வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணை ரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –
வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால் வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் -குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –
————–
க்ருத அவகாஹா ஜனதா யதீய சாரஸ் வதஸ் ரோதஸி துங்க பத்ரா
ஸம் ஸேவ்ய மாநா கவி பிஸ் ஸமிந்தே பாயாத் ஸ ந காந்த வரோ முனீந்திர –21-
எவருடைய வாக் வர்ஷா ப்ரவாஹத்தாலே தீர்த்தமாடின சிஷ்ட ஜன சமுதாயம் உயர்ந்த நலமுடையதாக
வித்வத் ஜனங்களால் சேவிக்கப்பட்டு விளங்குகிறதோ
அந்த அழகிய மணவாள மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –
துங்க பத்ரை -உயர்ந்த நன்மை -சஞ்சன ஸமூஹமும் -துங்க பத்ர நதிக்கு சமானம் –
நதியின் பக்ஷத்தில் கவி -நீர்ப்பறவை ஜலசர பஷிகளால் ஸேவிக்கப் படுகிறது என்று பொருளாகக் கடவது –
————-
யத் வாணீம் மதுரா மவாப்ய ஸூதி யஸ் சாகேத தாமாத் யஜஸ்
மாயா சங்க விதூ ரகாஸ் ச ஸூத ராம் ஸந்த்யக்த காஸ்யாஸ் ரயா
காஞ்ச்யாதிஷ் வபி நிஸ் ஸ்ப்ருஹாஸ் ச ஸததம் ராமானுஜ ஏக காந்தி ந
ராஜந்தே ச தநோது ஸூ ந்தர வரோ யோகீஸ் வரோ நஸ் ஸூ பம் –22-
நல்ல ஞானம் உடையவர்கள் -திரு அயோத்யா -ஸ்ரீ மாயாபுரி நகர் -ஸ்ரீ காஸீ -ஸ்ரீ காஞ்சீ -நகரங்களை எல்லாம் விட்டு
ஸ்ரீ வடமதுரா நகரை அடைந்து எப்பொழுதும் நம்பி மூத்த பிரானுடைய அனுஜனான ஸ்ரீ கிருஷ்ணன் இடத்தில் மட்டுமே
ஈடுபாடு கொண்டு விளங்குகிறார்களோ –
அப்படியே நல்ல ஞானம் உடையவர்கள்
எவருடைய இனிமையான வாக்கிலேயே ஈடுபட்டவர்களாய் விளங்குகிறார்களோ அப்படிப்பட்ட
அழகிய மணவாளர் ஆகிய யோகீஸ்வரர் நமக்கு மங்கலத்தைத் திரு உள்ளம் பற்ற வேணும் –
நல்ல ஞானம் உடையவர்கள் எவருடைய இனிமையான ஸ்ரீ ஸூ க்திகளில் ஈடுபட்டு
சிறந்த மாட மாளிகைகளில் ஆசை அற்றவர்களாய் -மாயையின் சம்பந்தத்தை விட்டு விலகியவர்களாய் –
காசியில் உள்ள தேவதாந்த்ரங்களை விட்டவர்களாய்
பொன் அரை நாண் முதலான ஆபரணங்களில் ஆசை அற்றவர்களாய்
எம்பெருமானாரையே ப்ராப்ய ப்ராபகமாய் கொண்டவர்களாய் பிரகாசிக்கின்றார்களோ
அப்படிப்பட்ட அழகிய மணவாள யோகீஸ்வரர் நமக்கு மங்களத்தைத் திரு உள்ளம் பற்ற வேணும் –
அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா புரீ த்வாராவதீ சேதி சப்தைதா மோக்ஷ தாயிகா –
மன்னு வட மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத ஏற்றம் உண்டே –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா
யஸ்யாம் ஜாதோ ஜகந்நாத ஸாஷாத் விஷ்ணு ஸநாதன –
கோகுலம் கோவர்த்தனம் பிருந்தாவனம் இவற்றுக்கும் உப லக்ஷணம் –
————-
யத் வாணீ மப ராஜிதாம் மது ஜிது ல்லா ஸாஸ் பதம் ஸந்ததம்
சேஷ அஹீந பல த்விஜேந்த்ர மஹிதாம் முக்தா வலீ பந்து ராம்
ஸூ த்தஸ் ஸம் ப்ரதிபத்ய ஹ்ருஷ்யதி ஜநோ நோபைதி பாபோத்தர
தஸ்மாத் காந்த வரான் முநேர் அநுப மாத் தைவம் பரம் நாஸ்ரயே –23-
முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீ வைகுண்ட நகரத்தைப் போன்று ஒருவராலும் ஜயிக்கப் படாதவையோ
மேலும்
முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகள் இடைவிடாது எம்பெருமானுடைய முக மலர்த்திக்குக் காரணமாக இருப்பதையோ
மேலும்
முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகளை பாபிஷ்டன் அடைய மாட்டானோ
மேலும்
முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகளை அடைந்து ஸ்ரீ ப்ராஹ்மண உத்தமர்கள் ஆனந்தம் அடைகிறார்களோ
அப்படிப்பட்ட ஒப்பற்ற பெருமை வாய்ந்த அழகிய மணவாள மா முனிகளைக் காட்டிலும்
மேலான தெய்வத்தை ஏற்க மாட்டேன்
ஒருவராலும் ஜயிக்கப் படாததும் -எம்பெருமானுக்கு முக உல்லாசதத்தை அளிப்பதாயும் -முக்தர்களின் வரிசையால்
மாலை போன்று தோற்றுவதுமான பெருமை வாய்ந்த பரம பதத்தில்
ஆதி சேஷன் -குறைவற்ற சேனையை உடைய விஷ்வக் சேனர் -த்விஜேந்த்ரன் -பெரிய திருவடி யானவர்கள்
எப்பொழுதும் ஆனந்தம் அடைகிறார்கள் –
ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகளும் அபராஜிதை என்றவாறு –
பாஹ்ய குத்ருஷ்டிகளால் பங்கம் அடையாதவை -எம்பெருமான் முக உல்லாசத்துக்கு உரித்தானவை –
————
யத் வாணீ விரஜா வகாஹந கலா தவ்தாத்மநா மாத்ம நாம்
ப்ரஜ்ஞா தர்ஜித நிர் ஜரேஸ் வர குரு பிரவ்டிம் சமாடவ் கதே
பக்தி ஸ்ரீ சத தீ யதே ஸிக பதா தாரா ஜரீஜ் ரும்ப்யதே
முக்திர்யாதி கரா பசேய பலதாம் ஸோ அவ்யாத் வரோ அஸ்மான் முனிஸ் –24-
எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால் சேதனர்கள்
பரி ஸூத்தமான மனஸ்ஸை உடையவர்களாக ஆகிறார்களோ
மேலும்
எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால் சேதனர்கள்
உடைய விசேஷ ஞானமானது தோற்கடிக்கப் பட்ட தேவ குருவான ப்ரஹஸ்பதியின்
ஆழ்ந்த ஞானத்தை அளவுபட்டதாகச் செய்கிறதோ
மேலும்
எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால்
ஸ்ரீ யபதியான எம்பெருமான் பாகவதர்கள் ஆச்சார்யர்களுடைய திருவடிகளை ஆஸ்ரயமாக உடைய
சேதனர்களுடைய பக்தியானது விருத்தி அடைகிறதோ –
மேலும்
எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால்
கைக்கு எட்டிய பலமாகிற மோக்ஷத்தை சேதனர்கள் அடைகிறார்களோ
அப்படிப்பட்ட வர வர முனியானவர் நம்மை ரக்ஷித்து அருள வேணும்
எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால்
பரி ஸூத்த மனஸ் கரான சேதனர்களுடைய பிரஜ்ஜை -அறிவு புத்தி -யானது எப்பேர் பட்ட பிரௌடியை -சாமர்த்தியத்தை அடைகிறதோ
எந்த புத்தியின் பிரௌடியானது -அறிவின் சிறப்பானது -தேவ குருவான ப்ருஹஸ்பதியின் புத்தி பிரௌடியையும் மிரட்டுகிறதோ
மேலும்
எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால்
பரி ஸூத்த மனஸ் கரான சேதனர்களுக்கு ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் இடத்திலும்
ததீயாரான பாகவதர்கள் இடத்திலும் ஆச்சார்யர்கள் இடத்திலும் உண்டான பக்தி ப்ராவண்யமானது
மேன்மேலும் விருத்தி அடைகிறதோ
மேலும்
எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால்
அவர்களுக்கு மோக்ஷ பலமும் கிடைக்கிறதோ அந்த மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –
————
யஸ் சிஷ்யாஸ் திஷ்யடிம்ப ப்ரதிமகு மதி துஸ் தர்கஸம்பர் கஜாத
த்ரயந்த ஸ்வாப ரூபா ப்ரதிம நிரவதி த்வாந்த கல்பாந்த ஸூர்யா
ஸ்ரீ மத் ராமாநுஜார்யோதி தமத மமதா மூர்தய கீர்த்தி மந்த
ஜாக்ரத் யஸ்மை நமஸ் ஸ்தாத் வர வர முநயே அநந்த நிஸ் துல்ய பூம்நே –25-
எந்த மா முனிகளுடைய சிஷ்யர்கள்
கலி புருஷனின் புத்ர ஸமானரான குத்ருஷ்டிகளுடைய குதர்க்க வாதங்களின் சேர்க்கையால் உண்டான
வேதாந்த உறக்கம் போன்ற எல்லை அற்ற அந்தகாரத்துக்கு பிரளய கால ஸூர்யன் போன்று இருப்பவர்கள்
நம் ஸ்வாமி எம்பெருமானார் வெளியிட்ட மதமான விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்
அபிமானம் உடையவர்களாக புகழப் படுகிறார்கள்
நம் ஸ்வாமி எம்பெருமானார் வெளியிட்ட மதமான விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்
விழிப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்
எல்லை ஏற்றதும் ஒப்பு இல்லாததுமான சிஷ்ய சம்பத்தை யுடைய நம்முடைய
அந்த மணவாள மா முனிகளுக்கு ப்ரணாமங்கள் இருக்கட்டும்
எந்த மா முனிகளுடைய சிஷ்யர்கள்
கலி புருஷ புத்ர சமானர்களான-கலி கோலா ஹலமே வடிவு எடுத்த – குத்ருஷ்டிகளின்
ஸ்ருதி விருத்தமான -குதர்க்க -விதண்டா வாதம் -சம்பந்தத்தால் உண்டான வேதாந்த மூர்ச்சை யாகிற
ஒப்பற்ற காட அந்தகாரத்தை -அடர்ந்த இருளைப் -போக்கடிப்பதில் பிரளய கால ஸூ ர்யனைப் போல் விளங்குகின்றனரோ
திஷ்யன் -கலி புருஷன் -டிம்ப -சிஸூ
ஸ்ரீ ராமானுஜர் வளர்த்து அருளிய விசிஷ்டாத்வைத தர்சனம் -இராமானுஜ தர்சனம் -நிலை நாட்டுவதில்
ஸதா ஜாகரூகராய்-எப்போதும் விழிப்புடன் -இருப்பவர்களாய் இருக்கிறார்களோ
ஒப்பு உயர்வு அற்ற வைபவ சாலியான அந்த மா முனிகளுடைய திருவடிகளுக்கு
அடியேன் உடைய பிராணாமம் என்றும் உரித்தாகுக –
——————-
அநி மிஷத நுர் ப்ரஹ்மா நிர்வேத பாவ நிபந்தநம்
பஜதி கில யஸ் ஸ்ரீ மன் மத்ஸ்ய அவதார துலாம் ஹரே
ச ஜயதி ஸதாம் சங்கஸ் ஸுவ்ம்யோ பயந்த்ரு சமாஸ்ரய
தமிஹ ஸததம் சேதஸ் சேவஸ்வ ஸத் குண சேவதிம் –26-
இமையாத கண்களை யுடைய சரீரகரான நான் முகன் மநோ வேதனை அடைந்ததனால்
ஸ்ரீ மத்ஸ்ய அவதாரத்தோடே சாம்யத்தை அடைகிறார் அல்லவா
எந்த மணவாள மா முனிகளை ஆஸ்ரயமாக உடைய சாதுக்களின் குழாம் மத்ஸ்ய அவதாரத்தோடு
சாம்யம் அடைகின்றதோ ஸத் குணங்களுக்கு நிதியான அந்த மா முனிகளை மனமே இங்கு
எப்பொழுதும் சேவித்துக் கொண்டே இருப்பாயாக –
இது முதல் பத்து ஸ்லோகங்களால் பக்த வர்க்கங்களின் தசாவதார சாம்யம்
மத்ஸ்ய மூர்த்தி -அநிமிஷ தநு-இமையாத கண்ணை உடையதாய் இருக்கும் –
மத்சயங்களுக்கு கண் திறந்தே இருக்கும் –
அடியார்கள் குழாங்களும் -அநிமிஷ தநுவாய் -எப்போதும் விழிப்புடன் இருந்து
பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸித்து வேதத்தின் துன்பத்தைப் போக்கடிப்பர்
————–
வேத ராஸி மநகம் ஸரோஜ ஜம் பிராபயந் நதி விஷண்ண மாஸ்ரிதம்
மத்ஸ்ய தேவ சத்ருஸோ விபாதி ய தம் பஜேய வர யோகி சேகரம் –26-இது ஸ்லோக பாட பேதம்
இதில் மா முனிகளுக்கே மத்ஸ்ய சாம்யம்
தன்னை ஆஸ்ரயித்த மிகுந்த துக்கத்தை உடைய தாமரையில் தோன்றிய ப்ரஹ்மாவுக்கு
குற்றம் அற்ற வேதங்களை அடைவித்து –
அதாவது வேதத்தை இழந்த நாபீ கமல உத்பூதரான ப்ரஹ்மாவுக்கு கொடுத்து அருளிய மத்ஸ்ய மூர்த்தி
தம்மை ஆஸ்ரயித்த சேதனனுக்கு தாமரையில் தோன்றிய பொய்கை ஆழ்வார் மூலமாகக் குற்றம் அற்ற
திராவிட வேதத்தை அடைவித்து எந்த மா முனிகள் பிரகாசிக்கிறாரோ
அந்த சிறந்த யோகிகளுக்குத் தலைவரானவரை பஜிப்பாயாக —
—————-
பிராப யந்நம் ருத காங் ஷிண அம்ருதம்
மந்த ராக பரணே அபி சாதர
திவ்ய கூர்ம சத்ருஸோ யதாஸ்ரித
ஸத் குணோ அவது ச மாம் வரோ முனி –27-
மந்த்ர மலையைத் தாங்குவதில் ஆதாரத்தை உடையவனாய்
அம்ருதத்தை விரும்பிய தேவர்களுக்கு அம்ருதத்தை அடைவித்து
அவர்கள் இடம் ஆர்வத்தை உடையவன் ஸ்ரீ கூர்மாவதார எம்பெருமான்
எந்த மா முனிகளை ஆஸ்ரயித்தவர்கள் -ஸ்ரீ கூர்மாவதார சாம்யத்தை உடையவர்களாய் மோக்ஷத்தையே விரும்புபவர்கள்
சிறிதே வைராக்யம் உடையவர்களே ஆனாலும் அவர்களை ரக்ஷிப்பதில் ஆர்வம் உடையவர்களாய்
அவர்களுக்கும் மோக்ஷத்தை அடைவிக்கும்
கல்யாண குணங்களை உடைய அந்த மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –
மந்த ராக பரணே அபி சாதர-மந்தராகிறார் -குறைந்த விருப்பம் உடையவர்கள் –
அல்ப அநு கூல்யம் உடையவர்கள்
மந்த்ர அக என்று மலை பக்ஷம்
மந்த ராக -இவர்கள் பக்ஷம்
பாட பேதமும் உண்டு -இதில் மா முனிகளையே ஸ்ரீ கூர்மாவதார ஸத்ருசம் என்று சொல்லும் –
———————–
ஸுவ்கர்ய வாந் யத் பத பக்தி சாலீ
பவாப்தி மக்ந உத்தரண ப்ரவீண
ஆடீ கதே ஹ்யாத் யகிடே ரபி க்யாம்
முனிஸ் ச ந பாது வரோ பயந்தா –28-
எந்த மா முனிகளுடைய திருவடிகளில் பக்தி மிகுந்த அடியவன் முமுஷு வான ஒரு சேதனனுக்கு
அவன் தன்னை ஸூ லபமாக ஆஸ்ரயிக்கும் படி இருப்பவன் ஆவான்
ஆஸ்ரித ரக்ஷணத்தை சுலபமாகச் செய்யக் கூடியவன் என்றபடி
இத்தால் அவன் சம்சார ஆர்ணவத்தில் மூழ்கி இருப்பவர்களை மேலே உயர்த்தி விடுவதில் வல்லவனான
ஸ்ரீ ஆதி வராஹ மூர்த்தியின் பெயரை -சாம்யத்தை அடைகிறான்
இப்படிப்பட்ட சிஷ்ய ஸம்ருத்தியை உடைய மா முனிகள் நம்மை ரசித்து அருளட்டும் –
ஸுகர்யவான் –ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் பிரளய ஆர்னவ உத்தாரணம்
ஆத்ய கிடி -ஸ்ரீ ஆதி வராஹ நாயனார்
————–
ஹிரண்ய ஜித் யத் பத பக்த சாலீ
ந்ருஸிம்ஹ பாவம் ப்ரகடீ கருதி
ச மே விதத்தா மது லாநு பாவோ
வரோ பயந்தா குசலான் யஜஸ்வரம் –29-
மாமுனிகளின் திருவடிகளில் பக்தி உடையவர்-ஹிரண்ய ஜித் -பொன்னில் ஆசையை வென்றவரான –
ஹிரண்யனை வென்றதால் ஸ்ரீ நரஸிம்ஹருடைய தன்மையை வெளிப்படுத்து கிறார்களோ –
ஒப்பற்ற பிரபாவம் உடைய புருஷ ஸிம்ஹம் என்னும் படியான அந்த மணவாள
மா முனிகள் நித்யமான நன்மைகளை -குசலங்களை -அளிக்க வேணும்
————————-
பஜதே கில வாமன உப மாம் ஸூ மநோ வைரிபலிஸ் மயம் ஹரந்
ஸூப விக்ரம பூத் யதாஸ்ரித தமுபாஸ வரயோகி சேகரம் –30-
எந்த மா முனிகளை ஆஸ்ரயித்தவர் -சாத்விகர்களுடைய பலமுடைய விரோதிகளின்-பலிஷ்டர்களின் –
கர்வத்தை அழித்து ஸ்ரீ வாமன அவதாரத்துக்கு சமமான தன்மையை அடைகிறார்களோ
ஸோபனமாகத் எங்கும் சஞ்சரிப்பவராக -தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
ஸூபமான த்ரிவிக்ரம அவதாரத்தை உடையவராக ஆனாரோ
அந்த யோக ஸ்ரேஷ்டரான மா முனிகளை உபாஸிக்கிறேன் -பக்தியுடன் சேவிக்கிறேன் –
—————————
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply