ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சுளகம் என்ற சொல்லுக்கு உள்ளங்கை என்று அர்த்தமாகும்.. -அசேதநம் - சேதநன் - ஈச்வரன் என்னும் தத்துவங்களைப் பற்றிய விஷயங்களை உள்ளங்கையில் வைத்தாற் போல் எளிதில் காட்டுவதால் இந்த ரஹஸ்யத்திற்கு இப்பெயர் வந்தது -
ஸ்ரீ மந் நாராயணன் திருவடிகளே சேதநர்க்கு உபாயமாகனும் -அதனால் வரும் பலனாகவும் ஆகும். இவ்வெண்ணத்துடன் அவன் திருவடிகளைப் பற்ற வேண்டுமானால் முதலில் மூன்று தத்துவங்களைப் பற்றிய உண்மைகளை விரிவாய் அறிய வேண்டும். இவற்றை அறிந்தால் மட்டுமே சில விபரீத ஜ்ஞாநங்கள் ஒழியும். அவையாவன - (1) சரீரத்திலும் ஆத்மா வேறு பட்டிருக்கும் உண்மையை அறியாமல் சரீரத்தையே ஆத்மாவராகக் கருதுதல். (2) எம்பெருமானுக்கு அடிமையாக இருக்கும் ஆத்மாவை ஸ்வதந்த்ரனாக நினைத்தல். மூன்று தத்துவங்களையும் நன்கு அறிந்தால் தான் இந்த விபரீத எண்ணங்களெல்லாம் ஒழியும்.
அசேதந வஸ்து மூவகைப்படும். (1) த்ரிகுணம் (2 காலம் -(3) சுத்த ஸத்துவம். இந்த மூன்றுக்கும் அறிவு கிடையாது. ஆதலால் அசேதநமாகும்.
தர்மபூதஜ்ஞாநத்தின் நிலை -இங்கு ஒரு கேள்வி - ஜீவனிடம் உள்ள அறிவைத் தர்ம
பூதஜஞாநம் என்று கூறுகின்றோமே! அதற்கும் அறிவு இல்லையே! அறிவுக்கு ஒர் அறிவு ஏது? ஆதலின் அதுவும் ஒர் அசேதந வஸ்துவாய் உள்ளதே! இந்த மூன்றைப் போல் அதையும் அசேதந வஸ்துவில் சேர்த்து நான்காகக் கூற வேண்டாமா? என்று
அசேதநங்களை விளக்குவதன் பயன
இந்த மூன்றை மட்டும் பிரித்து விளக்குவதன் காரணத்தை ஆராய்வோம். திரிகுணம் என்னும் ப்ரக்ருதியைப் பற்றி விளக்கினால் இருபத்தைந்தாவது தத்துவமாகிய ஜீவனைப் பற்றி விளக்கமாய் அறியமுடியும். அந்த ப்ரக்ருகியின் மாறுபாடாகிய
சரீரத்தினும் ஜீவனுக்கு வேறுபாடு தெரியவேண்டுமன்றோ!
இவ்வாறே காலத்தைப் பற்றிய விளக்கம் தெரிந்தால்தான் இம்மைச் செல்வம் நெடுங்காலம் நிலைக்கக்கூடியதன்று என்ற விவேகம் ஏற்படும். மேலும் இந்தக் காலத்திற்குக் கட்டுப்படாத பரமபதத்தில் ஆசை உண்டாகும். மேலும் அந்த அந்தக் காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களை உரிய காலத்தில் செம்வதற்கு எண்ணம்
கொள்ளவும் காலத்தைப் பற்றிய விளக்க அறிவு பயன்படும். இங்ஙனமே சுத்த ஸததுவததைப் பற்றிய விரிவான அறிவு உபாயமும் பலனுமாய் நிற்கும் எம்பெருமானுடைய திருமேனி முதலியன சுத்த ஸத்துவ மயமாயிருப்பதை நன்கு அறியப் பயன்படும். இந்த மூன்று அசேதநங்களின் விளக்க அறிவு பயன்படுமளவுக்குத் தர்மயூதஜ்ஞாநத்தின் விளக்கம் பயன்படாதாகையாலும் அதை இந்த மூன்று அசேதநங்களுடன் சேர்க்கவில்லை.
ஸத்துவம் - ரஜஸ் - தமஸ்! என்னும் மூன்று குணங்களுக்கும் இருப்பிடமான ப்ரக்ருதி, தரிகுணம் என வழங்கும். இந்த ப்ரக்ருதி சேதநர்களுக்குப் பகவானுடைய ஸ்வரூபத்தைக் காட்டாமல் மறைக்கின்றது. இன்னும் பல தீங்குகளையும் விளைவிக்கின்றது. -ஸத்துவம் - இது உயர்ந்த குணம். இது சேதநருக்கு
வஸ்துக்களின் உண்மையான நிலையைக் காட்டும். மனிதன் ஸுகம் பெறுதற்கும் காரணமாகும். இந்தக் குணம் சிலருக்கு . மிகவும் அதிகமாகி விட்டால் மோக்ஷத்துக்குச் சாதனமான” செயலைச் செய்யத் தூண்டி உதவி புரியும்-ரஜஸ் என்பது நடுத்தரமான ஒரு குணம். இது சேதநருக்கு ஆசை - துன்பம் - விபரீத ஜ்ஞாநம் முதலியவற்றை உண்டாக்கும். தமஸ் என்பது இழிவான குணம்.
இது மனிதருக்குக் கவனமில்லாமை - சோம்பல் - உறக்கம் - அஞ்ஞாநம் முதலியவற்றைத் தரும்.இந்த மூன்று குணங்களும் ப்ரக்ருதியில் ஏற்றக் குறைவின்றி
ஸமமான அளவுக்கு இருக்கும் ஸமயமே மஹாப்ரளயமாகும். ஸ்வதந்தரனான எம்பெருமான் ஸங்கல்.்பித்தால்தான் இம்மூன்று குணங்களும் ஸமமான அளவுக்குச் சேரும். எப்பொழுது அவன் ஸங்கல்பிப்பான் என்பதைச் சாஸ்தரம் கூறியுள்ளது. அந்த
ஸங்கலபத்துக்கு அவனே காலத்தைக் குறிப்பிட்டுக் கொள்வான்.இவ்வாறே இந்த மூன்று குணங்களும் ப்ரக்ருதியில் சில ஸமயத்தில் ஒன்றுக்கொன்று ஏற்றக் குறைவாய் இருக்கும். இந்த ப்ரக்ருதி அப்பொழுதுதான் மஹாந் அஹங்காரம் முதலிய
மாறுபாடுகளை அடைகின்றது. அப்பொழுது தான் உலகில் ஸ்ருஷ்டி (படைப்பு) ஏற்படுகின்றது. நம் சரீரத்தில் வாதம் - பித்தம் - கபம் என்ற தாதுக்களில் ஒன்று குறைவதும் மற்றொன்று கூடுவதுமாய் இருக்கவில்லையா? அவ்வாறே ப்ரக்ருதியில் இம்மூன்று குணங்களுள் ஒன்று ஏறுவதும் மற்றொன்று இறங்குவதுமாய் இருப்பதுண்டு. அப்பொழுதுதான் ப்ரக்ருதி பல வஸ்துக்களாய் மாறுபாட்டை யடைகின்றது. இவ்வாறு குணங்களில் ஏற்படும் ஏற்றச் சுருக்கங்களுக்கு அளவேயில்லை.
முற்கூறிய மூன்று குணங்களும் ஸமமான நிலையில் இருக்கப் யெற்ற வஸ்துவே மூல ப்ரக்ருதி என வழங்குகின்றது. இந்த மூலபரக்ருதிக்கு அறிவு கிடையாது; அழிவு கிடையாது; பிறர் பயனுக்காகவே ஏற்பட்டது. எப்பொழுதும் மாறுபாடு அடைந்து
கொண்டேயிருப்பது. ஸ்ரீவைகுண்டம் தவிர மற்ற இடங்களில் இது இல்லாத இடம் இல்லையென்னலாம்படி எங்கும் பரவியுள்ளது. இந்த ப்ரக்ருதி மிவும் ஸூக்ஷமமான சில மாறுபாட்டை அடையும்போது அதற்குத தமஸ் முதலிய சில பெயர்ப்
பிரிவுகளைச் சுருதி சொல்லுகின்றது.
இந்த ப்ரக்ருதி பல்வேறு வஸ்துக்களாய் மாறு படும்போது வயக்தமெனப் பெயர் பெறும். ஒரே வகையான மாறுபாட்டை அடையும்போது அவயக்தமெனப் பெயர் பெறும். இந்த ப்ரக்ருதி மாறுபடும் நிலையில் வயக்தமெனப் பெயர் கொண்டு மஹாந் முதல் ப்ருதிவீ வரை உள்ள இருபத்துமூன்று தத்துவமாக மாறும்.
பரக்குதியின் முழுப் பகுதியும் இப்படி இருபத்து மூன்று தத்துவங்களாக மாறுவதில்லை. அதில் ஒரு பகுதியே இப்படி மாறுகின்றது. மற்ற பகுதி மாறாமல் அப்படியே இருந்து கொண்டிருக்கும். ப்ரக்ருதியில் மற்ற வஸ்துக்களாக மாறுபடும் பகுதி கடலில் அலைகளையுடைய பகுதி போன்றதாகும். மாறுபடாமல்
அப்படியே நிற்கும் பகுதி கடலில் அலையேயில்லாத இடம் போன்றதாகும். இப்படி மஹாத் முதலிய மாறுபாட்டை அடையாமல் அப்படியே நிற்கும் ப்ரக்ருதியின் பகுதியிலும் கூட ப்ரளய நிலையில்யோல் மிகவும் ஸு்க்ஷூமமாய் நமக்குப்
புலப்படாதனவாய் ஒரே வகையான மாறுபாடுகள் இருந்து கொண்டேயிருக்கும்.
இப்படி பரக்குதியில் ஸத்துவம் - ரஜஸ் - தமஸ் என்னும் மூன்று குணங்களின் ஏற்றச் சுருக்கங்களால் ஏற்படும் மாறு பாடுகளில் முதல் மாறுபாடு மஹாந் என்பது. ஜீவனுக்கு நிச்சயவடிவமான ஞானத்தை மநஸ்ஸுதான் உண்டாக்குகின்றது.
அப்பொழுது இந்த மஹாந் மனத்துக்குத் துணையாயிருக்கும். ஆதலால் இநத மஹாந் புத்தி என்று வழங்கப்பெறும். இந்த மஹானும் தன்னிடம் உள்ள குணத்தைக் கொண்டு மூன்று வகைப்படும். மஹானில் ஸத்துவகுணம் அதிகமாயிருந்தால்
ஸாத்துவிக மஹாந் என்றும், ரஜோ குணம் மிகுந்திருந்தால் ராஜஸ மஹாந் என்றும், தமோ குணம் அதிகமாயின் தாமஸ மஹாந் என்றும் அழைக்கப்படும்.
இந்த மஹானிலிருந்து பிறக்கும் தத்துவம் அஹங்காரம் என்பது. இதன் செயல் வருமாறு - ஜீவனிலும் வேறுபட்ட சரீரத்தையே ஆத்மாவாக நினைத்து அதில் நான் என்ற எண்ணத்தை மனம் உண்டாக்குகின்றது. அப்பொழுது மனத்துக்கு இந்த அஹங்காரம் துணை புரிகின்றது. அதனாலேயே இதற்கு அஹங்காரம் என்ற பெயர் வந்தது. இந்த அஹங்காரமும் தனக்குக் காரணமான மஹான் போலேஸாத்துவிகம் - ராஜஸம் - தாமஸம் என்று குணங்களின் மிகுதி குறைவுகளைக் கொண்டு
மூவகைப்படும். இவற்றுள் ஸாத்தவிக அஹங்காரத்தினின்று இந்திரியங்கள் பிறக்கின்றன. தாமஸ அஹங்காரத்தினின்று பின் தரும் விளக்கத்தின்படி பூதங்கள் பிறக்கின்றன. இந்த இரண்டு அஹங்காரங்களும் தத்தம் காரியங்களைப் பிறப்பிக்கும்போது ராஜஸ அஹங்காரம் இவ்விரண்டுக்கும் தூண்டித் துணை புரியும்
ஸாத்துவிக அஹங்காரத்தினின்று பதினொன்று. இந்திரியங்களும் பிறக்கின்றன. இந்த்ரியங்கள் உள் இந்திரியங்களென்றும் புற இந்திரியங்களென்றும் இருவகைப்படும். -உள் இந்திரியமென்பது மனம்தான். இந்த மனம்
ஸம்ஸாரலோகத்தில் உள்ள சேதநர்கள் ஒன்றைச் செய்ய ஸங்கல்பிப்பதற்கும் ஒன்றை நினைத்தற்கும் மற்றும் சில எண்ணங்கள் உண்டாவதற்கும் காரணமாயிருக்கும். வெளி இந்திரியங்கள் தத்தம் செயலைச் செய்ய இந்த மனம் துணையாய் நிற்கும். உலகில் மனிதனுக்கு நிச்சயமான எண்ணம் உண்டாகின்றதன்றோ! அந்த எண்ணத்துக்கு மனம்தான் காரணமாகின்றது. அப்பொழுது மனம் புத்தி என்று பெயரால் வழங்கும். மனிதன் ஒன்றை வேறொன்றாகத் தவறிக் கருதுகின்றான். அதற்கும் மனம் தானே காரணம்! அந்த நிலையில் மனம் அஹங்காரம் என்ற பெயர் பெறுகின்றது. மனிதன் ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசிக்னெறான். இந்த ஆலோசனைக்கும் மனமே காரணம். இந்த நிலையில் மனம் சிததம் என்று
அழைக்கப்பெறும்.
ஜஞாநேந்திரியங்கள் ஐந்தும் தத்தும் செயலைப் புரியும் போது அவற்றின் சக்தியை ஐந்து பூதங்களும் வளர்த்துப் போஷிக்கின்றன. காதுக்கு ஆகாய மம். ஸ்பரிசேந்திரியத்துக்கு வாயுவும், கண்ணுக்குத் தேஜஸ்ஸும். நாவுக்கு ஜலமும், மூக்குக்குப் பூமியும் துணைநின்று அவ்விந்திரியங்களின் சக்தியை வளர்க்கின்றன. இவ்வாறே உள்ளிந்திரியமாகிய மனத்துக்குப் பூமி என்னும் பூதம் போஷகமாயுள்ளது. ப்ராண வாயுவை ஜலம் போஷிக்கிறது. வாக்குக்குத் தேஜஸ் போஷகமாகும்.
மஹாந் என்ற தத்துவம் தொடங்கி ப்ருதிவி வரையில் உள்ள எம்பெருமானது படைப்பு ஸமஷ்டி ஸ்ருஷ்டியெனப்படும். இந்த மஹான் முதலிய தததுவங்களின் பகுதிகளைக் கொண்டு செய்யப்படும் படைப்பு வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்.
சுத்த ஸத்துவத்தின் உருவத்தைப் பற்றிச் சில கருத்துவேற்றுமைகள் உண்டு.
அவையாவன - சிலர் இந்தச் சுத்த ஸத்துவத்தை ப்ரக்ருதியையும் காலத்தையும் போல ஜடம் என்கின்றனர். அதாவது - தானே பரகாசிக்காமல் வேறொன்றால் புலப்படுத்த வேண்டியதாயுள்ள தென்கின்றனர். சிலர் சுத்த ஸத்துவத்தை ஸ்வயம்
ப்ரகாசமென்கின்றனர். அதாவது - இதைக் காண்பதற்குச் சாதனமாய் வேறொன்றும் வேண்டியதில்லையென்றும் தானே ப்ரகாசிததுக் கொண்டிருக்குமென்றும் கூறுகின்றனர். தர்மபூதஜ்ஞாநம், ஜீவாத்மா, அவனுடைய தர்மபூதஜ்ஞானம், சுத்த ஸத்த்வம் ஆகிய இவையெல்லாம் ஸ்வயம்ப்ரகாசம் என்று தேறுகின்றது. ஆத்மா *நான்” என்று எப்பொழுதும் தோன்றிக் கொண்டேயிருப்பதால் இதை அறிய வேறு ஞானம் வேண்டியதில்லை. ஆதலால் _ஆதிமா ஸ்வயம்ப்ரகாசம். ஆத்மாவிடம் உள்ள ஞானம் தர்மபூதஜ்ஞாநமெனப்படும். இந்த ஞானம் தன்னை அறிய வேறொரு ஞானம்
வேண்டாதபடி தானே ப்ரகாசிப்பதால் இதுவும் ஸ்வயம்ப்ர காசம் என்னப்படுகின்றது. இவ்வாறே சுத்த ஸத்துவமும் தன்னை அறிய வேறொரு ஞானம் வேண்டாதபடி தானே ப்ரகாசிக்னெறது. ஆதலின் இதுவும் ஸ்வயம் ப்ரகாசம். ஆக ஆத்மாக்களும் தர்மபூத ஜ்ஞாநமும் சுத்த ஸத்த்வமும் ஸ்வயம் ப்ரகாசம் என்ற முறையில் ஒற்றுமையுடையன.
ஆயினும் ஆத்மாவையும் தர்மபூதஜ்ஞாநத்தையும் காட்டிலும் சுத்த ஸத்துவத்துக்குச் சல வேற்றுமைகளும் உண்டு. இந்த வேறுபாடுகள் சாஸ்த்ரங்களால் நிச்சயிக்கப் பட்டனவாகும். உதரஹரணமாம் - ஆத்மாவுக்கு மாறுபாடு கிடையாது. சுத்த : ஸத்துவம் வேறொரு வஸ்துவாய் மாறுபாட்டை அடைவது. தர்ம பூதஜ்ஞாதம் மற்றொரு
வஸ்துவைக் காட்ட வல்லது. சுத்த ஸத்துவம் தன்னை மட்டும் காட் டுமேயன்றி மற்றொரு வஸ்துவைக் காட்ட வல்லதன்று. இப்படி சிற்சில வேற்றுமைகளையும் சாஸ்தரமே வரையறுத்துள்ளது -ஆத்மா, தான் புலப்படுமேயன்றி மற்ற வஸ்துவைக் காட்டாது. தர்மபூதஜ்ஞாநமோ தானே புலப்படுவதுடன் மற்ற வஸ்துவையும் காட்ட வல்லது.
ஆத்மா தான் புலப்படுவதால் வரும் பயனைத் -தானே பெறும். தர்மபூத ஜ்ஞாநம் தான் புலப்படுவதால் வரும் பலனைத் தான் அடைய முடியாது. அசேதநம்தானே! ஆத்மாவுக்குச் சுருக்கமோ மலர்ச்சியோ கிடையாது. தர்மபூதஜ்ஞாநம் சுருங்குவதும் மலருவதும் உண்டு. இந்த வேற்றுமைகளையும் சாஸ்தரம் , வலியுறுத்திக் கூறுவதால் ஏற்றுக் கொண்டேயாக வேண்டியிருக்கன்றதன்றோ! இவ்வாறே இந்த இரண்டிலும் காட்டிலும் இந்தச் சுத்த ஸத்துவத்திற்குக் ழ்க் கூறியவாறு லை வேற்றுமைகளையும் முன் கூறிய ப்ரமாணங்களை ஒத்த ப்ரமாணங்கள் வலியுறுத்திக் கூறுவதால் இசைந்தேயாக வேண்டும். -
சுத்த -ஸத்துவத்தின் தன்மைகள் நமக்கு மிகவும் அநுகூலமாயிருப்பதால் “சுத்த ஸத்துவத்தை ஆநந்தமயம்' என்றும் கூறுவர். இது எம்பெருமானுடைய ஞானம் - சக்தி - பலம்: ஐச்வர்யம். --வீர்யம் - தேஜஸ் ஆகிய ஆறு குணங்களும்! நமக்குப் புலப்படும்படி செய்வதால் ஷாட்குணயமயம் என்றும் அழைக்கப்படும்.
வாத்மாவைப் பற்றிய விளக்கத்தை ஸ்ரீ ஆளவந்தார் தாம் அருளிச் செய்த ஸித்தித்ரயத்தில் ஆத்மஸித்து என்ற பகுதியில் "தேஹேந்தரிம: என்று தொடங்கும் சுலோகத்தில் அருளிச் செய்தார் -தேறஹேந்த்ரிய மந: ப்ராணூ.ப்யோ 2ந்யோ 2நந்யாஸாததந: நித்யோ வ்யாபீ ப்ரதிக்ஷேத்ரமாத்மா பிந்ந: ஸ்வதஸ்ஸு-இதற்குச் சுருக்கமான பொருள் வருமாறு - ஜீவாத்மா, சரீரம் - இந்தரியம் - மநஸ் - ப்ராண வாயு - தர்மபூதஜ்ஞாநம் இவற்றிற காட்டிலும் வேறுபட்டவன். தானே ப்ரகாரிப்பவன். அழிவற்றவன; எந்த அசேதநத்திலும் உள்ளே புகவல்லவன். சரீரம்தோறும்
வேறுபட்டவன். இயற்கையில் ஸுகஸ்வரூபனும் ஸாகத்தைப் பெறத் தகுதி யுடையவனுமா யிருப்பவன்.
எம்பெருமானுக்கு இரண்டு வகைப்பட்ட தன்மைகள் உண்டு. (1) ஸ்வரூப நிரூபக தர்மங்கள் (2) நிரூபித ஸ்வரூப விசேஷணங்கள்.-ஸ்வரூப நிரூபகங்களாவன - ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை எந்தத் தன்மைகளையுடையதாகக் கூறியே விளக்கினாலன்றி அந்த வஸ்துவை அறிய முடியாதோ அந்தத் தன்மைகள் எம்பெருமானுக்கு (1) ஸத்யத்வம் (2) ஜ்ஞாநத்வம் (3) அநந்தத்தவம் (4) ஆநந்தத்வம் (5) அமலத்வம் என்னும் ஐந்து தன்மைகளும் ஸ்வரூப நிரூபக விசேஷணங்கள். எம்பெருமானைப் பற்றி அறிய முற்படும் யோது இந்தத் தன்மைகளை அறிந்தே இவற்றுடன் கூடியவனாக அவனை உணர வேண்டும். இந்த ஐந்தையும் சேர்க்காமல் அவன் ஸ்வரூபத்தை மட்டும் அறியமுடியாது.
(1) ஸத்யத்வம் - எப்பொழுதும் மாறுபடாது ஒரே நிலையில் நிற்றல்.
(2) ஜ்ஞாநதவம் - எப்பொழுதும் குறைவுபடாத ஞான வடிவனாயிருக்கும் தன்மை.
(3) அநந்தத்வம் - *இங்கு தான் இருக்கின்றான்? என்று தேசததாலும், இப்பொழுது தான் இருக்கின்றான்? என்று காலத்தாலும் இந்த வஸ்துவின் அந்தர்யாமியாகத் தான் இருக்கின்றான், என்று வஸ்துவினாலும் அளவிட முடியாதபடி எவ்விடத்திலும் எக்காலத்திலும் எந்த வஸ்துவையும் சரீரமாகக் கொண்டு நிற்கும் தன்மை.
4) ஆநந்ததவம் - ஆநந்த ஸ்வரூபனாய் நிற்றல்-(5) அமலத்வம் - தோஷங்களில்லாத தன்மை
நிரூபிதஸ்வரூபவிசேஷணம் - ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை விளக்கிய பின் அதன் பெருமை புலப்.படுவதற்குப் புகழ்ந்து பேசும் குணங்கள். முற்கூறிய ஐந்து குணங்களு டனேயே எம்பெருமானை விளக்கிய பின் அவன் பெருமையை அதிவதற்காக அவனிடம் உள்ள ஜ்ஞாநம் - சக்தி முதலிய குணங்களும் இவற்றின் உட்பிரிவுகளான ஸெளசீல்யம் (மிக மேம்பட்டவன் தாழ்ந்தவர்களோடு இடையீடின்றிக் கலந்து பழகும் தன்மை) முதலிய தன்மைகளும் கூறப் படுகின்றன. இவையெல்லாம் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாகும். இக்குணங்களின் இலக்கணங்களையும் இவை பயன்படும் முறை முதலியவற்றையும் விரிவாக அறிய வேண்டுமானால் சாஸ்த்ரங்களின் உதவியை நாடிக் கொள்க.
ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில் முப்பத்தொன்ப; விபவரூபங்களுக்கும் பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன அவையாவன - (1) பத்மநாபன் (2) ஸநத்குமாரன் (8) தருவ
(௧) அநந்தன் (5) சக்த்யாத்மா (6) மதுஸூதநன் (7) கபில (8) விச்வரூபன் (9) விஹங்கமன் (10) க்ரோடாதம (12) படபாவக்த்ரன் (12) தர்மன் (74) ஹயக்ரீவன் (14) ஹம்ஸ (15) மத்ஸ்யம் (16) கூர்மம் (17) அம்ருநாூாஹரணன் (18) வராஹ
(19) ந்ருஸிம்ஹன் (20) ராஹுஜித (21) காலநேமிக்நன் (22) பா ஜாதஹரன் (23) தத்தாத்ரேயன் (24) வடபத்ரசாயி (25) வாமன (26) த்ரிவிக்ரமன் (27) நரநாராயணர் (28) ஹரி (29) நாரத (30) ப்ருது (31) வ்ருஷபன் (22) தந்வந்தரி (83) வ்யாஸ
(34) பாதாளசயநன் (35) பரசுராமன் (36) ராமன் (67) பலராம (38) க்ருஷ்ணன் (39) கல்கி என்பன.
எம்பெருமானுடைய அவதாரங்களைப்பற்றிய ஆறு ரஹஸ்யங்கள் உண்டு. அவையாவன (3) எம்பெருமானுடைய அவதாரம் ஒவ்வொன்றும் இந்த்ரஜாலம் போலன்றி உண்மையாயிருத்தல் (2) அவதாரதசையிலும் எம்பெருமானுக்கு
இயற்கையாயுள்ள தன்மைகளை விடாதிருக்கப் பெறுதல் (3) அவ தாரத்திலும் உள்ள அவன் திருமேனி! ரஜஸ் - தமஸ்ஸுக்களின் ஸ்ம்பந்தமேயில்லாது சுத்தஸத்துவமயமாகவேயிருத்தல் (4) அவன் இக்கர்மபூமியில் அவதரிப்பதற்குக் கர்மம் முதலியவனவன்றின் தன் ஸங்கல்பமே காரணமாயிருத்தல் (5) பூமியில் தர்மம் குறைந்து அதர்மம் தலையெடுக்கும்யபேோது அவதரிக்கும் தன்மை (6) ஸாதுக்களை ரக்ஷிப்பதே அவதாரத்திற்குப் பலனாயிருத்தல் என்பன.
எம்பெருமானுடைய எட்டு நிலைகள் -(1) கர்த்தா (2) ப்ரேரகன் (3) அநுமந்தா (4) ஸஹகாரி (5) ஸாக்ஷி! (6) பலப்ரதன் (7) பலி (8) உதாஸீநன் என்று அந்த அந்த நிலைகளில் பெயர் யெறுகின்றான்.-கர்த்தா - வஸ்துவினுள் புகுந்து படைப்பு
முதலியவற்றைச் செய்பவன். -ப்ரேரகன் - ஜீவனுக்கு அறிவைக் கொடுத்து ஒரு
செயலைச் செய்யுமாறு ஏவுபவன்.-அநுமந்தா - சேதநன் செயலைச் செய்யும்போது
அதைச் செய்விப்பவன்.-ஸஹகாரி - சேதநன் செய்யும் செயலில் தான்
யெரும்பகுதியை ஏற்றுத் துணை செய்பவன். -ஸாக்ஷி-சேதனன் செய்யும் செயலை நேரில் பார்த்துக் கொண்டிருப்பவன்.- பலப்ரதன் - சேதநன் செயல்களுக்குப் பலனை
அளிப்பவன்.-பலி - அச்செயலின் பலனை முக்கியமாய்ப் யெறுமவன்-உதாஸீநன் - சேதநன் செய்யும் செயலில் தான் விசேஷமான தொடர்பற்று ப் பொதுக் காரணமாக இருப்பவன்.
—————————————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply