ஸ்ரீ அழகர் கிள்ளை விடு தூது
கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடிய நூல் அழகர் கிள்ளை விடு தூது.
காப்பு வெண்பா ஒன்றையும், 239 கண்ணிகளையும் கொண்ட நூல் இது
இந்நூலை இயற்றியவர் சொக்கநாதப் புலவர்.
- திருமாலிருஞ்சோலை,
- இடபகிரி,
- தென்திருப்பதி,
- சஞ்சீவி பர்வதம்,
- பழமுதிர்சோலை
எனப் பல பெயர்கள் உண்டு.
கிள்ளை விடு தூதில் அழகர் மலை சிறப்புகள், இறைவன் சிறப்புகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
அழகர் மலைக் கடவுள் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை அவரிடம் கூறக் கிளியைத் தூது அனுப்புவதாக அமைகிறது நூல்.
நூலின் முதலில் கிளியின் பெருமைகள் சொல்லப்படுகின்றன.
அடுத்துக் கோடைத் திருவிழாவில் அழகர் உலா வரும் அழகும், அப்பெருமானிடம் தலைவி தன் உள்ளம் இழந்த வரலாறும் சொல்லப்படுகின்றன.
இறுதியாக அழகரிடம் தன் காதலைத் தெரிவித்து அவருடைய மாலை ஒன்றை வாங்கிவருமாறு கிளியிடம் கூறுவதாக நூல் அமைகிறது.
இவர் மதுரை நகரைச் சார்ந்தவர். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
பலபட்டடைக் கணக்கு எழுதும் தொழில் செய்யும் மரபில் வந்ததால் இப்பெயர் பெற்றார்.
அழகர் மலைக்கு,
- திருமாலிருஞ்சோலை,
- இடபகிரி,
- தென்திருப்பதி,
- சஞ்சீவி பர்வதம்,
- பழமுதிர்சோலை
எனப் பல பெயர்கள் உண்டு.
——–
திருமாலிருஞ்சோலைமலை யென்பது பாண்டி நாட்டுத் திருமால் திருப்பதிகள் பதினெட்டனுள் ஒன்று.
சங்ககாலத்து நூலாகிய பரிபாடலில் இதன் பெருமை சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது.
அந்நூலில் இளம்பெருவழுதியாரென்னும் புலவ ராற் பாடப்பெற்று, மருத்துவன் நல்லச்சுதனாரால் இசை யமைக்கப் பெற்ற
நோதிறப் பண்ணிலமைந்த பதினைந்தாம் பாடல் இத்தலப் பெருமையை விரிவாகக் கூறும்;
அப்பாடலின் பொருட் சுருக்கம் வருமாறு :–
அறிவெல்லையால் அறியப்படாத புகமுடனே விளங்கி நிலத்தைத் தாங்கும் சக்கர வாளம் முதலாகத்
தொல் லிசைப் புலவர்கள் ஆராய்ந்துரைத்த குன்றங்களைப் பொதுவகையால் சொல்லப் புகுந்தாற் பலவாம் ;
அப்பலவற்றுள்ளும் நிலத்தில் உள்ளோரது பசித் துன்பத்தை நீக்கி, நிறை பயன்களெல்லா வற்றையும்
எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்றுகள் சில;
அச் சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர் களையுடைய தடாகங்களும் மேகம் படியும் சிகரங்களும் உள்ள குல வரைகள் சில சிறந்தன ;
அவற்றுள்ளே கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய
மாயோனும் பலதேவரும் எழுந்தருளியிருக்கும் சோலைமலை சிறந்தது.
துழாய் மாலையை யுடைய திருமால் அருள் புரிந்தாலல்லாமல் துறக்கம் அடைதல் எளிதாகுமோ ?
அரிதிற் பெறும் துறக்கத்தை எளிதிற் பெறச் செய்வதனால் திருமாலிருஞ்சோலை மலையை ஏத்தக் கடவோம்.
பலதேவரது திருமார்பிலுள்ள வெண் கடப்ப மாலையைப் போல அருவியாக வீழ்வதனால் சிலம்பாறு அழகுபெறும்.
திருமாலிருஞ்சோலை யென்னும் பெயர் உலகமெல்லாம் பரவ, மகளிரும் மைந்தரும் காமத்தை விதைத்து விளைக்கும்
யாமத் தியல்பையுடைய இருங்குன்றத்தில் இளவெயில் சூழ இருள் வளர்தலை யொத்துப் பீதாம்பரத்தையுடைய
திருமால் பலதேவ ரோடு அமர்ந்து நிற்கும் நிலைமையை, மாந்தர்களே !
தியானம் செய்ம்மின் ;அம் மலையின் சிறப்பைக் கேண்மின் :
சுனைகளிலெல்லாம் நீலமலர் மலர அச்சுனையைச் சூழப் பொன்னிறமுள்ள அசோக மலர்கள் மலர்தலாலும்
வேங்கை மலர்கள் மலர்தலாலும் பீதாம்பரத்தை அணிந்த மாயோனை ஓத்த நிலையினதாயிற்று அம்மலை.
இருங்குன்றென்னும் பெயர் பரவி உலகத்தில் பழையதாகிய புகழையுடைய அது தன்னைக்
கண்டாரது மயக்கத்தை அறுக்கும் தெய்வம் ;
அதனால் சென்று திருமாலைத் தொழும் ஆற்றலை இல்லாதீர் !
அம்மலையைக் கண் டேனும் பணிமின்.
குட்டியால் தழுவப்பட்ட மந்தி பாயவும், முல்லை மலர் கற்பு நிகழ்ச்சியைக் காட்டவும், மயில்கள் அகவவும்,
குருக்கத்தியின் இலை உதிரவும், அதன் கண் இருந்து குயிலினம் கூவவும்
அவ் விருங்குன்றத்தில் குகைக்குள் முழங்குகின்ற எதிரொலி ஒழியாது.
நும் மனைவியரோடும் தாய் தந்தையரோடும் குழந்தைகளோடும் சுற்றத்தோடும் கூடி
அக் குன்றத்தைத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித் தொழுது சென்மின்.
தன் திருவுந்தியில் முன்பு உண்டாகிய கமலத்தை யொக்கும் கண்ணை உடையவனும்,
மேகம் இருள் மணி ஆகியவற்றை யொத்த திருமேனியை உடையவனும்,
எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்க் கூட்டங்களின் பிறவித் துன்பத்தைக் களைவோனுமாகிய
திருமால் அன்பு கொண்டு அக்குன்றத்தின் கண் எழுந்தருளி யிருக்கின்றான்.
திருமாலே ! நீ பசுந்துழாய் மாலையையுடையை ; நீல மலையைப் போன்றாய்;
மிக்க ஒளியினையுடையை; ஒற்றைக் குழையையுடையை ; கருடக்கொடியை உடையை;
வளைந்த கலப்பையை உடையை; தண்டு, சங்கு, சக்கரம், வில், அம்பு, பாராவளை, வாள் என்பவற்றை ஏந்தினை.
இங்ஙனம், வேதம் அவன் பெருமை ஈதென்று உரைத்தலால் யாமும் அவற்றுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்துத்
திருமால் பலதேவரென்னும் இருவரையும் தொழுது அவ்விருங்குன்றத்தின் அடியில் வாழ்தல்
எமக்கு உண்டாகுகவென்று வேண்டுவோமாக !?
இப் பரிபாடலால், முற்காலத்தில் இத்தலத்தே திருமாலோடு
நம்பி மூத்தபிரானாகிய பலதேவரும் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்தனரென்று தெரிகின்றது.
அன்றியும், இற்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிர வருஷங்களுக்கு முன்பே பாடப் பெற்ற இப்பரிபாடலில் உள்ள,
இருங்குன் றென்னும் பெயர் பரந் ததுவே
பெருங்கலி ஞாலதீதுதீ தொன்றியல் புகழது ??–என்னும் பகுதி
அதற்கு முன்பே பல காலமாக இயன்ற புகழை யுடையதென்று இத்தலத்தைப் பாராட்டுதல் அறிதற்குரியது.
————————-
சிலப்பதிகாரச் செய்தி
சிலப்பதிகாரத்தில், மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு ஓரந்தணன் வழியிலே
காண்பனவற்றை விரித்துக் கூறுவதாக அமைந்த பகுதியில் இம் மலையைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன :–
திருமால் குன்றத்துச் செல்வீராயின், அங்கே மிக்க மயக்கத்தைக் கொடுக்கும் பிலத் துவார வழி ஒன்று உண்டு.
அங்கே புண்ணிய ஸ்ரவணம், பவ காரணி, இட்ட சித்தி என்னும் பெயரை யுடைய மூன்று பொய்கைகள் உள.
புண்ணிய ஸ்ரவணத்தில் நீராடினால் இந்திரனாற் செய்யப்பட்ட இந்திர வியாகரணமென்னும் இலக்கணத்தை உணரலாகும்.
பவ காரணி யென்னும் தீர்த்தத்தில் ஆடுவார் பழம் பிறப்பை உணர்வர்.
இட்ட சித்தியில் நீராடி நினைத்தவற்றை யெல்லாம் அடைதல் கூடும்.
அங்கே சிலம்பாற்றின் கரையின் கண் உள்ள கோங்க மரத்தின் நிழலிலே ஒரு தெய்வப்பெண் தோன்றி, ‘
இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும் இவை இரண்டும் ஒழிந்து
எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க் கோட்டமின் றி அழிவற நிற்கும் இன்பமு மாகிய பொருள்கள் யாவை?
அவற்றை உரைமின் ;
யான் இம் மலையடிவாரத்திலே வாழ்வேன் ; வரோத்தமை யென்னும் பெயருடையேன்.
யான் வினாவியவற்றிற்கு ஏற்ற விடையை யார் கூறுகின்றனரோ அவருக்கு யான் ஏவல் புரிவேன் .
நீவிர். உரைத்தீராயின் இப்பொழுது இப்பிலவாயிற் கதவைத் திறந்து தருவேன்? என்று சொல்வாள்.
அவள் வினாவியவற்றிற்கு விடை கூறின் அவள் பிலம் திறந்துவிடுவாள்
மேலே செல்லின் ஆங்கொரு பெண் தெய்வம் முன்னே கூறிய மூன்று பொய்கைகளையும் காட்டுவாள்.
அப்பொய்கைகளிலே பஞ்சாக்ஷரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் மனத்தால் நினைத்து ஜபித்து நீராடின் நற்பயனை அடைவீர்கள்.
அப்பொய்கையினால் உண்டாகும் பயனை விரும்பீராயின், அவற்றை நினையாது, அம்மலைமீது
நின்றோனுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளைத் தியானம் செய்யுங்கள்.
அங்கே துவஜஸ்தம்பத்தைக் காண்பீர்கள். அப்பெருமானுடைய திருவடி தரிசனம் பிறவித் துன்பத்தைக் கெடுக்கும் (சிலப். 11 : 87–138, சுருக்கம்.)
இப் பகுதியால் இந்தத் தலத்தில்
மூன்று பொய்கைகளும், சிறப்புடைய கோங்கமரம் ஒன்றும், பிலத்துவாரம் ஒன்றும் இருந்து வந்தனவென்று தெரியவரும்.
அன்றியும் சிலப்பதிகார காலத்தில் இத்தலத்தின் கண்ணே தெய்வப் பெண்கள் வாழ்ந்து வந்ததாக
மக்கள் எண்ணி யிருந்தனரென்பதும் பெறப்படும்.
————
வேம்பத்தூர்க் கவிகுஞ்சரமையரால் இயற்றப்பெற்ற கலம்பகம் ஒன்றும்,
சாமி கவிகாளருத்திரர் இயற்றிய பிள்ளைத் தமிழ் ஒன்றும்,
பெருங்கரைக் கவிகுஞ்சர பாரதியால் இயற்றப்பெற்ற குறவஞ்சி ஒன்றும்
இத்தல ஸம்பந்தமாக உள்ளன.
—————
தலத்தின் திருநாமங்கள்
அலங்காரன்மலை, அழகர் கோயில், அழகர்மலை, ஆராம சைலம், இருங்குன்றம், குலபூதரம், குலமலை,
குளிர்மாமலை, குன்றம், கேசவாத்திரி, கொற்றமலை, கோலமலை, சஞ்சீவி பர்வதம்,
சிங்காத்திரி, சீர்பதி, சோலைமலை, தர்மாசலம், திருமலை, திரு மால்குன்றம், திருமாலிருஞ்சோலை,
திருமாலிருஞ்சோலைமலை, தென் திருப்பதி, நிலமலை, நீண்டமலை, பழமுதிர்சோலை,
பழமுதிர்சோலைமலை, பிரம்மபர்வதம், மண்டூகபர்வதம், மாலிருங்குன்றம், வனகிரி, விருஷபகிரி, ஸ்ரீபதி.
பெருமாள் திருநாமங்கள்
அலங்காரர், அழகர், கள்ளழகர், சங்கத்தழகர், சுந்தரத் தோளர், சுந்தரபாஹு, சுந்தரராஜப் பெருமாள்,
சோலைமலைக் கரு, தெய்வசிகாமணி, பரமசுவாமி, மலையலங்காரர், மாலலங்காரர், விருஷபாத்திரி நாதர்.
நாச்சியார் திருநாமம்
ஸெளந்தரவல்லி ; கல்யாண சுந்தரவல்லி யெனவும் வழங்கும்.
ஆண்டாளும் இங்கே திருக்கோயில் கொண்டெழுந் தருளியுள்ளாள்.
தீர்த்தங்கள்
சிலம்பாறு என்பத! இத்தலத்திலுள்ள தலைமையான தீர்த்தம்.
அது தேனாறு, தூபுர கங்கை, பகவத்பாத தீர்த்தம், மஞ்சீரநதி, விஷ்ணு கங்கை யென்றும் வழங்கப்பெறும்.
அது திருக் கோயிலுக்கு வடக்கே 23 மைல் தூரத்தில் இருக்கிறது.
மற்றத்தீர்த்தங்கள் வருமாறு :–
அக்கினிவாபி, அனுமதீர்த்தம், இஷ்டசிதீதி, உத்தர நாராயணவாபி, கதலிவாபி அல்லது வாழைக்கவி,
கருடதீர்த்தம், கிருஷ்ணவாபி, நாராயண புஷ்கரிணி, பண்
டாரிவாபி, பவகாரணி, பாண்டவ தீர்த்தம், புண்ணிய சரவணம்,
பெரிய அருவி, வேணு தீர்த்தமென்னும் மூங்கிற்கவி.
விருக்ஷங்கள்
இங்கே முதல் யுகத்தில் ஆலாகவும்
இரண்டாவது யுகத்தில் அரசாகவும்
மூன்றாவதில் வில்வமாகவும்
இக்கலியுகத்தில் புத்திரதிபமென்னும் பெயரின தாகவும் ஒரு ஸ்தல விருக்ஷம் உண்டென்று இந்த நூல் கூறும்.
மூன்றாம் யுகத்தில் பலாவாகவும்
இக்கலி யுகத்தில் புத்திர ஜீவியென்னும் விருக்ஷமாகவும் இருப்பதாக இத்தல மான்மியம் தெரிவிக்கும்.
நூபுரகங்கையின் ஆரம்பத்தில் ஒரு மகா வடவிருக்ஷம் இருந்ததென்பர்.
சந்தனமரத்தைத் தலவிருக்ஷமென்பாரும் உளர்.
சிலப்பதிகாரத்திலே சொல்லப்பட்ட கன்னிகார விருக்ஷமும், இந்நூலில் கூறப்படும் உறங்காப்புளியும்
இத்தலத்தோடு .சேர்த்திச் சொல்லப்பெறும் விருக்ஷங்களாம்.
இங்கே சோதிவிருக்ஷ முண்டென்றும் கூறுவர்.
விமானம்
சோமச்சந்திர விமானமென்றும், சோமச்சந்த விமான மென்றும் வழங்கும்.
இது பிரணவாகாரமானதென்று தலமான் மியம் கூறும்.
மண்டபங்கள்
(1) மாத்வி மண்டபம் : இது சிலம்பாற்றங்கரையில் இருப்பது; இந்தத் தலமான்மியத்திலும் இது கூறப்படுகின்றது.
(2)சோலைமலை மண்டபம் : இது சாம்பல்போடும் மண்டபமென் றும் வழங்கும் ; பதினாறு கால்களை உடையது.
(3) கனு மண்டபாம் : கல்யாண சுந்தரவல்லித்தாயார் கனுத் திருவிழா நடைபெறும் மண்டபம்.
4) வண்டியூர் மண்டபம் : அழகர் எழுந் தருளும் மண்டபங்களுள் ஒன்று.
(5) தேனூர் மண்டபம் :வையையாற்றின் இடையிலே உள்ளது; அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று;
இது தேனூரிலுள்ள அன்பர்களாற் கட்டப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது.
பூசித்துப் பேறுபெற்றோர்
அம்பரீஷன், அருச்சுனன், அனுமன், இந்திரத்தியும்நன்,
இந்திரன், கந்தருவன் ஒருவன், கருடன், குப்ஜபாண்டியன்,
கெளதம முனிவர், சதிரிளமடவார், சந்திரகேது, சுதபஸ் என்
னும் முனிவர், செளனக முனிவர், தருமதேவர், தாலப்பியர்,
பச்சை வாரணதாசர், பராசரர், பாண்டவர், பிரகலாதன், பிரமதேவர், புண்ணியம், புரூரவ௬ு, புலத்தியர், மரீசி,
மலயத்துவசன், மார்க்கண்டேயர், மாவலி, மைத்திரேயர், யானையொன்று, ர௬ுக்மாங்கதர், வசிஷ்டர், விபீஷணன்.
பிற கோயில்கள்
(1) ஸ்ரீ நாகநாதர் கோயில்: பல நாகர்கள் உள்ள கோயில்.
(2) இராக்காயி அம்மன் கோயில் :
(3) அனுமன்கோயில் : இஃது அனும தீர்த்தத்துக்கு அருகிலுள்ளது.
(4) கருடன் கோயில் : கருட தீர்த்தத்துகீகு அருகில் உள்ள து.
(5) பாண்டவர் கோயில் : பாண்டவர் தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது.
(6) சதிரிளமடவார் கோயில் : இம்மலையின் தென் பகுதியில் உள்ளது.
(7) சக்கரத்தாழ்வார் கோயில் : இதற் குச் சில நிவந்தங்கள் அமைந்ததாகக் கூறும் சிலாசாஸனம் உண்டு.
(8), தண்டலைக் கோயில்.
(9) வெள்ளிமலை : இது மலையின் தென் பகுதிக்குப் பெயரென்றும்- இங்கே வெள்ளி மலை யாண்டி யென்னும் கடவுள் உறைவதாகவும் கூறுவர்.
(10) க்ஷேத்திரபாலகர் கோயில் : க்ஷேத்திரபாலகர் கல்லெனவும் வழங்கும் ; இக்கல்லில் வைரவர் எழுந்தருளியிருக்கின்றனரென்பது லீதிஹ்யம்.
விழாக்கள்
1) கோடை உத்ஸவம் : இஃது இந்நூலிற் சிறப்பிக்கப் பெறுவது ; சித்திரா பெளர்ணமியில் நிகழ்வது. இவ்விழாவில் பெருமாள், ஆண்டாள் சூடிக் கொடுத்து அனுப்பிய மாலையை அணிந்து செல்வது வழக்கம்.
(2) வசந்த உத்ஸவம் : வைகாசி மாதம் பத்துநாள் நடை பெறும்.
3 முப்பழ உத்ஸவம் : ஆனிப் பெளர்ணமியன்று முக் கனிகள் நிவேதனம் செய்யப்படும்.
(5) பிரும்மோத்ஸவம் : பத்துநாள் திருவிழா. மலயத்து வச பாண்டியன் முதலில் தொடங்கியதாகத் தலமான்மியம்கூறும்.
தங்கப் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுவர். ஆஷாட பெளர்ணமி யன்று திருத்தேர்.
5)கருட ஸேவை: ஆடி அமாவாசையன்று நடைபெறுவது.
(6) திருப்பவித்திர உத்ஸவம் : 5 நாள் நடைபெறும்.-ஆவணி மாதம் பெளர்ணமியோடு நிறைவுறும்.
(7) நவராத்திரி : புரட்டாசிமாதம் நடைபெறுவது.
(8) எண்ணெய்க் காப்பு உத்ஸவம் : ஐப்பசி மாதம் நடை பெறுவது, சுக்கில பக்ஷத் துவாதசி யன்று பெருமாள் தீர்த்தத் தொட்டிக்கு எழுந்தருளுவது வழக்கம்;
இதனால் இது தொட்டி யுத்ஸவமென்றும் வழங்கும்.
(9) திருக்கார்த்திகை விழா : இவ்விழாவிலே புறப்பாடு உண்டு.
(10) அத்யயன உத்ஸவம் : மார்கழி மாதம் நடைபெறும் பகற் பத்து இராப்பத்து.
(11) சட்டத்தேர் உத்ஸவம் : தை மாதம் நடைபெறுவது.
(12) திருக் கல்யாண உத்ஸவம் : பங்குனி உத்தரத்தன்று நிகழும். மறுநாள் தெப்பத் திருவிழா நடைபெறும்.
இவற்றை யன்றி வேறு சில உத்ஸவங்களும் நடைபெறுவதுண்டு. .
வாமன புராணம், வராக புராணம், பிரம்மாண்ட புராண மென்னும் மூன்று புராணங்களில்
இத்திருப்பதியின் மான்மியம் கூறப்பட்டிருப்பதாகத் தலபுராணம் தெரிவிக்கின்றது.
திவ்யப் பிரபந்தத்திற் கண்ட சிறப்பு
மேலே கூறியவற்றுள் சிலம்பாற்றை,
சிலம்பாறு பாயுந்தென் நிருமாலிருஞ் சோலையே -என்றும்
ஓட்டருந் தண் சிலம் பாறுடை மாலிருஞ் சோலையதே
என்றும் பெரியாழ்வாரும்,
சந்தொடு காரகிலுஞ் சுமந்து தடங்கள் பொருது
வந்திழி யுஞ்சிலம் பாறுடை மாலிருஞ் சோலை –என்று ஆண்டாளும்
சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ் சோலை –என்று திருமங்கை மன்னனும் பணித்தனர்.
இங்கே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய பெருமாளை,
சுந்தரத் தோளுடையான்
திருமாலிருஞ் சோலைநம்பி
மாலிருஞ் சோலைநம்பி
சுந்தரன் –என்று ஆண்டாளும்,
தேவர்கள் நாயகன்
கேசவ நம்பி –என்று திருமங்கைமன்னனும்,
அழகர் என்று நம்மாழ்வாரும் போற்றுகின்றனர்.
நெடுமாறன் தென்கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென்றிருமாலிருஞ் சோலை
அளித்தெங்கு நாடு நகரமும் தம்முடைதீ தீவினை .தீர்க்கலுற்றுதீ தெளித்து வலஞ்செய்யுந்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையே
சென்றுலகங் குடைந்தாடுஞ் சுனைத்திரு மாலிருஞ்சோலை –என்று (பெரியாழ்வார்)
தேசமெல் லாம்வணங்குநீ் திருமாலிருஞ்சோலை என்று (திருமங்கையாழ்வார்)
தென்சொல் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ் சோலை என்று (நம்மாழ்வார்)
இவ்வாறு இத்தலம் பாராட்டப்படுகின்றது.
————–
நூலின் பொருள் அமைப்பு
இந்நூலில்
1-தூதுவிடப் பெறும் கிளியின் பெருமையும்,
2-பாட்டுடைத் தலைவராகிய அழகர் சிறப்பும்,
3-தலைவி அழகரைக் கண்டு காமுற்ற வரலாறும்
முறையே கூறப்படுகின்றன.
———–
கிளியின் பெருமை
திருமாலின் திருநாமமாகிய அரியென்னும் பெயரையும், அவர் திருக்கண்வளரும் பாயலாகிய ஆலிலையின்
நிறத்தையும் கொண்டு மன்மதனுக்கு வாகனமாக விளங்கும் கிளியரசே, நான் சொல்வதைக் கேட்பாயாக :
உன்னுடைய பெருமை பலபடி யாகப் பரந்தது. மன்மதனுடைய ஆட்சியிலே உன் சொல்லைக் கேளாதவர் ஆர் ?
மன்மதனது ஒற்றைச் சக்கரங்கூட இல்லாமற் செலுத்துகின்ற காற்றாகிய தேரைப் பலங்கொண்டு
இழுத்துத் திரிகின்ற பச்சைக் குதிரையே, ஒற்றைச் சக்கரத்தோடு கூடிய சூரியன் தேர் ஒன்றை
யிழுக்கும் பச்சைக் குதிரைகள் ஏழும் உனக்கு ஒப்பாகுமோ?
அந்தக் குதிரைகள் சுற்றிவரும் உலக மும் நீயே; ஞான விளக்கும் நீயே? என்று சொல்வதிற் பிழை யென்ன ?
உன் உருவம் கொண்ட சுகமுனிவர் எல்லாம் தாமாகவே இருந்தார்.
எத்தகைய நிறத்தையுடைய பறவையானாலும் உன்னுடைய பஞ்சவர்ணங்களுக்குள் ஒன்நில் அடங்குமன்றோ
உன் மேனி முமுவதும் பச்சை நிறமா யிருந்தால் உன்னைக் கண்டோர் பார்வதி தேவியாரென்று
எண்ணி விடுவார்களென்று கருதியோ நீ மூக்கு மாத்திரம் சிவந்திருக்கின்றாய் ?
நாக்குத் தடுமாறிப் பேசுபவர்களை உலகத்தார் சேர்த்துக் கொள்ளாமல் விடுவர் , -உன்னை அப்படி விடுபவர் ஒருவரும் இல்லை.
முன்பு சீவகனுடைய மனைவியருள் ஒருத்தியாகிய காந்தருவதத்தை மிக்க சிறப்படைந்தமைக்குக் காரணம்,
அவள் உன் பெயருள் ஒன்றாகிய தத்தை யென்பதைக் கொண்டமையே.
பிற பறவைகளினிடத்தில் திருமால் திருநாமத்தையும், சிவபெருமான் நாமத்தையும் சொல்வதனால் பயனில்லை.
உன்னிடம் சொன்னால் நீ அவற் றைப் பயின்று கூறுவாய்.
கூடுவிட்டுக் கூடுபாயும் யோகி உனக்கு ஓப்பாவானோ ?
பாலின் பெயராகிய கீரம் என்ப து உனக்கும் பெயர். அதனால் உனக்கும் ஆடை (பாலாடை, உடை) உண்டு.
பாடகம், காலாழி முதலிய ஆபரணங்களை நீ பூண்பாய். -கற்புடையாய் ; சோலையாகிய மனையிலே சேர்வாய். இவற்றால் உன்னையும் ஒரு பெண்ணென்றே சொல்லலாம்.
சாயுச்சியமென்னும் பதவியைச் சுகரூபமென்பர்.
உன் பெயர் சுகமாதலின் அது நின் சொரூப மென்றே சொல்லவேண்டும்.
வன்னி (வன்னி நெருப்பு கிளி )பரிசித்த வெல்லாம் பரிசுத்தம் ? என்று வழங்குவதை யெண்ணியே நீ கோதிய பழத்தை யாவரும் உண்கின்றனர்.
யாருடைய சொல்லையும் நீ கற்றுக்கொள்வாய்.
யோகங்கள் சாதித்துப் 1 பச்சைப்பிள்ளையாக வாழும் பெரியோர் பலர் உண்டு.
ஆயினும் அந்த யோகங்கள் சாதியாமலே பச்சைப் பிள்ளையாய் நீ வாழ்கின்றாய்.
நீ|பாலனத்தாலே(பாலனம் பாலோடு கூடிய சோறு) பசி தீர்ககின்றாய்.
திருமாலும் தம்முடைய பாலனத்தாலே உலகத்தோர் பசியைத் தீர்க்கின்றார்.
ஆதலின் நீ அவருக்கு ஒப்பாகின்றாய்.
மிக்க நண்பினரானாலும் பூசையை விட்டார் முதலியோரை நீ விரும்பாய்.
உனக்குப் பச்சை சிவப்பு என்னும் இரண்டு நிறம் இருப்பதனால்
இரண்டு வடிவமுடைய (பறவை வடிவமும் புருஷ வடிவமும் )கருடாழ்வானுக்கு இணை யாவாய். ‘
ஐபம் செய்வோர்களுக்கெல்லாம் திருவரங்கர் திருநாமத்தை நீ உபதேசம் செய்வாய்.
பெண்களுக்கு ஆடவரைப் போல முத்தம் கொடுப்பாய்,
அங்ஙனம் முத்தங்கொடுப்பதனால் அவருக்கு இதழிலே செந்நிறம் உண்டாயிற்றோ?
அன்றி அவர் இதழ்ச் சிவப்பு உன் அலகிற்கு ஏறியதோ ?
யாருக்கும் தோந்றாத வனாகிய மன்மதனை நீ தேர்க் குதிரையாகி இழுத்து வருவாயாயின், அவனுக்குக் குறை ஏது?
யோகிகளெல்லாம் அடக்கிக் கஷ்டப்படுகின்ற வாயுவை உன் பின்னாலே (தேராக) வரச் செய்வாய்.
திருமகளும் மலைமகளும் தம்முடைய திருக் கரங்களிலே உன்னைப் பிடித்திருக்கும்படி நீ நட்புப் பூண்டாய்.
திருமாலுக்கும், பார்வதிக்கும், உனக்கும் பச்சை நிறம் வந்த விதம் எங்ஙனம் ?
யாவரும் மெச்சும் பறவையே, உன்னுடைய நாக்குக் கூழை நாக்கானது, அரி கீர்த்தனத்தை இடைவிடாமற் செய்ததனாலோ ?
குயில், வண்டு, புறா, மயில், நாகணவாய்ப்புள் என்னும் பறவைகளுக்கு உன் சிறப்பு வருமோ ?
வேதமாகிய சிவபிரான் குதிரைகளுக்குப் பிரமதேவர் சாரதி ;
மன்மதனுடைய குதிரையாகிய உனக்குச் சாரதி யார் ? சிவபெரு மான் திருநுதற் கண்ணால் மன்மதனும், அவன் நாணாகிய வண்டும், சின்னமாகிய குயிலும் சுடப்பட்டுக் கருகிய காலத்திலும் நீ கருகாமலே வந்தாய்.
உனக்குக் கனியினிடத்தில் அதிக விருப்பம்.
நீ அரிதாளை (திருமால் திருவடி -அரிந்த தினைத்தாள்) விட்டு அகலாய்.
எனக்கு உள்ள இரண்டு கை உனக்கு இல்லை ; உனக்குள்ள இருசிறகு எனக் கில்லை. எனக்கும் உனக்கும் பேதம் இதுதான்.
நீ வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களுடன் இதமாகப் பழகு வாய். அன்பினால் அக்கா, அம்மா என்று முறையிட்டு அழைப்பாய்.
வண்டு மதுவை உண்டு குழறும். குயிற்பிள்ளையோ மாமரத்திலேறிக் கத்தும்.
கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும், என்ற நல்ல பெயரை நீ பெற்றிருக்கிறாய்.
நீ அன்னமில்லாமற் பால்மாத்திரம் குடிக்கும் பச்சைச் குழந் தையானாலும், உன் காலைப் பிடிப்பார் பலராவர். மன்மதனால் வருந்துவோருடைய நோயைத் தீர்ப்பதற்காகவோ நீ பச்சிலை ரூபத்தைப் படைத்தாய்?
மகளிருடைய மயக்கமாகிய காட்டைச் சுடுவதற்காகவோ நீ வன்னியென்னும் பெயரைத் தாங்கினாய் ?(வன்னி -நெருப்பு -கிளி )
அவர்களுடைய துன்பமாகிய. வேழத்தைக் கொல்லவோ நீ அரி வடிவம் பூண்டாய்? (அரி -சிம்மம் கிளி )
அவர்களது விரகதாபமாகிய பெரிய படையை வெல்லவோ நீ கிள்ளை(குதிரை கிளி ) வடிவத்தை எடுத்தாய்? மாதர்களுடைய விசனம் கெடுவதற்காகவோ நீ சுக (இன்பம் கிளி )வடிவத்தைகீ கொண்டாய் ?
ரதிக்கும் கலைமகளுக்கும் உன்னை உவமானமாக்கி உரைப்பர்.
உவமையாகக் கூறும் பொருளே உயர்ந்ததாதலின் அவ்விருவரிலும் நீயே உயர்ந்தாயன்றோ ?
உன்னுடைய வடிவமும் வளைந்த மூக்கும் திருமாலினுடைய துவசத்தில் இருக்கும் கருடதேவனது அம்சமோ?
உன்னுடைய சிறகானது, பழைய காலத்தில் கண்ணபிரான் வேய்ங்குழல் வாசித்த போது மரங்களிலே தளிர்த்த பசுந்தழையோ ?
அல்லது, இராமபிரான் இராவணனைச் சம்ஹரித்த பிறகு விபீடணன் இலங்கையிலே புக்குக்கட்டிய புதுத்தோரணமோ ?
உன்னுடைய இனியமொழி கண்ணபிரானது வேய்ங்குழுலோசையோ ?
கிளிப்பிள்ளயே, தெள்ளமுதக் கிள்ளையே, இன்பரசக்குஞ்சே,
தென்றற் குழவியைத் தாய்போல எடுத்துச் சஞ்சரிக்கும் செல்வமே,
திருமகள் திருக்கரத்திலே யுள்ளாய், முத்தி நகரேழில் ஒன்றாகிய அவந்தியென்பதன் பெயரையும்,
தமிழில் வல்லினம் ஆறனுள் ஒன்றாகிய தகரவரியிலமைந்த தத்தை யென்னும் பெயரையும்,
லீந்து பூதத்தில் ஒன்றாகிய நெருப்பின் பெயராம் வன்னியென்பதையும்,
சதுரங்க சேனைகளுள் குதிரையின் பெயராகிய கிள்ளையென்பதையும்,
மும்மூர்த்திகளில் ஒருவராகிய அரியின் திருநாமத்தையும், இரு பயனாகிய சுக துக்கங்களில் சுகமென்னும் பெயரையும் தாங்கிய என் கண்ணே,
கண்ணுண் மணியே, நான் திருமாலைத் தரிசனம் செய்யப்போய் ஊராரெல்லாம் அவர் கூறும் நிலையை அடைந்ததைச் சொல் கின்றேன் ; கேட்பாயாக
———–
அழகர் பெருமை
அவன், நரசிங்கம் போன்ற திருவுருவத்தை எடுத்து இரணிய ஸம்ஹாரம் செய்தவன். -கிருஷ்ணாவதாரத்தில் பூதனையின் பாலை யுண்டவன்.
பிள்ளைத் தன்மை நீங்காதவன்.- கல்லைப்பெண்ணாக்கும் திருவடியையுடையவன்.
ஒரு கவிஞன் பொருட்டுத் தன் படுக்கையைத் தூக்கிச் சென்றவன். தேவர்களுக்காக அமுது கடைந்தவன்,
சீதாபிராட்டியுடன் கானங் கடந்தவன்.-ஒரு வேடனுக்கு மெல்லிய கால் நகங்களைத் தந்தவன்.
என் காதல் வெள்ளத்திலே அமிழ்ந்தினவன் ; பிரளயகால வெள்ளத்திலே மிதந்தவன் என் உள்ளத்தே உள்ளவன் ;
ஆயினும், உலகத்துக்கு அப்பாலான். வெட்ட வெளியிலே நின்று எளிதிலே தோற்றாதவன் –
அருகிலே இருந்தும் அணுகுதற்கரியான். மாயன் என்னும் பெயருக்கேற்ப என் மனத்துள் இருந்தாலும் மாயம் செய்து ஓளிப்பவன்.
எல்லாவற்றையும் காட்டி யருளிக் கண்ணனென்னும் பெயரை அடைபவன்.
எங்கும் இல்லாதிருந்தும் எங்கும் நிறைந்திருப்பவன் ; எங்கும் நிறைந்திருந்தும் எங்கும் இல்லாதவனாக இருப்பவன்.
என்னை எனக்கு ஓளித்துத் தன்னை எனக்கருளும் தம்பிரான்.
என்னுடைய பழைய வினை களையும் பல மாயைக் கூட்டத்தையும் கலைத்து என்னைத் தனியே இருத்துவோன்.
நானே பிரமன்; நானே எல்லா வுயிரும்; இவ்விருவரையும் ஏவுபவனும் நான்? என்று உணர்த் தும் பொருட்டுக்
கோவலரிடத்தே பசுவும் பசுவின் கன்றும் அவற்றை மேய்ப்பவர்களுமாகி நின்ற பரஞ்சோதி.
தன்னுடைய சங்கத் தொனியைக் கேட்டாரை நரகினின்றும் மீட்பவன்.
வேய்ங் குழலின் தொனியால் பட்ட மரங்களைத் தளிர்க்கச் செய்தவன்.
ஆதிமூலம் இவன்? என்பதை உணர்த்தும் யான யொன்றை உடையவன்.
பிரமாவைத் திருவுந்தியால் வெளிப்படுத்திச்சிருஷ்டிக்கு மூலகாரணன் தானென்பதைப் புலப்படுத்துவோன் ;
அப்படியே பிரளயகாலத்தில் உலகங்களை விழுங்கித் துடைப் போனும் தானே யென்பதை உணர்த்துவோன்.
தமிழினாலே வேதக் கருத்துக்களை உணர்த்திய ஆழ்வார்கள் பதினொரு வருடைய உள்ளத்திலே எழுந்தருளியிருப்பவன்.
தன் பாத மாகிய செந்தாமரை மலரிலிருந்து வழியும் தேனைப் போலக் கங்கை உண்டாகும் பெருமையுடையவன்.
துயிலாத் துயில் கொள்பவன். தன் தாயாகிய யசோதைப் பிராட்டிக்கு, தன்னுள்ளும் புறம்பும் உலகம் இருப்பதை வாய் திறந்து காட்டி உணர்த்தியவன்.
பிறப்பாகிய கடலில் கலந்த அவித்தையாகிய உவர்த்தன்மையை வாங்கிவிட முகில்போல விளங்குபவன்.
பரசமயவாதங்களாகிய நதிகள் யாவும் தன்பாலே அடங்கக் கடல் போல இருப்பவன்.
ஒரு கிரணம்போன்ற என்னைத் தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நீலமணிநிறம் பூண்டவன்.
உலகமாகிய ஊசலில் எழுந்தருளியிருப்பவனும் அதனை இயக்கு பவனும் தானே யாகின்ற அண்ணல்.
வேடர்கள் ஒரு பார்வை மிருகத்தைக் கொண்டு நூறுமான்களைப் பிடிப்பதைப் போலத்
தன் :அவதாரமாகிய பத்தினால் தான் படைத்த எண்பத்து நான்கு லக்ஷம் யோனி பேதங்களாகிய பிறவிகளை நீக்குபவன்.
———-
தசாங்கம்
கேசவாத்திரி, சிங்காத்திரி, இடபகிரி என்னும் திருநாமங்களையுடைய சோலைமலைக்கு அவன் தலைவன்.
அந்த இடபாசலம் இந்திரன் போலவும் அதில் உள்ள சுனைகள் அவன் கண்களைப் போலவும் இருப்ப,
தோளில் புரளும் முத்தாரத்தைப் போல விளங்கும் நூபுரநதியை உடையவன்.
பூமிதேவிக்குப் பன்னிரு செந்தமிழ் நாடுகளும் கை இரண்டு, காது இரண்டு, நகில் இரண்டு, முகம், காலிரண்டு,
பின்னல், கண்ணிரண்டு ஆகப் பன்னிரண்டு உறுப்புக்களாக இருப்பவும்,
அவற்றுள் சோழ நாடும் பாண்டிநாடும் கண்களாக விளங்க, அவற்றுள்ளும் வலக் கண்ணாக விளங்கும் பாண்டி நாட்டையுடையவன்.
சோமச் சந்திர விமானத்தை இந்திர விமானமென்றும், துவசஸ்தம் பத்தைக் கற்பகவிருட்ச மென்றும்,
தன்னை உபேந்திரனென்றும், திருமாலையாண்டானென்றும், ஆசிரியரைப் பிருகஸ்பதி யென்றும்,
மற்ற யாவரையும் இந்திரன் முதலாகிய தேவர்களென்றும்
யாரும் எண்ணுதலால் தேவர் வாழும் அமராபதி போலத் தோன்றுகின்ற சீபதியென்னும் திருப்பதியையுடையவன்.
தன் திருமார்பில் உள்ள பல ஆபரணங்களின் நிறத்தோடு சேர்ந்து இந்திரவில்லைப்போலத் தோற்றும்
பசுந்துளபமாலையை அணிந்த வன். வைணவமாகிய மதம் பொங்கவும் (மதம் யானையின் மதம் சமயம் )
வைகானசம் பாஞ் சராத்திரமென்னும் ஆகமங்களாகிய மணிகள் ஒலிப்பவும்,
வடகலையும் தென்கலையும் புரசைக் கயிறாக விளங்கும் அத்துவி தானந்தமென்னும் யானையை உடையவன். வேதமாகிய குதிரையையும் கருடனாகிய கொடியையும் மும்முரசையும் உடையான்.-தவநிலை ஆணை தரித்தவன்.
———
பிற சிறப்புக்கள்
கண்ணபிரானாக வந்தகாலத்துத் தன் திருமேனியிலே சிந்தின வெண்ணெய்ப் பிதிர்கள் நட்சத்திரங்களைப் போலவும்
கையில் ஏந்திய வெண்ணெயுருண்டை மதியம் போலவும் விளங்க அதனை உண்டவன். சூரிய சந்திரர்களாகிய திருவிழி
களையும், அவற்றைப் போன்ற சங்கு சக்கரங்களையும் தாங்கினவன். உலகத்தை உண்ட திருவாயையும், அடக்கிய
திருவயிற்றையும், ஈன்ற திருவுந்தித் தாமரையையும், அளந்த திருத்தாளையும், அதனை மாவலிபால் ஏற்ற திருக்கரத்தையும்,
அதன்கண் வளைந்த பயிர்களின் நிறத்தைக் காட்டும் திருமேனியையும், அதனை வராகாவதாரத்தில் பெயர்த்த மருப்பை யும், ஆமையாகி ஏந்திய முதுகையும், அதனைத் தன் படத்திலே வைத்த ஆதிசேடனாகிய பாயையும் உடையவன்.
தன் திரு நாமத்தை நினைந்து நாமமிட்டவர்களுக்கு இம்மை மறுமைப் பயன்களை ஈபவன்.
பிரமன் எழுதும் எழுத்தைத் தன் அஷ்டாக்ஷரத்தால், இனி இல்லையென்று சொல்லும்படி ஆக்குவோன்.
சங்கரன் முதலியோர் தங்கள் தங்கள் மலைகள் எங்கே இருப் பினும் இது நம் குன்று என எண்ணிவரும் நண்புடையவன்.
பச்சைவாரண தாசரென்பவருகீகு இரண்டு கண்களையும் மாற்றினவன் ; ஒரு யானைக் கன்றுக்குக் கண் கொடுத்தவன்.
திருக்கையில் உத்தியோகச் சக்கரத்தை யுடையவன். இலங்கையை முன்பு வென்று கொண்டாலும் நிலத்தை (மாவலியி னிடம்) தானமாக வாங்கினவன்……
திருக்கரத்திலே சங்கத்தை யுடைமையினாலும், மதுரையிலுள்ள சங்கத்தில் வீற்றிருந்து
தமிழ் ஆராய்ந்தமையினாலும் சங்கத்தழகனென்று சொல்லும் திருநாமமுடைய தம்பிரான்.
தன்னுடைய பாதுகை அரசு புரியவும் கருடாழ்வான் பறவைகளுக்கரசாக இருப்பவும் அருள் புரிந்தவன்.
செளந்தரவல்லி நாச்சியாரோடு சுந்தரராசனெனத் தோற்றினவன்.
சுந்தரத்தோளன், மலையலங்காரன் என்னும் திரு நாமங்களையுடையவன் .
வேறு வேறு தெய்வங்களை மக்கள் பூசித்தமையால் உண்டான புண்ணியமே தன்னை வந்து பூசிக்கப்பெற்றவன்.
மலயதீதுவச பாண்டியனால் வழிபடப் பெற்றவன். அம்பரீஷ னுக்கு அருள் செய்தவன்.
————
திருவிழா
அத்தகைய திருமால், தென்றல் வீசுங்காலத்திலே கோடைத் திருவிழாக் கொண்டருளி மதுரைக்கு எழுந்தருளினான்.
தல்லா குளத்திற்கு வந்து விடியற்காலத்தில் குதிரைவாகனத்தில் எழுந்தருளிப் பொற்குடையும் வெள்ளிக் குடையும் கொடிகளும் இலங் கவும், முரசம் முழங்கவும், மக்கள் கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வரவும்,
நீர்வீசு கருவிகள் பனிநீரைத் தூவவும், காணிக்கைக் கொப்பரை முன்னே செல்லவும் வையைநதியில் அங்கங்கே செய்யப்படும் உபசாரங்களை ஏற்றருளி
வண்டியூர் மண்டபத்தில் வீற்றிருந்தருளினான்.
அப்பொழுது சூரியன் அத்தமித்தான். தீவட்டிகள் பிரகாசித் தன. வாணக்காட்சி நடைபெற்றது. பெருமாள் அனந்தாழ் வான் மீது பவனிவந்தான்.
அப்பவனியிலே அவனைத் தரிசித்துக் காமமயக்கத்தை யான் அடைந்தேன். அவன் மற்ற இடங் களுக்கு எழுந்தருளலானான்.
——————
தலைவியின் நிலை
நான் அவனுடைய திருமுகமண்டலம் முதலியவற்றைக் கண்டு மால் கொண்டு என் உடன் வந்த மாதர்களுக்கு அவனைப் பற்றிக் கூறினேன்.
பின் அவனைப் பார்த்து, **அன்று நீர் திருடிய வெண்ணெயைப்போலத் தோற்றும் சங்கு இருப்பவும் என் கையிலுள்ள சங்கைக் கவர்ந்துகொண்டீர். (சங்கு வளை )-என்னுடைய கண்ணீர் உம்முடைய மலையிலே உள்ள அருவியைப்போல உமக்கு உவப்பாயிற்றோ?
உமக்குரிய பீதாம்பரம் போதாதோ ? இராமாவதாரத்திலே-உடுத்துக்கொண்ட மரவுரியிலே வெறுப்பு வந்துவிட்டதோ?
திரெளபதியாகிய பெண்ணுக்கு நீரே ஆடையை உதவினீரே. இப்பொழுது என்னுடைய ஆடையைக் கவர்ந்தீரே.
பழையபடி கோவியர் ஆடை கவர்ந்ததைப் போலத் திருட்டுத்தனத்தை மேற்கொண்டீரோ ?
இந்த நூலாடை உமக் குப் *பாலாடையாயிற்றோ ? (காய்ச்சின்ன பாலில் உள்ள மேல் உள்ள ஏடு )
உம் மேல் விருப்பங்கொண்டு முழங் குகின்ற எம்முடைய வார்த்தையை நீர் கேட்டிலீர்.
பாற்கடலிலே தூங்குவதைப்போல இந்த வையையிலும் தூக்கம் உண்டோ? இப்பொழுது உண்மையாக நிலாவெள்ளம் பரந்ததோ?
அன்றிப் பாற்கடல்தான் உம்முடைய பிரிவாந்றாமல் உம்மைப் பின் தொடர்ந்து இங்கே வந்துவிட்டதோ ?
இரவாகிய யானை கசேந் திரன் போல இருக்கிறது;-அதன்மேல் வரும் முதலையைப்போன்ற சந்திரனை நீர் சும்மா விட்டு விடலாமா
சதிரிள மடவா ருக்கு இரங்கிய நீர் நெஞ்சம் தவிக்கும் இளமாதருக்கு இரங்கு தல் கூடாதோ?
கோவியர்களிடத்தில் காம விளையாடல் புரிந்த செய்திகளெல்லாம் இப்பொழுது மறந்து போனீரோ??? என்று யான் கூறி முறையிட்டேன்.
பிறகு பெருமான் தேநூர் மண்டபத்தை வலங்கொண்டு சோலைமலையைச். சார்ந்தான்…
யானோ மிக மெலிந்து யானை நோயுண்ட விளாம்பழம் போலானேன்.
இந்தத் துன்பத்தைத் தந்த அவன் சிறிதேனும் திருவுள்ளங் கனியானாயினன்.
சந்திரனும், கடலும், அயல் மகளிர் மொழியும், மன்மதன்
செயலும், காளைகளின் மணியும், வேய்ங்குழலும் என்னைப் பலவாறாகத் துன்புறுத்துகின்றன.
——————
கிளியை வேண்டுதல்
கிளியரசே, என்னுடைய உடம்பும் உன் கூடும் பலவகையில்
ஓப்புமையுடையன. உன்னுடைய விருப்பத்தையறிந்து யான் உண்பிப்பேன் ;
நலங்குக் குளிப்பாட்டுவேன் ; பட்டாடையால் துடைப்பேன் ; கூட்டில் இருத்தி ஆலத்தி எடுப்பேன் ; வாசனைத் தூபம் காட்டுவேன்;
இளவெயிலிலே குளிர்காயச் செய்து
எடுத்து முத்தமிட்டு என்கையின்மேல் வைத்துப் பெருமாள் திரு நாமமெல்லாம் உனக்குப் பழக்கி வைப்பேன்.
உன்னையன் றிப் பிறபொருள்களைத் தூதுவிடல் கூடுமோ
அன்னம், சூயில், வண்டு, தென்றல், மேகம், காக்கை என்பன தகுதியற்றவை.
நீயோ, அங்கே போனால் அடியார்கள் இருப்பின் நீயும் அவர்களோடு சேர்ந்து கீர்த்தனம் செய்வாய். நாச்சி யார் அருகில் இருந்தால் அவர் கையிற் பறந்து சென்றிருப்பாய்.
எங்கிருந்து வந்தாய்??? என்று கேட்டால், சோலையிலிருந்து தரிசிக்க வந்தேன் ?? என்று சொல்வாய்.
செளந்தரவல்லிக்கும், சூடிக்கொடுத்த நாச்சியாருக்கும் தெரியாமல் என்னுடைய காதலைத் தெலுங்கிலே தந்திரமாகச் சொல்வாய்.
என்னுடைய துன்பத்தை நீக்குவாய். சச்சிதானந்தனாகிய பெருமாள் அணிந்துள்ள மாலையைக் கொண்டு வருவாய்.
அங்கே யுகந்தோறும் வேறு வேரறுகிக் கலியுகத்தில் புத்திர தீபமாகும் தரு ஒன்று உண்டு.
தேவர்களுக்குரிய லந்து கற்பகங்களோடு ஆறாவதாக அது விளங்கும். ஒரு கோடி சோலை களும், ஒரு கோடி ஆறுகளும், ஒரு கோடி பூஞ்சுனையும் இருக்கின்றன.
அன்றியும், யோகிகளைப்போல அல்லும் பகலும் துயிலாத உறங்காப் புளி ஒன்று இருக்கின்றது.
—————-
கோயிற் பணியாளர்
அத்தலத்தில் பிரமதேவனும் இந்திரனும் வந்து பெருமாளை இறைஞ்சுவார்கள்.
சீரங்கராச பட்டரென்னும் அர்ச்சகரும், திரு மாலிருஞ்சோலைச் சீயரென்னும் மாதவரும்,
திருமாலை யாண்டா னென்னும் ஆசிரியரும், தோழப்பையங்காரும், வேத பாரகரும், அமுதாரும்,
திருமலை நம்பியும், சோலைமலை நம்பியும், சடகோப நம்பியும், திருமாலிருஞ் சோலைப் பிரியரென்னும் சீகருணிகரும்,
சீகாரியஞ் செய்யும் நாயகர்களும் தன்னுடைய திருத்தாளை வணங்கி நிற்ப எம்பெருமான் திருவோலக்கத்தில் எழுந்தருளி யிருப்பான்.
————-
தூதுரைக்கும் முறை
அப்பொழுது நீ தூதுரைக்கத் தொடங்கினால் உன் வார்த்தை அவன் திருச்செவியில் ஏறாது.
ஆதலின் அவன் பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை பார்த்து வேறொருவர் ஒன்றை விண்ணப்பித்தற்கு முன்,
என்னை மன்மதன் துன்பப்படுத்துவதற்கு முன்னே, பெண்டிர் அலர் தூற்றுவதற்கு முன்னே,
கடலின் ஒலியும் தாயின் உரையும் என்னைத் துன்புறுத்தாமல் அடங்கும்படியாகத் தத்தையே, நீ என் தூதுச்செய்தியை உரைப்பாயாக.
உன்பேர் ஸ்வாகதமாகையால்(ஸ்வா கதம் நல் வரவு ) உனக்கும் சுவாகதம் உண் டாகும்.
முன்பு ஒருநாள் ஸ்ரீ ராமபிரானே உன்னைப் புகழ்ந்து பேசினானென்றால் உன்னைப் புகழ்ந்து பேசாதவர் யார் ?
நீ என் தூதுச் செய்தியைச் சொல்லிப் பெருமாளிடம் அவன் திருப் புயத்திலணிந்த மாலையைக் கேள்.
உம்முடைய மாலையை அளியாவிடின் கோதையார் சூடிக்கொடுத்துவிட்ட மாலையை யேனும் தந்தருள்க??என்று கேள்.
தன்னை அடுப்பவர் யாவருக்கும் ஆடி மாதத்தில் தியாகம் கொடுக்கும் எம்பிரான் இல்லையென்று சொல்லான்.
ஆதலின் அவ்வழகன் புயத்து அணிந்த மாலையை நீ வாங்கி வருவாயாக.
————–
நூற் பொருள் ஆராய்ச்சி
அணிகள்
இந்தூலின்கண் அங்கங்கே பலவகையான சொல்லணி பொருளணிகளைக் காணலாம்.
வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்தீதை
கேளாதவரார் காண் கிள்ளையே (3)
மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனதீ தாலே பசிதீர்ப்பாய் (19)
என்பன போன்ற இடங்களில் சிலேடையணி அமைந்திருக்கின்றது,
தூதுக்குரிய பொருள்களுட்.கிளியல்லாத பிறபொருள்கள் தகுதியடையனவல்லவென்று கூறும் பகுதியில் சிலேடையமைதியை மிகுதியாகக் காணலாம்.
செலுத்தியகாற் றேரைமுமுதீ தேராய் (4)
—என்காதல் வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன்மிதந்தோன்
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் (24-5)
என்பன போன்ற இடங்களில் விரோத அணியும்,
மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மாதஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம்பிடித்தாய் (28)
—கும்பமுனி
வாய் னுரையடங்க வந்த கடலடங்கத் தாயி னுரையடங்கத் தத்தையே?? (232-3)
என்பன முதலியவற்றிற் பின்வரு நிலையணியும் அமைந்துள்ளன.
தேறுகனி காவேரி சிநீதுகோ தாவிரியும் வீறு பெறுமே?? (33)
அரசா யிருத்தியா லத்தி யெடுத்து? (196)
என்யவற்றிற் பிறபொருட் பெயர்கள் தொனிக்கின்றன.
தத்தை யடைந்தவரே ததீதையடையார் (64)
கூடலிற் கூடலெனுங் கூ a நிருநகரில் 7? (146)
சல்கெடுப்பாம் அசெழுக்னுத் சச்சிதானந்தர் ?? (208-9)
என்பன போன்ற மடக்குகளும்,
திருப்பா துகைக்குஞ் செழுங்கருட னுக்கும்
திருப்பா துகைக்குமர சீந்தோன் (137)
: பாத கமலம் பரவுமல பரவுமல யதீதுவசன்
பாத கமலம் பறித்திடுவோன் ?(041)
என்பவற்றில் யமகமும்,
72-4, 142, 147, 2242-ஆம் கண்ணிகளில் திரிபும் அமைந்துள்ளன.
சில இடங்களில் வகையுளி அமைந் திருக்கின்றது (108, 215)
——–
தொகை முதலியன
ஏமுமுதல் இரண்டு வரையில் உள்ள சில தொகைப் பொருள்கள் ஒவ்வொன்றிலும்
கிளியின் பெயரை அமைத்துக் காட்டிய பகுதி (635) இன்பந் தருவதாகும்.
பூமிக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்பு மிக அழகாக ஓரிடத்தில் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது (1026-8)
* கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும்? (6-7),
அவனசையாமல் அணுவசையாது ? (123),
யானையுண்ட விளாம்பழம் (187-8) என்னும் பழமொழிகள் இதில் வந்துள்ளன.
—————
சமற்காரம்
கிளியின் பெருமையைப் பல திறத்திற் பாராட்டிக் கூறவந்த இந்நூலாசிரியர் அதன் பெயரையும், இயல்பையும்,
புராண வரலாறுகளையும் வைத்துக்கொண்டு சமற்காரமாகப் பல பொருளமை யும்படி அமைத்துக் காட்டுகின்றார்.
அரி, அவந்தி, கிள்ளை, கிளி, கிளிப்பிள்ளை, கீரம், சுகம், சுவாகதம், தத்தை, வன்னி என்னும் கிளியின் பெயர்களைச்
சிலேடை வகையிலும் பிறவாறும் இவர் எடுத்தாளுவர்.
பிறபொருள்களைத் தூதுவிடுவதனாற் பயனில்லை என்று மறுக்கும் வாயிலாகச் சில தூதுப் பொருள்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன.
அவை வருமாறு: அன்னம் (33,199), காகீகை (304), குயில் (3&,46,200), தென்றல் (202), நாகண வாய்ப்புள் (38),
புறா (36), மயில் (37), மேகம் (203), வண்டு (35,46,201)
——————–
புராண முதலிய நூற் செய்திகள்
திருமாலின் பெருமைகளைச் சொல்லுமிடங்களில் இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசச் செய்திகளும்,
பாகவதம் முதலிய மாபுராண வரலாறுகளும், இத்தலத்திற்குரிய புராணத் திற் கண்ட சிறப்புக்களும் எடுத்தாளப்படுகின்றன.
ஓரிடத்தில் சீவக சிந்தாமணிச் செய்தியைக் காணலாம்.
——————-
வைணவ மரபு
நம்மாழ்வாரைக் காப்பிலே வாழ்த்தியிருத்தல் வைணவ மரபு ;
கருடனைப் பெரிய திருவடிகள் என்றும் (22),
திருமால் வாகனமாகிய குதிரையைக் குதிரை நம்பிரானென்றும் (152),
ஆதிசேடனை அனந்தாழ்வான் என்றும் (166), பள்ளியறையைச் சேர்த்தி யென்றும் (230) வழங்குதல் அம்மரபைச் சார்ந்ததே.
——————
பாண்டி நாட்டு வழக்கம்
உன்னுடைய சிறகுகள், இராமாவதாரத்தில், விபீடணன் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டபோது,
அங்கே கட்டிய புது மாவிலைத் தோரணமோ ? (59) என்பது ஒரு கண்ணியிற் கண்ட பொருள்.
ஒரு நிலத்தை மற்றொருவன் தனக்குரிய தாக்கும்போது அங்கே . தோரணங்கட்டுதலும்,
அதனால் அச் செயலைத் தோரணம் வைத்தலென்று வழங்குதலும் பாண்டி நாட் டினர் வழக்கம்.
அவ்வழக்கத்தைப் பின்பற்றியே அவ்வாசிரியர் இங்கே இங்ஙனம் அமைத்தார்.
———
செய்யுள் நடை
இத்தூதின் செய்யுள் நடை பலவிதமாக அமைந்துள்ள து.
மடக்கு, திரிபு, சிலேடை முதலியவை அமைந்த இடங்களிலே சற்றுக் கடினமாக இருப்பினும்
மற்ற இடங்களில் தெளிவாகச் செல்வது. திருமாலினுடைய இயல்பைச் சொல்லும் இடங்கள்,
முக்கியமாக 75-ஆம் கண்ணி முதலிய சில கண்ணிகள் இந்
நூலாசிரியர் உள்ளத்தே தீவிரமான பக்தியுணர்ச்சியோடு பாடப்பட்டிருக்கவேண்டும்.
உயர்ந்த உண்மைகளை ஆற்றலோடும், தெளிவாகவும் விளக்கும் அப்பகுதியிலே இவருடைய கவித்துவத்தின் சிறந்த அமைப்பைக் காணலாம்.
கிளியினைத் தூதுவிடுவதாக மேற்கொண்ட பிறகு, எந்த எந்த வகையாக வெல்லாம் அதைப் பாராட்ட முடியுமோ அந்த அந்த வகை யாகப் பாராட்டியிருக்கின்றார்.
கல்வி, கேள்வி, அனுபவங்களிலே கிளியைப்பற்றி அறிந்தவற்றையெல்லாம் எப்படியோ தொடுத்துக் கோத்திருக்கின்றார்.
கிளியைப்போலத் தூது செல்லு வதற்குரிய பொருள் வேறில்லை யென்று சொல்லுவதற்காக
நிகண்டிலே கிளியின் பெயர்களாக உள்ள பதங்களும், புராண இதிகாசங்களும், சிலேடையணி முதலிய கருவிகளும், இவருக்குத் துணையாக நிற்கின்றன.
கிளிதான் சகலமுமென்றவரைக்குங் கூட இவர் பாராட்டிப் பேசி விடுகிறாரெனின் வேறு என் செய்வது !
—கண்ட
செகமுமுது நீஞான தீபமுநீயென்று
சுகமுனியே சொல்லாரோ — என்று இவர் வினாவும்பொழுது ஆம் என்று விடையளிப் பதையன்றி வேறு வழி யேது;
யுக்தியினால் சமற்காரமாகக் கிளிக்கு உயர்ந்த புகழைக்கூறிப் பாராட்டும் இடங்கள் இதிலே பல இருக்கின்றன.
கிளியைப் பலர் தம் கையிலே பிடிப்பர் ;
இதே விஷயத்தைக் கிளிக்குப் பெருமை விளைவிக்கும் உருவத் திலே மாற்றி,
*பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால்பிடிப்பார் கோடிபேர் கண்டாயே –என்று அமைக்கும் இக் கவிஞருடைய சாமர்த்தியத்தை நாம் வியவாமல் இருப்பது எங்ஙனம் ?
திருமாலுடைய பெருமையை மரபறிந்து புகழ்கின்றார். தலப் பெருமையையும், தசாங்கங்களையும், திருவிழா நடைபெறும் முறையையும் ஒழுங்காக உணர்த்துகின்றார்.
இந்தத் தலத்திலே உள்ள பல கைங்கர்யபரர்களின் பெயர்களை வரிசையாகத் தெரிவிக் கின்றார்.
அந்தப் பகுதியினால் கிளிக்காவது, தலைவிக்காவது, நமக்காவது பெரும்பயன் ஒன்றும் இல்லையென்றாலும்
ஆசிரியர் தம் காலத்தில் இருந்த அவர்களைக் கிளியோடும் அழகரோடும் சேர்த்து அவர்கள் புகழையும் கல்லிற் பொறித்ததுபோல் தம் சொல்லிற் பொறித்திருக்கின்றார்.
இது புலவருடைய நன்றியறிவென்றோ, அம்மக்களுடைய பாக்கியமென்றோ இரண்டுமென்றோ சொல்வதிற் பிழை யாதும் இல்லை.
————-
காப்பு
(வெண்பா)
தெள்ளு தமிழழகர் சீபதி வாழ்வார் மீது
கிள்ளை விடு தூது கிளத்தவே–பிள்ளைக்
குருகூரத்தானே சங்கூர் கமுகிலேறும்
குருகூரத்தா னேசங் கூர்.
பிள்ளைக் குருகு- நாரைக்குஞ்சு.
ஊர- தன்பின்னே ஊர்ந்து வருதலால்.தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் :
ஊர்கமுகு – மேற்பாகம் பரவியுள்ள கமுகு;
ஊர்தல் – பரத்தல். சங்கு ஏறுதற்கு இடமான.
குருகூர் அத்தான் – ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளியுள்ள தலைவனே ;
அத்தான் – அத்தனே : விளி;
நேசம் கூர்-திருவருள் புரிவாயாக.
————-
நூல்
கிளியின்பெருமை
கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாய னி றங்கொண்டு– சீர்கொண்ட–1-
அரி என்பது கிளிக்கும் பெயர்
பாயல் – அவருடைய படுக்கையான ஆலிலையின். நிறம் -பச்சை நிறம்.-
கடவுளினற் பேர் கொண்டு.
வையம் படைக்கு மதனையுமேற் கொண்டின்பம்
செய்யுங் கிளியரசே செப்பக்கேள்-வையமெலாம்–2-
வை அம்பு அடைக்கும் மதனையும் : மதனையும்–மன்மதனையும்.
கிளி- மன்மதனுக்கு வாகனமாதலால், மதனையுமேற் கொண்டு? என்றார்.
வையம் படைக்கும் அதனையும் – புவியைப் படைக்கும் அத் தொழிலையுமென்று வேறொரு பொருளும் தோற்றுகின்றது.
வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின் வார்த்தை
கேளா தவரார் காண் கிள்ளையே-நாளும்–3-
வேளாண்மை- மன்மதனுடைய ஆட்சி; பயிர்களை விளைத்தல் ;சிலேடை.
வேளாண்மைத் தொழிலாகிய விளைச்சலென்பது மற்றொரு பொருள்.
மலைத்திடு மாரனொற்றை வண்டிலுமில் லாமற்
செலுத்தியகாற் றேரை முழுத் தேராய்ப் -பெலத்திழுத்துக்-4-
மலைத்திடும் – போர் செய்யும்.
மாரன் – மன்மதன்.
ஒற்றை வண்டில் – ஒரு சக்கரம் ; சக்கரம் வண்டிலெனவும் வழங்கும்
கால் தேர் – தென்றற் காற்றாகிய தேர்; காற்பங்கான தேரென்பது மற்றொரு பொருள்.
மாரன் செலுத்திய என இயைக்க.
பெலத்து – பலம் கொண்டு,
கொண்டு திரி பச்சைக் குதிரா யுனக்கெதிரோ
பண்டு திரி வெய்யோன் பரியேழும்-கண்ட–5-
பச்சைக் குதிராய் – பச்சைக் குதிரையே என்றது –ஸூரியன் தேரிலுள்ள ஏழு பச்சைக் குதிரைகளை நினைந்து.
ஒற்றைச் சக்கரத்தை யுடைய ஸூரியன் தேரை இழுத்துச் செல்லும் ஏழு பச்சைக் குதிரைகளும்
ஒரு சக்கரமும் இல்லாத தேரை இழுத்துச் செல்லும் பச்சைக் குதிரையாகிய உனக்கு ஒப்பாக மாட்டா. என்றவாறு
செகமுழுது நீ ஞான தீப முநீ யென்று
சுக முனியே சொல்லாரோ சொல்லாய்-வகை வகையாய்-6-
சுகமுனி – சுகமுனிவர் –கிளி வடிவங்கொண்டிருந்த கிருதாசி யென்னும் தெய்வ மகளிடம்
வியாசருடைய கருணையால் அவதரித்தமை யின் இவர் இப்பெயர் பெற்றார்.
செக…… முனியே : சுகமுனிவர் பிறந்த பொழுதே துறவு பூண்டு பூமியில் நடநீது சென்றார்.
அவர் தந்தையான வியாசர், * குழந்தாய் ? என்று அவரை அழைப்ப எல்லாப் பொருளும் ஏனென்று கேட்டனவென்பர் ;
பிறந்தபொழுதே துறந்து பிறைக் குழவி போனடப்பப் பின்போய்த் தொன்னூல்,
அறைந்தபுகழ் வியாத முனி யாதரத்தான் மதலாயென் றழைப்பச் செவ்வாய், திறந்து
நறை பொழியு மலர்ச் செழுந்தருவு மேனென்ன வுயிர்கள் யாவும்,
நிறைநீ துறையுஞ் சுகமுனிவ விரையிதழ்தீதா மரைமலர்தீதா ணினை தல் செய் வாம் (பாகவதம், காப்பு 3)
என்பதனாலும் இவர் எங்கும் வியாபகமா யிருந்தனரென்பது விளங்கும்.
சுகமுனிவர் உன் வயிற்றிற் பிறந்தவ ராதலால் புகழ்பெற்றார்.
எவ் வண்ண மாம்ப் பறக்கு மெப்பறவை யாயினு முன்
ஐ வண்ணத் துள்ளே யடங்குமே-மெய் வண்ணம்–7-
ஐ வண்ணம் – ஐந்து நிறம்; பஞ்ச வர்ணக் கிளி யென்று கிளியில் ஒரு சாதியுண்டு.
பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதி யென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்- நாக்குத்–8-
பார்வதி யென்று யாரும் உன்னை நினையாதபடி முற்றும் பசுமை யாயுள்ள தன்மை நீங்கி மூக்குமட்டும் சிவந்தாயென்றபடி ;
இதனால்: உன்னுடைய அடக்கம் வெளிப்படுகின்றது. பார்வதி தேவியார் பச்சை நிறமுடையவர்.
தடுமாறு வோரையெல்லாந் தள்ளுவரே யுன்னை
விடுவா ரொருவருண்டோ விள்ளாம்-அடுபோர்–9-
உன்னை – குழறிப் பேசுகின்ற உன்னை.
விடுவார் – தள்ளுபவர்.
மறந்தரு சீவகனார் மங்கையரிற் றத்தை
சிறந்த துநின் பேர்படைத்த சீரே-பிறந்தவர்–10-
சீவகனார் – சிந்தாமணி யென்னும் காப்பியத் தலைவன். தத்தை-காந்தருவதத்தை;
சீவகனுடைய பட்டத்தேவியருள் முதல்வி; இவள் பெயர் தத்தை யென்றும் வழங்கும்.
ஆரும் பறவைகளுக் கச்சுதன்பே ர௬ஞ்சிவன்றன்
பேரும் பகர்ந்தார் பிழை யன்றோ-நேர் பெறுவி–11
அச்சுதன் பேர் அரங்கனென்பது.-சிவன் தன் பேர் சொக்க னென்பது.
கிளி ரங்க ரங்கா வென்று கூறுதல் வெளிப்படை. சொக்கர் பெயரைக் கூறுதல்,
புமுகுநெய்சீ சொக்க ரபிடேகச் சொக்கர்கர்ப் பூரச் சொக்கர்,
அழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்;
தழுவியசங்கத் தமிழ்ச்சொக்க ரென்றென்று சநீததநீ;
பழகிய சொற்குப் பயன் நேர்ந்து வாவிங்கென் பைங்கிளியே ?? (மதுரைக். 54) என்பதனால் விளங்கும்,
பகர்ந்தால் – கற்பித்தால்.-பிழை – தகுதியில்லார்க்குக் கற்பித்தல்.
அச்சுதன் பேரையும் சிவன் பேரையும் நீ பிழையில்லாமற் கூறுகின்றாய்.
மற்றப் பறவைகளுக்குக் கற்பித்தால் அவை பிழை படக் கூறும் ;
அங்ஙனம் கற்பித்தல் பிழை.
நேர் – நேர்மை.
வேகி யொருகூடூ விட்டுமறு கூடடையும்
யோகி யுனக்குவமை யுண்டோ காண்- நீகீரம்–12-
கூடு – உடம்பு, பறவைக் கூடு. ஒருகூடு விட்டு மறு கூட்டை
அடையும் யோகி உனக்கு உவமை ஆகான்;
அவன் தான் இருக்கும் உடம்பை விட்டு அரூபியாகி வேறோர் உடம்பிற் புகுவான்
நீ உடம்போடு வேறு கூட்டை அடைவாய்
கிட்டுநெறி யோகியருங் கிள்ளைகளுந் தங்கூடு, விட்டுமறு கூடடையும் வேங்கடமே (திருவேங்கட மாலை, 73).
கீரம் – கிளி, பால் ; சிலேடை.
11-12. விவேகி – விவேகியாகிய ஒருவன்
ஆகையா லாடை யுனக்குண்டே பாடகமும்
நீ கொள்வாய் காலாழி நீங்காயே-ஏகாத–13-
ஆடை-பாலின் ஆடை ; இங்கே சட்டை.
பாடகம்-ஓராபரணம்.
காலாழி-ஒருவகை அணி; இது பீலி யென்னும் ஆபரணத்தோடு சேர்த்து வழங்கப்படும்.
கிளிக்குச் சட்டை போடுதலும், கால் விரல்களில் மோதிரம் போடுதலும் உண்டு.
ஏகாத – நீங்காத,
கற்புடையாய் நீயென்றாற் காமனையுஞ் சேர்வாயே
அற்புடைய பெண்கொடி நீ யாகாயோ-பொற் புடையோர்–14-
கற்புடையாய்- கல்லின் பக்கத்தே யுள்ளாய், கற்பை யுடையாய்-சிலேடை. -நீ கற்புடையா யென்றால்.
காமனை – மன்மதனை, காவாகிய மனையை; கா – சோலை ;-சிலேடை.
கிளியையும் பெண்ணென்று கூறுதற்குரிய காரணங்கள் சிலேடை வகையாற் கூறப்பட்டன
துன்னியசா யுச்யஞ் சுகரூப மாகையால்
அன்னது நின்சொருப மல்லவோ-வன்னி–15–
பரிசித்த வெல்லாம் பரிசுத்த மென்றோ
உருசித்த வுன்னெச்சி லுண்பார்-துரிச ற்றோர்–16-
சுக ரூபம் – இன்ப ரூபம்.
வன்னி- கிளி, நெருப்பு,
உன் எச்சில் – உன்னுடைய உச்சிட்டதீதை. கிளி கடித்த பழம் சிறந்தது?
சுழித்து நல்லமு தொழுகியஞ் சுகமுகஞ் சேர்ந்து,
தழைத்த நான் மறைத் தடஞ்சினைக் கற்பகத் தருவிற்,
பழுத்து திர்ந்தது பரமபா கவத மென் றிசைக்கும்,
விழுப்பெ ருங்கனி நுகர்ச்சியே விரும்புவார் மேலோர் -(பாகவதம், காப்பு. 4),
வன்னியென்னும் பெயர், —அச்ச மனப் பேதையார் மால் வனஞ்சுடவோ வன்னி, எனப் பேர் படைத்தா யியம்பாய் -(49-50) என்று பின்னும் சிலேடையில் அமைக்கப்பட் டுள்ளது.
இன் சொல்லைக் கற்பா ரெவர்சொல்லு நீ கற்பாய்
உன் சொல்லைக் கற்க வல்லா ருண்டோ காண்-நின்போலத்-17-
உண்டோ : இல்லையென்றபடி.
தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோரார்-உள்ளுணர்ந்த–18-
யோகங்கள் – மருந்துகள், யோகாப்பியாசங்கள்.
பச்சைப் பிள்ளையாய் – இளம் பிள்ளையாகி. இளம் பிள்ளையைப் பச்சைப் பிள்ளை யென்பது .வழக்கு,
எப்போதும் இளம் பிள்ளையாயிருத்தற்கு யோகம் இன்றி யமையாதது.
உள் உணர்ந்த – அறிஞர்கள் உள்ளத்தால் உண ரப்பட்ட.
மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசி தீர்ப்பாய்-மேலின த்தோர்–19-
பாலனம் : திருமாலுக்குப் பரிபாலனத் தொழிலென்றும் கிளிக்குப் பாற் சோறென்றும் கொள்க.
நட்டா ரெனினு நடந்து வரும் பூசை தனை
விட்டார் முகத்தில் விழித்திடாய்-வெட்டுமிரு–20-
நட்டார் – நண்பர்,
பூசை தனை விட்டார் – பூனையை உன் மேல் விட்டவர்,-பூஜையைச் செய்யாது விட்டவர்.
வாளனைய கண்ணார் வளர்கீகவளர்வா யுறவில்
லாளனை நீ கண்டா லகன் நிடுவாம்-கேளாய்–21-
உறவில்லாளனை – மிக வில்லை யாள்கின்ற வேடனை,-உறவு இல்லாதவனை ; சிலேடை.
இருவடிவு கொண்டமையா லெங்கள் பெரிய
திருவடிகள் வீறெல்லாஞ் சேர்வாம்-குருவாய்ச்-22-
இரு வடிவு : கருடனுக்குப் புருஷ வடிவமும் பறவை வடிவமும்; –கிளிக்குப் பசீசை வடிவமும் சிவப்பு வடிவமும்.
பெரிய திருவடி-கள்-கருடன் ;**வயங்கு மீருரு வண்ணக் கலுழன் (தக்க, 286,)
வீறு–வேறொன்றற்கில்லாத பெருமை.
* மெய்யின், வடிவம் வளைந்த மணி மூக்கு மாயன், கொடியிலிருப்பவர்தங் கூறோ — என்பர் பின் ) 56-7.
செப தேசிகர் கீகெல்லாநீ தென்னரங்கர் நாமம்
உபதேச மாக வுரைப்பாய்-இபமுலையார்–23-
செப தேசிகர் – ஜபஞ்செய்தலையுடைய குருமார். உரைப்பது:–ரங்க ரங்காவென்பது.
இபம் – யானை -இங்கே அதன் கொம்பு அல்லது மத்தகம்.
சித்தங் களிகூரச் செவ்விதழி லாடவர்போல்
முத்தங் கொடுக்க முகங்கோணாம்-நித்தமவர்–24-
இதழ் – கீழுதடு.
ஆடவர் போல் – கணவரைப் போல. முத்தங் கொடுத்தல்-ஆடவர் தொழில்.
அவர் – அம் மகளிருடைய.
செவ்விதழ் நின் ; செவ்வி யழியாதவர் போல்.
செவ்விதமுன் மூக்காற் சிவந்ததோ வுன்மூகீகில்
அவ்வித ழின்சிவப்புண் டானதோ–செவ்வியிழந்–25–
தண்டருக்குந் தோற்றா னடல் வேளா னானை நீ
கொண்டிழுத்தா லாகுங் குறை யுண்டோ -உண்டடக்கி–26–
தோற்றான் – தோல்வி யுற்றவன், கண்ணுக்குப் புலப்படாதவன்.
அடல் வேள் ஆனானை – தோற்றானாகி அவர்களை அடுதலையுடைய மன்மதனை.
தோல்வியுற்றவனை நீ இழுத்தும் குறையில்லாயென்றபடி,
ஆயுவை நீட்ட வருந்தவத்தோர் பூரகஞ்செய்
வாயுவை யுன் பின்னே வரவழைப்பாய்-தேயசொளிர்–27-
ஆயுவை – ஆயுளை.
பூரகம் – காற்றை உள்ளே நிரப்புதல்.
தென்றலென்னும் தேரை இழுக்கும் குதிரையாய் முன்னே செல்லுதல்
பற்றி, * வாயுவை யுன் பின்னே வரவழைப்பாய் ? என்றார் ; வாயு-தென்ற லாகிய தேர்.
தேயசு- ஒளி.
மைப் பிடிக்கும் வேற் கண் மலர்மா துஞ் சங்கரியும்
கைப் பிடிக்க நீ வங் கணம் பிடித்தாய்-மெய்ப் பிடிக்கும்–28-
மலர் மாது – திரு மகள். திருமகள் கையில் கிளியுண்மை,
பின்னைத் தாய் கையிலுறை பெண்டத்தாய் -என்றும்
நாச்சியார், பங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாய் -என்றும் (65, 205) என்பவற்றாலும்,
உமாதேவியாரின் கையிலுண்மை, — களங்கனி யென்றுமை கைக்கிளி பார்க்குங் கறைக் கண்டனே காசிக். -61) என்பதனாலும் விளங்கும்.
வங்கணம்-நட்பு ; நேசமிலா, வங்கணத்தி னன்று வலிய பகை (தனிப்.)
பச்சைநிற மச்சுதற்கும் பார்ப்பதிகீகு முன் றனகீகும்
இச்சைபெற வந்தவித மெந்தவிதம்-மெச்சும்–29–
குருகே யுன் னாக்குத்தான் கூழைநாகீ கான
தரிகீர்த் தனத்தினா லன்றோ-தெரிவையர்கள்–30-
கீர்த்தனம் – இறைவன் பெயரை இசையோடு சார்த்திச் சொல்லுதல்
ஆர்த்தவிர லுன்முகமொப் பாகையா லேகையைப்
பார்த்து முகமதனைப் பாரென்பார்-சீர்த்திகீ–31-
தூங்கி யெழுந்தவுடன் மகளிர் தம் கை விரலைப் பார்த்துப்
பின்பு கண்ணாடியில் முகத்தைப் பார்க்க வேண்டுமென்பது பண்டை மரபு;
இங்ஙனம் கூறுதற்குக் காரணம் அவர்களுடைய: கை விரலின் நகம் உன் மூக்கை ஒத்திருத்தலே.
கிரியையிலே காணுங்காற் கிள்ளை யடையாத
பெரியதனம் வீணன்றோ பேசாய்-தெரியுங்காற்–32-
கிள்ளை – கிள்ளுதலை, கிளியை.
பெரிய தனம் – பெருத்த நகில்,-பெருஞ்செல்வம்.
றேறுகனி காவேரி சிந்து கோ தாவிரியும்
வீறுபெறுமே நீ விரும்பினாற்-கூ நிலனம்–33-
தேறப்பட்ட பழங்களானவை காவிலுள்ள தேனைச் சிந்து கின்ற சக்கையாகக் கெடும் ; நீ விரும்பினால் ௮க்கனிகள் வீறுபெறும்-
வீறுபெறுதலாவது கிளி கோதின பழமென்று எல்லாராலும் விரும்பி யுண்ணப்படுதல் : கீழ் 16,கண்ணி பார்க்க.
அனம் – சோறு, அன்னப்பறவை.
இக் கண்ணியில் கன்னி, காவேரி, சிந்து, கோதாவிரி யென்னும் நதிப் பெயர்கள் தோற்றுகின்றன.
கனி – தொகுத்தல்.
உன்னுடைய வூணன்றோ வூதப் பறந்து போம்
சின்னவடி வன்றோ செழுங்குயிலும்-என்னே–34-
ஊதுதற்குப் பறந்து செல்லும் சின்னமாகிய வாத்திய வடிவு ஊதியவளவிற் பறந்துபோம் சிறிய வடிவு
குயில் மன்மதனுக்குச் சின்னமென்னும் வாத்தியமென்பது இங்கே அறிதற்பாலது.
முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும்
மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ- எதிரும்--35-
முடிச்சவிழ்தீதல் – பேரரும்பின் இதழ்க் கட்டை அவிழ்த்தல்,-இரகசியத்தை விரித்துச் சொல்லுதல்.
வாயுண்டோ வென்பது குழறு மென்றபடி (45-6).
கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும்புறா வுக்குமொரு வாயோ-விரும்புமயில்–36-
கரும்புறா -கரும்பின் சுவையுறாத, –கரிய புருவென்னும் பறவை.
புரு தூது விடுவனவற்றுள் ஒன்றென்பது மலையாள பாஷையிலுள்ள கபோத சந்தேச மென்னும் நூலால் அறியப்படுகின்றது (கபோதம்-புறா -சந்தேசம் – தூது); நன்புறவைத் தூண்டினது நாளுந் தூதுண்டொழிக்கும், என்புறத்துத் தூதாக வெண்ணுமே (கச்சியானந்த. வண்டு.-337)
உற்ற பிணிமுகமே யுன்போற் சுகரூபம்
பெற்ற பறவை பிறவுண்டோ-கற்றறியும்–37-
பிணிமுகமென்பது மயிலின் பெயர் ;நோயோடு கூடிய முக மென்பது மற்றொரு பொருள்.
கல்வியுங் கேள்வியுநீ கைக்கொண்டாய் சாரிகைக்குன்
செல்வமதி லள்ளித் தெளித்தாயோ-சொல் வேத–38-
சாரிகை – நாகணவாய்ப்புள்.
செல்வமதில் அள்ளி – உன்னு டைய செல்வத்திற் சிறிய பாகத்தை அள்ளி.
நாகணவாய்ப்புள் பேசும் வன்மை சிறிதே பெற்றதென்னும் கருத்தை உட்கொண்டு இங்ஙனம் கூறினார்.
மென்பரிநா லுக்கும் விதிசா ரதிவில்வேள்
தன்பரி யேயுனக்குச் சாரதியார்-வன் போரில்–39-
வேத மென் பரி-வேதமாகிய மெல்லிய குதிரை; வேதமென்னும் பரியுமாம்.
விதி – பிரமன்.
மேவுஞ் சிவன்விழியால் வேள்கருகி நாண்கருகிகீ
கூவும் பெரிய குயில்கருகிப்-பாவம்போல்–40-
வேள் கருகி – நெற்றிக் கண்ணின் தீயால் மன்மதன் சாம்பராகி; –கரு நிறத்தை அடைந்தென்பது மற்றொரு பொருள். மன்மதன்-கரியநிற முடையவன்
ஆழி யுடையான் மகன் மாயன் (தண்டி. 48, மேற்.).
நாண் – வண்டு.
கூவும் – சின்னமாக இருந்து கூவுகின்ற.
இயற்கைகள் செயற்கையாகக் கூறப்பட்டன.
நின்று மறுப்படுநா ணீதா னடுப்படையிற்
சென்று மறுப்படா தேவந்தாம்-என்றுமாகீ–41-
மறுப்படு நாள் – தோல்வியுற்ற காலத்தில், சாம்பராகி மறுப் பட்ட காலத்தில்.
மறுப்படாதே வந்தாயென்றது, பச்சை நிறத்தோடி இருத்தலை நினைந்து.
காய்க்குங் கனியல்லாற் காய்பூவென் ரானாக்கு
மூக்கு மறுப்பாய் முகம் பாராய்-ஆக்கம்-42-
நாக்கு மூக்கு மறுப்பாய் – நாக்கையும் மூக்கையும் கொண்டு முறையே சுவைத்தலையும் மோத்தலையும் செய்ய மறுப்பாய் ;
அறுப்பா யென்று பிரித்து, சொன்னவருடைய நாக்கையும் மூக்கையும் அறுப்பா யென்று வேறொரு பொருள் கொள்க.
ஆக்கம் – செல்வம்.
வரையாம னன்மை வரத்தினை நல்கும்
அரிதாளை நீவிட் டகலாம்-இருகை–43-
உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக் கில்லை
எனக்குமுனக் கும்பேத மீதே-மனைக்குள்–44-
நன்மை வரத்தினை நல்கும் – நல்ல கரிய மேன்மையான தினையைக் கொடுக்கும், –நல்ல வரத்தைக் கொடுக்கும்;
கருந் தினை யென்று ஒரு சாதியுண்டு.
அரிதாளை – தினையின் அரிந்த தாளை, திருமாலின் பாதங்களை ;
அரிதாள், மறவாத பாக வதனே (மான் விடு தூது, 45) என்று பிறரும் இதனைச் சிலேடையில் அமைத்துள்ளனர்.
இதமாய் மனிதருட னேபழகு வாயன்” —
பதனான் முறையிட் டழைப்பாய்-ம துவுண் .–45-
முறையிட்டு – முறைப்பெயரிட்டு; அப்பா, அம்மா; அக்கா என்பன முதலியன
.டளிப்பிள்ளை வாய்குழறு மாம்பரத்தி லேறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும்-கிளிப்பிள்ளை..–46-
களிப்புள்ள பூங்குயிலும். -பாட பேதம்
அளிப்பிள்ளை – இளைய வண்டு.
ஆம்பரம் – மாமரம்.
பிள்ளைப் பூங்குயிலும் – பிள்ளையாகிய குயிலும் ;-குயிலுக்கு மாமரம் உரியது.
சொன்னத்தை ச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாம்
அன்னத்தைப் போலுமொரு பேதுண்டோ-அன்னமின் றிப்--47-
சொன்னத்தை – சொல்லியதை; தங்கத்தை.
அத்தைப் போலும் – அதனைப்போலும்.
அன்னம் இன்றி – அன்னம் இல்லாமல்.
பால்குடிக்கும் பச்சைக் குழந்தைநீ யானாலும்
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே-மால் பிடித்தோர்–48-
பச்சைக் குழந்தை – இளங்குழந் தை.
கால் பிடித்தல் – கிளியின் கால் தம் கையிற்படும்படி வைத்துக் கொண்டிருத்தல்.
கைச்சிலைவே ளால்வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்திருந்தாம்-௮ச்ச–49-
நோயைத் தீர்ப்பதற்குரிய மருந்துகளுள் பச்சிலை ஒன்று.
மனப்பேதை யார்மால் வனஞ்சுடவோ வன்னி
எனப்பேர் படைத்தா யியம்பாய்-அனத்தை–50-
மால் வனம் – காம மயக்கமாகிய காட்டை.
வன்னி- கிளி,நெருப்பு.
அனத்தை – அன்னப் பறவையை, சோற்றை.
நிலவோவென் பார்க ணெடுந்துயர்வே ழத்தைகீ
கொலவோ வரிவடிவங் கொண்டாய்-சிலை நுதலார்--51-
அன்னப் பறவையையும் மயக்கத்தால் நிலவென்று அஞ்சும் மகளிர்-தலைவரைப் பிரிந்த மகளிர் நிலவைக் கண்டு
வருந்துவராதலின் வெண்மையான பிற பொருள்களையும் கண்டு அஞ்சுவாராயினர்.
கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவெடுத்தாய் கிற்பாய்நீ-உள்ளம்–52-
கிள்ளை – குதிரை, கிளி,
கிற்பாய் – வன்மை யுடையாய்.
மிகவுடை மாதர் விதனங் கெடவோ
சுகவடிவு நீகொண்டாய் சொல்லாம்-தகவுடைய–53-
உடைமாதர் – உடைந்த மகளிர்.
சுகவடிவு- கிளியாகிய வடிவு, இன்பவடிவு.
தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும்
வித்தையடைந் தாயுனையார் மெச்சவல்லார்-முத்தமிழோர்–54-
ததீதை-கிளியை, ஆபதீதை.
மாரதி பாரதியார்க் குன்னை யுவ மானிப்பார்
ஆரதிக மார்தாழ் வறைந்திடாய்-ஊர றிய–55-
மா ரதி- திருமகளுக்கும் ரதிதேவிக்கும்.
பாரதியார்க்கு -கலைமகளுக்கு. உவமை உயர்ந்ததென்பது கருத்து;
உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை (தொல். உவம. 3)
நெய்யிற்கை யிட்டாலு நீதான் பசுமையென்றே
கையிட்டுச் சுதீதீ கரிக்கலாம்-மெய்யின்–56-
ப௬மையென்றது கிளிப்பச்சை யென்ற ஒருவகை ரத்தி னத்தை நினைந்து.
கையிட்டு – கையைச் செலுத்தி, கையறைந்து.
வடிவும் வளை ந்த மணிமூக்கு மாயன்
கொடியி லிருப்பவர்தங் கூறோ-நெடியமால்–57-
கொடியிலிருப்பவர் – கருடாழ்வார்.
விண்டுதறித் தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ-கொண்டசிற–58-
விண்டு- மூங்கிலை.
தறித்து- வெட்டி.
வேணு- புல்லாங்குழல்.
சிறகு, தழைத்த பசுந்தழையோ.
சிறகு : இடைநிலைத் தீவகம்.
கல்லிலங்கு மெய்யானை யன்றமித்து வீடணன் போய்த்
தொல்லிலங்கை கட்டுபுதுத் தோரணமோ -நல் வாய் –59-
மெய்யான் – இராவணன்.
கிளி தோரணத்திற்கு உவமை;
மாடத்துப் பறக்குமொண் கிளியொ முங்கின், இலை செருகிய பசும் பூந் தோரண மிசைய வார்த்தார்
மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக்
குழலி னிசைதானோ கூறாம்-அழகுக்–60-
மணிவண்ணன் – நீலமணி போன்ற நிறதீதையுடைய கண்ண பிரான்.
கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப்பிள்ளா யின்பரசக் குஞ்சே-வளிப்பிள்ளை–61-
நலங்கு குளிப்பிள்ளாய்- நலங்கு குளித்தலையுடைய பிள்ளாய்)
நலம் காட்டுவேன் பட்டாடை யாற்றுடைப்பேன் என்பர் பின் ; 195.
வளிப்பிள்ளை – தென்றற்காற்று.
தன்னைத்தாய் போலெடுத்துச் சஞ்சரிக்குஞ் சம்பத்தாய்
பின்னைத்தாய் கையிலுறை பெண் டத்தாய்-பொன்னொத்தாம்-62-
தாய் போலெடுத்துச் சஞ்சரிக்குமென்றது-குதிரையாக இருந்து வளிப் பிள்ளையைத் தாங்கிச் செல்லுதலை நினைந்து.
பின்னை தீதாய்- திரு மகள் ; நப்பின்னையுமாம்.
பொன் – கிளிச் சிறையென்னும் பொன்.
முத்திநக ரேழிலொன்றே முத் தமிழ்வல் லாறிலொன்றாய்
ஓத்ததனித் தவ்வரிப்பே ருற்றதொன்றே-சுத்தமுறும்–63-
முத்தி நகர் ஏழில் ஒன்று அவந்தி.
வல்லாறில் – வல்லெழுத்து ஆறில் ;
தவ்வரிப்பேர் உற்றது ஒன்று : தத்தை.
அவந்தி யென்பதும் தத்தை யென்பதும் கிளியின் பெயர்கள்.
ஐந்துபூ தத்திலொன்றே யான படை நான்கிலொன்றே
முந்துமுத லானபொருண் மூன் நிலொன்றே-வந்த–64-
ஐந்து பூதத்தில் ஒன்று : வன்னி (நெருப்பு).
படைநான்கி லொன்று : குதிரை.
குதிரைக்குக் கிள்ளையென்று ஒரு பெயர் உண்டு.
முதலான பொருள் மூன்றில் – திரிமூர்த்திகளில், ஒன்று என்றது அரி யென்னும் பெயரை.
வன்னி, கிள்ளை, அரி யென்பன கிளியின் பெயர்கள்.
இருபயனி லொன்றே யிமையே விழியே
பருவ விழியிலுறை பாவாய்-ஒரு நாரில்–65-
இருபயன் – சுகம், துக்கம்; ஒன்று சுகம்; அது கிளிக்கும் பெயர்,
நார் – அன்பு, பூத்தொடுக்கும் நார்.
ஏற்றுந் திருமாலை யெய்தப் போ யூரெல்லாம்
தூற்று மலர் கொண்ட கதை சொல்லக் கேள்-தோற்றி–66-
திருமாலை-அழகரை, அழகிய மாலையை,
அலர் – பூ. பழிமொழி
ஒரு நாரில் தொடுத்த பூமாலையை அடையப் போய் மலரை மாத்திரம் கொண்டேனென்பது வேறு பொருள்.
————
அழகர் சிறப்பு
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப்
பெரியதொரு தூணிற் பிறந்து-கரிய–67-
அரி – சிங்கம்.
அரன் – சிவன்.
நரன் வடிவுமாகி யெனப் பிரித்து, நரனென்னும் அவதாரம் செய்தென்று கொள்ளுதலுமாம்.
இக் கண்ணி நரசிங்காவதாரத்தைச் சுட்டியது. .
வரைத்தடந் தோளவுணன் வன்காயங் கூட்டி
அரைத்திடுஞ் சேனை யருந்தி-உருத்திரனாய்ப்–68-
அவுணன் – இரணியன்.
காயம் – உடம்பு,
உணவுப் பொருளோடு சேர்க்கும் பலவகைப் பொடி) இது மசாலை யென வழங்கும் )-உப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் (நாலடி. 116).
சேனை-சைனியத்தை, சேனைக் கிழங்கை.
உருத்திரனாய்- நிலைபெற்ற வடிவை யுடையவனாகி, உருத்திரனென்னும் கடவுளாகி.
பண்ணுந் தொழிலைப் பகைத்துநிலக் காப்புமணிந்
துண்ணும் படியெல்லா முண்டருளி-வெண்ணெயுடன்–69-
பண்ணும் தொழில் – காத்தற்றொழில்.
நிலக்காப்பு – மண்ணைக் குழைத்திட்ட பொட்டு, நிலத்தைக் காத்தல்.
குழந்தைகளுக்கு மண் பொட்டிடுதல் மரபு ;
மண்பொட் டணிந்து நீறிட்டு?? (பிரபு. மாயை யுற்பதீதி, 46). உண்ணும் உலகங்களை யெல்லாம் உண்டு;
படி – உலகம்;-படியால்:அளக்கப்படும் அரிசியால்
குளப்படி நெய் யடிசிற் கொதத்ததோ –திரு வரங்கத்.–89-
பூதனை தந்தபால் போதாம லேபசித்து
வேதனையும் பெற்று வெளிநின்று-பாதவத்தைத்–70-
வேதனை -துன்பத்தை – பிரம தேவனை.
பாதவத்தை – மருத-மரங்களை
தள்ளுநடை யிட்டுத் தவழ்ந்து விளையாடும்
பிள்ளைமை நீங்காத பெற்றியான்-ஓள்ளிழையார்–71-
ஒள்ளிழையார் – ஒள்ளிய ஆபரணத்தை யணிந்த மகளிர்.
கொல்லைப்பெண் ணைக்குதிரை யாகீகுந் திருப்புயத்தான்
கல்லைப்பெண் ணாக்குமலர்க் காலினான்-சொல்கவிக்குப்–72-
கொல்லையிலுள்ள பனை மரத்தாலாகிய குதிரை யாக்குதற்குக் காரணமான -மகளிர் மடலேறுதல்,
திவ்யப் பிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல் முதலியவற்றால் அறியப்படும்.
புயவழகைக் கண்டு மகளிர் மடலேறுவாரென்பது கருத்து.
பெண் –அகலிகை.
கவிக்கு- திருமழிசை யாழ்வார் மாணாக்கரான கணி கண்ணர் பொருட்டு.
பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்கீகா
ஆர முதுகடைந்த வங்கையான்- நாரியுடன்–73-
முதுகு அடைந்த பாயலான் : அரவப். பாயலைத் தோளில்
எடுத்துத் தூக்கிக் கணி கண்ணர்க்குப் பின்னே சென்றாரென்னும் பழைய வரலாறு இங்கே அறியத்தக்கது?
பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப் பணைத் தோளெருத் தலைப்பப், பழமறைகண்
முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே (மீனாட்சி. பிள்ளைத். காப்பு. 1).
ஆர்அமுதுகடைந்த – அரிய அமுதத்தைக் கடைந்த
கடல் கடைந்து அமுதம் கொண்ட; அண்ணலை –திருவாய் -3-4-9-
நாரியுடன் -ஸீதாப்பிராட்டியுடன்
வன்கா னகங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு
மென்கா னகங்கடந்த வீட்டினான்-என்காதல்–74-
வன் கானகம் கடந்த – வலிய தண்டகாரணியத்தைக் கடந்து சென்ற.
வேட்டுவற்கு – சரனென்னும் வேடனுக்கு.
மென் கால் நகங்கள் தந்த- மெல்லிய கால் நகங்களைத் தந்த,
கண்ணபிரானுடைய காலை மானாக நினைந்து சரத்தை எய்து, பின் கண்ணபிரானது பாதமென்று அறிந்து
வருந்திய அவனுக்கு வீட்டையும் அளித்தனரென்பதை வீட்டினான் என்பதனால் உடம்படு புணர்த்தினார் ;
இந்த வரலாறு பாகவதம்,11-ஆம் கந்தம் தன்னுடைச் சோதிக்கெழுந்தருளிய அத்தியாயம்,28-ஆம் செய்யுள் முதலியவற்றால் அறியப்படும்.
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன்மிதந்தோன்
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான்-தெள்ளிதின்–75-
முதலடியில் முரண் அமைந்துள்ளது-
வெட்ட வெறுவெளியி லேநின்றுந் தோற்றாதான்
கிட்ட விருந்துங் கிடையாதான்-தட்டாதென்–76-
எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன்
கண்ண னெனும்பெயராற் காண்பிப்போன்-எண்ணுங்கால்–77-
மாயன் – கரிய நிறமுடையவன், மாயையை யுடையவன்.
கண்ணன் – எல்லார் கண்ணிலும் உள்ளவன்
வீதிவாய்ச் செல்கின்றான் போல் விழித்திமை
யாது நின்ற, மாதரார் கண்களூடே வாவுமான் நேரிற் செல்வான்,
யாதினு முயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ணனென்றே,
ஓதிய பெயர்க்குத் தானே யுறுபொரு ளுணர்த்தி விட்டான் (கம்ப, உலாவியற். 6) என்பதிலும்
இச்சொல் இப்பொருளில் அமைக்கப் பட்டுள்ளது.
எங்கு மிலாதிருந்தே யெங்கு நிறைந்திருப்போன்:
எங்கு நிறைந்திருந்தே யெங்குமிலான்-அங்கறியும்–78-
என்னை யெனக்கொளித்தி யானென்றுங் காணாத
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்-முன்னைவினை–79-
கொன்று மலமாயைக் கூட்டங் குலைத்தென்னை
என்றுந் தனியே யிருத்துவோன்-துன்றுபிர–80-
மாவுநான் மன்னுயிரு நானவ் விருவரையும்
ஏவுவான் றானுநா னென்றுணர்த்தக்-கோவலர்பால்–81-
கோவலர்பால் – இடையரிடத்தில்.
பிரமாவும் நான்.
ஆனுமா யான்கன்று மாகி யவற்றைமேய்ப்
பானுமாய் நின்ற பரஞ்சோதி-மா நரகப்–82-
பிரமன் ஆன்கன்றுகளையும் சிறார்களையும் கவர்ந்து ஒளித்து வைத்த பொழுது கண்ணபிரான்
அப்பொருள்களாக இருந்தன ரென்பது, பாகவதம், மலரவன் சிறார்க்கன்று கவர்ந்த அத்தியாயத்தால் அறியப்படும்.
பேரிரு ணீக்கப் பெருந்தவம்வேண் டாவுடலில்
ஆருயிர் கூட்ட வயன் வேண்டா-பாருமெனச்--83-
சங்கத் தொனியுந் தடங்குழ லோசையெனும்
துங்கத் தொனியுந் தொனிப்பிப்போன்-பொங்குமலை–84-
துரியோதனனைச் சேர்ந்தவர்கள் தீது செய்தவராயினும்,
கண்ணபிரானது சங்கத் தொனியைக் கேட்டமையின் நரகம் புகாராயினார்;
ஆதலின் நரகப்பேரிருள் நீக்கச் சங்கத்தொனி தொனிப்பிப்போன் என்றார்.
வேய்ங்குழலோசையால் பட்டுப்போன மரங்கள் தளிர்த்தனவாதலின்,
உடலில் ஆருயிர் கூட்ட வயன்வேண்டா -என்றும்,
குழலோசை —-தொனிப்பிப்போன் -என்றும் கூறினார்.
அலை- திருப் பாற்கடல்.
மோதும் பரனாதி மூல மிவனென்றே
ஓதுங் கரியொன் றுடையமால்-மூ துலகைத்–85-
கரி – கசேந்திரனென்னும் யானை, சாட்சி.
தந்திடுவோ னுந்துடைப்போன் றானுநா னென்றுதிரு
உந்தியால் வாயா லுரைத்திடுவோன்-பைந்தமிழால்–86-
உந்தி- நாபி; இது தன் பால் பிரமனைத் தோற்றி உலகைச் சிருட்டிப்பது.
பிரளய காலத்தில் உலகத்தை உண்டமையால் வாய் அழித்தற்கு. உரியது
உலக. முண்ட பெருவாயா(திருவாய், 6: 1) .
ஆ திமறை நான்கையுநா லாயிரத்து ‘நற்கவியா
ஓதும் பதினொருவ ருள்ளத்தான்-பா ஈதமெனும்–87-
பதினொருவர் – ஆழ்வார்கள் பன்னிருவருள் மதுரகவி யொழிந்த மற்றையோர்.
செந்தா மரை மலரிற் சிந்திய தேன் போல
மந்தா கினி வழியும் வண்மையான்-சந்ததமும்–88-
திரிவிக்கிரமாவதார காலத்தில் வலக் காலை மேலே தூக்கிய போது கங்கை வழிந்ததென்பர்.
மந்தாகினி : வளைந்து செல்வ தென்பது இதன் அவயவப் பொருள்.
ஆன்ற வுலக மறிவுமறி யாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன்-ஈன்றவளைத்–89-
துயிலாத் துயில் – அறிதுயில்,
ஈன்றவளை – யசோதையை.
தெள்ளு மணிவாயிற் காட்டிச் செகம்புறமும்
உள்ளு மிருப்ப துணர்வித்தோன்-கொள்ளைத்–90-
கொள்ளை – மிகுதி.
ஈன்றவளை உணர்வித்தோனென இயைக்க.
கவற்சிதரு சென்மக் கடலிற் கலந்த
அவிச்சை யுவர் வாங்க முகி லானோன்-நிவப்பா–91-
அவிச்சை யுவர் – அஞ்ஞானமாகிய உப்பை.– உவரை நீக்கி நீரைக் கொள்வது முகிலின் இயல்பு ;
முகில் – மேகம்.
நிவப்பா – உயர்வாக.
மடங்கும் பரசமய வாத நதிவந்
தடங்கக் கருங்கடலு மானோன்-உடம்பிற்–92-
கடலுக்கு நதிபதியென்று ஒரு பெயருமுண்டு.
புணர்கீக வொருகிரணம் போலுமெனை யுங்கொண்
டணைக்க மணிநிறமு மானோன்-பணைக்கும்–93-
நீலமணி ஏனை நிறங்களைத் தனக்குள்ளே அடக்கிக்கொள்ளும் இயல்புடையது.
விசைப்பூ தலவூசன் மீதிலிருப் போனும்
அசைப்போனுந் தானாகு மண்ணல்-இசைத்திசைத்–94-
தூன் பிடிக்கும் வேட ரொருபார்வை யானூறு
எண் பிடிக் கின்ற வகை யென்னத்-தான் படைத்த–95-
பார்வை – பார்வை மிருகம்-மிருகங்களைப் பிடிப்பதற்காக வேடர்கள் வளர்க்கும் மிருகங்கள்
அல்லது அவற்றைப் போல மண்ணாற்் செய்த வடிவங்கள் ;
இவை தீபகமென்றும் சொல்லப்படும்.
என் பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமும்
தன் பிறவி பத்தாற் றணித்திடுவோன்-முன்பு புகழ்ந் –96–
பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமென்பது எண்பத்துநான்கு லட்சம் பிறப்பின் பேதங்களை,
பிறவி பத்து – தசாவதாரம்;
தாம் அவதாரம் எடுத்தமையால் அவற்றைத் தியானிக்க என் பிறவி தீர்ந்த தென்பது கருத்து.
———-
தசாங்கங்கள்
(மலை)
தேத்திருவர் நீங்கா திருக்கையா லேகேச
வாத்திரி யென்னு மணிபெற்றுக்-கோத்திரமாம்--97-
இருவர் – பிரமதேவரும் உருதீதிரரும்.
கேசவாத்திரி – அழகர் மலையின் திருநாமங்களுள் ஒன்று.
வெங்காத் திரஞ்சேர் விலங்குகளை மாய்த்திடலாற்
சிங்காத் திரியென்னுஞ் சீர்மருவி-எங்கோமான்–98-
காத்திரம் சேர் விலங்குகளை – உடம்பை அடைகின்ற பிறவி களாகிய தளைகளை,
முன்காலைச் சேர்ந்த மிருகங்களாகிய யானைகளை–சிலேடை.–காத்திரம் – யானையின் முன்கால்.
சிங்காத்திரி : இம்மலையின் திருநாமம்,
எம்கோமான் – கண்ணபிரான்.
மேய்த்த நிரைபோல வெற்புகளெல் லாஞ்சூழ
வாய்த்த நிரையிலொரு மால் விடையாய்ப்-பார்த்திடலால்–99-
கீழேயிருக்கும் சிறு குன்றுகளுக்குப் பசு நிரையும், அழகர் மலைக்கு இடபமும் உவமை.
தரும தேவதை இடப வடிவங்கொண்டு இங்கே தவஞ் செய்து வழிபட்டுப் பேறு பெற்றமையின் இடபகிரி யென்ற
பெயர் உண்டாயிற்றென்பர்.
இன்னிய மார்க்கு மிடபகிரி யென்னும்பேர்
மன்னிய சோலை மலையினான்-எந்நாளும்–100-
இனிமை இயம் – இனிய வாத்தியங்கள் ;
முன்றி லதிர் மும் முரசினான் –என்பர் பின் ; 122.
—————-
(நதி)
பொற்சிலம்பி லோடுஞ் சாம் பூநத போன் மாணிக்க
நற்சிலம்பி லோடு நதியாகிக்-கற்சிலம்பில் –101–
பொற்சிலம்பில் – மேருமலையில்.
சாம்பூநதம்-மேருவின் தென் பால் ஓடும் ஓராறு; நாவற்பழத்தின் சாறே ஆறாக ஓடுதலால் இந்நதம் சாம்பூ நதமெனப் பெயர் பெற்றது;
நதம் – மேற்கு நோக்கி ஓடும் ஆறு.
மாணிக்க நற்சிலம்பு – திருவடியில் அணியப் பெற்றுள்ள மாணிக்கப் பரலை யுடைய சிலம்பென்னும் ஆபரணம்,
கற் சிலம்பில் – பல வகையான கல் மலைகளுக்கு இடையே.
இந்திரன் போலு மிடபா சலமவன்மேல்
இத்தவிழி போலும் வளச்சுனைகள்-முந்துதிரு–102-
௬னைகளுக்கு இந்திரன் விழிகள் உவமை.
மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போல வருதா புரநதியான்-சீலமுறு–103-
முத்தாரம் தோளிலும் மார்பிலும் உள்ளன;–நதிக்கு-முத்தாரம் உவமை
மாயோன் மார்பி லாரம் போல, மணிவரை யிழிதரு மணி கிளரருவி(தொல். செய். 35, பேர். மேற்;)
நதிக்குப் போத வொமுகு முதீதாரமும் (தக்க. 280).
நூபுர நதி – சிலம்பாறு ?
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை (சிலப். 11 : 108) ;
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ் சோலை (பெரியதிரு. 9, 9:9)
—————-
நாடு
பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகட்கு
முன்னிருகை காது முலைமுகங்கால்-பின்னகங்கண் –104-
பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகள் – செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகள்
தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி, பன்றி யருவா வதன்வடக்கு-நன்றாய, சீத மலாடு
புனனாடூ செந்தமிழ்சேர், ஏதமில் பன்னிருநாட் டெண் (நன். 274மயிலை. மேற்.)
பின்னகம் – பின்னல்.
கண் – கண்கள்.
கையிரண்டு; காதிரண்டு, நகிலிரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகிய பன்னிரண்டு உறுப்புக்களும் பன்னிரு நாடுகளுக்கு உவமை.
காட்டு மவற்துட் கனக வரை மீது புகழ்
தீட்டும் புனனாடுந் தென்னாடும்-நாட்டமாம்.–105-
கனகவரை – மேருமலை,
புனல்நாடு – சோழநாடு.
தென்னாடு- பாண்டிநாடு.
நாட்டம் ஆம் – கண்கள் ஆகும்.
அந்நா டிரண்டி லருள்சேர் வலக்கணெனும்
நன்னுடாந் தென்பாண்டி நாட்டினான் பொன்னுருவச் –106-
—————————-
(ஊர்)
சந்தீரவடி வாஞ்சோமச் சந்திரவி மானத்தை
இந்திரவி மான மிதுவென்றும்-மந்தரவிரு–107-
சோமச்சந்திர விமானம் : இஃது அழகருடைய விமானத்தின் திருநாமம்.
தரும தேவதையின் கட்டளைப்படி விஸ்வ கருமா சந்திர மண்டலத்தைப்போல அமைத்தமையால் இப்பெயர் பெற்றது;
இது சோமச் சந்த விமானமென்றும் வழங்கும் ;
வந்த விமா னத்தமரர் மலர் தூவிப் பணி சோமச், சந்த விமானத் தமருஞ் செளந்தரிய பரஞ்சோதி ?? (அழகர் கலம். 1)
துகீகொடி யேறு துசத்தம்பம் வல்லி சா
தக்கொடி யேறுகற்ப தாருவென்றும்-மிக்கோர்க்–108-
விருதுக் கொடி – வெற்றிக் கொடி.
துசத்தம்பம் – துவசதீதம்பம்.
வல்லி சாதக் கொடி – கற்பகமரத்திற் படரும் காமவல்லி
கொருவாழ்வா னோனை யுபேந்திரனே யென்றும்
திருமாலை யாண்டானைத் தேவ-குருவென்றும்–109-
ஒரு வாழ்வானோனென்ற.து அழகரை.
திருமாலையாண்டான் – உடையவருடைய குரு- இவருடைய விக்கிரகம் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி யின் பக்கத்தே இத் தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸுப்ர பாதபடனம், புஷ்பாஞ்சலி முதலியன இவர் சொல்லா நிற்ப அர்ச்சகர் செய்யவேண்டும். திவ்யப்ரபந்த சேவையும் உண்டு.
இவருடைய சந்ததி யார் பெருமாள் எழுந்தருளும்பொழுது முன்னே பல்லக்கில் வருவார்கள்.
திரியெடுத்தாடுதல் முதலியவற்றில் இவர்களுக்குக் காணிக்கை யுண்டு.
இவர்களைச் சேவித்த பின் அடியார்கள் பெருமாளைச் சேவிப் பார்கள்.
நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை
விண்ணவர்கோ னாதி விபுதரென்றும்-எண்ணுதலால்–110-
நம்பி – திருமலை நம்பி; இவர் கைங்கரிய பரர் ;
பட்டைக் கைங் கரியமென்று பெயர் – இக்கைங்கரியம் தர்ப்பம், கூர்ச்சம், பவித்ரம் முதலியன கொடுத்துப்
புண்யாஹவாசனாதிகள் செய்து வைக்கும் பெளரோகித சம்பந்தமானது.
இவர் பரம்பரையார் இன்றும் இங்கேயே இருந்து கைங்கரியஞ் செய்து வருகிறார்கள்.
விபுதர் – தேவர்.
ஆர்பதி யான வமரா பதிபோலும்
சீர்பதி யான திருப்பதியான்-மார்பிடத்தில்–111-
ஆர் பதி- நிறைந்த ஊர்.
சீர்பதி-ஸ்ரீய பதி; இஃது இம்மலைக்கு உரிய ஒரு திருநாமம்,
——————
மாலை
எண்ணுங் கலனிறத்தோ டிந்திரவிற் போற்பசந்த
வண்ணந் தருந்துளப மாலையான்-உண்ணின்–112-
கலன் – ஆபரணங்கள்.
மற்ற ஆபரணங்களோடு சேர்ந்துள்ள துளபமாலைக்கு இந்திரவில் உவமை.
—————-
(யானை)
றுருக்கும் வபிணவமா மோங்குமதம் பொங்கதீ
திருக்கொம்பு தான்றுதிக்கை சேர-நெருக்கிய–113-
மதம் – சமயம், யானையின் மதம்.
திருக்கொம்பு – திருமகளாகிய பூங்கொம்பு, அழகிய யானைக்கொம்பு.
துதிக்கை – துதித்தல், யானை யின் துதிக்கை.
பாகமொத்த வைகான தம் பாஞ்ச ராத்திரமாம்
ஆகமத்தி னோசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு–114-
வைகானதம், பாஞ்சராத்திரம் : வைஷ்ணவ ஆகமங்களின் பெயர்கள்.
மட்டும் பிணிக்கும் வடகலையுந் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக-விட்டுவிடா–115-
வடகலை, தென்கலை – வைணவ மததீதின் உட்பிரிவுகள்.
புரசைக் கயிறு – யானையின் கழுத்திற் கட்டும் கயிறு.
வானந்த மான மலர்தீதாள்கண் டத்துவி
தானந்த மென்றகளி யானையான்-தானந்த–116-
வான் அந்தம் ஆன.
—————-
(குதிரை)
வர்கீகத் துடனெழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவுநலங் காண்பித்துச்-சொர்க்கத்தில்–117-
வர்க்கம்-எமுத்தின் வர்க்கம், சேணம்.
வாயின் உரைகடந்து- மனிதர் வாயின் உரையைக் கடந்து, –வாயில் நுரைகள் தந்தென்பது மற் றொரு பொருள்,
கற்கி வடிவு – கோயிலின் வடிவு. குதிரையின் வடிவு
கற்கி-கோயில் —கற்கிளர் கற்கி செய்தோன் (சேது.இராமநாத. 43)
ஏறுங் கதிகாட்டி யெய்து மணுத்தோற்றி
வீறும் பலகலையும் வென்றோடி-ஆறங்கம்–118-
அணு – துளி, உயிர்,
தோற்றி – வெளிப்படச் செய்து.
கலை – நூல்கள், மான்கள்.
ஆறு அங்கம் – வேதாங்கம் ஆறு, ஆறுவகை உறுப்புக்கள்.
சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டூ தாரணியிந்
போற்றிய வேதப் புரவியான்-பாற்கடலிற்–119-
வேதத்துக்கும் குதிரைக்கும் சிலேடை,
—————-
(கொடி)
புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும்
சக்கரமும் போலத் தலைசுழன்று-தொக்கவிசை–120-
மந்திரத்திற்குப் பம்பரமும், பூமிக்குச் சக்கரமும் உவமைகள்.
விசை – வேகம்.
வற்றும் பொழுதுவிழ வாசுகியைச் சேடனைப்
பற்றுங் கருடப் பதாகையான்-சுற்றியதன்–121-
கருடப்பதாகை – கருடக்கொடி : பதாகை – பெருங்கொடி.
—————
(முரசு)
குன்நிலரி யுங்கரியுங் கொண்மூவு நின்றதிர
முன்றி லதிர்மும் முரசினான்-என்றும்–122-
அரி – சிங்கம்.
கரி- யானை,
கொண்மூ- மேகம்.
மும்முரசு –நியாய முரச, தியாக முரசு. வீர முரசு (புறநா. 58 :12, உரை)
————–
ஆணை
அவன் அசையாமல் அணுவும் அசையாது என்னும்
தவநிலை யாணை தரித்தோன்-நவநீதம் –122-
எங்கும் நிறைகின்றவன் என்றவாறு
நவநீதம் -வெண்ணெய்
மேனியிற் சிந்தியது மென்கையி லேந்தியதும்
வானி லுடுவு மதியுமெனத்-தானுண்டோன்–124-
உடு -நக்ஷத்ரம்
மதி -சந்திரன்
மேனியிற் சிந்திய வெண்ணெயின் சிறிய பிதிர்களுக்கு நட்சத்திரமும்,
கையில் எடுத்த பெரிய உருண்டைகளுக்கு மதியும் உவமைகள்.
செங்கதிரும் வெண்கதிரு மென்னத் திருவிழியும்
சங்கமுஞ் சக்கரமுந் தாங்கினோன்-அங்கணுல–125-
திங்கள் இடக்கண்ணும் சங்கும், சூரியன் வலக்கண்ணும் சக்கரமும் ஆகும்.
குண்டகனி வாயா னுறையுந் திருவயிற்றான்
கொண்ட படியீன்ற கொப்பூழான்-மண்டி–126-
உலகு உறையும் என இயைக்க.
கொண்டபடி – உட்கொண்டபடி,
கொப்பூழ் – திருவுந்தி.’
அளந்த திருத்தாளா னன்றேற்ற கையான்
விளைந்த பொருள்காட்டு மெய்யான்-உளங்கொண்–127-
பூமியை அளந்ததும் அதனை ஏற்றதும் வாமனாவதார
தீதில். விளைந்த பொருள் – பச்சைப் பயிர்.
டிடந்த மருப்பினா னேந்து முதுகான்
படந்தனில் வைத்த மணிப் பாயான்-தொடர்ந்தவினை–128-
இடந்த- பெயர்த்த; இது வராகாவதாரத்தில்.
முதுகிலேந்தியது கூர்மாவதாரத்தில்,
பாய் – ஆதிசேடன்.
கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக்,
கிடந்திடுந் தன்னுட் கரக்கு முமிமும்,
தடம்பெருந்தோ எாரதீ தழுவும் பாரென்னும்,
மடந்தையை மால்செய்கின்ற மாலார் காண்பாரே —
உண்டு முமிழ்ந்துங் கடந்து மிடந்துங் கிடந்து நின்றும்,
கொண்ட கோலத்தோடு வீற்றிருந்துமணங் கூடியும்,
கண்டவாற்றாற் நனதே யுலகென நின்றான் (திருவாய். 2, 8: 7; 4. 5:10)
முட்டதுக்குந் தன்னாம முன்னித் திருநாமம்
இட்டவருக் கீவோ னிகபரங்கள்-எட்டெழுத்தாற்--129-
முட்டு- தடை.
தன் நாமம் முன்னி -தன் திருநாமங்களைத் தியானித்து.
திருநாமம் இட்டவருக்கு – திருமண்குறிகளை இட்ட அடி யார்களுக்கு;
மணிவாசற் றூங்க வொருகுடைக் கீழ் வையங் காத்துச் சிந்தா,
மணிவா சவனென வாழ்ந்திருப் போர்பின்னை மாதிருக்கும்,
மணி வாச மார்பரங் காகேச வாவென்று வாழ்தீதித்திரு,
மணிவா சகங்கொண் டணிவா ரடியை வணங்கினரே (திருவரங்கத். 72);
“ஈராறு நாம முரைசெய்து மண் கொண்் டிடுவார்கள் காணு மிமையோர் ? (வி. பா. 9-ஆம் போர்ச். 1),
எட்டெழுத்து – அஷ்டாக்ஷரம்.
பிஞ்செழுத்தாய் நையும் பிரம லிபியெனும்பேர்
அஞ்செழுத்தை மூன்றெழுத்த தாக்குவோன்-வஞ்சமறத்–130-
பிஞ்சு எழுத்தாய்- சிறிய எழுத்தாய் :
பிஞ்சு எழுத்து எனப் பிரித்து, பிய்ந்த எழுத்து எனினுமாம்.
பிரமலிபி : ஐந்தெழுத்தாலாகியது; அஞ்சு எழுத்து – யாவரும் அஞ்சுதற்குரிய எழுத்தெனினுமாம்.
மூன்று எழுத்தது – மூன்று எழுத்தையுடைய இல்லை யென்னுஞ் சொல்
“போதனார் நெட்டெழுதீது நமனா ரிட்ட குற்றெழுத்தும் புனலெழுத் தாய்ப்போக (சீரங்க. ஊசல், 16) ்
தங்கள்குன் றெங்கிருந்துஞ் சங்கர னாதியோர்
நங்கள்குன் நீ தென்னவரு நண்புடையோன்-அங்கோர்–131-
வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண் கொடுத்த கண்ணன்-நயமுரைக்கின்–132-
வயமுனி-பச்சை வாரண தாசர்; இவர் திருக்கச்சி நம்பி முன் னோர்களுள் ஒருவர்; பச்சை வாரணப் பெருமாள்
கோயிலில் வழிபட்டவர். இவருக்கு ஹஸ்திகிரியில் கண்ணைப் போக்கின தாகவும்,
அழகர் மலையில்கண்ணைக் கொடுத்ததாகவும் வரதராஜ ஸ்தவத்தில் கூரத்தாழ்வார் கூறி யிருப்பதாகப் பெரியோர் கூறுவர்.
கயமுனி – யானைக்கன்று; இதற்குக்கண் கொடுத்தது, வளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில் வண்டோ டிரண்டுபாடும் மழைபாய் கடாக்கரிக் கண்கொடுத்தும் (அழகர் பிள்ளைத். அம்புலிப். 4) என்பதிலும் கூறப்பட்டுள்ளது.
அஞ்சுபடை யோனெனினு மஞ்சாம லங்கையில்வா
சஞ்செய்யு முத்யோகச் சக்கரத்தான்-எஞ்சாது–133-
அஞ்சுபடை -பஞ்சாயுதம், அஞ்சுகின்ற படை.
உத்தியோகச் சக்கரம் : உத்தியோகச் சக்கரம், பிரயோகச் சக்கரமெனச் -சக்கராயுதம்-இருவகைப்படும்-
அவற்றுள் இயல்பாக உள்ளது உத்தியோகச் சக்கரம்.
விண்ணிலங்கொள் பொன்னிலங்கை வெற்றியாய்க் கொண்டாலு
மண்ணிலங்கைத் தானமாய் வாங்குவோன்-பண்ணிலங்கும்–134-
பொன் இலங்கை – பொன் மயமான இலங்கை நகரத்தை.
மண் நிலத்தை. கைத் தானமாய் வாங்குவோன் –மகாபலியினிடத்தே தானமாய்க் கையில் வாங்குவோன்.
ஏரணி பொன்னரங்கத் தெம்பிரான் போலெவர்க்கும்
தாரணி நல்காத தம்பிரான்-காரணியும்–135-
அரங்கத் தெம்பிரான் – ஸ்ரீ ரங்க நாதர்.
ஸ்ரீரங்கநாதர் நாச்சியார் பலருக்கு மாலையை அளிப்பவர்
அழகர் ஆண்டாளுக்கு மட்டும் மாலை அளிப்பவராதலின் இங்ஙனம் கூறினார்.
தாரணி – மாலையாகிய . ஆபரணத்தை.
கார் அணியும் – கொடையால் மேகத்தை ஒத்த.
செங்கைத் தலத்திடத்துந் தென்மதுரை யூரிடத்தும்
சங்கத் தழகனெனுந் தம்பிரான்-எங்கும்–136-
இடச்செங்கையில் சங்கமென்னும் ஆயுதத்தையுடைய அழகர்
தென்மதுரையூரிடத்தில் தமிழ்ச் சங்கத்திலுள்ள அழகர்;
சுந்தரத் தமிழ்ப் புலவர், சங்கத் திருப்பிரியான் சார்பு (அழகர்.கலம். 68)
திருப்பாது கைக்குஞ் செழுங்கருட னுக்கும்
திருப்பாது கைக்குமர சீந்தோன்-விருப்பமுகம்--137-
திருப்பாது உகைக்கும் – பின் வாங்காமல் செலுத்துகின்ற.
கருடன் – கருடாழ்வான்;
கருடனுக்கு அரசீந்தது, பறவைகளுக்கு அரசாக்கியது.
திருப்பாதுகை – திருவடி நிலை; அதற்கு அரசீந்தது இராமாவதாரத்தில்.
சந்திர னான சவுந்தர வல்லியுடன்
சுந்தர ராசனெனத் தோன்றினோன்-அந்தம்–138-
சவுந்தர வல்லி- இத்தலத்து நாச்சியார் திருநாமம்,
அந்தம் -அழகு.
சொலநலங்கொ டோளழகாற் சுந்தரத் தோளன்
மலையலங் காரனென வந்தோன்-பலவிதமாய்–139-
தோள் அழகால்- தோளாலும் அழகாலும்.
தோளால் சுந்தரத் தோளனென்றும்,
அழகால் மலை யலங்காரனென்றும் உண்டாயின.
—————
வழி பட்டோர்
நண்ணியதெய் வத்தை நரரெல்லாம் பூசித்த
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன்-கண்ணனைய–140-
புண்ணியம் – தருமதேவதை ;
தருமதேவதை வழிபட்டதை, 99-ஆம் கண்ணியின் குறிப்புரையால் அறியலாம்.
கள் நனைய – தேனை யுடைய-
அரும்புகளை யுடையனவாகிய; அரும்புகள், இட்டவை.
பாத கமலம் பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்-கோதில்--141-
பாத கமலம் பரவு – திருவடித் தாமரைகளை வணங்கிய.
மலயத் துவசன் – மலயத்துவசபாண்டியன் ;
இவன் இத்தலத்தில் கோயிற்நிருப் பணி முதலிய திருப்பணிகளையும்
நித்தவிழா முதலியவற்றையும் செய்வித்துப் பேறு பெற்றவன்;
இவ்வரலாறு இத்தலபுராணத்திலும் உள்ளது;
பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே (அழகர் கலம். 1).
அரணாம் புயங்களுறு மம்பரீ டற்குச்
சரணாம் புயங்க டருவோன்-திரு நாளில்–142-
அரணும் :புயங்கள் – தம்முடைய குடிகளுக்கு அரணுகிய தோள்கள் ;
அரண்டரு திரடோள் (கம்ப. சடாயுவுயிர். 63).
அம்பரிடன் : இத் தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்ற ஓரரசன்.
சரண அம்புயங்கள் – திருவடித் தாமரைகளை.
—————————
கோடைத் திருவிழா
சந்தக்கா வூடு தவழ்ந்துவருந் தென்றற்கால்
மந்தக்கா லாக மருவுங்காற்-சிந்திக்கும்–143-
சந்தக்காவூடு – சந்தனச் சோலையினுள்ளே -என்றது பொதியின் மலையிலுள்ள சந்தனச் சோலையை.
மந்தக்கால் ஆக – மந்த மாருதமாக; -தென்றலின் மூவகை நடையுள் மந்தம் ஒன்று.
வாடைத் துளிபோன் மலர்த்தேன் றுளிதுளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டருளி-நீடுவிடைக்–144-
குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற்
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்–145-
விடைக் குன்று; அழகர்மலை -99, பார்க்க.
ஸ்ரீ பதியோர் -அழகர் மலையிலுள்ளோர்.
கூடலிற் கூடலெனுங் கூடற் நிருநகரில்
ஏடலர் தாரான் எழுந்தருளி ஆடக்குடன்–146-
ஸ்ரீ பதியோர் கூடுதலால் கூடலென்னும் பெயர் பெற்ற மதுரையில்;
இது பிரிநிலை நவிற்சியணி.
தாரான் – அழகர்.
கல்லா குளங்கள் கரையப் பணிவார் முன்
தல்லா குளம் வந்து சார்ந்தருளி-மெல்ல –147-
கல் ஆகு உளங்கள் – கல்லைப் போன்ற மனங்கள்.
தல்லா குளம் – மண்டபப்படியுள்ள ஓர் ஊரின் பெயர்-இது வையை நதிக்கு வடக்கே உள்ளது.
——–
வையைக்கு எழுந்தருளுதல்
நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்றுசிலர் பார்க்கச்-சுரலோகத்-148-
நரலோகமீது – பூமியின்மேல்.
சுரலோகத்து – தேவருலகத்தில் உள்ள.
திந்த்ர விமானமிது வென்று மிதுசோமச்
சந்த்ர விமானமே தானென்றும்-முந்தியவட்–149-
சோமச் சந்த்ர விமானம் : இத் தலத்துள்ள கோயிலின் விமானம் ; 107-ஆம் கண்ணியின் குறிப்பைப் பார்க்க.
டாங்க விமான மவையிரண்டு மென்னவே
தாங்கு விமானந் தனிற்புகுமுன்-தீங்கிலார்–150-
அட்டாங்க விமானம் : எட்டு அங்கங்களையுடையது :
அழகருடைய சோமச்சந்திர விமானமும், கூடலழகருடைய விமானமும் இவ்வாறு கூறப்படுதலால், -அட்டாங்க விமான மவையிரண்டும் -என்றார்.
இதன் இலக்கணத்தை, அழகர் பிள்ளைத் தமிழ், முத்தப் பருவம், * மட்பாவை தோயும் (2) என்னும் முதற் குறிப்புடைய செய் யுளால் அறிந்து கொள்ளலாம்.
தீங்கிலார் – விமானந் தாங்குவோர்.
உன்னி விமான முரத்தெடுக்கும் போதனந்தன்
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த-தென்னவே--151-
உரத்து – வன்மை கொண்டு.
அனந்தன் – ஆதிசேடனுடைய.
சென்னிமணி – தலையிலுள்ள மணிகளுள்.
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி-அம்பரத்திற்–152-
குதிரை நம்பிரான் – பெருமாளுடைய வாகனமான குதிரை ;
உத்தம இலக்கணம் அமைந்த குதிரையைக் குதிரை நம்பிரானென்றல் மரபு (சீவக. 2157, ந)
ஸூரியனுக்கு ஆதிசேடனுடைய மணி உவமை.
கோடி கதிரோனுங் கோடி பனிமதியும்
ஓடி நிரையா வுதித்தவென-நீடிய–153-
கதிரோன் – சூரியன்.
மதி- சந்திரன்.
நிரையா – வரிசையாக
பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் வெயர்துடைப்பச்-சொற்கத்--154-
பொற் குடைக்குச் சூரியனும், வெள்ளிக் குடைக்குச் சந்திரனும் உவமைகள்.
விற் கொடிகள் – ஒளியை யுடைய கொடிகள்
தியலுங் கரியுமதி லெற்று முரசும்
புயலு முருமேறும் போலக்-கயலினத்தை-155-
எற்றும் – அடிக்கப்படும்.
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்துநர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்–156-
திருத்தகு மேகம்போற் செல்லுதலா னீர்தூம்
துருத்தி மழைபோற் சொரியகீ-கருத்துடனே-157
நீர்தூம் துருத்தி – நீர்தூவும் ஒருவகைக் கருவி.
வாட்டமற வந்து வரங்கேட்கு மன்பருக்குக்
கேட்டவர மூறுங் கிணறுபோல் நாட்டமுடன்–158-
காணிக்கை வாங்கியன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரகீ-காணிற்–159-
காணிக்கை – கையுறைகளை.
புரந்தரற்கு தேரிதென்று போற்றிசைப்ப வோரா
யிரந்திருக்கண் வையைநதி யெய்தி-உரந்தரித்த--160-
திருக்கண் – வையை நதியினிடையே அழகர் திருக்கண்
சாத்தி யருளுதற்காக வைக்கப்படும் பூர்ண கும்பமுதலியன உள்ள மண்டபங்கள்.
ஆயிரம், பலவென்னும் பொருளை யுடையது. -ஆயிரங்
கண்களை யுடைமையால் வையை நதிக்கு இந்திரனை உவமை கூறினர்.
உரம் -மார்பு
——————
வண்டியூர் மண்டபத்தில் எழுந்தருளுதல்
வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்குவண்டி
யூர்மண்டபத்தி னுவந்திருந்து-சீர்மண்டு–161-
வார்மண்டு கொங்கை–திரு மகள்
வண்டியூர் மண்டபம் -வையைக்கு வடக்கில் உள்ள ஓரூர்
இவ்வூரில் சிவ கங்கை அரசரால் மண்டபப்படி நடத்தப்பட்டு வருகிறது என்பர்
மாயனுக்கு வாகனமாய் வாவென்று சேடனைத்தான்
போயழைக்க வெய்யோன் புகுந்திடலும்-தூயோன்–162-
சூரியன் அதீதமிக்க. தற்குறிப்பேற்றவணி.
மருளப் பகலை மறைத்தவ னிப்போ
திருளைப் பகல்செய்தா னென்னத்-தெருளவே–163-
பகலை மறைத்தது, கிருஷ்ணாவதாரத்தில் ;
பகல் – சூரியன்
அங்கிக் கடவுளும்வந் தன்பருட னாடுதல்போற்
றிங்கட் கடவுள்சே விப்பதுபோநற்-கங்குற்–164-
கரதீப மும்வாணக் காட்சியுங் காண
வரதீப ரூபமாய் வந்த-திருமால்–165-
கரதீபம் – தீவட்டி,
காண – காண்பதற்கு.
தீப ரூபமாய் வந்தது திருத் தண் காலில்-இவருடைய திருநாமம் விளக்கொளிப் பெருமாளென்பது.
—————
தலைவி அழகரைத் தரிசித்து மயல் கொள்ளல்
அவனி பரிக்கு மனந்தாழ்வான் மீது
பவனிவரக் கண்டு பணிந்தேன்-அவனழகிற்–166-
அனந்தாழ்வான் மீது – ஆதி சேட வாகனத்தின் மீது.
பவனி -உலா
பின்னழகு முன்னழகாம் பேரழகைகீ காணுமுன்னே
முன்னழகைக் கண்டேனான் மோகித்தேன்-பின்னழகு-167-
பெருமானுடைய முன்னழகைப் போல்வதாகிய பின்னழகைக் காணுமுன்னே. முன்னிலும் பின்பழகியரென்று பெருமாளுக்கு ஒரு திருநாமம் உண்டு-
முன்பிலும் பின் பழகிய நம் பெருமாள் (சீரங்க. ஊசல், 8. )
தானேகண் டாலுந் தனக்குத் துயர்வருமென்
ஹேனோரை நோக்கி யெழுந்தருள-ஆனோன்–168-
(பி-ம்.) எழுந்தருளி – வானோன்.
விமலத் திருமுகமு மென்மார்பின் மேவும்
கமலத் திருமுகமுங் கண்டேன்-அமலன்–169-
கமலத்திரு – தாமரைப் பூவிலுள்ள திருமகளது.
அரவணையா னென்பதுமுண் டண்ணலரன் போல
இரவணையா னென்பதுமுண் டேனும்-பரவைத்–170-
அரவணையான் – ஆதிசேடனை அணையாக உடையவன்.
இரவு அணையான் – யாசித் தலைப் பொருந்தான், இரவில் தழுவான்..
திருவணையா னென்றுதினஞ் செப்புவது பொய்யென்
றுருவணையு மாதர்க் குரைத்தேன்-மருவணையும்–171-
பரவைத் திருவணையான் – கடலிற்கட்டிய திருவணையை யுடையவன், –பாற்கடலிற்றோன் றிய திருமகளை அணையாதவன் ;
பரவை – கடல், பாற்கடல்.
மரு – வாசனை.
(ி-ம்.) செப்புவதைப்பொய் ; முருகனையுஞ்.
—————–
தலைவி அழகரை நோக்கிக் கூறுதல்
செங்கரத்தி லன்று திருடியவெண் ணெய்போலச்
சங்கிருக்க வென்சங்கு தான்கொண்டீர்-கொங்கை–172-
என் சங்கு – என்னுடைய வளையலை.
மலையருவி நீருமக்கு மாலிருஞ் சோலைத்
தலையருவி நீர்தானோ சாநீறீர்-விலையிலாப்–173-
கொங்கையாகிய மலையில் விழுகின்ற அருவி போன்ற கண்ணீர்.
பொற்கலை யொன்நறிருந்தாற் போதாதோ வன்றுபுனை
வற்கலையி லேவெறுப்பு வந்ததோ-நற்கலைதான்–174-
அன்று- இராமாவதாரத்தில்.
வற்கலை- மரவுரி.
நற்கலை-நல்ல ஆடைகளை
ஆரஞ்சேர் கொங்கைக் களித்த தறியீரோ
சோரந் திரும்பத் தொடுத்தீரோ-ஈரஞ்சேர்--175-
ஆரம் – முத்துமாலைகள்.
கொங்கைக்கு – திரெளபதிக்கு.
சோரம் – திருட்டுத் தொழில் ; என்றது-கிருஷ்ணாவதாரத்தில் கோவியர் துகில் கவர்ந்ததை நினைந்து.
நூலாடை யாமெங்க ணுண்ணாடை தாமுமக்குப்
பாலாடை யாமோ பகருவீர்-மாலாகி–176-
பாலாடை – பால்போன்ற ஆடை, காய்சீசிய பாலிலுள்ள ஏடு-
ஆடை தனை யொதுக்கிடுமென் பால்வாரும் (அழகர் கலம். 87) .
மொய்த்திரையு மெங்கண் மொழிகேளீர் பாற்கடலில்
நித்திரைதான் வேகவதி நீரிலுண்டோ-இத்தரையிற்–177-
மொய்த்து-நெருங்கி.
இரையும்-முழங்கும்.
வேகவதி-வையை நதி.
(பி-ம்.) வேகவதி நீருண்டோ.
பொங்குநிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடறான்
அங்குநிலா தும்மோ டணைேந்ததோ-கங்குலெனும்–178-
நிலாவிற்குப் பாற்கடல் உவமை.
ஆனை கெசேந்திர னாகிலதன் மேல்வருவன்
மீனையும் விட்டு விடலாமோ-கானச்--179-
கெசேந்திரன் – கசேந்திராழ்வான்.
வன்மீனென்றது சந்தி ரனை ; கோள்களையும் மீனென்றல் மரபு;
மைம்மீன் புகையினும் (புறநா. 117 : 1); –முதலையென்பது மற்றொரு பொருள்.
கானம் – பாட்டு.
சதிரிள மாதர் தமகீகிரங்கு வீர்நெஞ்
சதிரிளமா தர்கீகிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக்–180-
சதிரிளமாதர் – இத்தலத்திலுள்ள தளிப்பெண்டுகள்-
இப்பெயர், சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது(திருவாய்மொழி, 2.10: 2) என்பதிலும் காணப்படும்.
நெஞ்சு அதிர் இளமாதர்க்கு இரங்க ஒண்ணாதோ.
கொட்டத்து வெண்பால் குனிந்துகறப் பார்முலையில்
விட்டுக் கறப்பதையும் விட்டீரோ-கிட்டப்போய்–181-
கொட்டத்து – பால்கறக்கும் பாதீதிர தீதில்.
கன்றை விட்டுக் கறப்பதையென இயைக்க.
மென்பா றெறித்த வியன்முலையைப் பாற்குடமென்
றன்பா லெடுத்த தறியீரோ-மின்போல்வார்–182-
எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். (பி-ம்.) எடுப்பதறியீரோ,
செவ்விதழின் மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல்
அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை–183-
செவ்வி தழை – அழகு தழைத்த. (பி-ம்.) யுண்பார்போல்.
குன்றன் றெடுத்தீர் குளிருமமு தங்கடைந்தீர்
சென்றன்று பாம்பினடஞ் செய்தீரே-என்றென்று--184-
குன்று – கோவர்தீதன மலையை.
அமுதங்கடைந்தீர் : ஆரமுதுகடைந்த வங்கையான் -என்றார் முன்னும்; 73.
பாம்பில்-காளியன் தலையில்.
—————
அழகர் சோலைமலைக்கு மீளுதல்
கொண்டபஞ் சாயுதன்மேற் கொள்கை பெறத் தேனூர்
மண்டபஞ் சார்வாய் வலங்கொண்டு-பண்டை–185-
தேனூர் – மிகப் பழையதோர் ஊர் ;
ஐங்குறு நூற்றிலும் இப்பெயர் வந்துள்ளது ;
தேனூர் வெற்றிலையும் மானூர்ச் சுண்ணாம்பும் – என்பது ஒரு பழமொழி.
விரசையுடன் வைகுந்த வீடுமிது வென்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான்-வரிசை–186-
விரசை – விரஜாநதி ; வைகுந்தத்திற்கு அருகே ஓடுவதோர் ஆறு.
வைகுந்த வீடு – வைகுந்தமாகிய ,முத்தி யுலகு.
புரசைமலை -கசேந்திரனாகிய யானையை.
உபசாரங் கொண்டருளி யோர்சிவிகை மீது
தபசாரஞ் சீபதியைச் சார்ந்தான்-இபமுண்ட–187-
தபசு ஆர் ௮ம் சீபதி – தவம் பொருந்திய அழகிய சோலை மலையை.
இபம்-இங்கே யானை யென்னும் நோய்–
தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோல் (சீவக. 232) என்பதன் உரையையும் ஒப்புமைப் பகுதியையும் பார்க்க.
—————-
தலைவியின் நிலை
வெள்ளிற் கனியானேன் வேதனை யீன்றவன்றான்
உள்ளிற் கனியானே யூர்ந்துவரும்-பிள்ளைமதி–188-
வெள்ளிற்கனி- விளாம்பழம்.
வேதனை யீன்றவன் -பிரமனைப் பெற்றவன், –துன்பத்தைக் கொடுத்தவன் ;
வேதனையும் பெற்று வெளி நின்று–என்றார் முன்னும் ; 70.
உள்ளில் கனியான் – மனத்தில் இரங் கான்.
பிள்ளைமதி – பிறை.
செவ்வை மதியோ திரைக்கடல் வாய்சிறிதோ
கொவ்வையித ழார்மொழிதான் கூற்றன்றோ-எவ்வமுறும்–189-
செவ்வை மதியோ என்றது பிறை கோணியிருப்பதை நினைந்து.
மொழி – பழிமொழி.
கூற்று- யமன், சொல்.
எவ்வம்-துன்பம்.
காற்றேரி னானுமொரு காலனன் றோவுருக்கி
ஊற்றாத சேமணியு மொன்றுண்டோ-வேற்றுக்–190-
காற்றேரினான் – தென்றற் காற்றாகிய தேரையுடையவன்.
ஒரு காலன் – ஒற்றைத் தேர்ச் சக்கரத்தை யுடையவன், ஓர் யமன்.
உருக்கி ஊற்றாத – வெண்கலத்தை உருக்கி ஊற்றப்படாத; –தன் ஓசையைக் கேட்டாரை உருக்கி ஊற்றத.
சே மணி – இடபத்தின் ‘கழுத்திற் கட்டிய மணி. உருக்கியூற்றாத சேமணி உண்டோ :
மெமுகான், றூ துலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி(குறுந். 155 : 3-4)
கிளை யோடு வாடிக் கிடந்தாலுஞ் சுட்டுத்
‘துளையாக் குழலுமுண்டோ சொல்லாய்-கிளியரசே–191-
வேற்றுக் கிளையோடு – வேறு மூங்கில்களோடு.
௬ட்டுத் துளையாக் குழல் – சுட்டுத் துளை செய்யப்படாத வேய்ங்குழல், தன் இசையைக் கேட்பவரைச் சுட்டுத் துளையாத குழல்.
என்கூடு பொன்கூடு மிந்த நிறத்தினால்
உன்கூடு மென்கூடு மொன்றுகாண்-என் கூட்டில்–192-
என் கூடு – என்னுடம்பு. பொன் – பசலை.
மாங்கனி யுண்டு வளஞ்சேர் செழுங்கொவ்வைத்
தீங்கனி யுண்டா சினியுண்டு-பாங்கிற்–193-
கொவ்வைத் தீங்கனியென்றது உதட்டை,
ஆசினி – பலா–இங்கு அதன் .பழத்திற்கு ஆயிற்று;
கொங்கைக்கு உவமை: –கொங்கைப் பலாப்பழத்தீயினொப்பாய் ?? (திருவா. நீத்தல்.)
(பி-ம்.) செழுங்கோவைத்.
குழையுமன முண்டுகுழம்பிய பாலுண்
டூழையே தெளிபாலு முண்டு-விழைவறிந்–194-
குழையும் மனம், குழையும் அனம்.
பால் – பகுதி, உண்ணும் பால்,
உழை – பக்கம்.
தூட்டுவே னுள் யுருப்பசியா யென்ன நலம்
காட்டுவேன்பட்டாடையாற்றுடைப்பேன்- கூட்டில்–195-
உருப்பசியே தாயே என்றுகூற, உருவம் பசுதீதிருப்பாயென்று யாவரும் சொல்ல. நலங்கு ஆட்டுவேன் : 61.
அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன்-அருகே–196-
ஆலத்தி- ஹாரத்தி;
அரசு, ஆல்; அதீதி யென்னும் மரப் பெயர்கள் தோற்றுதல் ஒரு நயம்.
நறை – நறும்புகை.
இளவெயிலிற் காய்வித் தெடுத்தொருகான் முத்தி
வளைபயில் கையின்மேல் வைத்துத்-துளபமணி–197-
முத்தி – முத்தங்கொண்டு : புதல்வர் பூங்கண் முத்தி -(புறநா. 41:14)
ஈசன் நிருநாம மெல்லாமென் போலுனக்குப்
பாசந் தொலையப் பயிற்றுவேன்-பேசென்றே–198-
பேசென்று பயிற்றுவேனேன இயைக்க.
————–
பிற பொருள் தூதிற் சிறவா வென்றல்
ஈடுபட்ட வெள்ளை யெகினத்தைத் தூ துவிட்டாற்
சூடுபட் டார்துணிந்து சொல்வாரோ- கூடுகட்டி–199-
ஈடுபட்ட – எனிவரவுபட்ட (தக்க. 61, உரை).
எகினத்தை -அன்னப் பறவையை.
சூடு – உச்சிக் கொண்டை : இஃது அன்னத்தின் தலையிலுள்ளது.
சூடுபட்டார் – சூடுண்டவரென்பது மற்றொரு பொருள்.
அன்பாய் வளர்த்ததா யார்க்குதவாகீ கோகிலந்தான்
என்பா லருள்வைத் தியம்புமோ-தன் பேர்–200-
வளர்த்த தாயார் – காக்கை,
கோகிலம் – சூயில்.
காக்கைக் கூட்டிலிருந்து வளர்ந்து இறகு முளைத்த பின் பறந்து போய் விடுதல் குயிலின் இயல்பு;
வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற் கேட்டில் கடிந்தாள் (சீவக. 1661)
உயிர்த்த பொழுதே நின் குரல்கே ளாமுன் ஓடிற் நீன்றதாய், நயதீதின் வளர்த்த தாய்குரல்கேட்டலுமே நடுங்கத் துரந்ததால் (பிரபு. பிரபுதேவர் வந்த. 63)
அரியென்று சொன்னா லளியென்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ-விரகஞ்செய்–201-
அரியென்று……சொல்லும் : என்றது வண்டு குழறு மென்ற படி;
முதுவண் டினந்தான் முடிச்சவிழ்தீ தாலும் மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ
அளிப்பிள்ளை வாய்குழறும் என்றார் முன் னும்; 35) 46.
அரி- அளியென்னும் இரண்டும் வண்டின் பெயர்கள்.
அரியென்பது திருமால் பெயர் ; அதைக் கூடச் சொல்லத்தெரியா தென்பதும்,
அரிச்சுவடியிலே முதல் வார்த்தையாகிய அரியென்பதே தெரியா தென்பதும் வேறு பொருள்;
அரியென்றெங்கள், தாலத்தின் மீதெழுதச் சமர்தீதி லாரோ (அழகர் கலம். 6).
விரகம் – பிரிவால் உண்டாகும் துன்பம்.
வன்கால திக்கின் மலைவா யிருக்கின்ற
தென்காலு மென்காதல் செப்புமோ-பொன்காதல்–202-
காலதிக்கு – தெற்கு; காலன் – யமன். .துன்பத்தைச் செய்வா
ரோடு தொடர்புடையதென்பதைக் காட்டத் தெற்கென்னாது காலதிக்கென்றாள்.
மலைவாய்- பொதியின் மலையின்கண், –மலைப்புடன்.
தென்கால் – தென்றற் காற்று.
பொன் – திருமகள்.
வண்டலையுநீ தாரான்முன் மாதரையெல்லாந்தூந்றும்
கொண்டலையுந் தூதுவிடகீ கூடுமோ-உண்ட-203-
தாரான் – திருமால்,
மாதரை எல்லாம் தூற்றும் – பெண்களை யெல்லாம் பழி கூறுகின்ற. –பெரிய பூமி முமுதும் துளியைத் தூற்றுகின்ற.
கொண்டலை – மேகத்தை,
படியேழுங் காக்கும் பரங்கருணை யான்முன்
கொடியோரும் போவாரோ கூறாய்-அடியார்கள்–204-
படி- உலகம்.
கொடியோர் – காக்கைகள், கொடுமையை யுடையவர் ;
காகத்தைத் தூது விடுதலுண்டென்பது வடமொழியிலுள்ள காக சந்தேசமென்னும் நூலால் விளங்கும்.
————-
கிளியின் தகுதி
அங்கிருந்தார்(கீர்த் னஞ்செய் வாயடுத்த நாச்சியார்
பங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாம்-எங்கிருந்து–205-
கீர்த்தனம் ; : குருகேயுன் னாக்குத்தான் கூழைநாக் கான, தரிகீர்த் தனத்தினா லன்றோ–என்றார் முன்னும் – 30.
நாச்சியார் – ஆண்டாள் இவர் கையிற் கிளியிருக்கும்.
வந்தாயென் றான்மா லிருஞ்சோ லையினிலிருந்
தெந்தா யுனைத்தொழவந் தேனென்பாய்-அந்தசீ–206-
சவுந்தர வல்லியெனுந் தற்சொரூ பிக்கும்
உவந்தலர்சூ டிக்கொடுத்தா ளுக்கும்-சிவந்த–207
சவுந்தரவல்லி : இத் தலத்துள்ள நாச்சியார் திருநாமம்,
தற் சொரூபி – அதே வடிவாயிருப்பவள்.
சூடிக்கொடுத்தாள் – ஆண்டாள்
கடுகிலே சங்கோபங் காணாம லென்மால்
வடுகிலே சொல்வாய் வகையாய்-அடுகிலே--208-
கடுகு இலேசம் – கடுகளவாகிய சிறுமைகூட.
மால் – மயல்.
வடுகு – தெலுங்கு. .
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதா னந்தரணி
கொங்கெடுக்குந் தாமங் கொடுவருவாய்-அங்கடுகீகின்–209-
அடு கிலேசம் கெடுப்பாய் – வருந்துகின்ற துன்பத்தைப் போக்குவாய்.
சச்சிதானந்தர் – அழகர்.
கொங்கு – தேன்; பூந்தாதுமாம்.
———–
அடையாளம்
ஓருகத்தி லாலாகி யோருகத்தி லேயரசாய்
ஒருகத்தி லேவில் லுவமாகி-ஒருகதீதிற்–210-
கிருதயுகதீதில் ஆலமரமாகவும்,
திரேதாயுகத்தில் அரச மரமாகவும்,
துவாபரயுகத்தில் பலாமரமாகவும்,
கலியுகத்தில் புத்திரஜீவி மரமாகவும் தருமம் விளங்கும் என்று இத்தலபுராணம் கூறும்.
இவர் மூன்றாம் யுகத்தில் வில்வமரத்தைக் கூறுகின்றார்.
புத்திர தீபமுமாய்ப் புங்கவர்கீகா றாந்தருவாய்ச்
சத்தி தருமோர் தருவுண்டு-மொய்த்த–211-
புத்திரதீபம் – ஒரு மரம்,
புங்கவர்க்கு – தேவர்க்கு. கற்பகங்கள் ஐந்தாதலின்,ஆறாந் தருவாய்- என்றார் ;
மூவரி னால்வரா முனி?? (கம்ப. மந்திரப். 5). என்பது போல.
ஒரு கோடி காவுண் டொருகோடி யாறுண்
டொருகோடி பூஞ்சுனையு முண்டு-திருமால்—212-
கா- சோலை.
அறங்காக்கும் யோகிகள்போ லல்லும்பகலும்
உறங்காப் புளிதானு முண்டு-திறஞ்சேர்–213-
உறங்காப்புளி-ராஜ கோபுரத்துக்கு வடக்கே பதினெட்டாம் படிக்கு எதிரில் இது முன்னிருந்த தென்றும்,
சில நாளைக்குமுன் கீழே விமுந்துவிட்டதென்றும் அந்த இடத்தில் இப்பொழுது பூஜை நிவேதனம் நடந்து வருகின்றனவென்றும் கூறுவர்.
குமுதவல்லியோடு திருமங்கை மன்னன் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தபோது வைக்கப்பட்டதென்பது கர்ண பரம்பரைச் செய்தி
யோகிகள் இரவும் பகலும் தூங்காதிருப்பர்.
அவர்போல் இலைகளை மூடாமல் எப்பொழுதும் விரித்தே – இருக்கும் புளியை உறங்காப்புளி யென்பர்.
திருமால் அறம் – ரீவைஷ்ணவ தர்மம்.
தாமக னோடுறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்துபுகழ் பேசசீ-சதாகால–214-
மகனோடு பிதா உறையும் பெற்றி. பிதாமகன் – பிரமன்…
முந்திரமாய் வாழு முபேந்திரனங் கில்லையென
இந்திரனார் வந்தங் கினிதிறைஞ்சப்-பிந்திய–215-
சதாகாலமும்-எப்பொழுதும்.
திரம்-ஸ்திரம்.
உபேந்திரன் -அசுரரால் தேவர்களுக்கு உண்டாகும் துன்பத்தை மாற்றுவதற்குத் திருமால்
உபேந்திரராக எருந்தருளி யிருக்கிறிரென்பது மகாபுராண
வரலாறு.
இருகூல மும்பொரு மாநீ ரரங்கத்தி லெந்தை…புருகூத
னுக்குத் திருத் தம்பி யாகிப் புரக்கும் (திருவரங்கத்து மாலை, 16).
முதலிலுள்ள அங்கென்றது தேவலோகதீதைக் குறித்தது.
தம்பியர் மூவருக்குந் தானே யரசீந்த
நம்பி திருத்தாளை நம்பினோர்-வெம்பிறவித்–216-
மூவர் – பரதன், சுக்கிரீவன்) விபீடணன் ஆகிய மூவர்.
————-
ஸ்தலாசாரிய புருஷர்களும் பிறரும்
தேகம் பவித்திரஞ்செய் சீரங்க ராசபட்டர்
ஆகும் ப்ரசித்தரா மர்ச்சகரும்-மோகமுறும்–217-
பவித்திரம் – சுத்தம்.
சீரங்கராச பட்டர் : இவர் ஸ்தானிகராக முதலில் வந்தவர் ;-அர்ச்சக ஸ்தானிகத்தில் குரு பரம்பரையார்.
கங்குன் மலமாயை கன்மம் விளங்காமற்
செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்-சங்கையறச்–218-
கங்குல் – இருளைப் போன்ற. மலமும், மாயையும், கன்மமும்
அடுத்தவர்களுக்கு நீங்கும்படி ஓங்கிய திரிதண்டம். திரிதண்டம் ஸ்ரீ வைஷ்ணவ சந்நியாசிகளுக்கு உரியது.
சங்கை – சந்தேகம்.
செய்யுந் திருமா லிருஞ்சோலைச் சீயரென
வையம் விளங்கவரு மாதவரும்-பொய்யில்லா-219-
திருமாலிருஞ்சோலைச் சீயர் : ஸ்ரீ மணவாள மாமுனிகள் காலத்தில் இந்த ஜீய ஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு உரிய ஆசாரியர்கள் இப்போது கூடலழகர் சந்நிதியிலுள்ளனரென்பர்.
ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொருப
மானதீ பங்காட்டி வந்துநின்று-மேனாளில்–220-
முத்தமிழ்க்குப் பின்போவார் முன்போகப் பின் போன
அத்தன் நிருமாலை யாண்டானும்-பத்தியினால் –221.
முத்தமிழ்க்குப் பின்போவாரென்றது திருமழிசையாழ்வாருடைய மாணாக்கருள் ஒருவராகிய
கணி கண்ணர் செல்ல அவர் பின்னே திருமால் சென்றதை
சொல்கவிக்குப், பார முதுகடைந்த பாயலான் (72-3) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
திருமாலையாண்டான் – இவர் உடையவருடைய ஆசிரியர்களுள் ஒருவர்
இவர் பரம்பரையினர் தல்லா குளத்திற்கு வந்து விட்டனரென்பர்.
வையங்கார் வண்ணனையே வாழ்த்த வருந்தோழப்
பையங்கா ரென்னுமா சாரியரும்-மெய்யன்பாம்–222-
வையம் கார்வண்ணனையே வாழ்த்த–வையம் -உலகத்தார்.
தோழப்பையங்கார் : திருமாலையாண்டான் பரம்பரையிலிருந்து பிரிந்தவர்களுள் மூத்தவர்;
தோழப்பர் நற்றமிழ் சீர் பதிப்போன் நலமருவு மழகன் புரோகிதன் புனிதபத நாண்மலர் வமுத்துவேனே -(அழகர்.பிள்ளைத். பழிச்சினர்ப்பரவல், 14)
சிட்டர்க டேவர்க ளாகத் தினம்பரவும்
பட்டர்க ளாம் வேத பாரகரும்-விட்டுவெனும்–223-
சிட்டர்கள் – ஓழுக்கமுடையோர்.
வேதபாரகர்- வேதத்தைக் கரை கண்டவர்.
விட்டு – விஷ்ணு
சோதிகரு ணேக்கடற் றோன்றிக் கரசர
ணாதியுடன் வந்த வமுதாரும்-மூ துலகிற்–224-
கரசரணாதியுடன் – கைகால்களுடன்.
அமுதார் – இவருடைய திருவுருவம் நம்பிள்ளை சந்நிதியிலுள்ளதென்பர்;– இவர்பரிசாரக ஸ்தானிகர்.
றண்ணந் துழாயழகன் றங்குந் திருமலைபோல்
நண்ணுந் திருமலை நம்பிகளும்-உண்ணின்ற--225–
திருமலை – திருவேங்கடம்.
திருமலை நம்பிகள் :மடைப் பள்ளிப் பரிசாரக ஸ்தானிகர்.
மாமலை சோலை மலையையே நம்புதலாற்
சோலைமலை நம்பியெனுந் தூயோரும்-மேலை--226-
மாலை மலை – மயக்கத்தை அழிக்கின்ற ; திருமாலைத் தரித்த எனினுமாம்.
சோலைமலை நம்பி – சோலை மலையை நம்பியவரென்பது பொருள் ; இவர் சந்நிதி பரிசாரக கூடஸ்தர்.
விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தருஞ்சட கோபநம்பி தாமும்-பெருஞ்சீர்–227-
விரிஞ்சன் – பிரமன்.
சடகோப நம்பி – பரிசாரக ஸ்தானிக ருள் ஒருவர்.
இதன்பின்
மருவு திருமா லிருஞ்சோலை நம்பி
உருவின் மதனனையொப் போனும் –என ஒரு கண்ணின் மிகையாகக் காணப்படுகின்றது.
வரியெழுதிக் கற்றதிரு மாலிருஞ் சோலைப்
பிரியரெனுஞ் சீர்கருணப் பேரும்-கிரியிலிருந்–228-
வரி- எழுத்து.
திருமாலிருஞ்சோலைப் பிரியர் :இவர் ௧ருணீகர்களுள் ஒருவர்.
சீர்கருணப்பேர் – கணக்கர்.
தாளுங் கடவு எருளே துணையாயெந்
நாளுஞ்சீ காரியஞ்செய் நாயகரும்-தாள்வணங்க–229-
கடவுள் – அழகர்.
சீகாரியஞ்செய் நாயகர் – கோயிற் பணி விடை செய்பவர் ; இவர்களைக் கோயிற்கொத்தென்பர்.
———————
தூதுரைக்க வேண்டூதல்
ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்ப னப்பொமுதுன் _
வார்த்தை திருச்செவியில் வாயாது-சேர்த் யிலே–230-
திருவோலக்கம்- சூழ இருப்பாரோடு ஆதனத்தில் எழுந்தருளி யிருத்தல்.
வாயாது – பொருந்தாது.
சேர்த்தி – பள்ளியறை.
மெல்ல வெழுந்தருளும் வேளைபார்த் தவ்வேளை
சொல்ல வெழுந்தொருவர் சொல்லாமுன்-/வெல்லுமதன்–231-
மதன் – மன்மதன்.
அம்பலர் தூற்ற வடர்த்து வருமுன்னே ‘
வம்பலர் தூற்ற வருமுன்னே-கும்பமுனி–232-
அம்பு அலர் தூற்ற – பாணமாகிய பூவைத் தூவ.
வம்பலர் -அயலார்.
தூற்ற – பழிமொழிகூற.
கும்பமுனி- அகத்திய முனிவருடைய.
வாயி னுரையடங்க வந்த கடலடங்கத்
தாயி னுடையடங்கத் தத்தையே-நீயுரையாய்–233-
நுரை அடங்க – நுரைகள் ஒன்று பட. வாயில் வந்தவென இயைக்க.
அகத்தியமுனிவர் கடலை ஆசமனம் செய்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டது.
தாயின்: உரை – செவிலித்தாயின் அதிகாரச் சொற்கள்)
அனை வேங்கையினதட்ட (அழகர் கலம். 42).
தத்தையே -.கிளியே.
உன்பேர் சுவாகதமென் றோதுகை யாலுனக்கும்
அன்பேர் சுவாகதமுண் டாகுங்காண்-முன்பொருநாள்--234-
சுவாகதம் – கிளியின் பெயர்களுள் ஒன்று.
அன்பு ஏர் சுவாகதம் ; சுவாகதம் – நல்வரவு.
கோசலை கையிற் குருசி லுனைப்புகழ்ந்து
பேசி னுனைப்புகழ்ந்து பேசாரார்-நேசமுடன்–235-
குருசில் – இராமன்,
அவர் கிளியைப் புகழ்ந்து பேசியதென் றது, சீதை தன் கிளிக்கு யார் பெயர் வைப்பதென்று கேட்க,
கைகேயி யின் பெயரை வைக்கும்படி இராமன் கூறியதை நினைந்து;
என்னொ ரின்னுயிர் மென்கிளிக் கியார்பெய ரீகேன்,
மன்ன வென்றலு மாசறு கைகயன் மாதென்,
அன்னை .தன்பெய ராகென வன்பினொ டந்நாட்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய் (கம்ப. சூடாமணிப். 83)
எம்முடைய மாலை யிருபுயத்து மாலைகேள்
உம்முடைய மாலை யுதவீரேல்-அம்மைதிருக்--236-
மாலை – திருமாலை ;
நோக்கியென ஒரு சொல் வருவிக்க.
மாலை கேள் – பூமாலையைக் கேட்பாயாக.
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மினென்பாய்-நீதி–237-
கோதையார் – சூடிக்கொடுத்த நாச்சியார்.
தாதைஆர் – பூந் தாதுகள் நிரம்பிய.
திருவிழாக் காலத்தில் சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிய மாலை ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து இங்கே வருவது வழக்கம்.
தம்மின் – தருவீர்.
அடுப்பவர் யாவர்க்கு மாடித் தியாகம்
கொடுப்பவ னில்லையென்று கூறான்-தடுக்கும்–238-
ஆடித் தியாகம் : அழகருக்கு: ஆடிமாதத்தில் முன்பு பிர மோத்ஸவம் நடைபெற்று வந்ததென்பர்.
அருமாலை நீக்கு மழகன் புயத்து
மருமாலை நீ வாங்கி வா.–239-
அருமாலை – போக்குதற்கு அரிய மயக்கத்தை.
மருமாலை -நறுமணமுள்ள பூமாலையை.
புயத்து மரும் மாலையென்று கொண்டு-திருத்தோளில் மருவிய மாலையெனலும் ஆம்.
அழகர் கிள்ளைவிடு தூது முற்றிற்று.
—————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply