Archive for the ‘அருளிச் செயலில் அமுத விருந்து –’ Category

ஸ்ரீ திருமங்கை யாழ்வார் அருளிச் செயல்களில் -இனி பதப் பிரயோகங்கள் –

November 25, 2025

ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே – நாலாயி:716/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/4
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ – நாலாயி:1195/2
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – நாலாயி:1473/3
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/3

பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் – நாலாயி:1659/3
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/4
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் – நாலாயி:1770/3
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/2
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே – நாலாயி:1969/4
இனி களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2005/2
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:2029/2

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–இடையரும் பசுக்களும் தொலையும் படியாக இந்த்ரன் கல் வர்ஷம் வர்ஷித்த படியாலே
மலையை எடுத்து குடையாக தரித்ததும் – தர்ச நீயமான குரவைக் கூத்திலே கோபிகாரோடு ஒக்கத் தன்னையும் கோத்ததும்-ஒருவன் கன்றாய் ஒருவன் விளாவாய் வந்த இருவரையும் சேர முடித்ததும்-நான் ஆசைப்பட்டு பெறாத திருவடிகளைக் கொண்டு ஆசூர பிரக்ருதியான காளியன் தலையிலே மிதித்தது முதலாக வீரப் பாட்டுக்கும் மௌக்யத்துக்கும் சேர்ந்து இருக்கிற அதி மநோஹரமான அனைத்திலும் அங்கு என் உள்ளம் குளிர ஒன்றும் கண்டிட பெற்றிலேன் –அடியேன்-இவை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற நான்-ஒன்றும் காணப் பெற்றிலேன் – காணுமாறு இனி வுண்டேனில் அருளே—-நீ நினைத்தக்கால் செய்ய ஒண்ணாதது இல்லை -நான் இவை காணும் படி அருள வேணும் –

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே-30-இப்படி தோஷ பிரசுரனான எனக்கு இனி –என் தோஷத்தை அனுசந்தித்து-நான் எனக்கு ரஷகனாகை தவிர்ந்து தேவரீர் பக்கலிலே ந்யஸ்த பரனான பின்பு-கதி என் சொல்லாய் –போக்கடி சொல்லாய் –போக்கடிக்க சூழ்ந்து கொண்டு வைத்து -அவனைச் சொல்லாய் -என்னும்படி இறே பிராப்தியிலும் இருப்பது –நீர் போக்கடி சொல் என்ற போதாக நமக்குச் சொல்ல வேண்டுகிறது என் என்ன –என்னை ஆளுடைய கோவே–இத்தலையில் சேஷத்வமும் அத்தலையில் சேஷித்வமும் வ்யவஸ்திதமாய் அன்றோ இருப்பது –

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-4-இப்போது உனக்கு உறுதியாக ஒரு நல் வார்த்தை சொல்லுகிறேன் -நெஞ்சே கேள்
சொல்லச் செய்தே பின்னையும் சொல்லாததின் பலமே யாகாமே நீ அவனைத் தொழுது உஜ்ஜீவிக்கப் பாராய் –பேரருளாளன் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி -திரு ஹஸ்திகிரி நாதன் தானே-தொழுது எழு-ஆஸ்ரயித்து உஜ்ஜீவி-தொழுது எழு மனனே-நம்மாழ்வார் தொழா விட்டால் விழுவோம் -தொழுதால் எழுவோம் )

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே—1-10-9-எந்தாய்-திருமலையிலே வந்து புகுந்து
உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே –இனி யான் உன்னை என்றும் விடேனே-எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் – ஆன பின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ-(நாம் உனக்காம் படி நீ என் நெஞ்சினில் பற்ற பற்றின பற்று விடுவேனோ என்றபடி இவர் பற்றவில்லையே )என்றும்-இத்தால் -பரபக்தி பர்யந்தமாக பிறந்தது -என்றபடி-அரை ஷணம் அவனை ஒழியச்  செல்லாமை  உண்டாகை இறே-பரபக்தி -யாவது வ்யதிரேகத்தில் ஜீவியாத படி -ஆனார்

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ
கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே–3-5-8-சங்கு மாறாதே இருப்பதாய் பரப்பை உடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய்-அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய் இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க-என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய் –இனிப் போயினால் அறையோ–உனக்கு வந்த கிருபை மாறாதபடி இருக்கையாலே இனி நீ போவாய் ஆனால் அறையோ அறை –ஹேது மாறில் இறே அதன் கார்யம் மாறுவது
உன்னால் அல்லது செல்லாத என்னை விட்டு நீ இருக்கவுமாய் போகவுமாய் இருப்பார் நெஞ்சில் இருக்க ஒண்ணாது –விதி வாய்க்கின்றது-அறையோ-என் நெஞ்சை விட்டு வன் நெஞ்சில் இருக்க ஒட்டுவேனோ-

எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று  முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடி யவராடலொடு கூட வெழிலார்
மண்ணி லிது போலு நகரில்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-8-ரஜஸ் தமஸ்  ஸூக்களாலே அபிபூதராய்-ஆராயாதே சிலர் காலிலே குனியும் இத்தனை போக்கி –
எண்ணில் – ஆராயில் த்யானத்துக்கு விஷய பூதனான  ஈஸ்வரன்-இவனை ஒழிய வேறு ஒருவர் இல்லை என்று சனகாதிகள் அழகு மிகு இருந்துள்ள பண்ணிலே மிக கானத்தோடு பாடி – அவ் வவருடைய ஆடலோடே கூட –

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன்  திருவிண்ணகரானே—6-3-6-
நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான் இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன்   – இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிது அறியேன்  – தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-3-உம்முடைய பாகம்-( மூப்பு-) ஒன்றையும் புத்தி பண்ணுகிறிலீரோ –எங்களுடைய ஒப்பனையை நீர் இனி ஏத்திக் காண்பது- என்று இங்கனே பண்ணுகிற ஷேப உக்திகள் செவிப் படுவதற்கு முன்பே –எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று  போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம் –

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்

நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-7-உன்னை ஒழிய அறியாத படி இருக்கிற என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து இனி இங்கு நின்றும்  போயிருக்கவுமாய் -போகவுமாய் – இருப்பார் நெஞ்சில் போய் இருக்க ஒட்டேன்
(போகவுமாய் -இருப்பார் நெஞ்சில் -விஸ்லேஷத்தில் தரிப்பார் நெஞ்சில் ) ஒட்டேன் என்றாலும் நாம் தவிரோம் என்றால் – வளைத்து வைத்தேன் –நீ போகில் நான் முடிவன் -என்கிறார் –நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன –-நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –நீர் குற்றம் கண்டு  கை விடப் பார்க்கும் அன்றும்
ந கச்சின் ந அபராத்யதி –என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –

இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து  இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-அவனுடைய நிக்ரஹ பலமான பாபங்கள் என்னைக் கிட்ட வற்றோ – அவசியம் அநு போக்தவ்யம் -என்கிற வசனத்தைக் கொண்டு அனுபவித்தால் அல்லது நசியேன் என்று கொண்டு சிலவை  நிற்றல்

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-) பிராரப்தம் காண் என்று சிலவை நிற்றல் செய்ய வற்றோ –இனி -என்றது எத்தைக் கொண்டு என் என்ன இம்மையே அருள் பெற்றமையால் –இஹ லோகத்திலேயே பகவத் பிரசாதத்தைப் பெற்ற படியாலே
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர்
–என் பக்கலில் தான் ஆசை உடையனாய்
என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவனை – நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை அரை ஷணத்திலே பண்ணினவனை இன்று நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே-உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –திரு மாலே –அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனிச் செய்வது ஓன்று அறியேன் –இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்–கிருபை ஒன்றே நான் அறிவேன் -கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-
சம்சர்க்கஜ பிராவண்யம் சொல்லுகிறாள் –பாணனார் –தலை மகன் பிரிந்தால் எதிர் தலையில் உண்டான மறத்தைப் போக்கி சேர விடுகைக்காக பாணனைக் கொடுத்து வர விடும் அவர்களும் இன் சொற்களாலே அவர்கள் நெஞ்சத்தில் மறத்தைப் போக்கி சேர விடுவர்கள் –இங்கு பாணனார் ஆகிறார் -சேதனருக்கு ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் மறத்தைப் போக்கி-சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும் ஆச்சார்யன் இறே(ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்த இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )பாணனார் –என்கிறாள் காணும் இவள் –பேராளன் பேரோதும் பெரியோர் -என்று தன் மகள் சொல்லக் கேட்டவள் ஆகையால் இன்னார் இன்னாருக்கு சொல்ல என்பது இல்லை யாகாதே-சமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் –முண்டகம் -என்கிறபடியே தந் நிஷ்டனானம் இதுவே யாகாதே வேண்டுவது –திண்ணம் இருக்க –அவர்கள் அசல பிரதிஷ்டராய் இருக்க –வினி  யிவள் நாணுமோ-
இப்படி இடைவிடாமல்  இருந்து துஸ் சிஷை பண்ணச் செய்தேயும் இனி இவள் நாணுமோ –
சம்சர்க்கஜ ப்ராவண்யத்தாலும்  மீள மாட்டாள் –ஸ்வ கத பிராவண்யத்தாலும் மீள மாட்டாள் –
உனக்கு இது வாகாது காண்-என்று சொல்லுகிற நான் லஜ்ஜித்து மீளும் இத்தனை போக்கி
இவள் மீளுமோ என்கிறாள் –ஆசார்யனாலும் பசை இல்லை இறே-நாம் அவர் வசப்பட்டு ஸத் ப்ரக்ருதியாக இல்லா விட்டால் இரண்டும் வேண்டி அன்றோ இருப்பது-இவள் மீள என்பது ஓன்று உண்டோ –நன்று நன்று நறையூரர்க்கே –-இவள் காரியமும் கிடக்கிடும்-அச் சௌரி பெருமாள் காரியமும் கிடக்கிடும்-அடியிலே இவள் கையிலே மடலைக் கொடுத்து
கொல்லை யாக்கி புறப்பட விட்ட-அந் நறையூரார்  கார்யமே நன்றாய் தலைக் கட்டிற்று
-என்கிறாள் –

கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-ஆயன் விலங்கல் வேயினது ஓசையுமாய்-இடையன் உடைய கையில் அபிஜாதமாய் இருந்துள்ள
குழல் ஓசையுமாய் என்னை முடியா நின்றது –(மூங்கில் மட்டுமே வில்லாகவும் புல்லாங்குழலாகவும் ஆன பாக்யம் பெற்றதே )இனி விளைவது ஓன்று அறியேனே    –
நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் -நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில்-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-வ்யதிரேகத்தில் இவள் உளள் ஆகாள் என்னலாம் படி கலந்து வைத்து தன்னைக் கொண்டு பின்னை அகன்றான் ஆயிற்று –நின்னை கலக்க பொறுப்பாரை அன்றோ பிரிவது –உன் சௌகுமார்யம் கண்டு வைத்துத் தான் பிரிவானோ –பிரியேன் இனி என்று அகன்றான் —கடுக  பிரிந்து கொடு நின்றால் இடி விழுந்தால் போலே இவள் முடிந்து கொடு நிற்கும் என்று பார்த்து-பிரிவு சாத்மிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே பிரிவை பிரசங்கித்தான் ஆயிற்று –(போய் வருகிறேன் என்று சொல்லாமல் பிரியேன் –பிரிவை இவள் உணர வியதிரேகத்தில் சொல்லி தயார் படுத்துகிறான் )அதாகிறது –இவன் அந்த சம்ஸ்லேஷ சமயத்தில் சொன்ன வார்த்தை யாகாதே இது -என்று பிரத்யபிஜ்ஞ்ஞை ( நினைத்து ) பண்ணித் தரிக்கைக்காக – இங்கன்  அன்றாகில் சம்ஸ்லேஷத்துக்கு உறுப்பான பாசுரம் அன்றே இது –சம்ஸ்லேஷ தசையில் பொய் சொன்னான்-கலவியில் ஒரு வகை தானே – என்று உணர்ந்து பிரிந்த பின்பு சமாதானம் பண்ணிக் கொள்ளலாமே அகலகில்லேன் இறையும் -என்னுமா போல் பிரியேன் என்பது சம்ஸ்லேஷ தசையில் உன்மஸ்த்தக தசையில் சொல்லுவது போல் இல்லை-பிராட்டி அகலாமல் சொல்லும் வார்த்தை போல் அல்லவே இவனது -இயற்கையில் கலவிக்கு முன்பும் உண்டு உடுத்தும் திரிந்தவள் அன்றோ இவள் -என்று இராதே கிடாய்-உன்  சுவடு அறிந்த பின்பு -இனி பிரிந்து ஆற்ற மாட்டேன் காண் -என்றிலள்  ஆயிற்று – இவள் தான் இங்கனே வருந்திக் கொடு கிடந்தது துக்கப் பட்டாள் இத்தனை யாயிற்று – இவள் பேதை யாயிற்று – இவன் தான் முக்த கண்டமாய் பிரியேன் என்றாலும் அது தான் கலவியில் ஒரு பிரகாரமோ -என்று இருக்குமாயிற்று இவள் பிரிவு -கலவி -என்கிற இவற்றுக்கு வாசி அறியாள் ஆயிற்று –பேதை –வயசால் வந்த இளமை – போகத்தால் வந்தால் முற்றி இருக்கும் இறே இனித் தான் விலஷண  விஷயங்கள் எதிர்த் தலை தன்னையும் உண்டாம்படி பண்ணி இறே புஜிப்பது-பிரியேன் இனி என்று அகன்றான் – சொலவுக்குச் சேராத செயலைச் செய்தான் – இப்படி கலந்து வைத்து பிரியுமது ஒரு சைதன்ய க்ருத்யம் அன்று இறே பாவியேன் என் ஆற்றாமை கண்டால் கூட இருக்க அன்றோ அடுப்பது-இவன் தான் அணைத்த கையை நெகிழ்த்தே வார்த்தை சொல்லுவது –-அப்போது உடம்பில் பிறக்கும் வை வர்ண்யம் காணுமே-இது கண்டால் போகலாமா-இவள் தான் பிரிவு அறியாள் ஆகிலும் -தன் கார்யம் செய்கை தவிராதே தன்னால் தகையலாவது அன்று இறே –என்று அகன்றான் –பாவியேன் இவற்றில் ஒன்றே அமையாதோ(பிரியேன் சொல்வதும் அகன்றதும் -இரண்டும் உண்டே இங்கு ) இது தான் இரண்டாயிரம் பிரிவு போலே இருக்கிறது காணும் இவளுக்கு-பிரியேன் என்று சொன்ன போதே பிரிந்தான் இறே
பின்னை  போனதும் மிகை(பரதன் ராமனை எதிர்த்து வந்தான் என்ற செய்தி கேட்டதுமே
நான் இல்லாமல் போனது போல் என்றார் அன்றோ பெருமாள் )

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப்  புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே —-9-3-7-அக்ரமான பேச்சுக்களைச் சொல்லி அடைவு பாராமல் தொழலாம் படியான தேசத்து ஏறப் பாரு –(ராக்ஷசர் குரங்குகள் கரடிகள் அணில்கள் சேவை செய்யும் படியான திவ்ய தேசம் அன்றோ )போயவன் பாலமாய் –போய்த் தொழுதும் எழு -என்னுதல் –போயவன் பக்கலிலே நெஞ்சை வைத்து -என்னுதல் –இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்– இரவும் பகலும் இருந்து
இனிக் கண் உறங்காது ஒழிகிற இத்தால் என்ன பிரயோஜனம்  உண்டு –அநித்ரஸ் சததம் ராம (ஸூந்தர ) -என்று இவன் இருக்குமது கேட்டு அதடியாக நாம் –நசமேஸ்தி நித்ரா (ஸூந்தர)-என்று இருக்கும் அன்று அன்றோ அபிமத சித்தி உள்ளது –அவன் ருசி முன்னாக –
இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது – அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே-ஆனால் பின்னை   அவனுக்கு இரக்கம் இல்லை என்கிறதோ -என்னில் ஓம் -அப்படி சொல்லக் குறை இல்லை இறே -இப்போது அவன் வாராமையாலே –
இல்லையாகில் வருகைக்கு சக்தி இல்லை -என்னுதல் சிலருக்கு பர தந்த்ரன் -என்னுதல் -சொல்ல ஒண்ணாது இறே முறை கெட்டுச் சொல்ல வேண்டும்படியான தசை பிறந்தால்
முறை உடைய அவனுக்கு வரக் குறை என் தொழுதும் எழு -என்று கொண்டு பழி யாகிறதோ

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல் விலி  ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-பல சொல்லி என்-தான் செய்த தப்பின் பலம் தானே அனுபவித்தான்-இனி யாவர்க்கு உரைக்கோம் –இனி இத்தை ஆர்க்கு இருந்து சொல்லுவோம்  –

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ்  கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-ஒரோ கார்யங்க ளிலே இழிவார் தம்தாமால் செய்து தலைக் கட்டலாம் கார்யங்களிலே  அன்றோ இழிவது –ஒரோ ஒன்றையே தலை காண ஒண்ணாதபடி இருக்கை –நம்பி மூத்த பிரானோடே கூட நின்று செய்தான் ஆகில் கண் எச்சில் வாராத படி அவன் தலையிலே ஏறிடலாம் –தம் தாமையும் பார்க்க வேண்டாவோ –எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் –உன்னைப் பெற்ற இதுவே அமையாதோ
வயிறு எரிச்சலுக்கு வேண்டுவது – நீ ஒரு செயலைச் செய்ய வேணுமோ –

பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்—11-2-4-
அடி குறிக்க ஒண்ணாத படி குவியா நிற்கிற மரா மரங்கள் ஏழையும் எய்து ஆஸ்ரித விஷயத்தில் தமக்கு உண்டான ஓரம்
தரை காண ஒண்ணாத படி  இருக்கிற –அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் –கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல்
ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் –அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது –இதற்கு இனி என் செய்கேன் —ஓர் அபலை இதுக்கு கடகிடவோ -(கடுகு -பரிகாரம் )

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8-நெஞ்சில் அடக்கத்தைக் கொண்டு போனார் –இத் தலையை இப்படி சர்வ ஸ்வபஹாரம் பண்ணினோம் ஆகாதே -என்று
நெஞ்சில் இத்தனை இரக்கமும் இன்றிக்கே இரா நின்றார் – ரஷகன் பாதகன் ஆனவாறே
அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே –அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது –இவள்  சன்னதியிலே வர்த்திக்கில்
இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் ( ப்ராத காலத்தில் )விடிய வேணும் என்று நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் –எவ்விடம் புக்கதோ –இவன் ஆஞ்ஞை நடையாடாத தோர் இடம் தேடித் போனானே  அவன் –அவன் பாதகன் ஆன பின்பு அவன் பரிகரமும்  பாதகம் ஆயிற்று –நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே 

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலேயான காலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித் தலைவன் முழங்கொளி  சேர்  திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக் கவளத் திரு வுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4-குளிர்ந்து பரந்து இருக்கிற திரைகளாலே அலை எறிந்து உள்ள கடலானது சர்வ லோகங்களும் தானே யான காலம்-இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே(க்ருத அக்ருதக க்ருதக்ருதக மூன்று வகையில் ஏழும் கொள்ளலாம் )சத்வஸ்தனான சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள
திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள திரு உடம்பை  உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே 

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-அரங்க நரகரப்பா – நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் – வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு  –ஸ்ரமஹரமான தேசத்திலே வந்து சாய்ந்து அருளின நிருபாதிக பந்துவான தேவர் அவசர ப்ரதீஷராய் வந்து நிற்க நான் வேறு சிலரை அபாஸ்ரயமாக நினைத்திரேன் – தேவரீருடைய சௌஹார்த்தம் ஒழிய வேறு ஒன்றைத் தஞ்சம் என்று வ்யவசிதனாய் இரேன் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிச் செயல்களில் -இனி பதப் பிரயோகங்கள் –

November 25, 2025

இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/7
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய் – நாலாயி:597/3
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே – நாலாயி:603/4
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2

——————

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்
–இனித் தான் எழுந்திராய் – எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ எழுந்திராய் –எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால் உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ – எங்கள் ஆற்றாமையை அறிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே-எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி -மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.-இனி எழுந்திராய்-பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை – புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில் அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் -பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய ப்ரஸித்தமாய்த்து-எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்–

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது – பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –இனி என்றும் பொய்கைக்கு வாரோம் –இவர்கள் வாரோம் இனி -என்றவாறே — தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-அவனோ வந்திலன் –
அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து-வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து-இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்-அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்-அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே--10-7-என்னுடையான தனத்தைக் கொண்டான் என்னுதல்-என்னுடைமையும் தனத்தையும் கொண்டான் என்னுதல்
என்னை சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான் என்னுதல்-உங்களுக்கு இனி ஓன்று போதுமே –
அவன் அல்லாத உங்களுக்கு என் முன்னே ஆடி நாளிகை போருமோ –இனி –அவன் குடக் கூத்தாடுவதற்கு முன்னே ஆடினி கோளாகில் அன்றோ பிரயோஜனம் உள்ளது – சைதன்யம் நடையாடினால் பின் ஆடக் கடவதோ-பெண்ணின் வருத்தம் அறியாத -அவனில் காட்டிலும் உங்களுக்கு ஒரு வாசி வேண்டாவோ பிறர் நலிந்தாரையும் நலியக் கடவி கோளோ –

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-நாணி நான் என்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்குகிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –நாணுகை யாவது லஜ்ஜிக்கை இறே-லஜ்ஜித்து மீள வேண்டுவது –இன்னமும் சில நாள் இருந்து அவ்வஸ்துவை லபிக்க வேணும் என்று இருப்பார்க்கே – லஜ்ஜை போகையாவது முடிகை இறே –இனி -முடியும் அளவானாலும் ஜீவித்து இருப்பார் செய்யுமது செய்யப் போமோ –சத்தை கிடக்கில் இறே லஜ்ஜை நோக்குவது-சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ-தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது
தரமி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோ-
இனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-ஓர் குற்றேவல்
முலை எழுந்தவளுடைய குற்றேவல் இறே –தம்தாமுக்கு அடைத்த கரணங்களைக் கொண்டு பண்ணும் கைங்கர்யம் இறே தானே குற்றேவல் –இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என் காத்ரைஸ் சோகாபி கர்சிதை –சம்ஸ் ப்ருசேயம் -என்னுமா போலே
இவ் வுடம்போடே அணைய ஆசைப் பட்டு பெறாதே-இனி அவ்வருகே போய்-ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி பெரும் பேறாகிறது-பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸ் ஸூ பண்ணுவாரோ பாதி -என்று இருக்கிறாள் பரம பதனை அனுபவிப்பது இது போலே என்று இருக்கிறாள் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் -இனி பதப் பிரயோகங்கள் –

November 25, 2025

மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவுஅணை பள்ளியானே – நாலாயி:427/4
புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ – நாலாயி:453/2
வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால் – நாலாயி:454/1
உனக்கு பணிசெய்திருக்கும் தவம் உடையேன் இனி போய் ஒருவன் – நாலாயி:455/1
இத்தனை காலமும் போய் கிறிப்பட்டேன் இனி உன்னை போகல் ஒட்டேன் – நாலாயி:460/2
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே – நாலாயி:461/2
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – நாலாயி:463/4
என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே – நாலாயி:468/4-

——————

தன் மாமன் நந்த கோபாலன் தழீ இக்கொண்டு என் மகள் தன்னை
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செவ்வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மகளை பெற்ற தாயார்  இனித் தரியார் என்னும் கொலோ -3 -8-5 –இப் பெண் பிள்ளையை பெற்ற தாயார் ஆனவள் –இவளைப் பிரிந்த பின்பு –பிராணனோடு தரிக்க மாட்டாளோ என்று சொல்லுவாரோ-அன்றிக்கே-அவிகிருதராய் இருப்பாரோ-இவளைப் பிரிந்த பின்பு-இவளைப் பெற்ற தாயார் பிராணனோடு ஜீவித்து இருக்குமோ
அன்றியே-இவளுக்கு இத் தலையில் உண்டான நன்மைகளை நினைத்து ப்ரீதியாய் இருக்குமோ என்று கொலோ என்கிறாள் 

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-ஐயனே -பரம பந்துவானவனே  –மாதா பிதா பிராதா (ஸூபால உபநிஷத் )-என்கிறபடியே
எனக்கு நிருபாதிக பந்து ஆனவனே–இத்தால்-ரஷிக்கைக்கு ஈடான ப்ராப்தியை சொல்கிறது-இனி என்னைக் காக்க வேண்டும் –நான் உன் அபிமானத்திலே ஒதுங்கின பின்பு கைம்முதல் அற்ற என்னை ரக்ஷித்து அருள வேணும்–அந்த வையத்தில் உள்ளார் படி அன்றிக்கே உன்னுடைய அங்கீகார விசேஷத்தாலே வ்யாவ்ர்த்தனாய் –உனக்கு மங்களா சாசனம் பண்ணி அன்றி தரியாதபடியான பின்பு இப்படி இருக்கிற என்னை – என்னுடைய புருஷார்தத்துக்கு விரோதியான யமபடரால் வரும் நலிவில் அந்வயம் இன்றி ரஷித்து அருள வேணும்-திருப்பாற் கடலிலே வந்து கிட்ட மாட்டாத என் போல்வாருக்காக அன்றோ
நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் –அந்தர்யாமித்வம்  -பரத்வம் -வியூகம் -விபவம் -அர்ச்சாவதாரம் -அளவாகச் சொல்லுகை எல்லா இடத்தலும் உன்னை ஸாஷாத் கரிக்கப் பெற்றேன்-அறப் பறித்து -என்று அநிஷ்ட நிவ்ருத்தியும் கண்டு கொண்டேன் -என்று இஷ்ட பிராப்தியும் பண்ணித் தந்தோம் ஆகில் -இனி போய் வர அமையாதோ -என்ன –இனிப் போக விடுவது உண்டோ –அறப் பறித்து -என்றும் -கண்டு கொண்டேன் -என்றும் தாம் செய்தாராய் அருளிச் செய்கைக்கு அடி – பிதா தேடின அர்த்தத்தை -தன்னது -என்னும் புத்திரனைப் போலே –இனிப் போய் வர அமையாதோ என்ன –இனி  போக விடுவது உண்டே –1-விரோதியில் சிறிது கிடத்தல் –2-காட்சியிலே சிறிது கிடத்தல் –3-இவை இரண்டுக்கும் மூலமான ஸூஹ்ருதம்  என் கையில் கிடத்தல் –செய்யில் அன்றோ நான் போக விடுவது –(1-அஞ்ஞானாதிகள் இருந்தால்-2-உனது வைலக்ஷண்யத்தில் குறை இருந்தால்-3-சாதனாந்தரம் அன்வயம் இருந்தால் அன்றோ நான் போக விடுவது -)உன்னாலே பெற்ற நான் -என்னாலே இழப்பேனோ – பேறு அவனாலே-இழவு இவனாலே –-அவன் பெறுகைக்கு கிருஷி பண்ணும்-இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதால் போலே-அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது அன்று –(கர்மமும் கிருபையும் ஹேதுக்கள் இவற்றுக்கு )போக விடுவது உண்டேஇனி நான் போகல் ஒட்டேன் -என்று போக்கும் உண்டாய் –ஒட்டேன் -என்கை அன்றிக்கே – போக என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார் –இனிப் போக விடுவது உண்டே-கைப்பட்ட உன்னை நான் போக ஸம்மதிப்பேனோ
போகிலும் கூடப் போகும் அத்தனை-உன்னாலே பெற்ற நான் உன்னைப் போக விடுவேனோ–நான் உன்னைப் போக விடுவேனாய் இருந்தேனோ -என்று
அவனையே கேட்கிறார்-உண்டே –உனக்கு தெரியாதோ போகைக்கு ஹேது உண்டாகில் என்று அவனை கர்மமும் கிருபையும் ஹேதுக்கள் இவற்றுக்கு கேட்கிறார் ஆகவுமாம்-போகாத படி பெற்று -தம் இழவு தீர்ந்தமையை அருளிச் செய்கிறார்-

வளைத்து வைத்தேன் இனி  போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்  நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 2-உதாரர் வாசலிலே -தரித்தருமாய் -அந்தருமாய் இருப்பார் –பெற்று அன்றி போகோம்-என்று கிடக்குமா போலே –வளைத்து கிடக்கிறார் –ஸ்ரீ பரத ஆழ்வான் பர்ண சாலை வாசலிலே வளைத்து கிடந்தான் இறே-தம் செல்லாமை இறே வளைக்கிறது–இனி   போகல் ஒட்டேன் –உன் சுவடு அறிந்த நான் பின்பு போக விடுவேனோ

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்  இனிப் போய் ஒருவன்
தனக்கு  பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்

புனத்  தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர்  புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்-1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )-2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )-3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )-4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)-இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை-நமக்கு உபாயத்வம் அனுசந்தித்து
உபேயத்தில் ஆசையுமே உள்ளது-ஆழ்வார்களுக்கு இவை நாலும் உண்டு-தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்-இனிப் போய் – இந்நாலு தசையும் பிறந்த பின்பு –இவற்றை பொகட்டு புறம்பே போய் –போகை யாவது –-இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்-ஒருவன்  தனக்கு  பணிந்து-பிரம்மா முதலாக பிபீலிக அந்தமாக அதி ஷூத்ரர் இறே –அவர்களிலே ஒருத்தனுக்கு கடைத்தலை நிற்கை –உன் கடைத்தலை இருந்து வாழும் -என்கிற செயலை-அங்கே செய்கை உனக்கு அவத்யம் இறே-நின் சாயை அழிவு கண்டாய் –-உனக்கு தேஜோ ஹானி இறே -எனக்கு இது புதுமை அன்று –உன் ஸ்வரூப ஹானிக்காய்த்து நான் கிலேசிக்கிறது-

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –ஒரு நாளாய் -ஒரு பஷமாய் -ஒரு மாசமாய் -ஒரு சம்வத்சரமாய்- இப்படி கல்பம் கல்பமாக-கழிந்ததுக்கு ஒரு முடிவு இல்லை-காலத்துக்கு முடிவு இல்லாதது போல் போன இடங்களுக்கும் முடிவு இல்லை-கிறி பட்டேன்-கிறி ஆவது -விரகு-அதாவது யந்த்ரம் – சர்வ பூதங்களும் பிரமிக்கும்படி ரூடமாய் இருப்பதொரு யந்த்ரம் அஞ்ஞானா வர்த்தமாய் இருப்பது ஓன்று –(ஞான அனுதயம் அனிதா விபரீத ஞானம் – காரணமாயும் கார்ய மாயும் வியாப்தமான கர்ம ஜாலம் )பட்டேன்
அசந்நேவ-என்னும் படி அகப்பட்டேன் – நசித்தேன் -என்னவுமாம்-இனி-1-கரண களேபரங்களை தந்து-2-அஜ்ஞாத ஸூஹ்ருதத்தைப் பிறப்பித்து –3-இதர விஷயத்தில் ருசியைக் குலைப்பித்து –4-உன் பக்கல் ருசியைப் பிறப்பித்து –5-அபிமதமும் நீயே என்னும் இடமும் பிறப்பித்த பின்பு-இனி-நான் ஏதும் உன் மாயம் ஓன்று அறியேன் -(பெரியாழ்வார் – 4-10 ) இனி இது உன் மாயம் என்று அறிந்த பின்பு உன்னை-ரஷகனுமாய் –உபாய பூதனுமாய் –ப்ராப்ய பூதனுமாய் -இருக்கிற உன்னைபோகல் ஒட்டேன் –
பெற்றினி போக்குவேனோ உன்னை -என்கிறபடியே-1-உபாயாந்தரத்தில் அந்வயம் உண்டாதல் –-2-ப்ராப்யாந்தரத்தில் அந்வயம் உண்டாதல் –-3-இரண்டும் நீயானால் பெற்ற போது பெறுகிறோம் -என்று ஆறி இருத்தல் செய்யல் இறே உன்னைப் போக சம்மதிப்பது –

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய்
-5 -3-9 –அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் அன்று நான் பிரார்த்தித்த படியே திரு மலையிலே வந்து என் விரோதியைப் போக்கி ஞானத்தைப் பிறப்பித்த உன்னை
வந்து கண்டு கொண்டேன் -இனிப் போக விடுவது உண்டே –கர்ப்பத்திலே கிலேசப்படுகிற வன்று -அடிமையிலே உற்று இருந்த நான் அடிமை கொள்ளுகைக்கு சுலபன் ஆன இன்று போக விடுவேனோ-ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் கழித்து கொண்ட படியை மூதலிக்கிறார்-

சென்னியோங்கு தண்  திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும்  உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து நிர்பரனாய் இருந்தேன்-இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது அவன் அடியாக வரில் விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –புரிந்து-எத்தனையும் வான் மறந்த காலத்தும் (பெருமாள் திருமொழி )-இத்யாதி-இருந்தேன் –-உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –விரோதி நிவ்ருத்தியும் பிறந்து –அபேஷிதமும் பெற்றதாகில்  –இனி பதறுகிறது என் –இனி என் திருக் குறிப்பே –என் கொல் அம்மான் திரு அருள்கள்(10-7)-திருக் குறிப்பு -திரு உள்ளத்தில் நினைவு-ஞான லாபத்தையும் பண்ணித் தந்து விரோதி நிவ்ருத்த பூர்வமாக அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில்
இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட  விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –என் சேஷத்வத்தையும் –
உன் சேஷித்வத்தையும் உதறிப் படுத்த பின்பு  உனக்கு போக்கு இனி எவ்விடத்தில் –
என் ஸ்வ யத்னத்தாலே வந்ததாகில் இறே உனக்கு போகல் ஆவது –உன் அருளால் புகுந்த நீ போகக் கடவையோ –இராம நம்பீ எங்குப் போகின்றதே
மன்னஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந் நெஞ்சத்து உள் இருத்தி இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
(பெரிய திருமொழி -7-2 )-என்று
அவரும் ஒருவர் வளைத்தார் இறே-இல்லாத காலத்தில் ஸ்ருஷ்ட்டித்தும் ரஷித்தும் ஆபத்து தசையிலே வயற்றில் வைத்து நோக்கியும் போருமவன் இல்லையோ நீ-எம்பெருமான் –
உன் ஸ்வாமித்வத்துக்கு போருமோ –இனி உன் கிருஷி பலித்து –திருப்பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் வந்த பின்பு போக்கு வரத்து உண்டாம் படியோ நாம் இருவரும் கலந்த படி –ஆக இப் பாட்டால் அவன் வந்து புகுந்த பிரகாரத்தையும் அவன் போனால் தாம் முடியும்படியான அவஸ்தை பிறந்த படியையும் அவனுக்கு போக்கின்றி நிற்கிற நிலையையும் நிர்ஹேதுகமாக விஷயீகரித்த பிரகாரத்தையும் சொல்லுகிறது —

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச்செயலில் ஸ்ரீ இராமாயணம்-ஸ்ரீ பாசுரப்படி இராமாயண விவரணம்-

November 25, 2025

ஸ்ரீ அவதாரம் -ஸ்ரீ திருநாமம் சாத்துதல் -தாலாட்டு -தாடகா வதம் -சிவதனுஸ் பங்கம் -சீதா கல்யாணம் -பரசுராம கர்வ பங்கம்

ஸ்ரீ அவதாரம்-
அந்தர்யதிகரணம் -சாது பரித்ராணாம் ஏவ காரணம் மற்றவை ஆனு ஷங்கிகம்-ராவணஸ்ய வதார்த்தம் வால்மீகி –திரு உள்ளம் அறிந்து ஆழ்வார்கள்-மேரு-அணு வாசி-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

பெயர்கள் ஆயிரம் உடைய-சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-
யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு –என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் – தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம் மரு பூமி –நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன–இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய்-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20- இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் தோற்றம் -ஆவிர்பாவம்-தொடக்கமாக-

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய –ஸ்ரீ கௌசலையாருடைய அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே-சித்தியை வளர்பிறை நவமி புனர்வசு -நக்ஷத்ரம் -பன்னிரு திங்கள் -நாம் தந்தையிடம் 2 மாசம் அண்ணையிடம் 10 மாசம் -பாயாசம் மூலமும் -தேவகி கர்ப்பம்-8 மாஸம் -அதுக்கு சரி பண்ண

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து
உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-ப்ரஹ்மாதி கள் தேசத்தை அருவருத்து வர்த்திக்கிற நித்ய ஸூ ரிகளோடே வர்த்திக்கிறவன் -அந்த ப்ரஹ்மாதிகளும் குத்ஸிக்கும் பூமியிலே பிறந்து -சம்சாரிகள் தன்னில் அறிவு பிறந்தாரும் காற்கடைக் கொள்ளுகிற தேசத்திலே இ றே பிறந்து –அகர்மவஸ்யனான தான் கர்ம வச்யரோடு ஓக்க கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து-சம்சாரிகள் கர்மத்தால் படும் அளவு அன்று இறே அவன் அனுக்ரஹத்தாலே பட்டது -ஒரு சேதனன் பிறந்தால் இருக்கும் நாள் தானும் ஸ்திரீயும் சேர இருந்து ஜீவித்து போகா நின்றான் -அவ்வளவும் அன்றிக்கே பிராட்டி ஓர் இடத்திலும் தான் ஓர் இடத்திலும் வர்த்திக்க வேண்டிற்று இறே -ராஜ்யாத்ப்ராம்ச -இத்யாதி -இப்படி படுகிறது யாருக்காக -என்னில் –மனிசர்க்கா-தங்களுக்காக அனுக்ரஹத்தால் படுகிற இம் மஹா குணத்தை குண ஹானியாக சொல்லும் க்ருதக்நர்காக-ராவண பவனத்தில் இருந்தவளோடே சேர வர்த்தியா நின்றான் -என்று சொன்னது இறே இரண்டாம் பிரிவுக்கு முதல் –கர்ம வஸ்யரை சொல்லும் வார்த்தையை சொன்னார்கள் இறே-இருந்ததே குடியாக உண்டு உடுத்து திரிகிறது ஹேதுவாக நலிகிற ராக்ஷஸரை நாடித் தடிந்திட்டு-அவர்கள் வந்து மேலிட்டால் அன்றிக்கே -அவர்கள் இருந்த இடங்களிலே சென்று அவர்களை அழியச் செய்து -சர்வ சாதாரணன் நலிகிறது நிர் நிபந்தனமாக விபூதியை நலிகையால் இறே-நாட்டை அளித்து-போந்த கார்யம் தலைக் காட்டிற்று ஆகில் இனி போவோம் என்னாதே மீண்டும் தம்முடைய ஸுந்தரியாதிகளாலே இருந்ததே குடியாக வாழ்வித்து -தம் வரவு பார்த்து இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானையும்-அபிஷேக மஹோத்சவங்கள் காண ஆசைப்பட்ட தாய்மாரையும் -பின் தொடர வழி மாற்றிப் போந்த நாட்டையும் -கடல் ஞாலத்து அளி மிக்கான் -என்கிறபடியே நெடு நாள் ஆஸ்வசிப்பித்து-உய்யச் செய்து-தம்மைப் பெறுகைக்கு அவர்கள் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே அசத்சமமாய் இருக்கிறவர்களை -சந்தமேனம்-என்னும் படி பண்ணி–தர்மம் வழி நடந்தால் வானரங்களும் உதவும் -அதர்மம் வழி நடந்தால் தம்பியும் உதவ மாட்டான் -என்று காட்டி –

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்-என்னும் –-ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும் ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்-வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
கீழில் -வீரன் -என்கிறதும் -இங்கும் அன்வயிக்கக் கடவது -சத்யேதியாதிவத் –

2-நாம கரணம்
வசிஷ்டர் -ராமன் பரதன் லஷ்மண சத்ருக்ந
ரமயதி இதி ராமன் -மனத்துக்கு இனியான் -திருப்பாவை-12–சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா -என்று சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாய்ந்து-உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து -தன்னைப் பிரிந்து நாம் படுமவற்றை நம்மைப் பிரிந்து தான் பட வல்லன்-கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

பரணாத் பரதன் -ராஜ்ஜியம் -பாதுகை –பழி ஏற்றுக்கொண்டு -நானே தான் ஆயிடுக -இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக-மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

லஷ்மீ ஸம்பன்னன்-நற்செல்வன் –-தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி-தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –

நித்ய சத்ருக்ந -அநக -ராமனை அன்றி அறியாத பரதனை அன்றி அறியாத – கோதில் அடியார் -அடியார் தம் அடியார்-3-10-10-

ராம லஷ்மணர் பரத சத்ருக்ந -தொட்டில் தொடங்கி-பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை
யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7-

3-தாலாட்டு-மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–தாலாட்டு சந்தையிலே அருளிச் செய்தார் –கௌசல்யா ஸூ ப்ரஜா -எழுப்புகிறார் விச்வாமித்ரர் -இங்கு பொங்கும் பரிவால் தாலாட்டு-ராகவனே! தாலேலோ –8-2–-8-3-8-4-என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-சீ ராமா! தாலேலோ –8-6–-அயோத்தி மனே! தாலேலோ— 8-7–-சீ ராமா! தாலேலோ– 8-8–ராகவனே! தாலேலோ– 8-9-ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10–என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை-8-11-

4-தாடகா வதம் –12 திருநக்ஷத்ரம் -விஸ்வாமித்ரர் -சித்தாஸ்ரமத்தில் யாக ரக்ஷணம் –

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு –ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற

தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –விஸ்வாமித்ர மகரிஷியினுடைய அத்ரவா த்ராணார்த்தமாக-(யாக ரக்ஷணத்துக்காக ) மகரிஷியோடே கூட எழுந்து அருளின அளவிலே-யாகங்களையும் பிராமணரையும் -தபச்சுக்களையும் – அழித்துக்
கொண்டு திரியும்-முது பெண்–(பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த ராஷசியான தாடகை – அதிரக் கூப்பிட்டு கைகளையும் எடுத்துக் கொண்டு -மிருந்த மிகுந்த கோபத்தோடு நலிவதாக அடர்ந்து வர –ஸ்ரீ விஸ்வாமித்ர நியோகத்தாலே -திருக் கையில் வில் வளைத்து அவளுடைய பிராணனை முடித்தவன் –மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகை -பெரிய திருமடல் -மா முனிக்காய் -தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலோன்-பெரிய திருமடல்-திண் திறலாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!-8-2-ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே ஆஸூர வர்க்கத்தைப் போக்கின படி

5-விச்வாமித்ரர் யாகம் ரக்ஷணம் -6 நாள்கள்
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்-10-2- காயத்ரி மந்த்ரம் கண்டு வழங்கிய -ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து-யாகம் பண்ணும் பொழுது கோபமோ சாபம் கொடுப்பதோ கூடாதே -ஆகவே யாகத்துக்கு இடையூறு பண்ண வந்தார்கள் முன்னூறு பின்னூறு பண்ணாமல் நடுவிலே வந்தார்கள்-மாரீசனை விரட்டிய மிடுக்கால் மைந்தன் -தாடகைக்கு ஈமச்செயல் பண்ண வேண்டுமே –இங்கு கோதண்டத்தால் அல்ல – கல்விச்சிலையால் காத்தானூர்-பெரிய திருமொழி -பயிற்சிக்கான வில்

வல்லாளரக்கர் குலப்பாவை   வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால்
காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —8-6-3-வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –(பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ ) முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  – ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று
தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –ராஷசர்கள் புற்றுப் போலே என்றும் ஒக்க துர் வர்க்கம் மாறாத
இலங்கையில் உண்டான ராஷசரையும் கூட்டிக் கொண்டு போக பூமியான பாதாளத்தில் புக்கு மறைய –கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே    – வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை கையிலே பிடித்தவனுடைய ஊரான திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –

அவப்ரத ஸ்நாநம் -மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் – அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி –மா முனி –
முனி மனன சீலர் -கவி ரிஷி முனி என்னும் ஆழ்வார் –-கிராந்தி காலம் தாண்டிப் பார்க்கும் கவி –ரிஷி மந்த்ர த்ரஷ்டா – விச்வாமித்ரர்-ரக்ஷ பரம் பெருமாள் –சித்த உபாயம் பற்றியதால் மா முனி –

6-மிதிலை நோக்கி பயணம் -மூவரும்

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-8-
கங்கையில் நீராடி பாபங்களைப் போக்கி கொள்கிறோம் –அந்த கங்கையின் பாபத்தைப்போக்கவே இவர்கள் நீராட்டம்-தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த -என்கிறது -விச்வாமித்ரனை–அவன் ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே – அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே அத்தை சொல்லிற்று ஆகவுமாம்-தபஸை செய்து உயர்ந்த என்ற – இதுக்கு ஸ்ரீ பராங்குச தாசர் -ஜீயா மா முனி புகன்ற -என்று பாட பேதத்தை பண்ணி அதினுடைய பிரபாவத்தை பிள்ளைகளுக்கு சொல்லிப் போந்தான் இறே அத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் -என்ன அதுக்கு நமக்கு பலம் போராது -என்று அருளிச் செய்வர்-அன்றிக்கே (உயர்ந்த தவம் புரிந்தார் என்று கொண்டு)-பகீரதன் தன்னையே சொல்லுகிறதாய் அவன் கொடு வந்த கங்கை என்னுதல்

இப்பொழுது தான் அஹல்யா சாப விமோசனம் -கௌசல்யை முனிவர் -ஆழ்வார்கள் இத்தை அருளிச் செய்யவில்லை-இந்திரன் லீலை -அவனுக்கும் சாபம் -திருவடி துகள் -காகுத்தன் திருவடி துகள் கதுவ -கம்பர் -திருவடியால் கூடவே தீண்ட மாட்டார் பெருமாள் –பெண்ணின் கற்பை இழிவாகச் சொல்லி ரஷித்த பெருமை -கங்கையையே புனிதமாக்கிய பெருமாளுக்கு இது பெரிய செயல் அல்லவே

7-ஸீதா திருமணம்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
-கம்பர் மட்டுமே ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டி அருளிச் செய்கிறார்-செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து
-10-3-அஸி தேஷணா –என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை-தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து-கன்னி மாடம் மேலிருந்து கீழே பார்க்கக் பெருமாள் மேல் பார்க்க-நோக்கினான் -உற்றுப்பார்த்தல்-nokkiya-

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலை பெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்.

பார்வையே கயிறாக மாறி இருவர் மனமும் ஒவ்வொருவர் இடமும் மாறிற்றே –பத்து பொருத்தம் பார்த்து ஒன்பது கிரஹம் சேர்த்து எட்டு திசைகளுக்கும் பத்திரிகை அனுப்பி ஏழு ஏழு ஜென்மங்களுக்கும் சேர்ந்து இருக்குமாறு ஆறு சுவை உணவு அளித்து ஐந்து பூதங்கள் சாக்ஷியாக அக்னியில் போட்டு நான்கு வேதம் ஓதி மூன்று முடிச்சு போட்டு இரண்டு மனமும் ஒன்றாவதே திருமணம்-நீரில் சேர்ந்து ஒருவர் நெருப்பில் பாயாசம் மூலm ஒருவர் நிலத்தில் சீதையாக வந்து சேர்ந்தனர் -பிரிந்தவர் பேச மறந்து –

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள்
இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-நெறித்து-மிருதுவான மயிர் முடியை உடையளாய் விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்-பிரசித்தியை உடைத்தாய்-மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –-இவ் வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே-அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ஸ்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து-சிவ தனுஸ் -ஹுங்காரத்தாலே வெடித்தது -உடைந்த வில்லை -(உடனாய வில்லென்ன-தநுஸ் ப்ரஸித்தி -வம்ஸம் வழியாக வந்ததால் ஓக்க பிறந்த தநுஸ் என்கிறார் ஷீரத்வஜன் முதல் ஜனகன் பெற்ற சிவ தநுஸ்-அல் -என்று இருளாய் -இருண்ட வில்

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை
கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்-அடிப்பகுதி இடது திருவடி தீண்ட -நடுப்பகுதி கையால் ஸ்பர்சம் -மேல் பகுதி தானே வந்து வலது திருவடி தொட்டதாம்-

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4
– 1-2 –ரௌத்ரமாய் ஒருவரால் எடுக்கவும் வளைக்கவும்  அரிது என்று கிடந்த வலிய வில்லை முறிக்க (ருத்ரனுடைய வில் அன்றோ )கடுமை -திண்மை -ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ ) ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர் 

இயம் ஸீதா மம ஸூதா பத்ரம் தே பாணி க்ருஹந் -ஐயர் பார்த்து-அவர் காலைப் பிடித்த பின்பே இவள் கையைப் பிடிப்பேன்-வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்-13-பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து – அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷிதவனே-ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக
ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து பெண் தேடி வந்தோமோ நாங்கள் – அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி – அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆயத்துதோள் தோய்ந்தான் என்னும் – விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி – அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –இத்தால் – நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும் உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி – சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும் ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது –நீர் போல் அணைத்து நம்மை சேர்விக்கிறாள் –

ஊர்மிளை லஷ்மணனுக்கும் -தம்பி யான குசத்வஜன் பெண்கள் மாண்டவி பரதனுக்கும் ஸூதகீர்த்தி யை சத்ருக்கனனுக்கும் திருமணம்

இயம் ஸீதா மம ஸூதா ஸஹதர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருண்ஹீஷ்வ பாணிநா--இந்த ஸீதா என் மகள்-தர்மங்களை ஒன்றாகச் செய்யக்கூடியவள்-இவளை ஏற்றுக்கொள்ளுங்கள்-உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்-இவளுடைய கையை உங்கள் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும்  இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3 3-5 –பிரதிகூல நிரசனமும் அனுகூல ரஷணமும் கண்டால் -பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே –
உகந்து அணைக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கு வல்லபன் ஆனவனே-அப்ரமேயம் தத் தேஜஸ் ஜனகாத்மஜா

8-பரசுராம கர்வ பங்கம் –

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி

முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –என்னுடைய வில்லின் வலியை கண்டு போ -என்று
எதிரே வந்த பரசுராமனுடைய –அதாவது –மகேஸ்வர தநுர் பங்கம் பண்ணி –ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை திருக் கல்யாணம் புணர்ந்து பெரிய செருக்கோடு திரு அயோதியை நோக்கி எழுந்து அருளா நிற்கச் செய்தே – இந்த விசேஷத்தை கேட்டு -குபித ஹ்ருதயனாய்  
தன்னுடைய வில்லையும் எடுத்துக் கொண்டு நடு வழியிலே வந்து தோன்ற –ஸ்ரீ சக்கரவர்த்தி எதிரே சென்று பொற் பூக்களையும் காலிலே பொகட்டு அனுவர்த்தித்து –
பாலானாம் மம புத்ரானாம் அபயம் தாது மர்ஹசி -என்று அர்த்தித்த அளவிலும் – அத்தை அதிகிரமித்து தள்ளிக் கொடு போந்து – தன் சீற்றம் எல்லாம் தோற்றும்படி முகத்தை பார்த்து –முன்பே மூரிப் போய் பல இடங்களிலும் பூண் கட்டிக் கிடக்கிறதொரு சொத்தை
வில்லை முறித்தேன் -என்று கர்வோத்தரனாய் வருகிற -நீ –என் கையில் -வில்லை வாங்கி வளைத்தாய் ஆகில் சமத்தன் -என்ற நினைவால் – என் வில் வலி கண்டு போ – என்று தன்னுடைய பூர்வ பராக்ரமங்களையும் – அதுக்கடியான தபஸ்ஸும் கனக்க நினைத்து –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -என்றும் மதியாதே அடர்ந்து வந்த படியை சொல்லுகிறது-தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி – ஆனால் தன்னுடைய வில்லை தந்து காண் -என்று வில்லை வாங்குகிற அளவில் – அந்த வில்லோடு கூட அவனுடைய கர்வ ஹேதுவான தபச்சையும் அவன் பார்த்து நிற்கச் செய்தே வாங்கி எதிர் வந்தான் தன் வில் என்று – எதிரே வந்தவனுடைய வில்-என்னுதல்-எதிரே வந்த ஸ்ரீ பரசு ராமன் கையில் இருப்பதாய் -வைஷ்ணமான தனுஸ் ஆகையாலே முன்பே தன்னுடையதாய் இருக்கிற  வில் -என்னுதல் –இப்படி இருக்கிற வில்லோடு அவனுடைய தபஸ்ஸை எதிர் வாங்குகையாவது –
அந்த வில்லை வாங்கி – அதிலே சரத்தை தொடுத்து – இத்தை கொண்டு உன் பிராணனை போக்கி விட என்றால்- நீ பிராமணனாய் இரா நின்றாய் – ஆன பின்பு உன்னுடைய கதி பங்கத்தை பண்ணி விடவோ உன்னுடைய தப பலங்களை அழித்து பொகட்டு விடவோ -என்று கேட்ட அளவில்-கதி பங்கம் பண்ணினால் -எனக்கு வாசஸ்தலமான மகேந்தர பர்வதத்தே ஏறப் போகாது – என்னுடைய தப பலத்தை அழித்து விடும் -என்ன- அப்படி செய்து விட்டது –

ஸ்வரூப ஆவேச அவதாரமாய் – தசாவதார மத்யே சஹ படிதனாய் போகிற அப் பரசு ராமன் தான் நிரஸ்தன் ஆனபடி  எங்கனே என்னில்-ஸ்வரூப ஆவேசத்தாலும் -சாஷாத் அவதாரம் பிரபலம் ஆகையால் அத் யுத்கடத்வம் உண்டான போது-இதினாலே அது (ஸ்வரூப ஆவேசம் ) நிரஸ்தமாகக் குறை இல்லை-பரசுராமன் எதிர்த்தது ஜீவ ஸ்வா தந்தர்யத்தாலே -உடனே ஆவேசம் நீங்கி வேறு ஜீவன் ஆவானே தபஸ்ஸூ பண்ணி ஆவேசிக்க பிரார்த்தத்து பெட்ரா தபஸ்ஸும் போகுமே – ஸ்வ தந்திரமாய் செயல்பட்டு அனுகூலித்தால் சரி -பிரதிகூலித்தால் முடிவானே -சக்தி ஆவேசத்தில் -ஸ்வரூப ஆவேசம் பிரபலமான வோபாதி
ஸ்வரூப ஆவேசத்தில் சாஷாத் அவதாரம் பிரபலமாகத் தட்டில்லை இறே-சக்தி ஆவேசத்தில் ஸ்வரூப ஆவேசம் பிரபலம் ஆகையாலே இறே சஹச்ர பாஹ்வைர்ஜுனன் பரசு ராமனாலே நிரஸ்தன் ஆய்த்து-(வேத வியாசர் கார்த்த வீர்யார்ஜுனன் போல்வார் சக்தி ஆவேசம்
பரசுராமன் பல ராமன் ஸ்வரூப ஆவேச அவதாரம் )

செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை-10-3-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடை

ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்-9-9-முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

சீதை வாய் அமுதம் உண்டாய்-2-10-12 ஆண்டுகள் -74 ருதுக்கள் சந்தோஷமாக இருந்தார்கள்-பெருமாளுக்கு 24 திரு நக்ஷத்ரம் -பிராத்திக்கு 12 நக்ஷத்ரம்-

9-கூனியின் சூழ்ச்சி -10-வனம் செல்லுதல்-11-குகனுடன் ஸஹ்யம் -12-பாதுகா பட்டாபிஷேகம் -13-காகாசூரன் சரித்திரம்

9-கூனியின் சூழ்ச்சி -காரணம் வால்மீகி சொல்ல வில்லையே -ஆழ்வார்கள் அருளிச்செயல்களில் உண்டு

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித் தெறித்து அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே
ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி உகப்பானும் தானே என்கை –

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-ஆஸ்ரிதரை அவத்யம் பாராதே விஷயீ கரித்து பின்னை அவர்களுடைய அவத்யத்தை போக்குமவனே-திர்யக்குகளோடும் பொருந்துமவன் –என்கை அங்கன் இன்றிக்கே பெருமாளுடைய பால்யத்தில் சுண்டு வில்லையிட்டு கூனியுடைய கூன் சிதையும் படி மர்மத்தில் தெறித்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம்-கோவிந்தா -பூமிக்கு ரஷகன் -என்கை-அப்பஷத்தில் தீம்பு சொல்வது கிருஷ்ணனுக்கு ஆகையாலே பெருமாள் தீம்பை அவன் பக்கலிலே வைத்து கோவிந்தா என்கிறது

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி
கண்டகரை களைந்தானூர்      
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –கூனியாகிற அடியாட்டி ஆனவள் –திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –ஜ்ஞாதி தாசியானதொழுத்தை-இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் – ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே  திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் – மங்கள வாத்திய கோஷங்களையும்  கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து -கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்  உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் – முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே -அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று  திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே -இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி   பின்பு ராஜா உடனே  முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்  ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன் 
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான் சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண -அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு 
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார் -உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும் 
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்  வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் – நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு -ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை – என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்  ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற தன் குணங்களில் ஈடுபட்டு  பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு -காட்டோடு காடு தொடுத்து கிடக்கிற வழியிலே –நெய்வாய வேல் நெடும் கண்  நேர் இழையும் இளம் கோவும்  பின்பு போக –என்கிற படியே  பிராட்டியும் இளைய பெருமாளும் பின்னே சேவித்து கொண்டு வர  ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து  அருளி

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5–பூமிப் பரப்படைய ஆளக் கடவதான பெரிய சம்பத்தை –பாரதந்த்ர்ய குணங்களாலே பூர்ணனாய் இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு அருளி -அவனைப் போலவே நியமித்த இடத்திலே பிரிந்து இருக்க மாட்டாதே –குருஷ்வ மாம் -என்னும் ஸ்ரீ இளைய பெருமாளோடு கூடி ஒருவராலும் இயங்க ஒண்ணாத துஷ்ட சத்வ பிரசுரமான காட்டிலே பிரவேசித்தவனே-தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து-10-4-ஸ்ரீ சக்கரவர்த்தி வாய் திறக்க மாட்டாதே இருக்க -பிள்ளாய் -உங்கள் ஐயர் உன்னைக் காடேறப் போகச் சொல்லா நின்றார் – என்று கைகேயி சொன்ன வார்த்தையாலே –மந்தரை உடைய வசனத்தை கொண்டு –ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே – வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை–அம் கண்ணன்--2-1-8-கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த-அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில் முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் -என்கிறது –ராம கமல பத்ராஷா-என்கிறபடி-அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா- ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே

வனவாசம் –தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல்  துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர்
-5-10-6-சௌகுமார்யத்துக்கு அத்விதீயரான
தம்பியோடு கூட- தம்பியொடு-இவர் முன்னாலே தயாராக நிற்க–பிராட்டியோடு கூடப் போகை-நில வெம்மை தோற்றிற்று இல்லை யாய்த்து -அவற்றின் மேலே-பஞ்சடியால் -பூவிலே அடியிடிலும் கொப்பளிக்கும் படியான திருவடிகளாலே –மன்னன் இராமன் பின்-அந்நிலை வெம்மைக்கு நீரும் நிழலும் இருக்கிறபடி ––இவர் முன்னாலே தயாராக நிற்கஉன் பிரிவினும் சுடுமோ வன் காடு -ஸ்வர்க்கம் என்ன நரகம் என்ன-

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –மாற்றுத் தாய் -என்றது மற்றைத் தாய்-ஸ்ரீ கௌசலையரோபாதி  -ஸ்ரீ பெருமாள் பக்கலிலே அதி ச்நேஹிதையாய் இறே ஸ்ரீ சுமித்ரையார்   இருப்பது இப்படி இருக்கிற தாயார் ஆனவள் சென்று (ராமன் அருகில் சென்று )-நீர் வனத்திலே போம் -என்று சொல்ல –ஸ்ர்ஷ்டஸ்த்வம் வன வாசாய ஸ்வ துரக்தச் ஸூஹர்ஜ் ஜன ராமே பிரமாதம் மகார்ஷி புத்ர ப்ராதரி கச்சதி -என்றும்-ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம் அயோத்யாமடவிம் வித்தி கச்ச தாதா சுகம் -என்றும் சொல்லி இவரை ஒருப்படுத்தி-பெருமாளுடைய ஸௌகுமாரத்தையும்-போகிற இடத்தில் உண்டான கொடுமையையும் பாராமல்–பதினாலு சம்வத்சரம் வனவாசம் பண்ண சொன்ன க்ரௌர்யத்தை பற்ற -இவளைக் கூற்றுத் தாய் -என்கிறது–ஆசை உள்ளம்-எல்லாம் தனக்கேயாக -கூற்றுத்தாய் –அன்பு உள்ளம் -தனக்கும் பிறருக்கும்-கௌசல்யா தேவி –அருள் உள்ளம் – பிறருக்காகவே–சுமத்ரா தேவி -மூன்றையும் உணர்த்தியபடி-சீற்றம் இலாதனை –
கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டாள் – என்னும் சீற்றம் ஏக தேசமும் திரு உள்ளத்தில் இல்லாதவனை-மாச லஷ்மண சந்தாபம் கார்ஷிர் லஷம்யா விபர்ய யே-ராஜ்ஜியம் வா வனவாசோ வா வனவாசோ மகோதய (அயோத்யா -22)-என்று சந்தோஷத்தோடே இறே எழுந்து அருளிற்று

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!--8-6–எல்லாரும் போனார்களோ -சிறிதிடம் போய் மீண்டது என்று அன்றோ சொல்லிற்றாய்த்து –-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சொன்ன எல்லா அடிமையும் செய்யும் ஸ்ரீ இளைய பெருமாள் கூடப் போகையாலே-எல்லா பந்துக்களும் கூடப் போனார்கள் யாய்த்து இறே -என்று ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்து அருளினார்-தன் விந்தை தந்த தந்தையாகவும் தாங்குபவளான தாயாவும் ஆக்குபவள் அக்கா போலவும் பேரை உடையவ பேரனைப்போலவும் தமது பின் பிறந்தவ தம்பி போலவும் -அன்பு அறிவு அக்கறை பாசம் வழிமுறை அனைத்தையுமே காட்டி பணிவிடையும் செய்து-

உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–மனம் உருக்கும் மகனே! இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன் என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–கமலம் போல் முகமும் காணாது எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே– 9-6–வனம் தான் சேர்த்தல் தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்! நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும்
(எழுகின்ற பிறவிகளில் தோறும் -அவதரிக்கும் போதும்)நெடும் தோள் வேந்தே —9-9-நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல்-9-11--பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –இப்படித் தண்ணிய செயலை செய்தக்கால் முடியவும் ஆகாதே இருக்கவும் வேணுமோ நான் –- பிராமணரே -நீங்கள் இது சொல்லி கோள்-இது தர்மமோ-ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீ வசிஷ்ட பகவானே சொல்லாய் –அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்-தந்தையும் அம்மா என்றும் அளிக்கும் பெருமாளைப் பிரிந்து–என்னுயிர் பிரிந்து போவதை நானே பார்க்கும் பாவி-நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்-கர்மவஸ்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே-ஸ்ரீ சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரம்-

குக ஸஹ்யம்ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து-5-8-1–ஏழை-விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே – அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் – என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
ஜ்ஞானம்   பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –-யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் – விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
தர்மஞ்ஞ -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –இத்தால் ஜ்ஞான கொத்தையைச்   சொல்லிற்று –-ஏதலன் –சத்ரு-தாயைச் சோறு வேண்டும் போது வாளை விதிர்த்த வேண்டும்படியான  சாத்ரவத்தை சொல்லுகிறது –-ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி-இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது–கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்-கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும் பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே – இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே-இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி – இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –என்னாது இரங்கி-இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –இவர் இரக்கமே உபாயம்–இவ் விஷயீ காரத்துக்கு மேலே-இனிய அருளைச் சுரந்து-இன்னருள் –-தன் பேறான அருள்-சுரந்து – வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை சுரக்குமா போலே
குணங்களைச் சுரந்து –குஹே  ந சஹிதோ ராமோ லஷ்மணனேன  ச சீதயா-என்று
ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –யுன் தோழி –உனக்கு ஸ்வாமிநி- என்னாதே தோழி என்கிறார் -நீர்மையாலே-உம்பி யெம்பி –உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –-பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை அவரோபாதியாக நினைத்து இருக்கும் இளைய பெருமாள் கருத்தாலே-பிராட்டியை தோழி என்றும் -இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே-ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –தோழன் நீ எனக்கு –ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி-புருஷகாரத்தை முன்னிட்டு-ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் உண்டானால் அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது –

தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று-10-4-தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய் ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த-மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –பெருமாள் திருவடியையே அலம்பி படகில் ஏறச்சொல்ல –துகள் பட்டு கல் பெண்னானதே -அதனால் -படகோட்டி -இருவரும் –வைகுந்தன் என்னும் தோணி -அன்றோ ஸஜாதீயர்

ஸ்ரீ சித்ரகூடத்திலே எழுந்தி அருளி இருக்கிற இருப்பு தான் பெறாதே பிற்பட்டார்க்கும் இழவு தீர சர்வ காலத்திலும் அனுபவிக்கைக்காக திருச் சித்ரகூடத்திலே வர்த்திக்கிறவனை-இவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண் குளிரும்படி –-காணப் பெற்ற–கேட்டே போகை அன்றிக்கே கண்டு அனுபவிக்கப் பெற்ற

பாதுகா பட்டாபிஷேகம் -சேனை எழ-அனைவருடன் – பரதன் செல்ல கைகேயி மனமும் மாறி உடன் செல்ல-கைகேயி அப்பா அஸ்வபதிக்கு வாக்கு -பேரனுக்கு பட்டாபிஷேகம் -சுமந்திரன் சொல்ல பின்பே பெருமாள் இத்தை அறிந்தார்

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –
நாம் எல்லோரும் கூடப் போய் பெருமாள் திருவடிகளிலே விழுந்து –அவரை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவிப்போம் வாரும் கோள் -என்று எல்லோரையும் கூடக் கொண்டு –படியில் குணத்து பரத நம்பிக்கு –1-இக் குடியில் (இஷ்வாகு குடியில் ) மூத்தார் இருக்க இளையார் முடி சூடி அறிவார் இல்லை -என்று குல மரியாதையை நோக்குகையாலும் (நடுவில் பிள்ளை புகழும் ஆக்கமும் ஆக்கி -நாயனார் )-2-ஸ்வா தந்த்ர்ய பீதியாலே முடி சூட வெருவி -தன் ஸ்வரூபத்தை நோக்குகையாலும்-3-ஆர்த்தியோடே திரு வடிகளிலே வந்து விழுந்து -மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று அர்த்திக்கையாலும் ஒப்பிலாத குணத்தை உடையனான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
(படி-ஒப்பு –ஓர் ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ தெரியல அம்மா -கம்பர் )

அன்று அடி நிலை ஈந்தானை – அவன் ஆர்த்தனாய் நிற்கிற அக் காலத்திலே –
நீ சொல்ல நாம் இப்போது மீண்டோம் ஆகில் – நாம் ஐயர் சொன்னது செய்யாமல் ராஜ்ய ஸ்ரத்தையாலே மீண்டோம் ஆவோம் -நீ நம்மை மீட்டுக் கொண்டு போனாய் ஆகில் –
ஸ்ரீ பரத ஆழ்வான் இரண்டும் செய்ய வல்லனாய் இருந்தான் –-1-முன்பு கீழ் ஓலை வைத்து தாயை கொண்டு ராஜ்யத்தை வாங்கி தமையனை காடேறப் போக விட்டான் –
-2- இப்போது லோக அபவாதம் முதிர்ந்தவாறே பின் தொடர்ந்து சென்று கண்ணை பிசைந்து
காலிலே விழுந்து மீட்டுக் கொண்டு வந்தான் – என்னும் அவத்யமும் உனக்கு வரும்-ஆன பின்பு உன்னை ஸ்வ தந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் முன்னே – உன் ஸ்வரூப அனுரூபமான பார தந்த்ர்யத்தை நீ பெற்று போ -என்று அவன் நிர்ப்பந்தியாதபடி வார்த்தை சொல்லி இசைவித்து-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து -என்கிற படியே
1-அவன் ஸ்வ தந்த்ர்ய பயம் எல்லாம் போம் படியாகவும்-2-மீண்டு எழுந்து அருளுவர் -என்னும் அதுக்கு விசுவாசமாகவும் திருவடி நிலைகளைக் கொடுத்து-அடி சூடும் அரசாக்கி விட்டவனைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப் பற-ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடாமல் -அடி சூடிப் போகையாலே திரு அயோத்தியில் உள்ளவர்களுக்கு தானே நிர்வாஹனாய் ஆனவனைப் பாடிப் பற -என்று எதிரியைப் பார்த்து சொல்லுகிறாள்-மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ-4-9-1-பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது-வான் பணையம் -என்கையாலே-மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது-வான் -என்று-வலியதால் –-பெருமை யாதல்

பாதாவநி ப்ரபவத: ஜகதாம் த்ரயாணம்
ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத்
நோ சேத் கதந்நு பரதஸ்ய தம் ஏவ லிப்ஸோ:
பரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ
—-108-ஸ்ரீ பாதுகையே -பெருமாள் உன்னை அடகு வைத்து தன்னை மீட்டுக் கொண்டார் –உன் மதிப்பு பெருமாளை விடவும் மூ உலகங்களிலும் உயர்ந்ததாக இருந்ததால் தானே உன்னை அடகுப் பொருளாக ஏற்றுக் கொண்டார்-ராமராஜ்யம் விட சிறந்த ராஜ்ஜியம் -நம்மாழ்வார் –அவியின்றி யான் பெரியன் -நீ பெரியவர் என்பதை யார் அறிவர்-பாதுகாப்பூ -பாதுகையில் பூ

காகாசூரன் வ்ருத்தாந்தம் –பிராட்டி தொடையில் தலை வைத்து சயனம் –பொன் திகள் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணி வண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா
-2 6-7 –பிராட்டியும் தாமும் கூட ஜலக்ரீடை பண்ணின பின்பு பெருமாள் மடியிலே முந்துற பிராட்டி கண் வளர்ந்து அநந்தரம்-
பார்யாயேன ப்ரசூப்த -என்கிறபடியே – பிராட்டி மடியில் பெருமாள் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே – இந்திர புத்ரனான ஜெயந்தன் – ஆசூர பிரகிருதி ஆகையாலே -தேவ ரூபத்தை மறைத்து காக ரூபத்தை பரிகிரஹித்து கொண்டு ஜனனி-என்று அறியாதே -பிராட்டி உடைய வடிவு அழகை கண்டு -விபரீத புத்தியாலே வந்து திருமேனியிலே புண் படுத்த –அத்தாலே பெருமாள் சீறி அருளி -காகத்தை குறித்து ப்ரஹ்மாஸ்த்ரத்தை பிரயோகிக்க -அது புக்க இடம் எங்கும் தொடருகையாலே – ஓர் இடத்திலும் போக்கற்று -தமேவ சரணம் கத -என்கிறபடியே தன்னுடைய பிராண ரஷணம் அர்த்தமாக  வந்து சரணம் புக – அத்தாலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண் அழிவை கற்ப்பித்து பிராணனோடு   போக விட்ட கதையைச்  சொல்லுகிறது-விபரீத புத்தி அடியாக பிராட்டி உடைய வடிவிலே சென்று உற்ற இரண்டு கண்ணில் ஒரு கண்ணைப் பறித்து விட்டவன்-அக் கற்றை குழலன் கடியன்
அப்படிப்பட்ட ஸ்வாபவனாய்-செறிந்த திருக் குழலை உடையனாய் இருக்கிறவன்- குற்றத்துக்கு ஈடாக தண்டிக்கும் க்ரூரன்-இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது அது இல்லாமையால் ராவணன் மாண்டான்-ஒரு கண் கொண்டே இருபக்கமும் பார்க்கும் திறனையும் கொடுத்து அருளினவன் -கா ககா எவன் எவள் -எவனுக்கு ராமன் போல் கருணை உள்ளது எவனுக்கு சீதா போல் கருணை உள்ளது -ஆகவே காகா கத்துகிறது –

முனிவர் தவம் செய்து இருக்கும் இடம் சித்ரகூடம் -அயோத்யா மக்கள் அறிந்த இடம் -தண்டகாரண்யம் சென்றால் தானே அசுரர்களை முடிக்க முடியும் -போகும் வழியில் அத்ரி அநஸூயை ஆஸ்ரமம் -ரிஷி பத்னி பிரசாதம் -பெற்றார்கள்

மேல் ஏழு நிகழ்வுகள் பார்ப்போம் – அகஸ்தியர் இடமும் விஷ்ணு தனுஸ் வாங்கியது -சூர்ப்பணகை அங்க பங்கம் -கர தூஷண வதம் -மாரீச வதம் -பிராட்டி பிரிவு -ஜடாயு மோக்ஷம் -சுக்ரீவ பட்டாபிஷேகம்

போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——செல்வம் மிகுந்த நாட்டை உபக்ஷித்துவிட்டு-திக்குகள்தோறும் மின் போன்ற கானலே பரவி யிருக்கப் பெற்றதும்.-எல்லாம் சூந்ய ஸ்தலமாகவுமிருக்கப் பெற்றதும்-கல்லுகள் நிறைந்து (புல்லுகள்) தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சுழல்காற்று அடித்துக்கொண்டிருக்கப் பெற்றதும்–அதற்குமேலும்-ஆஹாரமில்லாமையால்) மடிந்த வயிற்றேயுடைய பேய்களே திரிந்து கொண்டிருக்கப் பெற்றதும்-கொலையைப் பற்றின சப்தமே கிளம்பிக்கொண்டிருக்கப்பெற்றதுமான-வெவ்விய காட்டினுள்ளே-உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்விய பருக்கைக் கற்களின் மேலே (எழுந்தருளின வளவிலே)வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய்-அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே-பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே-தானும் நடந்து செல்லவில்லையா?

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் -3-4-6-ஜாதி பிரயுக்தமான கண்ணில் பசுமையையும் மிடுக்கையும் சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைய வாலி முடியும்படியாக-பரந்த காட்டிலே உண்டான சத்வங்களை அடைய
இரண்டு கையாலும் வாரி பஷித்துக் கொண்டு வருகிற கபந்தனோடு கூட-படையார் திண் கை –-திண்ணிய படையார்ந்த கை-வெவ்விய கண்களையும் மிடுக்கையும் உடைய விராதன் முடியும்படியாக வில்லை வளைத்த(ராகவ் ராம லஷ்மன் இருவரும் -கட்கம் கொண்டு விராதனை முடித்ததாக ஸ்லோகம் வில் என்றது உப லக்ஷணம் )விராதன் மூவர் நடப்பதைப் பார்த்து —அவனை முடித்தது மேல் பலர் மாளாப் போவதற்கு முன் நோட்டம்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து

மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5-1-கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்--மாய மானாக வருவான் இங்குதே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே
காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது- (கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)அப்படியே இங்கும் துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும்  ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய் வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே
?– 9-2–இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –என்னாயனே நான் என் செய்கேன் –நேர் இழையும்-சக்ரவர்த்தி நிர்பந்திக்க–ஆபரணங்கள் அணிந்தே சீதாபிராட்டி செல்கிறாள்-அத்ரி கொடுத்ததையும் அணிந்தே போகிறாள்- -பின்பு வானர முதலிகளை இவை கொண்டே கடாக்ஷிக்க வேண்டுமே–அக்ரே ராம மத்யே ஸீதா ஸூ மத்யமா ஹா-பெருமாள்-பிராட்டி -இளைய பெருமாள் மூவரும்பிரணவமே நடந்து செல்வதைப் போல் நடந்தார்கள்

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை-10-5-எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று-ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-(10 வர்ஷம் வனவாசம் பின்பே அகஸ்தியர் இடமும் இருந்து சிலை வாங்கினார்)கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி-இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து-அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை-

அகஸ்திய பாஷா -தமிழ் -வண் -அனைவரும் புரியும்படியாக வள்ளல் தன்மை கொண்டது- வரி சில் -சிறந்த அழகிய -மா முனி வடிவத்தில் சிறியவர் கீர்த்தி பெரியவர் -கீழே -பரசுராமர் இடம் -வாங்கி -வில்லுடன் போகாமல் -வருண தேவன் வாங்கி அகஸ்தியர் இடம் கொடுத்து பின்பு வாங்கிக் கொண்டார் -ஆச்சார்யர் இடம் வாங்கிக் கொண்டது போல் -நாசிக் -பஞ்சவடி -ஐந்து ஆலமரம் சூழ்ந்த இடம் –மூன்று வருஷங்கள் இங்கு இருந்தார்கள்
சூர்ப்பணகை அங்க பங்கம் -இவள் கணவன் வித்யுஜ்ம்ன ராவணன் முன்பே கொன்றான்

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-மேல் எங்கும் பரந்து ஒளியை உடைத்தாய் இருக்கிற எயிறானது ஒளி விட –மின் போலே விளங்க –மின்னின் எதிர் விழிக்க ஒண்ணாதாப் போலே மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது
மின் போலே விளங்க –துணுக் என்ன வேண்டும்படியான வடிவை உடையவளை –மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது மின் போலே விளங்க –முன்னே சஞ்சரிக்கிற வடிவை உடையவள் -என்றுமாம் –பிராட்டியோடு போலியாகப் பண்ணிக் கொடு வந்த-( பேணிக் கொண்டு வந்த )அவயவங்களைப் போக்கின திருக் கைகளை உடையவனே-ராமஸ்ய தஷிணோ பாஹூ பாஹ்ய பிராணன் (இளைய பெருமாள் )-என்னக் கடவது இறே –
(கொல்லை அரக்கியை மூக்கு அறுத்து விட்ட குமாரனார் )

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்-இருவரும் பொருத்தமான –நல் தங்கை-வாள் போன்றபற்களையுடையளும்-எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான-சூர்பணகை யென்பவள்-அதிகமாக வுண்டான காம நோயினால்-வைவர்ணிய மடைந்து-பரவசப்பட்டு (தளர்ந்து)-தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை-தான் சீறி-மூக்கை யறுத்து-இதையே ஒரு ப்ரதிஷ்டையாக நினைத்துக கொண்டிருப்பதென்ன.-“ஸ்த்ரிவதம் பண்ணினால் அநுதாபமுமின்றிக்கே பெரிய ஆண் பிள்ளைத் தனம் செய்ததாக நினைத்திருக்கிற நிலை நின்ற த்ருடதவமும்“ 

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன்
-3-9-4—திருநக்ஷத்ரம் பெருமாளுக்கு-37 -சூர்ப்பணகை -அனைய யுக -த்ரேதா யுகம் -13 வது -மாறுவேடம் பூண்டு வந்தாளே–விளங்கா நின்றுள்ள பரியட்டத்தை உடைத்தான அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடையளாய் கொண்டு தோற்றின ராஷசியைக் கொண்டாடும்படி இருக்கிற பெண்ணை –தனக்கு ஒரு பரியட்டமும் பெருமையும் உடையளாய் வந்து தோற்றினாள் ஆயிற்று – அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று-அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு
தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின
தோள் வலியை உடையவன் 

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான்-
1-5-5–மேல் விழுந்து கிட்டி-ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு – கிளர்ந்து வந்து தோற்றினவள் –பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை(காதுக்கும் இது உப லக்ஷணம்
நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
அயில்-கூர்மை கூரிய திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்-கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி நித்ய ஸூரிகள் கார்யத்தை நிர்வஹித்துக் கொண்டு போகிறவன்-

கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து தன்மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகளா மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே!”.–தண்ணிய ஸ்திரீ-ராவணன் உடன் பிறந்தவள் ஆகையாலே இலங்கையில் உள்ளார் அடையக் கொண்டாடும்படி இருக்கிறவள்-பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து-அனன்யை யானவளை நோக்கி வந்த படியாலே
தன் மேலே வந்ததாய் இருந்தபடி
-ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி
தானான படியே யாக்கி விட்ட படி- இவனை புஜிக்கைக்கு விரோதி இவள் இறே என்று
பிராட்டியை நலிவதாக வாயை அங்காந்து கொண்டு வந்தாள் ஆய்த்து    – அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற
-3 -9-8 –காம ரூபிணி ஆகையாலே   -ஸ்வ வேஷத்தை மறைத்து –(காம ரூபிணி–இஷ்டமான ரூபம் கொள்ள வல்லவள் ) அத்யந்த அபிமதமான ஒரு ஸ்திரீ வேஷத்தை கொண்டு வருகையாலே – நுடங்கின இடையை உடையளான சூர்பணகயை -தன் அழகைக் காட்டி – என்னை விஷயீ கரிக்க வேணும் -என்று வந்த அளவில் –பிராட்டியைக் கண்டு -நமக்கு இவள் ஒரு ஸ்திரீ உண்டு -அங்கே போ -என்று
இளைய பெருமாளைக் காட்ட – அங்கே சென்ற அளவில் -நான் அவருக்கு சேஷ பூதனாய் இருப்பான் ஒருத்தன் – இன்னம் அவர் பக்கலிலே போ -என்ன-இப்படி உபாலம்பிக்கையாலே (பரிஹாஸ ரஸத்தை அனுபவிக்கையாலே ) அவள் அதிக்ருதையாய் -பழைய வேஷத்தை கொண்டு- எடுத்துக் கொண்டு போகப் புக்க அளவிலே – (பிராட்டி மேலே காய்ந்து -எடுத்து விட்டு -சண்டை போடப் புறப்பட்டு வியாக்யானங்களில் காண்கிறோம் ) செவியோடு கூட அவள் மூக்கையும் – அவள் கதற கதற அறுத்தவனை-ராமஸ்ய தஷிணோ பாஹூ –என்கிற படியே இளைய பெருமாள் கரண பூதர் ஆகையாலே அறுத்ததில் கர்த்ருத்வம் பெருமாளதாகச் சொல்லுகிறது-பஹிர் பிராணன் அன்றோ இவன்-

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-வரம்பு அழிந்த செயலை உடையவள் -மரியாதை தப்பி நின்றவள் இறே
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப் பற்ற பிராப்தமாய் இருக்க –
அவளோடு மலைந்து பெறப் பார்த்தவளை –இவளே இறே இவனோட்டை அனுபவத்துக்கு தண்ணீர் துரும்பு -என்று அவள் மேலே விழுந்தாள் யாய்த்து –தமக்கு அனந்யார்ஹராய் இருப்பாரோடு உண்டான சம்ஸலேஷத்துக்கு விரோதிகளாய் வருவாரை
அழியச் செய்யுமவர் கிடீர்-நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் – தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள்-அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே –தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக நினைத்து இருந்தாள் யாய்த்து — இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –

ஜனஸ்தானம் ஓடுகிறாள் –கர தூஷண வதம் -பஞ்சவடி அருகில் உள்ளது -ஓன்று விட்ட சகோதரர்கள் -14000 அரக்கர்கள் –அன்று நேர்ந்த நிசாசரரைக்-கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்அன்று – ஜன ஸ்தானத்திலே இருக்கிற வன்று ரஷகனாவன் ரஷ்யத்தை நோக்கக் கடவதாக வந்து நின்ற அன்று –நிசாசரர் -வெளியில் முகம் கண்டு அறியாத பையல்கள்-கவர்ந்த-புறப்படும் போது வினயத்தோடு புறப்பட்டு வேட்டை நாய்கள் ஓடி மேல் விழுமா போலே விழுகை-விடும் போது அம்பாய் படும் போது காலாக்நி போலே இருக்கை-தீப்த பாவக சங்காசைத்தரை -என்கிறபடியே பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லது நில்லாத வெம்மை-குடிப் பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்தபடியும் வீரவாதியும்-

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்

திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே–8-9-3-தோலாத தனிவீரன்-பிரசித்தமான வீரத்தை உடையவனும்-பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான்–ஞானம் உடைய திரு ஆழி முதலான ஆயுதங்களாலே-புகழப் பட்ட வெற்றி ஒலியை உடைய பெருமானே–சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை-பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா –சுந்தர -105-6-என்கிறபடியே-கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று- பகைவர்கள்-புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –ஆயுதம் தரித்தவனாய்-போரிலே புக்கு தீயோர்களை முடித்தான் –பொன்றுவித்தான் -முடித்தான்-

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –-59-கரன் அரக்கன் நிரஸனம் ராம பெருமான் –காலனோடு கூட வில் குனித்த – இவர்கள் பேர் கேட்க அஞ்சும் காலன் இவர்களுக்கு நிர்வாஹகனாய் இவர்கள் அஞ்சிச் சென்று கூப்பிடும்படியாக
சங்கல்பத்தாலே அன்றி -வில்லாலே -அழியச் செய்தவனே –வில் கை வீரனே —
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்கைக்கு வில் வளைக்கவும் வேண்டாதே
சக்ர சாப நிபே சாபே க்ர்ஹீத்வா சத்ரு நாசநே -என்னும்படியே வில் பிடித்த பிடியிலே
அவர்கள் முடியும்படி
ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனே –ஒன்றரை முகூர்த்தத்தில் -அகம்பணன் மட்டுமே பெண் வேடம் பூண்டு தப்பிச்சென்று ராவணனிடம் சொன்னான்-அவட்க்கு மூத்தோனை வெந் நரகம் சேரா வகையே வில் குனித்தான் – -கையும் வில்லையும் பார்த்ததே -பல்லாயிரம் நரக வேதனை இங்கேயே அனுபவித்தான்-கூடலர் சேனை பொருது அழியச்  சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் -4-1-3-மகர்ஷிகளை நலிகையாலே சத்ருக்களான ஜனஸ்தான வாசிகளான ராஷசர் உடைய  சேனையானது –
விசேஷம் சொல்லவும் ஒருவர் இல்லாதபடி அழியும் படியாக பொருது –(அகம்பனன் ஒருவன் இருந்தானே என்னில்-கர தூஷணாதிகள் உடன் யுத்தம் செய்ய வந்தவன் அல்லவே இவன்-புடவை சுத்தி இருந்தேன் -பெண் என்று நினைத்து என்னைக் கொல்ல வில்லை என்றானே ராவணன் இடம் )

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன்
-3-9-4-தலை இலங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த-அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன்-ராவணன் இடமும் சொல்லி -மேல் மாரீச வதம்-(கிவாஜா கடை சிப்பந்த்திக்கு கடைசி பந்தியா –இம்மைக்கும் மறுமைக்கும் சரியில்லை -இம்மை மறுமை சரியில்லை பேச மைக் சரியாக வேலை செய்யாததால் சொன்னாராம்)

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-இலை மலி பள்ளி
 -பர்ணசாலைக்கு தமிழ்-பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே –ஆஸ்ரமத்வார மாகம்ய  -இத்யாதி –எழிலை உடையாளாய்
இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய் ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு
வந்த மாயா மிருகத்தை நிரசித்து  –பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே-ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம்  மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர் நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை-2-5-6-புள்ளி மான் துள்ளி விளையாட-கிளர்ந்து –நாநா வர்ணமான பொறியை உடைத்தான மான் குட்டியை பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன துஷ்ட ம்ருகமாகையாலே அது அங்கே இங்கே சஞ்சரிக்க
அதின் பின்னே அடி தீயப் போனவனை – பிராட்டி பிரிவு விளையும்  படியாக இறே
கை கழியப் போன படி –

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-
கைகேயி வரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்-ஏத்துகை –அடிமையாய்-இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –(பேய் முலை உண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன்-ஆயப்பிள்ளை அதே போல் இங்கும் அம்மானை பத பிரயோகம் )பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று ஒருவன் கவி பாடவும்-எம்பெருமானார் கேட்டு அருளி மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த –ஹா ஸீதா ஹா லஷ்மணா கத்திப் போக -லஷ்மணன் மேல் சுடு சொல் -லீலைபாகவத அபசாரம் க்ரூரம் என்பதைக் காட்டவே –

பிராட்டி பிரிவு -முக்கோல் முனிவர் வேஷம்-காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம்பெருமான்-2-2-1-காஷாய வஸ்த்ரத்தை இட்டு
உடம்பு எங்கும்  மறையும்படி மூடி ராம பயத்தாலே பயந்து நடந்து போய்-ஜநநீ என்று பாராதே –வீத ராக வேஷத்தைத் தரித்து வைத்து ராகத்தைப் பண்ணின –பையலுடைய ஊரானது –ஸ்மாசந சத்ருசமாம்படி யாக திரு உள்ளத்திலே கொண்டருளி அப்படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான வீரஸ்ரீ யால் பூரணன் ஆனவன் –லஷ்மண ரேகா -வால்மீகி கம்பர் -இவர் தாயுக்கு கட்டளை இடமாட்டாரே -ராவண சன்யாசி -பர்ணசாலைக்குள்ளே வந்து உபசாரம் பெற்றான் -உள்ளே வந்து தானவன் ஆனான்-பிரமனின் சாபத்தால் தப்பான நோக்கால் தொட்டால் தலைகள் வெடித்து சுக்குநூறாகும்

தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.
-4-8-5-ஒளியையும் ஒளியைஉடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி? விளப்புற்ற – 1‘கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, ‘தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்; அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே 2‘இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது.-சிறை இருந்தவள் ஏற்றமே ஸ்ரீ இராமாயணம் -அசோகவனம் அடைய பெருமாள் சோகவனம் -வால்மீகி கவனம் கவிதை -நாம் வனம் கண்ணீருடன் கேட்க்கிறோம்

தன மருவு வைதேகி பிரியல் உற்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
-10-6-திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுசடாயுவை வைகுந்தத்து ஏற்றிமாம் –தேவத்வம் அஸ்நுதே -இவள் கடாக்ஷத்தாலேயே தேவனானன்-ஜடாயு மோக்ஷம் –

ஆயுஷ்மன் -அந்த தருணத்திலும் மங்களாசாசனம் -பெரிய உடையார் -செய்தியும் சுருக்கமாக சொல்லி -தேவி மம பிராணன் கூட கொண்டு சென்றான் -விந்தோ நாம முஹூர்த்தம் -விந்தம் முஹூர்த்தம் காணலாம் போனது மாறுதல் இல்லாமல் உடையவனிடம் சேரும் கவலைப்படாதே –சடாயுவை வைகுந்தத்து ஏற்றி-10-6-பரத்வம் பீடிற்று கச்ச லோகான் அநுத்தமான்சத்யேனே லோகான் ஜயதி–ஈமச் சடங்கும் செய்து முடித்தான்

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
-2-10-5-பர ஹிம்சையில் த்வரையாலும் எப்போதும் ஒக்க சத்ரு நிரசனம் பண்ணுகையாலும் கறை கழுவுகைக்கு அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே மிக்க கறையை உடைத்தாய் இருக்கிற வேலை உடைய கரன் துடக்கமாக கபந்தன் வாலி -என்கிற இவர்கள் – கரன் விராதன் இவர்கள் வந்து தோற்றுகிற போது சிம்ஹங்கள் புலிகள் இவற்றை சூலத்திலே கோத்துக் கொண்டு வந்து இறே தோற்றுவது–கணை யொன்றினால்-கைக்கு எட்டிற்று ஓர் அம்பாலே முடித்தான் இறே

கவந்தனை முடித்து ரிஷ்யமுகம் -வந்து சபரி மோக்ஷம் –ஆழ்வார்கள் அருளிச் செயலில் இல்லை -பெருமாள் சாக்ஷியாக மட்டும் –சாஷீ பூதர் மதங்கர் முனி ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் பெற்றவள் -ரஹஸ்ய கிரந்தங்களில் உண்டு-ஆச்சார்யர் திருவடிகளை அடைகிறோம் –தானே வைகுந்தம் தரும்

சுக்ரீவ பட்டாபிஷேகம் -திருவடியை முதல் முதலில் கடாக்ஷம் -அக்னி சாக்ஷியாக -நட்ப்பு -உடன்படிக்கை சுக்ரீவ மஹா ராஜர்

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-ப்ரஹ்மாதிகள் அளவு அல்லாத திர்யக்குகளுடைய ரஷணத்துக்காக சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து – தேவதாந்தர ஸ்பர்சத்தாலே ஸ்வரூபம் அறிந்த வாலிக்கு – ராம பாணா சைஷிப்த மாவஹத் பரமாங்கதிம் -என்கிறபடியே ச்வஹஸ் தவதத்தாலே மோஷ ப்ரதன் ஆகைக்காக தசரதாத் மஜனாய் வந்து-தனக்கு துஷ் ப்ராபமான ரிச்யமுகத்திலே பகையான மஹாராஜர் இருக்கையாலே பகை மீளப் பெறாத நாம் என்ன ராஜ்யம் பண்ணுகிறோம் -என்று நெஞ்சு அழிந்த வாலியாலே மஹாராஜருக்கு பிறந்த ஆபத்தை தீர்க்கைக்காக வந்து என்றுமாம் –தம்பி தனக்கு -மவ்வுக்கு -ன -ஆதேசமாய் தம்பி -என்றதை -தன் -என்று கடைக் குறைத்தலாய்க் கிடக்கிறது -என்று ஒரு தமிழன்-ஆபத்திலே ரஷிக்க வர கண்டு -ரஷணத்திலே அதி சங்கை பண்ணின மஹாராஜர் விஸ்வசிக்கைகாக -இலக்கு குறிக்க ஒண்ணாதபடி மிடைந்து நிற்கிற மராமரங்கள் ஏழையும் அநுக்தமான கிரி ரஸாதலங்கள் ஏழையும் அடங்கத் துளைத்து வாலி -ஸ்வ பரிஷை பண்ணுவது ஒரு மராமரத்தளவிலேயாய் இருக்க – மஹாராஜர் உடைய அதி சங்கையை சவாசனமாக போக்குகைக்காக ஏழு என்ற பேர் பெற்றது அடைய எய்தார் ஆய்த்துவாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
-அவதாரத்தில் தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த சீலமும் –பிற்பாடானவர்கள் இழவாமைக்கு திரு மலையில் ஆஸ்ரயித்து நிற்கிற வ்யாமுகன்-வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று-1-2-1-வாலி என்று பேராய்-மஹா பலத்தில் வந்தால் தன்னை எண்ணினால் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி அத்விதீயனாய் இருக்கிறவனுடைய உடலானது சிந்தும்படியாக தர்சநீயமான வில்லை வளைத்து – வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும் -அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி யரசளித்தாய்
-4-6-3-உருவென்று சீற்றம்
வெஞ்சினத்த  வேழ வெண்  மருப்பு ஒசித்து உருத்த மா கஞ்சனைக் கடந்து -திருச்சந்த -என்றது இறே-மிக்க சீற்றத்தை உடையனாய் அகாலத்திலே வந்து அறை கூறுகிறவன் தான் யார் -என்று பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின-அங்கே நாமி பலம் இங்கே நாம பலம் திருமாலை வியாக்யானத்தில் -விட்டார் விட்ட அம்புகள் அடங்கலும் வாய் மடிந்து போம் இத்தனையாய் தனக்கு ஓர் அழிவு இல்லாதபடி இருக்கிற வாலியுடைய திண்ணிய மார்விலே- ஏகேந மகேஷூணா-என்கிறபடியே கைக்கு எட்டிற்று ஓர் அம்பை வாங்கி
மறுபாட உருவும்படி நடத்தி ஒசழக்காக –அஸ்ரத்தையாக-விட்ட அம்பு தானே மறுபாடு உருவம்படி நடத்தி (ஏழு பெயர் உள்ள மலைகள் கடல்கள் பாதாள லோகங்கள் நடுங்கும் படி )-வாலி செலுத்திப் போந்த ராஜ்யத்தை அப்படி நடத்துகைக்கு ஈடான கருத்தை உடையவன் -என்னுதல்-வாலி பேர் கேட்க வனம் அடைந்து கிடந்த சுக்ரீவன் தன்னையே (ஆளாக்கி ஜெயிப்பித்தாய் )ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்னச் செய்தே இறே பின்னையும் அவர்களை ஜெயிப்பித்தது உனது திரு உள்ளம் படியே உன் திரு உள்ளம் உடைய மகா ராஜர்க்கு என்றுமாம்இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்-இன்பத்தை விளைப்பதாய்
ஆனந்தாவஹமாய் மதிப்புடைத்தான முடியையும் அதுக்கு விஷயமான ராஜ்யத்தையும் கொடுத்து அருளினாய்-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-திர்யக்கான வாலியை வீழ்த்தது இது –(மறைந்து கொன்றது குற்றம் இல்லை திர்யக் என்பதால்

கழி சினத்த வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன்
–85–அதிக கோபத்தை யுடையனாய் -பலிஷ்டனாய் -வானர ராஜாவான வாலியினுடைய கர்வத்தைப் போக்கின தநுர்த் தரனான சக்ரவர்த்தி திருமகன்-ஸஹ ஜீவ காருண்யம் இல்லாதவனுக்கு இறைவன் காருண்யம் பெற வாய்ப்பே இல்லையே

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-எதிர் இல்லாத யுத்தத்தை பண்ணி -உன் கோப அக்நியாலே தக்தர் ஆனவர்களுக்கும் – மஹா ராஜரோடே வாலி பண்ணின யுத்தத்தை யாய்த்து இவர் –மாறிலாத போர் –என்கிறது –ராம பாணா ஹத -ஷிப்ர மா வஹத் பரமாங்கதம் -என்று வாலி உடைய பகவத் ப்ராப்தியை சொன்னான் ஸ்ரீ வால்மீகி பகவான் –ஆதலால் – உன்னை நிந்தித்தாருக்கும் எதிரிட்டாருக்கும் அகப்பட குண ப்ரபாவத்தாலே உன்னைப் பெறலாம்

சேனைகளை நாலாபுறமும் அனுப்புவது -கணையாழி கொடுத்து திருவடியை தெற்கே அனுப்பி -ஸூந்தர காண்டம் -அனைத்து ராமாயண செயல்களும் இதில் உண்டு -திரிஜடை கனவில் எதிர்காலம் நடக்கப் போவதும் உண்டு -ஸூந்தரன் திருவடிக்கு அஞ்சலிதேவித் தாயார் இட்ட திருநாமம் -மற்றவை காரணப் பெயர்கள் -அவர் பெருமையைச் சொல்லும் காண்டம் இதுவே-அங்குலீய அளித்து சூடாமணி பெற்று திரும்பினார்- -விபீஷண ஸரணாகதி -சேது பந்தனம் –

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-குரங்கை யாள் உகந்த வெந்தை –
கீழ் சொன்ன பஷபாததுக்கு த்ர்ஷ்டாந்தம் சொல்லுகிறது-.-ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக- ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே-எந்தை – என்று நித்ய ஸூரிகளை அடிமை  கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது  பேறாக நினைத்து
இருக்கையாலே என் நாதனே என்கிறார் –அரங்கனே கூறு தேற வேறிதே — ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்- இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் –வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது பெரிய பெருமாள் பக்கலிலே

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–
2-2-3-த்வாபரத்தின் உடைய ஆதியிலே
பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமை மீதூர்ந்து கடலிலே புக்கு முடியும் அளவானவாறே ஒரு குரங்கின் வாயிலே வார்த்தையைச் சொல்லி விட்டான் –அரக்கன் உடைய வராதிகளாலே
பூண் கட்டின ஊரை –ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக் கேளாத ஊரை மனிச்சுக்கு ஏகாந்தமான
அம்பாலே அழியும்படி சீறினான் ஆயிற்று – *ஸத்ய வாக்யனாக இருந்தால் என்று பிரதிஜ்ஜை செய்து விட்டாரே பெருமாள்)-கடலில் நீரே நெய்யாகப் பற்றி எரிய வல்ல அம்பு உடையனாய்-ஆதி மன்னர்க்காகி-பாண்டவர்க்காகி-பாண்டவ தூதன் -ஸ்ரீ பாடகம் -வைத்துக் கொண்டு உகந்து அருளுகிறானே

100யோஜனை 1000 மைல் தள்ளி திரேதாயுகத்தில் இலங்கை இருந்ததாம் – சம்பாதி கழுகு பார்வை

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழே யாம்படி கடந்து அக்கரைப் பட்டு –ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே

நான் தேட கிடைக்கவில்லை -நான் இல்லாமல் பிராட்டி அருளாலே காட்டக் கண்டார் -நமோஸ்து ராமாய-இத்யாதி–அசோக வனம் சிஞ்சுபா மரத்தில் – அமர்ந்து-grey brown கலந்த நிறம்-

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்
–3-10-1-மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ உமது அடியவனான என்னுடைய விஞ்ஞாபனம் ஒன்றைக் கேட்டருள வேண்டும்-நெருங்கின ரத்தினங்களை யுடைய கிரீடத்தை அணிந்த ஜனக மகா ராஜன் கன்யா சுல்கமாக ஏற்படுத்தின ருத்ர தனுசுவை முறித்து -உம்மை -பிராட்டியை -திரு மனம் புரிந்து கொண்டதை தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச் -தெரிந்து கொண்டு துஷ்ட ராஜாக்களை பயிருக்குக் களை களைவது போலே
அழித்து- 21-தலைமுறை கார்த்த வீர்யார்ஜுனன் போல்வாரை -அழித்து அரிய தவத்தை யுடைய பரசுராமன் நடுவழியில் தடுக்க தனக்குத் தகுந்த அப்பரசுராமன் கையில் இருந்த விஷ்ணு தனுசுவை –இதனாலே செறிந்த சிலை -வாங்கிக் கொண்டு அப்பரசுராமனுடைய தபஸை அழித்ததுவும் ஒரு அடையாளமாகும்-தவத்தை சிதைத்தது அடையாளம் -என்னாதே
சிதைத்தும் ஓர் அடையாளம் -என்கையாலே
இன்னும் பல அடையாளங்களும் சொல்லுவதாக நினைத்துச் சொல்கிறான் என்னும் இடம் தோற்றுகிறது- சங்கா நிவ்ருத்தி பிறக்கும் அளவும் சொல்ல வேணும் இறே

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்
–3-10-2-வால்மீகிக்கும் தெரியாத அடையாளம் -உன்னுடைய விக்ரமம் -ஓன்று ஒழியாமல் எல்லாம் – பெரியாழ்வார் மட்டுமே அறிந்து அருளிச் செய்த அடையாளம் இது பெருமாள் சொல்லி விட்ட அந்தரங்க அடையாளம்என்னுடைய ஸ்வரூப அநு ரூபமாக தேவரீர் திருவடிகளில் வணங்கி
தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன்(அடி பணிந்தேன் -காயிக விருத்தி
விண்ணப்பம் -வாசிக விருத்தி ) இனி வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி விண்ணப்பம் செய்யத் தக்கது ஓன்று உண்டு என்ன-ராத்ரி காலத்தில் பெருமாளும் தேவரீருமாய் ரஸோத்தரமான இருப்பாக இருந்த தொரு ஸ்தலத்திலே-ஸ்லாக்கியமான மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளை பந்தி வைத்ததும் ஓர் அடையாளம்-பெருமாளுடைய- பிரணயித்வ-பாரதந்த்ர ப்ரயுக்தமாய் -போக தசையில் நடப்பதொரு ரசமாய்த்து இது ஆகையால் அல்லாத அடையாளங்கள் போல் அன்றிக்கே அத்யந்த ரஹஸ்யமாய் இருப்பது ஓன்று இறே இது தான்-ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே -புஞ்ஜாநா அமானுஷாந் போகான் சர்வ காம ஸம்ருத்தி நீ -என்று இவள் தானும் பெருமாளும் அறியும் அத்தனை இறே –

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம்
–3-10-3-குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே
தான் புறப்படுவதுக்கு முன்னே இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
–3-10-4-ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே – பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே-ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே – மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
–3-10-5-பான் மொழியாய்
பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –தேவர்கள் ராமன் பரதன் மட்டுமே காணும்படி வந்து சொன்னதும் பாதுகா தேவியைப்பெற்று திரும்பினான்

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6-பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே-ஒரு தர்ப்பத்தை எடுத்து -அதில் ப்ரஹ்மாஸ்திரத்தை யோஜித்து அத்தை அந்த காகத்தின் மேலே செலுத்தி விட-எல்லாரையும் குணத்தால் ரமிப்பிக்க வல்லவனே என்று சரண்யனான பெருமாள் குணத்தைச் சொல்லி ஓ என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கொண்டு –
உனக்கு அபயம் -என்று சரணாகதனானமை தோற்றக் கூப்பிட கிருபையால் பெருமாள் ரஷித்து அருளுகிற அளவில் காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணி அஸ்திரத்துக்கு ஒரு கண் அழிவு கற்பிக்கையாலே முன்பு தலை அறுப்பதாக தொடர்ந்த அஸ்திரம் தானே
அதனுடைய ஒரு கண்ணை அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் 

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்
-3-10-7- -தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று–ஹா சீதே ஹா லஷ்மணா -என்று பெருமாள் மிடற்று ஓசை போலே கூப்பிட்டுக் கொண்டு விழ–பெருமாளுக்கு ஏதேனும் அபாயம் வந்ததாக நினைத்து – இத்தைச் சடக்கென போய் அறியும் -என்று தேவரீர் அருளிச் செய்யச் செய்தேயும்-இங்குத்தைக்குக் காவலாக நிறுத்திப் போகையாலும்- பெருமாளுடைய ஸுர்யத்தை அறிகையாலும்-அங்குத்தைக்கு ஒன்றும் வாராது தேவரீர் பயப்பட்டு அருள வேண்டா -என்று விண்ணப்பம் செய்து – தாம் போக மாட்டாமல் சுற்றிக் கொண்டு நிற்க –அவர் நில்லாமல் போக வேண்டும்படி தேவரீர் சில அருளிச் செய்கையாலே பிற்பாடு அங்கே இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஓர் அடையாளம் –

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே
–3-10-8-கீழ் ஏழு விண்ணப்பங்கள்-தனக்கு சுல்கமாகக் கல்பித்து இருந்த வில்லை முறித்த பெருமாளுடைய திருக் கையிலே அப்போது கிடந்ததாய் பின்பு பாணி கிரஹணம் பண்ணுகிற போது தன் கையில் உறுத்தினதாய்- சர்வ காலமும் பெருமாள் திருக் கையில் கிடக்குமதான திருவாழி மோதிரத்தைக் கண்டு-அநுமானே நீ முன்பு சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒக்கும் என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லி
க்ருஹீத்வா ப்ரேஷா மாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம் ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத் –என்கிறபடியே அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் – அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் – அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி -முன்பு ஊடலில் கடகராக கணையாழி தானே என்பதை நினைத்துப் பார்த்து-பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே
–3-10-10-பெரியாழ்வார் திருவடி நிலையில் அருளிச் செய்தவை-சூடாமணி கொடுத்தருளி -கோணலாக திலகமிட்டு வைத்த வ்ருத்தாந்தம் சொல்லி -கால் பிடிக்க தயங்கி -கல்மோதிரங்கள் பெண்ணாகுமே -சிந்தையாலும் மற்ற பெண்களை நினையேன் சொன்னதையம் சொல்லி —

அசோகவன துவம்சம் –யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்து-10-2-6-ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –காதல் மக்களும் சுற்றமும் கொன்று –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –முன்பு ராம தூதன் இப்பொழுது ராமதாசன்-உன் வரங்கள் பொய்க்கலாம் பெருமாள் சரங்கள் பொய்க்காது -தேவியைக் கொடுத்து விடு இல்லையே; ஆவி போகும்தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே – வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே–கடி யிலங்கை மலங்க எரித்துத்-அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து – (வாயு குமாரன் -அக்னி பெற்றதாயும் குமாரனும் சேர்ந்து வந்து -வாயு அக்னி பெற்றது அன்றோ -)-இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ

தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே
–6-4-6-கடலை அகழாக-(அகழியாக துர்கமாக ) உடைத்தான இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி விலங்காலே எரி ஊட்டினான்-இலங்கு எரி ஊட்டினான்-பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே வயிறு நிறைய புஜித்து தன்னிறம் பெற்று உஜ்ஜ்வலமாம் படியைச் சொல்லுகிறது-முன்பு சோறு வேவப் பண்ணுகைக்கு வேண்டும் அளவு புக்கு வெளுத்து இருந்தது-அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும் கோல வில்லி-—4-8-5– என்றும்-பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல்-ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி ராவணன் எதிர்த்த அன்று அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் –வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –அரசன் –நிர்வாககன்-ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் – ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம் ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் – ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.-திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –
நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)அன்பினால் அனுமன் வந்து – காலால் அன்று போலே – அந ஸனம் தீஷித்தும் – கடல் கடந்தும் – யுத்தம் பண்ணியும் – இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது – த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு – பிராட்டி விருத்தாந்தம் கேட்டு ஸ்தப்தராய் நின்றவர்க்கு –

தெற்கு நோக்கி தொழுதான் திருவடி-(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)நெஞ்சு என்ற பேராய்
பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே
நீராட்டுவன் –தெற்கு நோக்கி தொழுதான் திருவடி-(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)

நெஞ்சு என்ற பேராய் பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அன்புடனே கூடின நீர் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அடியனேனே –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –பரிஷ்வங்கோ ஹனுமதோ -எனக்கே தன்னைத்தந்த கற்பகம்

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்-
10-2-4-பிராட்டியைக் கொண்டு புகுந்தானாய் இவ்வூரிலே வந்து இவளை மீட்க வல்லார் உண்டோ -என்று குறைவற்றவனாய் இருந்த ராவணனை நாங்கள் அடைய ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க எங்கள் முன்னே அவன் காலிலே விழுந்து-கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே
திண்ணியதான உடல் கிழியும்படிக்கு   ஈடாக தர்ச  நீயமாய் தீப்த பாவக சங்காசை  -என்கிறபடியே தொடுத்து விடும் போது அம்பாய் சத்ருக்கள்  சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும்அம்பை நடத்தின வில் வலியை உடையவனை  –செல்வ விபீடணற்கு
ராவண பவனத்தை விட்டு-ஆகாச ஸ்தானனானன் ஆன போதே அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வேறாக நல்லானை – வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது  -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-ராவணனுக்கு வில்லானானவனே இவனுக்கு நல்லான் -மித்ரா பாவேனே -வந்தாலும் -கைவிடேன்-கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-குமரனார் –நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் – தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள் அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே – தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக நினைத்து இருந்தாள் யாய்த்து —
இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –சொல்லும் பொய்யானால் –ஆஸீத சம்ஸ்லேஷ விரோதிகளை போக்கும் இடத்தில் அர்த்த க்ரியா கார்யமாம் படி பண்ணித் தலைக் கட்டுமவர்-இங்கு உக்தியையும் தலைக் கட்டு கிறிலர்-தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விரோதியைப் போக்கக் கடவ அவர் தம்மையும் -அப்போது நியமிக்க மாட்டு கிறிலர் –அவ்வார்த்தை பொய்யாம் என்று பொய்யானால் -என்கிறாள் அல்லள் அதுக்கு விஷயம் நாமாகையாலே தப்பிலும் தப்பும் என்கிறாள் –

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற

மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –ஒளி விடா நின்றுள்ள ஆபரணத்தை உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு – அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் – ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்- ஆகையாலே -நம்பி என்கிறது-அஞ்சலி முத்தரையே ஒளி வீசும் ஆபரணம்-சரணாகதி பண்ண வேண்டியவனுக்கு வேண்டிய அங்கங்கள் அனைத்தும் நிறைந்தவன் -நம்பி-சிரஞ்சீவி -ராமநாமம் உள்ளளவும் அரசுகைங்கர்யம்-கடலைக் கடக்க விபீஷணன் தனக்குப் பலித்த சரணாகதி -எருது கெடுத்தாருக்கும் ஏழு கடுக்காய் -திருப்புல்லாணி தர்பசயனம் கிடந்தகோலம் -நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-5-10-6-புஜங்க சயனம் வீர சயனம் -தர்ப்ப சயனம்-பால சயனம் மாணிக்க சயனம் வீர சயனம் – இத்யாதி-கிடந்தவாறும்-“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” என்கிறபடியே,
“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21 : 1.கடற்கரையிலே கிடந்த கிடையும்.-ப்ரதிஸிஸ்யே-எதிர் நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ, ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்சித்து பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே; “கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ. என்றது, பின்பு விடக் கடவதாகத் தொடுத்த அம்பு முன்பு விடமாட்டாமை இல்லை அன்றோ; அப்படிப்பட்ட அம்பு இருக்க, தம் தோள் வலி கிடக்க, தரம் போராதார் முகங்காட்டாதே இருக்கப் பொறுத்துக் கிடந்த கிடையைச் சொல்லுகிறது.

தருண மங்கையை மீட்பதோர் நெறி தரு கென்னும் பொருள் நயந்து நன்னூல் நெறி யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி
. -கம்பராமாயணம், வருணனை வழிவேண்டு படலம், 5.

கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரம் தொட்ட கைகளால் கொட்டாய் சப்பாணி -சாரங்க வில் கையனே சப்பாணி -1-6 7-மூன்று நாள் கிடந்த கிடக்கை–முகம் காட்டாதே மறைந்து நின்ற கடலை –பீதியாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி கலங்க – சாபமா ந யா ஸௌ மித்ரே சராம்சாசீ விஷோபமான் -என்கிறபடியே சீறி –கடல் என்கிற சப்தத்தாலே அபிமானியான வருணனை சொல்லுகிறது –அப்போது கையும் வில்லுமாக நின்ற அழகை உடையவன்-வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-கடல் சுஷ்கத்ர்ண சமூஹம் போலே தக்தமாம்படி -வில் வளைத்தவனாய் –பிரதி பஷத்தை வெல்லும் சினத்தை உடைய வீரனே –இத்தால் ஆஸ்ரிதருக்கு ஸுவ அனுபவ விரோதி-வர்க்கத்தை அநாயாசேந போக்குமவன் என்கை இவன் சினம் வென்றதின் பின் தான் தீரும் – வெல் சினத்த வீரன் -என்கிறார் அதனால்-வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர்-50-வெளுத்த திரைகளை உடைத்தான கரும் கடல் –திரைக் கிளர்த்தியின் மிகுதி சொல்லிற்று –கறுத்த கடலோடு வெளுத்த திரைகளோடு வாசியற அக்நியின் நிறமான சிவப்பே நிறமாய் மறுகும்படி தக்தமான படி –-இத்தால் -ஆஸ்ரித ரஷணத்துக்கு வருணன் விரோதியாக அவனுக்கு இருப்பிடமான கடலை அழியச் செய்தபடி-இருபத்தெட்டாம் சதுர் யுகத்தில் மிக்க வலியை உடைய ஸ்ரீ சார்ங்கத்தை
சாப மாநய -என்கிறபடியே வாங்கி அம்புகளை ஏவின ஆண் பிள்ளை red sea-அம்பால் சிவக்க -கடலசரன் பணி கொண்டு-

மிடைத்திட்டு  எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே
—10-6-7-நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர்-மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39துர்வாசசாபத்தாலே இந்த்ராதிகள் ஐஸ்வர்யத்தை இழந்து -சரணம் த்வாம் அநுப்ராப்தா –
என்கிறபடியே திருவடிகளில் சரணம் புகுர -கடல் கொண்டு முழுகும் மந்த்ரத்தைப்
பரிகரமாகக் கொண்டு சமுத்திர ஜலத்தில் அவர்கள் இழந்தவை அடங்கலும்
உத் பன்னநாம் படி கலக்கினாய் -ரத்நாகரம் -மத்ஸ்யாகரம்-என்று லோக பிரசித்தமாய்
இருந்துள்ள சமுத்ர ஸ்வபாவத்தை தவிர்ந்து ஸ்வர்க்கத்தில் உள்ள பதார்த்தங்களுக்கு
உத்பாதகம் ஆக்கினாய் –பிரயோஜ நாந்தர பரன் என்று அவன் சிறுமை பாராதே -மோஷ பிரதனாய் இருக்கும் தன் பெருமை பாராதே -ஈச்வரோஹம் – என்று இருக்குமவன் என்று அவன் பூர்வ வ்ருத்தம் பாராதே -சரணம் என்று நின்றான் -என்றத்தையே பார்த்து ரஷித்து அருளினாய் –அதன்றியும் – இது தானே போருமாய்த்து -ஆஸ்ரிதர் உன்னை தஞ்சம் என்று விஸ்வசித்து இருக்கைக்கு -அதுக்கு மேலே –வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
கண்ட மலைகளைப் பிடுங்கி சமுத்திர ஜலத்தின் மேலே -பூமியிலே வரம்பு கட்டுமா
போலே -ப்லவங்கங்கள் காலாலே நடந்து போம்படி அணை கட்டி – இது ஒரு அதிமானுஷமான ஆச்சர்யம் -அகாதமான சமுத்ரத்திலே மலை யமிழ்ந்தது இல்லை -திரைக் கிளர்த்தியில் மண் கரையப் பெற்றதில்லை –வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ – கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விச்வகர்மாவாலே சமைக்கப் பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –
27-மலைகளாலே கடலைத் தூர்க்கிற விடத்தில் மலைகளுக்கு தொகை உண்டாய் – ஸ்ரீ வானர வீரர்களுக்கு தொகை இல்லாமையாலே ஒரு மலையை அநேகர் கூடித் தொட்டுக் கொண்டு வருவார்கள் ஆய்த்து –ஒரு மலை ஒருவற்கு பாத்தம் போராதபடி பெரு மிடுக்கராய் இருக்கச் செய்தேயும்
உபாத்யாயர் ஊசி போலே –மரத்தில் ஊசி குத்தி கொண்டு வந்த சிஷ்யர் கூட்டம் போலே –
எல்லோரும் கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் நிலை பெற வேணும் என்று இருக்கிறவர்கள் ஆகையால் இப்படி செய்கிறார்கள் ஆய்த்து –ஸ்வரூப ஜ்ஞானம் உடையாதரோடு இல்லாதாரோடு வாசி அற துரும்பு எழுந்து ஆடும் படி இறே அடிமை கொள்ளுகிறவர் கையும் வில்லுமாய் நின்ற நிலை தான் –மலையை நூக்க –கடலிலே பொகட -என்னாதே -நூக்க -என்றது –ஒரு திரளுக்கு ஒரு மலை விஷயமாகவும் போராமையாலே வேறு ஒரு திரளும் வந்து பற்ற அவர்கள் பக்கலிலே -நூக்க -இப்படி கை மேலே போலே யாய்த்து மலை கடலிலே புகுவது –அவகாஹ் யார்ணவம் ஸ்வப்சயே-என்று கொண்டு பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரண்டு செல்லா நிற்க அக் கார்யத்துக்கு வேண்டுவார் ப்ரவர்தியா நின்றார்கள் ஆறி இருக்க ஒண்ணாது இறே – கடல் தூர்ப்புண்டு அக்கரைப் பட்டதாய் விடவற்று என்னும் த்வரையாலே எல்லாரும் ஒக்க ப்ரவர்த்திதார் ஆய்த்து-குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
குளித்து –ஸ்ரீ வானர வீரர்கள் உடைய த்வரை தான் அணில்களுக்கு போந்திராமையாலே
பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரளா நிற்க முதலிகளுக்கு இத்தனை மெத்தனம்
எல்லாம் தான் என் –இருந்தபடியால் சடக்கெனக் கடல் அடைக்க இவர்களுக்கும் சக்தி இல்லை –ஆன பின்பு மலையாலே தூர்ப்புண்ட பிரதேசத்துக்கு மணல் சுமக்க பரிகரம் இல்லையே என்று அணில் நீரிலே புக்குத் தோய்கையும் கரையிலே ஏறினால் மணல் தொற்றுகையும் உதறினவாறே விட்டுக் கழிகையும் இவை முன்பே கை கண்ட படியாலே
இப் பிரகாரத்தாலே கடலைத் தூர்ப்போம் என்று பார்த்து கடலிலே புக்கு முழுகும் ஆய்த்து –
இம் முழுக்கு தன்னாலே நீர் சுவரும் மணலும் கொண்டு வரலாம் என்று ஆய்த்து நினைவு –தாம் –கடலிலே நீர் சுவறுவதும் மணல் தொற்றுவதும் தம் உடம்பிலே என்று அறியாது யாய்த்து அடிமையில் த்வரையாலே தாழ்வு பட்ட கார்யம் அடங்க தங்களாலே தலைக் கட்டுகிறதாக அபிமாநித்துத் திரிகிறபடியால் – தாம் -என்னவுமாம் –புரண்டிட்டு ஓடி –
புக்க மலைகளுக்கு நொய் மணல் புக்குச் சொரிந்து கொண்டு வருகிறபடி போராது என்று பார்த்து மணலிலே புரண்டோடி நிற்கும் யாய்த்து –உள்ள மணலும் வழியிலே உதிரும்படியாக ஓட-இடையில் நின்றவர்கள் இவற்றின் த்வரையைக் கண்டு என் தான் இத்தனை வேகம் என்றால் –பெருமாளுக்கு பகல் அமுது இலங்கையில் வடக்கு வாசலில் விடுவித்ததாய் இருக்கும் உங்களுக்கு த்வரை அற்று இருந்ததீ-என்னும் யாய்த்து – ருசியானது தாம்தாம் அளவைப் பார்க்க ஒட்டாது இறே-தரங்க நீர் அடிக்கல் உற்ற –
திரையை உடைத்தாய் கிளர்ந்து இருந்துள்ள கடலை அடைக்கையிலே சமைந்த-உற்ற –
கடலை அடைக்கிறவர்கள் தாங்களாய் முதலிகளும் தங்களுக்கு எடுத்துக் கை நீட்டுபவர்களாய் ஆய்த்து இவற்றின் உடைய அபிமானம் –சலமிலா வணிலம் போலேன் –
இவற்றின் உடைய வியாபாரம் அங்குத்தைக்கு கிஞ்சித் காரமாய் பலிப்பது ஓன்று இல்லை யாகில் இது அடிமை யாகிற படி எங்கனே என்னில் – அடிமை கொள்ளுகிறவனுக்கு இவற்றின் பாவ சுத்தியே அமையும் -என்கை –சலமிலாமை யாவது – கடல் தூரப்புண்டு பெருமாள் அக்கரை பட்டார் ஆக வல்லரே -என்கிற பாவத்தில்புரை அற்று இருக்கை –
சலம் -வ்யாஜம்-இலா -இல்லாமை –-நின்ற நிலை பேராதே நிற்கை – சாஸ்திர வஸ்யதையும் இன்றிக்கே –வர்ணாஸ்ரம நியமும் இன்றிக்கே –ஹஸ்த பாதாதி கரணமும் இன்றியிலே இருக்கிற திர்யக் சாமான்யமான மாத்ரமான இவை-குளிப்பது-ஓடுவது-புரளுவது ஆகிற இவற்றின் உடைய பாவமும் எனக்கு இல்லை என்று குளித்து -மூன்று அனலை –ஒளித்திட்டேன் -என்கிறார் ––

விலங்கலால் கடலடைத்து   விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புயம் துணிந்தான்

நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே—5-9-6-நீரிலே ஆழக் கடவதான மலைகளாலே கடலை அடைத்து விளங்கா நின்றுள்ள ஆபரணத்தாலே அலங்க்ருதையான
பிராட்டி உடைய ஒப்பனையிலே தோற்று ஷத்ரியத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே  ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய அவ் ஊருக்கு கணையம்-உழல் தடி -ரக்ஷகம் – போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து – 

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
-29-பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தது –அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காக கடலைக் கடந்தது –யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் -அம்ருத பிரதானமும் குடி இருப்பு கொடுக்கையும் ஆநுஷங்கிகம் -இறே –தெய்வீக ஸ்ருங்கார ரஸத்துக்கு அடையாளமே சேது-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
-6-5-3-ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் – மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் – குதிரைகளை விட்டு-அநந்தரம்   தேர்களாலே அலங்கரித்து – இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்த தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் 

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான்
எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-இந்த்ராதி தேவதைகள் முதுகிட்டு போமது ஒழிய எதிர் நிற்க மாட்டாத படி பண்ணும் மிடுக்கை உடையனான
ராவணன் உடைய துர்மாநத்தை போக்கும் இடத்தில் – இடக்கை வலக்கை வாசி அறியாதே
என்றும் காட்டிலே வர்த்திக்குமது ஒழிய பூசல் கண்டு அறியாத – எண்கும் -கரடியும்-குரங்கையும் முசுவையும் சேனையாகக் கொண்டு திக்பாலாதிகளை அழியச் செய்த மிடுக்கை உடைய ராவணன் உடைய மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் -துர்மாநத்தைப் போக்கின சர்வாதிகன் –

ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
–ஒரு பர்யாயம் சந்த்ராதித்யர்கள் மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே – பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ச்லேஷ விரோதியைப் போக்கினால் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய் காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை வில்லினுடைய கோடித்வயமும் வளையும் படி அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை-
4-2-1-பிராணிகளை இருந்த இடத்தில் இருக்க ஒண்ணாதபடி அலைத்து- அதாவது – இவர்கள் கீழ் நமக்கு வர்த்திக்க போகாது – எங்கே போவோம் -என்று நின்று தளும்பும் படி பண்ணுகை-வெருளப் பண்ணி –
அதாவது தங்களுடைய உக்ர வேஷங்களையும் உக்ர வியாபாரங்களையும் -கண்டு பயப்படும்படி பண்ணுகை-அலம்பா வெருட்டா -என்றதுக்கு ஆராவரித்து சிவிட்கை விளைத்து அஞ்சப் பண்ணி -என்னவுமாம்-

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.
–7-4-7-சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நிற்கிற சர ஸமூஹத்தாலே -ஓர் அம்பை விட்டால் அதற்கு எதிராக மற்றை யம்பை விடுகையாலே திருச் சரங்கள் தன்னிலே முட்டி த்வநிக்கிற படி-இனமான நூறு நூறாக பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க -அநேக பிணங்கள் என்றுமாம்-பூர்ய மாணமசல ப்ரதிஷ்ட்டம்-என்கிறபடியே அவிக்ருதமான கடல் ரத்தத்தால் நிரம்பி ஆறுகளில் எதிரே மடுத்து ரக்த ஜலமாக -ரக்ஷகனானவன் லங்கை பஸ்மாமாம் படி அழித்த நேர்பாடு என்னுதல் -நேரே என்று ஐஸ்வர்யமான ப்ரபாவத்தாலே அன்றிக்கே செவ்வையான ஆண் பிள்ளைத் தனத்தால் என்னுதல் -க்ருதரிம யோதிகளான ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே நேர் போராக என்னுதல்-

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்-4-4-6-தான் போலும் -ஷத்ரியன் போலே எதிரி என்று வந்தான்-அது கண்டு தரித்து இருப்பான் ராஷசராஜானாம் -என்று கிளர்ந்து எழுந்த ராவணன் உடைய மலை போல் இருக்கிற இருபது தோளையும் துணித்த தனி வீரன் கிடீர்-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற-பாகவத அபசாரம் பொறாமல் சினம் கொண்டு மகுட பங்கம்-வெறும் கையே போகும்படி அவமானப்படுத்தி போக வைத்த என்பதையே செற்ற-மனத்துக்கு இனியான்

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில்-
4-10-6-பெரும் காற்றிலே பூளைப் பூவானது பறந்து உரு மாய்ந்து போமா  போலே-துன்பம் உற-ஓதம் கிளர்ந்த -ஓங்கிக் கிளர்ந்த கடல் போல் மிகைத்து வந்து தோற்றின ராஷச சேனை எல்லாம் -முன்பு யமனைத் திறை கொண்டு -ஜெயித்து – பர தந்த்ரனாக்கி வர்த்தித்தவர்கள்-இப்போது அவனுக்கு குடி மக்களாக திக் விஜயம் பண்ணுகிற போது முந்துற அழியச் செய்வது யமனை இறே–கொடுங்கணை துரந்த – பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராத க்ரௌர்யத்தை உடைய அம்பை விட்ட கோல வில்லி ராமன் தன் கோயில் – கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ -என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்(கோலம் வில்லுக்கு விசேஷணம் )-இன்று போய் நாளை வாகும்பகர்ணனும் தோற்று உனக்குப் பெரும் துயில் தந்தானோ

மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால் அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோசனை நீளம் -10 mile -நீளம் உடைய-கும்பகர்ணன் பட்டு விழும்படி சங்கல்பத்தால் அன்றிக்கே திருச் சரத்தாலே-தேவ கார்யம் செய்தானாகை அன்றிக்கே தனக்கே வந்ததாக சீற்றத்தை ஏறிட்டுக் கொண்டு-எய்தான் –சங்கல்பத்தால் கொன்றான் ஆகில் நற் கொலையாய் இருக்குமே
ஷமையா பிருத்வி சமயா –அவஸ்தை மாறி-க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -கோப வஸ்யமாகி–தேவர் கார்யம் செய்தானாகை இன்றிக்கே தனது காரியமாக -ஏறிட்டுக் கொண்டு செய்த செயல் – வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் அன்றோ

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்ற கில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான்  குழமணி தூரமே 
—10-3-2-மூல பல சேனையும் தான் ஒருவனே அழித்து-

செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே
–8-6-2–யுத்த கண்டூதி வர்த்தித்து திகைத்த வரக்கரை-சக்கரவர்த்தி திருமகனை வெல்ல நினைத்த மதி கேடரான ராக்ஷஸரை –அன்று -ந நமேயம்-என்ற அன்று –உருக்கெட -சின்னம் பின்னம் சரைர்த்தக்தம் –வாளி பொழிந்த-சர வர்ஷம் வவர்ஷஹ –ஒருவனான –பிரான் கண்டீர் -ஏக வீரனான உபகாரகன் கண்டீர் –

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்-
8-6-3-மூல பலம் சாம்படி அருளுகிற அன்று முந்துற ஒருவனாய்த் தோற்றி -சாரிகையிலே வேகம் மிக மிக இருவரும் மூவருமாய்த் தோற்றி –உருவு கரந்து –வேகம் மிக்க வாறே இந்திரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி யாகையாலே -ரூப கிரஹணம் அரிதாய் -உருக்கெட வாளி பொழிந்த வொருவனே-என்று அந்வயம் –வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை

மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்தும் என வந்த வசுரர்
தோளு மவர் தாளும் முடியோடு பொடியாக   நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும்  வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்

நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-5-புகையும்படி அதுக்கடியான அக்னியை சிந்தி சீறி பூசல் பொரும் இத்தனை -என்று வந்த அசுர -தாளைக் குறையா தோளைக் குறையா முடியைத் தள்ளா ஒரு ஷண காலத்திலே எய்தவன்   வர்க்கத்தின் உடைய அப்படி இன்னமும் யுத்தத்துக்கு பரிகரமான வாளும் தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும் கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-மாதலி பச்சைக் குதிரை -ஏழாம் நாள் இந்திரனின் கைங்கர்யம் -இந்திரன் என்றும் ஒக்க முது காட்டிப் போருகையாலே ஒரு நாளும் முன் நின்று அறியான் யாய்த்து – பெருமாளும் ராவணனுமாக பொருத அன்றாய்த்து-முன் நின்று சாரத்தியம் பண்ணப் பெற்றது –மாயன் ராவணன் –
செவ்வை பூசல் பொர அறியாத -என்றும் ஒக்க வஞ்சனத்தால் பொருமவன் யாய்த்து –த்வம் நீச சச வத் ஸ்ம்ருத-சுந்த -32-16-என்றாள் இறே பிராட்டியும் –கோழையாய் ராஜ புத்ரர்களை மதித்து இருந்த படியாலே –அவர்களை அகற்றி தனி இருப்பிலே கொடு போர்க் கடவ நீயே இவ்வார்த்தை சொல்லுகிறாய் -என்கிறாள்-யதந்தரம் சிம்ஹ ஸ்ருகாலயோர்வனே -ஆரண்ய -47-45-என்று – சிம்ஹ ஸ்ருகாலயோ-என்றவாறேதன்னை சிம்ஹமாக சொன்னால் என்று பையல் பிரமிக்கக் கூடும் என்று –த்வம் நீச சச வத் –என்றாள் இறே -நீ முயல் போன்றவன் என்று பிரித்துக் கொண்டு போந்து தனி இருப்பு இருத்தினவன் முன்னே இறே இவ்வார்த்தை சொல்லுகிறது – அவனை மதியாத வீர பத்னி யாகையாலே-மாயன் ராவணன் மேல் -வஞ்சகனான ராவணன் மேலே- சர மாரி-சர வர்ஷம் வவர்ஷ ஹ –என்கிறபடியே பாட்டம் பாட்டமாக –தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் பிரதானமான தலை அற்று வீழ – தாய் தலை -மெய்யான தலை -என்றவாறு-திருச் சரங்கள் பண்ணின பாக்யத்தாலே அறுக்க அறுக்க முளைத்தது யாய்த்து
பின்னை அது தானே போது போக்காக நின்று கொன்றான் யாய்த்து அப்படி முளைத்தது இல்லையாகில் திருச் சரங்களின் வரவு இவனால் -பெருமாளால் -பானங்களை திருப்தி செய்து அடக்கப் போகாதே-தலைவன் -தீரோத்தாத நாயகன்

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43–எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்-முடி அனைத்தும்-
அறுக்க வறுக்க முளைக்கையாலே ஒரு சங்க்யை சொல்ல ஒண்ணாத படியான தலைகளையும் – தாள் இரண்டும் வீழச் –இவை எல்லா வற்றுக்கும் ஆதாரமான தாள் இரண்டையும் விழும்படிக்கு ஈடாக- சரத்தை துரந்தவன்–சரம் துணிந்தான் –இந்த க்ரம விவஷையால் பிரயோஜனம் – திருச் சரத்துக்குப் போது போக்குண்டாம் படி பண்ணுகையைச் சொல்லுகை –திருச்சரம் விளையாடின க்ரமம்-ஆஸ்ரித விரோதி யாகையாலே- நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்- யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும் அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-குளவிக்கூடு சேர்த்தாப்  போலே ஹிம்சகர் சேர வர்த்திக்கும் இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் -ராவணோ ராஷஸேஸ்வர -என்கிறபடியே அந்த துர் வர்க்கத்துக்கடைய நிழலாய் இருக்குமவன் இறே ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துக-அறுக்க அரிதான பத்துத் தலையையும் பூமியிலே உதிர்த்து உரு மாய்ந்து போம்படி-பைந்தலை -வலிய தலை-ஐந்தொடைந்து-என்று தசேந்த்ரியாநநம் -என்கிறபடியே அநந்ய பிரயோஜனருக்கு பாதகமான சில வஞ்சகங்களை நினைக்கிறார் ஆய்த்து –கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே –
பயமிருக்கும்படி அறியாதவன் பயத்தாலே போக்கற்று கலங்கும்படி – இவனுக்கு வரம் கொடுத்த தேவதைகளும் குடி இருப்பு இழக்கும்படியான தசையிலே ஜனஸ்தான  வதத்தையும் -சேது பந்தனத்தையும் பண்ணிச் சென்று அவனைக் கொன்று விஜயத்தை லபித்த ஆண் புலியானவனே –

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் –அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும் அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –நங்கை-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் –என்கிற பிராட்டி பக்கலிலே –கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க –திருவடிகளில் தங்க ப்ராப்தமாய் இருக்க -மாதர்  விஷயம் என்று பாராதே அதிக்ரமத்தை நினைத்த ராவணனுடைய சரீரம் அழிகைக்காக –தங்கல் -தொங்கல்
இந்த துர் புத்திக்கு அடி -தேஹாத்ம அபிமானம் ஆகையாலே அதுக்கடியான சரீரத்தை
யாய்த்து அழிக்க நினைத்தது-வன்று – உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே -இருவரையும் கடலுக்கு அக்கரையும் இக்கரையுமாம்படி பண்ணின அன்று என்னுதல்
வேணி யுத்க்ரதந தசையிலே -என்னுதல்-சென்று –அபியாதா ப்ரஹர்த்தாசா -என்கிறபடியே அவன் இருந்த  இடத்தே  சென்று-அடர்த்து எறிந்த  வாழியான் – அடை மதிள் படைத்து -அவந்தலையை அறுத்து அந்த ஹர்ஷத்தாலே கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-எறிதல் -அறுத்தல்

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்

மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று  இருந்தாப் போலே காணும் இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி-விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா -என்றான் இறே-யாவன் ஒருவனுக்காக இவனை அழியச் செய்ய நினைக்கிறார் -அவன் தன்னையே இவ் வரணுக்கு காவலாக வைப்பர் கிடீர் அல்பம் அனுகூலிததான் ஆகில் –தலை பத்து உதிர –பனங்குலை உதிர்ந்தாப் போலே உதிர -அறுக்க அறுக்க முளைத்த சடக்கு ஒட்டி – அனுகூலிக்குமாகில் அழியச் செய்ய-ஓர் வெங்கணை வுய்த்தவன் –பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன்அவன் பிரதி கூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
–13-பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –கிள்ளிக் களைந்தானைக் –திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –-கிள்ளி –என்கிறார்கள்-திரு விளையாடு சூழலில் நோவு பட்ட இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே –தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல் விலி  ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
—10-2-1-

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும்  ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 
–10-2-2-இரண்டு தோளும் ஒரு முடியும் விக்ருத வேஷர் அல்லாத பெருமாளை பெறாமையாலே கெட்டோம் வாழ்ந்தோம் -என்று ஷேப பரம் –

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே 
–10-3-1-குணாலைக் கூத்துப் போலே தோற்றார் தோல்விக்கு ஈடாக குழமணி தூரக் கூத்து என்று ஒரு கூத்து உண்டு ஆடுவது –
அத்தை ராஷசர் செய்த படி பேசி அவர்கள் பாசுரத்தாலே பகவத் விஷயத்தை அனுபவிக்கிறார் –

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கரு முகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே
–10-3-3-

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற
– 3-9- 10—நேரா–அறுத்துப் போகட்டு-விபீஷண பட்டாபிஷேகம் செய்த பின்பே பிராட்டியை மீட்டான் -ராஜநீதி -மன்னனால் சிறை வைத்தவளை மன்னனே விடுவிக்க வேண்டும்-திரு வடிகளை சேர்ந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கே என்னிலங்கு நாமத்தளவுமாக (2-6 )-என்று – தீர்க்க காலம் நடக்கும்படி இலங்கைக்கு அரசாகிற ஐஸ்வர்யத்தை கொடுத்த

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண்
——-59-

இத்தால் –

1-சர்வேஸ்வரனுக்கு போக்யமாய் இருந்துள்ள ஆத்மாவை -என்னது -என்று இருக்குமவன் -பிராட்டியைப் பிரிந்த ராவணன்
உடன் ஒக்கும் என்னும் இடமும் –

2-இவ் வாத்மா அவனுடையது -என்று அனுகூலித்தவனுக்கு பிராட்டி இருந்த மார்விலே அம்பு ஏற்றுப்
பரிஹரித்தால் போலே பரிஹரிக்கும் என்னும் இடமும் –

3-அவளோடு கூடினவன் உபாயம் என்கையாலே பற்றுமவர்கள்-அவள் முன்னாகப் பற்ற வேணும் என்னும் இடமும் சொல்கிறது(ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி )

(மனம் இந்திரியங்கள் இராவணன் இத்யாதி-முதலியாண்டான் வார்த்தை -தேசிகர் ஸ்லோகம் )

(கீழே பல பாசுரங்களில் )திரு உள்ளம் -இந்திரிய ஜெயம் பண்ணு என்றது -தொழு என்றது -திரு நாமம் சொல்லு என்றது -நினை என்றது
பல படிகள் சொன்ன இவற்றுக்குத் தாத்பர்யம் என் என்னில் –

இதுக்கு கீழ் எல்லாம் ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை –

இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே (நடுநாயகமாக ரத்னம் போல் இந்த பாசுரம் -சரம ஸ்லோகம் போல் )-உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –

அடைந்த அருவினை -அவித்யாதிகள் –ஆத்மா ஹேய சம்சர்க்கத்துக்கு அநர்ஹன் ஆகையால் -அடைந்த -என்றது
பரமாத்வுக்கும் பிரவேசம் ஒக்கும் இறே -அனஸ்னன்(சிறைச் சாலைக்குள் அரையனும் சிறையனும் உண்டே )

(தேகத்துக்குள் இருந்தாலே கர்மங்கள் இயற்கை என்று சொல்வாய் ஆனால் அது அல்ல என்று காட்டவே இங்கு
ஒரு மரம் -இரண்டு பறவைகள் -ஓன்று உண்டு ஒளி குறைய -மற்ற ஓன்று உண்ணாமல் ஒளி விஞ்சி
மரம் -சரீரம் -பழம் -கர்மாக்கள் -பரமாத்மாவுக்கு கர்மம் தீண்டாதே)

அல்லல் நோய் -ஆதி வியாதி -பாவம் -சரீரத்துடன் பண்ணும் பாவம்
மிடந்தவை–சமிதை இடாத மாணி -ப்ரஹ்மசாரி போலே –பரணிக் கூடு வரித்தால் போலே –
மீண்டு ஒழிய வேண்டில் -தொடருகிற பாம்பை திரிய விடுத்தால் போலே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இறே

சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ – நுடங்கிடையை -(நித்ய அநபாயினி நிரவத்யாம் )ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கின
இலங்கை வைத்தான் -தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் மிடுக்கு ஒழிய -பிராட்டி அம்பெய்யும் அன்று இவனால் போக்கலாவது-

தத் தஸ்ய சத்ருசம் பவேத் –கூர்மையை விஸ்வஸித்து இருக்கும் அத்தனை -(சொல்லினால் சுடுவேன் –மாசு என்று அஞ்சினேன் )
அவளுக்கு பரியுமா போலே பரியும் அவதார ஸுலப்யம்
பிறந்து முன்னே உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நின்றான் -இனி பிரதிபத்தியே உள்ளது -(வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து -காட்கரை அப்பன் )

அல்லல் நோய் –அல்லல் என்று பாப காரணமாய் வரும் மனத்துன்பங்கள் -நோய் -சரீரத் துன்பங்கள் இவற்றையே ஆதி -வியாதி என்று வடமொழியில் சொல்வர்-மிடைந்தவை -வெளியேற முடியாதபடி சூழ்த்துக் கொண்டவை(சும்மெனாதே கை -விட்டோடி பெரியாழ்வார் -5-4-3–மாமேகம் சரணம் வ்ரஜ ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி0

இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல் ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே
சிந்தித்து இரு -41-
வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47
மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49-
அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50-
திரு நாமம் எண் –51-
தொழுது எழுதும் எழு –58
-என்று சொன்னது எல்லாம் உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே-மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –-இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம் இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே -)

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –
5-8-2-பிரயாகையில் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் புஷ்பகவிமானம் இறங்க-திருவடியை பரதனுக்கு செய்தி சொல்லி அனுப்ப -சொல்லி திரும்ப வந்து -உடன் உண்ட சரித்திரம் இங்கு —உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள்-வாழை இலையில் நரம்பு பின்பு-காய்கனிகள் மேல் பாதியில் –

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே—
10-8–அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி-10-1-பாதுகாதேவியின் அரசால் வந்த பெருமை

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன் 
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 

அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்   
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1- 1-கஸ்ர கிரணங்கள் ஆன ஆயிரம்  ஆதித்யர்கள் சேர பிரகாசித்தால் போலே  இருக்கும் தேஜசை உடைத்தாய் – ஆதி ராஜ்ய ஸூசுகமான ஒக்கத்தை உடைத்தான  திரு அபிஷேகத்தை உடையவன் –-இத்தால்- ராவண வதம் பண்ணி  ஸ்ரீ விபீஷண ஆழ்வானை இலங்கைக்கு ராஜாவாக அபிஷேகம் செய்து  ஸ்ரீ பிராட்டியும் தாமும் ஆன சேர்த்தியோடே- ஸ்ரீ திரு அயோத்யையில் எழுந்து அருளி  திரு அபிஷேகம் பண்ணி இருந்த படியை சொல்லுகிறது –

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே
  – 4-9 -2-இப் பாட்டை -சென்னி யோங்கு பாசுரத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநித்த
பிரக்ரியைக்கு இணங்க இங்கும் ஸ்ரீ மா முனிகள் வ்யாக்யாநித்து அருளுகிறார்-இவன் பொறுத்தது நமக்காகவா – இவர்களுக்காகவா — நம் போகத்துக்காகவா -என்று ஆராய்க்கைகாக சிதகுரைக்க தொடங்கினாள் ஆனால்-என் அடியார் அது செய்யார் -என்னும் அவன்-அது செய்யார்ஆஸ்ரயணத்துக்கு முன்பு இவள் மன்றாடும் – பின்பு அவன் மன்றாடும்

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.
–4-5-10–கிடந்தும் – என்றது,
‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு-முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,-ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நின்றும் –‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் –‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே,-இருந்த இருப்பாதல்; க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல்.
மணம் கூடியும் –பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.-மணம் கூடியும்
பதினோறாயிரம் ஆண்டு பூமியை ரஷிக்கையாலே பூமிக்கு அபிமானியான பிராட்டி விரும்பி அணைக்க அவளோடு சம்ச்லேஷித்தும்-கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை –பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு,-‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது-எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’ ஒத்தி நிலத்தில் கமுகு வைக்க மாட்டார்கள் —
‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ –திருவாய். 6. 3 : 5.-என்னக் கடவதன்றோ?-அருளிச் செயல்களில் இந்த ஒரே பாசுரம் தான் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் காட்டும்

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
.–7-5-1-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் –திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் –ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன
நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக்கு கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து,
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான். ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம் மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்
பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே –பூமா இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
—2-3-7–ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற--சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று – தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை–தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –-கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள் ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின அபதானம் ஒன்றுமே ஆயிற்று –யெம்மானை – அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை-ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று – பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று- (ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ- பக்தர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே
–10-11–பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை-கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் – வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ எம்பெருமானும் -மலையும் -கடலும் -முகிலும் -பொன்னும்-மணியும் யானையும் தெய்வ வண்டும் நிதியும் ஸிம்ஹமும்–

November 22, 2025

வார்த்தை -440-
பச்சை மா மலை போல் மேனி-திருமாலை -2-  என்றது –
ஒருத்தரிட்டு ஆகாது ஒழிகையும் –
எல்லாவற்றாலும் பெருத்து இருக்கையும் –
தானே எல்லாவற்றையும் தரித்து இருக்கவற்றாய் இருக்கையும் –
இதிலே அன்வயித்தால் எங்கும் தெரியும்படியாய் இருக்கையும் –
ஒருத்தரால் பேர்க்கப் போகாதே இருக்கையும் –

இதிலே அன்வயித்தாருக்கு சகல போகங்களும் இதுக்கு உள்ளே உண்டாய் இருக்கையும் –
கத்யாகதி இன்றியிலே இருக்கையும் –
அஞ்சினான் புகலிடமாய் இருக்கையும் –

கடலேயும் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-8-என்றது –
எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு இருக்கையும்கண்ணுக்கு இலக்காய் இருக்கச் செய்தே ஆழமும் அகலமும் அளவிட ஒண்ணாதாய் இருக்கையும் –

உயிர் அற்றவற்றை உட்கொள்ளாது ஒழிகையும் –
ஸ்வ சக்தியாலே உள்ளுப் போகாது ஒழிகையும் –
தான் அள்ளி விநியோகம் கொள்ளாது ஒழிகையும் –
ஒன்றின் வாயாலே(மேகம் -ஆச்சார்யர் –லஷ்மீ நாதாயா சிந்தவ் இத்யாதி) விநியோகம் கொள்ளலாய் இருக்கையும் –
தர்சநீயமாய் இருக்கையும் –

கார் முகில் -திருவாய்மொழி -2-3-7- என்கிறது –
தர்சன மாத்ரத்திலே தாக சாந்தியைப் பண்ணுகையும் –
எங்கும் ஒக்க வர்ஷிக்கும் இடத்தில் தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாது
ஒழிகையும் –
கொண்டவன் பிரத்யுபகாரம் தேடாது ஒழிகையும் –
ஒரு படிப்பட உபகரிக்கப் பெறாமையாலே உடம்பு வெளுக்கையும்

———

எண்ணும் பொன்னுருவாய் -திருநெடும்தான்டகம் -1- என்றது –
நித்தியமாய் இருக்கையாலும் –
சகலராலும் கௌரவிக்கப்படுவது ஒன்றாகையாலும் –
உரை உண்டாகையாலும்
உண்டென்ன உயிர் நிற்கையாலும்

இது கைபட்டவன் நினைத்தபடி பண்ணலாய் இருக்கையாலும் –
அவனுக்கு அபிமதங்கள் எல்லாம் கொடுக்கவற்றாய் இருக்கையாலும் –
அலங்காரமாய் இருக்கையாலும் –
ஆபத்துக்கு உதவுகையாலும் –
இது கைப்பட்டவனை ஸ்ரீ மான் என்கையாலும் –
இது கைப்பட்டவன் சகலராலும் சேவ்யமானாய் இருக்கையாலும் -சொல்லுகிறது –

பொன்னுருவாய் –பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

————-

மணியை வானவர் கண்ணனை –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –
மாலே மணி வண்ணா –
சாம்யம் ரத்னத்துக்கும் எம்பெருமானுக்கும் பல படிகளில் –

1-உறங்காமை –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதலே
சதா பஸ்யந்தி சூரய
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே-
2-தலைப்பில் முடிந்து ஆளலாம்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் பாய சீருடை
பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் –
3-மணி ரத்னம் மலையிலும் கடலில் இருக்குமே
ஒண் குறவர் மால் யானை பேர வெறிந்த பெரு மணியை -முதல் திருவந்தாதி
மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் –
4-செருக்கு பண்ணப் பண்ணும்
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மாறுளதோ இம் மண்ணின் மிசையே
எனக்கு என் இனி வேண்டுவதே
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-
5- தன்னை உடையாரை லோகம் எல்லாம் அனுவர்த்திக்கப் படும்படி பண்ணுபவன்-
6-இடைத் தரகர் கொண்டே ரத்னம் கொள்ளுவார்
வேதம் வல்லார்களைக் கொண்டே விண்ணோர் பெருமான்
திருப் பாதம் பணிந்து
விபீஷண ஆழ்வான் -நிவேதயமாம் ஷிப்ரம் விபீஷனம் உபஸ்திதம் –

7-ரத்னம் சில சில ஆச்ரயங்களில் அதிக மதிப்பு பெரும்
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே -போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் சிறப்பு பெறுவான் எம்பெருமானும்-

8-ரத்னம் ஒளியை விட்டு இராது -எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான் -தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ-
அநு ஜனர் அநு ரூபரூப சேஷ்டா –இந்திரா -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அனந்யா ஹி மா சீதா பாஸ்கரேண பிரபா யதா
ரத்னங்களில் ஒளி உத்பூதமாயும் அநுத்பூதமாயும் இருப்பது போலே ஸ்பஷ்டமாயும் மறைந்தும் பிராட்டி இருப்பாள்
வாமன

கிருஷ்ணாஜிநேந சம் வ்ருண்வன் வாமனோ வஷசி ச்ரியம்-என்ற மறைந்து இருந்தாள்

9- ரத்னம் ஒளியால் மேன்மை பெரும் -திருவில்லா தேவரை தேறேல்மின் தேவு -ச்ரத்தயா அதேவ தேவத்வம் அஸ்நுதே –
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா —

10-ரத்னம் தன்னை இழந்தவனை கதறி அழப் பண்ணும் -பரதனும் விலலாபா சபா மத்யே -கதறி அழுதான்
ஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடா வரைத் தோல் தயரதன் புலம்பிய புலம்பல் பிரசித்தம்
பழுதே பல பகலும் போயின -என்று அஞ்சி அழுதார்கள்
இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே தைவத் தேவகி புலம்பலும் பிரசித்தம்
உன்னைக் காண்பான் அலப்பாய் நான் ஆகாயத்தை நோக்கி அழுவேன் –

11-ரத்னம் அதமன் மத்யமன் உத்தமன் கையில் பட்டு -அல்ப விலை உள்ள விலை ஸ்வயம் போக்கியம் ஆகும்
இச்சுவை யான் பொய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வைகுண்ட வாசே அபி ந அபிலாஷா
எனக்கு தேனே பாலே கண்ணாலே அமுதே
அநுபாயங்களில் உபாயத்வ புத்தி பண்ணுபவர்கள் வியாபாரிகள் போலே
சூத்திர பலார்த்திகள் செம்படவன் போல்வார்

12-சேற்றிலே ரத்னம் இருந்தால் மதிப்பு அறியாமல் இருப்பார்கள் -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே
அவஜா நந்தி மாம்மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதம் –
மகா ஞானிகளோ எத்திறம் உரலினோடே இணைந்து ஏங்கி இருந்த எளிவே -பிறந்தவாறும் வளர்ந்த வாறும் என்று மோஹித்து இருப்பார்கள் –

13 க்ருத்ரிமான கல்லும் ரத்னம் பேரில் இருந்தால் வாசி அறிய மாட்டாதார்கள்
தேவதாந்த்ரங்களும் பகவான் என்று போலியாக ராஜச தாமசர்கள் பிரமிக்க சாத்விகர்கள் அடுப்பில் இட்ட கல்லோபாதி நினைப்பார்கள்

——————————————————————————————————————-

முகில் வண்ணன் -மேக வண்ணன் -ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்

1- மேகம் பெய்ய வேண்டும் இடம் வரை சென்று பொழியும்
எம்பெருமானும் -வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து –
-மண் மீது உழல்வாய் -கிருபா ரசம் பொழிய -வாழ உலகினில் பெய்திடுவான் –

2-மேகம் மின்னுள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –

3- மேகம் தான் மொண்ட இடத்திலும் பெய்யும் வசிஷ்டாதிகளுக்கும் பெருமாள் உபதேசித்த்காது பிரசித்தம்

4- மேகம் பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும்
கோவிந்தேதி யதாக்ரந்தம் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயாத் நாபசர்ப்பதி-

5-மேகம் இன்ன பொது பெய்யும் என்று அறுதி இட ஒண்ணாது -வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே -திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான் அபேஷா நிரபெஷமாக தாவி அன்று உலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்

6-வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று -வளைப்புக்காக கார்யம் செய்பவன் அல்லன் -பெண்ணுலாம் சடையினானும்
பிரமனும் காண்பான் எண்ணிலா ஊழி ஊநிழி தவம் செய்தார் வெள்கி நிற்க விண்ணுளார் வியப்ப ன்று ஆணைக்கு அன்று அருளை ஈந்தவன்

7-மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றி பெய்யும் -அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -வசிசிஷ்டர் சண்டாளன் வாசி இல்லாமல் அனுக்ரஹ சீலன்
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிர் தாலி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -நிர்விசெஷமாக அனைவருக்கும் அருளை பொழிபவன் –

8-மேகம் கர்ஜித்துப் போகும் ஆடம்பரம் இன்றியும் பொழியும் -குசேலருக்கு அருள் மலை பொழிந்தான் –

9–விராட பார்வை கால ஷேபம் கேட்க மேகம் வந்து நிற்கும் -பகவத் விஷய கால ஷேபத்துக்கு இவனும் வந்து நிற்பான் –
மா முனிகள் கால ஷேப கோஷ்டியில் ஸ்ரீ சைல தயா பாத்ரம் தனியன் சாதித்துன் கொண்டு வந்தானே –

10-மேகம் சுக்திகளில் பெய்து முத்தாகும் -அடியாருக்கு இன்பமாரியாகிய எம்பெருமான் உடைய கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்
இடத்தே ப்ரவஹித்து மிக்க பயன் விளைத்து முத்தன்ன அருளிச் செயல்களையும் ஸ்ரீ வசன பூஷணாதிகளையும் பயக்கும்

11-மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் -இத்யாதிப் படியே தூது விடப் பெரும் -இவனும் இன்னார் தூதன் என நின்றான் என்றும்
கோதை வேல் ஐவர் க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் -என்ற பாண்டவ தூதன் என்று அழியாப் பெயர் பெற்றான்

12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும் -எருக்கிலை போல்வன வீழ்ந்து ஒழியும்-இவனும் பரித்ராணாயா சாது நாம்
விநாசாய ச துஷ்க்ருதாம் -என்று சோதி வாய் திறந்து அருளினானே-கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -தாயார் மகிழ ஒன்னார் தளர –

13-மேகமானது -எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் வேறு புகல் இல்லாமல் –
எம்பெருமானும் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் -என்று சாதக வ்ருத்திகளான அனன்ய கதிகளால் ப்ரதீஷிக்கப் பட்டிருப்பன் –

14-மேகமானது விருப்பம் இல்லா விடிலும் கண்ணீர் விட்டாலும் வாளா நிற்கும்-ஸ்ரீ பரத ஆழ்வான் -ஏபிச் ச சசிவைஸ் சார்த்தம் சிரஸா யாசிதோ மயா-ப்ராதுச் சிஷ்யஸ்ய
தாஸஸ்ய பிரசாதம் கர்த்துமர்ஹசி-என்று பலருடன் கண்ணநீர் சித்ரகூடத்தில் விட்டாலும்
ச காமம் அநவாப்யைவ-என்னும்படி மநோ ரதம் நிறைவேறப் பெறாமல் மீண்டு போம்படி ஆயிற்று-

15-மேகம் கடலில் படிந்து அங்கு நின்றும் எழுந்து தோன்றி வர்ஷித்து விட்டு மீண்டும் கடலில் புகும் -எம்பெருமானும் அவதார கந்தமான திருப் பாற் கடலிலே படிந்து
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றபடி
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதாரங்களில் கிருபா ரசத்தை பொழிந்து மீண்டும் அங்கே புகுவான்
பின் துரக்கும் காற்று இழிந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே -பெரிய திருவந்தாதி

16-மேகம் தான் தோன்றின வாறே மயில்களை சிறகு விரித்து ஆடப் பண்ணும் -கார் முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துல்லாதார் தம்மால் கருமம் என் சொல்லீர்-என்றபடியே தத் பஷ பாதிகளை எழுந்தும் பறந்தும் துள்ளப் பண்ணும் –

——————————————————————————–

கடல் வண்ணன் -விசேஷார்த்தம்
அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோததயே -கடலை நோக்கி கடல் பள்ளி கொண்டது போலே
கருணை யம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி –
பிரதிஜலதிதோ வேலாசய்யாம் -பட்டர் –

1-நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்றிவர் -பெரிய திரு மொழி -2-8-5-
கடல் மைநாகம் போன்ற மலைகளை கொண்டது போலே இவனும் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திரு மால் -மலை போன்ற திருத் தோள்களை உடையவன்
நகு கதிர் வழங்கு தகடு படு செம்பொன் நவமணி குயின்ற தொடு யணி யணிந்த ககனவிலிடு நீலே வெற்பு ஒத்து இருந்தனை -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
கடல் சிறந்த நவ மணிகளை உடைத்தால் போலே இவனும் குரு மா மணிப்பூண் -கௌச்துப மணியையும் -செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் –கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் மங்கள ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் -உடையவன்
கடல் லஷ்மி பிரஸூதிக்ருஹம் ஆகையாலே பெரிய பிராட்டியாருக்கு உறைவிடம் -இவனும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்
கடல் சங்கு தங்குமிடம் இவனும் வெள்ளை சுரி சங்கு ஏந்துமவன் –

2- கடல் முன்னீர் -எல்லா வற்றுக்கும் முன்னே உண்டான நீர் -அப ஏவ சசர்ஜ ஆதௌ-நன்மைப் புனல் பண்ணி -இவனும் முனைவன் மூ வுலகாளி யப்பன் –

3- கடல் முந்நீர்-ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர் ஆகிய மூன்று வகை பட்ட நீரையும் உடைத்தாய் இருக்கும்
எம்பெருமானுக்கும் ஸ்வா பாவிக கருணை ரசமும் -பிறர் படும் துயரைக் கண்டு தோன்றும் அருள் நீறு பிராட்டியால் தூண்டுவிக்கப் பட்டு பொழியும் அருள் நீரும் உண்டே –

4-கடல் சிறு மீன் திமிங்கலம் கிளிஞ்சல் மணி மாணிக்கம் அதம உத்தம விபாகம் இல்லாமல் தன பக்கம் இடம் கொடுத்து இருப்பது போலே
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் -என்றும் ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன் -என்றும்
பச்யாமி தேவான் தவ தேவ தேஹ -என்கிறபடியே சர்வ அபாஸ்ரயமாய் இருப்பான் –

5-கடல் சாவா மருந்தான அமிர்தத்தை தேவர்களுக்கு அளித்தது -எம்பெருமானும் உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் -என்றும்
தன்னைப் பெற்றேற்குத் தன வாய் அமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் -என்றபடி பேரன்புடையாருக்கு சாவா மருந்தான தனது வாயமுதைத் தந்து அருள்வான் –

6-கடல் அளவிட முடியாத ஆழம் -இவனும் சமுத்திர இவ காம்பீர்ய -கொள்ள மாளா இன்ப வெள்ளம் ஆகையாலே இதில் இழிவார்க்கு உள் ஆழம் காண்பது அரிது –

7-கடல் தன பக்கல் உள்ளதை மேகத்துக்கு கொடுக்கவும் செய்யும் மேகம் பொழிவதை தன்னிடமும் பெற்றுக் கொள்ளும்
எம்பெருமானும் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் -என்றும் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -என்கிரபடுயே கொடுக்கவும் செய்வான்
கரோமி யத் யத் சகலம் பிரச்னை நாராயணா யேதி சமர்ப்பயாமி -கொடுப்பவற்றை கொள்ளவும் வல்லவன் தத் குருஷ்வ மதர்ப்பணம் -என்பன்-

8-கடலுக்கு மழை நீரால் அதிசயம் இல்லை முகிலுக்கு ஆத்மலாபம் -எம்பெருமானுக்கு எவ்வளவு சமர்ப்பித்தாலும் அது போலே நாம் க்ருதார்த்தர்கள் ஆவது தவிர புதிதாக அவனுக்கு செல்வா நிறைவு இல்லை

9-கடல் நீர் நம் போல்வார் வாயில் புக மாட்டாது -துவர்க்கும் -ஆசாந்த சிந்தோ கும்பீ ஸூ நோ -என்றபடி குறு முனிவனுக்கு உணவாயிற்று -எம்பெருமானும் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றின நஞ்சு -சுவை அறிந்தாற்கு அமுதிலும் ஆற்ற இனியன் –எனக்குத் தேனே பாலே கண்ணாலே அமுதே திரு மால் இரும் சோலை கோனேயாகி-என்னும்படி பரம போக்யன்-

10-கடல் அஞ்சினார்க்கு புகலிடம் இந்த்ரன் இடத்து அஞ்சின மைநாக கிரிக்கு புகலிடமாக இருந்ததே -இவனும் அஞ்சினேற்கு அஞ்சேல் என்று காவி போல் வண்ணர் வந்து
என் கண்ணின் உள்ளே தோன்றினாரே -ஆர்த்த த்ராணா பராயணஸ் ச பகவான் நாராயணோ மே கதி –

11-கடல் நீர் மா முகில் வாய் மூலம் வந்தால் அன்றி யாருக்கும் உபஜீவிக்க ஒண்ணாது -எம்பெருமானும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திரு வாய் மூலம் வந்தால் அன்றி உபஜீவிக்கலாகான்
லஷ்மீ நாதாக்ய சிந்தௌ சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நாதாத்ரௌ அப்ய ஷிஞ்சத் -என்றும்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற்கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யமாமே –

12-கடல் குளிர்ந்தே பெரும்பாலும் இருந்தாலும் ஒரு புறத்தில் பாடபாக்னி பொங்கி இருக்கும் -எம்பெருமானே தண்ணளி வே வடிவாய் இருந்தாலும்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறக்கும் –

13–கடல் சந்த்ரணைக் கண்டால் பொங்கி கிளரும் -எம்பெருமானும் ஞானிகளைக் கண்டால் தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் என்னும்படி சத சதமாகப் பணைப்பன் –

14- நாம் கடல் கரையிலே நின்றே அனுபவிக்க முடியும் -நிலவர்களே உட்புகுந்து ரத்னங்களை கொணர்வர் -நம்பிள்ளை போல்வாரே அவஹாகித்து வேதாந்த விழுப் பொருள் நிதிகளை வாரிக் கொணர்ந்து நமக்கு அளிக்க வல்லவர்கள் –

15-கடல் விஷத்தையும் தந்தது அமுதத்தையும் தந்தது இவனும் பயக்ருத் பய நாசன –நல்குரவும் செல்வமும் நரகமும் சுவர்க்கமுமாய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் இருப்பவன் -பட்டர் -பல மோஷண யோஸ் த்வயைவ ஜந்து க்ரியதே ரங்க நிதே -என்பர்

16-கடல் எத்தனை தரம் பார்த்தாலும் திருப்தி பெறாமல் அபூர்வ தர்சனமாய் இருக்கும் இவனும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் –

17-கடலுக்கு நதிகள் மூலம் வரவும் மேகம் மூலம் செலவும் உண்டு -அர்ச்சாவதார உண்டியலில் வரவும் உண்டு செலவும் உண்டு

18-திரை கடல் ஓடியும் திரவியம் தேடுவார் -நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே வேண்டும் செல்வம் -எம்பெருமான் வழியே போவார்க்கு மஹார்த்தங்கள் கிட்டும்-

19-வானர வீரர்கள் கடலைக் கடந்து விட்டாலும் உள் ஆழம் அறியாதார் -அழுந்தின மந்தர மலைக்கே தெரியும் -நாம் அவனை ஸ்துதி செய்தாலும் அறியோம் ஆழ்வார்கள் மட்டுமே அறிவார்
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆரறிவார் –ஞாலத்து ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் ஒரு பொருளை யான் அறிந்த வாறு -என்பர் திரு மழிசைப் பிரான் —

20-கடல் கலங்காது கலங்கினாலும் சீக்கிரம் தெளியும்
சீற்றம் கொள்ளான் கொண்டாலும் அருள் சீக்கிரம் சுரக்கும் -சுக்ரீவ மகாராஜர் சமுத்திர ராஜன் நரகாசுரன் போல்வார் இடம் கண்டோம்-

21- அபரிச்சேத்யமான கடலும் குறு முனிவன் கையில் ஆசமனத்துக்கு போதும்படி அடங்கி இருந்தது -வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ -பகவத் விஷயம் ஆழ்வார்களுக்கு பரிச்சேத்யம் ஆயிற்று
நண்ணா அசுரர் நலிவெய்த நல்லவமரர் பொலிவெய்த எண்ணாதன்கள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி -திருவாய் -10-7-5-
ஆனந்தம் ஒன்றையே பேசி மீண்டதே வேதம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை விரிவாக பேச ஒரு கிரந்தம் வேண்டுமே என்று எண்ண
திருவாய் மொழி திரு வவதரித்த பின்னர் இன்னம் எம்பெருமானுக்கு ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் வேண்டுமே என்று எண்ணம் படி ஆனதாம் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
அனைத்தும் ஆழ்வார் திரு வாக்கிலே அடங்கி விட்டன என்றே கருத்தாகும் –

22–கடல் சம்பந்த ஞானம் இல்லாத புல்லை வெளியே தள்ளும் -மகரம் போன்றவற்றை அங்கனம் தள்ளாது -அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-5-

23–கடல் கடக்க அரிதாயினும் நாவாயால் எளிதில்கடக்கலாம்
பாதாம் போஜ வரத பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச -முகுந்த மாலை -பத்துடை அடியவக்கு எளியவன் –

24-கடல் அருகே இருந்தாலும் தாக விடாய் தீர்க்க வேறு நீர் நிலை தேட்டமாய் இருக்கும் -சாச்த்ரன்களால் எம்பெருமானை எவ்வளவு அனுபவித்தாலும் அர்ச்சையில் இழிந்தால் அன்றி ஆர்த்த சாந்தி இல்லை இ றே-

25–எவ்வளவு கார்ய நிர்பந்தங்கள் இருந்தாலும் பெரிய செல்வந்தர்களும் சிறிய நேரமாவது கடல் கரை சாராது இரார்கள்
பல காரியங்களை சுருக்கிக் கொண்டு ஒரு நாழிகை பொழுது யாவது பகவத் ஆராதனத்தில் அந்வயியாது இரார்கள் –

கடலில் அலை ஓயாது -அலம் புரிந்த நெடும் தடக்கையும் ஓயாது
கடல் கோஷித்துக் கொண்டே இருக்கும் -இவனும் ஏதத் வ்ரதம் மம–மோஷயிஷ்யாமி மாசுச -நமே மோகம் வசே பவேத் -இத்யாதிகளை சாதித்துக் கொண்டே இருப்பான்
கடல் ஒரு நாளும் வற்றாது -எம்பெருமானுக்கு நாஸ்தித்வம் உண்டாகாது
கடல் ஏறுவதும் வடிவதுமாய் இருக்கும் -இவனும் சேவை சாதிப்பதும் மறைவதுமாய் இருப்பான்
இப்படி பலவும் உண்டே –

———————————————————————————————————————————-

நீர் வண்ணன் எம்பெருமான் -நீருக்கும் அவனுக்கும் சாம்யம் பல படிகளில்

1-நீர் பள்ளத்திலே பாயும் –மேட்டில் ஏற்றுவது ஸ்ரமம்-ஜாதி முதலியவற்றால் குறைந்தார் இடம் எளிதாக செல்வான்
உயர்ந்தவர் என்று மார்பு நெறித்து இருந்தால் அணுக விரும்பான்
பாண்டவ தூதனாக விதுரர் திருமாளிகை சென்றவன் ஞானத்தால் உயர்ந்த பீஷ்மாச்சார்யர் -குலத்தால் சிறந்த த்ரோனாச்சார்யர் செல்வத்தால் சிறந்த துரியோதனை பொருட்டாக மதியாமல்
முன்னமே துயின்று அருளிய முதுபயோததியோ பன்னகாதிபப் பாயலோ பச்சை ஆலிலையோ சொன்ன நால்வகைச் சுருதியோ கருதி நீ எய்தற்கு எண்ண மாதவம் செய்தது இச் சிறு குடில் என்றான் -வில்லிபுத்தூரார் பாரதம் –

2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாதே -லோகோ பின்னருசி யாக இருந்தாலும் நீர் அனைவருக்கும் வேண்டுமே -அது போலேயும் எம்பெருமானும்

3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை -சூடு வந்தேறி -தண்ணளி இயற்கை -நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறக்கலாம் –

4- நீர் சுட்டாலும் ஆற்றுவதற்கு நீரே வேண்டும் -அவன் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும் -தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரணில்லை –

5- நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரித்தாய் இருக்கும் -ஆண்டாள் சூடிக் களைந்த மாலையால் விலங்கிட்டு வைத்து
புஜிக்க நின்றான் -பாண்டவர்கட்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போக விடப் பெற்றான் –

6-நீர் மற்ற பண்டங்களை சமைக்க பயன்படும் தானாக குடிக்கவும் பயன்படும் -இவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் உண்டு –
எம்பெருமானைக் கொண்டு வேறு பிரயோஜனம் பெற விரும்புவாரும் ஸ்வயம் பிரயோஜனமாய் அவனையே பெற விரும்புவாரும் உண்டே –

7-அன்னம் காய் கனி வேர் கிழங்கு பால் பின்ற பிரதி நிதிகளை சஹிக்கும் -நீருக்கு நீரே வேணும் -எம்பெருமானும் அப்படியே
ஒரு நாள் காண வாராயே-அடியேன் தொழ வந்து அருளே
என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்
நீரை ஒருவராலும் விட முடியாது கர்ம ஞான பக்தி பரபக்தி இவற்றில் எத்தை விட்டு எத்தைப் பற்றினாலும் ஒருபடியாலும் விடத் தகாதவன் –

8-சோறு உண்ணும் போதும் நீர் வேண்டும் நீர் வேறு ஒன்றையும் அபேஷியாது-உபாயாந்தரங்களுக்கும் அவனே வேண்டும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –

9-கொள்ளும் பாத்ரங்களின் தாரதம்யமே அன்றி நீர் தானே குறைய நில்லாது -கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்வார் குறையே அத்தனை –அல்ப ஐஸ்வர்யகைவல்யம் பெற்று போவாரும் உண்டே -எழுவார் விடை கொள்வார் -இத்யாதி

10-நீர் ஐவகைப் பட்டு இருக்கும் -பூமிக்கு உள்ளே கிடக்கும் நீர் –ஆவரண ஜலம்–பாற் கடல் நீர் -பெருக்காற்று நீர் –தடாக நீர்
அந்தர்யாமி –பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அர்ச்சை -பெருகாற்றிலே தேங்கின மடுக்கள் போலே கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி –

11- நீரானது ச்வத பரிசுத்தம் ஆயினும் ஆஸ்ரய வசத்தால் த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும் -அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமானும்
த்யாஜ்யன் -கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள ஸ்ரீ யபதியே உபாதேயன் –

12-தோண்டத் தோண்ட சுரக்கும் நீர் -இவனும் கொள்ள மாளா இன்ப வெள்ளம் -பேசப் பேச வளர்ந்திடுவன் -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் இருப்பன்

13-நீர் பரார்தமாயே இருக்கும் -தனக்கு என்று பிரயோஜனம் இல்லாமல் -பக்தாநாம் -என்றபடி எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும் –

14-நீர் தானே பெய்ய வேணும் -ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது -எம்பெருமானும் அப்படியே –

15-நீர் கடலில் இருந்து காளமேகம் வழியாக வந்தால் அன்றி உபஜீவிக்க உரியது ஆகாது -இவனும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆச்சார்யர் மூலமாக
வந்தே உபஜீவ்யன் ஆகிறான் -மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆகும் –

16–சிறியார் பெரியார் விபாகம் இன்றி ஒரே துறையிலே படிந்து குடைந்து ஆடலாம் -எம்பெருமானும் -நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்றும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் –

17- நீர் சிறிய த்வாரம் கிடைத்தாலும் உட்புகுந்து விடும் -எம்பெருமானுக்கும் சிறிய வ்யாஜ்யமே போதும் -திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என் ஊரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -இத்யாதி –

18-தீர்த்த விசேஷங்களில் நீருக்கு மஹாத்ம்யம் அதிகம் -எம்பெருமானுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயில் திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்-

19-தாபம் மிக்கவர்கள் முகத்தில் எறேட்டுவது முதுகிலே கொட்டுவது உள்ளில் இழிச்சுவது படிந்து குடைந்து ஆடுவது போலே
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி விழுங்குவர்கள் எம்பெருமானையும் –

20-நீர் வேண்டியவன் நுனி நாக்கு நனைக்கக் கிடைத்தால் போதும் என்பான் -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள்மண்ணும் விண்ணும் மகிழவே -என்பர் –

21–நீரில் சிறிய கல்லும் அமிழும் தெப்ப மரமும் மிதக்கும் – எம்பெருமான் பக்கலிலும் ப்ரஹ்மாவாய் இழந்து போவதும் இடைச்சியாய் பெற்று விடுதலும் செய்யக் கானா நின்றோம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -என்றும்
மருவு நின் திரு நெற்றியில் சுட்டி யசை தர மணி வாயிடை முத்தம் தருதலும் உந்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ள முள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-என்றும்
பகவத் குணங்களில் சிறு மா மனிதர் அமிழ்தலும் ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க் கரையிலே நிற்றலும் உண்டே –

22-துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை-போக சாதனமாயும் ஸ்வயம் போக்யமாயும் நீர் இருக்கும் -ப்ராபகனும் பிராப்யனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே —

—————————————————————

யானையுடன் ஒப்புமை -திருவேங்கடத்து என் யானை -சொன்னால் விரோதம் ஒரே பாசுரம் -நம்மாழ்வார் -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் –

“தென்னானாய் வடவானாப் குடபாலானாய் குணபாலமதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலும் அருளிச் செய்வர்.

“என்னானை என்னப்பனெம்பெருமான்” என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

1. யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வவஸ்து போலவேயிருந்து பரமாநந்தத்தைத் தருவது போல எம்பெருமானும் ”அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே” என்னும்படியிருத்தலால் ஆனையாகச் சொல்லப்படுவன்.

2. ஆனையின் மேல் ஏறவேண்டியவன் ஆனையின் காலைப்பற்றியே ஏறவேண்டுவதுபோல, எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவர்களும் அவனது திருவடிகளையே பற்றி ஏறவேண்டுதலாலும் ஆனையென்கிறது.

3. ஆனையானது தன்னைக்கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால்” (திருச்சந்த விருத்தம்.) என்றபடி பக்தியாகிற கயிற்றை எம்பெருமானே தந்தருள்வன்.

4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலே அழுக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய்ப் பரமபவித்திரனாயிருக்கக் செய்தேயும்* பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்புமுடைய நம்போல்வாரோடே சேரத் திருவுள்ளமாயிருப்பன் வாத்ஸல்யத்தாலே.

5. யானையைப் பிடிக்கவேண்டில் பெண்யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.

6. பாகனுடைய அநுமதியின்றித் தன் பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் யானை; எம்பெருமானும் 1. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.

7. யானையின் பாஷை யானைப்பாகனுக்கே தெரியும்; எம்பெருமானுடைய பாஷை திருக்கச்சி நம்பிபோல்வார்க்கே தெரியும்; பேரருளாளனோடே பேசுமவரிரே நம்பிகள்.

8. யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் 1. “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்றும் 2. “கிடந்தவா றெழுந்திருந்து பேசு” என்றுஞ் சொல்லுகிற திருமழிசைப்பிரான் போல்வார்க்கு ஸர்வாத்மநா விதேயனிறே.

9. யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்* அலம்புரிந்த நெடுந்தடக் கையனிறே.

10. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பலகோடி நூறாயிர மெறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமானமுது செய்து சேஷித்த ப்ரஸாதத்தாலே பலகோடி பக்தவர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோமிறே.

11. யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் ஸாதித்துத் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதைகளை உணர்த்தி உதவுகின்றானிறே.

12. யானைக்கு ஒரு கையே; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளுங்கையில்லையிறே.

13. பாகனுக்கு ஜீவநங்கள் ஸம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு – இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டு கொள்க…

யானை -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலமதயானாய் –என்றும்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -என்றும் சோலை மழகளிறே -என்றும் சொல்வார்களே –
குஞ்ஜரம் வா அத்ரி குஞ்ஜே -என்றார் பட்டர் –

1- யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் பொழுது எல்லாம்அபூர்வ வஸ்துவாகவே -பரமானந்தமாகவே -இருக்கும்–இவனும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு
ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -பண்டு இவரைக் கண்டது எவ் ஊரில் -என்றும் சொல்லப் பண்ணுவன்

2-ஆனை உடைய காலைப் பற்றியே ஏற வேண்டும் -இவன் திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பர் –

3- தன்னைக் கட்ட கையிற்றை தானே எடுத்துக் கொடுக்கும்-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -பக்தியாகிய கயிற்றை அவனே தந்து அருள்வான் -மதி நலம் அருளினான் –

4-நீராட்டிய உடனே அழுக்கோடு சேரும் -சுத்த சத்வமயன் -பரம பவித்ரன் -இருந்தும் வாத்சல்யத்தாலே பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் உடைய நம் போல்வாருடன் சேர்வான் –

5-பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் -பிராட்டியின் புருஷகாரம் இன்றி இவனும் வசப்படான் –

6-பாகனுடைய அனுமதி இன்றி தனது பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
என்றபடி பாகவதர்களை முன்னிட்டு புகாதாராய் அங்கீ கரித்து அருளான் –

7-யானையின் பாஷை பாகனுக்கு தெரியும் -எம்பெருமான் பாஷை திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும் ஸ்ரீ காஞ்சி பூர்ண மிஸ்ரேண ப்ரீதா சர்வ அபி பாஷிணே-

8-யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்காய் இருக்கும் -இவனும்
கனி கண்ணன் போகின்றான் –காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -உன் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொள் -என்றும்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்றும் சொல்வாருக்கு சர்வாத்மநா விதேயன் இ றே–

9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும் -இவன் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தால் பல கோடி பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம் –

10-யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை -நீண்ட அந்தக் கருமுகிலை எம்மான் தன்னை –

11-யானை இறந்த பின்பும் உதவும் -இவனும் தீர்த்தம் பிரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளிய பின்பும் இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாக தனது சரிதைகளை உணர்த்தி உதவுகிறான் –

12-யானைக்கு ஒரு கையே உள்ளது -இவனுக்கும் கொடுக்கும் கை மட்டுமே கொள்ளும் கை இல்லை இ றே

13-பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் யானை -இவனும் அர்ச்சக பரிசாரகர்களுக்கும் தன்னை நிர்வஹிக்கும் வித்வான்களுக்கும் ஜீவன உஜ்ஜீவன ப்ரதன்-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

——————————————————————————————————————————-
பொன்னப்பன் மணியப்பன் –பொன்னை மா மணியை –பொன்னானாய் –பொருது வருகின்ற பொன்னே —

1- ஹேம்நா கேதோ ந தாஹேந சேதேந கஷணேந வா ஏத தேவ மஹத் துக்கம் யத் குஞ்ஜா சமதோல நம் -தீயிலிட்டோ உரை கல்லிலோ உளியை இட்டோ வெட்டினாலும்
ஹிம்சையால் வருந்தாமல் ஒளி விஞ்சி காட்டும் குந்துமணிக்கு ஒப்பாக நிறுத்திப் பார்த்தால் குன்றிப் போகும்
இன்னார் தூதன் என நின்றான் -பாண்டவ தூதன் என்றதாலே தரிப்பு உண்டாயிற்று
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தானை -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அவதார பிரயோஜனம் பெற்றோம் என்று ஒளி விஞ்சி இருப்பான்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -அதி சூத்திர வஸ்துக்களோடு ஒப்பிட்டால் துக்க ஹேது
ஒட்டுரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —

2–பொன்னானது மண்ணில் கலந்து இருந்தாலும் சேற்றில் அழுந்திக் கிடந்தாலும் உள்ளே மாசு ஏறப் பெறாது -எம்பெருமானும் ஹேய வச்துக்களோடு கூடி இருந்தாலும் மாசறு சோதியனே யாவான் –

3-பொன்னின் மதிப்பிக்கு ஒரு நாளும் குறை இல்லை -பொன் நகைகளுக்கு எந்நாளும் ஏற்றம் உண்டே -இவன் மதிப்பிக்கு என்றுமே கொத்தை இல்லை-

————————————————————————————————————————————————————-

ஆயர் ஏறு –ஆயர்கள் போர் ஏறு —

1-வ்ருஷபத்துக்கு சரணங்கள் நான்கு -கால் செய்கை -சிருஷ்டி சம்ரஷணம் சம்ஹாரம் மோஷ பிரதானம் –வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் -ஜகத் உத்பவ ஸ்திதி பிரணாச சம்சார விமோசன –ஆளவந்தார் –

2 வ்ருஷபம்-வ்ருஷபத்துக்கும் தர்மத்துக்கும் பெயர் -கிருஷ்ணம் தர்மம் சநாதனம் –ராமோ விக்ரஹவான் தர்ம –தர்ம சம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன் தானே சேரம தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்கையாலே சாஷாத் தர்மம் தானே என்கிறது —

4- உணவுக்கு பிறர் கை பார்த்து இருக்கும் வ்ருஷம் -அர்ச்சையில் அப்படியே விபவத்திலும் வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டி அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனன் —

5- வ்ருஷபம் -மாடு -அறிவிலி-இவனும் அவிஜ்ஞாதா -பக்தர்கள் அபராதங்கள் பற்றி அறிவில்லாதவன் குற்றங்களில் கண் செலுத்த மாட்டான் கண் செலுத்தினாலும் நற்றமாகவே கொள்வான்

5-வ்ருஷபம் கறுவுதல் உண்டானால் முட்டித் தள்ளும் -சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் –

6-வ்ருஷபம் காசு கொடுத்து வாங்கி விட்டால் நம் வீட்டையே நாடி வரும் -பக்திக்ரீதோ ஜநார்த்தனா-நம்மையே நாடி நிற்பன் -எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே -கனிவார் வீட்டின்பமாய் இருப்பவன் —

7-வ்ருஷபம் பிறருக்கு உழைப்பதையே இயல்பாக கொண்டது -இவனும் தூது செல்வதும் தேர் பாகனாய் நிற்பதுவும் மனிசர்க்காய் நாட்டில் பிறந்து படாதன பட்டும்
ந தே ரூபம் ந சாகாரோ நா யுதானி ந்சாச்பதம் ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வா பிரகாசசே -என்றும்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவிகிம் –

8- வ்ருஷபம் பாரத்தை வஹிக்கும் -இவனும் பக்தர் யோக ஷேமங்களை வஹிப்பன் -யோக ஷேமம் வஹாமி அஹம் -ஸ்ரீ கீதை-

9-வ்ருஷபம் எத்தனை அடி பட்டாலும் லஷ்யம் பண்ணாது -இவன் அடிபட்டதும் மகாபாரதம் இ றே–ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி –தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்து அடிப்ப -ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –

10-வ்ருஷபம் நிலம் உழ சாதனம் -இவனும் பக்தி உழவன்-தம் த்வாம் ஷேமக்ருஷீவலம் ஹலதரம் -பட்டர் -பக்தி யாகிற பயிருக்கு நெஞ்சு விளை நிலம்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய் –

11- வ்ருஷபம் நல்ல வழிகளில் நன்றாக ஓடும் -சேற்று நிலம் கண்டால் தளரும் -இவனும் நன்னெறி நின்றவர்கள் பக்கல் விரைந்து கார்யம் செய்வான்
மாய வான் சேற்று அள்ளலில் படிந்தவர்கள் இடம் தளரச் தோன்ற இருப்பன் —

———————————————————————————————————————————————–

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு /வண்டுகளோ வம்மின் /அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை -என்று அவனையும் ஆச்சார்யர்களையும் வண்டாகச் சொல்வர்

1-வண்டு சாரக்ராஹி -போதில் கமல வன்னெஞ்சம் -பக்தாநாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம் -படிந்து சாரத்தை கவர்ந்து களிப்பவன்-

2-வண்டுக்கு பத்ம அபி நிவேசம் உண்டு இவனுக்கும் பத்ம அபி நிவேசம் உண்டு-பத்மம் தாமரெஐ பத்மை பிராட்டி

3-சாகா சஞ்சாரம் உடையது வண்டு சாகை கிளை வேதம்

4-வண்டு செவிக்கு இன்பமாக பாடும் -இவனும் அப்படியே குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க —

5-வண்டின் ஜாதி வேட்டு வேளாண் குளவி தன்னிறம் ஆக்கும் -இவனும் பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டான்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்கட்கு தம்மையே ஒக்க அருள் செய்வான்

6-வண்டு சோலைகளிலே சுழலும்
இவனும் வண்டினம் முரலும் சோலை –அண்டர் கோன் அமரும் சோலை –ஆராமம் சூழ்ந்த அரங்கம் முதலான திருப்பதிகளிலே அனுரக்தன் –

7-வண்டு மதுவைப் பருக தென்னா என்று முரலும் -தென்னா தென் வென்று வண்டு முரல் -தொண்டர்களின் அமுத வாக்கைப் பருகி -தென்னா என்று தெகுடாடுகிறான்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித் தென்னா வென்னும் என் அம்மான் திருமால் இரும் சோலை யானே —

——————————————————————————————————–

நிதியே திரு நீர்மலை நிலத் தொத்தே –நிதியினை பவளத் தூணை –வைத்த மா நிதியம் மது சூதனன் –அந்தர் ஹிதோ நிதி ரசி த்வம்–ஸ்ரீ கூரத் ஆழ்வான் மயானி கூடம் அநபாய மகா நிதிம் த்வாம் -ஸ்ரீ தேசிகன் –

1-நிதி கண்ணுக்கு புலப்படாதபடி மறைந்து இருக்கும் -இவனும் கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்கு தோற்றாதபடி மறைந்து நிற்கும் –
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -கரந்து எங்கும் பரந்துளன் –கட்கிலி யாய் இருப்பன்

2-மறைந்து கிடக்கும் நிதி சில பாக்ய சாலிகளுக்கே புலப்படும் -யானே தவம் செய்தேன் –கோர மா தவம் செய்தனன் கொல்அறியேன் -லப்யோசி புண்ய புருஷை இதரைர் துராப -ஸ்ரீ கூரத் ஆழ்வான்

3-ஒரு வகை சித்த அஞ்சனம் அணிதவர்களுக்கு கண்ணுக்கு புலப்படுவான் -பக்த்யா சாஸ்தராத் வேதமி ஜனார்த்தனம் -சஞ்சயன் த்ருஸ்தராஷ்திரன் இடம் காட்டினான் –

4-நிதியானது தன்னைப் படைத்தவர்களை -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகர்கள் ஆக்கி ஆனந்த பரம காஷ்டையில் கொண்டு வைக்கும் –
உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே —

5- நவ நிதி பிரசித்தம் -நவ ஒன்பது புதியது -எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப் பொழுதைக்கு அப்பொழுது எனக்கு ஆராவமுதமே -நவ நவமாகத் தோற்றுவன்

6-நிதி எவ்வளவு அனுபவிக்கப் பட்டாலும் கொள்ளக் கொள்ள மாலாததாய் அஷய்யமாய் இருக்கும் -இவனும் எத்தனை ஊழி காலம் அனுபவிக்கப் பட்டாலும் மேன்மேலும் பெருகிச் செல்வன் –

—————————————————————————————-

யசோதை இளம் சிங்கம் –சிற்றாயர் சிங்கமே –

1- சிம்ஹம் மிருகங்களில் ராஜா -பாரளந்த பேரரசே எம் விசும்பரசே –இவனே ராஜாதி ராஜன் –

2-காடுகளிலே திரியும் -ப்ருஹ தாரண்யகம் போன்ற உபநிஷத்துக்களில் உலாவுவான் –

3-சிம்ஹம் மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் –தென்னன் உயர் பொருப்பு தெய்வ வடமலை திருவத்தி மலை களிலே உகந்து வசிப்பான்
அணி மணி சேர் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -நீளா துங்கஸ் தனம் -இத்யாதி –

4- சிம்ஹம் ஒருவராலும் அடக்க முடியாதே இருக்கும் -தன்னைப் பழக்கிக் கொண்டு இருக்கும் சிலருக்கு சர்வாத்மநா விதேயமாய் இருக்கும்
இவனும் பிறர்களுக்கு அறிய வித்தகன் -பத்துடை அடியவர்களுக்கு எளியவன்
சேநேயோ உபயோர் மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத -அர்ஜுனன் நியமிக்கும் படி பவ்யனாய் இருப்பன் –

5-கம்பீர நடை நடக்கும் -கானகம் படி உலாவி உலாவி கரும் சிறுக்கன் –சிம்ஹ விக்ராந்த மாமினம் நடைச் சக்ரவர்த்து பிடிக்கலாம் படி நடை அழகு உடையவன் –
ராமே பிரமாதம் மா கார்ஷீ புத்திர ப்ராதரி கச்சதி -ஸ்ரீ சுமுத்ரா தேவி இளைய பெருமாளை நடை அழகில் கண் வையாமல் கைங்கர்யம் செய அறிவுறுத்தினாள்-

6-சிம்ஹம் மத யானைகளை அவலீலை யாக தொலைத்து விடும் -இவனும் மது கைடப ஹிரண்ய ஹிரண்யாஷ ராவண கும்பகர்ண ஹம்ச சிசுபாலாதிகளை -மத யானைகளை கிள்ளிக் களைந்தவன் –

—————–——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியானதொகுப்பு–-ஸ்ரீ திருவாய் மொழியின் தசாவதாரம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

November 21, 2025

கர விசும்பு எரி வளி நீர்நிலம் இவை மிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே–1-1-11-இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன-வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும்-

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-சேதனர்க்கு ஹிதமாவது – நன்மையாவது ஏது என்று நிரூபித்துச் சொல்லப்பட்டவை;-ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே
–1-3-11-ஸ்ரீ நித்திய ஸூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த் தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப் பெறுவர்கள்-ஸ்ரீ ஆதி வாஹிகரோடே விரஜையிலே சென்று ஸூஷ்ம சரீரமும் விதூநம் நீங்கப் பெறுவர்-த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’
என்கிறார்.

அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-
சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம் கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று –விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம்,

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-
அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, ஸ்ரீ இறைவன்-சம்ஸ்லேஷ உன்முகன் ஆனவாறே வந்து காட்சி அளித்தவாறே அயோக்கியன் -‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-உபதேசம் இல்லாமலே நிரபேஷமாக- -சம்சார சம்பந்தம் அற்று ஸ்ரீ பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள்

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஓடு விக்குமே–1-7-11-
பிராப்தி பிரதிபந்தகங்களை பலத்திற்குத் தடையாக உள்ளவற்றை உன்மீலிதமாக்கும்- வேரோடு அழித்து விடும்-சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் வேறு இடத்திற் சென்று சேரினும் –மறுமுட்டப் பெறாதபடி-தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’ அல்லாதனவாகக் கெடும்-

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து, ஓர்தல் இவையே–1-8-11-அவனுடைய ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து- சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை – சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–பொரு
-என்று ஒப்பாய் ஒப்பாவது -சேருகையாய் -சேரும் என்றபடி –தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்-ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு இது கற்றார்க்கு முதல் அடியிலே உண்டாம்

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே–1-10-11-
தணிவு – முயற்சி அற்று இருத்தல்;
அதாவது, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி, சிரத்தை மாறாமல் கற்பராகில் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான ஸ்ரீ பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்-‘ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே,-ஞானமாகில் பகவத் விஷயத்தைப் பற்றியல்லது இராமையாலே, இதனைக் கற்க,-இதற்குப் பலமாகத் தொண்டினை இது தானே தரும்.-இனி, இதற்குக் கல்வி தானே பயன்’ என்று பொருள் கூறலும் ஒன்று.

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-
இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் ஸ்ரீ பகவானைப் பெற்றமையால் களிக்கும் நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள்.‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார்.‘திண்ணன்’ என்றது, -ஸூ நிச்சிதம் -ஐயமின்மையைக் குறிக்க வந்தது.

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே–2-2-11-
இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது –அபர தேவதைகள் பக்கல் – இறைவர் அல்லாதாரை- ஸ்ரீ பரத்வ புத்தி பண்ணுகையும் இறைவர் என்று எண்ணுதலும், ஸ்ரீ பர தேவதை பக்கல் -ஸ்ரீ இறைவனை -பரத்வ பிரதிபத்தி பண்ணாமையும் -ஸ்ரீ இறைவன் என்று எண்ணாமையும். இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-
அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும் நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே, நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.-ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க, இதற்கு அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க, ‘உலகத்தில் இருந்ததே குடியாக அனைவரும் சமுசாரிகளாக இருக்க, அதில் நாலிரண்டு பேர் உத்தம ஆஸ்ரமிகளானால் சமுசாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமே உண்டோ?
சுவர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன; ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான் என்று கேள்விப்படுகிறோம்? ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’ என்று ஸ்ரீ நம்பிள்ளைக்கு ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தார் –

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11
-பித்ரு தனம் -தமப்பன் செல்வம் புத்திரனுக்குக் கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று, இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவர்-‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே–2-5-11
-‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்-இவருடைய அனுபவத்தைப் பரமபதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.-

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத் தன்மையாலே அவர்கள் ஸ்ரீ பகவதீயர் -ஸ்ரீ பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்து விடும்;-‘இத் திருவாய்மொழியின் சம்பந்தந்தானே ஸ்ரீ கேசவன் தமராக்கி விடும்,‘

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-
இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்-ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார்-

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே–2-9-11-
‘தனக்கேயாக வேணும்’ இவர் பிரார்த்தித்தபடியே இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்திற்குத் தகுதியான-அனுரூபமான பேற்றினைச் செய்து கொடுக்கும்.

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-
அருளைக் கொண்டே ஸ்ரீ பரம் பொருளை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘அருளையுடையவன்’ என்கிறார்.
அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும்.-ஒரு ஞான லாபத்தைப் பண்ணித் தந்து விடுதலே அன்றி, அர்த்த கிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே , ஸ்ரீ அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-
கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.-இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்ற போதே ஸ்ரீ ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின், பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச் செய்கிறார்.-ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?-இவரோடு சம்பந்த முடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-
ஸ்ரீ ஆழ்வார் பிரார்த்தித்த படியே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்யப்பெறுவர்,’-கைங்கரியத்தை மநோ ரதித்து விடுகை அன்றி இவருடைய மநோ ரதமே மநோ ரதமாக
கைங்கரியமாகிற சம்பத்தைப் பிராபித்து அனுபவிக்கப் பெறுவர்கள்.-இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.-

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே–3-4-11-
நித்ய கைங்கரியத்தைப் பெற்று, ஸ்ரீ அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’-இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞான விசேஷம் பிறந்து அநுசந்திப்பதே!’என்று ஸ்ரீ ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேம அதிசயத்தாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, ஸ்ரீ சர்வேஸ்வரனை விட்டு இவர்களை மொய்த்து விரும்புவர்-நெருங்கி ஆதரிப்பார்கள்-

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-மஹாபாவத்தை இது தானே-நிஸ் சேஷமாக அடியோடு போக்கும்-ஸ்ரீ பகவானுடைய குணங்களைக் கேட்டால் விக்ருதாராகாமல் -வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹா பாவங்களைச் சாம்பல் ஆக்கும்.-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-ஸ்ரீ பரத்வ ஞானத்துக்கு அடியான -ஸூஹ்ருதம் -புண்ணியமாதல்,சாஸ்திர ஞானமாதல்,
ஸ்ரீ சதாச்சார்ய -நற்குருவின் உபதேசமாதல், ஸ்ரீ பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் -ஸ்ரீ பகவத் கடாக்ஷம் –இவையனைத்தும் இல்லாதார்க்கும் ஸ்ரீ அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்கிறார்.

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே–3-7-11-
பாகவதசேஷத்வ ப்ரதிபாதகமான இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள், இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தைக் கடப்பர்கள்,’

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-
-சப்த மாத்ரத்தாலே இதில் பிரார்த்தித்த படியே அனுபவிக்கலான -பரமபதத்தைச் செல்லப் பெறுவர்-ச ஏகதா பவதி -என்றபடியே -அநேக சரீரங் களைப் பரிக்ரஹித்து அவ்வோ சரீரங்களிலும் கரணங்களும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து பூர்ண அனுபவம் பண்ணலாம் படி தேசத்திலே பெறப் பெறுவர் 

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-
இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ -ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?-பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?-பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,மேலே ஸ்ரீ பரமபதத்திலே சென்றால் தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ -தன் ஐஸ்வர்யத்திலே அந்தர்பூதமாம் -அடங்கியதாகும் -படி பண்ணிக் கொடுக்கும் –-என்கிறார்.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-
அஃகல் – சுருங்கல்.-இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற ஷூத்ர – சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, ஸ்ரீ பகவானுடைய கைங்கரியத்தையே -ஏக போக –புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,-காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே–4-2-11-
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு சத்ருசர் -ஒத்தவர் ஆவர்,’-வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர்.-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே–4-3-11-
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உபய விபூதியும் திருவாய்மொழியை அப்யசித்தவர்கள் இட்ட வழக்கு,’ -பூமியிலே ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து. இங்கே இருக்கச் செய்தே ஸ்ரீ பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்-பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே,
தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று ஸ்ரீ சீயர் உருத்தோறும் அருளிச் செய்வர்.

வல் வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சட கோபன்
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே–4-4-11-
-வீற்று -வேறுபாடு.-சம்சார துரிதமும் போய், ஸ்ரீ பகவத் விஸ்லேஷம் கந்தம் இல்லாத திருநாட்டிலே எல்லாரும்-சிரஸா வஹிக்கும் – தலைமேல் தாங்கும்படி மேன்மையோடே இருக்கப்பெறுவர்,’-இவர் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கற்றவர்களைத் தொழுது ஸ்ரீ நித்ய ஸூரிகள் உய்வு பெறும்படி.
அவன் சேஷித்வத்துக்கு முடிசூடி இருக்குமா போலே இவர்களும் சேஷத்வ சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-
இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் பிரசாத அதிசயத்தாலே -கருணையின் மிகுதியாலே,
சர்வேஸ்வரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே -பரமாக -பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.-‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே–4-6-11-
இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யமான -அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும். வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது, விரஹ சுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும் ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக, தோழியானவள்,இது ஒரு விஷயத்தில் பாவபந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.-தொழுது ஆடிப் பாட வல்லார் -பெண் பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.-துக்க சீலம் இலர்களே – மோஹித்தவிடத்து தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும், பாகவத ஸ்பர்சம் -சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது. அஃது இல்லாமையே ஸ்வபாவமாகவே தன்மையாக உடையர் ஆவர். சீலம் – ஸ்வபாவம் -தன்மை.

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே–4-7-11-
ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி -மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? அதிலே சிறிது அணைய நின்றாகிலும் இதனைக் கற்க -அப்யஸிக்க வல்லவர்கள்-பாரவசயத்தாலே விக்ருதராய் ஆட வல்லவர்கள் -காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற சம்சாரத்தை -இவ் வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப் பெறுவர்.–

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து வைகுந்தம் நண்ணுவரே–4-8-11-
இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து.-ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, ச ஏகதா பவதி த்ரிதா பவதி -அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்- அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி – பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம் படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவர். என்றது, ‘பல படிகளாலும் -‘பல சரீரங்களாலும், பல விதங்களாலும்’–விரும்பின விதம்’ ‘விரும்பின திருமேனி’ அடிமை செய்யப் பெறுவர்-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;-நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.-அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,
அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.-இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம்.-இப்பொருளில் ‘மற்றது’ என்பது அவ்யயமாய் -இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மா நகருக்கு அடைமொழியாக்கி, ‘ மற்றையதான – அதாவது, சம்சாரத்துக்கு -இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான
வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.-அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;-அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-
 நிரவதிக -தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப் பெறுவர் -நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,
பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்
.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-இத்திருவாய்மொழி கற்றார்க்கு, தேவதாந்த்ரங்கள் -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையும்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல், அபாகவத ஸஹவாசம் -பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல், ஸ்ரீ எம்பெருமான் பக்கல் ப்ரயோஜனாந்தர பரதையுமான –வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் 

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகும் தம் மூரெல்லாம்–5-3-11-
இருந்த தேசத்தே
அவ் வெம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் –எப்பொழுதும் சேர்ந்திருப்பான்-நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல்,
இவர்கள் இருந்த இடம் தானே ஸ்ரீ பரம பதமாம்-அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-
இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத ஸூரியனும் அஸ்தமியாத மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர்-பிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்- ஸ்ரீ தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள்-மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்
ஸ்ரீ உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே–5-6-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப் பெறுவர்கள்-ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய வ்ருத்தி – கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-
இத் திருவாய் மொழியைப் பொருள் அறிவோடு -சாபிப்ராயமாக –கற்குமவர்கள் நித்ய ஸூரிகளுக்கு என்றும் போக்யர் -இனிய பொருளாவர்-ஸ்ரீ நித்ய ஸூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘ஆராவமுதே’ என்கிறார்-

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-
இப் பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் -இனியர் ஆவர்-இது கற்றாரை ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள்-

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே ஸ்ரீ பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள்-இவர்களுடைய ஜன்மங்கள் கர்மம் காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே முக்தர்களுடைய சரீரத்தைக் காட்டிலும் ஸ்லாக்கியம்.-ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களின் பொருட்டு அவதரித்த ஸ்ரீ பகவானுடைய அவதாரம் போலே ஸ்லாக்கியம் என்கை –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-
ஸ்ரீ பரம பதத்திலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்-சம்சாரத்தைவிட்டு, ஸ்ரீ பகவானுடைய அநுபவத்துக்கு விச்சேதம் -நழுவுதல் ஒரு நாளும் இல்லாத ஸ்ரீ பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே–6-1-11-
-இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் போக்யமாமா –இனிய பொருளாயிருக்குமாறு – போலே, ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் –விரும்பத் தக்க பொருளாவர்

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-
இத் திருவாய் மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்கு ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை-தூது விட்டு, அவன் வரக் கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் பட வேண்டா-அவன் தானே வந்து மேல் விழ நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11
-இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நாள் தோறும் கௌரவிக்கத் தக்கவராவர்-சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள்-ஸ்ரீதரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே-வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11--ஸ்ரீ கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே தூய்மையை யுடைத்தான இப் பத்தும் கற்றார், தம்மைப் போன்றே ஸ்ரீ கிருஷ்ண பக்தராவர்

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான அனுரூபமான -கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள்-ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் சேர இருக்க ஸ்ரீ இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே,
விசிஷ்ட வேஷத்தில் சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் –

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-
இத் திருவாய் மொழியினை வல்லவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை -போகத்தை புஜிக்க பெறுவர் -அநுபவிப்பார்கள்-நீர்மைக்கு எல்லையான ஸ்ரீ திருமலை ஆஸ்ரயணீய -பற்றுதற்குரிய ஸ்தலம்;-மேன்மைக்கு எல்லையான ஸ்ரீ பரம பதம் -அனுபவ அநுபவத்திற்குரிய ஸ்தானம் .

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-
இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு ஸ்ரீ திரு நாடு என்கிறார்.-ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்யாநுபவம் பண்ணலாம் ஸ்ரீ நிலத்திலே புகப் பெறுவர்.தனி வழி போகாதே, ஸ்ரீ அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான ஸ்ரீ தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே–6-8-11-
இத் திருவாய்மொழியில் ஸ்ரீ ஆழ்வாருடைய ஆர்த்தியை -துன்பத்தை –அனுசந்திப்பார் -நினைத்தவர்கள் தாமும் உருகுவர்-ஸ்ரீ பகவானுடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள்-குண வித்தகர் – பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்த தாகையாலே இது தானே பலம் என்கிறது.

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே–6-9-11-
இப் பத்தும் கற்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கமான கிங்கரர் -தொண்டராவர்-சர்வ ரக்ஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.-சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விட மாட்டாதவர் களாதலின் உரிய தொண்டர்’ என்கிறார்.-குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” -ஸ்ரீ வசன பூஷணம்,

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-
ஸ்ரீ பரம பதத்திலே சென்று தாஸ்யத்தில் அபி ஷிக்தராய் -அடிமையிலே முடி சூடினவராய் அடிமை செய்யப் பெறுவர்கள்-நற் கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப் பத்துங் கற்றார் பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.

கொண்ட மூர்த்தி ஓர் மூவ ராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே–7-1-11-
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்திரியங்களால் ஆத்மாவுக்கு வரும் நலிவு போம்

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல் ஸ்ரீ திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், ஸ்ரீ நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-
இத் திருவாய் மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே மிகவும் அவகாஹித்தார் -மூழ்கினாரேயாவர்,’ -அடிமைக் கூட்டத்தில் திரு வாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட் புகுவர் என்னுதல்.

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-
இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே விஜயத்தைக் கொடுக்கும்-எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்கொடுக்கும்-கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்-பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி.

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-
இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான ஸ்ரீ பரமாத்மாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவராய் இருப்பர்-

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-
இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித் ஸ்ரீ திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,-நெடு நாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே–7-7-11-
இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பகவத் விஸ்லேஷத்தால் கிலேசப்படாதே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடே -ஒரு கோவையாய்-உருவு வெளிப் பாட்டாலே நோவு படாமல்-கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ 

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார் என்றைக்கும் கிருத்தியர்-அவர்களுக்கு இவ் வாத்மா உள்ளதனையும், ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;-ஸ்ரீ ஆழ்வார் பரிக்ரஹம் – அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும்.-என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே–7-9-11-
இத் திருவாய் மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்-இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஸ்ரீ ஈஸ்வரன் இவர்களைக் கடாஷிப்பது? இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய் அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற் றத்தனை-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-
இத் திருவாய் மொழி கற்றவர்கள் ஸ்ரீ அயர்வறும் அமரர்களுக்குச் ஸ்லாகிக்கத் தக்கவர்கள்,-நாள் தோறும் பவித்ர பூதர் -தூயர் ஆவார்’ என்று ஆதரித்துக் கொண்டு போந்து. தங்கள் மஹிஷிகளை -மனைவி மார்களைச் ஸ்னேகித்துக் கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள்.

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-இதனை அப்யசிப்பார்க்கு -கற்கின்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம்

பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையு மோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-
‘இத் திருவாய் மொழி வல்லார் அவித்யாதி சகல தோஷங்களும் –அறிவின்மை முதலிய எல்லா குற்றங்களும் நீங்கி-இஹ லோக இவ் உலகத்திலும்-பர லோகங்களிலும் மேல் உலகத்திலும்
தாங்களே கிருதக்ருத்யர் ஆவார் -நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா-உபய விபூதியிலும் தாங்களே பிரதானர் -முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-
இத் திருவாய் மொழி அப்யசிப்பார் -கற்பவர்கள் அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத இத் தேசத்தில் பிறவார்கள் ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
இத் திருவாய்மொழியை அப்யசிப்பார்க்கு -கற்றவர்கட்கு இது தானே முதலில் ஸ்ரீ பரம பதத்து ஏறக் கொடுபோய் பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும்-அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே இப் பத்து தானே முந்துற ஸ்ரீ பரம பதத்தைக் கொடுத்து-பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-
இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே-இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே-அவனைப் பெற்று -ஸ்ரீ பகவத் அனுபவம் பண்ணி-எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-
இத் திருவாய் மொழி கற்றவர்களை இது தானே ஸ்ரீ திரு நாட்டில் கொடு போய் விடும்-சம்சாரத்தில் இதனைக் கற்பவன் அப்யசிப்பான் – ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு -ஆச்சர்யப் பட்டு-
சர்வாதிகமான -எல்லா உலகங்கட்கும் மேலான ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது-மாயக் கூத்தா -என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து-ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும்

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-
இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் -இப் பத்துக்கும் பிறவிக்கும் சஹா நவஸ்தா லக்ஷண -ஒரே இடத்தில் இருக்கக் கூடிய தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி 

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்துள் இப் பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-
இப் பத்தும் கற்றாரை-தம்மை விஷயீகரித்தாப் -அங்கீகரித்தாப் போலே விஷயீகரித்து -அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –இத் திருவாய் மொழி அப்யசித்தாருக்கு -கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -தகுதியான கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-
இத் திருவாய் மொழி வல்லார் இதில் சொன்ன ஸ்ரீ பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று-
ச பரிகரமாக –-பெண்டு பிள்ளைகளோடு வாழப் பெறுவர் என்கிறார்

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார் -கற்பவர்கள் எனக்கு ப்ரியகரர் -பிரியத்தை செய்கின்றவர்-என்கிறார்-இதனைக் கற்பதற்கு அப்யசிக்கைக்கு ஈடான தகுதியான தன்மை உள்ளவர் பிறவி தொடக்கி நமக்கு ஸ்ரீ நாதர்

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-ஆஸ்ரித அடியவர்கட்கு ஸூலபன் ஆனவனுடைய திருவடிகளை ஹ்ருதயத்தில் மனத்தால் நிரந்தரமாக –எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார் இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் அபேஷையோடே ஆசையோடு திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்-திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்-தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும் உலாவும்படி காண வேண்டும்
ஸ்மிதம் புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும் என்று ஆசைப் பட்ட இவருக்கு
அப்போதே கிடையாமையாலே இவற்றைப் பெற வேண்டும் என்னும் மநோ ரதம் -எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று-இதனைக் கற்றவர்களுக்கும் அப்யசித்தவர்களும் -இந்த மநோ ரதம் -எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்-

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-
இத் திருவாய் மொழி கற்றார் ஸ்ரீ பரம பதத்தே செல்லுதல் ஆச்சர்யம் அன்று –ப்ராப்தமே தக்கதே -இயல்பாகவே இருக்கும் –-–என்கிறார் –இப் பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-யுக்தி மாத்திரம் -இப் பாசுரங்களை ஒரு கால் சொல்லுதல்-பாட தாரணம் -இவற்றைப் பாடம் செய்தல்-அர்த்த அனுசந்தானம் -இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் – என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பிராப்தம் – தாய பாகமாக அடைய வேண்டியதாகவே இருக்கும் அன்றோ –

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-
இத் திருவாய்மொழி தன் போக்யத்தையால் -இனிமையினால் ஸ்ரீ நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் –
ஹ்ருதயம் ஈர்க்கப் பண்ணும் -என்கிறார்-அன்றிக்கே-ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு ஏறான ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11-
இத் திருவாய்மொழி பாசுரங்கள் ஹிருதயத்திலே -நெஞ்சில் படில் ஆரேனுமாகிலும் தரியார்-என்கிறார்-என்னுடைய ஆர்த்த நாதத்தாலே –துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது என்றவர்க்கு பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு ஸைதில்யமே -நலிந்து வருந்துவதே பலித்து விட்டது-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு – கற்பார்க்கு பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –இங்கே பிறக்க இருக்காமல்- ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்
அனுசந்தானம் சாத்மிக்கும் -பொறுக்கக் கூடிய தேசத்திலே புகுவார்கள் –என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11- பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் –ஸ்ரீ பகவானைப் பிரிதல்-விஸ்லேஷம் – ஆகிற நோயை அறுக்கும் -என்றது-கலந்து பிரிந்து துக்கம் பட வேண்டா-கலந்து பிரிந்து திர்யக்குகளின் காலிலே விழுந்து கிளேஸிக்க வேண்டா –
விஸ்லேஷம் -பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-
ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்-இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும் அனுப்பிக்கப் பெறுவர் –சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–
9-9-11–அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் -ப்பாசுரத்தை அப்யசிப்பாருக்கு -கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –என்கிறார்-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-
உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில் இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்-தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
பரம உதாரமான -மேலான வண்மையை உடைய ஸ்ரீ திரு மோகூருக்கு கொடுத்த இத் திருவாய் மொழியை அப்யஸிக்க கற்க வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம்–சரீர அவசானத்திலே –உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே வழித் துணை இல்லை என்று கிலேசப்பட – வருந்த வேண்டாதபடி ஸ்ரீ காளமேகம் வழித் துணையாம்-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார்-அங்குத்தை அப்சரஸ் ஸூக்களுடைய ஆதரத்துக்கு விஷய பூதராய் – விருப்பத்துக்குப் பொருளாக இருப்பார்-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே இது கற்றாரும் அவனோடு நித்ய சம்ச்லேஷம் -நீங்காத கலவியைப் பெறுவார் -அவனை பசு நிரைமேய்க்க போக வேண்டாம் என்று நிஷேதித்த -விலக்கிய பாசுரமான இத் திருவாய் மொழியும் மற்றைய திருவாய் மொழியைப் போன்று ஒரு திருவாய் மொழியே -என்று விஸ்மிதராகிறார் – 

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-
இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள் ஸூலபமாம்-அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற வேண்டாதபடியான பற்றாகும்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11–அப்யசித்தவர்களை -கற்றவர்களை ஸ்ரீ ஆழ்வார் தம்மைப் போலே பகவான் உடைய விஷயீகார பாத்ரம் -திருவருளுக்குப் பாத்ரமாக்கும்

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-
-செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே-இத் திருவாய் மொழியை கற்க -அனுபவிக்க -உரியவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஆவார்கள் என்கிறார்-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
மஹான் அஹங்காரம் இவை முதலானவற்றின் விஷயமான இத் திருவாய் மொழி திரு மால் இரும் சோலை மலையிலே சொல்லிற்று –ஸ்ரீ திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
ஸ்ரீ அழகரைச் சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று-ஸ்ரீ திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
இத் திருவாய் மொழியினை அப்யஸிக்க -கற்க வல்லவர்கள் இட்ட வழக்கு பரம பதம் –ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று அங்கு உள்ளார் சொல்லுவது-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-இத் திருவாய் மொழியைக் கற்றவர்-அப்யசித்தவர்கள் – நித்ய ஸூரிகளோடு ஒப்பர்-அப் பரம பதத்திலே ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுபவித்து அவற்றிலே வித்தராய் -ஈடுபட்டவராய் அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–
-பரம பக்தியாலே –
ஸ்ரீ பகவானுடைய பிரசாதம் -திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின – கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற -அனுக்ருஹீதையான -பக்தியினுடைய இடத்திலே ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது – இதனை அறிந்தவர்கள்-சம்சாரத்திலே -இவ் உலகத்தில் பிறந்து வைத்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பர் – ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம் இவர்களுடைய பிறப்பும் –

—————

கம்பர் தெய்வப் பனுவலான திருவாய்மொழியைக் ‘கண்ணன் உண்ணும் அறுசுவை உணவு’ (7) பக்திக்கு மூலப்பனுவல் (8) திருமாலின் 11ஆவது அவதாரம் (78), நான்கு வேதத்தின் சாரம் (71) எனப் பலவாகக் காண்கின்றார்.

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான்
சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-திருமால் அமுது செய்து அருளும்படி பரிமாறுபவர்

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-ஆஸ்திகர்களுடைய பக்திக்கு காரணமுமாம்-மற்றத் திவ்ய பிரபந்தங்களும் மூலம் -முதல் நூல்-முமுஷுக்களுக்கு முத்தி சாதனம்

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளும்-மேலோட்டமாக பார்ப்பவர் தமிழ் பதிகங்கள் என்பர்கள்-ஆழ்ந்து நோக்குபவர்கள் நான்கு வேதங்களே இவை என்பர்கள்-நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுதமாய் அருளினான்-

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–-அத்ரி ஜமதக்கினி ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில் சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும் வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும் கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –திருமாலது பதினொன்றாவதாகிய திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி-வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்

————————

ஸ்ரீ எம்பெருமானுடைய அவதாரங்களுக்கு என்ன என்ன ப்ரயோஜனங்களோ அவை யெல்லாம்‌ திருவாய்மொழியின்‌ திருவவதாரத்தினாலும்‌ நன்கு தேறுகின்‌ றன வென்றும்‌ அறியக் கிடக்கின்றது. இவ் விஷயம்‌ ஆழ்வாருடைய திவ்ய ஸூத்திகளைக்‌ கொண்டே இங்கு நிரூபிக்கப் படுகின்றது.

1-2--ஸாது பரித்ராண துஷ்க்ருத விநாசனங்கள்‌ -பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாசாய ச  துஷ்க்ருதாம்‌ சம்பவாமி யுகே யுகே -*சாதுசனத்தை லியுங்‌  கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஆதியஞ்‌ சோதி யுருவை அங்கு வைத்திங்குப்‌  பிறந்த வேத முதல்வன்‌*-*நண்ணாவசுரர்‌  நவிவெய்த  நல்லவமரர்‌ பொலிவெய்த-பண்ணார்‌ பாடல்‌ இன்கவிகள்‌ யானாய்த்‌ தன்னைத்‌ தான்‌ பாடி”-ஸ்துத்யனுடைய அவதாரம்‌ 
போலேயாயிற்று ஸ்துதியினுடைய அவதாரமும்‌
.”-திருவாய்மொழி யென்றும்‌ ஸ்ரீராமாயண மென்றும்‌ இரண்டு வலிய மதிள்கள்‌ என்று மழியமாட்டாதபடி யன்றோ வுள்ளன, அந்த மதிள்‌களை இவன்‌ அசைக்கவும்‌ முடியாதவனன்றோ-ஆகவே திருவாய்‌
மொழியானது எம்பெருமானுக்குப்‌ பெரிய திரு மதிள்‌ போலே யிருந்து ஸாது பரித்ராணமும்‌ துஷ்க்ருத் விநாசநமும்‌ செய்யுமதென்றறிக.


3-4--மயர்வையறுத்து மதிநலமளித்தல்‌ -1. அஜ்ஞாந நிவர்த்தகத்வம்‌, 2. ஜ்ஞாந ப்ரதத்வம்‌. -3. பக்தி ப்ரதத்வம்‌ ஆகிற. இம் மூன்றும்‌ திருவாய்மொழிக்குமுண்டு. மாறன்‌ சடகோபன்‌ ஒலி புகழாயிரத்திப்‌ பத்து உள்ளத்தை மாசறுக்குமே என்கிற பாசுரத்தினால்‌ அஜ்ஞாந நிவர்த்தகத்வமும்‌ “வண் சடகோபன்‌ தெருள் கொள்ளச்‌ சொன்ன வோராயிரம்‌!” என்ற பாசுரத்தினால்‌ ஜ்ஞாந ப்ரதத்வமும்‌, “குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன, தூய வாயிரத்திப் பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்‌றியே”' என்ற பாசுரத்தினால்‌ பக்தி ப்ரதத்வமும்‌ திருவாய்‌ மொழிக்கு முண்டென்பது அறியத்தக்கது,

5-எம்பெருமானுக்கு உரிய தொண்டராக்குதல்‌ -எம்பெருமான்‌ நம்மைத்‌ தனக்கு அநந்யார்ஹ சேஷமாக அங்கீ கரிப்பவன்‌ என்பது “வெறித் துளப முடியானே ! வினையேனை உனக் கடிமை அறக் கொண்டாய்‌'' என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ நம்மை எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கு மென்னுமிடம்‌ “தொண்டன்‌ சடகோபன்‌ தெரியச்‌ சொன்ன ஓராயிரத் துளிப்பத்து உரிய தொண்டராக்கு முலக முண்டாற்கே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌-

6-நோய்களறுக்கும்‌ மருந்தாதல்‌ -எம்பெருமான்‌ ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்தா யிருப்பவன்‌ என்னுமிடம்‌ அறிந்தனரெல்லாம்‌ அரியை வணங்கி அறிந்தனர்‌ நோய்களறுக்கும்‌ மருந்தே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌ -திருவாய்மொழியும்‌ ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களையும்‌ உரு மாய்ந்து போம்படி பண்ணு மென்னுமிடம்‌ *தென் குருகூர்ச்‌ சடகோபன்‌ மிடைந்த சொல் தொடை ஆயிரத்துளிப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்குமே'” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

7-வானின் மீதேற்றி யருள்‌ செய்தல்‌ -எம்பெருமான்‌ பக்தர்கட்குப்‌ பரமபதத்தை யளிப்பன்‌ என்னுமிடம்‌ “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு ஆற்றல்‌ மிக்கான்‌ பெரிய பரஞ்சோதி புக்க வரியே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.திருவாய்மொழியும்‌ பரமபத ப்ராப்தியைப்‌ பண்ணி வைக்கு மென்னுமிடம்‌ “கோனை வண் குருகூர்‌ வண் சடகோபன்‌ சொன்ன வாயிரத்‌துளிப்பத்தும்‌ வானின் மீதேற்றி யருள் செய்து'” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

6-அருளி யடிக்கீ ழிருத்துதல்‌ -எம்பெருமான்‌ நம்மைத்‌ திருவடிகளின் கீழ்ச்‌ சேர்த்துக்‌
கொள்ளுமென்னுமிடம்‌ “பெருந் துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன் தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன் செய்யும்‌ சேமம்‌” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.-திருவாய்மொழியும்‌ அவன்‌ திருவடிகளின் கீழே சேர்த்து வைக்குமென்னுமிடம்‌-திருமாலா லருளப்பட்ட சடகோபன் சொல்லாயிரத்துளிப்‌ பத்தால்‌ அருளி யடிக் கீழிருத்தும்‌'-என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

9-இன்பக் கதி பயக்குந் தன்மை -எம்பெருமான்‌ தன்னோடு அந்வயித்தவர்களுக்குத்‌ தன்னுடைய அநுபவமாகிற நிரதிசய ஆநந்த யுக்தமான ப்ராப்யத்தைக்‌ கொடுப்பன்‌ என்னுமிடம்‌ “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்‌ தெளிவுற்ற கண்ணன்‌” என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன் பால்‌ அந்வயித்தார்க்கு பகவதநுபவ ஆனந்தத்தை யுண்டாக்கு மென்னுமிடம்‌ **வண் குருகூர்ச் சடகோபன்‌ இங்ஙனே சொன்ன வோராயிரத்துளிப்‌ பத்து எங்ஙனே சொல்லிலு மின்‌பம்‌ பயக்குமே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

10-நீராயுருக்குந்‌ தன்மை -எம்பெருமான்‌ தன்னை யனுபவிக்க இழிந்தவர்களை த்ரவ த்ரவ்யமாம்படி உருக்கு வனென்னுமிடம்‌ ““ஊடு புக்கு என தாவியை யுருக்கி யுண்டிடுகின்ற நின்றன்னை” என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன்னை யநுபவிக்க இழிந்தாரை நீர்ப் பண்டமாக உருக்கு மென்னுமிடம்‌ “தென் குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்லாயிரத் துள்ளிவை ஒன்பதோ டொன்றுக்கும்‌ மூவுலகு முருகுமே” என்கிற பாசுரத்தினாலும்‌' தோற்றங்களா யிரத்துள்‌ இவையுமொரு பத்தும்‌ வல்லார்‌ ஊற்றின் கண்‌ நுண் மணல் போல்‌ உருகா நிற்பர்‌ நீராயே!” என்கிற பாசுரத்தினாலும்‌ விளங்கும்‌,

ஆக இப்படி பத்து ப்ரகாரங்களாலே எம்பெருமானோடு ஸாம்யத்தை யுடைத்தாகையாலே, வாஸ்யனான அந்த ஸர்வேஸ்வரனுடைய *பத்தினாய தோற்றம்‌!” என்கிற பத்து அவதாரம் போலே “தோற்றங்களாயிரம்‌'! என்கிற இதனுடைய பத்துப் பத்தான ஆவிர்ப்பாவமும்‌-என்று அறியத்தக்கது-எம்பெருமான்‌ லோக ரஷணார்த்தமாக அவதரித்தது போலே திருவாய்மொழியும்‌ லோக ரக்ஷணார்த்தமாகவே அவதரித்த தென்‌றதாயிற்று.
———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

திருமங்கை ஆழ்வாரின் மடிபிடி ரகஸ்யம்

November 14, 2025

வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று முதலி யாண்டான் –

திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்
  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

இதழ் விண்டு அலருகிற பூவை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட திரு மங்கையில் உள்ளார்க்கு பிரதானராய் உள்ள ஆழ்வார்  –வாள் கலியன் ––பகவத் பிராப்திக்கு பிரபத்தி போலே யாய்த்து பிரதி பஷ நிரசனத்துக்கு கையிலே வாள் –திருவாலி நாடன் —இதுவே போருமாய்த்து ஏற்றம் –நன்னறையூர் நின்ற நம்பி தன் –திரு நறையூரிலே வந்து நிற்கையாலே கல்யாண குண பூர்ணன் ஆனாவன்  –நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும்-நிரதிசய போக்யமாய்-குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகளை திரு முடிக்கு வளையமாக வைத்தும்  –தொழுதும் எழுந்து  ஆடியும் –நம புரஸ்தாத் அத ப்ருஷ்ட –முன்னும் பின்னும் எல்லாப் பக்கமும் தொழுத அர்ஜுனன் – என்கிறபடியே தொழுதும்
தொழப் பெற்ற ஹர்ஷத்தாலே இச் சரீரம் இருந்த இடத்தே இராதே ஆடியும் –

பாசுரத்தை கேட்டு இவர் கால் வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக் கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச் சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் –பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின்
முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாயை யுடையவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்-நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும்-சாமான்யம் அதி தெய்வதம்-உறுதியாக பற்ற வேண்டுமே-சர்வ லோக சரண்யாய ராகவாய -யுத்தம் -17-15-என்றான் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகிதான திருவடிகளை தொழப் பாருங்கோள் –

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது – உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன-இங்கு உமக்கு ஒழியாது-வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன் 

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

அவர்கள் எங்கே உளர் என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-7-4-3- என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4

கொண்டாடும் நெஞ்சுடையார்-இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்
நமக்காக விறே -என்று-நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் –(திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார்
அவரே என் குல தெய்வம்
)-அவர் எங்கள் குல தெய்வமே–குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார்-என்னும் அளவல்ல எங்களது–ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –-சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் – அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே  

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை -காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே  –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும் கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ  –

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

சந்தனப் பூ மலரை உடைத்தான சோலையை உடைத்தாய் ஸ்ரமஹரமாய் இருக்கிற
திருச்  சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது இது வெருமனேயோ –

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-

ரஷணத்துக்குப் பாங்கான கலவிருக்கையை உடையவன் –உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –பேரோதும் பெரியோரை –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு –( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –யொருகாலும் பிரிகிலேனே  —ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் – அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –இவ்வனுஷ்டானம் தான் நீர் எங்கே யார் சொல்ல பரிஹரித்தீர் -என்ன நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )-இது பின்னை அநேக அர்த்தங்களை சொல்லுமே –ஜீவ ஸ்வரூபத்தைச் சொல்லும் –நம்முடைய ஸ்வரூபத்தை சொல்லும் –ஜீவ வஸ்துக்களுக்கும்  நமக்கும் உண்டான சம்பந்தத்தை சொல்லும் –ப்ராப்தி பலமான கைங்கர்யதளவும் வந்திருக்குமே -என்ன-அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும் அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம்-அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –சேஷத்வம் -அநந்யார்ஹத்வம் -பாகவத சேஷத்வம் -ஆய -உகாரார்த்தம்–நமஸ்ஸூ -கீழே பார்த்தோம் –பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் -அவனது அவயவ பூதங்கள்-மற்று எல்லாம் பேசிலும் -திரு மந்த்ரார்த்தங்கள் பல உண்டே –முதல் வார்த்தைக்கு -பல அர்த்தங்கள் உண்டே -உன் அடியார்க்கு அடிமை என்று அறிந்தேன்-நான் கண்டு கொண்டேன் நாராயணா -உபக்ரமம்-பிராப்தி -சேஷ சேஷி பாவ சம்பந்த நிபந்தன முறை -உறவின் முறை –எங்குமாக அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் -என்றது -அநந்யார்ஹத்வம் -உனது அடியார்க்கு அடிமை –ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்-ஞாதவ்ய தயா -அறிய வேண்டியதாக அறிந்து ஜீவ ஸ்வரூபம் ஆஸ்ரய தயா ஞாதவ்யம் -மகாரம் மனா ஞானி மனா அவ போதனை பகவத் ஸ்வரூபம் விஷய தயா -ஜேயம் தத் விஷய கைங்கர்யம் -சேஷத்வ கார்யம் -சேஷத்வ பலம் –கீழே இவ்வளவும் சொன்னதுக்கு தாத்பர்யம் -சேஷத்வம் சித்திக்க -பாகவத சேஷத்வ பர்யந்தமும் பாகவத பர்யந்த கைங்கர்யம் வரை போனால் தான் நிலை நிற்கும் –ஆகையால் உன் அடிமை ஆகை ஆயிற்று என்பதே உனது அடியார்க்கு அடிமை என்பது சித்திக்கும் )

பிரபன்னன் உடைய லஷணம் ஆகிறது –ஸ்ரீயபதியே -உபாய உபேயங்கள் என்று இருக்கையும்-தேவதாந்தர ஸ்பர்சமும்-தாமஸ புருஷர்களோடு சம்சர்க்கமும் இன்றிக்கே இருக்கையும் – பாகவதரை ஒழிய செல்லாமை யுண்டாய் இருக்கையும் –தர்மியை அனுபந்தித்து இருக்கும் தர்மங்களை நேரே வ்யவஹரித்தது இல்லையே யாகிலும்
தர்மியைச் சொன்ன போதே தர்மங்களை எல்லாம் சொல்லிற்றாம் இறே-அவனைச் சொன்ன போதே அவயவ பூதங்களான பாகவதர்களையும் சொன்னது ஆகுமே-

நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றாவது –
உன் அளவில் நின்றவன் அல்லேன் -என்ற போது அவன் திரு உள்ளம் என் படுகிறதோ  -என்று நஞ்சீயர் அருளிச் செய்ய-பிள்ளை –அல்லிக் கமலக் கண்ணன் ஆகிறான் -(திருவாய் -8-10-11)-என்று அருளிச் செய்தார் –-நீக்கமில்லா அடியார்  தன் அடியார்  அடியார் எம் கோக்கள் -(திருவாய் -8-10-10 )-என்று இவர் பாகவத சேஷத் தளவில் நின்றவாறே அவன் அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் –

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜபுருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை
விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றோம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

———————-

பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –

(-தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக   -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் – 1-உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
2-உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
3-இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

(சாண்டில்யை வ்ருத்தாந்தம் -இது வன்றோ எழிலாலி என்றான் தானே -இவையும் உண்டு -இங்கு போல் திவ்ய தேச வாசமும் வேண்டும் என்றும் அடியார் ஸஹவாசமும் வேண்டும் என்பதும் உண்டு-நாம் சாண்டில்யையும் திருமங்கை ஆழ்வாரும் போல் அல்லவே-மனம் ஈடுபாடு வேண்டுமே –போதயந்த பரஸ்பரம் துஷ்யந்தி ச ரமயந்தி இத்யாதி)


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த- ப்ரபன்னனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவ பத்துக்கள் -ப்ரபன்னனுக்கு த்யாஜ்ய உபாதேயங்கள்–

November 12, 2025

வார்த்தை -424-
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தியும்
2-ஆசார்யன் அளவிலே உபகாரத்வ பிரதிபத்தியும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில் உத்தேச்ய பிரதிபத்தியும்
4-உபாயத்தளவிலே அத்யாவஸாய  பிரதிபத்தியும்(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை)
5-உபேயத்தளவில் த்வரா  பிரதிபத்தியும்-(பேற்றுக்குத் த்வரிக்கை)
6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தியும்
8-இதரரான சம்சாரிகள் பக்கலில் வழி பறிகாரர் பிரதிபத்தியும்
9-ஐஸ்வர்யத்தளவில் அக்நி பிரதிபத்தியும்(கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக)
10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தியும் –
ஆகிற இப்பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

—————————————————————————————-

வார்த்தை -425-

இவற்றிலே
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு -திருவாய்மொழி -10-10-3- என்றும்
என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
உன்னை விட்டு எங்கனம் தரிக்கேன் -திருவாய் மொழி -7-2-1- என்றும் இருக்கை –

2-ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன் -திருவாய்மொழி -2-7-8- என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7- என்றும்
தேவு மற்று அறியேன் -கண்ணி நுண் -2
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணி நுண் -9-
ஒண் தமிழ் சடகோபன் அருளையே எண் திசையும் அறிய இயம்புகேன் -கண்ணி நுண் -7–என்றும் இருக்கை –

3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -79 – என்றும்
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றார் -பெரிய திருமொழி -7-4-3- என்றும்
எத்தனையும் கண் குளிரப் காணப் பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே -பெருமாள் திருமொழி -10-5- என்றும் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறும்
எம்மை ஆளும் பரமர் -திருவாய்மொழி -3-7-1- என்றும் இருக்கை –

4-உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -உன்னால் அல்லால்
யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
நல்லான் அருள் அல்லால் -முதல் திருவந்தாதி -15- என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் இருக்கை

5-உபேயத்தளவில் த்வரா பிரதிபத்தியாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது -பெரிய திருமொழி -6-3-8- என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய்மொழி -3-3-1- என்றும் இருக்கை –

6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போலே -பெரிய திருமொழி -11-8-3- என்றும் –
பொல்லா வாக்கை -திருவாய்மொழி -3-2-3-
ஆக்கை  விடும் பொழுது எண்ணே -திருவாய்மொழி -1-2-9-
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-
மேம்பொருள் போக விட்டு-திருமாலை -38 என்றும் இருக்கை

7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –
தாயே நோயே  தந்தையே நோயே -பெரிய திருமொழி -1-9-1- என்றும்
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்ற இவர் பின் உதாவாது அறிந்தேன் -பெரிய திருமொழி -6-2-4- என்றும் -இருக்கை –

8-இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –
நீசர்-திருச்சந்த விருத்தம் -66- என்றும் –
தொழும்பர் -திருமாலை -5 என்றும் –
பூமி பாரங்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் இருக்கை

9-ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –
வீழ் பொருட்கு இரங்கி -பெரிய திருமொழி -1-1-4- என்றும் –
பெரும் செல்வம் நெருப்பு -திருவாய்மொழி -4-9-4- என்றும் –
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் -பெரிய திருமொழி -6-2-5- என்றும் இருக்கை

10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –
புலன் ஐந்து மேவி -2-8-என்றும்-சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படித்தேன் –பெரிய திருமொழி -6-3-4-என்றும்
பொறுத்துக் கொண்டு இருந்தார் பொறுக்க ஒணாப் போகாமே நுவர்வான் புகுந்து
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7- என்றும் –
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலைப் பிழைத்துக் குடி போந்து
உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் -பெரிய திருமொழி -7-7-8- என்றும் –
கோவாய் ஐவர் என் மெய்க்குடி ஏறிக் கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார்
நான் அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே தீவாய் நாகணையில்
துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்-பெரிய திருமொழி -7-7-9-என்றும் இருக்கை-

1-உத்தாரக -பிரதிபத்தியை -உயர்வற உயர்நலம் -1-1-1-தொடக்கமானவற்றிலும்
2-உபகாரத்வ பிரதிபத்தியை -தூதுகள் நாலிலும் -அஞ்சிறைய -1-4/வைகல் 6-1-பொன்னுலகு ஆளீரோ -6-8/எம் கானலகம் -9-7/
3-உத்தேச்ய பிரதிபத்தியை -பயிலும் சுடரொளி-3-7/நெடுமாற்கு அடிமை -8-10-தொடக்கமானவற்றிலும்
4-அத்யாவசாய பிரதிபத்தியை -நோற்ற நோன்பு -5-7-1-/ஆரா வமுது -5-8-1-/தொடக்காமான வற்றிலும்
5-த்வாரா பிரதிபத்தியை -முனியே நான்முகனே -10-10-1- தொடக்கமானவற்றிலும்
6-விரோதி பிரதிபத்தியை -முந்நீர் ஞாலம் -3-2-1- தொடக்கமானவற்றிலும்
7-பிரிவுகாரர் பிரதிபத்தியை -கொண்ட பெண்டிரிலும் -9-1-1-
8-வழி பறிகாரர் பிரதிபத்தியை -நண்ணாதார் முறு வலிலும் -4-9-1-
9-அக்நி பிரதிபத்தியை -ஒரு நாயகத்திலும் -4-1-1-
10-இடிப் பிரதிபத்தியை -உண்ணிலாவிய விலும்
பிரதம ஆசார்யரான நம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்தார் ஆகையாலே
இப் பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

————

1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ –நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ –அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய்
என்றான்

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–

திரு மந்த்ரம் ஓர் இடத்திலே ப்ரஸ்துதம் ஆனால் -முன்னே யாதல் பின்னே யாதல் அர்த்தத்தைச் சொல்லிப் போருவார்-எனக்கு உபகாரகன்-எனக்கு ஜனகன்-என் குடல் துவக்குக்கு ஆன எல்லா உறவு முறையும் ஆனவன்-என்னை வன்னிய மறுத்து ஆண்டவன்-என்னுடைய ஆயுஸு–சங்கல்ப்பத்தால் அன்றிக்கே அம்பாலே ராஷசர் அஞ்சும்படி நெருக்கி அவர்கள் உயிரை முடித்த எம் ஸ்வாமி-ஸ்வாமித்வத்தோடே தலைக் கட்டிற்றாய் நின்றது-த்தால் சொல்லிற்று ஆயிற்று-மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் –என்கிறபடியே –இது தான் உமக்கு வந்தபடி என் என்ன -தஞ்சை மா மணிக் கோயிலே-வணங்கி வந்தது–எல்லா உறவு முறையும் தானே என்று தோற்றும் படி அவன் வந்து நிற்கிற சௌலப்யத்தை அனுசந்திக்கையாலே வந்தது-சர்வ வித பந்துவும் அவனே என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திரு நாமத்தைக் காணப் பெற்றேன்-

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12-

உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை –ஆர் உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த*
பேர் உயிரேயோ
பெரிய நீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத் தேவர் போலத்* தேவர்க்கும் தேவாவோ*
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ? — என்கிறபடியே-அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ-ண்டாயாகில் பிரியாய்;-பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி.

———–

2-ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-

விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்–அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்-நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்-
பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்-நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் -புஷ்கலனாய் இருக்கிற உனக்கு நான் எத்தைச் செய்வேன்-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே-மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய்-3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்–ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே-வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்-அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் –
ஷிபாமி –என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய
விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –
ஆளவந்தார் அத்ரபத்ர -என்கைக்கு அடி இவர் இ றே- (3-மனஸ் ஸஹ காரம் இல்லாமல் நாவினால் நவின்றாலும் -மெய்ம்மையே மேவினேன் -உண்மையாகவே பேற்றைப் பெற்றேன் -)

தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று-
புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இ றே
அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே
சாஸ்திர வாசனையாலே யாதல் –
ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –

வேண்டா என்கிறேன் அன்று-வ்யுத்பத்தி இல்லாமை-பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்-விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் –
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் –தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்-ஐஸ்வர்யம் என்ன -ஆத்ம லாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –தேவு அறிவன் –ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே-ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று-அநந்ய தைவத்வமியம் சாமா ச -என்று அநந்ய தைவதத்தை யுடைய பிராட்டி பெருமாளுக்கு எடுத்துக் கை நீட்ட-பெரிய பெருமாள் பாடு புகுமா போலே இவ்வர்த்தம் நாங்கள் விச்வசிக்கும் படி என் என்னமெய்ம்மையே
இது சத்தியமே-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்
ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –-உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே – அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள்-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை ஸ்திரமாக்கினார் –கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே-நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார் இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் 

யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தீ தேவா -என்கிறபடியே-வேதத்துக்கு பிராணனான பிரமேயம்  (-இலக்கு -சார தமம் -)திருவாய்மொழி-திருவாய் மொழிக்கு பிரமேயம்-(-இலக்கு -சார தமம் -) பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –பண்ணோடும் இசையோடும் பாடி என் நெஞ்சிலே பிரதிஷ்டிப்பித்தான்-கல்லைக் குழித்து நீரை நிறுத்துவாரைப் போலே கிடீர் செய்தது –

வேதியர்-வேதியர் ஆகிறார் -பாஹ்ய சாஸ்த்ரங்களை -காண்பரோ கேட்பாரோ தான் என்று கண்ணாலும் பாராதே செவியாலும் கேளாதே-நித்ய நிர்த்தோஷமான வேத பிரமாண நிஷ்டர் ஆனவர்கள்-வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை என்று இருக்குமவர்கள்-(பரம் -வேறு -உயர்ந்த இரண்டும் -இங்கு வேதம் தவிர வேறு சாஸ்திரம் இல்லை -கேசவனை தவிர தெய்வம் இல்லை )
மிக்க வேதியர்-அவ்வேதத்திலும் வேத வாதரதா -என்றும் த்ரை வித்யா மாம் சோமபா பூத பாபா -என்றும் சொல்லுகிறபடியே-ஆபாத ப்ரதீதமாய் அல்ப அஸ்திரங்களான ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களான ஜ்யோதிஷ்டோமாதிகளையும்-புருஷார்த்த தத் சாதனங்களாக அறுதி இட்டிருக்கை அன்றிக்கேஉத்தம புருஷார்த்தமான பகவத் பிராப்தியே புருஷார்த்தம் என்றும் தத் சாதனமும்-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதி வாக்யோக்தமான வேதனம் ஆதல்=முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே என்கிற சரணாகதி ரூபமான சரம சாதனமாதல் என்று-வேதாந்த விஜ்ஞ்ஞானத்தாலே ஸூ நிச்சிதார்த்தராய் இருக்குமவர்கள்-(வேத ஞானம் -வேத விஞ்ஞனம் -வேதாந்த  ஞானம் -வேதாந்த விஞ்ஞனம் -நான்கு நிலைகள் )
மிக்க வேதியர்-மிக்கார் வேதியர் என்று ஆழ்வார் பாடே கேட்கையாலே மிக்க வேதியர் என்கிறார் –அன்றிக்கே மிக்க வேதியர் என்று சுடர் மிகு சுருதி என்கிறபடியே பிரதஷ்யாதிகளில் அதிகமான வேத பிரமாண நிஷ்டர் என்றுமாம்
வேதியர் வேதம்ப்ரஹ்மணா நாம் தனம் வேத -என்றும்-அந்தணர் மாடு என்றும் சொல்லுகிறபடியே அவர்களுக்கு பரம தனமான வேதம்
வேதியர் வேதம்-வேதத்தை தங்களுக்கு நிரூபகமாகவும் தனமாகவும் உடையராய் இருப்பவர்கள்–வேதத்தின் உட்பொருள்-அந்த வேதத்தில் உண்டான அர்த்த விசேஷத்தை
வேதத்தின் பொருள்-அதாவது -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
வேதப் பொருளே என் வேங்கடவா -என்றும் -வேதாந்த விழுப் பொருள் -என்றும் சொல்லுகிறபடியே சகல வேதங்களும் ஒரு மிடறாக ஓதித் தலைக் கட்டுவது பகவத் ஸ்வரூபாதிகளை இறே
உட்பொருள்-அதில் தத் விஷய பிரதிபாதிதமான அம்சம் புறப்பொருளாய்-ததீய பிரதிபாதிதமான அம்சம் உட்பொருளாய் இருக்கும்=அதில் புறப் பொருளையே சொல்லி விடுகை அன்றிக்கே அதுக்கு ஹ்ருதயமான ததீய வைபவத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -இரண்டாலும் அருளிச் செய்தார்-

நிற்கப் பாடி
1-துர்க்ரஹமான வேதார்த்தத்தை பிரதிபத்தி விஷயமாம் படி பாடி
நிற்கப்பாடி
2-கேட்டவர்கள் நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி பாடி என்றுமாம்
வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி
3-அது நிற்கும் நான்மறை யானாப் போலே அதில் அர்த்த ரூபமான இதுவும் சர்வ காலமும் அழிவின்றிக்கே நிற்கும் படியாகப் பாடி என்றுமாம்
வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி
4-வைதிகர் ஆனவர்கள் அதுக்கு ஹ்ருதயமான அர்த்த தாத்பர்யத்தை அறிந்து அதிலே நிஷ்டராம் படி பாடி

என்நெஞ்சுள் நிறுத்தினான்-அது தன்னை என் நெஞ்சிலே ஸூ பிரதிஷ்டிதமாம் படி பண்ணினார்
என் நெஞ்சுள் நிற்கப்பாடி நிறுத்தினான்=பாடுகிறபோதே என் நெஞ்சில் தங்கும் படிக்கு ஈடாக விரகிட்டுப் பாடி நிறுத்தினான்-நெஞ்சுள் நிறுத்தினான்- அது தன்னிலும் மேல் எழச் சொல்லி விடுகை யன்றிக்கே அந்தரங்கமாக உபதேசித்தார்-என் நெஞ்சுள் நிறுத்தினான்
புன்மையே வேஷமான என் நெஞ்சிலே படுத்தினார்-நிறுத்தினான்-உபதேசித்தவர் தாமே குலைக்கிலும் குலையாத்படி திருட அத்யவசாயமாக உபதேசித்தார்-என் நெஞ்சுள் நிறுத்தினான்-தத் விஷயமும் உட்பட வூடு போகாத என் நெஞ்சிலே ததீய வைபவம் உட்பட நடையாடும்படி பண்ணினார் –மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-வேதார்த்தங்களை வகுத்து அதுக்குப் பாசுரம் இட்டுத் திருவாய் மொழி பாடினால் போலேயோ -அப்பரமார்த்தங்களை என் நெஞ்சிலே படுத்தின அருமை –
வேதார்த்தங்களைத் திருவாய் மொழியிலே சேர்த்து -அத் திருவாய் மொழியின் அர்த்தங்களை என் நெஞ்சிலே சேர்த்தார்-ஆசார்ய வைபவம் கைபட்டவனுக்கு ஆய்த்து சகல வேதார்த்தங்களும் வசப்படுவது=மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்பிரமாண வைபவத்தையும்- ப்ரமேயமான தத் வைபவத்தையும்- ப்ரமாத்ரு வைபவத்தையும் -அபிமத வைபவத்தையும்-இவர் நெஞ்சிலே படும்படி பூர்ண உபதேசம் பண்ணினார் ஆய்த்து –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –-
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –ஒள்ளிய தமிழ்-பெரிய ஆழத்தில் உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் எல்லாம் தரையிலே காணுமா போலே அதிக்ருதாதிகாரமாய் அவகாஹிக்க ஒண்ணாதே-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை சர்வாதிகாரம் ஆக்குகையாலே ஒண் தமிழ் என்கிறது –மயர்வற மதிநலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் ஆழ்வார் அங்கீ கரித்த அருளைக் கிடீர் சொல்லுகிறது –

ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்-மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்-ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்
அறிய இயம்புகேன்-நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்-ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும் தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன் என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையேதெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –
எண் திசையும் அறிய இயம்புகேன்தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலேஅங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படிஅங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்இனி பத க்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79

விண்ணுளாரிலும் சீரியரே – நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8

இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறுமில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம்
பகவதநுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது
அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?
ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம் மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனமொழிமெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று.-இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷணர் ஆவர்கள்

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே – சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள்
இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே  
–பாற் கடல் பாம்பணி மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்-இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

ஒன்றன் மேல் ஒன்றாக நிரந்தரமாய் வருகிற ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் ஸ்வாமிகள்-நின் பன் மா மாய பல் பிறவி -என்று நிந்தித்த ஜன்மத்தையும் அனுமதி பண்ணுகிறார் ததீய சேஷத்வ ரசத்தாலே-முன்பு அவனை பரமர் என்றீர் –இங்கே இவர்களை பரமர் என்னா நின்றீரே -என்ன அனுபாவ்ய குண ஆதிக்யத்தாலே சொல்லிற்று அங்கு -இங்கு அக் குணத்துக்கு தோற்றவர்களை சொல்லுகிறது தத் சம்பந்தம் ஒழிய சொல்லில் பகவத் சம்பந்தம் அற்றதாம்

‘நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று முகம் காட்டுவித்துக்கொண்டு பிரயோஜனத்திற்கு மடி யேற்கை யன்றியே, அவன் தன்னையே பிரயோஜனமாகப்பற்றி நெருங்கும் செல்வமுடையார். என்றது, ஒரு பிரயோஜனத்துக்குப் பற்றினவர்கள்-அது பெற்றவாறே அவனை விட்டுப் போவர்கள் அன்றோ? அவன்தன்னையே பற்றினவர்கள் பின்னை அங்கே நெருங்குமத்தனையே யாதலின்,-‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார் என்றபடி. அவன் இறைமைத்தன்மைக்கு எல்லையாய் முடி கவித்தாற்போலே,
இவர்கள் அடிமைக்கு எல்லையாய் முடி கவித்திருப்பவர்களாதலின், ‘திருவுடையார்’ என்கிறார்.‘ஆயின், இதனைத் திருவாகச் சொல்லலாமோ?’ எனின், ‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் – ஆகாயத்தை அடைந்தவன் ஸ்ரீமானாக உள்ளவன்’, ‘ஸது நாகவரஸ் ஸ்ரீமான் – அந்தக் கஜேந்திர ஆழ்வான் ஸ்ரீமானாய் இருந்தான்,’ ‘லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:’ என்னும் இடங்களில் இதனைத் திருவாகக் கூறப்பட்டுள்ளமை காண்க.
‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான்’ – இலங்கைவிட்டுப் பெருமாள் திருவடிகளில் வர என்று ஓரடி இட்டபோதே, இராவண சம்பந்தத்தால் வந்த திருவின்மை நீங்கிச் சொரூபத்திற்குத் தகுந்ததான ஸ்ரீ குடி புகுந்தது என்றபடி.-‘சதுநாகவரஸ் ஸ்ரீமான்’ – சர்வேசுவரன் அரைகுலையத் தலைகுலைய வந்து விழ வேண்டும்படியான ஆர்த்திதன்னை ஒரு செல்வமாகச் சொல்லப்பட்டது அன்றோ ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு?‘நீர் இளவரசாக முடி சூடாவிடில் நாம் முடி சூடோம்,’ என்று பெருமாள் அருளிச் செய்யவும் முடி சூட இசையாத இளைய பெருமாளை அன்றோ, ‘இலக்ஷ்மணன் ஐஸ்வரியத்தால் நிறையப்பெற்றவன்,’ என்றது?

மற்றும், ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போதோ!’ என்று கேட்க,-‘இராஜ இலக்கணம் பொருந்திய தமையனாருடைய திருவடிகளைத் தலையிலே எதுவரையிலும் தாங்கமாட்டேனோ, அது வரையிலும் எனக்கு நிம்மதியானது உண்டாகமாட்டாது,’ என்கிறபடியே, பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி,
நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று ஆறும்,’
என்றான் அன்றோ? ‘அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’ என்றார் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்- ‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்,’ என்றபடி. ‘வைஸ்ரவணன்’ என்னுமாறு போன்று, பாரதந்திரியமாகிற செல்வத்தையுடையவர்களாதலின்,-‘உடையார்’ என்கிறார். ‘இச்செல்வத்தை உடையர் ஆகிறார்கள்: மற்று என்ன ஏற்றம் உண்டாக வேண்டும் இவர்களை ஆதரிக்கைக்கு?’ என்னில்,-எவரேலும் –-ஜன்ம ஒழுக்க ஞானங்கள் எவையேனும் ஆகவுமாம்; இது உண்டாமத்தனையே வேண்டுவது.-அவர் கண்டீர் –-அபிமானம் இல்லாதார் நமக்குத் தேட்டம்,’ என்கிறார்; ‘பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளால் வரும் அபிமானம்
பகவானுக்கு அடிமைப்படுதற்கு விரோதியாகையாலே அவை இல்லாதார் உத்தேசியர்,’ என்கிறார் என்றபடி.-‘அவர்கள் எத்தனை நாள்களுக்கு உத்தேசியர்?’ என்ன,
பயிலும் பிறப்பிடை தோறு –மேன்மேல் என நெருங்கி வருகிற பிறவிகளில் அவகாசங்கள்தோறும். ‘நின் பன் மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்’ என்று
வெறுக்கத் தக்கதாகச் சொன்ன பிறவி தன்னையே விரும்புகிறார் இப்போது; பாகவதர்களுக்கு அடிமைப்படுவதற்கு உறுப்பு ஆகையாலே ‘மேன்மேல் எனப் பிறவிகள் உண்டாகவும் அமையும்; ஒரு பாகவதர் ஸ்ரீ பாதத்திலே வசிக்கப்பெறில்’ என்கிறார் என்றபடி.
எம்மை ஆளும் பரமர் – என்னை அடிமை கொள்ளக்கூடிய ஸ்வாமிகள். ‘முன்பு அவனைப் ‘பரமன்’ என்றீர்; இங்கே இவர்களைப் ‘பரமர்’ என்னாநின்றீர்;-இது இருக்கும்படி என்?’ என்னில், அனுபவிக்கும் குணங்களின் மிகுதியாலே சொல்லிற்று அங்கு;
இங்கு, அக்குணங்களுக்குத் தோற்றவர்களைச் சொல்லுகிறது. ‘நன்று; ‘எவரேலும்’ எனின், அமையாதோ?-பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம்.-குண க்ருத தாஸ்யம் -அவன் இடம் பாகவதர்கள் பண்ண –நான் ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் இவர்கள் பக்கல் என்கிறார்

4-உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்தநா மதி-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா-அசக்தர் அப்ராப்தர் அரஷகர் -பிறர் –
ஒரு குறையும் அவர்களால் நிவர்த்திக்க வேண்டேன்-இதுகாறும் அநப்யுபகம்ய வாதத்தாலே -உடன்படாமலே பேசுகின்ற வாதம்.-அருளிச் செய்தார்;-அப்யுபகம்ய வாதத்தாலே -உடன்பட்டுப் பேசுகின்ற வாதத்தாலே அருளிச் செய்கிறார்-வேறு உபாயங்களிலே தமக்கு ஞானசக்திகளும் உண்டாய்,-வேறு தெய்வங்கட்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் சக்தியு முண்டாகிலும், ஸ்வரூபத்திற்கு விரோதமாகையாலே தமக்கு வேண்டா-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.–முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது.-என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார்–“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.-என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.
அன்றிக்கே, –இரண்டாவது பொருள்.-“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது-பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.-கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது,-இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை-மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,-‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது, பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —
-15-

சகல ஜகத் காரண பூதன் திருமால் திருவருளே நன்மையை பயக்கும்-முதலாய நல்லான் அருளே நன்று பல்லார் அருளும் பழுது--இதுக்கு அடங்க காரண பூதனுமாய்-இவற்றை உடையானும் ஆகையாலே இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள அவனுடைய அருள் அல்லது பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள-பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்-இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு வாசி யடைய வ்யர்த்தம்-அன்றிக்கே நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –-பழுது தான் பலியாமையே அல்ல-பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும்-அத் தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்-திருவடி நாமம் மறந்தும் புறம்  தொழா மாந்தர்  -நான்முகன் திரு -68-மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ-தேவ தாந்தரங்களுக்கும் உபாயாந்தரங்களுக்கும் தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்
தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-

ஆத்ம ஞானமும் -அப்ரதிஷேதமும் -தானே வேண்டுவது -விலக்காமை அத்வேஷ மாத்ரமே கொண்டு அருள் பயன்பெறும்-அவன் அருள் எப்போதும் நித்யமாகவே இருந்தாலும்-கார்யகரம் ஆவதுக்கு இதுவே வேண்டுவது-முதலாய நல்லான் -பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முலைப் பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ

அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் – சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே

சென்னியோங்கு தண்  திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும்  உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – 

நின் அருளே –இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது-அவன் அடியாக வரில் –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது

புரிந்து
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-(பெருமாள் திருமொழி )-இத்யாதி-இருந்தேன் –உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –விரோதி நிவ்ருத்தியும் பிறந்து –அபேஷிதமும் பெற்றதாகில்  –இனி பதறுகிறது என் -இனி என் திருக் குறிப்பே –திருக் குறிப்பு –திரு உள்ளத்தில் நினைவு–

என்னை முற்றும் உயிர் யுண்டு என் மாயா வாக்கையிதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய வம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே –10-7-3-)-

5-உபேயத்தளவில் த்வரா பிரதிபத்தியாவது –

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே
–9-3-7-

அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது--மாகம் -பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என் மனஸ்ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –

முளிந் தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந் தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-

இங்கே இருந்து-இன்னார் இன்னதனை நாள் ஜீவித்து முடிந்தார்கள்-இன்னவை தோற்றா நசித்தன -என்று இத்தை மநோ ரதியாதே –உன் பக்கலிலே தெளிவை உடையேனாய்
ஸ்நேஹத்தை உடையேனாய்–வெட்டிதான நிலத்திலே வலியதொரு பதார்த்தாலே தள்ளுண்டு போகிற மா மரம் போலே சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து-அநவரதம் உண்டான அவதானத்தை உடைத்தான மநோ ரதத்தை உடைய அநந்ய கதியான எனக்கு-அ புநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை என்று தருவது-அவ் வருகு படுத்துகைக்காக வந்து இருக்கிற உனக்கு தரும் நாள் இந்நாள் என்று தெரியும் இறே

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே –2-3-10-

நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே-வர்ஷிக்கிற ஆகாசத்தையும் அத்தாலே ஜீவிக்கிற பூமியையும் -சங்கல்பத்தால் அன்றிக்கே கையும் திரு ஆயுதங்களுமாய் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்கிற ஆச்சர்ய சக்தி உக்தனான ஈஸ்வரன்-பரம பதத்தில் ஆபரணமாய் காட்சி தரும் -இங்கு ஆயுதமாய் இறே திவ்ய ஆயுதங்கள் இருப்பது-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ் விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –இவ்வாறு காக்கின்ற அக் காத்தல் தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ் விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய்-ஓக்க ப்ராப்யருமாய் – இறைவனுடைய நற் குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய்,
போதயந்த பரஸ்பரத்துக்கு -தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக் கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய ஸூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார். 

கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று, இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார். ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.    

பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேண்டும்,’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று அருளினார்.-அவர்களும் ‘மணற் குன்றையும் காவற் காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் புன் முறுவல் செய்து அருளிச் செய்தபடி:‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படை வீடு செய்திருக்கும் போது
ஸ்ரீ வானர வீரர்கள் இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி, இவர்கள் கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித்
திருக் கையிலே பிடித்த சார்ங்கமும் திருச் சரமுமாய் இராமுற்றும் நோக்கின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளே தஞ்சமென்று இருமின்
,’ என்று அருளினார்.ஆகையால், ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்றபடி’.-இந்த திருவாய் மொழிக்கு –நிதான பாசுரம் இது-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமையாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார்-அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.
எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,-‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.
ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது-இவருக்கு-இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?
(‘தொழுது எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.)
இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பர்யந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.-இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. திருஅருவியின் ஒலியும் கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு,-அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி,
இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது.

6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-

பாம்போடு –அவை ஒழியில் நாட்டார் பிழையாதபடி இருக்கிறவை-இவருக்கு இருக்கிற படியாயிற்று இது –வெய்யிலிலே நொந்தவன் ஆடுகிற சர்ப்பத்தின் நிழலிலே போய் ஒதுங்கி-அது அள்ளிக் கொள்ளும் என்று அறியாதே சுகிக்கப் பார்க்குமா போலே இருப்பது ஓன்று இறே-அது அள்ளிக் கொண்டது அப்போது இறே –(மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்னே )-ஒரு கூரையிலே  பயின்றாப் போலே  —கண்டது அடைய அது சங்கா ஹேது வாயிற்று –தாங்காது உள்ளம் தள்ளும் –தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இறே
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி-பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே?-அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்.-

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவ-அவன் கண் ஒடுங்க – பிரகாரமாக இருக்கும் நீங்கள் பிரகாரியாக இருக்கின்ற அவன் பக்கலிலே சென்று சேர,-ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை – ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –ஒடுங்கல் -வந்தேறி யாய் –ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்-ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்-ப்ராப்த்தத்தைச் செய்ய -செய்யத் தக்கனவற்றைச் செய்ய,
அப்ராப்தமானவை -தகாதவை எல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்;-ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –
ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.
‘ஒடுங்கல்’ என்கையாலே இவை ஆத்துமாவிற்கிடப்பன அல்ல; ஆத்துமாவிற்கு விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னுமிடம் தோன்றுகிறது.
ஒடுங்கல்’ என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு-ஒடுக்கல்-
‘இவனுக்குக் குறைவைப் -சங்கோசத்தைப் -பிறப்பிக்குமவை
’-எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது-அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை யாவா மருங்கு
–‘மாடே வரப் பெறுவராம் என்றே வல்வினையார்’ என்னும் பாசுரங்களை யோஜித்துக் கொள்வது

பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே--பின்பு சரீர அவசானமே விளம்பம்-காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை-இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு
உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.
கொங்கை மேற் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்,’ என்று அழுக்குக் கழற்றி ஒப்பித்துப் பார்த்து இருந்தாள் ஒரு பிராட்டி.
அப்படியே, அழுக்கு உடம்பு’ என்கிற இவ்வழுக்கு நீங்கி மோக்ஷமாகிய பலத்தை அடைதல்
எப்போதோ என்று பார்த்திருக்கும் இத்தனை.

உடையவர் குன்றத்து சீயரை -சிங்கப் பிரான் இன்று அயநம் கிடாய் என்ன – நிதானம் அறியாமையாலே திகைத்து நிற்க ப்ராப்தி பிரதிபந்தகமான காலத்திலே ஆறு மாசம் போந்தது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ –என்று அருளிச் செய்தார்
க்ருதக்ருத்யா -இத்யாதி-எம்பார் -அஸ்திரமான சரீரம் தானே நசியா நிற்க இவனுக்குத் தான் மநோ ரதிக்க வேணுமோ -என்று அருளிச் செய்வர் –ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!–பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ -மம மாயா துரத்யயா -என்றிலையோ–மங்க ஒட்டு உன் மா மாயை –உன் மா மாயை மங்க ஒட்டு –ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி-நீ கட்டிய இந்தச் சரீரம் மங்குவதற்கு இசை –விடத்தக்கது -என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தினை நீரே விட வேண்டியது அத்தனை அன்றோ – நாம் இசைய வேண்டுகிறது என் -என்ன –-எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவனான-நீ பிணைத்த பிணையை ஆற்றல் சிறிதும் இல்லாதவனான நன் விடவோ –என்னுடைய மாயம் ஒருவராலும் தாண்ட முடியாது -என்றிலையோ –
வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும்

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-

ஸ்ரீ மகா பாரதத்துக்கு சரம ஸ்லோகம் போலே யாய்த்து-இப்பிரபந்ததுக்கு இப்பாட்டு-சரம ஸ்லோகம் பிராப்தியை விதிப்பதாய் இருக்கும் –அதில் ருசி உடையாருடைய அனுசந்தானமாய் இருக்கும் -த்வயம் –த்வய நிஷ்டர் பக்கலிலே ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை சொல்லுகிறது -இப் பாட்டு –

மேம்பொருள் என்பதற்கு-மேலெழுந்த பொருளென்றும்,-மேவின பொருளென்றும்,-மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்றுபடியாக நிர்வாஹம்-கருமங்கள் காரணமாக வந்தேறியாய் பகவத்விஷய உணர்ச்சி வந்தவாறே விட்டகலும்படியாயிருக்கும் பொருள்–கர்மம் அடியாக வந்தேறி யாய் –பகவத் ஞானம் வந்தவாறே -மறந்து போமதாய் இருக்கை –இத்தை போக்யதை என்று பார்த்து இழிந்தவனுக்கும் ஆபாத ப்ரதீதியில் ஓன்று போல் தோற்றி நிரூபித்தால் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே இருக்கை -என்றுமாம் –மேலெழுந்த பொருள் எனப்படும். அதாவது-ஸம்ஸாரஸம்பந்தம்.மேவின பொருளாவது– சிக்கன ஒட்டிக் கொண்டிருக்கும் பொருள்;-சேதநனால் பிரிக்க வெண்ணாத படி யிருக்கை.-அதாவது-தேஹஸம்பந்தம்,-அவித்யா ஸம்பந்தம்-தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று உடம்பை தானாக நினைத்து இருக்கும் படி இறே இத்தோட்டை பொருத்தம் இருப்பது – அத்தைச் சொல்லிற்றாகவுமாம் –.–மேம்பாட்டை விளைக்கையாவது- தன்னைப் பற்றினாரை ஸர்வஜ்ஞராக அபிமாநித்திருக்கும்படி பண்ணவற்றாகை.-மெய்ப்பாட்டை – தன்னைப் பற்றினாரை-சர்வஜஞ் தமராக அபிமானித்து இருக்கும்படி பண்ணவற்றாய் இருக்கை –-அப்படிப்பட்ட பொருளாவது-ப்ரக்ருதி ப்ராக்ருத பதார்த்த ஸம்பந்தம்;-பொருள் -என்று பதார்த்தம் –அதாகிறது -தேஹம் –இது தான் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களுக்கும் உப லஷணம்-

போக விட்டு -ஆகிற இவற்றை வாஸநையோடே ஒழித்து, தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை.
தேஹத்தைப்பற்றின ப்ராக்ருத பதார்த்தங்களில் ‘இவை என்னுடையவை’ என்கிற மமதா புத்தி தேஹத்திற் காட்டில் வேறுபட்ட ஆத்மாவில் ஸ்வாதந்திரிய புத்தி முதலியவற்றை அடியோடு ஒழித்து என்றபடி.-வாசனையோடு விட்டு -என்கை – சரீரிகளால் அவை துஷ்கரம் ஆகையாலே பிரகிருதி பிராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்கிற ஞானத்தை உடையவனாகை அல்லது புகுர விட்டான் இவன் ஆகில் இறே இவனால் போக விடலாவது –மமமாயா துரத்தயயா -என்கிறபடியே ஈஸ்வரன் பந்தித்த பந்தத்தை இவனால் போக்க ஒண்ணாது இறே –அநாந்த்மன் யாத்ம புத்திர்யா – என்கிற ஸ்லோகத்தின் படியே தேகத்தில் ஆத்ம புத்தியையும் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களில் மமதா புத்தியையும் தேஹாதிரிக்தனான ஆத்மாவில் ஸ்வ தந்திர புத்தியையும் தவிருகை –அளவுடையரான சனகாதிகளுக்கும் செய்யலாவது இவ்வளவே இரண்டு மரம் கூட நின்றால் ஒன்றை வெட்ட நினைத்தவன் ஒரு மரத்திலே கொத்தி பெருங்காயத்தை விட அது பட்டு நிற்குமா போலே யாய்த்து இப் பிரதி பத்தி மாத்ரத்திலே இதுவும் விடும் –மெய்ம்மையை மிக உணர்ந்து –ஆம் பரிசு அறிந்து கொண்டு என்று மேலும் ஞான பிரகரணம் ஆகையாலே போகவிட்டு -என்று பிரகரண பலத்தாலே ஜ்ஞானத்தைச் சொல்லிற்றாகக் கடவது —-மெய்ம்மையை மிக உணர்ந்து-மெய்ம்மையை மிக உணர்ந்து –மெய் -என்கிறது ஆத்மாவை–மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் – சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று-ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –-அதற்கு மேல் ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர வேணும்:அதாவது ஆத்மா ஸ்வயம் ப்ரகாசன்,நித்யன், உணர்வைக் குணமாக வுடையவன்: அணுபரிமாணன்,எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதன்,அந்த சேஷத்வத்தை பாகவதரளவும் உடையவன் என்றிங்ஙனே விரிவாக உணருகை.-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் ஹேயம் என்றறிந்து ஆத்மாவையும் உள்ளபடி யறிந்த பிறகு பின்னையும் ஆம் பரிசு அறிந்துகொள்ளுகையாவது –கைங்கரியமே புருஷார்த்தம் என்றறிக்கை

மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் –பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது –கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-ஆக-மெய்ம்மை -என்று –மெய்யான தன்மை -என்றபடி 

மிக உணர்ந்து –
தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –
1-ஸுவயம் பிரகாசனாய்
2-நித்யனாய்
3-ஜ்ஞான குணகனாய்
4-அணு வாய்
5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்
6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை – அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –

ஆம் பரிசறிந்து கொண்டு- பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –பின்னையும்-ஆம் பரிசு ஆவது –கைங்கர்யமே யாய்த்து ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –

1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –

அறிந்து கொண்டு –நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும்-பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும் இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும்
பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –

மேம் பொருள்மெய்ம்மைஆம் பரிசு-என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே

—————-

7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன்
உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே-1-9-1

தாயே என்றும் தந்தையே என்றும் தாரமே என்றும் கிளையே என்றும் மக்களே என்றும் புத்ர மித்ராதிகளை ஆசைப்பட்டு –நோயே பட்டு –இவன் பக்கல் உபகாரம் கொள்ளலாம் என்று கொண்டு –இவனுக்கு உதவ வேண்டும் அன்று –அபகாரத்தை பண்ணித் தங்களைக் கொண்டு-அகல நினைக்குமவர்களை பந்துக்கள் என்று நினைத்தால்-அவர்கள் பந்துக் க்ருத்யம் பண்ணக் காணாமையாலே-க்லேசம் இறே சித்திப்பது-இவன் பந்துக்கள் என்று நினைத்து இருக்கும் அத்தனை இறே-அவர்கள் பக்கல் அது இல்லையே-வேறு ஒரு வ்ருத்தாதிகளால் வேண்டாதே-அவர்கள் தாங்களே க்லேசத்துக்கு உடலாய் இறே இருப்பது –தாயே நோயே  தந்தையே நோயேபட்டு ஒழிந்தேன் –பட்டேன் –என்றபடி யாகவுமாம்
அன்றிக்கே-நோய் பட்டு ஒழிந்தேன் – அவர்களை விட்டேன் என்னவுமாம் –

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன்
ஆதலால்  நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-

நான் வேறு சிலரை பந்துக்கள் என்று நினைத்து இருப்பது இல்லை –ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும் உடையேன் அல்லேன் – புறம்பு ஒருவரும் இல்லை யாகில் நீர் உண்டே என்ன நானும் எனக்கு கழுத்துக் கட்டி –(கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன்
நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது –பிறிந்தேன் –சம்சாரத்தில் சிலரை பந்துக்களாக நினைத்து-தான் உபகரித்து போருகிறது
தனக்குத் தான் உதவாத வன்று இவன் செவியில் திரு நாமத்தைச் சொல்லுதல்
இவனுக்கு நல் வழி போகைக்கு விரகு பார்த்தல்  செய்கைக்காக இறே
அதில் அவர்கள் செய்வது –சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு
என்னா நிற்பார்கள் ஆய்த்து
-இவன் தான் தனக்கு உணர்த்தி உண்டான வன்றே தன்னுடைய சர்வஸ்த்தையும் இவர்கள் இட்ட வழக்காக்கி யாய்த்து வைப்பது
நீ மறந்து ஏதேனும் வைத்தது உண்டாகில் அத்தை சொல்லு என்னா நிற்பார்கள் ஆய்த்து –இவன் தனக்கும் அவர்களோபாதி புன்மை போரும் காணும் இவன் தன்னுடைய சர்வஸ்வத்தையும் அவர்களுக்கு ஆக்கா நிற்கச் செய்தேயும் சிறிது இவன் பக்கலில் உண்டு என்று தோற்ற வாய்த்து வர்த்திப்பது-சுற்றும் இருந்து –-எமபடர் ஒரு திரளும் இவர்கள் ஒரு திரளும் யாய்த்து இருப்பது-இவர்கள் அலையா நின்றால் அவன் செய்வது என் என்னில்
ஆர் வினவிலும் தன் உடைமையை அடைய எழுதிக் கொடுத்து ஸ்வீகரித்த இளையாளைக்
கொடு வந்து முன்னே நிறுத்திலும் வாய் திறவான் ஆய்த்து –பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது —வயிற்றிலே பிறந்த புத்திரன்-பார்யை-இவர்கள் இறே அண்ணிய உறவாய் போருவர்-அவர்களும் இவன் பக்கல் முன்பு உபகாரம் கொள்ளும் நாள் கொண்டு
பின்பு இவனுக்கு உதவ வேண்டும் அளவானவாறே போகா நிற்பார்கள்-ஸ்வப்னத்தில் பதார்த்த தர்சனம்- உணர்ந்தால்  இன்றியே இருக்குமா போலே-யாய்த்து இவர்களோட்டை சம்பந்தமும் –

(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )

அறிந்தேன் –பிறிந்தேன் –ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை – இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்
இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று-நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி-அவன் பணித்த மாமேகம் -என்ற வார்த்தை ஆய்த்து-அருள் என்கிறது என் என்றால்-என்னுடைய பிரசாதத்தையே உன்னுடைய உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்றான் இறேஒள் வாள்-சம்சயங்களை அடைய துணித்துப் பொகட்டு-நஷ்டோ மோஹ -ஸ்ம்ரித் லப்த -ஸ்திதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே -என்னப் பண்ண வற்றாய் இருக்கை

——-

8-இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய் இருக்க -பகவத் சமாஸ்ரயணம் அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர் ஆகிறார் –நீசர் – தங்கள் அனுபவத்துக்கு உபதேசம் வேண்டும்படி அஜ்ஞராய் இருக்குமவர்கள்-ப்ரக்ர்தி ப்ராக்ர்தங்களின் தண்மை ப்ரத்யஷத்தாலும் பரோஷத்தாலும் ப்ரகாசியா நிற்கச் செய்தே விட மாட்டாதே இருக்கிற பாப ப்ரசுரம் –என்றுமாம் –

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே5-

தொழும்பர்-தண்ணியர் –இதனுடைய போக்யதை அறியாதே அபோக்யமாய் அப்ராப்தமாய்
இருந்துள்ள சூத்திர விஷயங்களை விரும்பும் நீசர்-பிராப்தி இல்லாமல் இத்தை இழக்கிறார் அல்லர்-லபிக்கையில் நேர்த்தி உண்டாய் இழக்கிறார் அல்லர்-சூத்திர விஷயங்களுக்கு இதுக்கு நெடு வாசி அறியும் சேதனராயும் இருக்க-துராராதமாய் -அபோக்யமாய் விஷயத்திலே மண்டப் பண்ணிற்று இறே பாப பலம்

ஆமையின் முதுகத்திடை குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே -4 -4 -5-

பூமி பாரங்கள்-இப்படி பகவத் ஸ்மரண கந்த ரஹிதர் ஆகையாலே விஸ்வம்பரையான பூமியாலும் பரிக்க ஒண்ணாத பாரமாய் இருந்துள்ள பாபிகள் ஆனவர்கள் – தாங்கள் அறியாது இருக்க செய்தேயும் -தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
தங்களை ரஷித்து கொண்டு திரியும் ஈஸ்வர விஷயத்தில் க்ர்தக்னர் ஆனவர்களை இறே பூமி பாரம் என்கிறது

———–

9-ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–

வென்றியே வேண்டி – பிதாவாகவுமாம் ஆசார்யனாகவுமாம் வென்றியே யாயிற்று இவன் வேண்டி இருப்பது – தன்னை ஒழிந்தாரை கீழ்ப் படுத்தி தான் மேலாக வாயிற்று இவன் வேண்டி இருப்பது –( ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் அவன் ஒருவனே ) தோல்வி குணமாம் விஷயத்தில் யாயிற்று வெல்ல நினைத்து  இருப்பது –வீழ் பொருட்கு இரங்கி –கையிலே சிறிது அர்த்தம் உண்டாய் -அத்தாலே இறே இவன் ஒருத்தரையும் மதியாது இருப்பது –அது அஸ்தரம் ஆனபடியாலே அபஹ்ருத்யமாய் இருக்கும் இறே – அத்தை இழந்து கூப்பிடா நிற்கும்-கௌரவ்யராய் இருப்பார் பக்கல் அபிமானம் பண்ணக் கடவது அன்றிக்கே  இருக்க அபிமானம் பண்ணி வர்த்தித்ததுக்கும் மேலே இரங்கக் கடவது அல்லாததுக்கு  இருந்து கண்ண நீர் பாயா நிற்கும் –அங்கன் அன்றிக்கே-தேக ஆத்மா  அபிமானத்தைப் பண்ணி-தன்னை எல்லாருக்கும் மேலாக நினைத்து போந்ததுவே அன்றியே அஸ்திரமான உடம்பை நித்யமாக வேணும் என்று சோகியா நிற்கும் என்னவுமாம்

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று-மொண்டெழு பானை – ஏத்தச்சால்-போல- மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –-நெருப்பாகக்-நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்-கொள் என்று தமம் மூடும்;-இவை விநாச ஹேது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் பிறர் கொள் என்று பிரேரித்த வாறே தம அபிபூதனாய் துராசையாலே முன்பு விநாச ஹேது வானத்தை விரும்பும்-கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம்-ஹதே பீஷ்மே ஹதே த்ரோணே ஹதே கர்ணே மஹா ரதே ஆசாபலவ தீராஜன் சல்யோ ஜேஷ்யாதி பாண்டவான்–மஹா ரதரான பீஷ்மர் இறந்த பின்னரும், துரோணர் இறந்த பின்னரும், கர்ணன் இறந்த பின்னரும், சல்லியன் பாண்டவர்களை வெல்வான் என்ற ஆசையானது அதிகரித்தது,’ என்கிறபடியே, அதிரதர் மஹாரதர் அடையப்பட்டுப் போகா நிற்கச் செய்தேயும், பின்னையும் சல்லியனைக் கொண்டே பாண்டவர்களை வெல்லப் பார்த்தான் அன்றோ துரியோதனன்?இவை என்ன உலகியற்கை!-ப்ரத்யக்ஷமும் அகிஞ்சித்கரமாம் படி இருப்பதே –-வள்ளலே!-இந்த தபோ அபிபூதியை தவிர்த்து -இது அஸஹ்யமாம் படி பண்ணின மஹா உதாரனனே-

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார்
அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5-

ஒரு பிரதேசத்துக்கு கடவர் அன்றிக்கே-ஒரு நாயகமாய் -என்கிறபடியே-ஒரு முத்தின் குடையாம்படி பூமிப் பரப்பை அடங்கலும் நிர்வஹித்து போந்தவர்கள் -முன்பு இப்படி நடத்திப் போந்தவர்கள் தாங்களே –முடி சூடினார் என்று ஒரு ஓலையிலே இட்டால் துஞ்சினான் என்று வேறு ஒரு ஓலையிலே இட்டு வரக் காட்டுகைக்கு அவசரம் இல்லாதபடி முடிந்து நிற்கையாலே அவ்வோலையிலே மறு புறத்திலே துஞ்சினான் என்று இட்டு யாய்த்து வருவ்து  – ஆண்டவன் ஆண்டே வந்தான் என்று சொல்லப் படுவது இல்லை யாய்த்து-இப்படி யாய்த்து முடியச் சொல்லிப் போருவது-ஆண்டார் மாண்டார் என்கிற சொல்லும் இடை ஒத்து இருக்கும் ஆய்த்து–ததா தேஹாந்தர ப்ராப்தி உத்பத்தி விநாசங்கள் ஆக்கின ஆத்மாவுக்கு அவஸ்தாந்த்ரா பத்தி இறே  –இப் பரப்பு அடங்கலும் தனக்கு நிலை நிற்கும் என்று அவன் விசாரியா நிற்கச் செய்தே ஆயுஸ்ஸூ அடி அற்று இருக்கும் ஆய்த்து –இவருடைய பாரிப்பையும் அதின் உடைய நிலை இல்லாமையும் அனுசந்தித்து தயை பண்ணிப் பொறுக்க மாட்டாமையாலே அந்தோ -என்கிறார் –நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல ) அபிமத விஷயங்களை பிறர் காணாத படி புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்-உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-(சாலில் எடுத்த நீர் போலே-ஏத்த சாலில் நீரை இறைப்பதே கொட்டத்தானே )ஆண்டார் மாண்டார் என்கிற இவை இரண்டும் இரண்டு வியக்தியிலேயாகப் பெற்றது இல்லை – பெருக்காறு அடி சுட்டாப் போலே-பட்ட தர்ம ஹானியை கண்டு ஐயோ என்கிறார்-

————-

10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

ஐந்து விஷயங்களிலும் ப்ரவணமாம் ஐந்து இந்த்ரியங்களுக்கும் வஸ்யராகை தவிர்ந்து -சில பதார்த்தத்தை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே -சப்தாதிகளிலே மூட்டி நசிப்பிக்கையாலே இந்திரியங்களை பொறி என்கிறது –புலன் ஐந்து என்கிறது -விஷயங்களை யாய் -அவற்றிலே பிரவணமாகக் கடவவான பொறி ஐந்து உண்டு -ஸ்ரோத்ராதிகள்-அவற்றுக்கு வச்யராகை தவிர்ந்து -சில பதார்த்தங்களை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே-மூஷிகாதிகளை -எலிகளை தீய கந்தம் காட்டி முடிக்குமா போலே – சப்தாதிகளிலே மூட்டி நசிப்பைக்கையாலே இந்த்ரியங்களை பொறி என்கிறது-இத்தால் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வச்யராகை தவிர்ந்து

சாந்தேந்து மென் முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்

போந்தேன் புண்ணியனே  உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே —6-3-4-

தட முலை செய்ய சாந்து -என்னக் கடவது இறே- குங்குமத்தைச் சொன்னபடி
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர் வீத ராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய-முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு –என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள்- சிறியாண்டான் பெருமாள் – பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது-அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு-முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்-அவர் சொன்னவாறே தளிரும்  முறியுமாய்த் தோற்றும் -என்று –மென் முலையார் –விரஹம் பொறாத முலையை உடைய ஸ்திரீகள் உடைய –தடந்தோள் புணரின்ப வெள்ளத்து –முலைகள் ஆகிற மலைகளோடு-தோள் ஆகிற பாசங்களாலே நெருக்கிக் கட்டி-கடலிலே புகத் தள்ளுவாரைப் போலே அவர்களோடு தோள்கள் உடன் அணைகையில் உண்டான ஆனந்த சாகரத்திலே தரை காண ஒண்ணாத படி அவஹாகித்தேன்-உன்னுடைய கிருபைக்கும் அவிஷயம் ஆனேன் –-ஆனந்த மய -என்கிற விஷயத்தை உள்ளபடி கண்ட இவர்-இப்போது இங்கே இன்ப வெள்ளம் என்கிறது
இவ்வளவும் வரக் கால் கட்டின படியைக் கொண்டு-அநந்த கிலேச பாஜனமான இத்தை
இன்ப வெள்ளம் என்கிறது நெடு நாள் துவக்கின படியைக் கண்டு
இறே –இத்தால் பலித்த தோர் பலம் உண்டு  –ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்- காலம் எல்லாம் இடை விடாதே அவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்க இட்டுப் பிறந்த நான் காலம் எல்லாம் நித்ய சம்சாரியாய் போகையாகிற பிரயோஜனத்தைப் பெற்றேன்
விஷய ப்ராவண்யம் சம்சார பீஜம் -என்று இருக்கிறார்  –

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-

இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க-அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8-

நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத –என்கிறபடியே அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன்
புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-

நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –நான் ( வகுத்த ப்ராப்தமான திருவடிகளையே )கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய வேறு சிலவற்றைத் தா வென்று என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் – நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் 

——————————————–

வார்த்தை -426-

ஒரு அதிகாரிக்கு த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டு –
அவையாவன பிரகிருதி ப்ராக்ருதமும் -பகவத் பாகவதரும் –

த்யாஜ்யம் -ஆவது த்யாஜ்யப் பிரதிபத்தி –
உபேதேயமாவது -உபாதேய பிரதிபத்தி –
பிரதிபத்தியாவது -பெறாததிலே செல்லாமை -பெற்றதில் ப்ரீதி இன்றிக்கே ஒழிகை —
இழந்ததில் கிலேசம் இன்றிக்கே ஒழிகை -வழி இல்லா வழியில் ஆர்ஜியாது ஒழிகை யாகிற இவை –

இவை யன்றே நல்ல இவை யன்றே தீய -பெரிய திருவந்தாதி -3 -என்றும் –
உளதென்றினும் ஆவார் -இரண்டாம் திருவந்தாதி -45-என்றும் –
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -இராமானுச -நூற்றந்தாதி -17-என்றும் –
உண்டு இல்லை என்று தளர் தல தனருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி -45 என்றும் –
துயரங்கள் முந்திலும் முனியார் -இராமானுச நூற்றந்தாதி –17-என்றும்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-1-4-என்றும்
இத்யாதிகளாலே த்யாஜ்ய பிரதிபத்தி சொல்லிற்று –

எங்கே காண்கேன் –திருவாய்மொழி -8-5-1-என்றும் –
காணுமாறு அருளாய் -திருவாய்மொழி -8-1-2-என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-6-என்றும் –
கண்டு கொண்டு -திருவாய்மொழி -9-4-9-என்றும் –
கண்டேன் கமல மலர்ப் பாதம் -திருவாய்மொழி -10-4-9- என்றும் –
திகழக் கிடந்தமை கண்டேன் -திருவாய் மொழி -5-8-1- என்றும் –
என்னுடைய கண் களிப்பே நோக்கினேன் -என்றும் -பெரிய திருமடல் -73-என்றும் –
கூட்டுண்டு நீங்கினான் -திருவாய்மொழி -9-5-6- என்றும் –
எம்மைப் பணி யறியா விட்டீர் -பெரிய திருமொழி -4-9-7- என்றும் –
உருக்காட்டாதே ஒளிப்பாயோ -திருவாய்மொழி -6-9-5-என்றும் –
தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று -திருவாய்மொழி -9-7-9-என்றும் –
யாம் மடலூர்ந்தும் -திருவாய்மொழி -5-3-10-என்றும் –
குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும்
அறிவிழந்து எனை நாளையும் -திருவாய்மொழி -5-3-1-என்றும் –
எங்கு  சென்றாகிலும் கண்டு -திருவாய்மொழி -6-8-5-என்றும் -இத்யாதிகளாலே-

பெறாததில் செல்லாமை பிறக்கையும் –
பெற்றதில் ப்ரீதி பிறக்கையும் –
இழந்ததில் கிலேசம் இருக்கையும்-
வழி யல்லா வழி யாகிலும் பெற வேண்டும் என்று இருக்கையும் ஆகிற உபாதேய பிரதி பத்தி சொல்லிற்று –

———————–
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது-புகழோம் மதியோம் –மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-அவ் விஷயத்தைப் புகழப் பார்த்தோம் ஆகில் பழித்தோம் ஆவோம்-புகழ்வோம் என்றதினாலே இவ் வர்த்தம் ஸித்தியாதோ என்னில் அந்வயத்தில் காட்டில் வ்யதிரேகத்தாலே சொன்னால் அர்த்தத்துக்கு ஒரு ஸ்தைர்யம் உண்டு-இகழ்வோம் மதிப்போம்-நெஞ்சால் நினைத்தோமாகில் அவ் வஸ்துவை இகழ்ந்தோம் ஆவோம்
மன பூர்வோ வாக் உத்தர என்று மனஸ்ஸாலே நினைத்தை அன்றோ வாக்கு சொல்லுவது என்கிற நியாயத்தாலே-புகழ்வோம் பழிப்போம் -என்கிறத்தாலே ஸித்தியாதோ என்னில்-நெஞ்சாலே நினைத்த பாபங்களுக்கே பிராயச்சித்தம் பண்ண வேண்டும்படியாலே
நினைத்தோம் ஆகிலும் வஸ்துவை அழித்தோம்-மதியோம் -இகழோம்-நினைத்திலோம் ஆகில் இகழ்ந்திலோம் ஆவோம்

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல தனருகும் சாரார் –அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

உளது என்று இறுமாவார் –ஜன்ம தரித்ரனாய்ப் போருகிறான் ஒருவன் இங்கனே சஞ்சரியா நிற்கச் செய்தே ஒரு நிதி வந்து காலிலே தட்டுவது –அநந்தரம்-அத்தால் வந்த கர்வத்தால்  சிலருக்குத் திரிய ஒண்ணாத படி அதிர நடப்பர்கள் ஆய்த்து –தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது –பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்று மிகவும் தளர்த்திக்கு யுடலாமே –அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது -தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே-மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம்
பண்ணுவர்கள்-இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் – ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம்-இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று -உண்டு இல்லை என்று தளரார் –என்று சொல்லுகிறது-தளர்தல தனருகும் சாரார்-என்றது-சோகம் உண்டாய் அனுதாபம் பிறந்து மீளார் என்கிறது-முதலிலே தளரார் என்கிறது -அஸ்திரம் -என்று நினைத்து ஒரு கால் ஸ்திரம் என்று நினைத்து ஒரு கால் அஸ்திரம் என்று நினைத்து இருக்குமவர்கள் அன்று இறே
ஸ்திரமானது அஸ்திரம் ஆயிற்று என்னில் இறே சோகம் உள்ளது-செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது,-சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும் தளர மாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார்.‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.

உளதென்று இறுமாவார் என்றால் அதுக்கு எதிர்த்தலை –இல்லை என்று  தளரார் என்னும் இத்தனை யாய்த்து உள்ளது –நடுவு -உண்டில்லை என்கிறதுக்கு பிரயோஜனம்
நெடு நாள் – தாரித்ரியத்தோடு முகம் பழகிப் போந்தவனுக்கு-பின்பும் அத் தாரித்யமே யானால்  அது சாத்மித்துப் போம் அத்தனை போக்கி –அதுக்கு உடையக் கடவது அன்றிக்கே இருக்கும்-அங்கன் அன்றிக்கே –நடுவே சில நாள் ஜீவித்துப் போந்தவனுக்கு பின்பு ஒரு வறுமை வந்தால் அது மிகவும் தளர்த்திக்கு யுடலாய் இருக்கும்-அதாகிறது  அன்று இங்கனே யுண்டாய்த்து-இன்று இங்கனே இல்லையாய்த்து  என்னும்-இவ் வனுசந்தானம்  ஆய்த்து தளர்த்திக்கு அடி – இப்படி வரும் தளர்த்தியை யுடையர் அன்றிக்கே இருப்பார்கள்

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார்
மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

ஸ்ரீ திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய்-பிரிய தமரான- -எங்கள் நாதராய் இருக்கிற-ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் சுக துக்க நிபந்தனமான -கலக்கம்  மேலிட்டாலும் கலங்கார் -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் –துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும் இது வந்ததே என்று வெறார்கள்– சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும் பக்வபலம் போலே மனசு இளையார்கள் – ஆன பின்பு நீங்களும் இவற்றால் வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம்–சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து அருளும்-ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின் அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்

ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் –கீதை – 5-20 – என்றார் இறே ஸ்ரீ கீதாசார்யரும் .-மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே 

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமை கஞ்சனை கொன்று  நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே -5 -1-4 –

நான் ராஜ குலம் புகுகையாலே  எனக்கு அவ்வவ கைங்கர்ய  ரசத்துக்கு உள்ளே எல்லா ரசங்களும் உண்டு(பூவையும் பூம் பாட்டிலும் யாவையும் திருமால் திரு நாமங்கள் போல் )
தன் ஸ்வரூபத்தை யாதொன்றாக நினைத்தான் -அதுக்கு ஈடாக இறே தாரக போஷகாதிகள் இருப்பது –தேகாதி விலஷணன் ஆகையாலே சப்தாதிகள் புருஷார்த்தம் ஆக மாட்டாது
பர தந்த்ரன் ஆகையால்  ஸ்வ அனுபவம்  புருஷார்த்தமாக மாட்டாது
ஸ்வரூபம் நித்யம் ஆகையாலே ஸ்வரூபம் விச்சேதம் புருஷார்த்தம் ஆக மாட்டாது
நித்ய ஜ்ஞான குணகன் ஆகையாலே குண நாசம் புருஷார்த்தம் ஆக மாட்டாது
இனி சேஷ பூதனுக்கு  சேஷ விருத்தியே புருஷார்த்தம் -அவற்றின் சங்கங்களையும்-
அதுக்கு அடியான கர்மங்களையும் -போக்க வேணும் என்கிறார் மேல்-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் -பரத்வம் முதலானவற்றை பெறாத நான்–- எங்கே காணக் கடவேன்-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இறே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இறே அத்தை பற்றலாவது –அருளாய் –ஒரே வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொல்வேன்-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இறே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே-வினையேன்– கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –காணாமைக்குப் பாவம் பண்ணினாரும் கூடக் காணும்படியான விஷயத்தை,-காண்கைக்கு யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன்-நீங்கள் காட்டுகைக்கு விரைய ஆறி யிருக்கக்கூடிய நான், இன்று ‘காண்பது எஞ்ஞான்று கொலோ’ என்னும்படியான பாவத்தைப் பண்ணினேன் –

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

நான் அழைப்பேனே-என்ற விடாய் எல்லாம் கெடக் காணப் பெற்று-காணக் கருதும் என் கண்ணே -என்கிற கண்களின் விடாய் கெட-லியர் வயிறு நிரம்ப உண்டேன் -என்னுமா போலே-மறுகின நெஞ்சு களிக்கும் படி-இவ்வுகப்புக்கு இடைச் சுவரான ப்ராக்த்தன கர்மங்கள் ஆனவற்றை சவாசனமாகப் போக்கி -காண்பதற்கு முன்புள்ள துக்கத்தை சவாசனமாகப் போக்கி-என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்-இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –நானும் உண்டு-என் வேலையாள்களும் ஜீவித்து-என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –என்பாரைப் போலே –-சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்-அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –சர்வேஸ்வரனாலே-அடியவனாக-அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்

தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் -தன்னுடைய பிரபத்தி அதன் பலத்தோடு பொருந்தின படியை-அதாவது-நேராக கண்ட படியையைச் சொல்கிறார்-
இதனால் புறக் கண்களால் கண்டது போன்று-ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –விசத தமமான மானஸ சாஷாத் காரம் –—பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே–இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி -அதுவே யாத்ரையாகச் செல்லும் படி–நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே-சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே-கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் –
மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை –ஸ்வயம் நிரபேஷம்-அவன் –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அடியேனும் பணி வகையே காணப் பெற்றேன் என்கிறார் –

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

அழகு மிக்க ஒப்பனை -இப் ஒப்பனை அழகு நிறம் பெறும்படி யாயிற்று கண் வளர்ந்து அருளிற்று -அல்லாதார்க்கு கிடந்த போது வைரூப்யம் உறைத்து இருக்கும் -இங்கு அழகு உறைத்து இருக்கும் –வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.-திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.–கண் வளர்ந்து அருளுகிற படி கண்டேன் –உணர்ந்து குளிர நோக்குதல் -அணைத்தல் -இந்த சொல்லுச் சொல்லுதல் -செய்யப் பெற்றிலேன் -கண்ணாலே காணப் பெற்றேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் -பரிமாற்றம் பெறா விட்டால் ஆறி இருக்கலாம் –பிராப்தி இல்லை யாகில் -வடிவு அழகோ பாதி சம்பந்தமும் நலியா நின்றதே -ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறதுஎம்மானே-இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்றது,-சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ என்கிறார் என்றபடி.-அன்றிக்கே,-வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியா நின்றது என்கிறார் என்னுதல்.

இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74

மன்னு மறையோர் திரு நறையூர் –மறையோர் மன்னும் திரு நறையூர் –-மடல் எடுக்கை சாஸ்த்ரார்தம் என்று உபபாதிக்குமவர்கள் மன்னும் தேசம் –அங்கன் உண்டோ என்னில் –
வ்யவசாயாத்ருதே ப்ரஹ்மன் நாசாத யதி தத்பரம் -என்று உண்டாகையாலே –மா மலை போல்-மலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்-பொன்னியலும் மாடக் –
அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண்-அவன் காண்கை-அவ வாளம் காலை தப்பின படி-பல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை-என்னுடைய படபாக்னி குளிர –களிப்ப –கண்கள் ஆரவளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திரு மொழி -7-10-9-என்னுமா போலே –
நெடும் காலம் பட்டினி விட்ட கண்கள் வயிறு நிரம்பும்  படி –நணுகினம் நாமே -திருவாய் மொழி -1-1-3-மன்யே ப்ராப்தா சம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -அயோத்யா -69-9-நோக்கினேன் நோக்குதலும் மன்னன் –நான் கண்ட பொழுதே எழுதிக்  கொண்டான் –-வாளும் பலகையும் பொகட்டு கண்ட போதே மடல் எடுக்கப் பண்ணினவன் –கண்ட போதே தான் என்னலாம்படி இருக்கை-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

ஓர் உடம்பில் இத்தனை பகை தேடி வைக்கலாமா –கலந்து என் பிரக்ருதியை அறிந்து வைத்து பிரிந்தான் -அவன் கூட இருந்தால் அன்றோ உன் படிகள் அனுகூலமாய் இருப்பது –தனி இருப்பில் நலிவார் ராவணாதிகள் அன்றோ -அனுகூலர் நலிவாரோ-

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம்
இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7-

சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே
(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர்  –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து
பொகட்டீர் –இத்தை அல்லாதவை போல் அன்றியே வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்-
(கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ -நம் ஆற்றாமைக்கு வேண்டும் அளவு அன்றியே கண்ணாஞ்சுழலை இட்டு இனி இவ் வஸ்துவை பிறர் நம்பாதபடி சொன்னோம்-

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

அத்தனை அளவில்லாத சம்சாரிகளுக்காக சஜாதீயனாய் வந்து அவதரித்து -மார்விலே அம்பேற்று சோக மோகங்களை அனுபவித்து ரக்ஷிக்குமவனே
காண்கையும் அஸஹ்யமாய் இருப்பார்க்கு முகம் தோற்றாத படி நின்று சகல பதார்த்தங்களின் உடைய சத்தையை நோக்கினவனே-அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களுக்கும் இப்படியே ரக்ஷகன் ஆனவனே-என்னுடைய ஹ்ருதயத்தில் உள்ளே மிகவும் பிரகாசித்து -என்னுதல் –அந்தர் பஹிச்ச வர்த்தித்து என்னுதல் –பக்தா நாம் என்கிற வடிவை எனக்கு காட்டாதே மறைய நின்றால் ஜீவிப்பனோ-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் –பூந்துழாய் முடியார்-பொன் ஆழிக் கையார்-திரு மூழிக் களத்தார் –என்று வைத்து தாம் என்கிறாள் அன்றோ –
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு -என்கையாலே-வடிவு அழகினைச் சொல்லிற்று-திரு மூழிக் களத்தாற்கு – என்கையாலே குணம் சொல்லிற்று-ஆக
இப்படிப் பட்ட வடிவு அழகையும்-குணங்களையும் உடைய தாம் -என்றபடி –
இவற்றையே பற்றாசாக கொண்டு அன்றோ தூது விடுகிறாள் -வெறுப்பு -தீ வினையேன் -சொல்லக் கூடாது பார்த்தோம் —
தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது –தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது –

அத நு கிம் துக்கதாம் ச அஹம் இஷ்வாகு நந்தனம்-இமாம் அவஸ்தாம்ஆபன்ன ந இஹ பஸ்யாமி ராகவம் -அயோத்யா -59-26-தசரதன் புலம்பல்-இந் நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை-இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே-
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது–வா போகு-வந்து ஒரு கால் கண்டு போ முன் அழகும் பின் அழகும் கண்டு சக்கரவர்த்தி – எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி-ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு–இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி

தாம் தம்மைக் கொண்டு அகல்தல்-தாம் என்னைக் கொண்டு அகலுமது ஒழிய தம்மைக் கொண்டு அகலக் கடவரோ-தம்மைக் கொண்டு அகல வேண்டினால்-தமக்கு உரிமைப் பட்ட பொருளைப் -ஆழ்வார் ஆகிய நாயகியை -பொகட்டு-பிறர்க்கு உரிமைப் பட்ட பொருளையோ -இறைவனது திரு மேனியை -கொடு போவது -என்னுதல்-பக்தர்களுக்காக அன்றோ அவன் உடம்பு இருப்பது -என்றபடி-தனக்கே யாக எனைக் கொள்ள வேண்டும் -என்றே அன்றோ இத்தலை இருப்பது -என்றவாறு –உனக்கே என்று சொல்லாமல் -ஆழ்வார் அருளிச் செய்ய -அழகில் மயங்காமல் கைங்கர்யம் செய்ய -படர்க்கையில் சொல்ல-பக்தானாம் -உமக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -சொல்லாமல் தனக்கே யாக -சத்ய ஸங்கல்பன் அன்றோ –தாம் தம்மை –ஸ்வரூபம் ரூபம் -சதைக ரூப ரூபாயா –ஆத்மைவ பந்து -மனசே பந்த மோக்ஷ ஹேது -ஆத்மாவால் ஆத்மாவை உசற்ற -ஆத்மாவால் ஆத்மாவை தள்ளி விடாதே –
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -முந்துற்ற நெஞ்சே —
தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –காதலுக்கும் மிருத தன்மைக்கு சேராத மாத்ரமே அன்றிக்கே இது அருளே இல்லாதவர் செயல் என்று சொல்லுங்கோள் -என்கிறாள் –-பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்ய்மவற்றைச் செய்தீர் -என்று சொல்லுகோள்-என்கிறாள் –

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

செய்யக் கடவது அல்லாததை செய்தே யாகிலும் –சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த:-தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30.
“என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக் கூடிய நாம், – மடலூர்ந்தே யாகிலும் -இங்கு மடலாக நினைக்கிறது –பெற்று அன்று தரியாத உபேய த்வரையும்-அதுக்கு அடியான உபாய வை லக்ஷண்ய அனுசந்தானமும் உபாயம் தன்னாலே பேறு என்ற துணிவும் -வேறு ஒன்றை உபாயமாக நினையாமையும் -க்ரம பிராப்தி பற்றாமையும் -மடலாய்ச் செல்லுகிறது

பிரணவத்தில் சொல்லப்பட்ட சேஷத்வத்திற்கு உரியதான ஆத்மாவுக்கு வாசக சப்தம்
இருக்கிறபடி யாயிற்று ‘யாம்’ என்பது.-அத் தலையைக் கொண்டே அன்றோ இவனை நிரூபிப்பது.-அஹம் அர்த்தம் -மகாரம்-சேஷ பூதன் –அகாரம் சேஷி –-ஆறி இருக்காமல் -ஸுவ பிரயோஜனம் கூடாதே -மடல் எடுப்பதால் அஹம் அர்த்தம் உடன் சேராத செயல் –
யாம் முதலில் சொல்லிஆழி அம் கைப் பிரான் –பின்னால் சொல்லி -பிரணவம் -அகாரம் சொல்லித் தானே மகாரம் –பிரணவத்தை விட இங்கே நன்றாக அருளிச் செய்த படி –கேட்டு திருந்த வேண்டியது ஜீவாத்மா தானே-ராஜ புருஷன் -சப்தம் முன்னால் இருந்தாலும் சேவகனுக்கு முக்கியம்-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

என்னாலான மிறுக்குகள் செய்து -கோணை-மிறுக்கு-அதாவது மடல் கொண்டு புறப்பட்டவாறே எதிரே வரும் –-சென்று கும்பிடக் கடவேன்-குதிரியாய்-என்று –குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய்
தடை இல்லாத பெண் என்கிற படியாய், தடை யுடையேன் அன்றிக்கே என்னுதல்;-தடை இல்லாப் பெண் -அடங்கா ஸ்திரீயாய் –குதிரி என்று ஆபரணம் இட்டு வைக்கும் செப்பாய் –இவளுக்கு ஆபரணம் -நாணும் நிறையும் இறே -அவை போகையாலே கேவல சரீர மாத்ரமாய் செல்லக் கட வேன்குதிரி –குதிரையை யுடையவள்-பனை மடலை குதிரையாக யுடையவள் என்றுமாம் –மடல் ஊர்துமே.-இரண்டு தலையையும் நோக்கி இருந்தது அமையும் –இனி மடலூர்ந்தே விடக் கடவேன் –மடலாகிறது -அபிமத விஷயத்தை ஒரு படத்திலே எழுதி பனை மடலையைக் குதிரையாய்க் கொண்டு -உடம்பைப் பேணாதே மயிரை விரித்து கண் வாங்காதே பார்த்துக் கொண்டு திரியா நின்றால்-போக உபகரணங்கள் கண்டால் அக்னி கல்பமாய் இருக்கக் கடவதாய்-இப்படி செல்லா நின்றால் -ராஜாக்கள் கூட்டுதல் -ஆற்றாமை கூட்டுதல் -இரண்டு தலையிலும் உள்ள பந்துக்களும் கை விட்டு ஒருவருக்கு ஒருவர் தஞ்சமாய் முடிகை தானே பேறாகச் செய்யுமதாயிற்று –-மடல் ஊர்துமே-‘செய்யக் கடவதாயிற்ற பின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது -தன் பக்கல் கை வைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ,‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார் அத் தோள்’–பூதத்தார் –42- என்னக் கடவதன்றோ.“ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே சஞ்சரிக்கிறான்” என்கிறபடியே,பேற்றினைப் பெறுகிற சமயத்திலே இவ் வருகுள்ள வற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே,ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ் வருகுள்ள வற்றை நினையாமலே செய்ய வல்ல விஷயம் அன்றோ?தன்னை அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநு சந்திக்கும் படியோ அவன் படி.-ஆனாலும் ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்ச வேண்டாவோ -என்ன –அவ்வெல்லை கடந்திலமோ –என்கிறாள்-கவ்வை -பழி – தோழி! என்செய்யுமே?–-இவ்விஷயத்துக்கு புறம்பானோர் சொல்லுமதுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்று அறியாயோ -அவர்கள் பழி நமக்கு புறம்பாம் அத்தனை அன்றோ -நமக்கு இது உபகாரகம் அன்றோ -பழி பற்று அறுக்கிறது–அலர் எழில் ஆர் உயிர் நிற்கும் அதனைப் பலர் அறியார் பாக்கியத்தால் –நமக்கு ஸ்மாகரம் அன்றோ -என்கிறாள் –

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5

பர வ்யூஹ விபவாதி ஸ்த்தலங்கள் எங்கேனுமாகிலும் சென்று கண்டு-இவளை சித்த அபஹாரம் பண்ணித் தனிமைப் படுத்தின இதுவோ தகுதி- என்று சொல்லுங்கோள் –கீழே வானவர்கோனைக் கண்டு என்கிறபடியே லோகத்தில் அன்றிக்கே ஏகாந்த ஸ்தலத்தில் சென்றாகிலும் வார்த்தை சொல்லுங்கோள் -அங்கனம் அன்றியிலே-“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம் அநேந ஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40. -என்கிறபடியே -பரமபதத்தில் கண்டிலோம் -என்று மீளாதே வ்யூஹ விபாவாதிகள் எங்குத் தேடியாகிலும் கண்டு சொல்லுங்கோள்-ஸ்தான பேதம் உண்டாகிலும் பாசுரம் இதுவே –நீர்மை கொண்டாடி இருப்பார்க்கு இது அல்லது மர்மம் இல்லை -இத்தை சொல்லுங்கோள்-பிறர் மனத்தினையும் கவர்ந்து தன் மனத்தினையும் கொண்டு
கடக்க இருக்கையோ தக்கோர்மையாவது? அவனுக்கு அருள் இல்லை என்கையாவது, -தர்மியை இல்லை என்கை அன்றோ. தர்மியைச் சேர்ந்துள்ளதான கிருபையும் எங்கள் பக்கல் காணாமையாலே – அருள் அனைவர் இடமும்- கிருபை அடியவர்கள் இடம் -தமக்கு அதுவும் இல்லை என்று சொல்லுங்கோள்.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வார்த்தா மாலையில் சில அருளிச் செயல்களுக்கு விசேஷ அர்த்தங்கள்-வார்த்தை -440–

November 9, 2025

வார்த்தை -440-
பச்சை மா மலை போல் மேனி-திருமாலை -2-  என்றது –
ஒருத்தரிட்டு ஆகாது ஒழிகையும் –
எல்லாவற்றாலும் பெருத்து இருக்கையும் –
தானே எல்லாவற்றையும் தரித்து இருக்கவற்றாய் இருக்கையும் –
இதிலே அன்வயித்தால் எங்கும் தெரியும்படியாய் இருக்கையும் –
ஒருத்தரால் பேர்க்கப் போகாதே இருக்கையும் –இதிலே அன்வயித்தாருக்கு சகல போகங்களும் இதுக்கு உள்ளே உண்டாய் இருக்கையும் –
கத்யாகதி இன்றியிலே இருக்கையும் —அஞ்சினான் புகலிடமாய் இருக்கையும் –

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-

பச்சை நிறத்தை உடைத்தாய்-ஸ்லாக்கியமாய்-இருப்பதொரு மலை போலே யாய்த்து திரு மேனி இருப்பது –காணப் புக்கால் கண்ணும் குளிர்ந்து-நெஞ்சும் குளிரும்படி ஸ்லாக்கியமாய்த்து இருப்பது –தாபத் த்ரயம் உடையவர்களின் சகல தாபங்களும் கண்ட போதே ஆறும்படி யாய்த்து திருமேனி இருப்பது –நெய் திணுங்கினால் போலே அகவாயில் தண்ணளி உடைய செறிவு எல்லாம் வடிவிலே காணலாம் படி இருக்கை –மா மலை -என்றது
பூஜ்யமான மலை என்றபடி –பிரதமத்தில்-சுபாஸ்ரயமாய்-பின்பு நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் ஸ்லாக்கியதையைச் சொல்லுகிறது –மலையானது-ஸ்தைர்யத்துக்கு ஒப்பாய்
வளர்த்திக்கும் ஒப்பாம் இத்தனை ஒழிய-போக்யதா அதிசயம் எல்லாம் இல்லையே அதனுக்கு –மேனிஆனந்த மய -என்கிற ஸ்வரூபமும்-ஆனந்தாதி குணங்களும் அல்ல –
இவரை உகப்பிப்பது –இவை இரண்டும் அகவாயிலே யாம்படியான இவ்வடிவு யாய்த்து இவரை உகப்பித்தது –-இச்சா க்ர்ஹீத அபிமதோருதேக -என்றும்
குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போலே குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் -என்றும் சொல்லக் கடவது இறே-கழுத்தே கட்டளையாக நீரை முகந்து போக மாட்டாதே மலை உச்சியினிலே சாய்ந்த மேகம் போலவும்
கண்ணாலே முகந்து அனுபவிக்க குவளைகள் போலவும்
அனுபவித்து முடிக்க ஒண்ணாமைக்கு கடல் போலவும்
வைத்த கண் வாங்க ஒண்ணாமைக்கு மயில் திரள்கள் போலவும்
ஆய்த்து இத் திரு மேனி இருப்பது –

சிஞ்சேதி மஞ்ச ஜன மிந்திரியா தடித்வான் பூஷா மணி தியுதிபிரிந்த்ரத நுர்த்ததான
ஸ்ரீ ரெங்க தாம்நி தயாரச நிர்புரத்வாதத் ரௌ சயாளுரிவ சீதள காளமேக -என்றார் இறே

ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும்
முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால் ‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.

பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குப் பச்சை மா மலையை உவமை கூறினார்.ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும் முதலிய குணவிசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.

———————

கடலேயும் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-8-என்றது –
கண்ணுக்கு இலக்காய் இருக்கச் செய்தே ஆழமும் அகலமும் அளவிட
ஒண்ணாதாய் இருக்கையும் –உயிர் அற்றவற்றை உட்கொள்ளாது ஒழிகையும் –
ஸ்வ சக்தியாலே உள்ளுப் போகாது ஒழிகையும் –
தான் அள்ளி விநியோகம் கொள்ளாது ஒழிகையும் –
ஒன்றின் வாயாலே (மேகம் -ஆச்சார்யர் –லஷ்மீ நாதாயா சிந்தவ் இத்யாதி)விநியோகம் கொள்ளலாய் இருக்கையும் –
தர்சநீயமாய் இருக்கையும் –

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-

இவருடைய நிறத்தை பார்க்கில் காவி போலேயும் கடல் போலேயும் இரா நின்றார் –முந்நீர் மடந்தை கடலில் பிறந்த ஸ்ரீ மகா லஷ்மி-ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர் -மலை நீர் -முந்நீர் என்பர்-முச்செய்கை யுடைய -மண்ணைப் படைத்து காத்து அழித்தல்-முத் தொழில் களும்  கடலுக்கு உரியதாம்-நீரில் இருந்து நிலம் பிறக்கும் -முடிவில் நீரினால் மூடப் பட்டு உலகம் அழியும் -நடுவில் நீரால் காக்கப் படும்-முந்நீர் -பழைய நீர் என்றுமாம் ஆதியில் நீரையே படைத்தார் -நாராயணன்-

————————–

கார்முகில் -திருவாய்மொழி -2-3-7- என்கிறது –
தர்சன மாத்ரத்திலே தாப சாந்தியைப் பண்ணுகையும் –
எங்கும் ஒக்க வர்ஷிக்கும் இடத்தில் தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாது
ஒழிகையும் –
கொண்டவன் பிரத்யுபகாரம் தேடாது ஒழிகையும் –
ஒரு படிப்பட உபகரிக்கப் பெறாமையாலே உடம்பு வெளுக்கையும்

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

கார் முகிலே–பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை-வள்ளன்மையினைப் பற்றிக் ‘கார்முகிலே’ என்கிறார்.

——————

எண்ணும் பொன்னுருவாய் -திருநெடும்தான்டகம் -1- என்றது –
நித்தியமாய் இருக்கையாலும் –
சகலராலும் கௌரவிக்கப்படுவது ஒன்றாகையாலும் –
உரை உண்டாகையாலும்
உண்டென்ன உயிர் நிற்கையாலும்-இது கை பட்டவன் நினைத்தபடி பண்ணலாய் இருக்கையாலும் –
அவனுக்கு அபிமதங்கள் எல்லாம் கொடுக்கவற்றாய் இருக்கையாலும் –
அலங்காரமாய் இருக்கையாலும் –
ஆபத்துக்கு உதவுகையாலும் –
இது கைப்பட்டவனை ஸ்ரீ மான் என்கையாலும் –
இது கைப்பட்டவன் சகலராலும் சேவ்யமானாய் இருக்கையாலும் -சொல்லுகிறது –

மின் உருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய்  முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி  மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய்
மணி வுருவில் பூதம் ஐந்தாய் புனல் வுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே–1

இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்-எண்ணும் பொன்னுருவாய் -என்று திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –

எண்ணும் –போக்யாதிசயத்தாலே நேதி நேதி –(ப்ரஹ்மதாரண்யம்)என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||
–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 19 –

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,-ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –ஆழ்வார் போலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று பேசி விடாமல் ஏதோ பேசத் தொடங்கி பரிபவப் பட்டனவே வேதங்கள் –-அருமையான வேதாந்த விழுப் பொருளை அருளிச் செய்கிறார் இத்தால்

பொன்னுருவாய் – பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது – அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் – 4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

——————–

அந்தி மூன்றும் அனலோம்பும் -பெரிய திருமொழி -7-5-1-என்றது
காமாக்நி -கோபாக்னி -ஜாடராக்னி –

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

அந்தி மூன்று அனல் ஓம்பும் – ஒரு பல அபிசந்தியை பண்ணிச் செய்கிறார்கள் அன்று இறே
நித்ய அனுஷ்டானத்துக்காக கொள்ளுவது   ஒரு பலம் இல்லை இறே – ஆகையால் இதுவே யாத்ரையாய் –(ஓம்பும் வர்த்தமானம் )

—————-

சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் -79
வெட்டி வாளிலும் -சிரமன்(வேலை செய்யும்) வாள் கனத்து இருக்கும் என்றபடி –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79

விண்ணுளாரிலும் சீரியரே – நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8

இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறுமில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம்
பகவதநுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது
அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?
ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம் மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனமொழிமெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று.

இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷனர் ஆவர்கள்

—————–

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -1-4-7–என்றது
அணு கதமான பாபம் -விபு கதமான கிருபைக்கு  எதிர் நிற்குமோ –

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7-

தம்முடைய அபராத சஹத்வத்துக்கும் நிலம் அன்றோ -என் பிழை என்று அவர்க்கு அறிவி என்று தன் கிளியை நோக்கிச் சொல்லுகிறாள்-இத் திருவாய் மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது –

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்-அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது-என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்-கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேசதிருவடியின் தகவினுக்கு-இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில்,‘ஸ்வாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள்.
இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் -தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல்.
அதாவது, ‘ஸ்வாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி.
‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்?
நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலே யன்றோ? ஆதலால், செய்யப் போகாது.
இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல் முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –

தகவினுக்கு-ஆந்ரு சம்சயம் பரோ தர்ம -‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு-என் பிழைத்தாள்-என்ன தப்புச் செய்தாள் – என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.
கிம் கோப மூலம் -‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,
‘இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்.–.
மனுஜேந்த்ர புத்ர -அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டு கொண்டு போந்தான்-உங்கள் தமப்பனார் -அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை அறுக்க வந்து நின்றீர் நீர் –-அழகியதாய் இருந்தது உம்முடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே -சாஸ்த்ர வஸ்யம் இன்றிக்கே கண்டத்தில் கடுக்கச் சாபல்யத்தைப் பண்ணி மீளமாட்டாத திர்யக்குகளே நீரே இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர்த்து விட்டு நீர் சொல்லிற்றுச் செய்தன என்று தலை அறுக்க வந்து நின்றீர் –
இப்படிச் சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது –

————-

நம்பிள்ளை ப்ரஹ்ம தேசத்தில் எழுந்தருளி நிற்கச் செய்தே பெரிய கோயில் வள்ளலார்
காண வர -குலம் தரும் -என்கிற பாட்டில் முதல் பதத்துக்கு தாத்பர்யம் அருளிச் செய்ய வேணும் என்று பிள்ளையைக் கேட்க முரட்டு திருப்பதியானான உன்னை நம்பூர் குலத்துக்கு சேஷமாக்கின குலம் தரும் -என்று விண்ணப்பம் செய்தார்

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9-திரு நாம பலத்தைச் சொல்லுகிறார் இப் பாட்டில்-

குலம் தரும் – ஜன்ம வருத்தங்களால் குறைய நின்றான் ஒருத்தனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் இவற்றால் உயர்ந்தான் ஒருத்தன் இவை இரண்டிலும் இவனுக்கு தாழ்வு உண்டாகவும் தான் உயர்ந்தான் ஆகவும் -நினைத்து இருக்கவும் கூட கூச வேண்டும்படி யாயிற்று பகவத் பிரபாவம் இருப்பது –
ஆனாலும் பெண் கொடுத்தல் கொள்ளுதல் செய்கிறார் இல்லை –-அதுக்கடி ஜாதி நிபந்தனம் ஆகை
ஸ்லாகைக்கு நிபந்தனம்-ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸகுலீந -என்னக் கடவது இறே –

கண்டதெல்லாம் தர்ம சந்தேஹம் பண்ணக் கடவ தர்ம புத்திரன் பகவத் ப்ரத்யாசத்தியாலும்
அசரீரி வாக்யத்தாலும் விதுரரை ப்ரஹ்ம ரதத்தாலே சம்ஸ்காரம் பண்ணினான் இறே –
ருஷிகள் தர்ம வ்யாதன் மாம்ஸ விக்ரயம் பண்ணி கை ஒழியும் தனையும்
பார்த்து நின்று தர்ம சங்கங்கள் கேட்டுப் போனார்கள் இறே –

இங்கன் அன்றாகில் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே எழுதக் கூடாது இறே –
கைசிக கதையிலே வந்தவாறே விலஷணனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்ம ராஜஸ்
ஆசார வைகல்யத்துக்கு -பகவத் ஜ்ஞானம் உடையான் ஒரு பாடுவானாலே பரிஹாரம் இருந்தது இறே –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைப் பார்த்து -பெருமாளை சரணம் புகு-என்று சொல்ல –
த்வாந்துதிக்  குல பாம்ஸநம் -என்று -நீ இக்குடிக்கு உடல் அல்ல என்றான் இறே –
ராவணனுக்கு வார்த்தை சொல்லும் இடத்தில் –நிசாசர -என்று அவனை ராஷசனாகவும்
தான் அல்லனாகவும் சொன்னான் –இங்கனே அன்றிக்கே –ராஷசாநாம் பல அபலம் என்று பெருமாள் தாமும் அருளிச் செய்தார் –

ஆகையாலே பகவத் சம்பந்தம் ஸ்பர்ச வேதியாய் இருந்தது –

———————–

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே -திருவாய்மொழி -2-5-8-
1-என்னுடைய சத்தா ஹானி காணும்படிக்கு ஈடான கிருபா ஹாநி அவனுக்கு இல்லாமையாலே என்னை அங்கீகரித்தான் -2-(அவன் என்னைப் பெற )தொடங்கின உபாயம் முடிவதற்கு முன்னே என்னுள் கலந்தான்
3-வறுத்த பயறு போலே ஆத்ம அனுபவத்தளவிலே  நின்று முடியாதபடி என்னுள் கலந்தான் –
4-என் அஹங்காரம் பாராதே குலம் கொண்டே பரிக்ரஹித்தான்
5-அபரிச்சேதயனான தன்னை நான் புஜிக்குமா போலே அணு ஸ்வரூபனான என்னை புஜித்தான்

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

என்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ குண வ்ருத்தாதி களினுடைய நிஹீநதையைப் பாராதே என்னுள்ளே கலந்த இஸ் ஸுசீல்யத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்-தன் உத்கர்ஷத்துக்கு எல்லை காணாதவோபாதி என் நிகர்ஷத்தின் முடிவு காணாதே என் நெஞ்சுக்குள்ளே கலந்தவனை –நான் -ஸ்வ சம்வேத்யமாக அறியுமது ஒழிய பாசுரம் இட்டுச் சொல்லும் பிரகாரம் காண்கிறிலேன் –நீங்கள் அனுபவித்த விஷயம் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுமோபாதி இங்குச் சொல்லுவது ஏது-உண்டாகில் சொல்லுங்கோள்–என்று லௌகீகரைக் குறித்து உரைக்கிறார் – லோக வ்யாவ்ருத்தனுடைய சம்ச்லேஷ சாரஸ்யம் வாசா மகோசரம் என்று கருத்து – விஸ்லேஷ தசையில் என் முடிவு காணாதே -என்றுமாம் –தன்னைப் பிரிந்து நான் முடியுமது காண மாட்டாமையாலே என்றுமாம்-என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான்.-இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று, இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி.
இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் -விஸ்லேஷ வியசனத்தால் -‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக, அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து
ஒரு குணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை. இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ 

————————-

நாநாவித நரகம் புகும் பாவம் நானே செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
தேன விநா தருணக்ரம்பி ந சலதி -நீ செய்து என்னைச் சொல்லலாமோ -என்பார் –
(நீ செய்து என்னைச் சொல்லலாமோ -நீ அன்றி அணுவும் அசையாதே)அடாப் பழி யிடுகிறார்கள் அத்தனை யன்றோ -நான் செய்தது என் –
தேவாங்கு சேற்றிலே விழுமா போலே அவனுக்கு ஸ்ப்ருஹணீயமான வஸ்து இப்படி படுவதே
நானே செய்தேன் -அஹங்காரம் ஒன்றாலும் செய்தேன் –

மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
சேதன பேதத்துக்கு எல்லை இல்லை இறே –அவர்களை கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கைக்கு லோகங்கள் தோறும் பண்ணி வைக்கும் நரகங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே – அவை எல்லாவற்றுக்கும் நான் ஒருவனே தேவை யறுக்கும்படியான
பாபத்தைப் பண்ணினேன் –
ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேண்டும் –
ஸ்ரீ ராமாயணத்தில் கைகேயியை நீ என்ன நரகத்தில் புகக் கடவை என்று உண்டு அவ் விடத்தை வாசியா நிற்க நம்பிள்ளை முன்பே ஸ்ருஷ்டமான நரகங்கள் போராது என்கிறதோ -என்ன அழகிதாகச் சொல்லிற்று -என்று ஜீயர் அருளிச் செய்தார்-

நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -என்ற நானே வந்தடைந்தேன்
அந் நரகம் அனுபவம் பண்ணும் போதை க்லேசத்துக்கு எதிர்தட்டான ஸூக ஏக கதநமாய் இருக்கும்-கைங்கர்யத்தை என்னைக் கொண்டு அருள வேணும் –
காமுகனுக்கு அங்கநா பரிஷ்வங்கம் போலே ரசிக்கும் இறே சேஷ பூதனுக்கு கைங்கர்யம் –
ரம்யவ ஆசதம் க்ருத்வா ரமமாணாவ நேத்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர தேந்ய  வசந் ஸூகம் –

———————————————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வார்த்தை மாலையில் -421-ஸ்வரூப அனுகூலமான அவஸ்ய ஜ்ஞாதவ்ய பத்துக்கள்–

November 6, 2025

வார்த்தை -421-
1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் –
2-ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் –
3-ஸ்வரூப அனுகூலமான சேவை –
4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு –
7-ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் –
8-ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் –
10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம்   ஜ்ஞாதவ்யமாகக் கடவது -(அனுஷ்டானமாகவும் இருக்கக்கடவது)

1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது –
தேச ரஷகன் என்றும்-
தேக ரஷகன் என்றும் –
பதார்த்த ரஷகன் என்றும் –
பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற ரஷகத்வங்களைத் தவிர்ந்து –

தேச நிவர்தகன் என்றும் –
தேக நிவர்தகன் என்றும் –
விஷய நிவர்தகன் என்றும் –
பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –

அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே –
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு அருள் செய்யும்

பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே –
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்

ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே
அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2-

நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே –
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இறே

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

அழைத்துக் கொள் -கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்-உன்னை விட்டு ஐம்புல இன்பங்களால் போது போக்கி இருக்கிற உலகம்.-இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு ஆகா தொழிய வேண்டும் என்கையாலே,-இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி.-மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று
சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை.
யாவையும் திருமால் திரு நாமமே கூவி – இவர் பிராக்ருத பதார்த்தங்களில் கண் வைப்பார் அல்லர் –
காட்டேல் – இவன் தான் அவருக்குக் காண்பித்தான் -என்றவாறு-ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில்,-பர ஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்; -இது தான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ண வேண்டும்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

தன்னடியார்க்கு கலியுகம் ஒன்றும் தட்டாத படி அருள் செய்யும் -நாட்டுக்கு இட்ட நினைப்பு அன்று இ றே அந்தப்புரத்துக்கு இடுவது –-கலவ் க்ருத யுகம் தஸ்ய -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யம்-தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத்-“எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது;-எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது” என்கிறபடியே,

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இறே-பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி-புணர்வினை– சரீர சம்பத்துக்கு அடியான கர்மம் என்னுதல் -சரீர சம்பந்தம் என்னுதல்-அறுக்க என்றால் போகாது -ராவண சிரஸ்ஸைப் போலே முளையா நிற்கும் என்கை –சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடொன்று-பிணைந்திருக்கின்ற பாவங்களை அறுக்க முடியா.-பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே?அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

அடியாரை செடியார் யாக்கை சேர்த்தல் தீர்க்கும்-இங்கு அடியார் என்கிறது கேவலரை-ஆயின், அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக்கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.-தம்மைப் போலே கிட்டி அவத்யத்தை விளைக்காதே பிரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகையாலே அடிமை யாவது ஸ்வாமிக்கு அதிசயத்தை பண்ணுகை இறே-தூறு மண்டின சரீரம் அவர்களைச் சேராதபடி பண்ணும்-ஜரா மரண மோஷாயா மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே ( ‘முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும் பொருட்டு என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’ )என்கிறபடியே,-என்று இறே அவர்கள் புருஷார்த்தம் இருப்பது-திருமாலை-அவர்கள் சரீரம் சம்பந்தம் அறுத்துக் கொடுப்பான் ஸ்ரீ யபதி இறே

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே
–7-7-7-

இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி
போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

ந நமேயம் ‘வணங்க மாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு,-பிரயோஜ நாந்தரத்தைக் கொண்டு அகலாதே-தானே பிரயோஜனமாய் இருக்குமவர்களுக்கு-விஷயங்களில் மூட்டி -ஸ்வ விஸ்லேஷ ஜனகமான மஹா பாபத்தை பண்ணுவிக்கைக்கு சமர்த்தமான ஸ்ரோத்ராதி இந்த்ரியங்களால் வசிக்கும் படி விட்டுக் கொடான்-ஐந்து இந்திரியங்களிலும் புக்குத் துஞ்சக் கொடான் – துப்பு -சாமர்த்தியம்-சங்காத் சஞ்சாயதே–இதயாரப்ய–புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்னக் கடவது இறே

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன்
வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-

இப்படி முறை கெட வர்த்திக்கையாலே யம படர் பண்ணும் வேதனையை அனுசந்தித்து அஞ்சி –-சர்வ அவயவங்களும் ஒடுங்கி-சரீரம் தான் எடுத்து எடுத்து அறையத் துடங்கும் –

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ்  துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-

யமனுடையார் நம்முடையாரை ஆராயக் கடவர் அல்லர் –அதுக்கு நிபந்தனம் என் என்னில்
வேண்டாமை-அல்லாதாரை இவன் ஆராயக் கடவன்-என்று இட்ட நாமே இத்தைக் கழித்துக் கொடுத்தோம் 

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும்
நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9-

அடியார்  உண்டு -தனக்கு அசாதாரணர் ஆனவர்கள்-படு துயர் உண்டு -அவஸ்யம் அநுபோக்தவ்யம் -என்று அநுபவ விநாச்யமான கர்மங்கள் –அவற்றை எல்லாம்-நிலந்தரம் செய்யும் –நிலத்தோடு ஒக்கப் பண்ணும்-வெறும் தரை யாக்கும்-கேவல பூதலமாக்கும்-அங்கன் அன்றிக்கே
நிலம் என்று அவன் வர்த்திக்கும் இடமாய்-தரம் என்று தாரணமுமாய் இடைக் குறைத்தலாய்
இவன் பக்கலில் நின்றும் கர்மங்கள் தாமே நமக்கு இருப்பிடம்  அன்று என்று போம்படி
பண்ணும் என்றுமாம்–(நிலம் -இவன் இருக்கும் இடம்-தரம் தாரணம் தாண்டுதல் )-யத்ராஷ்டாஷர ஸம்ஸித்தோ மஹா பாஹோ மஹீயதே –
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி யாதி துர்ப்பிஷ தஸ்கரா
-என்றும் (நோய் பஞ்சம் திருட்டு மூன்றுமே போகுமே )சும்மனாதே கை விட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே -என்றும்
கோலாடு குறுகப் பெறா(கோலாடு-கோல் நடமாடும் தேசம் -ஆஜ்ஜை நடமாடும் இடம் )அங்கன் அன்றியே-நிலம் என்று ப்ருதிவ்யாதி பூதங்களாலே ஆரப்தமான சரீரமாய்
இவன் பண்ணின கர்மங்களை சரீரத்தளவாக்கும் – பக்திமானுக்கு பிராரப்த கர்ம அவதியாய் இருக்கும் –இவ்வர்த்த அனுசந்தானத்தைப் பண்ணி பிரபன்னன் ஆனவனுக்கு இஸ் சரீர அவதியாய் இருக்கும்-

——————–

2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது –
இதர சேஷம் என்றும் –
க்ருஹ சேஷம் என்றும் –
பித்ரு சேஷம் என்றும் –
தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து

சர்வேஸ்வரனே தாரகன் என்றும் –
வியாபகன் என்றும் –
சரீரி என்றும் –
சேஷி என்றும் பற்றுகை -அதாவது –

ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —
என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —
அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

விலக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய்
என்றான்

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் –இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ –கண்டாயாகில் பிரியாய்;-பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–

மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –எனக்கு உபகாரகன்-எனக்கு ஜனகன்-என் குடல் துவக்குக்கு ஆன எல்லா உறவு முறையும் ஆனவன்-என்னை வன்னிய மறுத்து ஆண்டவன்-என்னுடைய ஆயுஸு–

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–20-

இஸ் சமர்த்தியைக் கண்டால் ஸ்வரூப ஞானம் உடையார்க்கு அகலப் போமோ-இதற்குப் புறம்பாய் -அஹம் மம -நான் என்னது -என்று இருப்பார்க்கு அன்றோ அகலல் ஆவது –ஆமே -என்றது-எதிரிகளுக்கும் அகலப் போகாது என்ன வேண்டும் படியாய் இறே-அர்த்தத்தின் மெய்ப்பாடு இருப்பது-எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி-ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலக முடியுமோ?

————————–

3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது –
சேதனாந்தர சேவையையும் –
தேவதாந்தர சேவையையும் –
பகவத் சேவையையும் –
த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் –
அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து –
ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை (அவனுக்காகவே அவனை அடைய சேவிக்கையே ஸ்வரூபம்)-அதாவது-சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -(இவர் கிடைத்தவுடன் செங்கண்மால் ஆனான் வெளுப்பு தவிர்ந்த மகிழ்ந்தான்)என்றும் -உன்னை சேவித்து(திருப்பாவை -29- தேவதாந்த்ரங்களைத் தவிர்ந்து கண்ணனாக எங்கள் குலத்தில் வந்து பிறந்த புண்ணியம் அன்றோ) என்றும் -சீதனையே தொழுவார்-(திருவிருத்தம் -79) என்றும்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மாற்றலால் -(பெரியாழ்வார் -5-1-2)என்றும் இருக்கை

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே35-

‘இப்படிப் பட்ட நம்மை விட்டு புறம்பே போக நினைப்பான் என் என்ன-உம்முடைய நீர்மை அறியாதே நினைத்தேன் இத்தனை –உன்னை விட்டு புறம்பே போகேன் -என்கிறார் –உன்னை இழந்தால் நானும் பிறரும் இறே உள்ளது –இரண்டிலும் அன்வயிக்கப் பார்த்திலேன்-அவை இரண்டும் இறே பிரணவத்திலும் மத்திய பதத்திலும் சொல்லுகிறது –சேஷத்வ வாசனையாலே புறம்பு போனாலும் சேவிக்கும் அத்தனை யாய்த்து இவர் –இவை எத்தனை குளிக்கு நிற்கும் என்ன –சிக்கென –இது எல்லா குளிக்கும் நிற்கும்-யாவதாத்மாபவி-சர்வேஸ்வரனைக் குறித்து -மாஸூச -என்கிறார் இவர்-செங்கண்மாலே
இது ஸ்வ பாவ கதனம் அன்று-தாத் காலின விசேஷணம்- இவர் சிக்கென -என்றவாறே
திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்-இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே – ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் –
வத்யதாம் -என்ற போது-பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-பின்பு திருவடி –அத ராம பிரசன்னாத்மா -என்று பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –திருவடி –
அவதாரத்தில் -மாஸூச -என்றான்இவர் –அர்ச்சாவதாரத்தில் -மாஸூச -என்கிறார் –என் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-29-

வந்து-பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து-மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து –நம் தெருவின் நடுவே வந்து –கதவின் புறமே வந்து –முற்றம் புகுந்து –நம் இல்லம் புகுந்து –நீ மலர் அணை மேல் வைகி –மாலை புகுர ப்ராப்தமாய் இருக்க -படுக்கையை விட்டுப் படி கடந்து-காவலும் கடந்து – உன் தோரண வாசலிலே வந்து –உட் கட்டிலிலே புகுந்து –பள்ளிக் கட்டில் கீழே –சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ –வந்து –இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே(நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச நேந ச -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே நாலு அடி இட்டுச் செல்ல இட்ட இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை-உன்னைச் சேவித்து – பலம் வேண்டாதே -சாதனா காலத்திலே ரசிக்கும் உன்னைச் சேவித்து –பலமுந்து சீர் என்று இறே இருப்பது –அதுக்கு மேலே ஓர் அஞ்சலியையும் உண்டறுக்க மாட்டாத-உன்னைச் சேவித்து – தொழுது எழும் அதுவும் மிகையான உன்னை சேவித்து – சேவ்யரான நாங்கள் சேவகராம்படி அத்தலை இத்தலை யாவதே –உன்னைச் சேவித்து-இது இறே நாங்கள் செய்த தப்பு என்கிறார்கள் –எங்கள் ஸ்வரூபத்தை அறியா விட்டால்-உன் ஸ்வரூபத்தை தான் உணர்ந்தோமோ –இத் தலையில் மித்ர பாவநையாய் இருக்கை –இவனை விடில் தான் உளனாகாத படி இருக்குமவன் இறே – வரவு தானே மிகையாய் இருக்கும் படி இருக்கிற யுன்னை –அதுக்கு மேலே-துராராதர் பக்கல் செய்வது எல்லாம் செய்தோம்-பஞ்சாக்கினி வித்யையில் சொல்லுகிற பரிவ்ருத்தியை கரை ஏறி –துஸ்ஸாதமாய் கை புகுந்தாலும் நிஸ்ஸாரமான விஷயங்களில் துவண்டு-அது தனக்கு உறுப்பாக இதர சேவையில் இழிந்து அவர்கள் முகத்தில் விழித்து – அவர்கள் முகத்தில் வெம்மை பொறுத்து-நீச பாஷணங்களைப் பண்ணித் திரிகை யாகிற ஸ்வ விருத்தியை அநாதி காலம் பண்ணிற்று-அத்தை தவிர்ந்து —
விஷயம் வகுத்ததாய்-ஸூசீலனாய் ஸ்வாராதனாய்- புலன் கொள் வடிவு படைத்தவனாய் (திருவாய் -8 ) தானே தன்னைத் தருவானாய்-தந்தால் பின்னை ஒரு காலமும் கை விடாதவனாய் இருந்தவனை-உசித தாஸ்யம் பண்ணுகை ப்ராப்தமாகச் சொல்லா நிற்க –எதிரே இட்ட நாலடிக்கும் பொறாதே உபசாரம் சொல்லுமவன் கருத்து அறிகையால்
பின்னே தொடர்ந்து சேவித்ததை குற்றமாகச் சொல்லுகிறார்கள்-வந்து உன்னைச் சேவித்து –உன்னை (ப்ராப்யமாக )வேண்டாதே சாதன காலத்திலே ரசிக்கிற உன்னைச் சேவித்து
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -அதுக்கு மேலே ஒரு அஞ்சலி உண்டு அறுக்க மாட்டாத உன்னைச் சேவித்து-உன்னைச் சேவித்து –அத்தலை இத்தலை யாயிற்று -ஸேவ்யரான நாங்கள் சேவகரான படி –லோக நாதம் புரா பூத்வா -ஸூக்ரீவம் நாதம் இச்சதி -தாமே இறே காலம் பார்த்து இருப்பார் –ஸ்ரீ விபீஷண ஆழ்வானை முடி சூட்டுக்கைக்காக லங்கைக்கு நடந்து காலம் பார்த்து இருந்தவன் அன்றோ –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –

சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத் திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று – –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-அந்நிய விமுகராய்க் கொண்டு
(வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே – அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்

சழக்கு நாக்கொடு புன்  கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி  ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –

விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால்– நின் கண் மற்று அல்லால்-மற்று-விழிக்கும் கண்ணிலேன்-உன்னுடைய கடாஷம் ஒழிய -வேறு நோக்குகைக்கு (ரஷிக்கைக்கு ) ஒரு மறு விழி உடையேன் அல்லேன் –உன்னை ஒழிய வேறு ஒரு ரஷகரை உடையேன் அல்லேன் –நம்மைப் போலே ரஷகருமாய் -போக்யருமாய் -இருப்பார் உண்டானால் –
பற்றக் குறை இல்லையே என்ன –வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது –குண க்ருத தாஸ்யம் அன்றிக்கே –ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் ஆகையாலே -புறம் போகாது

———————————-

4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
விஷயாந்தரத்துக்காகச் சேருமதும் -த்ரவ்ய ஆர்ஜனத்துக்காகச் சேருமதும் பரஹிம்சைக்காகச் சேருமதும் தவிர்ந்து ஸம்ஸாரத்திலே அருசி பிறக்கைக்கும் பகவத் விஷயத்திலே ருசி பிறக்கைக்கும் -ஸ்வரூபத்திலே தெளிவு பிறக்கைக்கும்  -ஆசார ப்ரவர்த்தனாகைக்கும் ஆவாரோடு சேருகை -அதாவது -பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன்-பெரிய திரு -7-4-4- -என்றும் உயவேன் உயர்ந்தவரோ டல்லால் -முதல் திரு -64–என்றும் சேருகை

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-

வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்-சர்வ உத்தமனான சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –உத்க்ருஷ்ட வஸ்து உத்க்ருஷ்டம் என்று இருப்பாரோடு அல்லது போத யந்த பரஸ்பரம் பண்ணேன் –இவர்கள் பேர் சொல்லும் போது உயர்ந்தவர் என்று சொல்லுவர்கள்
இவர்களை உயர்ந்தவர்கள் என்றது -அவர்களைக் கீழோர் என்றது இதுவே யாகாதே
ஏற்றத் தாழ்வுகளுக்கு பிரயோஜனம்-உயவேன் -என்றது-உசாவேன் -என்றபடி –

——————

5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –

பகவத் குண அனுபவத்தை -பிறரில் வ்யாவ்ருத்தமாக ஓன்று சொல்லுகிற போதுபோக்கைத் தவிர்ந்து -பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் -63- என்கிறபடியே போது போக்கை-அதாவது ஸ்வரூபம் என்றும் தாரகம் என்றும் போக்யம் என்றும் மறக்க மாட்டாமே சொல்லுகை -அதாவது தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே -திருவாய் -1-6-7-என்றும் கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்திருப்பேனே -நாச்சியார் -8-2- என்றும் தொல் சீரை ஓவாத வூணாக வுண் -பெரிய திரு -78-என்றும் ஏது செய்தால் மறக்கேன் -பெரிய திரு –9-3-3- என்றும் போருகை

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

நஷத்ர கணங்கள் உடைய சஞ்சாரத்தை விஸ்த்ருதமாகச் சொன்ன திரு வனந்த ஆழ்வானுக்கு ஆத்மாவாய் இருந்துள்ள உன்னை அனுசந்தித்தும்-போதாத் சங்கர்ஷண-அவன் மேல் கண் வளர்ந்து அருளுகிற உன்னை-ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும்
தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன்-தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –இது அன்றோ நான் சத்தை பெறும்படி தரிக்கைக்காக போது போக்கின படி-என்கிறார் -சத்ருக்களுக்குப் பயங்கரமான திருவனந்த ஆழ்வானைத் திரு மேனியாக யுடைய உன்னை அனுசந்தித்தும் எழுதியும் வாசித்தும் கேட்டும் வணங்கியும்
அதுவே யாத்ரையாய் இருந்தும் அர்ச்சித்தும் போது போக்கினேனாகவே தரித்து இருந்தேன்-லிகித்தும் வாசித்தும் ஸ்ரவணம் பண்ணியும் நிர்மமனாய் வணங்கி அது தானே யாத்ரையாய் ஆராதித்தும் காலம் போக்கினேன் –ஆகவே தரித்து இருந்தேன் -தரித்து இருந்தேன் ஆகைக்காக பூசித்துக் காலத்தைப் போக்கினேன் -ஏவகாரம் அவ்யயம் -எல்லா வற்றாலும் தரித்து இருந்தேன் என்றவாறு-சத்தை உண்டாகைக்காக இப்படிக்கு காலத்தைப் போக்கினேன்-முதல் ஆழ்வார்கள் அருளிச் செயல்களையும் உபதேச வசனங்களையும் கேட்டு வணங்கி மமகாராம் அற்று அதுவும் அவனது இன்னருளே என்று திருவடிகளிலே வணங்கி வழிபட்டும் பூசித்தும்-மநோ வாக் காயங்களால் ஆராதனம் செய்து-வழிபட்டும் பூசித்தும் -இரண்டு பத பிரயோகம் ஆராதனம் பொழுது போக்கு என்று காட்டவே சத்தைக்காவே இவற்றைப் போது போக்காகக் கொண்டேன்-காலை மாலை கமல மலரிட்டு நீர் -மாலை நண்ணித் தொழுது எழுமினோ -9-10-1-கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்-9-10-2- விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -9-10-3-–என்று
கால ஷேப அர்த்தமாகவும் – ஸ்வயம் போக்யமாகவும் – பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்த அருளிச் செயல்கள் இதே போல்

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி-ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் –ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இறே இருப்பது-இறைவனுடைய போக்யதை -இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு-இடையிலே யுள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள் கடல்’ என்கிறார்.
திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது-அன்றிக்கே-சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் –

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

இத் தசையில் குண ஜ்ஞானத்தாலே தரித்தல் – குண கீர்த்தனத்தாலே தரித்தல் செய்யலாம் என்று இருக்கிறாரோ-இத் தாபம் அத் தேசத்தை நினைக்கத் தீரும் காணும் – சகல தாபங்களையும் ஆற்ற வல்ல தேசமாய்த்து-என் –இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே-குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே -அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –-ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே-அளியத்த மேகங்காள் –நீங்கள் முன்னம் அவனைப் போலே யாகாது ஒழியப் பெற்றேன்-அவன் பொகட்டுப் போன சமயத்தில் முகம் காட்டுவதே –ஆவி காத்து இருப்பேனே—–பிராண நாதன் நானோ-தன்னை அனுபவிக்கும் அது ஒழிய பிராண ரஷணமும் எனக்குப் பணியோஆனைப் பண்ணைக் குதிரை சுமக்க வற்றோ – ஆனைக்கு உரிய அலங்காரங்கள் கட்டுக்கள் இவற்றை குதிரை சுமக்குமா ஒரு சர்வ சக்தி தொழிலை என்னாலே செய்யலாமோ –

துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை-ஸோபாதிக பந்துக்களுக்கும் நிருபாதிக பந்துக்களுக்கும் வாசி யறியும் நெஞ்சே-எம்பெருமானைப் பற்று என்று-சொல்லப் பாங்கான நெஞ்சு -விச்சேதம் இல்லாத போகமாக புஜி-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

நாட்டார் தம் தாம் உடைய அபிமதரைப் பிரிந்தால்-கூடின போது மறக்க மாட்டாராய்-
பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பர்கள் – இங்கன் அன்றிக்கே பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது – இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு-கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் – போந்து காணாய் -என்கிறாள் – இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது  – (நாட்டார் இயல்பு ஒழிந்து நாரணனை நண்ணுமவள் அன்றோ )மனமே –பேறு இழவுகள் இரண்டாலும் வரும்
வியசன உகப்பு உதயங்களுக்கு (அப் உதயங்களுக்கு )உன்னைக் கொண்டு இறே அனுபவிப்பது –தொழுதும் எழு-மறைக்கைக்கும் தொழ வேணும் போலே காணும் –
ஏதேனுமாக -அபிமத லாபம் தொழுகையால் அல்லது இல்லையாய் இருந்தது –

—————

6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு -அதாவது –

த்ரவ்யார்ஜனத்துக்கு ஏகாந்தம் என்றும் இவ்வருகுண்டான-கள்ளர் காட்டுமிருகம் இவற்றால் உண்டாகும் – பய நிவ்ருத்திக்கு உறுப்பு என்றும் – ஸ்வ ஜாதி விஸ்லேஷம் பொறாமையும் புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து-தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் –
தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் –
தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் விபரீதங்கள் புகுராத இடம் என்று இருக்கை –

தஞ்சை மா மணிக் கோயிலே தொழுது -பெரிய திருமொழி -1-1-என்றும் –அதனுள் கண்ணா என்றும்-திருவாய்மொழி -9-6-7-என்றும் –
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் –
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-என்றும் இருக்கை-

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–

இத்தால் சொல்லிற்று ஆயிற்று-மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –இது தான் உமக்கு வந்தபடி என் என்ன –
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி – நித்ய வசந்தமான சோலையையும் மா மதிளையும் உடைத்தான தஞ்சை மா மணிக் கோயிலே-வணங்கி வந்தது– எல்லா உறவு முறையும் தானே என்று தோற்றும் படி அவன் வந்து நிற்கிற
சௌலப்யத்தை அனுசந்திக்கையாலே வந்தது-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

காட்கரை ஏத்தும் –அவனிலும் அவன் இருந்த வூரை ஏத்தும் –அதனுள் கண்ணா என்னும்-பரத்வத்தில் காட்டில் அவ்வூரில் புகுந்த பின்பு யுண்டான ஏற்றம் –என் கண்ணன் -என்னா காட்கரை ஏத்தும் -அவ்வூரை ஏத்தா அவன் தன்னை ஏத்தும் -இரண்டுக்கும் புறம்பு போகிறதில்லை –

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால்  நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-

நான் வேறு சிலரை பந்துக்கள் என்று நினைத்து இருப்பது இல்லை -ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும் உடையேன் அல்லேன் – புறம்பு ஒருவரும் இல்லை யாகில்-நீர் உண்டே என்ன-நானும் எனக்கு கழுத்துக் கட்டி –நிராலம்பநாய் விழுமவனுக்கு
ஒரு தரையிலே விழ வேணுமே- சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )–இவன் நம்மை விட்டு புறம்பே போய் படக் கடவது எல்லாம் பட்டான் -என்று உன் திரு உள்ளத்திலே கொண்டு என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் -என்னால் அறுத்துக் கொள்ள ஒண்ணாத சம்பந்தம் உன் கை யதன்றோ – இவன் கீழ் விட்டுப் போந்த உறவு முறை எல்லாம் நாமே அன்றோ என்ற இத்தை திரு உள்ளத்திலே கொண்டு என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேண்டும் ––நீ வர்த்திக்கிற ஊரில் உள்ளார் விழுந்த ஏடு எடுத்து வாசித்தார் உண்டோ – அறிவுடையார்க்கு எல்லாம் பட வேண்டாவோ –ஆர்யேண-கருணம் -கார்யம் –என்னக் கடவது இறே என்று ஜீயர்( நஞ்சீயர் ) அருளிச் செய்த வார்த்தை –(பிராட்டி திருவடிக்குச் சொன்ன வார்த்தை )

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 –

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற-பரம பதத்திலே சம்சாரிகள் இழவிலே திரு உள்ளம் குடி போய் உள்ளுக் கொதித்து இருக்கும் –அவ்விருப்பு நித்யமானாலும் -இருந்தாலும் முள் மேல் இருப்பு -என்னக் கடவது இறே-ப்ரீதியோடே  பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு (2-5 )–என்று காட்டுத் தீயில் அகப்பட்டவன் தடாகத்தில் வந்து விழுமா போலே இறே வந்து விழுந்தது –
விடுகை -கொதிப்பு
என் ஆவி சேர் -அன்பு
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் -என்னக் கடவது இறே
பள்ளி கொள்ளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -என்னக் கடவது இறே-கோவிந்தன் குணம் பாடுவார்  உள்ள நாட்டினுள்
செங்கண் மால் -என்று வாத்சல்யம்
சேவகம் கொண்ட –என்று சௌசீல்யம்
கோவிந்தன் -என்று சௌலப்யம்
அவதாரம் பரத்வம் -என்னும் படி இறே அர்ச்சாவதார சௌலப்யம்-இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார்  உள்ள நாட்டினுள் அவர்கள் அளவல்ல-அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல-அவர்கள் இருந்த ஊர் அளவல்ல அவ்  வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே  – தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது-பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை-புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன் பொன் அடி வாழ்க (5-3 )-என்று இறே இவர்கள் இருப்பது –

——————-

7-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஸ்வீகரிக்கையும்
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஸ்வீகரிக்கையும்-
ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ஸ்வீகரிக்கையும் –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து –

க்ருஷி பண்ணுதல் –
முஷ்டி புகுதல் – –
சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் –
சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது -மெய் வருத்திக்  கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6-என்றும் -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3-என்றும் -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் -என்றும் –
வரு விருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2  -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீகரிக்கை-பரிகிரஹிக்கை

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத் தொழில் செய்து ஜீவிக்கப் பாருங்கோள் -என்பர் எம்பார் –அத்தால் ஜீவனம் பூர்ணம் ஆகாது -இவர் சம்சார யாத்திரையில் கண் வைக்குமவர் அல்லர்
இவர்கள் பிரயோஜனத்துக்காக இப்போது ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் குறை தீர்க்க வல்லார் இன்றிக்கே இருந்தது-நல்லது அறியும் நீங்கள் வாருங்கோள்; காட்டுத்தீயிலே அகப்பட்டாரை மடுவைக் காட்டி அழைப்பாரைப் போன்று ‘வாருங்கோள்’ என்கிறார்.
‘எங்களை நீர் அழைக்கின்றது என்? எங்கள் இல் வாழ்க்கை நடக்க வேண்டாவோ, பிறரைக் கவி பாடியாகிலும்?’ என்ன,-மெய்யே-உண்மையாக -சரீர -வாழ வேண்டினாலும் உங்கள் தரம் குலைய வாழ வேண்டுமோ? உங்கள் தரம் குலையாமல் வாழ ஒண்ணாதோ?-உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள். இதற்கு, ‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர்.-ஆற்றுப்பெருக்கின் தன்மையைப் போன்று நித்தியமான இந்த உலகத்தில் உங்கள் கவி கேட்டு இக்கவிக்குத் தரமாகத் தருகைக்கு வள்ளல்களாய் இருக்கும் ஸ்ரீமான்கள் இல்லை-‘செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்’ எனச் சொற்களை மாற்றிப் பொருள்-செல்வர் இல்லை இப்பொது நோக்கினோம் -/ செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் -இரண்டும் இல்லை-முன்பே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –இப்போது தான் உங்கள் அனர்த்தம் கண்டு நோக்கினேன்

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து 
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர் 
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே 
நச்சுமின்
நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 3-

நாடு பரப்புண்டே -அதிலே பிஷையை புகுந்து ஜீவித்தாகிலும் எனக்கு ஸ்வாமி யானவனுடைய திரு நாமத்தையே விருப்பத்தோடு சாத்தி அழையுங்கோள் -ஒரு பிராமணன் தன் பிள்ளையை பேர் இடுகிற சமயத்தில் -ஐஸ்வர்யம் தர வல்லான் ஒருவன் பேர் இட வேணும் -என்ன – வைஸ்ரவணன் பேரை இடு என்ற அளவிலே -ஐளி பிளி -என்று இட்டு அழைத்து ஜீவிப்பதில் -நாராயணன் -என்கிற திரு  நாமத்தைச் சாத்தி  பிஷை புக்கு ஜீவிக்க அமையும் என்றான் -என்று ( நாலூர் ) பிள்ளை அருளிச் செய்வர் என்று ( நாலூர் )ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்) என்று திரு வாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்வர் -இத்தால் பிஷையை புகுந்து ஆகிலும் என்னுடைய நாதனானவனுடைய  திரு நாமத்தையே நான் சொன்னபடியே உங்கள் பிள்ளைக்கு விரும்பி இடுங்கோள் -பிஷை புக வேண்டாதபடி த்ருஷ்டமும் (அத்ருஷ்டமும் )அவன் ப்ரசாதத்தாலே தன்னடையே சித்திக்கும்  என்று கருத்து -ஆகையால் அத்ருஷ்டத்தில் தானே குறை இல்லை என்கை –வர்ணாஸ்ரம தர்மம் வைதமானவோ பாதி இதுவும் வைதமாக இடுங்கோள்-வர்ணாஸ்ரம தர்மிகளுக்கு
ஜன்மாந்தர ஸித்தமான புண்ய பாப பலங்களை புஜிக்க விதித்தவோ பாதி உங்களுக்கும் அந் நேர் வரும்-அது போராதாகில் பிச்சை எடுத்தாவது எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
(பிராணன் பரித்யஜ்ய அரியை காக்க வேண்டும் பிராணனை விட்டாவது இல்லாமல் விட்டே காக்க வேண்டும் அதே போல் பிச்சை எடுத்து அவன் பெயரை வைக்க விதியாகவே கொள்ள வேண்டும் )

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –

வரும் விருந்தினரை ரஷித்து கொண்டு இருப்பார்-அதாவது-தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணுகை-இப்படி வைதிக கர்ம அனுஷ்டானத்தையும் – பகவத் சமாராதனத்தையும்
அநந்ய பிரயோஜனமாக செய்கையாகிற நன்மையை உடையராய்-இதுக்கு உடலாக வேத தாத்பர்யத்தை அறிந்து இருக்கும் அவர்கள் பெருமாளை அனுபவித்துக் கொண்டு வாழா நிற்கிற திருவரங்கம் என்பதுவே 

இப்படி ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே கரை ஏறினார்கள் உளர் ஆகில் -அவர்களுக்கும்
இந்த நிரதிசய புருஷார்த்தம் உபதேச கம்ய ஞானத்தாலே ஸித்தித்த பாகவதர்க்கும்
கைங்கர்ய பரராய் தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளி வந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணியும்=இவர்கள் அமுது செய்வதற்கு முன்னே வேறே சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்வரூப அனுரூபமாக அங்கே அமுது செய்யும் படி அருளிச் செய்ய வேணும் என்று பிரார்த்தித்தால் தங்கள் இழவு பாராதே பர ஸம்ருத்தியே பிரயோஜனம் என்று இருக்கையும்-இழவு தோன்றித்தாகில் தாங்களும் அவர்களோடே சென்று அங்கே அமுது செய்கையும் இங்குச் சமைந்த வற்றையும் அங்கு கொண்டு போய் அமுது செய்கையும்

——–

8-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது –
க்யாதியைப் பற்றவாதல் –
பூஜையைப் பற்றவாதல் –
என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து –

நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும்
நல்லதோர் சோறு – (திருப்பல்லாண்டு-8 )-என்றும் மாற்றிலி சோறு பெரியாழ்வார் -4-4-10 -என்றும் -உண்ணும் சோறு-திருவாய்மொழி -6-7-1-என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை

நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்ய மிஸ்ரமாய் பால் முடிவான சோறு -இன்னடிசில் –எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி –என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –நிச்சல்-பகவத் விஷயத்தில் வாசி அறிய அறிய உபகாரகரை கொண்டாடும் அத்தனை இ றே –மேவீரோ -ஸ் வீகரியீரோ -என் பேறாக ஸ் வீகரிக்க வேணும் என்கை –உபாய நாந்யுபாதயா மூளா நிச பலா நிச-என்று திருவடியை முதலிகள் கொண்டாடினால் போலே-“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்” என்று கொடுக்கைக்கு உடல் இல்லையே இவளுக்கு.-உடல் இவளது இல்லையே“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6. என்றது, அவன் ஸ்வதந்திரனாகையாலே கொடுத்தான்; இவள் பரதந்திரப்பட்டவள் ஆகையாலே நாயகனுக்கு ஒழியப் பிறர்க்குச் சரீரத்தைக் கொடுக்கப் போகாதே அன்றோ என்றபடி.-நெய்யோடே கூடின இனிய அடிசிலை நாள் தோறும் பாலோடே கூட நான் தர, அதனை உண்டு நீங்கள் என்னை உஜ்ஜீவிப்பிக்க வேணும்.
உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கக்கூடிய இவள், இவை உகப்பது தேடி இடுகிறாள் அன்றோ. இதனால், என் சொல்லியவாறோ? எனின், பகவத் விஷயத்தில் உபகார பரராயிருப்பார்க்கு, ‘உண்பதில் ஒரு கை பகுந்திட்டோமாகில் செய்யலாவது உண்டோ?’ என்று கைவாங்குமதன்று;
அவர்கள் விரும்பினவற்றையே தேடி இட வேணும் என்னும் விசேடப் பொருளைத் தெரிவித்தபடி.“எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனா யிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையேஅன்னமாக வுடைத்தா யிருக்கிறது”
“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம் யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30. என்னலாவது அவன் பக்கல்.-நிச்சல் –
சேர்ப்பது ஒருநாளே, இவர்களுக்குப் பின்பு அநுபவம் நித்தியமாயிருக்கிறபடி.
“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும் எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”
“நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்தினம்,– 2.என்னுமாறு போலே.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
கை யடைக் காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகை கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8

நல்லதோர் சோறும் –சோற்றுக்கு நன்மையாவது –இட்டவன் இட்டோம் என்று இருத்தல் -உண்டவன் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் -செய்யாத சோறு –
அதாவது-தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லை இறே
ஓர் சோறு –இப்பாவ சுத்தியே  அன்றிக்கே விலஷண ரசோபேதமாய் இருக்கை
அங்கன் இன்றிக்கே -சேஷ பூதன் சேஷிக்கு இடும் சோறு போலே இருக்கை-அதாகிறது –
அஹங்காரோபேதம் இன்றிக்கே பக்த்யு பர்ஹ்ர்த்யமாய் இருக்கை –
ஈஸ்வரனும் -பக்தாநாம் -என்கிற நினைவாலேயும் வத்சலனாயும் இறே இடுவது –
அநந்ய பிரயோஜன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்கனே இருக்கும் என்னில் –
விதுராந நானி புபுஜே ஸூசீநி குண வந்திச -என்னும்படி பாவந முமாய் -போக்யமுமாய்
இருக்கை –ஸூசீநி -என்றது சுத்தங்களாய் இருக்கை -சோற்றுக்கு சுத்தி யாவது-துர்யோதனன் தன் ஐஸ்வர்யத்தைப் பற்ற அபிமாநித்தான் –-பீஷ்மன் ஞாநாதிகன் என்று அபிமாநித்தான்-த்ரோணன் வர்ணத்தாலிகன் என்று அபிமாநித்தான்-இவை ஒன்றும் இன்றிக்கே –பக்த் வுப ஹ்ர்தமாய் இருக்கை

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-

ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் –தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -“பஹூநாம் ஜந்மநாம அந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:”-என்பது ஸ்ரீகீதை, 7 : 19
என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள்.
-என்று ஆயிற்று இவள் இருப்பது-சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ?
‘உண்ணுஞ் சோறு’ என்பது போன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில்,
வேட்ட பொழுதின் அவை யவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ;(ஆசைப்பட்ட சமயத்தில் அவை அவை பெற்றால் உகக்குமா போல் பூ சாத்தும் தோள் உடன் அணைவது உகக்குமே -)அப்படியே, இவை தாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே;அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொரு படியிருக்கும் அப்படியே யாயிற்று இவர்க்கு எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.-உண்ணும் சோறு’ என்ற நிகழ் காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும், இது மாறாதே உண்ணும் சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.கணை நாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்” –பெரிய திருவந். 78.-என்னக் கடவதன்றோ.
மாறாதே உண்ணலாவதும், மாளாததும் இதுவே அன்றோ;
“அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதம்”-திருவாய். 2. 5 : 4.- என்றும்,
“கொள்ள மாளா இன்ப வெள்ளம்” -திருவாய். 4. 7 : 2.-என்றும் அன்றோ இருப்பது.
இவற்றில் ஆகாதது ஒன்று இல்லை கண்டீர்,-இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’ என்கிறாள்.-இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.

——–

9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது –
இவ்வருகு உண்டான ரக்ஷக ஸ்வீகாரங்கள் அன்றியே (ரக்ஷகமும் ஸ்வீ காரமும் பரகதமாக இருக்க வேண்டுமே)ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான
புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் –
நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே
“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;
அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி
:”என்றது,-சரம ஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.-பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ – அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே, என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் 

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–28-

இறைவா –தன் கை கால் தப்புச் செய்தது என்று பொடிய -விரகு -உண்டோ – உடைமையை இழக்கை உடைவன் இழவு அன்றோ –பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே –ஐயர் தடுக்கின் கீழே இருந்து கேட்டு அறியாயே – நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு-நீ தருவோம் என்ற வன்று விலக்குகைக்கு உரியார் உண்டோ –உன் ஸ்வரூபத்தை உணராய் – எங்கள் தலையிலே கிடந்து நாங்கள் பிரதிபத்தி பண்ணாமையாலே அழித்துக் கொண்ட சேஷத்வம் போல் அன்றே உன் தலையிலே கிடக்கையாலே அழிக்க ஒண்ணாத சேஷித்வம் – அத்தை ஆராய்ந்து எங்களுடைய கார்யத்தைச் செய்யாய்-அத் தலையிலே குறை இன்றியிலே ஒழிய அமையும் இறே –அவனாலும் சேஷித்வத்தை அழிக்க முடியாதே-நாம் அநாதி காலம் யானே என்னை அறிகிலாதே-பண்டே பலகாலும் கழித்து அன்றோ உள்ளோம் -பேற்றுக்கு அத்வேஷம் இறே இத்தலைக்கு வேண்டுவது பேற்றின் கனத்துக்கு கீழ் விளைந்தது எல்லாம் அத்வேஷம் மாத்ரமாய் இருக்கும் இறே–-வானோர் இறையை நினைத்தன்று –(வள ஏழ் உலகு இறை வானோர் இறை ) ஆய்க் குலமாய் வந்து தோன்றின நம் இறை-நீ தாராய் பறை – விலக்காமை பார்த்து இருக்கும் நீ எங்கள் அபேஷிதம் செய்யாய் –கோவிந்தா –இறைவா –ஒழிக்க ஒழியாது –பறை தாராய்-உன்னைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை –எங்களைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை-நீ-நான் ரஷிக்கைக்கு நீங்கள் பண்ணின சாதன அனுஷ்டானம் என் என்று கேட்டால் தேவர் எல்லையில் வர்த்திக்கிறதுக்கு குறை சொல்லப் போமோ என்கிறார்கள் – அறிவுடையார் -அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு- விஷய வாச மாத்திரமே அன்றிக்கே குடல் துடக்கு உண்டானால் ரக்ஷிக்கச் சொல்ல வேணுமோ-சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ இங்கு வந்து பண்ணி அருளிற்று –நீ தாராய்-அவள் தருவது தந்தாள் – நீ தரும் அத்தைத் தாராய் – உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது – மேல் உள்ளது உன் பணி அன்றோ-அஸ்துதே என்று அவள் அது செய்தால் – அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ (கோவிந்தா)ஸூலபனான நீ தாராய் –(இறைவா) ஸ்வாமி யான நீ தாராய் –சர்வ உபாய சாதாரணமான ருசியை உபாயத்தில் செலவு எழுதாதே-சைதன்ய கார்யமான ஸ்வீகாரத்தையும் உபாயத்தில் செலவிடாதே-எங்களால் சாத்தியம் இன்றிக்கே
சித்த ஸ்வரூபனான உன்னையே பார்த்து கார்யம் செய்து அருள வேணும் –நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்- ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து அனுதாபமுமம் அத் தலையிலே யாக வேணும்-ஏகம்-என்றபடியே செய்து அருளாய் -என்கை -உபாயம் தன்னைப் பொறுக்கும்-உபாயாந்தரம் இருவரையும் பொறுக்கும்
இது ஒன்றையும் பொறுக்காதே

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே

யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.
மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,
‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை
’ என்று சொல்லுவாருமுளர்.

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.-அவற்றுள், முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே அருளிச் செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று தொடங்கி.
அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று தொடங்கி.

இரண்டாவது பொருள்.
“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது,
உன்னாலே பெறும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே, ‘பெறுவது உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு – காலபுருஷதானம் வாங்கி.
அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி.
‘கடல் கடத்த’ என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’ என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி.
அப்படிச் செய்தால், அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.

மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,
உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது,
பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது,
பிராப்பியம் ஒரு பரம சேதனம்’ என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’ என்கையாலே,-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

சென்னியோங்கு தண்  திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும்  உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – 

நின் அருளே –இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது அவன் அடியாக வரில் –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –புரிந்து-எத்தனையும் வான் மறந்த காலத்தும் (பெருமாள் திருமொழி )-இத்யாதி-இருந்தேன் –உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து – விரோதி நிவ்ருத்தியும் பிறந்து – அபேஷிதமும் பெற்றதாகில்  – இனி பதறுகிறது என் -இனி என் திருக் குறிப்பே –என் கொல் அம்மான் திரு அருள்கள்(10-7)திருக் குறிப்பு -திரு உள்ளத்தில் நினைவு-நின்னருளே புரிந்து இருந்தேன்-உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து நிர்பரனாய் இருந்தேன்-இனி என் திருக் குறிப்பே-ஞான லாபத்தையும் பண்ணித் தந்து-விரோதி நிவ்ருத்த பூர்வமாக அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில் இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –

—————–

10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது –
புத்ர பஸ்வன்னாதி பதார்த்தத்தையும்
ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் –
கைவல்ய புருஷார்த்தத்தையும் –
பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

என் மனஸ் ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ –என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-மா கம் -பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என்னுடைய மனம் ஆனது–எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது –இரவில் ஒரு காரியமும்-பகலில் ஒரு காரியமுமே அன்றோ உலகத்தார்க்கு இருப்பது- இவர்க்கு-எல்லா காலங்களிலும்-இதுவே ஆயிற்று –ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17-நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று
இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்
இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார்-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இ றே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே-வினையேன்– கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –நீங்கள் காட்டுகைக்கு விரைய ஆறி யிருக்கக்கூடிய நான்,-இன்று ‘காண்பது எஞ்ஞான்று கொலோ’ என்னும்படியான பாவத்தைப் பண்ணினேன் -(கண்கள்)குழந்தைகள் செய்தபடி செய்ய, நான் முன்னம் என் பசி தீர்த்துக் கொள்வது என்றோ.-உலகநடைக்கு ஒத்ததல்லாத பாவத்தைச் செய்தேன் என்பாள், தன்னை-வினையேன்’ என்கிறாள். என்றது,
காணாமைக்குப் பாவம் பண்ணினாரும் கூடக் காணும்படியான விஷயத்தை,
காண்கைக்கு யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன்
என்றபடி.-காமரு சீர் அவுணன் –கொண்டாடி -காணப் பெற்றானே -வாமனன் கோலத்தையும் விஸ்வரூப திரிவிக்ரமன் -கண்டு-அதற்கு மேலே திருவடியையும் சென்னியிலே ஏறப் பெற்றானே-மாண் குறள் கோலப்பிரானே யன்றோ

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் 

அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.
எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,
‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-

ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி ‘ராஜந்’ என்ன, அப்போது ஸ்வாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று விலலாப ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ?-இதனால், பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் ஸ்வாதந்திரியம் அநர்த்தம் என்று தோற்றும்.
மேலும், ஏபிஸ்ச ஸசிவைஸ் ஸார்த்தம் – சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார் இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான்.-‘இவன் தம்பி’ என்று ஸ்வாதந்தரியம் மேற்கொண்டு, கண்ணழிக்கலாவது எனக்கு அன்றோ?இவர்கள் சொன்னவற்றைச் செய்ய வேண்டுமே! இவர்கள் தாங்களே காரியத்தை விசாரித்து அறுதியிட்டு,‘நீர் இப்படிச் செய்யும்’ என்று இவர்கள் ஏவினால் அப்படிச் செய்ய வேண்டி வருமன்றோ அவர்க்கு?அவருடைய வ்யதிரேகத்திலே – பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில்,தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில், ‘நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்க மாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல் கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே.போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ?‘மயா-என்னாமல்’ – அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ?‘ப்ராது: – பின் பிறந்தவன்’ – பஸ்மதாஸ் குருதான் சிகீ ‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி,‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? அசேஷ ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது?‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதி யில்லாதவனாயிருந்தேனோ? ஆன பின்னர், நான் விரும்பிய காரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’வழுவிலா அடிமை செய்யவேண்டும் –ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது-இவருக்கு-

செய்ய –’இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?
(‘தொழுது எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.)
இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பர்யந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.-ஷூத்ர விஷய -‘சிற்றின்பம் நுகரவேணும்’ என்று புக்கால், இரண்டு தலைக்கும் ஒத்த ரசமான போகத்திற்கு ஒரு தலையிலே பொருளை நியமித்து, போகத்திற்குரிய காலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவார்கள்; இனி, ‘ஸூவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால்,
ஸ்வர்க்கே அபி பாத பீதஸ் யக்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருத்தி -‘ஸூவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்;
இனி, ஸூவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள்;
இப்படிச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவாய் அகங்கார மமகாரங்கள் அடியாக வரும் இவ்வனுபவங்கள் போலன்றி, சொரூபத்தோடு சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும் நித்தியனாய், காலமும் நித்தியமாய், தேசமும் நித்தியமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷமாய், சிற்றின்ப விஷய அனுபவம் போன்று துக்கம் மிஸ்ரமாய் -கலந்ததாயிருத்தல் அன்றி, நிரதிசய ஸூக ரூபமாய் இருப்பதொன்றன்றோ இது?

நாம் – தம் திருவுள்ளத்தையும் கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்;
அன்றி, கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல்.
அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:
இருந்த விடத்திலேயிருந்து மநோ ரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்?
அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை
?

—————————————————————-————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .