Archive for the ‘தனி ஸ்லோக வியாக்யானம்’ Category

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –இயம் ஸீதா மம ஸுதா-பால – 73-27–

January 17, 2024

பால காண்டம்

ஸர்க்கம்-73; ஶ்லோகம்-27

இயம் ஸீதா மம ஸுதா ஸஹத4ர்ம சரீதவ|

ப்ரதீச்ச2 சைநாம் 4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||

பொழிப்புரை:
என்னுடைய பெண்ணான இந்த ஸீதையானவள் உமக்கும் தர்மங்களைக் கூட இருந்து செய்யக்கூடியவள்;
இவளை அங்கீகரிப்பீராக; உமக்கு மங்களமுண்டாகட்டும்;
இவளுடைய கையை உம்முடைய கையினால் பிடித்துக் கொள்ளும்.

இந்த ஶ்லோகத்தில் புருஷகாரத்துக்கும் புருஷகாரானாகும் ஜநகரின் நிலையைப் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.
ராமபிரான் ஶிவதநுஸ்ஸை முறித்து பித்ரு பாரதந்த்ரியம் தோன்ற அடக்கவொடுக்கத்துடன் நிற்க,
ஜநகர் சிந்தார்ணவம் என்னும் கவலைக்கடலிலிருந்து கரையேறினவராய், மிகவும் மனமுவந்து
பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்து வைக்க எண்ணி, பெருமாள் கையிலே பிராட்டியைக் கொடுப்பதன் மூலம் தன் காரியத்தை முடிக்கிறான்.
சேதனரைப் பெருமாளிடம் சேர்ப்பிக்கும் புருஷகாரபூதையான பிராட்டியையே
பெருமாளிடம் சேர்ப்பிப்பதன் மூலம் பிராட்டிக்கும்  புருஷகாரமாகிறான் இவன்.

இதோ இருக்கிறாள் ஸீதை, (இயம் ஸீதா) இங்கேயும் பாரும் என்று ராமனை நோக்கிச் சொல்வதாய் அமைகிறது
இங்கே. சந்திரனைப் போன்ற முகத்தினை உடையவனாய், அந்தச் சந்திரனைக் காட்டிலும் அழகு பொருந்தியவனாய்,
வடிவழகு, வண்மை குணங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்களையும், நெஞ்சங்களையும் கொள்ளை கொள்பவனாய் இருக்கும் ராமனிடம்
(சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவப்ரியத3ர்ஶநம், ரூபௌதா3ர்யகு3ணை: பும்ஸாம் த்3ருஷ்டிசித்தாபஹாரிணம்; அயோ.கா. 3-29 )
‘உம்மைப் பார்த்து இறுமாந்திராதீர்; இவளையும் பாரீர்; குணம், வயது, நடத்தை முதலியவற்றால்
வேறு ஒருவருக்கும் பொருத்தமின்றிக்கே, உமக்கே பொருத்தமாயிருக்கிற (துல்ய ஶீலவ்யோவ்ருத்தாம்; ஸுந்தர.கா. 16-5)
காரணத்தால் உமக்குத் தருகிறேனத்தனை காணும்’ என்று மனத்தில் நினைத்திருப்பதாகக் கற்பித்து வியாக்கியானம் செய்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.

‘என்னைக் காட்டிலும் இவளுக்கு ஏற்றமேது?’ என்று ராமன் நினைப்பானாகில், இவள் ஏற்றம் சொல்லும் வகையாக, இவள் என் மகள் (மம ஸுதா) என்கிறான்.
இவள் நற்குடியில் பிறந்தவள்; உன்னைப்போல் அல்லாமல் கர்ப்பவாஸம் பண்ணாதவள்;
ஸீதா லாங்கலபத்ததி: (கலப்பை உழுத வழி ஸீதை எனப்படும்) என்பதற்கிணங்க, பொற்கொடிபோலே பூமியிலே பிறந்தவள்.
ஹிரண்யவர்ணை (ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்; ஶ்ரீ ஸூக்தம்) ஆயிற்றே இவள்!
பற்றி எரியும் மிதிலையில் எனக்குவொன்றும் இல்லை என்று அபிமானமற்று இருந்த எனக்கும்,
‘இவள் எனது பெண்’ என்று அபிமானிக்கும்படியாக ஏற்றமுள்ளவள்.
‘வள்ளி மருங்குல் என்றன் மடமான்’ (பெரிய திருமொழி 3-7-1) என்று தாயார் பெண்ணின் பெருமையைச் சொல்லுமாப்போலே சொல்லுகிறான்.
பிறவாமையிலும் ஏற்றமுண்டு; பிறப்பிலும் ஏற்றமுண்டு; இரண்டிலும் இவளுக்கு ஏற்றமுண்டு.
‘ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்; திருமகள் போல வளர்த்தேன்; (பெரியாழ்வார் திருமொழி 3-8-4) என்று சொல்கிறான்.

மேலும், ஜநகர் ராமன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என்று எண்ணுகிறார்.
ஒருவேளை, ‘இந்த வைலக்ஷண்யத்தில் எமக்கு என்ன தேட்டம்? எனது தர்மத்துக்கு உதவியாய் இருப்பாளா?’
என்று ஸங்கித்து இருப்பானாகில் என் செய்வது? என்று நினைத்து, மேலும் கூறுகிறான்.
உமக்கு தர்மங்களைக் கூட இருந்து செய்யக் கூடியவள் (ஸஹத4ர்ம சரீதவ) என்றும் சொல்கிறான்.
நண்பனாக வேஷம் தரித்து வந்தாலும் கைவிடமாட்டேன் (மித்ர பா4வேந ஸம்ப்ராப்தும் ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா.18-3)
என்கிற உமது ஸங்கல்பத்துக்கு உறுதுணையாக இருப்பாள்;
என்னைச் சரணமடைந்தவனுக்கு எல்லா பூதங்களினின்றும் நான் அபயமளிக்கிறேன்;
இது என் விரதம் (அப4யம் ஸர்வ பூதேப்4ய; த3தா3மி ஏதத் வ்ரதம் மம; யுத்.கா 18-34) என்று
விரதம் மேற்கொண்ட உமக்கு உறுதுணயாக இருப்பாள்;
இப்படித் தேவரீர் அருளிச்செய்த அர்த்தத்தை ‘ராக்ஷஸிகளான உங்களுக்கு அபயம் அளிக்கிறேன்
(அலமேஷா பரித்ராதும் ரக்ஷஸீர் மஹதோ ப4யாத்; யுத்.கா 27-46) என்றும்,
ராக்ஷஸிகளை பெரும் பயத்தினின்றும் காப்பாற்ற இப்பிராட்டியே தகுந்தவள்;
பாபிகளாயினும், நல்லோர்களாயினும், கொல்லத் தக்கவரே யாயினும் பெரியோனால் அவர்கள் விஷயத்தில்
கருணை காட்டப்படவேண்டும்; குற்றம் செய்யாதவர்கள் யாருமில்லை என்று ராக்ஷஸிகளுக்குப் பரிந்து பேசக்க்டியவள்
(பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாணாம் வா ப்லவங்கம; கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந் நபராத்4யதி; யுத்.கா. 116-44).

இவளை அங்கீகரிப்பீராக (ப்ரதீச்ச) என்றவுடன், ஜநகர் மனதில் ஒரு ஸந்தேஹம் நிழலாடுகிறது.
நந்தகோபன் திருமகனைப் போன்றவனன்றே இவன்! ராமனும், ‘நாம் இதுக்குக் கடவோமோ?
ஐயரும், ஆச்சியரும், வஸிஷ்டாதிகளும் அன்றோ செய்விக்கவேண்டும்?’ என்றான்.
ஜனகரும் இதையறிந்து, ‘நின் தாள் நயந்திருந்த இவளை உன்மனத்தால் என் நினைத்திருந்தாய்?’ (பெரிய திரு. 2-7-1) என்று கேட்டு,
ஒத்தகுணம், வயது, நடத்தை (துல்ய ஶீல வயோவ்ருத்த:) ஆகியவற்றை உடையவளாயிருப்பினும் பயனில்லையே;
இவள் இறையும் அகலகில்லேன் (திருவாய்மொழி 6-10-10) என்று இருப்பதுபோல், நீரும் ஸீதையை விட்டு
ஒருகணமும் ஜீவியேன் (ந ஜீவேயம் க்ஷணமபி; ஸு.கா. 66-10)
தானே வருகிற ஶ்ரீதேவியைக் காலாலே தள்ளாதே கொள்ளும்’ என்று வேண்டி நின்றார்.

ஶ்ரீராமன் தந்தை இசைந்திருந்ததைப் போன்றே தானும் இசைந்திருந்தான்.
இவன் பெருமைக்கேற்ற பெருத்த கண்ணாலங்கள் செய்து (பெரியாழ். திரு. 3-7-10),
நாடு நகரமறிய நல்லதோர் கண்ணாலம் செய்து தக்கவா கைப்பற்றுங்கொலோ (பெரியாழ். திரு.3-8-6)
என்று ஆசைப்படுகிறான் ஜனகன்.
வெள்ளி வளைக்கை (பெரியாழ். திரு; 3-7-1) என்னும் கையைப் பற்றச்சொல்கிறான்
( ஏநாம் பாணிம் க்3ருஹ்ணீஷ்வ). இவ்வேப்பங்குடி நீரையன்றோ உம்மைக்குடிக்கச்செய்வது?
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டியிருப்பதே!
பால்மொழியாள் (பெரியாழ். திரு. 3-10-5), இவள் ஆயிற்றே! இனியவள்; இனிய பேச்சை உடையவள்
(மது4ரா மது4ராலாபா4; ஸு.கா. 66-15) என்று சொல்லப்பட்டவளன்றோ?
உனக்கு மங்களமுண்டாகட்டும் ( பத்3ரம்தே) பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக் கண்டவுடன் மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.
பரமபுருஷனுக்குப் பெண்பெற்றுக் கொடுத்தாரெல்லாம் பெரியாழ்வாரைப்போலே திருப்பல்லாண்டு பாடவேண்டும் அன்றோ?
நன்று நன்று நறையூரர்க்கே (பெரிய திரு 8-2-2).

இப்போது செய்யவேண்டுவது என்ன? ‘இவளுடைய கையை உம்முடைய கையினால் பிடித்துக் கொள்ளும்’
(பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா)
அம்மி மிதிக்கும்போது காலைக்  கையாலே பிடிப்பீர்; இப்போது, கையைக்  கையாலே பிடிப்பீர்’ என்கிறான்.
மதுஸூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் (நா. திரு.6-6 ),
என்கைப் பற்றித் தீவலஞ்செய்யக் கனாக் கண்டேன் (நா. திரு. 6-7),
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் (நா. திரு. 6-8)
என்ற பகவானது கையைக் காட்டிலும், கைமேல் என்கை (நா.திரு. 6-9) என்கிற பிராட்டியின் கை
இனிமையில் விஞ்சியிருக்கையாலே, கையால் கையைப்பிடி என்னாதே, கையைக் கையாலே பிடி என்றது மிகப் பொருத்தம்.

————–—————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –அஹம் வேத்மி மஹாத்மானம்-பால – 19-14–

January 17, 2024

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா-

பால காண்டம் 19-14
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்
வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி-

நானே ஸ்ரீ ராமனை மகாத்மாவாகவும் சத்ய பராக்ரமனாகவும் அறிவேன்
மிகுந்த தேஜஸ்சை உடைய வசிஷ்ட மஹ ரிஷியும் அறிவார்
இங்கே இருக்கிறவர்களாய் -இமே
தபஸ் சிலே நிலை நிற்கிறவர்களான யாவர் சில மக ரிஷிகள் உண்டோ அவர்களும் அறிவார்கள்-

ந யுத்த யோக்யதாம் அஸ்ய பச்சாமி -அவர் அயோக்யதையை சொல்லுகைக்கு நீ ஒருவனுமே உள்ளாய்
இவர் யோக்யதையை அறிக்கைக்கு நாங்கள் இத்தனை பேரும் உண்டு என்கிறான்-

1-அஹம் வேத்மி –
ந சஷூஷா க்ருஹ்யதே -முண்டோக்யம் 3-1-8-
மனஸா து விசுத்தே ந -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -273-2-
என்றேனும் கட் கண்ணால்   காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால்  காணும் உணர்ந்து -பெரிய திருவந்தாதி -28
நான் அறியும் அத்தனை போக்கி
பாஹ்ய சஷூஸ்சாலே காண்கிற உனக்குத் தெரியாது காண்-

2-அஹம் வேத்மி
ஜ்ஞான வ்ருத்தாமா ராஜன் பகவ பர்யுபாசிதா –
பல ஆச்சார்யர்களை சேவித்த நான் அறியும் அத்தனை போக்கி
நாட்டாராலே சேவிக்கப் படுகிற உனக்குத் தெரியுமோ –

3-அஹம் வேத்மி –
குச தர்ப்ப தரா -புல்லும் கையுமான நான் அறியும் அத்தனை போக்கி
வில்லும் கையுமான நீ அறியாய்-

4-அஹம் வேத்மி –
தலையும் சடையுமான நான் அறியும் அத்தனை போக்கி
தலையும் முடியுமான நீ அறியாய்-

5-அஹம் வேத்மி –
சாத்விக பிரக்ருதியான நான் அறியும் அத்தனை போக்கி
ராஜச பிரக்ருதியான நீ அறியாய்-

6-அஹம் வேத்மி
நீச சய்யா ஆசனம் சாஸ்ய நிதயம் ச்யாத குரு சன்னிதௌ-என்று
ஆசனத்தின் கீழே இருந்த எனக்குத் தெரியும் அத்தனை போக்கி
சிம்ஹாசனே பிரபு -ஆசனத்தின் மேலே இருக்கிற உனக்குத் தெரியுமோ-

7-அஹம் வேத்மி
யோக க்ரமம் அறியும் நான் அறியுமத்தை போக
க்ரமம் அறியும் நீ அறிவுதியோ-

8-அஹம் வேத்மி
மோஷ காமேஷ்டி பண்ணின நான் அறியும் அத்தனை போக்கி
புத்திர காமேஷ்டி பன்னன நீ அறிவுதியோ-

9–அஹம் வேத்மி
தர்ம மோஷ பரனான நான் அறியுமத்தை
அர்த்த காம பரனான உன்னால்  அறியப் போமோ –

நானேயோ அறியாதேன் –
நேதி  நேதி-என்றும்
க இத்தா வேட யத்ரச-என்றும்
பிரமாணங்களான வேதங்கள் தான் அறிந்ததோ –

ப்ரஹ்ம ருத்ர இந்திர பூதானாம் மநாம்ப்ய கோசரம் -என்றும்
நான் முகனும் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய் -8-3-9-என்றும்
பிரமாதாக்களான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தான் நிலமோ

பிரமாதக்கள் அளவேயோ –
சோ அங்க வேதி யதி வா ந வேத -என்றும்
தனக்கும் தன் தன்மை அறிவரியானை -திருவாய் -8-4-6-என்றும்
பிரமேய பூதனானவன் தனக்கும் தெரியுமோ

இத்தனை பேர் அறியார்களே காண் என்ன

10-அஹம் வேத்மி
யஸ் சர்வஜ்ஞஸ்  சர்வவித
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -என்கிற பிரமாணங்களை விச்வசித்து சர்வஜ்ஞம் கொண்டாடி
ஓர் ஆச்சார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அவனுக்கும் தெரியாதே-

ததாமி புத்தியோகம் -ஸ்ரீ கீதை -10-10-என்றும்
மயர்வற   மதிநலம் அருளினான் -என்றும்
சம்ப்ரதாய சித்த ஜ்ஞானம் உடையவனுக்கு தெரியும் இறே.

ஆச்சார்யன் இடத்தில் கேளாத அக்குறை -அவ்விழவு தீருகைக்கு இறே
பஹூ ஸ்ருதானாம் வ்ருத்தானாம் ப்ராஹ்மணா நாமுபாசிதா -அயோத்யா -2-33-என்று
அறிவுடையார் கால் கடையிலே துவண்டு திரிந்தது

11-அஹம் வேத்மி-
தமேதம் வேத அநுவசநேந ப்ராஹ்மணா  விவிதி ஷந்தி யஜ்ஞேந தானேந  தபஸா அநாசகேந -ப்ரு -6-4-22-என்றும்
ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -ப்ரு-6-5-6-என்றும்
அவனை அறிக்கைக்கு நான் பட்ட வருத்தம் சொல்லப் போமோ –

நீ அறிந்த பிரகாரம் என் என்னில்-

1-மஹாத்மானம் -அறப் பெரியவன் -என்று அறிவேன்
தேஜசாம ஹி ந வய சமீஷ்யதே -ரகுவம்சம் -11-1-என்கிறபடியே
வடிவு சிறுத்து இருந்ததே யாகிலும் பரத்வம் உறைத்து இருக்கும் காண்

2-மஹாத்மானாம் -ஆத்மா ஜீவே -தருதௌ (தைர்யத்திலும் )-
தே ஹே -ஸ்வபாவே-பரமாத்மிநி -யத்னே-ஆகாசக்னௌ-சூர்யன் அக்னி -மநோ-புத்தி -வாதே -காற்று -என்று
அநேகார்த்த வாசி இறே ஆத்ம சப்தம்
அதில் முற்பட ஜீவ வாசியான போது
மஹாத்மானம் -என்று -யஸ் யாத்மா சரீரம் -ப்ரு -5-7-26-என்றும்
ய ஆத்ம நி திஷ்டன் நாத மநோ அந்தர -ப்ரு -5-7-26-என்றும்
சர்வ ஜீவாத்மாக்களும் சரீரமாம் படி சர்வாத்ம சரீரியாய் இருப்பான் என்னும் இடம் அறிவன்
அன்றியிலே

3- மஹாத்மானம் -என்று திருதியிலே   யாய் -தைர்யத்தில் –
ஆபதயபி ஸ்வ கார்யேஷூ கர்த்த வ்யத்வஸ்திதிர் தருதி-என்று
தாடகா தாடகேய பரமுகரான பிரபல விரோதி பரம்பரைகள் உண்டே யாகிலும்
யஜ்ஞ  விக்ன கரம் ஹந்யாம்-என்று நாம் ஏறிட்டுக் கொண்ட கார்யம் தலைக் கட்டலாம் படியான
நிலையை யுடையராய்க் காண் இருப்பது என்றுமாம்
அன்றியிலே

4-மகாத்மானம் -தேக வாசியாய்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாமஸ மேதோ அஸ்தி சாம்பவா -என்றும்
மாசூணாச் சுடருடம்பாய் -திருவாய் -3-1-8-என்றும் சொல்லுகிறபடியே
சத்ருக்களால் அழிக்க ஒண்ணாத படி
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய விக்ரஹராய் காண் இருப்பது -என்றுமாம்
அன்றியே

5- மஹாத்மானாம் -ஸ்வபாப வாசியாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-யுத்த-18-34-என்றும்
பாஸூ பால்யம் ஹி வ்ருத்தி-என்றும்
ஆபன்ன ஜன ரஷணத்தை ஸ்வபாவமாக உடையராய்க் காண் இருப்பது -என்றுமாம் –
அன்றியிலே

6- மஹாத்மானம் -என்று பரமாத்மா வாசியாய்
பரோமா அஸ்மாதிதி பரம -என்றாய்
யஸ்மாத் பரம நா பரமஸ்தி கிஞ்சித் -என்றும்
ந தத்சமச்சாப் யதி கச்ச த்ருச்யதே -என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா -திருவாய் -2-3-2-என்றும் சொல்லுகிறபடியே
தம்மை ஒழிந்த சகல தேவதைகளுக்கும் மேலாய்
அவை தனக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் படி அறிவன் -என்றுமாம்
அன்றியிலே

7- மஹாத்மானம் -என்று யத்ன வாசியாய் –
அதாவது பரயத்னமாய்
பிரயத்ன ஸ்வாத்ம தர்ம ச்யாதுத்சாஹோ பாவநா ச ஸ-என்றும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் சம்பவாமி -கீதை -4-8-என்றும்
சொல்லுகிறபடியே
துஷ்க்ருத விநாசத்துககாக அவர் உத்சாஹித்துப் போந்த படி அறிவேன் -என்றுமாம்
அன்றியிலே

8- மஹாத்மானாம் -என்று
அர்க்க வாசியாய் -சூர்யன் –
ராம திவாகர சத்ருர ஷோமயம்  தோயமுப சோஷம் ந்யிஷ்யதி -என்றபடி
ஆயுத நிரபேஷமாய் தம்முடைய பிரதாபத்தாலே சத்ரு ரஷஸ்ஸூக்களாகிற  நீரை ஊற்றகப் படச் சுவரும்படி
பண்ண வல்லர்-என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே

9-மஹாத்மானம் -என்று அக்னியாய்
அபித பாவ கோபமம-அயோத்-99-26-என்றும்
நிர்தஹே தபி காகுத்ச்த க்ருததஸ் தீவ்ரேண சஷூஷா-என்றும்
அனலுருவில்  திகழும் சோதி தன்னுருவாய் -திரு நெடும் -1-என்றும் சொல்லுகிறபடியே
சத்ரு சரீரங்களை யடையச் சுட்டுக் கூறாய் நீறாய்ப் போம்படி பண்ண வல்லர் என்னும் இடம் அறிவன் என்றாகவுமாம் –
அன்றியிலே

10-மஹாத்மானம் -என்று மதி வாசியாய் –
சர்வ சாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞ-பால -1-15-
புத்த்யாஹயஷ்டாங்கயா யுக்த-சுந்த -116-27-என்றும் சொல்லுகிறபடியே
இருந்த இடத்தில் இருந்து சத்ருக்கள் முடியும்படியான விரகுகள் வகுக்க வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே

11-மஹாத்மானம் என்று வாத வாசியாய்
தஸ்மை வாதாத்மனே நம-என்றும்
காலாய் தீயாய் -என்றும் சொல்லுகிறபடியே
மகா வாதஹதமான தூல ராசி போலே சத்ருக்களைப் புக்கவிடம் அறியாமல் ஓட்டுபவர் என்று அறிவன் என்றுமாம் –
அன்றியிலே

12-மஹாத்மானம் -ம்ருத சஞ்சீவனம் ஹி ராம வ்ருத்தாந்தம் -என்று
சர்வ பிராணி பிராணன் ஹேதுவான காற்று போலே உஜ்ஜீவனகாரராக வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்-

வேத்தி வேதயதீதி வேத -என்று
தானும் அறிந்து பிறரை யும் அறிவிக்கக் கடவதான வேதம் அகப்பட
வேதாஹா மேதம் புருஷம் -என்று நான் அறிவேன் என்று சொல்லி -அறிந்தபடி என் என்ன

அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருளாதல் -திருவாய் -9-3-3-என்கிறபடியே
மஹாந்தம் -என்று அபரிச்சின்னன் என்று சொல்லி விட்டத்து இத்தனை இறே
யஸ்யா  மதம் தஸ்ய மதம் யஸ்ய ந வேத ஸ -என்று அவ்வஸ்துவை அறிக்கையாவது
அது அபரிச்சின்னம் என்று உள்ளபடி அறிகை இறே

வேதாஹ மேதம் -என்ற வேத வாக்கியம் தன்னை இறே
அஹம் வேத்மி -என்று உப ப்ரும்ஹிக்கிறது –

அங்குற்றை வேத -என்கிறத்தை இறே
இங்கு வேத்மி -என்கிறது

ஏதம் -என்று சௌலப்ய ஸூ சகமான ஏதச் சப்தார்த்தை இறே
இங்கு ராமம் என்று அவதார நிர்த்தேசம் பண்ணுகிறது

அங்குற்றை புருஷ சப்தத்தாலே நிர்த்திஷ்டமான சௌர்ய வீர்யாதிகளை இறே
இங்கு சத்ய பராக்கிரமம் -என்கிறது –

அங்கு மஹாந்தம் -என்கிறத்தை இறே
இங்கு மஹாத்மானம் -என்கிறது

ஆக
வேத புருஷனோடு
வைதிக புருஷர்களோடு வாசி யற
இவ்விஷயத்தில் பாசுரம் ஒன்றாய் இறே இருப்பது

இப்படி மஹாத்மானம் என்று பேசுகிற வஸ்து தான்
தேசாந்தரத்த்லேயாய் எட்ட ஒண்ணாதோ என்னில்

ராமம் –
பிதரம் ரோசயாமாச -பால -16-8-என்று உன்னை இசைவித்து ராம ரூபேண வந்து
பிறந்த இவர் அப்பர வஸ்து காண் -என்கிறார்

ராமம் –
பர வஸ்து என்று நீயும் நானும் உட்கூசுதல் நம்மை அருவருத்து அவர் தாம் அகல நிற்றல் செய்யாதே
எனக்கு கையாளாக அழைக்கலாம் படியாய் தம்மை அமைத்து
தாழ நிற்கையாலே தெரிகிறது இல்லை காண் –

ராமம் மஹாத்மானம் –
ஸ ஸ்ரேயான் பவது ஜாயமான -என்று
அவர் தம்மைத் தாழ விட்டு பிறந்த பின்பு காண் மஹத்வம் ஒப்பமிட்டது –

நீ தானே ராமம் -என்று சொன்னாய் இன்னம் வடிவில் சுணை அழிந்தது இல்லை –
ஸ்ரமத்தால் உடல் இறுகிற்றில்லை
இவர் பராக்ரமத்துக்கு சக்தரோ -என்ன
1-சத்ய பராக்ரமம் –
இவர் வடிவு போலே வேண்டின போது கொள்ளவும் தவிரவும் படி அல்ல காண்  இவர் குணங்கள் இருப்பது
அவை நித்யமாய்க் காண் இருப்பது –

2- சத்ய பராக்கிரமம் –
சதைக ரூப ரூபாயா -என்றும்
த இமே சத்ய காமா -என்றும்
ஏதாமச்ச சத்யான் காமான் -என்றும் சொல்லுகிறபடியே
விக்ரஹம் இச்சமாய் குணங்கள் நித்தியமாய் காண் இருப்பது

இது தன்னை பராசர மகரிஷியும் –
இச்சாக்ருஹீதாபி மதோரு தேக -என்று விக்ரஹ பரிக்ரகம் இச்சம் என்னும் இடத்தைச் சொல்லி
தேஜோ பலைச்வர்ய மகாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி -என்று
குணங்கள் ஸ்வாபாவிகங்கள் என்னும் இடத்தைச் சொன்னான் இறே

3- சத்ய பராக்கிரமம் –
அவ்யவஸ்தௌ ஹி த்ருச்யதே யுத்தே ஜய பராஜ யௌ-என்று நாட்டாரைப் போலே
இவருடைய ஆண் பிள்ளைத் தனம் அவ்யச்தம்-அயோத் -2-37-என்றும்
அபி யாதா ப்ரஹர்த்தா ஸ -அயோத்யா -1-29-என்றும்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -திருச்சந்த -56-என்றும் சொல்லுகிறபடியே
இவர் எழுந்து இருந்தால் சத்ருக்களை ஆக்கிரமித்துத் தலை அழித்து அல்லது மீளார் காண்

தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்றும்
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த -திருவாசிரியம் -1- என்றும்
தம் தாமைப் பரராக நினைத்து இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை அகப்படக்   கீழ்ப்படுத்தி
அவ் வருகாய் இருக்கிற வஸ்து ஷூத்ரரான சத்ருக்களை விடுமோ

4-சத்ய பராக்கிரமம்
சத்யரான பரரை ஆக்கிரமிப்பார் என்றாகவுமாம்
அதாவது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாக ப்ராதி கூல்யம் பண்ணினால் அவர்கள் மீண்டும் அநு கூலிப்பார்களோ என்று
யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-34-என்றும்
கச்சா நுஜா நாமி -என்றும் யுத்த -59-143- என்றும்
வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட -பெரியாழ்வார் -1-6-9- என்றும்
ஒரு நிலை நின்று முட்ட ப்ராதி கூல்யத்திலே நிலை நின்றார்கள் ஆகில் அவர்களை முடிப்பார் என்கிறது –

5-ராமம் சத்ய பராக்கிரமம்
ஆக்ரமிக்கும் இடத்தில் த்ரிவிக்ரமனைப் போலே சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று அன்றியிலே
ஏக ரூபமாய்க் காண் இருப்பது

6-ராமம் சத்ய பராக்கிரமம்
பிறரை அழிக்கும் இடத்தில் ஆயுதம் எடுத்தல் பராக்ரமித்தல் செய்ய வேணுமோ
ஹதான் யே கேன ராமேண்-ஆரன் -26-36-என்றும்
ராம பாணாபி ஹதோ ப்ருசார்த்தச்சால சாபஞ்ச முமோச வீர -யுத்த-59-139-என்றும்
ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப -சுந்த -38-25-என்றும் சொல்லுகிறபடியே
அழகும் எழிலுமே பரிகரமாக இழியாரோ –

ஏதேனுமாகக் கொடு போகத் தேடுகிற படியாலே போரப் பொலியச் சொல்லுகிற
இந்த வாக்கியம் விஸ்வநீயமோ-என்ன
1-வசிஷ்டோபி –
சர்வஜ்ஞனாய் பரம ரிஷியான ஸ்ரீ வசிஷ்ட பகவானும் அறியும்

2-வசிஷ்ட –
என் கார்யத்துக்கு வந்த நான்  ஒழிய
ச தேஹம் பிதுராசார்யா -அயோத் -111-4-என்று
உன் கார்யத்துக்குக் கடவனாய் உனக்கு ஆப்தனான வசிஷ்ட பகவானைப் கேட்க மாட்டாயோ –

3-வசிஷ்ட –
வஸ் நஸ்ஸிலே சப்தமியாய் -குல குருர் பகவான் வசிஷ்ட -என்கிறபடியே
எங்கள் பக்கலிலே சந்நிஹிதனாய் உங்கள் ஹிதத்திலே நிலை நின்றவன் அன்றோ –

4-வசிஷ்ட –
இதம் வோ யாஜ்யா நாமுதிதம் யத் குலமபூத்
யதிஷ்டம் வா குர்வன்ன க்ருத சகர பூர்த்தமுததிம்
அசௌ தி பூர்வேஷாம் ஸூ சரிதா பதாகா யதமர
ஸ்ரவந்தீ க்ருத்ஸ் நோய்ம த்ரிபுவன குரோஸ் தஸ்ய விபவ -என்று முராரியும் சொன்னான் இறே
நீ தானும் இஷ்வாகு குல சாத்தான் ஆகையாலே உனக்கும் ஒவ்வாதோ அவற்றில் அந்தர்பாவம் என்ன

5-வசிஷ்டோபி வேத்தி
அவரும் அறிவார் –
அம்மர்யாதை குலைந்து இவன் புத்ராதிகளைக் கொள்ளுவது இவன் ஸூரபியைப் பறிப்பது -இவனோடு யுத்தம் பண்ணுவது
இவனாலே பரிபூதனாவதாய் -இப்படிக்கு விரோதம் பிறந்த படியால் எனக்காகப் பொய் சொல்லான்
அப்படிக்கொத்த இவனையும் கேட்டுக் கொள்

6-அபி சப்தம் -நானே அல்ல -இவனும் அறியும் என்று சமுச்சயமாக்கவுமாம்

7-அன்றியிலே -அபி -சப்தம் விரோதம் த்யோதயாதி
எனக்கு விருத்தனான இவனும் அறியும் என்றாகவுமாம்-

இவனுக்கு ஏற்றம் ஏது என்னில்
1-மகா தேஜா
சரஸ்வதி வல்லபனான ப்ரஹ்ம புத்ரனுமாய்
ஸ்வ யோக சித்த ஜ்ஞானனுமாகையால் வந்த மதிப்பை யுடையவன்

2- மகா தேஜா –
லோக நாதனான புருஷோத்தமன் அகப்படத் தன் காலிலே குனியும்படியான ஏற்றம் யுடையவன்

3-மகா தேஜோ –
கௌசிகோ யச சாம நிதி -என்று நாட்டில் புகழுக்கு எல்லையான நான் அகப்பட
வசிஷ்டோ மாமேவம் வதது-என்றும்
சத்யம் சகாரா ப்ரஹ்ம ரிஷி ரேவ மஸ்த்விதி சாப்ரவீத் -பால -65-25-என்றும்
அவன் வாயாலே ப்ரஹ்ம ரிஷி பட்டமும் பரியட்டமும் பெற வேண்டும்படி பெரு மதிப்பனானவன்
இப்படி உமக்கு ஏறப் பெரியராகில்
தேஷாம தேஜோ விசேஷேண்  பிரத்யவாயோ ந வித்யதே   -ஆபஸ்தம்பதர்-2-13-8-என்று
உமக்குப் பொய் சொன்னாலும் பொறுக்கும் படியாய் இருந்ததே என்ன

4-மகா தேஜோ
சத்ய தர்ம பராயண -அயோத் -2-29-என்றும்
சத்யம் வத தர்மம் சர-தை- சீஷா -11- என்றும்
தானும் சத்தியத்தை ஹிதமாக அனுஷ்டித்து பிறரையும் அகப்பட அனுஷ்டிப்பித்து இப்படி மகா தேஜச்வியாய்
பெரும் தவத்தனாய் இருக்குமவன் தேஜோ ஹானி பிறக்கும் படி அசத்தியம் சொல்லுமோ

5- மகா தேஜா
திக்பலம் ஷத்ரிய பலம் ப்ரஹ்ம தேஜோ பலம் பலம் -பால -56-23–என்னும்படி
நிரவதிக ப்ரஹ்ம தேஜச்வியாய் இருக்கிறவன் –

அப்படிப் பெரியவராய் இருந்தாலும்
யத் பிராமணச் சாப்ராஹ்மணச்ச பிரஸ்நமே  யாதாம் பிராமணா யாதி ப்ரூயாத் -என்றும்
ப்ராஹ்மானார்த்தே கவார்த்தே வா சத்ய பிராணான் பரித்யஜேத்-மனு -11-79- என்றும்
நானும் நீயுமானால் தன்னை அழிய மாறியும் ப்ரஹ்ம ரிஷியான உனக்காக வார்த்தை சொல்லும்
அத்தனை போக்கி ஷத்ரியனான எனக்காகச் சொல்லுமோ என்ன
1-யே சேமே தபஸி ஸ்திதா -தவத்தில் நிலை நிற்கும் இவர்களும் அறிவார்கள் –
படை வீட்டார் தம் பலம் மதித்து முகத்துக்குத் தக்க வார்த்தை சொல்லுகிற எங்களை விட்டுச்
சருகிலை தின்னிகளான இவர்களைக் கேட்க மாட்டாயோ -என்றுமாம்

2- இமே தபஸி ஸ்திதா
ஊன ஷோடச வர்ஷ -பா -20-2- என்று அவர் பருவம் நிரம்பாமையை இட்டு அவர் யோக்யதைக்கு நீ தட்டுளப்பட வேண்டா
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோ நிம –புருஷ ஸூக்தம் -என்று அவனுடைய ஜன்ம ரஹச்ய ஜ்ஞானமுடைய இவர்களைக் கேளாய்

3-இமே -இவர்கள் -புலச்த்யன் அகஸ்த்யன் -பராசரன் -பராசர புத்ரனான வியாசன் -என்றால் போலே
நான் இவர்களுக்கு சில வைலஷண்யம் ஆபாதிக்க இருந்து கேட்க வேணுமோ
நரை  தலையும் -முசியும் மோவாயும் -ஒட்டின கதுப்பும் -திரங்கின தோலும் -உலர்ந்த வடிவும் -எண்ணுகிற விரலும் –
சபிக்கிற வாயும் -வடிகிற கண்ணீரும்-ஆறாத பகவத் அனுசந்தானமும்
மயிர் எறிந்த உடம்புமாயிருக்கிற இருப்பிலே தெரியாதோ
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பர குணாவிஷ்டோ த்ரஷ்டவ்யஸ்  சர்வ தேஹிபி -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
என்னும்படி இருக்கிறவர்கள் அன்றோ –

4- இமே -இவர்கள் இப்படி இதம் ச்ப்தத்தாலே சொல்லி விரலிட்டுக் காட்டும் அத்தனை ஒழிய
வேறு பாசுரம் இட்டு வாங் மனஸ்ஸூக்களுக்கு விஷயமோ –

5-இமே -சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை
மாவலி யிடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று
தூரச்தனாய் இருப்பான் ஒருவன் பக்கலிலே கேட்க வேண்டாத படி இங்கே சந்நிஹிதராகப் பெற்றோம் இறே

6-இமே -மகா பலியைப் போலே ஆசூர பிரக்ருதியாகை அன்றிக்கே பரம சத்வ நிஷ்டரான ரிஷிகளாகப் பெற்றோம் இறே

7-இமே -என்னைப் போலே ஸ்ரீ வசிஷ்ட பகவானைப் போலே ஒருவராகை அன்றிக்கே
பூயாசாம் ஸ்யாத் பலீயஸ்த்வம்-என்று இவர்கள் பலரானதுவும் உனக்கு விஸ்வாச ஹேது விறே-

இவர்கள் பலரானால் பிரயோஜனம் என்
பொய் சொல்லாத படியான தார்மிகராக வேணுமே என்னில்
1-தபஸி ஸ்திதா –
தபோ தானம் தபஸ் சத்யம் தபோ தர்ம ப்ரதிஷ்டித -என்கிறபடியே
சர்வ காலமும் தப பரர ஆகையாலே பரம தார்மிகர் என்கிறது –

2- தபஸி ஸ்திதா
பகவதீயமாய் நித்தியமான ஆத்ம வஸ்துவுக்கு ஹிதம் தேடி அல்ப அஸ்திரமான சரீரத்தை ஒருத்துப் போருமவர்கள்

3- தபஸி ஸ்திதா
ஹூத மிஷ்டஞ்ச தப்தஞ்ச தர்மச்சாயம் குலச்ய தே
க்ருஹாத் பிரதி நிவர்த்தந்தே பூர்ண காமா யதர்த்தின -என்று
அதிதிகளாயும் அப்யாகதராயும் யுள்ளவர்களை உகப்பிக்கையே பரம தர்மம் என்று இருக்குமவர்கள்

4- தபஸி ஸ்திதா –
தப சப்த வாச்யமான அர்த்த த்ரயத்திலும் நிலையுடையவர்கள்
அதாவது தப சந்தாபே -என்கிற தாதுவிலேயாய்
யஜ்ஞ்ஞேன தானென தபஸா -ப்ரு-6-4-22- என்றும்
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த  தான யஜ்ஞாதி சேவனம் -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -22-என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஜ்ஞான ரூபமான ஜ்ஞான யோகத்திலே நிஷ்டர் ஆனவர்கள் என்றாகவுமாம்
அன்றியிலே

5-தபஸி ஸ்திதா –
தப ஐஸ்வர்ய-என்கிற தாதுவிலேயாய்
பிரசாசி தாரம் சர்வேஷாம் -மனு -12-122-என்றும்
யே சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப இத்யுபாசதே -சாத் -5-10-1-என்றும்
பரமம யோ மகாத்தப -சஹஸ்ரநாமம் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ பிரசாசிதாவாய் தபஸ் சப்த வாச்யனான பரமாத்மா விஷயத்திலே ஜ்ஞான பக்தி யோக நிஷ்டர் என்றாகவுமாம்
அன்றியிலே

6-தபஸி ஸ்திதா -என்று வாசிக தபசான ஸ்வ அத்யாயத்திலே உளர் என்றாகவுமாம் –
தத்தி தபஸ் தத்தி தப -தை சிஸா -9-வேதாத்யயனமே தவமாகும் –
அன்றியிலே

7-தபஸி ஸ்திதா
பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகளை உடையவர் என்றாகவுமாம்
அன்றியிலே

8-தபஸி ஸ்திதா
என்று -தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் ந்யாசமதிரிக்தம் தப ஸ்ருதம -என்றும் சொல்லுகிறபடியே
சர்வாதிசாயி தபசான பிரபத்தியிலே நிஷ்டர் ஆனவர்கள் -என்றுமாம் –

இஸ் ஸ்லோஹம் தன்னால் -ஊன ஷோடச வர்ஷ -பால -20-2-என்கிற ஸ்லோஹத்துக்கு உத்தரம் சொல்லுகிறது
பச்யாமி -என்று மேல் எழுந்த கண்ணாலே நீ காண்கிறது காட்சி அன்று காண்
யோக பரிசுத்தமான உட் கண்ணாலே நான் காண்கிறது காட்சி -என்கிறது-

அஹம் வேதமி -என்கையாலே -ஊன ஷோடச வர்ஷ-என்று பருவத்தை இட்டு எளியன் என்று இருக்க வேண்டா காண் –
விரோதி நிரசன ஷமராம்படி பெரியார் காண் -என்கிறது-

மஹாத்மானம் -என்கையாலே –
மே ராம -என்று நீ உன்னுடைய மமகாரத்திலே ஒதுக்க ஒண்ணாது காண் –
லோகாபி ராமோயம்-அயோத்-2-44-என்று சர்வ லோக சரண்யராய்க் காண் இருப்பார் என்கிறது
வெறும் -ராமம் -என்கிறத்தாலே-

ராஜீவ லோசன -என்று பொழுது புகுவதற்கு முன்னே உறங்குவார்
நிசாசரோடு பொருகைக்கு ஆள் அல்லர் என்று நினைத்து இருக்க வேண்டா
ஸூக ஸூ ப்த பரந்தப -சுந்தர -38-25-என்று அவ்வுறக்கம் தான் எதிரிகளை அழிக்கும்படி
நித்ய பராக்ராமர் காண் என்கிறது -சத்ய பராக்கிரமம் -என்கிறத்தாலே –

அஸ்ய ராஷசை -என்று இவரோ ஒருவர் அவர்கள் பலர்
இவர் மனுஷ்யர் அவர்கள் ராஷசர் என்று நினைத்து இருக்க வேண்டா
உட்குடையசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவன் -திருவாய் -7-2-3- என்றும்
திண் கொள் அசுரரைத் தேய  வளர்கின்றான் -பெரியாழ்வார் -1-2-16-என்றும்
ஒரு கோடி பேருக்கு ஒருவனே அமைந்து காண் இருப்பது என்கிறது .

இவற்றில் ஏக வசனத்தாலும் –
மஹாத்மானம் -என்று தர்மி நிர்த்தேசத்தாலும் —
ராமம் -என்று -பச்யாமி -என்கிற ஏவ வசன சித்தனான நீ ஒருவனுமே இறே இவர்
அயோக்யதையைச் சொல்லுகைக்கு உள்ளது
அவருடைய யோக்யதையைச் சொல்லுகைக்கு கிடக்கிற பேர் ஒரு வெள்ளம் காண் என்கிறது
வசிஷ்டோபி யே சேமே தபஸி ஸ்திதா -என்கிறத்தால்
ஆக
இப்படி இந்த ஸ்லோஹத்துக்கு உத்தரமாய் இருக்கிறது இஸ் ஸ்லோஹம் –

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

பால காண்டம்

ஸர்க்கம்-19; ஶ்லோகம்-14

அஹம் வேத்3மி மஹாத்மாநம் ராமம் ஸத்யபராக்ரமம்|

வஸிஷ்டோ2பி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்தி2தா:||

பொழிப்புரை:
இராமனை மஹாத்மாவாகவும், ஸத்யபராக்ரமனாகவும் இருப்பதாய் நான் அறிவேன்.
மஹாதேஜஸ்வியான வஸிஷ்ட மஹரிஷியும் அறிவார்.
மற்றும் இங்கே கூடியுள்ள தபஸ்ஸில் நிலைபெற்ற மஹரிஷி கணங்களும் இவ்வாறு அறிவார்கள்.

அயோத்தியில் த3ஶரத2ரின் அரசவைக்கு வருகை தந்த விஶ்வாமித்ர மஹரிஷி தஶரதனிடம்,
கரிய செம்மல் ஒருவனைத்  (இராமனை) தன்னுடன் அனுப்பிவைத்து
அவர் செய்யும் யக்ஞத்திற்கு உதவியாய் தர்மத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார்.
இராமனை அனுப்ப மனமில்லாத தஶரதன் அதற்கு காரணமாக இராமன் மிக இளம்பருவம் உடையவன்,
அரக்கர்களை எதிர்கொள்ளச் சக்தியற்றவன் என்பன பல வார்த்தைகளைச் சொல்லித் தட்டிக் கழிக்கிறான்.
அதைக் கேட்ட விஶ்வாமித்திரர் கூறும் பதிலாக அமைந்ததுதான் இந்த ஶ்லோகம்.

த3ஶரத2ன், “ ந யுத்3த4யோக்3யதாம் அஸ்ய பஶ்யாமி” அதாவது,
‘இவனிடம் போர் செய்வதற்குண்டான அருஹதை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று வாத்ஸல்ய மேலீட்டால் சொன்னாலும்,
விஶ்வாமித்திரருக்கு மனதிலே கோபம் கனன்று எழுகிறது.

“அஹம் வேத்3மி” ‘நானறிவேன்’ இவன் யாரென்று. இவனை மஹாத்மாவாகவும், ஸத்யப்ராக்ரமனாகவும் நானறிவேன்.
பரமாத்மா கண்ணாலே காணப்படுகிறவன் அல்லன் (ந சக்ஷுஷா க்3ருஹ்யதே: மு.உ.3-1-8),
தூய்மையான மனத்தாலேயே காணத்தக்கவன் (மநஸா து விஶுத்3தே4ந: வி.த.275-2).
உன்னைப்போலே ஊனக்கண்களால் காண இயலாது.
‘என்றேனும்  காணாத கட்கண்ணால் அவ்வுருவை நெஞ்சேனும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ (பெரி.தி.-28). (1)
யோகத்தினாலே அழுக்கற்ற உட்கண்ணாகிற நெஞ்சாலே நான் அறிவேனேயொழிய,
வெளிக் கண்ணாகிற கட்கண்ணாலே காணும் உனக்குத் தெரியாது காண்.
அரசனே! என்னால் அறிவில் முதிர்ந்த பல மஹநீயர்கள் உபாஸிக்கப்பட்டிருக்கிறார்கள்.

(2) பல ஆசார்யர்களை ஸேவித்த நான் அறிவேனேயொழிய பாமரர்களால் ஸேவிக்கப்படும் நீ அறிவாயோ?
(3) கையிலே புல்லைப் பிடித்த நான் அறிவேன்; கையில் வில்லைப் பிடித்த நீ அறிவாயோ?
(4) தலையிலே சடையை உடையவனான நான் அறிவேன்; தலையிலே முடிதரிக்கும் நீ அறிவாயோ?
(5) ஸாத்விக ஸ்வரூபனான நான் அறிவேன், ராஜஸ ஸ்வரூபியான நீ அறிவாயோ? (6)
குருவின் ஆஸநத்திற்கு கீழே இருந்த எனக்குத் தெரியுமேயொழிய பிரபு என்று ஸிம்ஹாஸநத்தின் மேலிருக்கிற உனக்குத் தெரியுமோ?
(7) யோகவழியறியும் நான் அறியும் விஷயத்தைப் போகவழியறியும் நீ அறிவாயோ?
(8) மோக்ஷத்தை விரும்பி யாகம் செய்த நான் அறியும் விஷயத்தைப் புத்ரனை விரும்பி யாகம் செய்த நீ அறிவாயோ? (
9) த4ர்ம மோக்ஷ புருஷார்த்தங்களில் ஈடுபட்ட நான் அறிவதை அர்த்த காம புருஷார்த்தங்களில் ஈடுபட்ட உன்னால் அறியமுடியுமோ?
இதுபோன்று பலவாறாக வினவிய விஶ்வாமித்திரர் மேலும் பரமாத்மாவை யார் யார் அறியமாட்டார்கள் என்றும் சொல்லத் தொடங்குகிறார்.

ப்ருஹ்மம் இவ்வளவுமட்டுமன்று, இப்படிப்பட்டது (வேறொன்றும்) இல்லை’ [நேதி, நேதி: ப்ருஹ.உப. 4-3-6],
‘அந்த ப்ருஹ்மம் எப்படிப்பட்டது என்று எவன் அறிவான்?’ [க இத்தா2 வேத3யத்ர ஸ: கட.உப. 1-2-25]
என்றும் ப்ரமாணங்களாக இருக்கும் வேதங்களும் அறிந்தனவா? வேறு சொல்வானேன்? ‘
நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள் எம்பெருமான் தன்மையை யாரறிகிற்பார்?’ [திருவாய் 8-3-9]. என்றும்
அறிவாளிகளான ப்ருஹ்ம ருத்ராதி3களுக்கும் அறியக்கூடிய விஷயமாவானோ?
அவன் தானே தன்பெருமையை அறிவானோ, அறியமாட்டானோ? [தை-ப்ரா 2-8-9]
தனக்கும் தந்தன்மை அறிவரியானை [திருவாய் 8-4-6].

இத்தனை பேர்கள் அறியாதிருக்கும் போது, ஓராசார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அல்லவோ இவர்கள் யாரும் அறிந்திலர்?
இது இவ்வாறிருக்க, தான் மட்டும் எங்ஙனம் அறிந்து கொண்டார்?
‘நான் என் பக்தர்களுக்கு என்னை அறிய உதவும் புத்தியைக் கொடுக்கிறேன்’ என்று தேர்த்தட்டிலிருந்து சொன்ன வாக்கியமிருக்கிறதே [
த3தா3மி புத்3தி4யோக3ம் தம்; கீதை 10-10],
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பதும் ஸித்தமாயிருக்கிறதே.
அவனை அறிகைக்கு நான் பட்ட வருத்தம் சொல்லப்போமோ?
‘கேட்கத்தக்கதும் நினைக்கத்தக்கதுமான பரமாத்மா தியானிக்கத்தக்கது’
[ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய: ப்ருஹ. உப. 6-5-6] என்று
அவனை அறிய நான் பட்ட சிரமம் சொல்லவும் முடியுமோ?

வடிவு சிறுத்திருந்தாலும் பரத்வம் நிறைந்திருக்கும் அல்லவா?
தேஜஸ்ஸை உடையவர்களிடத்தில் வயது கவனிக்கப்படுவதில்லை [தேஜஸாம் ஹி ந வய: ஸமீக்ஷ்யதே; ரகு4வம்ஶம் 11-1].
அவனை மஹாத்மா என்று அறியவேண்டும்.
வைஜயந்தி என்னும் நூல் ஆத்மா என்னும் பதத்தின் தன்மையை விவரிக்கிறது.
அதாவது ஆத்மா ஜீவனிடமும், தைர்யத்திலும், தேஹத்திலும், ஸ்வபாவத்திலும், முயற்சியிலும்
என்று இவ்வாறு பல விஷயங்களில் ப்ரயோகம் உள்ளது என்று சொல்லுகிறது.
1. எவனுக்கு ஆத்மா ஶரீரமோ, எவன் ஆத்மாவில் நின்றுகொண்டு ஆத்மாவில் நுழைந்திருக்கிறானோ [ப்ரு.உப]
எல்லா ஜீவாத்மாக்களும் தன்னுடைய ஶரீரமாம்படி இருக்கும் மஹாசேதனன் என்று அறிவேன்.
2. ஆபத்துக் காலத்திலும் தைர்யத்தோடு நிலைநிற்கும் தன்மை உடையவன்
[தாடகை, ஸுபாஹு மாரீசாதிகளை வதம் செய்யும் வலிமையும் தைர்யமும் பொருந்தியவன்]
3.நித்யனாய், நித்யமான தேஹத்தை உடையவன் [மாசூணாச்சுடருடம்பு; திருவாய் 3-1-8] சத்ருக்களால் அழிக்கமுடியாதபடி நித்யன்
4. ஸ்வபாவவாசியாய், என்னைச் (பரமாத்மாவை) சரணமென்று வந்தவர்க்கு எல்லா பூதங்களிடமிருந்தும் அபயமளிக்கிறேன்,
இது என் விரதம் [அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வ்ரதம் மம; ராமாயணம் யுத்: 18-34].
5. பரமாத்ம வாசியாய், இவனைக் காட்டிலும் மேலொருவனில்லை என்ற பரம ஶப்தார்த்திற்கு ஏற்ப
[ஒத்தார்   மிக்காரை இலையாய  மாமாயா; திருவாய் 2-3-2] தன்னையொழிந்த எல்லா தேவதைகளுக்கும் மேலாய்,
அவர்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறபடியை அறிவேன்.
6. யத்ந வாசியாய், அதாவது பிரயத்நமாய். துஷ்ட நிக்ரஹத்திற்காக உத்ஸாஹிப்பது ஆத்ம தர்மம்மாகும்.
[விநாஶாயச து3ஷ்க்ருதாம் ஸம்ப4வாமி; கீதை 4-8]
7. அர்க்க வாசியாய், அதாவது ஆத்மா அர்க்கன் அல்லது ஸூர்யன் [ராம தி3வாகர:]
சர ஸமூகங்களாகிற கிரணங்களையுடைய ராமன் என்னும் ஸூரியன், ஸத்ருராக்ஷஸர்களாகிற நீரை வற்றச்செய்யும் வல்லமை உடையவன் என்று அறிவேன்.
8. ராமனை அக்நி ஸ்வரூபனாயும் அறிவேன். ராமன் கோபமடைந்தால், தன் கண்களாலே எரித்துவிடுவார்
[நிர்த3ஹேத3பி காகுஸ்த்த2: க்ருத்3த4ஸ்தீவ்ரேண சக்ஷுஷா; ஸு.கா: 30-14],
அனலுருவில் திகழும் சோதி தன்னுருவாய் [திருநெடு -1] ஸத்ரு ஶரீரங்களைச் சாம்பலாக்க வல்லவர்.
9. மதி வாசியாய், ராமன் எல்லா தத்துவங்களையும் அறிந்தவர்
[ஸர்வ ஶாஸ்த்ரார்த்த2 தத்வஜ்ஞ: ரா. பால.கா. 1-15] இருந்த இடத்திலேயிருந்தே ஶத்ருக்களை அழிக்க வல்லவன்
10. வாத வாசியாய், (வாயு ரூபியாய்) ‘வாயு ரூபியாய் இருக்கும் அவனுக்கு நமஸ்காரம்’
[தஸ்மை வாதாத்மநே நம: விஷ்.புரா. 1-14-31].
“காலாய்த் தீயாய்” [திருவாய் 6-9-1]
என்று சொல்லுகிறபடியே, பெருங்காற்றால் அடிக்கப்பட்ட பஞ்சுக்குவியலைப் போலே
எதிரிகளைப் போனவிடமறியாதபடி விரட்டிவிடும் மஹாவாயு இவர் என்பதை அறிவேன்.
அன்றிக்கே ‘ராமவ்ருத்தாந்தம் இறந்தவர்களையும் பிழைக்க வைப்பது”  [ம்ருத ஸஞ்ஜீவநம் ஹி ராமவ்ருத்தாந்தம்; பட்டர் ஸஹஸ்ரநாம பாஷ்யம்]
என்று எல்லா உயிர்ப்பிக்கும் காற்று போலே அநுகூலர்களை உய்ப்பிக்கும் மஹாவாயு என்று அறிவேன்.

தானும் அறிந்து பிறரையும் அறிவிக்கையாலே வேதம் [‘வேத்தி வேத3யதீதி வேத3:’] என்று வேத பதத்திற்கு வ்யுத்பத்தி சொல்லுமிடத்திலே,
நான் இந்தப் புருஷனை அறிவேன் [வேதா3ஹமேதம் புருஷம்; புரு.ஸூக்], என்று சொல்லி, அறிந்தது எப்படி? என்னும் கேள்வி எழ,
‘அறிந்தன வேதவரும்பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும்பொருளாதல்’ [திருவாய்: 9-3-3] என்கிறபடியே,
அளவற்றவன் என்று சொல்லி (மஹாந்தம்) முடித்தது அன்றோ?
எவனுக்கு அப்பரவஸ்து அளவிட்டு அறியப்படாததாகிறதோ அவனுக்கு அறிப்படாததாகிறது.
எவன்  அளவிட்டு அறிந்தேன் என்று சொல்வானோ அவன் உண்மையில் அறியாதவனாகிறான்.

கேனோபநிஷத் இதைச் சொல்லுகிறது. வேதா3ஹமேதம் (வேத3+அஹம்+ஏதம்), வேத என்னும் பதத்தை இங்கே ‘வேத்3மி’ என்றது;
அஹம் என்பது இரண்டு இடங்களிலும் மாறாமல் இருக்க, ஏதம் என்னும் பதம் இங்கே ‘ராமம்’ என்று குறிக்கிறது.
அஹம் வேத்3மி ராமம் என்பது வேதவாக்கியமான ‘வேதா3ஹமேதம்’ என்பதுடன் பொருந்தியிருக்கிறது.
அங்கே புருஷ ஶப்ததாலே காட்டப்பட்ட சௌர்ய வீர்யாதி குணங்களை இங்கே’ ஸத்யபராக்ரமம்’ என்னும் பதம் காட்டுகிறது.

குணங்களாலே பூர்ணன் (புருஷன்) அங்கு ‘மஹாந்தம்’ இங்கு ‘மஹாத்மாநம்’ ஆகிறது.
மஹாத்மா என்னும் பரமாத்மா இந்த உலகத்திலே ஒருவருக்கும் எட்டாததோவென்னில், ‘
பிதரம் ரோசயாமாஸ’ என்று உன்னையிசைவித்து,  ராமரூபேண வந்து பிறந்தவர் அந்த பரவஸ்து என்பதை அறிவாயாக.
ராமன் இப்படித் தன்னைத் தாழ விட்டுக் கொண்டு இருப்பதனால் நீ அவன் பெருமையை உணரவில்லை.
ராமனை மஹாத்மாவானவனை ‘அவன் பிறந்த பிறகே மேன்மையை அடைகிறான்’
[ஸ உ ஶ்ரேயாந் ப4வதி ஜாயமாந: யஜுர்.அஷ்.3-6-3] என்பதால் அறியலாம்.

ராமன் மிக இளம்பருவத்தினன்:

என் மகன் ராமனுக்குக் இன்னும் பதினாறு வயது நிரம்பவில்லை; [ஊனஶோடஷ]
இவனுக்கு வடிவில் மெருகழியவில்லை; கடினகாரியங்களைச் செய்து உடல் இன்னும் இறுகவில்லை;
இவன் பெருஞ்செயல் செய்யவல்லனோ?
ரமயதீதி ராம: ரமிக்கச்செய்பவனாக இருக்க இவனை அரக்கர்களை அடக்க நான் எவ்வாறு உம்முடன் அனுப்புவேன்?’ என்று பதிலிறுத்த தஶரதனுக்கு,
விஶ்வாமித்திரர் எப்படி ‘ஸத்யப்ராக்ரமம்’ (ராமம் ஸத்யபராக்ரமம்) என்னும் பதத்தின் உட்பொருளை விளக்குகிறார் என்று இங்கே காண்போம்.

ஸத்யபராக்ரமன் என்றால் நித்யமான, என்றும் மாறாத பராக்ரமத்தை உடையவன்.
ஸதை3கரூபரூபாய [விஷ்.ஸஹ] என்பதிலிருந்து அறியலாம்.

ஸத்யப்ராக்ரமன் எப்பொழுதும் ஒருபடிப்பட்டிருக்கும் பராக்ரமத்தை உடையவன்.
த இமே ஸத்யா: காமா: என்று விஷ்ணு புராணத்திலும்,
பகவானுடைய இந்த குணங்கள் ஸத்யமான காமங்கள் என்பபடுகின்றன என்று சாந்தோக்கியத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.
அவதார விக்ரஹம் இச்சையினால் எடுக்கப்படுவதால், குணங்கள் நித்யமாய் காணக்கிடைக்கின்றன என்று விஷ்ணு புராணத்திலும் காணலாம்.
தேஜஸ், பலம், ஐஶ்வர்யம், ஞான வீர்ய ஶக்தி ஆகிய குணங்களின் குவியலாய் இருப்பவன் பரமாத்மா என்றும் விஷ்ணு புராணம் மேலே விவரிக்கிறது.

லௌகீகர்களுடைய பராக்கிரமம் போலே அன்றிக்கே, ஸத்யபராக்ரமன் ‘ஜயிக்காமல் திரும்பமாட்டான் ராமன்’
[அபி4யாதா ப்ரஹர்த்தா ச; அயோ.கா. 2-37] என்றும்,
‘சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே’ [திருச்சந்த 56] என்று சொல்லுகிறபடியே,
இவர் போர் புரியப் புறப்பட்டால், எதிரிகளை வெல்லாமல் திரும்ப மாட்டார் காண்.

ஆக, இப்படியாக அழகையே ஆயுதமாகக் கொண்டும் வெல்வான் ராமன்.
ஶ்ரீமான் ஸுக2ஸுப்த: பரந்தப: [யு.கா. 38-25] என்று சொல்லுகிறபடியே அழகும் எழிலுமாகவே எதிரிகளின் படையை அழிக்க வல்லவன் ராமன் என்று அறியலாம்.

அடுத்தது,  வஸிஷ்டரும் அறிவார் (வஸிஷ்டோபி மஹாதேஜா) என்று ஏன் சொன்னார் என்று பார்ப்போம்.
விஶ்வாமித்திரர் அரசரிடம், ‘என் கார்யம் நடக்கவேண்டும் என்று வந்து உன்னிடம் கேட்கும் என்னை நீ நம்பமாட்டாயானால்,
உனக்கு ஆப்தனான வஸிஷ்டபகவானைக் கேட்கலாமே!
ரிஷிகளில் மஹாதேஜஸ்வியானவர். ப்ருஹ்மாவின் புத்திரர். லோகநாதனான புருஷோத்தமனும் தன்னை வணங்கும்படி ஏற்றமுள்ளவர்.
அவரது திருவாயாலே அடியேனுக்கு ப்ருஹ்மரிஷி பட்டமும் தந்தவர்.
ஸத்யம் வத3, த4ர்மம் சர என்று அனைவருக்கும் உபதே3ஶிக்கும்படியான இந்த கு3ருவரர் அஸத்யம் சொல்வாரோ? ‘
தஸ்ய தீ4ரா: பரிஜாநந்தி யோநிம்’ [புருஷ. ஸூ] என்று ராமனுடைய ஜந்மரஹஸ்ய ஞானமுடைய வஸிஷ்டரைக் கேளாய்!’

மேலும் இங்கே கூடியிருக்கும் மற்ற ரிஷிகணங்களும் அறிவார்கள் (யே சேமே தபஸி ஸ்திதா2: ) என்பதை விளக்குகிறார்.
“அகஸ்த்யர், பராஶரர், வியாஸர் என்ற பல மேன்மை மிக்க ரிஷிவரர்கள் ஒருவேளை தம் பெருமை நிலைநிற்க பக்ஷபாதம் செய்யக்கூடும்.
ஆனால், இங்கே அமர்ந்திருக்கும் ரிஷிகளோ தபஸ்ஸில் நிலை நின்றவர்கள்.
இவர்களுக்குப் பெருமை என்னவென்றால், இவர்களது நரைத்தலையும், ஒட்டிய கன்னமும், சுருங்கிய சருமமும்,
ஜபிக்கிற வாயும், வடிகின்ற கண்ணீரும் மட்டுமே அடையாளங்கள்.
விஷ்ணு தத்துவத்தில் சொன்னபடி. பகவதநுபவத்தாலே ஆநந்தம் பெருக குளிர்ந்த கண்ணீர் பெருகுபவராய்,
மயிர்க்கூச்செறியும் தேஹத்தினராய், எப்போதும் பரமாத்மாவின் குணங்களைத் த்யானிப்பவராய் இவர்கள்
(இமே) பெருமையை அளவிடமுடியுமோ?
‘சிறியனென்று இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்; சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்  சென்று கேள்’ (பெரியாழ்வார் 1-4-8) என்று
எங்கேயோ பாதாளத்திற்குச் சென்று மஹாபலியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய வாமனன் பெருமை அன்று;
இவன் பெருமை அறிய இதோ இங்கிருக்கும் இவர்களிடம் கேள்.
மஹாபலியோ ஒரு அஸுரன்; இவர்களோ பரமஸாத்விகர்களான ரிஷிகள்;
என்னையும், வஸிஷ்டரையும் போல் தனி ஒருவரல்லர்; பலராய் இங்கே இருக்கிறார்கள்;
உனது நம்பிக்கைக்கு ஹேதுவாக இருக்கும்.” என்று விஶ்வாமித்திரர் அரசருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஒருகால் இவர்கள் அஸத்யம் சொல்வரோ என்ற ஸந்தேஹம் அரசரின் மனத்தில் தோன்றினால், என் செய்வது? என்று எண்ணி,
விஶ்வாமித்திரர், மேலும் சொல்கிறார். இவர்கள் பொய் சொல்லாத தார்மிகராக இருப்பாரோவென்னில், தபஸி ஸ்திதா2: என்றார்.
‘தபோ தா3னம் தபஸ் ஸத்யம் தபோ த4ர்ம: ப்ரதிஷ்டித2:’ என்கிறபடியே எக்காலமும் தபத்திலே ஈடுபட்டவராகையாலே தர்மஶ்ரேஷ்டரென்கிறது.
மேலான தர்மமான (பரமம் யோ மஹத்தப: விஷ்ணு. ஸஹ) பகவானிடமே பக்தி செய்பவராய்
தபஸ்ஸிலே நிலைநிற்பவர்கள் (தபஸி ஸ்திதா2:) என்றுமாம்.

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் —ஸ்ரீ ராமசந்த்ரனின்16 கல்யாண குணங்கள்–

November 24, 2023

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

ஸ்ரீ மத் கிருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷைக லஷ்யணாம் ஸூலபஸ் ஸ்ரீ தரஸ் ஸதா

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

———–

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

தபஸ் ஸ்வாத்யாயனிரதம் தபஸ்வீ வாக் விதாம் வரம் |
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முனி புங்கவம் || 1 ||

தாத்பர்யம்
உயர்ந்த தவமுடைய வால்மீகி பகவான்
கர்ம யோகாதி அனுஷ்டானம்
வேத அத்யயன ஜபாதி நிஷ்டை முதலியவைகளை யுடையவராய்
வேதார்த்த வித்துக்களில் உயர்ந்தவராய்
ஸகல வித்யைகளை அறிந்தவர்களில் சிறந்தவராய்
ஸரஸ்வதி புத்ரர்களாகிய அத்தி மரீசீ முதலியவர்களின் மேன்மை யுடையவராய்
முனி ஸ்ரேஷ்டராய் இருக்கிற நாரத மஹா முனியைக் கேட்டு
ப்ரஸ்னம் பண்ணினார் -கேள்வி கேட்டார்

—————-

விசேஷ அர்த்தம்

தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌ சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனி புங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்

ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்

வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்

முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்

நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்

ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –

——–

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாது ஸேவீ ஸ‌முசித‌ ச‌ரித‌ஸ் தத்வ‌ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணி ப‌த‌ந‌ ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌ கால‌ ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோ தாந்தோ ந‌ஸூயுஸ் ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வி த‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாது ஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌தி ய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த் த‌க்க‌து.

தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளி வ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

——–————————————————————————————

கோऽன்வஸ்மின் ஸாம்ப்ரதம் லோகே குணவான் கஶ்ச வீர்யவான் |
தர்மஜ்ஞஶ்ச க்ருதஜ்ஞஶ்ச ஸத்ய வாக்யோ த்ருட வ்ரத꞉ || 2 ||

கோநு –ஹேம அரவிந்தம் போல் ஆஸ்ரய வைலக்ஷண்யத்தினால் நிஸ் ஸமாப்யதிகையைச் சொல்வதற்காக பிரதமம் தர்மி நிர்தேசம் செய்கிறார்
அஸ்மின் -இந்த லோகத்தில் -இத்தால் பரமபத நிலையனில் வியாவ்ருத்தி

அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.

ஓ நாரத பகவானே லோகாந்தரத்தில் ஸ்ரீ மன் நாராயணனும் காலாந்தரத்தில் நரஸிம்ஹாதிகளும்
நான் இனிக் கேட்கப் போகிற குணங்களை உடையவர்கள் உண்டு என்பது அறிவேன்
இவ் வுலகில் இக் காலத்தில் இவ் விதமான புருஷன் யாராவது உண்டோ -அதை அறிந்து சொல்லும்
அதாவது ஸுசீல்யமுடைய புருஷன் யார் -ஸுசீல்யமாவது உயர்ந்தவன் தன் உயர்வை மதித்து இறுமாறாதே தாழ்ந்தவருடன் அடர்ந்து புணருகையாவது
வீர்யத்தை யுடையவன் யார் -வீர்யமாவது -தான் வருத்தம் அற்றவனாய் மற்ற ஒருவனை வருத்தமுறச் செய்தலாம்
வருந்துகைக்குக் காரணங்கள் உண்டாயினும் வருந்தாது ஒழிகையாகவுமாம்
அவஸ்யம் செய்யத்தக்க தர்மத்தை அறிந்தவன் யார் -தர்மமாவது பிதாவின் சொல் வழி நடக்கை –
சரணம் அடைந்தவனை ரஷிக்கை முதலானவை
செய்யத் தகாத அதர்மங்களை அறிந்தவன் யார் –அதர்மமாவது ஸாஸ்த்ரத்தில் செய்யத் தகாது என்று நிஷேதித்த ஸூரா பானம் அஹம்பாவ மனம் முதலானவை
சிறிது உபகாரம் செய்யினும் அதை எப்போதும் மாறவாமல் பெரியதாக நினைப்பவன் யார்
ஒருவன் அபகாரம் செய்தால் அதை ஒருக்காலும் நினையாமல் மறந்து விடுகிறவன் யார்
ஸங்கல்பித்ததைத் தவறாமல் நடத்த வல்லவன் யார்-ப்ரதிஜ்ஞாதமான ஆர்த்த ரக்ஷணத்தை ஆபத்திலும் விடாத ஸங்கல்பத்தை யுடையவன்

————–

சாரித்ரேண ச கோ யுக்த꞉ ஸர்வ பூதேஷு கோ ஹித꞉ |
வித்வான் க꞉ கஸ் ஸமர்தஶ்ச கஶ்சைக ப்ரிய தர்ஶன꞉ || 3 ||

தங்கள் பெரியோர்கள் ஆசரித்த குல ஆசாரத்தை ஒரு வகையிலும் விடாமல் ஆசரிப்பவன் யார்
ஸத்ரு மித்ர பேதம் இன்றி ப்ராணி மாத்ரத்துக்கு நன்மை செய்கிறவன் யார்
ஸகல ஸாஸ்த்ரங்களையும் அறிந்தவன் யார்
நினைத்த காரியத்தை முடிக்க வல்லமை உள்ளவன் யார்
எல்லோருக்கும் எப்போதும் பார்க்கப் பார்க்க ஆனந்த ஜநகனாய் இருப்பவன் யார்

சாரித்ரேண ச கோ யுக்த-தொடங்கி ஆத்ம குண பரமான ப்ரஸ்னம்
மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் –ஸ்ரீ ராம ஸித்தாந்தம் அன்றோ –
ஸர்வோத்தரமாய் ஸத்துக்களுக்கு அபிமதமாய் இருக்கும் அன்றோ –

———-

ஆத்மவான் கோ ஜித க்ரோதோ த்யுதிமான் கோऽனஸூயக꞉ |
கஸ்ய பிப்யதி தேவாஶ்ச ஜாதரோஷஸ்ய ஸம்யுகே || 4 ||

சலியாத தைர்யம் உடையவன் யார்
கோபத்தை அடக்கியவன் யார்
ஸகல பிராணிகளும் ஆவலுற்றுப் பார்க்கத் தகுந்த அழகுடையவன் யார்
அஸூயை இல்லாதவன் யார் -அஸூயை யாவது பிறர் இடத்தில் இல்லாத குற்றங்களை ஏறிட்டுச் சொல்லுதல்
போர்க்களத்தில் எவனுக்கு கோபமுற்றால் தேவர்களும் அசுரர்களும் பயப்படுவார்கள்
அதாவது மாற்றார் மேல் கோபமுற்றால் அன்பரும் அஞ்சும்படியாகப் பெரும் கோபம் யுடையவன் யார்
தன்னடியார் திறத்தில் ஒருவன் அபராதம் செய்தால் அப்போது அவனை வென்று அடியார்களைக் காப்பாற்றுவதற்காக
தனக்கு ஸ்வ பாவம் இல்லாத கோபத்தை ஏறிட்டுக் கொள்பவன் யார் என்பது தாத்பர்யம்

——————-

ஏததிச்சாம் யஹம் ஶ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே |
மஹர்ஷே த்வம் ஸமர்தோऽஸி ஜ்ஞாதுமேவம்விதம் நரம் || 5 ||

ஓ மஹ ரிஷியே நீர் எல்லாம் அறிந்தவர் -ஆகையால் இவ்விதமான புருஷனை அறிந்து சொல்ல உமக்கு சாமர்த்தியம் உண்டு
இக் குணங்கள் ஓர் இடத்தில் சேர்ந்து இருப்பது அரிதாகையாலே இவை எல்லாவற்றையும் உடையவன் ஒருவன்
உளன் என்று கேட்பதில் எனக்கு மிகவும் உத்ஸாஹமாய் இருக்கிறது
இது வரையில் என்னுடைய இக் கேள்விக்குத் தக்க உத்தரம் சொல்ல வல்லவர் ஒருவரும் அகப்படவில்லை
இப்போது உம்மைக் கண்டு உம்மிடத்தில் கேட்க வேண்டும் என்று ஆவலுற்றவனாக இருக்கின்றேன்
இதை எனக்கு தெரிய உரைக்க வேண்டும்
இதனால் வேதார்த்தங்களை ஒரு ஆச்சார்யர் இடம் கேட்டே அறிய வேண்டும் என்பது தெளிவாகிறது

மஹர்ஷே த்வம்–அலௌகிகார்த்த த்ருஷ்டாக்கள் நீர் -மஹ ரிஷியானபடியால் எங்களைக் காட்டிலும்
வேதாந்த ரஹஸ்ய ஞானம் உடையவர் அன்றோ நீர்
ஆகையால் இப்படிப்பட்ட குணங்களை யுடைய பரம புருஷனைச் சொல்ல வேண்டும் என்கிறாள்

—————-

ஶ்ருத்வா சைதத் த்ரிலோகஜ்ஞோ வால்மீகேர்னாரதோ வச꞉ |
ஶ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்ய மப்ரவீத் || 6 ||

ச்ருத்வா ஏதத் வால்மீகேர் வச:’ – இந்த வால்மீகியுடைய வார்தையைக் கேட்டு,
‘த்ரிலோகக்ஞ: நாரத:’ – மூவுலகையும் அறிந்த, எல்லாம் அறிந்த நாரத பகவான் சொல்ல
ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்’ – அவரும் ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கிறார்.

ஸமஸ்த லோகங்களிலும் உள்ள ஸகல பிராணிகளுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்த நாரத பகவான்
வால்மீகி மொழிந்த இவ் வசனத்தைக் கேட்டும் தம்முடைய புத்தியால் ஊஹித்தும்
இவர் மனதில் உள்ள அபிப்ராயங்களைத் தெரிந்து கொண்டு இம்மஹா அர்த்தத்தைத் தாம் சொல்லக்
கேட்க்கைக்கு அதிகாரிகள் அகப்பட்டாரே என்று சந்தோஷம் அடைந்தவராய்
ஓ வால்மீகி மஹ ரிஷியே சொல்லுகிறேன் கேளும் என்று தம் மொழியில் அவர் மனதை இசையச் செய்து சொல்லத் தொடங்கினார்

—————-

பஹவோ துர்லபாஶ்சைவ யே த்வயா கீர்திதா குணா꞉ |
முனே வக்ஷ்யாம் யஹம் புத்த்வா தைர்யுக்த꞉ ஶ்ரூயதாம் நர꞉ || 7 ||

ஓ வால்மீகி மஹ ரிஷியே நீர் கேட்ட இக் குணங்கள் ஒவ்வொன்றும் அநேக குணங்களை விளைக்கத் தக்கவை
இவை ஸாதாரண ஜீவர்களிடம் சேர மாட்டா
நான் இப்போது ஸ்ரீ ராம குணங்களை அனுபவித்துக் கொண்டு பரவசனாய் இருக்கிறேன்
சற்று நிதானியும் -இக் குணங்களுடைய புருஷனை யோசித்து அறிந்து சொல்கிறேன்

பஹவோ -ப்ரஸ்னம் பண்ணப்பட்ட குணங்கள் 16 ஆக இருந்தாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியே
விஸ்தரித்துப் பார்த்தால் அநேக குண ராசீ கரணமாய் இருக்குமே
துர்லபாஶ்–ராமனை விட்டு பர வாஸூதேவன் இடமும் அவதாராந்தரங்களிலும் கான முடியாதவை அன்றோ
வாயினால் சொல்லவும் அரிது என்னவுமாம்
இப்படி ப்ரஸ்னம் வேறே ஒருவராலும் செய்ய முடியாதே என்றுமாம்
முனே -நீர் மனன சீலர் ப்ரேம சாலீ யாகையாலே இவ்வாறு ப்ரஸ்னம் பண்ணினீர்

இவன் குணம் ப்ரஸ்னம் விலக்ஷண பிரேமசாலிகள் பண்ணும் பகவத் குண கீர்த்தனங்கள் போல் போக்யமாக
செவிக்கு இனிய செஞ்சொல்லாய்-உருகுமால் நெஞ்சம் என்னும்படி இருப்பதால் கீர்த்திதா -என்கிறான்

முனே வக்ஷ்யாம் யஹம் புத்த்வா–நான் ஆனவாறே சொல்கிறேன்
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப –
அந்நிய பரனான நான் தெளிந்து ப்ரக்ருதிஸ்தனனான வாறே சொல்கிறேன் என்கிறான்

————-

இக்ஷ்வாகு வம்ஶ ப்ரபவோ ராமோ நாம ஜனை꞉ ஶ்ருத꞉ |
நியதாத்மா மஹா வீர்யோ த்யுதிமான் த்ருதிமான் வஶீ || 8 ||

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவ:’ – இக்ஷ்வாகு வம்சத்தில ஒளியோடு விளங்குபவன்
த்யுதிமான்’ – ஒளி மிகுந்தவன்–தேஜஸோட இருப்பான்.
‘த்ருதிமாந்’ – தைர்யசாலி.
‘வசீ’ – இந்திரியங்களைத் தன் வசத்தில் வைத்திருப்பவன்.

இஷ்வாகு வம்சத்தில் ஸ்ரீ ராமர் என்று ப்ரஸித்தராய் ஒருவர் அவதரித்து இருக்கிறார் -நீரும் அவரை இதுவரை கேட்டு இருப்பீர்
அவருடைய பெரும் தொழிலைக் கண்டு ஜனங்கள் அவரை பராத்பரரான ஸ்ரீ மன் நாராயணன் என்று நிச்சயிக்கிறார்கள்
அவர் கர்மாதீனமாய் அதி ஹேயமான ஜனன மரணாதி விகாரங்கள் அற்றவர்
பெரிய சாமர்த்தியம் யுடையவர் -ஸ்வயம் ப்ரகாஸமானவர்
உயர்ந்த ஆனந்தத்தை யுடையவர் -ஸகல ஜகத்தையும் தனது வசமாக்கிக் கொண்டவர்

பிதரம் ரோச யாமாஸ –சக்ரவர்த்தியைப் பிதாவாகக் கொள்ள ஆசைப்பட்டான் அன்றோ
இஷ்வாகூணாம் மியம் பூமி ஸ ஸைல வன காநந–என்றார் அன்றோ பெருமாள்
இக் குணங்கள் எல்லாம் இக் குடிப் பிறப்பாலே வந்தது போலே காணும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
தம்முடைய தவத்தின் பலனாக ஸ்ரீ ரெங்கநாதனைப் பெற்ற மஹா புருஷன் அன்றோ
ப்ரபவோ –உத்பத்தி ஸ்தானம் –
ராமோ நாம ஜனை꞉ ஶ்ருத꞉ |–குணத்து அளவும் செல்ல வேண்டாம் ராமன் என்கிற திரு நாமமே செவிக்கு இனிய செஞ்சொல்லாய் ஸர்வ ஜனங்களுக்கும் இருக்கும் அன்றோ –
ஸ்ரோதவ்யம் ஏதன் நியமேன ஸத்பிர் –மஹானுபாவம் சரிதம் –சத்துக்களால் நியமத்துடன் ஸ்ரீ ராமாயணம் கேட்கத்தக்கது என்றாரே வால்மீகியும்
ராம ராம -ரமயதி இதி ராம –ரமந்தே யோகிந அஸ்மின் இதி ராம
ராமம் ஸத்ய பராக்ரமம் -அவதார வை லக்ஷண்யம்
ஜனைஸ் ஸ்ருத -லௌகிக ப்ரஸித்தி
நியதாத்மா -அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
மஹா வீர்ய -வீரியத்துக்கு மஹத்வமாவது தோஷ ரஹிதம் -ஸ்வ பாவிகம் -எல்லையற்ற ஒப்பு இல்லாத வீர்யம்

——

புத்திமான் நீதிமான் வாக்மீ ஸ்ரீ மான் ஸத்ரு நிபர்ஹண
விபுலாம் ஸோ மஹா பாஹோ கம்பு க்ரீவோ மஹா ஹநு 
꞉ || 9 ||

வாக்மீ’ – நல்ல வாக்கு. பேச்சு ‘மதுராபாஷி
விபுலாம்ஸ:’ – பரந்த தோள்கள்.
கம்புக்ரீவ:’ – கழுத்து சங்கு போல இருக்கும்.
‘மஹாஹநு:’ – ‘ஹநுமான்’னு கூட சொல்லுவோம் இல்லையா ‘ஹநு’ன்னா தாடை. பெரிய தாடை.

எல்லாம் அறிந்தவர் -அந்தவந்த ஜாதிகளுக்கு உள்ள நடவடிக்கைகளை புரளாமல் அப்படியே நடப்பிக்க வல்லவர்
சிறந்த வாக்கை யுடையவர் -அகண்ட ஐஸ்வர்யம் யுடையவர்
அதற்கு நேரிடும் விரோதியைப் போக்க வல்லவர் -பருத்து உருண்ட திருக் கைகளை யுடையவர்
உயர்ந்த திருத் தோள்களை யுடையவர் -சங்கு போல் மூன்று ரேகைகளை யுடைய கண்டம் யுடையவர்
நீண்டு பருத்த கபோலங்களை யுடையவர் –

————–

மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தம꞉ |
ஆஜானு பாஹு꞉ ஸுஶிரா꞉ ஸுல லாட꞉ ஸுவிக்ரம꞉ || 10 |

‘மஹோரஸ்க:’ – ‘விபுலாம்ஸ:’ன்னா பரந்த தோள்கள். ‘மஹோரஸ்க:’ பெரிய மார்பு.
‘மஹேஷ்வாஸ:’ – பெரிய வில்லை வெச்சிண்டிருக்கறவன்
கூடஜத்ரு:’ – நல்ல சதைப்பற்றுள்ள collar bones தோள்களெல்லாம் இருக்கிறவர்
அரிந்தம:’ – எதிரிகளை தபிக்கப் பண்ணுபவர்.
ஆஜாநுபாஹு:’ – ‘ஜாநு’ன்னா முட்டி. முட்டி வரைக்கும் நீண்ட கைகள்.
‘ஸு சிரா:’ – அழகான தலை.
‘ஸுலலாட:’ – பெரிய பரந்த நெற்றி.
‘ஸுவிக்ரம:’ – மிகுந்த பராக்ரமம் கொண்டவர்.

பரந்த மார்பை யுடையவர் -பெரும் வில்லைப் பிடிக்க வல்ல விக்ரஹத்தை யுடையவர்
மறைந்த கழுத்து எலும்புகளை யுடையவர் -சத்ருக்களை போக்குபவர்
முழந்தாள் அளவும் நீண்ட கரங்களை யுடையவர் -பருத்து வட்டமாயுள்ள சிரஸ்ஸை யுடையவர்
அர்த்த சந்திரன் போன்ற நெற்றியை யுடையவர் -அழகிய நடையை யுடையவர்

————–

ஸம꞉ ஸமவிபக்தாங்க꞉ ஸ்னிக்த வர்ண꞉ ப்ரதாபவான் |
பீனவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவான் ஶுப லக்ஷண꞉ || 11 ||

ஸம:’ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்!
‘ஸமவிப4க்தாங்க3:’ – ! சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள்.
‘ஸ்நிக்3த4வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு!
‘பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்!
‘பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்பு ‘வக்ஷஸ்’.
‘விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.
‘லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது! .
‘ஶுப4லக்ஷண:’ – லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷண -சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது!

அதிக நீட்சியும் அதிக தாழ்ச்சியும் அற்று சமானமான திரு மேனியை யுடையவர்
குறுமை நெடுமை அற்று ஒன்றோடு ஓன்று சேராமல் பிரிந்து காண்கிற அவயவங்களை யுடையவர்
காண ஆவலுறுத்தும் நிறமுடையவர் -உஜ்வலமான விக்ரஹ காந்தியை யுடையவர் –
பருத்த மார்பை யுடையவர் -பரந்த நேத்ரங்களை யுடையவர்
அவயவ சவுந்தர்யம் யுடையவர் -மற்றும் அநேக லக்ஷணங்களை யுடையவர்

————–

தர்மஜ்ஞ꞉ ஸத்ய ஸந்தஶ்ச ப்ரஜானாம் ச ஹிதே ரத꞉ |
யஶஸ்வீ ஜ்ஞான ஸம்பன்ன꞉ ஶுசிர்வஶ்ய꞉ ஸமாதிமான் || 12 ||

தர்மம் அறிந்தவர் -சொன்ன சொல் தவறாதவர் -பிராணிகளுக்கு நன்மை செய்ய ஆவல் உள்ளவர்
சிறந்த கீர்த்தியை யுடையவர் -ஊஹா போஹம் முதலிய விசித்திர ஞான பரி பூர்ணர்
பரி ஸூத்தர் -அடியாருக்கு வசப்பட்டவர் -அவருடைய ஷேமத்தைச் சிந்தை செய்தவர்

‘த4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்!
‘ஸத்ய ஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர்!
‘ப்ரஜாநாம் ச ஹிதே ரத:’ – ‘ரஞ்சயதே இதி ராஜ’ –
யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர்
ஜ்ஞான ஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.
‘ஶுசி:’ – தூய்மையானவன்.
‘வஶ்ய:’-குணத்துனால வசியம் பண்ணி-அவன் எல்லாருக்கும் வசப்பட்டு-
‘ஸமாதி4மாந்’-தீர்க்க யோஜனை பண்றது

கௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,
யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச |
ஸவை ராகவ ஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

—————

ப்ரஜாபதி ஸமஶ் ஶ்ரீமான் தாதா ரிபுனிஷூதன꞉ |
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா || 13 ||

ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்!
‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.
‘ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.
‘ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.
‘த4ர்மஸ்ய பரிரக்ஷிதா

ப்ரஹ்மாவைப் போன்றவர் -அதாவது ப்ரஹ்மாவைப் போலே த்ரி மூர்த்திகளிலே ஒருவராக திரு அவதரித்தவர்
ஸ்ரீ யபதி -அடியாருக்குப் போஷகர் -விரோதியைப் போக்குபவர் –
சத்ரு மித்ரர் பேதமற எல்லாரையும் ரக்ஷிப்பவர் -அனைவரையும் அவர் அவர் தர்மங்களில் திருத்துபவர் –

——————

ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா |
வேத வேதாங்க தத்த்வஜ்ஞோ தனுர் வேதே ச நிஷ்டித꞉ || 14 ||

‘ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.
‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர்.
“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே
அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு”
‘அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி,
‘பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன்!
‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை!
‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன்!
‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை,
‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர்! – ‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’
‘வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் -அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்!
‘த4நுர்வேதே3 ச நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.

தமக்குரிய தர்மங்களை விடாமல் அனுஷ்டிப்பவர் -தம்முடைய ஞாதிகளையும் அஸூயை இன்றி ரக்ஷிப்பவர்
ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்கிற நான்கு வேதங்களையும் வியாகரணம் சிஷை சந்தஸ்ஸூ நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்கிற ஆறு
அங்கங்களையும் அறிந்தவர் தனுர் வேதத்தில் பொருந்தி இருப்பவர்

தானும் தர்மத்தை அனுஷ்ட்டித்து பிரர்களையும் தர்மங்களை அனுஷ்ட்டிக்கச் செய்து தர்மங்களை ரக்ஷிப்பவன்
தர்ம ஸம்ஸ்தானம் பண்ணவே திருவவதாரம்
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்யஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே அபாயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம -என்றது அன்றோ ஸ்வ தர்மம்
இவற்றால் மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்டமை -யும்
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் உயிராய்த் தோன்றி விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் அன்றோ
சீதைக்காக சின விடையொன் சிலை இறுத்து
திருமணம் புரிந்து மழு வாள் ஏந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு மெல்லியல் தோள் நயந்த
இவ்வாறு பால காண்ட ஸாரத்தைச் சொல்லிற்று ஆயிற்று-

————

ஸர்வ ஶாஸ்த்ரார்த தத்த்வஜ்ஞோ ஸ்ம்ருதிமான் ப்ரதிபானவான் |
ஸர்வ லோக ப்ரிய꞉ ஸாதுரதீனாத்மா விசக்ஷண꞉ || 15 ||

‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்!
‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி!
‘பிரதிபா4நவாந்’-சரியான நேரத்துல சரியான விஷயம் ஞாபகம்
‘ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்!
ஸாது4-ஸாது குணங்கள் நிறைந்தவர்!

நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களுடைய உண்மையை அறிந்தவர் அறிந்தத்தை ஒன்றும் மறவாதவர்
அந்தவந்த காலங்களுக்குத் தக்க ஸம் பூர்த்தி என்னும் ஞானத்தை யுடையவர்
ஸகல பிராணிகளுக்கும் பிரியமானவர் -அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுமவர்
தீன ஸ்வ பாவம் இல்லாதவர் -வாக் சாதுர்யம் யுடையவர்

—————

ஸர்வதாபிகத꞉ ஸத்பி꞉ ஸமுத்ர இவ ஸிந்துபி꞉ |
ஆர்ய꞉ ஸர்வ ஸமஶ்சைவ ஸதைக ப்ரிய தர்ஶன꞉ || 16 ||

‘ஸர்வதா3பி4 க3த: ஸத்3பி4: ஸமுத்3ர இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ
அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வருவர்
ஆர்ய:-பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble
ஸர்வஸமஶ்சைவ’ – எல்லார் கிட்டயும் சமமா இருப்பார்
ஸதை3கப்ரியத3ர்ஶந:’ – எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார்.

வாலி – ‘ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ ‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’.

ஆறுகள் தங்களுக்குப் போக்கற்று சமுத்ரத்தைச் சேர்வது போல் எக்காலமும் ஸஜ் ஜனங்களால் சூழப் பட்டவர் -பூஜ்யர் –
ஜாதி முதலிய பேதம் இன்றியே எல்லாராலும் அடையத் தக்கவர்
எக் காலும் பார்த்தாலும் அந்தவந்த காலங்களுக்குப் புதியவராய்த் தோற்றுமவர்

ஆர்ய -அபி கந்தவ்ய -ஸுலப்யாதி குணங்களால் பூஜிக்கத் தக்கவன் -அடையத் தக்கவன் –
எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் -என்னும்படி இருப்பவன்
ஸமுத்ர இவ ஸிந்துபி꞉-நிரதிசய தேஜிஷ்டத்வ-
இத்தால் சத்துக்களை கத்யந்தரம் இல்லாமையும்-பெருமாளுடைய ஸுலப்யமும் சொன்னவாறு ம் காட்டுகிறது

—————-

ஸ ச ஸர்வ குணோபேத꞉ கௌஸல்யானந்த வர்தன꞉ |
ஸமுத்ர இவ காம்பீர்யே தைர்யேண ஹிம வானிவ || 17 ||

ஸ ச ஸர்வகு3ணோபேத:’ – எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன்,
‘கௌஸல்யா நந்த3வர்த4ந:’ – கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.
‘ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்ய’ – கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன்-சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.
‘தை4ர்யேண ஹிமவானிவ’ – ஹிமவானைப் போல தைர்யம்!

கௌசல்யையின் திருக் குமாரரான அவர் இப்படி ஸகல ஸத் குண ஸம் பன்னர்
ஸமுத்ரம் தன்னுள்ளே அடங்கின மணி முதலியவைகளைப் பிறருக்குத் தெரியாமல் மறைப்பது போல்
இவர் பிறர் அறியாத மநோ பாவம் உடையவர்
இமய மலை மழைக்கு அசையாமல் இருக்குமா போல் எவ்வித துன்பங்கள் நேரிடினும் சலியர்

ஸ ச கௌஸல்யானந்த வர்தன꞉ |–சகாரம் ஏவகார அர்த்தமாய் அந்நிய யோக வியச்சேதகம் -அதாவது
கௌசல்யா தேவிக்குப் புத்திரனாக அவதரித்த விஷ்ணுவே வேதாந்தங்களில் சொல்லப்பட்ட ஸமஸ்த கல்யாண குணாத்மகன்
தசரத நந்தன என்னாதது புத்ர லாபம் இவளுக்கே –
கௌசல்யா லோக ப்ரத்தாரம் ஸூஷு வேயம் மனஸ்விநீ
தைர்யேண ஹிம வானிவ–தைர்யமாவது சோகத்துக்கு காரணங்கள் இருந்தாலும் சோகியாது இருத்தல்

—————

விஷ்ணுநா ஸத்ருஶோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஶன꞉ |
காலாக்னி ஸத்ருஶ꞉ க்ரோதே க்ஷமயா ப்ருதிவீ ஸம꞉ || 18 ||

விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர்.
‘ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ – பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்!
‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்!
‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’ – பொறுமையில பூமியைப் போன்றவன்-

இவர் விஷ்ணுவின் அர்த்தாம்சம் ஆயினும் விஷ்ணுவைப் போன்ற பராக்ரமம் யுடையவர்
சந்திரனைப் போல் ஸந்தோஷ கரமானவர்
பிரளய காலத்து அக்னியைப் போன்று கோபமுடையவர்
பொறை -பொறுமையில் பூமியை ஒத்தவர்

ராமஸ் ஸஸ்த்ர ப்ருதஸ் அஹம் -ஸ்ரீகீதை

ஸோமவத் ப்ரிய தர்ஶன-த்ருஷ்ட ஏவ ஹி ந சோகம் –-கண்ட போதே சோகம் போவதுடன் சந்த்ர தர்சனம் போல் போக்யமானவன்

காலாக்னி ஸத்ருஶ–ததவஸ்தம் சமிபஸ்த லஷ்மணம் ப்ரேஷ்ய ராகவா பபூவ ஸம் ரப்ததரோ யுகாந்த இவ பாவக -பெருமாள் பிரளய கால அக்னி போல் ஆனார்

———-

தனதேன ஸமஸ்த்யாகே ஸத்யே தர்ம இவாபர꞉ |

‘த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல.
‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.
கொடையிலே குபேரனோடு ஒத்தவர்
ஸத்ய வசனத்தில் -பேசுவதில் -தர்ம தேவதை போன்றவர்

ஸத்யே தர்ம இவாபர꞉–ஸத்ய வசனத்தில் தனக்கு ஒப்பார் மிக்கார் இல்லாத தர்ம தேவதையுடன் ஒப்பாவார்
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஞ்ஞா –ஆஞ்ஞா ரூபமான தர்மமே யதார்த்த உக்தியில் தனக்கு உபமானமாய் இருக்கை
தர்ம சப்தம் தபஸ்ஸைச் சொல்லி –வேதஸ் தத்வம் தபோ ப்ரஹ்ம -என்றும் வேதத்தையே சொன்னவாறு
வேதோ அகில தர்ம மூலம் அன்றோ

——-

தமேவங்குண ஸம்பன்னம் ராமம் ஸத்ய பராக்ரமம் || 19 ||

‘தம் ஏவம் குண ஸம்பந்ந:’ – இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை,
‘ஸத்ய பராக்ரமம்’ –வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.

ஜ்யேஷ்டம் ஶ்ரேஷ்ட குணைர் யுக்தம் ப்ரியம் தஶரத꞉ ஸுதம் |
ப்ரக்ருதீனாம் ஹிதைர் யுக்தம் ப்ரக்ருதி ப்ரிய காம்யயா || 20 ||

ஜ்யேஷ்ட2ம்’ – மூத்த பிள்ளை
‘ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’ – எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,
‘ப்ரியம்’ – தனக்கு ரொம்ப ப்ரியமான,
‘ஸுதம்’ – பிள்ளையை,
‘த3ஶரத2:’ – தசரத மஹாராஜா ,
‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ – ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,
‘ப்ரக்ருதி ப்ரிய காம்யயா’ – அந்த ஜனங்களும் இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா! அப்பேற்பட்ட ராமனை,

யௌவ ராஜ்யேன ஸம்யோக்துமைச் சத் ப்ரீத்யா மஹீபதி꞉ |

இப்படி ஸகல குண ஸம் பன்னராய் அரசாள வல்ல சக்தியை யுடையவராய் நீதி ஸாஸ்த்ரத்தில் சொல்லிய
சிறந்த குணங்களை யுடையவராய்
தனக்குப் பிரியராய் -ஜனங்களின் நன்மைகளில் முயற்சியை யுடையவராய்
ஜ்யேஷ்ட குமாரராகிய ஸ்ரீ ராமனை சக்ரவர்த்தி மஹா ராஜன் மந்திரி புரோகிதர் முதலியவர்களுக்குப்
பிரியத்தை விளைவிக்கைக்காக இளைய வரசனாக்க இச்சயித்தார்

——-
தஸ்யாபிஷேக ஸம்பாரான் த்ருஷ்ட்வா பார்யாऽத கைகயீ || 21 ||

பூர்வம் தத்தவரா தேவீ வரமேனமயாசத |
விவாஸனம் ச ராமஸ்ய பரதஸ் யாபிஷேசனம் || 22 ||

ராமனை இளவரசில் முடி சூட்டுகைக்குச் சேர்ந்த ஸாமக் கிரியைகளை சக்ரவர்த்தி மஹா ராஜன்
இளைய மனைவியான கைகேசி பார்த்துப் பொறை அற்றவளாய் முன் சம்பாசூர யுத்தத்தில்
ராஜன் புகழ்ந்து உனக்கு வேண்டும் போது வேண்டிய இரண்டு வரங்களையும் முடி சூடக் கோடித்த
அக்காலத்தில் தசரதரைக் குறித்துக் கேட்டாள் -அதாவது
ஸ்ரீ ராமன் இம்முடியைத் தவிர்த்துக் காட்டுக்குப் போக வேண்டும்
இம்முடியை என் மகனான பரதனுக்குச் சூட்ட வேண்டும் என்று கேட்டாள்

————

ஸ ஸத்ய வசனாத் ராஜா தர்ம பாஶேன ஸம்யத꞉ |
விவாஸயாமாஸ ஸுதம் ராமம் தஶரத꞉ ப்ரியம் || 23 ||

தசரதன் தர்மமாகிய கயிற்றினால் கட்டுண்டு கைகேயிக்குச் சொன்ன தர்ம வசனம்
தவறாமைக்காகத் தனக்கு பிரியமான ஸ்ரீ ராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டார்

ராஜா -ப்ரக்ருதி ரஞ்சகனாய் இருக்குமவன்

ராமோ விக்ரஹவான் தர்ம -ஸாஷாத் தர்மம் பார்க்காமல் –தர்ம பாஶேன ஸம்யத-சாதாரண தர்மம் கைக்கொண்டு -ஸங்கேத்யம் பாரி ஹாஸ்யம்

————-

ஸ ஜகாம வனம் வீர꞉ ப்ரதிஜ்ஞாமனு பாலயன் |
பிதுர் வசன நிர்தேஶாத் கைகேய்யா꞉ ப்ரிய காரணாத் || 24 ||

அந்த ஸ்ரீ ராமன் அரசாள வல்லவராயினும் கைகேயியின் ப்ரீதிக்காகத் தசரதன் இட்ட கட்டளையால்
அவர்கள் முன் தாம் காட்டுக்குப் போவதாகச் சொன்ன சொல் தவறாமல் காட்டுக்குச் சென்றார்

————–

தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்ராதா லக்ஷ்மணோ ऽனுஜகாம ஹ |
ஸ்னேஹாத் வினய ஸம்பன்ன꞉ ஸுமித்ரானந்த வர்தன꞉ || 25 ||

ப்ராதரம் தயிதோ ப்ராது꞉ ஸௌப்ராத்ரமனு தர்ஶயன் |

அந்த ஸ்ரீ ராமன் காட்டுக்குப் போகும் போது அவருக்கு இளையவரான லஷ்மணன் விநயத்தோடு கூடியனவராய்
தன் தாயான ஸூ மித்ரையின் சொற்படி நடந்து அவளுக்குப் பிரியத்தை விளைத்தவராய்
ஸ்ரீ ராமனிடம் மிக்க பிரியத்தை உடையவராய் அவரை விட்டு ஒரு நொடியும் பிரிந்து
இருக்க மாட்டாதவராய் அவருடன் கூடவே காட்டுக்குச் சென்றார்

தம் வ்ரஜந்தம்-பரத்வ ஸுலப்யங்களுக்கு அனுகுணமான ஸர்வ சமாஸ்ரயணம்
அன்றிக்கே ஸித்த சாதன நிஷ்டர்கள் இளைய பெருமாளை போல் கைங்கர்யம் செய்ய வேண்டியதை ஸூ சிப்பிக்கிறது
ப்ராதா ஸ்வ மூர்த்திர் ஆத்மநா -சரீர பூதன்
விநயம் -கைங்கர்ய ரூப ஆசாரம் -சேஷத்வ ஞானம்
ஸூ மித்ர ஆனந்த வர்த்தநா -ஸ்ருஷ்டத்வம் வன வாஸாயா
ராமம் தசரதன் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜம்
ந ச அஹம் அபி ராகவ
ந ச தேந விநா நித்ரம்
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூ ஸ் நிக்த
சென்றால் குடையாம்
யேந யேந தாத்தா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி

————–
ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண ஸமாஹிதா || 26 ||

ஜனகஸ்ய குலே ஜாதா தேவ மாயேவ நிர்மிதா |
ஸர்வ லக்ஷண ஸம்பன்னா நாரீணாமுத்தமா வதூ꞉ || 27 ||

ஸீதாऽப்யனுகதா ராமம் ஶஶினம் ரோஹிணீ யதா |

ஸ்ரீ ராமனுக்குப் பிரியமான பார்யையாய் அவருக்குப் பிராணன் போன்றவளாய் ஸகலமான
உத்தம ஸ்த்ரீ லக்ஷணங்களோடே கூடினவளாய் -பெண்களில் சிறந்தவளாய்
ஜனங்களின் நன்மையில் முயன்றவளாய் பரிசுத்தமான ஜனக குலத்தில் விஷ்ணு சக்தியைப் போல்
அதி விசித்திர ரூப லாவண்யங்களை யுடையவளாய் திரு அவதரித்தவளான ஸீதா தேவியும்
சந்திரனைப் பின் தொடர்ந்த ரோஹிணியைப் போலே ஸ்ரீ ராமனைப் பின் தொடர்ந்து காட்டுக்குச் சென்றாள் –

சாதன தசையில் புருஷகாரமாகவும்
பல தசையில் பிராபியை யாகவும் கைங்கர்ய வர்த்தகையாகவும்
இருக்கும் நித்ய யோகத்தை இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

ந ஜீவேயம் க்ஷணம் அபி —
மித்ர ஓவ்பயிகம் கர்த்தும் -ஹித பரையாயும்
ஜனகஸ்ய குலே ஜாதா–ஆசார ப்ரதான குலப்பிறப்பு
தேவ மாயேவ நிர்மிதா-மோஹிக்க நிர்மிக்கப்பட்ட விஷ்ணு மாயை போல்வாள் -விஷ்ணுவின் ஆச்சர்ய சக்தியானவள்
ஸீதா -அயோனித்வம் -பரமபதம் போல் பூர்ணை -ஆத்ம குண பூர்த்தி
ஶஶினம் ரோஹிணீ யதா-அழகு இல்லாமல் குரூபியாய் இருந்தாலும் விட மாட்டாத பாதிவிரதம் -அநஸூயை முன் ஸ்வரூப க்ருத தாஸ்யை என்றாளே
புருஷோத்தமான பெருமாளுக்கு ஆன்ரு சம்சயாதி குண பூர்த்தி போல்
இவளுக்கும் ராமஸ்ய தயிதா பார்யா-இத்யாதிஷட் குண பூர்த்தி
ஸீதாபி ராமம் அநு கதா
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க நிரயோ யஸ் த்வயா விநா
மன்னன் ராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அண்ணா நடை வணங்கு நடந்திலளே
தனு மத்யமா -ஸூ மத்யமா -மின்னின் நுண் இடை மடக்கொடி
அஸீதே க்ஷிணா
திவளும் வெண் மதி போல் திருமுகம் –குவளை யம் கண்ணி

—————–
பௌரைரனுகதோ தூரம் பித்ரா தஶரதேன ச || 28 ||

ஶ்ருங்கி பேர புரே ஸூதம் கங்கா கூலே வ்யஸர்ஜயத் |
குஹமாஸாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் || 29 ||

தசரதரும் பட்டணத்தில் உள்ள ஜனங்களும் ஸ்ரீ ராமனைச் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்றார்கள்
ஸ்ரீ ராகவன் ஸ்ருங்கி பேரம் என்கிற ஊரைக் கிட்டி அவ்வூர் அருகில் உள்ள கங்கைக் கரையில்
அது வரையில் தன்னைத் தேர் மேல் ஏற்றிக் கொண்டு வந்த ஸூமந்த்ரனையும் விட்டு விட்டார்
அந்தக் கங்கைக் கரையில் ஸ்ரீ ராகவன் வேட ஜாதிக்கு அரசனாய் தன்னிடத்தில் நேசம் உள்ளவனான குகன் என்பவனோடு நேசித்தார்

இவ்விடத்தில் தர்ம ஸப்தம் சீல பரமாகக் கடவது

————-

குஹேன ஸஹிதோ ராம꞉ லக்ஷ்மணேன ச ஸீதயா |

ஸ்ரீ ராகவன் ஸீதையோடும் லஷ்மணனோடும் பொருந்தி இருப்பது போலே நீச ஜாதியாய் அறிவற்றவனாய்
வஞ்சனை ஸ்வ பாவம் உள்ளவனா யினும் தன் பக்தன் என்று குகனை அபிமானித்து அவனுடன் பொருந்தி இருந்தார்

பக்தி யுடைக் குகன்-ராமஸ்ய ஆத்ம சஹா -இளைய பெருமாளையும் அதிசங்கை பண்ணும்படி பொங்கும் பரிவு கொண்டவன்

———–

தே வனேன வனம் கத்வா நதீஸ்தீர்த்வா பஹூதகா꞉ || 30 ||

சித்ரகூட மனுப்ராப்ய பரத்வாஜஸ்ய ஶாஸனாத் |

பிறகு சிறிது தூரம் சென்று குகனையும் விட்டுவிட்டு அம்மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
காட்டு வழியிலே அதிக ஜலமுள்ள அநேக ஆறுகளைத் தாண்டிச் சென்று பரத்வாஜ மஹா முனிவருடைய
நியமனப்படியே சித்ர கூடம் என்னும் மலையை அடைந்தார்கள் –

————
ரம்யமா வஸதம் க்ருத்வா ரமமாணா வனே த்ரய꞉ || 31 ||

தேவ கந்தர்வ ஸங்காஶாஸ் தத்ர தே ந்யவஸன் ஸுகம் |

தேவர்களோடும் கந்தர்வர்களோடும் ஒத்த அம்மூவரும் அந்தச் சித்ர கூட மலையில் அழகிய
ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு ப்ரீதியோடு கூடினவர்களாய் அங்கு ஸூ கமாக வாஸம் செய்தார்கள்

————
சித்ரகூடம் கதே ராமே புத்ர ஶோகா துரஸ் ததா || 32 ||

ராஜா தஶரத꞉ ஸ்வர்கம் ஜகாம விலபன் ஸுதம் |

ஸ்ரீ ராகவன் சித்ர கூடம் சேர்ந்த அளவில் தசரத மஹா ராஜர் புத்ர சோகத்தினால் வருத்த முற்றவனாய்
பிள்ளையை நினைந்து அழுது கொண்டே சுவர்க்கத்தை அடைந்தார்

—————
ம்ருதே து தஸ்மின் பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர் த்விஜை꞉ || 33 ||

நியுஜ்ய மானோ ராஜ்யாய நைச்சத் ராஜ்யம் மஹா பல꞉ |

தசரத மஹா ராஜன் ஸ்வர்க்க லோகத்தை அடைந்த பின் அவனுக்கு மற்ற ஒரு பிள்ளையாகிய பரதன்
வசிஷ்டர் முதலிய பெரியோர்கள் இராச்சியத்தில் பட்டாபிஷேகம் பண்ணிக் கொள்ளும்படி நியமித்தாலும்
தாம் இராச்சியத்தை ஆள ஸமர்த்தராய் இருந்தும் அவர் அந்த ராஜ்யத்தை விரும்பவில்லை

————-

ஸ ஜகாம வனம் வீரோ ராம பாத ப்ரஸாதக

அந்த பரதன் பூஜ்யராகிய ஸ்ரீ ராகவனைப் ப்ரஸன்னராக்கி மீட்டுக் கொண்டு வருகைக்காக
சதுரங்க சேனையுடன் கூட அவன் இருக்கும் காட்டைக் குறித்துச் சென்றார்

——–

கத்வா து ஸ மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம் |
அயாசத் ப்ராதரம் ராமம் ஆர்ய பாவ புரஸ்க்ருத꞉ || 35 ||

பரதன் காட்டுக்குச் சென்று எல்லாரும் கொண்டாடும் படியான நல் ஒழுக்கம் யுடையராய்
வன வாஸத்தினால் மனத்தில் கலக்கம் அற்றவராய் சொன்ன சொல் தவறாதவராய்
தன்னுடைய தமையனான ஸ்ரீ ராகவனிடம் தனக்கு இஷ்டமானதைப் பிரார்த்தித்தார்

————

த்வமேவ ராஜா தர்மஜ்ஞ இதி ராமம் வசோ ऽப்ரவீத் |

அதாவது ஸ்ரீ ராகவனே நீர் தசரத மஹா ராஜனுக்கு மூத்த பிள்ளை யாகையாலே
நீரே இவ் ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று சொன்னார்

——–

ராமோऽபி பரமோதார꞉ ஸுமுகஸ் ஸுமஹாயஶா꞉ || 36 ||

ஸ்ரீ ராகவன் அடியார்கள் இரந்ததை எல்லாம் கொடுக்க வல்ல ஸ்வ பாவம் யுடையவராயினும்
அடியார்கள் இரப்பைக் கண்டு உகக்குமவராயினும்

———–

நசைச் சத் பிதுரா தேஶாத் ராஜ்யம் ராமோ மஹாபல꞉ |

பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம் தத்த்வா புன꞉ புன꞉ || 37 ||

நிவர்தயாமாஸ ததோ பரதம் பரதாக்ரஜ꞉ |

ஸ்ரீ ராகவன் ராஜ்யத்தில் தனக்குப் பதிலாகத் தன்னுடைய பாதுகைகளை வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்து
தன்னை விட்டுப் போக மாட்டாமல் அங்கே நிற்கிற பரதனை அநேக சமாதானங்களைச் சொல்லி அயோத்யைக்கு அனுப்பி விட்டார்

———–
ஸ காம மனவாப் யைவ ராமபாதா வுபஸ் ப்ருஶன் || 38 ||

நந்திக்ராமே ऽகரோத் ராஜ்யம் ராமாகமனகாங்க்ஷயா |

அந்த பரதன் தன் கோரிக்கையை அடையாமல் ஸ்ரீ ராமனுடைய பாதுகைகளை ப்ரதிதினம் சேவித்துக் கொண்டு
ஸ்ரீ ராகவன் வரும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு அயோத்யைக்கு அருகில் இருக்கிற
நந்திக் கிராமத்தில் இருந்து ராஜ்யத்தை நடத்தி வந்தார்

————-
கதே து பரதே ஶ்ரீமான் ஸத்ய ஸந்தோ ஜிதேந்த்ரிய꞉ || 39 ||

ராமஸ்து புனராலக்ஷ்ய நாகரஸ்ய ஜனஸ்ய ச |
தத்ராகமனமேகாக்ரோ தண்டகான் ப்ரவிவேஶ ஹ || 40 ||

பரதன் அயோத்யைக்குப் போன பின்பு பரதன் இவ்வளவு பிரார்த்தித்தும் தான் செய்த ப்ரதிஜ்ஜையை விடாமலும்
ராஜ்ய ஸூ கத்தில் மனம் சலியாமல் இருக்கிற பெரும் புகழை யுடையரான ஸ்ரீ ராகவன்
இந்த சித்ர கூடத்தில் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் வந்தார்கள்
ஆகையால் இனி இங்கு இருக்கக் கூடாது என்று ஆலோசித்து பிதாவின் சொல்லைப் பரிபாலனம்
செய்வதற்காக தண்டகாவனத்தில் பிரவேசித்தார்

————-

ப்ரவிஶ்ய து மஹாரண்யம் ராமோ ராஜீவலோசன꞉ |
விராதம் ராக்ஷஸம் ஹத்வா ஶரபங்கம் ததர்ஶ ஹ || 41 ||

ஸுதீக்ஷ்ணம் சாப்யகஸ்த்யம் ச அகஸ்த்ய ப்ராதரம் ததா |

செந் தாமரைக் கண்ணனான ஸ்ரீ ராகவன் அப் பெரும் காட்டில் புகுந்து அங்குள்ள விநோதங்களைப் பார்த்துக் களித்தவராய்
போகும் வழியில் வந்த விராதனன் என்னும் அசூரனைக் கொன்று அப்புறம் போய் சரபங்க மஹா முனியையும்
ஸூ தீஷணரையும் அகஸ்திய மஹா முனிவரையும் அவர் தம்பியாகிய ஸூ தர்சனரையும் பார்த்தார் –

———————
அகஸ்த்ய வசனாச்சைவ ஜக்ராஹைந்த்ரம் ஶராஸனம் || 42 ||

கட்கம் ச பரம ப்ரீதஸ்தூணீ சாக்ஷயஸாயகௌ |

அகஸ்தியருடைய நியமனத்தின் படி அவருடைய ஆஸ்ரமத்தில் வைத்து இருந்த இந்த்ர தனுஸ்ஸையும்
கத்தியையும் பாணங்களின் ஓய்வற்று எப்போதும் நிறைந்து இருக்கும் இரண்டு
அம்புறாத் துணிகளையும் ப்ரீதியுடன் எடுத்துக் கொண்டார்

————–
வஸதஸ் தஸ்ய ராமஸ்ய வனே வனசரை꞉ ஸஹ || 43 ||

ருஷயோ ऽப்யாகமன் ஸர்வே வதாயாஸுர ரக்ஷஸாம் |

ஸ்ரீ ராகவன் அந்த சரபங்க ஆஸ்ரமத்தில் இருக்கும் போது ருஷிகள் அசூர ராக்ஷஸர்களை
வதம் செய்ய வேண்டும் என்று இவரிடம் பிராத்திக்கைக்காக அங்கு வந்தார்கள்

—————

ஸ தேஷாம் ப்ரதி ஸூஸ்ராவ ராஜஸா நாம் ததா வனே

ஸ்ரீ ராகவன் அவர்கள் பிரார்த்தித்த படியே அரக்கற்களைக் கொல்லுகிறேன் என்று ப்ரதிஜ்ஜை செய்தார்

————

ப்ரதிஜ்ஞாதஶ்ச ராமேண வதஸ் ஸம்யதி ரக்ஷஸாம் |
ருஷீணாமக்னி கல்பானாம் தண்ட காரண்ய வாஸினாம் || 45 ||

அதாவது அக்னியோடு ஒத்த தேஜஸ்ஸை யுடையவராய் தண்டகவனத்தில் வாஸம் செய்கிற
ருஷிகளைக் குறித்து நான் யுத்தத்தில் ராக்ஷஸர்களைக் கொல்லுகிறேன் என்றார்

————-

தேன தத்ரைவ வஸதா ஜனஸ்தானனி வாஸினீ |
விரூபிதா ஶூர்பணகா ராக்ஷஸீ காம ரூபிணீ || 46 ||

ஸ்ரீ ராகவன் அவ் வனத்தில் வாஸம் செய்து கொண்டு இருக்கும் போது இஷ்டம் உள்ள வடிவை எடுக்க வல்லளாய்
ஜனஸ்தானத்தில் வாஸம் செய்கிற சூர்ப்பணகை என்கிற ராக்ஷஸியின் மூக்கை அறுத்து விட்டார்

————-

தத꞉ ஶூர்பணகா வாக்யாத் உத்யுக்தான் ஸர்வ ராக்ஷஸான் |
கரம் த்ரிஶிரஸம் சைவ தூஷணம் சைவ ராக்ஷஸம் || 47 ||

நிஜகான ரணே ராமஸ் தேஷாம் சைவ பதானுகான் |

பிறகு சூர்ப்பணகையின் சொல்லைக் கேட்டு சண்டைக்கு வந்த அரக்கர்களையும் அவர்களுக்குத் தலைவர்களான
கரன் தூஷணன் த்ரி சிரஸ்ஸூ என்பவர்களையும் அவர்களுடைய சேனையையும் ஸ்ரீ ராமன் யுத்தத்தில் கொன்றார்

——————-
வனே தஸ்மின்னிவஸதா ஜனஸ்தான நிவாஸினாம் || 48 ||

ரக்ஷஸாம் நிஹதான்யாஸன் ஸஹஸ்ராணி சதுர்தஶ |

அவ் வனத்தில் வாஸம் செய்கிற ஸ்ரீ ராமன் அந்த யுத்தத்தில் ஜனஸ்தானத்தில் இருக்கிற
பதினாறாயிரம் ராக்ஷஸர்களைக் கொன்றார்

————–
ததோ ஜ்ஞாதி வதம் ஶ்ருத்வா ராவண꞉ க்ரோத மூர்சித꞉ || 49 ||

ஸஹாயம் வரயாமாஸ மாரீசம் நாம ராக்ஷஸம் |

பின்பு ராவணன் கர தூஷணர்கள் மாண்டு போனதை சூர்ப்பணகை அறிவிக்கக் கேட்டு
வெகு சினம் உற்றவனாய் ஸ்ரீ ராமனுக்குத் தீங்கு விளைக்கக்காக மாரீசன் என்பவனைத்
தனக்குத் துணையாக வேண்டிக் கொண்டான்

—————–
வார்யமாண꞉ ஸுபஹுஶோ மாரீசேன ஸ ராவண꞉ || 50 ||

ந விரோதோ பலவதா க்ஷமோ ராவண தேன தே |

அந்த மாரீசன் ஓ இராவணா அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜனஸ்தான யுத்தத்தில் கேட்டாய் அன்றோ
இனி அப்பெரும் மிடுக்கரோடு எதிர்ப்பது உனக்கு உரியது அன்று என்று சொல்லி
ராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்

—————
அனாத்ருத்ய து தத் வாக்யம் ராவண꞉ கால சோதித꞉ || 51 ||

ஜகாம ஸஹ மாரீச꞉ தஸ் யாஶ்ரம பதம் ததா |

இயமனாலே உண்ட ராவணன் அம்மாரீச வசனத்தை சட்டை செய்யாமலே ஸ்ரீ ராகவன் வீற்று இருக்கும்
ஆஸ்ரமத்துக்கு மாரீசனைக் கூட்டிக் கொண்டு போனான்

—————-
தேன மாயாவினா தூரமபவாஹ்ய ந்ருபாத்மஜௌ || 52 ||

ஜஹார பார்யாம் ராமஸ்ய க்ருத்ரம் ஹத்வா ஜடாயுஷம் |

அங்கு அந்த மாரீசன் விசித்திரமான பொன் மான் உருவம் கொண்ட தன்னிடத்தில் ஆவலுற்றுப் பிடிக்க முயன்ற
ஸ்ரீ ராகவனையும் லஷ்மணனையும் கைக்கு அகப்படாமல் வெகு தூரம் இழுத்துக் கொண்டு போனான்
அந்த ராஜ குமாரர்கள் இல்லாத காலத்தில் இராவணன் புகுந்து ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு போகையில்
அவனிடத்தில் பரிந்து வந்த ஜடாயுவையும் மடித்து விட்டு அவளைத் தன்னிலங்கைக்கு எடுத்துக் கொண்டு போனான்

——————–
க்ருத்ரம் ச நிஹதம் த்ருஷ்ட்வா ஹ்ருதாம் ஶ்ருத்வா ச மைதிலீம் || 53 ||

ராகவ꞉ ஶோக ஸந்தப்தோ விலலாபாகுலேந்த்ரிய꞉ |

பிறகு இராகவன் வந்து சீதையைக் காணாமல் தேடிக் கொண்டு போகையில் குற்றுயிராய்
அடிபட்டு விழுந்து இருக்கிற ஜடாயுவைப் பார்த்து சீதையை ராவணன் எடுத்துக் கொண்டு போனதாக அவர்
சொல்லக் கேட்டு மிக்க வருத்த முற்றவராய்த் தயங்கி பிரலாபித்தார்

—————-
ததஸ்தேனைவ ஶோகேன க்ருத்ரம் தக்த்வா ஜடாயுஷம் || 54 ||

மார்கமாணோ வனே ஸீதாம் ராக்ஷஸம் ஸந்ததர்ஶ ஹ |
கபந்தம் நாம ரூபேண விக்ருதம் கோரதர்ஶனம் || 55 ||

பிறகு ஜடாயுவுக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்துப் பெரும் துன்பமுற்ற இராகவன் ஜடாயுவைத் தஹனம் செய்துவிட்டு
சீதையைத் தேடிக்கொண்டு போகையில் வழியில் பயங்கரமான உருவம் கொண்ட கபந்தன் என்ற அரக்கனைப் பார்த்தார்

சத்யேன லோகான் ஜயதி

———————

தம் நிஹத்ய மஹா பாஹு꞉ ததாஹ ஸ்வர்கதஶ்ச ஸ꞉ |
ஸ சாஸ்ய கதயாமாஸ ஶபரீம் தர்ம சாரிணீம் || 56 ||

ஶ்ரமணீம் தர்மனிபுணாமபிகச்சேதி ராகவ |

ஸோऽப்ய கச்சன் மஹாதேஜா꞉ ஶபரீம் ஶத்ரு ஸூதன꞉ || 57 ||

ஶபர்யா பூஜித꞉ ஸம்யக் ராமோ தஶரதாத்மஜ꞉ |

இராகவன் அந்தக் கபந்தனைக் கொன்று தஹனம் செய்தார் அவன் ஸ்வர்க்கம் சென்றான்

அந்த கபந்தன் ஸ்வர்க்கத்துக்குப் போகும் போது -ஓ ராகவன் இவ்வழியே சென்றால் அங்கு நல் ஒழுக்கம்
உடையவளாய் ஸந்யாஸ ஆஸ்ரமம் உள்ள ஒரு வேட்டுவ ஸ்த்ரீ இருக்கிறாள்
அவள் இருக்கும் இடத்துக்கு நீர் செல்லும் என்று சொன்னான்

————

பம்பா தீரே ஹநுமதா ஸங்கதோ வானரேண ஹ

இராகவன் அங்கு இருந்து சென்று பம்பை என்னும் ஸரஸ்ஸின் கரையில் திருவடியுடன் சேர்ந்தார்

ஹநுமதா என்ற பதத்தால் நமக்குத் புகலிடம் எது என்று வருந்தா நின்ற நிலையில்
விஜய ஸூசக வ்ரணத்தால் அடையாகமிட்ட திருமுகம் யுடையவன் சேர்க்கை யதேர்ச்சையாக ஏற்பட்டதே
தளர்ந்து ஆவாரார் துணை என்று இருக்க வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையுடன் சேர்க்கை கிட்டுவதே
செவ்வியான் ஒருவனுடன் கூடப்பெறுவதே
விக்ராந்தஸ் த்வம் சமர்த்தஸ் தவம் ப்ராஞ்ஞஸ் தவம் வானர உத்தம -என்று பிராட்டியும் கொண்டாடும்படியானவன்
பம்பா தீரே ஹநுமதா ஸங்கதோ வானரேண ஹ-வழி பறியுண்ட இடத்தில் தாய் முகம் காணப்பெறுவதே

————–

ஹனுமத் வசனாச்சைவ ஸுக்ரீவேண ஸமாகத꞉ஹ|

அந்த திருவடி சொற்படி ராகவன் ஸூ க்ரீவனுடன் நேசித்தார்

இவர் வார்த்தை கேட்ட அநந்தரமே இவர் அபீஷ்டம் ஸித்தித்த படி
ஸஹாய சம்பத் உண்டாகப் பெற்றதே – -ஹ்ருஷ்டராகிறார் ருஷி

———–
ஸுக்ரீவாய ச தத் ஸர்வம் ஶம்ஸத் ராமோ மஹா பல꞉ || 59 ||

ஆதிதஸ் தத்யதா வ்ருத்தம் ஸீதயாஶ்ச விஶேஷத꞉ |

பலசாலியாகிய ராகவன் தான் பிறந்தது முதல் நடந்தவற்றை ஸூ க்ரீவனுக்குச் சொல்லி
ஸீதா தேவியின் விஷயமாக நடந்தவற்றை பரக்கச் சொன்னார்

————–
ஸுக்ரீவஶ் சாபி தத் ஸர்வம் ஶ்ருத்வா ராமஸ்ய வானர꞉ || 60 ||

சகார ஸக்யம் ராமேண ப்ரீதஶ் சைவாக்னி ஸாக்ஷிகம் |

ஸூக்ரீவனும் ஸ்ரீ ராமனுடைய வ்ருத்தாந்தங்களை எல்லாம் கேட்டு மகிழ்ச்சி உற்றவனாக
அக்னி முன்பாக அவருடன் ஸ்நேஹம் செய்தான்

ஸுக்ரீவஶ்–ராமேண ப்ரீதஶ்–ஏக கண்டராய் வ்ருத்த கீர்தநம் செய்தனர்

—————–
ததோ வானர ராஜேன வைரானு கதனம் ப்ரதி || 61 ||

ராமாயா வேதிதம் ஸர்வம் ப்ரணயாத்து꞉கிதேன ச |

பிறகு வானர ராஜனான ஸூக்ரீவன் வாலிக்கும் தனக்கும் நேர்ந்த விரோதத்தை வ்ருத்தாந்தம் கேட்ட ஸ்ரீ ராகவனுக்கு
விஸ்வாஸத்தால் கண்ணீர் விட்டுக் கொண்டே நடந்தவற்றைச் சொன்னான்

—————
ப்ரதிஜ்ஞாதம் ச ராமேண ததா வாலி வதம் ப்ரதி || 62 ||

வாலினஶ்ச பலம் தத்ர கதயாமாஸ வானர꞉ |

அப்போது ஸ்ரீ ராகவன் தான் வாலியைக் கொல்வதாக ப்ரதிஜ்ஜை பண்ணினார்
அவருக்கு ஸூக்ரீவன் வாலியினுடைய பலத்தை எல்லாம் அறிவித்தான்

—————–
ஸுக்ரீவ꞉ ஶங்கிதஶ் சாஸீன்னித்யம் வீர்யேண ராகவே || 63 ||

இந்த இராகவன் வாலியோடு ஒத்த பலம் உள்ளவரா அன்றோ என்று ஸூக்ரீவன் ஸம்சயித்தான்

————–

ராகவ꞉ ப்ரத்யயார்தம் து துந்துபே꞉ காயமுத்தமம் |
தர்ஶயாமாஸ ஸுக்ரீவோ மஹா பர்வத ஸன்னிபம் || 64 ||

இராகவனுடைய பலத்தை அறிகைக்காக ஸூ க்ரீவன் அங்கு பெரு மலை போல் விழுந்து இருந்த
துந்துபி யினுடைய வலிய சரீரத்தைக் காட்டி இதை வாலி தனது காலின் பெரு விரலினால்
தூக்கி எறிவான் என்றான் -வலிய என்றது ஜீவன் அற்ற எலும்புக் கூடு

—————–

உத்ஸ்மயித்வா மஹா பாஹு꞉ ப்ரேக்ஷ்ய சாஸ்தி மஹா பல꞉ |
பாதாங்குஷ்டேன சிக்ஷேப ஸம்பூர்ணம் தஶ யோஜனம் || 65 ||

மஹா பலசாலியான இராகவன் அவ்வெலும்பைப் பார்த்து இது எவ்வளவு என்று அலஷ்யமாகக்
காலின் பெரு விரலினால் எடுத்துப் பத்து யோஜனைக்கு அப்புரம் போய் விழும்படி எறிந்தார்

வாலி காலால் எறிந்தான்
பெருமாள் பாத அங்குஷ்டத்தால் எறிந்தார்
வாலி 200 வில் தூரம் எற்றினான்
பெருமாள் 10 யோஜனை தூரம் எற்றினார்

————-

பிபேத ச புன꞉ ஸாலான் ஸப்த ஏகேன மஹேஷுணா |
கிரிம் ரஸா தலம் சைவ ஜனயன் ப்ரத்யயம் ததா || 66 ||

வெகு நாளாய் உலர்ந்து கிடக்கிற அவ்வரக்கனுடைய காயத்தைத் தூக்கி எறிந்த மாத்திரத்தில்
இவர் வாலியைக் கொல்ல வல்லவரோ என்று ஸூக்ரீவன் மனத்தில் சங்கித்தபடியை அறிந்து
இன்னும் அவனுக்கு நம்பிக்கை உண்டாக்குகைக்காக ஒரு பெரிய பாணத்தினால் ஏழு மராமரங்களை எய்தார்
அந்தப் பாணம் அந்த மரங்களையும் அருகில் இருந்த மலையையும் பிளந்து பூமியுள்ளே சென்று
கீழ் லோகங்களில் ஆறாவது ஆகிற ரஸா தலம் என்கிற லோகத்தையும் பிளந்து விட்டது –

ஏகேன மஹேஷுணா–கைக்கு எட்டிய தோர் அம்பாலே

—————

தத ப்ரீத மநாஸ் தேந விஸ்வஸ் தஸ் ஸ மஹா கபி
கிஷ்கிந்தாம் ராம ஸஹிதோ ஜகாம ச குஹாம் ததா  
|| 67 ||

அதைக் கண்ட ஸூக்ரீவன் இவர் வாலியைக் கொல்ல வல்ல பலசாலி தான் என்று நம்பிக் களிப்புற்றவனாய்
அப்பொழுது இராகவனைக் கூட்டிக் கொண்டு வாலியைக் கொல்லுகைக்காக
மலைக்குள் இருக்கிற கிஷ்கிந்தைக்குப் போனான்

————

ததோऽகர்ஜத்தரிவர꞉ ஸுக்ரீவோ ஹேம பிங்கள꞉ |
தேன நாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஶ்வர꞉ || 68 ||

பிறகு ஸூ க்ரீவன் ஸந்தோஷத்தினால் புகழ் பெற்று இனி நாம் வானர அதிபதி யாவோம்
என்று நிச்சயித்துக் கொண்டு பெரும் கூச்சல் இட்டான்
அக் கூக் குரலைக் கேட்டு வாலி கிஷ்கிந்தையில் நின்றும் வெளிக் கிளம்பினான்

————-

அனுமான்ய ததா தாராம் ஸுக்ரீவேண ஸமாகத꞉ |
நிஜகான ச தத்ரைனம் ஶரேணைகேன ராகவ꞉ || 69 ||

இப்பொழுது நீர் யுத்தத்திற்கு போவது உசிதம் அன்று என்று தகைந்த தனது மனைவியான தாரையை
நல் வார்த்தை சொல்லிச் சமாதானப் படுத்தித் தான் வந்து ஸூ க்ரீவனுடன் யுத்தம் செய்தான்
அப்போர் களத்தில் ஸ்ரீ ராகவன் ஓர் அம்பினால் வாலியை முடித்து விட்டார்

—————-

தத꞉ ஸுக்ரீவ வசனாத் ஹத்வா வாலினமாஹவே |
ஸுக்ரீவமேவ தத் ராஜ்யே ராகவ꞉ ப்ரத்யபாதயத் || 70 ||

ஸூ க்ரீவன் கேட்டுக் கொண்ட படியே ஸ்ரீ ராகவன் வாலியை யுத்தத்தில் முடித்து
அந்த ராஜ்யத்தையும் கொடுத்து ஸூ க்ரீவனுக்கு முடி சூட்டினார்

—————

ஸ ச ஸர்வான் ஸமானீய வானரான் வானரர்ஷப꞉ |
திஶ꞉ ப்ரஸ்தாப யாமாஸ தித்ருக்ஷுர் ஜனகாத்மஜாம் || 71 ||

வானர அதிபதியாகிய அந்த ஸூ க்ரீவன் எல்லா வானரர்களையும் திரட்டிக் கொண்டு வந்து
ஸ்ரீ சீதா தேவியைத் தேடிப்பிடிக்கைக்காக எல்லாத் திக்குகளிலும் அனுப்பினான்

—————–

ததோ க்ருத்ரஸ்ய வசனாத் ஸம்பாதேர் ஹனுமான் பலீ |
ஶதயோஜன விஸ்தீர்ணம் புப்லுவே லவணார்ணவம் || 72 ||

பின்பு தென் திக்கை நோக்கிச் சென்ற திருவடி ஸ்ரீ சீதாப் பிராட்டி இலங்கையில் இருப்பதை ஸம்பாதி சொல்லக் கேட்டு
அங்கு போகக் கருதி வழியில் நூறு காதம் பரந்து இருந்த கடலைத் தாண்டினார்

————-

தத்ர லங்காம் ஸமாஸாத்ய புரீம் ராவண பாலிதாம் |
ததர்ஶ ஸீதாம் த்யாயந்தீம் அஶோக வனிகாம் கதாம் || 73 ||

அக் கரையில் ராவணன் பரிபாலித்து வருகிற இலங்கா புரியை அடைந்து அங்கு
அசோகா வனத்தில் எப்போதும் ஸ்ரீ ராமனையே த்யானித்துக் கொண்டு இருக்கிற
ஸ்ரீ ஸீதா தேவியைப் பார்த்தார்

—————-

நிவேதயித்வாऽபிஜ்ஞானம் ப்ரவ்ருத்திம் ச நிவேத்ய ச |
ஸமாஶ்வாஸ்ய ச வைதேஹீம் மர்தயாமாஸ தோரணம் || 74 ||

ஸ்ரீ சீதா தேவிக்கு ஸ்ரீ ராம நாமாங்கிதமான கணையாழியைக் கொடுத்து
ஸ்ரீ ராகவன் சீதாதேவியைப் பெறுகைக்கு செய்யும் முயற்சியையும் அறிவித்து
சமாதானம் சொல்லி பிறகு இலங்கையின் கோட்டை வாசலை இடித்தான்

————-

பஞ்ச ஸேனாக்ரகான் ஹத்வா ஸப்த மந்த்ரி ஸுதானபி |
ஶூரமக்ஷம் ச நிஷ்பிஷ்ய க்ரஹணம் ஸமுபாகமத் || 75 ||

அதைக் கேட்ட ராவணனா; ஏவுண்டு வந்த பஞ்ச சேனாதிபர்களையும் ஏழு மந்திரி குமாரர்களை
அக்ஷனையும் கொன்று விட்டு பிறகு இந்திரஜித் பிரயோகித்த ப்ரஹ்மாஸ்திரத்தினால் கட்டுண்ட

————–

அஸ்த்ரேணோன் முக்தமாத்மானம் ஜ்ஞாத்வா பைதாமஹாத் வராத் |
மர்ஷயன் ராக்ஷஸான் வீரோ யந்த்ரிணஸ் தான்ய த்ருச்சயா || 76 ||

ஒரு முயற்சி இன்றியே பிரம தேவனுடைய வரத்தினால் தான் கட்டுண்ட அந்த அஸ்திரத்தின்
கட்டு விடுபட்டுப் போனதை அறிந்த திருவடி தன்னைக் கட்டி இழுக்கிற
அரக்கர்களுடைய அபராதங்களைப் பொறுத்துக் கொண்டார்

——————

ததோ தக்த்வா புரீம் லங்காம் ருதே ஸீதாம் ச மைதிலீம் |
ராமாய ப்ரியமாக்யாதும் புனராயான் மஹாகபி꞉ || 77 ||

பிறகு ஸீதை இருக்கும் இடம் தவிர மற்ற இலங்கையை முழுதும் கொளுத்தி விட்டு
ஸ்ரீ ராமனுக்கு ஸ்ரீ சீதாப் பிராட்டியாரைக் கண்ட செய்தியை அறிவிக்கத் திரும்பி வந்தார்

——————–

ஸ்ரீ ஸங்க்ஷேப ஸுந்தர காண்டம்

ததோ ராவணநீதாயா: ஸீதாயா: சத்ரு கர்சன:
இயேஷ பதமன் வேஷ்டும் சாரணாசரிதே பதி –1.1 / 19

யதா ராகவ நிர்முக்த: சர: ச்வஸனவிக்ரம
கச்சேத்தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணபாலிதாம் –1.39 / 20

ப்ரவிச்ய நகரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர:
சக்ரே(அ)த பாதம் ஸவ்யஞ்ச சத்ரூணாம் ஸ து மூர்த்தனி – 4.3 / 21

ப்ரவிசந் நிஷ்பதம்ச்சாபி ப்ரபதந்நுத் பதந்நபி
ஸர்வமப்யவகாசம் ஸ விச்சார மஹாகபி: — 12.1 / 22

த்ருஷ்டமந்த: புரம் ஸர்வம் த்ருஷ்டா ராவண யோஷித:
ந ஸீதா த்ருச்யதே ஸாத்த்வீ வ்ருதா ஜாதோ மம ச்ரம: –12.6 / 23

அசோகவநிகா சேயம் த்ருச்யதே யா மஹாத்ருமா
இமாமகமிஷ்யாமி ந ஹீயம் விசிதா மயா — 13.55 / 24

அசோகவநிகாயாம் து தஸ்யாம் வானரபுங்கவ:
ததோ மலினஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம் — 15.18 / 25

உபவாஸக்ருசாம் தீனாம் நி:ச்வஸந்தீம் புன: புன:
ததர்ச சுக்லபக்ஷாதௌ சந்த்ரரேகாமிவாமலாம் — 15.19 / 26

தாம் ஸமீக்ஷ்ய விசாலாக்ஷீ மதிகம் க்ருசாம் தர்க்கயாமாஸ ஸீதேதி காரணை ருபபாதிபி: –15.26 / 27

அஸ்யா தேவ்யா மனஸ்தஸ்மிம் ஸ்தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம்
தேநேயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி– 15.51 / 28

ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட: பவனஸம்பவ:
ஜகாம மனஸா ராமம் ப்ரசசம்ஸ ச தம் ப்ரபும் — 15.54 / 29

ராஜா தசரதோ நாம ரத்குஞ்ஜர வாஜிமான்
தஸ்ய புத்ர: ப்ரியோ ஜ்யேஷ்ட ஸ்தாராதிப நிபானன — 31.2-6 / 30

ராமோ நாம விசேஷஜ்ஞ: ச்ரேஷ்ட: ஸர்வ தனுஷ்மதாம்
தஸ்ய ஸத்யாபிஸந்தஸ்ய வ்ருத்தஸ்ய வசனாத் பிது:
ஸபார்ய: ஸஹ ச ப்ராத்ரா வீர: ப்ரவ்ராஜிதோ வனம் –31.6-8 / 31

ததஸ்த்வமர்ஷாபஹ்ருதா ஜானகீ ராவணேன து
ஸ மார்க்கமாணஸ் தாம் தேவீம் ராம: ஸீதா மநிந்திதாம்
ஆஸஸாத வனே மித்ரம் ஸுக்ரீவம் நாம வாரணம் — 31.10-11 / 32

ஸுக்ரீவேணாபி ஸந்திஷ்டா ஹரய: காமரூபிண:
திக்ஷு ஸர்வாஸு தாம் தேவீம் விசின்வந்தி ஸஹஸ்ரச:– 31.13 / 33

அஸ்யா ஹேதோர் விசாலாக்ஷ்யா: ஸாகரம் வேகவான் ப்லுத:
யதா ரூபாம் யதா வர்ணாம் யதா லக்ஷ்மீஞ்ச நிச்சிதாம்
அச்ரௌஷம் ராகவஸ்யாஹம் ஸேயமாஸாதிதா மயா — 31.14-15 / 34

ஜானகீ சாபி தச்ச்ருத்வா விஸ்மயம் பரமம் கதா –31.16
ஸா ததர்ச கபிம் தத்ர ப்ரச்ரயம் ப்ரியவாதினம் –32.2 / 35

தாமப்ரவீன் மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ: — 33.2
அஹம் ராமஸ்ய ஸந்தேசாத் தேவி தூதஸ்தவாகத: — 34.2 / 36

வைதேஹி குசலீ ராமஸ்த்வாம் ச கௌசலமப்ரவீத்
லக்ஷ்மணச்ச மஹாதேஜா பர்த்துஸ்தே(அ)னுசர: ப்ரிய: — 34.4 / 37

ஸா தபோ குசலம் தேவீ நிசம்ய நரஸிஹ்மயோ
ப்ரீதி ஸம்ருஷ்ட ஸர்வாங்கீ ஹனுமந்த மதாப்ரவீத் — 34.5 / 38

கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மா
ஏதி ஜீவந்த மானந்தோ நரம் வைஷ சதாதபி — 34.6 / 39

பூய ஏவ மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ:
அப்ரவீத் ப்ரச்ரிதம் வாக்யம் ஸீதாப்ரத்யய காரணாத்
ராம நாமாங்கிதஞ்சேதம் பச்ய தேவ்யங்குலீயகம்
ப்ரத்ய யார்த்தம் தவாநீதம் தேந தத்தம் மஹாத்மனா — 36.1-3 / 40

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து: கரவிபூஷணம்
பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜானகீ முதிதா (அ)பவத் –36.4 / 41

ததோ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம்
ப்ரதேயோ ராகவாயேதி ஸீதா ஹனுமதே ததௌ –38.6-7 / 42

ததஸ்து ஹனுமான் வீரோ பபஞ்ஜ ப்ரமதாவனம்
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண:
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
அர்த்தயித்வா புரீம் லங்கா மபிவாத்ய ச மைதிலீம்
ஸம்ருத்தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் — 43.9-11 / 43

வேஷ்டயந்தி ஸ்ம லாங்கூலம் ஜீர்ணை: கார்ப்பாஸகை: படை:
தைலேன சாபிஷிச்யாத தே(அ)க்னிம் தத்ராப்யபாதயத் — 53.7 / 44

தீப்யமானே ததஸ்தஸ்ய லாங்கூலாக்ரே ஹனூமத:
ராக்ஷஸ்யஸ்தா விரூபாக்ஷ்ய: சம்ஸுர் தேவ்யாஸ்ததப்ரியம் — 53.23 / 45

மங்கலாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே:
உபதஸ்தே விசாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்
யத்யஸ்தி பதி சுச்ரூஷா யத்யஸ்தி சரிதம் தப:
யதி வாப்யேகபத்னீத்வம் சீதோ பவ ஹனூமத: — 53.26-27 / 46

ஹனூமதா வேகவதா வானரேண மஹாத்மனா
லங்காபுரம் ப்ரதக்தம் தத் ருத்ரேண த்ரிபுரம் யதா– 54.32 / 47

ஏவமாச்வாஸ்ய வைதேஹீம் ஹனுமான் மாருதாத்மஜ:
கமனாய மதிம் க்ருத்வா வைதேஹீமப்ப்யவாதயத்
தத: ஸ கபிசார்த்தூல: ஸ்வாமி ஸந்தர்சனோத்ஸுக:
ஆருரோஹ கிரிச்ரேஷ்ட மரிஷ்ட மரிமர்த்தன –56.25 / 48

நிபபாத மஹேந்த்ரஸ்ய சிகரே பாதபாகுலே –57.29
த்ருஷ்டா ஸீதேதி விக்ராந்த: ஸம்க்ஷேபேண ந்யவேதயத் — 57.35 / 49

ப்ரீதிமந்தஸ்ததஸ்ஸர்வே வாயு புத்ர புரஸ்ஸரா:
மஹேந்த்ராத்ரிம் பரித்யஜ்ய புப்லுவு: ப்லவகர்ஷபா: — 61.2 / 50

நிபேதுர் ஹரிராஜஸ்ய ஸமீபே ராகவஸ்ய ச — 64.38

ஹனுமாம்ச்ச மஹாபாஹு: ப்ரணம்ய சிரஸா தத:
நியதா மக்ஷதாம் தேவீம் ராகவாய ந்யவேதயத் — 64.39 / 51

தௌ ஜாதாச்வாஸௌ ராஜபுத்ரௌ விதித்வா தச்சாபிஜ்ஞானம் ராகவாய ப்ரதாய
தேவ்யா சாக்க்யாதம் ஸர்வ மேவானுபூர்வ்யாத் வாசா ஸம்பூர்ணம் வாயுபுத்ர: சசம்ச:–65.26 / 52

—————–

ஸோऽபிகம்ய மஹாத்மானம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம் |
ந்யவேத யதமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்த்வத꞉ || 78 ||

புத்திமானான அந்த திருவடி ஸ்ரீ ராமனிடம் வந்து அவரை ப்ரதக்ஷிணம் செய்து
கண்டேன் ஸீதையை என்று சொல்லி அங்கே நடந்தவற்றைச் சொன்னார்

————-

தத꞉ ஸுக்ரீவ ஸஹிதோ கத்வா தீரம் மஹோததே꞉ |
ஸமுத்ரம் க்ஷோப யாமாஸ ஶரைராதித்ய ஸன்னிபை꞉ || 79 ||

பின்பு ஸ்ரீ ராமன் ஸூக்ரீவனுடன் கடற்கரையை அடைந்து அங்கு அணை செய்யக் கருதி வருணனை வேண்டிக் கொள்ள
அவன் வாராமையாலே சினமுற்று அக் கடலை பாணங்களினால் வியாகுலம் செய்து விட்டார்

ஶரைராதித்ய ஸன்னிபை--தேஜஸ் பதார்த்தங்களில் தலையான ஆதித்யனைச் சொன்னதால் தீப்த பாவக சங்காஸை -என்கிறபடி மற்றவர்களையும் அதிசயித்த படி

ஹனுமார் திரும்ப வந்து சீதாதேவியுடைய நிலைமையை சொல்லும்போது, சீதாதேவி வார்த்தைகளையே சொல்றார்.

இமம்ʼ ச தீவ்ரம்ʼ மம ஶோக வேக³ம்ʼ ரக்ஷோபி⁴ரேபி⁴꞉ பரிப⁴ர்த்ஸனம்ʼ ச.
ப்³ரூயாஸ்து ராமஸ்ய க³த꞉ ஸமீபம்ʼ ஶிவஶ்ச தே(அ)த்⁴வாஸ்து ஹரி ப்ரவீர||

ஹே ஹனுமான், என்னுடைய தீவிரமான சோகத்தையும், ராக்ஷசிகள், ராவணன் எனக்கு பண்ணும் கொடுமைகளையும் ராமரிடத்தில் சொல்லு. என்னை இந்த கஷ்டத்தில் இருந்து சீக்கிரமா வந்து மீட்க சொல்லு.உனக்கு மங்களம் உண்டாகட்டும், அப்டின்னு அந்த வார்தைகளையே சொல்லி

ஸர்வதா² ஸாக³ரஜலே ஸந்தார: ப்ரவிதீ⁴யதாம்ʼ |
எப்படி கடலை தாண்டறதுன்னு உடனடியா ஒரு வழி பார்க்கணும். உடனே போகணும்னு ஹனுமார், ராமரை அந்த கார்யத்துல தள்ளறார்.
சுக்ரீவன் சொல்றான்.ஹே ராமா, எவ்ளோ மஹாமதி நீ, எவ்ளோ பெரிய புத்திமான். இப்போ போய் நீங்க தளரலாமா?எங்க சீதை இருக்கான்னு தெரியாம இருந்த போது தளர்ச்சியா இருந்தோம். இப்போ சீதை இருக்கற இடம் தெரிஞ்சாச்சு எப்படியாவது மீட்டுடலாம். நீங்க கிளம்பரத்துக்கு உத்தரவு கொடுங்கோ

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே .
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||
அப்டின்னு ராமர் வாக்கு குடுக்கறார். அந்த வாக்கு அன்னிக்கு விபீஷணனுக்கு மட்டுமில்ல. இன்னிக்கும் , என்னிக்கும் நமக்கும் இருக்கு. ராமா காப்பாத்துனு சொன்னா போறும். நமஸ்காரம் பண்ணா போறும்.

ஆபதா³ம் அப ஹர்தா²ரம்ʼ தா³தாரம்ʼ ஸர்வ ஸம்பதா³ம்ʼ |
லோகாபி⁴ராமம்ʼ ஶ்ரீராமம்ʼ பூ⁴யோ பூ⁴யோ நமாம்யஹம் ||
அப்டின்னு ராமரை நமஸ்காரம் பண்ணா, எல்லா ஆபத்துகளையும் விலக்கி, எல்லா சம்பத்துக்களையும் கொடுப்பார். விபீஷணனுக்கு அங்கேயே சமுத்திர ஜலத்தை வெச்சு லங்கைக்கு ராஜாவா பட்டாபிஷேகம் பண்ணிடறார்.

———————

தர்ஶயாமாஸ சாத்மானம் ஸமுத்ர꞉ ஸரிதாம் பதி꞉ |
ஸமுத்ர வசனாச் சைவ நலம் ஸேதுமகாரயத் || 80 ||

பின்பு சமுத்திர ராஜன் தனது மனைவிகளுடன் ஸ்ரீ ராமனிடம் வந்தான்
அந்த சமுத்திர ராஜனின் உத்தரவுப்படி நலன் என்பவனைக் கொண்டு கடலில் அணை கட்டினார்

ஐந்து நாள்ல 100 யோஜனை நீளம் 10 யோஜனை அகலம் அப்படிங்கற ஆஸ்ச்சர்யமான, கடல் மேல பாலம்ங்கற, இனிக்கும் scienceல கூட பண்ணல, அந்த மாதிரி ஆஸ்ச்சர்யமான காரியத்தை ராமர் பண்ணறார். முதல் நாள் 14 யோஜனை, அப்புறம் 20, அப்புறம் 21, அப்புறம் 22, அப்புறம் 23 யோஜனை இப்டி அஞ்சு நாள்ல பாலத்தை கட்டி லங்கைக்கு போய் சேரறா.

தேன க³த்வா புரீம்ʼ லங்காம்ʼ ” – அந்த 100 யோஜனை பாலத்துல ராமர் வானரப்படையோடு லங்கைக்கு போய் சேர்ந்தார். இந்த சங்க்ஷேப ராமாயணத்துல, ” ஹத்வா ராவணமாஹவே “, யுத்தத்தில் ராவணனை வதம் பண்ணார் அப்டின்னு 20 வது சர்கதுலேந்து 111வது சர்க்கம் யுத்த காண்டத்துக்கு ஒரு jump.

இந்திரஜித் கோபத்துல மறைஞ்சிருந்து ராம லக்ஷ்மணா மேல நாக பாசத்தை போடறான். எல்லா படையையும் மறைஞ்சிருந்து அடிக்கிறான். எல்லாரும் தவிக்கறா. நாக பாசத்துல ராம லக்ஷ்மணாள் விழுந்து இருக்கறத பாத்து எல்லாருமே ரொம்ப சோர்வடையறா. புஷ்பக விமானத்துல சீதையை கொண்டு வந்து காமிக்க சொல்றான் ராவணன். சீதையும் பாத்து புலம்பி அழறா. ராமர் ஒரு நிமிஷம் மூர்ச்சை தெளிஞ்சு எழுந்து, லக்ஷ்மணன் விழுந்து கிடக்கறத பாத்து அழறார். ரொம்ப வருத்தப்படும்போது கருட பகவான் வரார். கருட பகவான் வந்த ஒடனே அந்த நாகங்கள் எல்லாம் போய்டறது. அவர் வந்து அவாளை தடவி குடுத்தவுடனே, அவா மின்ன விட ரெண்டு மடங்கு சக்தியும் , தேஜஸும் , பலமும் ஆயிடறா. கருட பகவான் சொல்றார்.

ஶூராணாம் ஶுத்³த⁴ பா⁴வானாம் ப⁴வதாம் ஆர்ஜவம் ப³லம் ||
ராக்ஷஸர்கள் சூழ்ச்சி பண்ணுவார்கள், ஆனால் உங்களுடைய சத்தியமும், நேர்மையும் தான் உங்களுக்கு பலம்.
கவலைப்படாதே, நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் . சீதையை மீண்டும் அடைவீர்கள்

த⁴ர்மாத்மா ஸத்யஸந்த⁴ஶ்ச ராமோ தா³ஶரதி²ர்யதி³ ||
பௌருஷே சாப்ரதித்³வந்த்³வஸ்ததே³னம்ʼ ஜஹி ராவணிம் |
என்னுடைய அண்ணா தசரத குமாரர் ராமர், சத்திய சந்தர் தர்மாத்மா என்பது உண்மையானால், இந்த அம்பு ராவணனுடைய பிள்ளை இந்திரஜித்தை கொல்லட்டும்னு போடறான், இந்திரஜித் தலை கீழ விழறது. அப்படி அந்த ராம நாமத்துக்கு அவ்ளோ மஹிமை. சத்தியமும் , தர்மமும் ஜெயிக்கும் அப்படிங்கறது ராமாயாணத்துடய முக்கியமான message, முக்கியமான செய்தி.

———————

தேன கத்வா புரீம் லங்காம் ஹத்வா ராவணமாஹவே |
ராமஸ் ஸீதாமனு ப்ராப்ய பராம் வ்ரீடா முபாகமத் || 81 ||

அவ் வணையின் வழியே இலங்கையில் சென்று போர் களத்தில் ராவணனைக் கொன்று சீதையை அடைந்து
அநந்தரம் தான் பிறர் அகத்தில் இருந்த இவளை எப்படி அங்கீ கரிப்போம் என்று வெட்கித்து இருந்தார்

மரணாந்தாணி வைராணி ” – வைரமெல்லாம் மரணம் வரைக்கும் தான்-மண்டோதரி வந்து, நான் உன்னோட எவ்ளோ சந்தோசமா ஆடை ஆபரணம் எல்லாம் அணிந்து புஷ்பக விமானத்துல சுத்தி இருக்கோம், அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லாம போயிடுத்தே. நான் எவ்ளோ சொன்னேன் , விபீஷணன் எவ்ளோ சொன்னான்.

ஶுப⁴க்ருʼச்சு²ப⁴மாப்னோதி பாபக்ருʼத்பாபமஶ்னுதே |
விபீ⁴ஷண꞉ ஸுக²ம்ʼ ப்ராப்தஸ்த்வம்ʼ ப்ராப்த꞉ பாபமீத்³ருʼஶம் ||
நல்லது பண்றவன் நல்லதை அடைவான். கெட்டது பண்ணா கெட்டதுதான் விளையும். விபீஷணன் க்ஷேமத்தை அடைந்தான் , நீ இந்த மாதிரி கோரமான வதத்தை அடைஞ்சியே அப்டின்னு பொலம்பறா .

இவனுக்கு நான் ஸம்ஸ்காரம் பண்ணா ஜனங்கள் என்னை வெறுப்பாளோ அப்டின்னு. அதனால நான் இவனுக்கு ஸம்ஸ்காரம் பண்ண விரும்பலை அப்டின்னு சொல்றான். அப்போ ராமர் நீ பண்ணலேன்னா நான் பண்ணுவேன் ” மரணாந்தாணி வைராணி… த்வம் யஷோ பாக் பவிஷ்யதி” — உனக்கு புகழ் ஏற்படும். நீ ஸம்ஸ்காரம் பண்ணு அப்டின்னு சொல்றார்.
அப்புறம் ப்ராஹ்மணர்களுக்கு என்ன வேத மந்த்ராம் எல்லாம் உண்டோ அதுப்படி விபீஷணன், ராவணனுக்கு ஸம்ஸ்காரம் பண்ணறான்.

பாபானாம்ʼ வா ஶுபா⁴னாம்ʼ வா வதா⁴ர்ஹாணாம்ʼ ப்லவங்க³ம ||
கார்யம்ʼ காருண்யமார்யேண ந கஶ்சின்னாபராத்⁴யதி |

பாவம் பண்ணவாளா இருந்தாலும் சரி, வதத்துக்கு உரியவாளா இருந்தாலும் சரி.
கார்யம் கருணம் ஆர்யேன ” – பெரியவாளா இருக்கறவா மன்னிக்கணும். அவா இராவணன் பேச்சை கேட்டுண்டு பண்ணா. இப்போ ராவணன் இல்ல. இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டா, மன்னிச்சுடுனு சொல்றா. அப்புறம் சரிம்மான்னு சொல்லிடறார் ஹனுமார்.

—————

தாமுவாச ததோ ராம꞉ பருஷம் ஜனஸம்ஸதி |
அம்ருஷ்யமாணா ஸா ஸீதா விவேஶ ஜ்வலனம் ஸதீ || 82 ||

அநந்தரம் எல்லோரும் சீதாப்பிராட்டியாரை பதி விரதை என்று நம்புவதற்காக ஜனக்கூட்டத்தின் நடுவில்
இராகவன் சீதையைப் பார்த்து நீ அக்னி பிரவேசம் பண்ண வேண்டும் என்று கொடூரமாக மொழிந்தார்
ஸீதா தேவியார் அச் சொல்லைப் பொறுக்க மாட்டாதவளாய் அக்னியில் குதித்தாள்

————–

ததோऽக்னிவசனாத்ஸீதாம் ஜ்ஞாத்வா விகதகல்மஷாம் |
பபௌ ராமஸ் ஸம் ப்ரஹ்ருஷ்ட꞉ பூஜிதஸ் ஸர்வதைவதை꞉ || 83 ||

பிறகு இவள் மஹா பதி விரதை என்று அக்னி தேவன் சொல்லக் கேட்டு ஸீதா தேவியை எவ்விதத்திலும்
தோஷம் அற்றவளாக அறிந்து மிகவும் ஸந்தோஷித்தார்
அப்பொழுது தேவர்கள் இவரைக் கொண்டாடினர்

கண்டேன் சீதையை என்று கேட்டு ஹ்ருஷ்டரானார்
பையலைக் கொன்று விபீஷண ஆழ்வானுக்கு முடி சூட்டி ப்ரஹ்ருஷ்டரானார்
இப்போது ஸம் ப்ரஹ்ருஷ்டரானார்-வடிவிலே தொடை கொள்ளலாம் படி திருமேனி மிகவும் புகரிட்டு –திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் ஆனார்

எல்லா தேவர்களும் பிரம்மா , அக்னி , இந்திரன் , பரமேஸ்வரன் எல்லாரும் காட்சி கொடுத்து, ஹே ராமா நீ யாருன்னு உணரவில்லையா, நீ ஸாக்ஷாத் விஷ்ணு பகவான், சீதாதேவி லக்ஷ்மிதேவி அப்டின்னவுடனே ராமர் சொல்றார்,

ஆத்மானம்ʼ மானுஷம்ʼ மன்யே ராமம்ʼ த³ஶரதா²த்மஜம்
நான் என்னை தசரத குமாரனான ராமராக அறிகிறேன் அப்படின்னு சொன்னபோது,இல்ல ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் பண்ணக்கூடிய ஜகத் பரிபாலனம் பண்ணக்கூடிய விஷ்ணு பகவானே நீதான் அப்படின்னு ப்ரஹ்மா ஸ்தோத்ரம் பண்ணறார். அந்த ப்ரஹ்ம ஸ்துதியோட முடிவுல

அமோகம் தர்ஷனம் ராமா நச மோக தவஸ்தவ: |
அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச ஏ நரா: ||”

அப்படின்னு உன்னுடைய தரிசனமோ, உன்கிட்ட பண்ணற ஸ்தோத்திரமோ, உன்கிட்ட பண்ணற பக்தி வீண் போகாது அப்படின்னு சொல்றார். அப்புறம் அக்னி பகவான் வந்து இந்த சீதையை ஏற்றுக்கொள் அப்படின்னு சொன்னவுடனே ராமர் எனக்கு அவளோட மனசும் தெரியும், அவளோட தூய்மையும் தெரியும். ஜனங்களுக்காக இப்படி ஒண்ணு பண்ணேன்னு சீதாதேவியை ஏத்துண்டு,அப்போ தான் அவர் “பபௌ ராம: ஸம்ப்ரஹ்ருஷ்ட:” – சந்தோஷத்தை அடைந்தார். “பூஜித: சர்வதெய்வதை:” – எல்லா தெய்வங்களும் அவரை கொண்டாடினார்கள்.

—————-

கர்மணா தேன மஹதா த்ரை லோக்யம் ஸசராசரம் |
ஸதேவர்ஷி கணம் துஷ்டம் ராகவஸ்ய மஹாத்மன꞉ || 84 ||

ஸ்ரீ ராகவன் செய்த ராவண வதமாகிற அப்பெரும் தொழிலினால் தேவர்களும் ரிஷிகளும்
மற்றும் மூன்று உலகினில் உள்ள பிராணிகளும் மரம் முதலானவைகளும் களித்தனர்

————–

அப்யஷிஞ்சத்ஸ லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம் |
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர꞉ ப்ரமுமோத ஹ || 85 ||

விபீஷணனை ராக்ஷஸ ராஜனாக இலங்கையில் முடி சூட்டித் தான் கடற்கரையில் இராவணனை முடித்து
உனக்கு ராஜ்யத்தைத் தருகிறேன் என்று சொன்னபடி செய்து மனத்தில் உள்ள தாபம் தீர்ந்து
இராகவன் ப்ரீதியை அடைந்தார்

விஜ்வர -இவ் வரசு வேண்டேன் என்று சொல்லாமல் இருந்ததால் அந்தரங்க ஸந்தாபம் ஒழிந்தது
வி பஷியாய் அதன் விஷயமான ஜுரம் -ஜடாயு மஹாராஜர் இழவால் நேர்ந்த ஜுரம் இப்பொழுது தான் நீங்கப் பெற்றார்
தாம் செய்த ப்ரதிஜ்ஜை நிறைவேறப் பெற்றதால் ஜுரம் நீங்கப் பெற்றார்

—————-

தேவதாப்யோ வரம் ப்ராப்ய ஸமுத்தாப்ய ச வானரான் |
அயோத்யாம் ப்ரஸ்திதோ ராம꞉ புஷ்பகேண ஸுஹ்ருத்வ்ருத꞉ || 86 ||

ஸ்ரீ ராகவன் தேவர்களின் வரத்தினால் யுத்தத்தில் இறந்து போன வானரங்களை எழுப்பிக் கொண்டு
அவர்களுடன் கூட புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்யைக்குச் செல்லப் புறப்பட்டார்

—————

பரத்வாஜாஶ்ரமம் கத்வா ராமஸ் ஸத்ய பராக்ரம꞉ |
பரதஸ்யாந்திகம் ராமோ ஹனூமந்தம் வ்யஸர்ஜயத் || 87 ||

பரத்வாஜ மஹா முனிவருடைய ஆஸ்ரமத்தை அடைந்து அங்கு நின்றும் இராகவன்
தான் வருவதாக பரதனுக்கு அறிவிக்க அவரிடம் ஹநுமானை அனுப்பினார்

—————-

புனராக்யாயிகாம் ஜல்பன் ஸுக்ரீவ ஸஹிதஶ்ச ஸ꞉ |
புஷ்பகம் தத் ஸமாருஹ்ய நந்தி க்ராமம் யயௌ ததா || 88 ||

ஸ்ரீ ராமன் முன் நடந்த கதைகளை ஸூ க்ரீவனுடன் சொல்லிக் கொண்டு புஷ்பகத்தின் மேல் ஏறி
பரதன் இருக்கிற நந்திக் கிராமம் என்கிற ஊருக்குச் சென்றார்

———–

நந்தி க்ராமே ஜடாம் ஹித்வா ப்ராத்ருபி꞉ ஸஹிதோऽனக꞉ |
ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம் புனரவாப்தவான் || 89 ||

அந்த நந்திக் கிராமத்தில் ஸ்ரீ ராகவன் தம்பிகளுடன் கூட இந்நாள் தரித்த சடையை வாங்கி நீராடி
சீதா தேவியுடன் சிம்ஹாசனத்தில் உட்கார்ந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு ராஜ்யத்தை அடைந்தான்

ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம்ʼ புனரவாப்தவான் ||89||
அப்படின்னு, ராமர் சீதையையும் ராஜ்ஜியத்தையும் மீண்டும் அடைந்தார்னு, ராம பட்டாபிஷேக சர்க்கத்தை குறிப்பிட்டிருக்கா. ராம பட்டாபிஷேக மஹோத்சவத்தை வால்மீகி வார்த்தை வெச்சிண்டு படிச்சா தான் ஆனந்தமா இருக்கும். அதனால ராம பட்டாபிஷேக சர்கம் 131வது சர்கம், யுத்த காண்டத்துலேந்து எடுத்து கொண்டாடுவோம்.

ஶிரஸ்யஞ்ஜலிமாதா³ய கைகேயானந்த³வர்த⁴ன꞉ |
ப³பா⁴ஷே ப⁴ரதோ ஜ்யேஷ்ட²ன் ராமம்ʼ ஸத்யபராக்ரமம் || 1||–ராம பட்டாபிஷேக சர்க்கத்துல முதல் ஸ்லோகம்,

ராமர் வந்து சேர்ந்தவுடனே பரதன் நமஸ்காரம் பண்ணறான். அப்புறம் இதை சொல்றான், “ஶிரஸ்யஞ்ஜலிமாதா³ய” – கைகள் தலை மேல கூப்பிண்டு, ஏன்னா அவனுக்கு ராமரோட இந்த எண்ணம் தெரியும். கைகேயி சந்தோஷத்துக்காக பரதா நீயே ராஜ்ஜியத்தை திரும்பவும் வெச்சுக்கோன்னு சொல்லிடப்போறார்னு சொல்லி, “சத்ய பராக்ரமம் ராமம் பரத: பபாஷே” – பரதன் இந்த வார்த்தைகளை சொன்னான் . இந்த இடத்துல பரதனுக்கு “கைகேயானந்த வர்தன:” அப்படின்னு ஒரு பதம் போட்டுருக்கார், கைகேயியின் ஆனந்தை வளர்ப்பவர்னு.
ராமர் அங்கேருந்து பரதனை பாதுகை குடுத்து திருப்பி அனுப்பும்போது ஒரு ப்ரதிஞை பண்ண சொல்றார். என் மேலயும் சீதை மேலயும் ஆணை, நீ கைகேயியை கடிந்து எதுவுமே பேச கூடாதுன்னு, பரதனும் ஆஹா னு சொல்றான்.

யாவதா³வர்ததே சக்ரம் யாவதீ ச வஸுந்த⁴ரா |
தாவத்த்வமிஹ ஸர்வஸ்ய ஸ்வாமித்வம்அனுவர்தய ||
“யாவதா³வர்ததே சக்ரம்“ – எது வரைக்கும் கால சக்கரம் சுழல்கிறதோ,
“யாவதீ ச வஸுந்த⁴ரா“ – எது வரைக்கும் மலைகளும், நதிகளோடும் இந்த பூமி இருக்கிறதோ
“தாவத்”– அது வரைக்கும்
த்வம் இஹ ஸர்வஸ்ய” – நீங்கள் இங்க எங்கள் எல்லாருக்கும்
“ஸ்வாமித்வம்அனுவர்தய” – ஸ்வாமியா இருக்கனும் , அப்டின்னு சொல்றான்.

அதுக்கு முந்தின ஸ்லோகத்துல

தூர்யஸங்கா⁴தநிர்கோ⁴ஷை꞉ காஞ்சீநூபுரநிஸ்வனை꞉ |
மது⁴ரைர்கீ³தஶப்³தை³ஶ்ச ப்ரதிபு³த்⁴யஸ்வ ராக⁴வ ||
ராஜாவா இருந்தா எல்லாரைக்காட்டிலும் அவருக்குதான் பொறுப்பு அதிகம்,எல்லாரைக் காட்டிலும் அவருக்கு தான் போகங்களும் அதிகம் . பரதன் சொல்லும்போது, தன்னால ராஜ போகங்களெல்லாம் இழந்து காட்டுல கல்லுலேயும், முள்ளுலேயும் கஷ்டப்பட்டு நடந்து , தரைல படுத்துண்டு கஷ்டப்படறாரே, அப்டின்னு அது அவன் மனச ரொம்ப பாதிச்சிடுத்து . அதனால, நீங்க ராஜ பட்டாபிஷேகம் பண்ணிக்கணும், எங்களுக்கு நீங்க ராஜாவா இருக்கறதுனால நாங்கள்ளாம் சந்தோஷமா இருப்போம்ங்கறது மட்டுமில்ல, நீங்களும் சந்தோஷமா இருக்கனும்.
“தூர்யஸங்கா⁴தநிர்கோ⁴ஷை꞉ “ – நல்ல நாதஸ்வரம் , வீணா நாதம், ம்ருதங்கம் , “காஞ்சீநூபுரநிஸ்வனை꞉” – பெண்களுடைய ஆபரண சப்தங்கள் எல்லாம் கேட்டுண்டு ,
மது⁴ரைர்கீ³தஶப்³தை³ஶ்ச “- இனிமையான கீதங்கள் கேட்டுண்டு , வந்திகள் எல்லாம் உங்களை ஸ்தோத்ரம் பண்ற மாதிரி ,
ப்ரதிபு³த்⁴யஸ்வ ராக⁴வ” – ஒவ்வொரு நாளும் நீங்க எழுந்துக்கணும். ராஜ போகங்களையும் நீங்க அனுபவிக்கனும் , எங்களையும் ராஜாவாக இருந்து வழிநடத்தணும் அப்டின்னு பரதன் வேண்டிக்கறான்.

ப⁴ரதஸ்ய வச꞉ ஶ்ருத்வா ராம꞉ பரபுரஞ்ஜய꞉ |
ததே²தி ப்ரதிஜக்³ராஹ நிஷஸாதா³ஸனே ஶுபே⁴ ||
ராமரும் அப்டியே ஆகட்டும்னு சொல்றார்.
ஸ்வாமிகள் சொல்வார், பரதன் கேட்டபோது காலச்சக்கரம் இருக்கற வரைக்கும் ராமா நீ எங்களுக்கு ராஜாவா இருக்கணும்னு கேட்டதுக்கு, ராமர் அப்படியே அகட்டும்னு சொல்லிருக்கார். ராமர் சத்தியமும் தர்மமும் வடிவானவர். அதனால இன்னிக்கும் நமக்கெல்லாம் ராமர் தான் ராஜா.  நமக்கெல்லாம் நாடளுநாயகன் ராமர்தான்

அப்புறம் ராமர், லக்ஷ்மணன் , பரதன், சத்ருக்னன் நாலுபேரும் ஜடையெல்லாம் எடுத்துட்டு
“ஸுக²ஹஸ்தா꞉ ஸுஶீக்⁴ரா: ஶ்மஶ்ருவர்த⁴கா꞉” – நாவிதர்கள் பத்தி சொல்லும்போது அவா கைப்படறதே தெரியாது, சீக்கிரமாவும் செய்வான்னு ரெண்டு அடைமொழி போட்ருக்கா. அவாளைக்கொண்டு ஜடையெல்லாம் எடுத்துட்டு, ரொம்ப அழகா அலங்காரம் பண்ணிண்டு, இந்த எல்லா பரிஜனங்களோட ராமர் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சந்திரனை போல ஜொலிக்கிறார். அப்புறம் ராமரை சூரியனை போல ஜொலிக்கற ஒரு தேர்ல ஒக்காற வைத்து, பரதனே ஒட்டிண்டு நந்தி க்ராமத்துலேந்து எல்லாரோடும் அயோத்திக்கு ராமர் போறார்.

ருʼஷிஸங்கை⁴ர்ததா³காஶே தே³வைஶ்ச ஸமருத்³க³ணை꞉ |
ஸ்தூயமானஸ்ய ராமஸ்ய ஶுஶ்ருவே மது⁴ரத்⁴வனி꞉ ||
ராமர் நந்திக்ராமத்துலேந்து அயோத்தி தேர்ல போறத பாத்து, ஆகாசத்துல தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ற மதுரமான ஒலி எல்லார்க்கும் கேட்டது அப்படின்னு ஒரு ஸ்லோகம்.
அக்ஷதன் ஜாதரூபம்ʼ ச கா³வ꞉ கந்யாஸ்ததா² த்³விஜா꞉ |
நரா மோத³கஹஸ்தாஶ்ச ராமஸ்ய புரதோ யயு꞉ ||
முன்னாடி ஜனங்களெல்லாம் சீர் வரிசை எல்லாம் எடுத்துண்டு போறா. அதுல தங்கம் போல ஜ்வலிக்க கூடிய அக்ஷதை , அவ்ளோ அழகா இருக்காம். கன்யா பெண்கள் பசுமாடுகள் , ப்ராஹ்மணர்கள், “நரா: மோத³கஹஸ்தாஶ்ச “ – ஜனங்கள் கைல தட்டுல மோதகம் எல்லாம் எடுத்துண்டு, “ராமஸ்ய புரதோ யயு꞉ “ – ராமர் முன்னாடி போறார்கள்னு வரது.

இந்த ராமாயணத்தை திரும்ப திரும்ப படிச்சு அந்த தர்ம பலம், சத்ய பலம் அது தான் தேசத்துக்கு ரொம்ப முக்கியம். மத்தது எல்லாம் தானா நடக்கும் அப்படி ராமர் அயோத்திகுள்ள நுழையும்போது

ஹ்ருʼஷ்டபுஷ்டஜனாகீர்ணாமயோத்⁴யாம்ʼ ப்ரவிவேஶ ஹ |
ஜனங்கள்லாம் சந்தோஷத்துல ஒரு சுத்து பெருத்துட்டாளாம். ரொம்ப ஆனந்தமா கொடிகளெல்லாம் கட்டி, நாதஸ்வரம் மேல தாளத்தோட ராமரை அயோத்தியில் வரவேற்றார்கள். ராமர் தசரதருடைய அரண்மனைக்கு போய் சேரரார்.அங்க தான் அமர்ந்தவுடன் பரதனை கூப்பிட்டு இந்த சுக்ரீவனுக்கு என்னுடைய மாளிகைகளில் மிகச்சிறந்ததை ஒழித்து குடு அப்டிங்கறார்.

யச்ச மத்³ப⁴வனன் ஶ்ரேஷ்ட²ம்ʼ ஸாஶோகவனிகம்ʼ மஹத் ||
முக்தாவைதூ³ர்ய ஸங்கீர்ணன் ஸுக்³ரீவஸ்ய நிவேத³ய |
சுக்ரீவனை பார்த்தவுடனே எங்க நாலுபேரோட சேந்து நீயும் ஒரு சகோதரன் ஆயிட்ட அப்டிங்கறார்.
.அந்த மாளிகைல சுக்ரீவன் போய் ஒக்காந்த உடனே, சத்ருக்னன் சொல்றான், நாளை பட்டாபிஷேகத்துக்கு நாலு சமுத்திரத்திலேந்து ஜலம் எடுத்துண்டு வரணும் அப்டின்னவுடனே சுக்ரீவன், ரத்னமயமான நாலு தங்க குடத்தை நாலு பேர்கிட்ட குடுத்து

யதா² ப்ரத்யூஷஸமயே சதுர்ணான் ஸாக³ராம்ப⁴ஸாம் ||
பூர்ணைர்க⁴டை꞉ ப்ரதீக்ஷத்⁴வம் ததா² குருத வானரா꞉ |
நீங்க நாலு பேரும், நாலு சமுத்திரத்திலேந்து ஜலம் எடுத்துண்டு வரணும், “ப்ரத்யூஷ சமயே” – உஷத் காலம் னா, விடியற பொழுது . அதுக்கு ரொம்ப முன்னாடியே நீங்க வந்து காத்துண்டு இருக்கணும். எங்க வந்தாளான்னு நாங்க வாசல்ல வந்து காத்துண்டு இருக்கற மாதிரி வெக்க கூடாது , அப்படி பண்ணுங்கோ “ததா² குருத வானரா꞉ “ அப்டின்னு சொன்னவுடனே அவா போய் எடுத்துண்டு வந்துடறா. இன்னும் ஒரு 500 புண்ய தீர்த்தம் வந்துடுத்து அப்டின்னு சொல்றா. ஸ்வாமிகள் சொல்வார், மத்த வானராலெல்லாம் எங்களுக்கு ராம கைங்கர்யம் கிடைக்காதா னு queueல நின்னுட்டாளாம். அப்புறம் நீ போய் காவேரிலேந்து ஜலம் எடுத்துண்டு வா, நீ கங்கையிலேந்து ஜலம் எடுத்துண்டு வான்னு சுக்ரீவன் சொன்னான். 500 புண்ய தீர்த்தங்கள் வந்துடுத்து. பொழுது விடிந்தது.. அப்ப சத்ருக்னன் வசிஷ்டர்கிட்ட ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைங்கோ அப்டின்னு வேண்டிக்கறான்.

தத꞉ ஸ ப்ரயதோ வ்ருʼத்³தோ⁴ வஸிஷ்டோ² ப்³ராஹ்மணை꞉ ஸஹ ||
ராமன் ரத்னமயோ பீடே² ஸஹஸீதம்ʼ ந்யவேஶயத் |
வஸிஷ்டோ² வாமதே³வஶ்ச ஜாபா³லிரத² காஶ்யப꞉ ||
காத்யாயன꞉ ஸுயஜ்ஞஶ்ச கௌ³தமோ விஜயஸ்ததா² |
அப்⁴யஷிஞ்சன்னரவ்யாக்⁴ரம்ʼ ப்ரஸன்னேன ஸுக³ந்தி⁴னா ||
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷன் வஸவோ வாஸவம்ʼ யதா² |

அப்போ சீதாதேவியை ராமரோடு ரத்னமயமான சிம்ஹாசனத்தில் அமர்த்தி எட்டு ரிஷிகளும், வசுக்கள் எப்படி இந்திரனுக்கு அபிஷேகம் பண்ணி வச்சாளோ அந்த மாதிரி ராமரை சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் பண்ணி வைத்தார்கள்.

ச²த்ரம்ʼ தஸ்ய ச ஜக்³ராஹ ஶத்ருக்⁴ன꞉ பாண்டு³ரன் ஶுப⁴ம் ||
ஶ்வேதன் ச வாலவ்யஜனன் ஸுக்³ரீவோ வானரேஶ்வர꞉ |
அபரன் சந்த்³ரஸங்காஶன் ராக்ஷஸேந்த்³ரோ விபீ⁴ஷண꞉ ||

சத்ருக்னன் சந்த்ரனை போல ஒரு குடையை புடிக்கறான். இந்த பக்கமும் அந்த பக்கமும் சுக்ரீவனும் விபீஷணனும் நின்னுண்டு ராமருக்கு கவரி வீசறா.
அன்னிக்கு ராமர் காட்டுக்கு போன போது கௌசல்யை புலம்பி அழறா, பிச்சை எடுத்துண்டாவது என் கண்ணுமுன்னால இருக்க கூடாதான்னு. ஒரு தப்பும் பண்ணாத என் கொழந்தயை காட்டுக்கு அனுப்பனுமானு சொல்றா. அப்போ சுமித்திரை சமாதானம் சொல்றா. என்ன குறை ராமனுக்குன்னு நீ இப்படி வருத்தப்படற,

த⁴ர்மஸத்யவ்ரதத⁴ன꞉ கிம்ʼ ந ப்ராப்தஸ்தவாத்மஜ꞉ |
சத்தியத்தையும், தர்மத்தையும் வ்ரதமாகவும், தனமாகவும் கொண்ட உன் பிள்ளை என்னத்த இழந்துட்டான், அப்பா பேச்சை கேட்டு காட்டுக்கு போறான் அவ்ளோதானே. அவன் கூட லட்சுமிதேவி மாதிரி சீதை போறா, லக்ஷ்மணன் போறான். அவனுக்கு ஒரு குறையும் கிடையாது. அவன் எங்க போனாலும் இந்திரனுக்கு இந்திரன், வாயுக்கு வாயு, அந்த மாதிரி தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம். காட்டுல அவனை மரங்கள் , அருவிகள் , ஆறுகள் எல்லாமே அவனை வரவேற்று பூஜை பண்ணும். சூரியன் அவனை தஹிக்காது. சந்திரன் போர்வை மாதிரி, அப்பா மாதிரி அவனை அன்பு பாராட்டும். இப்படி அவன் இருக்கப்போறான். அவனை பத்தி கவலைப்படாத அப்படினு சொன்னா. எல்லாரும் அழும்போது சுமித்திரை ஏன் அப்டி சொன்னன்னா அவ ஞானி. அவளுக்கு 14 வருஷம் கழிச்சு, ஒரு வானர ராஜாவும் , ராக்ஷச ராஜாவும் கவரி வீச ராமன் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணிப்பான்னு தெரிஞ்சுது. அதனால தான் அப்படி சொன்னா. அந்த வார்த்தை கௌசல்யைக்கு ஆறுதலா இருந்தது. அப்படி இந்த பட்டாபிஷேக வைபவம். ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணா, நம்ப ஒவொருத்தருக்கும் தலைல மகுடம் சூட்டின மாதிரி தான்.தர்மத்துக்கு என்றும் ஜெயம், அப்படிங்கற message . அதனால அடிக்கடி ராமாயணம் படிச்சு, ராம பட்டாபிஷேகம் பண்ணி முடிக்கணும்.
அப்புறம் ராமர் எல்லாருக்கும் பரிசுகள் குடுக்கறார்.சீதாதேவி தன் கழுத்துலேந்து ஒரு முத்து மாலையை, எடுத்து அனுமாருக்கு கொடுக்க விரும்பி எல்லாரையும் பார்க்கறா.ராமரை பார்க்கறா.

தாமிங்கி³தஜ்ஞ꞉ ஸம்ப்ரேக்ஷ்ய ப³பா⁴ஷே ஜனகாத்மஜாம் |
ப்ரதே³ஹி ஸுப⁴கே³ ஹாரன் யஸ்ய துஷ்டாஸி பா⁴மினி ||
பௌருஷம் விக்ரமோ பு³த்³தி⁴ர்யஸ்மின்னேதானி நித்யதா³ |
ஹே சீதே, ஸுபகே. யார்கிட்ட உனக்கு த்ருப்தியோ, யார்கிட்ட பௌருஷம், விக்ரமம், புத்தி எல்லாம் எப்பவும் நெறஞ்சு இருக்கோ அவாளுக்கு கொடு அப்டின்னு சொல்றார். பௌருஷம்ங்கறது – உடல் பலம், விக்ரமம்ங்கறது – தைர்யம், மனோபலம் , புத்தினா – புத்தி.
சீதாதேவி கைல “ராம நாம அன்கிதம் ச ராம நாம அன்கிதம் ச இத³ம் பஶ்ய தே³வி அன்கு³லீயகம் ||” – ராம நாமம் பொறித்த இந்த அங்குலீயத்தை பார் அப்டின்னு கைய நீட்டி காமிச்சார். சீதை அத வாங்கிண்டு கண்ல ஒத்திண்டா.

ராம நாம அன்கிதம் ச இத³ம்  ||
அந்த நிமிஷத்துல சீதைக்கு ஏற்பட்ட சந்தோஷத்துல அவ சொன்னது என்ன,

விக்ராந்த꞉ த்வம் ஸமர்த²꞉ த்வம் ப்ராஜ்ஞ꞉ த்வம் வானர உத்தம |
யேன இத³ம் ராக்ஷஸ பத³ம் த்வயா ஏகேன ப்ரத⁴ர்ஷிதம் ||
ஹே ஹனுமான், விக்ரந்த: த்வம் , சமர்த்த: த்வம், ப்ராக்ஞ: தவம் – நீ தான் உடல் பலமும், மனோபலமும் , புத்தி பலமும் பொருந்தினவன். உன் ஒருத்தனால தான் இந்த காரியத்தை பண்ண முடியும் அப்டின்னு கொண்டாடினா. அப்போ அங்க ராமர் இல்ல. ஆனா அவா ஆதர்ஷ தம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்க வேண்டாம். அதே வார்த்தைகளை இங்க திருப்பறார் ராமர். அந்த ஹநுமானுக்கு கொடுன்னு சொல்லாம சொல்றார். உடனே சீதை அத ஹனுமானுக்கு கொடுக்கறா . ஹனுமான் அதை போட்டுண்டு மலைமேல் மேகம் போல அந்த முத்து மாலையோட பிரகாசிச்சார் அப்டின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
இப்படி ராம பட்டாபிஷேகம் முடிஞ்சுது. வந்தவா எல்லாரும் சந்தோசமா ராமர்கிட்ட உத்தரவு வாங்கிண்டு அவா அவா கிஷ்கிந்தைக்கு வனரா எல்லாம் போய் சேந்தா. லங்கைக்கு விபீஷணன் தன் மந்திரிகளோடு போய் சேர்ந்தான். ராமர் அஸ்வமேதாதி யாகங்கள் எல்லாம் பண்ணி 11000 வருஷங்கள் ராஜ்யபரிபாலனம் பண்ணி தர்மத்தை நிலைநாட்டினார்.

ஆஜானுலம்பி³பா³ஹு: மஹாஸ்கந்த⁴꞉ ப்ரதாபவான் |
லக்ஷ்மணானுசரோ ராம꞉ ப்ருʼதி²வீமன்வபாலயத் ||
” ஆஜானுலம்பி³பா³ஹு: ” – முட்டி வரைக்கும் நீண்ட கைகளோடு அந்த அம்பு வில்லை வெச்சுண்டு லக்ஷமணனோடு கூட ராமர் ராஜ்யபரிபாலனம் பண்ணார், அப்டின்னு இதுவரைக்கும் ராம காவியம். அடுத்த 10-15 ஸ்லோகங்கள் ராம ராஜ்யத்தோட பெருமை இந்த சர்க்கத்துல . அப்புறம் ஒரு 10 ஸ்லோகங்கள், ராம சரிதத்தை படிக்கறதோட புண்யம் அதுல வரது.
இந்த ராம ராஜ்யம் எப்படி இருந்ததுன்னா

ஸர்வம்ʼ முதி³தமேவாஸீத்ஸர்வோ த⁴ர்மபரோஅப⁴வத் |
எல்லாரும் சந்தோசமா இருந்தா, ஏன்னா எல்லாரும் தர்ம பராளா இருந்தா.

ராமமேவானுபஶ்யந்த: நாப்⁴யஹின்ஸன்பரஸ்பரம் ||
ராமனையே பார்த்துண்டு ஒருத்தரை ஒருத்தர் ஹிம்சை பண்ணாம இருந்தார்னு வராது.
இந்த எடத்துல அயோத்யா காண்டத்துல

கத²ஞ்சிது³பகாரேண க்ருʼதேனைகேன துஷ்யதி |
ந ஸ்மரத்யபகாராணாம்ʼ ஶதமப்யாத்மவத்தயா ||
ராமன் ஒரே ஒரு உபகாரம் பண்ணா, அதுலயே ரொம்ப சந்தோஷம் ஆய்டுவான் . அவன்கிட்ட 100 அபகாரம் பண்ணாகூட அவன்கிட்ட பொறுமையும், மனவடக்கமும் இருக்கறதால அதெல்லாம் பொருட்படுத்த மாட்டான் , ஏதோ அவாளுக்கு தெரிஞ்சுது அப்டினு விட்ருவான்.
அந்த குணத்தை, எல்லாரும் பாத்துண்டு யாராவது தப்புபண்ணா சரி போனு விட்டுண்டு இருந்தாளாம். அதனால ஒருத்தரை ஒருத்தர் ஹிம்சை பண்ணாம எல்லாரும் சந்தோஷமா இருந்தா.

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமப⁴வன் கதா²꞉ |
ராமபூ⁴தம்ʼ ஜகா³பூ⁴த்³ராமே ராஜ்யம்ʼ ப்ரஶாஸதி ||
ராமா, ராமா , ராமானு ராமனுடைய கதைகளையே பேசிண்டு உலகம் ராமமயமாக, ஆனந்தமயமாக ஆகிவிட்டது. அந்த தசரதருடைய ராஜ்யத்தை விவரிக்கும் போது பால காண்டத்துல ஆரம்பிக்கும்போது இதுவே இவ்ளோ நன்னா இருக்கே இதுக்கு மேல என்ன ராம ராஜ்யம் இருக்கப்போறதுனு தோணும். ஆனா தசரதர் காலத்துல இல்லாத ஒரு பெருமை ராம ராஜ்ஜியத்துல என்னன்னா ராமன் கதையை அப்போ தானே பேச முடியும். எல்லாரும் ராம கதையை பேசிண்டு, ராம சரித்திரத்தை பேசிண்டு ராமா ராமானு ஆனந்தமயமாக இருந்தார்கள். இன்னிக்கும் ராமருடைய கதையை படிக்கறவாளுக்கு வாழ்வே ஆனந்தம்தான்.
அந்த ராமாயணத்தை படிக்கறதோட பலன், 1-2 ஸ்லோகங்கள் பாக்கலாம்

ப்ரார்தி²தான் ச வரான் ஸர்வான் ப்ராப்னுயாத் இஹ ராக⁴வாத் |
ராமரிடத்தில், இந்த ராமாயணம் படித்து அதன் மூலமா சந்தோஷமா இருக்கற ராமரிடத்தில் பிரார்த்தனை பண்ண வரங்கள் எல்லாம் கொடுப்பார்.

குடும்ப³வ்ருʼத்³தி⁴ம்ʼ த⁴னதா⁴ன்யவ்ருʼத்³தி⁴ம்ʼ ஸ்த்ரியஶ்ச முக்²யாஹ் ஸுக²முத்தமம்ʼ ச |
ஶ்ருத்வா ஶுப⁴ம்ʼ காவ்யமித³ம்ʼ மஹார்த²ம்ʼ ப்ராப்னோதி ஸர்வாம்ʼ பு⁴வி சார்த²ஸித்³தி⁴ம் ||

ஆயுஷ்யமாரோக்³யகரம்ʼ யஶஸ்யம்ʼ ஸௌப்⁴ராத்ருʼகம்ʼ பு³த்³தி⁴கரம்ʼ ஶுப⁴ம்ʼ ச |
ஶ்ரோதவ்யமேதந்நியமேன ஸத்³பி⁴ க்²யாநமோஜஸ்கரம்ருʼத்³தி⁴காமை꞉ ||

ச்ரேயஸை விரும்புகிறவர்கள் “ருʼத்³தி⁴காமை꞉” , “ஶ்ரோதவ்யம்” இதை அடிக்கடி கேக்கணும்.

தே³வாஶ்ச ஸர்வே துஷ்யந்தி க்³ரஹணாச்ச்²ரவணாத்ததா² ||
ராமாயணஸ்ய ஶ்ரவணே துஷ்யந்தி பிதர꞉ ஸதா³ |
ராமாயணத்தை படிக்கறதாலும் , கேட்பதாலும் “தேவா : சர்வே துஷ்யந்தி” – எல்லா தெய்வங்களும். “தேவா:” நா plural , “ஸர்வே தேவா :” – குடும்ப தெய்வம் , இஷ்ட தெய்வம் , கிராம தெய்வம், உங்களுக்கு யாரோ அந்த தெய்வத்துக்கு பண்ணல அப்டின்னா ராமாயணத்தை எடுத்து படிங்கோ அப்டிம்பார் ஸ்வாமிகள். அந்த மாதிரி ராமாயணம் படிச்சா எல்லா தெய்வங்களும் த்ருப்தி அடைவார்கள். “துஷ்யந்தி பிதர: ததா” – பித்ருக்களும் த்ருப்தி ஆவார்கள்.
“விநாயகாஸ்ச ஸாம்யந்தி” – ராமாயணம் இருக்கற எடத்துல எல்லா கஷ்டங்களும் விலகும் அப்படிங்கற ஒரு ஸ்லோகத்துக்கு மஹாபெரியவா,
|
ந புத்ரமரணம்ʼ கிஞ்சித்³த்³ரக்ஷ்யந்தி புருஷா꞉ க்வசித் |
ராம ராஜ்யம் எப்படி இருந்ததுன்னா, எவன் ஒருவனும் தன் புத்திர மரணத்தை பார்க்க வேண்டி வரவில்லை.
நார்யஶ்ச அவித⁴வா நித்யம்ʼ ப⁴விஷ்யந்தி பதிவ்ரதா꞉ ||

பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக, பதிவ்ரதைகளாக இருந்தார்கள்.
“ந அக்³நிஜம்ʼ ப⁴யம்ʼ கிஞ்சித்” – அக்னினால யாருக்கும் ஒரு கேடும், accident உம் வரவில்லை.
“ந அப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ꞉” – ஜலத்துல யாரும் முழுகவில்லை
“ந வாதஜம்ʼ ப⁴யம்ʼ கிஞ்சித்” – வாயுனால ஒரு hurricane ஓ , cyclone ஓ ஏதாவது வந்து யாரும் கஷ்டப்பட்டா அப்படிங்கறது கிடையாது
“ந அபி ஜ்வரக்ருʼதம்ʼ ததா²” – திடீர் திடீர்னு புது புது பேர்ல வ்யாதி வந்து, ஜ்வரம் வந்து ஜனங்கள் கஷ்ட படறா. அந்த மாதிரி ராம ராஜ்ஜியத்துல இருக்கலை.
அதாவது ராஜ்யத்தை ராஜ தர்மமாக ஆட்சி பண்ணினா, இந்த மாதிரி கஷ்டங்களெல்லாம் வராது அப்டினு தெரியறது.
“ந சாபி க்ஷுத்³ப⁴யம்ʼ தத்ர” – பஞ்சம் பட்டினி அப்டிங்கறதே இல்ல.
“ந தஸ்கரப⁴யம்ʼ ததா²” – திருட்டு பயம் இல்ல. யாரும் வீட்டை பூட்டவே மாட்டார்கள். ஏன்னா பிறர் பொருள் மேல ஆசைப்படறவா யாருமே கிடையாது.

நக³ராணி ச ராஷ்ட்ராணி த⁴னதா⁴ன்யயுதானி ச ||
எல்லா தேசங்களும் , நகரங்களும் தன தான்யத்தில் நிரம்பி இருந்தது.

நித்யம்ʼ ப்ரமுதி³தா꞉ ஸர்வே யதா² க்ருʼதயுகே³ ததா² |
க்ருத யுகத்தில் இருந்தது போல எல்லாரும் ராம ராஜ்யத்தில் சந்தோசமாக இருந்தார்கள்.

அஶ்வமேத⁴ஶதைரிஷ்ட்வா ததா² ப³ஹுஸுவர்ணகை꞉ ||
க³வாம்ʼ கோட்யயுதம்ʼ த³த்த்வா வித்³வத்³ப்⁴யோ விதி⁴பூர்வகம் | |
நிறைய தங்கத்தை தக்ஷிணையாக குடுத்து 100 அஸ்வமேத யாகங்களை ராமர் பண்ணார்.கோடிக்கணக்கான பசுக்களை விதி பூர்வமாக வித்வான்களுக்கு ராமர் தானம் பண்ணார். இந்த கோதானம் பண்ணும்போது கண்ணுகுட்டியோட தரணும். அந்த மாடு கறவை நின்னவுடனே இன்னொரு கறவை மாட்டை தரணும். அந்த மாதிரி விதி பூர்வமாக பண்ணார்

அஸங்க்²யேயம்ʼ த⁴னம்ʼ த³த்த்வா ப்³ராஹ்மணேப்⁴யோ மஹாயஶா꞉ ||
ப்ராஹ்மணர்களுக்கு கணக்கற்ற செல்வத்தை கொடுத்தார்.

ராஜவம்ʼஶான் ஶதகு³ணான் ஸ்தா²பயிஷ்யதி ராக⁴வ꞉ |
சாதுர்வர்ண்யம்ʼ ச லோகே(அ)ஸ்மின் ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி ||
ராஜ வம்சத்தை நிலைநிறுத்தினார். அந்த மாதிரி ஒரு சக்ரவர்த்தி stableஆ இருந்தா, சிற்றரசர்களும் நல்லபடியா இருப்பார்கள்.

சாதுர்வர்ண்யம்ʼ ச லோகே(அ)ஸ்மின் ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி ||

ப்³ராஹ்மணா꞉ க்ஷத்ரியா வைஶ்யா꞉ ஶூத்³ரா லோப⁴விவர்ஜிதா꞉ |
ஸ்வகர்மஸு ப்ரவர்தந்தே துஷ்டா²꞉ ஸ்வைரேவ கர்மபி⁴꞉ ||
தான் பண்ற கார்யத்துல பெருமையோட , பேராசையில்லாம நாலு வர்ணத்தவர்களும் அவரவருடைய கார்யங்களை ரொம்ப ஸ்ரத்தையா பண்ணிண்டு இருந்தா.
அப்படி ஒரு 20 தலைமுறை 30 தலைமுறை ஒவ்வொரு fieldலேயும் excel பண்ணிண்டே வந்தா அது என்னம்மா இருக்கும்ங்கரதை நம்ப கோவில்ல இருக்கற சிற்பங்களிலும் காவ்யங்களிலும் தெரிகிறது.
அந்த மாதிரி ராமர் எல்லாரையும் அவரவர் காரியங்களில் நிலை நிறுத்தினார்.

த³ஶவர்ஷஸஹஸ்ராணி த³ஶவர்ஷஶதானி ச |
ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்³ரஹ்மலோகம்ʼ ப்ரயாஸ்யதி ||
“த³ஶவர்ஷஸஹஸ்ராணி” – பத்து ஆயிரம் வருடங்கள்,
“த³ஶவர்ஷஶதானி ச” – பத்து நூறு வருடங்கள்
இங்க நாரதர் வால்மீகி மகரிஷிக்கு கதை சொல்லிண்டு இருக்கார். அப்போ ராமர் தானே ஆட்சி பண்ணிண்டு இருக்கார். வால்மீகி லவ குஷால்க்கு சொல்லி, ராமர் அவாகிட்டேந்தே நேரா கேக்க போறார். அதனால “ப்ரயாஸ்யதி” – ப்ரஹ்ம லோகத்திற்கு போவார் அப்டினு future tense ல சொல்றார்.

இத³ம்ʼ பவித்ரம்ʼ பாபக்⁴னம்ʼ புண்யம்ʼ வேதை³ஶ்ச ஸம்மிதம் |
ய꞉ படே²த்³ராமசரிதம்ʼ ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே ||
இந்த பவித்திரமான ராம கதை பாபத்தை போக்க கூடியது, புண்யத்தை கொடுக்க கூடியது “வேதை³ஶ்ச ஸம்மிதம்” – சாஷாத் வேத துல்யமானது. எவன் இந்த ராம சரிதத்தை படிக்கிறானோ அவன் எல்லா பாபங்களிலிருந்து விடுபடுவான்.

ஏததா³க்²யானமாயுஷ்யம்ʼ பட²ன் ராமாயணம்ʼ நர꞉ |
ஸபுத்ரபௌத்ர꞉ ஸக³ண꞉ ப்ரேத்ய ஸ்வர்கே³ மஹீயதே ||
யார் இந்த ராமாயணத்தை படிக்கிறார்களோ, அவன் இவ்வுலகில் தீர்காயுசோடு இருந்து, புத்ரர்களோடும், “सपुत्रपौत्रः” – புத்ரனுடைய பேரன், அதாவது கொள்ளுப்பேரன் வரை , “सगणः” – பந்துக்களோடும் ஸ்வர்கம் போவான்

பட²ன் த்³விஜோ வாக்³ருʼஷப⁴த்வமீயாத் |
ஸ்யாத் க்ஷத்ரியோ பூ⁴மிபதித்வமீயாத் ||
வணிக்³ஜன꞉ பண்யப²லத்வமீயாத் |
ஜனஶ்ச ஶூத்³ரோ(அ)பி மஹத்த்வமீயாத் ||
இதை படிக்கின்ற ப்ராஹ்மணன் “வாக்³ருʼஷப⁴த்வமீயாத் ” – நல்ல வாக்கு வன்மையை அடைவான். நல்ல பண்டிதனாக ஆயிடுவான்
“க்ஷத்ரியோ பூ⁴மிபதித்வமீயாத் ” – க்ஷத்ரியன் பூமிக்கு தலைவன் ஆவான். அதாவது ராஜாவாக ஆவான்
“வணிக்³ஜன꞉ பண்யப²லத்வமீயாத் ” – வைஸ்யர்கள், “பண்யம்” னா – வியாபாரம் . வியாபாரத்தில் நல்ல பலன் அடைவார்கள்
“ஜனஶ்ச ஶூத்³ரோ(அ)பி மஹத்த்வமீயாத் ” – இதை படிக்கும் சூத்திரர்கள் மஹத்வத்தை அடைவார்கள், அவர்களுக்குள் ஒரு தலைவராக இருப்பார்கள் .

அப்படி இந்த சங்க்ஷேப ராமாயணம் 100 ஸ்லோகம், இதுவே ராம கதை ,
“பட²ன் த்³விஜோ வாக்³ருʼஷப⁴த்வமீயாத்” –  ராமாயணம் படிக்கறதுக்கு மேல வாழ்க்கைல வேற பெரிய சந்தோஷம் கிடைக்காது. நம்ப படிக்கறது நம்ப குழந்தைகளுக்கு சொல்றது ரொம்ப ஸ்ரேயஸை கொடுக்கும். விஸ்தாரமா முழு ராமாயணத்தை படிக்கணும் முடிஞ்ச வரைக்கும் படிக்கணும்.

————————————————————————————————

ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோகஸ் துஷ்ட꞉ புஷ்ட꞉ ஸுதார்மிக꞉ |
நிராயமோ ஹ்யரோகஶ்ச துர்பிக்ஷ பய வர்ஜித꞉ || 90 ||

அக் காலத்தில் ஜனங்கள் உடம்பில் மயிர் எழுந்து மனக் களிப்புற்றுத் தாம் விரும்பின விருப்பத்தை எல்லாம் அடைந்து
சந்தோஷத்துடனே உடல் பருத்து தர்மமான நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு
மன வருத்தமும் சரீரத்தில் ரோகமும் அற்றவராய் ஏழ்மைத் தனத்தினால் உண்டான பயமும் அற்றவர்களாக ஆவர்கள்

ப்ரஹ்ருஷ்ட –பெருமாள் பட்டாபிஷேகத்தால் அனைவருக்கும் ப்ரீதி அதிசயத்தைச் சொல்லி
ஸுதார்மிக꞉ |–கைங்கர்ய ப்ராப்தியைச் சொல்லி
நிராயமோ ஹ்யரோகஶ்ச -கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லி
துர்பிக்ஷ பய வர்ஜித–கைங்கர்யத்துக்கு அனுகூலமான ஸம்பத் ஸம்ருத்தியை வர்ணித்தார் ஆயிற்று
————-

ந புத்ர மரணம் கிஞ்சித் த்ரக்ஷ்யந்தி புருஷா꞉ க்வ சித் |
நார்யஶ் சாவிதவா நித்யம் பவிஷ்யந்தி பதி வ்ரதா꞉ || 91 ||

அக் காலத்தில் ஜனங்கள் தங்கள் புத்ர மரணத்தைப் பார்க்கப் போவது இல்லை
பெண்கள் தங்கள் பர்த்தாவின் மரணத்தைப் பாரார்கள்
அவர்கள் இடம் அன்புற்றவராய் இருப்பார்கள்

———-

ந சாக்னிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ꞉ |
ந வாதஜம் பயம் கிஞ்சித் நாபி ஜ்வர க்ருதம் ததா || 92 ||

ந சாபி க்ஷுத்பயம் தத்ர ந தஸ்கர பயம் ததா |

அக்னியினாலாவது ஜலத்தினிலாவது காற்றினாலாவது ஜ்வரத்தினாலாவது பசியினிலாவது
திருடர்களினாலாவது காற்றினிலாவது எவர்க்கும் எவ்விதமான உபாதையும் உண்டாகாது

————
நகராணி ச ராஷ்ட்ராணி தன தான்ய யுதானி ச || 93 ||

நித்யம் ப்ரமுதிதாஸ் ஸர்வே யதா க்ருத யுகே ததா |

பட்டணங்களில் செல்வமும் -தேசங்களில் தானியமும் -ஸம் பூர்ணமாக உண்டாகப் போகிறது
ஜனங்கள் கிருத யுகத்தில் போலே இந்த த்ரேதா யுகத்திலும் ஸந்தோஷத்தை அடைவார்கள்

————
அஶ்வமேத ஶதைரிஷ்ட்வா ததா பஹு ஸுவர்ணகை꞉ || 94 ||

கவாம் கோட்யயுதம் தத்வா ப்ரஹ்ம லோகம் ப்ரயாஸ்யதி |
அஸங்க்யேயம் தனம் தத்வா ப்ராஹ்மணேப்யோ மஹா யஶா꞉ || 95 ||

ஸ்ரீ ராகவன் அநேக அஸ்வமேத -பஹு ஸ்வர்ணம் போன்ற யாகங்களையும் செய்து
பதினாராயிரம் கோடி கோ தானமும் செய்து பிராமணர்களுக்கு அளவற்ற த்ரவ்யங்களையும் கொடுத்து
பிறகு பர ப்ரஹ்ம ஸ்வரூபமான தன்னுடைச் சோதியை அடையப் போகிறான் –

————

ராஜ வம்ஶான் ஶத குணான் ஸ்தாபயிஷ்யதி ராகவ꞉ |
சாதுர் வர்ண்யம் ச லோகேऽஸ்மின் ஸ்வே ஸ்வே தர்மே நியோக்ஷ்யதி || 96 ||

ஸ்ரீ ராகவன் அநேகம் ஷத்ரியர்களுக்கு இராஜ்யத்தைக் கொடுத்து பரிபாலனம் செய்வார்
நால் வகை வர்ணத்தில் உள்ளாரை அந்த வந்த வர்ணத்துக்கு உரிய தர்மங்களில் நடத்தி வைப்பர்

———–

தஶ வர்ஷ ஸஹஸ்ராணி தஶ வர்ஷ ஶதானி ச |
ராமோ ராஜ்ய முபாஸித்வா ப்ரஹ்ம லோகம் கமிஷ்யதி || 97 ||

பதினோராயிரம் வருஷம் இவ்விதம் ஜனங்களை பரி பாலனம் செய்த பிறகு ஸ்ரீ வைகுண்டத்தை அடையப் போகிறார்

————-

பல ஶ்ருதிகள் :

இதம் பவித்ரம் பாபக்னம் புண்யம் வேதைஶ்ச ஸம்மிதம் |
ய꞉ படேத் ராம சரிதம் ஸர்வ பாபை꞉ ப்ரமுச்யதே || 98 ||

இந்த சங்க்ஷேப ராமாயணமாவது வேதம் போல் தன்னை நியமத்துடன் ஓதுமவர்களுக்குப் புண்ணியத்தை விளைக்கும்
பாபத்தைத் தொலைக்கும் பரி ஸூத்தியை யுண்டாக்கும்
இதை நியமத்துடன் ஓதுகின்றவன் ஸர்வ பாபங்களில் நின்றும் விடுபடுவார்

————–

ஏத தாக்யாநம் ஆயுஷ்யம் படேத் ராமாயணம் நர
ஸ புத்ர பவுத்ரஸ் ஸ கண ப்ரேத்ய ஸ்வர்க்கம் மஹீயதே –99-

ஆயஸ்ஸை வளர்க்கக் கடவதாய் ஸ்ரீ ராமனுடைய முற் கதைகளை உறைகின்ற இந்த பால ராமாயணத்தை நியமமாக ஓதுகிறவன்
புத்ர பவ்தர்களுடனும் பந்து மித்ரர்களுடனும் கூடி இங்கு இருக்கும் நாள் ஐஹிக போகங்களைப் புஜித்துப்
பின்பு ப்ரக்ருதி சம்பந்தத்தை விட்டு வைகுண்ட மா நரனுக்குச் சென்று அங்குள்ளவர்களாலும் பூஜிக்கப் படுவார்கள்

——————-

படன் த்விஜோ வாக்ருஷபத்வமீயாத்
ஸ்யாத் க்ஷத்ரியோ பூமிபதித்வமீயாத் |
வணிக்ஜன꞉ பண்யபலத்வமீயாத்
ஜனஶ்ச ஶூத்ரோऽபி மஹத்த்வமீயாத் || 100 ||

பிராமணன் இந்த சங்க்ஷேப ராமாயணத்தைப் பாடம் செய்தானாகில் ஸகல வேதார்த்தங்களையும் அறிய வல்லனாவான்
ஷத்ரியன் பெரிய ராஜ்யத்தை ஆள வல்ல சக்ரவர்த்தி ஆவான்
வைஸ்யன் வியாபாரத்தில் பெரிய லாபத்தை அடைவான்
நான்காம் வர்ணத்தவன் இத்தைக் கேட்டால் பெரும் தன்மையை அடைந்து புகழப் படுவான்

இத்யார்ஷே ஶ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே பாலகாண்டே ஶ்ரீராமாயண கதா ஸங்க்ஷேபோ நாம ப்ரதமஸ் ஸர்க꞉ ||

———–

ஸ்ரீ ராமபட்டாபிஷேகம்

வஸிஷ்டோ வாமதேவச்ச ஜாபாலிரத காச்யப:
காத்யாயனோ கௌதமச்ச ஸுயஜ்ஞோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்க்ரம் ப்ரஸன்னேன ஸுகந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம் யதா –53

ஆயுஷ்ய மாரோக்யகரம் யசஸ்யம் ஸௌப்ராத்ருகம் புத்திகரம் சுபம் ச
ச்ரோதவ்ய மேதந்நியமேன ஸத்பிராக்க்யான மோஜஸ்கரம் ருத்திகாமை:54

பாராயண ஸமர்ப்பணம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ப்ய: பரிபாலயந்தாம் ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா:
கோப்ராஹ்மணேப்ப்ய: சுபமஸ்து நித்யம் லோகா: சமஸ்தா: ஸுகினோ பவந்து –55

ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: –56

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி –57

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ –58-

———–

ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ருணாதி என்பதைக் காட்டும்.
இங்கே ஹிம்ஸை என்ற சொல் போக்குதல் அல்லது அழித்தல் என்ற அர்த்தத்தில் வந்துள்ளது.
அதனால், ஶ்ருணாதி என்பது அழிக்கிறாள் – அதாவது எல்லா குற்றங்களையும் போக்குகிறாள் என்பதைக் காட்டுகிறது.
ஶ்ரூ-விஸ்தாரே என்பது மிகுதிப்படுத்துகிறாள் என்பதைச் சொல்லுகிறது.
இதிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ரூணாதி என்பதைக் காட்டும்.
ஶ்ரூணாதி என்பது விஸ்தரிக்கிறாள் – அதாவது நல்ல குணங்களை அதிகரிக்கச் செய்கிறாள் என்பதை காட்டுகிறது.

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே ||

——–

மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது,
காடென்பது செடிகளும் முட்களும் நிறைந்த பாதையைக் கொண்டது.
அங்கிருப்பது துக்கமுடைத்து (அத: வநம் துக்கம்), என்று சொல்லி அவளைத் தடை செய்யும் போது,
பிராட்டியின் வார்த்தை:
“ஓ! இராமனே! நான் வனத்தில் உன் முன்னே நடந்து செல்வேன் – தே கமிஷ்யாமி அக்ரத:.”
அது மட்டுமல்ல. அப்படிச் செல்லும் போது அந்தப் பாதைகளில் உள்ள புற்களையும் முட்களையும்
தலைமிதி யுண்ணும்படி செய்து (குஶ கண்டகாந் ம்ருதந்தி) உன் திருவடிகளுக்கு நான் வழி வகுப்பேன் என்றாள்.

அவள் சொன்ன பாதையும் சாதாரண காட்டு வழியன்று.
அவள் பாதையென்று கூறியது தர்மத்தின் வழி.
அதில் இராமனுக்கு அவள் என்றும் துணையாய் இருப்பாள் என்பதை ஸஹ தர்மசரீ தவ என்றானிறே ஜனகனும்.
இராமாயணத்தில் தொட்டவிடமெங்கும் எம்பெருமான் காட்டும் தர்மம் சரணாகதி தர்மம் என்று
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆக பிராட்டி அவனுடன் காட்டுக்குச் சென்றது அந்தச் சரணாகதி தர்மத்தைக் காப்பாற்றவே.

அதைக் கொண்டு நோக்கும் போது, முன்னே சென்று அதைக் கடைப்பிடிப்பேன் என்றதையே
செய்திருக்கிறாள் என்பது தெளிபு.
தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் என்றார் ஆழ்வார்.
சிறை இருந்தவள் என்றார் பிள்ளை உலகாரியனும்.
அதற்காக, இராமனுக்கும் முன்னாக இலங்கைக்குச் சென்றதையே அவள் உமக்கு முன் நான் நடப்பேன் என்றது.
அப்படி அவள் எம்பெருமானுடைய தர்ம மார்க்கத்தில் போகும் போது, இடையில் இருக்கும்
முள்ளும், புல்லும் அவன் திருவடிக்கு – அதாவது அவன் திருவடியில் செய்யும் சரணாகதிக்கு
தடையாம்படி இருக்கும் என்றும், அதை தலை மடியச் செய்வதே தன் கார்யம் என்றும் சொன்னாள்.

இங்கே புல்லும், முள்ளுமாய் இருப்பது என்று அவள் சொன்னது அந்த ராவணப் பயலையன்றோ.
ராவணன் இவ்வுலகிற்கு ஒரு முள்ளாய் இருந்தான் என்று வேண்டித் தேவர் இரக்கவும், அவனும் விரும்பிப் பிறந்ததுவும்.
அவன் புல்லாயும் இருக்கிறான் என்பதாலேயே பிராட்டி த்ருணம் அந்தரத: என்று அவனுக்கும் தனக்கும் இடையே ஒரு புல்லை இட்டுப் பேசியது.
த்ருணமந்தர: க்ருத்வா என்று அஜ்ஞனாயிருக்கிற உன்னை, த்ருணமிவ லகு மேநே என்று
இத்ருணத்தோ பாதியாக நினைத்திருப்பது என்று பொகட்டாளாகவுமாம் என்றார் பெரியவாச்சான் பிள்ளை.

இப்படி புல்லாயும், முள்ளாயும் இருக்கும் அவனையும் அவன் அஹங்காரத்தையும் தலை மடியச் செய்து
அவனை இராமனின் திருவடியில் சேர்ப்பித்து, அத்திருவடிகளுக்கு ஒரு நோவும் வாராதபடி,
அதாவது நிறம் பெறச் செய்வேன் என்று பிராட்டி எம்பெருமானுக்கு உரைத்தாள்.
அப்படியே சிறை இருந்தும், மித்ரம் ஔபயிகம் கர்த்தும் என்றும்
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி என்றும் உபதேசித்தும் தலைக்கட்டினாள்.
ஆனால் அவன் திருந்தாதொழிந்தது அவனுடைய பாபப்ராசுர்யமிறே என்றார் பிள்ளை லோகாசார்யர்.

இப்படி இலங்கைக்கு முன்னே நடந்து சென்றது மட்டுமன்று.
பெருமாள் “நாம் அதிகரித்த கார்யத்துக்கு ஸஹகாரியாக வேணுமே” என்ன,
அதிலும் அநுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் (ஜனகன்) என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
அவனுடைய தர்மத்துக்கு அவள் ஸஹகரிக்கையாவது, சரணாகத ரக்ஷணத்வத்தில்
அவனைக் காட்டிலும் முன்னிற்பவளாய் இருப்பாள் என்றது.

மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந என்றவனைக் காட்டிலும்,
முன்னின்று
பாபாநாம் வா ஶுபாநாம் வா என்று சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரக்ஷித்தவள் பிராட்டி.
இதை ஸ்ரீகுணரத்நகோசத்தில், பட்டரும்
மாதர் மைதிலி என்ற ஶ்லோகத்தில் அபராதம் செய்த கை உலராமலிருந்த ராக்ஷஸிகளை ரக்ஷித்த
உன்னால் சரணம் என்று சொன்ன பின் ரக்ஷித்த ராம கோஶ்டி சிறிதாக்கப்பட்டது என்றார்.

இதுவே அவள் காட்டிலே எம்பெருமானுக்கு முன்னே நடந்த நடையும், நடந்து கொண்டமையுமாம்.

————————————————————————————

ஸ்ரீ ராமசந்த்ரனின் 16 கல்யாண குணங்கள்

ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ நாரத மகரிஷி இடம் -கோநு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே –குணவான் -வீர்யவான் –16 கல்யாண குணங்கள்
ஸ்ரீ ராம சந்தரன் -குணா பரிவாஹாத்ம நாம் ஜன்ம நாம் –

கோனு அஸ்மின் சாம் ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |
தர்மக்ஞ்ச: க்ரிதஞ்ச: சத்யவாக்ய: த்ரிடவிரத: ||–2-

அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வ புதேஷு கோ ஹித: |
வித்வான் க: க: சமர்தஸ்ச: ஏக பிரிய தர்சன: ||–3-

——–

ஆத்மவான் ஜிதக்ரோத: த்துதிமானு அன் அசூயக: |
கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே ||–4-

கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே–யுத்தத்தில் எவர் கோபம் கொண்டால் தேவர்கள் கூட
பயப்படுவாளோ அப்பேற்பட்ட பராக்கிரமம் – சமுத்திர ராஜனே பயந்தான் அன்றோ !

—————

1- க குணவான் –

வசீ வதான்ய குணவான் ருஜூ சுசி –சமஸ்த கல்யாண குணாம் ருதோததி–ஸ்தோத்ர ரத்னம் -18-
குணவான் -சீலவான் என்றபடி –
சீல க ஏஷ தவ ஹந்த –அத்ர அவதீர்ய ந நு லோசந கோசர பூ -அதிமாநுஷ ஸ்தவம் -10-
பிறந்தவாறும் -உருகும் படி திருவவதரித்த சீல குணம் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –
தத்ர ராஜா குஹோ நாம் ராமஸ்ய ஆத்ம சமஸ் சகா –தம் ஆர்த்தஸ் சம் பரிஷ்வஜ்ய குஹோ ராகவம் அப்ரவீத் –
குகனொடும் ஓர் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான் -மகனொடும் ஓர் அறுவரானோம்
எம்முழை யன்பின் வந்த அகனமர் காதலையந நின்னோடும் எழுவரானோம் புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் தந்தை -கம்பர்
நிஷாதா நாம் நே தா கபி குலபதி காபி சபரீ-பெருமாள் ஸ்ரீ சபரி கையாலே அமுது செய்து அருளினார்
ரகுகுல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் -சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத்மஜா —என்னும்படி
வேடுவிச்சியாய் வைத்தே குரு சுசுருஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்-தன நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம்
இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன ஆதார அனுகுணமாக
தன கையாலே அமுது செய்யப் பண்ண அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் –
நஹி வர்த்தே ப்ரதிக்ரஹே-என்று குகன் இடம் மறுத்த பெருமாள் -இங்கே அர்ச்சி தோஹம் த்வயா பக்த்யா -உகந்து இவள் சமர்ப்பனையை ஏற்றுக் கொண்டார்
கபந்தன் பெருமாள் இடம் -ஸ்ரமணீ சபரீ காகுத்ஸத சிரஞ்சீவிநீ த்வாம் து தர்மே ஸ்திதா நித்யம் –என்றும்
ஸ்ரமணீம் தர்ம நிபுணாம் அபி கச்ச –தர்மம் என்றது குரு சுஸ்ருஷ்யையே
பெருமாளும் சபரி இடம் -கச்சித் தேகுரு சுஸ்ருஷா சபலா சாருபாஷிணி-இந்த தர்மம் இருந்ததால் தான் சபரி இடம் அமுது கொண்டு அருளினார் பெருமாள்
பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரி க்ருஹே -தேசிகன் –
கோயம் குண கதரகோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத கஸ்ய பூமி -அதி மானுஷ ஸ்தவம் -27
-திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் -பஞ்சு எனச் சிவக்கும் மென்கால் பாவையை பிரித்த பாவி வஞ்சன்
-ராவணனை இன்று போய் நாளை வா -என்ற குணமும் சீலம்
-கச்சா நுஜா நாமி ரணார் திதஸ் தவம் பிரவிச்ய ராத் ரிஞ்சிர ராஜ லங்காம் ஆச்வாச்ய நிர்யாஹி –
சீலவத்தை யாகிறது அபிஷேக விக்னம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே -வன வாஸோ மஹோ தய -என்று காடு ஏறப் புறப்பட்டுப் போவது
-ஆவாசம் த்வஹமிச்சாமி -என்று ரிஷிகள் பக்கலிலே தாழ நிற்பது
-கிங்கரௌ சமுபஸ்திதௌ-எனபது-ஜன்ம வருத்தங்களில் குறைய நிற்கிறவர்களை -உகந்த தோழன் எனபது
-இப்படிகளாலே சீலவதியை மூதலித்தது-அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா –

———-

2-க வீர்யவான்

வீர்யம் சௌர்யம் பராக்கிரமம் -சௌலப்யத்தை அனுசந்தித்து உருகி ஈடும் எடுப்பும் இல்லாத மேன்மையை அனுசந்தித்து தரிக்க அடுத்த குணம் இது
-ஜய ஜய மஹா வீர -வீர ராகவன் –
அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
சத்ரோ ப்ரக்க்யாத வீர் யஸ்ய ரஜ்ஞ நீயச்ய விக்ரமை -யுத்த -106-6-ராவணன் வார்த்தை
சின்னம் பின்னம் –ராம சஹஸ்ராணி –காகுத்ச்தம் ஏகமேவ
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கறந்து உள்ளும் தோறும் தித்திப்பான் – –உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –
வேகம் மிக்கவாறே இந்த்ரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி யாகையால் ரூப க்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் என்று அன்வயம்
வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடி படாது ஒழிகை –
கிள்ளிக் களைந்தானை –தலை பத்து உதிர ஒட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் –
வாலீ வானர புங்கவ –சர ஏணை கேந வானர -அசஹாய சூரன் -சதுர்தச சகஸ்ராணி — ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி
மரணாந்தானி வைராணி நிர்வ்ருத்தம் -ந பிரயோஜனம் -க்ரியதாம் அஸ்ய சம்ச்காரோ மமாப்யேஷ யதா தவ
-விபீஷணோ வா ஸூக்ரீவ யதி வா-இவன் விலக்காது ஒழிவான் என்பதே நாம்பார்த்த பிரயோஜனம்
ரஷ்யா அபேஷம் ப்ரதீஷதே –
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்கிரமம் -தான் விகாரம் அடையாமல் அனைவரைகளையும் விகாரம் அடையச் செய்பவன் வீர்யவான் –

———-

3-க தர்மஜ்ஞ
தர்மம் அறியா குறும்பன்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத –கருணா காகுத்ச்த
காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநு கம்பா ஸ்யாத் அனுக்ரோசோபி-ஏழு பதங்கள் பர்யாயம்
துக்கத்தில் நடுங்குபவனை கண்டு தானும் நடுங்குதல் அனுகம்பா -அழுபவனைக் கண்டால் அழுபவன் அனுக்ரோசம்
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித உத்சவேஷூ ச சர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி -அயோத்யா -2-40-
விகர்த்தா -சகஸ்ர நாமம் –
பிராணா தார்த்தி ஹரன் -கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசினாம் ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயாத் நாப சர்ப்பதி —
இத்யேவ மார்த் தஸ்ய ரகுப்ரவீர ச்ருத்வா வாஸோ வால்யநுஜஸ்ய தஸ்ய -சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமாநா பபூவ
–ஸூ க்ரீவன் அழுகை ஓய்ந்தபின்பும் பெருமாள் கண்ணீர் பொழிந்தார்-மதி எல்லாம் உள் கலங்கி நின்றார்
இயம் ஸீதா சஹ தர்ம சரீ தவ –நமது கல்யாணத்தில் இமாம் கன்யாம் தர்ம பிரஜார்த்தம் வ்ருணீ மஹே-
விதி தஸ் ச ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்சல-சம் ரஷைணைக வ்ரதி தரமோ விக்ரஹவான் –
ஆவியைச் சனகன் பெற்ற வன்னத்தை அமிழ்தின்வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –
வதார்ஹம் அபி காகுத்ச்த க்ருபயா பர்யபாலயத் –கிருபா -பிராட்டிக்கு வாசகம் -லஷ்ம்யா சஹ ஹ்ருஷிகேசோ தேவ்யா காருண்யரூபயா
-அனுக்ரஹமயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹம் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான் –

———-

4-க க்ருதஜ்ஞ-
கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு –
நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்
வெறிதே அருள் செய்பவர் -மனிதனாக வந்த இடத்தில் உண்ட குணம் அன்றோ
ஸூ க்ரீவன் அனுப்பியே திருவடி
பம்பா தீரே ஹ நு மதோ சங்கதோ வாநரேண ஹ -இந்த செயலுக்கு நன்றி பாராட்டியே லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி
-ஸூக்ரீவம் சரணம் கத –
விபீஷணனை ராவணன் குல பாம்சனம் என்றான் பெருமாள் இஷ்வாகு வம்சராக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
ஆக்க்யாஹி மம தத்வேன ராஷசா நாம் பலாபலம்-செல்வா விபீடணற்கு வேறாக பல்லானை
க்ருதம் ஜா நாதி இதி க்ருதஜ்ஞ-சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற வித்தை ஸூ க்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் என்னில்
நாம் அன்று ஈஸ்வரன் என்று கேட்டு இருக்கையாய் இருக்கும் –யாத்ருச்சிக்க -ஆநு ஷங்கிக-ப்ரா சங்கிக

————-

5-க சத்ய வாக்ய

ஷமா சத்யம் தமச் சம –சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் -சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ன் ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
வீதஹவ்யன் -ப்ருகு மகரிஷி இடம் ஒழிந்த கதை -நே ஹா அஸ்தி ஷத்ரிய கச்சித் சர்வே ஹீமே த்விஜாதய
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் -ஸூ ஷ்ம பரம துர்ஜ்ஞேயஸ் சதாம் தர்ம பிலவங்கம
தத் ப்ருஹி வசனம் தேவி ராஜ்ஞோ யதபி காங்ஷிதம் -கரிஷ்யே பிரதிஜாநேச ராமோ த்விர் நாபி பாஷதே –கைகேயி இடம் பெருமாள் வார்த்தை
அந்ருதம் நோக்த பூர்வம் மே நச வஷ்யதே கதாசன -ஏதத் தே பிரதிஜா நாமி சத்யே நைவச தே சபே -கிஷ்-7-22- ஸூக்ரீவன் இடம் /மீண்டும் கிஷ்-14-14
–முன்பே வரப்ரதானத்தைப் பண்ணி வைத்து இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி நின்று
-ராமோ விக்ரஹவான் தர்ம –என்கிற பெருமாளோடு கூடி வாழ இருந்த பேற்றை இழந்த தசரத சக்கரவர்த்தியை போலே
இங்கே இல்லை என்ற தாதி பாண்டன் தனது தயிர் தாழி உடன் மோஷம் பெற்றான்
சத்யேன லோகன் ஜயதி தீ நான் தா நேன ராகவ குரூன் சுச்ரூஷயா தீரோ தாநுஷோ யுதி சாத்ரவான் -சத்ய வாக்காலே சகல லோகங்களையும்
தானிட்ட வழக்காக கொண்டார் பெருமாள் இதனாலே மயா த்வம் சமநுஜ்ஞாதோ கச்ச லோகன் அனுத்தமான் –
மா ச லஷ்மண சந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே-ராஜ்யம் வா வனவாசோ வா -வனவாசோ மஹோதய –அயோத்யா -22-29-
-வனவாசமே உகந்தது என்றபடி
ராஜ்யாத் பரம்சோ வநே வாஸோ நஷ்டா ஸீதா ஹதோ த்விஜ-யீத்ருசீயம் மமா லஷ்மீ நிர்தஹேதபி பாவகம் -ஆரண்ய -67-25-என்று
புலம்புவது எவ்வாறு பொருந்தும் பிராட்டி பிரிந்து மகாராஜர் இழந்த துக்கத்தால் அன்றோ இந்த வார்த்தை –

———-

6- க த்ருட வ்ரத–திடமான வரதம் கொண்டவன்
சரணாகத வத்சல்யன் –
நிஷ் கிஞ்சன ஜன ஸ்வயம் ரஷா தீஷா சமாதிக சமிந்தானயசசே -சர்வ அவஸ்த ச்க்ருத் பிரபன்ன ஜநநா சம்ரஷணை கவ்ரதீ
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம்வா சீதே ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-
சத்ரு சஞ்சா நுரூபஞ்ச கு லஸ்ய தவ சாத்மன-ச தர்ம சாரிணீ
மே த்வம் பிராணே ப்யோபி கரீயசீ -10-22-
கபோத உபாக்யானம் -வ்யாக்ரவா நர சம்வாதம்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேவத கர்ஹிதம்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம –

————-

7–சாரித்ரேண ச கோ யுகத –
சாரித்ரம் -நல் நடத்தை -சரித்ரம் நீண்டு சாரித்ரம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதமஜாம்
இமௌ ஸ்ம முனிசார்தூல -கிங்க ரௌ சமுபஸ்தி தௌ ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாஸ நம் கரவாவ கிம்
ந மே ஸ்நானம் பஹூ மதம் வஸ்த்ராணி ஆபரணாநி ச -தம் வி நா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம்
பரத்வாஜச்ய சாசநாத் –
பித்ருவசன நிர்தேசாத் –
விச்வாமித்ரஸ்ய வசனாத் –
அகஸ்த்ய வசனாத் -சைவ –
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே யாள நீ போய்த் தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழி வெங்கான நண்ணிப் புண்ணியப் புனல்களாடி ஏழ் இரண்டு ஆண்டின் வா வென்று
இத்தை மீறி நடக்க உபதேசித்த ஜாபாலி முனிவர் வசனம் கேட்காத பெருமாள்
மாத்ரு தேவோபவ பித்ரு தேவோ பவ –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹி தவ்யா கதஞ்சன -தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பர தஸ்ய கதாம் குரு –
கௌசல்யா ஸூ ப்ரஜாராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே -உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் -நித்ய கர்மானுஷ்டங்களில் நிஷ்டன்
ஆச்வாசிதோ லஷ்மணேன ராமஸ் சந்த்யாம் உபாசத ஸ்மரன் கமலா பத்ராஷீம் சீதாம் சோகாகு லீக்ருத -பிராட்டியை பிரிந்த காலத்திலும்
அக்னிம் சம்சமயது ஆர்ய -ஹோம புகை கண்டு பரதன் அடையாளம் காணாமல் இருக்க அக்னியை அனைத்து விடும்படி சொல்லுகிறார் பெருமாள்-
வேல் வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை யருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
சாரித்ரம் தெய்வ பக்தி -சஹ பத்ன்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -அயோத்யா -6-1-
த்யாயன் நாராயணம் தேவம் –மேலேயும் உண்டு
லப்த்வா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாத் விபீஷண-யுத்த -131-85-
ஸ்ரீ ரெங்கே ந்தோ பதகி சலயே–ஹேமாம் போஜைர் நிபிட நிகடே ராம சீதோ ப நீதை-பெருமாள் அர்ச்சனை செய்த புஷ்பங்கள் இன்றும்
பெரிய பெருமாள் திருவடிகளில் காணலாம் பட்டர்
சர்க்காப்யாச விசாலாய நிஜதியா -ஸ்லோஹத்தில் ப்ரஹ்மாவால் ஆராதிக்கப் பட்டவன் -அதற்கு மேலே
ம நு குல மஹீ பால –மைதிலீ ரமணவபுஷா ஸ்வேன ச்வார்ஹாணி ஆராத நானி அஸி லம்பித்த -ஸ்ரீ ஸீதா பெருமாள் ஆராதித்து பின்பு
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு கிடைத்ததை மேலே பட்டர் உத்தர சதகத்தில் அருளுகிறார்
சாரித்ரம் ஒரே தாரம் கொண்டவன் என்றுமாம்

——-

8-சர்வ பூதேஷு கோ ஹித

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளான் பால் –
சிலரை ஸூ கிகலாகவும் சிலரை துக்கி களாகவும் ஸ்ருஷ்டித்தால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில்
-கர்மம் அடியாகச் செய்கையாலும் மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித பரநாகச் செய்கையாலும் வாராது
பெறலரும் திருப் பெற்று உதவி உதவிப் பெரும் திறன் நினைந்திலன் சீர்மையினன் தீர்ந்தனன் –
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் -ஸூ க்ரீவனுக்கு ஹிதம் செய்யவே இளைய பெருமாளை அனுப்பினான்
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை —சாஸ்திர வாக்யம் அன்றோ –

———-

9-க வித்வான் –

வேத வேதாங்க தத் வஜ்ஞ தனுர் வேதேச நிஷ்டித சர்வ சாஸ்த்ரார்த்த தத்ளஜஞ ச்ம்ருதிமான் பிரதிபானவான் -என்கிறார் நாரதர்
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்த யுன் பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ ஓதங்கள் கடல் அன்றி
ஒன்றினோடு ஓன்று ஒவ்வாப் பூதங்கள் தோறும் உறைந்தால்
அவை யுன்னைப் பொறுக்குமோ –விராதன் ஸ்தோத்ரம்
ஆதிப் பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ ஓதி யுறு பொருளுக்கு அப்பால் உண்டாயினு நீ சோதிச் சுடர்ப் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற
வேத முரை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-கவந்தன் ஸ்தோத்ரம்
வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத்மஜே
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்கிரமம் வசிஷ்டோபி மஹா தேஜா யேசேமே தபசி ஸ்திதா –
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்
இருந்தாலும் ஆத்மானம் மானுஷம் மத்யே ராமம் தசரதாத்மஜம்
வித்வான் -சர்வஜ்ஞன் -என்றபடி -உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -கருதரிய யுயிர்க்கு யுயிராய் கரந்து எங்கும் பரந்து
உறையும் ஒரு தனி நாயகம் என்றால் உன் பெருமைக்கு அளவாகுமோ
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் எதத கர்ஹிதம் -குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -என்பதாலும் வித்வான் இவனே என்றதாயிற்று

———

10-க சமர்த்தா

தீன பந்து தீன தயாளு -என்பதாலே ஸூ க்ரீவன் உடன் நட்பு கொண்ட சமர்த்தன் -இளையவர்கட்கு அருளுடையாய் இராகவனே
–தம்பிகள் மட்டும் அல்ல -இளைத்தவர்கள் என்றுமாம்
சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றிச் செருக்களத்து
-அங்குல் யகரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
அசமர்த்தம் விஜா நாதி மா மாயம் மகராலய -தனது திரு வாக்காலே அசமர்த்த புருஷனாக கட அரசன் கருதினான் என்று சொல்லும் படி
சரணாகதியை விளக்கி அருளவே சமுத்திர அரசன் இடம் சரண் அடைந்தார் அன்று ஈன்ற கன்றான விபீஷண ஆழ்வான் சொல் படியே பண்ணி அருளிய சமர்த்தன்

———–

11- ஏக ப்ரிய தர்சன க —

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமே
ரமயதி ராமன் -சந்த்ரகாந்தாநநாம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் ரூபா ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்
ந ததர்ப்ப சமாயாந்தம் பச்யமாதோ நராதிப -அயோத்யா -3-28-
சந்த்ரனை விட காந்தி உள்ளவன் -பும்ஸாம் -தண்டா பூபிகா நியாயம் -அனைவருக்கும்
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வாராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக வாதரம் செய்வன் -திருவரங்கத்தந்தாதி
பெண்டிரும் ஆண்மை வெக்கிப் பேதுரு முலையினாள்–சீவக சிந்தாமணி
கௌசல்யா ஸூ பிரஜாராமா -முனிவன் உண்ணப் புக்கு வாயை மறப்பாரைப் போலே தான் அதிகரித்த காரியத்தை மறந்து பெற்ற வயிற்ருக்குப் பட்டம்
கட்டுகிறவனாய் ஒரு திருவாட்டி பிள்ளை பெற்ற படி என்னே -என்று ஸ்ரீ கௌசல்யாரைக் கொண்டாடுகிறான் -வடிவு அழகு படுத்தும் பாடு
தோள் கண்டார் தோளே கண்டார் தோடு கழல் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அக்தே வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார் ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் –
வா போகு வா வின்னம் வந்து ஒரு கால் கண்டு போ –
ரூப சம்ஹ நனம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ருசுர் விச்மிதாகாரா ராமஸ்ய வனசாரிண-வன வாசின –
தருனௌ ரூபா சம்பன்னௌ ஸூ குமாரௌ மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ சீர கிருஷ்ணா ஜி நாம்பரௌ
கந்தர்வ ராஜ ப்ரதிமௌ பார்த்திவவ் யஜ்ஞா நான்விதௌ-சூர்பனகை
ஓவியத் எழுத ஒண்ணா உருவத்தாய் -வாலி
ஆயதாச்ச ஸூ வ்ருதாச்ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா -திருவடி
மஞ்செனத் திரண்ட கோலமேனிய மகளிக்கு எல்லாம் நஞ்செனத் தகையவாகித் நளிரிரும் பனிக்கு தேம்பாக்க கஞ்ச மொத்த லர்ந்த கண்ண -கம்பர்
தம் பத்ம தள பத்ராஷம் சிம்ஹ விக்ராந்த காமி நம் தன்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதி நம் –வால்மீகி
பத்ம தளம் பத்ம பத்ரம் இரண்டும்
செங்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கே
அஷம் இந்த்ரிய காயயோ-கண்ணுக்கும் வடிவுக்கும்
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -ஆண்டாள்
திரு உள்ளத்து அழகைக் காட்டி திருத்தவே அணை கட்டி இலங்கைக்கு வந்தார் பெருமாள் -தன பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் அன்றோ
ஏக ப்ரிய தர்சனன் -இனிமையாக கண்டு கொண்டு இருக்கத் தக்கவன்
யச்ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி நிந்தி தஸ் ஸ வஸே லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –
சபரி -சஷூஷா தவ சௌம்யேன பூ தாஸ்மி ரகு நந்தன –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் –
விரும்பிக் காணத் தக்க அழகன் என்றும் அன்பர்களை விரும்பிக் காண்பவன் என்றுமாம் –

———–

12- ஆத்மவான் க –

ஆத்மா ஜீவே -த்ருதௌ தேஹே சவ பாவே பரமாத்மநி –நிகண்டு -ஜீவாத்மா -தைரியம் -உடல் -இயல்பு பரமாத்மா
பிதரம் ரோசா யாமாச -சகல ஆத்மாக்களுக்கும் சேஷி என்றுமாம்
இமௌ ஸ்ம முனிசார்தூல கிங்கரௌ சமுபஸ்திதௌ -ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாஸ நம் கரவாவ கிம் –
கிங்கரன்-என் செய்வேன் என் செய்வேன் -என்னுபவன்-என் செய்தான் என் செய்தான் -என்னப் படுபவன்
பிசாசான் தாநவான் யஷான் ப்ருதிவ் யாஞ்சைவ ராஷசான் -அங்குல் யக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
பரதச்ய வச குர்வன் யாசமா நஸய ராகவ -ஆத்மானம் நாதி வர்த்தே தாஸ் சத்ய தர்ம பராக்கிரம -தேவும் தன்னையும் -திருவாய் மொழி
தேவி -ஐஸ்வர்யம் -தன்னையும்-ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
ஆத்மா பூதம் பரதம் நாதி வர்த்ததே -பூர்வர் -பட்டர் நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பாரதந்த்ராகை
-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறான் என்று -இத்தால் பக்த பராதீனன் என்கிறது
பரமாத்மாவின் தன்மையையும் காட்டிய அவதாரம் அன்றோ
ஸ ஹி தேவை ருதீர்ணஸய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்க்னே விஷ்ணுஸ் சநாதன
மயா த்வம் சம நு ஜ்ஞாதோ கச்ச லோகா ந நுத்தமான் –

———

14- க த்யுதிமான்

13-கோ ஜிதக்ரோத —16-கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோ ஷஸ்ய சம்யுகே -சேர்த்து பின்னர் பார்ப்போம்
த்யுதி -ஒளி-ராம திவாகரா -ராம ரத்னம் -மணியே மாணிக்கமே -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அனந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண பிரபா யதா —
நித்ய அநபாயினி-கிருஷ்ணா ஜிநேந சம்வ்ருண் வன் ச்ரியம் வஷஸ்தலஸ்திதாம் -மான் தோலினால் மறைத்துக் கொண்டானே
இவளோடு கூடியே வஸ்துவினுடைய உண்மை -அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் -திருவில்லாத் தேவரை தேறேல் மின் தேவு
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசியத்பாத சிஹ்நைஸ்
தரந்தி –பூர்ணம் தேஜ ச்புரதி பவதீ பாதலா ஷார சாங்கம் –
ஒளி -பிராட்டி என்றும் திருக் கல்யாண குணங்கள் என்றும் கொள்ளலாம் -புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் கல்யாண குணங்கள் – அன்றோ
பால்யாத் ப்ரப்ருத்தி ஸூஸ்நிக்த-தொட்டில் பருவத்தில் உள்ள சிசுக்களையும் ஈடுபடுத்த வல்ல அழகும் குணங்களும் உண்டே

———–

15-க அ ந ஸூ யக —
வாத்சல்யமும் அ ந ஸூ யையும் பர்யாய சப்தங்கள் -நற்றங்களை குற்றங்களாக கொள்வதே அ ஸூ யை
செய்தாரேல் நன்றே செய்தார் என்பர் போலும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜேயம் கதஞ்சன –தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம் –
துஷ்டனாக–தேசிகன்-தோஷ தஸ்ய ஸ்யாத் –
பிறர் பெருமையை பொறுக்கும் தன்மை இல்லாமை அ ஸூ யை என்றும் கொள்ளலாம்
உத்சவேஷூ ஸ சர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி -அயோத்யா மக்கள் பெருமாளை தந்தையாகக் கொள்ளுவார்கள்
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கை -மற்றை எல்லாக் குணங்களும் உண்டானாலும்
உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று அன்றோ இது
ப்ரவஷ்யாமி அ ந ஸூ யவே -ஸ்ரீ கீதை -9-1–சாஸ்திர உக்தங்களான விஷயங்களைக் கேட்டால் இது பொருந்தாது என்று
குதர்க்கம் செய்பவன் அ ஸூ யை உடையவன் பொருந்தும் என்று உகந்து இருப்பவன் அ ஸூ யை இல்லாதவன்
ஜாபாலி சொல்வதை சஹிக்க மாட்டாமல் பெருமாள் சீறி வெறுத்தார்-

———–

13/16- கோ ஜிதக்ரோத –கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷஸ்ய சம்யுகே

கோபத்தை வென்றவர் –ஸ்வ அதீனமாக கொண்டவர் -அம்கண் மா ஞாலம் அஞ்ச -முளைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச -உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற –
இஷ்வாகு சம்ச ப்ரபவோ ராமோ நாம ஜ நைஸ் ஸ்ருத —சதைவ ப்ரிய தர்சன –சோமவத் ப்ரிய தர்சன –காலாக்னி சத்ருச க்ரோத-
-கோபச்ய வசமேயிவான் -பாகவத அபாசரம் பொறாமையால் அன்றோ இவன் அவதரித்து செய்து அருளிய ஆனைத் தொழில்கள் –

———————————————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்–ஸ்ரீ இராமாயண ரஹஸ்யங்கள்–

November 24, 2023

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

———–

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

———–

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்

ஸ்ரீ காயத்ரி -சந்தஸாம் மாதா -இதிஹாச ஸ்ரேஷிடம் ஸ்ரீ ராமாயணம் –

ஒவ்வொரு ஆயிரமாகப் பிரித்து முதல் ஸ்லோகமாக எடுத்து வந்த ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ காயத்ரி ராமாயணம்

இந்த ஸ்ரீ காயத்ரி ராமாயணத்தை படிப்பதால் ஸ்ரீ காயத்ரி ஜபம் செய்த புண்யமும்
ஸ்ரீ ராமாயணம் முழுவதும் படித்த பலனையும் பெறலாம்

——-

தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் ப்ரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம் –-1-

வேத வேதாங்காதி ஸகல வித்யா பாராங்கதராய்
விரத நியம ஜபாதி அநுஷ்டான ஸம்பன்னராய்
வேதார்த்த வித்துக்களில் சிறந்தவராய்
முனி ஸ்ரேஷ்டரான நாரதரைக் குறித்து
உயர்ந்த தவமுடைய வால்மீகி மஹரிஷி ப்ரஸ்னம் பண்ணினார்

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌ சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனி புங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்

ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்

வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்

முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்

நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்

ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

——–

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாது ஸேவீ ஸ‌முசித‌ ச‌ரித‌ஸ் தத்வ‌ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணி ப‌த‌ந‌ ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌ கால‌ ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோ தாந்தோ ந‌ஸூயுஸ் ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வி த‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாது ஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌தி ய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த் த‌க்க‌து.

தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளி வ‌ந்ததினால்–வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்

——-

ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வான் யக்ஞக்நான் ரகு நந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீ புரா –2-

முன்பு தேவாஸூர யுத்தத்தில் அஸூரர்களை வெல்லும் போது இந்திரன் அஸூரர்களைக் கொன்றது போலே
அந்த சித்தாஸ்ரமத்தில் விச்வாமித்ரருடைய யாகத்தை அழிக்க வந்த அரக்கர்கள் அனைவரையும்
ஸ்ரீ ராகவன் கொன்று ருஷிகளினால் பூஜிக்கப் பட்டார்

———

விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷித:
வத்ஸராம் தனு: பஸ்ய இதி ராகவம் ப்ரவீத் –3-

இந்த வில்லை ஒருவராலும் நாண் ஏற்ற முடியாது என்று ஜனக மஹாராஜர் மொழிந்தத்தைக் கேட்டு
தர்மாத்வாகிய விச்வாமித்ரர் இராகவனைப் பார்த்து குழந்தாய் ஸ்ரீ ராகவ அந்த வில்லை நீர் பாரும் என்று பணித்தார் –

——-

துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்புதே
ஸயநீயம் நரேந்த்ரஸ்ய ததாசாத்ய வ்யதிஷ்டத —4-

ஸூ மந்த்ரர் என்பவர் தசரத மஹா ராஜருடைய அரண்மனையில் நுழைந்து சயன க்ருஹத்தை அடைந்து நின்று
அப்பொழுது அந்த தசரத மஹாராஜருடைய வம்ஸா வழியைச் சொல்லி ஸ்துதித்தார்

———–

வனவாசம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தார மனுகச் சந்த்யை சீதாயை ஸ்வ ஸுரோ ததௌ –-5-

இராகவனுடன் கூட வனவாஸம் போக நிச்சயித்துத் தன் பார்த்தாவைப் பின் சென்று போகிற சீதாப் பிராட்டியாருக்கு
மாமனாராகிய தசரத மஹா ராஜர் வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்தார்

——–

ராஜா ஸத்யம் ச தர்ம்ஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம் –6-

உலகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நடப்பிக்க வைப்பவன் அரசன்
நற் குலத்தில் பிறந்தவர்களுடைய குலாச்சாரத்தையும் நடப்பிக்க வல்லவன் அரசன்
ஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஹிதம் செய்பவன் அரசனே என்று பரதன் சொல்லுகிறான்

—————-

நிரீக்ஷ்ய ஸ முஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராமமாசீனம் ஜடா மண்டல தாரிணம் –7-

பரதன் சித்ர கூடத்தில் பர்ண சாலையில் ஜடையைச் சக்ராதாரமாகக் கட்டிக் கொண்டு வீற்று இருக்கும் ஸ்ரீ ராமனைப் பார்த்து
ஜடாதாரியாகிற இம் மஹாநுபாவன் யாராய் இருக்கலாம் -என்று சிறிது நேரம் நிதானித்துப் பார்த்துப் பின்பு
இவர் நம் குருவாகிய ராகவன் என்று அறிந்தார்

———

யதி: புத்தி: த்ருஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம்
அத்யைவக மனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸ: –8-

பெரும் புகழ் படைத்த ஸ்ரீ ராகவனே நீர் முனி ஸ்ரேஷ்டராகிய அகஸ்திய மஹ ரிஷியைப் பார்க்க விரும்பினீராகில்
இப்பொழுதே அவருடைய ஆஸ்ரமத்தைக் குறித்துச் செல்ல மனம் வையும் என்று ஸூ தீஷ்ணர் சொன்னார்

————-

பரதஸ் யார்யபுத்ரஸ்ய ஸ்வஸ்ரூணாம் மம ச ப்ரபோ
ம்ருக ரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி –-9-

ஓ ஸ்வாமீ அதி விசித்ரமாகிய இந்த மானான் உமக்கும் பரதனுக்கும் என் மாமிமார்களுக்கும் எனக்கும்
வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுமாகையாலே இதைப் பிடித்துத் தாரும் என சீதாப்பிராட்டியார் வேண்டுகிறார்

————

கச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவ.ந்தம் மஹா பலம்
வ்யஸ்ய.ந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ:–10-

ரகுகுல நாதனாகிய ஓ இராமனே நீர் இங்கு நின்றும் சீக்கிரம் புறப்பட்டுப் போய் மஹா பலசாலியாகிய
ஸூக்ரீவன் என்கிற வானர அதிபதியான அக்னி ஸாக்ஷிகமாக ஸ்நேஹன் ஆக்கிக் கொள்ளும் என்று கபந்தன் சொன்னான்

——

தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ சமமாண: ப்ரியாப்ரியே
ஸுகது:க்கஸஹ: காலே ஸுக்ரீவ வஸகோ பவ: –11-பஜஸ் வாத்ய –-பாட பேதம்

அப்பா அங்கதனே இனி நீ தேச காலங்களை ஆலோசித்து –இந்த தேசத்தில் இந்தக் காலத்தில் இம் மாதிரி இருக்க வேண்டும்
மற்றப் பொழுது மற்றப் படியாக இருக்க வேண்டும் என்று விசாரித்து அநிஷ்டம் நேர்ந்ததாகில் அதை இஷ்டம் போலவும்
துக்கம் நேர்ந்தால் அதை ஸூகம் போலவும் பாவித்துப் பொறை -பொறுமை அடக்கம் யுற்றவனாய்க் கொண்டு
ஸூ க்ரீவனுக்கு அதீனமாக இருக்கக் கடவாய் என்று வாலி சொன்னான் –

———–

வந்த்யாஸ்தே து தபஸ் ஸித்தாஸ் தாபஸா வீத கல்மஷா:
ப்ரஷ்டவ்யா சாபி சீதயா: ப்ரவ்ருத்திர் வினையான் விதை:–12-

ஓ வானர வீரர்களே தபஸ்ஸினால் பாபம் அற்றவர்களாய் அதனால் அணிமாதி ஸித்தியை அடைந்து இருக்கிற
அந்த மஹரிஷிகளை நீங்கள் பணிந்து விநயத்துடனே சீதா தேவி இருக்கும் இடத்தை
அவர்களைக் கேளுங்கோள் என்று ஸூக்ரீவன் சொன்னான்

———

ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காம்ரூபிணீம்
விக்ரமேண மஹா: தேஜா: ஹநுமான் மாருதாத்மஜ: –13-

வாயு புத்ரராய் மிக்க தேஜஸ்ஸை யுடையவைராக்கிய அந்த ஹனுமான் வேண்டும் உருவம் கொள்ள வல்லவனாய்
சிறந்த அந்த லங்கா புரிக்கு தேவதையாகிய இலங்கியை பராக்ரமத்தினால் வென்றார்

———

தன்யா தேவா: ஸகந்தர்வா: ஸ்த்தாஸ்ச பரமர்ஷய:
மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவ லோசனம் –-14-

என்னைப் பிரிந்த சோகத்தினால் தேவ லோகத்தை அடைந்த என்னுடைய பர்த்தாவாகிய செந்தாமரைப் பூ போன்ற
கண்களை உடைய இராகவனை அங்குள்ள எந்த தேவர்களும் கந்தர்வர்களும் சித்தர்களும் மஹ ரிஷிகளும் பார்க்கிறார்களோ
அவர்கள் மஹா பாக்யம் செய்தவர்கள் என்று ஸீதா தேவி சொல்கிறார்

————

மங்களாபிமுகே தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே
உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம் –15-

அப்பொழுது பரந்த கண்களை யுடைய அந்த ஸீதா தேவி வாநரோத்தமனாகிற அந்த ஹநுமானுக்கு
வாலில் நெருப்புச் சுடாமல் இருக்க வேண்டும் என்ற ஸ்ருதி பரிசுத்தையாய்க் கொண்டு அக்னியைக் கிட்டிப் பிரார்த்தித்தாள்

———

ஹிதம் மஹார்த்தம் ம்ருது பூர்வ ஸமிதம் வ்யதீத காலாயதி ஸம் ப்ரதிக்ஷமம்
நிஸம்ய தத் வாக்ய முபஸ்தித ஜ்வர ப்ரஸங்க வானுத்தர மேதத ப்ரவீத் –16-ம்ருது ஹேது –பாட பேதம்

பிற் காலத்தில் நன்மையை விளைக்குமதாய் அக்கணமே ஸூக ஜனகமாய் யுக்தி யுக்தமாய் பூத பவிஷ்யத் வர்த்த மாநங்கள்
என்கிற மூன்று காலங்களுக்கும் உரியதாய் நல் வார்த்தையாய்ச் சொன்ன விபீஷணன் சொல்லைக் கேட்டு
தன் கோரிக்கையில் பிடிவாதம் உடைய இராவணன் சினம் உள்ளவனாய்க் கொண்டு
இதை மேற் கூறியபடி உத்தரம் பதில் சொன்னான்

————-

தர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட: ஸம் ப்ராப்தோsயம் விபீஷண:
லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா நயம் ப்ராப்நோத்ய கண்டகம் –17-

தர்ம சிந்தை யுடையவனாய் ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான இந்த விபீஷணன் என்னை அடைந்தான்
ஆகையால் இவ்வளவு அனுகூல்யமுடைய இந்த விபீஷணன் இப்பொழுதே தடையின்றி இலங்கையினுடைய ஐஸ்வர்யத்தை
அடையப் போகிறேன் என்று இராகவன் பணித்தார்

——–

யோ வஜ்ர பாதாஸனி ஸன்னிபாதாத் ந சுக்ஷூபே நாபி ச்சால ராஜா
ஸ ராம பாணார்பிஹதோ ப்ருஸார்த்த: சசால சாபம் ச முமோச வீர: –18-

எந்த இராவணன் முன்பு இந்திரனுடைய வஜ்ர ஆயுதத்தினாலும் அடி உண்டவனாய்க் கொண்டு
ஆனால் ஒரு வருத்தத்தையும் யடைய வில்லையோ சலிக்கவும் கூட வில்லையோ
அந்த ராவணன் இராகவனுடைய பாணத்தினால் அடிக்கப் பட்டவனாய்க் கொண்டு அதனால் மிக வருத்தம் உள்ளவனாய் நடுங்கினான்
கையிலிருந்து வில்லையும் நழுவ விட்டான்

——-

யஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:
தம் மந்யே ராகவம் வீரம் நாராயணம்னாமயம் –-19-

எந்த இராகவனுடைய பராக்ரமத்திற்கு முன்னே நின்று அரக்கர்கள் மாண்டு விட்டார்களோ அந்த வீரனாகிய
இராகவனை நான் ஒரு பத்திரமற்ற நாராயணனாக எண்ணுகிறேன் என்று இராவணன் சொன்னான்

——–

ந தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம்
மோஹிதா: பரமாஸ்த்ரேன காந்தர்வேண மஹாதமனா –20-

இராகவன் பிரயோகித்த பெரும் தன்மையை யுடைய சிறந்த அந்த காந்தர்வம் என்கிற அஸ்திரத்தினால்
அரக்கர்கள் மோஹம் அடைந்தவர்களாய் சத்ரு ஸைன்யத்தை பாணத்தினால் கொளுத்துகிற இராகவனை காணாதவர்கள் ஆனார்கள்

————

ப்ரணம்ய தேவதாப்யஸ்ச்ச ப்ராஹ்மணே ப்யஸ்ச மைத்லீ
பத்தாஞ்ஜலி புடா சேதமுவாசாக்.நிஸமீபத: —21-

மிதிலேசனுடைய பெண்ணான ஸீதா தேவி அக்னி ப்ரவேஸ காலத்தில் தேவர்களையும் ப்ராஹ்மணர்களையும்
நமஸ்கரித்து கையைக் கூப்பிக் கொண்டு நெருப்பின் அருகில் நின்று இதை மேற் கூறியபடி மொழிந்தாள்

———

சலநாத் பர்வதேந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா:
சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம் –22

இராவணன் கைலாஸ மலையை அசைக்கும் போது அங்குள்ள மஹா தேவனுடைய பரிவார கணங்கள்
எல்லாம் நடுங்கிப் போயின -பார்வதியும் நடுக்கம் உற்றவளாய் அப்பொழுது
தன் பதியாகிய மஹா தேவனைத் தழுவிக் கொண்டனள்

———-

தாரா: புத்ரா: புரம் ராஷ்ற்றம் போகாச்சாதனபாஜனம்
ஸர்வமேவாவிபக்.நம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர: –-23-

ஓ வானர உத்தமனாகிற வாலியே இது முதல் உனக்கும் உனக்கும் பெண்டாட்டிகள் பிள்ளைகள் நகரம் இராச்சியம்
கந்த கு ஸூ மாதிகள் ஊண் உடை ஆகிய இவைகளில் ப்ரீதி பேதம் இன்றி நடக்க வேண்டும்
இதில் சம்சயம் இல்லை என்று இராவணன் சொன்னான்

——–

யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம் ஸமாவிஸத்
தாமேவ ராத்ரிம் சீதாபுஇ ப்ரஸூதா தாரகத்வயம் –24-

லவணாசுரனுடைய வாதார்த்தமாகப் போம் போது எந்த ராத்திரியில் சத்ருக்கனன் வால்மீகி மஹ ரிஷியினுடைய
ஆஸ்ரமத்தின் பர்ண சாலையைப் பிரவேசித்தாரோ
அந்த ராத்திரியிலே ஸீதா தேவியும் இரண்டு குழந்தைகளைப் பெற்றனள்

———-

இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீ பீஜ ஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படே.ந் நித்யம் ஸர்வ பாபை: ப்ரமுச்யதே 

காயத்ரியின் பீஜ அக்ஷரங்களோடு கூடிய இந்த காயத்ரி ராமாயணத்தை முழுதும் யாவன் ஒருவன்
மூன்று ஸந்த்யா காலங்களிலும் தினம் தோறும் பாடம் செய்கிறானோ
அவன் எல்லாப் பாபங்களிலும் இருந்தும் விடப்பட்டவன் ஆவான் –

ஸ்ரீ காயத்ரீ ராமாயணம் ஸம்பூர்ணம்

————-

‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.

ஓம் பூர்புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத் |–இது தான் காயத்ரி மந்திரம்.

ஓம்
பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய
ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள
வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்
பர்கோ – தெய்வீகப் பேரொளி மீது
தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்
தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்
நஹ – நம்
தியோ – அறிவுக்கு
ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்

அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி.
எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி!
அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி.
அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

——–

அக்ஷரங்களின் பயன்!

ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.
தத் என்பது ப்ரஹ்ம ஞானத்தையும்
‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,
‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,
‘து’ என்பது தைரியத்தையும்,
‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,
’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,
‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,
‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,
‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,
தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,
‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,
‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,
‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,
‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்
‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,
‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,
‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,
‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்
‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,
’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,
‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்
‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்
‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்
‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்!

ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம்,
மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம்,
வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும்,
ருத்ரதெய்வதம், கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.

தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

———–

காயத்ரி மந்திரம் கீழ்க்கண்ட சொற்களைக் கொண்டது:

­­­­“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”

இதன் பொருள்:

மண்ணுலகம், விண்ணுலகம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை, நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர, அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

காயத்திரி மந்திரத்தின் பொருளைப் மகாகவி பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடியுள்ளார்.

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்

அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”

 நல்லனவெல்லாம் எத்திசையிலிருந்து வந்தாலும், எம்மொழியிலிருந்து வந்தாலும் அவற்றை ஏற்று நாம் பயன் பெறுவோமாக

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்

இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத் – என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச – என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி – என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர் – என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

வ – என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே – என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி – எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம் – ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர் – கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ – கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே – தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ – வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய – சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ – தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

ம – மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி – ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி – மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ – யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன – யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ் – தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர் – ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ – ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த் – த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத் – நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்.

————

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம் தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப் பட்டு வந்துள்ளது.

ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப் பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம். ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான் உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.

ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம். ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக இருப்பது ஓங்காரம்.

பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.

நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம். ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் (நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்; பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.

நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு வியவகாரம் பண்ணுகிறது. அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும் தமோகுணத்தால் [மூவகைக் குணங்களில் ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.

இம்மூன்று அவஸ்தைகளிலும் நாம் மாறிமாறி இருக்கின்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த மூன்று உலகங்களிலும் சற்று ஏறத்தாழ வசித்து வருகிறோம். இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன. நாம் எந்த அவஸ்தையில் இருந்தாலும் சரி, அதாவது எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, இந்த காயத்ரி மந்திரத்தினுடைய கருத்தையுணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிற அளவு ஆன்மிகத் துறையில் முன்னேற்றமடைகிறோம்.

விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு வாய்க்கிறது.

சுஷுப்தி அவஸ்தையில் தமோகுணம் ஆதிக்கம் செய்கிறது. தமோகுணத்தில் மூன்று நிலைகள் உண்டு – தமஸில் தமஸ், தமஸில் ரஜஸ், தமஸில் சத்துவம் என அம்மூன்று நிலைகள் விளக்கப் படுகின்றன. ஆத்ம பரிபாகம் அடைந்தவர்கள் தமஸில் சத்துவத்துக்கு மேலோங்க முடியும். அது அறிதுயில் அல்லது யோகநித்திரை எனப்படுகிறது. அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே குறிக்கோள்.

இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக் கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ்வர்க்கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப் போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.

இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பாரமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான்.  இருபிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக்குரியவன் ஆகின்றான்.

செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரியில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து அமைப்போம் –

ஓம் தத் ஸவிது: வரேண்யம் பர்க: தேவஸ்ய தீமஹி |திய: ய: ந: ப்ரசோதயாத் ||

य: ய: – யார், न: ந: – நம்முடைய, धिय: திய: அறிவை, प्रचोदयात् ப்ரசோதயாத் – தூண்டுகிறாரோ, तत् தத் – அந்த, देवस्य தேவஸ்ய – சுடருடைய, सवितु: ஸவிது: கடவுளின், वरेण्यम् வரேண்யம் – மேலான, भर्ग: பர்க: – ஒளியை, धीमहि தீமஹி – தியானிப்போமாக.

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

சரியாக அமைந்துள்ள காயத்ரி மந்திரத்தில் பரம்பொருளின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந்திருக்கும். ஜீவப் பிரயத்தனத்தையும், தெய்வத்தின் அருளையும் விளக்குவதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள் காயத்ரீ மந்திரங்கள் அனைத்துக்குமே பொதுவானவைகள்.

இம்மந்திரத்தில் பரம்பொருளுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது: என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல்லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப் படுகிறது. உலக நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மாவுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது. ஸவித்ரு என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்ற பொழுது, அது ஸாவித்ரீ என்று சொல்லப் படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது.

வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால். ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால். ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும், அது உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரம்பொருள் ஆகிறது

பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப் பொருளாகவும், முதல் காரணமாகவும் இருப்பது பரம்பொருள். பரம்பொருளுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவ வியக்தி இல்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன. (: தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மை போல் – நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே : திருமழிசையாழ்வார், நாலாயிர திவ்யப் பிரபந்தம்).

ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து (பரம்பொருள்) ஸவித்ரு என்று சொல்லப் படுகிறது. கட்புலனாகிற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸவித்ரு என்று சொல்லப் படுகிறார். ஆனால் இதன் லட்சியார்த்தம் (குறியீட்டுப் பொருள்) பரமாத்மாவையே குறிக்கிறது.

பரம்பொருளை விளக்குவதற்கு அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ: என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ: என்னும் சொல் திவ்யமானவன், பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் படுகிறது. பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை, யதார்த்த நிலை. பிரகாசத்தை இழந்த நிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூலநிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம்.

சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும், சந்திரனும் சுயப்பிரகாசத்தை இழந்தைவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும். ஜகத் (பருப்பொருள் உலகம்) ஜடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் (உணர்வு) ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப் பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ: என்னும் சொல் இப்பேருண்மையை விளக்குகிறது. பரம்பொருள் யாண்டும் சுயம்ஜோதி என்பது இதன் பொருள்.

இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க: என்பதாகிறது. பர்க: என்பது ருத்ரனுக்கும், சிவனுக்கும் அமைந்த மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக் கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப் பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரம்பொருளின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்வதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான். தன் வெளிச்சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ஙனம் ஞான சொரூபியாகிய பரமாத்மா தன்னைத் தானே விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஜகத்தும், ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.

இங்ஙனம் ஸவித்ரு, தேவ:, பர்க: ஆகிய மூன்று சொற்களையும் நாம் உச்சரிக்கின்ற பொழுது, அச்சொற்களுக்கு இலக்காக இருக்கிற பரமாத்மாவையே பாவனை பண்ண வேண்டும். . பரமனைப் பற்றிய பதங்களைப் பேசுகின்ற பொழுது, அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்திரத்துக்கு வலிவு வருகிறது.

காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் எனும் வினையின் விகாரமாம். வரேண்யன் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது. தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடுகின்றன. பரமனை விளக்குவதற்கு ஏற்ப ஜீவாத்மனிடம் ஞானச் சுடர் வளருகிறது. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் “பொருள்சேர் புகழ்” என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள் சேராத புகழ். பரம்பொருளைப் பற்றிய ஸ்துதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாக சொற்களை வாரிக் கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அதனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.

வினைச்சொல் தீமஹி. தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்ம சாதனங்களுள் இது தலை சிறந்தது. அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்துகிற பொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது.

தியானத்துக்காக நிமிர்ந்து உட்காரவேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்கவேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ஙனம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும், மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறியிருப்பதற்கேற்ப ஆன்மிகம் மக்களிடத்து ஓங்குகிறது.

ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது; மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும் ஊக்கத்தோடு அனுஷ்டுக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.

ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது. தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும், முடிவும் உண்டு. ஆனால் பரமாத்மனுடைய செயலுக்கோ ஆதி அந்தம் இல்லை. இச்செயலைத் தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்குகிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்லவேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.

இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும், ஜீவப் பிரயத்தனமும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்று படுத்துவது தான் யோகம். ஆக, பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.

காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும், உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்து நான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.

வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும், ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது. ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்.

———

ஸ்ரீராம காயத்ரி–ஓம் தாசரதாய வித்மஹே  சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி–ஓம் ஜனக புத்ரியை வித்மஹே ராம ப்ரியாய தீமஹி தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீராம பாத காயத்ரி–ஓம் ராம பாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி தந்நோ ராம பாதப் ப்ரச்சோதயாத்

விபீஷண காயத்ரி மந்திரம்.. “ஓம் ராம பக்தாய வித்மஹே சர்வாஸ்ரயாய தீமஹி தந்நோ விபீஷண ப்ரசோதயாத்”

—————-

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம:
விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல~ கம்பராமாயணம், அனுமபடலம்

————–

ஆயுர்வேத, சித்த மருந்துகள் மட்டும் அல்லாது ஆங்கில மருந்துகளை ஏற்போரும் மருந்துகளை விழுங்கும் முன்னால்,
ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் பாஹிமாம்
ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ரக்ஷமாம் —என்று ஓதி மருந்துகளை,
மாத்திரைகளை, டானிக்குகளை உட்கொள்வதால் அந்த மருந்துகளின் முழுப் பலனையும் பெற்று உடனடி நிவாரணம் பெறலாம்.

————-

காயத்ரி வேதஜனனி காயத்ரி பாபநாசினி
காயத்ர்யாஸ்து பரம்  நாஸ்தி திவி சேஹ ச பாவநம்- –யோகரிஷி யஞ்யவல்க்யர்
காயத்ரி தேவி  வேதத்தின் தாய். இந்த மாதா பாவங்களை அழிப்பவள். பூலோகத்திலும்  தேவலோகத்திலும்,  காயத்ரி மாதாவிற்கு ஈடு இல்லை.

கூர்ம புராணம், காயத்ரி தேவியை போற்றும் பொழுது,  இதையே சொல்கிறது

காயத்ரி வேதஜனனி  காயத்ரி லோகபாவனி
வேதத்தின் தாய், உலகை  புனிதமாக்குபவள்
ந காயத்ர்யா:  பரம் ஜப்யம் ஏதத்  விந்ஞானமுச்யதே மந்திரத்தை விட   உயர்ந்த மந்திரம் இல்லை

—————-

ஸ்ரீ இராமாயண ரஹஸ்யங்கள்–

ஸ்ரீ நாரதர் மோகித்து குணவான் இத்யாதிக்கு பதில் சொல்லும் முன்பு –
காமன் உடல் கொண்ட தவத்தார்க்கு உண்மை உணர்த்த –ஆனந்த கண்ணீர் பெருகி –
ஸ்ரீ வால்மீகியும் அதே நிலையிலே -தெரிந்து கேட்ட கேள்வி அன்றோ –
ஸ்ரீ ராமன் சரித்திரம் இன்னும் ஒருவர் சொல்லிக் கேட்க ஆசையால் கேட்க்கிறார்

சித்ர கூடம் எழுந்து அருளும் பொழுது முதலிலே வால்மீகி ஆஸ்ரமம் தானே –
ஸ்ரீ பரத்வாஜர் சொல்லி ஸ்ரீ பெருமாள் போனார் -ஸ்ரீ வால்மீகீம் அபிவாதயே அயோத்யா -56-மகரிஷி
பிரமுதிக-ஸ்ரீ ராகவன் ப்ரீதி சம்யுக்தம் வசனம் -அருளியது உண்டே
காட்டுக்கு வந்த விஷயம் அறிவேன் என்றாரே –
ஸ்ரீ வால்மீகி ஆஸ்ரமத்துக்கு தமஸா தீரத்தில் உள்ளது -அங்கே கொண்டு போக ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ லஷ்மணனுக்கு சொல்லி அனுப்பினார்
நம் தமப்பனாருக்கு ஆத்ம சஹா என்றும் சொல்கிறார் அந்தக் கட்டத்தில்

சோகமே ஸ்லோகம் -ஸ்ரீ ராம சரித்திரம் –ராமனை வாழ்த்துவதாக மா நிஷாதா -முதல் ஸ்லோகம் -ஆதி காவ்யம் தானே இது

ஸ்ரீ கம்பர் -அண்ணலும் நோக்கினான் –
சீதை பிராட்டியை குடிலோடே கூட்டி போனதாக சொன்னவை வால்மீகி சொல்ல வில்லை -வால்மீகி சொன்னதே பிரமாணம்
ஸ்ரீ கம்பன் -கம்பத்தில் வந்தது -இவர் பரம ஸ்ரீ வைஷ்ணவர் -ஹிரண்ய வதைப்படலம் -230-
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ வால்மீகி சொல்லாததை சொல்வதும் பிரமாணம் –
அங்குல்யா அக்ர தாம் ஹன்யா –ஸ்ரீ பெருமாள் சொன்னதை விவரித்து -ஸ்ரீ கம்பர் -தம் குல தைவம் சரித்திரம்
லஷ்மண ரேகா -எந்த ராமாயணத்திலும் இல்லை — கர்ணபரம்பரை
அணில் கைங்கர்யம் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களில் மட்டும் உண்டே

யவ்வனம் தன சம்பத் பிரபுத்வம் அவி விவேகம் -சர்வ நாசகாரம் சதுஷ்ட்யம்
தேவர்கள் அர்த்திக்க ராமம் மானுஜம் ஜெகநா -ராவண சம்ஹாரம்
பவித்ராணாம் சாதூனாம் விநாசாய துஷ் க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்த மூன்றும் தானே சொல்லி
மழுங்காத –தொழும் காதல் –
முதலை முதலை என்று கதறினாலும் முதலே தன்னை கூப்பிட்டது போலே வந்தான் –
அ என்று கதறினான் -அகாரார்த்தம் தன்னை என்று வந்தான்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவன்-
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக வருவான் -26-பொருளே தெரியாமல் சொன்னாலும் பலன் கிட்டும் –
அர்த்தம் நமக்கு தெரியாது இருந்தாலும் பலன் -வணக்கம் பிரதம மந்திரி சொல்ல கேட்ட நாம் மகிழ்வது போலே
அகாரார்த்தம் தெரியாமல் அ என்றாலும் வந்தானே
நாராயணன் நாகணை மிசை நம்பிரான் மணி வண்ணன் இவ்வளவு அகாரத்துக்கும் உண்டே

ஹூங்காரம் -மாட்டுவண்டிக் காரன் ஹாவ் ஹாவ் சொல்லுவது போலே – ஹஸ்தத்தால் -அடித்து -அக்ரி -காலால் உதைத்து –
இவ்வளவும் கருடனுக்கு பண்ணி த்வரைக்கு நமஸ்தே
துதிக்கை ஸ்துதிக்க கை -தொழும் காதல் அன்றோ –
கரஸ்த கமலாநி -தானே கையாலே பறித்த புஷ்பத்தை தனது கையாலே சமர்ப்பிக்க ஆசை கொண்டதே
சாது பரித்ராணம் -சாது லக்ஷணம் க்ஷண கால விஸ்லேஷம் கல்ப கோடியாக நினைப்பவர்
கம்பர் -கரா–அரவணைத்த துயில்வோய் என்று அழைத்த அந்த மெய்ப்பொருளை ராமன் பெயர் -காட்டிக் கொடுத்து
அவதாரம் -அவ தரத்தி கீழே இறங்கி பரமபதத்தில் இருந்தும் என்றும் -தாழ எளிமையாக என்றும் இரக்கம் கொண்டு இறங்குதல் –
க்ருத்ஸ்னம் சீதாயாக சரித்திரம் மஹத் -முழுவதுமாக -பெருமையானது -நாடு நயமாக சொல்லி
பவ்லஸ்ய வதம் என்றும் – இராம சரித்திரம் –
திருவினை பிரித்ததால் பவ் லஸ்ய வதமும் இவளுக்காக
ராமாயணம் ராமஸ்ய அயனம் -ரமா
என்பதை ராமாயாக அயனம் -சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது

பால காண்டம் -5-சர்க்கம் கதை – -18 சர்க்கம் அவதாரம்-அவதாரம் -9-ஸ்லோகம் –
அதிலே சில ஸ்லோகங்கள் பின்பு விசுவாமித்திரர் வந்தது
700-சர்க்கம் ராமாயணம்
ரிஷ்ய சிங்கர் -உனக்கு கொம்பு முளைத்து இருக்கா வசனம் இதனால்
புனர்வசு -புஷ்யம் -ஆயில்யம்

இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சாரீதவ–ப்ரதீச்ச ச ஏனாம் பத்ரம் தே பாணிம் க்ரீஹணீஸ்வ பாணினா–1-73-26-

சக்ரவர்த்தி கலப்பை உழுவது எதனால் -கர்ம யோக நிஷ்டர் அன்றோ -யாக பூமியை சுத்தி யஜமானனே செய்ய வேண்டுமே
இவனே தர்மம் -இதை நிலை நாட்டவே அவதாரம் -தர்மஞ்ஞா- சரணாகத வத்சலன் இதி விதித

முன் சென்று கல்லையும் முள்ளையும் அகற்றுவேன் –
கல் நெஞ்சு உள்ளாரையும் முள் போன்ற கருத்து உள்ளாரையும் திருத்தவே சுக்ரீவாதிகளை ஆபரணம் மூலம் திருத்தி
அதனால் தான் ஆண் உடை உடுத்திய பெண் போன்ற வார்த்தைகளை சொல்லி
ராமா மகா ஸஹ கச்சா-நீ பின் வா உறுதியாக
ஸஹ தர்ம சரிதா பவ -ராமனும் சொல்லி கூட்டிச் சென்றான்
இவள் சந்நிதியும் அசந்நிதியும் பெருமாள் ரஷிக்கவும்-வதம் செய்யவும் –
ஆவியை -ஜனகன் பெற்ற அன்னத்தை -அமுதினிலும் வந்த தேவியை பிரிந்து திகைத்தனையே -வாலி

———-

கச்ச மாதுல குலம் பரதேந ததா அநக -சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ் க்ருத –2-1-1-அயோத்யா காண்டம்
சத்ருக்ந ஆழ்வான் படி பாகவத சேஷத்வம்
அநக – அயோத்யையில் பாபம் இல்லாதவன் இவன் ஒருவன் இறே -உத்தேச்ய விரோதியே பாபம் –
ராம பக்தியான பாபம் -இஷ்ட பிராப்திக்குத் தடையானது தானே பாபம்

ராவணன் பண்ணிய பாபமே தசரதனுக்கு முடியில் நரை -அது கண்டு ராமனை பட்டாபிஷேகம்-இத்யாதி
ராவணன் செய்த தீமை தான் இந்த நரை -கம்பர்
பேதமைத்தாய் வரும்-இராமனுக்கு இராத மன்னனாக்கி பரதனுக்கு ராஜ்ஜியம் நல்கி பிறப்பை நீத்துவான் –
புத்ர சோகம் -வானத்தை நண்ணுவேன் -வான பிரவேசம் சொல்ல வந்ததாகவும்
பெருமாள் காட்டுக்கு போவதையும் வைத்து கம்பர்
பூ பழம் இரண்டையும் பார்க்க பூவை மறந்து பழத்தைக் கொள்ளுவாராய் போலே
ராமனைக் கொண்டு தசரதரனை மறந்தார் அயோத்யா வாசிகள் -துளசிதாசர் ராமாயணம்

பரதன் இல்லாத சமயம் இதுவே ப்ராப்த காலம் உனக்கு பட்டாபிஷேகம் –
மனஸ் ஒரு நிலையில் இருக்காதே -தசரதன் வார்த்தை -வால்மீகி
கைகேயி தமப்பனார் இடம் தசரதர் முன்பே அவள் பிள்ளைக்கு ராஜ்ஜியம் தருவதாக சொல்லி இருப்பதை நினைத்து
இந்த விஷயத்தை ராமனே சித்ரகூடத்தில் பரதனுக்கு சொல்லி –
சத்யம் காக்க வந்த தசரதர் -இப்படி செய்யலாமோ
ராமரும் அன்று எதற்கு இத்தை சொல்ல வில்லை என்றும் கேள்வியும் வருமே
கல்யாண காலத்தில் பண்ணும் சத்ய வாக்கியம் -மனைவியுடன் கூடிய காலம் -தர்மத்துக்காக –
உயிரைக் காப்பாற்ற -அடியவர்க்காக பொய் சொல்லலாம் icu-dr பார்க்கலாம் நான் dr பார்க்க முடியுமோ
நன்மை பயந்தால் பொய்மையும் -சரியே வள்ளுவர்
கைகேயி கல்யாணம் பொழுது பிள்ளையே இல்லையே
தர்ம சாஸ்திரம் மூத்த பிள்ளைக்கே -இவனுக்கு தர இவருக்கு அதிகாரம் இல்லையே
இந்த மாதிரி பேசி சமாதானம் பண்ண வேண்டி இருக்குமே அதனால் தசரதன் சொன்னார்

ராமர் சொல்லாத காரணம்
சொல்லி இருந்தால் வனவாசம் நின்று இருக்குமே –
பெரிய பெருமாளுக்கும் ராமருக்கும் சம்வாதம் -பட்டாபிஷேகம் நின்று போக கூனியை அனுப்பி
திரும்பி வந்த பின் ராமருக்கு ராஜ்ஜியம் திரும்ப தருவதாக சொல்ல வில்லையே -பரதனுக்கு அரசு இல்லையே நியாயமா –
சித்ர கூடம்-மூத்தவன் இருக்க இளையவள் ஆண்டால் நரகம் -சாஸ்திரம் -என் ராஜ்ஜியம் தானே –
என் உடைமையை நான் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமே -உமக்கு சமர்ப்பிக்கிறேன் –
தர்மம் ஏற்று கொள்ளாமல் இருக்க கூடாதே -வனவாசம் முடித்து வந்தபின்பு கொள்கிறேன் -பிரதி நிதியாக பாதுகையை வைத்து –
இயம்பினன் அரசன் என்றாள் -நும் பணி மறுப்பனோ -பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ –
இதுதான் பரதனுக்கு நீ வாங்கிக்கொடுத்துள்ளாய் –
மன்னவன் பணி அன்று -ஆகிலும் நும் பணி மறுப்பனோ

யாதோ ஜாதா -எங்கேயோ பிறந்தவள் கூனி -அயோத்யையில் பிறந்தவளாக இருந்தால் கெடுக்க மாட்டாள்
ராவணன் தீமையே கூன் வடிவில் கம்பர்
எதனால் கூனி செய்தால் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை

பாதுகை முன்பு எங்கு இருந்தது
தகப்பனார் பட்டாபிஷேகத்துக்காக சேகரித்த சர்வமும் கொண்டு காண வந்தான் –
சித்ர கூடத்தில் பண்ணப் போகிறேன் -ஸ்லோகம் உண்டே
ராஜாவாகவே அழைத்து வர எண்ணி போனான் –
அதில் முக்கியமானவை செங்கோல் கிரீடம் தங்க கவசம் போட்ட பாதுகை -உண்டே
ராஜ்யத்தை அங்கீ கரிக்கவே பாதுகையில் ஏறி அருளினார் பெருமாள்
ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்டா மகிழ்ந்து திரும்பினான் -மரவாடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய்

ஆழ்வார் பாசுரத்தில் உண்டே -அதனால் கம்பரும் காட்டுகிறார்
கூனி சிதைய உண்டை வில் –கோவிந்தா -கொண்ட கொண்ட அரங்க ஒட்டி -போன்றவை உண்டே
வால்மீகி –சொல்லாதது -சீதையா சரித்திரம் சொல்ல வந்ததே
12-வயசில் திருக் கல்யாணம் -24-வயசில் தண்டகாரண்யம் செல்ல
இவற்றை விவரிக்க வில்லையே வால்மீகி
14-வருஷம் பார்க்காமல் இருந்தால் செத்ததுக்கு சமம் -13-வருஷம் த்ரேதா யுகம் -12-வருஷம் கலியுகம் இன்றும் உண்டே

இப்போது எம்மனாரால் இயம்புவதற்கு எளிதோ -என்று கம்பர் எழுதாமல் மயங்கி விழ
ராமர் திரு முகம் காட்டி அருள –அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது
முள் கிரீடம் முன்பு -ஏறு போன்று மகிழ்ந்தான்
ஸுசீல்ய சாகரம் -ராமனை தேசிகன் கொண்டாடி -சீர் அணிந்த குகனோடு தோழமை கொண்ட அடையாளம்
அதிக நியதம் பிரபாவாத் பாதுகா சஹஸ்ரம்

தன் ஜோதியில் விரி ஜோதியில் மறைய பொய்யோ என இடையாளொடும் இளையானொடும் போனான்
மரகதமோ –மையோ -மரகதமோ மரி கடலோ மழை முகிலோ-ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்
திருக்கண்ணபுரம் பாசுரம் அடி ஒற்றி கம்பர்

12-வருஷங்கள் தண்டகாரண்யம் இருந்தவற்றையும் விவரமாக வால்மீகி சொல்லவில்லை
பிரிவை க்ஷணமும் சஹியாத பெருமாள் என்று -12-வருஷங்கள் இருந்து உணர்ந்த பிராட்டி –
வந்த கார்யம் செய்ய இப்படி வார்த்தை -எதுக்கு வீண் வம்பு ஸ்தூணா நிகன நியாயம்
ப்ரதிஜ்ஜை -உயிரை விட்டாலும் உன்னை விட்டாலும் இளைய பெருமாளை விட்டாலும்
ரக்ஷண தர்மத்தை விட மாட்டேன் -பெருமாளை சொல்ல வைக்க –
தன் அடியார் -சேர்க்கும் முன்பு அவள் மன்றாட பின்பு அவன் மன்றாட -இப்படி அன்றோ நாம்
ஆச்சார்ய -பாபம் இல்லாதவனே கங்கையில் இறங்கி ரஷிக்க முடியும் ஒருவனே செய்ய –
கங்கையில் முழிக்கினால் பாபம் போகும் நீர் சொன்னீரே அத்தை மனசில் வைத்து ரஷித்தேன் -கதை
அங்கீ கரித்த பின்பு பாபம் இல்லை -உன் அடியார் இருக்க பாபம் இருந்தாலும் என் அடியாராக பின்பு பாபம் இல்லையே

யாதிருச்சியா வந்தவர் கூனியும் சூர்பனகையும் -இருவராலும் காண்டங்கள் மாற
அழகான வடிவாக வந்ததாக ஆழ்வார் -அதை அடி ஒட்டியே -கம்பர் -கலை வணக்கு நோக்கு அரக்கி -ஆழ்வார் மான் போன்ற கண்
நடக்கிற அழகு பாட்டில் -கம்பர் -வஞ்சி என நஞ்சம் என வந்தாள்
ஹாஸ்ய ரசம் -இவ்விடத்தில் வால்மீகி
சூர்பனகையை வதம் பண்ணாமல் விட்டது -தாரையை வதம் பண்ண அங்கு விசுவாமித்திரர் –
அடுத்து பிராட்டி அருகில் இருக்க வதம் பண்ண முடியாதே
ஆத்மாய ஜமாந
தருணவ் ரூப சம்பன்னவ் -போலே கம்பரும் கர தூஷணாதிகள் –
மூக்கை அறுக்காமல் நாக்கை அறுத்து இருக்க வேண்டும் என்றார்களாம்

பெருமாளே பிராட்டியை பிரித்து கர தூஷணாதிகளை முடித்தார்
புஸ்தகம் எழுதினர்-dedicated to wife -இல்லாத படியால் எழுத முடிந்தது கதை போலே

மாரீசன் முதல் உபதேசம் பலிக்க சூர்ப்பனகை வந்து காமத்தை கிளப்ப மீண்டும் மாரீசன் இடம் சென்று –
சொன்னபடி செய்யா விட்டால் கொல்லுவேன் என்ன

அருந்தி விரும்பி வைத்தேன் -சபரி -அருந்தின கனிகளைக் கொடுக்க விரும்பி பெருமாள் கொண்டான்
கம்பர் நாதமுனிகள் காலம் -பட்டர் காலம் -கூட்டம் கூட்டமாக திருவாய் மொழி அனுபவம் சடகோப அபந்தாதியில் இருப்பதால்
பட்டர் காலமே என்பர் காஞ்சி ஸ்வாமிகள்
திருவடி -சப்த பிரயோகமும் கம்பர்
ஆஸ்ரித வாத்சல்யத்தால் ஸ்ரீ திரு மழிசை பிரான் அமுது செய்த பிரசாதம் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார்
அமுது செய்தார் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
சூடிக் கொடுத்த மாலையை சூடுவானே
ரகுகுல திலகர் ஆச்சார்ய பிரதரான பெருமாள் -வேடுவச்சி -குரு ஸூஸ்ருஷையால் –
நாவுக்கு இனிதான பல மூலாதிகளை –தன் கையால் அமுது செய்யப் பண்ண விரும்பி அமுது செய்தார்
வண்டு கடித்த பழம் இனிமையாக இருக்குமே
வேதக்கடலே –சொல்லின் செல்வன் -கம்பர் /சொல்லில் செல்வோம் இப்பொழுது
விரிஞ்சனோ விடை ஏறியோ -விஷ்ணு தான் இல்லையே –

தரணி ஸூத சுக்ரீவன் சூர்யன் பிள்ளை இடம் சரணாகதி -ஸ்வாதந்தர்யத்தால் பரதந்தர்யத்தை
ஏறிட்டுக் கொண்டு நாதம் இச்சாமி
சுக்ரீவன் இடம் தான் பிராட்டி கடாக்ஷம் வாலி இடம் இல்லையே அதனால் தான்
முனிவர்கள் நியமனமும் சுக்ரீவனை இடம் செல்ல உபதேசம்
தம்பி மனைவி கொண்டதால் அதர்மம் –
அக்னி சாக்ஷியால் வாலி இராவணன் நட்பு உத்தர காண்டம்
துந்துபி சரீரம் வாலி எறிய மதங்க முனிவர் ஆஸ்ரமம் ரத்தம் விழா சாபம் -அதனால் நுழைய முடியவில்லை வாலியால்
நித்யம் பாதாதி வந்தனம் -லஷ்மணன் நூபுரம் ஒன்றே அறிவேன்
இப்படிப்பட்டவனை அந்த வார்த்தை சொன்னது -ஸ்த்ரீயம் புருஷ விக்ரஹம் பெருமாள் இடம் சொன்னது போலே
ராவணன் வரும் பொழுது பெருமாள் இளைய பெருமாள் இருக்கக் கூடாதே
மாரீசன் கூச்சல் பண்ணினது ராவணை முடிக்கவே
ராவணன் சீதையை கொண்டு போனதை அறிந்தும் நாலு திக்குகளிலும் அனுப்பியது
மூன்று லோகங்களையும் வென்றவன் எங்கு வைத்து இருப்பான் தெரியாதே

துஷ்கரம் க்ருதவான் ராகவா ஜீவாதி தாராயத்தி ஆத்மனோ தேகம் –
இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்க -ஸ்ரீ நம்பிள்ளை
நம் உடம்பு எம்பெருமானுக்கு சரீரம் நம் ஆத்மாவை போலே
மதுராம் வார்த்தை-தேவ பாஷையால் பேசாமல் மதுர பாஷையால் -தமிழில் திருவடி -இனிமையும் நீர்மையும் தமிழ் நிகண்டு
தமிழ் தமிழ் திரும்ப சொல்ல -அமிழ்து-ஸ்ரீ வால்மீகிக்கும் தமிழ் தெரியும்
புறநானூறு வால்மீகியார் என்பவர் உண்டே-திருவினை விட்டார் அனைத்தையும் விட்டார் –
இவள் சந்நிதியால் காகம் தலைப்பெற்றது -என்பதையே இவ்வாறு அருளிச் செய்கிறார்-
வால்மீகி தமிழிலும் ஆதி கவி
சிரத்தினால் தாங்கி மெலிந்தாள் -குளிர்ந்தாள்-கணையாழி பெற்ற நிலை கம்பர்

சரணாகதி சாஸ்திரம் -காண்டங்கள் தோறும் சரணாகதி உண்டே
சுக்ரீவம் சரணாகதி நாதம் இச்சாமி பலிக்க வில்லை -பயமூட்டி கார்யம் நான்கு மாதங்கள் கழித்து உதவினான் –
இது கிஷ்கிந்தா காண்ட சரணாகதி
சுந்தர காண்டத்தில் தான் காகாசூரன் சரணாகதி காட்டுகிறார் -வால்மீகி -அயோத்யா காண்டத்தில் நடந்ததை
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித்த சூர்ப்பணகை ஷேப யுக்தியாக -வசவாக -சொல்லக் கேட்டு
என்று பார்ப்போம் என்று பாரித்து இருந்தார் பெருமாள் -மறக்குடி அறம் செய்யக் கெடும் –
இட்டு வா என்றால் சுட்டு வரணும் -மோதிரம் இட்டு வந்தவர் இலங்கையை எரித்து விட்டு வந்தார்
மீண்டும் ஒரு தூது -அங்கதன் -அவன் பேசின பேச்சு வால்மீகி ராமாயணத்தில் இல்லை
வாலில் நெருப்பு வைத்து அனுப்பிய குரங்கா -அத்தை துரத்தி விட்டோம்
வால் தானே குரங்குக்கு பிரதான அங்கம் என்றதுமே கதி கலங்கினான் ராவணன்
தீயிடை –குதித்த -அவள் வாய் சொல் வேகவதி வார்த்தை -பெண்ணால் அழிவு உனக்கு-
அவ் வணங்கை விட்டு விடு விபீஷணன்-அறிவில் மிக்கான் – சுட்டிக் காண்கிறான்

மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் -பழ மொழி ஸ்ரீ கூரத்தாழ்வான் பொன் வட்டில் எறிந்த பின்பே –
பெரும் செல்வம் நெருப்பாக -ஆழ்வார் -நெருப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை –
உலகு வாழ்வுக்கு கொஞ்சம் செல்வம் வேண்டுமே -பெரும் செல்வராய் திருமால் அடியாரைப் பூசிக்க நோற்றார்கள்
நெருப்பும் செல்வமும் அளவோடு இருக்க வேண்டும் திருக்குறளும் உண்டே
உடையார் -சக்கரவர்த்தி / பெரிய உடையார் -ஜடாயு -/மங்களா சாசனம் செய்ததாலும் பெரிய -ஸ்ரீ பெரியாழ்வார் போலே
இவர் ஆயுஷ்மான் என்று வாழ்த்தினதால் தான் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ சீதா பிராட்டியை விட்டு உயிருடன் இருந்தார் என்பர்
ஆச்சார பிரதானர் -சமுத்திரம் கடலைத் தாண்டக் கூடாது -ஸாஸ்த்ர விதி -ஆகையால் சேது

அபராத பிராயச்சித்தார்த்தமாக சுக்ரீவனையே இட்டு ஸ்ரீ விபீஷணனை அழைத்து வரச் சொல்லி
என் மீது வைத்த காதலால் சொன்னாய் ஆகிலும்
குகனோடும் ஐவரானோம் –நின்னோடும் எழுவரானோம் —
புகல் யரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை -உம்பி எம்பி ஆழ்வார் பாசுரம் படியே

இங்கேயே ஸ்ரீ விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் என்றால் ராவணன் திருந்தி வந்தால்
பிரதிசிஷ்யே மஹோ தயயே -வால்மீகி கருணை என்னும் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி -கம்பர் –
ஸ்ரீ நஞ்சீயர் இத்தை மேற்கோள் காட்டி அருளுகிறார்
அதிகாரம் சம்பாதிக்க வேண்டாம் நின்ற நிலையிலே -சர்வாதிகாரம் -ஸ்ரீ வேல் வெட்டிப்பிள்ளைக்கு-
பட்டுப்புடவை தோய்க்கக் கெடும்–நூல் புடவை தோயாமல் கெடும் மடி-சுத்தம் –
த்ருஷ்டாந்தம் இதுக்கு வார்த்தாமாலையில் காட்டி –
கூரப்புடவை நனைக்காமல் -பிள்ளைக்கு நூல் புடவை நினைத்தே கல்யாணத்தில்
புறம் தூய்மை நீரால் அமையும் அகம் தூய்மை வாய்மையால் அமையும் -வள்ளுவர்

சரணா கதி பண்ணினதால் வரவில்லை -சமுத்திர ராஜன்
மொட்டைத்தலையன் இதிகாசம் ஸ்தோத்ரம் பண்ண மனுஷ்யனே மயங்கும் பொழுது பரமாத்மாவுக்கு சொல்ல வேண்டுமோ
அபராதம் மறந்து விரோதிகள் இடம் அம்பை விட்டு
மனுஷ்ய பாவனை ஏறிட்டுக் கொண்டு -ஸ்ரீ பெருமாள் -அதனால் தான் ஸ்ரீ சுக்ரீவன் இடமும் சமுத்திர ராஜனிடமும்
மிரட்டி தான் கார்யம் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் இல்லாமல் பலிக்காதே
அணிலம் போல கைங்கர்யம் ஆழ்வார் மட்டும் -குரங்குகள் மலையை நோக்க -உபாத்தியாயர் ஊசி போலே
குளிக்க குளிக்க சமுத்திரம் குறையும் -என்பது அன்றோ அணில்கள் பாரிப்பு
மணலை ஒட்டி ஒட்டி அணை கட்டும் -என்பது அன்றோ அணில்கள் பாரிப்பு
ஓடி -ஓடினால் நிறைய மணல் ஒட்டிக்கும்
கைங்கர்ய பாரிப்பு
தரங்க நீர் -அலை உள்ள கடல் –
தோள்களின் மேல் மேல் பெருமாளை தூக்கி யுத்தம் என்பதால் திருவடி பெயர்

உனக்கு இவன் எப்படியோ அப்படியே என்பக்கம் நாம் கார்யம் செய்கிறேன்
எனக்கு நீ அப்படியே அப்படியே அவனும் என்னாமல் -அடியவன் என்னாமல் –
ஸ்ரீ பரதன் இடம் செய்தி சொல்லி திரும்பி வந்து ஸஹ போஜனம் வால்மீகி ராமாயணத்தில் இல்லை –
ஆகவே காய்கறிகள் இத்யாதி அந்தப்பக்கம் அன்னம் பருப்பு இந்தப்பக்கம் இன்றும் சாதிக்கிறோம்

அஞ்சிலே ஓன்று பெற்றான் -பஞ்ச சம்ஸ்காரம் திருமந்திரம் உபதேசம் அருளி
அஞ்சிலே ஒன்றைத் தாண்டி விரோதி ஸ்வரூபம் தாண்டி
அஞ்சிலே ஓன்று ஆறு ஆக -உபாயம்
அணங்கு-பிராட்டி புருஷகாரம்
பூ லோக வைகுண்டம் காட்டிக் கொடுக்கிறார் இத்தால்
அவன் நம்மை அளித்துக் காப்பான் –ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்

ரஹஸ்யமாக ராவணன் சரணம் -அனைத்தையும் தொலைத்து தன்னையே சமர்ப்பித்து
ஆகாசம் சாகரம் ராவண யுத்தம் -பூமியில் விழுந்த விதியில் ஏற்றுக் கொண்டான் – லீலை தானே –
இது த்வார பாலகர்களில் ஒருவன் தானே -விபீஷணன் வெளிப்படையாக காட்டி இவன் அந்தரங்கமாக காட்டி -என்பர்-

————————————-————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தப ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் பரி பப்ரச்ச வால்மீகி முனி புங்கவம் –இஷ்டா தேவதா நமஸ்கார மங்கள ஸ்லோகம் —

November 20, 2023

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத்–ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் தனியன்

ஸ்ரீ மத் கிருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷைக லஷ்யணாம் ஸூலபஸ் ஸ்ரீ தரஸ் ஸதா

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

——–

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

————-

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம்
நாரதம் பரி பப்ரச்ச வால்மீகி முனி புங்கவம் –1-இஷ்டா தேவதா நமஸ்கார மங்கள ஸ்லோகம்

தாத்பர்யம்
உயர்ந்த தவமுடைய வால்மீகி பகவான் –
கர்ம யோகாதி அனுஷ்டானம் -வேத அத்யயன ஜபாதி நிஷ்டை -முதலியவைகளை யுடையவராய்
வேதார்த்த வித்துக்களில் உயர்ந்தவராய் -ஸகல வித்யைகளை அறிந்தவர்களும் சிறந்தவராய்
ஸரஸ்வதி புத்திரர்கள் ஆகிய அத்ரி மரீசி முதலியவர்களின் மேன்மை யுடையவராய்
முனி ஸ்ரேஷ்டராய் இருக்கிற நாரத மஹரிஷியைக் குறித்து பிரஸ்னம் பண்ணினார்-

தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌ சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனி புங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்

ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்

வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்

முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்

நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்

ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

——–

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாது ஸேவீ ஸ‌முசித‌ ச‌ரித‌ஸ் தத்வ‌ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணி ப‌த‌ந‌ ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌ கால‌ ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோ தாந்தோ ந‌ஸூயுஸ் ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வி த‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாது ஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌தி ய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த் த‌க்க‌து.

தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளி வ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்

——–————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சீதாப்பிராட்டியுடைய சரம ஸ்லோகம்=

October 23, 2023

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே –ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே –ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இறே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இறே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வாநர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –

ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இறே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –

ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இறே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் –நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –


யுத்த  காண்டம்

ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44

பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3|

கார்யம் கருணமார்யேண   கஶ்சிந் நாபராத்4யதி ||

பொழிப்புரை: வானரனே! பாபிகள் விஷயத்திலும், புண்ணியவான்கள் விஷயத்திலும்,கொல்லத்தக்கவர் விஷயத்திலும் நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது. எவனும் குற்றம் செய்யவில்லை என்பது இல்லையே.

இராவணன் அழிந்து, இராமபிரான் போரில் ஜயித்தார் என்னும் இனிய செய்தியை ஸீதா பிராட்டியிடம் அநுமன் விண்ணப்பம் செய்ய, பிராட்டியும் உகப்பின் மிகுதியாலே, விம்மல், பொருமல்கள் ஏற்பட்டு செயலற்றவளாயிருக்க, ‘தேவி! என்ன நினைக்கிறீர்? தேவரீர் எதனால் என்னோடு பேசவில்லை?’ [கிந்நு சிந்தயஸே தே3வி, கிம் த்வம் மாம் நாபி4பா4ஷஸே; யுத்.கா. 116-16 ] என்று வினவினான். தேவியும் பதிலிறுத்தாள் ‘நீ செய்த பேருபகாரத்துக்குத் தக்கபடி தரக்கூடியதொன்றில்லையே என்று நினைத்தே பேசாமலிருந்தேன்’ என்று கூற அநுமனும், ‘தேவரீரைச் சூழ்ந்திருந்து துன்புறுத்திய இந்த அரக்கிகள் ராவணனைக் காட்டிலும் கொடியவர்கள், ராவணனுக்கு முன்னமேயே இவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ராவணன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதனால் அடங்கி இருக்கிறார்கள். இவர்களை என் கையால் துன்புறுத்திக் கொல்வதற்கு தேவரீர் அநுமதி தரவேண்டும்   பகவானிடம் அபசாரம் செய்தவர்களையும், பாகவதாபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் ரீதியிலே தண்டிக்க முயற்சிக்கிறேன். முன்பு வந்தபோது அவகாஶமின்மையாலே விட்டுப்போனேன். இபோது இந்த வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார். இதைக் கேட்ட பிராட்டி பதிலிறுக்கும் வண்ணம் இந்த ஶ்லோகத்தை அருளிச் செய்கிறார்.

பாபிகளானும், பரிஶுத்தர்களானாலும் (பாபாநாம் வா ஶுபா4நாம் வா) நீ நினைக்கிறபடி பாபமே செய்தவர்களாக இருப்பினும் சரி, நான் நினைத்தபடி பரிஶுத்தர்களாக இருப்பினும் சரி, எப்படியிருந்தாலும் கருணை காட்டவேண்டியதே. பரிஶுத்தர்களாகில் கருணை காட்டவேண்டும் என்பதை நீயே அறிவாய். பாபிகள் பக்ஷத்திலும் கருணையே காட்டப்படவேண்டும் என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டுகிறேன். ‘கருணை காட்டுவதற்கு மஹாபாபிகள் கிடைக்கமாட்டார்களா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நல்லோர்கள். ‘குற்றமுளதாகில் மிகவும் நன்று’ [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா.18-3] என்ற இராமபிரானைப் போலே, அழுக்குடையவனைத்தானே குளிப்பாட்ட வேண்டும்.  அதுபோலவே பாபமாகிற அழுக்குடையவர்கள் அகப்பட்டால், கருணையான குளிர்நீராலே அவர்களைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும். ஆகையால் ராக்ஷஸிகள் பாபம் செய்திருப்பதால்தான் அவர்களுக்குக் கருணை முகம் காட்டவேண்டும். பாபமற்றவராகில் அவர்கள் தாமாகவே கடைத்தேறிவிடுவார்கள். தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ளத் தம் கையில் ஒன்றும் இல்லாதவர்களையன்றோ நல்லோர்கள்  கைதூக்கி விடவேண்டும். இதைக்கேட்ட அநுமன், ‘அப்படியென்றால் தர்ம ஶாஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டுமோ?’ என வினவ, அதற்கு பிராட்டி சொன்னாள், ‘கொல்லத்தக்கவரானாலும் (வதா4ர்ஹாணாம்) நீ சொன்னது ஸாமாந்ய ஶாஸ்திரம்’. ஆகையால், கொல்லத்தக்கவனாயினும் ஶரணமடைந்தவனைக் கைவிடுவதில்லை’ [தஸ்மாத3பி வத்3யம் ப்ரபந்நம் ப்ரதிப்ரயச்சந்தி; யஜு.ஸம்.6-5-20] என்கிற விஶேஷ ஶாஸ்திரத்தைக் கிழித்துப் போடவேண்டுமே’. ஸாமாந்ய ஶாஸ்திரத்துக்கும், விஶேஷ ஶாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால், ஸாமாந்ய ஶாஸ்திரத்தைத் தள்ளி விஶேஷ ஶாஸ்திரத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்கிறாள் பிராட்டி. இதைக் கேட்டும் அநுமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமையாலே, பிராட்டி, ‘ஹரி, ஹரி’ என்கிறாள். பிடித்த பிடியை விடாத உன் குரங்கு புத்தியைத்தான் உன் செயலில் காண்கிறேன். வஸிஷ்டர், வாமதேவர் முதலானோர் மந்த்ராலோசனை வழங்கக்கூடிய இக்ஷ்வாகு வம்ஶத்தில் பிறந்தவன் அல்லையே நீ. கர்மயோகியான ஜனகரின் வம்ஶமுமன்று. காட்டில் கிளைக்குக்கிளை தாவித்திரியும் ஜாதியிலன்றோ நீ பிறந்தது! அப்பேர்பட்ட உனக்கு ஶரணாகதியின் பெருமை எப்படித் தெரியும்? பேருபகாரம் செய்த அநுமனை இப்படிப் பிராட்டி நிந்திக்கலாமோவெனில், அன்று அவன் செய்த பேருபகாரத்துக்குத் தோற்று ‘வானரோத்தம’ என்றவள், இன்று அவன் அடாத செயல் புரிவதில் பிடிவாதமாய் இருப்பதைக் காண்கையாலே, அவனைத் திருத்துமுகமாக ‘குரங்கே’ என்று நிந்திக்கிறாள் என்று கொண்டால் குற்றமில்லை. ராஜாவாய், இஷ்டப்படி நடக்கத்தக்க ஸ்வாதந்த்ரியமுடைய இராமபிரானும் எங்கள்முன் இத்தனை கோபமாகப் பேசியறியார். நீ கேவலம் ஒரு குரங்காயிருந்து என்முன்னம் இத்தனை கோபமாய்ப் பேசலாமோ?

நல்லோனால் கருணை காட்டப்படவேண்டும் (கார்யம் கருணமார்யேண). இவர்களுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு? அது நிற்க. இப்போது இவர்களுடைய வருந்தத்தக்க நிலையைப் பார். உன்னைப்போல் ஒருவன் இவர்களைத் துன்புறுத்தினால், ரக்ஷிப்பதற்கு இங்கு ஒருவருமில்லை. இப்படிப்பட்ட ஸமயத்தில் இவர்களுக்காகவன்றோ நாம் இரங்க வேண்டும். நல்லோனன உனக்கு நான் இப்போது இவையெல்லாம் சொல்லித்தரவேண்டியுள்ளதே! நீ ஐந்திர வியாகரணம் கற்றிலையோ? இப்படி எல்லா ஶாஸ்திரமும் கற்றிருந்தும், ராம கோஷ்டியில் பழகின பின்னர் இத்தன்மையுடையனானாய் போலும்! நான் பிரிந்த பின்னர் பெருமாளுடைய கோஷ்டி நீர் விடப்பட்ட  பால்போலே தரம் குறைந்து போயிற்று போலும்!

குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே ( கஶ்சிந் நாபராத்4யதி) இந்த உலக வாழ்க்கையில் குற்றமில்லாதவர் யார்? அலைபோனபின்பு கடலில் குளிக்கலாம் என்று சொல்லமுடியுமோ? அதுபோலவே, குற்றமில்லாதாரைப் பார்த்து கருணை காட்டுவேன் என்று சொன்னால், கருணை காட்டுவதற்கு ஒருவருமே அகப்படமாட்டார்களன்றோ? குதிரைகளில் சிறந்த குதிரை ‘நற்குதிரை’ என்பதுபோலே, ‘நன்மனிதர்’ என்று மனிதரில் சிறந்தவராகத் வேஷமிட்டுக் கொண்டிருக்கும் இராமபிரான் மட்டும் குற்றம் செய்யாதவரா? நான்தான் குற்றம் செய்யாதவளா? நீதான் குற்றம் செய்யாதவனோ?

ராமபிரான் என்ன குற்றம் செய்தார்-எனில், அவர் காடு சென்றார். மடலூருவாரைபோலே இலக்ஷ்மணனும் இவர் சென்றவிடமெல்லாம் சென்றார். இராமபிரானோடு காட்டில் இஷ்டப்படியெல்லாம் திரிந்து விளையாடலாம் என்று நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். இப்படிப்பட்ட என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார். ஓர் அம்பைவிட்டு ராவணனை நினைத்த மாத்திரத்தில் ஏன் மாய்க்கவில்லை? இதைச் செய்ய வல்லவராயிருந்தும் என்னைப்பிரிந்தே இருக்க வல்லவரானபோதே பெருமாள் குற்றம் செய்தவர் என்பது தெரியவில்லையா? என்னுடைய பாரதந்திரியத்துக்குத் தக்கவாறு அவர் என்ன செய்தபோதிலும் நான் பேசாமலிராமல், அவர் குற்றத்தை உன்னிடம் சொன்னபோதே, நானும் குற்றவாளியாகிறேன். தன் தலைவனான ராவணன் கட்டளையை நிறைவேற்ற இந்த அரக்கிகளை நீ தண்டிக்க நினைத்தால், முதலில் நீ உன் தலைவனான ராமனின் கட்டளையைச் செய்வதால் உன்னையன்றோ முதலில் தண்டிக்க வேண்டும்! ஆகையால், நீ சொல்லுகின்ற காரணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் நீயும் குற்றம் செய்தவனாகிறாய். ஆகவிப்படி, ராமபிரானும், நானும், நீயும் குற்றவாளிகள் ஆனபடியால், உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்? அதாவது, எல்லாவிதத்திலும் ஒரு சேதனனைப் பெருமாள் கோபித்தபோது, அந்தக் கோபத்தை ஆற்றிவிடுவதற்காக (புருஷகார பூ4தையான) நான் உண்டு. நானும் அவர் வழியிலே சென்று ஒரு சேதனனைக் கைவிடுமேயானால் ஆசார்யனான நீ உண்டு அச்சேதனனையும் எங்களையும் திருத்திச் சேர்ப்பிப்பதற்கு என்று நினைத்திருந்தேன். நீயும் இப்படிக் கருணையற்றவனானால் குற்றம் செய்தவற்கு யார் புகல்? என்கிறாள் கோபம் என்பதையே அறியாதவள் (அஜ்ஞாத நிக்3ரஹா), கருணையே வடிவெடுத்தவள் (கருணா) என்று ஶாஸ்திரங்களில் பேசப்படும் பிராட்டி.

அரக்கிகளிலும் கொடிய நம்மைப் போன்ற மஹாபாபிகளுக்குத் தஞ்சமாவது பெருமாளுடைய சரமஶ்லோகங்களல்ல; பிராட்டியினுடைய இந்தச் சரமஶ்லோகமே நமக்கு எப்போதும் தஞ்சமாகக் கடவது.

————

ஸ்ரீ சீதாவதாரத்தில் விளங்கிய பிராட்டியின் ஈடற்ற பொறுமை மஹா அபராதிகளான நம்மை
இன்புறுத்துவதாகக் கூறுகிறார் —

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

மாதர் மைதிலி -தாயே -ஜனகன் திருமகளாய் திரு வவதரித்து அருளியவளே –
தாயின் பொறை தகப்பன் பொறையை விட விஞ்சியே இருக்கும் அன்றோ
அவனையும் பெற்ற தாய் நீயே -என்பாரேலும் சிறிது வன்மை உண்டே ஆண் மகனான அவனிடம்
உபசரித்துக் கூறினும் இயல்பான தாயின் தன்மை சிறந்தது அன்றோ –
இயல்பான குணமும் படைத்த குணமும் சேர்ந்து அற விஞ்சியது என்பதால் மைதிலி என விளிக்கிறார்

ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா -நின் திறத்து அப்பொழுதே
ஆர்த்ராபராதா -குற்றங்கள் புரிந்த வண்ணமாய் யுள்ள -அரக்கியரை –

ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி ஷமௌ ரஷத
வாயு குமாரனான ஹனுமானிடம் இருந்து காப்பாற்றுகிற உன்னால்
சரணம் இதி -சரணம் என்று–
உக்தி ஷமௌ -சொல்லுவதில் தகுதி வாய்ந்த
காகாசுரனையும் பிரசித்தமான விபீஷணனையும் காப்பாற்றுகிற ராமனுடைய கோஷ்டியானது மிகவும் எளியதாக செய்யப் பட்டு விட்டது –
ததைவ –ராவண வதத்தைச் சொல்ல வருகின்ற அந்த சமயத்திலே -என்றபடி –
அப்பொழுதும் ராஷசிகள் துன்புறுத்திக் கொண்டே இருந்தும் காத்தனளே-
கொண்ட பிடியை விடாத குரங்கின் இடம் இருந்து காப்பது அரிது அன்றோ –
தந்தையான வாயு போலே தடுத்தற்கு அரியவன் -பவ நாத் மஜன் -என்கிறார் –
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறார் –

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கதா -என்றும்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத -என்றும் சரணம் அடைந்தவர்கள் அன்றோ அவர்கள் –
பலி புஜி–குண லவ சஹவாசாத் த்வத் சாமா சங்கு சந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
உக்தி ஷமௌ -சரணம் என்று சொல்ல தகுதி வாய்ந்தவர்கள் -என்பதால் காகத்தையும் சேர்த்து என்னலாம்
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -என்பதால் சரண் அடைந்ததும் சொன்னதாகவும் கொள்ளலாம் —
நின்னபயம் என்று அடைய சொல்லவில்லை பெரியாழ்வார் அதனாலே உக்தி ஷமௌ இங்கே
அப்பொழுது -உக்த்யா ஷமௌ -ரஷிப்பதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கொள்ள வேண்டும்
தீங்கு இளைத்த ஜெயந்தனை காகம் என்றே அருளுகிறார் ஆளவந்தாரும் வாயசமாக இவனைக் குறிப்பிட்டார்
சொல்லை பற்றாசாகக் கொண்டு ரஷித்த பெருமாளை விட யாதொரு பற்றாசும் இன்றி ரஷித்த பிராட்டியின் ஏற்றம் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –

ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது
நெருங்கின மஹத்தான அபராதங்களை யுடைய எம்மை இன்புறுத்துவதாக-

ஆகச்மிகீ நிர்ஹேதுகம் என்றபடி
திரிஜடை சொல்லியும் கேளாத ராஷசிகளை ரஷித்த பெருமை உண்டே
ராஷசர் நால்வரும் சரண் அடையாவிடிலும் விபீஷணன் செய்த சரணாகதி பலித்தது அவர்களுக்கும்
சிஷ்யன் அனுகூலித்து வரா விடில் இவனுக்காக ஆசார்யன் செய்த பிரபத்தியும் பயனில்லதாம்
பிராட்டி வியாஜ்யம் இன்றி காப்பது ஆகிஞ்சன்யம் உடையவர்களையே யாதலின் சர்வ முக்தி பிரசங்கம் வாராது –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய்.
இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும்
உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அன்னை சீர் மைதிலியே அரக்கியர்கள் அன்றைக்கும் பைங்குற்றம் புரியா நிற்ப
அன்னாரை யளித்த நுமன் அழியா வண்ணம் அழித்தனையால் இராமனது குழுவின் மேன்மை
தந்நாவில் சரணம் எனத் தகுதி வாய்ந்த தசமுகனின் தம்பியொடு காகம் காத்த
தென்னாவது இரும் குற்றம் இழைக்கின்றோ முக்கின்பம முனதியல்பான பொறுமை நல்க –50

பைங்குற்றம் -பசுமையான நாள் படாத அப்பொழுதே செய்த குற்றம் –

———

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்ததிருப் புளிங்குடிக் கிடந்தானே--9-2-1-

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பல நாள்களாக செய்து போந்த உன் திரு வருளையும் -என்றது
நீ நேற்று இன்று செய்து போந்த கிருஷியின் பலமோ -இது –
எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –
நெடுநாள் கிருஷியை செய்து-பல வேளையில் கை விடவோ -என்கிறார்-

பங்கயத்தாள் திருவருளும் -கொண்டு
அவன் அருளுக்கு காரணமான பெரிய பிராட்டியார் திருவருளையும் கொண்டு-
அவனுடைய அருளின் ஸ்வாதந்த்ரியத்தை தவிர்க்கும் அருள் –
காதல் காரணமாக வந்த பாரதந்த்ரியமே அன்றோ ஸ்வாதந்த்ர்யத்தை தவிர்ப்பது -என்றது-
அவன் அருளின் ஸ்வாதந்த்ர்யத்தின் வாசனையை தவிர்க்குமவன் அருளும்படியாக அன்றோ வந்தது –
ஆதலால் அவள் அருள் அவன் ஸ்வாதந்த்ர்யத்தை பின் செல்லாதபடி செய்யும் ஆயிற்று -என்றபடி-
நன்று -அங்கனமாயின் –
அவனுடைய பாரதந்த்ர்யம் அவள் காதல் காரணமாக வந்தது அன்றோ –அது நிலை நிற்குமோ –
ஸ்வா தந்த்ர்யமே அன்றோ அவனுக்கு இயற்க்கை –அதற்கு நாம் அஞ்ச வேண்டாமோ-எனின் -அஞ்ச வேண்டா
அவள் அருகே நிற்க ஸ்வாதந்த்ர்யம் நிலை நிற்காது-
ஆகையால் அன்றோ த்வயத்தில் முன் வாக்யத்தில் அவள் புருஷகாரமாக பற்றுகிறது
இனி
பண்டை நாளில் நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்பதற்கு
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று -என்றலுமாம் –
அன்றிக்கே –
சதம் நிபபதிம் பூமௌ சரண்ய சரணாகதம்-வதார்ஹமாபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
கொல்லத் தக்கவனாய் இருந்தும் பேரருளால் அந்த காகாசுரனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
கிருபைக்கு பரதந்த்ரப் பட்டவனான உன்னுடைய திருவருளையும்-
அந்த பரதந்த்ரத்துக்கு காரணமான அவள் திருவருளையும் பெற்று என்றலுமாம் –

நின் திரு அருள் -பங்கயத்தாளுக்கு திரு வருள் -ஆழ்வார் திருமகள் -பக்ஷ பாதி -இயம் சீதா -உன் கையால் இவள் கையைப் பிடிக்க
உன் தாமரைக் கண்ணால் நோக்காய் –செந்தாமரைக் கையால் -சீரார் வளை ஒலிப்ப – அணி மிகு தாமரைக்கு கையை அந்தோ
ஸ்வா தந்தர்யம் போக்கும் பார தந்தர்யம் -பாபங்களைக் கண்டு பயப்படாமல் இருக்க அபாய ஹஸ்தம் வைத்து இருக்கும்
அவனைக் கண்டு பயப்படாதே என்னும் திருக் கை அன்றோ -இவளது –

———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -முதல் ஸ்லோகார்த்தம் – ஸ்ரீ ராமாவதார -ஸ்ரீ குச லவர் திரு அவதார -ஸ்ரீ இராமாயண அவதார விசேஷ ஸ்லோகங்கள் —

January 11, 2021

ராமஸ்ய அயனம் எனப்பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து
இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து,
சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.

வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிறுதியாவார். (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும்,
நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.

————

ஸ்ம்ருதி
தர்ம சாஸ்த்ர ரதாரூடா வேதகட்கதரா த்விஜா: |
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயு: ஸதர்ம: பரமஸ்ம்ருத:|| (போதாயனாச்சார்)

வேதத்தை நன்கு அப்யசித்தவர்கள் ஸத்புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச்
சொல்லப் பட்டனவை களே ஸ்ம்ருதிகளாம்.

ஸ்ரீராமாயணம் (2வது சருக்கம்)
மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

(இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே
இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர்.
நீர் செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம்
வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டதினால், இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

———–

மூன்றாவது :– ஸதாசாரம் = (ஸத்புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)

பாலகாண்டம் முதலாவது சருக்கத்தில் 2 முதல் 4 சுலோகங்களால் வான்மீக முனிவர் நாரத மகரிஷியை நோக்கி,
“சுவாமி! இவ்வுலகத்தில், இக்காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசீல்ய குணமும் மற்றும்
அனேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத்புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன்.
அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்யவேண்டும்” என்று வினாவினபோது நாரதமகரிஷி மிகுந்த களிப்புடன்
‘ஓய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்”

இக்ஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோநாம ஜநை:ச்ருத:|
இக்ஷ்வாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமபிரான் என்பவர்தான் என விடையளித்திருக்கிறார்.
இதனால் ஸ்ரீராமபிரான் ஸத்புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதாசாரம் என்றும்
ஏற்படுவதால் மூன்றாவது ப்ரமாணமும் பொருத்தமாகிறது.

———-

நான்காவது:—ஆத்ம ஸந்துஷ்டி
பாட்யே கேயேச மதுரம் ஹலாதயத் ஸர்வகாத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச | (ராமாயணம்)
இந்த இராமாயணம் மனதிற்கும் இருதயத்திற்கும் மிக்க களிப்பாக இருக்கின்றது என
இராமாயணம் 4-வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தியாகின்றது.

————————-

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -முதல் ஸ்லோகார்த்தம்

த‌ப‌:ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம் த‌ப‌ஸ்வீ வாக்விதாம் வ‌ர‌ம்|
நார‌த‌ம் ப‌ரிபப்ர‌ச்ச‌ வால்மீகி முநிபுங்க‌வ‌ம்||” (வா.ரா. பா.கா. ச‌ரு 1 சுலோ 1)

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனிபுங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாதுஸேவீ ஸ‌முசித‌ச‌ரித‌ஸ் தத்வ‌போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ்த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணிப‌த‌ந‌ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌கால‌ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோதாந்தோ ந‌ஸூயுஸ்ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வித‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாதுஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌திய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த்த‌க்க‌து.

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளிவ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

———

இராமாவதார காலம்.
(1) வால்மீகி இராமாயணம்-பாலகாண்டம் சரு. 15. சுலோ. 28, 29.
“பயம் த்யஜ் த பத்ர‌ம் வோ ஹிதார்த்தம் யுதிராவணம் |
ஸுபுத்ர பௌத்ரம் ஸாமாத்யம் ஸமித்ரஜ்ஞாதிபாந்தவம் ||
” ஹத்வா க்ரூர‌ம் துராத்மானம் தேவரிஷீணாம் பயாவஹம் |
தச வருஷ ஸஹஸ்ராணி தசவருஷ சதா நிச |
வத்ஸயாமி மா நுஷே லோகே பாலயன் ப்ருத்வீமிமாம் |.”

(இத‌ன் பொருள்)(இனி இ-ள்) ”ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்;
உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய
பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்துகொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன் ” என்று
தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச்செய்தனர்.”

2. வால்மீ- இரா. உத்-கா. சரு. 37-க்குப்பின் ப்ரக்ஷிப்தசரு. சுலோ. 18,19.
ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி:’
‘க்ருதே யுகே வ்யதீதேவை முகே த்ரேதாயுகஸ்யது |
ஹிதார்த்தம் தேவமர்த்யானாம் பவிதாந்ருபவிக்ரஹ: ||
இக்ஷுவாகூணாம் ச யோராஜாபாவ்யோ தசர‌தோபுவி !
தஸ்ய ஸூநுர்மஹாதேஜா ராமோநாமபவிஷ்யதி. || ”

(இ-ள்) “க்ருதயுகம் கழிந்தபின்னர் த்ரேதாயுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷியர்களுக்கு
மிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசர‌தனென ஒரு ராஜன் ஜனிப்பான்;
அந்தத் தசரத மஹாராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒரு மஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் ” என உரைத்தனர்.

3. அத்யாத்ம ரா. பாலகாண்டம் சரு. 7. சுலோ. 25, 26.
” த்ரேதாமுகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய: |
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரஷ்யஸிமாம் தத: | ”

(இ-ள்) “‘ அழிவற்ற நான் த்ரேதாயுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப்போகிறேன்.
அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப் போகிறாய்” என்பதாக ஸ்ரீமஹாவிஷ்ணு தனக்கு வரமருளியிருப்பதாக
பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ் செய்தனர்.

4. அத்யாத்ம ரா. ஆரண்யகாண்டம் சரு. 9. சுலோ. 19. :
த்ரேதாயுகே தாசர‌திர்பூத்வா நாராயண: ஸ்வயம் |
ஆகமிஷ்யதி தேபாஹுச் சித்யேதே யோஜனாய தெளதேனசாபாத் வினிர்முக்தோ பவிஷ்யஸி யதாபுரா! ‘

(இ -ள்) ” ஸ்ரீமந் நாராயணமூர்த்தி த்ரேதாயுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து,
ஸ்ரீ ராமனென்னும் திருநாமத்துடன் வரப்போகிறார். அவர் திருக்கரத்தால் உன் கரங்கள் சோதிக்கப்படுங்காலம்,
உன் சாபவிமோசன காலமாகும்.” என்பதாக அஷ்டவக்ரமுனிவர் தனக்கு உரைத்திருப்பதாய்
கபந்தாசுரன் ஸ்ரீ ராமபிரானை நோக்கிக் கூறினன்.

5. அத்யாத்ம ரா. சுந்தரகாண்டம் சரு. 1. சுலோ. 48.
‘புராஹம் ப்ரஹ்மணா ப்ரோக்தா ஹ்யஷ்டாவிம்சதிபர்யயே|
த்ரேதாயுகே தாசரதீராமோ நாராயணோ அவ்ய‌ய: || ”

(இ-ள்) “இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதாயுகத்தில் சாக்ஷாத் நாராயணன்
தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவ‌தரிக்கப்போவதாய் ப்ரஹ்மதேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார்”
என்பதாக இலங்கணி என்பவள் திருவடி (ஆஞ்சநேயர் ) உரைத்தனள்.

6. விவஸ்வான் = சூரியன்
அவருடைய புத்ரர் = மனு (வைவஸ்வத மனு) அவருடைய புத்ரர் = இஷ்வாகு .
இஷ்வாகு பரம்பரையில் தசரத சக்ரவர்த்திக்கு ஸ்ரீராமபிரான் அவதாரம்.

7. வால்மீ – ரா. பால கா. சரு. 18 சுலோகம் 9, 10, 11.
”ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள !
நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு|
க்ரஹேஷ- கர்க்கடெலக்நே வாக்பதாவிந்து நாஸஹ
ப்ரோத்யமாநெ ஜகன்னாதம் ஸர்வலோக நமஸ்கிருதம்|
கௌஸல்யாஜநயத்ராமம் ஸர்வலக்ஷண ஸம்யுதம்
விஷ்ணொரர்த்தம் மஹாபாகம் புத்ரமைக்ஷவாக வர்த்தந‌ம்|| ”

(இ-ள்) ” பின்பு பன்னிரண்டாவது மாஸமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர்வஸு நக்ஷத்திரம்
கூடின தினத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருந்தவளவில், கர்கட‌ லக்ந‌த்தில், குரு சந்திரனோடு கூடியிருந்தவளவில்,
கௌஸ‌ல்யாதேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய்,
ஸாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷலக்ஷணங்களோடு கூடினவராய்,
விஷ்ணுவினுடைய பேர்பாதி பாகத்தினா லுண்டான வராய், மஹாபாக்யவானாய்,
பித்ருக்களை நர‌கத்தில்நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹாராஜனுடைய மனோல்லாசத்தை
வ்ருத்தி பண்ணுபவரான ஸ்ரீ ராமபிரானைப் பெற்றனள்,

8. கம்ப-ரா. பால-கா. திரு அவதாரப்படலம் 104, 110.”
“ஒரு பகலுலகெலா முதர‌த்துட் பொதிந்
த‌ரு மறைக் குணர்வரு மவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை.”

” மேடமாமதி திதி நவமி மீன் கழை
நீடுறு மாலை கற்கடக நீதிசேர்
ஓடைமா களிறனானுதயராசி கோள்
நாடினேகாதசர் நால் வருச்சரே.” –

இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28-வது சதுர்யுகமான த்ரேதாயுகத்தில்
சித்திரைமாஸத்தில் சுக்லபக்ஷ நவமி. திதி, புனர்வசு நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில்
ஸ்ரீமந்நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத் திருக்குமாரராக ஸ்ரீராமனென்னும்
திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.

————————

சர்வஜ்ஞரான ஸ்ரீராமபிரான் மகுடாபிஷேக மஹோத்ஸவம் கண்டருளிய பின்னர், கருமநெறி தவறாது
இராஜ்ய பரிபாலனம் செய்தும் ஒழிந்த வேளைகளில் வைதேஹியுடன் கூடி உத்தியான வனத்திற்குச்சென்று
நாடோறும் விநோதமாக பொழுதுபோக்கியும் வந்தனர். ஸ்ரீராமபிரான் பிரதிதினம் முற்பகலில்
ராஜாங்க சம்மந்தமான சகல காரியங்களையும் நீதிமுறை தவறாது நிறைவேற்றி
அதன் பின்னர் அந்தப்புரஞ் சென்று பிராட்டியுடன் அகமகிழ்ந்திருப்பார். ஜானகி ரகுநாயகர்களுக்கு, இவ்விதமாகவே

– ‘ தசவர்ஷஸஹஸ்ராணி கதாநி ஸுமஹாத்மனோ: |
(வா-ரா. உத்-கா, சரு. 42. சுலோ . 26.)
பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென் றன.
வா -ரா, உத்-கா. சரு. 42. சுலோ . 31, 32.
‘ அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸுரஸுதோபமாம் !
அபத்ய லாபோ வைதேஹி த்வய்யயம்.ஸமுபஸ்தித:
கிமிச்சஸி வராரோஹேகாம: கிம் க்ரியதாம் தவ /”

(இ-ள்) ஒருநாள் ஸ்ரீராமபிரான் ஜானகியை நோக்கி “ஹே! வைதேஹி! நீ கர்ப்பந்தரித்திருப்பது எனக்கு
மிகவும் களிப்பைத் கருகின்றது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை?
நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன்” எனக் கூறினார்.
அதற்குப் பிராட்டி , கங்கைக்கரையிலுள்ள மிகப்பரிசுத்தமான தபோவனங்களுக்குச் சென்று, அங்கு,
மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சில நாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற
ஆசையிருப்பதாகத் தெரிவித்தாள்.

அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப்பற்றி
சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதியிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு,
அவளையழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத்தருகே விட்டுவிடுமாறு ,
இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.

சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷிகுமாரர்களால் கேள்வியுற்ற வான்மீக முனிவர்
உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்துவந்து
அங்குள்ள ரிஷிபத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருத்துடனே காத்து வருமாறு கட்டளையிட்டனர்.

யமுனாதீரவாஸிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாசுரனது
வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராமபிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயேயிருந்து
ராஜ்ய பரிபாலனஞ் செய்துவருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர்.
லவணாசுரனுடன் போர்புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள்,
சத்ருக்னர், வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.

வா – ரா. உத் – கா. சரு. 66. சுலோ . 1.
”யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத்|
தாமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூதா தாரகத்வயம் ” :

(இ-ள்) சத்ருக்ன ஆழ்வார், என்றையத்தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ணசாலையில்
படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாபிராட்டியார் இரண்டு குமாரர்களைப் பெற்றனர்.

இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராமபிரானுடைய பட்டாபிஷேகானந்தரம்,
பதினாயிரம் வர்ஷங்கள் கழிந்த பின்னரே, குசலவர் ஜநநம் என ஏற்படுகிறது.

வா – ரா. பால- கா. சரு. 4. சுலோ . 1, 2. .
”பராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: |
சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான் |
சதுர்விம்சத்ஸஹஸ்ராணி ச்லோகாநாமுக்தவான்ரிஷி: |
ததாஸர்க்கசதான் பஞ்ச ஷட்காண்டானி ததோத்தரம் || ”

(இ-ள்) ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருக்கும் காலத்தில், வான்மீக முனிவர்
இருபத்திநாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ர காண்டமும் செய்தருளினார்.

‘மானிஷாத” என்று ஆரம்பிக்கும் சுலோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை,
(தமஸா நதிக்கரையில்) ப்ரஹ்மதேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர்த் தானமான பின்பு.

வா – ரா. பால-கா. சரு. 2. சுலோ . 39.
“ தத: ஸசிஷ்யோ வால்மீகிர்முநிர் விஸ்மய மாயயௌ
தஸ்ய சிஷ்யாஸ்தத: ஸர்வே ஜகு: ஸ்லோகமிம்ம்புன 😐
முஹர் முஹு: ப்ரீயமாணா: ப்ராஹூஸ்ச ப்ருசவிஸ்மிதா:

(இ-ள்) வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தையடைந்தார்.
அந்த சுலோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும், ஆச்சரியத்துட னும்,
அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக்கழித்தனர்.

மேலேகண்ட சுலோகத்தில் – சிஷ்யா:- என்று பகுவசனமாகக் கண்டிருப்பதற்கு,
கோவிந்த ராஜீய வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று
வ்யாக்யானம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்னரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.

சத்ருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுராபுரியை ஸ்தாபித்தபின்
”ததோ த்வாதசமே வர்ஷே சத்ருக்னோ ராமபாலிதாம் |
அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக: ”
(வா – ரா. உத் – கா. சரு. 7. சுலோ . 1)

(இ-ள்) பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக் காதல் கொண்டு
சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப்புறப்பட்டனர்.
வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிரமமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாத்தியாதி அதிதி
பூஜைகளைப் பெற்று, அன்றிராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.

வா-ரா. உத்- கா. சரு. 71. சுலோ . 14, 15, 16.
”ஸபுக்தவாந் நாஸ்ரேஷ்டோ கீதமாதுர்ய முத்தமம் |
சுச்ராவ ராமசரிதம் தஸ்மின்காலே யதாக்ருதம்
தம்த்ரீலய ஸமாயுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம் |
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸமதால ஸமந்விதம் |
சுச்ராவ ராமசரிதம் தஸ்மின்காலே புராக்ருதம் |”

(இ-ள்) சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில்,
ஸமீபத்தில் அதிமதுரமான ஸங்கீதமொன்று கேட்டது. ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில்
இசையொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு, சுலக்ஷணமாக மறைவிலே பாடப்பட்டது.
அதனைச் செவியுற்றவளவில், சத்ருக்னாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீராம சரித்திரம் மறுபடி
தமது கண்ணெதிரில் நடப்பதுபோலத் தோன்றியது.
வான்மீக முளிவர் தாமுண்டுபண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குசலவருக்கு உபதேசித்தருளினபோது,
அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது.

ஸ்ரீராமபிரான் அச்வமேத யாகஞ்செய்யத் தீர்மானித்து கோமதி நதி தீரத்தில் யாகசாலை நிருமித்து
வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப்படுத்தவும்,
வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ்வேள்விக்கு வரவழைக்கும் படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,

வா-ரா. உத் – கா. சரு. 91. சுலோ . 24, 25.
”மம மாத்ருஸ்ததாஸர்வா : குமாராம்த: புராணிச |
காம்சநீம் மம பத்நீம்ச தீக்ஷாயாம்ஜ்ஞாம்ஸ்ச கர்மணி ||
அக்ரதோ பரத: க்ருத்வாகச்சாத்வக்ரே மஹாயசா: ”

(இ-ள்) ‘நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும்,
ஸீதைக்குப் பிரதியாக நிருமித்துவைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ்செய்யும் முறைகளை
நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக்கொண்டு, பாதன் முன்னாலே செல்லக்கடவன் ” எனவும் நியமித்தருளினர்.
இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்திலிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.

வா – ரா. உத் – கா. சரு. 93. சுலோ . 1.
” வர்தமானே ததா பூதேயஜ்ஞேச பரமாத்புதே |
ஸசிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி: || ”

(இ-ள்)* இவ்வாறு மகாவைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு
வான்மீக முனிவரும் தமது சீஷர்களுடனே எழுந்தருளினர்.”
வான்மீகமுனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும்,
பிராம்மணர்கள் இறங்கியிருக்குமிடங்களிலும், ராஜமார்க்கங்களிலும், அச்வமேதயாகம் நடக்குமிடத்தில்
ஸ்ரீராமபிரான் சன்னதியிலும், பாடிக்கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளையிட்டனர்.
அவ்விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.

வா-ரா. உத்-கா. சரு. 94. சுலோ . 2. –
“தாம் ஸசுச்ராவகாகுத்ஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் |
அபூர்வாம் பாட்யஜாதிம்ச கேயேன ஸமலம்க்ருதாம் |
ப்ரமாணைர் பகுபிர்பத்தாம் தந்த்ரீலய ஸமந்விதாம்|
பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கௌதூஹலபரோபவத்.”

(இ-ள்) ” இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக்கொண்டு ஒத்த குரலினராய் சுலக்ஷணமாக தம்மாசிரியர் கற்பித்த
இராமாயணத்தை இன்பமாய்ப் பாடிக் கொண்டு வருவதை ஸ்ரீராகவன் திருச்செவி சார்த்தி இஃது
அபூர்வமாயும், அற்புதமாயுமிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.”
அனந்தர‌ம் அந்தக் காவியத்தின் வரலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும்
அச்சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்து கொண்டனர்.

வா -ரா. உத்- கா. சரு. 95. சுலோ . 1.
“ராமோ பஹூன்யஹான்யேவ தத்கீதம் பர‌மம் சுபம் |
சுச்ராவமுனிபி: ஸார்த்தம் பார்த்திவை: ஸஹவானரை|”

(இ-ள்) ஸ்ரீராகவன் நாள்தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடைசூழச் சபையினடுவே
முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவிசார்த்திக் களி கூர்ந்தனர்.

இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யாபுரிக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,
பதினாயிரம் வருஷங்கள் தருமநெறி தவறாது அரசாட்சி செய்துவந்தபின் சீதாப்பிராட்டி கர்ப்பமடைந்து
வான்மீக முனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று,
அக்குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது, வான்மீக முனிவருக்கு நாரத மகரிஷியால்
ஸ்ரீராமசரிதம் சங்க்ரஹமாக உபதேசிக்கப்பட்டு ப்ரஹ்மதேவரின் ஆக்ஞாப்ரகாரம் அம்முனிபுங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய
ஸ்ரீ இராமாயணமென்னும் ஆதிகாவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குசலவர்களுக்கு உபதேசிக்க,
அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகாமண்டபத்தில் முனிவர், அரசர், வானரர்
முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சன்னதியில் தாளலயத்துக்கிணங்க கானம் செய்து
அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ அபய பிரதான சாரம்–சரண்ய விரத விசேஷ பிரகாசம் என்னும் எட்டாம் அதிகாரம் -/சரண்ய சரணாகத சங்கம லாபம் என்னும் ஒன்பதாவது அதிகாரம் /பிராப்தி பிரகார ப்ரபஞ்சகம் என்னும் பத்தாவது அதிகாரம் —

September 22, 2019

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய
ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் -இருபத்தொரு சரணாகதி வேதம்
இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம் சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்
ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்

இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்
இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும் இரண்டு வகையாய் இருக்கும் –
பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது

———

சரண்ய விரத விசேஷ பிரகாசம் என்னும் எட்டாம் அதிகாரம் –

சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் –விபீஷனோ வா ஸ்லோகார்த்தம்

சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் —
ஸ்ருதி ஸ்ம்ருதி சதாசார ஸ்வஸ்ய ச பிரிய மாத்மந
சம்யக் சங்கல்பஜ காம தர்ம மூலமிதம் ஸ்ம்ருதம் -யாஜ்ஞ ஸ்ம்ருதி -1-7-என்று
மஹரிஷிகள் சொன்ன தர்ம பிரமாணங்கள் ஐந்தில் நாலை அருளிச் செய்து காட்டி –
பஞ்சம தர்ம பிரமாணத்தை அருளிச் செய்கிறார் –

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம் மம –யுத்த -106-53–

சக்ருதேவ
மற்ற உபாயத்தில் ஆவ்ருத்தி சாஸ்த்ரார்த்தம் ஆனால் போலே காணும்
பிரபத்தியில் அநா வ்ருத்தி சாஸ்த்ரார்த்தமாய் இருக்கும் படி

ஏவ -கார்த்தாலே
நைரபேஷ்யம் சொன்னபடி

ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
என்கிற இரண்டாலே கோப்த்ருத்வ வரணமும்
ஆத்ம நிக்ஷேபமும் சொன்னபடி

ப்ரபந்நாய-என்று மாசநமுமாய்
யாசதே -என்று வாஸிகமுமாய்-என்றுமாம்

த்வயத்தில் போலே அடைவே
உபாயத்தையும்
பலத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம்

ப்ரபந்நாய-என்று
கோபலீ வர்த்த நியாயத்தாலே ப்ரயோஜனாந்தர பரனைச் சொல்லி
தவாஸ்மீதி ச யாசதே -என்று
அநந்ய ப்ரயோஜனனைச் சொல்லுகிறது ஆகவுமாம்

சரணம் ச ப்ரபந்நா நாம் தவாஸ் மீதி ச யாசதாம்
பிரசாதம் பித்ரு ஹந்த்ரூணாம் அபி குரவந்தி சாதவ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -106-53-என்கிற ஸ்லோகத்திலும்
இப்படியே யசோசித விவஷையைக் கண்டு கொள்வது

சதுர்விதா பஜந்தே மாம் –ஸ்ரீ கீதை -7-16- என்கிற உபாசனம் போலே
தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-இத்யாதி பிரமாணங்களாலே பிரபத்தியும்
சகல பல சாதகமாய் இருக்கும்

அபயம்-என்று
சங்கோசா பாவத்தால் சர்வ பயாபாவத்தையும் சொல்லுகிறது

சர்வ பூதேப்ய -என்கிற
இத்தை பஞ்சமீ என்று சிலர் வியாக்யானம் பண்ணினார்கள்

ஸ்ரீ சோமயாஜி யாண்டான் உள்ளிட்டார் சதுர்த்தீ என்று நிர்வஹித்தார்கள்

இரண்டு பக்ஷத்திலும் உள்ள குண தோஷ தத் சமாதானங்களைத் தத் தத் கிரந்தங்களில் கண்டு கொள்வது

அதில் பஞ்சமீ பஷத்தில் -ப்ரபந்நாய-என்கிற இதுக்கு -சங்கோசம் இல்லாமையால்
ப்ரபத்தியினுடைய சர்வாதிகாரம் சித்திக்கும்

சதுர்த்தீ பக்ஷத்தில் சர்வாதிகாரத்வம் கண்ட யுக்தமாம்

பஞ்சமீ யானால் கேவல ராவணாதி மாத்ரத்தைப் பற்ற அன்றி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் –
நம்மையும் -பற்ற
பயம் இல்லாதபடி பண்ணுவோம் என்று அருளிச் செய்தபடியாம்

சதுர்த்தீ யானால் விபீஷணன் என்று நினைக்க வேண்டா –
ராவணன் தான் ஆகிலும் நாம் அவனுக்கு அபய பிரதானம்
பண்ணுவோம் என்றதாம்

இப்பொருள் கீழில் பிரகரணத்துக்கும்
மேலில் பிரகாரணங்களில் ஸ்லோகங்களுக்கும் சேரும்
இந்த யோஜனையில் சர்வரையும் பற்ற பயாபாவம் அர்த்த சித்தம்

நிதா நாம் சர்வ பூதா நாம் ஏக கர்ம பல ப்ரத
இதி பஸ்யந் கஸாதுல்யத் குதஸ்ஸிந் நபி பேதி ஹி
சர்வா பராத நிஷ் க்ருத்யா பிரபத்த்யா கருணா நிதிம்
ப்ரஸாதயன் ந ஹி புநச ததோபி பயம் ருச்சதி
அபாய சம்ப்லவே பூய யதார்ஹம் அநு சிஷ்யதே
பிராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புந சரணம் வ்ரஜேத்–ஸ்ரீ தேசிகருடைய காரிகை ஸ்லோகம் இது

ஏதத் விரதம்
இது சர்வ பிராமண அநு மதமாய்-
தவறில் பிரத்யவாயம் வரும்படியான தர்ம்யமான சங்கல்பம் காணும்

மம —
நமக்கு சங்கல்பம் நடத்துகைக்கு விலக்கான அஞ்ஞான அசக்தைகள் ஒரு காலும் வாரா காணும் –
ஆகையால் விலக்க ஒண்ணாத இவ் விரதத்தை பரிவரான நீங்களும்
இசைந்து ரஷியுங்கள் என்று திரு உள்ளம்-

——————-

விபீஷனோ வா ஸ்லோகார்த்தம்

கீழ் ஸ்லோகத்தில் அருளிச் செய்த ப்ரபத்தியினுடைய சர்வாதிகாரத்வத்தை ப்ரக்ருதமான
ராவண விபீஷண உதாஹரணத்திலே காட்டி
இவன் விபீஷணனே யாகிலும் ராவணன் யாகிலும் நாம் இவனுக்கு அபய பிரதானம் பண்ணினோம் –
உம்மையும் முதலிகளையும் புருஷகாரமாகக் கொண்டு
நம்மை சரணாகதனானவனை அமானவத்யாயஸ்த்தரான நீரே
நம்மோடே சேர்த்து நமக்கு இந்தப் புருஷார்த்தத்தைத் தாரீர் -என்று
ஸூஹ்ருத பாரதந்தர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –

விபீஷணோ வா ஸூக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்
ஆநயை நம் ஹரி ஸ்ரேஷட்ட தத்தமஸ்யாபயம் மயா -18-34-என்று
நீங்கள் சொல்லுகிறாப் போலே விபீஷணனாகவுமாம்
கபோதத்தின் பேறு நாமும் பெற வேண்டும் என்று இருக்கிற
நம்முடைய மநோ ரதத்தின் படியே சாஷாத் ராவணன் ஆகவுமாம்

அஸ்ய ராகவம் சரணம் கத -17-14-என்கிற
அருந்துத யுக்தியை நேர்ந்த இவனுக்கு என்றபடி

அஸ்ய -என்கிற இதில்
இவனுடைய அநு பந்திகளும் அநு ப்ரவிஷ்டர்-
அநு பந்திகளுடைய பயமும் சமித்தால் ஆயிற்று இவனுக்கு அபய பிரதானம் பண்ணிற்று ஆவது

விபீஷண அங்கீகாரத்தை இசைந்து
முதலிகள் பக்கல் தாக்ஷிண்யம் குலையாமைக்காக
இவனைச் சிறிது பரீக்ஷித்ததாக பண்ணிக் கைக் கொண்டாலோ என்று
மஹாராஜருக்குக் கருத்தாக திரு உள்ளம் பற்ற உத்தரம் அருளிச் செய்கிறார்

தத்தம் அஸ்ய அபயம் மயா
சத்ய சங்கல்பரான நாம் பாண்டே சரணாகத பரித்ராணத்தை நமக்கு விரதமாக சங்கல்பித்து வைத்தோம்
விபீஷணனும் உபாயம் அனுஷ்ட்டித்தான் –
ஆன பின்பு நாம் இவனுக்கு அபய பிரதானம் பண்ணினோம் ஆயிற்று –

இனி இவனுக்கு நம்மைப் பற்ற பரீஷை என்று ஒரு பய ஸ்த்தானத்தை உண்டாக்கி
நமக்கு விரத பங்கம் பிறப்பிக்க அழகிதோ –
தாங்களே தெளியப் புகுகிற முதலிகள் பக்கல் தாக்ஷிண்ய பங்கம் அழகிதோ-என்று
ஹரி ஸ்ரேஷ்டனாய் வானர ராஜ்யத்துக்கு முடி சூடி மஹாத்மா மநவாய் இருக்கிற நீர்
இத்தை நெஞ்சிலே உறைத்துப் பாரீர்
ஆநநை நம் என்றது கார்யத்தில் தீர்வு இருந்தபடி –

சரண்ய விரத விஷய பிரகாசம் என்னும் எட்டாம் அத்யாயம் முற்றிற்று

——————-

சரண்ய சரணாகத சங்கம லாபம் என்னும் ஒன்பதாவது அதிகாரம் –

ஸூக்ரீவ சம்மதி பூர்வக விபீஷண அங்கீகாரம் –
சரணாகத அநு பந்தி ரக்ஷணம்

ஸூக்ரீவ சம்மதி பூர்வக விபீஷண அங்கீகாரம் –

இப்படி அருளிச் செய்தவாறே முன்பு
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம்-என்று நின்ற மஹாராஜர் தெளிந்து
தாம் பண்ணின அபராததுக்குப் பெருமாளை க்ஷமை கொண்டு -தாமே புருஷகாரமாய்
வந்து மண்ணுக்கும் மணமும் கொண்மின்
எமது இடம் புகுதென்று –இத்யாதிகளில் பிரகிரியையால்

நாங்களும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் ஒரு வாசியற அடிமை செய்யப் பெற வேண்டும் –
நாங்களும் இவனுக்கு சஹா தாஸோஸ்மி–40–10- என்னும்படி
அடியோமாக வேணும் என்று விண்ணப்பம் செய்ய

இப்படி பிரதிபந்தகம் கழிந்து அநந்தரம் பெருமாளுக்கு
சரணாகத லாபமாகிற புருஷார்த்தம் பிறந்தபடியையும்

தத்தம் அஸ்ய அபயம் மயா -18-34-என்கையாலே
அபயம் பெற்ற சரணாகதனுக்கும் இப்படி விஸ்லேஷித்துப்
பெருமாள் பாசுரமும் இன்றிக்கே தங்களுக்கு வேறு ஒரு உபாயமும் இன்றிக்கே
சரணாகதனுடைய அபிமானத்திலே அடங்கிக் கூட வந்த நாலு ராக்ஷஸர்களும்
பெருமாள் திருவடிகளைப் பெறுகையாகிற பரம புருஷார்த்தம் பிறந்த படியையும்

பர்யங்க வித்யாதிகளில் படியே பரஸ்பர சம்ஸ்லேஷத்தால் பிறந்த
ப்ரீதி பரிவாஹமான சம்வாத விசேஷங்களையும் எல்லாம் இந்த சர்க்கத்தின் சேஷத்தாலும்
மேலில் சர்க்கத்தின் முகப்பாலுமாகச் சொல்லி
சரணாகதி வேதமான பிரபந்தத்தில் உபநிஷத் பாகமான அபய பிரதான பிரகரணத்தைத்
தலைக்காட்டுகிறான் ஸ்ரீ வால்மீகி பகவான்

அவ்விடத்தில் தாம் முற்பட நினைத்தது ஒன்றை விலக்க வல்லார் இல்லாதபடியான நிரங்குச ஸ்வா தந்திரத்தை யுடைய
பெருமாள் ஆஸ்ரித பரதந்த்ரராய் மஹாராஜரையும் முதலிகளையும் தெளிவித்து
ஆநயைநம் ஹரி ஸ்ரேஷ்ட்ட-18-34–என்று அருளிச் செய்த உறவு உடைமையிலும்
நீர்மையிலும் ஈடுபட்ட மஹாராஜர் விண்ணப்பம் செய்தபடி சொல்லுகிறான் –

ராமஸ்ய து வசஸ் ஸ்ருத்வா ஸூக்ரீவ ப்லவகேஸ்வர
ப்ரத்யபாஷத காகுத்ஸ்த்தம் ஸுஹார்த்தே நாபி சோதித –18-35–

ராமஸ்ய
சரணாகதனாய் இவர் கை விடில் எங்கேனும் புகுரிலும் அழியும்படி நிற்கிற விபீஷண ஆழ்வானையும்-
இவனை அழிக்க நினைத்த பரிவரையும் ரமிப்பித்த படியைப் பற்ற
இங்கு ராமஸ்ய -என்கிறது

து -என்கிற
இத்தால் மஹாராஜருக்குக் கலக்கமும் சீற்றமுமான முன்னில் அவஸ்தையைக் காட்டில்
தெளிவும் ப்ரீதியுமான இஃதோர் அவஸ்தா பேதம் இருந்த படியைச் சொல்லுகிறது

ஸூக்ரீவ ப்லவகேஸ்வர
சரணாகதன் பக்கல் அபசார ருசி தவிர்ந்த பின்பு அன்றோ
இவருக்குப் பேரும் பெருமையும் நிலை நின்றது

காகுத்ஸ்த்தம்
பராவஸ்தையில் திட்டமாய் பிறந்து படைத்த நீர்மை இருந்தபடி

ஸுஹார்த்தேந அபி சோதித —
இப்படி நிருத்தரான மஹாராஜர்
பெருமாளுடையவாதல்
தம்முடையவாதல்
ஸுஹார்த்தம் பேசி வைக்கப் பேசுகிறார்

கிமத்ரசித்ரம் தர்மஞ்ஞா லோக நாத ஸூகாவஹ
யத் த்வம் ஆர்யம் ப்ரபாஷேதா சத்த்வ வாந் சத்பதே ஸ்த்தித -18-36-

கிமத்ரசித்ரம்
எங்களைப் போலிகள் இப் பாசுரத்தைச் சொல்லில் அன்றோ ஆச்சர்யமாவது-
தேவரீர் இப்படி அருளிச் செய்த இடத்தில் ஆச்சர்யம் உண்டோ
ஸ்வ பாவம் என்று இருக்கும் அத்தனை அன்றோ

தர்மஞ்ஞா
பணையோடு பணை தத்தித் திரிந்த எங்களால்
தேவரீர் திரு உள்ளம் பற்றி இருக்கும் தர்மங்கள் எல்லாம் அறியப் போமோ
ஸூஷ்ம பரம துர்ஜ்ஜேய சதாம் தர்ம பிலவங்கம் -18-36-என்று
அருளிச் செய்த தேவரீருக்கு அன்றோ உண்மை தெரிவது

லோக நாத
உடைமை அழியாதபடி ரஷிக்கை உடையவனுக்கு ஏற்றம் அல்லாமையாலே-
சரணாகதனுக்கு அச்சம் தவிர்த்து ரஷித்தீர் –
எங்களை அபசாரம் தவிர்த்து ரஷித்தீர்

ஸூகாவஹ
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தேவரீருக்கு அடிமை செய்யப் பெற –
நாங்களும் அவனுக்கு அடிமை செய்யப் பெற –
இரண்டு வர்க்கத்தையும் க்ருதார்த்தர் ஆக்கினீர்

சத்த்வ வாந்
இதற்கு முன் கண்டு அறியாத சரணாகதன் பக்கல் ஒரு தலையாக
பரிவர் சொன்ன உபபத்திகளுக்கும் நிர்பந்தங்களுக்கும்
இளையாத வ்யவசாயத்தில் திண்மை இருந்த படி என்

சத்பதே ஸ்த்தித –
ப்ருஹஸ்பதி சிபி ரகு வானர கபோத வசிஷ்ட விச்வாமித்திராதிகள் முதலான சத்துக்கள் நடந்த நல்வழியான
சரணாகத பரித்ராண தர்மத்தில் தேவரீர் நின்ற நிலை ஒரு கோடி சரணாகதராலும்
கலக்க ஒண்ணாதபடியாய் இருந்தது

யத் த்வம் ஆர்யம் ப்ரபாஷேதா
தேவரீர் அருளிச் செய்த பாசுரத்தில் நிழலிலே ஒதுங்கி
புலியும் புல்வாயும் ஒரு துறையிலே நீர் உண்ணும்படியாய் இருந்தது

எனக்கு மறுக்க மாட்டாமையாலே கொண்டாடுகிறீரோ –
நீர் மானஸ அபராதமும் தவிர்க்கும்படி தெளிந்தீரோ என்ன

மம சாப்யாந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம்
அநுமாநாச்ச பாவாச்ச ஸர்வத ஸூபரீக்ஷித-18-37-

மம சாப்யாந்தராத்மா அயம் -ஸூத்தம் வேத்தி விபீஷணம்
ஒருத்தராலும் தெளிவிக்க ஒண்ணாத படியான கலங்கின என் நெஞ்சம்
தேவரீர் பாசுரங்களாலே தெளிந்து
சரணாகதனான விபீஷணன் ஸூத்தன் என்று அறியப் பெற்றது –

அநுமாநாச்ச
பிராணாதஸ் ச மஹா நேஷா -இத்யாதிகளில் படியே ஸ்வர ப்ரசாதிகளாலும்

பாவாச்ச
அபிப்ராய வ்யஞ்ஜகங்களான மற்றுமுள்ள ஆகாரங்களாலும் -என்றபடி –

சதாம் ஹி சந்தேக பதேஷு வஸ்துஷு பிராமண மந்த கரண ப்ரவர்த்தய -என்கிறபடியே
நம்முடைய அந்தக்கரணம் இசைந்த படியாலும் என்னவுமாம்

ஸர்வத
உள்ளும் புறமும் ஓக்க என்றபடி –
அங்கன் அன்றிக்கே ராவணனும் அல்லான்-
ராவண ப்ரேஷிதனும் அல்லான் –
ராவண அநுரக்தனும் அல்லான் -என்று
சர்வ பிரகாரத்தாலும் தெளிய அறிந்தோம் என்றுமாம்

ஸூபரீக்ஷித-
இனி சர்வ சக்திகரான உம்மாலும் எங்களைக் கலக்க ஒண்ணாது என்று தாத்பர்யம்

நாம் இனி விபீஷணனுக்கு செய்ய வேண்டுவது என் –
உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் –
இரண்டும் நீர் நியமித்தால் அல்லது நாம் செய்ய ஒண்ணாது என்று பெருமாளுக்கு
திரு உள்ளத்தில் கருத்தாகக் கொண்டு விண்ணப்பம் செய்கிறார் –

தஸ்மாத் க்ஷிப்ரம் ஸஹ அஸ்மாபி துல்யோ பவது ராகவ
விபீஷணோ மஹா ப்ராஞ்ஞா சகித்வம் சாப்யுபைது ந 18-38–

தஸ்மாத்
நிர்தோஷனான அளவன்றிக்கே எங்களிலும் பரிவன் என்று தெளிகையாலும்

யயோ சித்தேநவா சித்தம் நைப்ருதம் நைப்ருதேநவா
சமேதி பிரஞ்ஞயா பிரஞ்ஞாதயோர் மைத்ரீ ந ஜீர்யதே –உத்யோக -39-4-/8-என்னும்படி
எங்களுக்கும் இவனுக்கும் மநோ ரதாதிகள் ஒத்து இருந்தபடியாலும்

க்ஷிப்ரம்
இனி இவனை ஒழிய ஒரு க்ஷணமும் எங்களுக்குக் கைங்கர்யம் பண்ண முயலாது –
அவன் தானும் இனி ஒரு க்ஷணமும் விஸ்லேஷம் பொறுக்க மாட்டான்

ஸஹ அஸ்மாபி துல்யோ பவது
அஸ்மாபி-ஸஹ- துல்யோ பவது-இவன் எங்களோடு பிரிக்கப் படாதே நாங்கள் பெற்ற பேறும் பெற்று –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய திரு உள்ளமாய் அருள வேண்டும் –

இவன் இழந்த காலத்துக்கும் படி எடுத்ததுமாய் –
இப்போது காலத்திலே சோற்றை இட்டு கையைப் பிடித்தால் போலே
தகையுண்டு நிற்கிற கிலேசமும் தீர இவன் ஒருவனும் ஒரு தலையும் நாங்கள் எல்லாரும் ஒரு தலையாக
விஷயீ கரித்து அருள வேண்டும் என்று
ஏக வசனத்திற்கும் பஹு வசனத்திற்கும் தாத்பர்யம்

விபீஷணோ
தேவரீர் அவனுக்கு அபய ப்ரதானம் பண்ணின படியால் ராவணாதிகள் எல்லாம் இவனுக்கு
அஞ்சும்படி யதார்த்த நாமா ஆனான்
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித –ஆரண்ய -17-24–என்கிற
தார்மிகத்வ ப்ரசித்தியும் தோற்றுகிறது

மஹா ப்ராஞ்ஞா
தர்மத்தில் நிலை குலையாதபடி வரம் வேண்டிக் கொண்ட தெளிவு உடையவன்

ஸீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வஸேம் ராஜந் நிஹ வீதஸோ-யுத்த –15-14-என்று
ராவணனுக்கும் கூட பரம ஹிதம்
சொல்லும்படிக்கு ஈடான ப்ரக்ருஷ்ட ஞானம் உடையவன் –

கைங்கர்யம் ஆகிற பரம புருஷார்த்தம் பெறுகைக்கு
ஸக்ருத் கர்த்தவ்யமான சாதிய உபாயத்தாலே வசீக்ருதராய்
ராமோ விக்ரஹவான் தர்ம –ஆரண்ய -37-13 –என்னும்படியாய் இருக்கும் பெருமாள் சித்த உபாயம் என்றும் –
இவர் தாமே விலக்குவாரைத் தெளிவித்து -ஏக ரசராக்கி
இரு வகைப்படாத படி பொருந்த விடுவார் -என்றும்
துணிய வல்ல மஹா விசுவாச ரூபமான ஞானத்தை உடையவன்

மஹா ப்ராஞ்ஞா
ஸூக்ரீவ சங்கிதஸ் சாஸீத் நித்யம் வீர்யேண ராகவே-என்று
எனக்குப் பிறந்த பழி இல்லாதவன் –
இன்னம் கலங்குகிற எங்களைப் போலே இவனும் அதி சங்கை பண்ணினான் ஆகில்
ராவணன் எடுத்த கைலாசத்தையும்
வாலி எறிந்த துந்துபி கங்காள கூடம் பட்டது படுத்திக் காட்ட வேண்டும் இறே தேவரீருக்கு

சகித்வம் சாப்யுபைது ந –
காசி ராஜா முதலான தரமுடைய ராஜ குமாரர்கள் பெறக் கடவ பேற்றை
காட்டுக்கு எழுந்து அருளப் பண்ணின
பரம காருணிகருடைய ப்ரஸாதத்தாலே ஸ்ரீ குகப் பெருமாளும் நாமும் பெற்றால் போலே

இவனும் தேவரீருக்குத் தோழன் என்கிற தரம் பெற்று –
ராஜஸ ஜாதியில் குடல் துவக்கால் உள்ள
வழு அறும்படி பண்ணி அருள வேணும்

நாங்கள் அடியோம் என்றால் உண்மையாகிலும் தன் நீர்மையாலே இவன் இசையான்-
எங்களுக்குத் தோழன் என்றாகிலும் தேவரீரைப் போலே இவனும் இசையும்படி
பண்ணி அருள வேணும் என்றதாகவுமாம்
ஸகா தாஸோஸ்மி -40-10-என்னுமவர் ஆகையால்
நாங்கள் அடியோமாக வேண்டும் என்று இவருக்குத் தாத்பர்யம்

அப்யுபைது
வைஸ்ரவணன் தம்பியான மேன்மையை இட்டு அநாதரியாதே
வானரங்களை அடிமை கொள்ள இவரை நினைப்பிடும்படி
பண்ணி அருள வேண்டும் என்று கருத்து –

இத்தால்
தேஹாத்ம பிரமம் முதலான அல் வழக்குகள் எல்லாம் கழித்து
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவச் சேஷத்வத்திலே
நிலை நின்றவர் ஆகையால் மஹாராஜர் பெருமாள் திருவடிகளில் விபீஷண ஆழ்வானைச் சேர்த்துத்
தாம் அவனுக்கு அடிமை செய்ய மநோ ரதிக்கிறார்

——-

ஸூக்ரீவ சம்மதி பூர்வக விபீஷண அங்கீ காரம்

இப்படி சரணாகதனான விபீஷண ஆழ்வானுக்கு அபேக்ஷிதத்தையும் –
நிவேதயத மாம் க்ஷிப்ரம் -18-15- என்று
அவன் இரந்த படியே கடகரான தங்களுக்கு அபேக்ஷிதத்தையும் மஹா ராஜர் விண்ணப்பம் செய்ய
அதடியாக பிறந்த சரண்யன் மநோ ரத சித்தி சொல்லப்படுகிறது –

ததஸ்து ஸூக்ரீவ வசோ நிஸம்ய தத்
ஹரீஸ்வரேணாபி ஹிதம் நரேஸ்வர
விபீஷனே நாஸூ ஜகாம சங்கமம்
பதத்ரி ராஜேந யதா புரந்தர -18-39-

ததஸ்து ஸூக்ரீவ வசோ நிஸம்ய தத்
கடகருடையவும் சரணாகதனுடையவும் சித்தியில் காட்டில்
மஹாராஜர் தெளிந்து விண்ணப்பம் செய்த
பெரிய வார்த்தையைக் கேட்டு அருளினை பின்பு –
இவர்கள் காட்டித் தர நாம் இப் பேறு பெற்றோம் -என்று
பெருமாளுக்குப் பிறந்த சித்தி விசேஷத்தினுடைய ஏற்றம் இருந்தபடி –

தத
சாஸ்திரமும் தம்முடைய விரத விசேஷமும் நிற்க இப்போது தோழன்மார் வாக்கியமே சரணாகத
பரிக்ரஹத்துக்குக் காரணம் என்று கைக்கொண்டு அருளினார் என்று தாத்பர்யம் –

நரேஸ்வர
சரணாகத ரக்ஷணத்துக்கு முடி சூடின ரகு வம்சத்தில் பிறந்த பிறவி
இப்போது நிலை நின்றது என்று இருந்தார்

ஹரீஸ்வரேணா அபி ஹிதம்
விபீஷணோ சங்கமம் ஜகாம-என்று அந்வயம்

தஸ்மாத் க்ஷிப்ரம் -18-38-என்கிற ஸ்லோகத்தில்
மஹாராஜர் விண்ணப்பம் செய்த விபீஷணாதிகளுடைய
மநோ ரத சித்தி ஆநுஷங்கிக பலமாக
ஸ்ரீ விபீஷண ஆழ்வானோடே தமக்கு உண்டான சேர்த்தியைத் தம் பேறாகப் பெற்றார்

ஆஸூ
பிரதி பந்தகங்கள் எல்லாம் கழிந்தால் ஸ்வரூப ப்ராப்திக்கு விளம்பம் இல்லை இறே
இது பெருமாளுடைய த்வராதிசயம் சொன்னபடி யாகவுமாம்

பதத்ரி ராஜேந யதா புரந்தர –
தன்னில் சர்வ பிரகாரத்தாலும் பெரியனான பெரிய திருவடியோடே இந்திரன் உறவு பண்ணின போது
இந்திரனுக்குப் பேறு ஆனால் போலே
பெருமாள் சரணாகத லாபத்தை தமக்கு நிர் யத்ன ஸித்தமான
அலாப்ய லாபமாகத் திரு உள்ளம் பற்றினார் என்று தாத்பர்யம்

சரண்ய சரணாகத சங்கம லாபம் -என்னும் ஒன்பதாவது அதிகாரம் முற்றிற்று

————-

பிராப்தி பிரகார ப்ரபஞ்சகம் என்னும் பத்தாவது அதிகாரம் –

பிராப்தி பிரகார நிரூபணம்
இப்படி ஒன்றாலும் பிரதி பந்திக்க ஒண்ணாத ஒரு யுக்தி விசேஷத்தாலே யதா பிரமாணம்
சரணாகதன் கோரின கோலின பலம் சித்தித்த படியைப் பொதுவில் சொல்லி
மேல் பிராப்தி பிரகாரத்தை விவரிக்கிறான்

ராகவேணாபயே தத்தே சந்நதோ ராவணாநுஜ
விபீஷனோ மஹா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயந் -19-1-

ராகவேணாபயே தத்தே
மேன்மை கொண்டு அபய பிரதானம் பண்ண வேண்டி இருக்க
அணுக ஒண்ணாது என்கிற பயம் தீர்க்கும்படி
பரிக்ரஹித்த அவதார தசையில் நீர்மை விஞ்சி இருந்தது –

தத்தமஸ்ய அபயம் மயா -18-34-என்று தாம் அருளிச் செய்தது போதாமே
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட்ட -என்று மஹா ராஜரையும் முன்னிலை யாக்க-
அவரும்
அஸ்மாபி துல்யோ பவது –என்று விண்ணப்பம் செய்ய –
இப்படி முதலிகளும் இசைய-
பெரிய திரு ஒலக்கத்தில் எழுந்து இருந்து –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு அருளப்பாடு -அருளுப்பாடு –என்ற பின்பு
பெருமாள் பண்ணின அபய பிரதானம் நிலை நின்றதாயிற்று என்று தோற்றுகைக்காக
இங்கே அபயே தத்தே -என்று அநு வதிக்கிறது

சந்நத
சம்யக் நத-
சரண்யனுடைய நிலையுடைமையிலும் நீர்மையிலும் மிகவும் ஈடுபட்டு –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
அவன் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி பெற்றான் –
அருளப்பாட்டுக்கும் தூரத்திலே உசித உபசாரம் பண்ணினான் என்னவுமாம்

ராவணாநுஜ
நநாமேயம் -36-11-என்று இருக்கக் கடவ –
வணங்கலில் அரக்கன் –பெரிய திருமொழி -9-8-5-கிடந்த வயிற்றில்
கிடந்தவனுக்கு வர ப்ரபாவத்தாலே வந்த வகுத்த விஷயத்தில் வணக்கம் இது

விபீஷணோ
ஒரு வயிற்றிலே கிடக்கச் செய்தே-
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித –ஆரண்ய -17-24-என்று
கும்பகர்ணாதிகளில் காட்டில் வேறொரு ஜாதியாகப் பேர் பெற்றவன்

மஹா ப்ராஞ்ஞா
இனித்தான் க்ஷணம் விளம்பிக்கில் பெருமாள் தரிக்க மாட்டார் என்று
தூரத்தில் இங்கிதம் கொண்டு அறிய வல்ல பேர் அறிவாளன்

பூமிம் சமவலோகயந்
பெருமாளுடைய சரணாகத வாத்சல்யத்தையும் முற்பட
வானர முதலிகள் பெற்ற பேற்றையும் கண்டு –
தான் துஷ் ப்ரக்ருதிகளான ராவணாதிகளையும் திருத்தலாமோ என்று
ஹித உபதேசார்த்தம்
ஆந்ரு சம்சயத்தாலேயும்
வாத்சல்யத்தாலேயும் –
இத்தனை காலம் கால் தாழ்ந்ததற்கு லஜ்ஜித்து தலை கவிழ்தலை இட்டான் –

முன்பு கல்லும் தடியுமாக நின்ற ஓலக்கத்தைப் பார்த்து அஞ்சி நின்றான்
இப்போது முதலிகள் எல்லாம் முக்த விஷயத்தில் ஆதி வாஹிகரைப் போலே
போற்றி
பல்லாண்டு –என்று நின்ற நிலையைக் கண்டு ச
ரண்யன் இருந்த திவ்ய தேசத்தினுடைய பிரபாவம்
இருந்தபடி என்-என்று பார்த்தான் என்னவுமாம் –

கல்லும் தடியும் பொகட்டு கையும் அஞ்சலியுமாய் எதிர் கொள்ள நிற்கிற ஓலக்கத்திலே
தண்டனிட இடம் பார்த்தான் என்னவுமாம்

இஸ் ஸ்லோகத்துக்கு
சந்நத-என்று வாக்யார்த்தம் தலைக்கட்டுகிறது

காத்ப பாத -என்று
மேலே அந்வயிக்கவுமாம் –

காத்ப பாதா வநிம் ஹ்ருஷ்டோ பக்தைர் அநு சரைஸ் ஸஹ–19-2-
தனக்கு சேஷ பூதருமாய் பரதந்த்ரருமாய் இருக்கையாலே
தன் கைகளும் கால்களும் போலே தன்னிலே சொருகி –
தனித்து ஒரு உபாய பலன்கள் இல்லாத நாலு ராக்ஷஸரோடே கூட உத்தேஸ்யமான
திருவடிகள் அளவும் செல்ல ஒண்ணாத படி
ஹர்ஷ பாரவஸ்யம் தள்ள திருவடிகளோடே பிறவித்துவக்கு உடைத்தான் பூமியிலே விழுந்தான்

பண்டு ராவண ஸ்தானத்தில் விழுந்து ஏறிட்டுக் கொண்ட ரஜஸ்ஸூக்கள் எல்லாம் போம்படி
அமாநவ கர ஸ்பர்சம் போலே
அத்யந்த சோதகமான திரு முன்பில் பூமியிலே விழுந்து
திருவடிகளை ஸ்பர்சிக்கைக்கு யோக்யனாய் பின் எழுந்திருந்து
வந்து திருவடிகளில் தலை சாய்க்க விழுந்தபடி சொல்கிறான் –

ச து ராமஸ்ய தர்மாத்மா நிப பாத விபீஷணா
பாதயோ சரணாந் வேஷீ சதுர்ப்பிஸ் ஸஹ ராஜஸை–19-2-

ச து
லீலா விபூதியில் உள்ள சிலர் –
யூயம் யூயம் வயம் வயம் -என்கிறபடி
வந்தேறிகளான பந்துக்களோடே துவக்கற்று
சம்சார சமுத்ரத்தைக் கடந்து
விஷ்ணு பதத்தைக் கிட்டினால் பிறக்கும் வேறுபாடு போல் இருந்தது

ராமஸ்ய
விபீஷண ஆழ்வானுக்குப் பஹு முக பரிபவத்தாலே பிறந்த பரிதாபம் எல்லாம்
கழியும் படி ரமணீயமாய் இருந்தது
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -இறே-

தர்மாத்மா
பழைய போலிகளான தர்மங்கள் போல் அன்றிக்கே இருக்கிற
சரணாகதி தர்மம் ஒரு வடிவு கொண்டால் போலே இருந்தான் –

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்
வஸசா சாந்வயித்வை நம் லோச நாப்யாம் பிபந் நிவ
ஆக்யாஹி மம தத்தவேந ராக்ஷஸாநாம் பலாபலம்–19-3-

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா
அநந்ய சரண்யனாய் அநந்ய ப்ரயோஜனனாவனுடைய
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ புரஸ்காரமாக த்வயார்த்த பரமான வசனத்தைக் கேட்டு

ராமோ வசனம் அப்ரவீத்
த்விஸ் சரம் நாபி சந்தத்தே த்வி ஸ்த்தா பயதி நாஸ்ரிதாந்
த்விர்த்த தாதி ந சார்த்திப் யோ ராமோ த்விர் அநாபி பாஷதே -என்று கவி பாடினால்
இது பரமார்த்தமாய் இருக்கும் படி குணாதிசயமுடைய பெருமாள்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் கார்யத்தைப் பற்ற
இனி ஒரு வத்தவ்யம் இல்லாமையால்-

தம்முடைய அவாந்தர -அவதார -பிரயோஜனமாக –
துஷ் க்ருத விநாசத்துக்கு உப யுக்தமாக
ஆக்யாஹி மம தத்தவேந ராக்ஷஸாநாம் பலாபலம்–
என்று ராக்ஷஸ விருத்தாந்தத்தைக் கேட்டு அருளினார்

வஸசா சாந்வயித்வை நம்
நீர் இதற்கு முன்பு பட்ட சிறுமை எல்லாம் நமக்காக வன்றோ
இது எல்லாம் ஏற்கவே கோலப் பொறாத
ச அபராதரரான நாம் அன்றோ பட்டோம் என்னுமா போலே
இன் சொல்லாலே இவனை உருக்கப் பண்ணி
அருளிச் செய்தார் –

அருளிச் செய்கிற போது
லோச நாப்யாம் பிபந் நிவ
பெரு விடாய்ப் பட்டவன் தண்ணீரைக் கண்டால் ஒரு காலும் விட மாட்டாதாப் போலே
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -இத்யாதிகளில் படியே
அனுபவியா நின்று கொண்டு
அனவதிக அதிசய ஸுஹார்த்த அநு ராக கர்ப்பங்களான திருக் கண்களாலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முக்தனைப் பார்த்து அருளுமா போலே குளிரப் பார்த்து அருளி
ஆலாம் கட்டியை விட்டு எறிந்தால் போலே அவனை
சீதீ பூதோ நிராமய -என்னும்படி
பண்ணிக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தார்

———

இதற்கு மேல் உள்ளது எல்லாம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் மநோ ரதித்த கைங்கர்யத்துக்கு
உறுப்பான பாரிப்பாகக் கண்டு கொள்வது

ராகாந்தே ருத்த லங்கஸ் ஸ்யுத பணி கதநோ ( நாக பாசத்தில் இருந்து விடுபட்டு )
தூம்ரத்ருக் வஜ்ர தம்ஷ்ட்ரவ் பங்க்த்வா அகம்பம் ப்ரஹஸ்தம் தசமுக மகுடம் கும்ப கர்ணன் அதிகாயவ்
ப்ரஹ்மாஸ்த்ர சின்ன கும்பாதிக்கம் மக ராஜம் ஹத்வா இந்த்ரசத்ரும் ஜித்வா
ஸஹ பலம் த்ரிபி கஸ்ரை அவதீத் ராவணம் ராம பத்ர

———

அபதிஸ்ய வேங்கடேசம் ஸ்வ ஹஸ்த சம்சக்த தூலிகா துல்யம்
அபய பிரதான சாரம் குரு பிரசாத ஸ்வயம் வ்யலிக்த்

பொன்னை இகழ்ந்து விருகங்கள் புல்லிய புல் உகந்தால்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே மன்னு உலகு அனைத்தும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன்
பொன்னடி நாம் அடைந்தோம் புறமார் என் கொல் செய்திடிலே

மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற
முனிவர்களும் தேவர்களும் மினிந்த அந்நாள்
தாவரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த
தனிக்காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக்
காண நிலை இலச்சினை யன்று இட்ட வள்ளல்
ஏவல் பயன் இரக்கம் இதுக்கு ஆறு என்று ஓதும்
எழில் உடையோர் இணை யடிக் கீழ் இருப்போம் நாமே

சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

வேதத் திரளில் விதி யுணர்ந்தோர்கள் விரித்து உரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
ஒதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே

இத்தால் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி என்னும்
அர்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார் இவற்றால்

——————-

பிராப்தி பிரகார பிரபஞ்சகம் என்னும் பத்தாவது அதிகாரம் முற்றிற்று

ஸ்ரீ அபய பிரதான சாரம் முற்றிற்று

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ அபய பிரதான சாரம் -பிரகரண தாத்பர்ய நிர்ணயம் என்னும் நாலாவது அதிகாரம் / சரண்ய சீல பிரகாசம் என்னும் ஐந்தாம் அதிகாரம் /சரண்ய வைபவம் பிரகாசம் -என்னும் ஆறாவது பிரகாரம் /பரம தர்ம நிர்ணயம் என்னும் ஏழாவது அதிகாரம் —-

September 22, 2019

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய
ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் -இருபத்தொரு சரணாகதி வேதம்
இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம் சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்
ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்

இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்

இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும் இரண்டு வகையாய் இருக்கும் –
பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது

———————–

பிரகரண தாத்பர்ய நிர்ணயம் என்னும் நாலாவது அதிகாரம்

சரணாகத விக்ந நிராகரணம் –
ஸ்ரீ விபீஷண சரணாகதி பிரகரணத்தில்
ஆனுகூல்ய சங்கல்பாதி
அங்க பஞ்சக பூர்த்தி –
ஸ்ரீ விபீஷண பல காங்ஷித்வ விசாரம்

சரணாகத விக்ந நிராகரணம்
இப்படி சரணாகதி வேத உபநிஷத்தான இவ் வவபய பிரதான பிரகரணத்தில்

பரமாபத் கதஸ்யாபி தர்மே மம மதிர் பவேத் -உத்தர -10-31 –என்று

ப்ரஹ்மாவின் பக்கலிலே வரம் வேண்டிக் கொண்டு

தர்மிஷ்டஸ்த்வம் யதாவத்ச ததா சைதத் பவிஷ்யதி –உத்தர -10-34-என்று

வரம் பெற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணாகதி தர்மத்தைப் பரிக்ரஹித்து அனுஷ்டிக்கையாலும் –
பின்பு ஸ்ரீ பெருமாளையும் கூட அனுஷ்டிப்பிக்கையாலும்
சரணாகதி பரம தர்மம் என்னும் இடம் சிஷ்டாசாரத்தாலே ஸ்த்தாபிதம்

இப் பிரகரணத்தில் முன்பே பல சர்க்கங்களாலே ரஜஸ் தமஸ் பிரக்ருதிகளாய் இருப்பார்க்கு
சத்வ ப்ரக்ருதிகளாய் இருப்பார் ஹிதம் சொன்னாலும்
ஸ்ரீ பகவத் விஷயத்தில்
ஆபி முக்கியம் கூடாது என்னும் இடம் சொல்லிற்று

ஸத்வ உத்தரனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணாகதனாய் வருகிற போது அவன் விஷயத்தில்
தேவதா அவதாரரான ஸ்ரீ வானர வீரர்களால் விக்னம் பிரசகதமானபடி சொல்லுகையாலே

ஸ்ரூயதே கில கோவிந்தே பக்தி முத்வ ஹதாம் ந்ருணாம்
சம்சார நியூ நதா பீதா த்ரிதசா பரிபந்தினா –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -2-25-என்கிறபடியே

ஸ்ரீ பகவத் விஷயத்தில் அபிமுகமாவாரைத் தாங்கள் குடிமக்கள் தப்பித் போகிறார்கள் என்று நினைத்து
தேவர்கள் விலக்குவார்கள் என்னும் இடமும்

இப்படி விக்னங்கள் வந்தாலும் ஸூத்த பாவராய் அநன்யராய் வந்து அடைந்தவர்களை

சங்கல்பா தேவ பகவான் தத்வதோ பாவிதாத்மநாம்
வ்ரதாந்தம் அகிலம் காலம் ஸே சயத் யம்ருதேந து -என்றும்

ப்ரவ்ருத்தி காலாதாரப்ய த்வத்மாலாபாவசா நிகம்
யத்ராவகாசோ விக்நா நாம் வித்யதே ந கதாச நே –என்றும்

ஸாத்வத பவ்ஷ் கராதி களிலே சொல்லுகிறபடியே
ஸ்ரீ பெருமாள் தாமே எல்லா விக்னங்களை சமிப்பித்து
அடிமை கொள்ளுவார் என்னும் இடம் வெளியிடப்பட்டது –

————-

ஸ்ரீ விபீஷண சரணாகதி பிரகரேண ஆனுகூல்யாதி அங்க பஞ்சக பூர்ணத்வம் –

சர்வஞ்ஞ ஸம்ஹிதாதிகளில் சொன்ன ஆனுகூல்ய சங்கல்பாதிகளும் அடங்க
இப் பிரகரணத்தில்
காணலாம் எங்கனே என்னில்

அடியிலே ராவணாதிகளுக்கும் கூட ஹித உபதேசம் பண்ணுகையாலும் –

தூதனாய்ச் சென்ற திருவடியை துஷ் ப்ரக்ருதியான ராவணன் அசக்யம் என்று அறியாதே நலிய நினைக்க-
அத்தை விலக்குகையாலும்-

பிறவி உறவையும்
பெரிய ஐஸ்வர்யத்தையும்
புத்ர தாராதிகளையும் அநா தரித்து
பிராதி கூல்ய வர்ஜனம் பண்ணுகையாலும்

ஆனு கூல்ய சங்கல்பமும்
பிராதி கூல்ய வர்ஜனமும் ஸூசிதமாயிற்று –

பெருமாள் சர்வ லோக சரண்யன் என்கிற வ்யவசாயத்தாலும்
ஆஜகாம முஹூர்த்தேன யாத்ர ராம ச லஷ்மண –யுத்த -17-1–என்கிறபடியே
அஞ்ச வேண்டும் பிரதேசத்தில்
அசங்கிதமாகத் தன் நிலமாக நினைத்து வருகையாலும் –
ரஷிஷ்ய தீதி விசுவாசம் -காட்டப்பட்டது –

ராகவம் சரணம் கத –யுத்த -17-14-என்கிற
உபாய வரண வாக்ய சாமர்த்தியத்தால் கோப்த்ருத்வ வரணம் -சொல்லிற்று –

உபாயாந்தர ஸ்த்தாந நிவேச பரமான சரண சப்தத்தால் வ்யஞ்சிதமாய்
ரஷா பர சமர்ப்பண பிரதானமான ஆத்ம நிக்ஷேபமும்
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே
நிவேதயதே மாம் க்ஷிப்ரம் விபீஷணன் உபஸ்திதம் –யுத்த -18-4-என்று
அந்தரங்கராய் இருப்பாரை
முன்னிலையாகக் கொண்டு விசதமாகச் சொல்லப்பட்டது –

இவ்விடத்தில் ஸ்ரீ பெருமாளும்
ஸ்ரீ இளைய பெருமாளும்
முதலிகளும் கேட்க்கும்படி கிட்ட வந்து
பிரணாதஸ் ச மஹா நேஷ-18-14-என்கிறபடியே
கூப்பிடுகிறவன் ஆகையால்
பெருமாளுக்கு அறிவியுங்கோள்-என்கை விவஷிதம் அன்று –

சக்யம் ஆத்ம நிவேதனம் —என்றும்
கிங்கரோஸ் மீதி சாத்மாநம் தேவாயைவம் நிவேதயேத்–ஜிதந்தா -1-14-இத்யாதிகளில் படியே
நிவேதயத மாம் -என்று
என்னை சமர்ப்பியுங்கோள் என்றபடி

ராவணோ நாம துர்வ்ருத்த -17-10-என்று தொடங்கி –
ஸோஹம் ப்ருஷிதஸ் தேந தாச வச்சா வமாநித –என்றது அறுதியாக
துஷ் ப்ரக்ருதியான ராவணனுக்குத் தான்
ஹித உபதேசம் பண்ணிப் பாழுக்கு நீர் இறைத்துப் பரிபூதனான படி சொல்லுகையாலும்

ஸ்வரேண மஹதா மஹாந் -17-9-என்கிற ஆர்த்த ஸ்வரத்தாலும்

நிவேதயதே மாம் க்ஷிப்ரம் -17-15-என்கிற த்வர அதிசயத்தாலும்

பிரணாதஸ் ச மஹா நேஷு ததோஸ்ய பயமாகதம்-18-14-என்கிற
சர்வஞ்ஞனான சரண்யனுடைய வாக்யத்தாலும்
கார்ப்பண்யம் சொல்லப்பட்டது –

ஆக இப்படி
ஆனுகூல்ய சங்கல்பாதி யுக்தையாய்-
பரிபூர்ணையாய்-
ஸ்ரீ த்வயத்தில் பூர்வ கண்டத்தில் சொல்லப்படுகிற
ஸ்வ ரஷா பர சமர்ப்பணாத்மிகையான ப்ரபத்தியை
சர்வ அவஸ்தையிலும் தர்ம சாரத்தில் நிலை குலையாத ஸ்ரீ விபீஷண ஆழ்வான் அனுஷ்ட்டித்தான் –

—————-

ஸ்ரீ விபீஷண காங்ஷித்வ விசாரம்

அதற்கு அவன் பலமாகக் கோலிற்று என் என்னில் –

ஆபாத ரசிகராய் இருப்பார் லங்கா ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் கருத்தை அடி ஒற்றினால்
சரண்யனான ஸ்ரீ பெருமாள் திருவடிகளில்
கைங்கர்யமே பலமாய் இருக்கும் –
அது எங்கனே என்னில் –

சரணாகதி காலம் தன்னில் –
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -17-14-என்று
இதர விஷயங்களில் நைராஸ்யத்தைத் தான் கண்ட யுக்தி பண்ணுகையாலும்

பின்பு ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்கிற போதும் –
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச
பவத்கதம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸூகாநி ச -19-5-என்று
இலங்கை ஐஸ்வர்யாதிகளை அடைய விட்டு
எல்லாப் புருஷார்த்தமுமாகத் தேவரீர் திருவடிகளைப் பற்றினேன் -என்று விண்ணப்பம் செய்கையாலும்
இவன் அநந்ய ப்ரயோஜனனான அதிகாரி என்னும் இடம் ஸூவ்யக்தம் –

ஆன பின்பு
ராஜ்யம் பிரார்த்தய மாநஸ்து புத்தி பூர்வம் இஹா கத -17-65-என்கிற
ஸ்ரீ திருவடி வாக்கியமும்
ந வயம் தத் குலீ நாஸ் ச ராஜ்ய காங்ஷீ ச ராக்ஷஸ -18-13-என்று
பெருமாள் அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ ராம பக்தியால் கலங்கின ஸ்ரீ மஹா ராஜருடைய கிளர்த்தியை அடக்குகைக்காக ஈடாக
நீதி சாஸ்திரங்களில் சொல்லும் ராஜ வ்ருத்தாந்தக் கட்டளையில் காட்டின படியாம் அத்தனை –

திருவடியும் பெருமாளும் அருளிச் செய்த பாசுரமும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தன் பாசுரமும் விரோதித்தால்
அந்தரங்க நியாயத்தாலே தன் பாசுரம் பிரபலமாகக் கடவது

அஹம் ஹத்வா தசக்ரீவம் சப்ரஹஸ்தம் ச பாந்தவம்
ராஜநம் த்வாம் கரிஷ்யாமி சத்யமேதத் ப்ரவீமி தே -19-19-என்று

ராவணனைக் கொன்று உம்மை ராஜ்யத்தில்
முடி சூட்டக் கடவோம்-என்று ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்வான்
என் என்னில் –

அதுவும் –
சரீர ஆரோக்யம் அர்த்தாம்ஸ் ச போகாம்ஸ் சைவ அநு ஷங்கி காந்
ததாதி த்யாயிநாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -74-43-என்று
சர்வ நிரபேஷரான ஸ்ரீ திருவடியைப் போலே அவசர உசிதமான அடிமை செய்யக் கடவேன்-என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விண்ணப்பம் செய்தது –

இவன் தார்மிகத்வத்தை வரமாக வேண்டிக் கொள்ள
ப்ரீதனான ப்ரஹ்மா அமரத்வத்தையும் கூடக் கொடுத்தால் போலே
அடிமை செய்ய வேண்டிக் கொண்ட ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
ஸ்ரீ பெருமாளே அடிமைக்கு உறுப்பாக ஐஸ்வர்யத்தையும் கொடுத்தார் –

ஆகையால் திருவடி நிலையை முன்னிட்டு
ஸ்ரீ பரதாழ்வான் நாட்டில் உள்ளாரை நியமித்து இருந்தால் போலே
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தமாக அவதீர்ணரான ஸ்ரீ பெருமாளுடைய நியோகத்தாலே
மட்டுப்படாத ராக்ஷஸரை வழிப்படுத்தி
நடத்துகைக்காக ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராஜ்யத்தை இசைகையால்
இதுவும் ஆஞ்ஞ அநு பாலனம் ஆகையால் கைங்கர்ய கோடியிலே அந்வயித்தது –

இவர் தமக்கு இசைவு இன்றிக்கே இருக்கப்
பெருமாளுடைய அநதிலங்க நீயமான சப்த பூர்வக சாசனத்தாலே
ராஜ்யம் பண்ணினார் என்னும் இடம்
ஸ்ரீ பெருமாள் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிற போது
விடை கொடுத்த பாசுரத்தாலே வெளியிடப்பட்டது –

யாவத் பிரஜா தரிஷ்யந்தி தாவத் த்வம் வை விபீஷண
ராக்ஷ சேந்த்ர மஹா வீர்ய லங்காஸ்த்த த்வம் தரிஷ்யசி
சாபிதஸ் த்வம் சகித்வேந கார்யம் தே மம சாசனம்
ப்ரஜாஸ் ஸம்ரக்ஷ தர்மேண நோத்தரம் வக்தும் அர்ஹஸி –உத்தர -108-27-/29-என்று
மிறுக்கோடே இறே ஸ்ரீ பெருமாள் இவரை இராஜ்யத்தில் இருக்க இசைவித்தது –

இப்படி இவன் அநந்ய ப்ரயோஜனாகையாலே இறே இவனுக்குத் தம்மிலும் சீரிய
ஸ்ரீ கோயில் ஆழ்வாரை எழுந்து அருளுவித்துக் கொடுத்தது –

இப்படி அன்றிக்கே
ஆபாத ப்ரதீதி பக்ஷத்தாலே இவன் ஐஸ்வர்த்தியானாலும்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதம் சந
அபயம் சர்வம் பூதேப்யோ ததாத் ஏதத் விரதம் மம –யுத்த -18-33- என்று
பொதுவான பாசுரங்களாலே
சரண்ய அபிப்ராயத்தைப் பார்த்தால்
ப்ரபத்தியானது சாமாந்யேந மோக்ஷ பர்யந்த சகல புருஷார்த்த சாதனம்
என்னும் இடம் தெளியலாம் –

பிரகரண தாத்பர்யம் என்னும் நாலாம் அதிகாரம் முற்றிற்று –

——————

சரண்ய சீல பிரகாசம் என்னும் ஐந்தாம் அதிகாரம் –

பரத்வ ஸுலப்ய யுக்தத்வம் -சர்வ லோக சரண்யாய ஸ்லோகார்த்தம் -த்வம் ஹி ஸ்லோகார்த்தம் –
அத ராம ஸ்லோகார்த்தம் -மித்ர பாவேந ஸ்லோகார்த்தம் –

பரத்வ ஸுலப்ய யுக்தத்வம் –
இப்படித் தன் அபிமத சித்திக்காக சரணாகதனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –
சர்வ லோக சரண்யாய —யுத்த -18-4-என்கிற அர்த்தத்தை –
ராகவாய மஹாத்மநே-என்று
ஸுலப்யத்தாலும்
பரத்வத்தாலும் சாதிக்கிறான்

த்ருணம் ஸூலபமே யாகிலும்
ஒன்றுக்கும் உறுப்பு அல்லாமையாலே அநாதரணீயம் –

ஸூ மேரு ஆதரணீயமே யாகிலும்
துர்லபம் யாகையாலே அநுப யுக்தம் –

ஆகையால்
பரத்வமும்
ஸுலப்யமும் அபேக்ஷிதம் –

——–

சர்வ லோக சரண்யாய–ஸ்லோகார்த்தம்

சர்வ லோக சரண்யாய –
உங்களுக்குத் போலே எனக்கும் ஸ்ரீ பெருமாள் பக்கலிலே கூறு உண்டு என்கிறான் –

அங்கன் அன்றிக்கே
யாவன் ஒருவனோடு ஒரு குடல் துவக்காலே நானும் கூட உங்களுக்குக்
கல்லும் தடியும் எடுக்க வேண்டும்படியாய் இருக்கிறேன் –

அப்படியே மஹா அபராதனான ராவணன் தனக்கும் கூட
ஸ்ரீ பெருமாள் சரண்யராய்க் கிடிகோள் இருப்பது –

இப்படிப் பொதுவான சரண்யன் விஷயத்தில்
ருசி இல்லாமையால் துராத்மாவான ராவணன்
தன் கூறு இழக்கிறான் அத்தனை

ராகவாய மஹாத்மனே -என்று பத த்வய
சமபி வ்யாஹாரத்தாலே
நிலை வரம்பில் பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
அவதார தசையில்
பர தசையில் காட்டிலும் அதிசயிதமான மஹாத்ம்யத்தைச் சொல்லுகிறான் –

ராகவாய
ஸ்ரீ பெருமாளுக்கு சரணாகத ரக்ஷணம் ரகு முதலாகப் போருகிற குல தர்மம் அன்றோ

மஹாத்மநே
கடலைக் கையிட்டு இறைத்து முடிய ஒண்ணாதாப் போலே விசேஷித்துச் சொல்ல முடிய
ஒண்ணாது இம் மஹாத்ம்யம்

இவ் வவதார தசையில் உண்டான நிரதிசய மஹாத்ம்யத்தைப்
பர தார தர்சன பராங்முகரான ஸ்ரீ பெருமாள் திரு முன்பே நின்று
கதஞ்சித் அஹம் ஆகத–ஆரண்ய -31-2- என்கிறபடியே
பெண்ணுடை உடுத்து உருமாறி நான் ஒருவனும் தப்பித் போந்தேன் -என்று
ராவணனுக்கு ஜனஸ்தான வ்ருத்தாந்தத்தைச் சொன்ன
அகம்பனன் வாக்யத்தாலே மகரிஷி வெளியிட்டான் –

அஸாத்ய குபிதோ ராமோ விக்ரமேண மஹா யஸா
ஆப காயா ஸூ பூர்ணாயா வேகம் பரி ஹரேச்சரை
சதா ராக்ரஹ நக்ஷத்ரம் நபஸ் சாப்யவ ஸாதயேத்
அசவ் ராமஸ்து சீதந்தீம் ஸ்ரீ மாநப் யுத்தரேத் மஹீம்
பித்வா வேலாம் சமுத்ரஸ்ய லோகாநாப் லாவயேதி மாந்
வேகம் வாபி சமுத்ரஸ்ய வாயும்வா விதமேச்சரை
ஸம்ஹ்ருத்ய வா புநர் லோகாந் விக்ரமேண மஹா யஸா
சக்தஸ் வா புருஷ வ்யாக்ர ஸ்ரஷ்டும் புநரிமா பிரஜா
ந ஹி ராமோ தசக்ரீவ சக்யோ ஜேதும் த்வயாயுதி
ரக்ஷஸாம் வாபி லோகேந ஸ்வர்க்க பாபஜநைரிவ –ஆரண்ய -31-23-/24-/25-/26-27-என்கிறபடியே
ராவண கோஷ்டியிலே அவனுக்கு ஆப்தரானவர்கள்
ப்ரஸித்தமாக்கின மஹாத்ம்யம் இது

ஸ்ரீ பெருமாளுடன் பொருது இளைத்துக் கலங்கின ராவணன்
தெளிந்து தன் தேரை மீட்டுக் கொண்டு
போன சாரதியை வெறுத்துச் சொல்லும் போதும்
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சனீயஸ்ய விக்ரமை -106-6–என்று மேலே
இவ்வாதார மஹாத்ம்யத்தைச் சொல்லக் கடவன் இறே

இப்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –
மஹாத்மநே-என்றும் –
ராகவாய -என்றும் சுருங்கச் சொன்ன பரத்வமும் ஸுலப்யமும்
மேலே முதலிகள் பாசுரத்தாலும் வெளியிடப்பட்டது -எங்கனே என்னில்

அஞ்ஞாதம் நாஸ்திதே கிஞ்சித் த்ரிஷு லோகேஷு ராகவ
ஆத்மாநம் பூஜயந் ராம ப்ருச்சஸ் யஸ்மாந் ஸூஹ்ருத்தயா –யுத்த -17-33-/34-என்றார்கள் –

இவ் வர்த்தம் தன்னையே
த்வம் ஹி சத்யவ்ரத ஸூரோ தார்மிகோ திருட விக்ரம
பரீஷ்ய காரீ ஸ்ம்ருதி மாந் நிஸ்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூ ச –என்று விவரித்தார்கள்

————–

த்வம் ஹி ஸ்லோகார்த்தம்
அத ராம ஸ்லோகார்த்தம்

த்வம் ஹி -என்கிற இத்தால்
மேலே சொல்லப்படுகிற குணங்களுக்கு எல்லாம் அதிசயவஹமான
ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்லுகிறது –

பொற்றாமரைப் பூவின் பரிமளத்திற்கு அல்லாத தாமரைப் பூவின் பரிமளத்தைக் காட்டில்
ஆஸ்ரய வை லக்ஷண்யத்தாலும் அதிசயம் உண்டாய் இருக்கும் இறே

இவ்வர்த்தத்தை
குணாயத்தம் லோகே குணிஷு ஹி மதம் மங்கள பதம்
விபர் யஸ்தம் ஹஸ்தி ஷிதிதர பதே தத் த்வயி புந
குணா சத்யா ஞான ப்ரப்ருத்ய உத த்வத் கத தயா
ஸூபீ பூயம் யாதா இதி ஹி நிரணைஷ்ம ஸ்ருதிவசாத் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் —11-என்கிற ஸ்லோகத்தில்
குணங்கள் தேவரீரை அடைந்து மங்களத் தன்மையை அடைந்தன என்று உபபாதித்தார்கள் –

சத்ய விரத-
சர்வ லோக சரண்யரான தேவரீருடைய சரணாகத ரக்ஷண விரதத்தை
ராவண பர்யந்தமாக
எவ் விஷயத்திலே விலக்கலாம்

ஸூர-
இவ் விரதத்துக்கு விரோதிகளை யதார்ஹமாகத் தேவரீர் அமோகங்களான
அம்புகளாலே யாதல்
உத்தரங்களாலே யாதல் வெல்லும் சேவகம் வேறு ஒருவருக்கு உண்டோ

தார்மிக
சரணாகத ரக்ஷணத்தில் நிலையுடையீர் தேவரீரே அன்றோ

திருட விக்ரம
ஆஸ்ரித அர்த்தமான தேவருடைய பராக்கிரமத்தை விரோதிகளால் ஆதல் ஆஸ்ரிதர் பக்கல்
குற்றம் காட்டும் பரிவரால் ஆதல் விலக்கப் போமோ

பரீஷ்ய காரீ
சர்வஞ்ஞராய் அஷ்ட அங்கையான புத்தியால் ஆராய்ந்து செய்து அருளும் காரியங்களுக்கு
அடியோங்களைக் கேட்க வேண்டுவது உண்டோ

ஸ்ம்ருதி மாந்
தேவரீர் விசிஷ்டாதிகளான ஞான விருத்தர்களுக்கு –
ராம குருக்கள் -என்று ஒரு தரம் கொடுக்கைக்காக
அவர்கள் பக்கல் கேட்டு அருளின அர்த்தங்களில் அவசரங்களில் உதவாதது உண்டோ

அன்றிக்கே
ந ஸ்ம்ரத்ய அபகாராணாம் சதமபி யாத்மவத்த்யா
கதஞ்சித் உபகாரேண க்ருதேந ஏகேந துஷ்யதி–அயோத்யா -1-11- என்னும்படி யன்றோ
தேவரீருடைய க்ருத்தஜ்ஜதை இருக்கும் படி

நிஸ்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூச
வரத சகலமேதத் சமஸ்ரிதார்த்தம் சகர்த்த –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -65-என்னும்படி
தேவரீருடைய
ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதரான அடியோங்கள் இட்ட வழக்காக்கி யன்றோ தேவரீர் வைப்பது –

ஆகையால் தாக்ஷிண்ய பர தந்தரரான தேவரீர் திரு உள்ளத்தால் கோரின -கோலின -காரியத்தைக்
காபேயரான எங்களையும் இசைவித்துக் கொண்டு செய்து அருளுவதற்காக அன்றோ
எங்களைக் கேட்டு அருளுகிறது -என்று இப்படி ஸ்ரீ பெருமாளைக் கொண்டாடி –

பரிவாலே கலங்கின –
அங்கத -சரப -ஜாம்பவத்-ப்ரப்ருதிகளான முதலிகள்
சில ஹேத்வ ஆபாசங்களை ஹேதுக்களாய்க் கொண்டு
ஸ்ரீ விபீஷண பரிக்ரஹத்தைக் கடுக இசையாது ஒழிய –

தத்துவ வித்தாய் சன்மந்திரியான
ஸ்ரீ திருவடி அவர்கள் சொன்ன ஹேத்வ ஆபாசங்களை எல்லாம் பிரதி ஷேபித்து ஸூபரீஷிதங்களான
நிர்த்தோஷ குணங்களாலே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பரிக்ராஹ்யன் என்று விண்ணப்பம் செய்தான்

அவ்வளவில் ஸ்ரீ பெருமாள் சரணாகதனை நலியச் சொல்லுகிற திரளில்
இவன் பரிக்ராஹ்யன் என்று சொல்லுவாரையும் பெற்றோமே -என்று திரு உள்ளம் உகந்து

அத ராம ப்ரசன்னாத்மா ஸ்ருத்வா வாயூ ஸூ தஸ்ய ஹா
ப்ரத்ய பாஷத துர்த்தர்ஷஸ் ஸ்ருதவான் ஆத்மநி ஸ்த்திதம் –யுத்த -18-1-என்கிறபடியே
அகம்ப நீயமான ஸ்வ மதத்தை அருளிச் செய்யத் தொடங்கினார் –

ஸ்ரீ விபீஷணன் ச தோஷன்-ஆகையால் சங்க நீயன் -என்ற அங்கதாதி மதங்களும்

இவன் நிர்தோஷன் ஆகையால் பரிக்ராஹ்யன் -என்கிற ஸ்ரீ திருவடி மதத்துக்கும்
அவிருத்தமாக –
ச தோஷமே யாகிலும் சரணாகதன் என்று பேரிட்டு வந்தவன் பரிக்ராஹ்யன் -என்று
தாம் அருளிச் செய்யப் புகுகிற மதம் அவ்வோலகத்திலே சர்வ விருத்தம் ஆகையால்
இத்தை எல்லாரும் கூட அநாதரிப்பார்கள் என்று பார்த்து அருளி –

மமாபி த விவஷாஸ்தி காசித் பிரதி விபீஷணம்
ஸ்ரோதும் இச்சாமி தத் சர்வம் பவத்பி ஸ்ரேயஸி ஸ்த்திதை -18-2-என்று
நம்முடைய மதத்தை நாமும் –
நாம் முன் – சொல்ல நினையா நின்றோம் –
அதனுடைய அனுஷ்டானம் பின்பு பார்த்துக் கொள்ளுகிறோம்-
நமக்குப் பரிவரான நீங்கள் நாம் சொல்லுகிற வாக்கியத்தை ஸ்ரீ விபீஷணனுடைய சரணாகதி வாக்கியம்
பட்டது படுத்தி அநாதரியாதே கேட்டுத் தர வேணும் -என்று இரந்து அருளினார்

இப்படி முதலிகள் செவி தாழ்க்கும்படி இரந்து தம்முடைய ஸ்வ பாவம் சொல்லுவாரைப் போலே
ஸ்வ சித்தாந்தத்தை சமீஸீனமான ஹேதுவோடே சுருங்க அருளிச் செய்கிறார் –

மித்ர பாவேந ஸ்லோகார்த்தம் –

மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத கர்ஹிதம் -18-3-என்று

ஸ்ரீ பெருமாள் தம்முடைய சீர்மையாலே ஆஸ்ரிதனைத் தம்மோடு ஓக்கப் பார்த்து அருளி
சரணாகதன் என்று புல்லிதாகச் சொல்ல மாட்டாமல் –
மித்ர பாவேந -என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெருமாளோடே துல்ய சீலையான ஸ்ரீ பிராட்டியும்
விதித ஸஹ தர்மஜ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதம் இச்சசி -ஸூந்தர -21-20- என்று
சரணாகதி சப்த விஷயத்தில் மைத்ரீ என்று அருளிச் செய்தாள் இறே

மித்ர பாவேந –
மித்ரத் வேந -இத்தால் ஆனுகூல்ய சங்கல்பாதி பூர்வகமாகப் பண்ணின
ஆத்ம ரஷா பர சமர்ப்பணம் ஸூசிதம் ஆகிறது
அங்கன் அன்றிக்கே
மித்ர பாவனையால் என்னவுமாம் –

உள்ளில்லையே யாகிலும் சரணாகதன் என்னும் பேரிட்டு வந்தாரை நாம் விட மாட்டோம் என்கிறார்

இப்படி வ்யாஜ மாத்ர சாபேஷாரான ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்தை அடி ஒற்றி
பாபீய ஸோபி சரணாகதி சப்த பாஜோ நோ பேஷணம் மம தவோசித மீஸ்வரஸ்ய
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீஷு நைவ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீநம் –ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம் -61-என்று
பூர்வர்கள் விண்ணப்பம் செய்தார்கள் இறே

ஸம் ப்ராப்தம்
இவன் ராவண க்ராஹ க்ருஹீதனாய்க் கடலுக்கு அக் கரைக்கே நின்று
ராகவம் சரணம் கத -என்றானாகில்
நாம் அதி த்வரையோடு வைநதேய கதியாலே
அக் கரைக்கே செல்ல வேண்டி இருக்க
நாம் இருந்த இடத்தில்
பங்கோரு பரி கங்கா நிபதன நியாயத்தாலே வந்த இவனை நாம் விடும்படி என்

ஸம்ப்ராப்தம்
சம்யக் பிராப்தம் -இங்கு சம்யக்த்வமாவது
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச -17-14-
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச
பவந்தம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸூகாநி ச -19-5- என்கிறபடியே
ஹேய உபாதேய விபாகம் பண்ணிக் கழிக்க வேண்டுவன கழித்துக் கைக்கொள்ள வேண்டுவது கைக்கொண்டு
சரணாகதன் என்கிற யுக்தி மாத்திரமே பற்றாசாகப் பற்றி
அதி சங்கை தீர்ந்து அந்தரங்கரைப் புருஷகாரமாகக் கொண்டு முன்னிட்டு வருகை

ந த்யஜேயம்
இவன் பரித்யாஜ்யனோ -பரிக்ராஹ்யனோ -என்கிற மீமாம்சை எதற்கு உறுப்பாகிறது –
சரணாகதன் என்கிற சப்தத்தை நாம் செவிப்படுத்தின அவனை விட வல்லோமோ

கதஞ்சன
சரணாகதனுக்குக் குணங்கள் இல்லையே யாகிலும் –
தோஷங்கள் பிரசுரங்களே யாகிலும்
இவனைக் கைக்கொள்ளுகை பரிவரானவர்க்கு அபிமதம் அன்றே யாகிலும்
இவனைக் கைக் கொண்டால்
மேல் த்ருஷ்ட அதிருஷ்ட ப்ரத்யவாய சஹஸ்ரம் உண்டே யாகிலும்
ஒரு படிக்கும் நாம் இவனைக் கை விட மாட்டோம் –

இஸ் ஸ்லோகத்தில் பூர்வ அர்த்தத்தாலே –
உன்னுடையவன் -நான் உனக்கே பரம் -என்று
ஒரு கால் உறவு பண்ணுவது அடியாக ஒரு காலத்தில் இவனை
சர்வேஸ்வரன் விடான் -என்ற ஸ்ருதி வாக்ய அர்த்தம் உப ப்ரும்ஹணம் ஆயிற்று

இப்படி ஒரு படியாலும் சரணாகதனைத் தாம் விட மாட்டாத ஸ்வ பாவத்தை அருளிச் செய்து
முதலிகள் விண்ணப்பம் செய்த பரித்யாஜ்யதா ஹேதுக்களான தோஷங்களுக்கு சாத்யத்தோடு
வியாப்தி இல்லாமையால்
அவை உண்டே யாகிலும் அகிஞ்சித்காரம் என்கிற திரு உள்ளத்தால்
அவர்கள் சங்கித்த தோஷங்களுடைய ஸ்வரூப ஸத்பாவத்தை இசைகிறார் –

தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
ஸ்யாத் –
இவ்விடத்தில் அப்யனுஜ்ஜை தோற்றுகைக்காக வாதல் –
சம்பாவனையைப் பற்ற வாதல் –
துஷ்டனையும் சரணாகத சப்த மாத்திரத்தாலே பரிக்ரஹித்தார் என்கிற மஹா குண சித்த்யர்த்தமாக
தோஷ பிரார்த்தனையைப் பற்ற வாதல் -ஸ்யாத் -என்கிறார்

தோஷ -என்கிற
சாமான்ய நிர்த்தேசத்துக்கு நீங்கள் சொன்ன தோஷங்கள் ஆகவுமாம்-
நீங்கள் சொல்லாத சாஷாத் ராவண அதிகதமான தோஷாந்தரங்கள் ஆகவுமாம் -என்று கருத்து –

இத் தோஷங்கள் எல்லாம் பரித்யாஜ்யதா ஹேதுக்களாவது சரணாகத வ்யதிரிக்த விஷயத்திலே என்று
தஸ்ய ஸ்யாத் -என்கிற
சர்வ லோக சரண்யரான ஸ்ரீ பெருமாளுக்குத் திரு உள்ளம் -ஆகையால் இறே
யதிவா ராவண ஸ்வயம் -18-35–என்றும் ராவணன் தன்னைக் குறித்தும்
நஸேச் சரணம் அப் யேஷி -41-66-என்றும் அருளிச் செய்கிறது

சதா மேதத் அகர் ஹிதம்
தேவரீர் ஆர்த்ர ஸ்வபாவர் ஆகையால் துஷ்ட பரிக்ரஹம் பண்ணினால்-
நாட்டிலே சிஷ்டை கர்ஹை பிறவாதோ-என்று முதலிகளுக்குக் கருத்தாக
அதற்கும் உத்தரம் அருளிச் செய்கிறார் –
சதா மேதத் அகர் ஹிதம் – என்று –

அகர்ஹிதம்
கர்ஹிதா தந்யத் –பூஜிதம் -என்றபடி –
நாம் சரணாகதனைத் தோஷம் பாராதே பரிக்ரஹித்தால்
வத்யனே யாகிலும் சரணாகதனை அழியக் கொடுக்கலாகாது -என்கிற ஸ்ருதி அர்த்தத்தை அறிந்து
அனுஷ்ட்டித்துப் போருகிற வசிஷ்ட பகவான் விச்வாமித்ர பகவான் உள்ளிட்ட சத்துக்கள்
நாம் பண்ணின தர்ம உபதேசம் பலித்தது என்று கொண்டாடும்படியாம் –

நீங்கள் சொல்லுகிறபடியே கேட்டு நாம் கை விட்டால் அவர்கள் நம்மை கர்ஹிக்கும் படியும் –
ஆகையால் நமக்குக் கார்யம் தப்பாமைக்கு நீதி சொல்லப் பரிவும் நிரப்பமும் உடைய நீங்கள்
வசிஷ்ட விச்வாமித்ர ப்ருஹஸ்பதி ரகு சிபி ப்ரப்ருதிகளான சத்துக்களும் நெஞ்சாறல் படாமே
நம் ஸ்வ பாவத்தையும் குலையாதே நம்மைப் பெறப் பாருங்கோள்-என்று திரு உள்ளம்

சரண்ய சீல பிரகாசநம் என்னும் ஐந்தாவது அதிகாரம் முற்றிற்று –

————-

சரண்ய வைபவம் பிரகாசம் -என்னும் ஆறாவது பிரகாரம் –

ஸ்ரீ விபீஷண விஷயே ஸ்ரீ ஸூக்ரீவ அதி சங்கா நிவரணம் –
சரண்யத்வ உபயுக்த குண பூர்ணத்வம்

ஸ்ரீ விபீஷண விஷயே ஸ்ரீ ஸூக்ரீவ அதி சங்கா நிவரணம் –
இப்படி ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு ஸ்ரீ மஹா ராஜர்
கூட ஹ்ருதயனான ராக்ஷஸனுடைய அநு பிரவேசத்தினாலே என் விளையப் புகுகிறதோ என்று
ஸ்ரீ பெருமாள் பக்கல் பரிவாலே கலங்கி பின்பு

கோ நாம ச பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத்
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் ய பரித்யஜேத் -18-5-என்று
ஸ்ரீ விபீஷண தவ்ர் ஜன்யாதிகளைக் காட்டி
ஸ்ரீ பெருமாளை விலக்கப் பார்க்க –
ஸ்ரீ பெருமாள் ராஜ நீதி மரியாதையாலே உத்தரம் அருளிச் செய்தார் –

பின்னையும் ஸ்ரீ மஹா ராஜர் -ஸ்ரீ பெருமாளுடைய
ப்ரபந்ந பார தந்தர்ய காஷ்டையாலே இறே
நாம் விண்ணப்பம் செய்த வார்த்தை திரு உள்ளத்தில் படாதே இருக்கிறது -என்று புத்தி பண்ணி

ஒரு ப்ரபத்திக்கு இரண்டு பிரபத்தி பண்ணுவோம் -என்று
ஸ்ரீ இளைய பெருமாளையும் கூட்டிக் கொண்டு
திருவடிகளில் விழுந்து ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்திலே தரிக்க வேணும் என்று பார்த்து –

உம்மளவில் அன்றிக்கே
உமக்குத் தோழனான என் விஷயத்திலும்
பஹிஸ் சர பிராண பூதரான ஸ்ரீ இளைய பெருமாள் விஷயத்திலும்
இவன் பிரச்சன்னனாய் நின்று நலியும் கிடீர் –
ஆகையால் இவன் வத்யன் என்று விண்ணப்பம் செய்ய –

இத்தைக் கேட்ட பின் ஸ்ரீ பெருமாள்
ஸூக்ரீ வஷ்ய து தத் வாக்யம் ராம ஸ்ருத்வா விம்ருஸ்யச —
தத ஸூபதரம் வாக்யம் உவாச ஹரி புங்கவம் -18-21-என்கிறபடியே
கலக்கம் அடியாக ஸ்ரீ மஹாராஜர் ஸ்ரீ இளைய பெருமாளையும் கூட்டிக் கொண்டு
பண்ணின சரணாகதியைக் காட்டிலும் தெளிவு அடியாக வந்த
ஸ்ரீ விபீஷணன் சரணாகதி ஒன்றுமே பிரபலம் என்று அறுதியிட்டு

ஸ்ரீ மஹா ராஜருடைய அச்சம் தெளிய வேண்டும் என்று பார்த்து அருளி –
தோழனாரே ஸ்ரீ விபீஷணன் துஷ்டன் என்றும்
அதுஷ்டன் என்றும் பண்ணுகிற விசாரம் ஏதுக்காகப் பண்ணுகிறீர்
தம் அளவில் ராக்ஷஸன் என்கிற இது ஏன் என்பது
நம் அளவிலாதல்
உம்மளவில் யாதல் –
தம்பி அளவில் யாதல் -இவன் ஒரு பாதகம் செய்கைக்கு பிரசங்கம் என்

நம்முடைய பூந்தோட்டத்தில் ஜாதி மாத்ர வானரங்களுக்கும் இவன் ஒரு குற்றம் செய்ய வல்லனோ
நாம் நினைத்த போது பிசாசங்கள் அசுரர்கள் யக்ஷர்கள் பிருத்வியில் உள்ள ராக்ஷஸர்கள் எல்லாரும்
திரண்டு வந்தாலும் ஒரு அங்குளி அக்ரத்துக்குப் பற்றுமோ –
அஞ்சலியாகிற அஸ்திரம் எடாதார்க்கு நம்மை வெல்ல விரகுண்டோ-என்று
தம்முடைய சர்வ சக்தித்வத்தை வெளியிட்டு
மஹா ராஜருடைய அச்சத்தைக் கழிக்கிறார் –

ஸூ துஷ்டோ வாப்ய துஷ்டோ வா கிமேஷ ரஜ நீசர
ஸூஷ்ம மப்யஹிதம் கர்த்தும் மமா சக்த கதமசந
பிஸாஸாந் தானவாந் யஷாந் ப்ருதிவ்யாம் யே ச ராக்ஷஸாந்
அங்குள் யக்ரேண தாந் ஹாந்யாம கிச்சன் ஹரி கணேஸ்வர யுத்த -18-22-/23-
பண்டு நாம் உமக்கு காட்டின பிரபாவத்தை வானர ராஜ்யத்திலே புக்கவாறே மறந்தீரோ

மஹாத்மநே -என்று
ஸ்ரீ விபீஷணன் நினைப்பித்ததும் நெஞ்சில் பட்டது இல்லையோ –
எதிரிகள் விரல் கவ்வும்படி காணும் -நம்முடைய யங்குள் யக்ர வியாபாரம் –
நகங்கள் இறே ஸ்ரீ பெருமாளுக்கு ஸ்ரீ நரஸிம்ஹ தசையில் பஞ்சாயுதங்கள்

சரண்யத்வ உப யுக்தமாக ஸ்ரீ பகவச் சாஸ்த்ரங்களிலும் அபியுக்தர் வாக்யங்களிலும்
ஸர்வஜ்ஜோ அபி ஹி விஸ்வேச சதா காருணிகோ அபி சந் –ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -17-8-என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ச தீஷு –ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -61-என்றும்
சங்க்ருஹீதமான சரண்ய குண த்ரயமும் இப்பிரகரணத்தில் விவஷிதம் -எங்கனே என்னில் –

அடியிலே –
அஞ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் –17-33-என்று
சர்வஞ்ஞத்வம் சொல்லிற்று

மத்யே
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -18-3-என்று
பரம காருணித்தவம் சொல்லிற்று

இவ்விடத்தில்
அங்குள் யக்ரேண தாந் ஹந்யாம் இச்சன்–18-23-என்று
சர்வ சக்தித்வம் சொல்லிற்று – –

இப்படி மானுஷ பாவத்தில் நின்றும்
ராம சப்தம் ஈரரசு படாதபடி பண்ணின மஹா வீரன் என்னும் செருக்காலே
மதியாமே பேசுகிறாப் போலே
தம்முடைய ஈஸ்வரத்வ
ரக்ஷகத்வ ஞாபக
சர்வ சக்தித்வத்தாலே
சரண்யத்வ உபயுக்த சர்வ குண சம் பூர்ணதையை அருளிச் செய்து
ஸ்ரீ மஹா ராஜ ப்ரப்ருதிகளுடைய அச்சம் தீரும்படி பண்ணி அருளினார்

சரண்ய வைபவ பிரகாரம் என்னும் ஆறாவது அதிகாரம் முற்றிற்று

—————–

பரம தர்ம நிர்ணயம் என்னும் ஏழாவது அதிகாரம் —

சரணாகதியின் பரம தர்மத்வம் –
ஸ்ரூயதே ஹி ஸ்லோகார்த்தம் —
வ்யாக்ர வானர சம்வாதம் –
கண்டு காதா விவரணம் –
சரணாகத பரித்யாகே த்ருஷ்ட ப்ரத்யவாய நிரூபணம் –
அத்ருஷ்ட ப்ரத்யவாய நிரூபணம் – ஸ்வ மத பிரகாசநம்

சரணாகதியின் பரம தர்மத்வம் –
இப்படித் தம்முடைய ஸ்வ பாவத்தையும் ப்ரபாவத்தையும் வெளியிட்டு –
மேல் -இவன் துஷ்டனே யாகிலும் –
நாம் அசக்தரே யாகிலும்
பிராண பர்யந்தமாக சரணாகத சம்ரக்ஷணம் பண்ண வேண்டும் –

இதுவே பரம தர்மம் என்னும் இடத்தைக்
கபோத உபாக்யான ஸஹ க்ருத
கண்டு காதா விதி முகத்தால் அருளிச் செய்கிறார் –

———-

ஸ்ரூயதே ஹி ஸ்லோகார்த்தம்

ஸ்ரூயதே ஹி கபோதேந சத்ரு சரணமாகத
அர்ச்சி தஸ் ச யதா நியாயம் ஸ்வைஸ் ச மாம் ஸை நிமந்த்ரித –
ஸ்ரூயதே-என்கிற இத்தால்

ஸ்ருணு ராஜந் கதாம் ஏதாம் சர்வ பாப பிரணாசி நீம்
ந்ருபதே முசுகுந்தஸ்ய கதிதா பார்க்க வேண யா -இதிஹாச சமுச்சயம் -8-5-என்றும்

ய இதம் ஸ்ரூணுயான் நித்யம் படே தாக்யா ந முத்தமும்
வி முக்த சர்வ பாபேப்யோ ஸ்வர்க்க லோகம் ச கச்சதி –இதிஹாச சமுச்சயம் 8-5-128–என்றும் சொல்லுகிறபடியே

பாவநத்மத்வத்தாலே சர்வரும் ஆதரித்துக் கேட்க்கும் படி ஸூசித்தம் ஆகிறது

ஸ்ரூயதே
விப்ர கீர்ணங்களாய் அநந்தங்களான ஸ்ருதி களை சாஷாத் கரிக்க வல்லாருக்கு இதுவும்
ஒரு மூலையில் காணலாய் காணும் இருப்பது

ஸ்ரூயதே
பார்க்கவாதிகள் சொல்ல முசுகுந்தாதிகள் கேட்கலாம் அத்தனை போக்கி எத்தேனையேனும்
காருணிகராய் இருப்பாராலும் இப்படி அனுஷ்டிக்கை அசக்யம் காணும்

ஹி
அதி பிரசித்தம் ஆகையாலும்
அந்ய விருத்தம் ஆகையாலும்
இவ்விருத்தாந்தம் எங்களுக்கு முன்னே நீங்களும்
கேட்டுப் போருமது அன்றோ –
நம் பக்கல் பரிவாலே வந்த கலக்கத்தை விட்டு நீரே பிரதி சந்தானம் பண்ணிப் பாரீர்

கபோதேந
ஒரு த்ரை வர்ணிகனும் அன்று –
வர்ண மாத்திரத்தில் பிறந்தான் ஒருவனும் அன்று –
சாமான்ய தர்ம யோக்ய மனுஷ்ய ஜாதியனும் அன்று –
ஒரு திர்யக் செய்த படி இது –
இப்படி இத் தர்மம் திர்யக்குகளுக்கும் கூட ரக்ஷணீயமுமாய் இருந்தது

தாம் தர்ம ப்ரவர்த்தகரான நாம் இருந்து
சரணாகதனை வத்யன் என்பதும் –
த்யாஜ்யன் என்பதும் ஆகா நின்றோம்

கபோதேந-
ஒற்றைக் கபோதம் ஆகையால் விலக்குகைக்கு ஈடான பரிவர் இல்லாமையாலும் –
அர்த்தம் -என்று சுருதியில் ஓதுகிறபடியே ஸஹ அதிகாரத்தில் தர்மியிலே சொருகி
ச்ருணு சாவஹித காந்த யத்த வாஹ்யாம் யஹம் ஹிதம்
பிராணைர் அபி த்வயா நித்யம் சம் ரஷ்ய சரணாகத –என்று
தர்மத்தில் பிரேரிப்பிக்கிற
ஸஹ தர்ம சாரிணீ சந்நிதியாலும்
அக் கபோதம் சடக்கென சரணாகத ரக்ஷண தர்மம்
அனுஷ்ட்டிக்கப் பெற்றது இறே

சத்ரு
கபோதத்திற்கு வேடன் தானே பார்ய அபஹாரம் பண்ணின சத்ருவாய் இருக்கும் –
நமக்கு ஸ்ரீ விபீஷணன் அப்படிப்பட்ட சத்ரு இருந்த ஊரில் நின்றும் வந்தான் அத்தனை அன்றோ –

சரணமாகத-
கபோதம் இருந்த மரத்தடியில் வேடன் யாதிருச்சிகமாக வந்தான் அத்தனை
ஸோ அஞ்சலிம் சிரஸா க்ருத்வா வாக்யமாஹ வனஸ்பதிம்
சரணம் ஹி கதோஸ்ம் யத்ய தேவதாம் த்விஹ வாசி நீம் –என்று
வனஸ்பதி தேவதையைக் குறித்து சரண சப்தம் பிரயோகித்தான் ஆகிலும்
இக் கபோதத்தைக் குறித்து சரண சப்தம் பிரயோகித்திலன்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் புத்ர தாராதிகள் எல்லாம் விட்டு –
ராகவம் சரணம் கத -என்று நமக்கு கூடஸ்தனான ரகு
ரகு ராக்ஷஸ சம்வாதத்திலே சரணாகத சம்ரக்ஷணம் பண்ணின படியை நினைப்பித்துக் கொண்டு
நம்மை யதாக்ரமம் சரணாகதனானான்

அர்ச்சித ச
வேடனாகையாலே பஷி ஜாதிக்கு ப்ரக்ருதியா சத்ருவுமாய் –
விசேஷித்து தன் பார்யா அபஹர்த்தாவுமான இவன்
பட்டது படுகிறான் என்று இருப்புதல்-
அவசரத்தில் நலிய விரகு தேடுதல் பிறப்பியமாய் இருக்க
அதிதியைத் தேவனாக விதிக்கிற ஸ்ருதியின் படியே தேவர்களை ஆராதிக்கும் திறத்தில்
அக்னி முகமாக வன்றோ அர்ச்சித்தபடி

நாமும் சரணாகதனை
வாத்யதாம் ஏஷ தீவ்ரேண தண்டேந ச சிவைஸ் ஸஹ என்று
அநு பந்தி பர்யந்தமாக நன்றாக அர்ச்சியா நின்றோம்

யதா நியாயம்
சீதத்தாலும் ஷூத்தாலும் ஆர்த்தனான வேடனுக்கு அபேக்ஷிதங்களான
அக்னி ஆநய நாதிகளைப் பண்ணி
நல் விருந்து வந்தால் ஆதரிக்கும் படி தப்பாதே
அந்தர் விஷாத கந்தம் இல்லாதே அக் கபோதம் ஆதரித்த படி –

யதா நியாயம்
இன் சொல் முதலாக பிராண பர்யந்தமாக சரணாகத விஷயத்தில்
சக்தி வஞ்சநம் பண்ணாதே செய்த
பரிவு எல்லாம் அளவாய் இருக்கும் அத்தனை போக்கி மிகுதி உண்டோ

ஸ்வஸை மாம்ஸை நிமந்த்ரித
புறம்பே சில ஆகாரங்களை எடுத்துக் கொண்டு வந்து இட்டது அன்று
தன்னுடையதாக த்ரவ்யாந்தரங்களிலே சிலவற்றை இட்டு உபசரித்ததும் அன்று –
விவேகம் இல்லாதார் தானாக அபிமானித்து இருக்கக் கடவதாய்-
விவேகிகளுக்கும் ஆத்யமான தர்ம சாதனம் என்று
பேணக் கடவதான சரீரத்தின் மாம்சங்களாலே அன்றோ அவனை
உபசார பூர்வகமாக நல் விருந்தூட்டப் ப்ரவர்த்தித்தது

மாம்ஸை –
ஏக தேசங்களை பிரித்து இட்டதன்று –
கடுகப் பசி தீர வேண்டும் என்று வேடனுக்குத் தனக்குள்ள அவயவங்கள் ஒன்றும்
சேஷியாதபடி சர பங்காதி தாபஸரைத் போலே
இது ஒரு மஹா தபஸ்ஸாக நினைத்து நெருப்பிலே காணும் விழுந்தது –

இப்படி இஸ் ஸ்லோகத்தில் சொன்ன அர்த்தங்களைத் தம்முடைய அனுஷ்டானத்துக்கு
ஹேதுவாக அனுவதித்துக் கொண்டு –
அப்படியானால் நமக்கு சரணாகதி ரக்ஷணம் கைம்முக நியாய சித்தம் அன்றோ
என்று அருளிச் செய்கிறார்

சஹி தம் பிரதி ஜஹ்ரஹா பார்யா ஹர்த்தார மாகதம்
காபோதோ வாநர ஸ்ரேஷ்டட கிம் புநர் மாதவிததோ ஜெந

சஹி
அக் கபோதம் நம்மைப் போலே தர்ம அனுஷ்டானம் பண்ணக் கடவ ஜாதிகளில் ஒன்றிலே யாதல் –
சரண்ய வம்சத்தில் யாதல் பிறந்தது அன்று என்னும் இடம் பிரசித்தமாய் அன்றோ இருப்பது

தம்
தன் ஜாதியாலும் விசேஷித்துத் தன் கொடுமையாலும்
கஸ்சித ஷூத்ர சமாசார பக்ஷிணாம் கால சம்மித -என்று பஷி ஜாதிக்காக
விருத்தனாய் காபோதம் இருந்த இடத்திலே
யாதிருச்சிகமாக வந்து விழுந்ததற்கு கபோதத்தைக் குறித்து ஒரு உபாய பிரயோக ரஹிதனாய் –
விபரீத அனுஷ்டானத்திலும் நிலை குலையாதவனாய்
அனுதாப லேசமாதல்
அனுகூல வாத பிரசாங்கமாதல்
இன்றிக்கே கிடீர் அவ்வேடன் இருப்பது –

ச ஹி தம் பிரதி ஜஹ்ரஹா
தன்னை அழிய மாறி அன்றோ அவ் வேடனைக் கைக் கொண்டு ரஷித்தது

பார்யா ஹர்த்தாரம்
முன்பு சத்ரு என்று பொதுவில் அருளிச் செய்ததை அவன் விருத்தியைக் காட்டி விசேஷிக்கிறார்
இப்படியே ராவணன் வந்தாலும் நமக்கு கைக்கொள்ள வேண்டி யன்றோ இருப்பது என்று திரு உள்ளம்

ஆகதம்
இவன் தன்னைக் கைக் கொள்ளுக்கைக்குச் செய்த உபாய அனுஷ்டானம்
கபோதம் இருந்த மரத்தடியில் வந்த அளவே கிடீர் அல்லது
வனஸ்பதி தேவதையைக் குறித்து சரணம் என்று சொன்ன சப்தமும்
கபோதம் என்று கேட்டது இல்லை

காபோதோ
முன்பே கபோத -என்று சொல்லி இருக்க
இரு காலும் இட்டு கபோத என்றது –
சிபியினுடைய சரணாகத ரக்ஷண தர்மம் சொல்லுகிற ஸ்யேந கபோத விருத்தாந்தத்தில் போலே
கபோத வேஷம் கொண்டான் ஒரு தேவனோ ரிஷியோ என்று சங்கியாமைக்காக
இது பூர்வ கர்ம விசேஷத்தால் ஸ்ரீ கஜேந்த்ராதிகளைப் போலே திர்யக்காய் இருக்க
இப்படி தர்ம அனுஷ்டான யோக்யமாய்ப் பிறந்தது –

வாநர ஸ்ரேஷ்டட -வேறேயும்
ஒரு திர்யக் சத்ருவான வேடனை ரஷித்தபடி கேளீர்

————-

வ்யாக்ர வானர சம்வாதம்-

வாநர ஸ்ரேஷ்டட
வானர ஜாதிகளுக்கு முடி சூடின நீர் வ்யாக்ர வாமன சம்வாதம் கேட்டு அறியீரோ –
ஒரு புலி வந்து தொடரத் தான் இருந்த மரத்தடியில் வந்து ஏறின வேடனை
அந்த வ்யாக்ரம் விடச் சொல்ல
இவனை சரணாகதன் என்று வானரம் ரஷித்தது –

அப்போது மரத்தடியை விடாதே கிடக்கிற புலி
இவ் வானராம் தூங்கின அளவில் வேடனைப் பார்த்து –
உன்னை விடுகிறேன் வானரத்தைத் தள்ளித் தர வல்லையோ–என்ன

பாப புத்தியான வேடன் தன்னை ரஷித்த வானரத்தைத் தள்ளின அளவிலே –
வானரத்தைப் பிடித்து உன்னை விடுகிறேன்
தனக்கு உபகாரகனான உன்னைத் தள்ளின வேடனைத் தள்ளித் தர வில்லையோ -என்று
மனுஷ்ய மாம்ச லுப்தமான புலி சொல்ல

தர்ம வித்தான வானரம் ப்ராணாந்த்ய தசை யாகையாலே அஹ்ருதயமாக இசைந்து
புலி விட்டவாறே மரத்திலே எறி சத்ருவான வேடனைப் பின்பும் போக்கற்றுத்
தான் இருந்த மரத்தில் இருந்ததே யடியாக சரணாகதன் என்று ரஷித்தது –

நீர் வானரங்களுக்கு முடி சூடி இருந்தாலும் உங்களுக்கு ஜாதி தர்மம் என்று
பார்த்தாகிலும் கைக் கொள்ள வேண்டாவோ –

வாநர ஸ்ரேஷ்டட –
முதலிகள் கலக்கினால் தெளிவிக்க இருக்கிற நீர் கலங்கலாமோ

வாநர ஸ்ரேஷ்டட
வாலி பதத்தில் இருந்தவாறே உமக்கு சரணாகத பீடை ருசித்ததோ

வாநர ஸ்ரேஷ்டட
வானர மாத்திரம் அல்லீரோ –
ஆதித்யனுடைய புத்ரனுமாய் தர்ம அதர்மங்களை அறிந்தும் இருக்கிற நீர் –
அல்லாத வானரங்களைப் போலே காபேயம் பண்ணப் பெறுவதிரோ –

கிம் புநர் மாதவிததோ ஜெந
கபோதம் செய்தபடி கண்டால் நம் போலிகளுக்குக் கேட்க வேணுமோ –
நாம் சரணாகத ரக்ஷணத்துக்கு கொடி எடுத்த ரகு வம்சத்தில்

ஷஷ்டிர் வர்ஷ சஹஸ்ராணி லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்ட ரஸ்ய ஆதபத் ரஸ்யச் சாயா யாம் ஜரிதம் மயா –அயோத்யா -2-7-என்று
அறுபதினாயிரம் ஆண்டு
வெண் கொற்றக் குடை தன் நிழல் ஒழிய வேறு ஒரு நிழலில் ஒதுங்காதே லோக ரக்ஷணார்த்தமாகப்
பத்துத் திக்கிலும் தேர் நடத்தி ப்ரசித்தனான தரசரதன் மகனாய் வசிஷ்ட விச்வாமித்ர சிஷ்யனாய்
மஹா யோகியாக ப்ரயக்யாதனான ஜனகனோடு சம்பந்தம் பண்ணின நாம்

ராமோ விக்ரஹவான் தர்ம–ஆரண்ய -37-13 -என்று
உடம்பில் சிஷ்டத்தையா ப்ரஸித்தியை ஏறிட்டுக் கொண்டு

மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -ஸூந்தர -35-11 -என்கிறபடியே
இத்தனை காலமும் நம்முடைய கை பார்த்து நாட்டார் அனுஷ்டிக்கும்படி நடந்து போந்து
இன்று சரணாகத காதம் பண்ணினால் நாடு என் படக் கடவது

மத்வித
நம்முடைய விரதம் பின் சொல்லக் கடவோம்
சாமாந் யோயம் தர்ம சேதுஸ் நாராணாம்–என்கிறபடியே
நம் போலிகள் எல்லாருக்கும் இதுவே
பொதுவாய்க் காணும் இருப்பது

மத்வித
நம் போலிகள் சரணாகதனை விடுவார்களோ –
ஹிம்ஸாபி ருசிகள் ஆகையால் அவத்யரை வதிக்க வல்ல
ராவணாதிகளுக்கு அன்றோ இப்படிக்கு ஒத்த கார்யங்கள் ருசித்து

ஜன
சரணாகதனை பரித்யஜித்தவன் என்ன
பிறப்பு பிறந்தானாகக் கடவன் –
நம் போலிகளுக்கு ஜென்ம பிரயோஜனம்
சரணாகத ரக்ஷணம் அன்றோ

சிஷ்ட அனுஷ்டானம் ப்ரமாணமே யாகிலும் ஒரு கபோதம் அனுஷ்டித்தது
என்று ஒரு பிரமாணம் உண்டோ –

இதற்க்கு விதாயகமாய் இருபத்தொரு வாக்யம் வேண்டாவோ என்கிற சங்கையிலே
கண்டு என்பான் ஒரு மகரிஷி கண்டதொரு காதையைக் கேளீர் -என்கிறார்

—————

கண்டு காதா விவரணம்

ரிஷே கண் வஸ்ய புத்ரேண கண்டுநா பரமர்ஷிணா
ச்ருணு காதாம் புரா கீதாம் தர்மிஷ்ட்டாம் சத்யவாதி நா -18-26-

கண்டு என்கிற மஹர்ஷியினுடைய
ஜென்ம பிரகார்ஷத்தை முற்படக் கேளீர்

ரிஷே கண் வஸ்ய புத்ரேண
தான் தோன்றி அன்றிக்கே -யஸ்ய ஸ்யாத் ஸ்ரோத்ரிய பிதா -என்கிறபடியே
அவனுடைய பிதாவும் சதுர்வேத அத்யாயியாய்
அதீந்த்ரிய த்ரஷ்டாவாய்க் காணும் இருப்பது -ஆனால் பறப்பதின் குட்டி தவழாது இறே

கண் வஸ்ய புத்ரேண
மஹா தபாவான கண்வ மகரிஷிக்கு சம்சார நிஸ்தாரகனாய்க் காணும் இருப்பது

கண் வஸ்ய புத்ரேண கண்டுநா
பிதாவின் பெயராலும் தன் பெயராலும் ப்ரசித்தனாய்க் காணும் இருப்பது –

கண்டுநா
அவன் பெருமையைப் பார்த்தால் –
ச சாபி பகவான் கண்டு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-5–52-என்று
மஹரிஷிகள் கொண்டாடும்படியான பெயருடையான் ஒருவன் காணும்

ரிஷி புத்ரேண பரமர்ஷிணா
விளக்கில் கொளுத்தின பந்தம் என்னும் படி காணும்
பிரகாச பஹுளனான பிதாவிலும் காட்டில்
இவனுடைய ஞான விகாசம் இருக்கும் படி –

ச்ருணு
இத்தனை நாளும் இக்காதை உம்முடைய செவியில் படாமையால் இறே நீர் இப்படிக் கலங்குகிறது –
இத்தை அவஹிதராய்க் கேளீர்

காதாம்
இது பெரிய பொருள்களை எல்லாம் பொதிந்து கொண்டு எளிதாய்க் கேட்கலாம் படி
சுருங்கின பாசுரமாய்க் காணும் இருப்பது

புரா கீதாம்
இன்று முதலாகக் கட்டினது ஓன்று அன்று காணும் இது –
வேதம் போலே பழையதாய் இருப்பது ஓன்று

கீதாம்
கண்டுவான மகரிஷியும் இத்தை ஸ்ருஷ்ட்டித்தான் என்று இராதே கிடீர் –
ரிக்கை சாமமாகப் பாடுமாப் போலே
பண்டே உள்ளது ஒன்றை அவன் பாடினான் அத்தனை

கீதாம்
அவன் செய்தானே யாகிலும் அந்த சாம த்வனி போலே
ஸமஸ்த பாபங்களையும் போக்க வற்றாய்க் காணும் இருப்பது

தர்மிஷ்ட்டாம்
போலியான தர்மங்களை போல் அன்றிக்கே ப்ரத்யக்ஷ ஸ்ருதி ஸித்தமான பரம தர்மத்தை
விஷயமாக உடைத்தாய்க் காணும் இக்காதை இருப்பது

சத்யவாதி நா
சத்யவாத சீலனான கண்டு என்கிற மகா ரிஷி வாய் வெருவிச் சொன்னாலும் பழுதாய் இருபத்தொரு
சவ்வும் துவ்வும் கூட்டுகையும் இன்றிக்கே காணும் இருப்பது

இதில் –
பரமர்ஷிணா -என்று யதார்த்த தர்சித்தவம் சொல்லிற்று
சத்யவாதி நா-என்று யதா த்ருஷ்டார்த்த வாதித்தவம் சொல்லிற்று
தர்மிஷ்ட்டாம் -என்று உபதேசத்தினுடைய பரம ப்ரயோஜனத்வம் சொல்லிற்று

இத்தால்
ப்ரம விப்ரங்கள் அற்று சர்வ லோக ஹிதம் சொல்லுவான் ஒருவன்
என்று ஆப்தி அதிசயம் சொல்லிற்று ஆய்த்து

மேல் கண்டு காதை என்று எடுக்கிற நாலரை ஸ்லோகத்தில்
பிரதம ஸ்லோகத்தால் பூர்ண சரணாகதி இல்லையே யாகிலும்
போக்கற்ற தசையில் ஆத்ம நிக்ஷேப அபிப்ராய வ்யஞ்ஜகங்களாய்க் கொண்டு
சரணாகதியினுடைய சகல துல்யங்களான அஞ்சலி பந்தாதி மாத்ரங்களை நேர்ந்தவனையும்
அழியக் கொடுக்கலாகாது என்கிறார்

பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம்
ந ஹன்யாத் ஆந்ரு ஸம்ஸ்யார்த்தம் அபி ஸத்ரும் பரந்தப —யுத்த -18-27-

பத்தாஞ்சலி புடம்
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ -என்கிறபடியே அத்யந்த ஸ்வ தந்த்ரனையும்
கடுக இரங்கப் பண்ணும் முத்திரை அன்றோ இது

தீநம்
அஞ்சலியும் வாங் பாத மாத்ரமும் நேராதே கார்ப்பண்யம் தோற்ற நிற்கும் நிலையே அமையும் –

யாசந்தம்
கை கூப்பிற்றிலனே யாகிலும் கார்ப்பண்யம் தோற்றில்லையே அஹ்ருதயமாக இரக்கவும் அமையும் யாகிலும்

சரணாகதம்
அஞ்சலி பந்தாதிகள் மூன்றும் இல்லையே யாகிலும் ரக்ஷகன் கிடைக்குமோ என்று இருந்த இடத்தில் வந்து புகுர அமையும்
முதல் ஸ்வ ரஷா பர நிக்ஷேப ரூபையான சரணாகதியின் சகல ஸ்த்தா நீயங்களைச் சொல்லிற்றாய்
இங்கு சரணாகதம் என்று பூர்ண சரணாகதியைச் சொல்லுகிறது ஆகவுமாம்

ந ஹன்யாத்
தான் அழியச் செய்தல் -ரக்ஷிக்க சக்தனான தன் உபேஷாதிகளால் அழியக் கொடுப்புதல் செய்யப் பெறான்

இந்த சாஸ்திரம் ஐஹிகாப் யுதயார்த்தமோ-
பர லோகார்த்தமோ –
ப்ரத்யவாய பரிஹாரார்த்தமோ -என்ன
அவை நிற்க முற்பட ப்ரயோஜனாந்தரம் சொல்லுகிறது

ஆந்ரு ஸம்ஸ்யார்த்தம்
ஆந்ரு ஸம்ஸ்யம் ஆகிற மஹா குணத்தை ரஷிக்கைக்கு ஆகவுமாம் –
ந்ருஸம்ஸன் -என்று நாட்டார் சீ சீ என்னாமைக்காக வுமாம்

அபி ஸத்ரும்
நேரே சத்ரு தான் வந்து சரணாகதன் ஆனாலும் அழிய விட ஒண்ணாத படியானால்
இதற்கு முன்பு ஒரு குற்றம் காணாது இருக்க
சத்ரு இருந்த ஊரில் நின்றும் வந்தான் என்கிற இவ்வளவைக் கொண்டு
சரணாகதனை அழியக் கொடுக்கலாமோ என்று தாத்பர்யம்

பரந்தப —
சரணாகதனோடேயோ நாம் சேவகம் காட்டுவது -நேரே பொருமவனோடே அன்றோ

ந ஹந்யாந் -என்று தான் கொல்லாது ஒழியும் அளவன்றோ என்ன -அங்கன் அன்று –
சரணாகதனை வேறு ஒருவர் நலியும் போது
ஆர்த்தான் திருப்தன் என்கிற சரணாகத அவஸ்தா பேதங்களைப் பாராதே
தன் ப்ராணன்களை அழிய மாறியும் அவனை ரக்ஷிக்க வேண்டும் என்கிறார் –

ஆர்த்தோவா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய-18-28-

ஆர்த்தோவா யதி வா திருப்த
இப்போதே அபிமத சித்தி உண்டாக வேணும் என்று விளம்ப ஷமன் இன்றிக்கே இருக்கவுமாம் –
விளம்பித்துப் பெறலாவதொரு பலத்தைக் கோலி- கோரி -என்றேனுமாக அபிமதம் சித்தம் அன்றோ
என்று தேறி இருக்கவுமாம்

இவனுக்கு அபிமதத்தைப் பற்ற அகிஞ்சனதையாலே ஆர்த்தி உண்டு –
அங்கன் அன்றிக்கே ப்ரச்ரய பயாதி யுக்தனாய் இருக்கவுமாம் –
இவை இன்றிக்கே இருக்கவுமாம் -என்று
ஆர்த்த திருப்த விபாகம் சொல்லுவார்கள்

பரேஷாம் சரணாகத
இதற்கு முன் முகம் அறியாதார் இருந்த இடத்தே வர அமையும்

அரி
அவன் சத்ருத்வம் அடியறாதே உள்ளே கிடக்கச் செய்தே மித்ர பாவனையைப் பண்ணி வந்தாலுமாம்
பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய
அஸ்த்ரங்களான ப்ராணன்களை விட்டு ஸ்திரமான சரணாகதி ரக்ஷண தர்மத்தைப் பற்ற வன்றோ பிராப்தம்

இவ்வர்த்தத்தை -ஆத்ம பிராணை பர ப்ராணான் யோ நர பரி ரஷதி
ச யாதி பரமம் ஸ்த்தானம் யஸ்மான் நா வர்த்ததே புந –இதிஹாச சமுச்சயம் -4-74-/75- என்றும்

பிராணைர் அபி த்வயா ராஜன் ரஷித க்ருபணே ஜன -என்றும்
ஸ்யேந கபோத உபாக்யானத்தில் சிபியைக் குறித்து இந்திரன் சொன்னான்

க்ருதாத்மநா
இப்படிச் செய்யாத போது இவன் கற்ற கல்வி எல்லாம் என் செய்வதாகக் கடவன்
விதுஷோ அதிக்ரமே தாண்ட பூயஸ்த்வம் –ஸ்ரீ கௌதம தர்ம ஸூத்த்ரம் -2-12-6-
என்னும்படியாம் அத்தனை இறே

தன்னை ரஷித்த வானரத்தைத் தள்ளின வேடனைப் போலே
ரஷிதனான சரணாகதன் பின்பு க்ருதக்நனாய்
பிரதிகூலனான போது தான் அவனுடைய சிஷாதிகளில் அதிக்ருதனாகில் அம்முகத்தாலே ரஷிக்கவும் –
அவற்றில் அதிக்ருதன் அல்லாத போது பின்பு அவன் அநு தப்தனாய் சரணாகதன் ஆனானாகில் க்ஷமிக்கவும் –
அங்கன் அல்லாத போது உபேக்ஷிக்கலான ப்ராதிகூல்யத்தை உபேக்ஷிக்கவும் –
தன்னுடைய வதாதி பர்யந்தமாக ப்ரவர்த்திக்குமாகில் சாஸ்த்ரா விரோதம் இல்லாத மர்யாதையாலே
யதா சக்தி விலக்கிக் கொள்ளவும் பிராப்தம்

மேல் இரண்டு ஸ்லோகத்தால்
சரணாகத பரித்யாகத்தில் வரும் த்ருஷ்ட அதிருஷ்ட
ப்ரத்யவாயங்களை அருளிச் செய்கிறார்

ச சேத் பயாத் வா மோஹாத் வா காமாத்வாபி ந ரக்ஷித
ஸ்வயா சக்த்யா யதா சத்யம் தத் பாபம் லோக கர்ஹிதம் -18-30–

பயாத் வா
சரணாகதனைக் கைக்கொண்டால் பிரபலமான விரோதிகள் நம்மை நலியில் செய்வது என்
என்னும் அச்சத்தால் யாதல் என்றபடி
சேந்த்ர தக்ஷக நியாயம் இங்கே கண்டு கொள்வது

மோஹாத் வா
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் ய பரித்யஜேத் -18-5-என்றால் போலே
சில யுக்த ஆபாசங்களால்
வந்த கலக்கத்தாலே யாதல் என்றபடி

காமாத் வா
சாஸ்த்ர அதி லங்கந ஹேதுவான ஸ்வச் சந்த ஸ்வ பாவத்தில் யாதல் என்றபடி –
அங்கன் இன்றிக்கே
ஹிம்ஸா ருசிகளான ராக்ஷஸரைத் போலே இவன் படுவது கண்டால் ஆகாதோ
என்கிற விபரீத ருசி யாலே யாதல் -எனினுமாம் –
அப்படியே சரணாகதனுடைய சத்ருவின் பக்கலிலே கைக்கூலியை ஆசைப்பட்டு என்னவுமாம்

அபி
பூர்வ அபகாரங்களை நினைத்து வரும் ஓவ்தா சீன்யம் முதலான
வேறு ஏதேனும் ஒரு ஹேதுவாலே யாகவுமாம்

ந ரஷித
கிணற்றின் கரையில் பிள்ளையை வங்காதாப் போலே
ரஷியாத மட்டும் கிடீர் நாம் சொல்லப் புகுகிற பாபம் –
இப்படியானால் தானே நலியும் அளவிலே என்ன விளையக் கடவது

ஸ்வயா சக்த்யா
தன் சக்தி வஞ்சநம் பண்ணாதே ரக்ஷிக்க வேண்டும் –
அங்கன் அன்றிக்கே கைக்கொள்ளவுமாம் -கை விடவுமாம் –
தனக்கு வல்லதொரு விரகால் என்று தாத்பர்யம் –
ரகு பிரப்ருதிகள் ப்ராஹ்மணாதிகளைத் தாங்கள் கைக் கொண்டு ரஷித்தார்கள்-
தேவர்களும் ரிஷிகளும் காகத்தைப் போக்கற்றது என்று ஸ்ரீ பெருமாள் கைக் கொள்ளுக்கைக்காகத்
தாங்கள் கை விட்டு ரஷித்தார்கள்

யதா சத்யம் –
லோகத்திற்குக் கண் காணிகளாகப் படைத்த ஆதித்யாதி பதினாலு சாஷிகளும் இவர்களுக்கு மேல்
கண் காணியாய் சர்வ சாஷியான சர்வேஸ்வரனும் கண்டு கொண்டு இருக்கத் தான் சக்தனாய் இருக்கச் செய்தே
சில சலங்களாலே தனக்கு சக்தி இல்லாமையைக் காட்டி –
ஸோசந்நிவ ருதந்நிவ -என்கிற கணக்கிலே கண் அழிக்கப் பெறான் –

தத் பாபம்
அந்த பாவத்தின் கொடுமையைக் கேளீர் –
இது நஹுஷ ப்ருஹஸ்பதி சம்வாதிகளிலே
அதி பிரசித்தமாய்க் காணும் இருப்பது –

இதன் கொடுமையை

சரணாகதாம் ந த்யஜேயம் இந்த்ராணீம் ச யசஸ்வினீம்
தர்மஞ்ஞாம் தர்ம சீலாம் ச ந த்யஜேயம் அநிந்திதாம்
நா கார்யம் கர்த்தும் இச்சாமி ப்ராஹ்மணஸ் சந் விசேஷத
ஸ்ருத தர்ம சத்ய சீலோ ஜாநந் தர்ம அநு சாசனம்
நாஹ மேதத் கரிஷ்யாமி கச்சத்வம் வை ஸூ ரோத்தம
அஸ்மிம்ஸ் சார்த்தே புரா கீதம் ப்ரஹ்மணா ஸ்ரூயதாமிதம்
ந சாஸ்ய பீஜம் ரோஹதி ரோஹ காலே
ந சாஸ்ய வர்ஷம் வர்ஷதி வர்ஷ காலே
பீதம் ப்ரபன்னம் பிரததாதி சத்ரவே
ந சோந்தரம் லபதே த்ராண மிச்சந்–உத்யோக பர்வம்
மோக மந்நம் விந்ததி சாப்ரசேதா ஸ்வர்க்க லோகாத்
பிரஸ்யதி பிரஷ்ட சேதா பீதம் ப்ரபன்னம் பிரததாதி சத்ரவே
சேந்த்ரா தேவா ப்ரஹரந்தஸ்ய வஜ்ரம் -12-/16-/20–என்று

இந்திர பதம் பெற்ற மதி கெட்ட
நஹுஷனாலே பிரேரிதரான தேவர்களைக் குறித்துத் தேவ ப்ரோஹிதன் சொன்னான்

அப்படியே –
ப்ராயச்சித்தேந ஸூத்த்யந்தி மஹா பாதகிநோபி யே
சரணாகத ஹந்த்ரூணாம் ஸூத்தி கவாபி ந சித்த்யதி
பூயதே ஹய மேதேந மஹா பாதகி நோபி ஹி
சரணாகத ஹந்தாரோ ந த்வேவ ரஜநீசரே –என்று

ரகு ராக்ஷஸ சம்வாதத்திலும் இவ்வர்த்தம் பிரசித்தம் –

இத்தை

லோபாத் த்வேஷாத் பயாத் வாபி யஸ் த்யஜேத் சரணாகதம்
ப்ரஹ்ம ஹத்யா சமம் தஸ்ய பாபம் ஆஹுர் மநீஷிண
சாஸ்த்ரேஷு நிஷ் க்ருதி த்ருஷ்டா மஹா பாதகி நாமபி
சரணாகத ஹந்துஸ்து ந த்ருஷ்டா நிஷ் க்ருதி க்வசித்
பிராணிநம் வத்யமாநம் து யஸ் சக்த சமுபேஷதே
ச யாதி நரகம் கோரம் இதி ப்ராஹூர் மநீஷிண–என்று

ஸ்யேந ரூபனான இந்த்ரனைக் குறித்து சிபி சக்ரவர்த்தி சொன்னான்

ப்ராணார்த்தி நமிமம் பீதம் த்விஜம் மாம் சரணாகதம்
த்யஜேயம் யதி கோ மத்த ஸ்யாந் நர பாப க்ருத் புவி
சக்தோபி ஹி ரக்ஷனே லோபாத் பயாத் வா சரணாகதம்
யஸ் த்யஜேத் புருஷோ லோகே ப்ரஹ்ம ஹத்யாம் ச விந்ததி -என்று

இதிஹாச உத்தமத்திலும் சொல்லப்பட்டது

யோ ஹி கஸ்சித் த்விஜம் ஹன்யாத் காம் ச லோகஸ்ய மாதரம்
சரணாகதம் ச யோ ஹன்யான் துல்யமேஷாம் ச பாதகம் –என்று

கபோதி தன்னைக் கட்டி இருக்கிற வேடனை
ரஷிக்கைக்காகத் தன் பர்த்தாவான கபோதத்தைக் குறித்துச் சொல்லிற்று

தத் பாபம்
சரணாகதம் பரித்யஜ்ய வேதம் விப்லாவ்யச த்விஜ
சம்வத்சரம் யவாஹார தத் பாபம் அவசேததி–என்று

மன்வாதிகள் சொல்லுகிறபடியே பிராயச்சித்தம் பண்ண அரிதாய்க் காணும் இருப்பது –

லோக கர்ஹிதம்-ததேவம் ஆகதஸ்ய அஸ்ய கபோதஸ்ய அபயரர்த்திந
கதம் அஸ்மத் வித ச தியாகம் குர்யாத் சத் அபி விகர்ஹிதம் –என்று

சிபி சொன்ன சிஷ்ட கர்ஹதை அளவே அன்று –
இது கேட்க்கிலும் பிராயச்சித்தம் பண்ண வேண்டுகையாலே நாட்டார் எல்லாரும் இவனை சீ சீ என்று
ஒரு காலும் கூட்டிக் கொள்ளார்கள்-ஆகையால் இறே

பால க்நாந் ச க்ருதக்நாந் ச விசுத்தாநாம் அபி தாமத
சரணாகத ஹந்த்ரூந்ச ஸ்த்ரீ ஹந்த்ரூந் ச ந சம வசேத் –என்றும்

சரணாகத பால ஸ்த்ரீ ஹிம்சகாந் சம்வஸேந் ந து
சீர்ண வ்ரதாநபி சத க்ருதக்ந சஹிதா நிமாந் –என்று
சரணாகத காதகனையும் –
பால காதகனையும் –
ஸ்த்ரீயையும் கொன்றவனையும் –
க்ருதக்நனையும் –
பிராயச்சித்தம் பண்ணித் தங்களுக்கு ஸூததனனாலும் ஒரு காலும் கூட்டிக் கொள்ளலாகாது என்று
மன்வாதி தர்ம சாஸ்திரங்களில் சொல்லுகிறது –

ஆன பின்பு நாம் சரணாகதனைக் கை விட்டால்
நம்மை நாடும் விச்வாமித்ராதிகளான குருக்களும் ஒரு காலும் கூட்டிக் கொள்ளார்கள் காணும் –

இப்படி த்ருஷ்ட ப்ரத்யவாயம் சொல்லிற்று –
அநந்தரம் அதிருஷ்ட ப்ரத்யவாயம் சொல்லுகிறது –

வி நஷ்ட பஸ்ய தஸ் தஸ்யா ரஷிணஸ் சரணாகதி
ஆதாய ஸூஹ்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித–யுத்த-18-30–என்று
ரக்ஷிக்க வல்லனாய் இருக்க ரஷியாமையாலே அவன் காணச் செய்தே நஷ்டனான சரணாகதனுக்கு
வேறு ஒரு கிருஷி பண்ண வேண்டா —
அவன் அநாதி காலம் பண்ணின ஸூஹ்ருத்ததை எல்லாம் ச வாசனமாக
வாங்கிக் கொண்டு -அவன் புகக் கடவ புண்ணிய லோகங்களை எல்லாம் தான் கைக்கொள்ளும் –

சரணாகத பரித்யாகி யானவன் பக்கல் பிராயச்சித்தம் பண்ணுகைக்கும்
கைம்முதலான ஸூஹ்ருத லேசமும் இல்லாமையால்
பாப பிரதத்தாலே முழுக்க நரகங்களிலே விழும் அத்தனை –

ஏவம் தோஷா மஹா நத்ர ப்ரபந்நா நாம ரக்ஷனே
அஸ் வர்க்யம் சாய சஸ்யம் ச பல வீர்ய விநாசனம் –யுத்த -18-31–

உத்தர அர்த்தத்தாலே த்ருஷ்டா அதிருஷ்ட ப்ரத்யவாயங்களை சமுச்சயித்துச் சொல்கிறது
சரணாகதனுக்கு சரீரம் ஒன்றுமே அழியும் அளவு உள்ளது –
அவனை அழியக் கொடுத்தவனுக்குப் பரலோகமும்
இங்குள்ள புகழும் பல வீர்யங்களும் மற்றும் சொல்லிச் சொல்லாத குண விபூதிகளும் எல்லாம் அழியும்படியாய் இருக்கும் –

சரணாகதனுக்கு ரக்ஷை பிறந்ததாகில் இங்கே நினைத்தது ஆம் –
ரக்ஷை பிறந்தது இல்லையாகில் விட்டவனுடைய ஸூஹ்ருத்தை
எல்லாம் கைக்கொண்டு தன் நினைவு இன்றிக்கே வந்த பர லோக ஸூகம் பெறலாம் –
ஒருபடியாலும் சரணாகதனுக்குக் கார்யம் தப்புவது இல்லை –

இப்படி சரணாகதனை ரஷியாது போது வரும் த்ருஷ்டா அதிருஷ்ட தோஷம் சொல்லிற்று

மேல் ஸ்லோகத்தாலே
சரணாகத ரக்ஷணத்தில் வரும் த்ருஷ்டா அதிருஷ்ட புருஷார்த்த சித்தியை அருளிச் செய்து கொண்டு
கண்டு மகரிஷி சொன்ன அர்த்தத்தில் தமக்கு அனுஷ்ட்டித்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பிறந்த ருசியை அருளிச் செய்கிறார் –

கரிஷ்யாமி யதார்த்தம் து கண்டோர் வசன முத்தமம்
தர்மிஷ்டம் ச யஸஸ்யம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பலோதயே –யுத்த -18-32–

கரிஷ்யாமி
நாம் சரணாகத ரக்ஷணம் பண்ணக் கடவோம் –
தர்ம ஸ்ருதோ வா திருஷ்டோ வா –இத்யாதிகளை அறிந்து
தர்மிஷ்டரான நீங்கள் இதற்கு விலக்காமை என்றோரு பந்து க்ருத்யம் செய்து தர வேண்டும் –

கரிஷ்யாமி
அனுஷ்டிகைக்கா வன்றோ நாம் இந்தக் காதை கற்றது

ந காதா கதிநம் சாஸ்தி –என்கிறபடியே
குலிங்க சகுனியைப் போலே வேறு ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றைச் செய்கைக்கு அன்றே

யதார்த்தம்
பாதகம் இல்லாமையாலும் ப்ரத்யக்ஷ ஸ்ருதி சம்வாதத்தாலும் பழுதற்ற பாசுரம்
த்ருஷ்டா அதிருஷ்ட விருத்தமான உங்கள் வார்த்தையில் காட்டில்
அவன் வார்த்தைக்குள்ள விசேஷம் இருந்தபடி கண்டீரே

து கண்டோர் வசனம்
தர்மஸ்ய தத்துவம் நிஹிதம் குஹாயம் –என்னும்படி இருந்தால்
மஹா ஜநோ யேந கதஸ் ச பந்த்தா –என்கிறபடியே
பெரியனான கண்டுவின் வழியைப் பின் செல்லுகை காணும் நமக்கு கார்யம்

உத்தமம்
உத்தம தர்ம விஷயம் -அங்கன் அன்றிக்கே
இப்பாசுரத்துக்கு மேல் உம்மாலே யாதல் –
முதலிகளாலே யாதல் –
நம்மாலே யாதல் –
ஒரு கண் அழிவு சொல்ல ஒண்ணாத படி எல்லாவற்றுக்கும் மேலான பாசுரம் காணும் இது –

இதற்கு
பீத அபய பிரதாநேந சர்வான் காமான் அவாப் நுயாத்
தீர்க்க மாயுஸ் ச லபதே ஸூகீ சைவ சதா பவேத் –என்றும் –

ஏகதஸ் க்ரதவஸ் சர்வே சமக்ர வர தக்ஷிணா
ஏகதோ பய பீதஸ்ய பிராணிந பிராண ரக்ஷணம் –என்று

சம்வர்த்தாதிகள் சொன்ன தாத் காலிக பலமும் –
விபாக காலத்தில் வரும் பலமும் கேளீர்

தர்மிஷ்டம் ச யஸஸ்யம் ச -என்று
தத்காலத்திலே சித்தித்து நிற்கும் பலம்

ஸ்வர்க்யம் ஸ்யாத் து பலோதயே –என்று
பிரதி பந்தகம் கழிந்தால் விபாக காலத்தில் வரும் பலம்

நாதோ பூயஸ் ததோ தர்ம கஸ்சித் அந்யோஸ்தி கேஸர
பிராணி நாம் பய பீதா நாம் அபயம் யத் பிரதீயதே –என்றும்
மஹாந் தர்மோ அக்ஷய பல சரணாகத பாலநே
தர்ம நிஸ்சய தத்தவஞ்ஞா ஏவமாஹுர் மநீஷிண –என்று
சிபி பிரப்ருதிகள் அறுதியிட்ட படியே சரணாகத ரக்ஷண தர்மமே
தர்மங்கள் எல்லாவற்றுக்கும் முடி சூடின தர்மம்

இது அறிந்து காருணிகருமாய் ரக்ஷண சமர்த்தருமாய் இருக்குமவர்கள் பக்கல் சரணாகதிக்குப் பல சித்தியில்
சம்சயம் இல்லை என்று திரு உள்ளம்

தீநோ த்ருப்யது வா அபராத்யது பரம் வ்யாவர்த்ததாம் வா தத
த்ராதவ்ய சரணாகதஸ் சகநத சத்பிஸ் ததா ஸ்தாப்யதே
விச்வாமித்ர கபோத வானர ரகு வ்யோமாத்வக ப்ரேயசீ
நாளீ ஜங்க ப்ருஹஸ்பதி பரப்ருதிபி நந் வேஷ கண்டா பத —

இந்த ஸ்லோகம் சங்கல்ப ஸூர்யோதத்திலும் அனுசந்திக்கப் படுகிறது –

பரம தர்ம நிர்ணயம் என்னும் ஏழாம் அதிகாரம் முற்றிற்று –

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ அபய பிரதான சாரம் – -ஸ்ரீ பிரபந்த அவதாரம் -முதல் அதிகாரம்-/பரதத்வ நிர்ணயம் என்னும் இரண்டாம் அதிகாரம்/சரணாகதி தாத்பர்ய பஞ்சகம் என்னும் மூன்றாம் அதிகாரம்–

September 20, 2019

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய
ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் –
இருபத்தொரு சரணாகதி வேதம்

இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம்
சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்
ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்

இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்

இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும்
இரண்டு வகையாய் இருக்கும் –

பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது

சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

வேதத் திரளில் விதி யுணர்ந்தோர்கள் விரித்து உரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
ஒதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே

இத்தால்
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி என்னும்
அர்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார் இவற்றால்

—–

முதல் அவதாரம் -பிரபந்தாவதாரம்

மங்களா சரணம் -ஸ்ரீ ராம சரம ஸ்லோக அர்த்த ஸங்க்ரஹம் –
ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம் -ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்

மங்களா சரணம்
ஜெயதி ஆஸ்ரித சந்த்ராச த்வாந்த வித்வம்சந உதய
பிரபாவாந் சீதயா தேவ்யாம் பரமா வ்யோம பாஸ்கர

பிராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந்
ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்து மாம் அவ்யத் அபயமுத்ரித

நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது நிஷ் கிஞ்சன ஜந
ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தான யஸசே
ஸூரா தீச ஸ்வை ரக்ஷண குபித சாபாயுதா வதூ
த்ருஷத்தா துர் ஜாத ப்ரசமந பதாம் போஜ ரஜஸே

வதூ த்ருஷத்தா-கௌதம மகரிஷி பார்யை -அகல்யை -கல்லாய் இருக்க
துர் ஜாத-கெட்ட ஜென்மத்தை
நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது- அந்த ஸ்ரீ ராமன் பொருட்டு நமஸ்காரம் இருக்கட்டும்

சோகம் தவிர்க்கும் ஸ்ருதிப் பொருள் ஓன்று சொல்லு கின்றேன்
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணாம்
ஆ கண்டலன் மகனாகிய ஆவலிப்பு ஏறியதோர்
காகம் பிழைத்திடக் கண் அழிவே செய்த காகுத்தனே

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும் உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பவன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

———

ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம்

பரித்ராணாய ஸாதூ நாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே –என்கிறபடியே
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஒரு த்ரேதா யுகத்தில் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்த காலத்தில்
ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரஹ்ம புத்திரனான ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே இவ்வவதார வ்ருத்தாந்தத்தை
சங்க்ஷேபேண ஸ்ரவணம் பண்ணி
மச்சந்தா தேவ தே ப்ரஹ்மன் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ—பால-2-32–என்கிறபடியே
ஸ்ரீ ஸரஸ்வதீ வல்லபனான ப்ரஹ்மாவினுடைய ப்ரஸாதத்தாலே ப்ரவ்ருத்தமான திவ்ய ஸாரஸ்வதத்தை யுடையனுமாய்

ரஹஸ்யம் ச பிரகாசம் ச யத்வ்ருத்தம் தஸ்ய தீமத
ராமஸ்ய ஸஹ ஸுவ்மித்ரே ராக்ஷஸா நாம் ச ஸர்வஸ
வைதேஹ்யாஸ் சாபி யத் வ்ருத்தம் பிரகாசம் யதி வா ரஹ
தச்சாப்ய விதிதம் சர்வம் விதிதம் தே பவிஷ்யதி
ந தே வாகந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று ப்ரஹ்மாவால் தத்த வரனுமாய்

ஹசிதம் பாஷிதம் சைவ கதிர் யா யச்ச சேஷ்டிதம்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம் ப்ரபஸ்யதி–பால-3-4-என்கிறபடியே
தர்ம வீர்ய பிரஸூ தமான திவ்ய சஷுஸ் சாலே -இவ்வவதார வ்ருத்தாந்தத்தை
பாணவ் ஆம லகம் யதா -பால-3-6-என்னும்படி நிரவசேஷமாக சாஷாத் கரித்து

தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீசரம்
விவேக சர ஜாலேந சமம் நயதி யோகிநாம் –என்கிறபடியே முமுஷுவுக்குப் பரம உபகாரகமான
இவ்வவதார ரஹஸ்யத்தை வெளியிட்டு லோகத்தை உஜ்ஜீவிப்பைக்காகத் தன் கருணையால் ப்ரவ்ருத்தனாய்

————-

ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்

இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபப்ரும்ஹயேத்
பிபேத் யல்பஸ்ருதாத் வேதோ மா மயம் பிரதர்ஷயிதி –என்கிற சாஸ்திரத்தை அநு சந்தித்துக் கொண்டு
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும் அவர்களைப் பற்ற
வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காவும்

புண்யம் வேதைஸ் ச சம்மிதம் –பால-1-97-என்கிறபடியே நாலு வேதங்களும் ஒரு தட்டிலும் தான் ஒரு தட்டிலுமாக நிற்கிற
ஸ்ரீ ராமாயணம் ஆகிற பிரபந்தத்தை அருளிச் செய்து

சிந்த யாமாச கோந் வேதத் ப்ரயுஞ்ஜீயாத் இதி பிரபு -பால-4-3-என்கிறபடியே யாரைக் கொண்டு
இந்த பிரபந்தத்தை ப்ரவர்த்திக்கக் கடவோம்-என்று சிந்தித்த சமயத்தில் குச லவர் வந்து பாதோப ஸங்க்ரஹணம் பண்ண

தவ் து மேதாவிநவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ் வேத உப ப்ரும்ஹணார்த்தாய தவ் அக்ராஹயத பிரபு -என்கிறபடியே
உசித அதிகாரி முகத்தால் உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை ப்ரவர்த்திப்பித்தான் –

ஸ்ரீ பிரபந்த அவதாரம் -முதல் அதிகாரம் முற்றிற்று –

————–

இரண்டாம் அதிகாரம் -பர தத்வ நிர்ணயம் –

பர தத்வ நிர்த்தாரணம்
இப்படி இப் பிரபந்தத்தில் பண்ணுகிற பஹு விதங்களான வேத உப ப்ரும்ஹணங்களிலே பிரதானமான
உப ப்ரும்ஹணம் ஸ்வேதாஸ் வராதிகளில் சொல்லுகிற
சர்வ சரண்ய பர தத்வ விஷயமாயும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும்
இரண்டு வகையாய் இருக்கும்

அதில் சர்வ சரண்யமான பரதத்வத்தை நிஷ் கர்ஷிக்கும் இடத்தில் –
சர்வேஸ்வரனைப் பற்ற –
சமர் -என்றும்
ஏகர் -என்றும் –
அதிகர் -என்றும் சங்கித்தராய் இருப்பர் இருவர் உண்டு –

அவர்கள் யார் என்னில்
சர்வேஸ்வரனுடைய மகனும்
பேரனும் –

அவர்களில் பேரனான ருத்ரனின் காட்டில்
சர்வேஸ்வரன் அதிகன் என்னும் இடத்தை
ஸ்ரீ பரசுராம வாக்யத்தால் வெளியிட்டான் –

ராவண வத அனந்தரம் தேவர்கள் பெருமாளை ஸ்தோத்ரம் பண்ணுகிற போது
ப்ரஹ்மாதி சர்வ தேவர்களுடைய
கர்த்தா ஸர்வஸ்ய லோகஸ்ய ஸ்ரேஷ்ட்டோ ஞான வதாம் விபு
உபேஷஸே கதம் ஸீதாம் பதந்தீம் ஹவ்ய வாஹநே
கதம் தேவ கண ஸ்ரேஷ்ட்ட நாத்மாநம் அவ புத்த்யஸே
உபேஷஸே வா வைதேஹீம் மானுஷ பிராக்ருதோ யதா –யுத்த -120-6-/7- என்கிற வாக்யத்தாலே
பெருமாளுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை ஸ்தாபித்தான்

அநந்தரம் -தேவர்கள் தவிர -ப்ரஹ்மா தனித்து ஸ்தோத்ரம் பண்ணுகிற இடத்திலும்
எதிரி கையாலே விடுதீட்டான கணக்கிலே
அக்ஷரம் ப்ரஹ்ம சத்யம் த்வம் –யுத்த -120-14-என்று
சர்வ விலக்ஷணமான பர ப்ரஹ்மம் பெருமாள் என்னும் இடமும்

த்வம் த்ரயாணம் ஹி லோகா நாம் ஆதி கர்த்தா ஸ்வயம் பிரபு -120-19–என்று
ப்ரஹ்ம லக்ஷணமான ஜகத் காரணத்வத்தையும்

ஜகத் சரீரம் சர்வம் தே -120-25–என்று சர்வ சரீரத்வத்தையும்

அஹம் தே ஹ்ருதயம் ராம ஜிஹ்வா தேவீ ஸரஸ்வதீ-இத்யாதிகளாலே ஸ்ரவ்த பிரயோகத்தில் புத்ர பரமான
ஹ்ருதய சபதத்தாலே ப்ரஹ்மாவினுடைய கார்யத்வத்தையும்
மற்றும் உள்ள தேவதைகள் எல்லாம் விபூதி ஏக தேசமான படியையும்

சரண்யம் சரணம் ச த்வா மாஹு திவ்ய மஹர்ஷயா-120-18-என்று
சர்வ சரண்யத்வத்தையும் பேசினான் –

யாவன் ஒருவன் ப்ரஹ்மாவை முற்பட ஸ்ருஷ்டிக்கிறான்-என்று
ஸ்வேதாஸ்வர உபநிஷத்தில் அதீதமான அர்த்தத்தை
உத்தர ஸ்ரீ ராமாயணத்தில் ப்ரஹ்மா தன்னுடைய வாக்காலே பேசினான் –
எங்கனே என்னில்

சமயஸ்தே மஹா பாஹோ ஸ்வான் லோகான் பரி ரஷிதும்
சம் ஷிப்ய ச புரான் லோகான் மாயயா ஸ்வயமேவ ஹி
மஹார்ணவே சயாநோ அப்ஸூமாம் த்வம் பூர்வம் அஜீஜன –உத்தர -104-3 /-4 –என்று தொடங்கி

பத்மே திவ்யே அர்க்க சங்காஸே நாப்யாம் உத்பாத்ய மாம் அபி
பிரஜா பத்யம் த்வயா கர்ம சர்வம் மயி நிவேசிதம்
ஸோஹம் சந்யஸ்தபாரோ ஹி த்வாம் உபாஸே ஜகத் பதிம்
ரஷாம் விதத்ஸ்வ பூதேஷு மம தேஜஸ் கரோ பவாந்
ததஸ் த்வம் அபி துர்த் தர்ஷஸ் தஸ்மாத் பாவாத் சனாத நாத்
ரஷார்த்தம் சர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜக்மிவாந்
அதித்யாம் வீர்யவாந் புத்ரோ ப்ராத்ரூணாம் ஹர்ஷ வர்த்தந
சமுத் பன்னேஷு க்ருத்யேஷு லோகஸ் யார்த்தாய கல்பஸே
சத்வம் வித்ராஸ்ய மாநாஸூ பிரஜாஸூ ஜகதோதுநா
ராவணஸ்ய சதா காங்ஷீ மானுஷேஷு மநோ அதாதா –உத்தர -104-7 /-11- என்று

சர்வேஸ்வரன் பரம காரணமான படியையும் –
தான் அவனுக்குகே காரண பூதனுமாய்ப்
பரதந்த்ரனுமாய்த்
தத் அதீன பல லாபனுமாய் இருந்த படியையும்
தங்கள் நடுவும் -ராஜ வம்சத்தில் நடுவும் -சர்வேஸ்வரன் மத்ஸ்யாதிகளுடைய மதியத்தில் போலே
ஸ்வ இச்சையால் அவதரிக்கிறார் என்னும் இடத்தையும் ப்ரஹ்மா விண்ணப்பம் செய்தான் –

தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிற போதும்

ஆ கச்ச விஷ்ணோ பத்ரம் தே திஷ்ட்யா ப்ராப்தோஸி மாநத
ப்ராத்ருபி ஸஹ தேவாபை ப்ரவிசஸ்ய ஸ்வ காம் தனும்
வைஷ்ணவீம் தாம் மஹா தேஜ தச்சாகாசம் ஸநாதனம்
த்வம் ஹி லோகபதிர் தேவ ந த்வாம் கேசந ஜாநதே
ருதே மாயாம் விசாலாஷீம் தவ பூர்வ பரிக்ரஹாம்
யாமிச்சசி மஹா தேஜஸ் தாம் தநும் ப்ரவிஸஸ் வயம் –உத்தர -110 –7-/10-என்று விண்ணப்பம் செய்தான் –

இப்படிகளால் ப்ரஹ்மாதிகளுக்கும் கூட
சரண்யமாய்
பரம காரணமான பர தத்வத்தை ப்ரதிபாதிக்கிற
வேத பாகங்களுக்கு உப ப்ரும்ஹணம் பண்ணினான் –

பர தத்வ நிர்ணயம் என்னும் இரண்டாம் அதிகாரம் முற்றிற்று –

—————–

சரணாகதி தாத்பர்ய ப்ரபஞ்சம்–என்னும் மூன்றாம் அதிகாரம்

தேவதைகள் சரணாகதி —
ஸ்ரீ இளைய பெருமாள் சரணாகதி —
ஸ்ரீ பரதாழ்வான் சரணாகதி –
மகரிஷிகள் சரணாகதி –
காகாஸூரன் சரணாகதி –

காகாஸூராதி ரக்ஷணத்தில் தண்டமும் ஆஸ்ரித ஹிதார்த்தமும் –

ஸ்ரீ ஸூக்ரீவ ஸ்ரீ லஷ்மண சம்வாத தாத்பர்யம் –

ஸ்ரீ பெருமாள் சரணாகதியின் நிஷ் பலத்வ காரணம் –
சாஷாத் சத்ருவையும் காக்கும் சர்வ சக்தித்வாதிகள் –

லோக ஹிதத்தில் திவ்ய தம்பதிகளின் சாமான அபிப்ராயத்வம் –

பிராட்டியின் ராவண அநு சாசனத்தின் ச பலத்வம் –
த்ரிஜடா சரணாகதி -நாராயண தர்மம் –

வாலி வத சமர்த்தனம் -விஷய வாசமும் ரக்ஷண காரணமாகும் படி –

ஸ்ரீ ராமாயணத்தின் சரணாகதி வேதத்வ பிரகாரம் –

இப்படி சர்வ சரண்யமான பரதத்துவத்தினுடைய வசீகரண சமர்த்தமாய் –
சர்வாதிகாரமாய் –
பரம ஹிதமாய் இருக்கிற
சரணாகதி தர்மத்துக்கு விதாயகங்களான வேத பாகங்களை இப்பிரபந்தத்தில்
உபக்ரமாதிகளாலே உப ப்ரும்ஹித்தான்-
எங்கனே என்னில்

————–

தேவதைகள் சரணாகதி
அவதார ஆரம்பத்திலே முற்பட சக்கரவர்த்தியினுடைய யஜ்ஜத்திலே ஹவிர்ப்பாக கிரஹண அர்த்தமாகத் திரண்ட
தேவர்கள் ரஷக ஆகாங்ஷிகளாய்
ஆவார் ஆர் துணை -என்று நிற்கிற அளவிலே

ஏதஸ்மிந் அந்தரே விஷ்ணு உப யாதோ மஹாத்யுதி
சங்க சக்ர கதா பாணி பீத வாசா ஜகத் பதி–பால -15-16–என்கிறபடியே

சர்வ சேஷியான சர்வேஸ்வரன்
அவகாசம் பார்த்து ரக்ஷண சான்னாகத்தால் உண்டான புகர் தோன்றும்படி
ரக்ஷண உபகரணங்களோடே கூடக்
கட்டி உடுத்து வந்து தோன்ற –

சித்த கந்தர்வ யஷாஸ் ச தத த்வாம் சரணம் கத —பால-15-24–என்று தேவ ஜாதியில் உள்ளார் எல்லாரும்
இருந்ததே குடியாக சரணாகதரான படி சொன்னான்

திரிசங்கு ஸூநஸ்ஸேபாதி விருத்தாந்தங்களிலும்
விச்வாமித்ராதி வியாபார விசேஷங்களைச் சொல்லி
சரணாகதி ரக்ஷணம் பரம தர்மம் என்றும்
சமர்த்த காருணிக விஷய சரணாகதி பலவிநாபூதை என்றும் காட்டினான்

——————-

ஸ்ரீ இளைய பெருமாள் -சரணாகதி

ஸ்ரீ இளைய பெருமாள் —
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய ராகு நந்தன
ஸீதாம் உவாசாதியசா ராகவம் ச மஹா விரதம் –அயோத்யா -31-2-என்று
உபாய பரிக்ரஹத்தைப் பண்ணி

இதற்குப் பலமாக
குருஷ்வ மாம் அநு சாரம் வை தர்ம்யம் நேஹ வித்யதே
க்ருதார்த்தோ அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே
பாவம்ஸ்து ஸஹ வேதேஹ்யா கிரிசானுஷு ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஸ்ச தே –அயோத்யா -31-24-/26-என்று

ஸ்ரீ பெருமாளும் பிராட்டியும்
சேர்ந்த சேர்த்தியிலே தாம் அடிமை செய்ய அபேக்ஷித்தார் என்று சொல்லுகையாலே
உபாய உபேய பர வாக்ய த்வய ரூபமான சரணாகதி
மந்த்ர விசேஷத்தை உப ப்ரும்ஹித்தான்

—————-

ஸ்ரீ பரதாழ்வான் சரணாகதி
முற்பாடரான தேவர்கள் பண்ணின பிரபத்திக்காக
ராவண வதத்துக்கு எழுந்து அருளுகையும்
பிற்பாடரான ஸ்ரீ பரதாழ்வான் பண்ணின பிரபத்திக்காக மீண்டு
திரு அபிஷேகம் பண்ணி ராஜ்ஜியம் பண்ணுகையும்
விருத்தமான படியால்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு பிரபத்தி பண்ணின போதே பரமபதம் சடக்கென தலைக் கட்டிற்றிலையே யாகிலும்

அவருக்கு கைகேயீ வரத்தால் பிரசக்தமான அவத்யம் தீர்க்கும்படி
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ -என்கிறபடியே
அப்போது சாஷாத் பலமான திருவடிகளுக்கு பிரதிநிதியான ஸ்ரீ சடகோபனாலே
ச பலத்தவம் சொல்லி பின்பு
பூர்வ பரதிஜ்ஞ்ஞாதமான தேவ கார்யம் தலைக் கட்டினவாறே
ஸ்ரீ புஷ்பக விமானத்தாலே
சாஷாத் பலமான திருவடிகள் ஸ்வயம் ஆகதங்களாய் அயத்ன லப்தங்களான படி சொன்னான் –

அப்படியே
புற் பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால அயோத்தியில் வாழ் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே -என்றும்

த்வாம் ஆம நந்தி கவய கருணாம்ருதாப்தே
ஞான க்ரியா பஜன லப்யம் அலப்ய மந்யை
ஏதேஷு கேந வரத உத்தர கோசலஸ்த்தா
பூர்வம் ச நூர்வம பஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -69-என்றும் பேசுகிறபடியே

ஜங்கம ஸ்தாவர விபாகமற
உபாய அதிகார பிரசங்க ரஹிதமான ஜந்துக்களை எல்லாம்
ஸ்ரீ பரதாழ்வான் பண்ணின பிரபத்தியினாலேயே
அவருடைய விஷய வாச மாத்ரமே பற்றாசாக
பல ப்ரதானம் பண்ணி அருளி

————

மஹரிஷிகள் சரணாகதி
பின்பு ரஷிக்கும் பிரகாரத்துக்குப் புறம் செயலான

தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாசிந
நகரஸ்த்தோ வநஸ்த்தோ வா த்வம் நோ ராஜா ஜனேஸ்வர–ஆரண்ய -1-20–என்கிற

ரிஷிகள் வாக்கியத்தின் படியே
அவர்களுக்கு விரோதிகளான ராக்ஷஸரை நிராகரித்து
ரிஷிகளை ரஷித்த படி சொல்லுகையாலே

ரஷக அபேக்ஷை பண்ணும் போது வேறு ஒரு உபாயம் -உபகாரம் -பண்ண வேண்டா
அபிமான கோசாரமான விஷயத்திலே துவக்காலே
அநந்ய சரண்யதையை வெளியிட்டுக் கிடைக்க அமையும் -என்கிற
ஸ்ரீ திருக்கண்ண மங்கை ஆண்டான் படியே
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலும் -என்னும்
அர்த்தத்தை வெளியிட்டு அருளினான் –

——————

காகாஸூர சரணாகதி
ஆர்த்ராபராதனாய் உதிரக்கையனான காகம் ப்ரஹ்மாஸ்த்ர அபி மந்த்ரிதமான துரும்பாலே துரப்புண்டு
ப்ரஹ்மா முதலான ஓன்று ஏறி ஓன்று உயர்த்தார் வாசல்கள் எல்லாம் நுழைந்து –
என்னைக் காத்துக் கொள்ள வல்லார் உண்டோ -என்று கதறின இடத்தில்
இக்காக்கைக்கு ஒருவரும் இல்லையாயிற்று –
அவ்வளவில்

ச பித்ரா ச பரித்யக்த ஸூரைஸ் ச சமஹர்ஷிபி -என்கிறபடியே
பிரிய ஹித காரிகளான தாயும் தகப்பனும்
அவர்கள் நாட்டில் குடி இருக்கிற தேவ ஜாதிகளும்
சரணாகத ரக்ஷண தர்மத்துக்கு உபதேஷ்டாக்களான மகரிஷிகளும்
தங்கள் ஏறிட்டுக் கொண்டால்

ப்ரஹ்மா ஸ்வயம்பூ வா சதுரா நநோ வா
ருத்ரஸ் த்ரி நேத்ரஸ் த்ரி புரந்தகோ வா
இந்த்ரோ மஹேந்திர ஸூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் –ஸூந்தர –51-44-என்கிறபடியே

இக்காகத்துக்கு ரக்ஷை பிறவாது என்று இதனுடைய ஹிதத்தை நிரூபித்து ஸ்ரீ பெருமாள்
கைக்கொள்ளுக்கைக்கு ஈடாக இக்காகம்
எங்கும் போய்க் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை -என்கிறபடியே
அநந்ய கதியாய் விழ வேண்டும் என்று பார்த்து எல்லாரும் துரத்திக் கதவை அடைத்தார்கள்

அப்போது வேறு ஒரு திக்கை நோக்கினால்
ப்ரஹ்மாஸ்திரம் தொடருகிற படியையும்
ஸ்ரீ பெருமாள் எழுந்து அருளின திக்கை நோக்கின போது
கொல்ல நினைவு இன்றிக்கே செருக்கடக்க நினைத்து இருக்கிற
சர்வ லோக சரண்யன் திரு உள்ளத்தை அறிந்த ப்ரஹ்மாஸ்திரம் கால் தாழ்கிற படியையும்
கண்ட காகம்

தப்பிப் போக நினைவு உண்டாய் இருக்கச் செய்தேயும்
த்ரீந் லோகாந் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்கிறபடியே
போக்கற்று வந்து விழுந்தது

இப்படி விழுந்த இடத்தில்
ச தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம்
வதார்ஹம் அபி காகுத்ஸத க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடியே

வதார்ஹன் போக்கற்றுத் தாம் இருந்த இடத்திலே
விழுந்த மாத்திரமே சரணாகதியாகக் கொண்டு
ஸ்ரீ பெருமாள் பிராணார்த்தியான இவனுக்கு பிராண பிரதானம் பண்ணி
ரஷித்தார் என்கையாலே

எத்தனையேனும் தீரக் கழிய அபராதம் பண்ணினாரையும் போக்கற்று விழுந்தால்
ஸ்ரீமச் சப்தத்திலும்
நாராயண சப்தத்திலும் சொல்லுகிறபடியே
நித்ய அநபாயினியான ஸ்ரீ பிராட்டி சந்நிதி உண்டாகையாலும் –
பரம காருணிகத்வாதி குணங்களாலும் –
ஸ்ரீ பெருமாள் ஏறிட்டுக் கொண்டு ரஷிப்பார் என்னும் பரம ரஹஸ்யத்தை வெளிட்டான் –

பிராணார்த்தியான இக் காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணுகையாலே
பிரபத்தி பலம் சித்தம் –

துஷ் பிரக்ருதியான இக் காகத்துக்கு சிஷையாக
ஒரு கண் அழிவால் அஸ்திரத்தை விலக்கினார் –

—————–

காகாஸூராதி ரக்ஷணத்தில் தண்டமும் ஆஸ்ரித ஹிதார்த்தமும் –

ஸ்ரீ பரசுராமன் அளவில் தொடுத்த அம்பை –
அவன் தெளிந்து த்வந்த்வ யுத்த அபேக்ஷை தவிர்ந்த அளவிலே
அவனுக்கு மநீஷித விருத்தங்களான ஸூஹ்ருதங்களிலே ஏவினார் –

சமுத்ரத்தைக் கொடுத்து தொடுத்த அம்பை
சமுத்திர அபிமான புருஷன் ச அனுதாபனாய் சரணாகதன் ஆகையால்
தவிஷுத்துக்கள் பக்கலிலே ஆஸ்ரிதருடைய பாப க்ருத்யத்தை ஏறிடும் கணக்கில்
சமுத்திர விரோதிகளான பாபிஷ்டர் பக்கலிலே ஏவினார்

காகத்தைப் பற்ற அஸ்திரத்தை பிரயோகித்த அளவிலே
போக்கறுதி ஒழிய உள்ளரு பசை இல்லாத காகம்
சரணாகதமான போது இக்காகத்துக்கு அபராதம் பண்ணுகையிலே
அபிசந்தி விராமம் இல்லாதபடியால் –
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா -என்கிறபடியே
இனி ஓர் அபராதத்தோடே மற்றைக் கண்ணும் போம் -என்று அஞ்சி
துர் அபி சந்தியை விட்டுத் திரிகைக்காக ஒரு கண்ணை அஸ்திரத்துக்கு இலக்கு ஆக்கினார்

ஆகையால் இம்மூன்று விருத்தாந்தங்களிலும்
அஸ்திரத்துக்கு லஷ்யம் கொடுத்தபடி எல்லாம் ஆஸ்ரித ஹிதமாக என்று நிர்ணீதம்

——–

ஸ்ரீ ஸூக்ரீவ ஸ்ரீ லஷ்மண சம்வாத தாத்பர்யம் –

கார்யத்தில் அபி சந்தி உண்டாய் இருக்க
போக பிரசங்கத்தாலே அந்ய பரராய்க் கடுக ஸ்ரீ பெருமாள் எழுந்து அருளி இருந்த
இடத்தில் வாராத அளவிலே
ஸமயாதி லங்கனம் பண்ணினாராகப் பழி சுமந்த மஹா ராஜர் விஷயத்திலே
ஸ்ரீ இளைய பெருமாளுடைய சீற்றத்தைக் கண்ட சந் மந்திரியான ஸ்ரீ திருவடி

க்ருத அபராதஸ்ய ஹி தே நாந்யத் பஸ்யாம் யஹம் ஷமம்
அந்தரேண அஞ்சலிம் பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாதநாத் -என்று

அவ்வசரத்திலே அபராதம் பற்றாசாக
சரணாகதராய் ப்ரசாதிக்கப் பிராப்தம் என்று ஸ்ரீ மஹா ராஜருக்கு தர்ம உபதேசம் சொல்லும் கிரமத்திலே
ஹிதம் சொல்ல ஸ்ரீ மஹாராஜரும் தெளிந்து –

யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாசாத் பிரணயேந வா
ப்ரேஷ் யஸ்ய ஷமிதவ்யம் மே ந கஸ்சின் ந பராத்யதி –கிஷ்கிந்தா -36-11-என்று

க்ஷமை கொண்ட பிரகாரத்தைச் சொல்லுகையாலே
ஸ்ரீ பகவத் விஷயத்தில் சாபராதர் ஆனாலும்
பாகவதரை க்ஷமை கொள்ள
அம்முகத்தாலே ஸ்ரீ பெருமாள் க்ஷமித்து அருளுகையாலே
இவனும் நிராபராதனாய்க் கைங்கர்ய யோக்யனாம் என்னும் இடத்தை வெளியிட்டு அருளினான்

யச்ச சோகாபி பூதஸ்ய ஸ்ருத்வா ராமஸ்ய பாஷிதம் –
மயா த்வம் புருஷாண்யுக்த தச்ச தவம் ஷந்தும் அர்ஹஸி –கிஷ்கிந்தா -36-27-என்று

ஸ்ரீ இளைய பெருமாள்
தம்முடைய பாருஷ்ய வாக்யங்களுக்கு அடி சோக பரவசரான
ஸ்ரீ பெருமாளுடைய சீற்றத்து அளவில் பிறந்த பாசுரங்கள்
என்று தம்முடைய அபராதத்தை சோபாதிகமாக்கி

ந ச சங்குசித பந்த்தா யேந வாலீ ஹதோ கத –என்றால் போலே
மேல் எழுச்சியான ஸ்ரீ பெருமாளுடைய
பாசுரங்களுக்குக் காரணம் –
காமன் செய்தான் -மன்யு செய்தான் -என்கிற கணக்கிலே சோகமே யாயிற்று –

ஸமயே திஷ்ட்ட ஸூக்ரீவ -என்கையாலே
ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த பாசுரங்களுக்கு -இப்படித் தாத்பர்யம் என்று காட்டி
அப்படியே சோபாதிகமான தங்கள் அபராதங்களுக்கு
ஸ்ரீ மஹா ராஜரை க்ஷமை கொண்டார் என்கையாலே

சாபராதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் புரிந்து அனுதாபத்தாலே க்ருத ப்ராயச்சித்தரானால்
இவர்கள் விஷயத்தில்
அபராத தசையில் பண்ணின அநாத ராதிகளுக்குத் தாங்கள் எதிரே க்ஷமை கொள்ள வேண்டும்
என்னும் சாஸ்த்ரார்த்தைக் காட்டினான் –

———–

ஸ்ரீ பெருமாள் சரணாகதியின் நிஷ் பலத்வ காரணம்

இப்படி ஸ்ரீ விபீஷண வ்ருத்தாந்தத்துக்கு முன்பு சரணாகதி தர்மத்தில்
இப்பிரபந்தம் நின்ற நிலை சொன்னோம்

ஸ்ரீ விபீஷண வ்ருத்தாந்தத்துக்கு பின்பு –
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி–யுத்த -19-31-என்று
தனக்கு சரணாகதி பலிக்கக் கண்ட பரம தார்மிகனுடைய வாக்யத்தாலே
அசக்தனுக்கு அபிமத சித்திக்கு சக்தனாய் ஆஸ்ரயிக்க பிராப்தம் என்னும்
இடம் சொன்னான் –

அவ்விடத்தில்
சாபமாநய ஸுவ் மித்ரே சராம்ஸ் சாஸீ விஷோபமாந்
சாகரம் சோக்ஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா -என்று
அருளிச் செய்யக் கடவ

ஸ்ரீ பெருமாள் கையம்பு மாண்டவர் இல்லாமையாலும் –
சரணமாக வரிக்கப்பட்ட ஜலாசயம்
அல்ப மதியுமாய்
அல்ப சக்தியுமாகையாலும்
சரணாகதி பலியாது ஒழியும் அத்தனை

——————

சாஷாத் சத்ருவையும் காக்கும் சர்வ சக்தித்வாதிகள்

ராவணன் தன்னைக் குறித்து ரிபூணாம் அபி வத்சலரான ஸ்ரீ பெருமாள்

அராஜ சமிமம் லோகம் கர்த்தாஸ்மி நிஸிதை சரை
நஸேச் சரணம் அப்யேஷி மாம் உபாதாய மைதலீம்–யுத்த –41-66- என்று

அருளிச் செய்த பாசுரத்தாலே
ஸ்ரீ பெருமாளுடைய சரண்யதைக்கு உறுப்பான
சர்வ சக்தித்வத்தையும்
பரம காருணிகத்வத்தையும்
ஹித ப்ரவர்த்தகத்தையும் பிரகாசிப்பித்தான்

————————–

லோக ஹிதத்தில் திவ்ய தம்பதிகளின் சமாந அபிப்ராயத்வம்

இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ-பால -73-26-என்கிறபடியே

சரணாகத ரக்ஷண தர்மத்திலும் ஸஹ தர்ம சாரிணியான ஸ்ரீ பிராட்டியும்

மித்ர மவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்த்தாநம் பரீப்சதா
வதம் சா நிச்சதா கோரம் த்வய அசவ் புருஷர்ஷப
விதித சாஹி தர்மஞ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதம் இச்சசி
பிரசாத யஸ்வ த்வம் ஸைநம் சரணாகத வத்சலம்
மாம் சாஸ்மை ப்ரயதோ பூத்வா நிர்யாத யிதும் அர்ஹஸி -ஸூந்தர -21-20-/22-என்று

ராவணன் பிரதிகூலனாய் இருக்கச் செய்தேயும்
மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்ய அதி சயத்தாலே
அஸ்து தே என்னும் பிரகாரத்தாலே -அருளிச் செய்த
வாக்யத்தாலே இத்தம்பதிகள் லோக ஹிதத்திலே
சமாந அபிப்பிராயர் என்னும் இடத்தைக் காட்டினான் –

—————

ஸ்ரீ பிராட்டியின் ராவண அநு சாசனத்தின் ச பலத்வம்

இப்படி –
தேந மைத்ரீ பவதுதே -என்றதுவும்
ராவணனுக்கு ஸிஸூ பாலனான ஜன்மாந்தரத்திலே
அந்திம ஷணத்திலுமே யாகிலும் கார்யகரம் ஆயிற்று –

——————–

த்ரிஜடையின் சரணாகதி

சரண்ய ஸஹ தர்ம சாரிணியான ஸ்ரீ பிராட்டி விஷயத்திலே தர்ஜன பர்சனாதி
ப்ரவ்ருத்தைகளான ராக்ஷஸிகளைக் குறித்து

ததலம் க்ரூர வாக்யை வ சாந்த்வமேவாபி தீயதாம்
அபியா சாம வைதேஹீம் ஏதத்தி மம ரோஸதே
பர்த்ஸிதா மபி யா சத்வம் ராக்ஷஸ்ய கிம் விவஷயா
ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாம் உபஸ்திதம்
பிரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்–என்று

த்ரிஜடையும் ஸ்வ மதம் சொன்ன படியைப் பேசினான்

ஸ்ரீ பிராட்டியும் அவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க
சத்துவ ப்ரக்ருதியான த்ரிஜடையோடு அவர்களுக்கு உண்டான
துவக்கத்தாலே வாத்சல்ய பரவசையாய் அருளிச் செய்த வார்த்தையை
ஸ்ரீ வானர வீரர்களுக்கு அநு பாஷித்துக் காட்டுகிற ஸ்ரீ திருவடி

அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம் -என்று
த்ரிஜடை வாக்கியத்தை முடித்து

ததஸ் சா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா
அவோ சத்யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வ –என்று
ஸ்ரீ பிராட்டி அருளிச் செய்த
ரஷா பர ஸ்வீ கார வாக்யத்தை அநு வதித்துக் காட்டினான்

பின்பு சாபரதைகளான ராக்ஷஸிகளைப் பற்ற ஸ்ரீ ராம தூதன் சீறின விடத்து

பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருண மார்யேண ந கச்சின் நா பராத்யதி –இத்யாதிகளாலே

அவன் சீற்றத்தை ஆற்றி
ஸ்ரீ பிராட்டி ராக்ஷஸிகளைத் தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்த படி சொன்னான் —

இவ்விருத்தாந்தத்தை அனுசந்தித்த ஸ்ரீ பட்டர்
ஸ்ரீ ராம கோஷ்டிக்கும் ஆகாத நமக்கு ஸ்ரீ பிராட்டியுடைய
க்ஷமை ஒழியத் தஞ்சம் இல்லை என்னும் இடத்தை –

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத் மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டீ க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணம் இத்யுக்தி ஷமவ் ரஷத
சாந ஸாந்த்ர மஹா காஸ் ஸூக யது ஷாந்திஸ் தவா கஸ்மிகீ –ஸ்ரீ குணரத்னகோசம் -50–
என்று அருளிச் செய்தார் –

இப்படி ஆறு காண்டங்களிலும்
சரணாகதி தர்மமே அஞ்சுரு வாரியாகக் கோக்கப் பட்டது –

————

ஸ்ரீ நாராயண தர்மம் —

உத்தர ஸ்ரீ ராமாயணத்திலும் ராவணன் பாட்டன்மார் காலத்தில்
ஸ்ரீ விஷ்ணு அவதாரஸ்த்தனான சர்வேஸ்வரன்
சரணாகதரான தேவர்களை ரக்ஷிப்பதற்காகத் திரு உள்ளம் பற்றி –
ராஷசஸரோடு பொருத அளவிலே –

பூசலில் கெட்டு பராங்முகராய் லங்கையைக் குறித்து
பலாயனம் பண்ணுகிற ராக்ஷஸரைத் பின் தொடர்ந்து
சார்ங்கம் உதைத்த சர மழைகளாலே கொன்று சூறையாடக் கண்ட
மால்யவான் புரிந்து –

நாராயண ந ஜாநீஷே ஷாத்த்ரம் தர்மம் ஸநாதனம்
அயுத்த மநஸோ பக்நாந் அஸ்மாந் ஹம்ஸி யதேதர–உத்தர -8-3- என்று

ஓடிப்போகிற எங்களைக் கொல்லுகை ஷத்ரிய தர்ம விருத்தம் அன்றோ –
தர்மம் அறியாதார் செய்யுமத்தை
தர்மஞ்ஞனான நீ செய்யா நிற்கிறது என் -என்று ஆற்றாமையால் முறையிட

சர்வேஸ்வரன் -நாம் ஷத்ரியராகில் அன்றோ ஷத்ரியம் அனுஷ்டிப்பது –
நம்மை நாராயணன் என்று நீ சொன்னபடியே
நாம் நியந்த்ருத்வாதிகளாலே சர்வ விலக்ஷணர் ஆகையால்
நாராயண தர்மமான
சரணாகத ரக்ஷணம் அனுஷ்டிக்கிறோம் என்று அபிப்ராயம் கொண்டு

யுஷ்மத்தோ பய பீதா நாம் தேவா நாம் ஹி வை மயா பயம்
ராக்ஷஸோத் சாதனம் தத்தம் ததே ததனு பால்யதே
பிராணைரபி பிரியம் கார்யம் தேவா நாம் ஹி சதா மயா
ஸோஹம் வோ நிஹ நிஷ்யாமி ரஸாதல கதா நபி –உத்தர -8-7-/8-என்று

நாம் தேவர்களுக்குப் பண்ணின அபய பிரதானத்தாலே
பசுக்களுக்காகப் புலிகளைத் தொடர்ந்து கொல்லும் கணக்கிலே
உங்களைக் கொல்லுகிறோம்-என்று அருளிச் செய்த பாசுரத்தாலே
மற்றுமுள்ள ஷத்ரிய தர்மாதிகளிலும் காட்டில்
சரணாகத ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநு பால நீயம் என்னும் இடத்தை ஸ்தாபித்தான் –

————-

வாலி வத சமர்த்தனம்

வாலியுடைய சோத்யத்திற்கும் இவ்வுத்தரத்தையே திரு உள்ளம் பற்றி
ஸூஷ்ம பரம துர் ஜ்ஜேய சதாம் தர்ம பிலவங்கம்–கிஷ்கிந்தா -18-15-என்று
கம்பீரமாக ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்தார்

முன்பு சாபராதரான ஸ்ரீ மஹா ராஜர்
அநு தப்தராய் சரணாகதராக
அவரை நீ நலிந்தாயாகையால்
நீ தண்ட்யனாகையாலும்-
சரணாகதாரன ஸ்ரீ மஹா ராஜரை ரஷிக்கை நமக்குத் பரமாகையாலும்
உன்னை நிராகரித்தோம் என்று தாத்பர்யம்

————-

விஷய வாசமும் ரக்ஷண காரணமாகும் படி

இப்பிரபந்தம் தலைக்கட்டுகிற இடத்திலும்
உபாய அநதிகாரிகளான ஸ்த்தாவரங்களையும் கூட

விஷயே தே மஹா ராஜ ராம வ்யஸன கர்சிதா
அபி வ்ருஷா பரிம்லாநா ச புஷ்பாங்குர கோரகா–அயோத்யா -59-8-என்னும்படி

உண்டான விஷய வாசத்தையும் –
அவஸ்த்தா விசேஷத்தையும் பற்றாசாக ரஷித்த படி பரக்கப் பேசப்பட்டது –

————–

ஸ்ரீ ராமாயணத்தின் சரணாகதி வேதத்வம்

உபக்ரம உபஸம்ஹார அவப்யாஸோ அபூர்வதா பலம்
அர்த்த வாத உபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணய –என்கிற

தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய்
ஸ்ரீ வால்மீகி பகவானாலே த்ருஷ்டமாய்
இருபத்தொரு சரணாகதி வேதம்

இதில் இவ் வபய பிரதான பிரகரணம்
சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்

—————————–

சரணாகதி தாத்பர்ய பஞ்சகம் என்னும் மூன்றாம் அதிகாரம் முற்றிற்று –

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –