
தம்மோடு ஸம்பந்தம் பெற்றவர்களையுங் கூட்டிக்கொண்டு நம் மேலென்கிறாரென்றலும் பொருந்தும்.

இரண்டாமடியில், உயவேன் என்றது உசாவேன் என்றப்டி:
உசாவுதலாவது ஒருவருக்கொருவர் வார்த்தையாடிப் போது போக்குதல்;
”உசாத் துணை” என்ற ஆன்றோர்களின் ஸ்ரீ ஸூக்தியுங்காண்க.

————–

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

பதவுரை

நினைதற்கு அரியானை–(ஸ்வ ப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை–(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர்–ஆயிரம் திருநாமங்களை யுடையவனும்
செம் கண் கரியானை–சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவை யுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால்–அஞ்சலி பண்ணினால்
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)
வினையால்–நல் வினை தீ வினைகளால்
அடர்ப் படார்–நெருக்கு பட மாட்டார்கள்;
வெம் நரகில்–கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார்–(மீண்டும்) சென்று கிட்ட மாட்டார்கள்;
தினையேனும்–சிறிதளவும்
தீ கதிக்கண்–கெட்ட வழிகளில்
செல்லார்–போக மாட்டார்கள்.

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தாம் ஒழுங்குபட நிற்கும் நிலைமையை யருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட நிலைமை மற்று எல்லார்க்கும் உண்டாகவில்லையே, அஃது ஏன்? என்று ஒரு கேள்வி பிறக்க;
இந்த நிலைமை எல்லார்க்கும் உண்டாகக் கூடியதே ;
எம்பெருமானைக் கைதொழுதால் இஃது எல்லார்க்கும் தன்னடையே உண்டாகும் என்கிறார் இப்பாட்டில்.

வினையால் அடர்ப்படார்= ‘வினை’ என்னும் பொதுச் சொல்லானது நல்வினை தீவினை என்ற இருவினைகளையும் இங்குக் குறிக்கும்;
உபநிஷத்தில் [முமுக்ஷு மோக்ஷத்துக்குப் போம் போது புண்யம் பாபம் என்ற இருவினைகளையும் உதறி விட்டுக்
கல்மஷமற்றவனாய்ப் பரமஸாம்யத்தை அடைகின்றான்] என்று ஓதி வைத்திருக்கையாலே
மோக்ஷமார்க்கத்திற்குப் பாபம் எப்படி இடையூறோ அப்படி புண்யமும் இடையூறென்பது நூற்கொள்கை.
பாபம் நரகத்திலே கொண்டு தள்ளும்; புண்யம் ஸ்வர்க்காதி லோகங்களில் கொண்டு தள்ளும்;
ஆகவே, பாபம் இரும்பு விலங்கு போன்றதென்றும் புண்யம் பொன்விலங்கு போன்ற தென்றும் சமத்காரமாகச் சொல்லுவதுமுண்டு.

இனி, “வினையாலடர்ப்படார்” என்றவிதற்கு- இங்கே யநுபவிக்க நேரும் பாப பலன்களினால் துன்பப்படமாட்டார்கள்
என்று பொருள்கொள்வதும் பொருந்தும்.

வெம் நரகில் சேரார்=[ எம்பெருமானோடு கூடி யிருத்தல் ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருத்தல் நரகம் ] என்று
ஸ்ரீராமயணத்திற் சொன்னபடியே எம்பெருமானைப் பிரிந்து வருந்துகையாகிற நரகாநுபவம் பண்ணமாட்டார்களென்கை.

———–

“உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே” [உலகம் என்னுஞ்சொல் மிகப்பெரிய மஹான்களைக் குறிக்கும் ] என்று
கூறியிருப்பதனால், இப்பாட்டின் முதலடியிலுள்ள உலகம் என்னுஞ்சொல் ‘ உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்’ என்னும்
பொருளிலே பிரயோகிக்கப்பட்ட்து. அறிவு நிரம்பிய பெரியோர்கள் எம்பெருமானது திருவடிகளையும்
அவனது திருநாமங்களையுமே காண்பதுங் கேட்பதுமாயிருப்பர்களென்கிறார் இப் பாட்டில்.

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

பதவுரை

உலகம்–உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்
காலை எழுந்து–(ஸத்வ குணம் வளரக் கூடிய ) விடியற் காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும்–அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர்–படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள்
வேட்பனவும்–ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
(எவையென்றால்)
வேலைக்கண் ஓர் ஆழியான்–திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியை யுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே–திருவடிகளேயாம்;
ஓதுவதும்–மஹான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும்–மநநம் பண்ணப் பெறுவனவும்
(எவையென்றால்)
பேர் ஆழி கொண்டான்–பெரிய கடல் போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர்–திருநாமங்களேயாம்.

மேலைத் தலைமறையோர்- கீழ்வேதமென்றும் மேல்வேதமென்றும் வேதம் இருவகைப்படும்:
கீழ்வேதமென்பது கர்மகாண்டம்; மேல்வேதமென்பது ப்ரஹ்மகாண்டம் (உபநிஷத்பாகம்);
ஆகவே, மேலைத் தலைமறையோரென்றது வேதாந்திகளென்றபடி.

———–

ஞானமென்பது உலகிற் பலவிதம் ;
தர்க்க சாஸ்திரம் படித்து வாதங்கள் செய்யத் தேர்ச்சி பெற்றவனும் தன்னை ஞானியென நினைக்கிறான்;
ஆயுர்வேதம் ஜோதிடம் மந்த்ரம், தந்த்ரம் முதலியவற்றில் கைதேர்ந்தவனும் தன்னை ஞானியென நினைக்கிறான்;
இப்படி ஒவ்வொரு யோக்யதை பெற்றவனும் தன்னை ஞானியென நினைத்துக்கொண்டால் உண்மையான ஞானம் எது?
வாஸ்தவத்தில் ஞானியென்பான எவன்? என்கிற கேள்விக்கு சாஸ்த்ரங்கள் சொல்லும் உத்தரமாவது
எம்பெருமானை அறிகிற அறிவு ஒன்றுதான் ஞானமெனப்படும் என்பதே.

“ஒந்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிற வாக்கியமே இப்பாட்டின் முக்கிய விஷயம்.
மற்றவை த்ருஷ்டாந்த கோடியிலே அருளிச் செய்யப்பட்டவை.

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பதவுரை

ஆறு–ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும்–பொங்கி கிளர்கின்ற மஹா ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ–அழகிய தாமரைப் பூவானது
உயரும்–உயர்ந்த ஸ்தாநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே–ஸூர்யனையே
நோக்கும்–கண்டு மலரும்;
உயிரும்–பிராணனும்
தருமனையே நோக்கும்–யம தர்ம ராஜனையே சென்று சேரும்;
[இவை போலவே]
உணர்வு–ஞானமானது
ஒண் தாமரையாள்–அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன்–பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே–வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும்–சென்று பற்றும்

ஆறுகளானவை ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்வதும், – தாமரைப்பூ ஸூர்யனை நோக்கியே மலர்வதும்,
பிராணன்கள் யமதர்ம ராஜனையே சென்று கிட்டுவதும் எப்படிநியதமாக நிகழ்கின்றனவோ
அப்படியே ஜ்ஞாநமென்பதும் திருமாலைப்பற்றியல்லது வேறு விஷயங்களைப்பற்றி நில்லாது என்றது-
எம்பெருமானைத் தவிர்த்து இதர விஷயங்களைப் பற்றியுண்டாகும் அறிவு அறிவல்ல; அது அஜ்ஞாநபர்யாயமே என்றவாறு .

“தொக்கிலங்கியாறெல்லாம் பரந்தோடித்தொடு கடலே, புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்,
மிக்கிலங்குமிகில் நிறத்தாய் வித்துவக்கோட்டம்மா, உன்புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே!” என்ற
பெருமாள் திருமொழிபாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கது.

பிள்ளைலோகாசர்யாருளிச்செய்த முமுக்ஷுப்படியில் திருமந்தரப்ரகரனத்தில் 73 “ இத்தால்-
*தாமரையாள் கேள்வ நொருவனையே நோக்கு முணர்வு என்றதாயிற்று” என்னும் ஸூத்ரத்திற்கு
மணவாளமாமுனிகளருளிச்செய்துள்ள வியாக்கியான சைலியை நோக்குங்கால்,
இப்பாட்டில் உணர்வு என்பது ஜ்ஞாநமயனான ஆத்மா என்று பொருள்படிகிறதென்று கொண்டு,
ஜ்ஞாநைக நிரூபணீயனான ஆத்மா திருமாலுக்கு அநந்யார்ஹ சேஷபூதனென்பதை
இப்பாட்டு உணர்த்துவதாகக் கருத்துக்கொள்ளவும் இடமேற்படுகின்றது; அதுவும் ஒரு நிர்வாஹமாகும்.

இப் பாட்டால் மூன்று வகையான சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன்;
1. எம்பெருமானைப்பற்றி யுண்டாகிற ஞானமே ஞானம் .
2. ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன்.
3. ( தாமரையாள் கேள்வனென்று பிராட்டி ஸ்ம்பந்தம் தோற்றச் சொல்லியிருக்கையாலே) மிதுந சேஷத்வமே ஜீவாத்மலக்ஷணம் –
என்னு மிப்பொருள்கள் மூன்ருமாம்.

“உயிரும் தருமனையே நோக்கும் “ என்றவிடத்தில் ஒரு விசாரமுண்டு:
அவைஷ்ணவர்களுடைய பிராணன் யமதர்மராஜனுக்கு வசப்படுமேயன்றி
ஸ்ரீவைஷ்ணவர்களின் பிராணான் அப்படி யமனைசென்று கிட்டமாட்டாதே; அப்படியிருக்க,
“ உயிரும் தருமனையே நோக்கும்” என்றுபொதுவாக எப்படி அருளிச்செய்யலாம்? என்று.

இதற்கு அப்பிள்ளையுரையில் “ உயிரும்-பகவத் பரரல்லாத நாட்டிற் பிராணிகளடங்கலும்” என்றுரைத்திருக்கக் காண்கையாலே
இந்த சங்கை வேண்டா என்பர் சிலர்.
வைஷ்ணவர்களானாலும் சரி, அவைஷ்ணவர்களானாலும் சரி; எல்லாருடைய பிராணனும் பகவதாஜ்ஞையின் படி
யமதர்ம ராஜனிடத்திலேயே சென்று சேரும்;
ஸித்தாந்தத்தில் ஆத்மா’ வேறு, பிராணன் வேறு; வைஷ்ணவாத்மா எம்பெருமானைச் சென்று சேர்ந்தாலும்
அவனுடைய பிராணன் யமனைத்தான் சென்று சேரும் என்பர் சிலர்.
மற்றுஞ் சிலர் “ யமோவைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹருதி ஸ்தித” என்றும்
“ க்ருஷ்ணம் தர்ம்ம் ஸநாதநம்” என்றும் எம்பெருமானையே யமனாகவுஞ் சொல்லியிருக்கையாலே
“ உயிரும் ‘தருமனையே நோக்கு” மென்கிற விவ்விடத்திற்கும் அவ்வெம்பெருமானே பொருள் என்பர். நிற்க.

———————

திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார்,
அறிவுக்கு எல்லை நிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படி யிருந்தாலும்
அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறார்.
இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமேயொழிய அறிவின் குறைவன்றென்பதும் அறியத்தக்கது.”உணர்வாரார்? ‘ என்ற வினாவினால்
ஸர்வஜ்ஞ்னான உன்னாலும் உன் தன்மை அறியமுடியாதென்பதும் ஸூசிப்பிக்கப்படும்
“ தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும்.

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

பதவுரை

விண்ணகத்தாய்–பரமபதத்திலெழுந்தருளி யிருப்பவனே!
மண்ணகத்தாய்–இந்த மண்ணுலகில் திருவவதரிப்பவனே!
வேங்கடத்தாய்–திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய்–ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!
உன் பெருமை–(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி–காலமுள்ளதனையும்
(இருந்து ஆராய்ந்தாலும்)
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை–உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தைத்தான்
உணர்வார் ஆர்–அறியக்கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால்–(ஆர்த்த ரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்
உணர்வார் ஆர்–அறிய வல்லாரார்? [எவருமில்லை.]

———–

இப்பாட்டு ஒரு சமத்காரமான கேள்வியாயிருக்கிறது
மஹாப்ரளயத்திலே இந்த விபூதி அழியாதபடி திருவயிற்றிலே இதனை வைத்துக் கொண்டு அப்ராக்ருதமான உனது
திருமேனியைச் சிறுக்கி ஒரு சிறுகுழந்தை வடிவத்தைக் கொண்டவனாகி,
சயனிப்பதற்குச் சிறிதும் பற்றாத ஒரு ஆலந்தளிரில் நீ பிரளய காலத்தில் சயனித்தருளினாயென்று
பரம ஆப்தர்களான முனிவர் மொழிகின்றனர்; ‘ எத்திறம்!’ என்று நினைந்து நைந்து ஈடுபடும்படியான இச்செயலானது—
முன்பு கிருஷ்ணாவதாரத்தில் ஏழுபிராயத்தில் ஏழுநாள் ஒருசேரக் கோவர்த்தந மலையையெடுத்துக் குடையாகப் பிடித்த
அருஞ்செயலைக்காட்டிலும் அதிக ஆச்சரியமாயிருக்கின்றது;
நீ கண்வளர்ந்த அந்த ஆல் பிரளய ஸமுத்திரத்தில் தோன்றியதோ?
அன்றி, பிடிப்பொன்றுமில்லாத ஆகாசத்தில் தோன்றியதோ?
அன்றி, பிரளயத்தில் கரைந்துபோன மண்ணிலிருந்துதான் தோன்றியதோ?
இதன் வரலாற்றை விளங்கச் சொல்லவேணுமென்று கேட்கிறார்.
இவ்வதிசயம் ஸர்வஜ்ஞனான வுன்னாலும் கண்டுபிடித்துச்சொல்லமுடியாத தென்றும்
அகடிதகடநாஸாமர்த்தியத்தினால் நேரும் அதிமாநுஷ சேஷ்டிதங்களின் குதர்க்கங்கள் பண்ணுவது தகாதென்றும் வெளியிடுதலே
இப்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பதவுரை

சோலை சூழ் குன்று எடுத்தாய்–சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உருஆய்–நீ சிறுகுழந்தை வடிவு கொண்டு
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திருவயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல்–ஓர் ஆலந்தலிரின் மேல்
அன்று–பிரளயகாலத்தில்
வளர்ந்த–கண் வளர்ந்த செயலை
மெய் என்பர்–(வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று-(எல்லாம் அழிந்து கிடந்த) அக்காலத்தில்
ஆல்–அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ–வெள்ளங் கோத்துக்கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
(அல்லது)
விண்ணதோ–(நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ?
மண்ணதோ–(பிரளய ஜலத்திலே கரைந்து போன) பூமியிலுள்ளதோ?
சொல்லு–இவ் வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

———

எம்பெருமான் விசித்ரசக்தி வாய்ந்தவனென்பதைக் கீழ்ப்பாட்டில் தெரிவித்து இப்படிப்பட்ட பெருமானை
உலகத்திலுள்ளீ ரெல்லீரும் பணிந்து வாழுங்கோளென்று பரோபதேசத்தில் மூளுகிறாரிப்பாட்டில்.

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

பதவுரை

திருமாலை–பிராட்டியோடு கூடின பெருமானை
நல் இதழ் தாமத்தால்–அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால்–யாகம் முதலிய ஸத் கரு மங்களாலும்
தந்திரத்தால்–(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால்–(க்ரியா கலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும்–அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின்–தொழுங்கள்;
(இவற்றை செய்ய சக்தி யில்லா விட்டால்)
சொல்லும் தனையும்–(உங்களுக்குச்) சொல்லக் கூடிய சக்தியுள்ள வரையிலும்
நாமத்தால்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல்–புகழ்ந்தீர்களாகில்
நன்று–அது மிகவும் நல்லது.

“ விழுமுடம்பு செல்லுந்தனையும் நல்லிதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் திருமாலைத் தொழுமின்;
சொல்லுந்தனையும் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று” என்று அந்வயிப்பது.
இந்த சரீரம் என்றைகாவ தொருநாள் சரிந்தே போகப் போகிறது;
“இதம் சரீரம் பரிணாம பேசலம் பதத்யவச்யம் சலதஸந்தி ஜர்ஜரம்” (முகுந்தமாலை) என்றபடியே
தவறாமல் நசித்தே போகக் கடவதான இவ்வுடல் உள்ளவரையில் சிறந்த புஷ்பங்களைக் கொண்டும்
யாகம் முதலிய வைதிக கருமங்களைக்கொண்டும் மந்தர தந்த்ரங்களைக் கொண்டும் எம்பெருமானைப் பணியுங்கள்;
சரீரத்தால் சிரமப்பட்டுச் செய்யக்கூடிய அக்காரியங்களில் கைவைப்பது கஷ்டமாயிருந்தால்,
வெறும் வாயினால் எவ்வளவு சொல்லக்கூடுமோ அவ்வளவு திருநாமங்களைச் சொல்லி ஏத்தினாலும் போதுமானது- என்றாராயிற்று.

தாமம், தந்திரம், மந்திரம், நாமம் – வடசொற்கள்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -51-60 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 17, 2021

எம்பெருமானுடைய திருநாமங்களைப் பரம போக்யமாக நாம் வாயாரச் சொல்லவே,
அப்பெருமான் ப்ரஹ்லாதாழ்வானுடைய விரோதியைத் தொலைத்துத் தன்னைக் கொடுத்தாப் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னைத் தந்தருள்வனென்கிறார்.

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

பதவுரை

என் உள்ளம்-எனது நெஞ்சே!(நீ)
தெளிய–கலக்கம் தீர்ந்து தெளிவு பெற்றால்
(அந்த எம்பெருமானும்)
செவ்வே தெளிந்தொழியும்–மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;
(ஆகையினால்)
களியில்–அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை–அடி பணியாதிருந்த ஹிரண்யாசுரனோடு
பொரல் உற்று–போர் செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான்–நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம்–திருநாமங்களை,
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு–(அவனுடைய) உபய பாதங்களையும் சுலப மாகக் காணும் பொருட்டு
எண்–சிந்திப்பாயாக.

என்னுள்ளம் என்றது அண்மைவிளி; என்னுள்ளமே! என்றபடி. நீ எம்பெருமானுடைய திருவடியிணையை ஸேவித்து
அநுபவிப்பதற்கித் தெளிவுகொண்டிருந்தால் அவன் ப்ரஸந்நனாய் அருள்புரிவன்;
நீ தெளிவுற்றிருக்கிறாயென்பது நன்குவிளங்குமாறு ஸ்ரீ நரசிம்ஹமூர்த்தியின் திருநாமங்களை எண்ணிக் கொண்டிரு.

————

அஹங்காரிகளான முப்பத்து மூவரமரர்களும் எம்பெருமானை யடி பணிந்தே சிறப்புற்றிருக்கின்றனரென்கிறார்.

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

பதவுரை

எண்மர்–அஷ்ட வஸுக்களும்
பதினொருவர்–ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர்–த்வாதசாதித்யர்களும்
ஓர் இருவர்–இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்)
வைகலும்–நாள் தோறும்
வண்ணம் மலர் ஏந்தி–நாநா வர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு
நண்ணி–(எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால்–ஒப்பற்ற புருஷ ஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது–இடைவிடாமல்
எப்போதும்–எல்லா வேளைகளிலும்
பரவி–துதிசெய்து
திருமாலை சென்று–திருமகள் கொழுநனைக்கிட்டி
கை தொழுவர்–வணங்குவர்கள்

முதலடியில் முப்பத்து மூன்று தேவர்களை எடுத்துக் காட்டினது முப்பத்து முக்கோடி தேவர்களெனப்படுகிற
அனைவரையும் எடுத்துக்காட்டினமைக்குப் பர்யாய மென்க.
நம்மாழ்வாரும் பெரிய திருவந்தாதியில் “ இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர். எட்டோடொரு நால்வர் ஓரிருவர்” என்றருளிச்செய்தது காண்க.

—————-

திருவனந்தாழ்வானைப்போல எம்பெருமானுக்கு எல்லாக் காலங்களிலும் எல்லா விதமான அடிமைகளையும்
செய்யப்பெற வேணுமென்று திருவுள்ளங்கொண்ட ஆழ்வார்
அத்திருவனந்தாழ்வான் செய்யுமடிமைகளை யெடுத்தருளிச் செய்கிறார்.

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

பதவுரை

திரு மாற்கு–பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு–திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம்–(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால்–எழுந்தருளியிருந்தால்
(அப்போது)-
சிங்காசனம் ஆம்–ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால்–நின்று கொண்டிருந்தால்
(அப்போது)
மரவடி ஆம்–பாதுகையாவன்;
நீள் கடலுள்–பாம்பிணை யுடலிலே
(சயனிக்கும்போது)
என்றும்–எப்போதும்
புணை ஆம்–திருப் பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம்–மங்கள தீபமாவன்;
பூம்பட்டு ஆம்–அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம்–தழுவிக் கொள்வதற்கு உரிய அணையுமாவன்.

எம்பெருமான் உலாவியருளும் போது மழை வெயில் படாதபடி குடையாக வடிவெடுப்பன்;
எழுந்தருளீ யிருந்த காலத்தில் திவ்ய ஸிம்ஹாஸந ஸ்வரூபியாயிருப்பன்; நின்று கொண்டிருந்தால் பாதுகையாயிருப்பன்;
திருப்பாற்கடலில் திருக்கண்வளர்ந் தருளும்போது திருப்பள்ளி மெத்தையாயிருப்பன்;
ஏதேனு மொன்றை விளக்குக்கொண்டுகாண அவன் விரும்பினபோது திருவிளக்குமாவன்;
சாத்திக்கொள்ளும்படி திருப்பரிவட்டத்தை அவன் விரும்பினபோது அதுவுமாவன்;
சாயந்தருளும்போது தழுவிகொள்வதற்குரிய உபதாநமுமாவன்.

நீள்கடலுள் புணையாம் – திருப்பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவன் என்று முரைக்கலாம் .
புல்கும் அணையாம் –எம்பெருமான் பிரணய கலஹத்தினால் பிராட்டிமாரைப் பிரிய நேர்ந்தால் அப்போது விரஹ துக்கம்
தோன்றாத படிக்குத் திருவனந்தாழ்வானைத் தழுவிக் கொள்வனாம்.

மூன்றாமடியில் “ மணி விளக்காம்” என்றும் பிரிக்கலாம்

—————-

ஆச்ரித விரோதிகளைப் போக்க வேண்டில், கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி தன் நினைவுக்குத் தகுதியாக
எல்லா வடிமைகளையுஞ் செய்கிற திருவனந்தாழ்வானாகிற படுக்கையுலும் பொருந்த மாட்டாமல் இந்த லீலாவிபூதியில்
வந்து பிறந்து களைபிடுங்கித் தன்விபூதியைப் பாது காப்பவன் என்று அவனது திருக்குணத்தை அநுஸந்தித்து
அதற்கேற்ற சில திவ்ய சேஷ்டிதங்களை யநுபவிகிறாரிப்பாட்டில்.

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம்  புள்வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

பதவுரை

செம் கண் அவன்–செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி–மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]
அரவம்–காளிய நாகத்தை
விட்டு–விட்டடித்தும்
அடல் வேழம்–பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து–(தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன்–பசுக்களை
மேய்த்து–(வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம்–அஸுரா வேகமுடைய குருந்தமரத்தை
ஒசித்து–ஒடித்துப் பொகட்டும்
புள்வாய்–பகாசுரனுடைய வாயை
கீண்டு–கிழித்தும்
குரவை–ராஸக்ரீடையை
கோத்து–(இடைப் பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம்–குடங்களைக் கொண்டு
ஆடி–கூத்தாடியும்
முலை–பூதனையின் முலையை
உண்டு–(அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல்–(கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு–கொன்றும்
குன்றம்–கோவர்த்தன மலையை
எடுத்த–(குடையாக) எடுத்துப் பிடித்த இச் செயல்கள்
(என்ன ஆச்சரியம்!..)

கண்ணபிரானது காளியமர்த்தநம் முதலிய அரிய செயல்களை அனுஸந்தித்த ஆழ்வார் அவற்றில் உள் குழைந்து ஈடுபட்டு
மேலொன்றும் சொல்ல மாட்டாமையால் ஒரு வினைமுற்றுச் சொல்லவும் மாட்டாது விட்டனர்;
ஆச்சர்ய கரமான விஷயங்களைக் கூறும்போது அவற்றுக்கு வினை முற்றுத் தந்து முடியாது நிறுத்துவதைப்
பல கவிகளின் வாக்குகளிலும் காணலாம்.

ஈற்றடியில் எடுத்த என்றது –’ அன்’ சாரியை பெறாத பலவின்பாற்பெயர்; சாரியை பெறின் ‘எடுத்தன’ என நிற்கும்.
இப்பாட்டில், அரவுமுதலிய பெயர்ச்சொற்கள் ‘விட்டு’ முதலிய வினைச்சொற்களை முறையே சென்று இயைதலால் முறை நிரனிறையாம்;
இதை வடமொழியில் ‘யதாஸங்க்யாலங்காரம்’ என்றும், தென்மொழியில்’ நிரனிறையணி’ என்றும் அலங்கார சாஸ்திரிகள் கூறுவர்.

காளியநாகத்தை வலியடக்கி உயிரோடு விட்டதும்,
குவலயா பீடமென்னும் கம்ஸனது யானையைக் கொம்புமுறித்து முடித்ததும் ,
தன் மேன்மையைப் பாராமல் தாழநின்று பசுக்களைமேய்த்ததும்,
அஸுரன் ஆவேசித்திருந்ததொரு குருந்தமரத்தை முறித்து வீழ்த்தியதும்,
பகாஸுரன் வாயைக் கீண்டொழித்ததும்,
இடைப்பெண்களோடே குரவைக் கூத்தாடியதும்,
குடங்களெடுத்தேற வெறிந்தாடியதும்,
தன்னைக் கொல்லுமாறு தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் ஸ்தனங்களை உறிஞ்சியுண்டதும்,
மல்லர்களைக் கொன்றதும்,
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தேந்தி நின்றதுமாகிய
இச்செயல்கள் என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டுப் பேசினாராயிற்று.

————-

யமபடர்கள் பாகவதர் திறத்திலே அஞ்சி யிருக்கும் படியை அருளிச் செய்கிறார்.

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

பதவுரை

அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு–இடைத் தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட்பட்டார் பேர்–அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால்–யம படர்களாலே
“அவன் தமர் எவ்வினையர் ஆகிலும்–“ அந்த சர்வேச்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலை யுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”–எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று–என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால்–(தாங்கள்) விலகிப் போவது தவிர,
ஆராயப்பட்டு அறியார்–ஆராயப் பட்டிருநக்க அறிய மாட்டார்கள்

யமன் நாட்டிலுள்ளாருடைய பாவங்களையெல்லாம் ஆராய்வதற்கு அந்த ஸர்வேச்வரனால் நியகிக்கப்பட்டவனே;
ஆனாலும் தனக்கும் நியாமகனான அந்த ஸர்வேச்வரனுடைய பக்தர்கள் நற்காரியங்களைத் தவிர்ந்து
தீய காரியங்களையே செய்து வந்த போதிலும் அவர்களை யம கிங்கரர்கள் “நமது யஜமாநனான யமனையும் நியமிக்கும்
வல்லமை யுடையவர்களன்றோ இந்த பாகவதர்கள்” என்று கொண்டாடி வணங்கி அப்பால் போய்விடுவார்களே தவிர,
அவர்களுடைய குணா குணங்களை ஒருபோதும் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்: ஏனெனில்;
அப்படிப்பட்டவர்களை ஸம்ரக்ஷிப்பதில் புருஷகார பூதையான பிராட்டியும் ஒருகால் ஏதேனும் குறை சொல்லிலும் அதையும் லக்ஷியஞ்செய்யாமல்

“ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்று சொல்லிக் கொண்டு ஸர்வேச்வரன் பரிந்து ரக்ஷிப்பவனன்றோ?
இப்படிப் பெரிய பிராட்டியாராலும் குறை கூறக் கூடாதவர்கள் விஷயத்தில் நம்மால் அணுகவும் முடியுமோ? என்கிற பயத்தினாலென்க.
அன்றியும், யமன் தன்படர்களை நோக்கி ‘நீங்கள் வைஷணவர்கள் திறத்தில் அபசாரப்பட வேண்டா;
அவர்களைக் கண்டால் அநுவர்த்தித்திருங்கள்’ என்று கட்டளை யிட்டிருக்கின்றானென்பதை,

“ திறம்பேன்மின் கண்டீர், திருவடி தன் நாமம், மறந்தும் புறந்தொழா மாந்தர்- இறைஞ்சியும் சாதுவராய்ப்
போதுமின்களென்றான் நமனும் தன் , தூதுவரைக் கூவிச் செவிக்கு.” என்ற நான்முகந்துருவந்தாதிப் பாசுரத்தாலும்,
* ஸ்வபுருஷ மபிவீக்ஷ்ய பாசஹஸ்தம்வததி யம : கில தஸ்ய கர்ணமூலே – பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந்
ப்ரபுரஹமந்யந்ருணாம் . ந வைஷ்ணவாநாம்.” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவசநத்தாலும் அறிக.

“கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன, நாளுங் கொடுவினைசெயுங் கூற்றின் தமர்களுங் குறுககில்லார்” என்ற திருவாய்மொழியும்,
“வென்றி கொண்ட வீரனார், வேறு செய்து தம்முளென்னை வைத்திடாமையால் நமன், கூறுசெதுகொண்டு இறந்த குற்ற மெண்ணவல்லனே” என்ற
திருச்சந்தவிருத்தமும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

இப்பாட்டில் “ பேராயற்கு ஆட்பட்டார்பேர்” என்ற ஈற்றடிக்கு வேறுவகையாகவும் பொருளுரைக்க இடமுண்டாயினும்,
அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்த திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானத்தில்
ஆழிமழைக்கண்ணா வென்னும் நாலாம் பாட்டின் அவதாரிகையில்,
“ அவன்தமரெவ்வினையராகிலும் இத்யாதி” என்று இப்பாசுரத்தையெடுத்து
[” அரவணைமேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் ஆராயப்பட்டு அறியார் கண்டீர்= ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது,
அவனையும் யமன் கோஷ்டியில் பட்டோலை பார்க்கப்பெறாது”] என்று வியாக்கியானித்தருளியிருக்கக் காண்கையாலே
‘பேராய்ற் காட்பட்டார்பேர்’ என்னுமளவை ஒருசொல்லாகக்கொண்டு (அன்மொழித் தொகையாகப் பாவித்து)
எம்பெருமானுக்கு ஆட்பட்டவர்களுடைய பேரை யுடையவர்கள் எனப் பொருள் கொள்ளூதல் சிறக்கும்

————-

பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

பதவுரை

[நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது]
பேரே–எம்பெம்மானது திருநாமமாகவே
வர–வரும்படியாக
பிதற்றல் அல்லால்–பிதற்றுவதைத் தவிர
எம்பெம்மானை–[அந்த] எம்பெருமானை
ஆரே–ஆர் தான்
அறிவார்–(உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க–அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன்–பிரமனானவன் .
கடி–பரிமளம் மிகுந்த
கமலத்துள்–(அவ்வெம் பெருமானது, நாபிகமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும்–(அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக் கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை–அந்த ஸர்வேச்வரனுடைய திருவடிகளை
காண்கிலான்–ஸேவிக்கப் பெற்றானில்லை.

எம்பெருமானுடைய பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டறிய முடியாதது; கடற்கரையில் குடிசை கட்டிக்கொண்டிருப்பவர்க்கும்
அந்தக் கடலினுடைய ஆழம் அறிய முடியாமற் போவதுபோலவே அவனுடைய திருநாபிக்கமலத்தில் தோன்றின
நான்முகக்கடவுள் எப்பொழுதும் அவ்விடத்தே வாஸஞ்செய்து கொண்டிருந்தும் அவனுக்கும் அப்பெருமானுடைய பெருமை
அளவிட்டறியக் கூடாததாயிராநின்ற தன்றோ; ஆகையினால் ‘எம்பெருமான் உணர்வதற்கு முடியாதவன் ’என்று
நாம் உணர்ந்து அவனது திருநாமங்களை வாயில் வந்தபடியெல்லாஞ் சொல்லிக் கூப்பிடுவது செய்யலாமத்தனையொழிய,
அவனது மஹிமையை உள்ளபடியறிந்து எவராலும் சொல்லப்போகாது என்றவாறு.

சாஸ்திரங்களில் பலபேர்களைக் குறித்து ‘ப்ரஹ்மஜ்ஞாநி’ என்று சொல்லியிருப்பதெல்லாம்-
பரப்ரஹ்மத்தை உள்ளபடி அளவிட்டறிந்தமையைச் சொன்னதன்று;
‘எம்பெருமான் அளவிட முடியாதவன்’ என்ற இவ்வுண்மையை அறிந்தவர்களே ப்ரஹ்ம வித்துக்களெனப்படுவார் என்றறிக.

கன்றுகுட்டியானது ஓரிடத்திலிருந்துகொண்டு தன் தாயைக்காணாமல் அம்மே! என்று கத்தினால் அக்கத்துதல்
தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு இரங்கிக் கன்றின் பக்கத்தில் வந்து நிற்பதுபோலவே,
எம்பெருமானை உள்ளபடி அறியாவிட்டாலும் அவனது திருநாமத்தை வாய்வந்தபடி பிதற்றினால்
அவன் வந்து அருள்புரிவான் என்ற கருத்து முதலடியில் உய்த்துணரத்தக்கது.

பெம்மான் – ‘பெருமான்’ என்பதன் மரூஉ. நிற்க- வியங்கோள்முற்று.
இப்பாட்டில் “நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் அயன் கண்ணனடிக் கமலந்தனைக் காண்கிலான்; (ஆதலால் )
எம்பெம்மானை ஆரேயறிவார்? என்று கைமுதிக நியாயம்படக் கூறியிருத்தலால் தொடர்நிலைச்செய்யுட் பொருட்பேறணியாம்.

———-

பலவகைக் கொடிய பாவங்கள் என்னிடத்தில் நெருங்கிக் கிடப்பதைக் கண்டு ‘இப்பாவங்கள் இன்னமும் முன்போலவே
மேல்விழுந்து நலிந்தால் நாம் என்ன செய்வது!’ என்று பயப்பட்டேன்;
‘எம்பெருமானது திருவடிகளிற் சென்று சேர்ந்துவிட்டால் பாவங்கள் அடியோடு நீங்கப்பெற்று நாம் உஜ்ஜீவிக்கப் பெறலாம்’
என்று துணிந்து, உன் திருவடிகளில் வந்து சேரும்விதம் யாது? என்று ஆராய்ந்து பார்த்தேன்;
நமது வாய் மொழிகளை உன் விஷயத்தில் உபயோகிப்பதே அதற்குச் சிறந்தவழி என்று நிச்சயித்து,
திருமந்திரத்தின் பொருளை விவரிப்பதான இப் பிரபந்தத்தைப் பாடினேன்;
இதனால், பாவங்களுக்கு அஞ்சின அச்சம் தீர்ந்து உஜ்ஜீவநமும் பெற்றேன் என்றாராயிற்று.

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-

பதவுரை

அயல் நின்ற–(என்) அருகிலேயே இருந்து கொண்டு (என்னை) இடைவிடாமல் ஹிம்ஸித்துக் கொண்டே யிருக்கிற
வல் வினையை–மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
அஞ்சினேன்–பயப்பட்டேன்;
அஞ்சி–(இப்படி) பயப்பட்டு
உய–(இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு
நின்–உன்னுடைய
திரு அடியே–திருவடிகளில் தானே
சேர்வான்–வந்து கிட்டுகைக்காக
நயம் நின்ற–இன்பம் பொருந்திய
நல் மாலை கொண்டு–சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு
தொழுது–(உன்னை) ஆச்ரயித்து
நமோ நாரணா என்னும் சொல் மாலை–திருமந்திரத்தின் பொருளை
கற்றேன்–அப்யஸித்தேன்.

சேர்வான்= வான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சம்.
“நயம்நின்ற” என்பதற்கு- ‘திருமந்த்ரார்த்தத்தை நயப்பித்தலில் நோக்கமாயுள்ள’ என்று பொருள் கூறுதலும் பிரகரணத்திற்குப் பொருந்தும்,
எம்பெருமானுடைய ஸ்வரூபம், அவனை அடைதற்குரிய ஜீவாத்மாவின் ஸ்வரூபம், அடைவதற்கான உபாயம், அடைந்து பெற வேண்டிய பேறு,
அடைவதற்கு இடையூறாகவுள்ள விரோதிஸ்வரூபம் ஆகிய இவ்வைந்து விஷயங்களே திருமந்திரத்தின் அர்த்தமாதலாலும்,
இவையே இப்பிரபந்தத்திலும் விவரிக்கப்படுகின்றன வாதலாலும் இதுகூடும்.

———-

நெஞ்சே! நாம் பகவத் விஷயத்தை விட்டு ஒரு நொடிப்பொழுதும் ஆறியிருக்க வழியில்லை;
நாம் குருகுலவாஸம் பண்ணி மந்த்ரங்களை அப்யஸிப்பதெல்லாம் எம்பெருமானை அடிபணிவதற்கேயன்றி
வேறொரு பிரயோஜனத்திற்காக வன்றே; ஆனபின்பு, தூப தீப புஷ்பாதிகளான உபகரணங்களைக் கையிற்கொண்டு
அப்பெருமானை ஆராதிக்கச் செல்வோம். எழுந்திரு; இனிநாம் தாமஸித்திருப்பதற்கு அவகாசமேயில்லை – என்று
தம் திருவுள்ளத்தை த்வரைப் படுத்துகிறார்.

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

பதவுரை

நெஞ்சே–மனமே!
மலர் கொண்டு–புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம்–தூபத்தை
கை ஏந்தி–கையிலே ஏந்திக் கொண்டும்.
தொழுது–(எம்பெருமானை ) வணங்கி
எழுதும்–உஜ்ஜீவிப்போம்;
எழு–நீ புறப்படு;
வாழி–(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:
[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்]
மந்திரங்கள்–பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும்–முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் ஏ–ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
ஆனபின்பு]
அந்தரம் ஒன்று இல்லை–(நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை–(அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு.

“மலர் கொண்டு தூபம்கையேந்தி- தொழுது எழுதும் எழு” என்று ஆழ்வார் சொன்னவுடனே நெஞ்சு மிகவும்
அதற்கு அநுகூலப்பட்டிருக்கவே “வாழி நெஞ்சே” என்று உவப்பினால் மங்களாசாஸநம் செய்தாரென்க;
இந்த ஆநுகூல்யம் உனக்கு ஒருநாளும் மாறாதிருக்க வேணுமென்றவாறு.

பழுது இன்றி = குருகுலவாஸம் செய்யாமல் மந்த்ரங்களைக் கற்பது பழுது;
அப்படிப்பட்ட பழுது இல்லாமல் [குருகுலவாஸம் பண்ணி] என்றபடி.
அந்தரம் ஒன்று இல்லை –’பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்று ஆறியிருக்க அவகாசம் சிறிதுமில்லை.

————

நாம் நல்ல வழியிற் போதுபோக்க வேணுமானால் பகவானை ஆச்ரயிப்போம்;
அப்படி அவனை ஆச்ரயிக்குமிடத்து ஆச்ரயிக்க வொட்டாமல் இடையூறாக அருவினை அல்லல் நோய் பாவம்
முதலியவை குறுக்கே நிற்கின்றனவே! அவற்றைப் போக்கும்வழி யாது? என்று சங்கை பிறக்க,
நமது பிரதிபந்தநங்களை இரு துண்டமாக்குவதற்கு உபாயமாக ஸ்ரீராமபிரானைச் சரணம் புகுதல் நன்று என்கிறார்.

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

பதவுரை

அடைந்த–அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற
அரு–போக்குவதற்கு அருமையான
வினையோடு–பழவினைகளும்
அல்லல்–(அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத் துன்பங்களும்
நோய்–சரீர வியாதிகளும்
பாவம்–இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை–[இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில்–வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன்–முன்பொருகால்,
நுடங்கு இடையை–மெல்லிய இடையை யுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான்–லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய–மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள்–ஸ்ரீராமனாய்ப் பிறந்தவொரு காலத்து
தன் வில்–தன்னுடைய வில்லை
அம்கை–அழகிய திருக்கையிலே
வைத்தான்–எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண்–உபாயமாவான்.

இத்தால், எம்பெருமானுக்கு போக்யமாயிருந்துள்ள ஆத்மவஸ்துவை என்னுடைய தென்று செருக்குற்றிருக்குமவர்கள்
ராவணாதிகள் பட்டது படுவாரென்னுமிடமும், இவ்வாத்வைஸ்து அவனுடையது’ என்று அநுகூலித்திருக்குமவர்களுக்கு
வரும் விரோதகளை அப்பெருமான் பிராட்டியின் துயரத்தைப் பரிஹரித்தது போலே
பரிஹரித்தருள்வனென்னும்மிடமும் தெரிவிக்கப்பட்டனவாம்.

—————-

உலகத்தில் பொதுவாக ஒரு நியாயமுண்டு; எவன் பலனை அநுபவிக்கிறானோ அவன் அதற்கு உரிய உபாயத்தை
அநுஷ்டிக்க வேணுமென்று. அந்த நியாயத்தைக் கொண்டு பார்க்கும் போது, எம்பெருமானைப் பெறுதலாகிற பயனை அநுபவிப்பவன்
சேதநனாயிருக்க அதற்குரிய உபாயமும் இவனிடத்திலன்றோ இருக்க வேண்டும்;
‘எம்பெருமானே உபாயம்’ என்று, முறையிடுவது எங்ஙனே பொருந்தும்? என்று ஒருசங்கை தோன்ற,
அஜ்ஞனாய் அசக்தனான இவனால் செய்யக் கூடியதொன்று மில்லாமையினால்,
ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான அவனே உபாயமாயிருக்க வேண்டியது ஆவச்யகமாயிற்றென்கிறார்.

பலனை அநுபவிப்பவனும் எம்பெருமானே, அதற்கு உபமா நுஷ்டாநம் செய்பவனும் எம்பெருமானே என்கிற
ஸத்ஸம் ப்ரதாய ஸித்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

கைதவறி போன பொருளைத் தேடிபிடித்து அநுபவிப்பதும் அதனால் ஆநந்தமடைவதும்
ஸொத்தையுடைய ஸ்வாமியின் காரியமேயொழிய ஸொத்தின் காரியமல்லவே;
இதுபோல அப்பரம புருஷனுடைய ஸொத்தாகிய நாம் அவனை விட்டுத் தப்பித் தவறியிருக்கிறோமாயின்,
நம்மைத் தேடிப்பிடித்து ஆட்கொள்ளப் பெருதலும் பெற்று மகிழ்தலும் அவனுக்கே உரியனவாதலால்
பலனை அநுபவிக்குமவனான தானே உபாயாநுஷ்டாநம் செய்கிறானென்க.
ஸ்ரீபாஷ்யத்தில் முடிவான ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் “பரமபுருஷ: ஜ்ஞாநிநம் லப்த்வா” என்ற ஸ்வாரஸ்யமுணர்க.

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

பதவுரை

சரண் ஆம் மறை–(எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த–(எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின
தாமரையானோடு–பிரமனோடு கூட
மரண் ஆய–மரணமடையுந் தன்மை யுடைய
மன் உயிர்கட்கு எல்லாம்–நித்யமான ஸ்வரூபத்தை யுடைய ஆத்மாக்களெல்லா வற்றுக்கும்
அரண் ஆய–ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்டபிராண் அன்றி–பெரிய திருவாழி யாழ்வானைக் கையிற் கொண்ட எம்பெருமான் அறிவனே யல்லது
மற்று–அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு–கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்.
அறியாது–அறியமாட்டார்கள்.

இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தம் வேதங்களில் ஸித்தமானது என்பதைத் தெரிவிக்கவே
“சரணாமறைபயந்த” என்ற விசேஷணம் தாமரையானுக்கு இடப்பட்டது.

அரணாய’ என்பதை பேராழி கொண்ட பிரானுக்கு விசேஷணமாகப் பலர் மயங்கி மொழிவர்;
அது விசேஷணமன்று; இரண்டாம் வேற்றுமைச்சொல்: ‘அரணானவற்றை’ எனப் பொருள் படுதலால் பயனிலை.
பிரமன் முதல் எறும்பு ஈறாகவுள்ள ஸகல ஜந்துக்களுக்கும் உபாயமானவற்றை எம்பெருமான் அறிவனே யல்லது
அற்பஞானிகளான உலகத்தவர்கள் அறிய மாட்டார்கள் என்றவாறு.

ஆழி சூழ்ந்த வுலகமானது மன்னுயிர்க்கெல்லாம் அரணாயிருக்கிற பேராழி கொண்ட பிரானை யன்றி
மற்றதொன்றையும் அறியாது – என்றும் பொருள் சொல்லலாமே என்று முற்காலத்தில் ஒருவர் சொன்னாராம்;
உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்திருப்பதால் ‘உலகானது பிரானையன்றி மற்றறியாது’ என்கிற
விப்பொருள் இணங்காது என்று கொண்டு நஞ்சீயர், “உலகமென்பது உயர்ந்தோர்மாட்டே” என்றிருப்பதால்
இவ்விடத்தில் உலகு என்பதற்கு ‘சிறந்த மாஞானிகள்‘ என்று பொருள் கொண்டால்,
‘மஹான்கள் பேராழிகொண்ட பிரானையன்றி மாற்றறியார்கள்’ என்னும் பொருள் இணங்கி விடலாம் என்று அபிப்ராயம் கொண்டாராம்;

இதை பட்டர் கேட்டருளி, “ இவ்விடத்தில் ‘ஓராழி சூழ்ந்தவுலகு’ என்றிருப்பதை நோக்க வேணும்;
‘ஆழிசூழ்ந்த’ என்கிற விசேஷணம் இல்லாதிருந்தால் நீர் சொல்லும் பொருள் ஏற்கும்;
’கடலால் சூழப்பட்ட மஹான்கள்’ என்று பொருள் சொல்லப்
போகாமையாலே, ‘கடல் சூழ்ந்த இவ்வுலகமானது தனக்கு அரணானவற்றை அறிய மாட்டாது,
பேராழிகொண்ட பிரானே அறிவான்’ என்றே பொருள் கொள்ள வேணும்” என்று உபபாதித்து உரைத்தருளினராம்.

இங்ஙனே நிர்வஹித்து பட்டரருளிச்செய்தபோது நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டிருந்தார்கள்;
ஆனாலும் இதனை ஒருகால் நஞ்சீயர் மறந்திட, நம்பிள்ளை ஞாபகப்படுத்தினர் என்றும்
பெரிய வாச்சான்பிள்ளை யருளிச்செய்தனர்.

இப் பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப் பிரதிகளில் சில பதங்களும் வாக்கியங்களும்
விடுபட்டிருப்பதை ஒலை ஸ்ரீகோசங்களைக்கொண்டு பரிஷ்கரித்துக்கொள்க.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -41-50 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

எம்பெருமானுடைய வாத்ஸல்ய குணத்திலீடுபட்டுப் பேசுகிறார்–

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு  –41-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
என்றும்–எப்போதும்
புறன் உரையே ஆயினும்–(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தை யாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே–சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு–அநுஸந்தித்துக் கொண்டிரு;
(அப்படியிருந்தால்)
இன்று முதலாக–இன்று தொடங்கி
குன்று அனைய குற்றம் செய்யினும்–மலை போல் (பெருப் பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும்–(அவற்றை யெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்

நெஞ்சே!, ஆந்தரிகமான அன்பின் மிகுதியினாலே சொற்களைத் தொடுத்து எம்பெருமானைத் துதிப்பார் பலருண்டு;
அப்படிப்பட்ட அன்பு நமக்கு இல்லாமையினால் கழுத்துக்கு மேற்படவே சில சொற்களை நாம் கபடமாகச் சொல்ல வல்லோம்;
அப்படி மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும் அது பகவானைப்பற்றின வார்த்தையாக இருந்துவிடுமாயின் பயன்படும்.
எம்பெருமான் ‘மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந’ [ ப்ரீதியை பாவனைசெய்து வருபவனையும் கைவிடமாட்டேன் ]
என்று சொன்னவனாகையாலே நாம் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையையும் அவன் கனத்ததாகத் திருவுள்ளம் பற்றித்
தன்னுடைய வாத்ஸல்ய குணத்தை நம்மேல் ஏறிப்பாய விடுவன்;
நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்”
என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும்;
அவன் நமது ஆபிமுக்யத்தை மாத்திரமே எதிர்பார்ப்பவனாதலால் நாம் மேலுக்குச் சொல்லும் வார்த்தையும்
அவனுக்குக் கார்யோபயோகியாக ஆய்விடுங்காண் – என்றாராயிற்று.

————

நாம் மலை போன்ற குற்றங்களைச் செய்தாலும் எம்பெருமான் அவற்றைக் குணமாகத் திருவுள்ளம் பற்றுவன் என்றார் கீழ்ப்பாட்டில்.
அப்படி குற்றத்தையும் குணமாகத் திருவுள்ளம் பற்றவேண்டிய காரணம் ஏதென்ன,
பிராட்டிமார் மூவரும் கூடவே குடியிருக்கை தான் காரணமென்கிறாரிதில்.

திருமகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

பதவுரை

பால் ஓதம் சிந்த–திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்து ஸுகப்படுத்த,
படம் நாக அணை கிடந்த–படமெடுத்த பாம்பினணையிற் பள்ளிகொண்ட
மால் ஓதம் வண்ணர்–பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது
திரு மகள் மேல் மனம்–பெரிய பிராட்டியார் மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது.
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்–ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது
திருமகட்கே தீர்ந்த ஆறு என் கொல்–பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத் தீர்ந்திருக்கிற விதம் என்னோ?

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களும் கூடியிருக்கும் படியை முதலடியிலருளிச் செய்கிறார்.

பாலோதம் சிந்தப் படநாகணைக்கிடந்த மாலோதவண்ணரது திருமகள் மேல் (வைத்து) மனமானது
திருமகட்கே தீர்ந்தவாறு ஏன்கொல்? என்கிறார்.
இப்பாட்டுக்கு இரண்டு படியான நிர்வாஹங்களுண்டு;
தீர்ந்தவாறென்கொல் என்பதை நாச்சிமார் மூவரிடத்திலும் கூட்டி,
திருமகட்கே தீர்ந்தவாறென்கொல், மண் மகட்கே தீர்ந்தவாறென்கொல், ஆய் மகட்கே தீர்ந்தவாறென்கொல்
என்று திருமலை அனந்தாழ்வான் நிர்வஹிப்பராம்.

இங்ஙனன்றிக்கே பட்டருடைய நிர்வாஹம் – திருமகட்கே தீர்ந்தவாறென்கொல்? = திருமகளோடு கலந்து பரிமாறும்போது
மண்மகள் முதலிய மற்ற பிராட்டிமார்கள் போகத்திற்கு உபகரணமாயிருப்பர்கள்;
திருமகளோடு ஸம்ச்லேஷிப்பதைத் தங்கற் முலையோடும் தோளோடும் ஸம்ச்லேஷிப்பது போலவே நினைத்திருப்பர்கள்.
ஆகையாலே மற்ற தேவிமார்களை உபகரண கோடியிலேயாக்கித் திருமகள் பக்கலிலேயே பிரதான போகம் கொள்வது என்கொல்? – என்று.

தீர்ந்தவாறு – தீருகையாவது – ஒரு வஸ்துவை விட்டு மற்றொரு வஸ்துவில் சிறிதும் நெஞ்சு செல்லாமல்
அந்த ஒரு வஸ்துவிலேயே ஆழங்காற்பட்டிருக்கை.
“ தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்” என்ற திருவாய்மொழிப் பிரயோகமுங் காண்க.

————-

கீழ்ப் பாசுரத்திலருளிச் செய்தபடி பிராட்டிமார்கள் இடைவிடாது கூடி யிருக்கையாலே ஒருவரும்
தங்கள் குற்றங்களை நினைத்துப் பின்வாங்க வேண்டுவதில்லை; ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கிஞ்சித்காரங்களிலே அந்வயிக்கலாம் ;
அப்படி அந்வயிக்கவே தீமைகளெல்லாம் தொலைந்து நன்மைகள் கைகூடுமென்கிறார்.

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்

ஸர்வரக்ஷகன் என்பது விளங்கத் தனிமாலை யிட்டிருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளில் திருவாராதன
உபகரணங்களான புஷ்பம் தீர்த்தம் முதலியவற்றை யேந்திக்கொண்டு வந்து பணிமாறி வழிபடுமவர்களுக்கு –
மநஸ்ஸைப் பற்றிக் கிடக்கிய அஜ்ஞாநம் விஷய ராகம் முதலான தோஷங்களடங்கலும் தன்னடையே விட்டுக் கழலும்;
இவற்றுக்கு மூல காரணமான துஷ்கருமங்களும் கிட்டவராதபடி தொலைந்து போம்;
ஸ்வரூபாநுரூபமான செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் தனக்குத்தானே வந்து கைபுகுரும் என்றாராயிற்று.

மனம் , தனம் – வடசொல் விகாரம். பாகவதர்களுக்கு பகவத் பக்தியே பெருஞ்செல்வமாதலால் ‘ தனமாய்’ என்றார்.

———–

கீழ்ப்பாசுரத்தி லருளிச்செய்தபடி ஆச்ரிதர்கள் அடிமை செயுமளவில், எந்த ரூபத்தையும் எந்த நாமத்தையும்
இதரர்கள் உகந்திருப்பார்களோ அந்த ரூப நாமங்களையே யுடையனாகத் தன்னை அமைத்துக்கொண்டு
அர்ச்சாவதார ரூபியாய் இங்கே அடிமைகொள்வனென்கிறார்.
தமர்கள் கல்லையோ மண்ணையோ லோகங்களையோ எதை உருவமாக்கினாலும் அதையே தனக்கு அஸாதாரண விக்ரஹமாகப்
பரிக்ரஹித்து அதிலே ஸந்நிதாநம்பண்ணி யெழுந்தருளியிருப்பன்.
‘அந்த விக்ரஹத்தில் தமர்கள் எந்த திருநாமத்தையிட்டு வழங்குவர்களோ அந்தத் திருநாமத்தையே
நாராயணாதி நாமங்கள் போல விரும்பிக் கொண்டிருப்பன்.
மற்றும் குணம் சேஷ்டிதம் முதலியவற்றில் எந்த குணசேஷ்டிதங்களை அநுஸந்தித்து அநவரதபாவநை பண்ணுவர்களோ,
அவற்றையே கொண்டிருப்பன். – என்று அர்ச்சாவதார ஸெளலப்யத்தை யருளிச் செய்தாராயிற்று.

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் -44–

பதவுரை

ஆழியான்–திருவாழி யாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாகவுடைய எம்பெருமான்,
தமர் உகந்தது எவ்வுருவம்–ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட உருவம் எதுவோ,
அவ்வுருவம் தானே ஆம்–அவ்வுருவமாகத்தான் பரிணாமமடைவன்;
தமர் உகந்த்து எப்பேர்–ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட திருநாமம் எதுவோ
அப்பேர் ஆம்–அந்தத் திருநாமமே தனக்காம்படி யிருப்பன்;
தமர்–ஆச்ரிதர்கள்
உகந்து–உகப்புடனே
எவ் வண்ணம் சிந்தித்து–குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து
இமையாது இருப்பர்–ஓயாமல் பாவநை பண்ணிக் கொண்டிருப்பார்களோ
அவ் வண்ணம் ஆம்–அவ் வண்ணமே யாவன்

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் சில ஐதிஹ்யங்கள் அருளிச் செய்யப் பட்டிருக்கின்றன்: –
“எம்பெருமானார் மாதுகரத்துக்கு எழுந்தருளாநிற்க, சில பிள்ளைகள் காலாலே கீறி
‘உம்முடைய எம்பெருமான் திருமேனி’ என்று காட்ட, பாத்ரத்தை வைத்துத் தண்டனிட்டருளினார்.”
[எம்பெருமானார் பிக்ஷைக்காகத் திருவீதியில் எழுந்தருளா நிற்கையில் தெருப் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் திருவாழி திருச்சங்கு முதலியவற்றோடே ஒரு உருவத்தைத் தரையிலே கீறி
‘உடையவரே! உம்முடைய பெருமாள் பார்த்தீரா? ‘ என்றழைத்துக்காட்ட,
உடையவரும் “ தமருகந்த தெவ்வுருவமவ்வுருவந்தானே’ என்ற இப்பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி
அந்தக்கீறலை மெய்யே பகவதி விக்ரஹமாகப் பிரதி பத்திபண்ணி தண்டனிட்டருளினார்.]

“கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள் திருவீதியிலேயிருந்து பெருமாளும் நாய்ச்சிமாரும்
பெரிய திருமண்டபமும் கற்பித்துப் பெருந்திருப்பாவாடையும் அமுது செய்வித்து .’ எம்பெருமானார் ! ப்ரஸாதப்படும்’ என்று
மணலைக் கையாலே முகந்தெடுக்க தத்காலத்திலே மாதுகரத்துக் கெழுந்தருளுதிறவுடையவர்,
அவ்விடத்திலே அது கேட்டருளித் தெண்டளிட்டு அவர்களெடுத்த ப்ரஸாதத்தை பாத்ரத்திலே ஏற்றார் என்று ஜீயரருளிச் செய்தார்’
[= நம்பெருமாள் ஸந்நிதியில் நடக்கிற ரீதிகளை அப்படியே அபிநயித்துத் தெருப்புழுதியில் ஓரு நாள் விளையாடிக் கொண்டிருந்த
சிறுபிள்ளைகள் ஒரு கொட்டங்குச்சியில் மண்ணைவாரி யெடுத்துக்கொண்டு, ஸந்நிதியில் அருளிப்பாடுகள் சொல்லுகிற க்ரமத்திலே
சொல்லிக் கொண்டு வரும்போது “ஜீயோ! “ என்று அருளிப்பாடு சொல்லிக் கூவ, அந்த ஸமயத்தில் யாத்ருச்சிகமாக
பிக்ஷைக்கெழுந்தருளிக் கொண்டிருந்த உடையவர் இவ்விளையாட்டொலியைக் கேட்டு மெய்யே ப்ரதிபத்தி பண்ணீ
‘ நாயிந்தே!’ என்று சொல்லிக் கொண்டே போய் ஸேவித்து அந்த மண்ணைச் சிக்கத்தில் ஏற்றுக்கொண்டார்..]

“எங்களாழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற்பழம் வேண்ட, ‘நீயார்?” என்று அவர்கேட்க,
ஜீயர்மகனான ஆயர்தேவு என்ன, ஜீயரக்கண்டு உம்முடைய பிள்ளை எங்களைக்குடியிருக்க வொட்டுகிறிலன் என்றார்.”
[ – நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளுக்கு ஆயர்தேவு என்று திருநாமம்.
அப்பெருமாள் , திருக் குருகைப் பிரான் பிள்ளானுடைய சிஷ்யரான எங்களாழ்வானுக்கு ஸ்வப்நத்திலே ஸேவை ஸாதித்து,
தான் இன்னானென்று தெரிவித்து நாவற்பழம் யாசிக்க, மறுநாள் எங்களாழ்வான் நஞ்சீயரைக் கண்டு
‘உங்கள் பெருமாள் நாவற்பழத்துக்காக என்பிராணனை வாங்குகிறாரே’ என்று விநோதமாக ஸாதித்தாராம்.
கண்ணபிரானான விபவத்தில் உகந்திருந்த நாவற்பழத்தை அர்ச்சையிலும் உகந்தபடி சொல்லிற்றென்க.]

————

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆச்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக்காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

இப்பாட்டின் பின்னடிகளில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத் கதை மூன்றாந்திருவந்தாதியில்-
“ ஆய்ந்தவருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில், வாய்ந்த குழவியாய் வாளரக்கன்- ஏய்ந்த,
முடிப்போது மூன்றேழென்றெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட்கரண். “என்ற எழுபத்தேழாம் பாட்டிலும்,

நான்முகன் திருவந்தாதியில் – “ கொண்டுகுடங்கால் மேல்வைத்த குழவியாய், தண்டவரக்கன் தலைதாளாற்
பண்டெண்ணிப் – போங்குமரன்….. “என்ற நாற்பத்துநாலாம் பாட்டிலும்
பேயாழ்வாராலும் திருமழிசைப்பிரானாலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.

முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக் கொண்டு நான்முகனிடஞ் சென்று வரம் வேண்டிக்
கொள்ளுமளவிலெம்பெருமான் ஒரு சிறு குழந்தை வடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து
‘இவன் பத்துத் தலைகளை யுடைய இராவணன்; ஸ்வ ஸ்ரூபத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து
வரம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான்; இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்’ என்று
தெரிவிப்பவன் போன்று தன் திருவாயால் அவ்விராவணனுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக் காட்டினன் –
என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது. இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை;

பெரியாழ்வார் திருமொழியில் –“சீமாலிக னவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய்,
சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் “ என்றும் —
‘ எல்லியம் போதினி திருத்தலிருத்ததோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மோரடையாலம்” என்றும்
அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல்
ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை என்று நம் பூருவாசாரியர்கள் நிர்வஹித்திருப்பது போலவே
இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதென்று பெரியோர் கூறுவர்.
இனி, இதற்கு இதிஹாச புராணங்களில் ஆகர முண்டேல் கண்டு கொள்க: விரிவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தாலெண்ணினானான எம்பெருமானுடைய
குணங்களைத் தேவர்களால் அறிய முடியாது;
எம்பெருமானுடைய திருவருளாலே தெளியக் காணவல்ல நாமே அறிய வல்லோம் – என்பது ஒரு பொருள்;
தேவர்களே அறிய மாட்டாத போது நாமோ அறியக் கடவோம் என்று நைச்சியமாகச் சொல்லிக் கொள்வதாக மற்றொரு பொருள்.

பாதமத்தால் – பாதத்தால் என்றபடி.

———–

பிரமனுக்கு அருள் செய்தமையைக் கீழ்ப்பாட்டிற் சொன்னார்,
சிவனுக்கு அருள் செய்தமையைச் சொல்லுகிறாரிதில்.

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் —46-

பதவுரை

பண் புரிந்த நான்மறை யோன்–ஸ்வரங்களோடு கூடின நால் வேதங்களை நிரூபமாக வுடையனான பிரமனுடைய
சென்னி–தலையில்
[கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக் கொண்ட கபாலத்தில்]
பலி ஏற்ற–பிச்சை யெடுத்துத் திரிந்தவனும்
வெண் புரி நூல் மார்பன்–வெளுத்த யஜ்ஞோ பவீத்த்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய
வினை–ப்ரஹ்மஹத்தி பாபமானது
தீர–நீங்கும்படியாக
[ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக]
புண் புரிந்த ஆகத்தான்–தன்னுடைய திரு மார்பைப் புண்படித்தி கொண்டவனுடை எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணிவார்–ஆச்ரயிக்குமவர்கள்
அமரர்தம் போகத்தால்–நித்ய ஸூரிகளின் போகமாகிய பரமபதாநுபவத்தோடு
பூமி–இந்த லீலா விபூதியை
ஆள்வார்–ஆட்சி புரிவர்கள்.

சிவனுடைய வினையைத் தீற்பதற்காகத் தனது திருமார்பை நகத்தால் கீறி புண்படுத்திக் கொண்டது பற்றி
புண்புரிந்த ஆகத்தான் என்றார். இப்படி பரோபகார சீலனான பெருமானுடைய திருவடிகளைப் பணியுமவர்களே
உபய விபூதியையும் ஆலவள்ள பாக்யசாலிகள் – என்றாராயிற்று.
“வையம்மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வார் மண்ணூடே” என்று திருவாய் மொழிப் பாசுரம் இங்கு நினைக்கத் தகும்.

போகம் – பூமி- வட சொற்கள்

——————-

கீழ்ப்பாட்டில் “ புண் புரிந்த வாகத்தான் தாள்பணிவார் கண்டீர் அமரர்தம் போகத்தால் பூமியாள்வார்” என்றார்;
எம்பெருமானது தாள்களைப் பணிதல் யார்க்குக் கை கூடும்? என்று கேள்வி யுண்டாக,
இந்திரியங்களை அடக்கி ஆள்பவர்களே எம்பெருமான் திருவடியைப் பணிதற்குப் பாங்குடையர் என்கிறாரிதில்

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–

பதவுரை

மதம் களிறு ஐந்தைனையும்–மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி–ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப் பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ–கண்ட விடங்களிலும் திரிய வொட்டாமல் செவ்வையாக நிலை நிறுத்தி
கூரிய–மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால்–உண்மையான பக்தி ரூபா பந்ந ஜ்ஞானத்தாலே
உணர்வார்–(அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள்–முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான்–கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

இந்திரியங்களை அடக்கி யாளுதல் மிகவும் அரிது என்பது தோன்ற, அவ்விந்திரியங்களை மதம் பிடித்த
யானையாக உபசரித்துக் கூறுகின்றார்.
யானைகள் நீர்நிலையில் புகுந்தால் முதலை முதலிய ஜல ஜந்துக்களால் துன்பம் நேரிடுவது ஸம்பாவிதமாதலால்
அங்குப் போகாதபடி சுருக்க வேணும் யானையை;
அப்படியே, பிரகிருதத்தில் நீர்நிலையாவது – விஷயாங்தரங்கள்; இந்திரியங்களாகிற மதயானைகள்
சப்தாதி விஷயங்களினருகிற் சென்றால் துன்பம் நேரிடுவது திண்ணமாதலால் அவற்றில் நின்றும் சுருக்க வேணும் இவற்றை;
இதுவே “ வாரிசுருக்கி” என்பதன் கருத்து.

வாரி என்னும் வடசொல்லுக்கு ‘நீர்’ என்று பொருள்; நீரானது எப்படி விடாயைப் பிறப்பிக்குமோ
அப்படி விஷயங்களும் விடாயைப்பிறப்பிக்கின்றன என்பதுபற்றி விஷயங்களை ‘வாரி’ என்ற சொல்லாற் குறித்தன ரென்க.
“வாரி சுருக்கி” என்றதே போதுமாயிருக்க, மறுபடியும் “ சேரிதிரியாமல் செந்நிறீஇ” என்றது-
பலாத்கரித்தாகிலும் இந்திரிய மதயானைகளை விஷய வீதிகளில் நின்றும் மடக்கியடக்கி ஆளவேண்டுவது
அவசியம் என்பதற்காக வென்க. நிறீஇ- சொல்லிசையளபெடை.

ஆக விப்படி இந்திரியங்களை வென்று பாரமார்த்திகமான பக்தி ரூபாபந்நஜ்ஞாநத்தாலே அவனை உள்ளபடி
உணரக் கூடியவர்கள் யாரோ, அவர்கள் அவனுடைய திருவடிகளை ஸேவிக்கப்பெறுவர்கள் – என்றாராயிற்று.
“ கைந்நாகங்காத்தான் கழல்” என்ற சொல்லாற்றலால் ஸ்ரீகஜேந்திரவாழ்வான் போல்வார்
இப்படிப்பட்ட அதிகாரிகள் என்பது ஸூசிக்கப்பட்டதாம்.

—————-

உலகளந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று
திருவுள்ளத்தைத் தேற்றுகின்றார்.

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து -48–

பதவுரை

ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]
ஒரு கழல்–ஒரு திருவடியை
எடுத்து–மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை–ஒரு திருக் கையாலே
சுற்றி–[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றி யெறிந்து
ஓர் கை மேல்–மற்றொரு திருக்கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான்–இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற
[அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்]
அழலையுமிழ்கிற யுத்த சாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல–திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு–பொருந்துவாயாக;
மகிழ்–இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்.

———–

தேவயோநிகளென்றும் மநுஷ்யயோநிகளென்றும் திர்யக்யோநிகளென்றும் பலவகைப்பட்ட யோநிகளில்
பிறப்பதும் இறப்பதுமாகிற ஸம்ஸாரத்தைத் தொலைத்துக் கொள்ள விருப்பமுடையவர்களுக்கே
எம்பெருமானைக் காணுதல் கைகூடுமென்கிறார்.

மகிழல கொன்றே போல் மாறும் பல்யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49–

பதவுரை

மகிழ் அலகு ஒன்றே போல்–(கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே
காணி ஸ்தாநத்திலும் கோடி ஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பது போல
மாறும் பல் யாக்கை–மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ–தன்னடையே விட்டு நீங்கும் படியாக
முயலகிற்பார்க்கு அல்லால்–முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும்–மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடுமுடி எம் ஆதி காண்பு–விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல்
தோன்றுகிற தேஜஸ்ஸையுடைய அழகிய பெரிய திருவபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது–கூடாத காரியம்.

பலகறை, மகிழம் விதை முதலியவற்றைக் கொண்டு கணிதம் பார்க்கிற முறைகள் சிலவுண்டு;
அந்த கணிதத்தில் காணிஸ்தாநமென்றும் கோடிஸ்தாநமென்றும் பாகுபாடுகளுமுண்டு;
காணிஸ்தானமென்பது மிகத்தாழ்ந்த ஸ்தாநம்; கோடிஸ்தானமென்பது மிகவுயர்ந்தஸ்தாநம்.
கணிதம் பார்க்கிற வகையில் ஒரு மகிழம் விதையே சற்றுபோது கணி ஸ்தாநத்திலும்
சற்றுபோது கோடிஸ்தாநத்திலுமாக மாறிமாறி வந்துகொண்டிருக்கும்; (இது கணிதஸாமர்த்தியத்தைப் பொறுத்ததுமாம்.)

அது போல பகவத் ஸங்கல்பத்தாலே கர்மாநுகுணமாக (உத்க்ருஷ்டமாகவும் அபக்ருஷ்டமாகவும்) பலவகைப்பட்டு
மாறிமாறி வாரக்கூடிய (பிரமன் முதற்கொண்டு எறும்பு ஈறாகவுள்ள) சரீரங்கள் தொலைந்து
நித்யாந்ந்தமநுபவிக்க வேணுமென்று ஆசை கிளரிந்து அதற்குரிய முயற்சியைச் செய்யுமவர்களுக்குத் தவிர
மற்று யார்க்கும் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பது அரிதாகும்.

நான்காமடியை “ ஆதிகான்பு ஆர்க்கும் அரிது” எனப்பிரித்து உரைக்கப்பட்டது
காண்பு – காணுதல். இனி “ காண்பார்க்கும் “ என்று ஒரு சொல்லாகவே கொண்டு உரைக்கவுமாம்
காணவேணு மென்னும் விருப்பமுடையவர்களுக்கும் எம் ஆதி அரிது ( அருமைப்படுவன்)என்க.

இப்பாட்டில் முதலடிக்குச் சார்பாக ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்திலுள்ள
“படுநைவராடிகேவ க்ல்ப்தா ஸ்தலயோ: கரகணிகாஸுவர்ண கோட்யோ:.” என்ற ச்லோகம்
ஒருபுடை ஒப்புமையாக ஸ்மரிக்கத்தக்கது.

————–

விஷயாந்தரங்களில் பற்றற்று அன்புடன் அவனை ஆச்ரயிகுமவர்களூக்கு
அவனைக் காண்பதில் அருமையேயில்லை யென்கிறார்.

அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது -50-

பதவுரை

அரிய–அடக்க முடியாத
புலன் ஐந்து–பஞ்சேந்திரயங்களையும்
அடக்கி–கட்டுப் படுத்தி,
ஆய்–ஆராயந்தெடுக்கப்பட்ட
மலர்–புஷ்பங்களை
கொண்டு–கையில் ஏந்திக் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால்–அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில்–கிட்டப் பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்–‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தை யுடையனாய்
தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலி யிடத்தில்
வண் கை–உதாரமான தனது திருக் கையாலே
நீர் ஏற்றானை–உதக தாநம் வாங்கின பெருமானை
காண்பது–ஸேவிப்பது
எளிது–ஸுலபமாகும்.

செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஜ்ஞாநேந்திரயங்களைத்தையும் விஷயாந்தரங்களில் போக வொண்ணாதபடி அடக்கி,
பகவதாராதனைக்கு உரிய நன் மலர்களைச் சேகரித்துக் கொண்டு மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால்,
மாவலியின் மதமொழித்த பெருமானைக் கண்டநுபவிப்பது மிகவும் எளிதாகும்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –