Archive for the ‘அஷ்ட பிரபங்கள்’ Category

ஸ்ரீ அழகர் கலம்பகம்–ஸ்ரீ வேம்பத்தூர் ஐயர்

October 23, 2023

ஸ்ரீ திருமாலிருஞ்சோலைமலை ஸ்ரீ அழகர் கலம்பகம்.

பாயிரம்.
காப்பு.

கட்டளைக்கலித்துறை.

ஆனைக்கு முன்செல் லிடபா சலத்தி லழகனையெம்
மானைக் கருதிக் கலம்பகங் கூற வரற்கரற்குத்
தானைச் சுரர்க்குச் சடகோபங் சித்திக்கத் தாங்குசெங்கோல்
சேனைத் தலைவர் திருத்தாள் கருத்தொடுஞ் சேவிப்பனே.

அத்தியின் மத்தியி லேவிளங் காலிலம் மாமகிழ
நித்திரை கொள்ளுந்த மாலத் துருவ னிவனென்பதே
சத்திய மென்னப் புளிக்கீழ் மகிழந் தமிழ்க்கரசே
நித்திய மாலழ கன்றமிழ் கூறமுன் னின்றருளே.

நேரிசை வெண்பா.

முதலாழ்வார் மூவர்தொண்டர் பாதப் பொடியார்
மதுரகவி மாறன்மழி சைக்கோ – இதவார்
குலசே கரன்கோதை பட்டர்பிரான் பாணன்
கலியன் றிருவடிகள் காப்பு.

அவையடக்கம்

அழகர் பதின்ம ரருந்தமிழ்கொண் டார்யான்
குழறியபுன் சொற்றமிழுங் கொண்டார் – முழுதும்
கருத்திருத்தி வைத்த வெண்மர் காந்தருமாய்க் கூனி
உருத்திருத்திக் கொண்டதுபோ லும்.

நூல்.

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

எட்டடித்தரவுகள்       (2)

நீர்பூத்த பொற்றகட்டு நெட்டிதழ்ச்செந் தாமரைமான்
கார்பூத்த முழுநீலக் கண்ணுமன முங்குளிரச்
சுரும்புதுவைத் தோகைமிகச் சூடியதா மமுங்கவியும்
தரும்புதுவைத் தோகைகன தனதடங்கள் புளகரும்பப்
பழமுதிர்நான் மறைகுமுறப் பதின்மர்கண்முத் தமிழ்முழங்கப்
பழமுதிர்பூஞ் சோலைமலை பச்சைமர கதத்திலங்க
வந்தவிமா னத்தமரர் மலர்தூவிப் பணிசோமச்
சந்தவிமா னத்தமருஞ் சௌந்தரிய பரஞ்சோதீ.

குறித்தமுகில் பந்தரிட்டுக் குறுந்துளிதூற் றிடவாயர்
தறித்தமர மத்தனையுந் தழைத்தலர்ந்து பழுத்துதவக்
கடும்புலிக ளயர்ந்துசித்திர காயமெனும் பேர்விளக்கக்
கொடும்பணிகண் மாலையதாய்க் குலரத்தின விளக்கேற்றக்
கருங்கற்றான் வெண்ணெயெனக் கரைந்தோட விரைந்தோடி
வருங்கற்றா னிமைப்பொழிய மழவிடையங் கயர்ந்துநிற்ப
மிகவிளங்கோ வியரெழுத வெள்கியதிரி பங்கியுடன்
சுகவிளங்கோ வியர்மழலை தொனித்தக்குழ லிசைத்தோய்கேள்.

ஈரடித்தாழிசைகள்.       (6)

பலகடலுஞ் செதிலடங்கப் பசுந்துழாய் பரிமளிக்கப்
பலகடமீன் வடிவெடுத்தாய் பார்த்தெம்மைக் காக்கவென்றோ.             (1)

போகமடங் குலகமுற்றும் பூவெனவன் புறங்கிடக்க
நீகமட வுருக்கொண்டாய் நினைத்தெம்மைப் புரக்கவென்றோ.       (2)

நிலக்கினிய தேவகிபா னீபிறந்த சுபயோக
விலக்கினமேற் கடைப்பிடியோ விடபமலை யுவந்தனையே.       (3)

உதித்ததுநம் மிந்துகுல முயர்த்ததுநந் தமையென்றோ
பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே.       (4)

தருமகதி யாய்ப்பாடி தனினவநீ தங்கவர்ந்தா
யொருமகதி முனிமுதலோ ருள்ளமெனக் குறித்தேயோ.       (5)

ஆரமுத வுததிபொங்க வமரர்குழாம் வாயூற
வாரமுத மதித்தெடுத்தா யடியவர்கட் கென்றேயோ.       (6)

ஈரடி அராகங்கள்       (4)

நிலமுத லியவெயி னிலவுமிழ் கதிர்மதி
குலதெய்வம் வழிபடு குருவென வருளினை.       (1)

அரியய னரனென வவனவ ளதுவென
விரியிக பரமிரு வினையென மருவினை.       (2)

அருள்சில வறிபவ னறிவறி தருமொரு
பொருள்பல வெனமறை புகல்சுக வடிவினை.       (3)

ஒளியினு ளொளியுல குயிரினு ளுயிர்மிகு
களியினுள் களியென மிகமகிழ் கருணையை.       (4)

பெயர்த்தும் ஈரடித்தாழிசைகள்       (4)

அடலவுணன் பாற்குறுகி யற்பநிலங் கையேற்றாய்
கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ.       (1)

இலகங்கை யெனத்திரைக ளெறியமுனை துளைந்தாய்வான்
குலகங்கை கால்பிடித்துக் கூப்பிடுதல் கேட்டிலையோ.       (2)

கருதுகளி றோலமிடக் கலுழனொடும் விண்பறந்தாய்
மருதினுர லொடுதவழ்ந்தாய் மால்விளையாட் டென்றேயோ.       (3)

சிறந்தபெரும் பகொரண்டத் திரளெல்லாந் திருவுருவிற்
பிறந்தகுறும் புளகெனினின் பெருமையையா ருரைக்கவல்லார்.       (4)

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்.

சகலநற் பொருளிநீ தத்து வங்கணீ
புகறரு கரணநீ புவன போகநீ.       (1)

மொழியுநீ பொருளுநீ முக்கு ணங்கணீ
விழியுநீ மணியுநீ விந்து நாதநீ.       (2)

முச்சீர் ஓரடி அம்போதரங்கம்.

தயரதர் தவசிலு தித்தனை.
தசமுக னுருளவ தித்தனை.
உயர்சது முகனைவி தித்தனை.
உரனுள சரபமி தித்தனை.

இருசீர் ஓரடி அம்போதரங்கம்.       (16)

செகமி சைந்தனை. கரும மண்டினை.
ககமி சைந்தனை. தரும மண்டினை.
செயல்க டந்தனை. கதம டக்கினை.
மயல்க டந்தனை. மதம டக்கினை.
சுகமு கந்தனை. அருவி ழைந்தனை.
மகமு கந்தனை. உருவி ழைந்தனை.
துன்பொ ழிந்தனை. அமிழ்த ழைத்தனை.
பொன்பொ ழிந்தனை. தமிழ்த ழைத்தனை.

தனிச்சொல்.
எனவாங்கு.

இருபத்துமூன்றடியால்வந்த ஆசிரியச்சுரிதகம்.

தேறிய வடகலை தென்கலை யெனவிரண்
டாறொழு கரங்க வரவிந்த லோசன
குளிர்பத மிடுசட கோபமீ தெனவான்
வெளிமுக டணிவட வேங்கட வாண

அதிர்குரல் வளைசுட ராழியா மெனமதி
கதிர்புடை வரநிமிர் கரிகிரி வரத
வலம்புரி போலயன் வாகன மீண்டிச்
சிலம்புறு தரளச் சிலம்பாற் றிறைவ
எழுமணி யால்கட லீந்தபொன் னுடனொரு
செழுமணி யுரமணி தெய்வ சிகாமணீ
உரனுடை மதலையு மிரணிய னுரமொடு
சரபமும் வகிர்தரு நரகரி ரூபா
பூமியி லசுரப் புன்பனிக் கினனெனும்
நேமியம் பரம சாமி வாழி
இரவினி லாடு மிறையணி யொளிக்க
அரவினி லாடுநின் னடிமலர்க் கியம்புவென்
அண்டகோ டியையு மயனையு முந்திப்
புண்டரீ கத்துப் பொதிந்தரு ணின்னை
நெஞ்செனு மலரு ணிறுத்துமெய் யடியர்க்
கஞ்சுற் றஞ்சுற் றாங்கவர் தம்மை
கண்ட விடத்துநுங் காற்றுக ளென்று
தொண்டுபட் டொழுகத் துணைசெய்
தண்டமிழ்ச் சங்கத் தனியிறை யவனே.       (1)

நேரிசைவெண்பா.

அவனிவனென் றெண்ணி யலையா திருத்தி
அவனிவனி தைக்கா மழகன் – கவடார்
மருதிடந்தா னேகட வுண் மற்றில்லை நெஞ்சே
ஒருதிடந்தான் சொன்னே னுனக்கு.       (2)

கட்டளைக் கலித்துறை.

உனைக்கண் டகங்குளிர்ந் துன்னாமங் கூற வுனைவணங்க
வினைக்கண் டகரிடஞ் செல்லா திருக்கநல் வீடுபெற
முனைக்கண் டகங்கையை நேராக்குங் காந்தி முகுந்தநந்தன்
மனைக்கண் டகணித லீலாதென் சோலை மலைக்கொண்டலே.       (3)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

கொண்டல்வண் ணாவன் றேயுன் குரைகழற் கமலம் பெற்றேன்
மண்டல மளந்த காலை மற்றுநான் புறம்போ சொல்லாய்
அண்டர்தெள் ளமுத முண்ண வாலமுண் டவர்க்கே சோமன்
துண்டமுன் றந்தாய் தந்தாய் சுந்தர ராச மாலே.       (4)

சந்தவிருத்தம்.

மாலைக் கரும்புபிறை புரைவா ளெயிற்றுநமன்
வனபாசம் வீசவுடலம்,
ஆலைக் கரும்புபடு முன்னேகண் முன்னேபுள் ளர
சோடும் வந்துதவுவாய்,
வேலைக் கரும்புனித விந்திராதி யர்க்கு நல்
விருந்திட்டு வந்துவிதுரன்,
சாலைக் கரும்புதுவி ருந்தா மருந்தே
தடஞ்சோலை மலையழகனே.       (5)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

மலைக்குமேன் மலைவிளக்கா மழகா வேத
வான்குதலை நான்குதலை மகனார் வாளா
தலைக்குமே லெழுதுகின்றா ரரியென் றெங்கள்
தாலத்தின் மேலெழுதச் சமர்த்தி லாரோ
அலைக்குமே லுடுமலரா மிதக்குங் கால
மாலமொன்று காயாம்பூ வலர்ந்தாற் போற்பச்
சிலைக்குமேற் செங்கண்வள ரனந்தா னந்தா
விருக்கி லிருக்கும் பொருளே யெம்பிரானே.       (6)

கட்டளைக் கலிப்பா.

பிரானெனச் சொன்முராரி புராரிநீ பிரமனீ குணப்பேதநீ பூதநீ,
தராதலத் திற்சராசரம் யாவுநீ சச்சிதாநந்த விம்பமுநீ யன்றோ,
மராமரங் கொலி ராமவிராகவ வாசுதேவ வனகிரி வாசமுன்,
கராசலஞ்சொற் பராபர நாதசெங் கஞ்சலோசன வஞ்சன மேருவே.       (7)

நேரிசைவெண்பா.

அஞ்சார லும்மணிநீ ராறுங் கிடைக்கரிய
மஞ்சீர மாறா வனகிரியே – பஞ்சவர்தம்
பங்கங் களைந்தான் பனிரண்டு கண்ணொருவர்
பங்கங் களைந்தான் பதி.       (8)

கட்டளைக்கலித்துறை.

பதிக்கின்ற கற்பகப் பூஞ்சோலையை யெட்டிப் பார்த்து மந்தி
குதிக்கின்ற மாலிருஞ் சோலைவெற் பாநின் குளிர்வதனம்
உதிக்கின்ற திங்கண்மெய் யுற்பலக் காடங் கொழுகு பைந்தேன்
மதிக்கின்ற கட்டழ கெங்கள்கண் மூழ்கு மதுகரமே.       (9)

புயவகுப்பு.

ஆசிரியவண்ணவிருத்தம்.

தனதனன தந்ததன தனதனன தந்ததன.
தனதனன தந்ததன -தனத்ததனதனந்தன.

மதுகயிட வன்சடல மெழுகுபட வெங்குருதி
மதுவினில்வ ழிந்தொழுக இறுக்கிநனிபிழிந்தன
வடிதயிர்மு கந்துரலில் வரியவுமி சைந்துபய
மருதையுமி டந்துபினும் அடுக்குறிநெய்கவர்ந்தன
மகளிர்நக சந்த்ரகலை பதிபிடர்த ழும்புபட
மணிகணிரெ னுஞ்சுரபி திருப்புகுணில்சுமந்தன
வயிறுகுழை யும்பொழுது சிறுகுமுத மொன்றநிரை
மடிமுலைவி ரைந்துருவி நுரைத்தசுரைகறந்தன

புதுவையின்ம டந்தைகவி பதின்மர்தமிழ் கொண்டினிது
புளகிதமெ றிந்துமர கதக்கிரியினிமிர்ந்தன
பொதுவர்தரு பெண்கள்முலை திமிர்மிர்கம தங்களொடு
புதியபசு மஞ்சள்குமு குமுக்கவிமிவளர்ந்தன
புவிகிடுகி டென்றதிர வெதிர்தொடைய றைந்துசமர்
பொருமலர்க லங்கமுகம் இடித்துமிகநுழைந்தன

புகையுமொரு கஞ்சன்விழ முரனடுந டுங்கயம
புரநெளிய வும்பர்மலர் இறைக்கவமர்புரிந்தன
மிதிலைமயி லின்புருவ நிகரலதி தென்றரனும்
வெருவிடவ வன்சிலையை முறித்தவையிலெறிந்தன
விசையினொடு கொம்பினிணை திருகிமணி சிந்தரண
வெறிகொள்கெச கும்பமது தகர்த்துவிருதணிந்தன
விசையன்ரத வெண்புரவி கருவிகொடு ரிஞ்சிமிக
மெழுகுசெய்து தண்புனலின் மினுக்கியுளைவகிர்ந்தன
விரனுனிசி வந்தபடி யுலவைகள்கொ ழுந்துவிட
வெணெயின்மலை யுங்கரைய இசைத்தகுழல்பயின்றன

அதிர்கனக னெஞ்சமிரு பிளவுசெய்து றுஞ்சமுக
அருகுதிர மொண்டுதவி நிணத்தகுடர்பிடுங்கின
அவைதொடைபு னைந்துரகம் வளைமலையை வென்றுதொழு
வரசிளம கன்குடுமி திருத்தியலர்புனைந்தன
அணிமகர குண்டலநல் விசயமக ளுஞ்சலென
வசையவவள் செம்பொனெயி லெனத்தொடிகள்செறிந்தன
அமுதமதி வந்துதவ ழிடபகிரி நின்றவடி
வழகர்துள வுந்தளவு மணத்ததிரள்புயங்களே.

நேரிசைவெண்பா.

புயங்க சயனா புயல்வண்ணா பூமின்
முயங்கு மணிமார்பா முகுந்தா – மயங்கும்
கருப்பழகா தன்பரையாள் கண்ணாதென் சோலைப்
பொருப்பழகா நீயே புகல்.       (11)

வண்டுவிடுதூது.

எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

நீயாகி லுஞ்சொல் லொணாதோ பிரிந்தேகும்
நிட்டூர ருக்கந்த நெட்டாலி னிலையோர்
பாயாக விழிதுஞ்சு முகில்சோலை வெற்பிற்
பசுந்தேன் விருந்துண் கருந்தேனி னரசே
மீயாகும் வெளிநாகம் வெண்பா லெனுந்தண்
மேகங்க ளுரிபுள்ளி மீனஞ்செவ் வானம்
வாயாகும் ரவிகான்ற மாணிக்க மெயிறோ
மதியால மறுமூச்சு வாடைக்கொ ழுந்தே.       (12)

இரங்கல்.

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

கொழுநனைவிட் டாய்பூவை நிரைக்கின்றாய்
வண்டிசையைக் குறித்தாய் கண்ணீர்,
விழுவதறா யொன்றுமருந் தாதுகைப்பா யிதழ்புலர்ந்தாய்
வினையேன் போன்றாய்,
எழுவிடையுந் தழுவியொரு விடைமலையில்
வாழழக ரிந்திர நீலச்,
செழுமலையொப் பார்நாட்டில் வெண்டளவே
கண்டளவே தேறி னேனே.       (13)

தவம்.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேறாது வனம்போயெள வனமும் போனீர்
சிறுகிழங்கைக்கொண்டுபெருங் கிழங்கைக் கொண்டீர்
ஏறாத பலஞ்சுவைத்தோர் பலமுங் காணீ
ரிலைமேய்ந்தும் பேறிலையே யிதுவோ யோகம்
மாறாது சருகுதின்று சருகு பட்டீர்
வாயுநுகர்ந் தீர்வாயு மௌன மானீர்
ஆறாத தீயினிற்பீர் தீய ரேநும்
மருந்தவமே தவமழகர்க் காட்ப டீரே.       (14)

கட்டளைக்கலித்துறை.

படவர வப்பள்ளி மாலலங் காரர் பழமறையும்
தடவர வச்சிரத் தண்டையு மார்ப்பச் சகடுதைத்த
திடவர வச்சுத ரெல்லா விடுக்கணுந் தீர்த்தருளக்
கடவர வற்றைக் கருது மவரைக் கருதுமினே.       (15)

மேகவிடுதூது.
நேரிசைவெண்பா.

மின்னுமுகி லேசோலை வெற்பழகர் வந்திலார்
உன்னையெதிர் கண்டே னுயிர்தரித்தேன் – ஒன்னார்
வெருவவிரு தூதுமவர் மேனிநிற முற்றும்
மருவவிரு தூதுபோய் வா.       (16)

இரங்கல்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

வாளுந் திகிரிப் படையுங் கதையுங்
வளையும் வளையுஞ் சிலையும் புனைவார்
ஆளுங் குலபூ தரனார் மலர்மா
னன்னாள் பிரியா ரெந்நாள் வருவார்
நீளுங் குழலீர் காமம் படுதீ
நெய்விட் டதுகா ணீர்பெய் பனிநீர்
வேளைங் கணையும் விறகா மவர்தாம்
வேயூ துவதுந் தீயூ துவதே.       (17)

வேறு.

வேயினா னிரையழைத்துக் களிறழைக்க வோடி
மென்பிடிக்காய் மான்பின்போய் விடைமலைமே லிருப்பீர்
போயின்மா முலைபருகு மச்சுதரே கேளீர்
பின்னைக்கு முன்னாளை பின்னைக்கென் னாமல்
போய்வாச வன்றருவை வேரினொடுங் கொணர்ந்தீர்
புதல்வனார் தமக்குமுந்திப் பூவிருப்பென் றளித்தீர்
தூயகோ வியர்க்குமெல்ல விதழ்கொடுத்தீர் நம்புந்
தொண்டன்முடி மேற்றாளைச் சூட்டுவதுன் கடனே.       (18)

சந்தவிருத்தம்.

கடதாரை குன்றாத விபராசன் முன்றாவு
ககராச னுந்தாமு நொடியூடே
வடமேரு வுஞ்சோனை மழைமேக மும்போல
வருமா லலங்காரர் பதிகேளீர்
சடகோபர் தம்பாட லெனவே பசுந்தேறல்
தவழ்சாரல் சங்கீனு மணியாலே
திடராக மஞ்சீர நதியோ லிடுந்தூய
திருமாலிருஞ்சோலை மலைதானே.       (19)

வண்டுவிடுதூது.
நேரிசைவெண்பா.

மலையழகர் வண்டினமே வண்டுவரை யார்காண்
நிலைகொள் பொறியளியை நீங்கார் – தலைவரவர்
ஆழியுடை யாருமக்குண் டாறுகால் பேர்சுமந்தீர்
வாழிசெல லாஞ்சொலலா மால்.       (20)

கட்டளைக் கலித்துறை.

மாலாகும் வேளையி னீலா சலமொத்து மாப்பறவை
மேலாக வந்தருள் வாயெங்கள் கோசலை மெய்வயிறென்
ஆலா னதிலிளஞ் சேயாயுறங்கி யசோதை கண்போல்
சேலா யெழுமழ காகுல பூதரச் சீதரனே       (21)

அம்மானை.

மடக்குக் கலித்தாழிசை.

சீதரராஞ் சோலைமலைச் செல்வரைமுன் சந்ததியா
மாதர சோதை வளர்த்தனள்கா ணம்மானை
மாதர சோதை வளர்த்தனளே யாமாகில்
ஆதரவில் லார்போ லடித்ததே னம்மானை
அடித்ததொரு வன்மத்தா லல்லவோ வம்மானை.       (22)

மடக்கு.

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மானமா லழகர் பதிகணூற் றெட்டே
மற்றவை யாவுநூற் றெட்டே
வளரக நந்த னந்தமா மனையே
வதைத்தது மந்தமா மனையே
ஏனமா யெடுத்த தெட்டுமா தாரையே
யிணங்கிய தெட்டுமா தரையே
யேற்றது கயவர்க் குடையுமை வரையே
யேந்திய குடையுமை வரையே
ஆனைகூப் பிடுமுன் புகுமிடங் கரையே
யன்றுயுங் கனகன் கைப்பொருந் தூணே
யண்டகோ டிகள்பொருந் தூணே
பானமுங் கரும்பேய் வனமுலைப் பாலே
பயிற்சியும் வனமுலைப் பாலே
பாயலு மரவுக் கரசனா லிலையே
பரஞ்சுட ரவனலா லிலையே.       (23)

கட்டளைக்கலித்துறை.

இலையும் பசும்புல்லுஞ் செஞ்சூட்டரவு மிடைச்சி மடித்
தலையுஞ் சயனங்கொண் டீரடி யேன் மனத் தாமரையின்
றலையுஞ் செயலொழித் திங்கிருந் தாலென்ன வஞ்சனமா
மலையுங் கடலும் பொருந்தமிழ்ச் சோலை மலையரசே.       (24)

மறம்.

பதினான்குசீர்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அரசர் தூத கவிஞர் தூத ரயனொடுந் துதிக்கவே
யைவர்தூத ராயளித்த வழகர்நாட்டின் மறவர்யாம்
பரசிகால தூதரும் பறப்பரெங்கள் பேர்சொலிற்
பயமிலாது செல்லுமென்று பயமிலோலை வைத்தனை
சரசம்வாசி யென்றுசொல்வை சரணிதேடு காவலர்
தளமிணக்க மென்கிறாய் சரந்தொடுக்க வெண்டுமோ
சிரமிருக்க வேண்டிலுங்க டிருமுகங் கிழித்தெறி
சேரர்பெண்ணை யீவர்போ சிறாரினிப் பொறார்களே.       (25)

வேறு.

பொறுபொறு தூத பசிபொறாய் முந்திப்
புனைசுருட் டோலையைத் தின்னு
புரவலர் காதிற் சொருகுசந் திரிகை
புயனிறத் தழகர்சீர் பதியின்
மறவரென் றறிந்துங் காரிகை கேட்டாய்
மதமலோ வதுபுல வரைக்கேள்
வயலிலே யரிவை சிலையிலே நாரி
மரத்தினு மண்ணினும் பாவை
குறிதிகழ் தையல் பாணர்பால் வஞ்சி
குடக்கினிற் கோதையு மாங்கே
குன்றின்மேற் குன்றா விளம்பிடி நல்ல
குமரியுண் டடவியி லுடனே
நறுமணங் கூடுஞ் சோறுமுண் டோடு
நங்கையைப் பார்வினை முகத்தில்
ஞாலமே னீங்கள் வாலையே படைத்தா
னரியொடுந் திரிவது திரமே.       (26)

மடக்கு.
கட்டளைக்கலிப்பா.

திரவி ருப்பணி தாமத் திகிரியே
செங்கை மேலணி தாமத் திகிரியே
வரதர் மொய்ம்பு குலவர விந்தமே
வாய்கண் கால்கை குலவர விந்தமே
உரமி சைக்கரும் பன்ன கமலையே
யுறையு ளுங்கரும் பன்ன கமலையே
அரச ருக்கிட முத்தமர் சங்கமே
யழகர் சேரிட முத்தமர் சங்கமே.       (27)

கட்டளைக்கலித்துறை

மேகங் கடல்மணி காளிந்தி பூவைமென் காவிகண்மை
மாகந் தொடுபச்சை நின்னுருக்காட்ட மனங்குளிர்ந்தேன்
சோகந் தவிர்ந்தனென் மாலிருஞ் சோலைச் சுரும்புசெய்த
யோகந் திகழழ காவவைவாழி யொளிசிறந்தே.       (28)

நேரிசை வெண்பா.

சிறந்துன் பதந்தொழுவார் சேவடிதொ ழாமல்
இறந்தும் பிறந்து மிரைக்கே – பறந்தும்
மிகவேசற் றேனிடப வெற்பாவ சோதை
மகவேசற் றேகடைக்கண் வை.       (29)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்

வைக்குமிடத் தன்புவையா மாந்தர் காளம்
மறலிகதை யறியீரோ வருமே நாளை
தக்ககதை புகுமேநுங் குணமும் போமே
சரமும்போ மேயெடுத்த தநுவும் போமே
திக்கிலைவே றிக்கணமே சோலை வெற்பிற்
சீதரசஞ் சீவிதனைத் தேடிக் கொள்ளும்
துக்கமறு நமனோடத் துரப்பீர் யார்க்குந்
தோற்றிடீ ரொருகாலுந் தோற்றி டீரே.       (30)

கட்டளைக்கலிப்பா

தோற்றும் பொய்கை விடாதா ரருவியுந்
துலங்க விட்டவர் சோலைவெற் பார்சந்தச்
சேற்று மொய்ம்ப ரிவரிக்கரி தோநம
திருக்குளக் குறை தீர்ப்பது மாவலி
ஊற்று நீரினி தென்றே குடங்கைகொண்
டுற்ற நாளங் கொருகால்விண் ணுச்சிகண்
டாற்று நீர்தந்த திங்கொரு காலுல
களந்து போக ம்னைத்த்துங் கொடுத்ததே.       (31)

கட்டளைக்கலித்துறை.

கொடுக்கின்ற செங்கை யழகனென் றோதுங் குழகன் வெய்யோன்,
எடுக்கின்ற சக்கரத் தேரோ டிலங்கு மிடபவெற்பில்,
அடுக்கின்ற வாயிரம் பேரோ கிரணமஞ் ஞானவிருள்,
தடுக்கின் றவருமுண் டோபனி காண்புன் சமயங்களே.       (32)

அறுசீர்க்கழிநெடில் வண்ணவிருத்தம்.

சமயமென முதுகடவு கடவியுயிர் கறுவிவரு
சமனுமொரு திரண மிவனே,
ஆமையுமென வுழலும்யம படருமொரு மசகமெழு
தயனுமவ னளவு நமர்காள்,
கமையுரக கிரியிறைவர் கரிகிரியில் வரதர்வளர்
கமலைதன கிரியை யகலார்,
இமையகிரி ரசதகிரிகனககிரி பரவுநம
திடபகிரி யழகர் துணையே.       (33)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

துணையென்று வந்தே மெம்மைத் தொடர்ந்துமா லாக்கிக் கொண்டாய்,
அணையென்று நாக மீந்தா யாங்கரு டனைவி டேமால்,
இணையொன்று மில்லாய் நல்லா யீசசர் வேச புல்லும்,
சுணையென்ற வழகா வெண்ணெய்க் கள்வனே துளவி னானே.       (34)

மடக்கு.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

துளவழகர் கலக்கவர வஞ்சலிக்குங் காலந்
தொனித்திடிகள் கலக்கவர வஞ்சலிக்குங் காலம்
வளமலிவெற் பருகுகரு மஞ்சாருங் காலம்
வாடையுயிர் பருகுகரு மஞ்சாருங் காலம்
களிறுருளச் சிலையருவி யம்புதைக்குங் காலங்
காயமுறுஞ் சிலையருவி யம்புதைக்குங் காலம்
தளவமளி பாடீரப் பூச்செறியுங் காலந்
தளவமளிப் பாடீரப் பூச்செறியுங் காலம்.       (35)

வேறு.

காலமுகந் தானு மோலமுகந் தானுங்
காமனைவாய்த் தானு மாமனைமாய்த் தானும்
ஞால மடுத்தானுஞ் சூல மெடுத்தானு
நளின விருப்பானும் புளின விருப்பானும்
நீல மதித்தானுஞ் சீலம் விதித்தானு
நீதி பொழிந்தானுஞ் சோதி வழிந்தானும்
சால நிறைந்தானு மால முறைந்தானுஞ்
சலமலை வென்றானுங் குலமலை நின்றானே.       (36)

கட்டளைக்கலித்துறை.

மலைதாங்கு மாயர் வனகிரிக் கேமழை தாங்கிச்சந்திர
கலைதாங்கி யிந்திர சிலைதாங்கிக் கஞ்சமுந் தாங்கியங்கே
கொலைதாங்கு நீலங் குமிழாம்ப றாங்கிக் கொடியொன்றின்மேல்
நிலைதாங்கு கோங்கமுந் தாங்கியொர் பூங்கொம்பு நிற்கின்றதே.       (37)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேனைப் பழித்த விசைக்குயில்காள் செம்மாந் தழைக்கப் புறப்பட்டீர்,
சோனைப் புயல்போ லனங்கனம்பு தொடுத்தா னினிமேற் றொடப்போமோ,
ஆனைக் கரச னிடுக்கணிருட் கருணோதயம்போ லிமைத்த செம்பொற்,
றானைத் திருமா லலங்கார தந்தா ரிந்தா தந்தாரே.       (38)

மடக்கு.
தாழிசை.

தாரமருங்கா மனப்புள்ளே தைக்கு மருங்கா மனப்புள்ளே
சரக்கோ டங்கங் குலைபடவே தகுமோ வங்கங் குலைபடவே
வேரோ டின்ப வளவனமே விடமோ வின்ப வளவனமே
மேகம் பாவி வருந்திடரே விதிகாண்பாவி வருந்திடரே
மாரனுடைவாட் கேதகையே மயல்கொண் டுடைவாட் கேதகையே
மணந்த விராவம் போருகமே வந்த விராவம் போருகமே.
ஆரங் கடுக்கு மென்னுரையே யாருக் கடுக்கு மென்னுரையே
யலைக வராவெண் ணந்தினமே யழகர் வராவெண்ணந்தினமே       (39)

நேரிசைவெண்பா.

தினகரனு மப்பால்வெண் டிங்களுங்கா ரென்ன
வனகிரிவாழ் காயாம்பூ வண்ணா – அனகா
அறவேத வித்தேநின் னம்புயத்தாள் காணா
தறவேத வித்தே னருள்.       (40)

களி.

பன்னிருசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அருணன் பரிபோற் பரியிலக
வமரில் விசயன் றேர்கடவு
மழக ரிணையில் குழகரெமை
யாளும் பெருமாள் வாளரக்கர்

செருவென் றிறுத்தார் மதுவார்க்குஞ்
செயலை முடித்தார் பின்னுமன்பர்
தேனுக் கலையா மற்கருணை
செய்தா ரவர்தந் திருவடிகள்

கருதுங் களியெங் கனமடத்தைக்
கழுவு மினிய வினையடையுங்
கஞ்சாக் கருக்கு வகைநிறையுங்
கற்பத் தயன்வீழ்ந் தனனன்று

குருவி சார மச்சமறுங்
குலவா ரணங்கள் முன்படியுங்
குறும்பாட் டையுமோ திடும்வாருங்
குடியும் படையும் வேண்டியவே.       (41)

பறவைவிடுதூது.
எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

வேண்டலர் நகைக்கவொரு பாங்கியும் வெறுக்கவனை
வேங்கையி னதட்டமதன் வில்லாலே
தூண்டில்படு மச்சமென நான்பதை பதைக்கும்விதி
தூங்கியிரை கொத்திநிமிர் புள்ளீரே
பாண்டவர் துதிக்குமயில் கூந்தல்சொரு கத்தவள
பாஞ்சசனி யத்தொனிசெய் செவ்வாயர்
ஆண்டுதுரு வற்குநிழ லீந்தவன வெற்பிலெனை
யாண்டவழ கர்க்கினிது சொல்லீரே.       (42)

கட்டளைக்கலித்துறை.

சொல்லிட பாசல மாயர்நன் னாட்டிற் சுடர்க் கொதுங்கும்
அல்லிடர் தீர்குழ லாய்நின் படாமுலை யானை கண்டால்
மல்லிட றுந்திண் புயத்தார் கனக வளைநிரைப்பார்
புல்லிட வுஞ்செய்வ ரீந்தார் பிடியென்றிப் பூந்தழையே.       (43)

பாண்.

தாழிசை.

தழைவிருந்த வனத்தர்பூமிசை குழைவிருந்தவ னத்தனை
தந்தசுந்தர ராசகேசவர் தம்பதங்களி னினைவினார்
இழைமருங்குடை வாணியுந்தொழ வியங்கொர்பாணரு ளாரவ
ரிசைபுகுந்திடு காதின்மற்றவ ரிசைபுகாதுத காதுநீ’
மழைதொடுங்கொடி மாடவீதியில் வந்ததேபிழை யிறையிவண்
வரத்தைவிட்டனர் ஞானம்வந்து பரத்தைநச்சினர் வீணையும்
பழையபேச்சுரை யுந்தொடுத்தனை புதியபேச்சுரை காணது
பாடினிக்கு மவட்கெழுந்தருள் பாடினிக்கு மணாளனே.       (44)

ஊசல்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மணங்கமிழ்பு வையுமயிலுந் தமாலக் காடும்
வண்கிளியு நீலவெற்பு மடமான் கன்றும்
இணங்குகட லுந்துகிருங் காரு மின்னும்
யமுனையெனுந் திருநதியு மெகினப் பேடும்
கணங்குழைய கோசலைதே வகிய சோதை
கண்மணியும் பாவையும்போற் கமல வீட்டில்
அணங்கரசி னுடன்குலவி யாடி ரூச
லலங்கார மாயவரே யாடி ரூசல்.       (45)

தவம்.
எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

ஊசிமுனை நின்றுமென தாழ்குகைநு ழைந்துமென
வூமரிலி ருந்துமென வளைபோலே
காசினிசு ழன்றுமென வானிடைப றந்துமென
காயமிதெ ழுந்துவிழும் வினைபோமோ
நீசரையு மண்டர்செய சோலைமலை யின்கன்முழு
நீலமலை யுண்டுதொழு மியலாதேல்
கேசவமு குந்தமது சூதனவ னந்தகக
கேதனவெ னுந்தளரி னினைவீரே.       (46)

கட்டளைக்கலித்துறை

நினையா தவர்தமை யாளலங் காரனை நேர்ந்து நந்தன்
தனையா தவர்நண்ப வென்றிட பாசலச் சாரலிற் போய்
முனையா தவர்தகை தீர்சிலம் பாற்றின் முடை யுடலை
நனையா தவர்சன்ம முஞ்சன்ம மோவிந்த நானிலத்தே.       (47)

சந்தவிருத்தம்

நிலங்குலவு நாபர்பணி லங்குலவு முத்த
நிரைக்குமரு விக்குலவ ரைக்குமரு வியகார்
இலங்கையில்வெவ் வாளிகொடி லங்கையிலி ருக்கு
மிராவணவி ராவணனி ராவணம றுத்தோர்
அலங்கலைய ளித்தனர லங்கலைக டற்கு
மந்தமத னுக்குமனை சந்தமத னுக்கும்
கலங்கலெ னெனக்கணிக லங்கலவை தம்மின்
கையிலமனை தாருமுலை சயிலமனை யாரே.       (48)

கொச்சகக் கலிப்பா

ஆராம வெற்பி லழகர்சுரு திக்குமெட்டா
ஏரார் பதந்தீண்ட வெத்தவங்கள் செய்தனவோ
சூரான வன்சிலையுந் துந்துமியென் புஞ்சகடும்
காராய கட்டையும்வெங் காளியப்பேர் நாகமுமே.       (49)

மதங்கி

தாழிசை

காளமேகமும் வெளிறிமின்னிய கண்னனார்வன கிரியினில்
காமதங்கம தங்கமாமெழின் மாமதங்கம டந்தைகேள்
தாளநின்முலை யிடைகுறுந்துடி தவளசங்கதிர் களமுகம்
தகசந்திர வலையநூபுர சரணமென்பது மத்தளம்
நீளூம்யாழின முன்கைகார்குழ னெற்றிவேடன தம்புரு
நிறுத்தினன்றொறு சற்றுடுக்கைநெ கிழ்க்கவேண்டுநின் சிந்தையே
நாளுநச்சின னாடகத்தினி நட்டுவாவெனு மதிசயம்
நாட்டவாளினை சுழலுமுன்பல கூட்டவாள்சுழல் கின்றவே.

நேரிசைவெண்பா

சுழல்காற்றை மாய்த்துஞ் சுடர்நெருப்பை யுண்டும்
நிழல்பார்த் திடபகிரி நின்றோன் – குழலூதிக்
கற்றாக் குவித்த கடவுளவ னேயனைத்தும்
பெற்றாக்கு வித்த பிரான்.

33- அடி நேரிசை ஆசிரியம்.

வித்தகர் கருத்துட் பத்தி பாய
நீலம் பழுத்த கோல மேனி
காற்கடன் முகந்த சூற்புய லென்று
கதிரிளங் கொங்கைச் சதிரிள மங்கையர்
இயலுறு கலாப மயினட மாடக்
காயா மலர்விரி காயா வனமென
அரையர வல்லி வரையர மகளிர்
குழலிசை வண்டு குழலிசை பாட
அங்கையிற் றாங்குஞ் சங்கமுந் திகிரியும்
புதையிருள் சீக்கு மதிகதிரென்ன
கவண்கலா லிசைசெய் சிவந்தவாய் மழலைக்
கொடிச்சியர் கண்போ லடிக்கடி சுனைதொறும்
பதுமச் செங்கா டிதழ்குவிந் தலர
இருவகைக் காந்தமும் பெருமுனி வர்க்குப்
புனலும் புகையாக் கனலுங் கொடுப்ப
வனந்திரி மேதி யினஞ்சொரி தீம்பால்
கங்கையிற் பரக்கப் பொங்குதேன் வெள்ளம்
சாம்புன தம்போன் மேம்படு சாரல்
சோலை மாமலை மேலினி தமர்ந்தோய்
அதிர்ந்துவெண் பரிக ளெதிர்ந்தவென் றஞ்சி
பசும்பரி யேழும் விசும்பிடை மறுக
விரிதிரை கொழிக்கும் பரிபுர நதியோய்
மழுப்படைக் கடவுள் விழிக்குடை யாத
சித்தசர் கோடி யொத்தகட் டழக
சடைகொடு வேட்ட விடையுடை யவற்காப்
புரஞ்சொற் றருளிய பரஞ்சுடர் மூர்த்தி
குருகூர் விளங்க வருசட கோபர்
வழுத்தவிர் நான்மறை விழுப்பொருள் பழுத்த

வாக்கெனு மமுதந் தேக்கிய வொருநீ
புவிமேற் சிற்சிலர் கவியுங் கொண்டனை
ஆங்கவை தமக்குப் பாங்கெனும் வளைகாய்ப்
புளியென மகிழ்ந்தனை போலும்
எளியேன் புன்கவி யேற்பதெத் திறமே.       (52)

குறம்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

ஏற்றபூங் கோதைகே ளிடபமால் வரையில்வா
ழிளங்குறப் பாவையான் விளங்குறப் பாவையும்
சாற்றுவேன் கண்ணர்முன் வெண்ணெயாக் குவியவே
தானடுக் குறிசொனேன் சயிலமா தினைமுதற்
போற்றினே னாழியின் னெல்லையுஞ் சங்கையும்
பூரியெட் டக்கரஞ் சீரினிட் டெம்பிரான்
தோற்றுவார் வாக்குநன் கூழ்பெலங் கஞ்சியச்
சுதர்விடா ரம்பரத் துணிவையா யினியமே.       (53)

கைக்கிளை.
மருட்பா.

இனியஞ்ச னெஞ்சே யினியவிசை யேழும்
கனியாறு காலுமிரு காலும் – முனிவர்
தொழுதா ளழகர் சுரும்பில்
எழுபூ வாய்ந்த திவளணங் கவளே.       (54)

சித்து.
தாழிசை.

அலகைமாமுலை யுண்டகொண்டல்புள்
ளலகையன்றுப குந்தமா
லழகர்தாள்தெரி சித்தசித்தா
னுக்கிரகம்பெறு சித்தர்யாம்

சலனமேனொரு கடகநற்கரி
தனையழைப்பிமுன் னாகமா
தங்கமாக்குவெ மெய்தராவிடு
சந்தமிக்குயர் பணம்வரும்

இலகிரும்புத னைப்பொன்வெள்ளியொ
டேற்றுவோமுரை குறைபடா
தெடுத்ததாம்பிர மாழை மச்சநம்
மிரதவாதம தன்கையிற்

பலமருந்தறி வொஞ்சொல்வோமதி
பசியவர்க்குப சரியையா
படியளப்பந மக்குமாவடை
பழவனம்பிரிய மப்பனே       (55)

கட்டளைக்கலித்துறை
அப்போத கத்துறை செந்திரு மார்பத் தழகர்பனைக்
கைப்போத கஞ்சொன்ன மாயரெக்காலங் கருணை செய்வார்
மெய்ப்போ தகநமக் கெந்நாள்வரும் வினையென் றொழியும்
எப்போ தகமு மமதையும் போம்புக லேழைநெஞ்சே       (56)

சம்பிரதம்

14-சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்

ஏழுலோ கமுமிக்க மண்டலத் தூடடைத்
திடுவோங் குணக்கு வெய்யோ
ரெமதிசை புகச்செய்வோ முத்தரத் தூடுபன்
னிருதிங்க ளெண்ணி விடுவோம்

வாழ்குகையு ளண்டரை யரம்பையரை நாரதனை
வரவழைப் போம் படர்கொடி
மருப்பங் கயங்கள்பல் குதிரைகுடை சுனையிலெழ
மாதேரை யடைய நினைவோம்

தாழ்வறும் புல்லையடு புலிசெய்வோந் திரணத்தை
யுந்திருத் தூணாக்கு வோம்
தருமெறும் பிதனைமத கரிசெய்வோந் துவரையைச்
சண்பகா டவியாக்கு வோம்

ஆழிநீர் முன்பொருப் பாக்குவோ மெய்யகலு
மாவிகள் வரப்பண்ணு வோ
மதிரகசி யங்கேளு மழகர்தாட் காளலா
வதிதெய்வ முன்விடுவ மே.       (57)

கலிவிருத்தம்.

விடலறு மறையினும் விடவ ராவினும்
நடமிடு மழகரெந் நாளி ரங்குவார்
தடமுலை மயிலொரு சரம் விடாமுனம்
அடன்மதன் விடுசர மனந்த கோடியே.       (58)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

கோடிதவ முயன்முனிவோர்க் கருள்பதத்தா மரையார்
குறியவரா கம்பெரிய நெடியவரா கமுமாய்
ஆடிரண சிங்கமுமா மெம்மான்பல் கலையோ
டம்புலிதாழ் கோட்டிடபத் தணிவரையைக் கண்டால்
மூடி ருளைப் பொருதறுகண் மறலிகடா விடிலே
முடுகொருக டாமடங்கு மூன்றுகடா மடங்கா
தோடிவரக் குளிறிவெளி றியகளிறு வந்தே
யுறப்பிடரி னிணைத்துலவும் பிறப்பிடர்மற் றி**ய.       (59)

தாழிசை.

இடர்களென்ற திரைகளாலி டிந்துதீரம் வீழவே
யெழுந்தபாவ சாகரத்தி னிடைமிதந்த திரணநான்
மடமைநெஞ்ச நாளிலே மகிழ்ச்சிகூர்ந்த தெம்பிரான்
மந்த்ரமூல சொருபகாந்தி யிந்த்ரநீல மல்லவோ
உடன்மறந்த மறவிராத னுறவிராத தறுகணா
னொடுங்கவந்த னாவிபோயொ டுங்கவந்த நிருதரும்
திடமலைந்து விடமலைந்து தென்னிலங்கை வென்றவன்
திங்கள்குன்ற முத்திலங்கு நங்கள்குன்ற மாயனே.       (60)

கட்டளைக்கலித்துறை.

மாய்கின்ற தேவர்க்கெ லாமண வாளர் வடிவழகர்
வேய்கின்ற குல்லையென் றோதரு வாரெங்கள் மின்கரும்பு
சாய்கின்ற பூவணை யாலைபொன் னோலையிற் றாவுங்கண்ணீர்
பாய்கின்ற சாறு குறுவேர் பிதுங்கிய பான்முத்தமே.       (61)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

பாலிருந்த நீர்பிரிப்பீ ரொருநீ ருங்கள்
பங்கயத்தோன் றன்னாவைப் பாரா னென்கண்
போலிருந்தா ரையமெனை யும்பிரித்தா னிந்தப்
புண்ணியமுங் களையடையும் போமோ சொல்லீர்
சேலிருந்த கொடியோனைப் பெறுமால் சோலைச்
சிலம்பாற்றி னிரைதெவுட்டித் திரைமுத் தூஞ்சல்
மேலிருந்து விளையாடிக் கமல வீட்டின்
மென்பேட்டி னுடன்செல்செங்கால் வெண்புள் ளீரே.       (62)

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

புள்ளின்வாய்க் கிழித்தார் மருதிடந் தழித்தார்
பூதனை யாருயிர் கழித்தார்
புறகுசுழல் காற்றுண் டுதிரமொண் டிரைத்தார்
புரவியோ டிரவியை மறைத்தார்

துள்ளிய குயிலைப் பூத்ததே மாவைத்
தூற்றுமன் னையைச்சிறு காற்றைச்
சுடுமதி கோர மதியினை விடுத்தார்
தோன்றிய மதியையென் சொல்வேன்
விள்ளரும் பிலத்துட் பணிகளோ வென்று
விகங்க பூபதியெழக் கனகன்
வெங்குடர் பிடுங்கி யெறிந்துறங் கிழித்து
விடாய்க்குவெங் குருதிநீ ருறுஞ்சி

பிள்ளையைப் புரந்த வெள்ளெயிற் றகல்வாய்ப்
பெருங்குரற் சிங்கமெங் கணுந்தேன்
பெருக்கெறி சோலைப் பொருப்பலங் காரர்
பிறர்க்குப் காரமொன் றிலரே.       (63)

கட்டளைக்கலித்துறை.

ஒன்றாகி மூன்று வடிவா யடியவ ருள்ளத்துள்ளே
நின்றாய் புறத்தும்புள் ளேறிவந் தாயெங்கு நீநிறைந்தாய்
நன்றாமுன் னாடல்பொன் னாடர்கை கூப்பிய நங்கள்குன்றிற்
குன்றா மரகதக் குன்றே குன்றேந்து குணக்குன்றமே.       (64)

கலிவிருத்தம்.

குணசலதி யாமழகர் குலவரையின் முகில்காள்
மணமலரின் வண்டுநிகர் வன்கணர்பி ரிந்தார்
கணவரவர் நெஞ்சது கருங்கல்ல வோவென்
புணர்முலையில் வந்துவிளை பொன்னையுரை யீரே       (65)

மடக்கு.
கொச்சகக்கலிப்பா.

ஈரமதிச் சோலைவரை யிறைவர்மதிச் சோலைவரை
சாரகவி மானமறார் தாரகவி மானமறார்
ஆரணந்தா மோதரனா ரயனாந்தா மோதரனார்
சீரரங்க மொழியாரே தீயரங்க மொழியாரே.       (66)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மொழியு மினியீர் குழைவார்ந்தீர் முத்த
மிழச்செய்யுட்பயின்றீர்,
வழியு மாசா ரமுஞ்சிறந்தீர் மதுரக்
கழைகா ளினிக்கேளீர்,
பொழியுங் கொடையா ரழகர்வெற்பிற் புராரிக்
கெதிர்போய்த் தழல்விழியால்,
அழியுங் காமன் பழிகாரனங்கே
யிணக்க மாகாதே.       (67)

நேரிசைவெண்பா
அங்காப் பொழிய வருணனுக்குத் தேனருவி
அங்காப் பொழியேற் றசலமே – பங்கயமேல்
துங்கத் திருப்பிரியான் சுத்தத் தமிழ்ப்புலவர்
சங்கத் திருப்பிரியான் சார்பு.       (68)

வஞ்சித்துறை
சாரலங் காராமால்
சாரலங் காராமால்
நீரலங் காராமால்
நீரலங் காராமால்.       (69)

சந்தவிருத்தம்
அலங்கார யமனும் புறஞ்சாய விதழ்மென்
றறுங்காது பொருகும்ப கனன்வீழா
இலங்கேசன் மகுடந் தகர்ந்தோட முனையம்
பெயுங்கார்மு கமன்முன்பென் மயல்கூறீர்
கலங்காம லரசன்முன் செலுங்காம துவசங்
களைந்தேவின் முதல்தின்று மகிழ்வாயே
சிலம்பாறு தனில்வந் திளம்பேடை குமுறும்
சிலம்போசை நறவுண்ட குருகாரே       (70)

நேரிசைவெண்பா
காமனார் வெள்ளைக் கருப்புவில்லே கீற்றுமதி
தாமடுவுச் சிந்து சரங்களே – ஆமாம்
வளைத்தெய் வசிகா மணிநிகரில் லாவெள்
வளைத்தெய் வசிகா மணி.       (71)

கட்டளைக்கலித்துறை.

மணியுந்தி யான நதிபாய் வனவெற்பன் மண்ணும்விண்ணும்
தணியுந்தி யானலங் காரனெங் கோவெனுந் தாமமென்னும்
பணியுந்தி யானந்த வேளென்னு நீலம் பசுங்குரும்பைக்
கணியுந்தி யான மிடுந்திசை பார்க்குமென் னாரணங்கே.       (72)

நாரைவிடுதூது.
அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

ஆரமா மலையிற் றொன்றி யங்கங்கோ டிச்செய் தீங்கால்
ஈரமே வியதென் காற்று மிந்துவுஞ் சமனே கண்டீர்
வீரமா லலங்காரர்க்கு விடவரா விடவ ராதோ
தீரமே நாரை காணீர் செல்லுவீர் சொல்லு வீரே.       (73)

கட்டளைக்கலித்துறை.

சொல்லா ரணப்பொருண் மாலலங் காரர்தண் சோலைவெற்பில்,
வல்லா ரிளங்கொங்கை மங்கையெங் கேமனு நூல்வழியிற்,
செல்லாச் செலுத்தொரு கோல்போன் முடங்கிய தீங்கரும்பு,
வில்லானைங் கோல்வென்று முக்கோல் விழைந்திட்ட வேதியரே.       (74)

சந்தவிருத்தம்.

வேதாவே னச்சொல்சுதர் பூமேல்வ ரத்தளரின்
மீதாம்வி சித்ரர்மறை வேரானார்
வாதாச னச்சயன ராராம வெற்பிறைவர்
வாராம லெய்த்ததுயர் சீராமா
சாதார ணத்ததல வேள்பூச லிப்பொழுது
தாரா மடைக்குருகு தூதாமோ
போதா வவைக்கறிவு போதாவெ னிற்பரிவர்
போதாம லர்த்துளவு போதாவே.       (75)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தாவுமன் புள்ளவர் மேவுமன் புள்ளவர்
தக்கதா மலையினார் மிக்கசே மலையின்மேல்
ஆவியுங் கூடுமா வோவியந் தேடுமே
வலகிலா வஞ்சன்முன் னுலகெலாங் கஞ்சமும்
காவியும் மகரமு நாவியுஞ் சிகரமுங்
காந்தளுஞ் சங்கமும் பாந்தருளுஞ் சிங்கமும்
கோவையு மாரமும் பூவையுங் கீரமுங்
கொஞ்சுமின் சொல்லுநீண் மஞ்சும்விண் வில்லுமே.       (76)

நேரிசைவெண்பா

மஞ்சுகா ளுங்களைப்போல் மாரன்பூ மாரிபெய்ய
விஞ்சியது பேராசை வெள்ளங்காண் – தஞ்சம்
வழுத்தீர் மதிச்செங்கண் மாலலங் காரர்க்கு
வழுத்தீர் மதிச்செங்கண் மால்.       (77)

வஞ்சிவிருத்தம்.

செங்கண் மாயவர் சீபதி
மங்கை யாரிடம் வண்புனம்
கொங்கை யுங்கணுங் குதலையும்
அங் கரும்பிணை யாகுமால்.       (78)

தாழிசை.

மாலுநான்முகனு மரனுமாமழகர்
மால் விடைச் சயில மயிலனீர்
நீலராமிறைவ ரின்னம்வந்திலர்கன்
னெஞ்சர்போலு மினியென்செய்வேன்
ஆலகாலம்வட காலதாகவெதி
ரம்புகாலவில் வளைத்ததால்
காலகாலர்கள மெனவிருண்டுபல
காறிறந்தமழை காலமே.       (79)

கட்டளைக்கலிப்பா.

மழையுறங்குத டஞ்சோலைமாமலை
வாணன்வாணன்க ரங்களைப்பூதங்கள்
விழையும்பாரவெ ழுக்களென்றேபற்றி
வீசுமாலும்பர் வேதாமவருக்கே
பழயநான்மறை சிங்காசனமலர்ப்
படுக்கைவீடுந டுக்கடல்வெண்ணெய்போல்
குழையுமன்பர்க ருத்தேயுபரிகை
குளிர்நிலாமுற்றங் கோகுலங்காணுமே.       (80)

மடக்கு.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

குலமலைமா யாவாழி கொடியவென்றன் சிந்தா
குலமலைமா யாவாழி கொடியமதி ளிலங்கை
நிலமலைய மாதவரி னானெறிந்தாய் மந்தா
நிலமலைய மாதவர்கை நின்னாமங் கண்டாய்
பலவருண வாரீச நயனமுழு நீலோற்
பலவருண வாரீசன் பயப்படவெற் பெடுத்து
நலவரிசைக் கவிகைபுனை காரேதென் குருகூர்
நலவரிசைக் கவிகைவிடா நளினமின்னா யகனே.       (81)

கலிநிலைத்துறை.

நளினவி லோசன ரழகர்பு லோமிசை நாதன்றன்
இளவலு மாயவர் மாயவர் வெற்பினி விலையோகாண்
தளையவிழ் மல்லிகை புல்லிய வண்டீர் தமியேன்போல்
வளைகலை நாண்மதி தோற்றிட நின்றே மருண்மாலை.       (82)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

மருதொடித்து விளவெறிந்து குருந்திலேறி
வடத்துறங்கிச் சோலைமலை வருமால்வெற்பில்
இருதலைப்புள் ளென்னவிருந் திமைப்புநீங்கா
வெனைப்பிரிந்த பாதகர்நாட் டில்லைபோலும்
அருவிமத மிக்களைமா தளைகடள்ளி
யடையலர்மாக் கோட்டையிடந் தாவிதேக்கித்
தெருவுதொறு மால்யானைக் கன்றுபோலத்
தென்றலிளங் கன்றோடித் திரியும்வேனில்.       (83)

கட்டளைக்கலித்துறை.

திரியுங் கிரிக்கெதிர் சென்றோ ரழகர் திருமலைமேல்
பரியுங் கொடித்தடந் தேர்வல வாபரி போற்றிரைகள்
விரியும் புனற்கட லுண்டமை யாதுநம் மின்கொடிகண்
சொரியும் புனற்கடற் கோடுதல் பார்நுண் டுளிப்புயலே.       (84)

நேரிசைவெண்பா.

புயல்பார்க்குஞ் சாதகமே போன்றேன்பொன் னாட்டின்
இயல்பார்க்குஞ் சேமலைமே லெந்தாய் – தயையின்
நிலையா திருக்கவரு ணேயா மிடிதீர்த்
தலையா திருக்க வருள்.       (85)

வலைச்சியார்.
அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அலைகடலி னடுத்துயிலு மழகர்நாட்டி
லஞ்சொலெலாங் குளமாக வஞ்சனக்கண்
வலையெறிவீர் பொய்கைவிட்டென் னாவிதாங்கும்
வரலாறு கேளுமச்ச மருங்குநில்லும்
கலைமதியோ டாரலலர் வெளிச்சைமீறுங்
கவலைமுன்னீ ரிரையேர்க்குங் கனகருப்பம்
சிலையருவ ரால்மலங்கு படுதல்பாருந்
திருக்கைவையு மழைச்சுறவைத் தேடுவீரே.       (86)

கொற்றியார்.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேடுதமிழ் வடிவழகர் நெடியவிடை மலைமேற்
சிறியவிடைப் பெரியவிடைத் திருக்குலத்தி னமுதே
கூடுகின்ற வெண்ணெடொடும் வேனிலா னெய்யுங்
குறைவிலைவிற் போரதிகங் கொண்டதெழு படிகாண்
நாடறிந்த ததிமோக முறையிணக்கம் வையு
நவமணிசேர் பொன்னாழி நல்குவேன் மெல்ல
ஆடைதனை யொதுக்கிடுமென் பால்வாரு மிச்ச
மாமுழக்கு மோர்போது மகலேனந் தமையே.       (87)

தாழிசை.

நந்தனந்தன வென்றுகார்தனை நங்கைசெங்கைமு கிழ்க்குமின்
நளினமாதென விகலுமாரனை நமதுசாபம்வி டாதெனும்
சந்த்ரசூரியர் தங்களைச்செய சங்குசக்ர மெனத்தொழும்
சலதியாடுதல் யமுனைமூழ்குத றவமெனுந்தலை நாளிலே
ஐந்தலைப்பணி யுந்தருப்பையு மாகிலேனெனும் வேணுவா
யமுதமுண்டுயர் வம்சமானத திட்டமேயெனு மாசைநோய்
மந்திரத்தில றாதுதீர்க்குநின் வாசம்வீசிய துளவுகாண்
வாசவன்பதி பரவுசீபதி வாசசுந்தர ராசனே.       (88)

சுரம்போக்கு.

கட்டளைக்கலித்துறை.

சுந்தரத் தோள ரழகர்நன் னாட்டன்னத் தூவியந்தாள்
மந்தரத் தீஞ்சொற் கிளிசெல்லு மோசக்ர வாளஞ்சுற்றி
அந்தரப் பானுவு மோடச்செந் தீயுநெட் டாழிவிழக்
கந்தரத் தன்குளக் கண்போற் கொதிக்குங் கடுஞ்சுரமே.       (89)

பிச்சியார்.

மடக்கு – எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மேதினிபோற் றழகர்மலைத் திருப்பிச்சி யாரே
வெளிப்பட்டீர் முனிவர்மலைத் திருப்பிச்சி யாரே
கோதுபடு குழல்போக விளங்குதலைச் சுகமே
கொள்ளைகொண்டீ ரிங்குவர விளங்குதலைச் சுகமே
காதிலிட்ட செம்பணியு நடுக்காவி யுடையுங்
கபாலமுஞ்சூ லமுங்கண்டே நடுக்காவி யுடையும்
ஆதரியு முங்கள்சிவ மதவேடந் திரமே
யறிவீரே யன்றெதிர்த்த மதவேடந் திரமே.       (90)

நேரிசைவெண்பா.

மதுசூத னாமுகுந்தா வாமனா மாயா
அதிரூபா ராமா வழகா – எதுவீரா
வெண்ணந் துளவா விமலா மகலாட்சா
தண்ணந் துளவா சரண்.       (91)

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

சரணகோ கனகங் கற்பக நாறத்
தண்டுழாய் முடிபரி மளிக்க
சங்குநே மியும்வெண் ணிலாவெயி லெறிக்கத்
தமனியத் துகில்பள பளக்க

மரகத மேனி யெழில்பழுத் தொழுக
மகரகுண் டலம்புயத் தலம்ப
வனசலோ சனங்க ளருண்மழை பொழிய
வந்தநின் கோலநான் மறவேன்

திரன்முலைக் கிராத நுணுகிடைக் கிராத
சிறுமிகள் முகமதி யெனவாய்
திறந்தவாம் பலையும் பறந்தவண் டையுஞ்செந்
தீயெழு புகையெனப் பதறி

விரனெரித் தடங்கா விழிபுதைத் தோடி
வெண்பளிக் கறைகுடி புகுங்கா
வெற்பலங் காரா வுற்பலங் காரா
மெய்யனே தெய்வநா யகனே.       (92)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தெய்வசிகா மணியையெங்கள் சாரசோர
சிகாமணியைக் கண்மணியிற் சிறந்தோன்றன்னை
ஐவர்சகா யனைமுதலுந் தும்பியன்றோ
வழைத்ததின்னந் தும்பிகளே யழைத்துவாரும்
கைவருபந் தாடுமணி முற்றமெல்லாங்
கமழ்பனிநீ ரிறைத்திறைத்துக் கழுநீர்போலும்
மைவிழியார் குளமாக்கி விட்டாரென்ன
வன்பகையோ பொருமுதலை வளர்கின்றாரே.       (93)

எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

வளங்குலவு தண்டலைநெ டுங்கிரிமு குந்தர்நல்வ
ரந்தினம்வ ழங்கழ கர்தாம்
இளங்குதலை கொஞ்சியப சுங்கிளிகள் கெஞ்சியுமி
ரங்கியினம் வந்தில ரையோ
உளங்கரையு மென்சொலமு னஞ்சமன டுங்கிடவு
தைந்தவர்வெ குண்டு சுடவே
களங்கமற வெந்ததும தன்சடல மென்றனர்க
ரும்புகையொ ழிந்த தலவே.       (94)

மடக்கு.

பன்னிருசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அலமேந் தழகர் பதிச்சுனையே
யாடு மேமெய்ப் பதிச்சுனையே
யணில்வாற் கதிர்போ மருந்தினையே
யகன்றே மேய மருந்தினையே

குலவஞ் சுகமே கோகிலமே
கொம்பிற் புனத்திக் கோகிலமே
கூட வளர்மா தவிப்போதே
கொடியார்க் கென்மா தவிப்போதே

கலைமுன் பிரியக் கணக்கன்றே
கரும்பைப் பிரியக் கணக்கன்றே
கணியார் காட்டு மருவலரே
கணியார் காட்டு மருவலரே       (94)

சலதி முகக்கு முகமஞ்சே
தனித்தே நிமிட முகமஞ்சே
தைய லொதுங்கும் வரவழையே
தயையுண் டானால் வரவழையே       (95)

அகவல்.

வரம்பெற் றிடுதலி னருந்தவக் கிழவரும்
கண்டகரை யடர்த்தலின் மண்டலத் தரசரும்
கற்பக மண்டலிற் கனக நாடரும்
கானமு ழக்கலி னானகந் திருவரும்
எழுதரு மறைகள்கூ றிடலால் வியாதனும்
போதக மோதலிற் புராணவே தியரும்
சாந்தமுற் றிடுதலிற் றனிஞா னிகளும்
மான்மத மடுத்தலின் வைணவக் குரவரும்
நவமணி விரித்தலி னன்னா வலரும்
அன்னம் வழங்கலி னகவாழ்க் கையரும்
செம்பொன் னீட்டலிற் றிருப்பாற் கடலும்
அச்சங் களைதலி னமுதசஞ் சீவியும்
பூமிதந் திடுதலிற் புண்ட ரீகனும்
பொங்க ருரைதலிற் பூவை வண்ணனும்
அம்பிகை கலத்தலி னந்தி வண்ணனும்
பொருமலை யெறிதலிற் புலோமிசை கொழுநனும்
அகிலங் காட்டலி னலர்கதிர் ஞாயிறும்
முத்தமிழ் துதித்தலின் முழுமதிக் கடவுளும்
சிவணுங் கடவுட் சிலம்பாற் றிறைவ
இருபது சிகரத் தெண்ணிலாச் சிகரப்
பொன்மலை வளைத்த செம்மலை யேந்தும்
வெண்குன் றெடுத்த கருங்குன் றொருநாள்
முழைவாய் திறந்து மழைபோ லிடித்து
முடுகுசெங் களத்துக் கொடுமரம் வாங்கி
அடுசம ராட நடுநடு நடுங்கி
கொடிமுடி கவிழ்தலிற் குறுநகை பூத்து
நாளைவா வின்றுன நீள்பதிக் கேகென
விடைகொடுத் தருள்மால் விடைமலை வாண
உந்திக் கமலத் துச்சிவிட் டிறங்கி
கருத்திற் றெளிந்த கரகநீ ராட்டிக்
கண்டகண் போற்குளிர் தண்டுழாய் சாத்தி
இசைமக ளுடன்றுதித் தெண்ணில் கோடி
பிரமர்போற்      (*)றிய பரம சாமீ
அளவறு பிறைகளும் களனுறு கறைகளும்
கணக்கிலா மழுக்களும் குணக்கிலாக் கழுக்களும்
உடையார் புலித்தோ லுடையா ரிடையார்
அலகிலா வுமைகளு மிலகுபன் னதிகளும்
பதிகொ ளத்தனார் குதிகொள் மத்தனார்
வீரபத் திரமுதற் கோரபுத் திரரொடும்
அனந்த முருத்திரர் தினந்தினந் தொழுதிடும்
திருவடி யுடைய பிரம மூர்த்தி
ஒருவிண் ணப்பமுன் பெருமுனி பின்னர்
நம்பிநன் னிழலிற் றம்பின் தொடரச்
செஞ்சிலை யொடும்போய்க் கருஞ்சிலை மிதித்து
மின்னிள மேகமும் வில்லும் பிறையும்
அரவிந் தமுமாங் கதிற்சில பூவும்
சங்கமுந் திகிரியும் பங்கய முகுளமும்
காந்தளுங் கொடியும் பாந்தளுங் கதலியும்
மாவிளந் தளிரும் வகுத்தனை மீண்டும்
புன்மதி யுடைய வென்மனப் பாறையை
நற்பதப் படுத்தி யற்புதம் விளைக்கும்
கண்ணநீ யுண்ணக் கவர்ந்த
வெண்ணெய் செய்து விடுவதுன் கடனே.       (96)

தாழிசை

வெண்ணெய்சூறை கொண்டகொண்டல் மேனிமாயர் வனகிரி
விறலியென்ற கோகிலத்து மென்பெடைக்கோர் சேவல்கேள்
பண்ணுமிங்கு தங்குடைந்து பாணர்தம்மை வென்றபின்
பாதகற்கு மருமையோவோர் பாணநின்னை வெல்வது
வண்ணமார் பெழுந்தகொங்கை கிண்ணமென்ப ரதுமெய்யா
வந்துபா னிறைந்ததுண்மை மதலைபால னென்பதும்
எண்ணெயீது பசுநரம்பெ னுங்கொடிக்கு விட்டநீ
ரேற்குமோ வவர்க்கும்யாழின் வீக்குகாய நின்பமே.       (97)

எழுசீர்க்கழிநெடிலடி வாசிரிய விருத்தம்

காயரன் பிரமர்முத லோர்தொழுஞ் சனகர்நிமிர்
காளமஞ் சனவழகர் மா
மாயரம் புவியுநவ நீதமுங் கமிழ்பவள
வாயர்கண் டிலர்கொ லளிகாள்
பாயும்வெம் புலிபொருத மாமனென் பவன்விடுமோர்
பாறைநெஞ் சினள் சிகரநேர்
ஆயகொங் கையிலொழுகு பால்பரந் தெனவிரிய
கோர சந்திர கிரணமே.       (98)

சந்தவிருத்தம்

சந்தன நிழற்குளிரு வந்ததகை தீரச்
சந்திரமுகி யேகவியு மிந்த்ரதரு மானும்
ஐந்தலை யராவில்வரு மழகர்பழ மறைதே
டரியமுனை யார்முளரி தெரியமுனை போல்
வந்தருணம் வைகையிது பொய்கையிது முத்தின்
வண்டலிது கொண்டறவழ் மண்டபமி தல்லால்
செந்திருநன் னகரமிது சிகரமிது சோலைச்
சிலம்பிடைசி லம்பியசி லம்புநதி யிதுவே.       (99)

கட்டளைக்கலித்துறை.

நதிபெற்ற பாதர் மலையலங் காரர்நன் னாட்டணங்கே
கதிபெற்ற னன்னந்த மீகாமன் காமன் கழைகழையே
பதிபெற்ற வவ்வங்க மிவ்வங்கஞ் சங்கம் பலித்ததங்கே
துதிபெற்ற முத்தங் கிடைத்ததொப் பேதுன் சுகக்கடற்கே.       (100)

அறுசீர்கழிநெடி லாசிரியவிருத்தம்.

சகமும் பிகமும் மறையோதும் சோலை மலையி லலங்காரர்
இகமும் பரமும் வகுத்தபிரா னெல்லாப் பதமும் தரவாழ்
மகமுந் தவமுஞ் செய்ததொக்கும் மானந் தனைக்கும் பிடுவ
செகமும் பரவுஞ் சிலம்பாற்றுத் திருநீர் படியு மொருநீரே.       (101)

ஸ்ரீ அழகர் கலம்பகம் முற்றுப்பெற்றது.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அழகர் கிள்ளை விடு தூது–ஸ்ரீ சொக்க நாதர் புலவர்

October 23, 2023

ஸ்ரீ அழகர் கிள்ளை விடு தூது

கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடிய நூல் அழகர் கிள்ளை விடு தூது.
காப்பு வெண்பா ஒன்றையும், 239 கண்ணிகளையும் கொண்ட நூல் இது
இந்நூலை இயற்றியவர் சொக்கநாதப் புலவர்.

  1. திருமாலிருஞ்சோலை,
  2. இடபகிரி,
  3. தென்திருப்பதி,
  4. சஞ்சீவி பர்வதம்,
  5. பழமுதிர்சோலை

எனப் பல பெயர்கள் உண்டு.

கிள்ளை விடு தூதில் அழகர் மலை சிறப்புகள், இறைவன் சிறப்புகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
அழகர் மலைக் கடவுள் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை அவரிடம் கூறக் கிளியைத் தூது அனுப்புவதாக அமைகிறது நூல்.
நூலின் முதலில் கிளியின் பெருமைகள் சொல்லப்படுகின்றன.
அடுத்துக் கோடைத் திருவிழாவில் அழகர் உலா வரும் அழகும், அப்பெருமானிடம் தலைவி தன் உள்ளம் இழந்த வரலாறும் சொல்லப்படுகின்றன.
இறுதியாக அழகரிடம் தன் காதலைத் தெரிவித்து அவருடைய மாலை ஒன்றை வாங்கிவருமாறு கிளியிடம் கூறுவதாக நூல் அமைகிறது.

இவர் மதுரை நகரைச் சார்ந்தவர். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.

பலபட்டடைக் கணக்கு எழுதும் தொழில் செய்யும் மரபில் வந்ததால் இப்பெயர் பெற்றார்.

அழகர் மலைக்கு,

  1. திருமாலிருஞ்சோலை,
  2. இடபகிரி,
  3. தென்திருப்பதி,
  4. சஞ்சீவி பர்வதம்,
  5. பழமுதிர்சோலை

எனப் பல பெயர்கள் உண்டு.

——–

திருமாலிருஞ்சோலைமலை யென்பது பாண்டி நாட்டுத்‌ திருமால்‌ திருப்பதிகள்‌ பதினெட்டனுள்‌ ஒன்று.
சங்ககாலத்து நூலாகிய பரிபாடலில்‌ இதன்‌ பெருமை சிறப்பித்துச்‌ சொல்லப்‌ படுகின்றது.
அந்நூலில்‌ இளம்பெருவழுதியாரென்னும்‌ புலவ ராற்‌ பாடப்பெற்று, மருத்துவன்‌ நல்லச்சுதனாரால்‌ இசை யமைக்‌கப் பெற்ற
நோதிறப்‌ பண்ணிலமைந்த பதினைந்தாம்‌ பாடல்‌ இத்தலப்‌ பெருமையை விரிவாகக்‌ கூறும்‌;
அப்பாடலின்‌ பொருட்‌ சுருக்கம்‌ வருமாறு :–

‌அறிவெல்லையால்‌ அறியப்படாத புகமுடனே விளங்கி நிலத்தைத்‌ தாங்கும்‌ சக்கர வாளம்‌ முதலாகத்‌
தொல் லிசைப்‌ புலவர்கள்‌ ஆராய்ந்துரைத்த குன்றங்களைப்‌ பொதுவகையால்‌ சொல்லப்‌ புகுந்தாற்‌ பலவாம்‌ ;
அப்பலவற்றுள்ளும்‌ நிலத்தில்‌ உள்ளோரது பசித்‌ துன்பத்தை நீக்கி, நிறை பயன்களெல்லா வற்றையும்‌
எப்பொழுதும்‌ அவர்‌ பெறப்‌ பயன்படும்‌ குன்றுகள்‌ சில;
அச் சிலவற்றுள்ளும்‌ தெய்வங்கள்‌ தாமாக விரும்பும்‌ மலர்‌ களையுடைய தடாகங்களும்‌ மேகம்‌ படியும்‌ சிகரங்களும்‌ உள்ள குல வரைகள்‌ சில சிறந்தன ;
அவற்றுள்ளே கடலும்‌ கானலும்‌ போல வேறு வேறாகிய நிறத்தினையும்‌, சொல்லும்‌ பொருளும்‌ போல வேறுபடாத தொழிலினையுமுடைய
மாயோனும்‌ பலதேவரும்‌ எழுந்தருளியிருக்கும்‌ சோலைமலை சிறந்தது.
துழாய்‌ மாலையை யுடைய திருமால்‌ அருள்‌ புரிந்தாலல்லாமல்‌ துறக்கம்‌ அடைதல்‌ எளிதாகுமோ ?
அரிதிற்‌ பெறும்‌ துறக்கத்தை எளிதிற்‌ பெறச்‌ செய்வதனால்‌ திருமாலிருஞ்சோலை மலையை ஏத்தக்‌ கடவோம்‌.

பலதேவரது திருமார்பிலுள்ள வெண் கடப்ப மாலையைப்‌ போல அருவியாக வீழ்வதனால்‌ சிலம்பாறு அழகுபெறும்‌.
திருமாலிருஞ்சோலை யென்னும்‌ பெயர்‌ உலகமெல்லாம்‌ பரவ, மகளிரும்‌ மைந்தரும்‌ காமத்தை விதைத்து விளைக்கும்‌
யாமத்‌ தியல்பையுடைய இருங்குன்றத்தில்‌ இளவெயில்‌ சூழ இருள்‌ வளர்தலை யொத்துப்‌ பீதாம்பரத்தையுடைய
திருமால்‌ பலதேவ ரோடு அமர்ந்து நிற்கும்‌ நிலைமையை, மாந்தர்களே !
தியானம்‌ செய்ம்மின்‌ ;அம் மலையின்‌ சிறப்பைக்‌ கேண்மின்‌ :

சுனைகளிலெல்லாம்‌ நீலமலர்‌ மலர அச்சுனையைச்‌ சூழப்‌ பொன்னிறமுள்ள அசோக மலர்கள்‌ மலர்தலாலும்‌
வேங்கை மலர்கள்‌ மலர்தலாலும்‌ பீதாம்பரத்தை அணிந்த மாயோனை ஓத்த நிலையினதாயிற்று அம்மலை.
இருங்குன்றென்னும்‌ பெயர்‌ பரவி உலகத்தில்‌ பழையதாகிய புகழையுடைய அது தன்னைக்‌
கண்டாரது மயக்கத்தை அறுக்கும்‌ தெய்வம்‌ ;
அதனால்‌ சென்று திருமாலைத்‌ தொழும்‌ ஆற்றலை இல்லாதீர்‌ !
அம்மலையைக்‌ கண்‌ டேனும்‌ பணிமின்‌.
குட்டியால்‌ தழுவப்பட்ட மந்தி பாயவும்‌, முல்லை மலர்‌ கற்பு நிகழ்ச்சியைக்‌ காட்டவும்‌, மயில்கள்‌ அகவவும்‌,
குருக்கத்தியின்‌ இலை உதிரவும்‌, அதன் கண்‌ இருந்து குயிலினம்‌ கூவவும்‌
அவ்‌ விருங்குன்றத்தில்‌ குகைக்குள்‌ முழங்குகின்ற எதிரொலி ஒழியாது.
நும்‌ மனைவியரோடும்‌ தாய்‌ தந்தையரோடும்‌ குழந்தைகளோடும்‌ சுற்றத்தோடும்‌ கூடி
அக் குன்றத்தைத்‌ தெய்வமாக மதித்துத்‌ திசை நோக்கித்‌ தொழுது சென்மின்‌.

தன்‌ திருவுந்தியில்‌ முன்பு உண்டாகிய கமலத்தை யொக்‌கும்‌ கண்ணை உடையவனும்‌,
மேகம்‌ இருள்‌ மணி ஆகியவற்றை யொத்த திருமேனியை உடையவனும்‌,
எல்லா உலகத்திலும்‌ வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்க்‌ கூட்டங்களின்‌ பிறவித்‌ துன்‌பத்தைக்‌ களைவோனுமாகிய
திருமால்‌ அன்பு கொண்டு அக்குன்‌றத்தின் கண்‌ எழுந்தருளி யிருக்கின்றான்‌.
திருமாலே ! நீ பசுந்துழாய்‌ மாலையையுடையை ; நீல மலையைப்‌ போன்றாய்‌;
மிக்க ஒளியினையுடையை; ஒற்றைக்‌ குழையையுடையை ; கருடக்கொடியை உடையை;
வளைந்த கலப்பையை உடையை; தண்டு, சங்கு, சக்கரம்‌, வில்‌, அம்பு, பாராவளை, வாள்‌ என்பவற்றை ஏந்தினை.
இங்ஙனம்‌, வேதம்‌ அவன்‌ பெருமை ஈதென்று உரைத்தலால்‌ யாமும்‌ அவற்றுள்‌ அறிந்தவற்றைக் கூட்டி உரைத்துத்‌
திருமால்‌ பலதேவரென்னும்‌ இருவரையும்‌ தொழுது அவ்விருங்‌குன்றத்தின்‌ அடியில்‌ வாழ்தல்‌
எமக்கு உண்டாகுகவென்று வேண்டுவோமாக !?

இப் பரிபாடலால்‌, முற்காலத்தில்‌ இத்தலத்தே திருமாலோடு
நம்பி மூத்தபிரானாகிய பலதேவரும்‌ கோயில் கொண்டு எழுந்‌தருளியிருந்தனரென்று தெரிகின்றது.
அன்றியும்‌, இற்றைக்குச்‌ சற்றேறக்குறைய இரண்டாயிர வருஷங்களுக்கு முன்பே பாடப்‌ பெற்ற இப்பரிபாடலில்‌ உள்ள,
இருங்குன்‌ றென்னும்‌ பெயர் பரந்‌ ததுவே
பெருங்கலி ஞாலதீதுதீ தொன்றியல்‌ புகழது ??–என்னும்‌ பகுதி
அதற்கு முன்பே பல காலமாக இயன்ற புகழை யுடையதென்று இத்தலத்தைப்‌ பாராட்டுதல்‌ அறிதற்குரியது.

————————-

சிலப்பதிகாரச்‌ செய்தி
சிலப்பதிகாரத்தில்‌, மதுரை நோக்கிச்‌ செல்லும்‌ கோவலனுக்கு ஓரந்தணன்‌ வழியிலே
காண்பனவற்றை விரித்துக் கூறுவதாக அமைந்த பகுதியில்‌ இம் மலையைப் பற்றிய செய்திகள்‌ பல காணப்படுகின்றன :–
திருமால்‌ குன்றத்துச்‌ செல்வீராயின்‌, அங்கே மிக்க மயக்கத்தைக்‌ கொடுக்கும்‌ பிலத் துவார வழி ஒன்று உண்டு.
அங்கே புண்ணிய ஸ்ரவணம்‌, பவ காரணி, இட்ட சித்தி என்னும்‌ பெயரை யுடைய மூன்று பொய்கைகள்‌ உள.
புண்ணிய ஸ்ரவணத்தில்‌ நீராடினால்‌ இந்திரனாற்‌ செய்யப்பட்ட இந்திர வியாகரணமென்‌னும்‌ இலக்கணத்தை உணரலாகும்‌.
பவ காரணி யென்னும்‌ தீர்த்‌தத்தில்‌ ஆடுவார்‌ பழம் பிறப்பை உணர்வர்‌.
இட்ட சித்தியில்‌ நீராடி நினைத்தவற்றை யெல்லாம்‌ அடைதல்‌ கூடும்‌.
அங்கே சிலம்பாற்றின்‌ கரையின் கண்‌ உள்ள கோங்க மரத்தின்‌ நிழலிலே ஒரு தெய்வப்பெண்‌ தோன்றி, ‘
இப்பிறப்பிற்கு இன்பமும்‌ மறு பிறப்பிற்கு இன்பமும்‌ இவை இரண்டும்‌ ஒழிந்து
எக்காலத்தும்‌ ஒன்றாந்‌ தன்மையாய்க்‌ கோட்டமின்‌ றி அழிவற நிற்கும்‌ இன்பமு மாகிய பொருள்கள்‌ யாவை?
அவற்றை உரைமின்‌ ;

யான்‌ இம்‌ மலையடிவாரத்திலே வாழ்வேன்‌ ; வரோத்தமை யென்னும்‌ பெயருடையேன்‌.
யான்‌ வினாவியவற்றிற்கு ஏற்ற விடையை யார்‌ கூறுகின்றனரோ அவருக்கு யான்‌ ஏவல்‌ புரிவேன்‌ .
நீவிர்‌. உரைத்தீராயின்‌ இப்பொழுது இப்பிலவாயிற்‌ கதவைத்‌ திறந்து தருவேன்‌? என்று சொல்வாள்‌.
அவள்‌ வினாவியவற்றிற்கு விடை கூறின்‌ அவள்‌ பிலம்‌ திறந்துவிடுவாள்‌
மேலே செல்லின்‌ ஆங்கொரு பெண் தெய்வம்‌ முன்னே கூறிய மூன்று பொய்கைகளையும்‌ காட்டுவாள்‌.
அப்பொய்கைகளிலே பஞ்சாக்ஷரத்தையும்‌ அஷ்டாக்ஷரத்தையும்‌ மனத்தால்‌ நினைத்து ஜபித்து நீராடின்‌ நற்பயனை அடைவீர்கள்‌.
அப்பொய்கையினால்‌ உண்டாகும்‌ பயனை விரும்பீராயின்‌, அவற்றை நினையாது, அம்மலைமீது
நின்‌றோனுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளைத்‌ தியானம்‌ செய்‌யுங்கள்‌.
அங்கே துவஜஸ்தம்பத்தைக்‌ காண்பீர்கள்‌. அப்பெருமானுடைய திருவடி தரிசனம்‌ பிறவித்‌ துன்பத்தைக்‌ கெடுக்கும்‌ (சிலப்‌. 11 : 87–138, சுருக்கம்‌.)

இப் பகுதியால்‌ இந்தத்‌ தலத்தில்
மூன்று பொய்கைகளும்‌, சிறப்புடைய கோங்கமரம்‌ ஒன்றும்‌, பிலத்துவாரம்‌ ஒன்றும்‌ இருந்து வந்தனவென்று தெரியவரும்‌.
அன்றியும்‌ சிலப்பதிகார காலத்தில்‌ இத்தலத்தின்‌ கண்ணே தெய்வப்‌ பெண்கள்‌ வாழ்ந்து வந்ததாக
மக்கள்‌ எண்ணி யிருந்தனரென்பதும்‌ பெறப்படும்‌.

————

வேம்பத்தூர்க் கவிகுஞ்சரமையரால்‌ இயற்றப்பெற்ற கலம்பகம்‌ ஒன்றும்‌,
சாமி கவிகாளருத்திரர்‌ இயற்றிய பிள்ளைத்‌ தமிழ்‌ ஒன்றும்‌,
பெருங்கரைக்‌ கவிகுஞ்சர பாரதியால்‌ இயற்றப்பெற்ற குறவஞ்சி ஒன்றும்‌
இத்தல ஸம்பந்தமாக உள்ளன.

—————

தலத்தின்‌ திருநாமங்கள்‌
அலங்காரன்மலை, அழகர்‌ கோயில்‌, அழகர்மலை, ஆராம சைலம்‌, இருங்குன்றம்‌, குலபூதரம்‌, குலமலை,
குளிர்மாமலை, குன்றம்‌, கேசவாத்திரி, கொற்றமலை, கோலமலை, சஞ்சீவி பர்வதம்‌,
சிங்காத்திரி, சீர்பதி, சோலைமலை, தர்மாசலம்‌, திருமலை, திரு மால்குன்றம்‌, திருமாலிருஞ்சோலை,
திருமாலிருஞ்சோலைமலை, தென்‌ திருப்பதி, நிலமலை, நீண்டமலை, பழமுதிர்சோலை,
பழமுதிர்சோலைமலை, பிரம்மபர்வதம்‌, மண்டூகபர்வதம்‌, மாலிருங்‌குன்றம்‌, வனகிரி, விருஷபகிரி, ஸ்ரீபதி.

பெருமாள்‌ திருநாமங்கள்‌
அலங்காரர்‌, அழகர்‌, கள்ளழகர்‌, சங்கத்தழகர்‌, சுந்தரத்‌ தோளர்‌, சுந்தரபாஹு, சுந்தரராஜப்‌ பெருமாள்‌,
சோலைமலைக்‌ கரு, தெய்வசிகாமணி, பரமசுவாமி, மலையலங்காரர்‌, மாலலங்‌காரர்‌, விருஷபாத்திரி நாதர்‌.

நாச்சியார்‌ திருநாமம்‌
ஸெளந்தரவல்லி ; கல்யாண சுந்தரவல்லி யெனவும்‌ வழங்‌கும்‌.
ஆண்டாளும்‌ இங்கே திருக்கோயில்‌ கொண்டெழுந்‌ தருளியுள்ளாள்‌.

தீர்த்தங்கள்‌
சிலம்பாறு என்பத! இத்தலத்திலுள்ள தலைமையான தீர்த்‌தம்‌.
அது தேனாறு, தூபுர கங்கை, பகவத்பாத தீர்த்தம்‌, மஞ்‌சீரநதி, விஷ்ணு கங்கை யென்றும்‌ வழங்கப்பெறும்‌.
அது திருக்‌ கோயிலுக்கு வடக்கே 23 மைல்‌ தூரத்தில்‌ இருக்கிறது.
மற்றத்‌தீர்த்தங்கள்‌ வருமாறு :–
அக்கினிவாபி, அனுமதீர்த்தம்‌, இஷ்டசிதீதி, உத்தர நாராயணவாபி, கதலிவாபி அல்லது வாழைக்‌கவி,
கருடதீர்த்தம்‌, கிருஷ்ணவாபி, நாராயண புஷ்கரிணி, பண்‌
டாரிவாபி, பவகாரணி, பாண்டவ தீர்த்தம்‌, புண்ணிய சரவணம்‌,
பெரிய அருவி, வேணு தீர்த்தமென்னும்‌ மூங்கிற்கவி.

விருக்ஷங்கள்‌
இங்கே முதல்‌ யுகத்தில்‌ ஆலாகவும்‌
இரண்டாவது யுகத்தில்‌ அரசாகவும்‌
மூன்றாவதில்‌ வில்வமாகவும்‌
இக்கலியுகத்தில்‌ புத்திரதிபமென்னும்‌ பெயரின தாகவும்‌ ஒரு ஸ்தல விருக்ஷம்‌ உண்டென்று இந்த நூல்‌ கூறும்‌.

மூன்றாம்‌ யுகத்தில்‌ பலாவாகவும்‌
இக்கலி யுகத்தில்‌ புத்திர ஜீவியென்னும்‌ விருக்ஷமாகவும்‌ இருப்பதாக இத்தல மான்மியம்‌ தெரிவிக்கும்‌.

நூபுரகங்கையின்‌ ஆரம்பத்தில்‌ ஒரு மகா வடவிருக்ஷம்‌ இருந்ததென்பர்‌.
சந்தனமரத்தைத் தலவிருக்ஷமென்பாரும்‌ உளர்‌.
சிலப்பதிகாரத்திலே சொல்லப்பட்ட கன்னிகார விருக்ஷமும்‌, இந்நூலில்‌ கூறப்படும்‌ உறங்காப்புளியும்‌
இத்தலத்தோடு .சேர்த்திச்‌ சொல்லப்பெறும்‌ விருக்ஷங்களாம்‌.
இங்கே சோதிவிருக்ஷ முண்டென்றும்‌ கூறுவர்‌.

விமானம்‌
சோமச்சந்திர விமானமென்றும்‌, சோமச்சந்த விமான மென்றும்‌ வழங்கும்‌.
இது பிரணவாகாரமானதென்று தலமான்‌ மியம்‌ கூறும்‌.

மண்டபங்கள்‌
(1) மாத்வி மண்டபம்‌ : இது சிலம்பாற்றங்கரையில்‌ இருப்‌பது; இந்தத்‌ தலமான்மியத்திலும்‌ இது கூறப்படுகின்றது.
(2)சோலைமலை மண்டபம்‌ : இது சாம்பல்போடும்‌ மண்டபமென்‌ றும்‌ வழங்கும்‌ ; பதினாறு கால்களை உடையது.
(3) கனு மண்டபாம் : கல்யாண சுந்தரவல்லித்தாயார்‌ கனுத்‌ திருவிழா நடைபெறும்‌ மண்டபம்‌.
4) வண்டியூர்‌ மண்டபம்‌ : அழகர்‌ எழுந்‌ தருளும்‌ மண்டபங்களுள்‌ ஒன்று.
(5) தேனூர்‌ மண்டபம்‌ :வையையாற்றின்‌ இடையிலே உள்ளது; அழகர்‌ எழுந்தருளும்‌ மண்டபங்களுள்‌ ஒன்று;
இது தேனூரிலுள்ள அன்பர்களாற்‌ கட்டப்பெற்றமையின்‌ இப்பெயர்‌ பெற்றது.

பூசித்துப்‌ பேறுபெற்றோர்‌
அம்பரீஷன்‌, அருச்சுனன்‌, அனுமன்‌, இந்திரத்தியும்நன்‌,
இந்திரன்‌, கந்தருவன்‌ ஒருவன்‌, கருடன்‌, குப்ஜபாண்டியன்‌,

கெளதம முனிவர்‌, சதிரிளமடவார்‌, சந்திரகேது, சுதபஸ்‌ என்‌
னும்‌ முனிவர்‌, செளனக முனிவர்‌, தருமதேவர்‌, தாலப்பியர்‌,

பச்சை வாரணதாசர்‌, பராசரர்‌, பாண்டவர்‌, பிரகலாதன்‌, பிரமதேவர்‌, புண்ணியம்‌, புரூரவ௬ு, புலத்தியர்‌, மரீசி,
மலயத்துவசன்‌, மார்க்கண்டேயர்‌, மாவலி, மைத்திரேயர்‌, யானையொன்று, ர௬ுக்மாங்‌கதர்‌, வசிஷ்டர்‌, விபீஷணன்‌.

பிற கோயில்கள்‌
(1) ஸ்ரீ நாகநாதர்‌ கோயில்‌: பல நாகர்கள்‌ உள்ள கோயில்‌.
(2) இராக்காயி அம்மன்‌ கோயில்‌ :
(3) அனுமன்‌கோயில்‌ : இஃது அனும தீர்த்தத்துக்கு அருகிலுள்ளது.
(4) கருடன்‌ கோயில்‌ : கருட தீர்த்தத்துகீகு அருகில்‌ உள்ள து.
(5) பாண்டவர்‌ கோயில்‌ : பாண்டவர்‌ தீர்த்தத்துக்கு அருகில்‌ உள்ளது.
(6) சதிரிளமடவார்‌ கோயில்‌ : இம்மலையின்‌ தென்‌ பகுதியில்‌ உள்ளது.
(7) சக்கரத்தாழ்வார்‌ கோயில்‌ : இதற்‌ குச்‌ சில நிவந்தங்கள்‌ அமைந்ததாகக் கூறும்‌ சிலாசாஸனம்‌ உண்டு.
(8), தண்டலைக்‌ கோயில்‌.
(9) வெள்ளிமலை : இது மலையின்‌ தென்‌ பகுதிக்குப்‌ பெயரென்றும்‌- இங்கே வெள்ளி மலை யாண்டி யென்னும்‌ கடவுள்‌ உறைவதாகவும்‌ கூறுவர்‌.
(10) க்ஷேத்திரபாலகர்‌ கோயில்‌ : க்ஷேத்திரபாலகர்‌ கல்லெனவும்‌ வழங்கும்‌ ; இக்கல்லில்‌ வைரவர்‌ எழுந்தருளியிருக்கின்‌றனரென்பது லீதிஹ்யம்‌.

விழாக்கள்‌
1) கோடை உத்ஸவம்‌ : இஃது இந்நூலிற்‌ சிறப்பிக்கப்‌ பெறுவது ; சித்திரா பெளர்ணமியில்‌ நிகழ்வது. இவ்விழாவில்‌ பெருமாள்‌, ஆண்டாள்‌ சூடிக் கொடுத்து அனுப்பிய மாலையை அணிந்து செல்வது வழக்கம்‌.
(2) வசந்த உத்ஸவம்‌ : வைகாசி மாதம்‌ பத்துநாள்‌ நடை பெறும்‌.
3 முப்பழ உத்ஸவம்‌ : ஆனிப்‌ பெளர்ணமியன்று முக்‌ கனிகள்‌ நிவேதனம்‌ செய்யப்படும்‌.
(5) பிரும்மோத்ஸவம்‌ : பத்துநாள்‌ திருவிழா. மலயத்து வச பாண்டியன்‌ முதலில்‌ தொடங்கியதாகத்‌ தலமான்மியம்‌கூறும்‌.
தங்கப்‌ பல்லக்கில்‌ பெருமாள்‌ எழுந்தருளுவர்‌. ஆஷாட பெளர்ணமி யன்று திருத்தேர்‌.
5)கருட ஸேவை: ஆடி அமாவாசையன்று நடைபெறுவது.
(6) திருப்பவித்திர உத்ஸவம்‌ : 5 நாள்‌ நடைபெறும்‌.-ஆவணி மாதம்‌ பெளர்ணமியோடு நிறைவுறும்‌.
(7) நவராத்திரி : புரட்டாசிமாதம்‌ நடைபெறுவது.
(8) எண்ணெய்க்‌ காப்பு உத்ஸவம்‌ : ஐப்பசி மாதம்‌ நடை பெறுவது, சுக்கில பக்ஷத்‌ துவாதசி யன்று பெருமாள்‌ தீர்த்தத்‌ தொட்டிக்கு எழுந்தருளுவது வழக்கம்‌;
இதனால்‌ இது தொட்டி யுத்ஸவமென்றும்‌ வழங்கும்‌.
(9) திருக்கார்த்திகை விழா : இவ்விழாவிலே புறப்பாடு உண்டு.
(10) அத்யயன உத்ஸவம்‌ : மார்கழி மாதம்‌ நடைபெறும்‌ பகற்‌ பத்து இராப்பத்து.
(11) சட்டத்தேர்‌ உத்ஸவம்‌ : தை மாதம்‌ நடைபெறுவது.
(12) திருக் கல்யாண உத்ஸவம்‌ : பங்குனி உத்தரத்தன்று நிகழும்‌. மறுநாள்‌ தெப்பத்‌ திருவிழா நடைபெறும்‌.
இவற்றை யன்றி வேறு சில உத்ஸவங்களும்‌ நடைபெறுவதுண்டு. .
வாமன புராணம்‌, வராக புராணம்‌, பிரம்மாண்ட புராண மென்னும்‌ மூன்று புராணங்களில்‌
இத்திருப்பதியின்‌ மான்மியம்‌ கூறப்பட்டிருப்பதாகத்‌ தலபுராணம்‌ தெரிவிக்கின்றது.

திவ்யப்‌ பிரபந்தத்திற்‌ கண்ட சிறப்பு
மேலே கூறியவற்றுள்‌ சிலம்பாற்றை,
சிலம்பாறு பாயுந்தென்‌ நிருமாலிருஞ்‌ சோலையே -என்றும்
ஓட்டருந் தண் சிலம்‌ பாறுடை மாலிருஞ்‌ சோலையதே
என்றும் பெரியாழ்வாரும்‌,

சந்தொடு காரகிலுஞ்‌ சுமந்து தடங்கள்‌ பொருது
வந்திழி யுஞ்சிலம்‌ பாறுடை மாலிருஞ்‌ சோலை –என்று ஆண்டாளும்

சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ்‌ சோலை –என்று திருமங்கை மன்னனும்‌ பணித்தனர்‌.

இங்கே திருக்கோயில்‌ கொண்டெழுந்தருளிய பெருமாளை,
சுந்தரத்‌ தோளுடையான்‌
திருமாலிருஞ்‌ சோலைநம்பி
மாலிருஞ்‌ சோலைநம்பி
சுந்தரன்‌ –என்று ஆண்டாளும்‌,

தேவர்கள்‌ நாயகன்‌
கேசவ நம்பி –என்று திருமங்கைமன்னனும்‌,

அழகர்‌ என்று நம்மாழ்வாரும்‌ போற்றுகின்றனர்‌.

நெடுமாறன்‌ தென்கூடற்கோன்‌
தென்னன்‌ கொண்டாடும்‌ தென்றிருமாலிருஞ்‌ சோலை
அளித்தெங்கு நாடு நகரமும்‌ தம்முடைதீ தீவினை .தீர்க்கலுற்றுதீ தெளித்து வலஞ்செய்யுந்தீர்த்தமுடைத்‌ திருமாலிருஞ்சோலையே
சென்றுலகங்‌ குடைந்தாடுஞ்‌ சுனைத்திரு மாலிருஞ்சோலை –என்று (பெரியாழ்வார்‌)

தேசமெல்‌ லாம்வணங்குநீ்‌ திருமாலிருஞ்சோலை என்று (திருமங்கையாழ்வார்‌)

தென்சொல்‌ திசைக்குத்‌ திலகமாய்‌ நின்ற திருமாலிருஞ்‌ சோலை என்று (நம்மாழ்வார்‌)
இவ்வாறு இத்தலம்‌ பாராட்டப்படுகின்றது.

————–

நூலின்‌ பொருள்‌ அமைப்பு
இந்நூலில்‌
1-தூதுவிடப்‌ பெறும்‌ கிளியின்‌ பெருமையும்‌,
2-பாட்டுடைத்‌ தலைவராகிய அழகர்‌ சிறப்பும்‌,
3-தலைவி அழகரைக் கண்டு காமுற்ற வரலாறும்‌
முறையே கூறப்படுகின்றன.

———–

கிளியின்‌ பெருமை
திருமாலின்‌ திருநாமமாகிய அரியென்னும்‌ பெயரையும்‌, அவர்‌ திருக்கண்வளரும்‌ பாயலாகிய ஆலிலையின்‌
நிறத்தையும்‌ கொண்டு மன்மதனுக்கு வாகனமாக விளங்கும்‌ கிளியரசே, நான்‌ சொல்வதைக்‌ கேட்பாயாக :
உன்னுடைய பெருமை பலபடி யாகப்‌ பரந்தது. மன்மதனுடைய ஆட்சியிலே உன்‌ சொல்லைக்‌ கேளாதவர்‌ ஆர்‌ ?
மன்மதனது ஒற்றைச்‌ சக்கரங்கூட இல்லாமற்‌ செலுத்துகின்ற காற்றாகிய தேரைப்‌ பலங்கொண்டு
இழுத்துத்‌ திரிகின்ற பச்சைக்‌ குதிரையே, ஒற்றைச்‌ சக்கரத்தோடு கூடிய சூரியன்‌ தேர்‌ ஒன்றை
யிழுக்கும்‌ பச்சைக் குதிரைகள்‌ ஏழும்‌ உனக்கு ஒப்பாகுமோ?
அந்தக்‌ குதிரைகள்‌ சுற்றிவரும்‌ உலக மும்‌ நீயே; ஞான விளக்கும்‌ நீயே? என்று சொல்வதிற்‌ பிழை யென்ன ?
உன்‌ உருவம்‌ கொண்ட சுகமுனிவர்‌ எல்லாம்‌ தாமாகவே இருந்தார்‌.
எத்தகைய நிறத்தையுடைய பறவையானாலும்‌ உன்னுடைய பஞ்சவர்ணங்களுக்குள்‌ ஒன்‌நில்‌ அடங்குமன்றோ

உன்‌ மேனி முமுவதும்‌ பச்சை நிறமா யிருந்தால்‌ உன்னைக்‌ கண்‌டோர்‌ பார்வதி தேவியாரென்று
எண்ணி விடுவார்களென்று கருதியோ நீ மூக்கு மாத்திரம்‌ சிவந்திருக்கின்றாய்‌ ?
நாக்குத்‌ தடுமாறிப்‌ பேசுபவர்களை உலகத்தார்‌ சேர்த்துக்‌ கொள்ளாமல்‌ விடுவர்‌ , -உன்னை அப்படி விடுபவர்‌ ஒருவரும்‌ இல்லை.
முன்பு சீவகனுடைய மனைவியருள்‌ ஒருத்தியாகிய காந்தருவதத்தை மிக்க சிறப்படைந்தமைக்குக்‌ காரணம்‌,
அவள்‌ உன்‌ பெயருள்‌ ஒன்றாகிய தத்தை யென்பதைக்‌ கொண்டமையே.
பிற பறவைகளினிடத்தில்‌ திருமால்‌ திருநாமத்தையும்‌, சிவபெருமான்‌ நாமத்தையும்‌ சொல்வதனால்‌ பயனில்லை.
உன்னிடம்‌ சொன்னால்‌ நீ அவற்‌ றைப்‌ பயின்று கூறுவாய்‌.
கூடுவிட்டுக்‌ கூடுபாயும்‌ யோகி உனக்கு ஓப்பாவானோ ?
பாலின்‌ பெயராகிய கீரம்‌ என்ப து உனக்‌கும்‌ பெயர்‌. அதனால்‌ உனக்கும்‌ ஆடை (பாலாடை, உடை) உண்டு.
பாடகம்‌, காலாழி முதலிய ஆபரணங்களை நீ பூண்பாய்‌. -கற்புடையாய்‌ ; சோலையாகிய மனையிலே சேர்வாய்‌. இவற்றால்‌ உன்னையும்‌ ஒரு பெண்ணென்றே சொல்லலாம்‌.

சாயுச்சியமென்னும்‌ பதவியைச்‌ சுகரூபமென்பர்‌.
உன்‌ பெயர்‌ சுகமாதலின்‌ அது நின்‌ சொரூப மென்றே சொல்லவேண்‌டும்‌.
வன்னி (வன்னி நெருப்பு கிளி )பரிசித்த வெல்லாம்‌ பரிசுத்தம்‌ ? என்று வழங்குவதை யெண்ணியே நீ கோதிய பழத்தை யாவரும்‌ உண்கின்‌றனர்‌.
யாருடைய சொல்லையும்‌ நீ கற்றுக்கொள்வாய்‌.
யோகங்கள்‌ சாதித்துப்‌ 1 பச்சைப்பிள்ளையாக வாழும்‌ பெரியோர்‌ பலர்‌ உண்டு.
ஆயினும்‌ அந்த யோகங்கள்‌ சாதியாமலே பச்சைப்‌ பிள்ளையாய்‌ நீ வாழ்கின்றாய்‌.

நீ|பாலனத்தாலே(பாலனம் பாலோடு கூடிய சோறு) பசி தீர்ககின்றாய்‌.
திருமாலும்‌ தம்முடைய பாலனத்தாலே உலகத்தோர்‌ பசியைத்‌ தீர்க்கின்றார்‌.
ஆதலின்‌ நீ அவருக்கு ஒப்பாகின்றாய்‌.
மிக்க நண்பினரானாலும்‌ பூசையை விட்டார்‌ முதலியோரை நீ விரும்பாய்‌.
உனக்குப்‌ பச்சை சிவப்பு என்னும்‌ இரண்டு நிறம்‌ இருப்பதனால்‌
இரண்டு வடிவமுடைய (பறவை வடிவமும் புருஷ வடிவமும் )கருடாழ்வானுக்கு இணை யாவாய்‌. ‘

ஐபம்‌ செய்வோர்களுக்கெல்லாம்‌ திருவரங்கர்‌ திருநாமத்தை நீ உபதேசம்‌ செய்வாய்‌.
பெண்களுக்கு ஆடவரைப்‌ போல முத்தம்‌ கொடுப்பாய்‌,
அங்ஙனம்‌ முத்தங்கொடுப்பதனால்‌ அவருக்கு இதழிலே செந்நிறம்‌ உண்டாயிற்றோ?
அன்றி அவர்‌ இதழ்ச்‌ சிவப்பு உன்‌ அலகிற்கு ஏறியதோ ?
யாருக்கும்‌ தோந்றாத வனாகிய மன்மதனை நீ தேர்க்‌ குதிரையாகி இழுத்து வருவாயாயின்‌, அவனுக்குக்‌ குறை ஏது?
யோகிகளெல்லாம்‌ அடக்கிக்‌ கஷ்டப்படுகின்ற வாயுவை உன்‌ பின்னாலே (தேராக) வரச்‌ செய்வாய்‌.
திருமகளும்‌ மலைமகளும்‌ தம்முடைய திருக்‌ கரங்களிலே உன்னைப்‌ பிடித்திருக்கும்படி நீ நட்புப்‌ பூண்டாய்‌.
திருமாலுக்கும்‌, பார்வதிக்கும்‌, உனக்கும்‌ பச்சை நிறம்‌ வந்த விதம்‌ எங்ஙனம்‌ ?
யாவரும்‌ மெச்சும்‌ பறவையே, உன்னுடைய நாக்குக்‌ கூழை நாக்கானது, அரி கீர்த்தனத்தை இடைவிடாமற்‌ செய்ததனாலோ ?
குயில்‌, வண்டு, புறா, மயில்‌, நாகணவாய்ப்புள்‌ என்னும்‌ பறவைகளுக்கு உன்‌ சிறப்பு வருமோ ?
வேதமாகிய சிவபிரான்‌ குதிரைகளுக்குப்‌ பிரமதேவர்‌ சாரதி ;
மன்மதனுடைய குதிரையாகிய உனக்குச்‌ சாரதி யார்‌ ? சிவபெரு மான்‌ திருநுதற்‌ கண்ணால்‌ மன்மதனும்‌, அவன்‌ நாணாகிய வண்டும்‌, சின்னமாகிய குயிலும்‌ சுடப்பட்டுக் கருகிய காலத்திலும்‌ நீ கருகாமலே வந்தாய்‌.
உனக்குக்‌ கனியினிடத்தில்‌ அதிக விருப்பம்‌.
நீ அரிதாளை (திருமால் திருவடி -அரிந்த தினைத்தாள்) விட்டு அகலாய்‌.
எனக்கு உள்ள இரண்டு கை உனக்கு இல்லை ; உனக்குள்ள இருசிறகு எனக்‌ கில்லை. எனக்கும்‌ உனக்கும்‌ பேதம்‌ இதுதான்‌.
நீ வீட்டுக்குள்‌ இருக்கும்‌ மனிதர்களுடன்‌ இதமாகப்‌ பழகு வாய்‌. அன்பினால்‌ அக்கா, அம்மா என்று முறையிட்டு அழைப்‌பாய்‌.
வண்டு மதுவை உண்டு குழறும்‌. குயிற்பிள்ளையோ மாமரத்திலேறிக்‌ கத்தும்‌.
கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும்‌, என்ற நல்ல பெயரை நீ பெற்றிருக்கிறாய்‌.
நீ அன்னமில்லாமற்‌ பால்மாத்திரம்‌ குடிக்கும்‌ பச்சைச்‌ குழந்‌ தையானாலும்‌, உன்‌ காலைப்‌ பிடிப்பார்‌ பலராவர்‌. மன்மதனால்‌ வருந்துவோருடைய நோயைத்‌ தீர்ப்பதற்காகவோ நீ பச்சிலை ரூபத்தைப்‌ படைத்தாய்‌?

மகளிருடைய மயக்கமாகிய காட்டைச்‌ சுடுவதற்காகவோ நீ வன்னியென்னும்‌ பெயரைத்‌ தாங்கினாய்‌ ?(வன்னி -நெருப்பு -கிளி )
அவர்களுடைய துன்பமாகிய. வேழத்தைக்‌ கொல்லவோ நீ அரி வடிவம்‌ பூண்டாய்‌? (அரி -சிம்மம் கிளி )
அவர்களது விரகதாபமாகிய பெரிய படையை வெல்லவோ நீ கிள்ளை(குதிரை கிளி ) வடிவத்தை எடுத்தாய்‌? மாதர்களுடைய விசனம்‌ கெடுவதற்காகவோ நீ சுக (இன்பம் கிளி )வடிவத்தைகீ கொண்டாய்‌ ?
ரதிக்கும்‌ கலைமகளுக்கும்‌ உன்னை உவமானமாக்கி உரைப்பர்‌.
உவமையாகக்‌ கூறும்‌ பொருளே உயர்ந்ததாதலின்‌ அவ்விருவரிலும்‌ நீயே உயர்ந்தாயன்றோ ?
உன்னுடைய வடிவமும்‌ வளைந்த மூக்கும்‌ திருமாலினுடைய துவசத்தில்‌ இருக்கும்‌ கருடதேவனது அம்சமோ?
உன்னுடைய சிறகானது, பழைய காலத்தில்‌ கண்ணபிரான்‌ வேய்ங்குழல்‌ வாசித்த போது மரங்களிலே தளிர்த்த பசுந்தழையோ ?
அல்லது, இராமபிரான்‌ இராவணனைச்‌ சம்ஹரித்த பிறகு விபீடணன்‌ இலங்கையிலே புக்குக்கட்டிய புதுத்தோரணமோ ?
உன்னுடைய இனியமொழி கண்ணபிரானது வேய்ங்குழுலோசையோ ?

கிளிப்பிள்ளயே, தெள்ளமுதக்‌ கிள்ளையே, இன்பரசக்‌குஞ்சே,
தென்றற்‌ குழவியைத்‌ தாய்போல எடுத்துச்‌ சஞ்சரிக்‌கும்‌ செல்வமே,
திருமகள்‌ திருக்கரத்திலே யுள்ளாய்‌, முத்தி நகரேழில்‌ ஒன்றாகிய அவந்தியென்பதன்‌ பெயரையும்‌,
தமிழில்‌ வல்லினம்‌ ஆறனுள்‌ ஒன்றாகிய தகரவரியிலமைந்த தத்தை யென்னும்‌ பெயரையும்‌,
லீந்து பூதத்தில்‌ ஒன்றாகிய நெருப்பின்‌ பெயராம்‌ வன்னியென்பதையும்‌,
சதுரங்க சேனைகளுள்‌ குதிரையின்‌ பெயராகிய கிள்ளையென்பதையும்‌,
மும்மூர்த்திகளில்‌ ஒருவராகிய அரியின்‌ திருநாமத்தையும்‌, இரு பயனாகிய சுக துக்கங்களில்‌ சுகமென்னும்‌ பெயரையும்‌ தாங்கிய என்‌ கண்ணே,
கண்ணுண்‌ மணியே, நான்‌ திருமாலைத்‌ தரிசனம்‌ செய்யப்போய்‌ ஊராரெல்லாம்‌ அவர்‌ கூறும்‌ நிலையை அடைந்ததைச்‌ சொல்‌ கின்றேன்‌ ; கேட்பாயாக

———–

அழகர்‌ பெருமை
அவன்‌, நரசிங்கம்‌ போன்ற திருவுருவத்தை எடுத்து இரணிய ஸம்ஹாரம் செய்தவன்‌. -கிருஷ்ணாவதாரத்தில்‌ பூதனையின்‌ பாலை யுண்டவன்‌.
பிள்ளைத்‌ தன்மை நீங்காதவன்‌.- கல்லைப்‌பெண்ணாக்கும்‌ திருவடியையுடையவன்‌.
ஒரு கவிஞன்‌ பொருட்‌டுத்‌ தன்‌ படுக்கையைத்‌ தூக்கிச்‌ சென்றவன்‌. தேவர்களுக்காக அமுது கடைந்தவன்‌,
சீதாபிராட்டியுடன்‌ கானங்‌ கடந்தவன்‌.-ஒரு வேடனுக்கு மெல்லிய கால்‌ நகங்களைத்‌ தந்தவன்‌.
என்‌ காதல்‌ வெள்ளத்திலே அமிழ்ந்தினவன்‌ ; பிரளயகால வெள்ளத்‌திலே மிதந்தவன்‌ என்‌ உள்ளத்தே உள்ளவன்‌ ;
ஆயினும்‌, உலகத்துக்கு அப்பாலான்‌. வெட்ட வெளியிலே நின்று எளிதிலே தோற்றாதவன்‌ –
அருகிலே இருந்தும்‌ அணுகுதற்கரியான்‌. மாயன்‌ என்னும்‌ பெயருக்கேற்ப என்‌ மனத்துள்‌ இருந்தாலும்‌ மாயம்‌ செய்து ஓளிப்பவன்‌.
எல்லாவற்றையும்‌ காட்டி யருளிக்‌ கண்ணனென்னும்‌ பெயரை அடைபவன்‌.
எங்கும்‌ இல்லாதிருந்தும்‌ எங்கும்‌ நிறைந்திருப்பவன்‌ ; எங்கும்‌ நிறைந்திருந்தும்‌ எங்கும்‌ இல்லாதவனாக இருப்பவன்‌.
என்னை எனக்கு ஓளித்துத்‌ தன்னை எனக்கருளும்‌ தம்பிரான்‌.
என்னுடைய பழைய வினை களையும்‌ பல மாயைக்‌ கூட்டத்தையும்‌ கலைத்து என்னைத்‌ தனியே இருத்துவோன்‌.
நானே பிரமன்‌; நானே எல்லா வுயிரும்‌; இவ்விருவரையும்‌ ஏவுபவனும்‌ நான்‌? என்று உணர்த்‌ தும்‌ பொருட்டுக்‌
கோவலரிடத்தே பசுவும்‌ பசுவின்‌ கன்றும்‌ அவற்றை மேய்ப்பவர்களுமாகி நின்ற பரஞ்சோதி.
தன்னுடைய சங்கத் தொனியைக்‌ கேட்டாரை நரகினின்றும்‌ மீட்பவன்‌.
வேய்ங்‌ குழலின்‌ தொனியால்‌ பட்ட மரங்களைத்‌ தளிர்க்கச்‌ செய்தவன்‌.
ஆதிமூலம்‌ இவன்‌? என்பதை உணர்த்தும்‌ யான யொன்றை உடையவன்‌.
பிரமாவைத்‌ திருவுந்தியால்‌ வெளிப்படுத்திச்‌சிருஷ்டிக்கு மூலகாரணன்‌ தானென்பதைப்‌ புலப்படுத்துவோன்‌ ;
அப்படியே பிரளயகாலத்தில்‌ உலகங்களை விழுங்கித்‌ துடைப்‌ போனும்‌ தானே யென்பதை உணர்த்துவோன்‌.
தமிழினாலே வேதக்‌ கருத்துக்களை உணர்த்திய ஆழ்வார்கள்‌ பதினொரு வருடைய உள்ளத்திலே எழுந்தருளியிருப்பவன்‌.
தன்‌ பாத மாகிய செந்தாமரை மலரிலிருந்து வழியும்‌ தேனைப்‌ போலக்‌ கங்கை உண்டாகும்‌ பெருமையுடையவன்‌.
துயிலாத் துயில்‌ கொள்பவன்‌. தன்‌ தாயாகிய யசோதைப்‌ பிராட்டிக்கு, தன்னுள்ளும்‌ புறம்பும்‌ உலகம்‌ இருப்பதை வாய்‌ திறந்து காட்டி உணர்த்தியவன்‌.
பிறப்பாகிய கடலில்‌ கலந்த அவித்தையாகிய உவர்த்தன்மையை வாங்கிவிட முகில்போல விளங்குபவன்‌.
பரசமயவாதங்களாகிய நதிகள்‌ யாவும்‌ தன்பாலே அடங்கக் கடல்‌ போல இருப்பவன்‌.
ஒரு கிரணம்போன்ற என்னைத்‌ தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நீலமணிநிறம்‌ பூண்டவன்‌.
உலகமாகிய ஊசலில்‌ எழுந்தருளியிருப்பவனும்‌ அதனை இயக்கு பவனும்‌ தானே யாகின்ற அண்ணல்‌.
வேடர்கள்‌ ஒரு பார்வை மிருகத்தைக்‌ கொண்டு நூறுமான்களைப்‌ பிடிப்பதைப்‌ போலத்‌
தன்‌ :அவதாரமாகிய பத்தினால்‌ தான்‌ படைத்த எண்பத்து நான்கு லக்ஷம்‌ யோனி பேதங்களாகிய பிறவிகளை நீக்குபவன்‌.

———-

தசாங்கம்‌
கேசவாத்திரி, சிங்காத்திரி, இடபகிரி என்னும்‌ திருநாமங்‌களையுடைய சோலைமலைக்கு அவன்‌ தலைவன்‌.
அந்த இடபாசலம்‌ இந்திரன்‌ போலவும்‌ அதில்‌ உள்ள சுனைகள்‌ அவன்‌ கண்களைப்‌ போலவும்‌ இருப்ப,
தோளில்‌ புரளும்‌ முத்தாரத்தைப்‌ போல விளங்கும்‌ நூபுரநதியை உடையவன்‌.
பூமிதேவிக்குப்‌ பன்னிரு செந்தமிழ்‌ நாடுகளும்‌ கை இரண்டு, காது இரண்டு, நகில்‌ இரண்டு, முகம்‌, காலிரண்டு,
பின்னல்‌, கண்ணிரண்டு ஆகப்‌ பன்னிரண்டு உறுப்புக்களாக இருப்பவும்‌,
அவற்றுள்‌ சோழ நாடும்‌ பாண்டிநாடும்‌ கண்களாக விளங்க, அவற்றுள்ளும்‌ வலக் கண்ணாக விளங்கும்‌ பாண்டி நாட்டையுடையவன்‌.
சோமச்‌ சந்திர விமானத்தை இந்திர விமானமென்றும்‌, துவசஸ்தம்‌ பத்தைக்‌ கற்பகவிருட்ச மென்றும்‌,
தன்னை உபேந்திரனென்றும்‌, திருமாலையாண்டானென்றும்‌, ஆசிரியரைப்‌ பிருகஸ்பதி யென்‌றும்‌,
மற்ற யாவரையும்‌ இந்திரன்‌ முதலாகிய தேவர்களென்றும்‌
யாரும்‌ எண்ணுதலால்‌ தேவர்‌ வாழும்‌ அமராபதி போலத்‌ தோன்றுகின்ற சீபதியென்னும்‌ திருப்பதியையுடையவன்‌.
தன்‌ திருமார்பில்‌ உள்ள பல ஆபரணங்களின்‌ நிறத்தோடு சேர்ந்து இந்திரவில்லைப்போலத்‌ தோற்றும்‌
பசுந்துளபமாலையை அணிந்த வன்‌. வைணவமாகிய மதம்‌ பொங்கவும்‌ (மதம் யானையின் மதம் சமயம் )
வைகானசம்‌ பாஞ்‌ சராத்திரமென்னும்‌ ஆகமங்களாகிய மணிகள்‌ ஒலிப்பவும்‌,
வடகலையும்‌ தென்கலையும்‌ புரசைக் கயிறாக விளங்கும்‌ அத்துவி தானந்தமென்னும்‌ யானையை உடையவன்‌. வேதமாகிய குதிரையையும்‌ கருடனாகிய கொடியையும்‌ மும்முரசையும்‌ உடையான்‌.-தவநிலை ஆணை தரித்தவன்‌.

———

பிற சிறப்புக்கள்‌
கண்ணபிரானாக வந்தகாலத்துத்‌ தன்‌ திருமேனியிலே சிந்தின வெண்ணெய்ப்‌ பிதிர்கள்‌ நட்சத்திரங்களைப்‌ போலவும்‌
கையில்‌ ஏந்திய வெண்ணெயுருண்டை மதியம்‌ போலவும்‌ விளங்க அதனை உண்டவன்‌. சூரிய சந்திரர்களாகிய திருவிழி
களையும்‌, அவற்றைப்‌ போன்ற சங்கு சக்கரங்களையும்‌ தாங்கினவன்‌. உலகத்தை உண்ட திருவாயையும்‌, அடக்கிய
திருவயிற்றையும்‌, ஈன்ற திருவுந்தித்‌ தாமரையையும்‌, அளந்த திருத்தாளையும்‌, அதனை மாவலிபால்‌ ஏற்ற திருக்கரத்தையும்‌,
அதன்கண்‌ வளைந்த பயிர்களின்‌ நிறத்தைக்‌ காட்டும்‌ திருமேனியையும்‌, அதனை வராகாவதாரத்தில்‌ பெயர்த்த மருப்பை யும்‌, ஆமையாகி ஏந்திய முதுகையும்‌, அதனைத்‌ தன்‌ படத்திலே வைத்த ஆதிசேடனாகிய பாயையும்‌ உடையவன்‌.
தன்‌ திரு நாமத்தை நினைந்து நாமமிட்டவர்களுக்கு இம்மை மறுமைப்‌ பயன்களை ஈபவன்‌.
பிரமன்‌ எழுதும்‌ எழுத்தைத்‌ தன்‌ அஷ்டாக்ஷரத்தால்‌, இனி இல்லையென்று சொல்லும்படி ஆக்குவோன்‌.
சங்கரன்‌ முதலியோர்‌ தங்கள்‌ தங்கள்‌ மலைகள்‌ எங்கே இருப்‌ பினும்‌ இது நம்‌ குன்று என எண்ணிவரும்‌ நண்புடையவன்‌.
பச்சைவாரண தாசரென்பவருகீகு இரண்டு கண்களையும்‌ மாற்றினவன்‌ ; ஒரு யானைக்‌ கன்றுக்குக்‌ கண்‌ கொடுத்தவன்‌.
திருக்கையில்‌ உத்தியோகச்‌ சக்கரத்தை யுடையவன்‌. இலங்‌கையை முன்பு வென்று கொண்டாலும்‌ நிலத்தை (மாவலியி னிடம்‌) தானமாக வாங்கினவன்‌……
திருக்கரத்திலே சங்கத்தை யுடைமையினாலும்‌, மதுரையிலுள்ள சங்கத்தில்‌ வீற்றிருந்து
தமிழ்‌ ஆராய்ந்தமையினாலும்‌ சங்கத்தழகனென்று சொல்லும்‌ திருநாமமுடைய தம்பிரான்‌.
தன்னுடைய பாதுகை அரசு புரியவும்‌ கருடாழ்வான்‌ பறவைகளுக்கரசாக இருப்பவும்‌ அருள்‌ புரிந்தவன்‌.
செளந்தரவல்லி நாச்சியாரோடு சுந்தரராசனெனத்‌ தோற்றினவன்‌.
சுந்தரத்தோளன்‌, மலையலங்காரன்‌ என்னும்‌ திரு நாமங்களையுடையவன்‌ .
வேறு வேறு தெய்வங்களை மக்கள்‌ பூசித்தமையால்‌ உண்டான புண்ணியமே தன்னை வந்து பூசிக்கப்பெற்றவன்‌.
மலயதீதுவச பாண்டியனால்‌ வழிபடப்‌ பெற்றவன்‌. அம்பரீஷ னுக்கு அருள்‌ செய்தவன்‌.

————

திருவிழா
அத்தகைய திருமால்‌, தென்றல்‌ வீசுங்காலத்திலே கோடைத்‌ திருவிழாக்‌ கொண்டருளி மதுரைக்கு எழுந்தருளினான்‌.
தல்லா குளத்திற்கு வந்து விடியற்காலத்தில்‌ குதிரைவாகனத்தில்‌ எழுந்தருளிப்‌ பொற்குடையும்‌ வெள்ளிக்‌ குடையும்‌ கொடிகளும்‌ இலங்‌ கவும்‌, முரசம்‌ முழங்கவும்‌, மக்கள்‌ கூட்டம்‌ கூட்டமாகத்‌ தொடர்ந்து வரவும்‌,
நீர்வீசு கருவிகள்‌ பனிநீரைத்‌ தூவவும்‌, காணிக்கைக்‌ கொப்பரை முன்னே செல்லவும்‌ வையைநதியில்‌ அங்கங்கே செய்யப்படும்‌ உபசாரங்களை ஏற்றருளி
வண்டியூர்‌ மண்டபத்தில்‌ வீற்றிருந்தருளினான்‌.
அப்பொழுது சூரியன்‌ அத்தமித்தான்‌. தீவட்டிகள்‌ பிரகாசித்‌ தன. வாணக்காட்சி நடைபெற்றது. பெருமாள்‌ அனந்தாழ்‌ வான்‌ மீது பவனிவந்தான்‌.
அப்பவனியிலே அவனைத்‌ தரிசித்துக்‌ காமமயக்கத்தை யான்‌ அடைந்தேன்‌. அவன்‌ மற்ற இடங்‌ களுக்கு எழுந்தருளலானான்‌.

——————

தலைவியின்‌ நிலை
நான்‌ அவனுடைய திருமுகமண்டலம்‌ முதலியவற்றைக்‌ கண்டு மால் கொண்டு என்‌ உடன்‌ வந்த மாதர்களுக்கு அவனைப்‌ பற்றிக்‌ கூறினேன்‌.
பின்‌ அவனைப்‌ பார்த்து, **அன்று நீர்‌ திருடிய வெண்ணெயைப்போலத்‌ தோற்றும்‌ சங்கு இருப்பவும்‌ என்‌ கையிலுள்ள சங்கைக்‌ கவர்ந்துகொண்டீர்‌. (சங்கு வளை )-என்னுடைய கண்ணீர்‌ உம்முடைய மலையிலே உள்ள அருவியைப்போல உமக்கு உவப்பாயிற்றோ?
உமக்குரிய பீதாம்பரம்‌ போதாதோ ? இராமாவதாரத்திலே-உடுத்துக்கொண்ட மரவுரியிலே வெறுப்பு வந்துவிட்டதோ?
திரெளபதியாகிய பெண்ணுக்கு நீரே ஆடையை உதவினீரே. இப்பொழுது என்னுடைய ஆடையைக்‌ கவர்ந்தீரே.
பழையபடி கோவியர்‌ ஆடை கவர்ந்ததைப்‌ போலத்‌ திருட்டுத்தனத்தை மேற்கொண்டீரோ ?
இந்த நூலாடை உமக்‌ குப்‌ *பாலாடையாயிற்றோ ? (காய்ச்சின்ன பாலில் உள்ள மேல் உள்ள ஏடு )
உம் மேல்‌ விருப்பங்கொண்டு முழங்‌ குகின்ற எம்முடைய வார்த்தையை நீர்‌ கேட்டிலீர்‌.
பாற்கடலிலே தூங்குவதைப்போல இந்த வையையிலும்‌ தூக்கம்‌ உண்டோ? இப்பொழுது உண்மையாக நிலாவெள்ளம்‌ பரந்ததோ?
அன்றிப்‌ பாற்கடல்தான்‌ உம்முடைய பிரிவாந்றாமல்‌ உம்மைப்‌ பின்‌ தொடர்ந்து இங்கே வந்துவிட்டதோ ?
இரவாகிய யானை கசேந்‌ திரன்‌ போல இருக்கிறது;-அதன்மேல்‌ வரும்‌ முதலையைப்‌போன்ற சந்திரனை நீர்‌ சும்மா விட்டு விடலாமா
சதிரிள மடவா ருக்கு இரங்கிய நீர்‌ நெஞ்சம்‌ தவிக்கும்‌ இளமாதருக்கு இரங்கு தல்‌ கூடாதோ?
கோவியர்களிடத்தில்‌ காம விளையாடல்‌ புரிந்த செய்திகளெல்லாம்‌ இப்பொழுது மறந்து போனீரோ??? என்று யான்‌ கூறி முறையிட்டேன்‌.
பிறகு பெருமான்‌ தேநூர்‌ மண்டபத்தை வலங்கொண்டு சோலைமலையைச்‌. சார்ந்தான்‌…
யானோ மிக மெலிந்து யானை நோயுண்ட விளாம்பழம்‌ போலானேன்‌.
இந்தத்‌ துன்பத்தைத்‌ தந்த அவன்‌ சிறிதேனும்‌ திருவுள்ளங்‌ கனியானாயினன்‌.
சந்திரனும்‌, கடலும்‌, அயல்‌ மகளிர்‌ மொழியும்‌, மன்மதன்‌
செயலும்‌, காளைகளின்‌ மணியும்‌, வேய்ங்குழலும்‌ என்னைப்‌ பலவாறாகத்‌ துன்புறுத்துகின்‌றன.

——————

கிளியை வேண்டுதல்‌
கிளியரசே, என்னுடைய உடம்பும்‌ உன்‌ கூடும்‌ பலவகையில்‌
ஓப்புமையுடையன. உன்னுடைய விருப்பத்தையறிந்து யான்‌ உண்பிப்பேன்‌ ;
நலங்குக்‌ குளிப்பாட்டுவேன்‌ ; பட்டாடையால்‌ துடைப்பேன்‌ ; கூட்டில்‌ இருத்தி ஆலத்தி எடுப்பேன்‌ ; வாசனைத்‌ தூபம்‌ காட்டுவேன்‌;
இளவெயிலிலே குளிர்காயச்‌ செய்து
எடுத்து முத்தமிட்டு என்கையின்மேல்‌ வைத்துப்‌ பெருமாள்‌ திரு நாமமெல்லாம்‌ உனக்குப்‌ பழக்கி வைப்பேன்‌.
உன்னையன்‌ றிப்‌ பிறபொருள்களைத்‌ தூதுவிடல்‌ கூடுமோ
அன்னம்‌, சூயில்‌, வண்டு, தென்றல்‌, மேகம்‌, காக்கை என்பன தகுதியற்றவை.
நீயோ, அங்கே போனால்‌ அடியார்கள்‌ இருப்‌பின்‌ நீயும்‌ அவர்களோடு சேர்ந்து கீர்த்தனம்‌ செய்வாய்‌. நாச்சி யார்‌ அருகில்‌ இருந்தால்‌ அவர்‌ கையிற்‌ பறந்து சென்றிருப்பாய்‌.
எங்கிருந்து வந்தாய்‌??? என்று கேட்டால்‌, சோலையிலிருந்து தரிசிக்க வந்தேன்‌ ?? என்று சொல்வாய்‌.
செளந்தரவல்லிக்கும்‌, சூடிக்கொடுத்த நாச்சியாருக்கும்‌ தெரியாமல்‌ என்னுடைய காதலைத்‌ தெலுங்கிலே தந்திரமாகச்‌ சொல்வாய்‌.
என்னுடைய துன்‌பத்தை நீக்குவாய்‌. சச்சிதானந்தனாகிய பெருமாள்‌ அணிந்‌துள்ள மாலையைக்‌ கொண்டு வருவாய்‌.
அங்கே யுகந்தோறும்‌ வேறு வேரறுகிக்‌ கலியுகத்தில்‌ புத்திர தீபமாகும்‌ தரு ஒன்று உண்டு.
தேவர்களுக்குரிய லந்து கற்‌பகங்களோடு ஆறாவதாக அது விளங்கும்‌. ஒரு கோடி சோலை களும்‌, ஒரு கோடி ஆறுகளும்‌, ஒரு கோடி பூஞ்சுனையும்‌ இருக்‌கின்றன.
அன்றியும்‌, யோகிகளைப்போல அல்லும்‌ பகலும்‌ துயிலாத உறங்காப்‌ புளி ஒன்று இருக்கின்றது.

—————-

கோயிற்‌ பணியாளர்‌

அத்தலத்தில்‌ பிரமதேவனும்‌ இந்திரனும்‌ வந்து பெருமாளை இறைஞ்சுவார்கள்‌.
சீரங்கராச பட்டரென்னும்‌ அர்ச்சகரும்‌, திரு மாலிருஞ்சோலைச்‌ சீயரென்னும்‌ மாதவரும்‌,
திருமாலை யாண்டா னென்னும்‌ ஆசிரியரும்‌, தோழப்பையங்காரும்‌, வேத பாரகரும்‌, அமுதாரும்‌,
திருமலை நம்பியும்‌, சோலைமலை நம்பியும்‌, சடகோப நம்பியும்‌, திருமாலிருஞ்‌ சோலைப்‌ பிரியரென்னும்‌ சீகருணிகரும்‌,
சீகாரியஞ்‌ செய்யும்‌ நாயகர்களும்‌ தன்னுடைய திருத்தாளை வணங்கி நிற்ப எம்பெருமான்‌ திருவோலக்கத்தில்‌ எழுந்தருளி யிருப்பான்‌.

————-

தூதுரைக்கும்‌ முறை
அப்பொழுது நீ தூதுரைக்கத்‌ தொடங்கினால்‌ உன்‌ வார்த்தை அவன்‌ திருச்செவியில்‌ ஏறாது.
ஆதலின்‌ அவன்‌ பள்ளியறைக்கு எழுந்தருளும்‌ வேளை பார்த்து வேறொருவர்‌ ஒன்றை விண்ணப்பித்‌தற்கு முன்‌,
என்னை மன்மதன்‌ துன்பப்படுத்துவதற்கு முன்னே, பெண்டிர்‌ அலர்‌ தூற்றுவதற்கு முன்னே,
கடலின்‌ ஒலியும்‌ தாயின்‌ உரையும்‌ என்னைத்‌ துன்புறுத்தாமல்‌ அடங்கும்படியாகத்‌ தத்‌தையே, நீ என்‌ தூதுச்செய்தியை உரைப்பாயாக.
உன்பேர்‌ ஸ்வாகதமாகையால்‌(ஸ்வா கதம் நல் வரவு ) உனக்கும்‌ சுவாகதம்‌ உண்‌ டாகும்‌.
முன்பு ஒருநாள்‌ ஸ்ரீ ராமபிரானே உன்னைப்‌ புகழ்ந்து பேசினானென்றால்‌ உன்னைப்‌ புகழ்ந்து பேசாதவர்‌ யார்‌ ?
நீ என்‌ தூதுச்‌ செய்தியைச்‌ சொல்லிப்‌ பெருமாளிடம்‌ அவன்‌ திருப்‌ புயத்திலணிந்த மாலையைக்‌ கேள்‌.
உம்முடைய மாலையை அளியாவிடின்‌ கோதையார்‌ சூடிக்கொடுத்துவிட்ட மாலையை யேனும்‌ தந்தருள்க??என்று கேள்‌.
தன்னை அடுப்பவர்‌ யாவருக்கும்‌ ஆடி மாதத்தில்‌ தியாகம்‌ கொடுக்கும்‌ எம்பிரான்‌ இல்லையென்று சொல்லான்‌.
ஆதலின்‌ அவ்வழகன்‌ புயத்து அணிந்த மாலையை நீ வாங்கி வருவாயாக.

————–

நூற் பொருள்‌ ஆராய்ச்சி
அணிகள்‌
இந்தூலின்கண்‌ அங்கங்கே பலவகையான சொல்லணி பொருளணிகளைக்‌ காணலாம்‌.
வேளாண்மை யென்னும்‌ விளைவுக்கு நின்வார்தீதை
கேளாதவரார் காண்‌ கிள்ளையே (3)
மாலினைப்‌ போல மகிதலத்தோர்‌ வாட்டமறப்‌
பாலனதீ தாலே பசிதீர்ப்பாய்‌ (19)
என்பன போன்ற இடங்களில்‌ சிலேடையணி அமைந்திருக்கின்‌றது,

தூதுக்குரிய பொருள்களுட்‌.கிளியல்லாத பிறபொருள்கள்‌ தகுதியடையனவல்லவென்று கூறும்‌ பகுதியில்‌ சிலேடையமைதியை மிகுதியாகக்‌ காணலாம்‌.
செலுத்தியகாற்‌ றேரைமுமுதீ தேராய்‌ (4)
—என்காதல்‌ வெள்ளத்‌ தமிழ்ந்தினோன்‌ வேலைக்கு மேன்மிதந்தோன்‌
உள்ளத்துள்‌ ளானுலகுக்‌ குப்பாலான்‌ (24-5)
என்பன போன்ற இடங்களில்‌ விரோத அணியும்‌,

மைப்பிடிக்கும்‌ வேற்கண்‌ மலர்மாதஞ்‌ சங்கரியும்‌
கைப்பிடிக்க நீவங்‌ கணம்பிடித்தாய்‌ (28)
—கும்பமுனி
வாய் னுரையடங்க வந்த கடலடங்கத் தாயி னுரையடங்கத்‌ தத்தையே?? (232-3)
என்பன முதலியவற்றிற்‌ பின்வரு நிலையணியும்‌ அமைந்‌துள்ளன.

தேறுகனி காவேரி சிநீதுகோ தாவிரியும்‌ வீறு பெறுமே?? (33)
அரசா யிருத்தியா லத்தி யெடுத்து? (196)
என்யவற்றிற்‌ பிறபொருட்‌ பெயர்கள்‌ தொனிக்கின்றன.

தத்தை யடைந்தவரே ததீதையடையார்‌ (64)
கூடலிற்‌ கூடலெனுங் கூ a நிருநகரில்‌ 7? (146)
சல்கெடுப்பாம்‌ அசெழுக்னுத்‌ சச்சிதானந்தர்‌ ?? (208-9)
என்பன போன்ற மடக்குகளும்‌,

திருப்பா துகைக்குஞ்‌ செழுங்கருட னுக்கும்‌
திருப்பா துகைக்குமர சீந்தோன்‌ (137)
: பாத கமலம்‌ பரவுமல பரவுமல யதீதுவசன்‌
பாத கமலம்‌ பறித்திடுவோன்‌ ?(041)
என்பவற்றில்‌ யமகமும்‌,

72-4, 142, 147, 2242-ஆம்‌ கண்ணிகளில்‌ திரிபும்‌ அமைந்துள்ளன.

சில இடங்களில்‌ வகையுளி அமைந்‌ திருக்கின்றது (108, 215)

——–

தொகை முதலியன
ஏமுமுதல்‌ இரண்டு வரையில்‌ உள்ள சில தொகைப்‌ பொருள்கள்‌ ஒவ்வொன்றிலும்‌
கிளியின்‌ பெயரை அமைத்துக்‌ காட்டிய பகுதி (635) இன்பந்‌ தருவதாகும்‌.
பூமிக்கும்‌ திருமாலுக்கும்‌ உள்ள தொடர்பு மிக அழகாக ஓரிடத்தில்‌ தொகுத்துச்‌ சொல்லப்பட்டுள்ளது (1026-8)
* கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும்‌? (6-7),
அவனசையாமல்‌ அணுவசையாது ? (123),
யானையுண்ட விளாம்பழம்‌ (187-8) என்னும்‌ பழமொழிகள்‌ இதில்‌ வந்துள்ளன.

—————

சமற்காரம்‌
கிளியின்‌ பெருமையைப்‌ பல திறத்திற்‌ பாராட்டிக்‌ கூறவந்த இந்நூலாசிரியர்‌ அதன்‌ பெயரையும்‌, இயல்பையும்‌,
புராண வரலாறுகளையும்‌ வைத்துக்கொண்டு சமற்காரமாகப்‌ பல பொருளமை யும்படி அமைத்துக்‌ காட்டுகின்றார்‌.
அரி, அவந்தி, கிள்ளை, கிளி, கிளிப்பிள்ளை, கீரம்‌, சுகம்‌, சுவாகதம்‌, தத்தை, வன்னி என்னும்‌ கிளியின்‌ பெயர்களைச்‌
சிலேடை வகையிலும்‌ பிறவாறும்‌ இவர்‌ எடுத்தாளுவர்‌.
பிறபொருள்களைத்‌ தூதுவிடுவதனாற்‌ பயனில்லை என்று மறுக்கும்‌ வாயிலாகச்‌ சில தூதுப்‌ பொருள்களின்‌ பெயர்கள்‌ சொல்லப்படுகின்றன.
அவை வருமாறு: அன்னம்‌ (33,199), காகீகை (304), குயில்‌ (3&,46,200), தென்றல்‌ (202), நாகண வாய்ப்புள்‌ (38),
புறா (36), மயில்‌ (37), மேகம்‌ (203), வண்டு (35,46,201)

——————–

புராண முதலிய நூற்‌ செய்திகள்‌
திருமாலின்‌ பெருமைகளைச்‌ சொல்லுமிடங்களில்‌ இராமாயணம்‌, பாரதம்‌ என்னும்‌ இதிகாசச்‌ செய்திகளும்‌,
பாகவதம்‌ முதலிய மாபுராண வரலாறுகளும்‌, இத்தலத்திற்குரிய புராணத்‌ திற்‌ கண்ட சிறப்புக்களும்‌ எடுத்தாளப்படுகின்றன.
ஓரிடத்தில்‌ சீவக சிந்தாமணிச்‌ செய்தியைக்‌ காணலாம்‌.

——————-

வைணவ மரபு
நம்மாழ்வாரைக் காப்பிலே வாழ்த்தியிருத்தல்‌ வைணவ மரபு ;
கருடனைப்‌ பெரிய திருவடிகள்‌ என்றும்‌ (22),
திருமால்‌ வாகனமாகிய குதிரையைக்‌ குதிரை நம்பிரானென்றும்‌ (152),
ஆதிசேடனை அனந்தாழ்வான்‌ என்றும்‌ (166), பள்ளியறையைச்‌ சேர்த்தி யென்‌றும்‌ (230) வழங்குதல்‌ அம்மரபைச்‌ சார்ந்ததே.

——————

பாண்டி நாட்டு வழக்கம்‌
உன்னுடைய சிறகுகள்‌, இராமாவதாரத்தில்‌, விபீடணன்‌ இலங்கையைக்‌ கைப்பற்றிக்‌ கொண்டபோது,
அங்கே கட்டிய புது மாவிலைத்‌ தோரணமோ ? (59) என்பது ஒரு கண்ணியிற்‌ கண்ட பொருள்‌.
ஒரு நிலத்தை மற்றொருவன்‌ தனக்குரிய தாக்கும்போது அங்கே . தோரணங்கட்டுதலும்‌,
அதனால்‌ அச் செயலைத்‌ தோரணம்‌ வைத்தலென்று வழங்குதலும்‌ பாண்டி நாட்‌ டினர்‌ வழக்கம்‌.
அவ்வழக்கத்தைப்‌ பின்பற்றியே அவ்வாசிரியர்‌ இங்கே இங்ஙனம்‌ அமைத்தார்‌.

———

செய்யுள்‌ நடை
இத்தூதின்‌ செய்யுள்‌ நடை பலவிதமாக அமைந்துள்ள து.
மடக்கு, திரிபு, சிலேடை முதலியவை அமைந்த இடங்களிலே சற்றுக்‌ கடினமாக இருப்பினும்‌
மற்ற இடங்களில்‌ தெளிவாகச்‌ செல்வது. திருமாலினுடைய இயல்பைச்‌ சொல்லும்‌ இடங்கள்‌,
முக்கியமாக 75-ஆம்‌ கண்ணி முதலிய சில கண்ணிகள்‌ இந்‌
நூலாசிரியர்‌ உள்ளத்தே தீவிரமான பக்தியுணர்ச்சியோடு பாடப்பட்டிருக்கவேண்டும்‌.
உயர்ந்த உண்மைகளை ஆற்றலோடும்‌, தெளிவாகவும்‌ விளக்கும்‌ அப்பகுதியிலே இவருடைய கவித்துவத்தின்‌ சிறந்த அமைப்பைக்‌ காணலாம்‌.
கிளியினைத்‌ தூதுவிடுவதாக மேற்கொண்ட பிறகு, எந்த எந்த வகையாக வெல்லாம்‌ அதைப்‌ பாராட்ட முடியுமோ அந்த அந்த வகை யாகப்‌ பாராட்டியிருக்கின்றார்‌.
கல்வி, கேள்வி, அனுபவங்‌களிலே கிளியைப்பற்றி அறிந்தவற்றையெல்லாம்‌ எப்படியோ தொடுத்துக்‌ கோத்திருக்கின்றார்‌.
கிளியைப்போலத்‌ தூது செல்லு வதற்குரிய பொருள்‌ வேறில்லை யென்று சொல்லுவதற்காக
நிகண்டிலே கிளியின்‌ பெயர்களாக உள்ள பதங்களும்‌, புராண இதிகாசங்களும்‌, சிலேடையணி முதலிய கருவிகளும்‌, இவருக்குத்‌ துணையாக நிற்கின்றன.
கிளிதான்‌ சகலமுமென்றவரைக்குங்‌ கூட இவர்‌ பாராட்டிப்‌ பேசி விடுகிறாரெனின்‌ வேறு என்‌ செய்வது !
—கண்ட
செகமுமுது நீஞான தீபமுநீயென்று
சுகமுனியே சொல்லாரோ — என்று இவர்‌ வினாவும்பொழுது ஆம் என்று விடையளிப்‌ பதையன்றி வேறு வழி யேது;
யுக்தியினால்‌ சமற்காரமாகக்‌ கிளிக்கு உயர்ந்த புகழைக்கூறிப்‌ பாராட்டும்‌ இடங்கள்‌ இதிலே பல இருக்கின்றன.
கிளியைப்‌ பலர்‌ தம்‌ கையிலே பிடிப்பர்‌ ;
இதே விஷயத்தைக்‌ கிளிக்குப்‌ பெருமை விளைவிக்கும்‌ உருவத்‌ திலே மாற்றி,
*பால்குடிக்கும்‌ பச்சைக்‌ குழந்தை நீ யானாலும்‌
கால்பிடிப்பார்‌ கோடிபேர்‌ கண்டாயே –என்று அமைக்கும்‌ இக் கவிஞருடைய சாமர்த்தியத்தை நாம்‌ வியவாமல்‌ இருப்பது எங்ஙனம்‌ ?

திருமாலுடைய பெருமையை மரபறிந்து புகழ்கின்றார்‌. தலப்‌ பெருமையையும்‌, தசாங்கங்களையும்‌, திருவிழா நடைபெறும்‌ முறையையும்‌ ஒழுங்காக உணர்த்துகின்றார்‌.
இந்தத்‌ தலத்திலே உள்ள பல கைங்கர்யபரர்களின்‌ பெயர்களை வரிசையாகத்‌ தெரிவிக்‌ கின்றார்‌.
அந்தப்‌ பகுதியினால்‌ கிளிக்காவது, தலைவிக்காவது, நமக்காவது பெரும்பயன்‌ ஒன்றும்‌ இல்லையென்றாலும்‌
ஆசிரியர்‌ தம்‌ காலத்தில்‌ இருந்த அவர்களைக்‌ கிளியோடும்‌ அழகரோடும்‌ சேர்த்து அவர்கள்‌ புகழையும்‌ கல்லிற்‌ பொறித்ததுபோல்‌ தம்‌ சொல்லிற்‌ பொறித்திருக்கின்றார்‌.
இது புலவருடைய நன்றியறிவென்றோ, அம்மக்களுடைய பாக்கியமென்றோ இரண்டுமென்றோ சொல்வதிற்‌ பிழை யாதும்‌ இல்லை.

————-

காப்பு
(வெண்பா)
தெள்ளு தமிழழகர்‌ சீபதி வாழ்‌வார் மீது
கிள்ளை விடு தூது கிளத்தவே–பிள்ளைக்‌
குருகூரத்‌தானே சங்‌கூர் கமுகிலேறும்‌
குருகூரத்‌தா னேசங்‌ கூர்‌.

பிள்ளைக்‌ குருகு- நாரைக்குஞ்சு.
ஊர- தன்பின்னே ஊர்ந்து வருதலால்‌.தானே சங்கு ஊர்‌ கமுகில்‌ ஏறும்‌ :
ஊர்கமுகு – மேற்பாகம்‌ பரவியுள்ள கமுகு;
ஊர்தல்‌ – பரத்தல்‌. சங்கு ஏறுதற்கு இடமான.
குருகூர்‌ அத்தான்‌ – ஆழ்வார்திருநகரியில்‌ எழுந்தருளியுள்ள தலைவனே ;
அத்தான்‌ – அத்தனே : விளி;
நேசம்‌ கூர்‌-திருவருள்‌ புரிவாயாக.

————-

நூல்‌
கிளியின்பெருமை

கார்கொண்ட மேனிக்‌ கடவுள்‌ பெயர்கொண்டு
நீர்கொண்ட பாய னி றங்கொண்டு– சீர்கொண்ட–1-

அரி என்பது கிளிக்கும் பெயர்
பாயல்‌ – அவருடைய படுக்கையான ஆலிலையின்‌. நிறம்‌ -பச்சை நிறம்‌.-
கடவுளினற்‌ பேர் கொண்டு.

வையம்‌ படைக்கு மதனையுமேற்‌ கொண்டின்பம்‌
செய்யுங்‌ கிளியரசே செப்பக்கேள்‌-வையமெலாம்‌–2-

வை அம்பு அடைக்கும்‌ மதனையும்‌ : மதனையும்‌–மன்மதனையும்‌.
கிளி- மன்மதனுக்கு வாகனமாதலால்‌, மதனையுமேற்‌ கொண்டு? என்றார்‌.
வையம்‌ படைக்கும்‌ அதனையும்‌ – புவியைப்‌ படைக்கும்‌ அத்‌ தொழிலையுமென்று வேறொரு பொருளும்‌ தோற்றுகின்றது.

வேளாண்மை யென்னும்‌ விளைவுக்கு நின் வார்த்தை
கேளா தவரார் காண்‌ கிள்ளையே-நாளும்‌–3-

வேளாண்மை- மன்மதனுடைய ஆட்சி; பயிர்களை விளைத்தல்‌ ;சிலேடை.
வேளாண்மைத்‌ தொழிலாகிய விளைச்சலென்பது மற்றொரு பொருள்‌.

மலைத்திடு மாரனொற்றை வண்டிலுமில்‌ லாமற்‌
செலுத்தியகாற்‌ றேரை முழுத்‌ தேராய்ப்‌ -பெலத்திழுத்துக்‌-4-

மலைத்திடும்‌ – போர் செய்யும்‌.
மாரன்‌ – மன்மதன்‌.
ஒற்றை வண்டில்‌ – ஒரு சக்கரம்‌ ; சக்கரம்‌ வண்டிலெனவும்‌ வழங்கும்‌
கால் தேர்‌ – தென்றற் காற்றாகிய தேர்‌; காற்பங்கான தேரென்பது மற்றொரு பொருள்‌.
மாரன்‌ செலுத்திய என இயைக்க.
பெலத்து – பலம்‌ கொண்டு,

கொண்டு திரி பச்சைக்‌ குதிரா யுனக்கெதிரோ
பண்டு திரி வெய்யோன்‌ பரியேழும்‌-கண்ட–5-

பச்சைக் குதிராய்‌ – பச்சைக் குதிரையே என்றது –ஸூரியன்‌ தேரிலுள்ள ஏழு பச்சைக் குதிரைகளை நினைந்து.

ஒற்றைச்‌ சக்கரத்தை யுடைய ஸூரியன்‌ தேரை இழுத்துச்‌ செல்‌லும்‌ ஏழு பச்சைக் குதிரைகளும்‌
ஒரு சக்கரமும்‌ இல்லாத தேரை இழுத்‌துச்‌ செல்லும்‌ பச்சைக்‌ குதிரையாகிய உனக்கு ஒப்பாக மாட்டா. என்றவாறு

செகமுழுது நீ ஞான தீப முநீ யென்று
சுக முனியே சொல்லாரோ சொல்லாய்‌-வகை வகையாய்‌-6-

சுகமுனி – சுகமுனிவர்‌ –கிளி வடிவங்கொண்டிருந்த கிருதாசி யென்னும்‌ தெய்வ மகளிடம்‌
வியாசருடைய கருணையால்‌ அவதரித்தமை யின்‌ இவர்‌ இப்பெயர்‌ பெற்றார்‌.
செக…… முனியே : சுகமுனிவர்‌ பிறந்த பொழுதே துறவு பூண்டு பூமியில்‌ நடநீது சென்றார்‌.
அவர்‌ தந்தையான வியாசர்‌, * குழந்தாய்‌ ? என்று அவரை அழைப்ப எல்லாப்‌ பொருளும்‌ ஏனென்று கேட்டனவென்பர்‌ ;
பிறந்தபொழுதே துறந்து பிறைக்‌ குழவி போனடப்பப்‌ பின்போய்த்‌ தொன்னூல்‌,
அறைந்தபுகழ்‌ வியாத முனி யாதரத்தான்‌ மதலாயென்‌ றழைப்பச்‌ செவ்வாய்‌, திறந்து
நறை பொழியு மலர்ச்‌ செழுந்தருவு மேனென்ன வுயிர்கள்‌ யாவும்‌,
நிறைநீ துறையுஞ்‌ சுகமுனிவ விரையிதழ்தீதா மரைமலர்தீதா ணினை தல்‌ செய்‌ வாம்‌ (பாகவதம்‌, காப்பு 3)
என்பதனாலும்‌ இவர்‌ எங்கும்‌ வியாபகமா யிருந்தனரென்பது விளங்கும்‌.
சுகமுனிவர்‌ உன்‌ வயிற்றிற்‌ பிறந்தவ ராதலால்‌ புகழ்பெற்றார்‌.

எவ் வண்ண மாம்ப் பறக்கு மெப்பறவை யாயினு முன்‌
ஐ வண்ணத்‌ துள்ளே யடங்குமே-மெய் வண்ணம்‌–7-

ஐ வண்ணம்‌ – ஐந்து நிறம்‌; பஞ்ச வர்ணக் கிளி யென்று கிளியில்‌ ஒரு சாதியுண்டு.

பார்க்கும்‌ பொழுதிலுனைப்‌ பார்ப்பதி யென்‌ பாரென்றோ
மூக்குச்‌ சிவந்தாய்‌ மொழிந்திடாய்‌- நாக்குத்‌–8-

பார்வதி யென்று யாரும்‌ உன்னை நினையாதபடி முற்றும்‌ பசுமை யாயுள்ள தன்மை நீங்கி மூக்குமட்டும்‌ சிவந்தாயென்றபடி ;
இதனால்‌: உன்னுடைய அடக்கம்‌ வெளிப்படுகின்றது. பார்வதி தேவியார்‌ பச்சை நிறமுடையவர்‌.

தடுமாறு வோரையெல்லாந்‌ தள்ளுவரே யுன்னை
விடுவா ரொருவருண்டோ விள்ளாம்‌-அடுபோர்‌–9-

உன்னை – குழறிப் பேசுகின்ற உன்னை.
விடுவார்‌ – தள்ளுபவர்‌.

மறந்தரு சீவகனார்‌ மங்கையரிற்‌ றத்தை
சிறந்த துநின்‌ பேர்படைத்த சீரே-பிறந்தவர்‌–10-

சீவகனார்‌ – சிந்தாமணி யென்னும்‌ காப்பியத் தலைவன்‌. தத்தை-காந்தருவதத்தை;
சீவகனுடைய பட்டத்தேவியருள்‌ முதல்வி; இவள்‌ பெயர்‌ தத்தை யென்றும்‌ வழங்கும்‌.

ஆரும்‌ பறவைகளுக் கச்சுதன்பே ர௬ஞ்சிவன்றன்‌
பேரும்‌ பகர்ந்தார்‌ பிழை யன்றோ-நேர் பெறுவி–11

அச்சுதன் பேர்‌ அரங்கனென்பது.-சிவன் தன் பேர்‌ சொக்க னென்பது.
கிளி ரங்க ரங்கா வென்று கூறுதல்‌ வெளிப்படை. சொக்கர்‌ பெயரைக்‌ கூறுதல்‌,
புமுகுநெய்சீ சொக்க ரபிடேகச்‌ சொக்கர்கர்ப்‌ பூரச்‌ சொக்கர்‌,
அழகிய சொக்கர்‌ கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்‌;
தழுவியசங்கத்‌ தமிழ்ச்சொக்க ரென்றென்று சநீததநீ;
பழகிய சொற்குப்‌ பயன்‌ நேர்ந்து வாவிங்கென்‌ பைங்கிளியே ?? (மதுரைக்‌. 54) என்பதனால்‌ விளங்கும்‌,
பகர்ந்தால்‌ – கற்பித்தால்‌.-பிழை – தகுதியில்லார்க்குக்‌ கற்‌பித்தல்‌.
அச்சுதன் பேரையும்‌ சிவன் பேரையும்‌ நீ பிழையில்லாமற்‌ கூறுகின்றாய்‌.
மற்றப்‌ பறவைகளுக்குக்‌ கற்பித்தால்‌ அவை பிழை படக்‌ கூறும்‌ ;
அங்ஙனம்‌ கற்பித்தல்‌ பிழை.
நேர்‌ – நேர்மை.

வேகி யொருகூடூ விட்டுமறு கூடடையும்‌
யோகி யுனக்குவமை யுண்டோ காண்‌- நீகீரம்‌–12-

கூடு – உடம்பு, பறவைக்‌ கூடு. ஒருகூடு விட்டு மறு கூட்டை
அடையும்‌ யோகி உனக்கு உவமை ஆகான்‌;
அவன்‌ தான்‌ இருக்கும்‌ உடம்பை விட்டு அரூபியாகி வேறோர்‌ உடம்பிற்‌ புகுவான்‌
நீ உடம்‌போடு வேறு கூட்டை அடைவாய்‌
கிட்டுநெறி யோகியருங்‌ கிள்ளைகளுந்‌ தங்கூடு, விட்டுமறு கூடடையும்‌ வேங்கடமே  (திருவேங்கட மாலை, 73).
கீரம்‌ – கிளி, பால்‌ ; சிலேடை.

11-12. விவேகி – விவேகியாகிய ஒருவன்‌

ஆகையா லாடை யுனக்குண்டே பாடகமும்‌
நீ கொள்வாய்‌ காலாழி நீங்காயே-ஏகாத–13-

ஆடை-பாலின்‌ ஆடை ; இங்கே சட்டை.
பாடகம்‌-ஓராபரணம்‌.
காலாழி-ஒருவகை அணி; இது பீலி யென்னும்‌ ஆபரணத்தோடு சேர்த்து வழங்கப்படும்‌.
கிளிக்குச் சட்டை போடுதலும்‌, கால் விரல்களில்‌ மோதிரம்‌ போடுதலும்‌ உண்டு.
ஏகாத – நீங்காத,

கற்புடையாய்‌ நீயென்றாற்‌ காமனையுஞ்‌ சேர்வாயே
அற்புடைய பெண்கொடி நீ யாகாயோ-பொற் புடையோர்‌–14-

கற்புடையாய்‌- கல்லின்‌ பக்கத்தே யுள்ளாய்‌, கற்பை யுடையாய்‌-சிலேடை. -நீ கற்புடையா யென்றால்‌.
காமனை – மன்மதனை, காவாகிய மனையை; கா – சோலை ;-சிலேடை.

கிளியையும்‌ பெண்ணென்று கூறுதற்குரிய காரணங்கள்‌ சிலேடை வகையாற்‌ கூறப்பட்டன

துன்னியசா யுச்யஞ்‌ சுகரூப மாகையால்‌
அன்னது நின்சொருப மல்லவோ-வன்னி–15–

பரிசித்த வெல்லாம்‌ பரிசுத்த மென்றோ
உருசித்த வுன்னெச்சி லுண்பார்‌-துரிச ற்றோர்‌–16-

சுக ரூபம்‌ – இன்ப ரூபம்‌.
வன்னி- கிளி, நெருப்பு,
உன்‌ எச்சில்‌ – உன்னுடைய உச்சிட்டதீதை. கிளி கடித்த பழம்‌ சிறந்தது?
சுழித்து நல்லமு தொழுகியஞ்‌ சுகமுகஞ்‌ சேர்ந்து,
தழைத்த நான்‌ மறைத் தடஞ்சினைக்‌ கற்பகத் தருவிற்‌,
பழுத்து திர்ந்தது பரமபா கவத மென்‌ றிசைக்கும்‌,
விழுப்பெ ருங்கனி நுகர்ச்சியே விரும்புவார்‌ மேலோர்‌ -(பாகவதம்‌, காப்பு. 4),
வன்னியென்னும்‌ பெயர்‌, —அச்ச மனப்‌ பேதையார்‌ மால்‌ வனஞ்சுடவோ வன்னி, எனப் பேர்‌ படைத்தா யியம்பாய்‌ -(49-50) என்று பின்னும்‌ சிலேடையில்‌ அமைக்கப்பட்‌ டுள்ளது.

இன் சொல்லைக்‌ கற்பா ரெவர்சொல்லு நீ கற்பாய்‌
உன் சொல்லைக்‌ கற்க வல்லா ருண்டோ காண்‌-நின்போலத்‌-17-

உண்டோ : இல்லையென்றபடி.

தள்ளரிய யோகங்கள்‌ சாதியாதே பச்சைப்‌
பிள்ளையாய்‌ வாழும்‌ பெரியோரார்‌-உள்ளுணர்ந்த–18-

யோகங்கள்‌ – மருந்துகள்‌, யோகாப்பியாசங்கள்‌.
பச்சைப்‌ பிள்ளையாய்‌ – இளம் பிள்ளையாகி. இளம் பிள்ளையைப்‌ பச்சைப்‌ பிள்ளை யென்பது .வழக்கு,
எப்போதும்‌ இளம் பிள்ளையாயிருத்தற்கு யோகம்‌ இன்றி யமையாதது.
உள்‌ உணர்ந்த – அறிஞர்கள்‌ உள்ளத்தால்‌ உண ரப்பட்ட.

மாலினைப்‌ போல மகிதலத்தோர்‌ வாட்டமறப்‌
பாலனத்‌ தாலே பசி தீர்ப்பாய்‌-மேலின த்தோர்‌–19-

பாலனம்‌ : திருமாலுக்குப்‌ பரிபாலனத் தொழிலென்றும்‌ கிளிக்குப்‌ பாற் சோறென்றும்‌ கொள்க.

நட்டா ரெனினு நடந்து வரும்‌ பூசை தனை
விட்டார்‌ முகத்தில்‌ விழித்திடாய்‌-வெட்டுமிரு–20-

நட்டார்‌ – நண்பர்‌,
பூசை தனை விட்டார்‌ – பூனையை உன் மேல்‌ விட்டவர்‌,-பூஜையைச்‌ செய்யாது விட்டவர்‌.

வாளனைய கண்ணார்‌ வளர்கீகவளர்‌வா யுறவில்‌
லாளனை நீ கண்டா லகன்‌ நிடுவாம்‌-கேளாய்‌–21-

உறவில்லாளனை – மிக வில்லை யாள்கின்ற வேடனை,-உறவு இல்லாதவனை ; சிலேடை.

இருவடிவு கொண்டமையா லெங்கள்‌ பெரிய
திருவடிகள்‌ வீறெல்லாஞ்‌ சேர்வாம்‌-குருவாய்ச்‌-22-

இரு வடிவு : கருடனுக்குப்‌ புருஷ வடிவமும்‌ பறவை வடிவமும்‌; –கிளிக்குப்‌ பசீசை வடிவமும்‌ சிவப்பு வடிவமும்‌.

பெரிய திருவடி-கள்‌-கருடன்‌ ;**வயங்கு மீருரு வண்ணக்‌ கலுழன்‌ (தக்க, 286,)
வீறு–வேறொன்றற்கில்லாத பெருமை.
* மெய்யின்‌, வடிவம்‌ வளைந்த மணி மூக்கு மாயன்‌, கொடியிலிருப்பவர்தங்‌ கூறோ — என்பர்‌ பின்‌ ) 56-7.

செப தேசிகர் கீகெல்லாநீ தென்னரங்கர்‌ நாமம்‌
உபதேச மாக வுரைப்பாய்‌-இபமுலையார்‌–23-

செப தேசிகர்‌ – ஜபஞ்செய்தலையுடைய குருமார்‌. உரைப்பது:–ரங்க ரங்காவென்பது.
இபம்‌ – யானை -இங்கே அதன்‌ கொம்பு அல்லது மத்தகம்‌.

சித்தங்‌ களிகூரச்‌ செவ்விதழி லாடவர்போல்‌
முத்தங்‌ கொடுக்க முகங்கோணாம்‌-நித்தமவர்‌–24-

இதழ்‌ – கீழுதடு.
ஆடவர் போல்‌ – கணவரைப் போல. முத்தங்‌ கொடுத்தல்‌-ஆடவர் தொழில்‌.
அவர்‌ – அம் மகளிருடைய.
செவ்விதழ் நின்‌ ; செவ்வி யழியாதவர் போல்‌.

செவ்விதமுன்‌ மூக்காற்‌ சிவந்ததோ வுன்மூகீகில்‌
அவ்வித ழின்சிவப்புண்‌ டானதோ–செவ்வியிழந்‌–25–

தண்டருக்குந்‌ தோற்றா னடல் வேளா னானை நீ
கொண்டிழுத்தா லாகுங்‌ குறை யுண்டோ -உண்டடக்கி–26–

தோற்றான்‌ – தோல்வி யுற்றவன்‌, கண்ணுக்குப்‌ புலப்படாதவன்‌.
அடல்‌ வேள்‌ ஆனானை – தோற்றானாகி அவர்களை அடுதலையுடைய மன்மதனை.
தோல்வியுற்றவனை நீ இழுத்தும்‌ குறையில்லாயென்றபடி,

ஆயுவை நீட்ட வருந்தவத்தோர்‌ பூரகஞ்செய்‌
வாயுவை யுன்‌ பின்னே வரவழைப்பாய்‌-தேயசொளிர்‌–27-

ஆயுவை – ஆயுளை.
பூரகம்‌ – காற்றை உள்ளே நிரப்புதல்‌.
தென்றலென்னும்‌ தேரை இழுக்கும்‌ குதிரையாய்‌ முன்னே செல்லுதல்‌
பற்றி, * வாயுவை யுன்‌ பின்னே வரவழைப்பாய்‌ ? என்றார்‌ ; வாயு-தென்ற லாகிய தேர்‌.
தேயசு- ஒளி.

மைப் பிடிக்கும்‌ வேற் கண்‌ மலர்மா துஞ்‌ சங்கரியும்‌
கைப் பிடிக்க நீ வங்‌ கணம் பிடித்தாய்‌-மெய்ப் பிடிக்கும்‌–28-

மலர் மாது – திரு மகள்‌. திருமகள்‌ கையில்‌ கிளியுண்மை,
பின்னைத் தாய்‌ கையிலுறை பெண்டத்தாய்‌ -என்றும்
நாச்சியார்‌, பங்கிருந்‌தாற்‌ கையிற்‌ பறந்திருப்பாய்‌ -என்றும் (65, 205) என்பவற்றாலும்‌,
உமாதேவியாரின்‌ கையிலுண்மை, — களங்கனி யென்றுமை கைக்கிளி பார்க்குங்‌ கறைக்‌ கண்டனே காசிக்‌. -61) என்பதனாலும்‌ விளங்கும்‌.
வங்கணம்‌-நட்பு ; நேசமிலா, வங்கணத்தி னன்று வலிய பகை (தனிப்‌.)

பச்சைநிற மச்சுதற்கும்‌ பார்ப்பதிகீகு முன்‌ றனகீகும்‌
இச்சைபெற வந்தவித மெந்தவிதம்‌-மெச்சும்‌–29–

குருகே யுன்‌ னாக்குத்தான்‌ கூழைநாகீ கான
தரிகீர்த்‌ தனத்தினா லன்றோ-தெரிவையர்கள்‌–30-

கீர்த்தனம்‌ – இறைவன்‌ பெயரை இசையோடு சார்த்திச்‌ சொல்லுதல்‌

ஆர்த்தவிர லுன்முகமொப்‌ பாகையா லேகையைப்‌
பார்த்து முகமதனைப்‌ பாரென்பார்‌-சீர்த்திகீ–31-

தூங்கி யெழுந்தவுடன்‌ மகளிர்‌ தம்‌ கை விரலைப்‌ பார்த்துப்‌
பின்பு கண்ணாடியில்‌ முகத்தைப்‌ பார்க்க வேண்டுமென்பது பண்டை மரபு;
இங்ஙனம்‌ கூறுதற்குக்‌ காரணம்‌ அவர்களுடைய: கை விரலின்‌ நகம்‌ உன்‌ மூக்கை ஒத்திருத்தலே.

கிரியையிலே காணுங்காற்‌ கிள்ளை யடையாத
பெரியதனம்‌ வீணன்றோ பேசாய்‌-தெரியுங்காற்‌–32-

கிள்ளை – கிள்ளுதலை, கிளியை.
பெரிய தனம்‌ – பெருத்த நகில்‌,-பெருஞ்செல்வம்‌.

றேறுகனி காவேரி சிந்து கோ தாவிரியும்‌
வீறுபெறுமே நீ விரும்பினாற்‌-கூ நிலனம்‌–33-

தேறப்பட்ட பழங்களானவை காவிலுள்ள தேனைச்‌ சிந்து கின்ற சக்கையாகக்‌ கெடும்‌ ; நீ விரும்பினால்‌ ௮க்கனிகள்‌ வீறுபெறும்‌-
வீறுபெறுதலாவது கிளி கோதின பழமென்று எல்லாராலும்‌ விரும்பி யுண்ணப்படுதல்‌ : கீழ் 16,கண்ணி பார்க்க.
அனம்‌ – சோறு, அன்னப்பறவை.
இக் கண்ணியில்‌ கன்னி, காவேரி, சிந்து, கோதாவிரி யென்னும்‌ நதிப்‌ பெயர்கள்‌ தோற்றுகின்றன.
கனி – தொகுத்தல்‌.

உன்னுடைய வூணன்றோ வூதப்‌ பறந்து போம்‌
சின்னவடி வன்றோ செழுங்குயிலும்‌-என்னே–34-

ஊதுதற்குப்‌ பறந்து செல்லும்‌ சின்னமாகிய வாத்திய வடிவு ஊதியவளவிற்‌ பறந்துபோம்‌ சிறிய வடிவு
குயில் மன்மதனுக்குச் சின்னமென்னும்‌ வாத்தியமென்பது இங்கே அறிதற்பாலது.

முதுவண்‌ டினந்தான்‌ முடிச்சவிழ்த்‌ தாலும்‌
மதுவுண்டாற்‌ பின்னைவா யுண்டோ- எதிரும்‌--35-

முடிச்சவிழ்தீதல்‌ – பேரரும்பின்‌ இதழ்க் கட்டை அவிழ்த்தல்‌,-இரகசியத்தை விரித்துச்‌ சொல்லுதல்‌.
வாயுண்டோ வென்பது குழறு மென்றபடி (45-6).

கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும்புறா வுக்குமொரு வாயோ-விரும்புமயில்‌–36-

கரும்புறா -கரும்பின்‌ சுவையுறாத, –கரிய புருவென்னும்‌ பறவை.
புரு தூது விடுவனவற்றுள்‌ ஒன்றென்பது மலையாள பாஷையிலுள்ள கபோத சந்தேச மென்னும்‌ நூலால்‌ அறியப்படுகின்றது (கபோதம்‌-புறா -சந்தேசம்‌ – தூது); நன்புறவைத் தூண்டினது நாளுந் தூதுண்டொழிக்கும்‌, என்புறத்துத்‌ தூதாக வெண்ணுமே (கச்சியானந்த. வண்டு.-337)

உற்ற பிணிமுகமே யுன்போற்‌ சுகரூபம்‌
பெற்ற பறவை பிறவுண்டோ-கற்றறியும்‌–37-

பிணிமுகமென்பது மயிலின்‌ பெயர்‌ ;நோயோடு கூடிய முக மென்பது மற்றொரு பொருள்‌.

கல்வியுங்‌ கேள்வியுநீ கைக்கொண்டாய்‌ சாரிகைக்குன்‌
செல்வமதி லள்ளித்‌ தெளித்தாயோ-சொல் வேத–38-

சாரிகை – நாகணவாய்ப்புள்‌.
செல்வமதில்‌ அள்ளி – உன்னு டைய செல்வத்திற்‌ சிறிய பாகத்தை அள்ளி.
நாகணவாய்ப்புள்‌ பேசும்‌ வன்மை சிறிதே பெற்றதென்னும்‌ கருத்தை உட்கொண்டு இங்ஙனம்‌ கூறினார்‌.

மென்பரிநா லுக்கும்‌ விதிசா ரதிவில்வேள்‌
தன்பரி யேயுனக்குச்‌ சாரதியார்‌-வன் போரில்‌–39-

வேத மென்‌ பரி-வேதமாகிய மெல்லிய குதிரை; வேதமென்‌னும்‌ பரியுமாம்‌.
விதி – பிரமன்‌.

மேவுஞ்‌ சிவன்விழியால்‌ வேள்கருகி நாண்கருகிகீ
கூவும்‌ பெரிய குயில்கருகிப்‌-பாவம்போல்‌–40-

வேள் கருகி – நெற்றிக்‌ கண்ணின்‌ தீயால்‌ மன்மதன்‌ சாம்பராகி; –கரு நிறத்தை அடைந்தென்பது மற்றொரு பொருள்‌. மன்மதன்‌-கரியநிற முடையவன்‌
ஆழி யுடையான்‌ மகன்‌ மாயன்‌ (தண்டி. 48, மேற்‌.).
நாண்‌ – வண்டு.
கூவும்‌ – சின்னமாக இருந்து கூவுகின்‌ற.
இயற்கைகள்‌ செயற்கையாகக்‌ கூறப்பட்டன.

நின்று மறுப்படுநா ணீதா னடுப்படையிற்‌
சென்று மறுப்படா தேவந்தாம்‌-என்றுமாகீ–41-

மறுப்படு நாள்‌ – தோல்வியுற்ற காலத்தில்‌, சாம்பராகி மறுப்‌ பட்ட காலத்தில்‌.
மறுப்படாதே வந்தாயென்றது, பச்சை நிறத்தோடி இருத்தலை நினைந்து.

காய்க்குங்‌ கனியல்லாற்‌ காய்பூவென்‌ ரானாக்கு
மூக்கு மறுப்பாய்‌ முகம் பாராய்‌-ஆக்கம்‌-42-

நாக்கு மூக்கு மறுப்பாய்‌ – நாக்கையும்‌ மூக்கையும்‌ கொண்டு முறையே சுவைத்தலையும்‌ மோத்தலையும்‌ செய்ய மறுப்பாய்‌ ;
அறுப்பா யென்று பிரித்து, சொன்னவருடைய நாக்கையும்‌ மூக்கையும்‌ அறுப்பா யென்று வேறொரு பொருள்‌ கொள்க.
ஆக்கம்‌ – செல்வம்‌.

வரையாம னன்மை வரத்தினை நல்கும்‌
அரிதாளை நீவிட்‌ டகலாம்‌-இருகை–43-

உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக்‌ கில்லை
எனக்குமுனக்‌ கும்பேத மீதே-மனைக்குள்‌–44-

நன்மை வரத்தினை நல்கும்‌ – நல்ல கரிய மேன்மையான தினையைக்‌ கொடுக்கும்‌, –நல்ல வரத்தைக்‌ கொடுக்கும்‌;
கருந் தினை யென்று ஒரு சாதியுண்டு.
அரிதாளை – தினையின்‌ அரிந்த தாளை, திருமாலின்‌ பாதங்களை ;
அரிதாள்‌, மறவாத பாக வதனே (மான் விடு தூது, 45) என்று பிறரும்‌ இதனைச்‌ சிலேடையில்‌ அமைத்துள்ளனர்‌.

இதமாய்‌ மனிதருட னேபழகு வாயன்‌” —
பதனான்‌ முறையிட்‌ டழைப்பாய்‌-ம துவுண்‌ .–45-

முறையிட்டு – முறைப்பெயரிட்டு; அப்பா, அம்மா; அக்கா என்பன முதலியன

.டளிப்பிள்ளை வாய்குழறு மாம்பரத்தி லேறிக்‌
களிப்பிள்ளைப்‌ பூங்குயிலும்‌ கத்தும்‌-கிளிப்பிள்ளை.
.–46-

களிப்புள்ள பூங்குயிலும்‌. -பாட பேதம்
அளிப்பிள்ளை – இளைய வண்டு.
ஆம்பரம்‌ – மாமரம்‌.
பிள்ளைப்‌ பூங்குயிலும்‌ – பிள்ளையாகிய குயிலும்‌ ;-குயிலுக்கு மாமரம்‌ உரியது.

சொன்னத்தை ச்‌ சொல்லுமென்று சொல்லப்‌ பெயர் கொண்டாம்‌
அன்னத்தைப்‌ போலுமொரு பேதுண்டோ-அன்னமின்‌ றிப்‌--47-

சொன்னத்தை – சொல்லியதை; தங்கத்தை.
அத்தைப்‌ போலும்‌ – அதனைப்போலும்‌.
அன்னம்‌ இன்றி – அன்னம்‌ இல்லாமல்‌.

பால்குடிக்கும்‌ பச்சைக்‌ குழந்தைநீ யானாலும்‌
கால் பிடிப்பார்‌ கோடி பேர்‌ கண்டாயே-மால் பிடித்தோர்‌–48-

பச்சைக் குழந்தை – இளங்குழந் தை.
கால் பிடித்தல்‌ – கிளியின்‌ கால்‌ தம்‌ கையிற்படும்படி வைத்துக் கொண்டிருத்தல்‌.

கைச்சிலைவே ளால்வருந்துங்‌ காமநோய்‌ தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம்‌ படைத்திருந்தாம்‌-௮ச்ச–49-

நோயைத்‌ தீர்ப்பதற்குரிய மருந்துகளுள்‌ பச்சிலை ஒன்று.

மனப்பேதை யார்மால்‌ வனஞ்சுடவோ வன்னி
எனப்பேர்‌ படைத்தா யியம்பாய்‌-அனத்தை–50-

மால் வனம்‌ – காம மயக்கமாகிய காட்டை.
வன்னி- கிளி,நெருப்பு.
அனத்தை – அன்னப் பறவையை, சோற்றை.

நிலவோவென்‌ பார்க ணெடுந்துயர்வே ழத்தைகீ
கொலவோ வரிவடிவங்‌ கொண்டாய்‌-சிலை நுதலார்‌--51-

அன்னப் பறவையையும்‌ மயக்கத்தால்‌ நிலவென்று அஞ்சும்‌ மகளிர்‌-தலைவரைப்‌ பிரிந்த மகளிர்‌ நிலவைக்‌ கண்டு
வருந்துவராதலின்‌ வெண்மையான பிற பொருள்களையும்‌ கண்டு அஞ்சுவாராயினர்‌.

கொள்ளை விரகக்‌ கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவெடுத்தாய்‌ கிற்பாய்நீ-உள்ளம்‌–52-

கிள்ளை – குதிரை, கிளி,
கிற்பாய்‌ – வன்மை யுடையாய்‌.

மிகவுடை மாதர்‌ விதனங்‌ கெடவோ
சுகவடிவு நீகொண்டாய்‌ சொல்லாம்‌-தகவுடைய–53-

உடைமாதர்‌ – உடைந்த மகளிர்‌.
சுகவடிவு- கிளியாகிய வடிவு, இன்பவடிவு.

தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும்‌
வித்தையடைந்‌ தாயுனையார்‌ மெச்சவல்லார்‌-முத்தமிழோர்‌–54-

ததீதை-கிளியை, ஆபதீதை.

மாரதி பாரதியார்க்‌ குன்னை யுவ மானிப்பார்‌
ஆரதிக மார்தாழ்‌ வறைந்திடாய்‌-ஊர றிய–55-

மா ரதி- திருமகளுக்கும்‌ ரதிதேவிக்கும்‌.
பாரதியார்க்கு -கலைமகளுக்கு. உவமை உயர்ந்ததென்பது கருத்து;
உயர்ந்ததன்‌ மேற்றே யுள்ளுங்‌ காலை (தொல்‌. உவம. 3)

நெய்யிற்கை யிட்டாலு நீதான்‌ பசுமையென்றே
கையிட்டுச்‌ சுதீதீ கரிக்கலாம்‌-மெய்யின்‌–56-

ப௬மையென்றது கிளிப்பச்சை யென்ற ஒருவகை ரத்‌தி னத்தை நினைந்து.
கையிட்டு – கையைச்‌ செலுத்தி, கையறைந்து.

வடிவும்‌ வளை ந்த மணிமூக்கு மாயன்‌
கொடியி லிருப்பவர்தங்‌ கூறோ-நெடியமால்‌–57-

கொடியிலிருப்பவர்‌ – கருடாழ்வார்‌.

விண்டுதறித்‌ தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ-கொண்டசிற–58-

விண்டு- மூங்கிலை.
தறித்‌து- வெட்டி.
வேணு- புல்லாங்குழல்‌.
சிறகு, தழைத்த பசுந்தழையோ.
சிறகு : இடைநிலைத்‌ தீவகம்‌.

கல்லிலங்கு மெய்யானை யன்றமித்து வீடணன்‌ போய்த்‌
தொல்லிலங்கை கட்டுபுதுத்‌ தோரணமோ -நல் வாய் –59-

மெய்யான்‌ – இராவணன்‌.
கிளி தோரணத்திற்கு உவமை;
மாடத்துப்‌ பறக்குமொண்‌ கிளியொ முங்கின்‌, இலை செருகிய பசும் பூந்‌ தோரண மிசைய வார்த்தார்‌

மழலை மொழிதான்‌ மணிவண்ணன்‌ செங்கைக்‌
குழலி னிசைதானோ கூறாம்‌-அழகுக்‌–60-

மணிவண்ணன்‌ – நீலமணி போன்ற நிறதீதையுடைய கண்ண பிரான்‌.

கிளிப்பிள்ளாய்‌ தெள்ளமுதக்‌ கிள்ளாய்‌ நலங்குக்‌
குளிப்பிள்ளா யின்பரசக்‌ குஞ்சே-வளிப்பிள்ளை–61-

நலங்கு குளிப்பிள்ளாய்‌- நலங்கு குளித்தலையுடைய பிள்ளாய்‌)
நலம் காட்டுவேன்‌ பட்டாடை யாற்றுடைப்பேன்‌ என்பர்‌ பின்‌ ; 195.
வளிப்பிள்ளை – தென்றற்காற்று.

தன்னைத்தாய்‌ போலெடுத்துச்‌ சஞ்சரிக்குஞ்‌ சம்பத்தாய்‌
பின்னைத்தாய்‌ கையிலுறை பெண்‌ டத்தாய்‌-பொன்னொத்தாம்‌-62-

தாய் போலெடுத்துச்‌ சஞ்சரிக்குமென்றது-குதிரையாக இருந்து வளிப் பிள்ளையைத்‌ தாங்கிச்‌ செல்லுதலை நினைந்து.
பின்னை தீதாய்‌- திரு மகள்‌ ; நப்பின்னையுமாம்‌.
பொன்‌ – கிளிச் சிறையென்னும்‌ பொன்‌.

முத்திநக ரேழிலொன்றே முத்‌ தமிழ்வல்‌ லாறிலொன்றாய்‌
ஓத்ததனித்‌ தவ்வரிப்பே ருற்றதொன்றே-சுத்தமுறும்‌–63-

முத்தி நகர்‌ ஏழில்‌ ஒன்று அவந்தி.
வல்லாறில்‌ – வல்லெழுத்து ஆறில்‌ ;
தவ்வரிப்பேர்‌ உற்றது ஒன்று : தத்தை.
அவந்தி யென்பதும்‌ தத்தை யென்பதும்‌ கிளியின்‌ பெயர்கள்‌.

ஐந்துபூ தத்திலொன்றே யான படை நான்கிலொன்றே
முந்துமுத லானபொருண்‌ மூன்‌ நிலொன்றே-வந்த–64-

ஐந்து பூதத்தில்‌ ஒன்று : வன்னி (நெருப்பு).
படைநான்கி லொன்று : குதிரை.
குதிரைக்குக்‌ கிள்ளையென்று ஒரு பெயர்‌ உண்டு.
முதலான பொருள்‌ மூன்றில்‌ – திரிமூர்த்திகளில்‌, ஒன்று என்றது அரி யென்னும்‌ பெயரை.
வன்னி, கிள்ளை, அரி யென்பன கிளியின்‌ பெயர்கள்‌.

இருபயனி லொன்றே யிமையே விழியே
பருவ விழியிலுறை பாவாய்‌-ஒரு நாரில்‌–65-

இருபயன்‌ – சுகம்‌, துக்கம்‌; ஒன்று சுகம்‌; அது கிளிக்கும்‌ பெயர்‌,
நார்‌ – அன்பு, பூத்தொடுக்கும்‌ நார்‌.

ஏற்றுந்‌ திருமாலை யெய்தப் போ யூரெல்லாம்‌
தூற்று மலர்‌ கொண்ட கதை சொல்லக் கேள்‌-தோற்றி–66-

திருமாலை-அழகரை, அழகிய மாலையை,
அலர்‌ – பூ. பழிமொழி

ஒரு நாரில்‌ தொடுத்த பூமாலையை அடையப் போய்‌ மலரை மாத்திரம்‌ கொண்டேனென்பது வேறு பொருள்‌.

————

அழகர்‌ சிறப்பு

அரிவடிவு மாய்ப்பின்‌ னரன்வடிவு மாகிப்‌
பெரியதொரு தூணிற்‌ பிறந்து-கரிய–67-

அரி – சிங்கம்‌.
அரன்‌ – சிவன்‌.
நரன் வடிவுமாகி யெனப்‌ பிரித்து, நரனென்னும்‌ அவதாரம்‌ செய்தென்று கொள்ளுதலுமாம்‌.
இக் கண்ணி நரசிங்காவதாரத்தைச்‌ சுட்டியது. .

வரைத்தடந்‌ தோளவுணன்‌ வன்காயங்‌ கூட்டி
அரைத்திடுஞ்‌ சேனை யருந்தி-உருத்திரனாய்ப்‌–68-

அவுணன்‌ – இரணியன்‌.
காயம்‌ – உடம்பு,
உணவுப்‌ பொருளோடு சேர்க்கும்‌ பலவகைப்‌ பொடி) இது மசாலை யென வழங்கும்‌ )-உப்பொடு நெய்பா றயிர்காயம்‌ பெய்தடினும்‌ (நாலடி. 116).
சேனை-சைனியத்தை, சேனைக் கிழங்கை.
உருத்திரனாய்‌- நிலைபெற்ற வடிவை யுடையவனாகி, உருத்திரனென்னும்‌ கடவுளாகி.

பண்ணுந்‌ தொழிலைப்‌ பகைத்துநிலக்‌ காப்புமணிந்‌
துண்ணும்‌ படியெல்லா முண்டருளி-வெண்ணெயுடன்‌–69-

பண்ணும்‌ தொழில்‌ – காத்தற்றொழில்‌.
நிலக்காப்பு – மண்ணைக்‌ குழைத்திட்ட பொட்டு, நிலத்தைக்‌ காத்தல்‌.
குழந்தைகளுக்கு மண்‌ பொட்டிடுதல்‌ மரபு ;
மண்பொட்‌ டணிந்து நீறிட்டு?? (பிரபு. மாயை யுற்பதீதி, 46). உண்ணும்‌ உலகங்களை யெல்லாம்‌ உண்டு;
படி – உலகம்‌;-படியால்‌:அளக்கப்படும்‌ அரிசியால்‌
குளப்படி நெய்‌ யடிசிற்‌ கொதத்ததோ –திரு வரங்கத்‌.–89-

பூதனை தந்தபால்‌ போதாம லேபசித்து
வேதனையும்‌ பெற்று வெளிநின்று-பாதவத்தைத்–70-

வேதனை -துன்பத்தை – பிரம தேவனை.
பாதவத்தை – மருத-மரங்களை

தள்ளுநடை யிட்டுத்‌ தவழ்ந்து விளையாடும்‌
பிள்ளைமை நீங்காத பெற்றியான்‌-ஓள்ளிழையார்‌–71-

ஒள்ளிழையார்‌ – ஒள்ளிய ஆபரணத்தை யணிந்த மகளிர்‌.

கொல்லைப்பெண்‌ ணைக்குதிரை யாகீகுந்‌ திருப்புயத்தான்‌
கல்லைப்பெண்‌ ணாக்குமலர்க்‌ காலினான்‌-சொல்கவிக்குப்‌–72-

கொல்லையிலுள்ள பனை மரத்தாலாகிய குதிரை யாக்குதற்குக்‌ காரணமான -மகளிர்‌ மடலேறுதல்‌,
திவ்யப் பிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல்‌ முதலியவற்றால்‌ அறியப்படும்‌.
புயவழகைக்‌ கண்டு மகளிர்‌ மடலேறுவாரென்பது கருத்து.
பெண்‌ –அகலிகை.
கவிக்கு- திருமழிசை யாழ்வார்‌ மாணாக்கரான கணி கண்ணர்‌ பொருட்டு.

பார முதுகடைந்த பாயலான்‌ விண்ணவர்கீகா
ஆர முதுகடைந்த வங்கையான்‌- நாரியுடன்‌–73-

முதுகு அடைந்த பாயலான்‌ : அரவப்‌. பாயலைத்‌ தோளில்‌
எடுத்துத் தூக்கிக்‌ கணி கண்ணர்க்குப்‌ பின்னே சென்றாரென்னும்‌ பழைய வரலாறு இங்கே அறியத்தக்கது?
பணிகொண்ட முடவுப்‌ படப்பாய்ச் சுருட்டுப்‌ பணைத் தோளெருத் தலைப்பப்‌, பழமறைகண்‌
முறையிடப்‌ பைந்தமிழ்ப்‌ பின்‌ சென்ற பச்சைப்‌ பசுங்கொண்டலே (மீனாட்சி. பிள்ளைத்‌. காப்பு. 1).

ஆர்‌அமுதுகடைந்த – அரிய அமுதத்தைக்‌ கடைந்த
கடல் கடைந்து அமுதம் கொண்ட; அண்ணலை –திருவாய் -3-4-9-
நாரியுடன் -ஸீதாப்பிராட்டியுடன்

வன்கா னகங்கடந்த வாட்டத்தான்‌ வேட்டுவற்கு
மென்கா னகங்கடந்த வீட்டினான்‌-என்காதல்‌–74-

வன்‌ கானகம்‌ கடந்த – வலிய தண்டகாரணியத்தைக்‌ கடந்து சென்ற.
வேட்டுவற்கு – சரனென்னும்‌ வேடனுக்கு.
மென்‌ கால்‌ நகங்கள்‌ தந்த- மெல்லிய கால்‌ நகங்களைத்‌ தந்த,
கண்ணபிரானுடைய காலை மானாக நினைந்து சரத்தை எய்து, பின்‌ கண்ணபிரானது பாதமென்று அறிந்து
வருந்திய அவனுக்கு வீட்டையும்‌ அளித்தனரென்பதை வீட்டினான் என்பதனால் உடம்படு புணர்த்தினார்‌ ;
இந்த வரலாறு பாகவதம்‌,11-ஆம்‌ கந்தம்‌ தன்னுடைச்‌ சோதிக்கெழுந்தருளிய அத்தியாயம்‌,28-ஆம்‌ செய்யுள்‌ முதலியவற்றால்‌ அறியப்படும்‌.

வெள்ளத்‌ தமிழ்ந்தினோன்‌ வேலைக்கு மேன்மிதந்தோன்‌
உள்ளத்துள்‌ ளானுலகுக்‌ குப்பாலான்‌-தெள்ளிதின்‌–75-

முதலடியில்‌ முரண்‌ அமைந்துள்ளது-

வெட்ட வெறுவெளியி லேநின்றுந்‌ தோற்றாதான்‌
கிட்ட விருந்துங்‌ கிடையாதான்‌-தட்டாதென்‌–76-

எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன்‌
கண்ண னெனும்பெயராற்‌ காண்பிப்போன்‌-எண்ணுங்கால்‌–77-

மாயன்‌ – கரிய நிறமுடையவன்‌, மாயையை யுடையவன்‌.
கண்ணன்‌ – எல்லார்‌ கண்ணிலும்‌ உள்ளவன்‌
வீதிவாய்ச்‌ செல்கின்‌றான் போல்‌ விழித்திமை
யாது நின்ற, மாதரார்‌ கண்களூடே வாவுமான்‌ நேரிற்‌ செல்வான்‌,
யாதினு முயர்ந்தோர்‌ தன்னை யாவர்க்குங்‌ கண்ணனென்றே,
ஓதிய பெயர்க்குத்‌ தானே யுறுபொரு ளுணர்த்தி விட்டான்‌ (கம்ப, உலாவியற்‌. 6) என்பதிலும்‌
இச்சொல்‌ இப்பொருளில்‌ அமைக்கப்‌ பட்டுள்ளது.

எங்கு மிலாதிருந்தே யெங்கு நிறைந்திருப்போன்‌:
எங்கு நிறைந்திருந்தே யெங்குமிலான்‌-அங்கறியும்‌–78-

என்னை யெனக்கொளித்தி யானென்றுங்‌ காணாத
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்‌-முன்னைவினை–79-

கொன்று மலமாயைக்‌ கூட்டங்‌ குலைத்தென்னை
என்றுந்‌ தனியே யிருத்துவோன்‌-துன்றுபிர–80-

மாவுநான்‌ மன்னுயிரு நானவ்‌ விருவரையும்‌
ஏவுவான்‌ றானுநா னென்றுணர்த்தக்‌-கோவலர்பால்‌–81-

கோவலர்பால்‌ – இடையரிடத்தில்‌.

பிரமாவும்‌ நான்‌.

ஆனுமா யான்கன்று மாகி யவற்றைமேய்ப்‌
பானுமாய்‌ நின்ற பரஞ்சோதி-மா நரகப்‌–82-

பிரமன்‌ ஆன்கன்றுகளையும்‌ சிறார்களையும்‌ கவர்ந்து ஒளித்து வைத்த பொழுது கண்ணபிரான்‌
அப்பொருள்களாக இருந்தன ரென்பது, பாகவதம்‌, மலரவன்‌ சிறார்க்கன்று கவர்ந்த அத்தியாயத்தால்‌ அறியப்படும்‌.

பேரிரு ணீக்கப்‌ பெருந்தவம்வேண்‌ டாவுடலில்‌
ஆருயிர்‌ கூட்ட வயன்‌ வேண்டா-பாருமெனச்‌--83-

சங்கத்‌ தொனியுந்‌ தடங்குழ லோசையெனும்‌
துங்கத்‌ தொனியுந்‌ தொனிப்பிப்போன்‌-பொங்குமலை–84-

துரியோதனனைச்‌ சேர்ந்தவர்கள்‌ தீது செய்தவராயினும்‌,
கண்ணபிரானது சங்கத் தொனியைக்‌ கேட்டமையின்‌ நரகம்‌ புகாராயினார்‌;
ஆதலின்‌ நரகப்பேரிருள்‌ நீக்கச்‌ சங்கத்தொனி தொனிப்பிப்போன்‌ என்றார்‌.
வேய்ங்குழலோசையால்‌ பட்டுப்போன மரங்கள்‌ தளிர்த்தனவாதலின்‌,
உடலில்‌ ஆருயிர்‌ கூட்ட வயன்வேண்டா -என்றும்‌,
குழலோசை —-தொனிப்பிப்போன்‌ -என்றும்‌ கூறினார்‌.
அலை- திருப்‌ பாற்கடல்‌.

மோதும்‌ பரனாதி மூல மிவனென்றே
ஓதுங்‌ கரியொன்‌ றுடையமால்‌-மூ துலகைத்‌–85-

கரி – கசேந்திரனென்னும்‌ யானை, சாட்சி.

தந்திடுவோ னுந்துடைப்போன்‌ றானுநா னென்றுதிரு
உந்தியால்‌ வாயா லுரைத்திடுவோன்‌-பைந்தமிழால்‌–86-

உந்தி- நாபி; இது தன் பால்‌ பிரமனைத்‌ தோற்றி உலகைச்‌ சிருட்டிப்பது.
பிரளய காலத்தில்‌ உலகத்தை உண்டமையால்‌ வாய்‌ அழித்தற்கு. உரியது
உலக. முண்ட பெருவாயா(திருவாய்‌, 6: 1) .

ஆ திமறை நான்கையுநா லாயிரத்து ‘நற்கவியா
ஓதும்‌ பதினொருவ ருள்ளத்தான்‌-பா ஈதமெனும்‌–87-

பதினொருவர்‌ – ஆழ்வார்கள்‌ பன்னிருவருள்‌ மதுரகவி யொழிந்த மற்றையோர்‌.

செந்தா மரை மலரிற்‌ சிந்திய தேன் போல
மந்தா கினி வழியும்‌ வண்மையான்‌-சந்ததமும்‌–88-

திரிவிக்கிரமாவதார காலத்தில்‌ வலக் காலை மேலே தூக்கிய போது கங்கை வழிந்ததென்பர்‌.
மந்தாகினி : வளைந்து செல்வ தென்பது இதன்‌ அவயவப்‌ பொருள்‌.

ஆன்ற வுலக மறிவுமறி யாமையுமாத்‌
தோன்றத்‌ துயிலாத்‌ துயில்கொள்வோன்‌-ஈன்றவளைத்‌–89-

துயிலாத்‌ துயில்‌ – அறிதுயில்‌,
ஈன்றவளை – யசோதையை.

தெள்ளு மணிவாயிற்‌ காட்டிச்‌ செகம்புறமும்‌
உள்ளு மிருப்ப துணர்வித்தோன்‌-கொள்ளைத்‌–90-

கொள்ளை – மிகுதி.
ஈன்றவளை உணர்வித்தோனென இயைக்க.

கவற்சிதரு சென்மக்‌ கடலிற்‌ கலந்த
அவிச்சை யுவர்‌ வாங்க முகி லானோன்‌-நிவப்பா–91-

அவிச்சை யுவர்‌ – அஞ்ஞானமாகிய உப்பை.– உவரை நீக்கி நீரைக்‌ கொள்வது முகிலின்‌ இயல்பு ;
முகில்‌ – மேகம்‌.
நிவப்பா – உயர்‌வாக.

மடங்கும்‌ பரசமய வாத நதிவந்‌
தடங்கக்‌ கருங்கடலு மானோன்‌-உடம்பிற்‌–92-

கடலுக்கு நதிபதியென்று ஒரு பெயருமுண்டு.

புணர்கீக வொருகிரணம்‌ போலுமெனை யுங்கொண்
டணைக்க மணிநிறமு மானோன்‌-பணைக்கும்‌–93-

நீலமணி ஏனை நிறங்களைத்‌ தனக்குள்ளே அடக்கிக்கொள்ளும்‌ இயல்புடையது.

விசைப்பூ தலவூசன்‌ மீதிலிருப்‌ போனும்‌
அசைப்போனுந்‌ தானாகு மண்ணல்‌-இசைத்திசைத்‌–94-

தூன் பிடிக்கும்‌ வேட ரொருபார்வை யானூறு
எண் பிடிக்‌ கின்ற வகை யென்னத்‌-தான் படைத்த–95-

பார்வை – பார்வை மிருகம்‌-மிருகங்களைப்‌ பிடிப்பதற்காக வேடர்கள்‌ வளர்க்கும்‌ மிருகங்கள்‌
அல்லது அவற்றைப்‌ போல மண்ணாற்‌் செய்த வடிவங்கள்‌ ;
இவை தீபகமென்றும்‌ சொல்லப்படும்‌.

என் பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமும்
தன் பிறவி பத்தாற் றணித்திடுவோன்‌-முன்பு புகழ்ந்‌ –96–

பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமென்பது எண்பத்துநான்கு லட்சம்‌ பிறப்பின்‌ பேதங்களை,
பிறவி பத்து – தசாவதாரம்‌;
தாம்‌ அவதாரம்‌ எடுத்தமையால்‌ அவற்றைத் தியானிக்க என்‌ பிறவி தீர்ந்த தென்பது கருத்து.

———-

தசாங்கங்கள்‌
(மலை)

தேத்திருவர்‌ நீங்கா திருக்கையா லேகேச
வாத்திரி யென்னு மணிபெற்றுக்‌-கோத்திரமாம்‌--97-

இருவர்‌ – பிரமதேவரும்‌ உருதீதிரரும்‌.
கேசவாத்திரி – அழகர்‌ மலையின்‌ திருநாமங்களுள்‌ ஒன்று.

வெங்காத்‌ திரஞ்சேர்‌ விலங்குகளை மாய்த்திடலாற்‌
சிங்காத்‌ திரியென்னுஞ்‌ சீர்மருவி-எங்கோமான்‌–98-

காத்திரம்‌ சேர்‌ விலங்குகளை – உடம்பை அடைகின்ற பிறவி களாகிய தளைகளை,
முன்காலைச்‌ சேர்ந்த மிருகங்களாகிய யானைகளை–சிலேடை.–காத்திரம்‌ – யானையின்‌ முன்கால்‌.
சிங்காத்திரி : இம்மலையின்‌ திருநாமம்‌,
எம்கோமான்‌ – கண்ணபிரான்‌.

மேய்த்த நிரைபோல வெற்புகளெல்‌ லாஞ்சூழ
வாய்த்த நிரையிலொரு மால்‌ விடையாய்ப்‌-பார்த்திடலால்‌–99-

கீழேயிருக்கும்‌ சிறு குன்றுகளுக்குப்‌ பசு நிரையும்‌, அழகர்‌ மலைக்கு இடபமும்‌ உவமை.
தரும தேவதை இடப வடிவங்கொண்டு இங்கே தவஞ்‌ செய்து வழிபட்டுப்‌ பேறு பெற்றமையின்‌ இடபகிரி யென்ற
பெயர்‌ உண்டாயிற்றென்பர்‌.

இன்னிய மார்க்கு மிடபகிரி யென்னும்பேர்‌
மன்னிய சோலை மலையினான்‌-எந்நாளும்‌–100-

இனிமை இயம்‌ – இனிய வாத்தியங்கள்‌ ;
முன்றி லதிர் மும்‌ முரசினான்‌ –என்பர்‌ பின்‌ ; 122.

—————-

(நதி)

பொற்சிலம்பி லோடுஞ் சாம்‌ பூநத போன்‌ மாணிக்க
நற்சிலம்பி லோடு நதியாகிக்‌-கற்சிலம்பில்‌ –101–

பொற்சிலம்பில்‌ – மேருமலையில்‌.
சாம்பூநதம்‌-மேருவின்‌ தென்‌ பால்‌ ஓடும்‌ ஓராறு; நாவற்பழத்தின்‌ சாறே ஆறாக ஓடுதலால்‌ இந்நதம்‌ சாம்பூ நதமெனப்‌ பெயர்‌ பெற்றது;
நதம்‌ – மேற்கு நோக்கி ஓடும்‌ ஆறு.
மாணிக்க நற்சிலம்பு – திருவடியில்‌ அணியப் பெற்றுள்ள மாணிக்கப்‌ பரலை யுடைய சிலம்பென்னும்‌ ஆபரணம்‌,
கற் சிலம்பில்‌ – பல வகையான கல் மலைகளுக்கு இடையே.

இந்திரன்‌ போலு மிடபா சலமவன்மேல்‌
இத்தவிழி போலும்‌ வளச்சுனைகள்‌-முந்துதிரு–102-

௬னைகளுக்கு இந்திரன்‌ விழிகள்‌ உவமை.

மாலுடைய தோளின்‌ மணிமார்பின்‌ முத்தாரம்‌
போல வருதா புரநதியான்‌-சீலமுறு–103-

முத்தாரம்‌ தோளிலும்‌ மார்பிலும்‌ உள்ளன;–நதிக்கு-முத்தாரம்‌ உவமை
மாயோன்‌ மார்பி லாரம்‌ போல, மணிவரை யிழிதரு மணி கிளரருவி(தொல்‌. செய்‌. 35, பேர்‌. மேற்‌;)
நதிக்குப்‌ போத வொமுகு முதீதாரமும்‌ (தக்க. 280).
நூபுர நதி – சிலம்பாறு ?
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்‌ றகன்றலை (சிலப்‌. 11 : 108) ;
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்‌ சோலை (பெரியதிரு. 9, 9:9)

—————-

நாடு

பன்னிரு செந்தமிழ்சேர்‌ நாடுகளும்‌ பார்மகட்கு
முன்னிருகை காது முலைமுகங்கால்‌-பின்னகங்கண்‌ –104-

பன்னிரு செந்தமிழ்‌ சேர்‌ நாடுகள்‌ – செந்தமிழ்‌ நாட்டைச்‌ சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ்‌ நாடுகள்‌
தென்பாண்டி குட்டங்‌ குடங்கற்கா வேண்பூழி, பன்றி யருவா வதன்வடக்கு-நன்றாய, சீத மலாடு
புனனாடூ செந்தமிழ்சேர்‌, ஏதமில்‌ பன்னிருநாட்‌ டெண்‌ (நன்‌. 274மயிலை. மேற்‌.)
பின்னகம்‌ – பின்னல்‌.
கண்‌ – கண்கள்‌.
கையிரண்டு; காதிரண்டு, நகிலிரண்டு, முகம்‌, காலிரண்டு, பின்னல்‌, கண்ணிரண்டு ஆகிய பன்னிரண்டு உறுப்புக்களும்‌ பன்னிரு நாடுகளுக்கு உவமை.

காட்டு மவற்துட்‌ கனக வரை மீது புகழ்
தீட்டும்‌ புனனாடுந்‌ தென்னாடும்‌-நாட்டமாம்‌.–105-

கனகவரை – மேருமலை,
புனல்நாடு – சோழநாடு.
தென்னாடு- பாண்டிநாடு.
நாட்டம்‌ ஆம்‌ – கண்கள்‌ ஆகும்‌.

அந்நா டிரண்டி லருள்சேர்‌ வலக்கணெனும்‌
நன்னுடாந்‌ தென்பாண்டி நாட்டினான் பொன்னுருவச் –106-

—————————-

(ஊர்‌)

சந்தீரவடி வாஞ்சோமச்‌ சந்திரவி மானத்தை
இந்திரவி மான மிதுவென்றும்‌-மந்தரவிரு–107-

சோமச்சந்திர விமானம்‌ : இஃது அழகருடைய விமானத்தின்‌ திருநாமம்‌.
தரும தேவதையின்‌ கட்டளைப்படி விஸ்வ கருமா சந்திர மண்டலத்தைப்போல அமைத்தமையால்‌ இப்பெயர்‌ பெற்றது;
இது சோமச் சந்த விமானமென்றும்‌ வழங்கும்‌ ;
வந்த விமா னத்தமரர்‌ மலர்‌ தூவிப்‌ பணி சோமச்‌, சந்த விமானத் தமருஞ்‌ செளந்தரிய பரஞ்சோதி ?? (அழகர்‌ கலம்‌. 1)

துகீகொடி யேறு துசத்தம்பம்‌ வல்லி சா
தக்கொடி யேறுகற்ப தாருவென்றும்‌-மிக்கோர்க்‌–108-

விருதுக் கொடி – வெற்றிக் கொடி.
துசத்தம்பம்‌ – துவசதீதம்‌பம்‌.
வல்லி சாதக் கொடி – கற்பகமரத்திற்‌ படரும்‌ காமவல்லி

கொருவாழ்வா னோனை யுபேந்திரனே யென்றும்‌
திருமாலை யாண்டானைத்‌ தேவ-குருவென்றும்‌–109-

ஒரு வாழ்வானோனென்ற.து அழகரை.
திருமாலையாண்டான்‌ – உடையவருடைய குரு- இவருடைய விக்கிரகம்‌ ஸ்ரீ ஆண்டாள்‌ சந்நிதி யின்‌ பக்கத்தே இத் தலத்தில்‌ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸுப்ர பாதபடனம்‌, புஷ்பாஞ்சலி முதலியன இவர்‌ சொல்லா நிற்ப அர்ச்சகர்‌ செய்யவேண்டும்‌. திவ்யப்ரபந்த சேவையும்‌ உண்டு.
இவருடைய சந்ததி யார்‌ பெருமாள்‌ எழுந்தருளும்பொழுது முன்னே பல்லக்கில்‌ வருவார்‌கள்‌.
திரியெடுத்தாடுதல்‌ முதலியவற்றில்‌ இவர்களுக்குக்‌ காணிக்கை யுண்டு.
இவர்களைச்‌ சேவித்த பின்‌ அடியார்கள்‌ பெருமாளைச்‌ சேவிப்‌ பார்கள்‌.

நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை
விண்ணவர்கோ னாதி விபுதரென்றும்‌-எண்ணுதலால்‌–110-

நம்பி – திருமலை நம்பி; இவர்‌ கைங்கரிய பரர்‌ ;
பட்டைக்‌ கைங்‌ கரியமென்று பெயர்‌ – இக்கைங்கரியம்‌ தர்ப்பம்‌, கூர்ச்சம்‌, பவித்ரம்‌ முதலியன கொடுத்துப்‌
புண்யாஹவாசனாதிகள்‌ செய்து வைக்கும்‌ பெளரோகித சம்பந்தமானது.
இவர்‌ பரம்பரையார்‌ இன்றும்‌ இங்கேயே இருந்து கைங்கரியஞ்‌ செய்து வருகிறார்கள்‌.
விபுதர்‌ – தேவர்‌.

ஆர்பதி யான வமரா பதிபோலும்‌
சீர்பதி யான திருப்பதியான்‌-மார்பிடத்தில்‌–111-

ஆர்‌ பதி- நிறைந்த ஊர்‌.
சீர்பதி-ஸ்ரீய பதி; இஃது இம்மலைக்கு உரிய ஒரு திருநாமம்‌,

——————

மாலை

எண்ணுங்‌ கலனிறத்தோ டிந்திரவிற்‌ போற்பசந்த
வண்ணந்‌ தருந்துளப மாலையான்‌-உண்ணின்‌–112-

கலன்‌ – ஆபரணங்கள்‌.
மற்ற ஆபரணங்களோடு சேர்ந்துள்ள துளபமாலைக்கு இந்திரவில்‌ உவமை.

—————-

(யானை)

றுருக்கும்‌ வபிணவமா மோங்குமதம்‌ பொங்கதீ
திருக்கொம்பு தான்றுதிக்கை சேர-நெருக்கிய–113-

மதம்‌ – சமயம்‌, யானையின்‌ மதம்‌.
திருக்கொம்பு – திருமகளாகிய பூங்கொம்பு, அழகிய யானைக்கொம்பு.
துதிக்கை – துதித்தல்‌, யானை யின்‌ துதிக்கை.

பாகமொத்த வைகான தம் பாஞ்ச ராத்திரமாம்‌
ஆகமத்தி னோசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு–114-

வைகானதம்‌, பாஞ்சராத்திரம்‌ : வைஷ்ணவ ஆகமங்களின்‌ பெயர்கள்‌.

மட்டும்‌ பிணிக்கும்‌ வடகலையுந்‌ தென்கலையும்‌
கட்டும்‌ புரசைக்‌ கயிறாக-விட்டுவிடா–115-

வடகலை, தென்கலை – வைணவ மததீதின்‌ உட்பிரிவுகள்‌.
புரசைக்‌ கயிறு – யானையின்‌ கழுத்திற்‌ கட்டும்‌ கயிறு.

வானந்த மான மலர்தீதாள்கண்‌ டத்துவி
தானந்த மென்றகளி யானையான்‌-தானந்த–116-

வான்‌ அந்தம்‌ ஆன.

—————-

(குதிரை)

வர்கீகத்‌ துடனெழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவுநலங்‌ காண்பித்துச்‌-சொர்க்கத்தில்‌–117-

வர்க்கம்‌-எமுத்தின்‌ வர்க்கம்‌, சேணம்‌.
வாயின்‌ உரைகடந்து- மனிதர் வாயின்‌ உரையைக்‌ கடந்து, –வாயில்‌ நுரைகள்‌ தந்தென்பது மற்‌ றொரு பொருள்‌,
கற்கி வடிவு – கோயிலின்‌ வடிவு. குதிரையின்‌ வடிவு
கற்கி-கோயில்‌ —கற்கிளர்‌ கற்கி செய்தோன்‌ (சேது.இராமநாத. 43)

ஏறுங்‌ கதிகாட்டி யெய்து மணுத்தோற்றி
வீறும்‌ பலகலையும்‌ வென்றோடி-ஆறங்கம்‌–118-

அணு – துளி, உயிர்‌,
தோற்றி – வெளிப்படச்‌ செய்து.
கலை – நூல்கள்‌, மான்கள்‌.
ஆறு அங்கம்‌ – வேதாங்கம்‌ ஆறு, ஆறுவகை உறுப்புக்கள்‌.

சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டூ தாரணியிந்‌
போற்றிய வேதப்‌ புரவியான்‌-பாற்கடலிற்‌–119-

வேதத்துக்கும்‌ குதிரைக்கும்‌ சிலேடை,

—————-

(கொடி)

புக்கதொரு மந்தரமும்‌ பூமியும்‌ பம்பரமும்‌
சக்கரமும்‌ போலத்‌ தலைசுழன்று-தொக்கவிசை–120-

மந்திரத்திற்குப்‌ பம்பரமும்‌, பூமிக்குச்‌ சக்கரமும்‌ உவமைகள்‌.
விசை – வேகம்‌.

வற்றும்‌ பொழுதுவிழ வாசுகியைச்‌ சேடனைப்‌
பற்றுங்‌ கருடப்‌ பதாகையான்‌-சுற்றியதன்‌–121-

கருடப்பதாகை – கருடக்கொடி : பதாகை – பெருங்கொடி.

—————

(முரசு)

குன்நிலரி யுங்கரியுங்‌ கொண்மூவு நின்றதிர
முன்றி லதிர்மும்‌ முரசினான்‌-என்றும்‌–122-

அரி – சிங்கம்‌.
கரி- யானை,
கொண்மூ- மேகம்‌.
மும்முரசு –நியாய முரச, தியாக முரசு. வீர முரசு (புறநா. 58 :12, உரை)

————–

ஆணை

அவன் அசையாமல் அணுவும் அசையாது என்னும்
தவநிலை யாணை தரித்தோன்‌-நவநீதம்‌ –122-

எங்கும் நிறைகின்றவன் என்றவாறு
நவநீதம் -வெண்ணெய்

மேனியிற்‌ சிந்தியது மென்கையி லேந்தியதும்‌
வானி லுடுவு மதியுமெனத்‌-தானுண்டோன்‌–124-

உடு -நக்ஷத்ரம்
மதி -சந்திரன்

மேனியிற்‌ சிந்திய வெண்ணெயின்‌ சிறிய பிதிர்களுக்கு நட்சத்திரமும்‌,
கையில்‌ எடுத்த பெரிய உருண்டைகளுக்கு மதியும்‌ உவமைகள்‌.

செங்கதிரும்‌ வெண்கதிரு மென்னத்‌ திருவிழியும்‌
சங்கமுஞ்‌ சக்கரமுந்‌ தாங்கினோன்‌-அங்கணுல–125-

திங்கள்‌ இடக்கண்ணும்‌ சங்கும்‌, சூரியன்‌ வலக்கண்ணும்‌ சக்கரமும்‌ ஆகும்‌.

குண்டகனி வாயா னுறையுந்‌ திருவயிற்றான்‌
கொண்ட படியீன்ற கொப்பூழான்‌-மண்டி–126-

உலகு உறையும்‌ என இயைக்க.
கொண்டபடி – உட்‌கொண்டபடி,
கொப்பூழ்‌ – திருவுந்தி.’

அளந்த திருத்தாளா னன்றேற்ற கையான்‌
விளைந்த பொருள்காட்டு மெய்யான்‌-உளங்கொண்–127-

பூமியை அளந்ததும்‌ அதனை ஏற்றதும்‌ வாமனாவதார
தீதில்‌. விளைந்த பொருள்‌ – பச்சைப் பயிர்‌.

டிடந்த மருப்பினா னேந்து முதுகான்‌
படந்தனில்‌ வைத்த மணிப்‌ பாயான்‌-தொடர்ந்தவினை–128-

இடந்த- பெயர்த்த; இது வராகாவதாரத்தில்‌.
முதுகிலேந்தியது கூர்மாவதாரத்தில்‌,
பாய்‌ – ஆதிசேடன்‌.

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க்‌ கீழ்புக்‌,
கிடந்‌திடுந்‌ தன்னுட்‌ கரக்கு முமிமும்‌,
தடம்பெருந்தோ எாரதீ தழுவும்‌ பாரென்னும்‌,
மடந்தையை மால்செய்கின்ற மாலார்‌ காண்பாரே —
உண்டு முமிழ்ந்துங்‌ கடந்து மிடந்துங்‌ கிடந்து நின்றும்‌,
கொண்ட கோலத்தோடு வீற்றிருந்துமணங் கூடியும்‌,
கண்டவாற்றாற்‌ நனதே யுலகென நின்றான்‌ (திருவாய்‌. 2, 8: 7; 4. 5:10)

முட்டதுக்குந்‌ தன்னாம முன்னித்‌ திருநாமம்‌
இட்டவருக்‌ கீவோ னிகபரங்கள்‌-எட்டெழுத்தாற்‌--129-

முட்டு- தடை.
தன்‌ நாமம்‌ முன்னி -தன்‌ திருநாமங்களைத்‌ தியானித்து.
திருநாமம்‌ இட்டவருக்கு – திருமண்குறிகளை இட்ட அடி யார்களுக்கு;
மணிவாசற்‌ றூங்க வொருகுடைக்‌ கீழ் வையங்‌ காத்துச்‌ சிந்தா,
மணிவா சவனென வாழ்ந்திருப்‌ போர்பின்னை மாதிருக்கும்‌,
மணி வாச மார்பரங்‌ காகேச வாவென்று வாழ்தீதித்திரு,
மணிவா சகங்கொண் டணிவா ரடியை வணங்கினரே (திருவரங்கத்‌. 72);
“ஈராறு நாம முரைசெய்து மண் கொண்‌் டிடுவார்கள்‌ காணு மிமையோர்‌ ? (வி. பா. 9-ஆம்‌ போர்ச்‌. 1),
எட்டெழுத்து – அஷ்டாக்ஷரம்‌.

பிஞ்செழுத்தாய்‌ நையும்‌ பிரம லிபியெனும்பேர்‌
அஞ்செழுத்தை மூன்றெழுத்த தாக்குவோன்‌-வஞ்சமறத்‌–130-

பிஞ்சு எழுத்தாய்‌- சிறிய எழுத்தாய்‌ :
பிஞ்சு எழுத்து எனப்‌ பிரித்து, பிய்ந்த எழுத்து எனினுமாம்‌.

பிரமலிபி : ஐந்தெழுத்தாலாகியது; அஞ்சு எழுத்து – யாவரும்‌ அஞ்சுதற்குரிய எழுத்தெனினுமாம்‌.
மூன்று எழுத்தது – மூன்று எழுத்தையுடைய இல்லை யென்னுஞ்‌ சொல்‌
“போதனார்‌ நெட்டெழுதீது நமனா ரிட்ட குற்றெழுத்தும்‌ புனலெழுத் தாய்ப்போக (சீரங்க. ஊசல்‌, 16) ்‌

தங்கள்குன்‌ றெங்கிருந்துஞ்‌ சங்கர னாதியோர்‌
நங்கள்குன்‌ நீ தென்னவரு நண்புடையோன்‌-அங்கோர்‌–131-

வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன்‌ போற்றும்‌
கயமுனிக்குக்‌ கண் கொடுத்த கண்ணன்‌-நயமுரைக்கின்‌–132-

வயமுனி-பச்சை வாரண தாசர்‌; இவர்‌ திருக்கச்சி நம்பி முன்‌ னோர்களுள்‌ ஒருவர்‌; பச்சை வாரணப்‌ பெருமாள்‌
கோயிலில்‌ வழிபட்டவர்‌. இவருக்கு ஹஸ்திகிரியில்‌ கண்ணைப்‌ போக்கின தாகவும்‌,
அழகர்‌ மலையில்‌கண்ணைக்‌ கொடுத்ததாகவும்‌ வரதராஜ ஸ்தவத்தில்‌ கூரத்தாழ்வார்‌ கூறி யிருப்பதாகப்‌ பெரியோர்‌ கூறுவர்‌.
கயமுனி – யானைக்கன்று; இதற்குக்‌கண்‌ கொடுத்தது, வளிநான்ற மணிமுறத்‌ தழைசெவிச்‌ சிறுகவுளில்‌ வண்டோ டிரண்டுபாடும்‌ மழைபாய்‌ கடாக்கரிக்‌ கண்கொடுத்தும்‌ (அழகர்‌ பிள்ளைத்‌. அம்புலிப்‌. 4) என்பதிலும்‌ கூறப்பட்டுள்ளது.

அஞ்சுபடை யோனெனினு மஞ்சாம லங்கையில்வா
சஞ்செய்யு முத்யோகச்‌ சக்‌கரத்தான்‌-எஞ்சாது–133-

அஞ்சுபடை -பஞ்சாயுதம்‌, அஞ்சுகின்ற படை.
உத்தியோகச் சக்கரம்‌ : உத்தியோகச் சக்கரம்‌, பிரயோகச்‌ சக்கரமெனச்‌ -சக்கராயுதம்‌-இருவகைப்படும்‌-
அவற்றுள்‌ இயல்பாக உள்ளது உத்தியோகச்‌ சக்கரம்‌.

விண்ணிலங்கொள்‌ பொன்னிலங்கை வெற்றியாய்க்‌ கொண்டாலு
மண்ணிலங்கைத்‌ தானமாய்‌ வாங்குவோன்‌-பண்ணிலங்‌கும்‌–134-

பொன்‌ இலங்கை – பொன் மயமான இலங்கை நகரத்தை.
மண்‌ நிலத்தை. கைத் தானமாய்‌ வாங்குவோன்‌ –மகாபலியினிடத்தே தானமாய்க்‌ கையில்‌ வாங்குவோன்‌.

ஏரணி பொன்னரங்கத்‌ தெம்பிரான்‌ போலெவர்க்கும்‌
தாரணி நல்காத தம்பிரான்‌-காரணியும்‌–135-

அரங்கத்‌ தெம்பிரான்‌ – ஸ்ரீ ரங்க நாதர்‌.
ஸ்ரீரங்கநாதர்‌ நாச்சியார்‌ பலருக்கு மாலையை அளிப்பவர்‌
அழகர்‌ ஆண்டாளுக்கு மட்டும்‌ மாலை அளிப்பவராதலின்‌ இங்ஙனம்‌ கூறினார்‌.
தாரணி – மாலையாகிய . ஆபரணத்தை.
கார்‌ அணியும்‌ – கொடையால்‌ மேகத்தை ஒத்த.

செங்கைத்‌ தலத்திடத்துந்‌ தென்மதுரை யூரிடத்தும்‌
சங்கத்‌ தழகனெனுந்‌ தம்பிரான்‌-எங்கும்‌–136-

இடச்செங்கையில்‌ சங்கமென்னும்‌ ஆயுதத்தையுடைய அழகர்‌
தென்மதுரையூரிடத்தில்‌ தமிழ்ச் சங்கத்திலுள்ள அழகர்‌;
சுந்தரத் தமிழ்ப்‌ புலவர்‌, சங்கத்‌ திருப்பிரியான்‌ சார்பு (அழகர்‌.கலம்‌. 68)

திருப்பாது கைக்குஞ்‌ செழுங்கருட னுக்கும்‌
திருப்பாது கைக்குமர சீந்தோன்‌-விருப்பமுகம்‌--137-

திருப்பாது உகைக்கும்‌ – பின் வாங்காமல்‌ செலுத்துகின்ற.
கருடன்‌ – கருடாழ்வான்‌;
கருடனுக்கு அரசீந்தது, பறவைகளுக்கு அரசாக்கியது.
திருப்பாதுகை – திருவடி நிலை; அதற்கு அரசீந்தது இராமாவதாரத்தில்‌.

சந்திர னான சவுந்தர வல்லியுடன்‌
சுந்தர ராசனெனத்‌ தோன்றினோன்‌-அந்தம்‌–138-

சவுந்தர வல்லி- இத்தலத்து நாச்சியார்‌ திருநாமம்‌,
அந்தம்‌ -அழகு.

சொலநலங்கொ டோளழகாற்‌ சுந்தரத்‌ தோளன்‌
மலையலங்‌ காரனென வந்தோன்‌-பலவிதமாய்‌–139-

தோள்‌ அழகால்‌- தோளாலும்‌ அழகாலும்‌.
தோளால்‌ சுந்தரத்‌ தோளனென்றும்‌,
அழகால்‌ மலை யலங்காரனென்றும்‌ உண்டாயின.

—————

வழி பட்டோர்‌

நண்ணியதெய்‌ வத்தை நரரெல்லாம்‌ பூசித்த
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன்‌-கண்ணனைய–140-

புண்ணியம்‌ – தருமதேவதை ;
தருமதேவதை வழிபட்டதை, 99-ஆம்‌ கண்ணியின்‌ குறிப்புரையால்‌ அறியலாம்‌.
கள்‌ நனைய – தேனை யுடைய-
அரும்புகளை யுடையனவாகிய; அரும்புகள்‌, இட்டவை.

பாத கமலம்‌ பரவுமல யத்துவசன்‌
பாத கமலம்‌ பறித்திடுவோன்‌-கோதில்‌--141-

பாத கமலம்‌ பரவு – திருவடித் தாமரைகளை வணங்கிய.
மலயத் துவசன்‌ – மலயத்துவசபாண்டியன்‌ ;
இவன்‌ இத்தலத்தில்‌ கோயிற்நிருப்‌ பணி முதலிய திருப்பணிகளையும்‌
நித்தவிழா முதலியவற்றையும்‌ செய்‌வித்துப்‌ பேறு பெற்றவன்‌;
இவ்வரலாறு இத்தலபுராணத்திலும்‌ உள்ளது;
பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே (அழகர்‌ கலம்‌. 1).

அரணாம்‌ புயங்களுறு மம்பரீ டற்குச்‌
சரணாம்‌ புயங்க டருவோன்‌-திரு நாளில்‌–142-

அரணும்‌ :புயங்கள்‌ – தம்முடைய குடிகளுக்கு அரணுகிய தோள்கள்‌ ;
அரண்டரு திரடோள்‌ (கம்ப. சடாயுவுயிர்‌. 63).
அம்பரிடன்‌ : இத் தலத்தில்‌ வழிபட்டுப்‌ பேறுபெற்ற ஓரரசன்‌.
சரண அம்புயங்‌கள்‌ – திருவடித் தாமரைகளை.

—————————

கோடைத்‌ திருவிழா

சந்தக்கா வூடு தவழ்ந்துவருந்‌ தென்றற்கால்‌
மந்தக்கா லாக மருவுங்காற்‌-சிந்திக்கும்‌–143-

சந்தக்காவூடு – சந்தனச்‌ சோலையினுள்ளே -என்றது பொதியின்‌ மலையிலுள்ள சந்தனச்‌ சோலையை.
மந்தக்கால்‌ ஆக – மந்த மாருதமாக; -தென்றலின்‌ மூவகை நடையுள்‌ மந்தம்‌ ஒன்று.

வாடைத்‌ துளிபோன்‌ மலர்த்தேன்‌ றுளிதுளிக்கும்‌
கோடைத்‌ திருவிழாக்‌ கொண்டருளி-நீடுவிடைக்‌–144-

குன்றிலுற்ற வெள்ளங்‌ கொழுந்தோடி வையைதனிற்‌
சென்றெதிர்த்து நிற்பதெனச்‌ சீபதியோர்‌-அன்றெதிர்த்துக்‌–145-

விடைக்‌ குன்று; அழகர்மலை -99, பார்க்க.
ஸ்ரீ பதியோர்‌ -அழகர்‌ மலையிலுள்ளோர்‌.

கூடலிற்‌ கூடலெனுங்‌ கூடற்‌ நிருநகரில்‌
ஏடலர் தாரான் எழுந்தருளி ஆடக்குடன்–146-

ஸ்ரீ பதியோர்‌ கூடுதலால்‌ கூடலென்னும்‌ பெயர்‌ பெற்ற மதுரையில்‌;
இது பிரிநிலை நவிற்சியணி.
தாரான்‌ – அழகர்‌.

கல்லா குளங்கள்‌ கரையப்‌ பணிவார் முன்‌
தல்லா குளம் வந்து சார்ந்தருளி-மெல்ல –147-

கல்‌ ஆகு உளங்கள்‌ – கல்லைப்‌ போன்ற மனங்கள்‌.
தல்லா குளம்‌ – மண்டபப்படியுள்ள ஓர்‌ ஊரின்‌ பெயர்‌-இது வையை நதிக்கு வடக்கே உள்ளது.

——–

வையைக்கு எழுந்தருளுதல்‌

நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்றுசிலர்‌ பார்க்கச்‌-சுரலோகத்‌-148-

நரலோகமீது – பூமியின்மேல்‌.
சுரலோகத்து – தேவருலகத்‌தில்‌ உள்ள.

திந்த்ர விமானமிது வென்று மிதுசோமச்‌
சந்த்ர விமானமே தானென்றும்‌-முந்தியவட்‌–149-

சோமச் சந்த்ர விமானம்‌ : இத் தலத்துள்ள கோயிலின்‌ விமானம்‌ ; 107-ஆம்‌ கண்ணியின்‌ குறிப்பைப்‌ பார்க்க.

டாங்க விமான மவையிரண்டு மென்னவே
தாங்கு விமானந்‌ தனிற்புகுமுன்‌-தீங்கிலார்‌–150-

அட்டாங்க விமானம்‌ : எட்டு அங்கங்களையுடையது :
அழகருடைய சோமச்சந்திர விமானமும்‌, கூடலழகருடைய விமானமும்‌ இவ்வாறு கூறப்படுதலால்‌, -அட்டாங்க விமான மவையிரண்டும்‌ -என்றார்‌.
இதன்‌ இலக்கணத்தை, அழகர்‌ பிள்ளைத்‌ தமிழ்‌, முத்தப்‌ பருவம்‌, * மட்பாவை தோயும்‌  (2) என்னும்‌ முதற்‌ குறிப்புடைய செய்‌ யுளால்‌ அறிந்து கொள்ளலாம்‌.
தீங்கிலார்‌ – விமானந்‌ தாங்குவோர்‌.

உன்னி விமான முரத்தெடுக்கும்‌ போதனந்தன்‌ 
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த-தென்னவே--151-

உரத்து – வன்மை கொண்டு.
அனந்தன்‌ – ஆதிசேடனுடைய.
சென்னிமணி – தலையிலுள்ள மணிகளுள்‌.

உம்பரில்‌ வெய்யோ னுதயஞ்‌ செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி-அம்பரத்திற்‌–152-

குதிரை நம்பிரான்‌ – பெருமாளுடைய வாகனமான குதிரை ;
உத்தம இலக்கணம்‌ அமைந்த குதிரையைக்‌ குதிரை நம்பிரானென்றல்‌ மரபு (சீவக. 2157, ந)
ஸூரியனுக்கு ஆதிசேடனுடைய மணி உவமை.

கோடி கதிரோனுங்‌ கோடி பனிமதியும்‌
ஓடி நிரையா வுதித்தவென-நீடிய–153-

கதிரோன்‌ – சூரியன்‌.
மதி- சந்திரன்‌.
நிரையா – வரிசையாக

பொற்கொடியும்‌ வெள்ளிக்‌ குடையும்‌ பொலிந்திலங்க
விற்கொடிகள்‌ விண்ணோர்‌ வெயர்துடைப்பச்‌-சொற்கத்‌--154-

பொற் குடைக்குச்‌ சூரியனும்‌, வெள்ளிக் குடைக்குச்‌ சந்திரனும்‌ உவமைகள்‌.
விற் கொடிகள்‌ – ஒளியை யுடைய கொடிகள்‌

தியலுங்‌ கரியுமதி லெற்று முரசும்‌ 
புயலு முருமேறும்‌ போலக்‌-கயலினத்தை-155-

எற்றும்‌ – அடிக்கப்படும்‌.

அள்ளுந்‌ திரைவையை யாறுட்‌ பரந்துநர
வெள்ளங்‌ கரைகடந்து மீதூர-வள்ளல்‌–156-

திருத்தகு மேகம்போற்‌ செல்லுதலா னீர்தூம்‌
துருத்தி மழைபோற்‌ சொரியகீ-கருத்துடனே-157

நீர்தூம்‌ துருத்தி – நீர்தூவும்‌ ஒருவகைக்‌ கருவி.

வாட்டமற வந்து வரங்கேட்கு மன்பருக்குக்‌
கேட்டவர மூறுங்‌ கிணறுபோல்‌ நாட்டமுடன்‌–158-

காணிக்கை வாங்கியன்பர்‌ கைகோடி யள்ளியிடும்‌
ஆணிப்பொற்‌ கொப்பரைமுன்‌ னாகவரகீ-காணிற்‌–159-

காணிக்கை – கையுறைகளை.

புரந்தரற்கு தேரிதென்று போற்றிசைப்ப வோரா
யிரந்திருக்கண்‌ வையைநதி யெய்தி-உரந்தரித்த--160-

திருக்கண்‌ – வையை நதியினிடையே அழகர்‌ திருக்கண்‌
சாத்தி யருளுதற்காக வைக்கப்படும்‌ பூர்ண கும்பமுதலியன உள்ள மண்டபங்கள்‌.
ஆயிரம்‌, பலவென்னும்‌ பொருளை யுடையது. -ஆயிரங்‌
கண்களை யுடைமையால்‌ வையை நதிக்கு இந்திரனை உவமை கூறினர்‌.
உரம் -மார்பு

——————

வண்டியூர்‌ மண்டபத்தில்‌ எழுந்தருளுதல்‌

வார்மண்டு கொங்கை மனம்போல்‌ விலங்குவண்டி
யூர்மண்டபத்தி னுவந்திருந்து-சீர்மண்டு–161-

வார்மண்டு கொங்கை–திரு மகள்
வண்டியூர் மண்டபம் -வையைக்கு வடக்கில் உள்ள ஓரூர்
இவ்வூரில் சிவ கங்கை அரசரால் மண்டபப்படி நடத்தப்பட்டு வருகிறது என்பர்

மாயனுக்கு வாகனமாய்‌ வாவென்று சேடனைத்தான்‌
போயழைக்க வெய்யோன்‌ புகுந்திடலும்‌-தூயோன்‌–162-

சூரியன்‌ அதீதமிக்க. தற்குறிப்பேற்றவணி.

மருளப்‌ பகலை மறைத்தவ னிப்போ
திருளைப்‌ பகல்செய்தா னென்னத்‌-தெருளவே–163-

பகலை மறைத்தது, கிருஷ்ணாவதாரத்தில்‌ ;
பகல்‌ – சூரியன்‌

அங்கிக்‌ கடவுளும்வந்‌ தன்பருட னாடுதல்போற்‌
றிங்கட்‌ கடவுள்சே விப்பதுபோநற்‌-கங்குற்‌–164-

கரதீப மும்வாணக்‌ காட்சியுங்‌ காண
வரதீப ரூபமாய்‌ வந்த-திருமால்‌–165-

கரதீபம்‌ – தீவட்டி,
காண – காண்பதற்கு.
தீப ரூபமாய்‌ வந்தது திருத் தண் காலில்‌-இவருடைய திருநாமம்‌ விளக்கொளிப்‌ பெருமாளென்பது.

—————

தலைவி அழகரைத்‌ தரிசித்து மயல்‌ கொள்ளல்‌

அவனி பரிக்கு மனந்தாழ்வான்‌ மீது
பவனிவரக்‌ கண்டு பணிந்தேன்‌-அவனழகிற்‌–166-

அனந்தாழ்வான் மீது – ஆதி சேட வாகனத்தின் மீது.
பவனி -உலா

பின்னழகு முன்னழகாம்‌ பேரழகைகீ காணுமுன்னே
முன்னழகைக்‌ கண்டேனான்‌ மோகித்தேன்‌-பின்னழகு-167-

பெருமானுடைய முன்னழகைப்‌ போல்வதாகிய பின்னழகைக்‌ காணுமுன்னே. முன்னிலும்‌ பின்பழகியரென்று பெருமாளுக்கு ஒரு திருநாமம்‌ உண்டு-
முன்பிலும் பின்‌ பழகிய நம்‌ பெருமாள்‌ (சீரங்க. ஊசல்‌, 8. )

தானேகண்‌ டாலுந்‌ தனக்குத்‌ துயர்வருமென்‌
ஹேனோரை நோக்கி யெழுந்தருள-ஆனோன்‌–168-

(பி-ம்‌.) எழுந்தருளி – வானோன்‌.

விமலத்‌ திருமுகமு மென்மார்பின்‌ மேவும்‌
கமலத்‌ திருமுகமுங்‌ கண்டேன்‌-அமலன்‌–169-

கமலத்திரு – தாமரைப்‌ பூவிலுள்ள திருமகளது.

அரவணையா னென்பதுமுண்‌ டண்ணலரன்‌ போல
இரவணையா னென்பதுமுண்‌ டேனும்‌-பரவைத்–170-

அரவணையான்‌ – ஆதிசேடனை அணையாக உடையவன்‌.
இரவு அணையான்‌ – யாசித் தலைப்‌ பொருந்தான்‌, இரவில்‌ தழுவான்‌..

திருவணையா னென்றுதினஞ்‌ செப்புவது பொய்யென்‌
றுருவணையு மாதர்க்‌ குரைத்தேன்‌-மருவணையும்‌–171-

பரவைத் திருவணையான்‌ – கடலிற்கட்டிய திருவணையை யுடையவன்‌, –பாற்கடலிற்றோன்‌ றிய திருமகளை அணையாதவன்‌ ;
பரவை – கடல்‌, பாற்கடல்‌.
மரு – வாசனை.
(ி-ம்‌.) செப்புவதைப்பொய்‌ ; முருகனையுஞ்‌.

—————–

தலைவி அழகரை நோக்கிக்‌ கூறுதல்‌

செங்கரத்தி லன்று திருடியவெண்‌ ணெய்போலச்‌
சங்கிருக்க வென்சங்கு தான்கொண்டீர்‌-கொங்கை–172-

என்‌ சங்கு – என்னுடைய வளையலை.

மலையருவி நீருமக்கு மாலிருஞ்‌ சோலைத்‌
தலையருவி நீர்தானோ சாநீறீர்‌-விலையிலாப்‌–173-

கொங்கையாகிய மலையில்‌ விழுகின்ற அருவி போன்ற கண்ணீர்‌.

பொற்கலை யொன்‌நறிருந்தாற்‌ போதாதோ வன்றுபுனை
வற்கலையி லேவெறுப்பு வந்ததோ-நற்கலைதான்‌–174-

அன்று- இராமாவதாரத்தில்‌.
வற்கலை- மரவுரி.
நற்கலை-நல்ல ஆடைகளை

ஆரஞ்சேர்‌ கொங்கைக்‌ களித்த தறியீரோ
சோரந்‌ திரும்பத்‌ தொடுத்தீரோ-ஈரஞ்சேர்‌--175-

ஆரம்‌ – முத்துமாலைகள்‌.
கொங்கைக்கு – திரெளபதிக்கு.
சோரம்‌ – திருட்டுத்‌ தொழில்‌ ; என்றது-கிருஷ்ணாவதாரத்தில்‌ கோவியர்‌ துகில்‌ கவர்ந்ததை நினைந்து.

நூலாடை யாமெங்க ணுண்ணாடை தாமுமக்குப்‌
பாலாடை யாமோ பகருவீர்‌-மாலாகி–176-

பாலாடை – பால்போன்ற ஆடை, காய்சீசிய பாலிலுள்ள ஏடு-
ஆடை தனை யொதுக்கிடுமென்‌ பால்வாரும்‌ (அழகர்‌ கலம்‌. 87) . 

மொய்த்திரையு மெங்கண்‌ மொழிகேளீர்‌ பாற்கடலில்‌
நித்திரைதான்‌ வேகவதி நீரிலுண்டோ-இத்தரையிற்‌–177-

மொய்த்து-நெருங்கி.
இரையும்‌-முழங்கும்‌.
வேகவதி-வையை நதி.
(பி-ம்‌.) வேகவதி நீருண்டோ.

பொங்குநிலா வெள்ளம்‌ பொருந்திற்றோ பாற்கடறான்‌
அங்குநிலா தும்மோ டணைேந்ததோ-கங்குலெனும்‌–178-

நிலாவிற்குப்‌ பாற்கடல்‌ உவமை.

ஆனை கெசேந்திர னாகிலதன்‌ மேல்வருவன்‌
மீனையும்‌ விட்டு விடலாமோ-கானச்‌--179-

கெசேந்திரன்‌ – கசேந்திராழ்வான்‌.
வன்மீனென்றது சந்தி ரனை ; கோள்களையும்‌ மீனென்றல்‌ மரபு;
மைம்மீன்‌ புகையினும்‌ (புறநா. 117 : 1); –முதலையென்பது மற்றொரு பொருள்‌.
கானம்‌ – பாட்டு.

சதிரிள மாதர்‌ தமகீகிரங்கு வீர்நெஞ்‌
சதிரிளமா தர்கீகிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக்‌–180-

சதிரிளமாதர்‌ – இத்தலத்திலுள்ள தளிப்பெண்டுகள்‌-
இப்‌பெயர்‌, சதிரிள மடவார்‌ தாழ்ச்சியை மதியாது(திருவாய்மொழி, 2.10: 2) என்பதிலும்‌ காணப்படும்‌.
நெஞ்சு அதிர்‌ இளமாதர்க்கு இரங்க ஒண்ணாதோ.

கொட்டத்து வெண்பால்‌ குனிந்துகறப்‌ பார்முலையில்‌
விட்டுக்‌ கறப்பதையும்‌ விட்டீரோ-கிட்டப்போய்‌–181-

கொட்டத்து – பால்கறக்கும்‌ பாதீதிர தீதில்‌.

கன்றை விட்டுக்‌ கறப்பதையென இயைக்க.

மென்பா றெறித்த வியன்முலையைப்‌ பாற்குடமென்‌
றன்பா லெடுத்த தறியீரோ-மின்போல்வார்‌–182-

எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில்‌. (பி-ம்‌.) எடுப்பதறியீரோ,

செவ்விதழின்‌ மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல்‌
அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை–183-

செவ்வி தழை – அழகு தழைத்த. (பி-ம்‌.) யுண்பார்போல்‌.

குன்றன்‌ றெடுத்தீர்‌ குளிருமமு தங்கடைந்தீர்‌
சென்றன்று பாம்பினடஞ்‌ செய்தீரே-என்றென்று--184-

குன்று – கோவர்தீதன மலையை.
அமுதங்கடைந்தீர்‌ : ஆரமுதுகடைந்த வங்கையான்‌ -என்றார்‌ முன்னும்‌; 73.
பாம்பில்‌-காளியன்‌ தலையில்‌.

—————

அழகர்‌ சோலைமலைக்கு மீளுதல்‌

கொண்டபஞ்‌ சாயுதன்மேற்‌ கொள்கை பெறத் தேனூர்‌
மண்டபஞ்‌ சார்வாய்‌ வலங்கொண்டு-பண்டை–185-

தேனூர்‌ – மிகப்‌ பழையதோர்‌ ஊர்‌ ;
ஐங்குறு நூற்றிலும்‌ இப்‌பெயர்‌ வந்துள்ளது ;
தேனூர்‌ வெற்றிலையும்‌ மானூர்ச்‌ சுண்ணாம்பும்‌ – என்பது ஒரு பழமொழி.

விரசையுடன்‌ வைகுந்த வீடுமிது வென்னப்‌
புரசைமலை காத்தோன்‌ புகுந்தான்‌-வரிசை–186-

விரசை – விரஜாநதி ; வைகுந்தத்திற்கு அருகே ஓடுவதோர்‌ ஆறு.
வைகுந்த வீடு – வைகுந்தமாகிய ,முத்தி யுலகு.
புரசைமலை -கசேந்திரனாகிய யானையை.

உபசாரங்‌ கொண்டருளி யோர்சிவிகை மீது
தபசாரஞ்‌ சீபதியைச்‌ சார்ந்தான்‌-இபமுண்ட–187-

தபசு ஆர்‌ ௮ம்‌ சீபதி – தவம்‌ பொருந்திய அழகிய சோலை மலையை.
இபம்‌-இங்கே யானை யென்னும்‌ நோய்‌–
தூம்புடை நெடுங்கை வேழந்‌ துற்றிய வெள்ளி லேபோல்‌ (சீவக. 232) என்பதன்‌ உரையையும்‌ ஒப்புமைப்‌ பகுதியையும்‌ பார்க்க.

—————-

தலைவியின்‌ நிலை

வெள்ளிற்‌ கனியானேன்‌ வேதனை யீன்றவன்றான்‌
உள்ளிற்‌ கனியானே யூர்ந்துவரும்‌-பிள்ளைமதி–188-

வெள்ளிற்கனி- விளாம்பழம்‌.
வேதனை யீன்றவன்‌ -பிரமனைப்‌ பெற்றவன்‌, –துன்பத்தைக்‌ கொடுத்தவன்‌ ;
வேதனையும்‌ பெற்று வெளி நின்று–என்றார்‌ முன்னும்‌ ; 70.
உள்ளில்‌ கனியான்‌ – மனத்தில்‌ இரங்‌ கான்‌.
பிள்ளைமதி – பிறை.

செவ்வை மதியோ திரைக்கடல்‌ வாய்சிறிதோ
கொவ்வையித ழார்மொழிதான்‌ கூற்றன்றோ-எவ்வமுறும்‌–189-

செவ்வை மதியோ என்றது பிறை கோணியிருப்பதை நினைந்து.
மொழி – பழிமொழி.
கூற்று- யமன்‌, சொல்‌.
எவ்வம்‌-துன்பம்‌.

காற்றேரி னானுமொரு காலனன்‌ றோவுருக்கி
ஊற்றாத சேமணியு மொன்றுண்டோ-வேற்றுக்‌–190-

காற்றேரினான்‌ – தென்றற் காற்றாகிய தேரையுடையவன்‌.
ஒரு காலன்‌ – ஒற்றைத்‌ தேர்ச் சக்கரத்தை யுடையவன்‌, ஓர்‌ யமன்‌.
உருக்கி ஊற்றாத – வெண்கலத்தை உருக்கி ஊற்றப்படாத; –தன்‌ ஓசையைக்‌ கேட்டாரை உருக்கி ஊற்றத.
சே மணி – இடபத்தின்‌ ‘கழுத்திற்‌ கட்டிய மணி. உருக்கியூற்றாத சேமணி உண்டோ :
மெமுகான்‌, றூ துலைப்‌ பெய்த பகுவாய்த் தெண்மணி(குறுந்‌. 155 : 3-4)

கிளை யோடு வாடிக்‌ கிடந்தாலுஞ்‌ சுட்டுத்‌
‘துளையாக்‌ குழலுமுண்டோ சொல்லாய்‌-கிளியரசே–191-

வேற்றுக்‌ கிளையோடு – வேறு மூங்கில்களோடு.
௬ட்டுத் துளையாக்‌ குழல்‌ – சுட்டுத்‌ துளை செய்யப்படாத வேய்ங்குழல்‌, தன்‌ இசையைக்‌ கேட்பவரைச்‌ சுட்டுத்‌ துளையாத குழல்‌.

என்கூடு பொன்கூடு மிந்த நிறத்தினால்‌
உன்கூடு மென்கூடு மொன்றுகாண்‌-என் கூட்டில்‌–192-

என்‌ கூடு – என்னுடம்பு. பொன்‌ – பசலை.

மாங்கனி யுண்டு வளஞ்சேர்‌ செழுங்கொவ்வைத்‌
தீங்கனி யுண்டா சினியுண்டு-பாங்கிற்‌–193-

கொவ்வைத்‌ தீங்கனியென்றது உதட்டை,
ஆசினி – பலா–இங்கு அதன்‌ .பழத்திற்கு ஆயிற்று;
கொங்கைக்கு உவமை: –கொங்கைப்‌ பலாப்பழத்‌தீயினொப்பாய்‌ ?? (திருவா. நீத்தல்‌.)
(பி-ம்‌.) செழுங்கோவைத்‌.

குழையுமன முண்டுகுழம்பிய பாலுண்‌
டூழையே தெளிபாலு முண்டு-விழைவறிந்‌–194-

குழையும்‌ மனம்‌, குழையும்‌ அனம்‌.
பால்‌ – பகுதி, உண்ணும்‌ பால்‌,
உழை – பக்கம்‌.

தூட்டுவே னுள்‌ யுருப்பசியா யென்ன நலம்‌
காட்டுவேன்‌பட்டாடையாற்றுடைப்பேன்‌- கூட்டில்‌–195-

உருப்பசியே தாயே என்றுகூற, உருவம்‌ பசுதீதிருப்பாயென்று யாவரும்‌ சொல்ல. நலங்கு ஆட்டுவேன்‌ : 61.

அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்‌
புரைதீர்‌ நறையும்‌ புகைப்பேன்‌-அருகே–196-

ஆலத்தி- ஹாரத்தி;
அரசு, ஆல்‌; அதீதி யென்னும்‌ மரப்‌ பெயர்கள்‌ தோற்றுதல்‌ ஒரு நயம்‌.
நறை – நறும்புகை.

இளவெயிலிற்‌ காய்வித்‌ தெடுத்தொருகான்‌ முத்தி
வளைபயில்‌ கையின்மேல்‌ வைத்துத்‌-துளபமணி–197-

முத்தி – முத்தங்கொண்டு : புதல்வர்‌ பூங்கண்‌ முத்தி -(புறநா. 41:14)

ஈசன்‌ நிருநாம மெல்லாமென்‌ போலுனக்குப்‌
பாசந்‌ தொலையப்‌ பயிற்றுவேன்‌-பேசென்றே–198-

பேசென்று பயிற்றுவேனேன இயைக்க.

————–

பிற பொருள்‌ தூதிற்‌ சிறவா வென்றல்‌

ஈடுபட்ட வெள்ளை யெகினத்தைத்‌ தூ துவிட்டாற்‌
சூடுபட்‌ டார்துணிந்து சொல்வாரோ- கூடுகட்டி–199-

ஈடுபட்ட – எனிவரவுபட்ட (தக்க. 61, உரை).
எகினத்தை -அன்னப் பறவையை.
சூடு – உச்சிக்‌ கொண்டை : இஃது அன்னத்தின்‌ தலையிலுள்ளது.
சூடுபட்டார்‌ – சூடுண்டவரென்பது மற்றொரு பொருள்‌.

அன்பாய்‌ வளர்த்ததா யார்க்குதவாகீ கோகிலந்தான்‌
என்பா லருள்வைத்‌ தியம்புமோ-தன்‌ பேர்‌–200-

வளர்த்த தாயார்‌ – காக்கை,
கோகிலம்‌ – சூயில்‌.
காக்கைக்‌ கூட்டிலிருந்து வளர்ந்து இறகு முளைத்த பின்‌ பறந்து போய்‌ விடுதல்‌ குயிலின்‌ இயல்பு;
வருந்தி யீன்றாண்‌ மறந்தொழிந்தாள்‌ வளர்த்தாள்‌ சொற்‌ கேட்டில்‌ கடிந்தாள்‌ (சீவக. 1661)
உயிர்த்த பொழுதே நின்‌ குரல்கே ளாமுன்‌ ஓடிற்‌ நீன்றதாய்‌, நயதீதின்‌ வளர்த்த தாய்குரல்கேட்‌டலுமே நடுங்கத்‌ துரந்ததால்‌ (பிரபு. பிரபுதேவர்‌ வந்த. 63)

அரியென்று சொன்னா லளியென்று சொல்லும்‌
வரிவண்டு பேசி வருமோ-விரகஞ்செய்‌–201-

அரியென்று……சொல்லும்‌ : என்றது வண்டு குழறு மென்ற படி;
முதுவண்‌ டினந்தான்‌ முடிச்சவிழ்தீ தாலும்‌ மதுவுண்டாற்‌ பின்னைவா யுண்டோ
அளிப்பிள்ளை வாய்குழறும்‌ என்றார்‌ முன்‌ னும்‌; 35) 46.
அரி- அளியென்னும்‌ இரண்டும்‌ வண்டின்‌ பெயர்கள்‌.
அரியென்பது திருமால்‌ பெயர்‌ ; அதைக்‌ கூடச்‌ சொல்லத்தெரியா தென்‌பதும்‌,
அரிச்சுவடியிலே முதல்‌ வார்த்தையாகிய அரியென்பதே தெரியா தென்பதும்‌ வேறு பொருள்‌;
அரியென்றெங்கள்‌, தாலத்தின்‌ மீதெழுதச்‌ சமர்தீதி லாரோ (அழகர் கலம்‌. 6).
விரகம்‌ – பிரிவால்‌ உண்டாகும்‌ துன்பம்‌.

வன்கால திக்கின்‌ மலைவா யிருக்கின்ற
தென்காலு மென்காதல்‌ செப்புமோ-பொன்காதல்‌–202-

காலதிக்கு – தெற்கு; காலன்‌ – யமன்‌. .துன்பத்தைச்‌ செய்வா
ரோடு தொடர்புடையதென்பதைக்‌ காட்டத்‌ தெற்கென்னாது காலதிக்‌கென்றாள்‌.
மலைவாய்‌- பொதியின்‌ மலையின்கண்‌, –மலைப்புடன்‌.
தென்‌கால்‌ – தென்றற்‌ காற்று.
பொன்‌ – திருமகள்‌.

வண்டலையுநீ தாரான்முன்‌ மாதரையெல்லாந்தூந்றும்‌
கொண்டலையுந்‌ தூதுவிடகீ கூடுமோ-உண்ட-203-

தாரான்‌ – திருமால்‌,
மாதரை எல்லாம்‌ தூற்றும்‌ – பெண்களை யெல்லாம்‌ பழி கூறுகின்ற. –பெரிய பூமி முமுதும்‌ துளியைத்‌ தூற்றுகின்‌ற.
கொண்டலை – மேகத்தை,

படியேழுங்‌ காக்கும்‌ பரங்கருணை யான்முன்‌ 
கொடியோரும்‌ போவாரோ கூறாய்‌-அடியார்கள்‌–204-

படி- உலகம்‌.
கொடியோர்‌ – காக்கைகள்‌, கொடுமையை யுடையவர்‌ ;

காகத்தைத் தூது விடுதலுண்டென்பது வடமொழியிலுள்ள காக சந்தேசமென்னும்‌ நூலால்‌ விளங்கும்‌.

————-

கிளியின்‌ தகுதி

அங்கிருந்தார்‌(கீர்த்‌ னஞ்செய்‌ வாயடுத்த நாச்சியார்‌
பங்கிருந்தாற்‌ கையிற்‌ பறந்திருப்பாம்‌-எங்கிருந்து–205-

கீர்த்தனம்‌ ; : குருகேயுன்‌ னாக்குத்தான்‌ கூழைநாக்‌ கான, தரிகீர்த்‌ தனத்தினா லன்றோ–என்றார்‌ முன்னும்‌ – 30.

நாச்சியார்‌ – ஆண்‌டாள்‌ இவர்‌ கையிற்‌ கிளியிருக்கும்‌.

வந்தாயென்‌ றான்மா லிருஞ்சோ லையினிலிருந்
தெந்தா யுனைத்தொழவந்‌ தேனென்பாய்‌-அந்தசீ–206-

சவுந்தர வல்லியெனுந்‌ தற்சொரூ பிக்கும்‌
உவந்தலர்சூ டிக்கொடுத்தா ளுக்கும்‌-சிவந்த–207

சவுந்தரவல்லி : இத் தலத்துள்ள நாச்சியார்‌ திருநாமம்‌,
தற்‌ சொரூபி – அதே வடிவாயிருப்பவள்‌.
சூடிக்கொடுத்தாள்‌ – ஆண்டாள்‌

கடுகிலே சங்கோபங்‌ காணாம லென்மால்‌
வடுகிலே சொல்வாய்‌ வகையாய்‌-அடுகிலே--208-

கடுகு இலேசம்‌ – கடுகளவாகிய சிறுமைகூட.
மால்‌ – மயல்‌.
வடுகு – தெலுங்கு. .

சங்கெடுப்பாய்‌ சங்கெடுக்குஞ்‌ சச்சிதா னந்தரணி
கொங்கெடுக்குந்‌ தாமங்‌ கொடுவருவாய்‌-அங்கடுகீகின்‌–209-

அடு கிலேசம்‌ கெடுப்பாய்‌ – வருந்துகின்ற துன்பத்தைப்‌ போக்குவாய்‌.
சச்சிதானந்தர்‌ – அழகர்‌.
கொங்கு – தேன்‌; பூந்தாதுமாம்‌.

———–

அடையாளம்‌

ஓருகத்தி லாலாகி யோருகத்தி லேயரசாய்‌
ஒருகத்தி லேவில்‌ லுவமாகி-ஒருகதீதிற்‌–210-

கிருதயுகதீதில்‌ ஆலமரமாகவும்‌,
திரேதாயுகத்தில்‌ அரச மரமாகவும்‌,
துவாபரயுகத்தில்‌ பலாமரமாகவும்‌,
கலியுகத்தில்‌ புத்திரஜீவி மரமாகவும்‌ தருமம்‌ விளங்கும்‌ என்று இத்தலபுராணம்‌ கூறும்‌.
இவர்‌ மூன்றாம்‌ யுகத்தில்‌ வில்வமரத்தைக் கூறுகின்றார்‌.

புத்திர தீபமுமாய்ப்‌ புங்கவர்கீகா றாந்தருவாய்ச்‌
சத்தி தருமோர்‌ தருவுண்டு-மொய்த்த–211-

புத்திரதீபம்‌ – ஒரு மரம்‌,
புங்கவர்க்கு – தேவர்க்கு. கற்பகங்‌கள்‌ ஐந்தாதலின்‌,ஆறாந்‌ தருவாய்‌- என்றார்‌ ;
மூவரி னால்வரா முனி?? (கம்ப. மந்திரப்‌. 5). என்பது போல.

ஒரு கோடி காவுண்‌ டொருகோடி யாறுண்‌
டொருகோடி பூஞ்சுனையு முண்டு-திருமால்‌—212-

கா- சோலை.

அறங்காக்கும்‌ யோகிகள்போ லல்லும்பகலும்‌
உறங்காப்‌ புளிதானு முண்டு-திறஞ்சேர்‌–213-

உறங்காப்புளி-ராஜ கோபுரத்துக்கு வடக்கே பதினெட்டாம் படிக்கு எதிரில் இது முன்னிருந்த தென்றும்‌,
சில நாளைக்குமுன்‌ கீழே விமுந்துவிட்டதென்றும்‌ அந்த இடத்தில்‌ இப்பொழுது பூஜை நிவேதனம்‌ நடந்து வருகின்றனவென்றும்‌ கூறுவர்‌.
குமுதவல்லியோடு திருமங்கை மன்னன்‌ எழுந்தருளி மங்களாசாசனம்‌ செய்தபோது வைக்கப்பட்டதென்பது கர்ண பரம்பரைச்‌ செய்தி

யோகிகள்‌ இரவும்‌ பகலும்‌ தூங்காதிருப்பர்‌.

அவர்போல்‌ இலைகளை மூடாமல்‌ எப்பொழுதும்‌ விரித்தே – இருக்கும்‌ புளியை உறங்காப்புளி யென்பர்‌.

திருமால்‌ அறம்‌ – ரீவைஷ்ணவ தர்மம்‌.

தாமக னோடுறையும்‌ பெற்றி விளங்கப்‌
பிதாமகன்‌ வந்துபுகழ்‌ பேசசீ-சதாகால–214-

மகனோடு பிதா உறையும்‌ பெற்றி. பிதாமகன்‌ – பிரமன்‌…

முந்திரமாய்‌ வாழு முபேந்திரனங்‌ கில்லையென
இந்திரனார்‌ வந்தங்‌ கினிதிறைஞ்சப்‌-பிந்திய–215-

சதாகாலமும்‌-எப்பொழுதும்‌.
திரம்‌-ஸ்திரம்‌.
உபேந்திரன்‌ -அசுரரால்‌ தேவர்களுக்கு உண்டாகும்‌ துன்பத்தை மாற்றுவதற்குத் திருமால்‌
உபேந்திரராக எருந்தருளி யிருக்கிறிரென்பது மகாபுராண
வரலாறு.
இருகூல மும்பொரு மாநீ ரரங்கத்தி லெந்தை…புருகூத
னுக்குத்‌ திருத் தம்பி யாகிப்‌ புரக்கும்‌ (திருவரங்கத்து மாலை, 16).
முதலிலுள்ள அங்கென்றது தேவலோகதீதைக்‌ குறித்தது.

தம்பியர்‌ மூவருக்குந்‌ தானே யரசீந்த
நம்பி திருத்தாளை நம்பினோர்‌-வெம்பிறவித்‌–216-

மூவர்‌ – பரதன்‌, சுக்கிரீவன்‌) விபீடணன்‌ ஆகிய மூவர்‌.

————-

ஸ்தலாசாரிய புருஷர்களும்‌ பிறரும்‌

தேகம்‌ பவித்திரஞ்செய்‌ சீரங்க ராசபட்டர்‌
ஆகும்‌ ப்ரசித்தரா மர்ச்சகரும்‌-மோகமுறும்‌–217-

பவித்திரம்‌ – சுத்தம்‌.
சீரங்கராச பட்டர்‌ : இவர்‌ ஸ்தானிகராக முதலில்‌ வந்தவர்‌ ;-அர்ச்சக ஸ்தானிகத்தில்‌ குரு பரம்பரையார்‌.

கங்குன்‌ மலமாயை கன்மம்‌ விளங்காமற்‌
செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்‌-சங்கையறச்‌–218-

கங்குல்‌ – இருளைப் போன்ற. மலமும்‌, மாயையும்‌, கன்மமும்‌
அடுத்தவர்களுக்கு நீங்கும்படி ஓங்கிய திரிதண்டம்‌. திரிதண்டம்‌ ஸ்ரீ வைஷ்ணவ சந்நியாசிகளுக்கு உரியது.
சங்கை – சந்தேகம்‌.

செய்யுந்‌ திருமா லிருஞ்சோலைச்‌ சீயரென
வையம்‌ விளங்கவரு மாதவரும்‌-பொய்யில்லா-219-

திருமாலிருஞ்சோலைச்‌ சீயர்‌ : ஸ்ரீ மணவாள மாமுனிகள்‌ காலத்தில்‌ இந்த ஜீய ஸ்தானம்‌ ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு உரிய ஆசாரியர்கள்‌ இப்போது கூடலழகர்‌ சந்நிதியிலுள்ளனரென்பர்‌.

ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட்‌ டென்றொருப
மானதீ பங்காட்டி வந்துநின்று-மேனாளில்‌–220-

முத்தமிழ்க்குப்‌ பின்போவார்‌ முன்போகப்‌ பின் போன
அத்தன்‌ நிருமாலை யாண்டானும்‌-பத்தியினால்‌ –221.

முத்தமிழ்க்குப்‌ பின்போவாரென்றது திருமழிசையாழ்வாருடைய மாணாக்கருள்‌ ஒருவராகிய
கணி கண்ணர்‌ செல்ல அவர் பின்னே திருமால்‌ சென்றதை
சொல்கவிக்குப்‌, பார முதுகடைந்த பாயலான்‌ (72-3) என்பதன்‌ குறிப்புரையைப்‌ பார்க்க.
திருமாலையாண்டான்‌ – இவர்‌ உடையவருடைய ஆசிரியர்களுள்‌ ஒருவர்‌
இவர்‌ பரம்பரையினர்‌ தல்லா குளத்திற்கு வந்து விட்டனரென்பர்‌.

வையங்கார்‌ வண்ணனையே வாழ்த்த வருந்தோழப்‌
பையங்கா ரென்னுமா சாரியரும்‌-மெய்யன்பாம்‌–222-

வையம்‌ கார்வண்ணனையே வாழ்த்த–வையம்‌ -உலகத்தார்‌.
தோழப்பையங்கார்‌ : திருமாலையாண்டான்‌ பரம்பரையிலிருந்து பிரிந்தவர்களுள்‌ மூத்தவர்‌;
தோழப்பர் நற்றமிழ் சீர் பதிப்போன் நலமருவு மழகன்‌ புரோகிதன்‌ புனிதபத நாண்மலர்‌ வமுத்துவேனே -(அழகர்‌.பிள்ளைத்‌. பழிச்சினர்ப்பரவல்‌, 14)

சிட்டர்க டேவர்க ளாகத்‌ தினம்பரவும்‌
பட்டர்க ளாம் வேத பாரகரும்‌-விட்டுவெனும்‌–223-

சிட்டர்கள்‌ – ஓழுக்கமுடையோர்‌.
வேதபாரகர்‌- வேதத்தைக்‌ கரை கண்டவர்‌.
விட்டு – விஷ்ணு

சோதிகரு ணேக்கடற்‌ றோன்றிக்‌ கரசர
ணாதியுடன்‌ வந்த வமுதாரும்‌-மூ துலகிற்‌–224-

கரசரணாதியுடன்‌ – கைகால்களுடன்‌.
அமுதார்‌ – இவருடைய திருவுருவம்‌ நம்பிள்ளை சந்நிதியிலுள்ளதென்பர்‌;– இவர்பரிசாரக ஸ்தானிகர்‌.

றண்ணந்‌ துழாயழகன்‌ றங்குந்‌ திருமலைபோல்‌
நண்ணுந்‌ திருமலை நம்பிகளும்‌-உண்ணின்ற--225–

திருமலை – திருவேங்கடம்‌.
திருமலை நம்பிகள்‌ :மடைப்‌ பள்‌ளிப்‌ பரிசாரக ஸ்தானிகர்‌.

மாமலை சோலை மலையையே நம்புதலாற்‌
சோலைமலை நம்பியெனுந்‌ தூயோரும்‌-மேலை--226-

மாலை மலை – மயக்கத்தை அழிக்கின்ற ; திருமாலைத்‌ தரித்த எனினுமாம்‌.
சோலைமலை நம்பி – சோலை மலையை நம்பியவரென்பது பொருள்‌ ; இவர்‌ சந்நிதி பரிசாரக கூடஸ்தர்‌.

விரிஞ்சன்‌ முதலோர்க்கும்‌ விட்டுப்‌ பிரசாதம்‌
தருஞ்சட கோபநம்பி தாமும்‌-பெருஞ்சீர்‌–227-

விரிஞ்சன்‌ – பிரமன்‌.
சடகோப நம்பி – பரிசாரக ஸ்தானிக ருள்‌ ஒருவர்‌.
இதன்பின்‌
மருவு திருமா லிருஞ்சோலை நம்பி
உருவின்‌ மதனனையொப்‌ போனும்‌ –என ஒரு கண்ணின் மிகையாகக் காணப்படுகின்றது.

வரியெழுதிக்‌ கற்றதிரு மாலிருஞ்‌ சோலைப்‌
பிரியரெனுஞ்‌ சீர்கருணப்‌ பேரும்‌-கிரியிலிருந்‌–228-

வரி- எழுத்து.
திருமாலிருஞ்சோலைப்‌ பிரியர்‌ :இவர்‌ ௧ருணீகர்களுள்‌ ஒருவர்‌.
சீர்கருணப்பேர்‌ – கணக்கர்‌.

தாளுங்‌ கடவு எருளே துணையாயெந்
நாளுஞ்சீ காரியஞ்செய்‌ நாயகரும்‌-தாள்வணங்க–229-

கடவுள்‌ – அழகர்‌.
சீகாரியஞ்செய்‌ நாயகர்‌ – கோயிற்‌ பணி விடை செய்பவர்‌ ; இவர்களைக்‌ கோயிற்கொத்தென்பர்‌.

———————

தூதுரைக்க வேண்டூதல்‌

ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்ப னப்பொமுதுன்‌ _
வார்த்தை திருச்செவியில்‌ வாயாது-சேர்த்‌ யிலே–230-

திருவோலக்கம்‌- சூழ இருப்பாரோடு ஆதனத்தில்‌ எழுந்தருளி யிருத்தல்‌.
வாயாது – பொருந்தாது.
சேர்த்தி – பள்ளியறை.

மெல்ல வெழுந்தருளும்‌ வேளைபார்த்‌ தவ்வேளை
சொல்ல வெழுந்தொருவர்‌ சொல்லாமுன்‌-/வெல்லுமதன்‌–231-

மதன்‌ – மன்மதன்‌.

அம்பலர்‌ தூற்ற வடர்த்து வருமுன்னே ‘
வம்பலர்‌ தூற்ற வருமுன்னே-கும்பமுனி–232-

அம்பு அலர்‌ தூற்ற – பாணமாகிய பூவைத்‌ தூவ.
வம்பலர்‌ -அயலார்‌.
தூற்ற – பழிமொழிகூற.
கும்பமுனி- அகத்திய முனிவருடைய.

வாயி னுரையடங்க வந்த கடலடங்கத்‌
தாயி னுடையடங்கத்‌ தத்தையே-நீயுரையாய்‌–233-

நுரை அடங்க – நுரைகள்‌ ஒன்று பட. வாயில்‌ வந்தவென இயைக்க.
அகத்தியமுனிவர்‌ கடலை ஆசமனம்‌ செய்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டது.
தாயின்‌: உரை – செவிலித்தாயின்‌ அதிகாரச்‌ சொற்கள்‌)
அனை வேங்கையினதட்ட (அழகர்‌ கலம்‌. 42).
தத்தையே -.கிளியே.

உன்பேர்‌ சுவாகதமென்‌ றோதுகை யாலுனக்கும்‌
அன்பேர்‌ சுவாகதமுண்‌ டாகுங்காண்‌-முன்பொருநாள்‌--234-

சுவாகதம்‌ – கிளியின்‌ பெயர்களுள்‌ ஒன்று.
அன்பு ஏர்‌ சுவாகதம்‌ ; சுவாகதம்‌ – நல்வரவு.

கோசலை கையிற்‌ குருசி லுனைப்புகழ்ந்து
பேசி னுனைப்புகழ்ந்து பேசாரார்‌-நேசமுடன்‌–235-

குருசில்‌ – இராமன்‌,
அவர்‌ கிளியைப்‌ புகழ்ந்து பேசியதென்‌ றது, சீதை தன்‌ கிளிக்கு யார்‌ பெயர்‌ வைப்பதென்று கேட்க,
கைகேயி யின்‌ பெயரை வைக்கும்படி இராமன்‌ கூறியதை நினைந்து;
என்னொ ரின்னுயிர்‌ மென்கிளிக்‌ கியார்பெய ரீகேன்‌,
மன்ன வென்றலு மாசறு கைகயன்‌ மாதென்‌,
அன்னை .தன்பெய ராகென வன்பினொ டந்நாட்‌,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்‌ந்தோய்‌ (கம்ப. சூடாமணிப்‌. 83)

எம்முடைய மாலை யிருபுயத்து மாலைகேள்‌
உம்முடைய மாலை யுதவீரேல்‌-அம்மைதிருக்‌--236-

மாலை – திருமாலை ;
நோக்கியென ஒரு சொல்‌ வருவிக்க.
மாலை கேள்‌ – பூமாலையைக்‌ கேட்பாயாக.

கோதையார்‌ சூடிக்‌ கொடுத்து வரவிட்ட
தாதையார்‌ மாலைதனைத்‌ தம்மினென்பாய்‌-நீதி–237-

கோதையார்‌ – சூடிக்கொடுத்த நாச்சியார்‌.
தாதைஆர்‌ – பூந் தாதுகள்‌ நிரம்பிய.
திருவிழாக் காலத்தில்‌ சூடிக்கொடுத்த நாச்சியார்‌ சூடிய மாலை ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து இங்கே வருவது வழக்கம்‌.
தம்‌மின்‌ – தருவீர்‌.

அடுப்பவர்‌ யாவர்க்கு மாடித்‌ தியாகம்‌
கொடுப்பவ னில்லையென்று கூறான்‌-தடுக்கும்‌–238-

ஆடித் தியாகம்‌ : அழகருக்கு: ஆடிமாதத்தில்‌ முன்பு பிர மோத்ஸவம்‌ நடைபெற்று வந்ததென்பர்‌.

அருமாலை நீக்கு மழகன்‌ புயத்து
மருமாலை நீ வாங்கி வா.–239-

அருமாலை – போக்குதற்கு அரிய மயக்கத்தை.
மருமாலை -நறுமணமுள்ள பூமாலையை.
புயத்து மரும்‌ மாலையென்று கொண்டு-திருத்தோளில்‌ மருவிய மாலையெனலும்‌ ஆம்‌.

அழகர்‌ கிள்ளைவிடு தூது முற்றிற்று.

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் –ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரும்‌ ஸ்ரீ பங்குனி உத்தரமும்‌ —

October 23, 2023

ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரைப் பற்றி இது வரையில்‌ கிடைத்த ஆதாரங்கள்‌ ஐந்து
இவைகளில்‌ ஸ்ரீ ரங்க நாதனுடைய பங்குனி உத்ஸவம்‌ முழுவதும்‌, அவர்‌ ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரைக்‌ கல்யாணம்‌ பண்ணிக் கொண்ட விவரமும்
நன்றாய்ச்‌ சொல்லப்‌ படுவதால்‌ அவை உள்ளபடியே இங்கு எழுதப்படுகன்‌றன.–

1. நிசுளாபுரி மாஹாத்மியம்‌
இந்த மாஹாத்மியம்‌ காகிதத்தில்‌ எழுதிய பிரதி ஒன்று தான்‌ கிடைத்தது
சென்னையிலும்‌ தஞ்சாவூரிலுமுள்ள ராஜாங்க புஸ்‌தக சாலைகளில்‌ இது கிடைக்கவில்லை. மூன்று அத்தியாயமாயுள்ள இது பரீதாவி வருஷத்தில்‌ ஸ்ரீரங்கம்‌ கீதா பாஷ்யம்‌ ரங்காசாரியரால்‌ தமிழில்‌ எழுதி அச்சிடப்பட்‌டிருக்கிறது. -இதிலுள்ளபடி. நாச்சியாரின்‌ சரித்திரம்‌ பின்வருமாறு-

1-ம்‌ அத்‌யாயம் –
திரி சரனுடைய திரிசிர பர்வதமென்னும்‌ திருச்சி மலைக் கோட்டையைச்‌ சுற்றியுள்ள ப்ரதேசம்
கரன் என்னும்‌ ராக்ஷஸனுடைய வாஸஸ் ஸ்தானமாய்‌ காரண்யமாயிருக்தது —
அகஸ்‌தியர்‌ கரனை வடக்கே அனுப்பி அவ்விடத்தை ரிஷிகளின்‌ தபஸ்‌ஸுக்கு விரோதமில்லாமல்‌ செய்தார்‌.

2-ம்‌ அத்‌,–
பிரம்மா, விஷ்ணு, சிவன்‌–இம்‌ மூவரில்‌ யார்‌ பெரியவர்‌–என்று அறிவதற்காக பிருகு மஹரிஷி காலையில்‌ சிவனிடம்‌ போனார்‌.
அவர்‌ பார்வதியோடு கிரீடித்துக் கொண்டு ரிஷிக்குத் தரிசனம்‌ கொடுக்க: வில்லை.
ரிஷி பிரம்மாவினிடம்‌ போய்‌, அவர்‌ கர்மானுகுணமாக ஸ்ருஷ்டி செய்து கொண்டே யிருப்பது கண்டு
அவரும்‌ பரவஸ்‌து வல்லவென்று நிச்சயித்து,ஸாயங்‌ காலம்‌ விஷ்ணுவினிடம்‌ போனார்‌.
விஷ்ணு பிருகுவை உபசரித்து, வந்த காரியம்‌ வினவுகையில்‌, தனியாய்த்‌. தெரிவிக்க வேண்டுமென்றார்‌ ரிஷி.
எல்லாரும்‌ அப்பால்‌ செனறார்கள்‌. காந்தனோடு எகாந்தமாயிருக்கும்‌ ஸமயம்‌ ௮து தானென்று கண்ட லக்ஷ்மி பிருகுவை அப்பால்‌ போகச்‌ சொன்னாள்‌.
பிருகு கோபித்துக்கொண்டு, மனுஷிய ஜாதியில்‌ பிறப்பாய்‌ என்று சபித்து, விஷ்ணுவே பர தத்வம்‌ என்று சொல்லிக் கொண்டு. போனார்‌,
லக்ஷ்மி ரிஷியின்‌ சாப்த்தினால்‌ மிகவும்‌ கவலைப்‌. பட்டாள்‌,

விஷ்ணு–பிருகு சாபம்‌ தப்ப முடியாது, பூலோகத்தில்‌ பிறந்திரு, நானும்‌ அங்கே வந்து உன்‌ னைக்‌ கலியாணம்‌ செய்துகொள்கிறேன்‌.
கொஞ்ச நாள்‌ பூலோகத்திலிருர்து இங்கே வருவோம்‌.

லக்ஷ்மி கேவலமான மனுஷ்யனுக்கு நான்‌ எவ்‌விதம்‌ பிறப்பது

விஷ்ணு–கராஸூரனை அகஸ்தியர்‌ வடக்கே அனுப்பிக்‌ கராரண்யத்தை ரிஷி வாஸத்துக்குத்‌ தகுதி யாக்கிய பிறகு,
சோழ. ராஜனான தர்மவர்மா என்னும்‌ பக்தன்‌ கும்ப கோணத்தை விட்டுக்‌ காவேரியின்‌ தென்‌ கரையில்‌ நகரம்‌ ஸ்தாபித்து
தன்‌ பத்தினி நிசுளையின்‌ பெயரால்‌ நிசுளாபுரி எனப்‌ பெயரிட்டு அரசு செலுத்துகிறான்
அவனும்‌ மனைவியும்‌ ஸந்ததி யில்லாக்‌ குறையினால்‌ லக்ஷிமீ தந்த்ரம்‌ என்னும்‌ சாஸ்‌திரத்‌தின்படி உன்னைப்‌ பூஜிப்பார்கள்‌,
நீ அவர்களுக்குப்‌ பெண்ணாய்‌ப் பிற–நானும்‌ அங்கே வருகிறேன்‌.

3-ம்‌ அத்‌–அப்படியே நிசுளாதேவியின்‌ கர்பத்‌தில்‌ சித்திரை, சுக்ல துவாதசி , உத்தரம்‌-கூடிய வெள்‌ளிக்‌ கிழமையில்‌ லக்ஷ்மி அவதரித்தாள்‌.
அவளுக்கு வாஸ லக்ஷ்மி எனப்‌ பெயரிடப்பட்ட, .பிறகு சந்திர திலகன்‌ என்ற புத்திரன்‌ பிறந்தான்‌.
தர்ம வர்மா ரங்ககாதனிடம்‌ உத்தமமான பக்தனாயிருக்தான்‌.
வாஸ லக்ஷ்மி ரங்க நாதனையே விரும்பிக்‌ கலியாணம்‌ செய்து கொண்டாள்

மீனாக்ஷி ஸூந்தரம்‌ பிள்ளை எழுதிய உறையூர்ப் புராணம்‌
உறையூர்‌ நாச்சியாரைப் பற்றியதல்ல வாகையால்‌ இங்கு சேர்க்‌கப் பட வில்லை.
அது பஞ்சவர்ண ஸ்வாமி காந்திமதி யம்மன்‌ விஷயம்‌.

2. திவ்ய ஸூரி சரிதம்‌
தர்ம வர்மாவின்‌ வம்‌ஸத்தவனான நந்த சோழனுக்கு உறையூர்‌ நாச்சியார்‌ கிடைத்ததாகக்‌ கோயிலொழுகு ;
தர்ம வர்மாவுக்குக்‌ கிடைத்ததாக திவ்ய ஸூரி சரிதம்‌-7-ம்‌ ஸர்கம்‌. மற்றை விவரம்‌ கோயிலொழுகு போலே.
உடையவர் காலத்தில்‌ உத்தம நம்பி வம்சத்தில் இருந்து கருட வாஹன பண்டிதரால்‌ ஆழ்வார்‌ ஆசார்யர்களின்‌
சரித்ரம்‌ இந்தக்‌ காவ்யமாக எழுதப் பட்டது.

3- கோயிலோழுகு
“ நிகளாபுரியிலே தர்ம வர்மாவின்‌ வம்சரான நந்த சோழன்‌ ராஜ்யம்‌ பண்ணுகிற காலத்தில்‌ பகுகாலம்‌ அநபத்யனாயிருந்து
ஸ்ரீரங்க நாயகரிடத்தலே ௮திப்‌ பிரவணனாய்‌ தபஸ்ஸைப்‌ பண்ணி, அந்த தபோ பலத்‌தினாலே ஒருநாள்‌ தாமரை ஓடையில்‌
தாமரைப் பூவிலே ஒரு சிசுவாக ஸ்திரீ ப்ரஜை இருக்கக் கண்டு, அந்த ராஜா ஹ்ருஷ்டனாய்‌, அந்தக்‌ குழந்தையைத்
தம்முடைய கிருஹத்திலே கொண்டு வந்து கமல வல்லி யென்று நாம கரணம்‌ பண்ணி வளர்க்குமிடத்தில்‌,
அந்தக் குழந்தையும்‌ வளர்ர்து பெரியவளாய்‌ ஒத்த பெண்களுடனே விளையாடும்‌ காலத்‌திலே,
ஒருநாள்‌ தோழிகளுடனே லீலோத்யாநத்தில்‌ புஷ்பாப௪யம்‌ பண்ணுகிற ஸமயத்‌திலே,–
ஸ்ரீரங்கராஜர்‌ குதிரை நம்பிரான் மேலே ஏறி யருளி பலாச தீர்த்தத்துக்கு (சியர் புரத்‌துக்கு) வேட்டை எழுந்தருளாகிறவர்‌.
அந்தக்‌ கமல வல்லிக்கு அதி ஸுந்‌தரராய்‌ விபவாவதாரமாக ஸேவை சாதிக்க, கமலவல்லி கண்டு மோஹித்து
மஹா பிரயத்னத்தினாலே தோழிமார்‌ தேற்றத் தேர்ந்து , தன்‌ விடுதியிலே வந்து உன்மத்தை போலேயிருக்க,
அந்த ராஜாவும்‌ கமல வல்லியைக் கண்டு மன்மத விகாரம்‌ என்று கணிசித்து ,
* உனக்கு ஆர் மேலே மனஸ்ஸு இருக்கறது *– என்‌று கேட்க ,கமலவல்லி தனக்கு * ஸ்ரீரல்கராஜன்‌ அன்றியிலே ஒருத்தரிடத்‌திலேயும்‌ மனஸ்ஸூ இல்லை;
தன்னை * ஸ்ரீரங்கராஜருக்குப்‌ பாணி கிரஹணம்‌ பண்ணுவியும்‌’–என்று சொல்ல,
ராஜாவும்‌ ஸந்துஷ்டனாய் தனது மந்திரிகள் உடனே ஆலோசித்து , தம்முடைய குமாரத்தி கமல வல்லியை ஸ்ரீரங்க.ராஜருக்கு கன்னிகா ப்‌ரதானம்‌
பண்ணுவித்து பெண்ணைக்‌ கோயிலுக்கு அனுப்பும்‌ போது, ஸ்திரீ தனமாக முன்னூற்றுப் பதின்கலம்‌ தங்க
அமுதுபடியும்‌, அதுக்கு வேண்டின பருப்பமுதும்‌, கொம்பஞ்சு கொடியஞ்சு கறியமுதும்‌, அதுக்கு வேண்‌டின சம்பாரங்களெல்லாம்‌
தங்கக்தாலே பண்‌ணுவித்‌து அது களையும்‌, ஸ்‌த்ரீகளுக்கு ஸமங்களமான நூறு பரிசாரிகைகளையும்‌ கொடுத்தனுப்பி வைக்க,–
அத்தக் கமல வல்லியும்‌ கோயிலிலே வந்து திரு மண்ணுக்குள்ளே-(திரு மணத் தூணுக்குள்ளே ) புகுந்து அத்ருத்யை யாக, -அத்தைக் கண்டு ராஜாவும்‌ அதி ஸந்துஷ்டனாய்‌
அநபத்யனாகையாலே தம்முடைய ஸர்வஸ்வத்தையும்‌ பெருமாளதீனம்‌ பண்ணி,–
திரு மா மணி மண்டபங்களும்‌, திருமதிள்களும்‌, திருக் கோபுரங்களும்‌, திரு தந்தவனங்கள்‌ முதலானதுகளையும்‌ கட்டிவைத்து
தம்முடைய பட்டணமான உறையூரிலேயும்‌ தம்முடைய குமாரத்தியையும்‌ அதி ஸுந்தர ரூபத்‌தினாலே
வஸீ கரித்தபடி யாலே அழகிய மணவாளப் பெருமாளையும்‌ பிரதிஷ்டிப்பிக்து,
விமான கோபு மண்டப பிரகாராதிகளையும்‌ விஸ்த்ருதமாகக்‌ கட்டி வைத்து அனைத்து அழகும்
கண்டருளப் பண்ணிக் கொண்டி ருந்தான்‌.”

4. லக்ஷ்மீ காவ்யம்‌
இது உறையூர்‌ நாச்சியார்‌ விஷயமாயும்‌ ரங்கநாதன்‌ விஷயமாயும்‌ ஏற்பட்ட காவ்யம்‌. இது உத்தமநம்பி திரு மலாசாரியரால்‌ எழுதப்பட்டது.
இவர்‌ தன்‌ பெயரையும்‌ வம்சத்தையும்‌ ஒவ்வொரு ஸர்கத்தின்‌ முடிவில்‌ முத்ரையாகச்‌ சொல்லுவது தவிர இரண்டு மூன்று இடங்களிலும்‌ சொல்லுகிறார்‌.

ஸ்ரீரங்கத்திலிருந்த பூர்வாசாரியர்களையும்‌, கைங்கர்ய பரர்களையும்‌ சொல்லும்‌ கவி தன்‌ வம்சத்தில்‌
தனக்கு முன்‌ தன்னைப் போலொரு காவியம்‌ எழுதின திவ்ய ஸூரி சரித்‌ர காரைச்‌ சொல்லவேயில்லை. உறையூர்‌ திருப்பாணாழ்வார்‌ அவதரித்த இடமென்றும்‌ இவர்‌ சொல்ல வில்லை.
இதில்‌ கந்தாடை ராமானுஜ அய்யங்காரைப் பற்றிச்‌ சொல்லுவதால்‌ கவி ௮வர் காலத்துக்குப்‌ பிற்பட்டவராவார்‌.
இந்தக்‌ காவியம்‌ இருப்பதாக குரு பரம்பரையிலிருந்து தெரிந்து சேடினதில்‌ பிராசீன வித்யா பிருஹஸ்பதி
கும்ப கோணம்‌ காலேஜ்‌ தமிழ்ப் பண்டிதர்‌ சடகோப ராமானுஜாசாரியாரிடத்திலும்‌, சென்னையிலும்‌, அடையாரிலும்‌ இருப்பதாகத் தெரிந்தன,.
இதையே வெகு நாளாகச்‌ தேடிக் கொண்டிருந்த திவான்‌ பஹதூர்‌ ஸ ர்‌. டி. தேசிசாரியாரிடம்‌ தெரிவித்ததும்‌,
அவர்‌ சடகோப ராமானுஜாசாரியாருடைய புஸ்தகத்தை வர வழைத்து எழுதுவதற்கும்‌, சென்னையிலுள்ள
புஸ்‌தகங்களோடு ஒத்துப் பார்ப்பதற்கும்‌ வேண்டிய செலவைக்‌ கொடுத்து சேகாம் செய்து அச்சிட்டுக் கொண்டிருக்கிறார்‌.
உறையூர்‌ நாச்சியார்‌. சரித்திரமூம்‌ ரங்க நாதனுடைய ஆதி ப்ரம்மோத்ஸவமும்‌ லஷ்மீ காவ்யகத்தில்‌ வர்ணித்‌திருக்கும்‌
கிரமத்திலேயே சுருக்கமாய்‌ எழுதப்படுகின்றன.

1-ம்‌ ஸர்‌–
நித்ய ஸூரிகள்‌, வியாஸர்‌, ஆழ்வார்‌கள்‌, பெருமாள்‌ நாச்சியார்‌, ஊர்‌, கோபுரம்‌ மண்டபம்‌,
கோயில்‌, பூர்வாசாசியர்கள்‌, கைங்கரிய பரர்கள்‌—வர்‌ணிக்கப் பட்டிருக்கிறார்கள் ,
[ விஷ்வக்ஸேனர்‌, ஸுூத்ரவதி, கஜானனன்‌, ஜயத்‌ஸேனன்‌, ஸிம்மவக்தரன்‌, காலன்‌, ஆதிசேஷன்‌, கருடன்‌,
ருத்ரை ஸூகீர்த்கிகள்‌, பஞ்சாயுதங்கள்‌, கெளஸ்‌துபம்‌,ஸரஸ்வதி , ஹயக்ரீவன்‌, வியாஸர்‌, நம்மாழ்வார்‌,
திருமங்கை யாழ்வார்‌, உடையவர்‌, பெருமாள்‌, நாச்சியார்‌, கிருஷ்ணார்‌ ஜுனர்கள்‌, துவஜ கருடன்‌, கோபுர நர ஸிம்ஹன்‌, கோபுர விநாயகர்‌,
கங்கை யமுனை, நான்முக கோபுரம்‌, தாமோதர கோபுரம்‌, ராமாயண மண்டபம்‌, ஆயிரம் கால்‌ மண்டபம்

சந்‌திரபுஷ்கரிணி, பார்த்தஸாரதி , சக்காத்தாழ்வான்‌, வீர ஹனுமான்‌, ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌, பராசர வியாஸ பட்டர்‌கள்‌,
பெரியநம்பி, மணவாளமாமுணி, வாதூல தேசிகர்‌, எம்‌பார்‌, திருவேங்கட தாதாசாரியார்‌, பிரதிவாதி பயங்காம்‌ அண்ணா,
கந்‌தாடை ராமானுஜ அய்யங்கார்‌, உத்தம நம்பி,திருப்பணி செய்வார்‌, பாகவத நம்பி, ஹரித கோத்ரிகளான பாரிகர்கள்‌?,
அரையர்‌, திருமஞ்சனக் கரரர்‌, புரோஹிதர்கள்‌,ஆரியபடர்கள்‌, வைத்தியர்கள்‌, புண்டரீக தாஸர்கள்‌, கணக்‌குப்பிள்ளை,
சேர்வைகாரன்‌, உறையூர்‌ வல்லி கூட்டத்தாரான தாஸிகள்‌–இவர்கள்‌ வர்ணிக்கப்பட்டிருக்கறார்கள்‌.]

2-ம்‌ ஸர்‌–
ஆலிலையில்‌ பள்ளிகொண்டவனும்‌ கிருஷ்ணன்‌ வரையுள்ள எல்லா அவதாரங்களையும் எடுத்‌தவனுமான
ஸர்வேஸ்வரனே ரங்கநாதனாக வந்து ஜகம்‌ முழுவதையும்‌ ஆனத்திப்பிக்கிறான்‌.
ரங்க நாதனுக்கு லக்ஷ்மி, பூமி, நீளை, ஆண்டாள்‌–நால்வர்‌ தவிர, சேர சோழ பாண்டியர்‌–முதலான ராஜ புத்திரிகளும்‌ பத்‌னிகளாயிருந்தார்கள்‌,
ரங்கநாதன்‌ வஸந்த ருதுவில்‌ காவேரி முதலிய இடக்களிலும்‌, கிரிஷ்ம ருதுவில்‌ குளங்களிலும்‌,
வருஷ ருதுவில்‌ சயன கிருஹத்‌திலும்‌ பத்னிகளோடு வினோதமாய்க்‌ காலம்‌ கழித்தார்‌;–
கார்த்திகை பூர்ணிமையில்‌ திபோத்ஸவம்‌ கண்டருளினார்‌;
ஹேமந்தத்தில்‌ மார்கழி முதல் நாள்‌ திவ்ய ஸூக்‌தியான திருப்பள்ளி யெழுச்சியினால்‌ பள்ளியுணர்ந்து , ஆராதனம்‌ கண்டருளி,
பிராம்மணர்களுக்கு நித்ய தானம்‌ பண்ணி வேத பாராயணம்‌ சேட்டு, சகீத ந்ருத்யங்களோடு மண்டபம்‌ போய்‌,
நம்மாழ்வார்‌ முதலானோர்‌ களால்‌ ஸேவிக்கப்பட்டு அவர்களின்‌ ஸூக்‌திகளையும்‌,
அவற்றிலுள்ள சரித்ரத்தின் ௮பி நயத்தையும்‌ ௮னுபவித்து ஸாயங்காலம்‌–நின்ற போது நாட்டியமும்‌ போகும்
போது வாத்யமுமாய் உள்ளே எழுந்து அருளினார்

ஓன்பது நாளும்‌ இப்படியே நடந்தது; பத்‌தாம்‌ நாள்‌ மாயா நாராயணீ ரூபம்‌ தரித்தார்‌, பதினோராம் நாள் வேத பாராயணம்‌ கேட்டருளி,
வடக்குவாசல்‌ வழியாகப்போய்‌, நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌, உடையவர்‌ மூவரையம் பாதுகைகளால்‌ அனுக்ரஹித்து
மண்டபத்திலிருந்து நம்மாழ்வாருடைய பிரபந்தத்தையும்‌ ந்ருத்த கீதங்களையும்‌ கேட்டருளி, கடைசி நாள்
அவருடைய சரணாகதியையும்‌ அங்கீ கரித்தார்‌–
தை முதல்‌ நாளின்‌ உத்வைத்தையும்‌ ஆயிரம் கால்‌ மண்ட. பத்தில்‌ உபய நாயகி மாரகளோடு மத்தியானம்‌ வரையில்‌
அனுபவித்து உள்ளே எழுந்தருளினார்‌;- சிசிர ருதுவிலும்‌ தகுந்த ஸுகங்களை அனுபவித்தார்‌,

[ திருக்கார்த்‌திகையன்‌று திருமுகப் பட்டையம்‌ அனுப்புவதைக்‌ கவி எழுதவில்லை.
மார்கழித் திருகாள்‌ முதல்‌ தேதி ஆரம்பமானது போலே எழுதப்பட்டிருக்கிறது ]

3-ம்‌ ஸர்‌–
பெருமாள்‌ சயனித்‌ இருக்கையில்‌ பாடகர்கள்‌ வந்து–
தாமோதரன்‌ கோபுரத்தில்‌ வெயில்‌ வந்து விட்டது; சந்தன மண்டபத்தில்‌ வெயில்‌ வந்து: விட்டது .” என்று பாடி. எழுப்பினார்கள்‌,
பெரு.மாள்‌ எழுந்திருந்து காலைக்‌ காரியங்களை நடத்‌தினார்‌,
பிரம்மா, சிவன்‌, ஸுப்‌ரம்மணியன்‌, இந்திரன்‌, கணே
சன்‌–எல்லா தேவர்களும்‌ வந்து பெருமாளை ஸ்தோத்‌திரம்‌ செய்தார்கள்‌,

4-ம்‌ ஸர்க்கம்
ரங்கநாதன்‌ ஸந்தோஷித்து வந்த காரியம்‌ வினவினார்‌. உம்முடைய ஆஜ்ஞையினால்‌. நான்‌ ஸ்ருஷ்டித்த இந்த பரபஞ்சத்தின்‌ ஷேமத்துக்காக.
சுபமான இந்தப்‌ பங்குனியில்‌ துவஜாரோஹண பூர்‌வகமாக யாத்ரோத்ஸவத்தை நீர்‌ அனுபவிக்க வேண்‌டும்‌.
சோழ ராஜனக்குத்‌ தபஸ்ஸினால் பிறந்த லக்ஷ்மியின்‌ ௮ம்சமான லக்ஷ்மியை நீர்‌ கலியாணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.
நீலீ வனத்திலிருக்கும்‌ வியாக்ரா ஸுரனையும்‌ வதம்‌ செய்ய வேண்டும்‌.” என்று பிரார்த்‌தித்தார்பிரம்மா, பெருமாள்‌ அங்கீ கரித்தார்‌.
எல்லாரும்‌ அனுமதி பெற்றுக்கொண்டு சந்திர புஷ்கரிணியில்‌ மாத்யாந்ஹிகம்‌ பண்ணி, நாச்சியாரைத் தர்சித்துப் போனார்கள்‌.
பெருமாளுடைய ஆஜ்ஜையின் பேரில்‌ விஷ்வக்ஸேனர்‌ பங்குனி பரணியில்‌ ௮ங்குரார்ப்பணம்‌
செய்து, கார்த்திகையில்‌ ஹோமம்‌, பலி, கருட பிர திஷ்டை முதலியவற்றை நடத்தி, பரிவாரங்களோடு நகர சோதனை செய்தார்‌.
[இப்பொழுது நகர சோதனை முன்னும்‌ கருட ப்‌ரதிஷ்டை பின்னுமாக நடக்கிறது .]

5-ம்‌ ஸர்‌–
முதல்‌ திருநாள்‌–ரோஹிணியன்று நல்ல முஹுர்‌த்தத்தில்‌ உத்ஸவத்தை ஆரம்பிப்பதற்‌காக ரங்கநாதன்‌ புறப்பட்டு,
அன்னமூர்த்தி இருக்கும்‌ மண்டபத்‌திலிருந்து ஸங்கீதங்களைக் கேட்டுக் கொண்டே த்வஜாரோஹணம்‌ நடத்தி, மத்தியானம்‌ உள்ளே போனார்‌ ;
ஸாயங்கால்ம்‌ உபய நாச்சி மார்களோடு பூச்‌சப்பரத்தில்‌ எழுந்தருளி, உத்ஸவத்துக்கு வந்த ராஜாக்‌களோடும்‌ சைன்யங்களோடும் புறப்பட்டு,
மூலை தோறும்‌ ந்ருத் யங்களை அனுபவித்‌துக் கொண்டே வீதி வலம்‌ வந்து, ஆரியபடாள்‌ வாசலில்‌ ராஜாக்கள்‌ முதலானோரை நிறுத்தி உள்ளே போய்‌,
திருவந்திக்‌ காப்பு கண்டருளி, யாகசாலையில்‌ திரு மஞ்சனம்‌ செய்து கொண்டு, ஹோமம்‌ முதலியன ஆனதும் உள்ளே போனார்‌.
[அன்னமூர்த்தி துவஜாரோஹண மண்டபத்திலேயே இப்பொழுது பின்னமாய்க்‌ கிடக்கிறார் .
பெருமாள்‌ கண்ணாடி. யறை எழுந்தருளின தாகச்‌ சொல்லப்படவில்லை.
கண்ணாடி. யறை பின்காலத்தில்‌ சேர்க்கப்பட்டதென்று அந்தக்‌ கட்ட டமே தெரிவிக்‌கிறது ]

இரண்டாம்‌ திருநாள்‌–மிருகசீர்ஷத்தன்று காலையில்‌ ரங்கநாதன்‌ மேலூர்‌ புன்னாக தீர்த்தத்துக்கருகே யுள்ள மண்டபத்துக்குப்‌ புறப்பட்டு,
வழியே பத்ர காளி கோயிலையும்‌ பயங்கரமான ஷுத்ர தேவதைகளையும்‌ பார்த்துக்கொண்டே போய்‌ சாயங்காலமம் திரும்பினார்
சந்திரசேகரன்‌ :சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமத்‌துக்கு வந்து ௮னுக்ர ஹிக்கவேண்‌டும்‌ என்று பிரார்த்‌தித்தான்‌.
பெருமாள்‌ அங்கீ கரித்து ஸன்னிதிக்குள்‌ எழுந்தருளினர்‌.[ சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமம் கிளியனூராயிருக்கலாம்‌.]

6-ம்‌ ஸர்‌. மூன்றாம்‌ திருகாள்‌–திருவாதிரையன்று காலையில்‌ ரங்கநாதன்‌ குதிரையேறி வீரர்களோடும்‌,
அரசர்களோடும்‌, பக்தர்களோடும்‌ புறப்பட்டு மூங்கில்‌காடு வழியாகவும்‌ காவேரிக் கரை வழியாகவும்‌
ஸு*ப்‌ரமண்யன்‌ தபஸ்‌ செய்த ஈசானமங்கலம்‌ என்னும்‌ கிராமம்‌ போய்‌, அங்கே தென்கரையிலுள்ளவர்களரல்‌ உபசரிக்கப்பட்டார்
[ஸுப்ரம்மண்யன்‌ சீயர்புரத்தில்‌ தபஸ்‌ செய்த விருத் தாந்தம் நம்மால் வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்ம்யத்தில் பார்க்க.
சீயர் புர கிராமத்துக்கே ஏற்பட்ட ஈசானமங்கலம்‌ என்னும்‌ பெயர்‌ இப்பொழு ஈசான்ய மண்டபம்‌ என்னு
மண்டபத்தின்‌ பெயராக மாறியிருக்கிறது.
இங்கு அம்மையார்‌ தண்ணீர்ப்பந்தல்‌ விருத்தாந்தம் கவியினால்‌ சொல்லப்பட வில்லை]

பிறகு, ஸ்நானம்‌ செய்‌து கொண்டிருக்த உறையூர்‌ நாச்சியாரின்‌ கூந்தவிலிருந்து பூக்கள்‌ விழும்‌ காவேரியின்‌ தென் கரை வழியாக
ரங்க நாதன்‌ கொஞ்சதூரம்‌ வந்து .காவேரியிலிறங்‌கி வடகரை போனார்‌. அவர்‌ கையிலிருந்த மோதிரம்‌ ஜலத்தில்‌ வீழ்ந்த்து ; அதை அவர்‌ கவனிக்கவில்லை ;வடகரை போய்‌, வடக்கு முகமாகவே நெடுந்தூரம் வினேதமாக சவாரி” செய்து, நேற்று அழைத்த சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ சிறிது நேரம் தங்கித்‌ திருவெள்ளறை வரையிலும்‌ போய்‌ நீலிவனம்‌ (திருப்பைங்‌கிலி) சென்றார்
அங்கு இருந்த வியாக்‌.ராஸுரன்‌ ரங்க நாதனைக் கண்டு ஒளிந்தான் -அங்கே வெகுநேரம்‌ வேட்டையாடி,
கந்தஸ்தம்பேசருடைய ளெளம்ய ஜாமாத்ருமங்கலம்‌ (திருமணத் தூண்‌ நம்பிவசமுள்ள அழகிய மணவாளம்‌ கிராமம்‌) ,
காவேரி தீரத்‌திலுள்ள வகுள தீர்த்தம்‌ (திருவாசி), இவற்றைப்‌ பார்வையிட்டுக்கொண்டே. ஊருக்குள்‌ பிரவேசித்து மேல வாசல்‌ வந்ததும் மழை வெகு
கடுமையாகப்‌ பெய்தது .
மழை ஓயும்‌ வரையில்‌ பெருமாள்‌ உத்தம நம்பி திருமாளிகையில்‌ தங்கி உபசாரங்களைப்‌ பெற்றுக் கொண்டு சந்நிதிக்குள் போய்‌ வாஹனத்தை விட்டு இறங்கினார்
(பங்குனி மூன்றாம்‌ திரு நாள் குகிரைவாஹனம்‌ இந்த மழைக்குப்பிறகு உத்தமநம்பியால்‌ பல்லக்காக மாறின
விவரம்‌ கோயிலொழுகு 124-ம்‌ பக்கத்தில்‌ இருக்கிறது

7-ம்‌ ஸர்‌. நாலாம்‌ திரு-புனர்வஸூ -*வன்று காலையில்‌ ரங்கராசன்‌ புறப்பட்டு உத்தம நம்பி பிராமணர்களுக்குக்‌
கொடுத்த ௮க்ரஹா.ரத்தின்‌ வழியாக காவேரிக்கரையிலுள்ள கருட வாஹன மண்டபம்‌ போய்‌ உல்லாஸமாயிருந்தார்‌.
மத்தியானம்‌ ஒரு தாஸி லஷமிக்குப்‌ பெருமாளிடமுள்ள காதலை லக்ஷ்மீ நாடகத்திலுள்ளபடி.யே அபிநயித்‌தாள்‌.
அப்பொழுது ஸூர்ய வம்சத் வனான உறையூர்‌ ராஜாவினால்‌ அனுப்பப்பட்ட புரோஹிதர்‌
பெருமாளிடம்‌ வந்து விக்ஞாபனம்‌ பண்ணினார்‌ :–

தர்மவர்மாவின்‌ வம்சத்தவனான நிசுளாபுரி” ராஜா கரிகால்‌ சோழன்‌ சந்திரவம்௪த்தில்‌ பிறந்த
தர்மதை என்னும்‌ மனைவியோடு ஸந்தானத்துக்காக நெடுநாள் லக்ஷ்மியை தியானித்து தபஸ்‌ செய்தான்‌.
லக்ஷ்மி பிரத்யகூமாகி * நானே உனக்குப்பெண்ணாய்‌ பிறக்கிறேன்‌… – என்று அனுக்ரஹித்தாள்‌.
அப்‌:படியே கொஞ்சநாளில்‌ பெண்‌ குழந்தை பிறக்து லஷ்கி யெனப் பெயரிடப்பட்டஅு. லஷ்மி இப்பொழு கல்‌யாணப்‌ பருவத்‌தில் இருக்கிறாள்‌,
அவளுடைய ஸ்வயம்‌ வர த்துக்காக தேவர்களும்‌ ராக்ஷஸர்களும்‌ வந்‌து .இருக்‌கிறார்கள் –
ஸ்வயம்வரத்துக்கு உம்மை அழைத்து வருமாறு நான்‌ ராஜனால்‌ அனுப்பப்பட்டு வந்தேன்‌.
லஷ்மியும்‌ தன்னுடைய தோழி ஹரிலேகையை- அனுப்பியிருக்கறாள்‌. அவள்‌ எல்லா விஷயங்களையும்‌:
சொல்லுவாள்‌, ”–என்று சொல்லி விடையெற்றுச்‌ சென்றார்‌ புரோஹிதர்‌.

6-ம்‌ ஸர்‌–ஹரிலேகை வந்தாள்‌. அவன்‌ விரும்‌பியபடி எல்லாரும்‌ வெளியே அனுப்பப்பட்டார்கள்‌…-
அவள்‌ ரங்கநாதனுக்கெதுரில்‌ உட்கார்க்து ஏகாந்தமாய்ச்‌ சொல்லுகிறாள்‌.
” சோழ ராஜ புத்ரியான லஷ்மி தோழிகளோடு
,காவேரியில்‌ விளையாடிக் கொண்டி ருக்கையில்‌, நீர்‌ ஸைனயங்களோடு குதிரை மேலேறிப்‌ போய்க் கொண்டி.ருந்தீர்‌,
உம்முடைய அழகைப் பார்‌த்து அவள்‌ மோஹித்துக்‌ இடக்கிறாள்‌. உம்முடைய மோதிரம்‌ காவேரி ஜலத்தில்‌ அகப்பட்டது.
இந்த மோதிரத்தை உமக்குக்‌ கொடுக்‌கச் சொன்னாள்‌. ”–என்று . சொல்லி மோதிரத்தைக்‌ கொடுத்தாள்‌.
அதில்‌ லஷ்மி என்று எழுதி யிருந்தது கண்டு ரங்கநாதனுக்கு மோஹமமும்‌ மகிழ்ச்சியும்‌ மிகுந்தது
ஹரிலேகை–நான்‌ லஷ்மியினிடம்‌. என்ன “சொல்லுகிறது ?
ரங்கநாதன்‌–புஷ்யத்தன்று அவளுடைய ராஜ தானிக்கு வருகிறேன்‌.
ஹரிலேகை விடைபெற்று லஷ்மியினிடம்‌ போனாள்‌.

9-ம்‌ ஸர்‌-.-ரக்கநாதன்‌ கருடவாஹனத்‌தில் ஏறிப்‌ புறப்பட்டு வீதி வலம்‌ வந்து ஸன்னிதிக்குள்‌ சென்றார்‌.

10-ம்‌ ஸர்‌–5-ம்‌ திருநாள் –புஷ்யத்தன்று காலையில்‌ நான்காம்‌ ஜாமத்தில்‌ ரங்கநாதன்‌ ஸைன்யத்தோடும்‌
௮ரசர்களோடும்‌ பல்லக்கிலேறிப்‌ புறப்பட்டுக்‌ காவேரிதாண்டி உறையூர்‌ சேர்ந்தார்‌.
கரிகால்‌ சோழன்‌ வந்து அடி.பணிந்து ரங்கநாதனுக்கு உடத்தியானத்தில்‌ இடம்‌ கொடுத்து உபசரித்தான்‌,
ஸ்வபம் வரத்துக்கு தில்லை நடராஜன்‌, ஜம்பூபதி, ஏகாம்பர நாதன்‌, மத்யார்ஜுனேசன்‌ முதலான எல்லா சைவ மூர்த்திகளும்‌ வந்திருந்தார்கள்‌.

11-ம்‌ ஸர்‌–ரங்கநாதன்‌ ஸ்வயம்வர மண்டபத்‌துக்குப்போக சித்தமாயிருக்கையில்‌ சோழ ராஜா வந்து அழைத்தான்‌.
ரங்கநாதன்‌ யானை மேலேறிப் புறப்பட்டு வந்து எல்லா தேவர்களுக்குமிடையே ஆஸனத்‌திலமர்ந்தார்‌,i

12-ம்‌ ஸர்‌–ராஜா மஹோதயன்‌ என்னும்‌ மந்திரியை அனுப்பி, பெண்ணை ஸ்வயம்வர மண்டபத்‌துக்கு வரவழைத்து,
ஒவ்வொரு க்ஷேத்திரத்திலிருந்து வந்திருக்கும்‌ சிவா மூர்த்தி விஷ்‌ணு மூர்த்திகளின்‌ பெயர்‌ இருப்பிடம்‌, வைபவம்‌ முதலியவற்றைச்‌ சொன்னான்‌.
[ஆண்டாள்‌ ஸ்வயம்வரத்தில்‌ திவ்ய ஸூரி சரிதக்‌காரர்‌ 108 திருப்பதியிலுள்ள விஷ்ணு மூர்த்‌திகளை மட்டுமே வர்ணித்திருக்கறார்‌.
இந்தக் கவி சிவ மூர்த்திகளையும்‌ சேர்த்து வர்ணிக்கிறார்‌. ]

சோழராஜன்‌ கடையில்‌ ரங்க நாதனிடம்‌ வந்து
அவருடைய பெருமையை வர்ணித்தான்‌.
லக்ஷ்மி எல்‌லாருக்கும்‌ மத்தியில்‌ ரங்க நாதனுக்கே மாலையிட்டாள்‌,

13-ம்‌ ஸர்‌– ராஜா முறைப்படி உறையூர்‌ வல்லிக்‌ கும்‌ ரங்கநாதனுக்கும்‌ அக்னி ஸாக்ஷிகமாகக்‌ கலியாணம்‌ செய்து வைத்தான்‌.
அந்த ஸ்வயம் வரத்தில்‌ அத்தனை மூர்‌த்திகளுக்கு இடையில்‌ ரங்கநாதனையே அழகான மாப்‌பிள்ளையாக
உறையூர்‌ வல்லி தீர்மானித்ததால்‌ அவரும்‌ அழகிய மணவாளனானார்‌.
ராஜா அநேக விதமான சீர்களையும்‌ ௮னேகம்‌ சேடிகளையும்‌ கொடுத்து , ரங்கநாதனையும்‌ உறையூர்‌ வல்லியையும்‌ ஊருக்கு அனுப்‌பினான்‌,
வழியில்‌ வியாக்ராஸூரன்‌ ஸைன்யத்தோடு சூழ்ந்து கொண்டான்‌. விஸ்வக்ஸேன பரிகரமான கஜானனன்‌ வியாக்ராஸுரனிடம்‌ பேரய்‌ “இரண்டு நாள்
முன்னரே உன்னை நீலி வனத்தில்‌ வேட்டையாட வேண்டி யிருந்தது. நீ ஒளிந்துசொண்டாய்‌, இப்போது
கலியாணமாகி பட்டணப் ப்ரவேசம்‌ சேய்வதற்கு உன்னை பலியிடுகிறேன்‌.” என்று சொல்லி,
ரங்க நாதனை ஸாக்ஷியாக வைத்துக் கொண்டு, ராஷஸ ஸைன்யத்தோடு கோரமாக யுத்தம் பண்ணி, வியாக்ராஸூரனையும்‌ அவ னுடைய ஸைந்யத்தையும்‌ வதம்‌ செய்து ஒழித்தான்‌.

(ரங்கநாதன்‌ ‘ வியாக்ராஸுரனை வதம்‌ செய்ததால்‌ அவருக்கு ** வ்யாக்ராஸூர நிஷுதந – என்ற பெயர்‌ ஏற்பட்டிருக்கிறது .
ரங்கநாகன்‌ ராமாவதாரதத்துக்கும் முன்‌னமே வியாக்ராஸுரனை வதம்‌ செய்வதற்காகக்‌ காவேரி வந்து
ரிஷிகளுக்கு தரிசனம்‌ கொடுத்துத்‌ திரும்பிய விவரம்‌ நம்மால்‌ வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்மியத்தில்‌ காண்க, நெடுநாள் முன்‌ நடந்த வியாக்ராஸுரன் வதத்தை உறையூர்‌ நாச்சியார் கல்யாணத்தோடு சேர்த்தது யுத்த வர்ணனத்துக்கு அவகாசம கொடுப்பதற்கான கவி சாதுர்யம.
இந்து மதியைக்‌ கல்யாணம்‌ செய்‌து கொண்டு புறப்படும்‌ ௮ஜ மஹா ராஜாவுக்கும்‌ ஸ்வயம் வரத்துக்கு வந்த ராஜாக்களுக்கும்‌
யுத்தம் நடந்ததாக ரகு வம்‌ஈத்தில்‌ காளிதாஸ கவி வர்ணித்திருக்‌கிறார்‌.
ரகுவம்சத்தையே அனுஸரித்து எழுதப்பட்ட திவ்ய ஸுூரி சரித்ரத்திலும்‌ ஆண்டாள்‌ ஸ்வயம்வரத்‌துக்குப்‌ பிறகு
திருமங்கையாழ்வார்‌ வேடர் பறியாக வந்து அ ரங்கநாதனை எதிர்த்ததாக வர்ணிக்கப்பட்டிருக்டுறது .
ஸ்வயம்வரத்துக்கு வந்த மூர்த்திகளை திவ்யஸூரி சரிதத்திலும்‌ லக்ஷ்மீ காவியத்‌திலும்‌ வாணித்தது கூட
இந்துமதி ஸ்வயம்வரத்தில்‌ காளிதாஸ கவி ஒவ்வொரு ராஜாவையும்‌ வர்ணித்ததை அனுஸரித்ததாகும்‌.

14-ம்‌ ஸர்‌ – ரங்க நாதன்‌ பல்லக்கோடு வந்து சக்கரத்தாழ்வான்‌ ஸன்னிதிக்கருகிலுள்ள வாஹன மண்ட
பத்தில்‌ இறங்கி வேறு ஆஸனத்திலேறி உள்ளே போனார்‌.
[4-ம்‌ திருநாள் கருட வாஹனம்‌ வாஹன மண்டபத்தில்
இறங்கினதாகக்‌ கவி சொல்லாமல்‌ இன்று பல்லக்கு இறங்கினதாகச்‌ சொல்லுறார்‌.
புஷ்யத்தில்‌ கலியாணமெனறு கவி -வியக்‌தமாகச்‌ சொல்லுவதால்‌ பெருமாள்‌ உறையூர்‌ எழுந்‌தருள வேண்டியது 5-ம்‌ திருநாள் .
இப்பொழுது 6-ம்‌ திரு நாள்‌ ஆயில்யத்தன்று எழுந்தருளுகிறார்‌. உறையூர்‌ நாச்சியார்‌ பிறகு யாதாயினள்‌ என்று கவி சொல்லவில்லை.]

15-ம்‌ ஸர்‌–ஆறாம்‌ திரு நாள் –ஆயில்யத்தன்று காலையில்‌ பெருமாள்‌ புறப்பட்டு தாமோதர கோபுரத்தின்‌
வழியாகப்‌ பல்லவராஜன்‌ தோட்டம்‌ போய்‌,
ஸாயம் காலம்‌ யானை வாஹனத்‌துக்கேற்ற உடைகளோடு வந்‌து யானையேற்று மண்டபத்தில்‌ யானையேறி வீதி வலம்‌ வந்து,
வாஹனத்திலிருந்கவாறே திருவந்திக்காப்பு கண்டருளி, யானையை விட்டிறங்கி உள்ளே போய்‌
திருமஞ்சனம்‌ செய்து கொண்டார்‌.
[பெருமாளோடு யானை மேல்‌ அர்ச்சகர்‌ உட்காருவதும்‌, யானையை விட்டிறங்கி ஆண்டாளும்‌ பெருமாளும்‌ மாலை
மாற்றிக் கொள்வதும்‌ இங்கு சொல்லப்படவில்லை.
மணவாள மாமுனி ஸன்னிதிக்குப்‌ பல்லவராயன்‌ மடம்‌ என்று பெயர்‌.
கோயிலை ஆஸ்ரயித்திருக்கும்‌ தேசாந்தரி ஜியர்களுக்காக ௮து பல்லவ ராயனால்‌ கட்டப் பட்டதென்று அங்குள்ள சிலா சாஸனமே சொல்லுகிறது .
இவனே கிழக்கே பல்லவ ராஜன்‌ தோட்டம்‌ என்று பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகத் தெரிகிறது. ]

16-ம்‌ ஸர்‌—ஏழாம்‌ திரு நாள் –மகத்தன்று ரங்க நாதன்‌ .வஸந்த வேஷம்‌ தரித்துக்கொண்டு உபய நாச்சிமாரோடு-சூர்ணாபிஷேகம்‌ செய்து கொண்டார்‌.
எல்லோரும்‌ ஒருவர்மேலொருவர்‌ மஞ்சள்‌ பொடியைக்‌ தூவி விளையாடினர்‌.
Iரங்க நாதன் ஸாயங்காலம்‌ புறப்பட்டுக்‌ கொட்டார வாசலில்‌ நெல்‌ அளவு கண்டருளி, ப்ர தஷிணமாக நாச்சியார்‌ கோயில் போய்‌,
இரு புறமும்‌ வரிசையாய்‌ நிற்கும்‌ தாஸிகள்‌ மூலம்‌ திருவந்திக்காப்பு செய்து கொண்டு, ஸிம்ஹா ஸனத்தில்‌ வீற்றிருந்து
திரு மஞ்சனம்‌ முதலியவற்றை அனுபவித்து, பூந் தேரில்‌ புறப்பட்டு, மூலை தோறும்‌ நர்த்தனங்களைப்‌ பார்த்துக்‌
கொண்டே விதி வலம்‌ வந்து உள்ளே போனார்‌,

[இப்பொழுது .பூந்தேர்‌ முன்னும்‌ திருமஞ்சனம்‌ பின்னுமாக நடக்கிறது. கவியின்‌ காலத்தில்‌ நடந்த விதம்‌ எப்‌பொழுது மாறினதோ?
பாஞ்சராத்‌திரப்படி நடக்கிற ஜல க்ரீடை இங்கு சொல்லப்படவில்லை:]

எட்டாம்‌ திரு நாள் –பூரத் தன்று காலையில்‌ ரங்கநாதன்‌ ஸ்ரீரங்கத்தின்‌ எல்லையைப்‌ பார்ப்பதற்காகப்‌ புறப்பட்டு
பத்‌ர . ஸுபத்ரர்கள்‌ உள்ள (நாழிகேட்ட)) வாசல்‌ வந்து, பஞ்ச கோபுரங்களையும்‌ தாண்டி. வாமனாஸ்ரமத்தைப்‌
பார்‌த்துக் கொண்டே தென்‌ திருக் காவேரியின்‌ ௨டகரை சென்றார்‌.
[வாமனப்‌ பெருமாளுக்கு ஸ்ரீரங்கத்தில்‌ உபநயனம்‌ நடந்ததாக பாஞ்சராத்‌ர பாரமேஸ்வர
ஸம்‌ஹிதையிலிருக்கும்‌ விவரம்‌ நம்முடைய ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில்‌ காண்க.
கவி பஞ்ச கோபுரங்களுக்கும்‌ வேளியே என்று கணக்கிட்ட ரீதியில்‌ தெற்கு ராயகோபுரத்துக்கு உள்பட்ட
திருக் குறளப்பன்‌ ஸன்னிதியே வாமனாஸ்ரமம்‌ என்று தெரிகிறது .
இந்த ஸன்னிதி புராண ப்ர ஸித்தம் என்று கோயிலொழுகிலும்‌ ‘சொல்லப் பட்டிருக்கிறது .]

ரங்கநாதன்‌ காவேரிக்‌ கரையிலிருந்து கிழக்கே போய்‌, வடக்கே திரும்பி, ஸ்ரீரங்கத்துக்கும்‌ மாதங்க
வனத்துக்கும்‌ (திருவானைக் காவலுக்கும்‌)  உள்ள எல்லைக்‌ கல்லையும்‌, வழியிலிருந்த ஜம்பூபதி ஸைன்யத்தையும்‌, தாமோதர கோபுரத்தையும்‌ பார்த்துக் கொண்டே கின்னர .கிம் புருஷ கந்தர்வர்கள்‌ வஸிக்கும்‌ ச்வேதாங்‌கணம்‌ என்னும்‌ பில்வ தீர்த்தம் போய்‌, வடதிருக்‌ காவேரி தாண்டி,
கதம்ப தீர்த்தத்தின்‌ வழியாகத்‌ திரு மங்கையாழ்வாருடைய மண்டபம்‌ போனார்‌;
ஸாயங்‌ காலம்‌ குதிரை யேறிப்‌ புறப்பட்டு, காவேரியில்‌ விளையாடி, வடக்கு வாசல்‌ வழியாக ப்‌ரவேசித்து, மூலை
களில்‌ .ந்ருத்தங்களை அனுபவித்துக் கொண்டே விதி வலம்‌ வந்து உள்ளே எழுந்தருளினார்‌.
[கதம்ப தீர்த்தம்‌ திருமங்கை யாழ்வாருடைய ஸ்தானம்‌.-இன்னும்‌ அவர்‌ பேரிலேயே பட்டா இருக்றது .
எல்லைக்‌ கரை ஆஸ்தான மண்டபம்‌ லஷ்மீ காவ்யத்துக்குப் பிறகு கொள்ளிடத்தின்‌ தென்‌ கரையில்‌ ஏற்பட்டதால்‌
பெருமாள்‌ கதம்ப தீர்த்தத்‌துக்கு மாசி உத்ஸவத்தில்‌ எழுந்தருளுகிறார்‌.
ஸ்ரீ ரங்கத் தாருக்கும்‌ திருவானைக் காவலாருக்கும்‌ நேர்ந்த எல்லைச்‌ சண்டை இங்கு சொல்லப்படவில்லை யாகையால்‌
இந்தக்‌ காவியத்துக்குப் பிறகு ௮து நேர்ந்து இருக்க வேண்டும்‌.]

நாள் 17-ம்‌ ஸர்‌–9-ம்‌ திரு –உத்தரத்தன்று காலையில்‌
பெருமாள்‌ ரத யாத்திரை செய்து நாச்சியார் கோயிலுக்குப்‌ போனார்‌.
[இப்பொழுது நாச்சியார் கோயிலுக்குப்‌ போவது முன்‌னும்‌ ரத யாத்திரை பின்னுமாய்‌ நடக்கிறது,
நாச்சியார்‌ கோயிலில்‌ பிரணய கலஹம கத்யத்ரய கோஷ்டி முதலியன்‌ இங்கு சொல்லப்படவில்லை. |

16-ம்‌ ஸர்‌–ரங்கநாதன்‌ திர்த்தவாரிக்காக வட திருக் காவேரி போய்‌ வருண ஸூக்தம்‌ சொல்லும்‌ ரித்‌ விக்குகளோடு ஸ்நானம்‌ செய்தார்‌.
கூட வந்தவர்கள்‌ எல்லாரும்‌ ஸ்நானம்‌ செய்தார்கள்‌.–ரங்கநாதன்‌ ஸன்னிதிக்கு எழுந்தருளினார்‌. ;
[இப்பொழுது பெருமாள்‌ நாச்சியார் கூடவே இருந்து விடுவதால்‌ தீர்த்‌த வாரிக்கு செல்வர்‌ மட்டும்‌ வட திருக் காவேரி எழுந்தருளுகிறார்‌.]

10-ம்‌ திரு நாள் –ஹஸ்தத்தன்று மத்தியானத்‌து க்கு
மேல்‌ பெருமாள்‌ மண்டபத்தில்‌ திருமஞ்சனம்‌ செய்து
கொண்டு பாஞ்சராத்ர முறைப்படி புஷ்பயாகம்‌ செய்தார்‌.
பிறகு மேள வாத்தியங்களோடு ஸப்‌த ஆவரணங்களையும்‌ பிர,தஷிணம்‌ செய்வதற்காக வெளியே போய்‌
ஐந்து பிரகாரங்களை ப்ரதக்ஷிணம் செய்து, ஆர்ய
படாள்‌ கோபுரத்துக்கு நேராக வடக்கே பார்த்து
நின்று,
பூர்வ ராஜாக்களாலும்‌ வர்த்தமான ராஜாக்களாலும் செய்யப்பட்ட கைங்கரியங்களைப் பற்றிய ஸ்ரீஸூக்‌தியைக்கேட்டு,
தீர்த்தம்‌, துளஸி, சந்தனம்‌, மாலை முதலியன அனுக்ரஹித்து தேவதை முதலானோரை உத்வாஸனம்‌ பண்ணி,
பத்ர ஸுபத்ரர்கள்‌ உள்ள கோபுரம்‌ (நாழி கேட்ட வாசல்‌) தாண்டி, கருட விஷ்வக்‌ஸேனர்கள்‌ இருக்கும்‌ பிரகாரத்தையும்‌, துர்கை கஜானனர்களிருக்கும்‌ பிராகாரக்தையும்‌ பிர தக்ஷிணம் செய்து கொண்டு ரங்கநாதன்‌ உள்ளே எழுந்தருனினார்‌.
[பெருமாள்‌ திருவிண்ணாழியையும்‌ பீரதஷிணம்‌ செய்த தாகவும்‌ ஸப்த ப்ராகாரங்களிலும்‌ மேள வாத்தியங்களோடும்‌ எழுந்தருளினதாகவும்‌ தெரிகிறது .
ராமானுஜ நூற்றந்தாதிக்காக மேளமில்லாமல்‌ எழுந்து அருளுவதும்‌, உடையவர்‌ ஸன்னிதிக்கு எழுந்தருளுவதும்‌ இங்கு சொல்லப்படவில்லை.
ஸப்த ஆவரணத்தோடு காவியம்‌ பூர்த்தியாகிறது. ஆடும்‌ பல்லக்கு சொல்லப்படவில்லை.]

————

5. ஸ்ரீரங்கராஜ சரித பாணம்‌

[பாணம்‌ என்பது நாடகம் போலுள்ள ஒரு ரசனை, இது கெளண்டின்ய கோத்ரியான ஸ்ரீனிவாஸ கவியால்‌ எழுதப்‌ பட்டது .
இவருடைய காலம்‌ தெரியவில்லை. இந்தப்‌ புஸ்‌தகம்‌ 1881, 1891-ம்‌ வருஷங்களில்‌ கிரந்த எழுத்தில்‌ அச்சு இடப் பட்டிருக்கிறது.
ரங்கநாதன்‌ ஒவ்வொரு நாயகியோடும்‌ கிரீடித்துக் கொண்டு உறையூர்‌ நாச்சியாரிடம்‌ போய்‌, அவளைக் கலியாணம்‌ செய்‌து கொள்வதையும்‌,
அவளுக்குப்‌ பெருமாளிடம்‌ காதல்‌ உண்டான விவரத்தையும்‌, பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உண்டாகும்‌ பிரணய ரோஷத்தையும்‌ இந்தக்‌ கவி வெகு ரஸமாகச்‌ சொல்லுகிறார்‌.
இந்த கிரந்தத்தில் உள்ள கடைசி இரண்டு விஷயங்கள்‌ மட்டும்‌ இங்கு அவஸ்யமாதலால்‌ எழுதப்படுகின்‌றன-

[ரங்க நாதன் உறையூர்‌ வல்லியைக்‌ கலியாணம்‌ செய்து கொண்டு அவளை மடியில்‌ வைத்து விளையாடிக் கொண்டிருக்‌கிறார்‌.
அப்பொழுது அவளுடைய தாய்‌ நிசுளையும்‌ பெரு மாளும்‌ இவ்வாறு பேசுகிறார்கள்‌.]

நிசுளை–உம்முடைய கருணையினாலேயே நீர்‌ எங்களுக்கு மணவாளப்‌ பிள்ளையாக வாய்த்தீர்‌, இவளுடைய செய்தியைச்‌ செல்லுகிறேன்‌ ; கேளும்‌ :–
பதினெட்டாம்‌ பெருக்கன்ரூ காவேரிக்குப்‌ பொட்‌டும்‌ புடவையும்‌ விடுத்துக்‌ கரையில்‌ நின்ற உம்மழகைப்‌ பார்த்து இவள்‌ ஆசைப்பட்டாள்‌.

நீர்‌ குறுத்‌துக்களால்‌ அலங்கரிக்க பல்லக்கிகே ஏறி ஒரே மூச்சிலோடி, ஆண்டாளிடம்‌ போய்‌ அவளுடைய
மாலையை வாங்கிச்‌ சூடியது கண்டு_-
**இவர்‌ எனக்கு என்ன மாகக்‌ கிடைப்பார்‌”,–என்று என்‌ பெண்‌ கவலை கொண்டாள்‌.

ரங்கநாதன்‌–இதற்கு முன்னேயே இவ்ளுடைய ஆசையை நான்‌ தெரிந்து கொண்டேன்‌, எப்போ என்‌றால்‌–
௮னேக கலச தீர்த்‌தங்களினால்‌ நான்‌ ஜேஷ்டாபிஷேகம்‌ செய்து கொண்டு உபய நாச்சியாரோடு திருப்‌ பாவாடை யன்று
ஏராளமான ப்‌ரஸாதங்களைப்‌ பார்த்‌துக் கொண்டிருக்கையில்‌ இவள்‌ என்‌ மனதைக்‌ கவர்ந்து விட்டாள்‌.

நிசுளை–பவித்ரோச்ஸவத்தில்‌ 360 தரம்‌ திருவாராதனம்‌ செய்து கொண்டு ஆச்‌சரியமான முக காந்தி யோடு
நீர்‌ பவிதர உத்ஸவ மண்டபத்தில் இருந்த படியே இவள்‌ மனதில்‌ பிரவேஸித்து விட்டீர்‌.
[பவித்ர உத்ஸவத்தன்௮ பெருமாள்‌ யாக சாலையி லிருந்து உள்ளே எழுந்தருளுகிறார்‌.
கவியின்‌ காலத்தில்‌ மண்டபம்‌ எழுந்தருளினார் போலத்‌ தோன்று கிறது .]

ரங்கநாதன்‌–அந்த மாஸத்திலேயே உறியடி. யன்று நான்‌ நாச்சிமார்களோடு வீதி வருகையில்‌ இவள்‌
அடிக்கடி என்னை ஸந்தோஷ்மாகப்‌ பார்த்தாலும்‌ ஓரோர்‌ ஸமயத்தில்‌ பார்வை கோபத்துடனிருந்தது

நிசுளை–அடுத்த மாஸம்‌ நவ ராத்ரியில்‌ நாச்சியார்‌ பூஜித்த குதிரைமேலேறி நீர்‌ சமீ விருஷ்த்தினிடம்‌
போனதைப்‌ பார்த்து இவள்‌ மெய்‌ மறந்தாள்‌
ஐப்பசி மாஸத்தில்‌ தாஸிகளின்‌ பாடலைக்‌ கேட்டுக்‌ கொண்டே ஊஞ்சலாடும்‌ உம்முடைய பக்கத்‌திலிருந்த
நாச்சிமார்களைப்‌ போலிருக்க இவள்‌ ஆசைப்பட்டாள்‌,

ரங்கநாதன்‌–இத்தளையும்‌ என்னுடைய பெருமையைக் கண்டு உண்டான ஆசை தானே!
நிசுளை–கார்த்திகை யன்று நீர்‌ தீப ஸ்‌தம்பத்தைப்‌ பார்த்து விட்டு, திரும்பவும்‌ ஆஸ்தானத்‌திலிருந்‌து
கலியன்‌ பாட்டுக்‌ கேட்ட களிப்பால்‌ ஆழ்வாருக்கு எல்லாவற்றையும்‌ கொடுத்து ஒன்றுமேயில்லாமல்‌ :
உள்ளே கடந்‌து போனதை நினைத்து நினைத்து இவள் தூங்கவேயில்லை.

ரங்கநாதன்‌–இக்த மாஸத்திலேயே உன்‌ பெண்‌ செய்த காரியத்தைச்‌ சொல்லுகிறேன்‌
கைசிகத்‌தன்று நான்‌ போர்வை சாத்திக்கொண்டு கைசிக புராணம்‌ கேட்கையில்‌ இவளைப்‌ பார்த்தேன்‌ ;
உடனே எனக்கு எல்லாம்‌ நூதனமாகிப்‌ புராணமென்பதே இல்‌லாமல்‌ போயிற்று 1 .

நிசுளை–இன்னொரு ௮திசயம்‌ கேளும்‌. மரர்கழி
மாஸத்தில்‌ நீர்‌ சித்திர மண்டபத்தில்‌ ஆழ்வார் ஆசாரியர்களோடு விற்றிருந்து
பெரியாழ்வார்‌ பிரபந்தம்‌ முதலாக பத்து நாளும்‌ பானம்‌ பண்ணின அமிருதத்தை எல்லாருக்கும்‌ கொடுப்பகற்காக
தரித்துக் கொண்ட மோஹினி ரூபத்தைக் கண்டு இந்தப்‌ பெண்‌ வெட்டுப்‌ போனாள்‌.
முக்த சேதனன்‌ அர்ச்சிராதி மார்க்கமாய்ப்‌ போவதை ஏகாதசி முதல்‌ அனுகரித்து பக்தர்களை அநுக்ரஹிப்பதற்காக நீர்‌
ஆயிரக்கால்‌ மண்டபம்‌ போய்‌ ஆழ்வாருடைய பிரபந்தத்தைக் கேட்டு அவரை ஆனந்‌திப்‌ பித்த குணத்தையே இவள்‌ பாடிக்கொண்டிருக்கிறாள்‌.

இதிலேயே நீர்‌ எட்டாம்‌ திரு நாள் குதிரை மேலேறி வையாளி விளையாடுகையில்‌ கூட்டமாய்‌ வந்து
எதிர்த்து வழிப்பறி செய்த கலியனை அனுக்ரஹித்ததைக் கண்டு இவள்‌ ஆச்சரியப்படுகிறாள்‌,

இந்த உத்ஸவத்திலேயே நீர்‌ நித்தியம்‌ ராத்திரி ஏகாந்தத்தில்‌ ஸங்கீதம் கேட்பதற்காகக்‌ கூட்டமில்லாமல்‌ உள்ளே போய்‌,
வீணை வாத்‌தியத்தைக்‌ கேட்டுக்‌ கொண்டே. படியேற்றம்‌ கண்டருளினதைப்‌ பார்த்து இவள்‌ திகைத்துப் போனாள்

தை மாஸத்‌தில்‌ முதல்‌ திருநாள் நீர்‌ உபய நாச்சியாரோடிருந்‌து மற்றை நாளில்‌ ஹம்ஸம்‌, ஸிம்மம்‌, ௧ருடன்‌, ஹனுமான்‌, யானை–வாஹனங்களேறி,
ஏழாம்‌ நாள்‌ உபய நாச்சிமாரோடு சூர்ணாபிஷேகம்‌ செய்து கொண்டு, எட்டாம்‌ நாள்‌ குதிரையேறி விளையாடி,
ஒன்பதாம்‌ நாள்‌ நாச்சிமாரோடு தேரிலிருந்ததைப்‌ பார்த்து இவள்‌ மோஹித்துப்‌ போனாள்‌,

இந்தச்‌ தேரன்று ராத்‌ரி நாச்சியார் கோயிலில்‌ உபசாரங்களைப்பெற்று, உபய நாச்சியாரைத் தனித்தனியாகப்‌ பல்லக்கில்‌ வைத்து
நீர்‌ வீதி வலம்‌ வந்த வைபவத்தைக்‌ கண்டு இவள்‌ பூரித்துப்‌ போனாள்‌.

கனுவன்று நீர்‌ முத்து நகை பூண்டு மாலைப்‌ போதில்‌ குதிரை யேறி வேட்டை. விளையாடினதைப்‌ பார்த்து இவள்‌ மகிழ்க்தாள்‌.

மாசி மாஸக்தில்‌ கதம்பம்‌,வகுளம்‌, ஆம்ரம்‌ முதலிய: தீர்த்தங்களில்‌ உத்ஸவம்‌ பண்ணிக்‌ கடைசி நரள்‌
பெரிய தெப்பத்தில்‌ நாச்சிமாரோடு நீர்‌ விளையாடினது கண்டு இவளும்‌ விளையாட விரும்பினாள்‌.”
[க,தம்பம்‌ ஆம்‌சம்‌-இவ்விரண்டு தான்‌ இப்பொழுது மாசி உத்ஸவத்தில்‌ நடக்கின்றன.
தீர்தங்களில்‌ உத்ஸவம்‌ கடக்கும்‌ விவரத்தை ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில்‌ காண்க.]

பங்குனி உத்தரத்‌தில்‌ நீர்‌ உபய நாச்சிமார்களை கர்ப க்ருஹத்திலேயே விட்டு பெரிய பிராட்டியாரோடு
ஏக ஆஸனத்தில் இருப்‌பதைப் பார்த்து இவள்‌ தானும்‌ உம்‌ மோடு வீற்றிருக்க விரும்பினாள்‌.

[கவி இங்கு பிரணய கலஹத்தைச்‌ சொல்லாதது . இவளுடைய கல்யாணம்‌ பூர்த்தியாகாததால்‌.]
இன்னொரு விஷயம்‌ நினைவுக்கு வந்தது :–இந்த உச்ஸவத்திலேயே மூன்றாம்‌ திருநாள்‌ சத்‌ர சாமராதிகளோடும்‌, ஸைன்யங்களோடும்‌,
பெரிய கூட்டத்‌தோடும்‌, மஹா வைபவத்துடன்‌ புறப்பட்டு அகண்ட. காவேரியில்‌ நீர்‌ அம்மையாரை நினைத்துக் கொண்டு அவளுடைய தண்ணீர்ப் பந்தலில்‌ போய்‌ உட்கார்ந்ததைப் பார்த்து.-
*இவ்வளவு இறு பிள்ளையாயிருப்பவர்க்கு அம்மையாரிடம்‌ ஆசை உண்டாயிற்றே,”.- என்று சொல்லி என்‌ பெண்‌ சிரித்தாள்‌.
[லக்ஷ்மீ காவ்யக்காரர்‌ சொல்லாத அம்மையார்‌ தண்ணீர்ப்‌ பந்தலை இந்தக் கவி சொல்லுகிறார்‌,]

சித்திரை மாஸத்தில்‌ நீர்‌ த்வஜ ஆரோஹணம்‌ பண்ணி, நாளுக்கு மண்டபமாகப்‌ போய்‌, வித:விதமான
நைவேத்தியங்களை அனுபவித்து உச்ஸவம்‌ செய்து கொண்ட அழகையும்‌ என்‌ பெண்‌ பார்த்தாள்‌.

ரங்கநாதன்‌–௮ம்மா- நான்‌ ஒன்று சொல்லுகிறேன்–இந்த மாஸத்திலேயே பச்சைக்‌ கர்ப்பூரம்‌ குங்குமப்பூ, கஸ்தூரி,
முதலிய வாஸனை த்ரவியங்‌களாலும்‌ பூக்களாலும்‌ சைத்யோபசாரம்‌ செய்து சொண்டு, பானகம்‌ முதலியவற்றால்‌
நான்‌ ஸந்‌தோஷப்‌படுகையில்‌ இவள்‌ தினங்தோறும்‌ என்னெதிரிலிருந்து எனக்கு நேத்ர ஆநந்தத்தைக்‌ கொடுத்தாள்‌,

நிசுளை-வைகாசி மாஸத்தில்‌ ஜலம்‌, நிறைந்த: அகழி நடுவே மண்டபத்தில்‌ நாச்சிமாரோடு ஊஞ்சலில்‌
நர்த்தனம்‌ செய்யும்‌ தாஸிகள் சூழ நீர்‌ உட்கார்ந்‌து இருப்‌பதைப் பார்த்து மெச்சினாள்‌.
ஒவ்வொரு உத்ஸவத்திலும்‌ சந்த்ர புஷ்கரணியில்‌ – நீர்‌ தீர்த்வாரி நடத்துவதையும்‌,

பத்தாம்‌ திரு நாள் .
புஷ்ட யாகத்துக்குப் பிறகு வீதி வந்து. உபகார ஸ்மிருதியாக உடையவர்‌ ஸன்னிதி த்வாரத்துக்குப்‌ போவதையும்‌, படிப்புக்‌ கேட்பதையும்‌, கொடி யிறக்குவதையும்‌- பார்தது இவள்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ சொரிந்தாள்‌,
[உடையவர்‌ ஸன்னிதி விஷயம்‌ வக்ஷ்மீ காவியக்காரரால்‌ சொல்லப் படவில்லை.]

ஸ்லாமி ! ஒவ்வொரு உத்ஸத்திலும்‌ ஏழாம்‌ திரு நாள் உபய நாச்சிமார்களோடு நீர்‌ நெல்‌ அளவிட்டு
இவ்வளவென்று சொல்வதற்குப்போல நாச்சியார் கோயில்‌ போனதைக் கண்டு இவள்‌ மோஹித்தாள்‌..

ஒவ்வொரு உத்ஸவத்திலும்‌ எட்டாம்‌ திருநாள்‌ நீர்‌ எல்லையெல்லாம்‌ சுற்றி.மண்டபத்திலிருக்து
குதிரை யேறிக்‌ காவேரி வழியாய்த் திரும்பும் போது இவளும்‌ கூட வந்தாள்‌,
[இத்தால்‌ எல்லைக் கரை எழுந்து அருளுவது இப்போது
போலப்‌ பங்குனியில்‌ மட்டுமில்லாமல்‌ ஒவ்வொரு யாத்ர உத்ஸவச்திலும்‌ உண்டென்று தெரிகிறது -.
கோயிலுக்கு “வெளியே உள்ள்‌ மண்டபத்துக்கு எழுந்து அருளுவது கூட இப்‌பொழுது கோயிலுக்குள்ளேயே ஏற்பட்டுவிட்டது .]

ஒவ்வொரு உத்ஸவத்துலும்‌ முதல்‌ நாள்‌ ராத்திரி நீர்‌ யாக சாலையிலிருந்து வந்து பெரிய பெருமாளுக்கெதிராக உட்கார்ந்து பிரதி ஸரம்‌ கட்டிக்கொண்டு, வெகு வேகமாகத்‌ திரும்பி எழுந்தருளின அழகைக்‌ கண்டு இவள்‌ ஆச்சரியப்பட்டாள்‌,
மத்தளம்‌, தாளம்‌, எக்காளம்‌ முதலிய கோஷத்‌தோடும்‌, ஸ்‌துதி பாடகர்கள்‌ சொல்லும்‌ கட்டியத்தோடும்‌, கைகூப்பி நிற்கும்‌ ஜனங்களினிடையில்‌,
சாமரங்‌களுக்கு நடுவே, திருமுகத்துக்‌ குடையின்‌ கீழ்‌ நீர்‌ திருவந்திக்‌ காப்பு கண்டருளும்போது உம்முடைய முக
ஜோதியைப்‌ பார்க்கப்‌ பார்க்க இவளுக்கு அலுக்கவே யில்லை,
தீபாவளியன்றும்‌ யுகாதியன்றும்‌ நீர்‌ சந்தன மண்‌டபத்‌திலிருந்து நம்மாழ்வார்‌ முதலானோரை வெகுமதி யளித்‌.து அனுப்பி,
ஷண நேரம்‌ தங்கி விட்டு உடனே உள்ளே எழுந்தருளின அழகையே இவள்‌ பாடிக்‌ கொண்டிருக்கிறாள்‌,

ஸங்கிராந்தி முதலான தினங்களில்‌ மேனி முழும்‌ நீர்‌ சந்தனம்‌ பூசிக்கொண்டு ஸஹஸ்‌ர தாரைத் தீர்த்தத்தினால்‌
திருமஞ்சனம்‌ செய்துகொள்ளும்‌ போது உம்மூடைய கன்னத்தின்‌ அழகைக் கண்டு இவள்‌ முத்தமிடப்‌ புறப்பட்டாள்‌.

ரங்க நாதன்‌–உன்‌ பெண்‌ தன்னுயிராலேயே
என்னை அங்கீ கரித்து விட்டாள்‌.

நிசுளை–ஒன்று மாத்திரம்‌ பெண்‌ புத்தியால்‌ கேட்டுக் கொள்கிறேன்‌ : உம்முடைய மற்றை மஹிஷிகளைப் போல இவளையும்‌ பாவிக்க வேண்டும்‌,

ரங்ககாதன்‌–இந்த ஸபையில்‌ இப்படி. ப்‌ரதிக்ஞை பண்ணித்‌ தருகிறேன்‌ : இவள்‌ எனக்கு லக்ஷ்மியைப்‌ போல பிரியாத பத்தினி,
லக்ஷ்மியைப்‌ போல இவளையும்‌ தனிக் கோயிலில்‌ வைத்‌து இவளுக்கு ஸகல போகம்‌களையும்‌ கொடுக்கிறேன்‌.
வருஷத்துக்‌கு ஓருமுறை இந்த நகரம்‌ வந்து ஒரு நாள்‌ ‘இவளோடிருக்கிறேன்‌.

[ரங்க நாதன்‌ ஸ்ரீரங்கம்‌ வந்து நாச்சியார் கோயிலுக்குப்‌ போய்‌ கதவைக்‌ தட்டிக்‌ கூப்பிடுகிமுர்‌.] ்‌
கண்ணே யார்‌ அங்கே? ரங்க ரஸிகன்‌ ;
இங்கென்ன போம்‌ 1] நான்‌ உன்னுடைய காந்தன்‌;
அவர்‌ இங்கில்லை–விளையாடப்‌ போயிருக்கிறார்‌ ;
உன்னை விட்டு அவர்‌ எங்கே விளையாடுவது ?
பாக்யசாலியான ப்ரியை எங்‌கே யிருக்கிருளோ 7
உன்னைவிட அவருக்கு ப்ரியை யார்‌?
நிசுளைக்கு நாதனுடைய கன்யா ரத்னம்‌ இருக்‌கிறாளே]|

[ரங்க நாதன்‌ கதவைத் திறந்து உள்ளேபோய்‌ நாச்சியாரிடம் உட்கார்ந்து . ௮வளை ஸமாதானப்படுத்‌தி னார்‌. ]
நாச்சியார்‌–உம்முடைய மேனி மிக்க மிருது வென்று நான்‌ கெட்டியாகக் கூட கட்டி யணைந்த தில்லை;-அழுத்தமாயும்‌ முத்தமிட்ட தில்லை,
கொஞ்சம்கூட தயவேயில்லாமல்‌ யார்‌ உம்மை இப்படிக்‌ காயப்‌ படுத்தியது?

ரங்கநாதன்‌–அப்படி நினையாதே, நேற்று ராத்‌ரியே நான்‌ ஊரைவிட்டு நீலீவனம்‌ போய் ராக்ஷஸனைக்‌
கொன்று ரிஷிகளை ஸந்தோஷப்படுத்தி , இப்போது தான்‌ வருகிறேன்‌.
சத்துரு புலியாயிருந்தாலும்‌ இடம்‌ காடாயிருந்தாலும்‌ யுத்தத்‌தில்‌ உடம்பெல்லாம்‌: காயமாயிற்று,
நான்‌ நிஜத்தைச் சொல்லுகிறேன்‌.-பொய்‌ சொன்னதுமில்லை ண: சொல்லட் போகிறதுமில்லை,

நாச்சியார்‌–(கடகடவென்று சிரித்‌துக் கொண்டு):
வியாக்ராஸூரனை இன்று கொன்றதும்‌ நிஜம்‌ ! நீலீ வனத்தில்‌ முள்‌ இருப்பதும்‌ நிஜம்‌ |

ரங்கநாதன்‌–நம்பிக்கை யில்லையானால் தேவர்களின்‌
முன்னால்‌ ஸத்தியம்‌ பண்ணுகிறேன்‌; நெருப்பைக்‌ கையிலேந்துகிறேன்‌.
கொடிய பாம்பையும்‌ கையில்‌ பிடிக்கறேன்‌; ஸ்ரீயான நீதான்‌ எனக்கு ப்ரியமானவள்‌.

நாச்சியார்‌–நீரே ஸத்யமான பரம புருஷன்‌.-
தேவர்கள்‌ உம்முடைய துளி மாயையாலும்‌ வஞ்சிக்கபடுவார்கள்‌.
உம்முடைய முகமே நெருப்பு, பாம்பே உமக்குப்‌ படுக்கை, நீர்‌ ஸ்ரீ ய : ஸ்ரீ -ஸ்ரீ க்கும் ஸ்ரீ யாய் இருப்பவர்யிருப்பவர்‌).

ரங்கநாதன்‌–பதில்‌ சொல்ல இடமில்லாமல்‌ பேசுகிறாளே ! குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக்‌ கேட்க வேண்டியது தான்‌. “
(என்று மன்னிப்புக்‌ கேட்‌கிறார்‌. நாச்சியாரும் மன்னித்தாள்‌.)

————-

6–ஆதி ப்ரஹ்ம உத்ஸவம்

விபீஷணன்‌ ரங்க விமானத்தை அயோத்தியில் இருந்து லங்சைக்குக்‌ கொண்டு போகையில்‌ மாத்யாந்ஹிகத்துக்‌காக புஷ்கரிணிக்‌ கரையில்‌ வைத்தான்‌.
அப்பொழுது உறையூரில்‌ ராஜாவாயிருந்த தர்மவர்மா விபிஷணனை உபசரித்து இங்கேயே சில நாள் இருக்கும் படியாகப்‌.ப்‌ரார்த்தித்தான்‌.
மறுநாள்‌ பிரம்மா ஏற்படுத்தின உத்ஸவத்தை நடத்த வேண்டிய தினமாகையால்‌ லங்கைக்குப்‌ போக விரும்பின விபீஷணன்‌ தர்மவர்மாவின்‌ பிரார்த்தனையினால்‌ இவ்விடமே உச்ஸவத்தை நடத்தினான்‌.
(ஸ்ரீரங்க மாஹாத்மியம்‌ பார்க்க) ஸ்ரீ ரங்கமாஹாத்மியத்திலும்‌ லக்ஷ்மீ காவ்யத்திலும்‌ சொன்ன
ப்ரகாரமே பங்குனி ரோஹிணியில்‌ த்வஜ ஆரோஹணம் ஆகி பத்து நாள் உத்ஸவம்‌ இப்பொழுதும்‌ நடக்‌கிறது
இந்த உத்ஸவத்தின்‌ விவரம்‌ ஈருக்கமாகப்‌ பின்வருமாறு,

1-ம்‌ திரு–த்வஜாரோஹணம்‌, பேரி தாடனம்‌,
உபய நாச்சியாரோடு திருவீதி , யாக சாலையில்‌ பெருமாளுக்குத் திரு மஞ்சனம்‌,
பஞ்சகுண்டஹோமம்‌, ஸன்‌னிதி வாசலில்‌ யாத்ரா தானம்‌,

2-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில் வீதி எழுந்து அருளுவதில்லை. அம்பட்ட மண்டபத்துக்கு எழுந்தருளுவதாக ஐதிஹ்யம்‌.
ஆனால்‌ கருட மண்டபத்திலேயே மண்டபப்படியாகி சீக்கிரம்‌ உள்ளே எழுந்தருளுவார்‌.
இன்றைய மண்ட பப்படி.செலவு மட்டும்‌ திருச்சி பரியாரி’களுடையது.

3-ம்திகு–சீயர்‌ புரத்துக்காக ராத்ரியே பெருமாள்‌ பல்லக்கில்‌ புறப்பட்டு ப்‌ரதக்ஷிணமாய்‌ வடக்கு வாசல்‌ வழியாக மேலூர்‌ போய்‌,
விருஷி தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து, கொள்ளிடத்திலிறங்கி -சிலையாத்தி போய்‌, மீண்டும்‌ கொள்ளிடத்‌ திலிறங்‌கி, காவேரியையும்‌ தாண்டி
இரவெல்லாம்‌ வழி நடந்து, உதயம்‌ சீயர் புரம் அம்மையார்‌ தண்ணீர்ப் பந்தலில்‌ தத்யோகனமும்‌ மாங்‌காய்‌ ஊறுகாயும்‌ அழுது செய்து, மண்டபத்தில்‌ ஆராதன நைவேத்தியம்‌ : கண்டருளி,ஸாயங்காலம்‌ புறப்பட்‌டுக்‌ காவேரி தாண்டி,
மேலூர்‌ வழியாக வந்து வடக்கு வாசல்‌ பிரவேசித்து, வீதி எழுந்தருளி உள்ளே போவார்‌,

4-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ பல்லக்கில்‌ புறப்‌பட்டு கொள்ளிடம்‌ இறங்கி , நொச்சியத்துக்கு மேற்கில்‌
ஸ்ரீரங்கராஜ புரத்திலுள்ள செட்டி ராயர்‌ மண்டபத்திலிருந்து ஸாயங்காலம்‌ கருட வாஹனகத்தில்‌ புறப்பட்டு.
விதி யெழுந்தருளி உள்ளே போவார்‌.

5-ம்‌ திரு–காலை சேஷ வாஹனத்தில்‌ வீதி யெழுந்தருளி, மத்தியானம்‌ சேஷ ராய மண்டபத்திலிருந்து
ஸாயங்காலம்‌ கல்ப விருக்ஷத்தில்‌ வீதி யெழுந்தருளி உள்ளே போய்‌, விடியற்காலையில்‌ புறப்பட்டு உறையூர் எழுந்தருளுவார்‌.

6-ம்‌ திரு–உறையூருக்குப்‌ பெருமாள்‌ எழுந்தருளும்போது 10 மணியாகும்‌. பெருமாள்‌ பல்லக்கோடு சந்தன மண்டபத்தில்‌ எழுந்தருளுவார்‌.
திருக்காப்பு சேர்த்து வெளியே தாஸிகள்‌ பாட்டும்‌ மேள வாத்தியமும்‌ முழங்கும்‌.
ஸன்னிதிக்‌கெதிரில்‌ பல்லக்கோடு எழுந்தருளின பெருமாள்‌ பல்லக்கிலேயே நாச்சியாருக்கு நேராக எழுந்தருளி,
புது வஸ்திரம் . சந்தனம்‌, திலகம்‌, மாலை முதலியன சாத்திக் கொண்டு, களைந்த மாலையை நாச்சியாருக்கு அனுப்புவார்‌.
நாச்சியார்‌ மாலை யணிந்து கொண்ட பிறகு, ஏகாந்த ப்ரஸாதம்‌ நிவேதனமாகும்‌.
முதலில்‌ பெருமாளும்‌ பிறகு நாச்சியாரும்‌ வெளி மண்‌ டபத்தில்‌ எழுந்தருளி, திருவாராதனம்‌ முதலியன ஆகும்‌.
ராத்திரி 10 மணி வரையில்‌ பெருமாள்‌ எல்‌லாருக்கும்‌ ஸேவை ஸாதித்து, நாச்சி யாரை உள்ளே அனுப்பிப்‌ புறப்பட்டு, ஸ்ரீரங்கம்‌ வந்து வெளியாண்டாளோடு மாலை மாற்றிக் கொண்டு உள்ளே எழுந்தருளுவார்‌.

7-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ வீதி எழுந்தருளுவதில்லை; ,ஸாயங்காலம்‌ உபய நாச்சிமாரோடிருந்து
ஜலக்ரீடை,, சூர்ணாபிஷேகம்‌, நெல்‌அளவு–இவை ஆனதும்‌ வீதி யெழுந்தருளி, நாச்சி யார் கோயிலில்‌ திருமஞ்‌சனம்‌ செய்து கொண்டு உள்ளே போவார்‌,

8-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ திரு வீதி எழுந்‌தருளாமலே தெற்கு வாசல்‌ வழியாகக்‌ கிழக்கே போய்‌,
அசுவத்த தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து-வேலேந்து தாஸருக்கு ஆனை ஏற்றம் அனுக்ரஹித்து வழியில் அவ்வோ இடங்களில்‌
ஸ்தலத்தார்களையும்‌ அனுக்ரஹித்து , பில்வ தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து எல்‌லைக் கரை மண்டபம்‌ போய்‌, எல்லைக் கரை ராமானுஜனையும்‌ ஸ்ரீரங்க நாரயண ஜீயரையும்‌ ௮நுக்ரஹிப்பார்‌;
ராத்திரி குதிரை வாஹனத்‌தில்‌ புறப்பட்டுக்‌ கொள்‌ளிடம்‌ இறங்கி வடக்கு வாசல்‌ வழியாக ஊருக்குள்‌
பிரவேசித்து , கோரதத்தினடி.யில்‌ வையாளி யாகி உள்ளே எழுந்தருளுவார்‌.

9-ம்‌ திரு. பங்குனி உத்தரம்‌–பெருமாள்‌ காலையில்‌ பல்லக்கில்‌ புறப்பட்டு சித்திரை வீதி உள்‌ திரு வீதிகளில்‌ வலம்‌ வந்து
நாச்சியார்‌ ஸன்னிதிக்குள்‌ போகையில்‌ கதவுகள்‌ சாற்றப் பட்டு, தாஸிகள்‌ புஷ்பங்களையும்‌ பழங்களையும்‌ எறிந்து பெருமாளைத்‌ தடுக்து வெளியே நிறுத்தி வைப்பார்கள்‌.
கதவு திறக்கும் போது பெருமாள்‌ உள்ளே போவதும்‌ கதவு சாற்றும் போ.து பெருமாள்‌ பின்னால்‌ ஒதுங்குவதுமாயிருக்கும்‌.
பெருமாள்‌ நாச்சிமார்களுக்கு ஸமாதானம்‌ பண்ணி வைப்பதற்‌காக நம்மாழ்வார்‌ வருவார்‌.
பெருமான்‌ தான்‌ சொல்ல வேண்டியவைகளை அரையரிடம்‌ சொல்லி ஆழ்வாரை மத்தியஸ்‌தமாகக்‌ கொண்டு நாச்சியாரிடம்‌ தெரிவிப்‌பதற்காக இருவரையும்‌ அனுப்புவார்‌,
அரையர்‌ ஆழ்‌வாரோடு உள்ளே போய்‌ நாச்சியாருடைய பரிகரமான பண்டாரியினிடம்‌ பெருமாள்‌ சொன்னதைச்‌ சொல்லி
பண்டாரி சொல்லும்‌ நாச்சியார் வார்த்தையைப்‌ பெருமாளிடம்‌ – ஆழ்வாரோடு வந்து சொல்லுவார்‌,
பெருமாள்‌ சொல்லுவது அஞ்சு வார்த்தை, நாச்சியார்‌ சொல்லுவது அஞ்சு வார்த்தை,
இந்தப்‌ பத்து வார்த்‌தைக்குப்‌ பத்து பாட்டு வெகு ௮ழகாக முன்னோரான அரையர்களால்‌ செய்யப்பட்டு இப்பொழுதும்‌ சொல்லப்‌ படுகிறது.
பாட்டு அரையர்களிடமே இருக்கிறது,–வார்த்தை மட்டும்‌ * மட்டையடி” என்னு விகாரமாகப்‌ பெயர் பெற்ற புஸ்தகமாய்‌ வெளியாயிற்று, அத்த வார்த்தை பின்‌ வருமாது :—

நாம்‌ உத்ஸவார்த்தமாகப்‌ புறப்பட்டருளி, திரு வீதிகளெல்லாம்‌ வலம்‌ வந்து தேவதைகள்‌ புஷ்ப வர்ஷம்‌ வர்ஷிக்க,
ப்‌ராம்மணர்களெல்லாரும்‌ ஸ்தோத்‌திரம்‌ பண்ண,—இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்தில்‌ வந்தால் ,
தாங்களெப்போதும்‌ எதிரே விடை கொண்டு திருக் கை கொடுத்து, உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு போய்‌, திவ்ய ஸிம்மாஸனத்திலேறி யருளப் பண்ணி, திருவடி விளக்‌க, திரு வொத்து வாடை சாத்தி, திருவால வட்டம்‌ பரிமாறி, மங்களாலத்தி கண்டருளப் பண்ணி, சுருளமுது
திருத்தி ஸமர்ப்பித்‌து , –இப்படி ௮னேக உபசாரங்களெல்லாம்‌ நடக்குமே.
இன்றைக்கு நாமெழுந்தருளின விடத்திலே திருக் காப்பு சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்‌ திருப்பிக் கொண்டு, திருச் சேவடிமார்‌கள்‌ கைகளாலே
பந்துகளாலும்‌ பழங்களாலும்‌ விட்டெ.றிவித்‌து , இப்படி யொரு நாளும்‌ : பண்ணாத ௮வமானங்களை யெல்லாம்‌ இன்றைக்குப்‌ பண்ண வந்த காரியம்‌
ஏதென்று. கேட்டு வரச்‌ சொல்லிப்‌–பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாரம்‌,

தாம்‌ எப்போதும் போல எழுந்தருளினதே மெய்‌யானால்‌—திருக் கண்களெல்லாம்‌ சிவந்து இருப்பானேன்‌?
திருக் குழல்‌ கற்றைகளெல்லாம்‌ கலைந்திருப்பானேன்‌ ?
கஸ்தூரி திருமண்‌ காப்பு கரைந் திருப்பானேன்‌ ? திருவதரம் வெளுத்திருப்பானேன்‌ ? திருக் கழுத்தெல்லாம்‌
நக க்ஷதங்களா யிருப்பானேன்‌ ? திருமேனியெல்லாம்‌ குங்குமப்பொடிகளாக யிருப்பானேன்‌ ?
திருப்பரிவட்‌டங்களெல்லாம்‌ மஞ்சள்‌ வர்ணமா யிருப்பானேன்‌ ?திருவடிகளெல்லாம்‌ செம்மஞ்சக்‌ குழம்பா யிருப்பானேன்‌?
இப்படிப்பட்ட அடையாளங்களைப்‌ பார்த்து . நாச்சியாருக்கு மிகவும்‌ திருவுள்ளம்‌ கலங்கி யிருக்கிறது,
ஆன படியினாலே , உள்ளே யிருக்கிறவர்களை வெளியிலே விட வேண்டாமென்றுல்‌, வெளியிலே யிருக்கிறவர்களை
உள்ளே விட வேண்டாமென்றும்‌– இப்படி, கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற ஸமயத்திலே உள்ளே விண்‌ணப்பம் செய்ய ஸமயமில்லை, ஆன படியினாலே நேற்றைக்‌ கெழுக்தருளின விடத்திலே தானே இன்றைக்கும் எழுந்து அருளச் சொல்லி– நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

திருக் கண்‌ சிவந்து இருப்பான் என் என்றால்‌ நாம்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வரானபடியினாலே
கவிரி முடித்து, கல்கச்சை சட்டி, வல்லய மேந்தி,குதிரை நம்பிரான்‌ மேலே ராத்திரி முழுவதும்‌ நித்திரை
யின்‌றி ஜகத்‌ ரக்ஷணார்‌த்தமாக ஜாக ரூகனாயிருந்த படியினாலே திருக்கண்‌ சிவந்து போச்சுது .,
திருக் குழல்‌ கற்றைகளெல்லாம்‌ கலைந்திருப்பானேனென்றால்‌–காற்‌றடித்து கலைந்து போச்சுது -, கஸ்தூரி திருமண்‌ காப்பு கரைந்திருப்பானேனென்றால்‌–௮தி கடோரமான ஸுரிய கிரணத்தால்‌ கரைந்து போச்சுது –திருவதரம்‌ வெளுத்திருப்பானேனென்றால்‌-௮ஸூர நிரசனார்த்தம்‌
தேவதைகளுக்காக சங்கத் வானம்‌ பண்ணின படியினாலேவெளுத்துப்‌ போச்சுது .
திருக் கழுத்தெல்லாம்‌ நக க்ஷதமாயிருப்பானே னென்றால்‌—௮தி ப்ரயாஸமான காடுகளிலே போகிற போது பூ முள்ளு கிழித்தது.
திருமேனி யெல்லாம் குங்குமப் பொடிகளா யிருப்பானேனென்றால்‌- தேவதைகள்‌ புஷ்ப வர்ஷம்‌ வர்ஷித்த படியினாலே புஷ்ப ரேணு படிந்தது. திருப் பரிவட்டங்களெல்லாம்‌ மஞ்சள்‌ வர்ணமா யிருப்பானேனென்றால்‌-ஸந்த்யா ராகம்‌ போலே யிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள்‌ கண்ணுக்கு மஞ்சள்‌ வர்ணமாகசத் தோன்றுகிறது ,
திருவடி.கனெல்லாம்‌ செம்மஞ்‌சக் குழம்பாயிருப்பானேனென்றால்‌–குதிரை நம்பிரான்‌
மேலேறி ௮ங்கவடிவமேல்‌ திருவடிகளை வைத்துக் கொண்டு போனபடியினாலே திருவடிகள்‌ சிவந்து போயின.
இப்படிப்பட்ட அடையாளமே யொழிய வேறில்லை.–ஆனால் போது கழித்து வருவானேனென்‌றால்‌–வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே திருமங்கை யாழ்வானென்பவன்‌ ஒருவன்‌ வந்து ஸர்வ ஸ்வாபஹாரத்தையம்‌ பண்ணிக் கொண்டு போனான்‌,
அவனைச்‌ சில நல்ல வார்த்தைகளைச்‌ சொல்‌லித்‌ திருவாபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு
போய்‌ கருகூலத்தில்‌ எண்ணிப்‌ பார்க்குமிடத்தில்‌ ௧னையாழி மோதிரம்‌ காணாமல்‌ போச்சுது.
அதற்காக விடிய பத்து நாழிகைக்குப்‌ புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம்‌ வலம் வந்து, கணையாழி மோதிரத்தைக் கண்டு
எடுத்துக் கொண்டு  மீள வாரா நிற்கச் செய்தே,௮ப்‌பொழுது தேவதைகள்‌ பாரிஜாத புஷ்பங்கள்‌ கொண்டு ஸேவிக்க வந்தார்கள்‌,
நாம்‌ நம்முடைய பெண்டுகளன்‌றியிலே சூடுகிறது இல்லை யென்று நமக்கு முன்னமே வரக்காட்டி. நாமும்‌ பின்னே எழுந்தருளினோம்‌.
ஆன படியினாலே நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிக்‌ கொண்டு நம்மையும்‌ உள்ளே அழைக்கச்‌ சொல்லிப்‌ பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாரம்‌

கணையாழி மோதிரம்‌ காணாமல் போனதே மெய்‌யானால்‌–விடிய’ பத்து நாழிகைக்குப்‌ புறப்பட்டருளி உறையூரிலே போய்‌,
மின்னிடை மடவார்‌ சேரியெல்‌லாம்‌ புகுந்து யதா மநோ ரதம் அனுபவித்து உண்டாயிருக்கிற அடையாளங்களெல்லாம்‌
திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்‌தேயும்‌, அவ் வடையாளங்களையும்‌ அந்யாதவாகக்‌ கொண்டு, நாங்கள்‌ ஏழைகளானபடி.யினாலே
இப்படிப்பட்டிருக்கிற வஞ்சந உக்‌திகளை யெல்லாம்‌ நேற்றைக்‌ கெழுந்தருளின விடத்தில்‌ தானே
சொல்லிக் கொண்டு இன்றைக்கும்‌ அங்கே. தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

நாமானால்‌ உறையூரைக்‌ கண்ணாலே கண்டது மில்லை; காதாலே கேட்டதுமில்லை. துஷ்டர்களா யிருக்கிறவர்களும்‌
மனதுக்குச்‌ சரிப்போனபடி சொன்‌னால்‌ நீரும்‌ அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக்‌ கொண்டு நம்மையும்‌ ஒரு நாளும்‌ பண்ணாத அவமானன்‌களெல்லாம்‌ பண்ணலாமா ?
நீங்கள்‌ ஸ்‌த்ரீகளானபடி.யினாலே முன்பின்‌ விசாரியாமல்‌ பண்ணினீர்களாமென்ற அவமானம்‌ உங்களுக்கே யொழிய நமக்குத்‌ தேவை யில்லை.
ஆனபடியினாலே, நாம்‌ கொடுத்த புஷ்‌பத்தையும்‌ வாங்கிக் கொண்டு நம்மையும்‌ உள்ளே யழைக்‌கச் சொல்லிப்‌ பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாசம்‌.

முந்தா நாள் அழகிய மணவாளப் பெருமாள்‌ வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள்‌ அதி ப்ரீதியுடனே
எதிரே விடைகொண்டு, திருக்கை கொடுத்து, உள்ளே யெழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு போய்‌, திவ்ய ஸிம்ஹாசனத்திலே
ஏறி யருளப் பண்ணி, திருவடி விளக்கி , திரு வொத்து வாடை. சாத்தி, திருவாலவட்டம்‌ பரிமாறினோம்‌.
அப்‌போது ௮தி௧ ஸிரமத்தோடே எழுந்தருளி யிருந்தார்‌.
ஆனால்‌, இளைப்போ வென்று வெந்நீர்த்‌ திருமஞ்சனம்‌ சேர்த்து ஸமர்ப்பித்தோம்‌.
அதை நீராடினது பாதியும்‌ நீராடாதது பாதியுமாக எழுந்தருளி யிருந்தார்‌,
ஆனால்‌, இளைப்போவென்று திருவறைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம்‌ கொண்டு வந்து ஸமர்ப்பித்‌தோம்‌, அதையும்‌ எப்போதும்‌ போல சாத்‌திக் கொள்‌ ளாமல்‌ ஏதோ ஒரு விதமாக சாத்தியருளினார்‌.
ஆனால்‌, இளைப்போவென்று கஸ்தாரித்‌ திருமண் காப்பு சேர்த்து ஸமமர்ப்பித்தோம்‌. அதையும்‌ எப்போதும்‌
போல சாத்திக் கொள்ளாமல்‌ திரு வேங்கடமுடையான்‌
திருமண்காப்பு போல கோணாமாணாவாய்ச்‌ சாத்தியருளினார்‌.
ஆனால்‌, இளைப்போவென்று தங்கப் பள்ளயத்தில்‌ அப்பம்‌ கலந்த சிற்றுண்டி யக்காரம்‌ பாலில் கலந்து,
வர்க வகைகள்‌ முதலானதுகளைச்‌ சேர்தது ஸமர்ப்பித்‌தோம்‌.
அதையும்‌ அமுது செய்தது பாதியும்‌ அமுத செய்யாதது பாதியுமாய்‌ எழுந்தருளியிருந்தார்‌. ஆனால்‌ இளைப்போவென்று
சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்‌தோம்‌. அசையும்‌ ௮முது செய்யாதபடி தானே எழுந்தருளியிருந்தார்‌. ஆனால்‌, இளைப்போவென்று
திருவநந்தாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன்‌ மேலே திருக் கண்‌ வளரப் பண்ணி அடியோங்கள்‌ திரு வடிகளைப்‌ பிடித்துக்கொண்டிருந்தோம்‌.
தாம்‌ வஞ்‌சகரான படியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை யுண்டாக்‌கி , எங்கள்‌ கருகூலம்‌ திறந்து, எங்கள்
ஸ்த்ரீ தனங்களான அம்மானை பந்து கழஞ்சி பீதாம்பரங்களையும்‌ கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. எழுந்தருளுகிறோமென்றும்‌ சொல்லாதபடி. எழுந்தருளினார்‌.
அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள்‌ ௮ச்சமுடன்‌ திடுக்கிட்டெழுந்திருந்து, திருப்படுக்கையைப்‌ பார்க்கு மிடத்தில்‌,
பெருமாளைக்‌ காணாமையாலே கை நெரித்து வாயடித்து ௮ணுகவிடும்‌ வாசற்‌ காப்பாளரை யழைத்‌துக் கேட்குமளவில்‌,–
அவர்கள் வந்து , அம்மானை பந்து கழஞ்சு பீதாம்பாமான ஸ்திரீ தனத்தையும்‌ கைக்‌ கொண்டு, இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. யெழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள் –அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க
பரிஜனங்களாயிருக்கிற திருச்சேவடி.மார்களை யழைப்‌பித்தோம்‌.
அவர்கள்‌ வந்து அடிபிடித்து அடிமிதித்‌துக் கொண்டு போனவிட த்‌ திலே, உறையூரிலே கொண்டு போய் விட்டது .
௮ங்கே மச்சனியென்று ஒருத்‌திக்கு முறைமை சொல்லி, மற்றொருத்தியை மடியைப் பிடித்தும்
கச்சணி பொன்‌ முலை கண்ணா லழைத்ததும்‌, கனி வாய்‌ கொடுத்ததும்‌,
கையில்‌ நகக் குறி மெய்யங்கமானதும்‌, கார் மேனி யெங்கும்‌ பசுமஞ்சள்‌ பூத்ததுமாகக்‌
கரும்புத்‌ தோட்டத்தில்‌ யானை ஸஞ்சரிக்கிறாப் போலே,. தேவரீர்‌ ஸஞ்சரிக்கிறிர் என்று நாங்கள்‌ உசிதமாகப்‌
போக விட்ட தூதியோடி அங்கே உள்ளபடி. வந்து சொன்னாள்‌.
உம்மாலே எங்கள்‌ மனது உலை மெழுகாயிருக்றது -ஒன்‌றும்‌ சொல்லாதே போம்‌ போமென்று நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

ஒருவருக்கொருவர்‌ ஸம்சயப்பட்டால்‌, அந்த ஸம்சயம்‌ ஒரு ப்ரகாரத்திலுல்‌ தீராமற்போனால்‌, ப்‌ரமாணத்தாலே தீர்த்‌துக் கொள்வார்கள்‌.
அந்தப்படி ப்‌ரமாணம்‌ பண்ணித்‌ தருகிறோம்‌. நாம்‌ தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்‌.
ஸமுத்திரத்திலே முழுகுகிறோம்‌. அக்நி ப்ரவேசம்‌ பண்ணுறோம்‌. பாம்புக்‌ குடத்‌திலே கையிடுகிறோம்‌,
மழுவேந்துகிறோம்‌. நெய்க்‌ குடத்திலே கையிடுகிறோம்‌. இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும்‌ வாங்கிக்
கொண்டு, நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிச்‌ சூட்‌டிக் கொண்டு, நம்மையும்‌ உள்ளே யழைக்கச்‌ சொல்லிப்‌
பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்‌.

ஒருவருக்கொருவர்‌ ஸம்சயப்பட்டால்‌ அந்த ஸம்சயம்‌ ஒரு ப்ரகாரத்தாலும்‌ தீராமற் போனால்‌: ப்‌ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்‌.
லோகத்திலே ப்ராம்மணனுக்கும்‌ ப்‌ராம்மணனுக்கும்‌ வாக்‌கு வாதம் வந்தால்‌ ப்ராம்மணன்‌ ப்ராம்மணனைத் தாண்டிக் கொடுப்பான்‌.
தாம்‌ தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்தீரே !
அந்த தேவகைகள்‌ தம்முடைய திருவடிகளை எப்போ காணப் போகிறோம்‌ ! எப்போ காணப் போகிறோம்‌ ! –என்று ஸதா பிரார்த்தித்துக்‌ கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோம் என்றால்‌ வேண்டா மென்பார்‌களா –
ஸமுத்‌ரத்திலே முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே !ப்‌ரளய காலத்திலே ஸகல லோகங்களையும்‌ திரு வயிற்றிலே வைத்‌து ரக்ஷித்து
ஒரு ஆலிலைத்‌ தளிரிலே கண்வளர்ந்த உமக்கு ஸமுத்திரத்தலே முழுகிறது அருமையா ?
அக்நி ப்‌ரவேசம்‌ பண்ணுகிறோமென்று சொல்ல வந்தீரே ! ப்‌ரம்மாவுக்காக உத்தர வேதியில்‌ ஆவிர்ப்பவித்‌த தமக்கு அக்நியில்‌ முழுகுகிறோமென்‌றால்‌ அக்நி சுடுமா ?
பாம்புக்குடத்‌திலே கையிட்டுத் தருகிறோம் என்று சொல்ல வந்தீரே ! சென்றாற்‌ குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
என்று ஸதா ஸர்வ காலம்‌ திரு வானந்தாழ்வான் மேலே திருக் கண்‌ வளர்ந்து இருக்கிற
தமக்குப்‌ பாம்புக்‌ குடத்திலே கையிட்டால்‌ பாம்பு கடிக்குமா
மழுவேந்துகிறோ மென்று சொல்ல வந்தீரே! கோடி ஸூர்ய ப்‌ரசாசமான திருவாழியாழ்‌வானை ஸதா திருக்கையிலே தரித்‌துக் கொண்டி.ருக்கிற
தமக்கு ௮ப்ரயோஜகமான இரும்பு மழு வேந்துகிறது அருமையா?
நெய்க்‌ குடத்திலே கையிடுகிறது அருமையா? இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்‌.ரமாணங்களை யெல்லாம்‌ சரிப் போன விடத்திலே தானே
பண்‌ணிக் கொண்டு இன்றைக்கும்‌ ௮ங்கே தானே யெழுந்த ருளச்‌ சொல்லி நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்‌.

நாம்‌ உச்ஸவார்‌த்தமாகப்‌ புறப்பட்டருளி திரு வீதிகளெல்லாம்‌ வலம்‌ வந்து, தேவதைகள்‌ புஷ்பவர்‌ஷம்‌ வர்ஷிக்க,
ப்ராம்மணர்க ளெல்லாரும்‌ ஸ்தோத்‌திரம் பண்ண, இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்‌தில்‌ வந்தால்
தங்கள் எப்போதும் போலே ஆதரியாமல் படிக்கு அபராதங்களைப்‌ பண்ணினோம் என்‌றீர்கள்‌.
நாமானால்‌ உறையூரைக்‌ கண்ணாலே கண்டதுமில்லை, காதாலே கேட்டதுமில்லை யென்று சொன்னோம்‌.
அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்‌.
ஆனால்‌, ப்‌ரமாணம்‌ பண்ணித் தருகிறோம் என்று சொன்‌னோம்‌. -அத்தைப்‌ பரிஹாஸ ப்ரமாணமென்று சொன்‌னீர்கள்‌.
இப்படி நாம்‌ எத்தனை சொன்ன போதிலும்‌ அத்தனையும்‌ அந்யதாவாகக்‌ கொண்டு சற்றும்‌ திருவுள்‌ளத்தில்‌ இரக்கம்‌ வராமல்‌,
கோபத்தாலே திருவுள்ளம்‌ கலங்கத் திருமுகமண்டலம்‌ கறுத்துத்‌ திருக்கண்கள்‌ சிவந்து இப்படி. யெழுந்தருளியிருந்தால்‌ நமக்கென்ன கதி யிருக்கிறது?
௮ழகிய மணவாளப்‌ பெருமாள்‌ ஸ்ரீரங்க நாச்சியார்‌ ஸந்நிதி வாசலிலே தள்ளுபட்டுக்‌ கொண்டிருக்கிறாராம் என்ற அவமானம்‌ உங்களுக்கே யொழிய நமக்குத் தேவை யில்லை.
ஆன படியினாலே, நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிக் கொண்டு நம்மையும்‌ உள்ளே யழைச்கச் சொல்லிப்‌ பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்‌.

நாம்‌ வருஷா வருஷம்‌ அடமாயெழுந்தருளியிருந்து தமக்குச்‌ சரிப் போன படி நடந்து போட்டு, பின்னும்‌ இங்கே வந்து
நாமொன்று மறியோமென்றும்‌, ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும்‌–பரிஹாஸங்‌களைப்‌ பண்ணி இப்படிப் பட்டிருக்கிற
அக்ருத்யங்‌களைப்‌ பண்ணிக் கொண்டு வருகிறீர்‌.-நாமானால்‌ பொறுக்‌கிறதில்லை. நம்முடைய அய்யா நம்மாழ்வார்‌ வந்து
மங்களமாகச்‌ சொன்ன வாய்‌ மொழியினாலே பொறுத்‌தோம்‌. உள்ளே எழந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்‌ரகாரம்‌.

முதல்‌ ஏகாந்தம்‌–நாச்சியாரால்‌ அனுமதிக்கப்‌ பட்டு பெருமாள்‌ ஸன்னிதி வாசலில்‌ எழுந்தருளி ஆழ்வாரை மரியாதை செய்து அனுப்புவார்‌.
உறையூரில்‌ நடந்தது போலவே ஏகாக்தம்‌, தளிகை நிவேதனம்‌ நடந்து பெருமாள்‌ பங்குனி உத்தர மண்டபம்‌
எழுந்து அருளுவார்‌.-நாச்சியாரும்‌ பெருமாளிடம்‌ போய்‌ வீற்றிருப்பாள்‌,

இரண்டாம்‌ ஏகாந்தம்‌– செல்வர்‌ பெரிய கோயிலி.லிருந்து புறப்பட்டு வட திருக் காவேரியில்‌ தீர்த்தம்‌ ஸாதித்துப்‌ பெருமாளிடம்‌ வந்ததும்‌,
கத்ய த்ரயம்‌.ஸேவிக்கப்படும்‌. -கத்ய த்ரயம்‌ என்னும்‌ கிரந்தம் இன்றைய தினமே அவதரித்தது,
கத்ய த்ரய சாற்று முறைக்காக இரண்டாம்‌ ஏகாந்தத் தளிகை நிவேதனம்‌ ஆனதும்‌ செல்வர்‌ பெரிய கோயில்‌ எழுந்தருளுவார்‌.

மூன்றாம்‌ ஏகாந்தம்‌. பெருமாள்‌ நாச்சியார்‌ இருவருக்கும்‌ பதினெட்டு ஆவ்ருத்தி திருமஞ்சனம்‌ ஆகும்‌.
மூன்றாம்‌ ஏகாந்தத்‌ தளிகை நிவேதனம்‌ முதலியவை ஆனதும்‌ நாச்சியார்‌ உள்ளே எழுந்து அருளுவாள்‌,
பெருமாள்‌ கோரதத்தில்‌ திரு விதி எழுந்தருளி: உள்ளே போய்‌ கண்ணாடி யறையில்‌ திருமஞ்சனம்‌: செய்து கொள்வார்‌.

10-ம்‌ திரு–பெருமாள்‌ திருமஞ்சனம்‌ செய்து ‘கொண்டு ஸாயங்காலம்‌ மேளமில்லாமல்‌ உலாப்பாட்டும்‌
ராமானுஜ நூற்றந்தாதியும்‌ கேட்டுக் கொண்டே வீதி யெழுந்தருளி, உடையவர்‌ ஸன்னிதி வாசலில்‌ உடை யவரை அனுக்ரஹித்து,
அவர்‌ செய்‌து வைக்கும்‌ சைத்யோபசாரங்களையும்‌ பெற்றுக் கொண்டு, துவஜ ஸ்தம்பத்‌தினடியில்‌
படிப்புக்‌ கேட்டு ஸன்னிதிக்குள்‌ எழுந்தருளுவார்‌. பிறகு ரக்ஷா விஸர்ஜனமும்‌ துவஜ அவரோஹணமும்‌ ஆகும்‌.
மறு நாள் ராத்திரி விடாயாற்றியாக ஆடும்‌ பல்லக்கில் பெருமாள்‌ வீதி எழுந்தருளுவார்‌.
பெருமாள்‌ பங்குனி உத்தரத்தன்று நாச்சியார்‌ ஸன்‌னிதிக்கு எழுந்தருளச்‌ காரணம்‌ என்ன? ஸ்ரீரங்கத்தில்‌
பங்குனி உத்தரம்‌ என்பது தந்த்ரோத்ஸவம்‌ -அதாவது-இரண்டு உத்ஸவம்‌.
உத்ஸவம்‌ அவ.வர்களுடைய நக்ஷத்‌திரத்தில்‌ ஆரம்பமாக வேண்டும்‌ ; ௮ல்லது , முடிய வேண்டும்‌.
பெருமாளுக்கு ரோஹிணி நக்ஷத்‌திரமாகையால்‌ அன்று இந்த உத்ஸவம்‌ ஆரம்பமாகி உத்தரத்தில்‌ முடிகிறது;
நாச்சியாருக்கும்‌ ரோஹிணியில்‌ ஆரம்பமாகி அவளுடைய நக்ஷத்ரமான உத்தரத்தில்‌ முடிகிறது -.
பெருமாளுக்கு காலை யிலும்‌ ராத்‌திரியிலும்‌ உத்ஸவம்‌ நடக்க வேண்டி யிருப்பதால்‌ நாச்சியார் உத்ஸவம்‌ தனியாக
நடக்க முடியாமல்‌ பாவனையாக நடக்கிறது .-உத்தாம்‌ இருவருடைய உத்ஸவத்துக்கும்‌
கடைசி நாளாதாகையால் நாச்சியாருடைய சேர்த்‌தியில் இருப்‌பதற்காகப்‌ பெருமாள்‌ இன்று அங்கெ போகிறார்‌.
பிரளய கலஹ உத்ஸவம்‌ பண்ண வேண்டுமென்ற ஆகம விதிப்படி. அதற்கும்‌ உறையூர்‌ நாச்சியார்‌ ஸம்பந்தம்‌ அனுகூலமான ஸந்தர்பமாய்‌ வாய்த்தது.

77- உறையூர்ச் சரித்திரம்

உறையூர்‌ சோழர்களின்‌ ராஜ தானியாயிருக்தது — திருச்‌சினாப்பள்ளி கெஜடீர்‌ 27, 30, 49 பக்கங்களில்‌ பார்க்க,
உறையூர்‌ ராஜாவான பராந்தகன்‌, திரிசிர மலையில்‌ ஸரம முனி பயிராக்கின சிவந்திப்பூவை அபஹரித்த தோட்டக்‌.காரனை மன்னித்ததால்‌
சிவன்‌ கோபித்துக் கொண்டு உறையூரை மண்‌ மாரியால்‌ அழித்தார்‌.கெஜடீர்‌ 337-ம்‌ பக்கத்தில்‌ காண்க. கலி யுகத்திலே_ பகுகாலம்‌ சென்ற அனத்தரம்‌,. ஒரு கால விசேஷத்திலே ஒரு சோழனுடைய பாப விசேஷத்தினாலே மண் மாரி பெய்து பட்டணம்‌ முழுகிப் போயிற்று,
அநந்தரம் , ௮து முதலாக சோள தேசாதி பதிகள்‌ கங்கை கொண்டானிலே வாஸம்‌ பண்ணுகையில்‌,
கால விசேஷச்திலே உறையூரிலே கொஞ்சமாகக்‌ கோயில்‌ கட்டி பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ ஒரு சோழன்‌ பிரதிஷ்டிப்பித்‌தான்‌, என்று கோயிலொழுகு 5-ம்‌ பக்கத்தில்‌ இருக்‌கிறது
இது எந்த சோழனுடைய என்ன பாபத்‌தினாலே : மண் மாரி பெய்தது என்றும்‌, எந்தச் சோழன்‌ ஊரைப்‌ புனருத்‌தாரணம்‌ பண்ணினான்‌ என்றும்‌ தெரியவில்லை .
ஸுந்தர பாண்டியன்‌ சோழ ராஜாக்களை ஐயித்‌து அவர்‌களுடைய பட்டணங்களான தஞ்சாவூர்‌ உறையூர்‌ இரண்‌டையும்‌ எரித்த பிறகு
அவர்களுக்கே கொடுத்து விட்டதாக தன்னுடைய ஸ்ரீரங்கம்‌ சாஸனத்தில்‌ சொல்லும்‌ விவரம்‌ கெஜடீர்‌ 45 ஆம் பக்கத்திலிருக்கிறது .
உறையூர்‌ 1820ம்‌ வருஷத்துக்கு முன்பு துருப்புக்கள் தங்குமிடமாயிருந்தது ..–கெஜடீர்‌ 336 ம்‌ பக்கம்‌,

இப்படிப்‌ பல தடவை உறையூருக்கு ஆபத்து வந்த காலத்தில்‌ கோயிலை ரக்ஷிக்க முடியாமல்‌
நாச்சியாரை மட்டும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணினதாகச்‌ சொல்லப்படுகிறது .
உறையூர்‌ கமல வல்லித்‌ தாயாரை ஸ்ரீரங்கத்திலேயே கூர நாராயண ஜீயர்‌ பிரதிஷ்டிப்பித்த விவரம்‌ கோயிலொழுகு 112ம்‌ பக்கம்‌,
உறையூர்க் கோயிலைச்‌ சேர்ந்த இடங்கள்‌ இப்பொழுது குடிகளாலும்‌ அன்ய மதத்தினராலும்‌ ஆக்‌ரமிக்கப்பட்டு விட்டன.
கோயிலுக்‌ கெதிரிலிருந்த தெப்பக் குளம்‌ இப்‌பொழுது அன்னியர்களால்‌ ஆக்ரமிக்கப்பட்டதாய்த்‌ தெரிகிறது இப்படி ஸ்தலங்கள்‌ “பறி கொடுக்கப் பட்டதால்‌
நாச்சியாருக்குத் தெப்பம்‌ நடத்த இடமில்லாமல்‌ கோயிலுக்‌குள்ளே யிருக்கும்‌ சிறு புஷ்கரிணிக்குள்ளேயே தெப்பம்‌ நடந்து கொண்டிருக்கிறது
நம்முடையதை அன்யர்களுக்கு அபஹரித்துக்‌ கொடுக்கும்‌ விஷயத்‌தில்‌ சட்டமும்‌ அதிகாரமும்‌ செல்லுன்றனவே யன்றி
அன்யர்களால்‌ ஆக்ரமிக்கப்‌பட்ட நம்முடைய ஸ்தலத்தை நமக்கு மீட்டுக் கொடுக்க எதுவும் பயன்படுகிறது இல்லை.
அன்யர்களுக்குள்‌ மதாபிமானமும்‌ நமக்குள்‌ ௮து இல்லாததுமே இம்மாதிரி துர்கதிக்குக் காரணம்‌.
தெப்பத்தன்று கோயில்‌ கிணற்றில்‌ தெப்பம்‌ சுற்றின பிறகு மற்றை நாளில்‌ வெளி வராத நாச்சியார்‌
அன்றும் அடுத்த நாள்‌ பந்தக் காட்சி யன்றும்‌ வீதி வருவதைக்‌ கொண்டே ஆதியில்‌ தெப்பக்குளம்‌ வெளியே இருந்ததாகத்‌ தீர்மானிக்கலாம்‌.
உறையூர்க் கோயிலில்‌ மணவாளப்‌ பிள்ளை யாக நின்ற திருக் கோலமாய்‌ ரங்க நாதனும்‌ அவருக்கு அருகில்
உறையூர்‌ நாச்சி யாரும்‌ த்ருவ பேரங்களாக எழுந்தருளி ‘ யிருக்கிறார்கள்‌.
நாச்சியாரின்‌ உத்ஸவ மூர்த்தி முன்னால்‌ பெருமாளுடைய திருவடி. நிலைகளுக்குக் கீழ்‌ பிரதிஷ்டிக்கப்‌ பட்டிருக்கிறது ஸ்ரீரங்கத்‌துக்கு அபி முகமாயிருக்க வேண்‌டியதால்‌ இந்த ஸன்னிதி வடக்குப்‌ பார்த்திருக்கிறது
எதிரில்‌ குளமும்‌ அப்பால்‌ காவேரியுமாய்‌ வெகு அழகாயுள்ள ஸன்னிவேசத்தை எதிரில் வீடுகள்‌ சூழ்ந்து விகாரப்படுத்தி விட்டன

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ திருக்குறுங்குடி. அழகிய நம்பியுலா

October 23, 2023

காப்பு
பூமாலை சேர் குறுங்கைப்‌ பொன்மேனி நம்பியெங்கள்‌
மாமால்‌ பவனியுலா மாலைக்கு–நாமேவு
பூவற்‌ கருடனே பொன்னுலகத்‌ தார்பரவுங்‌
காவற்‌ கருடனே காப்பு.

நூல்‌
கார்கொண்ட மேனியான்‌ கைகொண்ட நேமியான்‌
பார்கொண்ட பாதப்‌ பரந்தாமன்‌ சீர்கொண்ட
பூமகளும்‌ பார்மகளும்‌ போற்றியிரு பாலிருப்ப
மாமலரோன்‌ கைகுவித்து வந்திப்ப நேமியுடன்‌
சங்கமுத லைம்படையுந்‌ தானிலங்கப்‌ புள்ளரசு
புங்கவனாஞ்‌ சேனையர்கோள்‌ போற்றிசைப்ப—எல்குங் நிறை
தேவர்‌ குழாம்நெருங்கிச்‌ சேவிப்பச்‌ செங்கமலப்‌
பூவலரும்‌ நிலவரை போலவே–யாவருக்கு ––5-

மிஞ்சிய வைகுண்ட வீட்டிருக்கும்‌(வீட்டிருக்க ) நாளவுணன்‌
நெஞ்சிற்‌ கெறுவம்‌ நிறுத்த வெண்ணிக்‌–கொஞ்சவுரு
வாமனமாய்‌ வேள்விபுரி மண்டபத்திற்‌ சென்றிரந்து
தாமன தால்‌ மூவடிமண்‌ தாவென்ன—ஒமெனவே
வெள்ளி தடுப்ப விழியொன்று போக்கிமுன்னே
யள்ளியநீர்‌ கையேற்ற வந் நாளில்‌–உள்ளமகிழ்ந்
தோரடியிற்‌ கீழே ழுலகளந்து(யுலகளந்து ) மேல்நின்ற
வோரடியில்‌’ மேலே ழுலகளந்தும்‌(யுலகளந்தும் )–ஓரடிக்கும்‌
எங்கே யிடமென்‌ றெதிர்மா வலிசிரசிற்‌
பங்கே ருகப்பொற்‌ பதம்வைத்தே— துங்கத்‌–10-

திரிவிக்‌ கிரமத்‌ திருவவதா ரஞ்செய்‌
தருள் முக் கியதலமென்‌றாகும்‌–ப.ரவரிய
வாமனச்‌ சேத்ரமென வாழுங்‌ குறுங்குடியான்‌
தேமருவு சித்தாச்‌ சிரமத்தான்‌–மாமறையோன்‌
கோர முகத்திற்‌ குறுங்கண் பிறந்திந்தத்
தாரணியிற்‌ றீதிழைக்கக்‌ தான்கண்டே—நேரெதிர்ந்து
( வென்றி தரு )வென்று திரு வைகுண்டம்‌ விற்றிருந்த கோலமும் பொற்
குன்று தனில்நின்‌ற கோலமும்பால்‌–துன்று கடற்‌
பள்ளி கொண்ட கோலமும்பண்‌ பாய்ச் சேவை சாதித்து
விள்ளுமவ னாமம்‌ விளங்குமூர்‌–உள்ள மகிழ்‌–15

கோடி மகர தீர்ததங்‌ குலவு, தல மென்‌ றுவிண்ணோர்‌
நாடியிறைஞ்‌ சுங்குறுங்கை நன்னகரான்‌– வீடு பெற.
நேசித் தலர் சொரிந்து நின்றெழுபத்‌ தெண் பிரமர்‌
பூசித்‌ தினிதேத்தும்‌ பொற் பதத்‌தான்‌ -தேசிகமாஞ்‌
செக்கச்‌ சிவந்த செழுஞ்சுடரைப்‌ பேத மறப்
பக்கத்தில்‌ வைத்த பரிவினான்‌—மிக்க தமிழ்ச்‌
சீரன்‌ புறவே தெரிந்து பா டும்பறைச்சிக்‌
காரங் கொடுத்தருளு மன்பினான்‌—நாரதனார்
நன்றுதரு மெஞ்ஞான்றும்‌ ஞானம்‌ “விளங்குமென
நின்று தவம்புரிய நேசித்தோன்‌– வென்‌ றிதரு–20-

மாக்களிற்று வேக்தன்‌ மனப்பூ ரணமாக :
நாக்கறுக்க வுண்மையாய்‌ நாக்களித்தோன்‌–ஆக்கமது
மிச்ச நமக்குக்கீழ்‌ வீட்டுவர மங்கையெனப்‌ ்‌
பிச்சனுக்குப்‌ பேறுதவும்‌ பெற்றியான்‌–இச்செகத்தில்‌
வந்தித்த காரி மதலை யெனப்புளிக் கீழ்ச்
சந்தத்து (சந்தித்து ) வேதந் தமிழ்செய்தோன்‌–சிந்‌திக்குந்‌
தெற்குவீ டென்று திருமங்கை மன்னன் வர
நற்கதியன்‌ றீந்தருளும்‌ நம்பெருமாள்‌ சொற்கிசைந்த
பாடற்‌ குருகிப்‌ பரவு மரையர் துழாய
மாடத்திற்‌ போயிருந்த வாரத்தான்‌–நாடிக்‌–25–

குழனார்‌ கழனிக்‌ குளத்திற்‌(குழத்திற் ) றிருவாய்‌
மொழியா லடகுகொய்த மூர்த்தி–வழுவால்‌
வருராக்‌ கதனும்‌ மதங்கனும்வீ டெய்தக்‌
கருணா கடாட்சமருள்‌ கண்ணன்‌—அருள் கூரும்‌
எம்பெருமா னார்சீட னென்னச்சோ மன்றுவைத்த (மன்றோய்த்த )
நம்பெருமா னாயிர நாமத்தான்‌–தம்பமினி. ‘
யாரெனக்கு நானுன்‌ னடைக்கலமென்‌ றேயிறைஞ்சுஞ்‌
சேரனுக்குப்‌ பிள்ளையாய்ச்‌ சென்மித்தோன்‌–வார்புனலிற்‌
காரண்ட மூழ்கிக்‌ கரும்பனையைச்‌ சுற்றி வரப்‌
பேரண்ட வீடளித்த பெற்‌றியான்‌—சீர்தங்கு–30-

பிள்ளைதர வேணுமென்றே (வேணுமென்று )பேராசை யாற்றவஞ்செய்‌
வள்ள முலைப்‌ பாடக வல்லிபால்‌–உள்ளறிவாய்ச்‌
சென்மித்துத்‌ திக்களைத்துஞ்‌ சென்றுரா மேசுரத்திற்
றன்மத்தால்‌ செப்பேடு தான்கண்டே–நன்மைபெறுஞ்‌
சீவல மாறனுக்குச்‌ சித்த மகிழ்ந் தேயருள்செய்‌
காவலவன்‌ செங்கமலக்‌ கண்ணினான்‌–மேவு
முறைகேத்‌ திரபால மூர்த்தி வட கீழ்‌
புறமேவ வன்பு (புற மேவி யன்பு )புரிந்தோன்‌–நிறமான
பச்சைப்‌ பரியேறிப்‌ பாரறியச்‌ சேரனுக்காய்‌
(மெச்சு )மெய்ச்சப்‌ படைவெட்டும்‌ வீர த்தான்‌—உச்சி தமாம்‌ –35–

நீல வரையருவி நேராகச்‌ செவ்வந்தி
மாலை புனையு மணிப்புயத்‌தான்‌–சால
மழைதடுத்து முன்னாள்‌ வசந்தன்கொண்‌ டாடுங்‌
‘குழகனம்பி ராயனெங்கள்‌ கோமான்‌–விழைவாகத்‌
தேசிக விலாசச்‌ சிகரந் தெரிசித்த
கோசிகனுக் கன்பு கொடுத்த பிரான்‌–விசலைசூழ்‌
பாருண்‌ டுமிழ்ந் தளந்து(தமர்ந்து ) பன்‌.றியாய்க்‌ கீண்டெடுத்த
நீருண்ட மேக நிஐத்தினான்‌–பேரண்ட
௮ண்டமு மண்டத்‌ தலகிலுயி ரும்படைக்கப்‌
பண்டயனை யீன்ற பரந் தாமன்‌ விண்ட –40–

முதலை நிருதன்‌(கிருதன் ) முனியை யடர்ந்து
மதலை மதலையாய்‌ வந்தோன்‌–இதமுடனே
அன்றெதிர்ந்த தாடகையை யாதி யிராவணனை
வென்று செயங்கொண்ட வீரத்‌தான்‌–துன்று
மருது ௪கடு வளர்தொட்டிற்‌ பேய்ச்சி
யெருது குதிரை யிளங்கன்‌–றுருகியபுள்‌
ளானை முதல்மல்ல ராவியுண்டு கஞ்சனையும்‌
வானி லனுப்பு மருகனார் –ஆனிரைக்காய்க்‌
குன்றெடுத்து மாய்ச்சியர்கள்‌ கூறையெடுத்‌ தும்மனைக்‌குள்‌
சென்றெடுத்து வெண்ணெய்‌ திருடியும்‌–அன்றெடுத்த–45–

தாம்போ டசோதைமுன்னே தாழ்ந்து நின்றோன்‌ தாமரைத்தாள்‌
பாம்போடுமாடும்பர தத்தான்‌–மேம்பாடி த்‌
தென்றுபதி னாறா யிரங்கோ பியர் மகழ
மன்‌ றல்‌ புரிந்தருளு மாயத்தான்‌—வென்‌ றிபுனை
ஐவருக்குத் தூதுரைத்தும்‌ அர்ச்சுன ற்குத்‌ தேரூர்ந்தும்‌
தையலுக்குத்‌ தானை தனைக்காத்தும்‌- செய்ய ்‌
பகலில்‌ இரவழைத்தும்‌ பாரதப்போர்‌ மூட்டிச்‌
செக மகிழப்‌ பூபாரந்‌ தீர்த்தோன்‌-.-இகழ்வான
வாணன்‌ கரமறுத்தோன்‌ வானோர்‌ பணிந் (பரிந்)தேத்தும்‌
சேணிந் திரற்கிளைய செங்கண்மால்‌–காணும்‌–50-

மதுகை டபர்ச்செற்றோன்‌ மாமதவா னைக்காய்‌
முதலை தனையடர்ந்த மூர்த்தி–முதியதிரைப்‌
பாலுததி யிற்பகுவாய்ப்‌ பாம்பிற்‌ பசுத்துரத்துங்
கோலிலா லிற்றுயிலுங் கோவிந்தன்‌–மேலடியார்‌
தன்னெஞ்சும்‌ வைகுந்தத்‌ தானமுந் தாழ்ந் திறைஞ்சும்‌
என்னெஞ்சும்‌ நீங்கா தினி திருந்தோன்‌–முன்னமொரு:
மாவானை முன்னு மதுரத்‌ தமிழ்பாடு
நாவாணன்‌ பின்னும்‌ நடந்த பிரான்‌–தேவான
ஈசனார்‌ பக்கத்தும்‌ ஏத்துமறை யுச்சியினும்‌
நேசமா யெப்போதும்‌ நின்றமால்‌–காசினியாந்–55-

தான மடிதீண்டத்‌ தாரகைக்கு மேலான
வானமுடி தீண்ட வளர்ந்‌த பிரான்‌. ஆன தவம்‌
நம்புருஷ நாராயணப்பேரே ரிச்சிறப்புந்
தும்பிநின்‌ றுலாவிய பூஞ்‌ சோலையும்‌–பைம்புனல்சேர்‌
காலடியி லாற்றின்‌ (லிரற்றினக் )கவர்த்தலையிற்‌ பொன்விளையச்‌
சாலி விளையு்‌ந் தடம்பணையும்‌–மேலான
சித்திர கோபு ரமுஞ்‌ சேர்ந்ததென்னஞ்‌ சோலைகளும்‌
வர்த்‌தனையாந் தென் குறுங்கை மாநகரான்‌–இத்தரையில்
முத்தொழிற்கு மூவுருவாய்‌ மூல நடு வீறாகி
வித்தகஞ்செய்‌ பேரின்ப வீட்டினான்‌– ௮த்திபடி (அத்தியடி )–60-

மீனாமை பன்றி யரி மிக்க குறள் பரசுக்
கோன்வார்‌ சிலைராமன்‌ கூன்கலப்பை— தானே
விசயபெல்‌ ராமன்‌ விளங்கு கிட்ண மாவாந்‌
தெசவவதா ரம்புரியுந் தேவன்‌—உசி தமறைக்‌
காரணத்தா னார்க்குமடங் காரணத்தா னேந்தி யகை
வாரணத்தான்‌ காத தருள்கை வாரணத்தான்‌.. கார் வரை போல்
ஆகத்தான்‌ பூமகள்சே ராகத்தா னன்றெடுத்த
நாகத்தான்‌ பள்ளிகொண்ட காகத்தான்‌–கோகனக
வுந்தியா னீள்‌ சகட வுந்தியான்‌ கன்றெறிந்த
வந்தியான்‌ தாரணிசெவ்‌ வந்தியான்‌–சிந்தியார்‌–65-

உண்ணத்தான்‌ பார்முழுது முண்ண த்தான்‌ நீண்டகடல்‌
வண்ண த்தான்‌ வாமகர வண்ணத்‌ தான்‌–எண்ணுமன்‌பால்
வாரத் தான்‌ முன்பாரா வாரத்‌ தான்‌ அஞ்சவெய்த
தீரத்தான்‌ சிந்துநதி தீரத்தான்‌.-பாரிரந்த
வாமத்தான்‌ சங்கரன்சேர்‌ வாமத் தான்‌ ஆயிரமா
நாமத்தான்‌ கஸ்த்தூரி நாமத்தான்‌–கோமளப்பால்‌
வேலையான்‌ முத்தொழில்செய்‌ வேலையா னெல் லழைத்‌த(வளைத்த )
மாலையான்‌ பூந் துளப மாலையான்‌–ஞாலத்‌
திடர்செய்‌ கனகன் எதிர வவன் தன்
குடாலங்க லாயணிந்த கொண்டல்‌… கடல்சார்‌ (கடல் அரசர் )–70-

அலகில்‌ தரணி யடியி லடைய (லடையு )
மலரு மிருதாள்‌ மலரான்‌. -குலவுநெறி
நின்று முனிவர்‌ நெருங்‌கித்‌ தவம்புரியு
மன்றல்‌ மயேந்திர மால்வரையும்‌– நன்று தருஞ்‌,
சிந்து நதியுந் திருப்பாற்‌ கடல்வளமும்‌
நந்து தவழ்‌ வைகுந்த நன்னாடும்‌—முந்துங்
குறுங்கா புரியுங் குலவுபுது வாச
மருங்கா துளப மலரும்‌–நெருங்கும்‌
கருட துவசமும் கைமதங்கள்‌ சிந்த
மருடருநாற்‌ கோட்டுமத மாவும்‌— தரணியிலே.–75-

வென்றி தருங்கவன மேவு துரகதமும்‌.
மன்‌ றலொலி மாறா மணி முரசுந்‌-.. துன்‌று
மருவு தசாங்கமென வாழ்வோன்‌ சிறந்த
உருவு தசாங்க முடையோன்‌–அருமறைதேர்‌
அயயன்‌ குழகன்‌ அழகிய நம்பியலர்‌
கொய்யுந் துளபக்‌ குறுங்குடிமால்‌–பையா
டராவணை வாசன்‌ அறிவி லரிய
பிரான் எனை யாளும்‌ பெருமாள்‌–விராவுமலை
நம்பிதிருப்‌ பாற் கடலில்‌ நம்பிபள்ளி கொண்டருளும்‌
நம்பி யிருந்த நம்பி நானிலத்தில்‌–உம்பர்தொழ–80-

நின்ற கரு மேகம்போல்‌ நீண்டபொன்‌ மேனிநம்பி
வென்றிபுனை நாத வினேதநம்பி-என்றும்‌
தரணிபுக ழாபற்‌ சகாய நம்பி செம்பொன்‌
மருவிய செங்கனி வாய்‌ நம்பி-.- கருணை
பரவுதய மார்த்தாண்டப்‌ பந்தற்கீ ழுண்மை
வரு. ராம தேவ மக ராசன்‌–தருபீடத்‌
துற்பனமாய்ப்‌ பூமகளும்‌ ஓங்கு (ஒங்க )நிலமகளும்‌
விற்பனமாய்‌ நீங்காத மேன்மையான்‌– அற்புதமாம்‌
நங்கையெனையாளும்‌ நம்பிக்கு நாச்சியார்‌
மங்கை குறுங்குடி வல்லியார் பங்கிலே-85-

சீராக வீற்றிருக்கச்‌ சித்த மகிழ்ந்து திரு
வாரா தனங் கொண் டருளுநாள்‌–பாரோர்‌
பரவு திருப்பங் குனித்‌திருவி ழாவிற்‌
கருட துவசமேற்‌ கட்டிச்‌ -சுருதி முறை
கேட்டு முதற்.றிருநாள்‌ (கேடகத்து மிரண்டா நாள் )கேடகத்தி ரண்டாம்நாள்‌
தீட்டு திறல்விசைய சிங்கத்‌துஞ்‌—சூட்டுநாள்‌
மூன்றி லனுமார்‌ முதபுயத்தும்‌ நாலாம்நாள்‌
நான்‌ றமுடி யைந்தலை நாகத்துந்‌- தோன்‌ றிவரும்‌
அஞ்சாம்நா ளிற்கருட னம்புயத்தும்‌ ஆறாம்நாள்‌
எஞ்சாத வானையினும்‌ ஏழாம்நாள்‌—மிஞ்சவே-90-

வேண்டியபள்‌ ளிச்சிவியார்‌ மேவு சிவிசையினுங்‌
கூண்டவெட்டாம்‌ நாளிற் குதிரையினும்‌–பூண்டுங்‌
குலவொன்ப தாம்நாள்‌ குருந்தேறி வீதி
வலம்வந்து பத்தாம்நாள்‌ வானில்‌–௮லருதைய
காலத்தில்‌ நித்யல்படிக்‌ கட்டளையாந் தாரையுட்ணஞ்‌(தாரையுட்டிணஞ்‌)
சீலத்‌ துடனமுது செய்தபின்பு–பாலாழிச்‌
சீரார்‌ திருமஞ்‌ சனஞ்செய்‌து வாய்த்ததிரு
வாரா தனங்கொண்‌ டருளியே- நேராய்
இசைந்தமணி ரத்னாபி ஷேகத்துக்‌ கேற்க
அசைந்த குழைக்கா தழகும்‌–பசுந் துளபத்‌-95-

தாரும்‌ கவுஸ்த்‌ துவமுஞ்‌ சங்குசக்‌ரக்‌ கையுமியல்‌(கையுமேல்)
தேருங்கஸ்த்‌ தூரித்‌ திரு நுதலும்‌–காரில்மின்போற்‌
பிதாம்‌ பரமும்‌ பிறவிப்‌ பிணியறுக்கும்‌
பாதாம்‌ புயமும்‌ பலபணியுஞ்‌–சோதிதரு
மாணிக்க மாலை வயிரவொளி யுஞ்சூழ்ந்த
காணிற்பொன்‌ (கானிற்பொன்‌)பூத்ததொரு கார்வரைபோல்‌—பூணிலகப்
பூவுலகும்‌ பாதலமும்‌ பொன்னகரத்‌ திந்‌ த்ரன்முதல்‌
தேவர்‌ முனிவர்‌ செயசெயென–மேவரிய
காளமுதற்‌ பல்லியமுங் கார்முழக்க மென்னவண்ட
கோளமட்டும்‌ நின்று குமிறவே–ஆழ்வார்கள்‌--100-

பன்னிருவ ரோதியப்ர பந்தமும்‌ நான்மறையும்‌
முன்னம்‌ மறையோர்‌ மொழிந்து செல்ல–உன்னரிய
பேரருளா ளச்சீயர்‌ பேராம்‌ வயிணவர்கள்‌
சார்வுறுதா னத்தார்‌ தலத்தார்கள்‌–வாரமுறுங்
கோயில்‌ வள ரனைத்துக்‌ கொத்தும்‌ புடைசூழ
ஏய திருத்‌ தேரி லெழுந்தருளி–நாயகனார்‌
சீலப்‌ பவனி வரச்‌ சேனையர்கோ னின்றுதிரு
வோலக்கஞ்‌ சேவித்‌ துடன்போத– மேலான

குழாங்கள்‌

காத லரம்பையருங்‌ காகோ தரநாட்டு
மாதரும்பர்‌ மங்கையரும்‌ வந்தீண்டிச்‌–சிதக்‌–105-

களமுங்க கவானுங் கன தனமேற்‌று ஓய்யில்‌
வளமும்‌ விழியும்‌ வதனத் .-தழகும்‌
கமுகு கதலி கரும்பிளநீர்‌ வாசங்‌
குமுகுமெனுங்‌ காவிகஞ்சங்‌ கொண்டே–சமுகமாய்‌
வீதி வளமைசெய்யு மேன்மைபோலே நெருங்கி
நீதி. யிருமருங்கும்‌ நின்றேற்றி-(நின்றேத்தி )-மாதரீர்‌
வாரிர்‌ பவனிதொழ வாரீ ரிவ.ரழகைப்‌
பாரீர்‌ எனவே பகருவார்‌ தார்குழலீர்‌(கார் குழலீர் )
முன்னானை காத்தார்‌ முலையானைக்‌ சன்புசெய்யார்‌
என்னா மிவர் நீதி யென்றுசொல்வார்‌…..நன்னுதலீர்‌–110-

நாடறிய வேழுன்‌ நர சிங்க மாயானைக்‌
கோடுபிளந் தாரென்.று கூறுவார்‌. ஆடை தனை
அன்றொருத்திக்‌ கீந்த தவராகி மாதர்கலை
இன்றுகொள்வ தேதென்‌றி யம்புவார்‌–நன்றுநன்று
கூடுகின்‌ற கோபியர்‌ தங் கூறைகவர்ந் தேதுளபஞ்‌
சூடுகின்றார்க் குள்ள தொழிலி தென்பார்‌ ஆடல்மதன்‌.
வாதை பொறாமல் வளை சோர்வார் வார் சோர்வார்
கோதைமலர்‌ சோர்வார்‌ குழாத் தொருத்‌தி பேதையடர்

பேதை

காலம்வரு மட்டும்‌ கரை கடவா வேலைபோல்‌
வேலைவிடம்‌ போலும்‌ விழியினாள்‌–மாலை–115–

வனைகுழலார்‌ தமமுடனே வண்டலயர்‌ போதில்‌
எனையடிமை கொண்டநம்பி ராயர்‌-புனைதேர்ப்‌
பவனி தொழுந் தாயரைப்பின்‌ பற்றி நடந் தோடி. ‘யவர்கள்சொன்ன வண்ணமுரைத்‌ தன்னே–இவர்மெய்‌யில்‌
மாலை தனைவாங்கும்‌ வண்டல் மக வுக்கெனவே
சேவைநிகர்‌ கட்கடைநீர்‌ சிந்‌தினாள்‌-..-ஆலை
மதன் பைங் கழைகுழையான்‌ வார்கணையும்‌ பூட்டான்‌
விதஞ்செய்மறு வீதி போம்‌ வேளை- பெதும்பை ரத்ன

பெதும்பை

வார்புனைய முத்து வடம்புனையச்‌ சிந்தையருள்‌
கூரவடிக்‌ (கூர்வடிக் )கொண்டரும்புங் கொங்கையாள்‌–.ஆர்வமுடன்‌-120-

வெற்றிசெய்யுங்‌ காமா (காம)விகாரங்‌ கொழுந்து விட்டுப்‌
பற்றிப்‌ படரும்‌ பருவத்தாள்‌–பொற்று ஒடியார்‌
கூடுங்‌ கலவி குறித்தெழுதுஞ்‌ சித்திரத்தை
மேடையிற்போய்ப்‌ பார்த்‌து நிற்கும்‌ வேளை தனில்‌ சூடும்‌
மருத்தேர்‌ குழற்பாங்கி வந்து நம்பி ராயன்‌
திருத்தேர்ப்‌ பவனியென்று செப்பக்‌–கருத்துருகி
மாதருடன்‌ வந்து வணங்கி நம்பி ராயன்மேல்‌
காத லரும்பவிழும் காட்சிபோல்‌-.ஓதீர்(ஆதீர்)
மருக்குலவு மார்பிலொரு மாதல்லால்‌ தோள்மேல்‌
இருக்குமிவள் ஒருத்தி யென்றாள்‌–விரைக்குழலார்‌–125-

பூவில்வளர்‌ மாது புவிமா திருவரிவற்‌
காவசிய மென்ப தறியாயோ(தறியாயே )–பாவாய்‌
எனவுரைத்த போதில்‌ இணைவிழியால்‌ நோக்கி
மனமுருகி னாள் பின்‌ மறந்தாள்‌–பனிமதியைக்‌
காண விளகுசந்த்ர காந்தமொத்தாள்‌ மாரன்வர்மம்‌
பூணவயல்‌ வீதிப்‌ புறம்போந்தாள்‌–வாணுதலாள்‌

மங்கை

மங்கை யொருத்தி மதனாபி ஷேகமிரு
கொங்கைமயில்‌ காமக்‌ குலதெய்வம்‌—இங்கி தமாஞ்‌
சீரார் துணைவி நம்பி தேர்ப்பவனி பார்க்கமின்னே
வாரா யெனவே மகிழ்ந்துபோய்‌–நேராய்ப்‌–130-

பணிந்தே மயலாய்ப்‌ பரிபவங்க ளெல்லாந்
துணிந்தே யெதிராடிச்‌ சொன்னாள்‌–மணந்தருளிச்‌
செய்யவிருந்‌ தாவனத்திற்‌ சென்றொருத்திக் காக் நீர்
மையல்கொண்ட செய்தி மறந்தீரோ –பொய்யலவே
மோகம்‌ பொறாமலொரு மொய்குழலுக்‌ கும்மைப்போல்‌
ஆகங்‌ கொடுத்தார்கள்‌ ஆர்சொல்வீர்‌–சோகமாய்ப்‌
பேராசை யானானும்‌ (யாய் நானும்)பெண்ணென்றோ பூந் துளபத்
தாராசை தீரவே தாருமென்று–தேரிற்
தொடர்ந்தாள்வே ளம்பு சொரியவயல்‌ வீதி
நடந்தார்பொற் றேருடனே நம்பி–மடந்தை--135-

மடந்தை

வடுவும்‌ பிணையும்‌ வளர்சேலும்‌ வேலும்‌
கடுவுமமு துங்கலக்த கண்ணாள்‌–நடுவாம்‌
எழுபருவத்‌ துள்ளு மிவள் பருவ மென்று
தொழுது மதன்‌ போற்றுந் துரைப்பெண்‌– அழகான
பொன்னூச லாடும்‌ பொழுது குழை யிரண்டும்‌
மின்னூச லாட விறலிபோய்‌—உ ன்னழகு
நன்றென்று கொண்டாடி. நம்பிதிருத்‌ தேர்ப்பவனி
யின்றென்றாள்‌ சென்றாள் இறைஞ்சினாள் –நின்று உருகிச்
செங்கனகத்‌ தேர்விருப்பஞ்‌ செய்‌தீர்‌ மயலான
வெங்களல்குற்‌ றேருமுமக்‌ கேலாதோ-.-பைங்கமலக்--140-

கைச்சங்கங்‌ கொண்டீர்‌ கருத்தில்‌ விரும்புமெங்‌கள்‌
மெய்ச்சங்கம்‌ நிர்விரும்ப வேண்டாவோ–நச்சரவம்‌
ஏறுபுள்ளோ டின்புற்‌ றிருந்ததுபோ லெங்கள்மேற்‌
சீறுமதி நட்பாச்சோ தீண்‌ டாதோ—கூறீர்‌
எனாமுன்மத னெய்தான்‌ இருகாலி லிட்டாள்‌(விட்டான் )
மனாவையல்கு லேந்தினாள்‌ வாரைத் –தனமேற்
கரிய குழல்மறைப்பக்‌ காதல்கொண்டாள்‌ மற்றோர்‌
தெருவில்‌ மதனொடுதேர்‌ செல்ல—அரிவை

அரிவை

இலவுகுமிழ்‌ முல்லை யிதழ்க்குவளை வள்ளை
மலருமொரு தாமரையில்‌ வாய்ப்பக் –கலவியிலே–145-

மேனகையுங்‌ கொல்லிமலை மேனகைசெய்‌ தாளும்வெடகத்‌
தானகைசெய்‌ காமசுர தானியாம்‌-(தனியாம்‌)-மானனையாள்‌
பாங்கினாற்‌ செம்பொற்‌ படாமும்‌ வனைகோலும்‌(பரமும் வளை கோலும் )
வாங்கினாள்‌ நம்பி வடிவெழுத–ஓங்குபொற்றேர்‌
மன்னும்‌ குறுங்‌கை நம்பி வந்தார் வந்தாரென்று [த்தி
சின்னத் தொனிகேட்பச்‌ சென்‌ நிறைஞ்சி-முன்னொரு
மெய்க் கரும்பி னாசையால்‌ (கரும்பு மாசையால் )வில்லொடித்தீர்‌ போர் மாரன்‌
கைக்கரும்பை வில்லைசெய்யக்‌ காணேனான்‌–மைக்கடலின் ‘
வீறடைத்து மேவுமணை மீது சென்‌றீர்‌ என்னிருகண்‌
ணாறடைத்து மேவு மணை காணீர்‌–மாறுபடும்‌–150

புள்வாய்‌ கிழித்தநீர்‌ பூங்குபிலோ டன்‌றிலெனும்‌
புள்வாய்‌ கிழிக்கவின்‌று போகாதோ–உள்ளம்‌
பரிபவமென்‌ றாள்கடைக்கண்‌ பாலித்து மற்றோர்‌
தெருவில்‌ மதனொடுதேர்‌ செல்ல த்‌–தெரிவை

தெரிவை

நிலவுமுடித்‌ தோன்முடிக்க நீறுபட்ட காமன்‌
இலகுமுயிர்‌ பெற்றுலக மெங்குஞ்‌–சிலையேந்திச்‌
சென்றுபோர்‌ வென்று செயஸ்தம்பம்‌ நாட்டியே
நின்றநாள்‌ தேடுகின்ற நிட்சேபந் –துன்‌று மலர்‌
வாவிப்‌ புனலாடி மாதருடன்‌ தேர்ப்பவனி
சேவித்தாள்‌ நம்பி திருமுன்போய்‌–மேவீர்‌–155-

வளையாழி கைக்கிருக்க மையலா மெங்கள்‌
வளையாழி கொள்ள வழக்கோ–இளையார்கள்‌
காணவளைத்‌ தாளிவளைக்‌ கைக்கொளவே நல்கீரேல்‌
பூணமலர்த்‌ தாரளித்தாற போதுமே–வாணுதலார்‌
ஆந்தரங்க மாமிருவர்க்‌ காட்சி புய மார்பல்லாற்‌
பூந் துளப மார்க்கும்‌ பொதுவன்றோ–பூந் துளபத்‌
தாரே தரீரேற்‌ (தாரேதீ ரீரேற் )றகுந்தகா தென்பதொன்றும்‌
பாரேன்கை தொட்டும்‌ (தொட்டுப் )பறிப்பேனான்‌–சேருமென்றாள்‌
புன்முறுவல்‌ செய்து நம்பி போனா ரயல் வீதி(போனார் பல வீதி )
மன்மதனும்‌ நின்று வளைக்கின்றான்‌–கன்னற் -160–

றனுவிற்‌ சரந் தொடுத்தான்‌ தையலின்மெய்‌ (தையலும் மெய்)யென்னத்‌
தனுவிற்‌ சரக்கூட (சரக்கூடத்)தானாள்‌–வனிதையப்பாற்‌

பேரிளம்பேண்‌

காரார்‌ கருங்கூந்தற் செங்கனிவாய்‌ வெண்முறுவற்
பேரான சிற்றிடைசேர்‌ பேரிளம்பெண்‌–மாரனுக்கு
வீறு தரு விற்று எழிலு மிக்ககலைக்‌ கியானமுமே
கூறவருந்‌ (கூறு வருந்)தீட்சா குருபீடம்‌–தேறிமறை
தேடுகின்ற நம்பி திருப்பதி நூற்‌ றெட்டிலொன்று
பாடகமென்‌ றேயணியாப்‌ பாதத்தாள்‌–நாடறிய
எல்கள் நம்பிக்‌ கொப்பாக யான்வனையே னென்றிகழ்ந்து
சங்கவளை பூட்டாத்‌ தடக்கையாள்‌–௮ங்கொருத்தி
மா அக்கு மாலானாள்‌ மாத்றவள்பே ரென்றுசொல்லிக்‌–165–

மாலுக்கு மாலானாள்‌ மாத்றவள்பே ரென்றுசொல்லிக்‌
கோலக்‌ திருவணியாக்‌ கூந்தலாள்‌—மேலுலகத்‌
தோரைவென்று தானே உபயசொர்க்க மாய்ச்சினந்து
பாரைவெல்லப்‌ பார்க்கும்‌ பயோதரத்தாள்‌–நேரான
கீதம்வளர்‌ வச்ரச்‌ சிலா தலத்திலே பகவற்‌
கீதை பிர சங்கிக்கக்‌ கேட்டிருக்கும்‌ போது
விரும்பவனி போற்று நம்பி மேவுதிருத்‌ தேரில்‌
வரும்பவனி சேவிக்க வந்தாள் -கரும்புயல்போல்‌
நீண்டபொன்‌ மேனி நம்பி நின்‌ற வடிவழகைக்‌
காண்டலுமே மட்டுமிஞ்சும் காதலாய்‌–வேண்டுகின்‌றாள்–170-

(சாந்தளிவர் மீது )சந்ததமும்‌ நீர்விரும்புஞ்‌ (நீ இருப்பச் )சந்திரபா கைக்குதவும்‌
ஜந்தருவந் தாலு மதுகொள்ளேன்‌–சிக்தா
மணிமகத்வ மார்புமது மார்புக்‌ கணியாய்‌
அணிகவுதக்வ மீதுமில்லை யாசை–பணிவோர்க்குச்‌
சாந்தணியு மார்பிற்‌ சவாது மணம்வீசும்‌
பூந் துளப மாலை தந்தாற்‌ போதுமே–ஈந்தருள்‌ வீர்‌
என்றாள் இது ௪மய மென்று மதன்‌ வில் வளைத்தான்
வென்றாள் .இனியெனவே மெய்‌தளர்ந்தாள்‌–தென்‌றல் வரச்
சாலகங்கள்‌ தாழ்‌ திறந்தார்‌ தாரை யுட்ண சாந்திகள் மென்‌
மேலுமமைத்‌தார் தளிரால்‌ மெத்தையிட்டார்‌–ஆலவட்‌டம் .–175-

வீசினார்‌ மல்லிகைவி தானித்தார்‌ சாந்து பன்னீர்‌
பூசினார்‌ நேர்ந்‌ தாரப்‌ போதொருத்தி–நேசமுள்ள
மூதறிவாம்‌ பாங்கி வந்து மொய்குழலாரை விலக்கிக்‌
காத லொருவர்‌ கருத்த.றியிர்‌–வே.தனையே
செய்‌தீர்‌ இவட்கு இதங்கள்‌ செய்வதுபோலே யிடர்கள்‌
செய்தீர்‌ இனியென்ன செய்குவீர்‌–வெய்துயிர்க்க
வார்த்தபன்னீர்‌ நம்பி மகிழும் திருப்படிக்கத்‌
தீர்த்த நிக ராகுமோ செப்புவீர்‌– போர்த்த
குளிரு முலைமேற்‌ குறுங்கேச ஈம்பி |
துளப நிக ராகுமோ சொல்லீர்‌… .குனிர்மையென்‌தீர்‌-180-

ஏந்து களபநம்பி யிட்டபட்ட வர்த்தனம்போல்‌
போக்தமயல்‌ போக்கவிது புத்தியோ. சாந்தாற்றி
வட்ட விசிறி நம்பி வாழ்கோ புரவாச
லிட்டமுள்ள தென்‌ றலொப்போ வீதெல்லாம்‌–விட்டுவிடுவீர்
என்றுபோய்‌ நம்பிக்‌கு இதமுரைத்து வாங்கி வந்து
மன்‌ றல்மலர்‌ சூட்ட மனமகழ்ந்தாள்‌—நின்‌று கிளி
பேசுகின்ற தென்னவரும்‌ பேதைமுதற்‌ பேரிளம்பெண்‌
ணாசைகொண்டு போற்ற வருள்செய்தே–தேசமகிழ்‌–184

நம்பிகுறுங்‌ காபுரியில்‌ நாத விநோத நம்பி
யும்பர் தொழப்‌ போந்தான்‌ உலா.

ஸ்ரீ அழகிய நம்பி உலா முற்றும்

————-

அனுப பந்தம்

பரவுதய மார்த்தாண்டப்‌ பந்தற்கீ ழுண்மை
வரு. ராம தேவ மக ராசன்‌–தருபீடத்‌–82- என்று

இவ்வுலாவில்‌ வரும்‌ அடிகள்‌ சரித்திரத்‌ தொடர்புடையன.
“உதயமார்த்தாண்டர்‌ என்ற அரசர்‌ தம்பெயராற்‌ சமர்ப்பித்த பந்தலின்‌ கீழாக இராமதேவர்‌ என்ற அரசர்‌
தம்பெயார்ல்‌ அமைத்தளித்த பீடத்திலே’ என்பது பொருள்‌.

கொல்லம்‌ ஆண்டு 630-ல்‌ (கிபி. 1455) எழுதப்பெற்ற தாமிர சாஸன மொன்றிலும்‌ காட்டாற்றுப்‌ போக்கு வைகுண்ட வளநாட்டுத்‌ திருக்குறுங்குடியில்‌
உதய மார்த்‌தாண்டப்‌ பந்தலின்‌ கீழ்ப்‌ புஜபல வீரசெளந்தர ராமவர்மன்‌ பீடத்தில்‌
ஸ்வாமி அழகிய நம்பி எழுந்தருளியிருந்ததாகக்‌ காணப்படுகின்றது.-(Rangacharya’s I. M. P. vol. tii. p. 1472, no. 285).
இங்கே கூறப்பெற்ற உதய மார்த்தாண்டர்‌ சேர – உதய மார்த்தாண்ட வர்மவாக இருத்தல்வேண்டும்‌. ஏனெனின்‌,
இவமே திருநெல்வேலிக்குத் தெற்கிலுள்ள நாட்டுப் பகுதியை வென்றடிப்படுத்து வள்ளியூரிலும்‌,
சேரன்‌ மாதேவியிலும்‌ அடிக்கடி தங்கி வசித்து வந்தார்
இவருக்கு முன்‌ உதயமார்த்தாண்டர்‌’ என்ற பெயருடையராக இருவர்‌ திருவிதாவ்‌ கோட்டுச்‌ சரித்திரத்திற்‌ காணப்படினும்‌,
இவ்விருவருக்கும்‌ திருக் குறுங்குடிப்‌ பிரதேசத்‌திற்கும்‌ யாதோரியைபும்‌ இருந்ததாகத்‌ தெரிய வில்லை.
இவர்‌ தமது 16-வது . ஆண்டில்‌ பட்டத்திற்கு வந்தார்‌; 78-வது
ஆண்டில்‌, கொல்லம்‌ 619-ம்‌ வருடத்‌தில்‌, தேகவியோகமாயினர்‌.
(திரு விதாங்கூர்‌ ஸ்டேட் மானுவல்‌, முதல் வால்யம்‌, பக்‌. 262).
ஆகவே, .கி பி. 15-ம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்பத்தில்‌ உதயமார்த்தாண்டப்‌ பக்.தல்‌ அமைக்கப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
அழகிய நம்பி கோயிலிலுள்ள மணியின்‌ மேற்புறத்‌தில்‌,

செயதுங்க நாட்டுச்‌. சிறை வாய் மன்‌னாதித்தன்‌ தென் வஞ்சியான்‌
வியலொன்‌ றகில கலையாளன்‌ கன்னி விசாகம் வந்தோன்‌
நயமொன்று கொல்ல மறுதூற்று நாற்பத்‌து நாலினண்பால்‌
அயனும்‌ பணிய மணியளித்‌ தானம்பிக்‌ கன்புகொண்டே –. என்ற செய்யுள்‌ பொறிக்கப்பட்டுள்ள.து.
இதனால்‌ திருவிதாங்கோட்டு: அரசர்கள்‌ பலர்‌. திருக்குறுங்குடி ஸ்வாமி அழகிய நம்பியின்‌ பக்தர்‌களாய்‌ விளங்கினர்‌ என்பது உணரலாம்‌.

இப் பந்தரின் கீழுள்ள பீடத்தை இயற்றியவர்‌ இன்னாரென அறிந்து கொள்வது எளிதன்று.
ராமவர்மன்‌ என்ற ஓர்‌ அரசர்‌ கொல்‌லம்‌ 646 முதல்‌ 659 வரை அரசு புரிந்தவரெனச்‌ ‘ சிலா ஸாஸன ஆராய்ச்சியாற்‌ புலனாகின்றது.
இவ்வரசர்‌ கொல்லம்‌ 640 – லும்‌, 654-லும்‌ சாஸனங்கள்‌ செய்திருக்கின்றார்‌. இவர்‌ ௮ரசாவதற்கு முன்‌
தமது மூத்த சகோதரர்‌ ஆதித்திய வர்மரின்‌ பிரதி நிதியாகப்‌ பல விடங்களில்‌ ஆட்‌சி புரிந்திருக்கிறார்‌.
இவருக்குச்‌ “செண்பகராமன்‌’ என்ற பட்டப் பெயரும்‌ உளதாகத்‌ தெரிகிறது .
செண்பகராமச்‌ சதுர்‌’வேதி மங்கலம்‌ எனவொன்று திருக்குறுங்குடியில்‌ கொல்லம்‌ 646-ல்‌ இருந்ததென்பதும்‌, செண்பகராம மண்டபம்‌ எனவொன்று திரு
நெல்வேலியில்‌ கொல்லம்‌ 653 ல்‌ இருக்ததென்பதும்‌ சாஸனங்களால்‌ அறியலாவன.

புஜபல வீர செளச்தர ராமவர்மன்‌ என்பதும்‌ இவரது பெயராகவே கருதத்தக்கது .
நூலிற்‌ குறிக்கப் பெற்ற சாஸ னத்திற்‌ காணும்‌ புஜபல வீரசெளச்தர ராமவர்மன்‌ பீடமாக: இருத்‌தல் கூடும்‌. இவ்வூகம்‌ சரியாயின்‌, உத்தேசம்‌ கிபி. 1450-ல்‌ இப்பீடம்‌ அமைக்கப் பெற்றதாகலாம்‌.
ஆனால்‌ நூலில்‌ வந்துள்ள தொடர்‌ இம்‌ முடிபை அத்துணை ஆதரிப்பதாகத்‌ தோன்றவில்லை.
* ராமதேவ மகராசன்‌ ‘ என்றே அது கூறுகின்றது .
கொல்லம்‌ 7608-ல்‌ உதய மார்த்தாண்டப் பந்தரின்‌ கீழ்ப்‌ புஜபல வீர வசந்த வேங்கடதேவ மகா ராஜர்‌ பீடத்தில்‌ ஸ்வாமி அழகிய நம்பி வீற்றிருந்ததாக வேறொரு தாமிர சாஸனம்‌ தெரிவிக்கின்றது. (1. நந. 1. 114. ஐ. 172, 00. 986).
இங்கே குறித்த வேங்கடதேவ மகாராஜர்‌ விஜய நகரத்து அரசர்களுள் ஒருவர்‌.
இவரைப்போன்று, ராமதேவ மகராசனும்‌ விஜய நகரத்து அரசரில்‌ ஒருவராயிருத்தல்‌ மிகப்‌ பொருத்தமானதாகும்‌.
இஃது உண்மையாயின்‌, இவர்‌ மேற்குறித்த வேங்கடதேவ மகாராஜாவின்‌ பின் இ. பி. 619 முதல்‌ 680 வரை அரசு புரிந்த ராமதேவ மகாராஜாவாக இருத்தல் வேண்டும்‌.
சாலிவாகன சகாப்தம்‌ 1551-ல்‌ பொறிக்கப்பட்ட சாஸனமொன்நில்‌ ராஜாதி ராஜ ராஜ பரமேஸ்வர
ராமதேவ மஹாராயர்‌’ என்று இவர்‌ குறிக்கப்படுகிறார்‌. (5. 1.1. v . no . 291).
எனவே, இப்பீடம் தோன்றியது இவரது காலமாகிய கி பி. 17-வது நூற்றாண்டின்‌ தொடக்கமாதல் வேண்டும்‌.

பீடம்‌ அமைத்ததைச்‌ குறிக்கும் தொடர்‌ அத்‌ திருப் பணி நிகழ்ந்த காலத்தில்‌ இருந்தார் ஒருவரது கூற்றுப் போலத்‌ தோன்றுகிறது.
ஆதலால்‌ இந் நூல்‌ இயற்றப் பெற்ற காலமும்‌ 17-ம்‌ நூற்றாண்டின்‌ முற்‌ பகுதியே யாதல்‌ வேண்டும்‌.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேக விடு தூது–

October 23, 2023
தனியன்

போதுமண வாளணங்கு புல்லுநறை யூர்நம்பி
மீதுமண வாளரருண் மேகவிடு – தூதுதனைச்
சொல்லுவார் கேட்போர் துதிப்பாரிம் மேதினிமேல்
வெல்லுவா ரெல்லாம் விரைந்து.

காப்பு
நம்மாழ்வார்

நாரணனை யெவ்வுயிர்க்கும் நாயகனை யண்டாண்ட
பூரணனை நாகணையிற் புண்ணியனை – வாரணமுன்
வந்தானை யேத்தி மறையா யிரந் தமிழாற்
றந்தானை நெஞ்சே தரி.

திருமங்கையாழ்வார்

நாட்டியசீர்த் தென்னறையூர் நம்பி திருவடிக்கே
சூட்டியதோர் மேகவிடு தூதுக்குக் – கூட்டம்
பொலியன்ப ரேத்தும் புனலாலி நாடன்
கலியன் பரகாலன் காப்பு.

நூல்

கலிவெண்பா
மேகத்தை விளித்தல்

சீர்கொண்ட செங்கமலச் செல்வத் திருமகளு
நீர்கொண்ட வேலை நிலமகளு – மேர்கொண்ட 1

காந்தண் மணிக்கடகக் கையா லடிவருடப்
பாந்தண் மணிச்சுடிகைப் பாயன்மேற் – சேர்ந் துறங்குஞ் 2

செங்கண்மா லுந்தித் திருத்தா மரைப்பிறந்த
வங்கண்மா ஞாலத் தனைத்துயிர்க்குந் – தங்காமும் 3

மாரி வழங்குதன் மாறாமே கைம்மாறு
காரிய மென்று கருதாமே – பாரிற் 4

றுளிக்கின்ற தண்ணந் துளியமுத நல்கி
யளிக்கின்ற கொண்மூ வரசே – களிக்கின்ற 5

மேலுலக மேறி விரிஞ்சனா மம்படைத்து
நாலு திசைமுகமு நண்ணுதலான் – மாலுமாய் 6

நீலநிற மாகி நிறைகமலக் கண்ணாகிக்
கோல வளையாழிக் கொள்கையாற் – சூலம் 7

விரவிய பாணியால் மின்னையிடந் தாங்கி
யரவ மணியு மழகால் – வரமளிக்கு 8

மெத்தே வருக்கு மிறைவராய் மேலாய்
முத்தே வருநிகரா மூர்த்தியே – மைத்தகன்ற 9

வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே – வானத்து 10

வேலைவாய் நீரருந்தி வெற்பி லரசிருந்து
சோலைவாய்க் கண்படுக்குந் தோன்றலே – ஞாலமிசைத் 11

மேகத்தின் சிறப்புரைத்தல்

தானமும் மெய்யுந் தருமமுங் கல்வியு
மானமுந் தானமு மாதவமு – நானக் 12

கருங்கொண்டை மங்கையர்தங் கற்புநிலைநிற்ப
தருங்கொண்ட லேயுனைக்கொண் டன்றோ – நெருங்குமுவ 13

ராழிநீர் துய்யவமுத நீரானதுவும்
வாழிநீ யுண்ட வளமன்றோ – தாழுமடி 14

தந்துயர்கூறி மேகத்தை வேண்டுதல்

யாவுஞ் சிந்தாமணியு மம்புயமுஞ் சங்கமுங்
காவும் பணியவுயர் கார்வேந்தே – நாவினாற் 15

சாதகமும் தோகைத்தனி மயிலும்போலவே
மேதகையை நின்வரவை வேட்டிருந்தேன் – பூதலத்துப் 16

பல்லுயிருங் காக்கும் பரமா முனக்கெனது
புல்லுயிருங் காக்கில் புகழன்றோ – வல்லதொரு 17

சீருயிரு மேகமே செங்கண்மாற் காளானேன்
ஆருயிரு மேகமே யல்லவோ – பேரரவ 18

நீலமஞ்சே கேட்டியா னின்னையல்லா தென்னையிந்தக்
காலமஞ்சே லென்பாரைக் காணகிலேன் – ஓலமரு 19

விண்மாரியே பெருமாள் வேரித்துழாய் வேட்டென்
கண்மாரி பெய்வதெல்லாங் கண்டாயே – தண்மை 20

விளையும் பயோதரமே வெம்பாத செம்பொன்
அளையும் பயோதரமே ஆனேன் – கிளைபிரியாக் 21

கோலமழையே குயில்மாரனையங்குக்
காலமழையாமல் காப்பாரார் – நீலநிற 22

மங்குலுக்கு வேந்தே மலர்க்கண் புதைத்தனைய
கங்குலுக்கு நெஞ்சங்கரைகின்றேன் – இங்கு 23

நடந்தகனமே முலையினாலுந்தரள
வடந்தகனமே செய்து மாய்த்தேன் – விடந்திரண்ட 24

திங்களெழிலிக்குச் சிலைமாரவேள் முனியில்
எங்களெழிலிக்கரசே யென்செய்கேன் – மங்கலமா 25

மிந்திரவில் வாங்கி யெழுகின்ற மைப்புயலே
வந்திரவில் வாடை வருத்துங்காண் – அந்தரத்து 26

விண்ணே யுனக்கிவற்றை விண்டுரைத்தே னல்லாதெ
னுண்ணேய வேட்கை யெவர்க்கோதுவேன் – கண்ணழலால் 27

வேட்கைபிறர்க் குரையேனென்றல்

வெந்தானிலத்துக்கு வீறாகத் தாங்குதலால்
மந்தானிலத்துக்கும் வாய்திறவேன் – அந்த 28

குருத்தத்தை மாரன்குரகதாமா மென்றே
வருத்தத்தை யங்குரைக்க மாட்டேன் – கருத்துள்ள 29

மாதண்டலைவாய் மதுகரத்துக்கும வன்றன்
கோதண்ட நாணென்று கூறேனான் – மூதண்ட 30

கோளக்குயிற் கெல்லாங் கோவே யவன்றனது
கானக்குயிற்குங் கழறேனான் – நாளொன்றில் 31

அன்புருவுக்கு மரசனுட லீர்வித்த
புன்புறாவுக்கும் புகலேனான் – மென்புரத்து 32

கோம்பிக்குடல் பனிக்கும் கொச்சை மடமஞ்ஜைக்கும்
சோம்பித் தளரும் துயர் பணியேன் – றேம்பிரச 33

நிற்கின்ற பூவைக்கு நீள்குழலார் சொல்லியதே
கற்கின்ற பூவைக்குங் கட்டுரையேன் – பொற்கால் 34

வெறிப்பதுவும் வீட்டன்னம் வெண்பாலு நீரும்
பிறிப்பதுபோல் நட்புப் பிரிக்குங் – குறிப்பறிந்து 35

காதலா லுள்ளக் கவலையது கேட்க
வோதலாகா தென்றுரையேனான் – ஆதலால் 36

உள்ளே புழுங்குவதன்றி யோருவருக்கு
விள்ளே னுனக்கு விளம்பினேன் – தெள்ளியநூல் 37

இரக்கந் தோன்ற வுரைத்துத் தூதுவேண்டல்

ஓதுவாரெல்லாம் உதவுவாரொப் புரைக்க
வேதுவாய் நின்ற வெழிலியே – பூதலத்து 38

பெய்யுதவியும் புரிந்தால் பேச்சுதவியுஞ் சிறிது
மெய்யுதவியும் புரிய வேண்டாவோ – துய்ய 39

அடலாழி யானடிக்கே அன்பாயகாதல்
கடலாழி மூய்கினேன் கண்டாய் – உடல்வாழ 40

விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பால்
மைம்முகிலே சந்தாகமாட்டாயோ – பெய்மதவேள் 41

தண்ணப்பஞ் செய்வதெல்லாந் தாமோதரனடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ – வெண்ணத்தின் 42

சீதரனை நீயிரந்து தெய்வத் துழாய் கொணர்ந்தென்
ஆதரவு தீர்த்தருள லாகாதோ – கேதகைக்கு 43

மின் கேள்வனாக்கிய நீவிண்ணோர் பெருமானை
என் கேள்வனாக்கினா லேலாதோ – முன்கேட்டு 44

மெள்ளரிய தாமம் எனக்குதவா யேலுனக்கு
வள்ளலெனும் நாமம் வழுவாதோ – தெள்ளுகடன் 45

ஞாலத் துளவமே நல்லிளமை போகாமல்
கோலத்துளவமே கொண்டுதவாய் – சீலத்தா 46

லூனா யுடலாயுறு துணையாய்த் தெய்வமா
யானா மருந்தா யென்னாருயிராய் – ஆனாத 47

நெஞ்சமாய்க் கண்ணாய் நினைவாய் வினையேற்கு
தஞ்சமாய்நின்ற தனிமுதலே – பஞ்சவர்க்காய் 48

மெய்த்தூது சென்றவரை வெல்லவே வெண் சங்கம்
வைத்தூது செங்கமல மாயோன் பால் – இத்தூது 49

நல்லதெனக்காரே நடந்தருள வேண்டுநீ
அல்லதெனக்காரே யருள் செய்வார் – சொல்லித் 50

தருதுமெனக் கந்தரமே சாற்றாயே லுய்யக்
கருதுமெனக் கந்தரமே கண்டாய் – பெரிது 51

தூது சென்றார் சிலரை எடுத்துக்காட்டல்

மெனைத் தோன்றியோ துயரமெய்தினார் பார் மேல்
தோன்றியோ தூதுழன்றார் – நினைத்தார் 52

தமது பிறப்பறுக்கும் தாயாகி மேனாள்
அமுதிற் பிறந்தாள் பாலன்றோ – நமது 53

கருமஞ்சனை யவர்க்கா காய் கதிரைப் பாய்ந்து
பொருமஞ்சனை சிறுவன் போனான் – தரணிதனில் 54

மீது பரவை விடமுண்டவ னன்றோ
மாது பரவைமனை வந்தான் – ஆதலால் 55

ஓதுமிவரில் உயர்ந்தாரிலை யென்றே
தூது புரிந்தோரை தொகுத்துரைத்தேன் – ஆதலால் 56

தேனின்புறத் தூது தெய்வத் துளவினன்பால்
யானின்புறத் தூது எழுந்தருளாய் – வானிற் 57

றிவலை பிலிற்றி வருந்தெய்வமே நீயென்
கவலையறத் தூது போங்காலை – குவலயத்தி 58

பாற்கடலிற் பரமன் பெருமையும் நிலைமையும்

லெம்பிரானூரு மவர்பெயரு மெற்பயின்ற
தம்பிரான் செய்தமையுஞ் சாற்றக்கேள் – உம்பரில் 59

பன்னிருவர் மான்றேர் பரிதிக் கடவுளரு
மன்னிருவர் தெய்வ மருத்துவரும் – ஒன்னலரைப் 60

பாயும் விடையர் பதினொருவருந் திசையில்
காயுங் கடாஆ யானைக் காவலரும் – தூயகதிர் 61

வெண்ணிலா விட்டுவிளங்குங் கலா மதியும்
எண்ணினத் தாரகை யீட்டமும் – கண்ணி 62

லருடரு மாஞானத் தகுந்தவர் நாகர்
தெருடரும் விஞ்சையர் சித்தர் – கருடர் 63

அரக்கரி யக்கரவுணர் முதலோர்
பரக்கும் கணங்கள் பலரும் – பெருக்கரு 64

நீரேழுமேழு நினது பெருங்கணமும்
பாரேழு மேழு பருப்பதமும் – ஈரே 65

ழடுக்கும் புவனமு மாடகமால் வெற்பு
மெடுக்கு மரவரசு மெல்லாம் – தொடுக்கத்தான் 66

முண்டக நாபிமுளைக்குஞ் சதுமுகனோ
டண்ட வளாக மடங்கலுந் தான் – கண்டளித்து 67

முன்னிய வண்ண முடித்து விளையாடும்
தன்னிக ரில்லாத் தனி முதல்வன் – அன்னமாய் 68

மீனாகி ஆமையாய் வெள்ளேனமாய் மடங்கல்
மானாகி மாயையாய் வாமனமாய் – ஆனாத 69

மானிடராய் பாய்பரியாய் வாழு மடியவர்க்கு
தானிட ராற்றப் புகுந்த தம்பிரான் – மேனாளிற் 70

பைந்நாகப் பள்ளிமேல் பங்கயங்கள் பூத்தொளிரும்
மைந்நாகம்போல் கண்வளருநாட் – பொன்னாய 71

வன்ன முளரிமலர்த்தவிசில் வீற்றிருக்கும்
அன்ன முணர்த்த வுணராமையால் – என்னையல்லால் 72

இந்நித்திரை மடந்தை எய்தலுமாயிற் றோவென்
றுன்னித்திரை மடந்தை யூடினளால் – அந்நிலையே 73

திருமகள் சுகந்த வனம் வருதல்

காயத்திரியுங் கலைமகள் சாவித்திரியும்
ஆயத் தெரிவைய ராமாங்கு வர – நேயத்தார் 74

கோலத்தார் கைதொழுது கூரிலைய முக்கவட்டுச்
சூலத்தாளே வற்றொழில் கேட்ப – ஞாலத்து 75

மானிட மங்கைவடி வாகவந் துறையும்
கானிடம் யாதென்று கண்சாத்தி – யானா 76

யோசனையோர் நாற்றிசையும் முத்தித்
தலமாஞ் சுகவனந்தன்னுள் – அலமாற 77

வான்றிகழுங் கங்கை முதல் மங்கைமார் மார்கழியில்
தோன்றிய முற்பக்கத் துவாதசியில் – தேன்றிகழும் 78

கூந்தனனை குடைந்தாடலான திக்கு
வேந்தனென நாமம் விளம்பியே – பாய்ந்த 79

திருமணி முத்தாறலைக்குந் தீரத்தினின்ற
மருமருவுவஞ்சியின் கீழ்வைக – வருகைமா 80

வானமே தாவிவளரும் மகிழடியின்
ஞான மேதாவியெனு நன்முனிவன் – தானெய்திச் 81

மேதாவி திருமகளைத் தமக்கு அருமகளாகப் போற்றல்

செய்ய கமலத்துச் செய்யவளைக் கண்டுவந்தே
யையர் பயந்தெடுத்த வன்னையார் – துய்யபெய 82

ரூரேதெனப் பெயருமூருமிலை தந்தைதாய்
நீரேயென முனிவன் நெஞ்சுருகி – பாரேத்த 83

மன்னிள வஞ்சியின் கீழ்வந்துறைதலால் பெயரும்
என்னிள வஞ்சியரே என்றுரைத்து – தன்றுழையி 84

லானவர முனிவனவ் வனத்துள் கொண்டிருப்ப
வானவர் தோலாவலி தோற்று – தானவரால் 85

எம்பெருமான் மானிட வடிவாய் மாமகளைத் தேடி வருதல்

விண்ணாடிழந்து விரிஞ்சகனோடு கூப்பிடுநாட்
டண்ணாந்துழாய் மாதவனுணர்ந்து – நண்ணார் 86

மிடைகிடைத்துமென்று விடைகொடுத்து பின்னர்
கிடைகிடைத்தச் செந்துவர் வாய்க்கிள்ளை – யடைகொடுத்த 87

புண்டரீகமாளிகைமேல் பூவைதணந்தமையும்
அண்டரெல்லா மாற்றலகன் றமையும் – கண்டருளிச் 88

செந்திருவை நாடுவான் தெய்வ வடிவகற்றி
யைந்துருவமாகி யவனியின்மேல் – வந்தருளி 89

ஆடல்பறவை யரசன கல்விசும்பு
திசையனைத்துந் தேடியணாள் – நீடும் 90

சுகந்தவன நோக்கித் துணையாய் செல்வி
யுகந்த வனமீதென்றுணர்ந்து – புகுந்தருள 91

மேதாவி அதிதிகளை ஆராதித்தல்

மேதாவிகண்டு விருந்தளிப்ப வெவ்வுயிர்க்கு
மாதாவினல்லான் மகிழ்ந்த கற்பின் – போதார் 92

முருகுவளை மொய்கழலை முன்றிதனிற்கண்டு
பெருகுவளை முன்கை பிடிப்பத் – திருமகளும் 93

காதலால்வந்த நம்பி கைபிடித்தா னென்றலறி
கோதிலா மாமுனியைக் கூவுதலும் – வேதியனும் 94

கண்புகையச்செய்யக் கதிர்புகைய கார் வெளிற
விண்புகைய வாய்துடிப்ப மெய்பதற – மண்புகைய 95

எம்பெருமான் ப்ரஸந்நனாதலும் முனிவர் துதித்துத் தம்மகளை மணஞ் செய்து கொடுத்தலும்

வந்தான் கரகநீர் வாங்கிச் சபிப்பதற்கு
முந்தாமுன் சங்காழி முன்காட்டச் – சிந்தை 96

மயங்கினான் அஞ்சினான் வாய்குழறிப் பார்மேல்
முயங்கினான் செங்கை முகிழ்த்தான் – தியங்கி 97

அழுதான் துளவின்மா லஞ்சலென வானோர்
விழுதாமரைத் தாளில் வீழ்ந்து – முழுது 98

மறியாமை செய்தேன் அதுபொறுத்தியென்ன
எறியாழியம்மா னிரங்கிச் – செறிதுழாய் 99

கோதைமணம் புணர்ந்த வக்கொண்டலுமப் புண்டரீக
மாதைமணம் புணர்ந்து வைகியபின் – நீதி 100

வாக்குவரமளித்து வீடருளி எம்பெருமான் சுகந்தகிரிமேல் அமர்தல்

யறந்திறம்பா நேமியானவ் வனஞ்சேர்கைக்கும்
பிறந்தார்கள் வீடுபெறற்கும் – சிறந்த மலர் 101

மாமாதின் பேரே வழங்குகைக்கும் கேட்டவர
மாமாதவனுக் கருளியபின் – பூமாதை 102

பாமாதுள்ளிட்டார் பணிந்துவிடை கொடுபோய்
தேமாமலரோன் செவிபடுப்ப – நாம 103

மறையாளனவ் வனத்து வந்தரசனீழல்
முறையாய வேள்வி முடித்து – பொறையார்ந்த 104

பாதாரவிந்தம் பணிந்தேத்தப் பாற்கடலில்
சீதாரவிந்தத் திருவினொடும் – பூதலத்தோர் 105

பேறுபெறவே பஞ்சபேரவடிவுகந்து
வீறுபெற மாமுனிக்கு வீடருளி – கூறரிய 106

ஞாலத்தெழுபத்து நான்கு சதுரயுகம்
நீலத்தடவரை போனின்றபிரான் – மேலைச் 107

திருக்காவிரிவளனும் திருநறையூர்ச் சிறப்பும்

சிகரக் குடகிரியில் சென்றிழிந்து கீழை
மகரக் கடல் வயிறு மட்டும் – அகலிடத்தில் 108

பாரங்கிழித்துப் பரவி மதகிடறி
யாரஞ்சுருட்டி யகிலுருட்டி – நார 109

நுரையெறிந்து வித்துருமக் கொத்து நுடங்கி
திரையெறிந்து முத்தஞ் சிதறி – கரையில் 110

கொழிக்குங் காவேரி குதித்தோடப் பாய்ந்து
சுழிக்குங் காவேரித் துறையான் – வெழிற்கருகி 111

யோங்கிப் பகலிருளை உண்டாக்கி மேகரும்பை
தாங்கிப் புயறடுத்த தண்டலையும் – தேங்கமலப் 112

பூமிசை யன்னம் பொருந்தி வலம்புரியும்
நேமியு மேந்திய நீள்கயமும் – காம 113

ருளமகிழ வெண்ணிலா வொண்கதிரைக் கன்னல்
வளமதனை ஈன்ற வயலும் – அளவின்றி 114

தன்னையே போலத் தழைப்பத் தரணிக்கோ
ரன்னையே போல வருள்செய்வான் – மன்னு 115

மருநறையூர் வீதி மணிமாடக் கோயில்
திருநறையூர் வாழ்வாசு தேவன் – இரணியனைப் 116

நம்பியின் சிறப்புரைத்தல்

பாரிலுரங் கிழித்த பன்னகத்தான் பன்னகத்தான்
வாரிநிகர் வண்ணத்தான் வண்ணத்தான் – ஆரிடத்தும் 117

தண்ணளியான் தண்ணளியான் தாழ்ந்தவசைக் கரத்தான்
கண்ணினழகார் முகத்தான் கார்முகத்தான் – விண்ணுலகில் 118

நல்லசுரர்க் கண்ணியான் நாறுதுழாய்க் கண்ணியான்
புல்லசுரர்க்குக் கொடியான் புட்கொடியான் – தொல்லிலங்கை 119

வஞ்சனை யங்கறுத்தான் வாய்ந்த வடிவங்கறுத்தான்
கஞ்சனை முன்சிவந்தான் கண்சிவந்தான் – துஞ்சுந் 120

திரையான் மலரிந்திரையான் கவிகை
வரையான் செழுந்துவரையான் – திரையார் 121

மங்கையான் வேதநியமங்கையான் சென்னியிலோர்
கங்கையான் சூடிய காற்கங்கையான் – பங்கயக்கை 122

ஆரணன் கேசவன் ஆழியான் அச்சுதன்
காரண னெம்பெருமான் காகுத்தன் – நாரணன் 123

யாதவன் கண்ண னிருடிகேசன் முகுந்தன்
மாதவன் கோவிந்தன் வைகுந்தன் – சீதரன் 124

மாயன் அனந்தன் மதுசூதனன் திருமால்
ஆயன் முராரி அருளாளன் – தூயகழல் 125

தேவாதிதேவன் திருநாயகத்தேவன்
றவாவிடர் கெடுத்த தம்பிரான் – ஓவாப் 126

படந்திகழு மாடரவப் பாய்க்கிடந்து மேலா
மிடந்திகழ் வைகுந்தத்திருந்து – நடந்து 127

பொறையூ ரடிக்கமலம் பூத்தோயவந்து
நறையூரி னின்றருளும் நம்பி – மறையூரு 128

நம்பி திருவிழாக் கோலங்கொண்டு மண்டபத்து அமர்தலும் வானவராதியோர் வந்து பணிதலும்

மாயிரம் பேழ்வாய் அனந்தன் பணாடவிமேல்
மாயிரு ஞாலம் மகிழ்ந்திறைஞ்ச – சேயிருந்தார் 129

அண்டர்குழாமும் அருந்தவரீட்டமும்
தொண்டர் குழாமுந் தொழுதேத்தப் – பண்டைத் 130

திருவாய்மொழியும் திருமொழியும் வேதாத்
துருவாய் மொழியுந் தழைப்ப – வருவாத 131

திங்களு நாளுந் திருவிழா நின்றோங்க
மங்கல வெண்சங்கம் வாய்பிளிற – வங்கமர்ந்து 132

நன்பஞ்சேர் நாடகக்கானம்பிக்கு நாயகிதன்
இன்பஞ்சேர் நாளிலினி தொருநாள்- அன்பமர்ந்து 133

தன்னிசையாற் புள்வேந்தன் சாமவேதம்பாடும்
இன்னிசையால் பள்ளியெழுந்தருளி – மன்னி 134

சிலம்பு திரைமோது திருமணி முத்தாற்றி
னலம்பு திருமஞ்சனமாடி – நலம்பரவு 135

சேலைகளைந்தணிந்து தெய்வ பசுந்துளப
மாலை புதியவகைசூடிக் – கோல 136

துயங்கு திருவாராதனைக் கொண்டபின்னர்
இயங்கு கடற்சங்கமிசைப்பப் – பெயர்ந்ததோர் 137

திருந்து மணிமண்டபத்துச் சிங்கஞ்சுமந்த
வருந்தவிசினேறியருளி – பொருந்தியநூல் 138

வேதமும்வேதாந்தமெய்த்த திருவாய்மொழியு
நாதமுங் கேட்டு நயந்துருகி – யோது 139

மருவை வடவரை அம்பொற்குவட்டிற்
றருணமவுலிதயங்க – திருநாம 140

மிட்டவதனத்தெழுதிய கத்தூரி
வட்டமதியின் மறுவேய்ப்பக் – கிட்டரிய 141

தேங்குழைக்கீழ்க் கற்பகத்தில் செம்பாம்பு சூழ்ந்ததென
பூங்குழைக்கீழ்வாகுபுரிதயங்க – வாங்கிற் 142

பதிக்குங் கவுத்துவமும் மார்பும் பருதி
உதிக்குமரகதக்குன்றொப்ப – குதித்தொருநாட் 143

கால்வீழ்ந்தகங்கை விலங்கிக்கடிமார்பின்
மேல்வீழ்ந்ததென்ன முந்நூல்விட்டிலங்க – சூல்வீங்கு 144

கொண்டலின்கீழ்தோன்று குடதிசையில்செக்கரென
விண்டிலங்கு பொன்னாடை மெய்யசைய – தொண்டரெல்லாம் 145

பற்றிக்கழல வடபாதாரவிந்தத்தின்
வெற்றிக்கழலின் வெயிலெறிப்பட – மற்றுந்தான் 146

வேண்டும்பலகலனுமேகவடிவிற்கேற்ப
பூண்டுகளபம்புயத்தணிந்து – நீண்டகடற் 147

பெண்ணாடியதன் பெரியதிருவடியைக்
கண்ணாடிமண்டிலத்தில் கண்சாத்தி – வண்ணத் 148

திருமருங்குக் கேற்பதொரு சிற்றுடைவாள்வீக்கி
யிருமருங்கும் ஐம்படையுமேந்தித் – திருமறுகில் 149

போதரலுநாற்கடல்சூழ் பூதலத்தும் வானத்தும்
மாதரரம்பையர்கள் வந்தீண்டிப் – பாதம் 150

தொழுவார்வளைகலைநாண் சோர்வார் மயலா
யழுவார்முலை பசலையாவார் – குழுவாகி 151

தலைவி தனது குறையுரைத்தல்

யம்மாதர் நிற்பயருவினையேன் கைதொழுதேன்
விம்மாவெதும்பாமெலிவானேன் – எம்மானுக் 152

கென்னெஞ்சுமென்கலையுமென்னாணுஞ் சங்குமவன்
தன்னெஞ்சறியத்தனிதோற்றேன் – பின்னுமொரு 153

விண்ணப்பமுண்டென்று மெய்ந்நடுங்கிக் கைகூப்பி
வண்ணத்துகிலொதுக்கி வாய்புதைத்துன் – கண்ணுதலாம் 154

வீரன்சிலையிறுத்தவேந்தே வினைவிளைக்கு
மாரன் சிலையிறுக்க வாராயோ – பாரமலை 155

யன்றெரித்தகையால் அழல்வீசியதென்றல்
குன்றெடுத்தபோது குறையாமோ – நின்றெரிக்கும் 156

செய்யகதிர்மறைத்த சீராழியால் மதியின்
வெய்யகதிர்மறைக்க வேண்டாவோ – கையசைக்கு 157

முன்னநீவாயடங்கு முந்நீரையென்பொருட்டால்
இன்னநீவாயடக்கிலேலாதோ – பன்னகத்தின் 158

பூமரமேழுந்துளைத்த போர்வாளிபுன்குயில்வாழ்
மாமரமொன்றுந்துளைக்கமாட்டாதோ – சேமலைந்து 159

மாவாய்பிளந்த மரகதமே வம்புரைப்பார்
நாவாய்பிளந்தால் நவையாமோ – பூவாய்த்த 160

தூயகுருந்தொசித்த தோளாய் செவிவெதுப்பு
மாயர்குழலொசித்தால் ஆகாதோ – மாயமாங் 161

காதிச்சுழல்காற்றைக்காய்ந்த நீவாடையா
வாதிச்சுழல்காற்றை மாற்றாயோ – மோதிவரு 162

மண்ணாறுநீங்கவழிகண்டநீயெனது
கண்ணாறுநீங்கவழிகாட்டாயோ – தண்ணார்ந்த 163

தாதுதிரும்பைந்துழாய் தாராயேல் கண்ணனென
வோதுதிருநாம மாசுண்ணாதோ – வீதிருக்க 164

நீநெடுமாலானநிலை நின்சேவடிதொழுது
நாணெடுமாலாகவோ நம்பியே – மாநிலத்து 165

பாவையர்கைச்சங்கம் பறிப்பதற்கு நின்சங்கம்
தீவகமோ நேமித்திருமாலே – மேவத் 166

திருக்கடைக்கண் சாத்தாய் திருவாய்மலராய்
யருட்கடலே என்னுமளவின் – மருக்கமலை 167

தலைவி தனது மையலுரைத்தல்

நாதன்சிறிதேநகைகோட்டி வெண்கோட்டு
மாதங்கமீதே மறைதலால் – சீதரன்தனா 168

வையம்புதைக்குமலர்கருதி மாரவேள்
எய்யம்புதைக்குமிலக்கானேன் – செய்யநிறப் 169

பீதகவாடைக்கும் பெரியதிருவரை
பாதகவாடைக்கும் பரிவானேன் – ஆதலால் 170

அந்திக்கமலனணையுங் கொலென்றிருந்தேன்
உந்திக்கமலத்துளமானேன் – கொந்துற்ற 171

கொய்துழாய்மார்பகலம்கூடுங் கொலோவெனவே
கைதுழாய்மண்சுழித்துக் கைசோர்ந்தேன் – எய்தி 172

யயனாலுங்காணவரியான்கரிய
புயனாலுங்காணாமல் பூண்டேன் – வியமாரன் 173

தாதைதிருப்பவளந்தான் வேட்டிளந்தென்றல்
ஊதைதிருப்பவளமொல்கினேன் – மாதுவரை 174

ஆயன்பவனிதொழுதன்றுமுதல் இன்றளவும்
தூயநயனந் துயினீங்கி – யாயொறுக்க 175

பந்துகழன்மறந்து பாவைகிளிதுறந்து
சந்துபனிநீர் தனத்தகற்றி – வெந்துயரால் 176

போதக்கழலணிந்து பூவிழிந்து நீரிழிந்து
காதற்சிறையிருத்தல் கண்டாயே – மாதுளபத் 177

தலைவி தூது செல்ல மேகத்திற்குத் துணிவு கூறல்

தாரானை வேட்கையெல்லாந் தந்தானை மும்மதமும்
வாரானை யன்றழைக்க வந்தானை – காரானை 178

மெய்யானை யன்பருக்குமெய்த்தானைகண்கைகால்
செய்யானை வேலையணைசெய்தானை – வையமெல்லாம் 179

பெற்றானைக்காணப் பெறாதானைக் கன்மழையில்
கற்றானைக்காத்த தொருகல்லானை – யற்றார்க்கு 180

வாய்ந்தானை செம்பவளவாயானை மாமடியப்
பாய்ந்தானை ஆடரவப்பாயானை – பூந்துவரை 181

மாமாலைக் கண்டந்திமாலைவருமுன்னமே
தேமாலைவாங்க நீசெல்லுங்கால் – பூமாயன் 182

முன்னந்தடுத்த முளரித்திருக்கரத்தால்
இன்னந்தடுக்குமென்றெண்ணாதே – நின்னுடைய 183

தீமுழக்கின் மிக்கதெனச் செங்கண்மால் கைச்சங்கின்
வாய்முழக்கங்கேட்டு மயங்காதே – நீமருவும் 184

வானச்சிலையின் வனப்புளதென்றெம்பெருமான்
கூனற்சிலைகண்டுகூசாதே – மேனிலத்து 185

மின்சோதியெல்லாம் விழுங்குமென்று நாந்தகத்தின்
நன்சோதிகண்டு மிகநாணாதே – நின்சோதி 186

மையழகினீலமணியழகிலெம்மான்றன்
மெய்யழகு நன்றென்றுவெள்காதே – துய்யமணி 187

தலைவி தன்செய்தி கூற உபாயமுரைத்தல்

யாரக் கபாட மணிக்கோயில் வாசலெல்லா
சேரக் கடந்து திருமுன்போய் – தூரத்தில் 188

நின்றுவணங்கி நெடிதேத்தி வாய்புதைத்து
சென்று பெருமான்திருச் செவியில் – துன்றுகடல் 189

தையற்கரசே யுன்னார்வேட்டொருபேதை
மையற்கரைசேருமாறறியாள் – மெய்யுருகி 190

கொம்பனையாளோர் விரகங்கொண்டாளதுதன்னை
யெம்பெருமான் கேட்டருளாயேதென்னில் – அம்பரமும் 191

மட்புலனுமுண்டுமிழ்ந்த மாயோனுருவமல்லால்
கட்புலனும் வேறுருவும் காணற்க – புட்புளத்து 192

மூர்த்திபுகழேமுகப்பதல்லான் மற்றொருவர்
கீர்த்திசெவிமடுத்துக் கேளற்க – நீர்த்தரங்கப் 193

பூவெடுத்த வெண்கோட்டுப்புண்ணியனையல்லாதென்
நாவெடுத்துவேறு நவிலற்க – கோவெடுத்து 194

கங்கையுலவும்கழலினாற் கல்லாதென்
செங்கைத்தலைமிசை போய்ச்சேரற்க – பங்கயத்தாள் 195

தாங்குந் திருத்துழாய்தாம மணமல்லாதென்
மூக்கும் பிறிதுமணமோவற்க – மாக்கடல்போல் 196

அஞ்சனவண்ணனடிக்கமலமல்லாதென்
நெஞ்சமுமொன்றை நினையற்க – செஞ்சுணங்கோ 197

டிங்கெழுந்த கொங்கையெழுபிறப்பு மெம்பெருமான்
கொங்கணைந்த தோளல்லால் கூடற்க – மங்கைநல்லீர் 198

என்று வருந்தியிருந்தாளவளுக்குன்
மன்றல்கமழ்தார் வழங்கென்று – நின்றிரந்து 199

மாலைபெற்று வாவென்றல்

பண்டுளவத்தாமரையாள் பற்றுந்திருமார்பின்
வண்டுளவத்தார் வாங்கிவா. 200

ஸ்ரீ அழகிய மணவாளர் அடியிணை வாழ்க
மேகவிடுதூது முற்றிற்று

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வஞ்சுள வல்லி ஸமேத ஸ்ரீ திரு நறையூர் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும் —

January 20, 2023

ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும்

இவ்வுலகத்தினர் அனனவருக்கும் அறிவு செயல் இனவகளுக்கான திறமையை அளிப்பவரர்
இவ்வுலகில் உள்ள யோகிகள் அனனவருக்கும் தலைவர்
எல்லோராலும் அவசியம் அறியப்பட வேண்டிய
உண்னமப் பொருனள அறிந்தவர்-
இவ்வுலகமனனத்தையும் ஆட்டி னவக்கும் சிறந்த நாயகனாக இருப்பவர்-
அத்தகைய எங்கும் நினறந்த மஹா விஷ்ணுனவ உள்ளத்தால் தியானிக்கிறேன்.

பாகம்-1–பர ப்ரஹ்ம ஸ்வரூபம்

1.சச்சினாநந்த ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்துடன் ஒன்றாகி ஐக்யம் அடைவதான பரம பக்தி பரவஸ்யத்தையே
உபநிஷத்துக்கள் சாதனா மார்கத்தின் உச்சக்கட்டமாக விவரிக்கின்றன.
அந்த பர ப்ரஹ்ம தத்துவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது -மேலும் மற்ற ஒன்றுடன் ஒப்பிட்டுக்கூற இயலாது.
அது கால தேச வர்த்தமானத்திற்கு கட்டுப்படாத ஓன்று -எவ்வளவு முயன்றும் வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் விவரிக்க
முடியாத ஓன்று-
அவனைப் ப்பற்றி விவரிக்குங்கால்,அது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லாமல் நேதி நேதி
(இதுவல்ல,இதுவல்ல) என்று இதர வஸ்துக்களுக்கு விலக்காகத்தான்
வர்ணிக்கப் பட்டுள்ளது-
இப்படி “ யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ” என்றபடி
மனத்திற்கும்,வாக்கிற்கும் எட்டாதது பர ப்ரஹ்ம ஸ்வரூபம்.

2.இந்த பஞ்ச பூதங்களாலான சரீரமும் ஜகத்தும் அழிவுள்ளனவ.
நான்,எனது என்ற எண்ணத்தால்-அனவகளுடன் ஓன்றுபடும் நிலைகளும், தோற்றங்களும், எண்ணங்களும்,
அவ்வாறே அனவகளுக்கெல்லாம் ஆதாரமாக,மாற்றம் இல்லாத சாக்ஷியாக ஸ்வயம் ப்ரகாசமாக விளங்குவதே
தன்னுனடய உண்னமயான ஸ்வரூபம் என்ற த்ருடமான முடிவுடன் அப்யாச அதிசயத்தினால், ஜீவன், ஸதா அவ்விதமான நினனவுடன்,
பர ப்ரஹ்மத்தோடு இரண்டறக் கலப்பதையே , மோக்ஷம் என்று சொல்லப்படுகிறது
“நாஹம் தேஹோ ந சான்யோஸ்மி ப்ரஹ்மை வாஹம் ந ஸோகபாக்
ஸச்சதானந்த ரூபோஹம் நித்ய முக்த ஸ்வபாவான்”

3.இப்படி தன்னுனடய ஜீவனானது பர ப்ரஹ்மமே என்ற ஐக்ய பாவமான பேர் உண்மையை அறிவதனால் தான்
அக்ருத்ரிம புருஷார்த்தமான மோக்ஷத்தை அனடயலாம்-
ஸ்வ விமர்ச:புருஷார்த்த :–தன்னுடய உண்னமயான இந்த ஸ்வரூபத்தை அவித்யா (மானயயினால்) மறந்து மயங்கிக் கிடக்கும் மனுஷ்யனானவன்,
அப்படி மறந்து போன ஸ்வரூபத்தை அறியப் பெறுவது தான் ஞானத்தின் முடிவு-
மேற் சொன்ன மாயை ஸத்வ, ரஜோ , தமோ எனும் முக் குணங்களின் வாயிலாக நாம ரூப
குணங்கணளாடு, ஜகத்தாகவும், ஜீவனாகவும், பரிணமிக்கிறது

4.சத்வ குணம் எனப்படுவது மற்ற குணங்களாகிற -ரஜோ ,தமோ குணங்களிலிருந்து-முற்றிலும் விடுபட்டு
சுத்தமானதாக இருக்கிறது.
வேத வ்யாசர் தன்னுனடய பல புராணங்களின் வாயிலாக, பர ப்ரஹ்மமும்,
மானயயும் சேர்ந்து ஸ்ருஷ்டி, ஸ்த்தி ஸம்ஹாரம் என்ற முத் தொழினலச் செய்ய, பல ரூபங்களை
ஏற்றுக் கொண்டு,
பல நாமங்களால் அனழக்கப்பட்டு,குணங்களிலிருந்து வேறுபட்டு,சுத்த சத்வ ஸ்வரூபத்துடன்,
அவதாரம் என்ற தொழிலை ஏற்றுக் கொள்கிறது என்று தெரியப் படுத்தி உள்ளார்,

5.ஸ்ரீமத் பாகவத்தில் ஸ்ரீகிருஷ்ேன், தேவகியின் கர்பத்தில் ஆவிர்பவிக்கும் சமயம்,தேவர்களுடன்,
ப்ரஹ்மா, மஹாவிஷ்ணுவின் அவதார தத்துவத்தையும்  நோக்கத்தையும் கீழ் கண்டவாறு ஸ்துதி செய்கிறார்.
“தாமரைக் கண்ணா ! சுத்த ஸத்வ ஸ்வரூபியான தங்களிடத்தில் சமாதி நினலயில் ஸ்திரமாக னவக்கப்பட்ட மனத்தினால்,
மநோ லயம் அடையப் பெற்ற ஒரு சிலரே , நின் திருவடியாகிற மரக் கலத்தால் ,ஸம்ஸார சாகரத்தை ,பசுங்கன்றின் குளம்படி போல் எளிதில் தாண்டுகிறார்கள் ( ஸ்ரீ மத் பாகவதம்-ஸ்கந்தம் – 10 அத்யா,-2 ஸ்லோ,30)

6.மேலும் இந்த ப்ரஹ்ம ஸ்துதியில் , பகவானுனடய அவதார தத்துவத்தை விளக்குங்கால்,”எல்லா
ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக,ஒளியாகப் ப்ரகாசிப்பவனே
ப்ரகிருதி வசத்தால் மனறக்கப்பட்ட
ஜீவாத்மாக்கள் அந்த ஒளியான ப்ரகாசத்தினாலேயே தங்களுனடய மநோ , வாக், காயங்களால்,
உலக அனுபவத்தை அடைகின்றன என்று அறிவதில்னல.
அந்த மாயையை உன் வசத்திலே னவத்துக் கொண்டு,
மேலும் “ஸத்வம் விஸுத்தம்” (ரஜோ ,தமோ குணங்கள் கலக்காத ) உன் சுத்த சத்வ ரூபத்தோடு,அதர்மத்தை
அழிக்க அவ்வப்போது தோற்றம் அனடகிறீர்.
அந்த அவதார தத்துவத்தையும் நாம,ரூப,குணங்கனளயும் விவரிக்க இயலாது.
அவை , ப்ரத்யக்ஷம், அனுமானம் முதலிய ப்ரமாணங்களால் அறியக் கூடியனவ அல்ல.
ஆயினும் அநந்ய பக்தி யாலும், இடை விடா முயற்சியால் அனடயப் பெற்ற சுத்த மனத்தில் நின்
அருளால், அந்தா நாம ரூப குணங்களை ஜீவர்களுக்கு அனுபவ பூர்வமாய் உணர்த்துகிறீர்கள்.
”இந்த ஸ்துதி யினால் வ்யாச பகவான்,நமக்கு பக்தி மார்கமே ஞானத்தை அளித்து மோக்ஷத்தை அளிக்க வல்லது என்று விளக்குகிறார்.
பக்தி யற்ற ஞானம்,மேல் உலகங்களில் தற்காலிகமாக, சுகத்தை யளித்து திரும்பவும் மறுபிறப்னபயும் அளிக்குமே தவிர
ஸம்ஸார ஸாகர சுழலிலிருந்து விடுவிக்காது என்று அறுதியிட்டு கூறுகிறார்..(ஸ்ரீ மத் பாகவதம் -10-2-35-37)

7.அப்படிப்பட்ட ஸச்சிதானந்தப் பரம் பொருளை விட்டகலாத கிருஷ்ேண பக்தியே ராஸ லீலையில்
கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணனோடு அனுபவித்த பரமானந்தம்,
அதுவே பக்தன் பகவானுடன் அனுபவிக்கும் பரமானந்தம்.
அதுவே முக்தனுடன் சேர்ந்து முமுஷுக்கள் அனுபவிக்கும் ப்ரஹ்மானந்தம்.

8.அப்படிப் பட்ட ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கி திளைத்த மஹான்கள் பலருண்டு.
அவர்களில் பாகவத ஸமுதாயம்,
என்றென்றும் மறக்காமல் ஆராதித்துவரும் ஸ்ரீ ஜயதேகவியும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் முக்கியமானவர்கள்.
அவர்கள் அப் பரம்பொருனள அறிந்து,தான்,தனது என்ற பாவம் ஒழிந்து, அதனுடன் இரண்டறக் கலந்து பரிபூரண ஆனந்தத்தை அனுபவித்தனர்.
“ஏகம் ஸ்வாது ந புஞ்ஜீத ” என்ற கூற்றுப்படி, தான் அனுபவித்த அந்த பரமானந்தத்தை ,மற்ற பாமர மக்களும் அனுபவித்து
மோக்ஷ சாம்ராஜ்யத்தை அனடய வேண்டும் என்ற பரம கருணையால் தங்களுனடய ஆனந்த அனுபவங்கனள,
தங்களின் தெய்வீகப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தி நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாம் இப் பாடல்கனளப் பாடும் போதும்,மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும்,நம்மை மறந்த நினைவில் ,
பரவசமாகி, ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும்,இதற்குத் தக்க ப்ரமாணமாகும் எனபதில் ஐயமே இல்லை ,

9.ஸ்ரீஜயதேவர்”கீதா கோவிந்தம் ”என்ற நூலையும்,ஸ்ரீ நாரா யண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூலையும்,பனடத்து,
தாங்கள் ருசித்த பரமானந்த ரஸத்தை பாமர மக்களும் ருசித்து அனுபவிக்க ,ராக தாளங்களுடன் கூடிய ஜன ரஞ்சகமான பாடல்களாக அருளிச் செய்தார்கள்.

இக்கட்டுரை 3 பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
1ம் பாகத்தில் ப்ரஹ்ம ஸ்வரூப விளக்கமும்,
2ம் பாகத்தில் நூல்களும் அதன் ஆசிரியர்களும்-என்ற தலப்பில் ஸ்ரீ ஜயதேவரின் கீதா கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூல்களின் சிறப்புகளைப் பற்றியும்
3ம் பாகத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் என்ற தலைப்பில் இந் நூல்களின் இடையே உள்ள ஒற்றுமையும், வேற்றுமையும் விவரிக்கப்பட்டுள்ளன.

நாமும் இப் பாடல்களின் உட்பொருள் அறிந்து, அந்த அமிர்த ரஸத்தை முடிந்த வரை பருகி அனுபவிக்க,
முதற் கண் இந் நூல்களின் காவியத் தலைவனான ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹ புரி ஸ்ரீதேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீவேங்கடேசப் பெருமாளையும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.

————————-

பாகம் -2- நூல்களும் அதன் ஆசிரியர்களும்
ஸ்ரீஜயதேவரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீ கீத கோவிந்தமும்
1.கிபி 12வது நூற்றாண்டு ஸ்ரீஜயதேவர், ஒரிஸ்ஸா மாநிலத்தில் பூரி ஷேத்திரத்தின் அருகில் உள்ள
கெண்டுபில்வா என்றகிராமத்தில் போஜதேவர் ராதா தேவி தம்பதியினரின் மைந்தனாக அவதரித்தார்.
ஸ்ரீஜயதேவரும் அவரதுமனனவி பத்மாவதியும் பூரி ஜகன்னாதரின் பரம பக்தர்கள்.
அவர் ஸ்ரீ கீத கோவிந்தம் என்கிற தெய்விக காவ்யத்தைப் படைத்து அதனை பூரி ஜகன்னாதரின் ஸந்நிதியில் தம்பதியினர்
தினந்தோறும் பாடியும்,நடனம் ஆடியும், பக்தி பரவசத்தில் மெய்மறந்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

2. காதல் எனும் சொல் தத்வரீதியில் மிக நுண்ணிய அர்த்தத்தை யுடையதாக இருக்கிறது.
ஸாதாரணமாக பொது வாழ்வில், மனித உறவுகளில், நடைமுனறயில் இது அன்பு என்று அனழக்கப்படுகிறது.
அந்த அன்பின் பரிமாணம் ஓவ்வொரு உறவுகளிலும் வேறுபடுகின்றது.
தாய்-குழந்தை , ஸ்த்ரீ-புருஷன்,நாயகி- நாயகன், கணவன்-மனைவி,பெற்றோர்-குழந்தைகள் என்ற உறவுகளில்,
அன்பின் அளவு வேறுபாட்னட நாம் உணர முடிகிறது.
இந்த அன்பு அல்லது ப்ரேமை , மனித உறவுகளைக் கடந்து, தெய்வத்திடம் காட்டப் படும் போது, அது பக்தி என்று அழைக்கப் படுகிறது.

3.ஸ்ரீ கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ராதையும், மற்ற கோபிகைகளும் கொண்ட காதல்
ஸாதாராணமாக ஸ்த்ரீ-புருஷ வேறுபாட்டினால், இந்த்ரிய வசத்தால் தோன்றும் மானிடக் காதல் அல்ல.
அது தெய்வீகக் காதல்.
இத்தகைய தெய்வீகக் காதலை ராதையும் , மற்ற கோபிகைகளும் பரமாத்மாவிடம் செய்ததும்,
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவர்களின் பேரில் கொண்ட காதலையும்
ஸ்ரீஜயதேவர் தனக்கே உரித்தான கவிநயத்துடன் சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களாக தன் நூலின்
முலம் வெளிப்படுத்தி யுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.
தன்னையே ராதையாகவே கற்பனை செய்து கொண்டு பரமாத்மாவுடன் சேர்ந்து அனுபவித்த
பேர் ஆனந்தத்தை , தன் பாடல்கள் வாயிலாக
வெளிப்படுத்தி யுள்ளார் என்பது பாடல்களின் பாவத்திலிருந்து, நாம், நன்கு உணர முடிகிறது..

4.காவ்யம் என்ற பெயருக்கு ஏற்ப ஸ்ரீ கீத கோவிந்தம் பண்ணிரண்டு ஸர்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இருபத்து நான்கு அஷ்டபதிகள் கொண்ட இக் காவ்யத்தில் ஒவ்வொரு அஷ்டபதியிலும் நடனத்திற்கு ஏற்றபடி எட்டெட்டு பதங்கள் உள்ளன.
இதற்கு விதி விலக்காக முதல் அஷ்டபதியிலும் மற்றும் சில அஷ்டபதிகளிலும் எட்டுக்கு மேற்பட்ட பதங்கள் உள்ளன.
இந்த அஷ்டபதிகளில் ஒவ்வொன்றிலும் கூறப்படும் கருத்துக்களுக்கு தொடர்பு உள்ளபடி 90 ஸ்லோகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

5.முன்னுரை ஸ்லோகங்களுக்குப் பின்னர் முதல் அஷ்டபதி விஷ்ணுவின் பத்து அவதாரங்கனளயும் விவரிக்கிறது.
பின்னர் வஸந்த கால வர்ணனையும் கோபியருடன் கண்ணன் மகிழ்ந்து குலாவுவதை
ராதையிடம் அவள் தோழி வர்ணிப்பதையும் கூறப்பட்டுள்ளது.
ராதையின் பிடிவாதம் கனலந்த பின், இன்னமும் கோபப் பட்டாலும்,மீண்டும் மீண்டும் கண்ணனை நினனந்து மனம் வருந்துகிறாள்.
ராதையின் விரஹ தாபத்தை கவி மிகவும் அழகாக விவரித்துள்ள பாங்கு மிகவும் போற்றி பாராட்டப்படுகிறது,

6.கண்ணனும்,தான் ராதைக்கு மனத் துயர் அளித்ததை எண்ணி மனம் வருந்துகிறான்.
ராதையின் தோழிஅவர்களிடையே தூது சென்று அவர்களிடையே ஏற்பட்ட பிணக்கு நீங்க வழி செய்கிறாள்.
மீண்டும் ராதையும் கண்ணனும் முன் போலவே ஆனந்த மயமான கேளிக்கைகளில் ஈடுபடுவதை ,
கவி வர்ணனை செய்து இந்தக் காவ்யத்தை நிறைவு செய்துள்ளார்.

7.பதினெட்டு புராணங்களில் ஒன்றான ப்ரஹ்ம வைவர்த்த புராணம் விவரிக்கும் ராதா கிருஷ்ண
சரித்ரத்தின் அடிப்பனடயில் இந்த காவ்யம் அமைக்கப் பட்டுள்ளது.
மேலே எழுந்த வாரியாகப் பார்க்கும்
போது ச்ருங்கார ரஸமே ப்ரதானமாக வுள்ளது போலே தோன்றினாலும்,கூர்ந்து நோக்குங்கால்,
பக்தியின் உன்னத நினலக்கு நம்மை ஈர்த்துச் செல்லும் பக்தி ரஸம் நினறந்துள்ள காவ்யமாகும்.
ஒவ்வொரு அஷ்டபதியின் முடிவிலும் கண்ணனிடம் உள்ள பக்திப் பெருக்கால் பக்தர்கள் மேன்மை அடையட்டும்
என்று வேண்டி முடிக்கிறார்.
பஜனை சம்பிரதாயத்லே கீத கோவிந்தம் பாடாத பத்ததியே இல்லை என்று கூறும்படி அவ்வளவு ப்ரஸித்தம் அடைந்துள்ள காவ்யமாகும்.
இந்தியாவில் வடநாட்டில் இக் காவ்யம்
உருவானாலும் தென் நாட்டில் மிகவும் விரும்பி பரம பக்தி யுடன் பாகவதர்களால் கையாளப்பட்டு வருகிறது .
இக் காவ்யம் ஸமஸ்கிருதத்தில் எழுதப் பட்டிருந்தாலும் அந்த பாஷை தங்களுக்கு பரிச்சியமில்லாவிடினும்
அது அமர காவ்யம் என்று உணர்ந்து அதை ராகத்துடன் கற்றறிந்து
பாகவதர்கள் பாடி பரவசமடைந்து கேடபோரையும் நெகிழ னவக்கிறார்கள்,

8.இதற்கு அடிப்படைக் காரணம் என்ன வென்றால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்ற
மனிதனுடைய ஆத்மாவின் உள்ள கிடக்கையையும்,படிப் படியாக முன்னேறி, அதில் வெற்றி காண்பதையும்,
பரமானந்தத்தை அனுபவிப்பதையும்,  உட்கருத்தாகக் கொண்டு இக் காவ்யம் அமைக்க பட்டதேயாகும்,

9.இக் காவ்யம் ராதா என்பவளை ஜீவாத்மாவாகவும்,ஸ்ரீகிருஷ்ணனை பரமாத்மாவாகவும் பாவித்து
அவர்களின் ஐக்யத்னே -ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தை -புகழ்ந்து போற்றி, சிருங்கார ரஸம் ததும்ப எழுதப்பட்டதாகும்.
ஸ்ரீஜயதேர் பூரி ஜகன்நாதரை ராதா கிருஷ்ண ஐக்கியமாகப் பாவித்து இந்த மஹா காவ்யத்தைப் படைத்தருளினார்.

10.ஸ்ரீஜயதேவர் மாபெரும் கவியாக இந்தியா முழுவதும் கருதப்படுகிறார்.
அவருடைய சங்கீத அறிவும் சமஸ்கிருதத்தில் அவருக்கு உள்ள பாண்டித்யமும் அவருடைய அஷ்டபதிகளின் வாயிலாகத் தெள் எனத் தெரிகின்றது.
அவருடைய கவித்துவத்தைப் பாராட்டாத பண்டிதர்களே இல்லை .
சொற்களின் கோர்வை ,மற்றும் பொருள் செறிவைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்,
ஸர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இக் கவி தையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது அதைத் தொடர்ந்து ஜெர்மன்,பிரான்சு மேலும்
சில ஐரோப்ய மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதிலிருந்து கீத கோவிந்தம்
என்ற காவ்யம் சிறந்த இலக்கியமாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.

11.இப்போது நாம் சில முக்கிய ஸ்லோகங்கள்,அஷ்டபதிகள் அதன் பிண்ணனி ஆகியவைகளை அனுபவிக்கலாமே .
ஸ்ரீஜயதேவரின் புகழ்பாடும் தியான ஸ்லோகங்களுக்கு பின்னர், முதல் ஸர்கத்தில்
“மேகைர் மேதுர மம்பரம்“ என்று தொடங்கும் முதல் ஸ்லோகம்
“காரிருள் கவ்வுகிறது–.வானில் மேக மூட்டம் காணப்படுகிறது,குழந்தை கிருஷ்ணன் அச்சப் படுகிறான்,அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்”
இவ்விதம் நந்த கோபன் உத்திரவுப்படி, செல்லும் வழியில், யமுனை நதிக்கரையில் புதர்களின் இடையே
ராதாவும் மாதவனும் புரிந்த கேளிக்கைகள் ஜயமடையட்டும் என்று மங்களா சாஸனம் செய்து கவிதையைத் தொடங்குகிறார்,

12.இவ்விடம் குழந்தை என்று கண்ணன் அழைக்கப் பட்டு மேலும் ராதையோடு கேளிக்கை புரிந்தான்
என்று கூறியதிலிருந்தும் கண்ணனுனடய வயது மிகக் குனறவு என்பது ஊர்ஜிதமாகிறது.
அவன் ராஸ லீலா கேளிக்கை எல்லாம் தன் பத்து வயதிற்குள் முடித்து விட்டான் என்றும் கூறப்படுகிறது.
இதிலிருந்து ராஸலீனல ஒரு தெய்வீகக் கேளிக்கை எனறு சந்தேகமறத் தெரிகிறது.
மேலும் “பய க்ருத் பய நாசன:” என்று பயத்தை உண்டாக்குபவனும்,அப் பயத்தை அழிப்பவனும் அவனே என்றிருக்க
கண்ணன் பயப்படுகிறான் என்ற விவரிப்பு, கண்ணன் குழந்தை ரூபத்தை ஏற்றது மட்டுமல்லாது,
அக் குழந்தைக்குறிய குணங்கனளயும் வெளிப்படுத்தி யுள்ளான் என்பது தெளிவாகிறது,

13.ஸ்ரீ ஜயதேவர் முேல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.இதில் புத்த அவதாரத்தையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்கனளயும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார் என்று கூறுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும்
“கேசவா த்ருத ” -கேசவன் தரித்தான் -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன் முலம்
ஸ்ரீகிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதானுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோஹம்- 5 ல் தெளிவாக வராக அவதாரம் எடுத்து,வேதத்தை மீட்டவனான
ஸ்ரீகிருஷ்ணன் பத்து அவதாரங்கனள எடுத்தான்,அவனுக்கு நமஸ்காரம்.-கிருஷ்ணாய துப்யம் நமஹ- என்று கூறுகிறார்.

14. “ஸ்ரித கமலா குச மண்டலா”என்று தொடங்கும் 2வது அஷ்டபதியில்
“தவ சரணே ப்ரண தாவயமிதி பாவய ஏ குருகுசலம் ப்ரணதேஷூ ஜய ஜய தே வ ஹரே ” என்று-உன்னைச் சரணமடைந்தோம் என்று அறிவாயாக.
சரணமடைந்த எங்களுக்கு நன்னம பயக்கச் செய் -என்று சரணா கதி மஹத்வத்தை -மார்ஜார பக்தி தத்துவத்தை -விளக்குகிறார்.
மேலும் வஸந்த கால மேக வர்ணனை மஹாகவி காளி தாஸரின் மேக தூதத்தை நினனவு கூறுகிறது

15.ஸ்ரீஜயதேவர் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சிதபி”என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,
7வது சரணத்தில் அவர் கண்ணன் காதல் உன்மத்தம் கொண்டு ராதையிடம் பேசுவதாக உள்ள வரிகளில்,
அவர், ஸ்ரீ ஜகன்நாதரிடம் மனம் லயித்து தன்னன மறந்த நிலையில்,”கண்ணன் ராதையிடம்
காதல் உன்மத்தம் கொண்ட என் ஸிரஸ்ஸில் உன் மிருதுவான பாதத்தை வைத்து, அதை குளிரச் செய்”
என்று சொல்வது போலஂ எழுதி விட்டார்.-பின் சுய நினைவுடன் அதைப் படித்த பின் திடுக்கிட்டார்.
”என்ன அபச்சாரம் செய்து விட்டேன் பரமாத்மா கண்ணனின் தலையிலே ராதையின் பாதமா”என்று வருந்தி
அந்த வரிகனள நீக்கி வேறு விதமாக மாற்றி எழுத பல தடவை முயன்றும் முடியாமல் போயிற்று.
எழுது கோலை கீழே வைத்து விட்டு கங்கையில் நீராடச் சென்று விட்டார்.
திரும்பி வந்ததும் எழுதுவதற்காக ஓலையை எடுத்தார் -என்ன ஆச்சர்யம்!! அவர் முதலில் எழுதிய வாறே அந்த
நீக்கிய வரிகள் எழுதப் பட்டு இருந்ததைப் பார்த்து, வியந்து, தன் மனனவியிடம் விசாரிக்கும் போது, அவர்
மனனவி “நீங்கள் தானே சற்று முன் வந்து எழுதி விட்டு, சாப்பிட்டு விட்டு வெளியே சென்றீர்கள்” என்று சொன்னார்.
ஸ்ரீ ஜயதேவரும் பத்மாவதி தேவியும் அப்போது தான் உணர்ந்தார்கள்- பூரி ஸ்ரீ ஜகன்நாதரே
ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து அந்த வரிகனள எழுதினார் என்றும்
பத்மாவதி தேவி கையால் உணவும் அருந்திச் சென்றார் எனறும் அறிந்து ஆனந்த பாஷ்பம் பெருக மெய் மறந்தனர்.

இது ஒன்றே போதுமே “கீத கோவிந்தம் “ஒரு தெய்வீக காவ்யம்” என்பதற்கு.
பகவானால் எழுதப்பட்ட அந்த தெய்வீக வரிகனளப் பார்ப்போம்.
”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம்
தேஹி பத பல்லவமுதாரம் ஜ்வலதி மயி தாருணோ
மதன கத நாருணோ ஹரது தது பாஹித
விகாரம் ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்”
“வஞ்சிக் குறமகள் பாதம் வருடிய மணவாளா” என்று அருண கிரிநாதர் தன்
திருப் புகழில் முருகனைப் போற்றி எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

16.மேலும் இந்த அஷ்டபதி மரணத்திலிருந்து மீட்டு உயிரளிக்கும் ம்ருத சஞ்ஜீவினி மந்திரமாகவும்
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது கீழ்கண்ட சம்பவத்திலிருந்து அறிகின்றோம்
ஒரு சமயம் பத்மாவதி தேவி கஜபதி ராஜா அரண்மனையில் மஹாராணியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் ராணி வினளயாட்டாக பத்மாவதி தேவியிடம் ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீ ஜகன்நாதர் ஆலயத்தில் த்யானத்தில்
இருந்த போது உயிர் நீத்தார் என்று சொல்ல,
அதனைக் கேட்ட பத்மாவதி தேவியார் துக்கம் தாங்காமல் அந்த ஷணமே தானும் உயிர் நீத்தார்.
வினளயாட்டு விபரீதாமானதைப் பார்த்த ராணி மிகவும் வருந்தினாள்.
ராஜாவும் உடனே ஸ்ரீ ஜயதேவரிடம் சென்று நடந்ததைக் கூறி வருந்தி மன்னிப்புக் கேட்டார்.
ஸ்ரீ ஜயதேவர் துளியும் கவலைப் படாது உடனே பத்மாவேி தேவியின் உடலுக்கருகில் சென்று ஸ்ரீ ஜகன்நாதரை மனதால் வேண்டி
அஷ்டபதி – 19ல் உள்ள “ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்” என்ற வரிகனள இசை மீட்டிப் பாடினார்.
உடனே பத்மாவதி தேவியார் தூக்கத்திலிருந்து எழுவது போல உயிர் பெற்றெழுந்து ஸ்ரீஜயதேவருடன் சேர்ந்து
இந்த அஷ்டபதியை இசை மீட்டிப் பாடி ஸ்ரீஜகன்நாதரை ஸ்துதித்தார்கள் என்று சொல்லப் படுகிறது.

17. “ரதி ஸுக ஸாரே ” எனத் தொடங்கும் – 11வது அஷ்டபதியில் விப்ரலம்ப ஸ்ருங்காரத்தை கவி வர்ணிக்கிறார்,
கிருஷ்ணன் யமுனா நதிக் கனரயில் ராதையின் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறான்.
5வது சரணத்தில் கிருஷ்ண ராதையின் ஆனந்த ஆலிங்கனத்தை , கார் மேகத்தின் இடையே தோன்றும் மின்னலாகவும்,
கரு மேகங்களின் இடையே பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களாகவும் வர்ணித்துள்ள அழகு,கவியின் மஹா கவித்துவத்தைப் பறை சாற்றுகிறது.

18.”பச்யதி திஸி திஸி” எனத் தொடங்கும் 12வதுஅஷ்டபேியில் தன்னிடத்தே விட்டு துளியும் அகலாது, மனம் கண்ணனையே நினனத்து,
அவன் பிரிவாற்றா மையை சஹிக்க இயலாது, அவன் வரவை எதிர் நோக்கி விரஹ தாபத்தினால் வேதனை யுறும், ராதையைக் கண்ணுற்று,
தோழி, ராதையின் நிலமையைக் கண்ணனிடம் கூறுவதை விளக்கியுள்ள அழகே தனி.

19.கீத கோவிந்தத்தின் பெருமையை விளக்க மேலும் ஒரு ருசிகரமான நிகழ்ச்சி-
ஒரு இலந்தைப்பழம் விற்கும் ஒரு வயதான மூதாட்டி காட்டிற்குள் சசன்று முட்கள் அடர்ந்த மரங்களிலிருந்து
இலந்தைப் பழம் திரட்டச் சென்ற போது ,
பக்திப் பரவசத்துடன் தன் இனிமையான குரலில் கீத கோவிந்தப் பாடல்கனளப் பாடினாள்.
அந்த இசையில் மயங்கித் தன் ஆலயம் விட்டு, ஸ்ரீஜகன்நாத கிருஷ்ணர் அக் கிழவியைப் பின் தொடர்ந்தார்.
அங்குள்ள முட்கள் அவருனடய ஆடைகளைத் துண்டு துண்டாகக் கிழித்தது.
மறுநாள் அர்சகர்கள் பூட்டிக்கிடந்த கோயிலுக்குள் சென்று பார்க்கையில் ஸ்ரீஜகன்நாதரின் ஆடைகள்
முட்களால் கிழிக்கப் பட்டிருந்ததைக் கண்டு, என்ன காரணம் என்று அறிய முடியாமல் அதிர்சியுற்றனர்.
அவர்கள் கனவில் ஸ்ரீஜகன்நாதர் தோன்றி நடந்த நிகழ்சியைக் கூறினார் என்று கீத கோவிந்த்தத்தின் பெருமையைக் கூறுகின்றனர்

20.தினமும் ஸ்ரீஜகன்நாதரின் ஸன்நிதானத்தில் கீத கோவிந்தப் பாடல்கள் பக்க வாத்யங்களுடன் பாடப்பெற்று
நடன மாதர்களால் நாட்யமும் ஆடப் பட்டு பகவானுக்கு நித்ய ஸேவையாகச் சமர்பிக்கப்படுகிறது.

21 இவருனடய புகழிலும், கீத கோவிந்தத்தின் பிராபல்யத்தைக் கண்டும், பொறாமை கொண்ட மஹாராஜா கஜபதி
தானும் கீத கோவிந்தத்தின் மையக் கருத்தின் அடிப்படையில் பாடல்கனள எழுதி அப் பாடல் களையே , பாடகர்கள் சங்கீதத்துடன்
ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடவேண்டும் என்றும்,-கீத கோவிந்தப் பாடல்களைப் பாடக்கூடாது, என்றும் கட்டளை இட்டான்.
இருப்பினும்,ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடுவதையும்ஆடுவதையும் நிறுத்த வில்னல.
ராஜா மிகவும் கோபம் கொண்டு ஸ்ரீ ஜயதேவரிடம், எந்த வகையில் கீத கோவிந்தம் தன்கவி தையை விட உயர்ந்தது என்று வாக்குவாதம் செய்தார் .
இருவரின் பனடப்புகளில் எது சிறந்தது என்று தீர்மானிக்க இரண்டு கவிதைகளையும் , ஸ்ரீஜகன்நாதரின் திருப் பாதங்களில் னவத்து, கதவைத் தாளிட்டு, கோயிலுக்கு வெளியே சென்று விட்டனர்-சில நேரங்கள் கழித்து மறுபடி கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.என்னஆச்சர்யம்!!
ராஜாவின் கவிதை எழுதப் பட்ட ஓலை கீழே தரையில் தள்ளப்பட்டு கீத கோவிந்தமுள்ள ஓலை மட்டும் ஸ்ரீஜகன்நாதரின் பாதத்தில் காணப் பட்டது.
அதைப் பார்த்த அனைவரும் ஸ்ரீஜகன்நாதாரே கீத கோவிந்தம் தான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கி விட்டார் என்று உணர்ந்து பெரும் உவகை யடை ந்தனர்.
அன்றிலிருந்து கீத கோவிந்தத்தின் பெருமை பன் மடங்காயிற்று.
மக்கள் அனைவரும் அதை தெய்வீக காவ்யம் என்று போற்றிப் புகழலானார்கள்.

22. ஆழ்ந்த கிருஷ்ண பக்தி யுடைய ஸ்ரீஜயதேவரால் விவரிக்கப்பட்ட கீத கோவிந்தத்தின் மூலம்,அறிவாளிகள், இசைக் கலையில் திறமையும்,
விஷ்ணுவின் மேன்மையை இனடவிடாது த்யானம் செய்தலும், வெவ்வேறு காவ்யங்களில் சிறப்பாக விவரிக்கப்பட்ட ஸ்ருங்கார ரஸத்துடன் கூடிய
ஸ்ரீகிருஷ்ணனுடைய ராஸ லீலை தத்வத்தை உணர்ந்து அறியவும், இவை அனைத்தையும்
ஒருங்கு இணைந்து , பெறட்டும் என்று 12வது ஸர்கம் ஸ்லோஹம் 88ல் பல ஸ்ருதியும் கூறி யுள்ளார்.

23.”ஸாத்வீ மாத்வீக” எனத் தொடங்கும் ஸ்லோகம் 90 ல்- “இனிய மது பானமே !நீ இனிமை என்று இனியும் நினனயாதே !
சர்க்கரையே நீ கடினம்! த்ராஷையே உன்னன காண எவர் விரும்புவர்,-அம்ருதமே இனி நீ உயிரற்றது!
பாலே நீ ருசியற்றது! மாம்பழமே (பயனற்றது என்று)ஓலமிடு!
அழகிய பெண்களின் சிவந்த உதடே ஸ்ருங்கார ரஸம் நினறந்த மங்களமான ஜயதேவனின் மிகச் சிறந்த சொற்கள் உள்ளவரை ,
இனிமைக்கு ஸமம் என்று கூற வினழயாதே !.”-என்று கூறி காவ்யத்தை நினறவு செய்கிறார்.

24.கீத கோவிந்த மாகிற அந்த அம்ருத ஸாகரத்தில் மூழ்கித் திளைத்து நம் அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண பக்தி மேலிட்டு,
ஸ்ரீ ஜயதேவர் போல், அந்த பர ப்ரஹ்மத்துடன் இரண்டற கலந்து ப்ரஹ்மானந்த மாகிற மோக்ஷப் ப்ராப்தி கிட்ட,
ஸ்ரீ ஜயதேவரின் திவ்ய பாத சரணங்கனளப் பற்றுவோமாக.

“ஸ்ரீகோபால விலாஸி நீவலய ஸத் ரத்நாதி முக்தாக் க்ருதி ஸ்ரீராதா பதி பாத பத்ம ஜநா நந்தாப்தி
மக்நோ (அ) நிஸம் லோகே ஸத் கவி ராஜ ராஜ இதி ய: க்யாதோ தயாம் போநிதி : தம் வந்தே
ஜயதேவ ஸத் குரு வரம் பத்மாவதீ வல்லபம்”

கோபியர்களின் வனளகளிலுள்ள சிறந்த முத்து முதலான ரத்னங்களின் வடிவம் கொண்ட ராதையின்
மணவாளனின் பாதத் தாமரையைத் தொழுது எப்போதும் ஆனந்தக் கடலில் மூழ்கிய வரும், உலகிலேயே
சிறந்த கவியரசர் எனப் பெற்றவரும்,கருணைக் கடலும், பத்மாவதியின் பதியும்,உன்னதமான குருவுமான
ஸ்ரீ ஜயதேவரை வணங்குகிறேன்.

—————

ஸ்ரீ நாராயண தீர்த்தரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும்–

1.ஸ்ரீநாராயண தீர்த்தர் கிபி 17ம் நூற்றாண்டில் ஆந்திர ப்ரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில்
விளத்தூர் என்ற கிராமத்தில் அவதரித்த தாகச் சொல்லப் படுகிறது.
பூர்வாஸ்ரமத்தில் அவருடைய பெயர் மாதவன் என்றும் கோவிந்த சாஸ்திரி என்றும் இருந்த தாகச் சொல்லப் படுகிறது.
அவர், தன் இளம் வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டு, பல ஷேத்திரங்களுக்குச் சென்று, பகவத் தரிஸனம் செய்தார் என்றும்
அவர் வேதாத்ரியைச் சேர்ந்த பெண்ணை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் என்றும், கரண பரம்பரை வாயிலாகத் தெரிகிறது.
அவர் இளமையிலேயே வேத சாஸ்த்திரங்கள்,சங்கீத சாஹித்யங்களில் விற்பன்னராக இருந்தார் என்றும் தெரிகிறது.

2. ஒரு சமயம் கிருஷ்ணா நதியின் அக்கரையிலுள்ள தன் மாமனார் வாழ்ந்த வேதாத்திரி கிராமத்தை அடைய நீந்திச் செல்கையில்
நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் அவரை உருட்டிச் சென்று விட்டது.
அவர் உயிருக்குப் பேர் ஆபாயம் ஏற்பட்ட சூழ் நிலையில், அவர் தான் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தைத் துறந்து,
ஸந்நியாச மார்கத்தைத் தழுவுகின்றேன் என்று ப்ரதிஜ்ஜையை எடுத்துக் கொண்டார்.
வெள்ளமும் வடிந்து அக்கரையிலுள்ள மாமனாரின் வீட்டை அடைந்தார் .
அவரைப் பார்த்த அவரின் மனனவி அவரிடம் ஒரு ஸந்யாசியின் காந்தி வீசுவதை உணர்ந்தார்
அவரிடம் விசாரித்த போது நடந்தவற்னற அறிந்தாள்.
பின் தன் மனனவிடம் அனுமதி பெற்று இல்லற வாழ்வைத்
துறந்து காஞ்சீபுரம் சென்று ஸ்ரீசிவராம தீர்த்தர் என்ற மஹானிடம் முறைப்படி ஸந்நியாசம் பெற்றார் என்று சொல்லப் படுகிறது.
கிருஷ்நா நதி வெள்ளம் ஸ்ரீ தீர்த்தரை ஸந்நியாசி ஆக்கியது , ஸ்ரீ கிருஷ்ண மஹா ஸாகரம் அவனர ப்ரஹ்ம ஞானி ஆக்கியது போலும்.
இது ஆதி சங்கரர், முதலை ,தன் காலை ப் பிடித்துக் கொண்டதையே வ்யாஜ்யமாகக் கொண்டு,
ஸந்நியாசம் வாங்கிக் கொண்டதை நினனவு படுத்துகிறது.

3.அதற்கு பிறகு, அவர் தன் குருவின் ஆஜ்ஜைப்படி தீர்த்த யாத்திரை மேற் கொண்டு காசி, ப்ரயாகை ,
மதுரா.பூரி போன்ற ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்,
காசியில் பல வருடங்கள் தங்கி ப்ரஹ்ம உபாசனையில் ஈடுபட்டார்.
பிறகு காவேரிக் கரையிலுள்ள பல ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வரும் போது
அவருக்குத் தீராத வயிற்று வலி வந்து மிகவும் சிரமப்பட்டார்

4.இப்படியாகத் திருவையாறு வந்தடைந்தார் . அவ் வூரின் தெற்கே உள்ள நடுக் காவேரி எனும் கிராமத்தை அனடந்த போது,
அவரின் வயிற்று வலி மிக அதிகமாகி அங்குள்ள வினாயகர் கோயிலில் இரவு படுத்துறங்கினார்.
அவர் கனவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றி “நீ காலையில் விழித்தெழும் போது முதலில் எந்த
மிருகத்தைப் பார்க்கிறாயோ ,அதைத் தொடர்ந்து செல்,உன் வயிற்று வலி நீங்கும்”என்று சொல்லி அருளினார்.

5.அது போலவே மறுநாள் காலையில் கண்விழித்த போது, ஓரு வெள்ளைப் பன்றியைக் கண்ணுற்றார்.
காலையில் கண் விழிக்கும் போது பன்றியைப் பார்ப்பது அப சகுனம் என்று மனத்தில் தோன்றினாலும்
ஸ்ரீகிருஷ்ணனின் ஆக்ஜ்ஜையை சிரமேற் கொண்டு அப் பன்றியைப் பின் பற்றிச் சென்றார்,
சுமார் 4 கி.மீ தொலைவு வரை அதனைத் தொடர்ந்து சென்றபின் மிகவும் களைப்புற்றார்.

6.அத் தருணம் ,அப் பன்றி ,அருகாமையில் உள்ள ஒரு கோயிலினுள் சென்று மனறந்தது.
அச் சமயம் ஆகாச வாணியின் குரலைக் கேட்கலுற்றார்.
”என்னைத் தேடாதே .உன்னன இங்கு வர வழைக்கவே நான் இவ்வாறு செய்தேன்”எனற குரலொலி கேட்டது.
அதைக் கேட்ட அவர் மெய் சிலிர்த்து ,ஆனந்த பரவசம் அனடந்தார்.
அந்த ஷணமே அவருனடய தீராத வயிற்று வலியும் மனறந்தது,
பூபதி ராஜ புரம் என்ற பெயர் பெற்ற அக் கிராமம், அன்று முதல் வராஹ புரி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.
வராஹ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் பன்றி என்று பொருள்,

7.ஸ்ரீ தீர்த்தர் அந்த இடத்தின் மஹிமையை உணர்ந்து கிராம ஜனங்களின் உதவியுடன் அந்த பூமியை அகழ்ந்து பார்த்ததில்
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தேவியை அணைத்தவாறு உள்ள ஸ்வயம்பு ஸிலா மூர்த்தியைக் கண்டெடுத்து அந்த இடத்தில்
ஒரு கோயிலை , பக்தர்களின் சஹாயத்துடன் நிர்மாணித்து, பகவானைப் ப்ரதிஷ்டை செய்து, பூஜா வழிபாடுகள் தினமும் நடக்க ஏற்பாடுகள் செய்தார்,

8.அவர் தம் வாழ் நாள் முழுவதும் அந்த புண்ணிய வராஹ ஷேத்ரத்திலேயே தங்கி உலகப் புகழ் பெற்ற
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பக்தி சுனவ சொட்டும் பாடல்கள் நிரம்பிய காவ்யத்தை அருளிச் செய்தார்.
அவர் ஸங்கீதத்திலும்,நடன சாஸ்த்திரத்திலும் வல்லுநராக இருந்ததால் தன் இஷ்ட தேவதையான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ளத்தின் ஒருமைப் பாட்டை வெளிப்படுத்து வதற்காக ஸங்கீதத்தையும் நாட்யத்தையும் தன் பாடல்களில் சேர்த்துள்ளார்.
இந்த காவ்யத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
ஸ்ரீகிருஷ்ண ஸன்நிதியில் அவர் எழுதிய அத்தனைப் பாடல்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீருக்மிணி தேவியுடன் நடமாடி தன் அங்கீகாரத்தை வழங்கினார் என்றும்
அவர்களின் சலங்னக ஒலியை மட்டும் ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார் என்றும் சொல்லப் படுகிறது.
இங்கு, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீநாராயண பட்டத் திரியின் ஸ்ரீநாராயணீயம் முழுவதற்கும் அங்கீகாரம் வழங்கியதை நினனவு கூறுவோம்.

9.வடமொழியில் தரங்கிணி என்ற சொல், அனலகளுடன் கூடிய ஆற்னற குறிப்பதாகும்.
ஸ்ரீகிருஷ்ணனுனடய லீலைகள் ஆகிற அனலகளை 12 தரங்க பிரிவுகளுடன் கொண்டுள்ளதால்
இந்நூலுக்கு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நூலில் 303 -ஸ்லோகங்கள் 153-கீதங்கள் 31 -ஸூர்ணிகைகள் அடங்கியுள்ளன.

10.ஸ்ரீநாராயண தீர்த்தர் கடினமான சொற்களைத் தவிர்த்து லலிதமான சொற்களாலேயே தன்
கத்யங்களையும், பத்யங்களையும் சுலபமாக புரிந்து கொள்ளும் வனகயில் அனமத்துள்ளார்.
ஸ்லோகங்கனளயும் ஸூர்ணிகைகளையும் கீதங்களிடையே சந்தர்பத்துக்கேற்ப அழகுபட பொருத்தி யுள்ளார்.
ஸ்லோகங்கள் 17அழகிய பல விருத்தங்களிலும்,கீதங்கள் 34 மனம் கவரும் ராகங்களிலும்,
கேட்போரை நடனம் ஆட வைக்கும் 10 தாளங்களிலும் அனமக்கப் பட்டுள்ளன.

11.இந்த நூலில் ஸ்ரீமத் பாகவதம் தஸம ஸ்கந்தம் 1 முதல் 58 வரையுள்ள அத்யாயங்களில் கூறப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரம்,பால லீலைகள்,
கன்றுகளை மேய்த்தல் ,கோபீ வஸ்த்ராபஹரணம்,கோவர்த்தன கிரி உத்தாரணம்,ராஸக் கிரீடை , கம்ஸன் முதலிய துஷ்டர்களை அழித்தல்,
கடலின் நடுவே துவாரகையை நிர்மாணித்து அதனுள் ப்ரவேசித்தல் ஸ்ரீ பலராம விவாஹம்,ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தை வர்ணிப்பதோடு அஷ்ட மஹிஷிகளுடன் விவாஹமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12.ஒவ்வொரு தரங்கத்திலும் இன்ன இன்ன லீலைகள் அபிநயிக்கப் பட்டுள்ளன,
இந்த இந்த பாத்திரங்கள் வருகின்றனர் என்று கூறி, ஸ்லோகம்,கீதம்,ஸூர்ணிகை – இவைகளால் அந்த அந்த லீலைகளை விளக்கி யுள்ளார்,
கிருஷ்ண லீலைகனள அபிநயம் செய்தல் என்ற முனறயைத் தழுவியே இந்த நூலானது படைக்கப் பட்டுள்ளது.
ஹரி கதா கால ஷேபம் செய்யும் பாகவதர்கள் கதையின் ஆரம்பத்தில்,
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் தொடக்கத்தில் உள்ள “ஹிம கிரி தனய” பத்யத்தைப் பாடுகிறார்கள்
என்பது இதன் தனிப் பெருமையை விளக்குகிறது.

13.ஸ்ரீநாராயண தீர்த்தர், வேதார்த்தங்களில் விசாரம் செய்து நிர்ணயித்தவாறு,
ஜாதி ,குணம்,கிரியை , இவைகளற்றதும்,ஆனந்தம், பிரகாசம்,சத்து (எப்போதும்,எங்கும்,எல்லாமுமாக இருப்பது) ஆகிய லக்ஷணங்களைக் கொண்ட
பரம்பொருனள எப்போதும் உள்ளத்தில் இருத்தி ஆராதித்தவர் ஆயினும் அத்தகைய நிர்குணமான பரம்பொருனள அடைவதற்கு அவன்
ராம,கிருஷ்ண வடிவங்கனள உபாஸிக்க வேண்டும்.
இந்த ச குண வழிபாட்டை நாளடைவில் தனக்கு தானே நிர் குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீ சுகப்ப்ரஹ்மம் நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயில் தீ விரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவேத்தை – ஸ்ரீ கிருஷ்ண லீலைகனள -உபதேஸித்தார்,
ஒவ்வொரு லீலையிலும் தன் உள்ளத்திலுள்ள பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப் பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே
பரம் பொருளின் ச குண வடிவங்கனளத் துதித்து தன் பாடல்கள் மூலம் வழிபட்டுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச் சிறப்பு.

14–முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின்” என்ற கீதத்தில்,கணபதியையும்,
”துர்கே துர்கதி ஹாரிணீ ” என்ற ஸ்லோகத்திலும் “ஜயஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவினயயும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தானோது மதுஸூதன ஸதா ” என்ற கீதத்தில் கங்காதரன்,தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் ேரங்கங்களில் நர ஸிம்ஹனரயும்,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வ ஞான க்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல், மஹா விஷ்ணுனவயும்,
3ம் கீதத்தில், வராஹ புரி வேங்கடேசப் பெருமானளயும் துதித்துள்ளார்.

15.ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலைகனள வர்ணிக்கும் போது ஸ்ரீ ஜயதேவனரப் பின்பற்றாமல்,
ஸ்ரீவேத வ்யாஸர், ஸ்ரீமத் பாகவேத்தில் ஸ்ரீகிருஷ்ண லீலைகனள வர்ணித்த முறையையே பின் பற்றி யிருக்கிறார்.
முதலில் ஸ்ரீகிருஷ்ண அவதார கட்டத்தில்”தம் அத்புதம் பாலகம் அம்புஷேணம் ”(ஸ்ரீ மத் பாகவதம் -10-3-9)கருத்தை
”கல்யாணம் விதநோது” என்று தொடங்கும் முதல் தரங்கம் ஸ்லோஹம் -.27 ல் “சங்கம் சக்ரம்,கதை ,தாமரைப்பூ கதை ,வில்,
பல இரத்தினங்கள் பதித்த கிரீடம்,மகர குண்டலம்,மஞ்சள் பட்டு, கழுத்தில் கௌஸ்துப மணி ,இவற்றுடன் கூடியவரும்,
யாதவ குலத்தின் தலைவனான வஸுதேவருடையவும், தேவகியினுடையவும், குழந்தையாகத் தோன்றியவருமான கிருஷ்ணன்
எல்லாவிதமான மங்களங்களையும் அளிக்கட்டும்” என்று கூறுகிறார்.
இதில் கிருஷ்ணனுடைய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போதே கல்யாணம் என்று மங்களகரமாக ஆரம்பிக்கிறார்,
நாராயண பட்டத்திரி நாராயணீ யத்தில் கிருஷ்ணனுனடய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போது “ஆனந்த ரூப பகவன்” (தஸகம் 38,)என்று ஆரம்பிப்பதை நினைவு கூறுவோம்.
மேலும் நாராயணீ யம் ஆரம்பிக்கும் போதும் “ஸாந்த்ரானந்த ” என்றும்
ஆனந்த ஸ்வரூபியான பரப்ரஹ்மத்தை வர்ணிப்பதும் குறிப்பிடத்தக்கது.

16.ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் ஸூதபா என்ற ப்ரஜாபதி , ப்ருச்னி என்ற மனைவியுடன் நல்ல
பிள்ளையை அனடய 12000 தேவ ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார்,
விஷ்ணு அத் தவத்தின் பலனை யளிக்க அவர்கள் முன் தோன்றினார்,
அப்பொழுது அந்த தம்பதிகள் விஷ்ணுவைப் போன்ற புத்திரனையே வரமாக வேண்டினர்.
அதனால் விஷ்ணுவும், ப்ரச்னி கர்பன் என்ற பெயருடன் பிறந்தார்.
அந்த தம்பதிகள், அதிதி -கஸ்யபராகத் தோன்றிய போது, அவர்களுக்கு உபேந்திரன்(வாமனன்)
என்ற குழந்தையாகப் பிறந்தார்.
மூன்றாவது முனறயாக, அந்த தம்பதிகள் தேவகி-வஸூ தேவராகத் தோன்றிய போது அவர்கள் செய்த புண்யத்தினால் விஷ்ணுவே அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண ராக அவேரித்தார். (பாக.ஸ்க.10-அத்யா. 3-ஸ்லோ . 32-45).
மேலே குறிப்பிட்ட விஷயத்தையே “தத் ப்ராக்தனை : கர்மபி: என்ற சொற் தொடரால் குறிப்பிட்டுள்ளார் (முதல் தரங்கம் ஸ்லோ .28)

17.ஸ்ரீ பாகவதத்தில் வியாசர் கிருஷ்ணர்,ராமர்,ந்ருஸிம்ஹ அவதாரங்கனளக் குறிப்பிடும் போது ஸ்ரீமன்
நாராயணன் எல்லை யற்ற கருணையினாலேயே அவதாரங்களை எடுத்தார் என்று வலியுறுத்த
ஒவ்வொரு அவதாரத்தினைக் கூறும் போதும் “அத்புத ” என்ற அடை மொழியைச் சேர்த்து இருக்கிறார்.
இவ்விஷயத்தையே ஸ்ரீ தீர்த்தர் “மங்களாலய மாமவ தேவ என்று தொடங்கும்” முதல் தரங்கம் கீதம்10-ல்
“அதி கருண வித்ருத அத்புத ரூபா” என்ற சொற் தொடரால் விளக்கியுள்ளார்.
இதையே ஸ்ரீ ஜயதேவர் முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றி சொல்லும் போதும்
“கேஶவா த்ருத ” -கேஶவன் தரித்த -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா
என்று எடுத்துக் காட்டுகிறார்.
இவ்வாறே ஸ்ரீ தீர்த்தரும் தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும் சூர்ணிகைகளிலும் கீதத்திலும்
ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு இறப்பு அற்றவன்,
எங்கும் நினறந்திருப்பவன் ,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நிலையான ஆனந்த வடிவு உடையவன்,தன்
அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி, என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப் பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விதிதம்” என்று கூறியுள்ளார் (தரங்கம் -3,கீதம்-34ல்7வது சரணம்).
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய கால் வாய்கள் ஆயிரம் தோன்று கின்றதோ ,
அது போலே மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூர்ண தத்வம்–. மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவேம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)

18.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்குத் தந்தையாகப் போகிறார் என்ற காரணத்தால் வஸூதேவர்
பிறப்பின்போதே மங்கள வாத்யங்களை தேவர்கள் முழக்கினர் என்ற காரணத்தால் வஸூதேவருக்கு
“ஆனகதுந்துபி” என்ற பெயர் ஏற்பட்டது, (பாகவேம் ஸ்க.9-அத்யா. 24-ஸ்லோ . 29&30).
இதையே ஸ்ரீ தீர்த்தர் “அ லௌகிக மிதம் ரூபமாலோக்யானக துந்துபி:” என்று குறிப்பிடுகிறார் (முதலாவது தரங்கம் ஸ்லோ .29).

19.”பங்க்தி ” எனப்படும் சந்தஸ் (விருத்தம்) ஒரடிக்கு ஐந்து எழுத்துள்ளதாகும். அவ்விதம் ஐந்து
பொருட்கள் அடங்கிய கூட்டங்கள் சேர்ந்தே இவ்வுலகம் “பாங்க்தம்” என்று அழைக்கப் படுகிறது.
இவை உலக பாங்க்தம்,தெய்வ பாங்க்தம்,பூத பாங்க்தம்,வாயு பாங்க்தம்,இந்திரிய பாங்க்தம்,தாது பாங்க்தம் என்று ஆறு வகைப்படும்
இவ்வித ஆறு பாங்க்தங்களும் சேர்ந்தே உள்ளிலும், வெளியிலுமுள்ள உலகமாகும்.
இதை , ப்ரஹ்மமாக உபாஸிப்பவன், பரம் பொருளாகவே ஆகின்றான் என்று தைத்திரீய உபநிஷத் சிக்ஷாவல்லி,7ம் அனுவாகத்தில்
”பாங்க்தம் வா இதகும் ஸர்வம், பாங்தேனைவ பாங்க்தக்
ஸ்ப்ருணோதேதி ஓம் இதிப் ப்ரஹ்மா ஓம் இதீ தகும் ஸர்வம்”எனபதின் கருத்தையே
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம் ஸ்லோ .44ல் “பாங்க்த கர்ம க்ரமேண வேத்யம்” எனக் கூறுகிறார்,

20.பகவத் கீதையிலுள்ள (அத்,4ஸ்லோ 8) “பரித்ராணாய ஸாதூனாம்……ஸம்பவாமி யுகே யுகே ”.என்று
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வுலகில் தீயவர்களை யழித்து அதர்மத்தை யகற்றி பக்தர்களை ரக்ஷிக்கவும்,தர்மத்தை தழைக்கச் செய்வதற்கு, நான் இஷ்டப்படி பிறப்பு எடுக்கிறேன் என்ற கூற்றை விளக்க,
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம்,சூர்ணிகை 15ல் “ஸ்வ பத அநுக்ரஹ சிகீர்ஷயா ஸ்வேச்சயா ப்ராப்த கோபால விக்ரஹ:” என்ற சொல் தொடனரப் ப்ரயோகப்படுத்தி யுள்ளார்,

21.2வது தரங்கம்,சூர்ணிகை -17ல், ஸ்ரீ தீர்த்தர்,”ஆருருஷுநிவாரூடயோகி” என்ற சொல் தொடரைப் ப்ரயோகப் படுத்தி யுள்ளார்.
எல்லாம் அறிந்த கண்ணன் உயரத்தில் உள்ள உரிகளில் வைக்கப் பட்டிருக்கும் தயிர்,பால்,வெண்ணைய் முதலியவைகளை எடுப்பதற்கு
வழி தெரியாத கோப குழந்தைகளுக்கு, உபாயங்கனளக் கற்றுக் கொடுத்தான் என்பது பொருள்
.”ஆருருஷுநிவாரூடயோகி”- நிஷ்காம கர்மாக்களினால் சித்த ஸுத்தி அடைந்தவன் ஆரூட யோகி.
அதைப் பெற விரும்புபவன் ”ஆருருக்ஷு யோகி. என்று ஸாஸ்த்திரங்கள் கூறுகின்றன.முன்னவர் பின்னவருக்கு வழி காட்டுபவர்
.”ஆருருணக்ஷார் முனேர் யோகம்” என்று தோடங்கும் பகவத் கீதை அத்.6,ஸ்லோ.3 லும் இக் கருத்தே கூறப்படுகிறது.

22. வராஹ புரி புண்ய ஷேத்ரத்தில் ஸ்ரீநாராயண தீர்த்தரால் ஆரம்பிக்கப் பட்டதும்,பக்தர்களால்
இன்று வரை பக்தி ஸ்ரத்தை யுடன் நடத்தப் பட்டு வரும் உரியடி தத்வத்தை விளக்குவது இந்த இடத்தில்
பொருத்தமாக இருக்கும் என தோன்றுகிறது,
மனிதன் தன்னுள்ளேயே இருக்கும் ப்ரஹ்மத்தை
உணர்ந்து,தானும் அதுவாகவே ஆகி பேர் ஆனந்தத்தை அனுபவிக்க அக்ஞானம்(அறியாமை ) தடையாக உள்ளது.
வாழ்கையில் பல்வேறு இடர்கள் மனிதனை அவன் லக்ஷியத்தை அடைய முடியாமல் குறுக்கிடுகின்றன
இவற்னற ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவனம் .அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம்,ஸக்யம்,ஆத்ம நிவேதனம் ஆகிற ஒன்பது வகைப்பட்ட
பக்தியில் ஈடுபடு வதால் ஏற்படும் ஞானத்தால், இடர்களைத் தகர்த்து, பகவத் அநு க்ரஹத்தாலும், ஞானிகளின் துணை கொண்டும்,
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து, ப்ரஹ்மானந்தம் அடைவதையே விளக்குவது போல், உரியடி உத்ஸவம் அமைந்துள்ளது

23.மூங்கில் பெட்டியால் பின்னப்பட்ட உரியடிப் பெட்டியும் வழுக்கு மரத்தில் பூசப்பட்டிருக்கும் பசை முதலியவையும் அக்ஞானமாகும்,
பலவித மான இடையூறுகளுக்கிடையில் தடிகளால் உரியை அடித்தும்,கைளால் பிடித்து பெட்டியை உடைப்பதும்,
வழுக்கு மரத்தின் மீது பூசப்பட்ட அக்ஞானமாகிற பாச பந்தங்கனளக் கனளந்தும் படிப்படியாக மேலே ஏறுவதும்,
ஸ்ரவணம் முதலிய ஸாதனங்களால் உண்டாகிற அறிவாகும்.
வழுக்கு மரத்தின் அடியில் ஸ்திரமாக நின்று மேலே ஏறிச் செல்பவர்களுக்கு உதவுபவர்கள் ஆரூடயோகி க்கும், மேலே ஏறிச் செல்பவர்கள் ஆருருக்ஷுவிற்கும் ஸமமானவர்களே ,
இத் தத்துவமே உரியடித் தத்துவம்.– உரியிலும்,வழுக்கு மரத்தின் மேலும் தொங்கும் ப்ரஸாதத்தை பகவத் ப்ரஸாதமாக ஏற்று,பக்தர்கள் பகிர்ந்து கொள்வது, பகவத் அனுக்ரஹத்தினாலேயே , பர ப்ரஹ்ம ஞானம் கிட்டி பூர்ண ஆனந்தம் கிட்டும் என்பதைக் காட்டுகிறது.

24. 2வது தரங்கம்,சூர்ணிகை -17ல் ஸ்ரீ தீர்த்தர் “முக்ய ப்ராண இவ வாகாதீன்” என்ற சொல் தொடரை உபயோகித்து
ஸ்ரீகிருஷ்ணனே ப்ராணனுக்கு இணையாகவும் கோபர்கனள வாக்கு முதலிய புலன்களுக்கு இணையாகவும் உருவகப்படுத்தி ,
வாக்கு முதலிய புலன்கனளக் காட்டிலும் ப்ராணனே சிறந்தது என்று விளக்குகிறார்.
ப்ராணனே ஐம்புலன்களிலும் சிறந்தது என்ற விஷயமானது, ப்ரச்ந உபநிஷத் 2வது ப்ரசனம் 4வது வாக்யத்திலும்,
சாந்தோக்ய உபநிஷத்5வது அத்யாயம் 1வது கண்டத்திலும், ப்ரஹதாரண்ய உபநிஷத் 6வது அத்யாயம் 1வது கண்டத்திலும் கூறப்படுள்ளது.
வேத ஸாஸ்த்திரங்களையும்,வேதாந்தங்களையும் நன்கு கற்றறிந்த ஸ்ரீ தீர்த்தர்,
பாமர மக்களுக்கும் எளிதாக புரியக் கூடிய வனகயில் ஸகல வேதாந்த ஸாரங்களைத் தன் நூலில் இடை இடையே நன் மணிகளாகக் கோர்த்திருக்கிறார்.

25.ஸ்ரீ தீர்த்தர்,”பாஹி பாஹி ஜகன் மோஹன கிருஷ்ணா பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” (4வது தரங்கம்- கீதம்
35) என்று குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் அழகு உலகம் அனைத்தையும் மயங்கவைக்கும் அழகு என்றும்
பரமானந்த வடிவுடையவன் என்றும் கூறுகிறார்.
சாதாரணமாக ஒரு குழந்தையின் கள்ளம் கபடற்ற சிரிப்பைப் பார்த்தாலே நமக்கு இனம் தெரியாத ஆனந்தம் கிட்டுகிறது.
ஏன் என்றால் அது பூர்வ ஸத்வ குணத்துடன் இருப்பதாலேயே . அதற்கு அன்ன ப்ராசனம் ஆகும் வரை இந்த பூர்ண ஸத்வ குணம் அதனிடம் நீடிக்கிறது.
அதற்குப் பின் அதற்கு ரஜோ தமோ , குணங்களின் கலப்பு வந்து விடுகிறது.ஸத்வ குண அளவும் குறைய ஆரம்பிக்கிறது.
அப்படியிருக்க ஸுத்த சத்வ குணமே உருவெடுத்து இருக்கும் குழந்தை ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் போது பரமானந்தமாக இல்லாமல் எப்படி இருக்க முடியும்.-அதையே “பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்,

26.மேலும் (4வது தரங்கம்- கீதம் 35) 3வது சரணத்தில் ஸுலபமாக மாந்தர்களால் அறிய முடியாத ,
உள்ளடங்கிய மஹிமை வாய்ந்தவர் எனபதை “கூடமஹிம ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்.
நந்த கோகுலத்தில், குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன் செய்யாத சாஹசங்கள் இல்லை .
பூதனை வதம், சகடாஸுர வதம்,காளிங்க நர்தனம், கோவர்தனகிரி உத்தாரணம்,போன்ற வளர்ந்த மனிதனாலேயே முடியாத பல
அதிசயிக்கும் சாஹசங்களைச் செய்தாலும்,கோபர்கள் அவனுடைய பராக்கிரமத்தை அறியவில்னல,
ஒரு குளத்தில் இருக்கும் மீன்கள் தண்ணீரில் தெரியும் பூர்ண சந்திர ப்ரதி பிம்பத்தைக் கண்டு அதன் பெருமையை அறியாமல்,
அந்த சந்திரனையும் தன்னைப் போல் ஒரு மீன் என்று எண்ணுமாம்.
அது போல கோபர்களும் ஸ்ரீ கிருஷ்ணனை தங்கனளப் போல ஒரு சாதாரண இனடயன் என்றே எண்ணினார்கள்,என்று இதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
இந்தப் பாடலை ஸ்ரீ ஜேஸு தாஸ் அவர்கள், தன்னுனடய இனிமையான குரலில்,அர்த்த பாவத்துடன் பாடும் போது மயங்காதவர்உண்டோ .கல்லும் கனரந்து உருகுமே .

27.அத்வைத வேதாந்த ஸித்தாந்தப்படி ஆத்ம ஸ்வரூபம் ஒன்றே ப்ரகாசமாக இருக்கும் பொருள்.
அந்த ஆத்ம ஸ்வரூபத்தை தவிர்த்த அனைத்துப் ப்ரபஞ்சமே , ப்ரகாசம் அற்ற ஜடப் பொருளாகும்.
எனவே ,ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஆவரணம்(மனறப்பு) தேவை யில்னல.
மாயையின் வசத்தில் கட்டுப்பட்டு கோபிகள் இருந்தாலும், அவர்கள் தன்னிடம் கொண்ட அத்யந்த ப்ரேமையால் கவரப்பட்டு அவர்களை
அனுக்ரஹிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணன் நடத்திய லீலையே கோபிகா வஸ்த்ராபஹரணம்.
வஸ்திரம், ஸ்தூல தேஹத்தை மறைக்கும் ஆவரணம்(திரை ).மாயை , சூக்ஷ்ம தேகத்தையும் காரண தேகத்தையும் மறைக்கும் ஆவரணம்.
அபஹரணம் என்றால் பரிப்பது,களையும்படி செய்வது என்று பொருள்.
காத்யாயணி வ்ரதம் மேற்கொண்ட கோபிகை களின் ஸ்தூல தேஹ ஆவரணம் இந்த லீலையால் நீங்குகிறது.
உண்மையான ஆத்ம ஸ்வரூபம் ஸ்ரீகிருஷ்ணனிடமும் கோபிகைகளிடமும் ஒன்றே .
கோபிகை களுக்கு ஸ்வயம் ப்ரகாச ஸ்வரூபமான தன்னிடம், மனம்,சித்தம்(சூக்ஷ்ம தேஹம்),
மாயை யாகிற ஆவரணம் களையப்பட்டு தன்னிடம் பூர்ணமாக லயிக்கப் பெற வேண்டும் என்று
வஸ்த்ராபஹரணம் என்ற வ்யாஜத்தால் உபதேசித்த போது கோபிகைகளுக்கு மூல அக்ஞான ஆவரணம் போக்கடிக்கப் பட்டது.
மேலும், “என்னிடம் உள்ளத்தை நினலயாக இருக்கச் செய்தவர்களுக்கு மறுபடி உடலை யடைந்து சம்ஸாரத்தில் உழலுவது என்பது கிடையாது
தீயில் நன்கு வறுக்கப்பட்ட பயிறு,உளுந்து,கோதுமை போன்ற வித்துக்கள் ஒரு பொழுதும் வயலில் விதைக்கப் பெற்று முனளத்த தில்லை .
ஆகவே , நீங்கள் பிறவி யற்றவர்கள் ஆனீர்கள்”-என்று கோபிகைகளிடம் ஸ்ரீகிருஷ்ணன் கூறினார்,(பாகவதம் ஸ்க.10அத்யா 22-ஸ்லோ . 26).
வஸ்த்ராபஹரண தத்துவத்தை , ஸ்ரீதீர்த்தர் 5வது தரங்கத்தில் “ஆவரணம் மம நஹி தே தாதும் பாவய கோப வதூ ஜன ப்ருந்த ” என்ற கீதம் 45ல்
கிருஷ்ண கோபிகள் ஸம்பாஷணையின் வாயிலாகத் தெளிவு படக் கூறியுள்ளார்.

ஸ்ரீ ரமணரின் அக்ஷர மணி மாலாவில் கூறப்பட்ட வரிகளை இங்கு நினனவு கூர்வோம்
“மானங்கொண்டு உறுபவர் மானத்தை யழித்து அபிமான இல்லாது ஒளிர் அருணா சலா”-(அருணாசலர்
ஒளி வடிவானவர்-அக்னி தத்வம் )

28.மேலும்,”கோபிகைகள் நான்கு பிரிவாக உள்ளனர்,
உபநிஷத்துக்கள்,தண்டகாவனத்திலுள்ள ரிஷிகள்,நித்ய ஸித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள், தேவ ஸ்த்ரீகள் ஆகியவர்களே
கோகுலத்தில் கோப ஸ்த்ரீகளாக இருப்பவர்கள். மானிடப் பிறவி உள்ளவர்கள் ஒருவரும் இல்லை “எனற ப்ரஹ்ம வைவர்த்த புராண வசனக் கருத்தை
ஸ்ரீதீர்த்தரும் 5வது தரங்கத்தில் ஸ்லோ .135 ல் “ச்ருதி சிரோ வாக் கோபிகா வல்லப:”என்று கோபிகைகள் வடிவம் எடுத்த
உபநிஷத் தேவதைகளுக்கு மிகப்ரியமானவராக விளங்குபவர் என்று ஸ்ரீகிருஷ்ணரை வரணித்துள்ளார் –

29.கங்கை , கோதாவரி , யமுனை ,காவேரி,முதலிய நதிகள் கடலில் கலந்தவுடன் பெயரையும், உருவத்தையும் இழந்து
ஒரே கடலின் வடிவத்தை அடைகின்றன,-அவ்வண்ணமே முக்தி பெற்றவர்கள்
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து தம் சுயத்தன்மையை இழக்கிறார்கள்.-என்று முண்டகோபநிஷத்தில் கூறிய கருத்தை
ஸ்ரீதீர்த்தர் 6வது தரங்கத்தில் சூர்ணிகை 24 ல் இங்கு கிருஷ்ண ஸமுத்ரத்தில் கோபிகைகளான நதிகள் கலந்து விி்ட்டன என்று வர்ணிக்கிறார்.

30.கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து எழுந்த ஒலியானது வெளி விஷயங்களில் ஈடுபாடுனடய கோபிகைகளை
கண்ணனிடம் கொண்டு போய்ச் சேரத்தது, என்று 6வது தரங்கம் ஸ்லோ 142,143 ல் ஸ்ரீதீர்த்தர் கூறுகிறார்.,
இக் கருத்து பாகவேத்திலும் (ஸ்க.10அத்யா 29-ஸ்லோ . 3-8). காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவர்கள் அறம்,பொருள், இன்பம் ஆகியவை களிலிருந்து முதலில் விடுபட வேண்டும் என்பது வேதாந்தங்கள் முடிவு.

31.ஸ்ரீதீர்த்தர் “ப்ருந்தாவன மதுனா மன்யே ஸகி ப்ரஹதாரண்யமஹம்” (6வது தரங்கம் கீதம் 52)
கண்ணனுடன் சேர்ந்து இருக்கும் ப்ருந்தாவனத்தை ,
“ப்ரஹதாரண்யகம்” என்ற உபநிஷத்தாகவே கருதுகின்றேன் என்றும்,
பிருந்தாவனம், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை உளமாற நேசிப்பவர்களுனடய, பல காலமாகத் தொடர்ந்து வரும்
அக்ஞானத்தை அடியோடு அழிக்கக் கூடியது என்றும்,
ப்ரஹதாரண்யகம் முமுக்ஷுக்கள் பலருக்கு ஜீவ பரமாத்ம ஐக்ய ஞானத்தை அளிப்பதன் மூலம்
அக்ஞானத்தை அறவே அழிக்க வல்லது என்பது போல் ,இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை களையும்
ஒரு தோழி மற்ற ஓரு தோழியிடம் விளக்குவது போல் ஸ்ரீதீர்த்தர் கூறுவது அவரது சிறந்த வேதாந்த ஞானத்தை பனற சாற்றுகிறது,

32. “நிமிஷமபி யுக ஸஹஸ்ர ஸம தயா நீயம் மயா தின மாஸாயம் -” (6வது தரங்கம் கீதம் 58, 2வது சரணம்) –
கண்ணனைப் பார்க்காத க்ஷணநேரம் ஆயிரம் யுகங்களுக்கு ஸமமாகும் என்று கோபிகள்
கூறுவதாக ஸ்ரீதீர்த்தர் ,அவர்களின் பிரிவாற்றாமையை விளக்கியுள்ளார். ,
பாகவதம் ஸ்க.10அத்யா. 31-ஸ்லோ . 15ல் கோபிகா கீத த்தில் “த்ருடிர் யுகாயதே த்வாம் அபஸ்யதாம்” என்ற வரியை இப்போது நினனவு கூர்வோம்.

33.மேலும் ஸ்ரீதீர்த்தர், ‘பூயோ பூயோ யாசேஞ்ஜலினா”-என்று தொடங்கும் மிக அருமையான கீதம் 57ல்(தரங்கம்6)
அரை நிமிஷம் கூட கிருஷ்ணனைப் பார்க்காதிருக்கும் இந்தா உடல் வெறுக்கத் தக்கதாகும்.என்றும்
“காந்தம் காந்தாரமபி தவ யோகே,……காந்தாரம் க்ருஹமபிது வியோகே கருண
தருணீ மயி தவ பவது” -எனறு கண்ணன் இருக்குமிடமானால் காடும் நாடு போன்று அழகுள்ளதாகும்,
கண்ணன் இல்லையேல் வீடானாலும் அது கஷ்டங்கள் நினறந்த காடாகும் என்று ஸ்வானுபவத்தை
கூறும் அழகு கிருஷ்ண பக்தர்களை மிகவும் கவருகிறது.
மேலும் புன்னாகவராளி ராகத்தில்
அர்த்த பாவத்துடன் உனடயாளூர் அனுபவித்துப் பாடும் போது, அதைக் கேட்போர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

ராஸக்ரீனட
34.7வது தரங்கத்தில்,கோபிகைகள் ஸம்ஸாரத்தில் வெறுப்பு ஏற்பட்டு அதனிடம் இருந்து விடுதலை அடையவே
ஸ்ரீ கிருஷ்ணனிடம் புகலிடம் அனடந்தோம்,.எனக் கூறிய பின் ராஸ க்ரீனட விவரிக்கப் படுகிறது.
ஆயர்பாடியிலுள்ள மங்கையர் அநேக ஆயிரம் பிறவிகளில் செய்த தவத்தால் கோப ஸ்த்ரீ என்ற
இந்தப் பிறவியில் ஸச்சிதானந்த வடிவான ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய தர்ஸனம்
பெற்று பிறவியின் பயனை அனடந்தனர் என்று கூறுகிறார்.(7வது தரங்கம் ஸ்லோ .4) .

35.மேலும் 7வது தரங்கம், கீதம் 1 ல் “அத்வயம் கண்டிதம்” என்ற சரணத்திலிருந்து 20 வது சரணம் வரை
20 சரணங்கள் அடங்கிய கீதத்தால்-ஸாம வேதத்தைச் சார்ந்ததும் 16 பிரிவுகள் கொண்டதுமான
சாந்தோக்ய உபநிஷத்தில், உத்தாலக ருஷியால் தன் புதல்வனும் சீடனுமான, ச்வேதகேது என்ற முனிகுமாரனுக்கு,
உபதேஸிக்கப்பட்ட ஆத்ம தத்வ ஸாரத்தை ,ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ராஸ மண்டலத்தில் உள்ள கோபிகைகளுக்கு
கான ரூபமாக உபதேஸித்துள்ளதாக,ஸ்ரீதீர்த்தர் வர்ணித்துள்ளது அவரின் கவித்வத்தையும் உயர்ந்த ஆத்ம ஞானத்தையும் எடுத்துக்காட்டுகிறது,

36.மிகச்சிறந்த தத்வக்ஞானம் பெற்றவர்களுள் இணையற்றவள் என்று ஒரு கோபியைக் குறிப்பதற்காக
“ஹ்ருதய நிஹிதம் காந்தம் காசித் களிந்த ஸூதா தடே ” என்ற வரியில் காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கடோபநிஷத்தில், “மிகச் சிறந்த அறிவாளி ஆத்ம தத்வத்தைக் கண்டான்” என்று கூறுகையில்
“காசித்” பதம் ப்ரயோகிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்தில் ஒருவனே ஆத்ம ஞானத்திற்காக முயற்சி செய்வான் .முயற்சிப்பவர்களுள் ஆயிரத்தில் ஒருவனே தத்துவத்தை அறிகின்றான் என்று
பகவத்கீதையிலும் “மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு……..கச்சின் மாம் வேத்தி தத்வத “(அத்.7 ஸ்லோ .3)-என்று கூறப்பட்டுள்ளது.
இங்கேயும், ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மா, காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கோபியர்கள் அத்தகைய கினடத்தற்கரிய ஆத்ம தத்வ ஞானத்தை ஸ்ரீகிருஷ்ணனுனடய அருகாமையில் இருந்த
காரணத்தாலேயே கை வரப் பெற்றனர் என்று விளக்கவே ஸ்ரீதீர்த்தர், காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார். (தரங்கம் 7 ஸ்லோ . 12).

37.“சத்யம் ஞானம் அனந்தம்– ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோஸ்நுதே
ஸர்வான் காமான் ஸஹ-“என்று தைத்ரிய உபநிஷத் ஆனந்த வல்லி கூறுகிறது,
ஹ்ருேயத்தில் இருக்கும் உபநிஷத் ஸாரச் சுருக்கமான” “புத்தியால் நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்
என்று உணருபவன் பேர் ஆனந்தத்தை அடைகிறான்-பேர் ஆனந்தத்தில் முழ்கித் திளைத்த அந்த ஜீவன்
முக்தன், நானே அந்த பர ப்ரஹ்மம் என்று பாடுகிறான்” என்று தைத்ரீய உபநிஷத் ப்ருகுவல்லி
கூறுகையில் ‘ஹாவ் ஹாவ் ஹாவ்’ என்று ஆனந்தக்கூத்து ஆடுகிறான் என்றும் கூறுகிறது.
இக் கருத்தையே ஸ்ரீதீர்த்தர், தன்னையே ஒரு கோபிகையாகப் பாவித்து இந்த பரமானந்தத்தைத் தான் அனுபவித்து,
அதையே கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் அனுபவித்தாக எழுதி யுள்ளார்.(தரங்கம் 7 ஸ்லோ . 12).

38.”நிரங்குச த்ருப்தித ”- என்ற சொல்லால் ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மாவும் நானும் ஒன்றே , வேறில்னல–அதாவது
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே , வேறில்னல என்ற ஆத்ம ஞானத்தினால் ஏற்படும் பேர் ஆனந்தம் நிகரற்றது
என்ற மஹா வாக்யங்களின் அர்த்தத்தையே உணர்த்துகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ ?. (தரங்கம் 7 ஸ்லோ . 12).

39.கோபிகைகள் யமுனாநதியில் நீராடும் போது தங்களுக்கு கிருஷ்ணனைப் போலே அழகுள்ள
கணவனை அருள வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தனர்.
கல்யாண சந்தர்பத்தில் ஓதும் வேத மந்திரங்கள் கூறுகின்றன-சோமோ கந்தர்வர்களே ,அக்னியே ,மற்ற தேவர்களே இந்தா விட்டு விலகிச் செல்லுங்கள்.
அவள் பூலோக சம்பிராதாயப்படி தன் கணவனின் மூலம் தாய்மை அனடய வேண்டியுள்ளது.-
இந்த மந்திரங்கள் அவளுக்கு அனுகூலமாக,சாதாரண உணர்ச்சி பூர்வமான அநுபவங்களிலிருந்து விடுவித்து,
அவளைத் தாய்மை எனும் உன்னதமான உயர்ந்த நிலையை அடையச் செய்ய ஹேதுவாக இருக்கிறது.

40. இந்த வேத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் நீராடப் போகு முன் அவர்கள்
மரத்தில் வைத்திருந்த வஸ்திரங்கனள அபகரித்த ஸ்ரீகிருஷ்ணனிடம் அவைகளைத் திருப்பிக்
கொடுக்குமாறு வேண்டிய அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் செய்த உபதேஸமும், ஆகியவை அழகுற சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ராஸ லீலை , கோபிகாகீதம், யுகளகீதம் ஆகியவைகள் தொடர்ச்சியாக விவரிக்கப்பட்டு
அவை மூலம் கோபியர்கள் கண்ணன் பால் கொண்டிருந்த பரம ப்ரேமையையும் ,
அவர்களின் எண்ண ஓட்டங்களையும், அவர்கள் எது பொய் எது உண்னம என்று அறிந்து மனப் பக்குவம்
அடைந்து, பரமாத்மாவுடன் ஐக்யமனடந்து ஆனந்தத்தாய் அடைந்து, சிறந்த பேற்றை அடைவது
ஆகியவை அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன .
ஸ்ரீநாரத பக்தி ஸூத்ரத்தில் (19,55,57,88 ) பரம ப்ரேமையின்
லக்ஷணங்களும்,வெளிப் பாடுகளும் எத்தகையது விளக்கப்பட்டு இருப்பதையே , மேற்கண்ட ஸர்கங்கள்,
ஸ்ரீகிருஷ்ணர் கோபிகைகளுடன் நடத்திய லீலைகளின் வாயிலாக சித்தரிக்கின்றன.

41.சாதாரணமான மனித அனுபவங்களில், விழிப்பு நினலயில், மனத்தில் தோன்றும் பூரண நினறவு பெறாத எண்ணங்கள்
நினனவுகள் உருவெடுத்து,நம் உறக்க நினலயில் கனவுகளாக மாறுகிறது.
இதையே கவிதை நயத்துடன் பார்க்கும் போது நம் கனவுகளே விழிப்பு நினலயில் நினறவு பெற்ற நிகழ்வுகளாக மாறுகிறது.
இதைத்தான் .ஸ்ரீலீலா சுகர் தான் எழுதிய கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் (அங்கநாம் அங்கநாம் என ஆரம்பிக்கும் (2-வது ஆஸ்வாசம் ஸ்லோகம்- 35)
ராஸ லீலையை விவரிக்கும் போது,எப்படி ஒரு கனவு,விழிப்பு நினலயில் உண்மை நிகழ்வாக மாறுவதை கவி நயத்துடன் வர்ணிக்கிறார்.
இந்த நினலயில் நமது வலுப் பெற்ற ஏகாக்ர சிந்தனைகள்
பகவான் பால் இருந்தால் ,அவனருளால்,அவை நிறை வாகும் தன்மையை ராஸ க்ரீடா நிகழ்ச்சி மூலம் விவரிக்கிறார்.
இதில் கிருஷ்ணன் எப்படி தன்னை பல கிருஷ்ணன்களாக ஆக்கிக் கொண்டு கோபியர்களின் இடையே நடனம் புரிந்த நிகழ்ச்சியை அழகாக வர்ணித்துள்ளார்.
மேலும் கோபியர்கள் அனமத்த வட்டத்தின் நடுவிலும் நின்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு இருக்கிறான்.
அவர்களுக்கு மற்ற கோபியர்கள் மனறந்து, ஒவ்வொரு கோபியும் தான் ஒருவளே கண்ணனுடன் தனியாக
ஆடிக் கொண்டிருப்பதாகவே எண்ணி ஆனந்திக்கிறாள், அப்போது கனவும் நினனவும் ஒன்று இணைந்து,
அவர்களுக்கு தான் கனவுலகத்தில் தான் அனுபவித்த தனிப் பட்ட ஆனந்தம், நினனவு நினலயில்,ஒரு உண்மை நிகழ்வாகவே தோன்றுகிறது.
இந்த தன் உணர்வு இல்லாது ,தான்,தனது என்ற தளைகளையும் உதறித் தள்ளிவிட்டு அப்பரமாத்மாவிடம் அனன்ய பக்தி யுடன் சரணா கதி அடைவதையே ஒவ்வொரு பக்தனும்( ஜீவாத்மாவும்) விரும்புகிறான்.
இந்த விவரிக்க இயலாத , உன்னத ப்ரேம பக்தி பெருக்கு, நினைவுலகத்தையும்,கனவாக மாற்ற வல்லது என்பதை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில்
(விக்ரேது காமா எனத் தொடங்கும் ஸ்லோகம் 55-2வது ஆஸ்வாஸம்), லீலா சுகர் மற்ற ஓரு நிகழ்ச்சியால் வர்ணிக்கிறார்
தயிர் விற்கும் ஒரு கோபிகை ப்ருந்தா வனத்தி ல் “த யிர், தயிர்” என்று கூவிக் கொண்டு செல்லும் போது ,கிருஷ்ணனின் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்தி
அவனுனடய பால லீலைகளில் மனம் லயித்து, தன்னை மறந்த நிலையில், “தயிர் தயிர்” என்று கூவுவதை மறந்து
“கோவிந்தா மாதவா ,தாமோதரா “என்று தன் இனிய குரலில் கூவ ஆரம்பித்தாள்.
கனவு, நினனவுகளைத் தாண்டி,பக்திப் பரவசம் ஒருவரை எப்படி மதி மயங்கச் செய்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது.
தன் ஸ்வானுபவங்களை கவிகளா லேயே இப்படி நயம் பட வர்ணிக்கமுடியும்.

42.மேலும் பாகவத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோபியர்களுடன் ராஸ க்ரீடையில் ஈடுபட்டபோது,
இவ்விதம் கோபியர்கனளக் கட்டிக் கொள்வது, கைகளால் தொடுவது, அன்பு ததும்பப் பார்பது,
அழகிய கம்பீரமான சிரிப்பு இவைகளினால் தன் நிழனலப் பார்த்து வினளயாடும் குழந்னதை போல் வினளயாடினார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.-
“ ரே மே ரமேஸோ வ்ரஜ ஸுந்தரீபி: யதார்பக: ஸ்வ ப்ரதி பிம்ப விப்ரம:”( பாகவதம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ. 17)

43.நம்முனடய வேதங்கள், புராணங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் ஆதாரமாக உள்ளன.
புராணங்கள் காவ்யங்களும், கவிதைகளும் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன.
பலிபீடம் யக்ஞம்(அக்னி கார்யங்கள்) செய்வது எல்லாம் ப்ரக்ருதி ,புருஷன் என்ற இரண்டு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவையே .
நமது திருமணங்களில் தம்பதிகளின் நலன் குறித்து ஓதப்படும் வேத மந்திரங்கள் எல்லாம் தாய்மை
அடைவது,புத்திர உற்பத்தி என்ற புனிதமான நிகழ்வுகளுக்கு ஆசி வழங்குபவைகளாகவே இருக்கின்றன.
“ஆத்மாவை புத்ர நாமாஸி ப்ரஜாமனு ப்ரஜாயஸே ”-என்று விவாஹ சமயம் செய்யப்படும், சேஷ ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரங்கள்,
கணவன்-மனைவி, தங்களுடைய குழந்தைகளிடத்தில் மறுபிறப்பு அனடகிறார்கள் என்ற கருத்தை
ப்ரதான ஹோமத்தில்,வடு ஹோமம் செய்யப்படும்போது கீழ் கண்டவாறு மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
”இந்திரனே ! இந்த வதுவிற்கு பத்து பிள்ளைகள் பிறக்கும்படி அருள் செய்.கணவனை பதினோராவது புத்திரனாகப் பாவித்து அன்பை வழங்கட்டும்”
என்று ப்ரார்திக்கப்படுகிறது.
வேத மந்திரங்களால் சுத்தி கரிக்கப்பட்ட மனத்துடன் இணையும் தம்பதிகள் பெறுவது ப்ரஹ்மானந்தத்தின் சிறு ப்ரதி பலிப்பே .
இல்லற வாழ்க்கையில் தேடிச் செல்லும் மற்ற விஷயங்களால் ஏற்படும் சுகங்கள் நினலயற்றதே .
நம்மில் அந்தர்யாமியாய் இருக்கும் சுத்த ஸத்வமான பரமாத்வ ஸ்வரூபத்தை உள்நோக்கி மனனம், முதலிய ஒன்பது ஸாதனங்களால் செலுத்தும் போது
ஏற்படும் ஆனந்தம், ஸாமீப்யம்,ஸாரூப்யம்,ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைகளில் அடையப்படுகிறது..
கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் (ஸாலோகம்) ஸ்ரீ கிருஷ்ணன் ஸமீபத்தில் (ஸாமீப்யம்) அவனுனடய ரூப,லாவண்யத்தில் ஈடுபட்டு(ஸாரூப்யம்),
ராஸ க்ரீனடயில் மனம் லயம் அனடந்து(ஸாயுஜ்யம்) ஏற்பட்ட பரம ஆனந்தமே இவை ..
வெளி நோக்கிச் செல்லும் எண்ணங்களுக்கும்,வாஸனைகளால் நினைவுகளுக்கும் அப்பாற்பட்டவை ,
இந்த அனுபவம்.ஸ்ரீநாரதரின் பக்தி ஸூத்ரம் 21ல்-எவ்விதம் கோகுலத்துக் கோபிகைகளுக்கு பக்தி இருந்ததோ
அப்படி பக்தி செய்ய வேண்டும் என்று பக்திக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.
வேத வ்யாஸரும்,இந்த பாகவத ஸர்கத்தை சுத்த மனதுடன் பாராயணம் செய்பவர்களும்,கேட்பவர்களும் விகாரமான எண்ணங்கள், துர்வாஸனை நீங்கப்
பெற்றவர்களாக, சுத்த மநோ பாவத்தை அடைகிறார்கள் என்று பல ஸ்ருதியில் சொல்வதே இதன் மேன்மைக்கு தக்க சான்றாகும். (பாகவத ம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ.40)

44. ராஸ க்ரீடா வர்ணனையை விவரிக்கும் போது, ராஜா பரீக்ஷித், கேள்வியாகக் கேட்பது போலும் ஸ்ரீசுகர் பதிலளிப்பது போலவும்
நமக்கு ஏற்படும் சம்சயங்கனள போக்கும் நோக்கத்துடன் ,பாகவேத்தில் கூறப்படுகிறது,
கோபியர்களின் உள்ளத்திலும் மற்றும் எல்லாப் பிராணிகளின் உள்ளத்திலும் எந்த பகவான் புத்தி சாக்ஷியாக உள்ளாரோ
அந்த பகவானே பூலோகத்திலுள்ள அனைவருக்கும் அனுக்ரஹம் செய்யவே மானிட சரீரத்தை எடுத்து பல லீலைகளைப் புரிகிறார்.
அந்த லீலைகளை சிரத்தை யுடன் கேட்ட மாத்திரத்தி லேயே மனிதன் அப் பரமாத்மாவிடம் உறுதியான பக்தி நிறைந்த வனாகிறான்.
அவன் மனத்தை வருத்தும் காமம் தன்னைப்போல் ஒழிந்து விடுகிறது என்றும் கூறுகிறார். ”( பாகவதம் ஸ்க.10- அத்யா. 33-ஸ்லோ . 27-40)

அங்கப்ரேக்ஷிேம்
45. வரஹூர் உரியடி உத்ஸவம் அன்று இரவு கடுங்காலிலிருந்து பகவான் ஸகல அலங்காரத்துடன்,தன்
மனைவி மார்களுடன் ஊர் கோலமாய் பவனி வருகிறார்,
அவருக்குப் பின் பக்தர்கள் நீராடி,ஈரமான
உடைகளுடன் பெருமாளின் திருவருள் வேண்டி, தரையில் படுத்துப் புரண்டு,அங்க ப்ரதக்ஷிணம் செய்கிறார்கள்.
அப்போது கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று உரக்க கூறிக் கொண்டு பக்தியுடன் மஞசள் பூசிய தேங்காயை கூப்பிய கைகளில் னவத்துக் கொண்டு
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தொடர்ந்து பின் செல்கின்றனர் என்று ஸ்ரீ கிருஷ்ண சிக்யோத்ஸவ ப்ரபந்தம் கூறகிறது.
இந்த வழிபாட்டை ஸ்ரீதீர்த்தரே ஆரம்பித்து னவத்தார் என்று கூறப்படுகிறது-

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் பெருமை பெற்ற கோயில்கள் பல. இவற்றோடு அங்கு நடைபெறும் திருவிழாவாலும் பெருமையுறும் கோயில்களும் உண்டு.
 
அவ்வகையில் திருவிழாவினால் பெருமை கொள்ளும் ஊர், வரகூர். இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் மிகப் பிரசித்தம். இந்திய நாட்டின் எந்தக் கோயிலிலும் இதுபோன்ற உறியடி உற்சவத்தைக் காண முடியாது.
 
வரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறு கிராமம். வரகூர் மக்கள், இங்குள்ள வெங்கடேசப் பெருமாளைத் தான் தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். முடி இறக்குதல், காது குத்துதல் போன் வேண்டுதல்கள் எல்லாமே இந்தக் கோயில் தெய்வத்திற்குத்தான் என்று இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
 
வேலை கிடைத்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் இவ்வூர் இளைஞர்கள், தங்கள் முதல் மாதச் சம்பளத்தை இக்கோயிலுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், அதாவது காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக (நவநீதம் என்றால் வெண்ணெய் எனப்பொருள்) இக்கோயில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். பின்னால் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் தொடரும். அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
 
தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமுமாக, உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும். அடுத்து, பாகவதர்கள், நாராயண தீர்த்தர்  இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடிக் கொண்டு வருவார்கள்.
 
இடையர் வேடம் அணிந்தவர்கள் உறியடி மரத்தை வந்தடைவார்கள். கோயில் வாயிலின் முன்புறத்தில் நீளமான மூன்று மூங்கில் மரங்களை ஒன்றாக இணைத்து, ஆழமாகத் தோண்டப்பட்ட ஒரு குழியில் நடுவார்கள். மரத்தின் நடுவே 10 அடி உயரத்தில் குறுக்கே ஒரு மூங்கிலைக் கட்டித் தொங்க விடுவார்கள். அதன் ஒரு முறையில் மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களை மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள். மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.
 
போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் உறியை எட்டிப் பிடிக்க முயலுகையில் ஊர் மக்கள் இந்தக் கயிற்றை அப்படியும் இப்படியும் ஏற்றி இறக்கி ஆட்டங் காட்டுவார்கள். (ஆட்டம் காட்டுவது என்பது இதுதானோ?) கையால் எட்டிப் பிடிக்க முடியாமல், இளைஞர்கள் தடிகொண்டு அடிப்பார்கள். அதற்கும் இடையூறு செய்வதுபோல் ஊர் மக்கள் இவர்கள் மீது தணீணரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்து, பார்வையை மறைப்பார்கள். முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெறுவார். பின் கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
 
உறியடியை அடுத்து, வழுக்குமரம் ஏறுதல். உயராமான ஒரு தேக்கு மரத்தை சில நாட்கள் தண்ணீரிலே போட்டு ஊற வைப்பார்கள். பின், புளியங்கொட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒருவித பசையை இதன் மீது பூசி, காயப்போடுவார்கள். உறியடி தினத்தில் இம்மரத்தின் மீது கடுகு எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் தடவி உறியடி மரத்திற்குத் தெற்கில் நடுவார்கள். உறியடி முடிந்தவுடன் எல்லோரும் இங்கு கூடுவார்கள். ஒருவர் மீது ஒருவராகத் தோள் மீது ஏறி 10 அல்லது 12 அடி உயரம் வரை ஏறிவிடுவார்கள். பின்னர் வேட்டிகளை இம்மரத்தில் சுற்றிக் கட்டி அதன் மீது காலை வைத்து ஏற முயற்சிப்பார்கள். வேட்டியும் எண்ணெயில் தோய்ந்து வழுக்கும். இளைஞர்கள் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து வழுக்குமர உச்சியை அடைய முயலுவார்கள்.
 
எண்ணெய் வழுக்குவது போதாதென்று சுற்றியிருப்பவர்களும் இவர்கள் மீது தண்ணீர் அடித்து ஆரவாரம் செய்வார்கள். அப்படி இப்படி என்று 25 அடி உயரம் ஏறி, ஒரு வழியாக யாராவது ஒருவர் உச்சியை அடைந்து விடுவார். மேலே கட்டி வைத்துள்ள பண முடிப்பையும் தின்பண்டங்களையும் கைப்பற்றி வெற்றியுடன் இறங்குவார். தின்பண்டங்களை நாலாபுறமும் வீசி எல்லோரக்கும் கொடுப்பது வழக்கம். இதற்குள் பொழுது விடிந்த விடும்.
 
விடியலில் நித்திய வழிபாடுகள் முடிந்து அலங்காரம் ஆராதனை முடிந்து, உஞ்சவிருத்தி, அதன்பின் முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற சம்பிரதாயங்களுடன் ருக்மணி கல்யாணம் நடைபெறும்.
 
வரகூரில் 1868-ல் பிறந்து 1935 வரை வாழ்ந்த ஸ்ரீநாராயணகவி என்பவர் “கிருஷ்ண சிக்யோத்ஸவம்’ என்ற பெயரில் வடமொழியில் ஒரு காவியம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் உறியடி உற்சவம் என்று பொருள். சுமதி, சுகுணன் என்ற இரண்டு கின்னரர்கள் பூலோகத்திற்கு வந்து வரகூரை அடைந்து, உறியடி உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்து, தமக்கிடையே உரையாடும் விதமாக இவ்விழாவைப் பற்றி இந்நூலில் வர்ணிக்கப்படுகிறது.
 
இடையர் வேடமணிவது, உறியடி அடிப்பது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவை எல்லாம் வெறும் கேளிக்கையல்ல. கிருஷ்ண அவதார லீலைகள். இதில் அமைந்துள்ள செய்திகள் தத்துவார்த்தமானவை. உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.
 
உறியடி, ருக்மணி கல்யாணம், அனுமத் ஜெயந்தி என்ற மூன்றுநாள் விழா அமைப்பு முறையை உருவாக்கியவர் வரகூரில் வாழ்ந்து அங்கேயே முக்தியடைந்த நாராயண தீர்த்தரையே சாரும். அவரது கிருஷ்ண லீலா தரங்கிணியில் இவ்விழா பத்ததி (கொண்டாடும் முறை) தெளிவாக சித்திரிக்கப்பட்டுள்ளது. வரகூர் உறியடி விழாவை நேரில் கண்டு இன்புறும் அனுபவத்தை, வார்த்தைகளில் எளிதில் விவரித்துவிட முடியாது.

46.இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால், அங்க ப்ரதக்ஷிண வழிபாட்டை ஆரம்பித்து வைத்தவர்-பாகவத உத்தமரான ஸ்ரீஅக்ரூரே ஆவார்.
எப்படி என்று பார்ப்போம்.-கோகுலத்திலிருந்து ஸ்ரீகிருஷ்ணரை மதுரைக்கு அழைத்து வர ஸ்ரீஅக்ரூரர்,
கம்ஸனின் உத்திரவின் பேரில் புறப்பட்டு ,மாலைப் பொழுதில் சபாழுேில் கோகுலத்தை அடைந்தார்.
அங்கு இந்திரன் முதலிய திக்பாலகர்களுனடய கிரீடங்களுடன் சேர்ந்ததும் தூய்மை வாய்ந்த திருவடிப் பொடிகளை யுடையதும்,
பூதேவிக்கு மகிழ்ச்சி யளிப்பதும் தாமரை மலர், யனவ,அங்குசம் முதலிய கோடுகளுடன் கூடியதுமான, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகனளக் கண்ணுற்றார்.-கண்ட வுடனேயே ,எல்லை யற்ற ஆனந்தம் அடைந்து உணர்ச்சி வசப்பட்டார். -கண்களில் ஆனந்தக் கண்ணீர் நினறந்தது.
”இவைகள் என் தெய்வத்தின் திருவடிகள் பட்ட பொடிகள் அல்லவா” என்று எண்ணி ,தேரிலிருந்து துள்ளிக் குதித்து கண்ணனுனடய திருவடிகள் பட்ட மண்
பொடிகள் மீது மீண்டும் மீண்டும் புரண்டார் அங்கப்ரதக்ஷிணமும் செய்தார்..,(பாக.ஸ்க.10-அத்யா. 38- ஸ்லோ . 25,26)

47.இதி “தேஷு அசேஷ்டத ” என்று திருவடிப் பொடிகள் மீது விழுந்து புரண்டார் என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
இக் கருத்தை ஸ்ரீதீர்த்தர் (தரங்கம் 7 ஸ்லோ . 14)”.”புத்யாதி தத்வ பரிசிந்ஹித கோபவேஷம்,
ஸித்தானுபாவிதம் அசேஷ ஜகந் நிதானம்”என்ற சொல் தொடரால் கோபிகைகள் ,அக்ரூரர் முதலியோர் ஸ்ரீ
கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகளை , பத்மம் முதலிய ரேகைகளால் கண்டு பரவசமனடந்த நிலையை ,விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்தா அங்க ப்ரதக்ஷிண வழிபாட்னட வராஹ புரியில் ஆரம்பித்து வைத்து, தான் அனடந்த ஆனந்தத்தை மற்ற பக்தர்களும் அடைய வழி செய்துள்ளார் என்றே தோன்றுகிறது,

48.இருப்பினும்,இது கோகுலம் அல்லவே ஸ்ரீகிருஷ்ண னுனடய பாத தூளிகள், இவ் வராஹ புரி மண்ணில்
இருப்பது எப்படி. பொருந்தும் என்ற வினா எழும் போது,
ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஊருக்கு ஸ்ரீதீர்த்தரை வரவழைக்க பன்றியின் ரூபம் தரித்ததும்,
ஸ்ரீதீர்த்தர் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் தன் சலங்கை ஒலி கேட்கச் செய்ததும் ஸ்ரீ கிருஷ்ணர் வராஹ புரியில் நித்ய வாஸம் செய்கிறார் என்பதற்கு
ப்ரமாணமாகிறது.
அவரது பாத தூளிகள் இந்த மண்ணில் நினறந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
மேலும் ஸ்ரீதீர்த்தருக்கும்,ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வித்யாசமே இல்லை என்பது உறுதி .
ஸ்ரீதீர்த்தர் வராஹ புரியிலேயே பலகாலம் வாழ்ந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலா விநாேதங்களைப் பாடிப் பாடி
அவனையே ஸதா ஸர்வ காலம் நினைந்து, நினைந்து உருகி அவனுள்ளே ஐக்யமாகி,பரம அத் வைதியான அவரே ,
ப்ரஹ்மைவ ப்ரஹ்மவித் பவதி என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கிருஷ்ணராக பாவித்து ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டார் என்பதில் ஒருவித ஐயமும் இல்னல.
இதை அவரே நிரூபணமும் செய்திருக்கிறார்.-தேவர்களின் ப்ரார்த்தனை யுடன் தொடங்கும்
“பாஹிமாம் பாஹிமாம் பரம தயாளோ ” எனத் தொடங்கும் 10வது தரங்கம் கீதம்40 ல் ஈடற்ற தன் பரம பக்தியால் இப்பாடலின்
ஒவ்வொரு சரணத்திலும் ஸ்ரீவிஜய கோபாலா என்ற சொல்லை 12 தடவைகள் ப்ரயோகித்து முத்திரை சரணத்தில்
நாராயண தீர்த்த விஜய கோபாலா என்று நாராயண தீர்த்தராகவே அவரிடமிருந்து வேறு படாமல் இருப்பவரே என்று கூறியிருப்பது
ஸ்ரீதீர்த்தர், தான் ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டதை உணர முடிகிறது.
தரங்கப் பாடல்களில், தான் வேறு தரங்கம் வேறு என்றில்லாமல் ஸ்ரீகிருஷ்ணனே ப்ரத்யக்ஷமாகக் குடி கொண்டுள்ளான் என்பது ஸத்ய வாக்காகும்.
இதை உணர்ந்து, பாட்டு,பாடுபவர் என்ற வேறுபடாத
மநோ நிலையில் ,தரங்கப் பாடல்கனளப் பாடும் போது வராஹ புரியில் நித்ய வாசம் செய்யும்,ஸ்ரீகிருஷ்ணன் ப்ரஸன்னமாகிறார் என்பதில் ஐயமே இல்லை .
அப்படி ஸ்ரீதீர்த்தர் உருவில் ஸ்ரீ கிருஷ்ணர் ஐக்யமாகி இருக்கும் போது, அம் மஹானின் பாத தாமரைகள் பட்ட வராஹ புரியில்
ஸ்ரீகிருஷ்ணனின் பாத தூளிகள் என்றென்றும் விளங்கும் என்பது ப்ரமாணம்.

49.இந்த இடத்தில் பாகவதம் முதல் ஸ்கந்தம் .அத்யா.13 ஸ்லோகம்10 நினனவுக்கு வருகிறது.
இதில் தீர்த்த யாத்ரை சென்று விரும்பிய விதுரரை வரவேற்று யுதிஷ்டிர் பேசுவதாக வருகிறது.
“பவத் விதா பாகவதாஸ் தீர்த்த பூதா : ஸ்வயம் விபோ தீர்த்து குர்வந்தி தீர்த்தானி ஸ்வாந்தஸ் ஸ்தேன கதாப்ருதா
“ஹே ப்ரபோ தங்களைப் போன்ற பகவத் பக்தர்கள், புண்ய தீர்த்த ரர்களாக இருந்து கொண்டு, தங்களது மனத்தில் உனறயும்
ஸ்ரீவாஸுதேவனால், பாபிகளின் சேர்க்கையால் மாசு படிந்த புண்ய ஸ்தலங்கனளக் கூட, மாசு நீக்கி மறுபடியும் சுத்தமாக்கி
புண்ய ஸ்தலங்களாகச் செய்து விடுகின்றனர் – என்று விதுரரைப் புகழ்கிறார்.

50.ஸ்ரீநாராயண தீர்த்தர் தன் பெயரிலேயே தீர்த்தர் என்று கொண்டு, வாழ்ந்த புண்ய ஆத்மாவாகும்.
அவர் வராஹ புரியிலேயே பல காலங்கள் வாழ்ந்து வந்ததால், புண்ய ஷேத்திரமான வராஹ புரியின்
பவித்ரம் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சொல்லவும் வேண்டுமா?
அப்பேர்பட்ட இந்த மஹானின் பாத சுவடுகள் பட்ட வராஹ புரி பூமி, ஒப்புயர்வற்ற புண்ய பூமியே .
அவருடைய திருவடித் தாமரைகள் பட்ட மண் பொடிகள் நினறந்த பூமியில், பக்தர்கள் அங்க ப்ரத க்ஷிணம்
செய்ய தம் பாவங்கள் தொலைந்து நற்கதி அடைவார்கள் என்பதில் ஐயமே இல்லை .

51.இத்துணை பவித்திரமான வராஹ புரி மண்ணில் பூர்வ ஜன்ம புண்யத்தால் பிறந்தவர்கள் மிகவும் பாக்யசாலிகளே .
அதுவும் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வரூபமான,ஸ்ரீநாராயண தீர்த்தர் காலடி பட்ட மண்ணில் விழுந்து புரள மிகவும் பாக்யம் பெற்றவர்களே
”அஹோ பாக்யம் அஹோ பாக்யம் வராஹ புரி ஜனித மஹா ஜனானாம்”.

52.வேத ,புராணங்கள்,சாஸ்த்திரங்கள்,வேதாந்தம் இவைகளில் மிகத் தேர்ச்சி யுடையவராக இருந்தது மட்டுமல்லாது
நாட்டிய ஸங்கீதக் கலைகளிலும் தேர்ச்சி மிக்கவராக இருந்தார் என்பது அவருடைய நூலிலிருந்து விளங்குகிறது.
தரங்கம் 7 ஸ்லோகம் 16ல் ராஸ லீலைகளை விவரிக்கும் போது கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் வாத்யங்களிலிருந்தும் னககளிலிருந்தும் தோன்றுகின்ற
த்ருவ தாளம்,மட்ய தாளம்,ரூபகம், ஜம்பா,த்ரிபுட என்ற உயர்ந்த பல தாளங்களுடனும்,
அகற்றியும், குறுக்கியும்,நீட்டியும்,வனளத்தும்,காலடிகளை வைத்தல் போன்ற அழகிய பாத வின்யாஸங்களுடன் கூடிய நாட்டியத்தை
கோபிகைகள் மிக்க ஆனந்தத்துடன் அபிநயம் செய்து கொண்டு ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டதை விவரிக்கிறார்.

53. பாகவதத்தில் (பாக.ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ . 10) ஒரு கோபி ஸ்ரீகிருஷ்ணனுடன் ஸ்வர ஜாதிகளை
ஒன்றக்கொன்று கலக்காமல் பாடி, ஸ்ரீகிருஷ்ணனுடைய பாராட்டுக்களைப் பெற்றாள்.
மேலும் அதே ஸ்வர ஜாதியை த்ருவ தாளம் போட்டு கானம் செய்ய ஸ்ரீகிருஷ்ணனால் வெகுமதி அளிக்கப் பட்டாள், என்றும் கூறப்பட்டுள்ளது.
இக் காட்சியையே , ஸ்ரீதீர்த்தர்,மனக் கண்ணால் பார்த்து ஆனந்தம் அடைந்து, தரங்கம் 7 கீதம்6 லிருந்து 12 வரை
நாட்டை -துருவ தாளம்,மத்யமாவதி -மட்ய தாளம்,முகாரி-ரூபக தாளம்,வராளி-ஜம்பக தாளம், மோஹனம் திரிபுட தாளம்,
ஆனந்த பைரவி-அட தாளம்,காம்போஜி- ஏக தாளம்,ஆகிய பல ராகங்களிலும்,பல தாளங்களிலும் கோபிகள் பாடி ஆடினார்கள்.என்றும் கூறுகிறார்.
ராகம்- தாளத்திற்கு ஏற்ப பாடல்களின் மூலம் ராஸ லீனல மஹத்வத்தைத் தெரியப் படுத்துதில் அவருடைய ஸங்கீத -நடன புலமை வெளிப்படுகிறது..

54.அக்ரூரருடன், ஸ்ரீகிருஷ்ணர் மதுரா நகரம் செல்லும் போது, கோபிகைகள் ,பிறிவாற்றாமையால், வெட்கத்தை விட்டு,
கோவிந்தா மாதவா தாமோதரா என்று கூக்குரலிட்டு அழுதனர் என்று ஸ்ரீவ்யாசர் விவரித்துள்ளார்.
நமக்கு வேண்டியவர்கள் பயணம் கிளம்பும் போது அழுவது அமங்கலமாகக் கருதப் படுகிறது.
ஸ்ரீவியாசர், இதை உணர்ந்தே ,கோபிகைகள் ஸுஸ்வரத்துடன் அழதனர் என்று குறிப்பிட்டுள்ளார். (பாக.ஸ்க.10-அத்யா.39-ஸ்லோ . 31)
ஸ்ரீநாராயண தீர்த்தர்,இதை நன்கு உணர்ந்து ,சந்தேகத்திற்கு துளியும் இடமளிக்காமல், தரங்கம் 9 – “விஜய கோபால தே மங்களம்” – எனத் தொடங்கும்
கீதம்32ல் , கோபிகைகள் ,ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கல்யாண குணங்கனளப் புகழ்ந்து கூறி, மதுராவில்
அவருக்கு வெற்றியும் ,எல்லா நலன்களும் கிட்டவேண்டும்,என்று மங்களம் பாடினார்கள்,என்று மங்களகரமாக வர்ணித்துள்ளார்,
இச் சமயம், ஸ்ரீராமபிரான் தந்தையின் வாக்னக நிறை வேற்ற நாடு துறந்து காட்டுக்குச் செல்லும்போது ,தாய் கௌஸல்யா தேவீ மகனின் பிரிவைத் தாங்க
முடியா விட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல்,ஸ்வஸ்தி வாக்யங்கனளக் கூறிக் காப்பிட்டுஆசி
வழங்கி மங்களகரமாக ஸ்ரீராமரை வழியனுப்பினாள் என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள்
நினனவிற்கு வருகிறது. (வால்மீ,ராமா-.அயோத்யாகாண்டம் 25 வது ஸர்கம்)

55.உத்தவர் கோகுலம் சென்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளிய தத்வ உபதேஸங்களை ஸ்ரீகிருஷ்ணனை
பிரிந்து மனம் வருந்திய கோபியர்களுக்கு அளித்து-அவர்களை மனச் சமாதானம் அனடயச் செய்ததும்
அவர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் தெரிவித்ததையும்,
ஸ்ரீதீர்த்தர் தரங்கம் 11 ஸ்லோ .94 முதல் 99,கீதம் 41-44 வரை விவரிக்கும் போது கோபியர்களின் வாயிலாகத் தான்
ஸ்ரீகிருஷ்ணரிடம் கொண்டிருக்கும் அத்யந்த ப்ரேம பக்தியை வெளிப்படுத்தி யுள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது,
உத்தவர், கோபியர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து “எந்த கோப ஸ்திரிகளினால் செய்யப்படும் ஸ்ரீகிருஷ்ண லீலா கானமானது,
மூவுலகத்தையும் புனிதமாக்குகிறதோ அந்த கோப ஸ்திரிகளின் பாத தூளியை நான் அடிக்கடி வணங்குகிறேன்” என்று கூறியது
ஸ்ரீதீர்த்தரின் ப்ரேம பக்திக்கும் பொருந்துகிறது அல்லவா!! (பாக.ஸ்க.10-அத்யா. 47ஸ்லோ . 63)

56.ஸ்ரீதீர்த்தர் ,”கோபாலமேவ தைவதம் ” (தரங்கம் 12 கீதம் 50) என்ற கீதத்தைப் பாடும் போதே திவ்யமான
தன் கண்களால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், தன் முன்னே நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும்
ஸ்ரீகிருஷ்ணனே கண் குளிரக் கண்டு பரவசமடைந்தார் என்றும்,மேலும் ஸ்ரீதீர்த்தர் மீது உள்ள அபார
கருணையினால், தரங்கிணி நூல் முடியும் வரை , ஸ்ரீகிருஷ்ணன் திவ்ய தரிஸனம் தந்து அவரை
ஆனந்தக் கடலில் முழுகச் செய்தார் என்றும், ஸ்ரீகிருஷ்ணனின் விருப்பப்படியே ஸ்ரீருக்மிணி
விவாஹத்துடன் தரங்கிணியை முடித்தார் என்று சிறந்த பாகவதோத்தமர்கள் கூறுகின்றனர்,
இந்தப் பாடலில்” மிக்க பாக்யசாலியான தனக்கு உண்மைப் பொருளைக் காணும் திவ்ய சக்ஷூஸை (தெய்வீகப்
பார்வையை ) ஸ்ரீகிருஷ்ணன் அளித்தான்“ என்று புகழ்கிறார்.
கோபாலன் என்ற தெய்வத்தினையே வழிபடுகிறேன், வேறு ஒருவரையும் தெய்வமாகக் கருத மாட்டேன், என்றும் கூறுகிறார்.

57.ஸ்ரீதீர்த்த ர், “காங்ஷே தவ ப்ரஸாதம்” (தரங்கம் 12 கீதம் 51) என்ற கீதத்தில் தான், பல ஷேத்திரங்களில்
தங்கியிருந்த போதிலும் , தீராது தன்னைத் தொடர்ந்து வாட்டி வந்த வயிற்று வலி, வராஹ புரி பெருமாள்
ஸந்நிதியில் தான் தீர்ந்தது என்ற விவரத்தை கடைசி சரணத்தில் “வர நாராயண தீர்த்த வாரித துஸ்தரா நர்தக “ என்று தெரிவிக்கிறார்.

58.தரங்கம்12 “ப்ரஹ்ம க்ரந்திம்” என்று தொடங்கும் கீதம்58ல் ஸ்ரீதீர்த்தர், லக்னாஷ்டகம்,ஸ்ரீகிருஷ்ண
ருக்மிணி விவாஹ நிகழ்ச்சிகளை -மண மகள் மண மகனுக்கு முத்துக்களால் அபிஷேகம்
செய்வது,ப்ரஹ்ம க்ரந்தி ,லாஜ ஹோமம்,ஸ்தாலீ பாகம்,நாக பலி,ஆகிய
கல்யாண ஸம்ப்ரதாயங்களை ஆந்திரர்களின் அனுஷ்டானப்படி விவரித்துள்ளார்.

59.“மஙகளாதீனி ,மங்கள மத்யானம்,மங்களான் தானி ஸாஸ்த்ராணி வீர்யவத் புருஷ கர்த்ரு காணி
ப்ரேந்தே ”-துவக்கம் ,நடுவு,முடிவு இவற்றில் மஙகளா ஸாஸனத்துடன் கூடிய நூல்கள் இவ்வுலகில்
நீண்ட காலம் புகழுடன் விளங்குகின்றன என்ற ஆன்றோர் வசனப்படி ஸ்ரீதீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியில் தொடக்கத்தில்
“ஹிம கிரி தனயா பத்யம்” என்ற வினாயக ஸ்துதியுடன் ஆரம்பித்து
நடுவில் “கல்யாணம் வித னோது” என்ற பால கிருஷ்ண ஸ்துதியையும்
“தா ⦂குர்வந்த்வபிதானி” என்ற ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தில் பங்கு கொண்ட நல் முத்துக்களின் ஸ்துதியை அமைத்து,
முடிவில் ஜய மங்களம் என்ற மங்கள கீதத்துடனும் முடித்து அருளிச் செய்திருக்கிறார் என்பது இந்நூலின் தனிச் சிறப்பு.
ஆன்றோர் வாக்குப்படி இந்த தெய்வீக காவ்யம் சூர்ய சந்திரர்கள் இருக்கும் வரை புகழோடு இவ்வுலகில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை .

60.ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள் ,புராணங்கள் இவைகளைப் ப்ரமாணமாகக்
கொண்டு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை அருளிச் செய்தார்.
மேலும் ஸ்ரீதீர்த்தர், ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை ஸ்ரீமத் பாகவேத்தை அனுஸரித்தே தஸம ஸ்கந்த கிருஷ்ண லீலைகள் ,ஸ்ரீ ருக்மிணி விவாஹ பர்யந்தம் அருளியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதத்தில், ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல், மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீ தீர்த்தர் 8வது தரங்கத்ேில், கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவைகளை விவரித்துள்ளார்.
ஏன் இந்த மாறுபாட்னடச் செய்தார் என்று ஆராயுங்கால் கீழ்க்கண்ட இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.
1.ஸ்ரீதீர்த்தர் கீத கோவிந்தத்தை இயற்றிய ஸ்ரீஜயதேவரின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
2. வராஹ புரி பெருமாள் யாராலும் பிரிக்க முடியாதவாறு ஆதரவாகப் பிராட்டியை அணைத்தவாறும்,
பிராட்டியும், பெருமாளை விட்டுப் பிரியாமல் அன்பு பெருக்கெடுத்து ஆரத் தழுவியுள்ளார்.
இக் காட்சியை தினமும் பார்த்தாலும்.ஓவ்வொரு தரங்கிணிப் பாடலையும், சலங்கை ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து தன் தேவியுடன் காட்சி கொடுத்தும்,-
கிருஷ்ண ராதையே – ஜீவாத்மா பரமாத்ம ஐக்கிய ருபமாக- என்று அவர் மனக் கண் முன் தோன்றிய தாலும் அவர் ராதா கிருஷ்ணனைப் பற்றி எழுதி யிருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.

61.பத்ம புராணத்தில் உள்ள ஸ்ரீமத் பாகவத மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் சிறிது பார்க்கலாம்
சுகருனடய வாயிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் கதாம்ருதத்தின் பலன் அளவிட முடியாது.
கங்கை ,கயா ,காசி,புஷ்கரம்,ப்ரயாகை அளிக்கும் பலன்கள் யானவயும் இந்த பாகவத பலன்களுக்குச் சமமாகாது.என்று கூறப்பட்டுள்ளது.(அத்.3.ஸ்லோ.32)
இந்தப் பெருமையும்,புகழும் ஸ்ரீமத்பாகவதத்தை அனுஸரித்தே ஸ்ரீதீர்த்தரின் வாயிலிருந்து வெளிப்பட்ட கதாம்ருதமான ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணிக்கும் பொருந்தும் என்று சொல்லவும் வேண்டுமோ ?

62.ஸ்ரீதீர்த்தர் 12 தரங்கம்- “காமதா காமினா மேஷா”- எனத் தொடங்கும் ஸ்லோ .161ல் இந்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற சிறந்த பக்தி நூலை
பக்தியுடன் பாடுகிறவர்களுக்கும், கேட்பவர்களுக்கும்,அவரவர்களின் விருப்பம் போல, அறம்,பொருள்,இன்பம்,வீடு இவற்றை இந்த நூல்
அளிக்கிறது என்று பல ஸ்ருதியும் கூறிவிட்டார்.

63.ஸ்ரீதீர்த்தரின் நாமாவை உச்சரிப்ப தாலேயே நம் பாவங்கள் தொலைந்து அக்ஞான இருள் நீங்கி
ஆத்ம ஞானத்தை அடைந்து பரமானந்தத்தை அனடயலாம் என்பதில் ஒரு ஐயமே இல்லை .
ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருநாமத்தை ஒருமுனற கூறுவது லக்ஷம் தடவைகள் ஓங்காரத்தை ஜபிப்பதால் கிட்டும்
புண்ணி யத்தைக்காட்டிலும் அதிக புண்ணியத்தை அளிப்பதாகும்.
அவரின் திருவுருவத்தை வழிபடுவது ப்ரஹ்மா, சிவன்.நாராயணன், இவர்கனள வழிபடுவதால் கிட்டும் பலனுக்கு ஸமமான பலனைத்தரும்
என்று குரு த்யான ஸ்லோகத்தில் சொல்லப்பட்டதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
மேலும் அவ்வரிகள் அனுபவ பூர்வமாகவே வந்ததில் என்ன சந்தேகம்.அத்தகைய மஹான் ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருவடித் தாமரைகளை வணங்கி
நமக்கும் தூய்மையான உள்ளத்தை யளித்து,பரமாத்ம அநுபவம் ஏற்பட்டு ஆனந்த ஸ்வரூபியான பரம் பொருளுடன் ஐக்யமாகிற மோக்ஷத்தைப் பெறுவோமாக..

————–

பாகம்-3

ஒற்றுமையும் வேற்றுமையும்

1.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் சிருங்கார ரஸம் இனழந்த பக்தி ரஸம் ததும்பும் இனிமையான பாடல்களைக் கொண்டது.
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி பக்தி ரஸத்துடன் ஆத்ம ஞானத்தை போதிக்கும் இனிமையான தெய்வீகப் பாடல்களைக் கொண்டது.
2.இந்த இரண்டு நூல்களுக்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ேண பரமாத்மாவே .ஸ்ரீமத் பாகவேத்திற்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே .
3.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் 12 ஸர்கங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும் 12 தரங்கிணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமத் பாகவதமும் 12 ஸ்கந்தங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,

4.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் த்வாேஸாக்ஷரி மந்திரம் 12 அக்ஷரங்களைக் கொண்டது. ஒவ்வொரு
ஸ்கந்தம் ஆரம்பிக்கும் போது வியாசர், இந்த மூல மந்திரத்தை ஸ்மரித்தே தொடங்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
துருவ சரித்திரத்தில் ஸ்ரீநாரத மஹரிஷி, துருவனுக்கு,இந்த மூல மந்திரத்தை உபதேஸிப்பதாக ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
( பாக.ஸ்க.4அத்யா.8-ஸ்லோ .54).மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திர அக்ஷரங்களின் எண்ணிக்கை 12
ஆனதால்,.ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களான ஸ்ரீஜயதேவரும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் ஸ்ரீமத் பாகவதத்தை அனுசரித்து தம் தம் நூல்களை 12 பாகமாக
பிரித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

5.ஸ்ரீஜயதேவர், சிருங்கார ரஸம் ப்ரதானமாக உள்ள இந்த நூலை 18புராணங்களில் ஒன்றான
ப்ரஹ்ம வைவர்த்த புராணத்தில் ராதா கிருஷ்ண சரித்திரத்தின் அடிப்படையில் படைத்தருளினார்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிேணியை ,ஸ்லோகங்கள் .சூர்ணிகைகள் ,கீதங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீமத் பாகவேத்தை அனுசரித்து,
தஸம ஸ்கந்தம் ருக்மிணி விவாஹம் வரையில் படைத்தருளினார்.
ஸ்ரீமத்பாகவதத்தில் ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாசாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீதீர்த்தர் 8வது தரங்கத்தில் கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவை களை விவரித்துள்ளார்.
இதுஒரு சிறிய வேறுபாடு ஆகும்.எனினும் இந்நூலின் இப்பகுதி ,ஆத்ம ஞானத்தை போதிப்பதால் சிறந்து விளங்குகிறது.

6.மேலும் ஸ்ரீநாராயண தீர்த்தர் தத்வங்கள் அடங்கிய பாகவதம் ஏகாதஸ ஸ்கந்தம் பற்றி எழுதாமல்
விட்டு விட்டரே என ஏக்கப்பட வைக்காமல்
ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள்
இவைகளின் ஸாரத்தை ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி யிலேயே சந்தர்பத்துக்கு ஏற்றவாறு
புகுத்தி ,
தனக்கே உரித்தான எளிய நடையில், அருளிச் செய்தார் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு..

7.ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் இருவருமே சங்கீதம்,நாட்டிய கலைகளில் பாண்டித்யம் பெற்று
இருந்ததனால்,
எல்லாப் பாடல்களையும் பல ராகங்களிலும், தாளங்களிலும், நடனமாடக் கூடியவகையில் அனமத்து மெருகு ஊட்டியுள்ளனர்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஒருபடி மேலே போய் நாட்டிய ஜதிகளையும் அனனவரும் வியக்கும் வண்ணம் னகயாண்டிருப்பது அவரின் புலமையை நன்கு பறை சாற்றுகிறது.

8.இவ் விரண்டு நூல்களுமே ,ஆத்ம ஞானம் பெற்று பரமாத்ம ஐக்கியத்தில் ஈடுபட்டு ப்ரஹமானந்தத்தில் திளைத்த
ஸ்ரீஜயதேவர்,ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆகிய ப்ரஹ்ம நிஷ்டர்களால் ஸ்வானுபவத்தில் எழுதப் பெற்றதால், அவர்களின் பாடல்களில் பக்தி ரஸம் சொட்டுகிறது.
எனவே இப்பாடல்களை நாம் பாடும் போதும், மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும் மெய் மறந்து பரமானந்தத்தில் திளைத்து கண்ணீர் மல்கி பரவசமாகின்றோம்.
இப்படி ப்ரேம பக்தியில் முழ்கிய உறுதியான பக்தன் தனக்குப் பிரியமான பகவன் நாம கீர்த்தனைகளைப் பாடும் போது மனமுருகி உலக விவஹாரங்களை அறவே மறந்து பித்தன் போல உரக்கச் சிரிப்பான்,சில சமயம் அழுவான்,உறக்க கூச்சலிடுவான்,பாடுவான்,ஆடுவான்
என்று நவ யோகிகளில் ஒருவரான கவியோகி, விதேஹ ராஜாவிற்கு பக்தனின் லக்ஷணத்தை தெரிவிக்கிறார்( ஸ்ரீமத் பாகவேம் .ஸ்க.11அத்யா2ஸ்லோ 40).
இம்மாதிரி, ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் எழுதிய பாடல்கள், மேலே கூறியவாறு ஸ்ரேஷ்ட பக்தர்களை உருவாக்குகிறது என்று சொன்னால்
மிகையாகாது.

9.இவ் விரண்டு நூல்களுமே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட்டவைகளே .
ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தம் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சதபி “ என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,7வது சரணத்தில்
ஸ்ரீ ஜகன்நாதரே ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து, .”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம் தேஹி பத பல்லவமுதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கத நாருணோ ஹரது தது பாஹித விகாரம் ப்ரியே சாருஸீல முஞ்ச மயி மாமை நிதானம்”, என்ற வரிகளை எழுதினார் என்று கூறுவர். இது ஒன்றே போதுமே கீத கோவிந்தம் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.

10.ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் ஓவ்வொரு பாடனலயும் சலங்னக ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து திவ்ய தரிஸனம் கொடுத்தும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அங்கீ கரித்தார் என்பது ஒன்றே போதுமே இந் நூல் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.
மேலும் கிருஷ்ண ருக்மிணி விவாஹத்துடன் முடிக்கச் சொன்னதும்,ஸ்ரீகிருஷ்ணரே என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநாராயண பட்டத்திரி அருளிய ஸ்ரீநாராயணீயமும் தரங்கிணி யைப் போலவே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் முழுவதும் அஙகீகரிக்கப்பட்ட நூலாகும்.

11.ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் குறித்தே எல்லாப் பாடல்கனளயும்
பாடியுள்ளார். மற்ற தெய்வங்கனளப் பற்றிப் பாடவில்னல.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே  மற்ற தேவதைகளையும் துதிப்பது தரங்கத்தின் தனிச் சிறப்பு.
இந்த ச குண வழி பாடே நாளனடவில் தனக்குத் தானே நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனையாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீசுகப் ப்ரஹ்மம் நிர்குண பரப் ப்ரஹ்ம உபாஸனையில் தீவிரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவதத்தை – கிருஷ்ண லீலைகளை -உபதேஸித்தார்,ஒவ்வொரு லீலையிலும் தன்
உள்ளத்திலுள்ள பரப்ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப்
பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே பரம் பொருளின் சகுண வடிவங்களைத் துதித்து தன் பாடல்கள் மூலம்வழிபட்டுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச்சிறப்பு.

12.முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின் “என்ற கீதத்தில்,கணபதியையும்,”
துர்கே துர்கதி ஹாரிணி ” என்ற ஸ்லோகத்திலும்“ஜய ஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவியையும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தனோது மதுஸூதன ஸூ தா “என்ற கீதத்தில் கங்காதரன் தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் தரங்கங்களில் நரஸிம்ஹரையும் ,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வக்ஞானக்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல் மஹா விஷ்ணுவையும்,
3ம் கீதத்தில் வராஹ புரி வேங்கடேசப் பெருமாளையும் துதித்துள்ளார்.

13.ஸ்ரீஜயதேவர்,கீத கோவிந்தத்தில் முதல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.
இதில் புத்த அவதாரத்னையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்களையும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார்.என்று கூ றுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும் “கேசவா த்ருத ” -கேசவன் தரித்த -என்று கூறி அந்த
அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதா னுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோகம் 5 தெளிவாக வராக அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டவனான
ஸ்ரீ கிருஷ்ணன் பத்து அவதாரங்களை எடுத்தான் –அவனுக்கு நமஸ்காரம். -கிருஷ்ணாய துப்யம் நமஹ-.என்று கூறுகிறார்.

14.ஸ்ரீ தீர்த்தர் “அதி கருணா வித்ருதாத்புதரூபா” என்ற சொல் தொடரால் பகவானின் அவதாரங்களை விளக்கி யுள்ளார்
மேலும், தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும், சூர்ணிகைகளிலும் ,கீதத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு,இறப்பு அற்றவன்,எங்கும் நிறைந்திருப்பவன்
,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நினலயான ஆனந்த வடிவு உடையவன் ,தன் அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப்பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விகிதம்” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய
கால்வாய்கள் ஆயிரம் தோன்றுகின்றதோ , அது போல் மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள்
அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூரண தத்வம். மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவதம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)

15.ஸ்ரீ தீர்த்தர் தன் நூலின் துவக்கத்தில் முதல் தரங்கத்தில் “ராம கிருஷ்ண கோவிந்த ” எனத் தொடங்கும் கீதம் 6ல், ஸனகாதி யோகிகள்
“ராம கிருஷ்ண கோவிந்த ” என்று கூறிக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனுனடய ஸந்நிதிக்கு வந்தனர் என்றும்,
நூலின் முடிவிலும் தரங்கம் 12ல் தரு 8 ல் கிருஷ்ணனிடம், ருக்மிணிக்காக தூது சென்ற அறிவாளியான அந்தணர்
“கோவிந்த ராம,கோவிந்த ராம” என்று பகவானின் திரு நாமங்களைக் கூறிக் கொண்டு வருகிறார் என்று வர்ணித்து, கலியுகத்தில்
நாம ஸங்கீர்தனம் என்ற எளிதான வழியில் கடவுளை அனடய முடியும் என்பதால்,
மற்ற முன்று யுகங்களிலும் பிறந்தவர்கள் கலியில் பிறக்க வேண்டும், அதிலும் புண்ணிய நதிகளான காவேரி,
தாமிரபரணி ஓடும் திராவிட நாட்டில் பிறக்க வேண்டும் என்று பாகவதம்,ஸ்க-11 ,அத்யா.5 ஸ்லோ .38-
40ல் கூறப்பட்டதை நினனவு கூர்கிறார். ஆழ்வார்கள்,நாயன்மார்கள் இவர்களின் பாடல் பெற்ற
பல ஷேத்திரங்கள் உள்ள திராவிட நாட்டில்,காளிந்தி நதி பாயும் வராஹ புரி ,பூலோக வைகுண்டம் என்று பெயர் பெற்றதற்கு,இவையே சான்று.-

16.இந்த இரண்டு நூல்களுமே ஓப்பு உயர்வு அற்ற அமர காவியங்களாகும்.இரண்டும் தெய்வீக மணம் வீசும் உயர்ந்த காவியங்கள்,
இதில் எது சிறந்தது என்ற கேள்விக்கே இடமில்லை ஒருவனின் இரு கண்களில் எது சிறந்தது என்று கூற இயலாது. ஏன் எனில் இயல்பான பார்வைக்கு, மனிதனுக்கு இரு கண்களுமே முக்கியமானது.
அது போலே ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தமும், ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும், பாகவத சமுதாயத்தின் இரண்டு கண்கனளப் போன்றவை
இவை இல்லாத பஜனை சம்பிரதாயமே இருக்க முடியாது.
ராதா கல்யாணம், திவ்ய நாமம்.தீப ப்ரதக்ஷிணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவை இரண்டும் முக்ய பங்கு வஹிக்கின்றன.
நாமும் இவ் விரண்டு கிருஷ்ண ஸாகரத்தில் முழ்கித் திளைத்து பரமானந்தம் பெற அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹபுரி ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீ வேங்கடேசப் பெருமானளயும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.

“நவநீத சோராய நந்தாதி கோப கோ ரக்ஷிணே கோபிகா வல்லபாய,
நாரத முனீந்த் ரனுத நாமதே யாயதே நாராயண ஆனந்த தீர்த்த குரவே ”
என்று அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கும், ஸ்ரீநாராயண தீர்த்த குருவிற்கும் மங்களம் பாடி நினறவு செய்வோம்.

————————-

இக் கட்டுரை ,திருவையாறு P.நடராஜ ஸர்மாவும், கும்ப காேணம் M.S.கோபால கிருஷ்ண ஸர்மாவும்
இணைந்து,வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாளிடமும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரிடமும் கொண்ட பக்தி மேலீட்டால் எழுதப்பட்டது.

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வர வர முனி பூர்வ தினசர்யா–ஸ்லோகம் 14- 32–ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது – ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமி உரை —

May 25, 2022

பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ்ஸமுபஸ்திதே |
ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குருபரம்பராம் || (14)

பதவுரை:-

பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில்,

யாமிந்யா – இரவினுடைய,

பஸ்சிமே யாமே – கடைசியான நாலாவது யாமமானது,

ஸமுபஸ்திதே ஸதி – கிட்டினவளவில், (மாமுனிகள்)

ப்ரபுத்ய – தூக்கம் விழித்து,

பராம் – உயர்ந்த,

குரு பரம்பராம் – எம்பெருமான் தொடக்கமாக தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை முடிவாகவுள்ள ஆசார்யர்களின் தொடர்ச்சியை,

ஸரணம் கத்வா – த்யானித்துச் ஸரணம் புகுந்து…

எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தை (ஆசார்ய பர்யந்தமாக) மோக்ஷோபாயமென்று பற்றும் அதிகாரிக்கு

ஸர்வ தர்மங்களையும் விட்டுவிடுதலை அங்கமாகக் கண்ணபிரான் கீதை சரமஸ்லோகத்தில் விதித்திருந்தபோதிலும்,

நித்ய கர்மாநுஷ்டானத்தை பகவத் கைங்கர்யரூபமாகவோ, உலகத்தாரை அநுஷ்டிக்கச் செய்வதாகிற லோகஸங்க்ரஹத்திற்காகவோ

பெரியோர்கள் செய்தே தீரவேண்டுமென்னும் ஸித்தாந்தத்தை அநுஸரித்து,

பரமகாருணிகரான மாமுனிகள் முற்கூறியபடி அபிகமனம், இஜ்யை முதலான – ஐந்து காலங்களில் செய்யத்தக்க ஐந்து கருமங்களையும் பகவத்கைங்கர்யாதிரூபமாக நாள்தோறும் அநுஷ்டித்து வருவதனாலும்,

‘குருவின் நித்யகர்மாநுஷ்டானங்களையும் ஸிஷ்யன் அநுஸந்திக்கவேண்டும்’ என்னும் ஸாஸ்த்ரத்தை உட்கொண்டும்,

ஆசார்ய பக்தியை முன்னிட்டும் இவ்வெறும்பியப்பா மாமுனிகளைப் பற்றிய திநசர்யா ப்ரபந்தத்தை அருளிச் செய்கிறார்.

ததீயாரதன காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பங்க்தியைப் பாவநமாக்குவது –

பங்க்திபாவநராகிய மாமுனிகளைப் பற்றிய இந்நூலென்பது முன்பே கூறப்பட்டது நினைக்கத்தக்கது.

மேல் ஸ்லோகத்தில் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் சொல்லப்படுவதனால் இக்குருப்பரம்பராநுஸந்தானம் அதற்கு அங்கமாக நினைக்கத்தக்கது;

குருபரம்பரையை த்யானம் செய்யாமல் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் கூடாதாகையால் என்க.

இங்கு குருபரம்பரை என்பது –

பரமபதத்தில் ஆசார்யப்ரீதிக்காகப் பண்ணும் பகவதனுபவமாகிய மோக்ஷமொன்றையே புருஷார்த்தமாகவும்,

ஆசார்ய பர்யந்தமாக எம்பெருமான் ஒருவனையே அதற்கு உபாயமாகவும் உபதேசிக்கிற நம்முடைய ஆசார்யர்களின் பரம்பரையேயாகும். (14)

——————-

த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் |
பர வ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய ச || (15)

பதவுரை:-

தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய,

ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களையும்,

த்யாத்வா – அர்த்தத்துடன் த்யாநம் செய்து,

பர வ்யூஹ ஆதிகாந் – பரம், வ்யூஹம் முதலியனவான,

பத்யு: – ஸர்வ ஜகத்பதியான ஸ்ரீமந் நாராயணனுடைய,

ப்ரகாராந் – ஐந்து நிலைகளை,

ப்ரணிதாய ச – த்யாநம் பண்ணி…

கருத்துரை:-

ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்கள் மூன்று. அவையாவன –

ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே அடிமையாயிருக்கை,

அப்பெருமானையே மோக்ஷோபாயமாகவுடைமை,

அவனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாக)வுடைமை என்கிற இவையாகும்.

திருமந்த்ரத்தில் உள்ள ஒம் நம: நாராயணாய என்னும் மூன்று பதங்களும் முறையே

முற்கூறிய மூன்று வடிவங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டுவதனாலும்,

இதிலுள்ள நம: பதத்தினால் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானை மோக்ஷோபாயமாக அறுதியிடுதலை –

த்வயமந்த்ரத்தின் முற்பகுதியாகிய ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே’ என்ற மூன்று பதங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பதனாலும்,

கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிச்செய்த கீதாசரம ஸ்லோகத்தின் பூர்வார்த்தமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ’ என்பது கண்ணபிரான் ஸ்ரீமந்நாராயணனாகிய தன்னையே மோக்ஷோபாயமாக அறுதியிடும்படி விதித்துள்ளதை ஸ்பஷ்டமாக உணர்த்துவதனாலும்

இம்மூன்று ரஹஸ்யங்களும் ஆத்மஸ்வரூபத்தைக் காட்டும் கண்ணாடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விரிவு ரஹஸ்யங்களில் காணத்தக்கது.

எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன

(1) பரமபதத்தில் நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனுபவித்து நிற்கும் பரத்வநிலை;

(2) ப்ரஹ்மாதிகளின் கூக்குரல் கேட்டு ஆவன செய்வதற்காகத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் வ்யூஹநிலை;

(3) அஸுரராக்ஷஸர்களை கொன்று ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வுலகில் ராமக்ருஷ்ணாதி ரூபமாக அவதரிக்கும் விபவநிலை;

(4) சித்து, அசித்து எல்லாப்பொருள்களின் உள்ளும், புறமும் ஸ்வரூபத்தினால் வ்யாபித்து நிற்பதும், ஜ்ஞாநிகளுடைய ஹ்ருதய கமலங்களில் அவர்களுடைய த்யானத்திற்கு இலக்காவதற்காக திவ்யமான திருமேனியோடு நிற்பதுமாகிய அந்தர்யாமி நிலை;

(5) இந்நிலை நான்கினைப்போல துர்லபமாகாமல், அறிவும் ஆற்றலும் குறைந்த நாமிருக்கும் இடத்தில், நாமிருக்கும் காலத்தில், நம்முடைய ஊனக்கண்களுக்கும் இலக்காகும்படி கோவில்களிலும், வீடுகளிலும், நாமுகந்த சிலை செம்பு முதலியவற்றாலான பிம்பவடிவாகிய திருமேனியோடு கூடியிருக்கும் அர்ச்சை நிலை என்பனவேயாகும்.

இவையேயன்றி ஆசார்யனாகிய ஆறாவது நிலையும் ஒன்று உண்டு.

பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து (பெரியாழ்.திரு.5-2-8) என்று பீதாம்பரம் தரித்த எம்பெருமானே ப்ரஹ்மத்தை உபதேஸிக்கும் ஆசார்யனாக அவதரிப்பதனை ஆழ்வார் அருளிச்செய்வதனால் என்க.

இதனால் குருபரம்பரை முன்னாக, எம்பெருமானுடைய இவ்வாறு நிலைகளையும் மாமுனிகள்

பின்மாலையில் அநுஸந்திக்கிறாரென்பது இதனால் கூறப்பட்டதாயிற்று. (15)

——————-

தத: ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீ: க்ரியா: |
யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா || (16)

பதவுரை:-

தத: – அதற்குப்பின்பு,

ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில்,

ஸ்நாத்வா – நீராடி,

பௌர்வாஹ்ணிகீ: – காலையில் செய்யவேண்டிய,

க்ரியா: – ஸுத்தவஸ்த்ரம் தரித்தல், ஸ்ந்த்யாவந்தனம் செய்தல் முதலிய காரியங்களை,

யதீந்த்ர சரணத்வந்த்வ ப்ரவணேந ஏவ – யதிராஜரான எம்பெருமானாருடைய திருவடியிணையில் தமக்குள்ள பரமபக்தியொன்றையே கொண்ட,

சேதஸா – மனஸ்ஸுடன்,

க்ருத்வா – செய்து.

கருத்துரை:-

ப்ரத்யுஷ: – அருணோதயகாலம். அதாவது

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள நான்கு நாழிகைக் காலமாகும்.

இக்காலம் முன்பு கூறப்பட்ட – இரவின் நான்காவது யாமத்தின் கண் உள்ள ஏழரை நாழிகையில் முதல் மூன்றரை நாழிகை கழிந்தவுடன் பின்பு உண்டான நான்கு நாழிகைகாலமாகும்.

இந்த ஸ்லோகத்தில் கூறிய ஸ்நாநத்திற்கும், முன் ஸ்லோகத்தில் குறிக்கப்பட்ட குருபரம்பரை, எம்பெருமானுடைய ஆறுநிலைகள் ஆகிய இவற்றின் த்யானத்திற்கும் இடையில் நேரும் தேஹஸுத்தி தந்தஸுத்தி ஆகிய இவற்றையும் கொள்ளல் தகும்.

முன்பு ஆறு, ஏழு, எட்டாம் ஸ்லோகங்களில் குறிப்பிட்டபடி காஷாயங்களை உடுத்துதல், திருமண்காப்பு அணிதல், தாமரை மணிமாலை, துளஸிமணி மாலைகளை தரித்தல் ஆகியவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்வது உசிதம்.

ஆசார்யனையே எல்லாவுறவுமுறையாகவும் கொண்டுள்ள ஸிஷ்யர்கள், ‘

எம்பெருமானே ஆசார்யனாக அவதரிக்கிறான்’ என்ற சாஸ்த்ரத்தின்படி ஆசார்ய ரூபத்தில் உள்ள

எம்பெருமானுடைய திருமுகமலர்ச்சிக்காகவே நித்யநைமித்திக கருமங்களாகிய கைங்கர்யங்களைச் செய்ய வேண்டியிருப்பதனால்,

மாமுனிகள் அவற்றை எம்பெருமானார் திருவடிகளிலுண்டான பக்தி நிறைந்த மனஸ்ஸுடன் அநுஷ்டித்தமை இங்குக் குறிக்கப்பட்டது. (16)

—————–

அத ரங்கநிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் |
ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோதயித்வா பதத்வயம் || (17)

பதவுரை:-

அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு,

நிஜம் – தம்முடைய ஆராதனைக்கு உரியவராய்,

ப்ரபும் – ஸ்வாமியான,

ரங்கநிதிம் – (தமது மடத்தில் எழுந்தருளியுள்ள) ஸ்ரீரங்கத்துக்கு நிதி போன்ற அரங்கநகரப்பனை,

ஸம்யக் அபிகம்ய – முறைப்படி பக்தியோடு கிட்டித் தண்டன் ஸமர்ப்பித்து,

ஸ்ரீநிதாநம் – கைங்கர்யமான செல்வத்துக்கு இருப்பிடமான,

தஸ்ய பதத்வயம் – அப்பெருமானுடைய திருவடியிணையை,

சநை: – பரபரப்பில்லாமல் (ஊக்கத்தோடு)

சோதயித்வா – தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து (திருவாராதனம் செய்து).

கருத்துரை:-

சாண்டிலஸ்ம்ருதியில், ஸ்நாநத்துக்குப் பின்பு பகவானை அபிகமனம் செய்வது (கிட்டுவது) பற்றிக் கூறப்பட்டுள்ளது.

‘பகவானை அபிகமனம் செய்யவேண்டும். (எப்படியெனில்) நன்றாக நீராடித் திருமண்காப்புகளையணிந்து,

கால்களை அலம்பி, ஆசமநம் செய்து, பொறிகளையும் மனத்தையும் அடக்கி, இரண்டந்திப்பொழுதுகளிலும்,

தினந்தோறும் முறையே காலையில் சூரியன் தோன்றும் வரையிலும், இரவில் நக்ஷத்திரங்கள் தோன்றும் வரையிலும்

மந்த்ரங்களை ஜபித்துக்கொண்டேயிருந்து

அதன் பிறகு பகவானை அபிகமனம் (திருவாராதனத்திற்காகக் கிட்டுதல்) செய்யவேண்டும்’ என்பது சாண்டில்ய ஸ்ம்ருதிவசநம்.

இங்கு ரங்கநிதியின் திருவடி ஸோதனம் கூறியது திருவாராதனம் முழுவதற்கும் உபலக்ஷணமென்று கொள்ளல்தகும்.

இங்கும் முன்புகூறிய யதீந்த்ரசரண பக்தி தொடருவதனால், தம்முடைய அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்வதும்,

தம்முடைய ஆசார்யராகிய எம்பெருமானார்க்கு, அவ்வப்பன் உகந்தபெருமானாகையாலே என்று கொள்ளல் பொருந்தும்.

பரதனுடைய பக்தரான ஸத்ருக்னாழ்வான், பரதனுக்கு ஸ்வாமியாகிய ஸ்ரீராமபிரானை, பரதாழ்வானுடைய

உகப்புக்காகவே நினைத்துக் கொண்டிருந்தது போல் இது தன்னைக் கொள்க… (17)

——————-

ததஸ்தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் |
ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாதமதுரஸ்மிதம் || (18)

பதவுரை:-

தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு,

தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய்,

ப்ராங்முகம் – கிழக்கு முகமாக,

ஸுகம் – ஸுகமாக (மனத்தின் ஒருமைப்பாட்டிற்கு அநுகூலமாக),

ஆஸீநம் – உட்கார்ந்திருக்குமவரும்,

ப்ரஸாத மதுரஸ்மிதம் – மனத்திலுள்ள தெளிவினால் உண்டான இனிய புன்சிரிப்பையுடையவருமாய்…

கருத்துரை:-

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவதாராதனத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய த்வயமந்த்ர ஜபத்தையும் உபலக்ஷணவகையால் கொள்க;

அதுவும் நித்யாநுஷ்டானத்தில் சேர்ந்ததாகையால். ‘முக்காலங்களிலும் பெருமாள் திருவாராதனம் செய்தபிறகு,

சோம்பலில்லாதவனாய்க்கொண்டு, ஆயிரத்தெட்டுதடவைகள் அல்லது நூற்றெட்டுத் தடவைகள்

அதுவும் இயலாவிடில் இருபத்தெட்டு தடவைகள் மந்த்ரரத்நமென்னும் த்வய மந்த்ரத்தை அர்த்தத்துடன்,

தன் ஜீவித காலமுள்ளவரையில் அநுஸந்திக்கவேண்டும் என்று பராசரர் பணித்தது காணத்தக்கது.

இப்படி மந்த்ர ஜபம் செய்யும்போதும் மாமுனிகளின் மனம் ஆசார்யரான எம்பெருமானாருடைய திருவடிகளில்

ஒன்றி நிற்குமென்பதையும் நினைவில் கொள்ளவேணும்;

மாமுனிகள் ஆசார்ய பரதந்த்ரராகையால் என்க. மாமுனிகள் திருவுள்ளத்தில் கலக்கமேதுமின்றித் தெளிவுடையவராகையால்,

அவரது திருமுகத்தில் சிரிப்பும் அழகியதாயிருக்கிறதென்றபடி. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமிறே.

நற்காரியங்களைச் செய்யும் போது கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து செய்யவேணுமென்று

சாஸ்த்ரம் சொல்லுவதனால், ‘ப்ராங்முகம் ஸுகமாஸீநம்’ எனப்பட்டது. (18)

——————-

ப்ருத்யை: ப்ரியஹிதைகாக்ரை: ப்ரேமபூர்வமுபாஸிதம் |
தத்ப்ரார்த்தநாநுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே || (19)

பதவுரை:-

ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை ஸம்பாதிப்பதில் ஒருமித்த மநஸ்ஸையுடைய,

ப்ருத்யை: – கோயிலண்ணன் முதலான ஸிஷ்யர்களாலே,

ப்ரேமபூர்வம் – அன்போடுகூட,

உபாஸிதம் – முற்கூறியபடி ப்ரியமாயும், ஹிதமாயுமுள்ள பகவதாராதனத்திற்கு உரிய பொருள்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்துப் ப்ரிசர்யை (அடிமை) செய்யப் பெற்றவராய்க் கொண்டு,

தத் ப்ரார்த்தநா அநுஸாரேண – அச்சிஷ்யர்களுடைய வேண்டுகோளை அநுஸரிக்க வேண்டியிருப்பதனால் (அவர்களுடைய புருஷகாரபலத்தினால்),

மே – (முன் தினத்திலேயே தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த) அடியேனுக்கு,

ஸம்ஸ்காராந் – தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் என்ற ஐந்து ஸம்ஸ்காரங்களை,

ஸம்விதாய – நன்றாக (ஸாஸ்த்ர முறைப்படியே) ஒருகாலே செய்து…

கருத்துரை:-

முன்கூறியபடியே பெருமாள் ஸந்நிதியில் உள்ள கம்பத்தின் கீழ்ப்பகுதியில் மாமுனிகள் எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில்,

அந்தரங்க ஸிஷ்யர்கள் பெருமாள் திருவாராதனத்திற்கு வேண்டியதாய் ஸாஸ்த்ர விரோதமில்லாத

அரிசி, பருப்பு, பழம், பால், தயிர், கறியமுது முதலிய வஸ்துக்களை பக்தியுடன் கொண்டுவந்து எதிரில் ஸமர்ப்பித்துப்

பணிவிடை செய்ய அவற்றை அவர் அங்கீகரித்தருளினார்.

‘மாடாபத்யம் யதி: குர்யாத் விஷ்ணுதர்மாபிவ்ருத்தயே’ [யதியானவர் வைஷ்ணவமான தர்மங்களை

(பஞ்சஸம்ஸ்காரம், உபயவேதாந்த ரஹஸ்யக்ரந்த ப்ரவசநம், அவற்றில் கூறியபடி ஸிஷ்யர்களை அநுஷ்டிக்கச் செய்தல் தொடக்கமானவற்றை) மேன்மேலும் வளர்ப்பதற்காக, மடத்தின் அதிபதியாயிருத்தலை ஏற்றுக்கொள்ளக் கடவர்] என்று

பராஸரஸம்ஹிதையிலுள்ளபடியே மாமுனிகள் மடாதிபதியாக அழகியமணவாளனாலே நியமிக்கப்பட்டாராகையாலே

கோயில் கந்தாடையண்ணன் முதலிய பல மஹான்கள் அவருக்கு ஸிஷ்யர்களாகி, வைஷ்ணவ ததீயாராதனம் நடக்கும்

அம்மடத்தில் பெருமாள் திருவாராதனத்திற்கு உதவும்படி வஸ்துக்களை ஸமர்ப்பிப்பதும்

மாமுனிகள் அவற்றை அங்கீகரிப்பதும் யுக்தமேயாகுமென்க.

முற்கூறப்பட்ட ஸிஷ்யர் பெருமக்கள் மாமுனிகள் ஸந்நிதியில், புதிதாக வந்து முதல்நாள் சேர்ந்த தமக்கு

(எறும்பியப்பாவான தமக்கு) பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளும்படி ப்ரார்த்தித்தார்களாம்.

அவர்கள் மிகவும் வேண்டியவர்களாகையால் அவர்கள் செய்த ப்ரார்த்தனையைத் தட்டாமல் மாமுனிகள் அப்படியே செய்தாராம்.

அதனைக் குறிப்பிடுகிறார். பின்னிரண்டடிகளில்

‘ஒரு வருஷகாலம் ஆசார்யனை உபாஸிக்கவேண்டுமென்றும், அப்படியுபாஸித்த ஸிஷ்யனுக்கே ஆசார்யன் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்யவேண்டுமென்றும் சாஸ்த்ரம் கட்டளையிடாநிற்கவும்,

மாமுனிகள் அப்பாவிற்கு வந்த மறுநாளே செய்தது குற்றத்தின் பாற்படாது;

அந்தரங்கஸிஷ்யர்களின் ப்ரார்த்தனை – அந்த சாஸ்த்ரத்தைவிட பலமுடையதாகையாலென்க.

பெருமாள் திருவாராதநம் முடிந்த பிறகு இப்பஞ்சஸம்ஸ்காரங்கள் நடைபெற்ற விஷயம்

‘ஆசார்யன் நன்னாளில் காலையில் நீராடி எம்பெருமானுக்கு முறைப்படி திருவாராதனம் செய்து,

தீர்த்தமாடி அநுஷ்டாநம் முடித்து வந்த ஸிஷ்யனை அழைத்து, அவன் கையில் கங்கணம் கட்டி முறைப்படியே

பஞ்சஸம்ஸ்காரங்களையும் செய்யக்கடவன்’ என்றுள்ள பராஸரவசநத்தோடு பொருந்தும்.

அடுத்த ஸ்லோகத்தில் அப்பா செய்யும் யாகமாக (தேவபூஜையாக) மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரித்தலும்,

அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் த்வய மந்த்ரோபதேஸமும், கூறப்படுகிறபடியால்

இந்த ஸ்லோகத்தில் தாபமென்கிற சங்கு, சக்கரப் பொறிகளை இரண்டு தோள்களில் ஒற்றிக்கொள்ளுதலும்,

புண்ட்ரமென்னும் பன்னிரண்டு திருமண்காப்புக்களை அணிதலும்,

ராமாநுஜதாஸன் முதலிய நாமந்தரித்தலும் ஆகிய மூன்று ஸம்ஸ்காரங்களே கொள்ளத்தக்கன.

ஸம்ஸ்காரமாவது – ஒருவனுக்கு ஸ்ரீவைஷ்ணவனாகும் தகுதிபெறுவதற்காக ஆசார்யன் செய்யும் நற்காரியம்.

ஸம்ஸ்காரம் – பண்படுத்தல் – சீர்படுத்தல். (19)

———————-

அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் |
திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20

பதவுரை:-

அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால்,

அபிஷேசந பூர்வகம் – அடியேனை (துன்பமென்னும் தாபம் தீரும்படி) முதலில் முழுக்காட்டி அப்புறமாக,

தீர்க்கம் – வெகுநேரம்,

ப்ரணமத: – பக்தியினால் தெண்டனிட்டு அப்படியே கிடக்கிற,

மம – அடியேனுக்கு,

திவ்யம் – மிகவும் உயர்ந்த,

பதத்வயம் – திருவடியிணையை,

தத்வா – தலையில் வைத்து.

கருத்துரை:-

மாமுனிகள் – தம்முடைய தாபமெல்லாம் தீரும்படி குளிரக்கடாக்ஷித்து, ஒரு தடவை தண்டம் ஸமர்ப்பித்து

பக்திப்பெருக்கினால் அப்படியே வெகுநேரம் கிடக்கிற தம்முடைய ஸிரஸ்ஸில் திருவடிகளை வைத்தருளினாரென்கிறார்.

ஒருவன் துன்பத்தால் நடுங்காநிற்க, அதுகண்டு தானும் துன்பமுற்று நடுங்குதலே அநுகம்பா என்பது.

தயையென்பது இதன்பொருள். ‘க்ருபாதயா அநுகம்பா’ என்ற அமரகோஸம் காணத்தக்கது.

‘க்ருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரம் ஒன்றேயாக இருந்தாலும்

அது பத்து அஸ்வமேதயாகங்கள் செய்து முடித்தாலொத்த பெருமையைப் பெறும்.

பத்துத் தடவைகள் அஸ்வமேதயாகம் செய்தவன் அதன் பயனாக ஸ்வர்க்கபோகத்தை அநுபவித்துவிட்டு

மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்புவது நிஸ்சயம். க்ருஷ்ண நமஸ்காரம் செய்தவனோ என்றால்

பரமபதம் சென்று, மறுபடியும் இவ்வுலகில் பிறவியெடுக்க மாட்டான் (விஷ்ணுதர்மம் 4-36) என்பது இங்கு கருதத்தக்கது.

பகவானுக்குச் செய்யும் ப்ரணாமமே இப்படியானால், ஆசார்யனைக்குறித்துப் பண்ணும் ப்ரணாமத்தைத்

தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை.

திவ்யம் பதத்வயம் – பகவானுடைய திருவடியிணையை விட உயர்ந்தது ஆசார்யனுடைய திருவடியிணையென்றபடி.

ஸம்ஸாரமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான காரணமாகிய பகவத் ஸம்பந்தத்தைவிட,

மோக்ஷத்திற்கே காரணமான ஆசார்யஸம்பந்தம் உயர்ந்ததென்று கூறும் ஸ்ரீவசநபூஷணம் (433 சூர்ணிகை) ஸேவிக்கத்தக்கது. (20)

——————

ஸாக்ஷாத் பலைகலக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் |
மந்த்ரரத்நம் ப்ரயச்சந்தம் வந்தே வரவரம் முநிம் || 21

பதவுரை:-

ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி

பவித்ரிதம் – முக்கிய நோக்கமுடைமையைத் தாம் நினைப்பதனாலே பரிஸுத்தியை உடையதாகும்படியாக,

மந்த்ரரத்நம் – மந்த்ரரத்நமாகிய த்வயமந்த்ரத்தை,

ப்ரயச்சந்தம் – உபதேஸித்துக்கொண்டிருக்கிற,

வரவரம்முநிம் – அழகியமணவாளரென்னும் முனிவரை,

வந்தே – வணங்குகிறேன்.

கருத்துரை:-

மணவாளமாமுனிகள் – தாம் ஸிஷ்யர்களுக்குச் செய்யும் த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாக நினைப்பது

உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் திருந்தி பகவந் மங்களாஸாஸநம் செய்வதொன்றையே.

அப்படி அவர் நினைத்தால்தான் அவர் செய்யும் உபதேஸம் தூய்மையுடையதாகும்.

ஆகையால் அங்ஙனமே அவர் நினைத்துத் தமக்கு த்வயமந்த்ரத்தை ஸுத்தோபதேஸமாகும்படி

உபதேஸித்தாரென்று இதனால் தெரிவித்தாராயிற்று.

முற்கூறியபடி நினையாமல்,

(1) பணம், பணிவிடைகள் முதலிய உலகில் காணும் பலனையோ,

(2) ஸிஷ்யன் மோக்ஷம் பெறுதலையோ,

(3) தான் ஒரு ஸிஷ்யனைத் திருத்தி அதனால் பகவானுக்குச் செய்யும் கைங்கர்யத்தையோ,

(4) தன்னுடைய தனிமை தீரும்படி தன்னோடு ஸிஷ்யன் கூடியிருக்கையாகிற ஸஹவாஸத்தையோ பலனாக நினைத்து த்வயத்தை உபதேஸித்தால், அவ்வுபதேஸத்திற்கு தூய்மை குறையுமென்று ஸூசிப்பித்தபடி இது.

இங்கு – ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள்களில் தேஹயாத்ரைக்கு பணமோ பணிவிடையோ தேவைப்படாதா?

ஸிஷ்யன் மோக்ஷம் பெறவேண்டாமா? இங்கிருக்கும் நாள்களில் ஆசார்யன் பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டாமா?

நல்ல ஸிஷ்யனோடு ஸஹவாஸம் ஆசார்யனுக்கு வாய்க்கவேண்டாமா? இவையெல்லாம் நல்லவையேயன்றித் தீயனவல்லவே?

இவற்றைப் பயனாகக்கருதி ஆசார்யன் செய்யும் த்வயோபதேஸம் தூய்மை குன்றப்பெறுவது எப்படி? என்று ஒரு கேள்வி எழுவது இயற்கையே.

அதற்கு – ஆசார்யன் விஷயத்தில் ஸிஷ்யனுக்கு உள்ள ஷேஷத்வம்(அடிமையாந்தன்மை) ஏதோ இயன்ற வரையில்

சிறிது தநம் ஸமர்ப்பித்துப் பணிவிடை செய்தாலன்றி நிலைபெறாதென்று நினைக்கும் ஸிஷ்யனது நினைவால் முதற்பயன் ஸித்திக்கும்.

யாராவது ஒருவன் மோக்ஷம் பெற்று நம்மிடம் வருவானா என்று நினைத்து அதற்கு உறுப்பாக ஒரு ஸிஷ்யனை

ஓராசார்யனோடு சேர்த்து த்வயோபதேஸம் பெற்றவனாக ஆக்கிய எம்பெருமானுடைய நினைவாலே ஸிஷ்யனுக்கு மோக்ஷம் ஸித்திக்கும்.

‘இவன் (நம்ஸிஷ்யன்) நல்ல உபதேஸங்களைச் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு ஆளாம்படி ஒரு ஸிஷ்யனைத் திருத்துவது பகவான் திருவுள்ளத்திற்கு மிகவும் உகப்பாகையாலே இது பகவத் கைங்கர்யமன்றோ?’ என்று நினைத்திருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே, ஆசார்யனுக்கு பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும்.

வெகுகாலமாக ‘யான், எனது’ என்னும் அஹங்கார மமகாரங்களாலே ஸத்தையை இழந்து கிடந்த நம்மை ஹிதோபதேஸம் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு உரியவனாக்கிய மஹோபகாரகனை நாம் ஒரு நாளும் விட்டுப் பிரியக்கூடாதென்று நினைத்திருக்கும் ஸிஷ்யனது க்ருதஜ்ஞதையாலே (செய்ந்நன்றி மறவாமையாலே) ஸிஷ்யனோடு ஆசார்யனுக்கு ஸஹவாஸம் ஸித்திக்கும்.

ஆகையால் ஆசார்யன் தான் ஸிஷ்யனுக்கு செய்யும் த்வயோபதேஸத்தை தன்னடையே ஸித்திக்கும்

இந்நான்கினையும் பயனாக நினையாமல், பகவந்மங்களாஸாஸநமொன்றையே பயனாக நினைத்து,

ஸுத்தமாகச் செய்யவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி மாமுனிகள் அங்ஙனமே

தமக்கு த்வயமந்த்ரோபதேஸம் செய்தருளியதை இதனால் அறிவித்தாராயிற்று.

இம்மந்த்ரோபதேஸத்தையும் மாமுனிகள் எம்பெருமானாருடைய திருவடிகளையே த்யாநித்துக்கொண்டு செய்தாரென்று கொள்ளவேணும்;

நம்முடைய ஆசார்ய கோஷ்டியில் எம்பெருமானார் மிகச் சிறந்தவராகையால் என்க.

குருபரம்பரையை அநுஸந்தித்தே த்வயத்தை அநுஸந்திக்கவேண்டிய நிர்ப்பந்தமுள்ளபடியினால்

‘யதீந்த்ர ஸரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று முன்பு கூறப்பட்ட எம்பெருமானாரைப்பற்றிய

அநுஸந்தாநம் தொடர்ந்து வருவதனால் அது அவர்க்கு முன்னும் பின்னுமுள்ள ஸகலாசார்யபரம்பரைக்கும் உபலக்ஷணமாய் நின்று,

அதை நினைப்பூட்டுகிறதென்பது கருத்து.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஷ்டிக்கத்தக்க அபிகமநம், உபாதாநம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் ஆகிய ஐந்து அம்ஸங்களில்,

எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தலாகிய உபாதாநமென்பது,

இங்கு மாமுனிகள் த்வயோபதேஸத்தின் வாயிலாக இந்நூலாசிரியராகிய அப்பாவை ஸிஷ்யராக ஏற்று,

எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய சேதநத்ரவ்யமாகச் சேகரித்தல்

ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டதனால் அநுஷ்டிக்கப்பட்டதாயிற்று.

இது முன்பே ‘ஆத்மலாபாத் பரம்கிஞ்சித்’ என்ற பதினோராவது ஸ்லோகத்தில்

ஸூசிக்கப்பட்டதென்பது நினைவில் கொள்ளத்தக்கது. (21)

——————-

ததஸ்ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர்நித்யாநபாயிபி: |
ஸ்ரீரங்கமங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் || 22

பதவுரை:-

தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு,

ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய்,

புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய்,

புருஷம் – புருஷோத்தமராகிய பெரியபெருமாளை,

த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,

நித்ய அநபாயிபி: ப்ருத்யை: ஸார்த்தம் – ஒருகணமும் விட்டுப்பிரியாத கோயிலண்ணன் முதலிய அடியவர்களுடன் கூடி,

விநிர்க்கத்ய – தமது மடத்திலிருந்து புறப்பட்டு.

கருத்துரை:-

இயற்கையாகவே பெருமையைப் பெற்ற பொருளைக்காட்டுகிற ஸ்ரீஸப்தம் இங்கு ரங்கநகரத்திற்கு அடைமொழியாயிற்று.

ஸ்ரீயாகிற ரங்கம் – ஸ்ரீரங்கமென்றபடி. பெரியபெருமாள் பள்ளி கொண்டதனால் அரங்கத்திற்குப் பெருமை ஏற்படவில்லை.

பின்னையோவென்னில்

எல்லார்க்கும் பெருமையை உண்டாக்கும் பெரியபெருமாளும் தமக்கு ஒரு பெருமையைத் தேடிக்கொள்வதற்காகவே

வந்து சேரும்படிக்கீடாக இயற்கையான பெருமைவாய்க்கப்பெற்றது அரங்கநகரமென்பது இவ்வடைமொழிக்குக் கருத்து.

‘க்ஷீராப்தேர் மண்டலாத் பாநோர் யோகிநாம் ஹ்ருதயாதபி, ரதிம் கதோஹரிர்யத்ர தஸ்மாத் ரங்கமிதி ஸ்ம்ருதம்’

(எம்பெருமான் திருப்பாற்கடல், ஸூர்யமண்டலம், யோகிகளின் ஹ்ருதயம் ஆகியவற்றைவிட அதிகமான

ஆசையைப்பெற்ற இடமாதல் பற்றி இந்நகரம் ரங்கமென்று கருதப்பட்டது) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

இக்கருத்து எம்பெருமானுடைய நினைவைத் தழுவிக் கூறப்பட்டதாகும்.

நம்முடைய நினைவின்படி – மேல் ‘ஸ்ரீரங்கமங்களம்’ என்று ஸ்ரீரங்கநகருக்கும் அணிசெய்பவராக –

பெருமையைத் தருமவராக எம்பெருமான் கூறப்படுவதும் கண்டு அநுபவிக்கவுரியதாகும்.

இயற்கையாகவே பெருமைபெற்ற இரண்டு பொருள்களும் தம்மில் ஒன்று மற்றொன்றுக்குப்

பெருமை தருமவையாகவும் உள்ளனவென்பது உண்மையுரையாகும்.

(1) புருஷ: – புரதி இதி புருஷ: என்பது முதல் வ்யுத்பத்தி. ‘புர-அக்ரகமநே’ என்ற தாதுவடியாகப் பிறந்த புருஷ

ஸப்தத்திற்கு உலகமுண்டாவதற்கு முன்பே இருந்த எம்பெருமான் பொருளாகையால்

அப்பெருமானுக்கு உண்டான ஜகத்காரணத்வம் இந்த வ்யுத்பத்தியாலே குறிக்கப்பட்டது.

(2) புரீ ஸேதே இதி புருஷ: என்பது இரண்டாவது வ்யுத்பத்தி.

ஜீவாத்மாக்களுடைய ஸரீரத்தில் (இதயகுகையில்) தங்கியிருப்பவனென்பது இதன் பொருளாகையால்

அந்தர்யாமித்வம் இதனால் குறிக்கப்பட்டது.

(3) புரு ஸநோதி இதி புருஷ: என்பது மூன்றாவது வ்யுத்பத்தி. அதிகமாகக் கொடுப்பவனென்பது இதற்குப் பொருளாகையால்,

கேட்பவர் கேட்கும் மற்ற பொருள்களோடு தன்னோடு வாசியில்லாமல் எல்லா வபேக்ஷிதங்களையும்

தந்தருளும் ஔதார்யம் இதனால் குறிக்கப்பட்டது.

இம்மூன்று பொருள்களும் அழகியமணவாளப் பெருமாள் திறத்தில் பொருந்துமவையேயாம்.

ஆதிஸேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது பரம்பொருளின் லக்ஷணமென்பர் பெரியோர்.

ஸ்ரீரங்கமங்களமாய் புருஷஸப்தவாச்யனாய் புஜகஸயனனாயிருக்கிற எம்பெருமானை மணவாளமாமுனிகள் ஸேவிப்பது

எம்பெருமானாருடைய திருவுள்ளவுகப்புக்காகவேயன்றி வேறொன்றுக்காகவல்ல என்பதும் இங்கு நினைக்கத்தக்கது.

‘நித்யநபாயிபி: ப்ருத்யை:’ – ஒருக்ஷணமும் விட்டு நீங்காத ஸிஷ்யர்கள் என்றபடி. ஒருமனிதனைவிட்டு நீங்காதது

அவனுடைய நிழலேயன்றி வேறொன்றில்லையென்பர் உலகோர்.

நிழல் கூட இருளில் மனிதனைவிட்டு நீங்கும்.

மாமுனிகளின் ஸிஷ்யர்கள் அவரை இருளிலும் விட்டு நீங்காத பெருமையைப் பெற்றவர்கள் என்கிறார் அண்ணாவப்பங்கார்ஸ்வாமி.

இதனால் மாமுனிகள் விஷயத்தில் ஸிஷ்யர்கள் வைத்திருக்கும் பக்தியின் பெருமை கூறப்பட்டது. (22)

—————-

மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் |
ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் || 23

பதவுரை:-

ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும்,

மஹதி – மிகப்பரந்ததுமான,

த்வாரே – கோவிலுக்குச் செல்லும் வழியில்,

சதுராநநம் – நான்முகனென்று சொல்லப்படுகிற,

கோபுரம் – கோபுரத்தை,

ப்ரணிபத்ய – மனமொழிமெய்களால் வணங்கி,

ஸநை: – மெல்ல (கோபுரத்தின் அழகை அநுபவித்து மகிழ்ந்திருக்கும் தம் கண்களை வருத்தப்பட்டு மெல்லத் திருப்பி)

அந்த: – கோவிலுக்குள்ளே,

ப்ரவிஸந்தம் – எழுந்தருள்கின்ற,

தம் – அந்த மணவாள மாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

ஸ்ரீமதி, மஹதி என்பன நான்முகன் கோட்டைவாசலென்று ப்ரஸித்தமான கோவில் வாசலுக்கு அடைமொழிகள்.

ப்ரஹ்மாதிகளும் இவ்வாசலில் புகுந்தமாத்திரத்தால் ஸகலைஸ்வர்யங்களையும் பெறும்படிக்கீடான

ஐஸ்வர்யம் மலிந்திருக்கப் பெற்றுள்ளமையும், ஸ்ரீரங்கநாதன் தன்னடியாரெல்லாரோடும் கூடி

இவ்வாசலில் ப்ரவேஸித்தாலும் நிரப்ப முடியாதபடி இருக்கும். இதன் விஸாலத்தன்மையும் முறையே இவற்றால் குறிக்கப்படுகின்றன.

சதுராநநம் கோபுரம் – இக்கோபுரம் நான்முகன் கோபுரமென்று வழங்கப்படுகிறது. தெண்டன்

ஸமர்ப்பிப்பதை மனத்தினால் நினைத்தும், ‘அடியேன் தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்று வாயால் சொல்லியும்,

ஸாஷ்டாங்கமாகத் தரையில் படுத்தும் தெண்டனிடுவதை ‘ப்ரணிபத்ய’ என்ற சொல் தெரிவிக்கிறது. (23)

—————–

தேவீ கோதா யதிபதிஸடத்வேஷிணௌரங்கஸ்ருங்கம்
ஸேநாநாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்துகந்யா |
பூமாநீளா குருஜநவ்ருத: புருஷச்சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 24

பதவுரை:-

தேவீ கோதா – தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள்,

யதிபதி சடத்வேஷிணௌ – யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார்,

ரங்கஸ்ருங்கம் – ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய மேற்பகுதியான விமாநம்,

ஸேநாநாத: – ஸேனைமுதலியார்,

விஹகவ்ருஷப: – பக்ஷிராஜரான கருடாழ்வார்,

ஸ்ரீநிதி – ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன்,

ஸிந்துகந்யா – திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார்,

பூமா நீளா குருஜந வ்ருத: – பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன, நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, புருஷ:

ச – பரமபதநாதன்,

இதிஅமீஷாம் அக்ரே – என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில்,

வரவரமுநே: – மணவாளமாமுனிகளுடைய, அங்க்ரியுக்மம் – திருவடியிணையை,

நித்யம் – தினந்தோறும்,

ப்ரபத்யே – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

மணவாளமாமுனிகள் நான்முகன் கோட்டைவாயில் வழியாக உள்ளே ப்ரதக்ஷிணமாக எழுந்தருளும் க்ரமத்தில்

ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமாநம், ஸேனைமுதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார்

இவர்களையும், பின்பு பரமபதநாதன் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள் ஸ்ரீபூமிநீளைகளோடும் நம்மாழ்வார் தொடக்கமான

ஆழ்வார்களனைவரோடும் கூடிய பரமபதநாதனையும் ஸேவித்துவிட்டு எழுந்தருளும்போது,

ஒவ்வொரு ஸந்நிதி வாசலிலும் தாம் அவர்களை ஸேவியாமல் மணவாளமாமுனிகளை ஸேவிப்பதாக

எறும்பியப்பா இதனால் அருளிச் செய்கிறார். ஏன்?

அவர்களை இவர் ஸேவிப்பதில்லையோ என்றால்

அவர்களை இவர் தமக்கு ருசித்தவர்களென்று ஸேவியாமல், தம்முடைய ஆச்சார்யராகிய மணவாள மாமுனிகளுக்கு

இஷ்டமானவர்களென்ற நினைவோடே ஸேவிக்கிறாராகையால், அப்படி இவர் அவர்களை ஸேவிப்பதைப்பற்றி இங்குக் குறிப்பிடவில்லை.

எறும்பியப்பா தமக்கு ருசித்தவரென்ற காரணத்தினால் ஸேவிப்பது மாமுனிகளொருவரையேயாகும்;

இவர் ஆசார்யபரதந்த்ரராகையால் என்க.

‘எம்பெருமானை ஸேவிக்கும்போது அர்ச்சாரூபிகளாக எழுந்தருளியுள்ள அவனுடைய பரிவாரங்களையும்

பக்தர்களையும் ஆசார்யர்களையும் பரமபக்தியோடு நன்றாக ஸேவிக்கவேண்டும்’ என்கிற பரத்வாஜவசனத்தையொட்டி,

மாமுனிகள் ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்கும்போது ஆண்டாள் தொடக்கமான பக்தஜநங்களையும் ஸேனைமுதலியார்

தொடக்கமான பரிவாரங்களையும் நன்றாக ஸேவித்தது இதனால் கூறப்பட்டது.

ஆண்டாள் ‘அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம!’ (புருஷ ஸ்ரேஷ்டரே! நான் உமக்கு ஸிஷ்யையாகவும்,

அடியவளாகவும், பக்தையாகவும் இருக்கிறேன்) என்று வராஹப் பெருமாளிடம் விண்ணப்பித்த

பூமிதேவியின் அவதாரமாகையால் பக்தையாகவும், ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவளாகையால் குர்வீயாகவும் ஆவது காணத்தகும்.

ஸ்ரீபூமிநீளாதேவிகள், பெரிய பிராட்டியாராகிய ஸ்ரீரங்கநாச்சியார் இவர்கள் பத்நி வர்க்கத்தில் சேர்ந்தவர்கள்.

ஆக மணவாளமாமுனிகள் பத்நீ பரிஜந குருஜநஸஹிதரான ஸ்ரீரங்கநாதனை மங்களாசாசனம் செய்து வருவதையும்

தாம் அம்மாமுனிகளை அவர்களெதிரில் தினந்தோறும் ஸேவிப்பதையும் இதனால் கூறினாராயிற்று. (24)

——————–

மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் |
தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25

பதவுரை:-

தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார விஷயங்களில்,

மங்கள் ஆஸாஸநம் – (உள்ள குறைகளனைத்தும் நீங்கப்பெற்று) மேன்மேலும் எல்லையில்லாத மங்களங்கள் (நன்மைகள்) உண்டாக வேணுமென்னும் ப்ரார்த்தனையை,

யதோசிதம் – அவ்வவ்விஷயங்களில் தமக்கு உண்டான ப்ரீதிக்குத் தக்கபடி,

க்ருத்வா – செய்துவிட்டு ,

தஸ்மாத் தாம்ந – அந்த ஸந்நிதியிலிருந்து,

விநிஷ்க்ரம்ய – வருந்திப்புறப்பட்டருளி,

ஸ்வம்நிகேதநம் – தம்முடையதான மடத்திற்குள்,

ப்ரவிஸ்ய – ப்ரவேஸித்து (உட்புகுந்து)

கருத்துரை:-

மாமுனிகள் ஆண்டாள் முதலியவர்களின் ஸந்நிதிக்குச் செல்வது, அவர்களைச் சேவித்துத்

தாம் ஒரு பலனைப் பெறுவதற்காக அல்லாமல், அவர்கள்தமக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காகவேயாகையால்,

‘அவர்களைச் சேவித்து’ என்னாமல், அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து என்றார்.

மங்களாஸாஸநம் செய்வதும் முக்யமாக எம்பெருமானார்க்கேயாகையாலும்,

அவருடைய உகப்புக்காகவே மற்றுள்ளவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதனாலும்

மங்களாஸாஸநங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நெஞ்சில் கொண்டு, ‘

யதோசிதம்’ (அவரவர்களுக்குத் தக்கபடி) என்றருளிச்செய்தாரானார்.

‘அநக்நி: அநிகேத: ஸ்யாத்’ (ஸந்யாஸி அக்நியில் ஹோமம் செய்வதும், ஸ்திரமான வீடும் இல்லாதிருக்கக்கடவன்) என்று

ஸாஸ்த்ர விதியிருக்கச் செய்தேயும் ‘

ஸ்வம் நிகேதநம் ப்ரவிஸ்ய’ (தமது மடத்திற்கு எழுந்தருளி) என்று அவர் தமதாக ஒரு இருப்பிடத்தை இங்கே குறிப்பிட்டது

ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளுக்கென்னவே ஓரிடத்தை நியமித்து அதில் ஸ்திரமாக அவரை எழுந்தருளியிருக்கும்படி

ஆணையிட்டருளியதனால் குற்றத்தின் பாற்படாதென்று கருதவேண்டும்.

‘விநிஷ்க்ரம்ய’ = (ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதியிலிருந்து வருந்தி மிகமுயன்று புறப்பட்டு) என்றது,

அவ்வவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமையால், மடத்தில் செய்யவேண்டிய திருவாராதநம், க்ரந்த காலக்ஷேபம்

முதலிய கார்யங்களுக்காகத் திரும்பி எழுந்தருளவேண்டிய நிர்பந்தத்தைக் குறிப்பதாகக் கொள்க. (25)

—————-

அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே |
ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் || 26

பதவுரை:-

அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு,

ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், 

ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான,

மண்டபே – மண்டபத்தில்,

தத் அங்க்ரி பங்கஜ த்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்

பிள்ளையுடைய திருவடித்தாமரையிணையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற,

(மாமுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்லோகத்தில் இதற்கு அந்வயம்)

கருத்துரை:-

தமது மடத்திலுள்ள காலக்ஷேப மண்டபத்திற்குத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது குருவின் திருநாமம் சாத்தி

அதில் சித்ரவுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாமுனிகள்.

அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க.

‘ஸ்ரீமதி மண்டபே’ மிக்க ஒளியுடைய மண்டபத்தில். இங்கு மண்டபத்திற்குக்கூறிய ஒளியாவது –

பிள்ளைலோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டு வந்து

சுவர் முதலியவற்றில் பூசியதனாலுண்டான ஸுத்தியேயாகும்.

மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்தாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மண் பரிஸுத்தமன்றோ ?

அதனாலன்றோ இம்மண்டபத்திற்கு ஸுத்தியேற்படுவது.

இங்கு ‘ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டி பஹுவசநாந்தமான பாடமும் காண்கிறது.

அப்பாடத்திற்கு – அத்திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிச்சாயையின் நடுவில் (தம்மைப்போல்)

எழுந்தருளியிருக்கிற தமது ஸிஷ்யர்களுக்கு என்பது பொருள்.

இதற்கு மேல் ஸ்லோகத்தில் உள்ள ‘திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் வ்யாசக்ஷாணம் நமாமி தம்’

(திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தங்களை உபதேஸித்துக் கொண்டிருக்கும் அம்மாமுனிகளை வணங்குகிறேன்)

என்றதனோடு அந்வயம் கொள்ளவேண்டும். (26)

————-

தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் || 27

பதவுரை:-

ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்)

ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான,

திவ்யப்ரபந்தாநாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களினுடைய,

ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க பலமுடைய,

தத்த்வம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை,

ஸரஸம் – மிக்க இனிமையோடு கூடியதாக,

வ்யாசக்ஷாணம் – ஐயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற,

தம் – அம்மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

திவ்யப்ரபந்தங்கள் ஸரீரஸம்பந்தரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம்

‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்

பொல்லா வருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100)

‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’ (திருவாய் 4-8-11)

முதலிய பலஸ்ருதிப் பாசுரங்களில் காணலாகும்.

முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது

மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும்.

சிறிது ஆராய்ந்தவாறே, பாகவதர்களே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும்.

மேலும் சற்று விமர்ஸித்தால் ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும்.

ஆக, ரஹஸ்யத்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றாம் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே

ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீமதுரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும்.

இங்கு மணவாளமாமுனிகள் யதீந்த்ரப்ரவணர் – எம்பெருமானாரிடத்தில் ஊன்றியவராகையால்,

அவரையே ஸேஷியாகவும், உபாயமாகவும், ப்ராப்யமாகவும், ஸிஷ்யர்களுக்கு திவ்யப்ரபந்தங்களின்

ஸாரார்த்தமாக உபதேஸித்தாரென்பது அறியத்தக்கது.

ஆசார்யர்களில் எம்பெருமானாரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும்.

ஸேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத்தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்க கருவி.

நாம் கைங்கர்யம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரேயாகையால், அதற்காக அடையத்தக்க (ப்ராப்யரான)

வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாச்சார்யரையே உபாயமாக பற்றவேணுமென்பது

ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும்.

இதையே மாமுனிகள் ஸிஷ்யர்களுக்கு உபதேஸித்ததாக இந்த ஸ்லோகத்தில் கூறினாராயினார்.

இப்படி உயர்ந்ததோர் அர்த்தத்தை உபதேஸித்த மணவாளமாமுனிகளுக்குத் தலையல்லால்

கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலை ‘தம் நமாமி’ – அவரை வணங்குகிறேனென்றதாகக் கொள்க. (27)

————-

தத: ஸ்வசரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: |
பாவநைரர்த்திநஸ்தீர்த்தை: பாவயந்தம் பஜாமி தம் || 28

பதவுரை:-

தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு,

ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்தத்தினால் மிக்க நறுமணத்தையுடையதும்,

பாவநை: – மிகவும் பரிஸுத்தமானதுமாகிய,

தீர்த்தை: – ஸ்ரீபாததீர்த்தத்தினால் – ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்ளும்படி கொடுப்பதனால்,

அர்த்திந: – ஸ்ரீபாததீர்த்தத்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஷ்யர்களை,

பாவயந்தம் – உய்யும்படி செய்யாநின்ற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

திவ்யப்ரபந்த ஸாரார்த்தங்களை உபதேஸித்தபிறகு, உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தித்தார்களாகையால்

தம்முடைய ஸ்ரீபாததீர்த்தத்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளச்செய்து

அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாமுனிகள் – என்கிறார் இதனால்.

எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து

தமது ஸ்ரீபாததீர்த்தத்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாமுனிகளுக்குக் குற்றமாகாது.

ஸிஷ்யர்கள் மிகவும் நிர்பந்தமாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும்.

மாமுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்தத்திற்கு

நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க.

‘தீர்த்தை’ (தீர்த்தங்களாலே) என்ற பஹுவசநத்தினால்

ஸ்ரீபாததீர்த்தம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது.

ஸ்ரீபாததீர்த்தம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘த்ரி பிபேத்’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாததீர்த்தம் பருகக்கடவன்) என்ற

ஸ்ம்ருதி வசநம் இங்கு நினைக்கத்தக்கது.

சிலர் ஸ்ரீபாததீர்த்தத்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள்.

‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகவத ஸ்ரீபாததீர்த்தபாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’

என்று உசந ஸ்ம்ருதியில், ஸ்ரீபாததீர்த்தபாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக

இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும்.

ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்த்ர ஸம்மதமாகையால்

அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்கக் குறையில்லை.

பாரத்வாஜ ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதேஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிப்பதை

அங்கமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்லோகத்தில் திவ்யப்ரபந்தஸாரார்தோபதேஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு

இதில் ஸ்ரீபாததீர்த்தபாநத்தை கூறினாராயிற்று.

முன்பு உபதேஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர்,

இப்போது ஸ்ரீபாத தீர்த்தம் ஸாதித்ததில் மனங்கனிந்து ‘பஜாமி’ என்கிறார்;

வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாமுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க. (28)

—————

ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய ச |
ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் || 29

பதவுரை:-

பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு),

ஸ்ரீநிதிம் – திருவுக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பனை,

ஆராத்ய – மிக்க பக்தியுடன் ஆராதித்து,

அநுயாகம் – பகவான அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாகத்தை,

விதாய – செய்து, மாம் – இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுகமாக இருந்த அடியேனை,

ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா – தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரிக்கும்படி செய்து)

பஸ்யந்தம் – அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற

தம் – அந்த மாமுனிகளை,

பாவயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

கருத்துரை:-

ஆராத்ய – நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி,

“இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினனையும்

எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே பகவானையும் பூசிக்கவேண்டும்.

பதிவிரதை தனது அன்பிற்குரிய கணவனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும்,

ஸிஷ்யன் தன்னாசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும்

எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆதரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆதரிக்கவேண்டும்” என்று

சாண்டில்யஸ்ம்ருதியில் கூறியபடியே அரங்கநகரப்பனை மாமுனிகள் ஆராதித்தாரென்றபடி.

அநுயாகமாவது – யாகமாகிற பகவதாரதனத்தை அநுஸரித்து (பகவதாராதனத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற

பகவத் ப்ரஸாத ஸ்வீகாரமாகிய போஜனமாகும்.

‘பரிசேஷனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உதாநன் ஸமானனென்னும் பெயர்களைக்

கொண்ட எம்பெருமானை உத்தேஸித்து அந்நத்தை ஐந்து ஆஹூதிகளாக வாயில் உட்கொள்ள வேணும்,

பின்பு உண்ணவேணும்’ என்று பரத்வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு.

சாண்டில்யரும் ‘நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள எம்பெருமானை த்யாநம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரித்து

ப்ராணாய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்யவேண்டும்.

பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல்

(உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாறாகக் குற்றங்கூறாமல்) உண்ண வேண்டும்.

ஸுத்தமானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் சுவையுடையதும் மனத்துக்குப் பிடித்ததும்

நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஷ்ணமானதுமான அந்நம் புத்திமான்களாலே

உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபவிக்கத்தக்கது.

‘அநுயாகம் விதாய ச’ என்ற சகாரத்தினாலே (அநுயாகத்தையும் செய்து என்று உம்மையாலே)

மணவாளமாமுனிகள் தாம் அமுது செய்வதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது.

‘பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்தத்தினால் சுவை பெற்றதும்

நறுமணம் மிக்கதும் ஸுத்தமானதும் மெத்தென்றுள்ளதும் மனத்தூய்மையை உண்டாக்குமதும்

பக்தியோடு பரிமாறப்பட்டதுமான பகவத் ப்ரஸாதத்தினாலே பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை

மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தியடையச் செய்தார்.

பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில்

குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும்.

மாம் – அடியேனை. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது,

‘யதியின் அந்நமும் யதி அமுது செய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற

ஸாமாந்ய வசநத்தை நினைத்து துர்புத்தியாலே அமுது செய்ய மறுத்து,

இப்போது நல்லபுத்தி உண்டாகப்பெற்ற அடியேனை என்றபடி.

பஸ்யந்தம் பாவயாமி – பார்த்துக்கொண்டேயிருக்கிற மாமுனிகளை த்யானிக்கிறேன்.

முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம் ?

என்று ஆஸ்சர்யத்தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை,

தம்மைத் திருத்தின பெருந்தன்மைக்காக எப்போதும் த்யாநிக்கிறேன் என்றபடி.

ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்கதன்று’ என்று ஸாஸ்த்ரம் மறுத்தது –

அவைஷ்ணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும். (29)

————–

தத: சேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே |
உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே || 30

பதவுரை:-

தத: – அமுதுசெய்த பிறகு,

புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய,

புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில்,

சேத: – தமது மநஸ்ஸை,

ஸமாதாய – நன்றாக ஊன்றவைத்து,

உத்தம் ஸிதகரத்வந்த்வம் – ஸிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி,

உபஹ்வரே – தனியடத்தில்,

உபவிஷ்டம் – (பத்மாஸநமாக யோகாப்யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸேவிக்கிறேன்

என்று 31ஆம் ஸ்லோகத்துடன் அந்வயம்.

கருத்துரை:-

அநுயாகத்திற்குப் (போஜனத்திற்குப்) பின்பு யோகம் – பரமாத்ம்த்யாநம் செய்ய வேண்டுமென்று

ஸாஸ்த்ரம் விதித்துள்ளதனால் அதைச் சொல்லுகிறார்.

யோகமானது ஆராதநம் போல் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க.

யோகமாவது யோகிகள் தமது ஹ்ருதயகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை,

அசையாத மனதுடன் நன்றாக த்யாநித்தலாகும்.

‘எம்பெருமான் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கிறான்.

எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும்.

அவ்வெம்பெருமானே யோகம் செய்பவர்களின் ஹ்ருதய கமலத்திலோ என்றால்

திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்’ என்று பராஸரர் பணித்தமை காண்க.

‘யோகிகளின் ஹ்ருதயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே’ என்று

தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்,

ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணனாந் தன்மை)

சாந்தோக்யத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்

‘புருஷே புஷ்கரேக்ஷணே’ என்று இங்கு மாமுனிகளாகிய யோகியின் ஹ்ருதயத்திலுள்ள

பரமபுருஷனுக்குப் புண்டரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க.

புரி ஸேதே – யோகி ஸரீரத்தில் வஸிக்கிறான் என்ற வ்யுத்பத்தியினால் புருஷஸப்தம் பரமபுருஷனாகிய

விஷ்ணுவைக் குறிக்குமதாகும்.

யுஜி – ஸமாதௌ என்ற தாதுவினடியாகப் பிறந்த யோக ஸப்தம் ஸமாதியாகிற பரமாத்மத்யாநத்தைத் தெரிவிக்கிறது. (30)

————–

அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் |
ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி || 31

பதவுரை:-

அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும்,

அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான திருமேனியை உடையவரும்,

ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியைத் த்யாநம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும்,

அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய த்வயத்தையுடையவரும்,

ஆநம்ர மௌளிபி: – நன்றாக வணங்கிய தலைகளை உடையவரான,

அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய ஸிஷ்யர்களாலே,

உபாஸிதம் – ஸதா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை,

நிப்ருதஸ்ஸந் – ஊக்கமுடையவனாய்க் கொண்டு, 

நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

‘அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில்

முதலில் (மரத்தாலான மணையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மான்தோலையும்,

அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து பத்மாஸநத்திலுள்ளவனாய் அவயங்களை நேராக வைத்துக்கொண்டு

யோகம் செய்ய வேண்டும்’ என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது.

மூக்கின் நுனியை இருகண்களாலும் பார்த்துக்கொண்டு யோகம் செய்யவேண்டுமென்று தர்ம

ஸாஸ்த்ரங்களில் கூறியுள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

‘ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தேஹத்தையுடையவனும்,

பரமாத்மாவின் குணங்களால் ஆவேஸிக்கப்பட்டவனுமாகிய (பரமாத்மகுணங்களை த்யாநம் செய்யுமவனுமாகிய)

யோகியானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதா காணத்தக்கவனாகிறான் (விஷ்ணுதத்வம்) என்று

கூறுகிறபடியினால், ஸிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மணவாளமாமுனிகளை

எப்போதும் ஸேவிக்கிறேன்’ என்று கூறினாரென்க. (31)

—————-

தத: ஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: |
யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் || 32

பதவுரை:-

தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு,

தஸ்மிந் – முற்கூறிய,

ஸுபாஸ்ரயே – யோகிகளால் த்யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில்,

நிமக்நம் – மூழ்கியதாய்,

நிப்ருதம் – அசையாது நிற்கிற,

மந: – தனது மனத்தை,

யதீந்த்ரப்ரவணம் – எதிராஜரான எம்பெருமானாரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக,

கர்த்தும் – செய்வதற்கு,

யதமாநம் – முயற்சி செய்து கொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள்.

அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று எம்பெருமானார் திருவடியிணையை

மனத்தினால் பக்தியோடு நினைத்துக்கொண்டே பகவதபிகமநம் முதலாக எல்லாவநுஷ்டானங்களையும்

மாமுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால்,

எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை

‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்ற்படி.

ஸுபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமான து:க்காதிகளைப் போக்குவதும்,

அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய திவ்யமங்களவிக்ரஹமாகும்.

இதனால் எறும்பியப்பா மாமுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அநுஸந்தித்து

அவரை வணங்கினால், தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸித்திக்குமென்று கருதி

‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றருளினாராயிற்று.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மாறன் பாப்பாவினம்-ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் —

April 30, 2022

ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
ஸ்ரீ நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர்.
ஸ்ரீ நம்மாழ்வாரை ‘வேதம் தமிழ்ப்படுத்த மாறன்’ எனப் போற்றுவது வழக்கம்.
இந்த முறையில் இந்த மாறன் பெயரில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் சில நூல்களை இயற்றியுள்ளார்.

மாறன் அலங்காரம் [1], (அணி)
மாறன் அகப்பொருள் [2],(பொருள்)
மாறன் பாப்பாவினம்,(யாப்பு)-என்னும் இலக்கண நூல்களும்,
திருக்குருகை மான்மியம் என்னும் இலக்கியமும் இவரால் செய்யப்பட்டவை. [3]

நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியமும்
(நம்பெருமாள் என்பது திருவரங்கப் பெருமான்) இவரால் பாடப்பட்டுள்ளது. [4]

குருகைப்பிரான் என்னும் பெயர் நம்மாழ்வாரைக் குறிக்கும்.
இவரது குருகைப் பெருமாள் என்னும் பெயர் குருகைப்பிரான் என்னும் பெயரோடு தொடர்புடையது.

பாப்பாவினம் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது பாக்களையும் பாவினங்களையும் பற்றிக் கூறுகிறது.
இதனாலேயே இதற்குப் பாப்பாவினம் (பா + பாவினம்) என்னும் பெயர் ஏற்பட்டது.
இதற்கு மாறன் பாப்பாவினம் என்ற பெயரும் வழங்குகிறது.
மாறனலங்காரம் (அணி),
மாறன் அகப்பொருள் (பொருள்) ஆகிய நூல்களை இயற்றிய
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரே இதனையும் இயற்றினார் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
எனினும் இதனைக் காரி இரத்தின கவிராயர் என்பவர் இயற்றினார் என்ற கருத்தும் நிலவுகின்றது[1].
நூலாசிரியரின் ஏனைய இரண்டு நூல்களைப் போலவே இதுவும் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது.
இலக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கண நூல்களையும் சமயப் பரப்புரைக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு,
வைணவத்தின் பெருமை கூறும் இந்நூல் சான்றாக விளங்குகிறது.

இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொடுத்து
அவற்றுக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்தது இந்நூல்.

வெண்பா,
ஆசிரியப்பா,
கலிப்பா,
வஞ்சிப்பா
என்னும் பாவகைகள் நான்கு,

வெண்பாவினம்,
ஆசிரியப்பாவினம்,
கலிப்பாவினம்,
வஞ்சிப்பாவினம் என்னும் அவற்றின் பாவினங்கள் நான்கு என்பவற்றுடன்
மருட்பாவுக்குமாக 135 எடுத்துக்காட்டுப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து பரிபாடல்களையும் சேர்த்து மொத்தம் 140 பாடல்கள் இந்நூலில் உள்ளன.
ஒவ்வொரு எடுத்துக்காட்டுப் பாடலுக்கும் பின்னர் அது பற்றிய விபரங்களைக் கொடுத்து
அவற்றின் இலக்கணத்தைக் கூறுவது இந்நூலின் சிறப்பு ஆகும்[2].

6.2 இலக்கணம்
வைணவப் புலவர்கள் இலக்கணம் எழுதித் தமிழ் இலக்கிய உலகத்தோடு இலக்கண உலகத்தையும் வளப்படுத்தியுள்ளனர்.
ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், திருப்பதிக்கோவை, மாறன் பாப்பாவினம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

6.2.1 மாறன் அலங்காரம்
மாறன் அலங்காரம் செய்யுள் அணி வகை பற்றி விரித்துரைக்கின்றது.
மேற்கோள்களாகத் தம் வழிபடு தெய்வத்தோடு தொடர்புடைய செய்யுள்களைக் காட்டுவதன் மூலம்
சமயப் பணியோடு தமிழ்ப்பணியும் செய்துள்ள பாங்கை அறிய முடிகின்றது.
இந்நூலின் உரை ஆசிரியர் பேரை காரி ரத்தினக் கவிராயர்.

கைக்கு அணி ஈகை, கருத்துக்கு அணி ஞானம், சென்னிக்கு (தலை) அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சுதல்,
இனி வேறு அணி எதற்கு என நம்மாழ்வாரை வழிபடு கடவுளாகக் காட்டுகிறது, இந்நூல்.

6.2.2 மாறன் அகப்பொருள்
மாறன் அகப்பொருள் என்பது தமிழ் அகப்பொருள் இலக்கண நூல்களுள் வைணவரால் இயற்றப்பட்ட நூல்.
ஆசிரியரின் இயற்பெயர் சடையன். வழக்கப்படி மன்னர் அல்லது வள்ளல் முன்பு நூல் அரங்கேற்றம் செய்யப்படும்
இந்த முறையை மாற்றி, இந்நூல் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி சீனிவாச அய்யர் முன்பு
கி.பி. 1522-இல் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வழி இலக்கண நூலில் மேற்கோள் வடிவத்தில் சமயம் இடம்பெறத் தொடங்கிய முறையை அறிகின்றோம்.
எனவே சமயம் சார்ந்த ஒருவர் முன்பு அரங்கேறுவது அவசியமாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம்.

இந்நூலுக்கு மேற்கோள் நூல் அவர் இயற்றிய திருப்பதிக் கோவை ஆகும்.

6.2.3 மாறன் பாப்பாவினம்
பாவும், பா இனமும் பற்றிய நூல் ஆதலின் பாப்பாவினம் (பா+பாஇனம்) எனப் பெயர் பெற்றது.
இந்நூலில் உள்ள பாடல்கள் வைணவ சமயத்தின் பெருமையைப் பறை சாற்றுபவை; சமய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.

இலக்கியம் மட்டுமன்றி, இலக்கணத்தின் வழியும் சமயப் பணி ஆற்ற முடியும், சமய வளர்ச்சிக்கு வித்திட முடியும்
என்பதற்குச் சான்றாக – ஆவணமாக – இந்நூலில் உள்ள 140 பாடல்கள் அமைந்துள்ளன.

6.2.4 திருப்பதிக் கோவை
திருவரங்கத்தமுதனார் பாடியுள்ள திருப்பதிக் கோவை வைணவத் திருத்தலங்களான 108 திவ்விய
தேசங்களை 40 கண்ணிகளில் தொகுத்துக் காட்டுகின்றது.

அப்பதிகளைக் ‘கண்டும், தொழுதும், வலம் செய்தும், சொல்லித் துதித்தும், முழுதும் உணர்ந்தும், ….
வேதம் உரைத்தும் வேத நிழலே சரணம் என நினைத்து வாழ்வார் பாதமே நமக்குக் கதி’ என்கிறது, இந்நூல்.

• மும்மணிக் கோவை
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் நம்மாழ்வார் மும்மணிக் கோவை இயற்றியுள்ளார்.
வேதாந்த தேசிகர் ஒரு மும்மணிக்கோவை அருளியுள்ளார்.

மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
(சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
முடத்திருமாறன்பாண்டியன்
சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன்
வழுதிமாலைமாறன்நாயனார்
நின்றசீர் நெடுமாற நாயனார்
மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

மறன் பாப்பாவினம்-பா.குப்புசமி-உதவிப்பேராசிரியர்
தமிழ்ப்பிரிவு-தொலைதூரக் கல்வி இயக்ககம்-அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கணத்தை ஐந்து பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவற்றுள் யாப்பிலக்கணமும் ஒன்று.
பிற இலக்கணம் போன்று யாப்பிலக்கண நூல் தமிழில் அவ்வளவாகத் தோன்றவில்லை
தொல்காப்பியர் செய்யுளியலில் தொடங்கிவைத்த யாப்பிலக்கணம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி என்று
தனி இலக்கண நூல்கலாக உருவானது. பின்னர் வந்த பாட்டியல் நூல்கள் சில யாப்பிலக்கணத்தைக் கூறியுள்ளன.
அதன் பிறகு எந்த இலக்கணமும் யாப்புக்குத் தோன்றவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பின் 16 ஆம் நூற்றாண்டில் மாறன் பாப்பாவினம் என்ற நூல் தோன்றியது.
இந்நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது.
இதை இயற்றியவர் திருக்குருகை பெருமாள் கவிராயராவார்.
திருக்குருகை பெருமாள் என்பது நம்மாழ்வாருடைய வேறு பெயர்களுள் ஒன்று அவர் மீதுள்ள பற்றினால்
சடையன் என்ற தனது இயற்பெயரை திருக்குருகை பெருமாள் என்று மாற்றிக்கொண்டார்.

அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்புக்கு ‘மாறன் பாப்பாவினம்’ அமைந்துள்ளது.
இலக்கணம் கூறாமல் அதற்கான சான்றிலக்கியங்கள் மட்டும் கோவையாகக் கூறப்பட்டுள்ளன.
யாப்பிலக்கணம் கூறும் வரிசப்படி இப்பாடல்களின் வரிசைமுறை அமைந்துள்ளன.
இந்நூலில் யாப்புக்கு மட்டுமின்றி அகம், புறம், அணியிலக்கணங்களும் சான்று பாடல்கள் ஆங்காங்கு கிடைக்கின்றன.

140 செய்யுள்களைக்கொண்டுள்ள இந்நூல் தொல்காப்பியரது செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.
யாப்பருங்கலம் யாப்பருங்கல விருத்தி குறிப்புகளையும் ஆங்காங்கு தருகிறர் ஆசிரியர்.
பரிபாடலுக்குத் தொல்காப்பியம் மட்டுமே இலக்கணம் கூறியுள்ள நிலையில்
இந்நூலாசிரியர் பரிபாடலுக்கு 5 பாடல்கலைச் சான்றாகப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூல் ஒரு முழுமையான வைணவ இலக்கியம்
எனவே பின் வந்த இலக்கணிகள் இந்நூல் பாடல்களையே மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.
இந்நூலைப் பயின்ற சைவ சமயத்தினர், சைவத்திலும் இப்படியொரு சான்றிலக்கியம் வேண்டுமென எண்ணி
குமர குருபரரின் துணை கொண்டு ‘சிதம்பரச் செய்யுட்கோவை’ என்ற நூலை உருவாக்கியுள்ளார்.
இதேபோல் தற்காலத்தில் இந்நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ சமய கருத்துக்களை வெளிப்படுத்தும்
விதமாக ‘அரங்கன் செய்யுள் அமுதம்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார் கவிஞர் சக்தி சரணன் அவர்கள்.

நூல் பொருள்
மறன் என்ற சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும் இந்த நூலில் திருமாலைப்பற்றியும் நம்மாழ்வாரைப்பற்றியும் பாடல்கள் அமைந்துள்ளன.
நம்மாழ்வாரைப்பற்றிய படல்கள் மிகுதியாக அமைந்துள்ளதால் இந்நூல் ‘மாறன் பாப்பாவினம்’ என்று பெயர் பெற்றுள்ளது.
முன்பு கூறியது போன்று இது யாப்பிலக்கணச் சான்றிலக்கியம் என்பதால்
நான்கு வகை பாக்களுக்கும் பாவினங்களுக்கும் சான்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாப்பாவினம் என்ற பெயரை வைத்துள்ளனர்.
இந்த நூலில் நம்மாழ்வாரது முதன்மைச் சீடரான மதுரகவியாழ்வாரைப் பற்றியும் இரண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்த இந்நூல் சிறந்த பக்தி நூலாகவும் சிறந்த இலக்கியச் சுவை மிகுந்த நூலாகவும் அமைந்துள்ளது.

இலக்கணச் சான்று
இந்த நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக இயற்றப்பட்டிருப்பினும் இதில் அமைந்துள்ள பாடல்கள்
அகத்திணைக்கும்,
புறத்திணைக்கும்,
அணியிலக்கணத்துக்கும் கூட சான்றுகளாக அமைந்துள்ளன.
இக்கூற்றினை நிறுவும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
இனி இந்த மூன்று இலக்கணங்களுக்கும் ஒவ்வொரு சான்று பாடல்களையும்
அவை அவ்விலக்கணப்படி அமைந்துள்ள பாங்கினையும் ஆராயலாம்.

அகப் பொருள்
இந்த நூலில் வரும் 42 ஆம் பாடல் அகத்திணை களவியலில் வரும் பகற்குறி தொடர்பானதாக அமைந்துள்ளது.
துறை ‘வருத்தம் கூறி வரைவு கடாதல்’ என்பதாகும். பாடல் வருமாறு,

காமரு பல்மரம் கஞலிய பொதும்பர்
மாமரப் பணையின் மதுகரம் இழைத்த
முதிர்நறுந் தேறல் நொதுமலர் முன்னுபு
கொளத்தகு மரபின் குன்ற வான!
வரைதலின் வரையாது ஒழுகலின் இருவிரும்
மாறுபட்டு ஒழுகிய மதியினிர் ஆதலின்
திருமகிழ் மாறன் திருவருட்கு இலக்காய்
ஒழுகா மதியின் மறுகுவல் யானே.

இப்பாடல் நேரிசை ஆசிரியப்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது.
இப்பாடல் அகத்திணையில் அமைந்துள்ளது. தலைவனிடம் தலைவியை மணக்கும்படி தோழி கூறுவதாக அமைந்துள்ளது.
தலைவியோடு பொருந்தாத மனம் கொண்டால் மட்டுமே திருமணத்தைத் தள்ளிப் போடமுடியும்
எனவே அத்தகு மனத்தினை ஒரு உவமை மூலம் விளக்குகிறார் கவிஞர்.
மாறனது அருளுக்கு ஆட்படாத உள்ளத்தினை எடுத்துக் காட்டுகிறார்.
உள்ளுறை உவமமும் இப்பாடலில் பயின்று வந்துள்ளது.
தேனீக்கள் தேடித் தொகுத்த தேனைப் பிறர் கவர்ந்து கொள்வது போல தலைவியை நீ மணக்காது விட்டுவிட்டால்
அவளது தாய்தந்தையர் பிறருக்குத் திருமணம் செய்யக்கூடும் என்பதை உள்ளுறை உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

புறப் பொருள்
இந்நூலில் வரும் 18 ஆம் பாடல் புறத்திணையில் வஞ்சித்திணையைச் சார்ந்த பாடலாகும்.
துறை மாறாயம் பெற்ற நெடுமொழி ஆகும். பாடலடிகள் வருமாறு,

நாராய ணாய நம என்றே நாவீறன்
ஓரா யிரம் என்று உரைத்த கவிப் பாவமுதம்
ஆராய் பவர்க்கடிமை ஆகினேன். வாரான் இங்கு
என்பால் ஒருநாள் யமன்.

இப்பாடல் இன்னிசை வெண்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது.
இன்னிசை வெண்பா நான்கடியில் அமைந்து மூன்றாம் அடியில் தனிச்சொல் பெற்று வரவேண்டும் என்பது இலக்கணம்.
இந்த இலக்கணம் பொருந்தி இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் புறத்திணைக்குரிய வஞ்சித்திணைக்கும் உதாரணப்பாடலாக அமைந்துள்ளது.
இதனை ‘மாறாயம் பெற்ற நெடுமொழி’ என்ற துறையின் மூலமாக தொல்காப்பியம் விளக்குகிறது.
இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் முழுமையும் திருமாலின் புகழைப் பாடக்கூடிய நெடுமொழிப் பாடலாக அமைந்து
தொல்காப்பியர் சுட்டிய புறத்துறையோடு பொருந்துமாறு அமைந்துள்ளது.

நாரயணாய நம என்று ஓராயிரம் முறை மாறன் பாடிய சொற்களை ஆராய்பவர்க்கு அடிமையானேன்
அதனால் உயிரைக் கொள்ளக்கூடிய யமன் என்னிடத்தில் ஒருநாளும் வரமாட்டான் என்பது பொருள்.

திருமாலைப் பாடிய நம்மாழ்வாரது பாடல்களுக்கே அவ்வளவு வலிமை என்றால்
திருமாலது வலிமையை உய்த்துணர முடியாது என்பதை விளக்குமாறு இப்பாடல் அமைந்துள்ளது.

இதே போன்று காஞ்சித்திணையில் அமைந்த மற்றொரு புறத்திணைப்பாடல் வருமாறு,

பெருநூல் பிறபல கற்பதின் மாறன்
ஒருநூல் கற்பது ஊதியம் உயிர்க்கே

இப்பாடல் குறள் வெண்பாவுக்கு இனமான குறள்வெண்செந்துறைக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது.
குறள் வெண்பாவுக்குரிய இலக்கணம் பொருந்தி இரண்டு அடியும் நான்கு சீர்களாக வரவேண்டும் என்பது
குறள் வெண்செந்துறைக்குரிய இலக்கணமாகும். அவ்விலக்கணம் இப்பாடலில் நன்கு பொருந்தியுள்ளது.
காஞ்சித்திணையில் அமைந்த இப்பாடல் முதுமொழிக்காஞ்சி என்னும் துறையில் பொருந்துமாறு பாடப்பட்டுள்ளது.

பெரிய பெரிய நூல்கள் பலவற்றைக் கற்பதைக் காட்டிலும்
நம்மாழ்வார் அருளிய ஒருநூலைக் கற்பதே உயிருக்கு மேன்மைதருவது என்ற பொருள்பட இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

அணி
இந்நூலில் வரும் 25 ஆம் பாடல் அணியிலக்கணம் பொருந்திய பாடலாகும்.
சொல்பின்வரு நிலையணியில் அமைந்த அப்பாடல் வருமாறு,

மாதங்கம் மூலமெனும் வண்குருடர் மால்வரைஓர்
மாதங்கம் அஞ்ச வருபோழ்துஇம் – மாதுஅங்கம்
மாதங்குஅவ் வாகுவல யத்தணைத்து வல்விரைந்துஅம்
மாதங்கம் வெண்றான்ஓர் மன்.

இப்பாடல் இருகுறள் நேரிசைவெண்பாவுக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு குறள் வெண்பாக்கள் ஒன்றன் பின் ஒன்று வருவதைப்போல இந்த யாப்பு அமைந்திருக்கும்;
இடையில் தனிச்சொல் பெற்றுவரும் என்பது யாப்பிலக்கணம் கூறும் விளக்கம்.
இந்த விளக்கத்துக்கேற்ப இப்பாடல் அமையப்பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி அணியிலக்கணத்துக்குரிய எடுத்துக்காட்டாகவும் இப்பாடல் அமைந்துள்ளது.

இதில் ‘மாதங்கம்’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருளில் வந்தமையால் இது சொல்பின்வரு நிலையணியாகும்.
இப்பாடலின் முதல் அடியில் திருமால் புகழ் பேசப்படுகிறது.
அதாவது ‘கஜேந்திரன் ஆதிமூலமே என அழைத்த குருகூரில் வாழும் திருமாலினது மலையிலே’ என்ற பொருள்பட பாடல் அமைந்துள்ளது.
அதன்பின் வரக்கூடிய அடிகளில் அகத்துறையில் வரும் பொருள் பிரிவு எனும் பகுதிக்குள் அடங்கக்கூடிய
தலைவன் தலைவியை மணக்க பொருள் ஈட்டச் செல்லும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு
அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்பிலக்கணத்துக்கு மாறன் பாப்பவினம் என்ற இந்த நூல்
யாப்பிலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது.
இந்த நூலின் சிறப்பு இதில் இயற்றப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றிலும் வைணவம் சார்ந்த கருத்துக்களும்;
திருமால், நம்மாழ்வாரது புகழும் பாடப்பட்டுள்ளமையாகும்.
பின்வந்த யாப்பு சான்றிலக்கிய நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்த நூல் அமைந்துள்ளது.
இந்த நூலில் யாப்புக்குச் சான்றுகள் அமைந்துள்ளது மட்டுமின்றி அகப்பொருள், புறப்பொருள், அணியிலக்கணம்
போன்றவற்றுக்கும் சான்றுகள் அடங்கியுள்ளன என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது.

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–நான்காவது எச்சவியலுரை–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

————

300.மொழிந்ததைமொழிதன்மாறுபடுபொருண்மொழி
பிரிபொருட்சொற்றொடர்கவர்படுபொருண்மொழி
நிரனிரைவழுவேயதிவழுச்சொல்வழுச்
சந்திவழுவொடுசெய்யுள்வழுவென
வந்தவொன்பதுமொருவழிக்கடிவழுவே.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின் எஞ்சி நின்ற வழுவணி யுணர்த்தினமையான் எச்சவியலென்னும் பெயர்த்து,
ஆயினித் தலைச்சூத்திர மென்னுதலிற்றோவெனின் முன்னரோதப்பட்ட வணிபெறுஞ் செய்யுள்கட்குப்
பொருந்தாத வழுக்களு ளொருவழிக் கடியப்பட்ட வழுக்களைத் தொகுத்துணர்-ற்று.

(இ-ள்) மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்டுத் தொன்றுதொட்டுவந்த
வொன்பதுஞ் செய்யுளகத்துவருமெனி லோரிடங்களிற் களையப்பட்ட வழுவா மென்றவாறு.

வழி – இடம். ஓரிடங்களிற் களையப்படுமெனவே சிலவிடங்களில் வழுவமைதியாகக் களையப்படாதென்பதூஉ மாயிற்று.
அவையெல்லாம் மேற்காட்டுதும்.

301.அவற்றுள்,
பழியறவொருபொருண்மொழிபரியாய
மொழியொடுதொடர்வதுமொழிந்ததைமொழிதல்.
(எ-ன்) வைத்தமுறையானே மொழிந்ததைமொழிதலென்னும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனந் தொகுத்துக்கூறப்பட்ட வொன்பதுள், மொழிந்ததை மொழிதலென்னும்வழு ஒரு
பொருளைக்காட்டு நிலைமொழியப்பொருளைக் காட்டும் பரியாயமொழியொடுதொடர்வதா மென்றவாறு.

* 309-ம் சூத்திரத்திலும், நிரனிரையென இடையின ரகரவைகார ஈறான பாடங்கொண்டு நிரை – கூட்டமென வுரையெழுதப்பட்டிருக்கிறது.

உடுத்தாரகைபோன்றொளிர்மலர்ப்புன்னாகத்
தடுத்தாள்விழிகடுத்தானன்பா–நடுத்தா
னிலையென்பதாகுமிணைமேருவாகு
முலையென்பனதேமொழி. (813)
இது மொழிந்ததைமொழிதல்.

இதனுள், உடுத்தாரகைபோன்றொளிர்மலர் என்றதனா லவ்வாறாதல் காண்க.
நடு – இடை. தேம் – தேன். அஃதேற் சொற்பின்வருநிலையும் பொருட்பின்வருநிலையும் சொற்பொருட்பின்வருநிலையு
மவ்வா றல்லவோவெனின் அற்றன்று, அவற்றிற்குப் பொருள் வேறென்க. என்னையெனின்,
சொற்பின்வருநிலையென்பது மொழிந்தசொல்லே வரினும் பொருள் வேறுபடும்.
அது “மானைப் பொருகயற்கண் மானைப் புவனமட, மானைக் கமல மலர்மானை – மானை” என்பதனா லறிக.
பொருட் பின்வருநிலையென்பது மொழிந்தபொருளேமொழியினும் சொல் வேறு படப் பொரு ளொன்றாவதோ ரலங்காரம்.
அது “மாய்த்தேன் செனனம் வதைத்தேனென் வல்வினையைத், தேய்த்தேனறிவின் சிறுமையினை” என்பன.
சொற்பொருட்பின்வருநிலையென்பது சொல்லும் பொருளும் பெயர்த்து வேறுவேறாகிச் சொல்லொன்றாய் வருவது.
அது “மாதர்மாதர்கூர் வாளம ருண்கண்மா னிலத்து, மாதர் மாதர்கூர் வண்டிமிரளியதா மரைப்பூ, மாதர் மாதர்கூர்” என வரும்.

302.அதுவே,
சிறப்பினும்விரைவினுஞ்சிதைவின்றாகும்
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙன மொருபொருண்மேற் பலசொல்வருதல் சிறப்பின்கண்ணும் விரைவின்கண்ணும்
வருமெனி லிலக்கணவழுவின்றா மென்றவாறு. என்னை “ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ” என்பதனா லறிக.

மீமிசைத்தாய்த்தோன்றுமழல்வெண்மதிவந்தாலிறைவா
யாமிசைப்பதொன்றுளதாயெய்யேமாற்–பூமிசைவாழ்
பொன்னங்கொடிநோய்புடைபெயர்போழ்துற்றுணர்ந்த
நின்னன்பிதுவானினைந்து. (814)

இது சிறப்பின்கண் ணொருபொருட்பன்மொழி வந்தது.
கள்ளர் கள்ளர் பாம்புபாம்பு தீத்தீத்தீ போபோபோ விரைவின்கண் இரண்டும் மூன்று மொருபொருட்கு வந்தன. என்னை?
“அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொ, லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்” என்பதனா லறிக.
பொருணிலை, விரைவு வெகுளி யுவகை யச்ச மவல மென்னு மைந்துபொருண்மைக்கண்ணும் வருமெனினும் இவை விரைவு.

303.பகர்ந்தமுன்மொழிப்பொருளொடுமுரண்பான்மையிற்
புகன்றிடுமதுவேமாறுபடுபொருண்மொழி.
(எ-ன்) மாறுபடுபொருண்மொழியாமாறுணர் – ற்று.

(இ-ள்) முன்னர்மொழிந்தமொழிப்பொருளொடு மதன்பின்னர் வருமொழிப்பொருள்மாறுபடுபகுதியையுடைத்தாகக் கூறுமது
மாறுபடு பொருண்மொழியா மென்றவாறு. பின்னர்வரு மொழிப்பொருளென்பது எதிர்மறையெச்சம்.

முற்றவுரைத்தமுதுவேதநுட்பமெல்லாங்
கற்றுணர்ந்துமெய்ஞ்ஞானங்கைக்கொண்டீர்–தெற்றெனவே
தத்துவங்கண்மூன்றினையுஞ்சந்தயந்தீரீரினிமே
னித்தமநித்தந்தெளியீர்நீர். (815)
இது மாறுபடுபொருண்மொழி. என்னை? இதனுள், ‘முதுவேத நுட்பமெல்லாங் கற்றுணர்ந்து மெய்ஞ்ஞானங் கைக்கொண்டீர்’ என்று கூறி,
‘தெற்றெனவே தத்துவங்கண்மூன்றினையுஞ் சந்தயந்தீரீர்’ என்றதனான் மாறுபடுபொருண்மொழியாயிற்று.
தெற்றென – தெளிய. தத்துவங்கண் மூன்றென்பன – சித் தசித் தீச்சுரம்.

304.அச்சமுங்காமமுமகமிகினுரித்தே.
(எ-ன்) இதுவு மெய்தியதிகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அச்ச மகத்து மிகினுங் காம மகத்து மிகினு மவ்வா றுரைக்கப்படு மென்றவாறு. அகம் – உள்ளம். காமம் – விருப்பம்.

வாசமலர்மெல்லணைமேல்வைத்தாலுமண்டழல்போற்
கூசுமலர்ச்சிற்றடிக்குக்கொற்றவா–நேசமது (439)

நெஞ்சத்தடங்காதநேரிழைநின்னோடுவரிற்
கஞ்சத்தடங்காண்கடம். (816)
இது காமமிகுதியான்வந்த மாறுபடுபொருண்மொழி. அச்ச மிகுதியான்வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.

305.உரியசொற்பலபொருளொன்றினொன்றாதன
பிரிபொருட்சொற்றொடரெனும்பெயருடைத்தே.
(எ-ன்) முறையானே பிரிபொருட்சொற்றொடரெனும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்துப் புலவனாற்சேர்த்தற்குரிய பலசொற்களினது பலபொருள்களு மொன்றினோடொன்று
பொருந்தாதனவாகச் சொல்லப்பட்டது பிரிபொருட்சொற்றொடரெனும் பெயரினையுடைத் தென்றவாறு.

எனவே வேறுவேறுநோக்கப் பொருளுடையனவாய்க் கூட்டிநோக்க வொருபொருளாக வுரைக்கப்படா தென்றவாறு.
இதனுள் ஒன்றென்பது சொல்லெச்சம்.

கங்கைக்குக்கன்னிநெடுங்காதங்கஞ்சமலர்
மங்கைக்குமாயோன்மணவாள–னங்கைக்கு
ளெட்டாவுறுப்புடலுள்யாதுமிலைக்காமனெனப்
பட்டானிரதிபதி. (817)
இது பிரிபொருட்சொற்றொடர். இதனுள், பலசொல்லுந் தனித் தனிநோக்கப் பொருளுடைத்தாய்க் கூட்டி
நோக்கப் பொருளன்றாதல் கண்டுகொள்க.

306.அதுவே,
கள்ளுண்மாந்தர்பித்தரிற்கடிவரையில.
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) முன்மொழிந்த பிரிபொருட்சொற்றொடர் கள்ளுண்டு களித்தமாந்தராற் கூறுமிடத்தினும் பித்தினான்
மயங்கப்பட்டார் கூறுமிடத்தினும் வழுவென்றுநீக்கப்படா தென்றவாறு.

கள்ளிதனிற்பிறந்தகள்ளிற்கடுந்தேறல்
வள்ளிதனைப்பெற்றபுளிமாந்தேறல்–வெள்ளிமலை
பெற்றபதிவானோர்பெருமான்புரந்தபதி
புற்றரவின்பிள்ளைபுதன். (816)
இது கள்ளுண்டுமயங்கினான்மொழிந்தது. பித்தர் கூறுவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வரையிலவென்னாது கடிவரையிலவென்றதனால், பிள்ளைமையான்மொழியுங்காலு மாம்.
அஃதே லிக்குற்றங்களெல்லாஞ் செய்யுணோக்கிவருவனவாதலாற் செய்யுட் கிலக்கணங்கூறு நூலினுளன்றே யுணர்த்துவது ;
ஈண்டுரைத்தல் பிறிதெடுத்துரைத்த லென்னுங் குற்றமாமெனின்,
நன்றுசொன்னாய் ! அச்செய்யுளென்பன சட்டகம் அலங்காரமென இரண்டாம் ; அவற்றுள் அலங்காரமென்பன
அச்சட்டகத்தைப் பொலிவுசெய்வனவாமாதலாற் செய்யுட்குப் பொலிவழிவு செய்வன வீண்டு முற்கூறி யதன்
பின்ன ரொழிபிற் செய்யுட்குப் பொலிவு செய்வன செய்யுட்குவாராமற் புணர்க்கவென வீண்டுரைக்கப்பட்டதாதலாற்
பிறிதெடுத்துரைத்தலென்னுங் குற்றமாகாதென் றறிக.

307.உவர்ப்பறத்துணிந்தொருபொருள்குறித்துரைத்தசொற்
கவர்த்திருபொருட்குறல்கவர்படுபொருண்மொழி.
(எ-ன்) வைத்தமுறையானே கவர்படுபொருண்மொழியாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைக் குற்றமறத்தெளிந் துட்கொண்டுரைத்த சொற்குப் பொருள் கவர்த்துப் பிறிதுமொருபொருளைக்
காட்டுவதாகி யிரண்டுபொருளைக் காட்டுதல் கவர்படுபொருண்மொழியென்னும் வழுவா மென்றவாறு.

பற்றற்றிடுதிடத்தாற்பற்றியதேபற்றியயன்
மற்றொன்றுதன்னைமதியாதாங்–கொற்றமிகும்
வேல்விட்டெறிந்தனையவெய்யவிழிநோக்கத்தாய்
மால்விட்டுநீங்கார்மனம் (819)
இது கவர்படுபொருண்மொழி.

இதனுள், மால்விட்டுநீங்கார்மனம் என்பது ஸ்ரீமந் நாராயணன் விட்டுநீங்காதார் மனமெனவும் பித்துவீட்டுநீங்காதார்
மனமெனவும் முதலே தெளிந்து கொண்டுரைத்த பொருளைக்காட்டுவதுடனிருபொருட்குக் கவர்த்தவாறு காண்க.
பத்தர்மேற்சொல்லுங்காற் பற்றற்றிடுதிடத்தா லென்பது அய னரன் மண் பெண் பொன் னென்னு மாசைகளைவிட்டு
நீங்கிய வுண்மைஞானத்தால் என்பதாம். பற்றியதேபற்றி என்பது அந்தரியாமியாகநின்ற அவனது
சொரூபரூபகுணவிபூதியையுட் கொண்டு அதுவே தியானமாக என்பதாம்.
அயல் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது அவைநாலுமேயன்றி வேறொன்றினையு முட்கொள்ளாதா மென்றவாறு.
பித்தர்மேற்சொல்லுங்கால், பற்றியதேபற்றி யயன் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது சான்றோர் தெருட்டத்
தெருளுறாது தான்பற்றியதே பற்றிக்கொண்டு உண்மையாக வொன்றினையும் பற்றாததாம் என நின்று கவர்த்தது காண்க.

308.வசைபொருந்தாவழிவரினதுமரபே.
(எ-ன்) மேற்சொன்ன கவர்படுபொருண்மொழி வழுவல்லவா மிட முணர்-ற்று.

(இ-ள்) அக் கவர்படுபொருண்மொழி குற்றம்பொருந்தாவிடத்துப் பொதுப்படவுரைப்பின் வழுவன்று, இலக்கணமா மென்றவாறு.

பரப்பமர்கண்ணாட்கிடும்பைபாலிக்குமென்றே
னிரப்பிடும்பையார்க்கெதிர்சென்றீயா–நிரப்பே
பெருநிரப்பென்கின்றாய்பெருமானேயெண்ணி
யிருநிதிக்குப்போவேனெனல். (820)
இதனுள் எனல் என்னும் அல்லீற்றுவியங்கோள், விதியும் விலக்குமாக நின்றும் வழுவன்றாயிற்று. என்னை?
யா னவ்வண்ணங்கூறவு நீ யதனையுட்கொள்ளாயாகிக் கூறாநின்றாய் ; நினது திருவுள்ள மதுவேயானா லிரண்டையு மனத்தா
லெண்ணித் துணிந்தென்னுடனே பொருண் மேற்செல்வேனென்று கூறாதொழிவாயாக வெனவும்,
அதுவல்லது செல்லத் துணிந்தாயெனில் எம்பெருமானே ! இறைவியோடும் நின்செலவை நீயே
சென் றியான் பொருண்மேற்செல்வேனென்று கூறுவாயாகவெனவும் இரண்டாய கவர்படுபொருண்மொழி
விதியினும் விலக்கினுங் குற்றமல்லவாயிற்று. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நின்செலவை நீயேகூறென்றல்.

309.முன்னரெண்ணிற்குமொழிமாற்றிக்கொளப்
பின்னரெண்ணிரல்பிறழ்வதுநிரனிரைவழு.
(எ-ன்) வைத்தமுறையே நிரனிரைவழுவாமாறுணர் – ற்று.

(இ-ள்) செய்யுளகத்து முன்னரெண்ணப்பட்ட பெயர்வினைகளான முறைக்கு மொழிமாற்றிக்கொள்ளும்படிக் கதன்
பின்னரெண்ணப் பட்டுவரும் பெயர்வினைகள் முறைபிறழவைக்கப்படுமது நிரனிரைவழுவா மென்றவாறு.
பெயர்வினையென்பது சொல்லெச்சம். நிரல் – முறை. நிரை – கூட்டம். பிறழ்தல் – தானமாறாடுதல்.

கலவமயில்சாபங்கழுநீர்குமுத
மிலவநுதல்சாயலிதழ்வா–யுலவுவிழி
நண்பாபொனங்கொடிதானண்ணுமிடநாவீறன்
பண்பார்துடரியிலோர்பால். (821)
என வரும். இதனுள், மயில் சாபங் கழுநீர் குமுதமென முதலே யெண்ணப்பட்ட பெயர்முறைக்குப் பின்னர்
இயல் நுதல் நோக்கம் வாய் என்னாது, நுதல் சாயல் வாய் நோக்க மென முறைபிறழவைத்தமையால்நிரனிரைவழுவாயிற்று.

310. உய்த்துணரிடமெனிலுரிமையுடைத்தே.
(எ-ன்) அம்முறைபிறழ்ச்சி யாமாறுணர் – ற்று.

(இ-ள்) அங்ஙனஞ் சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சி உய்த்துக் கொண்டுணரப்படுந்தானமாகில் வழுவன்றென்று
கொள்ளு மிலக்கண முறைமையுடைத் தென்றவாறு.

அங்ஙனஞ்சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சியென்பது அதிகார நோக்கத்தா லெச்சமாக விரிந்தது.

மந்தன்கதிர்மழைக்கோள்வானோர்குருமேதை
யிந்துநிலமகன்பாம்பென்பவற்றுட்–பைந்தொடியாய்
தேறுமிடைநான்குந்தெரிசுபக்கோளேனையவாய்க்
கூறியவைபாவக்கோள். (822)
என வரும். இதனுள், உய்த்துணர்ந்துகொள்ளப் பிழையாமல் வைத்தவிடமாவன : மந்தன்முதலாகப் பாம்பீறாக வடைவேயெண்ணி,
மழைக்கோள் வானோர்குரு மேதை யிந்து வென்னு மிடைப்பட்ட நான்குஞ் சுபக்கோளென்றும், மந்தன் கதிர் நிலமகன் பாம்பு
என முதலினு மீற்றினுநின்ற நான்கும் பாவக்கோளென்று முய்த்துணரவைத்தவாறு கண்டுகொள்க. பாம்பு – சாதியேகவசனம்.

311.நசைதீர்யதிவழுநாடுகிலோசை
யிசைதரநிகழாதிழுக்குவதாகும்.
(எ-ன்) முறையே யதிவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) விரும்பப்படாத யதிவழுவென்பதனை யாராயுங்காலத்துச் செய்யுட்கமைத்த புணர்ச்சி
யிசைபொருந்துவதாய்நடவாது மரபு வழுவுவதா மென்றவாறு.

பார்க்கும்பொழுதுநிலம்பார்த்துப்பார்வையையா
நீக்கும்பொழுதுநிலம்பாரா–நோக்கு
வடைவடைவேவந்தவவற்றுண்முதனோக்கந்
தடையறயாம்வாழ்வதற்கோர்சார்பு. (823)
இதனுள், நோக்கடைவடைவேவந்தவென்புழி நோக்குவடைவடைவே வந்த வெனச் சொற்கூடா தறுத்திசைத்து வழுவாயிற்று.

312.அதுவே,
வழுவின்றாமெனல்வகையுளிக்காகும்.
(எ-ன்) மேலெய்திய திகந்து படாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙனம் வரப்பட்ட யதிவழு வழுவில்லையென்று சொல்லப்படுவது வகையுளியாகச்
சேர்த்துக்கொள்ளுமிடத்துக் குற்றமில்லையா மென்றவாறு.

வாளிவேல்சேலாமதர்நோக்கமேருமுலை
வேளினடல்விற்போன்மிளிருநுத–லாளிநிகர்
காவலவனாற்றலதுகாய்ந்தகனிவாய்பவளம்
யாவருணர்வுட்காதிவட்கு. (824)
இதனுள் வகையுளிசேர்த்தேகொள்ளக் குற்றமின்றாயிற்று. துறை குறிவழிச்சென்றபாங்கன் றலைவனைவியத்தல்.

313.திணைமுதலாகச்செப்பியவழுவினொன்
றணைதருமாயினுமதுசொல்வழுவே.
(எ-ன்) முறையே சொல்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) திணைமுதலாகச் சொல்லப்பட்ட சொல்வழுவேழினுள், பலவேயன்றி யொருவழுச்
செய்யுளகத்துப்பொருந்துமாயினு மது சொல் வழுவா மென்றவாறு.

அருட்குணத்துக்கூடாதென்றாய்ந்துரைத்தபின்னும்
பொருட்ககல்வலென்றேபுகன்றீர்–மருட்கைமிகுங்
கொன்னுனைவேல்போன்றவிழிக்கோதைபொருட்டாற்குறித்திங்
கென்னுனையான்சொல்வேனினி. (825)
இதனுள், புகன்றீரெனற் வுபசாரப்பன்மைக் கென்னுமையான் சொல்வே னென்னாது என்னுனையான்
சொல்வே னென்றதனாற் பால் வழுவாயிற்று.

314.மரூஉக்கட்டுரைச்சொலின்வழுவின்றதுவே.
(எ-ன்) சிறுபான்மை கடியப்படாதென்ப துணர் – ற்று.

(இ-ள்) அச்சொல்வழு மரூஉமொழியாய்வருங் கட்டுரைச் சொல்லோடுங் கூடிவருமெனின் வழுவில்லையா மென்றவாறு.

மன்றல்கமழுமலைநாட்டும்வண்டமிழ்தேர்
நன்றிபயில்பாண்டிநாட்டகத்தும்–வென்றிபயில்
சோணாட்டகத்துந்துயின்மாயனைத்துதிப்பார்
காணார்பிறவிக்கடல். (826)
இதனுள், மலையமானாடென்பது மலைநாடென்றும், பாண்டியனா டென்பது பாண்டிநாடென்றும்,
சோழனாடென்பது சோணாடென்றும் மருவா யடிப்படவந்த வழக்காற்றால்வந்து வழுவின்றாயிற்று. துறை- கடவுள்வாழ்த்து.

315.ஆற்றல்சாலெழுத்தினுளமைத்தசந்தியின்வகை
மாற்றமதுறவழுவுதல்சந்திவழுவே.
(எ-ன்) வைத்தமுறையானே சந்திவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) பெருமையொடுகூடிய வெழுத்திலக்கணத்தினுள் விதிக்கப்பட்ட சந்திகளின்கூறுபாடு நூல்கூறிய
கூறுபாட்டான்வாராது செய்யுளகத்து வழுவுதல் சந்திவழு வென்னுங் குற்றமா மென்றவாறு.

பொய்யில்பொருண்மேற்புரிந்தினிநீபோகிலிவண்
மெய்யிலெழினலமும்வேறுபோந்–தொய்யிலுறாத்
தோள்பைங்கழையெனலாந்தொல்கவின்போகத்துயில்போம்
வாள்கண்ணிணைக்கெழுதாண்மை. (827)

இதனுள் வாள்போன்றகண்ணிணை வாட்கண்ணிணையென
“லள வேற் றுமையிற் றடவு மல்வழி, யவற்றோ டுறழ்வும் வலிவரி னாம்” என்னுஞ் சூத்திரத்தான்,
ளகாரம் டகாரமாக மெய்பிறிதாகமுடியற்பால வழி வாள்கண்ணிணையென வியல்பாய்முடிந்தமையாற் சந்திவழுவாயிற்று.

316.ஐயெனுருபுதொகினஃதியல்பாம்.
(எ-ன்) அத்திரிபு திரியாது இயல்பாமிட முணர்-ற்று.

(இ-ள்) இரண்டாம் வேற்றுமைதொக்கபுணர்ச்சியில் வல்லெழுத்து முதன்மொழிவந்துழித் திரியா தியல்பாய்முடியவும்பெறு மென்றவாறு.

அஞ்சொன்மடவாயரங்கத்தமுதமெனு
மஞ்சனையசெவ்விமழைவண்ணன்–கஞ்சமலர்த்
தாள்கண்டார்மாரன்றனக்கிலக்கானாற்றுளபத்
தோள்கண்டாரென்படார்சொல். (828)
இதனுள், தாள்கண்டார் தோள்கண்டாரென “இயற்கை மருங்கி னியற்கை தோன்றலு, மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்”
என்பதனா லியல்பாய்முடிந்தன. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை….

317.பழுதறப்பகர்ந்தபாட்டினதியல்பு
வழுவுதல்செய்யுள்வழுவெனமொழிப.
(எ-ன்) செய்யுள்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அகத்தியன்முதலோர் செய்யுளியலுட் குற்றமறப்பகர்ந்த செய்யுளிலக்கணத்தோடுகூடாது வழுவும்
பகுதியாய்வருதல் செய்யுள் வழுவென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

முல்லைவெண்ணகைமொய்குழனுமர்வாழ்
மல்லன்மால்வரைக்கெமர்வரைநல்வினையாற்
கூடலருண்மங்கையரைக்கூடிப்பிரிந்துவருந்
தாடவர்க்குவேள்போன்றணித்து. (829)

இஃது ஆசிரிய முதல்வந்து வெண்பாவாய் முடிந்தது. அவ்வாறு முடிதற் கோத்திலாமையால் வழுவாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – இடமணித்துக்கூறி வற்புறுத்தல்.

318.தவமுறுபவரவர்போலுணர்சாற்றலு
ணவமுறப்புனைசெயுணடைநவையிலவே.
(எ-ன்) மேற்சொல்லப்பட்ட செய்யுள்வழுச் சிறுபான்மை யொரோவிடங்களுள் வருவன வுளவாமென்று வழுவமைப்புணர்-ற்று.

(இ-ள்) தவசரிதையெய்துமிருடிகளும் அவர்போல்வாருமாகிய முற்றவுணர்ந்த மூதறிவுடைப் புலவோரா னவமாகப்
பாடப்படுவனவாஞ் செய்யுணடை யாசிரியரால் நீக்கப்படுங் குற்றமில்லையா மென்றவாறு.

நாராயணனேநமவென்றுரைப்பவர்பால்
வாராதொருநாளும்வல்வினைதான்
சாரானொருதலையாய்த்தண்டதான்சாராவாம்
பேராதமாயப்பிறப்பு. (830)
இது சவலைவெண்பாட்டு ; என்னை? இதனுள் முதலே காசு நாள் மலர் பிறப்பு என்னும் வாய்பாட்டாலிறாது
மூவசைச்சீராயிற்ற குறள்வெண்பாவா யதன்பின்னரும் பிறப்பென்னும்வாய்பாட்டாலிற்ற குறள்வெண்பாவாய்த்
தனிச்சொலின்றிமுடிந்தமையா லென வறிக. இதற்கு முன்னோர்கூறியசூத்திரம் யாதோவெனின்
“நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த், தனிவர லில்லது சவலைவெண் பாட்டே” என்பதென வுணர்க.
அன்றியும், “அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய், நட்டாலு நண்பல்லார் நண்பல்லர்,
கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு, சுட்டாலும் வெண்மை தரும்” என்னுஞ் செய்யுளானு முணர்க.

எனவே மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்ட வொன்பதும் பொதுவகையான்
வழுவெனக்கூறியவற்றைத் தனித் தனி விதிச்சூத்திரத்தா னிவ்வாறுவரின் வழுவென விதித்துச்
சிறப்புவிதியா னிவ்வாறுவரின் வழுவமைதியா மென்றவாறாயிற்று.

319.உலகிடங்காலங்கலையேநியாய
மாகமமலைவென்றாறொருவகையுள.

(எ-ன்) இதுவு மொருவகை வழுவாமா றுணர் – ற்று.

(இ-ள்) உலகமலைவு மிடமலைவுங் காலமலைவுங் கலைமலைவும் நியாயமலைவு மாகமமலைவு மென்று
கூறப்படுவனவா மொருவகைமலைவு மாறுளவா மென்றவாறு.

ஏகார மீற்றசை. மலைவென்பதனை யிறுதிவிளக்காக வெங்கு மொட்டுக. மலைவென்பது மாறுபடுதல்.
எனவே யவையு மொரு வகைவழுவாயிற்று. அஃதேல் ஒழிந்த வழுவுணர்த்துமாறெடுத்த தொகைச்சூத்திரத்து ளொருவகைப்படப்
பதினைந்தெனக்கூறாது இரு வகைத்தாகப் பிரித்துக்கூறியவா றென்னையோவெனின் முன்னரொன்பதுங் குற்றமாதல்
பெரும்பான்மையாய்ச் சிறுபான்மை யொரோவிடத்துக் குணமாதலுமுடையவென்றுரைக்கப்படும் ;
பின்னராறும் ஒருதலையாகவே குற்றமாய்ப் பொருந்துமிடத்துப் புனைந்துரைவகையா னன்புலவராற்
சிறுபான்மை மொழியப்படுமென்ப தறிவித்தற்குக்கூறியவா றெனவுணர்க.

320.ஒழுக்கநடையேயுலகமதாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உலகமலைவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அவ்வாறனுள், பெரியோரா லெடுத்துவழங்கு மொழுக்க நடையே யுலகமென்றுகூறப்படுவதா மென்றவாறு.

எனவே உலகமென்பது மக்கண்மேலு நிலத்தின்மேலு மொழுக்கத் தின்மேலு நிற்கும் பலபொருளொரு
சொல்லாதலா னிவ்விடத் தொழுக்கத்தையேகோடற் குலகென் றெடுக்கப்பட்டது. அவ்வொழுக்க மெல்லாரும்
அறிவுறக்கிடந்தமையா னின்னதென் றெடுத்துரைக்கவேண்டுவ தில்லை.
அது மலைதலென்பது உலகத்தொழுகலாற்றோடு மாறுபட்ட வொழுக்கநிகழ்வதாகக் கூறுதல்.

பூமிநடுநின்றுபுணரியேழுந்தாவி
நேமிவரைதனினேர்நின்றமரர்–கோமகிழ்வுற்
றாண்டதுறக்கமதைப்பார்த்தவனிபோதுமென
மீண்டவனிவ்வேந்தர்க்குவேந்து. (831)
என வரும். இதனுள் ஒருதீவினுள்வேந்த னெழுதீவையு மெழுகடலையு மேழ்பூமியையுங் கடக்கப் பாய்ந்து,
சக்கரவாளகிரியி னிமிர்ந்துநின்று, தேவர்கோனாகிய விந்திரன் களித் தாண்டிருக்குந் தேவலோகத்தையெட்டிப் பார்த்துத்
தனக்குப் பூலோகமொன்றுமாண்டிருப்பதேபோதுமென மீண்டுவந்தவனாகு மிந்த வேந்தர்க்குவேந்த னென்று
மாறுபடக்கூறினமையா னுலகமலைவாயிற்று.

321. இடமதுமலைநாடியாறெனமூன்றே.
(எ-ன்) வைத்தமுறையானே இடமென்பதனை விரித்துணர்- ற்று.

(இ-ள்) இடமென வொன்றாய்நின்றவது மலையும் நாடும் யாறுமென மூன்றா மென்றவாறு.

மலையென்பன : பொதியமு மிமயமு முதலாயின. நாடென்பன : பதினெண்பாடைக்குமுரிய நிலங்கள்.
யாறென்பன : கங்கையும் பொருநையுங் காவிரியு முதலாயின. இவற்றுள் ஒன்றினுளுரியவாகச்சொன்ன பொருள்
பிறிதொன்றனுளுரியவாகச் சொல்லுதல் வழுவாம். அவை,

காரகிலும்பொன்னுங்கவின்செய்மலயத்தினிற்பெண்
ணாரமுதின்மெல்லடிகட்கையனே–பார்பரலாய்ச்
செந்தழல்பாரித்தகடஞ்செப்பினசும்பூரிமயச்
சந்தனச்சோலைத்தடமாந்தான். (832)
எனவும்,

பருவமாமழையுகுபஃறுளிதிரண்டுநீ
ரருவிபாடிமிழ்வளனமர்சிலம்பாநின்
னறைகழல்பணிந்தெழுகலிங்கத்தரசர்
திறைதருகலினத்திரள்வாம்பரிகளு
மாளுவராரியர்மராட்டர்சோனகரெமை
யாளுகவெனத்தாழ்ந்தருள்கடாக்களிற்றுட
னறக்கழிவினராயருஞ்சமத்தெதிர்ந்து
புறக்கொடைபுரிந்தோர்புரந்தநன்னகர்களுங்
கங்கையுள்வலம்புரிகான்றவெண்டரளமுந்
துங்கவண்பொருநைத்துறையுண்மாமணிகளு
மெண்ணிலாதளிப்பினுமிடைவிலையலவாற்
பெண்ணியல்பெருக்கியபேரமுதாமெனத்
திருமகளாமெனச்சிறந்தவள்
வருமுலைக்கெவனீவிலைவழங்குவதே. (833)

எனவும் வரும். இவற்றுள், இமயத்திற்குரியன பொதியிலகத்துளவாகவும் பொதியிலகத்துளவானவை
யிமயத்துளவாகவும்புணர்த்து மலையிட மலைவாயிற்று.
தண்பொருநைக்குரியன கங்கையொடுபுணர்த்துங் கங்கைக்குரியன தண்பொருநையொடுபுணர்த்து மாற்றிடமலைவாயிற்று.
மாளுவ மாரியமுதலாயினவற்றிற்குரிய கலிங்கத்தொடுபுணர்த்துங் கலிங்கத்திற்குரிய மாளுவ மாரிய
முதலியவற்றொடு புணர்த்தும் நாட்டிட மலைவாயிற்று.

322.சிறுபொழுதொடுபெரும்பொழுதெனக்கால
மறுவகைத்தாமெனவறைந்தனர்புலவர்
(எ-ன்) காலமாமாறு மதன்பகுதியு முணர்-ற்று.

(இ-ள்) காலம், சிறுபொழுதுடன் பெரும்பொழுதென இரண்டு கூறா யொரோவொன்றறுவகைத்தா மென்றுஆசிரியர்கூறினா ரென்றவாறு.

அவற்றுள், சிறுபொழுது : விடியல் உச்சி எற்பாடு மாலை யாமம் வைகறை என ஆறு. பெரும்பொழுது :
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என ஆறுமாம். அவற்றொடு மலைதலாவது :
ஒன்றற்குரிய பூவும் புள்ளும் பொழுதும் தொழிலும் வேறொன்றிற்குரியவாகப் புணர்த்துரைப்பது.

உம்மையினிரந்தோர்க்கொன்றீயாதோ
ரிம்மையின்வறுமையென்பவற்றினுக்கிடமென
விரப்பவராயிலமெனவிசைத்ததற்கெதிர்
புரப்பவரிலமெனப்புகலும்வெவ்வுரையினு
நிரப்பெவனெனநிகழ்த்துதனிமித்தமதாய்க்
கரப்புரையிஃதெனக்கலுழ்ந்தகண்ணீரினைத்
தடுப்பவர்போற்றுயிலையுந்தடுத்திருகையி
னெடுத்தணைத்தினையலென்றெனையும்வற்புறுத்திப்
போர்வேலவர்தாம்போமுனங்குறித்த
கார்காலத்தினிற்கார்வருமாலையிற்
குயிற்குலங்காமாகூகூவெனுநிலை
வெயிற்குலமெனவிருள்வெருளவெண்ணிலவெழப்
புரவலர்முகம்போற்பொற்புமிக்கதுவா
யிரவலர்தாமரையேமநன்மலரே
நின்னிற்பிரியலன்பிரியினாற்றலனெனு
மன்னர்பொய்ம்மொழியினுமடங்கலுமடங்கலுஞ்
சுடுஞ்சுடுந்தொடர்ந்துமன்னுயிரை
யடுங்கொடுமையவெனுமவரறிவிலரே. (834)
என வரும். இதனுள். வேனிற்காலத்திற்குரியகுயிலைக் கார்காலத்துடன் புணர்த்தும்,
பகன்மலர்தாமரையை இரவுமலர்ந்ததாகப் புணர்த்தும், பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுமாகிய விரண்டுகாலமு மலைவாயிற்று.

323.பொருளுமின்பமும்புணர்பொருட்டாகியநூ
லருளுமெண்ணான்கிரட்டியகலையதுவே.
(எ-ன்) பொதுவகையாற் கலைக ளின்னதுக்குங்கருவியாய்த் தோன்றுமென்பதூஉ மவற்றது தொகையு முணர்-ற்று.

(இ-ள்) கலையென்றுசொல்லப்பட்டவது பொருளு மின்பமு மெய்துதற்கே துவாய வேதமுதலியநூல்களுட் கூறப்பட்ட வறுபத்து நாலா மென்றவாறு.

ஏகார மீற்றசை. அவற்றொடுமலைதலாவது அவ்வந்நூல்களுட் கூறியபடிகூறாது பிறழக்கூறுதல்.

நாணமில்செய்கைநாடகக்கணிகையர்
மாண்மரபினிலொருவனிதைதன்மைந்தர்க்
குற்றவெண்ணிரண்டுடனோங்கியவுருவம்
பெற்றவந்நிலைத்தண்டியம்பிடித்தனளா
யாடலும்பாடலுமமைவிலன்கொளுத்த
நீடலிலயணமொன்றினினிரப்பினளாய்ப்
படிபுரந்தருளும்பார்த்திபன்முன்னர்க்
கடியரங்கேற்றியகாலையிற்பிண்டியிற்
யிணையலுங்களையாள்பிணையலிற்பிண்டியு
மணைதரல்களையாதாடலுந்தாள
மெய்யிற்பயிலவுமேதகவுடையிசை
கையிற்பயிலவுங்காலியல்பயிலவு
நடித்தனணடத்துடனாதமுமுன்னூல்
வடித்திடுபான்மையின்மலைத்திடநடத்தின
ளாடல்சான்றோரவருடன்
பாடல்சான்றோர்பயிலவைக்களத்தே. (835)

இதனுள், ஐயாண்டிற் றண்டியம்பிடித்து ஏழாண்டியற்றிப் பன்னீராண்டினி லவையரங்கேறினாளொன்னாது
மைந்தர்க் கிந்திரியகலின முறுவதென்றுவிசாரிக்கப்பட்ட பதினாறாமாண்டிற் றண்டியம்பிடித்து
ஆடலும் பாடலு முற்றக்கல்லா வாசானுட னவை யோரயணத்தின் முற்றக்கற்றனளாய்க் கடியரங்கேறின ளெனவுங்
கூறியதன்மேல் ஒற்றை யிற்செய்த கைத்தொழி லிரட்டையிற்புகாமலு மிரட்டையிற்செய்த கைத்தொழி லொற்றையிற்புகாமலுங்
கைத்தொழில்காட்டாது மலையக் காட்டினா ளெனவும், இசையை மெய்யினு மிபலைக் கையினுந் தாளத்தைப் பாதத்தினுங் காட்டாது
மயங்க நடித்தனளெனவும், அவடானே பின்னொருநாள் நாதமும் நூல்சொன்னபடிநடத்தாது
பிறழநடத்தின ளெனவுங் கூறினமையானுங் கலைமலைவாயிற்று. கலையென்பது வித்தை.
இசையைப் பிறழநடத்தினாளென்பது நின்றநரம்பிற் கைந்தாவது கிளையாதலா னதனைப் பகையென்றும்,
ஆறாவது பகையாதலா னதனைக் கிளையென்றும், நான்காவது நட்பாதலா னதனை யிணையென்றும்
இரண்டாவதனைத் தொடுத்தல். என்னை?
“ஐந்தா நரம்பிற் பகைவிரவா தாறாகி, வந்த கிளைகொள்ள நான்காகி – முந்தை, யிணைகொண்ட யாழெழுவு
மேந்திழைதன் னாவித், துணைவன் புகழே தொடுத்து” எனத் தொண்டி எச்சவியலிற் கூறியவதனா லறிக.
அஃதேல் இந்நூலுட்கூறிய தொனிக்குத் தெண்டிகூறிய வுதாரணமே யுதாரணமாகக்காட்டியவா றென்னையெனின்
இந்நூற் கது முதனூலாயதாற் காட்டியதென வுணர்க. அவடானே பின்னொருநா ளென்பது சொல்லெச்சம்.
அஃதன்றித் தோரியமடந்தை யவளாடியவவைக்களத் தங்ஙனம் பாடினா ளெனினு மாம்.
தோரிய மடந்தையாவாள் ஆடிச்செலவைத்தவளா யங்ஙன மாடினவள்காலுக்குப் பாடினவள்.

324.அளவையினாயபல்பொருட்கமைவினைத்திற
முளமுறமதித்துரைப்பதுவேநியாயம்.
(எ-ன்) நியாயமாமாறுணர் – ற்று.

(இ-ள்) ஒரோகாரணங்களா லுலகத்துண்டாயபொருள்கட் கமைக்கப் பட்ட வினையினது கூறுபாட்டைக் காட்சி
முதலாய நால்வகையளவைகளாற் குறித்துக் கேட்டோருள்ளத்துறும்படி யுரைப்பது நியாயமா மென்றவாறு.

அவை யறுவகைப்பட்ட சமயங்களோடுங்கூடிய வுலகத்துப்பொருள் களினது தோற்றமு மழிவு மின்னவகையவென்று கூறுதல்.
அவற்றை யவரவர்கூறியவாறு கூறாது மாறுபாடாக வுரைத்தல் மலைதலேயாம். அது,

அன்றாலிலைத்துயின்றவச்சுதனையல்லாது
பொன்றாப்பொருளெப்புவியிலுள்ள–தென்றான்
றனதகத்தாயெவ்வுலகுந்தானடக்கிக்கொண்ட
புனலகத்தாய்நீந்தம்புயன். (836)
என வரும். இதனுள், ஆதிப்பிரமகற்பாந்தத்திற் சகலகடவுளருஞ் சகலான் மாக்களுமழியச் சகலான்மக்களையு மகிலாண்ட
கோடிகளையுந் திருவுதரத்தடக்கி யழிவிலாதிருந்தது ஸ்ரீ மந்நாராயணனென்று மார்க்கண்ட னுரைத்தா னெனற்பாலதனைப்
புனலகத்தாய்நீந்தும் பிரமாவுரைத்தா னென்றமையான் நியாயமலைவாயிற்று.
அச்சுதன்- அழிவிலாதான். அக்காலத்துப் புனலகத்தாய் நீந்திக் கண்டது மார்க்கண்டன். ஒழிந்தனவு மிவ்வாறே யொட்டிக்கொள்க.

325.அறம்பகர்மனுமுதலாயினவாகமம்.
(எ-ன்) ஆகமமாமாறுணர் – ற்று.

(இ-ள்) அறத்தினதுமார்க்கத்தைக்கூறாநின்ற மனுமுதலாய பதினெண் வகை யறநூலுமே யாகமமா மென்றவாறு.

அவற்றொடு மலைவாவது : இன்னா ரின்னதுசெய்த லற மென்று விதிக்கப்பட்ட விதியிற் பிறழவருவது. அது,

ஓட்டினொடும்பொன்னையொருநிலையாயுட்கோடல்
வீட்டினதின்பத்தைமிகவிரும்ப–லேட்டிருண்மென்
கூந்தலாரின்பமதுட்கொள்ளாமையில்லறத்திற்
றோய்ந்துளார்க்குண்டாஞ்சுகம். (837)
எனவரும். இதனுள், துறவறம்பூண்டார்தொழிலை யில்லறம் புரிந்தாரோடு புணர்த்தமையா னாகமமலைவாயிற்று.

326.நாவலர்நாடகவழக்கினுணயந்து
மூவிருமலைவுமொழிவதற்குரிய.
(எ-ன்) எய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) மேற்கூறிய வாறுவகைவழுவு நாடகவழக்கத்தாற் கூறுங்கால் நாவலர்க்குரியவாகக் கொள்வதா மென்றவாறு.
நாடகவழக்கென்பது “நாடக வழக்கினு முலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” எனத்
தொல்காப்பியத்துரைக்கப் பட்ட மூன்றனுள்ளு முதல்வழக்கு. அஃதாவது இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
புனைந்தவுரையாய்த் தோன்றுவது. என அவ்வாறு புகழ்ச்சியிடத்து நீக்கப்படாவலங்காரமாயே வரு மென்பதாம். அவை வருமாறு :-

மேலைமலையிற்புகுதுமாதவனைநிற்றியென
மீளவருவித்துலகின்வாய்
மாலைமதியத்தினுடனோடநியமிப்பனுரு
மாறிவருவிப்பனிமையோ
ராலையநிலத்திடுவன்வேலைவலயத்தையவ
ணாகவுமமைப்பனழகார்
சோலைமலையிற்குடி கொளாதியைநிகர்த்ததொரு
சோதியைவிதிப்பனெளிதே. (838)
இதனுள், சம்பிரதமாதலி னுலகமலைவுப்பொருள்வந்தும் அலங்கார வழுவின்மையாயிற்று. இந்திரசாலமென்பது மிது.

காழகிற்பொழிலுஞ்சந்தனப்பொழிலுங்
கமழ்நறுஞ்சண்பகப்பொழிலுங்
கோழரைக்கமுகுநாளிகேரமும்பொற்
கோங்கும்வேங்கையுமலர்க்குருந்து
மாழையஞ்சுளைமுட்புறக்கனிப்பலவு
மாவுநாகமும்பணைமருதுந்
தாழையுமகிழும்வாழையுங்கரும்புந்
தனித்தனிதழைத்ததெம்மருங்கும். (839)
இது தண்பொருநையுண் மலையிரண்டிற்கும் பிறநிலங்கட்குமுரிய அகிலுஞ் சந்தனமுங் கோங்கும் வேங்கையுங் குருந்தும்
புன்னையும் வந்திட மலைவாயும் புகழ்ச்சியிடத்துப் பொருந்தின அலங்காரமாயிற்று.

காவியங்கண்ணியர்காலையின்மலர்கொய
வாவியுட்குறுகலும்வதனமண்டலத்தினை
மதியெனச்செழுந்தாமரைமலர்குவிதரப்
புதியதண்புனல்படிந்திடப்புகுமாலையி
லாடவர்முகத்தையுமருணோதயமென
வேடவிழாம்பலினத்தொடுமுகிழ்க்கும்
பாடல்சான்மருதப்பார்த்திபர்தலைவ
பொழுதுமாறுதனின்புலக்கருப்பொருட்கு
முழுதுமுண்மையதான்மொழிபலகிளைத்தெவன்
புலந்தெவன்பொதுவுணின்மார்வங்
கலந்தெவன்றீண்டலெங்காமர்மெல்லணையே. (840)
இதனுள் மாலையிற்குவியுங் கமலங் காலையிற் குவிந்ததாகவும், காலையிற் குவியும் ஆம்பல் மாலையிற்
குவிந்ததாகவுங்கூறியது காலமலை வாயினும் புனைந்துரைவகையா னலங்காரமாயிற்று.
பகுதி – பரத்தையிற் பிரிதல். துறை – பள்ளியிடத்தூடல்.

வெயினுழைந்தறியாப்பணைமரச்செறிவுள்
வெறிவரிவண்டினமிரைத்துப்
பயின்முகையவிழ்ந்துபனிற்றுதெண்ணறவைப்
பருவமாமழைப்பெயலெனவே
குயிலடங்கலுந்தாம்பொதும்பருளொளிப்பக்
குறிப்பொடும்வெளிப்படவிருந்து
மயிலடங்கலுந்தாமகவலுங்களிப்ப
வருந்தனீமதர்மழைக்கண்ணாய். (841)
இதனுள், கார்க்குரியன வேனிற்குப்புணர்த்தும் புனைந்துரை வகையா னலங்காரமாயிற்று.

செறியுமிற்றொறும்புனன்மலர்முதலியசிறப்பின்
குறியமந்திரத்தமைந்துளவுறுப்பினிற்கொடுபோழ்
தறிவிழந்தவைமுறைதடுமாறினுமவையே
நெறியவாயிறையுட்கொளநிறைக்குநன்னீரார். (842)
இது கலைமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

வண்டுலவுந்தண்டுளபப்பெம்மானேயனைத்துயிர்க்கும்வசதியாய
வண்டரண்டபகிரண்டமகத்தடக்குமுழுமுதனீயாயிற்றென்றாற்
பண்டுலகமனைத்தையுமோரடலெயிற்றாலிடந்தளந்தபான்மையல்லா
துண்டுமிழ்ந்தபடியயல்கண்டிருந்தவராரெவணிருந்தன்றுண்டவாறே (843)
இது நியாயமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

*இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்
றிடங்கொள்புல்லறிவினரேனுஞ்
சிறந்தவந்நகரத்தினியொருபிறவி
சிறக்கவிங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதே
பிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுக்
கழலகத்தமைப்பரக்கணத்தே. (844)
இஃது ஆகமமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

327.ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன்முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே.
இச்சூத்திரம் இந்நூலுளுரைத்த விலக்கணமனைத்துந் தொகுத்திவ்வணி யிலக்கணத்திற்குப் பிறவாறு
வருவனவுளவெனினு மவற்றையுந் தழீஇக்கொள்க வெனப் புறநடையுணர்த்துகின்றது.

* இச்செய்யுள் பின்வருமாறு குருகாமான்மியத்துக் காணப்படுகிறது.

“இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்றிடங்கொள்புல்லறிவினோரெனினுஞ்
சிறந்தபேரறிவின்மேலொருசெனனஞ்செறிகவாங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதேபிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுமழலகத்தமைப்பனக்கணக்கே.”

இதன்பொழிப்பு ; செய்யுளெனத் தொகையானொன்றாயதனை வெண்பா வாசிரியமெனப் பகுத்த விருவகையினின்றுங்
கலி வஞ்சி மருட்பா பரிபாட லென்னு நான்கினொடு மாறென விரித் தவற்றைத் தெளியும்படிக்குப் பொருள்பெறும்
நான்கென்றுபகுத்த முத்தகங் குளகந் தொகை தொடர்நிலையென்னுஞ் செய்யுண்மரபும்,
வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு மூன்றுபாகமும், அவற்றொடும்பயில்வதான இன்பம் தெளிவு செறிவு சமனிலை
இன்னிசை உதாரம் வலி காந்தம் உய்த்தலில் பொருண்மை சமாதி யெனக்கூறப்பட்ட பத்துவகைக்குணமும்,
தன்மை முதற் பாவிகமீறாக வறுபத்துநாலென்னு மெண்ணையுடைய பொருளலங்காரமும்,
அடியினானுஞ் சொல்லினானு மெழுத்தினானு மடுக்கப்பட்டனவாகி முற்றுப்பெறவகுத்த மூன்றுவகை மடக்கலங்காரமும்,
வல்லின மெல்லின மிடையினமென்னு மூவினப்பாடன்முதலாக முறையினோடும் பொருந்திய விருபத்தாறின்மேலு மாறுகூட்டி
முப்பத்திரண்டென விழுமிதாய சித்திரக்கவிகளும் விரித்தபின்னர்க் குறையாய்நின்றனவாய வழுவும்,
வழுவமைதியு மிவையிவையென விரண்டுகூறாக்கிக்கூறிய பதினைந்தினொடு மணியிலக்கணநிரம்பாம லொழிந்தனவாய்
வருவனவுள வெனினு மவற்றையு மிவற்றினகத்தகப்படத் தழீஇக்கோடல் கற்றறிந்த வுத்தமர்கடனா மென்றவாறு.

அஃதேல் முற்கூறியனவல்லவோ மீண்டுங்கூறிற்று ; புனருத்தியாம் பிறவெனின், ஆகாது ; தொகுத்துமுடித்தலென்பது
தந்திரவுத்தியாகலா னிவ்வாறுரைக்கப்பட்டதென்றறிக. அஃதாக, “குறித்துரையெழுத்தொடு கூற்றவை செய்யுளி” னென்ற
முறையானே எழுத்து மொழி யடி யென்னா தீண்டு அடி மொழி யெழுத்தென்று முறைபிறழக்கூறியவா றென்னையெனின்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றென்னு முத்தி வகையான் அடிமடக்கென்பதும் சொன்மடக்கென்பதும் எழுத்தின்
கூட்டமென்ப தறிவித்தற்கும் ஓரெழுத்தானும் ஓரினத்தானும் வருவனவு மதன்பாற்படுமென்றற்கும் என்க.
நிரோட்டிய மோட்டியமுதலாகக் கூறப்பட்ட மிறைக்கவிகளும் நோக்கியாராயுங்காற் பெரும்பான்மையும்
எழுத்தின்பாற்படுமாயினு மவை வேறுவேறு சிறப்புப்பெயருடையவா யுலகி னுண்டாக்குகின்றனவாகலாற்
சொல்லின்முடியுமிலக்கணத்தா னவ்வாறு சொல்லப்பட்டது. சொல்லின்முடியுமிலக்கணந்தான்
யாதோவெனின் ஒப்பினாகியபெயருங் காரணமாகியபெயருங் குறித்துரைக்கப் படுதலா னவற்றினானே யுணர்ந்துகொள்க.

அஃதேல் மாலை மாற்றுஞ் சுழிகுளமும் சருப்பதோபத்திரமுங் கோமூத்திரியுமென நான்குமேயன்றே
யாண்டாசிரியனால் வடநூலு ளுரைக்கப்பட்டன.
ஒழிந்த மிறைக்கவி யீண்டுரைத்தல் மிகை படக்கூறிற்றாம்பிறவெனின், ஆகா ;
ஒழிந்தன ஒன்றினமுடித்த றன்னின முடித்தலென்னுந் தந்திரவுத்தியானுரைக்கப்பட்டது.
அல்லதூஉம், வடமொழிமுதனூலாதலாற் றனக்கொருவிகற்பம்படக் கூறுதலிலக்கணமென்பது ;
“முன்னோர்நூலின் முடிபொருங்கொத்துப், பின்னோன்வேண்டும்விகற்பங்கூறி, யழியாமரபினதுவழி நூலாகும்” என்பவாகலின்.

எச்சவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.
மாறனலங்காரம் முற்றும்.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

April 30, 2022

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.
https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

ஒரு தனித் திகிரியி னிரு விசும்பொழுக்கத்
தொருஞான்றொரு பகலொடியா வுழப்பிற்

(இருவிசும்பொழுக்கத்து) பெருமையை யுடைய ஆகாச வீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொரு கணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்

பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மத நால்வாய்க் கரியுரிமுக்கட்
செம்மல்

(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தை யெல்லையாக வுடைய நிலத்தின்
கண் ணுயர் திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு

(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாத பாகனையுடைய தேரின் மீதே

(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினை யுடைய பெரிய கையினையும், பெருகாது சிறுகாது
தம்மி லொத்த புழையொடு கூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப் போலச் சிவந்து,

இருகணு மிமையாத் தேவர்க
ளொருபோழ்தகலா தொரு வழிப்பட நின்
றிருகையுங் கூப்பி முப்போதினுமிறைஞ்ச
நான்முக முதல்வனினசைஇய நல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்

முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த

முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொரு
நெறிப்பட விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய,
நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய
கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற மூன்றுபாலுந் தம்மாலாய
பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப, விரண்டுபக்கமு மின்போன்றதொரு
மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு மொருகூறுபாடெய்த
விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்மாறுபாட்டைக்கெடுத்து
மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந் தங்கப்பட்ட
சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு
நல்வினை தீவினை யென்னு மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை
யித்தன்மைத்தென நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர்
சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்
பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு,
உலகின்கண்ணுள்ள இனியவுயிர்க ளஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த
நமன்றிக்கி லெழுந்த கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டது
விளங்கும்படிக் குத்தர கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத்
தேனையொழுக்கு நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய
மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து, பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய
ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு, பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது
திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும்,
அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற திருப்பவளத்தினைத் திறந்து,
வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக,
ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை
கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச் சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு
முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரிய
செயலொடு முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரிய
பிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே ! ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே !
அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத்
திருவுளமகிழ்ந் தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக்
கருணை புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.

ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி.

பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது.

பிணர் – சற்சரைவடிவு.

செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு.

நசைஇய – விரும்பப்பட்டன.

முழுநலம் – பேரானந்தம்.

தெற்றென – தெளிய.

பிறழாது – மாறாடாது.

ஒருங்கு – ஒக்க.

ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை.

முற்குணம் – சாத்துவிககுணம்.

நாலாங்கடவுள் – இந்திரன்.

அமைத்த – விதித்த.

இறும்பூது – ஆச்சரியம்.

உளர்தல் – குடைதல்.

அவிழ்த்தல் – ஒழுக்குதல்.

நலம் – ஆனந்தம்.

நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.

உறுபொருளைந்துடன் என்பது
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் – தொக்கியலு,
மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை.
எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடை
யூர்தியின் முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழுகடற்புவனத்
தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல் மூவுலகமுமளந்தவனிரு
செவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும் பிணிதவிர்த்தருள் ஞானபூரண!
நாவீற!
குருகாபுரிவரோதய!
எதிராசனையாண்ட விருசரணாம்புயத் தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற்
கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே
எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான் பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –