ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த நாலு வார்த்தைகள் –
1-அஞ்ஞான சமயத்திலும் –
2-ஜ்ஞான சமயத்திலும் –
3-ஜ்ஞானம் பக்வமான சமயத்திலும் –
4-ஜ்ஞான பலமான பகவத் ப்ராப்தி சமயத்திலும் –
1-மாதா பிதாக்களோடு -2-ரூப நாமங்களோடு -3-போஜநாதிகளோடு -4-பிரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு -5-விதி நிஷேதங்களோடு -6-தேச வாசங்களோடு -7-பந்து வர்க்கத்தோடு -8-ஐஸ்வர்யாதிகளோடு -9 –பிரார்த்தனைகளோடு -வாசியற பேதித்து இருக்கும் -(இந்த ஓன்பதையும் மேல் உள்ள நான்கு தசைகளிலும் வைத்து ப்ரமாணங்களைக் காட்டி அருளுகிறார்)
முதலடியான அஞ்ஞான சமயத்தில்
விவேகம் சஞ்சரியாமையாலும்
சரீரமேவ மாதா பிதரௌ ஜநயத -(ஆபஸ்தம்ப தர்ம-1-1-1-18–மாதா பிதாக்கள் சரீரத்தையே உண்டாக்குகிறார்கள் -ஆச்சார்யனைப் போலே ஆத்மாவுக்கு ஒரு புதுப்பிறவியை உண்டாக்குவதில்லை)என்கிறபடியே கேவல சரீரத்தை பெற்றவர்களையே
மாதா பிதாக்களாக அபிமானித்து – அவர்கள் இட்ட பேரும் -அவர்கள் நியமித்த
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -அவர்களை அநுவர்த்தித்து அத்தாலே வந்தேறியான ரூப
நாமங்களும் – அவர்கள் விரும்பின பந்து வர்க்கங்களும் –
அவர்கள் வம்ஸ அபிமாநமும் ஐஸ்வர்யமும் –
அவர்கள் கற்பித்த சம்சார வர்த்தகமுமாய் இருப்பன சில ப்ரார்தனைகளுமாய்
சம்சாரத்தில் என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாப்யதிக தரித்ரனாக(ஓத்தாரும் மிக்காரும் இல்லாதவனாக) அபிமாநித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும் -1-
ஜ்ஞானம் பிறந்த சமயத்தில் –
ஐஞ்சு சேர் ஆக்கையான கேவல சரீரம் அன்று -பெரிய திருமொழி -9-7-8-
ப்ராக்ருத ஏக பரனாய் -பஞ்ச விம்சகனாய்(25) -ஸ்வ ஸ்மை ஸ்வயம் ப்ரகாசனாய் –
ஏக ரூபனாய் -ஜ்ஞாநாநந்த ஏக ஸ்வரூபனாய் -அச்சேத்யனாய் -அதாஹ்யனாய் –
அக்லேத்யனாய் -அசோஷ்யனாய் -நித்யனாய் -ஜனன மரணாதிகள் இன்றிக்கே
இருப்பான் ஒரு ஆத்மா உண்டு -வேத சாஸ்த்ரங்கள் உண்டு -புண்ய பாபங்கள் உண்டு –
வர்ண ஆஸ்ரமங்கள் உண்டு –கீழ் நின்ற நிலைகள் பாப விகாரத்தாலே பிரமித்த இத்தனை -என்று உணர்ந்து
நெகிழ்ந்து ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயிதி (ஆபஸ்தம்ப தர்ம-1-1-1-16–ஆச்சார்யனே யன்றோ சிஷ்யனை ப்ரஹ்ம வித்யையின் மூலம் புதிய ஞானப் பிறவியை எடுக்க வைக்கிறான் –)என்கிறபடியே – வேத சாஸ்த்ரத்தை மாதாவாகவும் -சாஸ்திர பிரதானம் பண்ணினவனையே பிதாவாகவும் அபிமானித்து -அந்த சாஸ்திரம் விதித்த படியே போஜநாதிகளும் – ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -விதி நிஷேதங்களும் -வேத சாஸ்திரம் போமவர்களையும் பந்துக்களாகவும் -அந்த சாஸ்திர அபிமானத்தால் வந்தேறின ரூப நாமங்களும் – சாஸ்திர அப்யாசம் பண்ணலான தேசமாய் -சாஸ்த்ரத்தை ஐஸ்வர்யமாகவும்
ப்ரார்தனைகளாகவும் அபிமானித்து -ஆத்ம அபிமானங்களில்(அஞ்ஞான தசையில் தேஹாத்ம பரமம் -ஞானம் பிறந்து பக்வமாகாத போது ஸ்வ ஸ்வா தந்த்ர ப்ரமம்) என்னை விஞ்சினார் இல்லை-தன்னை சமாயதிக தரித்ரனாக அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும் —2-
மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-8-மேகங்கள் சஞ்சரியா நின்றுள்ள ஆகாசம்-தேஜோ பதார்த்தம்-ஜல தத்வம் பூமி காற்று இவையாய்க் கொண்டு
பஞ்சீ க்ருதமாய் நின்ற –உபசயாத்மகமான சரீரத்தை இது (பரிணாமாய் இருக்குமே -பலவும் சேர்ந்தால் அநித்யமாகவே இருக்குமே ) நமக்கு ரஷகம் அன்று என்று புத்தி பண்ணி –பலவாய்க் கூடி ஒன்றானது தன்னடையே பிரிந்து போம் என்று பார்த்து உஜ்ஜீவிக்கப் பார்த்தாய் ஆகில் –
ஜ்ஞானம் பக்வமான சமயத்தில் –
சகல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மாவினுடைய ஸ்வா தந்த்ரம்
விநாசம் என்றும் -ஈஸ்வர ஸ்வா தந்த்ரம் இவனைக் கரை ஏற்றும் என்னும் இடமும் –
பதிம் விஸ்வஸ்ய (தைத் -உலகு அனைத்துக்கும் பதியான இருப்பவன்)-
ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தே ஸ்வ ஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச ஸதா ஸ்மர-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -நீ உஜ்ஜீவிக்க வேணும் என்று எண்ணினாயாகில் -உன்னுடைய சத்யையில் உனக்கு விருப்பம் இருந்ததாகில் ஆத்மாவின் உடைமையாய் இருக்கும் தன்மையையும் எம்பெருமான் உடையவனாய் இருக்கும் தன்மையையும் -இவ்விரு தன்மைகளும் இயல்பானவையே தான் என்பதையும் எப்போதும் நினைப்பாயாக -) -இத்யாதி பிரமாணங்களாலும்
ஆலோட்ய சர்வ சாஸ்ராணி விசார்ய ச புந புந இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயா நாராயணஸ் ஸதா –(பார ஆனு -178-11-எல்லா சாஸ்திரங்களிலும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்த போதிலும் நாராயணன் ஒருவனே த்யானிக்கத்தக்கவன் என்பது அசைக்க முடியாத படி தேறும்) -என்று பிரமாணங்கள் சொல்லுகையாலும்
கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து
தத்வ த்ரய ஜ்ஞானத்தையும் -தத்வ த்வய வைராக்ய விஷயத்தையும் –
தத் ஏக விஷய பக்தியையும் உடையவனாய் –
தத்வ ஹிதங்களை அறியும் போது -கைப்பறி பறித்தும் (தன் ஷேமத்துக்காக தான் முயலுவதும்)-கிடந்த ஆனை கண்டு ஏறியும் (படுத்திருக்கும் யானை மேல் பாகனின் துணை இல்லாமல் தானே ஏறுவது போல் உலகமேத்தும் தென் ஆனை வடவானை மேல் ஆச்சார்யர் ஸஹாயமில்லாமல் பற்ற முயலுதல்)அல்லாமையாலே லோகத்திலே –
அர்த்த காமோபஹதன் அன்றியிலே வேத சாஸ்திர நிதான ஜ்ஞானனாய்
லோக பரிக்ரஹம உடையனாய் இருந்துள்ள ஆசார்யன் ஸ்ரீ பாதத்திலே சென்று
கண்ணும் கண்ண நீருமாய் -கீழ் தேகாத்ம அபிமாநியுமாயும் -கேவல ஆத்ம அபிமாநியுமாயும் தான் பட்ட அநர்த்தம் எல்லாம் நேராக விண்ணப்பம் செய்ய –
ஆசார்யனும் தன் நிரவதிக கிருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து –
இரண்டு பங்குக்கு ஒரு கையோலை போலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்துக்கும்
ஆத்ம பாரதந்த்ர்யத்துக்கும் வாசகமாய் -இவ்வாத்மாவுக்கும் எம்பெருமானுக்கும் உண்டான
ஒழிக்க ஒழியாத சம்பந்தத்துக்கு –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் ஓன்று உண்டு என்று
பெரிய திருமந்த்ரத்தை ஆசார்யன் தன் இரக்கத்தாலே அருளிச் செய்து –
ஸ்வரூபத்தில் உணர்ச்சியோடு(நவவித சம்பந்தமும் சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபமும் யதாத்ம்யமாக அறிந்து) -ஸ்வ ரஷணத்தில் அசக்தியோடு -ஈஸ்வரனைப்
பேணிக் கொண்டு -வர்த்தி என்று அருளிச் செய்து அருளினால் -தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –சூரணை -113-பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம் என்னும் இடம் தோற்ற –இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –அதாவது –பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள ஸூத்ரம் போல் அன்றிக்கே –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –எட்டு திரு அஷரமாய்- மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –திரு மந்த்ரத்தை மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அதிலே த்வயமாகிற அச்சுத தாலியையும் முளைத் தாலியையும் வயிர மணி ஸ்தானத்தில் 32- எழுத்துத்தான சரம ஸ்லோகத்தையும் சேர்த்து ஆத்மாக்களுக்கு அநந்யார்ஹத்வ ப்ரகாசகமாகக் கட்டினான்)
பெற்றார் பெற்று ஒழிந்தார் -பெரியதிருமொழி -8-9-7- என்றும்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ-பெரிய திருவந்தாதி -5-என்றும் –
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் –
பெரிய திருமொழி -1-9-1- என்று சொல்லுகிறபடியே
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-பித்ராதிகள் ராகாந்தராய் பிரஜைகளை உத்பாதித்து யௌவன விரோதி என்று பொகட்டுப் போக நிற்பர்கள் ஆயிற்று – பின்னையும் இவனுக்கு ஒரு உறவு முறை ஒழிய செல்லாது இறே –
பண்ணிப் போந்த வாசனையாலே அவ்வளவில் அவர்கள் வழியாலே நின்று முகம் கொடுக்குமாயிற்று –தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –ஸகல வித பந்துவாய் -பழகியதை சொல்லி பிதா நாராயணா-த்வம் மாதா – சேலேய் கண்ணியரும் -மாதா தேவோ பவ –இவற்றைச் சொல்லி-பண்டைய நாளாலே-9-2- -எல்லா உறவும் -அடுத்து -9-3-சகல வித கைங்கர்ய பிராத்தனை போல்-எத்தால் யான் மறக்கேன் இனி- தென் குறுங்குடி நின்ற அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர் ஆதி யம் சோதியை எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –2-1-10- போல் இங்கு இவர்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–பிரஜை யுண்டாக்குகைக்கு நோன்பு நோற்று வயிற்றிலே தரித்தால் ப்ரஜைக்குப் பாங்காக போஜன சய நாதிகளை நியமித்து-பிறந்தால் அ ஸூசி பிரஸ்ர வாதிகளைத் தொட்டு அளைந்து வளர்த்து இதினுடைய ஹிதங்களையே சிந்திக்கும் தாயாவாயும் நீயே-(புருஷோத்தம ப்ரவசம் -நம் சம்ப்ரதாயம் )ஒரு பாத்ரத்திலே இட்டு வைக்குமவை போலே தரிக்கும் அளவே இறே இவளது உத்பாதகன் பிதாவே இறே
ஹிதமே சிந்தித்து இருக்கும் பிதாவும் எனக்கு நீயே-ஸரீரம் ஏவ மாதா பிதரவ் ஜனயத (ஆபஸ்தம்ப ஸூத்ரம் )-என்று இருவரும் கூட சரீரத்துக்கு உத்பாதகர் அத்தனை இறே
ஆத்மாவுக்கு நன்மை பார்க்கும் ஆசார்யனாயும் நீயே-(மாதா நாராயண பிதா நாராயண
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பாவ-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே-அன்னையாய் அத்தனாய் –ஆச்சார்ய பரம்-உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப்பிறவி-அன்னை குடி நீர் அருந்தி –ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி )
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-நான் வேறு சிலரை பந்துக்கள் என்று
நினைத்து இருப்பது இல்லை –ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும்
உடையேன் அல்லேன் –புறம்பு ஒருவரும் இல்லை யாகில் நீர் உண்டே என்ன நானும் எனக்கு கழுத்துக் கட்டி –(கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )நிராலம்பநாய் விழுமவனுக்கு ஒரு தரையிலே விழ வேணுமே-
சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )இவன் நம்மை விட்டு
புறம்பே போய் படக் கடவது எல்லாம் பட்டான் -என்று உன் திரு உள்ளத்திலே கொண்டு
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –என் குறை அறுத்து வைத்தேன்-
நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-என்கிறார் –
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே-1-9-1-தேவரே சர்வ வித பந்துவுமாய் இருக்க-சோபாதிக பந்துகளாய் –-இத் தலையில் பிரயோஜனம் உள்ள நாள் கொண்டு இவனுக்கு உதவ வேண்டும் என்று தங்களைக் கொண்டு அகல வேறு அபகாரத்தையே பண்ணுமவர்களையே பந்துக்கள் என்று நினைத்து அனர்த்தப் பட்டேன் -இவன் பக்கல் உபகாரம் கொள்ளலாம் என்று கொண்டு – இவனுக்கு உதவ வேண்டும் அன்று –அபகாரத்தை பண்ணித் தங்களைக் கொண்டு அகல நினைக்குமவர்களை பந்துக்கள் என்று நினைத்தால் அவர்கள் பந்துக் க்ருத்யம் பண்ணக் காணாமையாலே-க்லேசம் இறே சித்திப்பது-இவன் பந்துக்கள் என்று நினைத்து இருக்கும் அத்தனை இறே
அவர்கள் பக்கல் அது இல்லையே வேறு ஒரு வ்ருத்தாதிகளால் வேண்டாதே
அவர்கள் தாங்களே க்லேசத்துக்கு உடலாய் இறே இருப்பது –பட்டு ஒழிந்தேன் –பட்டேன் -என்றபடி யாகவுமாம்-அன்றிக்கே-நோய் பட்டு ஒழிந்தேன் –-அவர்களை விட்டேன் என்னவுமாம் –
திருமந்த்ரத்தை மாதாவாகவும்
ஆசார்யனையே பிதாவாகவும் அபிமானித்து
ஆசார்யன் திரு உள்ளமான ரூப நாமங்களும் -போஜநாதிகளும் ( பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள்–மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்கிறபடியே அருளிச் செயல்களையே ஸாத்விக ஆகாரம்-உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர்
அறி தர நின்ற,இராமானுச னெனக் காரமுதே.-19- )-
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -விதி நிஷேதங்களும் –
ஆசார்யன் விரும்பி வர்த்திக்கும் தேசமே த்வய தேசமாகவும் –
ஆசார்யன் திரு உள்ளத்தாலே சஹ வாஸ யோக்யராக கற்ப்பித்த
பரம சத்வ நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களே பந்துக்களாகவும்
அவர்கள் தங்களுக்கு ஐஸ்வர்யமாக அபிமாநித்து இருக்கும் ஆசார்ய கைங்கர்யமே
தனக்கு ஐஸ்வர்யமாகவும் -தத் கைங்கர்யத்தின் மேல் உண்டான பிரார்த்தனையே
தனக்கு தேக யாத்ரையாகவும் நினைத்து –
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -நின்னிலங்கு பாதமன்றி
மற்றோர் பற்றிலேன் -திருச்சந்த விருத்தம் -90- என்றும்
கற்றிலேன் கலைகள் –நல் துணையாகப் பற்றினேன் அடியேன் -பெரிய திருமொழி -1-1-8- என்றும்-
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புணைய மாட்டேன் —
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே -திருமாலை -26-என்றும் –
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து -திருவாய் மொழி -10-6-2- என்றும் –
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது -பெரியாழ்வார் திருமொழி -5-1-5-என்றும் சொல்லுகிறபடி தன் வேறுபாடு தோன்ற இந்நிலத்தில் பொருந்தாமையும்
பொருந்தும் நிலத்தில் புகப் பொறாமையும் வடிவிலே தோன்றும்படி நிர்மலனாய் மோஷ பிரதனான எம்பெருமானைக் கிட்டி வாழும் அளவும் ஜ்ஞானப் பிரதனான ஆசார்யன் நிழலிலே ஒதுங்கி அவர் ப்ரீதிக்கு வர்த்தகனாய் இருந்த இடம் அறியாமல் (உப்புப்போலே உம்மைப்போலே இருக்க வேண்டுமே)இருக்கும் —3-
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –90-தம்முடைய
ஆகிஞ்சன்யத்தை அருளிச் செய்கிறார் –வேறு முதல் இன்றிக்கே அகதிகளான எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விலங்கா நின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-புனித –விஷயாந்தர ப்ராவண்யத்தால் அசுத்தராய் -தாம்தாம் பக்கல் சுத்தி ஹேது இன்றிக்கே இருக்கும்-குறைவாளரையும் ஸ்வ ஸ்பர்சத்தாலே சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன் அல்லையோ-அதாவது –
உத்கர்ஷ்ட ஜன்மம் என்ன – வேத ஸ்பர்சம் என்ன-வேதார்த்த அனுஷ்டானம் என்ன –
இவற்றினுடைய ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹம் நின்று-விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து தருகை
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் —8-ஓர் ஆச்சார்யனைப் பின் சென்று -அவன் உச்சரிக்க அநு உச்சாரணம் பண்ணி போராமையாலே சாஸ்த்ரீய ஜ்ஞானம் உண்டாயிற்று இல்லை-மனத்தை பர விஷயமாக்கி -விஷயங்களிலே ப்ரவணம் ஆகிற பாஹ்ய இந்திரியங்களை காதாசித்கதமாய் ஆகிலும் விஷயங்களில் நின்றும் மாற்றி -ப்ரத்யக் விஷயம் ஆக்கினால் நல் வழி போகுகைக்கு உறுப்பாம் இறே –
ஸ்தோத்ராதி இந்திரியங்கள் விஷயங்களிலே இழிந்து தான் நினைத்த வழியிலே கொடு போய் –மனசையும் அதுக்கு உறுப்பாக்கி போந்தேன்-விஷய ப்ரவணர் ஆனவர்கள் விஷய ப்ராவண்யம் போராது என்று ஔஷத சேவை பண்ணி இருப்பார்கள் இறே-அப்படியே விஷயங்களிலே மனசை வலிய மூட்டிப் போந்தேன்-சாஸ்த்ரீய ஜ்ஞானமும் இன்றிக்கே –
விஷய ப்ரவணனாய்ப் போருகையாலே -அறிவு கேடனாய் ஹித சிந்தை பண்ணப் பெற்றிலேன்-எனக்கு ஒரு நன்மை சம்பாதியாமையே அன்றிக்கே – பர ஹிம்சையைப் பண்ணும் விரகே சிந்தித்துப் போந்தேன் எல்லாரையும் ஹிம்சித்து நான் ஜீவிக்கும் விரகே பார்த்துப் போந்தேன் –ஒருவனுக்கு பகவத் சம்பந்தம் உண்டு இல்லை என்று தனக்கே அறியலாம் -என்று பலகாலும் அருளிச் செய்வர் ஸ்ரீ ஜீயர்-ஒருவன் நோவுபட கண்டால் -ஐயோ -என்று இரக்கம் பிறந்து இருக்கில் நமக்கு பகவத் சம்பந்தம் உண்டு என்று அறியலாம்-அத்தனையும் வேண்டும் -என்று இருந்தான் ஆகில் நமக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்கலாம்-ஹேது அறிந்திலேன்–தவிர்ந்து கொடு நிற்கக் கண்டேன்-
உய்வதோர் பொருள் -என்றும்-ஆழியான் அருள் என்றும் –-சிக்கெனத் திருவருள் பெற்றேன் -என்றும் கீழ் சொன்னார் இறே-செல்லக் கடவ கதி உண்டு -ஸ்ரீ பரமபதம் -அங்கே புக்கு உஜ்ஜீவிக்கும்படியை அனுசந்தித்து-(திருவேங்கட யாத்திரை -அக்ரூரர் -அர்ச்சிராதி கதி மூன்றையும் பாரித்து இருக்க வேண்டுமே )அம்மியைக் கட்டிக் கொண்டு ஆற்றிலே இழிவாரைப் போலே அன்றிக்கே-பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தநாம்ருதம் -என்னுமத்தைப் பற்றினேன் –அக்கரை படுத்தி விடுமத்தைப் பற்றினேன்-
(நாரத்தைப் பற்றாமல் அயனத்தைப் பற்றி இருப்பதே நல் துணை)நாராயணா என்னும் நாமம் – அக்கரைப் படுத்தும் வஸ்துவுக்கு வாசகமான திரு நாமம் – நயாமி பரமாம் கதிம் –என்னக் கடவது இறே –
போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே -26–ஏதும் இல்லேன் –அது தன்னாலே ஏதிலேன் – மநோ வாக் காயங்கள் ஒரு படி பட்டு இருப்பார் பெறும் பேற்றுக்கு
இவற்றில் ஒன்றாகிலும் வேண்டி இருக்க – அதுவும் எனக்கு இன்றிக்கே இருக்கையாலே-அரங்கற்கு-ஏதிலேன் —ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம்-என்கிற சௌஹார்தத்தையும் –ருஜூ -என்கிற படியே-ஆஸ்ரித விஷயத்தில் மநோ வாக் காயங்கள் மூன்றும் செவ்விதாய் இருக்க
ஆர்ஜவ குணத்தையும் கேட்டே போகாமே-அனுஷ்டான சேஷம் ஆக்குகைக்காக கோயிலிலே சந்நிஹிதரான தேவரீருக்கு –ஒன்றுமாகப் பெற்றிலேன் –ஒரு கரணத்தாலும் தேவரீரை ஸ்பர்சிக்கப் பெற்றிலேன் –என்னே –-அசந்நிஹிதராய் இழந்தேன் அல்லேன் – பிராப்தி இல்லையால் இழந்தேன் அல்லேன் செய்த அம்சத்திலே பிழை பிடிக்குமவராய் இழந்தேன் அல்லேன் –என் இழவுக்கு அடி பாபம் இறே –ஸ்ரீ கௌஸ்துபம் போலே உகப்பான வஸ்து கிடீர் இப்படி வ்யர்த்தமாய்ப் போய்த்தது – அரங்கத்து உறையும் இன் துணைவருக்கு கிடீர் நான் தூரஸ்தன் ஆய்த்து –கஷாய பாநம் பண்ணுமா போலே ஹித புத்தியாலே சேவிக்க வேண்டும் விஷயமாய்த் தான் இழந்தேனோ – பாலே மருந்து ஆனால் போலே தர்ச நீயரான தேவரீரே மோஷ ப்ரதராய் இருக்க வன்றோ இழந்தது –
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அறப் பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1–கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணின படி கண்டாயே -உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ ––நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் —விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –
படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ-
நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் -நெஞ்சு சப்ததோஸ்மி – திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ ––
தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பு வகுத்து கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –நிரதிசய போக்யமான உன் திருவடிகளிலே இவற்றில் ஒன்றும் குறையாமல் திரள –என் நெஞ்சாலே வளைத்துக் கொண்டு இருந்தேன்-உன்னை ஒழிய புறம்பே
தாரக போஷக போக்யங்களாய் இருப்பரோட்டை சஹவாசம் எனக்கு துஸ்ஸஹம்-சர்வ லோகங்களும் பிரளயத்தில் அகப்பட -ஊன்றி இடந்து எடுத்து– தானத்தே வைத்தானால் -என்கிறபடியே ஸ்வ ஸ்தானத்திலே வைத்தான் என்கை-இது தான் ஸ்வபாவம் ஆனவன் என்கை –குவலயாபீடத்தை நிரஸ்ததாம்படி கொம்பை ஒசித்தவனே –இத்தால் பலித்தது –
சம்சாரிகள் பக்கல் நின்றும் எடுத்து – ஸ்வ ஸ்தானமான உன் திருவடிகளில் வைத்து –
அதுக்கு விரோதியான கர்மங்களையும் கழித்துத் தர வேணும் -என்கிறார்-
ஜ்ஞான பலமான பகவத் ப்ராப்தி சமயத்தில் – தான் கீழ் நின்ற (மூன்று)நிலைகளையும் அடையநெகிழ்ந்து -ஆசார்யன் கட்டின ஸ்வரூப அநுபந்தியான மங்கள ஸூத்ரத்தில்
அர்த்த அனுசந்தானத்துடன் வர்த்தியா நிற்கச் செய்தேயும் –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் -விபரீத ஜ்ஞான ஜநநியான சரீர சம்பந்தத்தை ருசி வாசனைகளோடே விட்டு (மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்)-ஆற்றிலே குளித்துக் கரை ஏறி புக்ககத்தில் உற்றார் அலங்கரிக்கப் போய்(மதிமுக மடந்தையர் இத்யாதி -சதம் மாலா ஹஸ்தா இத்யாதி) -வகுத்த தேசத்திலே முகம் பழகிய திரளிலே சென்று புகுந்து (ஆத்மாவுக்கு பழகின திரள் இதுவே -வந்தேறியான சரீரத்துக்கு பழகின திரள் கீழ் எல்லாமே)-தனக்கென்ன ஒரு ரூப நாமங்கள் ஆதல் –போஜன சயநாதிகள் ஆதல் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஆதல் -விதி நிஷேதங்கள் ஆதல்-தேச வாஸம் ஆதல் -பந்துக்கள் ஆதல் -ஐஸ்வர்யம் ஆதல் -பிரார்த்தனைகள் ஆதல் –அன்றிக்கே –
அஹம் அன்னம் (நான் எம்பெருமானுக்கு போக்யப் பொருள்)என்னுதல் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி நிற்றல் –சதா பஸ்யந்தி -என்று வைத்த கண் வாங்காதே பார்த்து இருத்தல் – சாயாவா சத்வம் அநுகச்சேத் -(தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வஸ்தோ வா மாதரம் சாயாவா சத்வம் அநுகச்சேத் ததா ப்ரகாரம் யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -இளம் கன்றை யுடைய பசு தனது கன்றையும் கன்று தனது தாய் பசுவையும் நிழல் அசையும் பொருளைப் பின் தொடர்வது போலே பரம் பொருளைப் பின் தொடர்கிறான் முக்தாத்மா –)என்கிறபடியே சாயாவத் பர தந்த்ரனாய் வர்த்தித்து
செய்தல் எப்போதோ என்று த்வரை நடந்து செல்லுகை-
இவ் வர்த்தம் ஒரு ஆசார்யன் அங்கீகரித்த முமுஷுவுக்கு நாள் தோறும் ஆராய வேண்டுவது ஓன்று –எங்கனே என்னில் –
1-ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்திர சம்பந்தத்தாலே கைப் பிடித்தால் –
பூர்வ அவஸ்தையின் நிலைகள் அடைய நெகிழ்ந்து பர்த்தாவினுடைய
அபிமானத்திலே ஒதுங்கினாப் போலேயும் -2-அனுபநீதனாவன் ஒரு மந்திர சம்பந்தத்தாலே
சிகை யஜ்ஜோபவீதங்களைத் தரித்தால் த்விஜன் என்று பேர் ஆகிறாப் போலேயும் -3-யஞ்ஞத்தில் ஒருவன் தீஷித்தால் பூர்வ அவஸ்தையின் நிலைகள் அடைய நெகிழ்ந்து
அவப்ருத ஸ்நானத்தளவும் யஜமான வேஷத்துக்கு தக்க அனுஷ்டானம் ஆகிறாப் போலேயும்-4-சந்நியாசி கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து ஆஸ்ரமத்துக்கு உசிதமான வர்த்தனத்தோடே வர்திக்கிறாப் போலேயும் –இந்த ஜீவன் முக்தனான முமுஷுவும் (ஜீவன் முக்தி நம் சம்பிரதாயத்தில் கிடையாது -வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ஸ்வாமிகள் பன்னி பன்னி ஸாதித்த அர்த்தம் –முமுஷு இங்கு இருக்கும் நாள்களில் முக்தனாகும் த்வரை யுடன் வாழ்வதையே இங்கு காட்டும் -) கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து பகவத் கைங்கர்யம் ஒன்றிலுமே நிரதனாய் வர்திக்கிறது எப்போதோ என்று தன் நெஞ்சத்தை உருக்கி தன் வேறு பாடு தோன்ற வர்த்திக்கையே முமுஷு க்ருத்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் –
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply