ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————-
இப்படி தோஷ பாஹுள்யத்தையும்-தோஷ பூயிஷ்டரான தமக்கு உஜ்ஜீவன உபாயம் ஸ்ரீ எம்பெருமானார் கிருபையே
என்னும் அத்தையும் இவர் அருளிச் செய்தவாறே
ஸ்ரீ எம்பெருமானார் இவரை விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி உமக்கு அபேக்ஷிதம் என் என்று கேட்டு அருள
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்(மூன்றாம் ஆறாம் ஸ்லோகங்களில் )பிரார்த்தித்த அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும்
இஸ் ஸ்லோகத்தில் பூர்வ உத்தர அர்த்தங்களாலே பிரார்த்தித்து அருளுகிறார் (ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அருளுகிறார் இதில்)
(வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம்
பாதாநு சிந்தன பர சததம் பவேயம் –3-)
அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி –
சப்தாதி போக ருசி அந்வஹம் ஏதத்தே ஹா
மத் பாபம் ஏவ ஹி நிதாதம் அமுஷ்ய நாந்யத்-
தத்வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ–6-)
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்-
அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை என்று இவர் தம்முடைய
அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்தவாறே -உமக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்ன-
கீழ் வாசோ -இத்யாதியால் நாம் பிரார்த்தித்த ப்ராப்யத்தினுடைய சரமாவதியை(சரம -கடைசி-அவதி -இறுதி நிலையில் )
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக செய்து அருள வேணும் என்கிறார் –
சப்தாதி போக விஷயா ருசிரஸ்–இத்யாதியாலே – –
சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ்
தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –16-
விஷயங்களின் உள்ள எங்கள் ஆசை யதீந்த்ரே! தேவரீரின் கிருபையால் இங்கே அடியோடு அழியட்டும்..
தேவரின் தாஸ தாஸ தாசன் என்று கடைப் படியில் உள்ளவருக்கு ஆட்பட்டு அடிமை புரிவதில் இன்புறும் தன்மை நீங்காமல் இருக்க வேண்டும்
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே,
அஸ்மதீயா – அடியேனுடையதான,
ஸப்தாதி போக விஷயா – பகவத் ருசி வளர பிரதிபந்தங்களான நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப் பற்றிய
ருசி: – ஆசை யானது,
பவத் தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக் கோடாகக் கொண்ட தயையினால்,
நஷ்டா பவது – உருத் தெரியாதபடி காணாமல் போகுக,
(மேலும்) ய: – எந்த பாக்யஸாலியானவன்,
த்வத் தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய,
தாஸ கணநா – அடியவர்களை எண்ணும் போது,
சரமாவதௌ – அவ் வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில்,
பவதி – இருக்கிறானோ,
தத் தாஸதா – அவனைக் குறித்துச் செய்யும் அடிமையில்,
ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது,
அவிரதா – நித்யமாக ,
பவத் தயயா – தேவரீருடைய தயையினால்,
மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.
—————
சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா-நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்ருதீய பதத்தில் சொன்ன அநந்ய போக்யத்துக்கு சப்தாதி அனுபவம் இறே விரோதி யாகையாலே
அவித்யா நிவ்ருத்தியை அபேஷியாமல் விஷய ப்ராவண்ய நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –இந்த ருசியால் அன்றோ அநாதி காலம் ஸ்வரூப அனுரூப புருஷார்த்தத்தை இழந்தது என்று
அதன் பேர் சொல்லவும் அஸஹ்யமாய் இருக்கிறதாய்த்து –
யாது சததா விநாசம் -(ஸ்தோத்ர ரத்னம் )என்னுமா போலே உருக் காண ஒண்ணாத படி நசிக்க வேணும்
ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||-ஶ்லோகம் 57 –
ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.
தேக அவசாநத்திலே தன்னடையே நசியாதோ என்ன
இஹ –நஷ்டா பவத்
இஸ் சரீரத்தோடு இருக்கிற இப்பொழுதே நசிக்க வேணும்
அன்றிக்கே
பேர் அளவு உடையவர்களையும் தன் கீழ் ஆக்கி சப்தாதிகள் தனிக் கோல் செலுத்துகிற இவ் விபூதியிலே என்னவுமாம்
அநாதி காலமே பிடித்துக் கரம்பேறிக் கிடக்கிற இது நசிக்கும் போதைக்கு ஒரு ஹேது வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார்
(இது ஆனு ஷங்கிதம் -இடைப்பட்ட பலன் -பிரதான பலன் மேல்)
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
ஸ்ரீ தேவரீர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாக உடைய சேஷ பூதருடைய பரம்பரையில் எல்லை நிலத்தில்
நிற்கிறவர்கள் யாவர் ஒருவர் அவர் திருவடிகளில் சேஷத்வம் ஒன்றிலுமே ஒருபடிப் பட்ட ரசத்தை யுடையனாகையே
இடை விடாமல் எனக்கு நடக்க வேணும் –
மமாஸ்து
இதுவே புருஷார்த்தம் என்று அறுதி இட்டு இருக்கிற எனக்கு இது உண்டாவதாக
இந்த புருஷார்த்தத்தில் ருசி இல்லாதவர்கள் இழந்தார்கள் என்று ருசி யுடைய எனக்கும் இழக்க வேணுமோ –
நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –
தாத்பர்யம்
இவ்வுடலுடன் இருக்கும் பொழுதே சப்தாதி விஷய ப்ராவண்யம் நசிக்கும்படிக்கும் -ருசி நம்மிடம் -சப்தாதி விஷயங்கள் இருந்தாலும் ருசி இல்லாவிடில் அவை நமக்கு கெடுதல் பண்ணாவே –
பிரதிபந்தகம் ஒழியவே -தேவரீர் தாஸ பூதர்களில் சரமாவதியில் உள்ளாருக்கு கைங்கர்யம் பண்ணி தாஸ்யம் பண்ணும்படி அருள்ச செய்ய வேணும்
ஏதேனுமாக ஜனிக்கப்பெறுகிற -குடில் புழு பிறவியும் போதும் என்னுமா போல்
நடக்கும் படிக்கும் -உம்மைத்தொகை -அனுக்ரஹிக்க வேணும் -என்கிறார்
————–
சப்தாதி போக விஷயா ருசி –
நிதித்யாசிதவ்ய -ப்ருஹதா -4-4-5- என்றும் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
தேவம் இவ ஆசார்யம் உபாசீத -என்றும்
அதிதி தேவோ பவ -என்றும் –
குரு பாதாம் புஜம் த்யாயேத் –என்றும் –
ஆகதம் வைஷ்ணவம் சாஷாத் விஷ்ணுரித் யபி சிந்தயேத் தத் க்ருபா தத்த சரணவ் மூர்த்த்னி பாலே த்ருசோர் ஹ்ருதி வின் யஸ்ய பக்தி பூர்வந்து ஹாள யேத் கந்த வாரினம் -இத்யாதி பிரமாணங்களால்
ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத ஸ்ரீ ஆசார்ய விஷயங்களிலே அபிஹிதையான பக்தியானது அடியேனுக்கு
விஷச்ய விஷயாணாஞ்ச தூரம் அத்யந்த மந்த்ரம் உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி-என்கிறபடியே
உபபுக்தமான விஷம் போலே சரீர மாத்ர நாசகம் அன்றிக்கே ஸ்மரண மாத்ரத்தாலே அச்சேத்யமான
ஆத்ம ஸ்வரூபத்துக்கும் நாசகங்களாய் இருக்கிற சப்தாதி விஷய அனுபவங்களில் கிடீர் பிரவணமாய்த்து என்கிறார் –
சப்தாதி போக விஷயா ருசி –
சப்தாதி விஷய அனுபவத்தை இட்டு தன்னை நிரூபிக்கும் படி யாய்த்து ருசி —
ருசி சப்தாதி விஷயங்களிலே பிரவணமாய்த்து என்கிறார் –
விஷய பிரகாச புரஸ் சரமாக விறே-ஜ்ஞானம் பிரகாசிப்பது -ருசி தானும் ஜ்ஞான விசேஷம் இறே
ருசி தான் தனக்கு விஹிதமான விஷயத்தை விட்டு அவிஹிதங்களான சப்தாதி விஷய அனுபவத்தில்
பிரவணம் ஆகைக்கு அடி என் என்ன
அஸ் மதீயா-
ருசியானது ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –
தத் ஜ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87- என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் -திரு 67- என்றும் சொல்லுகிறபடியே
பிராப்த விஷயத்திலே மண்டி இருக்குமது அவ் விஷயத்தை விட்டு சப்தாதி விஷயங்களில் பிரவணம் ஆகைக்கு அடி –
ஸ்வத வருவதொரு ஹேது இல்லாமையாலே –
இனி சேதனன் உடைய கர்மம் அடியாக வேண்டுகையாலே அடியேனுடைய சம்பந்தமே அதுக்கு காரணம் என்கிறார் –
இனி செய்ய வேண்டுவது என் என்ன
நஷ்டா பவது-
அது இருந்த இடம் தெரியாதே ஸ்வரூபேண நசிக்க வேணும் என்கிறார் –
இவர் தாம் ஆன்ருசம்சய பிரதானர் ஆகையாலே உபாசகரைப் போலே தம் புண்ய பாபங்கள் அடைய
அந்ய சங்கரமணத்தை சஹிக்க மாட்டார் இறே –
ஆகையாலே வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றோ கண்டிலமால் -பெரிய திரு -54–என்கிறபடியே
போனவிடம் தெரியாமல் போக வேணும் என்கிறார் –
இத்தால்
பிரபன்னனுடைய புண்ய பாப ரூப கர்மத்துக்கு ஸ்வரூபேண நாசம் ஒழிய அந்ய சங்க்ரமணம் இல்லை என்கிறது –(உபாசகன் மோக்ஷம் போகும் பொழுது தாயம் -வேண்டியவர்களுக்கு புண்ணியமும் வேண்டாதவர்களுக்கு பாபங்களும் போய் சேரும்
ஹாயம் விலகி-உபாதானம் வேறு ஒருவர் இடம் சேரும்
பிரபன்னனுக்கு இவ்வாறு இல்லை -இதுவும் ஒரு வாசி
கர்மங்கள் ஒழிந்தே போகும் –
அபசாரம் பட்டால் அதனால் வரும் பாபம் கட்டாயமாக வரும் ஆகையால் பிரபன்னனிடமும் -தப்பு பண்ணக் கூடாது
சரம விமல திருமேனி -அனைவர் இடம் கருணை உள்ளம் கொண்டவன் -ஆகவே யார் இடமும் இவன் கர்மம் போகக் கூடாதே )
இங்கு இப்படி ருசி ஸ்வரூப நாசத்தை பிரார்த்தித்தார் ஆகில் –தத் தாஸதைகர சதா அவிரதா மமாஸ்து-என்று
அது தன்னையே பிரார்த்திக்க கூடுமோ என்னில்
இங்கு விஷய அனுபவத்தை இட்டாய்த்து ருசியை நிரூபித்தது –
நிரூபகத்தை ஒழிய நிரூப்ய சித்தி இல்லாமையாலே நிரூபகமான விஷய அனுபவம் நசிக்கவே
தந் நிரூபிதையான ருசி தன்னடையே நசித்ததாம் இறே –
ஸ்வர்க்கீ த்வஸ்த-என்றும் உண்டு இறே –
மேல் பிரார்த்திக்கப் படுகிறது தாஸ்யைக நிரூபிதையான ருசியாகையாலே கூடும் –
விசேஷண பேதம் கொண்டு விசிஷ்ட பேதம் சொல்லுகை சர்வ சம்மதம் இறே
தேச விசேஷத்தில் தருகிறோம் என்ன –இஹ
அங்கன் இன்றிக்கே இத் தேசத்திலே யாக வேணும் –
சப்தாதி விஷய அனுபவத்துக்கு ஏகாந்தமான இத் தேசத்திலே அவ் விஷய அனுபவத்தை காற் கடைக் கொண்டு
வகுத்த விஷயத்திலே சரம அவதி தாஸ்யத்திலே பிரவணமாய் இருக்கை யன்றோ
தேவரீர் சம்பந்திகளுக்கு உள்ள வை லஷண்யம் என்று கருத்து —
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி யாடி யுழி தரக் கண்டோம் -5-2-1- என்கிறபடியே
ஸ்ரீ தேவரீரும் ஸ்ரீ தேவரீராலே லப்த சத்தாகரான ஸ்ரீ தேவரீர் சம்பந்திக்களுமாக உலாவுகிற இத் தேசத்திலே என்னவுமாம் –
இத்தால் த்வதீய அனுபவ விரோதியான விஷய அனுபவ ருசியை போக்கி யருள வேணும் என்று கருத்து-
இதுவோ தேசத்தைப் பார்த்தாலும் உம்மைப் பார்த்தாலும் விஷயங்களைப் பார்த்தாலும் துஷ்கரம் –
தேசமோ
புண்ய பாபங்களுடைய பலமான ஸூக துக்க அனுபவத்துக்கு ஏகாந்தமான தேசம் அன்றிக்கே புண்ய பாபம் விருத்தி அடையும் தேசம் –
உம்மைப் பார்த்தால்
ஏவம் காலம் நயாமி -என்னும்படி பாபம் செய்கையிலே கை ஒழியாதவர்
விஷயங்களைப் பார்த்தால் –
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்கள் இவை -7-1-6- என்கிறபடியே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஈஸ்வரனுக்கு அடிமை செய்வாரையும் பாதிக்க வல்ல
மிடுக்கு உடையவைகள் -ஆகையாலே துஷ்கரம் என்ன
பவத் தயயா –
ஸ்ரீ ஈஸ்வரன் தயை போலே சேதன கர்ம ப்ரதிபந்தகம் அன்றிக்கே –பர துக்கம் போக்கி யல்லது
தரிக்க மாட்டாத ம்ருது பிரக்ருதியான
ஸ்ரீ தேவரீருடைய கிருபையாலே செய்து அருள வேணும் என்கிறார் –
பர துக்க ஏக நிரூபணியையான தேவரீர் கிருபையாலே என்னவுமாம்
நிரூபகமான துக்கம் அடியேன் இடத்திலே கிடைக்கையாலே அடியேன் தேவரீர் கிருபைக்கு விஷயம் என்கிறார்
இரண்டு ஆகாரத்தாலும் தேவரீர் தயா குணம் ஒன்றையுமே பார்த்து அடியேனுடைய
விஷய அனுபவ ருசியைப் போக்கி யருள வேணும் -என்கிறார்
பவத் தயயா
அநிஷ்ட நிவ்ருத்திக்காக வாதல் -இஷ்ட பிராப்திக்காவாதல்
அடியேனுக்கு ஒரு கைம் முதல் இல்லை -இரண்டும் தேவரீர் உடைய கிருபையாலே யாக வேணும் என்கிறார்
தயை யுண்டாகிலும் சக்தி இல்லாவிடில் செய்வது என் என்ன
யதீந்திர
இந்த்ரியங்களை ஜெயித்தவர்களில் தலைவர் அன்றோ ஸ்ரீ தேவரீர் என்கிறார் –
இந்த்ரியங்களை ஜயிக்கை யாவது -அவற்றை சப்தாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே பிரவணம் ஆக்குகை-
இத்தால் இந்த்ரிய வஸ்யதை தவிர்ந்து இந்த்ரியங்களை ஸ்வ வசமாக்கிக் கொள்ளும் விரகு அறியும் ஸ்ரீ தேவரீரே அடியேனுடைய
இந்த்ரிய வச்யதையைத் தவிர்த்து அருள வேணும் என்கிறார் என்று கருத்து –
இவ்வளவேயோ உமக்குச் செய்ய வேண்டுவது -மற்றை ஏதேனும் உண்டோ என்ன –
உண்டு என்கிறார்
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
நமக்கு சேஷமாய் வைத்து இவ் வஸ்து இவ் விஷயங்களின் காலிலே துகை யுண்வதே
இதன் கையில் இவன் இனி நலிவு படாமல் ஒழிவான் என்று ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணில் பிழைக்கலாம் அத்தனை –
கிருபா மாத்திரம் கொண்டு விஷய ருசியைத் தவிர்க்கப் போமோ என்ன
அருளிச் செய்கிறார்
யதீந்த்ர -என்று –
விஷயங்களை திரஸ்கரிக்கும் சக்திமான்களான யதிகளுக்கு தலைவரான தேவரீருக்கு முடியாதது உண்டோ –
இவ்வளவோ மற்றும் வேறே அபேக்ஷிதம் உண்டோ என்ன
இது ஆனு ஷங்கிகம் வேறே ஒரு பிரயோஜனம் உண்டு என்று தமக்கு அபேக்ஷித்தமான
புருஷார்த்தத்தையே அபேக்ஷிக்கிறார் –
விஷயங்களின் உள்ள எங்கள் ஆசை யதீந்த்ரே! தேவரீரின் கிருபையால் இங்கே அடியோடு அழியட்டும்..
தேவரின் தாஸ தாஸ தாசன் என்று கடைப் படியில் உள்ளவருக்கு ஆட்பட்டு அடிமை புரிவதில்
இன்புறும் தன்மை நீங்காமல் இருக்க வேண்டும்..
த்வத் தாஸ தாஸ -இத்யாதியாலே –
அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –3-7-10-என்றும்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -7-1-1- என்றும்
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யச்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோக நாத -ஸ்ரீ முகுந்த மாலை – 27-என்றும்
பரமாசார்யரான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ பகவத் விஷயத்திலே பிரார்த்தித்தால் போலே இவர் இவ் விஷயத்திலே பிரார்த்திக்கிறார்
விஷய ப்ரேமம் தலை எடுத்தால் சம்பந்தி சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் இறே-
இப்படி யாகாத வன்று பிரேமத்துக்குக் கொத்தையாம் இறே
ஸ்ரீ தேவரீர் சம்பந்த சம்பந்திகளுடைய பரிகணனா சரமாவதி யாகையாலே யாவனொருவன் –
இவ் வூருக்கு இது எல்லை என்னுமா போலே -இவ் வளவாய்த்து ஸ்ரீ எம்பெருமானார் பரம்பரா சம்பந்தம் இருப்பது
என்னலாம் படி இருப்பான் யாவன் ஒருவன் -அவனுக்கு அடிமையாய் இருக்கையாலே-
ஏக ரசதா –
கலப்பற்ற ப்ரீதியை உடைத்தாய் இருக்கை யாவது –
கலப்பறுகை யாவது -பகவத் விஷயத்தில் பாதியும் பாகவத விஷயத்தில் பாதியும் ஆகை யன்றிக்கே –
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே ததீய விஷயத்திலே யாய் இருக்கை –
ஸ்ரீ பெருமாள் இடத்தில் பக்தியும் சௌந்தர்யமும் இறே ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு
அநகத்வேநவும் நித்ய சத்ருத்வேநவும் கழி யுண்கிறது –(குற்றம் இல்லாதவன் -பெருமாள் பக்தி இல்லாதவன்-அநகன் -நித்ய சத்ரு -அவன் சவுந்தர்யம் )
(கேசவ பக்த பக்தியே வேண்டும் -இது கிட்டாவிடில் அதுவாவது வேண்டும்)
(தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-)
அவிரதா மமாஸ்து –
இச் சரமாவதி தாஸ்ய ருசியாவது -தமக்கு அத்யந்தம் போக்யமாய் இருக்கையாலே அவிச்சின்னமாக வேணும் என்கிறார்
மம–
ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் -7-1-10- என்கிறபடியே
இந்த்ரியங்களால் போர நெருக்குண்ட அடியேனுக்கு -என்னுதல்
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் -ஸ்ரீ இராமானுச -நூற்றந்தாதி -84-என்கிறபடியே
அதிலே ஆசை யுடைய அடியேனுக்கு என்னுதல்
(கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே
தொண்டு கொண் டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று
உண்டு கொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.–84-)
மமாஸ்து –
த்ருஷார்த்தன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே தாம் தரிக்கைக்கு தாஸ்யம் வேணும் என்கிறார் –
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை இறே
சித்தத்துக்கு பிரார்த்தனை வேணுமோ என்னில் ரசம் உண்டாலும் தத் ஏக ரசம் இல்லாமையாலே வேணும்
அவிரத அஸ்து
ஆகில் செய்கிறோம் என்றவாறே -விஷய அனுபவத்தால் உண்டான உறாவுதல் தீர்ந்து தரித்தாராய்-
இனி ஒருக் காலும் விஷய அனுபவம் நடையாடாத படி இதுக்கு ஒரு விச்சேதம் இன்றிக்கே நித்யமாகச் செல்ல வேணும் என்கிறார்
மம
அதின் வாசி அறியும் அடியேனுக்கு என்னவுமாம்
அஸ்து
அடியேனுக்கு உள்ளது பிரார்த்தனை இறே
இது ஸ்வரூப அந்தர்கதம் ஆகையாலே சாதனம் ஆக மாட்டாது -ஆகில் சாதனம் என் என்னில்
பவத் தயயா-
என்று கீழ்ச் சொன்னதுவே சாதனம் —
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்னக் கடவது இறே
மம அவிரதா அஸ்து –
சப்தாதி போக நிரத-என்று சப்தாதி விஷய அனுபவத்தை இட்டு நிரூபிக்கும் படியான அடியேனுக்கு
இவனையோ சப்தாதி விஷய பிரவணன் என்னாலாவது -என்னும்படி தாஸ்யமே நிரூபகமாக வேணும் என்கிறார்
வந்தேறி கழிந்தால் தாஸ்யம் ஸ்வரூபமாய் தோற்றும் இறே –
———-
இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது.
இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருள வேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால்.
1-இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும், –2-யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ அவருக்குத் தொண்டு செய்ய வேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய இவ் விரண்டு பலன்களையும் முறையே -இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக் கொண்டாராயிற்று.
எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால் அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது. எம்பெருமானாருடைய க்ருபையோ வெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரை யேற்றும்.
அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும். எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர் நம்பிகள் தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது.
இவ் விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத் தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது.
பகவானுடைய தயை அடியேனிடம் வேலை செய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.
இந்த சரீரத்தில் இருக்கும் போதே -அஸ்மதீய அடியேனுடையவும் -என்னுடையவர்கள் -சேர்க்காமல் என்றும் சேர்த்தும் இரண்டு நிர்வாகம்
அஸ்மத்-அஹம் ஆவாம் வயம் -பஹு வசனம் -நாங்கள் பேசுகிறோம் -நாங்கள் பேசுகிறேன் கூடாதே -பூஜ்ய உக்தியால் பஹு வசனம் -மதீய -ஏகத்வ பஹு வசனம்
கீழ் 9 ஸ்லோகத்தில் மந்த்ரம் குரு தேவதை மூவரையும் அவமதிக்கும் பலரையும் -அநதிகாரிகளைச் சேர்த்துக் கொள்ளலாம்
சப்தாதி விஷய அனுபவ ருசி -துர்கதிக்கு ஆலம்பனம் தேவரீர் கிருபையால் மட்டுமே போக்க முடியும்
தாஸ்யம் -கிரய அதிக்ரய எம் தம்மை விற்கவும் பெறும்படி -சரமாவதி –
எல்லை -பூரணமான எல்லை -ஒப்பிட்டு பார்த்தும் -உத்தர சூந்யம் -வைவஸ்திக அவதி -விவஸ்தை -சொல்ல வந்த விஷயம் –
ஏக ரஸம் -வேறே ரஸம் கலவாமல் -பகவத் தாஸ்யம் கூடக் கலவாமல் –
இக்காலம் வரை கிடைக்காத சேஷத்வ காஷ்டா தேவரீர் கிருபையால் கிட்ட வேண்டும்
மம -ஏக வசனம் -அஸ்மாத் -இல்லையே -இங்கும் பன்மையில் அர்த்தம் கொள்ளலாம்
அடியார்க்கு எல்லை நிலையில் தாஸ்யம் வந்தால் எனது அடியார்களுக்கும் அது அநுக்த ஸித்தம் ஆகுமே
——————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply