காப்பு
பூமாலை சேர் குறுங்கைப் பொன்மேனி நம்பியெங்கள்
மாமால் பவனியுலா மாலைக்கு–நாமேவு
பூவற் கருடனே பொன்னுலகத் தார்பரவுங்
காவற் கருடனே காப்பு.
நூல்
கார்கொண்ட மேனியான் கைகொண்ட நேமியான்
பார்கொண்ட பாதப் பரந்தாமன் சீர்கொண்ட
பூமகளும் பார்மகளும் போற்றியிரு பாலிருப்ப
மாமலரோன் கைகுவித்து வந்திப்ப நேமியுடன்
சங்கமுத லைம்படையுந் தானிலங்கப் புள்ளரசு
புங்கவனாஞ் சேனையர்கோள் போற்றிசைப்ப—எல்குங் நிறை
தேவர் குழாம்நெருங்கிச் சேவிப்பச் செங்கமலப்
பூவலரும் நிலவரை போலவே–யாவருக்கு ––5-
மிஞ்சிய வைகுண்ட வீட்டிருக்கும்(வீட்டிருக்க ) நாளவுணன்
நெஞ்சிற் கெறுவம் நிறுத்த வெண்ணிக்–கொஞ்சவுரு
வாமனமாய் வேள்விபுரி மண்டபத்திற் சென்றிரந்து
தாமன தால் மூவடிமண் தாவென்ன—ஒமெனவே
வெள்ளி தடுப்ப விழியொன்று போக்கிமுன்னே
யள்ளியநீர் கையேற்ற வந் நாளில்–உள்ளமகிழ்ந்
தோரடியிற் கீழே ழுலகளந்து(யுலகளந்து ) மேல்நின்ற
வோரடியில்’ மேலே ழுலகளந்தும்(யுலகளந்தும் )–ஓரடிக்கும்
எங்கே யிடமென் றெதிர்மா வலிசிரசிற்
பங்கே ருகப்பொற் பதம்வைத்தே— துங்கத்–10-
திரிவிக் கிரமத் திருவவதா ரஞ்செய்
தருள் முக் கியதலமென்றாகும்–ப.ரவரிய
வாமனச் சேத்ரமென வாழுங் குறுங்குடியான்
தேமருவு சித்தாச் சிரமத்தான்–மாமறையோன்
கோர முகத்திற் குறுங்கண் பிறந்திந்தத்
தாரணியிற் றீதிழைக்கக் தான்கண்டே—நேரெதிர்ந்து
( வென்றி தரு )வென்று திரு வைகுண்டம் விற்றிருந்த கோலமும் பொற்
குன்று தனில்நின்ற கோலமும்பால்–துன்று கடற்
பள்ளி கொண்ட கோலமும்பண் பாய்ச் சேவை சாதித்து
விள்ளுமவ னாமம் விளங்குமூர்–உள்ள மகிழ்–15
கோடி மகர தீர்ததங் குலவு, தல மென் றுவிண்ணோர்
நாடியிறைஞ் சுங்குறுங்கை நன்னகரான்– வீடு பெற.
நேசித் தலர் சொரிந்து நின்றெழுபத் தெண் பிரமர்
பூசித் தினிதேத்தும் பொற் பதத்தான் -தேசிகமாஞ்
செக்கச் சிவந்த செழுஞ்சுடரைப் பேத மறப்
பக்கத்தில் வைத்த பரிவினான்—மிக்க தமிழ்ச்
சீரன் புறவே தெரிந்து பா டும்பறைச்சிக்
காரங் கொடுத்தருளு மன்பினான்—நாரதனார்
நன்றுதரு மெஞ்ஞான்றும் ஞானம் “விளங்குமென
நின்று தவம்புரிய நேசித்தோன்– வென் றிதரு–20-
மாக்களிற்று வேக்தன் மனப்பூ ரணமாக :
நாக்கறுக்க வுண்மையாய் நாக்களித்தோன்–ஆக்கமது
மிச்ச நமக்குக்கீழ் வீட்டுவர மங்கையெனப் ்
பிச்சனுக்குப் பேறுதவும் பெற்றியான்–இச்செகத்தில்
வந்தித்த காரி மதலை யெனப்புளிக் கீழ்ச்
சந்தத்து (சந்தித்து ) வேதந் தமிழ்செய்தோன்–சிந்திக்குந்
தெற்குவீ டென்று திருமங்கை மன்னன் வர
நற்கதியன் றீந்தருளும் நம்பெருமாள் சொற்கிசைந்த
பாடற் குருகிப் பரவு மரையர் துழாய
மாடத்திற் போயிருந்த வாரத்தான்–நாடிக்–25–
குழனார் கழனிக் குளத்திற்(குழத்திற் ) றிருவாய்
மொழியா லடகுகொய்த மூர்த்தி–வழுவால்
வருராக் கதனும் மதங்கனும்வீ டெய்தக்
கருணா கடாட்சமருள் கண்ணன்—அருள் கூரும்
எம்பெருமா னார்சீட னென்னச்சோ மன்றுவைத்த (மன்றோய்த்த )
நம்பெருமா னாயிர நாமத்தான்–தம்பமினி. ‘
யாரெனக்கு நானுன் னடைக்கலமென் றேயிறைஞ்சுஞ்
சேரனுக்குப் பிள்ளையாய்ச் சென்மித்தோன்–வார்புனலிற்
காரண்ட மூழ்கிக் கரும்பனையைச் சுற்றி வரப்
பேரண்ட வீடளித்த பெற்றியான்—சீர்தங்கு–30-
பிள்ளைதர வேணுமென்றே (வேணுமென்று )பேராசை யாற்றவஞ்செய்
வள்ள முலைப் பாடக வல்லிபால்–உள்ளறிவாய்ச்
சென்மித்துத் திக்களைத்துஞ் சென்றுரா மேசுரத்திற்
றன்மத்தால் செப்பேடு தான்கண்டே–நன்மைபெறுஞ்
சீவல மாறனுக்குச் சித்த மகிழ்ந் தேயருள்செய்
காவலவன் செங்கமலக் கண்ணினான்–மேவு
முறைகேத் திரபால மூர்த்தி வட கீழ்
புறமேவ வன்பு (புற மேவி யன்பு )புரிந்தோன்–நிறமான
பச்சைப் பரியேறிப் பாரறியச் சேரனுக்காய்
(மெச்சு )மெய்ச்சப் படைவெட்டும் வீர த்தான்—உச்சி தமாம் –35–
நீல வரையருவி நேராகச் செவ்வந்தி
மாலை புனையு மணிப்புயத்தான்–சால
மழைதடுத்து முன்னாள் வசந்தன்கொண் டாடுங்
‘குழகனம்பி ராயனெங்கள் கோமான்–விழைவாகத்
தேசிக விலாசச் சிகரந் தெரிசித்த
கோசிகனுக் கன்பு கொடுத்த பிரான்–விசலைசூழ்
பாருண் டுமிழ்ந் தளந்து(தமர்ந்து ) பன்.றியாய்க் கீண்டெடுத்த
நீருண்ட மேக நிஐத்தினான்–பேரண்ட
௮ண்டமு மண்டத் தலகிலுயி ரும்படைக்கப்
பண்டயனை யீன்ற பரந் தாமன் விண்ட –40–
முதலை நிருதன்(கிருதன் ) முனியை யடர்ந்து
மதலை மதலையாய் வந்தோன்–இதமுடனே
அன்றெதிர்ந்த தாடகையை யாதி யிராவணனை
வென்று செயங்கொண்ட வீரத்தான்–துன்று
மருது ௪கடு வளர்தொட்டிற் பேய்ச்சி
யெருது குதிரை யிளங்கன்–றுருகியபுள்
ளானை முதல்மல்ல ராவியுண்டு கஞ்சனையும்
வானி லனுப்பு மருகனார் –ஆனிரைக்காய்க்
குன்றெடுத்து மாய்ச்சியர்கள் கூறையெடுத் தும்மனைக்குள்
சென்றெடுத்து வெண்ணெய் திருடியும்–அன்றெடுத்த–45–
தாம்போ டசோதைமுன்னே தாழ்ந்து நின்றோன் தாமரைத்தாள்
பாம்போடுமாடும்பர தத்தான்–மேம்பாடி த்
தென்றுபதி னாறா யிரங்கோ பியர் மகழ
மன் றல் புரிந்தருளு மாயத்தான்—வென் றிபுனை
ஐவருக்குத் தூதுரைத்தும் அர்ச்சுன ற்குத் தேரூர்ந்தும்
தையலுக்குத் தானை தனைக்காத்தும்- செய்ய ்
பகலில் இரவழைத்தும் பாரதப்போர் மூட்டிச்
செக மகிழப் பூபாரந் தீர்த்தோன்-.-இகழ்வான
வாணன் கரமறுத்தோன் வானோர் பணிந் (பரிந்)தேத்தும்
சேணிந் திரற்கிளைய செங்கண்மால்–காணும்–50-
மதுகை டபர்ச்செற்றோன் மாமதவா னைக்காய்
முதலை தனையடர்ந்த மூர்த்தி–முதியதிரைப்
பாலுததி யிற்பகுவாய்ப் பாம்பிற் பசுத்துரத்துங்
கோலிலா லிற்றுயிலுங் கோவிந்தன்–மேலடியார்
தன்னெஞ்சும் வைகுந்தத் தானமுந் தாழ்ந் திறைஞ்சும்
என்னெஞ்சும் நீங்கா தினி திருந்தோன்–முன்னமொரு:
மாவானை முன்னு மதுரத் தமிழ்பாடு
நாவாணன் பின்னும் நடந்த பிரான்–தேவான
ஈசனார் பக்கத்தும் ஏத்துமறை யுச்சியினும்
நேசமா யெப்போதும் நின்றமால்–காசினியாந்–55-
தான மடிதீண்டத் தாரகைக்கு மேலான
வானமுடி தீண்ட வளர்ந்த பிரான். ஆன தவம்
நம்புருஷ நாராயணப்பேரே ரிச்சிறப்புந்
தும்பிநின் றுலாவிய பூஞ் சோலையும்–பைம்புனல்சேர்
காலடியி லாற்றின் (லிரற்றினக் )கவர்த்தலையிற் பொன்விளையச்
சாலி விளையு்ந் தடம்பணையும்–மேலான
சித்திர கோபு ரமுஞ் சேர்ந்ததென்னஞ் சோலைகளும்
வர்த்தனையாந் தென் குறுங்கை மாநகரான்–இத்தரையில்
முத்தொழிற்கு மூவுருவாய் மூல நடு வீறாகி
வித்தகஞ்செய் பேரின்ப வீட்டினான்– ௮த்திபடி (அத்தியடி )–60-
மீனாமை பன்றி யரி மிக்க குறள் பரசுக்
கோன்வார் சிலைராமன் கூன்கலப்பை— தானே
விசயபெல் ராமன் விளங்கு கிட்ண மாவாந்
தெசவவதா ரம்புரியுந் தேவன்—உசி தமறைக்
காரணத்தா னார்க்குமடங் காரணத்தா னேந்தி யகை
வாரணத்தான் காத தருள்கை வாரணத்தான்.. கார் வரை போல்
ஆகத்தான் பூமகள்சே ராகத்தா னன்றெடுத்த
நாகத்தான் பள்ளிகொண்ட காகத்தான்–கோகனக
வுந்தியா னீள் சகட வுந்தியான் கன்றெறிந்த
வந்தியான் தாரணிசெவ் வந்தியான்–சிந்தியார்–65-
உண்ணத்தான் பார்முழுது முண்ண த்தான் நீண்டகடல்
வண்ண த்தான் வாமகர வண்ணத் தான்–எண்ணுமன்பால்
வாரத் தான் முன்பாரா வாரத் தான் அஞ்சவெய்த
தீரத்தான் சிந்துநதி தீரத்தான்.-பாரிரந்த
வாமத்தான் சங்கரன்சேர் வாமத் தான் ஆயிரமா
நாமத்தான் கஸ்த்தூரி நாமத்தான்–கோமளப்பால்
வேலையான் முத்தொழில்செய் வேலையா னெல் லழைத்த(வளைத்த )
மாலையான் பூந் துளப மாலையான்–ஞாலத்
திடர்செய் கனகன் எதிர வவன் தன்
குடாலங்க லாயணிந்த கொண்டல்… கடல்சார் (கடல் அரசர் )–70-
அலகில் தரணி யடியி லடைய (லடையு )
மலரு மிருதாள் மலரான். -குலவுநெறி
நின்று முனிவர் நெருங்கித் தவம்புரியு
மன்றல் மயேந்திர மால்வரையும்– நன்று தருஞ்,
சிந்து நதியுந் திருப்பாற் கடல்வளமும்
நந்து தவழ் வைகுந்த நன்னாடும்—முந்துங்
குறுங்கா புரியுங் குலவுபுது வாச
மருங்கா துளப மலரும்–நெருங்கும்
கருட துவசமும் கைமதங்கள் சிந்த
மருடருநாற் கோட்டுமத மாவும்— தரணியிலே.–75-
வென்றி தருங்கவன மேவு துரகதமும்.
மன் றலொலி மாறா மணி முரசுந்-.. துன்று
மருவு தசாங்கமென வாழ்வோன் சிறந்த
உருவு தசாங்க முடையோன்–அருமறைதேர்
அயயன் குழகன் அழகிய நம்பியலர்
கொய்யுந் துளபக் குறுங்குடிமால்–பையா
டராவணை வாசன் அறிவி லரிய
பிரான் எனை யாளும் பெருமாள்–விராவுமலை
நம்பிதிருப் பாற் கடலில் நம்பிபள்ளி கொண்டருளும்
நம்பி யிருந்த நம்பி நானிலத்தில்–உம்பர்தொழ–80-
நின்ற கரு மேகம்போல் நீண்டபொன் மேனிநம்பி
வென்றிபுனை நாத வினேதநம்பி-என்றும்
தரணிபுக ழாபற் சகாய நம்பி செம்பொன்
மருவிய செங்கனி வாய் நம்பி-.- கருணை
பரவுதய மார்த்தாண்டப் பந்தற்கீ ழுண்மை
வரு. ராம தேவ மக ராசன்–தருபீடத்
துற்பனமாய்ப் பூமகளும் ஓங்கு (ஒங்க )நிலமகளும்
விற்பனமாய் நீங்காத மேன்மையான்– அற்புதமாம்
நங்கையெனையாளும் நம்பிக்கு நாச்சியார்
மங்கை குறுங்குடி வல்லியார் பங்கிலே-85-
சீராக வீற்றிருக்கச் சித்த மகிழ்ந்து திரு
வாரா தனங் கொண் டருளுநாள்–பாரோர்
பரவு திருப்பங் குனித்திருவி ழாவிற்
கருட துவசமேற் கட்டிச் -சுருதி முறை
கேட்டு முதற்.றிருநாள் (கேடகத்து மிரண்டா நாள் )கேடகத்தி ரண்டாம்நாள்
தீட்டு திறல்விசைய சிங்கத்துஞ்—சூட்டுநாள்
மூன்றி லனுமார் முதபுயத்தும் நாலாம்நாள்
நான் றமுடி யைந்தலை நாகத்துந்- தோன் றிவரும்
அஞ்சாம்நா ளிற்கருட னம்புயத்தும் ஆறாம்நாள்
எஞ்சாத வானையினும் ஏழாம்நாள்—மிஞ்சவே-90-
வேண்டியபள் ளிச்சிவியார் மேவு சிவிசையினுங்
கூண்டவெட்டாம் நாளிற் குதிரையினும்–பூண்டுங்
குலவொன்ப தாம்நாள் குருந்தேறி வீதி
வலம்வந்து பத்தாம்நாள் வானில்–௮லருதைய
காலத்தில் நித்யல்படிக் கட்டளையாந் தாரையுட்ணஞ்(தாரையுட்டிணஞ்)
சீலத் துடனமுது செய்தபின்பு–பாலாழிச்
சீரார் திருமஞ் சனஞ்செய்து வாய்த்ததிரு
வாரா தனங்கொண் டருளியே- நேராய்
இசைந்தமணி ரத்னாபி ஷேகத்துக் கேற்க
அசைந்த குழைக்கா தழகும்–பசுந் துளபத்-95-
தாரும் கவுஸ்த் துவமுஞ் சங்குசக்ரக் கையுமியல்(கையுமேல்)
தேருங்கஸ்த் தூரித் திரு நுதலும்–காரில்மின்போற்
பிதாம் பரமும் பிறவிப் பிணியறுக்கும்
பாதாம் புயமும் பலபணியுஞ்–சோதிதரு
மாணிக்க மாலை வயிரவொளி யுஞ்சூழ்ந்த
காணிற்பொன் (கானிற்பொன்)பூத்ததொரு கார்வரைபோல்—பூணிலகப்
பூவுலகும் பாதலமும் பொன்னகரத் திந் த்ரன்முதல்
தேவர் முனிவர் செயசெயென–மேவரிய
காளமுதற் பல்லியமுங் கார்முழக்க மென்னவண்ட
கோளமட்டும் நின்று குமிறவே–ஆழ்வார்கள்--100-
பன்னிருவ ரோதியப்ர பந்தமும் நான்மறையும்
முன்னம் மறையோர் மொழிந்து செல்ல–உன்னரிய
பேரருளா ளச்சீயர் பேராம் வயிணவர்கள்
சார்வுறுதா னத்தார் தலத்தார்கள்–வாரமுறுங்
கோயில் வள ரனைத்துக் கொத்தும் புடைசூழ
ஏய திருத் தேரி லெழுந்தருளி–நாயகனார்
சீலப் பவனி வரச் சேனையர்கோ னின்றுதிரு
வோலக்கஞ் சேவித் துடன்போத– மேலான
குழாங்கள்
காத லரம்பையருங் காகோ தரநாட்டு
மாதரும்பர் மங்கையரும் வந்தீண்டிச்–சிதக்–105-
களமுங்க கவானுங் கன தனமேற்று ஓய்யில்
வளமும் விழியும் வதனத் .-தழகும்
கமுகு கதலி கரும்பிளநீர் வாசங்
குமுகுமெனுங் காவிகஞ்சங் கொண்டே–சமுகமாய்
வீதி வளமைசெய்யு மேன்மைபோலே நெருங்கி
நீதி. யிருமருங்கும் நின்றேற்றி-(நின்றேத்தி )-மாதரீர்
வாரிர் பவனிதொழ வாரீ ரிவ.ரழகைப்
பாரீர் எனவே பகருவார் தார்குழலீர்(கார் குழலீர் )
முன்னானை காத்தார் முலையானைக் சன்புசெய்யார்
என்னா மிவர் நீதி யென்றுசொல்வார்…..நன்னுதலீர்–110-
நாடறிய வேழுன் நர சிங்க மாயானைக்
கோடுபிளந் தாரென்.று கூறுவார். ஆடை தனை
அன்றொருத்திக் கீந்த தவராகி மாதர்கலை
இன்றுகொள்வ தேதென்றி யம்புவார்–நன்றுநன்று
கூடுகின்ற கோபியர் தங் கூறைகவர்ந் தேதுளபஞ்
சூடுகின்றார்க் குள்ள தொழிலி தென்பார் ஆடல்மதன்.
வாதை பொறாமல் வளை சோர்வார் வார் சோர்வார்
கோதைமலர் சோர்வார் குழாத் தொருத்தி பேதையடர்
பேதை
காலம்வரு மட்டும் கரை கடவா வேலைபோல்
வேலைவிடம் போலும் விழியினாள்–மாலை–115–
வனைகுழலார் தமமுடனே வண்டலயர் போதில்
எனையடிமை கொண்டநம்பி ராயர்-புனைதேர்ப்
பவனி தொழுந் தாயரைப்பின் பற்றி நடந் தோடி. ‘யவர்கள்சொன்ன வண்ணமுரைத் தன்னே–இவர்மெய்யில்
மாலை தனைவாங்கும் வண்டல் மக வுக்கெனவே
சேவைநிகர் கட்கடைநீர் சிந்தினாள்-..-ஆலை
மதன் பைங் கழைகுழையான் வார்கணையும் பூட்டான்
விதஞ்செய்மறு வீதி போம் வேளை- பெதும்பை ரத்ன
பெதும்பை
வார்புனைய முத்து வடம்புனையச் சிந்தையருள்
கூரவடிக் (கூர்வடிக் )கொண்டரும்புங் கொங்கையாள்–.ஆர்வமுடன்-120-
வெற்றிசெய்யுங் காமா (காம)விகாரங் கொழுந்து விட்டுப்
பற்றிப் படரும் பருவத்தாள்–பொற்று ஒடியார்
கூடுங் கலவி குறித்தெழுதுஞ் சித்திரத்தை
மேடையிற்போய்ப் பார்த்து நிற்கும் வேளை தனில் சூடும்
மருத்தேர் குழற்பாங்கி வந்து நம்பி ராயன்
திருத்தேர்ப் பவனியென்று செப்பக்–கருத்துருகி
மாதருடன் வந்து வணங்கி நம்பி ராயன்மேல்
காத லரும்பவிழும் காட்சிபோல்-.ஓதீர்(ஆதீர்)
மருக்குலவு மார்பிலொரு மாதல்லால் தோள்மேல்
இருக்குமிவள் ஒருத்தி யென்றாள்–விரைக்குழலார்–125-
பூவில்வளர் மாது புவிமா திருவரிவற்
காவசிய மென்ப தறியாயோ(தறியாயே )–பாவாய்
எனவுரைத்த போதில் இணைவிழியால் நோக்கி
மனமுருகி னாள் பின் மறந்தாள்–பனிமதியைக்
காண விளகுசந்த்ர காந்தமொத்தாள் மாரன்வர்மம்
பூணவயல் வீதிப் புறம்போந்தாள்–வாணுதலாள்
மங்கை
மங்கை யொருத்தி மதனாபி ஷேகமிரு
கொங்கைமயில் காமக் குலதெய்வம்—இங்கி தமாஞ்
சீரார் துணைவி நம்பி தேர்ப்பவனி பார்க்கமின்னே
வாரா யெனவே மகிழ்ந்துபோய்–நேராய்ப்–130-
பணிந்தே மயலாய்ப் பரிபவங்க ளெல்லாந்
துணிந்தே யெதிராடிச் சொன்னாள்–மணந்தருளிச்
செய்யவிருந் தாவனத்திற் சென்றொருத்திக் காக் நீர்
மையல்கொண்ட செய்தி மறந்தீரோ –பொய்யலவே
மோகம் பொறாமலொரு மொய்குழலுக் கும்மைப்போல்
ஆகங் கொடுத்தார்கள் ஆர்சொல்வீர்–சோகமாய்ப்
பேராசை யானானும் (யாய் நானும்)பெண்ணென்றோ பூந் துளபத்
தாராசை தீரவே தாருமென்று–தேரிற்
தொடர்ந்தாள்வே ளம்பு சொரியவயல் வீதி
நடந்தார்பொற் றேருடனே நம்பி–மடந்தை--135-
மடந்தை
வடுவும் பிணையும் வளர்சேலும் வேலும்
கடுவுமமு துங்கலக்த கண்ணாள்–நடுவாம்
எழுபருவத் துள்ளு மிவள் பருவ மென்று
தொழுது மதன் போற்றுந் துரைப்பெண்– அழகான
பொன்னூச லாடும் பொழுது குழை யிரண்டும்
மின்னூச லாட விறலிபோய்—உ ன்னழகு
நன்றென்று கொண்டாடி. நம்பிதிருத் தேர்ப்பவனி
யின்றென்றாள் சென்றாள் இறைஞ்சினாள் –நின்று உருகிச்
செங்கனகத் தேர்விருப்பஞ் செய்தீர் மயலான
வெங்களல்குற் றேருமுமக் கேலாதோ-.-பைங்கமலக்--140-
கைச்சங்கங் கொண்டீர் கருத்தில் விரும்புமெங்கள்
மெய்ச்சங்கம் நிர்விரும்ப வேண்டாவோ–நச்சரவம்
ஏறுபுள்ளோ டின்புற் றிருந்ததுபோ லெங்கள்மேற்
சீறுமதி நட்பாச்சோ தீண் டாதோ—கூறீர்
எனாமுன்மத னெய்தான் இருகாலி லிட்டாள்(விட்டான் )
மனாவையல்கு லேந்தினாள் வாரைத் –தனமேற்
கரிய குழல்மறைப்பக் காதல்கொண்டாள் மற்றோர்
தெருவில் மதனொடுதேர் செல்ல—அரிவை
அரிவை
இலவுகுமிழ் முல்லை யிதழ்க்குவளை வள்ளை
மலருமொரு தாமரையில் வாய்ப்பக் –கலவியிலே–145-
மேனகையுங் கொல்லிமலை மேனகைசெய் தாளும்வெடகத்
தானகைசெய் காமசுர தானியாம்-(தனியாம்)-மானனையாள்
பாங்கினாற் செம்பொற் படாமும் வனைகோலும்(பரமும் வளை கோலும் )
வாங்கினாள் நம்பி வடிவெழுத–ஓங்குபொற்றேர்
மன்னும் குறுங்கை நம்பி வந்தார் வந்தாரென்று [த்தி
சின்னத் தொனிகேட்பச் சென் நிறைஞ்சி-முன்னொரு
மெய்க் கரும்பி னாசையால் (கரும்பு மாசையால் )வில்லொடித்தீர் போர் மாரன்
கைக்கரும்பை வில்லைசெய்யக் காணேனான்–மைக்கடலின் ‘
வீறடைத்து மேவுமணை மீது சென்றீர் என்னிருகண்
ணாறடைத்து மேவு மணை காணீர்–மாறுபடும்–150
புள்வாய் கிழித்தநீர் பூங்குபிலோ டன்றிலெனும்
புள்வாய் கிழிக்கவின்று போகாதோ–உள்ளம்
பரிபவமென் றாள்கடைக்கண் பாலித்து மற்றோர்
தெருவில் மதனொடுதேர் செல்ல த்–தெரிவை
தெரிவை
நிலவுமுடித் தோன்முடிக்க நீறுபட்ட காமன்
இலகுமுயிர் பெற்றுலக மெங்குஞ்–சிலையேந்திச்
சென்றுபோர் வென்று செயஸ்தம்பம் நாட்டியே
நின்றநாள் தேடுகின்ற நிட்சேபந் –துன்று மலர்
வாவிப் புனலாடி மாதருடன் தேர்ப்பவனி
சேவித்தாள் நம்பி திருமுன்போய்–மேவீர்–155-
வளையாழி கைக்கிருக்க மையலா மெங்கள்
வளையாழி கொள்ள வழக்கோ–இளையார்கள்
காணவளைத் தாளிவளைக் கைக்கொளவே நல்கீரேல்
பூணமலர்த் தாரளித்தாற போதுமே–வாணுதலார்
ஆந்தரங்க மாமிருவர்க் காட்சி புய மார்பல்லாற்
பூந் துளப மார்க்கும் பொதுவன்றோ–பூந் துளபத்
தாரே தரீரேற் (தாரேதீ ரீரேற் )றகுந்தகா தென்பதொன்றும்
பாரேன்கை தொட்டும் (தொட்டுப் )பறிப்பேனான்–சேருமென்றாள்
புன்முறுவல் செய்து நம்பி போனா ரயல் வீதி(போனார் பல வீதி )
மன்மதனும் நின்று வளைக்கின்றான்–கன்னற் -160–
றனுவிற் சரந் தொடுத்தான் தையலின்மெய் (தையலும் மெய்)யென்னத்
தனுவிற் சரக்கூட (சரக்கூடத்)தானாள்–வனிதையப்பாற்
பேரிளம்பேண்
காரார் கருங்கூந்தற் செங்கனிவாய் வெண்முறுவற்
பேரான சிற்றிடைசேர் பேரிளம்பெண்–மாரனுக்கு
வீறு தரு விற்று எழிலு மிக்ககலைக் கியானமுமே
கூறவருந் (கூறு வருந்)தீட்சா குருபீடம்–தேறிமறை
தேடுகின்ற நம்பி திருப்பதி நூற் றெட்டிலொன்று
பாடகமென் றேயணியாப் பாதத்தாள்–நாடறிய
எல்கள் நம்பிக் கொப்பாக யான்வனையே னென்றிகழ்ந்து
சங்கவளை பூட்டாத் தடக்கையாள்–௮ங்கொருத்தி
மா அக்கு மாலானாள் மாத்றவள்பே ரென்றுசொல்லிக்–165–
மாலுக்கு மாலானாள் மாத்றவள்பே ரென்றுசொல்லிக்
கோலக் திருவணியாக் கூந்தலாள்—மேலுலகத்
தோரைவென்று தானே உபயசொர்க்க மாய்ச்சினந்து
பாரைவெல்லப் பார்க்கும் பயோதரத்தாள்–நேரான
கீதம்வளர் வச்ரச் சிலா தலத்திலே பகவற்
கீதை பிர சங்கிக்கக் கேட்டிருக்கும் போது
விரும்பவனி போற்று நம்பி மேவுதிருத் தேரில்
வரும்பவனி சேவிக்க வந்தாள் -கரும்புயல்போல்
நீண்டபொன் மேனி நம்பி நின்ற வடிவழகைக்
காண்டலுமே மட்டுமிஞ்சும் காதலாய்–வேண்டுகின்றாள்–170-
(சாந்தளிவர் மீது )சந்ததமும் நீர்விரும்புஞ் (நீ இருப்பச் )சந்திரபா கைக்குதவும்
ஜந்தருவந் தாலு மதுகொள்ளேன்–சிக்தா
மணிமகத்வ மார்புமது மார்புக் கணியாய்
அணிகவுதக்வ மீதுமில்லை யாசை–பணிவோர்க்குச்
சாந்தணியு மார்பிற் சவாது மணம்வீசும்
பூந் துளப மாலை தந்தாற் போதுமே–ஈந்தருள் வீர்
என்றாள் இது ௪மய மென்று மதன் வில் வளைத்தான்
வென்றாள் .இனியெனவே மெய்தளர்ந்தாள்–தென்றல் வரச்
சாலகங்கள் தாழ் திறந்தார் தாரை யுட்ண சாந்திகள் மென்
மேலுமமைத்தார் தளிரால் மெத்தையிட்டார்–ஆலவட்டம் .–175-
வீசினார் மல்லிகைவி தானித்தார் சாந்து பன்னீர்
பூசினார் நேர்ந் தாரப் போதொருத்தி–நேசமுள்ள
மூதறிவாம் பாங்கி வந்து மொய்குழலாரை விலக்கிக்
காத லொருவர் கருத்த.றியிர்–வே.தனையே
செய்தீர் இவட்கு இதங்கள் செய்வதுபோலே யிடர்கள்
செய்தீர் இனியென்ன செய்குவீர்–வெய்துயிர்க்க
வார்த்தபன்னீர் நம்பி மகிழும் திருப்படிக்கத்
தீர்த்த நிக ராகுமோ செப்புவீர்– போர்த்த
குளிரு முலைமேற் குறுங்கேச ஈம்பி |
துளப நிக ராகுமோ சொல்லீர்… .குனிர்மையென்தீர்-180-
ஏந்து களபநம்பி யிட்டபட்ட வர்த்தனம்போல்
போக்தமயல் போக்கவிது புத்தியோ. சாந்தாற்றி
வட்ட விசிறி நம்பி வாழ்கோ புரவாச
லிட்டமுள்ள தென் றலொப்போ வீதெல்லாம்–விட்டுவிடுவீர்
என்றுபோய் நம்பிக்கு இதமுரைத்து வாங்கி வந்து
மன் றல்மலர் சூட்ட மனமகழ்ந்தாள்—நின்று கிளி
பேசுகின்ற தென்னவரும் பேதைமுதற் பேரிளம்பெண்
ணாசைகொண்டு போற்ற வருள்செய்தே–தேசமகிழ்–184
நம்பிகுறுங் காபுரியில் நாத விநோத நம்பி
யும்பர் தொழப் போந்தான் உலா.
ஸ்ரீ அழகிய நம்பி உலா முற்றும்
————-
அனுப பந்தம்
பரவுதய மார்த்தாண்டப் பந்தற்கீ ழுண்மை
வரு. ராம தேவ மக ராசன்–தருபீடத்–82- என்று
இவ்வுலாவில் வரும் அடிகள் சரித்திரத் தொடர்புடையன.
“உதயமார்த்தாண்டர் என்ற அரசர் தம்பெயராற் சமர்ப்பித்த பந்தலின் கீழாக இராமதேவர் என்ற அரசர்
தம்பெயார்ல் அமைத்தளித்த பீடத்திலே’ என்பது பொருள்.
கொல்லம் ஆண்டு 630-ல் (கிபி. 1455) எழுதப்பெற்ற தாமிர சாஸன மொன்றிலும் காட்டாற்றுப் போக்கு வைகுண்ட வளநாட்டுத் திருக்குறுங்குடியில்
உதய மார்த்தாண்டப் பந்தலின் கீழ்ப் புஜபல வீரசெளந்தர ராமவர்மன் பீடத்தில்
ஸ்வாமி அழகிய நம்பி எழுந்தருளியிருந்ததாகக் காணப்படுகின்றது.-(Rangacharya’s I. M. P. vol. tii. p. 1472, no. 285).
இங்கே கூறப்பெற்ற உதய மார்த்தாண்டர் சேர – உதய மார்த்தாண்ட வர்மவாக இருத்தல்வேண்டும். ஏனெனின்,
இவமே திருநெல்வேலிக்குத் தெற்கிலுள்ள நாட்டுப் பகுதியை வென்றடிப்படுத்து வள்ளியூரிலும்,
சேரன் மாதேவியிலும் அடிக்கடி தங்கி வசித்து வந்தார்
இவருக்கு முன் உதயமார்த்தாண்டர்’ என்ற பெயருடையராக இருவர் திருவிதாவ் கோட்டுச் சரித்திரத்திற் காணப்படினும்,
இவ்விருவருக்கும் திருக் குறுங்குடிப் பிரதேசத்திற்கும் யாதோரியைபும் இருந்ததாகத் தெரிய வில்லை.
இவர் தமது 16-வது . ஆண்டில் பட்டத்திற்கு வந்தார்; 78-வது
ஆண்டில், கொல்லம் 619-ம் வருடத்தில், தேகவியோகமாயினர்.
(திரு விதாங்கூர் ஸ்டேட் மானுவல், முதல் வால்யம், பக். 262).
ஆகவே, .கி பி. 15-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உதயமார்த்தாண்டப் பக்.தல் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும்.
அழகிய நம்பி கோயிலிலுள்ள மணியின் மேற்புறத்தில்,
செயதுங்க நாட்டுச். சிறை வாய் மன்னாதித்தன் தென் வஞ்சியான்
வியலொன் றகில கலையாளன் கன்னி விசாகம் வந்தோன்
நயமொன்று கொல்ல மறுதூற்று நாற்பத்து நாலினண்பால்
அயனும் பணிய மணியளித் தானம்பிக் கன்புகொண்டே –. என்ற செய்யுள் பொறிக்கப்பட்டுள்ள.து.
இதனால் திருவிதாங்கோட்டு: அரசர்கள் பலர். திருக்குறுங்குடி ஸ்வாமி அழகிய நம்பியின் பக்தர்களாய் விளங்கினர் என்பது உணரலாம்.
இப் பந்தரின் கீழுள்ள பீடத்தை இயற்றியவர் இன்னாரென அறிந்து கொள்வது எளிதன்று.
ராமவர்மன் என்ற ஓர் அரசர் கொல்லம் 646 முதல் 659 வரை அரசு புரிந்தவரெனச் ‘ சிலா ஸாஸன ஆராய்ச்சியாற் புலனாகின்றது.
இவ்வரசர் கொல்லம் 640 – லும், 654-லும் சாஸனங்கள் செய்திருக்கின்றார். இவர் ௮ரசாவதற்கு முன்
தமது மூத்த சகோதரர் ஆதித்திய வர்மரின் பிரதி நிதியாகப் பல விடங்களில் ஆட்சி புரிந்திருக்கிறார்.
இவருக்குச் “செண்பகராமன்’ என்ற பட்டப் பெயரும் உளதாகத் தெரிகிறது .
செண்பகராமச் சதுர்’வேதி மங்கலம் எனவொன்று திருக்குறுங்குடியில் கொல்லம் 646-ல் இருந்ததென்பதும், செண்பகராம மண்டபம் எனவொன்று திரு
நெல்வேலியில் கொல்லம் 653 ல் இருக்ததென்பதும் சாஸனங்களால் அறியலாவன.
புஜபல வீர செளச்தர ராமவர்மன் என்பதும் இவரது பெயராகவே கருதத்தக்கது .
நூலிற் குறிக்கப் பெற்ற சாஸ னத்திற் காணும் புஜபல வீரசெளச்தர ராமவர்மன் பீடமாக: இருத்தல் கூடும். இவ்வூகம் சரியாயின், உத்தேசம் கிபி. 1450-ல் இப்பீடம் அமைக்கப் பெற்றதாகலாம்.
ஆனால் நூலில் வந்துள்ள தொடர் இம் முடிபை அத்துணை ஆதரிப்பதாகத் தோன்றவில்லை.
* ராமதேவ மகராசன் ‘ என்றே அது கூறுகின்றது .
கொல்லம் 7608-ல் உதய மார்த்தாண்டப் பந்தரின் கீழ்ப் புஜபல வீர வசந்த வேங்கடதேவ மகா ராஜர் பீடத்தில் ஸ்வாமி அழகிய நம்பி வீற்றிருந்ததாக வேறொரு தாமிர சாஸனம் தெரிவிக்கின்றது. (1. நந. 1. 114. ஐ. 172, 00. 986).
இங்கே குறித்த வேங்கடதேவ மகாராஜர் விஜய நகரத்து அரசர்களுள் ஒருவர்.
இவரைப்போன்று, ராமதேவ மகராசனும் விஜய நகரத்து அரசரில் ஒருவராயிருத்தல் மிகப் பொருத்தமானதாகும்.
இஃது உண்மையாயின், இவர் மேற்குறித்த வேங்கடதேவ மகாராஜாவின் பின் இ. பி. 619 முதல் 680 வரை அரசு புரிந்த ராமதேவ மகாராஜாவாக இருத்தல் வேண்டும்.
சாலிவாகன சகாப்தம் 1551-ல் பொறிக்கப்பட்ட சாஸனமொன்நில் ராஜாதி ராஜ ராஜ பரமேஸ்வர
ராமதேவ மஹாராயர்’ என்று இவர் குறிக்கப்படுகிறார். (5. 1.1. v . no . 291).
எனவே, இப்பீடம் தோன்றியது இவரது காலமாகிய கி பி. 17-வது நூற்றாண்டின் தொடக்கமாதல் வேண்டும்.
பீடம் அமைத்ததைச் குறிக்கும் தொடர் அத் திருப் பணி நிகழ்ந்த காலத்தில் இருந்தார் ஒருவரது கூற்றுப் போலத் தோன்றுகிறது.
ஆதலால் இந் நூல் இயற்றப் பெற்ற காலமும் 17-ம் நூற்றாண்டின் முற் பகுதியே யாதல் வேண்டும்.
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply