ஸ்ரீ உறையூர் நாச்சியாரைப் பற்றி இது வரையில் கிடைத்த ஆதாரங்கள் ஐந்து
இவைகளில் ஸ்ரீ ரங்க நாதனுடைய பங்குனி உத்ஸவம் முழுவதும், அவர் ஸ்ரீ உறையூர் நாச்சியாரைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட விவரமும்
நன்றாய்ச் சொல்லப் படுவதால் அவை உள்ளபடியே இங்கு எழுதப்படுகன்றன.–
1. நிசுளாபுரி மாஹாத்மியம்
இந்த மாஹாத்மியம் காகிதத்தில் எழுதிய பிரதி ஒன்று தான் கிடைத்தது
சென்னையிலும் தஞ்சாவூரிலுமுள்ள ராஜாங்க புஸ்தக சாலைகளில் இது கிடைக்கவில்லை. மூன்று அத்தியாயமாயுள்ள இது பரீதாவி வருஷத்தில் ஸ்ரீரங்கம் கீதா பாஷ்யம் ரங்காசாரியரால் தமிழில் எழுதி அச்சிடப்பட்டிருக்கிறது. -இதிலுள்ளபடி. நாச்சியாரின் சரித்திரம் பின்வருமாறு-
1-ம் அத்யாயம் –
திரி சரனுடைய திரிசிர பர்வதமென்னும் திருச்சி மலைக் கோட்டையைச் சுற்றியுள்ள ப்ரதேசம்
கரன் என்னும் ராக்ஷஸனுடைய வாஸஸ் ஸ்தானமாய் காரண்யமாயிருக்தது —
அகஸ்தியர் கரனை வடக்கே அனுப்பி அவ்விடத்தை ரிஷிகளின் தபஸ்ஸுக்கு விரோதமில்லாமல் செய்தார்.
2-ம் அத்,–
பிரம்மா, விஷ்ணு, சிவன்–இம் மூவரில் யார் பெரியவர்–என்று அறிவதற்காக பிருகு மஹரிஷி காலையில் சிவனிடம் போனார்.
அவர் பார்வதியோடு கிரீடித்துக் கொண்டு ரிஷிக்குத் தரிசனம் கொடுக்க: வில்லை.
ரிஷி பிரம்மாவினிடம் போய், அவர் கர்மானுகுணமாக ஸ்ருஷ்டி செய்து கொண்டே யிருப்பது கண்டு
அவரும் பரவஸ்து வல்லவென்று நிச்சயித்து,ஸாயங் காலம் விஷ்ணுவினிடம் போனார்.
விஷ்ணு பிருகுவை உபசரித்து, வந்த காரியம் வினவுகையில், தனியாய்த். தெரிவிக்க வேண்டுமென்றார் ரிஷி.
எல்லாரும் அப்பால் செனறார்கள். காந்தனோடு எகாந்தமாயிருக்கும் ஸமயம் ௮து தானென்று கண்ட லக்ஷ்மி பிருகுவை அப்பால் போகச் சொன்னாள்.
பிருகு கோபித்துக்கொண்டு, மனுஷிய ஜாதியில் பிறப்பாய் என்று சபித்து, விஷ்ணுவே பர தத்வம் என்று சொல்லிக் கொண்டு. போனார்,
லக்ஷ்மி ரிஷியின் சாப்த்தினால் மிகவும் கவலைப். பட்டாள்,
விஷ்ணு–பிருகு சாபம் தப்ப முடியாது, பூலோகத்தில் பிறந்திரு, நானும் அங்கே வந்து உன் னைக் கலியாணம் செய்துகொள்கிறேன்.
கொஞ்ச நாள் பூலோகத்திலிருர்து இங்கே வருவோம்.
லக்ஷ்மி கேவலமான மனுஷ்யனுக்கு நான் எவ்விதம் பிறப்பது
விஷ்ணு–கராஸூரனை அகஸ்தியர் வடக்கே அனுப்பிக் கராரண்யத்தை ரிஷி வாஸத்துக்குத் தகுதி யாக்கிய பிறகு,
சோழ. ராஜனான தர்மவர்மா என்னும் பக்தன் கும்ப கோணத்தை விட்டுக் காவேரியின் தென் கரையில் நகரம் ஸ்தாபித்து
தன் பத்தினி நிசுளையின் பெயரால் நிசுளாபுரி எனப் பெயரிட்டு அரசு செலுத்துகிறான்
அவனும் மனைவியும் ஸந்ததி யில்லாக் குறையினால் லக்ஷிமீ தந்த்ரம் என்னும் சாஸ்திரத்தின்படி உன்னைப் பூஜிப்பார்கள்,
நீ அவர்களுக்குப் பெண்ணாய்ப் பிற–நானும் அங்கே வருகிறேன்.
3-ம் அத்–அப்படியே நிசுளாதேவியின் கர்பத்தில் சித்திரை, சுக்ல துவாதசி , உத்தரம்-கூடிய வெள்ளிக் கிழமையில் லக்ஷ்மி அவதரித்தாள்.
அவளுக்கு வாஸ லக்ஷ்மி எனப் பெயரிடப்பட்ட, .பிறகு சந்திர திலகன் என்ற புத்திரன் பிறந்தான்.
தர்ம வர்மா ரங்ககாதனிடம் உத்தமமான பக்தனாயிருக்தான்.
வாஸ லக்ஷ்மி ரங்க நாதனையே விரும்பிக் கலியாணம் செய்து கொண்டாள்
மீனாக்ஷி ஸூந்தரம் பிள்ளை எழுதிய உறையூர்ப் புராணம்
உறையூர் நாச்சியாரைப் பற்றியதல்ல வாகையால் இங்கு சேர்க்கப் பட வில்லை.
அது பஞ்சவர்ண ஸ்வாமி காந்திமதி யம்மன் விஷயம்.
2. திவ்ய ஸூரி சரிதம்
தர்ம வர்மாவின் வம்ஸத்தவனான நந்த சோழனுக்கு உறையூர் நாச்சியார் கிடைத்ததாகக் கோயிலொழுகு ;
தர்ம வர்மாவுக்குக் கிடைத்ததாக திவ்ய ஸூரி சரிதம்-7-ம் ஸர்கம். மற்றை விவரம் கோயிலொழுகு போலே.
உடையவர் காலத்தில் உத்தம நம்பி வம்சத்தில் இருந்து கருட வாஹன பண்டிதரால் ஆழ்வார் ஆசார்யர்களின்
சரித்ரம் இந்தக் காவ்யமாக எழுதப் பட்டது.
3- கோயிலோழுகு
“ நிகளாபுரியிலே தர்ம வர்மாவின் வம்சரான நந்த சோழன் ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் பகுகாலம் அநபத்யனாயிருந்து
ஸ்ரீரங்க நாயகரிடத்தலே ௮திப் பிரவணனாய் தபஸ்ஸைப் பண்ணி, அந்த தபோ பலத்தினாலே ஒருநாள் தாமரை ஓடையில்
தாமரைப் பூவிலே ஒரு சிசுவாக ஸ்திரீ ப்ரஜை இருக்கக் கண்டு, அந்த ராஜா ஹ்ருஷ்டனாய், அந்தக் குழந்தையைத்
தம்முடைய கிருஹத்திலே கொண்டு வந்து கமல வல்லி யென்று நாம கரணம் பண்ணி வளர்க்குமிடத்தில்,
அந்தக் குழந்தையும் வளர்ர்து பெரியவளாய் ஒத்த பெண்களுடனே விளையாடும் காலத்திலே,
ஒருநாள் தோழிகளுடனே லீலோத்யாநத்தில் புஷ்பாப௪யம் பண்ணுகிற ஸமயத்திலே,–
ஸ்ரீரங்கராஜர் குதிரை நம்பிரான் மேலே ஏறி யருளி பலாச தீர்த்தத்துக்கு (சியர் புரத்துக்கு) வேட்டை எழுந்தருளாகிறவர்.
அந்தக் கமல வல்லிக்கு அதி ஸுந்தரராய் விபவாவதாரமாக ஸேவை சாதிக்க, கமலவல்லி கண்டு மோஹித்து
மஹா பிரயத்னத்தினாலே தோழிமார் தேற்றத் தேர்ந்து , தன் விடுதியிலே வந்து உன்மத்தை போலேயிருக்க,
அந்த ராஜாவும் கமல வல்லியைக் கண்டு மன்மத விகாரம் என்று கணிசித்து ,
* உனக்கு ஆர் மேலே மனஸ்ஸு இருக்கறது *– என்று கேட்க ,கமலவல்லி தனக்கு * ஸ்ரீரல்கராஜன் அன்றியிலே ஒருத்தரிடத்திலேயும் மனஸ்ஸூ இல்லை;
தன்னை * ஸ்ரீரங்கராஜருக்குப் பாணி கிரஹணம் பண்ணுவியும்’–என்று சொல்ல,
ராஜாவும் ஸந்துஷ்டனாய் தனது மந்திரிகள் உடனே ஆலோசித்து , தம்முடைய குமாரத்தி கமல வல்லியை ஸ்ரீரங்க.ராஜருக்கு கன்னிகா ப்ரதானம்
பண்ணுவித்து பெண்ணைக் கோயிலுக்கு அனுப்பும் போது, ஸ்திரீ தனமாக முன்னூற்றுப் பதின்கலம் தங்க
அமுதுபடியும், அதுக்கு வேண்டின பருப்பமுதும், கொம்பஞ்சு கொடியஞ்சு கறியமுதும், அதுக்கு வேண்டின சம்பாரங்களெல்லாம்
தங்கக்தாலே பண்ணுவித்து அது களையும், ஸ்த்ரீகளுக்கு ஸமங்களமான நூறு பரிசாரிகைகளையும் கொடுத்தனுப்பி வைக்க,–
அத்தக் கமல வல்லியும் கோயிலிலே வந்து திரு மண்ணுக்குள்ளே-(திரு மணத் தூணுக்குள்ளே ) புகுந்து அத்ருத்யை யாக, -அத்தைக் கண்டு ராஜாவும் அதி ஸந்துஷ்டனாய்
அநபத்யனாகையாலே தம்முடைய ஸர்வஸ்வத்தையும் பெருமாளதீனம் பண்ணி,–
திரு மா மணி மண்டபங்களும், திருமதிள்களும், திருக் கோபுரங்களும், திரு தந்தவனங்கள் முதலானதுகளையும் கட்டிவைத்து
தம்முடைய பட்டணமான உறையூரிலேயும் தம்முடைய குமாரத்தியையும் அதி ஸுந்தர ரூபத்தினாலே
வஸீ கரித்தபடி யாலே அழகிய மணவாளப் பெருமாளையும் பிரதிஷ்டிப்பிக்து,
விமான கோபு மண்டப பிரகாராதிகளையும் விஸ்த்ருதமாகக் கட்டி வைத்து அனைத்து அழகும்
கண்டருளப் பண்ணிக் கொண்டி ருந்தான்.”
4. லக்ஷ்மீ காவ்யம்
இது உறையூர் நாச்சியார் விஷயமாயும் ரங்கநாதன் விஷயமாயும் ஏற்பட்ட காவ்யம். இது உத்தமநம்பி திரு மலாசாரியரால் எழுதப்பட்டது.
இவர் தன் பெயரையும் வம்சத்தையும் ஒவ்வொரு ஸர்கத்தின் முடிவில் முத்ரையாகச் சொல்லுவது தவிர இரண்டு மூன்று இடங்களிலும் சொல்லுகிறார்.
ஸ்ரீரங்கத்திலிருந்த பூர்வாசாரியர்களையும், கைங்கர்ய பரர்களையும் சொல்லும் கவி தன் வம்சத்தில்
தனக்கு முன் தன்னைப் போலொரு காவியம் எழுதின திவ்ய ஸூரி சரித்ர காரைச் சொல்லவேயில்லை. உறையூர் திருப்பாணாழ்வார் அவதரித்த இடமென்றும் இவர் சொல்ல வில்லை.
இதில் கந்தாடை ராமானுஜ அய்யங்காரைப் பற்றிச் சொல்லுவதால் கவி ௮வர் காலத்துக்குப் பிற்பட்டவராவார்.
இந்தக் காவியம் இருப்பதாக குரு பரம்பரையிலிருந்து தெரிந்து சேடினதில் பிராசீன வித்யா பிருஹஸ்பதி
கும்ப கோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சடகோப ராமானுஜாசாரியாரிடத்திலும், சென்னையிலும், அடையாரிலும் இருப்பதாகத் தெரிந்தன,.
இதையே வெகு நாளாகச் தேடிக் கொண்டிருந்த திவான் பஹதூர் ஸ ர். டி. தேசிசாரியாரிடம் தெரிவித்ததும்,
அவர் சடகோப ராமானுஜாசாரியாருடைய புஸ்தகத்தை வர வழைத்து எழுதுவதற்கும், சென்னையிலுள்ள
புஸ்தகங்களோடு ஒத்துப் பார்ப்பதற்கும் வேண்டிய செலவைக் கொடுத்து சேகாம் செய்து அச்சிட்டுக் கொண்டிருக்கிறார்.
உறையூர் நாச்சியார். சரித்திரமூம் ரங்க நாதனுடைய ஆதி ப்ரம்மோத்ஸவமும் லஷ்மீ காவ்யகத்தில் வர்ணித்திருக்கும்
கிரமத்திலேயே சுருக்கமாய் எழுதப்படுகின்றன.
1-ம் ஸர்–
நித்ய ஸூரிகள், வியாஸர், ஆழ்வார்கள், பெருமாள் நாச்சியார், ஊர், கோபுரம் மண்டபம்,
கோயில், பூர்வாசாசியர்கள், கைங்கரிய பரர்கள்—வர்ணிக்கப் பட்டிருக்கிறார்கள் ,
[ விஷ்வக்ஸேனர், ஸுூத்ரவதி, கஜானனன், ஜயத்ஸேனன், ஸிம்மவக்தரன், காலன், ஆதிசேஷன், கருடன்,
ருத்ரை ஸூகீர்த்கிகள், பஞ்சாயுதங்கள், கெளஸ்துபம்,ஸரஸ்வதி , ஹயக்ரீவன், வியாஸர், நம்மாழ்வார்,
திருமங்கை யாழ்வார், உடையவர், பெருமாள், நாச்சியார், கிருஷ்ணார் ஜுனர்கள், துவஜ கருடன், கோபுர நர ஸிம்ஹன், கோபுர விநாயகர்,
கங்கை யமுனை, நான்முக கோபுரம், தாமோதர கோபுரம், ராமாயண மண்டபம், ஆயிரம் கால் மண்டபம்
சந்திரபுஷ்கரிணி, பார்த்தஸாரதி , சக்காத்தாழ்வான், வீர ஹனுமான், ஸ்ரீரங்க நாராயண ஜீயர், பராசர வியாஸ பட்டர்கள்,
பெரியநம்பி, மணவாளமாமுணி, வாதூல தேசிகர், எம்பார், திருவேங்கட தாதாசாரியார், பிரதிவாதி பயங்காம் அண்ணா,
கந்தாடை ராமானுஜ அய்யங்கார், உத்தம நம்பி,திருப்பணி செய்வார், பாகவத நம்பி, ஹரித கோத்ரிகளான பாரிகர்கள்?,
அரையர், திருமஞ்சனக் கரரர், புரோஹிதர்கள்,ஆரியபடர்கள், வைத்தியர்கள், புண்டரீக தாஸர்கள், கணக்குப்பிள்ளை,
சேர்வைகாரன், உறையூர் வல்லி கூட்டத்தாரான தாஸிகள்–இவர்கள் வர்ணிக்கப்பட்டிருக்கறார்கள்.]
2-ம் ஸர்–
ஆலிலையில் பள்ளிகொண்டவனும் கிருஷ்ணன் வரையுள்ள எல்லா அவதாரங்களையும் எடுத்தவனுமான
ஸர்வேஸ்வரனே ரங்கநாதனாக வந்து ஜகம் முழுவதையும் ஆனத்திப்பிக்கிறான்.
ரங்க நாதனுக்கு லக்ஷ்மி, பூமி, நீளை, ஆண்டாள்–நால்வர் தவிர, சேர சோழ பாண்டியர்–முதலான ராஜ புத்திரிகளும் பத்னிகளாயிருந்தார்கள்,
ரங்கநாதன் வஸந்த ருதுவில் காவேரி முதலிய இடக்களிலும், கிரிஷ்ம ருதுவில் குளங்களிலும்,
வருஷ ருதுவில் சயன கிருஹத்திலும் பத்னிகளோடு வினோதமாய்க் காலம் கழித்தார்;–
கார்த்திகை பூர்ணிமையில் திபோத்ஸவம் கண்டருளினார்;
ஹேமந்தத்தில் மார்கழி முதல் நாள் திவ்ய ஸூக்தியான திருப்பள்ளி யெழுச்சியினால் பள்ளியுணர்ந்து , ஆராதனம் கண்டருளி,
பிராம்மணர்களுக்கு நித்ய தானம் பண்ணி வேத பாராயணம் சேட்டு, சகீத ந்ருத்யங்களோடு மண்டபம் போய்,
நம்மாழ்வார் முதலானோர் களால் ஸேவிக்கப்பட்டு அவர்களின் ஸூக்திகளையும்,
அவற்றிலுள்ள சரித்ரத்தின் ௮பி நயத்தையும் ௮னுபவித்து ஸாயங்காலம்–நின்ற போது நாட்டியமும் போகும்
போது வாத்யமுமாய் உள்ளே எழுந்து அருளினார்
ஓன்பது நாளும் இப்படியே நடந்தது; பத்தாம் நாள் மாயா நாராயணீ ரூபம் தரித்தார், பதினோராம் நாள் வேத பாராயணம் கேட்டருளி,
வடக்குவாசல் வழியாகப்போய், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர் மூவரையம் பாதுகைகளால் அனுக்ரஹித்து
மண்டபத்திலிருந்து நம்மாழ்வாருடைய பிரபந்தத்தையும் ந்ருத்த கீதங்களையும் கேட்டருளி, கடைசி நாள்
அவருடைய சரணாகதியையும் அங்கீ கரித்தார்–
தை முதல் நாளின் உத்வைத்தையும் ஆயிரம் கால் மண்ட. பத்தில் உபய நாயகி மாரகளோடு மத்தியானம் வரையில்
அனுபவித்து உள்ளே எழுந்தருளினார்;- சிசிர ருதுவிலும் தகுந்த ஸுகங்களை அனுபவித்தார்,
[ திருக்கார்த்திகையன்று திருமுகப் பட்டையம் அனுப்புவதைக் கவி எழுதவில்லை.
மார்கழித் திருகாள் முதல் தேதி ஆரம்பமானது போலே எழுதப்பட்டிருக்கிறது ]
3-ம் ஸர்–
பெருமாள் சயனித் இருக்கையில் பாடகர்கள் வந்து–
தாமோதரன் கோபுரத்தில் வெயில் வந்து விட்டது; சந்தன மண்டபத்தில் வெயில் வந்து: விட்டது .” என்று பாடி. எழுப்பினார்கள்,
பெரு.மாள் எழுந்திருந்து காலைக் காரியங்களை நடத்தினார்,
பிரம்மா, சிவன், ஸுப்ரம்மணியன், இந்திரன், கணே
சன்–எல்லா தேவர்களும் வந்து பெருமாளை ஸ்தோத்திரம் செய்தார்கள்,
4-ம் ஸர்க்கம்
ரங்கநாதன் ஸந்தோஷித்து வந்த காரியம் வினவினார். உம்முடைய ஆஜ்ஞையினால். நான் ஸ்ருஷ்டித்த இந்த பரபஞ்சத்தின் ஷேமத்துக்காக.
சுபமான இந்தப் பங்குனியில் துவஜாரோஹண பூர்வகமாக யாத்ரோத்ஸவத்தை நீர் அனுபவிக்க வேண்டும்.
சோழ ராஜனக்குத் தபஸ்ஸினால் பிறந்த லக்ஷ்மியின் ௮ம்சமான லக்ஷ்மியை நீர் கலியாணம் செய்து கொள்ள வேண்டும்.
நீலீ வனத்திலிருக்கும் வியாக்ரா ஸுரனையும் வதம் செய்ய வேண்டும்.” என்று பிரார்த்தித்தார்பிரம்மா, பெருமாள் அங்கீ கரித்தார்.
எல்லாரும் அனுமதி பெற்றுக்கொண்டு சந்திர புஷ்கரிணியில் மாத்யாந்ஹிகம் பண்ணி, நாச்சியாரைத் தர்சித்துப் போனார்கள்.
பெருமாளுடைய ஆஜ்ஜையின் பேரில் விஷ்வக்ஸேனர் பங்குனி பரணியில் ௮ங்குரார்ப்பணம்
செய்து, கார்த்திகையில் ஹோமம், பலி, கருட பிர திஷ்டை முதலியவற்றை நடத்தி, பரிவாரங்களோடு நகர சோதனை செய்தார்.
[இப்பொழுது நகர சோதனை முன்னும் கருட ப்ரதிஷ்டை பின்னுமாக நடக்கிறது .]
5-ம் ஸர்–
முதல் திருநாள்–ரோஹிணியன்று நல்ல முஹுர்த்தத்தில் உத்ஸவத்தை ஆரம்பிப்பதற்காக ரங்கநாதன் புறப்பட்டு,
அன்னமூர்த்தி இருக்கும் மண்டபத்திலிருந்து ஸங்கீதங்களைக் கேட்டுக் கொண்டே த்வஜாரோஹணம் நடத்தி, மத்தியானம் உள்ளே போனார் ;
ஸாயங்கால்ம் உபய நாச்சி மார்களோடு பூச்சப்பரத்தில் எழுந்தருளி, உத்ஸவத்துக்கு வந்த ராஜாக்களோடும் சைன்யங்களோடும் புறப்பட்டு,
மூலை தோறும் ந்ருத் யங்களை அனுபவித்துக் கொண்டே வீதி வலம் வந்து, ஆரியபடாள் வாசலில் ராஜாக்கள் முதலானோரை நிறுத்தி உள்ளே போய்,
திருவந்திக் காப்பு கண்டருளி, யாகசாலையில் திரு மஞ்சனம் செய்து கொண்டு, ஹோமம் முதலியன ஆனதும் உள்ளே போனார்.
[அன்னமூர்த்தி துவஜாரோஹண மண்டபத்திலேயே இப்பொழுது பின்னமாய்க் கிடக்கிறார் .
பெருமாள் கண்ணாடி. யறை எழுந்தருளின தாகச் சொல்லப்படவில்லை.
கண்ணாடி. யறை பின்காலத்தில் சேர்க்கப்பட்டதென்று அந்தக் கட்ட டமே தெரிவிக்கிறது ]
இரண்டாம் திருநாள்–மிருகசீர்ஷத்தன்று காலையில் ரங்கநாதன் மேலூர் புன்னாக தீர்த்தத்துக்கருகே யுள்ள மண்டபத்துக்குப் புறப்பட்டு,
வழியே பத்ர காளி கோயிலையும் பயங்கரமான ஷுத்ர தேவதைகளையும் பார்த்துக்கொண்டே போய் சாயங்காலமம் திரும்பினார்
சந்திரசேகரன் :சுகப்ரியம் என்னும் கிராமத்துக்கு வந்து ௮னுக்ர ஹிக்கவேண்டும் என்று பிரார்த்தித்தான்.
பெருமாள் அங்கீ கரித்து ஸன்னிதிக்குள் எழுந்தருளினர்.[ சுகப்ரியம் என்னும் கிராமம் கிளியனூராயிருக்கலாம்.]
6-ம் ஸர். மூன்றாம் திருகாள்–திருவாதிரையன்று காலையில் ரங்கநாதன் குதிரையேறி வீரர்களோடும்,
அரசர்களோடும், பக்தர்களோடும் புறப்பட்டு மூங்கில்காடு வழியாகவும் காவேரிக் கரை வழியாகவும்
ஸு*ப்ரமண்யன் தபஸ் செய்த ஈசானமங்கலம் என்னும் கிராமம் போய், அங்கே தென்கரையிலுள்ளவர்களரல் உபசரிக்கப்பட்டார்
[ஸுப்ரம்மண்யன் சீயர்புரத்தில் தபஸ் செய்த விருத் தாந்தம் நம்மால் வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்ம்யத்தில் பார்க்க.
சீயர் புர கிராமத்துக்கே ஏற்பட்ட ஈசானமங்கலம் என்னும் பெயர் இப்பொழு ஈசான்ய மண்டபம் என்னு
மண்டபத்தின் பெயராக மாறியிருக்கிறது.
இங்கு அம்மையார் தண்ணீர்ப்பந்தல் விருத்தாந்தம் கவியினால் சொல்லப்பட வில்லை]
பிறகு, ஸ்நானம் செய்து கொண்டிருக்த உறையூர் நாச்சியாரின் கூந்தவிலிருந்து பூக்கள் விழும் காவேரியின் தென் கரை வழியாக
ரங்க நாதன் கொஞ்சதூரம் வந்து .காவேரியிலிறங்கி வடகரை போனார். அவர் கையிலிருந்த மோதிரம் ஜலத்தில் வீழ்ந்த்து ; அதை அவர் கவனிக்கவில்லை ;வடகரை போய், வடக்கு முகமாகவே நெடுந்தூரம் வினேதமாக சவாரி” செய்து, நேற்று அழைத்த சுகப்ரியம் என்னும் கிராமத்தில் சிறிது நேரம் தங்கித் திருவெள்ளறை வரையிலும் போய் நீலிவனம் (திருப்பைங்கிலி) சென்றார்
அங்கு இருந்த வியாக்.ராஸுரன் ரங்க நாதனைக் கண்டு ஒளிந்தான் -அங்கே வெகுநேரம் வேட்டையாடி,
கந்தஸ்தம்பேசருடைய ளெளம்ய ஜாமாத்ருமங்கலம் (திருமணத் தூண் நம்பிவசமுள்ள அழகிய மணவாளம் கிராமம்) ,
காவேரி தீரத்திலுள்ள வகுள தீர்த்தம் (திருவாசி), இவற்றைப் பார்வையிட்டுக்கொண்டே. ஊருக்குள் பிரவேசித்து மேல வாசல் வந்ததும் மழை வெகு
கடுமையாகப் பெய்தது .
மழை ஓயும் வரையில் பெருமாள் உத்தம நம்பி திருமாளிகையில் தங்கி உபசாரங்களைப் பெற்றுக் கொண்டு சந்நிதிக்குள் போய் வாஹனத்தை விட்டு இறங்கினார்
(பங்குனி மூன்றாம் திரு நாள் குகிரைவாஹனம் இந்த மழைக்குப்பிறகு உத்தமநம்பியால் பல்லக்காக மாறின
விவரம் கோயிலொழுகு 124-ம் பக்கத்தில் இருக்கிறது
7-ம் ஸர். நாலாம் திரு-புனர்வஸூ -*வன்று காலையில் ரங்கராசன் புறப்பட்டு உத்தம நம்பி பிராமணர்களுக்குக்
கொடுத்த ௮க்ரஹா.ரத்தின் வழியாக காவேரிக்கரையிலுள்ள கருட வாஹன மண்டபம் போய் உல்லாஸமாயிருந்தார்.
மத்தியானம் ஒரு தாஸி லஷமிக்குப் பெருமாளிடமுள்ள காதலை லக்ஷ்மீ நாடகத்திலுள்ளபடி.யே அபிநயித்தாள்.
அப்பொழுது ஸூர்ய வம்சத் வனான உறையூர் ராஜாவினால் அனுப்பப்பட்ட புரோஹிதர்
பெருமாளிடம் வந்து விக்ஞாபனம் பண்ணினார் :–
தர்மவர்மாவின் வம்சத்தவனான நிசுளாபுரி” ராஜா கரிகால் சோழன் சந்திரவம்௪த்தில் பிறந்த
தர்மதை என்னும் மனைவியோடு ஸந்தானத்துக்காக நெடுநாள் லக்ஷ்மியை தியானித்து தபஸ் செய்தான்.
லக்ஷ்மி பிரத்யகூமாகி * நானே உனக்குப்பெண்ணாய் பிறக்கிறேன்… – என்று அனுக்ரஹித்தாள்.
அப்:படியே கொஞ்சநாளில் பெண் குழந்தை பிறக்து லஷ்கி யெனப் பெயரிடப்பட்டஅு. லஷ்மி இப்பொழு கல்யாணப் பருவத்தில் இருக்கிறாள்,
அவளுடைய ஸ்வயம் வர த்துக்காக தேவர்களும் ராக்ஷஸர்களும் வந்து .இருக்கிறார்கள் –
ஸ்வயம்வரத்துக்கு உம்மை அழைத்து வருமாறு நான் ராஜனால் அனுப்பப்பட்டு வந்தேன்.
லஷ்மியும் தன்னுடைய தோழி ஹரிலேகையை- அனுப்பியிருக்கறாள். அவள் எல்லா விஷயங்களையும்:
சொல்லுவாள், ”–என்று சொல்லி விடையெற்றுச் சென்றார் புரோஹிதர்.
6-ம் ஸர்–ஹரிலேகை வந்தாள். அவன் விரும்பியபடி எல்லாரும் வெளியே அனுப்பப்பட்டார்கள்…-
அவள் ரங்கநாதனுக்கெதுரில் உட்கார்க்து ஏகாந்தமாய்ச் சொல்லுகிறாள்.
” சோழ ராஜ புத்ரியான லஷ்மி தோழிகளோடு
,காவேரியில் விளையாடிக் கொண்டி ருக்கையில், நீர் ஸைனயங்களோடு குதிரை மேலேறிப் போய்க் கொண்டி.ருந்தீர்,
உம்முடைய அழகைப் பார்த்து அவள் மோஹித்துக் இடக்கிறாள். உம்முடைய மோதிரம் காவேரி ஜலத்தில் அகப்பட்டது.
இந்த மோதிரத்தை உமக்குக் கொடுக்கச் சொன்னாள். ”–என்று . சொல்லி மோதிரத்தைக் கொடுத்தாள்.
அதில் லஷ்மி என்று எழுதி யிருந்தது கண்டு ரங்கநாதனுக்கு மோஹமமும் மகிழ்ச்சியும் மிகுந்தது
ஹரிலேகை–நான் லஷ்மியினிடம். என்ன “சொல்லுகிறது ?
ரங்கநாதன்–புஷ்யத்தன்று அவளுடைய ராஜ தானிக்கு வருகிறேன்.
ஹரிலேகை விடைபெற்று லஷ்மியினிடம் போனாள்.
9-ம் ஸர்-.-ரக்கநாதன் கருடவாஹனத்தில் ஏறிப் புறப்பட்டு வீதி வலம் வந்து ஸன்னிதிக்குள் சென்றார்.
10-ம் ஸர்–5-ம் திருநாள் –புஷ்யத்தன்று காலையில் நான்காம் ஜாமத்தில் ரங்கநாதன் ஸைன்யத்தோடும்
௮ரசர்களோடும் பல்லக்கிலேறிப் புறப்பட்டுக் காவேரிதாண்டி உறையூர் சேர்ந்தார்.
கரிகால் சோழன் வந்து அடி.பணிந்து ரங்கநாதனுக்கு உடத்தியானத்தில் இடம் கொடுத்து உபசரித்தான்,
ஸ்வபம் வரத்துக்கு தில்லை நடராஜன், ஜம்பூபதி, ஏகாம்பர நாதன், மத்யார்ஜுனேசன் முதலான எல்லா சைவ மூர்த்திகளும் வந்திருந்தார்கள்.
11-ம் ஸர்–ரங்கநாதன் ஸ்வயம்வர மண்டபத்துக்குப்போக சித்தமாயிருக்கையில் சோழ ராஜா வந்து அழைத்தான்.
ரங்கநாதன் யானை மேலேறிப் புறப்பட்டு வந்து எல்லா தேவர்களுக்குமிடையே ஆஸனத்திலமர்ந்தார்,i
12-ம் ஸர்–ராஜா மஹோதயன் என்னும் மந்திரியை அனுப்பி, பெண்ணை ஸ்வயம்வர மண்டபத்துக்கு வரவழைத்து,
ஒவ்வொரு க்ஷேத்திரத்திலிருந்து வந்திருக்கும் சிவா மூர்த்தி விஷ்ணு மூர்த்திகளின் பெயர் இருப்பிடம், வைபவம் முதலியவற்றைச் சொன்னான்.
[ஆண்டாள் ஸ்வயம்வரத்தில் திவ்ய ஸூரி சரிதக்காரர் 108 திருப்பதியிலுள்ள விஷ்ணு மூர்த்திகளை மட்டுமே வர்ணித்திருக்கறார்.
இந்தக் கவி சிவ மூர்த்திகளையும் சேர்த்து வர்ணிக்கிறார். ]
சோழராஜன் கடையில் ரங்க நாதனிடம் வந்து
அவருடைய பெருமையை வர்ணித்தான்.
லக்ஷ்மி எல்லாருக்கும் மத்தியில் ரங்க நாதனுக்கே மாலையிட்டாள்,
13-ம் ஸர்– ராஜா முறைப்படி உறையூர் வல்லிக் கும் ரங்கநாதனுக்கும் அக்னி ஸாக்ஷிகமாகக் கலியாணம் செய்து வைத்தான்.
அந்த ஸ்வயம் வரத்தில் அத்தனை மூர்த்திகளுக்கு இடையில் ரங்கநாதனையே அழகான மாப்பிள்ளையாக
உறையூர் வல்லி தீர்மானித்ததால் அவரும் அழகிய மணவாளனானார்.
ராஜா அநேக விதமான சீர்களையும் ௮னேகம் சேடிகளையும் கொடுத்து , ரங்கநாதனையும் உறையூர் வல்லியையும் ஊருக்கு அனுப்பினான்,
வழியில் வியாக்ராஸூரன் ஸைன்யத்தோடு சூழ்ந்து கொண்டான். விஸ்வக்ஸேன பரிகரமான கஜானனன் வியாக்ராஸுரனிடம் பேரய் “இரண்டு நாள்
முன்னரே உன்னை நீலி வனத்தில் வேட்டையாட வேண்டி யிருந்தது. நீ ஒளிந்துசொண்டாய், இப்போது
கலியாணமாகி பட்டணப் ப்ரவேசம் சேய்வதற்கு உன்னை பலியிடுகிறேன்.” என்று சொல்லி,
ரங்க நாதனை ஸாக்ஷியாக வைத்துக் கொண்டு, ராஷஸ ஸைன்யத்தோடு கோரமாக யுத்தம் பண்ணி, வியாக்ராஸூரனையும் அவ னுடைய ஸைந்யத்தையும் வதம் செய்து ஒழித்தான்.
(ரங்கநாதன் ‘ வியாக்ராஸுரனை வதம் செய்ததால் அவருக்கு ** வ்யாக்ராஸூர நிஷுதந – என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது .
ரங்கநாகன் ராமாவதாரதத்துக்கும் முன்னமே வியாக்ராஸுரனை வதம் செய்வதற்காகக் காவேரி வந்து
ரிஷிகளுக்கு தரிசனம் கொடுத்துத் திரும்பிய விவரம் நம்மால் வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்மியத்தில் காண்க, நெடுநாள் முன் நடந்த வியாக்ராஸுரன் வதத்தை உறையூர் நாச்சியார் கல்யாணத்தோடு சேர்த்தது யுத்த வர்ணனத்துக்கு அவகாசம கொடுப்பதற்கான கவி சாதுர்யம.
இந்து மதியைக் கல்யாணம் செய்து கொண்டு புறப்படும் ௮ஜ மஹா ராஜாவுக்கும் ஸ்வயம் வரத்துக்கு வந்த ராஜாக்களுக்கும்
யுத்தம் நடந்ததாக ரகு வம்ஈத்தில் காளிதாஸ கவி வர்ணித்திருக்கிறார்.
ரகுவம்சத்தையே அனுஸரித்து எழுதப்பட்ட திவ்ய ஸுூரி சரித்ரத்திலும் ஆண்டாள் ஸ்வயம்வரத்துக்குப் பிறகு
திருமங்கையாழ்வார் வேடர் பறியாக வந்து அ ரங்கநாதனை எதிர்த்ததாக வர்ணிக்கப்பட்டிருக்டுறது .
ஸ்வயம்வரத்துக்கு வந்த மூர்த்திகளை திவ்யஸூரி சரிதத்திலும் லக்ஷ்மீ காவியத்திலும் வாணித்தது கூட
இந்துமதி ஸ்வயம்வரத்தில் காளிதாஸ கவி ஒவ்வொரு ராஜாவையும் வர்ணித்ததை அனுஸரித்ததாகும்.
14-ம் ஸர் – ரங்க நாதன் பல்லக்கோடு வந்து சக்கரத்தாழ்வான் ஸன்னிதிக்கருகிலுள்ள வாஹன மண்ட
பத்தில் இறங்கி வேறு ஆஸனத்திலேறி உள்ளே போனார்.
[4-ம் திருநாள் கருட வாஹனம் வாஹன மண்டபத்தில்
இறங்கினதாகக் கவி சொல்லாமல் இன்று பல்லக்கு இறங்கினதாகச் சொல்லுறார்.
புஷ்யத்தில் கலியாணமெனறு கவி -வியக்தமாகச் சொல்லுவதால் பெருமாள் உறையூர் எழுந்தருள வேண்டியது 5-ம் திருநாள் .
இப்பொழுது 6-ம் திரு நாள் ஆயில்யத்தன்று எழுந்தருளுகிறார். உறையூர் நாச்சியார் பிறகு யாதாயினள் என்று கவி சொல்லவில்லை.]
15-ம் ஸர்–ஆறாம் திரு நாள் –ஆயில்யத்தன்று காலையில் பெருமாள் புறப்பட்டு தாமோதர கோபுரத்தின்
வழியாகப் பல்லவராஜன் தோட்டம் போய்,
ஸாயம் காலம் யானை வாஹனத்துக்கேற்ற உடைகளோடு வந்து யானையேற்று மண்டபத்தில் யானையேறி வீதி வலம் வந்து,
வாஹனத்திலிருந்கவாறே திருவந்திக்காப்பு கண்டருளி, யானையை விட்டிறங்கி உள்ளே போய்
திருமஞ்சனம் செய்து கொண்டார்.
[பெருமாளோடு யானை மேல் அர்ச்சகர் உட்காருவதும், யானையை விட்டிறங்கி ஆண்டாளும் பெருமாளும் மாலை
மாற்றிக் கொள்வதும் இங்கு சொல்லப்படவில்லை.
மணவாள மாமுனி ஸன்னிதிக்குப் பல்லவராயன் மடம் என்று பெயர்.
கோயிலை ஆஸ்ரயித்திருக்கும் தேசாந்தரி ஜியர்களுக்காக ௮து பல்லவ ராயனால் கட்டப் பட்டதென்று அங்குள்ள சிலா சாஸனமே சொல்லுகிறது .
இவனே கிழக்கே பல்லவ ராஜன் தோட்டம் என்று பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகத் தெரிகிறது. ]
16-ம் ஸர்—ஏழாம் திரு நாள் –மகத்தன்று ரங்க நாதன் .வஸந்த வேஷம் தரித்துக்கொண்டு உபய நாச்சிமாரோடு-சூர்ணாபிஷேகம் செய்து கொண்டார்.
எல்லோரும் ஒருவர்மேலொருவர் மஞ்சள் பொடியைக் தூவி விளையாடினர்.
Iரங்க நாதன் ஸாயங்காலம் புறப்பட்டுக் கொட்டார வாசலில் நெல் அளவு கண்டருளி, ப்ர தஷிணமாக நாச்சியார் கோயில் போய்,
இரு புறமும் வரிசையாய் நிற்கும் தாஸிகள் மூலம் திருவந்திக்காப்பு செய்து கொண்டு, ஸிம்ஹா ஸனத்தில் வீற்றிருந்து
திரு மஞ்சனம் முதலியவற்றை அனுபவித்து, பூந் தேரில் புறப்பட்டு, மூலை தோறும் நர்த்தனங்களைப் பார்த்துக்
கொண்டே விதி வலம் வந்து உள்ளே போனார்,
[இப்பொழுது .பூந்தேர் முன்னும் திருமஞ்சனம் பின்னுமாக நடக்கிறது. கவியின் காலத்தில் நடந்த விதம் எப்பொழுது மாறினதோ?
பாஞ்சராத்திரப்படி நடக்கிற ஜல க்ரீடை இங்கு சொல்லப்படவில்லை:]
எட்டாம் திரு நாள் –பூரத் தன்று காலையில் ரங்கநாதன் ஸ்ரீரங்கத்தின் எல்லையைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு
பத்ர . ஸுபத்ரர்கள் உள்ள (நாழிகேட்ட)) வாசல் வந்து, பஞ்ச கோபுரங்களையும் தாண்டி. வாமனாஸ்ரமத்தைப்
பார்த்துக் கொண்டே தென் திருக் காவேரியின் ௨டகரை சென்றார்.
[வாமனப் பெருமாளுக்கு ஸ்ரீரங்கத்தில் உபநயனம் நடந்ததாக பாஞ்சராத்ர பாரமேஸ்வர
ஸம்ஹிதையிலிருக்கும் விவரம் நம்முடைய ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில் காண்க.
கவி பஞ்ச கோபுரங்களுக்கும் வேளியே என்று கணக்கிட்ட ரீதியில் தெற்கு ராயகோபுரத்துக்கு உள்பட்ட
திருக் குறளப்பன் ஸன்னிதியே வாமனாஸ்ரமம் என்று தெரிகிறது .
இந்த ஸன்னிதி புராண ப்ர ஸித்தம் என்று கோயிலொழுகிலும் ‘சொல்லப் பட்டிருக்கிறது .]
ரங்கநாதன் காவேரிக் கரையிலிருந்து கிழக்கே போய், வடக்கே திரும்பி, ஸ்ரீரங்கத்துக்கும் மாதங்க
வனத்துக்கும் (திருவானைக் காவலுக்கும்) உள்ள எல்லைக் கல்லையும், வழியிலிருந்த ஜம்பூபதி ஸைன்யத்தையும், தாமோதர கோபுரத்தையும் பார்த்துக் கொண்டே கின்னர .கிம் புருஷ கந்தர்வர்கள் வஸிக்கும் ச்வேதாங்கணம் என்னும் பில்வ தீர்த்தம் போய், வடதிருக் காவேரி தாண்டி,
கதம்ப தீர்த்தத்தின் வழியாகத் திரு மங்கையாழ்வாருடைய மண்டபம் போனார்;
ஸாயங் காலம் குதிரை யேறிப் புறப்பட்டு, காவேரியில் விளையாடி, வடக்கு வாசல் வழியாக ப்ரவேசித்து, மூலை
களில் .ந்ருத்தங்களை அனுபவித்துக் கொண்டே விதி வலம் வந்து உள்ளே எழுந்தருளினார்.
[கதம்ப தீர்த்தம் திருமங்கை யாழ்வாருடைய ஸ்தானம்.-இன்னும் அவர் பேரிலேயே பட்டா இருக்றது .
எல்லைக் கரை ஆஸ்தான மண்டபம் லஷ்மீ காவ்யத்துக்குப் பிறகு கொள்ளிடத்தின் தென் கரையில் ஏற்பட்டதால்
பெருமாள் கதம்ப தீர்த்தத்துக்கு மாசி உத்ஸவத்தில் எழுந்தருளுகிறார்.
ஸ்ரீ ரங்கத் தாருக்கும் திருவானைக் காவலாருக்கும் நேர்ந்த எல்லைச் சண்டை இங்கு சொல்லப்படவில்லை யாகையால்
இந்தக் காவியத்துக்குப் பிறகு ௮து நேர்ந்து இருக்க வேண்டும்.]
நாள் 17-ம் ஸர்–9-ம் திரு –உத்தரத்தன்று காலையில்
பெருமாள் ரத யாத்திரை செய்து நாச்சியார் கோயிலுக்குப் போனார்.
[இப்பொழுது நாச்சியார் கோயிலுக்குப் போவது முன்னும் ரத யாத்திரை பின்னுமாய் நடக்கிறது,
நாச்சியார் கோயிலில் பிரணய கலஹம கத்யத்ரய கோஷ்டி முதலியன் இங்கு சொல்லப்படவில்லை. |
16-ம் ஸர்–ரங்கநாதன் திர்த்தவாரிக்காக வட திருக் காவேரி போய் வருண ஸூக்தம் சொல்லும் ரித் விக்குகளோடு ஸ்நானம் செய்தார்.
கூட வந்தவர்கள் எல்லாரும் ஸ்நானம் செய்தார்கள்.–ரங்கநாதன் ஸன்னிதிக்கு எழுந்தருளினார். ;
[இப்பொழுது பெருமாள் நாச்சியார் கூடவே இருந்து விடுவதால் தீர்த்த வாரிக்கு செல்வர் மட்டும் வட திருக் காவேரி எழுந்தருளுகிறார்.]
10-ம் திரு நாள் –ஹஸ்தத்தன்று மத்தியானத்து க்கு
மேல் பெருமாள் மண்டபத்தில் திருமஞ்சனம் செய்து
கொண்டு பாஞ்சராத்ர முறைப்படி புஷ்பயாகம் செய்தார்.
பிறகு மேள வாத்தியங்களோடு ஸப்த ஆவரணங்களையும் பிர,தஷிணம் செய்வதற்காக வெளியே போய்
ஐந்து பிரகாரங்களை ப்ரதக்ஷிணம் செய்து, ஆர்ய
படாள் கோபுரத்துக்கு நேராக வடக்கே பார்த்து
நின்று,
பூர்வ ராஜாக்களாலும் வர்த்தமான ராஜாக்களாலும் செய்யப்பட்ட கைங்கரியங்களைப் பற்றிய ஸ்ரீஸூக்தியைக்கேட்டு,
தீர்த்தம், துளஸி, சந்தனம், மாலை முதலியன அனுக்ரஹித்து தேவதை முதலானோரை உத்வாஸனம் பண்ணி,
பத்ர ஸுபத்ரர்கள் உள்ள கோபுரம் (நாழி கேட்ட வாசல்) தாண்டி, கருட விஷ்வக்ஸேனர்கள் இருக்கும் பிரகாரத்தையும், துர்கை கஜானனர்களிருக்கும் பிராகாரக்தையும் பிர தக்ஷிணம் செய்து கொண்டு ரங்கநாதன் உள்ளே எழுந்தருனினார்.
[பெருமாள் திருவிண்ணாழியையும் பீரதஷிணம் செய்த தாகவும் ஸப்த ப்ராகாரங்களிலும் மேள வாத்தியங்களோடும் எழுந்தருளினதாகவும் தெரிகிறது .
ராமானுஜ நூற்றந்தாதிக்காக மேளமில்லாமல் எழுந்து அருளுவதும், உடையவர் ஸன்னிதிக்கு எழுந்தருளுவதும் இங்கு சொல்லப்படவில்லை.
ஸப்த ஆவரணத்தோடு காவியம் பூர்த்தியாகிறது. ஆடும் பல்லக்கு சொல்லப்படவில்லை.]
————
5. ஸ்ரீரங்கராஜ சரித பாணம்
[பாணம் என்பது நாடகம் போலுள்ள ஒரு ரசனை, இது கெளண்டின்ய கோத்ரியான ஸ்ரீனிவாஸ கவியால் எழுதப் பட்டது .
இவருடைய காலம் தெரியவில்லை. இந்தப் புஸ்தகம் 1881, 1891-ம் வருஷங்களில் கிரந்த எழுத்தில் அச்சு இடப் பட்டிருக்கிறது.
ரங்கநாதன் ஒவ்வொரு நாயகியோடும் கிரீடித்துக் கொண்டு உறையூர் நாச்சியாரிடம் போய், அவளைக் கலியாணம் செய்து கொள்வதையும்,
அவளுக்குப் பெருமாளிடம் காதல் உண்டான விவரத்தையும், பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உண்டாகும் பிரணய ரோஷத்தையும் இந்தக் கவி வெகு ரஸமாகச் சொல்லுகிறார்.
இந்த கிரந்தத்தில் உள்ள கடைசி இரண்டு விஷயங்கள் மட்டும் இங்கு அவஸ்யமாதலால் எழுதப்படுகின்றன-
[ரங்க நாதன் உறையூர் வல்லியைக் கலியாணம் செய்து கொண்டு அவளை மடியில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது அவளுடைய தாய் நிசுளையும் பெரு மாளும் இவ்வாறு பேசுகிறார்கள்.]
நிசுளை–உம்முடைய கருணையினாலேயே நீர் எங்களுக்கு மணவாளப் பிள்ளையாக வாய்த்தீர், இவளுடைய செய்தியைச் செல்லுகிறேன் ; கேளும் :–
பதினெட்டாம் பெருக்கன்ரூ காவேரிக்குப் பொட்டும் புடவையும் விடுத்துக் கரையில் நின்ற உம்மழகைப் பார்த்து இவள் ஆசைப்பட்டாள்.
நீர் குறுத்துக்களால் அலங்கரிக்க பல்லக்கிகே ஏறி ஒரே மூச்சிலோடி, ஆண்டாளிடம் போய் அவளுடைய
மாலையை வாங்கிச் சூடியது கண்டு_-
**இவர் எனக்கு என்ன மாகக் கிடைப்பார்”,–என்று என் பெண் கவலை கொண்டாள்.
ரங்கநாதன்–இதற்கு முன்னேயே இவ்ளுடைய ஆசையை நான் தெரிந்து கொண்டேன், எப்போ என்றால்–
௮னேக கலச தீர்த்தங்களினால் நான் ஜேஷ்டாபிஷேகம் செய்து கொண்டு உபய நாச்சியாரோடு திருப் பாவாடை யன்று
ஏராளமான ப்ரஸாதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் இவள் என் மனதைக் கவர்ந்து விட்டாள்.
நிசுளை–பவித்ரோச்ஸவத்தில் 360 தரம் திருவாராதனம் செய்து கொண்டு ஆச்சரியமான முக காந்தி யோடு
நீர் பவிதர உத்ஸவ மண்டபத்தில் இருந்த படியே இவள் மனதில் பிரவேஸித்து விட்டீர்.
[பவித்ர உத்ஸவத்தன்௮ பெருமாள் யாக சாலையி லிருந்து உள்ளே எழுந்தருளுகிறார்.
கவியின் காலத்தில் மண்டபம் எழுந்தருளினார் போலத் தோன்று கிறது .]
ரங்கநாதன்–அந்த மாஸத்திலேயே உறியடி. யன்று நான் நாச்சிமார்களோடு வீதி வருகையில் இவள்
அடிக்கடி என்னை ஸந்தோஷ்மாகப் பார்த்தாலும் ஓரோர் ஸமயத்தில் பார்வை கோபத்துடனிருந்தது
நிசுளை–அடுத்த மாஸம் நவ ராத்ரியில் நாச்சியார் பூஜித்த குதிரைமேலேறி நீர் சமீ விருஷ்த்தினிடம்
போனதைப் பார்த்து இவள் மெய் மறந்தாள்
ஐப்பசி மாஸத்தில் தாஸிகளின் பாடலைக் கேட்டுக் கொண்டே ஊஞ்சலாடும் உம்முடைய பக்கத்திலிருந்த
நாச்சிமார்களைப் போலிருக்க இவள் ஆசைப்பட்டாள்,
ரங்கநாதன்–இத்தளையும் என்னுடைய பெருமையைக் கண்டு உண்டான ஆசை தானே!
நிசுளை–கார்த்திகை யன்று நீர் தீப ஸ்தம்பத்தைப் பார்த்து விட்டு, திரும்பவும் ஆஸ்தானத்திலிருந்து
கலியன் பாட்டுக் கேட்ட களிப்பால் ஆழ்வாருக்கு எல்லாவற்றையும் கொடுத்து ஒன்றுமேயில்லாமல் :
உள்ளே கடந்து போனதை நினைத்து நினைத்து இவள் தூங்கவேயில்லை.
ரங்கநாதன்–இக்த மாஸத்திலேயே உன் பெண் செய்த காரியத்தைச் சொல்லுகிறேன்
கைசிகத்தன்று நான் போர்வை சாத்திக்கொண்டு கைசிக புராணம் கேட்கையில் இவளைப் பார்த்தேன் ;
உடனே எனக்கு எல்லாம் நூதனமாகிப் புராணமென்பதே இல்லாமல் போயிற்று 1 .
நிசுளை–இன்னொரு ௮திசயம் கேளும். மரர்கழி
மாஸத்தில் நீர் சித்திர மண்டபத்தில் ஆழ்வார் ஆசாரியர்களோடு விற்றிருந்து
பெரியாழ்வார் பிரபந்தம் முதலாக பத்து நாளும் பானம் பண்ணின அமிருதத்தை எல்லாருக்கும் கொடுப்பகற்காக
தரித்துக் கொண்ட மோஹினி ரூபத்தைக் கண்டு இந்தப் பெண் வெட்டுப் போனாள்.
முக்த சேதனன் அர்ச்சிராதி மார்க்கமாய்ப் போவதை ஏகாதசி முதல் அனுகரித்து பக்தர்களை அநுக்ரஹிப்பதற்காக நீர்
ஆயிரக்கால் மண்டபம் போய் ஆழ்வாருடைய பிரபந்தத்தைக் கேட்டு அவரை ஆனந்திப் பித்த குணத்தையே இவள் பாடிக்கொண்டிருக்கிறாள்.
இதிலேயே நீர் எட்டாம் திரு நாள் குதிரை மேலேறி வையாளி விளையாடுகையில் கூட்டமாய் வந்து
எதிர்த்து வழிப்பறி செய்த கலியனை அனுக்ரஹித்ததைக் கண்டு இவள் ஆச்சரியப்படுகிறாள்,
இந்த உத்ஸவத்திலேயே நீர் நித்தியம் ராத்திரி ஏகாந்தத்தில் ஸங்கீதம் கேட்பதற்காகக் கூட்டமில்லாமல் உள்ளே போய்,
வீணை வாத்தியத்தைக் கேட்டுக் கொண்டே. படியேற்றம் கண்டருளினதைப் பார்த்து இவள் திகைத்துப் போனாள்
தை மாஸத்தில் முதல் திருநாள் நீர் உபய நாச்சியாரோடிருந்து மற்றை நாளில் ஹம்ஸம், ஸிம்மம், ௧ருடன், ஹனுமான், யானை–வாஹனங்களேறி,
ஏழாம் நாள் உபய நாச்சிமாரோடு சூர்ணாபிஷேகம் செய்து கொண்டு, எட்டாம் நாள் குதிரையேறி விளையாடி,
ஒன்பதாம் நாள் நாச்சிமாரோடு தேரிலிருந்ததைப் பார்த்து இவள் மோஹித்துப் போனாள்,
இந்தச் தேரன்று ராத்ரி நாச்சியார் கோயிலில் உபசாரங்களைப்பெற்று, உபய நாச்சியாரைத் தனித்தனியாகப் பல்லக்கில் வைத்து
நீர் வீதி வலம் வந்த வைபவத்தைக் கண்டு இவள் பூரித்துப் போனாள்.
கனுவன்று நீர் முத்து நகை பூண்டு மாலைப் போதில் குதிரை யேறி வேட்டை. விளையாடினதைப் பார்த்து இவள் மகிழ்க்தாள்.
மாசி மாஸக்தில் கதம்பம்,வகுளம், ஆம்ரம் முதலிய: தீர்த்தங்களில் உத்ஸவம் பண்ணிக் கடைசி நரள்
பெரிய தெப்பத்தில் நாச்சிமாரோடு நீர் விளையாடினது கண்டு இவளும் விளையாட விரும்பினாள்.”
[க,தம்பம் ஆம்சம்-இவ்விரண்டு தான் இப்பொழுது மாசி உத்ஸவத்தில் நடக்கின்றன.
தீர்தங்களில் உத்ஸவம் கடக்கும் விவரத்தை ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில் காண்க.]
பங்குனி உத்தரத்தில் நீர் உபய நாச்சிமார்களை கர்ப க்ருஹத்திலேயே விட்டு பெரிய பிராட்டியாரோடு
ஏக ஆஸனத்தில் இருப்பதைப் பார்த்து இவள் தானும் உம் மோடு வீற்றிருக்க விரும்பினாள்.
[கவி இங்கு பிரணய கலஹத்தைச் சொல்லாதது . இவளுடைய கல்யாணம் பூர்த்தியாகாததால்.]
இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது :–இந்த உச்ஸவத்திலேயே மூன்றாம் திருநாள் சத்ர சாமராதிகளோடும், ஸைன்யங்களோடும்,
பெரிய கூட்டத்தோடும், மஹா வைபவத்துடன் புறப்பட்டு அகண்ட. காவேரியில் நீர் அம்மையாரை நினைத்துக் கொண்டு அவளுடைய தண்ணீர்ப் பந்தலில் போய் உட்கார்ந்ததைப் பார்த்து.-
*இவ்வளவு இறு பிள்ளையாயிருப்பவர்க்கு அம்மையாரிடம் ஆசை உண்டாயிற்றே,”.- என்று சொல்லி என் பெண் சிரித்தாள்.
[லக்ஷ்மீ காவ்யக்காரர் சொல்லாத அம்மையார் தண்ணீர்ப் பந்தலை இந்தக் கவி சொல்லுகிறார்,]
சித்திரை மாஸத்தில் நீர் த்வஜ ஆரோஹணம் பண்ணி, நாளுக்கு மண்டபமாகப் போய், வித:விதமான
நைவேத்தியங்களை அனுபவித்து உச்ஸவம் செய்து கொண்ட அழகையும் என் பெண் பார்த்தாள்.
ரங்கநாதன்–௮ம்மா- நான் ஒன்று சொல்லுகிறேன்–இந்த மாஸத்திலேயே பச்சைக் கர்ப்பூரம் குங்குமப்பூ, கஸ்தூரி,
முதலிய வாஸனை த்ரவியங்களாலும் பூக்களாலும் சைத்யோபசாரம் செய்து சொண்டு, பானகம் முதலியவற்றால்
நான் ஸந்தோஷப்படுகையில் இவள் தினங்தோறும் என்னெதிரிலிருந்து எனக்கு நேத்ர ஆநந்தத்தைக் கொடுத்தாள்,
நிசுளை-வைகாசி மாஸத்தில் ஜலம், நிறைந்த: அகழி நடுவே மண்டபத்தில் நாச்சிமாரோடு ஊஞ்சலில்
நர்த்தனம் செய்யும் தாஸிகள் சூழ நீர் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து மெச்சினாள்.
ஒவ்வொரு உத்ஸவத்திலும் சந்த்ர புஷ்கரணியில் – நீர் தீர்த்வாரி நடத்துவதையும்,
பத்தாம் திரு நாள் .
புஷ்ட யாகத்துக்குப் பிறகு வீதி வந்து. உபகார ஸ்மிருதியாக உடையவர் ஸன்னிதி த்வாரத்துக்குப் போவதையும், படிப்புக் கேட்பதையும், கொடி யிறக்குவதையும்- பார்தது இவள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்,
[உடையவர் ஸன்னிதி விஷயம் வக்ஷ்மீ காவியக்காரரால் சொல்லப் படவில்லை.]
ஸ்லாமி ! ஒவ்வொரு உத்ஸத்திலும் ஏழாம் திரு நாள் உபய நாச்சிமார்களோடு நீர் நெல் அளவிட்டு
இவ்வளவென்று சொல்வதற்குப்போல நாச்சியார் கோயில் போனதைக் கண்டு இவள் மோஹித்தாள்..
ஒவ்வொரு உத்ஸவத்திலும் எட்டாம் திருநாள் நீர் எல்லையெல்லாம் சுற்றி.மண்டபத்திலிருக்து
குதிரை யேறிக் காவேரி வழியாய்த் திரும்பும் போது இவளும் கூட வந்தாள்,
[இத்தால் எல்லைக் கரை எழுந்து அருளுவது இப்போது
போலப் பங்குனியில் மட்டுமில்லாமல் ஒவ்வொரு யாத்ர உத்ஸவச்திலும் உண்டென்று தெரிகிறது -.
கோயிலுக்கு “வெளியே உள்ள் மண்டபத்துக்கு எழுந்து அருளுவது கூட இப்பொழுது கோயிலுக்குள்ளேயே ஏற்பட்டுவிட்டது .]
ஒவ்வொரு உத்ஸவத்துலும் முதல் நாள் ராத்திரி நீர் யாக சாலையிலிருந்து வந்து பெரிய பெருமாளுக்கெதிராக உட்கார்ந்து பிரதி ஸரம் கட்டிக்கொண்டு, வெகு வேகமாகத் திரும்பி எழுந்தருளின அழகைக் கண்டு இவள் ஆச்சரியப்பட்டாள்,
மத்தளம், தாளம், எக்காளம் முதலிய கோஷத்தோடும், ஸ்துதி பாடகர்கள் சொல்லும் கட்டியத்தோடும், கைகூப்பி நிற்கும் ஜனங்களினிடையில்,
சாமரங்களுக்கு நடுவே, திருமுகத்துக் குடையின் கீழ் நீர் திருவந்திக் காப்பு கண்டருளும்போது உம்முடைய முக
ஜோதியைப் பார்க்கப் பார்க்க இவளுக்கு அலுக்கவே யில்லை,
தீபாவளியன்றும் யுகாதியன்றும் நீர் சந்தன மண்டபத்திலிருந்து நம்மாழ்வார் முதலானோரை வெகுமதி யளித்.து அனுப்பி,
ஷண நேரம் தங்கி விட்டு உடனே உள்ளே எழுந்தருளின அழகையே இவள் பாடிக் கொண்டிருக்கிறாள்,
ஸங்கிராந்தி முதலான தினங்களில் மேனி முழும் நீர் சந்தனம் பூசிக்கொண்டு ஸஹஸ்ர தாரைத் தீர்த்தத்தினால்
திருமஞ்சனம் செய்துகொள்ளும் போது உம்மூடைய கன்னத்தின் அழகைக் கண்டு இவள் முத்தமிடப் புறப்பட்டாள்.
ரங்க நாதன்–உன் பெண் தன்னுயிராலேயே
என்னை அங்கீ கரித்து விட்டாள்.
நிசுளை–ஒன்று மாத்திரம் பெண் புத்தியால் கேட்டுக் கொள்கிறேன் : உம்முடைய மற்றை மஹிஷிகளைப் போல இவளையும் பாவிக்க வேண்டும்,
ரங்ககாதன்–இந்த ஸபையில் இப்படி. ப்ரதிக்ஞை பண்ணித் தருகிறேன் : இவள் எனக்கு லக்ஷ்மியைப் போல பிரியாத பத்தினி,
லக்ஷ்மியைப் போல இவளையும் தனிக் கோயிலில் வைத்து இவளுக்கு ஸகல போகம்களையும் கொடுக்கிறேன்.
வருஷத்துக்கு ஓருமுறை இந்த நகரம் வந்து ஒரு நாள் ‘இவளோடிருக்கிறேன்.
[ரங்க நாதன் ஸ்ரீரங்கம் வந்து நாச்சியார் கோயிலுக்குப் போய் கதவைக் தட்டிக் கூப்பிடுகிமுர்.] ்
கண்ணே யார் அங்கே? ரங்க ரஸிகன் ;
இங்கென்ன போம் 1] நான் உன்னுடைய காந்தன்;
அவர் இங்கில்லை–விளையாடப் போயிருக்கிறார் ;
உன்னை விட்டு அவர் எங்கே விளையாடுவது ?
பாக்யசாலியான ப்ரியை எங்கே யிருக்கிருளோ 7
உன்னைவிட அவருக்கு ப்ரியை யார்?
நிசுளைக்கு நாதனுடைய கன்யா ரத்னம் இருக்கிறாளே]|
[ரங்க நாதன் கதவைத் திறந்து உள்ளேபோய் நாச்சியாரிடம் உட்கார்ந்து . ௮வளை ஸமாதானப்படுத்தி னார். ]
நாச்சியார்–உம்முடைய மேனி மிக்க மிருது வென்று நான் கெட்டியாகக் கூட கட்டி யணைந்த தில்லை;-அழுத்தமாயும் முத்தமிட்ட தில்லை,
கொஞ்சம்கூட தயவேயில்லாமல் யார் உம்மை இப்படிக் காயப் படுத்தியது?
ரங்கநாதன்–அப்படி நினையாதே, நேற்று ராத்ரியே நான் ஊரைவிட்டு நீலீவனம் போய் ராக்ஷஸனைக்
கொன்று ரிஷிகளை ஸந்தோஷப்படுத்தி , இப்போது தான் வருகிறேன்.
சத்துரு புலியாயிருந்தாலும் இடம் காடாயிருந்தாலும் யுத்தத்தில் உடம்பெல்லாம்: காயமாயிற்று,
நான் நிஜத்தைச் சொல்லுகிறேன்.-பொய் சொன்னதுமில்லை ண: சொல்லட் போகிறதுமில்லை,
நாச்சியார்–(கடகடவென்று சிரித்துக் கொண்டு):
வியாக்ராஸூரனை இன்று கொன்றதும் நிஜம் ! நீலீ வனத்தில் முள் இருப்பதும் நிஜம் |
ரங்கநாதன்–நம்பிக்கை யில்லையானால் தேவர்களின்
முன்னால் ஸத்தியம் பண்ணுகிறேன்; நெருப்பைக் கையிலேந்துகிறேன்.
கொடிய பாம்பையும் கையில் பிடிக்கறேன்; ஸ்ரீயான நீதான் எனக்கு ப்ரியமானவள்.
நாச்சியார்–நீரே ஸத்யமான பரம புருஷன்.-
தேவர்கள் உம்முடைய துளி மாயையாலும் வஞ்சிக்கபடுவார்கள்.
உம்முடைய முகமே நெருப்பு, பாம்பே உமக்குப் படுக்கை, நீர் ஸ்ரீ ய : ஸ்ரீ -ஸ்ரீ க்கும் ஸ்ரீ யாய் இருப்பவர்யிருப்பவர்).
ரங்கநாதன்–பதில் சொல்ல இடமில்லாமல் பேசுகிறாளே ! குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டியது தான். “
(என்று மன்னிப்புக் கேட்கிறார். நாச்சியாரும் மன்னித்தாள்.)
————-
6–ஆதி ப்ரஹ்ம உத்ஸவம்
விபீஷணன் ரங்க விமானத்தை அயோத்தியில் இருந்து லங்சைக்குக் கொண்டு போகையில் மாத்யாந்ஹிகத்துக்காக புஷ்கரிணிக் கரையில் வைத்தான்.
அப்பொழுது உறையூரில் ராஜாவாயிருந்த தர்மவர்மா விபிஷணனை உபசரித்து இங்கேயே சில நாள் இருக்கும் படியாகப்.ப்ரார்த்தித்தான்.
மறுநாள் பிரம்மா ஏற்படுத்தின உத்ஸவத்தை நடத்த வேண்டிய தினமாகையால் லங்கைக்குப் போக விரும்பின விபீஷணன் தர்மவர்மாவின் பிரார்த்தனையினால் இவ்விடமே உச்ஸவத்தை நடத்தினான்.
(ஸ்ரீரங்க மாஹாத்மியம் பார்க்க) ஸ்ரீ ரங்கமாஹாத்மியத்திலும் லக்ஷ்மீ காவ்யத்திலும் சொன்ன
ப்ரகாரமே பங்குனி ரோஹிணியில் த்வஜ ஆரோஹணம் ஆகி பத்து நாள் உத்ஸவம் இப்பொழுதும் நடக்கிறது
இந்த உத்ஸவத்தின் விவரம் ஈருக்கமாகப் பின்வருமாறு,
1-ம் திரு–த்வஜாரோஹணம், பேரி தாடனம்,
உபய நாச்சியாரோடு திருவீதி , யாக சாலையில் பெருமாளுக்குத் திரு மஞ்சனம்,
பஞ்சகுண்டஹோமம், ஸன்னிதி வாசலில் யாத்ரா தானம்,
2-ம் திரு–பெருமாள் காலையில் வீதி எழுந்து அருளுவதில்லை. அம்பட்ட மண்டபத்துக்கு எழுந்தருளுவதாக ஐதிஹ்யம்.
ஆனால் கருட மண்டபத்திலேயே மண்டபப்படியாகி சீக்கிரம் உள்ளே எழுந்தருளுவார்.
இன்றைய மண்ட பப்படி.செலவு மட்டும் திருச்சி பரியாரி’களுடையது.
3-ம்திகு–சீயர் புரத்துக்காக ராத்ரியே பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு ப்ரதக்ஷிணமாய் வடக்கு வாசல் வழியாக மேலூர் போய்,
விருஷி தீர்த்தத்தில் தீர்த்தம் ஸாதித்து, கொள்ளிடத்திலிறங்கி -சிலையாத்தி போய், மீண்டும் கொள்ளிடத் திலிறங்கி, காவேரியையும் தாண்டி
இரவெல்லாம் வழி நடந்து, உதயம் சீயர் புரம் அம்மையார் தண்ணீர்ப் பந்தலில் தத்யோகனமும் மாங்காய் ஊறுகாயும் அழுது செய்து, மண்டபத்தில் ஆராதன நைவேத்தியம் : கண்டருளி,ஸாயங்காலம் புறப்பட்டுக் காவேரி தாண்டி,
மேலூர் வழியாக வந்து வடக்கு வாசல் பிரவேசித்து, வீதி எழுந்தருளி உள்ளே போவார்,
4-ம் திரு–பெருமாள் காலையில் பல்லக்கில் புறப்பட்டு கொள்ளிடம் இறங்கி , நொச்சியத்துக்கு மேற்கில்
ஸ்ரீரங்கராஜ புரத்திலுள்ள செட்டி ராயர் மண்டபத்திலிருந்து ஸாயங்காலம் கருட வாஹனகத்தில் புறப்பட்டு.
விதி யெழுந்தருளி உள்ளே போவார்.
5-ம் திரு–காலை சேஷ வாஹனத்தில் வீதி யெழுந்தருளி, மத்தியானம் சேஷ ராய மண்டபத்திலிருந்து
ஸாயங்காலம் கல்ப விருக்ஷத்தில் வீதி யெழுந்தருளி உள்ளே போய், விடியற்காலையில் புறப்பட்டு உறையூர் எழுந்தருளுவார்.
6-ம் திரு–உறையூருக்குப் பெருமாள் எழுந்தருளும்போது 10 மணியாகும். பெருமாள் பல்லக்கோடு சந்தன மண்டபத்தில் எழுந்தருளுவார்.
திருக்காப்பு சேர்த்து வெளியே தாஸிகள் பாட்டும் மேள வாத்தியமும் முழங்கும்.
ஸன்னிதிக்கெதிரில் பல்லக்கோடு எழுந்தருளின பெருமாள் பல்லக்கிலேயே நாச்சியாருக்கு நேராக எழுந்தருளி,
புது வஸ்திரம் . சந்தனம், திலகம், மாலை முதலியன சாத்திக் கொண்டு, களைந்த மாலையை நாச்சியாருக்கு அனுப்புவார்.
நாச்சியார் மாலை யணிந்து கொண்ட பிறகு, ஏகாந்த ப்ரஸாதம் நிவேதனமாகும்.
முதலில் பெருமாளும் பிறகு நாச்சியாரும் வெளி மண் டபத்தில் எழுந்தருளி, திருவாராதனம் முதலியன ஆகும்.
ராத்திரி 10 மணி வரையில் பெருமாள் எல்லாருக்கும் ஸேவை ஸாதித்து, நாச்சி யாரை உள்ளே அனுப்பிப் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் வந்து வெளியாண்டாளோடு மாலை மாற்றிக் கொண்டு உள்ளே எழுந்தருளுவார்.
7-ம் திரு–பெருமாள் காலையில் வீதி எழுந்தருளுவதில்லை; ,ஸாயங்காலம் உபய நாச்சிமாரோடிருந்து
ஜலக்ரீடை,, சூர்ணாபிஷேகம், நெல்அளவு–இவை ஆனதும் வீதி யெழுந்தருளி, நாச்சி யார் கோயிலில் திருமஞ்சனம் செய்து கொண்டு உள்ளே போவார்,
8-ம் திரு–பெருமாள் காலையில் திரு வீதி எழுந்தருளாமலே தெற்கு வாசல் வழியாகக் கிழக்கே போய்,
அசுவத்த தீர்த்தத்தில் தீர்த்தம் ஸாதித்து-வேலேந்து தாஸருக்கு ஆனை ஏற்றம் அனுக்ரஹித்து வழியில் அவ்வோ இடங்களில்
ஸ்தலத்தார்களையும் அனுக்ரஹித்து , பில்வ தீர்த்தத்தில் தீர்த்தம் ஸாதித்து எல்லைக் கரை மண்டபம் போய், எல்லைக் கரை ராமானுஜனையும் ஸ்ரீரங்க நாரயண ஜீயரையும் ௮நுக்ரஹிப்பார்;
ராத்திரி குதிரை வாஹனத்தில் புறப்பட்டுக் கொள்ளிடம் இறங்கி வடக்கு வாசல் வழியாக ஊருக்குள்
பிரவேசித்து , கோரதத்தினடி.யில் வையாளி யாகி உள்ளே எழுந்தருளுவார்.
9-ம் திரு. பங்குனி உத்தரம்–பெருமாள் காலையில் பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதி உள் திரு வீதிகளில் வலம் வந்து
நாச்சியார் ஸன்னிதிக்குள் போகையில் கதவுகள் சாற்றப் பட்டு, தாஸிகள் புஷ்பங்களையும் பழங்களையும் எறிந்து பெருமாளைத் தடுக்து வெளியே நிறுத்தி வைப்பார்கள்.
கதவு திறக்கும் போது பெருமாள் உள்ளே போவதும் கதவு சாற்றும் போ.து பெருமாள் பின்னால் ஒதுங்குவதுமாயிருக்கும்.
பெருமாள் நாச்சிமார்களுக்கு ஸமாதானம் பண்ணி வைப்பதற்காக நம்மாழ்வார் வருவார்.
பெருமான் தான் சொல்ல வேண்டியவைகளை அரையரிடம் சொல்லி ஆழ்வாரை மத்தியஸ்தமாகக் கொண்டு நாச்சியாரிடம் தெரிவிப்பதற்காக இருவரையும் அனுப்புவார்,
அரையர் ஆழ்வாரோடு உள்ளே போய் நாச்சியாருடைய பரிகரமான பண்டாரியினிடம் பெருமாள் சொன்னதைச் சொல்லி
பண்டாரி சொல்லும் நாச்சியார் வார்த்தையைப் பெருமாளிடம் – ஆழ்வாரோடு வந்து சொல்லுவார்,
பெருமாள் சொல்லுவது அஞ்சு வார்த்தை, நாச்சியார் சொல்லுவது அஞ்சு வார்த்தை,
இந்தப் பத்து வார்த்தைக்குப் பத்து பாட்டு வெகு ௮ழகாக முன்னோரான அரையர்களால் செய்யப்பட்டு இப்பொழுதும் சொல்லப் படுகிறது.
பாட்டு அரையர்களிடமே இருக்கிறது,–வார்த்தை மட்டும் * மட்டையடி” என்னு விகாரமாகப் பெயர் பெற்ற புஸ்தகமாய் வெளியாயிற்று, அத்த வார்த்தை பின் வருமாது :—
நாம் உத்ஸவார்த்தமாகப் புறப்பட்டருளி, திரு வீதிகளெல்லாம் வலம் வந்து தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க,
ப்ராம்மணர்களெல்லாரும் ஸ்தோத்திரம் பண்ண,—இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்தில் வந்தால் ,
தாங்களெப்போதும் எதிரே விடை கொண்டு திருக் கை கொடுத்து, உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய், திவ்ய ஸிம்மாஸனத்திலேறி யருளப் பண்ணி, திருவடி விளக்க, திரு வொத்து வாடை சாத்தி, திருவால வட்டம் பரிமாறி, மங்களாலத்தி கண்டருளப் பண்ணி, சுருளமுது
திருத்தி ஸமர்ப்பித்து , –இப்படி ௮னேக உபசாரங்களெல்லாம் நடக்குமே.
இன்றைக்கு நாமெழுந்தருளின விடத்திலே திருக் காப்பு சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக் கொண்டு, திருச் சேவடிமார்கள் கைகளாலே
பந்துகளாலும் பழங்களாலும் விட்டெ.றிவித்து , இப்படி யொரு நாளும் : பண்ணாத ௮வமானங்களை யெல்லாம் இன்றைக்குப் பண்ண வந்த காரியம்
ஏதென்று. கேட்டு வரச் சொல்லிப்–பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்,
தாம் எப்போதும் போல எழுந்தருளினதே மெய்யானால்—திருக் கண்களெல்லாம் சிவந்து இருப்பானேன்?
திருக் குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன் ?
கஸ்தூரி திருமண் காப்பு கரைந் திருப்பானேன் ? திருவதரம் வெளுத்திருப்பானேன் ? திருக் கழுத்தெல்லாம்
நக க்ஷதங்களா யிருப்பானேன் ? திருமேனியெல்லாம் குங்குமப்பொடிகளாக யிருப்பானேன் ?
திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமா யிருப்பானேன் ?திருவடிகளெல்லாம் செம்மஞ்சக் குழம்பா யிருப்பானேன்?
இப்படிப்பட்ட அடையாளங்களைப் பார்த்து . நாச்சியாருக்கு மிகவும் திருவுள்ளம் கலங்கி யிருக்கிறது,
ஆன படியினாலே , உள்ளே யிருக்கிறவர்களை வெளியிலே விட வேண்டாமென்றுல், வெளியிலே யிருக்கிறவர்களை
உள்ளே விட வேண்டாமென்றும்– இப்படி, கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற ஸமயத்திலே உள்ளே விண்ணப்பம் செய்ய ஸமயமில்லை, ஆன படியினாலே நேற்றைக் கெழுக்தருளின விடத்திலே தானே இன்றைக்கும் எழுந்து அருளச் சொல்லி– நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்.
திருக் கண் சிவந்து இருப்பான் என் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரானபடியினாலே
கவிரி முடித்து, கல்கச்சை சட்டி, வல்லய மேந்தி,குதிரை நம்பிரான் மேலே ராத்திரி முழுவதும் நித்திரை
யின்றி ஜகத் ரக்ஷணார்த்தமாக ஜாக ரூகனாயிருந்த படியினாலே திருக்கண் சிவந்து போச்சுது .,
திருக் குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேனென்றால்–காற்றடித்து கலைந்து போச்சுது -, கஸ்தூரி திருமண் காப்பு கரைந்திருப்பானேனென்றால்–௮தி கடோரமான ஸுரிய கிரணத்தால் கரைந்து போச்சுது –திருவதரம் வெளுத்திருப்பானேனென்றால்-௮ஸூர நிரசனார்த்தம்
தேவதைகளுக்காக சங்கத் வானம் பண்ணின படியினாலேவெளுத்துப் போச்சுது .
திருக் கழுத்தெல்லாம் நக க்ஷதமாயிருப்பானே னென்றால்—௮தி ப்ரயாஸமான காடுகளிலே போகிற போது பூ முள்ளு கிழித்தது.
திருமேனி யெல்லாம் குங்குமப் பொடிகளா யிருப்பானேனென்றால்- தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷித்த படியினாலே புஷ்ப ரேணு படிந்தது. திருப் பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமா யிருப்பானேனென்றால்-ஸந்த்யா ராகம் போலே யிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாகசத் தோன்றுகிறது ,
திருவடி.கனெல்லாம் செம்மஞ்சக் குழம்பாயிருப்பானேனென்றால்–குதிரை நம்பிரான்
மேலேறி ௮ங்கவடிவமேல் திருவடிகளை வைத்துக் கொண்டு போனபடியினாலே திருவடிகள் சிவந்து போயின.
இப்படிப்பட்ட அடையாளமே யொழிய வேறில்லை.–ஆனால் போது கழித்து வருவானேனென்றால்–வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே திருமங்கை யாழ்வானென்பவன் ஒருவன் வந்து ஸர்வ ஸ்வாபஹாரத்தையம் பண்ணிக் கொண்டு போனான்,
அவனைச் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லித் திருவாபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு
போய் கருகூலத்தில் எண்ணிப் பார்க்குமிடத்தில் ௧னையாழி மோதிரம் காணாமல் போச்சுது.
அதற்காக விடிய பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம் வலம் வந்து, கணையாழி மோதிரத்தைக் கண்டு
எடுத்துக் கொண்டு மீள வாரா நிற்கச் செய்தே,௮ப்பொழுது தேவதைகள் பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு ஸேவிக்க வந்தார்கள்,
நாம் நம்முடைய பெண்டுகளன்றியிலே சூடுகிறது இல்லை யென்று நமக்கு முன்னமே வரக்காட்டி. நாமும் பின்னே எழுந்தருளினோம்.
ஆன படியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்
கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால்–விடிய’ பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி உறையூரிலே போய்,
மின்னிடை மடவார் சேரியெல்லாம் புகுந்து யதா மநோ ரதம் அனுபவித்து உண்டாயிருக்கிற அடையாளங்களெல்லாம்
திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும், அவ் வடையாளங்களையும் அந்யாதவாகக் கொண்டு, நாங்கள் ஏழைகளானபடி.யினாலே
இப்படிப்பட்டிருக்கிற வஞ்சந உக்திகளை யெல்லாம் நேற்றைக் கெழுந்தருளின விடத்தில் தானே
சொல்லிக் கொண்டு இன்றைக்கும் அங்கே. தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்.
நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டது மில்லை; காதாலே கேட்டதுமில்லை. துஷ்டர்களா யிருக்கிறவர்களும்
மனதுக்குச் சரிப்போனபடி சொன்னால் நீரும் அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக் கொண்டு நம்மையும் ஒரு நாளும் பண்ணாத அவமானன்களெல்லாம் பண்ணலாமா ?
நீங்கள் ஸ்த்ரீகளானபடி.யினாலே முன்பின் விசாரியாமல் பண்ணினீர்களாமென்ற அவமானம் உங்களுக்கே யொழிய நமக்குத் தேவை யில்லை.
ஆனபடியினாலே, நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே யழைக்கச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாசம்.
முந்தா நாள் அழகிய மணவாளப் பெருமாள் வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள் அதி ப்ரீதியுடனே
எதிரே விடைகொண்டு, திருக்கை கொடுத்து, உள்ளே யெழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய், திவ்ய ஸிம்ஹாசனத்திலே
ஏறி யருளப் பண்ணி, திருவடி விளக்கி , திரு வொத்து வாடை. சாத்தி, திருவாலவட்டம் பரிமாறினோம்.
அப்போது ௮தி௧ ஸிரமத்தோடே எழுந்தருளி யிருந்தார்.
ஆனால், இளைப்போ வென்று வெந்நீர்த் திருமஞ்சனம் சேர்த்து ஸமர்ப்பித்தோம்.
அதை நீராடினது பாதியும் நீராடாதது பாதியுமாக எழுந்தருளி யிருந்தார்,
ஆனால், இளைப்போவென்று திருவறைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து ஸமர்ப்பித்தோம், அதையும் எப்போதும் போல சாத்திக் கொள் ளாமல் ஏதோ ஒரு விதமாக சாத்தியருளினார்.
ஆனால், இளைப்போவென்று கஸ்தாரித் திருமண் காப்பு சேர்த்து ஸமமர்ப்பித்தோம். அதையும் எப்போதும்
போல சாத்திக் கொள்ளாமல் திரு வேங்கடமுடையான்
திருமண்காப்பு போல கோணாமாணாவாய்ச் சாத்தியருளினார்.
ஆனால், இளைப்போவென்று தங்கப் பள்ளயத்தில் அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து,
வர்க வகைகள் முதலானதுகளைச் சேர்தது ஸமர்ப்பித்தோம்.
அதையும் அமுது செய்தது பாதியும் அமுத செய்யாதது பாதியுமாய் எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போவென்று
சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்தோம். அசையும் ௮முது செய்யாதபடி தானே எழுந்தருளியிருந்தார். ஆனால், இளைப்போவென்று
திருவநந்தாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன் மேலே திருக் கண் வளரப் பண்ணி அடியோங்கள் திரு வடிகளைப் பிடித்துக்கொண்டிருந்தோம்.
தாம் வஞ்சகரான படியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை யுண்டாக்கி , எங்கள் கருகூலம் திறந்து, எங்கள்
ஸ்த்ரீ தனங்களான அம்மானை பந்து கழஞ்சி பீதாம்பரங்களையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. எழுந்தருளுகிறோமென்றும் சொல்லாதபடி. எழுந்தருளினார்.
அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள் ௮ச்சமுடன் திடுக்கிட்டெழுந்திருந்து, திருப்படுக்கையைப் பார்க்கு மிடத்தில்,
பெருமாளைக் காணாமையாலே கை நெரித்து வாயடித்து ௮ணுகவிடும் வாசற் காப்பாளரை யழைத்துக் கேட்குமளவில்,–
அவர்கள் வந்து , அம்மானை பந்து கழஞ்சு பீதாம்பாமான ஸ்திரீ தனத்தையும் கைக் கொண்டு, இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. யெழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள் –அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க
பரிஜனங்களாயிருக்கிற திருச்சேவடி.மார்களை யழைப்பித்தோம்.
அவர்கள் வந்து அடிபிடித்து அடிமிதித்துக் கொண்டு போனவிட த் திலே, உறையூரிலே கொண்டு போய் விட்டது .
௮ங்கே மச்சனியென்று ஒருத்திக்கு முறைமை சொல்லி, மற்றொருத்தியை மடியைப் பிடித்தும்
கச்சணி பொன் முலை கண்ணா லழைத்ததும், கனி வாய் கொடுத்ததும்,
கையில் நகக் குறி மெய்யங்கமானதும், கார் மேனி யெங்கும் பசுமஞ்சள் பூத்ததுமாகக்
கரும்புத் தோட்டத்தில் யானை ஸஞ்சரிக்கிறாப் போலே,. தேவரீர் ஸஞ்சரிக்கிறிர் என்று நாங்கள் உசிதமாகப்
போக விட்ட தூதியோடி அங்கே உள்ளபடி. வந்து சொன்னாள்.
உம்மாலே எங்கள் மனது உலை மெழுகாயிருக்றது -ஒன்றும் சொல்லாதே போம் போமென்று நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்.
ஒருவருக்கொருவர் ஸம்சயப்பட்டால், அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்திலுல் தீராமற்போனால், ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்.
அந்தப்படி ப்ரமாணம் பண்ணித் தருகிறோம். நாம் தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்.
ஸமுத்திரத்திலே முழுகுகிறோம். அக்நி ப்ரவேசம் பண்ணுறோம். பாம்புக் குடத்திலே கையிடுகிறோம்,
மழுவேந்துகிறோம். நெய்க் குடத்திலே கையிடுகிறோம். இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும் வாங்கிக்
கொண்டு, நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிச் சூட்டிக் கொண்டு, நம்மையும் உள்ளே யழைக்கச் சொல்லிப்
பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.
ஒருவருக்கொருவர் ஸம்சயப்பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற் போனால்: ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்.
லோகத்திலே ப்ராம்மணனுக்கும் ப்ராம்மணனுக்கும் வாக்கு வாதம் வந்தால் ப்ராம்மணன் ப்ராம்மணனைத் தாண்டிக் கொடுப்பான்.
தாம் தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்தீரே !
அந்த தேவகைகள் தம்முடைய திருவடிகளை எப்போ காணப் போகிறோம் ! எப்போ காணப் போகிறோம் ! –என்று ஸதா பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோம் என்றால் வேண்டா மென்பார்களா –
ஸமுத்ரத்திலே முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே !ப்ரளய காலத்திலே ஸகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து
ஒரு ஆலிலைத் தளிரிலே கண்வளர்ந்த உமக்கு ஸமுத்திரத்தலே முழுகிறது அருமையா ?
அக்நி ப்ரவேசம் பண்ணுகிறோமென்று சொல்ல வந்தீரே ! ப்ரம்மாவுக்காக உத்தர வேதியில் ஆவிர்ப்பவித்த தமக்கு அக்நியில் முழுகுகிறோமென்றால் அக்நி சுடுமா ?
பாம்புக்குடத்திலே கையிட்டுத் தருகிறோம் என்று சொல்ல வந்தீரே ! சென்றாற் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
என்று ஸதா ஸர்வ காலம் திரு வானந்தாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து இருக்கிற
தமக்குப் பாம்புக் குடத்திலே கையிட்டால் பாம்பு கடிக்குமா
மழுவேந்துகிறோ மென்று சொல்ல வந்தீரே! கோடி ஸூர்ய ப்ரசாசமான திருவாழியாழ்வானை ஸதா திருக்கையிலே தரித்துக் கொண்டி.ருக்கிற
தமக்கு ௮ப்ரயோஜகமான இரும்பு மழு வேந்துகிறது அருமையா?
நெய்க் குடத்திலே கையிடுகிறது அருமையா? இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்.ரமாணங்களை யெல்லாம் சரிப் போன விடத்திலே தானே
பண்ணிக் கொண்டு இன்றைக்கும் ௮ங்கே தானே யெழுந்த ருளச் சொல்லி நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்.
நாம் உச்ஸவார்த்தமாகப் புறப்பட்டருளி திரு வீதிகளெல்லாம் வலம் வந்து, தேவதைகள் புஷ்பவர்ஷம் வர்ஷிக்க,
ப்ராம்மணர்க ளெல்லாரும் ஸ்தோத்திரம் பண்ண, இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்தில் வந்தால்
தங்கள் எப்போதும் போலே ஆதரியாமல் படிக்கு அபராதங்களைப் பண்ணினோம் என்றீர்கள்.
நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதுமில்லை, காதாலே கேட்டதுமில்லை யென்று சொன்னோம்.
அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்.
ஆனால், ப்ரமாணம் பண்ணித் தருகிறோம் என்று சொன்னோம். -அத்தைப் பரிஹாஸ ப்ரமாணமென்று சொன்னீர்கள்.
இப்படி நாம் எத்தனை சொன்ன போதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு சற்றும் திருவுள்ளத்தில் இரக்கம் வராமல்,
கோபத்தாலே திருவுள்ளம் கலங்கத் திருமுகமண்டலம் கறுத்துத் திருக்கண்கள் சிவந்து இப்படி. யெழுந்தருளியிருந்தால் நமக்கென்ன கதி யிருக்கிறது?
௮ழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீரங்க நாச்சியார் ஸந்நிதி வாசலிலே தள்ளுபட்டுக் கொண்டிருக்கிறாராம் என்ற அவமானம் உங்களுக்கே யொழிய நமக்குத் தேவை யில்லை.
ஆன படியினாலே, நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே யழைச்கச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.
நாம் வருஷா வருஷம் அடமாயெழுந்தருளியிருந்து தமக்குச் சரிப் போன படி நடந்து போட்டு, பின்னும் இங்கே வந்து
நாமொன்று மறியோமென்றும், ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும்–பரிஹாஸங்களைப் பண்ணி இப்படிப் பட்டிருக்கிற
அக்ருத்யங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறீர்.-நாமானால் பொறுக்கிறதில்லை. நம்முடைய அய்யா நம்மாழ்வார் வந்து
மங்களமாகச் சொன்ன வாய் மொழியினாலே பொறுத்தோம். உள்ளே எழந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.
முதல் ஏகாந்தம்–நாச்சியாரால் அனுமதிக்கப் பட்டு பெருமாள் ஸன்னிதி வாசலில் எழுந்தருளி ஆழ்வாரை மரியாதை செய்து அனுப்புவார்.
உறையூரில் நடந்தது போலவே ஏகாக்தம், தளிகை நிவேதனம் நடந்து பெருமாள் பங்குனி உத்தர மண்டபம்
எழுந்து அருளுவார்.-நாச்சியாரும் பெருமாளிடம் போய் வீற்றிருப்பாள்,
இரண்டாம் ஏகாந்தம்– செல்வர் பெரிய கோயிலி.லிருந்து புறப்பட்டு வட திருக் காவேரியில் தீர்த்தம் ஸாதித்துப் பெருமாளிடம் வந்ததும்,
கத்ய த்ரயம்.ஸேவிக்கப்படும். -கத்ய த்ரயம் என்னும் கிரந்தம் இன்றைய தினமே அவதரித்தது,
கத்ய த்ரய சாற்று முறைக்காக இரண்டாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும் செல்வர் பெரிய கோயில் எழுந்தருளுவார்.
மூன்றாம் ஏகாந்தம். பெருமாள் நாச்சியார் இருவருக்கும் பதினெட்டு ஆவ்ருத்தி திருமஞ்சனம் ஆகும்.
மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் முதலியவை ஆனதும் நாச்சியார் உள்ளே எழுந்து அருளுவாள்,
பெருமாள் கோரதத்தில் திரு விதி எழுந்தருளி: உள்ளே போய் கண்ணாடி யறையில் திருமஞ்சனம்: செய்து கொள்வார்.
10-ம் திரு–பெருமாள் திருமஞ்சனம் செய்து ‘கொண்டு ஸாயங்காலம் மேளமில்லாமல் உலாப்பாட்டும்
ராமானுஜ நூற்றந்தாதியும் கேட்டுக் கொண்டே வீதி யெழுந்தருளி, உடையவர் ஸன்னிதி வாசலில் உடை யவரை அனுக்ரஹித்து,
அவர் செய்து வைக்கும் சைத்யோபசாரங்களையும் பெற்றுக் கொண்டு, துவஜ ஸ்தம்பத்தினடியில்
படிப்புக் கேட்டு ஸன்னிதிக்குள் எழுந்தருளுவார். பிறகு ரக்ஷா விஸர்ஜனமும் துவஜ அவரோஹணமும் ஆகும்.
மறு நாள் ராத்திரி விடாயாற்றியாக ஆடும் பல்லக்கில் பெருமாள் வீதி எழுந்தருளுவார்.
பெருமாள் பங்குனி உத்தரத்தன்று நாச்சியார் ஸன்னிதிக்கு எழுந்தருளச் காரணம் என்ன? ஸ்ரீரங்கத்தில்
பங்குனி உத்தரம் என்பது தந்த்ரோத்ஸவம் -அதாவது-இரண்டு உத்ஸவம்.
உத்ஸவம் அவ.வர்களுடைய நக்ஷத்திரத்தில் ஆரம்பமாக வேண்டும் ; ௮ல்லது , முடிய வேண்டும்.
பெருமாளுக்கு ரோஹிணி நக்ஷத்திரமாகையால் அன்று இந்த உத்ஸவம் ஆரம்பமாகி உத்தரத்தில் முடிகிறது;
நாச்சியாருக்கும் ரோஹிணியில் ஆரம்பமாகி அவளுடைய நக்ஷத்ரமான உத்தரத்தில் முடிகிறது -.
பெருமாளுக்கு காலை யிலும் ராத்திரியிலும் உத்ஸவம் நடக்க வேண்டி யிருப்பதால் நாச்சியார் உத்ஸவம் தனியாக
நடக்க முடியாமல் பாவனையாக நடக்கிறது .-உத்தாம் இருவருடைய உத்ஸவத்துக்கும்
கடைசி நாளாதாகையால் நாச்சியாருடைய சேர்த்தியில் இருப்பதற்காகப் பெருமாள் இன்று அங்கெ போகிறார்.
பிரளய கலஹ உத்ஸவம் பண்ண வேண்டுமென்ற ஆகம விதிப்படி. அதற்கும் உறையூர் நாச்சியார் ஸம்பந்தம் அனுகூலமான ஸந்தர்பமாய் வாய்த்தது.
77- உறையூர்ச் சரித்திரம்
உறையூர் சோழர்களின் ராஜ தானியாயிருக்தது — திருச்சினாப்பள்ளி கெஜடீர் 27, 30, 49 பக்கங்களில் பார்க்க,
உறையூர் ராஜாவான பராந்தகன், திரிசிர மலையில் ஸரம முனி பயிராக்கின சிவந்திப்பூவை அபஹரித்த தோட்டக்.காரனை மன்னித்ததால்
சிவன் கோபித்துக் கொண்டு உறையூரை மண் மாரியால் அழித்தார்.கெஜடீர் 337-ம் பக்கத்தில் காண்க. கலி யுகத்திலே_ பகுகாலம் சென்ற அனத்தரம்,. ஒரு கால விசேஷத்திலே ஒரு சோழனுடைய பாப விசேஷத்தினாலே மண் மாரி பெய்து பட்டணம் முழுகிப் போயிற்று,
அநந்தரம் , ௮து முதலாக சோள தேசாதி பதிகள் கங்கை கொண்டானிலே வாஸம் பண்ணுகையில்,
கால விசேஷச்திலே உறையூரிலே கொஞ்சமாகக் கோயில் கட்டி பெருமாளையும் நாச்சியாரையும் ஒரு சோழன் பிரதிஷ்டிப்பித்தான், என்று கோயிலொழுகு 5-ம் பக்கத்தில் இருக்கிறது
இது எந்த சோழனுடைய என்ன பாபத்தினாலே : மண் மாரி பெய்தது என்றும், எந்தச் சோழன் ஊரைப் புனருத்தாரணம் பண்ணினான் என்றும் தெரியவில்லை .
ஸுந்தர பாண்டியன் சோழ ராஜாக்களை ஐயித்து அவர்களுடைய பட்டணங்களான தஞ்சாவூர் உறையூர் இரண்டையும் எரித்த பிறகு
அவர்களுக்கே கொடுத்து விட்டதாக தன்னுடைய ஸ்ரீரங்கம் சாஸனத்தில் சொல்லும் விவரம் கெஜடீர் 45 ஆம் பக்கத்திலிருக்கிறது .
உறையூர் 1820ம் வருஷத்துக்கு முன்பு துருப்புக்கள் தங்குமிடமாயிருந்தது ..–கெஜடீர் 336 ம் பக்கம்,
இப்படிப் பல தடவை உறையூருக்கு ஆபத்து வந்த காலத்தில் கோயிலை ரக்ஷிக்க முடியாமல்
நாச்சியாரை மட்டும் ஸ்ரீ ரங்கத்தில் எழுந்தருளப் பண்ணினதாகச் சொல்லப்படுகிறது .
உறையூர் கமல வல்லித் தாயாரை ஸ்ரீரங்கத்திலேயே கூர நாராயண ஜீயர் பிரதிஷ்டிப்பித்த விவரம் கோயிலொழுகு 112ம் பக்கம்,
உறையூர்க் கோயிலைச் சேர்ந்த இடங்கள் இப்பொழுது குடிகளாலும் அன்ய மதத்தினராலும் ஆக்ரமிக்கப்பட்டு விட்டன.
கோயிலுக் கெதிரிலிருந்த தெப்பக் குளம் இப்பொழுது அன்னியர்களால் ஆக்ரமிக்கப்பட்டதாய்த் தெரிகிறது இப்படி ஸ்தலங்கள் “பறி கொடுக்கப் பட்டதால்
நாச்சியாருக்குத் தெப்பம் நடத்த இடமில்லாமல் கோயிலுக்குள்ளே யிருக்கும் சிறு புஷ்கரிணிக்குள்ளேயே தெப்பம் நடந்து கொண்டிருக்கிறது
நம்முடையதை அன்யர்களுக்கு அபஹரித்துக் கொடுக்கும் விஷயத்தில் சட்டமும் அதிகாரமும் செல்லுன்றனவே யன்றி
அன்யர்களால் ஆக்ரமிக்கப்பட்ட நம்முடைய ஸ்தலத்தை நமக்கு மீட்டுக் கொடுக்க எதுவும் பயன்படுகிறது இல்லை.
அன்யர்களுக்குள் மதாபிமானமும் நமக்குள் ௮து இல்லாததுமே இம்மாதிரி துர்கதிக்குக் காரணம்.
தெப்பத்தன்று கோயில் கிணற்றில் தெப்பம் சுற்றின பிறகு மற்றை நாளில் வெளி வராத நாச்சியார்
அன்றும் அடுத்த நாள் பந்தக் காட்சி யன்றும் வீதி வருவதைக் கொண்டே ஆதியில் தெப்பக்குளம் வெளியே இருந்ததாகத் தீர்மானிக்கலாம்.
உறையூர்க் கோயிலில் மணவாளப் பிள்ளை யாக நின்ற திருக் கோலமாய் ரங்க நாதனும் அவருக்கு அருகில்
உறையூர் நாச்சி யாரும் த்ருவ பேரங்களாக எழுந்தருளி ‘ யிருக்கிறார்கள்.
நாச்சியாரின் உத்ஸவ மூர்த்தி முன்னால் பெருமாளுடைய திருவடி. நிலைகளுக்குக் கீழ் பிரதிஷ்டிக்கப் பட்டிருக்கிறது ஸ்ரீரங்கத்துக்கு அபி முகமாயிருக்க வேண்டியதால் இந்த ஸன்னிதி வடக்குப் பார்த்திருக்கிறது
எதிரில் குளமும் அப்பால் காவேரியுமாய் வெகு அழகாயுள்ள ஸன்னிவேசத்தை எதிரில் வீடுகள் சூழ்ந்து விகாரப்படுத்தி விட்டன
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply