ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -31-40-

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணை ரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால் வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் -குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

மஹீ பர குத் ருக் பல ஷபண தஷிணவ் ஜோப்ருத
யதங்கரி சமுபாஸ்ரயா பர ஸூ ராம சாதரம்ய கா
ஜெயந்த் யகில பாபபீ மஹித விஷ்ணு தர்மாந் விதா
ச நோ வர வர முனிர் விதரது ஸ்ரீ யம் சந்ததம் –31-

எந்த மா முனிகளுடைய திருவடியை ஆஸ்ரயித்தவர்கள்
பூமிக்கு பாரமான குத்ருஷ்ட்டி பலத்தை அழிப்பதற்கு சாமர்த்தியம் உடைய தேஜஸ்ஸை உடையராய்
எல்லா பாபங்களைச் செய்வதில் பயந்தவர்களாய்
மிகவும் உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தைப் பற்றியவர்களாய்

பூமிக்கு பாரமான துஷ்ட ஷத்ரியர்களை அழிப்பதில் வல்லமை யுடைய தேஜஸ்ஸை உடையரான
ஸ்ரீ பரசுராமரோடே சமமான தன்மையை உடையவர்களாய் வெற்றி பெறுகிறார்களோ

அந்த ஸ்ரீ மா முனிகள் எப்பொழுதும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை அளித்து அருளட்டும் –

இதில் பாட பேதத்தால் -தாம் வென்ற பூமி முழுவதும் காஸ்யபருக்குக் கொடுத்து விட்டு
மஹேந்திர மலையில் -அர்ணவ நிவாஸம் கொண்டால் போல்
அடியவர்களும் எம்பெருமானுடைய குணக்கடலில் நித்ய வாஸம் பண்ணி
பகவத் குண அனுபவமே நியதமாக பண்ணுவார்கள் –

——————-

ஸஹஜா நக லஷ்மண அந் விதா வஸூ மத்யுத் பவயா ஸ்ரீய உஜ்ஜ்வலா
ரகு வர்ய சமா யதாஸ்ரிதா வர யோகீ ச ஸூபம் தநோ து ந –32-

எந்த மா முனியை ஆஸ்ரயித்தவர்கள்
ஸ்வ பாவிக -உடன் தோன்றிய குற்றம் அற்ற ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணங்களோடே கூடினவர்களாயும்
லஷ்மணா -அந் விதா -இரண்டு பதம் இங்கு -லஷ்மண ந் வித -ராகவன் பக்ஷத்தில் –
பூமியில் உத்பத்தியான செல்வத்தாலும் -ஸ்ரீ கைங்கர்ய ஸ்ரீ யாலும் விளங்குகிறார்கள் –

உடன் பிறந்த குற்றம் அற்ற-பாப ரஹிதரான – இளைய பெருமாளுடன் கூடினவரும்
யாக பூமியில் தோன்றிய ஸ்ரீ சீதாப் பிராட்டியால் பிரகாசிக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு
சமானர்களாய் உள்ளனரோ
தயா ஸாகரமாயும் -சரணாகத வத்சலராயும் -ஸதாச்சார்ய பராயணர்களாயும் –
பெரியோர்களுக்கு விதேயர்களாயும் -இப்படி சிஷ்ய சம்பத்தை உடைய –
அந்த மா முனிகள் நம்முடைய மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

————-

அதிகத பலபத்ராபி க்யயா யத் பாதாப்ஜ ப்ரவண ஜன சமஷ்டயா வாஸூ தேவாக் ரஜஸ்ய
அநி தர ஜன லப்யா லப்யதே சாம்ய லஷ்மீ ச ஜெயது வர யோகீ நிஸ் துலா வேல பூமா –33–

எந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளில் ப்ராவண்யம் உடையவர்களுடைய கோஷ்டியால்
பலம் மங்களம் கீர்த்தி இவை அடையப் படுகின்றனவோ
அதி கத -பல -பத்ர -அபி க்யயா -பஹு வ்ரீஹி ஸமாசார்த்தம் –
எந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளில் ப்ராவண்யம் உடையவர்களுடைய குழாத் தாலே
ஸ்ரீ கண்ணபிரானுக்கு மூத்தவராய் பல பத்ரன் -நம்பி மூத்த பிரான் -உடன்
மற்றவர்களால் அடைய முடியாத சமானமாக ஐஸ்வர்யம் அடையப் படுகிறதோ
ஒப்பற்ற பெருமையை உடைய அந்த மா முனிகள் -சர்வ ஸ்ரேஷ்டராக -வெல்லட்டும்

———————

ஸ தர்ம ஜாத அர்ஜுன சித்த ஹர்ஷ ப்ரத்வம்ஸி பக்ஷ ஷபண ப்ரவீணா
யதாஸ்ரயா கிருஷ்ண துலாம் பஜந்தே பாயாத்ஸ ந காந்த வரோ முனீந்த்ர–34-

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்து இருக்கிறவர்கள்
தர்மத்தோடே கூடின வெண்மையான தூய மனஸ்ஸின் சந்தோஷத்தை அழிக்கிற பக்ஷத்தை
நாஸம் செய்வதில் திறமையை உடையவர்களாய்
அர்ஜுனனுடைய சந்தோஷத்துக்கு அழிவை விளைவிக்கிற துர்யோதனன் முதலிய
துஷ்ட பக்ஷத்தை நாஸம் செய்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸமமான தன்மையை அடைகிறார்களோ
அந்த மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும்
கண்ணன் பக்ஷத்தில் தர்ம ஜாதர் -தர்ம புத்திரர்
அடியார்கள் பக்ஷத்தில் தர்ம ஸமூஹம் –

————————

கலி தோஷம் அசேஷத ஷிதவ் ஷபயன் கல்கி துலா விஹார பூ
யது பாஸ்ரித சஞ்ஜனஸ் ச ந சததம் ஸுவ்மய வரோ அபி ரக்ஷது –35-

எந்த மா முலைகளை ஆஸ்ரயித்த நல்லோர் பூமியில் கலியின் தோஷத்தை ஓன்று விடாமல்
நிஸ் சேஷமாக நாசம் செய்து -க்ருத யுக தர்மத்தை ப்ரவர்த்திப்பிக்கறவர்களாய் -கல்கி அவதாரத்தோடு
சமானமாக விளங்குகிறார்களோ -விஹார பூ -விஹரிக்கும் இடமாய் விளங்குகின்றார்களோ –
இப்படிப்பட்ட சிஷ்ய சம்பத்தை உடைய
அந்த மா முனிகள் எப்போதும் ரக்ஷித்து அருள வேணும்

—————

தசாவதார ஸாம்யத்துக்கு அடுத்து கோயில் திருமலை பெருமாள் கோயில் எம்பெருமான்களோடே
சாம்யம் இது முதல் மூன்று ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

அஹீந போக ப்ரவணஸ் சமிந்தே ஸ்ரீ ரெங்க தாமா கில ரெங்க பர்த்து
சாதர்ம்யமா ஸாத்ய யதங்க்ரி பக்த பாயாத் ச ந ஸுவ்மய வரோ முனீந்த்ர–36-

எந்த மா முனிகளுடைய திருவடிகளில் பக்தி உடையவர்கள்
ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாஸம் செய்பவர்களாய்
ஆதி சேஷன் ஆகிற படுக்கையை அனுபவிக்கிற ஸ்ரீ ரெங்க நாதனுக்கு சமமான பண்பை அடைந்து பிரகாசிக்கிறார்களோ
குறைவற்ற பகவத் அனுபவ போகத்தில் ஆழ்ந்த யோக ஸ்ரேஷ்டரான மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருளட்டும்
அஹீந போகம் -அஹீ -இந-போகம் -அரவரசின் உடலும் என்றும் -அஹீந போகம்-குறைவற்ற போகமும் –

—————

வ்ருஷாசல ஸ்திதம் பஜன் வஹந்ந நாரதம் ஸ்ரீயம்
ஸூ துர் லபாக மாகி லாரத் ததாந கேலி கீர்த்தி மாந்
விபாதி வேங்கடேச வத் யதங்க்ரி சேவிநாம் கண
ச ந ஸ்தநோது மங்களம் வரோ பயந்த்ரு தேஸிக–37-

எந்த மா முனிகளுடைய திருவடியை ஆஸ்ரயித்த குழாம்
தர்மத்தில் அசையாது ஊன்றி இருக்கும் நிலையை அடைந்தாய் எப்பொழுதும் கைங்கர்ய ஸ்ரீயை உடைத்தாய்
கிடைத்தற்கு அரிய சாஸ்திரங்களின் -வேதாதிகள் -அருளிச் செயல்கள் -ரஹஸ்யார்த்தங்கள் –
எல்லா அர்த்தங்களையும் கொடுப்பதில் இன்பம் அடையும் புகழை உடையவர்களாய்
வ்ருஷா சலத்தில் நிலை நின்று இருக்கும் தன்மையை அடைந்து
திருவேங்கட முடையானைப் போல் பிரகாசிக்கின்றதோ
அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை விருத்தி செய்து அருளட்டும் –
வ்ருஷ -அசலம் -ஸ்திதம் -எருது மலை வாஸம் -என்றும்
தர்மம் பேராத நிஷ்டை -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடன் விளங்கா நிற்பவர்கள்

——————–

பக்த அகிலார்த் தாதிக மைக ஹேதும் ஸ்ரீ புண்ய கோட்ய ஆயதனம் யதீயம்
விதந்தி ஸந்தோ வரதே ந துல்யம் வரோ முனிர் நஸ் ச தநோது பத்ரம் –38-

தம்மிடம் பக்தி கொண்டவர்கள் எல்லா அர்த்தங்களையும் அடைவதற்கு ஒரே காரணமும்
கைங்கர்ய ஸ்ரீ யும் -கோடிக்கணக்கான -எண்ணற்ற புண்ணியங்களுக்கு இருப்பிடமும் எவருடையதோ
மா முனிகளை ஆஸ்ரயித்த அந்த நல்லோர்கள்
எண்ணற்ற புண்ணியங்கள் எவருடையதோ அந்த வரதராஜப் பெருமாளோடே சாம்யத்தை அடைகிறார்கள் –
இப்படிப்பட்ட வைபவம் பொருந்திய அந்த மா முனிகள் நமக்கு –
கல்யாண பரம்பரையை -மங்களங்களைப் பெருக்கி அருளட்டும் –

—————————

காந்தம் வரம் ப்ராப்ய ஸதீ மதீ யா மதி
பரஸ்மின் புருஷே விரக்தா
தத் ஸத் குணாஸ் வாதரஸை கலோலா
பதி வ்ரதோ தா ஹரணத்வ மேது –39-

அழகிய மணவாள மா முனிகளையே அடைந்து அடியேனுடைய புத்தியானது
பர புருஷன் விஷயத்திலே விருப்பம் அற்று இருப்பவளாய்
தனது பர்த்தாவின் நல்ல குணங்களையே அனுபவிப்பதிலேயே ஸந்தோஷம் அடைபவளாய் –
ஸதீ -என்று போற்றப்படுபவளாய் -இருக்கும் பதி வ்ரதைக்கு
எடுத்துக் காட்டான தன்மையை அடையட்டும் –

————————–

இது முதல் ஆழ்வார்கள் இடத்திலும் அருளிச் செயல்கள் இடத்திலும்
மா முனிகளின் ஈடுபாட்டின் அதிசயத்தை அருளிச் செய்கிறார்

ஸரஸி க்ருத விஹாரம் த்யான மாத்ரேண பும்ஸாம்
சமித ஸகல தாபே ஹம்ஸ ஸம் ஸேவ்யமாநே
பஜதி முத ம வேலாம் ஸந்ததம் யஸ்ய சேதஸ்
ச பவது வர யோகீ மானஸே மாமகீ நே –40-

த்யானம் செய்வதாலேயே சேதனர்களுடைய எல்லா தாபங்களைப் போக்குபவராயும்
மற்ற பொய்கைகள் ஸ்நானம் செய்ய சில தாபங்களைப் போக்கடிக்கும் –
பொய்கையாழ்வாரை த்யானம் செய்யும் மாத்திரத்திலே சகல தாபங்களும் தானே போகுமே –
பரம ஹம்ஸர் களாலே ஸேவிக்கப் படுபவரான பொய்கையாழ்வாருடைய
ஸ்ரீ ஸூக்தியான முதல் திருவந்தாதியை அனுபவிக்கிற எவருடைய திரு உள்ளம்
எல்லை அற்ற இன்பத்தை அடைகிறதோ
அந்த மா முனிகள் அடியேனுடைய மனஸ்ஸிலே நித்ய வாஸம் செய்து அருள வேணும் –
அடியேனுடைய மனஸ்ஸாகிற ஸரோவரத்தில் மா முனிகள் ஆகிற பரம ஹம்சம் விஹகரிக்கட்டும் -என்றபடி

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading