இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/7
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய் – நாலாயி:597/3
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே – நாலாயி:603/4
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2
——————
கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்–இனித் தான் எழுந்திராய் – எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ எழுந்திராய் –எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால் உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ – எங்கள் ஆற்றாமையை அறிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே-எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி -மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.-இனி எழுந்திராய்-பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை – புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில் அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் -பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய ப்ரஸித்தமாய்த்து-எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்–
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது – பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –இனி என்றும் பொய்கைக்கு வாரோம் –இவர்கள் வாரோம் இனி -என்றவாறே — தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –
கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-அவனோ வந்திலன் –
அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து-வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து-இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்-அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்-அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –
நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே--10-7-என்னுடையான தனத்தைக் கொண்டான் என்னுதல்-என்னுடைமையும் தனத்தையும் கொண்டான் என்னுதல்
என்னை சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான் என்னுதல்-உங்களுக்கு இனி ஓன்று போதுமே –
அவன் அல்லாத உங்களுக்கு என் முன்னே ஆடி நாளிகை போருமோ –இனி –அவன் குடக் கூத்தாடுவதற்கு முன்னே ஆடினி கோளாகில் அன்றோ பிரயோஜனம் உள்ளது – சைதன்யம் நடையாடினால் பின் ஆடக் கடவதோ-பெண்ணின் வருத்தம் அறியாத -அவனில் காட்டிலும் உங்களுக்கு ஒரு வாசி வேண்டாவோ பிறர் நலிந்தாரையும் நலியக் கடவி கோளோ –
நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-நாணி நான் என்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்குகிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –நாணுகை யாவது லஜ்ஜிக்கை இறே-லஜ்ஜித்து மீள வேண்டுவது –இன்னமும் சில நாள் இருந்து அவ்வஸ்துவை லபிக்க வேணும் என்று இருப்பார்க்கே – லஜ்ஜை போகையாவது முடிகை இறே –இனி -முடியும் அளவானாலும் ஜீவித்து இருப்பார் செய்யுமது செய்யப் போமோ –சத்தை கிடக்கில் இறே லஜ்ஜை நோக்குவது-சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ-தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது
தரமி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோ-
இனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-ஓர் குற்றேவல்
முலை எழுந்தவளுடைய குற்றேவல் இறே –தம்தாமுக்கு அடைத்த கரணங்களைக் கொண்டு பண்ணும் கைங்கர்யம் இறே தானே குற்றேவல் –இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என் காத்ரைஸ் சோகாபி கர்சிதை –சம்ஸ் ப்ருசேயம் -என்னுமா போலே
இவ் வுடம்போடே அணைய ஆசைப் பட்டு பெறாதே-இனி அவ்வருகே போய்-ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி பெரும் பேறாகிறது-பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸ் ஸூ பண்ணுவாரோ பாதி -என்று இருக்கிறாள் பரம பதனை அனுபவிப்பது இது போலே என்று இருக்கிறாள் –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply