ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -71-80-

வேதாந்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால்
வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய
கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் –
குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும்
ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

ஸடரிபு நிகமார்த்த தத்த்வ போதம் ஜநயதி ய கில வாதி ஸிம்ஹ கோஷ
வர வர முனி வர்யம் ஆஸ்ரயே தத் ப்ரவண தியம் ப்ரஸமதி ஸத் குணாட்யம் –71-

நம்மாழ்வாருடைய தமிழ் வேதத்தில் தத்வார்த்தத்தின் ஞானத்தை எதிர் வாதம் செய்பவர்களுக்கு
ஸிம்ஹ கர்ஜனையாகப் பேசும்
எந்த வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அல்பரும் அறியும் படி செய்து அருளுகிறாரோ
அதில் ஈடுபட்ட திரு உள்ளத்தை உடையராய்
புலன் அடக்கம் முதலிய ஆத்ம குணங்கள் நிறைந்த ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கிறேன்

————-

சர ப்ரமுக திவ்ய ஸூர்யுதித திவ்ய ஸூக்த்யாசய
ப்ரகாஸந ஸமுத்பவாநி தர லப்ய கீர்த் யுஜ்ஜ்வலம்
குரும் ஹ்ருதி விபாவயந் வர முனிர் ஹி கிருஷ்ணாஹ் வயம்
மதீய ஹ்ருதயே ஸதா ஸ கருணம் விதத்தாம் ஸ்திதம் –72-

பொய்கையாழ்வார் முதலான ஆழ்வார்கள் அருளிச் செய்த அருளிச் செயல்களின் அர்த்தங்களை பரப்புவதில் உண்டான
வேறு ஒருவராலும் பெற முடியாத வ்யாக்யான சக்ரவர்த்தி என்ற புகழால் விளங்குகிற மஹா ஆச்சார்யரான
விலக்ஷண கீர்த்தி உள்ள ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை திரு உள்ளத்தில் சிந்தை செய்து கொண்டு இருக்கும்
மா முனி ஒருவரே கருணையோடு அடியேனுடைய ஹ்ருதயத்தில் எப்பொழுதும் நிலை பெற்று இருக்கட்டும் –

————-

ரஹஸ்ய த்ரயாக்யம் ஜகத் தேசிக உத்தமம் ரஹஸ்ய த்ரய அந்தர் கதார்த்த ப்ரதீபம்
விவவ்ரே ஜகத் குப்த யே ய க்ருபாப்தி ச ந பாது ரம்யோ பயந்தா முனீந்த்ர–73-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராலே அருளிச் செய்யப்பட முமுஷுப்படியை ரஹஸ்ய த்ரயத்தின்
உள் அர்த்தங்களை லோக ரக்ஷணத்திற்காக
ஒளி விளக்காக விளங்கும் கருணைக் கடலான ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் செய்து அருளினாரோ
அவர் நம்மை ரக்ஷித்து அருளட்டும்
ரஹஸ்ய த்ரயாக்யம் என்று கால ஷேப பிரபந்தம் ஆகிற முமுஷுப்படியையே சொன்னவாறு –

————————–

ஸ்ரீ மல் லோக குரூதி தா ஸ்ருதி சிரஸ் ஸித்தாந்த ஸஞ்ஜீவி நீ
ஸா தத்த்வ த்ரித யாஹ்வயா கில க்ருதி யத் வ்யாக்யய அலங்க்ருதா
ஸ்லாகா லோல பணீந்த்ர மௌலி விலஸத் ரத் நாம் ஸூ நீ ராஜி தா
பாயான் நஸ் ஸததம் ஸ ஸூந்தர வரோ யோகீ குணைஸ் ஸூ ந்தர –74-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரால் அருளிச் செய்யப் பட்டதாய் வேதாந்த சித்தாந்த அர்த்த விசேஷங்களை
விளக்குகின்ற தத்வ த்ரயமாகிற கிரந்தம்
எவருடைய வியாக்யானத்தால் அலங்கரிக்கப் பட்டு ஆதி சேஷன் தன் திரு முடியை அங்கீ காரமாக
ஆட்டுவதால் விளங்குகிற ரத்னங்களின் ஒளியால்
நீராஜநம் -ஆலத்தி செய்யப்பட்டு பிரகாசிக்கிறதோ -குணங்களால் சிறந்து விளங்கும்
அந்த மா முனிகள் நம்மை எப்போதும் ரக்ஷித்து அருள வேணும் –

———————–

ஸ்ருதி ஸ்ம்ருதி சரோ முனி ப்ரப்ருதி ஸூரி ஸூ க்திஸ் புரத்
ப்ரஸூந ரசிதா துலாநக வரார்ய ஸூக்திஸ் ரஜஸ்
பிபர்தி ஸூப ஸுவ்ரப ஸ்ரீய முதார யத் பாரதீ
ச மே தி சது ஸூ ந்தரோ வர முனிஸ் ஸூபம் ஸாஸ்வதம் –75-

ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் உடைய ஸ்ரீ ஸூ க்திகள் இவற்றை மூலமாகக் கொண்டு தோன்றியதும்
ஒப்பற்றதும் குற்றமற்றதும் தலை சிறந்த ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரால் அருளிச் செய்யப் பட்ட
ஸ்ரீ வசன பூஷணம் என்னும் மலையானது எவருடைய வியாக்யானமான மங்கள மணம் உள்ள
ஸ்ரீயை தரித்துக் கொண்டு இருக்கிறதோ வள்ளலான அந்த ஸ்ரீ மா முனிகள் அடியேனுக்கு
நிலையான மங்களத்தை அருளட்டும்
திவ்ய கந்தத்துடன் கற்றோர்களுக்கு அணி கலனாய் அநு பாவ்யமாய் உள்ள வியாக்யானம் அன்றோ –

———————-

ஜகத் குரு வர அநுஐ பிரதித சித்ர குர்வா சயா பிதா ந க்ருதி ஸம் ப்ரகாஸ ந படீ யஸீ யத் க்ருதி
அநந்ய ஸூலபா வ்யநக்த்ய நக சேமுஷீ நை புணீம் ச மே வர வரோ முனிர் விதரது ஸ்ரீயம் பூய ஸீம் —-76-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய அனுஜரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் அருளிச் செய்யப்பட
ஆச்சர்யமான ஆச்சார்ய ஹ்ருதயமான திவ்ய கிரந்தத்தை விளக்குவதில் மேலானதும் மற்றவர்களுக்கு கிடைக்க அரிதான
திறமை உடைய தோஷம் அற்ற ஞானம் நிறைந்ததுமான வியாக்யானத்தை அருளிச் செய்த மா முனிகள்
அடியேனுக்கு நிறைந்த ஞான ஸம்பத்தை அளிப்பாராக –

———————-

க்ருத்வா அநேகாந் யஹாந்ய ப்ரதிம நய மஹா ஸாஸ்த்ர ஸம்பாத கோரம்
தத்தாத் ருக் வாத யுத்தம் யதிபதிர நயத்யம் விஜித்ய ஸ்வ பக்ஷம்
தத் ப்ரோக்தம் ஞான சாரம் வ்யவ்ருணுத கில யோ மேய ஸாரம் ச ஸம்யக்
தஸ்மை நித்யம் நமஸ் ஸ்யாத் வர வர முநயே நிஸ்து லோதார பூம் நே –76-

அப்ரதிம நய மஹா ஸாஸ்த்ர-அமோகமான -நிச்சயமாக பலன் அளித்தே தீரும் படியான நீதி உடன் கூடிய
நியாய ஸாஸ்த்ரத்தைக் கொண்டு -17 நாட்கள் கோரமான போராட்டம் போன்று வாதப் போரை செய்து
ஸ்ரீ யதிராஜர் எந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை தம் பக்ஷத்துக்கு கொண்டு வந்தாரோ
அப்படிப்பட்ட வைபவம் பொருந்திய அருளாளப் பெருமாள் எம்பெருமானாரால் அருளிச் செய்யப் பட்ட
ஸ்ரீ ஞான சாரம் ஸ்ரீ பிரமேய சாரம் இவற்றை நன்கு விளக்கி அருளிய அந்த இணை அற்ற உதார குணம் நிறைந்த
ஸ்ரீ மா முனிகளுக்கு என்றும் நமஸ்காரங்கள் உரித்தாகட்டும் -நித்யம் அடியேன் தண்டம் சமர்ப்பிக்கக் கடவேன்-

———————

ப்ரபந்நா நாம் காயத்ர்யம்ருத கவி த்ருஷ்டா யதிபதி
ஸ்துதிர் யத் வ்யாக்யாதா ப்ரஜ நயதி ஸத்வ உத்தர முதம்
அஜஸ்ரம் ந பாயாத் வர முனி வர ஸீல கருணா
ஷமா வாத்சல்யாத்யை அநவதிக குணவ்க ஏகஸ் ச மதுர —-78-

திருவரங்க அமுதனாரால் அருளிச் செய்யப்பட ப்ரபந்ந காயத்ரி என்று சொல்லப் படுகிற
ஸ்ரீ எம்பெருமானாரை ஸ்துதிக்கும் ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி எந்த ஸ்ரீ மணவாள மா வியாக்யானத்தோடே
ஸத்வ குணம் மிகுந்து இருக்கிறவர்களுக்கு ஆனந்தத்தை உண்டு பண்ணுகிறதோ
சீலம் தயை பொறுமை வாத்சல்யம் முதலிய எல்லை அற்ற குணக் கூட்டங்களால்
இனிமையாக இருக்கும் அந்த ஸ்ரீ மா முனிகள் எப்போதும் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

————–

விஷ்ணோர் யத் தர்சன அர்ச்சா சரணி மநு சரன் அர்ச்சனம் சத்த்வ பாஜாம்
சங்கஸ் ஸர்வோ அபி குர்வன் ஜயதி குண நிதிஸ் தத் கடாக்ஷ ஏக பாத்ரம்
தஸ்மாத் காந்தோ பயந்து ப்ரணத ஜன நிதே ஸ்ரீ மதோ தேசிகேந்த்ராத்
நாஹம் நாஹம் ந ஜானே பரமிஹ சரணம் தைவதம் நைவ ஜாநே –79-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஜீயர் படி என்னும் எம்பெருமானுடைய திரு வாராதன க்ரமத்தை
அனுஷ்ட்டித்து சத்வ குணம் உள்ளவர்கள் அனைவருடைய குழாமும் திரு ஆராதனத்தைச் செய்து கொண்டு
சத் குணங்களை நிதியாக உள்ள அந்த மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு பாத்திரமாக விளங்குகிறார்கள் –
இங்கு அந்த ஸ்ரீ மானான ஆச்சார்ய ஸ்ரேஷ்டரும் அடி பணிந்தவர்களுக்கு நிதி யானவரான
மா முனிகளைக் காட்டிலும் மேலான தெய்வத்தை நான் அறிய மாட்டேன்
உபாயமும் நான் அறிய மாட்டேன் அறியவே மாட்டேன்
எப்போதுமே ஜீயர் திருவடிகளே சரணம் என்றே இருப்பேன்

————————

ஸ்ரீ மத் காந்த வரஸ்ய தேசிக வரஸ்ய அங்க்ரீ ஸரோஜ உபமவ்
ஸம்ஸார ஆர்ணவ மக்ந ஸர்வ ஜனதா சாந்தாரணை கவ்ரதவ்
யே த்யா யந்தி ஸதா தத் அந்ய விமுகாஸ் தத் தர்சிதே ஸத் பதே
நிஷ்டாம் பிப்ரதி ஸத் குணைஸ் ஸூ ரபி தாஸ்தேப்யோ மஹத் ப்யோ நம -80-

ஸ்ரீ மானான ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான மா முனிகளுடைய -ஸம்ஸாரக் கடலில் ஆழ்ந்து உள்ள
எல்லா சேதனர்களையும் கரை சேர்ப்பதையே விரதமாகக் கொண்ட பொன்னடியாம் செம் கமலமான
திருவடி இணைகளை யார் த்யானிக்கிறார்களோ -அவற்றைத் தவிர வேறு எதையும் காணாதவர்களான –
அவர் காட்டிய நல் வழியிலேயே நிஷ்டையை உடையவர்களாக -நற் குணங்களால்
நறு மணம் உடையவர்களாக உள்ள அந்த மகான்களுக்கு நமஸ்காரம்

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading