ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————–
(கீழ் 6-12 ஸ்லோகங்களில் தீமை பூயிஷடயத்தையை அருளிச் செய்யும் பிரகரணம்)
இப்படி பாபார்ஜன பூமியாய் தத் பலமான துக்க அனுபவத்துக்கும் ஸ்தானமான சரீரத்தில் இருப்பைத் தவிர்த்துக் கொள்ள
மாட்டீரோ என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
என்னுடைய பாப அதிசயத்தாலே சரீர நிவ்ருத்தியில் அபேக்ஷை பிறக்கிறது இல்லை –
தாத்ருச பாவத்தை தேவரீர் தாமே சீக்கிரமாக போக்கி அருள வேணும் என்கிறார் –
இவர் –நார்ஹ -என்றவாறே என் தான் இப்படி கிலேசிப்பது -நீர் சம்சாரத்தில் வர்த்திதிலீரோ —அதில் தாப த்ரயங்களால் வரும் துக்கங்களைக் கண்டு அருசி பிறவாதோ-
பிறந்தால் அது யோக்யதை யன்றோ என்ன –
அடியேனுக்கு இதில் வரும் துக்க அனுபவம் கண்டும் அருசி பிறவாமை மாத்ரம் இன்றிக்கே
மேன்மேலும் ருசி அபிவிருத்தமாகா நின்றது -என்கிறார் –தாபத்ரயீ ஜநித துக்க–இத்யாதியால் –(வைராக்யம் வராமல் ராகமே மேலிடுகிறதே )
தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி
தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-
ஆத்யாத்மிகம்,ஆதிதைவிகம் ,ஆதி பெளவ்திகம் மூன்றிலும் விழுந்தி வருந்தினாலும் எனக்கு சரீரம் இருப்பதிலே ஆசை
இதற்கு என் பாபமே காரணம் -என் நாதனே ஸ்ரீ யதி ராஜரே அந்த பாபத்தை விரைவில் போக்கி அருள வேணும்..
பதவுரை:-
ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே,
தாப த்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூ வகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டே யிருந்த போதிலும்,பாத நிபாத ஆழ்ந்து -விழுந்து கொண்டே அழுந்திக் கொண்டு இருக்கிறவனாக யிருந்த போதிலும்,
மம து – மிக நீசனான அடியேனுக்கோ வென்றால் ,
தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒரு படிப் பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில்,
ருசி: – ஆசையானது,
பவதி – உண்டாகிறது,
தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில்,–ரக்ஷணத்தில் இருந்து மீளுகையில் நாசத்தில்
ந ருசி: – வெறுப்பு,
பவதி – உண்டாகிறது.
ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந் நிலைமைக்கு,
காரணம் – காரணமானது,
மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும்.
நாத – ஸ்வாமீ!,
த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே,
தத் – அப் பாவத்தை,
ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே,
ஹர – போக்கி யருள வேணும்
———–
தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி–
இதிலே அனுபவிக்கிற துக்கம் தான் ஓன்று இரண்டாய் -அத்தைக் கழித்துக் கொள்ளாது ஒழிகிறதோ
கர்மம் ஏகவிதமாகில் இறே தத் பலமான துக்கமும் ஏக விதமாய் இருப்பது –
கர்ம அநு குணமாக அனுபாவ்யமான துக்கம் ஆத்யாத்மிகாதி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் ஆத்யாத்மிகம் தான் சாரீரம் என்றும் மாநசம் என்றும் இரண்டு வகையாய் இருக்கும்
சாரீரம் தான் ஜ்வராதி வியாதிகளால் அநேக விதமாய் இருக்கும் –
மாநசம் காம க்ரோதாதிகளால் வருகிற வியசனம்
ஆதி பௌதிகமாவது -மிருக பக்ஷியாதிகளால் வரும் வியசனம்
ஆதி தைவிகமாவது-சீதோஷ்ணாதிகளால் வரும் வியசனம்
இப்படி மூவகைப்பட்ட தாப சமூகங்களால் உண்டான துக்க சாகரத்தில் உத்தர உத்தரம் அவகாஹியா நிற்கச் செய்தேயும்
தேஹ ஸ்திதௌ மம ருசிஸ் து ந தந் நிவ்ருத்தௌ-
சர்வம் மா ஸூபம்-என்கிற லௌகிகர் படியும் கடந்து இருக்கிற துக்காஸ்பதமான சரீரத்தைக் குறைவற
நோக்கிக் கொள்ளுகையிலே யாய்த்து இப்போது ருசி
து
லௌகிகர் படியில் தமக்கு உண்டான விசேஷம்
ந தந் நிவ்ருத்தௌ-
அந்த ருசி இதனுடைய நிவ்ருத்தியிலும் ஒருக்கால் உண்டாய்த்து ஆகில் இத்தை விடுவித்துக் கொள்ளலாய்த்துக் கிடீர்
ஏதஸ்ய காரண
இதுக்கு காரணம் நான் பண்ணின பாபமே அன்றோ ஐயோ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ-நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –
நாத
இது அநாத வஸ்துவாய்த் தான் இங்கனம் எளிவரவு படுகிறதோ
த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம்
இஸ் சம்பந்தத்தைப் பார்த்து சர்வத்தையும் ஸூபமாக விரும்புகிற இவன் மென்மேலும் அனர்த்தத்தை விளைத்துக் கொள்ளும்
என்று சடக்கென அந்த பாபத்தை போக்கி அருள வேணும் -என்கிறார் –
தாத்பர்யம்
எதிபதியே -தாப த்ரய காரணமான துக்க பரம்பரையில் அழுந்தி இருந்தாலும்
இவற்றுக்குக் காரணமான தேஹத்தில் ஆசை குறையாமல் மேல் மேலும் போஷிக்கவே ஆசை வளர்ந்து கொண்டே இருக்க
இதற்கு ஹேதுஅடியேன் செய்த பாபங்களே
நாத்தனாக தேவரீரே இவற்றைப் போக்கி அருள வேண்டும்
——-
தாப த்ரயீ-
ஆத்யாத்மிக ஆதி தைவிக ஆதி பௌதிக -பேதேன மூன்று வகைப் பட்டு இருந்துள்ள
தாபங்களுடைய த்ரயத்தாலே என்னுதல் –
சமூஹத்தாலே என்னுதல் ‘
இவைகள் தான் ஓர் ஒன்றே அநேக விதமாய் இருக்கும் இறே –
ஆத்யாத் மிகங்களாவன-தன்னிடத்திலே உண்டாமாவை -அவை யாவன –
அபேஷித அலாபத்தால் வரும் மானஸ வ்யாதிகளும் -ஜ்வராதிகளால் வரும் சரீர வ்யாதிகளும் –
ஆதி தைவிகங்கள் ஆவன -இவனை அறியாமல் தைவ யத்னத்தால் வரும் அசநிபாதாதிகள்(இடி மின்னல் போல்வன )
ஆதி பௌதிகங்கள் ஆவன சர்ப்ப தம்சாதிகளால் வரும் நலிவுகள் -இப்படி இருந்துள்ள தாப த்ரயத்தாலே
ஜநித-
உண்டாக்கப் பட்டு இருந்துள்ள -இத்தால்- காரண வைசித்ர்ர்யத்தோடு ஒக்கும் கார்ய வைசித்ர்யமும் என்கிறது
ஜனித -என்று –
பூதார்த்தே -க்த -பிரத்யயமாய் -(பிறந்து விட்ட துக்கம் )அத்தால் துக்காம்சத்தில் ஜன்யமானமாதல் –
ஜநிஷ்யமாணமாதல் இல்லை என்கிறது –
இத்தால் ருசி பிறவாமைக்கு சாமக்ரீவைகல்யம் சொல்ல ஒண்ணாது என்கிறது
அன்றிக்கே –
ஆதி கர்மணி -க்த -பிரத்யயமாய் ஜன்யமான என்னவுமாம் –
இத்தால் துக்கம் உண்டாய் கழிந்ததும் அன்றிக்கே உண்டாகப் போகிறதும் அன்றிக்கே இடைவிடாமல் உண்டாகிறது(பிறந்து கொண்டே இருக்கும் துக்கம் -பிறந்ததாகவும் பிறக்கப்போவதும் உண்டே இதில்-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராத் துக்கம் என்றவாறு 3)
ஆகையாலும் சாமக்ரீவைகல்யம் சொல்ல ஒண்ணாது என்கிறது –
துக்க நிபாதி நோ அபி –
இப்படி பஹூ விதமாய் இருந்துள்ள துக்கங்களில் அதின் கரை காணாமல் விழா நின்றேனே யாகிலும் –
இத்தால் துக்க அனுபவம் இல்லாமையை இட்டு அருசி பிறவாமையைச் சொல்ல ஒண்ணாது என்கிறது –
நி -என்கிற உப சர்க்கத்தாலே
ஸூக பிராந்த்யா வரும் துக்கம் அன்றிக்கே துக்கத்வேன வரும் துக்க அனுபவத்தைச் சொல்லுகிறது
அதில் வர்த்தமான நிர்த்தேசத்தாலே –
துக்கம் உண்டாய் கழிகிறது போலே அன்றாய்த்து -துக்க அனுபவம் உண்டாகிற படியும் என்கிறது
அன்றிக்கே –
துக்கம் போலே உண்டாய் கழிந்தது அன்றிக்கே துக்க அனுபவம் உண்டாகா நின்றது என்கிறது –
மம-
தேஹமே ஆத்மா என்று இருக்கும் அடியேனுக்கு என்னுதல்-
துக்க அனுபவமே நிரூபகமான அடியேனுக்கு என்னுதல்
தேஹ ஸ்திதௌ ருசி-
துக்க அனுபவ மூலமான தேஹத்தினுடைய இருப்பிலே கிடீர் ருசி உண்டாகிறது
மம -தேஹ ஸ்திதௌ ருசி–
துக்க அனுபவ மூலம் என்று அறிந்தவதில் ருசி ஒருவருக்கும் பிறவாது -அடியேனுக்கு அங்கன் அன்றிக்கே
அதினுடைய சம்பந்தத்தால் உண்டான துக்கங்களை அனுபவியா நிற்கச் செய்தேயும் அதில் ருசி உண்டாகிறது என்கிறார்
மம –ருசி–ஸ்து – தே ஹஸ்தி தௌ –
அநிவ்ருத்தமான பாதகத்தில் அருசி பிறவா விடிலும் உபேஷை யாகிலும் உண்டாகக் கூடும் இறே-
அடியேனுக்கு அங்கன் அன்றிக்கே பாதக சம் ரஷணத்தில் கிடீர் ருசி உண்டாகிறது என்கிறார் –
தந் நிவ்ருத்தௌ-
துக்க ஹேதுவான தேஹத்தினுடைய நிவ்ருத்தியில் ருசி உண்டாகிறது இல்லை -துக்க ஆரம்பகமான சரீரத்தில் அருசி
பிறக்கக் கூடும் இறே -அதுவும் இல்லை என்கிறார்-
துக்க நிபாதி நோ அபி மம ருசிஸ் து தேஹஸ்தி தௌ-
அடியேனுடைய ருசி லோக விலஷணை கிடீர் -மற்ற எல்லாருடையவும் ருசியானது துக்க ஹேது வாமதில் நின்றும்
நிவ்ருத்தை யாகா நிற்க அடியேனுடைய ருசியானது துக்க ஹேதுவாமதில் அபிவிருத்தமாகா நின்றது என்கிறார் –
மம ருசி ஸ் து தே ஹஸ்தி தௌ –
தேஹாத்ம அபிமானியான அடியேனுடைய சம்பந்தி நியாய இதர விஜாதீயையான ருசி தேஹத்தினுடைய
இருப்பிலே உண்டாகா நின்றது என்கிறார்
ஸ்வ விஷயத்தில் அருசி ஒருவருக்கும் உண்டாகாது என்று கருத்து –
இப்படி பாதகமான சரீரத்தில் அருசி பிறவாமைக்கு அடி என் என்ன
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ –
இவ் விரண்டுக்கும் அடி அடியேனுடைய பண்ணி வைத்த பாபம் என்கிறார்
ஏவம் சம் ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே(அஹிர் புத்ய ஸம்ஹிதை –மீண்டும் மீண்டும் துக்கம் உளள யதாதிருச்சிக்க ஸூஹ்ருதத்தால் பகவத் கடாக்ஷம் கிடைக்க)
மம பாபம்
பிறர் பண்ணினதன்று
பாபமேவ
கர்மம் அடியான பகவத் சங்கல்பம் இறே சம்சார பிரவர்த்தகம் –
அங்கன் அன்றிக்கே கேவல கர்மமாய்த்து சம்சார பிரவர்த்தகம் என்கிறது
பரம தயாளுவான ஈஸ்வரன் பரம துக்க ஜனகமான சரீரத்தில் ருசி பிறக்கும் படி பண்ணுவனோ -என்கிறார்
அன்றிக்கே –
யதிவா ராவண ஸ்வயம் -என்றவன் பிரதிகூல்யர் பக்கல் ஆபி முக்யம் கொண்டு ரஷிக்கையில் க்ருத சங்கல்பனாய் இருக்க –
ந நமேயம் -என்னும் படி இறே என் பாபம் இருப்பது என்னவுமாம்
அஹோ –
ஸ்வ தோஷத்தினுடைய பலாதிக்யத்தைக் கண்டு அஹோ என்று ஆச்சர்யப் படுகிறார் ஆதல் –
துக்கப் படுகிறார் ஆதல்
நீர் இப்படி ஆச்சர்யப் படுவது -துக்கப் படுவதாக நின்றீர் ஆகில் உம்முடைய பாப நிவ்ருத்திக்கு யத்நிப்பாரா என்ன
நாத த்வமேவ ஹர தத் –
இத் தலையில் இழவு பேறுகள் தன்னதாம்படியான சம்பந்தமுடைய தேவரீரே
அப் பாபத்தைப் போக்கி அருள வேணும் என்கிறார்
நாத
ஆருடைமை அழிகிறது -ஆருடைமைக்கு ஆர் பிரார்த்திக்கிறது என்னவுமாம் –
த்வம்
பாபத்தை போக்கும் விரகு அறியும் தேவரீர்
த்வமேவ –
அடியேன் அறியில் தவிர்த்துக் கொள்ளுவேன்
ஆகையாலே அடியேன் அறியாமல் தேவரீரே போக்கி யருள வேணும் என்கிறார்(வன் மாய வையம் அளந்த வாமனா -அவன் அறியாமல் அளந்தால் போல் )
த்வமேவ
த்யஜ -வ்ரஜ -என்னும் தேவை இடாதே –
பவேயம் சரணம் ஹி வா -ஸூந்தர -58-56-என்னுமவள் கோடியிலே யான தேவரீரே என்றுமாம் –(பெருமாள் கண்ணன் போல் இல்லாமல் ஸீதாப்பிராட்டி போல் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி அன்றோ )
நாத த்வமேவ ஹர தத் –
எதிர் தலையிலே ஒரு பச்சை இன்றிக்கே தேவரீர் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக ரஷிக்கும் தேவரீரே என்னவுமாம்
த்வமேவ ஹரதத்
தேவரீரை அகலுகைக்கு அடியான தேஹத்தில் ருசியை உண்டாக்கும் போது அடியேன் பாபமே
அசாதாராண காரணம் ஆகிறாப் போலே
அத்தைப் போக்கும் போது தேவரீரே யாக வேணும் என்னுமாம்
த்வமேவ
சமிதை பாதி சாவித்திரி பாதி போலே அடியேனும் தேவரீரும் யாகாமல் நிரபேஷரான தேவரீரே என்னவுமாம்
தத் –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந சம்சய -ஸூந்தர -38-47–என்கிறபடியே பிரதமம் அல்பத் வேன ஜ்ஞாதமாய்
பல அனுபவ தசையில் பஹூத மத்வேன ஜ்ஞாதமான பாபத்தை என்னவுமாம் –
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே ப்ராப்தி உண்டாகிலும் பாப நிவ்ருத்திக்கு சக்தர் அன்றோ வேண்டுவது என்ன
யதிராஜ-
பாப நிவர்த்தந சக்தி யன்றோ தேவரீருக்கு ஔஜ்ஜ்வல்ய கரம் என்கிறார் –
அன்றிக்கே
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே இவருடைய பாப நிவ்ருத்தியிலே யத்நித்தமை தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு
இது வன்றோ தேவரீருக்கு பிரகாச கரம் என்கிறார் ஆகவுமாம் –
சீக்ரம் –
அத் தலையில் பிராப்தியையும் சக்தியையும் கண்டு சீக்ரம் -என்று ஸ்வீகரிக்கிறார்
அன்றிக்கே –
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் -என்கிறபடியே தேஹாத்ம அபிமானியாய் தேஹத்தினுடைய இருப்பிலே
ருசி பிறக்கைக்கு அடியான பாபத்தை யுடைய அடியேனுக்கு
இவ்வாபி முக்யம் இருக்கும் காலத்திலேயே தேவரீர் இப் பாபத்தை போக்கி யருள வேணும் என்கிறார் –
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்(பெரிய திருமொழி – முதற்பத்து)
இப்போது இவர் ஆபிமுக்யத்தை சொல்லுகிறது அவர் பண்ணும் ரஷணத்துக்கு ஹேதுவாக அன்று –
அது புருஷார்த்தமாகைக்காக -புருஷனாலே அர்த்திக்கப் படுமது இறே புருஷார்த்தம் –
யதிராஜ சீக்ரம்
அத் தலையில் வைராக்யத்தால் வந்த புகரைக் கண்டு அது தமக்கு உண்டாக வேணும் என்று பதறுகிறார் ஆகவுமாம்
ஆசாரே ஸ்தாப யத்யபி -என்கிறபடியே சிஷ்யனை தன் தலையிலே நிறுத்துகையும் ஆசார்ய க்ருத்யம் இறே –
மோஷமும் பரம சாம்யா பத்தி இறே
சீக்ரம் ஹர -என்று
பாப நிவ்ருத்தி பிரார்த்தனை யன்றோ சாப்தமாகத் தோற்றுகிறது-(பரம சாம்யா பத்தி)ஸ்வரூப பிராப்தி யன்றே என்னில் –அது அப்படி யாகிலும் –
1-தேஹத்தில் ருசி ஜனகமான பாபம் கழியவே தேஹத்தில் ருசி கழியும்
2-அது கழியவே ருசி நிர் விஷயமாய் இராமையாலே -ஆத்ம விஷயத்தில் ருசி உண்டாம் –
3-அது உண்டானவாறே ஸ்வரூப அநுரூப சித்த உபாய ஸ்வீகாரம் உண்டாம்
4-அத்தாலே ஸ்வரூபம் நிறம் பெரும் –
5-ஆகையாலே விரோதி நிவ்ருத்தியை பிரார்த்தித்த போதே தன்னடையே ஸ்வரூப ஆவிர்பாவம் பிரார்த்தித்ததாய் விடும் –
(ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி சொன்னதுமே மோக்ஷ பிராப்தியும் கிட்டும் என்று சொல்ல வேண்டாமே -தன்னடையே கிட்டும் அன்றோ)
————-
எதனால் துக்கம் ஏற்படுகிறதோ அது பிடிக்கக் கூடாது
தேகம் நிலைத்து இருப்பதில் ப்ரீதியும்
அது போவதில் எனக்கு துவேஷமும் -இரண்டும் இருப்பதால் மூர்க்கன்
இவற்றுக்கு காரணம் அஞ்ஞானமே-தன்னைக் கண்டால் பாம்பைக் கண்டால் போல் இருக்க வேண்டுமே
‘ஐயா, நீர் இது வரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம், நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையே யாகும். -தேஹ அநு விருத்தி ருசி ஏவ மூலம் -அவ் வாசையை அவ் வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை, நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து அவ்வுடலை நீரே விட்டு விடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார்
இதனால். தாபத்ரயீ – மூன்று வகையான துக்க காரணங்கள், (1) ஆத்யாத்மிகம் – உடலைப் பற்றி வருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன, (2) ஆதி பௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன. (3) ஆதி தைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரக யாதனை முதலியன.-
அபி சபித்தத்தால் தேஹ தோஷ அனுசந்தானத்தால் பயனே இல்லை -ஆழ்ந்து அன்றோ உள்ளேன்-தேஹம் -பதம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -வளர்ந்து கொண்டே இருப்பது தேகம் -இளைத்து இருந்தால் சரீரம் –
வளரும் என்பதால் எல்லா விகாரணங்களையும் -அஸ்தி இத்யாதி -ஷட் பாவ விகாரம் –
இவற்றை வேறு வகையாகவும் கூறுவதுண்டு. உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டி யடிப்பான்’ என்று பொருள்படும்
‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க.-உள்ளது வெளியதானால் காக்கை ஒட்டக காலம் போதாதே -அதுக்கு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் -ஸ்தித்வ பதம் நித்தியமாக இருப்பதில் ருசி வளர்கிறது ‘தந் நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும் ந என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது.
ஏதஸ்ய -நபும்சிக பிரயோகம் -சாமான்யமாக இருந்தால் இருக்கலாம் -ஜாதி ஏக வசனம் –
காரணம் -உத்தேச்ய தயா காரணம்
ருசிக்கும் அருள்சிக்கும் பாபமே காரணம்
நெருப்புக்கு உபாதானம் கட்டை –நெய் உத்தேச்ய தயா காரணம் -தூண்டி விட்டு எரிய வைக்கும்
அதே போல் ருசி வளர பாபமும் உத்தேச்ய தயா காரணம்-துக்க ஜனகத்வ லக்ஷணமான தோஷம் -தர்சனமே ருசியைத் தடுக்கும்
தத் பிரதிபந்தகமே பாபம் -விதேய ஸமகத்வ பதம் -அறியாதவற்றை அறிவிப்பது –ஏவ -ஈஸ்வர ஸங்கல்பம் போல்வன அல்ல
உத்தேச்ய சமகத்வ பதம் -பாபம் -பாபம் ஏவ -ஈஸ்வர ஸ்வாதந்த்ரம் தான் நம்மாழ்வார் போல்வார் இங்கு வர காரணம் -நாதனாகிய -சக்தி பிராப்தி உள்ள தேவரீரே போக்கி அருள வேணும்
சீக்ரம் உதகர க்ஷணத்தில் ஹரணம் -நாஸனம் பண்ணி அருள வேணும் -கீழ் சப்தாதிகள் -இங்கு தேஹ ருசி -அவற்றை விட குரூரம் இது -ஆகவே சீக்ரம் இங்கு
ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும் உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை அடுத்த க்ஷணத்திலேயே போக்கி யருள வேணும் என்றார் இதனால்.
இங்ஙனம் இவர் வேண்டிக் கொண்ட போதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம், இவர் இன்னும் சில நாள்கள் இவ் வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையே யன்றி வேறில்லை என்று கொள்க.
———————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply