Archive for June, 2025

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-9-

June 29, 2025

ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் (204-205-்)இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

204-205-்ராமாநுஜன் 2004ல் பதினேழாவது பிராயம் பூர்த்தியாகி 2005ல் பதினெட்டாவது பிராயம் ஆரம்பமாகிறது. இதன் ஞாபகசின்னமாகப் பதினெட்டு விஷயங்களை உபஹரிக்கிறேன். அந்த 18 விஷயங்களாவன:1 வேத ஸம்ஹிதையில் 18 -2,, ப்ராஹ்மணத்தில் 18–3 ஸம்ஸ்கிருத வேதாந்தத்தில் 18-4 பகவத்கீதையில் 18 -5 பூர்வாசார்யக்ரந்தவிவரணம் 18-6 ராமாநுஜனும்ராமாநுஜரும் 18-7 மநுஸ்மருதியில் 18 8 ஸ்ரீராமாயணத்தில் 18 – 9 ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் 18-10 பகவத் விஷயத்தில் 18 -11 மூவாயிரவியாக்யானத்தில் 18–12 ஆசாரியர்நால்வர் ஸு க்தி 18–13-ஸ்ரீவசநபூஷணத்தில் 18-14 தத்வத்ரயைத்தில் 18 15 முமுக்ஷப்படியில் 18 16 ஆசார்ய ஹ்ருதயத்தில் 18- 17வேதாந்த தேசிக க்ருதிகளில் 18- 18 மணவாள மா முனிகள் பற்றி 18-ஆக இங்ஙனே குறித்த பதினெட்டு விஷயங்களில் ஒவ்வொன்றிலும் 18 லக்கமிட்டு அபூர்வ விஷயங்கள் எழுதப்படும். எனவே இந்த நினைவுமலரில் (324) முந்நூற்றிருபத்து நான்கு விஷயங்கள் அபூர்வமாக வெளிவருகின்றன வென்றதாயிற்று.

அன்னம் கிடைக்கவேணுமென்றுவிரும்பினால் போதாதா? அன்ன முண்ணப்பெற வேணுமென்று கூட விரும்பவேணுமா? என்று. இது மிகவும் ஆவச்யகமான சங்கை தான். வேதபுருஷன் இங்ஙனே பல விடங்களிற்சொல்லுகிறான்; இரண்டாவது காண்டம்இரண்டாம் ப்ரச்நத்தில் “ய காமயே அந்நவாந்ஸ்யாமிதி’ என்றும்”ய காமயேதஅந்நாதஸ் ஸ்யா தி” என்றும் தனித்தனியாக இரண்டு இஷ்டிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தைத்திரீயோபநிஷத்தில் “அந்நவாநந்நாதோ பவதி” என்றோதி யிருப்பதுஸுப்ரஸித்தம். இங்ஙனே இரண்டு பலனாகச் சொல்லவேண்டியது அவசியமே
யாகும். ஏனென்றால் அன்ன ஸம்ருத்தி யிருந்தாலுங்கூட அதை யனுபவிக்கிறசக்தி இல்லாமற்போகும். ஆகவேதான் “போஜ்யம் போஜந சக்திச்ச ரதிசக்திர்வராங்கநா, விபவோ தாநஸம்பத்தி: நால்பஸ்ய தபஸ பலம்.” என்று மேலையார் சொல்லி வைத்தார்கள்.போஜ்ய ம்ருத்தியுள்ளவர்களுக்கு போஜநசக்தியில்வைகலயத்தைக் கட்கூடாகக் காணாநின்றோம். இவ்விஷயத்தை ஆழ்ந்து நோக்குமளவில்,அந்நவாந்என்பதற்கு வஸு தேவரையும், அந்நாதல் என்பதற்கு நந்தகோப ரையும் லக்ஷடியமாகக் கொள்ளலாம். பகவானைப் பிள்ளையாகப்பெற்ற வத்தனையேவ தேவர்க்காதலால் அவர் அந்நவாந் என்னத் தகுந்தவராயினர். “நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே” என்றுதெய்வத்தேவகி புலம்பும்படியாக அநுபவமெல்லாம் நந்தகோபர்க் காகையாலே இவர் அந்நாதரென்னத் தகுந்தவராயினர்.

நாலாவது காண்டம் முதல் ப்ரச்நத்தில் எட்டாவத நுவாகத்தில் சு ஹீரண்யகர்ப்பஸ் ஸமவர்த்ததாக்ரே என்றுதொடங்கி எட்டுருக்குக்கள் “கஸ்மை தேவாய ஹவிஷாவிதேம ” என்று ஒரேவிதமான முடிவோடு கூடியவையாய் விளங்குகின்றன். கர்ம
காண்டத்திலும் பரப்ர ம ப்ரபாவ ப்ரதிபாதநமுள்ளதென்று அடியேன் பரக்க
வுபந்யளிப்பதுண்டு. அதற்குப் பொருத்தமாக ஸம்ஹிதையிலும் ப்ராஹ்மணத்திலும்பல ஸ்தலங்கள் எடுத்துக் காட்டப் பாங்கானவையுண்டு; அவற்றுள் இந்த ஸ்தலம்மிக முக்கியமானது.தைத்திரீயோபநிஷத்தில் உத்தரநாராயணத்தில் “அத்ப்யஸ் ஸம்பூதோ ஹிரண்யகர்ப்ப இதியஷ்டெள ” என்று வைதிகர்களனைவரும் ஸமரீதியாக
ஓதிவருகிறார்கள். இங்கு “ஹிரண்ய கர்ப்ப இதி அஷ்டௌ” என்றது ஸம்ஹிதையில்
நாலாவது காண்டத்தில் ஓதப்பட்டு வருகிற எட்டுருக்குக்களையும் இங்கே ஓதவேண்
டியது என்றபடி. இவ்விதமாக ஸகல பாஷ்யகாரர்களும் அர்த்தம் செய்திருப்பதனால்
இது நிர்விவாதம்.இதனால் இந்த எட்டுருக்குக்களும் நாராயணபரங்களென்பது
ஸ்பஷ்டமாகத் தேறிநின்றது. இவற்றை வேறொரு தேவதாபரமாக ஒதுக்குவ
தற்குச்சிறிதும் ஒளசித்யம் கிடையாது. இவற்றில் இரண்டு ருக்குக்களைமட்டும் இங்கு விவரிக்கின்றேன். (ஹரண்யகர்ப்ப அக்ரே ஸமவர்த்தத.] ஸஹஸ்ர நாமத்தில்

ஹிரண்ய கர்ப்போபூகர்ப்ப * என்று ஹிரண்ய கர்ப்பனாகக் கூறப்பட்ட நாரா
யணனொருவனே முந்துறமுன்னமிருந்தனன். அவன் எப்படிப்பட்டவன்? [பூ தஸ்ய
ஜாத பதிரேக ஆஸீத்]
ஸகல ப்ராணிவர்க்கங்களுக்கும் அத்விதீயசேஷி. இன்னும்
அவனுடைய பிரபாவம் எத்தகைத்து? [ஸ தாதார ப்ருதி ம் த்யாமுதேமாம்]அவனே உபயவிபூதி நிர்வா கன். பருதிவீம் உத த்யாம் மண்ணுலகையும் விண்ணுல
கையும் என்றபடி. (உத என்னுமவ்யயம் ஸமுச்சயார்த்தகம். [கஸ்மை தேவாய
ஹவிஷா விதேம.]
ஸஹஸ்ரநாமத்தில் * ஏகோநைகஸ் ஸவ க கிம் * என்ற
விடத்தில் (கிம்என்று) கிம்சப்தநிர்திஷ்டனான அந்தநாராயணனுக்கு ஹவிஷ்யம்
நிவேதனம் பண்ணக்கடவோம் என்கை. (இந்த எட்டுருக்குக்களும் திருவாராதனத்
தில் விநியோகிக்கப்படுமவை. மற்றொரு ருக்கு-* ய ஆத்மதா பலதா யஸ்ய வீச்வ
உபாஸதே ப்ரசிஷம் யஸ்ய தேவா? யஸ்ய ச்சாயா அம்ருதம் யஸ்ய ம்ருத்யு. கஸ்மை
தேவாய விஷா விதேம.] ஆத்மதா – * எற்பரனென்னை யாக்கிக்கொண்டு எனக்கே
தன்னைத் தந்த கற்பகம் *
என்கிற திருவாய்மொழியின்படியே முற்றூட்டாக அநு
பவிக்கும்படி தன்னையே தருமவன் எம்பெருமான். பலதா -* குலந்தரும் செல்வம்
தந்திடும்….. வலந்தரும் *
என்ற திருமங்கையாழ்வா ரருளிச் செயலின்படியே
தன்னையநுபவிக்கைக் கீடான தே பல மனோபலங்களை யருள்செய்பவன். [யஸ்ய
ப்ரசிஷம் விச்வே தேவா உபாஸதே] * ஆணைமெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ
னாகி
என்று திருவாசிரியத்திலருளிச் செய்தபடியே எம்பெருமானுடைய ஆணையை
ஸகல தேவர்களும் சிரமேற்கொள்ளுகின்றார்கள். ப்ரசிஷம்-ஆஜ்ஞம்என்றபடி. [அம்ருதம் ம்ருத்யு யஸ்ய ச்சாயா] மோ பூமியும் ஸம்ஸாரபூமியும் அவனிட்டவழக்கு.

ஐந்தாவது காண்டம் ஐந்தாவது ப்ர நம் முதல வாகத்தில் ஸ்ரீமஹா விஷ்ணுவின்பாரம்யம் ஸு ஸ்பஷ்டமாக வோதப்பட்டிருக்கின்றது;- (அக் ரவமோை தேவதாநாம் விஷ்ணு பரமா] தேவதாநாம்’ என்றது நிர்தாரணே ஷஷ்டி. தேவதைகளுக்குள்ளே கீழ்பட்ட தேவதை அக். ‘இவற்கு மேற்பட்ட தேவதை யில்லை யென்னும்படியான பரமதேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு.இப்படிச்சொன்ன பாரம்யத்தை மேலே ஆறாவது காண்டத்தில் இரண்டாம் ர நத்தில் *தேஷாம ராணாம்திஸ்ர புர ஆஸந் என்றுதொடங்கிச் சொல்லுமுபாக்கியானம் நிலைநாட்டுகின்றது.

தேவர்கள் வெற்றிபெற முடியாதவர்களாயிருந்தனர். பிறகு ஓருபாயம்செய்துவெல்லத்தொடங்கினார். தே இஷும் ஸமஸ்குர்வ = அவர்கள் அம்பைளித்தப்படுத்தினர். அந்த அம்புக்கு எப்படி மிடுக்கு உண்டாயிற்றென்ன,(விஷ்ணும் தேஜநம்)திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (6.1-3) * குழல் நிறவண்ண ! நின் கூறு
கொண்ட தழல் நிறவண்ணன் நண்ணார்நகரம் விழ, நனி மலை சிலை வளைவு செய்துஅங்குஅழல்நீற அம்பது வானவனே !*
என்றருளிச்செய்திருப்பது கொண்டு(விஷ்ணும்தேஜனம்) என்பதற்குப் பொருள் காணவேணும்.திருவாய்மொழியில் (3-10-4ல்)பாணாஸுரபங்க கதையை யருளிச் செய்யுமிடத்து அந்தப் போரில் சிவபிரானும்தலையிட்டா னென்பதைச்சொல்லுகின்றஆழ்வார் * திரிபுரம் செற்றவனும் * என்கிறசொல்லால் சிவபிரானைக் குறித்தனர். அங்கு நம்பிள்ளை யீடு -கத்ரிபுரதஹன் ஸமயத்திலே வில்லுக்கு மிடுக்காயும், நாணிக்குத் திண்மையாயும்,அம்புக்குக் கூர்மையாயும் தனக்கு அந்தராத்மாவாயும் எதிரிகளைத் தலை சாயும்படி பண்ணி த்ரிபுரத்தையழித்துக் கொடுத்தா னெம்பெருமான்; அத்தை யறியாதே அஞரானவர்கள்இத்தை அவன் தலையிலே வைத்துக் கவிபாட, இத்தைத் தானுங்கேட்டு மெய்யிறேயென்று மயங்கி ‘ அது செய்த நமக்கு இவனை வெல்லத் தட்டென்?‘ என்று வந்துஎதிரிட்டானாயிற்று.” என்று.

(தே அப்ருவந் க இமாஷ்ய அம்பு ஸித்தமாய் விட்டது ஸரி; இதை யெடுத்து எய்ய வல்லவன்
யாவன்? என்கிறகேள்வி பிறந்தது.[ருத்ர இந்யப்ருவந்] அப்போது ருத்ரனைக்குறிப்
பிட்டார்கள். அவனைக் குறிப்பிட்டதற்குக் காரணம் சொல்லுகிறது உடனே
[ருத்ரோ வை க்ரூர:, ஸோஸ்யது இதி] ருத்ரன் தான் கொடியவன், அவன் எய்யட்டு மென்றார்களாம். உடனே ருத்ரனை நோக்கி எய்யச் சொன்னபோது (ஸோப்ரவீத்வரம் வ்ருணை. அஹமேவ பசூநாம் அதிபத்திரஸாநீதி] நான் பசுபதியாயிருக்கும்படி வரங்கொடுத்தால் எய்கிறேனென்றானாம் ருத்ரன். அப்படியே வரங்கொடுத்த பின்பு எய்தானென்று மேலே சொல்லிற்று. ருத்ரன் பரதேவதையா யிருந்தால் வரம்வேண்டுவனா?

[ஜாயமாநோ”ஹ வை ப்ராஹ்மணஸ் த்ரிபி: ருணவா ஜாயதே பிராமணன் பிறக்கும்போது மூவர்க்குக்கடன் பட்டவனாய்ப் பிறக்கிறான்; அம்மூவர் ரிஷிகளும் தேவர்களும் பித்ருக்களுமாவர். வேதாத்யனம் பண்ணி ரிஷிகளின் கடனைத் தீர்க்கக் கடவன். தேவ’பூஜை பண்ணி தேவர்களின் கடனைத்தீர்க்கக் கடவன்; ப்ரஜோத்பாதநம் பண்ணிப்பிதருக்களின் கடனைத் தீர்க்கக் கடவன். எனவே, வேத மோதி தேவதாரா தனம்பண்ணி ஸந்தான ஸம்பந்நனாயிருப்பவன் யாவனே அவனே கடன்கள் தீர்ந்தவன்என்றதாயிற்று.

நூல் வரம்புக்குக்கட்டுப்பட்ட பரம வைதிகர்கள் * ருதம் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமீதி ஸாயம் பரிஷிஞ்சதி.ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமீதி ப்ராத * என்றுபரிஷேசநமந்த்ரம் இரண்டு வேளைகளுக்குமட்டுமே உள்ளதனால் இரண்டு வேளைகள் தவிர வேறொரு வேளை எதுவும்உட்கொள்ள மாட்டார்கள். இடைப்பலஹாரங்கள் கடைப்பலஹாரங்கள் அணுகமாட்டா. பகவத் ஸந்நிதிகளில் அகாலங்களில் ப்ரஸாதம் கிடைத்தால்”ஆமலகமாந்ரம் க்ருஹ்யாத்” என்னும் சாஸ்த்ரத்தை யடியொற்றி நெல்லிக்காயளவுப்ரஸாதம் ஸ்வீகரிப்பர்கள்.

(யாம் காமயேத து தரம் ப்ரியா ஸ்யாதிதி. தாம் நிஷ்ட்யாயாம் தத்யாத். ப்ரியைவ பவதி.
நேவ து புதராகச்சதி ]
எந்த மகளை பர்த்தாவுக்கு மிகவும் ப்ரீதிபாத்ரமாயிருக்கவேணு
மென்று பிதா விரும்புகிறாரோ, அந்த மகளை ஸ்வாதீ க்ஷத்திரத்தில் விவாஹம்
பண்ணிக்கொடுக்க வேண்டியது. (நிஷ்ட்யா-ஸ்வாதீ .)அப்படியே அம்மகள் பர்த்
தாவின் பரமப்ரீதிக்குப்பாத்திரமாகிறாள். அதனால் அவள் மறுபடியும் பிதாவின்
க்ருஹத்தை நோக்கி வருவதே கிடையாது. (இது இந்த ஸ்வாதீ நக்ஷத்ரத்திற்கு
நிந்தையா? ஸ்துதியா? என்று விமர்சிக்கப் புகுந்த பாஷ்யகாரர் நிந்தையன்று,
ஸ்துதிதானென்று நிஷ்கர்ஷிக்கிறார். பிதா விரும்பியபடி பதியின் அதிசயித
ப்ரீதியை விளைப்பதனால் என்று காரணம் காட்டுகிறார்.) ஜநக சக்ரவர்த்தி ஸ்த
பிராட்டியை ஸ்வாதீ க்ஷத்ரத்தில் க யகாப்ரதானம் பண்ணியிருப்பர் போலும்;
பிராட்டி பெருமாளைக் கைப் பிடித்த வனந்தரம் ஸ்ரீமிதிலையை நினையாதாப் போலே”
என்று ஆசாரியர்கள் அருளிச் செய்வதனால்.

மூன்றாமஷ்டகத்தில் முதல் பிரச்னத்தில் நாலாவததுவாகத்தில் நக்ஷத்
திரங்களுக்குச் சிறப்புச் சொல்லி வருகையில் ஸ்வாதிநக்ஷத்ரப்ராகரணத்தில் *வாயுர்
வா அகாமயத
என்றுதொடங்கிச்சொல்லப்பட்டிருப்பதாவது-எல்லா விடங்களிலும்
தட்டுத் தடங்கலில்லாமல் யதேஷ்டமாக ஸஞ்சரிக்கப் பெறவேணுமென்று விரும்பிய
வாயுதேவதை ஸ்வாதீ நக்ஷத்ரதேவதையைக் குறித்து இஷ்டி செய்ய,அப்படியே
பேறு பெற்றதாக ஓதிற்று

நாலாவத நுவாகத்தில் *ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணாம்ருது ஸ்யோநம்
என்கிற மந்த்ரம் படிக்கப்படுகிறது. இது பித்ருதர்ப்பணம் செய்கிறவர்களுக்கெல்லாம் கண்டபாடமான மந்திரம். இதன் பொருளாவது ஒரே தடவை கிள்ளப்பட்ட தர்ப்பம் ; பஞ்சுபோல் மெல்லியது. ஸு ககரமானது. இப்படிப்பட்ட தர்ப்பமே!உன்னைப் பிதருக்களுக்காகப் பரப்புகிறேன். இங்ஙனம் பரப்பப்பட்ட தர்ப்பத்தில்என்னுடைய பித்ருபிதாமஹப்ரபிதாமஹர்கள் தம்தம் அநுசரர்களோடு கூட வீற்றிருக்கக் கடவர்கள் என்கை. [ மந்த்ரார்த்தம் தெரிந்திருப்பது நலம்.]

காடகம் மூன்றாவது ப்ரச்நத்தில் * பிதா புத்ரேண பித்ர்மாந்யோநியோநௌ.
நாவேதவிந் மநுதே தம் ப்ர்ஹந்தம்
* என்று பகவானுடைய விபவாவதாரம் ஓதப்பட்டது. இவ்விரண்டு வாக்யங்களின் பொருளாவது- எம்பெருமான் ஸர்வலோக பிதா ; அவன் ஒருவர்க்கும் மகனாகத் தகுந்தவனல்லன் ; ஆனாலும் தனக்குப் புத்ர
ப்ராயரானவர்களையே பிதாவாகக் கொண்டு எந்நின்ற யோனியுமாய்ப் பிறக்கிறான்
.வேதமோதாதவர்கள் அவன் பெருமையை யறியகில்லா ரென்கை.

ருத்ரனைப்பற்றி ஓர் இதிஹாஸம் ஓதப்பட்டுள்ளது. திருவாய்மொழியில் உயர்வற வுயர்நலப்பதிகத்தில் எட்டாம் பாட்டில் புரமொரு மூன்றெரித்து என்றவிடத்து ஈடுமுப்பத்தாறாயிரத்தில் “ தான்பூட்டின நாணி தன்கழுத்நை யறுத்துக்கொண்டு போகா தொழியும்போதும் ஈச்வரன் அந்தராத்மாவாய் நிற்கவேணும்” என்கிற ஸ்ரீஸக்தி காண்கிறது. ருத்ரன் தான் பூட்டின நாணி தன்கழுத்தை யறுத்துக்கொண்டு போனகதை எங்குள்ளதென்றால் இங்கேயுள்ளது. இங்கு (விச்வே தேவா விப்ரஹரந்தி என்றுதொடங்கிச் சொல்லப்பட்ட இதிஹாஸமாவது; தேவர்கள் ஆயுதங்களைக் கொண்டு போர்புரிய ஆயத்தமாயினர். ருத்ரன் தன்னு டைய வில்லைஊன்றிக்கொண்டுநின்று [வ தேவோ ந மர்த்ய. ந ராஜா வருணோவிபு:.நாக் ர் நேந்த்ரோ ந ப மாந:. மாத்ருக் கச்சந வித்யதே.] தேவர்களோ மனிதர்களோ ராஜாக்களோ வருணனோஅக்னியோ இந்திரனே வாயுவோ யாரானாலும் ஸரி; என்னைப்போன்றவர்கள் யாருமே கிடையார்கள் என்றான். இப்படிச் சொன்னவன் ருத்ரன். ஸாயணபாஷ்யத்தில் ” ஸோயம் விச்வைர் தேவை ருத்கோ தச் சப்த: ” என்றுள்ளது. இது தவறென்றும், ருத்ரன் உத்கோஷித்த சப்தராசிகளிவை
யென்றும் வேதாந்த கௌஸ்துபகாரர் உபபத்திகளுடன் எழுதியுள்ளார். அது தான் பொருத்தமாகக் காண்கிறது. மேலுள்ள கதையும் அதையே நிலைநாட்டுகின்றது. [ i அஸ்ய ஏகா தநுரார்த்னி:] இந்த ருத்ரத ஸ்ளின் ஒரு நுனி ஆகாசத்தை யளாவியுள்ளது. [பர்தீவ்யாம் அபரா சரிதா ] மற்றொருநுனி பூமியின் கீழே தாக்கியுள்ளது. ஜகதுபஸம்ஹாரமே நடக்கும் போல் தோன்றநின்றது. அப்போது இந்திரனுக்கு ஓர் உபாயம் தோன்றிற்று. என்ன செய்தா னென்னில்,[தஸ்யேந்த்ரோ வம்ரிருபேண. தநுர்ஜ்யாம் அசிநத் ஸ்வயம் ] இந்திரன் செல்லு என்கிற ஐந்துக்களின் வடிவுகொண்டு (கீழேபரவி) அந்த வில் நாணியை அறுபட்டதாம்படி
செய்துவிட்டனன். செல்லு மென்றதனால் நாணி இற்றொழிந்ததென்கை. பிறகு என்னாயிற்று? [ததிந்த்ரதநுரித்யஜ்யம். அப்ரவர்ணேஷ சக்ஷதே.] இந்த வில்ஆகா
சத்தில் போய் விழுந்திட்டது. சில ஸமயங்களில் மேக மண்டலத்தில் வில் ரேகை
நாணி யின்றிக்கே காணப்படுவதுண்டே, அதை இந்திர தநுஸ்யென்று சொல்லு
கிறார்கள். செல்லு வடிவுகொண்ட இந்திரனால் அறுபட்ட தநுஸ்ஸென்றும்
அதனால்தான் நாணியில்லாமல் தென்படுகிறதென்றும் சொல்லுகிறார்கள். இந்த வில் அறுபட்டு எழும்பிப் போம்போது வெறுமனே போகவில்லை; [ருத்ரஸ்யத்வேவதநுரார்த் . சீர உத்பிபே . ருத்ரன் தலையைப் பொடி பண்ணிவிட்டுப் போயிற்று.பிறகு அந்தத் தலை ஒட்டப் படுகிற வரலாறுஉள்ளது.

ஆரண்யகம் இரண்டாம் பிரச்நம் இரண்டா மநுவாகம் ஸந்த்யாவந்தனத்தின் ஆவச்யகத்வத்தைத் தெரிவிப்பதற்காகப் பழங்கதை யொன்று சொல்லு
கிறது. (* ரக்ஷாம்ஸி ஹ வா புரோநுவாகே * இத்யாதி.] முற்காலத்தில் ராக்ஷஸர்கள்
தீவரமான தவமொன்றைச் செய்தார்கள். அதனால் உகப்படைந்த ரஜாபதியானவர் நீங்கள் தவஞ்செய்தது போதும், வரம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.நாங்கள் ஸூர்யனோடு யுத்தம் செய்யவேணும் ; இந்தவரம் கொடுப்பீராக’ என்றார்கள்அரக்கர்கள். அப்படியே யநுமதியளித்தார் ப்ரஜாபதி. ஸூர்யன் உதித்ததுமுதல்அஸ்தமிக்குமளவும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தணர்கள் காயத்ரியைஐபித்து அளிக்கும் அர்க்கிய தீர்த்தத்தினால் அவர்கள் மாண்டொழிகிறார்கள்-நம்மாழ்வாருடைய முதற்பிரபந்தமான திருவிருத்தத்தில் (82) * எரிகொள் செந்நாயிறு என்கிற பாட்டில்” மீண்டவற்றுள் எரிகொள் செந்தீவீழ் அசுரரைப்
போல ”
என்பதனால் இந்த வைதிக கதை அநுஸந்திக்கப் பட்டுள்ளது. அவ்விடத்தில்அடியேனுடைய திவ்யார்த்ததீபிகையில் எழுதியுள்ளதாவது – ….ந் தஹாருண
மென்னும் த்வீபத்தில் வாழும் மந்தேஹரென்னும் அசுரர்கள் உக்ரமான தவத்தைச்செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனால் செருக்கடைந்து எப்பொழுதும் ஸுர்யனை வளைந்து எதிர்த்துத் தடுத்துப் போர்செய்கின்றனரென்றும்,அந்தணர்முதலியோர் ஸந்தியா காலங்களில் மந்த்ர பூர்வகமாகக் கையிலெடுத்துவிடும் அர்க்கிய
தீர்த்தங்கள் வஜ்ராயுதம் போலாகி அவர்கள்மேல் விழுந்து அவர்களை அப்பால்தள்ளி ர்யனுடைய ஸஞ்சாரத்துக்குத்தடையில்லாதபடி செய்கின்றனரென்றும்,அந்தணர் முதலியோர் செலுத்தும் அர்க்கியத்தின் ஆற்றலால் ஸூர்ய மண்டலத்தினிடையே ஒரு செந்தீ யெழுந்து வலிக்க (விளக்கில் விட்டில் போல் அத்தீயில்அசுரர்கள் விழுந்து மாண்டுபோகின்றனரென்றும் ஒதப்பட்டுள்ளது.” என்று.

ஆசார்ய ஹ்ருதயத்தில் (53 )” புரவியே ழொருகாலுடைய தேரிலே”இத்யாதி சூர்ணையின் வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள் அருளிச் செய்திருப்பது – ” மந்தேஹரென்பார்சில ராக்ஷஸர் ; ஸந்த்யாஸமயத்திலே ஆதித்யரதத்தைச் சுற்றிக்கொண்டு போகவெட்டாதே ஆதித்யனோடே மஹாயுத்தம்பண்ணி அவனைக் கொல்லத் தேடுவர்களாய், அவ்வளவிலே ப்ராஹ்மணர் காயத்ர்யபிமந்திரிதைகளான அப்புக்களை அர்க்கிய ரூபேண ஊர்த்வமாகப்ரக்ஷேபிக்க,அந்த காயத்ரீ பூத – அர்க்கய சக்தியாலே ஆதித்ய மண்டலத்திலே ஜ்வலித்துக்கொண்டுதோற்றின சிவந்த அக்கியிலே விழுந்து முடிந்து போவர்கள்….”

ஜகத்காரண வஸ்துவை ப்ரஸ்தாவிக்கின்ற வாக்யங்கள் காரணவாக்ய
மெனப்படும். அந்த வாக்யங்களை ஸாகாங்ஷ வாக்யங்களென்றும்,நிராகாங்க்ஷ
வாக்யங்களென்றும் இருவகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டியது
முதற்காரியம்.
ஸாகாங் வாக்யங்களென்பவைதாமும் இரு வகையாயிருக்கும். 1. ஸாமான்யாது
சப்தத்தோடு கூடியிருந்து விசேஷ ப்ரதிபத்தியை அபேக்ஷித்திருக்குமவை.
2.அநுவாத ரூபமாய்க்கொண்டுபுரோவாதத்தை அபேக்ஷித்திருக்குமவை -என்று.
ஸதேவஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் ” – ” ஸேயம் தேவதைக்ஷத”
இத்யாதி வாக்யங்களில் ‘ஸத் என்றும் தேவதா என்றும்ஸாமான்யா சப்தங்களே
யிருக்கையாலே இவை விசேஷ ப்ரதிபத்தி ஸாகாங்க்ஷங்க ளென்பது ஸ்பஷ்டம்.
” யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” இத்யாதி வாக்யங்கள் யச் சப்த கடிதங்களா
யிருப்பதுபற்றி அநுவாத ரூபங்களாகையாலே புரோவாத ஸாகாங்கங்களென்பதும்
ஸ்பஷ்டம்.
ஸாகாங்க்ஷவாக்யங்களில் கீழ்ச்சொன்ன இரண்டுவகைகள்தவிர மூன்றாவது வகையும் ஒன்று சொல்ல வேண்டியதாகிறது ; அதாவது, அயோக்யமான அர்த்தத்தைத் தெரிவிக்கும் வாக்யங்கள் யோக்யார்த்த பிரதிபத்தி ஸாகாங்க்ஷமாயிருப்பதாம். ப்ரதர்தந வித்யையில் “மாமுபாஸ்வ ஏததேவாஹம் மநுஷ்யாய ஹிததமம் மந்யே” என்று இந்திரன் சொன்ன வாக்யம் போன்றவை இந்த வகுப்பில் சேரக் கடவன். ஆக மூவகுப்பாகப் பிரியலுற்ற ஸாகாங்க்ஷங்களான காரண வாக்யங்கள் வஸ்து விசேஷத்தை நிர்ணயிப்பதில் ஸ்வதந்திரமாக அசக்தங்களாகையாலே நிராகாங்கங்களான வாக்ய விசேஷங்களைக் கொண்டே வஸ்து விசேஷத்தை நிர்ணயிக்க வேண்டியதாகிறது. யோக்யார்த்த விசேஷ ப்ரதிபாதகங்களாய்க் கொண்டு இதர வாக்யங்களை எதிர்பாராத வாக்யங்களே நிராகாங்க்ஷ வாக்யங்க ளென்று தேறிற்று.

+ஏகோ ஹவைநாராயண ஆஸ்த் ந ப்ரஹமா நேசாந: இத்யாதி வாக்யங்களே அப்படிப்பட்டவை என்று ஸாரஜ்ஞர்கள் நிஷ்கர்ஷித்துள்ளார்கள். மேலே கா டிய வாக்ய விசேஷத்தில் ஸாமாந்ய சப்தம் சேர்ந்திருக்கவில்லை. அநுவாத ரூபத்வமுமில்லை ; அயோக்யார்த்த ப்ரதிபாதநமுமில்லை. ஸத், ப்ரஹ்ம, ஆத்ம தேவதா இத்யாதிகளான பதங்களிருந்தால ோ ஸாமான்ய சப்தம் சேர்ந்திருப்பதாக ஆகும். அவை இல்லையே. யச்சப்த கடிதமாயிருந்தாலன்றே அநுவாத ரூபமாக ஆகும். அதுவுமில்லையே. அயோக்யார்த்த ரதிபாதகத்வமில்லாமையோடு கூடின யோக்யார்த்த ரதிபாதகத்வமே யுள்ளதென்பது நிரூபிக்கப்பட வேண்டியதாக நிற்கையாலே அதை நிரூபிக்கிறேன்.சாரீரக மீமாம்ஸையில் சாஸ்த்ராரம்ப ஸமர்த்த நார்த்தமான சதுஸ் த்ரி முடிந்ததும் ஐந்தாவது அதிகரணம் ஈக்ஷத்யதிகரணம்-இதில் விசேஷித்துக் குறிக்கொள்ளத்தக்க த்ரங்கள் இரண்டு ; “தந்நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்” ”கதிஸாமாந்யாத்” என்னுமிவை. ஸாதாரணமான ஸச்சப்தத்தையும் தேவதா சப்தத்தையும் கொண்டிருக்கிற ஸத்வித்யையானது புருஷஸுக்த ப்ரதி நனான ஸ்ரீமந் நாராயணன் பக்கலிலே பர்யவளிப்பதாக இவ்விரண்டு ஸூத்ரங்களாலும் காட்டப்படுகிறது.”தந்நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்” என்கிற ஸூத்ரத்தின் பொருளை முன்னம் தெரிந்து கொள்ளவேணும். “தந்திஷ்டஸ்ய “என்கிற விடத்துள்ள தச்சப்தத்தினால்-ஸு த்ரகாரர் கருதிய விஷய வாக்யத்திலுள்ள ஸச்சப்தவாச்யமான வஸ்து கொள்ளப்படுகிறது . ஆகவே, ஸத்தை உபா ளிப்பவனுக்கு என்பதாகப்பொருள் தேறிற்று.ஸத்தைஉபாளிப்பவனுக்கு முக்தி)கிடைப்பதாக ஓதப்படுவதால் ரக்ருத ஸச்சப்த வாக்யமான வஸ்து ப்ரதானமாக மாட்டாது என்றதாக த்ரார்த்தம் தேறும். ப்ரதாநந்தான் ஜகத் காரணம்’என்பவர்களை நிரஸிப்பதன்றோ ப்ரஸ்துதம். புருஷஸுனாதத்திலும் உத்தர நாராயணத்திலும் “தமேவம் வித்வா ம்ருத இஹ பவதி. நாய பந்தா அய நாய வித்யதே என்றும், ”நா ய. பந்தா வித்யதே அயநாய ” என்றும் மோ ேபாயமான உபாஸநத்திற்கு இலக்காகுந்தன்மை நாராயணனுக்கே ஓப்பட்டுள்ளது. இந்த ஸத்வித்யா ப்ரகரணத்திலும் (அதாவது,ச்சாந்தோக்யத்தில்]”ஆசார்யவாந் புருஷோ வேத ; தஸ்ய தாவதேவ சிரம்யாவந் விமோக்ஷயே அத ஸம்பத்ஸ்யே” என்று ஸ்துபாஸனமே மோஷோபாயமாகச் சொல்லப்பட்டது. இந்த ச்ருதி வாக்யத்தின் பொருளாவது. எவனுக்கு உபதேஷ்டாவான ஆசார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான். சரம சரீரத்திலிருந்து விடுபடுமளவே அவனுக்குக் கால தாமதம் ; சரம சரீரம் விழுந்தவுடனே ஸச்சப்த நிர்திஷ்டனாய் ஜகத்காரண பூதனா பரம புருஷனை அடைகின்றான். (ஸதுபாஸன நிஷ்டனுக்கு சரீரம் விழுமளவுதான் மோக்ஷப்ராப்தியில் தாமதம்; சரீரம் தொலைந்தவுடனே முக்தனாகிறான் என்பதாம்-இதனால் நாராயணனே ஸச்சப்த வாச்யனென்று அறுதியிடப்படுவதனால் ப்ரகருதமான ஸத்துப்ரதாநமன்றுஎன்றதாக த்ரதாத்பர்யம் தேறுகிறது. “தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி” இத்யாதிகளான உதாஹ்ருத வாக்கியங்களாலே நாராயணோபாஸனந்தான் மோக்ஷே பாயமென்றுநிச்சமிக்கப்பட்டவளவில்*தந்நிஷ்டஸ்ய மோக்ஷே பதேசாத் என்று த்ர மியற்றின் மஹர்ஷியானவர் நாராயணோபாஸகனையே விவக்ஷித்தாராகிறார் என்று நிர்ணயிப்பதில் தட்டுண்டோ?

கீழேநாம் விவரித்த விஷயத்தில் பிறர்சொல்லக்கூடிய தொன்றுண்டு;
அதாவது ; தந்நிஷ்டஸ்ய மோக்ஷோபதேசமாகிற ஹேதுவைக்கொண்டு ப்ரதாநம்
ஜகத்காரணமன்று என்று நிரஸிப்பது மட்டுமே இங்கு ஸூத்ரகாரருக்குஉத்தேச்ய
மானது ; நாராயணனே ஜகத்காரணபூகனென்றுஸ்தாபிப்பதில் இங்கு நோக்கே
கிடையாது. சப்தத்தினால் கிடைப்பதற்கு மேற்படக் கொள்ளத்தகாது என்று.
(இதற்கு மறுப்பு) இங்ஙனம் சொல்வது தவறு. இதர ப்ரதி க்ஷேபத்தில் மட்டுமே
த்ர தாத்பர்யமென்று கொண்டால் ந்யூந்தையாகும். இந்த வேதாந்தசாஸ்த்ரம்
எதற்காக ஆரம்பிக்கப் பட்டதென்று பார்க்கவேணும்; முமுக்ஷ வானவனை
மோஷோபாய பூதமான வஸ்துவை உபாளிப்பதில் ப்ரவர்த்திக்கச் செய்வதன்-பொருட்டு விசிகித்ஸையற்ற ப்ரஹ்மஜ்ஞானோத்பாதநத்தின் பொருட்டு சாஸ்த்ரம்
ஆரம்பிக்கப்பட்டது.சாஸ்த்ராரம்பத்திற்குப்பலன் இதுதானென்பதை வேதாந்திகள்
யாவரும் ஸமரூபமாக இசைந்தே தீருவர்கள். ஜக ஐந்மாதி காரணம் ப்ர ம்’
என்று ப்ரஹ்ம லக்ஷணம் சொல்லி ப்ரதாநாதிகள்ஜகத்காரணமன்று என்று
கண்டித்த வளவால் விசிகித்ஸையற்ற ப்ரஹ்மஜ் ஞாநோத்பாதானம் செய்ததாகஆய்விடுமோ? ஒருநாளுமாகாது. ப்ரஹ்ம ருத்ராதிகளிடையில் எந்த தேவதை
ஜகஜன்மாதி காரணம்? என்கிற விசிகித்ஸை பரிஹரிக்கப்படாத வளவில்நிஸ்ஸம்சய ப்ரஹ்மஜ்ஞானோத்பாத நம் செய்யப்பட்டதாக ஆகமாட்டா தென்பதைப்பேதையருமறிவர். ஏவஞ்ச, இன்ன தேவதைதான் ஜகத்காரணமென்று நிஸ்ஸந்
தேஹமாகத் தெரிவிக்கப்படாத வளவில் சாஸ்த்ராரம்ப ப்ரயோஜனம் தேறாமை
யாலே ந்யூமதைக்குப் பரிஹாரமே ஏற்படாது. ஆகவே, ஜகத்காரணபூத ரஹ்மசப்தவாச்யமான தேவதா விசேஷம் இன்னதென்று நிர்த்தாரணம் செய்வதிலும்சாஸ்த்ரம் தத்பரமானது என்று இசைந்து தீர வேண்டும். தந்நிஷ்டஸ்யமோஷோபதேசாத் என்கிற ஸேதூக்தியின் ஸ்வாரஸ்யத்தினாலும் தேவதாவிசேஷ நிர்ணயத்தை த்ரகாரர் செய்யக் கருதியுள்ளாரென்பது செவ்வனே விளங்கா நின்றது. மோஷேர்பாய பூதமான வஸ்துவுக்கு உபாஸந விஷயத்வம்யாதொன்று இங்குச் சொல்லப்பட்டிரா நின்றதோ இது ப்ரதாநாதி பிரதிக்ஷேபகமாத்ரமே யன்று, தேவதா விசேஷ விஷயகத்வத்தை ஸாதிப்பதாகவுமாகின்றது. தமேவம் வித்வாந்அமருத இஹ பவதி* என்கிற ச்ருதி வாக்கியத்திலுள்ளதானதச்சப்தமானது எந்த தேவதா விசேஷத்தைச் சொல்லுகின்றதோ, அதனையே

தந்நிஷ்டஸ்ய என்கிற ஸ த்ரத்திலுள்ள தச்சப்தமும் சொல்லக்கடவ தென்பதுதிண்ணம். *வாஸத்தேவ மநாராத்ய கோ மோ ம் ஸமவாப்ஸ்யதி * என்பதுமுதலான பல ரமாண வசனங்களை இங்கு அநுஸந்திப்பது. ஆக, மோக்ஷ
ஹேதுத்வமாகிற லிங்கத்தினால் ஸச் சப்தத்தின் பொருளை நிஷ்கர்ஷிப்பவரானவியாஸ முனிவர் தமது ஸூ த்ரத்தில் நாராயணனையே கருதினாரென்பது நிச்சயம்.

ஸச்சப்த வாச்யன் நாராயணனே என்பது மற்றொரு ரகாரத்தாலும்நிர்ணயிக்கத்தக்கதாம். அதாவது, புருஷ ஸ க்தத்திலும், உத்தர நாராயணத்திலும் ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர .நாமா கருத்வா அபிவதந் யதாஸ்தே.என்பதனால் நாம ரூப வயாகர்த்தாவாக இருக்குந் தன்மை சொல்லப்பட்டது.இது ஸ வித்யா ரகரணத்திலும் * ஸேயம் தேவதா இமாஸ் திஸ்ரோ தேவதாஅநேந ஜீவேநாத்மநா அனுப்ரவி ய நாமரூபே வயாகரோத்ஈ என்றோதப்பட்டிருப்பதானது ஸச்சப்தவாச்யன் நாராயணனே என்பதற்கு ப்ரத்யபிஞாபகமாகும்.ஈக்ஷத்யதிகரணத்திலிருந்து மேலே நாமெடுத்துக் காட்டின இரண்டு ஸு த்ரங்களில்* தந்நிஷ்டஸ்ய மோஷோபதேசாத் என்கிற முந்தின னத்ரத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமவை சொன்னோம். இனி * கதிஸாமாந்யாத் என்கிற அடுத்த த்ரத்தைப்பற்றிச் சொல்லுகிறோம் [ கதிஸாமான்யா .] கதியாவது பரவ்ருத்தி; அதாவதுஅர்த்த போதகத்வம் . [ஸாமாந்யாத்) அது ஸமாநமாயிருக்க வேண்டியது ஆவசயகமாகையாலே என்று பொருள். காரண வாக்யங்களெல்லாம் ஒரு மிட ாயிருக்கப்ரஸ்தாவம் கீதையில் இல்லாமற் போகவில்லை. (7.-20) * காமை ஸ்தை ஸ்தைர்
ஹ்ருதஞனாக பிரபத்யந்தே அந்யதேவதா * என்றுதொடங்கிச் சொல்லி வரு கையில் * அந்தவத்து பலம் தேஷாம் தத்பவதியல்பமேதஸாம் என்று தலைக் கட்டப்பட்டுள்ளது. இந்த ச்லோகத்தின் பாஷயத்தின் முடிவில் சங்கராசாரியர் எழுதியுள்ள வாக்கியம் பரம பக்தர்களை அவசமாகவே கண்ணீர் பெருக்க வைக் கின்றது.அவ்விடத்திலுள்ள வாக்கியமிது காணீர் : * ஏவம் ஸமாநே அப்யாயாஸ மாமேவ ந ப்ரபத்யந்தேஅநந்தபலாய; அஹோ கலு கஷ்டதரம் வர்த்ததே இத்யநுக்ரோசம் தர்சயதி பகவான் * என்று. ஸ்ரீமந்நாராயணனை பஜிப்பவர் களுக்கே அநந்தா ய பலன் பெறுவதற்கு அவகாசமுள்ளதென்று அறிந்தவர் களுங்கூட க்ஷத்ர பலன்களை விரும்பி தேவதாந்தரபஜனம் செய்கிறார்களே என்று பகவான் தானே கண்ணீர் விட்டழுது கதறுவதாக ஸாக்ஷாத் கரித்தன்றோ சங்காராசாரியர் இதை யெழுதியுள்ளார்.

பகவத் கீதை ஆறாமத்யாயத்தில் முடிவான சுலோகமிது. *யோகிநாமபி
ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா, சாத்தாவாந் பஜதே யோ மாம்ஸ மே யுக்த தரோ மத என்பது. இங்கு சங்கர பாஷ்ய பங்தி வருமாறு- *யோகிநாமபி
ஸர்வேஷாம் ருத்ராதி த்யான பராணாம். மத்கதேந – மயிவா தே வே ஸமா தேந, அந்தராத்மநா – அந்தமகரணே ந, ச்ரத்தாவார் சரத்ததாந ஸ்ஸந், பஜதே-ஸேவதே
யோ மாம், ஸமே -மம யுக்ததம: அதிசயேநம் யுக்த , மத:-அபிப்ரேத என்று.
இதற்கு விவரணம் அநபேக்ஷிதம்.ப பாத மற்றவர்கள் நற்றெளிவு பெறுவர்கள்

ஆதி சங்கராசார்யர் ஸஹஸ்ர நாம பாஷ்யத்திலும்பல பல இதிஹாஸங்களை யெடுத்துக்காட்டி நாராயண பாரம்யத்தைத் திடப்படுத்தியுள்ளார். விஷ்ணுவின் தாழ்வையோ, தேவதாந்தரத்தின் உயர்வையோ ஓரிடத்திலும் அவர்காட்டினதில்லை.கேசவநாம பாஷ்யத்தில் * கோ ப்ரமேதி ஸமாக்கியாத ஈசோஹம் ஸர்வதேஹி நாம்,ஆவாம் தவாங்கேஸம்பூதெள தஸ்மாத்கேசவ நாமவார்என்று சொல்லிக் கொண்டே சிவபெருமான் இந்த கேசவ நாமத்தை ஸமர்ப்பித்ததாக ஹரி வம்சத்தில் சொல்லப்பட்டுள்ள இதிஹாஸத்தை உதா ரித்துள்ளார் பகவத்பாதர். (அர்க்க ) என்னும் திருநாமத்தின் பாஷ்யத்தில் ப்ரஹ்மாதிபி பூஜ்யதமைரபி அர்ச்சநீயத் வாத் அர்க்க என்ற விவரணம் காட்டினார். இங்கு ஆதி சப்தத்தால் முந்துற முன்னம் கரஹிக்கக் கூடியவர் பார்வதீபதியல்லவோ? ஏன்? சுஸ ப்ரஹ்மா ஸ சிவ என்றோதுகிற வேத புருஷன் பிரமனுக்கடுத்தபடி சிவபிரானைச் சொல்லி வைத் திருப்பது பிரஸித்தமன்றோ? [அமிதாச : என்னும் திருநாமத்தின்பாஷயத்திலும் ஸம்ஹாரஸமயே விச்வம நா தி அமிதாசந.” என்று விவரித்தார் பகவத் பாதர் சிவபெருமான் விச்வ பஹிர்ப்பூதனல்லனே. நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் என்கிற திருவாசிரியப் பாசுரமும் இங்கு நினைக்கத்தக்கது.* அத்தா சராசரக்ரஹணாத் என்கிற ஸ த்திரத்தில் கருத்ஸ்நமான சராசரத்தையும் உண் டவனென்று நிர்ணயிக்கப்பட்ட நாராயணன் சிவபெருமானை விட்டிட்டானென்ன ப்ரஸக்தி யில்லையே. உட்கொள்ளப்பட்டவர்களில் சிவபெருமானே முதல்வதாவதுச்யதே யோ ௌ நாராயண: ப்ரஸித்த பரமாத்மா ஸர்வாத்மா இதி, தத்ந
நிராக்ரியதே. யதபி தஸ்ய பகவத அபிகமநாதிலக்ஷணமாராதனம் அஜஸ்ர ம ந்யசித்ததயா அபிப்ரேயதே, ததபி நப்ரதிஷித்யதே ; ச்ருதி ஸ்மருத்யோரீ வரப்ரணி தாநஸ்ய ப்ரஸித்தத்வாத் “ என்பன் அவருடைய பாஷ்ய பங்திகள்.-இவற்றால், ஸ்ரீமநாராயணனுக்கே பாரம்ய ப்ரதிஷ்டாபநத்தில் பகவத் பாதர் ஊக்கமுடையவரென்பது தேறிற்றென்னுமிடம் மறக்கத் தக்கதன்று

(10-8)அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே என்றவிடத்தில்சங்கர பாஷ்ய பங்தி இது காணீர்:- அஹம் பரம் ப்ரஹ்ம வாஸு தேவாக்க்யம், ஸர்வஸ்ய ஐகத: ப்ரபவ:- உத்பத்தி; மத்த ஏவ ஸ்திதிநாசக்ரியாபலோப்போகஎக்ஷணம் விக்ரியாரூபம் ர்வம் ஜகத்ப்ரவர்த்ததே” இத்யாதி .மூலத்தில் நாராயண பதமோ விஷ்ணு பதமோ காணப்படாத விடங்களிலெல்லாம் நியமேந விஷ்ணு நாராயண வாஸதேவ பதங்களை யிட்டே பாஷ்ய மியற்றுகிறார் சங்கராசாரியர்என்பது வயபிசரியாத விஷயம்.-அநந்யாச் சிந்தயந்தோமாம் * (9-22) என்ற விடத்தில் பரம் தேவம் நாராயணம் ப யுபாஸதே -தேஷாம் பரமார்த்த தர்சிநாம் * என்று பாஷயமிட்டிருக்கின்ற சங்கராசாரியர் பரதேவதையான நாராயணனை உபாளிப்பவர்கள் யாவரோஅவர்களே உண்மை யறிவாளிகள் என்று காட்டினாராகிறார் -ுஸர்வவாகீச்வரேச்வர * என்கிற நாம் பாஷ்யத்திலும் ஸர்வேஷாம் வாகீச்வராணாம் பிரஹ்மாதிநாமபி ஈச்வர என்றார் அவர் தாமே. 

முமுக்ஷ க்களும் முக்தர்களும் நித்யர்களுமான ஸமஸ்தஜீவராசிகளையும் தன்னுடைய குணாறுபவத்தினாலேயே உஜ்ஜீவிப்பிக்குமதான பரப்ரஹ்மம் ணமாத்ரமும் நிர்க்குண
மாக இருக்ககில்லாது. கூரத்தாழ்வானருளிச்செய்த ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில்தூரே குணாஸ்தவ து ஸத்வரஜஸ்தயாஸி தேந த்ர ப்ரதயதி தவயி நிர்க்குணத்வம், நித்யம் ஹரே! நிகில ஸத்குணஸாகரம் ஹி த்வாமாம ந்தி பரமேச்வரமீ வராணாம் என்றுள்ளச்லோக ரத்நம் இங்குநித்யானு ஸந்தேயமாகக் கடவது–ராமாயணத்தில்-ஆதியோடந்தமாகத் திருக்கல்யாண குணகண ப்ரஸ்தாவமே விளங்கா நின்றது .வான்மீகி முனிவர் தம்மிடம் வந்து சேர்ந்த நாரத மஹர்ஷி பக்கலில் கதை கேட்க விரும்பிற்றிலர் ; திருக்குணங்கள்
கேட்கவே விருப்பத்தை வெளியிட்டார். அதில், *கோ வஸ்மிந்ஸாம்ரதம் லோகே குணவார்* என்றும் * பஹவோ துர்லபாச்சைவ யே த்வயா கீர்த்திதாகுணா: * என்றும் உபகரமத்தில் காணும் வினாவிடைகளினால் இஃது அறியலாகும்

* ரம் ப்ரதானம் அம்ருதாக்ஷரம் ஹர ராத்மாநாவீசதே தேவ ஏக: * என்பது முதலான சருதிவாக்யங்கள் சேதந் அசேதந ஈச்வர ரூப தத்வத்ரையத்தின் உண்மையைத் தெரிவிக்கும் முகத்தால் பேதத்தைக்காட்டுகின்றன. *நேஹ நாநாஸ்தி கிஞ்சந* சுளர்வம் கல்விதம் ப்ரஹ்ம* *தத்த்வமஸி இத்யாதிகளான ச்ருதி வாக்யங்கள் பலவகைப்பட்ட வஸ்துக்களில்லாமையைத்தெரிவிக்கும்முகத்தால் அபேதத்தைக் காட்டுகின்றன.-*யஸ்யாத்மா சரீரம்,யஸ்யப்ருதிவீ சரீரம். ய ஆத்மநி திஷ்ட இத்யாதி வாக்யங்கள் பகவான் ப்ருதிவி முதல் ஆத்மா வரையிலுமுள்ள ஸகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாயிருக்கிறா னென்பதை ப்ரதிபாதிக்கின்றன;இவற்றை த்வைதிகளும் அத்வைதிகளுமான இரு வகுப்பினரும் அறவே விட்டிட்டார்கள்.-ஸுபாலோபநிஷத்து முதலான அந்தர்யாமி ப்ராஹ்மண வாக்கியங்களுக்கு உபய மதத்திலும் ஆதரவு கிடையாதென்பது ஸ்பஷ்டம். ஆக, த்வைதாத்வைத மதங்களிரண்டிலும் அநேக சருதி வாக்யங்களை அமுக்கியார்த்தங்களாகக் கொள்ளுதல்உபேக்ஷித்தல் இத்யாதியான பலீயஸ்ஸான தோஷமுள்ளது. இத்தகையதோஷம்சிறிதும் தட்டப்பெறாதது நமது மதமென்னுமிடம் அடுத்தபடியாக விவரிக்கப்படும்.

சுயஸ்யாத்மா சரீரமித்யாதிகளான ச்ருதி வாகியங்களுக்கு கடக ச்ருதிகளென்று பெயர்.பேனத்தையும் அபேதத்தையும் விரோத லேசமுமின்றிக்கே பொருந்தச் செய்யவல்லவை அந்தர்யாமி ப்ராஹ்மண வாக்யங்கள்-என்கிறகாரணத்தினால் இவற்றுக்கு கடகச்ருதிகளென்னும் பெயர் மிகப் பொருத்தமானது. * நேஹ நாநாஸ்தி கிஞ்சந இத்யாதிகளான அத்வைத (அபேத) ச்ருதி களினாலேற்பட்ட அபேதத்தையும் க்ஷரம் ப்ரதாநமம்ருதா ரம் ஹர * இத்யாதிகளான த்வைத (பேத ச்ருதிகளினாலேற்பட்ட பேதத்தையும்  பொருந்தவிடும்வழி கேண்மின்.சேதநா சேதந ஈச்வரர்களான மூன்று தத்துவப் பொருள்களின் ஸ்வரூப பேதம் உண்மையாதலால் * ரம் ப்ரதா மித்யாதி பேத ச்ருதியானது பேதத்தைச் சொல்லியிருப்பது பாங்கே. ப்ரஹ்மம் சேதநாசேதந விசிஷ்டமாய் கொண்டு ஒன்றேயாகிறபடியால் *ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதியான அபேத ச்ருதிகளும் பொருந்தக் குறையில்லை. *யஸ்யாத்மாசரீரமித்யாதி அந்தர்யாமி ராஹ்மண
ச்ருதிகளானவை ஸர்வேச்வரனை ஸர்வாந்தர்யாமியென்று தெரிவிக்கும் முகத்தால் பேதத்தையு அபேதத்தையும் பொருந்த விடுகின்றன என்பர் நம் ஆசாரியர்கள்- உண்மையில் வெவ்வேறுபட்ட வஸ்துக்களும் சரீர சரீரி பாவநிபந்தநமாக வே ஒன்றாக வழங்கப்படுவதாய் ஸ்த்திக்கையாலே அப்படிப்பட்ட சரீர சரீரிபாவத்தை யுணர்த்துகின்ற அந்தர்யாமி ராஹ்மணாதி ரூபங்களான ச்ருதி வாக்யங்களுக்கு நமது மதத்தில் மிகுந்த கௌரவமுள்ளது. அத்வைதிகள் பேதச்ருதிகளை அநாதரிப்பது போலவும், த்வைதிகள் அபேதச்ருதிகளை அநாதரிப்பது போலவும் நாம் ஒருவகையான ச்ருதியிலும் அநாதரம் காட்டுகின்றிலோம். ஆகவே ஸர்வச்ருதி ஸாமரஸ்யம் நமக்கேயொழியப் பிறர்க்கில்லையென்று கல்வெட்டாயிற்று.

மதாந்தரஸ்தர்கள் ஒப்புக்கொள்ளாத பல அர்த்தங்களை நாம் ஒப்புக் கொண்டிருக்கின்றோம்.நித்ய ரிஸத்பாவம், எம்பெருமானுடைய கல்யாண
குணாசரயத்வம், திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டத்வம் முதலானவை அவை. இவற்றை
யெல்லாம் விட்டு சரீர சரீரி பாவத்தையே கொண்டு விசிஷ்டாத்வைதமென்றுபெயரிடுவதில் என்ன விசேஷமென்னில்,கேண்மீன். த்தாந்தத்தில் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கின்ற அர்த்த விசேஷங்களுள் ஐகச்சரீரகத்வமென்பதே ப்ரதாநமானது
ஆனது பற்றியே இதுப்ரதாந ப்ரதிதந்த்ரார்த்தமெனப்படுகிறது. இதுவே ப்ரதா மென்பது எங்ஙனமென்னில் ஸர்வச்ருதிகளினுடையவும் முக்கியமான அர்த்தத்தைத் தெரிவிப்பதாய், ஸர்வ ச்ருதிகளுக்கும் ஸாமரஸ்யத்தை நிர்வஹித்து வாதி விஐய ப்ரயோஜகமா யிருப்பதனாலே, இதற்கு ப்ராதாந்யமென்றுணர்க.

முதலத்யாயம் நான்காவது பாதத்தில் வாக்யாந்வயாதிகரண மென்பது ப்ரஸித்த
மானது. நான்குஸு த்ரங்கள் கொண்டது இவ்வதிகரணம். ப்ருஹதாரண்யகோப
நிஷத்தில் ப்ரஸித்தமான மைத்ரேயீ ப்ராஹ்மணமென்னும் பகுதியில் அ ருத வோ
பாயமே தென்று கேட்டமைத்ரேயியைக் குறித்து யா ஞவல்க்யருடைய விடை: “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய : ச்ரோதவ்யோ மந்த யோ நிதித்யா தவ்ய “ என்பது. இதில் ஆத்மா என்னும் சப்தத்தால் குறிக்கப்பட்டவன் பரமாத்மாவா? ஜீவாத்மாவா? என்று விசாரம் ப்ரஸக்தமாக, பரமாத்மாவே யென்று நிர்ணயம் செய்வது இவ்வதி கரணத்தின் ப்ரமேயம். இது * வாக்யாந்வயாத் என்கிற முதல் த்ரத்தினால் தேறியது. மேத்ரே ப்ராஹ்மணத்திலுள்ள மஹாவாக்யம் ஸமஞ்ஜளமாக அந்வயிக்க வேண்டுகையாலே அந்த வாக்யத்தில் பிரதிபாதிக்கப்பட்டா ஆத்மா கரும்பலனை யநுபவிப்பவனான ஜீவாத்மாவாக இருக்க முடியாது,பரம புருஷனேயாகவடுக்கும் என்று சொல்லப்பட்டதாயிற்று. இதற்கு மேல் ஒரு கேள்வி எழுந்தது. அதாவது, இங்கு பரமாத்மா விவக்ஷிதனாகில் ஜீவாத்ம வாசகமான
ஆத்மா என்கிற சொல்லையிட்டுச் சொல்லுவானேன்? பரமாத்மாவென்றே பிர யோகிக்கலாகாதா? என்று. இக்கேள்விக்கு த்ரகாரரான வியாஸரால் மேலே
மூன்றுஸவத்ரங்களினால் ஸமாதானம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடைவே ஆத்மர
த்த்ய மதம், ஔடுலோமிமதம், காசக்ருத்ஸ் மதம் என மூவருடைய மதம் காட்டப்
பட்டுள்ளது. ப்ரதி ஞாஸித்தேர்லிங்கமாச்மரத்திய என்கிற முதல் ஸு த்ரம் ஆச்மரத்த்ய மதம். ஜீவாத்ம பரமாத்மாக்களுக்கு கார்ய காரண பாவம் சுருதியில் சொல்லப்பட்டிருக்கையாலே அதனால் அவர்களுக்கு அபேதம் ஏற்படுகிறது. காரண மான மண்ணுக்கும் அதன் கார்யமான பானைக்கும் அபேதம் காண்கிறதன்றோ.ஆக இவ் வபேதத்தைத் தெரிவிப்பதற்காக பரமாத்ம ஜீவாத்மாக்களுக்கு ஐக்யோக்தியுஎ ளதென்றார் ஆசமரத்தயர். 

இன ஒளடுலோமீ மதம்; கீழே காட்டிய ஆச்மரத்த்ய மதத்தில்ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவினிடத்திலிருந்து உத்பத்தியைக் கொள்ளுகையாலே நஜாயதே மரியதே வா விபச்சித்சு இத்யாதி ப்ரமாணங்களோடு அது விரோதிக்கையாலும் மற்றும் அநேக தோஷப்ரஸங்கத்தாலும் ஆசமரத்த்ய மதம்ஸாதுவன்றென்று கொண்ட ஒளடுலோமியானவர்- (உத்க்ரமிஷயத ஏவம்பாவாதித்யௌாலோமி ] முக்தி தசையில் ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவோடு அபேதம் சருதி ஸித்தமாயிருக்கையாலே முக்திதசையில் பவிஷ்யத்தான ஜீவாத்ம பரமாத்ம அபேதத்தை யவலம்பித்து ஐக்யம் சொல்லிற்றாக நிர்வஹித்தார். இதற்குமேல் காசக்ருத் த மதம்:-கீழே விவரித்த ஒளடுலோமி மதத்தில் மோக்ஷம் வரையில் ஜீவாத்ம பரமாத்மாக்களுக்கு பேதமுள்ளதென்றும், முக்தி தசையில் அபேதமென்றும் கொள்ளப்படுகிற விது ”பரமாத்மாத்மநோர்யோக: பரமார்த்த இதீஷ்யதே,மித்த் யைதத் அந்யத் ரவியம் ஹிநதி தத் த்ரவ்யதாம் யத : என்கிற ஸ்ரீவிஷ்ணு
புராண வசன விருத்தம். வெவ்வேறுபட்ட பொருள்கள் ஒன்றோடொன்று சேருமே யொழிய ஐக்கியத்தை யடையமாட்டா வென்று இதில் ஸ்பஷ்டமாகக் கூறியிருக் கின்றதன்றோ. முக்தி தசையில் ஜீவாத்மாவுக்கு அபஹத பாப்மத்வாதி ஸ்வரூபம் ஆவர்ப்பவிக்குமதொழிய பரமாத்மாவோடு ஐக்யாபத்தியென்பதில்லை யென்னுமிடம்
(1-4-1.) *ஸம்பத்யாவிர்ப்பாவாதிகரணத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆக இத்தனைக்கும் முரணாக நிர்வஹிப்பது அநுசிதம் என்று கொண்ட காசக்ருத்ஸ்நர்
[பி அவஸ்திதேரிதி காசகருத்ஸ்ந]பரமாத்மா ஜீவாத்மாவினுள் அந்தராத்மாவாக இருப்பதும், ஜீவாத்மாவுக்குப் பரமாத்ம சரீரத்வமும் ய ஆத்ம திஷ்டந்யஸ்யாத்மாசரீரம் * இத்யாதி ச்ருதி ஸித்தமாகையாலும், சரீர வாசகங்களான சப்தங்களுக்கு சரீரிபர்யந்த வாசகத்வம் ஆக்ருத்யதி கரண ஸித்த மாகையாலும் பிரக்ருதத்தில் ஜீவாதயவாசியான ஆத்ம சப்தத்தைப் பரமாத்மபர்யந்த வாசகமாக நிர்வஹிப்பது
தான் உசிதமென்று கருதினார்.

பதினெட்டு அத்யாயமாக அமைந்தகீதையில் பதினெட்டு ஸாரார்த்தங்கள்-தேரைக்கொண்டுநிறுத்து ‘ என்று அர்ஜுனன் கட்டளையிட, உடனே அங்ங்னம் செய்த கண்ணபிரான் தன்னுடைய ஆசரித பாரதந்திரியத்தைக் காட்டிக்கொண்டா னென்பது கண்ணனுடைய திருக்குணங்களில் ஸாரமாக அறியத்தக்கது .மேலே தன்னுடைய பரத்துவத்தைப் பலவாறு பேசப்போகிறான் ; அதனிலும் சிறப்பாக ௌலப்யத்தை முந்துற முன்னம் அனுஷ்டான முகத்தினால் காட்டியருளினானென்பது விசேஷம்.

அர்ஜுனன் வாயில் “ சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம்” என்று வெளிவந்திருக்கிறது. கண்ணா ! எனக்கு தர்மாதர்மங்கள் தெரியவில்லை;
எனக்குச்ரேயஸ்ஸென்றுநீ அறுதியிட்ட பொருளை எனக்கு உரைப்பாயாக. உனக்கு
நான் மித்திரன் மாத்திரமல்லேன்; சிஷ்யனுமாகிறேன்: இதோ உன் திருவடிகளில் வீழ்ந்துயாசிக்கிறேன்காண் ; எனக்கு ஹிதா ஹிதங்களை யுபதேசிப்பாயாக’ என்று
அர்ஜுநன் சொல்லும்படி செய்து விட்டான் கண்ணபிரான். இந்த ப்ரார்த்தனையைப்
றாமல்சிறந்த சாஸ்த்ரத்தை யுபதேசிப்பது தகுதியன்றாதலாலும் நிர்வேத மில்லா
து வாயில் இந்த பிரார்த்தனை வெளிவராதாகையாலும் இத்தனையும் கண்ணபிரான் செய்துவைத்த வொரு நாடகம் என்பது அறியத்தக்கது. ஆகவே அர் னனுக்குண்டான வயாமோஸம் அவன்றன்னுடைய ஸ்வபாவத்தாலுண்டானதன்று-மாயப்போர்த் தேர்ப்பாகனுடைய மாய மந்திரம் செய்வித்த செயல் என்றதாயிற்று.இல்லையாகில் கீதாசாஸ்த்ரம் அவதரிக்க அவகாசமே யிராதன்றோ

(3-22) *” நமே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷ லோ கேஷு கிஞ்சந.நாநவாப்த மவாப்தவ்யம் வர்த்தஏவ ச கர்மணி என்பது. இதில்பகவான்தானும் கர்மா நுஷ்டானத்தில் ஊன்றி யிருப்பதாக வற்புறுத்திச் சொல்லப்பட்டுள்ளது . க்ருஷ்ணாவதாரத்திற்கு முந்தின அவதாரமான ஸ்ரீராமாவதாரத்தில் இது தன்னை ஸுஸ்பஷ்டமாகக் காணலாம். விச்வாமித்ர முனிவன் தசரத மன்னனிடம் வந்து அஹம் வேத்மிமஹாத்மாநம் இத்யாதிகளைச் சொல்லி ஸ்ரீ ராமபிரானைக்கொண்டுசென்றான். ஊந்ஷோடச வர்ஷோமே ராமோ ராஜிவ லோசG : என்று சக்ரவர்த்தி சொன்னபடி இராமன் செந்தாமரைக் கண்ணனாகையாலே ஸுர்யன் அஸ்தமித்தவாறேதாம்ரை முகுளிதமாகுங் கணக்கிலே இராமனும் கண்மூடினான். பிறகு கூப்ரபாத காலத்திலே முனிவன் “கௌஸல்யாஸுப்ரஜா ராம! பூர்வாஸந்த்யா ப்ரவர்த்
ததே “ என்று சொல்லித் துயிலுணர்த்துகிறான். “இராமா! எழுந்திரு; நாம் சீக்கிரமாக ஆசரமம் சென்று சேர்ந்துயாகம் தொடங்கவேணும் என்று சொல்லவேண்டி யிருக்க. அங்ஙனே சொல்லாதே”உத்திஷ்டநரசார் தூல் ! கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் “
என்றான் முனிவன். ப்ராதஸ் ஸந்த்யா நுஷ்டானம் வழுவாமற் செய்யவேண்டுமே
அதற்காக எழுந்திராய் என்று சொன்னவிதனால் எம்பெருமானுடைய அவதாரம்
முக்கியமாக தர்மாநுஷ்டானத்திற்காகவே யென்பது நன்கு விளங்கும். மேலே
பிராட்டியைப் பிரிந்து வருந்திக் கிடக்கிற காலங்களிலும் பெருமாள் ஸந்தியாகாலங்
களில் தவறாது ஸந்தியாவந்தனம் அனுட்டித்தபடியை வான்மீகி பகவான் அஸ்க்ருத் கூறியிருக்கின்றார். ஆகவே பகவான் வர்த்த ஏவ ச கர்மணி* என்று சொன்னது மிகப்பொருந்தும்.

நாலாமத்யாயத்தில்(7) * யதா யதா ஹி தர்மஸ்ய * என்கிற ச்லோகத்தில் “ததா ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம்” என்ற விடத்தில் ரஹஸ்யமும் ரஹஸ்யமுமான ஒரு விசேஷார்த்தமுண்டு ; மலே ஏழாமத்யாயத்தில் “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” (18) என்று கீதாசார்யன் தானே ஜ்ஞானிகளைத் தனக்கு ஆத்மாவாகச் சொல்லுகையாலே இங்கு”ஆத்மாநம் ஸ்ருஜாமி” என்றதற்கு ஞானிகளை அவதரிப்பிக்கிறேன் என்பதும் அந்தரங்கமான பொருளாகும். அதர்மம் தலையெடுத்து தர்மம் தலைமடிந்துநிற்குங்காலங்களில் பகவான் தான் வந்து அவதரிப்பதிற்காட்டிலும் ஞானிகள் அவதரிப்பதில் ப்ரயோஜநாதிசயமுண்டு. இராமாநுச நூற்றந்தாதியில் (41) மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுறநிற்கிலும் காண்கில்லா வுலகோர்களெல்லாம் அண்ண ராமானுசன் வந்துதோன்றிய வப்பொழுதே நண்ணருஞானம் தலைக்கொண்டுநாரணற்காயினரே * என்றுள்ள பாசுரம் இங்குப் பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும். அன்றியும் இந்த நான்காமத்யாயத்திலேயே மேல் (34) * தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நோஸேவயா, உபதே யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநி நஸ்தத்வதர்சி : * என்கிற ச்லோகத்தில் ஞானிகளின் உபதேசப் பெருமை நன்கு கூறப்பட்டிருக்கிறது. தத்வமாகிய நான் சொல்லுவதிற்காட்டிலும். தத்வமாகிய என்னைஸாாத்கரித்து தத்வதர்சிகளென்று பேர் பெற்றஞானிகள் உபதேசிப்பது மிகச்சிறந்திருக்கும்.அவர்களை யடிபணிந்தும் பலகால் அநுவர்த்தித்துக் கேட்டும் தெரிந்துகொள்’ என்று அந்த ச்லோகத்தில்சொல்லப்படுகிறது. அப்படி யுபதேசித் துத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஞானிகளை ஸமய விசேஷங்களில் நானே அவதரிக்கச் செய்கிறேன் என்கிறானிங்கு. தன்னுடைய அவதாரத்தைப் பற்றிச் சொல்ல ப்ராப்தமான இந்த ப்ரகரணத்தில் ஞானிகளின் அவதாரத்தைப்பற்றிச் சொல்வதற்கு என்ன ப்ரஸக்தி யென்று நினைக்கவேண்டா:* பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து* என்கிற பெரியாழ்வார் திருமொழிப்படியும் ஸாக்ஷாந்நாராயாணோ தேவ: க்ருத்வா மர்த்யம ம் தநூம். மக்ாந்உத்தரதே லோகாந்காருண்யாத் சாஸ்த்ர பாணிநா* என்கிற ப்ரமாணப்படியும் ஞானிகளின் அவதாரமும்பகவதவதார விசேஷ மேயாகையாலே. * சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ,நாமம் பராங் குசமோ நாரணமோ? தாமம் துளவோ வகுளமோ தோளிரண்டோநான்கு முளவோ பெருமானுனக்கு*என்று நம்மாழ்வாரை நோக்கி ஒரு பரமபக்தர் பணித்த பாசுரமும் இங்கு அநுஸந்திக்கப் பொருந்தும்.

ஐந்தாமத்யாயத்தில் (18) வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி.சுநிசைவ ச்வபாகே ச பண்டிதாஸ் ஸமதர்சிந * என்பதொரு சுலோகம். இந்த ச்லோகத்தில் ” பண்டிதாஸ் ஸமதர்சிந “ என்றிருப்பது கொண்டு,’ஜாதிபேதம் முதலானவற்றை யிட்டு ஏற்றத்தாழ்வு காண்பவர்கள் பண்டிதர்களல்லர்,பாமரர் களே’ என்கிற அபார்த்தம் நவீந் ஸம்ஸ்காரகர்களின் வாக்கில் உலாவி வருகிறது. அது சிறிதும் பொருந்தாது, பாஷ்யஸுக்திகளை நோக்குக. பசுவினாலாகிறகாரியம் யானையினால்ாகாது . யானையினாலாகிறகாரியம்பசுவினாலாகாது. பால்வேண்டும்போது பசுவைத் தேடுவதும் மஹோத்ஸவங்களுக்கு யானையைத் தேடுவதும் யாவரிடத்துங் கண்ட வியல்பு. லோக ரீதியில் ஸமதர்சனம் எங்ஙனே பண்ணமுடியும்? ஸர்வத்ர ஸ்மதர்சிந் ” என்றதற்குநவீநர்கள் சொல்லுகிற பொருள் பொருந்தவேணுமாகில், யானைக்குச் செய்கிற அலங்காரங்களை நாய்க்குச் செய்யவேண்டும்; நாய்க்குச் செய்யு மவற்றைக் குதிரைக்குச் செய்யவேண்டும். இப்படிப்பட்ட ஆபத்திகளைப் பரிஹரிக் கைக்காக ஸர்வத்ர ஸமதர்சி ‘ என்பதற்குப் பொருத்தமான பொருள் காண வேண்டும். அதுதான் பாஷ்யத்தில் காண்பது. அன்றியும், இதற்குமேல் மூன்றாவது ச்லோகத்தில் (5-20) சொல்லப்பட்டிருக்கின்றதாவது – ப்ரியமானது கிடைத்தால் ஸந்தோஷிக்கக் கூடாது; அப்ரியமானது கிடைத்தால் வெறுப்புக் கொள்ளலாகாது என்று கூறப்படுகிறது. இப்படியிருக்க வல்லவனுக்குத்தான் ஸர்வத்ர ஸமதர்சந் ரூபமான ஞாந விபாக முண்டாகுமென்று பாஷ்யகாரர் அருளிச் செய்கிறார். அப் படிப்பட்ட ஓர்அதிகாரி தேறுவனாகில் அவனுடைய ஸர்வத்ரஸமதர்சித்வம் எப்படிப் பட்டதென்று நேராகக் கண்டு கொள்ளலாம்.

ஆறாவது அத்யாயத்தில் (5) உத்தரேத் ஆத்மநாத்மாநம் நாத்மாநமவஸாத யேத், ஆத்மைவ ஹ்யாத்மநோபந்து; ஆத்மைவ ரிபுராத்மந என்கிற ச்லோகம் ஒவ்வொரு வருடைய நெஞ்சிலும் அநவரதமும் ஊன்றியிருக்கத்தக்கது. தன்னைக்கொண்டே தான் கடைத்தேற வேணுமென்றும்,தன்னைத்தானே கெடுத்துக் கொள்ளலாகாதென் றும், தனக்குத் தானே உறவு, தனக்குத்தானே பகைவன் என்றும் இந்த ச்லோகத்தில் சொல்லப்படுகிறது. ஒருவன் கடைத்தேறுவதற்குப் பல பல ஸாதனங்கள் வேண்டி யிருக்கின் ற. ஸத்ஸ் வாஸம் வேணும். ஆசார்யோபஸேவை வேணும். பிராட் டியை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றுதல்வேணும்…….. என்றிப்படியாக உஜ்ஜீவனத்திற்கு வேண்டியவை பல இருந்தாலும் இவற்றுள் மிக முக்கியமான ஸாதனம் மனம் ஒன்றேயாம். அதை விஷயாந்தரங்களில் யதேஷ்டமாகச் செல்லவிட்டுவைத்தால் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டபடியாகும். மனத்தை விஷயக்ராமங்களில் புகவிடாமல் ஆத்மோஜ்ஜீவனத்திற்கு அபிமுகமாக்குமளவில் அந்த மனத்தைக்கொண்டுதான் வாழ்ந்தவனாவன். ஆகவே, மனமானது உறவாயு மிருக்கும், பகையாயு மிருக்கும். உறவாகக்கொண்டு வாழ்வதே விவேகிகளின் பணி: பகையாகக்கொண்டு பாழாய்ப் போக வேண்டாமென்று கீதாசார்யன் வெகு பொருத்தமாக உபதேசித்தருளுகின்றான்.

ழாமத்யாயத்தில் (17.) *தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த:* என்னும்ச்லோகத்தின் உத்தரார்த்தம் “ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய :” என்றுள்ளது. இங்குநம் ஸ்வாமி ” ஞாநிந: அஹம் அத்யர்த்தம் ப்ரிய “ என்று கரமாந்வயத்தையே திருவுள்ளம்பற்றி பாஷயமிட்டருளினார். இவ்வந்வயக்ரமத்தில்- ஞானிக்குத்தன்னிடத்தில் ப்ரீதி அதிகம் என்றதாக விளங்குகிறது. உண்மையில், பகவானிடத்தில் ஞானி வைத்திருக்கிற ப்ரீதி அதிகமா? ஞானியினிடத்தில் பகவான் வைத்திருக்கிற ப்ரீதி அதிகமா? என்று ஆராய்ந்து பார்க்கு மனவில் ஞானியினிடத்தில்பகவான் வைதிருக்கிற ப்ரீதிதான் அதிக மென்னத் தகும். ஆகவே இந்த ச்லோகத்தில் (அத்யர்த்தம்] என்பதை ‘அஹம் ப்ரிய:’ என்பதிலே கூட்டுவதைவிட ‘மம ப்ரிய என்பதிலே கூட்டுவதுதான் ரஸ்வத்தரமென்று திருவுள்ளம் பற்றின ஸ்வாமி ஸ்ரீபாஷ்யத்தில் சரமஸ்த்ரமான * அநா ருத்தி ஸூத்ரத்தின் பாஷ்யத்தில் “அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்கிற அநர்க்கமான வாக்யத்தினால் அந்த அந்வய க்ரமத்தையும் காட்டியருளினார். அந்த ஸ்ரீ பாஷ்ய ஸுக்தியின்படி ப்ரக்ருத கீதா லோகாந்
வயம் எப்படி கொள்ளவேணு மென்னில்; ஞாநி : அஹம் ப்ரிய: : ஸ ச மம் அத்யர்த்தம்ரிய:” என்றிங்ஙனே கொள்ளவேணும் . உபயத்பாஷ்யத்திலும் துல்யமானஅந்வயக்ரம்மே விவக்ஷித மென்று சில பண்டிதர்கள் கூறுவதுண்டு. இங்கு நாம் வாத ரதிவாத ருசி யுடையோமல்லோம்.
எட்டாமத்யாயத்தில் ஒரு நிதி காட்டுகிறேன் காண்மின். (14.)* அநந்யசே
தாஸ்ஸத்தம் யோ மாம் ஸ்மரதி நித்யசா, தஸ்யாஹம் ஸு லப பார்த்தநித்யயுக்தஸ்ய யோகிற என்கிறசுலோகத்தின் உண்மைப் பொருளைக் கண்டுணர்ந்து பாஷ்யமிட்டருளினவர் நம் ஸ்வாமி. இதை மிக விரித்து அடியேன் வேறு சில நூல்களில் விளக்கியிருக்கிறேன். இங்கு மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கிறேன். *நாயமாத்மாச்ருதியில் *யமே வைஷ வர்ணுதே தேந லப்ய என்றதிலுள்ள அர்த்த வாதத்தை ஸ்வாமி தமது
பாஷ்யத்தில் அறவே அறுத்தருளுகிறார். அதைதாத்பர்ய சந்த்ரிகா ஸ்ரீஸுக்திகள்
மிக நன்றாக விளக்குகின்றன. சேதந்னுடைய காரியங்களில் பசை யறுத்து எம்பெரு
மானுடைய க்ரூதியின் ப்ராபல்யத்தை ஸ்திரீகரிப்பது இவ்விடத்து பாஷ்யம். பரகத்
ஸ்வீகாரத்தின் பெருமையை யுணர்த்துவதென்றபடி. “தத்வியோகம் அஸஹமாந அஹ
மேவ தம் ருணே அத்யர்த்தமத்ப்ரியத்வாதிகஞ்ச அஹமேவ ததாமீதி அர்த்த “இத்யாதி பாஷ்ய ஸ்ரீஸுக்திகளையும், “உக்தஸ்ய அதிவாத மாத்ரத்வ சங்காவ்யுதாஸாய
ச்ருதி லதாம் ஆஹ- யமேவேதி. என்கிற தாத்பர்ய சந்த்ரிகா ஸ்ரீஸுக்தியையும்
சிந்தனை செய்வது.

ஒன்பதாமத்யாயத்தில் (26) *பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யாதுப்ரயச்சதி, தத ம் பக்த்யுபஹ்ருதமச்நாமி ப்ரயதாத்மந: என்கிற சலோகத்தினால் கண்ணபிரான் தான் ஆராதனைக் கெளியன் என்னுமிடத்தை அருளிச் செய்கிறான்-திருமங்கை
யாழ்வார் *கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்
பலுமுன் கண்டக்கால் புள்ளாயோ ரேனமாய்ப்புக்கிடந்தான் பொன்னடிக் கென்று உள்ளாதாருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே * என்று பெரிய திருமொழியில்
(11-7-6) அருளிச் செய்கிறார். –இடுகிற பொருளில் வாசி பார்ப்பதில்லை; இடுகிறவன் னெஞ்சில் ஈரமுள்ளதா என்பதொன்றையே பார்ப்பேன் ‘ என்று ஸ்பஷ்டமாகக் காட்டுகின்றது. பூர்வார்த்தத்தில் யோ மே பக்த்யா ப்ரயச்சதி’ என்று சொல்லிவைத்து உத்தரார்த்தத்திலும்‘தத் பக்த்யுபஹ்ருதம் ” என்று மீண்டும் சொல்லியிருக்கிறதல்லவா? தத் என்றாலே போதுமாயிருக்க பக்த்யுபஹ்ருதம்’ என்றது பக்தியின் கனமே முக்கியமென்று
காட்டுதற்காம் .

பத்தாமத்யாயத்திற்கு ஸ்வாமி யெம்பெருமானாருடைய அவதாரிகை வருமாறு:-கீழே பக்தியோகம் ஸாங்கமாக விவரித்துரைக்கப்பட்டது ; இப்பொழுது பக்தியுண்டாவதற்காகவும் அது வளருவதற்காகவும் எம்பெருமானுடைய (தன்னுடைய] நிகரற்றஐச்வர்யம் முதலிய
திருக்கல்யா குணங்களின் திரள் அளவு கடந்திருக்கிற படியையும், உலகமெல்லாம்
தனக்கு சரீரமாயிருக்கையாலே அவனுருவாய் அவன் ஏவச்செல்லும்படியாயிருக்
கின்றமையும் விஸ்தரித்துச் சொல்லப்படுகின் றன- என்று.-தானாகவே பூய ஏவ மஹாபாஹோ ! ச்ருணு மே பரமம் வச : (10-1) என்று,மீண்டும் நான் சொல்லுவதைக் கேளப்பா! என்று ஆரம்பித்துச் சொல்லுகிறான்; இப்படி அப்ருஷ்டோத்தரமாகச் சொல்லுவது கூடுமோ வென்று சங்கிக்க இடமில்லாதபடி உத்தரார்த்தத்தில் யத் தேஹம் ப்ரீயமாணாய
வக்ஷ்யாமி ஹிதகாம்யயா* என்று, ச்ரோதாவான அர்ஜு நனுடைய முகத்தில் ப்ரீதி
விசேஷத்தைக் கண்டு இவனுக்கு இன்னமும் விரிவாகச் சொல்லியே யாகவேண்டுமென்று திருவுள்ளம் பற்றிச் சொல்லுவதாகக் காட்டப்படுகிறது,-10.11. ஆகிய இரண்டத்யாயங்களிலும் சொல்லப்புகுகிற விஷயங்கள் கீதாசாஸ்தரத்தினுள் ஸாரங்களாயிருப்பதால் இவற்றைச் சொல்லத்தொடங்கும்போதேஅர்ஜுநன் தன்னுடைய அவாவை அதிகமாகக்காட்டினானென்பது ” ப்ரீயமாணாய தேஎன்பதனால் விளக்கப்படுகிறது. அவன் பரீதனாகத் தென்படாமற் போனாலுங் கூடஅவனுடைய ஹிதத்தை யுத்தேசித்துத்தான் சொல்லியே தீரப்போகிறதாகக்காட்டப்படுகிறது ” வ யாமி ஹிதகாம்யயா ” என்பதனால். ஆக,இவ்விரண்டத்யாயங்களிலும் தெரிவிக்கப்படுகிற அர்த்தங்கள் ப்ரியங்களுமாய் ஹிதங்களுமாயிருக்குமென்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டதாயிற்று.

(10-19) ஹந்த தே கதயிஷ் யாமி விபூதீ ராத்மநச் சுபா:, ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட! நாஸ்த்யந்தோவிஸ்தரஸ்ய மே என்று, அர்ஜுநா! என்னுடைய மிகவழகிய விபூதிகளை உனக்குச் சொல்லுகிறேன் ; எல்லாவற்றையும் சொல்லுவதென்றால் அவற்றுக்கு முடிவே கிடையாமையாலே சொல்லப் போகாது ; உன்னால் கேட்கவும்போகாது ; ஆகையாலே முக்கியமாகச் சிலவற்றைச் சொல்லுகிறேன் கேளாய் என்று சொல்லி. (21) ஆதித்யாநாமஹம் விஷ்ணு: என்று தொடங்கி முப்பத்தொன்பதாவது ச்லோகமளவும் சொன்னான். இவையெல்லாம் கேட்ட அர் நன் (11-1ல்) யத் த்வயோக்தம் வசஸ் தேந மோஹோயம் விகதோ மம என்று,கண்ணா! நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு என்னுடைய மோஸ மெல்லாம் தொலைந்தது என்று சொல்லி, (11-3ல்) த்ரஸ்டுமிச்சாமி தே ரூப மைச்வரம் புருஷோத்தம என்றுபகவானுடைய அஸாதாரண ரூபத்தைக்காண்பதிலே
தனக்கு விருப்பமிருப்பதாக வெளியிட்டான். அவனுக்குக் கண்ணபிரான் விச்வரூபம் காட்டியருளத் திருவுள்ளம்பற்றி அதை ஊனக்கண்ணாலே காண முடியாதாகை
யால்அது காண்கைக்காக திவ்யசக்ஷஸ்ஸைக் கொடுத்தருளி விச்வரூபத்தை அற்புத
மாகக்காட்டியருளினான். ஆக,பத்தாமத்யாயத்தில் விபூதி விஸ்தாரத்தைப் பேசி, பதினோராமத்யாயத்தில் விச்வரூபத்தைக் காட்டியருளினானாயிற்று. இவையெல்லாம்
எம்பெருமானுடைய உடைமைகள் என்றதாயிற்று.

பன்னிரண்டாமத்யாயத்தில் 18, 19 ச்லோகங்கள் ஸாரமானவை. அவையாவன- ஸமச் சத்ரெள ச மித்ரே ச ததா மாநாவமாநயோ :, சீதோஷ்ண ஸுக துக்கேஷ
ஸமஸ் ஸங்கவிவர்ஜித : துல்ய நிந்தாஸ்துதிர் மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித், அங்கேத:
ஸ்திரமதிர் பக்திமாந் மே ப்ரியோ நர, என்பன் . பகைவனிடத்திலும் நண்பனிடத்திலும் ஒரேவிதமான பாவனையுள்ளவனும், பஹுமானம் நேர்ந்தாலும் அவமானம் நேர்ந்தாலும் அவற்றையும் துல்யமாகவே பாவிப்பவனும், சீதோஷ்ணங்களையும்ஸு க துக்கங்களையும் ஸமமாக நினைப்பவனும், எதிலும் பற்றில்லாமலிருப்பவனும்,பிறர் நிந்திப்பத்தையும் துதிப்பதையும் துல்யமாக நினைப்பவனும், ஒருவரோடும் பேசாமலிருப்பவனும். ஏதேனுமொன்றினால் ஸந்துஷ்ட சித்தனாயிருப்பவனும் உறுதியும் பக்தியு முடைய வனுமானவன் எனக்குப் பரம ப்ரீதிபாத்ர பூதன் என்று சொல்லு கிறான் கண்ணபிரான். இப்படிப்பட்ட அதிகாரி உலகில் மிகவும் துர்லபனேயாயினும் இப்படியிருக்க ஆசைப்படவேணு மென்பதற்காகவே இங்து அருளிச்செய்தபடி. இத்தகைய அதிகாரிகள் இமயமலைச் சாரல்களில் காணப்படுவர்கள்.

பதின்மூன்றாமத்யாயத்தில் முதல் ச்லோகமும் இரண்டாம் ச்லோகமும்சிறிது விபரீதவுணர்ச்சியை உண்டாக்குவது போலுள்ளது. இங்குஸ்வாமியினுடையபாஷ்யமும் அதற்கு டீகையானதாத்பர்ய சந்த்ரிகையும் மிகமிக விரிவாக அமைந்திருக் கின்றது . மூல லோகங்களாவன- *இதம் சரீரம் கெளந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே, ஏதத்
யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித என்பது முதல் ச்லோகம். இனி இரண்டாவது சலோகமாவது க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷ பாரத!, க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞாநம் யத் தத் ஜ்ஞாநம் மதம் மம என்பது. இங்கு (ஆபாத ப்ரதீதியில்) மேல்நோக்கில் என்ன தோற்றுகிறதென்றால்,க்ஷேத்ரமென்னப்படுகிற அசேதநமும், க்ஷேத்ரஜ் னென்னப்படுகிறசேதநனும் ஆகிய இரண்டையும் அர் நா!
நானாக அறிந்துகொள் என்னப்படுகிறது பூர்வார்த்தத்தில் ; க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞர் களாகிறசேதநாசேதனங்களை யறிந்து கொள்வதென்பது யாதொன்றுண்டோ, அது
தான் என்னையறிந்து கொள்வதாகும் என்கிறது உத்தரார்த்தத்தில். இவற்றால் அத்வைதவாதம் ஸித்திக்கிறதென்று கருதிய சங்கராசாரியர் தமது பாஷ்யத்தில் அக் கருத்தை விளக்கியிருக்கின்றார். அதற்கு விரிவான மறுப்பு நமது ஸ்வாமியின் பாஷ் யத்திலுள்ளது; மிகமிக விரிவான மறுப்பு தாத்பர்ய சந்திரிகையிலுள்ளது. அதன் ஸாரத்தை மிகவும் சுருக்கமாகத் தெரிவிக்கிறேனிங்கு. தேஹத்திற்காட்டிலும்ஆத்மா வேறுபட்டவன் என்பது தெரிந்திருக்கச்செய்தேயும் தேவோஹம் மநுஷ்யோஹம் என்று வ்யவஹாரம் செய்துவருகிறோம். அஹம் என்பதற்கு ஆத்மா அர்த்தமேயொழிய தேஹம் அர்த்தமன்று; தேவத்வமோ மநுஷ்யத்வமோ சரீரத்திலுள்ளதேயன்றி அஹமர்த்தமான ஆத்மாவிலுள்ளதன்று. அப்படியிருந்தும்,தேவ அஹம்,மநுஷ்யஅஹம் என்று ஸமாநாதிகரணமாக ப்ரயோகிப்பது எப்படி பொருந்துகிறதென்றால் கேண்மின் ; ஆத்மாவும் சரீரமும் ஒன்றைவிட்டொன்று தனித்து நிற்பனவல்ல.தேஹமானது. ஆத்மாவுக்கு அப்ருதகளித்தவிசேஷணமாய்க்கொண்டேயிருப்பதால் இந்தச் சேர்த்தியையிட்டு தேவ அகம், மநுஷ்ய; அஹம்’ என்று வ்யவஹரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், தேவ சரீரக அஹம், மநுஷ்ய சரீரக அஹம் – என்பதேயாம். ஏவஞ்ச, சரீராத்மபாவரூபமான ஸம்பந்தத்தைக்கொண்டு பொருத்தப்பட்டதாயிற்று. இவ்வண்ணமாகவே ச க்ஷேத்ரஜ்ஞஞ் சாபி மாம் வித்தி என்றதும் சரீராத்ம பாவ ஸம்பந்த நிபந்தனமாகவே பொருந்தக் குறையில்லை. அசேதநமான தேஹமானது ஜீவாத்மாவுக்கு சரீரமாயிருப்பது போல, இவ்விரண்டும் சேர்ந்து பரமாத்மாவுக்கு சரீரமாயிருக்கும் விஷயம் ஸுபாலோபநிஷத்து முதலான வற்றில் கூப்ரஸித்தமா யிருப்பதால் க்ஷேத்ரத்தையும் க்ஷேத்ரஜ்ஞனையும் பரமாத் மாவாக நினைப்பதென்பது க்ஷேத்ரத்தையும் க்ஷேத்ரஜ்ஞனையும் சரீரமாகக்கொண்ட வன் பரமாத்மா” என்று நினைப்பதாகவே முடிந்து நிற்கும். இவ்விஷயம் பலபல உப பத்திகளுடன் ஸ்வாமி பாஷ்யத்தில் விரித்துரைக்கப் பட்டிருப்பது காண்க.

பதினான்காமத்யாயத்தில் (24,25ல்) *குணாதீதஸ் ஸ உச்ச்யதே என்று ஓர் உத்தமாதிகாரி சொல்லப்படுகிறான். இவனுக்கு குணுா தனென்று பெயர். குணங்களைக் கடந்தவனென்று பொருள். ஸகலகுணங்களுக்கும் கொள்கலமாக இருப்பவனன்றோ உத்தமாதிகாரி ; குணங்களைக் கடந்தவன் எப்படி உத்தமாதிகாரியாவன்? என்றுகேள்வி பிறக்கக்கூடும். இங்கு விவக்கப்படுகிற குணங்கள் சமதமாதிகுணங் களல்ல: ஸத்வ ரஜஸ் தமோகுணங்கள். *முக்குணத்து வாணியத்து இரண்டிலொன்று நீசர்கள்க என்று திருமழிசைப்பிரானும். * முக்குணத்திரண்டவையகற்றி, ஒன்றினி லொன்றி நின்று என்று திருமங்கையாழ்வாரும் அருளிச் செய்கிறபடி ரஜஸ் தமோ குணங்களிரண்டுதானே ஹேயங்கள் : ஸத்வகுணம் உபாதேயந்தானே; அதுவுங்கூட ஹேயமென்று தோன்றும்படியுள்ளதேயென்று நினைக்கவேண்டா: சுத்தஸத்வம்என்பது உபாதேயமே. ரஜஸ் தமஸ்ஸுக்களோடு கலசின ஸத்வம் உபாதேயமன்றுஅது ஹேயமே. ஆக, தமோகுணமும் ரஜோகுணமும் ரஜஸ்தமோமிச்ரஸத்வகுணமுமாகிய முக்குணங்களையும் கடந்தவன் குணா தனென்ப்படுவான். இவனை நாம் எப்படித் தெரிந்து கொள்ளுவதென்றால் அவனுடைய நிலைமையைக் கொண்டு தெரிந்து
கொள்ளலாம். அந்த நிலைமை தெரிவிக்கப்படுகிறது இரண்டு ச்லோகங்களினால்.
* ” ஸமதுக்க ஸுகஸ் ஸ்வஸ்த: ஸமலோஷ்டாச்ம காஞ்சந, துல்யப்ரியாப்ரியோ தீரஸ்
துல்ய நிந்தாத்ம ஸம்ஸ்துதி; மாநாவமாநயோஸ் துல்யஸ் துல்யோ நிந்தாரிபக்ஷயோ:
ஸர்வாரம்பபரித்யாகி குணாதீதஸ் ஸ உச்யதே * என்னு மிவ்விரண்டு ச்லோகங்களும்
அநவரதம் கண்டபாடம் செய்யத்தக்கன. ஸுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும்
ஒரேவிதமான சித்தவருத்தியையுடையனாயிருக்கவேணுமென்கிறது. [ ஸமதுக்கஸுக:]
என்பதனால்.அதன்மேல் (ஸ்வஸ்த; ] என்கிறது. இதற்கு இவ்விடத்தில் அபூர்வமான
வ்யுத்பத்தியைக் காட்டியருளுகிறார் ஸ்வாமி யெம்பெருமானார்.(தன்னிடத்திலேயே
யிருப்பவன்) என்கிறார். உடனே அதை விவரிக்கிறார்- உலகில் ஸுகதுக்கம். பிரியா
ப்ரியம் என்னும் சப்தங்கள் விசேஷமான பொருள்வாசியையுடையனவல்ல : பர்யா
யசப்தங்கள் போலவேகாணும். ஆனாலும் விஷய பேதத்தாலே பொருள் பேதித்
திருக்கும். [” ஸமலோஷ்டாச்மகாஞ்சன “) லோஷ்டத்தையும் கல்லையும் பொன்னையும்
துல்யமாக நினைப்பவன். இப்படியாக மேன்மேலும் சொல்லப்படுகிற தன்மைகள்
இந்நிலத்தில் நம் போன்ற பாமரர்களுக்கு எவ்வளவு பழக்கம் செய்தாலும் வாய்க்கக்
கூடியவையல்ல. இத்தகைய நலம் வாய்ந்தவர்கள் பூலோகம் முழுவதற்குள்ளும்
ஒருவரிருவர் தேறுவதும் அருமையென்னலாம். ஆயினும் இப்படிப்பட்ட ச்லோகங்களை நாம் மனனம் செய்துகொண்டே யிருந்தால் பெரிதும் பயன்படும் என்றிவ்வளவே சொல்லலாம் கீழே பன்னிரண்டாமத்யாயத்திலும் இது சொன்னோம். 

பதினைந்தாமத்யாயத்தில் (15) * ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநஞ் ச. வேதைச் ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்த
க்ருத் வேதவிதேவ சாஹம். இந்த ச்லோகத்தின் பூர்வார்த்தம் பகவத்கீதைக்கு அவ
தாரிகை போன்றிருக்கும். (எங்ஙனே யென்னில் 😉 யுத்தம் செய்வதற்கு மிகுந்த
உத்ஸாஹத்தோடு குருக்ஷேத்ரம் வந்து சேர்ந்த அர்ஜுநன் தீடீரென்றுயுத்தஞ்செய்ய மாட்டேனென்று வில்லையும் அம்புகளையும் எறிந்துவிட்டு உட்கார்ந்ததானது அவனு
டைய ஸொந்த எண்ணத்தினாலன்று. எப்படியாவது கீதா சாஸ்த்ரத்தை அவதரிப்
பிக்க வேணுமென்று தீவிரமான குதூஹலங்கொண்டிருந்த கண்ணபிரான் சாஸ்த்ர
ச்ரவணத்திற்குப் பூர்வாங்கமாக அர் ன னுக்கு நிர்வேதத்தை யுண்டாக்கவே விளை
வித்த வைராக்யமது என்று (2ல்)சொன்னோம். அதைத்தான் இங்கு ஸுசனையாகக்
காட்டுகிறான். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நானே உறைந்திருந்து ஜ்ஞான
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையுண்டாக்கிவருகிறேன் என்று சொல்லுகிறானிங்கு. இது
வேதா நுக்ரு ஹீதமுமான அர்த்தம். * அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா
இத்யாதிச்ருதிகள் காண்க. இனி உத்தரார்த்தத்தின் விவரணம் கேண்மின்(இங்கு
சங்கரபாஷ்யத்திலுள்ள விவரணம் மிகவும் ஸாமா யமானது.நம்ஸ்வாமி பாஷ்யத்
தின்படி விவரணம் கேளீர்.) வேதைச் ச ஸர்வை ரஹமேவ வேத்ய கர்மகாண்டங்களி
லும்கூட எனக்குத்தான் ப்ரசம்ஸையுள்ள தென்றபடி. ஸ்ரீ ரங்கராஜஸ்தவ – உத்தர
சதகத்தில் * ஆதெள வேதா ரமாணம் என்கிறசுலோகத்தின் நான்காவது பாதம்
வேத்யோ வேதைச் ச ஸர்வைரஹமிதி பகவந்ஸ்வேந் ச வயாசகர்த்த” என்பது. வேதாந்தக்ருத்] ”வேதாந்தார்த்த ஸம்ப்ரதாயக்ருத்” என்றுரைத்தார் சங்கராசாரியர். அந்தம் என்பதற்குப் பலன் என்று பொருள். வேதோக்த கருமங்களை யனுட்டிப்பவர்களுக்கு நானே பலனளிப்பவன் என்பதுஸ்வாமியின் ஸமஞ்ஜஸமான பாஷ்யம். [அஹமேவ வேதவித்] ஸர்வவேத வேத்யன் நானேயென்றும், வேதோக்தகர்ம பல பிரதாதா நானேயென்
றும் அறியாதவன் வேதவித்தல்லன்; இப்படியறிகிறநானே வேதவித்து என்றபடி.

பதினாறா மத்யாயத்தில் தேவா ரவிபாகம் முக்கியமானது. தைவப் பிறப்பு அஸுரப்பிறப்பு என்று பிறப்பிலேயே இருவகையுண்டு. (16-6) த்வெளபூத ஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸு ஏவ ச என்று,உலகத்திலுள்ள பிராணிவர்க் கங்களை யெல்லாம் இரண்டே வகுப்பாக வகுக்கிறான் கீதாசார்யன். தைவவகுப்பு ஒன்று, ஆஸுரவகுப்பு மற்றொன்று. இதைப்பற்றிச் சுருக்கமாகத்தெரிந்து கொள்ள வேணுமானால் + தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாய ஆஸுரீ மதா * (16-5) என்கிற வொரு பாதி ச்லோகத்தை மனனம் பண்ணினாற்போதும். ஸம்ஸாரபந்தத்தில் நின் றும் விடுபட்டு ஸத்தியை யடையும் வழியைச் சிந்தனை செய்யும் வகுப்புதான் தெய்வ வகுப்பெனப்படுவது. அப்படிப்பட்ட சிந்தனையின் றிக்கே அதோகதியை யடையும் வழியைத் தேடும் வகுப்புதான் ஆஸுர வகுப்பெனப்படுவது. இங்ஙனே சொன்ன தைக் கேட்டவுடனே அர்ஜுநனுடைய முகத்தில் துக்கக் குறி காணப்பட்டது. நம்மைக் கண்ணபிரான் தைவவகுப்பில் சேர்த்திருக்கிறானோ ஆஸுரவகுப்பில் சேர்த் திருக்கிறானோ தெரியவில்லையே யென்று அர்ஜுநன் கவலையுற்று நின்றான். அதை யறிந்த கண்ணபிரான் உடனே யருளிச் செய்கிறான் * [ பதினாறா மத்யாயத்தில் தேவா ரவிபாகம் முக்கியமானது. தைவப் பிறப்பு அஸுரப்பிறப்பு என்று பிறப்பிலேயே இருவகையுண்டு. (16-6) த்வெள
பூத ஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸு ஏவ ச என்று,உலகத்திலுள்ள பிராணிவர்க் கங்களை யெல்லாம் இரண்டே வகுப்பாக வகுக்கிறான் கீதாசார்யன். தைவவகுப்பு ஒன்று, ஆஸுரவகுப்பு மற்றொன்று. இதைப்பற்றிச் சுருக்கமாகத்தெரிந்து கொள்ள வேணுமானால் + தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாய ஆஸுரீ மதா * (16-5) என்கிற வொரு பாதிச்லோகத்தை மனனம் பண்ணினாற்போதும். ஸம்ஸாரபந்தத்தில் நின் றும் விடுபட்டு ஸத்தியை யடையும் வழியைச் சிந்தனை செய்யும் வகுப்புதான் தெய்வவகுப்பெனப்படுவது. அப்படிப்பட்ட சிந்தனையின் றிக்கே அதோகதியை யடையும் வழியைத் தேடும் வகுப்புதான் ஆஸுர வகுப்பெனப்படுவது. இங்ஙனே சொன்ன தைக் கேட்டவுடனே அர்ஜுநனுடைய முகத்தில் துக்கக் குறி காணப்பட்டது. நம்மைக் கண்ணபிரான் தைவவகுப்பில் சேர்த்திருக்கிறானோ ஆஸுரவகுப்பில் சேர்த் திருக்கிறானோ தெரியவில்லையே யென்று அர்ஜுநன் கவலையுற்று நின்றான். அதை யறிந்த கண்ணபிரான் உடனே யருளிச் செய்கிறான் * [மா சுசஸ் ஸம்பதம் தைவீம் அபிஜாதோஸி பாண்டவ!] * அப்பா!நீ கவலை கொள்ளாதே, நீ தெய்வ வகுப்பில் சேர்ந்தவனே யென்று கூறி அவனைப் பரமானந்தப்படுத்துகிறான். தான் செய்யும் உபதேசங்களை அவன் ருசிவிச்வாஸங்களோடு கேட்டுக் கொண்டிருப்பது பற்றியேஅவனைத்தைவஸம்பத்து வாய்ந்தவனாக அறுதியிட்டருளினன் கண்ணபிரான். நமக்கு ஆஸ்திக்ய முள்ளதா? நாஸ்திக்ய முள்ளதா? என்பது உலகில் அவரவர்களுடைய நெஞ்சுக்குத் தெரியுமன்றே. ஆஸ்தித்ய முண்டாகில் நம்முடைய பிறப்பு தெய்வப் பிறப்பு என்று தானே நிச்சயித்துக் கொள்ளலாம். அஃதில்லையாகில் ஆசுரப் பிறப்பே நமக்கு வாய்த்ததென்று நிச்சயித்துக்கொள்ள என்ன தடை? இத் தீய பிறப்பின் தன்மைகளை மேலே பல ச்லோகங்களினால் கண்ணபிரான் தானே நன்கெடுத்துக் கூறுகின்றான். * ந சௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷ வித்யதே. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீச்வரம் இத்யாதிகள் * காண்க. * அப்பா!நீ கவலை கொள்ளாதே, நீ தெய்வ வகுப்பில் சேர்ந்தவனே யென்று கூறி அவனைப் பரமானந்தப்படுத்துகிறான். தான் செய்யும் உபதேசங்களை அவன் ருசிவிச்வாஸங்களோடு கேட்டுக் கொண்டிருப்பது பற்றியேஅவனைத்தைவஸம்பத்து வாய்ந்தவனாக அறுதியிட்டருளினன் கண்ணபிரான். நமக்கு ஆஸ்திக்ய முள்ளதா? நாஸ்திக்ய முள்ளதா? என்பது உலகில் அவரவர்களுடைய நெஞ்சுக்குத் தெரியுமன்றே. ஆஸ்தித்ய முண்டாகில் நம்முடைய பிறப்பு தெய்வப் பிறப்பு என்று தானே நிச்சயித்துக் கொள்ளலாம். அஃதில்லையாகில் ஆசுரப் பிறப்பேநமக்கு வாய்த்ததென்று நிச்சயித்துக்கொள்ள என்ன தடை? இத் தீய பிறப்பின் தன்மைகளை மேலே பல ச்லோகங்களினால் கண்ணபிரான் தானே நன்கெடுத்துக் கூறுகின்றான். * ந சௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷ வித்யதே. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீச்வரம் இத்யாதிகள் * காண்க.

பதினேழாமத்யாயத்தில் மூவகையான தபஸ்ஸுக்களைக் கூறுகின்றான்
கண்ணன் . அவை சாரீர தபஸ்ஸென்றும், வாங்மய தபஸ்ஸென்றும், மாநஸ்தபஸ்ஸென் றும் வழங்கப்படுவன. *ஊன்வாட வுண்ணா துயிர்காவலிட்டு உடலிற்பிரியாப்
புலனைந்தும் நொந்து,தான்வாடவாடத் தவஞ்செய்ய * என்றும்,காயோடு நீடுகனி
யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று தவஞ் செய்ய * என்றும் ஆழ்வார்கள் ஒருவிதமான உடல்தவத்தை யருளிச் செய்துள்ளார்கள்.கீதா சார்யான் அருளிச்செய்வது அதனில் வேறுபட்டது. பகவானையும் அந்தணர்களையும் ஆசாரியர்களையும் பண்டிதர்களையும் வழிபாடு செய்வது, புண்ய தீர்த் தங்களில் குடைந்தாடுவது, நெஞ்சில் நினைத்தபடியே அனுஷ்டித்துக்காட்டுவது,மாதர்களைக் கண்டு காதல் கொள்ளாமை, ப்ராணி பீடைகள் செய்யாமை ஆகிய இவை காயிக தபஸ்ஸென்கிறான். அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத், ஸ்வாத்யாயா த்யயநம் சைவ வாங்மயம் தப உச்யதே என்பது வாங்மயமான தபஸ்ஸைத் தெரிவிக்கும்-ச்லோகம். பிறரை நோவச் செய்யாத வார்த்தைகளைச் சொல்லுவது, உண்மையைச் சொல்லுவது. ப்ரியமும் ஹிதமுமானவற்றைச் சொல்லுவது, வேதமோதுவது ஆகியவிவை வாசிக்தபஸ்ஸெனப்படும். * மந ப்ரஸாதஸ் ஸௌம்யத்வம் மௌனமாத்மவி
நிக்ரஹ,பாவஸம்சுத்திரித்யேதத் தபோ மானஸ் முச்யதே கோபம் முதலியன் கொள்
லாமையாகிற மனத்தெளிவு, பிறர்க்குத் தீங்கிழைக்க நினையாமையாகிற ஸௌம்யத்
வம் : வாய்திறந்து பேசாமை, ஸதா தியானிக்கத் தகுந்த பரமபுருஷன் விஷயத்திலே
நெஞ்சைச் செலுத்துகை,வேற்றுவிஷயங்களில் சிந்தனை கொள்ளாமை ஆகிய இவை
மாநஸ்தபஸ் ளெனப்படும்.இங்ஙனம் மூவகைப் பட்ட தபஸ்ஸு மறுபடியும் மூவகையாக வகுக்கப்படுகிறது; ஸாத்விகமென்றும் ராஜஸமென்றும் தாமஸ மென்றும். அங்கே விரிவு காண்க.

அவரவர்களுக்கு ஸ்வ தர்மத்தில் ருசியையுண்டாக்குவதே கீதையின் முழுநோக்கு-திருவாய்மொழியில் (4-8-6) * அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொரு மூர்த்தி என்கிறபாசுரத்தில் கீதையின் பெருமை ஸாரமாக அருளிச் செய்யப்பட்டது. இதன் அருமைபெருமையைக் கண்ணபிரான் தானே முடிவில் + இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந, நசாசுச்ஷவே வாச்யம் ந ச மாம் யோப்ய யதி என்கிற வொரு ச்லோகத்தினால்அற்புதமாகப் பேசினான். -இங்கு “ந சமாம் யோப்யயதி” என்ற விடத்திற்கு நம் பாஷ்யகாரர் பாஷ்யமிட்டருளுகிறார் ; காணக் கண்ணாயிரம் வேண்டும்; கேட்கக்காதாயிரம் வேண்டும். நவில் நாவாயிரம் வேண்டும்.
என்னுடைய ஸ்வரூபத்தையும் என்னுடைய ஐச்வர்யத்தையும் என்னுடைய குணங்களையும் ஒருவர் எடுத்துரைத்தால் அவற்றில் தோஷாவிஷ்கரணம் செய்பவனே என்னிடத்தில் அஸூயை கொண்டவன், அவனுக்கு நீ ஒன்றும் சொல்லாதே-என்றுகண்ணபிரான் கட்டளை யிடுவதாக ஸ்வாமி பாஷ்யம் செய்தருளுகிறார். பகவத்குணங்களை எத்தனை உயர்த்தியாகச் சொன்னாலும் அத்தனையும் ஒக்கும்! ஒக்கும்!!என்றிராதே அவற்றில் அஸம்பாவிதத்வத்தை உபபாதிக்கிறோம் கேண்மினென்று.தங்களுக்குண்டான பாண்டித்யத்தை யெல்லாம் பகவத் குணங்களை இல்லைசெய்வதிலும் இறக்குவதிலுமே உபயோகப்படுத்துகிறவர்கள் பகவத் கீதைக்கு வெகுதூரத்திலே நிற்கவேண்டுமென்பது ஸ்வாமி திருவுள்ளமாகக் காண்கிறது.

ஆளவந்தார் அருளிச்செய்த புருஷ நிர்ணயமென்கிற ஒரு க்ரந்தம் லுப்தமென்று தெரிகிறது, ஸித்தித்ரயத்தை கத்ய த்ரயம்போலே மூன்று க்ரந்தமாகக் கணக்கிடுவர் பெரியார்- கூரத்தாழ்வான் அருளிச் செய்த சரம ச்லோக வியாக்கியானமும் நித்யமுமருளிச்செய்திருந்ததாக தேசிகன் உதாஹரிக்கிறார் ; அவை லுப்தங்கள்.-பட்டர்.  அருளிச் செய்த–லக்ஷ்மீ கல்யாண நாடகமும் தத்வ ரத்நாகரமும் லுப்தங்கள்–நஞ்சீயர்.  அருளிச் செய்த.-நித்யமும் ஸ்ரீஸுக்த பாஷ்யமும் லுப்தங்கள்.- குன்றத்
தூரய்யன் திருக்குமாரரான அப்பன் ஸ்ரீ நிவாஸாசார்யர் பணித்ததாக (1913-ஆம்
வருஷத்தில்) தெலுங்கு லிபியில் அச்சிடப்பட்டுள்ள அஷ்டச்லோகி பெரியபடி வியாக்
கியானத்தில் (பக்கம் 14லும் 66லும்) வடக்குத் திருவீதிப்பிள்ளை அஷ்டாக்ஷர தீபிகை
யென்றொரு க்ரந்த மருளிச் செய்திருப்பதாக உதாஹரிக்கப்பட்டுள்ளது. அது லுப்தமென்றே சொல்லவேணும்.- பிள்ளை லோகாசாரியர் .-கத்யத்ரத்திற்கு ஒரு வியாக்கியான மருளிச்செய்திருந்ததாக மணவாள மாமுனிகளெடுத்துக்ாட்டியருளுகிறார் :- தத்வத்ரயத்தில் ஈச்வர ப்ரகரணத்தில் (6)ஜ்ஞ நா நந்தைக ஸ்வரூபனாகையாவது ஆநந்த ரூபஜ்ஞாநனாயிருக்கை” என்ற விடத்துமாமுனிகளின் வியாக்கியானத்தில் “அநுகூலஜ்ஞானமே ஸ்வரூபமாயிருக்க ஞாநானந்தங்களென்று பிரித்துச் சொல்லுகிறது இரண்டு முண்டாகைக்காக . என்றிறே இவர் தாமிட்டருளின் கத்ய வயாக்க்யானத்திலே அருளிச்செய்தது’ என்கிற ஸ்ரீஸூக்தி காண்கிறது . அந்த வியாக்கியானம் லுப்தம்.-அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அருளிச்செய்த ஆசார்ய ஹ்ருதயத்திற்கு மூலமான பட்டோலை லுப்தம்.- மணவாளமாமுனிகள் அருளிச்செய்த கீதாதாத்பர்ய தீபம் (லுப்த்தம்).-ஈட்டு ப்ரமாணஸங்க்ரஹம். (இப்போது அச்சிடப்பட்டிருப்பதல்ல.)

———

ராமாநுஜனுக்கும் ராமாநுஜருக்கும் ஒற்றுமைகள் பதினெட்டு

முகுந்தமாலை யென்னும் ஸ்தோத்ரத்தில் “ஹேராமாநுஜ! ஹே ஜகத்த்ரய குரோ! ஹே
புண்டரீகா மாம் ஹே கோபீஜநநாத! பாலய ” என்றுராமாநுஜ திருநாமத்தினாலே பல
ராமாநுஜனான கண்ணபிரான் அழைக்கப்பட்டுள்ளான்.-கண்ணபிரானுடைய
அந்தத்திருநாமமே ஸ்வாமி உடையவர்க்குச் சாத்தப்பட்டதென்று கொள்ளுகிற
ஸம்பிரதாயமும் ஒன்றுண்டு. யதிராஜ ஸப்ததியில்”ச தோதய சங்கராதிகர்வ:
ஸ்வபலாத் உத்த்ருதயாதவ ப்ரகாச:, அவரோபிதவாந்சருதேரபார்த்தாந் நநு ராமாவரஜஸ்
ஸ ஏஷ பூய :” என்ற ச்லோகம் இதற்கு ஆதாரமாக அவதரித்ததாகும். கண்ணபிரா
னுக்கும் உடையவர்க்கும் பல படிகளாலும் ஸாம்யமுண்டு. கண்ணபிரானாகத்
தோன்றின பகவான் செய்த செயல்களும் ஸ்ரீராமாநுஜர் செய்தருளின் செயல்களும்ஒத்திருக்கையாகிற ஒற்றுமையம் ஈண்டு நிரூபிக்கப்படுகிறது . மேலே யெடுத்துக்காட்டிய சமிதோதய சங்கராதிகர்வ: இத்யாதியான யதிராஜஸப்ததிலோக ரத்னத்தில் கண்ணனுக்கும் உடையவர்க்கும் ஸாம்யம் சிலேடையினால் நிர்வஹிக்கப்பட்டுளது: அது வடமொழிக்கடலில் ஆழ்ந்தவர்கட்கே ரஸிக்கக்கூடியது. 

கண்ணபிரான் திருவவதாரஞ் செய்த இடம் சிறைக் கூடம் என்பது உலகமறிந்தது. ஸ்ரீராமாநு ர் அவதரித்த இடமும் சிறைக் கூடமே. எப்படியெனில்:* அமரரோடு உயர்விற்சென்று அறுவர்தம் பிறவி யஞ்சிறையே * (திருவாய்மொழி1-3-11] என்ற நம்மாழ்வார் திருவாக்கின்படி இந்த ஸம்ஸார மண்டலமே ஒரு சிறைக்கூடமன்றோ. இஃது * இருள்தருமா ஞாலமாதலால் இருள் மலிந்த விடத்தேவந்து பிறந்தார் உடையவர். கண்ணனும் * இருள் நாள் பிறந்த வம்மான் * என்ற திருமங்கையாழ்வர் பாசுரத்தின்படியும் * வேண்டித் தேவரிரக்க- வீங்கிருள்வாய் வந்து பிறந்ததும் * என்ற நம்மாழ்வார் பாசுரத்தின் படியும் இருள்மலிந்தபோழ் தன்றோ வந்து பிறந்தது.

கண்ணபிரான் அவதரித்தபோது ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ரகதாதர!-என்கிறபடியே சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையனாகவே சுடர்விளக்கத்தோடு திருவவதரித்தான். ஸ்வாமி அவதரிக்கும்போதும் நம்போலியரைப்போலே அழுதல் அரற்றுதல் செய்யாதே மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்கத்தையே காட்டிக் கொண்டு அனைவரும் வியப்புறுமாறு அவதரித்தார்.

கண்ணபிரான் பிறந்த விடம் ஒன்று; இளமையில் வளர்ந்த விடம் வேறொன்று; பிறகு வளர்ந்தவிடம் மற்றொன்று. (அதாவது) வடமதுரையிலே பிறந்தது ; திருவாய்ப்பாடியிலே இளமையில் வளர்ந்தது ; பிறகு முதுமையில் த்வாரகை முதலான விடங்களில் வளர்ந்தது. நம் ஆசாரியரும் பிறந்தது, ஸ்ரீபெரும்பூதூரில் ; இளமையில் வளர்ந்தது காஞ்சீபுரியில்; பிறகு வளர்ந்தது ஸ்ரீரங்கம் திருநாராயணபுரம் முதலான விடங்களில்

“திருமந்திரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து என்கிற நம்முன்னோர்களின் முதுமொழியின்படியே திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தினால் ஸ்வரூப வுணர்ச்சி பெறுதலாகிற பிறவியைப்பெற்று. த்வயம் என்கிற மந்த்ரரத்னத்தின் அநுசந்தானத்தையும் அதன்படி அனுட்டானத்தையுமே செல்வ வா ழ்ச்சியாகக் கொண்டிருப்பவரென்க. பிறக்குமிடம் திருமந்த்ரம் ; வளருமிடம் த்வயம்- ஆக இதனாலும் கண்ணனோடு ஒப்புமை.

கண்ணபிரான் பிறந்த வயிற்றில் இவனொருவனே பிறக்கவில்லை: *மக்களறு
வரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில். சிக்கன வந்து பிறந்து நின்றாய் *
(பெரியாழ்வார் திருமொழி 5-3-1) என்கிறபடியே மற்றும் பல மக்கள் பிறந்தாருண்டு: ஆனால் அந்தப் பிள்ளைகளினால் உலகுக்கு யாதொரு உதவியும் நேர்ந்ததில்லை: அவர்கள் பிறந்ததும் இறந்ததுமே தெரியவருகின்றது. இதுபோல,எம்பெருமானார் திருவதரித்த இவ்வுலகத்தில் மற்றும் பலபேர்களும் ஒக்கப்பிறக்கின்றார்களெனினும் அவர்களால் உலகுக்கொரு நன்மையுமில்லையாயிற்று.அவர்களின் பிறப்பும் இறப்புமே தான் உலகுக்குத் தெரியும்.

கண்ணபிரான் வடமதுரையில் நின்றும் திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளும்போது “வ தேவோ வஹந் க்ருஷ்ணம் ஜா நுமாத்ரோதகோ யயௌ” என்னும்படி பேராழமான பெருவெள்ளமும் முழந்தாளளவாக வற்றிப்போயிற்றென்று தெரியவருகிறது.அதுபோல், நம் ஆசாரியர் சிறிது ஸஞ்சரிக்கத் தொடங்கும்போதே ” பிறவியென்னுங்கடலும் வற்றிப் பெரும்பதமாகின்றதால்” என்ற பெரியாழ்வார் திருவாக்கின்படியே ஸம்ஸாரமாகிற பெருங் கடலும் வற்றத் தொடங்கிற் றென்க.

பராத்பரனான பெருமான் தனது பெருமைகளை யெல்லாம் மறைத்து அடக்கிக்கொண்டு நீறு பூத்த நெருப்புப்போலேயாகி இடக்கை வலக்கை யறியாத ஆயர்களோடே கலந்து பழகினான்; அதுபோல் எம்பெருமானாரும் மிகுஞானச் சிறுகுழவியாய்த் தமது ஞானசக்திப்பெருமைகளையெல்லாம் மறைத்துக்கொண்டு அறிவிலா மனிசரோடே கலந்து பழகியிருந்தனர். கண்ணன் இடையர்களோடு மாத்திரம் கலந்து பழகி யிருந்தானல்லன்; தன்னை வதைக்க வழிபார்த்திருந்த ஆஸுரப்ரக்ருதி களோடும் கலந்திருந்து காலங்கழித்தனன்.எம்பெருமானாரும் தம்மை மாய்க்க வெண்ணின யாதவப்ரகாசர் போல்வாரிடத்திலும் கலந்திருந்து காலங் கழித்த துண்டே. கண்ணன் விரோதிகளை முடித்தனன் ; இவர் வாழ்விப்பதும் செய்தனர்.

வளர்ந்தருளுமிடத்தில் தீயபுந்திக் கஞ்சனால் ஏவப்பட்ட பூதனை தாய்வேஷம் பூண்டுவந்து நஞ்சு தீற்றிய முலையை உண்ணக் கொடுத்துக் கண்ணனைக்கொல்ல முயன்று தானே முடிந்துபோனாள். இந்தப் பூதனையின் வரலாற்றைப் பேசுகின்ற தேசிகர் யாதவாப்யுதயத்தில் + கம்ஸப்ரயுக்தா கில காபி மாயா என்று மாயை என்கிற சொல்லால் கூறினர். மாயை யென்று மூலப்ரக்ருதிக்குப்பெயர். அது உண்மையில் விஷம்போன்றதா யிருக்கச் செய்தேயும் தன்னிடத்தில் போக்யதாபுத்தியை யுண்டுபண்ணிக் கொண்டு தன்பக்கலிலே யீடுபடுத்தி நம்போல்வாரை முடிக்கப் பார்க்கிறது. இப்படியே ஆசாரியரையும் முடிக்கப் பார்க்கையில் அவரை முடிக்க மாட்டாமல் அவரது அளவற்ற பெருமையினால் தானே முடிந்து நின்றது.

* கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி (திருப்பாவை – 6] என்றபடி அஸ் ராவேசம் பெற்றவொரு சகடத்தைக் கண்ணன் திருவடிஸ்பசத்தால்நொறுக்கிமுறித்து முடித்தனன் என்பது ப்ரஸித்தம்.எம்பெருமானாரும் தமது திருவடி ஸ்பர்சத்தினால்சகடபங்கஞ் செய்தவரே, (எப்படியெனில்)ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுபோகும் ஸாதனம் சகடமெனப்படுவது. இங்கிருந்து நாம் அப்பால் செல்லப் பல வழிகளுண்டு ; நரகம் சுவர்க்கம் முதலானவற்றின் வழிகளிற்கொண்டு செல்லுவது கள்ளச் சகடமாகும்: நம் ஆசாரியருடைய திருவடி ஸம்பந்தத்தினால்அது தொலைந்தொழிந்ததேயாம். அர்ச்சிராதி மார்க்கமாகிய நல்வழியிற் செல்லும் ஸா தனமே மேம்பட்டுத் தீயவழிகளில் செல்லும் ஸாதனம் சிதைந் தொழிந்ததென்க.

கயிற்றினால் கட்டி ஓருரலிலே பிணித்துவிடப்பெற்ற கண்ணன் அவ்வுரலையுமிழுத்துக் கொண்டு தவழ்ந்து இரட்டை மருதமரங்களின் நடுவே யெழுந் தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப்பட்டபடியினாலே அந்த இரட்டை மரங்களிரண்டும் முறிந்து விழுந்தனவாகயமளார்ஜுன பங்க விருத்தாந்தமுள்ளது. இணைபிரியாதே நின்ற இரட்டை மருத மரங்கள் போல இணை பிரியாது நின்று நம்மை நலியுமவை பலவுண்டு ; பகவத் கீதையில் நான்காவது அத்யாயத்தில்-த்வந்த்வாதீதோ விமத்ஸர என்றும் ஏழாவது அத்யாயத்தில் த்வந்த்வமோஹே பாரத என்றும் பதினைந்தாமத்யாயத்தில் த்வந்த்வைர் விமுக்தாஸ் ஸுக து:க்க ஸம்ஜ்ஞை: என்றும் இப்படிப் பலவிடங்களில் த்வந்துவம் (இரட்டை)என்று பல சொல்லப்பட்டுள்ளன; இன்பு துன்பு. அஹங்கார மமகாரம்,காம க்ரோதம், புண்ணிய பாபம்.. என்னுமிவை யெல்லாம் இரட்டைகளாம். இவை யெல்லாம் எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்றவளவிலே இற்றொழிந்தன வென்க. காமாதி
தோஷ ஹரமாத்மபதா ரிதாநாம்.”

*வையமேழுங் கண்டாள் பிள்ளைவாயுளே * என்றும் * வாயுள் வையகங் கண்ட மட நல்லார் * என்றும் சொல்லுகிறபடியே கண்ணபிரான் தனது திருவாயில் ஏழுலகங்களையும் அன்பர்களுக்குக் காட்டினன். அதுபோல எம்பெருமானாரும்-1. ச்ருதிகள், 2. ஸ்மிருதிகள், 3. இதிஹாஸங்கள், 4. புராணங்கள், 5. பாஞ்சராத்ரங்கள், 6. ஆழ்வாரருளிச்செயல்கள். 7.ஆசார்ய திவ்யஸுக்திகள் ஆகிய ஏழையும் தமது திருவாக்கில் அன்பர்கட்குக் காட்டி யருளினர்

யமுனையாற்றில் ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன்
விஷாக்னியினால் கொதிப்படைந்தநீரூள்ளதாக்கிப் பெருங்கேடு விளைத்தகாளியனென்
னுங் கொடிய நாகத்தைக் கண்ணபிரான் கொழுப்படக்கினன். இவ்வரலாற்றை
யாதவாப்யுதய காவியத்தில் தேசிகர் கூறுமிடத்து (4-125) ஸ்ரீ ராமா ஐர் செய்
தருளின் செயலையே உவமையாகக் காட்டியருளினர். ஐந்தலைவாய் நாகமாகிய காளி
யன் யமுனையாற்றைக் கலக்கிக் கெடுத்தது – விஷவாக்குக்களான புறம த்தவர்கள்
மனம்போனபடியெல்லாம் கூறும் தவறான பொருள்களாலே வேதங்களைக் கெடுத்த
படியாம். அந்தக் கெடுதியைக் கண்ணபிரான் நீக்கி யமுனையை எல்லாரும் இனிமை
யாகப் பருகும்படி செய்தது -ஸ்வாமி தவறான பொருள்களை நீக்கி நல்ல பொருள்களை
வெளியிட்டு வேதத்தை ஸத்துக்களுக்கு உப வ்யமாக ஆக்கின படியாம். யமுனையின்
ஸ்தானத்தில் வேதம்: காளியன் ஸ்தானத்தில் குதர்க்கவாதிகள் ; கண்ணன் ஸ்தானத்துல் ஆசாரியர். * தூய பெரு நீர் யமுனைத் துறைவனை * என்னும்படி யமுனையாறு
இடையறாத பகவத் ஸம்பந்தத்தை யுடையதா யிருந்தது போல வேதமும் பகவத் ஸம்பந்தத்தை நியதமாக வுடைத்தா யிருக்குமிறே.

காளியன் ஐந்து தலைகளாலும் நஞ்சை யுமிழ்ந்து நாசம் விளைவித்தது போல் புறமதத்தவர்கள். ஐந்துவிதமான துர்வாதாங்களாலே நாசத்தை விளைவிக்கின்
றனர் ; (எப்படி யென்னில்) 1. ஈச்வரனே யில்லையென்னுதல்,2. ஈச்வரன் உண்டெனி
லும் அவன் அனுமானத்தால் ஸித்திப்பவனேயன்றி சாஸ்த்ரத்தால் ஸித்திப்பவனல்
லன் என்னுதல்; 3. சாஸ்த்ரங்களைக்கொண்டு ஈச்வரனை யாங்கீகரித்தும் அவனுக்குக்
குணங்களும் விக்ரஹமும் இல்லை யென்னுதல் ; 4. ஈச்வரன் ஒருவனே யென்பதில்லை.
பல ஈச்வரர்கள் உண்டென்னுதல், 5.பிரபஞ்சமேயில்லை- ஸர்வம் குன்யம் என்னுதல்.
ஆக இப்படிப்பட்ட ஐவகையான அபார்த்தங்களினால் புறமதத்தவர்கள் வேதங்களைக் கெடுக்க. அந்தக் கெடுதல்களை எம்பெருமானார் போக்கியருளினர், காளியன் தலையிலே
கண்ணபிரான் அடியிட்டுநடனம் புரிந்தாப்போலே நாவலிட்டுழிதருகின்றோம் நமன் தமர் தலைகண்மீதே ( திருமாலை-1) என்ற கணக்கிலே யமபடர்களின் தலைமீதும் குத்ருஷ்டிகளின் தலைமீதும் கூத்தாடப் பெறுவோம்.

குதிரை வடிவங்கொண்டு மஹாபயங்கரனாக வந்த கேசி யென்னு மஸ்ரனைக் கண்ணபிரான் தொலைத்தருளினன்; அதுபோல நம்பேராசிரியர் இந்த்ரியாணி
ஹயாநாஹு : என்றஉபநிஷத்தின்படியே குதிரைகளாகச் சொல்லப்பட்ட இந்திரியங்களின் வலியை யடக்கிஜிதேந்த்ரியராய் * மதநகதகைர் ந க்லிச்யந்தே யதீசவரஸம்சரயா: வ (யதிராஜஸப்த்தி)என்று சொல்லும்படி வாழ்ந்தவர்.

கம்ஸனால் ஏவப்பட்ட அசுரர்களில் ஓரசுரன் விளாமரத்தின் வடிவமாய். தன் கீழே கண்ணன் வரும்போது மேல் விழுந்து கொல்வதாக எண்ணிவந்து நிற்கவும். மற்றொரு அசுரன் கண்ணனை முட்டிக்கொல்லும்பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு நிற்கவும் இவற்றையறிந்த கண்ணபிரான் “விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே ” “கன்றுகொண்டு விளங்கனியெறிந்து’ என்கிறபடியே கன்றைச்சுழற்றி விளவின்மீ தெறிந்து இரண்டையும் ஒருசேரமுடித்தருளினன் என்ற வரலாறு முள்ளைக்கொண்டே முள்ளைக் களைகிறபடியைக் காட்டுகின்றது. இதுபோலவே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யகாரர் புற மதங்களைக் கண்டிக்குமிடத்து அவை பரஸ்பர யாஹதங்களா யிருக்குபடியை நன்கு நிரூபித்துக்காட்டி அவைகளைக் கொண்டே அவற்றை மறுத்தொழிப்பவர்.

இடையர்கள் வழக்கப்படி இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பற்பல வண்டிகளில் சோறும் தயிரும்.நெய்யும்,காய்கறிகளும் சேகரிப்பதைக்கண்டு கண்ணன் அப்பூசனை யனைத்தையும் கோவர்த்தனமலைக்கே இடும்படி கட்டளையிட்டுத் தானே ஒரு தேவதாரூபங் கொண்டு அவற்றை முற்றும் அமுதுசெய்தருள. இந்திரன் பசிக்கோபத்தினால் மேகங்களை ஏவிக்கடூரமான கல்மழையை ஏழுநாள் பெய்விக்க, அதனால்யார்க்கும் யாதொரு தீங்கும் நேரிடாதபடி கண்ணன் அம்மலையையே குடையாக வெடுத்துப்பிடித்து நின்றனன் என்பது ப்ரஸித்தமான கதை: தேவதாந்தரத்திற்கு வழிபாடு செய்வதைப் பொறாத தன்மையும் அந்தவழிபாடுகளையெல்லாம் தானே ஏற்றுக்கொள்ளும் தன்மையும், அதனால் எதிரி என்ன தீங்கு செய்ய நினைத்தாலும்அதற்குப் பிரதியாகத் தீங்கிழைக்க நினையாத பெருந்தகவும், தன்னையடுத்தவர்களைத் தான் ரக்ஷித்துக்கொண்டு நிற்றலுமாகிய விஷயங்கள் இவ்விதிஹாஸத்தில் கிடைக்கின்றன- மறந்தும் புறந்தொழாமாந்தர் என்றிருக்குமாசிரியர் தேவதாந்தரபஜனத்தைச் சிறிதும் ஸஹியார். ” திருவில்லாத் தேவரைத் தேறேல்மின்தேவு” என்று துணிந்து உபதேசிப்பர். ஸாக்ஷாத் நாராயணோ தேவ : கருத்வா மர்த்யமயிம்தநும், மக்நாநுத் தரதே லோகாந் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா என்றும் பிதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றுஞ்சொல்லுகிறபடியே எம்பெருமானே ஆசார்ய னாக வந்து பிறந்ததனால் ஆராதனைகளெல்லாம் ஆசார்யனுக்கே சேரும். ” குற்றஞ் செய்தவர்கள் பக்கல் பொறையும் க்ருபையும் சிரிப்பும் உகப்பும் உபகாரஸ்ம்ருதியும் நடக்கவேணும்“(ஸ்ரீவசனபூஷணம் 305) என்றிருப்பவர் ஆசார்யராகையாலே தீங்கிழைப்பவர் திறத்திலும் ப்ரதியாகத் தீங்கிழைக்க நினையார். பெருமழையில்நின்றும் கண்ணன் காத்தருளினதுபோல் அவிவேக கநாந்த திங்முகே பஸுதா ஸந்ததது:க்கவர் ஷிணி-பவதுர்த்திநே [ஸ்தோத்ரரத்னம் 49] என்னப்பட்ட பெருமழையில் நின்றும்(அதாவது, ஸம்ஸாரத் துயர்ப் பெரு மழை யினின்றும் )காத்தருளினர். கண்ணன் ஏழுநாள் காத்தனன். ஆசிரியர் காப்பது ஏழேழ்ப்பிறவிக்கும். 

கண்ணன் நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்துகொள்ளுதற்காக.அவளது தந்தை க யாசுல்கமாகக் குறித்தபடி அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளைவலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்துகொண்டனன்.நம் பரமாசார்யர் “எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கள ஸூத்ரம்போலே திருமந்த்ரம்[முமுக்ஷப்படி 113) என்கிறபடியே திருமந்திரமாகிற திருமங்கலியத்தை சேதநர்களுக்குக் கட்டி விவாஸம் நடத்துகைக்கு அங்கமாக.காமம். குரோதம். லோபம். மோஹம்.மதம் மாத்ஸர்யம் அஸூயை என்கிற ஏழு விரோதிகளையும் தொலைத் தருளினர். கண்ணன் இரண்டு மல்லர்களை மடித்ததுபோல ஆசிரியர் * நீர்நுமதென்றிவை வேர்முதல்மாய்த்தும் என்கிறபடியேஅஹங்கார மமகாரங்களை அடியறுத்தவர்.கண்ணன் குவலயா பீடமென்கிற மதயானையை முடித்தாப்போலே: மதக்களிறைந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ” என்கிற பொய்கையார் பாசுரத்தின் படியேமதகளி ாகிய இந்திரியத்தின் துஷ்டத்தன்மையைத் தொலைத்தவர். கண்ணன் மாலாகாரர் திருமாளிகைக் கெழுந்தருளி அவர் தந்த பூவைப்பெற்று உகந்ததுபோல நம்
ஆசிரியர் * அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ. ஸர்வபூதயா புஷ்பம் க்ஷமா
புஷ்பம் விசேஷத:, ஜ்ஞாநம் புஷ்பம் தப: புஷ்பம் த்யாநம் புஷ்பம் ததைவச, ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத் என்னப்பட்ட எண்பகர் பூவையும் சிஷ்யர்கள் பக்கலிலே செழித்து வளரக் காணப் பெற்றுக் களித்தவர்.

கண்ணபிரான் கம்ஸ் சிசுபால கௌரவ ப்ரப்ரூதிகளை முடித்துப் பஞ்சபாண்டவாதிகளை வாழ்வித்தது போல நம் பரமாசார்யர் * தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்நிற்கக் குறும்பு செய்சரும் மாண்டனரென்னுபடியாக *நாட்டிய நீத்த சிமயங்களைமாள்வித்து அர்த்தபஞ்சகம் முதலிய விசேஷார்த்தங்களை எங்கும் விளங்கச் செய்தனர்

———–

மநுஸ்மிருதியில் பதினெட்டு-(அத்.1. சுலோ.85) * அந்யே க்ருதயுகே தர்மா த்ரேதாயாம் த்வாபரே அபரே. அந்யே கலியுகே ந்ரூணாம் யுகஹ்ராஸாநுரூபத; * = தருமங்கள் எப்போதும் ஒரு படிப்பட்டே யிருக்கமாட்டா.யுகங்களுக்குத் தக்கபடி தருமங்கள் குறைந்துகொண்டே
வரும் என்கை. இதற்கடுத்த சுலோகத்தில், க்ருதயுகத்தில் தபஸ்ஸுக்கு ப்ராதான்ய மென்றும்,த்ரேதாயு த்தில் ஜ்ஞானத்திற்கு ப்ராதான்யமென்றும், த்வாபரயுகத்தில்
ய ஞத்திற்கு ப்ராதான்யமென்றும். கலியுகத்தில் தானமொன்றுக்கே ராதான்ய
மென்றும் சொல்லப்பட்டுள்ளது. வேறோரிடத்தில் த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞைஸ்
த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயங்,யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்
என்று க்ருதயுகத்தில் த்யானத்துக்கு ப்ராதான்யமும், துரேதாயுகத்தில் ய ஞத்துக்கு
ப்ராதான்யமும், த்வாபரயுகத்தில் அர்ச்சனைக்கு பராதான்யமும், கலியுகத்தில்நாம
ஸங்கீர்த்தனத்திற்குப்ராதான்யமும் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாமத்யாயத்தில் 36. 37, 38 ஆம் சுலோகங்கள் குறிக்கொள்ளத்
தக்கவை. (36ல்) கர்ப்பாஷ்டாமே அப்தே குர்வீத ப்ராஹ்மண ஸ்யோபநாயநம் என்று
கர்ப்பாஷ்டமமாகிய ஏழாவது வயதில் பிராமணனுக்கு உபநயனம்பண்ணவேண்டு
மென்றது. (37ல்) ப்ரஹ்மவர்ச்சஸ காமஸ்ய கார்யம் விப்ரஸ்ய பஞ்சமே * = ஐந்தாவது
வயதிலேயே உபநயமம் பண்ணினால் அப்போதிருந்தே வேதாத்யயன ஸம்பத்து
மலிந்து ப்ரஹ்மவர்ச்சஸம் மிகும் என்றபடி. இங்கு பஞ்சமே என்பதற்கு “கர்ப்ப
பஞ்சமே” என்றே வியாக்கியானம் செய்கிறார்கள். நான்காவது பிராயத்திலென்ற
தாயிற்று. (3 ல்) * ஆஷோடசாத் ப்ராஹ்மணஸ்ய ஸாவித்ரீ நாதிவர்த்ததே = இதனால்
பிராமணனுக்குப் பதினாறாவது வயது வரையில் உபநயனகாலம் அனுமதிக்கப்படு
கிறது. இதே சலோகத்தில் க்ஷத்ரியனுக்கு இருபத்திரண்டாம் வயது வரையிலும்,
வைச்யனுக்கு இருபத்துநான்காம் வயது வரையிலும் உபநயன்காலம் அனுமதிக்கப்
பட்டிருப்பதால் இக்காலத்து ப்ராஹ்மணப்பிள்ளைகளுக்கு க்ஷத்ரிய வைச்ய தர்மமே
கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது

இரண்டாமத்யாயத்திலேயே (127) நூற்றிருபத்தேழாம் சுலோகம்-சுப்ராஹ்மணம் குசலம் ப்ருச்சேத் க்ஷத்ரபந்து மநாமயம். வைச்யம் க்ஷேமம் ஸமாகம்ய சூத்ரம் ஆரோக்யமேவ ச .= இதில் (ஸமாகம்ய என்றது ப்ராஹ்மணம் ஸமாகம்ய, க்ஷத்ர பந்தும் ஸமாகம்ய, வைச்யம் ஸமாகம்ய, சூத்ரம் ஸமாகம்ய என்றபடி.பராம்மணன் அணுகினால் குசலமா? என்று கேட்கவெண்டியது ; க்ஷத்ரியன் அணுகினால் அநாமயமா?என்று கேட்க வேண்டியது. வைச்யன் அணுகினால் ஸேமமா? என்று கேட்கவேண்டியது. சூத்ரன் அணுகினால் ஆரோக்யமா ? என்று கேட்கவேண்டியது. இதில் குசலம் க்ஷேமம் என்கிற பதங்களும். அநாமயம் ஆரோக்யம் என்கிற பதங்களும் பரியாயமேயானாலும் இங்கு அர்த்தத்தில் நோக்கில்லை ; உச்சரிக்க வேண்டிய சப்தத்தில்நியமம் விவக்ஷிதம் என்பர் வியாக்க்யாதா. இது யுக்தமே.

இரண்டாமத்யாயத்திலேயே (131.) நூற்றுமுப்பத்தோராம் சுலோகம்
மாத்ருஷ்வஸா மாதுலா நீ ச்வச்ரூ அத பித்ருஷ்வஸா. ஸம்பூஜ்யா குருபத்ரீவத் ஸமாஸ் தா
குருபார்யயா. * = சிறிய தாயார் அம்மாமி மாமியார் அத்தை ஆகிய இவர்கள் ஆசார்ய பத்னியோடொத்தவர்களாகையாலே அவளைப்போலவே இவர்களை வழிபட வேண்டு
மென்கிறது. எழுந்திருத்தல் தொழுதல் செய்யவேண்டிய தென்கை. இதற்குமேல்
140,141-ஆம் சுலோகங்களில் இன்னாருக்கு ஆசார்யரென்று பெயர், இன்னாருக்கு உபாத்யாயரென்று பெயர் என்பது தெரிவிக்கப்படுகிறது. (140) * உபநீய து யச்
சிஷ்யம் வேதம் அத்யாபயேத் த்விஜ, ஸகல்பம் ஸரஹஸ்யஞ்ச தமாசார்யம் ப்ரசக்ஷதே. =
சிஷ்யனைத் தம்மிடத்திலேயே வைத்துக்கொண்டு கல்பம் ரஹஸ்யம் இவற்றோடுங்கூட
வேதச கையைப் பூர்த்தியாக ஓதுவிப்பவரை ஆசார்யரென்று கூறுவர்கள். (141.)
ஏகதேசம்து வேதஸ்ய வேதாங்காந்யபி வாபுந, யோத்யாபயதி வ்ர்த்த்யர்த்தம் உபாத்யாயஸ்
ஸ உச்யதே.க வேதத்தில் ஏகதேசத்தையோ (அல்லது) வியாகரணம் முதலான வேதாங்கங்களையோ வருத்திக்காக ஓதுவிப்பவர் உபாத்யாயரெனப்படுவர். இதற்கு
மேல் (145-ல்)* உபாத்யாயாந் தசாசார்ய இத்யாதியில், பத்து உபாத்யாயர்களுக்கு
ஸமமானவர் ஒரு ஆசார்யரென்றும். நூறு ஆசாரியர்களுக்கு ஸமமானவர் ஒரு பிதா
என்றும், ஆயிரம் பிதாக்களுக்கு ஸமமானவள் ஒருமாதா என்றும்சொல்லப்படுகிறது.
இதற்குமேல் 225, 226-ஆம் சுலோகங்களில் இன்னும் விசேஷம் சொல்லப்படுகிறது.
ஆசார்யன் பரமாத்மாவின் வடிவமானவன்.பிதா பிரமனுடைய வடிவமானவன்.
மாதா பூமிப்பிராட்டியின் வடிவமானவள். ஆசார்யன் தந்தை தாய் தமையன் ஆகிய
இவர்களால் தனக்கு ஏதேனும் பீடையுண்டானாலுங்கூட இவர்களை பிராமணன்
அவமதிக்கவே கூடாது என்கிறது .

ூன்றாவதத்யாயத்தில் (77, 78- ஆம் சுலோகங்களில்) க்ருஹஸ்தாச்ரமிக்கு
மிக்க ஏற்றம் சொல்லப்படுகிறது . (77)+ யதா வாயும் ஸமாச்ரித்ய வர்த்தந்தேஸர்வ
ஐந்தவ. ததா க்ருஹஸ்தமாச்ரித்ய வர்த்தந்தே ஸர்வ ஆச்ரமா ஸர்வப்ராணிகளும்
வாயுவை யவலம்பித்தே வாழ்வதுபோல ஸர்வாச்ரமிகளும் க்ருஹஸ்தாச்ரமியை யவ லம்பித்தே வாழவேண்டியிருக்கிறது. வாயுவில்லையானால் மூச்சடங்கிவிடும்; க்குஹஸ்
தனில்லையானால் ப்ரஹ்மசாரிகளும் ஸம்ந்யாஸிகளும் ஜீவிக்க முடியாதென்றபடி.
அடுத்த சுலோகத்தினால் இது உப்பாதிக்கப்படுகிறது. யஸ்மாத் த்ரயோ பயாச்ர
மிண ஜ்ஞாநேந அந்நேநசாந்வஹம் . க்ருஹஸ்தேநைவ தார்யந்தே தஸ்மாத் ஜ்யேஷ்டாச்ரமோ க்ருஹீ. ] வேதார்த்தவியாக்கியான முகத்தாலும் அன்னதான முகத்தாலும்க்ருஹஸ்தனே மற்றஆச்ரமிகளுக்கு உபகாரகனென்கை. ஆன துபற்றியே காளிதாஸர் ரகுவம்சத்தில் “ ஸர்வோபகார க்ஷமமாச்ரமம் தே என்றார்.

மூன்றாமத்யாயத்திலேயே (சுலோ. 238-ல்) போஜன காலத்து நியமம் கூறப்படுகிறது. யத்வேஷ்டிதசிரா புங்க்தே இத்யாதி. முட்டாக்கிட்டுக்கொண்டு உண்ணலாகாது ; தெற்கு முகமாயிருந்து உண்ணலாகாது. பாதரக்ஷை யணிந்து கொண்டுஉண்ணலாகாது. இந்த நிஷேதத்திற்குக் கட்டுப்படாமல் உண்டால் அந்த வுணவு ராக்ஷஸர்களுக்கே சேரும். (இந்த மூன்றாமத்யாயம் 286 சுலோகங்கள் கொண்டது ; பூர்த்தியாக ஊன்றி வாசிக்கத்தக்கது.)

நான்காமத்யாயத்தில் ஜீவிக்க வேண்டிய வழிகள் கூறப்படுகின்றன. ருதாம்ருதாப்யாம் ஜீவேத் து ம்ருதேந ப்ரம்ருதேந வா. ஸத்யா ருதாப்யாமபி வா நச்வ வ்ருத்த்யா கதாச பிறர்க்குத் தொண்டு செய்து ஜீவிப்பது கூடாதென்று முடிவாகச் சொல்லி, ருதம் அம்ருதம் மருதம் ப்ரம்ருதம் ஸத்யாந்ருதம் என்னும் வழிகளால் ஜீவிக்கலாமென்கிறது. இந்த பதங்களெல்லாம் விவரணஸாபே மாகையாலே மேலே மஹர்ஷிதாமே விவரிக்கிறார். ருதம் உஞ்சம் ஸிலம் என்று பர்யாயம். தட்டுத்தடை யில்லாதவிடங்களில் ஓஷதிகள் முளைத்ிருக்குமே. அவற்றை ஒவ்வொன்றாகக் கிள்ளிக் கொய்து கொள்ளுமது உஞ்சம் ; கொத்துக்கொத்தாகக்கொய்துகொள்ளுமது ஸிலம். இனி அம்ருதம் என்பது அாசிதம். இரந்து பெறாமல்,பாத்ரவிநியோகம் பண்ணுமவர்கள் கொடுப்பதைக் கொள்ளுவது அம்ருதம். இரந்து பெறுமது ம்ருதம்.க்ருஷி யினால் கிடைக்குமது ப்ரம்ருதம். ஸத்யாருத மென்று வாணி யத்திற்குப் பெயர் : அதாவது வர்த்தகம். மெய்யும் பொய்யும் கலந்து வாணிஜ்யம் நடத்தப்படுவதால் அதற்கு ஸத்யாந்த மென்று பெயர் போலும். ஆக இவற்றால் ஜீவிக்கலாமேயொழிய ஸேவகவருத்தியால் ஒரு போதும் ஜீவிக்கலாகாது. * ஸேவா ச்வவ்ருத்திராக்க்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் என்றுகடுமையாகச் சொல்லி முடிக்கிறார். இதைக் கண்ட ஒரு அபியுக்தர் சொல்லி வைத்தார்-” ஸேவா ச்வவ்ருத்திரிதியத் அபத்தம் தத்உதீரிதம். ஸ்வைரசாரீ க்வ சுநக விக்ரீதாஸு க்வ ஸேவக?”. [இதன் பொருளாவது. அடிமைப் படுவதை நாய்வேலையென்று மநுமஹர்ஷி கூறியது தவறு; ஒருவர்க்கும் அடிமைப்படாமல் யதேஷ்டமாகத்திரிகிற நாய்எங்கே ? நாலுகாசுக்கு உயிரை அறவிலை செய் திருக்கும் சேவகன் எங்கே? என்பதாம். இதனால் சேவகன் நாயினும் கடை கெட்டவன் என்றதாயிற்று.] குணங்கண்டு ப்ராப்த விஷயத்திலே ஸேவகனாயிருப்பவனைப் பற்றியதன்று இந்த நிந்தை.

நாலாமத்யாயத்திலேயே (ச்லோ.18.) வயஸ் கர்மணோர்த்தஸ்ய ச்ருதஸ்ய அபிஜநஸ்ய ச. வேஷவா வருத்தி ஸாரூப்யமாசரந் விசரேதி . + = இந்த சுலோகம் ஒவ்வொருவருடைய சிந்தனையிலுமிருக்கவேண்டும். வேஷம் வாக்கு வ்ருத்தி என்னுமிவை மூன்றும் வயதுக்கும் தொழிலுக்கும் பொருளுக்கும் படிப்புக்கும் குலத்துக்கும் தக்கபடி யிருக்கவேண்டுமென்பது பொருள். இதன் கருத்தை விவரிப்போம். வேஷ
மாவது அரையில் துணிகட்டுதல், நெற்றியில் புண்ட்ரமணிதல், ஆபரணம் பூணுதல் பூமுடித்தல் முதலியன. இவை வயத்துக்குத் தக்கபடியிருப்பதாவது – சைசவம் கெளமாரம் யௌவநம் ருத்தாப்யம் ஆகிய பருவங்களுக்குத் தக்கபடியிருப்பதாம். வயதுக்கு மட்டுமன்று; தொழிலுக்கும் தக்கபடி இருக்க வேணும். லௌக்கத் தொழிலுக்குத் தக்க வேஷம் வேறு; வைதிகத் தொழிலுக்குத் தக்க வேஷம் வேறு என்பதுதெரிந்ததே. அர்த்தஸ்ய =தனத்திற்கும் தக்கபடியிருக்கவேணும். தனிகன் கொள்ளத்தக்க வேஷத்தை தரித்ரன் கொள்ளலாகாது ; தரித்ரன் கொள்ளத்தக்க வேஷத்தை தனிகன் கொள்ளலாகாது . சருதஸ்ய = படிப்புக்குத்தக்கபடி வேஷமிருக்க வேணும். வித்வான்களின் வேஷம் வேறாகவும், படிப்பில்லாத மூடர்களின் வேஷம் வேறாகவுமிருக்கத்தக்க தென்கை. அபிஜநஸ்யச= அபிஜநமாவது ஆபிஜாதியம், ஸ குலப்ரஸ்தத்வமென்றவாறு. உயர்குடிப் பிறப்பாளர் வேஷம் வேறு, அநபிஜாதர்களின்வேஷம் வேறு.ஆக இதுவரை வேஷத்தைப் பற்றிச் சொல்லியாயிற்று ; இனிவாக்கைப் பற்றிச் சொல்லுவோம். வாக்கும் வயது தொழில் பொருள் படிப்பு குலம்ஆகிய இவற்றுக்குத் தக்கபடியிருக்கவேணும். பெரியார் வாக்கில் வெளி வரவேண்டியது சிறியார் வாக்கில் வெளி வரலாகாது; சிறியார் சொல்லக் கூடியதைப் பெரியார்சொல்லலாகாது. நி ந காரியங்களைச் செய்பவன் சொல்லுமதை உத்க்ருஷ்டகாரி
யங்கள் செய்பவர் சொல்லலாகாது. தனிகர்கள் சொல்லக்கூடிய வாக்கை தரித்ரன்
சொல்லலாகாது. படிப்பாளிகள் சொல்ல வேண்டிய வாக்கை அறிவிலிகள் சொல்ல
லாகாது ; குலீனர்கள் சொல்லவேண்டிய வாக்கை அநபிஜாதர்கள் சொல்லலாகாது.
இனி வ்ருத்தியைப் பற்றிக்கேண்மின்.வ்ருத்தியாவது தானிருக்கவேண்டிய நிலைமை.
இதுவும்- வயது தொழில் பொருள் படிப்பு குலம் ஆகிய இவற்றுக்குத் தக்கபடியிருக்கத் தக்கது. இந்த சுலோகம் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் முமுக்ஷ த்வாதிகாரத்தில்
உதாஹரிக்கப்பட்டுள்ளது .

ஐந்தாவது அத்யாயத்தில்(சுலோ .39 ) யஜ்ஞார்த்தம் பசவஸ் ஸ்ருஷ்டா ஸ்வயமேவ ஸ்வயம்புவா, யஜ்ஞச்ச பூத்யை ஸர்வஸ்ய தஸ்மாத் யஜ்ஞே வத அவத * யாகத்தில் பசுவதம் செய்வது வதமாகாது என்று இந்த சுலோகத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப்படுகிறது. ப்ரஜாபதியினால் யஜ்ஞத்திற்காகவே பசுக்கள் விரும்பிப் படைக்கப்பட்டன. ய ஞமானது ஸகல்லோக க்ஷேமத்திற்காக ஏற்பட்டது.ஆகையினால்யஜ்ஞத்தில் செய்யப்படும் வதம் வதமன்று. வதத்தினாலுண்டாகும் பாபம் அணுகாதென்றபடி . இங்கே விசேஷித்துச்சில விஷயங்களைத் தெளிவாகத் தெரிவிக்கின்றேன்.அடியேனெழுதிய உபந்யாஸ சதத்வயத்தில் (54.) அக்நிகோத்ராதி யாக ரசம் ஸோபந்யாஸத்திலும், மேலே இதன் அநுபந்தமாக 151 பக்கம் முதல் 8.பக்கமும் இதைப்பற்றிமிக விரிவாக எழுதியிருக்கிறேன். தச்சே பூதமாக இங்கும் விளக்கமாகச் சில விஷயங்கள் தெரிவிக்கிறேன். யஜ்ஞத்தில் பசுவதம் செய்வது பாபமென்றுஅடியேன் நெஞ்சிலும் நினைத்ததில்லை.வாக்கினாலும் சொன்னதில்லை. எழுதற்றுமில்லை.பகவத்கீதை இரண்டாமத்யாயம் முப்பத்தோராம் சுலோகத்தின் பாஷ்யத்திலும்(அவ்விடத்துத்) தாத்பர்ய சந்த்ரிகையிலும் ஸாதித்திருப்பவைகளைக் காணதவனல்லேன். அர் நன் யுத்தத்தில் கொலை செய்ய நேருவதைப் பாபமாக நினைத்துப்பேசினபோது அவனுடைய மதத்தைக் கண்டிப்பதற்காகக் கண்ணபிரான் க்ஷத்ரியனுக்கு யுத்தம் அதர்மமன்று, தருமமேயாகும் என்று உபதேசிக்கிறான். அங்கு பாஷ்யகாரர் “அ நீஷோமீயாதிவத்” என்றும் “அ நீஷோமீயாதி ஷ ந ஹிம்ஸா பசோ?” இத்யாதிகளும் அருளிச் செய்கிறார். மருத்துவர்கள் செய்யும் சஸ்த்ரசிகித்ஸையையும் எடுத்துக் காட்டுகிறார். இங்குதாத்பர்ய சந்திரிகையில் “உக்தஞ்ச ம நா- தஸ் மாத்யஜ்ஞேவத அவத* இதி’ என்று இப்போதடியேனெடுத்துக் கொண்டு விமர்சிக்கும் சுலோகத்தின் கடைப்பகுதியையும் உதா ரித்துள்ளார்ஸ்வாமி. உதாஹரித்தது மட்டுமன்றிக்கே ஸாரமாக ஒரு ஸ்ரீ ஸூக்தியை யருளியுள்ளார். அதாவது : வத
இதி பாம்ரத்ருஷ்ட்யா அநுவாத , அவத இதி தத்வகதநம் “என்று. இதன் கருத்துஎன்ன
வென்றால், வதம் என்று சொல்லவே கூடாது; பாமரர்கள் இதைப்பாபமாக நினைக்
கிறபடியால் அநுவாதமாத்ரமிது ; உண்மையில் வதமன்று என்பதாம். யஜ்ஞத்தில்பசுவதம் செய்ய வேணுமென்கிற கொள்கையுடையார்க்குத் தெரியாத ப்ரமாணங்களையும் அதிகமாக அடியேன் தெரிந்து கொண்டிருக்கிறேனென்பது ஆத்மஸ்துதி யன்று, உண்மையுரை. க்ஷத்ரியர்களுக்கு யுத்தம் போலே ப்ராஹ்மணர்களுக்கு யஜ்ஞம். இதில் ஸந்தே மில்லை. நமக்கு ப்ராஹ்மண்யத்திற்காட்டிலும் பரமைகாந்தித்வம் மிகச்சிறந்தது. அந்த பாரமைகாந்தியத்திற்குபசுவதம் பண்ணிச்செய்ய வேண்டியதான யஜ்ஞம் அநர் ணம். . வதம் பாபமன்றே, அதைச் செய்தாலென்ன?”என்கிற கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பீர்கள். மநுஸ்ம் தி யில் இப்போது நாம் விமர்சிக்கிற சுலோகம் [5-39.] இதற்குமுன்னே இருபத்தாறாம் சுலோகத்தில் “ ஏததுக்கம் த்விஜாதீநாம் பக்ஷியாபக்ஷயம் அசேஷத, மாம்ஸஸ்யாத ப்ரவக்ஷ்யாமி விதிம் பக்ஷணவர்ஜநே” = இந்த சலோகத்தில் ” மாம்ஸஸ்ய பக்ஷணவர் நேவிதிம் வ யாமி “ என்றதற்குமாம்ஸபக்ஷணஸ்ய வர் நே என்று அர்த்தம்செய்யப்படவில்லை; ” பக்ஷணே வர்ஜநேச “என்று விவரிக்கிறார் குல்லூகப்பட்டர். உண்மையில் இதுதான் இங்கு அர்த்தம். மேலே மாம்ஸம் பக்ஷிக்கத்தக்கது,பக்ஷிக்கவேண்டியது என்பதையும் மநுமஹர்ஷி கூறியுள்ளார். உடனே “ப்ரோக்ஷிதம் பக்ஷயேந் மாம்ஸம் “ என்றுஆரம்பிக்கிறார். இங்கு “ யஜ்ஞஹுத பசுமாம்ஸபக்ஷணம் இதம் யஜ்ஞாங்கம் விதீயதே “ என்கிறார் வ்யாக்க்யாதா. சிலர்சொல்லுவதென்னவென்றால் ‘மாம்ஸபக்ஷணம் கலிவர்யத்தில் சேர்ந்துவிட்டபடியால் அதை பக்ஷிக்கக் கூடாது’ என்று. இங்ஙனே பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களை அடியேன் கேட்பது ஒன்றே; ‘கலியிலும் மாம்ஸமுண்ணலாம். என்று சாஸ்த்ரம் சொல்லிவிட்டால் பரமைகாந்திகள் உண்பர்களா? மிகவும் அருவருக்கக் கூடிய கார்யமன்றா இது. தேவரேணஸுதோத்பத்தியை கலியிலும் உபாதேயமாக சாஸ்த்ரம் விதித்து விட்டால் சிஷ்டர்கள் அ த யநுஷ்டிப்பர்களோ? வர்ஜ்ய மென்று தெரிந்தும் வர்ஜியாதவர்கள்
எத்தனை பேரில்லை. பசுவதத்தில் எங்களுக்கு அருவருப்பில்லை’ என்னுமவர்கள்
அதை தாராளமாகச் செய்யலாமென்று அடியேன் பலகால் எழுதியிருக்கிறேனே. அக்ரியாவதநர்த்தாய தத்து கர்ம ஸமாசரேத் என்று ர ஸ்யத்ரய ஸாரத்தில்
கையாளப்பட்ட வசனத்தைக் கண்ணெடுத்து பார்ப்பாரில்லையே, அகரணேப்ரத்ய
வாயம் காட்டித் தீரவேணுமே. அதைத் தேடிப்பிடித்துக் காட்டுகிறவரையில் * பசு
மாரண கர்மதாருணர்களின் வாதம்செல்லாது; வதம் செல்லும். ஆப்தரான ஒரு
வித்வான் அடியேனுக்கெழுதினார் – யஜ்ஞம் ஸாமா யமாக எல்லாரும் செய்ய
முடியாது ; அதற்கு த்ரவ்யஸம்பத்து வேண்டும்; அஃதுள்ளவர்கள் செய்யாதிருக்க
லாமா?” என்று. இதற்கு ஒரே வார்த்தை சொல்லி முடித்துவிடுகிறேன். கீதையில் மூன்றாமத்யாயத்தில் (8) * நியதம் குரு கர்ம த்வம் என்கிற சுலோகத்தின் பாஷ்யத்
திலே ” ந்யாயார்ஜிததநேந மஹாயஜ்ஞாதிகம் க்ருத்வா தச்சிஷ்டாசநேநைவ சரீரதாரணம் கார்யம்” என்கிறார் ஸ்வாமி. தனிகர்கள் தனத்தைக் கொண்டு பசுவதம்பண்ணி
மாம்ஸ்பக்ஷணம் பண்ணிதேஹதாரணம் பண்ணவேணுமென்றா இதற்குப் பொருள்? மேலே ஆறாமத்யாயத்தில் 37. அநதீத்ய த்விஜோ வேதாந் அநுத்பாத்ய ததா ஸுதார், அநிஷ்ட்வாசைவ யஜ்ஞச்ச மோக்ஷமிச்சந் வ்ரஜத்யத* என்னுமிந்த சுலோகத்தை ஆழ்ந்து விமர்சிக்க வேண்டா; மேலெழ விமர்சித்தாலும் போதும். வேத மோதா விடில் நரகம் புகுவன்,யஜ்ஞம் செய்யாவிடில் நரகம்புகுவன் என்றது ஸரி. இடையில் மக்கள் பெறாவிடில் நரகம் புகுவன்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. இது யாரைப் பற்றிச் சொன்னது ? என்று விமர்சிக்கவேண்டும். பகவத்கீதை 8-3ல் பாஷ்யத்தில் * யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி என்று மேலுள்ள வசனத்தையும் எடுத்துக்காட்டி ”ச்ருதிஸித்தோ யோஷித்ஸம்பந்த:.. உத்வேஜநீயதயா பரிஹரணீயதயா ச முமுக்ஷ பி ஜ்ஞாதவ்யம் ” என்று ஸ்வாமி ஸாதித்திருப்பதை விச்வளித்து யோஷித் ஸம்பந்தத்தை வெறுத்தவர்களுக்குமா நரகம் வரும் ‘ஆமாம். வரத்தான்வரும் மென்னில், அவர்களோடு கூடவே இவர்களும் நரகம் போகட்டுமே. எவர்களும்? பசுவதத்தைக் கொண்டயாகத்தைச் செய்யாதவர்களும்.

10. நாலாமத்யாயத்திலே ச்லோ. 171 முதல் நான்கு சுலோகங்கள் தார்மிகர்கள் கண்டபாடம் செய்து வைத்துக் கொள்ளத்தக்கவை. அதர்மம் செய்பவர்கள் தனிகர்களாயிரூப் பதையும்,தருமம் செய்பவர்கள் அகிஞ்சனர்களாயிருப்பதையும்காணும்போது தார்மிகர்களுக்கு அதர்மருசி ஏற்படக்கூடும் தருமம் செய்துதரித்ரர்களாயிராமல் அதர்மம் செய்து தனிகர்களாயிருப்போமென்கிற எண்ணமுண்டாகி அதர்ம பரவ்ருத்தி விளையக்கூடுமன்றோ. அன்னவர்களைக் குறித்துச்சொல்லப்படுகிறது * ஸ்தந்நபி தர்மேண மந அதர்மே நிவேசயேத். அதார்மிகாணாம் பாபாநாம் ஆசு பச்ய விபர்யயம். * தர்மேண ஸ்தந்நபி ம அதர்மே ந நிவேசயேத்-தருமம் செய்வதனாலேதான் நமக்குக் கஷ்டங்களுண்டாகின்றனவென்று நினைக்க நேர்ந்தாலுங்கூட அத மாசரணத்தில் நெஞ்சைச் செலுத்தக்கூடாது; ஏனென்றால்,அதர்மஞ்செய்யும் பாபிகள் வாழ்ந்தேநிற்காமல் அதற்கு மாறுபாடான நிலைமையை யும் அடையக் காண்கையாலே. அடுத்த 172 சுலோகத்தினால் அதர்மம் பலன் காட்டியே தீருமென்று வற்புறுத்திச் சொல்லப்படுகிறது . நாதர்மச் சரிதோ லோகே ஸத்ய பலதி கௌரிவ, சநைராவர்த்தமாநஸ் து கர்த்துர் மூலாநி க்ருந்ததி. * =அதர்மம் செய்யப்பட்டால் அது உடனே அனர்த்தமாகிற பலனைக் கொடுத்துவிடுமென்பதில்லை. எதற்கும் பரிபாகத்சை யென்று ஒன்றுண்டு; அப்போது ஸமூலநாசம்பண்ணியே தீரும். 173 . * யதி நாத்மநி… இத்யாதி. அதர்மமான ஸாக்ஷரத்துகர்த்தாவினிடத்திலும் பலனைக் காட்டும்; இல்லையேல் புத்திரர்களிடத்திலோ பெளத்ரர்களிடத்திலோ  பெளத்ரர்களிடத்திலோ பலித்தே தீரும். செய்தஅதர்மம் எந்த விதத்திலும் நிஷ்ப்பலமாகாது. அடுத்த சுலோகம் 174 மிக முக்கியமானது அதர்மேண ஏததே தாவத் ததோ பத்ராணி பச்யதி. ததஸ் ஸபத்நாந் ஜயதிஸமூலஸ்து வி நச்யதி. * இந்த சுலோகம் அதர்மம் செய்து பழுத்தவன் ஸ்வாநுபவத்தைத் தெரிவிக்கும் சுலோகம் போலவே காண்கிறது. அதர்மம் செய்தவன் தற்காலத்தில் ஸம்ருத்தியடைகிறான் : மாடமா கைகள் கட்டிக்கொள்வதும் யானைகுதிரைகள்ஏறப்பெறுவதுமான செல்வங்களையும் அநுபவிக்கிறான். சத்துருக்களையும் வெல்லுகிறான் .நாளடைவில் பரிபாக சை வந்தவாறே ஸமூலநாசத்தையடைகிறான். ஆகவே தருமநிஷ்டையே க்ஷேமங்கரமென்றதாயிற்று.

எட்டாமத்யாயத்தில் ச்லோ 92. * யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித தே சேத் அவிவாதஸ் தே மா கங்காம் மா குரூந் கம . * இந்தசுலோகம் ஆழ்வார்கள் பாசுரம் போலுள்ளது. பெரும்பாலும் ரதமபுருஷ நிர்தேசமாகவே செல்லுகிறஇந்ததருமசாஸ்த்ரத்தில் இங்கு ஒரு மூன்று சுலோகங்கள் மத்யமபுருஷநிர்தேசமாக நிகழ்கின்றன. ஆழ்வார்கள் உபதேசம் செய்தருளும் வகை காண்கிறது. ஆகவேதான் இந்த சுலோகம் பகவத்வியைத்தில் விசேஷித்துக் கையாளப்படுகிறது. எம்பெருமானோடு த்வேஷம் முற்றி நிற்கும் நிலை நீங்கி அத்வேஷா நிலையென்று ஒன்று உண்டாகும்.அது பரபக்தி பரஜ்ஞான பரமபக்திகளுக்கு முதற்படியான நிலைமையாகையாலே அதையே பக்தி தசையாகவுங் கொள்ளுவர்கள்.எம்பெருமானோடு விவாதப்படுகிற நிலை நீங்குமளவே போதுமானது. எம்பெருமான்கண்ணுக்குப் புலப்பட்டாலன்றோ அவனோடு விவாதப்படமுடியும் கட்கிலியான அவனோடு விவாத ப்ரஸக்தியே யில்லையே யென்று சிலர் நினைக்கவும் கேட்கவும் கூடும்.அவனோடு தனக்குண்டான உறவை ஒப்புக்கொள்ளாமலிருப்பதுதான் விவாதமெனப்படுவது. த்வம் மே ‘ என்று பகவான் சொல்லுவதாகவும் அஹம் மே என்று சேதநன் சொல்லுவதாகவும் வைத்து பட்டர் அருளிச்செய்திருப்பது சமத்காரோக்தி
விந்யாஸம். பகவச்சேஷத்வத்திற்கு இசையாமலிருப்பதுதான் பகவானோடு விவாதப் படுகையாவது. அது தீராதவளவில் (பகவச்சேஷத்வத்திற்கு இசையாதவளவில்
கங்கைநீர் குடைந்தாடப்போவதும் குரு க்ஷேத்ர யாத்திரை செய்யப்போவதும்
வீணேயாகும். சேஷத்வருசி யுண்டாய்விட்டதாகில் க்ஷேத்ரதீர்த்த யாத்திரையே வேண்டா. அது உண்டாகாதவளவில் இந்த யாத்திரை நிஷப்பலமாகையாலே ஸர்
வாத்மநா யாத்திரை போகவேவேண்டா வென்கிறது. இதற்குயாத்ரர் நிஷேதத்தில்தாத்பரியமன்று ; பகவானோடுள்ள உறவை அறியவேண்டியது முக்கியம் என் கையிலே தாத்பர்யமத்தனை. இந்த சுலோகத்தைத் திருவாய்மொழியில் * வீடுமின்
முற்றத்தில் * உம்முயிர் வீடுடையானிடை வீடுசெய்மினே * என்றவிடத்து நம்பிள்ளை அற்புதமாக வியாக்கியானித்தருளுகிறார் ; அந்த ஸ்ரீ ஸக்திகளையே இங்கெடுத்துக் காட்டுகிறேன்;
யம ] ராதேசிகமான நியமனத்தை யுடையவனையன்று சொல்லுகிறது
* ப்ரபவதி ஸம்யமநே மமாபி விஷ்ணு * என்று அவன் தன்னையும் நியமிக்குமவனாயிற்று இவன். (வைவஸ்வத: விவஸ்வானுடைய குலத்திலே பிறந்தவனென்னுதல் ; ஆதித்யாந்தஜ் அவஸ்திதனென்னுதல். (ராஜா ] அவனைப்போலே தஹ பச என்கை யன்றிக்கே எல்லார்க்கும் இனியனாயிருக்குமவனாயிற்று இவன். ரஞ்ஜய தி.ராஜா .* [ய ] அந்தர்யாமி ப்ராஹ்மணதிகளில் ப்ரஸித்தி. [தவைஷ ஹ்ருதி ஸ்தித / அவன் எங்குற்றானென்ன; கண்டிலையோ? உன்னுடையஹ்ருதயத் திலே புகுந்து ஆட்சியில் தொடர்ச்சி நன்றென் றிருக்கிறான் . ஆனால் செய்ய வேண்டுவதென்னென்னில் ; [தேநசேத் அவிவாதஸ் தே]; உடையவனாயிருக்கிறவனோடே உனக்கு அஷிவாத முண்டாகில். ‘இத்தால் பேறுஎன்?’ என்பாயோ?-[மா கங்காம்மா குரூங் கடி ] ஒரு தீர்த்தம் தேடிப்போதல், புண்ய க்ஷேத்ரம் தேடிப்
போதல் செய்யவேண்டா. அஹங்கார மமகாரங்கள் கிடக்க ராயச்சித்தம்
பண்ணுகையாவது நிஷித்தத்ரவயத்தை உள்ளே வைத்து மெழுகூட்டின வோபாதியிறே. உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடியிறே ப்ராயச்சித்தமும். உடையவன் ஸர்வேச்வரன். த்ரவ்யங்களில் த ையான ஆத்மத்ர யத்தை யிறேஅப ரித்தது. ரவயத்தைப்பொகட்டுப்ராயச்சித்தம் பண்ணவேணுமே. பொகடுகிற த்ர யம் தானாகையாலே பராயச்சித்தம் பண்ணுகைக்கு வேறுஅதிகாரியுமில்லையே. ஆகையாலே நீங்களும் உடையவன், பக்கலிலே வீடுசெய்ம்மின். இவை ஈடு முப்பத்தாறாயிரப்படி ஸ்ரீ ஸுக்திகள்.

எட்டாவதத்யாயத்திலேயே, தவறு செய்தபிர மணனை தண்டிக்க வேண்
டிய விதம் கூறப்படுகிறது . ச்லோ. 979. பிராமணனுக்குமரண தண்டனை விதிக்கவே
கூடாது. தலையை மொட்டையடிப்பதுதான் பிராமணனுக்கு வதப யாயமான தண்டனையாகும். பிராமணன் தவிர மற்றஜாதியாருக்கே வத்தண்டனை விதிக்காலாம். பிராமணன் எவ்விதமான குற்றம் செய்திருந்தாலும் அவனுக்கு வததண்டம் விதிக் கவே கூடாது.தீவ்ரமான பாபம்செய்திருந்தால் பிராமணனை ராஷ்ட்ரத்தில் நின்றும் வெளியே துரத்தி விடலாம். அப்போதும் அவனுடைய ஜீவனத்திற்குப் போதுமான பொருளைக் கையில் கொடுத்தனுப்பவேணும். சரீரத்தில் எவ்விதமர தியையும் உண்டுபண்ணக்கூடாது. பிராஹ்மணவதத்திற்கு மேற்பட்ட ஆதர்மமே உலகத்தில் கிடையாது. ஆகையினால் அரசன் ப்ராஹ்மணவதத்தை நெஞ்சினாலும் நினைக்கலாகாது. (இதற்கான வசனங்களிவை . * மௌண்ட்யம் ப்ராணாந்திகோ தண்டோப்ராஹ்மணஸ்ய விதீயதே … ந ஜாது ப்ராஹ்மணம் ஹந்யாத்ஸர்வபாபேஷ்வபி ஸ்திதம். ராஷ்ட்ராத்ஏநம் பஹி குர்யாத் ஸமக்ரதநம் அக்ஷதம்.ந ப்ராஹ்மண

ஒன்பதாமத்யாயத்தில் ஸ்த்ரீபுருஷ தருமங்களைச் சொல்லத் தொடங்கி
ஸ்த்ரீகளுக்கு ஒருபோதும் ஸ்வாதந்திரியம் கூடாதென்று வலிதாக மறுக்கிறார்.
சுலோ. 3. பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷத்தி யௌவநே, ரக்ஷந்தி ஸ்தாவிரே புத்ரா
ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யமர்ஹதி. இந்த சுலோகம் நீதி சாஸ்த்ரஸங்க்ரஹத்தில் ஏறியிருந்தாலும் இதற்குஆகரம் மநுஸ்மிருதியேயாகும். ஸ்த்ரீகளை இளம்பிராயத்தில் தந்தைகாக்கிறார் ; யௌவனத்தில் கணவன் காக்கிறான். முதுமையில் புத்திரர்கள் காப்பர்-ஆக.ஸ்த்ரீகள் தங்களைக் காத்துக்கொள்வதில் ஒருபோதும் ஸ்வாதந்திரியமுடையரல்லர் என்பது ச்லோகார்த்தம். இதன்மேல் கேள்வி பிறக்கக்கூடும்? இளமையில்வைதவயமடைந்து பதியுமின்றிக்கே புத்திரனுமின்றிக்கே யொழிந்தவர்களைக் காப்பவர் யார்? என்று. இதற்கு வ்யாக்கியாதா (குல்லூகபட்டர் ] ஸமாதான மெழுதியுள்ளார்- தந்தை, தந்தையுடன் பிறந்தவர் முதலானார் காக்கும்படியைக் காணா நின்றோமென்று.

மாதா பிதாக்கள் ஜீவித்திருக்கும்போது புத்திரர்கள் பங்கு பிரித்துக்கொள்வது கூடாதென்றும், அவர்கள் முடிந்தபிறகு கநிஷ்ட ப்ராதாக்கள் ஐயேஷ்டப்ராதாவையே அநுவர்த்தித்து வாழ் வேண்டுமென்றும் நியமிக்கிறார். (9-104.)
* ஊர்த்வம் பிதுச் ச மாதுச் ச ஸமேத்ய ப்ராதரஸ் ஸமம். பஜேரம் பைத்ருகம் ரிக்த்தம் அநீ
சாஸ்தேஹி ஜீவதோ மாதா பிதாக்கள் ஜீவித்திருக்கும்வரையில் அவர்களது தனத்தில் புத்திரர்களுக்கு ஸ்வாழித்வம் கிடையாதாகையாலே அத் தந்தைதாயருடைய வாழ்நாள் முடிந்தபிறகே பங்கு பிரித்துக் கொள்ளவேண்டியது.(இங்கு வியாகயாதா எழுதுகிறா ) – ” விபாகஞ் சேத் பிதா குர்யாத் இச்சயா விபஜேத் ஸுதாங்(தகப்பனார் இஷ்டப்பட்டால் புத்ரர்களுக்குத் தாமே பங்கு பிரிக்கலாம்] என்றுயா வல்க்யர் சொல்லியிருக்கையாலே தகப்பனார் இஷ்டப்படாதவளவில் இந்த சாஸ்த்ரம் செல்லுமென்கிறார். அடுத்தசுலோகம் 105. * யேஷ்ட ஏவ து க்ருஹ்ணீயாத் பித்ர்யம் தநம் அசேஷத . சேஷாஸ் தம் உப வேயு யதைவ பிதரம் ததா. * பிதாவின் தனத்தையெல்லாம் மூத்தபுதல்வனே அடையக்கடவன் ; மற்ற ப்ராதாக்கள் தமையனையே தந்தையாகக் கொண்டு அவன்கீழ் வாழக் கடவர்கள். மேலே ச்லோ. 108.* பிதேவ பாலயேத் புத்ராந் ஐயேஷ்டோ ப்ராத்ரூந் யவீயஸ , புத்ரவச் சாபி வர்த்தேரந்ஜ்யேஷ்டேப்ராதரி தர்மதா * பிதா புத்திரர்களைக் காப்பதுபோல மூத்தவன் தம்பிமார்களைக் காக்கக் கடவன். தம்பிகளும் பிதாவினிடத்திற்போலவே மூத்தவனிடத்
தில் வர்த்திக்கக் கடவர்கள். இதெல்லாம் ஜ்யேஷ்ட பராதாயோக்யனாயிருக்குமளவில்
என்று நூற்கொள்கை.

அனுஷ்டானங்களில் முக்கிய கல்பமென்றும் கெ ண்கல்பமென்றும் இரண்டுண்டு.கௌண கல்பத்தை ஏதோ ஆபத்காலத்தில் கொள்ளலாமே யல்லதுசக்தியும் ஸௌகர்யமுமிருக்கும் காலங்களில் முக்கிய கல்பத்தைத்தான் கொள்ளவேண்டும்; கௌணகல்பம் கேவலம் ஆபத்கால் மாத்ரவிஷயம். 11-28. ஆபத்கல்பேந யோ தர்மம் குருதே அநாபதி த்விஜ, ஸ நாப்நோதி பலம் தஸ்ய பரத்ரேதி விசாரிதம்-கௌண்கல்பத்திற்கு ஆபத்கல்பமென்று பெயர் . அதை ஆபத் காலத்தில் மட்டுமே அனுட்டிக்கலாம். ஆபத்தொன்றுமில்லாதவளவிலும் ப்ராஹ்மணன் கௌண்கல்பத்ையனுட்டித்தானாகில் அதுஅனுட்டியாததோ டொக்குமத்தனை. (இந்த விதியைப் பரிபாலனம் செய்பவர்கள் மிகச் சிலரே யாவர். ஆசமன ப்ராணாயாமாதிகளையும் தினப்படி பெரும்பாலும் கௌணகல்பமாகவே யன்றோ அனுட்டித்து வருகிறோம் 

(11-34.) க்ஷத்ரியோ பாஹுவீர்யேண தரேத் ஆபதமாத்மந. தநேந வைச்ய
சூத்ரெள து ஜபஹோமைர் த்விஜோத்தம.* நான்கு ஜாதியார்க்கும் சத்துருக்கள் மூலமாகப் பரிபவங்கள் நேருவது ஸம்பாவிதம். அதைப் போக்கிக் கொள்ளுமுபாயம் ஜாதி பேதந வெவ்வேறு பட்டிருக்குமென்கிறது. க்ஷத்ரியன் தன்னுடைய பராக்ரமத்தைக் கொண்டு ப்ரதிக்ரியை பண்ணக்கடவன். வைச்யனும்சதுர்த்தனும் தனத்தைக்கொண்டு வெல்லக்கடவன். ப்ராஹ்மணோத்தமனோவென்னில், கேவலம் பம்ஹோமம் முதலிய வைதிக்கருமங்களைக் கொண்டேசத்ருபக்ஷ ரதிக்ஷேபம் பண்ணவேண்டியவன்.(இத்தால் தெரிவிக்கப்படுவதென்ன ? பிராமணன் தன்னிடத்தில் பராக்ரமமிருந்தாலுங்கூட அதை உபயோகிக்கக் கடவனல்லன்; தனமிருந்தாலும்அதை ப்ராப்து விஷயங்களில் தவிர இத்தகைய காரியங்களில் துர்விநியோகம் செய்யக்கடவனல்லன். ஓதியுணர்ந்திருக்க வேண்டியதையே கடமையாகவுடையவனாதலால்ஜ ஹோமாதிகளைக் கொண்டே ய சீலனாயிருக்கக் கடவனென்பதாம். * திக் பலம்க்ஷத்ரிய பலம் ப்ரஹ்மதேஜோ பலம் பலம் * என்ற புகழ்ச்சியைப் பரிபாலித்துக் கொள்ளக்கடவோம்].

ஸம்ந்யாஸிகளை த்ரிதண்டிகளென்கிறோம். முக்கோல் பிடித்த முனிக
ளென்றபடி. இந்த முக்கோல்களே த்ரிதண்டமெனப்படுகின்றன. தண்டமென்பதற்குக் கோல்என்கிற பொருள் தவிர, தண்டித்தல் [அடக்குதல்] என்கிற பொருளும் ப்ரஸித்தமாதலால் மூன்று வகையான தண்டங்களைக் கொண்டவர்களே
த்ரிதண்டிகளெனத் தகுவர்களென்கிறார் மனுமஹர்ஷி. 12-10, வாக்தண்டம், மநோ
தண்டம்,காயதண்டம் என்னுமிவை மூன்று தண்டங்களாம். வாக்கை யடக்குதல்,
மனத்தை யடக்குதல், சரீரத்தை யடக்குதல் ஆகிற இம்மூன்று அடக்கங்களும் மூன்று
தண்டங்கள்; இவற்றை யுடையவர் த்ரி தண்டி (இதன் விவரணம் வருமாறு ) பொய்
சொல்லுவது. பழிமொழிகளைச் சொல்லுவது, பகவத் பாகவத ஆசார்ய நிந்தைகளைப்
பொழிவது தன்னைத்தானே ரசம்ஸித்துக்கொள்வது முதலான வாக் தோஷங்களில்
லாமை வாக்தண்டமெனப்படும். (வாக்கினாலே தண்டித்தலென்று பொருளன்று; ுைவாக்கைத் தண்டித்து அடக்கிவைத்துக் கொள்ளுதலென்று பொருள்) மனோதண்ட மாவது-அப்ராப்த விஷயங்களைச் சிந்தனை செய்யாதபடி மனத்தை நிக்ரஹித்தல்.
ழ் காய தண்டமாவது-கரசரணாதி யவயவங்களை அப்ராப்த விஷயங்களில் போகவொட்
டாதபடி தடுக்கை. பெரிய திருமொழியில் 1-6-7. * நெஞ்சினால் நினைந்தும் வாயி
னால்மொழிந்தும் நீதியல்லாதன செய்தும் * என்றருளிச் செய்தபடியே மனமொழி
மெய்களால் அநீதியொன்றும் நிகழாதபடி ஜாகரூகர்களாய் வர்த்திப்பவர்களே த்ரி தண்டிகளென்றதாயிற்று. இங்கு வியாக்கியானத்தில் குல்லூகபட்டர் “நது தண்ட
த்ரயதாரண மாத்ரேண த்ரிதண்டீதி உச்யதே “ என்றெழுதி யிருக்கையாலே அவர் ஏக
தண்டிகளை நெஞ்சிலெண்ணாது த்ரி தண்டிகளையே சிந்தனை செய்பவரென்று புலப்படு கின்றது. சததூஷணி 64-ஆம் வாதத்தில் இது வ்யக்தம்.

(12-122) பரமபுருஷனையே அநவரதமும் சிந்திக்க வேணுமென்று மநுமஹர்ஷி தம்முடைய ஸ்ம்ருதியைத் தலைக்கட்டுகிறார். * ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணோரபி ருக்மாபம் ஸ்வப்நதீகம்யம் ‘வித்யாத் தம் புருஷோத்தமம். *(புருஷம்பரம் என்றும் பாடமுண்டு.) இதில் நான்கு விசேஷணங்கள் பரமபுருஷனைச்சிறப்பித்துக்கூறுவன. ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம்-ஸர்வ யந்தா என்றபடி . கீதையில்* ஸர்வஸ்ய சாஸம் ஹ்ருதி ஸம்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ரூதிர் ஞாநம்போஹநஞ்சி-என்றதை நினைப்பது. அ யாம்ஸம் அணோரபி = * அணோரணீயாந்மஹதோ ம யாந்என்கிறபடியே அணுபதார்த்தங்களிலும் அந்த ப்ரவேச ௌக யார்த்தமாகமிகவும் அணுவாயிருக்குமவன். (ருக்மாபம்]ச்சாந்தோக்யத்தில் அந்தராதித்ய ‘வித்யையிலே ஹிரண்மயர் புருஷ’ என்றும் ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண?’ என்றும்-சுட்டுரைத்த நன்பொன் உன்
திருமேனியொளி யொவ்வாது(திருவாய்மொழி 3-1-2.) என்றும்சொல்லுகிறபடியே பொன்மேனியன். திருக்கண்டேன்பொன்மேனி கண்டேன் * என்கிறபடியே ஹிரண்ய வர்ணையான பிராட்டியின் தேஜோவ்யாப்தியாலே-பொன்மேனி படைத்தவனென்னவுமாம்.[ஸ்வப்ந்திகம்யம் ] ‘ஸ்வப் நமூண்டாவது எப்போது? செவி வாய்கண் மூக்கு முதலான ஸகலேந்திரியங்களினுடையவும்வியாபாரம் உபரதமானவாறேகேவலம்மநோஐந்யமானது கனவு.அப்படியே பரம்புருஷனும் கண்டுகேட்டுற்று மோந்துண்டுழலுமைங்கருவிகளும் ஓய்ந்து, என்றேனும் கட்கண்ணால் காணாத வவ்வுருவை நெஞ்சென்னு முட்  கண்ணேல் காணுமுணர்ந்து *(பெரிய திருவந்தாதி.) என்கிறபடியே விசுத்தேந ம ஸாக்ராஷ்யனா யிருப்பவன்.இப்படிப்பட்ட பரமபுருஷனைச் சிந்தித்து வாழ்வோமாக. இந்த ஸ்ம்ருதியின் உபக்ரமத்தில் ச்லோ 10ல் * ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூநவ . தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயணஸ் ஸ்ம்ருத * என்று நாராயண நாம நிர்வசனம் செய்திருக்கையாலே இம்முனிவர்க்குப் பரமபுருஷத்வே விவக்ஷிதன் நாராயணனே யென்றறிவது.

நரஸிம்ஹமூர்த்தியினுடைய தம்ஷ்ட்ரையைத் தமிழில் கோரப்பல் என்பர். கோரமான பல் என்றபடி, இவர் அதைக் கோரைப் பல்லாக ஆக்கிப் பலகால் எழுதிவிட்டார். கோரை போலே நீண்டிருக்கும் பல் என்று வியாக்கியானமும் ஸாதிப்பர்.-கோரம் என்கிற சொல்லை ஆழ்வார்களும் கையாண்டிருக்கிறார்கள். கோரமாதவஞ் செய்தனன் கொலறியேன். அரும்பெருந்தமிழ்ப் புலவர்கள் ‘கோரைப்பல் ‘ என்றெழுதினால் (கோரமான பல் ) என்றே அதற்குப் பொருள்காண இயலும்-அங்கண்ஞாலப்பதிகத்தினால் சிங்க வேழ்குன்றத்தை மங்களாசாஸனம் செய்தருளாநின்ற திருமங்கையாழ்வார் முதற்பாட்டில் “அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன்” என்று நரஸிம்ஹமூர்த்தியை விசேஷித்திருக்கிறார்.-புனிதன்– பாவனன் என்றபடி, எம்பெருமானுடைய பாவத்வம் *பாவஸ் ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகுநந்த !* இத்யாத்யநேகப்ரமாண ஸித்தம். எனினும். இங்கு
அவுணனாகம் போழ்ந்த பனிதன்‘ என்றதற்குச் சேர நரஸிம்ஹமூர்த்தியின் பாவ
நத்வத்தை ஒன்பது வகையாக நிரூபிக்கின்றேன். பிறருடைய அவத்யத்தைப் போக்கி, தான் அவத்ய ஸங்கமற்றிருக்கை பாவநத்வமாகும். இதை நரஸிம் ஹமூர்த்தியின் திவ்ய சரித்திர விசேஷங்களைக் கொண்டே உபபாதித்துக் காட்டுகிறேன்.-1-ப்ரஹ்லாத ரக்ஷணத்தையும் ஸத்வாரகமாகவே செய்திருந்தானாகில் அவத்யமே யாகும். அத்வாரகமாகவே (ஸாக்ஷாத்தாகவே]செய்தருளினனாதலால் அவத்ய வைதேசிகனாயினன். இது முதன்மையான பாவநத்வம்.

பயலே! நீ சொல்லுகிற விஷ்ணு எங்கிருக்கிறான்?’ என்று இரணியன் கேட்க. எங்குமுளனென்றான் சிறுக்கன். பிறகு தூணைத்தட்டினானிரணியன். எம்பெருமான்
” ஒரு சிறுபயல் சொன்னவார்த்தையை மெய்ப்பிக்கவேணுமென்று நமக்கு என்ன நிர்ப்பந்தம்? என்று வாளாவிருந்து விடலாம். இற்றைக்கும் நாளைக்கும் பல்லாயிரமிடங்க
களில் பல்லாயிரவர் ‘ஈச்வரோ நாஸ்தி’ யென்று அட்டஹாஸங்கள் செய்துகொண்டுதானே யிருக்கிறார்கள். அவற்றைப் பொருள்படுத்தாமலேயிருக்கின்ற ஸர்வேச்வரன்ப்ரஹ்லாத ப்ரதி ஞையையும் பொருள் படுத்தாமல யிருந்தால் கேட்பாரார்?அங்ஙனேயிருந்தால் அவத்யமேயாகுமன்றோ . அதற்கு இடமளிக்காதது இரண்டாவது பாவநத்வம்.-நரஸிம்ஹமூர்த்தியும் ஸ்தம்பத்தில் கர்ப்பவாஸம் செய்து பத்து மாதங்கள் கழித்துத் தோன்றினனாகில் அப்போதும் அவத்யசாலியே யாவன்.(எங்ஙனே யெனில்) எங்குமுளன் என்பது மட்டுமன்று ப்ரஹ்லாத ப்ரதி ஞை; எப்போதுமுளன் என்பதுமாகையால் அது வய சரித்ததாகுமே. அந்த அவத்யத்திற்கும் இடமளிக்காமல் அப்பொழுதேதோன்றியது மூன்றாவதான பாவ த்வம்.

*ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:, அர்த்திதோ மாநுஷே
லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாத என்கிறபடியே பெருமாள் ராவணவதார்த்தமாகத்
திருவவதரித்தும் முப்பத்தெட்டாவது பிராயத்திலன்றோ ராவணவதம் செய்தருளிற்று.
வேண்டித் தேவரிரக்க வந்து பிறந்ததும் (திருவாய்மொழி 6-4-5 ) என்கிறபடியே
கம்ஸ சிசுபாலாதி வதார்த்தமாக வேண்டப்பட்டு வந்து பிறந்த கண்ணபிரானும் இடையில்
வெகுகாலம் கடத்தியே காரியம் செய்தருளினன். நரஸிம்ஹமூர்த்தியும் தூணைத் தட்டின
வுடனே தோன்றிவிட்டு இங்ஙனே விளம்பித்துச் செய்தால் அவத்யந்தானேயாகும்.
அதற்கும் இடமளிக்காமல், ப்ரஹ்லாதன் ப்ரதிஞை பண்ணினது, தூணினின்றும் தோன்றினது, இரணியனகல்மார்வம் கீண்டது ஆகிய இவை யெல்லாம் ஏககாலத்திலானது நான்காவது பாவநத்வம் .

தேவர்கள் *ராவணஸ்ய வதார்த்திபி: என்கிறபடியே இராவணவதத்தைக்கோரினது போல ப்ரஹ்லாதாழ்வான் இரணியன் வதத்தைக் கோரர்மையினாலே “எங்குமுளன் என்ற ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றுதல் மாத்திரமே நமக்குப்பணி” யென்று நினைத்து நரசிங்கமூர்த்தி தோன்றினவுடனே மறைந்திருக்கலாமே. அப்படி மறைந்திருந்
தால் அதுவும் அவத்யமாம்; அதற்கும் இடமளிக்காமே அவனை மாய்த் தொழித்து மறைந்தது
ஐந்தாவது. பாவநத்வம்.–

இரணியன் மாளிகையில் பல தூண்களுமுண்டே; ஏதேனுமொரு தூணில் தோன்றியும் காரியம் செய்யலாமே, அவன் புடைத்த தூணிலேயே புடைத்த விடத்திலேயே தோன்ற வேணுமென்று என்ன நிர்ப்பந்தம்? என்று நினைத்திருந்தால் எங்குமுளனென்ற ப்ரஹ்லாத ப்ரதிஜ்ஞை சிதிலமாகி அவதியம் நேர்ந்திருக்குமே; அதற்குமிடமளிக்காதது ஆறாவது பாவநத்வம்.-ராமபிரான் செளர்ய வீர்ய பராக்ரம நிதியாயிருக்கச் சேய்தேயும் ராவண
வதத்தில் பல கிலேசங்களை யடைந்ததாக வறிகிறோம். விபீடணன் வார்த்தையைக்
கேட்டுக் கடற்கரையிலே மூன்று நாள் தரைக்கிடை கிடந்தது. நாகபாசத்தால் கட்டுண்டு
கிடந்தது, அறுக்கவறுக்க முளைத் தெழுகின்ற அரக்கன்தலைகளை யறுக்கப் பாடுபட்டது.
அஸ்ஹாய் சூரனென்று ஓரிடத்தில் பேர் பெற்றும் குரக்கினப் படைகொடு காரியம்
செய்ததனாலே ஸஸஹாயனானது இங்ஙனே பல. கண்ணபிரானும் “ஜராஸுதபயாத்
விபலாயதாஸ் த்வம்” என்று ஆழ்வானருளிச் செய்யும் படி பகைவனுக்கு அஞ்சினவன்
போல ஓடியொளித்தமையுண்டே. இத்தகைய ஆபத்திகளுக்கு நரஸிம்ஹ பகவான் தன்
பாலிடமளிக்காதது ஏழாவது பாவநத்வம்.- * ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத:, த்யக்த்வா தேஹம்புநர் ஜம்ம நைதி மாமேதி ஸோர் ந!* என்று கீதையில் அவதாராத்யாயத்தில் பணித்தபடி தன் திருவவதாரத்தையும் சரிதையையும் எங்கும் பரவ வைத்து மூவுலகங்களையும் பரிசுத்தமாக்குகிறானென்பது எட்டாவது பாவநத்வம்.-தேவாநாம் தா வாநாஞ்சஸாமா யமதிதைவதம் ” என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வமாகக் குலாவப் படுகிற எம்பெருமான் *அமரர்க்கு இடர்கெட அசுரர்க்கு இடர் செய்வது அவத்யமன்றோ வென்று சங்கிக்க இடமறும்படி விளக்கிலே விட்டில்விழுந்து மடியுமாபோலவும், கழுத்திலே கல்லைக் கட்டிக்கொண்டு குளத்திலே விழுந்து மடியுமா போலவும் இரணியன் தானே நரசிங்கனுடைய சீற்றத்தீயில் விழுந்து மடிந்தன னென்கிற வஸ்து ஸ்திதியினால் தேறுமது ஒன்பதாவது பாவநத்வம்.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–-Sri Jagannathastakam

June 29, 2025

The Lord of the Universe—Sri Jagannath Deva is also known as Purushottam. Puri is known as Purushottam Dhama. Sree Chaitanya Mahaprabhu used to sing Sri Jagannath-ashtakam, eight verses of the glory of Jagannatha in Puri. It is written by Sri Adi Sankaracharya, and is still being sung daily before the Deity of Lord Jagannatha for His pleasure. It is respected everywhere in India.

கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன், புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.-அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர். அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

kadācit kālindī-taṭa-vipina-saṅgīta-taralo
mudābhīrī-nārī-vadana-kamalāsvāda-madhupaḥ |
ramā-śambhu-brahmāmara-pati-gaṇeśārcita-pado
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||1||

 Sometimes in great happiness Lord Jagannatha makes a loud concert with His flute in the groves on the banks of the Yamuna. He is like a bumblebee tasting the beautiful lotus like faces of the cowherd damsels of Vraja, and great personalities such as Laksmi, Siva, Brahma, Indra, and Ganesa worship His lotus feet. May that Jagannatha Svami be the object of my vision

புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

——–

bhuje savye veṇuṁ śirasi śikhi-piccham kaṭi-taṭe
dukūlaṁ netrānte sahacara-kaṭākṣaṁ vidadhate |
sadā śrīmad-vṛndāvana-vasati-līlā-paricayo
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||2||

In His left hand Lord Jagannatha holds a flute, on His head He wears peacock feathers, and on His hips He wears fine yellow silken cloth. From the corners of His eyes He bestows sidelong glances upon His loving devotees, and He always reveals Himself through His pastimes in His divine abode of Vrndavana. May that Jagannatha Svami be the object of my vision.

மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

———

mahāmbhodhes tīre kanaka-rucire nīla-śikhare
vasan prāsādāntaḥ sahaja-balabhadreṇa balinā |
subhadrā-madhya-sthaḥ sakala-sura-sevāvasara-do
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||3||

On the shore of the great ocean, within a large palace atop the brilliant, golden Nilacala Hill, Lord Jagannatha resides with His powerful brother Balabhadra and His sister Subhadra, who sits between Them. May that Jagannatha Svami, who bestows the opportunity for devotional service upon all godly souls, be the object of my vision.

கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

———-

kṛpā-pārāvāraḥ sajala-jalada-śreṇi-ruciro
ramā-vāṇī-rāmaḥ sphurad-amala-paṅkeruha-mukhaḥ |
surendrair ārādhyaḥ śruti-gaṇa-śikhā-gīta-carito
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||4||

Lord Jagannatha is an ocean of mercy and as beautiful as a row of blackish rain clouds. He is the storehouse of bliss for Laksmi and Sarasvati, and His face resembles a spotless full-blown lotus. The best of demigods and sages worship Him, and the Upanisads sing His glories. May that Jagannatha Svami be the object of my vision.

ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

———

rathārūḍho gacchan pathi milita-bhūdeva-paṭalaiḥ
stuti-prādurbhāvam prati-padam upākarṇya sadayaḥ |
dayā-sindhur bandhuḥ sakala jagatāṁ sindhu-sutayā
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||5||

When Lord Jagannatha moves along the road on His Rathayatra car, at every step large assemblies of brahmanas loudly chant prayers and sing songs for His pleasure. Hearing their hymns, Lord Jagannatha becomes very favorably disposed toward them. He is the ocean of mercy and the true friend of all the worlds. May that Jagannatha Svami, along with His consort Laksmi, who was born from the ocean of nectar, be the object of my vision.

பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

————

paraṁ-brahmāpīḍaḥ kuvalaya-dalotphulla-nayano
nivāsī nīlādrau nihita-caraṇo ’nanta-śirasi |
rasānandi rādhā-sarasa-vapur-āliṅgana-sukho
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||6||

Lord Jagannatha, whose eyes resemble full-blown lotus petals, is the ornament on Lord Brahma’s head. He resides on Nilacala Hill with His lotus feet placed on the heads of Anantadeva. Overwhelmed by the mellows of love, He joyfully embraces Srimati Radharani’s body, which is like a cool pond. May that Jagannatha Svami be the object of my vision.

ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

————

na vai yāce rājyaṁ na ca kanaka-māṇikya-vibhavaṁ
na yāce ’haṁ ramyāṁ sakala jana-kāmyāṁ vara-vadhūm |
sadā kāle kāle pramatha-patinā gīta-carito
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||7||

I do not pray for a kingdom nor do I pray for gold, rubies, or wealth. I do not ask for a beautiful wife as desired by all men. I simply pray that Jagannatha Svami, whose glories Lord Siva always sings, may be the constant object of my vision.

ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

————-

hara tvaṁ saṁsāraṁ druta-taram asāraṁ sura-pate
hara tvaṁ pāpānāṁ vitatiṁ aparāṁ yādava-pate |
aho dīne ’nāthe nihita-caraṇo niścitam idaṁ
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||8||

O Lord of the demigods, please quickly remove this useless material existence I am undergoing. O Lord of the Yadus, please destroy this vast, shoreless ocean of sins. Alas, this is certain Lord Jagannatha bestows His lotus feet upon those who feel themselves fallen and have no shelter in this world but Him. May that Jagannatha Svami be the object of my vision.

ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
ஸர்வ பாப விசுத்தாத்மா
விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

—————————

jagannāthāṣṭakaṁ punyaṁ yaḥ paṭhet prayataḥ śuciḥ
sarva-pāpa-viśuddhātmā viṣṇu-lokaṁ sa gacchati ||9||

The self-retrained, virtuous soul who recites these eight verses glorifying Lord Jagannatha becomes cleansed of all sins and duly proceeds to Lord Visnu’s abode.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாஜ்ஞவல்க்ய க்ருத ஸ்ரீ ஸரஸ்வதீ ஸ்தவம்

June 23, 2025

யாஜ்ஞவல்க்ய உவாச
க்ருபாம் குரு ஜக³ன்மாதர்‌-மாமேவம் ஹததேஜஸம்‌ ।
கு³ருஶாபாத் ஸ்ம்ருதிப்⁴ரஷ்டம் வித்³யாஹீனம் ச து³:கி²தம்‌ ॥ 1 ॥

ஜ்ஞானம் தே³ஹி ஸ்ம்ருதிம் வித்³யாம் ஶக்திம் ஶிஷ்ய ப்ரபோ³தி⁴னீம்‌ ।
க்³ரந்த²கர்த்ருத்வ ஶக்திம் ச ஸுஶிஷ்யம் ஸுப்ரதிஷ்டி²தம்‌ ॥ 2 ॥

ப்ரதிபா⁴ம் ஸத்ஸபா⁴யாம் ச விசாரக்ஷமதாம் ஶுபா⁴ம்‌ ।
லுப்தம் ஸர்வம் தை³வ யோகா³-ன்னவீபூ⁴தம் புன: குரு ॥ 3 ॥

யதா²ங்குரம் ப⁴ஸ்மனி ச கரோதி தே³வதா புன: ।
ப்³ரஹ்மஸ்வரூபா பரமா ஜ்யோதீரூபா ஸனாதனீ ॥ 4 ॥

ஸர்வவித்³யாதி⁴தே³வீ யா தஸ்யை வாண்யை நமோ நம: ।
விஸர்க³ பி³ந்து³மாத்ராஸு யத³தி⁴ஷ்டா²னமேவச ॥ 5 ॥

தத³தி⁴ஷ்டா²த்ரீ யா தே³வீ தஸ்யை வாண்யை நமோ நம: ।
வ்யாக்²யாஸ்வரூபா ஸா தே³வீ வ்யாக்²யாதி⁴ஷ்டா²த்ருரூபிணீ ॥ 6 ॥

யயா வினா ப்ரஸங்க்³யாவான் ஸங்க்³யாம் கர்தும் ந ஶக்யதே ।
காலஸங்க்³யா ஸ்வரூபா யா தஸ்யை தே³வ்யை நமோ நம: ॥ 7 ॥

ப்⁴ரம ஸித்³தா⁴ந்தரூபா யா தஸ்யை தே³வ்யை நமோ நம: ।
ஸ்ம்ருதிஶக்தி ஜ்ஞானஶக்தி பு³த்³தி⁴ஶக்தி ஸ்வரூபிணீ ॥ 8 ॥

ப்ரதிபா⁴கல்பனாஶக்திர்‌-யா ச தஸ்யை நமோனம: ।
ஸனத்குமாரோ ப்³ரஹ்மாணம் ஜ்ஞானம் பப்ரச்ச² யத்ர வை ॥ 9 ॥

ப³பூ⁴வ மூகவத்ஸோஸ்பி ஸித்³தா⁴ந்தம் கர்து மக்ஷம: ।
ததா³ஷ்ஜகா³ம ப⁴க³வா-னாத்மா ஶ்ரீக்ருஷ்ண ஈஶ்வர: ॥ 1௦ ॥

உவாச ஸ ச தாம் ஸ்தௌஹி வாணீ மிஷ்டாம் ப்ரஜாபதே ।
ஸ ச துஷ்டாவ தாம் ப்³ரஹ்மா சாஜ்ஞயா பரமாத்மன: ॥ 11 ॥

சகார தத்ப்ரஸாதே³ன ததா³ ஸித்³தா⁴ந்த முத்தமம்‌ ।
யதா³ப்யனந்தம் பப்ரச்ச² ஜ்ஞானமேகம் வஸுந்த⁴ரா ॥ 12 ॥

ப³பூ⁴வ மூகவத்ஸோஸ்பி ஸித்³தா⁴ந்தம் கர்து மக்ஷம: ।
ததா³ தாம் ச ஸ துஷ்டாவ ஸந்த்ரஸ்த: கஶ்யபாஜ்ஞயா ॥ 13 ॥

தத ஶ்சகார ஸித்³தா⁴ந்தம் நிர்மலம் ப்⁴ரம ப⁴ஞ்ஜனம்‌ ।
வ்யாஸ: புராணஸூத்ரம் ச பப்ரச்ச² வால்மீகிம் யதா³ ॥ 14 ॥

மௌனீபூ⁴த ஶ்ச ஸஸ்மார தாமேவ ஜக³த³ம்பி³காம்‌ ।
ததா³ சகார ஸித்³தா⁴ந்தம் தத்³வரேண முனீஶ்வர: ॥ 15 ॥

ஸம்ப்ராப்ய நிர்மலம் ஜ்ஞானம் ப்⁴ரமாந்த்⁴ய த்⁴வம்ஸதீ³பகம்‌ ।
புராணஸூத்ரம் ஶ்ருத்வா ச வ்யாஸ: க்ருஷ்ணகலோத்³ப⁴வ: ॥ 16 ॥

தாம் ஶிவாம் வேத³ த³த்⁴யௌ ச ஶதவர்ஷம் ச புஷ்கரே ।
ததா³ த்வத்தோ வரம் ப்ராப்ய ஸத்கவீந்த்³ரோ ப³பூ⁴வ ஹ ॥ 17 ॥

ததா³ வேத³விபா⁴க³ம் ச புராணம் ச சகார ஸ: ।
யதா³ மஹேந்த்³ர: பப்ரச்ச² தத்த்வஜ்ஞானம் ஸதா³ஶிவம்‌ ॥ 18 ॥

க்ஷணம் தாமேவ ஸஞ்சிந்த்ய தஸ்மை ஜ்ஞானம் த³தௌ³ விபு⁴: ।
பப்ரச்ச² ஶப்³த³ஶாஸ்த்ரம் ச மஹேந்த்³ர ஶ்ச ப்³ருஹஸ்பதிம்‌ ॥ 19 ॥

தி³வ்ய வர்ஷ ஸஹஸ்ரம் ச ஸ த்வாம் த³த்⁴யௌ ச புஷ்கரே ।
ததா³ த்வத்தோ வரம் ப்ராப்ய தி³வ்யவர்ஷஸஹஸ்ரகம்‌ ॥ 2௦ ॥

உவாச ஶப்³த³ ஶாஸ்த்ரம் ச தத³ர்த²ம் ச ஸுரேஶ்வரம்‌ ।
அத்⁴யாபிதாஶ்ச யே ஶிஷ்யா யைரதீ⁴தம் முனீஶ்வரை: ॥ 21 ॥

தே ச தாம் பரிஸஞ்சித்ய ப்ரவர்தந்தே ஸுரேஶ்வரீம்‌ ।
த்வம் ஸம்ஸ்துதா பூஜிதா ச முனீந்த்³ரை ர்மனு மானவை: ॥ 22 ॥

தை³த்யேந்த்³ரை ஶ்ச ஸுரைஶ்சாபி ப்³ரஹ்ம விஷ்ணுஶிவாதி³பி⁴: ।
ஜடீ³பூ⁴த ஸ்ஸஹஸ்ராஸ்ய: பஞ்சவக்த்ர ஶ்சதுர்முக:² ॥ 23 ॥

யாம் ஸ்தோதும் கி மஹம் ஸ்தௌமி தாமேகாஸ்யேன மானவ: ।
இத்யுக்த்வா யாஜ்ஞவல்க்ய ஶ்ச ப⁴க்தினம்ராத்ம கந்த⁴ர: ॥ 24 ॥

ப்ரணனாம நிராஹாரோ ருரோத³ ச முஹுர்முஹு: ।
ஜ்யோதீரூபா மஹாமாயா தேன த்³ருஷ்டா7ப்யுவாச தம்‌ ॥ 25 ॥

ஸுகவீந்த்³ரோ ப⁴வேத்யுக்த்வா வைகுண்ட²ம் ச ஜகா³ம ஹ ।
யாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீ ஸ்தோத்ரமேதத்து ய: படே²த்‌ ॥ 26 ॥

ஸ கவீந்த்³ரோ மஹாவாக்³மீ ப்³ருஹஸ்பதிஸமோ ப⁴வேத்‌ ।
மஹா மூர்க²ஶ்ச து³ர்பு³த்³தி⁴ர்‌-வர்ஷமேகம் யதா³ படே²த்‌ ।
ஸ பண்டி³தஶ்ச மேதா⁴வீ ஸுகவீந்த்³ரோ ப⁴வேத்³த்⁴ருவம்‌ ॥ 27 ॥

இதி ஶ்ரீ தே³வீ பா⁴க³வதே மஹாபுராணே நவமஸ்கந்தே⁴
ஸரஸ்வதீஸ்தவம் நாம பஞ்சமோத்⁴யாய: ।
ஸரஸ்வதீ கடாக்ஷ ஸித்³தி⁴ரஸ்து ।

இத³ம் மயாக்ருதம் பாராயணம்
ஶ்ரீஸத்³கு³ரு சரணாரவிந்தா³ர்பணமஸ்து ।

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ யாஜ்ஞவல்க்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸரஸ்வதீ தேவியார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ ரகஸ்ய த்ரய சுகளம் -ஸ்ரீ சார சங்க்ஷேபம் –

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

திருமந்தராதிகாரம்‌ -முன்னுரை 
ஆசார்ய லக்ஷணங்கள்‌ நிறைந்த சிறந்த ஆசார்யனை அடைந்து அவன்‌ கடாக்ஷத்தால்‌ ஞானம்‌ பெற்று ப்ர பத்தியைச்‌ செய்தவனுக்கு அந்த ப்ரயத்திக்குப்‌ பின்‌ திருமந்த்ரம்‌ - த்வயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய மூன்று ரஹஸ்யங்களை அதுஸந்தித்துக்‌ கொண்டும்‌ அவற்றின்‌ அர்த்தங்களை சிந்தித்துக்‌ கொண்டும்‌ இருப்பது எப்பொழுதும்‌ இன்பத்தைத்‌ தரும்‌.

திருமந்த்ரம்‌' சேதநன்‌ முக்கியமாய்‌ அறியவேண்டிய 'எல்லா விஷயங்களையும்‌
சருக்கமாய்த தெரிவிக்கும்‌. இது எட்டு அக்ஷரங்கள்‌ கொண்டது. இதில்‌ மூன்று பதங்கள்‌ உண்டு. முழுதும்‌ ஒரே வாக்யமாயிருக்கும்‌-இதில்‌ முதற்பதம்‌ ப்ரணவம்‌. இந்த ப்ரணவம்‌ எல்லா வேதங்களுக்கும்‌ மூலமானது. இதைச்‌ சொல்லிவிட்டுத்‌ தான்‌
வேதத்தைத்‌ தொடங்க வேண்டும்‌. இது ஒரே எழுத்தாக உள்ளது. வேதமும்‌ ஸ்ம்ருதிகளும்‌ இந்த ஒரெழுத்தான ப்ரணவத்தை மூன்று எழுத்துக்‌ கொண்டதாகக்‌ கூறி அந்த மூன்று அக்ஷரங்களையும்‌ மூன்று பதமாகப்‌ பிரித்து ஒரு வாக்யமாக வைத்துப்‌ பொருள்‌ கூறியுள்ளன.

இந்த ப்ரணவத்தில்‌ அ-உ-ம்‌ என்ற மூண்று எழுத்துக்கள்‌ உள்ளன. இதில்‌ முதல்‌ எழுத்தான ?௮ என்பது பிராட்டியைப்‌ பிரியாத எம்பெருமானைச்‌ சொல்லுகிறது. எத்தகைய எம்பெருமானை? எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌ எல்லோரையும்‌ காப்பவனாம்‌ எல்லோருக்கும்‌ சேஷியான எம்பெருமானைக்‌ காட்டும்‌. இந்த மூன்று அம்சங்களையும்‌ அகாரம்‌ எவ்வாறு காட்‌டுகின்றது என்பதை ஆராய்வோம்‌ - உலகில்‌ சொற்களும்‌ அச்சொற்களால்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ உண்டல்லவா? சொற்களுக்கெல்லாம்‌ மூலமான எழுத்து அ என்பது. எழுத்துக்கள்‌ ௮” வில்‌ தானே தொடங்குகின்றன! இவ்வாறே சொற்கள்‌ கூறும்‌ பொருள்களுக்கெல்லாம்‌ மூல காரணமாயுள்ளவன்‌ எம்பெருமானே-இப்படி சொற்களுக்கு மூலமான அகாரம்‌ சொற்‌ பொருள்களுக்கு மூல காரணமான எம்பெருமானைக்‌ கூறுவது பொருத்தம்‌ தானே! இவ்வம்சத்தை வாமன புராணமும்‌ காட்டுகின்றது. ஆகவே ௮ என்பதால்‌ அனைத்துக்கும்‌ எம்பெருமான்‌ காரணம்‌ என்ற பொருள்‌ தேறியது. மேலும்‌ ?௮? என்னும்‌ எழுத்து "அவ்‌? என்ற தாதுவிலிருந்து தேறுகின்றது. ?அவ்‌? என்ற வினைப்பகுதி (தாது) காத்தல்‌ என்ற பொருளைக்‌ காட்டும்‌. இவ்வழியால்‌ எல்லோரையும்‌ காப்பவன்‌ என்ற பொருள்‌ தேறும்‌. மேலும்‌ இந்த ௮? என்னும்‌ எழுத்தின்‌ மேல்‌ ஆய: என்னும்‌ நான்காம்‌ வேற்றுமையுருபு ஏறிப்‌ பின்‌ மறைந்திருக்கின்றது. இந்த வேற்றுமை யுருபுக்கு அடிமைத்‌ தன்மை பொருளாகும்‌. இங்கு எம்பெருமானால்‌ காக்கப்படும்‌ ஜீவன்‌ அவனுக்கு அடியன்‌ என்று பொருள்‌ கிடைக்கின்றது. இப்படி ஜீவன்‌ அவனுக்குச்‌ சேஷன்‌ என்று ஏற்பட்டால்‌ எம்பெருமான்‌ ஜீவனுக்குச்‌ சேஷியாகின்றான்‌. ஆகவே எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌ எல்லோரையும்‌ காப்பவனாகத்‌ திகழும்‌ எம்பெருமான்‌ எல்லோர்க்கும்‌ சேஷியாகவும்‌ உள்ளானென்று அகாரத்தால்‌ தேறியது.-இப்படி ஜீவன்‌ அடியனாம்‌ எம்பெருமான்‌ தலைவனாய்‌
நிற்றலாகிய சேஷ சேஷிபாவமென்னும்‌ ஸம்பந்தம்‌ ஒருநாளும்‌ யாராலும்‌ நீக்க முடியாதாதலின்‌ இதனால்‌ ஜீவன்‌ சரீரமாயும்‌ எம்பெருமான்‌ ஆத்மாவாயும்‌ நிற்பதென்ற சரீர சரீரிபாவ ஸம்பந்தமும்‌ கூறப்பட்டதாகின்றது. சரீரத்தின்‌ இலக்கணத்தில்‌ சேஷதவம்‌ ஒரு பகுதியன்றோ!

வயத்தில்‌ பிராட்டியின்‌ சேர்க்கை வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இங்குக்‌
கருத்தாகக்‌ கொள்ள வேண்டியுள்ளது.ப்ரணவத்தில்‌ உ” என்பது நடுவெழுத்து. இதற்கு அவதாரணம்‌ பொருள்‌ என்பர்‌ வடநூலார்‌. அவதாரணத்தைத்‌ தமிழர்‌ தேற்றேகாரம்‌ என்பர்‌. இரண்டும்‌ பரியாயச்‌ சொற்கள்‌. அவதாரணமேென் பதற்கு அவனுக்கு மட்டும்‌” *இவனுக்கே என்ற முறையில்‌ வரையறுத்தலே பொருளாகும்‌. அ?” என்பதுடன்‌ ௨”
என்ற எழுத்துச்‌ சேரும்போது அகாரத்தால்‌ கூறப்படும்‌ எம்பெருமானுக்கே அடியன்‌ ஜீவன்‌ என்று வரையறுத்த பொருள்‌ தேறும்‌. இதனால்‌ எம்பெருமானையன்றி மற்றுள்ளாரோடு ஜீவனுக்கு இயற்கையான ஸம்பந்தம்‌ ஏதுமில்லையென்று தேறியது.
இதனால்‌ எம்பெருமானையன்றி மற்ற தேவதைகளை விலக்க வேண்டிய அவசியம்‌ ஏற்படுவதுடன்‌ மற்ற தெய்வங்களை நாடுமவர்களையும்‌ அணுகாது விலக்க வேண்டுமென்பதும்‌ தேறியது.

ம்‌” என்ற எழுத்து ஜீவனைக்‌ கூறும்‌ பொருளில்‌ உருவாவதற்கு இரண்டு வழிகள்‌ உள்ளன. (1) வடமொழியில்‌ மந்‌” என்ற ஒரு தாது (வினைப்பகுதி) உள்ளது. இந்தப்‌ பகுதிக்கு அறிவு என்பது பொருள்‌. இந்த வினைப்பகுதியினின்று வியாகரண முறைப்படி ம்‌ என்று தேறிவிடுகின்றது. அப்பொழுது ஞான வடிவான ஆத்மா
என்று பொருளாகும்‌. (2) மற்றொரு வழி - வடமொழியில்‌ அஸ்மத்‌ என்ற ஒரு சொல்‌ உண்டு. இது தன்மைப்‌ பொருளில்‌ வருவது. வேதத்திற்கு இலக்கணம்‌ தனி. அந்த இலக்கணத்தின்‌ படி *அஸ்‌.மத? என்ற சொல்லில்‌ முன்னே உள்ள அஸ்‌” என்பதுவும்‌ பின்னே உள்ள அத? என்பதுவும்‌ அழிகின்றன. எஞ்சியுள்ள பகுதி ?ம்‌* என்பதுவே. இப்படி அஸ்மத்‌? என்ற முழுப்பகுதியே *ம்‌* என்று அகியிருப்பதால்‌ அந்தப்‌ பொருளே இதற்கும்‌ உண்டு.

ம்‌” என்னும்‌ மகாரம்‌ ஜீவனைக்‌ கூறுவதாய்த தேறியது. மந்‌” என்றவினைப்பகுதியினின்று ஞான வடிவன்‌ ஜீவாத்மா என்று தேறியது போல்‌ அநந்த வடிவமாயுள்ளவன்‌ என்றும்‌ தேறும்‌. எவ்வாறெனில்‌ நான்‌ என்று ஒவ்வொருவனும்‌ உணரும்போது அந்த ஜீவன்‌ அநுகூலனாகவே தோன்றுகின்றான்‌. நூன்‌” என்று உணரும்‌ எவனுக்காவது தன்‌ ஆத்மா ப்ரதிகூலனாய்த தோன்றுவதுண்டா? ஆகவே இன்பவடிவமாகவே தோன்று கின்றான்‌ ஜீவன்‌. ஆதலின்‌ அநந்த வடிவமாயுமுள்ளவனென்றும்‌ தேறுகின்றது. இவ்வாற்றால்‌ ஞானவடிவனாய்‌ ஆநந்தவடிவனாய்‌ முன்கூறிய அடிமைத்‌ தன்மையுடையவனாயுள்ளவன்‌ ஜீவாத்மா என்று பொருள்‌ தீர்ந்தது. ப்ரணவத்தின்‌ முழுப்பொருள்‌ ப்ரணவத்தில்‌ இந்த மூன்று அக்ஷ்ரங்களின்‌ அர்த்தத்தையும்‌ சேர்த்து ஒரு பொருளாகப்‌ பார்க்கும்போது ஜீவனைப்‌ பற்றிய பின்வருமாறு உள்ள அநுஸதந்தாநம்‌ பலிக்கும்‌. அதாவது - "ஜீவாத்மா தன்னை அறிய வேறொரு ஞானம்‌ வேண்டாதபடி தானே நான்‌? என்று ப்ரகாசிப்பவன்‌; எப்பொழுதும்‌ அநுகூலனாகவே தோற்று. மவன்‌: தன்‌ ஞானத்தாலே வஸ்துக்களை அறிபவன்‌; தான்‌ ப்ரகாசிப்பதால்‌ வரும்‌ பயனைத்‌ தானே பெறுமவன்‌; (ப்ரக்ருதி - மஹாந்‌ - அஹங்காரம்‌ - ஜஞாநேந்தரியம்‌ ஐந்து - கர்மேந்த்ரியம்‌ ஐந்து - மனம்‌ - தந்மாத்ரங்கள்‌ ஐந்து - பூதங்கள்‌ ஐந்து ஆகிய) இருபத்துநான்கு அசேதந தத்துவங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. இத்தகைய ஜீவாத்மா, எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌” எல்லோரையும்‌ காப்பவனாய்‌ எல்லோருக்கும்‌ தலைவனான சரிய: பதிக்கே இயற்கையில்‌ அடியனாயிருப்பவன்‌; வேறு எவனுக்கும்‌ அடியனாகத தகுதியூடையனல்லன்‌”. என்பதுவே. 'ப்ரணவத்தால்‌ இந்த அர்த்தத்தை அறிந்து சேதநன்‌ அநுஸந்திப்பான்‌. இப்படி ஜீவாத்மாவாகிய தான்‌ எம்பெருமானுக்குச்‌ சேஷமென்று தீர்ந்ததால்‌ தனக்கு உடைமையாயுள்ள ஸகல வஸ்துக்களும்‌ எம்பெருமானுக்கே சேஷமாயுள்ளனவென்றும்‌ தேறுகின்றது. உகாரத்திற்கே பொருள்‌ பிராட்டியென்று சுருதி முதலியன கூறுகின்றன. ஆகவே பரணவத்தில்‌ கடை எழுத்தான மகாரத்தால்‌ கூற.ப்படும்‌ ஜீவன்‌ முதலெழுத்தான அகாரத்தால்‌ கூறப்படும்‌
எம்பெருமானுக்கும்‌ நடு எழுத்தான உகாரத்தால்‌ கூறப்படும்‌ பிராட்‌ டிக்கும்‌ தாஸனாய்‌ நிற்பவன்‌ என்று பொருள்‌ தேறுகின்றது.ப்ரணவத்துக்கும்‌ நம: என்பதற்கும்‌ சேர்த்துப்‌ பொருளை ஆராய்ந்தால்‌ 'ஜீவ்னாஇய நானும்‌ என்னுடையனவாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ உண்மையில்‌ என்னுடையனவாகமாட்டா. பிறருக்கும்‌ இவற்றில்‌
சிறிதும்‌ - உரிமையில்லை. இவை அனைத்தும்‌ மற்றவருக்கு உரிமையில்லாதவாறு எம்பெருமானுக்கே சேஷமாயுள்ளன? என்று அநுஸந்திக்க வேண்டியதாய்‌ முடிந்தது.

திருமந்திரத்தின்‌ பதங்களை வாக்கியமாகச்‌ சேர்த்துப்‌ பொருள்‌ பூ கண்ட பெரியோர்கள்‌ பத்துவகை அர்த்தங்களை அநுஸந்திப்பர்‌. -அந்தப்‌ பத்துவகைப்‌ பொருள்களும்‌ ஸ்ரீமத்‌ ரஹஸ்யத்ரய ஸாரத்தில்‌ விளக்கமாய்க்‌ கூறப்பட்டுள்ளன-
முன்னோர்களான பெரியோர்கள்‌ 'திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வயைக நிஷ்ட்‌ டரா£வீர்‌' என்று சிஷ்யர்களுக்கு உப்தேசித்தார்கள்‌.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ தத்வ த்ரய சுகளம்-

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சுளகம்‌ என்ற சொல்லுக்கு உள்ளங்கை என்று அர்த்தமாகும்‌.. -அசேதநம்‌ - சேதநன்‌ - ஈச்வரன்‌ என்னும்‌ தத்துவங்களைப்‌ பற்றிய  விஷயங்களை உள்ளங்கையில்‌ வைத்தாற்‌ போல்‌ எளிதில்‌  காட்டுவதால்‌ இந்த ரஹஸ்யத்திற்கு இப்பெயர்‌ வந்தது -
ஸ்ரீ மந்‌ நாராயணன்‌ திருவடிகளே சேதநர்க்கு உபாயமாகனும்‌ -அதனால்‌ வரும்‌ பலனாகவும்‌ ஆகும்‌. இவ்வெண்ணத்துடன்‌ அவன்‌ திருவடிகளைப்‌ பற்ற வேண்டுமானால்‌ முதலில்‌ மூன்று தத்துவங்களைப்‌ பற்றிய உண்மைகளை விரிவாய்‌ அறிய வேண்டும்‌. இவற்றை அறிந்தால்‌ மட்டுமே சில விபரீத ஜ்ஞாநங்கள்‌ ஒழியும்‌. அவையாவன - (1) சரீரத்திலும்‌ ஆத்மா வேறு பட்டிருக்கும்‌ உண்மையை அறியாமல்‌ சரீரத்தையே ஆத்மாவராகக்‌ கருதுதல்‌. (2) எம்பெருமானுக்கு அடிமையாக இருக்கும்‌ ஆத்மாவை ஸ்வதந்த்ரனாக நினைத்தல்‌. மூன்று தத்துவங்களையும்‌ நன்கு அறிந்தால் தான்‌ இந்த விபரீத எண்ணங்களெல்லாம்‌ ஒழியும்‌.

அசேதந வஸ்து மூவகைப்படும்‌. (1) த்ரிகுணம்‌ (2 காலம்‌ -(3) சுத்த ஸத்துவம்‌. இந்த மூன்றுக்கும்‌ அறிவு கிடையாது. ஆதலால்‌ அசேதநமாகும்‌.
தர்மபூதஜ்ஞாநத்தின்‌ நிலை -இங்கு ஒரு கேள்வி - ஜீவனிடம்‌ உள்ள அறிவைத்‌ தர்ம
பூதஜஞாநம்‌ என்று கூறுகின்றோமே! அதற்கும்‌ அறிவு இல்லையே! அறிவுக்கு ஒர்‌ அறிவு ஏது? ஆதலின்‌ அதுவும்‌ ஒர்‌ அசேதந வஸ்துவாய்‌ உள்ளதே! இந்த மூன்றைப்‌ போல்‌ அதையும்‌ அசேதந வஸ்துவில்‌ சேர்த்து நான்காகக்‌ கூற வேண்டாமா? என்று

அசேதநங்களை விளக்குவதன்‌ பயன

இந்த மூன்றை மட்டும்‌ பிரித்து விளக்குவதன்‌ காரணத்தை ஆராய்வோம்‌. திரிகுணம்‌ என்னும்‌ ப்ரக்ருதியைப்‌ பற்றி விளக்கினால்‌ இருபத்தைந்தாவது தத்துவமாகிய ஜீவனைப்‌ பற்றி விளக்கமாய்‌ அறியமுடியும்‌. அந்த ப்ரக்ருகியின்‌ மாறுபாடாகிய
சரீரத்தினும்‌ ஜீவனுக்கு வேறுபாடு தெரியவேண்டுமன்றோ!
இவ்வாறே காலத்தைப்‌ பற்றிய விளக்கம்‌ தெரிந்தால்தான்‌ இம்மைச்‌ செல்வம்‌ நெடுங்காலம்‌ நிலைக்கக்கூடியதன்று என்ற விவேகம்‌ ஏற்படும்‌. மேலும்‌ இந்தக்‌ காலத்திற்குக்‌ கட்டுப்படாத பரமபதத்தில்‌ ஆசை உண்டாகும்‌. மேலும்‌ அந்த அந்தக்‌ காலத்தில்‌ செய்ய வேண்டிய காரியங்களை உரிய காலத்தில்‌ செம்வதற்கு எண்ணம்‌
கொள்ளவும்‌ காலத்தைப்‌ பற்றிய விளக்க அறிவு பயன்படும்‌. இங்ஙனமே சுத்த ஸததுவததைப்‌ பற்றிய விரிவான அறிவு உபாயமும்‌ பலனுமாய்‌ நிற்கும்‌ எம்பெருமானுடைய திருமேனி முதலியன சுத்த ஸத்துவ மயமாயிருப்பதை நன்கு அறியப்‌ பயன்படும்‌. இந்த மூன்று அசேதநங்களின்‌ விளக்க அறிவு பயன்படுமளவுக்குத்‌ தர்மயூதஜ்ஞாநத்தின்‌ விளக்கம்‌ பயன்படாதாகையாலும்‌ அதை இந்த மூன்று அசேதநங்களுடன்‌ சேர்க்கவில்லை.
ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌! என்னும்‌ மூன்று  குணங்களுக்கும்‌ இருப்பிடமான ப்ரக்ருதி, தரிகுணம்‌ என வழங்கும்‌.  இந்த ப்ரக்ருதி சேதநர்களுக்குப்‌ பகவானுடைய ஸ்வரூபத்தைக்‌ காட்டாமல்‌ மறைக்கின்றது. இன்னும்‌ பல தீங்குகளையும்‌ விளைவிக்கின்றது. -ஸத்துவம்‌ - இது உயர்ந்த குணம்‌. இது சேதநருக்கு 
வஸ்துக்களின்‌ உண்மையான நிலையைக்‌ காட்டும்‌. மனிதன்‌ ஸுகம்‌ பெறுதற்கும்‌ காரணமாகும்‌. இந்தக்‌ குணம்‌ சிலருக்கு . மிகவும்‌ அதிகமாகி விட்டால்‌ மோக்ஷத்துக்குச்‌ சாதனமான” செயலைச்‌ செய்யத்‌ தூண்டி உதவி புரியும்‌-ரஜஸ்‌ என்பது நடுத்தரமான ஒரு குணம்‌. இது சேதநருக்கு ஆசை - துன்பம்‌ - விபரீத ஜ்ஞாநம்‌ முதலியவற்றை உண்டாக்கும்‌. தமஸ்‌ என்பது இழிவான குணம்‌.
இது மனிதருக்குக்‌ கவனமில்லாமை - சோம்பல்‌ - உறக்கம்‌ - அஞ்ஞாநம்‌ முதலியவற்றைத்‌ தரும்‌.இந்த மூன்று குணங்களும்‌ ப்ரக்ருதியில்‌ ஏற்றக்‌ குறைவின்றி
ஸமமான அளவுக்கு இருக்கும்‌ ஸமயமே மஹாப்ரளயமாகும்‌. ஸ்வதந்தரனான எம்பெருமான்‌ ஸங்கல்‌.்பித்தால்தான்‌ இம்மூன்று குணங்களும்‌ ஸமமான அளவுக்குச்‌ சேரும்‌. எப்பொழுது அவன்‌ ஸங்கல்பிப்பான்‌ என்பதைச்‌ சாஸ்தரம்‌ கூறியுள்ளது. அந்த
ஸங்கலபத்துக்கு அவனே காலத்தைக்‌ குறிப்பிட்டுக்‌ கொள்வான்‌.இவ்வாறே இந்த மூன்று குணங்களும்‌ ப்ரக்ருதியில்‌ சில ஸமயத்தில்‌ ஒன்றுக்கொன்று ஏற்றக்‌ குறைவாய்‌ இருக்கும்‌. இந்த ப்ரக்ருதி அப்பொழுதுதான்‌ மஹாந்‌ அஹங்காரம்‌ முதலிய
மாறுபாடுகளை அடைகின்றது. அப்பொழுது தான்‌ உலகில்‌ ஸ்ருஷ்டி (படைப்பு) ஏற்படுகின்றது. நம்‌ சரீரத்தில்‌ வாதம்‌ - பித்தம்‌ - கபம்‌ என்ற தாதுக்களில்‌ ஒன்று குறைவதும்‌ மற்றொன்று கூடுவதுமாய்‌ இருக்கவில்லையா? அவ்வாறே ப்ரக்ருதியில்‌ இம்மூன்று குணங்களுள்‌ ஒன்று ஏறுவதும்‌ மற்றொன்று இறங்குவதுமாய்‌ இருப்பதுண்டு. அப்பொழுதுதான்‌ ப்ரக்ருதி பல வஸ்துக்களாய்‌ மாறுபாட்டை யடைகின்றது. இவ்வாறு குணங்களில்‌ ஏற்படும்‌ ஏற்றச்‌ சுருக்கங்களுக்கு அளவேயில்லை.

முற்கூறிய மூன்று குணங்களும்‌ ஸமமான நிலையில்‌ இருக்கப்‌ யெற்ற வஸ்துவே மூல ப்ரக்ருதி என வழங்குகின்றது. இந்த மூலபரக்ருதிக்கு அறிவு கிடையாது; அழிவு கிடையாது; பிறர்‌ பயனுக்காகவே ஏற்பட்டது. எப்பொழுதும்‌ மாறுபாடு அடைந்து
கொண்டேயிருப்பது. ஸ்ரீவைகுண்டம்‌ தவிர மற்ற இடங்களில்‌ இது இல்லாத இடம்‌ இல்லையென்னலாம்படி எங்கும்‌ பரவியுள்ளது. இந்த ப்ரக்ருதி மிவும்‌ ஸூக்ஷமமான சில மாறுபாட்டை அடையும்போது அதற்குத தமஸ்‌ முதலிய சில பெயர்ப்‌
பிரிவுகளைச்‌ சுருதி சொல்லுகின்றது.

இந்த ப்ரக்ருதி பல்வேறு வஸ்துக்களாய்‌ மாறு படும்போது வயக்தமெனப்‌ பெயர்‌ பெறும்‌. ஒரே வகையான மாறுபாட்டை அடையும்போது அவயக்தமெனப்‌ பெயர்‌ பெறும்‌. இந்த ப்ரக்ருதி மாறுபடும்‌ நிலையில்‌ வயக்தமெனப்‌ பெயர்‌ கொண்டு மஹாந்‌ முதல்‌ ப்ருதிவீ வரை உள்ள இருபத்துமூன்று தத்துவமாக மாறும்‌.
பரக்குதியின்‌ முழுப்‌ பகுதியும்‌ இப்படி இருபத்து மூன்று தத்துவங்களாக மாறுவதில்லை. அதில்‌ ஒரு பகுதியே இப்படி மாறுகின்றது. மற்ற பகுதி மாறாமல்‌ அப்படியே இருந்து கொண்டிருக்கும்‌. ப்ரக்ருதியில்‌ மற்ற வஸ்துக்களாக மாறுபடும்‌ பகுதி கடலில்‌ அலைகளையுடைய பகுதி போன்றதாகும்‌. மாறுபடாமல்‌
அப்படியே நிற்கும்‌ பகுதி கடலில்‌ அலையேயில்லாத இடம்‌ போன்றதாகும்‌. இப்படி மஹாத்‌ முதலிய மாறுபாட்டை அடையாமல்‌ அப்படியே நிற்கும்‌ ப்ரக்ருதியின்‌ பகுதியிலும்‌ கூட ப்ரளய நிலையில்யோல்‌ மிகவும்‌ ஸு்க்ஷூமமாய்‌ நமக்குப்‌
புலப்படாதனவாய்‌ ஒரே வகையான மாறுபாடுகள்‌ இருந்து கொண்டேயிருக்கும்‌.

இப்படி பரக்குதியில்‌ ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று குணங்களின்‌ ஏற்றச்‌ சுருக்கங்களால்‌ ஏற்படும்‌ மாறு பாடுகளில்‌ முதல்‌ மாறுபாடு மஹாந்‌ என்பது. ஜீவனுக்கு நிச்சயவடிவமான ஞானத்தை மநஸ்ஸுதான்‌ உண்டாக்குகின்றது.
அப்பொழுது இந்த மஹாந்‌ மனத்துக்குத்‌ துணையாயிருக்கும்‌. ஆதலால்‌ இநத மஹாந்‌ புத்தி என்று வழங்கப்பெறும்‌. இந்த மஹானும்‌ தன்னிடம்‌ உள்ள குணத்தைக்‌ கொண்டு மூன்று வகைப்படும்‌. மஹானில்‌ ஸத்துவகுணம்‌ அதிகமாயிருந்தால்‌
ஸாத்துவிக மஹாந்‌ என்றும்‌, ரஜோ குணம்‌ மிகுந்திருந்தால்‌ ராஜஸ மஹாந்‌ என்றும்‌, தமோ குணம்‌ அதிகமாயின்‌ தாமஸ மஹாந்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌.
இந்த மஹானிலிருந்து பிறக்கும்‌ தத்துவம்‌ அஹங்காரம்‌ என்பது. இதன்‌ செயல்‌ வருமாறு - ஜீவனிலும்‌ வேறுபட்ட சரீரத்தையே ஆத்மாவாக நினைத்து அதில்‌ நான்‌ என்ற எண்ணத்தை மனம்‌ உண்டாக்குகின்றது. அப்பொழுது மனத்துக்கு இந்த அஹங்காரம்‌ துணை புரிகின்றது. அதனாலேயே இதற்கு அஹங்காரம்‌ என்ற பெயர்‌ வந்தது. இந்த அஹங்காரமும்‌ தனக்குக்‌ காரணமான மஹான்‌ போலேஸாத்துவிகம்‌ - ராஜஸம்‌ - தாமஸம்‌ என்று குணங்களின்‌ மிகுதி குறைவுகளைக்‌ கொண்டு
மூவகைப்படும்‌. இவற்றுள்‌ ஸாத்தவிக அஹங்காரத்தினின்று இந்திரியங்கள்‌ பிறக்கின்றன. தாமஸ அஹங்காரத்தினின்று பின்‌ தரும்‌ விளக்கத்தின்படி பூதங்கள்‌ பிறக்கின்றன. இந்த இரண்டு அஹங்காரங்களும்‌ தத்தம்‌ காரியங்களைப்‌ பிறப்பிக்கும்போது ராஜஸ அஹங்காரம்‌ இவ்விரண்டுக்கும்‌ தூண்டித்‌ துணை புரியும்‌

ஸாத்துவிக அஹங்காரத்தினின்று பதினொன்று. இந்திரியங்களும்‌ பிறக்கின்றன. இந்த்ரியங்கள்‌ உள்‌  இந்திரியங்களென்றும்‌ புற இந்திரியங்களென்றும்‌ இருவகைப்படும்‌. -உள்‌ இந்திரியமென்பது மனம்தான்‌. இந்த மனம்‌ 
ஸம்ஸாரலோகத்தில்‌ உள்ள சேதநர்கள்‌ ஒன்றைச்‌ செய்ய ஸங்கல்பிப்பதற்கும்‌ ஒன்றை நினைத்தற்கும்‌ மற்றும்‌ சில எண்ணங்கள்‌ உண்டாவதற்கும்‌ காரணமாயிருக்கும்‌. வெளி இந்திரியங்கள்‌ தத்தம்‌ செயலைச்‌ செய்ய இந்த மனம்‌ துணையாய்‌ நிற்கும்‌. உலகில்‌ மனிதனுக்கு நிச்சயமான எண்ணம்‌ உண்டாகின்றதன்றோ! அந்த எண்ணத்துக்கு மனம்தான்‌ காரணமாகின்றது. அப்பொழுது மனம்‌ புத்தி என்று பெயரால்‌ வழங்கும்‌. மனிதன்‌ ஒன்றை வேறொன்றாகத்‌ தவறிக்‌ கருதுகின்றான்‌. அதற்கும்‌ மனம்‌ தானே காரணம்‌! அந்த நிலையில்‌ மனம்‌ அஹங்காரம்‌ என்ற பெயர்‌ பெறுகின்றது. மனிதன்‌ ஒரு விஷயத்தைப்‌ பற்றி ஆலோசிக்னெறான்‌. இந்த ஆலோசனைக்கும்‌ மனமே காரணம்‌. இந்த நிலையில்‌ மனம்‌ சிததம்‌ என்று
அழைக்கப்பெறும்‌.


ஜஞாநேந்திரியங்கள்‌ ஐந்தும்‌ தத்தும்‌ செயலைப்‌ புரியும்‌ போது அவற்றின்‌ சக்தியை ஐந்து பூதங்களும்‌ வளர்த்துப்‌ போஷிக்கின்றன. காதுக்கு ஆகாய மம்‌. ஸ்பரிசேந்திரியத்துக்கு வாயுவும்‌, கண்ணுக்குத்‌ தேஜஸ்ஸும்‌. நாவுக்கு ஜலமும்‌, மூக்குக்குப்‌ பூமியும்‌ துணைநின்று அவ்விந்திரியங்களின்‌ சக்தியை வளர்க்கின்றன. இவ்வாறே உள்ளிந்திரியமாகிய மனத்துக்குப்‌ பூமி என்னும்‌ பூதம்‌ போஷகமாயுள்ளது. ப்ராண வாயுவை ஜலம்‌ போஷிக்கிறது. வாக்குக்குத்‌ தேஜஸ்‌ போஷகமாகும்‌.

மஹாந்‌ என்ற தத்துவம்‌ தொடங்கி ப்ருதிவி வரையில்‌ உள்ள எம்பெருமானது படைப்பு ஸமஷ்டி ஸ்ருஷ்டியெனப்படும்‌. இந்த மஹான்‌ முதலிய தததுவங்களின்‌ பகுதிகளைக்‌ கொண்டு செய்யப்படும்‌ படைப்பு வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌.

சுத்த ஸத்துவத்தின்‌ உருவத்தைப்‌ பற்றிச்‌ சில கருத்துவேற்றுமைகள்‌ உண்டு.
அவையாவன - சிலர்‌ இந்தச்‌ சுத்த ஸத்துவத்தை ப்ரக்ருதியையும்‌ காலத்தையும்‌ போல ஜடம்‌ என்கின்றனர்‌. அதாவது - தானே பரகாசிக்காமல்‌ வேறொன்றால்‌ புலப்படுத்த வேண்டியதாயுள்ள தென்கின்றனர்‌. சிலர்‌ சுத்த ஸத்துவத்தை ஸ்வயம்‌
ப்ரகாசமென்கின்றனர்‌. அதாவது - இதைக்‌ காண்பதற்குச்‌ சாதனமாய்‌ வேறொன்றும்‌ வேண்டியதில்லையென்றும்‌ தானே ப்ரகாசிததுக்‌ கொண்டிருக்குமென்றும்‌ கூறுகின்றனர்‌. தர்மபூதஜ்ஞாநம்‌, ஜீவாத்மா, அவனுடைய தர்மபூதஜ்ஞானம்‌, சுத்த ஸத்த்வம்‌ ஆகிய இவையெல்லாம்‌ ஸ்வயம்ப்ரகாசம்‌ என்று தேறுகின்றது. ஆத்மா *நான்” என்று எப்பொழுதும்‌ தோன்றிக்‌ கொண்டேயிருப்பதால்‌ இதை அறிய வேறு ஞானம்‌ வேண்டியதில்லை. ஆதலால்‌ _ஆதிமா ஸ்வயம்ப்ரகாசம்‌. ஆத்மாவிடம்‌ உள்ள ஞானம்‌ தர்மபூதஜ்ஞாநமெனப்படும்‌. இந்த ஞானம்‌ தன்னை அறிய வேறொரு ஞானம்‌
வேண்டாதபடி தானே ப்ரகாசிப்பதால்‌ இதுவும்‌ ஸ்வயம்ப்ர காசம்‌ என்னப்படுகின்றது. இவ்வாறே சுத்த ஸத்துவமும்‌ தன்னை அறிய வேறொரு ஞானம்‌ வேண்டாதபடி தானே ப்ரகாசிக்னெறது. ஆதலின்‌ இதுவும்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌. ஆக ஆத்மாக்களும்‌ தர்மபூத ஜ்ஞாநமும்‌ சுத்த ஸத்த்வமும்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌ என்ற முறையில்‌ ஒற்றுமையுடையன.

ஆயினும்‌ ஆத்மாவையும்‌ தர்மபூதஜ்ஞாநத்தையும்‌ காட்டிலும்‌ சுத்த ஸத்துவத்துக்குச்‌ சல வேற்றுமைகளும்‌ உண்டு. இந்த வேறுபாடுகள்‌ சாஸ்த்ரங்களால்‌ நிச்சயிக்கப்‌ பட்டனவாகும்‌. உதரஹரணமாம்‌ - ஆத்மாவுக்கு மாறுபாடு கிடையாது. சுத்த : ஸத்துவம்‌ வேறொரு வஸ்துவாய்‌ மாறுபாட்டை அடைவது. தர்ம பூதஜ்ஞாதம்‌ மற்றொரு
வஸ்துவைக்‌ காட்ட வல்லது. சுத்த ஸத்துவம்‌ தன்னை மட்டும்‌ காட்‌ டுமேயன்றி மற்றொரு வஸ்துவைக்‌ காட்ட வல்லதன்று. இப்படி சிற்சில வேற்றுமைகளையும்‌ சாஸ்தரமே வரையறுத்துள்ளது -ஆத்மா, தான் புலப்படுமேயன்றி மற்ற வஸ்துவைக்‌ காட்டாது. தர்‌மபூதஜ்ஞாநமோ தானே புலப்படுவதுடன்‌ மற்ற வஸ்துவையும்‌ காட்ட வல்லது.
ஆத்மா தான்‌ புலப்படுவதால்‌ வரும்‌ பயனைத்‌ -தானே பெறும்‌. தர்மபூத ஜ்ஞாநம்‌ தான்‌ புலப்படுவதால்‌ வரும்‌ பலனைத்‌ தான்‌ அடைய முடியாது. அசேதநம்தானே! ஆத்மாவுக்குச்‌ சுருக்கமோ மலர்ச்சியோ கிடையாது. தர்மபூதஜ்ஞாநம்‌ சுருங்குவதும்‌ மலருவதும்‌ உண்டு. இந்த வேற்றுமைகளையும்‌ சாஸ்தரம்‌ , வலியுறுத்திக்‌ கூறுவதால்‌ ஏற்றுக்‌ கொண்டேயாக வேண்டியிருக்கன்றதன்றோ! இவ்வாறே இந்த இரண்டிலும்‌ காட்டிலும்‌ இந்தச்‌ சுத்த ஸத்துவத்திற்குக்‌ ழ்க்‌ கூறியவாறு லை வேற்றுமைகளையும்‌ முன் கூறிய ப்ரமாணங்களை ஒத்த ப்ரமாணங்கள்‌ வலியுறுத்திக்‌ கூறுவதால்‌ இசைந்தேயாக வேண்டும்‌. -
சுத்த -ஸத்துவத்தின்‌ தன்மைகள்‌ நமக்கு மிகவும்‌ அநுகூலமாயிருப்பதால்‌ “சுத்த ஸத்துவத்தை ஆநந்தமயம்‌' என்றும்‌ கூறுவர்‌. இது எம்பெருமானுடைய ஞானம்‌ - சக்தி - பலம்‌: ஐச்வர்யம்‌. --வீர்யம்‌ - தேஜஸ்‌ ஆகிய ஆறு குணங்களும்‌! நமக்குப்‌ புலப்படும்படி செய்வதால்‌ ஷாட்குணயமயம்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌.

வாத்மாவைப்‌ பற்றிய விளக்கத்தை ஸ்ரீ ஆளவந்தார்‌ தாம்‌ அருளிச்‌ செய்த ஸித்தித்ரயத்தில்‌ ஆத்மஸித்து என்ற பகுதியில்‌ "தேஹேந்தரிம: என்று தொடங்கும்‌ சுலோகத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌ -தேறஹேந்த்ரிய மந: ப்ராணூ.ப்யோ 2ந்யோ 2நந்யாஸாததந: நித்யோ வ்யாபீ ப்ரதிக்ஷேத்ரமாத்மா பிந்ந: ஸ்வதஸ்ஸு-இதற்குச்‌ சுருக்கமான பொருள்‌ வருமாறு - ஜீவாத்மா, சரீரம்‌ - இந்தரியம்‌ - மநஸ்‌ - ப்ராண வாயு - தர்மபூதஜ்ஞாநம்‌ இவற்றிற காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. தானே ப்ரகாரிப்பவன்‌. அழிவற்றவன; எந்த அசேதநத்திலும்‌ உள்ளே புகவல்லவன்‌. சரீரம்தோறும்‌
வேறுபட்டவன்‌. இயற்கையில்‌ ஸுகஸ்வரூபனும்‌ ஸாகத்தைப்‌ பெறத்‌ தகுதி யுடையவனுமா யிருப்பவன்‌.

எம்பெருமானுக்கு இரண்டு வகைப்பட்ட தன்மைகள்‌ உண்டு. (1) ஸ்வரூப நிரூபக தர்மங்கள்‌ (2) நிரூபித ஸ்வரூப விசேஷணங்கள்‌.-ஸ்வரூப நிரூபகங்களாவன - ஒரு வஸ்துவின்‌ ஸ்வரூபத்தை எந்தத்‌ தன்மைகளையுடையதாகக்‌ கூறியே விளக்கினாலன்றி அந்த வஸ்துவை அறிய முடியாதோ அந்தத்‌ தன்மைகள்‌ எம்பெருமானுக்கு (1) ஸத்யத்வம்‌ (2) ஜ்ஞாநத்வம்‌ (3) அநந்தத்தவம்‌ (4) ஆநந்தத்வம்‌ (5) அமலத்வம்‌ என்னும்‌ ஐந்து தன்மைகளும்‌ ஸ்வரூப நிரூபக விசேஷணங்கள்‌. எம்பெருமானைப்‌ பற்றி அறிய முற்படும் யோது இந்தத்‌ தன்மைகளை அறிந்தே இவற்றுடன்‌ கூடியவனாக அவனை உணர வேண்டும்‌. இந்த ஐந்தையும்‌ சேர்க்காமல்‌ அவன்‌ ஸ்வரூபத்தை மட்டும்‌ அறியமுடியாது.
(1) ஸத்யத்வம்‌ - எப்பொழுதும்‌ மாறுபடாது ஒரே நிலையில்‌ நிற்றல்‌.
(2) ஜ்ஞாநதவம்‌ - எப்பொழுதும்‌ குறைவுபடாத ஞான வடிவனாயிருக்கும்‌ தன்மை.
(3) அநந்தத்வம்‌ - *இங்கு தான்‌ இருக்கின்றான்‌? என்று தேசததாலும்‌, இப்பொழுது தான்‌ இருக்கின்றான்‌? என்று காலத்தாலும்‌ இந்த வஸ்துவின்‌ அந்தர்யாமியாகத் தான்‌ இருக்கின்றான்‌, என்று வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதபடி எவ்விடத்திலும்‌ எக்காலத்திலும்‌ எந்த வஸ்துவையும்‌ சரீரமாகக்‌ கொண்டு நிற்கும்‌ தன்மை.
4) ஆநந்ததவம்‌ - ஆநந்த ஸ்வரூபனாய்‌ நிற்றல்‌-(5) அமலத்வம்‌ - தோஷங்களில்லாத தன்மை

நிரூபிதஸ்வரூபவிசேஷணம்‌ - ஒரு வஸ்துவின்‌ ஸ்வரூபத்தை விளக்கிய பின்‌ அதன்‌ பெருமை புலப்.படுவதற்குப்‌ புகழ்ந்து பேசும்‌ குணங்கள்‌. முற்கூறிய ஐந்து குணங்களு டனேயே எம்பெருமானை விளக்கிய பின்‌ அவன்‌ பெருமையை அதிவதற்காக அவனிடம்‌ உள்ள ஜ்ஞாநம்‌ - சக்தி முதலிய குணங்களும்‌ இவற்றின்‌ உட்பிரிவுகளான ஸெளசீல்யம்‌ (மிக மேம்பட்டவன்‌ தாழ்ந்தவர்களோடு இடையீடின்றிக்‌ கலந்து பழகும்‌ தன்மை) முதலிய தன்மைகளும்‌ கூறப்‌ படுகின்றன. இவையெல்லாம்‌ நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாகும்‌. இக்குணங்களின்‌ இலக்கணங்களையும்‌ இவை பயன்படும்‌ முறை முதலியவற்றையும்‌ விரிவாக அறிய வேண்டுமானால்‌ சாஸ்த்ரங்களின்‌ உதவியை நாடிக்‌ கொள்க.
ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில்‌ முப்பத்தொன்ப; விபவரூபங்களுக்கும்‌ பெயர்கள்‌ கொடுக்கப் பட்டுள்ளன அவையாவன - (1) பத்மநாபன்‌ (2) ஸநத்குமாரன்‌ (8) தருவ 
(௧) அநந்தன்‌ (5) சக்த்யாத்மா (6) மதுஸூதநன்‌ (7) கபில (8) விச்வரூபன்‌ (9) விஹங்கமன்‌ (10) க்ரோடாதம (12) படபாவக்த்ரன்‌ (12) தர்மன்‌ (74) ஹயக்ரீவன்‌ (14) ஹம்ஸ (15) மத்ஸ்யம்‌ (16) கூர்மம்‌ (17) அம்ருநாூாஹரணன்‌ (18) வராஹ
(19) ந்ருஸிம்ஹன்‌ (20) ராஹுஜித (21) காலநேமிக்நன்‌ (22) பா ஜாதஹரன்‌ (23) தத்தாத்ரேயன்‌ (24) வடபத்ரசாயி (25) வாமன (26) த்ரிவிக்ரமன்‌ (27) நரநாராயணர்‌ (28) ஹரி (29) நாரத (30) ப்ருது (31) வ்ருஷபன்‌ (22) தந்வந்தரி (83) வ்யாஸ
(34) பாதாளசயநன்‌ (35) பரசுராமன்‌ (36) ராமன்‌ (67) பலராம (38) க்ருஷ்ணன்‌ (39) கல்கி என்பன.

எம்பெருமானுடைய அவதாரங்களைப்பற்றிய ஆறு ரஹஸ்யங்கள்‌ உண்டு. அவையாவன (3) எம்பெருமானுடைய அவதாரம்‌ ஒவ்வொன்றும்‌ இந்த்ரஜாலம்‌ போலன்றி உண்மையாயிருத்தல்‌ (2) அவதாரதசையிலும்‌ எம்பெருமானுக்கு
இயற்கையாயுள்ள தன்மைகளை விடாதிருக்கப்‌ பெறுதல்‌ (3) அவ தாரத்திலும்‌ உள்ள அவன்‌ திருமேனி! ரஜஸ்‌ - தமஸ்ஸுக்களின்‌ ஸ்ம்பந்தமேயில்லாது சுத்தஸத்துவமயமாகவேயிருத்தல்‌ (4) அவன்‌ இக்கர்மபூமியில்‌ அவதரிப்பதற்குக்‌ கர்மம்‌ முதலியவனவன்றின்‌ தன்‌ ஸங்கல்பமே காரணமாயிருத்தல்‌ (5) பூமியில்‌ தர்மம்‌ குறைந்து அதர்மம்‌ தலையெடுக்கும்யபேோது அவதரிக்கும்‌ தன்மை (6) ஸாதுக்களை ரக்ஷிப்பதே அவதாரத்திற்குப்‌ பலனாயிருத்தல்‌ என்பன.

எம்பெருமானுடைய எட்டு நிலைகள்‌ -(1) கர்த்தா (2) ப்ரேரகன்‌ (3) அநுமந்தா (4) ஸஹகாரி (5) ஸாக்ஷி! (6) பலப்ரதன்‌ (7) பலி (8) உதாஸீநன்‌ என்று அந்த அந்த நிலைகளில்‌ பெயர்‌ யெறுகின்றான்‌.-கர்த்தா - வஸ்துவினுள்‌ புகுந்து படைப்பு
முதலியவற்றைச்‌ செய்பவன்‌. -ப்ரேரகன்‌ - ஜீவனுக்கு அறிவைக்‌ கொடுத்து ஒரு
செயலைச்‌ செய்யுமாறு ஏவுபவன்‌.-அநுமந்தா - சேதநன்‌ செயலைச்‌ செய்யும்போது
அதைச்‌ செய்விப்பவன்‌.-ஸஹகாரி - சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌
யெரும்பகுதியை ஏற்றுத்‌ துணை செய்பவன்‌. -ஸாக்ஷி-சேதனன்‌ செய்யும்‌ செயலை நேரில்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பவன்‌.- பலப்ரதன்‌ - சேதநன்‌ செயல்களுக்குப்‌ பலனை
அளிப்பவன்‌.-பலி - அச்செயலின்‌ பலனை முக்கியமாய்ப்‌ யெறுமவன்‌-உதாஸீநன்‌ - சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌ விசேஷமான தொடர்பற்று ப்‌ பொதுக்‌ காரணமாக இருப்‌பவன்‌.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ சில்லரை ரகஸ்யங்கள்- ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி /ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்–

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை
ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே
வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்
7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம்
சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்
8—இது ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம்
9–இச் சமர்ப்பணத்தை தான் அனுஷ்ட்டிக்கவுமாம் -தனக்காக ஆச்சார்யாதிகள் அனுஷ்ட்டிக்கவுமாம்
10—இதற்குக் கோரின பலத்தைப் பற்றப் புந பிரபத்தி முதலான கர்தவ்ய சேஷம் இல்லை
11—இப்படி க்ருதக்ருத்யனான ப்ரபன்னனுக்கு வர்ண ஆஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வ தந்த்ர அஞ்ஞான சித்தங்களான கைங்கர்ய விசேஷங்கள்
12—இவனுக்கு ஆஞ்ஞா அனுஞ்ஞா சித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் பிரயோஜனங்கள்
13—கரண அகரண ரூபங்களான அபசாரங்கள் புகுந்தாலும் பிரபன்னனுக்கு நரகாதிகள் இல்லை –
14—ராஜ குமாரனுக்கும் அவதானம் பண்ணி நடக்க வேண்டுமா போலே லகு ப்ரத்யவாயமும் வாராமைக்காக அபசாரங்கள் துரபரி ஹரணீ யங்கள்
15—பிரபத்திக்கு கோரின பலத்துக்கு ஒன்றாலும் பிரதிபந்தம் இல்லை
16—புத்தி பூர்வக அபசாரங்கள் புகுந்தாலும் பிராயச்சித்த விசேஷம் அதிகாரி விசேஷம் நியதம்
17—இப்படி பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் கடின ப்ரக்ருதிகளுக்கு காசை காட்டுவாரைப் போலே
அவன் பண்ணுகிற சிஷைகளும் எல்லாம் சரண்ய பிரசாத பலம்
18—இங்கு இருந்த காலம் தர்ம அனுபந்தியான போகத்திலும் போக புத்தியால் ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தான்
அதிகார அனுரூபமான கைங்கர்ய அம்ருத ரசத்துக்கு தண்ணீர்த் துரும்பு
19—இப்படி நிஷித்த போக பிராவண்யம் கைங்கர்ய அம்ருத ரஸ விருத்தம் ஆகையால் விஷம் போலே திரை பரி ஹரணீயம்
20—கைங்கர்யமாவது -ஸ்வாமி உகந்த ஏவல் தொழில் செய்கையாலே இது எதா சாஸ்திரம் பண்ணினாள் உகப்பாம்
21—பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அனுஷ்ட்டிக்க அரிதான போது
பரம புருஷார்த்த காஷ்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயமாம்
22–இவை இரண்டிலும் பிரதானம் ஆச்சார்ய கைங்கர்யம்
23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்
24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்
25—இவனுக்கு அர்ச்சிராதி கதி சிந்தனைகள் சித்த சந்தோஷ ஹேது வான காலேயாபனம்-கால ஷேப கார்யம்
26—சாதக வ்ருத்தியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வதந்த்ர சாத்தியம் அன்று
27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்
28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி
29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு
30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

இது சாத்விக ஹ்ருதயங்கையமான ரஹஸ்ய ரத்நா வளி

சிறு பயனில் படியாத தாக்கவோர் எம்மைச் சேர்க்க அடைக்கலம் கொண்ட திருமால் தானே
மறு பிறவி அறுத்து அழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாத இருப்பது என் கொல்
உறுவது உனக்கு உரைக்கேன் இங்கு இருக்கும் காலம் ஒரு பிழையும் புகுதாத யுணர்த்தி வேண்டிப்
பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேர் அடிமையாலே இது என்று இகழேல் நீயே

ரஷந்த்வ அநந்யார்ஹ ஷேயம் லகீயா சீமபி காரீயசீ சாந்த
லஷ்மீ ஸஹாய ஹ்ருதயம் ரஹஸ்ய ரத்ன வளீம் ரமேயம் –

——————————————

ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்-

இது அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் பதினான்காவது.-காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது

தத்த்வோபாயா புமர்த்தேஷ
அத்யாத்மவிதாம் விபாவநீயேஷ
ஸ்வயமேவ ஸூசயாமோ
ரஹஸ்யரத்நாவளீஹ்ருதயம் |

ஸ்தாசார்யோபதே பூர்வகமாக ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸமர்ப்பித பரனான முமுக்ஷவினுடைய நிர்ப்பரத்வ அத்யவஸாயத்தைச் சொல்லுகிறது முதல் கவி

அத்யாத்மவிதாம் – வேதாந்த சாஸ்த்ரத்தைஅறிந்தவர்களுக்கு, விபாவநீயேஷ -அனுஸந்திக்கத் தக்கவைகளான, தத்வோபாயபுமர்த் தேஷ–தத்வம் ஹிதம் புருஷார்த்தம் இவைகளில், ரஹஸ்யரத்நாவளி ஹ்ருதயம் -ரஹஸ்ய ரத்நாவளி என்னும் க்ரந்தத்தின் தாத்பர்யத்தை –ஸ்வயமேவ – நாமே, சயாம: – ஸூசிப்பிக்கிறோம்.

இதில் ‘ ஒன்றே புகல்’ என்றது

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

(நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: |
கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத:
II)பாத்மோத்தரம்

ஸர்வபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுடைய, ஸ மூஹ: – கும்பல், நார: து இதி – நாரம் என்று, ப்ரகீர்த்தித: – சொலப்பட்டது, தஸ்ப – அந்தக் கும்பலுக்கு,கதி:-அடையவேண்டிய ப்ரயோஜனம், ஆலம்பனம் – ஆஸ்ரயிககவேண்டிய வஸ்து, தேந – ஆகையினால, நாராயண:இதி – நாராயணன் எனறு, ஸ்ம்ருத: – சொல்லப்பட்டான்.

(நாரோ நராணாம் ஸங்காத : தஸ்யாஹமயநம் கதி: )

நராணாம் – ஜீவாத்மாக்களுடைய, ஸ ங்க: – கும்பல், நார: – நார: (என்று சொல்லப்படுகிறது), தஸ்ய – அந்தக்கும்பலுக்கு, அஹம் – நான், அயநம கதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.(தேக – அத்தால், நாராயண இதி – நாராயணன் என்று,முநிபி-ரிஷிகளினால். ஈரித: – சொல்லப்பட்டவனாக,அஸ்மி – ஆகிறேன்,)

(ததேதததி துக்காநாம் ஆஸ்பதே து பவார்ணவே1 1
பத்தாம் கத்யதே ஸத்யம் விஷ்ணுரேக: பராயணம் ||

அதிதுக்காநாம் – அதிகமான துக்கங்களுக்கு, ஆஸ்பதே– இடமான, பவார்ணவே -ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தில், பததாம் – விழுகிறவர்களுக்கு,ஏக: விஷ்ணு: – விஷ்ணுஒருவனே, பராயணம் – முக்யமாக அடையவேண்டிய ப்ரயோஜனம, ததேதத் – அப்படிப்பட்ட இது, ஸத்யம் – உண்மையாக, கத்யதே – சொல்லப்படுகிறது.

(கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ: பரா கதி: ||- பாகவதம் – 11-19-18 )

கர்மணாம் – கர்மங்களுடைய, பரிபாகத்வாத் – பரிணாமமாக இருக்கிறபடியினால், ஆவிரிஞ்சாத் – ப்ரஹ்ம வரையிலும், அமங்களம் – பாபங்களைப் போக்கடிக்கக்கூடிய தன்மை
யாகிற சுபத்வம் இல்லாதவர்கள், இதி மத்வா – என்றுஎண்ணி, விரக் தஸ்ய -அவர்களிடத்தில் ஆசை இல்லாதவனுக்கு, வாஸு தேவ -பகவானே,பராகதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.

(யே ச வேதவிதோ விப்ரா: யே சாத்யாத்மவிதோ ஐநா: 1
தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் |1)

யே ச – எந்த, விப்ரா: – ப்ராஹ்மணர்கள், வேதவித: – வேதத்தை அறிந்தவர்களோ,யேச-எவர்கள், அத்யாத்மவிதோஜநா:-வேதாந்த சாஸ்த்ரத்தை அறிந்தவர்களோ,தே – அவர்கள், மஹாத்மாநம் – மஹாத்மாவாகிய, க்ருஷ்ணம்-க்ருஷ்ணனை, ஸநாதநம் – நித்யமான,தர்மம் – தர்மமென்று, வதந்தி – சொல்லுகிறார்கள்.

(அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் தம் பஸ்யந்தி மநீஷிண:யஜ்ஞாக்யம் பரமாத்மாநம் விஷ்ணும் த்யாயந் ந ஸ்ததி )-விஷ்ணுதர்மம் – 72 – 4

தம் – அந்தப் பகவானை,மநீஷிண:பெரியோர்கள், அம்ருதம் – அழிவில்லாத, ஸாதனம் – உபாயமாகவும், ஸாத்யம் – பலனாகவும், பச்யந்தி – பார்க்கிறார்கள், யஜ்ஞாக்யம் – யஜ் ஞம் என்று சொல்லப்படுகிற, பரமாத்மாநம் – பரமாத்மாவாகிய, விஷ் ணும் – விஷ்ணுவை, த்யாயந் – த்யானித்து, ந ஸ்ததி – துக்கப்படுவ தில்லை.

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய்-5-10-11- இத்யா திகளில் ஓர் அதிகாரி விசேஷத்திற்குப் பரம ப்ராப்யனான பரிய:பதி ஒருவனுமே வ்யாஜ விசேஷ வஸீகரணீயமான ஸித்தோபாயம் என்றபடி. உணர்ந்தவர்’ என்று ப்ரதிபுத்த அதிகாரி விசேஷத்தைச் சொல்லுகிறது.

(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச ப்ரத்யகாத்மம்:ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததா ப்ராப்தி விரோதி ச !வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா: )–ஹாரீத ஸம்ஹிதை.

ப்ராப்யஸ்ய – அடையவேண்டிய ப்ரயோ ஜனமாகிய, ப்ரஹ்மண: – ப்ரஹ்மத்தினுடைய, ரூபம்-ஸ்வரூபத்தையும், (ஸ்வபாவாதிகளையும்),ப்ராப்து: ச – அடைகிறவனாகிய – ப்ரத்யகாத்மந:- ஜீவாத்மாவினுடைய, (ஸ்வரூபாதிகளையும்). ப்ராப்த்யுபாயம் –அடைவதற்கு உபாயத்தையும், பலம் – பலத்தையும், ததா – அப்படியே, ப்ராப்தி விரோதிச – அடைவதற்குத் தடையாக நிற்கிற விரோதியையும், ஸேதிஹாஸ புராணகா: இதிஹாஸ புராணாதிகளோடு கூடிய, ஸகலா: – எல்லா, வேதா:- வேதங்களும், வதந்தி – சொல்லுகின்றன.

இத்யாதிகளிற் சொன்ன அர்த்த பஞ்சகத்தையும், சகார ஸமுச்சிதமான ஸம்பந்த விசேஷத்தையும், ஸத்த்வ நிஷ்ட்டருக்கு ஸ்ரோதவ்யபேஷமற உரைக்கலாம்படி திருந்தக் கண்டவர்களை ‘ப்ரதிபுத்தர் ‘ என்கிறது.

ப்ராப்யமான ப்ரஹ்மமாவது-(விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் |
ஸ்திதி ஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகச்ச ஸ : I!
-விஷ்ணுபுராணம்- 1 – 8 – 17

விஷ்ணோ: ஸகாசாத் – விஷ்ணு விடத்திலிருந்து, உத்பூதம் – உண்டானது, தத்ரைவ -அவ்விடத்திலே ஸ்திதம்-நிலைபெற்றிருக்கிறது,அஸௌ-இவன்,ஸ்திதிஸம்யமகர்த்தா ஸ்திதி நியமநம் இவற்றைச் செய்பவன், ஸ :- அவன்,ஜகச்ச -அந்த லோகமாகவும் (இருக்கிறான்)

(க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திரபி சாப்யய :-பார ஸபா – 38 – 26

க்ருஷ்ண ஏவ ஹி – க்ருஷ்ணன் ஒருவனே, லோகாநாம் – லோகங்களுக்கு, உத்பத்தி: -உண்டாகும் இடம், அபி சஅப்யய: -லயிக்கும் இடமும்.

(க்ருஷ்ணஸ்ய ஹி கருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்)பார – ஸபா – 41 – 23

இதம்– இந்த, பூதம் – ப்ராணியும், சரா சரம்-ஸ்த்தாவரஜங்கமரூபமான விச்வம் எல்லா லோகமும் க்ருஷ்ணஸ்ய ஏவஹி-க்ருஷ்ணனுக்காகவே, க்ருதம் – ஏற்பட்டதன்றோ.

இத்யாதிகளிற்படியே ஸர்வகார்யை காரணமாய், ஸத்யத்வ ஜ்ஞாநத்வாதி ஸ்வரூப நிரூபக தர்மங்களை யுடையனுமாய், ஜ்ஞாந சக்த்யாதி கல்யாண குண கண மஹோததியாய், ஸூத்தாஸூத்த விபூதி த்வயத்திற்கும் ஏக சேஷியாய்,

ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் ‘-திருவாய் – 8-1-5-என்னும்படி ஸர்வாந்தராத்மாவாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய், ஸர்வாவஸ்த்தையிலும் ஸலக்ஷ்மீகனாய், ஸர்வலோக ஸரண்யனாய், ஸரணாகத வத்ஸலனாய், ஸர்வ
ப்ரகார நிரதிஸய போக்யனான நாராயணன்.

ப்ராப்தாவான ப்ரத்யகாத்மாவாவது-
(புமாந் ந தேவோ ந நரோ ந பஸூ : ந ச பாதப : ஸரீராக்ருதி பேதாஸ்து பூபைதே கர்மயோநய: (நாயம் தேவோ ந மர்த்யோவா ந திர்யக் ஸ்த்தாவரோபி வா
ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந
: II-விஷ்ணு புராணம் – 2 13-98

புமாந் – ஜீவாத்மா, ந தேவ -தேவனுமல்லன், ந நர: – மனிதனுமல்லன், ந பசு : – பசுவுமல்லன், ந சபாதப: – மரமுமல்லன், பூப – ஒ ! அரசனே, ஏதே – இவைகள், கர்ம யோநய :- கர்மங்களைக் காரணமாக வுடைய, சரீராக்ருதிபேதா சரீரத்தின் ஆகாரபேதத்தால் உண்டானவை.-அயம் – இந்த ஜீவாத்மா, தேவ -தேவனுமல்லன், ந மர்த்யோவா – மனுஷ்யனுமல்லன், ந திர்யக் – திர்
யக்குமல்லன், ந ஸ்த்தாவரோபிவா – ஸ்த்தாவரமுமல்லன், ஆத்மா -ஆத்மாவானவன், ஜ்ஞாநாநந்தமய: – ஜ்ஞாநத்தையும், ஆநந்தத்தையும் ஸ்வரூபமாக வுடையவன், பரமாத்மந: – பரமாத்மாவிற்கு,சேஷ :- சேஷபூதனாயிருப்பவன்.

இத்யாதிகளிற்படியே தேஹேந்த்ரியாதி விலக்ஷணனாய், ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய், ஸ்வயம் ப்ரகாசனாய், ஸ்வஸ்மை பாஸமானாய், அணுவாய்,ஜ்ஞாநா நந்த குண கன,பரசேஷதைக ரஸனாய், பராதீந ஸ்வரூப ஸ்த்திதி பிர வ்ருத்திகனாய், பரிபூர்ண பகவத
நுபவ யோக்யனாய, ஸ்வரூபாநுகுண ஸ்வச் சந்த கைங்கர்யார்த்தியான ஜீவன்.

ப்ராப்த்பாயமாவது-இஜ்ஜீவன் ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்படுகைக்கு உபாயமாய், ஸாதநமாக ஸ்வ புத்தியாலே கோரும் (கோலும்)படி ஸாஸ்த்ர யுக்தமான அர்த்தம். இது ஸித்தம் என்றும் ஸாத்யம் என்றும் இரண்டு படியாயிருக்கும். ஸித்தோபாயமாவது-நித்ய ஸித்தங்களான ஸ்வரூப குணங்களை யுடையனாய், ஸர்வஜ்ஞனாகையாலே பரஹித வேதியாய், ஸர்வ சக்தி யாகையாலே ஸர்வாநிஷ்ட நிவாரண ஷமனாய், ஸர்வ பூத நிஸர்க்க ஸுஹ்ருத்தாகையாலே பராநிஷ்ட நிவாரணாதிகளில் ஸர்வதாபிமுகனாய்,( ஸர்வஜ்ஞோபி ஹி விஸ்வேஸ : ஸதா காருணிகோபி ஸந் |ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ பேஷாம் ப்ரதீஷதே !-லஷ்மீதந்த்ரம் – 17 – விச்வேச – பகவான், ஸர்வஜ்ஞ :அபி – எல்லாம் அறிந்தவனாயிருந்த போதிலும், ஸதா – எப்பொழுதும்,காருணிகோபி ஸந் – கருணையுடன் கூடியவனாய் இருந்த போதிலும்,ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் – ஸம்ஸாரத்தை நடத்துகிறவனாகையினாலே. ரக்ஷாபேக்ஷாம் – ரக்ஷிக்க வேண்டும் என்கிற அபேக்ஷையை,ப்ரதீஷதே – எதிர் பார்க்கிறான்.)இத்யாதிகளிற் படியே அவஸர ப்ரதீக்ஷனாய், வ்யாஜ விசேஷ வஸீகரணீயனாய், ஸங்கல்பித விசேஷத்தில் ஸஹகாரி நிரபேக்ஷனாய், ஸ்வார்த்த ப்ரவருத்தனாய்,மோக்ஷ ப்ரதாநத்திற்கு அவ்யவஹித ஸங்கல்பாஸ்ரயனான ஸ்ரிய:பதி. ஸாத்யோபாயமாவது-புருஷனுக்குக் கர்த்தவ்யமாகச் சோதிதமான புருஷார்த்த ஸாதநம். மோக்ஷார்த்தமான ஸாத்யோபாயம் பக்தி என்றும் ப்ரபத்தி என்றும் இரண்டு படியாய் இருக்கும். பக்தி ரூபமான ஸாத்யோபாயம் கர்ம யோக ஜ்ஞாந யோக ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், அஷ்டாங்க யோக ஸம்ஜ்தமாய்,வர்ணாதி நியதாதிகாரமாய், வர்ணாஸ்ரம தர்ம இதிகர்த்தவ்யதாகமாய்,க்ருச்ச்ர சாத்யமாய்,தைல தாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமாய், அஹரஹரப்யாஸாதேயாதிஸயமாய், ஆப்ரயாணம் அநுவர்த்தநீயமாய், ப்ராரப்தேதர புண்ய பாப நிவர்த்தகமாய், ஸ்வ யத்ந ஸாத்ய அந்திம ப்ரத்யய விசேஷமாயிருக்கும்.-ப்ரபத்தி ரூபமான ஸாத்யோபாயம் மஹா விஸ்வாஸாதி |
ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், ஷடங்க யோக ஸம்ஜ்ஜிதமாய், அநந்யோபாய ஸர்வாதிகாரமாய், ஆனுகூல்ய ஸங்கல்பாதி மாத்ர பரிகரமாய், ஸுகரமாய், ப்ரார்த்தநாந்வித ஸக்ருத் பர ந்யாஸ ரூபமாய், அநாதேயாதிஸயமாய், ஆதேஹபாதம்
ஸ்வரூப ஆவருத்த்யாதி கர்த்தவ்ய சேஷ ரஹிதமாய், ப்ராரப்த கர்ம நிவர்த்தந க்ஷமமாய், ஸ்வ ப்ரயத்ந ஸாபேக்ஷ அந்திம ப்ரத்யய அநபேக்ஷமாயிருக்கும். ஸாத்யோபாயத்தில் அனுபாயத்வாதி வ்யபதேசம் பர ஸங்கல்ப ஸா பேக்ஷத்வாதி நிபந்தநம்.

இங்கு பலமாவது :
ஸ்வாதிகாராநுகுண வஸீகரண விஸேஷத்தாலே உத்தர பூர்வாக அஸ்லேஷ விநாஸங்கள் பிறந்து, ஸ்தூல சரீர நிவ்ருத்தி யுண்டாய் ஊர்த்வ கதி விஸேஷத்தாலே உத்க்ராந்தனாய்,
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஆதி வாஹிகராலே அதிலங்கித த்ரிகுண மண்டலனாய், அவதூத ஸூஷ்ம சரீரனாய், அப்ராக்ருத தேஸ விஸேஷ ப்ரவிஷ்டனாய், ஆவிர்ப்பூத ஸ்வரூபனாய், அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக விஸிஷ்டனானவனுடைய

ப்ராப்தி விரோதியாவது–பீஜாங்குர ந்யாயத்தாலே அநாதியாக ப்ரவ்ருத்தமான அக்ருத்ய கரண கருத்யாகரண பிரவாஹத்தாலே உத்பந்நமாய், ப்ராயசித்தம் பண்ணாதார்க்கு அநதிலங்கரீய பலமாய், ஆகமைக ஸமதிகம்யமாய், அநுத் பரேக்ஷணீய விபாக ஸமயமாய், ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தம் அபி வ்யாப்தமாய், அத்யந்த விஷம பிரவாஹமாய், அதி கோர நரகாதி அநர்த்த பரம்பரா ஹேதுவாய், சக்ரவத் பரிவர்த்தமாநமாய், ஆமோ ஷம அநுவிருத்தமான பகவந் நிக்ரஹ ஸந்தாநமும், அதின் கார்ய காரண வர்ககமும்.

இங்கு ஸம்பந்தமாவது- ப்ராப்தாவான ஜீவாத்மாவிற்கு ப்ராப்யனான பரமாத்மாவோடு உண்டான துவக்கு. இது ஆதேயத்வம் விதேயத்வம், அப்ருதக் ஸித்தத்வம், ஸேஷத்வம், சரீரத்வம், வயாப்யத்வம், ரஷ்யத்வம், கிங்கரத்வம், போக்யத்வம்,போக்த்ருத்வம் என்றிப்படி ஸாமாந்ய விசேஷாதி ரூபமாய்க் கொண்டு ப்ரமாணங்களாலே விவிதமாக விபக்தமாயிருக்கும்.

இப்படி மோக்ஷ ஸாஸ்த்ர ஸித்தமான ப்ராப்யத்தையும், ப்ராப்தாவையும், ப்ராப்த் யுபாயத்தையும் ப்ராப்தியையும்,ப்ராப்தி ப்ரதிபந்தகத்தையும், ஸம்பந்தத்தையும் ஸாஸ்த்ர த்ருஷ்டியாலே ஸம்யக்காக கண்டவர்களே ‘உணர்ந்தவர்’ என்கிறது.
உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட’ என்று அந்வயம்

(தத்வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:-கீதை – 4 – 34

தத் – அந்த ஜீவாத்ம தத்த்வத்தை, ப்ரணிபாதேந- நன்றாக ஸேவிப்பதினாலும், பரி ப்ரச்நேந-செவ்வையாகக் கேட்பதினாலும், ஸேவயா – ஸிஸ்ரூஷை செய்வதினாலும், வித்தி – அறிந்து கொள், தத்த்வதர்சி : -உண்மையை அறிந்த, ஞாநிந; – ஜ்ஞாநிகள் , தே – உனக்கு, ஜ்ஞாநம் – ஆத்மாவைப் பற்றிய ஜ்ஞாநத்தை, உப தேஷ் யந்தி – உபதேசிக்கப் போகிறார்கள்.

யே ஸந்துஷ்டா: ருதோபேதா: ஸத்யார்ஜவ தயாபரா: 1 ஜிதேந்த்ரியா ஜிதக்ரோதா : தா நுபாஸ்வச ப்ருச்சச11
யே – எவர்கள், ஸந்துஷ்டா: -(கிடைத்ததைக் கொண்டு) ஸந்தோஷத்தை யுடையவர்களாயும, ச்ருதோபேதா ( சாஸ்த்ரார்த்தங்களை முறைப்படி பெரியோர்களிடம் இருந்து) கேட்டுத் தெரிந்து கொண்டவர்களாயும், ஸத்ய ஆர்ஜவ தயா பரா:- ஸத்யம், கபடமில்லாமை, தயை இவைகளை யுடையவாகளாயும், ஜிதேநத்ரியா: – இந்த்ரியங்களை ஜயித்தவர்களாயும், ஜிதக்ரோதா – கோபத்தை ஐயித்தவர்களாயும் (இருக்கிறார்களோ , தாந்-அவர்களை,உபாஸ்வ – முறைப்படி ஆச்ரயி,ப்ருச்ச – (கேட்க வேண்டிய அர்த்தங்களைக்) கேட்டுக்கொள்-

(ஸர்வயோக்யமநாயாஸம் அப்ரமாதமநூபமம் |
ப்ரபந் நார்த்தி ஹரம் விஷ்ணும் ஸரணம் கந்துமர்ஹஸி |

ஸர்வயோக்யம் – எல்லோராலும் ஆச்ரயிக்கத் தக்கவனாயும், அநாயாஸம் – ஆச்ரயிப்பதில் ச்ரமம் ஒன்றும் இல்லாதவனாயும், அப்ரமாதம் – அஜாக்கிரதை முதலிய தோஷங்கள் இல்லாதவனாயும், அநூபமம் – தனக்கு ஸத்ருசனானவன் ஒருவனும் இல் லாதவனாயும், ரபந்நார்த்திஹரம் – ஆச்ரிதர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கக்கூடியவனாயும்இருக்கிற, விஷ்ணும் விஷ்ணுவை, சரணம்- சரணமாக, கந்தும் – அடைவதற்கு, அர்ஹஸி – யோக்கியனாகிறாய்,-இத்யாதிகளிற்படியே நிரபாய ஸாத்யோபாய விசேஷத்தாலே
வஸீகரணீயமான ஸித்தோபாயத்தை வெளியிட என்றபடி.-இத்தாலே நானும் என்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டேன், வேறு எனக்கு ரக்ஷகரில்லை, மேலே என்னுடைய வ்யாபார விசேஷத்தாலே அபேக்ஷை யற தேவரீரே என்னை ரக்ஷித்தருள வேணும் என்கிற பரந்யாஸ ரூப வஸீ கரண விசேஷா நுஷ்ட்டாநமும் பலிதம்

அங்ஙனன்றிக்கே ‘ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் ‘ என்று ஆசார்யர்களை விசேஷிக்கிறதாகவுமாம். அப்போது ‘காட்ட ‘என்றது-(தவ பரோஹ மகார்ஷி ஹி தார்மிகை-ஸ்ரீரங்கராஜஸ்தவம் – 2 – 102 அஹம் -நான், தவ – உமக்கு,-பர: – ரக்ஷிக்க வேண்டிய பரமாக, தார்மிகை: – தர்மிஷ்டர்களினால் (ஆசார்யர்களினால் ), அகார்ஷி-செய்யப்பட்டேன். )-இத்யாதிகளிற் படியே ஸர்வ ஸேஷி திருவடிகளிலே- ஆத்மாத்மீயம் ச யத்கிஞ்சித் துர்ப்பரம் துஸ்த்யஜம் மம 1 தத் ஸர்வம் தவ விந்யஸ்தம் பயோ: பாதபத்மயோ: II)-ஆத்மா- நானும், ஆத்மீயம் -என்னுடையதன் யிருக்கிற, யத்கிஞ்சித் -எது, மம – எனக்கு, துர்ப்பரம் – ரக்ஷிக்க முடியாததும், துஸ்த்யஜம் – விடமுடியாததாயும் இருக்கிறதோ, தத் ஸர்வம் அவை எல்லாமும், தவ – உம்முடைய, சுபயோ :-மங்கள கரங்களான, பாத பத்மயோ:- திருவடித் தாமரைகளில், விந்யஸ்தம், ஸமர்ப்பிக்கப்பட்டது.என்று ஆத்மீயரான நம்மை அநந்ய ரக்ஷ்யத்வே ஸமர்ப்பிக்க என்றபடி.

திருவருளால் எனறது-(ஸ தம் நிபதிதம் பூமௌ ஸரண்ய; ஸரணாகதம்-வதார்ஹமபி காகுத்ஸ்த்த: க்ருபயா பர்யபாலயத-)-ஸுந்தர – 38-34. சரண்ய: – சரண்யராகிய,ஸ:-அந்த, காகுத்ஸ்த்த: -ககுத்ஸ்த வம்சத்தில் அவதரித்த ராமன்,பூமௌ – பூமியில் நிபதிதம் – விழுந்தவனாயும், சரணாகதம் – சரணம் அடைந்தவனாயும் இருக்கிற, தம்-அந்தக் காகத்தை, வதார்ஹமபி – கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் க்ருபயா – க்ருபையினால், பர்யபாலயத் -நன்றாக ரக்ஷித்தார்.)-(க்ருபயா கேவலமாத்மஸாத்குரு-ஸ்தோ-48.க்ருபபா கேவலம் – (உம்முடைய) க்ருபை யினாலேயே, ஆத்மஸாத்குரு -உமக்கு அதீனமாகச் செய்துகொள்ளும்-(யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்தரம் ஹி குணோததிம் 1 நிஸ்தரந்த்யசிரேணைவ வ்யக்த த்யாந பராயணா:-ஸ்ரீ ஸாத்வதம் – 12 – 34. வ்யக்த த்யாந பராயணம் – வ்யக்தம் என்று சொல்லப்படுகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்து கொண்டிருக்குமவர்கள், யாம் – எந்த லக்ஷ்மியை, ஆலம்ப்ய – ஆச்ரயித்து, துஸ்தரம் – மற்ற ஒருவரால் தாண்ட முடியாத, இமம் – இந்த, குணோததிம்-குணங்களாகிற ஸமுத்திரத்தை, அதாவது குணங் களுக்கு ஆதாரமான ப்ரக்ருதியாகிற ஸமுத்திரத்தை, கேந – ஸுகமாக. நிஸ்தரந்தி – தாண்டுகிறார்களோ.)என்கிற ந்யாயத்தாலே அவிளம்பித அநாயாஸமாய் பலஸித்தி யுண்டாம்படி ஆஸ்ரித ரக்ஷணத்திலே ஆத்மவல்லபனை அபி முகனாக்குகிற அகில ஜகந்மாதாவினுடைய அநபாய க்ருபையாலே என்னவுமாம்.

அன்றே அடைக்கலம் கொண்ட‘ என்றது-அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் -மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய க்ருதகருத்யோ பவிஷ்யதி !-“ஸாத்யகி தந்த்ரம் அநேநஏவதுமந்த்ரேண – இந்த மந்திரத்தினாலேயே, ஸ்வாத்மாநம் – தன்னுடைய ஆத்மாவை.மயி – என்னிடத்தில், நிக்ஷிபேத் – ஸமர்ப்பிக்கவேண்டும், மயி – என்னிடத்தில், நிதிப்த கர்த்தவ்ய: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவனானவன், க்ருதக்ருத்ய: – இனிச் செய்யவேண்டியகார்யத்தைச் செய்தவனாக, பலிஷ்யதி – ஆகப்போகிறான்.)என்றும்,-துராசாரோபி ஸர்வா கருத நோ நாஸ்திக புரா ஸமாரயேத் ஆதி தேவம் ப ரத்தயா ஸரணம் யதி !!நிர்த்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந : -ஸாத்வதம் 16-23. புரா -(பகவானை ஆச்ரயிப்பதற்கு) முன்னால், துராசாரோபி – கெட்ட அநுஷ்டானத்தை யுடையவனாயும்,ஸர்வாசீ – (சாப்பிடத் தகாத ) எல்லாம் சாப்பிடுகிறவனாயும்,
க்ருதக்க:- பண்ணின உபகாரத்தை மறந்தவனாயும், நாஸ்திக: -தெய்வம் ஒன்று இல்லை என்று சொல்லுகிறவனாயும் இருந்தபோதிலும்,-ஆதிதேவம் – தேவதைகளுக்கு எல்லாம் முதல் தேவதையாகிய பகவானை,சரத்தயா – மஹா விச்வாஸத்துடன், ஸமாச்ரயேத்யதி – ஆச்ரயிப்பானேயாகில்,தம் – அந்த, ஜந்தும் – ப்ராணியை,’. பரமாத்மந: – பரமாத்மாவினுடைய,ப்ரபாவாத் – மஹிமையினால், நிர்த்தோஷம் ஒரு தோஷமும் இல்லாதவனாக, வித்தி – அறி.)என்றும்-த்யக்த்வா புத்ராம் ச தாராம்.ச ராகவம் மரணம் கத:-ராமா யுத்த 17-16. புத்ராந் ச – பிள்ளைகளையும், தாராந்ச – பத்தினிகளையும், த்யக்த்வா – விட்டுவிட்டு, ராகவம் – ஸ்ரீ ராமனை, சரணம்- சரணமாக, கத – அடைந்தேன்.)-என்றும்,ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா-ராமா – யுத்த – 18–34. ஹரிச்ரேஷ்ட -வானரச்ரேஷ்டனான ஒ ! ஸு க்ரீவனே. அஸ்ய – இவனுக்கு, மயா – என்னால், அபயம் – அபயமானது, தத்தம் – கொடுக்கப்பட்டது. ஏநம் – இவனை,ஆநய – அழைத்துக் கொண்டுவா.)-என்றும் சொல்லுகிறபடியே பர ஸமர்ப்பண ஸமநந்தரம் நமக்கு ஸ்வ ரக்ஷணார்த்த கர்த்தவய பேரஷம் இல்லாதபடி பர ஸ்வீகாரம் பண்ணினவர் என்றபடி.)

நம் அத்திகிரித் திருமால் ‘ என்றது-(வேகவத்யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம் 1
வரதஸ் ஸர்வபூதாநாம் அத்யாபி பரித்ருயதே
IIஹஸ்திகிரீமாஹாத்ம்
யம் 15-16 வேகவத்யுத்தரே தீரே -வேகவதிஎன்னும் நதியின்வடகரையில், புண்ய கோட்யாம் – புண்யகோடி விமானத்தில், ஹரி: – பகவான், ஸ்வயம் – தானே, ஸர்வ பூதாநாம் – எல்லா ப்ராணிகளுக்கும்,வர த:- வரத்தைக் கொடுக்கிறவராக, அத்யாபி – இப்பொழுதும், பரித்ருச்யதே – எல்லோராலும் காணப்படுகிறார்.)என்றும்–நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை யாள்வானே ! ‘-திருவாய்- 6–10–10)இத்யாதிகளிற் படியே ஆஸ்ரித ஸம்ரக்ஷணோபயுக்த ஸௌஸீல்ய வாத்ஸல்ய ஸ்வாமித்வ விஸிஷ்டனாய் நண்ணினவர்களுக்கு விண்ணுலகம் தர விரைந்து ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதாநோமுகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.

இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் ‘ என்றது-க்வாஹம்அத்யந்த து புத்தி : க்கசாத்ம ஹித வீக்ஷணம்| யத் ஹிதம் மம தேவேச ததாஜ்ஞ பய மாதவ !
த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ் தே நாந்யா க்வாபி கதிர் மம | அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத் பதாம்புஜே II-ஜிதந்தா ஸ்தோத்திரம் 1 – 18-
(அத்யந்த துர்புத்தி: –
மிகவும் கெட்ட புத்தியையுடைய, அஹம் – நான், க்வ-எங்கே, ஆத்மஹித வீசணம் – என்னுடைய ஹிதத்தை நானே யோசித்துக் கொள்வது என்பது, க்வ – எங்கே, அதாவது எனக்கும் அதற்கும் வெகு தூரம் என்றபடி, தேவேச – தேவதைகளுக் கெல்லாம் ஈசுவர
னாகிய, மாதவ – சரிய:பதியகிய பகவானே : மம – எனக்கு, யத் – எது,ஹிதம் – நன்மைபைக் கொடுக்கக் கூடியதோ, தத் – அதை, ஆஜ்ஞாபய – உத்தரவு செய்யும், த்வாம் – உ பை, ரபந்ந:- ஆச்ரயித்தவனாயும், தே – உமக்கு, தாஸ: – தாஸனாகவும், அஸ்மி – ஆகிறேன், மம – எனக்கு க்வாபி – ஓர் இடத்திலும், அந்யா – வேறு,கதி:- கதி, ந – இல்லை, அத்யைவ – இப்பொழுதே, கிங்கரீ க்ருத்ய -கிங்கரனாகச் செய்து, த்வத் பதா புரே – உம்முடைய திருவடித் தாமரையில், நிதேஹி – வைத்துக்கொள்ளும்.)இத்யாதிகளிற்படியே பரம புருஷார்த்தைகமஸ்கராமளவில் அப்போதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக்கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி.

இனிப் பிறவோம் ‘ என்றது-கண்டு கேட்டு -திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே பராவர புருஷார்த்த விவேகத்தாலே ஐஸ்வர்ய கைவல்யங்களை ஒழித்த நாம் ஏதேனுமொரு பகவத் க்ஷேத்ர வாஸ கைங்கர்யாதி ஸங்கத்தாலே-இங்கேதிரிந்தேற்கு இழுக்குற்று என் ‘--திருவாய்- – 8- 10 -4-என்று த்வரையற்று இருக்குமளவிலும் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரண மானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-கீதை – 4 -9 அர்ஜூன, ஸ: – அவன், தேஹம்- இந்தத் தேஹத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, புந: – மறுபடியும், ஐந்ம-பிறப்பை, நைதி – அடைவதில்லை, மாம் – என்னை, ஏதி – அடை கிறான்.)-‘கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும்-திருவாய் 3-9-5-இத்யாதிகளிற்படியே இனி எனக்கு ஒரு ஸரீர பரிக்ரஹம் உண்டாகாதபடி ப்ராரப்த கர்ம விசேஷத்தையும் ஒரு விரகாலே கழித்து ரக்ஷித்தருளுவர் என்றபடி.

நன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – வி ரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்நபர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!)
(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து II)இத்யா திகளிற்படியேகைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச்சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விநன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – விரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்ந பர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!-
முநே – ஓ ! ரிஷியே ! நர :- மனிதன், யதா – எப்படி, ரத்ன பர்வதம் – ரத்னமயமான மலையை, ஆருஹ்ய- ஏறி, ரத்னம் – ரத் னத்தை, ஸத்த்வாநு ரூபம் – தன்னுடய சக்திக்குத் தகுந்தபடி, ஆதத்தே எடுத்துக் கொள்ளுகிறானோ,ததா – அபபடியே, கருஷ்ணாத் – க்ருஷ்ணனிடத்தில் இருந்து, மனோரதாந்- இஷ்டங்கள, ஆதததே -பெற்றுக் கொள்ளுகிறான்.)

(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து -ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை-பகவாந்- பகவானானவர், தத்த்வத: – உள்ள படியே, பாவிதாத் மநாம் -த னை தயானம் செய்பவாகளுக்கு, ஸங்கல் பாதேவ தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயே, வருதாந்தம் – இவனால் ராரததிக்கப்பட்டிருக்கும் வரையிலான, அகிலம – எல்லா, காலம்- காலததையும், அமருதே – அமருதத்துனால், ஸே சயது – நனைக்கிறார்.)இத்யா திகளிற்படியே கைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச் சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விஷங்கள் என்று ப்ரீதராகிறபடி.(ப்ரியமித்தரததாபி வா யத் யதா விதரஸி வரத ப்ரபோ த்வம ஹிமே-ததநுபவநமேவ யகதம் ஹி மே த்வயி நிஹிதபரோத்யஸோஹம் யத: -(வரதர. ஸதவம் – விபோ – ப்ரபுவாகிய, வரத – வரதனே த்வம்- நீர், மே எனக்கு, பரியம் – இஷ்டத்தையாவது, இதரத்- மற்றொன் ருகிய துக்கத்தையாவது, யத்- எதை,யதா -எப்படி, விதரஸி- கொடுக்கிறாயோ, மே – எனக்கு, ததறுபவமேவ – அதை அனுபவிப்பதே யுக்தம் ஹி – உசிதமன்றே, யத. – எந்தக்காரணத்தி ல், ஸோஹம் -அப்படிப்பட்ட நான், த்வயி-உம்மிடத்தில், நிஹிதபர: – வைக்கப்பட்டதான பரத்தை யுடையவனாக, அஸமி – ஆகிறேன.)என்றார்களிறே.

நமக்குப் பரம் ஒன்றிலதே’ என்றது ஸர்வஜ்ஞனுமாய் ஸர்வஸக்தனுமாய் பரம காருணிகனுமாய் பரம சேஷியுமான பெருமாள் பரஸ்வீகாரம் பண்ணி தேஹயாத்ரையை நம்முடைய கர்மா நுகுணமாக நடத்துகையாலும், ஆத்ம யாத்ரையைத் தம்முடைய ப்ரதாநரூப க்ருபா நுகுணமாக நிர்வஹிக்கையாலும்-(ஜநார்த்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி-ஜநார்த்தநம் – பகவானை, ப்ரணிபதித: – ஆச்ரயித்தவன், ந ஸ்ததி – துக்கப்படுவதில்லை. )
(நவாஸுதேவபக்தாநாம் அபம் வித்யதே க்வசித்-நக்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நா பாமதி; பவந்தி க்ருதபுண்யாநாம் பக்தாநாம் புருஷோத்தமே )-ஆநுசா-254 – 133,135 வாஸுதேவபக்தாநாம் – பகவானி டத்தில் பக்து செய்பவர்களுக்கு, க்வசித் – ஓர் இடத்திலும், அசுபம் -அமங்களம், நவித்யதே – க ணப்படுவதல்ய க்ருத பு யானாம்-புண்யம் செய்தவர்களாயும், புருஷோத்தமே – பகவானிடத்தில், பக்தாநாம்-பக்தர்களாயும் இருப்பவர்களுக்கு,க்ரோத – கோபமானது, ந- இல்லை, மாத்ஸர்யம் – த்வேஷமானது, ந, லோப . – லோபமானது, ந – இல்லை)இத்யாதிகளிற் படியே புத்தி பூர்வமாக அபாயங்களில் இழிய ஓட்டாமையாலும், ப்ரவருத்தங்களாகில் ஏதேனும் ஒரு கண்ணழிவு செய்து விடுகையாலும, பராவர தத்த்வ விவேகத்தாலே பர தந்தர கர்திருத்வ பரதிபத்தியை யுடையவருமாய ஸகிஞ்சந அகிஞ்சந அதிகாரி விவேகத்தாலே ந்யஸ்த பரருமான நமக்கு ஆத்ம ரக்ஷார்த்தமாக இனி ஒரு கர்த்தவய லேஷம் இல்லை என்றபடி.

இனிப் பிறவோம் ‘ என்றும், ‘ நமக்கு ‘என்றும் பஹு -வசந ப்ரயோகத்தாலே -(பஸூர் மநுஷ்ய: பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா-தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம்பதம் | )-சாண்டில்யஸ்ம்ருதி -1-15. பசு -பசுவானாலும், மனுஷ்ய.மனிதனானாலும், பஷீ வா-பக்ஷியானாலும், யே – எவைகள், வைஷ்ணவ ஸம்ச்ரயா: -வைஷ்ணவர்களை ஆச்ரயித்தவைகளோ, தே – அவைகள் தேநைவ – அந்த வைஷ்ணவர்களை ஆச்ரயித்ததினாலேயே, விஷ்ணோ பசுவானுடைய, தத் – அந்த, பரமம் பதம் – பரமபத்தை, ப்ரயாஸ் யந்தி – அடைகின்றன.இத்யாதிகளிற்படியே அநுபந்தி ரக்ஷணம் இங்கே ஸூசிதமாகிறது.

——————-

1-ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சமல்லன் ‘ என்றது-ஸ்வயம் மருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்யதேஹி :-ஸ்வரக்ஷணேப்ய க்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே|-இதிஹாஸ ஸ மு — 17 – 63 ஸ்வயம் – தான், மருத்பிண்ட பூதஸ்ய – மண்ணுருண்டைபோல் இருப்பவனாயும், பரதந்த்ரஸ்ய – பராதீனனாயும், ஸ்வரக்ஷணேபி – தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதிலும்,
அசக்தஸ்ய – சக்தி இல்லாதவனாயும் இருக்கிற, தேஹி : ஜீவாத்மா விற்கு, பரரக்ஷணே -அயலானைக் காப்பாற்றுவதில்,ஹேது :- காரணம்,க:- எது? இல்லை என்றபடி )ப்ரஹ்மாணம் மிதிகண்டம் ச யாசாந்யா தேவதா:ஸ்ம்ருதா -ப்ரதிபுத்தா நஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி – 350- 36 ப்ரஹ்மாணம்- ப்ரஹ்மாவையும், சிதி கண்டம் ச -ருத்திரனையும், யா: – எவர்கள், அந்யா: – இதரர்களான தேவதைகள், ஸ்ருதா: – சொல்லப்பட்டவர்களோ ( அவர்களையும்).ப்ரதி புத்தா: – நல்ல ஜ்ஞானமுடையவர்கள், நஸேவந்தே – ஸேவிப்பதில்லை, யஸ்மாத் எந்தக் காரணத்தினால்,(அவர்களால் கொடுக்கப் படுகிற) பலம் – ப்ரயோஜனம், பரிமிதம் – அல்பமாயிருக்கிறதோ.–(அநந்ய ஐஞாநவிரஹாத் அத்தா தேவதாகதா: -ப்ரஹ்மோநாதய : ஸர்வேஸ்வஸ்வாதந்த்ர்யேன கர்ஹிதா.-(தேவதாகதா:- தேவதைகளாய் இருக்கையை அடைந் திருக்கிற, ப்ரஹ்மேசாநாதய : – ப்ரஹ்மா, ருத்திரன்முதலிய, ஸர்வே- எல்லோரும், அநந்யஜ்ஞாந விரஹாத்- பகவானைத் தவிர வேறு ஒரு அடைய வேண்டிய ப்ரயோஜனம் இல்லை என்கிற ஜ்ஞாநம் இல்லாமையினால், அசுத்தா:- அபரிசுத்தர்கள், ஸ்வ ஸ்வாதந்த்ர்யேண-தாங்கள் ஸ்வதந்த்ரர்கள் என்று எண்ணி இருப்பதினால், கர்ஹிதா:- நிந்திக்கப் பட்டவர்கள், புருஷவ்யாக்ர – புருஷச்ரேஷ்டனே, அந்யே-மற்றவர்களான, யே- எவர்கள், சேதஸ : – மனத்திற்கு, வ்யபாச்ரயா: – த்யானத்திற்கு விஷயமாக இருக்கிறார்களோ, தே – அந்த, கர்ம யோநய : – கர்மத்தைக் காரணமாகவுடைய, தேவாத்யா :-தே தை முதலிய ஸமஸ்தா – எல்லோரும், அசுத்தா- அபரிசுத்தர்களாக,ஸ்பு:- ஆவார்கள்)(ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்யவஸ்த்திதா:1 ப்ராணிந: கர்ம நித ஸம்ஸாரவ வர்த்தி :||-(யதஸ்த்தோ ந தேத்யாநே த்யாநிநாமுபகாரகா: 1 அவித்யாந்தர்கதா ஸர்வே தே ஹி ஸம்ஸார கோசரா :-(பஸ்ாதுத்பூதபோதாதுச த்யாநே நைவோபகாரக: 1
நைஸர்கிகோ ந வை போதஸ்தேஷாமப்யந்யதோ யத-விஷ்ணுதர்மம்-104 -33-
யத:- எந்தக்காரணத்தினால், ஆப்ரஹ்ம- ப்ரஹ் மாமுதல், ஸ்தம்ப பர்யந்தா – புழுவரையிலான, ஜகதந்தர் வீயவஸ்திதா:- லோசுங்களுக்கு உள்ளடங்கிய ப்ராணிகள், கர்மஜநித – கர்மத்தினால்-உண்டாக்கப்பட்ட, ஸம்ஸாரவசவர்த்தி : – ஸம்ஸாரத்திற்கு வசப்பட்டவர்களோ, தத: – ஆகையினால்,தே – அவர்கள்,த்யாநிநாம் – த்யானம் செய்பவர் களுக்கு, த்யாநே – த்யானத்தில், நஉபகாரகா: – உபகாரம் செய்கிறவர்களல்லர், அவித்யாந்தர்கதா- அவித்யைக்கு உட்பட்ட வர்களான,ஸம்ஸார கோசரா: ஸம்ஸாரத்திலுழலும், தே ஸர்வே-அவர்கள் எல்லோரும்,பச்சாத் – பிற்பாடு, உத்பூதபோதா: ச – ப்ரகாசத்தை அடைந்திருக்கிற ஜ்ஞாநத்தை யுடையவாகள்,த்யா-ேத்யாநத்தில், நைவோபகாரகா :உபகாரம் செய்கிறவர்களல்லர்,தேஷாமபி – அவர்களுக்கும் போத :- ஜ்ஞாநமானது, ந நைஸர்க்கிகஸ்பாவத்தில் ஏற்பட்டதன்று,யத: – எந்தக் காரணத்தினால், அந்யத:- வேறு ஒருவனால் உண்டாக்கப்பட்டதோ)(பஸவ: பாரிதா: பூர்வம் பரமேண ஸ்வ லீலயா
தேநைவ மோச யாஸ்தேநாந்யை மோசயிதும்க்ஷமா :
||-பசவ :- ஜீவாத்மாக்கள, பூர்வம் – முன்
னால், பரமேண – பரமாத்மாவினால், ஸ்வ லீலயா – தன்னுடைய விளையாட்டினாலே. பாசிதா: கட்டப்பட்ட வைகள், தே நைவ – அந்தப் பரமாத்மாவினாலேயே, தே – அவைகள், மோசநீயா: – விடுவிக்கத்தக்கவைகள், அந்யை: – மற்றவர்களினால், மோசயிதும் – விடுவிப்பதற்கு நக்ஷமா : – யோக்யர்களல்ல. ) இத்யாதிகளிற்படியே பரதந்தர சேதநர்களில் ஆரேனும் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நிரபேக்ஷ ரக்ஷகனாக மாட்டான் என்றபடி. –

—————–

2-ஸ்ரீமானான நாராயணன் ஒருவனுமே ஸர்வஜீவர்களுக்கும் தஞ்சம் ‘ என்றது-(ஸ்ரீமந்நாராயண ஸ்வாமிந் அநந்ய ஸரணஸ் தவ –சரணௌ ரணம் யாத தவைவாஸ் யஹம் அச்யுத-த்வய மந்த்ராந்தரம் ஸ்ரீமந் – லக்ஷ்மியுடன் கூடியவனாயும். ஸ்வாமிங் – ஸ்வாமியாயும் இருக்கிற, நாராயண – நாராயணனே, அநந்ய சரண:- வேறு ஒரு ரக்ஷகனும் இல்லாதவனாகிய நான், தவ – உம்முடைய, சரணெள -திருவடிகளை, சரணம் – உபாயமாக, யாத : – அடைந்தேன், அச் யுத – ஆச்ரிதர்களை நழுவ விடாதவனாகிய பகவானே, அஹம் – நான், தவைவ – உமக்கே சேஷ பூதனாக, அஸ்மி – ஆகிறேன்.)(மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே-கீதை – 7 -14.யே – எவர்கள், மாமேவ – என்னை யே, ப்ரபத்யந்தே – ஆச்ரயிக்கிறார்களோ, தே – அவர்கள், ஏதாம் – இந்த மாயாம் – ப்ரக்ருதியை, தரந்தி – தரண்டுகிறார்கள்.)(தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத் யத ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ-கீதை – 15 – 4 யத: – எவனிடத்தில் இருந்து, புராணி- அநாதி யான, ப்ரவருத்தி: – லோகத்தினுடைய ப்ரவ்ருத்தி,ப்ர ஸ்ருதா – உண் டாயிற்றோ, தம் – அப்படிப்பட்ட, ஆத்யம் – முதலாவதாகிய, புருஷ மேவ – புருஷனையே, ப்ரபத்யேத் – ப்ரபத்தி செய்யக்கடவன்.)(தமேவ பரணம் கச்ச ஸர்வபாவேந பரர த ||தத்ப்ரஸாதாத் பராம்லாந்திம் ஸ்த்தாநம் ப்ராப்ஸ்யஸிஸாவதம்-கீதை 18-62 பாரத – அர்ஜுந, ஸர்வபாவேந – எல்லா அபிப்ராயத்தினாலும், தமேவ – அந்தப் பகவானையே, சரணம் – உபாய மாக, கச்ச – அடை, தத் ப்ரஸாதாத் – அவனுடைய அனுக்ரஹத் தினால், பராம் – உயர்ந்ததான, சாந்திம்-சாந்தியையும், சாச்வதம் -அழிவில்லாத, ஸ்தாநம் – இடத்தையும், ப்ராப்ஸ்யஸி – அடையப் போகிறாய்.)ஸம்ஸாரார்ணவமக்நாநாம் விஷயாக்ராந்தசேதஸாம்| விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்!!-விஷ்ணு தர்மம் – 1 – 5 – 9 ஸ ம்ஸாரார்ணவ மக்காநாம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தில் முழுகினவர்களாயும், விஷயாக்ராந்த சேதஸரம் – சப்தம் முதலிய விஷயங்களினால் பீடிக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாயும் இருப்பவர்களுக்கு, விஷ்ணுபோதம் விநா- விஷ்ணுவாகிற தெப்பத்தைத் தவிர, அந்யத் – வேறு, கிஞ்சித் – ஒரு பராயணம் – அடையக் கூடிய ப்ரயோஜனம், நாஸ்தி-இல்லை.)(ஸம்ஸாரஸாகரம் கோரம் அநந்தக்லே பா ஜநம் |த்வாமேவ ரரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: 1-அநந்தக்லேசபாஜனம் -அளவில்லாத துக்கத்திற்கு இடமாயும், கோரம் – பயங்கரமா யுமிருக்கிற, ஸம்ஸார ஸாகரம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தை மநீ ண : – புத்திமான்கள், த்வாமேவ – உம்மையே, சரணம் – உபாயமாக ப்ராப்ய – அடைந்து, நிஸ்தரந்தி – தாண்டுகிறார்கள்.)ஸர்வலோக ரண்யாய ராகவாய மஹாத்மநே| நிவேதயத மாம் க்ஷிப்ரம்)-ராமா – யுத்த – 17-15 ஸர்வலோக சரண்யாய – எல்லோராலும் சரணமாக அடையத் தக்கவராயும், மஹாத்மநே – மஹாத்மாவாயும் இருக்கிற, ராகவாய – ஸ்ரீராமன் ; பொருட்டு, மாம் – என்னை,க்ஷிப்ரம் – சீக்கிரமாக, நிவேதயத – ஸமர்ப்பியுங்கள்.)-இத்யாதிகளின்படியே பத்நீஸம்பந்த குணவிபேஷ வி ஷ்டனான நாராயணன் ஒருவனுமே அகிஞ்சநராயும் ஸகிஞ்சநராயும் உள்ள ஸர்வ ஜீவர்களுக்கும் ஸ்வபுத்ய தீ ந ஸஹகார்யதிரிக் அபேக்ஷா ரஹிதமாக அநிஷ்ட நிவ்ருத்தியையும் -இஷ்டப்ராப்தியையும் பண்ணுவன் என்றபடி.

இவனைப் பற்றினவர்களை ஒருவரும் பாதிக்கமாட்டாதபடியையும், ஸ்வபாவதஸ் ஸர்வ ஸமனாய்-(ந மே த்வேஷ்யோஸ்தி-கீதை- 9 – 29 மே – எனக்கு, த்வேஷ்ய:- த்வேஷிக்கத்
தகுந்தவன், நாஸ்தி – இல்லை) என்கிற இவனுக்கு த்வேஷ்யராம்படி ஸாபராதரானாரை ஒருவரும் ரக்ஷிக்கமாட்டாத படியையும்-(கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா-அயோ 60 20. கஜம் வா – யானையையாவது, ஸிம்ஹம் வா -சிங்கத்தையாவது, வீய – பார்த்து, (ஸீதை பயப்படவில்லை.)(ப்ரஹ்மா ஸ்வயம்பூ:-ந்தர- 51- 45 ஸ்வயம்பூ: – தானே உண்டானவரான,ப்ர
ஹ்மா – ப்ரஹ்மாவும், (மற்ற ருத்திரனும் இந்திரனும் ராமனால் கொல்லத் தகுந்தவனாக ஏற்படுத்தப்பட்டவனை ரக்ஷிக்க சக்தி யுடையவாகளல்லா என்றுமேல்)என்கிற ஸ்லோகங்களில் தாத்பர்யத்திலும், ப்ரஹ்லாத ஸு முககாக ராவணாதி வருத்தாந்தங்களிலும் கண்டு கொள்வது.

———-

3-இஜ்ஜீவன் அநாதிகாலம் அநுபவிக்கப் பெறாத ஸ்ரீரிய,பதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரஹஸ்ய த்ரயமுகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்குத் தஞ்சமாகிறான்” என்றது.தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்ம :-மந்திர ராஜபதஸ்தோத்திரம் – ஸர்வே -ஆத்மா : – எல்ல ஆத்மாக்களும், ஸ்வத: -ஸ்வபாவத்தினாலேயே, பரமாத்மந:- பரமாத்மாவிற்கு, தாஸபூதா : – தாஸர்கள்.)
இத்யாதிகளில்படியே ஸுரிகளோடொக்க ஸ்வரூப யோக்யதை உண்டாயிருகக, ஸ்வாபராதத்தாலே ஸ்வத: ப்ராப்தமான பகவதநுபவத்தை இழந்த ஸம்ஸாரி சேதநன் இப்பேறு பெறுகைக்கு அவிநாபாவத்தாலே விஸ்வஸநீயமான உபாய விசேஷத்தை அத்யாத்ம பலாஸ்த்ர ஸாரமான மூலமந்த்ராதிகளாலே உபதேஸித்து,-(ஆசார்ய : ப்லாவிதா தஸ்ய ஜ்ஞாநம் ப்லவ இஹ உச்யதே-தஸ்ய – அப்படிப்பட்ட ஜீவாத்மாவிற்கு, இஹ – இந்த, ஸம்ஸார தசையில், ஆசார்ய: – ஆசார்யன், ப்லாவிதா – தெப்பக்காரன், ஜ்ஞாநம் ப்லவ: – ஜ்ஞாநமாவது தெப்பம், (என்று) உச்யதே- சொல்லப்பபடுகிறது.)-(ஸாக்ஷாந் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தநும்-மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாத் யாஸ்த்ரபாணிநா-ஜயா க்ய ஸம்ஹிதை – தேவ – தேவனாகிய.நாராயண:- நாரா யணன், ஸாக்ஷாத் – நேராகவே, மர்த்யமயீம் – மநுஷ்ய ரூபமான-தநும் சரீரத்தை,கருத்வா-செய்து கொண்டு, காருண்யாத்-க்ருபையினால், சாஸ்த்ர பாணிநா – சாஸ்த்ரமாகிறகையினால், மக்னாக் முழுகி இருக்கிற, லோகாந்- ஜனங்களை, உத்தரதே – உயரத் தூக்கிவிடுகிறார்.)இத்யாதிகளில்படியே ஆசார்யன் இவனுக்குப் பரம்பரயா மோக்ஷ ஸாதநமாகிறான் என்றபடி.-(பாபிஷ்ட்ட: க்ஷத்ரபந்துச புண்டரீகஸ்ச புண்யகருத் ஆசார்யவத்தயா முகதெள தஸ்மாதாசார்யவார் பவேத் -பாபிஷ்ட்ட :- மிகவும் பாபியான. த்ரபந்து: ச – க்ஷத்திர பந்துவும் புண்ய க்ருத் – புண்யம்செய்தவனாகிய புண்டரீக: ச – புண்டரீகனும், ஆசாயவத்தயா – ஆசார்யனை அடைந்திருக்கையாலே, முக்தெள -மோக்ஷத்தை அடைந்தார்கள்,தஸ்மாத்- அ கையினால், ஆசார்யவாந்பவேத் – ஆசராயனை அடைந்தவனாக ஆகவேண்டும்.)என்றதற்கும்இதுவே தாத்பர்யம்.

————–

4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்–என்றது(ஸர்வேஷாமேவ லோகாநாம் ஈஸ்வரி மம வல்லபா-ஸர்வேஷாமேவ – எல்லா, லோகாநாம் – லோகங்களுக்கும்,மம – என்னுடைய, வல்லபா- பத்தினியாகிய லக்ஷமீ-ஈச்வரீ – யஜமானி.)(அஸ்யா மம ச லேஷம் ஹி விபூதிருபயாத்மிகா-.விஷ்வக்ஸேந ஸம்ஹிதை. உபயாத்மிகா – இரு வகைப்பட்ட, விபூதி: – விபூதியும், அஸ்யா – இந்த லக்ஷ்மிக்கும், மம ச – எனக்கும் சேஷம்ஹி- சேஷமல்லவா.)தேவதிர்யங் மநுஷயேஷு பு நாமா பகவாந்ஹரி:
(ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாநயோர் வித்யதே பரம்|!-விஷ்ணு புராணம் 1 – 8 35
. தேவதிர்யங் மநுஷ்யேஷ தேவதைகள், மருகங்கள், மனுஷ்யர்கள், இவர்களுக்குள், பு நாமா –
புருஷன் என்று பெயர் உடையதெல்லாம், பகவாங் – பகவானாகிய ஹரி: – விஷ்ணு (வின்விபூதி), ஸ்த்ரீ நாம் – ஸ்த்ரீ என்று பெயருடைய தெல்லாம்,ல மீ:- லக்ஷ்மிக்கு, (சேஷபூதம்), மைத்ரேய – ஒ ! மைத்ரேயனே ! அநயோ : – இவ்விருவர்களைத் தவிர,பரம் – மேலான வஸ்து, நவித்யதே – இல்லை.)நித்யை வைஷா ஜகந்மதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயி-விஷ்ணு புராணம் – 1 – 8 – 17 ஜகந்மாதர – லோகங்களுக்கு எல்லாம் தாயாகிய, ஏஷா – இந்த லக்ஷமீ, விஷ்ணோ:- விஷ்ணுவிற்குநித்யைவ – எப்பொழுதும் இருப்பவள், அந பா யிங் – விட்டுப்பிரியாத வள்.)(யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச பேலாபநே|
ஆத்மவித்யா ச தேவி! த்வம் விமுக்தி பலதாயி || -விஷ்ணு புராணம் 1 – 9-120.சோபமே – மங்களகரமான லக்ஷ்மியே! த்வம் – நீ, யஜ்ஞவித்யா – யஜ்ஞவித்யை, மஹாவித்யா ச்ரேஷ்டமான வித்யை, குஹ்ய வித்யா – ரஹஸ்யமான வித்யை விமுக்தி பலதாயிநீ – மோக்ஷமாகிற பலத்தைக் கொடுக்கிற, ஆத்மவித்யாச – ஆத்ம வித்யையும், தேவி – ஒ தேவியே, த்வம் – நீயே, (ஆதம வித்டையும நீயே, மோக்ஷம்,கற பலத்தைக் கொடுப்பவளும்
நீயே என்றும் பொருள் டடும்.)(இயம் ஸ்தா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ-பால -87-32 இயம் ஸ்தா – இந்தஸ்தை, மம என்னுடைய, ஸுதா – பெண், தவ – உமக்கு, ஸஹதர்ம சரீ – சேர்ந் திருந்து தர்மா நுஷ்டாநம் செய்யக் கூடியவள்.)(ஸர்வைச்வர்ய குணோபேதா நித்ய தத்தர்ம தர்மி-ஸர்வைச்வர்ய குணோபேதா – எல்லா வற்றிற்கும் ஈச்வரியாய் இருக்கை யாகிற, குணத்தை யுடையவள், நித்யம் – எப்பொழுதும், தத் தர்ம தர்மிணி – பகவானுடைய ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவத்தை யுடையவள்)(கருணாஸ்ரா நதமுகீ கமலா ஸ்ப்ரபா|<கல்யாணவாஹிநீ கல்யா கலிகல்மஷநாலி|ஸர்வார்த்திநா நீ ஹ்ருஷ்டா ஸமுத்ரபரியோஷி |ஸர்வேச்சா பரிபூரிகா |ஆர்யா யபோதா | வஸுதா தர்மகாமார்த்த மோக்ஷதா||அப்ரமேயா க்ரியா ஸூஷ்மா பரநிர்வாணதாயிநீ -லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம். கருணாஸ்ரா நதமுகீ – தயையினால் உண்டாகிய கண்ணீரை யுடையவளாயும், வணங்கின முகத்தை யுடையவளாயும் இருப்பவள்,கமலா – தாமரைப் புஷ்பம் போன்ற கண்களையுடையவள், சசி ப்ரபா – சந்த்ரன் போன்ற காந்தியுடையவள், கல்யாணவாஹி – மங்களங்களை உண்டாக்குகிறவள்,கல்யா-அப்படிச்செய்ய சக்தியுடையவள், கலிகல்மஷ நாசிநீ – கலியினாலுண்டான பாபத்தைப் போக்கடிப்பவள், ஸர்வார்த்தி நாசிநீ – எல்லோருடைய துக்கங்களையும் போக்கடிப்பவள், ஹ்ருஷ்டா – ஸந்தோஷத் தையுடையவள், ஸமுத்ரபரிசோஷிணீ – ஸமுத்ரத்தை வற்றும்படிசெய் யக்கூடியவள், ஸர்வேச்சா பரிபூரிகா – எல்லோருடைய ஆசையையும் பூர்த்திசெய்பவள், ஆர்யா – பூஜிக்கத்தகுந்தவள்,ய சோதா – யசஸ் ஸைக்கொடுக்கக்கூடியவள், வஸுதா – பணத்தைக் கொடுப்பவள, தர்மகாமார்த்த மோக்ஷதா – தர்மம், காமம், அர்த்தம், மோக்ஷம்ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவள், அப்ரமேயா – அளவிட்டு அறியமுடியாதவள், அக்ரியா – (அவாப்த ஸமஸ்தகாமதையாலே) ஒரு வித கார்யமும் செய்யாதவள், அன்றிக்கே ‘க்ரியா’ என்று பகவானுடைய ஸர்வவ்யாபாரங்களுக்கும் நிர்வாஹகையானபடியினாலே க்ரியா ரூபி என்றபடியாகவுமாம், ஸூக்ஷ்மா ஸூக்ஷ்மமான ஸ்வரூபத்தை யுடையவள், பரநிர்வாணதா உயர்ந்ததான மோக்ஷத்தை கொடுப்பவள்)(வாச: பரம் பரார்த்தயிதா ப்ரபத்யேத் நியத ரியம் -செளநக ஸம்ஹிதை. வாச: பரம் – வாக்குக்கு எட்டா த தான,பலம் – பலத்தை, ப்ரார்த்தயிதா – வேண்டுகிறவன் அபேக்ஷிப்பவன்), நியத:- ஸாவதானனாய்க்கொண்டு, சரியம் – லக்ஷ்மியை, ப்ரபத்யேத் – சரணம் அடையவேண்டும்.)ப்ராய சித்த பரணங்கே து ஸர்வபாபஸமுத்பவே மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் ரணம் வரஜேத் I-லகுதந்த்ரம்-17 10 ஸர்வ பாப ஸ முத்பவே – எல்லாப்பாபங்கள் உண்டான போதிலும், ப்ராயச்சித்த ப்ரஸங்கே து – ப்ராயச்சித்தம்செய்து கொள்ள நேர்ந்தபோது, தேவதேவஸ்ய.- பகவானுடைய,மஹிஷீம் – பத்னியாகிய, மாமேகாம் – என்னை ஒருவளையுமே, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடைய வேணடும்.)(ஸர்வகாமப்ரதாம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவதாரிணீர்-க்ஷிப்ரப்ரஸாதிநீம் ல மீம் ரண்யாம சிநதயேத் -ஸ்வாயம்பு வசனம். ஸர்வகாமப்ரதாம் – எல்லா இஷ்டங்களை
யும் கொடுக்கக்கூடியவளாயும், ரம்யாம் – அழகானவளாயும், ஸம்ஸாரார்ணவ தாரி ம் – ஸம்ஸாரமாகிற ஸழுத்திரத்தைத் தாண்டிவைப்பவளாயும், க்ஷிப்ர ப்ரஸாதி நீம் – சீக்ரத்தில் அனுக்ரஹம் செய்பவளாயும் இருக்கிற, லக்ஷ்மீ – லக்ஷ்மியை, சரண்யாம் – சரணம் அடையத்தகுந்தவளாக, அநுசிந்தயேத் – நினைக்கவேண்டும்.)(ப்ரணிபாத ப்ரஸ நாஹி மைதில் ஜகாத்மஜா-ஸந்தர – 27-44 ஜநகாத்மஜா – ஜநகராஜன் பெண் ணாகிய, மைதில் – ஸ்தையானவள், ப்ரணிபாத ப்ரஸந்நாஹி – சரணாம் சுதிசெய்வதினால் அனுக்ரஹத்தைச் செய்யக்கூடியவளன்றோ)(அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்- ஸந்தர – 27-44 ஏஷா – இந்த ஸ்தை,ராக்ஷஸ்ய: –ஓ! ராக்ஷஸிகளே, மஹத : பயாத்-பெரிய பயத்திலிருந்து, பரித்ராதும் ரக்ஷிப்பதற்கு, அலம் – சக்தியுடையவள்.)(அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷ கணம்-ராக்ஷ கணம்-ராக்ஷஸிகளையெல்லாம்,-ராகவாத் – ராமனிடமிருந்து, பரித்ராதும் -காப்பாற்றுவதற்கு, ஏஷா இவள் அலம் – சக்தியுடையவள்.)இத்யாதிகளிற் சொன்ன ஸர்வயேஷி வ்யதிரிக்த ஸர்வ பேஷித்வம் நிக்ரஹாஸமாநாதிகரண ஸர்வா நுக்ரஹவத்த்வம் இத்யாதிஸ்வபாவ விலேஷங்களையுடையளான பிராட்டி ஸாபராதரான
வர்கள் எல்லோருக்கும் பாஸிதாவான ஸர்வேஸ்வரன் அபிமுகம் கொள்ளமாட்டாதே தயங்காதபடி அவனுடைய பித்ருத்வப்ர யுத்தமான ஊஷமளீ பாவத்தை–உசிதை: உபாயை. விஸ்மார்ய-்குணரத்கோசம் – 52 உசிதை: – அததற்குத் தகுந்தவைகளான, உபயை – உபாயங்களினால், விஸ்மார்ய – மறக்கும்படிசெய்து,என்னும்படியாக்கி, இவர்களை அவன் திருவடிகளிலே சேர்த்து- தன் அடியார் திறத்தகததுத் தாமரையாளாகிலும்
சிதகுரைக்குமேல் என்அடியார் அது செய்யார்-பெரியாழ்வார் – 49 – 2-என்னும்படி பண்ணிக் கொண்டு-பவேயம் சரணம் ஹி வ: – சுந்தர – 58 90 வ: – உங்களுக்கு, சரணம் -உபாயமாக.
பவேயம் – ஆகக் கடவேன்.–என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷாஹேது ஆகிறாள்
என்றபடி.-

———–

5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே-என்றது-அப்ரமேயோநியோஜ்யச யத்ர காமகமோ வசீ – பார் – ஸபா – 40 – 78 யத்ர காம கம: – தனக்கு இஷ்டமான இடத்தில் போகக் கூடியவன், வசீ – எல்லாவற்றையும் தனக்கு வசமாக உடையவன். அப்ரமேய: – அளவிட முடியாதவன், அநியோஜ்யருவராலும் நியமிக்கப்படக் கூடியவனல்லன்)ஸ்வாதந்த்ர்யாமைஸ்வரம் அபர்யநுயோஜ்யமாஹு:- வைகுண்ட ஸ்தவம் – 55 ஐச்வரம் – ஈச்வரனுடையதாகிய, ஸ் வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரனாயிருக்கும் தன்மையை அபர்ய யோஜ்யம்- வேறு ஒருவராலும் கேட்கமுடியாததாக, ஆஹு :-சொல்லுகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நிரங்குச ஸ்வதந்த்ரனான ஸர்வேஸ்வரன்-தஸ்மாத் Uாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதௌ-கீதை- 16 – 24 தஸ்மாத் ஆகையினால், தே – உனக்கு,கார் யாகார்ய வ்யவஸ்திதௌ – இது செய்யத்தகுந்தது, இது செய்யத்தகாதது என்கிற ஏற்பாட்டில், சாஸ்த்ரம் – சாஸ்த்ரமானது, ப்ரமாணம்.-என்று க்ஷேத்ரஜ்ஞருக்கு கருத்யாகருத்ய வ்யவஸ்த்தாபகமான பலாஸ்த்ரத்தை அநாதியாக ப்ரவர்த்திப்பிக்க, ப்ரவாஹ அநாதி கர்ம ஸம்யுகதராய் ஆஜ்ஞாதிலங்கநம் பண்ணின
வர்களை இவன்- க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந்-கீதை – 16 – 19 அஜஸ்ரம் – எப்பொழுதும், அசுபாந்- பாபம் செய்த அவர்களை, க்ஷிபாமி – (அஸுர ஸ்வபாவமுள்ள சரீரங்களில்) தள் ளுகிறேன்.–என்கிறபடியே நிக்ரஹித்துப் போருமவனாக ப்ரமாண ஸித்தமாகையாலே, ஸ்வாபராத பூயஸ்தையாலே பீதரானவர்களுக்கு அர்த்த ஸ்வபாவாதிகளாலே அநதிலங்கநீய வாக்யையான விஷ்ணு பத்நியைப் புருஷகாரமாக்க வேண்டுகிறது என்றபடி. 

————-

6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்-என்றது-(ஸமோஹம் ஸர்வ பூதேஷ -கீதை 9 – 29 அஹம் – நான், ஸர்வபூதே – எல்லா ப்ராணி களிடங்களிலும், ஸம: – ஒரே விதமான மனதையுடையவன்-என்று ஸர்வ ஸமனான ஸர்வேஸ்வரன் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யாதிகள் வாராதபடி வ்யவஸ்தித நிக்ரஹம் பண்ணு கைக்கு விலேஷ காரணம்

நிமித்தமாத்ரமேவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க்க கர்மணி
ப்ரதாநகாரணீபூதா யதோ வை ஸ்ருஜ்யக்தய: !!(நிமித்தமாதரம் முகத்வைநம் நாந்யத் கிஞ்சிதபேக்ஷதே நீயதே தபதாம் ஸ்ரேஷ்ட ஸ்வக்த்யாவஸ்து வஸ்துதாம்-விஷ்ணு புராணம் – 1 – 4-51, 52
அஸெள – இந்தப் பகவான், ஸ்ருஜ்யா நாம் – ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களினுடைய, ஸர்க்க கர் மணி – ஸ்ருஷ்டிப்பதாகிய கார்யத்தில், நிமித்தமாத்ரமேவ – பொதுவா கிய காரணம் மாத்திரம் தான், யத: – எந்தக்காரணத்தினால். ஸ்ருஜ்ய சக்தய:- ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களின் சக்திகள், ( அதாவது முன் ஜன்மங்களில் செய்யப்பட்ட கர்மங்கள்), ப்ர தாந கார பூதா: – முக்யமான காரணங்களாக இருக்கின்றனவோ, இதம் – இந்த வஸ்து, நிமித்தமாத்ரம் முக்த்வா – பொதுவான காரணத்தைத் தவிர, அந்யத் கிஞ்சித் – வேறு ஒன்றையும், நாபேக்ஷதே – எதிர்பார்க்கிறதில்லை. வஸ்து – ஒரு வஸ்துவானது, தபதாம்ச்ரேஷ்ட – தபஸ் பண்ணுகிறவர் களுக்குள் ச்ரேஷ்டனே ! ஸ்வசக்த்யா-தன்னுடைய சக்தியினாலேயே (கர்மங்களினாலேயே), வஸ்துதாம்- அந்த வ ஸ்துவாய் இருக் கையை, நீயதே – அடைவிக்கப்படுகிறது)-கர்மபி: பாவிதா: பூர்வை: கு லாகு ஸலைஸ்து தா : -விஷ்ணுபுரா – 1-5-28 தா: – அந்த ஜனங்கள், பூர்வை:முன்பு செய்யப்பட்ட,குசலாகுசலை: – நல்லதாயும் கெட்டதாயும் இருக்கிற, கர்மபி: – கர்மங்களினால், பாவிதா:- உண்டாக்கப்பட்ட
வைகள்.-என்றும்-(ஹந்யதே தாத க: கேந யத: ஸ்வக்ருதபுக புமா -தாத – தகப்பனாரே, க: – எவன், கேந – எவனால், ஹந்யதே- கொல்லப்படுகிறான், யத:- எந்தக் காரணத்தினால், புமாந்-
மனிதன், ஸ்வக்ருதபு க் – தன்னால் செய்யப்பட்ட கர்மத்தின் பலனை அனுபவிக்கிறானோ- என்றும்( சுபேத்வஸௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதேஸௌ-பரமஸ் சரீரீ சாந்தி-199-25. சரீரீ – எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடைய, அஸௌ – இந்த, பரம்:- பரமாத்மா, சுபேது-நல்ல கர்மங்கள் செய்யும்பொழுது, துஷ்யதி – ஸந்தோஷப்படுகிறான், துஷ்க்ருதேது – பாப கர்மங்களைச் செய்யும்பொழுதோ எனில், நதுஷ் யதே- ஸந்தோஷப்படுவதில்லை. -) என்றும்,.-நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன் ‘என்றும் ப்ரமாணஸித்தமாய், ப்ரவாஹாநாதியான விருத்தாநுஷ்ட்டானம் என்றபடி.

7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம் சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்-என்றது-அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்-கீதை -9 33 அநித்யம் அழியக்கூடியதாயும், அஸ கம் – துக்க மயமாயும் இருக்கிற, இமம் – இந்த, லோகம் லோகத்தை, ப்ராப்ய – அடைந்திருக்கிற நீ, மாம் -என்னை, பஜஸ்வ – அடை.)
என்றும்,-(ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ-கீதை-18-65. ஸர்வதர்மாந் – எல்லாத் தர்மங்களையும், பரி த்யஜ்ய – நன்றாய் விட்டுவிட்டு (அதாவது ப்ரபத்திக்கு அங்கமாக அனுஷ்டிக்காமல் என்றபடி), மாம் ஏகம் – என்னை ஒருவனையே, சரணம் சரணமாக, வ்ரஜ – அடை.)என்றும்-பிதரம் மாதரம் தாராந் புத்ரார் பந்தூந் ஸகீந குரூங் 1
ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச கருஹாணி ச | ஸர்வதர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஸ் ச ஸாக்ஷராந்ங்1லோகவிகராந்த சரணெள பரணம் தே அவரஜம்விபோ! -ஜிதந்தாஸ்தோத்ரம்
பிதரம்-தகப்பனாரையும், மாதரம்- தாயாரை யும்,தாரா-பத்னி களையும்.புத்ரா பிள்ளைகளையும் பந்தூ – பந்துக்களையும் ஸகீர்-ஸகிகளையும், குரூந்-குருக்களையும்,ரத்நாநிரத்னங்களையும்தநதாந் யா -பணம்தாயங்களையும், க்ஷேத்ராணி-நிலங்களையும், க்ருஹாணிச – வீடுகளையும், ஸர்வதர்மாம்ச்ச- எல்லாத் தர்மங்களையும், ஸாக்ஷரார் -கைவல்யத்துடன் சேர்ந்த, ஸர்வகாமாச்ச – எல்லாக் காமங்களையும் (ஐச்வர்யங்களையும்), ஸந்த்யஜ்ய – விட்டுவிட்டு, விபோ -விபுவாகிய)என்றும்,(வ்ருதைவ பவதோ யாதா பூயஸ் ஜந்மஸந்ததி: 1தஸ்யாம் அந்யதரஜ்ஜந்ம ஸஞ்சிந்த்ய ஸ்ரணம் வ்ரஜேத்-சாண்டி – ஸ்ம்ருதி பவத: – உனக்கு, பூயஸ் – அதிகமான, ஜந்மஸந்ததி: – ஜன்மங்களின் பரம்பரை, வ்ருதைவ – வீனாகவே, யாதா – போய்விட்டது, தஸ்யாம் – அவற்றிற்குள், அந்யதரத் – ஒன்னாகிய, ஜந்ம – ன்மமாக, ஸஞ்சிந்த்ய – (இந்த ஜன்மத்தையும்) நினைத்துக் கொண்டு, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடை.)என்றும்,அஹமஸ்ம்யபராதாநாம் ஆலயோகிஞ்சநோகதி: 1தவமேவ உபாய பூதோ மே வேதி ப்ரார்த்தநாமதி: ஸரணாகதிரித்யுக்தா ஸாதேவேஸ்மிந் ப்ரயுஜ்யதாம் |தஸ்யாநுபந்தா : பாப்மாந ; ஸர்வே நய்யந்தி தத்க்ஷணாத|-அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை – 37 – 30. அஹம் – நான், அபராதாநாம் – குற்றங்களுக்கெல்லாம், ஆலய: – இருப்பிடமாகவும், அகிஞ்சந : – வேறு ஒரு உபாயம் இல்லாதவனாயும், அகதி: – வேறு ரக்ஷகாகள் இல்லாதவனாகவும், அஸ்மி – ஆகிறேன், த்வமேவ – நீரே, மே எனக்கு, உபாயபூத: – உபாயமாக, பவ – ஆகவேண்டும், இதி – என்கிற, ப்ரார்த்தநாமதி:- ப்ரார்த்திப்பதாகிய புத்தி, சரணாகதி:, இதி என்று, உக்தா – சொல்லப்பட்டது, ஸா – அது, அஸ்மிந் – இந்த,தேவே – தேவனாகிய பகவானிடத்தில், ப்ரயுஜ்யதாம் – ப்ரயோகிக்கத் தக்கது, தஸ்ய – இப்படிச் செய்தவனுக்கு, அநுபந்தா:- தடையாய் இருக்கிற, ஸர்வே – எல்லா, பா மா : – பாபங்களும், தத்க்ஷணாத்-அந்த க்ஷணத்திலேயே, நச்யந்தி – சித்து விடுகின்றன.)என்றும்,(பக்த்யா பரமயாவாபி ப்ரபத்த்யா வா மஹாமதேப்ராப்யோஹம் நாந்யதா ப்ராப்ய : மமகைங்கர்யலிப்ஸுபி: [!-மஹாமதே – புத்திமானாகிய ஓ! ரிஷியே, அஹம் – நான், மம -என்னுடைய, கைங்காபலிப்ஸுபி: – கைங்கர்யத்தைச் செய்யவேண்டும் என்கிற ஆசையுடையவாகளினால், பரமயா – உயர்ந்ததான, பக்த்யா- பக்தியினாலாவது, ப்ரபத்த்யாவா – ப்ரபத்தியினாலாவது,ப்ரா ப்ய: – அடையத் தகுந்தவன், அந்யதா – வேறு விதமாக, ந ப்ராப்ய: அடையத் தகுந்தவனல்ல.)என்றும்,

சரணம் தவாம் ப்ரபந்நா யே த்யா நயோக விவர்ஜிதா தேபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணவம் பதம் |1-த்யாநயோக விவர்ஜிதா: – த்யான யோகம் செய்யாதவர்களான,யே – எவர்கள், த்வாம்- உம்மை சரணம் ப்ர பந்நா: – சரணமாக அடைந்தார்களோ, தேபி – அவர்களும், ம்ருத்யும்- ஸம்ஸாரத்தை, அதிக்ரம்ய – தாண்டி, தத் – அந்த, வைஷ்ணவம் – விஷ்ணுவினுடையதான-பதம் – ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)என்றும்,

முமுக்ஷவுக்கு ஸரண்ய ப்ரஸாதநங்களாகச் சொல்லப்பட்ட உபாயங்களில் வைத்துக்கொண்டு,-நிக்ஷேபாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: ஸந்யாஸஸ் த்யாக இதயுக்த: லரணாகதிரித்யபி !!-லக்ஷ்மீதந்த்ரம் – 17-74 நிக்ஷேபாபர பர்யாய:- நிக்ஷேபம் என்று மற்றொரு பெயரையுடைய, பஞ்சாங்க ஸம்யுத: – ஐந்து அங்கங்களுடன் கூடிய, ந்யாஸ : – பரந்யாஸம், ஸந்யா :- ஸந்யாஸம்என்றும்,த்யாக இதி – த்யாகம் என்றும், சரணாகதிரித்யபி – சரணாகதி என்றும் உக்த:- சொல்லப்பட்டது.)-என்றும்,

ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹி ஆத்ம க்ஷேப உச்யதே–லக்ஷ்மீதந்த்ரம்-17 – 79. ஆத்மாத்மீய பரந்யாஸ.- தன்னுடையவும் தன்னைச் சேர்ந்த வஸ்துக்களினுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது(அவற்றைரக்ஷிக்க வேண்டிய பொறுப்பை பகவானிடம் ஸமர்ப்பிப்
பது), ஆத்மநிக்ஷேப – ஆத்ம நிக்ஷேபம் என்று, உச்யதே – சொல்லப்படுகிறது.என்றும் சொல்லப்பட்ட ஸ்வ ரக்ஷா பரஸமர்ப்பணம்,-(இதம் Uரணம் அஜ்ஞாநாம் இதமேவ விஜர்நதாம் 1இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்யமிச்சதாம்|1-லக்ஷ்மீதந்த்ரம் – 17-100. இதம் – இந்த சரணாகதி, அஜ்ஞாநாம் – ஜ்ஞாநம் இல்லாதவர்களுக்கும், சரணம் – உபாயம், விழாநதாம் – (பகவானுடைய ஸ்வரூபாதிகளை) விகேஷமாக அறிந்தவர்களுக்கும், இதமேவ – இதுவே (உபாயம் ), பாரம் – கரையை, திதீர்ஷதாம் – தாண்ட வேண்டும் என்கிற ஆசை யுடையவர்களுக்கும், இதம் இதுவே.உபாயம், ஆநந்த்யம் இச்சதாம் – (தர்ம பூதஜ்ஞானத்தின் வழியாக)அளவில்லாமல் இருப்பதை, இச்சதாம் -ஆசைப்படுகிறவர்களுக்கும், இதம் – இதுவே உபாயம்.)

(தாவதார்த்திஸ் ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா அஸுகம்-யாவந் ந யாதி பரணம் த்வாம் அனேஷாகநா நம்!!-விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாச)மடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதியஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் -அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.)(ப்ரபத்தே : கவசிதபயேவம் பராபோ ந வித்யதே ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா உபாயபக்தி: ப்ராரப்த வ்யதிரிக்காகநாலிநீஸாத்யபக்திஸ் து ஸாஹந்த்ரீப்ராரப்தஸ்யாபி பூய 11)ஸநத் குமார ஸம்ஹிதை – ப்ரபத்தே: – ப்ரபத்திக்கு, க்வசிதபி – ஓர் இடத்திலும், ஏவம் – இவ்விதமாக, பராபேக்ஷா – வேறு உபாயத்தைப் பற்றிய அபேக்ஷை, ந வித்யதே – இல்லை. ஹி-எந்தக் காரணத்தினால், ஸா – அந்த ப்ரபத்தி, ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வேஷாம் – எல்லோருக்கும், ஸர்வ காம பலப்ரதா-எல்லா இஷ்ட பலங்களையும் கொடுக்கக் கூடியதோ, உபாயபக்தி: -பக்தி யோகம், ப்ராரப்த வயதிரிக்தாகநாசி – பலன் கொடுக்க ஆரம்பித்த காமங்களைத் தவிர மற்ற கர்மங்களை நாசம் செய்யக் கூடியது, ஸா – அந்த, ஸாத்ய பக்திஸ்து – ப்ரபத்தியோ எனில், ப்ராரப் தஸ்யாபி – பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மத்திற்கும், பூயஸ் – மிகவும் பெரிதான, ஹந்த்ரீ – நாசம் செய்யக்கூடிய காரணம்.)

ஸத்கர்ம நிரதாஸ்த்தா: ஸாங்க்யயோகவிதஸ்ததா|-நார்ஹந்தி ரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி1-லக்ஷ்மீ தந்த்ரம் – 17-62. ஸத்கர்ம நிரதா: – நல்ல கர்மங்களில் நிஷ்ட்டையுடையவர்களும் (கர்ம யோகிகளும்), சுத்தா : – அதின்பலமான மனதின் சுத்தியை அடைந்தவர்களும், ததா – அப்படியே, ஸாங்க்ய யோகவித – ஜ்ஞான யோகம் பக்தி யோகம் இவைகளை அநுஷ்ட்டிப்பவர்களும், சரணஸ்த்தஸ்ய – சரணாகதியில் நிஷ்ட்டை யுடையவனுடைய, கோடிதமீம் – கோடியில் ஒன்ாகிய, கலாமபி -பாகத்தையும். நார்ஹந்தி – பெறமாட்டார்கள்.)இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ண விரேபஷாதி ரஹிதமாய், அத்யந்தாகிஞ்சநருக்கும் அதிகரிக்கையாலும், உபாயாந்தர பர்யந்த ஸகல ஸாதகமாகையாலும், ஆர்த்தியில் தாரதம்யத்துக்கு அநுகுணமாக ப்ராரப்த கர்மத்தையும்
கழிக்க வற்றாகையாலும், ஸுகரமாகையாலும், துஷ்கர பரிகரநிரபேக்ஷமாய் ஸக்ருத் கர்த்தவயமாகையாலும், ஸர்வருக்கும் ஸ்வாபிமத அவிளம்பித பலஸித்திக்கு இதுவே ப்ரதாநம் என்றபடி.-இதில் சொன்ன ப்ரபத்தி ரூபமான ஸ்வரக்ஷாபரஸமர்ப்பணமாவ து ஸ்வரக்ஷணார்த்த ஸ்வப்ரவருத்த்யபிமாந நிவ்ருத்தியோடும் ப்ரார்த்தனையோடும் கூடின ஸரண்யைக ஸாத்யஸ்வரக்ஷணத்வ அத்யவஸாய விஸஷம்.

————-

8-இது ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ‘ என்றது-ஸக்ருத் கருத; ஸாஸ்த்ரார்த்த :-சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரத்தின் அர்த்தமான கர்மம், ஸக்ருத் க்ருத: – ஒரு தடவையாலே செய்யப்பட்டதாகிறது.)என்கிற ஸாமாக்ய ப்ராப்தியாலும்,-ஆவருத்தி: அஸகருதுபதேஸாத் )
சாரீரக ஸூத்திரம் – 4- 1 – 1. அஸக்ருத் – அனேகம்தடவை, ஆவ்ருத்தி: – ஆவருத்தி செய்யத் தக்கது. உபதேசாத்அப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருப்பதினால்.என்கிற வியேஷஹேது இல்லாமையாலும்,-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1 அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வ்ரதம் மம-யுத்த – 18 – 33. ஸக்ருதேவ – ஒரு தடவையே ப்ரபந்நாய – ப்ரபத்தி செய்தவனுக்கும், தவ – உனக்கு, அஸ்மி – தாஸனாக ஆகிறேன் இதி – என்று,யாசதே ச – பரார்த்திக்கிறவனுக்கும், ஸர்வபூதேப்ய: – எல்லாப்ராணிகளுக்கும், அன்றிக்கே எல்லா ப்ராணிகளிடமிருந்தும், அபயம் – பயம்இல்லாமையை, ததாமி – கொடுக்கிறேன், ஏதத் – இது, மம – என்னுடைய, வரதம்)ஸக்ருதேவஹி லாஸ்த்ரார்த்த: க்ருதோயம்தாரயேந் நரம்-லக்ஷ்மீதேந்த்ரம் – 17- 19. அயம் – இந்த . சாஸ்த்ரார்த்த: -சாஸ்த்திரத்தின் அர்த்தமான ப்ரபத்தி, ஸக்தேவ – ஒரு தடவை, கருத செய்யப்பட்டதாய்க் கொண்டு, நரம் – மனிதனை,தாரயேத் – ஸம்ஸாரத்தைத் தாண்டி வைக்கும்.)நநு ப்ரபந்ந: ஸக்ருதேவ நாத தவாஹமஸ்மீதி ச யாசமாந-ஸ்தோ – 4. நாத – ஓ! நாதனாகிய பகவானே, க்ரு
தேவ – ஒரு தடவை. ப்ரபந்ந: – ப்ரப நனாயும், தவ – உமக்கு, அஹம் – நான், அஸ்மி- தாஸனாக ஆகிறேன், இதி ச – என்றும், யாசமா : – ப்ரார்த்திக்கின்றவன்)ஸக்ருத்ப்ரார்த்தநா மாத்ரேண பேக்ஷிதம் தாஸ்யதி-ஸக்ருத் ப்ரார்த்தநா மாத்ரேண – ஒருதரம் ப்ரார்த்தித்தமாத்திரத்தினால், அபேக்ஷிதம் – இஷ்டத்தை,தாஸ்யதி – கொடுக்கப்போகிறான்.)இத்யாதி ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலும், ப்ரபத்தி மந்த்ரங்களில் வர்த்தமாந வயபதேலம் அநுஷ்ட்டாநகால அபிப்ராயமாகையாலும், த்ரெளபதீ விபீஷண கஜேந்த்ர ஸமுக காககபோதாதி வருத்தாந்த விலேஷங்களாலும் ஆநுகூல்ய ஸங்கல்பாத்யங்க பஞ்சகஸம்யுக்தமான பரஸமர்ப்பணத்துக்கு ஸக்ருதநுஷ்ட்டாநமே லாஸ்த்ரீயம் என்றபடி.

(9) இஸ்ஸமர்ப்பணத்தைத் தான் அநுஷ்ட்டிக்கவுமாம், தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டிக்கவுமாம் ‘ என்றது-சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி-பூர்வமீமா-3-7-18 சாஸ்த்ரபலம் சாஸ்த்ரத்தின் ப்ரயோ ஜனம் அதாவது ஒரு கர்மத்தை அநுஷ்டிப்பதினால் உண்டாகும் பலன், ப்ரயோக்தரி – அந்தக் கர்மத்தை அநுஷ்டித்தவனிடத்தில் உண்டாகிறது.)என்று வ்யவஸ்தை உண்டாயிருக்கச் செய்தே புத்ராதிகளைப் பற்றவும் பித்ராதிகள் சில ஸுக்ருதங்களை அநுஷ்டிக்கை சாஸ்த்ரீயமாகையாலும்,-(ஸதிஸது பகவாங் அ ே ஷ பும்ஸாம் ஹரி: அபஜந்மஜராதி காம்ஸம்ருத்திம்-விஷ்ணு புராணம் 6. ஸ: – அந்தப் பகவானாகிய, ஹரி: – விஷ்ணு, அசேஷபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுக்கும், அபஜந்ம
ஜராதிகாம் – பிறப்பு கிழத்தனம் முதலியவை இல்லாததான, ஸம்ருத்திம் – ஸம்பத்தை, திசது – கொடுக்கட்டும்.)(மயாத்ய பக்த்யா பரமேஸ்வரேமே ஸ்ம்ருதே ஜகத்தாதரி வாஸுதேவே-செளநகஸம்ஹிதை. ஜகத்தாதரி-லோகங்கனை ஸ்ருஷ்டித்தவரான, பரமேச்வரேசே – ஈசுவரர்களுக்கெல்லாம் ஈசுவரனான, வாஸ தேவே. – வாஸ தேவன், மயா – என்னால், அத்ய – இப்பொழுது, பக்த்யா – பக்தியினால், ஸ்ம்ருதே (ஸதி) – த்யானம் செய்யப்பட்டிருக்கும் பொழுது)என்கிற பராபர பௌநக வாக்யங்களாலும்,மற்றும்பலமஹர்ஷிகளுடைய வருத்தாந்த ரகாரத்தாலும், ப்ரஹ்லாத விபீஷணதஸரத த்ரௌபதீ ப்ரப்ருதிகள் ஸ்வஸம்பந்திகளிலே சிலரைப்பற்ற ப்ரபத்தி பண்ணக் காண்கையாலும், லோகத்திலும்
(இவ்)அநுஷ்ட்டாநம் உண்டாகையாலும்,)வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோயிது தீர்த்து (திருவாய் – 4-6 – 8)என்று ஆழ்வார் அருளிச் செய்த ந்யாயத்தாலும்,)வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10.
-என்று நாச்சியார் அருளிச் செய்கையாலும், இப்படிப் பூர்வாசார்ய அநுஷ்ட்டாந ஸம்ப்ரதாயங்களாலும் இப்ரபத்தியைத்தான் அநுஷ்ட்டித்தால் பலஸித்தி யுண்டாமாப்போலே தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டித்தாலும் பலஸித்திக்குக் குறைவில்லைஎன்றபடி.)த்வய்யாசார்யை: விநிஹிதபராஸ்தாவகா ரங்கநாத-ந்யாஸ திலகம் 11. ரங்கநாத – ஓ! ரங்கநாதனே, த்வயி -உம்மிடத்தில், ஆசார்யை: – ஆசார்யர்களினால், விநிஹிதபரா: -ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவர்களரன, தாவகா : – உன்னை ஆச்ரயித்தவர்களும் (உமது கைங்கர்யத்திலே ஆசையுடையவர்கள் முதலியவர்களும் எனக்கு ருசிக்கட்டும் என்றுமேல்)(அந்தோநந்த க்ரஹணவக:-ந்யாஸ திலகம் -21. அநந்த – குருடனல்லாதவனை, கா ஹண – பிடித்துக் கொள்ளுவதினால், வசக: – அவனுக்குப்பின் செல்லுகிற, அந்த: – குருடன் (எப்படி வழி நடக்கிறானோ , நொண்டி யாயிருப்பவன் ஓடத்தின் நடுவில் வைக்கப்பட்டவனாய் ஓடக்காரனால் எப்படி அக்கரைக்குக் கொண்டு போகப்படுகிறானோ, அப்படியே தயாளுவான ஆசார்யன் எனக்கு உம்மை அடைகிற விஷயத்தில் சக்தியுடையவனாகிறான் என்றுமேல்)என்கிற ந்யாஸ திலகத்தில் ல்லோகங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

————-

(10)இதற்குக் கோலி(ரி)ன பலத்தைப் பற்றப் புந: ப்ரபத்தி முதலான கர்த்தவ்ய ஸேஷமில்லை ‘ என்றது-( ஸக்ருதேவ ப்ரபங்நஸ்ய க்ருத்யம் நைவாஸ்தி கிஞ்சந-க்ருதேவ – ஒரே தடவை, ப்ரபங்கஸ்ய – ப்ரபத்தி செய்த வனுக்கு, க்ருத்யம் செய்ய வேண்டியது, கிஞ்சந – ஒன்றும், நை வாஸ்தி இல்லை.)இத்யாதிகளிற்படியே செய்த வேள்வியனான இவனுக்கு ஸ்வாபிமத பல விஸேஷத்தைப் பற்ற ஸாங்கமாகப் பண்ணின ப்ரபத் திக்கு ஸ்வரூபாவ்ருத்தி ரூபமாகவாதல் அங்கமாகவாதல் ஒரு கர்த்தவ்ய ஸேஷமில்லாமையாலே ஸ்வாதிகாராநுகுணமாக ஸ்வாமி ஸந்தோஷாதிஸய ஹேதுவாய்க் கொண்டு ஸ்வயம் ப்ரயோஜநமான கைங்கர்ய விஸேஷங்களுக்கும், பக்தி தத்த்வ ஜ்ஞாநாதிகளைப் பற்றவாதல், பகவத் பாகவத ஸம்ருத்யாதிகளைப் பற்றவாதல், விளம்பா மதையாலேயாதல்,-அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயஸ்சித்தம் ஸமாசரேத் ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத் புநர் ஸ்ரணம் வ்ரஜேத்-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிற எந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்கிற நைமித்திச வேஷத்தாலேயாதல், புந: ப்ரபத்தி பண்ணுமதுக்கும் பூர்வ ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷயத்தோடு விரோதமில்லை என்றபடி.

———————-

(11) . இப்படி கருதக்ருத்யனான ப்ரபங்கனுக்கு வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வதந்த் ராஜ்ஞாஸித்தங்களான கைங்கர்ய விஸேஷங்கள்’ என்றது-மற்றொரு பல விஸேஷத்தைப் பற்றவன்றிக்கே அகரணத்தில் ஆஜ்ஞாதி லங்கந தோஷம் வரும்படிகளாய்-செய்யேல் தீவினை என்று அருள் செய்யும்–திருவாய் மொழி – 2-9 – 3-என்று ஸ்வதந்த்ர பகவதாஜ்ஞாரூப லாஸ்த்ர விஹிதங்களான வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் தத்த்வ ஹித நிஷ்கர்ஷமுடையனாய்-(தேவர்ஷி பூதாத்ம ருணாம் பித்ரூணாம்-ந கிங்கரோ நாயம் ரிணீச ராஜங் ஸர்வாத்மநா யஸ்ரணம் மரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந: II-பாகவதம் – 11-5 -41. ராஜந்-ஓ! ராஜாவே, ய:- எவன் சரண்யம் – சரணமாக அடையக் கூடியவனாயும், லோக குரும் – லோகங்களுக்கெல்லாம் குருவாயும் இருக்கிற, நாராயணம் – நாராயணனை, ஸர்வாத்மநா – எல்லா ப்ரகாரத்தாலும், சரணம் ப்ரபந்ந: -சரணமாக அடைந்தானோ, அயம் – இவன், தேவர்ஷிபூதாத்மந்ருணாம்-தேவதைகள், ரிஷிகள், ப்ராணிகள், தான், மனிதர்கள், இவர்களுக் கும், பித்ரூணாம் – பித்ருக்களுக்கும், ந கிங்கர: : வேலைக்காரனுமல்ல,
ந ரிணீ ச – கடன்காரனுமல்ல.)இத்யாதிகளிற்படியே அந்ய பஜநாதி தோஷரஹிதனான இவனுக்கு பக்தி வஞ்சநம் பண்ணாதே அவர்ஜநீயங்களான ஸ்வாமியுகந்த கைங்கர்யம் என்றபடி.

பகவத் கைங்கர்ய ரதியான ப்ரபங்கனைப் பற்றவே-(உபாயாபாய ஸந்த்யாக மத்யமாம் வருத்திமா ரித: |மாமேவ ரணம் ப்ராப்ய மாமேவாந்தே ஸமல்நுதே-லக்ஷ்மீதந்த்ரம். உபாய அபாய ஸந்த்யாகீ – (பலன்களுக்கு உபாயங்களான) காம்ய கர்மங்களையும், (அநிஷ்ட பலத்திற்குக்காரணமான ) பாபத்தையும் விட்டவனாய், மத்யமாம் – நடுவான, வ்ரு த்திம் – நிலையை, ஆச்ரித – அடைந்தவனாய், மாமேவ – என்னையே, சரணம்ப்ராப்ய – சரணமாக அடைந்து, மாமேவ – என்னையே, அந்தே- கடைசியில், ஸமச்நுதே -அநுபவிக்கிறான்.)என்றும்,அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்யச 1 ஸங்கரஹாய ச லோகாநாம் மர்யாதா ஸ்த்தாபநாய ச || ப்ரியாய மம விஷ்ணோச தேவதேவஸ்ய லார்ங்கிண: 1 மநீஷீ வைதிகாசாரம் மநஸாபி நலங்கயேத் II-லக்ஷமீதந்த்ரம், 17 – 93-94. தர்மாணாம் – தர்மங்களுக்கு அவிப்லவாய – நாசம் உண்டாகாமல் இருப்பதற்காகவும், குலஸ்ய -குலத்தை,பாலநாய ச – ரக்ஷிப்பதற்காகவும், லோகாநாம் – லோகங்களை,ஸங்க்ரஹாய – சேர்ப்பதற்கும், மர்யாதாஸ்த்தாபநாயச -வர்ணாச்ரமங்களுடைய வ்யவஸ்தைபை ஸ்த்தாபிப்பதற்கும், தேவதேவ ஸ்ய -தேவதைகளுககெல்லாம் தேவனயும், சார்ங்கிண: – சார்ங்கம் என்னும் வில்லைத் தரித்துக் கொண்டவனாயும் இருக்கிற, விஷ்ணோ:- விஷ்ணுவிற்கும், மம ச – எனக்கும், ப்ரியாய – ப்ரியம் உண்டாவதற் காகவும், மநீஷீ – புத்திமானாகிய மனிதன், ஸ்வதிகாசாரம் – வேதங்களில் சொல்லப்படுகிற தர்மங்களின் அநுஷ்ட்டாகத்தை, மநஸாபி -மனதினாலும்கூட, நலங்கயேத் – தாண்டக்கூடாது.)என்றும் சொல்லுகிற ப்ரமாண வர்கத்தையும், ஸ்ரீபாஷ்யகாராதிக (ள்)ளும் அருளிச்செய்த நித்யங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

———-

(12) ‘ இவனுக்கு ஆஜ்ஞாநுஜ்ஞா ஸித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் ப்ரயோஜநங்கள்’ என்றது–ஆஹாரத்தி ஆசார நியமம் அபராத பரிஹாரம் முதலான
முன்பு சொன்ன ஆஜ்ஞாஸித்தங்களான வர்ணாரமாதி தர்மங்களும்,-பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து’-திருவாய்மொழி – 9-2-1.இத்யாதிகளில்படியே இச்சையுள்ளபோது செய்யவுமாம் அதில்லாதபோது தவிரவுமாம்படி ஏற்றமாகநிற்கிற அந்தராத்ம(ராந்தர )குணாநுஸந்தாந ஸ்துதி ஸங்கீர்த்தந ஸம்மார்ஜ்ஜந உபலேபந மாலாகரண தீபாரோபனாதி கைங்கர்யங்களுமெ(ளெல்லாம் ஸர்வவிதபந்துவான ஸர்வஸ்வாமியினுடைய ஸம்ப்ரீதி ஹேதுவாகையாலே அநுரக்த பார்யாதிகளுடைய ரூஷணாதிகள் போலவும், முகதனுடைய வ்யாபாரங்கள் போலவும்,-(ப்ரஹர்ஷயிஷ்யாமி-ஸ்தோ -48. ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸந்தோஷிப்பிக்கப் போகிறேன்.)என்னும் ப்ரயோஜநமொழிய மற்றொரு ப்ரயோஜந விஸேஷத்தைக் கணிசிகக வேண்டாதபடி,(துர்கதாவபி ஜாதாயாம்– துர்க்கதெள – கெட்ட தசை, ஜாதாயாமபி – உண்டாயிருந்த போதிலும், (உம் மிடத்திலேயே பக்தி இருக்கவேண்டும்)(காமயே வைஷ்ணவத்வம் து-ஜிதந்தா – 1 – 13. வைஷ்ணவத்வம் – வைஷ்ணவனாபிருக் கையை, காமயே – ஆசைப்படுகிறேன்)ஸர்வேஷு தேச காலேஷு-ஸர்வேஷு – எல்லா., தேச காலேஷு – தேசங்களிலும் காலங்களிலும் (உனக்குக் கைங்கர்யம் செய்யக் கடவேன்) இத்யாதிகளிற்படியே இவைதன்னை(ம்மை)யே உத்தேஸித்து ப்ரவ்ருத்திக்கும்படி ஸ்வரூபேண ஸ்வாதுக்களாயிருக்கும் என்றபடி

———-

(13) கரணாகரணரூபங்களான அபசாரங்கள்புகுந்தாலும் ப்ரபந்நனுக்கு நரகாதிகள் இல்லை ‘ என்றது-அங்கமாகவாதல் ஸ்வதந்த்ரமாகவாதல் பகவத் ப்ரபத்தியைக்
கைமுதலாகப் பற்றின பரமைகாந்திக்கு ப்ரபல ப்ராரப்த துஷ்க்ருத விஸேஷத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யகரண க்ருத்யாகரண ரூபமான ஆஜ்ஞாதிலங்கநம் பிறந்ததாகில்-(த்ருஷ்டோ தர்மவ்யதிக்ரம: ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோவிசேஷேண ப்ரத்யவாயோ நவித்யதே 1-1கெளதம தாம ஸூத்ரம்.-பூர்வேஷாம் – முன்னோர்களுக்கு, தர்மவ்யதிக்ரம்:- தர்மத்தை மீறிநடப்பதும், ஸாஹஸம்ச – ஸாஹஸ கார்யமும், த்ருஷ்ட :- காணப் பட்டிருக்கிறது, )என்னும் விஷயமன்றிக்கே நம்மளவில்-(ததந்வீக்ஷ்ய ப்ரயுஞ்ஜாநஸ் ஸீதத்யவர:-2தேஷாம்- அவர்களுடைய, தேஜோ விசேஷேண – மி.குந்த தேஜஸஸினால், ப்ரத்யவாய:-தோஷம், ந வித்யதே – இல்லை. 2மனு பார்த்து, தத்- அந்தப் பெரியோர்களின் அதிக்ரமத்தை, அந் ய ப்ரயுஞ்ஜாந: – செய்கிற, அவர: – ஜ்ஞாநசக்த்யாதிகளால் தாழ்ந்தவனாயிருக்கும் மனிதன், ஸ்ததி – துக்கப்படுகிறான். )என்னும்படி நிற்கையாலும், தர்மாதிகரமம் பண்ணின மஹாத்மாக் களுககும் ஸுக்ருத விநாபாதி ப்ரத்யவாயம் சொல்லுகையாலும், அவ்வக்ருத்யகரணங்கள் ப்ரத்யவாய ஹேதுக்களாய் நின்றால்-ஸ்வபுருஷமபிவீக்ஷ்ய பாஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே பரிஹர மது தநப்ராப நாங் ப்ரபுரஹமந்ய நகுணாம் ந வைஷ்ணவாநாம் !-வாமந புராணம் – 94 31. பாசஹஸ்தம் – பாசத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற, ஸ்வபுருஷம் தன்னுடைய வேலைக் காரனை, அபிஷீஷ்ய பார்த்து யம: – யமன், தஸ்ய- அவனுடைய,கர்ணமூலே – காதின்ஸமீபத்தில், வததி – சொல்லுகிறான், மது தநப்ரபங்நாந்- மதுவைக் கொன்றவனாகிய பகவானை ஆச்ரயித்தவர்களை, பரிஹர – விட்டுவிடு, அஹம்-நான், அந்ய ந்ருணாம் – வேறுமனிதர்களுக்கு ப்ரபு: – யஜமாநன், வைஷ்ணவாநாம் -வைஷ்ணவர்களுக்கு, ந -(யஜமாநன்) அல்ல.

(தேவம் சார்ங்கதரம் விஷ்ணும் யே ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌக :-வாமந் புராணம் – 9443. யே – எவர்கள், சார்ங்கதரம் சார்ங்கத்தைத் தரித்துக்கொண்டவனாயும், தேவம்-தேவனாயும் இருக்கிற, விஷ்ணும் – விஷ்ணுவை, பராயணம் – பரமகதியாக, ப்ரபந்நா:ஆச்ரயித்திருக்கிறார்களோ, தேஷாம் – அவர்களுக்கு, யம ஸாலோக்யம்-யமலோகத்தில் வஸிக்கும் தன்மை, ந – இல்லை, தே – அவர்கள்
நரகௌகஸ் : நரகத்தில் இட முடையவர்களும் அதாவது வஸிப்பவர்களும், ந – அல்ல.)(யே ந்ரும்ஸா: துராத்மா : பாபாசார ரதாஸ்ததா தேபி யாந்தி பரம் தாம நரா நாராயணாரயா:-யே – எந்த மனிதர்கள், ந்ருசம்ஸா: – தயை இல்லாதவர்களோ, துராத்மா : – கெட்ட ஸ்வபாவமுடையவர்களோ, ததா – அப்படியே,பாபாசாரரதா: – பாபத்தைச் செய்வதிலேயே ஆசையுடையவ.களோ,தே – அந்த, நரா :அபி – மனிதர்களும், நாராயணாச்ரயா: நாராயணனை ஆச்ரயித்தவர்களாய்க் கொண்டு, பரம் – உயர்ந்ததாம- ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நரகாதி மஹாக்லேசம் வாராதே யதா ஸம்பவம் அநுதாப ஸ்பிக்ஷா உபக்லேயங்களாலே அபராத நிஸ்தாரமுண்டாம் என்றபடி.

கிங்கரா தண்டபாபௌ வா நயமோ ந ச யாதநா : 1ஸமர்த்தாஸ்தஸ்ய யஸ்யாத்மா கோவாலம்பநஸ் ஸதா ||-யஸ்ய – எவனுடைய, ஆத்மா – ஆத்மாவானது, ஸதர் – எப்பொழுதும், கேசவாலம்ப :- பகவானை ஆச்ரயித்திருக்கிறதோ, தஸ்யஅவனுக்கு, (அதாவது அவனுக்குத் துக்கத்தை உண்டாக்கும் விஷயத்தில்), கிங்கரா: – கிங்கரர்களும், யம – யமனும், தண்ட பாசெளவாயமனுடைய தண்டமும் பாசமும்,யாதநா : -நரக துக்கங்களும், நஸமர்த்தா: – சக்தி உடையவர்களல்ல.-‘நமன்கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே’-திருச்சந்தவிருத்தம் 116–நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை-திருவாமொழி 5- 2-1-இத்யாதிகளையும் இங்கே அநுஸந்திப்பது..

————–

(14) ராஜகுமாரனுக்கும் அவதாநம் பண்ணி நடக்க வேண்டுமா போலே, லகு ப்ரத்யவாயமும் வாராமைககாக அபசாரங்கள்-தூர பரிஹரணீயங்கள் ‘ என்றது-(பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யசகுருர் கரியாந்)இத்யாதிகளில் சொல்லப்பட்ட ஸ்வபாவங்களு (ளையு)டைய பகவான் இவனைப் புத்ராதிகளைப் போலே பக்ஷபாதியாய் ரக்ஷிக்கும் படி நிற்கிற பாகவதனுக்கு யம விஷயகமநம் இல்லை என்றும் அபசாரங்கள் புகுந்தால் அவை நீங்குகைக்குச் சில உபக்லேஸங்கள் அளவும் பலமாய் விடும் என்றும் சொல்லுகிற ஸ்த்ரார்த்தங்களின்படியே புத்தி பூர்வாபராதம் பிறந்தால் அநுதாபம் பிறந்து, புந: ப்ரபத்தி பண்ணாதபோது க்ஷாரூப ப்ரத்யவாய விஸேஷங்கள் வரும்படியாயிருக்கையாலே,இப்படி ஈஸ்வர நிக்ரஹங்களுக்கு இலக்காகாமைக்காக,

த்வாரி யஸ்ய த்வாராணி ஸுகுப்தாநி மநீஷிண: 1 உபஸ்தம் உதரம் பாணி: வாக் சதுர்த்தீ ஸ வை புமாந் |-யஸ்ய – எந்த, மநீஷிண: – விவேகியாகிய புருஷனுக்கு, உபஸ்தம், உதரம்- வயிறு, பாணி: – கை, சதுர்த்தி – நான்காவதானவாக்கு – நாக்கு இவைகளான, வாராணி-பாபம் வருவதற்கு வழியானசத்வாரி-நான்கு இந்த்ரியங்களும், குப்தாநி – காப்பாற்றப் பட்டிருக்கிறதோ ஸவை – அவனே, புமாந் – மனிதன்.-இத்யாதிகளிற் சொன்ன அவதாந விஸேஷமுடையவனாய் அநாகதாநவீ (வேஷ)ணம் பண்ணின இவன்,-” நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு ‘–முதல் திருவந்தாதி 64 ‘ செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்–திருப்பாவை 2-இத்யாதிகளிற்படியே ஏற்கவே அபராதங்கள் புகுராதபடி வர்த்திக்க ப்ராப்தம் என்றபடி.-(விஹிதே ப்ரதிஷித்தே ச யதாமதி யதாபலம் த்வய்யாஹிதபர: ஸ்ரீமந் வர்த்தே ராஜகுமாரவத் !-விஹிதே – சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கார்யத்திலும், ப்ரதிஷித்தே ச – தடுக்கப்பட்ட கார்யத்திலும் யதாமதி – என்னுடைய புத்திக்குத் தக்கபடியும் யதாபலம் – சக்திக்குத் தக்கபடியும், ஸ்ரீமக் ச்ரிய:பதியாகிய நாராயணனே ! த்வயி – உம் டத்தில், ஆஹிதபர: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தை யுடையவனாக, ராஜ குமாரவத்- ராஜ குமாரனைப்போலே, வர்த்தே- இருக்கிறேன்.)என்கிற வசநத்துக்கு அவய கர்த்த யங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாகவும் பரிஹரணீயங்களில் நிவ்ருத்தி ரூபமாகவும் பண்ண வேண்டும் வ்ருத்தியில் எனக்குள்ள ஜ்ஞாந பலங்களுக்கு அநுரூபமாக உபாய புத்தியையும் அதிலங்கநத்தில் பரம பல ப்ரதிபந்தக புத்தியையும் விட்டு ப்ரவர்த்தியா நின்றேன் என்கையிலே தாத்பர்யம்.

————-

(15) ப்ரபத்திக்குக் கோலி(ரி)ன பலத்திற்கு ஒன்றாலும் ப்ரதிபந்தகமில்லை ‘ என்றதுமித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமே தகர்ஹிதம் !!-யுத்த – 18 – 3 மித்ரபாவேக – ஸ்நேஹிதனா யிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால், ஸம்ப்ராப்தம் – நன்றாய் வந்து அடைந்தவனை, கதஞ்சந – ஒரு விதத்தினாலும், ந த்யஜேயம்- விடமாட்டேன். தஸ்ய- அவனுக்கு, தோஷ – தோஷம், யத்யபி ஸ்யாத் – இருந்தாலும் இருக்கட்டும், ஏதத் – இது (தோஷமிருப்பவனையும் காப்பாற்றுவது
என்பது), ஸதாம் – பெரியோர்களுக்கு, அகர்ஹிதம் – நிந்திக்கத்தகாதது (ஸ்தோத்ரம் பண்ணத்தக்கது என்றபடி)(கெளந்தேய ப்ரதிஜா ஹி ந மே பக்த: ப்ரணம்யதி-கீதை – 9-31 கெளந்தேய – ஓ! அர்ஜுந, மே – என்னுடைய, பக்த:- பக்தன், ந ப்ரணச்யதி – நாசமடைகிறதில்லை என்கிற விஷயத்தில், ப்ரதிஜா ஹி – நீ ப்ரதிஜ்ஞை செய்.)(ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் பரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: 11-கீதை 18 – 66 ஸர்வதர்ம ந்- எல்லாத் தர்மங்களையும், பரித்
யஜ்ய – விட்டுவிட்டு, ( அங்கமாக அநுஷ்ட்டிக்காமல் என்றபடி), மாமேகம் – என்னை ஒருவனையே, சரணம் – சரணமாக, வரஐ-அடை,அஹம்-நான், த்வாம் – உன்னை, ஸர்வபாபேப்ய: – எல்லாப் பாபங்களிலிருந்தும் மோக்ஷயிஷ்யாமி – விடுவிக்கிறேன், மா சுச: – நீ துக்கிக்காதே,)(மாமேகமேவ ரணமாத்மா நம் ஸர்வதேஹிநாம் | யாஹி ஸர்வாத்ம பாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம் || –ஸர்வதேஹிநாம் – எல்லா ப்ராணிகளுக்கும், ஆத்மாநம்-ஆத்மாவாகிய, மாம்- என்னை,ஏகம்-ஒருவனையே,ஸர்வாத்மபாவேந்
எல்லாவற்றிற்கும் இவன் அந்தராத்மா என்கிற புத்தியினால், சரணம்யாஹி – சரணமாக அடை, அகுதோ பயம் – ஒரு ப்ராணியிடத்திலிருந்தும் பயமில்லாமையை, யாஸ்யஸி – அடையப்போகிறாய்.) என்கிறபடியே சரண்யாபிப்ராய விசேஷத்தாலும்,)

(தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப ஸ்ருதம் -அஹிர்புத்ந்யஸம்ஹிதை- 37 – 36 தேஷாம் – அந்த, தபஸாம்-தபஸ்ஸுக்களுக்குள், ந்யாஸம் – சரணாகதி, அதிரிக்கம் – மேற்பட்ட
தான,தப :- தபஸ்ஸாக, ச்ருதம் – சருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)என்கிற ப்ரபாவாதி யத்தாலும்,-(நேஹாபிக்ரம நாலோஸ்தி ப்ரத்யவாயோ நவித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் | -கீதை – 2 – 40 இஹ – இந்தநிவ்ருத்தி தர்மமாக அனுஷ்ட்டிக்கப்படுமதில், அபிக்ரம நாச ள் – ஆரம்பிக்கப்பட்டதற்கு நாசம், நாஸ்தி-
இல்லை, (நடுவில் விட்டுப்போனாலும்), ப்ரத்யவாய : – தோ ஷம், நவித்யதே காணப்படவில்லை, – அஸ்ய- இந்த. தர்மஸ்ய – நிவ்ருத்திதர்மத் தினுடைய, ஸ்வல்பமபி, – கொஞ்சமும், மஹதோபயாத் – பெரிய பயத்திலிருந்து, த்ராயதே – காப்பாற்றுகிறது.) என்கிற நிவ்ருத்திதர்மாந்தரத்தில் சொன்ன நிஷ்கர்ஷம் நிஷ்காமனுடைய ப்ரபத்தியில் கைமுதிக நயாய ஸித்தமாகையாலும்,)(யாசநாத் நயதி தருவம்-யாசநாத் -(இதர பலன்களை யாசிப்பதினால்,த்ருவம் -நிச்சயமாக, நச்யதி -நாசமடைகிறான்.)(உபாயாபாய ஸம்யோகே நிஷ்ட்டயா ஹீயதேநயா-உபாயாபாய ஸம்யோகே – காம்யகர்மங்களுடையவும் நிஷித்த கர்மங்களினுடையவும் ஸம்பந்தம் ஏற்பட்டால், அநயா – இந்த, நிஷ்ட்டயா நிஷ்ட்டையினால், ஹீயந்த – குறைந்துவிடுகிறான்.)என்றது(ஏஷா ஸா வைதிகீ நிஷட்டாஹி உபாயாபாய மத்யமா-ஏஷா – இது, ஸா – அப்படிப்பட்ட, வைதிகீ- வேதத்தில் சொல்லப்பட்ட, உபாயாபாய மத்யமா – உபாயம் அபாயம் இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கிற, நிஷ்ட்டா – நிலைமை.)என்கிறபடியே உபாயாபாய த்யாக விரிஷ்ட மத்யம வருத்தியினுடைய விரேஷண வைகல்ய மாத்ர பரமாகையாலும்,

(ராக்ஷஸாநாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே யதா விகளிதா ஸத்ய: த்வமோகாப்யஸ்த்ரபந்தநா | ததா பும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத்
தமாத் விஸ்ரீம்பயுகதாநாம் முக்திம் தாஸ்யதிஸாசிராத் ;-ஸநத்குமார ஸம்ஹிதை
ஆஞ் நேயஸ்ய பந்தநே – ( ப்ரஹ் மாஸ்த்ரத்தினால்) ஹனுமாரைக்கட்டுவதில், ராக்ஷஸாநாம் – ரா ஸர் களினுடைய அவிஸ்ரம்பாத் – நம்பிக்கை யில்லாமையினால், அமோ காபி – வீண் போகாததாய் இருந்தபோதிலும், அஸ்த்ரபந்தநா-அஸ்த் ரத்தின் கட்டு, யதா – எப்படி, ஸத்ய: – அப்பொழுதே, விகளிதா – நழு விப்போய் விட்டதோ, ததா – அப்படியே, பும்ஸாம் – மனிதர்களுடைய, அவிஸ்ரம்பாத் – நம்பிக்கையில்லாமையினால், ப்ரபத்தி: – ப்ரபத்தியா
னது, ப்ரச்யுதா – நழுவினதாக, பவேத் – ஆகும், தஸ்மாத் – ஆகையி னால், விஸ்ரம்பயுக்தாநாம் – நம்பிக்கையுடையவர்களுக்கு,ஸா – அந்த, ப்ரபத்தி, அசிராத் – சீக்ரத்திலேயே, முக்திம் – மோஷத்தை,தாஸ்யதி- கொடுக்கப்போகிறது.) என்றது ப்ரபத்த்ய ஷ்ட்டாங் காலத்தில் விஸ்வாஸ ரூபாங்க வைகல்ய பரிஹார பரமாகையாலும்,

(யஜ்ஞோ அந்ருதேந க்ஷரதி தப: ‘க்ஷரதி விஸ்மயாத் ஆயு : விப்ராவமாநேந தாநம் க்ஷரதி கீர்த்தநாத் |-மனுஸ்ம்ருதி – 4 – 237 யஜ்ஞ: – யாகம், அந்ருதேந – பொய் சொல்லுவதினால், ரதி – நாசம் அடைகிறது, தப: – தபஸ்ஸு, விஸ் மயாத் – கர்வத்தினால், க்ஷரதி,ஆயு: – ஆயுஸ், விப்ராவமாநேந-ப்ராஹ்மணர்களை அவமதிப்பதினால், க்ஷரதி, தா நம் – தாநம் செய்வது, கீர்த் தநாத்- தானே சொல்லிக்கொள்ளுவதினால், க்ஷரதி-இத்யாதிகளில் போலே மற்றும் ப்ரபத்திக்கு விரேஷித்து ப்ரதிபந்தகாதிகளைச் சொல்லுவதொரு விபேஸஷ வசநமில்லா
மையாலும், லோகவேதங்களில் ஓர் இடத்திலும் ஸமர்த்த காருணிக விஷய ரணாகதிக்குப் பலஹாநி காணுணாமையாலும், அபவாத பீதரான ஸ்ரீ பரதாழ்வான்-சேஷ்யே புரஸ்தாத் பலாலாயா-அயோ – 111-14 சாலாயா (ஆச்ரமத்தின் ) பர்ணசாலையின்,vபுரஸ்தாத் – முன் பாகத்தில், சேஷ்யே- படுத்துக்கொள்ளபோகிறேன்.-(ரஸா யாசதஸ்தஸ்ய வசநம் நகருதம் மயா–யுத்- 124-19 சிரஸா – தலையினால்(வணங்கி)யாசத – ப்ரார்த்தித்த, தஸ்ய – அந்தப் பரதனுடைய, வசநம் – வார்த்தை,மயா -என்னால், ந க்ருதம் செய்யப்படவில்லை.)இத்யாதி மாத்ரத்தைக் கொண்டு ப்ரபத்தி பண்ணினார் என்று சொல்லுமதற்கு யதாபிப்ராயம் யதாகாலம் அபிமதஸித்தி யுண்டாகையாலும்,-(தாவதார்த்திஸ் ததா வாஞ்ச்சா தாவந்மோஹஸ் ததா ஸு கம் |யாவந்ந யாதி ரணம் த்வாமபே ஷாகநாயநம்
விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப்பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாசமடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதிய
ஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் – அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.-என்று பகவத் ப்ரபந்நனுக்கு அபிமதபலம் அப்போதே ஸித்திக்கும்படி நிற்கையாலும், ஸர்வ க்தியாய்ப் பரம காருணிகனான ஸர்வே வரனைப் பற்றி ப்ரபத்தி பண்ணுகிறவன் யாதொரு காலத்திலே யாதொரு பலம் வரவேண்டுமென்று கோலி(K)னான், அந்தக் காலத்திலே அந்தப் பலம் அவனுக்கு வருகை நியதம்.நடுப்புகுந்த நிஷித்த காம்யங்களும் அதுககு பரதிபந்தகங்களன்றிக்கே அதிகாராநுகுண ப்ராயசித்தாதிகளதீர்ந்து விடும் என்றபடி.

———-

(16) ‘புத்திபூர்வ அபசாரங்கள் புகுந்தாலும் ப்ராயசித்த விசேஷம் அதிகாரி விசேஷ நியதம் ‘ என்றது-சரீரம் பலமாயம் ச வய: காலம் ச கர்மச ம் ஸமீக்ஷ்ய தர்மவித் புத்த்யா ப்ராயசித்தா நிர்த்திலேத்-சரீரம் – தேஹத்தையும், பலம் – பலத்தையும், ஆயம்ச- வரும் படியையும், வய:- வயதையும், காலம்ச – காலத்தையும், கர்மச – (ப்ரா யச்சித்தத்திற்குக் காரணமாக ஏற்பட்ட) கர்மத்தையும், புத்த்யா-தன்னுடைய புத்தியினால், ஸமீ ய – யோசித்து, தர்மவித் – தர்மத்தை அறிந்தவன், ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களை, நிர்த்திசேத் விதிக்கவேண்டும்.)அபி சேத்பாதகம் கிஞ்சித் யோகீ குர்யாத் ப்ரமாதத: யோகமேவஹி குர்வீத நாந்யம் யத்நம் ஸமாசரேத்-யோ – யோகம் செய்பவன், ப்ரமாதத: – அஜாக்ரதை யினால், கிஞ்சித் – ஒரு, பாதகம் – பாபத்தை, குர்யாத்சேத் – செய் வானேயாகில், யோகமேவ – யோகத்தையே, குர்வீத – செய்யக் கட வன், (அதற்குப் பரிஹாரமாக), அந்யம் – வேறு, யத்நம் – ப்ரயத்தின த்தை,ந ஸமாசரேத் – செய்யக்கூடாது.)(உப்பாதகயுக்தோபி மஹாபாதகவா பி 1 யாமிந்யா: பாதமேகம் து ப்ரஹ்மத்யாநம் ஸமாசரேத்-விஷ்ணு தர்மம்- 66-72. உ பாதக யுக்தோபி – உபபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், மஹாபாதகவாநபி-மஹாபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், யாமிந்யா:-ராத்திரியினுடைய,ஏகம் – ஒரு பாதம் – கால் பாகத்தில், ப்ரஹ்மத்யா நம் – பசுவானுடைய த்யானத்தை, ஸமாசரேத் – செய்யவேண்டும்,

(அத பாதகபீதஸ் த்வம் ஸர்வபாவோ பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரோ பவ-அத – அப்படிக்கில்லா விடில், பாரத – ஓ ! யுதிஷ்டிரனே, பாதகபீத: – பாபங்களில் இருந்து பயந்தவனாகிய, த்வம் – நீ, ஸர்வபாவேந – எல்லாவித அபிப்ராயத்தினாலும், விமுக்தாந்ய ஸமாரம்ப : – வேறு ப்ரயத்தினங்களை விட்டு விட்டு,நாராயணபர:- நாராயணனை ஆச்ரயித்தவனாக,பவ – ஆகக்கடவாய்.)(மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண: 1
கேசவம் வைத்யமாஸாத்ய துர்யாதிரிவ நச்யதி ||
-பாபஸ்யகர்மண: – பாபகர்மங்
களின், ராசி – கும்பல், மேருமந்தர மாத்ரோபி – மேரு பர்வதம், மந்தபர்வதம் இவைகளின் அளவாக இருந்தபோதிலும், கேசவம் -பகவானாகிய,வைத்யம் ஆஸ த்ய – வைத்யனை அ டைர்து (வைத்யனை அடைந்த )துர்வ்யாதிரிவ – கெட்டவ்யாதியைப் போல, நச்யதி – நசித்து விடுகிறது.)நாம்நஸ்தே யாவதீ லக்தி: பாபநிர்ஹரணேஹரே | ஸ்வபசோபி நர: கர்த்தும் மஸ்தாவந் ந கில்பிஷம்II-ரே – பகவானே ! தே – உம்முடைய, நாம்ந்: – திருநாமத்திற்கு, பாப நிர்ஹரணே – பாபத்தைப் போக்கடிப்பதில், யாவதீசக்தி:எவ்வளவு சக்தி, அஸ்தி – இருக்கிறதோ, தாவத் – அவ்வளவு, கில்பிஷம் – பாபத்தை, ச்வபச :- சண்டாளனாகிய, நர: அபி – மனிதனும்,கர்த்தும் – செய்வதற்கு, ந ம :- சக்தியுடையவனல்லன்.)அவ ேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாங்விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரஸ்தை: ம்ருகைரிவ|1-விஷ்ணு புராணம் 6-8-19. யந்நாம்நி – எந்தப் பகவானுடைய திருநாமம், அவசேநாபி – எண்ணமில்லாமலே, கீர்த்திதே -சொல்லப் பட்டிருக்கு மளவில், புமாந் – மனிதன், ஸத்ய :- அப்பொழுதே,ஸிஹ்மத்ரஸ்தை: – ஸிஹ்மத்தினிடத்தில் இருந்து பயந்திருக்கிற, ம்ருகைரிவ – மருகங்களினாலே போல, ஸர்வபாதகை:- எல்லாப்பாபங்களினாலும் விழுச்யதே – விடப்படுகிறான்.)

(அயம்ஹி க்ருத நிர்வேபோ ஜந்மகோட்யம்ஹஸாமபி 1யத் வ்யாஜஹார விவபோ நாம ஸ்வஸ்த்யயநம் ஹரே:1-அயம் – இவன், ஐந்மகோட்யம்ஹஸாமபி-கோடி ஜன்மங்களில் செய்த பாபங்களுக்கும், க்ருத நிர்வேச: – ப்ராயச்சித்தம் செய்தவன், யத் – எந்தக் காரணத்தினால், விவச: – பரவசனாய், ஸ்வஸ்த்யயநம் – மங்களத்தைக் கொடுக்கக் கூடிய, ஹரே:- பகவானுடைய,நாம – திரு நாமத்தை,வயாஜஹார – சொன்னானோ.)(ப்ராயசித்தாந்யபேஷாணி தப: கர்மாத்மகாநி வை யாநி தேஷாம சேஷானாம் க்ருஷ்ணா நுஸ்மரணம் பரம் | 1-விஷ்ணு புராணம்- 5-6-39,40. அசேஷாணி – எல்லா, த :கர்மாத்மகாநி – தபஸ் , யாகம், முதலிய கர்மங்களாக இருக்கிற,யாநி -எந்த, ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களோ, அசேஷாணாம் தேஷாம் – அவைகள் எல்லாவற்றிற்கும், க்ருஷ்ணாநுஸ்மரணம்- க்ருஷ்ணனை நினைப்பது, பரம் – உயர்ந்தது. பாபே – பாபமானது க்ருதே – செய்யப்பட்டிருக்கும்பொழுது, யஸ்ய – எந்த, பும்ஸ: – மனிதனுக்கு,
அனுதாப : – அனுதாபமானது. ப்ரஜாயதே – உண்டாகிறதோ, தஸ்யஅவனுக்கு, ஏகம் – ஒன்றாகிய, ஹரிஸம்ஸ்மரணம் – பகவானை நினைப்பதே, பரம்- உயர்ந்தப்ராயச்சித்தம்.)

அதிபாப ப்ரஸக்தோபி த்யாயர் நிமிஷம் அச்யுதம் பூயஸ்தபஸ்வீ பவதி பங்க்தி பாவநபாவந:/!-தி பாப ப்ரஸக்தோபி – அதிகமான பாபத்துடன், கூடினவனாயிருந்த போதிலும், நிமிஷம் – ஒரு நிமிஷம் அச்யுதம் – பகவானை,த்யாயர் – த்யாநம் செய்கிறவன், பூய – அதிகமாக, தபஸ்வீ ரிஷியாகவும்,பங்க்திபாவந பாவந : – பங்க்திபைப்பரிசுத்தம் செய்யக்கூடியவர்களையும் பரிசுத்தம்செய்யக்கூடியவனாய், பவதி – ஆகிறான்)(நாராயணம் ஜபேர் நித்யம் ப்ரணம்ய புருஷோத்தமம்ஸ்வபர் நாராயணம் தேவம் கச்சந் நாராயணம் ததா 1-(புஞ்ஜந் நாராயணம் விப்ர: திஷ்ட்டர் ஜாக்ரத்ஸநாதநம் |உந்மிஷந் நிமிஷந் வாபி நமோ நாராயணேதி வை | )(போஜ்யம் பேயம் ச லேஹ்யம் ச நமோ நாராயணேதிய : 1அபிமந்த்ர்ய ஸ்ப்ரு ந் புங்க்தே ஸ யாதி பரமாம் கதிம் |ஸர்வபாப விநிர்முக்த: ப்ராப்நோதி பரமாம் கதிம்- நித்யம்- தினம்தோறும்,புருஷோத்தம -புருஷோத்தமனாகிய நாராயணம் – நாராயணனை, ப்ரணம்ய – ஸே வித்துவிட்டு, ஜபேத்-ஜபிக்க வேண்டும், விப்ர:- ப்ராஹ்மணன், ஸ்வபர்- தூங்கும்பொழுதும், தேவம்-தேவனாகிய, நாராயணம் – நாராயணனை,ததா – அப்படியே, கச்சந்- நடந்துபோய்க் கொண்டிருக்கும் பொழுதும், நாராயணம்- நாராயணனை, புஞ்ஜந் – சாப்பிடும்பொழுதும், நாராயணம் – நாராயணனை,திஷ்ட்டக் – நின்று கொண்டிருக்கும் பொழுதும், ஜாக்ரத் விழித்துக்
கொண்டிருக்கும் பொழுதும், உங்மிஷந்- கண்களைத் திறந்துகொண்டிருக்கும் பொழுதும், நிமிஷந்வாபி-மூடிக்கொண்டிருக்கும்பொழுதும்,-நமோநாராயணேதி – நமோ நாராயணா (என்ற அஸந்தாநம்செய்யவேண்டும்),போஜ்யம் – சாப்பிடக் கூடிய வஸ்துவையும், பேயம்சா – பருகக்கூடிய வஸ்துவையும், லே யம்ச – நக்கி சாப்பிடக்கூடியவைகளையும்,
ய: – எவன், நமோ நாராயணேதி – நமோ நாராயணா என்று, அபிமந்த்ர்ய – மந்திரத்தைச் சொல்லி, ஸ்ப்ருசந்- தொட்டுவிட்டு, புங்க்ே சாப்பிடுகிறானோ,ஸ : – அவன், பரமாகதிம் – உயர்ந்த கதியை, யாதி -அடைகிறான், ஸர்வபாப விநிர்முக்த: – எல்லாப் பாபங்களிலிருந்தும்
விடுபட்டவனாய், பரமாம் கதிம் – உயர்ந்த கதியை, யாதி – அடைகிறான். )இத்யாதிகளில் படியே ஏக நிமித்தம் தனக்கே வித்வத் அவிதவத் வர்ண ஆச்ரம வயோவஸ்த்தாதி வைஷம்யத்தாலே ப்ராயஸ்சித்தம் நாநா ப்ரகாரமாய்ப் போருகிறபடியே ப்ரபங்கனைப்பற்ற

(அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயசித்தம்ஸமாசரேத்-ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத்புந: ஸ்ரணம் வ்ரஜேத்1-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிறஎந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்றபடிக்கு விசேஷ வசநமுண்டாகையாலும்,

(யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயே வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே நகல்சிந்நாபராத்யதி 1 -கிஸ்கி-30-11. விச்வாஸாத் – நம்பிக்கையினா லாவது, ப்ரணயேந வா-ப்ரீ தியினாலாவது, ப்ரேஷ்யஸ்ய – தாஸனாகிய, மே – என்னுடைய, அதிக்ராந்தம் – மீறி நடந்தது தேவரீர் திருவுள்ளத் திற்கு கிஞ்சித்யதி-ஏதாவது ஒன்று இருந்தால், (அது), மிதவ்யம் – பொறுத்துக் கொள்ளத்தக்கது, கச்சித் – ஒருவனும், நாபராத்யதிஅபராதம் செய்வதில்லை என்பது, ந – இல்லை.) இத்யாதிகளிற் சொன்ன ந்யாயத்தாலும், இப்படிக்கு ஸத் ஸம்ப்ர தாயா நுஷ்ட்டாநம் உண்டாகையாலும், பரமாத்ம நிஷ்ட்டனுக்கு அக்ருத்ய கரண க்ருத்யாகரணங்களால் பாபம் பிறவாது என்கிற வாக்யமும் ஸ்துதிபரம், உத்தராக அஸ்லேஷ வசநமும் ப்ரா மாதிக விஷயமாக பாஷ்யாதிகளிலே ஸ்த்தாபிக்கையாலும்

(அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸபூர்வகம் 1 ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : ரணாகதி: -பரதமுனி லக்ஷண வாக்யம். ஸ்வாபீஷ்டே – தன்னுடைய இஷ்ட பலம், அநந்ய ஸாத்யே – வேறு ஒன்றினாலும் ஸாதிக்கத்தகாத தாக இருக்கும் பக்ஷத்தில், மஹாவிச்வாஸ பூர்வகம் – மஹா விச்வா ஸத்தை முன்னிட்டு, ததேகோபாயதா யாச்நா – அந்தப் பகவான் ஒரு வனே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பது, ப்ரபத்தி, சரணாகதி: – ப்ரபத்தி என்றும், சரணாகதி என்றும் சொல்லப்படுகிறது.)இத்யாதி ப்ரபத்தி லக்ஷண வாக்யா நுகுணமாகப் புத்தி பூர்வாபசாரங்கள் புகுந்ததாகிலும் அவற்றுக்கு ப்ரதிபதோக்த ப்ராயஸ்சித்த யோக்யதையில்லாதபோதும் ப்ரபந்நனுக்கும்,

(யத்யேநகாம காமே ந ஸாத்யம் ஸாதநாந்தரை: 1முமுக்ஷணா யத்ஸாங்க்க்யே யோகேந நச பக்தித: ||| ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: 1தேந் தேநாப்யதே தத்தந் ந்யாஸேநைவமஹாமுநே !)(பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்த.): 1-அஹிர்புத் ய ஸம்ஹிதை – 37-25. காம காமே – காம்யபலத்தை ஆசைப்படுகிற, யேந – எந்தப் புருஷனால், யத்-எந்தக் காம்யபலம், ஸாதநாந்தரை: – இதர உபாயங்களினால், நஸாத்யம் – ஸாதிக்கமுடியாததோ, மு க்ஷ னா – மோக்ஷத்தில் ஆசையுடையவனாகியமனிதனால், யத: – எந்தப் பலனிலிருந்து, யதி:- யதியானவன், நாவ த்ததே- திரும்பிவருகிறதில்லையோ, (அப்படிப்பட்ட) யத் – எந்த, பரம்தாம – பரமபதம், ஸாங்க்யே- ஐஞாந யோகத்தினாலும், பக்தித
பக்தியோகத்தினாலும், ந ப்ராப்யதே – அடையப்படுகிறதில்லையோ-தே தேந -அந்தந்த மனிதனால், தத்தத்- அந்தந்தப் பலன், மஹாமுநே-ஓ! மஹர்ஷியே, ந்யர்ஸேநைவ – சரணாகதியினாலேயே, ஆப்யதே -அடையப்படுகிறது புருஷோத்தம புருஷச்ரேஷ்டனான,பரமாத்மாசபரமாத்மாவும், தேநைவ – அந்தச்சரணாகதியினாலேயே, ப்ராப்யதே-அடையப்படுகிறான்.) என்றும்,(ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதாஸநத்குமார ஸம்ஹிதை-ஹி எந்தக் காரணத்தினால், ஸா அந்தச் சரணாகதி,ஸர்வேஷாம் – எல்லா ஜனங்களுக்கும், ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வகாம பலப்ரதா – எல்லாக்காம்ய பலன்களையும் கொடுக்கக் கூடியதோ.)என்றும் ப்ரதிபாதிதமான ப்ரபாவத்தையுடைத்தான ப்ரபத்தி தன்னையே மீண்டும் ப்ரயோகிக்கு மதுவே ஸ்வாதிகாராநு குணப்ராயசித்தமாகக் கடவது என்றபடி.

————–

(17) இப்படி ப்ராயசித்தத்திலே மூட்டுகிறதும் கடிந ப்ரக்ருதிகளுக்குக் கசை காட்டுவாரைப் போலே அவன் பண்ணுகிற சிக்ஷைகளும் எல்லாம் சரண்ய ப்ரஸாதபலம் ‘ என்றது-யம் ஹி ரக்ஷிதும் இச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம்-யம் – எவனை, ரக்ஷிதும் -காப்பாற்றுவதற்கு, இச்சந்தி (தேவதைகள் விரும்புகி ர்களோ), தம் – அவனை, புத்த்யா – நல்ல புத்தியோடு, ஸம்யோஜயந்தி – சேர்க்கிறார்கள், அவனுக்கு நல்லபுத்தி யைக்கொடுக்கிறார்கள் என்றபடி.)-என்கிற ஸாமான்ய ந்யாயத்தாலும்,

(ரக்ஷதே பகவார்விஷ்ணு. பக்தாநாத்மா சரீரவத் |1-பகவார் – பகவானாகிய விஷ்ணு: – விஷ்ணு,பக்தாந் தன்னிடத்தில் பக்தியுடையவர்களை, ஆத்மசரீரவத் – தன்னுடைய சரீரத்தைப்போல,ரக்ஷதே – காப்பாற்றுகிறான்.)என்கிற விஸேஷ வசநத்தாலும் ஆர்விஷயத்தில் ஈய்வரன்செய்யுமவையெல்லாம் ப்ரஸாத பலமாக வேண்டுகையாலே ஹிதைஷிகளான பித்ராதிகளைப்போலே அநுதாபாதிகளை விளைப்பித்து,
பாஸ்த்ர முகத்தாலே ப்ராயசித்த விஸேஷத்தை அறிவித்து, ப்ராயஸ்சித்தத்திலே மூட்டுகிறதும், விநீதரல்லாத புத்ராதிகளைக் கசாதிகளாலே பயம் பிறப்பிக்குமாபோலே உபக்லோங்களை விளைவித்துபரதியை உண்டாக்குமதுவும் ஸர்வபூத நிஸர்க்க
ஸுஹ்ருத்தான ஸர்வலோக பரண்யனுடைய இரக்கமடியாக வருகிறது என்று க்ருதஜ்ஞராக ப்ராப்தம் என்றபடி.

———-

(18) இங்கு இருந்த காலம் தர்மா நுபந்தியான போகத்திலும் போக புத்தியாலே ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தன் அதிகாரா நுரூபமான கைங்கர்யாமருத ரஸத்திற்குத் தண்ணீர்த்
துரும்பு எ
ன்றது-(ராகாத்யபேதம் ஹ்ருதயம் வாகதுஷ்டார ருதா திநா ஹிம்ஸாதிரஹித: காய கேசவாராதநம் த்ரயம் 11-ராகாத்யபேதம் – காமம் முதலியவைகள் இல்லாத, ஹ்ருதயம் – மனதும், அந்ருதாதிநா – பொய் முதலியவைகளினால், அதுடா – தோஷத்தை யடையாத, வாக்-வாயும், ஹிம்ஸாதிரஹித:- அயலாருக்கு ஹிம்ஸை முதலியது செய்யாத, காய:- சரீரமும்,த்ரயம் – இந்த மூன்றும், கேசவாராதநம் – பகவானுடைய ப்ரீதிக்குக் காரணமானவைகள்)

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார கருஹாதிஷ-கீதை – 13-9. அஸக்தி – (ஆத்மாவைத் தவிர வேறு வஸ்துக்களில்) பற்று இல்லாமையும், புத்ரதார க்ருஹாதிஷ – பிள்ளை, பத்நீ வீடு முதலியவைகளில், அநபிஷ்வங்க: – அதிகப் பற்றில்லாமையும்.)இத்யாதிகளிற்படியே ஆத்மகுணயுக்தனாய் இருந்தா னொருவனாகிலும் க்ருஹஸ்த்தாவஸ்த்தையிலே தர்மாவிருத்த போகங்கள் ஸாஸ்த்ர பலத்தால் வரவேண்டி(யதாதலால்) அத்தால் முமுஷுவான இவனுக்கு,-(சரீரம் வ்ரணவத் பஸ்யத் அந்நம் து வரணலேப நம் வ்ர ணஸேசநவத் பாநம் வஸ்த்ரம்து வ்ரணபட்டவத் -சரீரம் – தேஹத்தை வரணவத் – புண்ணைப் போலவும், அந்நம் – ஆஹாரத்தை, ரணலேபநம்-புண்ணுக்குப் பூசும் ஒளஷதம் போலவும்,பாநம் தண்ணீர்முதலியவற்றைக்குடிப்பதை வரண ஸேசநவத்-புண்ணை நனைப்பது போலவும் வஸ்த்ரம் – துணியை, வ்ரணபட்டவத் -புண்ணுக்குக் கட்டுகிற கட்டைப் போலவும், பச்யேத் – பார்க்கவேண்டும் (எண்ணவேண்டும்).)இத்யாதிகளிற்படியே வைராக்ய ஜ்ஞாந பக்த்யாதிகளுக்கு அநுகூலமான ஒளஷதாதி கரமத்தாலே புத்திபண்ண ப்ராப்தமாயிருக்க, அநாதி துர்வாஸநா பரிபாக வியே ஷத்தாலே ப்ரயோஜ நாந்தர பரனுடைய விலக்கடி இவனுடைய புத்தியிலே வருமதாகில் இத்தால் வருவதொரு ப்ரதாந பல ப்ரதிபந்தம் இல்லையேயாகிலும் இபபோது இங்கு இருந்து அநுபவிக்கிற கைங்கர்ய ரஸத்துக்கு ஸகோசாதி ஹேதுவாகையாலே,

(யந் முஹுர்த்தம் க்ஷணம் வாபி வாஸுதேவோ ந சிந்தயதேஸாஹாநி: தந்மஹச்சித்ரம் ஸாப்ராந்தி: ஸா ச விகரியா |1-பாஞ்ச முஹூ த்தம் – ஒரு முஹூர்த்த காலமாவது. ணம்
வாபி – ஒரு க்ஷணகாலமாவது, வாஸுதேவ: – பகவான், நசிந்த்யதே சிந்திக்கப் படவில்லை என்பது, யத் – எதுவோ, ஸா – அதுவே, ஹாநி :- நஷ்டம், தத் – அது, மஹத்- பெரியதான, சித்ரம் – தோஷம்,-காமம் குரோதம் முதலியவைகள் புகுவதற்கு வழி என்றபடி, ஸா -அது , ப்ராந்தி: – ப்ரமம், ஸாச – அதுவே, விக்ரியா – ஆத்மாவிற்கு மாறுதல்.-ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல காட்டிப் படுப்பாயோ-திருவாய்— 6-9-9-என்று பீதனாக ப்ராப்தம் என்றபடி.-ப்ருதிவீம் ரத்நஸம்பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி-தஸ்யாப்யந்ய மநஸ்கஸ்ய ஸுலபோ ந ஜநார்த்தந:-ய:- எவன், ரத்நஸம்பூாணாம் – ரத்நங்கள் நிறைந்த, ப்ருதிவீம் பூமியை. க்ருஷ்ணாய – ஸ்ரீ க்ருஷ்ணன் பொருட்டு, ப்ரயச்சதி கொடுக்கிறானோ, தஸ்யாபி – அப்படிப் பட்டவனாயிருந்த போதிலும். அந்யமநஸ்கஸ்ய – வேறு ப்ரயோஜநங்களில் ஆசையையுடைய மனித னுக்கு. ஜநார்த்த : – பகவான், ந ஸுல :அடையக் கூடியவனல்லன்-(பராங்முகாநாம் கோவிந்தே விஷயாக்ராந்த சேதஸாம் || தேஷாம் தத் பரமம் ப்ரஹ்மதூராத் தூரதரே ஸ்த்திதம்||-விஷ்ணு தர்மம்–99-13. கோவிந்தே – பகவானிடத்தில், பராங்முகாநாம-பக்தியிலலாதவாகளாயும், விஷயாக்ராந்த சேதஸாம் சபதாதி விஷயங்களினால் ஆக்ரமிக்கப்பட்டமனதை உடையவர்களாயும் இருக்கிற, தேஷாம் – அந்த மனிதர்களுக்கு, பரமம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமானது, தூராத்தூரதரே – வெகு தூரத்தில், ஸ்திதம் – இருக்கிறது.)இத்யாதிகளில் (அ)வர் ஜ நீய போகங்களன்றிக்கே மோக்ஷ ருசியை விலக்கும்படியான ப்ரயோஜநாந்தரங்களில் ப்ராவண்யத்தை யுடையார்க்கு ஸர்வேஸ்வரன துர்லபன் என்கிறது.

(அதோபாய ப்ரஸ தோபி புக்த்வா போகாந் அநாமயாங்1 அந்தே விரகதி மாஸாத்ய விதே வைஷ்ணவம் பதம் |-க்ஷ்மீதந்த்ரம்-17- 103 அத- அப்படிக் கில்லாமல், உபாயப்ரஸக்தோபி –
காம்ய கர்மங்களை அனுஷ்ட்டித்துக் கொண்டிருப்பவனும்,அநாமயாந் – ஒரு தொந்தரவும் இல்லாத, போகாந்- போகங்களை, புக்த்வா- அனுபவித்து விட்டு, அந்தே – கடைசியில், விரக்திம் – வைராக்யத்தை, ஆஸாத்ய – அடைந்து, வைஷ்ணவம்பதம் – மோக்ஷத்தை,
விசதே – அடைவிறான். )என்றது மோக்ஷருசியும் ஸ்வர்ககாதி ருசியும் நடப்பார்க்கு விளம்
பம் வரும் என்கிறது,-அப்ராப்தித: பரிஹர ஸ்வபரை: ஸ்வரக்ஷாம் 1) என்கிற நிபேரக்ஷையில் ஸ்லோகத்தையும் இங்கே அநுஸந்திப்பது.(நிக்ஷேபாக்ஷை, ஸ்வபரை: தன்னாலும் அயலாராலும் ஸ்வரக்ஷாம் – தன்னை ரக்ஷித்துக்கொள்ளுவதை, அப்ராப்தித: – ப்ராப்தி இல்லாமையினாலே, அதாவது கடமை யில்லாமையினாலே, பரிஹரந் – பரிஹரித்தவனாயும், (பகவானுடைய பாயோஜனத்திற்காகவே எல்லா வஸ்துக்களும் ஏற்பட்டிருக்கின்றன என்கிற ஜ்ஞாநத்தினால் தன்னுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது மற்றவர்களுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது ஏற்பட்டது என்கிற புத்தியைப் பரிஹரித்தவனாய்,-பகவானுடைய ப்ரீ தியைத் தவிரத் தனக்கு வேறு ஒரு ஸுகம் இல்லா
மையினால் ஒரு விதத் தோஷமும் இல்லாத ப்ரபந்நன் தன்னுடைய ஸுகங்கள் எல்லாவற்றையும் ஸ்வாமியான பகவானுடைய அனுபவத்திற்கு உள்ளடங்கிய வாகவே அனுபவிக்கிறான் என்று மேல்)

(19) · இப்படி நிஷித்த போக ப்ராவண்யம் கைங்கர்யா ம்ருத ரஸத்துக்கு விருத்த மாகையாலே விஷம் போலே தூர பரிஹரணீயம்-என்றது-ஸத்த்வ நிஷ்ட்டனாய் ஸ் வா மிக்கு அநபிமதத்தில் விமுகனாக ப்ராப்தனாயிருக்க ஸர்வருக்கும் ஸ்வப்நாத்ய வஸ்த்தைகளிலே
நிஷித்த ப்ரவ்ருத்திகள் வருமா போலவும், அவஹிதரான ருஷிகளும் கூட ஓர் அளவுகளிலே தேவாதிகளினாலே மோஹிதராய் அகப்படுமா போலவும் முமு வுக்கு நிஷித்தபோக ப்ராவண்யம் வருமாகில்-(அபாயா விரத: ஸர்வத் மாம் சைவ ரணம் கத: 1
தநூக்ருத்யாகிலம் பாபம் மாம் ப்ராப்நோதி நர: நை : 1 -லக்ஷ்மீதந்த்ரம்– 17-102
.சச்வத் – அடிக்கடி, அபாய விரத-நி த்த கார்யங்களில் இருந்து ஓய்வை அடையாதவனாயும், மாம்
சைவ – என்னையே, சரணம்கத: – சரணமாக அடைந்தவனாயும் இருக்கிற, நர: – மனிதன், அகிலம் – எல்லா, பாபம் – பாபத்தையும், தநூக்ருத்ய – கழித்து விட்டு, ச ை – மெள்ள (தாமதமாக) மாம் – என்னைப்ராநோதி – அடைகிறான்.) இத்யாதிகளிற்படியே இங்கு ப்ராயசித்தம் தண்ட விபேஷங்கள் வருமதுக்குமேலே அஸத் கல்பனான தனக்கு உஜ்ஜீவ
நமுமாய், போகமுமாகையாலே அம்ருத கல்பமான கைங்கர்யா நுபவத்திற்கு அநதிகாராதிகளைப் பண்ணுகையாலே,-(விஷஸ்ய விஷயாணாம் ச தூரம் அத்யந்தமந்தரம் |உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயா: ஸ்மரணாதபி 11–விஷஸ்ய – விஷயத்திற்கும், விஷயாணாம் ச – சப்தம் முதலிய விஷயங்களுக்கும், அத்யந்தம் தூரம் – அதிகத் தூரமான, அந்தரம் -வித்யாசம் இருக்கிறது, விஷம் – விஷமானது, உபபுக்தம் – சாப்பிடப்பட்டதாய்க் கொண்டு, ஹந்தி – கொல்லுகிறது, விஷயா: – விஷயங்கள், ஸ்மரணாதபி – நினைப்பது, மாத்திரத்தினாலும், கொல்லுகின்றவை)இத்யாதிகளை அநுஸந்தித் து ஸந்நிதி பரித்யாகம் பண்ண வொட்டாத பாபத்தில் அகப்படாதபடி நிபுணநிரூபணம் பண்ணி ஸர்ப்பாதிகள் இல்லாத தேலங்களிலே வர்த்திக்குமா போலே நிஷித்தபோக ஸம்பாவனை இல்லாத தேலங்களிலே வர்த்திக்கவும்,

(பாபம் ப்ரஜ்ஞாம் நாயதி க்ரியமாணம் புந புந: 1 நஷ்ட ப்ரஜ்ஞ: பாபமேவ புநராரபதே நர: 1 -பார – உத்யோக — 35-73. பாபம் – பாபமானது, புந: புரு:- அடிக்கடி, க்ரியமாணம் -செய்யப்பட்டதாய்க்கொண்டு, ப்ரஜ்ஞாம் – புத்தியை, நாசயதி -நாசம் செய்கிறது, நஷ்டப்ரஜ்:-இழந்த புத்தியை யுடைய, நர: – மனிதன், புந: – மறுபடியும்,பாபமேவ – பாபத்தையே,
ஆரபதே – செய்ய ஆரம்பிக்கிறான்.)இத்யா திகளிற் சொன்ன பாபாரம்பக பாபத்துக்கும் ப்ராயஸ்சித்தமாக ஏற்கவே ப்ரபத்திபண்ணவும் ப்ராப்தம் என்றபடி இப்படி வர்த்திக்குமவன்-அஹேரிவ கணாத்த: ஸந்மா நாத் மரணாதிவ | குணபாதிவ ய: ஸ்த்ரீப்ய; தம் தேவா ப்ராஹ்மணம் விது: |!-பாரதம்-சாந்தி – 251-13 கணாத் – கும்பலிலிருந்து, அறேரிவ – பாம்பினிடத்திலிருந்து போலவும், ஸமாநாத் – ப மாநத்தில்இருந்து, மரணாதிவ – மரணத்தினிடத்திலிருந்து போலவும். ஸ்த்ரீப்ய:-ஸ்த்ரீகளிடமிருந்து, குணபாதிவ – பிணத்தின் இடத்தில் இருந்து போலவும், ய: – எவன், பீத: – பயப்படுகிறானோ, தம் – அவனை, தேவா :- தேவதைகள், ப்ராஹ்மணம் – ப்ராஹ்மணனாக விது: -அறிகிர்கள்.). இத்யாதிகளிற்படியே தேவர்களுக்கும் பஹுமாக விஷயமாம்.

(பரரந்த்ரேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வபும்ஸகா: பரிவாதேஷு யே மூகா: தேதீவ தயிதா மம-விஷ்ணு தர்மம்-78-22.யே- எவர்கள், பரரந்த்ரேஷ – அயலாருடைய தோஷங்களில், ஜாத்யந்தா: – பிறவிக் குருடர்களோ, பரதாரேஷு – பிறருடைய பார்யைகள் விஷயத்தில், அபும்ஸகா: – ந ம்ஸகர்ளோ, பரிவாதேஷ – மற்றர்க்ளை நிந்திக்கும் விஷயத்தில், மூகா:- மைகளோ. தே – அவர்கள், மே – னெக்கு, அதீவமிகவும், தயிதா: – ப்ரியமானவர்கள்.-தந்மயத்வேந கோவிந்தே யே நரா: ந்யஸ்தசேதஸ: 1 விஷயத்யாகிநஸ்தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே !!-விஷ்ணு தர்மம்—99-15. யே – எந்த,நரா : – மனிதர்கள் கோவிந்தே- பகவானிடத்தில், தந்மயத்வேக – தந்மயமாய் இருப்பதினாலே (அவன் ஒருவனையே த்யானம் செய்து கொண்டிருப்பதினாலே)ந்யஸ்த சேதஸ: – ஸமர்ப்பிக்கப்பட்ட மனதையுடையவர்களாய், விஷ யத்யாகி : – சப்தாதி விஷயங்களை விட்டவர்களோ, தேஷாம் – அவர்களுக்கு, தத் – அந்தப் பரப்ரஹ்மம், அந்திகே – ஸமீபத் ல் இருப்ப தாக,விஜ்ஞேயம் – அறியத்தக்கது.)(க்ஷகேபிதே யத்விரஹோ திதுஸ்ஸஹ: -ஸ்தோ – 56. தே – உமக்கு, க்ஷணேபி – ஒரு க்ஷணப் பொழுதும், யத்விரஹ: – எவர்களுடைய பிரிவு. அதிதுஸ்ஸஹ: -மிகவும் பொறுக்கமுடியாததோ.)என்றபடி ஸர்வேஸ்வரனுக்கு நிரஸதிய ப்ரீதிஹேதுவாம்,

————-

(20) கைங்கர்யமாவது ஸ்வாமி உகந்த ஏவல்தொழில் செய்கையாகையாலே இது யதாயாஸ்த்ரம் பண்ணினால் உகப்பாம்-என்றது-நித்ய (ரும்)முக்தரும் பகவத் ப்ரீதிஹேதுக்களை நிரபேக்ஷ ஸர்வ விஷயஜ்ஞாநத்தாலே ஸாக்ஷாத்கரித்துக் கைங்கர்யம் பண்ணுமாபோலே யன்றிக்கே பத்த தசையில் கரணஸாபேக்ஷதை உண்
டாகையாலும், ப்ரத்யக்ஷாதிகளுக்கு நிலமல்லாத விஷயத்தில்-(பித்ரு தேவமநுஷ்யாணாம் வேதசக்ஷ : ஸநாதந: )பாகவதம் பித்ருதேவ மநுஷ்யாணாம்பித்-ருக்கள், தேவதைகள்’ மனிதர்கள் இவர்களுக்கு ஸநாத : – அநாதியான, வேத:- வேதமானது, சக்ஷ : -கண்.)மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி-ப்ரதீபமிவ – விளக்கைப்போல, மாநம் – சாஸ்திரத்தை,காரு
ணிக: – மிகுந்ததயை யுடைய பகவான்,ததாதி – கொடுக்கிறார்)இத்யாதிகளிற்படியே சாஸ்த்ர மொழியக் கண்ணும் கைவிளக்கும் இல்லாமையாலும்,(ய: சாஸ்த்ரவிதி முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: |ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் II)-கீதை 16 -23 ய :- எவன், சாஸ்த்ரவிதிம் – சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதியை, உத்ஸருஜ்ய – விட்டுவிட்டு, காம காரத:- தன் இஷ்டப்படி, வர்த்ததே – இருக்கிறானோ, ஸ: – அவன்,
ஸித்திம் – ஸித்திய்ை, நா அவாப்நோதி – அடைவதில்லை, ஸுகம் ஸுகத்தையும், ந – அடைவதில்லை, பராம்கதிம் – மோக்ஷத்தையும் நா – அடை வதில்லை.

(அ சாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம்| -கீதார்த்த ஸங்க்ரஹம் —21 அசாஸ்த்ரம் – சாஸ்த்ரத்தில்
விதிக்கப்படாதது, கருத்ஸ்நம் – எல்லாம ஆஸுரம் – அ ரஸ்வபாவமுடையவர்களுக்குப் பொருத்தமானது-என்றருளிச் செய்தது இங்குத்தை ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாந ந்யாயமாகையாலும்,-அறிவிலேனுக்கு அருளாய்‘-திருவாய்– 6-9- 8.-அறியாத பிள்ளைகளோம் ‘-திருப்பாவை — 28.-என்று நிற்க ப்ராப்தமான அவஸ்த்தையிலே ஸ்வாபிமதமாத்ரத்தாலே ஒன்றைக் கைங்கர்யம் என்று செய்தால் இது ஸ்வாமிக்கு அபிமதமாகையிலே நியமம் இல்லாமையாலும்,-லோகே ப்ரியதமாநி ஆத்மநச இஷ்டாநி பாஸ்த்ர அவிருத்தாநி-நித்யம்,லோகே – லோகத்தில், ப்ரியதமாநி – மிகவும் ப்ரியங்
களாயும், ஆத்ம : – தனக்கும், இஷ்டாநி – இஷ்டங்களாயும் -சாஸ்த்ர அவிருத்தாநி – சாஸ்த்ரத்திற்கு விரோத மில்லாததாகவும் இருக்கும் வஸ்துக்களைக் கொண்டு பகவானுக்கு ஆராதனம் செய்யவேண்டும்.)என்று நித்யத்திலே ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும்,-(ஸ்வயம் துருசிரே தேபே க்ரியதாம் இதி மாம் வத)என்கிற கட்டளையிலே-(கிம்கரோமி-ஆரண், – ஸ்வயம்து – தர்மே. ருசிரே – அழகான, தேசே- இடத்தில், க்ரியதாம் – செய், இதி – என்று, மாம்- என்னை,வத – சொல்லும,)என்று தாஸன் நிற்க.-இதம் குரு ‘ என்று ஸ்வாமி சொல்லச் செய்யுமது கைங்கர்யமாக வேண்டுகையாலும், செய்த வேள்வியனான ப்ரபந்நனுக்கும் .யாவச் சரீரபாதம் யதாதிகாரம் யதா சாஸ்த்ரம் நடந்தால், இதுவும்-(ப்ரஹர்ஷயிஷ்யாமி)என்கிற ப்ரதாந பல பர்யந்தமாம் என்றபடி..

—————-

(21) ‘பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அநுஷ்ட்டிக்க அரிதானபோது பரமபுருஷார்த்த காஷ்ட்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயதமம்‘ என்றது
ப்ரணவத்தில் க்ஷித ஸ்வரூபனாகையாலே சதுர்த்தியில் அபிப்ரேதமான பகவத் கைங்கர்யம் ஸ்வரூப ப்ராப்தமாய் நின்றது, ந மஸ்ஸிலே ஸுபபிக்ஷித ஸ்வரூபனாகையாலே பாகவத கைங்கர்யமும் இவனுக்கு ப்ராப்தமாயிருந்தது, இப்படியானால் இரண்டும் சேர அநுஷ்ட்டிக்க வரும்போது சேர அநுஷ்ட்டிக்கவும், இரண்டத்து ஒன்றைவிட வேண்டும் படியான ஆபத் தலையிலே,-தஸ்மாத் விஷ்ணுப்ரஸாதாய வைஷ்ணவாங் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந் ந ஸம் ய: I|-இதிஹாஸ ஸ முச்சயம -27-27. தஸ்மாத் – ஆகையினால் விஷ்ணுப்ரஸாதாய – பகவானுடைய அனுக்ரஹம் உண்டாவதற்காக,-வைஷ்ணவாங் – வைஷ்ணவர்களை, பரிதோஷயேத் – ஸந்தோஷப் படுத்த வேண்டும், தேநைவ – அதினாலேயே, ப்ரஸாதஸ – முக:-அநுக்ரஹத்தினால் ஸ முகராய், விஷ்ணு: – பகவான், ஸ்யாத்- ஆவார். நஸம்சய:- ஸந்தேஹமில்லை.

(மம மத்பக்தபக்தேஷ ப்ரீதிரப்யதிகா பவேத் 1 தஸ்மாத் மத்பக்தபக்தாஸ்ச பூஜ யா விஸேஷத: II-பார -ஆச்வ – 116- 23. மம – எனக்கு, மத்பக்தபக்தேஷ என்னுடைய பக்தர்களிடத்தில் ப்ரீதி செய் வர்களிடம், ப்ரீதி: – ப்ரீதியானது, அப்யதிகா – மிக அதிகமாக, பவேத் – உண்டாகும், தஸ்மாத் ஆகையினால், மத்பக்தபக்தா:ச- என்னுடைய பக்தர்களின் பக்தர்களும், விசேஷத: – விசேஷமாக, பூஜரீயா::- பூஜிக்கத்தக்கவர்கள்.-ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் 1 தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் I-பாத்மோ- 29 – 81 – ஸர்வேஷாம் – எல்லா, ஆரதநாநாம் ஆராதநங்களுக்கும், விஷ்ணோ: – விஷ்ணுவினுடைய, ஆராதநம், பரம் – ச்ரேஷ்டம், தஸ்மாத் – அந்த விஷ்ணுவினுடைய ஆராதத்தைக் காட்டிலும், பரம் – உயர்ந்ததான, தீயாராதநம் – பாகவதர்களுடைய ஆராதநம், பரதரம் – மிகவும் சிறந்ததாக, ரோக்தம் சொல்லப்பட்டது.-அநாத்ருதஸ்தம் கேஹீ புருஷம் நாபிநந்ததி 1ததாநர்ச்சித ஸத்பக்தம் பகவார் நாபிநந்ததி ||-சாண்டி- ஸ்ம்ருதி – 4-86. கே – க்ருஹஸ்தன், அநாத்ருத ஸுதம்-தன்னுடைய பிள்ளையை அநதரவு செய்த, புருஷம் – புருஷனைப் பற்றி, நாபிநந்ததி -(எப்படி) ஸந்தோஷிக்கிறதில்லையோ, ததா-அப்படியே, அநர்ச்சிதஸத்பக்தம் – தன்னுடைய பக்தனை ஆராதநம் செய்யாத புருஷனைப்பற்றி, பகவாந்- பகவான், நாபிநந்ததி – ஸந்தோவிக்கிற ல்லை.

ஸ்வாராதநம் விஹாயாபி ஸ்வபக்தாநர்ச்சயந்தி யே |தேப்ய: ப்ரஸந்நோபகவாந் ஸித்திமிஷ்டாம் ப்ரயச்சதி|-ஸ்வாராதநம் – தன்(பகவா)னுடைய ஆராதநத்தை, விஹா
யாபி – விட்டுவிட்டாவது, யே – எவர்கள், ஸ்வபக்தாங்-தன்னுடைய பக்தர்களை, அர்ச்சயந்தி- பூஜிக்கிறார்களோ, தேப்ய:- அவர்கள் விஷயத்தில், ப்ரஸந்த அநுக்ரஹத்தை யுடையவனாகிய, பகவாங், இஷ்டாம்- அவர்களுக்கு இஷ்டமான, ஸித்திம் ஸித்தியை, ப்ரயச்சதி- கொடுக்கிறார்.-இத்யாதி ப்ரமாண விலேஷங்களாலும்,
‘ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் ‘ -நான்.திருவந்தாதி-19-என்கிற ந்யாயம் ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாமாகையாலும், பாகவத கைங்கர்யம் தன்னிலே பகவத் கைங்கர்யத்தைக் கண்டு கருதார்த்தனாய் இருக்க ப்ராப்தம் என்றபடி.

————

(22) ‘ இவை இரண்டிலும் ப்ரதாநம் ஆசார்யகைங்கர்யம் ‘ என்றது-பகவான் பக்கலிலேபோல ஆசார்யன் பக்கலிலும் அநுவர்த்திப்பான் என்று அதிதேசித்தவளவன்றிக்கே-(குரோர் குருதரம் நாஸ்தி குரோரந்யம் ந பாவயேத் ]குரோர் வார்த்தாம் கதாம் சைவ குரோர் நாம ஸதா ஜபேத்!!-(குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: 1குருரேவ பராவித்யா குருரேவ பரம் தநம்| )(குருரேவ பர:காம: குருரேவ பராயணம்-குரோ:- ஆசார்யனைக் காட்டிலும், குருதரம்-பெரிய (உயர்ந்த)வஸ்து, நாஸ்தி – இல்லை.குரோ – ஆசார்யனைக் காட்டிலும், அந்யம்-வேறு ஒருவனை,நபாவயேத் – நினைக்கக் கூடாது, குரோ :- ஆசார்யனுடைய, வார்த்தாம் உபதேச ரூபமான வார்த்தைகளையும், கதாம்சைவ – (அவருடைய) சரித்திரத்தையும் குரோ:, நாம -திருநாமத்தையும், ஸதா-எப்பொழுதும், ஜபேத்- ஜபிக்க வேண்டும்,குருரேவஆசார்யனே, பரம்ரஹ்ம் – பரப்ரஹ்மம், குருரேவ, பரா கதி அடையவேண்டிய உயர்ந்த ப்ரயோஜனம், குருரேவ, பரா வித்யா – உயர்ந்த(மோஷோபயோகமான ) வித்யை, குருரேவ, பரம் – உயர்ந்த
தநம் – பொருள், குருரேவ, பர – உயர்ந்த,காம:- ஆசைப்படவேண் டிய புருஷார்த்தம், குருரேவ, பராயணம் – ஆச்ரயிக்கப்பட வேண்டிய வஸ்து.–இத்யாதிகளிலே ஆசார்ய கைங்கர்ய ப்ராதாந்யம் ப்ரமிதமாகையாலும், பகவத் பாகவத கைங்கர்யங்களும் ஆசார்யா நுஜ்ஞை
யால் நடக்கவேண்டுகையாலே ஆசார்யகைங்காயத்தை நிரூபித்துப் பார்த்தால் இது பகவதாஜ்ஞா ஸித்தமாகையாலே பகவத் கைங்கர்யமும் ஆசார்யனுடைய பாகவதத்வ ஸாமாந்யத்தாலே இதுதானே பாகவத கைங்கர்யமுமாய் நிற்கையாலே

(சக்ஷ ர்கம் யம் குரும் த்யக்த்வா சாஸ்த்ரகம்யம் து ய: ஸ்மரேத் ஹஸ்தஸ்த்தமுதகம் த்யக்த்வா கநஸ்தமபிவாஞ்ச்சதி ||-சக்ஷ ர்கம்யம் – கண்ணுக்கு விஷயமாயுள்ள, குரும்-
ஆசார்யனை, த்யக்த்வா – விட்டுவிட்டு, சாஸ்த்ரகம்யம் – சாஸ்த்ரத்தினால் அறியப் படுகிற பரமாத்மாவை, ய: – எவன், ஸ்மரேத் – நினைப்பானோ, (அவன்) ஹஸ்தஸ்த்தம்- கையில் இருக்கிற, உதகம்-ஜலத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, கநஸ்த்தம் – மேகத்தில் இருக்
கும் ஒலத்தை, அபிவஞ்சதி – ஆசைப்படுகிறான். )-ஸுலபம் து குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|லப்தம் த்யக்த்வா தநம் மூட: குப்தமந்வேதே க்ஷிதெள II-ஸூலபம் – ஸலபனாகிய, குரும் – ஆசார்யனை, த்யக்த்வா- விட்டுவிட்டு, ய: – எவன், துர்பைம் – துர்லபனான பகவானை, உமாஸதே – உபாஸிக்கிறானோ, அந்த மூடன், லப்தம் – கையில் கிடைத்த, தநம் – பணத்தை த்யக்த்வா – விட்டு விட்டு தௌ) இத்யாதிகளிற்படியே ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத் கைங்கர்யாதிகளிலே இழியக் கடவனல்லன்.

கண்ணி நுண் சிறுத்தாம்பின்படியே ஆசார்ய கைங்கர்ய ப்ரதாநனாய் நின்று-திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திருவுருக்காண்பன் நான்
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே ‘-
இத்யாதிகளிற் படியே ஆசார்யாபிமதமென்று யதாகாலம் பகவத் பாகவத கைங்கர்யங்களை அநுபவிக்க ப்ராப்தம் என்றபடி.

————–

23-இக் கைங்கர்யபரனுக்குப் பரமைகாந்திகள் உகந்த இடமே உசித ஸ்த்தாநம் ‘ என்றது
தர்ம ஸீலரா யிருப்பார்க்கு வாஸஸ்த்தாநமாக ஸாஸ்த்ரங்கள் வகுத்த புண்ய தேஸங்கள் கலிகாலர்தி தோஷங்களாலே ம்லேச்சாதி பரிக்ருஹீதங்களாய்-(நாதர்மஜநபூயிஷ்ட்டம்-அதர்மங்களைச்செய்கிற ஜனங்களால் நிறைந்த இடத்தில் வாஸம் செய்யக்கூடாது.).
இத்யாதிகளிற்படியே பரித்யாஜ்யங்களாகையாலும், புண்ய தே ங்களுக்குச் சொல்லும் சில லக்ஷணங்களுக்கு அவ்யாப்தி அதிவ்யாப்திகள் உண்டாகையாலே இவை ப்ராயிகங்களாகையாலும்,-ஆத்மநஸ்துஷ்டிரேவ ச-ஆத்ம :- தனக்கு, துஷ்டி: ஏவச – ஸந்தோஷமுமான )இத்யாதிகளைப் பார்த்துத் தன் அபிமத மாத்ரத்தாலே ஒரு தே பலத்தை அறுதியிட்டுக் கொள்ளப் பார்த்தால் அது தப்பவும் கூடு மாகையாலும்,

மேலும்‌ பகவானுக்கோ பாகவதனுக்கோ கைங்கர்யங்கள்‌ செய்வதானால்‌ ஆசார்யனது அநுமதி பெற்றே செய்ய வேண்டும்‌ மேலும்‌ ஆசார்ய கைங்கர்யத்தைப்‌ பற்றி ஆராய்ந்து பார்த்தால்‌ இது எம்பெருமானுடைய கட்டனையாகிய சாஸ்தரங்கனால்‌ விதிக்கப்பட்டதாயுள்ளமை பற்றி ஆசார்ய கைங்கர்யமே பகவானுக்குச்‌ செய்யும்‌. கைங்கர்யமுமாகின்றது. அவனது நியமநத்தின்படி செய்வதுதானே அவனுக்குச்‌ செய்யும கைங்கர்யம்‌! மேலும்‌ ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பாகவத கைங்கர்யமுமாகி விடுகின்றது. ஆசார்யனும்‌ ஒரு பாகவதன்‌ தானே! இவ்வாறு ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பகவத்‌ கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ என்ற இரண்டு உருவையும்‌ கொள்வதால்‌ இதுவே எல்லாவற்றினும்‌ முக்கியமானதாகும்‌. ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத்‌ கைங்கர்யத்தையோ பாகவத கைங்கர்யத்தையோ செய்யக்கூடாது.-சாஸ்தரங்களும்‌ கண்ணுக்கு இலக்காய்‌ மிக எனியனாய்‌  நிற்கும்‌ ஆசார்யனை விட்டுக்‌ கண்ணுக்குப்‌ புலப்படாது சாஸ்தரத்தாலேயே அறிய வேண்டியவனாய்‌ அரியனரம்‌ நிற்கும்‌ எம்பெருமானை விரும்பு மவன்‌ கையில்‌ உள்ள நீரைக்கொட்டி விட்‌டு மழை நீரை எதிர்பார்ப்பவனாகவும்‌ கையில்‌ உள்ள செல்வத்தை உதறிவிட்டுப்‌ பூமியில்‌ மறைந்துள்ள புதையலைத்‌ தேடுமவனாகவும்‌ கூறிப்‌ பழிக்கின்றன. ஸ்ரீமதுரகவிகளும்‌ கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு என்னும்‌ பிரபந்தத்தில்‌ தமக்கு ஆசார்மனாகிய ஆழ்வாருடைய  கைங்கர்யமே தமக்கு முக்கியமென விளக்கியுள்ளார்‌. மேலும்‌ அதில்‌ தம்‌ ஆசார்யனான ஆழ்வாருடைய' திருவு ள்ளத்துக்கு உகப்பாயிருக்கிற தென்பதற்காகவே எம்பெருமானைத்‌ தாம்‌  ஸேவிப்பதாகக்‌ கூறுகின்றார்‌. அவ்வாறே ஒவ்வொரு சேதநனும்‌ ஆசார்யனுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதையே முக்கியமாகக்‌ கொள்ள வேண்டும்‌. இதைச்‌ செய்ததுயோக எஞ்சிய காலங்களில்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பான செயல்‌ என்று நினைத்து அந்த அந்தக்‌  காலத்துக்கு ஏற்றவாறு பகவானுக்கும்‌ பாரகவதர்களுக்கும்‌  கைங்கர்யம்‌ செய்து ஆநந்தத்தை அநுபவிப் பது சேதநனது கடமையாகும்‌.
--------------

23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்.
தர்மத்தைச்‌ செய்தலையே கடமையாகக்‌ கொண்ட ஸாத்துவிகர்கண்‌ வசிப்பதற்கு. உரிய இடங்களாகச்‌ சில புண்ணியத்தலங்களைச்‌ சாஸ்த்ரங்கள்‌ வகுத்துள்ளன. அனால்‌ இது கலிகாலம்‌. இன்னும்‌ பல குற்றங்கள்‌, நல்ல புண்ணியத்‌ தலங்கனையெல்லாம்‌ ம்லேச்சர்‌ முதலியவர்கள்‌ ஆக்ரமித்துக்‌ 
கொண்டு விட்டனர்‌. ஆதலால்‌ சாஸ்த்ரங்கள்‌ குறிப்பிட்டதற்காக அவற்றில்‌ போய்‌ வசிக்க முடியுமா? அதலால்‌ அத்தலங்கள்‌  விலக்குதற்கு உரியனவேயாகும்‌-
மேலும்‌ புண்ணியத்தலத்துக்கு - இலக்கணங்கள்‌ (அடையாளங்கள்‌) நூல்களில்‌ கூறப்பட்டுள்ளன. ஆனால்‌ புண்ணியத்தலங்களென ஏற்றுக்‌ கொண்ட சில தலங்களில்‌ இந்த இலக்கணம்‌ பொருந்தவில்லை. புண்ணியத்‌ தலமாகக்‌ கொள்ளாத  சில இடங்களில்‌ புண்ணியத்‌ தலத்துக்குக்‌ கூறிய இலக்கணம்‌  பொருந்துகின்றது. ஆகவே இலக்கணத்தை வைத்துக்‌ கொண்டு  புண்ணியத்‌ தலத்தை நிச்சயித்துக்‌ கூற முடியாது. பெரும்பாலும்‌  புண்ணியத்‌ தலங்களுக்கு இந்த இலக்கணங்கள்‌ இருக்கக்‌  கூடுமென்ற கருத்தாலேயே இலக்கணம்‌ கூறப்பட்டதாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
தன்‌ மனம்‌ தடையின்றி! ஒரு தலத்தை விரும்பிச்‌  செல்வதாலேயே அதைப்‌ புண்ணியத்‌ தலமாகக்‌ கொண்டு  வசிக்கலாமே என்று கூறவும்‌ முடியவில்லை. மானிடராகிய நம்‌ அறிவைக்‌ கொண்டு ஒன்றை முடிவு செய்யப்‌ பார்ப்பதில்‌ தவறுதலும்‌ ஸம்பவிக்கக்‌ கூடுமன்றோ! புண்யமல்லாததையப்‌ 
புண்ணியத்‌ தலமென்று நாம்‌ முடிவு செய்து விடவும்‌ கூடுமே! மேலும்‌ ஒரு மனிதன்‌ தனியாய்‌ நின்று ஒரு முடிவைச்‌ செய்து விடக்கூடாதென்று சாஸ்தரமும்‌ தடை செய்கின்றதே! 
இன்னும்‌ சிலரைக்‌ கலந்து கொண்டு அவர்கள்‌ புண்ணியத்‌  தலமெனக்‌ குறிப்பிடுவதை ஏற்றுக்‌ கொள்ளலாமே என்று கூறலாம்‌. அனால்‌ அந்த மணிதர்கள்‌ ரஜேோ குணம்‌ தமேர குணம்‌ 
உடையராயிருக்கக்‌ கூடும்‌. அதனால்‌ அவர்கள்‌ அறிவு கலங்கித தவறான வழியைக்‌ காட்டவும்‌ கூடும்‌. சில ஸமயங்களில்‌ அவர்களின்‌ கலக்கம்‌ நமக்கு உள்ள தெளிவையும்‌ போக்கி நம்மையும்‌ கலக்கி 
விடக்கூடும்‌.பின்‌ எவ்வாறுதான்‌ புண்ணியத்தலத்தை நிர்ணயம்‌ செய்வது? இவ்வாறு - மஹான்கள்‌ தேர்ந்தெடுத்து எழுந்தருளியிருக்கும்‌ இடமே நமக்கு வஸிக்க ஏற்றதாகும்‌. எத்தகைய மஹான்கள்‌? ஒருவனுக்கு விசேஷமான ஞானம்‌ ஏற்பட வேண்டுமானால்‌ அவனுக்கு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க 
வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ நிரம்பிய பெரியோர்கள்‌ எம்பெருமானையன்றி வேறெருவருக்கும்‌ தங்களை அடியராகக்‌ கருதமாட்டார்கள்‌. ப்ரபத்தியையன்றி வேறோர்‌ உபாயத்தைக்‌ கைக்கொள்ள மாட்டார்கள்‌; மோக்ஷத்தையன்றி வேறொரு 
பயனையும்‌ நாடமாட்டார்கள்‌. இவ்வாறு நல்ல விவேகம்‌ பெற்ற பரமைகாந்திகள்‌ தங்களுக்குக்‌ கடமையாக ஏற்பட்ட பகவத்‌ கைங்கர்யத்தைச்‌ செய்வதற்கு இதுவே ஏற்ற இடமென்று ஓர்‌ 
ஆகோ்ஷேபமுமின்றி ஒருமுகமாய்‌ நிச்சயித்துக்‌ கொள்வார்கள்‌. அந்த இடத்தில்‌ மகிழ்ச்சியுடனும்‌ சிரத்தையுடனும்‌ வாஸம்‌ செய்யத்‌ தொடங்குவார்கள்‌. அதுவே புண்யகேகஷேத்ரமாகும்‌. அந்த இடம்‌ 
சாஸ்தரத்தில்‌ விதித்த ஆர்யாவர்த்தம்‌ முதலிய க்ஷேத்ரங்களில்‌ சேராதிருப்பினும்‌ தோஷமில்லை. இன்னும்‌ புண்ய க்ஷேத்ரங்களுக்குச்‌ சொல்லிய அடையாளங்கள்‌ இல்லாவிடினும்‌ பாதகமில்லை. 
மேலும்‌ இந்திரியங்களை வென்ற பாகவதன்‌ வஸிக்குமிடமே குருக்ஷேத்ரம்‌ - நைமிசம்‌ - புஷ்கரம்‌ அகிய எல்லா கோ்ஷேத்ரமுமாகுமென்றும்‌, பாகவதர்கள்‌ வஸிக்குமிடத்தில்‌ -எம்பெருமானும்‌ வஸிக்கிறனென்றும்‌, பாகவதர்கள்‌ அரை நிமிஷம்‌ வஸித்தாலும்‌ அந்த இடமே புண்ணியத்‌ தலமாகுமென்றும்‌ இவ்வாறெல்லாம்‌ சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. ஆதவின்‌ பாகவதர்கள்‌ வஸிக்கும்‌ இடமே எல்லாத்‌ தலங்களிலும்‌ மேம்‌ பட்ட புண்ய க்ஷேத்ரமாகும்‌. ஆகவே வேறு பயனை நாடாது 
எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உகப்பதையே பயனாகக்‌ கொண்டு பாகவத கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ - ஆசார்ய கைங்கர்யம்‌ ஆகிய மூவகைக்‌ கைங்கர்யங்களிலும்‌ ஈடுபட்டுள்ள 
பரமைகாந்தியான ப்ரபந்நன்‌ ஸகல கைங்கர்யங்களையும்‌ செய்வதற்குப்‌ பரங்கான இடம்‌ அதுவேயாகும்‌. அந்த இடத்தின்‌ பருமை. எத்தகைய தடைவரினும்‌ அதைப்‌ போக்கிக்‌ 
கைங்கர்யத்தை நன்கு நடைபெறச்‌ செய்யும்‌.
பரமைகாந்தி என்பவன்‌ எத்தகையன்‌? மேம்பட்ட தத்துவம்‌ - மேம்பட்ட உபாயம்‌ - மேம்பட்ட பலன்‌ அகிய மூன்றும்‌ எம்பெருமானே என்ற உறுதியுடன்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகிறபடி அவனையன்றி வேறொருவனும்‌ அவ்வாறு ஆகமாட்டானென்ற விசேஷ உறுதியுடையவன்‌. பாகவதன்‌ - வைஷ்ணவன்‌ என்ற சொற்களுக்கும்‌ இத்தகைய உறுதியையுடைய பரமைகாந்தியே முக்கியப்‌ யொருளாவான்‌. 
-------------

24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்

கெட்ட மனிதனிடம்‌ எத்தகைய கல்வி இருப்பினும்‌ அவனுடன்‌  பழகக்‌ கூடாது. பகவத பக்தி இல்லாத. துஷ்‌ டனுடன்‌ ஸஹவாஸம்‌  செய்வதைக்‌ காட்டிலும்‌ தீயின்‌ கொழுந்து நடுவே வஸிப்பது 
நல்லது என்று ப்ரமாணம்‌ கூறுகின்றது. கெட்டவனுடன்‌ பழகுவது பாம்புடன்‌ ஒரே வீட்டில்‌ வஸிப்பது போன்றது. துஷ்டர்களின்‌  ஸம்பந்தத்தை மிக்க தூரததிலேயே. விலக்க வேண்டும்‌.
நல்ல ஸாத்துவிகர்களுடன்‌ பழக வேண்டும்‌. நாடு மிகவும்‌ கெட்டிருப்பதால்‌ நல்லவர்கள்‌ கிடைப்ப்து கஷ்டமாயிருக்கலாம்‌. அப்படியானால்‌ ஏகாந்தமான இடத்தை நாடி அதில்‌ வஸிக்க வேண்டும்‌. அங்கு உறுதியான விரதங்கொண்டு உலக சுகங்களில்‌ அதிகமாய்‌ ஈடுபடாமல்‌ பிறரைத்‌ துன்புறுத்தாமல்‌ பரமாதமாவின்‌ தியானத்தில்‌ இருப்பவனுக்கு மோக்ஷம்‌ கிடைய்பது நிச்சயம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுவதன்‌ கருத்தை உணர வேண்டும்‌. நமக்கு எம்பெருமானையன்றி வேறு மனிதர்‌ துணையாக மாட்டாரென்று அறிந்து இயன்றவரை அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்‌. 
எம்பெருமானது ஸங்கல்பத்துக்கு வசப்பட்டிருப்பதை  அநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. நம்‌ உயிர்த்‌  துணைவனான எம்பெருமானுடன்‌ பரமபதத்தில்‌ கூடி வாழப்‌  போவதை நினைத்துக்‌ கொண்டேயிருக்க வேண்டும்‌.

25. இவனுக்குக்‌ கதிசிந்தநாதிகள்‌ சிததஸந்தோஷ  ஹேதுவான காலயாபநம்‌.

பக்தியோகம்‌ ப்ரஹ்மவித்யை என வழங்கும்‌. அவ்வாறே  ப்ரபத்தியும்‌ ப்ரஹ்மவித்யை எனப்படும்‌. இவை இரண்டுமே மோக்ஷத்துக்குச்‌ சாதனமாகும்‌. பக்தியோகமாகிய ப்ரஹ்ம வித்யையைச்‌ செய்பவனுக்குச்‌ சாஸ்த்ரங்கள்‌ பல அங்கங்களை விதித்துள்ளன.அவற்றுள்‌ சில முக்கியமான அம்சங்களை அடிக்கடி சிந்திக்க வேண்டுமென்றும்‌ இந்தச்‌ சிந்தனையும்‌ பக்தியோகத்துக்கு 
விசேஷமான அங்கமாகுமென்றும்‌ சாஸ்த்ரம்‌ கூறுகின்றது. அந்த அம்சங்களாவ - (1) பக்தியோகத்தைத்‌ தொடங்குமுன்‌ உள்ள பாபங்கள்‌ ஒழிந்துவிடுதலும்‌ பிறகு தெரியாமல்‌ செய்யும்‌ பாபங்கள்‌ ஒட்டாமையும்‌. (2) சரீரத்தினின்று ஜீவன்‌ வெளியேறும்‌ முறை. (3) முக்தி பெறும்‌ போது அவனுடைய புண்ய பாபங்கள்‌ கழிந்து புண்யங்கள்‌ அவனுடைய நண்பர்களிடமும்‌ பாபங்கள்‌ அவன்‌ 
பகைவர்களி டமும்‌ புகுதல்‌. (4) அக்நி முதலிய தேவர்கள்‌ வழி நடத்திக்‌ கொண்டு செல்லும்‌ முறை (5) மோக்ஷம்‌ சென்றபின்‌ பெறப்போகும்‌ அநுபவாநந்தம்‌ என்பன. இவ்வம்சங்களைப்‌ பக்தியோகம்‌ செய்பவன்‌ அடிக்கடி சிந்தித்தேயாக வேண்டும்‌. இதைச்‌ செய்யாவிடின்‌ அங்கங்கள்‌ நிறைவேறாததுடன்‌ 
அங்யொன பக்தி யோகமும்‌ நிறைவேறாது போய்விடும்‌.
ப்ரபத்தியும்‌ ஒரு ப்ரஹ்ம வித்யையாதலால்‌ இதைச்‌  செய்பவனும்‌ ழே கூறிய சிந்தனையை ப்ரபத்திக்கு அங்கமாகச்‌  செய்தாக வேண்டும்‌ எண்று ஊஹிக்கக்‌ கூடும்‌. உண்மை நிலை 
வேறு. ப்ரபத்திக்கு உரிய அங்கங்களைக்‌ கூறுமிடத்தில்‌ இந்தச்‌  சிந்தனையை விசேஷ அங்கமாகக்‌ கூறவில்லை. ஆநுகூல்ய  ஸங்கல்பம்‌ முதலிய ஐந்து அங்கங்களைத்‌ தான்‌ 
வெளிப்படையாய்ச்‌ சாஸ்த்ரம்‌ கூறியுள்ளது. இவற்றுடன்‌, தத்துவங்களை அறிந்து மோக்ஷத்தை மட்டுமே விரும்பி ப்ரபத்தி  செய்பவனுக்கு மற்றொன்றையும்‌ அங்கமாக விதித்துள்ளது.
அதாவது - தான்‌ ப்ரபத்தியை ஸ்வதந்தரமாகச்‌ செய்வதான எண்ணம்‌ - தன்‌ பயனுக்காகச்‌ செய்வதான எண்ணம்‌ முதலியவற்றை விடுகை. இதுவும்‌ மோக்ஷத்துக்காகச்‌ செய்யும்‌ ப்ர பத்திக்கு அங்கமாகும்‌. இவற்றைத்‌ தவிர ப்ரபத்திக்கு வேறு அங்கமே இடையாது. ப்ரபத்தி வேறு எதையுமே எதிர்பார்க்காது 
என்று கூறும்‌ ப்ரமாணத்துக்குக்‌ கீழே குறிப்பிட்ட ஐந்து அங்கங்களையன்றி வேறு அங்கங்களை எதிர்பாராது என்றே கருத்துக்‌ கூறியாக வேண்டும்‌. இன்னும்‌ சில அங்கங்களைச்‌ சேர்ததுக கொண்டு இந்த ப்ரமாணத்தைக்‌ குறுக்கிக்‌ கொள்ள வேண்டிய அவசியமும்‌ இல்லை. ஆகவே &ழ்க்‌ கூறிய ஐந்து 
அம்சங்களின்‌ சிந்தனை ப்ரபத்திக்கு அங்கமாகாது. 
அப்படி அவற்றால்‌ ப்ரபத்தி நிறைவேற உதவி ஒன்றும்‌ இல்லாவிடின்‌ அவற்றின்‌ நினைவுதான்‌ எதற்காக? என்று கேட்கலாம்‌. வரப்போகிற ஆநந்தங்களை இப்பொழுது இங்கு நினைத்துக கொள்வதால்‌ உள்ளத்துக்கு மகிழ்ச்சியன்றோ ஏற்படுகின்றது! அது தகுந்த முறையில்‌ நல்ல பொழுது 
பயோக்காகவு மன்றோ இருக்கும்‌! உலகில்‌ தன்‌ நாயகனைப்‌ பிரிந்து நிற்கும்‌ ஒரு தர்மபத்நி தூரதேசத்தினின்று திரும்பி) வரவிருக்கும்‌ நாயகனை நினைந்து கொண்டு மகிழ்ந்து இன்பமாய்ப்‌ பொழுது போக்குவதைக்‌ காண்கின்றோமே! அவ்வாறே இங்கும்‌. ஆழ்வார்‌ ஸ.்ரீவைகுண டத்தை ஸேவிப்பதற்குத்‌ தமது உள்ளம்‌ இரவு பகலென்ற வேற்றுமையன்றி எப்பொழுதும்‌ அதையே 
சிந்திப்பதாகக்‌ கூறுகின்றார்‌. 
இந்தச்‌ சிந்தனைகளெல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமாக மாட்டா என்பது உண்மைதான்‌. அதற்காக அவை வேண்டாமென்று புறக்கணித்து விட முடியுமா? நரம்‌ புறக்கணிக்க முயன்றாலும்‌ விலக்க முடியாதே! நமக்கென்று ஏற்பட்ட மோக்ஷ£நு.பவத்தில்‌ மனத்துக்கு ஏற்பட்ட ஈடுபாட்டின்‌ மிகுதியாலன்றோ 
அச்சிந்தனைகள்‌ தாமாகவே வருகின்றன! த்வயத்தை அர்த்தத்துடன்‌ எப்பொழுதும்‌ அநுஸந்திக்க வேண்டுமென்றும்‌, ஸ்ரீரங்கம்‌ முதலிய திவ்ய தேசங்களில்‌ சரீரம்‌ கழியுமளவும்‌ வஸிக்க வேண்டுமென்றும்‌, பகவதார ரதநம்‌ செய்து கொண்டே நாள்களைக்‌ கழிக்க வேண்டுமென்றும்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகின்றனவே! இவை எல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமா? அல்லவே! எதற்காக இவையெல்லாம்‌? என்று கேட்க முடியுமா? இவற்றிலெல்லாம்‌ ஆநந்தமான பொழுதுபயேோக்கையன்றேர காண்கின்றோம்‌! அசோக வனத்‌; சிறையிருந்த பிராட்டி தண்‌ உள்ளததாலேயே தூரத்திலிரு பெருமாளுக்கு அருகே செல்லப்‌ பாரித்ததையும்‌ அருகில்‌ அரக்கியரையேர பழுத்துக்‌ குலுங்குகின்ற கணி. முதலியவற்றையேோ பாராமல்‌ இராமனையே சிந்தித்‌; தேறுதலுற்றதையும்‌ இங்கு உவமானமாக அநுஸந்திக்கலாம்‌

26. சாதக விருததியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வ யத்‌ந ஸாத்‌யமன்று. 
வராஹப்பெருமா பிராட்டிக்கு உபதேசித்த சரம சுலோகத்தில்‌ கூறியதாவது - சரீர இந்திரியம்‌ முதலியன நல்ல நிலையில்‌ இருக்கும்பேோ ப்ரபத்தியைச்‌ செய்தவனுக்கு மரண காலத்தில்‌ அவன முயற்சியின்றியே என்னைப்‌ பற்றிய நினைவு வரும்படி நாே செய்து மோக்ஷத்திற்கு அழைத்துச்‌ செல்வேன்‌ என்று. சரஸ்த்ரமு ப்ரபந்நன்‌ புண்ணியத்‌ தலத்திலோ இழிவான இடத்திலோ நல்‌ 
நினைவு இன்றி மரணமடைந்தாலும்‌ மோக்ஷத்தை அடைகின்றா என்று கூறுகின்றது. 

ஸ்ரீ சரணாகதி கதயததிலும்‌ ஸ்ரீ பாஷ்யகாரர்‌ எம்பெருமா வாக்யமாக அருளிச்‌ செய்யும்போது ப்ரபந்நன்‌ மரண காலத்தி தன்‌ ஸங்கல்பத்தால்‌ பூர்ணமான ஞானத்தோடு இருப்பானென்று முந்திய நல்ல நினைவுகள்‌ பழக்கம்‌ எல்லா மாறாமல்‌ இருக்கயெறுவானன்றும்‌ விளக்கியுள்ளார்‌. பெரியாழ்வாரும்‌ தம்‌ மரண  வேதனை ஸமயத்தில்‌ எம்பெருமானைப்‌ பற்றிய நினைவு வராமற்யோகுமென்றும்‌ அதற்காக இப்பொழுதே அவனை அநுஸந்தித்து விடுவதாயும்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 
இவற்றினாலெல்லாம்‌ நாம்‌ அறிந்து கொள்வது யாது? 
பரபந்நராகிய நாம்‌ எம்பெருமானிடம்‌ பொறுப்பை முன்பே ஸமர்ப்பித்து விட்டபடியால்‌ மோக்ஷம்‌ பெறும்‌ விஷயத்தில்‌ பொறுபப்பின்றிக்‌ கவலையின்றி இருக்கன்றோமே! அவ்வாறே மரண காலத்தில்‌ இறுதி நினைவு நல்லதாய்‌ வரவேண்டுமே என்ற கவலையும்‌ இல்லாதிருப்போம்‌. எம்பெருமான்‌ திருவருளால்‌ நல்ல நினைவு தானாகவே அவசியம்‌ வரும்‌. 
பக்தியோகம்‌ செய்பவர்கள்‌ மட்டுமே மரணகாலத்தில்‌ மிக்க முயற்சி கொண்டு எம்பெருமானை உள்ளத்தில்‌ இருத்திக்‌ கொண்டேயோக வேண்டும்‌ என்ற நிர்ப்பந்தம்‌ உண்டு. ப்ரபததியைச்‌ செய்தவருக்கு இந்த நிர்ப்பந்தம்‌ கிடையாதே! ப்ரபந்நன்‌ ப்ரபத்திக்குப்‌ பின்‌ மரணம்‌ வரையில்‌ இங்கு இருக்க வேண்டிய முறை என்ன? மழை நீரையே எதிர்பார்த்து அண்ணாந்து நிற்கும்‌ சாதகப்பறவை போல்‌ மோக்ஷம்‌ பெறுதற்குக்‌ கண்ணனாகிய காளமேகத்தின்‌ கருணையாகிய இனிய நீரை 
எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒன்றே இவனுக்கு உரிய கடமையாகும்‌. 
செய்ய வேண்டியன வருமாறு - ஸாததுவிகர்களான யெரியோர்களின்‌ திருவுள்ளம்‌ உகக்கச செய்ய வேண்டும்‌. ஸாதுக்களின்‌ செய்கையைப்‌ பின்பற்றி நடக்க வேண்டும்‌. 
ப்ரஹ்மவித்துக்களிடம்‌ அபசாரம்‌ செய்வதற்கு அஞ்ச வேண்டும்‌. 
அறம்‌ - பொருள்‌ - இன்பம்‌ அகியவற்றிலேயே ஈடுபட்டு . நிற்பவர்கனைத்‌ துரும்பாகக்‌ கருதிப்‌ புறக்கணிக்க வேண்டும்‌. 
எப்பொழுதும்‌ சேஷியாய்‌ எல்லாவற்றையும்‌ பொறுப்பவனாயுள்ள சீரிய: பதியிடம்‌ பொறுப்பையெல்லாம்‌ ஸமர்ப்பித்துவிட்டுச சாதகப்‌ பறவை போல்‌ நின்று க்ஷேமத்தையடைய வேண்டும்‌. 

27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்

ஆத்மாவை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிததலாகிய ப்ரபத்தியை ஒரு வேள்வியாக உபநிடதம்‌ விதிக்கின்றது.ஆத்மாவே ஒரு ஹவிஸ்ஸாகும்‌. அதை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிப்பதே ஒரு வேள்வியாகும்‌. இது ஒரே க்ஷணத்தில்‌ செய்யக்‌ கூடியதே. இந்த ப்ரபத்தியாகிய வேள்வியைச்‌ 
செய்தவனுக்கு இச்‌ சரீரம்‌ கழிவதை அவப்ருதமென்கிறது உபநிடதம்‌. ஒவ்வொரு யாகத்திற்கும்‌ முடிவுக்குப்‌ பிறகு செய்ய வேண்டியது அவப்ருத ஸ்நாநம்‌ எனப்படும்‌. அத்துடன்‌ யாகம்‌ பூர்த்தியாகும்‌. அவ்வாறே ப்ரபத்தியாகிய வேள்விக்குப்‌ பிறகு நேரும்‌ மரணம்‌ பூர்த்தியாகிய அவப்ருதமாகும்‌.
இங்கு ஒரு கேள்வி எழலாம்‌. மரணத்தை அவப்கருதமென்று  கூறுவதாயின்‌ வேள்வியின்‌ அவப்ருத ஸ்நாநம்‌ மனிதம்‌ செய்ய வேண்டியிருப்பது போல்‌ மரணமும்‌ மனிதன்‌ செய்ய வேண்டியதாகவன்றோ ஏற்படும்‌! மரணத்தை மனிதன்‌ எவ்வாறு செய்ய முடியும்‌? மரணம்‌ அவரவர்‌ கர்மத்துக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு காலத்திலோ பகவானுடைய ஸங்கல்பத்தால்‌ மட்டுமே தானே வரக்கூடியதன்றோ! இதை மனிதன்‌ செய்ய வேண்டியதான அவப்ருதமாக எவ்வாறு கூற முடியும்‌? என்பது. 
ஒருகால்‌ மரணத்தை அவப்ருதமாக மனத்தில்‌ நினைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று விதிப்பதாய்க்‌ கூறிவிடலாமா? இதுவும்‌ யொருந்தாதே! அவன்‌ ஸங்கல்பத்தாலே தானே வரக்கூடிய மரணத்தை அதற்கு முரண்பாடாக மனிதன்‌ செய்ய வேண்டிய அவப்ருதமாக எப்படி நினைத்துக்‌ கொள்ள முடியும்‌? ப்ர பந்நர்கள்‌ மரணத்துக்கு அஞ்சாமல்‌ பிரியமான விருந்தாளியை வரவேற்பது யோல்‌ எதிர்பார்ப்பதாக ப்ரமாணம்‌ கூறுவதால்‌ மரணம்‌ தானே வருவதென்று தெரிகின்றதே! பின்‌ மரணத்தை அவப்ருதமாகக்‌ 
கூறியதன்‌ கருத்துயாதென்று பார்க்க வேண்டும்‌. 
அது வருமாறு - உபநிடதம்‌ ந்யாஸ வித்யை என்னும்‌ பர பத்தியை விதிக்கும்‌ இடங்களில்‌ அத்மாவை ஸமர்ப்பித்து ப்ரபத்தி செய்தலை ஒரு வேள்வியாகவே பேசியுள்ளது. மற்ற ப்ரமாணங்களும்‌ அந்த ப்ரபத்தியை அதற்கு ஏற்பட்ட அங்கங்களுடன்‌ ஒரே முறை செய்ய வேண்டுமென்று கூறுகின்றன. 
உபநிடதத்தில்‌ ப்ரபத்தியை விதித்துள்ள பகுதிக்குப்‌ பின்பகுதி பரபந்நன்‌ செய்ய வேண்டிய காரியங்கள்‌ அனைத்தும்‌ தாமே நன்கு நிறைவேறி விட்டனவாகும்‌ என்று புகழ்கன்றது. இந்தப்‌ புகழ்ச்சி எந்த அம்சத்தைக்‌ காட்டுகின்றது? என்று ஆராய்ந்தால்‌ முற்பகுதியில்‌ கூறிய ப்ரபத்தியைச்‌ செய்தவன்‌ அதன்‌ பலனுக்காக-இனிச்‌ செய்ய வேண்டிய எஞ்சிய செயல்‌ எதுவும்‌ இல்லையென்பதையே காட்டுகின்றது. ஆகவே மரணத்தை அவப்ருதமென்று கூறியதன்‌ தாற்பரியம்‌ இந்த ப்ரபத்தியாகிய யாகத்துக்கு வேறோர்‌ அவப்ருதம்‌ கிடையாதென்பதும்‌ சரீரம்‌ கழிந்தவுடனேயே ஸரீ வைகுண்டமென்னும்‌ திவ்யலோகத்தை 
அடைந்துவிடலாமேன்‌ பதுவுமேயாகும்‌. 

28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி

சேதநன்‌ இதுவரை எத்தனை பிறவிகளை எடுத்துள்ளான்‌ என்பதைக்‌ கூறமுடியுமா? முடியாது. மோக்ஷம்‌ பெறும்‌ வரை இவனுடைய கர்மங்களால்‌ ப்ரக்ருதி என்னும்‌ திரை இவனுக்கு நல்ல விஷயம்‌ புலப்படாமல்‌ மறைத்துக்‌ கொண்டேயிருக்கின்றது. இந்த ப்ரக்ருதி என்பது யாது? ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று  குணங்களையுடைய ஒரு வஸ்து. இது சேதநனுக்கு உள்ள அறிவ பயன்படாதபடி ஒரு திரையாய்‌ நின்று மறைத்து விடுகின்றது. 
விதையினால்‌ முனை உண்டாகின்றது. முளையினால்‌ விதை உண்டாகின்றது. எதற்கு எது காரணம்‌? எது முதலில்‌ வந்தது? விடை கூறமுடியூமா? காரணம்‌ கண்டுபிடிக்க முடியாமல்‌ அநாதியாய்‌ 
வருகின்றது இந்த முறை. அவவாறே சேதநனுக்குக்‌ கர்மத்தால்‌ அஜ்ஞாநம்‌ வருகின்றது - அஜ்ஞாநுதீதால்‌ கர்மங்களைச்‌ செய்கின்றான்‌. எதற்கு எது காரணம்‌ என்று கூறமுடியாமல்‌ 
அநாதியாய்க்‌ கர்மமும்‌ அஜ்ஞாநமும்‌ மாறி மாறித தொடர்ந்து வருகின்றது. சேதநன்‌ செய்கிற அபசாரத்துக்கு அளவில்லை. ஆற்று வெள்ளம்‌ தெடர்ந்து வருவதுபோல்‌ சேதநன்‌ செய்யும்‌ 
அபசாரங்களும்‌ தொடர்ந்தே நடைபெறுகின்றன. ஒரு நீண்ட சங்கிலித்‌ தொடரில்‌ ஒரு வளையத்தில்‌ மற்றொரு வளையமாகக்‌ கோத்துக்‌ கொண்டு தொடருவதுயோல்‌ ஓர்‌ அபசாரத்தின்‌ முடிவில்‌ 
மற்றோர்‌ அபசாரமாகச்‌ செய்து கொண்டே போகின்றான்‌ சேதநன்‌.
இவன்‌ இருக்கும்‌ இடமோ அஞ்ஞானத்தையே விளைவிக்கும்‌ பெரிய நிலமாகும்‌. அதில்‌ அகப்பட்டுத்‌ தவிக்கும்‌ இவனுக்குத திருமந்திரம்‌ - தவயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய ரஹஸ்யங்களையோ 
அவற்றின்‌ பொருளையோ அறியும்‌ வாய்ப்பு ஏது? ஆகவே தன்‌ ஸ்வரூபத்தை எவ்வாறு அறிய முடியும்‌? தன்‌ அதமா தன்னை அறு வதற்கு வேறொரு ஞானத்தை எதிர்பாராமல்‌ ஸ்வயம்ப்ரகாசமாய்‌ அதாவது தானே ?நான்‌ நான்‌” என்று தோன்றிக்‌ கொண்டேடயிருக்கின்றதே! இந்த ஆத.மாவைப்‌ பற்றியுள்ள அம்சங்களை அறிகன்றானா? அதுவுமில்லை. தன்‌ அதமாவைப்‌ பற்றியே அறியமுடியாத இவன்‌ பரமாதமாவை எவ்வாறு அறிவான்‌? எல்லாக்‌ காலங்களிலும்‌ எல்லாவிடததிலும்‌ ஒர்‌ இடமும்‌ விடாது பரந்து விபுவாய்‌ நிற்கும்‌ எம்பெருமானாகிய அழியாத ஒரு சேமநிதி இவனிடமும்‌ அந்தர்யாமியாய்‌ 
இருக்கின்றதே! எப்பொழுதும்‌ அருகில்‌ உள்ள இதை அறிய முடிகின்றதா இவனால்‌? நல்ல அறிவைப்‌ பெறுவதற்குச்‌ சிறிது முயற்சி கூட இவனுக்கு இல்லையே! அகவே அநாதியான ஸம்ஸார ஸம்பந்தததால்‌ உறங்கிக்‌ கொண்டு கிடக்கும்‌ இவனுக்கு அநாதியான காலமெல்லாம்‌ பயங்கரமான 
காளராதரியாகவல்லவோ கழிந்துள்ளன! 
இவ்வாறு அஞ்ஞானவிருளில்‌ மூழ்கிக்‌ கிடக்கும்‌ இவனுக்கு  ஏதோ ஒரு ஸாக்ருத விசேஷத்தால்‌ இவன்‌ ஞானமெனும்‌ பகலைக்‌ காண ஒரு வழி ஏற்படுகின்றது. ஒரு சிறந்த அசார்யன்‌ வந்து இவனை ஏற்றுக்‌ கொள்கின்றான்‌. இது இவன்‌ பிறகு காணப்போகும்‌ பெரும்‌ பகலுக்கு அருணோதயம்‌ போலாகின்றது. 
அந்த ஆசார்யன்‌ இவனது அஞ்ஞானவிருளைப்‌ போக்க முற்படுகின்றான்‌; சாஸ்த்ரார்த்தங்களையெல்லம்‌ ஒன்று திரட்டி இவனுக்கு உபதேசிக்கின்றான்‌; இவனை நல்ல ஆசாரத்தில்‌ நிலைநிற்கும்படி செய்கின்றான்‌; தானும்‌ அநுஷ்டித்துக்‌ காட்‌ டுகின்றான்‌; ' இவனுடைய அஞ்ஞானவிருளையெல்லாம்‌ ஒழிக்க வல்ல ஞானமாகிய ஒளிவிளக்கைத்‌ தருகின்றான்‌. -இவவாது நல்வழிகாட்டி ஒப்பற்ற மஹோபகாரம்‌ செய்த ஆசார்யன்‌ விஷயத்திலே இவன்‌ எப்படி நடந்து கொள்ள வேண்டும்‌? அவன்‌ செய்த உதவிக்கு இவண்‌ எதாவது கைம்மாறு காணமுடியுமா? இவனுக்கு மேம்பட்ட தேவர்களுக்குமே 
காணமுடியாதே! ஆதலின்‌ இவன்‌ தன்னை ஆசார்யன்‌ விஷயத்தில்‌ எந்நாளும்‌ கடன்ப ட்டவனாகக்‌ கருத வேண்டும்‌. இந்த உணர்ச்சியை எந்நாளும்‌ உள்ளத்துக்‌ கொண்டு இந்த ஸம்ஸார லோகத்தில்‌ மட்‌டுமன்றி ஸ்ரீவைகுண்டம்‌ சென்றாலும்‌ இந்த ஆசார்யன்‌ திருவடிகளே தனக்குத்‌ தஞ்சம்‌ என்ற உறுதியுடன்‌ இருப்பதுவே இவன்‌ கடமையாகும்‌. 

29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு

பலன்பெற முக்கிய காரணம்‌ ஆசார்யன்‌ சிஷ்யனை ஏற்றுக்‌ கொள்ளுதல்‌. ஆசார்யன்‌ ஏற்றுக்‌ கொண்டவடனேயே மோக்ஷம்‌ வந்து விடுனெறதா? இல்லை. சேதநன்‌ ப்ரபத்தி செய்யும்போது 
உடனே மோக்ஷத்தைக்‌ கேட்கவில்லையே! இச்சரீர முடிவில்‌ மோக்ஷம்‌ வந்தால்‌ போதுமென்றுதானே கேட்டு பிரபத்தி செய்கின்றான்‌. அதுவரையில்‌ இந்தச்‌ சரீரமாகிய சிறைக்கூடத்தில்‌ இவன்‌ இருந்துதானே தீர வேண்டும்‌! இந்தச்‌ சிறைக்‌ கூடத்துக்குத்‌ தூண்கள்‌ யாவை? சரீரத்தில்‌ உள்ள எலும்புகள்தாம்‌. இந்தச்‌ சேதநன்‌ அசார்யனருனால்‌ ஞானம்‌ யெற்றிருப்பினும்‌ அஞ்ஞான இருள்‌ கலவாது நடக்க முடிகின்றதா? 
இச்சரீரம்‌ உள்ளவரையில்‌ பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய கர்மங்களையும்‌ அவற்றால்‌ வரும்‌ பலன்களையும்‌ ப்ர பந்நன்‌ ஏற்றுக கொண்டுதானே இருக்கின்றான்‌. ஆதவின்‌ அக்கர்மங்களின்‌ 
விளைவாகச்‌ சிறிதளவாவது அஞ்ஞானவிருள்‌ கலந்துதான்‌ வாழ்க்கை நடத்த முடியும்‌. அதனால்‌ பெருந்தீ ங்கு ஒன்றும்‌ வந்துவிடாது, சிறந்த ஆசார்யனுடைய அநுக்ரஹத்தையன்றோ பெற்றிருக்கின்றான்‌! அதன்‌ வலிமையால்‌ இவனுக்கு ஞானமும்‌ வைராக்யமும்‌ பக்தியும்‌ பூ மலர்வது போல்‌ நிச்சயமாய்‌ மலரும்‌. இதனால்‌ வரும்‌ மகிழ்ச்சியையும்‌ அநுபவித்துக்‌ கொண்டிருப்பான்‌. 
இந்த நிலையில்‌ இவனது விவேகம்‌ இவனைத தட்‌டியெழுப்புகின்றது. ப்ரக்ருதி பல சிற்றின்பங்களைக்‌ காட்டி இதுவரை தன்னில்மயங்கிப்‌ படுத்திருக்கும்படி செய்திருந்தது - இப்பொவுதுஅவ்வுறக்கத்தினின்று விழித்துக்‌ கொள்கின்றான்‌. எம்பெருமானை அறிவதிலோ காண்பதிலோ அநுபவிப் பதிலோ 
சிறிதும்‌ ஐயமின்றி நிலையான மனவுறுதியோடு நிற்கின்றான்‌. 
உலக சுகங்களை உதறித்‌ தள்ளுகின்றான்‌. இச்சரீர முடிவில்‌ கார்மங்கள்‌ முதலிய எல்லாப்‌ பொல்லாங்குகளும்‌ நீங்கி எல்லையற்று பேரின்பமாகிய மோக்ஷம்‌ வரப்போவதை நினைத்துக்‌ கொண்டு 
இந்திரியங்களையெல்லாம்‌ எம்பெருமானிடமே ஈடுபடுத்திக்‌ கொண்டு இருக்க வேண்டியது ப்ரபந்நனது கடமையாகும்‌. ஆகவே இச்சீ ரம்‌ கழியுமளவும்‌ நல்ல விடியற்‌ காலப்பொழுதாகவே இருக்கும்‌.

30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

முன்பு சேதநன்‌ செய்த ப்ரபததியாலே இவனைக கைவிடாமல்‌ காக்கப்பட வேண்டிய வஸ்துவாக எம்பெருமான்‌ ஏற்றுக்‌ கொண்டு விட்டான்‌. மோக்ஷம்‌ பெற ஆசைப்பட்டுத தாணே -சரணாகதி செய்தான்‌! ஆகவே செய்ய வேண்டிய கடமையை௫செய்து முடித்தவனாகி விட்டான்‌. உலகில்‌ ஒரு சுரங்கத்தினின்று ஒரு பெரிய இரத்தினத்தை எடுக்கும்போது சுற்றிலும்‌ மண்‌ பற்றுப்‌ பூசிக்கொண்டு ஒளி புலப்படாதிருக்கும்‌. மண்பற்றைக கழற்றிக்‌ கழுவி விட்டால்‌ அந்த இரத்தினத்தின்‌ ஒளி! எங்கும்‌ பரவும்‌. அவ்வாறே சுரங்கத்தினின்று எடுத்த இரத்தினம்‌ போல்‌ உள்ளான்‌ ப்ரக்ருதி ஸ.ம்பந்தத்தோடு கூடிய இந்தச்‌ சேதநன்‌. இவனுக்கு இச்சரீரம்‌ கழியுமளவும்‌ ஸ்தூலமான ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ உண்டு. 
இவன்‌ சரீரமே ப்ரக்ருதியால்‌ ஆனதுதானே! சரீரம்‌ கழிந்து பரமபதத்துக்குச்‌ செல்லும்‌ நிலையில்‌ விரஜாநதிக்குப்‌ யோகும்‌ வரை ஸூ்ஷ்ம்மான சரீரத்தின்‌ வடிவில்‌ ப்ரக்ருதி ஒட்டிக்‌ கொண்டேயிருக்கும்‌. இந்த ஸ்தூல - ஸகிக்ஷூமமான இரண்டு ஸம்பந்தத்தையும்‌ எம்பெருமான்‌ கழிப்பது இரததினத்தின்‌ 
மண்பற்றைக்‌ கழற்றுவது யோலாகும்‌. 
பின்‌ இவனுடைய ஞானம்‌ எல்லாவற்றையும்‌ அறியக்கூடியதாய்‌ மலர்ச்சி பெற்றுவிவிடும்படி செய்கின்றான்‌ எம்பெருமான்‌. இது இரத்தினம்‌ இயற்கையொளியைப்‌ புலப்படுததும்படி எம்பெருமான்‌ செய்வது போன்றதாகும்‌. திருமார்பில்‌ எப்பொழுதும்‌ அணிந்துள்ள கெளஸ்துப ரத்தம்‌ எப்படி எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கின்றதோ, அவ்வாறே அதன்‌ அம்சமான ஜீவனும்‌ அவனுக்கு மகிழ்ச்சியை வினைவிப்பான்‌. ச்ரிய:பதியான எம்பெருமான்‌ திருவடிகளில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ எல்லா இடத்திலும்‌ எந்நாளும்‌ எந்த நிலையிலும்‌ எல்லாக்‌ கைங்கர்யங்களையும்‌ செய்து கொண்டிருப்பான்‌. 
எம்பெருமானுக்கு, இன்ன இடத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன ஸமயத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன வஸ்துவாகததான்‌ இருப்பான்‌ என்ற வரையறை எவ்வாறு இல்லையோ, அவ்வாறே சாஸ்த்ரங்களாலும்‌ ப்ரமாணங்களாலும்‌ காட்டப்பட்டுச்‌ சேதநன்‌ மோக்ஷத்தில்‌ செய்யும்‌ கைங்கர்யத்துக்கும்‌ வரையறை கிடையாது. இவ்வாறு பரமபதததில்‌ கைங்கர்யம்‌ செய்வதே ஒரு மஹோத்ஸவமாகும்‌. 
இந்த உதஸவத்தைத்‌ தரக்‌ காரணமாயுள்ளவன்‌ யாவன்‌? அவவெம்பெருமானே. உண்மையான அதமஸ்வரூபம்‌ அப்பொழுதே தோன்றும்‌. அது தோன்றுவதே ஒரு முறையே விடிந்து வந்த தொடர்ந்து நிற்கும்‌ நற்பகலாகும்‌. இந்தப்‌ பகலுக்குப்‌ பிறகு மாலைப்பொழுது வரவே வராது. இந்த நற்பகல்‌ வரக்காரணம்‌ யார்‌? அவ்வெம்பெருமானே. உலகில்‌ பகற்பொழுது  வரக்‌ காரணம்‌ யார்‌? சூரியன்தானே! இங்கு மோக்ஷ£நுபவமாகிய நற்பகல்‌ வருவதற்குக்‌ காரணம்‌ எம்பெருமானாகுிய சூரியனே என்று உணர வேண்டும்‌. 
உலகில்‌ உள்ள சூரியணுக்கு உதயம்‌ - அஸ்தமனம்‌ - இரகணம்‌ இவை எல்லாம்‌ உண்டு. இந்த எம்பெருமானாகிய மஹாஸ_ூர்யனுக்கோ அவை ஒன்றும்‌ கிடையாது. சூரியனை விட்டு ஒளி பிரியாதிருப்பதுபோல்‌ பிராட்டி அவனை விட்டுக்‌ கணப்பொழுதும்‌ பிரியாதிருக்கின்றாள்‌. உலகில்‌ உள்ள சூரியனது உருவத்தை அளவிட்டு விடலாம்‌. இந்த மஹாஸ_ூர்யனை அளவிட முடியாது. இந்த ஸூர்யன்‌ எப்பொழுதும்‌ ப்ரகாசித்தலே தனக்கு ஸர்வமங்களங்களையும்‌ சாச்வதமாகப்‌ பெறுதலாக அநுஸந்தித்துக்‌ கொண்டிருப்பதுவே சேதநனது கடமையாகும்‌. 
சிலர்‌ எம்பெருமான்‌ ஜீவனை அடைகின்றானேயன்றி ஜீவன்‌ எம்பெருமானை அடைவதில்லையென்றும்‌, லாபமும்‌, நஷ்டமும்‌ எம்பெருமானுக்கேயன்றி ஜீவனுக்கு இல்லையென்றும்‌ இன்னும்‌ இவ்வாறு பல கொள்கைகளைக்‌ கூறுகின்றனர்‌. இக்‌ கொள்கைகளைக்‌ கண்டிக்க வேண்டிய அவசியமில்லை. 
இக்கொள்கைகளின்‌ உட்கருத்தை நாம்‌ நல்லதாகவே கொண்டுவிட முடியும்‌. எவ்வாறெனில்‌ - ஜீவன்‌ எம்பெருமானுக்கு அடியனா யிருத்தலிலேயே சுவை கண்டவன்‌. மோக்ஷத்தில்‌ இவனுக்கு 
ஞானமலர்ச்சி முதலிய பல விசேஷங்கள்‌ வருகின்றன. இவையெல்லாம்‌ ஸர்வேசுவரனுக்கு மிகவம்‌ போக்யமாயுள்ளன. புஷ்பம்‌ சந்தனம்‌ முதலியவற்றைத்‌ தரித்தால்‌ அவற்றின்‌ மணம்‌ முதலியன தரிப்பவர்க்கே மகிழ்ச்சியை விளைவிப்பதுபோல்‌ ஆதமாக்களெல்லாம்‌ எம்பெருமானுக்கே சேஷமாயிருப்பதால்‌ ஜீவனுக்கு வரும்‌ விசேஷங்களால்‌ மகிழ்ச்சியடை பவனும்‌ ஸர்வேச்வரனேயோவான்‌ என்ற கருத்தைக்‌ கொண்டன. அவர்களின்‌ கொள்கைகள்‌ என்று கூறிவிடுதல்‌ நன்று.
 
சிறுபயனிற்‌ படியாத தகவோரெம்மைச்‌ சேர்க்கவடைக்கலங்கொண்ட திருமால்‌, தானே 
மறுபிறவியறுத்தழியா வானில்‌ வைக்கும்‌ மனமே நீ மகிழாதேயிருப்பதென்கொால்‌ 
உறுவதுனக்குரைக்கேனிங்கிருக்குங்காலம்‌ ஒரு பிழையும்‌ புகுதாத வுணர்த்தி வேண்டிப்‌ 
பெறுவதெலாமிங்கே நாம்‌ பெற்று வாழப்‌ பேரடிமையாலேதென்றிகழேல்‌ நீயே. 

ரக்ஷ்ந்த்வநந்யரக்ஷ்யாம்‌ லக யஸீமபி கரீயஸீம்‌ ஸந்த:1 

லக்ஷமீஸஹாய ஹ்ருத்யாம்‌ ரஹஸ்யரத்நாவளிம்‌ ரம்யாம்‌2 
பெரிய இரத்தின ஹாரத்தையும்‌ முத்துமாலையையும்‌ தண்‌ திகுமார்புக்கு ஏற்ற திருவாபரணமாகத்‌ தரித்திப்பதுபோல்‌ இந்த ரஹஸ்ய க்ரந்தமாகிய ஹாரத்தையும்‌ தன்‌ திருவுள்ளத்துக்கு உவப்பான அணியாகக்‌ கொள்ளும்படியிருக்கின்றது. 
இரததின.மாலை உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ ப்ரகாசம்‌ விலை முதலியவற்றால்‌ மிக்க பெருமையுடையதாயிருக்கும்‌. அவ்வாறே இந்தக்‌ ரெந்தமும்‌ உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ அவசியம்‌ அறிய வேண்டிய ஸகல ஸாரார்த்தங்களின்‌ சுருக்க.மாதலின்‌ மிகுத்த பெகுமையூடையதாயுள்ளது.-ஸாரம்‌ அஸாரம்‌ இவற்றைப்‌ பற்றிய பகுத்தறிவு மிக்கவர்களாய்ப்‌ பொறாமையற்றவர்களாய்ச்‌ 
சாஸ்தரங்களுக்கு வசப்பட்டவர்களான பெரியோர்களே இந்நூலை உரிய முறையில்‌ காப்பார்கள்‌

ஒன்றே புகலென்றுணர்ந்தவர்‌ காட்டத்‌ திருவருளால்‌ 
அன்றேயடைக்கலங்கொண்ட நம்மத்திகிரித்‌ திருமால்‌ * 
இன்றேயிசையினிணையடி சேர்ப்பரினிப்‌ பிறவோம்‌ 
நன்றே வருவதெலாம்‌ நமக்குப்‌ பரமொன்றிலதே.
ஒன்றே புகல்‌” என்ற பாசுரம்‌ இந்த ரஹஸ்யமாகிய இரத்தினஹாரத்தைக்‌ கோக்கும்‌ நூலின்‌ ஸ்தாநத்தில்‌ உள்ளது. இந்தப்‌ பாசுரத்தில்‌ ஆசார்யன்‌ மூலமாகப்‌ பிர பத்தியைச்‌ செய்து அந்தப்‌ பொறுப்பை எல்லாம்‌ ஸர்வேச்வரனிடம்‌ ஸமர்ப்‌ பித்துவிட்டு அந்தப்‌ பொறுப்பையும்‌ எம்பெருமானால்‌ 
ஏற்றுக்‌ கொள்ளப்‌ பெற்றவனான சேதநன்‌ தான்‌ ஒரு பொறுப்பும்‌ அற்றவனாய்த தன்னை நினைத்துக்‌ கொள்ள வேண்டிய நிலை காட்டப்‌ படுகின்றது 

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ ரஹஸ்ய நவநீதம்-

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————–

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் ஐந்தாவது.-இது திருவேங்கடத்தில் அருளிச் செய்யப்பட்டது.

திருமந்த்ரத்தில் ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம் என மூவர்த்தங்களும், த்வயத்தில்-உபாய விசேஷம் புருஷார்த்த விசேஷம், விரோதி நிவ்ருத்தி விசேஷம் என மூவர்த்தங்களும், சரம ச்லோகத்தில் அதிகாரி க்ருத்யம் சரண்ய க்ருத்யம்,
கருதக்ருத்யனுடைய உத்தர க்ருத்யம்
என மூவர்த்தங்களுமாக ஒன்பது அர்த்தங்கள்.

உத்தி திகழும் உரை, மூன்றில் மும்மூன்றும்*
சித்த முணரத் தெளிவித்தார்* முத்திதரும்
மூல மறையின் முடிசேர் முகில்வண்ணர்
சீலம் அறிவார் சிலர்.
–நேரிசை வெண்பா.-

ஸகல சாஸ்த்ரங்களுக்கும், அன்றிக்கே ஸகல புருஷார்த்தங்களுக்கும், முதற்காரணமான வேதத்தின் சிரோபாகமான வேதாந்தங்களில் ப்ரதிபாத்யனாய்ச் சேர்ந்திருக்கிற மோக்ஷத்தைக் கொடுக்கிற மேகம் போன்ற வர்ணத்தையுடைய பகவானுடைய ஸ்வபாவத்தை,-அதாவது அவனுடையஸௌசீல்ய குணத்தை, அறிந்த ஆசார்யர்கள்
சப்தங்களுக்குள் ச்லாக்யமான மூன்று ரஹஸ்யங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று அர்த்தங்களாக ஒன்பது அர்த்தங்களை மனது நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி ப்ரகாசம் செய்தார்கள்.

ஸகல வேத ஸாரமான திருமந்த்ரத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே ஸ்வரூப ஸமர்ப்பணமும் பரஸமர்ப்பணமும் பல ஸமர்ப்பணமும் அநுஸந்தேயம்.
இங்கு ஸ்வரூப ஸமர்ப்பணமாவதுஸர்வோபாதி விநிர்முக்தம் க்ஷேத்ரஜ்ஞம் ப்ரஹ்மணி ந்யஸேத்-தக்ஷ ஸ்ம்ருதி.(சரீரம், இந்த்ரியங்கள், ஸூக்ஷ்ம ப்ரக்ருதி அவித்யை முதலிய) எல்லா உபாதிகளினாலும் விடப்பட்ட ஜீவாத்ம ஸவரூபத்தைபபரமாத்மாவிடத்தில் ஸமர்ப்பிக்கவேண்டும்.)என்கிறபடியே வபுராதிகளில் வேறுபட்டு ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய் ஜ்ஞாநாநந்த குணகனாய் ஸ்வயம் பராகாரனாய் ஸ்வஸ்மை பாஸமாநனாய் அணுவான நான், ஸர்வ ஐகதேக காரண பூதனாய், ஸர்வ ரக்ஷகனாய், ஸர்வ சேஷியான ஸ்ரிய:பதியைப்பற்ற-நானும் உனக்குப் பழவடியேன்-பெரியாழ்வார் திருமொழி 1-1-11.-கண்ணபுரம் ஒன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனே–பெரிய திரு-8-9-3-என்கிறபடியே நித்ய நிருபாதிக சேஷபூதன் என்று அநுஸந்திக்கை. இஸ் ஸம்பந்தா நுஸந்தாநம் அர்த்த பஞ்சகா நுஸந்தாநத்திற்கு அஞ்சுருவாணியாய் நிற்கும்.

பர ஸமர்ப்பணமாவது-ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹ்யாத்ம நிஷேப உச்யதே-லக்ஷ்மீ தந்த்ரம்-17-79. தன்னுடையவும், தன்னைச் சேர்ந்த (புத்ரன், ப்ரேஷ்யன் முதலிய)வர்களுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது ஆத்ம நிஷேபம் என்று சொல்லப்படுகிறது.)என்கிறபடியே நித்ய சேஷ பூதனுமாய் நித்ய பரதந்த்ரனுமாய் அபிமத ஸித்திக்குப் புகல் ஒன்றில்லா அடியேனை இனி ஒரு கர்த்தவ்யத்திலே மூட்டாதே அடைக்கலமாகக் கொண்டு ரக்ஷித்தருள வேண்டும் என்கை.

பல ஸமர்ப்பணமாவது-தேந ஸம்ரஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்ய வியுக்ததா-.லக்ஷ்மீ தந்த்ரம்-17-73 அந்தப் பகவானால் ரக்ஷிக்கப்படுகிற தனக்கு ரக்ஷிக்கப்படுவதினால் உண்டாகிய ப்ரயோஜநத்தில் யஜமாநனயிருக்கும் தன்மை இல்லாமல் இருப்பதும். ‘கேசவார்ப்பண பாயந்தா ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே ‘ என்று மேல். ‘பகவானிடத்தில் அந்த யஜமாநனாயிருக்கும் தன்மையை ஸமர்ப்பிப்பது வரையில் தனக்கு யஜமாநனாயிருக்கும் தன்மை இல்லாமையே ஆத்மநிஷேபம் என்று சொல்லப்படுகிறது என்று அர்த்தம்.-இத்யாதிகளிற்படியே களையற்ற ஸூரிதுல்ய கைங்கர்யத்திற்கு ஸ்வரூப யோக்யனான ஆரா அன்பில் அடியேனுக்கு உபாதி அடியாக வந்த அயோக்யதைகளை யெல்லாம் கழித்து வழுவிலா அடிமைகொண்டு வாழ்வித்தருள வேண்டும் என்கை.

இப்படி-சேஷ சேஷி பாவத்தாலே இருவரையும் உறவாக்கி, சேஷசேஷி க்ருத்யத்தாலே இருவரையும் வணக்கி, சேஷ சேஷி பலத்தாலே இருவரையும் ஏக ரஸமாக்குகிறது திருமந்த்ரம்.

இதிலே ஸாரீரக க்ரமத்தாலே தோற்றின பர தத்த்வத்தையும், பரம ஹிதத்தையும், பரம புருஷார்த்தத்தையும் ஸ்வரூபாநுரூப விசேஷண விஸிஷ்டமாக வெளியிடுகிற ஸரணாகதி மந்த்ரத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே உபாய விசேஷமும் புருஷார்த்த விசேஷமும், விரோதி நிவ்ருத்தி விசேஷமும் ஸித்த ஸாத்ய ரூபத்தாலே இரு வகையாகச் சேர்ந்து நிற்கும்படி அநுஸந்தேயம். எங்ஙனே என்னில்:- ஸ்ரீமானான நாராயணன் அபிமத ஸித்திக்கு வ்யாஜ மாத்ர ஸாபேக்ஷமுமாய் தத் ப்ரவர்த்தகமுமாய் வ்யவதாந மற்று ப்ரதாநமுமான ஸித்தோபாயம்.

அநந்ய ஸாத்யே–பரதமுனி வாக்யம். ஸ்வாபீஷ்டே மஹா விச்வாஸபூர்வகம் ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : சரணாகதி : ‘ என்று மேல். (தன்னுடைய இஷ்ட பலமானது) வேறொரு உபாயத்தினாலும் ஸாதிக்க முடியாமல் இருக்கும்பொழுது (மஹா விச்வாஸத்தை முன்னிட்டுக்கொண்டு அவன் ஒருவனே உபாயமாகவேண்டும் என்று யாசிப்பது
ப்ரபத்தி, அது தான் சரணாகதி).-அகலகில்லேன் ‘-திருவாய்-6-10-10-இத்யாதிகளிற் சொல்லுகிற ரணாகதி அவனுடைய வஸீகரணமான ஸாத்யோபாயம்.

புருஷார்த்த விசேஷமாவது–.தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’-திருவாய்-2-9-4-என்கிறபடியே தன்னோடும் தான் பண்ணுகிற கைங்கர்யத்தோடும் துவக்கற்று,-கண்டுகேட்டு உற்று,-திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே நிரதிஸய போக்யமான நித்ய ஸித்த ப்ராப்யமும் அதனுடைய பரிபூர்ணாநுபவ பரீவாஹமாய்க் கொண்டு ஸாத்யமான சேஷி யுகந்த கைங்கர்யமும்.

விரோதி நிவ்ருத்தி விஷமாவது–தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்கிறபடியே (தன்னோடும் தான் பண்ணுகிற கைங்கர்யத்தோடும் துவக்கற்று]ஸர்வ அவித்யா நிவ்ருத்தி பிறக்கை. இப்படிப்பட்ட ஸித்த ஸாத்யங்களான புருஷார்த்த ஹேதுக்களையும், ஸித்த
ஸாத்யங்களான புருஷார்த்தங்களையும் சேர்த்து ஸாத்ய புருஷார்த்தத்தில் இருவகையான களையற்ற படியையும் காட்டு கிறது த்வயம்.

இதில் பூர்வோத்தர கண்டங்களுக்கு-(ஸ ப்ராதுஸ் சரணௌ காடம் )-அயோ . . 31-21. ‘நிபீட்ய ரகுநந்தந:, ஸீதாம் உவாசாதியசா: ராகவம்சமஹா ரதம்(ரகுவம்சத்திற்கு ஆநந்தத்தைக் கொடுக்கும் இளையபெருமாள் ஜ்யேஷ்ட ப்ராதாவாகிய ராமனுடைய திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும் ராமனையும் குறித்து சொன்னார்). அதாவது பெருமாளும் பிராட்டியும் சேர்ந்திருந்த ஸமயத்தில் ப்ரார்த்தித்தார் என்பதினால் ஸ்ரீமத் என்னும் பதத்தின் அர்த்தமும், ராகவம்ச மஹா வ்ரதம் ‘ என்று சரணாகதர்களைக் காப்பாற்றுகிற பெரிய வ்ரதத்தை யுடையவன் என்பதினால் நாராயண சப்தத்தின் அர்த்தமும், சரணெள என்று சரண சப்தமும் இருப்பதினாலே இந்த சுலோகம் த்வயத்தின் பூர்வ கண்டத்துடன் சேர்த்தி யாகிறது என்று கருத்து.

(பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-அயோ-31 -27. தேவரீர் ஸீதையோடு கூட, கிரிஸாநஷூ ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதச் ச தே ‘ என்று மேல். மலையின் தாழ்வரைகளில் விளையாடப் போகிறீர் விழித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் இருக்கிற போது தேவரீருக்கு எல்லா விதக் கைங்கர்யத்தையும் நான் செய்யப் போகிறேன், அதாவது செய்யவேண்டும் என்று கருத்து. ஸஹ வைதேஹ்யா ‘ என்பதினால் ஸ்ரீமதே’ என்பதின் அர்த்தமும், ‘ஜாக்ரத: இத்யாதியினால் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யங்கள் கூறப்படுகிற படியினால் சதுர்த்தியின் அர்த்தமும், பவாம்ஸ்து’ என்று நாராயண சப்தத்தின் அர்த்தமும் விவரிக்கப் பட்டபடியினால் இந்த சுலோகம் த்வயத்தின் உத்தர கண்டத்துக்குச் சேர்த்தியாகிறது என்று கருத்து.)

இவற்றில் தோற்றின பரம ஹிதத்தினுடைய அதிகார நைரபேக்ஷ்ய ஸ்வரூப ப்ரபாவங்களையும் வெளியிட்டுக் கொண்டு உப ப்ரும்ஹணமான சரம லோகத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே அதிகாரி க்ருத்யமும், ஸரண்யக்ருத்யமும், க்ருத க்ருத்யனுடைய உத்தர க்ருத்யமும் அநுஸந்தேயம்.

அதிகாரி க்ருத்யமாவது--மேம்பொருள் ‘-(திருமாலை-38. போகவிட்டு மெய்ம்மையை மிகஉணர்ந்து ‘ என்று மேல். வெளியிலே இருக்கும்படியான வஸ்துக்கள், அன்றிக்கே போக்யமாக அநுபவிக்கப்படும் வஸ்துக்கள், இவைகளை அஸ்த்திரத்வம் முதலிய தோஷங்களுடன் கூடியவை என்று பரித்யஜித்து மெய்யான ஜீவாத்மாவின் ஸ்வபாவத்தை உயர்ந்த வஸ்துவாக உணர்ந்து என்று அர்த்தம்.)இத்யாதிகளிற்படியே விவேகாதி யுக்தனாய்க் கொண்டு,-விடைக்குலங்கள்’-(திருச்சந்த-92. ஏழடர்த்து வென்றி வேற்கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய! வேலை நீர்ப் படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்து நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்னவேண்டுமே’ என்றுமேல். வ்ருஷபங்கள் ஏழைச் செருக்கடக்கி ஜயம் பொருந்திய வேல்போல் இருக்கிற கண்களையுடைய லக்ஷ்மீ, நப்பின்னைப்பிராட்டி முதலிய பத்நிகளுடைய வாஸனையோடுகூடிய தோள்களை ஸம்ச்லேஷித்து பசுக்களை மேய்க்கும் இடையனாய் அவதரித்த ஸ்ரீ க்ருஷ்ணனே ! தேவரீருக்கு அடைக்கலம்
ப்ரார்த்தித்தபடி’ புகுந்த என்னை பயப்படாதே என்ன வேண்டும் என்று பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டும் பகவானுடைய ஸௌலப்யாதி குணங்களை முன்னிட்டுக் கொண்டும் சரணம் அடைய வேண்டும என்று கருத்து)என்கிற பாட்டின்படியே ஸநாதந தர்மமான ஸர்வலோக ஸரண்யனுக்கு விண்ணப்பம் செய்கை.

ஸரண்ய க்ருத்யமாவது– தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது
மூர்த்தி’-என்கிறபடியே ஸரணாகதி விரோதிகளை யெல்லாம் கழிக்கைக்கு ஸர்வ சேஷியான தன்னைத் தட்டுமாற்றித் தாழ நின்று, ஏற்றின சுமையெல்லாம் ஏறிட்டுக் கொண்டு இவனைத் தன்னளவாக உயர எடுக்கை.

உத்தர க்ருத்யமாவது–‘அத்தனாகி அன்னையாகி என்கிற பாட்டின்படியே ( திருச்சந்த-115. ஆளும் எம்பிரானுமாய் ஒத்தொவ்வாத பல்பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி
ஏழை நெஞ்சமே’ என்று மேல் பாட்டு. அவனுடைய ஆர்த்தியையும், குணங்களையும், நம்மை ரக்ஷிப்பதற்காக முன்னதாகப் பாரித்து ஒருப் பட்டபடியையும் ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியானபடியையும் சிந்தித்து மனத்தை நிர்ப்பயமாக்கிக்கொள்ள வேண்டும் என்று இப்பாட்டின் கருத்து.)மநஸ்ஸைத் தேற்றி,- ‘சிற்றம் சிறுகாலே’ என்கிற பாட்டின்படியே (திருப்பாவை-29) நானெனக்கு சேஷபூதன்,என்னை ரக்ஷிக்க வேண்டிய பரம் என்னுடையது
, அத்தால் வரும் ப்ரயோஜனம் என்னுடையது என நினைக்காமல்)ஸர்வ ப்ரகாரத்தாலும் அநந்யனாய் ஸ்வயம் ப்ரயோஜந பாஸ்த்ரீய கைங்கர்ய பரனாகை.

இப்படியால் ஓர் அதிகாரியை சரண்யன் ஹித தமத்திலே மூட்டும்படியையும், இவனுக்கு ப்ரிய தமத்தைப் பண்ணும்படியையும், சரணாகதன் வீத சோகனாய் ஸர்வ சேஷிக்கு ப்ரிய தமங்களான ஸர்வ சேஷ வ்ருத்திகளையும் பண்ணும் ப்ரகாரத்தையும் கணிசிக்கிறது சரம ஸ்லோகம்.
இதில் சொன்ன சரண்யனுக்கும் சரணாகதிக்கும் பலத்திற்கும் தேச காலாதி பரிச்சேதமில்லை.ப்ரபத்த்யத் யாயாதிகளெல்லாம் இதின் விஸ்தரம்.

எனக்கு உரியேன் எனது பரம் என் பேறு என்னாது
இவை அனைத்தும் இறை யில்லா இறைக்கடைத்தோம்
தனக்கு இணை ஒன்றில்லாத திருமால் பாதம்
சாதனமும் பயனுமெனச் சலங்கள் தீர்ந்[த்]தோம் *
உனக்கு இதம் என்று ஒரு பாகன் உரைத்தது உற்றோம்
உத்தமனாம் அவன் உதவி எல்லாம் கண்டோம்-எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

நானெனக்கு சேஷபூதன்,என்னை ரக்ஷிக்க வேண்டிய பரம் என்னுடையது அத்தால் வரும் ப்ரயோஜனம் என்னுடையது என நினைக்காமல்-கீழ்க் கூறப்பட்ட இவைகளெல்லாவற்றையும் தனக்கு மேற்பட்ட யஜ மானனில்லாத ஸ்வாமியான ச்ரிய:பதிக்கு ஸமர்ப்பித்தோம், தனக்கு ஸத்ருசமான வஸ்து இல்லாத பகவானுடைய பாதங்களே உபாயமும் பலனும் என அநுஸந்தித்து, ஸ்வாதீனம் என நினைக்கும் தோஷங்களை நிவ்ருத்தி செய்தோம், அத்விதீய ஸாரதியான ஸ்ரீக்ருஷ்ணன் அகிஞ்சனான
உனக்கு இது ஹிதம் என உரைத்த ப்ரபத்தியை அநுஷ்ட்டித்தோம்,-உயர்ந்தவனான அவனுடைய உபகாரங்களை யெல்லாம் அறிந்தோம்,-இதற்கு மேல் அடைய வேண்டிய ப்ரீத்யாதிகள் கவர, துக்கத்தை இகழ்ந்தோம், இனி நாம் இவ்வுலகத்தில் இருக்கும் நாள்களில் ஸூரி களுடன் ஸமம்.

குருபஜந நேத்ரபாஜா மதிதரஹஸ்யேந வேங்கடே சேந|
நவநீதமிவ க்ருஹீதம் இதம் நவகம் நித்யம் ஆஸ்வாத்யம்

ஆசார்ய உபாஸனமாகிற, அன்றிக்கே குருபக்தியாகிற, தயிர் கடையும் கயிற்றை யுடையவராகிய, அன்றிக்கே ஜ்ஞாநக் கண்ணை யுடையவராகிய, கடையப்பட்ட ரஹஸ்யங்களை யுடைத்தாயிருக்கிற வேங்கடேசன் என்கிற ஆசார்யனால் எடுக்கப்பட்ட வெண்ணெயைப் போலே இருக்கிற இந்த ஒன்பது அர்த்தங்களும் எப்பொழுதும் அநுஸந்தானம் செய்யத்தக்கவ.

ப்ரபமிதகலிதோஷாம் ப்ராஜ்ய போகா நுபந்தாம்.
ஸமுதிதகுணஜாதாம் ஸம்யகாசாரயுக்தாம் |
பரிதஜந பஹுமாந்யாம் ஸ்ரேயஸீம் வேங்கடாத்ரௌ
பரியமுபசி நு நித்யம் ஸ்ரீநிவாஸ த்வமேவ |

ஓ! ஸ்ரீநிவாஸனே! தேவரீர்த்தாமே திருவேங்கடமாமலையில்,போக் கடிக்கப்பட்ட கலிகாலத்தினால் உண்டான தோஷத்தையுடையதாயும், அதிகமான போகத்தினுடைய ஸம்பந்தத்தையுடையதாகவும், அதாவது உம்முடைய கைங்கர்ய ரூபமாகையால் உமக்கும், உம்முடைய தாஸர்களான ப்ரபன்னர்களுக்கும் போகத்தை வருத்தி செய்கிறதாயும் என்றபடி, சேர்ந்திருக்கிற குணங்களின் ஸமூஹத்தையுடைத்தானதாயும், நல்ல அநுஷ்டானத்துடன் சேர்ந்ததாயும், உம்முடைய ஆச்ரிதர்களினால் கொண்டாடக்கூடியதாயும், உத்தமமாயுமிருக்கிற (கைங்கர்யமாகிற) ஸம்பத்தை எப்பொழுதும் வ்ருத்தி செய்யும்.

இப்படி கவிதார்க்கிகஸிம்ஹமும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ ரஹஸ்ய நவநீதம் முற்றிற்று.

———————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீதத்த்வ நவநீதம்-

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் நாலாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.

[போக்த்ராதி விபாகம்-போக்த்ரு நிரூபணம்-போக்ய நிரூபணம் -த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம் -ப்ரேரித்ருநிரூபணம்-ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம்.

உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான்*-பயிரில்
களைபோல் அசுரரைக் காய்ந்தான்தன் கையில்
வளைபோல் * எம் ஆசிரியர் வாக்கு.

நம் பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்தி,ஜீவாத்மாக்களும் அவை களின் சரீரங்களும் தனக்குச் சரீரமாயிருக்கும்படி தான் சேஷியாய் ஸர்வோத்க்ருஷ்டனாய் நின்று, திருவாய்ப்பாடியில் தயிர் வெண்ணெய் முதலியவைகளை இந்தப் பூமியுடன், (இது மற்ற எல்லா லோகங்களுக்கும் உபலக்ஷணம்), அமுதுசெய்தவனாய், பயிரில் களையைப் போலே அஸுரர்களைக் கொன்றவனாகிய பகவானுடைய திருக்கையில் கடகத் (சங்கத்)தைப் போலே (அவற்றைத் தரிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் த்ருப்தியை உண்டு பண்ணுகிறாப் போலே இருக்கிறது,

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ஹஸ்த ஆபரணம் போல் அன்றோ நம் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள்

போக்த்ராதிவிபாகம் –ஸம்ஸ்க்ருத த்ராவிடருதி ஸ்மருதி இதிஹாஸ புராணங்களில் சொல்லுகிற தத்த்வ ஜ்ஞாந பூர்வகமாக மோக்ஷோபாயாநுஷ்ட்டாநம் வேண்டு(மா)கை
யாலே, முமுக்ஷவுக்கு விசேஷித்தறிய வேண்டும் சித் அசித் ஈஸ்வர தத்த்வங்களை போக்தா என்றும், போக்யம் என்றும், ப்ரேரிதா என்றும் உபநிஷத்துச் சொல்லிற்று.

போக்தாவா கையாவது-போகத்தையுடையனாகை. இது-ஸர்வேஸ்வரனுக்கும் பொதுவாயிருக்க, அவனை ப்ரேரிதா என்று பிரியச் சொல்லுகையாலே ஸர்வ ப்ரேரகத்வ மின்றிக்கே பராதீந போகனான ஜீவனை இங்கு போக்தா என்கிறது.

தேகாத்மா பிரமமும் ஸ்வ ஸ்வா தந்த்ர பிரமமும்-அந்நிய சேஷத்வ பிரமமும் – போக்க வேண்டுமே-ஜீவனுடைய போக்த்ருத்வம் -பரி பூர்ண நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் சங்கல்பம் அடியாகவே –ஆகவே நியாந்தா ப்ரேரிதா -சர்வேஸ்வரன்

(அதிஷ்ட்டாநம் ததா கர்த்தா -கீதை -18-14 கரணம் ச ப்ருதக் விதம் | விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் ‘ என்று மேல் . (மனிதன் சரீரம் வாக்கு மனது இவைகளினால் எந்தக் கர்மத்தைச் செய்கிறானோ,அந்தக் கர்மத்திற்கு) சரீரம்,அப்படியே ஜீவாத்மா (வெவ்வேறாக இருக்கிற இந்த்ரியங்கள், அநேக விதமாயிருக்கிற வேறான வ்யாபாரத்தை யுடைய ப்ராண வாயு, இந்த விஷயத்தில் ஐந்தாவதாகிய பரமாத்மா,இவை ஐந்தும் காரணங்கள்.) என்கிற இடத்தில் கர்த்ரு பதம் பராதீந கர்த்தாவைச் சொல்லுகிறது. சித் அசித் ஈஸ்வரர்கள் என்னும் போது சித் சப்தமும் பராதீந சேதந விஷயம்.

( இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா -வைகுண்ட ஸ்தவம்-36. நித்யம் ப்ரியாஸ்தவ து கேசந தேஹி நித்யா: ‘ என்று மேல். உம்முடைய ஸங்கல்பத்தினாலேயே எல்லா
வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் உண்டாகிறது. ( எவை சில உமக்கு எப்பொழுதும் இஷ்டங்களோ அவை நித்யங்கள் என்னப்படுகின்றன.)இத்யாதிகளிற் படியே ஜீவனுடைய ஜ்ஞாநாநந்த ஸ்வரூபாதிகளும் பராதீநங்களாயிறே இருப்பது. இஜ்ஜீவ வர்க்கத்தில் பீஜாங்குர க்ரமத்தாலே அநாதியான அபராத ப்ரவாஹமடியாக முடிவில் பெரும் பாழான சிறைக்கூடத்திலே முப்பிரியான ஸத்வாதி குணங்களாலே கட்டுண்டு கழல விரகற்றுக் கிடக்கிறவர்கள் பத்தர்கள். இவர்களிலே மோக்ஷ ஸாஸ்த்ரங்களிற் சொல்லுகிறதொரு விரகாலே-(மோக்ஷயிஷ்யாமி) என்னும்படி முனிவு தீர்ந்து நித்யரோடொக்க முகப்பே கூவிப் பணி கொள்ளப் பெற்றவர்கள் முக்தர்கள். நித்ய பகவதனுபவத்தாலே நித்ய கைங்கர்ய பரரான சேஷ சேஷாஸநாதிகள் நித்யர்கள்.

போக்யநிரூபணம் –போக்யம் என்பது அநுபாவ்யம் என்றபடி. இது ஜீவேஸ்வரர்களுக்கும் பொதுவாகையாலே பூர்வாபரபதங்களிற் சொன்ன போக்த்ருத்வமும் நியந்த்ருத்வமும்
இல்லாத விஷயத்தை இங்கு’போக்யம் என்கிறது. இத்தை அசித்து என்றது ஜ்ஞாந ரஹிதம் என்றபடி. அசேதநத்வம் கேவல குணங்களுக்கும் தர்மபூத ஜ்ஞாநத்திற்கும் பொதுவாகிலும் இங்கு த்ரிவித அசேதனம் என்று பூர்வர்கள் நிரூபித்தவை த்ரிகுணமும் காலமும் ஸூத்த ஸத்த்வமும் என்கிற த்ரவ்ய விசேஷங்கள்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது-பரிமித ஸுகத்திற்கும் துக்கத்திற்கும் மோஹத்திற்கும் விசேஷ காரணங்களான ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற குணங்களுக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம். இது கேவல ப்ரக்ருதி என்றும், ப்ரக்ருதி விக்ருதி | என்றும், கேவல விக்ருதி என்றும் மூன்று வகையாய் இருபத்து நாலு தத்த்வ ரூபமாயிருக்கும். இவற்றில் ஸ்வபாவத்தாலும் பஞ்சீகரணாதிகளாலும் தேஸ கால பேதத்தாலே உண்டாம் விக்ருதிகளுக்கு எல்லை யில்லை.-மகான் அஹங்காரம் தன்மாத்திரைகள் -ஆகிய ஏழும் பிரகிருதி விக்ருதிகள்
பஞ்ச பூதங்களும் கர்ம ஞான பஞ்ச இந்திரியங்களும் மனஸ் ஆகிய இவை -16-கேவல விக்ருதிகள்-இவற்றில் ஸ்வ பாவத்தாலும் பஞ்சீ கரணாதிகளாலும் தேச கால பேதத்தாலே யுண்டாம் விக்ருதிகளுக்கு எல்லையில்லை –

கால நிரூபணம்–காலமாவது ஜடத்வ விபுத்வங்களை யுடைத்தாய் பால வ்ருத்தாதி வ்யவஸ்த்தைகளுக்கு விசேஷ காரணமான த்ரவ்யம். இது எப்போதும் அவ்வோ வஸ்துக்களுடைய பூத பவிஷ்யத் வர்த்தமாந வ்யபதேங்களுக்கும் தன் அவச்சேதங்களாலே நியாமகமாயிருக்கும். இதற்கு ஸத்த்வாதி குண த்ரயமின்றிக்கே இருக்க உபாதி விஸேஷங்களாலே ஸீத காலம் உஷ்ண காலம் என்னுமா போலே ஸாத்த்விக ராஜஸ தாஸாதி கால விபாகம் உண்டாகிறது. ப்ரஹ்ம திவஸம் முதலாக மனுஷ்ய திவஸ பர்யந்தமாக எங்கும் இது கண்டு கொள்வது. ஸூத்த ஸத்த்வத்தில் இப்படிப்பட்ட கால விபாகமின்றிக்கே பூர்வாபராதி விபாக மாத்ரமே யாயிருக்கும்.

சுத்தஸத்த்வ நிரூபணம்-சுத்த சத்வமாவது -ரஜஸ் தமஸ்ஸூக்கள் இன்றிக்கே -பிராகிருத சத்வ -விலக்ஷண சத்வத்துக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம்-இது ச பரிகாரனான ஸ்ரீ யபதிக்கு போக்ய-போக உபகரண -போக ஸ்தான ரூபமாய்க் கொண்டு அனந்த ஆச்சர்யமாய் ஹிரண்ய கர்ப்பாதி ஸ்தலங்கள் எல்லாம் நரகமாய்த் தோற்றும்படியான
ஆனுகூல்ய ப்ரகர்ஷத்தாலே பரமபத சப்த வாஸ்யமாய் இருக்கும்

ப்ரேரித்ருநிரூபணம்--இப்படி மூன்று வகையான சேதநாசேதநங்களுடைய ஸ்வரூப ஸ்த்திதி ப்ரவருத்திகள் மூன்றும் தானிட்ட வழக்காம்படி நிற்கிற ஸ்ரிய:பதியை ப்ரேரிதா என்கிறது. இவன் மூன்று ஸம்பந்த நியமத்தாலே ஸர்வ ஸரீரியாய்,மூன்று வ்யாபார விஸேஷங்களாலே ஸர்வ கார்யங்களுக்கும் ஸர்வ காரணமாய், மூன்று காலத்திலும் ஏகரூப ஸ்வரூப ரூபங்களை யுடையவனாய், மூன்று ஸ்த்தாநத்திலே நித்ய வாஸத்தை யுடையவனாய், மூன்று வகையான அர்ச்சாவதாரத்தை யுடையவனாய், மூன்று யுகத்திலே விஸேஷித்து ப்ரகாலிக்குமவனாய்,மூன்று குண யுகத்தாலும் த்ரியுகனாய், மூன்று வ்யூஹங்களாலே மூவிரண்டு ப்ரகாரங்களைப் பண்ணுமவனாய், மூன்று புருஷார்த்தங்களுக்கும் மூலமாய், மூன்று ப்ரமாணங்களாலும் ப்ரதி ஷேதமில்லாதவனாய், மூன்று மாத்திரையான ஒற்றை எழுத்திற்கு முக்க்யார்த்தமாய், மூன்று ரஹஸ்யங்களில் ஸிக்ஷையாலே விஸேஷித்தறியப்படும்.

ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம் –-ப்ரஹ்மத்தற்கு உபநிஷத்துக்களிற் சொன்ன த்ரைவித்யம் போகத்ரு(த்வ) விஸிஷ்ட ரூபத்தாலும், போக்ய(த்) விஸிஷ்ட ரூபத்தாலும், ப்ரோகத்வ விஸிஷ்ட ரூபத்தாலும் உபபந்நம். தன்னையும் ப்ரேரிதாவையும் பிரிய-அறிந்து பற்றினவனுக்கு அவன் ப்ரஸாதத்தாலே மோக்ஷம் என்று இங்கே ஓதுகிறது. இப்படியே பஞ்சதஸாத் யாயாதிகளிற்படியே பராவர தத்த்வ விவேகம் பிறந்தால் (த்யேயோ நாராயணஸ் ஸதா- நரஸிம்ஹ புராணம்-18-34 நாராயணன் எப்பொழுதும் த்யானிக்கத் தக்கவன்,) என்றும்,ஸ்மர்த்தவ்ய:ஸததம் விஷ்ணு:- பாரதம்- விஷ்ணு எப்பொழுதும் ஸ்மரிக்கத் தக்கவன். )என்றும்,துஞ்சும்போதும் விடாது தொடர்-திருவாய்-1-10-4-என்றும் சொல்லுகிற ஸதா நுஸந்தாநம் கருத்ய பேஷமுடையவனுக்கு உபாயோபகார விதி(தை)யாலேவந்த போகம். க்ருதக்ருத்யனுக்கும் கைங்கர்யோபகார விதி(தையாலே வந்த போகம்] போக்யனாய் நித்ய ஸ்ரீயான ஸேஷி ஸமாதிக தரித்ரனானாற்போலே
போகமும் நிஸ் ஸமாப்யதிகமாம்.

அலையற்ற ஆரமுதக் கடல் அக்கடலுண்ட முகில் *
விலையற்ற நன்மணி வெற்பு வெயில் நிலவோங்குபகல்*
துலையொத்தன என்பர் தூய்மறைசூடும் துழாய்முடியாற்கு
இலையொத்தன அவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்கே.

அலையில்லாத பூர்ணமான அம்ருதத்தையுடைய ஸமுத்திரம், அந்த அம்ருத ஸமுத்திரத்தை முழுதும் குடித்த மேகம், விலையில்லாததான உத்தம ரத்நமயமான மலை, வெயிலினாலும் நிலவினாலும் ப்ரகாசிக்கும் மத்தியான்னம் இவைகள் பரிசுத்தமான வேதங்களினாலே சிரஸ்ஸினால் சூடப்படுகிற துழாய் மாலையைக் கிரீடத்தில் தரித்துக் கொண்டிருக்கிற பகவானுக்கு ஸமமாயிருந்தன, அன்றிக்கே தூக்கிப் பார்ப்பதில் அதாவது நிறையில் ஸத்ருச்யமாயிருந்தன என்று ( பூர்வாசார்யர்கள்) சொல்லுவர்கள், அவனுடைய திருவடிகளை ஆச்ரயித்த பாகவதர்களுக்கு இவைகள் ஸமானம் என எண்ணுதற்கே ஸத்ருசமான வஸ்துக்கள் இல்லை

ஸத் ஸம்ப்ரதாய தத்நஸ் ஸமுத்த்ருதம் வேங்கடேரே ந |
தத்த்வநவநீதமேதத் தநுதே நவநீதநர்த்தகப்ரீதிம் |11

ஸத்ஸம்ப்ரதாயத்தில் உபதேச க்ரமமாக வந்த அர்த்தங்களாகிற தயிரிலிருந்து வேங்கடேசன் என்கிற திருநாமத்தை யுடைய ஆசார்யனால் எடுக்கப்பட்ட இந்தத் தத்த்வ நவநீதம் என்கிற க்ரந்தமானது நவநீதத்திற்காக (க்கோபர்களுடைய க்ருஹங்களில்) நர்த்தநம் பண்ணின பகவானுக்கு ப்ரீதியைச் செய்கிறது.

வரத விரசய த்வம் வாரிதாபேபஷதோஷாம்
புநருபசித புண்யாம் பூஷிதாம் புண்யகோட்யா |
ஸிதமுதித மநோபி: தாவகை: நித்ய ஸேவ்யாம்
ஹதரிபு ஜநயோகாம் ஹஸ்திதாம்நஸ் ஸம்ருத்திம் [1

ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில் அர்ச்சாரூபம் கொண்டிருக்கும் வரதனே! போக்கடிக்கப்பட்ட எல்லாத் தோஷங்களையுடையதாயும், மேன்மேலும் வருத்திசெய்யப்பட்ட புண்யத்தையுடையதாயும், புண்யகோடி விமானத்தினால் அலங்கரிக்கப்பட்ட தாயும், பரிசுத்தமாயும், ஸந்தோஷத்தோடு கூடியதாயுமிருக்கிறமனத்தையுடைய உம்முடைய பக்தர்களினால் எப்பொழுதும் ஸேவிக்கத் தகுந்ததாயுமிருக்கிற ஹஸ்திகிரியினுடைய ஸம்பத்தைப் போக்கடிக்கப்பட்ட சத்ரு ஜனங்களுடைய ஸம்பந்தத்தையுடையதாக நீர் செய்துகொள்ளும்,

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்திரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீதத்த்வநவநீதம் முற்றிற்று.

—————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ ரகஸ்ய பதவி–

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் மூன்றாவது.-[காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.)

ரகஸ்ய த்ரயங்கள் தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக காட்டி அளிக்கும் –

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முன் நான்கும் -தோன்றாத் தொலையும் துயர் –

தோன்றி தான் சூரியோதயம் இருளைத் தொலைக்கும் -இம் மூன்றும் தோன்றாமல் சம்சார துரிதங்களை போக்கி அருளும் என்றவாறு –

இதி தத்வ த்ரயஸ்ய ஏஷா ரகஸ்ய த்ரயஸ்ய ச பதவீ வேங்கடேசே
ந ப்ரத்யக் ப்ராச்சீ பிரதர்சிதா–ப்ரத்யக் ப்ராச்சீ-ஆத்ம ஸ்வரூப ஞானம்

ரகஸ்ய த்ரயர்த்தங்கள்
ஸ்ரீ யபதித்தவம் / ஜகத் காரணத்வம் / ஜகத் ரக்ஷகத்வம் / ஸ்வ பாவிக சேஷித்வம் /
ஜீவன் – அநந்யார்ஹ சேஷ பூதன் / ஜீவன் பாகவத -ததீய சேஷ பூதன்/
ஸமஸ்த ஜகத் பாலனத்வம் / ஞானாதி ஸுலப்யாதி குண விசிஷ்டன் / ஜீவன் அணு -பரமாத்மா விபு / ஜீவன் தேக இந்திரியாதி வி லக்ஷணம் /
அவன் சங்கல்பம் அடியாகவே ஜீவனுக்கு ஸ்வ தந்த்ர லேசம்/ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் பிரபன்னனுக்கு /
ரகஸ்ய த்ரய ஞானமே உஜ்ஜீவன ஹேது

உபோத்காதம் -ப்ரணவ சப்தார்த்தம்- நம: சப்தார்த்தம்- நாராயண சப்தார்த்தம் -த்வயத்தில் பூர்வ கண்டார்த்தம் -த்வயத்தில் உத் த ர கண்டார்த்தம் -த்வயத்தின் திரண்டபொருள்-சரமச்லோகத்தில் பூர் வார்த்தவிவரணம்-சரம ச்லோகத்தில் உத்தரார்த்த விவரணம்- நிக மநம் ]

உபோத்காதம் அநாதிகாலம் ஸம்ஸரித்துப் போந்த ஜீவாத்மாக்களுடைய உஜ்ஜீவநார்த்தமாக அத்யாத்ம ஸாஸ்த்ரங்கள் தத்த்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதிக்கும். அவற்றை ஸங்க்ரஹேண ரஹஸ்யத்ரயம் ப்ரகாமிப்பிக்கும்.

ப்ரணவ சப்தார்த்தம் -இவற்றில் திருமந்த்ரம், ஸர்வ ஸங்க்ரஹம். இது தான் மூன்று பதமாய் எட்டுத் திருவக்ஷ ரமாயிருக்கும். இதில் ப்ரதம பதமான ப்ரணவம் ஸாரதம ஸங்க்ர ஹம். இது மூன்று பதமாய் மூன்று அக்ஷரமாயிருக்கும். இதில் ப்ரதமாக்ஷரம் ஸர்வ காரண பூதனாய், ஸர்வ ரக்ஷகனாய் நித்ய நிருபாதிக சேஷத்வ ப்ரதி ஸம்பந்தியான ஸ்ரிய:பதியைச் சொல்லுகிறது. இதில் சதுர்த்தீ- சேஷத்வமாகிற ஸம்பந்
தத்தைக் காட்டுகிறது. மத்யமாகூரம் இஸ்ஸம்பந்தத்தை மற்றவரோடு துவக்கற நியமிக்கிறது. த்ருதீயாக்ஷரம் இஸ் ஸம்பந்தத்திற்கு ஆஸ்ரயனாய் ரக்ஷணீயனாய் ஜ்ஞாநாநந்த ஸ்வரூப குணனாய் அணுவாய் தேஹாதி விலக்ஷணனான ஜீவாத்மாவைச்
சொல்லுகிறது. ஆக இப் ப்ரணவத்தால்-கண்ணபுரமொன்று உடையானுக்கு அடியேன் + ஒருவர்க்குரியேனோ* * -(பெரிய திருமொழி-8-9-3)என்கிறபடியே இஜ்ஜீவாத்மா பகவதநந்யார்ஹ க்ஷேஷபூதன் என்றதாயிற்று.

நம : சப்தார்த்தம் -மத்யமபதமான நமஸ்ஸு இரண்டு அக்ஷரமாய் இரண்டு பதமாய் நான் எனக்கு உரியன் அல்லேன்,என் கார்யத்திற்கு நான் நிரபேக்ஷ ஸ்வதந்த்ரனும் அல்லேன் என்கிறது. இங்கே பாகவத சேஷத்வம் பலிதம். இந்நமஸ்ஸுக்கு
ஸரணாகதியிலும் தாத்பர்யம். அநிஷ்ட நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிறதாகவுமாம். இப்படி நமஸ்ஸு தன்னிலே தத்த்வ ஹித| புருஷார்த்த ப்ரகாநமுண்டு.

நாராயண சப்தார்த்தம் -நாராயண ப்தம் நாரங்களுக்கு அயநம் என்றும், நாரங்களை அயநமாகவுடையவன் என்றும், ஸர்வாதாரத்வாதி விஸிஷ்டனான ஸ்ரிய:பதியைச்
சொல்லுகிறது. இதில் சதுர்த்தீ தாதர்த்த்யத்தை முன்னிட்டுக் கொண்டு, அதன் பலமான கைங்கர்யத்தைக் காட்டுகிறது. இத்தால்-ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
திருவாய்-3-3-1-என்றதாயிற்று.-அகாரார்த்தாயைவ) என்கிற லோகத்தை இங்கே அநுஸந்திப்பது.

த்வயத்தில் பூர்வகண்டார்த்தம்-இப்படித் திருமந்த்ரத்தில் ஸங்க்ருஹீதங்களான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக்குகிறது த்வயம். இதில் பூர்வ கண்டம் ஒரு வாக்யமாய் உபாயபரம். உத்தர கண்டம் இரண்டு வாக்யமாய் உபேயபரம், இவை ஓரொன்றும் மூன்று பதமாயிருக்கும். ப்ரதம கண்டத் தில் ப்ரதம பதம் மூன்று பதம் கூட ஸமஸ்த பதமாயிருக்கும்.

இதில் ஸ்ரீமத் ஸப்தம் ஸர்வருக்கும் ஆஸ்ரயணீயையாய் அகலகில்லேன்-(திருவாய்-6-10-10)
என்கிறபடியே தன்னை ஆஸ்ரயித்திருக்கிற பெரிய பிராட்டியா ரோடு பிரிவற்றவன் என்கிறது. நாராயண ஸப்தம்-நிகரில் புகழாய்-இத்யாதிகளிற் சொன்ன வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌஸ்ரீல்ய ஸௌலப்யாதிகளை யுடையவனான ஸர்வேஸ்வரனைச் சொல்லுகிறது. ஸரண ஸப்தம் ஸ்ரண்ய விஷயத்தில் க்ருபோத்தம்பநாதி களுக்காக தாஸ பூதன் பற்றும் துறையான திருவடிகளைக் காட்டுகிறது. ‘ ஸரணம்’ என்கிற பதம் திருவடிகளுடைய உபாய பாவத்தைச் சொல்லுகிறது. ‘ப்ரபத்யே’ என்கிற பதம் அகிஞ்சநாதிகாரி மஹா விஸ்வாஸாதி விஸிஷ்ட ஸரண்யன் திருவடிகளை உபாயமாகக கொண்டு பரந்யாஸம் பண்ணுகிறபடியை ப்ரகாஸிப்பிக்கிறது.

த்வயத்தில் உத்தரகண்டார்த்தம் -‘ஸ்ரீமதே’ என்கிற பதம் ப்ராபகனான நாராயணன் ப்ராப்யனாய்க் கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியாம் போது பத்நீ விஸிஷ்டனா யிருக்கும்படியைக் காட்டுகிறது. இங்குற்ற நாராயண பதம் ஸர்வ ப்ரகார விஷ்டனாய்க் கொண்டு நிரதிய போக்யனான ஸர்வ சேஷியை ப்ரதிபாதிக்கிறது. இதின் சதுர்த்தியிலும் திருமந்த்ரத்திற் போலே கைங்கர்ய ப்ரார்த்தனையைக் கண்டு கொள்ளுவது. இக்கைங்கர்யம் ஸர்வவிரோதி ரஹிதமான படியை இந் நமஸ்ஸு கணிசிக்கிறது.

த்வயத்தின் திரண்ட பொருள் -ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளில் களையற்ற நித்ய
கைங்கர்யம் பெறுகைக்கு ஸ்ரீமானான நாராயணன் திருவடிகள் இரண்டையும் ஸரணமாகப் பற்றுகிறேன் என்று இதில் திரண்ட பொருள்.

சரம ச்லோக பூர்வார்த்தவிளக்கம் -இப்படித் திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் ப்ரகாஸித்த உபாயத்துக்கு அகிஞ்சநாதிகாரித்வ நிரபேக்ஷத்வாதிகளைக் காட்டிக் கொண்டு விதி முகத்தாலே உப ப்ரும்ஹணம் பண்ணுகிறது சரம ஸ்லோகம். இது தான் மூன்று வாக்யமாய்ப் பன்னிரண்டு பதமாயிருக்கும். இப்படி ரஹஸ்ய த்ரயம் உத்தரோத்தரம் பதங்கள் இரட்டிப்பாய் விஸதீகரண மாயிருக்கும். இஸ் ஸ்லோகத்தில் ப்ரதம வாக்யம் உபாய விதாயகம்.மத்யம வாக்யம் பல ப்ரதி பாதகம். உத்தர வாக்யம் கருதக்ருத்யத்வாதி தத் பரம்.

ஸர்வ தர்மங்களையும் விட்டு‘ என்கிற இரண்டு பதங்களாலே ‘நின்னிலங்கு பாதமன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே (திருச்சந்த-90)என்கிறபடியே அபிமத ஸித்திக்கு உபாயாந்தரம் அற்று இருக்கிற அதிகாரி விசேஷத்தையாதல், ப்ர பத்தியினுடைய தர்மாந்தர நைரபேஷ்யாதிகளையாதல் சொல்லுகிறது. என்னை ஒருவனை ‘ என்கிற இரண்டு பதங்களாலே ஸௌலப்யாதி குண விஸிஷ்டமாய் ப்ரதாநோபாயத்வ நிரபேக்ஷத்வ ஸர்வ பல ப்ரதத்வாதி விஸிஷ்டமுமான ஸநாதந தர்மத்தைக் காட்டுகிறது.’ ஸரணமாகப் பற்று’ என்கிற இரண்டு பதங்களாலே மஹாவிஸ்வாஸாதி விஸிஷ்ட பர ந்யாஸத்தை விதிக்கிறது.

சரமச்லோக உத்தரார்த்தவிளக்கம்நான் உன்னை ‘ என்கிற இரண்டு பதங்களாலே பர ஸ்வீகாரம் பண்ணின ஸர்வ ஸக்தியையும், நயஸ்த பரனான சாதக வ்ருத்தியையும் சொல்லுகிறது. ‘எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கக் கடவேன் ‘ என்கிற இரண்டு பதங்களாலே கைங்கர்ய விரோதிகளை நிஸ்பே ஷமாகக் கழிக்கும்படியைச் சொல்லுகிறது. ஸோகிக்க வேண்டாம்’ என்கிற இரண்டு பதங்களாலே புகலற்றுத் தளும்பின பூர்வ தஸையை விலக்கி,-நிஸ் ஸம்யஸ் ஸுகமாஸ்ஸ்வ-(சரணாகதி கத்யம். ஸம்சயம் ஒன்றுமில்லாமல் ஸுகமாயிரு.)என்று அருளிச்செய்த உத்தர தசையை உபலக்ஷிக்கிறது.

த்வயத்தில் பூர்வோத்தர கண்டங்களுக்கு இதில் பூர்வோத் தரார்த்தங்கள் சேர்த்தி யாகின்றன.

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முந்நான்கும்
தோன்றத் தொலையும் துயர்.
–குறள் வெண்பா.

ரஹஸ்யத்ரயத்தில் அத்விதீயமான மூன்று பதங்கள் அடங்கிய திருமந்த்ரமும், அன்றிக்கே ஒரு அர்த்தத்தை ப்ரதிபாதிக்கிற மூன்று பதங்களையுடைய திருமந்த்ரமும், ஆறு பதங்களையுடைய த்வயமும், பன்னிரண்டு பதங்களையுடைய சரம ச்லோகமும் அர்த்தத்துடன் மனதில் ப்ரகாசிக்கத் துக்கங்கள் நசித்துவிடும்.

இதி தத்த்வத்ரயஸ்யைஷா ரஹஸ்யத்ரிதயஸ்ய ச |
பதவீ வேங்கடேசே ப்ரத்யக் ப்ராசீந ப்ர தர்ஸிலிதா |

இந்த சித், அசித், ஈசுவரன் என்கிற மூன்று தத்த்வங்களினுடையவும், திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம், என்கிற மூன்று ரஹஸ்யங்களினுடையவும் கிழக்கு மேற்காக இருக்கிற,அதாவது ப்ரத்யக் என்று சொல்லப்படும் ஜீவாத்மாவை அடைவதற்குக் காரணமாயி ருக்கிற ப்ரா சீந மார்க்கமானது வேங்கடேசன் என்கிற திருநாமமுடைய ஆசார்யனால் இந்த ப்ரகாரம் காட்டப்பட்டது. இங்கு வேங்கடேசே என்னும் பதம் இந்த க்ரந்தத்திற்கு வக்தா தாமல்லர், ப்ரதமாசார்யனான பகவானே என்கிற அர்த்தமும் த்வனிக்கிறது. ஒரு ஊரிலிருந்து பல இடங்களுக்குச் செல்லும் வழியைச் சுட்டிக் காட்டுகிறாப்போல இங்கும் திங் மாத்திரம் காட்டப்பட்டது என்று கருத்து. ப்ருதக்ப்ராசீ ‘ என்று பாடாந்தரம். அப்பொழுது ப்ராசீநமான இந்தவழி தனித்தனியே காட்டப்பட்டது என்று அர்த்தம்;

ஸ்ரீரங்க த்விரத வ் ருஷாத்ரி பூர்வகேஷு
ஸ்த்தாநேஷ ஸ்த்திரவிபவா பவத் ஸபர்யா
ஆகல்பம் வரத விதூத வைரிபக்ஷா
பூயஸ்யா பவதநுகம்பயைவ பூயாத்!

பக்தர்களுக்கு அபீஷ்டங்களைக் கொடுக்கும் பகவானே ! ஸ்ரீரங்கம், ஹஸ்திகிரி, வேங்கடாசலம் இவை முதலான உகந்தருளின திவ்யதேசங்களில் உம்முடைய திருவாராதனம் அதிகமான உம்முடையதான க்ருபையினால் கல்ப காலம் வரையிலும் போக்கடிக்கப்பட்ட சத்ருக்களினுடைய பக்ஷத்தை யுடையதாகவும் அழிவில்லாத ஐச்வர்யத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படி கவிதார்க்கிகஸிம்ஹமும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ ரஹஸ்ய பதவீ முற்றிற்று.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ தத்த்வ பதவீ

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

——————-

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் இரண்டாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது.

உபோத்காதம்- பர தத்த்வ நிரூபணம்-சேதநநிரூபணம்–அசேதந நிரூபணம் த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம்- தர்மபூத ஜ்ஞாந நிரூபணம் – முக்தி அடையும் ப்ரகாரம்.

ப்ரஸாதாத் தோரிகேந்த்ராணாம் பராவரவிபாகவித்
ப்ரப ந: பரமாத்மாநம் ப்ராப்கோதி பரமம் பதம் I

ஆசார்யர்களினுடைய அநுக்ரஹத்தினால் பர தத்த்வம் அவர தத்த்வம், அதாவது உயர்ந்த வஸ்து தாழ்ந்த வஸ்து, இவைகளின் பிரிவைத் தெரிந்து கொண்டவனாய் உயர்ந்த தத்த்வமாகிய சரிய:பதியினிடம் ப்ரபத்தி செய்தவன் பரமபதத்தை அடை கிறான்.

உபோத்காதம்-ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே பராவர தத்த்வ ஜ்ஞாநம் பிறந்து(தவன்) ஸர்வேஸ்வரன் திருவடிகளை உபாய உபேயங்களாகப் பற்றி உஜ்ஜீவிக்க வேண்டும்.

பர தத்த்வ நிரூபணம் -பரதத்த்வமாவது-ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் சேஷியுமான ஸ்ரிய:பதி இவன் ஸ்வத:ஸர்வஜ்ஞனாய், ஸர்வக்தியாய், பரம காருணிகனாய், ஸர்வ ஸரண்யனாய், பரமோதாரனாய், மோக்ஷ ப்ரதனாய்,-முக்த ப்ராப்யனாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார பாஸ்ரய (திவ்ய மங்கௗ) விக்ரஹ விஷ்டனாயிருக்கும்.

இவனை ஒழிந்தவை அவர தத்த்வம். இது சேத மென்றும்,-அசேதநமென்றும் இரண்டு வகையாயிருககும்.

சேதந நிரூபணம் -சேதநமான அவர தத்த்வம் பரிச்சிநமான அஹமர்த்தம்)-இதற்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் பராயத்தங்களாயிருக்கும். இது பத்த முக்த
நித்ய ரூபத்தாலே த்ரிவிதம். பத்தராவார்-ஸம்ஸரிக்குமவர்கள்.-முக்தராவார் – ஸம்ஸாரம் கழிந்தவர்கள். நித்யராவார்-ஒரு காலத்திலும் ஸம்ஸாரமில்லாத நித்யஸூரிகள்.

அசேதந நிரூபணம் -அசேதநமாவது அறிவில்லாத வஸ்து. அசேதந த்ரவ்யம் த்ரிகுணம் என்றும், காலம் என்றும், த்தஸத்த்வம் என்றும், தர்மபூத ஜ்ஞாநம் என்றும் சதுர் விதமாயிருக்கும்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது ஸத்த்வாதி குணத்ரயாஸ்ரயமான த்ரவ்யம். இது ப்ரக்ருதி விக்ருதி விபாகத்தாலே இருபத்து நாலு வகையாய் பகவல்லீலார்த்தமாக
க்ஷேத்ரஜ்ஞருக்குக் கார்ய கரணாதி ரூபேண பரிணமித்து பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளைப் பண்ணும்.

காலநிரூபணம்-காலமாவது-க்ஷணாதி விபாகத்தையுடைத்தாய் ஸர்வ கர்த்தாவான ஈஸ்வரனாலே ஸஹ காரியாக ஸ்வீக்ருதமாயிருக்கும் த்ரவ்யம்,

சுத்தஸத்த்வ நிரூபணம் –சுத்தஸத்த்வமாவது- ர ஜ ஸ் தமஸ்ஸுக்களின்றிக்கே
ஸத்த்வ குணாஸ்ரயமான த்ரவ்யம்.-இது ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் விக்ரஹாதி ரூபேண விசித்ர (போக்ய)மாயிருக்கும்.

தர்மபூதஜ்ஞாந நிரூபணம் -தர்மபூத ஜ்ஞாநமாவது-பராவராத்மாககளுக்கு ஸ்வாத்மாவையும், ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்களையும் ப்ரகாசிப்பிக்கவற்றான ஜ்ஞாநம். இந்த ஜ்ஞாநத்தாலே ஆத்மாக்களுக்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் உண்டாகின்றன.

முக்தி அடையும் ப்ரகாரம் -பத்தருக்கு நிஷித்த காம்ய கர்த்ருத்வம் ஸம்ஸார ஹேது,
தத்த்வஜ்ஞாநமூல நிவ்ருத்தி தர்ம கர்த்ருத்வம் மோக்ஷ ஹேது.
பத்தன் முன்பு பண்ணின பந்தகங்களுக்கெல்லாம் தன் அதிகாராநுகுணமாக ப்ரபத்த்யாதி
ப்ராயசித்தம் பண்ணி, மேல் அபராதம் பண்ணாதே ப்ராரப்த கர்மத்தையும் ஒரு வழியாலே கழித்து முக்தனாம்.

முத்திக்கு அருள்சூட மூன்றைத் தெளிமுன்னம்
இத்திக்கால் ஏற்கும் இதம்.

ோக்ஷத்திற்குக் காரணமாகிய பகவானுடைய க்ருபையை சிரஸா வஹிக்க முதலில் சித், அசித் , ஈச்வரன் என்கிற மூன்று தத்த்வங்களையும் அவைகளின் அஸாதாரண தர்மங்களுடன் நன்றாகத் தெரிந்துகொள், இந்த வழியாக உபாயம் அநுரூபமாக உண்டாகும்.

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ தத்த்வ பதவீ முற்றிற்று.

————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –