மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள் -திருப் பள்ளி எழுச்சி -4
எறுமை சிறு வீடு மேய்வான் பரந்தன -திருப்பாவை -8
மேட்டு இள மேதிகள் -வளர்ந்த கிருஷ்ண கர ஸ்பர்சம் மூலம் வளர்ந்து -இளமை உடன் உள்ள எருமைகள்
மேடு -கொம்புகள் வளர்ந்து -இளமை பிராயம்–
மேடு -கொம்பு வளர ஆரம்பம் -நஞ்சீயர் -மேடாக வளர்ந்தன என்றுமாம்
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–எருமை சிறு வீடு அன்றி பெரு வீடு–
பனி புல் மேய்தல் சிறு வீடு மேய்தல்-பால போகம்-
மேட்டு இள -பெரு வீடு-ஒளி திக்கு எட்டும் பரவிய பின் -பெரு வீடாக கொள்ள வேண்டும்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்
கீழ்வானம் வெள்ளென்று –கிழக்கு வெளுத்தாலும் கிடந்தது உறங்கும் இத்தனையோ -எழுந்திராய் என்கிறார்கள் —
உம் -சகாரத்தாலே -கிழக்கு வெளுத்தது அன்று –
உங்களில் யாரேனும் அத் திக்கைப் பார்க்கையாலே-உங்கள் முகத்தில்
ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது-
இவர்கள் தான் திங்கள் திரு முகத்து சேயிழையார் இறே-
அது அந்யதா ஜ்ஞானம்-மற்று அடையாளம் உண்டோ என்ன –
சம்சாரிகளில் ராத்திரியில்
பர ஹிம்சாதி சிந்தனமும்-
நரக அவஹமான விஷய அனுபவமும்
தமோ குண அபிபவத்தால் வந்த நித்ரையுமாய்ச் செல்லுகையாலே
ராத்திரி தண்ணியது என்று புருஷார்த்த உபயோகியான பகல் விருப்பத்துக்கு உடலாய் இருக்கும்
அவள் உள்ளே கிடந்து அக்காலம் வருகை யாவது என் என்ன –
கீழ்வானம் வெள்ளென்று–
இதுக்கு முன்பு விடிவுக்கு உடலாகச் சொன்னது போல் அன்று – கிழக்கு வெளுத்தது காண் -என்கிறார்கள் –
அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் (திருவாய் -5-4-9) -என்று
போது புக்க போதே பிடித்து கீழைத் திக்கை பார்த்துக் கொண்டு இருப்புதிகோள் –
(வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
இங்கு கோதுகலம் -கிருஷ்ண அனுபவம் இருக்கும் பொழுது இரவு
அந்த பாசுரத்தில் -இரவு வந்ததே கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் துன்புற்று இருக்க
அந்த துன்பம் பார்க்க சகியாமல் ஆதித்யனும் வரவில்லை )
திங்கள் திரு முகத்து சேயிழையாரான உங்களுடைய முகத்து தேஜஸ்
கீழைத் திக்கில் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து
ப்ரதி பிம்பிக்கையாலே கிழக்கு வெளுத்தது போல் தோற்றுகிறது அத்தனை –
கிழக்கு வெளுத்தது அன்று –
இது உங்களுடைய அந்யதா ஞானம்-
இத்தை ஒழிய விடிவுக்கு வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன
வெள்ளென்று -என்றது வெள் என்றது -என்றபடி-
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாம் படி-சத்வோத்தரமான காலம் ஆயிற்று –
எழுந்திராய் -என்ன –
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாய்த்து-சத்வோத்தரமான கால க்ருதமல்ல –
மரங்களும் இரங்கும் வகை -என்று
உங்களுக்கு ஸ்வ அநுமான க்ருதம் –
வேறு அடையாளம் உண்டோ -என்ன –
கீழ்வானம் வெள்ளென்று –
கிழக்கு வெளுத்தது எழுந்திராய் -என்கிறார்கள் –
ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்த்துவதற்கு முன்னே எழுந்திராய் என்கிறார்கள்
(ஸூர்ய ஒளி சீதாப்பிராட்டிக்கு -சந்த்ர ஒளி இவர்களது -சந்த்ர வம்சம் அன்றோ )
வெண்ணிறத்தோய் தயிர் -என்று தயிர் வெளுக்கத் தோய்ந்தவாறே விடிந்தது என்று
அறிகையாலே உறங்காதே பல கால் தயிரைப் பாரா நிற்பர்கள் –
(இடக்கை வலக்கை அறியாமல் பாலையையும் தயிரையும் பார்த்தே காலத்தை உணருமவர்கள் )அத்தாலே கிழக்கு வெளுத்தது -என்ன
நீங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி -விடிந்தது இல்லையோ -என்று பார்க்க –
உங்கள் முகத்தின் ஒளி கீழ் திக்கில் சென்று தாக்கி உங்கள் முகத்திலே வந்து பிரதிபலிக்கையாலே
கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது அத்தனை –
இது அந்யதா ஞானம் -மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்-என்ன
(முத்து சிப்பி வெள்ளி -கயிறு பாம்பு -சங்க பீத போல் -பண்பை மாற்றி -அந்யதா ஞானம்
விபரீத ஞானம் பொருள் மாறாட்டம்
தேஹாத்ம அபிமானம் -விபரீத ஞானம்
ஆத்மாவின் பண்பை மாறாடி -சேஷத்வ பாரதந்தர்யம் மாற்றி ஸ்வதந்த்ரன் -நினைவு அந்யதா ஞானம் )
எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் –
பனிப்புல் மேய-அகாலத்திலே விட்டு -வயல்கள் எல்லாம் பரந்தன-
ஸ்ரீ நந்த கோபர்க்கு முத் திறமும் உண்டே -ஆட்டுத் திறம்-மாட்டுத் திறம்- எருமைத் திறம்-
அவற்றின் பின்னே கிருஷ்ணன் போம்-பின்னை ஆரைக் காண்பது -எழுந்திராய் -என்ன –
உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரிந்து போகிறது இத்தனை-
அது உங்களுடைய விபரீத ஜ்ஞானம் இருக்கிற படி-
சத்வ நிஷ்டர் சந்நிதியில் அந்தகாரம் நில்லாது இறே-
பெரியாழ்வார் பெண் பிள்ளை அக்நி ஹூத்ர அனுஷ்டானம் அறிகை ஒழிய-
சிறுவீடு வாசி அறிகையான மெய்ப்பாடு
அருணோதயத்துக்கு அஞ்சி இருள் சிதறி சிதறிப் போகிறது என்னவுமாம்
மேட்டிளமேதிகள் தளைவிடும் ஆயர்கள் -என்று-இவள் தகப்பனார் எம்பெருமானை எழுப்பினார்-
இவள் இவர்களை எழுப்புகிறாள்–
நாங்கள் பிரமித்தோமாய் ஆயிடுக -நீ விடிந்தது இல்லை என்று அறிந்தபடி எங்கனே -என்ன-
பஞ்ச லஷம் குடியில் பெண்களில் உங்களை ஒழிய அல்லாதார்-உணராமையால் -என்ன
மேட்டிள மேதிகள் தளை விடுமாயர் (திருப்பள்ளி எழுச்சி -4)-என்று
(விஷ்ணு சித்தர் போல் – துளஸீ ப்ருத்தர் -இவரும் புஷ்ப கைங்கர்யம் )
பெரிய பெருமாளை இவள் தமப்பன்மாரில் ஒருவர் எழுப்பினார் –
இவர்கள் இவளை எழுப்புகிறார்கள் –
இதில் ஆழ்வார்களும் இவளுக்கும் வாசி –
(விஸ்வாமித்திரர்- விஷ்ணு சித்ரர் துளஸீ ப்ருத்யர்கள் திருப்பள்ளி எழுச்சி கைங்கர்ய ஸாம்யம்
புஷ்ப கைங்கர்யத்தாலும் ஸாம்யம் உண்டே)
சிறு வீடு -மேய்வான்-
பெரியாழ்வார் மகளாய் அக்னி ஹோத்ர ஹோமங்களுக்கு உள் மானம் புற மானம் ஆராய்க்கை தவிர்ந்து
இடைச்சியாய் எருமையினுடைய சிறு வீடு பெரு வீடு என்னும் இவற்றில் வாசி அறிகை யாத்ரையான படி
பரந்தன காண்-
பட அடிப் பட்டாலும் உறங்கும் அத்தனையோ –
நம்முடைய உத்தேச்ய வஸ்து அவற்றின் பின் கை கழியப் போனால் என் படக் கடவோம்
ஸ்ரீ நந்த கோபருக்கு முத்திறமும் -ஆடு பசு எருமை -கிருஷ்ணன் அவற்றின் பின்னே போம் –
(வாரணம் ஆயிரம் யானையும் உண்டு வஸூ தேவர் சொத்தும் கண்ணனுக்கு உண்டே )
பின்னை நாம் ஆரைக் காணப் போகிறது –
கெடுவாய் எழுந்திராய் –
எருமை பனிப்புல் மேய்க்கைக்கு வயல் எங்கும் பரந்தன வென்று சொன்ன இது
விடிவுக்கு அடையாளம் அன்றோ என்ன
உங்களுடைய முக ஜ்யோதிஸ் யோஜனையாலே சிதறிப் போகிற இருள் அத்தனை இவை –
அல்லது எருமைகள் அன்று –
இது உங்களுடைய விபரீத ஞானம் இருக்கிற படி -விடிவுக்கு உடல் அல்ல என்ன –
கீழ்ச் சொன்னவை எங்களுடைய அந்யதா ஞானமும் விபரீத ஞானமும் ஆகிறது –
விடிந்தது இல்லை என்கைக்கு அடையாளம் நீ சொல்லாய் என்ன
அஞ்சு லக்ஷம் குடியில் உள்ள பெண்களுக்கு எல்லாம் அவதி இல்லை –
இங்கு எல்லாமாக ஆயிரம் பேர் போராது காண் வந்தது –
அல்லாதாரும் உணர்ந்து வர வேண்டாவோ –
அவர்கள் உணர்ந்து வாராது ஒழிந்தது விடியாததுக்கு அடையாளம் என்ன
———
206-
இறையவர் பதினொரு விடையரும் இவரோ -திருப் பள்ளி எழுச்சி -6
வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-
இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
இரவியர்-நெடு மணி தேர்– சிறந்த பெரிய 12ஆதித்யர்கள்
இறையவர்-சம்சார நிர்வாககர் –விடை-ரிஷபம் 11 ருத்ரர்கள்–திரு நாங்கூர் திவ்ய தேசம் சுற்றி 11 ருத்ரர்-
இவரோ-கை காட்டுகிறார்-
முற் கோலி கொண்டு வந்தார்கள்
தேவரீர் பணிக்கு அடைத்த – ஆதித்யன்-கதிரவன்-தவிர மற்றும் சோம்பி இருக்கிற ஆதித்யர்களும் வந்த பின்பு-
முன்பே கதிரவன் குண திசை வந்ததை சொல்லி –
இங்கு சோம்பி கிடக்கும் இவர்கள் -இவர்களே வந்த பின்பு நீர் பள்ளி எழுந்து அருள வேண்டாமோ –
ருத்ரன்-தமோ குணம்-அவர்களே வந்த பின்பு
இறையவர்-
ஜகன் நிர்வாகர்- இறையவர்-பசு அகம் மேவ பசு பதி-
பசு-பிராயர் மக்களுக்கு அதி பதி இருக்க வேண்டும் என்று
வரம் பிரார்த்தித்து கேட்டு பெற்றான்-ரோதநாத் அழுகிறார் குதிக்கிறார்
ருத்ரன் ஸ்தாணு சம்பு சிவா –எட்டு தரம் அழுது எட்டு பேர் வாங்கி கொண்டார்-
பிரார்த்தனை கோடி காட்ட இறையவர் என்கிறார் ஆழ்வார்
சர்வேஸ்வரன் போலே ஸ்வாபாவிகமாக இல்லையே இவன் –
அவர்கள் தேர் ரிஷபம் விட்டு இறங்க–அவர்கள் இறங்கி இழியவும் கூடும் –
இறைவ –வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
இறைவனே!’ என்பார்கள். ‘இங்ஙனே சொல்லுகிறவர்கள் தாம் யார்? என்னில்,
வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் –
சிவன் முதலானோர். ‘ஆயின், கடவுளை வணங்குகின்றவர்கள் வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின்,
இராஜ சேவை செய்வார் தம் தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று,
இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள்.
(அவன் கொடுத்த வரிசையோடே வந்தால் விரோதம் இல்லை -என்றபடி )
சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை —
நாட்டினான் தெய்வம் எங்கும் –அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்-
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவர் –
சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே,
திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்,
இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான்,
அப்பொழுது ஆட்டத்து வெளியில் யானைக் காலில் துகை யுண்ணா நிற்பார்கள்-
———————————————————————————————————
207-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4
அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
வாட்டுகை -நிச் சேஷமாக முடிக்கை -கரி யாக்குகை
வீர பத்னி யாகையாலே -கிள்ளிக் களைந்தானை -என்கிறாள் –
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4–இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-ராக்ஷஸ வர்க்கம் -மூல பலம் அனைத்தும் அழித்து–சார்ங்கம் பிடித்த அயோத்தி அம் அரசு -பிரதி நிதியாக உள்ள நம் பெருமாள் வானவர் ஏறு
துர் வர்க்கத்துக்கு புகலிடமாய்-இலங்கை-நிர்வாகனான இராவணன் குலத்தை ச பரிகரமாக மாய்த்த –
நல்லோர் ஓர் இருவர் இருந்தாலும் கேட்காத-நிரசித்த சார்ங்கம் –-பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
சமுத்திர ராஜன் பணிந்தான் -வில்லால் சேது -ஸ்ரீ சார்ங்கத்தை உடையவராய் –
ப்ரஹ்மாதிகள் அபேக்ஷிதம் முடித்தோம் -செய்யப் பெற்றோமே -என்று –
மேனாணிப்பும் உடையராய் -அஹங்காரம் இங்கு இவன் இடம் இருக்க வேண்டுமே –செய்து முடித்து அகங்காரம் கொண்டு–
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் –
அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி – திரு அயோத்தியை நிர்வகிப்பர் –
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்காக இங்கே வந்து திருக் கண் வளர்ந்து – பெரிய பெருமாள் ஸ்ரீ ராமராக அவதரித்து
இவற்றை செய்து முடித்து மீண்டும் சயனம் – தீபாத் உத்பன்ன பிரதி தீபம் -சர்வம் பூர்ணம் -அர்ச்சையே -அயோத்தியைக்
காட்டில் திருவரங்கம் உகந்து அருளி – அனைவருக்கும் என்றும் இங்கு தானே –
சர்வாதிகரான தேவரீர் உணர்ந்து அருளி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –
பொல்லா அரக்கனைக் அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
தாயையும் தமப்பனையும்-உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி
முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே
அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –
பொல்லா அரக்கனைக்-உயிரையும் உடலையும் பிரித்தால் போலே
தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த
நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –
முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே – துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே
பொல்லா அரக்கனை-விபீஷணஸ் து தர்மாத்மா -என்று-நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே
பொல்லா அரக்கனை-ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -என்ற நிலை மாறி தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி
(கோபத்தால் ஜகத்தையும் மலைகளையும் இல்லையாம் படி அம்பின் நுனியால் முடிப்பேன் என்று தண்டகாரண்யத்தில் சொன்ன நிலை
மாறி பொல்லா அரக்கனை -என்ற இடத்தில் பர்யவசிக்கிறது )
அரக்கனை-மாயா மிருகத்தைக் காட்டுவார் –மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய் -ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்
பொல்லா அரக்கனைக்-தாயையும் தமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
(சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-)
பொல்லா
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து -இறே –
(முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –திருக் குறும் தாண்டகம்-15-)
பிராட்டி –த்வம் நீச சசவத் ஸ்ம்ருத-என்றாள் (குள்ள நரி-முயல் குட்டி போல் நீ யானை போல் ராமன் -ஸூந்தர -21-16)
இவள் தானும் –அன்று இன்னாதான செய் சிசுபாலன் (நாச்சியார் 4-7-)-என்றாள் –
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை
குணவான் -என்றது அவனையும் அவளையும் கூட்டி வாழ நினைக்குமவர்களோடு பரிமாறின படி-(ஸுசீல்யன் என்றபடி )
வீர்ய வான் -என்றது பிரிக்க நினைத்தார் முடியும்படி
தர்மஞ்ஞ – என்றது அவர்கள் ஸ்வரூபம் உணர்ந்து இருக்கும் படி –
கிள்ளிக் களைந்தானைக் –திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –
கிள்ளிக் களைந்தானைக்-வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –கிள்ளி –என்கிறார்கள் –
கிள்ளிக் களைந்தானைக்-மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி–
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் -பொல்லாத அப்ராப்த விஷய ஸூசகமான-அஹங்காரத்தை
அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹம் மம -என்றால்-ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–
அஹந்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது –
அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய
“கிள்ளிக் களைந்தானை”-என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.
ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க.
ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் -தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில்
புள்ளின் வாய் கீண்டானை -இனிய வாய ஜடாயுவைக் கொன்றவன் -மந்த்ரம் சொன்னதும் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்
————————————————————————————
208
அந்தரத்து அமரர் -திருப் பள்ளி எழுச்சி-7-
கேசவன் தமர் -திருவாய் மொழி -2-7-1-
அந்தரம் -ஆகாசம் -தேவ லோகம் -அவர்கள் வர்த்திக்கும்தேசத்தை இட்டு அந்தரத்து அமரர்
ஸ்ரீ வைஷ்ணவர்களை விஷ்ணு இட்டே சொல்வது கேசவன் தமர்
ஏகாந்தீ வ்யாபதேஷ்டவ்ய நைவ க்ராம குலாதிபி -விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய -இறே
இப் பாட்டுக்கு தாத்பர்யம் இந்த்ரன் வந்தமை முதலில் – சொல்வது தான் –
த்ரஷ்டவ்ய முதலில் சொல்லி கேட்டு மனனம் தியானம் வேதம் சொன்னாலும் அர்த்த க்ரமத்தால் -இப்படி ஆமோ என்னில்
ஸ்ரோதவ்ய முதலில் சொல்லி த்ரஷ்டவ்யம் கடைசில் கொள்வது போலே –
தேவர்கள் மருத்துக்கள் முன்னமே சொன்னதால் இந்திரனை சொல்லி சொல்லாத அனைத்து தேவர்களும் வந்தார்கள் —
அர்த்த க்ரமத்தால் -கொள்வதற்கு உதாஹரணம் –
அக்னி ஆகிதார் ஆகிதாக்னி -ஆகித ஆக்னி-எப் பொழுதும் ஹோமம் பண்ணி கொண்டு இருப்பவர் போல-
பிரணவம் சப்தத்தால் இருந்தாலும் ஆத்மா ஸ்வரூபம் சொன்னாலும் –அ காரம் முதலில்–தாத் பர்த்யம் ம காரத்துக்கு தான் —
அவனுக்கு சொல்ல வேண்டியது இல்லை –அசித்துக்கும் சொல்லி பயன் இல்லை-
உபதேசமே ஜீவாத்மாவுக்கு தான் தேர் தட்டிலும் முன் அமர்ந்தான் –அர்த்தத்தால் –
பரமாத்மா முக்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்-ராஜ புருஷன்-ராஜா சேவகன்-பிரதான்யம் -போல
அண்டம் ஆகாசம் -அந்தரத்து அமரர் இவர்கள்- -அந்தரம் அண்டம் ஆகாசம் பர்யாயம் –
கேசவன் தமர் அல்லர் இவர்கள் -இவர் உள்ள இடம் வைத்தே இவர்களை –
பகவத் பக்தர்களை -கைங்கர்யம் இட்டும் அவனை இட்டும் -நிரூபகம் –
மேலே அடுத்த பாசுரத்தில் உபகரணங்கள் கொண்டு வந்தமை அருளிச் செய்வார்-
ஐஸ் வர்யார்திகள் தான் இவர்கள் அசித் அனுபவம் ஆசை பட்டு- தத்வம் மூன்று தானே
சித் ஆசை கொண்டு கைவல்யம்- பரமாத்மா தான் உயர்ந்தது என்று உணர்ந்து ஆசை கொண்டால்-பகவத் லாபார்திகள்
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தம் அனுபவம் -ஐச்வர்யார்திகள்-அனுபவத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாம் –
நிலை உயர்ந்து இந்த்ரன் பட்டம்-இதனால் தான் ஆழ்வார்கள் இவர்களை உயர்த்தி பேசாமல் -பகவத் அனுபவம் இழந்து —
அகங்காரம் மிக்கு-வேதம் வேற சொர்க்கம் போக தூண்டும் வேத சாஸ்திரம் நம்பிக்கை வர அனுபவம் பெற்று திரும்பி வர –
சாதனம் பண்ண முடியாத இடம் சொர்க்கம்-அப்படி அகங்கரிப்பவர்களே
பெரிய பெருமாளை சேவிக்க வந்த பின் நாம் வர வேண்டாமா-
எல்லோரும் ஈஸ்வர ஆதீனம் தான் என்று காட்ட-
பிரம்மா முதல் பிபீலிகா எறும்பு வரை-பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
நான் முன்னே நன் முன்னே என்று வாயில் நுழைந்தார்கள் பிரி கதிர் படாமல்-
ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
தேஷாம் சதத யுக்தாநாம்-எப் பொழுதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டு இருப்பார்கள் பக்தர்கள்
சேஷத்வம் பார தந்த்ர்யம் மிகுந்து -நம்மை ரஷிக்க -அவன் இருக்கிறான் என்ற மகா விசுவாசம்
காலையில் மட்டும் சத்வ குணம் வந்து அபிமானம் குறைந்து
வைராக்கியம் கொஞ்சம் வந்து அவனை பற்றி-புல்கு பற்று அற்றே-
கொஞ்சம் கைங்கர்யம் பண்ண சத்வ குணம் வளர-அபிமானம் பங்க -குறைந்து வந்தார்கள்
மனமே தான் பந்தத்துக்கும் மோட்ஷத்துக்கும் கரணம் –
அவன் நினைவு சாஸ்த்ரங்களில் பதித்து வைத்து இருக்கிறார்
நம்பி செய்தால் நம்மை சரி படுத்தும் பொறுப்பை அவனே எடுத்து கொள்கிறான்
ஜீவாத்மாவுக்கு எது நல்லதோ அதுவே தீமை-ஞாதுருத்வம் கொண்டு-சாஸ்திரம் படித்து நடந்து மோட்ஷம் போகலாம்
நான் உசந்தவன் என்று நினைந்து அகங்காரம் கொண்டு ஐஸ்வர்யம் கைவல்யம்-
அணு சக்தி அழிவுக்கும் உயர்வுக்கும் போல-ஞானத்தாலே சேஷத்வ பார தந்த்ர்யம் புரிந்து கொண்டு இருந்தால்-
அம் கண் ஞால அரசர்கள் பங்கமாய் வந்தது போல –
ஸ்த்ரீத்வம் என்கிற அபிமானம் தொலைந்து வந்தோம்-என்கிறாள் —
இரும்பு போல் வலிய நெஞ்சம்–
காந்தஸ்தே புருஷோத்தமன் -கிட்டே போனதும் இழுத்து கொள்கிறான் அவன் இடம்-
ஆந்த்ரமான சேஷத்வம் பார தந்த்ர்யம் புரிய தான் இப்படி அருளுகிறார்-
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்–2-7-1-
கேசவன் தமர் –
பிரசஸ்த கேசனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள். என்றது,
அவனுடைய அவயவங்களின்-ஸுந்தர்யத்திலே அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றபடி.
அன்றிக்கே,விரோதி நிரசன சீலதையிலே – பகைவர்களை அழிக்கும் பண்பிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்;
அன்றிக்கே, தஸ்மாத் கேசவ நாமாவான் -‘க என்பது பிரமனுடைய பெயர்; நான் எல்லாப் பொருளையும் நியமிக்கிற
சிவன் ஆகின்றேன்; நாங்கள் இருவரும் தேவரீர் திருமேனியில் உண்டானோம். ஆதலால், ‘கேசவன்’
என்னும் திருப்பெயரை உடையவர் ஆனீர்’ என்கிறபடியே, சர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்.
சர்வேஸ்வரன் உடையார்’ என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது;
‘எமர்’ என்கிற ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது.
இத்தால் அவன் விஷயீ கரிக்கைக்கு – அங்கீகரிப்பதற்கு ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது என்றபடி.
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்-
எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும்- கேசவன் தமர் -ஆனார்கள் என்க.
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ்த்தம் உதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச
‘குழந்தாய்! தருமபுத்திரா! வாராய்; ஒரு நாளாகிலும் பூமியில் தண்ணீரை விடு; அவ்வாறு விடும் தண்ணீர் வமிசத்தை
மூ ஏழ் தலைமுறை கரை ஏற்றுகிறது’ என்றும்,
தச பூர்வான் தச அபரான் ஆத்மா நஞ்ச –‘கழிந்து போன பத்துப் பிறவிகளையும், இனி வருகின்ற பத்துப் பிறவிகளையும், தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும் வரும் பிரமாணங்களைக் காண்க.
————————————————————————————-
209-
துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திருப் பள்ளி எழுச்சி -10-
ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் -பெரிய திருமொழி -11-2-6-
அவனுக்கு சேஷித்வ ஸூசகம் ஆழியும் இத்யாதி
சேஷ சேஷிகளின் அடையாளம் இத்தால் கூறப்பட்டன –
தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
அடையாளம்–சேஷருக்கு சூசுகம் சங்கு சக்கரம் பொலிந்து தோன்றிய தோள் சேஷிக்கு ஸூசுகம்
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-இதில் தனக்கு வேண்டியதை கேட்டார்
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
இதில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார்
பிரயோஜன பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம் வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் –வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள்
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்-தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்
அளியன் என்று அருளி-கிருபை பண்ணி-சிநேகமும் தயையும் இந்த ஜந்துவை கிருபை பண்ண அடுக்கும்-
எல்லாம் அற்றான் என்று திரு உள்ளம் கொண்டு-என்று தயை காட்டி அருளி –
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –
அளியன் -ஸ்நேகம்– தயாபாத்ரம் –
மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் -எல்லை நிலத்தினில் நிறுத்தினாய் -ரத்னம் பட்டது முத்து பட்டது என்னுமா போல
ஆட் படுத்தாய்-கிடைப்பது துர் லபம் -ஆட் படுத்தி விட்டாய்-
முதல் நிலையும் அன்றியே இவ்வருகே சம்சாரி நிலையும் அன்றி சேஷத்வ எல்லை நிலத்தில் நிறுத்தினாய் –
ரத்னம் முத்து பட்டது -கிடைத்தது போலே -ஆட்படுத்தாய் –பிரார்த்தனை மட்டும் இல்லை -கிடைத்த தனம்
வேண்டியது கிட்டியதே இன்னும் ஏன் தபஸ்-பாம்பின் மேல் நீர் நடுவில்
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –
புசிக்க எழுந்து அருளாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
உமக்கு என்று கொண்டு அருள வேண்டும் யோக நித்தரை பலம் பெற்றதன் பின் பண்ண வேண்டுமா –
கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –
ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் தாம் – -பெரிய திருமொழி -11-2-6-
சர்வேஸ்வர லஷணம் ஆயிற்று
திருவாழி ஆழ்வானும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் –
————————————————————————————
210
தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10
அடியார் அடியார் –அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10
பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –
தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10–கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அழகிய மணவாளன்-அரங்கா சொந்த பேர் இருவருக்கும் இல்லை -ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் –
விப்ர நாராயணன் விட்டு தொண்டர் அடிப் பொடி ஆனது போலே-நிரூபக தர்மம் -சூழ் புனல் அரங்கன்
அங்குத்தைக்கு ஸ்பர்சம் ஆகும் படி ஒத்து -கோவில் அரங்கனுக்கு நிரூபகம் போல கணித்திர-
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும் தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே – அளியன் -ஸ் நேகம்– தயாபாத்ரம் –
அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10 –
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் ‘அந்தப் பரம்பொருள் ஈசுவரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான
ஈசுவரன்’ என்கிறபடியே, சேஷித்வத்துக்கு -இறைமைத்தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதது போன்று,
சேஷத்வத்துக்கு -அடிமையாம் தன்மைக்குத் தமக்கு அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார்.
ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு ஒத்த-சஜாதீயரில் – இனத்தாரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு,
க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு,
இந்திர பதத்தை ஆசைப்பட்டு,
பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று,
இவரும் இவ்வருகில் எல்லையை ஆசைப்படுகிறார்.
இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் இவ்வளவிலே நின்றார் அல்லர்;
சந்தஸில் பாசுரத்தில் இதற்கு அவ்வருகு போக ஒண்ணாமையாலே நின்றார் இத்தனையேயாம்.
‘இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின்,
‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில்,
ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்த பழஞ்
சேமப் புவனம் செரிக்கு மென்றே,சிவன் மா முடிக்கு
நாமப் புனல் தந்த பொற்றாளரங்கர், நலஞ்சிறந்த
வாமத் திருக் கர மேலாகவே கண் வளர்வதுவே.’– திவ்வியகவி
———————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply