Archive for the ‘அருளிச் செயலில் அமுத விருந்து –’ Category

ஸ்ரீ வார்த்தா மாலை -ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள்

December 11, 2025

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என் -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பாரைக் கேட்க –
சகல வேத சாஸ்த்ரங்களாலே அறுதி இட்ட அர்த்தத்தை  பத்து வார்த்தையாலே
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் –

இப்பத்து வார்த்தைகள் உடைய வரலாறு சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்)

(ராம மிஸ்ரர் உய்யக் கொண்டார் புண்டரீகாக்ஷர் மணக்கால் நம்பி -அருவி -ஆளவந்தார் பெருக்காரு -பஞ்ச ஆச்சார்யர் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரி யாகிய எம்பெருமானார் -74ஸிம்ஹாஸனாதிபதிகள் -வம்சம் மூலமும் நம்மிடம் சேரும்)

இனி
எத்தினால் இடர்க் கடல் கிடக்கிறாய் -திருச்சந்த விருத்தம் -115-
அதன்றியே
பிரகிருதி அந்தத்தில் எம்பெருமான் திருவடிகளைப் பெறலாம் என்கிறது

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –-ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –

—————

முதல் வார்த்தை (பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -என்பதற்குப் பிரமாணங்கள்)
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் -திருவாய்மொழி -8-5-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய்மொழி -4-7-10 என்றும் –
பிரபன்னஸ் சாதகோ யத்வத்
(ப்ரபன்னன் சாதகப் பறவை போலே எம்பெருமானுடைய கருணை நீர் ஒன்றையே எதிர்பார்த்து இருப்பான்)-என்றும் இருக்கை-

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர்-காரார் திருமேனி காணும் அளவும் -சீரார் திருவேங்கடம் -எங்கும் போவார் – –எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –அநந்த கிலேச பாஜநம் ஆகையால் விபரீத லக்ஷணை யாதல் -விஷய அனுபவத்தால் களித்து வர்த்திக்கிற தேசம் என்னுதல் -தம்மைப் போலே கூப்பிடக் காணாமையாலே அவனை பெற்று இருக்கிறார்கள் என்னும் நினைவாதல் –இது பிள்ளான் நிர்வாஹம் -விபரீதமாக -குத்தலாக -கூப்பிடாமல் உண்டியே உடையே உகந்து போகிறார்களே -கூப்பிட வில்லை என்றால் அடைந்தார்கள் அன்றோ ––அலமந்தால் -தடுமாறினால் –இரங்கி-உனக்கு அபேக்ஷை இல்லா விட்டால் பர அநர்த்தத்துக்கு இரங்க வேண்டாவோ -ரிஷிகளுக்கு உள்ள ஆன்ரு சம்சயமும் இல்லையோ –யொருநாள் -பல நாள் வேணும் என்கிறேனோ –-நீ -கண்டு கொண்டு நிற்க வேண்டும் வை லக்ஷண்யத்தை யுடைய நீ-யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜ னார்த்தியாய் அழைக்கிறேனோ –-கரு நாயிறுதிக்கும்-கறுத்து இருக்கிற ஆதித்யன் உதிக்கிற-கருமா மாணிக்கம்-நாள் நன்மலைபோல்-அவ்வாதித்யனுடைய உதய கிரி இருக்கிற படி –நீலமாய் பெரு விலையனான ரத்ன பர்வதம் போலே – நாள் மலை -நாள் பூ -என்னுமா போலே தர்ச நீயமான மலை-சுடர்ச் சோதி முடி-மிக்க புகரை யுடைய மயிர் முடி -கறு நாயிறு உதிக்கும் -என்கிற த்ருஷ்டாந்த பலத்தால் –முடி என்று மயிர் முடி யாகிறது –
சேர் சென்னி -அதுக்கு ஆஸ்ரயமான திருமேனி நீல ரத்ன பர்வதம் போலே யாயிற்று இருப்பது –யம்மானே–ஸர்வேஸ்வரனே -நித்ய துக்கியாய் பேர்ந்த சம்சாரி முக்தனாய் சென்றால் தாப ஹரமாக அவனுக்கு செய்வது திருக் குழலை பேணும் அத்தனை –கிம் த்வயா நார்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -என்பது பிரமாணம்- –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இறே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது –கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-வந்து தோற்றும் படி – –கூரரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் என்று சொல்லக் கருதி முடியச் சொல்ல மாட்டாமையாலே -விடாய்த்தார் ஹஸ்த முத்திரையால் தண்ணீர் வேண்டுமா போலே அஞ்சலியாலே குறையும் தலைக் கட்டா நின்றாள் -இன்னார் என்று அறியேன் -என்று அறிவு அழிப்பனவும் இவை –செரு ஒண் சக்கரம் சங்கு என்று அறியப் பண்ணும் அவையும் இவை –சங்கு சக்கரம் என்று இயல் ஆனாலோ என்று பிள்ளை திரு நறையூர் அரையர் -பஹு வசனத்துக்கு பொருள் கண்டிலோமீ என்ன –இசையில் தூக்கின இடத்து இரண்டும் இசைந்து கிடைக்கையாலே சொல்லிப் போருகிற படியே சங்கு சக்கரங்கள் என்ன அமையும் -என்று ஆப்பான் நிர்ணயித்தார்–இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் -தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் -ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே-இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இறே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-ஜல சர தத்துவங்களும் கூட ஹர்ஷத்தாலே களிக்கும் படியான கோயிலிலே உள்ளவனே -செங்கயல் -இளமையாலே சிவந்த புகரை யுடைய கயல்-இவள் திறந்து –அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-வருகைக்கு சம்பாவனை உண்டான திகைப்பு பார்த்தே நின்று-அலந்தேன்;-வெறுத்தேன் -பரம ஆபதாமபன்ன-என்னும் அளவு இறே-பாவியேன் காண்கின்றிலேன்; ஆபத் சகனாய் இருக்க மஹா பாபியாகையாலே நான் காணப் பெறுகிறிலேன்-காணப் பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம் படி நெஞ்சில் பிரகாசியாது ஒழியத் தான் பெற்றேனோ –பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை-எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது
மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

——————————

இரண்டாம் வார்த்தை –(பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையாகிற மஹா விஸ்வாஸத்துக்கு பிரமாணங்கள்)
அப் பேறும் அவனாலே பெற வேண்டும் என்று இருக்கை -அதாவது –
உன்னால் அல்லால் யவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3- என்றும் –
யானே நீ என் உடைமையும் நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
எனதாருயிர் அவன் கையதே -திருவாய்மொழி -9-5-3- என்றும் –
இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால் -திருவிருத்தம் -62 என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திருவிருத்தம் -27-என்றும்
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும் -இருக்கை-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்  இனிப் போய் ஒருவன்
தனக்கு  பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்

புனத்  தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர்  புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )
3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )-4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)-இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை-தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்-இந்நாலு தசையும் பிறந்த பின்பு –
இவற்றை பொகட்டு புறம்பே போய் –இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்-பிரம்மா முதலாக பிபீலிக அந்தமாக அதி ஷூத்ரர் இறே –அவர்களிலே ஒருத்தனுக்கு கடைத்தலை நிற்கை –உன் கடைத்தலை இருந்து வாழும் -என்கிற செயலை
அங்கே செய்கை உனக்கு அவத்யம் இறே-உனக்கு தேஜோ ஹானி இறே -எனக்கு இது புதுமை அன்று –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-நானும் உனக்கு பிரகாரமே –அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்-மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி-ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே–என் உடைமையும் உனக்கு பிரகாரமே–யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே நானே மனு நானே சூர்யன் -சர்வம் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -பிரகார -பிரகாரி பாவ நிபந்தன சாமாநாதி கரண்யம்-என்னிடத்தில் இருந்து தான் எல்லாம் தோற்றிற்று -பிரகலாதன் –ப்ரஹ்ம பிரகாரா அஹம் அஸ்மி -என்று தானே சம்பந்தம் இருக்கும் படி-வாஸூ தேவனே -ஏகம் சதா ஏகம் -அந்யத் அஸ்தி வேறு பட்டது இல்லை லோகம் எல்லாம் அவர் -சரீர சரீரி ஆத்மா பாவ சாமாநாதி கரண்யம்-அனைத்தும் அவனது சொத்து –-வானில் உள்ளார் முறை அறிந்து ஏத்த-நீ -சேஷியான உத்கர்ஷத்தோடே இருக்குமவன் அல்லையோ–மாஞ்சா க்ரோசந்தி போலே -எம் என்று தமக்கும் அவர்களோடே பிராப்தி உண்டாய் இருக்கிற படி-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-என்னுடைய பிராணன் அவன் கையதே –நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் -மிதுனமானால்-உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ- உங்களுக்கு இது அவ்யுத் பன்னமோ –அஸ்யா தேவ்யா-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே – ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது – ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-தத் தஸ்ய சத்ரு சம்பவேத் –என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது -இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே –27-இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை-அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய் இருக்கும்-எங்கனே என்னில் —ஜகத்தை உண்டாக்குகையும் ,-சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து
பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும் இத்தை கால் கடை கொண்டு ,
தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது-மாமேகம் -என்று
தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி-இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி-இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்–தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-அவன் கிருபை அல்லது இல்லை —
அவ் வருள் அல்லன அருளும் அல்ல —-இடையீடான பக்தியாதிகளும் வேண்டா-

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள்

————————————-

மூன்றாம் வார்த்தை –
இப்பேறு பெற்று வாழ நினைத்து இருப்பார் தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிவர் –
அதாவது –
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி -68 என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4- என்றும் –
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -திருவாய்மொழி -6-9-1-என்றும் –
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -5-2-என்றும் இருக்கை –
தன் பர்த்தாவுடன் தான் வாழ வில்லை யாகிலும் பிறர் முகம் பாராதவளை இறே பதி வ்ரதை எனபது –

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68–பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் – தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது – பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –பர்தரந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி
யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் – வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே –ச்சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இறே-சர்வம் பரவசம் துக்கம் -என்று விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று இட்டு தாழ்ச்சி என்கிறார்-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்!
ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இறே –ஜகதாகாரத்தையைக் காட்டின இத்தால் அதிருப்தனாய் நிர்பந்திக்கும் படி பாபத்தைப் பண்ணின என் பக்கலிலே -செய்தபடி கண்டு இருக்கக் கடவதாய் இருக்க அத்யபி நிவேசத்தை பண்ணுகை இறே பாபம்-அசாதாரண விக்ரஹத்தைக் காட்ட வேணும் -திவ்யாயுதங்களோடே காட்ட வேணும் -நீயே வந்து காட்ட வேணும் -என்கிறார்

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்-பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

———————

நான்காம் வரத்தை –
தேவதாந்தர பஜனம் பண்ணுமரோட்டை சஹ வாஸம் வருந்தியும் கை விடுவான் –
அதாவது
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -பெரிய திருமொழி -2-6-1- என்றும்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -பெரிய திருமொழி -11-6-7- என்றும் –
சடைத்தேவர் தம் துவக்கைப் பாரது ஒழிவதே (
சடைமுடியை யுடைய சிவன் ஷூத்ர புருஷார்த்தங்களைக் கொடுப்பதனால் ஏற்படும் ஆகர்ஷணத்தை அலட்சியப் படுத்துவதே)-என்றும் –
பரம் தாமத்தை பற்றுவதே -என்றும் –
சத்தான சாந்துக்கு சுண்ணாம்பு விரோதி யாம் போலேயும்
ஸ்தா லீஸம் சர்கத்தாலே ஜலத்துக்கு உஷ்ணம் ப்ரேவேசிக்குமா போலேயும்
(பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுடுமா போல் தேவதாந்த்ர சம்பந்திகள் சம் சர்க்கத்தாலே நாமும் இழப்போம் அன்றோ)
ப்ராக்ருத அன்னம் த்யஜேத் -என்றும்
தஸ்ய பிரகிருதி லஷணம் -என்றும் –
த்விஷத அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷேச ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ உத்யோக பர்வம் -91-27-த்வேஷியின் அன்னம் உண்ணத் தகாதது -த்வேஷிக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -எனக்கு பாண்டவர்கள் உயிர் அன்றோ -கண்ணன் துரியோதனைப் பார்த்துக் அருளிச் செய்த வார்த்தை -)-என்று
சர்வ சக்தி தானே அநாதரிக்கையாலே சர்வதா நமக்கும் அநாதரணீயம்

நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-
மருவினிய தேசமாய் -ஸ்ரமஹதை விஞ்சி இருப்பதாய் –சிறு திவலை திரு மேனியிலே வந்து ஸ்பர்சிக்கும் படியாய் இருக்கிற திருக் கடல் மல்லையிலே-ஆஸ்ரிதனை உகந்து ஸ்தல சயனத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை-நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து-இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –இது என்ன நீர்மை  இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –இது செய்யாதே இருப்பாரை –அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –இறைப் பொழுதும் எண்ணோமே– எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் )அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே-வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .(அவஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே –11-6-7-பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அ வைஷ்ணவர்களை நினையாத போது -இனிது என்கை- –

——————–

ஐஞ்சாம் வார்த்தை –
உகந்தருளின திவ்ய தேசங்களிலே வர்த்திப்பான் –
அதாவது –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் திருமொழி -11-5- என்றும் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -52- என்றும் –
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -நாச்சியார் திருமொழி -8-9- என்றும் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும்
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பொய்யே யாகிலும் உகந்தருளின திவ்ய தேசங்களிலே புக்குப் புறப்பட்டீர் ஆகில்
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார் –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-அநந்ய பிரயோஜனர் வர்த்திக்கும் தேசம்-மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ்-திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் -4-8-2-என்னக் கடவது இறே-அத்தேசம் வாஸம் தானே வாழ்ச்சி –வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் –8-9-என்னக் கடவது இறே –நளிர் அரங்கம்நளிர் -குளிர்த்தி -ஸ்ரமஹரமாய் -தாப த்ரயங்களும் தட்டாத தேசம்-நாகணையான்-அனந்த சாயி-என்னை ஒழியவும் படுக்கை பொருந்துவதே –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் -புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று-பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்-பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சுற்றி வாழும் –சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள் என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே ––தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே-அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-மா முகில்காள்-ஒரு விபூதியாக அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே- அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே –நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி
இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே-பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் – புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்
இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்பாம்பணையான் வார்த்தை என்னே- படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–என்னாயனுடைய மலை மேல்
என்னாயனுடைய ஸ்லாக்யமான ஸ்ரீ திருமலையிலே-ஏதேனும் ஆவேனே – ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும்-அது என் என்னில் –சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை-அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –நாம் அறிய வேண்டா
திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா
ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும்
-என்றார் –

————

ஆறாம் வார்த்தை –
அநுகூல்ய சங்கல்பனாய் இருக்கை –
அதாவது –
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணமறி -திருவாய்மொழி -2-7-10- என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா -என்றும் –
சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி -ஸ்தோத்ர ரத்னம் -என்றும் –
இச்சா மாத்ரமே அமையும் என்று இருக்கை-(
பரம புருஷார்த்தத்தை எம்பெருமானிடமிருந்தே பெற வேணும் என்கிற இச்சா மாத்திரமே பேற்றுக்கு வேண்டியது)

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-தெருளுதியாகில்-அறிவுடைய யாகில் -ஞான இந்திரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உண்டாகில் நெஞ்சே வணங்கு –-உபகாரகனான அவன் திருவடிகளில் விழப் பார்-இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாக புத்தி பண்ணு அறிந்து-அவன் விட அடான் என்று அறிந்து-உனக்கு ஒரு போதாக அயோக்யதா அனுசந்தானத்தாலே அகல நினைப்பதொரு அறிவு கேடு உண்டு -அவ்வளவிலும் விடாதே கிடாய்-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே-முன்பு உபகரித்து நின்ற படி கண்டாயே
இவ்விஷயத்தை விட்டால் எத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்க –

————————

ஏழாம் வார்த்தை –
ப்ராதி கூல்யத்தை வருந்தியும் கை விடுவான் –
அதாவது –
பகவத் அபசார பாகவத அபசார அசஹ்ய அபசார ரூப நாநாவித அநந்த
அபசாரத்துக்கும் அடியாய் -த்யாஜ்யமான அர்த்த காமங்கள் நிமித்தமாக
பகவத் பாகவத விஷயங்களிலே சிவிட்கு என்று இருக்குமாகில்
அத்தை வருந்தியும் கை விடுவான்

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

——————–

எட்டாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கை –
அதாவது –
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே -திருமாலை -14- என்றும்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் –
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-என்றும் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே -பெரியாழ்வார் திருமொழி -5-1-6- என்றும் –
தரித்து இருந்தேன் ஆகவே தாரா கணப்போர் -விரித்துரைத்த வெநநாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினான்  போது –நான்முகன் திருவந்தாதி -63-என்றும் –
நகரமருள் புரிந்து நான்முகற்க்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி யுரு வெண்ணும்
அந்தியால் ஆம் பயன் எங்கென் -முதல்திருவந்தாதி -33- என்றும் இருக்கை –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே-14-அவன் தங்களுக்காக வந்து கண் வளரா நிற்க – அவன் இருந்த தேசத்தை வாயாலே சொல்லவும் கூட மாட்டாத மூர்க்கர் –விழுக்காடு அறியாதவர்கள்-அதாகிறது-நரக வாசம் கர்ப்ப வாசம் -முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க கேவலம் தேக போஷண பரராய் இருக்குமவர்கள் –திருவரங்கம் என்ன மாட்டாத மூர்க்கராய் இருப்பார் ஜீவிக்கிறது வழி அல்லா வழியே அபஹரித்து ஜீவிக்கிறார்கள் இத்தனை – அத்தை விலக்கி நாய்க்கு இடும்கோள்-தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை
அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-இது தான் –“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.-தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிறஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.-நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறன் உண்கிற சோற்றைப்பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ-அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று-அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;-இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.
——————-

ஒன்பதாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கும் சத்துக்களோடு சஹ வாஸம் பண்ணுவான் –
அதாவது
வாழாட் பட்டு  நின்றீர் உள்ளீரேல் -திருப்பல்லாண்டு -3 என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய்மொழி -5-2-2- என்றும்
எல்லாரும் போந்தாரோ -திருப்பாவை -15-என்றும் –
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -பெருமாள் திருமொழி -1-10- என்றும் –
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -திருவாய்மொழி -8-10-7- என்றும் –
அவன் அடியார் -திருவாய்மொழி -8-10-3- என்றும் –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8- என்றும்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –நான்முகன் திருவந்தாதி -18-என்றும் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10- என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –
-(தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் -உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இறே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க-சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –பட்டு -என்பது- உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்- வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது-நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்தேட்டமாய் இறே இருப்பது –-இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு கலந்து கொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2—கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர,
பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.-காணப் பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார்.

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-15-உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன-போந்தார்
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன-ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –போந்து எண்ணிக் கோள் –புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்-மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம்-தனித் தனியே பார்க்கையும் அனுபவிக்கையும் 

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே
?—1-10-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே-நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு-அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து-என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
உபகரிக்கும் இடத்தில் அத்விதீயாரான பரதேவதை யுடைய ஸூ குமாரமான திருவடிகளின் கீழே புகுகை தவிர்ந்து -தான் இல்லாத வன்று ஹிதம் பார்த்த உபகாரகனாய் -போக்ய பூதனானவனுடைய திருவடிகளை பற்றுகை இறே பிராப்தம் -அது எனக்கு வேண்டா -வேண்டுவது தான் எது என்னில்-அவன் அடியார்-அவனுடைய குணங்களிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய-நனி மாக் கலவி இன்பமே-மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே– –நனி -மிகுதி – மா -வேண்டற்பாடு-நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் –நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
-8-10-3-ஸ்ரீ வாமனனுடைய மிக்க நல்ல பரிமளத்தை யுடைய நாட் பூ போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகை உறுமோ எனக்கு -பகவத் விஷயத்தில் வெளிறு கழிந்த அம்சமான இதுவாயிற்று -பாகவத புருஷார்த்தத்தை குறித்து இவருக்கு கழிப்பனாகிறது-அன்றி -அத்தை தவிர்ந்து –அவன் அடியார்-ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே –பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்னக் கடவது இறே –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.-நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு, சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா-மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே, ‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை   இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்    அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“-வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பல்லாண்டு -என்று- ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்–வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம்
சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல்
-என்று- பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார்–தவம் –ஸூஹ்ருதம்–பெரியாழ்வார் -ஆண்டாள்-நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்-ராமானுஜர் -வடுக நம்பி-உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது-

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத
ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் )அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

——————

பத்தாம் வார்த்தை
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருப்பன் –
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வானைப் போலவும்
(எம்பெருமானரைப் பிரிந்து திருமலையில் புஷ்ப கைங்கர்யம் -அனந்தாண் பிள்ளை -அன்றோ))-எம்பாரைப் போலவும் (எம்பெருமானார் திரு உள்ளபடியே பட்டருக்கு ரக்ஷையாக த்வயம் உச்சாரணம் –வந்தே கோவிந்த தாதவ் -அல்ப அக்ஷரம் பூர்வகமாக இல்லாமல் அப்யஹிதம் பிரபாவம் அதிகமாக உள்ள ஆச்சார்யர் முன்னாக -ஞானப்பிதா -அன்றோ)
ஆசார்யன் அநாதரம் அநர்த்த கரம் என்று தன்னைத் தாழ விட்டு அடிமை செய்த
எச்சானைப் போலவும் இருக்கை
(பருத்திக் கொல்லை அம்மாளை அலட்ஷியம் செய்தது கண்டு எம்பெருமானார் தம்மை அநாதரித்து விட யஞ்ஞேசர் ஆகிற எச்சான் தம்மை தாழ விட்டு அடிமை செய்த வ்ருத்தாந்தம்)

இப்பத்து வார்த்தையும் அருளிச் செய்த ஆசார்யன் விஷயத்திலே க்ருத்ஜ்ஞனாய் இருப்பான்
இப்பத்து வார்த்தையும் ஓருரு நெஞ்சிகே பட அனுசந்திப்பான்
இப்பத்து வார்த்தையில் ஓன்று குறைந்தால் தன் ஆநுகூல்யம் அரை வயிறாம் என்று இருப்பான்
இப்படி அறுதி இட்டு இருப்பாருக்கு –
வைகுண்ட மாநகர் மற்றது கையதுவே -திருவாய்மொழி -4-10-11

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-
சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்-நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்
பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்-மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்-

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவடிகள்-திருமேனி -திருவதரம் -திருக்கண்கள்-திரு நாமம் திருமுடி -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய் -5-சர்வ ரஷகமுமாய் இருப்பதை விளக்கும் ஸ்ரீ அருளிச் செயல்கள்

December 4, 2025

வார்த்தை -438-
திருவடிகள் -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய்(விரஹ தாபத்தால் பாதகமாகுமே) -5-சர்வ ரஷகமுமாய்
இருக்கும் -எங்கனே என்னில் –

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய்மொழி -1-1-1- என்கையாலே
சேஷித்வம் சொல்லிற்று

ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி -5-7-10-என்கையாலே
உபாயத்வம் சொல்லிற்று

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று

அழித்தாய் வுன் திருவடியால் -திருவாய்மொழி -6-2-9- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் -திருவாய்மொழி -5-3-3- என்கையாலே சர்வ
ரஷகத்வம் சொல்லிற்று -(தனக்கும் தனது திருவடியையே ரக்ஷகத்வம் -ஆகவே ஸர்வ ஸப்த பிரயோகம்)

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயரறு-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி-சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்-இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது –அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-பிராப்தமுமாய் போக்யமுமான திருவடிகள் –சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர்பவிஷ்யதி -என்னும் என் சென்னிக்கு போக்யமுமாம் –தாரகாதிகளுக்கும் உப லக்ஷணம்-குரை -பரப்பு -போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுதல் -ஆபரண த்வனியை சொல்லுதல்–ஒன்றும் வாராயாகிலும்,-
குசஸ்த்தலே நிலசதி சச ப்ராத ரிஹைஷ்யதி-என்று புறப்பட்டான் அங்கே -இங்கே விட்டான் என்று வருகைக்கு பிரசங்கம் ஒன்றும் இல்லையே யாகிலும்-நாம க்ராஹஞ்ச நாதஸ்ய சீதல காஹள த்வனி –என்ன கடவது இறே-வாராய் யாகிலும் கோலமாம் என்பான் என் என்னில்-வாராது ஒழிகை கூடாது -கூடிலும் என் நினைவு இது என்கிறார் -என்னை இப்படிஆக்கினாய் என்று கருத்து –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9–அழித்தாய் உன் திருவடியால்;-உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ-தகவு செய்திலை;-நிர்த்தயர் செய்வதைச் செய்தாய் -பிரிந்த போதே பிரணயித்தவம் போயிற்று இறே -நீர்மை யுடையார் செய்வதுவும் செய்திலை-நான் செய்த குறை என் என்ன –எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு-நின்-முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இறே -உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்மா நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இறே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-பூதனை விஷயமாகவும் சகடாசூரன் விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களாலே -அவர்கள் நிரஸனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன் என்கிறாள் –பருவம் நிரம்பி ப்ரணயத்தில் தேசிகனாய்ச் செய்தவை ஒழிய பால சேஷ்டிதங்களும் தனக்காக செய்தான் என்று இருக்கிறாள் –அவதரித்தது தனக்கு என்று இருக்கையாலும்-ஸ்நேஹம் சத்தா ப்ரயுக்தம் ஆகையால்-ஊர் சகடம் அன்று -ஊர்ந்த சகடம் – அது செய்தது எல்லாம் செய்தற்றது -இவன் மௌக்கியத்தாலே அகப்பட்டான்-திருவடிகளினுடைய அவதானத்தாலே பிழைத்தான் அத்தனை –தாயார் ரக்ஷகமாக நிறுத்தின சகடம் -பாடி காப்பாரே களவு காண்பாரைப் போலே இறே நலிந்து –
உதைத்த பாதத்தன்--ஸ்தன்யார்த்தீ ப்ரருரோத ஹா -என்று -முலையை நினைத்து சீறிச் திருவடிகளை நிமிர்த்தான் -மேல் விழுந்த சகடம் துகளாகப் போயிற்று -இது பக்வ தசை என்னும் படி இறே பூதனை நிரசன தசை

——————————–

திரு மேனியும் -1-ருசி ஜனகமுமாய் -2-உபாயமுமாய் -3-உபேயமுமாய் -4-சேஷியுமாய் -5-பாதகமுமாய் இருக்கும்
எங்கனே என்னில் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமா சிறிய திருமடல் -55 -என்கையாலே -ருசி ஜனகத்வம் சொல்லிற்று –(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

வண்ண மருள் கொள் -திருவாய்மொழி -6-10-3-என்கையாலே உபாயத்வம் சொலிற்று -(பாசுரம் தோறும் திருவடி பிரயோகம் -அனைத்துமே உபாய பரமாகவே இருக்கும்)

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய்மொழி -5-3-4-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று(ஆழ்வாரது பக்தி சாத்திய ஸஹஜ பக்தி -ஆகையால் -விளைவித்த -பத பிரயோகம் -ஆகவே இது உபேயத்வம் தானே)

எம் மண்ணல் வண்ணமே யன்றி வாய் உரையாது -பெரிய திருமொழி -7-3-7-என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று

சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும் -திருவாய்மொழி -9-9-6-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3–நிறமானது கண்டார் நெஞ்சை அறிவு கெடுக்கும் படியான அழகிய மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவனே -வண்ணம் உண்டு -படி -ஸ்வபாவம் -அது அருள் கொண்டு இருக்கும் -கொள்வார் அளவன்றிக்கே கொடுக்கும் ஸ்வபாவனாய் இருக்கை-வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம்.
மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ. –மருள்-மேகத்துக்கும் எம்பெருமானுக்கும் விசேஷணம்-மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான திருவருளின் மிகுதி இருக்கிறபடி

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன்
தோழீ! கடியனே?–5-3-4-பேரமர் காதல்--ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -ஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –
ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காமகடல் புரைய விளைவித்த-
அப்ரமேயோ மஹாத-என்ற கடல் ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் -பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-
சம்ருத்தமான ஜலத்தை உடைத்தாய்-ஜல சர சத்வங்கள் தன்னில் கூடி விளையாடா நிற்கிற
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையனாய் பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –இந் நிறத்தைக் காட்டி-என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –(ஐயப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் அழகன் அன்றோ )

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனாள் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன
எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே -தோழிமார் உடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்தாலோ என்ன –ஆருக்கு-வடுகருக்கு தமிழர் வார்த்தை போலே சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் யார் -வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தோழிமார் எனக்கு முன்னே அழிந்தார்கள்-என் சொல்லுகேன் -கேட்ப்பாரைப் பெற்றால் சொல்லுகைக்கு பாசுரம் தான் உண்டோ-அன்னைமீர்காள்–தோழிமார் அழிந்தார்கள் –நாட்டார் அந்நிய பரர் — சேஷித்து கோள் நீங்களாய் இருத்தி கோள் -உங்களுக்குச் சொல்லவோ –

—————

திருவதரமும் –1-தாரகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-ப்ரப்யமுமாய் -4-போக்யமுமாய்
5-பாதகமுமாய் இருக்கும் -எங்கனே என்னில் –

அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே –
நாச்சியார் திருமொழி -13-4-என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று –

பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ -பெரியாழ்வார் திருமொழி -3-4-6- என்கையாலே
ப்ராப்யத்வம் சொல்லிற்று

கனி இருந்தனைய செவ்வாய் -திருமாலை 18 என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று

முறுவல் எனதாவி யடும் -திருவாய்மொழி -7-7-5- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே--13-4-இவளுடைய விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி -சஞ்சீவி மலை மூலிகைகள்-மார்பில் பட்ட அம்புகளை எடுக்கவும்-அதனால் பட்ட புண்களை ஆற்றவும்-ஆராவமுதம் அனையான் -கண்ணன் —விசல்ய கரணி -அவன் வாயில் ஊறிய நீர் -சந்தான கரணி இவளுக்கு-மார்வில் கொணர்ந்து புரட்டீர் -என்றது-எல்லாம் பெற்றதில்லை யாகிலும் -பல அவயவ சம்பந்தம் கொண்ட மாலை அன்றோ – அவனுடைய ஒரோ அவயவத்தில் உள்ளதைக் கொடு வந்தாகிலும் –புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே– இது சருகாய்ப் போகாமே -அந் நீரைக் கொடு வந்து தெளித்து பருகும் படி பண்ணி-உமிழ் நீர் மருந்தாகத் தீரும் காணும் என் நோய்-அவ்யவதா நேன என் தசைக்கு அவனைக் கொடு வர வேணும் இறே – அது செய்ய ஒண்ணாத பின்பு-இத்தாலே என் இளைப்பைப் பரிஹரித்துக் கொண்டு நிற்கப் பாருங்கோள்-வாய் மருந்திட்டு தீர்க்க வேண்டும் நோய் இறே இது –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்-பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து –திரளிலே நாம் அவனை வளைக்கும் படி என் – என்று நீ நினைக்க வேண்டா – நாங்கள் விளையாடுகிற போது எங்கள் பந்தைப் பறித்து கொண்டு போனான் -என்று சொல்லி போகாதபடி தடுத்து வைத்து-பவள வாய் முறுவலும் காண்போம் தோழி –நாம் இப்படி செய்தவாறே அவன் கால் வாங்கிப் போகாமே நின்று மந்த ஸ்மிதம் பண்ணுமே –அப்போது அவனுடைய பவளம் போல் இருக்கிற திரு அதரத்துக்கு பரபாகமான முறுவலையும்-தோழி-நாம் கண்டு அனுபவிக்க கடவோம் -என்று மனோரதிக்கிறாள்

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-18-சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –கனி இருந்தனைய செவ்வாய்–அக் கண்ணாலே நிர்மமர் ஆனார்க்கு அனுபாவ்யமான விஷயம் இருக்கிறபடி –கண்ட போதே நுகரலாம் கனி போலே யாய்த்து திரு அதரத்தில் போக்யதை இருப்பது –இருந்து -என்றது அச் செவ்வி என்றும் ஒக்க ஏக ரூபமாய் இருக்கிறபடி – சதைக ரூபரூபாய -என்னக் கடவது இறே-கண்ணனை-பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால்
அவதாரத்துக்கு பிற்பாடர்க்கு உதவுவதற்காக கிருஷ்ணனாய் வந்து கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படி யாய்த்து இருப்பது –கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன்– அண்டர் கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும்.-யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி வளர்ந்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும்-பெரிய பெருமாளைக் கண்டால் -என்றும் வசிஷ்டாதி களாலே ஸூசிஷிதராய் வார்ந்து வடிந்த விநயம் எல்லாம் தோற்றும்படியான சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்றும்
பட்டர் அருளிச் செய்வர் –

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5–மலையை எடுத்து மழையிலே நோவு படாத படி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது,
என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில்,
‘‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப் பார்த்து’ என்னக் கடவது அன்றோ?
மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம் படி
புன்முறுவல் செய்து கொண்டாயிற்று நின்றது.கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனுடைய முறுவல் என்னுடைய பிராணனை நலியா நின்றது -பிரிவால் பட்ட நலிவு எல்லாம் தீரும்படி பெண்கள் முகங்களில் பண்ணின ஸ்மிதம் எனக்கு ஒருத்திக்குமே பாதகம் ஆகா நின்றது -இவை நலியாத இடத்தில் போனாலோ என்னில்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.-ஒன்றும் அறிகின்றிலேன்-இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

—————–

திருக்கண்களும் -1-ரக்ஷகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-உபாயுமுமாய் –4-உபேயமுமாய் -5-பாதகமுமாய் -இருக்கும்
எங்கனே என்னில்
உயிர்க்கெல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-1-9-என்கையாலே ரக்ஷகத்வம் சொல்லிற்று -அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனை -6-7-10- என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று
அமலங்களாக விளிக்கும் -திருவாய் 1-9-9- என்கையாலே உபாயத்வம் சொல்லிற்று
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -திருவாய் -7-3-3-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று –
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ-திருவாய் -10-3-1- -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

(அச்சேத்யம் என்னும் அது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயில் அவையாக உடலம் ஆத்ம தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழக் கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே —சூரணை –132-)

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9-ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே-சர்வ பூத ஸூ ஹ்ருதாய்-ஆனுகூல்யம் பண்ணினாரோடு-பிரதி கூல்யம் பண்ணினாரோடு-வாசி அற-எல்லாருக்கும் ஒக்க நன்மையைப் பண்ணுகையால்
வந்த பாவ சுத்தியை உடையவனே –சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே –சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –அன்றிக்கே-சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் – அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும் திருக் கண்களை உடையவனே -என்னுதல் –

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10–இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது. ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ; அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;-உபய விபூதி உக்தன் என்கிற இடத்தை கோட் சொல்லுகிற கண்களை உடையவனை –இவள் நெடுங்கண் இளமான்-அவன் அரவிந்த லோசனன் –அவன் கண் ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -அவனையும் கூட விளாக் குலை கொள்ளும் கண் இவளது-அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.-கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர் கிடந்து போமத்தனை.- காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் – புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான்.
ந சஷூஷா க்ருஹீயதே ‘இறைவன் கண்ணுக்குப் புலப்படுமவன் அல்லன்,’ என்னும் மரியாதை குலைந்தது.-அவன் அவ் வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயமாக்கினான் ஆகில், நீர் பின்னைச் செய்வது என்?’ என்னில்,-காண்பன் –நானும் கண்டு அனுபவியா நின்றேன்.உலகத்திற்கே வேறுபட்ட -விலக்ஷண இறைவனை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரானபடி எங்ஙனே?’ எனின்,-அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் –அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்-தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1–நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–

————————————————————————————————-

வார்த்தை – 439-
திரு நாமமும் திருமுடியும்
1-பாவனமுமாய் -2-தாரகமுமாய் -3-போக்யமுமாய் -4-பாதகமுமாய் இருக்கும்-எங்கனே என்னில் –
மாயனை –தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்-திருப்பாவை -5-என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே-நாச்சியார் என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று
ஆயர் கொழுந்தே என்னும் இச்சுவை -திருமாலை -2-என்கையாலே பரம போக்யத்வம் சொல்லிற்று

கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-
உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே –இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்-பூர்வமாகிறது –ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக பண்ணின பாவம்-உத்தாரகம் ஆவது –
பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு பின்பு பிரகிருதி வாசனையால் பிராமாதிகமாகச் செய்யுமது –தீயினில் தூசாகும் –நெருப்பில் இட்ட பஞ்சே போலே ஆம்-அர்த்தம்-பெரியாழ்வார் மகள் ஆகையால் இடைச்சியான பின்பும் பின்னாட்டுகிற படி –

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-என் –-இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே-குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-மேன்மைக்கு எல்லை யானவர்களுக்கு நியாமகனாய் இருக்குமா போலே-தாழ்வுக்கு எல்லையான இடையருக்கும் பசுக்களுக்கும் ஸூலபன் ஆனபடி-வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் ஒரு பசும் கூட்டமாய் இறே பரத்வம் இருப்பதுஎன்னும் – இஸ் ஸ்வபாவங்களை அனுபவித்தோ உமக்கு இவ்வினிமை பிறந்ததோ என்னில்-அங்கன் அன்று-திரு நாமத்தின் உடைய உக்தி மாத்ரத்திலே வந்த இனிமை –இச்சுவை தவிர –இந்த ரசத்தை விட்டு-சுவை -ரசம் –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –இவருடைய அறு சுவை இருக்கிறபடி –திரு நாமத்தை உம் நாக்கிலே இட்டுப் பாராமை இறே நான் உபதேசிக்க வேண்டி இருக்கிறது –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –இங்கே இருந்து திரு நாமம் அனுபவிக்கும் இனிமைக்கு பரம பத அனுபவமும் சத்ருசம் அன்று என்னும்படி தமக்கு திரு நாமம் ரசித்த படியை சொல்லிற்று ஆய்த்து-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ-

—————-

திருமுடியும் -(குழல்) -1-பாவனமுமாய்–2–ரக்ஷகத்வமுமாய்-3–சேஷியுமாய்04-போக்யமுமாய் -5-பாதகமுமாய்
இருக்கும்–எங்கனே என்னில் –
கெடும் இடராயவெல்லாம் கேசவாய என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்–திருநெடும் தாண்டகம் -16-என்கையாலே -ரக்ஷகத்வம் சொல்லிற்று
முடியானே மூ வுலகும் தொழும் சீர் அடியானே–என்கையாலே-சர்வ சேஷித்வம் சொல்லிற்று
பூந்துழாய் முடியார்க்கு –திருவடி மூழிக் களத்தார்க்கு -9-7-என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று
சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் –7-7-10-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் -பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –
கேசவா வென்ன -ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்– என்கிறபடியே -சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் – பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி – இராவணன் ஒருவனும் தீ வினை செய்ய-இராக்கச சாதியாக அழிந்தால் போலே –இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்- முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்-என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா –யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –நாளும்-கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்-நாள் தோறும் குரூரமான வ்ருத்தியைப் பண்ணும் யமபடரும் கிட்ட மாட்டார் –ஸ்வ புருஷம் –இத்யாதி -தாஸ் யஞ்ஞ வராஹஸ்ய –இத்யாதி –கில்லார் -சக்தர் அல்லர் – எரிகிற நெருப்பில் ஏறச் சக்தர் யுண்டோ –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-நம்பி உடைய திருக் குழலையும் வடிவையும் சொல்கிறது – அற நெருங்கி இருண்ட குழலையும்-காளமேக நிபச்யாமமான வடிவையும் உடைய என் துணையே –தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காள மேகத்தை யன்றி மற் றொன்றிலம் கதியே-இறே இவர்கள் துணையாகப் பற்றுவது –
இந்தக் குழலிலும் வடிவிலும் போலே காணும் தான் அகப்பட்டது – பிராட்டியைத் தேடி திரிகிற காலம் திருக் குழல் பேணாமையாலே ஜடையாய் கிடந்தது-கண்டவாறே அவள் கையாலே வகிர்ந்து பேணின குழல் ஆகையாலே துன்று குழல் -என்கிறது –என் துணையே –ஸ்நிக்த நீல குடில குந்தளம் என்கிற மயிர் முடியையும் வடிவில் ஸ்ரமஹரதையும் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே –ப்ரஷஸ்த கேஸ பாஸம்-ப்ரஷஸ்த ஸ்நிக்த நீல குடிலை குண்டல -புகழப் படும் -வழுவழுப்பான -கறுத்த -சுருண்ட திருக் குழல் கற்றை-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-ஆதிராஜ்ய ஸூ சகமாய் உபய விபூதிக்கும் தவித்த முடி இ றே-சேஷ பூதனுக்கு சேஷித்வம் இறே முதல் காணப்படுவது-அவன் சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகத்தில் முந்துறக் கண் வைக்கிறார் -தர்ச நீயமான திரு அபிஷேகம்-ஆயின், சிவன் முதலானோர்க்கும் முடி உண்டே?’ எனின்,-அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது?
மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே –உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது?  இவருடைய அபிநிவேச அதிசயம் இசையின் ஓசையிலே அறியும் அத்தனை மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! –அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு

ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-பூந்துழாய் முடியார்க்கு –திருமுடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிற படி–பாண்டியன் கொண்டை -வளையம் திருத் துழாய் மேலே சாத்தி –-பொன் ஆழிக் கையார்க்கு-திரு முடிக்கு வளையம் போலே யாய்த்து திருக்கைக்கு திரு வாழி –திரு மூழிக் களத்தார்க்கு–வளையம் போலேயும் ஆபரணம் போலேயும் அவ் வூரில் நிலையும் அழகுக்கு உடல் என்று இருக்கிறாள் -அவை விக்ரஹத்துக்கு ஆபரணம் ஆனால் போலே -சீலம் ஸ்வரூபத்துக்கு ஆபரணம் இ றே -அழகும் குணமும் ஒரு தலைத்த விஷயம் இறே

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?–7-7-10-
நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் -ஒற்றுமை -ஒருமை-ஒருப்பட்டது தத்பரமானது ஐகாந்த்யம் –ஈடுபட்டு கிரயம் பண்ணிக் கொடுத்தது –‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே, அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வைபவம் -ஸ்ரீமத் பாகவதம் -ஸ்ரீ நாராயணீயம் -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-ஸ்ரீ அருளிச் செயல்கள் -ஸ்ரீ ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்–

December 2, 2025

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 24-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி திருவவதாரம்

ராஜோவாச
ப⁴க³வன் ஶ்ரோதுமிச்சா²மி ஹரேரத்³பு⁴தகர்மண꞉ .
அவதாரகதா²மாத்³யாம்ʼ மாயாமத்ஸ்யவிட³ம்ப³னம் .. 1..

யத³ர்த²மத³தா⁴த்³ரூபம்ʼ மாத்ஸ்யம்ʼ லோகஜுகு³ப்ஸிதம் .
தம꞉ப்ரக்ருʼதி து³ர்மர்ஷம்ʼ கர்மக்³ரஸ்த இவேஶ்வர꞉ .. 2..

ஏதன்னோ ப⁴க³வன் ஸர்வம்ʼ யதா²வத்³வக்துமர்ஹஸி .
உத்தம ஶ்லோகசரிதம்ʼ ஸர்வலோக ஸுகா²வஹம் .. 3..

ஸூத உவாச
இத்யுக்தோ விஷ்ணுராதேன ப⁴க³வான் பா³த³ராயணி꞉ .
உவாச சரிதம்ʼ விஷ்ணோர் மத்ஸ்ய ரூபேண யத்க்ருʼதம் .. 4..

ஶ்ரீஶுக உவாச
கோ³ விப்ர ஸுர ஸாதூ⁴னாம்ʼ ச²ந்த³ஸாமபி சேஶ்வர꞉ .
ரக்ஷாமிச்ச²ம்ʼ ஸ்தனூர்த⁴த்தே  த⁴ர்மஸ்யார்த²ஸ்ய சைவ ஹி .. 5..

உச்சாவசேஷு பூ⁴தேஷு சரன் வாயுரிவேஶ்வர꞉ .
நோச்சாவசத்வம்ʼ ப⁴ஜதே நிர்கு³ணத்வாத்³ தி⁴யோ கு³ணை꞉ .. 6..

வாயு -எங்கும் நிறைந்து -துர்நாற்றம் ஒட்டாதது போல் -அகிலேஹேய ப்ரத்யநீக கல்யாணை ஏக ஸ்தானன் -திவ்யம் -அப்ராக்ருதம் -ஆதியம் சோதி யுருவை அங்கே வைத்து இங்கே பிறந்த

ஆஸீத³தீத கல்பாந்தே ப்³ராஹ்மோ நைமித்திகோ லய꞉ .
ஸமுத்³ரோபப்லுதாஸ் தத்ர லோகா பூ⁴ராத³யோ ந்ருʼப .. 7..

காலேநாக³தநித்³ரஸ்ய தா⁴து꞉ ஶிஶயிஷோர்ப³லீ .
முக²தோ நி꞉ஸ்ருʼதான் வேதா³ன் ஹயக்³ரீவோ (அ)ந்திகே (அ)ஹரத் .. 8..

ஹயக்ரீவன் காரணப்பெயர் குதிரை முகத்தான் –அசுரனுக்கு இதே பெயர் –

ஜ்ஞாத்வா தத்³தா³னவேந்த்³ரஸ்ய ஹயக்³ரீவஸ்ய சேஷ்டிதம் .
த³தா⁴ர ஶப²ரீரூபம்ʼ ப⁴க³வான் ஹரிரீஶ்வர꞉ .. 9..

ஶப²ரீரூபம்ʼ–மத்ஸ்ய மீன் ரூபம்-பிரார்த்தனை பண்ணாமலேயே தானே திருவவதரித்த திருவவதாரம்-இச்சா மீன-தேசிகர்-

தத்ர ராஜ ருʼஷி꞉ கஶ்சின்நாம்னா ஸத்ய வ்ரதோ மஹான் .
நாராயண பரோ(அ)தப்யத்தப꞉ ஸ ஸலிலாஶன꞉ .. 10..

மதுரை -க்ருதமாலா நதிக்கரையில் சத்யவ்ரதர் பாண்டிய அரசனுக்கு காட்சி-ஸ ஸலிலாஶன꞉தண்ணீர் மட்டுமே உண்டு தவம் இருந்து ராஜரிஷி யானவள் -முன்பு ராஜரிஷி -ஸூர்ய மகன் -விவஸ்வனனுக்கு பிள்ளை ஸ்ராத்தா தேவனே -வைவஸ்ஸ மனுவாக இப்பொழுது உள்ளான்

யோ(அ)ஸாவஸ்மின் மஹாகல்பே தனய꞉ ஸ விவஸ்வத꞉ .
ஶ்ராத்³த⁴தே³வ இதி க்²யாதோ மனுத்வே ஹரிணார்பித꞉ .. 11..

ஏகதா³ க்ருʼதமாலாயாம்ʼ குர்வதோ ஜலதர்பணம் .
தஸ்யாஞ்ஜல்யுத³கே காசிச்ச²ப²ர்யேகாப்⁴யபத்³யத .. 12..

ஸத்யவ்ரதோ(அ)ஞ்ஜலிக³தாம்ʼ ஸஹ தோயேன பா⁴ரத .
உத்ஸஸர்ஜ நதீ³தோயே ஶப²ரீம்ʼ த்³ரவிடே³ஶ்வர꞉ .. 13..

தமாஹ ஸாதி கருணம்ʼ மஹா காருணிகம்ʼ ந்ருʼபம் .
யாதோ³ப்⁴யோ ஜ்ஞாதிகா⁴திப்⁴யோ தீ³னாம்ʼ மாம்ʼ தீ³ன வத்ஸல .
கத²ம்ʼ விஸ்ருʼஜஸே ராஜன் பீ⁴தாமஸ்மின் ஸரிஜ்ஜலே .. 14..

தமாத்மனோ(அ)னுக்³ரஹார்த²ம்ʼ ப்ரீத்யா மத்ஸ்ய வபுர்த⁴ரம் .
அஜானன் ரக்ஷணார்தா²ய ஶப²ர்யா꞉ ஸ மனோ த³தே⁴ .. 15..

தஸ்யா தீ³னதரம்ʼ வாக்யமாஶ்ருத்ய ஸ மஹீபதி꞉ .
கலஶாப்ஸு நிதா⁴யைனாம்ʼ த³யாலுர்னின்ய ஆஶ்ரமம் .. 16..

ஸா து தத்ரைகராத்ரேண வர்த⁴மானா கமண்ட³லௌ .
அலப்³த்⁴வா(ஆ)த்மாவகாஶம்ʼ வா இத³மாஹ மஹீபதிம் .. 17..

நாஹம்ʼ கமண்ட³லாவஸ்மின் க்ருʼச்ச்²ரம்ʼ வஸ்துமிஹோத்ஸஹே .
கல்பயௌக꞉ ஸுவிபுலம்ʼ யத்ராஹம்ʼ நிவஸே ஸுக²ம் .. 18..

ஸ ஏனாம்ʼ தத ஆதா³ய  ந்யதா⁴தௌ³த³ஞ்சனோத³கே .
தத்ர க்ஷிப்தா முஹூர்தேன ஹஸ்த த்ரய மவர்த⁴த .. 19..

ந ம ஏதத³லம்ʼ ராஜன் ஸுக²ம்ʼ வஸ்துமுத³ஞ்சனம் .
ப்ருʼது² தே³ஹி பத³ம்ʼ மஹ்யம்ʼ யத்த்வாஹம்ʼ ஶரணம்ʼ க³தா .. 20..

தத ஆதா³ய ஸா ராஜ்ஞா க்ஷிப்தா ராஜன் ஸரோவரே .
ததா³வ்ருʼத்யாத்மனா ஸோ(அ)யம்ʼ மஹா மீனோ(அ)ன்வவர்த⁴த .. 21..

நைதன்மே ஸ்வஸ்தயே ராஜன்னுத³கம்ʼ ஸலிலௌகஸ꞉ .
நிதே⁴ஹி ரக்ஷா யோகே³ன ஹ்ரதே³ மாமவிதா³ஸினி .. 22..

இத்யுக்த꞉ ஸோ(அ)நயன் மத்ஸ்யம்ʼ தத்ர தத்ராவிதா³ஸினி .
ஜலாஶயே(அ)ஸம்மிதம்ʼ தம்ʼ ஸமுத்³ரே ப்ராக்ஷிபஜ் ஜ²ஷம் .. 23..

க்ஷிப்யமாணஸ்தமாஹேத³மிஹ மாம்ʼ மகராத³ய꞉ .
அத³ந்த்யதிப³லா வீர மாம்ʼ நேஹோத்ஸ்ரஷ்டு மர்ஹஸி .. 24..

ஏவம்ʼ விமோஹிதஸ்தேன வத³தா வல்கு³பா⁴ரதீம் .
தமாஹ கோ ப⁴வானஸ்மான் மத்ஸ்ய ரூபேண மோஹயன் .. 25..

நைவம்ʼ வீர்யோ ஜல சரோ த்³ருʼஷ்டோ(அ)ஸ்மாபி⁴꞉ ஶ்ருதோ(அ)பி ச .
யோ ப⁴வான் யோஜன ஶதமஹ்நாபி⁴வ்யானஶே ஸர꞉ .. 26..(1-யோஜனை -10 மைல்)

நூனம்ʼ த்வம்ʼ ப⁴க³வான் ஸாக்ஷாத்³த⁴ரிர்நாராயணோ(அ)வ்யய꞉ .
அனுக்³ரஹாய பூ⁴தானாம்ʼ த⁴த்ஸே ரூபம்ʼ ஜலௌகஸாம் .. 27..

அக்னி பகவான் ஒளிந்து கொண்டதைக்காட்டிக்கொடுத்ததால் வலையால் பிடிக்கும் படி சாபம்-அக்னி சாபத்தால் நிந்திக்கப்பட்ட மீன்களை உஜ்ஜீவிக்கவே அவதாரம் -உண்மையாக இருந்தாலும் நன்மையைச் தராவிட்டால் சொல்லக்கூடாது -நன்மை செய்யும் உண்மை -உபதேசம் செய்யவேணும் அவதாரம் -பாண்டியர் கொடியில் வைத்ததே இதனால் தான் –

நமஸ்தே புருஷ ஶ்ரேஷ்ட² ஸ்தி²த் யுத்பத் யப்யயேஶ்வர .
ப⁴க்தானாம்ʼ ந꞉ ப்ரபன்னானாம்ʼ முக்²யோ ஹ்யாத்மக³திர்விபோ⁴ .. 28..

ஸ்தி²த் யுத்பத் யப்யயேஶ்வர .-generation operation destruction God

ஸர்வே லீலாவதாராஸ்தே பூ⁴தானாம்ʼ பூ⁴தி ஹேதவ꞉ .
ஜ்ஞாது மிச்சா²ம்யதோ³ ரூபம்ʼ யத³ர்த²ம்ʼ ப⁴வதா த்⁴ருʼதம் .. 29..

(அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-ஸ்ரீ தயா சதகம்-35)

பொய் சொன்னால் ஏழு ஜென்மங்கள் மீனாகப்பிறக்க வேண்டும் -தாயார் தூண்ட இவனை பெரிய மீனாக அவதரிக்க தூண்டி அவதாரம்-என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக-மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல் சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –

தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.-இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான். ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?)

ந தே(அ)ரவிந்தா³க்ஷ பதோ³பஸர்பணம்ʼ
ம்ருʼஷா ப⁴வேத் ஸர்வஸுஹ்ருʼத் ப்ரியாத்மன꞉ .
யதே²தரேஷாம்ʼ ப்ருʼத²கா³த்மனாம்ʼ ஸதாமதீ³த்³ருʼஶோ
யத்³வபுரத்³பு⁴தம்ʼ ஹி ந꞉ .. 30..

அ)ரவிந்தா³க்ஷ-பர ப்ரஹ்ம சிஹ்னம்-பங்கஜம் -சேற்றில் மலரும் செந்தாமரை அஜோபிசன் –பெருமை குன்றாமல் அவதாரம்-வழிபாடு எதுவும் வீணாகாதே

ஶ்ரீஶுக உவாச
இதி ப்³ருவாணம்ʼ ந்ருʼபதிம்ʼ ஜக³த்பதி꞉
ஸத்யவ்ரதம்ʼ மத்ஸ்யவபுர் யுக³க்ஷயே .
விஹர்து காம꞉ ப்ரலயார்ணவே(அ)ப்³ரவீ-
ச்சிகீர்ஷுரேகாந்த ஜனப்ரிய꞉ ப்ரியம் .. 31..

ஶ்ரீப⁴க³வானுவாச
ஸப்தமே(அ)த்³யதநாதூ³ர்த்⁴வ மஹன்யேத த³ரிந்த³ம .
நிமங்க்ஷ்யத் யப்யயாம் போ⁴தௌ⁴ த்ரைலோக்யம்ʼ  பூ⁴ர்பு⁴வாதி³கம் .. 32..

த்ரிலோக்யாம்ʼ லீயமானாயாம்ʼ ஸம்ʼவர்தாம்ப⁴ஸி வை ததா³ .
உபஸ்தா²ஸ்யதி நௌ꞉ காசித்³ விஶாலா த்வாம்ʼ மயேரிதா .. 33..

த்வம்ʼ தாவதோ³ஷதீ⁴꞉ ஸர்வா பீ³ஜான் யுச்சாவசானி ச .
ஸப்தர்ஷிபி⁴꞉ பரிவ்ருʼத꞉ ஸர்வ ஸத்த்வோப ப்³ருʼம்ʼஹித꞉ .. 34..

ஆருஹ்ய ப்³ருʼஹதீம்ʼ நாவம்ʼ விசரிஷ்யஸ்யவிக்லவ꞉ .
ஏகார்ணவே நிராலோகே ருʼஷீணாமேவ வர்சஸா .. 35..

தோ³தூ⁴யமானாம்ʼ தாம்ʼ நாவம்ʼ ஸமீரேண ப³லீயஸா .
உபஸ்தி²தஸ்ய மே ஶ்ருʼங்கே³ நிப³த்⁴னீஹி மஹாஹினா .. 36..

அஹம்ʼ த்வாம்ருʼஷிபி⁴꞉ ஸாகம்ʼ ஸஹனாவமுத³ன்வதி .
விகர்ஷன் விசரிஷ்யாமி யாவத்³ப்³ராஹ்மீ நிஶா ப்ரபோ⁴ .. 37..

மதீ³யம்ʼ மஹிமானம்ʼ ச பரம்ʼ ப்³ரஹ்மேதி ஶப்³தி³தம் .
வேத்ஸ்யஸ்யனுக்³ருʼஹீதம்ʼ மே ஸம்ப்ரஶ்னைர்விவ்ருʼதம்ʼ ஹ்ருʼதி³ .. 38..

பிரளயத்தில் ஸூர்ய சந்திர நக்ஷத்திரங்கள் இல்லாவிட்டாலும் சப்த ரிஷிகள் ப்ரஹ்ம தேஜஸ் ஒளி கொண்டு பார்த்து-ப்ரசண்ட மாருத புயல் வருமே என்ன-1000 மைல் நீளம் மீன் இப்பொழுது -அதை விட -பெரிய மீனாக வரும் -ஒற்றைக்கொம்பு -வாசுகி கொண்டு படகைக்காட்டு -நான் வழி நடத்துவேன் -பிரளய காலம் -1000 சதுர்யுகமும் நான் உங்களைக் காப்பேன் -ஞான உணவு ஊட்டுவேன்-கேள்வி கேட்டு அறிந்து கொள்

இத்த²மாதி³ஶ்ய ராஜானம்ʼ ஹரிரந்தரதீ⁴யத .
ஸோ(அ)ன்வவைக்ஷத தம்ʼ காலம்ʼ யம்ʼ ஹ்ருʼஷீகேஶ ஆதி³ஶத் .. 39..

ஆஸ்தீர்ய த³ர்பா⁴ன் ப்ராக்கூலான் ராஜர்ஷி꞉ ப்ராகு³த³ங்முக²꞉ .
நிஷஸாத³ ஹரே꞉ பாதௌ³ சிந்தயன் மத்ஸ்ய ரூபிண꞉ .. 40..

சொல்லி மறைந்து போக -அந்த ஏழு நாள்களும் பார்த்த மத்ஸ்ய சூபியைத் த்யான பண்ணி -பெரிய மத்ஸ்ய ரூபியைத் தரிசிக்க காத்து இருந்தார்

தத꞉ ஸமுத்³ர உத்³வேல꞉ ஸர்வத꞉ ப்லாவயன் மஹீம் .
வர்த⁴மானோ மஹா மேகை⁴ர் வர்ஷத்³பி⁴꞉ ஸம த்³ருʼஶ்யத .. 41..

த்⁴யாயன் ப⁴க³வதா³ தே³ஶம்ʼ த³த்³ருʼஶே நாவமாக³தாம் .
தாமாருரோஹ விப்ரேந்த்³ரைராதா³ யௌஷதி⁴வீருத⁴꞉ .. 42..

தமூசுர்முனய꞉ ப்ரீதா ராஜன் த்⁴யாயஸ்வ கேஶவம் .
ஸ வை ந꞉ ஸங்கடா த³ஸ்மாத³விதா ஶம்ʼ விதா⁴ஸ்யதி .. 43..

ஸோ(அ)னு த்⁴யாதஸ் ததோ ராஜ்ஞா ப்ராது³ராஸீன் மஹார்ணவே .
ஏக ஶ்ருʼங்க³ த⁴ரோ மத்ஸ்யோ ஹைமோ நியுத யோஜன꞉ .. 44..

ஹைமோ நியுத யோஜன꞉-பொன்நிறம் 10 லக்ஷணம் மைல் நீளம்

ஸ கோ³ நா ஸம்ʼ கோ³ கோ³
நிப³த்⁴ய நாவம்ʼ தச்ச்²ருʼங்கே³ யதோ²க்தோ ஹரிணா புரா .
வரத்ரேணாஹினா துஷ்டஸ் துஷ்டாவ மது⁴ஸூத³னம் .. 45..

ராஜோவாச
அநாத்³யவித்³யோபஹ தாத்ம ஸம்ʼவித³ஸ் தன் மூல ஸம்ʼஸார பரிஶ்ரமாதுரா꞉ .
யத்³ருʼச்ச²யேஹோபஸ்ருʼதா யமாப்னுயுர் வி முக்திதோ³ ந꞉ பரமோ கு³ருர் ப⁴வான் .. 46..

ஸ்துதிக்கிறார் -அநாதி அவித்யை -பொய் நின்ற ஞானம் -அழுக்கு உடம்பில் உழன்று-யாதிருச்சியா ஸூஹ் ருதம் -நாமும் அறியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் தானே அறிந்து -என் பேரைச் சொன்னாய் -பிரதம குரு -பீதகவாடைப்பிரானார் -லஷ்மீ நாதன் ஞானப்பிரான்

ஜனோ(அ)பு³தோ⁴(அ)யம்ʼ நிஜகர்ம ப³ந்த⁴ன꞉ ஸுகே²ச்ச²யா கர்ம ஸமீஹதே(அ)ஸுக²ம் .
யத்ஸேவயா தாம்ʼ விது⁴னோத்ய ஸன்மதிம்ʼ க்³ரந்தி²ம்ʼ ஸ பி⁴ந்த்³யாத்³த்⁴ருʼத³யம்ʼ ஸ நோ கு³ரு꞉ .. 47..

யத்ஸேவயாக்³னேரிவ ருத்³ரரோத³னம்ʼ புமான் விஜஹ்யான்மலமாத்மனஸ்தம꞉ .
ப⁴ஜேத வர்ணம்ʼ நிஜமேஷ ஸோ(அ)வ்யயோ பூ⁴யாத்ஸ ஈஶ꞉ பரமோ கு³ரோர்கு³ரு꞉ .. 48..

சர்வஞ்ஞனே அஞ்ஞாராகிய நம்மை வழி நடத்த வேண்டும்

ந யத்ப்ரஸாதா³யுதபா⁴க³லேஶமன்யே ச தே³வா கு³ரவோ ஜனா꞉ ஸ்வயம் .
கர்தும்ʼ ஸமேதா꞉ ப்ரப⁴வந்தி பும்ʼஸ- ஸ்தமீஶ்வரம்ʼ த்வாம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்³யே .. 49..

அசக்ஷுரந்த⁴ஸ்ய யதா²க்³ரணீ꞉ க்ருʼதஸ்ததா² ஜனஸ்யாவிது³ஷோ(அ)பு³தோ⁴ கு³ரு꞉ .
த்வமர்கத்³ருʼக்ஸர்வத்³ருʼஶாம்ʼ ஸமீக்ஷணோ வ்ருʼதோ கு³ருர்ன꞉ ஸ்வக³திம்ʼ பு³பு⁴த்ஸதாம் .. 50..

ஜனோ ஜனஸ்யாதி³ஶதே(அ)ஸதீம்ʼ மதிம்ʼ யயா ப்ரபத்³யேத து³ரத்யயம்ʼ தம꞉ .
த்வம்ʼ த்வவ்யயம்ʼ ஜ்ஞானமமோக⁴மஞ்ஜஸா ப்ரபத்³யதே யேன ஜனோ நிஜம்ʼ பத³ம் .. 51..

த்வம்ʼ ஸர்வலோகஸ்ய ஸுஹ்ருʼத்ப்ரியேஶ்வரோ ஹ்யாத்மாகு³ருர்ஜ்ஞானமபீ⁴ஷ்டஸித்³தி⁴꞉ 
ததா²பி லோகோ ந ப⁴வந்தமந்த⁴தீ⁴-ர்ஜானாதி ஸந்தம்ʼ ஹ்ருʼதி³ ப³த்³த⁴காம꞉ .. 52..

தம்ʼ த்வாமஹம்ʼ தே³வவரம்ʼ வரேண்யம்ʼப்ரபத்³ய ஈஶம்ʼ ப்ரதிபோ³த⁴னாய .
சி²ந்த்⁴யர்த²தீ³பைர்ப⁴க³வன் வசோபி⁴-ர்க்³ரந்தீ²ன் ஹ்ருʼத³ய்யான் விவ்ருʼணு ஸ்வமோக꞉ .. 53..

(எட்டு ஸ்லோகங்கள் -நீயே குரு -ஞானக் கண் அளித்து -ஆசை இருப்பதைக் காட்ட வேண்டுமே –ஸ்ரீ மத்ஸயவதாரம் –

211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –

அத₂ மத்ஸ்ய அவதார꞉ । அஸேஷ வித்₃யா பரமாசார்யக꞉ குரு--இனி மத்ஸ்ய அவதாரம் கூறப்படுகிறது=சத்ய விரத மனு -வைகை நதிக்கரையில் -மத்ஸ்ய அவதாரம்-ஏக ஸ்ருங்கம்–இச்சா மீனா இத்யாதி -மத்ஸ்ய கமல லோஷணா –கடாக்ஷத்தாலே ரக்ஷணம் -மத்ஸ்ய புராணம் உபதேசித்து அருளினார் –3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்)

ஶ்ரீஶுக உவாச
இத்யுக்த வந்தம்ʼ ந்ருʼபதிம்ʼ ப⁴க³வாநாதி³பூருஷ꞉ .
மத்ஸ்ய ரூபீ மஹாம் போ⁴தௌ⁴ விஹரம்ʼஸ்தத்த்வ மப்³ரவீத் .. 54..

புராண ஸம்ʼஹிதாம்ʼ தி³வ்யாம்ʼ ஸாங்க்²ய யோக³ க்ரியாவதீம் .
ஸத்ய வ்ரதஸ்ய ராஜர்ஷேராத்ம கு³ஹ் யமஶேஷத꞉ .. 55..

திவ்யமான மாத்ஸ்ய புராணம் -முதலில் சாங்க்ய -தத்வ உபதேசம் -26 தத்வங்கள்-அடுத்து -யோக -பக்தி யோகம் -யுஜ் -சேர்ந்து -த்யானம் -அடுத்து கிரியாவதம் -ஸ்வ வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -மனஸ் ஸூத்தி -பெற -1000 சதுர்யுகம் முழுவதும் உபதேசம்

அஶ்ரௌஷீத்³ருʼஷிபி⁴꞉ ஸாகமாத்ம தத்த்வ மஸம்ʼஶயம் .
நாவ்யாஸீனோ ப⁴க³வதா ப்ரோக்தம்ʼ ப்³ரஹ்ம ஸனாதனம் .. 56..

அதீத ப்ரலயாபாய உத்தி²தாய ஸ வேத⁴ஸே .
ஹத்வாஸுரம்ʼ ஹயக்³ரீவம்ʼ வேதா³ன் ப்ரத்யாஹரத்³த⁴ரி꞉ .. 57..

ஸ து ஸத்ய வ்ரதோ ராஜா ஜ்ஞான விஜ்ஞான ஸம்ʼயுத꞉ .
விஷ்ணோ꞉ ப்ரஸாதா³த் கல்பே (அ)ஸ்மின்னாஸீத்³ வைவஸ்வதோ மனு꞉ .. 58..

ஸத்ய வ்ரதஸ்ய ராஜர் ஷேர் மாயா மத்ஸ்யஸ்ய ஶார்ங்கி³ண꞉ .
ஸம்ʼவாத³ம்ʼ மஹதா³க்²யானம்ʼ ஶ்ருத்வா முச்யேத கில்பி³ஷாத் .. 59..

அவதாரோ ஹரேர்யோ (அ)யம்ʼ கீர்தயே த³ன்வஹம்ʼ நர꞉ .
ஸங்கல்பாஸ் தஸ்ய ஸித்⁴யந்தி ஸ யாதி பரமாம்ʼ க³திம் .. 60..

ப்ரலயபயஸி தா⁴து꞉ ஸுப்த ஶக்தேர் முகே²ப்⁴ய꞉ ஶ்ருதி க³ணமபனீதம்ʼ ப்ரத்யுபாத³த்தஹத்வா 
தி³திஜமகத²யத்³யோ ப்³ரஹ்ம ஸத்ய வ்ரதானாம்ʼதமஹ மகி²ல ஹேதும்ʼ ஜிஹ்ம மீனம்ʼ நதோ(அ)ஸ்மி .. 61..

இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹா புராணே வையாஸக்யா மஷ்டாத³ஶ ஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயா மஷ்டம ஸ்கந்தே⁴ மத்ஸ்யாவதார சரிதானுவர்ணனம்ʼ
நாம சதுர் விம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 24..

.. இத்யஷ்டமஸ்கந்த⁴꞉ ஸமாப்த꞉ ..

———————————

பரீக்ஷித் பகவானின் ஆதி அவதாரமாகிய மத்ஸ்யாவதாரத்தைப் பற்றிக் கூறும்படி சுகரிடம் கேட்டான்.
சுகர் கூறியது.
பிரம்மாவின் இரவில் ஏற்படுவது நைமித்திக ப்ரளயம் . அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன் பிரம்மா துயிலுறும் போது
வேதங்களைக் கவர்ந்து சென்றுவிட்டான். பகவான் மத்ஸ்ய உருவெடுத்து அவனைக் கொன்று சமுத்திரத்தில்
ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை வெளிக்கொணர்ந்தார் . இதுதான் மத்ஸ்யாவதாரம்.

முன்னொரு காலத்தில் சத்ய வ்ரதன் என்ற அரசன் சித்தத்தை நாராயணனிடம் வைத்துத் நீரை மட்டும் உட்கொண்டு தவம் செய்து வந்தான்.
ஒருநாள் அவன் நதியில் அர்க்கியம் விடும்போது அந்த கையளவு நீரில் ஒரு சிறு மீன் இருக்கக் கண்டான்.
அதை நதியில் விட நினைக்கையில் அந்த மீன் தன்னை நதியில் விட்டால் பெரிய மீன்கள் விழுங்கிவிடும் என்று கூறியதால்
அதைத் தன் கமண்டலுவில் ஆஸ்ரமத்திற்கு எடுத்துச்சென்றான்.

அந்த சிறிய மீன் விரைவில் கமண்டலு கொள்ளாமல் வளர்ந்து தன்னை அதைவிட பெரிய இடத்தில் விடுமாறு கூறியது.
படிப்படியாக ஒன்றை விட ஒன்று பெரியதான நீர் நிலையத்தில் அதை சேர்க்க அது பெரியதாகிக் கொண்டே வந்தது.
கடைசியில் அதை சமுத்திரத்திற்கு எடுத்துப் போகையில் அந்த மீன் இங்கு தன்னைவிடப் பெரிய சுறாமீன் முதலை போன்றவைகள்
தன்னைத் தின்று விடும் எனக்கூற அப்போது சத்யவ்ரதன் வியப்புற்று மீன் வடிவில் தன்னை மயக்குவது யார் எனக் கேட்டான்.

சத்ய வ்ரதன் கூறியது.
“ஒரே நாளில் நூறு யோஜனை பரப்புள்ள ஏரியை நிறைத்த நீங்கள் நிச்சயமாக நான் வணங்கும் நாராயணனே .
இந்த அற்புத வடிவை எடுக்க க் காரணம் என்ன என்று கூறியருள வேண்டும்” என்றான்.

பகவான் அவனிடம் அன்றைய தினத்தில் இருந்து ஏழாவது நாள் பூமி பிரளய ஜலத்தில் முழுகப்போகிறது என்றும்,
அப்போது பெரிய ஓர் ஓடம் மத்ஸ்ய ரூபியான தன்னால் செலுத்தப்பட்டு அங்கு வரும் என்றும்,
அதில் சத்ய வரதன் எல்லாவிதமான ஔஷதிகளையும் விதைகளையும் எல்லாப் பிராணிகளையும் நிரப்பிக் கொண்டு
சப்த ரிஷிகளுடன் பயமின்றி சஞ்சரிப்பான் என்றும் ,
அப்போது அவனுடைய எல்லா சந்தேகங்களுக்கும் விடை அளித்து பிரம்ம ஞானத்தை அருளுவதாகக் கூறினார்.

பகவானால் கூறப்பட்ட அந்தக் காலத்தில் பெரும் மேகங்கள் மழை பொழிய பூமி முழுகுவதைக் கண்டான்.
அப்போது பகவான் வாக்குப்படி ஒரு ஓடம் வர அதில அவர் சொன்னபடி எல்லா பொருள்களுடனும் சப்த ரிஷிகளுடனும் ஏறினான்.
அங்கு பகவான் மத்ஸ்ய ரூபத்தில் பொன் நிறமுடன் ஓர் லக்ஷம் யோசனை நீண்டு ஒற்றைக் கொம்புடன் காட்சியளிக்க
அவருடைய கொம்பில் அவரால் முன்னமே சொல்லப்பட்டவாறு ஓடத்தை வாசுகியை கயிறாகக் கொண்டு கட்டினான்.
பிறகு மகிழ்ச்சி பொங்க பகவானைத் ஸ்துதித்தான்.

“ தேவ ஸ்ரேஷ்டரும் உலகுக்கெல்லாம் நண்பரும் பிரியமானவரும் ஆத்மாவும் அறிவையும் இஷ்ட சித்தியையும் அளிப்பவரான
உம்மை குருடர்களைப் போல் உலக மக்கள் அறிந்து கொள்வதில்லை. ஈஸ்வரராகிய உம்மை அறிவின் விளக்கத்திற்காக சரண் அடைகிறேன்

ரஹஸ்யார்த்தங்களின் விளக்குப்போன்ற சொற்களால் இருதயத்தின் முடிச்சுகளை சேதித்து உமது உண்மையான
ஸ்வரூபத்தைக் காட்டியருள வேண்டும்,”இவ்வாறு கூறிய அரசனிடம் பகவான்
பிரளய ஜலத்தில் விளையாடியபடியே தத்துவத்தை உபதேசித்தார்.

அப்படிப்பட்ட மாயா மத்ஸ்ய ஸ்வரூபியான அவரை வணங்குவோமாக.

எட்டாவது ஸ்கந்தம் முடிவுற்றது

——————————

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 32–ஸ்ரீ மத்ஸ்யாவதாரம் –

இத்துடன் ஸ்ரீ மத் பாகவதம் 8 ஸ்கந்தம் நிறைவு அடையும்
1-2-5-6-7-8- உபஜாதி மீட்டர் –
3-4-9 இந்திர வஜ்ரா
10 -உபேந்த்ர வஜ்ரா

———

புரா ஹயக்ரீவ மஹா ஸூரேண ஷஷ்டாந்தரான் தோத் யதகாண்ட கல்பே
நித்ரோந் முக ப்ரஹ்ம முகாத் ஹ்ருதேஷு வேதேஷ் வதித்ஸ கில மத்ஸ்ய ரூபம் –1-

ஆறாவது மன்வந்தரத்தின் முடிவிலே -நைமித்திக பிரளயம் ஏற்பட்டது -அப்போது தூங்கிக் கொண்டு இருந்த பிரமதேவனின்
முகத்தில் இருந்து ஹயக்ரீவன் என்ற அரசன் வேதங்களைத் திருடிச் சென்றான் –
அப்போது ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தியாக திரு அவதாரம் செய்ய விரும்பினீர்கள் அல்லவா –

வைவஸ்வர மன்வந்தரம் ஏழாவது இப்பொழுது
ஆகவே புரா -தொடங்கி இந்த ஸ்லோகம்-குதிரை முக அசுரன் என்பதால் ஹயக்ரீவன்

முகாத்-முகம் என்பது இங்கு வாயைக் குறிக்கும்

எழுதாக் கிளவி வேதம் -ஸ்ருதி -ஓதுவித்து ஓதுவதால் இந்தப் பெயர்-

———

ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதி பர்துர் நதீ ஜலே தர்பய தஸ்ததா நீம்
கராஞ்சலவ் சஞ்ஜ வலிதா க்ருதிஸ் த்வம் அத்ருஸ்யதா கஸ்சந பால மீந –2-

தமிழ் நாட்டில் கிருதமாலை என்ற நதியில் ஸத்ய வ்ரதன் என்ற அரசன்-(ராஜரிஷி-ஜடபரதர் அரசனாக இருந்து தவம் செய்தது போல் இவனும் )தர்ப்பணம் செய்து
கொண்டு இருக்கும் போது கூப்பிய அவனுடைய கைகளிலே தாங்கள் –பால மீந –மீன் குஞ்சாகத் தோன்றினீர்கள்

த்ரமிலா-த்ரமிடா -லகார டகார பேதம்

க்ருதமாலா என்பது வேறே கிளை நதி -வைகையே என்றுமே சொல்வர்

மீன் கொடி பாண்டியருக்கு இதனால் தான் -சத்யவ்ரதன் முதல் பாண்டிய மன்னன்

கராஞ்சலவ்-திருக்கைக்கள் அஞ்சலி முகமாக கூப்பிய போது

————-

க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நிந்யே அம்பு பாத்ரேண முனி ஸ்வ கேஹம்
ஸ்வல்பை ரஹோபி க்லஸீம் ச கூபம் வாபீம் சரஸ் சாந சிஷே விபோ த்வம் –3-

உடனே தங்களை நீரிலே விட்டான் -பயந்த உம்மைத் தன் –அம்பு பாத்ரேண-தீர்த்த பாத்திரத்தில் விட்டு –ஸ்வ கேஹம்-தன் வீட்டுக்குக் கொண்டு சென்றான்
எங்கும் நிறைந்தவனே -சில நாள்களுக்குள் தங்கள் தீர்த்த பாத்திரத்தையும் கிணற்றையும்
குளத்தையும் ஏரியையும் விட பெரிதாக வளர்ந்து விட்டீர்கள் –

அம்பு பாத்ரம் கமண்டலம் -குடம் -கலசம் -கிணறு கூபம் -குளம் வாபி -ஏரி -ஸரஸ் -இவற்றை விடக் கடந்து வளர்ந்தாயே

————

யோக ப்ரபாவாத் பவதா ஜ்ஞயைவ நீதஸ்ததஸ்த்வம் முனிநா பயோதிம்
ப்ருஷ்டோ அமுநா கல்ப தித்ருஷு மேநம் ஸப்தாஹம் ஆஸ்வேதி வதன் நயாஸீ –4-

பிறகு தங்கள் கட்டளைப்படி ஸத்ய வ்ரதன் தன் யோக மகிமையால் (தபஸ் சக்தியால் இவன் உணர்ந்து  கேட்க – நீர் ஆணை இட்ட படி )மீனான தங்களைக் கடலில் கொண்டு –பயோதிம்-சேர்த்தான்
அவன் பிரளயத்தைக் காண விரும்புகிறேன் என்று தங்கள் இடம் சொல்ல
ஏழு நாட்கள் பொறுத்து இரு என்று சொல்லி –நயாஸீ-மறைந்தீர்கள்

————

ப்ராப்தே த்வத் யுக்தே அஹநி வாரி தாரா பரிப்லுதே பூமி தலே முனீந்திர
சப்த ர்ஷிபி சார்தம் அபார வாரிண் யுத் கூர்ணமாந சரணம் யயவ் த்வாம் –5-

தங்கள் குறிப்பிட்ட –அஹநி-நாளும் வந்தது –வாரி தாரா-மழை பெய்து –பரிப்லுதே பூமி தலே-பூமி முழுவதும் நீரில் மூழ்கியது
ஸத்ய வ்ரதன் ஸப்த ரிஷிகளுடன் நீரில் சுழன்று கொண்டு தங்களைச் சரண் அடைந்தான் –

அபார வாரிண்-எல்லை காண முடியாத ப்ரளயக் கடலில்

———–

தராம் த்வத் ஆதேச கரீம் ஆவாப்தாம் நவ் ரூபிணீம் ஆருரு ஹுஸ் ததா தே
தத் கம்ப கம்ப்ரேஷு ச தேஷு பூயஸ் த்வம் அம்புதேர் ஆவிரபூர் மஹீ யான் –6-

தங்களுடைய கட்டளைப் படியே தராம்-பூமி தோணியாக வந்தது -அவர்கள் அனைவரும்
தோணியில் ஏறினார்கள் -தோணி ஆடியதால் நடுங்கினார்கள்
அப்பொழுது தாங்களும் மறுபடியும் கடலில் இருந்து மிகப் பெரிய மீனாகத் தோன்றினீர்கள் –

———-

ஜஷாக்ருதம் யோஜன லக்ஷ தீர்க்காம் ததாம் உச்சைஸ் தர தேஜஸம் த்வாம்
நிரீஷ்ய துஷ்டா முனயஸ் த்வத் உக்த்யா த்வத் துங்க ஸ்ருங்கே தரணிம் பபந்து –7-

லக்ஷ யோஜனை (1 யோஜனை 10 mile )நீளம் உள்ள –ஜஷாக்ருதம்-மீன் உருவத்தில் மிகப் பிரகாசமாய் விளங்கினீர்கள் –
அதைக் கண்டு மகிழ்ந்த அவர்கள் தங்கள் சொல்படி அந்தத் தோணியை மிகப் பெரிய
தங்கள் கொம்பின் நுனியில் கட்டினார்கள் -(துங்க ஸ்ருங்கே-உயர்ந்த கொம்பிலே )

———–

ஆ க்ருஷ்ட நவ்கோ முனி மண்டலாய பிரதர்சயன் விஸ்வ ஜகத் விபாகாந்
ஸமஸ்தூய மாநோ ந்ரு வரேண தேந ஞானம் பரம் ச உபதி சன்ன சாரீ –8-

ஆ க்ருஷ்ட நவ்கோ-படகை இழுத்துக் கொண்டு சென்றாய்

ஓடத்தை இழுத்துக் கொண்டு –முனி மண்டலாய-அவர்களுக்கு –பிரதர்சயன் விஸ்வ ஜகத் விபாகாந்-உலகின் பல வேறு பிரிவுகளைக் காண்பித்தீர்கள் –
அரசனும் தங்களை –ஸமஸ்தூய மாந-ஸ்துதித்தான் -அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்தீர்கள் –

மாத்ஸ்ய புராணம் இவர் உபதேசித்தது
இப்பொழுது உள்ள மாத்ஸ்ய புராணத்தில் சில மாறு பாடுகள் உள்ளன

———-

கல்பாவதவ் ஸப்த முநீந் புரோவத் ப்ரஸ்தாப்ய ஸத்ய வ்ரத பூமிபம் தம்
வை வஸ்வ தாக்யம் மநு மாத தாந க்ரோதாத் ஹயக்ரீவம் அபி த்ருதோ அபூ –9-

கல்பாவதவ்-பிரளயத்தின் முடிவில் அந்த ரிஷிகளை-புரோவத்-முன்பு போலவே ஸப்த ரிஷிகளின் ஸ்தானத்தில் இருக்கச் செய்து -ஸத்ய வ்ரதனை வைவஸ்வத மனுவாக ஆக்கினீர்கள்
பிறகு மிகுந்த கோபத்துடன் ஹயக்ரீவன் என்ற அசுரனைத் தொடர்ந்து சென்றீர்கள் –

பிரளயம் ஆனபின்பு வேறே கல்பம் வரும் -விவஸ்வான் பிள்ளை என்பதால்-வை வஸ்வ-இந்தப் பெயர்
சாஷுச மன்வந்தரம் முந்திய ஆறாவது மன்வந்தரம்

மனு ஸ்ம்ருதி இந்த வைவஸ்ய மனு வழங்கியது

சரீர ஆத்ம பாவம் முதல் அத்யாயம் விளக்கும்
மேல் தர்மங்களை விளக்கும்
நாராயணன் உகப்புக்காக செய்யும் தர்மங்கள் என்பதால் முதலில் அவன் பெருமைகளை சொல்லும்

———–

ஸ்வ துங்க ஸ்ருங்க ஷத வக்ஷஸம் தம் நிபாத்ய தைத்யம் நிகமாத் க்ருஹீத்வா
விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே ததாந பிரபஞ்ச நாகார பதே ப்ரபாயா –10-

குருவாயூரப்பா தங்களுடைய மிகப் பெரிய கொம்பா-துங்க ஸ்ருங்க- அந்த அசுரனுடைய பிளந்து சாய்த்து(வேத ஞானம் ஹ்ருதயத்தில் தானே இருக்கும் -)
நிகமாத் க்ருஹீத்வா-வேதங்களை மீட்டு வந்து-விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே ததாந- பிரமன் இடம் கொடுத்து அருளிய தாங்கள் (பிரபஞ்ச நாகார-வாயு ஆகாரம்)-அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

ப்ரம்மா ஜீவாத்மா
குதிரை அசுரன் ஐம் புலன்கள்
ஞானம் இழந்து இருக்க
சரண் அடைந்து
ஞான உபதேசம் பெறுகிறோம்பொய்களை மன்னிக்க பிராட்டி
பொய் சொன்னால் மீனாகப் பிறக்க வேண்டுமே
நீயே பிறந்து இவனை ரக்ஷிக்க பிரார்த்திக்க -அதனால் மத்ஸ்ய அவதாரம்

அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-தயா தசகம்–35-

என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —
நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக
மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல்
சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –

தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.
இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான்.
ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?

———————————

ஸ்ரீ மத்ஸயவதாரம் –

211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –

3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்

அவதாரிகை
அத₂ மத்ஸ்ய அவதார꞉ । அஸேஷ வித்₃யா பரமாசார்யக꞉ குரு--இனி மத்ஸ்ய அவதாரம் கூறப்படுகிறது

சத்ய விரத மனு -வைகை நதிக்கரையில் -மத்ஸ்ய அவதாரம்-ஏக ஸ்ருங்கம்–இச்சா மீனா இத்யாதி -மத்ஸ்ய கமல லோஷணா –கடாக்ஷத்தாலே ரக்ஷணம் -மத்ஸ்ய புராணம் உபதேசித்து அருளினார் –

3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்

211- குரூர் குரு தம–குரு தம குரு -பரமாச்சார்யன் –அனைவருக்கும் குரு இவரே

க்ருக்₃ரோருச்ச, இதி கு ப்ரத்யய ꞉ உகாரஶ் சாந்தாதே ₃ஸ ꞉ । தஸ்யைவ விஸேஷணம்

உணாதி ஸூத்ரம் –குரோர் உச்ச –-செய்வது என்ற பொருள் தருகின்ற –க்ரு -பேசுதல் என்ற பொருள் தருகின்ற க்ரு
ஆகிய இரண்டிலும் உள்ள  என்ற ப்ரத்யயம்

கு₃ருதம꞉
ந ஸ்வதந்த்ர நாமத்வமஸ்ய ;குரு தம என்பது தனிச்சொல் அல்ல -குரு பதத்தை மேலும் விவரித்து உயர்ந்த குரு என்கிறது

ச பூர்வேஷாம் அபி குரு இதி ஹிரண்ய கர்ப்ப–இவனே பழைமையான குரு என்று ஹிரண்ய கரப்பன் கூறினான்

* பூஜ்யஶ்ச கு₃ருக₃ரீயான் இதி –ஸ்ரீ கீதை -11-43-
அனைவரையும் விட மேம்பட்ட பூஜிக்கத்தக்க குருவாக நீயே உள்ளாய்

கு இருள் ரு போக்கி -அஞ்ஞானம் போக்கி -இதற்கு அடை மொழி குரு தம

அறியாக் காலத்துள்ளே அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
பிதா மகராண ப்ரஹ்மனுக்கும் வேதங்கள் வெளிட்டு உபதேசித்து அருளினவன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -பெரியாழ்வார் -5-2-8-

மத்ஸ்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால்
ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

ஓம் குரவே நம:

ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்

ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்)

ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும்

குரு: பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———

குருர் குருதம – ஆசான்களில் முதன்மையானவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் குருர் மற்றும் குருதமாவை இரண்டு வெவ்வேறு நாமங்களாகக் கருதுகிறார், ஆனால் ஸ்ரீ பராசர பட்டர் அவற்றை ஒரே நாமமாகக் கருதுகிறார். குருர் குருதமஹ். சுவாரஸ்யமாக, ஸ்ரீ பராசர பட்டர் ‘வாசஸ்பதி’ மற்றும் ‘உதாராதீ’ ஆகிய இரண்டு தனி நாமங்களாகக் கருதுகிறார், ஸ்ரீ ஆதி சங்கரர் அவற்றை ஒரு நாமமாகக் கருதுகிறார். இருப்பினும், ஒட்டுமொத்த பெயர் எண்ணிக்கையும் இதனால் பாதிக்கப்படவில்லை. ஸ்ரீ பராசர் பட்டர், மேலே குறிப்பிட்டுள்ளபடி, குருர் குருதமாவை ஒரே கூட்டுப் பெயராகக் கொண்டு, ‘குரு-தமா’ என்ற சொற்றொடரை குருவின் பெயரடையாக விளக்குகிறார், அதாவது, சிறந்த குரு. அனைத்து குருக்களின்.

குரு என்றால் ‘ஆன்மீக போதகர்’ மற்றும் தமா என்பது ஒரு உயர்ந்தது, அதாவது சிறந்தது. சமஸ்கிருதத்தில் வார்த்தையின் முடிவில் ‘தமா’ சேர்த்தால் அது உயர்ந்த பட்டம். எனவே குருதமா என்பது அனைத்து ஆசான்களிலும் உயர்ந்தது அல்லது முதன்மையானது.

ஸ்ரீஆதிசங்கரர் இதை இரண்டு நாமங்களாகக் கருதுகிறார், குரு மற்றும் குரு-தமம். அவர் நாம ‘குரு’வை இரண்டு வெவ்வேறு அர்த்தங்களில் விளக்குகிறார், ஒருவர் சிறந்த ஆசிரியர் என்றும் மற்றவர் உலகளாவிய தந்தை என்றும். அவர் கூறுகிறார் ‘சர்வ வித்யாநாம் உபதேஷ்த்ருத்வாத் சர்வேஷாம் ஜனகத்வாத் வா – அவர் அனைத்து அறிவுக்கும் சிறந்த ஆன்மீக ஆசிரியராக இருப்பதால் அவர் குரு என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் பிரபஞ்சத்தின் தந்தை அல்லது படைப்பாளர் என்பதால்.

‘விரிஞ்சயாதீனாம் அபி பிரம்மவித்யா ஸம்ப்ரதாயகத்வாத் குருதமாஹ் – பிரம்மனைப் பற்றிய அறிவை பிரம்மனுக்குத் தானே கற்பிக்கிறார்’ என்று அவர் இதை நியாயப்படுத்துகிறார். இந்த யோசனை ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் (6.18) பிரதிபலிக்கிறது, இது ‘யோ ப்ரம்ஹாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாங்க ப்ரஹிணோதி தஸ்மை– பிரம்மத்தை உண்டாக்கி அவருக்கு வேதத்தை வழங்கியவர்’ என்று கூறுகிறது.

இதே போன்று மஹா நாராயண உபநிஷத் (8.15) ‘குருஹ் கா இதி | குரு சாக்ஷாத்-ஆதிநாராயணா – இறுதி குரு ஸ்ரீ ஆதி நாராயணா’. குரு-சிஷ்ய பரம்பரையின் ஆரம்பம் நர மற்றும் நாராயணருடன் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

தர்மச் சக்கரத்தில், எழுத்தாளர் குரு-தமஹ் என்று கூறுகிறார், ஏனென்றால் அவர் எல்லாவற்றிலும் வியாபித்து, எங்கும் இருக்கிறார், அவருடைய போதனைகளைப் பெற நாம் செய்ய வேண்டியது எல்லாம், அதற்காக நாம் ஏங்குவதுதான். உண்மையான அறிவை (ஞானத்தை) அடைவதற்காக முன்னேற அவரது அருளுக்கான தேடுதலே தேவை.

—————

212-தாம –
இருப்பிடம் – மநு என்கிற பக்தன் இடம் அனைத்தையும் தன் கொம்பில் கட்டி விட சொல்லி ரஷித்தவன்-மீனாய் வந்து உய்யக்கொண்டவன் –

ஸம்ஹார நஶ்வர சராசர பீ₃ஜ ஆதா₄ர நவ்கர்ண (படகு-நாவாய் முகுந்தன்  )தா₄ரத்வேந ததா₃ஶ்ரயத்வாத்
தா₄ம । தா₄ஞ꞉
* ஸர்வதா₄துப்₄யோ மநிந், இதி மநிந் ப்ரத்யய ꞉ ॥

உணாதி ஸூத்ரம் –ஸர்வ தாதுப்ய —மனிந்-தாக்குவது என்ற பொருள் கொண்ட தா என்பது அனைத்து
வினைகளுடன் உள்ள போது அத்துடன் மதின் என்பது இணையும்
தாம +மன் +இன் =தாமன்

மீனாய் ஆமையுமாய்-2-1-10-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் -பெரிய திருமொழி -8-8-10-
தேவுடை மீனாய் ஆமையாய் -பெரியாழ்வார் -4-9-9-
முன்பு 62 த்ரி ககுத் தாம பார்த்தோம்

சராசரங்கள் அனைத்தையும் தாங்குபவர் -பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும்
கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

ஓம் குருதமாய நம:

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும்

ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்

குருதம: பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

தம என்றால் ‘உயர்ந்த’ அல்லது ‘சிறந்த’ என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.

‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன் முதலில் நான்முகனைப் படைத்தாரோ…

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————

தாம – உறைவிடம்

தாம என்பதற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன:

  1. வசிக்கும் இடம்;
  2. உச்ச ஒளி; மற்றும்
  3. அனைத்து விரும்பிய பொருட்களின் உறைவிடம்.

தாம முதலில் ‘த்ரி-ககுட்-தாம‘ என்று நாம 62 ஆகத் தோன்றியது. அதே விளக்கங்கள் இங்கேயும் பொருந்தும். ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் இணைத்து மத்ஸ்ய அவதாரத்தைக் குறிப்பிடுகிறார். பிரளய வேளையில் அசையும் மற்றும் அசையாத அனைத்துப் பொருட்களின் விதைகளைச் சுமந்து கொண்டு படகைச் செலுத்தும் தலைவன் போல இருப்பதால், பகவான் தாமனாக இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ சங்கரர் நாமத்தை உச்ச முன்னணி ஒளியாக விளக்குகிறார். அவரது கருத்துப்படி, நாராயண ஸூக்தம் ‘நாராயண பரோ ஜோதிஹ் – நாராயணனே இறுதி ஒளி’ என்று கூறுவதால் இந்த அர்த்தம் பொருத்தமானது.

ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா தனது கீதா பாஷ்யத்தில் (அத்தியாயம் 10 வசனம் 12) பரம் ப்ரஹ்ம பரம் தாம என்று கூறுகிறார், தாம – தாம சப்தோ ஜோதிர்வாசனஹ் – பரம் ஜோதிஹ் என்ற வார்த்தைக்கு “உச்ச ஒளி” என்று பொருள் தருகிறார். தர்ம சக்கரத்தில் எழுத்தாளர் “உச்ச ஒளி” என்ற வார்த்தையை மேலும் விரிவாகக் கூறுகிறார். சூரியனிடமிருந்து வரும் ஒளியைக் கண் பார்க்கிறது. ஆனால் சூரியனின் ஒளியோ அல்லது கண்ணோ அல்டிமேட்டைப் பார்க்க முடியாது. அதற்கு பகவானின் அருள், உள்ளொளி என்னும் ஒளி வேண்டும். இதுவே மஹா விஷ்ணு, தாமா என்பது உச்ச ஒளி, வேறு எந்த ஒளியும் செய்ய முடியாததை வெளிப்படுத்தும். அவரை அடைய வேண்டும் என்ற தீவிர ஆசையின் கண்தான் இந்த ஒளியைக் காண முடியும், வேறு எந்தக் கண்ணாலும் பார்க்க முடியாது.

கொடுக்கப்பட்ட பிற விளக்கங்கள் அடங்கும்

  • விரும்பிய பொருள்கள் அனைத்திற்கும் அவன் உறைவிடம்,
  • அவர் ஆசைகள் அனைத்திற்கும் இருப்பிடம்,
  • கர்மங்கள் முதலிய எல்லாவற்றுக்கும் அவனே இருப்பிடம்.

ஸ்வ அமி சின்மயாஆனந்தா, “உச்ச ஒளி” என்பதன் விளக்கத்திற்கு கூடுதலாக, அவர் இறுதி இலக்கு (தாமா அல்லது சிகரம்) என்பதால் அவர் தாமா என்று மாற்று விளக்கம் கொடுக்கிறார்.

தற்செயலாக, சார் தாம் பற்றிய குறிப்பு (அதாவது: ‘நான்கு வசிப்பிடங்கள்/இருக்கைகள்) என்பது இந்தியாவில் உள்ள நான்கு புனிதத் தலங்களின் பெயர்கள் ஆகும், அவை இந்துக்களால் பரவலாக மதிக்கப்படுகின்றன. அவை பத்ரிநாத், துவாரகா, ராமேஸ்வரம் மற்றும் ஜகன்னாத் புரி. ஒருவர் வாழும் காலத்தில் சார் தாம் தரிசனம் செய்வது இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.


213-ஸத்ய
நல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-(873)

மந்வாதி₃ஷு தத் கால ஸமாஶ்ரிதேஷு ஸத்ஸு ஸாது₄ரிதி
ஸத்ய ꞉ ॥
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7

தாஸ சத்யன் அடியவர்க்கு மெய்யன் திரு வஹீந்திர புரம்-பிரியம் மட்டும் செய்தால் பொய்யன்–ப்ரயோஜனாந்தர பரர்களும் வேண்டியதைத் தந்து அருளுபவர் -கோவிந்த ஸ்வாமி விரும்பியபடியே இங்கேயே இருந்து பின் வா என்று அருளினார் அன்றோ -ஹிதம் அருளி தன்னுடன் சேர்த்துக் கொள்ளுபவன் மெய்யன் –

பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

ஓம் தாம்னே நம:

தாம ஜ்யோதிதாம என்றால் ஒளி (ஜ்யோதி) என்று பொருள்

நாராயண பரோ ஜ்யோதி:’(நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாராயணரே உன்னதமான ஒளியாவார்

இதி மந்த்ர வர்ணாத் இந்த மந்திரத்தின் படி

தாம: பகவான் ‘ தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாம என்றால் ஒளி மிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளி வடிவினராக இருப்பதால் பகவான் ‘தாம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா அனைத்து ஆசைகளும் சென்றடையும் இடமாக இருப்பதால்

தாம: பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரம் ப்ரஹ்ம பரம் தாம‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரப்ரஹ்மமே அனைத்தும் சென்றடையும் இடமாக இருக்கிறார்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———

சத்யா – நல்லது

இந்த நாமம் முன்பு நம 107 ஆக இருந்தது, மேலும் ஒரு முறை நம 873 ஆக நிகழும். இந்த நாமத்தின் பொருளின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  1. அவர் தூய உண்மை.
  2. அவர் பிராணன், பொருள் மற்றும் சூரியனால் ஆனது.
  3. அவர் உன்னத ஆன்மாக்கள் மீது நல்ல மனநிலை கொண்டவர்.
  4. கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் அவர் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் அந்த நேரத்தில் தனது உதவியை நாடிய மனு போன்ற சத்-புருஷர்களுக்கு நல்லவராக இருந்ததால் அவர் சத்யா என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்ரீஆதிசங்கரர், ‘சத்யஸ்ய சத்யம்-அனைத்து உண்மைக்குப் பின்னும் உள்ள சத்தியம்’ என்று அனைத்தையும் சுருக்கமாகக் கூறுகிறார். சத்யா என்பது பாணினி சூத்திரம் 4.4.98 இன் அடிப்படையில் சத்தில் ‘சிறப்பாக’ இருப்பவர்.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், பகவான் கிருஷ்ணரின் வார்த்தைகளில் ‘சத்’ என்பதன் வரையறைக்காக பகவத் கீதையை (அத்தியாயம் 17 வசனங்கள் 26 மற்றும் 27) குறிப்பிடுகிறார்.

ஸத் பாவே ஸாது பாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே |
ப்ரஷஸ்தே கர்மணி ததா சச்-சப்தஹ் பார்த்த உச்யதே || (17.26)

ய~ஜ்னே தபஸி தநே ச ஸ்திதிஹ் சதிதி கோச்யதே |
கர்ம சைவ ததார்த்தீயம் ஸதித்யேவ அபிதீயதே || (17.27)
சத்‘ என்ற சொல் இருப்பு, நன்மை, நல்ல செயல்கள், தியாகத்தில் உறுதிப்பாடு, துறவு, வரங்கள் அல்லது அத்தகைய நோக்கங்களுக்காகச் செய்யும் செயல்களைக் குறிக்கிறது. இவை அனைத்திலும் சிறந்தவர் அல்லது இந்த வழியில் செயல்படுபவர்களுக்கு சிறந்தவர் (அதாவது ஆதரவளிப்பவர்) சத்யா ஆவார்.


214-ஸத்ய பராக்கிரம
வஞ்சனை அற்ற ஆற்றல்

தேஷு ஸத்யோ(அ)கைதவ ꞉ பராக்ரமோ வ்ருத்திரஸ்யேதி
ஸத்ய பராக்ரம꞉

பொய் கலவாமல் -பொய் கலவாது மெய்கலந்தான் வெண்ணெய் இடமும் ஆழ்வார் இடமும்

தீய புந்திக் கஞ்சனை வஞ்சனை செய்தவன்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சன் -பெரிய திருமொழி -7-10-8-

அஹம் வேத்மி –மஹாத்மாநம் ராமம் சத்ய பராக்ரமம்

மெய்யன் மெய்ய மலையான் சங்கு ஏத்தும் கையன்

மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்திய வசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் ஸத்யாய நம:

ஸத்ய வசன உண்மைக் கூற்றுக்களாகவும்

தர்ம ரூபத்வாத் அறமே வடிவானவராயும் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

புராணங்கள், அறத்தை நான்கு கால்கள் கொண்ட ஒரு எருதாக உருவகப் படுத்துகின்றன. அந்த நான்கு கால்களில் உண்மையும் ஒன்றாகும். முதல் யுகமான க்ருத யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த அறமானது, இந்தக் கலியுகத்தில் வாய்மை என்னும் ஒரே காலில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு மெய்யம் என்னும் திருத் தலத்தில், பகவான் ‘ஸத்ய மூர்த்தி’, ‘மெய்யன்’ என்ற திருநாமத்துடனே எழுந்தருளியிருக்கிறார்.

தஸ்மாத் ஸத்யம் பரம் வதந்தி

வேதங்களிலும்உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ளது: ஆகவே, அந்த (என்றும் மாறாது இருக்கும்) உண்மையான தத்துவத்தையே பரம்பொருள் என்று கூறுகின்றனர்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்யஸ்ய உண்மையான பொருட்கள் அனைத்திற்குள்ளும்

ஸத்யமிதி வா உண்மையின் வடிவாய் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணா வை ஸத்யம் தேஶாம் ஏஶ ஸத்யம்‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஜீவாத்மா என்றும் மாறாத உண்மைப் பொருளாகும். அதற்குள்ளும் (அதனிலும் மேம்பட்ட) உண்மையாக பரமாத்மாவே இருக்கிறார்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———

ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத

பராக்ரமோ யஸ்ய ஸ

வீரத்தை உடையவராதலால்

ஸத்ய பராக்ரம: பகவான் ‘ஸத்யபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் ‘ஸத்யபராக்ரம:’ (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

சத்ய-பராக்ரமா – தவறாத வீரம்

பராக்ரம் என்றால் வீரம். எனவே சத்திய பராக்கிரமம் உண்மையான வீரம் கொண்ட ஒன்றாகும். ஆதி சங்கரரின் வார்த்தைகளில், ‘சத்யஹ் அவிதாத: பராக்ரமோ யஸ்ய சஹ் – உண்மையான மற்றும் தடையற்ற வீரம்’.

ஸ்ரீ பராசர பட்டர், மத்ஸ்ய அவதாரத்தின் அடிப்படையில் நமஸ்ஸின் இந்த வரிசையின் விளக்கத்தைத் தொடர்கிறார், மனு மற்றும் பிறரிடம் துணிச்சலான செயல்களை பகவான் உண்மையாகச் செய்ததற்கான உதாரணத்தைக் கூறுகிறார். தர்மச் சக்கரத்தில் எழுத்தாளர் இரண்டு வகையான வீரம் இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார், ஒன்று ஸ்ரீ ராமனுடையது போன்ற மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றொன்று சக்தியை வெளிப்படுத்தவும் மற்றவர்களைக் காயப்படுத்தவும் பயன்படுகிறது. என்று அரக்கன் ராவணன். மஹா விஷ்ணுவை தியானிப்பது சரியான வகையான வீரத்தை வளர்க்கும் திறனை அளிக்கிறது.


215-நிமிஷ –
கண் மூடி -அநாஸ்ரிதரை கடாஷியாதவன்-நிமி வம்சம் சீதா பிராட்டி -காணாக் கண் இட்டு இருப்பது -வேறே -உயர்ந்த விஷயம்

தத்₃விரோதி₄ஷு நிமிஷதி – ந கடாக்ஷய தீதி
நிமிஷ꞉ ॥

சந்தமர் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன்
நின்றான் -பெரிய திரு மொழி -2-3-6-

நஷ்டம் பராக் தத் அலாபஸ் த்ரிலோகம் –ஸம்பத் அநயோதயம் -சதுஸ் ஸ்லோகி

சத்வ அசத்வ நிதானம் இருள் தரும் அமலங்களாக வென்னும் ஜன்ம ஜாயமான கால கடாஷங்கள்-

சத்வ நிதானம் இருள் தரும் வென்னும்
ஜன்மம்
ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்-

சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் –
அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———

ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே மூடியுள்ளன

யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள்

யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது

அதோ நிமிஶ: எனவே, பகவான் ‘நிமிஶ:’ (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் ‘நிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நிமிஷா – கண்களை மூடியவர்

ஆதி சங்கரரின் கூற்றுப்படி இதன் பொருள் ‘நிமீலிதே யதோ நேத்ரே யோகநித்ரா ரதஸ்ய அதோ நிமிஷா – அவரது கண்கள் யோகநித்ரா அல்லது யோக உறக்கத்தில் மூடப்பட்டிருக்கும், எனவே அவர் நிமிஷா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் இதை ‘ந ஈக்ஷதே இதி நிமிஷாஹ்‘ என்று விளக்குகிறார். அவரை எதிர்ப்பவர்கள் மீதும் அல்லது அவரது பக்தர்கள் மீதும் அவருடைய அருள் பார்வை படுவதில்லை.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் அவர் நிமிஷா (மூடிய கண்களுடன்) என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவருக்குப் பார்க்க அவரது கண்கள் தேவையில்லை.

அவர் எங்கும், நம் ஒவ்வொருவரிடமும், எல்லா நேரத்திலும் இருப்பதால், கண்கள் இல்லாமல் எல்லா இடங்களிலும் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதால், அவர் தனது மூடிய கண்களால் அனைத்தையும் பார்க்கிறார் என்று தர்ம சக்கரம் எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார்.

விஷ்ணுவின் யோக நித்ராவைப் பற்றி சிந்திப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த நிலையில் (பொதுவாக, நம் கண்கள் திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும், அவர்கள் அலைந்து திரிவார்கள்) உலக எண்ணங்கள்!).


216-அநிமிஷா –
மீன் பார்வையாலே முட்டைகளை வளரச் செய்யும்-கீழ் தன்மைகளை சொல்லி இங்கு அவதார திரு நாமம்

க ஏவம் ?
அநிமிஷ꞉ ;
ஸத்ஸு ந நிமிஷதி ஜாக₃ர்தீதி
அநிமிஷ꞉,
தி₃வ்ய மீந தநு꞉ ॥

ஆஸ்ரிதர்களை குளிரக் கடாஷித்து அருளி
மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-

சபரி -விதுரர் -ரிஷி பாதணிகளை பூதராக்கும் நெடு நோக்கு கொள்ளும்

கற்பார் ராமபிரானை அல்லால் -விதியைச் சொல்லி உத்தரம் வார்த்தை அறிபவர் சரம ஸ்லோகம் கீதாச்சார்யர்

சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில்
இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் அநிமிஶாய நம:

நித்ய எப்பொழுதும்

ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் விழிப்புடன் இருப்பதால்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார். நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லை. எனவே, அவர் ‘அநிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபுத்த என்ற சொல்லிற்கு பல பொருட்களுள் உண்டு. அவற்றுள் ‘விழிப்புடன் இருத்தல்’, ‘அறிவொளியோடு இருத்தல்’ என்பவையும் அடங்கும். இங்கு பகவான் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்று பொருள். யோக நித்திரையில் கண்களை மூடி இருந்தாலும், விழிப்புடனேயே இருக்கிறார். மேலும், அவரது அறிவானது என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.

மத்ஸ்யரூபதயா வா மீனாக அவதரித்ததனாலும்

ஆத்மரூபதயா வா (அனைவருக்குள்ளும்) உறையும் ஆத்மாவாக இருப்பதனாலும்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார். மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாது. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார். புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்) ஆத்மா தூங்குவதில்லை. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.

மத்ஸ்யாவதார வரலாறு:

முந்தைய கல்பத்தின் முடிவில் (அதாவது, ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுதின் முடிவில்) ஹயக்ரீவன் என்ற அசுரன் ப்ரஹ்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். ப்ரஹ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அந்த வேதங்களை மீட்க முடிவெடுத்தார். அச்சமயம், ஸத்யவ்ரதன் என்றொரு த்ராவிட தேசத்து அரசன் இருந்தான். அவன் (இன்றைக்கு நாம் ‘வைகை’ என்று அழைக்கும்) க்ருதமாலா நதிக்கரையில் நீராடும் வேளையில் பகவான் அவன் கைகளில் ஒரு சிறு மீனாகத் தோன்றினார்.

பெரும் திமிங்கலங்களும், முதலைகளும் வாழும் சமுத்திரத்தில் தம்மால் வாழ இயலாதென்றும், தம்மை காக்குமாறும் அந்த மீன் (பகவான்) வேண்ட, ஸத்யவ்ரதன் அந்த மீனை தன் கமண்டலத்தின் கொண்டு சென்றான். அவன் அரண்மனையை அடையும் பொழுதே அந்த மீன் அவனது கமண்டலம் வரையிலும் வளர்ந்தது. அவன் அதை ஒரு தொட்டியில் விட, தொட்டில் வரையிலும் வளர்ந்தது. பின்னர் குளம், ஏரி ஆகியவற்றில் விட அந்த மீன் அந்தந்த அளவிற்கு வளர ஸத்யவ்ரதன் இது ஒரு சாதாரண மீன் அல்ல என்று உணர்ந்தான்.

அவன் வேண்ட, பகவான் அவனுக்கு காட்சியளித்தார். ‘அன்றிலிருந்து ஏழாவது நாளில் பூமி ஒரு பெருமழையால் மூழ்கும் என்றும் அப்பொழுது ஒரு படகு தோன்றுமென்றும், அப்படகில் ஸத்யவ்ரதன், ஸப்த ரிஶிகள் மற்றும் அனைத்து வகை மூலிகைகள் மற்றும் விதைகளை ஏற்றிக் கொண்டு அந்த படகை (மீனான) தனது கொம்பில் வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு கட்டி விடுமாறும்’ கூறிவிட்டு மறைந்தார்.

அவ்வாறே, ஏழாம் நாள் பெருமழை பொழிய, ஒரு படகும் தோன்றியது. ஸத்யவ்ரதனும் பகவான் கூறியபடியே ஸப்தரிஷிகள் மற்றும் மூலிகைகளையும் அந்த படகில் ஏற்றிக் கொண்டு, வாசுகியை பகவானின் (மத்ஸ்யாவதார மூர்த்தியின்) கொம்பில் கட்டினான். பகவான் ஸத்யவ்ரதனுக்கும், ஸப்தரிஷிகளுக்கும் வேதார்த்தங்களை உபதேசித்த படியே ப்ரளய ஜலத்தில் அந்த படகை வழி நடத்தி சென்றார்.

முடிவில், கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவனைக் கொன்று அவனால் கவரப்பட்ட வேதங்களை மீட்டு ப்ரஹ்மாவிடம் தந்தருளினார்.

இந்த ஸத்யவ்ரதனே இந்த கல்பத்தின் மனுவாக நியமிக்கப்பட்டார்.

———-

அனிமிஷா – எப்போதும் விழித்திருப்பவர்

ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை மத்ஸ்ய அல்லது வான மீன் அவதாரத்தின் அடிப்படையில் விளக்குகிறார். இந்த அவதாரத்தில், அவர் ஒருபோதும் தனது கண்களை மூடுவதில்லை மற்றும் அவரது பக்தர்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பார் (மீன்களுக்கு கண் இமைகள் இல்லை, எனவே அவற்றின் கண்களை மூடவே இல்லை).

ஸ்ரீ ஆதிசங்கரர் இரண்டு கூடுதல் விளக்கங்களைத் தருகிறார் – அவர் தனது ஞானத்தின் காரணமாக எப்போதும் விழித்திருக்கிறார், அல்லது அவர் ஆத்மா ஸ்வரூபம், மற்றும் ஆத்மா ஒருபோதும் தூங்குவதில்லை. ‘நித்ய ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் அனிமிஷா மத்ஸ்யரூபதாயா வா ஆத்மாரூபதாயா வா அனிமிஷா’ என்கிறார்.

என் அமுதினைக் கண்ட கண்கள் மாதொன்றினைக் காணவே” என்ற அமலன்ஆதிபிரானில் திருப்பனாழ்வாரின் நிறைவுப் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருக்கோயிலில் இறைவனின் அழகை வர்ணிக்கும் போது ஆழ்வார் இதைப் பாடிய போது, ​​அகக் கண்களுக்கும் பொருந்தும்.

இந்த நாமத்தை தியானிப்பவர் ஆன்மீக ரீதியில் எப்போதும் விழிப்புடன் இருப்பார் என்றும், கெட்ட எண்ணங்கள் மற்றும் உலக கவனச்சிதறல்கள் அவரது மனதில் நுழையாது என்றும் இந்த பெயரின் முக்கியத்துவத்தை தருகிறார் தர்ம சக்கரம் ஆசிரியர்.


217-ஸ்ரக்வீ
பரத்வ ஸூ சகமான மாலை அணிந்தவன் -வைரம் முத்து போன்ற  ஐந்து வித வைஜயந்தி மாலை-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் வைஜயந்தி அம்ச அவதாரம்

திர்யக்த்வே (அ)பி பரத்வ ஸூசிநீ வைஜயந்தீ ஸ்ரக₃ரஸ்ய நித்ய யோகி₃நீதி
ஸ்ரக்₃வீ ।
* அஸ்மாயா மேகா₄ஸ்ரஜோ விநி꞉ இதி விநி

அஷ்டாத்யாயீ –அஸ் மாயா மேதா ஸ்ரஜஸ் விநி —
மாயா–மேதா –ஸ்ரத் என்பதுடன் சேர்ந்து இருத்தல் என்பதை உணர்த்தும் விநி என்பது உண்டாகும்

கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை மினுங்க நின்று விளையாட -நாச் -14-2-
திருத் துழாய் மாலையைச் சொல்லிற்றாகவுமாம்
தோளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடைய அம்மான் -1-9-7-

மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக -பஞ்ச பூத ஸூஷ்மங்கள் சேர்ந்ததான-வைஜயந்தி என்னும் வன மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் வன மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————

ஓம் ஸ்ரக்விணே நம:

பூததன்மாத்ரரூபாம் பஞ்ச பூதங்கள், மற்றும் தன்மாத்திரைகளின் வடிவமான (அதாவது புலன்களின் சூட்சுமமான நிலை)

வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ என்ற பெயருடைய

ஸ்ரஜம் மாலையை

நித்யம் என்றும் (எக்காலத்திலும்)

பிபர்த்தீதி தாங்கியிருப்பதால் (அணிந்திருப்பதால்)

ஸ்ரக்வீ பகவான் ‘ஸ்ரக்வீ” (மாலையை அணிந்திருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பஞ்சபூதங்கள், மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான ‘வைஜயந்தி’ என்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார். எனவே, அவர் ‘ஸ்ரக்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்மாத்திரைகள்  இவை நம் புலன்களின் சூட்சும வடிவங்களாகும். இந்த தன்மாத்திரைகளே நமது புலன்களுக்கு அதன் சக்தியை வழங்குகிறது (உதாரணமாக, ஶப்த தன்மாத்திரையிலிருந்து நமக்கு கேட்கும் திறன் கிடைக்கிறது).

நித்யம்  எப்பொழுதும். பகவான் வைஜயந்தி மாலையை எப்பொழுதும், எல்லா அவதாரத்திலும் (நமக்குத் தெரியாவிடினும்) அணிந்துள்ளார். சங்கு, சக்கரம் போன்று வைஜயந்தி மாலையும் பகவானுடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு அடையாளமாகும்.

ஸ்ரக்வீ – மாலையால் அலங்கரிக்கப்பட்டவள் (வைஜயந்தி)

ஸ்ரக் என்ற சொல் மாலையைக் குறிக்கிறது. ஸ்ரக்வீ ஒரு மாலையால் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டவர். பாணினியின் அஷ்டாத்யாயி 5.2.121 படி – மாயா மேதா ஸ்ரஜோ விநிஹ் – ஸ்ரஜுக்குப் பின் வரும் ‘வின்’ என்ற இணைப்பு ‘உடன் இணைந்து’ என்பதைக் குறிக்கிறது. எனவே இங்கு பொருள் ‘எப்பொழுதும் மாலையால் அலங்கரிக்கப்பட்டவர் – ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் வைஜயந்தி மாலையைக் குறிக்கிறது.

பூத தன்மாத்ர ரூபம் வைஜயந்த்யாக்யம் ஸ்ரஜம் நித்யம் பிபாரதி இதி ஸ்ரக்வீ – தன்மாத்ரங்களின் ஐந்து அடிப்படை கூறுகளை (சுவை, பார்வை, ஒலி, வாசனை மற்றும் உணர்வு) குறிக்கும் வைஜயந்தி என்ற மாலையை எப்போதும் அணிந்திருப்பதால் அவர் ஸ்ரக்வீ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி விஷ்ணு புராணத்தின் குறிப்பைக் கொடுக்கிறார் –
பஞ்ச ஸ்வரூப யா மாலா வைஜயந்தி கதா பிரிதா |
ச பூத ஹேது ஸங்காதா பூதா மாலா ச வை த்விஜா || (1.2.72)

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டா என்பது ‘ஸ்ரிஜ்’ என்பதிலிருந்து தொடங்கும் அர்த்தம், ‘உருவாக்க அல்லது அமைக்க’. நட்சத்திரங்கள், சூரியன் முதலான படைப்புகள் அனைத்தும் அவனுடைய படைப்புகள் என்பதால், அவன் ஸ்ரக்வீ. ஒரு மாலையில், பல்வேறு வகையான பூக்கள் இருக்கலாம், ஆனால் அவை மாலையின் ஒரு பகுதியாக இருக்கும்போதே தங்கள் அடையாளத்தை இழக்கின்றன. மேலும், இந்த வெவ்வேறு படைப்புகள் அனைத்தும் ஸ்ராக்வீ அல்லது பகவான் விஷ்ணுவைப் போல ஒன்றாக உள்ளன. அல்லது, நம் சமுதாயத்தில் உள்ள ஒரு சிறந்த நபரின் கழுத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம் போல, பகவான் இந்த தனித்துவமான மாலையால் அவரது இறைவனையும் மேன்மையையும் குறிக்கிறார்.

முத்து, மாணிக்கம், மரகதம், நீலம், வைரம் ஆகிய ஐந்து விலையுயர்ந்த ரத்தினங்களால் ஆனது வைஜயந்தி என்று பேராசிரியர் ஏ. சீனிவாச ராகவன் குறிப்பிடுகிறார்.

தர்ம சக்கரத்தில் உள்ள எழுத்தாளர், விஷ்ணுவின் சேவையில் நமது அனைத்து தனமாத்ரங்களையும் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் (ரங்கநாதருக்கு அது போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் தன்னை மலர் மாலையால் அலங்கரித்த ஆண்டாள் உதாரணத்தை கூறுகிறார்)


218-வாசஸ்பதி –
சொல்லுக்கு அதிபதி-மேலும் இந்த நாமம் வரும் –

ஸ ஏவ ஶ்ரீமந் மாத்ஸ்ய புராணேந வேத₃உப ப்₃ரும்ஹணாத்₃
வாஸ ஸ்பதி꞉ ।
ஷஷ்ட்₂யா அலுக்,
* ஷஷ்ட்₂யா ꞉ பதி புத்ர இத்யாதி₃ நா ஸத்வம் ॥

சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்ல வல்லரே -திருச்சந்த -118-

மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர்-வாக்கு என்னும் சொல்லுக்கு அதிபதி -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:

வாசோ வித்யாயா ‘வாச’ என்றால் அனைத்து வகையான அறிவையும் குறிக்கும்

பதிஅவற்றின் தலைவர் (அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றவர்)

வாசஸ்பதி‘வாசஸ்பதி:’ என்று அழைக்கப்படுகிறார்

ஸர்வார்த்தவிஶயாதீர் அனைத்து பொருட்களையும் உள்ளபடி அறியும்

புத்திரஸ்யேத்யுதாரதீஅறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார்

வாசஸ்பதிருதாரதீ: எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாச’ என்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்) குறிக்கும். வாசஸ்பதி என்றால் ‘அறிவின் தலைவர்’ என்று பொருள். அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார். எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இத்யேகம் நாம | பொருள் தனித்தனியே இருப்பினும் ‘வாசஸ்பதி’, ‘உதாரதீ’ ஆகியவை இணைந்து ‘வாசஸ்பதிருதாரதீ’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.

———

வாசஸ்பதி – பேச்சின் இறைவன் 

ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீமத் மத்ஸ்ய புராணத்தின் மூலம் வேத அறிவை எடுத்துரைத்ததால், அவர் வாசஸ்பதி என்று கூறுகிறார். மத்ஸ்ய புராணத்தில் உள்ள வெளிப்பாட்டின் சக்தியே வாச்சஸ்பதியின் குணத்தை வெளிப்படுத்துகிறது.

ஸ்ரீஆதிசங்கரர் இந்த நாமத்தையும், அடுத்த நாமத்தையும் – உதாரதிஹ், ஒரு நாமமாக விளக்குகிறார். அவர் விளக்குகிறார் ‘வாச்சோ வித்யாயாஹ் பதிஹ் வாசஸ்பதி; ஸர்வார்தவிஷயா தீஹ் புத்திஹ் அஸ்ய இதி உதாராதீஹ், வாசஸ்பதி ருதாராதீ இதி ஏகம் நாம – அவர் அனைத்து அறிவுக்கும் அதிபதி, அற்புதமான புத்திசாலி.’ இவ்வாறு இது பகவானின் இரண்டு தொடர்புடைய பண்புகளை இணைத்து ஒரு பெயர். ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், பகவான் வித்யா அல்லது வேதத்தின் மாஸ்டர் என்பதைக் குறிக்க, வாசஸ்பதி என்ற சொல்லை விளக்குகிறார்.


219- உதார தீ
சிறந்த ஞானம் உடையவன் -சர்வஞ்ஞன் -எல்லையில் ஞானத்தன் -கம்பீர ஸ்வபாவன்-தயாளு ஞானவான்

ஏவம் ஸர்வ உப ஜீவ்ய ஸார்வஜ்ஞ்யாத்₃
உதா₃ரதீ₄꞉

ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-9-

ஞானக் கை தா காலக் கழிவு செய்யாமல்-

யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர் -ஸர்வஞ்ஞர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் –
வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் –
உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

உதார-தீஹ் – பரந்த அறிவைக் கொண்டவர்.

இங்கு ‘தீ’ என்றால் புத்தி அல்லது புத்தி. உதாரா என்றால் தாராளமான, உன்னதமான, புகழ்மிக்க, முதலியன. உதாராதீஹ் என்றால் தன் பக்தர்களிடம் தாராள மனப்பான்மை கொண்டவர், அல்லது எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் கைப்பற்றக்கூடிய புகழ்பெற்ற அல்லது அற்புதமான புத்திசாலித்தனம் கொண்டவர்.

ஸ்வாமி சின்மயாநந்தா, பகவான் தனது பக்தர்களின் இதயத்தின் பலவீனத்தைப் பாராட்டுவதற்குப் பெரிய மனதுடன் சகிப்புத்தன்மை கொண்டவர் என்றும், பொதுவாக பாவிகளிடம் மிகுந்த அனுதாபத்தையும் அளவற்ற கருணையையும் வெளிப்படுத்துகிறார் என்றும் விளக்கம் தருகிறார். கண்மூடித்தனமான மற்றும் சமரசமற்ற உடல் இயற்கையின் விதிகளைப் போலல்லாமல், நம்முடைய மீறல்களைக் கவனிக்க அவருக்கு போதுமான தந்தையின் கருணை உள்ளது.


211-குருர் குருதம-
மத்ச்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால் ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

212-தாம –
பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும் கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

213-சத்ய –
பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத்   தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

214-சத்ய பராக்ரம-
மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

————————————————————

உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்தியவசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

215-நிமிஷ –
சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் -அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

216-அநிமிஷ-
சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம  ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில் இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

217-ஸ்ரக்வீ-
மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக வைஜயந்தி மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

218-வாசஸ்பதி –
மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

219-உதாரதீ –
யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர்  -ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் -வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் -உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———

‘குருதமோ குரு:’ என்றால் குருவுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் என்று பொருள். அவ்வாறு குருவுக்கெல்லாம் குருவாக விளங்கி
நடாதூர் அம்மாள் போன்ற குருமார்களை எல்லாம் உருவாக்கியபடியால், மத்ஸ்யாவதாரப் பெருமாள் ‘குருதமோ குரு:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 211-வது திருநாமம்.

“குருதமோ குரவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்வழிகாட்டும் சிறந்த
குருநாதர் அமையத் திருமால் அருள் புரிவார்.

ஊழிக் காலத்தில், பாருக்கெல்லாம் (அனைத்துலகுக்கும்) பாராக (இருப்பிடமாக) இருந்த படியால், மத்ஸ்ய மூர்த்தி ‘தாம’ என்றழைக்கப்படுகிறார்.
‘தாம’ என்றால் அனைவருக்கும் இருப்பிடமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 212-வது திருநாமம்.
“தாம்னே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் எப்போதும் புகலிடமாக இருந்து அவர்களைக் காத்தருள்வார்.

உயர்ந்த உண்மைகளையும் ரகசியங்களையும் அடியார்களுக்கு மத்ஸ்யபுராணம் மூலமாகவும்,
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மூலமாகவும் வெளியிட்ட மத்ஸ்ய மூர்த்தி, ‘ஸத்ய:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸத்ய:’ என்றால் அடியார்களிடத்தில் உண்மையாக இருப்பவர் – அதாவது, வெறும் உண்மையைச் சொல்லாமல்,
மிகச்சிறந்த நன்மை பயக்கும் உண்மையை வெளியிடுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 213-வது திருநாமம்.
“ஸத்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் எந்நாளும் வாய்மையிலிருந்து வழுவாதபடி திருமால் அருள்புரிவார்.

மெய்யடியார்களுக்குத் தனது வீர தீர பராக்கிரமங்களை நன்கு காட்டி அருளுவதால்,
மத்ஸ்யமூர்த்தி ‘ஸத்யபராக்ரம:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸத்ய:’ என்பது மெய்யடியார்களைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் தனது பராக்கிரமங்களை வெளிப்படுத்திக் காட்டும் திருமால்
‘ஸத்யபராக்ரம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 214-வது திருநாமம்.
“ஸத்யபராக்ரமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் தனது மேன்மைகளை நன்கு காட்டியருள்வார்.

வடமொழியில் ‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடிக் கொள்ளுதல் என்று பொருள்.
அறவழியில் வாழும் அடியார்களுக்கு மட்டும் கண் திறந்து அருள்புரிந்து விட்டு,
அறவழிக்குப் புறம்பாக வாழ்வோரைக் கண்ணால் பாராமல் கண்களை மூடிக் கொண்டதால்,
மத்ஸ்ய மூர்த்திக்கு ‘நிமிஷ:’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 215-வது திருநாமம்.

“நிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அறநெறியிலிருந்து வழுவாத படித் திருமால் காத்தருள்வார்.

“அடியார்களின் மேல் கண்களின் கடாட்சத்தை நன்கு பொழிவதற்கு நாமே மீனாகப் பிறப்பது தான் சிறந்த வழி!” என்று கருதிய திருமால்,
மத்ஸ்யாவதாரம் செய்து, பிரம்மா, மனு, சப்தரிஷிகள், சத்தியவிரத மன்னன் உள்ளிட்ட மெய்யடியார்களின் மீது
தனது அருட்பார்வையை நன்கு பொழிந்தார். ஒருநொடி கூட கண்களை இமைக்காமல் தொடர்ந்து அவர்களைக் கடாட்சித்தார்.

‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடுதல், அல்லது இமைத்தல்.
கண்களை இமைக்காது தொடர்ந்து அடியார்களைக் கடாட்சித்தபடியால், மத்ஸ்யமூர்த்தி ‘அநிமிஷ:’ கண்களை இமைக்காதவர்
என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர
நாமத்தின் 216-வது திருநாமம்.

“அநிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலின் அருட்பார்வை பரிபூரணமாகக் கிட்டும்.

மத்ஸ்ய மூர்த்தியைத் திருமாலின் அவதாரம் என்று சத்தியவிரதர் அடையாளம் கண்டுகொள்ள ஏதுவாகக் கழுத்தில்
வைஜயந்தி வனமாலையுடன் தோன்றியதால், மத்ஸ்யமூர்த்தி ‘ஸ்ரக்வீ’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘ஸ்ரக்’ என்றால் மாலை, ‘ஸ்ரக்வீ’ என்றால் மாலையை அணிந்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 217-வது திருநாமம்.

“ஸ்ரக்விணே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி, திருவரங்கத்தில் தசாவதார சந்நதியில் உள்ள
மத்ஸ்ய மூர்த்தியைத் தியானித்து வரும் அன்பர்களின் இல்லங்களில்,
விரைவில் மாலை மாற்றும் வைபவம் நடக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

‘வாக்’ என்றால் பேச்சு. ‘வாசஸ்பதி:’ என்றால் பேச்சுக்கு அதிபதி என்று பொருள்.
கூறுவதற்கரிதான பற்பல வேத ரகசியங்களை எல்லாம் மத்ஸ்யபுராணத்தில் விளக்கி அருளியதால்
மத்ஸ்யமூர்த்தி ‘வாசஸ்பதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 218-வது திருநாமம்.

“வாசஸ்பதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல பேச்சாற்றலைத் திருமால் அருள்வார்.

பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி
வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார்.
இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்?
அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’ என்றழைக்கப்படுகிறார்.

பரந்த மனப்பான்மையை வடமொழி யில் ‘உதாரம்’ என்று சொல்வார்கள்.
‘உதாரதீ:’ என்றால் விசாலமான கருணை உள்ளத்தை உடையவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.“உதாரதியே நமஹ” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்களின் மீது திருமால் தனது விசாலமான கருணையைப் பொழிவார்.

—————

ஸ்ரீ மத்ஸ்ய அவதார பரமான அருளிச் செயல்கள்

அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –வேத பிரதமான ஹம்சமும் – பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும்- ஹிரண்ய நிரசன அர்த்தமான நரசிம்ஹமும் –இந்திர அபேஷித சம்விதானம் பண்ணும் வாமனனும்-மந்திர ஆதாரமான கூர்மமும் ஆனவனே -இத்தால் –-ஆஸ்ரித சம்ரஷித அர்த்தமாக -அசாதாரண திவ்ய விக்ரகத்தை அழிய மாறிக் கொண்டு – அவ்வவ தச குண அநு குணமாக -ரஷிக்கும் அவன் என்கை-உம்மைத் தொகை ஒவ்வொன்றுக்கும் -அந்த அந்த சேஷ்டிதங்கள் தனித்தனியே ஆகர்ஷணமாக இருப்பதால்

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3 -3-7 –பூமி உத்தாரணம் பண்ணின வராஹமும் –மந்தர ஆதாரமான கூர்மமும் – பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும் ஆன-(நரசிம்ம வாதி அவதாரங்கள் இருக்க இம்மூன்றையும் ஒரு கோவையாக அருளிச் செய்தது ) இத்தால் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை அழிய மாறி  – திர்யக் சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணி அருளின நீர்மையை சொல்லுகிறது-வராஹ அவதாரத்தை முற்படச் சொல்லிற்று -பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை எடுத்த அளவு அன்றிக்கே -சம்சார ஆர்ணவ மக்நரான சேதனரை உத்தரிப்பைக்காக
தத் அநுரூப உபாயங்களை உபதேசித்த ஏற்றத்தைப் பற்ற –-ஏனத் துருவாய்  இடந்த பிரான் –  ஞானப் பிரான்-(திரு விருத்தம் -99-) -என்றார் இறே ஆழ்வாரும்-திரு மங்கை ஆழ்வாரும் -ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான் ( 2-7-)-என்ற அநந்தரம்-ஞானத்தின் ஒளி உருவை -என்றார் இறே-இவர் தாமும் –எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து-( 4-2 ) -என்று மேலே அருளி செய்கிறார் இறே-மத்ஸ்யாதி அவதாரங்கள் பிரஸித்தமாய் இருக்கச் செய்தேயும்-அன்னமும் மீன் யுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே-(ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-5-11) என்பது–ஆனாயன் ஆனான் மீனோடு ஏனமும்-(திருவாய் -1-8-) என்பது-இப்படியே பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய என்று மாறாடி அனுசந்திப்பது-மீனோடு ஆமை கேழல் -(8 -10-10-)என்று அடைவே அனுசந்திப்பது ஆகிறது –-யுகே யுகே ஸம்பவாமி -என்கிற நியாயத்தையும்-வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் –ஊழி தோறு ஊழி வேறவன் (திருவாய்-7-3-11 ) -என்கிற அவதார ரஹஸ்யங்களையும் விஸதமாக அறிந்தவர்கள் ஆகையாலே இறே –

தேவுடைய மீனமாய்  யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய்
முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது-தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்—தேவுடைய-த்யோதமாந குணங்களை யுடையவனாய்
ஆபத் ரக்ஷகங்களுமான–(மீனமாய் )பிரளயத்தை வற்றுவித்து-வானோரளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வந்து உய்யக் கொண்ட மத்ஸ்ய அவதாரமாய்——-முடிப்பான் கோயில் அவ் வவதாரங்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இழக்க வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற கோயில் –

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –35-ஜலத்தில் உள்ள மீனுமாகியும்-மிகுந்த அன்பையும் காட்டியும் அருளி-பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -எனவே மிக்கதாய் –

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் –-இன் தொண்டர்க்கு இன் அருள் புரிந்த உபகாரம் தாஸோஹம் என்று அறிய வைத்த அருள்–இப்படிப் பட்ட ருசியை உடையராய் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –

கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்  அண்டமும் சுடரும் அல்லா  ஆற்றலும் ஆய எந்தை  ஒண் திறல் தென்னன் ஓட  வட அரசு ஓட்டம் கண்ட  திண் திறலாளர் நாங்கூர்த்  திருமணிக்கூடத்தானே.  –4-5-6- ஸ்ரீ மத்ஸ்யமும் ஸ்ரீ வாமனனும் ஸ்ரீ அன்னமும் ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரசிம்ஹமும் ஸ்ரீ ஹயக்ரீவரும்–அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து அவ் ஊரில் உள்ளார் இருப்பது (ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் இவர்களே செய்ய வல்லவர்கள் )

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு  ஏறுகைக்காக-வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்-அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்-மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்-இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்-நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம் என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

கொழுங் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன்
எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி  வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2—மிக்க ஜலமானது பூமியை அடையக் கொண்ட காலம் – கொழு விதமான-த்ருடமான கயலாய்-குல வரைக்கு மேலே போய் அண்ட பித்தி அளவும் செல்லத் துள்ளி ஸ்வைரமாக லீலா ரசம் அனுபவிக்கும் ஸ்வ தந்த்ரன்  –

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்

தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில்  கண்டேனே—6-8-2-மீனாய் பிரளயம் கொண்ட பூமியை ரஷித்த படி-மூழ்த்த நாள் –லோகத்தை பிரளயம் கொண்ட காலத்து –அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத் –அந்நீர் தானே -பாடி காப்பாரே களவு காணுமா போலே-
ஜகத்தை அடையக் கோக்க ஒரு மத்ஸ்யமாய் அத்தை தன்னுடைய செலுவிலே ஏக தேசத்திலே அடக்கினான் ஆய்த்து –கடல் கடைகைக்கு தேவர்களையும் அசுரர்களையும் கூட்டி-தானான மேன்மை குறையாதே நிற்க வேண்டிற்று – ஜகத்துக்காக வந்த பிரளயத்தை பரிகரிக்கிற இடத்தில்-அங்கன் ஒரு சகாயமும் இன்றிக்கே-தானும் தன்னைக் குறைய விட்டு நிற்கும் அளவிலே ஆய்த்து-ஓன்று செய்யும் இடத்தில் அநேகம் பேரைக் கூட்டி கொண்டு செய்யவும் வல்லனாய்-தனியேயும் செய்ய வல்லனுமாய் இருக்கும் பெருமானை – சர்வாதிகன் உடைய செயல் இறே –

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –பூமியை சிருஷ்டித்து பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து-திரியவும்
பிரளயம் வர -வயிற்றிலே வைத்து – திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு-இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார் மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்

தார் மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-கடலிலே அக் கடல் கண் செறி இட்டால் போலே(நெருக்கமாக வியாபித்து ஒரு லக்ஷம் யோஜனை-10 லக்ஷம் mile)
இருக்கிற வடிவை உடைய மத்ஸ்யமாய் –அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -(11-4-)-என்னக் கடவது இறே –கடலிலே நீர் குழம்பிச் சேறாம் படி இறே கொண்ட வடிவின் பெருமை –
அன்றிக்கே-ஜலசர ஜாதியுமான வடிவை உடைய ஆமையாய் –(தண்ணீரில் நீந்தும் -ஜலத்தில் பிறந்த இரண்டு உருவங்கள் என்றுமாம் )

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்

ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-தேவர்கள் எல்லை அளவும் செல்லக் கடல் வெள்ளம் பரந்த நாள் அத்தை அடைய தன்னுடைய ஒரு   செலுவிலே அடக்க வல்ல மிடுக்கை உடைய மத்ஸ்யமாய் வந்து –வியந்துய்யக் கொண்ட –நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே-இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே-வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான் ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால் தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்-சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து ) அங்கனும் அன்றிக்கே –விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –தண் தாமரைக்கண்ணன் –
மத்ஸ்ய கமல லோசன
-என்னக் கடவது இறே –ஆனா வுருவிலானா யவனை-சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –(சதைக ரூப ரூபாயா -ஸ்வரூபமும் உருவமும் மாறாதவை அன்று )-ஆனாத வுரு -கெடாத வுரு என்றபடி –

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி-ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்-2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்-4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்-8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம் 9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )

வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன்

போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —-9-1-3-எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட ஆகாசமும் பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட -இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-இழந்த வேத சஷூசை மீட்டுக் கொடுக்கைக்கு ஈடான அன்னமாயும்-ஸ்ரீ வராக புராணத்தை அருளிச் செய்தும் ஸ்ரீ மத்ஸ்ய புராணத்தை அருளிச் செய்தும் (ஸ்ருதி ஸ்ம்ருதி -வேதம் ஸ்ரீ வராஹ புராணம் -மத்ஸ்ய புராணம் )இப்படி தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த
ஜகத் காரண பூதனானவன் –(தான் உண்டாக்கிய ஜகத்தை ரக்ஷணம் தானே தானே பண்ண வேண்டும் ) திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –

நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே
–11-4-1-நிலை கொள்ளலாவதொரு இடமும் இன்றிக்கே ஆழம் காலாய்   இருக்கிற -என்னுதல் –
ஓர் இடத்திலே நில்லாதே அலைஞ்சு வருகிறது -என்னுதல்
இது கீழ் இது நடுவு இது மேல் -யென்று பரிச்சேதிக்க ஒண்ணாத மஹா பிரளயம் –லோகத்துக்கு ரஷகரான தேவர்கள் குடி இருப்பையும் கூட மேலிட –நாம் ரஷகராம் எல்லை கழிந்தது -யென்று தேவர்கள் கவிழ்  தலை இட –-அன்றிக்கே –தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன – மேலாய் இருப்பதொரு  இருப்பிடம் அற்று எங்களுக்கு ரஷகர் இல்லை யென்ன –நான் உளனாய் இருக்க நீங்கள் அஞ்ச வேணுமோ – நான் ரஷகனாய் இருக்கிறேன் – என்னும் படியான  கிருபையாலே –ஷூபிதமாய் வருகிற கடல் குழம்பாம் படியாக தன் கீழ் வயிற்றிலே அலை எறியும் படியாகவும்-ஆகாசத்தில் ப்ரஹ்மாதிகள் குடி இருப்பிலே வீசும் படியாக தன் திரு முதுகிலே-மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம்  தாரகமான வஸ்துவை –சர்வாதிகனான சர்வேஸ்வரனை –அவன் அப்படி தன்னுருக் கொடுத்து-வேற்றுருக்  கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் -( பக்தானாம் ப்ரஸாததே ) உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை-( இதுவே அரிய சேவை நமக்கு -இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ 

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே
–1-8-8-சர்வாதிகனான தானே இறே திர்யக் சஜாதீயன் ஆனான்-அவன் க்ரமத்திலே பிறக்கச் செய்தேயும் – அனுசந்தானத்தில் பதற்றத்தாலே ஏக காலத்திலே இரண்டு அவதாரம் போலே சொல்லுகிறார்-வடிவும் சொலவும் செயலும் ஜாதிக்கு அடுத்தவையாய் இருக்கை-இதுக்கு ஹேது என் என்னில்-என் பக்கல் தனக்கு உண்டான சங்காதிசயத்தாலே என்னுதல் என்னைக் குறித்து தான் பண்ணின அவதாரங்கள் சங்கம் என்கிற மஹா சங்க்யைக்குப் போரும் என்னில் என்னைக் குறித்து -தானாய தானவை -சங்கே -சங்கத்து அளவே அன்று இறே

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
வித்யா ப்ரவர்த்தகமான அவதாரங்கள்-அனுஷ்ட்ட்டே யதார்த்த ப்ரகாசகமான ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள்–அகர்ம வச்யனானவன் கர்ம வச்யரோடு ஒக்கப் பிறந்தாயிற்று-இப்படி செய்கின்றவன் தான் ஆர் என்னில்-ப்ரஹ்மாதிகளுக்கு ஆதி தேவர்களான நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் கிடீர் இப்படி தாழ நின்றான் என்கை –
இந்த்ராதிகளும் பூமியில் துர்க்கந்தாதிகள் பொறுக்க மாட்டாதே ஒரு யோஜனத்துக்கு அவ்வருகு இ றே நிற்பது –நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை-அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்-என்னை பிரயோஜ நான்தர பரதையை தவிர்த்தவன் –
நான் இழிந்து ஆடும் துறை என்றுமாம் –

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-
ஞான ப்ரதானார்த்தமான ஜல சர சஜாதீயன் ஆனான் –தாரண அர்த்தமாக கூர்ம ரூபி யானான் -சடக்கென விரோதியைப் போக்குகைக்கு இரண்டு வடிவைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு ஆர்த்தி யானான் –சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுக்கைக்கு வராஹ ரூபத்தைக் கொண்டான் –மனுஷ்யர் நடையாடாத காட்டில் மிகவும் வர்த்திக்கும் வராஹம் –என் கார்யம் சமைந்த பின்பும் -சம்சாரத்தின் நின்றும் கால் வாங்கும் தனையும் -இவருக்கு என் வருகிறதோ என்று கொண்ட குதை மீண்டிலன் –
மேல் வரும் விரோதத்தை போக்குகைக்கு இன்னமும் கல்கியாக இருந்தான் -நான் தன்னைத் தப்புகைக்காக பிறந்த அளவும் போரும்-அவன் ரஷிக்கைக்காக பிறந்த பிறவி -நான் கர்மத்தால் பிறந்தவை அடங்க அனுக்ரஹத்தாலே பிறந்தான் –வர்ஷூகவலாகஹம் போலே இருக்கிறான் அத்தனை -வர்ஷித்தானாய் இருக்கிறிலன்-

மீனாமை கோலநெடு நரசிங்கமாகி நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு நாராயணாய நமவே 
(மகாபாரதம், சல்லிய பருவம். 1) 
என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.

————————————————

(ஸூந்தர பாஹு ஸ்தவம -மத்ஸ்ய அவதார பரமான ஸ்லோகமும் – ஓசையும் பொருளும் நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1–ஒட்டியே இருக்கும்

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந
ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் ஸ்வ க்ருபயா
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீநதநு ரத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–92-

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் –பிரளயத்தில் உண்டான பெரு வெள்ளத்தால் நிரப்பட்ட தம் தாம் இருப்பிடங்களை உடையவர்களாய் –-அத ஏவ மிக வருந்தின முகத்தை உடையவராய் –
தடுமாறினவர்களாய் – நாதன் அற்றவர்களாய் – புகலிடம் விரும்புவர்களான தேவர்களுக்குத் தஞ்சமாகக் கொண்டு
1-பரிபூரி தஸ்வ நிலய-2- அவசந் நவ தந-3-ப்ரமத் -4- அசரண்ய பூத -5-சரணார்த்தி-ஆகிய ஐந்தும் நாகிகளுக்கு விசேஷணங்கள்

சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீந தநுர
–இவற்றை ஸமஸ்த பதமாகக் கொள்ளவுமாம் –இடையில் உள்ள –
கலுஷீ க்ரியாட்ய கமன என்று விஸர்க்க அந்தமாக்கி -அதை ஒருபதமாகவும்
மேல் உள்ளதை ஒரு பதமாகவும் கொள்ளலாம் -பொருளிலும் கருத்திலும் வாசி இல்லை
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச-என்றதற்கான கருத்தை –
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனமாலை-என்றதற்கான கருத்தை –
ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா சலகுல ஏஷ மீநதநு-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
கொந்தளிக்கின்ற கடல் நீர் வெள்ளத்தை எல்லாம் கலக்கிக் கொண்டு அதனுள்ளே சஞ்சரிப்பவரும் –முதுகிலே மலைத் திரள்களைத் தாங்கிக் கொண்டு இருந்தவருமான மத்ஸ்யவதாரப் பெருமாள்
அத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–இங்கே திருமாலிருஞ்சோலை மலை உறையும்
சுந்தரத் தோளராக சேவை சாதித்து அருளுகிறார் -என்கை –)

தேவோ ந ஸூபமாத நோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ் வநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-

யாருடைய அவதாரங்களில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் வெவ்வேறான பொருத்தமான அவதாரங்களை தானே எடுத்துக் கொண்டு
பல வடிவங்களை அவனது தர்மங்களோடு ஒத்த தர்மங்களுடன் இவ்வுலகில் விளையாடுகிறாளோ
அந்த அரங்கன் பத்து வித அவதாரங்களின் வேஷத்தை எடுத்துக் கொண்டு முழுமையான மகிழ்ச்சி அடைந்த பக்தர்களால்
திருவரங்கம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் காணப்படுபவனான திருவரங்கன் நம் எல்லாருக்கும் மங்களத்தை அருள வேண்டும் –

தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தசதா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்

சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து –
மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் –
கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –

ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –

———————————————————————————–

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-

கடலுக்குள் மூழ்கிய வேதத் தொகுதிகளைத் தேடும் வேளையிலே கறுத்துப் பொதிந்த -திருக் கண்களின் கடாக்ஷங்களால் –
கடலின் நீருக்கு உள்ள தாமரைக் கூட்டங்களைப் படைப்பது போலே தடை இல்லாத அலை வீசுதலால்
ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்ட நீர்த் தொகுதி என்னும் ஊஞ்சலிலே ஏறுவதில்லை உத்ஸாகம் கொண்ட
எம்பெருமான் மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் –

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி –
கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –

சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பதி உமா பதி இந்திரா பதி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்

—————————————————————

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப்பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் –
அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –

இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://


இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.”
– (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)

ஸ்ரீ தசாவதார-ஸ்தோத்ரம் (கீதா-கோவிந்தத்திலிருந்து) ஜெயதேவ கோஸ்வாமி–இது ஒவ்வொன்றும் எட்டு வரிகள் கொண்ட வசனங்களில் எழுதப்பட்டிருப்பதால், இது அஷ்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது.(1)
பிரளய-பயோதி-ஜலே த்ரிதவான் அசி
வேதம் விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம்
கேசவ த்ரித-மின-சரீர ஜெய ஜகதீச ஹரே

கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! மீனாக உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! பேரழிவின் கொந்தளிப்பான கடலில் மூழ்கிய
வேதங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காகவே ராட்சத மீன் வடிவில் படகாக எளிதாகச் செயல்பட்டாய் .(2)

வேதாந் உத்தாரதே ஜகந்தி வஹதே பூ-கோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே ஹலம் அத்ஸயந்துர்வதேக் உப்யம் நமঃ

ஓ பகவான் கிருஷ்ணரே, இந்தப் பத்து அவதாரங்களின் வடிவங்களில் தோன்றிய உமக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். மத்ஸ்ய வடிவில் நீ வேதங்களைக் காப்பாற்றுகிறாய், கூர்மமாக மந்தார மலையை உன் முதுகில் தாங்குகிறாய். வராஹாவாக நீ உன் தந்தத்தால் பூமியை உயர்த்துகிறாய், நரசிம்ம வடிவில் தைத்ய ஹிரண்யகசிபுவின் மார்பைக் கிழிக்கிறீர்கள். வாமன வடிவில் தைத்ய மன்னன் பாலியிடம் மூன்றடி நிலம் மட்டும் கேட்டு ஏமாற்றி, உனது படிகளை விரிவுபடுத்தி முழு பிரபஞ்சத்தையும் அவனிடமிருந்து பறித்து விடுகிறாய். பரசுராமராக நீங்கள் தீய சத்திரியர்கள் அனைவரையும் கொன்று, ராமச்சந்திரனாக ராக்ஷச மன்னன் ராவணனை வெல்கிறீர்கள். பலராமன் வடிவில் நீங்கள் கலப்பையை ஏந்தி, துன்மார்க்கரை அடக்கி, யமுனை நதியை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். பகவான் புத்தராகிய நீங்கள் இவ்வுலகில் துன்புறும் அனைத்து ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுகிறீர்கள், கலியுகத்தின் முடிவில் நீங்கள் கல்கியாக தோன்றி மிலேச்சர்களை [தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மனிதர்களை] திகைக்க வைக்கிறீர்கள். ஜெயதேவ கோஸ்வாமி அல்லது அனைத்து வைஷ்ணவ ஆச்சார்யர்களின் பஜனைகளுக்குத் திரும்பு .

” மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில் துன்னிய பரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும் மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர் வானாரின்ப மிங்குற வருதி.” (மும்மணிக்கோவை. 4)

[கேழல் – வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி – பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)

மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்க வுற்றனை.– (நவமணிமாலை. 2)

(மகரம் – மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் – இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் – இரணியகசிபு, மதலை – பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் – அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் – இராவணன் ; வரை – கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டாத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அந்தர்யாமி திருவாராதனம்–

November 29, 2025

வார்த்தை -434-
அந்தர்யாம்ய ஆராதனம் விளக்கும் வார்த்தை-

பகவத் விஷயம் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே -திருவாய்மொழி -2-5-4- என்றார் –
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிரேய்
பிரகிருதி மானாங்கார மனங்கள் -திருவாய்மொழி -10-7-10-என்கிறபடியே
இருபத்து நால்வர் ஏறின ஆகாரத்திலே
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
பெரியாழ்வார் திருமொழி -4-5-3-என்கிறபடியே
நடுவில் திரு முற்றத்தில் இருபத்தரறுவர் ஆவானை உகந்தருளப் பண்ணி –
அநந்யார்ஹனாய் -அநந்ய சரண்யனாய் -அநந்ய போகனாய் -ஜ்ஞானாநந்தியான
இருபத்தைவரான ஆத்மா திருவாராதானம் பண்ணும் நம்பியாருக்கும் பரத்வம் எட்டாது –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு-அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின் கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு;-இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.அதாவது, பூர்வ க்ஷணத்தில் ‘ அனுபவம் போல அல்ல ஆயிற்று உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது’ என்றபடி.

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –-வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கர்ம இந்திரியங்கள் ஐந்தும் -பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ்ஸூக்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்து -8-8-3-என்று அவன் தான் இவர் பக்கல் செய்ததனை–இப்போது அவனுக்கு இவர் தாம் அறிவிக்கிறார் –ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் 
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-ஹ்ருதயம் என்று பிரசித்தமாய் -அத்விதீயமான ஸ்த்தானத்தை உண்டாக்கி -ஸ்ரீ யபதி -என்று பிரசித்தமாய் -அத்விதீயமான வஸ்துவை பிரதிஷ்டிப்பித்து –திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து  என் நெஞ்சு நிறைய புகுந்தான் (10-8 )-என்று இவர் அஹ்ருதயமாக சொன்னதை சஹ்ருதயமாக கொண்டு வந்து புகுந்தான் –இவர் இப்போதே -அஹ்ருதயமாக சொன்னேன் -என்னவும் வல்லர்-அதுக்கு முன்பு இவர் நெஞ்சில் இடம் அற புகுந்து  கொள்ளும் கிடீர் என்று  பிராட்டியும் கூடக் கொண்டு புகுந்தான் –இவர் நெஞ்சு திருந்துவதற்கு முன்பு இறே -அல்லாத இடங்களில் நிற்பது –-நின்றது எந்தை ஊரகத்து -இத்யாதி-உகந்து அருளின நிலங்களில் கண்டு அனுபவிக்குமா போலே  இவர் திரு உள்ளத்தில் இருப்பதும் கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இவர்க்கு –
சல சயனத்து உள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை உள்ளீரே -என்னக் கடவது இறே –வந்தாய் என் மனம் புகுந்தாய்(பெரிய திருமொழி – 1-10-9 )-என்று இறே புகுந்தது –
வந்து வந்து என் மனத்து இருந்து (பெரிய திருமொழி -6-2 )-என்கிறபடியே-இவர் இசையாமல் -தட்டின நாளைக்கு ஓர் அவதி இல்லை இறே –அடியார் மனத்தாயோ-(பெரிய திருமொழி 11-5 )-வெள்ளத்தான் வேம்கடத்தான்  ஏலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் –என்று   உகந்து அருளின நிலங்களோடு ஒக்கும் -இறே இவர் திரு உள்ளமும் –

வ்யூஹம் கால்கடியாருக்கு
அவதாரம் அக்காலத்தில் உள்ளாருக்கு
அர்ச்சாவதாரம் உகந்து அருளின நிலங்களில் எப்போதும் திருவடிகளைப்
பிடித்து இருக்க ஒண்ணாது –

இவனுக்கு எப்போதும் ஒக்கப் பற்றலாவது அந்தர்யாமித்வம் இறே
இவனையே குறித்து நிற்கும் இடம் இறே அவ்விடம்
அல்லாத இடங்களில் காட்டில் அவன் அதி ப்ராவண்யம் பண்ணா நிற்பதும் இங்கே இறே
எங்கனே என்னில் –

(அர்ச்சாவதாரத்தை விட உயர்ந்த அந்தர்யாமித்வம் என்றும் அழகாக விளக்கிக் காட்டுகிறான்)

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-5-1- என்றும் –
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில்
வாழ வல்ல மாய மணாளா நம்பி -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-என்றும் –
வில்லாளன் நெஞ்சத்துளன் -நான்முகன் திருவந்தாதி -85-
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் -பெரிய திருமொழி -11-3-7- என்றும் –
திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன்
என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய்மொழி -10-8-6-என்றும் –
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த விருத்தம் -65-என்றும் –

(பரத்வமும் வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் அந்தர்யாமிக்குள்ளே அடங்குவதற்கு பிரமாணங்கள்)

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்-கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே -உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க் கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக் கூட்டியும்,-எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ் முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்
ஆனவனுக்குச் செந்தாமரைத் தடம் கண்
’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள்-

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து  என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ

தனிக் கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –சகல தாப ஹராமான கடல்-சம்சாரத்தில் தாப த்ரய தப்தரானவர்களுக்கு-ஸ்ரீ திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்திக்க போம் என்கை–சீதள ஸ்வபாவமான கடல் –
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை -என்று அவனுடைய ஸ்வபாவம் இதுக்கு உண்டாய் இருக்கிற படி –சம்பந்தம் அடியான வாத்சல்யம்
(கடல் அரசன் அபசாரம் பொறுத்தார் அன்றோ பெருமாள் )பள்ளி கொண்ட படி என்னும் இத்தனை -பாசுரம் (விசேஷணம்) இடப் போகாது –-கிடந்ததோர் கிடக்கை -என்றும்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும் சொல்லும் இத்தனை இறே –நாளும் வாய்க்க (8-10)-என்கிற பாட்டில் ஒரு போலி சொல்லும் இத்தனை இறே –இவர் தாமும் -வெள்ளை வெள்ளத்தின் மேல் -என்று ஆசைப்பட்ட படியே வந்து புகுந்தான் ஆய்த்து-தல சயனப்பெருமாள் போல் ஆதி சேஷன் படுக்கையை விட்டு வந்தாரா-அங்கு உள்ள சேவை கண்டு ஆனந்தம் படுவது போல் இங்கும் – இவருக்கு சேவை சாதித்தான்-ஆகவே மனதில் இல்லாமல் மனக்கடலில் என்கிறார்-பழக விட்டு –அங்கு உண்டான ஆசையை நேராக மறந்து விட்டு-ஓடி வந்து  –காதக் குதிரை கட்டி ஆய்த்து வந்தது –(காதக்குதிரை இட்டு –குதிரை போல் தானே நடை இட்டு என்றுமாம் )என் மனக் கடலில் வாழ வல்ல–அது பனிக் கடல் ஆகையாலே குளிர்ந்து இருக்கும்-இது மனக் கடல் ஆகையாலே குளிர் கெட்டு இருக்கும்(சந்தனம் சீதளம் -சந்திரன் இன்னும் சீதளம் —சத்துக்கள் மனஸ்ஸூ அவற்றை விட சீதளம் -பிரமாணம் )அது ஊற்று மாறினாலும் இது ஊற்று மாறாது-பனிக் கடலையும் தனக்கு உள்ளே அடக்கும் கடல் இறே –பரவைத் திரை பல மோதி -இத்யாதி-இக் கடலை கண்ட வாறே பனிக் கடல் காட்டுத் தீயோடு ஒத்தது –வாழ வல்ல–செருக்கரான ராஜாக்கள் பழைய படை வீடை விட்டு –தாங்களே காடு சீய்த்து சமைத்த – படை வீட்டிலே இறே ஆதாரத்தோடு இருப்பது –(ஸ்ரீ ரங்கம் -ஷீராப்திகளை விட்டு ஆசையுடன் கண் வளரும் திவ்ய தேசம் போல் )சாதன தசை போலே அன்று இறே போக தசை-பனிக் கடலையும்   விரும்புகைக்கு அடி -இவரைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு-யோக நிந்த்ரை சிந்தை செய்க்கைக்கு இறே –(ஸாத்யம் கை புகுந்த பின்பும் விடாமல் இருப்பதுக்கு காரணம் –இளம் கோயில் கை விடேல் என்ற பிரார்த்தனையாலும்-க்ருத்தஞ்ஞதா கந்தத்தாலும் )-மனக் கடலில் வாழ வல்ல –வாழ வல்ல வாசு தேவா –-அக் கடல் எங்கும் வாழ்ச்சி இறே-கீழில் பாட்டில் -வாழச் செய்தாய் -என்று –ஸ்ரீ ஆழ்வாரை வாழ்வித்து-அவ் வாழ்வு கண்டு தான் வாழுகிற  படி-மாய மணாளா நம்பீ –இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே –குணங்களும் -திரு மேனியில் செவ்வியும் பூர்த்தி பெற்றது(அந்தாமத்து அன்பு போல்-மாய-குணங்களும் –-மணாளா-திரு மேனியில் செவ்வியும்-நம்பீ -பூர்த்தி பெற்றது)

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-—மிக்க சினத்தை உடையனாய் -பெரு மிடுக்கனாய்  -வாநராதிபனுமாய் -இருந்த வாலியுடைய கர்வத்தை யழித்த- வில்லை யுடை யவன் என்னுடைய ஹிருதயத்தே யுளன் –வானவர் கோன் மதம் அழித்த வில்லாளன் அன்றோ இவன் –சரணாகத வத்சலன் -தம் பலத்தை தீயோரை அழித்து ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பயன் படுத்த வாலி தனது வலிமையை சரணாகதனான ஸூக்ரீவனை சிஷிக்க பயன் படுத்திய வில்லாளன்-அந்ய பரதை அறும்படிக்கு இடம் யறும் படி ஹ்ருதயத்தில் சன்னிஹிதராய் இரா நின்றார்-ஆகையாலே மிருத சஞ்சீவனமான ராம குணங்களிலே அகப்பட்ட எனக்கு நித்ய க்ருத்யம்-பழையவனாய் சர்வாதிகனான சக்ரவர்த்தி திருமகனுடைய திரு நாமங்களை அபிநிவேச பர வசனாய்க் கொண்டு
வாயாரப் பாடுகை ஏத்துகை-லௌகிகரான உங்களில் வியாவ்ருத்தமான எனக்கு மற்று உள்ள காலங்கள் எல்லாம் அதுக்கே நேரம் போதும்-எங்கள் தம் யுடையவர் திருக்கை அருளை ராமருடைய அருளைப் பெற இரக்கும் எங்களுக்கு அந்நிய பரதை பண்ணுவது எங்கனே என்கிறார்
– என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் படி-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை   யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7-அவன் ஹிருதயத்தில் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் கையில் வளை கழலும் படி இருக்கிற நமக்கு –

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6–ஏவகாரத்தால் திருமலை இருப்பை விரும்புகின்றதையும் சொல்லி –-திரு அயோத்யையில் வாசம் போலே யாய்த்து திருப் பேரில் இருப்பு -திருச் சித்ர கூடத்தில் இருப்பு போலே யாய்த்து திருமலையில் வாசம்–இன்று வந்து-பூர்வ க்ஷணத்தில் நினைவு இன்றியிலே இருக்க -வந்து கொடு நிற்கக் கண்டது அத்தனை –இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன் பேறாக பிரதிஜ்ஜை பண்ணி -இருந்திடுவானுக்கு என்று இராதே என் நெஞ்சிலே குறைவறப் புகுந்தான் –விருப்பே பெற்று -அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்று அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் -அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் –ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ —நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே
செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் – என்கிறபடியே அத் திருப்பதிகளை காற்கடைக் கொண்டு அவ் வவ் இடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மை எல்லாம் என் நெஞ்சிலே யாய்த்து –நிகிந அக்ரேசரனான என்னை -விஷயீ கரித்தவாறே -திருமலையில் நிலையும் மாறி என் நெஞ்சில் நின்று அருளினான் –தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை -என்கிறார் –

இங்கு இருக்கும் இடத்தில் தான் ஒருவனுமேயோ -என்னில் –
அரவத்தமளி யினொடும் -அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10 -என்கிறபடியே
நாய்ச்சிமாரோடும் சர்வ பரிகரத்தோடும் கூடி இருக்கிற இவனை இந் நம்பியார்
திருவாராதனம் பண்ணும்படி –

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5- 2-10 -அடியார்கள் குழாங்களுடனே வந்து புகுந்து-தான் இவர் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற படிக்கு ஸ்மாகரமாக அலை கேட்கும் படி கண் வளர்ந்து அருளுகிற உபகாரத்துக்குத் தோற்று தம் சத்தைக்கு போற்றுகை அன்றிக்கே –ரஷையின் பொருட்டு –காவலுக்கு உறுப்பாகப் போற்றுகிறார்-காத்தல் ரக்ஷை-உபய விபூதி உடன் இங்கும் அங்கும்-அரவிந்த பாவை –
அகம்படி வந்து புகுந்து -சுடர் ஆழி தானும் என்கையாலே நின்னோடும்
-இத் திருமொழியால்
திருப் பல்லாண்டில் அர்த்தத்தை நிகமிக்கிறார் –சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற அர்த்தம் –உறகல் உறகலிலே நிகமித்தார்-அடியோமோடும் நின்னோடும் -என்கிற பாட்டின் அர்த்தத்தை –அரவத் தமளியிலே -நிகமித்தார்-

ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய -என்கிறபடியே –
சத்வோத்தர காலத்திலே பிறந்து –
ஆத்மனோ ஹிதம் -என்கிற நன் ஜ்ஞானத் துறை (திருவிருத்தம்)படிந்தாடி –
அத் துறையிலே ஒரு குடம் திருமஞ்சனத்தை எடுத்து –
குரு பரம்பர அனுசந்தானத்தாலே கோயிலிலே வந்து-
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான –
அனன்யார்ஹ சேஷத்வ அனுசந்தனத்தாலே தண்டனிட்டு

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி –
அநந்ய  சரணத்வ அனுசந்தானாம் ஆகிற திருவிளக்கை எழத் தூண்டி –
அநந்ய போகத்வ அனுசந்தானத்தாலே -பிரயோஜநாந்தரம் ஆகிற துராலை விரட்டி –
சம்பந்த ஜ்ஞான அனுசந்தானத்தாலே திருவடி விளக்கி –

அன்பினால் ஜ்ஞான நீர் கொண்டாட்டுவன் அடியனேனே -திருக் குறும் தாண்டகம் -15-என்கிறபடியே திருமஞ்சனம் செய்து –
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே -திருவாய்மொழி -4-3-2-என்கிறபடியே
வாசிக அனுசந்தானத்தாலே திருப் பரியட்டம் சாத்தி –
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி 4-3-2- என்கிறபடியே மானஸ அனுசந்தானத்தாலே சாத்துப்படி சாத்தி –

தேசமான அணி கலனும் என் கை கூப்புச் செய்கையே -திருவாய்மொழி -4-3-2- என்கிறபடியே புரையற்ற அஞ்சலியாலே
திரு வாபரணம் சாத்தி –

நாடாத மலர் -திருவாய்மொழி -1-4-9- என்றும் –
விண்டு வாடா மலர் -திருவாய்மொழி -9-10-3- என்றும் –
இனமலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -1-2-7-என்றும்
கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6- என்றும் சொல்லுகிற ஆனுகூல்யத்தாலே திருமாலை சாத்தி –

(அடிக்கடி எட்டு மலர்கள் -அஹிம்சா ப்ரதமம் இத்யாதி -என்பக்கர் பூவும் கொணர்ந்தேன் -அஷ்ட வித கல்யாண குணங்கள் ஸூசிதம்)

பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்க துலகே -திருவாய்மொழி -5-2-9- என்கிற
அனுசந்தானத்தாலே தூபம் கண்டருளப் பண்ணி
மாடு விடாது என் மனன் -பாடும் என் நா -ஆடும் என் அங்கம் -திருவாய்மொழி -1-6-3-
என்கிறபடியே பக்தி ப்ரேரிதமான ந்ருத்த கீத வாத்யம் கண்டருளப் பண்ணி

கர்த்ருத்வ நிவ்ருத்த பூர்வகமான அனுசந்தானத்தாலே –
அஹம் அன்னம் -என்கிறபடியே அவனுக்கு போக்யமாக்கி
அஹம் அந்நாத -என்கிறபடியே தானும் புஜித்து
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே யிருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்கிறபடியே
இப்படி உணர்த்தின ஆசார்யன் விஷயத்திலே க்ருதஜ்ஞதா  அனுசந்தானத்தோடே தலைக் கட்டுகை –

இருபத்து நாலுபேரில் ஐஞ்சு பேர் க்ராமணிகள்(கண் காது மூக்கு வாய் த்வக் -ஞான இந்திரியங்கள்)
இவ் வைவர் கூடே கூடாதார் ஐஸ்வர்யம் இது
இவ் வைவரோடும் கூடினார் இமையாத கண்-முதல் திருவந்தாதி -32-(ஞானக் கண்) – பறி யுண்டு விடுவார்கள் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-என் நெஞ்சிலே உண்டான அன்பன்று –நெஞ்சு என்ற பேராய்-பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;

ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இறே -சாந்துக்கு பூக்கட்டி இறே மணம் கொடுப்பது-இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார்.-இவர் நெஞ்சினைக் காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும்.-சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ? ஆஸ்ரித கர ஸ்பர்சம் விரும்புவன் அன்றோ -இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டாமே-ஆழ்வார் எனக்கு சொன்னாலும் அவனுக்கே -நாம் அவனுக்கே சொன்னாலும் நமக்கே –-நான் -அஹம் -மாறாடி அன்றோ இருக்கும்
நானே அவர் தனம் ஆன பின்பு என்னுடையது எல்லாமே உன்னுடையதே-ஓன்று ஒரு போக உபகாரணமாகை தவிர்ந்து -அவனுக்கு பும்ஸவதாவஹமான பரிவட்டமும் என் யுக்தி யாவதே-பெரு விலையனான திருப் பரிவட்டம்–நெஞ்சின் பெருமை வாசகத்தாலே தானே தெரியும் –அந்தச் சொற்கள் தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும்.-இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக்காணும்;
‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ
?தேஜஸ் கரமான திரு ஆபரணமும் என்னுடைய அஞ்சலி யாவதே-ராஜ மஹேந்த்ரன் படி போலே இவருடைய அஞ்சலி அவனுக்கு உத்கர்ஷ ஹே துவாய் இருக்கிற படி-சேரபாண்டியன் தம்பிரானைப் போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி.அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு-சர்வ கந்த என்கிற விக்கிரஹத்தை உடையவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே என்கிறார் –என்னுடைய உறுப்புகளின் காரியங்களான – நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் நிறைவுற்று விளங்கும்-இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று

வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-அபி நிவேசத்துக்கு ஈடாகத் தேட வரிதான புஷ்பங்களைத் தேடி –எண்டிசையும் உள்ள பூக் கொண்டு -என்னுமா போலே–‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’-விச்சேதியாத படி-கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெரும் வஸ்துவுக்கு விச்சேதம் ஸ்வரூப ஹானி இறே-சர்வ ஸ்வாமி யானவனுடைய ஏக ரூபமான செவ்விப் பூ போலே இருந்துள்ள திருவடியின் கீழே-அகிஞ்சித்கரமான வன்றும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருவடிகள்-ஸ்ருஷ்டச்த்வம் வன வாசாய -என்னுமா போலே இதுக்காக வாயிற்று இவனை உண்டாக்கிற்று-வைக்க-சேர்க்க–ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய்-நிரதிசய போக்யமுமான – எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே- சர்வவித கைங்கர்யங்களையும் – எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான்சேஷ பூதனுக்கு கிஞ்சித் காரத்தாலே ஸ்வரூப லாபம் ஆனால் போலே சேஷிக்கும் கிஞ்சித் கரிப்பித்து கொண்டு அத்தாலே இறே ஸ்வரூப சித்தி

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-அலரத் தொடங்கின அளவாய் கழிய அலர்ந்து வாடாத பூ – –ஈஷத் விகசிதம் –செவ்விப் பூவைக் கொண்டு வணங்கும் கோள்-ஆஸ்ரயிங்கோள்-

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7-அஹிம்ஸாதிகளான  புஷ்பங்கள் எட்டும் இட்டு(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ் த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம் )அன்றிக்கே செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை என்றாப் போலே பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்-அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்-அத்தை மலர் என்னும்படி என் –என்னில் பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே –சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –அன்றிக்கே கீழில் திரு மொழியில் திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-கந்த வத்தான விலஷண புஷ்பங்கள் எட்டையும் இட்டு –அவை யாவன – கருமுகை -கற்பகம் -நாழல் -மந்தாரம் -சௌகந்தி -செங்கழுநீர் – தாமரை -கைதை –ஸ்வாபதேசம் – பரம போக்யமான திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –-சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-
–வேதத்தில் அவன் விபூதி விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும்
ஸ்வரூபத்திலுமாகப் பரந்திருக்கிற ஸ்ரீ புருஷ சூக்தாதிகளை நாக்கிலே கொண்டு.
நாவில் கொண்டு -நாவினால் நவிற்று -அஹ்ருதயமாக சொன்னதை அடியாருக்கும் பகவருக்கும் கொள்ளாமல் நமக்குக் கொள்வதே பொருந்தும் -இவர்கள் நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு “
அவர்களை விட மாட்டேன்” என்னுமவன்.–பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல்.-ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் –பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –உலகம் அடைய என்றபடி.-ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

ஈடும் யெடுப்புமிலீசன் –மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-
அவன் பரிசரத்தை விடுகிறது இல்லை என் மனஸ்சானது பிரயோஜனத்தைப் பற்றிக் கிட்டிற்று ஆகில் இறே பலத்து அளவிலே மீளுவது நான் அதிகரித்த காரியத்துக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
உம்முடைய அஹ்ருதமான உக்தியே அமையாதோ எங்கள் ஹிததுக்கு என்ன–‘நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’ என்பது அன்றோ உம்முடைய தன்மை?
ஆதலால் உம்முடைய மனத்தோடு படாத சொற்களே அமையாதோ எங்களுடைய நலனுக்கு?’ என்ன,-என்னுடைய வாக்கானது அவனுடைய குண பிரதிபாதிதமான காதா விசேஷங்களைப் பாடா நின்றது-உம்முடைய ஹஸ்த முத்ரையே அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன-என்னுடைய சரீரமும் தைவாவிஷ்டரைப் போலே ஆடா நின்றது–அதுவும் அவன் விஷயத்திலேயே பிரவணம் அன்பு கொண்டதாயிற்று.-தம்முடைய கரணங்கள் தனித் தனியே மேல் விழக் கண்ட ப்ரீதியாலே –என் மனன் -என் நா -என் அங்கம் -என்று உகக்கிறார் –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே-ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –((ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யா சி தவ்ய-த்ரஷ்டவ்ய
கேட்டு ஆராய்ந்து இடை விடாமல் சிந்தித்து காண 
)நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன்  –

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –

November 29, 2025

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்-முதலியாண்டானின் தனியன்

ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம் ராமானுஜ ஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம் ரங்கேச மங்களகரம் தநுர் தாஸம் அஹம் பஜே-பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :

ஸ்ரீ உடையவர்  ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் விஷயமாக
ஸ்ரீ முதலியாண்டானுக்கு பணித்த பத்து வார்த்தைகள் –

ஸ்ரீ முதலியாண்டான் உள்ளம் விம்மிப்  புறம் பொசிந்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ உடையவரும்
நாமே உமக்கு சொல்ல வேணும் என்று இருப்பதொரு அர்த்தத்தை நீர் தாமே கேட்டீரே என்று ப்ரீதராய்
சகல வேத சாஸ்திரங்களிலும் இதிஹாச புராணங்களிலும் உள்ளதைப் பொறுக்கிச் சேர்த்து
நம் ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலும் சொல்லப்பட்ட குஹ்யமாய் இருப்பதொரு அர்த்தத்தை
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு இப் பத்து வார்த்தைகளால் அருளிச் செய்கிறார் –

இதில் முதல் வார்த்தை –
நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
பூணூல் சாத்திய நமக்கும் சாத்தாத தாசர் போன்றவர்களுக்கும் உள்ள வாசி –
நாம் (ஆச்சார்யர்கள்)நாடு பரிக்ரஹிகைக்காகச் செய்வுதோம் –
அவர்கள் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருப்பர்கள் -திருவாய்மொழி -10-6-2–

( உலகைத் திருத்துவதற்காக நாம் உழல வேண்டும் -அவர்களுக்கு இக் கடமை இல்லையே -நாராயணனுக்குக்கே எப்பொழுதும் பற்றியே இருக்கும் பெருமை அவர்களுக்கு உண்டே)

(வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அற பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1- கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணினபடி கண்டாயே –உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ – –நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் -ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ- நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் – சப்ததோஸ்மி – திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ –

இரண்டாம் வார்த்தை –
திருப்பதிகளுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயிலுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் தெப்பக் கையரைப் போலே இரண்டையும் விடோம்
அவர்கள் சாரஞ்ஞராய்க் கொண்டு விட்டத்தில் இருப்பாரைப் போலே முதல் அடியிலே நிற்பர்கள்
பிரதான ஷேத்ரம் ஒன்றில் வாழ்ந்து நிர் பரராய் இல்லாமல் –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் -இராமானுச நூற்றந்தாதி -60-புக்கு நிற்போம் —

(வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும் அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-)

(உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-ஆத்ம குண  ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்மகுணங்கள் தன்னை சர்வ விஷயமாகஉபகரித்து அருளும் பரம ஔ தாரராய் -எங்கள் குலத்துக்கு தலைவரான எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் -யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி-வர்த்திக்கும் திருப்பதிகள் தோறும் –-அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு-நில்லா நிற்பர்-இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி-)=எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார்-எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்குமவர்-பொருந்தும் பதி -எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம்அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் –அவன் பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணும் இருப்பது .சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ  என்கிற திரு உள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும் த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம-பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு-ஹேது-மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால் .திவ்யதம்பதிகள் இங்கேயே-இமயத்து பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க-திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார்

மூன்றாம் வார்த்தை –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் கலக்கங்களும் தேற்றமுமாய்-திருவாய்மொழி -6-3-2- போருவுதோம்
அவர்கள் கலக்கம் இல்லா நற்றவர்களாய் —
கலக்கமிலா நல்தவ முனிவர் -திருவாய்மொழி -8-3-10-என்னும் பெருமை உடையவர்களாய்
பல்லாண்டு கூறி இருப்பர்கள் –
(திருப்பல்லாண்டு 3/11)பல்லாண்டு கூறுதுமே பல்லாண்டு கூறுவனே என்று மங்களாசாசன பரராய் இருப்பர்கள் – 

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-பரிச்சின்ன ஸூகம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூகத்திலே இறே தமக்கு அந்வயம்-அதற்கு எதிர்த்தட்டான துக்கம்-அஞ்ஞானங்கள் -ஞானம் –இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.-கோபமும் அருளும்.-கோபம் -பிரசாதம் -உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் -சீதா ஸ்வ பாவமான நிழலும்

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-முக்தர் –முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூரிகள்-துளக்கம் -சலனம் -அதாவது ஞானக் குறைவு -அது இல்லாத நித்ய ஸூரிகள்

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-சூரணை-250-அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை -251-அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை -252-அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –சூரணை -253-1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது4-பிராப்தி பலமும் இதுவே எனபது –5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் -சூரணை -254-)

நாலாம் வார்த்தை
அந்தரத்துக்கும் -(கரைக்கும் )-கடலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் சம்சாரம் ஆகிற கடலிலும் மழையிலும் பெரும் காற்றிலும்
அவற்றின் உடைய லாபச் சேதங்களாலும் சோக ஹர்ஷங்களைப் பண்ணா நிற்புதோம் –

ஆவாரார் துணை என்று அலைநீர் கடலுள் அழுந்தும் நாவாய் -திருவாய்மொழி -5-1-9- போலே –
அவர்கள் இரண்டிலும் தளர்தல் அதன் அருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி-45-என்றும்
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-என்கிறபடியே நிற்பர்கள்—

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–இத்தசையில் நமக்கு துணையாவார் யார் என்று-ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் (-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-)ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை -இந்த நடுக்கத்தில் அவன் செய்வது என் என்ன-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடும் -அவ்வடிவுக்கு சேர்ந்த திவ்ய ஆயுதங்களோடும் ஆழ்வார்களை சேர்த்துக் கொண்டால் போலே என்னையும் சேர்த்துக் கொண்டான் -என்று ஆளவந்தார் நிர்வாஹம்- எம்பெருமானார் –கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று இவர் உகந்த படி வந்தான் என்று அருளிச் செய்வார் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமே யாகிலும் பூ வேளைக் காரரைப் போலே ஆழ்வார்களை ஒழிய காண மாட்டார்

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம் பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள்-தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது – பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –சர்வேஸ்வரனைப் பற்றி இருக்குமவர்கள் இப்படி இருப்பது ஓன்று யுண்டாகில் அத்தை ஒன்றாக மதித்து இராமையாலே அது உண்டு என்னும் இடம் தோற்றி இரார்கள்  -இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் –ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம் இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று –உண்டு இல்லை என்று தளரார் – என்று சொல்லுகிறது-ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்றுமிகவும் தளர்த்திக்கு யுடலாமே –-அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது –பகவத் விஷயத்தில் பேறும் பிரிவும் அனர்த்தமாம் 0பகவத் விஷயத்தில் பிரிவும் உத்தேச்யமோ என்னில் –அழு நீர் துளும்ப  அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-என்னக் கடவது இறே

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -வாரி ஸ்ரவதி சோகஜம் –சுந்தர -33-4-சம்சாரியில் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி யன்றோ-இத்தை அன்றோ உண்ணும் சோறில் முற்கூறும் துவளில் மா மணியும் சொல்லுகிறது –-முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7- நான் பண்ணின ஸூஹ்ருதமோ-அவன் தன்னுடைய கிருபையோ – நிர்குண பரமாத்மா சௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -பீமசேனன் அனுமன் உடலில்  துவட்சி கண்டு சொன்னான் இறே – இத்யாதிகளால் பிரிவும் உத்தேச்யம்-இன்னம் இவ்வளவே அன்றிக்கே –அதனருகும் சாரார் –-இப்படிப் பட்ட ஜீவனத்தை இழந்தோம் என்னும் தளர்த்தி இல்லாத ஜ்ஞானவானுக்கும்-அவ் விழவாலே வருவதொரு அனுதாபம் யுண்டாய் இருக்கும் இறே-அங்கனே வருவதோர் அனுதாபமும் இன்றிக்கே இருப்பார்கள் இவர்கள் – அத்தை ஒரு வஸ்துவாக  புத்தி பண்ணும் அன்று இறே அத்தை இழந்ததாலே வருவதோர் அனுதாபத்தை யுடையராய் இருப்பது-ஸ்திரம் என்று நினைத்து பின்னை அஸ்திரம் என்று இருக்கும் அவர்கள் அன்றே –-ஸ்திரமானது அஸ்திரமாய்த்து என்னில் அன்றோ சோகம் உள்ளது-என் தான் இவடினுடைய லாப அலாபங்களில் நாட்டார்க்கு வரக் கடவதான சோக ஹர்ஷங்கள் இவர்களுக்கு இன்றிக்கே இருப்பான் என் என்னில் இவர்கள் பற்றி இருக்கும் விஷயத்துக்கு அவை இரண்டும் இல்லை

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்-தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும்-சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே-இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில் பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும் நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே –தரு துயரம் -என்கிறார் –ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து- ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே – யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —அதாவது-ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே-இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே -தடாயேல் – நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்-நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –-பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை-ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-

ஐந்தாம் வார்த்தை –
அணுவுக்கும் மஹா மேருவுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் சம்பந்தமும் -குடி கோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம் –
அவர்கள் சம்பந்த ஜ்ஞான அனுஷ்டானமே குடி கோத்ர ஸூத்ரம் என்று இருப்பர்கள்
நாம் பண்டைக் குலம் ப்ராஹ்மாண்யம் பற்றி நின்று குடி கோத்ரம் ஸூத்ரம் என்றும் —
அவர்கள் தொண்டக் குலம் -ஜீவ பர சம்பந்த ஜ்ஞானம் ஒன்றே என்று இருப்பர்கள்—

(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)

ஆறாம் வார்த்தை –
கரும்புக்கும் (கல்)கண்டுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் வேதம் ஆகிற கரும்பைக் கடித்து -(மறையாய நால் வேதம் -சக்கை கலந்த கரும்பு )
பல்லு முறிவுதோம் –
அவர்கள் சாரத் த்வயம் ஆகிற கண்டைக் கடித்து இன்புருவர்கள் —

(அறக் கற்கை அரிது என்று இறே-வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்-முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-சூரணை-16-)

ஏழாம் வார்த்தை
மண்ணுக்கும் விண்ணுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் -மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா -திருவாய்மொழி -7-1-6- என்றும்
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ-திருவாய்மொழி -6-9-9- என்றும் –
திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன் -பெரிய திருமொழி -7-7-9- என்றும் –
பயப்பட்டு கலங்கா நிற்புதோம்

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-தம் நிலமான சம்சாரத்திலே–சம்சாரிகளுக்கும் அவ்வருகாய் இருக்கிற என்னைப் பெற்றால் இந்திரியங்கள் அளவுடையாரையும் அகப்படுத்த வல்லவை -அவை அகப்படுத்த வேண்டாதே மேல் விழுமவன் நான் -ஆனால் எல்லாம் படுத்தவோ-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே உலகுண்ட வொருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-1-ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
உண்ணிலாவிய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியாலே நலியா நின்றுள்ள ஐந்து இந்திரியங்கள் என் பக்கலில் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறன  இல்லை –என்னுடைய விஷயத்தை காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?

தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-நெஞ்சு கலங்கும் படி-பஞ்ச இந்திரியங்களும் விஷயங்களில் மூட்டி நலியும் படியான -ஐவர் -என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது -நலிவின் மிகுதியால்-பகவத் விஷயத்தை இழப்பிக்க வேண்டுவதுண்டாய்-தன் பக்கல் அனுபாவ்யம் ஒன்றும் இன்றிக்கே இருக்கும் ஷூத்ர ஸூகத்தை அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து சப்தாதிகள் நடையாடுகிற தேசத்திலே இருக்கும் படி பாபத்தை பண்ணின என்னை -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் -என்றவர் இறே இங்கனம் சொல்லுகிறார்-பைதல் கைசு -நோய் முக்கைசு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப் தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –நான் அவரை பொறுக்க மாட்டேன்-நீரே போக்கும் விரகு பார்க்கலாகாதோ
கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் 

அவர்கள் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -திருவாய்மொழி -8-10-4- என்றும் –
வான் உயர் இன்பம் எய்தில் என் நரகமே எய்தில் என் -திருவாய்மொழி -8-1-9 -என்றும் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் -11 -என்றும்
செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும்
சொல்லுகிறபடியே நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போலே கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பர்கள்–

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4–பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை -தண்ணிதானது என்-மநோ வாக் காயங்கள் அவன் திருவடிகளிலே நிரந்தரமாக அடிமை செய்யும் படி -அவன் பிரசாதத்தை பெறில் –பாகவத ப்ரிய ரூபமான -பகவத் கைங்கர்யத்தை -அவன் பிரசாதத்தாலே -இங்கே பெறில் -அதுவே புருஷார்த்தம் -என்கை –

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் –சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு-எனினும் உடையவன் வைத்த இடத்தில் கிடக்கும் அத்தனை அன்றோ என்று ஓர் அர்த்த தத்வம் உண்டு-இந்த உண்மை இப்படி இருந்தாலும் —இந்த சம்சாரம் உனக்கு புறம்பு என்கிற ஆகாரத்தால்-தன்மையால் அன்றிக்கே-நான் உனக்கு அத்யந்த சேஷமாய் இருப்பவன் என்கிற தெளிவு பிறக்க பிறக்க-சேஷத்வ ஞானம் உண்டான பின்பு–சேஷமாய் இருக்கும் பொருள்–சேஷி செய்தபடி கண்டு
அவன் எல்லைக்குள் கிடக்கும் இத்தனை அன்றோ–நம்மை நிர்பந்திக்கக் கடவதோ-
என்பதே அன்றோ தேவர்க்கு நினைவு-உனக்கு இது நினைவு ஆனாலும் இந்த சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன்-அடிமை என்கிற எண்ணத்துக்கு விரோதி ஆகையாலே–சேஷத்வ பிரதிபத்தியே குலையும் படி அன்றோ இங்கு உள்ளது –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான பரமபதம் – இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில் திரு நகரியிலே பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது – சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை-அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இறே-ஆகையாலே திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்-திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள் என்கிற இத்தனையும் இவ் விடத்தில் அபிப்ரேதம் –அதுக்கடி-தாயுரை செய்ததனை–(3-7-11) -என்று திரு மொழி முழுவதம் தாயார் வார்த்தை என்று நியமிக்கையாலே –

எட்டாம் வார்த்தை –
இரவுக்கும் பகலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் வேதம் ஆகிற அந்த காரத்திலே தடுமாறா நிற்புதோம் –
அவர்கள் பேர் ஆயிரமும் ஓதின -பெரிய திருமொழி -1-5-10-விளக்கு ஒளியாலே
மாதவன் தன் துணையா நடந்து -மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய
கீதையின் செம்மைப் பொருள் -இராமானுச நூற்றந்தாதி -68–வழியே நடப்பர்கள் —

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-திரு நாமம் சொல்லுங்கோள்-இல்லையே வேதம் சொல்லுங்கோள் சுருதி–இங்கு திரு மொழி -வேதம் தமிழ் செய்த மாறன் -அங்கம் அன்றோ

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்

பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –சாரத்திய வ்ருத்தாந்தாலே தன்னுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை-ஜகத் பிரசித்தம் ஆக்கின ஆச்சர்ய பூதன் –ரதியான அர்ஜுனன் கையில் வில்லையும் பொகட்டு சோகாவிஷ்டனாய்–சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம்   த்வாம் பிரபன்னம் –கீதை -7-2 – -என்கிற-அக்காலத்திலே பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே திவ்யமாய் இருந்துள்ள திருத் தேர்த்தட்டிலே -நின்று அருளிச் செய்த -ஸ்ரீ கீதையினுடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை -ஸூவ்யக்தமாம் படி -தேரிலே அர்ஜுனைக விஷயமாக அவன் அருளிச் செய்தால் போல் அன்றிக்கே –-பாரிலே சர்வ விஷயமாக அருளிச் செய்த எம்பெருமானாரை ஆஸ்ரயித்து இருக்கும் விலஷணரானவர்கள் உடைய    கல்யாண குணங்களிலே இவ்வருகு ஒன்றில் கால் தாழாதே சென்று என்னாத்மாவும் மனசும் அத்தை விடில் முடியும் என்னும்படி ப்ரவணமாய் விட்டது .

சொல்லுமளவில் யார் தான் எனக்கு இன்று சத்ருசர்

ஒன்பதாம் வார்த்தை –
ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம் -4- என்று
அந்தி தோறும் மந்திரத்தை சொல்லா நிற்புதோம்(இங்கு மந்திரத்தால் என்றும் திருமந்த்ரத்தையே ஆழ்வார் அருளிச் செய்தால் காயத்ரி மந்த்ரத்தைத் சொல்லி நிற்பதற்குப் பிரமாணம்)
அவர்கள் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் எங்கன் -முதல் திருவந்தாதி -33-என்று
(காயத்ரி ஜெபத்தில் ஈடுபடாமல் )மந்திர ரத்னம் த்வயத்தைச் சிந்திப்பர்கள் —

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-கீழ் உக்தமான இவ் வஸ்து வேத சிரஸ்சிலே குஹ்யமாய் இருக்கும் -என்கிறார் –ப்ராஹ்மனர்க்கு தனம் வேதம் இறே-பிரமாண முகத்தாலே இறே -பிரமேய பூதனான ஈஸ்வரனை தனம் என்று அறிவது –மந்த்ரம் -என்று–பிரதிபாத்யமும் அங்கேயாய்-பிரதிபாதகமும் அங்கேயாய்
இருக்கிறபடி ஈஸ்வரனுக்கு திரு நாமமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமாவில் சொல்லிற்றே-1-ஜகத் காரண பூதனை –-2-சர்வாந்தராமியாய் –-3-துர் ஜ்ஜேயனாய் –-4-தத் கத தோஷை ரசம் அஸ்பர்ஷ்டனாய் இருக்கிறவனை அனுபவிப்புதியாகில்-அவ் விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் -வேதாந்த முகத்தாலே யாதல் –இதிஹாச புராணத்தாலே யாதல் -அனுபவிக்கப் பாராதே நான் இழிந்த துறையில் அனுபவிக்கப் பார் –திரு மந்த்ரத்திலே அனுபவிக்கப் பார் –திரு மந்தரத்தால் அனுபவிக்குமா போலே ஸூகரமாய் இராது இறே – சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம் –என்கிறபடியே –சர்வார்தங்களையும் திரளச் சொல்லும் மந்த்ரம் இறே –மறவாது வாழ்தியேல் –விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்-பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே-விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –அது இவர்க்குச் சேராது –சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே-இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் – விஷய வைலஷண்யத்தைப் பாரார் – தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது-ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்–இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ-இங்கனே சொல்லுவான் என் என்னில்-அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்-இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இறே –பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இறே பிராப்தி இல்லாமைக்கு-வாழ்தியேல் –அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே – போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –-வாழ்ச்சி உன்னதே இறே-நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இறே –வாழ்தியேல் -என்று தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –மன பிரதானம் தோற்ற –யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே -தத் சாபேஷனாய்  இறே முமுஷூ இருப்பது –என்றும் வாழலாம் –நித்ய ஸூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே- மட நெஞ்சமே-எனக்கு பவ்யமான நெஞ்சே-விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி வேளையோடு
உஜ்ஜீவன வேளையோடு போக வேளையோடு வாசி அற என் பின்னே ஒழுகும் படி எனக்கு விதேகமாகப் பெற்றேனே என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் – நெஞ்சமே நல்லை நல்லை -என்னுமா போலே –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
-33–சத்தையையும் வெளிச் சிறப்பையும் பண்ணிக் கொடுக்கக் கடவனவனுடைய திரு நாமத்தையே புத்தியாலே அனுசந்தியாதே-அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே இடக்கை பத்துருக் கொண்டு வாயாலே சொல்லுகிற இத்தால்
அவ்விடத்தில் பிரயோஜனமாய்த் தலைக் கட்டுவது ஏதோ-நெஞ்சு விஷயாதிகளைப் பற்றிக் கிடக்க வாயாலே சொல்லுவது கையாலே எண்ணுவதாகிற இவ்விருத்திகளால் என்ன கார்யம் உண்டு-எம்பெருமானை அகலுகையே பலித்ததாய் விடுமத்தனை-சந்த்யையாலே
எல்லா அனுஷ்டானங்களையும் நினைக்கிறது  –

பத்தாம் வார்த்தை –
பதி வ்ரதைக்கும் பர நாரிக்கும்(ஆபாச ப்ரதீதி -சந்தேகப்பட இடமுண்டு) உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் ஆக்நேயாதி களுக்கு சேஷமாய் இருப்புதோம் -(வைதிக கர்மங்களைப்
பற்றி இருப்போம்)
அவர்கள் அவனுக்கே சேஷம் என்று -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்று
அறுதி இட்டு இருப்பர்கள் –
இது இருவருக்கும் உள்ள தன்னேற்றம்

இந்தத் தன்னேற்றம் தான்
1-பெருமாள் பக்கலிலும் (-ரிஷிகள் விட குகப் பெருமாள் வானர முதலிகள் விபீஷண ஆழ்வான் போல்வார் இடமும்)
2-நம்பெருமாள் பக்கலிலும் -(லோக சாரங்கர் விட திருப் பாண் பெருமாள் இடமும்)
3-அப்பன் பக்கலிலும் -(தொண்டை மான் சக்ரவர்த்தி விட்டு குறும்பு அறுத்த நம்பி இடமும்)
4-பெரிய நம்பி பக்கலிலும் -(மாறனேர் நம்பிக்கு ப்ரஹ்ம ரதம் ஏற்றி அருளினது மூலம்) காணலாம்

இதின் ஏற்றம் தான் நமக்கும் உமக்கும் பெரியோர்களுக்கும் நித்ய அநுசந்தானம்
என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார்

ஸ்ரீ முதலியாண்டானும் -அடியேன் இத்தனை காலமும் அபசாரம் பண்ணிப் போந்தேன்
இனிச் செய்ய அடுப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய –

சரணாகதனான முமுஷுவுக்கு இப் பத்து வார்த்தையும் நெஞ்சிலே பட்ட வன்று
திருவடிகள் ஸித்திக்கும் என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ முதலி யாண்டான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த முமுஷு க்ருத்யம் -ஸ்ரீ வார்த்தா மாலையில் –

November 28, 2025

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த நாலு வார்த்தைகள் –
1-அஞ்ஞான சமயத்திலும் –
2-ஜ்ஞான சமயத்திலும் –
3-ஜ்ஞானம் பக்வமான சமயத்திலும் –
4-ஜ்ஞான பலமான பகவத் ப்ராப்தி சமயத்திலும் –

1-மாதா பிதாக்களோடு -2-ரூப நாமங்களோடு -3-போஜநாதிகளோடு -4-பிரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு -5-விதி நிஷேதங்களோடு -6-தேச வாசங்களோடு -7-பந்து வர்க்கத்தோடு -8-ஐஸ்வர்யாதிகளோடு -9 –பிரார்த்தனைகளோடு -வாசியற பேதித்து இருக்கும் -(இந்த ஓன்பதையும் மேல் உள்ள நான்கு தசைகளிலும் வைத்து ப்ரமாணங்களைக் காட்டி அருளுகிறார்)

முதலடியான அஞ்ஞான சமயத்தில்
விவேகம் சஞ்சரியாமையாலும்
சரீரமேவ மாதா பிதரௌ ஜநயத -(ஆபஸ்தம்ப தர்ம-1-1-1-18–மாதா பிதாக்கள் சரீரத்தையே உண்டாக்குகிறார்கள் -ஆச்சார்யனைப் போலே ஆத்மாவுக்கு ஒரு புதுப்பிறவியை உண்டாக்குவதில்லை)என்கிறபடியே கேவல சரீரத்தை பெற்றவர்களையே
மாதா பிதாக்களாக அபிமானித்து – அவர்கள் இட்ட பேரும் -அவர்கள் நியமித்த
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -அவர்களை அநுவர்த்தித்து அத்தாலே வந்தேறியான ரூப
நாமங்களும் – அவர்கள் விரும்பின பந்து வர்க்கங்களும் –
அவர்கள் வம்ஸ அபிமாநமும் ஐஸ்வர்யமும் –
அவர்கள் கற்பித்த சம்சார வர்த்தகமுமாய்   இருப்பன சில ப்ரார்தனைகளுமாய்
சம்சாரத்தில் என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாப்யதிக தரித்ரனாக(ஓத்தாரும் மிக்காரும் இல்லாதவனாக) அபிமாநித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும் -1-

ஜ்ஞானம் பிறந்த சமயத்தில் –
ஐஞ்சு சேர் ஆக்கையான கேவல சரீரம் அன்று -பெரிய திருமொழி -9-7-8-
ப்ராக்ருத ஏக பரனாய் -பஞ்ச விம்சகனாய்(25) -ஸ்வ ஸ்மை ஸ்வயம் ப்ரகாசனாய் –
ஏக ரூபனாய் -ஜ்ஞாநாநந்த ஏக ஸ்வரூபனாய் -அச்சேத்யனாய் -அதாஹ்யனாய் –
அக்லேத்யனாய் -அசோஷ்யனாய் -நித்யனாய் -ஜனன மரணாதிகள் இன்றிக்கே
இருப்பான் ஒரு ஆத்மா உண்டு -வேத சாஸ்த்ரங்கள் உண்டு -புண்ய பாபங்கள் உண்டு –
வர்ண ஆஸ்ரமங்கள் உண்டு –கீழ் நின்ற நிலைகள் பாப விகாரத்தாலே பிரமித்த இத்தனை -என்று உணர்ந்து
நெகிழ்ந்து ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயிதி (ஆபஸ்தம்ப தர்ம-1-1-1-16–ஆச்சார்யனே யன்றோ சிஷ்யனை ப்ரஹ்ம வித்யையின் மூலம் புதிய ஞானப் பிறவியை எடுக்க வைக்கிறான் –)என்கிறபடியே – வேத சாஸ்த்ரத்தை மாதாவாகவும் -சாஸ்திர பிரதானம் பண்ணினவனையே பிதாவாகவும் அபிமானித்து -அந்த சாஸ்திரம் விதித்த படியே போஜநாதிகளும் – ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -விதி நிஷேதங்களும் -வேத சாஸ்திரம் போமவர்களையும் பந்துக்களாகவும் -அந்த சாஸ்திர அபிமானத்தால் வந்தேறின ரூப நாமங்களும் – சாஸ்திர அப்யாசம் பண்ணலான தேசமாய் -சாஸ்த்ரத்தை ஐஸ்வர்யமாகவும்
ப்ரார்தனைகளாகவும் அபிமானித்து -ஆத்ம அபிமானங்களில்(அஞ்ஞான தசையில் தேஹாத்ம பரமம் -ஞானம் பிறந்து பக்வமாகாத போது ஸ்வ ஸ்வா தந்த்ர ப்ரமம்) என்னை விஞ்சினார் இல்லை-தன்னை சமாயதிக தரித்ரனாக அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும் —2-

மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை
அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-8-மேகங்கள் சஞ்சரியா நின்றுள்ள ஆகாசம்-தேஜோ பதார்த்தம்-ஜல தத்வம் பூமி காற்று இவையாய்க் கொண்டு
பஞ்சீ க்ருதமாய் நின்ற –உபசயாத்மகமான சரீரத்தை இது (பரிணாமாய் இருக்குமே -பலவும் சேர்ந்தால் அநித்யமாகவே இருக்குமே ) நமக்கு ரஷகம் அன்று என்று புத்தி பண்ணி –பலவாய்க் கூடி ஒன்றானது தன்னடையே பிரிந்து போம் என்று பார்த்து உஜ்ஜீவிக்கப் பார்த்தாய் ஆகில் –

ஜ்ஞானம் பக்வமான சமயத்தில் –
சகல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மாவினுடைய ஸ்வா தந்த்ரம்
விநாசம் என்றும் -ஈஸ்வர ஸ்வா தந்த்ரம் இவனைக் கரை ஏற்றும் என்னும் இடமும் –
பதிம் விஸ்வஸ்ய (தைத் -உலகு அனைத்துக்கும் பதியான இருப்பவன்)-
ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தே ஸ்வ ஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச ஸதா ஸ்மர-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -நீ உஜ்ஜீவிக்க வேணும் என்று எண்ணினாயாகில் -உன்னுடைய சத்யையில் உனக்கு விருப்பம் இருந்ததாகில் ஆத்மாவின் உடைமையாய் இருக்கும் தன்மையையும் எம்பெருமான் உடையவனாய் இருக்கும் தன்மையையும் -இவ்விரு தன்மைகளும் இயல்பானவையே தான் என்பதையும் எப்போதும் நினைப்பாயாக -) -இத்யாதி பிரமாணங்களாலும்
ஆலோட்ய சர்வ சாஸ்ராணி விசார்ய ச புந புந இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயா நாராயணஸ் ஸதா –(பார ஆனு -178-11-எல்லா சாஸ்திரங்களிலும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்த போதிலும் நாராயணன் ஒருவனே த்யானிக்கத்தக்கவன் என்பது அசைக்க முடியாத படி தேறும்) -என்று பிரமாணங்கள் சொல்லுகையாலும்
கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து
தத்வ த்ரய ஜ்ஞானத்தையும் -தத்வ த்வய வைராக்ய விஷயத்தையும் –
தத் ஏக விஷய பக்தியையும் உடையவனாய் –
தத்வ ஹிதங்களை அறியும் போது -கைப்பறி பறித்தும் (தன் ஷேமத்துக்காக தான் முயலுவதும்)-கிடந்த ஆனை கண்டு ஏறியும் (படுத்திருக்கும் யானை மேல் பாகனின் துணை இல்லாமல் தானே ஏறுவது போல் உலகமேத்தும் தென் ஆனை வடவானை மேல் ஆச்சார்யர் ஸஹாயமில்லாமல் பற்ற முயலுதல்)அல்லாமையாலே லோகத்திலே –
அர்த்த காமோபஹதன் அன்றியிலே வேத சாஸ்திர நிதான ஜ்ஞானனாய்
லோக பரிக்ரஹம  உடையனாய் இருந்துள்ள ஆசார்யன் ஸ்ரீ பாதத்திலே சென்று
கண்ணும் கண்ண நீருமாய் -கீழ் தேகாத்ம அபிமாநியுமாயும் -கேவல ஆத்ம அபிமாநியுமாயும் தான் பட்ட அநர்த்தம் எல்லாம் நேராக விண்ணப்பம் செய்ய –
ஆசார்யனும் தன் நிரவதிக கிருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து –

இரண்டு பங்குக்கு ஒரு கையோலை போலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்துக்கும்
ஆத்ம பாரதந்த்ர்யத்துக்கும் வாசகமாய் -இவ்வாத்மாவுக்கும் எம்பெருமானுக்கும் உண்டான
ஒழிக்க ஒழியாத சம்பந்தத்துக்கு –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் ஓன்று உண்டு என்று
பெரிய திருமந்த்ரத்தை ஆசார்யன் தன் இரக்கத்தாலே அருளிச் செய்து –
ஸ்வரூபத்தில் உணர்ச்சியோடு(நவவித சம்பந்தமும் சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபமும் யதாத்ம்யமாக அறிந்து) -ஸ்வ ரஷணத்தில் அசக்தியோடு -ஈஸ்வரனைப்
பேணிக் கொண்டு -வர்த்தி என்று அருளிச் செய்து அருளினால் -தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து –

எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –சூரணை -113-பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம்  என்னும் இடம் தோற்ற –இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –அதாவது –பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள ஸூத்ரம் போல் அன்றிக்கே –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –எட்டு  திரு அஷரமாய்- மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –திரு மந்த்ரத்தை மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அதிலே த்வயமாகிற அச்சுத தாலியையும் முளைத் தாலியையும் வயிர மணி ஸ்தானத்தில் 32- எழுத்துத்தான சரம ஸ்லோகத்தையும் சேர்த்து ஆத்மாக்களுக்கு அநந்யார்ஹத்வ ப்ரகாசகமாகக் கட்டினான்)

பெற்றார் பெற்று ஒழிந்தார் -பெரியதிருமொழி -8-9-7- என்றும்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ-பெரிய திருவந்தாதி -5-என்றும் –
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் –
பெரிய திருமொழி -1-9-1- என்று சொல்லுகிறபடியே

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-பித்ராதிகள் ராகாந்தராய் பிரஜைகளை உத்பாதித்து யௌவன விரோதி என்று பொகட்டுப் போக நிற்பர்கள் ஆயிற்று – பின்னையும் இவனுக்கு ஒரு உறவு முறை ஒழிய செல்லாது இறே –
பண்ணிப் போந்த வாசனையாலே அவ்வளவில் அவர்கள் வழியாலே நின்று முகம் கொடுக்குமாயிற்று –தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –ஸகல வித பந்துவாய் -பழகியதை சொல்லி பிதா நாராயணா-த்வம் மாதா – சேலேய் கண்ணியரும் -மாதா தேவோ பவ –இவற்றைச் சொல்லி-பண்டைய நாளாலே-9-2- -எல்லா உறவும் -அடுத்து -9-3-சகல வித கைங்கர்ய பிராத்தனை போல்-எத்தால் யான் மறக்கேன் இனி- தென் குறுங்குடி நின்ற அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர் ஆதி யம் சோதியை எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –2-1-10- போல் இங்கு இவர்

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–பிரஜை யுண்டாக்குகைக்கு நோன்பு நோற்று வயிற்றிலே தரித்தால் ப்ரஜைக்குப் பாங்காக போஜன சய நாதிகளை நியமித்து-பிறந்தால் அ ஸூசி பிரஸ்ர வாதிகளைத் தொட்டு அளைந்து வளர்த்து இதினுடைய ஹிதங்களையே சிந்திக்கும் தாயாவாயும் நீயே-(புருஷோத்தம ப்ரவசம் -நம் சம்ப்ரதாயம் )ஒரு பாத்ரத்திலே இட்டு வைக்குமவை போலே தரிக்கும் அளவே இறே இவளது உத்பாதகன் பிதாவே இறே
ஹிதமே சிந்தித்து இருக்கும் பிதாவும் எனக்கு நீயே-ஸரீரம் ஏவ மாதா பிதரவ் ஜனயத (ஆபஸ்தம்ப ஸூத்ரம் )-என்று இருவரும் கூட சரீரத்துக்கு உத்பாதகர் அத்தனை இறே
ஆத்மாவுக்கு நன்மை பார்க்கும் ஆசார்யனாயும் நீயே-(மாதா நாராயண பிதா நாராயண
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பாவ-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே-அன்னையாய் அத்தனாய் –
ஆச்சார்ய பரம்-உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப்பிறவி-அன்னை குடி நீர் அருந்தி –ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி )

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால்  நின் அடைந்தேன்

உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-நான் வேறு சிலரை பந்துக்கள் என்று
நினைத்து இருப்பது இல்லை –ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும்
உடையேன் அல்லேன் –புறம்பு ஒருவரும் இல்லை யாகில் நீர் உண்டே என்ன நானும் எனக்கு கழுத்துக் கட்டி –(கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )நிராலம்பநாய் விழுமவனுக்கு ஒரு தரையிலே விழ வேணுமே-
சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )இவன் நம்மை விட்டு
புறம்பே போய் படக் கடவது எல்லாம் பட்டான் -என்று உன் திரு உள்ளத்திலே கொண்டு
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –என் குறை அறுத்து வைத்தேன்-
நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-
என்கிறார் –

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன்
உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே-1-9-1-தேவரே சர்வ வித பந்துவுமாய் இருக்க-சோபாதிக பந்துகளாய் –-இத் தலையில் பிரயோஜனம் உள்ள நாள் கொண்டு இவனுக்கு உதவ வேண்டும் என்று தங்களைக் கொண்டு அகல வேறு அபகாரத்தையே பண்ணுமவர்களையே பந்துக்கள் என்று நினைத்து அனர்த்தப் பட்டேன் -இவன் பக்கல் உபகாரம் கொள்ளலாம் என்று கொண்டு – இவனுக்கு உதவ வேண்டும் அன்று –அபகாரத்தை பண்ணித் தங்களைக் கொண்டு அகல நினைக்குமவர்களை பந்துக்கள் என்று நினைத்தால் அவர்கள் பந்துக் க்ருத்யம் பண்ணக் காணாமையாலே-க்லேசம் இறே சித்திப்பது-இவன் பந்துக்கள் என்று நினைத்து இருக்கும் அத்தனை இறே
அவர்கள் பக்கல் அது இல்லையே வேறு ஒரு வ்ருத்தாதிகளால் வேண்டாதே
அவர்கள் தாங்களே க்லேசத்துக்கு உடலாய் இறே இருப்பது –பட்டு ஒழிந்தேன் –பட்டேன் -என்றபடி யாகவுமாம்-அன்றிக்கே-நோய் பட்டு ஒழிந்தேன் –-அவர்களை விட்டேன் என்னவுமாம் –

திருமந்த்ரத்தை மாதாவாகவும்
ஆசார்யனையே பிதாவாகவும் அபிமானித்து
ஆசார்யன் திரு உள்ளமான ரூப நாமங்களும் -போஜநாதிகளும் ( பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள்மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்கிறபடியே அருளிச் செயல்களையே ஸாத்விக ஆகாரம்-உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர்
அறி தர நின்ற,இராமானுச னெனக் காரமுதே.-19- )-
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -விதி நிஷேதங்களும் –
ஆசார்யன் விரும்பி வர்த்திக்கும் தேசமே த்வய தேசமாகவும் –
ஆசார்யன் திரு உள்ளத்தாலே சஹ வாஸ யோக்யராக கற்ப்பித்த
பரம சத்வ நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களே பந்துக்களாகவும்
அவர்கள் தங்களுக்கு ஐஸ்வர்யமாக அபிமாநித்து இருக்கும் ஆசார்ய கைங்கர்யமே
தனக்கு ஐஸ்வர்யமாகவும் -தத் கைங்கர்யத்தின் மேல் உண்டான பிரார்த்தனையே
தனக்கு தேக யாத்ரையாகவும் நினைத்து –

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -நின்னிலங்கு பாதமன்றி
மற்றோர் பற்றிலேன் -திருச்சந்த விருத்தம் -90- என்றும்
கற்றிலேன் கலைகள் –நல் துணையாகப் பற்றினேன் அடியேன் -பெரிய திருமொழி -1-1-8- என்றும்-
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புணைய மாட்டேன் —
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே -திருமாலை -26-என்றும் –
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து -திருவாய் மொழி -10-6-2- என்றும் –
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது -பெரியாழ்வார் திருமொழி -5-1-5-என்றும் சொல்லுகிறபடி தன் வேறுபாடு தோன்ற இந்நிலத்தில் பொருந்தாமையும்

பொருந்தும் நிலத்தில் புகப் பொறாமையும்  வடிவிலே தோன்றும்படி நிர்மலனாய் மோஷ பிரதனான எம்பெருமானைக் கிட்டி வாழும் அளவும் ஜ்ஞானப் பிரதனான ஆசார்யன் நிழலிலே ஒதுங்கி அவர் ப்ரீதிக்கு வர்த்தகனாய் இருந்த இடம் அறியாமல் (உப்புப்போலே உம்மைப்போலே இருக்க வேண்டுமே)இருக்கும் —3-

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –90-தம்முடைய
ஆகிஞ்சன்யத்தை அருளிச் செய்கிறார் –வேறு முதல் இன்றிக்கே அகதிகளான எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விலங்கா நின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-புனித –விஷயாந்தர ப்ராவண்யத்தால் அசுத்தராய் -தாம்தாம் பக்கல் சுத்தி ஹேது இன்றிக்கே இருக்கும்-குறைவாளரையும் ஸ்வ ஸ்பர்சத்தாலே சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன் அல்லையோ-அதாவது –
உத்கர்ஷ்ட ஜன்மம் என்ன – வேத ஸ்பர்சம் என்ன-வேதார்த்த அனுஷ்டானம் என்ன –
இவற்றினுடைய ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹம் நின்று-விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து தருகை

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன்
அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம்
—8-ஓர் ஆச்சார்யனைப் பின் சென்று -அவன் உச்சரிக்க அநு உச்சாரணம் பண்ணி போராமையாலே சாஸ்த்ரீய ஜ்ஞானம் உண்டாயிற்று இல்லை-மனத்தை பர விஷயமாக்கி -விஷயங்களிலே ப்ரவணம் ஆகிற பாஹ்ய இந்திரியங்களை காதாசித்கதமாய் ஆகிலும் விஷயங்களில் நின்றும் மாற்றி -ப்ரத்யக் விஷயம் ஆக்கினால் நல் வழி போகுகைக்கு உறுப்பாம் இறே –
ஸ்தோத்ராதி இந்திரியங்கள் விஷயங்களிலே இழிந்து தான் நினைத்த வழியிலே கொடு போய் –மனசையும் அதுக்கு உறுப்பாக்கி போந்தேன்-விஷய ப்ரவணர் ஆனவர்கள் விஷய ப்ராவண்யம் போராது என்று ஔஷத சேவை பண்ணி இருப்பார்கள் இறே-அப்படியே விஷயங்களிலே மனசை வலிய மூட்டிப் போந்தேன்-சாஸ்த்ரீய ஜ்ஞானமும் இன்றிக்கே –
விஷய ப்ரவணனாய்ப் போருகையாலே -அறிவு கேடனாய் ஹித சிந்தை பண்ணப் பெற்றிலேன்-எனக்கு ஒரு நன்மை சம்பாதியாமையே அன்றிக்கே – பர ஹிம்சையைப் பண்ணும் விரகே சிந்தித்துப் போந்தேன் எல்லாரையும் ஹிம்சித்து நான் ஜீவிக்கும் விரகே பார்த்துப் போந்தேன் –ஒருவனுக்கு பகவத் சம்பந்தம் உண்டு இல்லை என்று தனக்கே அறியலாம் -என்று பலகாலும் அருளிச் செய்வர் ஸ்ரீ ஜீயர்-ஒருவன் நோவுபட கண்டால் -ஐயோ -என்று இரக்கம் பிறந்து இருக்கில் நமக்கு பகவத் சம்பந்தம் உண்டு என்று அறியலாம்-அத்தனையும் வேண்டும் -என்று இருந்தான் ஆகில் நமக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்கலாம்-ஹேது அறிந்திலேன்–தவிர்ந்து கொடு நிற்கக் கண்டேன்-
உய்வதோர் பொருள் -என்றும்-ஆழியான் அருள் என்றும் –-சிக்கெனத் திருவருள்
 பெற்றேன் -என்றும் கீழ் சொன்னார் இறே-செல்லக் கடவ கதி உண்டு -ஸ்ரீ பரமபதம் -அங்கே புக்கு உஜ்ஜீவிக்கும்படியை அனுசந்தித்து-(திருவேங்கட யாத்திரை -அக்ரூரர் -அர்ச்சிராதி கதி மூன்றையும் பாரித்து இருக்க வேண்டுமே )அம்மியைக் கட்டிக் கொண்டு ஆற்றிலே இழிவாரைப் போலே அன்றிக்கே-பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தநாம்ருதம் -என்னுமத்தைப் பற்றினேன் –அக்கரை படுத்தி விடுமத்தைப் பற்றினேன்-
(நாரத்தைப் பற்றாமல் அயனத்தைப் பற்றி இருப்பதே நல் துணை)நாராயணா என்னும் நாமம்
அக்கரைப் படுத்தும் வஸ்துவுக்கு வாசகமான திரு நாமம் – நயாமி பரமாம் கதிம் –என்னக் கடவது இறே –

போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே -26–ஏதும் இல்லேன் –அது தன்னாலே ஏதிலேன் – மநோ வாக் காயங்கள் ஒரு படி பட்டு இருப்பார் பெறும் பேற்றுக்கு
இவற்றில் ஒன்றாகிலும் வேண்டி இருக்க – அதுவும் எனக்கு இன்றிக்கே இருக்கையாலே-அரங்கற்கு-ஏதிலேன் —ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம்-என்கிற சௌஹார்தத்தையும் –ருஜூ -என்கிற படியே-ஆஸ்ரித விஷயத்தில் மநோ வாக் காயங்கள் மூன்றும் செவ்விதாய் இருக்க
ஆர்ஜவ குணத்தையும் கேட்டே போகாமே-அனுஷ்டான சேஷம் ஆக்குகைக்காக கோயிலிலே சந்நிஹிதரான தேவரீருக்கு –ஒன்றுமாகப் பெற்றிலேன் –ஒரு கரணத்தாலும் தேவரீரை ஸ்பர்சிக்கப் பெற்றிலேன் –என்னே –-அசந்நிஹிதராய் இழந்தேன் அல்லேன் – பிராப்தி இல்லையால் இழந்தேன் அல்லேன் செய்த அம்சத்திலே பிழை பிடிக்குமவராய் இழந்தேன் அல்லேன் –என் இழவுக்கு அடி பாபம் இறே –ஸ்ரீ கௌஸ்துபம் போலே உகப்பான வஸ்து கிடீர் இப்படி வ்யர்த்தமாய்ப் போய்த்தது – அரங்கத்து உறையும் இன் துணைவருக்கு கிடீர் நான் தூரஸ்தன் ஆய்த்து –கஷாய பாநம் பண்ணுமா போலே ஹித புத்தியாலே சேவிக்க வேண்டும் விஷயமாய்த் தான் இழந்தேனோ – பாலே மருந்து ஆனால் போலே தர்ச நீயரான தேவரீரே மோஷ ப்ரதராய் இருக்க வன்றோ இழந்தது –

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அறப் பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1–கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணின படி கண்டாயே -உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ ––நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் —விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –
படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ-
நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–
பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் -நெஞ்சு சப்ததோஸ்மி திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ ––

தோட்டம் இல்லவள்  ஆ தொழு  ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே  வளைப்பு வகுத்து கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட  கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –நிரதிசய போக்யமான உன் திருவடிகளிலே இவற்றில் ஒன்றும் குறையாமல் திரள –என் நெஞ்சாலே வளைத்துக் கொண்டு இருந்தேன்-உன்னை ஒழிய புறம்பே
தாரக போஷக  போக்யங்களாய் இருப்பரோட்டை சஹவாசம் எனக்கு துஸ்ஸஹம்-சர்வ லோகங்களும் பிரளயத்தில் அகப்பட -ஊன்றி இடந்து எடுத்து– தானத்தே வைத்தானால் -என்கிறபடியே ஸ்வ ஸ்தானத்திலே வைத்தான் என்கை-இது தான் ஸ்வபாவம்  ஆனவன் என்கை –குவலயாபீடத்தை நிரஸ்ததாம்படி கொம்பை ஒசித்தவனே –இத்தால் பலித்தது –
சம்சாரிகள் பக்கல் நின்றும் எடுத்து – ஸ்வ ஸ்தானமான உன் திருவடிகளில் வைத்து –
அதுக்கு விரோதியான கர்மங்களையும் கழித்துத்  தர வேணும் -என்கிறார்-

ஜ்ஞான பலமான பகவத் ப்ராப்தி சமயத்தில் – தான் கீழ் நின்ற (மூன்று)நிலைகளையும் அடையநெகிழ்ந்து -ஆசார்யன் கட்டின ஸ்வரூப அநுபந்தியான மங்கள ஸூத்ரத்தில்
அர்த்த அனுசந்தானத்துடன் வர்த்தியா நிற்கச் செய்தேயும் –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் -விபரீத ஜ்ஞான ஜநநியான சரீர சம்பந்தத்தை ருசி வாசனைகளோடே விட்டு (மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்)-ஆற்றிலே குளித்துக் கரை ஏறி புக்ககத்தில் உற்றார் அலங்கரிக்கப் போய்(மதிமுக மடந்தையர் இத்யாதி -சதம் மாலா ஹஸ்தா இத்யாதி) -வகுத்த தேசத்திலே முகம் பழகிய திரளிலே சென்று புகுந்து (ஆத்மாவுக்கு பழகின திரள் இதுவே -வந்தேறியான சரீரத்துக்கு பழகின திரள் கீழ் எல்லாமே)-தனக்கென்ன ஒரு ரூப நாமங்கள் ஆதல் –போஜன சயநாதிகள் ஆதல் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஆதல் -விதி நிஷேதங்கள்  ஆதல்-தேச வாஸம் ஆதல் -பந்துக்கள் ஆதல் -ஐஸ்வர்யம் ஆதல் -பிரார்த்தனைகள் ஆதல் –அன்றிக்கே –

அஹம் அன்னம் (நான் எம்பெருமானுக்கு போக்யப் பொருள்)என்னுதல் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி நிற்றல் –சதா பஸ்யந்தி -என்று வைத்த கண் வாங்காதே பார்த்து இருத்தல் – சாயாவா சத்வம் அநுகச்சேத் -(தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வஸ்தோ வா மாதரம் சாயாவா சத்வம் அநுகச்சேத் ததா ப்ரகாரம் யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -இளம் கன்றை யுடைய பசு தனது கன்றையும் கன்று தனது தாய் பசுவையும் நிழல் அசையும் பொருளைப் பின் தொடர்வது போலே பரம் பொருளைப் பின் தொடர்கிறான் முக்தாத்மா –)என்கிறபடியே சாயாவத் பர தந்த்ரனாய் வர்த்தித்து
செய்தல் எப்போதோ என்று த்வரை நடந்து செல்லுகை-

இவ் வர்த்தம் ஒரு ஆசார்யன் அங்கீகரித்த முமுஷுவுக்கு நாள் தோறும் ஆராய வேண்டுவது ஓன்று –எங்கனே என்னில் –
1-ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்திர சம்பந்தத்தாலே கைப் பிடித்தால் –
பூர்வ அவஸ்தையின் நிலைகள் அடைய நெகிழ்ந்து  பர்த்தாவினுடைய
அபிமானத்திலே ஒதுங்கினாப் போலேயும் -2-அனுபநீதனாவன் ஒரு மந்திர சம்பந்தத்தாலே
சிகை யஜ்ஜோபவீதங்களைத் தரித்தால் த்விஜன் என்று பேர் ஆகிறாப் போலேயும் -3-யஞ்ஞத்தில் ஒருவன் தீஷித்தால் பூர்வ அவஸ்தையின் நிலைகள் அடைய நெகிழ்ந்து
அவப்ருத ஸ்நானத்தளவும் யஜமான வேஷத்துக்கு தக்க அனுஷ்டானம் ஆகிறாப் போலேயும்-4-சந்நியாசி கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து ஆஸ்ரமத்துக்கு உசிதமான வர்த்தனத்தோடே வர்திக்கிறாப் போலேயும் –இந்த ஜீவன் முக்தனான முமுஷுவும் (ஜீவன் முக்தி நம் சம்பிரதாயத்தில் கிடையாது -வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ஸ்வாமிகள் பன்னி பன்னி ஸாதித்த அர்த்தம் –முமுஷு இங்கு இருக்கும் நாள்களில் முக்தனாகும் த்வரை யுடன் வாழ்வதையே இங்கு காட்டும் -) கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து பகவத் கைங்கர்யம் ஒன்றிலுமே நிரதனாய் வர்திக்கிறது எப்போதோ என்று தன் நெஞ்சத்தை உருக்கி தன் வேறு பாடு தோன்ற வர்த்திக்கையே முமுஷு க்ருத்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் -ப்ரபன்னன் -முமுஷு வுடைய க்ருத்யங்கள்-

November 28, 2025

வார்த்தை -453-
முமுஷுவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு அறிய வேண்டிய அர்த்தம் நாலு உண்டு
இதில் அத்யவசாயமாய் இருப்பனவும் நாலு உண்டு -அவை எவை என்னில்
1-ப்ராப்யமும் -ப்ராப்ய அத்யவசாயமும் –
2-ப்ராபகமும்  -பிராபக அத்யவசாயமும் –
3-ஆசாரமும்  -ஆசார அத்யவசாயமும் –
4-போஜனமும்  -போஜன அத்யவசாயமும் –

இதில் ப்ராப்யம் ஆவது –
அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமாக –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்திலே போய் –
அங்கு உண்டான பரிபூரணமான பகவத் அநுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் –

இதில் அத்யவசாயம் ஆவது –
கைங்கர்யத்தை ஒழிந்துள்ள தர்ம அர்த்தங்களிலும்
மோஷத்தில் கைவல்யம் முதலாய் உள்ள புருஷார்த்தங்களிலும்
அபோக்யதா புத்தி பூர்வகமாக இக் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை –

இதில் ப்ராபகம் ஆவது –
சௌலப்யாதி கல்யாண குண விசிஷ்டனுமாய் -விக்ரஹ விசிஷ்டனுமாய்
இருந்துள்ள ஈஸ்வரன்(பிரபத்தி சரணாகதி என்பதே இந்த எண்ணம் தானே- விடுவித்து பற்றுவிக்குமவன் அவனே பிராப்பகம் உபாயம் -ஸுலப்யம் குணபூர்த்தி உள்ள அர்ச்சாவதாரத்திலே ஆழ்வார்கள் பலகாலும் சரணாகதி செய்து காட்டி உள்ளார்கள் -)

இதில் அத்யவசாயம் ஆவது –
பெரிய பிராட்டியார் புருஷகாரத்தாலே
அவன் தானே உபாயம் என்று உபாயாந்தரங்களான கர்ம ஞான பக்திகளிலே
கால் தாழாதே இவ் உபாயமே நிர பேஷ உபாயம் என்று இருக்கை

இதில் ஆசாரம் ஆவது –
உபாய ஸ்வீகாரம் பண்ணினவன் யாவதாயுஷம் மநோ வாக் காயங்களாலும்
ஸ்வரூப அநுகூலமாக வர்த்திக்கும் வர்த்தனம் -(சம்பிரதாயத்தை ஒட்டி வாழும் வாழ்க்கை முறையே ஆசாரம்)
அதாவது
பர வியூஹ விபவாதிகளில் காட்டில் அர்ச்சாவதாரத்தின் நீர்மையிலே
அதி ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே
அநுகூல வ்ருத்திகளைப் பண்ணுகையும் –
பிரதிகூலங்களை தவிர்ந்து வர்த்திக்கையும்

இதில் அத்யவசாயம் ஆவது –
கீழ் சொன்ன அநுகூல வ்ருத்திகளை பண்ணுகையும் –
பிரதிகூலங்களை தவிருகையும்
செய்யும் இடத்து
க்யாதி லாப பூஜைகளைப் பற்றவும் –
த்ருஷ்டப் பிரயோஜனர்தமாகவும் –
பகவத் ப்ராப்திக்கு சாதனமாகவும் -பிரதிபத்தி பண்ணிச் செய்யாதே –
இவ் வாசாரமே ஸ்வயம் பிரயோஜனம் என்று இருக்கை –

இதில் போஜனம் ஆவது
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தைக் கொண்டு குஷி பூர்த்தியிலே அந்வயியாதே
ஷூநிவ்ருத்தி மாத்ரமே பிரயோஜனமாக ஜீவிக்கும் ஜீவனம் -(வயிற்றை நிறப்பதற்காக சாப்பிடாமல் பசியைப் போக்கவே உண்ண வேண்டும்)

இதில் அத்யவசாயம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஜீவிக்கும் ஜீவனம் என்ன
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கும் ஜீவனம் என்ன
அமுதுபடி சாத்துப்படிகளுக்கு அர்ஹமான த்ரவ்யங்களிலே சாபேஷனாய் ஜீவிக்கும் ஜீவனம் என்ன
இவற்றில் கால் தாழாதே
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தைக் கொண்டு தேக யாத்ரை நடத்துகை ப்ரபன்ன க்ருத்யம் –

—————————

வார்த்தை -454-
1-ஸ்வரூபத்தில் உணர்த்தியும்
2-ஸ்வ ரஷணத்தில் அசக்தியும்
3-ப்ராப்யத்தில் த்வரையும்
4-ப்ராபகத்தில் அத்யவசாயமும்
5-விரோதியில் பயமும் –
6-உத்தேச்ய விஷயத்தில் கௌரவமும்
7-உபகார விஷயத்தில் க்ருதஜ்ஞ்ஞதையும்
8-உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியும் —

ஸ்வரூபத்தில் உணர்த்தியாவது –
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -பெரிய திருமொழி -8-9-3-என்று இருக்கை(கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றி -அந்வயமும் தள்ள வேண்டியவற்றையும் அருளிச் செய்வார்கள்)

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ
–8-9-3-அநந்யார்ஹத்வம் -திருமந்த்ரார்த்த ஞானம் அருளப் பெற்று அருளிச் செய்கிறார் இப்பதிகம் –-உயிரான பாசுரம்-கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  -பரமாத்மா அகாரம்-திருக் கண்ண புரத்தை தனக்கு
வாசஸ் ஸ்தானமாக உடையவனுக்கு –ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் இருப்புக்கு
அவ்வருகே ஓன்று போலே காணும் இது –—அடியேன் -சேஷ பூதன் -மகார அர்த்தம்
உடையானுக்கு -ஆய -சேஷத்வ வாசகம் லுப்த சதுர்த்தி–ஒருவர்க்கு உரியேனோ-அநந்யார்ஹ சேஷத்வம் குறிக்கும் உகார அர்த்தம் –-மோக்ஷ பிரதன் -ஸ்ரஷ்டா -இவன் ஒருவனே-பிரதிபந்தங்களைப் போக்கி இசைவித்து தனது தாளிணைக் கீழ் தனது பேறாக இருத்தும் ஸ்வாமி-இத்தால் தம் ஸ்வரூபம் சொல்லுகிறார் – பிறர்க்கு உரியேன் அல்லேன் என்னும் இடம் சொல்லுகிறார் –அசாதாராண விபூதி உக்தன் ஆனவனுக்கு என்னும் இடம் சொல்லுகிறார் –

ஸ்வ ரஷணத்தில் அசக்தி யாவது –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -திருவாய்மொழி -5-8-3- என்று இருக்கை

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ -நீர் துர்பலரானால் வேறே சிலர் நிர்வாஹகர் ஆனாலோ என்னில்
யாரே களை கண் –ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தரானவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ -அமிழ்ந்துவார் அமிழ்ந்துவரை எடுக்கவோ -என்னளவும் புகுரா நில்லாதவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ-என்னை என் செய்கின்றாய்-நீ உன்னைத் தரப் பார்த்தாயா -உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா -நெறி காட்டி நீக்குதியோ
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும்,-“யாரே களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும்,“என்னை என் செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம்மூன்றாலும் இவர்க்குண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார்-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;-க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக் கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-என் நான் செய்கேன்’-என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி -என்னை அறியாயோ! பிறரை அறியாயோ! உன்னை அறியாயோ-என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.-ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய, முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை என்பது இவர்க்குத் திருவுள்ளம்-என் நான் செய்கேன்–தாம் கை வாங்கின படி.-யாரே களைகண்-
பிறர் பக்கல் நின்றும் கை வாங்கினபடி.-என் நான் செய்கேன், ‘யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்னும் இம் மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும், அவனே ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப் படுகின்றன

ப்ராப்யத்தில் த்வரை யாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்று இருக்கை

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே
–9-3-7-அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-மா கம் –பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என் மனம் ஏகம் எண்ணும் – என்னுடைய மனம் ஆனது-எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது –இராப்பகல் இன்றியே இரவில் ஒரு காரியமும்-பகலில் ஒரு காரியமுமே அன்றோ உலகத்தார்க்கு இருப்பது-
இவர்க்கு-எல்லா காலங்களிலும்-இதுவே ஆயிற்று –-ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17
நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய
மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-

ப்ராபகத்தில் அத்யவசாயம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -திருவாய்மொழி -5-8-8- என்று இருக்கை

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,
சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் ––சர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்மதான பின்பு கிருஷியும் உம்மதாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ

விரோதியில் பயமாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றார் போல் -பெரிய திருமொழி -11-8-3- என்று இருக்கை

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3—பாம்பு -விஷயாந்தரங்கள் )-அவை ஒழியில் நாட்டார் பிழையாதபடி இருக்கிறவை-இவருக்கு இருக்கிற படியாயிற்று இது –வெய்யிலிலே நொந்தவன் ஆடுகிற சர்ப்பத்தின் நிழலிலே போய் ஒதுங்கி அது அள்ளிக் கொள்ளும் என்று அறியாதே சுகிக்கப் பார்க்குமா போலே இருப்பது ஓன்று இறே அது அள்ளிக் கொண்டது அப்போது இறே –(மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்னே )கண்டது அடைய அது சங்கா ஹேது வாயிற்று –தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –

உத்தேச்ய விஷயத்தில் கௌரவமாவது –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் –இங்கே திரிய உறுமோ பாவியேனுக்கு -திருவாய்மொழி -8-10-3- என்று இருக்கை

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
-8-10-3—ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-அவர்கள் ஆகிறார்
முன்னம் குறள் உருவாய் மூ அடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திருமொழி -9-4-2-என்று இருக்குமவர்கள் 
சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை யே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –ஆத்ம அனுபவத்தை குறித்து சொன்ன வார்த்தையை பகவத் விஷயத்திலும் சொல்லுகிறார் -கீழ்ச் சொன்னவை போலே கழிக்க ஒண்ணாதே சரம அவதி இல்லாமையால் உறுமோ -என்கிறார் –பாவியேன் -பிரதம அவதிக்கும் சரம அவதிக்கும் வாசி சொல்ல வேண்டும் படி பாபத்தை பண்ணினேன்

உபகார விஷயத்தில் க்ருத்ஜ்ஞ்ஞதை யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -திருவாய்மொழி -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7-
உனக்கு என் செய்கேன் –திருவாய்மொழி -2-7-8- -என்று இருக்கை

(அவன் பண்ணும் உபகாரங்கள் கிரமப்படி இருக்க வேண்டாமே -ஆகையால் மருவித் தொழும் மனமே தந்து அடுத்து என்னைத் தீ மனம் கெடுத்தான்)

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்-ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்-
பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –சுக்கிராதிகள் வார்த்தை செவிப்படாத படி மஹா பலியை வடிவு அழகால் வஞ்சித்தால் போலே என்னை அநந்யார்ஹனாக்கிக் கொள்ள வல்லை காண் இச் சக்தியை உடையவனுக்கு முடியாதது உண்டோ –1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே-மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது-அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது-என் வாமனனே –வல்லை காண்-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்–ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே-வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –

உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியாவது
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் –திருவாய்மொழி -10-10-3- என்று இருக்கை

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-விலக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –-என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –

ஸ்ரீயபதியான சர்வேஸ்வரனைப் பற்ற
ஜீவாத்மாக்களுக்கு அத்யந்த பாரதந்த்ர்ய சேஷத்வங்கள் ஸ்வரூபம் என்று
சதாசார்ய உபதேச முகத்தாலே சகல வேத சங்ரஹமான
ஸ்ரீ மத் அஷ்டாஷர மகா மந்த்ரத்திலே பிரதம மத்தியம பதங்களாலே தெளிய அறிந்து(பிரணவத்தால் சேஷத்வம் -நமஸ்ஸால் பாரதந்தர்யம் என்று கொள்ள வேண்டும்-பீஷ்மர் தர்மம் கேட்ட ஆறு கேள்விகளில் இறுதி கேள்விக்கு முதலில் பதிலல் சொல்லியது போல் இங்கும் சேஷத்வம் இறுதியில் இருப்பதால் பிரணவம் முதலில் உள்ளது)

ஸ்வ ரஷணத்தில் சக்தியும் பிராப்தியும் இல்லாமையாலே
மந்திர ரத்னம் என்கிற திரு நாமத்தை உடைத்தான த்வயத்தின் உத்தர வாக்யத்தாலே
பிரதிபாதிக்கப் பட்ட சித்த உபாய பூதனான ஸ்ரீயபதி திருவடிகளையே உபாயமாக
உடையனான அதிகாரிக்கு(பற்றுவது உபாயம் அல்லவே -அதிகாரி விசேஷணம் மட்டுமே தானேஸ்வ விசேஷணமான சக்ருத் பிரபத்திக்கு மேற்பட அபேஷிதமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே –

கீத உபநிஷத் ஆசார்யன்
த்யாஜ்ய தயா அகர்தவ்யமாக விதித்த அஷ்டாங்க யோக யுக்தமான கர்ம யோகமும்
தத் உபாயமான ஜ்ஞான யோகமும் –
தத் உபாயமான பக்தி யோகமும் –
எல்லாவற்றிலும் அங்கத் வேன அனுவர்திக்க கடவதான வர்ண ஆஸ்ரம யோக்யதா பாதக தர்மங்களும் த்யாஜ்யம்(வர்ணாஸ்ரம தர்மங்கள் நேராக த்யாஜ்யம் அல்லவே உபாய புத்தியால் மட்டுமே த்யாஜ்யம்)

மாமேகம் சரணம் வ்ரஜ என்று உபாதேய தயா கர்தவ்யமாக விதித்த ஷட் அங்க யோக
யுக்தமான ந்யாச வித்யையே அதிகாரமாய் இருக்கும் –

(இத்தால் ரஹஸ்ய திரயங்களும் விவரண பாவங்களாக இருப்பதால் முமுஷுவுக்கு மூன்றும் அறிய வேண்டியவை என்பதை இந்த வார்த்தை அழகாக விவரிக்கிறது)

————————————————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில்-ஸ்ரீ முதல் நான்கு திருவந்தாதிகள் -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி- -இனி பதப் பிரயோகங்கள் –

November 27, 2025

இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/4
இனி யார் புகுவார் எழு நரக வாசல் – நாலாயி:2168/1
என் பாக்கியத்தால் இனி – நாலாயி:2215/4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1
எங்கு அணைந்து காண்டும் இனி – நாலாயி:2363/4
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் – நாலாயி:2364/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் – நாலாயி:2364/2
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது – நாலாயி:2388/1
இடம் நாடு காண இனி – நாலாயி:2476/4
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் – நாலாயி:2477/1
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86
-இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் -இடை கழிக்கு உள்ளும் புறமும் காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -) காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )-இனி -இப்போது -இனி திருக் கோவலூரிலே நிற்கிறது கர்ம பல அனுபவத்துக்கு அன்று இறே – சம்சாரிகளை நரகத்தில் புகாமல் காக்க விறே-திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய்-திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –கீழே இருவரையும் கூறி–நின்றாய் -ஆள -என்று  சொல்லுகிறது
சாயையைத் தனித்து பேச வேண்டாமை  –ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி இப்போது இப்படி நின்றான் -என்னுதல்இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்-இனி -என்கையாலே-அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –-இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப்
பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே

இனியார் புகுவார் எழு  நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நா வலஞ்சூழ்  நாடு —87-எழு வகைப் பட்டு இருந்த நரக வாசல் இனி யார் போய்ப் புகுவார்-இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் உண்டோ
ஒருவன் –சர்வ பாபேப்யோ மொஷயிஷ்யாமி –என்று நிற்கச் செய்தே –அன்றிக்கே
எழுகிற நரக வாசல் உண்டு -எல்லாரும் போய்ப் புகுகிற நரக வாசல் -என்னுதல்
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அற்று -என்கை  –முனியாது –யம படருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை என்கிறது – எங்கள் பதத்துக்கு அழிவு  சொல்லுவதே என்று பொடியாதே முனிந்தார்கள் ஆகில் யமபடர் கன்றும் விளவும் பட்டது படும் இத்தனை –மூரித்தாள் கோமின் – பெரும் தாளைப் பூட்டுங்கோள்- -இனிப் புகுவார் இல்லை -மிடுக்குடைய தாளைக் கோவுங்கோள்-அதுக்கடி இன்னம் ஒரு கால் திறக்கும் என்னும்படி இருக்கில் இறே எளிதாகக் கோர்க்க வேண்டுவது –இவ் வாழ்வாருடைய பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2- இருக்கிற படி இப்பாசுரம்-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—34-புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -மிகவும் செறிந்த ஸ்நேஹத்தை யுடையேனாய்க் கொண்டு சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என் பாக்கியத்தால் இனி–—
தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் —என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –அர்ஜூனனுக்கு மாமேகம் என்று உன்னால் சாதிக்கப்படும் அசேதனமான க்ரியா கலாபங்களை விட்டு பரம சேதனனாய் -உன்னைப் பெறுகைக்கு  யத்னம் பண்ணுகிற சித்த ஸ்வரூபனான என்னையே பற்று -என்றான் – அது ஒருவனுக்கு ஒரு காலத்திலே என்னாத படி சர்வர்க்கும் சர்வ காலத்திலும் – மாமேகம் -என்று இருக்கிறவர் -பெரிய பெருமாள் –மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும்  –பர வியூஹ  விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள் பக்கலிலே  கண்ணழிவு  சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் – அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை-அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-
முதல் தன்னிலே இதில் இழியாதாது நன்று –
அதாகிறது அறிவதாக இழிந்து அறியாது ஒழிவதில் காட்டில் முதல் தன்னிலே அறிவதாக இழியாதது நன்று இறே -அறிய அரியனாய் இருப்பான் ஒருவன் –தன்னாலும் அறியப் போகாது –இவனாலும் அறியப் போகாது-தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய்மொழி -8-4-6-அவ்வருமை தீர அவன் தான் ஹ்ருதயத்திலே சந்நிதி
பண்ணி கலக்கும் அன்று ஒரு குறை இல்லையே என்னில் – அப்போதும் அவனை உள்ளபடி யறிந்து பரிச்சேதிக்கப் போகாது – அவனுடைய உண்மை யறியப் போகாது –வைலஷண்யத்தை பரிச்சேதிக்கப் போகாது-இவன் தான் காணும் அன்று காண வரிதாய்
அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும் இழந்து ஆறி இருக்க ஒண்ணாது
போக்யதையும் ஸ்வாமித்வமும் –லௌகிகர் படியிலும் காண விரகற்று-அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன் கிட்ட மாட்டேன் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன்
———83–இனியவன் மாயன் என வுரைப்பரேலும்-பிரமாணங்கள் ஸூ லபன் என்று சொல்லுகிற அவனை
நாட்டார் அரியன் என்று சொன்னார்களே யாகிலும் –இப்போது அவன் ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்களே யாகிலும் – வர்த்தமான தசையில் பிரகிருதி சம்பந்தித்து மம மாயா துரத்யயா-கீதை -7-13-என்னும்படி காண வரியன் ஆகிலும்  –இனியவன் காண்பரியனேலும்-நிரதிசய போக்யனாய் யுள்ளவன் தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்-அன்றிக்கே-சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு–சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று தோன்றாதபடி பூமியை அபஹரித்து நெஞ்சுக்கு இனியனாய் தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –விண் கடந்த பைங்கழலான் –ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து-சகல லோகங்களையும் தன் கீழே இட்டுக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையவன் – அன்றிக்கே-அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –இனி உள்ளத்தின் உள்ளே உளன் –இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்-புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே-இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச்   சொன்ன  அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –இனி -என்று -இப்போது -என்றபடி –அன்றிக்கே-இனியவன் என்று ஒரே சொல்லாய் அனுசந்திப்பார்க்கு நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை-அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே-அப்படியே நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்-இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று  பேர்த்திடுகிறார்-இங்கனே இருக்கை எனக்கு ஸ்வரூபம் -என்றுமாம் – –

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்யார் ஜனம்   பண்ணும் விபூதியையும் உபேஷித்து-விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-இத்தால் –
1-ப்ராப்யமான  கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த  சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு  விரோதியான  அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படிபரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை   நடுங்கித்
தம்  கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும்-அருளிச் செய்தார் ஆய்த்து-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை – அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய் சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே  சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து- அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்

கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கிற -தூய்மை -பரி சுத்தி –நெறி –உபாயம் -இது -ஆளவந்தாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-நெறி-ஒழுக்கல்-கதி–அதாவது ப்ராப்யம்–இராமானுசன்
-எம்பெருமானார் –என்னைக் காத்தனனே -லோகத்தில் ஞாநாதிகரை ரஷித்தது ஆச்சர்யமாய் இராது -பிரதி கூலனாய் இருக்கிற என்னை -அநு கூலனாக்கி ரஷித்தான் -இது என்ன அகடிதகடநா சாமர்த்தம் என்று வித்தராகிறார் –தூய் நெறி சேர் யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் -கதி பெற்று உடைய -என்கிற இது -எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –இனி-அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-யமுனைத் துறைவர் இணை யடி -என்பது ஆளவந்தார் திருவடியான பெரிய நம்பியை குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48
-எனக்கு-ஸ்வரூப லாபமாய் -தேவரீருக்கு குண லாபமாய் -இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம் வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ-உன் அருள் -ராமன் சீதா அருள்களில் வாசி -அநாதி காலம் ராஷஷிகளாக திரிந்து உள்ளோம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராக மூழ்கி உள்ளோம் -புன்மை இலோர் -நித்யர்களை சொல்லிற்று –நாம் பழுதே-யகலும் பொருள் என் -அமுதனார் தம்மையும் நம்மையும் –சேர்த்து அருளிச் செய்கிறார் – தம்மையும் உடையவரையும் என்றுமாம்-நாம் க்ர்த்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ -கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்ட கடவதாகையாலும் -பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும்  -நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனேஉலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது .ஆகையால் எம்பெருமானரேதேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி –

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62-அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ளமகா பிரபாவரானவர்களுடைய திருவடிகளைப் பற்றி-இன்று புண்ய பாப ரூபத்தாலே உபய விதமாய் இருந்துள்ள கர்ம பாச விநிர்முக்தனாய் -க்ருதக்ருத்யனாய் -நிர்ப்பரனாய் இருந்தேன் .–இப்படி இருந்த நான் இனி அத்யல்பமும் துக்கத்தில் அன்வயியேன்.கர்மம் கிடக்கில் இறே துக்கம் வருவது என்று கருத்து-கூரத் ஆழ்வான் திருவடிகளைப் பற்றி – இன்று இருவினைப் பாசம் கழற்றி -இருந்தேன்-இன்று யான் இறையும் வருந்தேன் இனி -இப்போது நான் ஷண மாத்ரமானாலும் சம்சார துக்கத்தால் கிலேசப்பட கடவேன் அல்லேன் –அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகமாஸ்வ –என்றபடி-சம்சார வெக்காயம் ஒரு ஷண மாத்ரமும் தட்டாதே சர்வதா ஆனந்த ரச அனுபவத்தோடு-இருக்கக் கடவேன் என்றது ஆய்த்து –யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன் -என்று இயைக்க-யான் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக .

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – –
81-பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி -இருக்கும் -பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும்-சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று பெறுவித்து அருளினவரே ! இப்படியான பின்பு தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை .-பெரிய பெருமாள் உடைய திருவடிகளில் சக்தனாய் -அந்த கர்வத்தாலே ததீயர் உடைய ப்ரபாபவத்தை அறியப் பெறாதே  -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பவர் பக்கல் சேராது ஒழிந்த எனக்கு அத்தை இன்று லபித்தது அருளின தேவரீர் உடைய அப்ரதிம பிரபாவதியான கிருபைக்கு –ஆராய்ந்து பார்க்கில் – ஒருவரும் சத்ர்சர் இல்லை-பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல் நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் 

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து அந்த ஆஸ்ரயணம்  விடாதேநிற்கிறவர்களையே பந்துக்கள் என்று -அனுசந்தித்து -அவர்கள் பின்னே திரிந்து -உழன்று –அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே -அவர்கள் முகத்திலே விழிக்க பெறுவது -எப்போது-என்று ஓடி -அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ  சோகங்களாலே -இனி சிதிலன் ஆகேன் –தத்வ ஹித புருஷார்த்தங்களை சூவ்யக்தமாக பிரகாசிக்கும் சாஸ்த்ரங்களைஅதிகரித்து இருக்குமவர்கள் -தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று –பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ளஎம்பெருமானாரை அனுசந்திக்கையே யாத்ரையாய் இருக்கும் மனசை நிதி பெற்றால் போலே-லபித்தது இருக்குமவர்கள் -யாவர் சிலர் –அவர்கள் குல சரண கோத்ரங்கள்  ஏதேனுமாக வமையும் –அவர்கள் நம்மை இவ்வாத்மா உள்ளளவும் ஒருபடிப்பட அடிமை கொள்ளும் மகானுபாவர் –ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி -முன்னம் -நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -கலியன்-நான் கண்டு கொண்டேன் ராமானுசா என்னும் நாமம் -என்கிறார்-நையேன் இனி -எம்பெருமானார் விஷயீ-காரத்தை பெற்ற பின் இப்படி செய்து சிதிலன் ஆகேன் -இது காறும் நைந்தது போதும் .இனி மேல் உழன்று ஓடி நிலை குலையும் நிலையே எனக்கு ஏற்படாது -அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –-இது நானாக தேடிக் கொண்ட கேடு-இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற  வியந்து பேசுகிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே

விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே –-98 –தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த எம்பெருமானார் –தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் -பிரகிருதி வச்யருக்கு சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ – அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே – அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –யுக்தி மாத்திரமே அமையும்-அவன் ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஸ்வதந்த்ரம் கொடுப்பான் –இவர் பாரதந்த்ரர் -நமக்கு பாரதந்தர்யம் கொடுத்து நம்மை தன் வசத்தே சேர்த்து கொள்கிறார் –அவன் நம்  கர்மம் பார்ப்பான் இவர் தம் கிருபை ஒன்றையே பார்ப்பார்-எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து- தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற   அடியோங்களை –அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார்எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்-நம்மை உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார்எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறேஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம்  –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது -தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்  ஒண் சீ
ராம்  தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100-
மற்றொன்றை கொடுத்தருளிற்றாகிலும் -அம்ருதாசிக்குப் புல்லை இட்டால் மிடற்றுக்கு-கீழே இழியாதாப் போலே ஈது ஒழிய வேறு ஒன்றையும் புஜிக்க  மாட்டாது –-தேவரீர் நினைத்தால் அதுவும் செய்விக்கலாம் – இனி வேறொன்றைக் காட்டி மயங்கப் பண்ணாது ஒழிய வேணும் -வேறே காட்டி மயக்கிடாமல் இதிலே ஸ்திரமாக  நிற்கும் படி -பண்ணி அருள வேணும்--பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -நெறி காட்டி  நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே-தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது சூதநனின் தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .  –இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடிலே -இப்படியான பின்பு வேறு ஒரு விஷயத்தை காட்டி-மோகிப்பிக்க வேண்டா –மயக்கம் -மோகம் –பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி – என்று சொல்லுகிறார் காணும் –உனது அடிப் போதில் என்னவே அமைந்து இருக்க -நின் பால் -என்று மிகை படக் கூறியது-மற்றவர் பால் போதராது -நின்பாலே போந்து அமர்ந்திடலை வலி வுறுத்துவதால்-மற்றவருக்கு உரியர் ஆகாமை காட்டிற்றுஅதுவே ஈந்திட வேண்டும் என்பதனால் எம்பெருமானாரே இன்பம் தரும் உபாயம் என்பது பெற்றோம்-உண்டு அமர்ந்திடப் போனது தானாகவோ அன்றிப் பிறர் மூலமாகவோ அல்லாமல்-எம்பெருமானாராலேயே அதனைப் பெற வேண்டி இருத்தலின் அவரன்றி வேறு உபாயம் இன்மை-தோற்றுகிறது .இதுவன்றி ஒன்றும் மாந்த கில்லாது -என்று வெளிப்படையாகவே எம்பெருமானார் அன்றி வேறு போக்கியம்-இல்லாமை சொல்லப் படுகிறது ..இப்படி ஆகார த்ரயமும் -சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செயல்களில் -இனி பதப் பிரயோகங்கள் –

November 27, 2025

உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது-நாடு திருந்த – நச்சுப் பொய்கை யாகாமைக்கு – பிரபந்தம் தலைக் கட்ட – வேர் சூடுவார் மண் பற்றுப் போலே – என்னும் அவற்றிலும் இனி இனி என்று இருபதின் கால் கூப்ப்பிடும் ஆர்த்த்யதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம் .(ஸ்ரீ அருளிச் செயல்களிலே 142 இடங்களிலே இனி பதப் பிரயோகங்கள் உண்டு)

அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய் திரு அடிகளில் விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-என்று திரு அடிகளைக் கிட்டி – ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –

தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் -பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் -பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம் பரிசமாப்தம் ஆகைக்காகவும் –வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே –ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே – இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-

1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி இவளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-
4-இனி அவர் கண் தாங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-
6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-
7-எந்நாள் யான் உன்னை இனி வந்துகூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-
9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-
10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-
11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-
14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-
15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-
16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-
18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்று
இப்படி இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து –
பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை ..

ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது -ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி —
பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது – ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் – இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து 

—————

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–இனி – ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே-உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு-யாம் உறாமை – பரா அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்-உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ-மன்றாடியவர் வருஷம் தோறும் சென்று திரும்புகிறார்-தந்தோம் தந்தோம் என்று தருகிறான் அவனும்-மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ராமானுஜர் -வேறு பாடு உண்டே-நாங்கள் ஸ்பர்சியாத படி –சம்சாரிகள் உடைய வ்யசனம் தம்மது ஆகையாலே –யாம் -என்கிறார்-ஆத்மனி பஹூ வசனம்வா –உறாமை-சாஸ்திர பலம் பிரயோகத்ரி -என்கிற படியே பலம் பெறுவார் அன்றோ அதுக்கு கிருஷி பண்ணுவார்- நம்மைக் கிட்டுகைக்கு வழிகள் கண்டு வைத்தோம் ஆகில் அவற்றின் படியே வந்து கிட்டுகிறீர்-என்ன

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-இனி வளை காப்பவர் ஆர் ?
வந்து கிட்டுவது  காணும் என்று இருக்கிறாள்-ரக்ஷக ஸந்நிதி இன்றியே பாதக ஸந்நிதி யுண்டான பின்பு கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்-கல்ப ஆகரைகளான ராத்ரிகள் என்னை ஈரா நின்றன-ஆகையாலே என்னைக் காக்க ஒண்ணாது என்று கருத்து–1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ-2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ-3-வறுத்துகிற வாடை காக்கவோ-4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று-(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )-பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை
இனிக் கழலாமல் நோக்குபவர் யார்-
(கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் ) எனை வூழிகள் ஈர்வனவே —அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன –-ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது–விளம்ப அஸஹத் வடிவமான கால தைர்க்யமானது ஸ்வரூப சத்தையையும் அழிக்கத் தேடா நின்றது-கழல் வளை கழலும் வளையானவே-நாயகனோ வரவில்லை-எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ
வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62 –ஈங்கிவள் தன் நிறையோ -இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது -பிரபல விரோதி யுண்டாய்-ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு
ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே – ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது – ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ –தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –முறையோ-நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-நன்னீர்மை-நற்சீவன் ஜீவந்தீம் மாம் யதா ராமஇனி-பாடு ஆற்றலாவது எல்லாம் ஆற்றினாள்-இனித் தாங்க மாட்டாது-ஆன அளவும் கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள்.-யவர் கண் தங்காது-சேஷியான உம்முடைய பக்கலிலே தங்கில் தங்கும் இத்தனை-சேஷியான உம்முடைய பக்கலில் தங்கில் தங்கும் அத்தனை. அதாவது, பிராட்டி, பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச் செய்தவாறே-‘நாமோ தாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் பாலி பாயக் கூடியதான ஸ்நேஹத்தை -அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடை செய்து போந்தார்; அவர் இவ் வாற்றாமையாலே உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக் கொண்டு வர,
விடாயர் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை;-அவரைக் கண்ட பிற்றை நாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று,‘தலைவராகிய உம் பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி-என்று ஒரு வாய்ச் சொல்-என்று ஒரு வார்த்தை சொல்லு-ஒரு யுக்தி – சொல் சொல்ல அமையும்.-வாசா தர்மம் அவாப்னுஹி-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
அத்தலையில் வ்யாமோஹம் அது
இத்தலையில் நோவு இது-இரண்டு தர்மியையும் ஓர் உக்தி மாத்ரத்தாலே நோக்கலாய் இருக்க வன்றோ நீ ஆறி இருந்தது-அது போகிறேன் என்று உத்யோகித்தது – இனி யாரை நோக்கப் போகிறாய் என்கிறாள் சமுதாய சோபையோடு கூடின அழகிய நிறத்தை இழந்தேன்-இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.–இனி உனக்கு செய்ய அடுப்பது -உன் பிரகிருதி அறிந்து வளர்ப்பாரைத் தேடுகை காண்-ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-என்னுடைய விரோதிகளை போக்கி இம் மஹா அவசானத்திலே வந்து சம்ச்லேஷித்து என்னை உண்டாக்கினவனே -இதுக்கு முன் நீ போய் நின்று பட்டது போரும்-இனி நீ என்னை விடாது ஒழிய வேணும் என்கிறார்-இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’-பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் ரக்ஷணத்திலே உக்தனாய் -முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே-இனி எம்மைச் சோரேல்-கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும் போக்கி,-அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள்.-இனி, ‘தம்முடைய ஆபத்தின் மிகுதியாலே ‘வந்து முகங்காட்டும்’ என்னும் விசுவாசத்தலே சொல்லுகிறாள்.’

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்–எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை; இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். – பூர்ணே சதுர்தசே வர்ஷே -பதினான்கு வருடங்கள் நிறைந்திருக்க, பஞ்சமி திதியன்று’ என்னுமா போலே , -உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்வர்.-எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்; ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச் செய்வர். ஆதலால், இப் பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-
-ஓர் ஊர்க்கு உதவின அளவேயன்றி, சகல பதார்த்தங்களிலும்- ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்துத் தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தவனை.-எல்லாரையும் அடிமை கொண்டவனை-அந்த தூளி தானத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்ட புகுகிறேன் அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நிராசர் ஆகிறார் –

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-முன்பு விஷயாந்தர பிரவணனாய்ப் போந்த என்னை உனக்கு அடிமை-அறக் கொண்டாய் அநந்யார்ஹமாக சேஷமாக்கிக் கொண்டாய்–நான் நின்ற நிலைக்குச் சேராத படியான உன் திருவடிகளில் அடிமையை ஒரு காரணமும் இன்றியே என்னைக் கொண்டருளினாய்-உனக்கே சேஷமாக்கிக் கொண்ட பின்பு இனி என் என்றுமாம் -அப்போது உன்னைக் காட்டி சம்சாரிகள் நோவை மீட்க ஒன்னாதான பின்பு இவர்களுக்கு சோகித்து பிரயோஜனம் என் என்கை-என் ஆரமுதே -உன் போக்யதையை எனக்கு காட்டினவனே-நீ நிரதிசய போக்யனாய் இருக்க நான் இவர்கள் நடுவே இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டு அருள வேணும்இனி என் – அவர்கள் ஒருபடியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள் கேட்டிற்குக் கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’ என்னை முதல் அங்கே அழைத்துக் கொண்டருள வேண்டும்,’ என்னுதல்.

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2–கண்ணனும் வாரான்-உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -உனக்கும் அவனோடு ஒத்த சம்பந்தமே அன்றோ. அவன் உதவும் தன்மையன் அல்லாதவனா யன்றே உதவாது விட்டது,
என்னுடைய சம்பந்தமே அன்றோ. என் மார்விலே அணைக்கை அன்றோ அவன் உதவாது ஒழிகிறது,-அது உனக்கும் ஒக்குமே அன்றோ.-இனி காப்பார் யார் –கம்சன் போன்ற தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீ தன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ?“வந்தானாகில் அப்போதே விடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று -இருவர் பவ்யராக-இருப்பதால் –ஒரு சேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ. பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பார் –

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே-இனி மநோ துக்கத்தை போக்குவார் யார் -ஆந்தரமான தமஸை போக்கும் போது அவனே வேண்டாவோ -பாஹ்ய தமஸை இறே ஆதித்யன் போக்குவது -விலக்ஷண விஷயத்தை பிரிந்தால் உள்ளதொன்று இது -உருகி தர்மி லாபமும் பிறவாதே -தரிக்கவும் பெறாதே யுருகா நிற்கும் அத்தனை –இன்னம் ஒரு கால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது,
அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன்
அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இறே-இனி –என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ-இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –இனி–உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,-உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து – ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?-இனி –என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.-ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.-அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-(உனக்கு சரீரம் என்று அறிந்த பின்பு–மெய் உண்மை என்றும் சரீரம் என்றும் சாடு)

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன்
அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இறே
இனி –என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ-இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆன பின்பு ஆறி இருக்க போமோ என்கை –

இனி- உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,
உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?
இனி –என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.
ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ(உனக்கு சரீரம் என்று அறிந்த பின்பு–மெய் உண்மை என்றும் சரீரம் என்றும் சாடு)

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-தரியேன் இனி
மாதா பிதாக்கள் சந்நிஹிதரான பின்பு -மாதா பிதாக்கள் அசந்நிதியில் பசி பொறுக்கலாம்-சந்நிதி யுண்டானாலும் பசி பொறுக்கப் போகாது இறே -தறியாமை எவ்வளவு போரும் என்ன-உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.-ஜென்ம சம்பந்தம் அற்று உன் திருவடிகளை பெறப் பற்றாது -முலையைக் கொடுத்து சிகித்சிப்பாரை போலே திருவடிகளைத் தந்து விரோதிகளை போக்க வேணும் –இனி தரியேன்–அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது.-தாய் தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய் ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க, குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு போரும் என்ன, கோமள வல்லித் தாயார் திருக் கோலம் -அவனுக்கும் ஆராவமுத ஆழ்வார் திருக் கோலம் அவளுக்கும் மாற்றி
குத்து விளக்கு பாசுரம் சாத்தி சேவை இன்றும் உண்டே
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும். -‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது;

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-நிறம் தானே போயிற்றே -அவனை நிறம் கொள்ள வேணும் என்று கோலி இருந்த என்னுடைய நிறத்தை இ றே இழந்தது -அந்நிறத்தை மீட்டுக் கொண்டு வருகிறேன் என்று போன என் மனசாகிறதும் என்னை மறந்து அங்கே அடி யுற்றதுஅவன் இழவாளனாய் நாம் இழவு பரிஹரிக்கை யன்றிக்கே நாம் இழவாளர் ஆவதே -என்று அபிமானித்து போன நெஞ்சை வினைத் தலையிலே படை யறுத்து கொள்வாரை போலே படை யறுத்துக் கொண்டான் -லங்கையை அரண் அழிக்கைக்கு ஸ்ரீ விபீஷணனை பெற்றால் போலே -என்னுடைய ஸ்த்ரீத்வம் ஆகிற அரண் அழிக்கைக்கு உள் ஆள் பெற்றோம் என்று நெஞ்சை படை யறுத்துக் கொண்டான் -இலங்கையின் அளவன்றிக்கே ஸ்த்ரீத்வ அபிமானத்துக்கு அவன் அஞ்சி இருப்பது –-நெஞ்சினார் -அங்குத்தை ராஜ குலத்தாலே என்னை மறந்தார் -பெற்றாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும் தரிக்க வேண்டாவோ என்ன
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!-உழந்து -வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-இப்போதே மீட்டுக் கொடு வருகிறேன்’ என்று விரைந்து சென்ற மனமும் அங்கே படையற்றது-(கிட்டிற்று )அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
‘பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?
அவன் சொன்னதாகவும் -நெஞ்சு சொன்னதாகவும் கொள்ளலாம் -பூஜ்ய வாசி நெஞ்சை சொன்னபடி -‘நெஞ்சினார்’-அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று. -இதுவும் அவனுக்கும் நெஞ்சுக்கும் –-‘தூசித் தலையில் வியாபரிப்பேன் நான்’ என்றான் அன்றோ ஸ்ரீவிபீஷணாழ்வான்?‘ப்ரவேஷ்யாமி ச வாஹிநீம்’ என்பது, ஸ்ரீராமா. யுத். 19:23.-தூசித்தலை – படையின் முன்னிடம் –இனி உழ்ந்து ஆரைக் கொண்டு என் உசாகோ –என் நெஞ்சினை இழந்த பின்பு இனி, துக்கப்பட்டு ஆரோடே கூட எதனைச் சொல்லி நான் காலம்.போக்குவது?-உழந்து – வருந்தி. இலங்கையிலே இருந்தவளுக்கு ஒருவனாதல் ஒருவன் குடியாதல் உண்டு; அதுவும் இல்லையே எனக்கு!-ஆரைக் கொண்டு என் உசாகோ – சரீரத்தையே ஆத்துமாவாக அபிமானித்து இருக்கிற சம்சாரிகளைக் கொண்டு போது போக்கவோ?-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற பிரமன் சிவன் முதலாயினோர்களைக் கொண்டு போதுபோக்கவோ? பகவானுடைய அனுபவித்திலே நோக்காக இருக்கிற நித்திய ஸூரிகளைக் கொண்டு போது போக்கவோ?
இத்தலையை உரிசூறை கொண்டு போனவனைக் கொண்டு போது போக்கவோ?-யாரைக் கொண்டு எதனை உசாவுவது? என் உசாகோ –‘நான் அங்கே பன்னிரண்டு வருடங்கள்’ என்று சொல்லலாமன்றோ பிராட்டிக்கு? அப்படியே நமக்கும் ஏதேனும் உண்டோ?-கலவியில் நிறைவு பெறாமை இருக்கிறபடி.-ஆரைக் கொண்டு –நெஞ்சு போலே நமக்குப் பாங்காய் இருப்பார் உளரோ? 

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-மெய்யன்-அல்லன் ஒருவர்க்கும்   -பரம பிரணயி -சர்வ ரக்ஷகன் என்று இருக்கிற உங்களுக்கும் பொய்யே பலிப்பது –ராமோ த்விர் நபி பாஷதே –நத்யஜேயம்–ஏதம் விரதம் மம -என்னும் ராமாவதாரத்தை போலே இறே நீங்கள் நினைத்து இருப்பது –கபந்தனுக்கும் மெய் சொல்லி -திருவடிக்கு மெய் சொல்லுமவன் அல்லனே -ஆயுதம் எடேன் என்று சொல்லி ஆயுதம் எடுக்கையும் பகலை இரவாக்குகையும் இ றே இவ்வாதாரத்தில் க்ருத்யம் –-இப்படிச் சொல்லவும் அவை விடாதே கூவிற்றன -முடிந்தேன் ஆகாதே -என்கிறாள் –-அத்தனை ஆம் இனி-இனி அத்தனை யாகாதே என்கிறாள் –என் உயிர்-அவன் கையதே–என்னுடைய பிராணன் அவன் கைப் பட்டது -அவன் நினைவேயாய்த் தலைக் கட்டின பின்பு என்னுடைய பிராண ரக்ஷணத்துக்கு உங்கள் கால் பிடிக்க வேண்டா வாகாதே –இராமாவதாரத்தில் மெய்யும்-கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்கட்கு தஞ்சம் –ஆகையாலே அவன் பொய்யன் ஆகில் என் -மெய்யன் ஆகில் என் –இருந்தபடியே உகப்போம் இத்தனை அன்றோ நாங்கள்-என்று தொடர்ந்த கார்யத்தில் முதிர நின்றன –அத்தனை ஆம் -இனி என் உயிர் அவன் கையதே – இனி அவ்வளவே அன்றோ –இவற்றின் ஒருப்பாடு இருந்தபடியால் அவன் நினைவே தலைக் கட்டி விட்டதே அன்றோ -என்கிறாள் – என் உயிர் அவன் கைப்பட்ட பின்பு-என்னைப் பாது காப்பதற்கு உங்கள் கால் பிடிக்க வேண்டாவே –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-நீர் நிலங்களிலே வர்த்திப்பதாய் -தொடங்கின கார்யம் முடிக்க வல்ல சாமர்த்தியத்தை யுடைத்தான நாரைக் குழாங்கள்-பயின்று என் இனி-திரண்டு பிரயோஜனம் என் -நான் அவன் கருத்தை பின் செல்ல நினையாத அன்று அன்றோ உங்கள் மந்திரத்துக்கு பிரயோஜனம் உள்ளது -முதலிகள் திரள் திரளாக இருந்து பெருமாளையும் பிராட்டியையும் சேர்க்கைக்கு விரகு பார்த்தால் போலே -இவை திரள் திரளாக இருந்து தன்னையும் அவனையும் பிரிக்கைக்கு விசாரிக்கிறன என்று இருக்கிறாள் -அவன் வேண்டுவரைச் சேர்க்கையும் வேண்டாதாரை முடிக்கையும் திர்யக்குகள் பணி என்று இருக்கும் இறே -ராமாவதார வாசனையால் –வான நாடன் -நாரைக் குழாங்கள் -என்கையாலே-உபய விபூதியும் வேண்டுமோ -ஓர் அபலையை முடிக்கைக்கு-என்பது தோற்றுகிறது-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-யுத்த பூமியிலே எதிரிட்ட அஸூரர்க்கு மிருத்யு வானவன் –எதிர் அம்பு கோத்த அ ஸூ ரர்க்கு யாய்த்து மிருத்யு யாவது –சரணம் என்ற அஸூரர்க்கு ரக்ஷகனாம் அத்தனை -ப்ரஹ்லாதி விபீஷணாதி களை ரஷித்தான் இறே–ப்ரஹ்மா ஸ்வயம்பூ சதுராநோவா ருத்ர த்ரிநேத்ர த்ரி புராந்தகோவா இந்த்ரோ மகேந்திர சூரநாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம் -சுந்தர -51-55- இராம தண்டத்துக்கு காரணமாய் இருக்கும் ஒருவனை-இந்த்ரன் சிவன் பிரமன் என்னும் இவர்களும் கூட அத் தண்டத்தின் நின்றும் காப்பதற்கு ஆற்றல் உடையார் அல்லர் -என்னக் கடவது அன்றோ –-வாரான்-என்னை நலிகிற பதார்த்தங்களை சிஷித்துக் கொண்டு வருகிறிலன்-இங்கு அம்பு ஏற்கவும் வேண்டா-பகைவர்களும் இலர்-முகம் காட்ட அமையும் –-இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்––வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ –இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ–வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ–என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ-வரையாதே- பாது காக்குகின்றவனுமாய்-ஆற்றலும் உடையவனுமாய்-சம்பந்தமும் உள்ளவனாய் இருக்கிறவன் வாராது ஒழிய அவனாலே பாது காக்கப் படுகின்ற பொருள்களில் சேர்ந்தவளாய் ஆற்றல் இல்லாதவளாய்-தகுதி இல்லாதவளாய்-இருக்கின்ற நான் என் உயிரை நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ—இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் -என்கிறபடியே -வரும் துணையும் ஜீவித்துக் கிடக்கும்படி இராகவன்-உணவுகளையும் உண்பது இல்லை என்று சிலர் சொல்லுதல்-அத்தலையிலே ஆற்றாமையும் –கானனானி சூரம்யாணி நதீ பிரச்ரவண நிச-சரன் நரதிம் ஆப்நோதி த்வாம் அபச்யன் நருபாத் மஜே -சுந்தர -35-47 ஜனகராஜன் புத்ரியே உன்னைக் காணாமையால் மிக்க துன்பத்தை அடைகிறார்-என்னுதல் செய்து தான் ஆறி இருக்கிறேனா–வாலி மாட்டான் படை கூடிற்று -என்றால் போலே ரக்ஷணத்தில் உத்யோகத்தையும் -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ -வரவுக்கு உடலாக-கரன் பட்டான்-கவந்தன் பட்டான்-வாலி பட்டான்-கடல் அடைப்பது வந்து புகுந்தார் அத்தனை -என்று சிலர் சொல்ல ஆறி இருக்கிறேனோ- இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்-என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இறே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –இப்பொழுது -இனி இருந்து -என்கையாலே
இதற்கு முன்பு எல்லாம் அவன் சரக்கு அழிய ஒண்ணாது -என்று-நோக்கிக் கிடந்தமை தோற்றுகிறது-பிறர் -சர்வேஸ்வரன் -உயிராகத் தான் நோக்கி இருக்கிறேனோ -என்பாள்-
அவன் விரும்பா விட்டால் நோக்கப் போமோ –என் உயிர் -என்கிறாள்-இவற்றின் கையில் நோவு பட-எனக்கு பணி யாகவோ என்னுடைய உயிரைப் பாதுகாப்பது -என்றபடி
துஷ்கரம் க்ருதவான் ராம பிரபு -என்று திருவடி –

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-என் தலை மிசையாய் வந்திட்டு-என் தலையிலே  திருவடிகள் இருக்கும் படி நீட்டி வைத்து -நிர்ஹேதுகமாக பெரிய திருவடியின் முதுகிலே வந்து -என் தலையிலே திருவடிகளை வைத்து -செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்றார் இறே-ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் பண்ணுகிற இடத்தில் உனக்கு ஜகத்தால் செய்யப் பட்டது ஓன்று இல்லாதாப் போலே என்னை இவ்வளவு புகுர நிறுத்தின உனக்கு என்னால் செய்யப் பட்டது ஓன்று இல்லை –இனி மேல் உள்ளதும் உனக்கே பரம் என்கை -இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு –ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இறே –ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் –இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் – என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –இனி-உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே-பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு-நான் –வழிச் சுவடு அறிந்த நான்-போகல் ஒட்டேன்
தம்முடைய செல்லாமையாலும்-சம்பந்தத்தாலும்-தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –
அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14-ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்- செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ- அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இறே-போகல் ஒட்டேன் –வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ – இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்- விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு–ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித –ஆரண்ய -10-9-நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு- மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று- நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –ஒன்றும் மாயம் செய்யேல் –உன்னை அறிவதற்கு முன்பு-விடத்தக்க விஷயங்களைக் காட்டி அதுவே அமையும் என்னச் செய்தாய்-உன்னை அறிந்த பின்பு குணங்களை அனுபவிப்பித்து-
உம்பர் என் குறை -10-8-7-என்னவும்-ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-என்னவும் செய்தாய்-அப்படியே இனி ஒரு குணத்தை அனுபவிக்கச் செய்து-நான் பெற்றேனாக செய்து என்னை வஞ்சியாதே கொள் என்னையே –ஏஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்-பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய் பலரை இருக்கிற முனிவர்கள் உடைய-சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும் –என்கிறபடியே விரகம் தின்று-குறைவு பட்ட உடம்பினை காட்டுகிறார் – அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு-இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் –
மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் –இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு-இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே – உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தவனே –நீலக்கடல் -கடைகிறவனுடைய நிழலீட்டாலே யாதல் -சகல ஓஷிதிகளையும் பொகடுகையால் வந்த நிற வேறுபாடு என்னுதல் – நிறத்தால் நீல ரத்னத்தைச் சொல்லிற்றாய் தத் பிரசுரமான ரத்நாகாரம் என்னுதல் -எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த-நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்-அன்றிக்கே- நீலம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்-அவை மிக்கு இருந்த காரணத்தால்- இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம்–உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -என்னைப் பெறுகைக்காகப் பண்ணி -என்னைக் கிட்டின பின்பு உன்னைப் போக விடுவேனோ –நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து- என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ- நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-இவ் அவஸ்தா பந்னையான இவளுடைய அடக்கமானது – உன் திருவருளால் அன்றி காப்பது அரிதால் –
உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே –
ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது –
ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது 

செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும்
படுக்கையும் –இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க- நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே--இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –
இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் – தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் –என்று அருளிச் செய்தார் –முகில் வண்ணன் -என்று-ஏக வசனமாக சொன்னால் –
நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி – ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் –என்றபடி -இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர்-–மிதுனமே உத்தேச்யமாய் இருக்க – எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார்-(அன் விகுதி இல்லாமல் அர் விகுதி-வெறுத்துப் பேசுவான் என் என்னில்-பிரிந்தால் தாயார் பக்கமே ஒதுங்கி இருப்பார்
அது போல் பட்டரும் நாச்சியார் திருவிழி விளிக்க ஒண்ணாது என்றாரே )

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உருமு உரல் ஓலி மலி நளிர் கடல் படம் அரவு
அரசு உடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–
ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு-இனி நாம்-ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க கர்மத்தால் நான் என்றும் என்னது என்றும் போந்தோம்-இனி சேஷித்த காலமாகிலும்-இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் – அவர்களோடே ஒப் பூணாய் ஒத்த தரமாகவோ என்னில்-ஆளாக-சேஷ பூதராக-ஆளாகவே -அவர்களுக்கும் ஆளாய் –நான் எனக்கு -என்ற இருப்பும் கலந்து செலவோ என்னில் –ஆளாகவே — ஆளாகும் தரம் அன்றிக்கே சேஷத்வமே வடிவாக-இசையும் கொல்-அவன் ஆள் பார்த்து உழி தருவான் -நான்முகன் -60-ஆகையால்
இவ்வர்த்தத்தில் இவனை இப்போதாக இசைவிக்க வேண்டா – இவர் எப்போது என்று பிரார்த்திக்கிறவர் ஆகையால் இவர்க்கு இசைவு உண்டு-இசையுங்கொல் என்பான் என் என்னில் – பாகவத சேஷத்வமாகை யாகிறது கூடுவது ஓன்று அல்லாமையாலே
கூடாத அர்த்தம் இங்கனே கூட வற்றோ -என்கிறார் –ஊழி தோறு ஊழி-இந்த பாகவத சேஷத்வம் தான் சில காலமாய்க் கழிய ஒண்ணாதே –-கல்பம் தோறுமாக வேணும் –
அது தன்னிலும்-ஓவாதே-ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் 

அவாப்த ஸமஸ்த காமனாய்- ஸ்ரீ யபதியாய் – அயர்வறும் அமரர்கள் அதிபதியான(திருவாய்-1-1-1 ) சர்வேஸ்வரன் சம்சாரிகளுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாதே இங்கே வந்து அவதரித்த இடத்து – துஷ் ப்ரப்ருதிகளான சிசுபாலாதிகள் அது பொறுக்க மாட்டாமே முடிந்து போனால் போலே –இப்போது பாகவதர்களுடைய பெருமை அறியாதே இவர்களும் நம்மோடு ஓக்க அன்ன பானாதிகளாலே தரியா நின்றார்கள் ஆகில் நம்மில் காட்டில் வாசி என் என்று
சஜாதீய புத்தி பண்ணி சம்சாரிகள் அநர்த்தப் படுகிற படி
-அவதரித்த சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாம் அன்று இறே-இவர்களும் சம்சாரிகளோடே சஜாதீயர் ஆவது-இவ் வுலகில் இவ் வுண்மையை அறிவது அரிது அன்றோ என்றபடி

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் –எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9
நுமக்கு அடியோம்-இதுவே போரும் அவன் இரங்குகைக்கு-என்று என்று-அதுக்கும் மேலே அத்தைப் பலகால் சொல்லுகையும் திரு உள்ளத்தைப் புண் படுத்துக்கைக்கு உடல்-நொந்து உரைத்தென்-ஆர்த்தோ வா யதி வா திருப்த ஹரி பரேஷாம் சரணாகத பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதார்த்தமநா (யுத்த )-என்றதுவும் பொய் போலே-மாலார் தமக்கு பண்டு (ஸம்ஸ்லேஷித்த தசையில் )இவை எல்லாம் செய்து வர்த்தித்தவருக்கு(நம்மிடத்திலே முன்பு அடியோம் என்பது நொந்து உரைப்பது-பல் காட்டுவதாய்ச் செய்து வர்த்தித்தவர்க்கு -என்றபடி )அவர் தாம் சார்வரியரானால்
கையாளாய் வர்த்தித்தவர் கிட்ட அரியவரானால் அவர் செய்வோம் என்று நினைத்த வன்று போலே காணும் இங்குச் சொன்னவை (நுமக்கு அடியோம் போல் சொன்னவை )எல்லாம் பலிப்பது–எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே-இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்-பசித்த போது கிடையாத சோறு என் செய்ய விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –நெஞ்சே–அவர் தாம் சார்வரியரானால்-சார்வு அரியரானால்- மாலார் தமக்கு நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் எமக்கு இனி -இனி எமக்கு – யாதானும் ஆகிடு காண் அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு-என்று அந்வயம் –‘எம்பெருமானுடைய அநுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால் தானே நமக்கு ஸத்தை;-அவன் நம்மை அநுக்ரஹியாது நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லலாமோ?-“எமக்கினி யாதானும் ஆகிடு காண் ” என்று எப்படி சொல்லலாம்? என்னில்; அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.-நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.-அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.-நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்; அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன்
-மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-ஸர்வேஸ்வரத்வத்தையும் ஸ்வா பாவிகமான விக்ரஹத்தையும் சொல்லுகிறது-ஆசா லேசமுடையார் பக்கல் வ்யாமோஹத்தையும்
த்வேஷம் பண்ணினாலும் விடப் போகாத படியையும் சொல்லுகிறது என்றுமாம்
(யதிவா ராவண ஸ்வயம் என்றவர் தானே )-ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் சொன்னதாகவும்-ஸ்வரூபம் ரூபம் இரண்டையும் சொன்னவாறு-படிச் சோதி –ஸ்வா பாவிகமான விக்ரஹம் -என்னுதல்-விக்ரஹத்தினுடைய காந்தி என்னுதல்-மாற்றேல் இனி
வைத்த இறையிலியை -அநந்ய போக்யத்வத்தை -மாற்றாதே கொள்(இறையிலி- வரி இல்லா நிலம் போல் நிர்ஹேதுகமாக )இறையிலி ஏது என்னில்-உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் – இவ்விறையிலியை மாற்றாதே கொள்-மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு -ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்
பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை-பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது-இவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில்-ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்-ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால் நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-
சரீரத்தைப் பூண் கட்டி இடரை விளைக்கும் மாதா பிதாக்கள் இறே அல்லாதார் இவன் சரீர பரிக்ரஹம் பண்ணுகைக்கு நோன்பு நோற்குமவர்கள் இறே அவர்கள்-யாதாகில் யாதேயினி-இனி பாபம் தன்னை அனுபவிக்கில் எனக்கு வந்தது என்
பாப நிமித்தமாக பயம் இல்லை என்றபடி –

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-உன் ஐஸ்வர்யத்தை நான் தானே சொல்லுவது உண்டோ -என்னவுமாம்-உன்னுடைய நீர்மையை நான் சொல்லுவது உண்டோ என்னவுமாம்-கார்ய ஜாதம் எல்லாம் அழிந்து காரண அவஸ்த்தமாய் நாம ரூப விபாக அநர்ஹமாய் தான் என்ற சொல்லிலே அடங்கித் தனக்கு வேறே ஒரு அபாஸ்ரயம் இன்றிக்கே நின்றவனே-

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும் இது தன்னையே சொல்லு-நான் புக்க இடத்தே புகக் கடவ நெஞ்சே-எல்லாக் காலத்திலும் கையை விட்டு அகலாத திருவாழியை யுடையவன் நம் பக்கல் பாபத்தைப் போக்குவான்-போக்யமான திருவடிகளை ஏத்த உத்ஸாஹி-பற்றினாரை விட்டுக் கொடாத திருவடிகளை என்றுமாம் –ஈதே சொல்-கீழே சீர் கலந்த சொல் -என்பதாகவுமாம்-அல்லது சொல்ல முயல் -என்ற இப்பாசுரம் சொல்லவே அமையும்

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே எனக்கு த்யாஜ்யமான சரீரத்தை தனக்கு போக்யமாகப் பற்றி நின்று-விலக்காத தொரு சமயம் பெற்றவாறே என் ஆத்மாவோடு வந்து சம்ச்லேஷித்தான்-இயல் வான்-வியாமோஹத்தை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்-இப்படி இப்படி எதிர் சூழல் புக்கு உத்ஸஹிக்குமவன் என்னுதல்-ஓட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–-முன்பு த்வேஷம் பண்ணித் திரிந்த நாள் என்னை என் கை வசத்தே விட்டுத் திரிந்தான்-இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன் பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ –எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்–பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி-பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-சர்வ சக்தியான தான் பண்ணி வைத்த வியவஸ்தை தன்னால் தான் அழிக்கப் போமோ
சர்வ சக்தித்வத்தோ பாதி சத்யா சங்கல்பத்துவமும் வியவஸ்த்தை–சர்வ சக்தியான தான் பண்ணி வைத்த வியவஸ்தை தன்னால் தான் அழிக்கப் போமோ சர்வ சக்தித்வத்தோ பாதி சத்யா சங்கல்பத்துவமும் வியவஸ்த்தை-இனி முன்பு செய்யலாம் -இனிச் செய்யப் போகாது -எத்தாலே என்னில்இனி’ என்கிற ‘உரப்பு எதனைப் பற்ற?’ என்னில்,-பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை-நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய ஸூ ரிகள் ஓலக்கம் இருக்க -அச் சேர்த்தி அழகிலே தோற்று அடிமை புக்க என் நெஞ்சை மீட்கப் போகாது என்கை-அந்தப்புர பரிகரத்தை ராஜாவாலும் அநாதரிக்க ஒண்ணாது-ஹர்யர்ஷ கண சந்நிதவ் –என்கிறபடியே நித்ய ஸூ ரிகள் முன்பு பண்ணின ப்ரதிஜ்ஜை முடிய நடத்த வேணும் என்கை-

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-உபய விபூதி உக்தனை கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து என் ஆத்மா ஏக த்ரவ்யம் என்னலாம் படி கலந்தது-இனி யகலுமோ-ப்ருதக் ஸ்திதி யுபலம்பம் இல்லாதபடி ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாக சம்ச்லேஷித்தும் அகல பிரசங்கம் உண்டோ-பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்துவ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ-ஜாதி குணங்களை பிரிக்க ஒண்ணாதாப் போலே த்ரவ்யத்துக்கும் நித்ய தாதாஸ்ரயத்வம் உண்டாகையாலே பிரிக்க ஒண்ணாதாய் இறே இருப்பது-நித்ய தத் ஆஸ்ரயத்வம்-எப்பொழுதும் ஒரு பொருளை மற்றொரு பொருள் சேர்ந்தே இருத்தல்.-ஈண்டு, விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும்,-‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-எண்ணிலும் வரும்–கட படாதிகள் உடைய அஸ்தி பாவத்தை இசையும் -ஈசுவரனுடைய அஸ்தி பாவத்தை இசையான்-
பஞ்ச விம்சதி தத்துவத்தையும் இசையும் -ஷட் விம்சகளை இசையான் –
நம்முடைய உண்மையை இசைந்தான் இ றே என்று அப்போதே வந்து முகம் காட்டும்
இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் என்னவுமாம்-பரம பத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’
என்னினி வேண்டுவம்--சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை -இறைவன், தன்னுடைய ஸ்வரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா ‘மாஸூச:’ என்றது போன்று, இவரும் இறைவனுடைய ஸ்வரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார்.-இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,-அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.–-ஸ்ரீ வேல்வெட்டி நம்பியார், ஸ்ரீ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ஸ்ரீ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில்
கிழக்கு இருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஆதலின், இப் பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று,சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க,சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அ ர்ஹதி (‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ ) என்று ஸ்ரீ பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்;அவன் தான் ஸ்ரீ பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை;‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில் ஸ்ரீ ‘பெருமாள் இஷ்வாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்;ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா,அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா;ஆகையாலே,சர்வாதிகாரம் இவ் வுபாயம்’என்று அருளிச் செய்தார்.

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-நெஞ்சமே நல்லை நல்லை –
சொன்ன காரியத்தை உகந்து செய்த சத் புத்திரர்களை உகக்குமா போலே உகக்கிறார் -என்னைக் கொண்டாடுகிறது என் என்னில்-உன்னைப் பெற்றால்-என் செய்யோம் –
பலம் தருகைக்கு ஈஸ்வரனுண்டு-விலக்காமைக்கு நீயும் உண்டு-இனிச் செய்ய முடியாதது உண்டோ –-இனி என்ன குறைவினம்-உன்னைப் பெற்றால் என் செய்யோம் என்று சாத்திய அம்சம் உண்டாக சொன்ன இடம் தப்பச் சொன்னோம்-உன் பக்கல் விலக்காத அளவே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் இனி சாத்திய அம்சம் உண்டோ
அவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்திய அம்சம் தானுண்டோ
எனக்கு க்ருத்யம்சம் யாது -என்ன-எனக்கு வள வேழ் உலகு பின்னாட்டுவது ஒரு போது உண்டு-அப்போதும் நீ விடாதே கொள்

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-அவன் மறவாமைக்கு கிருஷி பண்ணா நிற்க —அசித் கல்பன்-என்னாலே மறக்கப் போமோ என்கிறார் –அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறப்பனோ இனி –மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்-யான் –-அநாதி காலம் –மறந்தேன் உன்னை முன்னமே -என்று விஸ்மரித்துப் போந்த நான்-என் மணியையே– பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து புகரை உடைத்தான் நீல மணி போலே இருக்கிற தன்னை-எனக்கு அனுபவ யோக்யமாம் படி பண்ணி வைத்த பின்பு நான் அவனை அநாதரிப்பேனோ-

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-எனதாவி தந்து ஒழிந்தேன்
நீ உன்னை எனக்கு ஆக்குகையாலே வெளிறு கழிந்த என் ஆத்மாவைத் தந்தேன்-நெடு நாள் இழந்தவர் ஆகையால் இவர் திரிய நிற்கும் என்று கொண்டு இது எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன –இனி மீள்வது என்பதுண்டே-சத்யோ தசாஹமாக தந்தேன் -மீள்வு என்றோர் அர்த்தம் தானும் உண்டோ –இவரை ப்ரம்மத்தோடு விடுகிறது என் -என்று யார் பொருளை யாருக்கு கொடுத்தீர் என்ன-‘அழகிது, நீர் தாம் யாரதை யாருக்குத் தந்தீர்? ஆராய்ந்து பார்த்தீரோ!’ என்றான் ஈஸ்வரன்.-ஆராய்ந்து பார்த்தவாறே, அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாய் இருந்தது.-எனதாவி யாவியும் நீ – எனது ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறாய் நீ -இது உனக்கு அநந்யார்ஹ சேஷம் அன்றோ –(என்னாவி -என்னாதே -என்னதாவி -என்றதும் ஹார்த்த பாவம் -அநாதி காலம் இத்யாதி )ஆத்ம சமர்ப்பணம் செய்யாவிடில் சர்வமுத்தி பிரசங்கமாம்; சமர்ப்பிக்கில் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாம்; அப்படியாயின், செய்ய அடுப்பது என்?’ என்னில்,மயங்கிக் கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக் கடவன் அல்லன்-ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை யாதல் –-இவ்வாறு சாமான்ய சங்கல்பத்தையும் விசேஷ சங்கல்பத்தையும் சொன்ன படி-மயா சமர்ப்பித- ‘தேவரீருடைய திருவடித் தாமரைகளில் எனது உயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீ ஆளவந்தார் திருவாக்கு-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-இனி–உன பாதம் சேர்ந்தேனே-என்பதுடன் அந்வயம்-இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி அறிவித்த தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ -ஸப்த லோகங்களையும் விலக்ஷணமான ஸ்ரீ வராஹ நாயனாராய் கூர்மையான திரு எயிற்றிலே வைத்தாய்-இனி இப்படிச் செய்த போதே பண்டே உன் திருவடிகளைக் கிட்டினேன் அன்றோ –பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது போன்று, பிறவிப் பெருங்கடலால் கொள்ளப்பட்ட என்னை எடுத்த போதே தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே அன்றோ?’-இனி -என்றதும் மூன்று அர்த்தங்கள்-1-அறியாதன அறிவித்த பின்பு-2பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போல் சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்த பின்பு-3-இனி யாம் உறாமை -நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை யுடைய – உனது அங்கீ கார பலத்தை யுடைய நாங்கள் அணுகாத படி –வாயும் திரை யுகளில் வியசனம் தீர ஊனில் வாழ் உயிரில் ஸம்ஸ்லேஷித்த போதே உனபாதம் சேர்ந்தேன் அன்றோ )

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே
–2-6-7-எனக்காக்கில் இனி முடியாதது உண்டோ –இனி அநவாப்தாமாய் இருப்பது உண்டோ -எங்கனே என்னில்
முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து-அடியேனுள் புகுந்தான் –பிரளய ஆபத்தில் சகல லோகமும் நோவு படாத படி திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவன்–ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய செல்லாதனாய் சம்பந்தத்தைப் பார்த்து உட்ப்புகுந்தான்-ஒரு நீராகக் கலந்தான் -தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றிக்கே உகந்து புகுந்தான்-இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு ஏற்றம் இவ்விஷயத்தில் இவனுக்கு -மத சம்பந்திகள் அளவும் கீழ் மேல் ஓடும்படி புகுந்தான் –
அகல்வானும் அல்லன் இனி-பிரளய அநந்தரம் உமிழ்ந்தான்-இங்கு அங்கனே செய்வானாய் இருக்கிறான் அல்லன்-சேதனரைப் போலே பாபத்தாலே அகன்று ஒரு ஸூ க்ருத்தாலே கிட்டுதல் இல்லையே இவனுக்கு-வேறு ஒன்றால் அன்றியே என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக -எவ்வளவு என்னில் –கீழ் ஏழு படியும் மேல் ஏழு படியும் விடியா வென்னரகத்து –
ஒரு நாளிலே முடிவுண்டான தண்டல் யமனது -விடியா வென்னரகம் சம்சாரம்-வென்னரகம் -நரகம் என்று புத்தி பிறக்குமதில் தண்மை தோற்றாத நரகம் இது –என்றும் சேர்த்தல் மாறினரே –-என் பக்கல் அவன் பண்ணின பக்ஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள் ––எனக்கு இனி அநவாய்ப்பதமாய் -அடையப்படாதது -இருப்பது ஓன்று உண்டோ –மோஷயிஷ்யாமி -தன்னடையே ஓடிப்போமே -கிருஷ்ண சம்பந்தம-இங்கே கிருஷ்ண த்ருஷ்ண சம்பந்தம் –-குலம் –சப்த சப்தச்ச சப்த – -தச பூர்வா தச உத்தர தன்னோடு -அந்தன்-ஒருவன் அநந்தன் ஒருவன் -கூட்டிப் போவது போலே-ஆழ்வார் குருடர்களான நம்மையும் கூட்டிப் போவார் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-உன்னை என்னுள்ளே குழைந்த
கலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி யாயிற்று கலந்தது-வெம்-மைந்தா – என்னோடே கலக்கப் பெற்ற இத்தாலே நவீக்ருத யுவன ஸ்வ பாவன் ஆனவனே-வானேறே-அஸ் ப்ருஷ்ட சம்சார கந்தரை அனுபவிப்பித்தால் போலே யாயிற்று இவரை அனுபவிப்பித்தது-இனி எங்குப் போகின்றதே –-நித்ய ஸூ ரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது -போகிலும் கூடப் போக வேண்டும்படி யன்றோ கலந்தது –விலஷண விஷயம் -தானும் கால் கட்டி -எதிர்த் தலையும் கால் கட்டப் பண்ணுமாயிற்று —

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-மாதவன் என்றதே கொண்டு –மாதவன் என்கிற யுக்தி மாத்ரத்தையே கொண்டு -என் பக்கல் அஹ்ருதயமான யுக்தி மாத்திரமே உள்ளது-அத்தை அந்தப்புரத்தில் உள்ளார் வார்த்தை யாகையாலே சஹ்ருதயமாகவும் -அநேக ஆயாச சாத்தியமான ஆஸ்ரயணமாகவும் கொண்டு-என்னை –
கேவல நாராயண சப்தத்துக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை-இனி-போன காலமே போரும் –இனி விடேன் என்னா நின்றான் –பழுதே பல காலும் போயின -என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனர் இருக்கும் இருப்பை தான் இரா நின்றான் –இப்பால் பட்டது-அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இ றே போன காலம் -இனி மேல் உள்ள காலம் ஆகிலும் ஒரு பொல்லாங்கும் சேர விட்டுக் கொடேன் என்று –

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு –அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, -அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு.-கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ -வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்-கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து-இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’-வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-கிருஷ்ணா தி சிரஸா ஸ்வயம் -என்கிறபடியே சிரஸா வஹிக்கும் படியாக பாக்யம் பண்ணின எனக்கு இவர் கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரமாக இருக்கையாலே மாலை என்கிறது-இவருக்கு நோன்பு ஆகிறது -மண்ணை இருந்து துழாவி -யில் விடாய் ஆதல்-பகவத் பிரசாதம் ஆதல் -தம்முடைய பேற்றுக்கு அடியாக மயர்வற மதி நலம் அருளினான் என்றார் இறே
பூர்வ க்ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது ஆவது –-இனி என்ன குறை எழுமையுமே-
இங்கே ஸ்வரூப அனுரூபமான கிஞ்சித் காரம் பண்ணின எனக்கு பின்பு ஒரு நாளும் ஒரு குறை இல்லை-தேஹ சம்பந்தம் அற்றதில்லை -ஒரு தேச விசேஷம் சித்தித்தது இல்லை என்கிற குறைகள் ஒன்றும் இல்லை-இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ‘ அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ?-அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே அன்றோ?’-இது எத்தனை குளிக்கு நிற்கும் என்ன-எழுமையுமே-என்றும் ஓக்க சப்த சப்த ச சப்த ச –தச பூர்வாந்த சாபரான் -என்றது இறே-‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும்,
‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ-எனக்கு-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு
இன்று தொட்டும் இனி என்றுமே?–அடிமையை இழிந்த இன்று தொடங்கி-மேல் உள்ள காலம் எல்லாம் -அரியது இல்லை-(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -அடிமைத்தனம் அநாதி –இசையாமல் இழக்கிறோம்-இசைவித்து தான் தாள் இணை அடிக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ ) பின்னர் அவன் பயம் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது உபநிடதம். –தீர்ப்பாரை யாம் இனி அடுத்து நிற்க இறே -இவர் வார்த்தை சொல்லுகிறது பேற்றில் இழவு தோற்றாத படியான விஷயம் இறே-

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-ஈஸ்வரன் அழைத்து -நமக்கு ஒரு கவி சொல் என்றால் அப்போதே சமைக்க வல்ல எனக்கு என்று பூர்வர்கள் நிர்வாஹம்-அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே, சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை;
பகவத் குணங்களில் உடைகுலைப் பட்டு இருக்கிற நெஞ்சை தரித்து நின்று கவி சொல்ல வல்லேனாம் படி அமைக்க வல்ல எனக்கு என்று பட்டர் நிர்வாஹம்-ஈஸ்வரன் விஷயீ கரித்து குளிர நோக்கினால் அவ் வழகிலே சுழி யாறு பட வேண்டி இறே இருப்பது-இனியாவர் நிகர் அகல் வானத்தே?–-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்கிறவர்கள் தான் எனக்கு எதிரோ-த்ரிபாத் விபூதி என்னா-இங்கே இருந்து கவி சொல்ல வல்ல எனக்கு ஒத்தார்களோ-அகல் வானம் அது -நிகர் அற்றவன் அடியேனே–தெளி விசும்பு ஆகையால் அந்நிலம் தானே சொல்லுவிக்கும்-இருள் தரும் மா ஞாலம் ஆகையால் இந்நிலம் அத்தை தவிர்ப்பிக்கும்-சீதனையே தொழுவார் விண்ணுளா ரிலும் சீரியர் என்ன கடவது இறே-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-ஓர் ஊர் அளவன்றியிலே ஒரு நாட்டுக்காக காட்சி கொடுத்து கொண்டு இருக்கிற படி-கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–-இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு.- -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-இவர்கள் பரிஹாரம் பண்ணா நிற்கச் செய்தே-தீர்ப்பாரைத் தேடுகிறது -செய்கிறவை பரிஹாரம் அன்று என்கை தீர்ப்பாரைத் தேடுகையாலே இவள் பரிசரத்தில் பரிஹரிக்கைக்கு ஆள் இல்லை-மோஹிக்கைக்கு ஆள் உண்டு அத்தனை என்கை -இவள் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது? ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’–‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயா நிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ –யாம் –என்று தன்னையும் கூட்டிக் கொள்கிறாள் -இவர்களோபாதி தானும் நிரூபிக்கிறாளாய் தோற்றுகைக்காக- கலகத்துக்கு இவர்களோடு தன்னோடு வாசி இல்லை என்று தோற்றுகைக்காக -என்றுமாம் -தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அறுக்கும் விஷயம் என்று தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறது-தோழியானவள், ‘இனிப் பரிஹாரம் உண்டோ? எங்கே தேடக்கடவோம்?’ என்றவாறே,‘இவள் கையது நம் காரியம். இவள் அறிந்தாளாக அடுக்கும்,’ என்று உறவினர் அனைவரும் இவள்மேலே ஒருமுகம் செய்து பார்த்தனர்; ‘இனி, நாம் முன்னே அறிந்தோமாகச் சொல்லில் நம் காவற் சோர்வாலே வந்தது ஆம்;-நாம் இப்போதே ஆராய்ந்தோம் ஆவோம்,’ என்று பார்த்து–ஓர்ப்பால்
‘இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து’ என்கிறாள். என்றது, ‘நீங்களும் ஆராயா நின்றீர்களே அன்றோ?-உங்களைப் போன்று நானும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில் இங்ஙனே தோற்றிற்று,’ என்கிறாள் என்றபடி.-இவள் தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஓக்குங்காணும்; –
போதாயன வ்ருத்தி கிரந்தம் -இழந்தோம் -துக்கம் பட -ஸ்வாமி திரு உள்ளம் ஆகில் சொல்லவா என்றாரே —தாய்மார் -ஸ்ரீ பாஷ்ய காரர் -கூரத்தாழ்வான் தோழி –
மனத்தினைப் புறத்தே செல்ல விடாது உட்பொருளை நோக்கச் செய்தால்,-மனசை பிரத்யக் ஆக்கினால் —மூவகைத் தத்துவங்களையும் அலகு அலகாகக் காண வல்லள் ஆயிற்று.,–இனி–கடல் வண்ணார் இது செய்தார் காப்பார் யார் என்று ஒளஷதமே ரோத ஹேதுவானால் பரிஹாரம் உண்டோ –-நச்சு மா மருந்தம் இறே மோஹிக்கப் பண்ணுகிறது நிர்வாணம் பேஷஜம் பிஷக் –ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’–-ஒருவனுக்குச் சோகத்தை நீக்கினவன் காணுங்கோள் இவளுக்குச் சோகத்தை விளைத்தான்.-ஆணுக்குச் சோகத்தைப் போக்கினான்; அபலைக்குச் சோகத்தை விளைத்தான்.ஆன பின்பு-எங்ஙனம் நாடுதும் —எங்கனே தேடுவோம் –

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-ஸ்வ தந்தர்யத்தை நினைத்தோ -கிருபையை விஞ்சி கால் வாங்கி காண் -இனி என்கிறார்-ஐயோ என்றது ஹர்ஷத்தாலே -கிருபையின் கீழ் குற்றம் காண ஞானம் இல்லை -விட சக்தி இல்லை-கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.– ஓர் இடைச்சி கையிலே  கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி –இனிப் போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ –ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக -அவசர பிரதீஷனனாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே-சத்ருசமான பரமபதத்தை விட்டு -விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷணத்திலே முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் நின்று அவசர பிரதீஷனான பின்பு-நான் விட்ட வன்றும் என்னை விட மாட்டாத உன்னை ஒழிய-பச்சை கொண்டு பல வேளையிலே நிஷ் பிரயோஜனமாக விஷயங்களை பற்றவோ -ஆராதிக்கும் இடத்தில் துராரதரைப் பற்றவோ –

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-
நித்ய ஸூரிகளும் பூமியில் உண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஒரு நீறாகச் சேர்ந்து அடிமை சர்வாதிகனானவன் வந்து -காட்டில் த்ரியக்குகளோடு இளைய பெருமாளோடு வாசி அற அடிமை கொண்டால் போலே -விலக்கடி யுண்டான சம்சாரத்தில் இருக்கிறவர்களோடு நிலவரான நித்ய ஸூ ரிகளோடு வாசி அற அடிமை கொள்ளும் ஏற்றத்தை உடையவன் என்கை -இப்போது -பூர்வ க்ஷணத்தில் அறியாதே இருக்க -இங்கனே பலித்துக் கொடு நின்றேன் அடியேன் மனத்தே மன்னினார்- சம்பந்தம் அடியாக மனசிலே செறிந்தார்-விட ஒண்ணாத சம்பந்தத்தை இட்டு வந்தான். -நித்ய சம்சாரியாய்ப் போந்த என் நெஞ்சிலே தாவரத்தைப் போன்று நிலை பெற்று நின்றான்.-இனி-போக்யைகளான ஸ்த்ரீகளும்-தங்கள் நோக்காலே துவக்க வல்ல பெண்களும்.- -அதுக்கு உறுப்பான நிரவதிக சம்பத்தும் -குணவான்களான புத்திரர்களும் பரிவுடைய தாயும் தந்தையும் –இனி அவரே ஆவார்ஆவார் அவரேஇனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் -க்லேசகரமான-அவ்வோ பந்துக்களாலே க்லேசப் பட வேண்டா –மாதா பிதா பிராதா -அஹம்தாவத்-துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்

முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-இனி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள் -மேல் அடங்க இனி என்கிற இதன் விவரணம்-தோழீ -இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே மீட்க வேண்டாவோ –-நம்மை -நிறத்தில் வேறுபாடு அவளுக்கும் ஒத்து இருக்கும் படி –ஏஹம் துக்கம் ஸூ கஞ்ச சவ்-வாயாலே மடல் எடுக்க வேண்டா என்கிறாள் அத்தனை வைவர்ணயம் இருவருக்கும் ஒத்து இருக்கும் –
யாமுடைத் துணை என்னும் தோழி மாறும் எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ-எனக்கு அவன் வேணும் என்னும் அளவு இ றே இவளுக்கு உள்ளது –இவள் நோவு போக வேணும் -என்றும் இருவரும் சேர வேணும் என்றும் இரட்டித்து இறே அவள் நோய் இருப்பது –
ததா ஸீன் நிஷ் பிரபோத்த்யர்த்தம் ராஹு க் ரஸ்த இவாம் சுமான்-என்று பெருமாளின் காட்டில் ஒழி மழுங்கினார் இறே மஹா ராஜர்-இம் முதலடியில் உள்ள ‘இனி’ என்ற சொல்லின் பொருளைப் பாசுரத்தில்-மேல் உள்ள மூன்று அடிகளும் விரிக்கின்றன.
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ என்று கூட்டுக.-இனி நம்மை--தோழி, தன் வாயாலே ‘மடல் ஊரக் கடவதன்று’ என்று விலக்கவும் கூட, உடம்பு வெளுத்தல் அவளுக்கும் ஒத்திருக்கையாலே, ‘இனி என்னை’ என்னாமல், ‘இனி நம்மை’என்கிறாள்.
தோழிமாரும் “எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்னக் கடவதன்றோ. -முன்னமே ஈடுபடுவர்களே -என்றவாறு –“எனக்கு அவன் வேணும்’ என்னும் தலைவி;
இவளுக்கு அவன் வேணும்’ என்னும் தோழி என்னும் இதுவே யாயிற்று வாசி.
-பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும், பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வள வன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-என்னைக் கடல் கொண்டது -எனக்காய் இருக்கிற உங்களுக்கும் யாகாதபடி அகப்பட்டேன் –என் கார்யம் நான் நினைத்தபடி யாகில் யன்றோ உங்கள் வார்த்தை கேட்டு மீளுவது –-என்னை -தாயார் பிழையாள்-ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் -என்ன மீளாத என்னை –
இனி உமக்கு ஆசை இல்லை-இவ்விஷயத்தில் மூட்டுகை அன்றிக்கே-மீட்கப் பார்க்கில் பின்பு உங்களுக்கு என் பக்கல் நசை இல்லை –முன்னை அமரர் முதல்வன் –
பெரியார் சிறியோர் என்று இன்றிக்கே ஆழப் பண்ணும் கடலிலே அகப்பட்டேன் –யத்ர ருஷய பிரதமஜா யே புராணா-என்கிற நித்ய ஸூரிகளுக்கும் சத்தா ஹேதுவாய் இருக்கிற மேன்மையை யுடையவன் –வண் துவராபதி-மன்னன்– அம்மேன்மையைத் தப்பினாலும் தப்ப ஒண்ணாத நீர்மையை யுடையவன்-மணி வண்ணன் -நீர்மையைத் தப்பினாலும் தப்ப ஒண்ணாத வடிவு அழகு -பிரணயிநி துவக்குண்பது வடிவு அழகிலே இறே-வாசு தேவன் -அதில் காட்டிலும் ஆபி ஜாதியத்திலே யாயிற்று அகப்பட்டது –ஸ்நுஷாதசரதஸ் யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபி ந-வலையுளே அகப்பட்டேன் -நோக்கிலும் முறுவலிலும் அகப்பட்டேன் -முகப்பில் அனுகூலம் போலே தோற்றி பந்துக்களோட்டை தொற்றை யறுத்து வ்யதிரேகத்தில் முடிய ஒண்ணாது இருக்கை–அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும் புன்முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.-ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க, எம் பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,-கமலக் கண் என்னும் நெடுங்கயிறு” என்னக் கடவதன்றோ.-அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப் படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1உன்னுடைய க்ரித்ரிம லீலை என்னுமிடம் நான் அறிவேன்-இனியது கொண்டு செய்வதென்?-நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வைகள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இறே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்-இனி அது கொண்டு செய்வது என் – ‘சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள்.-அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம் தான் இல்லையோ?’ என்று
கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-இப்படி ஒருத்தருக்கும் நிலம் அல்லாத கிரித்ருமத்தை அபலைகளான நாங்கள் அறியவோ -பழம் கிணறு கண் வாங்குகிறது என் -அது கிடக்கிடாய் -நான் பசு மேய்க்கப் போனமை அஸத்யமோ –இனி எம் பரமே
நித்திய ஸூரிகளோடு ஒக்கத் தங்களையும் ஒன்று படுத்திப் பேசுகிறார்கள்.-அவர்களுக்கு நிலம் அல்லாதது எங்களால் அளவிடப் போமோ?அவை யெல்லாவற்றையும் எங்களை ஒழியச் சொல்லாய்.-‘என் தான்’-நான் பசு மேய்த்தமை இல்லை என்கிறீர்கோளோ?
அறிந்திலோம் என்கிறீர்கோளோ?-நான் சொன்னது பொய் தான் என்கிறீர்கோளோ? என்றான்.–விகல்பம் பண்ணி கேட்கிறான் –-வார்த்தை கேட்பதில் தானே இவனுக்கு அபேஷிதம் –அவையெல்லாம் அப்படியே யானாலும் நீதான் பசுக்கள் மேய்க்கும்படி இப்படியேயோ?

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே–6-4-3-தன் சேஷ்டிதங்களை அனுசந்தித்து நாள்தோறும் அடைவுகெட கூப்பிட்டு-அனுபவத்தோடு காலம் கழிய பெற்றேன் என்னுதல்-அனுபவிக்கலாம் படி காலம் நெடுக்கப் பெற்றேன் என்னுதல்எனக் கென்னினி நோவதுவே-ப்ரீதி பிரேரிதனாய் அனுபவிக்கிற எனக்கு இப்படி காலம் நித்தியமான பின்பு -விஸ்லேஷம் ஆகிற நோவு உண்டோ-எனக்கு என் இனி நோவதுவே –‘காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.-அன்றிக்கே,-அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.-இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு – ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் – இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.
உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-அவன் சேஷ்டிதங்களை அனுபவித்து நெஞ்சு நெகிழ்ந்து இச் சேஷ்டிதங்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன் –இனி எனக்கு வேண்டுவது என்-இவ்வனுபவத்தோடே காலம் செல்லப் பெற்ற எனக்கு அவாப்தவ்யம் உண்டோ –அதி பால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனை போலே இருக்கிறபடி.
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் –அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன். நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-அவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களையே-இடைவிடாமல் அநுஸந்திக்கும் நெஞ்சு உடையேன் –காரணம் பந்த மோஷாயா -என்கிற பொதுமை தவிர்ந்து அசாதாரணமான நெஞ்சை பெற்றேன் –
பஞ்சஸாத் கோடி விஸ்தீரணையான பூமியில் எனக்கு எதிர் யார்-பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ? பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.-

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-அவர்கள் தலையிலே திருவடிகளை வைத்த இது தம் பேறாக நினைத்து இருக்கிற படி -இப்படி தனித் தனியே அனுபவித்து முடிக்க ஒண்ணாத ஆச்சர்ய சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் நெஞ்சை யுடையேன் –அநுஸந்திக்கும் நெஞ்சு -நெஞ்சு என்னும் உட் கண் -என்னக் கடவது இறே
அங்கனம் அன்றியே -முடியானே யில் கரணங்களை யுடையாராகையாலே மனஸ்ஸூ சஷூர் இந்திரிய விருத்தியும் லபிக்க வற்றான படி சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் –இதர தேவதைகளை ரக்ஷகர் என்கிற கலக்கமும் -ஈஸ்வரனுடைய ரக்ஷணத்தில் அதி சங்கை பண்ணும் கலக்கமும் -தனக்குத் தானே கடவன் என்கிற கலக்கமும் இல்லை –என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே –
உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-பர வியூஹ விபவங்களிலே தொழுதவள் அல்லள்-அது தன்னிலும் உள்ளு நிற்கிற அரவிந்த லோசன் அளவாகில் அன்றோ மீட்கலாவது-அவனோடே சம்பந்தம் உள்ள இடம் எங்கும் புக்கு அவகாஹித்தவளை மீட்கப் போமோ -விஷயம் பரோஷமாய்-எட்டாது காண் என்று மீட்கவோ -ப்ரத்யக்ஷ விஷயம் பரிச்சின்னம் என்று மீட்கவோ-தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இறே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை -தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று-நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள்-இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு--இனி-தொழுகை தேக யாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்க வேண்டும் என்பாள்‘இனி’ என்கிறாள்.அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ-பகவத் விஷயத்தில் மூழ்குதல் என்று ஒன்று இல்லையோ? நியமித்தல் நியமிக்கப்படுதல் என்ற தன்மையேயோ வேண்டுவது;
பெற்றவர்கள் என்னா, பொருத்தமில்லாத காரியங்களில் இழியக் கடவதோ? என்பாள் ‘அன்னைமீர்!’ என்கிறாள்

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே

கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-இவள் திரு நாமம் சொல்லும் போது த்வயத்தில் படியே ஸ்ரீ மன் நாராயணன் என்று ஆயிற்று சொல்லுவது-நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –போய் இனித்-லீலா உபகரண ரசமும் திரு நாமமே யான இருப்பை விட்டு -அங்கு என்ன ஏற்றகத்துக்குப் போனாள்-என் புத்திக்கு வசமான செயல்களை யுடையவள் கண்டீர் என்னை ஒழியப் புறப்பட்டுப் போனாள்.-அன்றிக்கே,-நிருபாதிகமான பெண்மையை யுடையவள் என்னலுமாம். –-மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல – விளையாட்டுப் பொருள்களால் கொள்ளும் காரியமும் அவனே யாம்படியான இந்த ஈடுபாட்டிற்கு மேலே அங்குப் போய்ப் பெறுவது என்னாகப் போனாளோ? என்பாள் ‘இனிப் போய்’ என்கிறாள்.

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்

பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-த்யாஜ்ய உபாதேய விபாகம் -பருவம் நிரம்பாத அளவிலே கிடீர் உண்டாயிற்று –பால்யாத் ப்ரப்ருதி ஸூ ஸ் நிக்த-என்கிறபடியே பருவம் நிரம்பாது இருக்க பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கிற படி-போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்-இதில் காட்டில் அங்கு என்ன -ஏற்றகம் உண்டாய் போனாள் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் என்று இருக்க மாட்டிற்று இலள் -தனக்கு சர்வ ஸ்வமான ஸ்ரீ யபதி கண் வளர்ந்து அருளுகிற வூரிலே -பிராட்டியோபாதி தன் பக்கல் வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற வூரிலே என்றுமாம் –

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே

சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-தன்னை பிரிந்து நோவு படுகிற இத்தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழிய போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத்தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் –இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்இளமான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்-இனிப்போய்த்-பெற்றோரை விடும் படி இவ்விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் –பெற்றோரை விட்டு பற்றுமது இறே ப்ராவண்யத்துக்கு எல்லைஇனிப் போய் – உறவு முறையாரில் தாய்க்கு மேற்பட்டார் இலர் அன்றே! இப்படித் தாயுங்கூடப் புறம்பாம்படி அவன் பக்கலிலே பிறந்த பாவ பந்தத்துக்கு மேலே‘அவ் வருகே ஒன்று உண்டு’ என்னப் போனாளோ?-வந்தேறியைக் கை விட்டால் எப்பொழுதும் சித்தமாயிருப்பதற்குச் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?
ஸ்வதஸ் சித்தம் பகவத் கைங்கர்யம் -தேடித் போக வேண்டாம் என்றபடி

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே

ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-அஹோராத்ரம் அவன் வ்யாமோஹம் அனுபவிக்கிற இவ்விடத்தை விட்டு என்ன ஏற்றம் பெறப் போனாள் –யயவ்ச காசித் ப்ரேமாந்தா-என்கிறபடியே இருட்சி கை கொடுக்க இறே போயிற்று-அவன் தன் பக்கல் செய்யும் வியாமோகத்தைச் சொல்லிக் கூப்பிடும் இதற்கு மேலே தன் வியாமோகம் காட்டப் போனாளே.-அன்றிக்கே, கண்ணும் தோற்றாமல் நெஞ்சும் பறியுண்டிருக்கும் இதற்கு மேலே,
இனிப் போய், வேறே ஒன்று உண்டோ அநுபவிப்பது? என்னுதல்.

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-நேருடைத்தாகவும்-மருங்குடைத்தாகவும் அடைத்து -முன்பும் பார்ஸ்வத்திலும் நிறுத்தி -நீயே ரக்ஷகன் என்கிற விச்வாஸத்தையும் நெகிழ்ப்பாரைப் போலே இருந்தாய் என்னுதல் -கை விடுமா போலே இருந்தாய் என்னுதல்-ஆர் மருந்தினி யாகுவார்! -ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் யார் மருந்தாகுவார்-நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?- -பிறர் அல்லாத அற்றைக்கு நீ துணை என்று இருக்கலாம் -நீ கை விட்டால் நோக்கக் கடவார் உண்டோ -மருந்தாவது எது என்னாதே யார் என்கிறது ஒரு பரம சேதனன் மருந்து ஆவான் என்று இருக்கிறார் –நிர்வாணம் -பேஷஜாம் பிஷக்மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந்திருவந்தாதி, 4.–அநிஷ்டம் -சம்சாரம் -தொலைக்கும் -இஷ்டமான மோக்ஷம் கொடுக்கும் பொருளும் –போக்யமான அனுபவமும் நீயே-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்!
என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9–பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ என்கை-எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்-முனிந்து இனி -அவன் அவ்வபதானம் செய்வதற்கு முன்பே மீட்கப் பார்க்க வேண்டாவோ-என்செய்தீர் அன்னைமீர்காள்!-எனக்கு அநுகூலர்கள் ஆனீர் அல்லீர் -மீட்க்கத் தொடங்கிற்று தலைக் கட்டிற்று அன்று -பொடிகைக்கு முறை அமையுமோ -பலம் வேண்டாவோ

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங் குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-போது போக்குகைக்கு என் நெஞ்சை அழைத்து தருவாரும் இல்லை -அத்தை அழைத்து தரும் போது நெஞ்சிலும் அண்ணியராக வேணும் இ றே -இனி யாரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -நெஞ்சு மீளாதே வ்ருத்த கீர்த்தனத்துக்கும் ஆள் இன்றிக்கே ஒழிந்தது ஆகில் நீ செய்யப் பார்க்கிறது என் என்ன-என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே-என் நெஞ்சு யாது ஓர் இடத்தே போய்த் தரித்தது -நானும் அங்கே போய்ப் புகும் அத்தனை -என் நெஞ்சு மீளாத பின்பு எனக்கும் அது அல்லது புகல் உண்டோ –அத்யைவாஹம் கமிஷ்யாமி லஷ்மணே நகதாம் கதிம்-நான் இப்பொழுதே இலக்குமணன் சென்ற வழியிலேயே செல்லப் போகிறேன்’ என்கிறபடியே,‘நெஞ்சு சென்ற வழியே செல்லப் பார்த்தேன்’ என்கிறாள்.

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ -ஆனாலும் ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான லஜ்ஜையை விடாதே நோக்க வேண்டாவோ என்ன –
நன்னுதலீர் !இனி நாணித் தான் என் ?-ஜகத்து எல்லாம் அடைய பழி சுமந்த பின்பு லஜ்ஜித்து என்ன பிரயோஜனம் உண்டு -நம் அழகும் அழிவதற்கு முன்பே அன்றோ அது நோக்க வேண்டுவது –உலகத்தில் பிரசித்தமாய் விட்டதாகில் இனி நாணி என்ன பிரயோஜனம் உண்டு–நன்னுதலீர்-நுதல் –நெற்றி -உங்கள் முகத்தில் எழில் அழியாது இருக்க என் முகத்தில் எழில் குடி போன படி கண்டி கோளே -இந்த நெடுவாசியை பார்த்து அன்றோ வார்த்தை சொல்லுவது –

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-சம்ச்லேஷ அர்த்தமாக சென்றேன் -ஸ்வரூபத்தை அழிய மாறி யன்றோ நான் சென்றது–நான் முடிந்து ஒரு தலையே யாம்படி கிட்டினேன் -என்னுதல் –நித்ய விபூதிக்கு -சாம்யாபத்தி அடைய-அன்றிக்கே
கலவியின் பொருட்டு சென்று கிட்டினேன் என்னுதல் –இனி என் கொடுக்ககேன்-பண்டே எல்லாம் இழந்த பின்பு இனி எத்தை இழப்பது –கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து – அழகிய வளை –நெஞ்சு -தொடக்கமானவற்றை எல்லாம் என்பாடு அற்று வாசனையோடு போம்படியாக இழந்து– அவன் விபூதியைப் போலே யாகும் இவள் பரிகரத்தின் பரப்பும்–ஆதலின் எல்லாம் என்கிறது

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்-இப்படி நோவு படுத்தினவன் தான் தன்னோடு ஸ்பர்சம் உள்ளவற்றை தந்து ஆகிலும் என்னை உஜ்ஜீவிப்பிக்கிறிலன் -அது செய்கின்றிலன் அது செய்தான் ஆகில் பூவுக்கு இட்டோம் போலும் என்று இருக்கலாமே-காமுகர் காமினிக்கு இட்டால் போலே -சங்கேத சொல் –-தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் என்றவரே -என்னுடைய ஸ்பர்சம் உள்ளதைக் கொண்டு -அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் –அபிமதம் கிட்டாது ஒழிந்தால் சத்தையை நோக்க வேண்டாவோ ––ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-நலிந்த இவனுக்கு கூப்பிடாதே யாருக்கு கூப்பிடுவோம் சொல்லி கோளே -சம்பந்தம் இல்லாதார் வாசலிலே சென்று கூப்பிடவோ-

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-இந்திரன் ராஜ்யம் பெற்றான் -மஹா பலி உதார குணம் காட்டிப் போந்தான் நான் எனக்கு சர்வ ஸ்வம்மான அடக்கைத்தையும் லஜ்ஜையையும் இழந்தேன்-இனி என் கொடுக்கேன்-இனி எத்தை கொடுப்பேன்-என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–இத் துக்கம் அறியாமையால் அழகிலும் குறைவற்று பூரணைகளாய் எனக்கு ஹிதம் சொல்லலாம் இ றே உங்களுக்கு –கீழே நாலாம் பாட்டில் இனி என் கொடுக்கேன் என்று சொல்லிற்று -இதுக்கும் அதுக்கும் வாசி என் என்னில் -பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் கையும் திரு வாழி யுமான சேர்த்தியிலும் தோற்று நாயக் கூத்தனை யாதரித்து கலக்கச் சென்று கிட்டாமையாலே வந்த இழவு அதில் -ஸ்ரீ வாமனனுடைய அழகிலும் சேலத்திலும் தோற்று மஹா பலியைப் போலே சர்வஸ்வத்தையும் இழந்தேன் என்கிறது இதில்-

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-எனக்கு உறவு முறையாரான நீங்கள் வடிவு அழகிலும் ஸ்த்ரீத்வத்திலும் குறைவற்று இருக்கையாலே நிர் துக்கைகளாய் இருந்தி கோள்-யான்-எல்லாம் இழந்து அவசன்னையாய் இருந்தேன்
இனிச் செய்வதென் -இப்படியான பின்பு எத்தைச் செய்வேன் -இவற்றை மீட்க்கவோ -அவனை நியமிக்கவோ -எல்லா அளவிலும் தரித்து இருக்க வேண்டாவோ –என்ன
அதற்கு நெஞ்சு வேண்டாவோ -என்கிறாள் –

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-
பெரிய தாளுடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன் -வடிவில் கனமும்-நோவில் பாடாற்ற ஒண்ணாமைக்கு உடல் என்கை –பெருமான் —தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –இனி யானறியேனே-–எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் -அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -/அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே -முதலை ஐந்து –இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-
என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்-அவன் என்னுள்-இருள் தானற வீற்றிருந்தான்-அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய் -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ–நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாக நினைத்து இருப்பது -த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை ஆயிற்று -இவன் என் ஹிருதயத்திலே பிறந்த பின்பு அத்தையும் ஒரு பொருளாக நினைத்து இரேன் -என்று ஆளவந்தார் நிர்வாஹமாக-திருமாலை ஆண்டான் பணிக்கும் –என் ஹிருதயத்தில் வீற்று இருந்த இது ஒழிய வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செல்ல இருக்கிற ஐஸ்வர்யத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து இருக்குமோ -என்று பார்த்தால் அதுவும் அவனுக்கு ஒரு சரக்கு அல்ல -என்று எம்பெருமானார் நிர்வாஹம் -இதுவே பிரகரணத்துக்கு சேருவது-இதில் இதுவே தனக்கு பரம புருஷார்த்தம் என்று இருந்தான் –-மூ உலகும் பொருள் அல்ல -ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் என்று இரண்டு நிர்வாகங்கள்
மருள் தானீதோ ––சர்வேஸ்வரன் ஒரு சம்சாரியைப் பெற்று ஹ்ருஷ்டனானான் என்கிற இது கூடுவது ஓன்று அன்று -நான் பிரமித்தேனோ –-மாய மயக்கு மயக்கே-தன் ஆச்சர்யமான ப்ரம சாதனங்களால் ப்ரமிப்பித்தானோ -அநாதி காலம் பிரக்ருதியைக் காட்டி அறிவு கெடுத்தான் -இப்போது தன் வ்யாமோஹத்தை காட்டி அறிவு கெடா நின்றான் –

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-நான் முடியா நின்றேன் -இனி இப் பேறு பெற இருக்கிறார் யாரோ -நதே மனுஷ்யா -என்கிறபடியே மனுஷ்யர்க்கு கூட்டு அல்லர்
அந்தோ –உடைமையான எனக்கு உள்ளது உடையவனுக்கு இன்றிக்கே ஒழி வதே –வர்ஷே பஞ்ச தசே புன –பதினான்கு ஆண்டும் கழித்து பதினைந்தாம் ஆண்டுக்கு இருப்பாரே அன்றோ காணப் பெறுவார் காலம் முடிந்தது என்று இருக்கிறான் ஆயிற்று சக்கரவர்த்தி –

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ —இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் –என்கிறபடியே அத்தலையிலே ஆற்றாமையும் –வரவுக்கு உடலாக-கரன் பட்டான்-கவந்தன் பட்டான்-வாலி பட்டான்-கடல் அடைப்பது
வந்து புகுந்தார் அத்தனை -என்று என்றால் போலே -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ – இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்-என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இறே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ- வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ- என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ-பாது காக்குகின்றவனுமாய்-ஆற்றலும் உடையவனுமாய்-சம்பந்தமும் உள்ளவனாய் இருக்கிறவன் வாராது ஒழிய அவனாலே பாது காக்கப் படுகின்ற பொருள்களில் சேர்ந்தவளாய் ஆற்றல் இல்லாதவளாய்-தகுதி இல்லாதவளாய்-இருக்கின்ற நான் என் உயிரை நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ-இவற்றின் கையில் நோவு பட-எனக்கு பணி யாகவோ என்னுடைய உயிரைப் பாதுகாப்பது -என்றபடி-துஷ்கரம் க்ருதவான் ராம பிரபு –என்று திருவடி –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-கண்களுக்கு இலக்கான பொருள்கள்-முழுதும் துன்புறுத்த புக்கவாறே-அவற்றுக்கு அஞ்சி கண்களைச் செம்பளித்தாள்-அகவாயிலே அவன் அழகு நினைவுக்கு வந்து-நலியா நின்றதுஎனக்கு தாரகமான அழகு பாதகமானால் எனக்கு பிராணனை நோக்க விரகு உண்டோ-மனத்தே நின்று ஈரும் –என்கையாலே கண்ணை மூடினாள் எனபது தானே போதரும்-செம்பளித்தல் -மூடுதல்-என்னது என்று அபிமானித்த -உடம்பு பகை ஆயிற்று –என்னது -என்று அபிமானித்த அழகு பகை ஆயிற்று –-இனி இருந்து என்னுடைய உயிரை பாதுகாப்பாது என்ற-ஒரு பொருள் உண்டோ –

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6–பிராட்டியோடு -அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து -அச் சீலத்தை உடைய திருமேனி நித்தியமான ஆத்துமாவை-முடியா நின்றது-காபாலி கந்தர்க்கு எளிதானது கண்டீர் எனக்கு அரிதாயிற்று-ஆயின் புறம்பே சென்றாகிலும் தரிக்கல் ஆகாதோ என்ன-காபாலி கந்தர் -மூலம் -பிரமன் என்றபடி ––எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனால் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன-எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8–கலக்கிற போது நமக்கு ஸ்வம் என்னும் படி இருந்த கிருஷ்ணனுடைய தற்காலத்து பரிமாற்றம் -அவன் தன்னில் காட்டிலும் பாதகமாகா நின்றது -கலக்கிற போது தாழ்வுகள் தோற்ற பரிமாறின பரிமாற்றத்தில் காட்டிலும் அவன் தானே நல்லன் என்கை –ஆதலின் கண்ணனில் கொடிது -என்கிறாள் -என்றது இச் செயல்களைக் காட்டிலும் இன்னமும் அவன் தானே நல்லன் -என்றபடி –-இனியதனிலும்பர்-பின்னையும் அதுக்கு மேலே மது மண மல்லிகை மந்தக் கோவை-மதுவையும் மணத்தையும் யுடைத்தான மல்லிகையாலே செறியத் தொடுத்த மலை —வண் பசும் சாந்தினில்–அழகிய பசுஞ்சாந்து இவை நலியா நின்றன-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-அவன் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே அநாதி கால ஆர்ஜிதமான பூர்வாகம் நசிக்கும்-நாளும் பிணி -பூர்வாகம் -நித்யம் சேர்க்கிறோம் – –இனியத்தைச் செய்யவே விரோதியான பாபம் போம் என்கை –தம் சாரா எனக்கேல் இனி என் குறை–புகுதருவான் நின்ற வினைகளும்-உத்தராகமானது சேஷியாது –அவன் திருவடிகளிலே தலை சாய்க்க என்னுடைய சகல துரிதங்களும் போவதான பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ –

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-சகல துக்கங்களும் போம் –இனி எனக்கு என்ன குறை யுண்டு -பகவத் அனுபவ விரோதி துரிதங்கள் போன பின்பு -எனக்கு அனுபவிக்கைக்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்ததோ –என்னால் வருவது போவதான பின்பு அவனால் வருவதற்கு ஒரு குறை யுண்டோ –பக்தியில் இழிய பரிகரம் கர்ம ஞான யோகம் இல்லாமல் -பிரபத்தியில் வியவசாயம் இல்லாமல் -யுக்தி மாத்ரத்தால்
-அல்லல் -போம் -போக்கிட்டு என்ன -என்றால் -எனக்கேல் இனி என் குறை –-என்கிறார் –

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-இன்று நாம் –நன்று நணுகுதும் –அவன் சர்வ ரக்ஷகனான பின்பு -ரக்ஷக அபேக்ஷை யுடைய நாம் -நன்றாகக் கூடுவோம் -ஸ்ரீ மதுரையை காலயவன ஜராசந்தாதிகள்-கிட்டினால் போல் அன்றியே –நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் – திரு விருத்தம் -92-என்று-ப்ரஹ்மாதிகள் ஷீராப்தியை கிட்டினால் போல் அன்றியே –அநந்ய பிரயோஜனராகக் கிட்டுவோம் –  நமது இடர் கெடவேஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக–வழித் துணை தேடி க்லேசிக்கிற நம்முடைய துக்கம் கெட —

தகவிலை தகவிலையே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்-போகில் மேன்மேல் என பிரிவுண்டாம் -பிரிவை என்று செய்யுள் பாடாய் பிரிவால் என்றபடி -உன்னைப் பிரிகை யுண்டாம் -இனி -முன்புத்தை பிரிவுகளுக்கு ஜீவித்து இருந்தேன் ஆகிலும் இனி ஜீவித்து இருக்க மாட்டேன் –பிரிவை என்பதில்-ஐகாரம் அசை நிலை -செய்யுட்பாடு- பிரிவு உண்டாம்படி வருகிற பசு நிரை மேக்கப் போக்கு வீவ–பசு வந்தன -என்னுமாறு போலே-போக்குகள் தவிரப் படுவானவாக -என்றபடி –போக்கு ஏக வசனம் என்பதற்கு நிதானம் —-இனி வீவ –-இதற்க்கு முன்புள்ள காலம் எல்லாம் பிரிந்து போந்தாயே யாகிலும் இனி மேல் உள்ள காலம் எல்லாம் தவிர வேண்டும்-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –
இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ –அன்றிக்கே–உன்னை நீ அறியாயோ -என்னுதல்-ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –-சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே –இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –-என் தனிப் பேர் உயிரைஉன்னை –என்றதின் வியாக்யானம்-வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ– -உபமான ரஹிதனாய் விபூவாய் -எனக்குத் தாரகனாய் இருந்தவனை -சேதனனில் காட்டில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு-இஹ பர லோக ஐஸ்வர்யம் போலே இல்லையே –-என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –

————–

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25--என்னுடைய வளை நிமித்தமாக–சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும் ரஷியா நின்ற வாஞ்ஜையை பக்னம் ஆக்கா நின்றது—சம்சாரத்தின் அபலையான இவளைப் பெற்றால்-சர்வேஸ்வரன் தானே உபய விபூதியையும் ரஷிக்க கடவ ஆஜ்ஜையை பக்னம் ஆக்கா நின்றான்-என் உடைய வளை நிமித்தமாக இவனை அழிக்க தொடங்கினால்
வேறு ரஷிப்பார் யார் என்றுமாம்–மிடுக்கை உடைய இந்த்ராதி தேவதைகளுக்கு நாதனான பிரம்மாவுக்கும் நாதன் ஆனவன்-மேலா தேவர்களான அயர்வறும் அமரர்கள் அதிபதி
இத்தால் உபய விபூதி நாதன் என்ற படி-உபய விபூதிக்கு நாதன் ஆனால் போல அன்று கிடீர்
எனக்கு நாதன் ஆயிற்று-(அரங்கம் ஆளி என் ஆளி-ஸ்ரீ ரெங்க நாத மம நாத-அங்கு எல்லாம் விசேஷ கடாக்ஷம் இங்கு பேர் அளவிலே நாதன் )–அவனது பிரயத்தனமும் கார்யகரமாகா இருக்க -தலைகாட்டாமல் இருக்க அவனுடைய ஆணையையும் அழித்து இவளை பாதிக்கத் தொடங்கிற்றே-இனி அசாத்தியமான வியாபாரம் இதுக்கு ஒன்றுமே இல்லையேஇனி நால் நிலத்தே-இங்ஙனமான பின்பு,-இவ்வுலகத்தில்-(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமங்கை யாழ்வார் அருளிச் செயல்களில் -இனி பதப் பிரயோகங்கள் –

November 25, 2025

ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே – நாலாயி:716/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/4
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ – நாலாயி:1195/2
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – நாலாயி:1473/3
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/3

பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் – நாலாயி:1659/3
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/4
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் – நாலாயி:1770/3
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/2
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே – நாலாயி:1969/4
இனி களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2005/2
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:2029/2

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–இடையரும் பசுக்களும் தொலையும் படியாக இந்த்ரன் கல் வர்ஷம் வர்ஷித்த படியாலே
மலையை எடுத்து குடையாக தரித்ததும் – தர்ச நீயமான குரவைக் கூத்திலே கோபிகாரோடு ஒக்கத் தன்னையும் கோத்ததும்-ஒருவன் கன்றாய் ஒருவன் விளாவாய் வந்த இருவரையும் சேர முடித்ததும்-நான் ஆசைப்பட்டு பெறாத திருவடிகளைக் கொண்டு ஆசூர பிரக்ருதியான காளியன் தலையிலே மிதித்தது முதலாக வீரப் பாட்டுக்கும் மௌக்யத்துக்கும் சேர்ந்து இருக்கிற அதி மநோஹரமான அனைத்திலும் அங்கு என் உள்ளம் குளிர ஒன்றும் கண்டிட பெற்றிலேன் –அடியேன்-இவை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற நான்-ஒன்றும் காணப் பெற்றிலேன் – காணுமாறு இனி வுண்டேனில் அருளே—-நீ நினைத்தக்கால் செய்ய ஒண்ணாதது இல்லை -நான் இவை காணும் படி அருள வேணும் –

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே-30-இப்படி தோஷ பிரசுரனான எனக்கு இனி –என் தோஷத்தை அனுசந்தித்து-நான் எனக்கு ரஷகனாகை தவிர்ந்து தேவரீர் பக்கலிலே ந்யஸ்த பரனான பின்பு-கதி என் சொல்லாய் –போக்கடி சொல்லாய் –போக்கடிக்க சூழ்ந்து கொண்டு வைத்து -அவனைச் சொல்லாய் -என்னும்படி இறே பிராப்தியிலும் இருப்பது –நீர் போக்கடி சொல் என்ற போதாக நமக்குச் சொல்ல வேண்டுகிறது என் என்ன –என்னை ஆளுடைய கோவே–இத்தலையில் சேஷத்வமும் அத்தலையில் சேஷித்வமும் வ்யவஸ்திதமாய் அன்றோ இருப்பது –

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-4-இப்போது உனக்கு உறுதியாக ஒரு நல் வார்த்தை சொல்லுகிறேன் -நெஞ்சே கேள்
சொல்லச் செய்தே பின்னையும் சொல்லாததின் பலமே யாகாமே நீ அவனைத் தொழுது உஜ்ஜீவிக்கப் பாராய் –பேரருளாளன் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி -திரு ஹஸ்திகிரி நாதன் தானே-தொழுது எழு-ஆஸ்ரயித்து உஜ்ஜீவி-தொழுது எழு மனனே-நம்மாழ்வார் தொழா விட்டால் விழுவோம் -தொழுதால் எழுவோம் )

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே—1-10-9-எந்தாய்-திருமலையிலே வந்து புகுந்து
உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே –இனி யான் உன்னை என்றும் விடேனே-எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் – ஆன பின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ-(நாம் உனக்காம் படி நீ என் நெஞ்சினில் பற்ற பற்றின பற்று விடுவேனோ என்றபடி இவர் பற்றவில்லையே )என்றும்-இத்தால் -பரபக்தி பர்யந்தமாக பிறந்தது -என்றபடி-அரை ஷணம் அவனை ஒழியச்  செல்லாமை  உண்டாகை இறே-பரபக்தி -யாவது வ்யதிரேகத்தில் ஜீவியாத படி -ஆனார்

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ
கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே–3-5-8-சங்கு மாறாதே இருப்பதாய் பரப்பை உடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய்-அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய் இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க-என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய் –இனிப் போயினால் அறையோ–உனக்கு வந்த கிருபை மாறாதபடி இருக்கையாலே இனி நீ போவாய் ஆனால் அறையோ அறை –ஹேது மாறில் இறே அதன் கார்யம் மாறுவது
உன்னால் அல்லது செல்லாத என்னை விட்டு நீ இருக்கவுமாய் போகவுமாய் இருப்பார் நெஞ்சில் இருக்க ஒண்ணாது –விதி வாய்க்கின்றது-அறையோ-என் நெஞ்சை விட்டு வன் நெஞ்சில் இருக்க ஒட்டுவேனோ-

எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று  முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடி யவராடலொடு கூட வெழிலார்
மண்ணி லிது போலு நகரில்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-8-ரஜஸ் தமஸ்  ஸூக்களாலே அபிபூதராய்-ஆராயாதே சிலர் காலிலே குனியும் இத்தனை போக்கி –
எண்ணில் – ஆராயில் த்யானத்துக்கு விஷய பூதனான  ஈஸ்வரன்-இவனை ஒழிய வேறு ஒருவர் இல்லை என்று சனகாதிகள் அழகு மிகு இருந்துள்ள பண்ணிலே மிக கானத்தோடு பாடி – அவ் வவருடைய ஆடலோடே கூட –

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன்  திருவிண்ணகரானே—6-3-6-
நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான் இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன்   – இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிது அறியேன்  – தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-3-உம்முடைய பாகம்-( மூப்பு-) ஒன்றையும் புத்தி பண்ணுகிறிலீரோ –எங்களுடைய ஒப்பனையை நீர் இனி ஏத்திக் காண்பது- என்று இங்கனே பண்ணுகிற ஷேப உக்திகள் செவிப் படுவதற்கு முன்பே –எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று  போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம் –

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்

நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-7-உன்னை ஒழிய அறியாத படி இருக்கிற என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து இனி இங்கு நின்றும்  போயிருக்கவுமாய் -போகவுமாய் – இருப்பார் நெஞ்சில் போய் இருக்க ஒட்டேன்
(போகவுமாய் -இருப்பார் நெஞ்சில் -விஸ்லேஷத்தில் தரிப்பார் நெஞ்சில் ) ஒட்டேன் என்றாலும் நாம் தவிரோம் என்றால் – வளைத்து வைத்தேன் –நீ போகில் நான் முடிவன் -என்கிறார் –நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன –-நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –நீர் குற்றம் கண்டு  கை விடப் பார்க்கும் அன்றும்
ந கச்சின் ந அபராத்யதி –என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –

இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து  இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-அவனுடைய நிக்ரஹ பலமான பாபங்கள் என்னைக் கிட்ட வற்றோ – அவசியம் அநு போக்தவ்யம் -என்கிற வசனத்தைக் கொண்டு அனுபவித்தால் அல்லது நசியேன் என்று கொண்டு சிலவை  நிற்றல்

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-) பிராரப்தம் காண் என்று சிலவை நிற்றல் செய்ய வற்றோ –இனி -என்றது எத்தைக் கொண்டு என் என்ன இம்மையே அருள் பெற்றமையால் –இஹ லோகத்திலேயே பகவத் பிரசாதத்தைப் பெற்ற படியாலே
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர்
–என் பக்கலில் தான் ஆசை உடையனாய்
என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவனை – நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை அரை ஷணத்திலே பண்ணினவனை இன்று நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே-உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –திரு மாலே –அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனிச் செய்வது ஓன்று அறியேன் –இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்–கிருபை ஒன்றே நான் அறிவேன் -கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-
சம்சர்க்கஜ பிராவண்யம் சொல்லுகிறாள் –பாணனார் –தலை மகன் பிரிந்தால் எதிர் தலையில் உண்டான மறத்தைப் போக்கி சேர விடுகைக்காக பாணனைக் கொடுத்து வர விடும் அவர்களும் இன் சொற்களாலே அவர்கள் நெஞ்சத்தில் மறத்தைப் போக்கி சேர விடுவர்கள் –இங்கு பாணனார் ஆகிறார் -சேதனருக்கு ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் மறத்தைப் போக்கி-சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும் ஆச்சார்யன் இறே(ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்த இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )பாணனார் –என்கிறாள் காணும் இவள் –பேராளன் பேரோதும் பெரியோர் -என்று தன் மகள் சொல்லக் கேட்டவள் ஆகையால் இன்னார் இன்னாருக்கு சொல்ல என்பது இல்லை யாகாதே-சமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் –முண்டகம் -என்கிறபடியே தந் நிஷ்டனானம் இதுவே யாகாதே வேண்டுவது –திண்ணம் இருக்க –அவர்கள் அசல பிரதிஷ்டராய் இருக்க –வினி  யிவள் நாணுமோ-
இப்படி இடைவிடாமல்  இருந்து துஸ் சிஷை பண்ணச் செய்தேயும் இனி இவள் நாணுமோ –
சம்சர்க்கஜ ப்ராவண்யத்தாலும்  மீள மாட்டாள் –ஸ்வ கத பிராவண்யத்தாலும் மீள மாட்டாள் –
உனக்கு இது வாகாது காண்-என்று சொல்லுகிற நான் லஜ்ஜித்து மீளும் இத்தனை போக்கி
இவள் மீளுமோ என்கிறாள் –ஆசார்யனாலும் பசை இல்லை இறே-நாம் அவர் வசப்பட்டு ஸத் ப்ரக்ருதியாக இல்லா விட்டால் இரண்டும் வேண்டி அன்றோ இருப்பது-இவள் மீள என்பது ஓன்று உண்டோ –நன்று நன்று நறையூரர்க்கே –-இவள் காரியமும் கிடக்கிடும்-அச் சௌரி பெருமாள் காரியமும் கிடக்கிடும்-அடியிலே இவள் கையிலே மடலைக் கொடுத்து
கொல்லை யாக்கி புறப்பட விட்ட-அந் நறையூரார்  கார்யமே நன்றாய் தலைக் கட்டிற்று
-என்கிறாள் –

கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-ஆயன் விலங்கல் வேயினது ஓசையுமாய்-இடையன் உடைய கையில் அபிஜாதமாய் இருந்துள்ள
குழல் ஓசையுமாய் என்னை முடியா நின்றது –(மூங்கில் மட்டுமே வில்லாகவும் புல்லாங்குழலாகவும் ஆன பாக்யம் பெற்றதே )இனி விளைவது ஓன்று அறியேனே    –
நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் -நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில்-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-வ்யதிரேகத்தில் இவள் உளள் ஆகாள் என்னலாம் படி கலந்து வைத்து தன்னைக் கொண்டு பின்னை அகன்றான் ஆயிற்று –நின்னை கலக்க பொறுப்பாரை அன்றோ பிரிவது –உன் சௌகுமார்யம் கண்டு வைத்துத் தான் பிரிவானோ –பிரியேன் இனி என்று அகன்றான் —கடுக  பிரிந்து கொடு நின்றால் இடி விழுந்தால் போலே இவள் முடிந்து கொடு நிற்கும் என்று பார்த்து-பிரிவு சாத்மிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே பிரிவை பிரசங்கித்தான் ஆயிற்று –(போய் வருகிறேன் என்று சொல்லாமல் பிரியேன் –பிரிவை இவள் உணர வியதிரேகத்தில் சொல்லி தயார் படுத்துகிறான் )அதாகிறது –இவன் அந்த சம்ஸ்லேஷ சமயத்தில் சொன்ன வார்த்தை யாகாதே இது -என்று பிரத்யபிஜ்ஞ்ஞை ( நினைத்து ) பண்ணித் தரிக்கைக்காக – இங்கன்  அன்றாகில் சம்ஸ்லேஷத்துக்கு உறுப்பான பாசுரம் அன்றே இது –சம்ஸ்லேஷ தசையில் பொய் சொன்னான்-கலவியில் ஒரு வகை தானே – என்று உணர்ந்து பிரிந்த பின்பு சமாதானம் பண்ணிக் கொள்ளலாமே அகலகில்லேன் இறையும் -என்னுமா போல் பிரியேன் என்பது சம்ஸ்லேஷ தசையில் உன்மஸ்த்தக தசையில் சொல்லுவது போல் இல்லை-பிராட்டி அகலாமல் சொல்லும் வார்த்தை போல் அல்லவே இவனது -இயற்கையில் கலவிக்கு முன்பும் உண்டு உடுத்தும் திரிந்தவள் அன்றோ இவள் -என்று இராதே கிடாய்-உன்  சுவடு அறிந்த பின்பு -இனி பிரிந்து ஆற்ற மாட்டேன் காண் -என்றிலள்  ஆயிற்று – இவள் தான் இங்கனே வருந்திக் கொடு கிடந்தது துக்கப் பட்டாள் இத்தனை யாயிற்று – இவள் பேதை யாயிற்று – இவன் தான் முக்த கண்டமாய் பிரியேன் என்றாலும் அது தான் கலவியில் ஒரு பிரகாரமோ -என்று இருக்குமாயிற்று இவள் பிரிவு -கலவி -என்கிற இவற்றுக்கு வாசி அறியாள் ஆயிற்று –பேதை –வயசால் வந்த இளமை – போகத்தால் வந்தால் முற்றி இருக்கும் இறே இனித் தான் விலஷண  விஷயங்கள் எதிர்த் தலை தன்னையும் உண்டாம்படி பண்ணி இறே புஜிப்பது-பிரியேன் இனி என்று அகன்றான் – சொலவுக்குச் சேராத செயலைச் செய்தான் – இப்படி கலந்து வைத்து பிரியுமது ஒரு சைதன்ய க்ருத்யம் அன்று இறே பாவியேன் என் ஆற்றாமை கண்டால் கூட இருக்க அன்றோ அடுப்பது-இவன் தான் அணைத்த கையை நெகிழ்த்தே வார்த்தை சொல்லுவது –-அப்போது உடம்பில் பிறக்கும் வை வர்ண்யம் காணுமே-இது கண்டால் போகலாமா-இவள் தான் பிரிவு அறியாள் ஆகிலும் -தன் கார்யம் செய்கை தவிராதே தன்னால் தகையலாவது அன்று இறே –என்று அகன்றான் –பாவியேன் இவற்றில் ஒன்றே அமையாதோ(பிரியேன் சொல்வதும் அகன்றதும் -இரண்டும் உண்டே இங்கு ) இது தான் இரண்டாயிரம் பிரிவு போலே இருக்கிறது காணும் இவளுக்கு-பிரியேன் என்று சொன்ன போதே பிரிந்தான் இறே
பின்னை  போனதும் மிகை(பரதன் ராமனை எதிர்த்து வந்தான் என்ற செய்தி கேட்டதுமே
நான் இல்லாமல் போனது போல் என்றார் அன்றோ பெருமாள் )

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப்  புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே —-9-3-7-அக்ரமான பேச்சுக்களைச் சொல்லி அடைவு பாராமல் தொழலாம் படியான தேசத்து ஏறப் பாரு –(ராக்ஷசர் குரங்குகள் கரடிகள் அணில்கள் சேவை செய்யும் படியான திவ்ய தேசம் அன்றோ )போயவன் பாலமாய் –போய்த் தொழுதும் எழு -என்னுதல் –போயவன் பக்கலிலே நெஞ்சை வைத்து -என்னுதல் –இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்– இரவும் பகலும் இருந்து
இனிக் கண் உறங்காது ஒழிகிற இத்தால் என்ன பிரயோஜனம்  உண்டு –அநித்ரஸ் சததம் ராம (ஸூந்தர ) -என்று இவன் இருக்குமது கேட்டு அதடியாக நாம் –நசமேஸ்தி நித்ரா (ஸூந்தர)-என்று இருக்கும் அன்று அன்றோ அபிமத சித்தி உள்ளது –அவன் ருசி முன்னாக –
இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது – அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே-ஆனால் பின்னை   அவனுக்கு இரக்கம் இல்லை என்கிறதோ -என்னில் ஓம் -அப்படி சொல்லக் குறை இல்லை இறே -இப்போது அவன் வாராமையாலே –
இல்லையாகில் வருகைக்கு சக்தி இல்லை -என்னுதல் சிலருக்கு பர தந்த்ரன் -என்னுதல் -சொல்ல ஒண்ணாது இறே முறை கெட்டுச் சொல்ல வேண்டும்படியான தசை பிறந்தால்
முறை உடைய அவனுக்கு வரக் குறை என் தொழுதும் எழு -என்று கொண்டு பழி யாகிறதோ

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல் விலி  ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-பல சொல்லி என்-தான் செய்த தப்பின் பலம் தானே அனுபவித்தான்-இனி யாவர்க்கு உரைக்கோம் –இனி இத்தை ஆர்க்கு இருந்து சொல்லுவோம்  –

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ்  கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-ஒரோ கார்யங்க ளிலே இழிவார் தம்தாமால் செய்து தலைக் கட்டலாம் கார்யங்களிலே  அன்றோ இழிவது –ஒரோ ஒன்றையே தலை காண ஒண்ணாதபடி இருக்கை –நம்பி மூத்த பிரானோடே கூட நின்று செய்தான் ஆகில் கண் எச்சில் வாராத படி அவன் தலையிலே ஏறிடலாம் –தம் தாமையும் பார்க்க வேண்டாவோ –எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் –உன்னைப் பெற்ற இதுவே அமையாதோ
வயிறு எரிச்சலுக்கு வேண்டுவது – நீ ஒரு செயலைச் செய்ய வேணுமோ –

பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்—11-2-4-
அடி குறிக்க ஒண்ணாத படி குவியா நிற்கிற மரா மரங்கள் ஏழையும் எய்து ஆஸ்ரித விஷயத்தில் தமக்கு உண்டான ஓரம்
தரை காண ஒண்ணாத படி  இருக்கிற –அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் –கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல்
ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் –அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது –இதற்கு இனி என் செய்கேன் —ஓர் அபலை இதுக்கு கடகிடவோ -(கடுகு -பரிகாரம் )

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8-நெஞ்சில் அடக்கத்தைக் கொண்டு போனார் –இத் தலையை இப்படி சர்வ ஸ்வபஹாரம் பண்ணினோம் ஆகாதே -என்று
நெஞ்சில் இத்தனை இரக்கமும் இன்றிக்கே இரா நின்றார் – ரஷகன் பாதகன் ஆனவாறே
அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே –அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது –இவள்  சன்னதியிலே வர்த்திக்கில்
இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் ( ப்ராத காலத்தில் )விடிய வேணும் என்று நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் –எவ்விடம் புக்கதோ –இவன் ஆஞ்ஞை நடையாடாத தோர் இடம் தேடித் போனானே  அவன் –அவன் பாதகன் ஆன பின்பு அவன் பரிகரமும்  பாதகம் ஆயிற்று –நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே 

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலேயான காலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித் தலைவன் முழங்கொளி  சேர்  திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக் கவளத் திரு வுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4-குளிர்ந்து பரந்து இருக்கிற திரைகளாலே அலை எறிந்து உள்ள கடலானது சர்வ லோகங்களும் தானே யான காலம்-இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே(க்ருத அக்ருதக க்ருதக்ருதக மூன்று வகையில் ஏழும் கொள்ளலாம் )சத்வஸ்தனான சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள
திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள திரு உடம்பை  உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே 

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-அரங்க நரகரப்பா – நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் – வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு  –ஸ்ரமஹரமான தேசத்திலே வந்து சாய்ந்து அருளின நிருபாதிக பந்துவான தேவர் அவசர ப்ரதீஷராய் வந்து நிற்க நான் வேறு சிலரை அபாஸ்ரயமாக நினைத்திரேன் – தேவரீருடைய சௌஹார்த்தம் ஒழிய வேறு ஒன்றைத் தஞ்சம் என்று வ்யவசிதனாய் இரேன் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –