ஸ்ரீ மணவாள மா முனிகள் திருவடிகளில் ஆஸ்ரயித்து
அவரால் ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபி ஷிக்தராய்
அவருக்கு ஸ்ரீ பாஷ்யாதி கிரந்த பிரவர்த்தந கைங்கர்யங்களில் உசாத் துணையாய்
அவருடைய கருணா கடாக்ஷ விசேஷ லஷ்ய பூந்தராய்
யதீந்த்ர ப்ரவணரான அவர் திறத்தில் ப்ராவண்ய அதிசயத்தை உடையராய்
மா முனிகளுடைய ஸ்வரூப ரூப குண விபாவங்களையும் ஸ்ரீ ஸூக்தாதிகளையும் அனுபவித்து
அவ்வநுப ஜெனித ப்ரீதிக்கு போக்கு வீடாக சத முகமாக அவரது வைபவங்களை
இந்த ஸ்தோத்ர முகமாக வெளியிட்டு அருளுகிறார் –
ஆச்சார்ய வைபவ கீர்த்தனம் ஸச் சிஷ்ய காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேது
மா முனிவர்கள் அடியோங்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக உல்லாசத்துக்கும் உஜ்ஜீவனத்துக்கும் ஹேது ஆகும்-
வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணை ரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –
வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால் வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் -குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –
———
கலா நிதி ஸிரோ மணிர் ஜித மநோ பவோ யத் வசஸ்
ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக
ச மே தி சது மங்கலம் வர வரோ முநீ நாம் வர –11-
கலா நிதி -கலைகளை நிதியாக உடைய சந்திரனை
ஸிரோ மணிர் -தலைக்கு அணியாக உடையவரும்
ஜித மநோ பவோ -மன்மதனை ஜெயித்தவரும்
யத் வசஸ் ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி -அமுதம் உண்ணும் தேவர்கள் நதியாகிய
கங்கையை எப்பொழுதும் தரித்து இருக்குமவரான
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக -சிவபெருமானாக இருந்தாலும் –
மூன்று கண்கள் இருப்பதால் -எல்லாரையும் சமமாகப் பார்ப்பதில் இருந்து விலகி உள்ளார் –
எந்த மா முனிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சிஷ்யனோ எனில்
கலா நிதி ஸிரோ மணிர் -கலைகளை நிதியாக உடைய வித்வான்களுள் தலை சிறந்த வனாகவும்
ஜித மநோ பவோ -காமத்தை வென்றவனாகவும்
யத் வசஸ் ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி -மா முனிகளுடைய அமுதம் போன்ற ப்ரவாஹதமான
ஸ்ரீ ஸூக்திகளை -தலையில் -புத்தியில் -எப்பொழுதும் தரித்து இருக்கிறானோ
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக –இப்படி அவன் சிவனாக இருந்தும்-
பவித்ரனாக மங்கள ஸ்வ பாவனாக இருந்தாலும் – பக்ஷபாதம் உள்ள பார்வையில் இருந்து விலகி இருக்கிறான்
ச மே தி சது மங்கலம் வர வரோ முநீ நாம் வர –முனிவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மணவாள மா முனிகள்
மங்களமான வற்றைக் கொடுத்து அருள வேணும் –
மா முனிகளை ஆஸ்ரயித்தவர்கள் காம க்ரோதாதிகள் இல்லாமல் பரி ஸூத்தர்களாய் -பக்ஷபாதம் அற்று விளங்குவதை
ஸ்லேஷ அலங்காரமும் விரோத ஆபாஸ அலங்காரமும் கொண்டு அருளுவதை இந்த ஸ்லோகத்தில் காணலாம் –
இதே போல் மேல் ஸ்லோகங்களிலும் காணலாம் –
—————-
கல்யாண அசல தர்ம பாக குர்யத் ஸம்ஸ்ரிதோ பூதிமாந்
பிப்ரத் ரஸ்ய கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம்
க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே
ஸோ அவ்யாந் நஸ் ஸததம் முனிர் வர வரோ அநந்யார்ஹ தேஜோ நிதி –12-
கல்யாண அசல தர்ம பாக குர்யத் –பொன் நிறமான மேரு மலையின் பண்பான சிவந்த நிறத்தை உடையவரும்
பொன் திகழு மேனி புரி சடை யம் புண்ணியன் -அன்றோ-
ஸம்ஸ்ரிதோ பூதிமாந் பிப்ரத் ரஸ்ய -ஒப்பற்ற நந்தியை வாகனமாக உடையவரும் -விபூதியை அணிந்தவரும் –
கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம் – சந்திரனுடைய குறை யற்ற கலையை நன்கு சிரஸ்ஸால் தாங்குகிறவரும்-
க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே –பொருத்தம் உள்ள பாம்புகளை அணிகலனாக உடையவரும் –
மன்மதனை வென்றவருமான சிவபெருமானுடைய சமான நிலையை –
கல்யாண அசல தர்ம பாக குர்யத் -விவேகாதி சப்தகங்களில் சத்யம் முதலியவற்றைக் குறிக்கும்
கல்யாணத்தில் அசையாத நிலையை உடைய பண்பாளராய்
ஸம்ஸ்ரிதோ பூதிமாந் -ஒப்பற்ற வாக் வன்மையை உடையவராய்
பிப்ரத் ரஸ்ய கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம் க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி-கைங்கர்ய ஸ்ரீ
யாகிய செல்வத்தை உடையவராய் -பலமான குறைவற்ற சமதமாதிகளை ஆபரணமாக உடையவராய்
தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே ஸோ -சிவன் பூதி மான் -விபூதி உடையவன்
மா முனிகளை ஆஸ்ரியத்தவர்களும் பூதி மான் -கைங்கர்ய ஸ்ரீயை உடையவர் –
சிவன் சந்த்ர கலையைத் தரிக்கிறான் -இவர்களோ நிர்மலமான ஞான ரூபமான கலைகளைத் தரிக்கிறார்கள் –
தலை வணங்கி நிர்மலமான ஞான ஒளியைப் பெறுகிறார்கள்
சிவன் நாக பூஷணம் தரித்தவன் -இவர்களோ ஆத்ம குண பூஷண தாரிகள் –
அவ்யாந் நஸ் ஸததம் முனிர் வர வரோ அநந்யார்ஹ தேஜோ நிதி -எந்த மா முனிகளை
ஆஸ்ரயித்தவர் அடைகிறார்களோ அந்த வேறு ஒருவருக்கும் தகுதி இல்லாத தேஜஸ்ஸின் நிதி போன்ற
அழகிய மணவாள மா முனிகள் எப்பொழுதும் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –
விவேகம் விமோகம் அப்பியாசம் கல்யாணம் கிரியை அநவசாதம் அநுத்தர்ஷம் -சாதன சப்தகம்
பக்தி யோக நிஷ்டனுக்கு அடிப்படையான தன்மைகள்
மா முனிகளும் ஆச்சார்ய ஹ்ருதய –99-
விவேகாதிகள் -சமாதிகள் -வளர –
அதாவது –
இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் –
சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன்
எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக ..
( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )
இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –
(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காய சுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் )
என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள
அன்னத்தால் உண்டான காய சுத்தி -(காயம் -அந்தக்கரணம் -மனஸ் )
ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..
ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –
(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் /பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் /
சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )
ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..
நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் )
இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே
விவேக சப்தம் உபசாரனோக்தம்–அன்றிக்கே –
விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில்
ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —
சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் )
காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது )
என்றும் சொல்லுகிற இடங்களிலும் -சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே —
ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு
அடியான அன்ன சுத்தி என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது ..
விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..
யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் —
காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –
அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி
த்யான ஆலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –
ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி-
இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )
கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் – சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே
பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –
கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – -என்கிற படியே –
சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை,அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –
இதில் சத்யம் -பூதஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் .
தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –( தன் நலம் அற்று பிறர் துன்பம் பொறாமை )
தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி
அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல்
அன்றிக்கே
நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .அது இல்லாமை- அநபிதியை
அனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச
தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில்
அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்
சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி-
ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் –
சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது —
அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது –
அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்–
அனுத்தர்ஷம் ஆவது -தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி
தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய
அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –
அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை-
(பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு /அபாஸ்வரம் -தெளிவின்மை /தைன்யம் -வறுமைத்தன்மை )
(பகவத் விஷய சம்ச்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் தானே வேண்டும் –
லௌகிக விஷ உணர்ச்சி கொந்தளிப்பு கூடாது என்றபடி )
இனி–சமாதிகளில் – -அதாவது –
சமம் ஆவது அந்த கரண நியமனம் –
தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம்
சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம -என்கிற இடத்தில்
தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் –
என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..
ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை …
சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-
( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும்
சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே ,
உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..
மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..
ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –
——————
யத் பக்தோ நாபி பூதோ மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி
நாலீ கஸ்தோ க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் யத்வ ஸம் ப்ராப்த பூமா
சாம் ப்ராப்ய அநந்ய லப்யாம் கமல பவ துலா மேததே சத்ய தாமா
ஸோ அவ்யாந்ந ஷாந்தி சிந்துர் நிரவதி மஹிமா ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ –13-
யத் பக்தோ நாபி பூதோ -எந்த மாமுனிகளுடைய பக்தனாக இருப்பவன் உள் வெளி சத்ருக்களால்
பாதிக்கப் படாமல் இருப்பவனும்
மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி -சப்தாதி விஷயாந்தர காமத்தை வென்றானாகவும்
வாக் வந்தமைக்கு ஒரே பாத்திரமாகவும்
நாலீ கஸ்தோ -சத்தியத்தில் உறுதியாக இருப்பவனும்
க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் யத்வ ஸம் ப்ராப்த பூமா -அபவ்ருஷேயமான வேதத்தை வியவஹரிப்பதில்
திறமை மிக்க வாக் வன்மையினால் பெற்ற பெருமையை உடையவனாயும்
சாம் ப்ராப்ய -சத்யத்தினால் பெற்ற காந்தியை உடையவனாயும் இருக்கிறானோ அவன் –
மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி -மன்மதனை அழித்தவனை புத்ரனாகப் பெற்றவரும் -தனது பத்தினியான
சரஸ்வதியின் விலாசங்களை அனுபவிப்பவரும்
நாலீ கஸ்தோ -நாபீ கமலத்தில் இருப்பவரும்
க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் -யத்வ ஸம் ப்ராப்த பூமா நான்கு வேதங்களை ஓத நான்கு முகங்களைப்
பெற்ற பெருமையை உடையவரும்
மேததே சத்ய தாமா-சத்ய லோகத்தை இருப்பிடமாகக் கொண்டவருமான
சாம் ப்ராப்ய அநந்ய லப்யாம் கமல பவ துலா -வேறு எவருக்கும் கிடைத்தற்கு அரிய ப்ரம்மாவுடன் ஒப்பிட்டுச்
சொல்லும்படியான தன்மையைப் பெற்று பிரகாசிக்கிறான்
ஸோ அவ்யாந்ந ஷாந்தி சிந்துர் நிரவதி மஹிமா ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ -பொறுமைக் கடலாக எல்லை அற்ற
பெருமை யுடைய அழகிய மணவாள மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும் –
மா முனிகள் அடியார்கள் சிவனைக் காட்டிலும் வி லக்ஷணர்கள் என்பதை கீழ் இரண்டு ஸ்லோகங்களில்
இதில் நான்முகனுடன் ஒப்பீடு
ந அபி பூத -பாஹ்ய ஆந்த்ர சத்ருக்களால் பரிபவம் இன்ரிக்கே -விஷயாந்தர காமம் அற்று –
ஸ்ரீ ஸூ க்திகள் விலாஸத்துக்கு ஆசிரமாயும் அவற்றை ரசமாக எடுத்திப் பேசுபவராகவும் இருப்பார்கள்
அ லீகம் -பொய்ச் சொல் -அப்ரியமான சொல்
சதுர ஆஸ்யத்வ-நான் மறைகள் ஒதுவதில் சமர்த்த வாக் வன்மை கொண்டவர்கள் –
சத்தியத்தில் நிலை நின்றவர்களாயும் இருப்பார்கள்
அயனோ -நாபி பூதன் -உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் –
மதன மதன க்ருத் -காமனைத் தகித்த அரனை உண்டாக்கியவன் –
வாக் தேவியான சரஸ்வதியின் விலாசங்களை அனுபவிக்கிறார்
நாலீ கஸ்த-நாலீகம் -கமலம் -அதில் இருப்பவர்
சதுர் ஆஸ்யத்வ -நான்கு முகங்கள் கொண்டு நான்மறைகள்
சத்ய தாமா -சத்யலோகத்தில் இருப்பவர்
மா முனிகளின் அடியார்கள் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யாலே வந்த காந்தியும் ப்ரபாவத்தையும் கொண்டவர் என்றபடி –
அபகத மத மாநை அந்திம உபாய நிஷ்டை
அதி கத பரமார்த்தை அர்த்த காமாநபே ஷை
நிகில ஜன ஸூஹ்ருத்பி நிர்ஜித க்ரோத லோபை
வர வர முனி ப்ருத்யை அஸ்து மே நித்ய யோக —
கர்வம் அஹங்காரம் அற்று
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்னும் சரம நிஷ்டையில் உறுதி கொண்டவர்கள்
பூர்ணமாக ஆச்சார்ய கைங்கர்யம் செய்து கொண்டே இருப்பவர்களாயும்
உபயாந்தரங்களை ச வாசனமாக விட்டவர்களாயும்
பக்ஷ பாதம் இன்று அனைவருக்கும் ஸூ ஹ் ருதத்தையே அளிப்பவர்களாயும்
இரட்டைகளை வென்றவர்களாயும் இருப்பார்கள் என்பது அர்த்த வாதம் இல்லையே –
கோயில் கந்தாடை அண்ணன் -பஞ்சு மெத்தை
வானமா மலை ஜீயர் -திருப்பாத ரேகை
இவர்கள் போழ்வாருடன் நித்ய சம்பந்தம் வேணும் என்று பிரார்த்தனை இதில்
சிவனே அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே
அன்று அயனும் அயன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம்
அமர்ந்த செழும் குன்றை -ஆழ்வார்கள் அருளிச் செயல் போல் இங்கும் –
——————-
சிரஸி வஹதாம் யத் பாதாம்ப கலா நிதி மௌளிதா
ஜயதி வரதாச்சார்யா தீ நாம நந்ய சமாஸ்ரயா
ஸ ஹி வர முனிஸ் ஸாஷாந் நாராயணஸ் தத ஏவ தத்
சரண சரணஸ் சர்வே அப் யுர்வ்யாம் தரந்தி பவார்ணவம் –14-
சிரஸி வஹதாம் யத் பாதாம்ப கலா நிதி மௌளிதா –ஓங்கி உலகத்த யுத்தமானது ஸ்ரீ பாத தீர்த்தமான
கங்கையை திருமுடியில் தாங்கும் பரமசிவன் கலா நிதி மௌலியாய் சந்த்ர சேகரனாய் இருக்கிறார் –
ஜயதி வரதாச்சார்யா தீ நாம நந்ய சமாஸ்ரயா -மா முலைகளின் அநந்யார்ஹராய் இருக்கும் வரத குரு
போல்வாருக்கு எல்லாக் கலைகளையும் கற்று அறிந்த தன்மை விளங்குகிறது -வித்வத் சிகாமணிகள் அன்றோ
ஸ ஹி வர முனிஸ் ஸாஷாந் நாராயணஸ் தத ஏவ தத் -மா முனிகளும் ஸாஷாத் நாராயணனே –
பீதகவாடைப் பிரானார் பரம குருவாக வந்து
ஸாஷாத் நாராயணோ தேவ கிருத்வா மர்த்ய மயீம் த நு ம்
மக் நா நுத் தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணி நா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா ஸம்ஸார பய பீருணா -அதனாலேயே
சரண சரணஸ் சர்வே அப் யுர்வ்யாம் தரந்தி பவார்ணவம் –அவருடைய திருவடி சம்பந்திகள் அனைவரும்
சம்சார ஆரணவத்தை எளிதில் கடக்கிறார்கள் –
————————-
ஜலஜ நிலயா காந்தோ அனந்தத் விஜோத்தம சேவித
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத்
மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர –15-
ஜலஜ நிலயா காந்தோ அனந்தத் விஜோத்தம சேவித -ஜலஜம் -சங்கம் -எண்ணற்ற உயர்ந்த
ப்ராஹ்மணர்களால் சேவிக்கப்படுபவரும்
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன -ஜலஜம் -சங்கம் -எப்பொழுதும் தம்மை ஆஸ்ரயிக்க வரும்
நல்ல மனம் உடையவர்களுக்கு சங்க சக்ர இலச்சினை ப்ரசாதித்து ஆள் கொள்பவரும்
தாமரை போன்று விளங்கும் திருக்கைகள் என்றுமாம் -நித்யமாகக் கைப்பட்ட நல்ல தர்சனங்களை உடையவர் என்றுமாம் –
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத் மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர –அவர்களது
சத்ருக் கூட்ட கர்வங்களை அழிப்பவராயும் உள்ள மா முனிகள்
ஜலஜ நிலயா காந்தோ –தாமரையாள் –ஜலஜம் -பத்மம் -பெரிய பிராட்டியாருக்கு இடமாகக் கொண்ட
அனந்தத் விஜோத்தம சேவித –ஆதி சேஷன் பக்ஷி ஸ்ரேஷ்டரான திருவடி போல்வாரால் சேவிக்கப் படுபவனும்
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன -ஜலஜம் -சங்கம் -எப்பொழுதும் சங்கு சக்கரம் தரித்த
திருக்கைகள் உடையவனாயும்
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத்
மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர-தேவர்களின் சத்ருக்களான அசுரர் வர்க்க கர்வங்களை அடக்கி –
பெரிய பிராட்டியார் உகப்புக்கு தக்க கைங்கர்ய ஸ்ரீ யை உடையவரும்
மது கைடபர்களை அழித்த எம்பெருமானுக்கு சமமாக விளங்குகிறார் –
ஜலஜ -நிலய -ஏகாந்த -பாட பேதம் –
பத்மாசினிக்கு அசாதாரணமான பதி
ஜடமான சம்சாரத்தை அழிக்கும் அசாதாரணமான பெரிய ஜீயர் -யதாஜாதரையும் திருத்திப் பணி கொள்ள வல்லவர்
—————
மது ஜித தநுச் சேதி நாலீக வாஸ
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம்
பத்மா வாஸா ஷிதிதர ஸூ தா வாக் சஸீ காந்த பூதை
காந்த்யா காந்தம் ச ஜயது மஹா யோகி காந்தோ பயந்தோ –16-
பத்மா வாஸா -தாமரையாள் -பெரிய பிராட்டியார்
ஷிதிதர ஸூ தா வாக் சஸீ காந்த பூதை -ஹிமவான் புத்ரி சரஸ்வதி சசி தேவி இவர்களின் நாயகர்கள்
மது ஜித -மது சூதனனான நாராயணன்
தநுச் சேதி -சரீரம் அற்ற மன்மதனை அழித்த பரமசிவன்
நாலீக வாஸ -தாமரையில் வசிக்கும் ப்ரம்மா
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம் -தேவர்களால் பிரியத்தோடே ஸேவிக்கப் படுகிற இந்திரன்
மது ஜித தநுச் சேதி நாலீக வாஸ –பிரகாசத்தினால் தேனை வென்ற இனிமையை யுடையதாய் -காம க்ரோதாதிகளை
அழிக்க வல்லதாய் -ந அலீகஸ்தம் -பொய் கலவாத இன் மொழிகளால் -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிப்பதாய் விளங்கும்
யத் வாக் ஜாலம்- தெளிவாலும் காந்தியால் மனோஹரமான மா முனிகளுடைய ஸ்ரீ ஸூ க்திகள்
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம் காந்த்யா காந்தம் ச ஜயது -மஹா லஷ்மீ பார்வதி
சரஸ்வதி சசி தேவிமார் ஆகியவர்களின் நாயகர்களான தேவ ஸ்ரேஷ்டர்களால் பிரியத்துடன் ஸேவிக்கப் படுகின்ற
உத்க்ருத்த -நிரசிக்கப்பட்ட
உத் வ்ருத்த -துர் மார்க்கஸ்தர்
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த –
மா முனிகள் ஸ்ரீ ஸூ க்திகள் இவர்கள் உடன் சாம்யம் இத்தாலே என்றபடி
மஹா யோகி காந்தோ பயந்தோ –மஹா யோகியான மணவாள மா முனிகள் எல்லாரையும் விட சிறந்தவராக விளங்கட்டும்
———————
ஹ்ருத்யா யஸ்ய ஸரஸ்வதீ ஸூவி மலா தாபாந சேஷா நபி
த்ராகுந் மூல யதி ஸ்ருதா அபி பவிநாம் ஸூத்திம் விதத்தே பராம்
பங்க நைதி கதா அபி குத்ர சித் அபி ப்ராப்தா அபி கம்பீ ரதாம்
ஸோ அவ்யாந் மா மதி வேல வைபவ நிதி காந்தோ பயந்தா முனி –17-
ஹ்ருத்யா யஸ்ய ஸரஸ்வதீ ஸூவி மலா தாபாந சேஷா நபி -எவருடைய ஸ்ரீ ஸூ க்தியானது –
சரஸ்வதி நதி போல் மநோ ஹரமானது –
மிகத் தூய்மையானது -ஓன்று விடாமல் எல்லா தாபத்ரயங்களையும் சீக்கிரமாக வேரோடு அழிக்கிறது
த்ராகுந் மூல யதி ஸ்ருதா அபி பவிநாம் ஸூத்திம் விதத்தே பராம் -காதல் கேட்கப்பட்டாலும் சம்சாரிகளுக்கு
மேலான ஸூ த்தியை அளிக்கிறது –
பங்க நைதி கதா அபி குத்ர சித் அபி ப்ராப்தா அபி கம்பீ ரதாம்-மிக கம்பீரமானது –
ஸோ அவ்யாந் மா மதி வேல வைபவ நிதி காந்தோ பயந்தா முனி –எவ்விடத்திலும் எப்பொழுதும் பழுது போவது இல்லை —
எல்லையற்ற பெருமைகளுக்கு நிதியான அந்த மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும்
கம்பீரமான ஆழமான சரஸ்வதி நதியோ சில இடங்களில் பங்கத்தை -அலை எறிதலை -அடையும்
மா முலைகளின் ஸ்ரீ ஸூ க்திகளோ பங்கத்தை -பரிபவத்தை ஒரு போதும் ஓர் இடத்திலும் அடைவது இல்லையே
ஆகவே உத்க்ருஷ்டமானது
ஆத்யாத் மிகாதி மைத்ரேய ஞாத்வா தாப த்ரயம் புத
உத் பன்ன ஞான வைராக்ய ப்ராப் நோத் யாத் யந்திகம் லயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-1-
தாபத்ரயங்களை அறிந்து ஞானம் வைராக்யங்களைப் பெற்றவன் மோக்ஷம் அடைகிறான் –
ஆத்யாத்மிக அபி த்வி வித சாரீரோ மாநஸஸ் ததா
சாரீரோ பஹு பிர் பேதைர் பித்யதே ஸ்ரூயதாம் ச ச -6-5-2-
ஸிரோ ரோக பிரதிஸ்யாய ஜ்வர ஸூல பகந்தரை
குல் மார்சஸ் ஸ்வயது ஸ்வாஸ் சர்ச்ச்யாதி பிர் அநேகதா -6-5-3-
தத் அஷி ரோகாதி சார குஷ்ட அங்கா மய ஸம் ஜ்ஜிதை
பித்யதே தேஹஜஸ் தாபோ மாநஸம் ஸ்ரோதும் அர்ஹஸி -6-5-4-
காம க்ரோத பய த்வேஷ லோப மோஹ விஷாத ஜ
சோக அஸூய அவமான அர்ஷ்யா மாத்சர்யதி மய ஸ் ததா –6-5-5-
மானஸோபி த்விஜ ஸ்ரேஷ்ட தாபோ பவதி நைகதா
இத்யேவ மாதி பிர் பேதைஸ் தாபோ ஹ்யாத் யாத்மிக ஸ்ம்ருத –6-5-6-
பஸூ பக்ஷி மநுஷ்யாத்யை பிசாசா அரக ராஸசை
ஸரீ ஸ் ருபாத் யைஸ் ச ந்ரூணாம் ஜாயதே ச ஆதி பவ்திக –6-5-7-
ஸீதவா தோஷ்ண வர்ஷாம்பு வைத் யுதாதி ஸமுத் பவ
தாபோ த்விஜ வர ஸ்ரேஷ்டை கத்யதே ச ஆதி தைவிக –6-5-8-
ய ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக
விஜிகத்ச அபிபாஸ ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப -சாந்தோக்யம் –8-7-1-
பராம் ஸூத்திம் -என்று ஸ்வரூப ஆவிர்பாவம் இஷ்ட ப்ராப்தியைச் சொன்னவாறு
ஸர்வவித பந்துவாக நம்மாழ்வார் எம்பெருமானையும் ஆளவந்தார் ஆழ்வாரையும்
இராமானுஜர் திருவாய் மொழியையும் அமுதனார் ராமாநுஜரையும் கொண்டது போல்
அண்ணாவும் மா முனிகளின் ஸ்ரீ ஸூக்திகளையே கொண்டு அருளிச் செய்கிறார்
——————–
ஸமிந்தே யத் ஸூ க்திஸ் ஸகல ஸூ மநோ மௌளி வித்ருதா
சிவத்வம் ஸர்வேஷாம் அபி விதததீ ஸ்வாந் வயவதாம்
விதோ ரத்யா ஸன்நா நிரவதிக பூர்த்யா விலசத
ஸதா கங்கா உத்துங்கா ஜயதி ச முனிஸ் ஸூந்தர வர -18-
ஸமிந்தே யத் ஸூ க்திஸ் ஸகல ஸூ மநோ மௌளி வித்ருதா -எவருடைய ஸ்ரீ ஸூ க்திகள் எல்லா
நல்லார்களுடையவும் -தேவர்களுடையவும் சிரஸ்ஸால் தரிக்கப் பட்டு பிரகாசிக்கின்றனவோ
சிவத்வம் ஸர்வேஷாம் அபி விதததீ ஸ்வாந் வயவதாம் -தம்முடைய சொற்களின் பொருள் அறிந்தவர்கள்
அனைவருக்கும் தூய்மையான -மங்களமான தன்மையை -அளித்துக் கொண்டு
விதோ ரத்யா ஸன்நா நிரவதிக பூர்த்யா விலசத-இதுக்கு மேல் எல்லை என்னும் படியான பூர்ணமான
தன்மையினால் சந்திரனை விட பிரகாசிக்கின்றதால்
ஸதா கங்கா உத்துங்கா ஜயதி ச முனிஸ் ஸூந்தர வர –எப்பொழுதும் கங்கையைக் காட்டிலும்
மேன்மை பெற்றவராக -ஸர்வ உத்க்ருஷ்டராய் -மணவாள மா முனிகள் விளங்குகிறார் –
—————
ஸூர்ய ஆனந்த விதாயிநீதி யமுனா காந்தோ பயந்துர் முநே
வாணீவ வ்யவஹார பாக் பவது சாகிம் தாவதா ஸ்யாத ஸமா
ஸூத் தேயம் ந ஹி சா ஸ்வகம் ஸ்ரித வதாம் தாபா ந சேஷா நியம
ஸர்வேஷாம் வி நிவார்ய கர்து மமிதம் ஸ்ரேயஸ் ஷமா நைவ ஸா –19-
ஸூர்ய ஆனந்த விதாயிநீதி யமுனா காந்தோ பயந்துர் முநே வாணீவ வ்யவஹார பாக் பவது சாகிம்
தாவதா ஸ்யாத ஸமா -ஸூர்யனுடைய மகளான யமுனா நதி ஸூர்யனுக்கு ஆனந்தம் கொடுப்பது போல் என்பதால்
நித்ய ஸூரிகளுக்கு ஆனந்தம் அளிக்கும் மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகளைப் போல் வ்யவஹரிக்கத் தக்கதாக ஆகட்டும்
இவ்வளவாலே அந்த நதி இவற்றுக்கு சமமானதாக ஆகக் கூடுமோ
ஸூத் தேயம் ந ஹி சா ஸ்வகம் ஸ்ரித வதாம் தாபா ந சேஷா நியம -இவை பரி ஸூ த்தமானவை –
ஆஸ்ரிதர்களுடைய அனைத்துத் தானங்களையும் போக்கி
ஸர்வேஷாம் வி நிவார்ய கர்து மமிதம் ஸ்ரேயஸ் ஷமா நைவ ஸா –அபரிமிதமான ஆத்ம நன்மையை அடைவிக்கும்
இதற்கு அந்த தூய பெரு நீர் யமுனை நதி கூட சக்தி உடையவள் அல்லவே
———————-
விஹரிதி யமுநா யாஸ் ஸ்ரோத ஸீவாதி ஹ்ருத்யே
வஸஸி மனசி ச ஸ்ரீ மாதவோ யஸ்ய நித்யம்
நிருபம மஹி மாநம் யோகிநம் தம் மஹாந்தம்
நிரவதி குணை காந்தம் சிந்தய ஸ்வாந்த்ய நித்யம் –20-
விஹரிதி யமுநா யாஸ் ஸ்ரோத ஸீவாதி ஹ்ருத்யே
வஸஸி மனசி ச ஸ்ரீ மாதவோ யஸ்ய நித்யம் -யமுனை நதியின்
மிக்க மனோஹரமான பிரவாகம் போல் கண்ணபிரான் எப்பொழுதும் எல்லாருடைய உள்ளத்திலும்
ஸ்ரீ ஸூ க்திகளிலும் விளையாடுகிறானோ -இவையும் கிரீடா ஸ்தானமாகவே இருக்குமே –
நிருபம மஹி மாநம் யோகிநம் தம் மஹாந்தம்
நிரவதி குணை காந்தம் சிந்தய ஸ்வாந்த்ய நித்யம் –ஒப்பற்ற மேன்மையை உடையவரும் –
எல்லையற்ற மனோஹரமான குணங்களை உடையவரும் மஹாத்மாவுமான
மா முனியை மனமே எப்போதும் சிந்தித்து இரு –
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்