Archive for May, 2015

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-55/56/57/58/59/60/61–

May 2, 2015

பிராட்டியை அனுபவிக்க எல்லாம் வல்ல இறைவன் விஸ்வரூபம் முதலிய என்னென்ன செய்தாலும்
அவை பிராட்டியினது அழகியதொரு லீலைக்கும் போதா -என்கிறார்-

தச சத பாணி பாத வதநாஷி முகைர் அகிலை
அபி நிஜ வைஸ்வரூப்ய விபவைர் அநுரூப குணை
அவதரணை ரதைச்ச ரசயன் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–55-

கமிதா கமலே -இலக்குமியே உன் காதலன்
தச சத பாணி பாத வதநாஷி முகை ரகிலை-
ஆயிரக் கணக்கான கைகள் என்ன -அடிகள் என்ன -முகம் என்ன -கண்கள் என்ன -இவை
முதலியவற்றை உடை யவைகளும்
அகிலை -குறைவற்றவைகளும்
அநுரூப குணை-ஏற்புடைய குணங்கள் உள்ளவைகளுமான -தக்க குணங்களாலும் என்றுமாம் —
தனது விஸ்வரூபத் தன்மையினாலும்
அவதரணை ரதைச்ச -அவற்றைத் தவிர்த்த அவதாரங்களாலும் –
பஹூநிமே வ்யதீதாநி ஜன்மாநி -ஸ்ரீ கீதை -வ்யூஹ மூர்த்திகள்  என்னவுமாம்
ரசயன்-அனுபவித்துக் கொண்டு
தவ விப்ரம ப்ரமிமுகே -உனது விலாசச் சுழி வாயிலிலே
க்வசந-ஒரு மூலையிலே
ஹி விநி மஜ்ஜதி -மூழ்கி விடுகிறான் அல்லவா –

இறைவன் பிராட்டிக்காக எதுவும்  செய்வதற்கு ஹேது அவளது போக்யதையே –
வாய் புகு நீராய் போக்யதை வெள்ளத்தில் எங்கேயோ ஒரு மூலையில் மூழ்கி விடுகிறான் –

விப்ரமம் -காதலர் மனத்துக்கு இனிய லீலை
இத்தை சுழியாக உருவகம் செய்தலால் பிராட்டியை ஓர் பேரின்ப வெள்ளமாக கொள்க -ஏக தேச உருவாக
விநிமஜ்ஜதி -நி -உபசர்க்கத்தால் ஆழ மூழ்குதலும்
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே  இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

ஆயிரம் ஆயிரமான வடிகள் கைகள் ஆநனம்கள் நயனங்கள் ஏய்ந்து
மாயிருமை வாய்ந்ததன விசுவரூப மகிமையினால் ஏற்புடைய குணங்களாலும்
சேயொரு தாமரை வாழ்வாய் சனித்தலாலும் சிங்கார நலன் துய்ப்பான் நினது நேசன்
போயொரு மூலையில் மூழ்கிப் போகின்றான் இன்புரிலளித லீலை எனும் சுழிவாய்ப் பட்டே –55–

சனித்தல் -அவதாரங்கள்

——————————————————————–

நம் போல்வாரைக் காத்தற்கு ஏற்ற இடமாய் இருத்தலின் ஏனைய இடங்களிலும் ஸ்ரீ ரங்கத்தில்
மிக்க மகிழ்வுடன் எழுந்து அருளி இருப்பதாகக் கூறுகிறார் —

ஜநந பவந ப்ரீத்யா துக்தார்ணவம் பஹூ மன்யஸே
ஜநநி தித ப்ரேம்ணா புஷ்ணாசி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய மாத்ருச ரஷண
ஷமமதி தியா பூயச் ஸ்ரீ ரங்க தாமநி மோத ஸே –56–

ஜநந பவந ப்ரீத்யா -பிறந்தகத்து அன்பினாலே
துக்தார்ணவம் -பாற்  கடலை
பஹூ மன்யஸே -மதிக்கின்றாய்-வசிக்கின்றாய் –
ஜநநி தித ப்ரேம்ணா -தாயே -காதலன் பால் கொண்ட பிரேமத்தாலே -புக்ககத்  தன்பினாலே
புஷ்ணாசி தத் பரமம் பதம் -பிரசித்தமான பரம பதத்தை போஷிக்கின்றாய் -வளமுற வாழ்கின்றாய் –
உததி பரம வ்யோம்நோர் -அப்படிப் பட்ட பாற் கடலையும் பரம பதத்தையும்
விச்ம்ருத்ய மாத்ருச ரஷண -மறந்து என் போன்ற மக்களை காப்பதற்கு
ஷமமதி தியா பூயச் ஸ்ரீ ரங்க தாமநி மோத ஸே -ஏற்ற இடம் என்ற எண்ணத்தினாலே
மிகவும் ஸ்ரீ ரங்க ஷேத்ரத்திலே மகிழ்கின்றாய் —

பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –

அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –

ஜநநி -என்று விளித்து -மாத்ருசர் -என் போல்வாரை -மக்கள் -புத்திர வாத்சல்யமே
கணவன் பால் உள்ள காதலையும் விட மிக்கு இருக்கும்
என் போல்வாரை -என்றது அநந்ய கதித்வம் ஆகிஞ்சன்யமும்  உள்ள நிலைமை –
அதனாலே ஸ்ரீ ரங்கமே பிராட்டியை மகிழ்வித்துக் கூத்தாடும் படி செய்யும் இடம்-

அவ்வூரின் பேரும் பெரிய பிராட்டியாருக்கு ந்ருத்த ஸ்தானம் -பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி
நாச்சியார் திருமொழி -11-9- வ்யாக்யானத்தில்

பிறந்தகத்தில் சீராடும் இன்பத்தையும்
குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகத்தையும் மறந்து விடும்படி
பிராட்டியை மகிழ்விக்கிறது ஸ்ரீ ரங்கம் –
அங்கனம் மறந்து மகிழ்வதற்கு ஹேது தாய்மையால் வந்த புத்திர வாத்சல்யமே என்றதாயிற்று –

பிறந்தகத்து அன்பினாலே பீடு பாற் கடல் பெறுத்தி
சிறந்தக முன் தன் செம்மல் அன்பினால் செழிப்பு உறுத்தி
மறந்தக மவை  மகிழ்ந்து மக்கள் எம்மனோரைக் காக்கச்
சிறந்தகம் இக்தே என்று சென்னி சீரரங்கில் வாழ்தி–56-

——————————————————————————–

நம் போல்வாரைப் புருஷகாரமாய் இருந்து காப்பதற்குத் தேவையான குணங்கள் யாவும்
திரு வரங்கத்திலேயே சிறப்புறுகின்றன -என்கிறார் —

ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ
பூர்வேஷூ சர்வ மதிசாயிதம் அத்ர மாத
ஸ்ரீ ரங்கதாம்நி யதுத் அன்யத் உதாஹரந்தி
ஸீதாவதார முக மேதத் அமுஷ்ய யோக்யா –57-

ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித   வத்சலத்வ  பூர்வேஷூ சர்வ மதிசாயித மத்ர மாத –
தாயே -வள்ளன்மை கருணை -அடியாரிடம் வாத்சல்யம்
இவற்றை முன்னிட்ட நற் குணங்களுள்
புருஷகாரம் ஆவதற்குத் தேவையான குணங்கள் யாவும் –

ஸ்ரீ ரங்கதாம்நி யது தான்யா துதாஹரந்தி ஸீதாவதார முக மேத தமுஷ்ய யோக்யா —
ஸ்ரீ ரங்க ஷேத்ரத்தில்
அத்ர-ஸ்ரீ ரங்க நாச்சியாராய் இருக்கும் இந்த நிலையில்
அதிசாயிதம் -சிறப்பிறுத்தப் பட்டுள்ளன –
மேலும் -அன்யத் -இவ்வர்ச்சை நிலையின் நின்றும் வேறுபட்ட
யாதொரு சீதாவதாரம் முதலியவற்றை
உதா ஹரந்தி -கீழ்ச் சொன்ன குணங்கள் விளங்கும் இடமாக இதிஹாச புராணம் வல்லோர்   எடுத்து இயம்புகின்றனரோ
இந்த சீதாவதாரங்கள்  முதலியதும் -அமுஷ்ய -இவ்வர்ச்சை நிலைக்கு -யோக்யா -பயிற்சி செய்வதேயாம் –

ஔதார்யம் -தனது நலப் பற்று இன்றி பிறர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தல் –
சித்த உபாயமான தன்னையே கொடுத்தல் என்றுமாம் –

உலகை உய்விக்கக் கருதி பிராட்டி பல கால் திருவவதரித்து பயின்றனள்-
இறைவனும் அர்ச்ச்சை நிலையில் கோயில் முதலிய ஸ்தலங்களில் பயின்றதாக பூதத் தாழ்வார் –
பயின்றது அரங்கம் -பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –

வண்மையும் கருணையும் வாத்சலம் முதலன
உண்மையில் அரங்குறை யுனக்கொர் ஒப்பிலையனாய்
பெண்மணி சானகி போலுந பிறவிகள்
எண்ணிடல் இந்நிலைக்கு என்ற நற் பயிறலே –57-

அனாய் -தாயே
பாரதந்த்ர்யம் தலை சிறந்து விளங்க நின்றமையின் பெண் மணி சானகி என்று
அடை மொழி கொடுக்கப் பட்டது-

————————————————————————————

அக் குணங்களுள் ஔதார்யம் அளவு கடந்த அதிசயம் உடையது -என்கிறார் —

ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசி தஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சிதுசித்தம் க்ருதமித் யதாம்ப
த்வம் லஜ்ஜஸே கதய கோய முதாரபாவ –58-

ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா  கஸ்மைசி தஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய
அஞ்ஜலி பரம் -தொழுகைச் சுமையை -சுமக்கின்ற
கச்மைசித் -யாரானும் ஒருவனுக்கு -அவன் அதிகாரத்திற்கு ஏற்ப
ஐஸ்வர் யத்தை யாவது
கைவல்யம் என்னும் பயனையாவது
மோஷத்தை யாவது
விதீர்ய -கொடுத்து
இன்னமும் –

அஸ்மை ந கிஞ்சிதுசித்தம் க்ருதமித் யதாம்ப  த்வம் லஜ்ஜஸே கதய கோய முதாரபாவ —
இவனுக்கு சுமைக்குத் தகுந்தது -உசிதம் –
ஒன்றும் செய்யப்பட வில்லையே என்று வெட்க்கப் படுகின்றாய்
இந்த வண்மைக் குணம் -க கத்ய-  எத்தகைத்து சொல்லு-

நேர்வதோர் எளியதோர் அஞ்சலி மாத்ரம்-
பெறுவதோ பெரும் பயன்கள் –

ஸ்ரேயோ ந்ஹ்யரவிந்த லோசந மந காந்தா பிரசா தாத்ருதே சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத்வச
ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஆளவந்தார்

தேஹாத்மாபிமானிக்கு பயன் ஐஸ்வர்யம்
ஸ்வதந்த்ராபிமானிக்கு பயன் கைவல்யம்
அடிமையாய் அநந்ய பிரயோஜனனுக்கு பயன்  பரமபதம் –

ஒரு மலையைச் சுமந்தது போலே நாம் அஞ்சலி பண்ணுவதை பிராட்டி கருதுகிறாள் -அதற்க்கு ஏற்ப
சுமையாக அஞ்சலியைக் கூறினார் –

தே பூயிஷ்டாம் நம உக்திம் -என்றும் –
அது சுமந்தார்கட்கே -என்றும் ஸ்ருதிகள் ஓதுமே –

அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால்
கச்மைசித் -என்கிறார் –

உன்னடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ என்றபடி

தான் கொடுக்கும் மோஷமும் அற்பமாய்த் தோற்றுவதால் நாணி இருப்பதால்
இது என்ன ஔதார்யமோ என்று வியக்கின்றார் –

ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டாம் உதாராம் -சுருதி உதாரா சப்தம்

உதாரா சப்தத்துக்கு மோஷ ப்ரதத்வ ரூபமான உபாயத்வமும் பிராட்டிக்கு உண்டு
என்பர் ஸ்ரீ வேதாந்த தேசிகர்

பிராட்டி புருஷகாரம் ஆனால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான் ஆதலின்
இறைவன் வாயிலாக மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது என்பர் மற்றைய ஆசார்யர்கள் –

அஞ்சிறப் பக்கர மாக்கமோ அம்மனாய்
அஞ்சலி சுமப்பவர்க்கு அருளியு மேற்ப யான்
எஞ்சற ஈகலன் எனத் தலை குனிதியேல்
கொஞ்சமோ குருதி அம்மா நின் கொடைத் திறன் -58-

அம் சிறப்பு -அழகிய மோஷம்
அக்கரம் -கைவல்யம் -அஷர கதி
ஆக்கம் -ஐஸ்வர்யம்-

——————————————————————————-

மேல் இரண்டு ஸ்லோகங்களினால் தம் நைச்யத்தை யனுசந்திக்கிறார் —

ஞான க்ரியா பஜந சம்பத கிஞ்சந அஹம்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ
ஆகாம்சி தேவி யுவயோரபி துஸ் சஹாநி
பத்தநாமி மூர்க்க சரிதஸ் தவ துர்பரோஸ்மி –59-

ஞான க்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்  இச்சாதிகார சகநாநுசயா நபிஜ்ஞ
பயன் பெற வேண்டும் என்ற ஆசையையும்
அப் பயனுக்காக விதித்த வற்றைச் செய்யுமாறு ஏவப் படுகிற யோக்யதையையும்
சகந -செய்வதற்கு சக்தியையும்
அநு சய -விதித்ததை இது காறும் செய்யாது இருந்தோமே என்ற அனுதாபத்தையும்
அநபிஜ்ஞ -அறியாதவனும் -ஆதலின் –
ஞான யோகம் என்ன
கர்ம யோகம் என்ன
பஜந -பக்தி யோகம் என்ன
இவைகள் ஆகிற செல்வத்தினால்
அகிஞ்சனனான நான்
யுவயோ அபி -இறைவனும் இலக்குமியுமான உங்களுக்கும் கூட

ஆகாம்சி தேவி யுவயோரபி துஸ் சஹாநி பத்தநாமி மூர்க்க சரிதஸ் தவ துர்பரோஸ்மி —
பொறுக்க ஒண்ணாத -ஆகாம்சி -பிழைகளை
பத்த்நாமி -சேர்க்கின்றேன்
கெட்ட நடத்தை யுடைய நான் உனக்கு தாங்க இயலாதவனாக இருக்கின்றேன் –

முற்கூற்றால் ஆநு கூல்யம் இல்லாமையும்
பிற்கூற்றால் ப்ராதிகூல்யம் உடைமையும் கூறப் பட்டன –

இச்சை -மோஷ ருசி -முமுஷூத்வம்

அதிகாரம் -அனலை யோம்பும் அந்தண்மை முதலியன

சகநம் -விதித்தவற்றை அறிந்து அனுஷ்டிக்கும் திறம் –

இவை எனக்கு இல்லை என்பது மட்டும் இல்லை –
இங்கனம் சில உண்டு என்ற அறிவும் இல்லை

மேலும் தீமைகள் எல்லாவற்றையும் சேர்த்த வண்ணமாய் உள்ளேன்

குற்றத்தை நற்றமாக கொள்ளும் இயல்பு கருதி யுவரோபி -என்கிறார் –

ஷாந்தி ஸ்தவா கஸ்மிகீ -எனச் சிறப்பித்துக் கூறப் படும் உனக்கும் நான் பரிகரிக்க முடியாதவன் ஆனேன்

அஹமசம் யபராதா நாமாலய -குற்றங்களுக்கு கொள் கலம்

துர்ப ரோஸ்மி-எங்கனம் ஆயினும் நீ என்னைக் காத்து அருள வேணும் –

சற்றமே யறிவு கன்மம் பத்தி யாம் சம்பத்தில்லை
கற்றிலேன் இச்சை பெற்றி கவுசலம் இரங்கல் தேவி
குற்றமே புரியா நிற்பன் கொதிக்க நும் மிருவீ ருள்ளும்
முற்றுமே மூர்க்கனேனை முடியுமோ தாங்க நீ தான் –59-

பெற்றி -அதிகாரம் –
கவுசலம் -சாமர்த்தியம்
இச்சை -பெற்றி -கவுசலம் -இரங்கல் -கற்றிலேன் -இவற்றைப் படித்தும் அறியேன்
முற்றும் மூர்கனேனை நீ தான் தாங்க முடியுமோ –

————————————————————————

இங்கனம் நைச்ய அநு சந்தானம் செய்வதும் மனப் பூர்வமாய் அன்று –
முன்னோர்களைப் பேச்சளவிலே பின்பற்றின மாத்திரமே –
ஆதலின் நினது இயல்பான கருணையினால் என்னைக் காத்தருள்க -என்கிறார்-

இத் யுக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாநம்ப சத்ய வசச  புருஷான் புராணான்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வமேவ சரணம் விதித க்ருதாசி–60-

இத் யுக்தி கைதவ சதேந விடம்பயாமி  தாநம்ப சத்ய வசச  புருஷான் புராணான்-
அம்பா -தாயே
இதி -கீழ்ச் சொன்ன முறையிலே-
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைச்ய அநு சந்தானங்களால்-
தான் -பிரசித்தர்களும்
சத்ய வசச -உண்மையையே உரைப்பவர்க்களுமான
பழம் காலத்து ஆசார்யர்களை
விடம்பியாமி -அநு கரிக்கின்றேன் –

யத்வா ந மே புஜ பலம் தவபாத பத்ம  லாபே த்வமேவ சரணம் விதித க்ருதாசி–
யத்வா -அல்லது
நினது திருவடித் தாமரைகளைப் பெறுவதில் எனக்கு
புஜ பலம் -கைம் முதல் சாதனம் இல்லை

விதித -கருணையால் த்வ மேவ -நீயே
சரணம் க்ருதா அஸி-தஞ்சமாக செய்யப் பட்டு இருக்கிறாய் –

பொய்யே யாயினும் முன்னோர்களை பின் பற்றினமையாலும் இழக்க வேண்டும் படியோ உமது நிலை
நிர்ஹேதுக கிருபை ஒன்றே தஞ்சம் –

விதி -விதி வாய்க்கின்றது காப்பாரார்-கரை புரண்ட கருணையை –
பிராட்டி சரணம் ஆவது தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுவதே –
அதாவது புருஷகாரம் ஆதலே யாம் –

சரணமாகச் செய்யப் பட்டாய் -என்று -சரணம் ஆனாய் என்று சொல்லாமல் –
நிர்ஹேதுக கிருபையை விதி என்றதால் -விதியை யாரால் வெல்ல முடியும் –

தொல்லவர் மெய்யே சொல்லும் தூ நெறி தொடருவேன் போல்
எல்லை யிலாமல் இங்கன் இயம்பினன் சலங்கள் அந்தோ
அல்லது தாயே உன் தன் அடி மலர்ப் பெற என் கையில்
வல்லமை இலையதற்கு வல்லை நீ விதியினானாய் –60-

—————————————————————–

நிகமத்தில் பலன்களை ஆஸாசித்து இவ் வருமந்த ஸ்துதியைத் தலைக் கட்டுகிறார்-

ஸ்ரீ ரங்கே சரத்ச் சதம் சஹ ஸூஹ்ருத் வர்கேண நிஷ் கண்டகம்
நிர் துக்கம் ஸூ ஸூகஞ்ச தாஸ்ய ரசிகாம் புக்த்வா சம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ஸ்யாம த்வம் அம்பா பிதா
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ் மாத க்ருபாம் –61-

ஸ்ரீ ரங்கே சரத்ச் சதம் சஹ ஸூஹ்ருத் வர்கேண நிஷ்கண்டகம்
திருவரங்கத்தில் நூறு வருஷங்கள்
நண்பர்களோடு கூட
இடையூறு இன்றியும்

நிர் துக்கம் ஸூ ஸூகஞ்ச தாஸ்ய ரசிகாம் புக்த்வா சம்ருத்திம் பராம் –
துன்பம் இன்றியும் -மிகவும் ஸூகமாகவும்
அடிமை இன்பம் கொண்ட சிறந்த வளத்தை துய்த்து -ப்ருஷ ஆயுஸ் நூறு -என்பர்
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவுடன் இசைந்து இருந்து நுகர்ந்து –
ஸ்ரீரங்க ஸ்ரியம் அநு பத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய -என்றதாயிற்று

யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ஸ்யாம த்வம் அம்பா பிதா –
உங்களுடைய திருவடித் தாமரைகளினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் –

யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி

ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும்
ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –

நீயே அன்னை அப்பன் -இம்மை பயன் தருவதற்கு ஹேது –
ஏனைய உறவுக்கும் உப லஷணம்-

சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் —
நீயே எனது எல்லா தர்மமுமாக வேண்டும் –
மறுமை பயன் தருவதற்கு ஹேது-

கர்ம யோகாதி உபாய அனுஷ்டானம் எம்மிடத்து இல்லை யாயினும்
அவற்றின் ஸ்தானத்தில் புருஷகாரமாக நீயே இருந்து
இறைவனால் எமது விருப்பத்தை நிறைவேற்றி அருள வேணும் –

நிர்ஹேதுக கிருபையை -அங்கனம் அருள்வதும் நிர்ஹேதுக கிருபை அடியாக –
எனது யோக்யதையைப் பார்த்து அருளினால் உன் கிருபைக்கு ஏற்றம் இராதே என்பதால்
ஸ்வீகுர் வகஸ் மாத க்ருபாம் -என்கிறார் –

சர்வஞ்ச த்வமஸி த்வமேவ பவ நஸ் ச்வீகுர் வகஸ் மாத க்ருபாம் -என்றும் பாடம்
எல்லா உறவும் நீயே ஆகிறாய்
எமக்கு நீயே உபாயம் உபேயம் ஆகுக –

முன் ஸ்லோகம் த்வயத்தின் பூர்வ கண்டத்தின் பொருளையும்
இது உத்தர கண்டத்தின் பொருளையும் கூறும் என்பர்

நித்ய முக்தரும் இங்கே வந்து கைங்கர்யம் செய்வதாலும்
இது பிரத்யஷமான பரம பதம் ஆதலாலும்
பரம பதத்தையும் முறித்துக் கொண்டு வருவேன் என்று சொல்லும்படி போக்யமாக தமக்கு இருத்தலாலும்
இம்மையோடு மறுமையும் இங்கேயே வேண்டிக் கொண்டு தலைக் கட்டி அருளுகிறார் –

திருவரங்க நகர் தனிலே நண்பரோடே சேர்ந்து இடையூர் உறு துயரமின்றி நூறு
வருடங்கள் சுகமாக வடிமை இன்பம் வாய்ந்த பெரு வளம் துய்த்து வாழ்ந்த பின்னர்
இரு வருமா முமதுபத மலர்த் தூளாவோம் ஈன்றோயும் எந்தையும் நீ செய்யும் எல்லாத்
தருமும் நீ எம் தமக்குத் தானே யாகிச் சாதனம் அற்று இயல்பான தயை செய்வாயே –61–

————————————————————————

திருவினை நவிலும் பட்டர் தே மொழி தம்மில் காணும்
திருவினை யமைத்து நன்னர்த் திருமலை நல்லான் யாத்த
திருவினை இதனை யோர்ந்தே யின்ற தமிழ் வல்லீர் உள்ளத்
திருவினை நீங்கும் வண்ணம் எண்ணி நீர் இயம்புவீரே —

சீர் பராசர பட்டர் செகத்துக் கீந்த ஸ்ரீ குண ரத்ன கோசம் திறப்பதற்குப்
பார் புகழும் திருமலை நல்லான் உரைத்துப் பண்ணின விப் பொற்றிறவு  கோலைப் பாரீர்
சீர் மேவு மரதனங்கள் செழிக்கப் பெற்றுச் சிதறாமல் அணிந்து உய்வீர் செப்புகின்றேன்
கார் மேகக் கண்ணன் அருள் கமலச் செல்வி கண்ணின் அருள் கரை புரளும் காண்மின் நீரே —

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-48/49/50/51/52/53/54–

May 2, 2015

இங்கனம் திவ்ய ஆபரணங்களும் திவ்ய ஆயுதங்களும் பிராட்டிக்கே உரியவையே என்றமையால்
திவ்ய தம்பதிகளினுடைய ஆநுரூப்யம் காட்டப்பட்டதாயிற்று –
இவ் வநுரூப்யம் ஏற்கனவே யுள்ள நிலைகளில் மாத்திரம் அன்று –
புதிதாய் எடுக்கும் திரு அவதாரங்களிலும் காணலாம் –
ஆநு ரூப்யத்துடன் பிராட்டியும் கூட திரு வவதரிக்கா விடில் இறைவனது திரு வவதாரம்
விரசமாய் இருக்கும் என்கிறார் –

யதி மநுஜ திரஸ்சாம் லீலயா துல்ய வ்ருத்தே
அநுஜநூர் அநு ரூபா தேவி நாவாதரிஷ்ய
அஸரஸம் அபவிஷ்யன் நர்ம நாதஸ்ய மாத
தரதள தரவிந்தோ தந்த காந்தாயதாஷி -48–

மலருகிற தாமரையின் பேச்சை யுடையதும்
அழகிய நீண்ட திருக் கண் படைத்த
தாயான தேவியே
விளையாட்டினாலே மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் சமமான செயல்களை யுடைய கணவனது
திருவவதாரம் தோறும் தகுந்தவளாக திரு வவதரிக்காது இருந்திருப்பாய் ஆனால்

நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -நாயகனது விளையாட்டு விரஸமாக ஆகி இருக்குமே
இன்னாருக்கு விரசமாய் இருக்கும் என்னாதது
இருவருக்கும் -அடியார்களுக்கும் என்றபடி
க்ரீடேயம் கலு நான்யதாசஸய ரசதா ஸ்யாத்-என்றார் பெருமாள்-

ப்ரஹ்மசாரிக் குறளாய் திருவவதரித்த போதும் சிறிய திருமேனியுடன் திரு மார்பில் விளங்கும் இலக்குமியை
மான் தோல் உபவீதத்தால் மறைத்துக் கொண்டான்

பூ மேய செம்மாதை நின் மார்பில் சேர்வித்துப் பாரிடந்த அம்மா -நம்மாழ்வார் —
ஸ்ரீ வராஹாவதாரத்திலும் பிராட்டி திருமார்பில் இருந்தமை தோற்றுகிறது

பரிபாடலிலும் -செய்யோள் சேர்ந்த நின் மாசிலகலம் உள்ளுனர் உருப்போர் உரையொடு சிறந்தன்று –

ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதரேஷூ விஷ்ணோ ரேஷா நபாயி நீ -ஸ்ரீ பராசரர் –

தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை -வாலி

துல்ய சீல வயோவ்ருத்தாம் –ராகவோர்ஹதி வைதேஹீம் —

அநு ஜனு ரனுரூப ரூபசேஷ்டா ந எதி சமாகம மின்த்ரா கரிஷ்யத் அசரச மதவாப்ரியம் பவிஷ்ணு த்ருவ
மகாரிஷ்யத ரங்கராஜ நர்ம-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –

உபேந்த்ரனாய்-தேவயோநியிலும்
இராம கிருஷ்ணனாய் மனிதப் பிறப்பிலும்
மத்ஸ்யாதியாய் திர்யக் யோனியிலும்
மா மரமாய் -ஸ்தாவரப் பிறப்பிலும்
இஷ்டப்படி திருவவதரித்ததால் -லீலையா -மநுஜ திரஸ்சாம் என்கிறார் –

அவதாரங்களில் மெய்ப்பாடு தோன்ற துல்ய வ்ருத்தே –
மானமிலாப் பன்றியாயின் கோரைக் கிழங்கைப் புசிப்பது துல்ய வ்ருத்தி அன்றோ –

பிராட்டி திருவவதரிப்பது -விளையாடும் இயல்பினாலும் -தேவி
தாய்மை உறவினாலும் -மாதா

நிறைந்த கருணையினாலும் -காந்த ஆயதாஷி –கண்ணுக்கு அணிகலம் -கண்ணோட்டம் -கருணை

இந்தக் கண்ணைக் கண்டதும் போலியான தாமரையின் பேச்சு எழுதலின்
பேச்சை யுடையதாயிற்று இக்கண் -உதந்த -சமாசாரம் பேச்சு

உள் இதழை லஷிக்கும்
உள் இதழ் போன்ற அழகாய் நீண்ட திருக் கண்கள் -என்றபடி –

வேண்டியே விளையாடற்கு விளங்கு மானிடப் பிறப்பைப்
பூண்டிடும் தோறும் ஏற்பப் போந்து நீ  தோன்றிடாயேல்
யாண்டு நின்னன்பன் தாயே இன்பனாம் சிறிதலர்ந்து
காண்டகு கமலம் போலும் கவினுறு கண்ணாய் தேவி –48-

————————————————————————

திரு அவதாரம் தோறும் ரசிப்பதற்காக உடன் திரு அவதரிப்பது மாத்ரம் அன்றி
இறைவனது ஸ்ரமத்தை தீர்ப்பதற்காகவும் திரு அவதரிப்பது உண்டு என
திருப் பாற் கடலில் பிராட்டி அவதரித்தத்தை அனுசந்திக்கிறார் –

ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் முராரே
பகவதி ததிமாதம் மதந்தச் ஸ்ராந்தி சாந்த்யை
பிரமதம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ –49—

ஸ்கலித கடக மால்யைர் -நழுவின -தடங்கலான கை அணி என்ன -மாலைகள் என்ன -இவைகள் யுடைய –
தோர்பி ரப்திம்  -கைகளினாலே அப்திம் -கடலை –
பகவதி -நற்குணம் வாய்ந்த இலக்குமியே
ததிமாதம் மதந்தச் -தயிர் கடைவது போலே கடைகின்ற முராரே இறைவனுடைய –
ஸ்ராந்தி சாந்த்யை-களைப்பு நீங்குவதற்காக

ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ –புன்னகை என்ன -பார்வை என்ன இவைகளாகிற
அமுதங்களாலே நனைத்துக் கொண்டு சந்த்ரிகை போலே –
பிரமதம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ-சுழலும் அமுத அலைகளுடைய சுழியில் இருந்து தோன்றினை-

கடல் கடைவதையும் அலஷ்யமாகக் கருதிக் கடகம் மாலை முதலியவற்றைக் கழற்றாமையின் அவை தடங்கல் ஆயின –
தோர்பி -பஹூ வசனம் -ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்த பாரிப்பு தோற்றுகிறது –
தயிர் கடைந்தது போலே இருந்தாலும் பரிவின் மிகுதியால் அதுவும் ஸ்ரமமாகத் தோற்றவே
அதனை நீக்கவே சந்த்ரிகை போன்றவள் -என்கிறார் இலக்குமியை –

அமுதத்தின் சாரமே பிராட்டி -அமுதில் வரும் பெண்ணமுது -அன்றோ –
மதுர ரசேந்திரா ஹவஸூதா ஸூந்தர தோ பரிகம் -கூரத் ஆழ்வான்

என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை
தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –

கடகமும் தொடையலும் கழலக்  கைகளால்
கடையிறை தயிர் எனக் களைப்பு நீங்கிடப்
படு நில வென நகை பார்வையில் பகவதி
கடலமு தலைச் சுழி காண வந்தனை –49-

—————————————————————————-

ஸ்ரீ சீதாவதாரத்தில் விளங்கிய பிராட்டியின் ஈடற்ற பொறுமை மஹாபராதிகளான நம்மை
இன்புறுத்துவதாகக் கூறுகிறார் —

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயிததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணமி த்யுக்தி ஷமௌ ரஷத
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூக யது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–50-

மாதர் மைதிலி -தாயே -ஜனகன் திருமகளாய் திரு வவதரித்து அருளியவளே –
தாயின் பொறை தகப்பன் பொறையை விட விஞ்சியே இருக்கும் அன்றோ
அவனையும் பெற்ற தாய் நீயே -என்பாரேலும் சிறிது வன்மை உண்டே ஆண் மகனான அவனிடம்
உபசரித்துக் கூறினும் இயல்பான தாயின் தன்மை சிறந்தது அன்றோ –
இயல்பான குணமும் படைத்த குணமும் சேர்ந்து அற விஞ்சியது என்பதால் மைதிலி என விளிக்கிறார்

ராஷசீஸ் த்வயிததை வார்த்ராபராதாஸ் த்வயா -நின் திறத்து  அப்பொழுதே
ஆர்த்ராபராதா -குற்றங்கள் புரிந்த வண்ணமாய் யுள்ள -அரக்கியரை –

ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணமி த்யுக்தி ஷமௌ ரஷத
வாயு குமாரனான ஹனுமானிடம் இருந்து காப்பாற்றுகிற உன்னால்
சரணம் இதி -சரணம் என்று– உக்தி ஷமௌ -சொல்லுவதில் தகுதி  வாய்ந்த
காகாசுரனையும் பிரசித்தமான விபீஷணனையும் காப்பாற்றுகிற ராமனுடைய கோஷ்டியானது
மிகவும் எளியதாக செய்யப் பட்டு விட்டது –

ததைவ –ராவண வதத்தைச் சொல்ல வருகின்ற அந்த சமயத்திலே -என்றபடி –
அப்பொழுதும் ராஷசிகள் துன்புறுத்திக் கொண்டே இருந்தும் காத்தனளே-
கொண்ட பிடியை விடாத குரங்கின் இடம் இருந்து காப்பது அரிது அன்றோ –
தந்தையான வாயு  போலே தடுத்தற்கு அரியவன் -பவ நாத் மஜன் -என்கிறார் –
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறார் –

த்ரீன் லோகன் சம் பரிக்ரம்ய தமேவ சரணம் கதா -என்றும்

த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத -என்றும்
சரணம் அடைந்தவர்கள் அன்றோ அவர்கள் –

பலி புஜி–குண லவ சஹவாசாத் த்வத் சாமா சங்கு சந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்

உக்தி ஷமௌ -சரணம் என்று சொல்ல தகுதி வாய்ந்தவர்கள் -என்பதால்
காகத்தையும் சேர்த்து என்னலாம்

வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -என்பதால்
சரண் அடைந்ததும் சொன்னதாகவும் கொள்ளலாம் —

நின்னபயம் என்று அடைய சொல்லவில்லை பெரியாழ்வார் அதனாலே உக்தி ஷமௌ இங்கே
அப்பொழுது -உக்த்யா ஷமௌ -ரஷிப்பதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கொள்ள வேண்டும்
தீங்கு இளைத்த ஜெயந்தனை காகம் என்றே அருளுகிறார் ஆளவந்தாரும்
வாயசமாக இவனைக் குறிப்பிட்டார்

சொல்லை பற்றாசாகக் கொண்டு ரஷித்த பெருமாளை விட
யாதொரு பற்றாசும் இன்றி ரஷித்த பிராட்டியின் ஏற்றம் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –

ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது
நெருங்கின மஹத்தான அபராதங்களை யுடைய எம்மை இன்புறுத்துவதாக-

ஆகச்மிகீ நிர்ஹேதுகம் என்றபடி
திரிஜடை சொல்லியும் கேளாத ராஷசிகளை ரஷித்த பெருமை உண்டே
ராஷசர் நால்வரும் சரண் அடையாவிடிலும் விபீஷணன் செய்த சரணாகதி பலித்தது அவர்களுக்கும்
சிஷ்யன் அனுகூலித்து வராவிடில் இவனுக்காக ஆசார்யன் செய்த பிரபத்தியும் பயனில்லதாம்
பிராட்டி வியாஜ்யம் இன்றி காப்பது ஆகிஞ்சன்யம் உடையவர்களையே யாதலின் சர்வ முக்தி பிரசங்கம் வாராது –

அன்னை சீர் மைதிலியே அரக்கியர்கள் அன்றைக்கும் பைங்குற்றம் புரியா நிற்ப
அன்னாரை யளித்த நுமன் அழியா வண்ணம் அழித்தனையால் இராமனது குழுவின் மேன்மை
தந்நாவில் சரணம் எனத் தகுதி வாய்ந்த தசமுகனின் தம்பியொடு காகம் காத்த
தென்னாவது இரும் குற்றம் இழைக்கின்றோமுக்கு இன்பம் உமுனதியல்பான பொறுமை நல்க –50

பைங்குற்றம் -பசுமையான நாள் படாத அப்பொழுதே செய்த குற்றம் –

—————————————————————-

இங்கனம் பொறுமையில் சிறப்பு எய்திடலின் பிராட்டியைச் சேர்ந்தவர்களே நாம்
இறைவனை நாம் வேண்டுவதோ பிராட்டியின் தொடர்பு கொண்டே என்கிறார் –

மாதர் லஷ்மி யதைவ மைதில ஜனஸ் தே நாதவ நாதேவயம்
த்வத் தாஸ்யைக ரஸாபிமான ஸூகைர் பாவை ரிஹா முத்ரச
ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பஸ்யேம பிரதியாம யாமசபரீ சாரான் ப்ரஹ்ருஷ்யேமச  –51-

மாதர் லஷ்மி யதைவ மைதில ஜனஸ் தேநாதவநா தேவயம் –
தாயான லஷ்மி இலக்குமியே
உனக்கு மிதிலை மக்கள் எப்படியோ -அந்த வழியாலேயே நாங்களும் உன்னைச் சேர்ந்தவர்களே –
மிதிலை மக்கள் தங்கள் அரசன் ஜனகன் மருமகன் என்றும் ஜானகியின் கணவன் என்றும் தொடர்பு கொண்டே
இராமனைக் கண்டு உவப்பது போலே யாமும் இலக்குமியின் தொடர்பு கொண்டே இறைவனைக் கண்டு உவப்போம் -என்றவாறு

ப்ரபன்ன ராஜராகிய பெரியாழ்வார் மருமகன் என்றும்
கோதையின் கொழுநன் என்றும் அரங்கனைப் பார்க்கின்றோம் –

பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே –
அழகிய மணவாளப் பெருமாள் -என்று நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று
வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் அனுசந்தேயம் –

த்வத் தாஸ்யைக ரஸாபிமான ஸூபகைர் பாவை ரிஹா முத்ரச-
உனது அடிமையில் முக்ய ப்ரீதி முக்ய அபிமானங்களாலே
அழகிய அபிப்ராயங்களோடு இங்கும் -லீலா விபூதியிலும் -அங்கும் -பரம பதத்திலும் –

ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் -பஸ்யேம பிரதியாம யாமசபரீ சாரான் ப்ரஹ்ருஷ்யேமச
மணமகன் உன் கணவன் -என்று உனது தொடர்பு உணர்ச்சி கொண்டே
இறைவனைப் பார்க்கக் கடவோம் -சரண் அடையக் கடவோம்
பணி விடைகளை பெறவும் கடவோம் -களிக்கவும் கடவோம் –
பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா -எனபது சிந்திக்கற்பாலது

பவதீ பாதலா ஷார சாங்கம்-ஸ்ரீ ஸ்துதி
பவதீ பிரசாதாத் -தேவி மஹாத்ம்யம்

அந்தப் புரத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பிழை புரிந்தாலும் அரசர்கள் ஒரு வியாஜ்யத்தை யிட்டு பொறுப்பது போலே
நம் பெரும் பிழைகளையும் பொறுத்து அருள்வான் –

பிராட்டிக்கு புரிந்த பணி என்றே
ப்ரீதியும் நினைவும் உண்டாக வேண்டும் –

தாஸ்யம் ஒன்றிலுமே ரசமாய் இருக்கும் அபிமானம் கொள்ள வேண்டும்
பிரதியாம -பிரதிபத்தி பண்ணக் கடவோம் -அத்யவசாயம் ஒன்றே -கிட்டக் கடவோம் என்றபடி

பரிசாரான்யாம -பணிவிடை புரியக் கடவோம்
ப்ரஹ்ருஷ்யேமச-பணிவிடை புரிந்ததும் நீ உவக்க வேண்டும் –
அதனைக் கண்டு நாங்கள் இன்புற வேண்டும்

நின் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-நம் ஆழ்வார் –

ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார் –

தாயாகும் இலக்குமியே சனகனூரில் சனங்கள் என யாமுனையே சார்வோம் ஆவோம்
நீயேற்கும் பணி விடையின் இன்பம் ஒன்றே நினையு மனத் திலகு  கருத்தொடு நிலத்தும்
சேயாம் விண் வத்து மணமகன் நினக்குத் திருக் கணவன் என்னவும் உன் தொடர்பில் காண்போம்
மாயோனை வணங்கிடுவோம் இன்னும் ஏவல் புரிந்திடுவோம் மனம் மிகவும் மகிழுவோமே–51

சேயாம் விண் வத்தும்-பரமாகாசத்திலும் -பரம பதத்திலும் என்றபடி -விண் அத்து விண் வத்து –

———————————————————————————-

பிராட்டி சம்பந்தத்தை முன்னிட்டு நாம் இறைவனைப் பற்றுவதற்குக் காரணம்
தாய்மையே என்று அதனை உபபாதிக்கிறார் –

பிதேவ த்வத் ப்ரேயான் ஜனனி பரிபூர்ணாகஸி ஜனே
ஹித ஸ்ரோதோவ்ருத்யா பவதிச கதாசித் கலுஷ தீ
கிமோதன் நிர்தோஷ கஇஹ ஜகதீதி தவ முசிதை
உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயசி மாதா ததசி ந– 52-

பிதேவ த்வத் ப்ரேயான் ஜனனி பரிபூர்ணாகஸி ஜனே
தாயே நின் அன்பன்
குற்றம் நிறைந்த ஜனத்தினிடம் தகப்பன் போலே

ஹித ஸ்ரோதோவ்ருத்யா பவதிச கதாசித் கலுஷ தீ –
ஹிதத்தின் தொடர்ச்சியில் இருத்தலால் எப்பொழுதேனும்
கலங்கின திரு உள்ளதனாக ஆகவும் செய்கின்றான் –

கிமோதன் நிர்தோஷ கஇஹ ஜகதீதி தவ முசிதை –
கிம் ஏதத் -என்ன இது -இந்த உலகத்தில் குற்றம் அற்றவன் எவன் என்று தகுந்த –

உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயசி மாதா ததசி ந–
உபாயங்களினாலே அவனை அக்குற்றங்களை மறக்கும்படி செய்து
எம்மை தன மக்கள் ஆக்குகின்றாய்
ஆதலால் எமக்கு தாயாக இருக்கிறாய் –

பிரியம் ஒன்றிலே தாய்க்கு நோக்கம்
பிதாவுக்கு ஹிதம் -பாவம் செய்தால் சீறவும் கூடும்
அன்பன் ஆதலால் எளிதில் சீற்றத்தை மாற்ற முடிகிறது -ப்ரேயான் -என்கிறார்

நீரிலே நெருப்புக் கிளருமா போலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும் அதனைப் பிராட்டி மாற்றி விடுகின்றாள்
நிர்தோஷ கே இஹ ஜகதி -இருள் தரும் மா ஞாலம் அன்றோ –
உன்னையும் அறிவிலியாக்கும் இந்நிலத்தின் பொல்லாங்கு தெரியாதோ

குற்றம் குறை அற்ற ஒருவனை இங்கே காண முடியுமோ -மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
உசிதை  உபாயை -கண்ணைக் காட்டல் கச்சை நெகிழ்தல் முதலியன
ஸ்வ ஜன யசி–பிராட்டியை புருஷகாரம் என்பது அவன் தன்னைச் சேர்ந்தவன்
என்று அபிமாநிக்கும் படி செய்வதால் தானே –

அப்பன் போலுன தன்பனாய் குற்றம் ஆர்ந்துள்ள மக்களிதம் தொடர்ந்து நாடி
வெப்புறவே திரு உள்ளம் என்றைக்கேனும் வெகுண்டிடுமேல் அன்றவனை  இஃது என் சீற்றம்
தப்பரவே செய்யாதார் சகத்திலார் தான் சாற்றிடுவாய் எனத் தக்க விரகினாலே
அப் பிழைகள் மறக்கச் செய்து அவனோடு எம்மை அணைத்திடலா நீ என்னை யாகின்றாயே –52–

———————————————————–

கீழ் ஸ்லோகத்தில் -கிமேதந் நிர்தோஷ -என்றது –
ந கச்சின் ந அபராத்யதி -என்று
சிறிய திருவடியை நோக்கி பிராட்டி அருளிச்  செய்ததை உட்கொண்டதாம் –

திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல் வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா விறே-

அங்கனம் பொறுப்பிக்குமவள் கணவனுடன் இந்நாட்டில் பிறந்து படாதன பட்டதெல்லாம் நினைந்து பரிந்து
பிறத்தற்கு ஹேதுவான கருணையும் அளவு கடந்த ஸ்வாதந்த்ர்யத்தையும் வெறுக்கிறார் –

மாதாததஸிந -என்றதற்கு ஏற்ப
கூபத்தில் விழும் குழவியுடன் குதித்து அவ்வாபத்தை நீக்கும்
அவ் வன்னை போலே இவ்வுலகில் வந்து பிறந்ததை நினைந்து பரிந்து பேசுகிறார் ஆகவுமாம் —

நேதுர் நித்ய  சஹாயிநீ ஜனனி நஸ் த்ராதும் தவ மத்ராகதா
லோகேத்வன் மகிமாவ போத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹூ
க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸோ வநே
சாதோ திக் கருணாம் திகஸ்து யுவயோ ஸ்வாதந்த்ர்ய மத் யங்குசம்-53–

நேதுர் நித்ய  சஹாயிநீ ஜனனி நஸ் த்ராதும் -தவ மத் ராகதா  லோகேத்வன்
மகிமாவ போத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹூ-
தாயே நீ-நேது – நாயகனுக்கு என்றும் துணைவியாய்
நம்மைக் காப்பதற்கு
உனது மகிமையை அறிவதில் செவிடான இந்த உலகத்தில்
ஆகதா -அவதரித்தவளாகி -வருத்தத்தை அதிகமாக அடைந்தனை-

க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸோ வநே   சாதோ திக் கருணாம்
திகஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம் –
ஜாதிப் பூ போலே மெல்லிய திருவடிகள் பாறை களிலே க்லேசப் பட்டது

கானகத்திலே வசித்தல் -பிரிந்து -வருத்தம் யுண்டாயிற்று –
யுவயோ -உங்கள் இருவருடையவும் கருணையைப் பற்றியும்
அளவு கடந்த ஸ்வாதந்தர்யத்தைப் பற்றியும் நிந்தை உண்டாகுக —

கொன்னவிலும் வெம் கானத்தூடு   கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த
வெம்பரல் மேல் பஞ்சடியால் நடக்க நேர்ந்ததே –
அகலகில்லேன் இறையும் என்ற நிலை மாறி பிரியவும் நேர்ந்ததே

அந்தோ நாட்டில் பிறந்து படாதன படுவதற்கு காரணம் கருணை தானே
அத்தகைய கருணை எதற்கு -அங்கே இருந்தே ரஷிக்கல் ஆகாதோ

அடக்குவார் அற்ற ஸ்வாதந்த்ர்யமே காரணம் –
அவனது ஸ்வா தந்த்ர்யத்தை இவள் மேலும் ஏற்றி அருளுகிறார்

லஷ்ம்யா சஹ ரஷக-என்பதையே நித்ய சஹாயி நீ ஆகதா –
மட உலகம் -என்ன சொன்னாலும் உன் மகிமை காதில் ஏறாதே

கழிந்த துன்பங்களுக்கு இரங்குவதும்
அந்தத் துன்பங்களுக்கு காரணமான குணங்களை நிந்திப்பதும்
பரிவின் பெருக்கினால்  கூடுமே –

இறையோனுக்கு எந்நாளும் துணைவி யுந்தன் ஏற்றம் எல்லாம் எடுத்து நான் இயம்பினாலும்
இறையேனும் செவி யேறா இந்த லோகத்தெமை ஏற்க வந்து நீ படும் பாடென்னே
அறை மீது  நடந்தடி மெல்லலர்கள் வாட்டம் அடைந்தன கான் பிரிந்து துன்படைந்தாய்
நிறை கருணையொடு  தாயே நீவிர் கொண்ட நெறி கடந்த சுதந்திரமும் நிந்தை செய்வாம் –53

அறை மீது -பாறை மேலே-

————————————————————————

இறைவனுக்குத் துணையாய் -அவனைக் கொண்டே
பிராட்டி நம்மை ரஷிக்க வேண்டி இருப்பினும்
அவளுக்காக அவன் அரியனவும் செய்பவன் ஆதலின்
நம்மை ரஷிப்பது ஒரு பெரிய காரியமோ -என்கிறார் —

அதிசயிதவான் அப்திம் நாதோ மமந்த பபந்த தம்
ஹர தநுர சௌ வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச மைதிலி
அபி தச முகீம் லூத்வா ரஷக பந்தம நர்த்தயத்
கிமவ நபதி கர்த்தா த்வச்சாடு சுஞ்சு மநோரத –54–

மைதிலி
அசௌ நாத -இந்த ரங்க நாதன்
பிராட்டியே  இந்த ரங்கநாதன் -த்வச்சாடு சுஞ்சு-உனக்கு ப்ரியம் செய்தலோடு கூடிய
மநோரத -மநோ ரதத்தை யுடையவனாய்
அப்திம் -கடலில் -அதிசயிதவான் -பள்ளி கொண்டான் -நீ பிறந்த இடம் என்பதால் –
மமந்த -கடையவும் செய்தான் -அமுதினில் வரும் பெண்ணமுதம் கொள்ள கடையவும் செய்தான் –
தம் பபந்த -அதனை அணை கட்டவும் செய்தான் –
இளம் கிழை பொருட்டு விலங்கால் அணை இளம் கிழை பொருட்டு விலங்கால் அணை கட்டினான் –

தவ ப்ரியம் தாம யதீய ஜன்ம பூ யதர்த்த மம்போதி ரமந்தய பந்திச -ஆளவந்தார் -ஸ்ரீ ஸூக்தி-

ஹர தநு வல்லீ பபஞ்ஜம் ச -சிவனது வில்லை கொடியை முறிப்பது போலே முறிக்கவும் செய்தான் –
வில்லிறுத்ததும் மெல்லியல் தோள் தோய்கைக்காக-

தசமுகீம் லூத்வா ரஷக பந்த மநர்த்தயத் அபி -பத்து முகங்களை அறுத்து அரக்கனது முண்டத்தை ஆடவும் செய்தான் –
பொல்லா இராவணன் தலையைக் கிள்ளிக் களைந்ததும் இவளுக்காகவே  –
கிமவ ந பதி –நின் கணவன் எதைத் தான் செய்ய மாட்டான் –

யதி ராமஸ் சமுத்ராந்தரம் மேதிநீம் பரிவர்த்தயேத் அஸ்யா ஹேதோர் விசாலாஷ்யா
யுக்த மித்யேவ மே மதி -சிறிய திருவடி வாக்கு –

தடம் கடல் சாய்ந்தான்  சேது சமைத்தனன் கடைந்தான் நாதன்
கொடியென வரன் தன் வல்வில் குறைததனன் அரக்கன் பத்து
முடி தடிந்துடல மாட முன்னமர் கண்டான் சீதே
முடிந்திட உன் விருப்பம் முந்து மன் முடியான் என்னோ –54–

முந்தும் மன் -முற்பட்ட கணவன்-

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-41/42/43/44/45/46/ 47–

May 2, 2015

வருணிக்க இயலாதவையே யாயினும் தமது அவா அடங்காமையின்
பிராட்டி கடாஷங்களின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை வருணித்துக் கொண்டு
அவற்றால் தம்மை ரஷித்து அருள வேணும் என்கிறார் –

ஆநந்தாத்மபி ரசமஜ்ஜந மத ஷீபாலசைர் ஆகல
ப்ரேமார்த்ரைர் அபி கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை
ஐஸ்வர்ய உத்கம கத்கதைர் அசரணம் மாம் பாலய ஆலோகிதை–41–

ஆநந்தாத்மபி ரசமஜ்ஜந மத ஷீபாலசைர் ஆகல –
இன்ப வடிவங்களையும் -இறைவனையும் மூழ்கடிப்பதால் உண்டான மகிழ்ச்சியினால்
மதம் பிடித்து அலசி -சோம்பினவைகளாயும்
ஆகல -கழுத்து வரையிலும் -பிராட்டி கடாஷங்கள் யாவருக்கும் அனுகூலம் ஆனவை யாதலின் ஆனந்தம் விளைப்பன –

அனுகூலமாய்த் தோற்றும் அறிவே ஆனந்தம்
இறைவனை பூரணமாய் விஷயீ கரிக்கின்றன
அபாங்கா பூயாம்சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத் -என்று கீழே அருளிச் செய்தார்

இறைவனை மூழ்கடித்ததனால் என்னாது
இறைவன் மூழ்கியதால் வந்த மதம் என்றுமாம் –
கழுத்து வரை அன்பு  நனைத்ததாக கூறவே
கடாஷங்கள் பரிபூர்ணமாக அன்பை உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு இருத்தல் தெரிகிறது –

ப்ரேமார்த்ரைர் அபி கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை –
அன்பினாலே ஆர்த்ரை -நனைந்தவைகளாயும்-
மேலும் கரை புரண்டு ஓடுகிற அருளினாலே
சம்ப்லாவித-குளிப்பாட்டப் பெற்ற –
அஸ்மாத்ருசை -எம் போன்றாரை யுடையவைகளாயும் -கழுத்து வரை உள்ளடங்கினதாக

அன்பை சொல்லி கிருபை கரை புரண்டு உள் அடங்காமல் அருளிச் செய்தது அருள் பெருக்கின் மிகுதி காட்டியவாறு –
விரிவடைந்த அன்பே அருள் –
தொடர்புடையார் மாட்டே அமைவது அன்பு -இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்லுவது அருள் –
இயல்பான அருளினால் தாம் ஆளானமாய் தோற்ற அஸ்மாத்ருசை -என்கிறார்

கேவல க்ருபா நிர்வாஹ்யவர்கே வயம் -என்றார் கீழே
எம் போன்றார் என்றது
பக்தி முதலிய தொடர்பின்றி இயல்பான  அருளுக்கு இலக்காமாறு ஆகிஞ்சன்யம் உடையோர்களை –

பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை –
திவலை தோறும் செய்யப் பட்ட கலகத்தை உடையவர்களான ப்ரஹ்மாதிகளை உடையவைகளாயும்

ஐஸ்வர்ய உத்கம கத்கதைர் அசரணம் மாம் பாலய ஆலோகிதை–
ஐஸ்வர் யத்தினுடைய உத்பத்தியாலே-கத்கதை – இடறி நடப்பவைகளாயும்
ஆலோகித -உள்ள நோக்கங்களினாலே -அசரணம் மாம் பாலய -சரண் அற்ற என்னைக் காத்து அருள வேணும்-

என்னைக் காப்பதற்கு இறைவன் போலே படை எடுக்க வேண்டாமே —
உனது கடாஷமே போதுமே –

எவ்வாறு வருணிப்பது என்றவர்
அடுத்த ஸ்லோகத்திலே நேராக கடாஷங்களுக்கு ஓர் உருவம் கொடுத்து
அவற்றின் ஸ்வரூபத்தையும்
ஸ்வ பாவங்களையும்
செயல்களையும்
அழகு பட வருணித்து இருப்பது வியக்கத் தக்கது
எவ்வாறு வருணிப்பது எனபது பிறருக்குத் தான் போலும்-

இன்ப வடி வாயிறைவன் தனை முழுக்கும் எக்களிப்பின் திமிர்த்து மடிந்தீரமாகி
அன்பின் மிடறளவாக வளவு மீறும் அருள் வெள்ளம் தனில் எம்மனாரை யாட்டி
முன்பிடம் கொள் அயன் முதலோர் திவலை தோறும் முற்றி நசை கலகமிட மூளும் செல்வா
வன் பொறையினடை யிடறு நோக்கிக் காப்பாய் மறு புகலில் அடியேனை மலரினாளே–41-

மடிந்து -சோம்பி
முன்பிடம் கொள் -அக்ர ஸ்தானத்தை பெறுகின்ற முக்கியரான என்றபடி
எனக்கே இந்நோக்கு  எனக்கே இந்நோக்கு -என்று கலகமிட –
செல்வன் பொறையின்-ஐஸ்வர்யம் என்னும் பெரிய சுமையினால்
இன்ப வடிவாய் -திமிர்த்து மடிந்து ஈரமாகி ஆட்டி
கலகமிடும்படியாக மூளும் –பொறையினால் -நடை இடறும் நோக்கு -என்றபடி –

———————————————————————–

திரு மேனியின் மென்மை பேசும் திறத்தது அன்றி என்கிறார் —

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜஸ் சேடீ ப்ருசா லோகிதை
அங்கம் லாநி ரதாம்ப சாஹச விதௌ லீலாரவிந்த க்ரஹ
டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –42-

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜஸ்-தாமரைத் துகள் உன்னுடைய திருவடித் தலத்தை உறுத்தக் கூடியதாகவே ஆகின்றது –

சேடீ ப்ருசா லோகிதை -பணிப் பெண்களின் உற்றுப் பார்த்தல்களினாலேயே
அங்கம் லாநி -திரு மேனிக்கு வாட்டம் ஆகின்றது -தொட்டால் வாடும் ஒரு பச்சிலை
மோப்பக் குலையும் அனிச்சம் -காணக் குழையும் இந்த திருமேனி -மென்மைக்கு ஈடு எது இவ்வுலகத்தில்

ரதாம்ப சாஹச விதௌ லீலாரவிந்த க்ரஹ -மேலும் உனது விளையாட்டுத் தாமரையை ஏந்துதல்
சாஹாசமான கார்யம் ஆகின்றது –

இறைவன் சோலை சூழ் குன்று எடுத்ததினும் இவள் கையில் தாமரைப் பூ தாங்கி இருப்பது
அரிய செயலாய்த் தோற்றுகிறது  இவருக்கு –

டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-
இறைவனது தோளின் புறத்திலே வைஜயந்தி என்னும் வனமாலை யாலே ஊஞ்சல் ஆடுதல்
ஐயோ கஷ்டம் என்னும் சொற்களுக்கு இடமாக ஆகின்றது –

கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –
மிகவும் மெல்லிய இந்த திரு மேனி எந்தக் காரணத்தினால்
வாக்குகளுக்கு விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் –
காணவும் பொறாத இத் திருமேனி  பேச்சைப் பொறுக்குமோ
இந்த மெல்லிய திரு மேனியை வன் சொற்களால் வலிந்து துதி இடுதல் தகாது
இழிவு படுத்தியதாகும் -கசக்கியது போலே என்கிறார் –

பங்கயத் தூள் படுமேனும் பாதம் துன்பப் படுவதுவே சேடிமாருற்றுப் பார்க்கில்
அங்கமதப் பொழுதன்னாய் வாடிப் போகும் அரும் செயலே விளையாடு மலர் சுமத்தல்
தொங்கு மரி தோளில் வனமாலையால் நீ துயர் அந்தோ எனற்கிடமாம் ஊஞ்சலாடல்
எங்கனமா இம் மிக மெல்லியலுடம்பை இலக்குமியே வாசகத்தால் கசக்க லாகும் –42-

மெல்லியலுடம்பிறகு -நேர் மாறாக வல்லியல் வாசகம்-

————————————————————————–

திரு மேனியின் மென்மையைக் கூறினவர்
பருவம் கூறுகிறார் இந்த ஸ்லோகத்தில் –

ஆமர்யாத மகண்டகம் ஸ்தன யுகம் நாத்யாபி நாலோகித
ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா ஐஹதிவா நைசர்கி கத்வாயச
ஸூதே சைசவ யௌவன வ்யதிரேகரோ காத்ரேஷூ தே சௌரபம்
போகஸ் ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –43–

ஆமர்யாத மகண்டகம் ஸ்தனயுகம் நாத்யாபி -இரு கொங்கைகளும் எவ்வளவு வரை வேணுமோ
அவ்வெல்லை வரையிலும் இப்பொழுதும் தடங்கல் இல்லாதனவாக இல்லை –

நாலோகித  ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா ஐஹதிவா நைசர்கி கத்வாயச -நோக்குதல் –
புருவ நெறிப்புக்கள் – புன் முறுவல்கள் இவற்றின் விலாசங்களும்
இயற்கையால் விளைந்தவை என்னும் தன்மையால் உண்டான பழியை இப்பொழுதும் விட்டுவிட வில்லை

ஸூதே சைசவ யௌவன வ்யதிரேகரோ காத்ரேஷூ தே சௌரபம் போகஸ் ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –
அனுபவ வெள்ளத்தில் காதலனாகிற ஆசிரியனுடைய திருக்கையைப் பிடித்தலினால்
காஹ -இறங்குவதில் -மூழ்குவதில் தகுதி பெற்ற
குழந்தைத் தனம் என்ன
யௌவனம் என்ன
வ்யதிரேகா -சேர்க்கையானது உன்னுடைய திரு அவயவங்களிலே மணத்தை -சௌரபம் -ஸூதே –உண்டு பண்ணுகிறது –

கநகநக த்யுதீ -ஸ்லோகத்தில் சொல்லப் பட்ட தாருண்யம் இங்கே விளக்கப் படுகிறது –
பால்யத்தின் இறுதியிலும் யௌவனத்தின் தொடக்கமும் கூடும் பருவம் -யுவா குமாரா வுக்கு ஒத்த பருவம் –

கொங்கைகள் வளர்ப்பது யௌவனம் –
அது முற்ற வளர்ச்சியும் முடியும் -தொடங்கும் யௌவனத்தால் வளரும்
தொடரும் இளமை முற்றும் வளர ஒட்டவில்லை

ஆமர்யாதம் -எல்லை என்பது வளர்ச்சியின் முடிவு நிலையைக் குறிக்கும்

அகண்டகம் ந -இரண்டு எதிர்மறைகள் ஒரு உடன்பாட்டை வற்புறுத்தும்

அத்யாபி -உம்மை தொகை இன்று போலே நாளைக்கும் வளர்ச்சிக்கு தடங்கல் -உள்ளதே –

இதே போலே நோக்கம் முதலிய விலாசங்கள் –
போகஸ் ரோதஸ்-அனுபவ வெள்ளம் -அளவிறந்த போகம் –

இரண்டு பருவங்களும் கலந்து -பொற்றாமரை மணம் பெறுவது போலே திரு மேனி சிறப்புறுகிறது
சங்கீர்ணே கல்வியம் வயலி வர்த்ததே -என்று
முராரியும் இரு பருவங்களின் கலப்பு நிலையைக் கூறியது –

முழுவதும்   கொங்கை முற்ற முடிந்தில திடைஞ்சலின்னும்
விழி நகை புருவ லீலை விட்டில இயற்ப் பழியை
குழவு யௌவனங்கள் கூடும் வாசமுன் மேனி கூறும்
இழிதி நீ போக வெள்ளத்து ஏந்தலின் கரம் பிடித்தே –43-

——————————————————————-

மணம் குளிர்ச்சி அழகு முதலிய நற்குணங்கள் வாய்ந்த பிராட்டி திரு மேனியை
ஒரு பூ மாலையாக உருவகம் செய்து –
அதனை இறைவன் திரு மார்புக்கு அலங்காரமாக வருணித்து
மெல்லிய திரு மேனியை இங்கனமோ வருணிப்பது -எனத்
தம்மை நிந்தித்துக் கொள்கிறார் —

ஆமோதாத்புதசாலி யௌவன தசா வ்யாகோச மம்லா நிமத்
சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் லாவண்யா ஸூத்ரர்ப்பிதம்
ஸ்ரீ ரங்கேஸ்வரி  கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் தேவி தே
காந்தோர ப்ரதியத்ன மர்ஹதி கவிம் திங்மாம் அகாண்ட ஆகுலம் –44–

ஆமோதாத்புதசாலி -வாசனையால் ஆச்சர்யமாக விளங்குவதும் -ஆச்சர்யமான வாசனை என்றுமாம் –
யௌவன தசா வ்யாகோச -யௌவனப் பருவம் ஆகிற மலர்த்தியை யுடையதும்
மம்லா நிமத் -வாடாததும்
சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் லாவண்யா ஸூத்ரர்ப்பிதம் -சௌந்தர்யம் ஆகிற அம்ருதத்தைக் கொண்டு
நனைத்தலால் குளிர்ந்தும் -லாவண்யம் ஆகிற நூலில் கோக்கப் பட்டதுமான இந்த உன்னுடைய

ஸ்ரீ ரங்கேஸ்வரி  கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் தேவி தே –
மெல்லிய உறுப்புக்கள் ஆகிற பூக்களினுடைய தொடையலானது

காந்தோர ப்ரதியத்ன மர்ஹதி கவிம் திங்மாம் அகாண்ட ஆகுலம் —
காதலனுடைய மார்பிற்கு அலங்காரமாதலை   ஏற்கும்
அகாண்ட -தகாத வழியில் ஆகுலம் கலங்கின கவியான என்னை திக் -நிந்திக்க வேணும்-

திருமேனி முழுவதும் வியாபித்த லாவண்யம் ஆகிற நூலால் தொடுக்கப் பட்ட பூம் தொடையல்
ஆங்காங்கே சௌந்தர்யம் ஆகிற திரு அவயவ அழகு என்னும் அமுத நீரினால் நனைக்கப் பட்டு குளிர்ந்து உள்ளது

வாடாது ஆச்சர்யமாக மணம் கமழ்கிறது -மார்வத்து மாலை நங்கை அன்றோ இவள்-காதலன் திரு மார்புக்கு

இம்மாலை அலங்காரம் -அவனது திரு மார்பு இம்மாலைக்கு அலங்காரம் -என்றுமாம் –

பூக்களின் மகரந்தப் பொடியே திருவடிகளை உறுத்தும் என்றும்

திருக்கையில் மலர் சுமத்து சாஹாச கார்யம் என்றும்
பூவினும் மெல்லியதாக வருணித்த தாமே
திருமேனியை மலர் மாலையாக வருணிப்பது முரண்படாதா –

அதற்கும் மேலே அம்மாலை- அரக்கர் அசுரர்கள் அம்புகளுக்கு இலக்காகி வடுப்பட்ட   இறைவனது
கடினமான மார்புக்கு ஏற்கும் என்றது எவ்வளவு சாஹாசம் –

மதி கலங்கியே செய்தோம்   என்று தம்மை தாமே வெறுத்து கவிம் திங்மாம் அகாண்ட ஆகுலம் -என்கிறார்
தனது மேன்மைக்கு மிகவும் இசையாதே யாயினும் அவன் பால் உள்ள அன்பாலும்
அவன் ஸ்வா தந்த்ர்யத்தையும் சேதனர்களின் அபராதத்தையும்  கண்டு அகல மாட்டாமையாலும்
திருமார்பை விட்டு பிராட்டி சிறிதும் பிரிவது இல்லை —

அங்கம் எனும் மென் மலர்கள் அரிய கந்தம் ஆச்சரியமாய்க் கமழ வாடாதென்றும்
தங்கிய யௌவன மலர்ச்சி யுடனுறுப் பேர் தண்ணமுதால் குளிர்ந்து மிக விலாவணீயம்
என்கின்ற நூல் தன்னில் இயையக் கோத்த இன் தொடையல் என வன்பன் மார்புக்கு ஏற்பத்
தங்கினை சீ ரரங்கத்தின் தலைவி தேவி தகவின்றிக் கலங்கி  யிங்கன் சாற்றினேனே –44-

——————————————————————————–

கூடல் இன்பத்தில் இறைவனைக் களிப்பிக்கின்றாள் பிராட்டி என்கிறார் —

மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி
புஷ்பாவளீவ ரஸிக ப்ரமரோப புக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –45–

மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-
மருமத்தை தொடக் கூடியவைகளான ரச நாடிகளை தாக்கி நடந்தவைகளான

காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி –
காதலனுடைய அனுபவத்தின் விலாசங்களினாலே கசங்கின கொம்பு போன்ற திருமேனி யுள்ளவளாய்-

புஷ்பாவளீவ ரஸிக ப்ரமரோப புக்தா  த்வம் தேவி நித்யம் அபிநந்தயசே முகுந்தம் —
ரசிக்க வல்ல வண்டினாலே அனுபவிக்கப் பட்ட பூ வரிசை மாலை போலே நீ
கணவனான முகுந்தனை எப் பொழுதும் களிப்பிக்கின்றாய்
சுரும்பு துளையில் சென்றூத அரும்பும் -போலே இறைவனும் இலக்குமியின் இன்பம் தரும்
நரம்புகளைத் தாக்கி நலந்துய்க்கின்றனன் —

புஷ்பாவளி -பூ மாலை -முக்தாவளி -முத்து மாலை போலே –
தெய்வ வண்டு துதைக்கும் பூந்தொடையல் பிராட்டி –
இதனால் போகத்தில் இறைவனது திறமையும்
பிராட்டியினது தளர்வின்மையும் தோற்றுகின்றன

புஷ்பாவளி -என்கையாலே இவள் இறைவனுக்கேயாய் இருத்தல் தோற்றுகிறது
தான் களிப்பதாக கூறாமல் அவனை களிப்பிப்பதாக -பதியின் போகத்தையே முக்யமாக கொள்ளுதல் –

புங்க்தே ஸ்வ போக மகிலம் பதி போக சேஷம் -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகர்

பிரகர்ஷியாமி -ஆளவந்தார் -நித்ய கைங்கரயம் செய்து களிப்பிப்பேன் –

ஏற்புடைய மாலையாகி மார்பினை அலங்கரிக்கிறாள் என்பதில் தான் தவறு –
மாலை போலக் களிப்பிப்பதாக கூறுவதில் தவறு இல்லை போலும் –

சுவை தரு நரம்பு மர்மம் தொடுவன தொட்டுத் தாக்கி
நவையற லீலை நாதன் நடத்த நீ துவண்டு மேனி
சுவை யறி சுரும்பு சேர்ந்து துதித்த பூந்தொடையல் போல
உவகையில் முகுந்தனை நீ உய்த்தி எந்நாளும் தேவி –45–

நவை யற -குற்றம் அற்ற
உய்த்தி -செலுத்துகின்றனை

———————————————————————

திரு ஆபரணச் சேர்த்தி அழகை அனுபவிக்கிறார் –

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணி சர துலா கோடி ப்ராயைர் ஜநார்தன ஜிவிகே
பிரகிருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை
வலய சகலைர் துக்தம் புஷ்பைச்ச கல்ப லதா யதா –46-

கநகரசநா -தங்க ஒட்டியாணம் என்ன –
முக்தா தாடங்க -முத்துத் தோடுகள் என்ன
ஹார -முத்து மாலை என்ன
லலாடிகா -நெற்றிச் சுட்டி என்ன
மணிசர -மணி மாலை என்ன
துலா கோடி -கார் சிலம்பு என்ன இவைகளை –

ப்ராயைர் -முக்யமாக யுடைய-பல பலவே திவ்ய ஆபரணங்கள்
ஜநார்தன ஜிவிகே -இறைவனுக்கு பிழைப்பிக்கும் மருந்துக் கொடி யானவளே –

பிரகிருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை –
இயற்கையிலே அழகியதான உனது திருமேனி
அழகிய திவ்ய ஆபரணங்களாலே

வலய சகலைர் துக்தம் புஷ்பைச்ச கல்ப லதா யதா —
சக்கரைத் துண்டுகளால் பால் போலவும்
பூக்களாலே கல்பகக்  கொடி போலவும் விளங்குகிறது –
இயற்கையுடன் செயற்கை அழகும் சேர்ந்து சோபிக்கிறது –

கனகமே கலை முத்தாரம் காதணி சிலம்பு சுட்டி
இன மணிச் சரம் என்றின்ன எழில் இழை யணிந்தி யற்சீர்
உனதுடல் மலரின் கற்ப வொண் கொடி கண்டின் பாலும்
என வொளிர் தரும் சனார்த்தன் இன்னுயிர்க் கேதுவாவாய்–46-

———————————————————

இனி கௌஸ்துபம் வைஜயந்தீ என்னும் திவ்ய அணிகளும்
அவ்வினத்திலே சேர்க்கத் தக்க ஐம்படை முதலியவைகளும்
பிராட்டிக்கே உரியவை யாயினும்
அவைகளை இவனே தாங்குவதற்கு ஹேது கூறுகிறார் –

சாமான்ய போக்யமாபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுதாதி ரமணஸ் ஸ்வயமேவ பிப்ரத்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம
ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி  காஹதே த்வாம் –47-

சாமான்ய போக்யமாபி -பொதுவாக அனுபவிக்கத் தக்கவை யாயினும் –
கௌஸ்துப வைஜயந்தீ -கௌஸ்துப ரத்னம் என்ன -வனமாலை என்ன –
பஞ்சாயுதாதி -ஐம்படை என்ன -இவை முதலியவற்றை

ரமணஸ் ஸ்வயமேவ பிப்ரத் -அன்பனான அரங்கன் தானே சுமந்து கொண்டு -காதல் மகிமையால்
இறைவனுக்கு சுமை தெரிவது இல்லை –

தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம -அவற்றின் சுமையினாலான வருத்தத்தை உனக்கு இல்லாமல்
செய்ய விரும்பினவன் போலே

ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி -ஸ்ரீ ரங்க விமானத்தின் ரத்னக் கொத்துப் போன்றவளே –
ஸ்ரீ ரங்க தாம -ஸ்ரீ ரங்க நாதன் என்னவுமாம் –
அழகு ஒளியுடைமை என்பதால் மணி மஞ்ஜரி -என்கிறார்

காஹதே த்வாம் –உன்னை அனுபவிக்கிறான் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்
சுமை யுடைமையின் அழுந்தினன் போலும் -என் சுமையையும் சேர்த்துச் சுமக்கும்படி
இது என்ன காதலோ என்று நீர்ப் பண்டமாய் பிராட்டி உருக -அதிலே இறைவன் அழுந்துகின்றனன்-

ஏதி யைந்தகல மேந்து மெழில் மணி வைசயந்தி
ஆதி நீ தாங்கின் துன்பமா மெனப் பொது வானாலும்
காதலன் சுமந்து தானே கனம் கருதாத ரங்கம்
போதரு மணிப் பூங்கொத்தே   புகு முனைத் துய்ப்பதற்கே–47–

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-35/36/37/38/39/40–

May 1, 2015

ஸ்வரூபத்தின் கண் உள்ள வேறுபட்ட குணங்களைக் கூறினார் முன் ஸ்லோகத்தில் –
திரு மேனியின் கண் உள்ள வேற்பட்ட குணங்களை அனுசந்திக்கிறார் இதில் —

கந கநக த்யுதீ  யுவ தசாமபி முக்த தசாம்
யுவ தருண த்வயோ ருசிதம் ஆபரணாதி பரம்
த்ருவ மாசமாந தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயிச குசேசயோதர விஹாரிணி நிர்விசசி–35–

கந கநக த்யுதீ -மேகம் பொன் போன்ற ஒளிகளையும்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான்
நீலதோயத -சுருதி -பொன்னின் சோதி இலக்குமியிடம் -ஹிரண்ய வர்ணாம்
இரண்டு ஜோதிகளின் சேர்த்தி  அழகை நம் கண் முன் கொணர்ந்து நிறுத்தி அருளுகிறார் –

யுவ தசாமபி முக்த தசாம் -யௌவன இளம் பருவங்கள் –
காளைப் பருவம் இறைவனுக்கு -பால்யம் யௌவனம் சந்தி- நிலை பிராட்டிக்கு
ஸூதி சைசவ யௌவன வ்யதிகர -என்பர் 43 ஸ்லோகத்தில்-

யுவ தருண த்வயோ ருசித மாபரணாதி பரம் –
யௌவனம் இளமை இவைகளுக்கு ஏற்றதே –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -ஒரே வயது இல்லை ஏற்ற வயது –
ஆபரணாதி -ஆதி சப்தத்தால் ஆண்களுக்கே உரிய அவயவ அமைப்பு பெண்களுக்கே உரிய அவயவ அமைப்பு
முதலியன கூறப்படுகின்றன
பரம் -விலஷணம் என்றவாறு -சமானம் -ஏகம் ஓன்று -அசமானம் -அநேகம் பின்னம் –
வேறு வேறு திவ்ய ஆபரணங்கள் திவ்ய அவயவங்கள் –

த்ருவ மாசமாந தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ த்வயிச குசேசயோதர விஹாரிணி நிர்விசசி-
த்ருவம் -நிச்சயம் –
தேச -இடங்களில்
விநிவேசி -அமையப் பெற்றதும்
பரம் -சிறந்ததுமான
ஆபராணாதி-திவ்ய ஆபரணங்கள் முதலியவற்றையும்
ஹரௌ -இறைவன் இடத்தும்
த்வயிச -நின்னிடத்தும்
விபஜ்ய -பிரித்து
நிர்விசசி -அனுபவிக்கின்றாய்-

பிராட்டி பிரதான்யம் பற்றி இறைவனைக் கூறாமல்
பிராட்டி அனுபவத்தை மாத்ரம் அருளிச் செய்கிறார் –

கரு முகில் பொன்னின் காந்தி கட்டிளம் காளை மங்கைப்
பருவம் அந்நிலைகட்கு ஏற்பப் பால் வகை வெவ்வேறான
உருவினில் ஒளிரு நற் பூண் உறுதி நீ துய்த்தி மற்றும்
அரிமிசை பிரித்துன் மீதும் அம்புசத் தாடுவாளே–35–

அம்புசத் தாடுவாளே–தாமரையில் விளையாடுபவளே –

—————————————————————

இனி மூன்று ஸ்லோகங்களால் திவ்ய மங்கள விக்ரஹத்தை வருணிக்கிறார் –
இதில் பாற் கடலின் சாரம் எல்லாம்  திரண்டு பிராட்டி திரு மேனி யாயின –
தம் சாரத்தை இழந்த பாற் கடல் பொருளாகிய சந்தரன் முதலியன எல்லாம் கோது ஆகிவிட்டன என்று வருணித்து
நித்யமான அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தை இங்கனம் வருணிப்பது தகுமோ -என்கிறார் –

அங்கந்தே ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் கும்பத
ஷீராப்தே கிம் ருஜீஷதா முபகதா மன்யே மஹார்காச் தத
இந்து கல்ப லதா ஸூதா மது முகா இத்யாவிலாம் வர்ண நாம்
ஸ்ரீ ரங்கேஸ்வரி சாந்த க்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –36–

அங்கந்தே ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர்-திருமேனியை மென்மை என்ன -குளிர்ச்சி என்ன
முக்த -அழகு என்ன -இனிமை என்ன -உதாரை -பெரும் தன்மை என்ன –
இந்த சாரமான குணங்களைக் கொண்டு

கும்பத ஷீராப்தே கிம் ருஜீஷதா முபகதா மன்யே மஹார்காச் தத- –
இந்து கல்ப லதா ஸூதா மது முகா இத்யாவிலாம் வர்ண நாம் –
கும்பத -கோக்கின்ற பாற் கடலுக்கு –
இந்து -சந்திரனும் -கற்பகக் கொடியும் அமுதமும் மது முதலியனவும் –
ருஜீஷதாம் -சாறு பிழிந்த கோதாக இருக்கும் தன்மையை
உபகதாகிம் -அடைந்தன கொல்-

தத மஹார்கா-அதனால் அவை மிகவும் மதிப்புடையன என்று மன்யே -எண்ணுகின்றேன் –
இதி ஆவிலாம் வர்ணா நாம்  -என்று கலங்கின வருணனைக்கு

ஸ்ரீ ரங்கேஸ்வரி
சாந்த க்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –செயற்கைப் பேச்சே இல்லாத
அப்ராக்ருதமான உனது திருமேனி தகுதி உடையதாய் இல்லை-

சந்த்ரனிடம் உள்ள அழகு குளிர்ச்சி மென்மை என்னும் குணங்களை எடுத்தும்
கற்பகக் கொடியில் உள்ள ஔதார்ய குணத்தை எடுத்தும்
அமுதத்தினுடைய இனிமையை எடுத்தும்
மதுவினிடமுள்ள குளிர்ச்சியை எடுத்தும் -பிராட்டியின் திருமேனியை வகுத்ததனால் இவை கோது ஆகி விட்டன

நித்தியமான திருமேனி என்று அறியாமல் கலக்கத்தால் வர்ணனை –
அமிர்தம் போல பிறக்கவில்லை
தோன்றினாள் –

மதி யமுது மது கற்ப வல்லி மானும் மாண் பொருளின் தண்மை யழகு இனிமை வன்மை
மெதுமை எனும் குணம் கொண்டு உன் விளங்கும் அங்கம் வெண் திருப் பாற் கடல் கோப்பக் கோதாய் நின்றே
அதிக மதிப்பதனாலே யடைந்த போலும் அவை யெனவே அகம் கலங்கி வருணித் திட்டால்
அது திவிய மா மாக்கற் பேச்சே யற்ற ஆருடம்புக் கடுக்குமோ சி ரரங்கத் தாளே–36–

ஆக்கல் பேச்சே அற்ற –  புதிதாக உண்டாகப்படுதல் என்கிற பேச்சிற்கே இடமில்லாத-

————————————————————————————

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணம தநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந
பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி –37–

ப்ரணம தநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய -வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே -பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாக வுமாம் –

கநக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது

இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும்
செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்

இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ் வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

——————————————————–

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன்
தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம் புஜம்
த்வாம் பஸ்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்யா கூலங்கஷ
ஸ்பாரா பாங்க தரங்க மம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம் –38-

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய –  தொங்க விட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-

முலை உணாயே-என்னும்
தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பாரா பாங்க தரங்க மம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பஸ்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-

பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –

பஸ்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும்
பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-என்பது  போலே-

நளின மலர்த் தாள் ஓன்று நாலவிட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரம் அபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளிகரையில் பொருவுமகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

——————————————————————–

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத்
திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸூரபித நிகமாந்தம் வந்திஷீ  யேந்திராயா
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப
ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–39-

ஸூரபித நிகமாந்தம் வந்திஷீ  யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –

பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –
தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே

வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைஸ்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –

காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்

ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது  இல்லையே –

கமலபலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி –
இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம்  -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் – களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமார் இதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

—————————————————————————–

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷார் ஆஜ்ஞாம் த்ருசோ துர்வசா
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ஸ்ரீ நிர் பராப்யாம் பதிம்
த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
சாஷால் லஷ்மி தவ அவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே –40–

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-துர் வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –
செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய  சோபையினால்
நிறைந்தவைகளாய்-இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே
அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –

பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –
மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷால் லஷ்மி தவ அவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-27/28/20/30/31/32/33/34–

May 1, 2015

இங்கனம் ச பத்நிகளைக் கூறி பணிவிடை செய்வோரைக் கூறுகிறார் —

தே சாத்யாஸ் ஸந்தி தேவா ஜனனி குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை
போகைர்வா நிர்விசேஷாஸ்  சவயச இவயே நித்ய நிர்தோஷ கந்தா
ஹே ஸ்ரீ ஸ்ரீ ரங்க பர்த்து ஸ்தவ ச பதபரீ சார வ்ருத்யை சதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா –27-

தே சாத்யாஸ் ஸந்தி தேவா -வேத வாக்யத்தை அப்படியே கையாண்டபடி –
சாத்யா-என்பது நித்ய ஸூரிகளின் பெயர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -முமுஷுக்கள் இவர்கள் சாத்யர் என்பதால் இப் பெயராயிற்று –

ஜனனி குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை போகைர்வா –
ஜனனி -தாயே என்று விளித்து-
அபஹதபாப்மத்வம் முதலிய குணங்களில் சாம்யம் -திவ்ய மங்கள விக்ரஹம் -வடிவத்தில் சாம்யம் –
கோலம் -சங்காழி ஏந்தி-தொண்டுக்கே கோலம் பூண்டு – –
நடத்தை கன்மங்களுக்கு வசப்படாமை
ஸ்வரூபம் ஞானானந்த அமலத்வாதி ஆத்ம ஸ்வரூபம்-
சேஷித்வம் சேஷத்வம் ஒன்றே வாசி அவனுக்கும் இவர்களுக்கும் –
போகம் -விபூதியுடன் கூடிய பரமாத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்தல்-

சவயச -ஒத்த பருவம் சமானமான வயசு பஞ்ச விம்சதி வ்ருஷர்கள்-
நிரஞ்சன பரமம் சாம்யம் -சத்ய சங்கல்பத்தால் பெற்றது –
எனக்கு தன்னைத் தானே தந்த கற்பகம் –

நிர்விசேஷாஸ்  சவயச இவயே நித்ய நிர்தோஷ கந்தா -கீழ் சொன்னவை முக்தர்களுக்கும் ஒக்கும்
இங்கு நித்யர்களுக்கே உண்டான சிறப்பு -என்றுமே குற்றம் அற்றவர்கள் அன்றோ
தூ மணி மாடம் நித்யர்கள் -துவளில் மா மணி மாடம் -தோஷம் இருந்து நீக்கப் பட்டது போலே முக்தர்கள் –
தோஷம் க்லேச கர்ம விபாகாசயங்கள் -ஹதாகில க்லேச மலை ஸ்வபாவாத -ஆளவந்தார் –

1-அவித்யா ஸ்மிதா ராக த்வேஷாபிநிவேசா க்லேசா -கிலேசம்
அஞ்ஞானம் –தேஹாத்ம அபிமானம் -யானே என் தனதே என்று இருந்தேன் –
அது அடியாக அஹங்காரம் –ராகம் -த்வேஷம் –அபி நிவேசம் -கிலேசங்கள்
2-கர்மம் இவற்றுக்கு காரணமான புண்ய பாபங்கள்
3-விபாகம் -ஜாதி ஆயுள்–இவற்றால் வரும் விபாகங்கள்-
4-ஆசயம் -முன்னைய அனுபவத்தால் உண்டான மனத்தின் கணுள்ள சம்ஸ்காரம்-
ஸூபம் -அன்று -ஸ்ரீ கூரத் தாழ்வான்-ஆழ்வானை இழந்தோம் -என்ற கிலேசம் -வேண்டாம் –
நம்மையே நினைத்து இரும் என்றான் நம் பெருமாள்
பூர்ண -ஆயுசு கேட்டாராம் ஸ்ரீ பட்டருக்கு எம்பெருமானார் -பதில் அருளால் தீர்த்தம் பிரசாதித்து அனுப்பினாராம் -ஐதீகம்

ஹே ஸ்ரீ ஸ்ரீ ரங்க பர்த்து ஸ்தவ ச பதபரீ சார வ்ருத்யை சதாபி -ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா —
இவை இறைவனுக்கும் இல்லாத கைங்கர்ய பரர்களுக்கே கைங்கர்ய மஹா ரசம் உள்ளது என்கிறது –
அனுபவ ஜநிதி ப்ரீதி காரித கைங்கர்யம் –
அன்பினால் உருகிச் சித்த வருத்தி கலங்கிச் செய்தல்லது நிற்க ஒண்ணாது நெஞ்சாரச் செய்யும் கைங்கர்யம் –
பலாத்க்ருத்ய –தூண்டப்பட்டு -இன்பம் பயக்கும் திருமாலுக்கு என்றே யாட்செய்ய –
அடிமை செய்வர் திருமாலுக்கே -என்பதால் ஸ்ரீ ரங்க நாதனுக்கும் உனக்கும் -என்கிறார்-
திருவடிகளில் கைங்கர்ய வ்ருத்தி-வாழ்ச்சி தாளிணைக் கீழ் அன்றோ-

உற்றார் போனட்புரிமை யுடலம் கோலம் உயிரினிலை செயல் போகம் பண்பொடு ஆண்டில்
சற்றேனும் மாறின்றிக் குற்றம் என்றும் சாராது சாத்திய தேவர்கள் என்னப்
பெற்றார்கள் உள்ளுருகிக் குழம்பி எண்ணம் பிரேமையினால் பெறுவித்த பணியின் புற்றோர்
குற்றேவற்கு ளரன்றோய் திருவே என்றும் குளிரரங்கக்  கோனொடுந்தன் குரை கழற்கே –27

அன்பு செய்வித்தது -பிரேமையினால் செய்வித்த பணி -ப்ரீதி காரித கைங்கர்யம்
குற்றேவற்கு என்றும் உளர் என்று அந்வயம்-

—————————————————————————-

பிராட்டி இன்றி இறைவனை நிரூபிக்க முடியாது -என்கிறார்-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத இதம் சந்தர வதநே
த்வத் ஆஸ்லேஷ உத்கர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வமா சீர் மாதச் ஸ்ரீ கமிதுர் இதமித் தந்தவ விபவ
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் அபி தத்தே ஸ்ருதிரபி -28-

இன்னார் இனையார் என்னும் தன்மை உன்னை வைத்தே –
பேணிக் கருமாலைப் பொன்மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு —
அவனது ஸ்வரூப நிரூபிகை இவளே -இன்னார் என்று காட்ட
நிரூபித்த ஸ்வரூப விசேஷணம்-இனையார் -என்று விவரிக்கும்
நிலாவும் மதியும் போலே -பிராட்டியைப் பிரிந்த தனி நிலை இல்லையே –

ப்ரபேவ திவசே சஸ்ய ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே
அஹன்தையா வி நாஹம் ஹி நிருபாக்க்யோ நசித்யதி
அஹந்தா ப்ரஹ்மணச் தஸ்ய சாஹ மஸ்மி
அஹமர்த்தம்  விநாஹந்தா நிராதாரா நசித்யதி –ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –

நானே அப் பரம் பொருளுக்கு அஹந்தையாய் உள்ளேன் என்கிறாளே –
ஒன்றுக்கு ஓன்று ஆதார ஆதேய பாவம் -அஹம் அவன் -அகந்தை இவள் -பிரித்து சொல்ல இடம் இல்லை
பிரபை பிரபவான் /ரத்னம் ஓளி / புஷ்பம் மணம் / போலே அன்றோ -விஷ்ணு பத்னீ –

ஸ்வரூபம் -இது -இதம் அம்சத்தைக் காட்டும்
ஸ்வாதந்த்ர்யம் -இத்தம் இனையது அம்சத்தைக் காட்டும்-மற்றவற்றுக்கும் உப லக்ஷணம்
ஸ்வாதந்த்ர்ய ரூப சா விஷ்ணோ -அஹிர்புத்ன்ய சம்ஹிதா பிரமாணம் –

பகவத இதம் சந்தர வதநே -மதி முகம் வாய்ந்த தாயே –
த்வ தாச்லேஷாத் கர்ஷாத் -ஆச்லேஷத்திற்கு உத்கர்ஷமாவது பிரிக்க முடியாத தத்வமாய் இருத்தல் –

பவதிகலு நிஷ்கர்ஷ ஸமயே-நிஷ்கர்ஷமாவது ஒன்றாயுள்ள திவ்ய தம்பதிகளின் தன்மையை அறுதி இட்டுப் பார்த்தல் –

த்வமா சீர் மாதச் ஸ்ரீ கமிது ரிதமித் தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் அபிதத்தே ஸ்ருதிரபி –
தர்மியைச் சொன்ன போதே தர்மமும் அதனுள் அடங்கும் அன்றோ–
த்வாம் அபி –ஸ்ருதிர் அபி -என்று கூட்டி –
நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ சசா வியாபிகா பதி சம்ஸ்லேஷாத்
ஏக தத்வமிவ ஸ்த்திதௌ-அஹிர்பித்ன்யா சம்ஹிதை இதையே காட்டும் –

ப்ருதக் நாபிதத்தே -ஸ்ருதி விஷ்ணு பத்னீ -அவனை இட்டே இவளைக் கூறும்
விசேஷணமாக இவள் இருத்தலால்  -அவனையும் லஷ்மி பதியே என்று கூறும் –

இந்த விறைமை யுரிமை எம்பிராற்கே யிறுக்கமா நீ தழுவும் ஏற்றத்தாலே
வந்தனவாம் இவை தம்மை மனத்தில் எண்ணி வரை யறுக்கப் புகின் மலரின் மகளே தாயே
இந்துமுகி  யேந்தலுடை யிதுவாம் தன்மை இனையதாம் தன்மையவாம் ஏற்றமாவாய்
அந்த முறை யடங்குதலால் அவனுக்குள்ளே அரு மறையும் உன்னை வேறாய் அறைந்ததில்லை–28–

——————————————————————————–

மங்களம் மங்களா நாஞ்ச-என்றபடி
பகவானை மங்களம் என்பது பிராட்டி சம்பந்தத்தாலே –
பிராட்டிக்கு மங்கள ஸ்வரூபமாய் இருத்தலே இயல்பு –
காரணத்தால் வந்தது அன்று -என்கிறார் –

தவ ஸ்பர்சா தீசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவேதம் நோபாதே உப நிபதிதம் ஸ்ரீரசி யத
ப்ர ஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷூ
நசைவந் த்வா தேவம் ஸ்வ தத இதி கச்சித் கவயதே –29-

ஸ்ரீ சொல் மங்களம் என்னும் பொருள் –
மங்களம் கிமபியல் லோகே சதித்யுச்யதே தத் சர்வம் த்வததீ நமேவஹி
யதச்  ஸ்ரீ ரிதய பேதே நவா யத்வா ஸ்ரீ மதிதீ த்ருசேந வச்சா தேவி ப்ரதாமச் நுதே -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ ஸ்தவம்

உன்னுடைய அதீனத்தாலே-ஸ்ரீ -சம்பந்தத்தால் இந்த -ஸ்ரீ சப்தம் கொண்டே -ஸ்ரீ ரெங்கம் இத்யாதி போலே –
புஷ்பத்திற்கு சிறப்பு மணத்தாலே -திருஷ்டாந்தம் –
மணத்துக்கோ சிறப்பு இயல்பு -வேறு ஒரு காரணத்தால் வந்தது   அல்ல –

பரிமளர்த்திமபி-ஆகப் பிரிந்து நிலை இல்லை –
பிரபையையும் ப்ரபாவனையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே -முமுஷூப்படி-

ஜிகதிஷூ– சொல்ல ஆசைப்படுபவன் -நறு மணம் உடன் சேர்ந்தே புஷ்பம் சொல்லுவது போலே –
நாற்றத் துழாய் –ஐந்து ஆறு குளிக்கு இருக்கும் கோயில் சாந்து போலே –
நறு மணம் உடன் கூடிய திருத் துழாய் என்பது போலே –

ஸ்ரீயஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வன் ஆகையால் தெய்வத்துக்கு அரசு —
ஆஸ்ரயிக்கும் அர்த்தம் -மங்களம் இவளுக்கு ஒரு காரணம் பற்றி இல்லை –

திரு முளை மருத் சங்கரணம் பிராட்டி சந்நிதியில் இருந்தே இன்றும் –

எழில் வேதம் -சுடர் மிகு சுருதி –மிதுனத்தைப் பற்றி பேசுவதால் –

மங்களப் பெயர் ஈசற்கு வந்தது உன் தொடர்பால் நிற்கோ
அங்கன் அன்று அஃது இயற்க்கை யல்லையோ திரு நீ அல்லி
நங்கையே சிறப்பு அலர்க்கு நறு மணத்தால் அதற்கும்
எங்கனம் சிறப்புக் கேது வியம்புவன் கவிஞன் மாதோ –29-

————————————————————————-

பிராட்டியினாலே மங்களம் ஆவது மாத்திரம் அன்று –
இறைமையே யவளது பூர்ண கடாஷத்தால் தான் ஏற்பட்டது என்றும்
அற்பமான கடாஷத்தைப் பெற்றவர் இந்த்ராதியர் ஆயினர் என்றும்
ஆதலில் இறைவனையும் இந்த்ராதியரையும் பற்றின வேதம் முடிவில்
இலக்குமியையே கூறியது என்றும் அருளிச் செய்கிறார் –

அபாங்கா பூயாம்சோ யதுபதி பரம் ப்ரஹ்ம ததபூத்
அமீயாத்ரா த்வித்ராஸ் சச சத மகாதிஸ் தததராத்
அதஸ் ஸ்ரீர் ஆம்நாயஸ் ததுபய முசமஸ் த்வாம் ப்ரணி ஜகௌ
பிரசஸ்திஸ் சாராஜ்ஞோ  யதபிச புரீ கோச கதநம் –30-

த்வித்ரா -இரண்டு மூன்று துளிகள்
கோச -பொக்கிஷத்தினுடையவும்-
புரீ கோசம் -நகர பொக்கிஷம் -பர ப்ரஹ்மம் இந்திரன் –ஆதாரம் -நகரமும் பர ப்ரஹ்மமும்

தைக்கின்றதாழி -திரு விருத்த பாசுர வியாக்யானத்தில் –
இவள் கால் பட்ட மணல் பரதத்வம் ஆகாதோ -பட்டர் அருளிச் செய்வாராம் –
பூர்வர்கள் இவள் கால் மணலில் பட்டால் அதில் அவன் இருப்பானே என்பர் –
பட்டர் மணல் அவனாகும் என்றாரே –

பதி ஸம்மானம் -தோள் மாலை சாத்தினார் பெருமாள் -பூர்வர் –
தட்டு மாறி -காலில் விழுந்து நில் என்றார் பெருமாள் -பட்டர்

மலராள் மணம் நோக்கம் உண்டானே -திரு மங்கை ஆழ்வார்
ந ஜீவேயம் ஷணமபி வி நாதம் அஸி தேஷணாம்-பெருமாள் அருளிச் செய்தார் இறே
ஸ்ரத்தை யினாலேயே தேவன் ஆகிறான் -ஸ்ருதி-தது -அது ஆனது -என்கிறார் வஸ்து போலே –
திரு நின்ற பக்கம் திறவிது -திரு மழிசைப் பிரான் –

ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் சர்வே முனயச்ச தபோத நா
ஏதந்தே த்வத் பதச்சாயா மாஸ்ரித்ய கமலேஸ்வரி –
அரசனைப் போல் இலக்குமி –
நகரினைப்  போல் பர ப்ரஹ்மம் –
பொக்கிஷம் போல் இந்த்ராதி –

சர்வத்துக்கும் ஆதாரம் அவன் –
அவன் இடம் இருந்து தோன்றியதால் இவர்கள் பொக்கிஷம் –
ஒரு அரசனுடைய நகரத்தையும் பொக்கிஷத்தையும் ஒருவன் வருணித்தால் அது அரசனையே சாரும்
அது போலே வேதம் அனைத்தும் பிராட்டியையையே சாரும் –ஆம்நாய -வேதம் –

கடைக் கண்ணால் திரு நீ மிக்குக் கண்டது பரப் பிரம்மம்
படைத்தன விந்திராதி பார்வைகள் இரண்டு மூன்றே
எடுத்திரு  பொருளுமோதி இயம்பியது உனையே வேதம்
படித்திடி  னகர் செல்வங்கள் பார்த்திவன் புகழ்வாகாதோ–30–

——————————————————————————————–

இறைவனது இறைமை பிராட்டி அடியாக ஏற்படுமாயின்
இயல்பினில் அவனுக்கு ஏற்றம் இல்லை என்றாகாதோ என்பாருக்கு
திருஷ்டாந்தத்துடன் விடை யிறுக்கிறார் –

ஸ்வதஸ் ஸ்ரீஸ் த்வம் விஷ்ணோஸ் ஸ்வமஸி தத  ஏவைஷ பகவான்
த்வதா யத்த ருத்தித்வேபி யபவத் அபராதீன விபவ
ஸ்வயா தீப்தாயா ரத்னம் பவதபி மஹார்கம் நவி குணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவதி சன சான்ய ஆஹித குணம் -31–

திருவே நீ இறைவனுக்கு இயல்பாகவே சொத்தாக இருக்கின்றாய் –
அதனாலேயே இந்த அரங்கநாதன்
உன் அதீனமான ருத்தித்வேபி -சிறப்பை உடையவனாய் இருப்பினும்
அபராதீன -மற்று ஒருவரால் ஏற்படாத -விபவ -பெருமை உடையவனாக அபவத்-ஆயினான்
ரத்னம் தன்னதான ஒளியினாலே விலை மதிப்புள்ளதாக ஆனாலும் -விகுணம்- குணம் அற்றதாக ஆகவில்லை –
குண்ட ஸ்வா தந்த்ர்யம் -முக்கியத் தன்மை குன்றியனதாகவும் ஆவதில்லை –
அந்ய-மற்று ஒன்றால் ஆஹித -ஏற்பட்ட குணம் ச -சிறப்பை உடையதாகவும் நச பவதி -ஆவதும் இல்லை-

ஸ்வத்வ மாத்மநி சஞ்ஜாதாம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -ஸ்வாமி சொத்து சம்பந்தம் –
குணம் உள்ளாவான் என்பதால் பகவான் –
ரத்னம் ஒளியினால் விலை பெற்றால் அந்யாயத்தம் ஆகாது இறே -நம்பிள்ளை
ஸ்வத-பிராட்டிக்கு சேஷத்வம் இச்சையாலே வந்தது என்பாரும் உண்டு மகிஷி யாதலால்-

இயல்பினால் சொத்தாம் உன்னால் இறை சிறப்பு எய்தினாலும்
அயல் பொருளாலே யாகும் அதிசயம் உடையன் ஆகான்
சுய வொளி துலக்கு மேனும் தூ மணி குண மற்றொன்றால்
உயர்ந்தது திரு முதன்மை ஒழிந்தது என்று உரைக்கப் போமோ -31-

ஒளி போலே விட்டுப் பிரியாதவள் -ஆதலின் பிராட்டி வேறு ஒரு பொருள் அல்லள் –

——————————————————————————————

இங்கனம் இலக்குமியின் ஸ்வரூபத்தை இதுகாறும் அனுசந்தித்து
இனி ஸ்வரூபத்தையும் திரு மேனியையும் பற்றின திருக் குணங்களைக் கூறுவாராய்ப்
பெருமாளுடையவும் பிராட்டியினுடையவும்   பொதுக் குணங்களை அனுசந்திக்கிறார்-

பிரசகன பல ஜ்யோதிர் ஞான ஐஸ்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம ஷேமங் கரத்வ புரஸ்ஸரா
அபி பரிமள காந்திர் லாவண்ய மர்ச்சிரி தீந்திரே
தவ பகவதச் சைதே சாதாரணா குண ராசே –32-

பிரசகன-சக்தி என்ன –
பல -பலம் என்ன –
ஜ்யோதிர் -தேஜஸ் என்ன –
ஞான ஐஸ்வரீ விஜய ப்ரதா -அறிவு  ஐஸ்வர்யம் வீர்யம் பிரசித்தி என்ன
ப்ரணத வரண -வணங்கினோரை வரித்தல் என்ன
ப்ரேம -ப்ரீதி என்ன
ஷேமங் கரத்வ -ஷேமத்தைச் செய்தல் என்ன
புரஸ்ஸரா -இவைகளை முன்னிட்டவைகளும்
திவ்ய தம்பதிகளின் பொதுவான ஆத்ம குணங்களை  அருளி திரு மேனிக் குணங்களை அனுசந்திக்கிறார் –

அபி -மேலும்

பரிமள காந்திர் லாவண்ய மர்ச்சிரி தீந்திரே -நறுமணமும் சௌந்தர்யமும் லாவண்யமும் பளபளப்பும் என்கிற இந்த –

தவ பகவதச் சைதே சாதாரணா குண ராசே –குணக் குவியல்களும் உனக்கும் பெருமாளுக்கும் பொதுவானவை-

ஞானாதி ஷட்குணமயீ-இவை மற்ற குணங்களுக்கு ஊற்றுவாய்

பிரசகனம் -பிரவர்த்திக்கும் சேதனருக்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திபிக்கும் தன்மை –

பலம் -தனது சங்கல்பத்தாலே அனைத்தையும் தாங்கும் சக்தி

ஜ்யோதிஸ் பிறரை அபிபவிக்கும் திறம் கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றம் –

ஞானம் யாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி கண்டு அறிய வற்றாய் இருக்கை

ஐஸ்வர்யம் தம் இஷ்டப்படி நியமிக்கும் திறம் –

விஜயம் -வீர்யம் -விசேஷ ஜெயம் -விஜயம் -ஆயாசம் இன்றி அதனை -வீர்யம் -சர்வத்தையும் அனாயாசமாக தரிக்கை

ப்ரதை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

விஜய ப்ரதா -வெற்றியால் வந்த புகழ் என்றுமாம்

பிரணத வரணம்-யாத்ருச்சிக ஸூஹ்ருத லேசத்தை பிறப்பித்து அடியார் என்று ஏற்றுக் கொள்ளுதல்

குணக் குவியல்கள் -ஒவ் ஒன்றே பல்கித் திரள் திரளாய்க் குவிந்து   இருக்குமே

இவை இறைவனிடம் ஸ்வா தீனமாகவும்
இலக்குமியினுடம் பராதீனமாகவும் -அவனால் – ஏற்பட்டவைகள்-

மிகும் ஆற்றல் பலம் தேசு மெய்யுணர்தல் விசயம் சேர் புகழுடனே ஐஸ்வர்யம்
அகவையில் அன்புடைமை யண்டினாரை ஆதரித்து வயமாக்கல் காத்தலாதி
மகில்வேற்றும் உயிர்க் குணனும் உறுப்பில் மேவும் வனப்பு மணம் ஒளி யழகு என்று இன்ன
பகவானும் நீயுமே இப் பண்பினங்கள் பரமேசுவரி பொதுவாய்ப் படைத்துளீரே–32-

————————————————————————————

இன்னமும் யௌவனம் முதலிய குணங்கள் பொதுவானவையே எனக் கூறித்
தம்பதிகளுக்கு பரஸ்பரம் குணங்கள் போக்யங்களாய் இருத்தலையும் அருளிச் செய்கிறார்-

அன்யேபி யௌவன முகா யுவயோஸ் சமாநா
ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண
சம்ஸ்தீர்யா தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வ தந்தே –33-

விஜ்ரும்பண -பரப்புகிற
சம்ஸ்தீர்யா தர்ப்பண இவ -கண்ணாடியில் போலே பரவி
பரஸ்பரேண ப்ரசுரம் ஸ்வ தந்தே -ஒருவருக்கு ஒருவர் மிகவும் இனிக்கின்றன –

ஓன்று என்னலாம்படி அவ்வளவு ஒத்திருத்தல் பற்றி
மற்றவர் குணங்களை தம் குணங்களே எனக் கருதிக் களிக்கின்றனர்

யௌவனம் முகா -முதலியவை என்றது
ஆர்ஜவம் முதலிய ஆத்ம குணங்களும் –
மென்மை முதலிய திரு மேனிக் குணங்களும்

ஸ்ரீ ரங்க மங்கள -என்று
ஸ்ரீ ரங்க நாதனையே சொல்லிற்று என்றும்
அவனைச் செழிப்புறச் செய்யும் கொடி போல்வாளே-என்றுமாம் –

இன்னமும் இருவர் தங்கள் இளமை முன்னிட்ட பண்பு
மன்னியே பொதுவாய் மாறி மாறி மற்றிவரிற்று ஒன்றி
நன்னிலைக் கண்ணாடி போல நனி திகழ்ந்து அளிக்கும் இன்பம்
மன்னு தென்னரங்கத் தோங்கு மங்களக் கொடி போல்வாளே–33

—————————————————-

இங்கனம் குணங்கள் பொதுவாய் இருப்பினும் விலஷணமான ரச அனுபவத்திற்காக
பெண்ணிற்கே உரிய குணங்களும்
ஆணிற்கே உரிய குணங்களும் உடையீராய்த் தம்பதிகளாக
நீங்கள் பிரிந்து உள்ளீர் என்று
வேறுபடுத்தும்  குணங்களை அனுசந்திக்கிறார் –

யுவத்வாதௌ துல்யேப்ய அபர வசதா சத்ருச மன
ஸ்திரத்வாதீன் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸூலபான்
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா
ஷமாதீன்வா போக்தும் பவதி யுவயோ ராத்மனி பிதா -34-

விலஷண குண பேதங்கள் கலந்து அனுபவக்க சுவை மூட்டும் –
தாங்கள் அனுபவிக்க என்றும் –
அடியார்கள் அனுபவிக்கவும் என்றுமாம்-

யுவத்வாதௌ துல்யேப் யபரவசதா சத்ருசமன –
கீழ்ச் சொன்ன யௌவன முகா -என்பதை வேறு சிறப்புக் குணங்களைக் கூற அனுவதித்த படி
அபரவசதா -பிறருக்கு வசப்படாமை -ஸ்வாதந்த்ர்யம் –

ஸ்திரத்வாதீன் க்ருத்வா பகவதி குனான் பும்ஸ்த்வ ஸூலபான் –
ஸ்திரத்வம் -என்ன இடைஞ்சல் வரினும் அடியாரைக் கை விடாமை
பிராட்டிக்கு ம்ரதிம-மென்மை-குணத்திற்கு எதிர்த்தட்டு
சத்ருச மனம் -தண்டதரத்வம் -மனக் கடிந்யம் வேண்டுமே
மர்ஷயாமி ஹதுர்பலா -பிராட்டிக்கு தண்டதரத்வ ப்ரசக்தியே இல்லையே
ஆதி சப்தத்தால் சௌர்யாதிகளை கொள்வது –

த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய -ஷமாதீன்வா போக்தும் பவதி யுவயோ ராத்மனி பிதா-

ஆத்ம குணங்களை பேசும் இடம் என்பதால் மன நெகிழ்வு -ம்ரதிம -மென்மை
ஷமாதீன் -ஆதி சப்தத்தால் வாத்சல்யாதிகள்

பிராட்டி சத்ருசமனம் செய்தாவது இறைவன் செய்யும் பொழுது மறுக்காமல் இருப்பதே –
தானாக செய்வதற்கு இல்லை –
அசந்தேசாத்து ராமஸ்ய தபசாச்சா நுபலா நாத் நத்வா குர்மி தசக்ரீவ -பச்ம பச்மார்ஹ தேஜஸா -என்றாள் இறே

பாரதந்த்ர்யம் கலசாத சத்ருசமனம் அவனிடம் -பாரதந்த்ர்யம் சத்ருசமனத்துக்கு இடைஞ்சல்
ஸ்வாதந்த்ர்யம் கலசாத கருணை இவளுக்கு -ஸ்வாதந்த்ர்யம் கருணைக்கு இடைஞ்சல் –
இலக்குமி இன்றி கருணை முதலிய குணங்கள் அவனிடம் வெளிப்படாதே –

பகர்ந்தன பொது  வென்றாலும் பகை தெறல் திரம் பிறர்க்காட்
புகுந்திடலின்மை இன்ன புருடர் பண்பிறையில் வைத்தும்
மகிழ்நருக்கு ஆதல் மென்மை பொறை  யருள் மகட் பண்புன்தன்
அகமுற வைத்தும் துய்க்க அடைந்துளீர் ஆன்ம பேதம் -34-

மகிழ்நருக்கு ஆதல்-கணவனுக்கு வசப்பட்டு இருத்தல் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-21/22/23/24/25/26–

May 1, 2015

விளையாட்டிற்கு உபயோகப்படும்  இந்த லீலா விபூதி மாத்திரம் அன்று –
நித்ய விபூதியும் பிராட்டிக்காகவே உள்ளது என்கிறார் –

யத் தூரே மனசோ யதேவ தமஸ பாரேய தத் யத்புதம்
யத் காலா தபசேளிமம் ஸூர புரீ யத் கச்சதோ துர் கதி
சாயுஜ் யஸ்ய யதேவ ஸூதிரதவா யத் துர் க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ பரமம் பதம்  தவ க்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ–21-

தபசேளிமம் -முதுமை அடையாததோ
மத் கிராம் துர்க்ரஹம் -என் சொற்களுக்கு எட்டாததோ
தவ க்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ -உனக்காக என்றே ஓதினார்கள் –
யத் -வாக்யம் தோறும் தனித் தனியே கூறியது தனித் தனி லஷணம் என்று தோற்ற

யத் தூரே மனசோ -வாக்குக்கும் எட்டாமைக்கும் இது உப லஷணம் -மனத்தோடு வாக்கும் மீளுகின்றன -சுருதி
ஸ்ரீ மத் வ்யோம ந சீமா வாங்மனசயோ-ப்ருஹ்மாதீநாம் வாங்மனசா கோசரே-
அன்யைர தன்ய புருஷைர் மனசாப்ய  நாப்யம் –

யதேவ தமஸ பாரேய -தம ரஜ குணச் சொற்களால் பிரக்ருதியை ஸ்ருதி காட்டும் –
யதேவ பரமம் தமஸ பரஸ்தாத் -பிரகிருதி சம்பந்தம் சிறிதும் அற்றது என்றபடி

தத் யத்புதம் -அதி ஸூந்தரம் அத்புதஞ்ச -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –

யத் காலா தபசேளிமம் -ந காலச் தத்ர வை பிரபு -காலாதிகா -காலத்தை அதிக்ரமித்தது –

ஸூர புரீ யத் கச்சதோ துர்கதி -ஆனந்தாவஹம் –
ஏதைவ நிரயாஸ் தாத ஸ்தானச்ய பரமாத்மான்ஸ் -அந்யதா ஸூகோத்திரம் –
சாயுஜ்யஸ்ய யதேவ ஸூதி-
சாயுஜ்யஸ் யாஸூதி -சாயுஜ்யத்துக்கு பிறப்பிடம் -சாயுஜ்யம் உஜ்ஜ்வல முசந்தி யதாபரோஷ்யம்
சாலோக்யம் லீலா விபூதியில் ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பெறலாம் –
சாயுஜ்யத்தை பரம பதத்திலே பெறலாம் என்பதால் யதேவ -என்கிறார் –

ரதவா யத் துர்க்ரஹம் மத் கிராம் -சிறப்பாக பிராட்டியின் மதுரமான கடாஷத்தினால்
சிறந்த கவி வாணனான என்னாலும் பேச முடியாதது –
பேசித் தலைக் கட்டப் போகாது என்னவுமாம் –
வாசோ யதீய விபவஸ்ய திரஸ் க்ரியாயை -பேசப் புகின் பரம பதத்தின் மகிமையைக் குறைத்ததாகும் -கூரத் ஆழ்வான்

தத் விஷ்ணோ பரமம் பதம்  தவ க்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ –
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி ஆஸ்தி

இத்தாலும்
முந்தின  ஸ்லோகத்தாலும்
பிராட்டியினுடைய உபய விபூதி யோகமும் கூறப்பட்டதாயிற்று –

எது மனதுக்கு எட்டாது தமசுக் கப்பால்  எது வியப்புக்கு உரியது எது காலத்தாலே
எது மாறாது எதனை அடைகின்றானுக்கே இமையோரின் எழில் நகரும் நரகாய்த் தோற்றும்
எது சாயுச்சயம் அளிப்பது ஈது நிற்க என் பேச்சுக்கு எது நிலமே யன்றோ மாயோ
னதுவான வப் ப்ரம பதமும் கூட அன்னாய் நின் தனக்கு என்றே ஒதினாரே –21-

———————————————————————

கீழ்க் கூறிய உபய விபூதிகளும்
அவற்றில் உள்ள எல்லாப் பொருள்களும் –
இறைவனும் –
பிராட்டியின் பரிகரங்கள்-என்கிறார் –

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி பரா
தன்யாஸ்தே பரிசார கர்மணி சதா பஸ்யந்தி யே ஸூரய
ஸ்ரீ ரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ  ஸ்பாரணே –22-

அகிலம் சராசரம் இதம் ஹேலாயாம் —சமஸ்தமான ஜங்கமும் ஸ்தாவரமுமான இவ்வுலகம்
உனது விளையாட்டில் உபயோகப் படுகின்றது –

கண் எதிரே காட்டுதலால் இதம் -என்று
இதன் விசித்திர தன்மையையும்
அகிலம் என்றதால் அதன் பெருமையையும்
பிராட்டியின் லீலையும் விசித்ரமாய் மஹத்தாய் உள்ளது எனக் காட்டினார் ஆயிற்று

பரா விபூதி போகே –
மேலான நித்ய விபூதியானது போகத்தில் உபயோகப் படுகின்றது -மும்மடங்கு பெரியது
சுத்த சத்வ மயம் பரா விபூதி –
அனுபவிக்கத் தக்க இடமும்- கருவியாகும்- அனுபவிக்கும் பொருள்களாயும் நித்ய விபூதி

தன்யாஸ்தே பரிசார கர்மணி சதா பஸ்யந்தி யே ஸூரய-எப்பொழுதும் சேவித்துக் கொண்டு இருக்கிற
அந்த பாக்யசாலி களான நித்ய ஸூரிகள்
நினது கைங்கர்யச் செயலில் உபயோகப் படுகின்றனர் –
அவனது ப்ரீதிக்கு பாத்ரம் என்பதால் நித்ய ஸூரிகள் தந்யர்-அனுபவத்தால் உண்டான ப்ரீத கார்ய கைங்கர்யம்

ஸ்ரீ ரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்-நாங்கள் நிர்ஹேதுக கிருபையினால் நிர்வஹிக்கத் தக்கவர்களின்
திரளில் உபயோகப் படுகின்றோம் –
பிராட்டியின் ஸ்வாபாவிக கருணை வெளிப்படுத்தும் பரிகரம் நாமே

சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ  ஸ்பாரணே -பரம புருஷன் சேஷியாய் இருக்கும் தன்மையில் உபயோகப் படுகின்றான் –
சேஷியாய் இருத்தலால் அவனும் பரிகரமே
தனது பெருமையில் இவர்கள் பரிகரங்கள் அல்லவா –
குடை சாமரம் போலே –

இதனால் திருமகளார் தனிக் கேள்வன் என இறைவனது பெருமையும்
அவனுக்கு சேஷப் பட்டிருத்தல் ஆகிய பிராட்டியினது பெண்மையும் தோற்றுகின்றன-

விளையாடச் சராசரம் இவ்வனைத்தும் போகம் விளைத்தற்குமே தக்க விபூதியாகும்
களியாடச் சதா காணும் செல்வரான காமரு ஸூரிகளாவர் பணி விடைக்கே
உள நாங்கள் உனது இயல்பாம் கருணையாலே உறு துணையா நீ தாங்க இறமைக்கு ஈசன்
உளன் அரங்க நாயகனுக்கு உற்ற தேவீ உன் பெருமைக்கு ஏற்ற பரிகரங்கள் அம்மா –22-

——————————————————————————

நித்ய விபூதியில் உள்ள அயோத்தியை என்னும் நகரம்
பெருமாளுக்கும் பிராட்டிக்கும் ராஜ தாநியாகும் -என்கிறார்-

ஆஜ்ஞ அநுக்ரஹ பீம கோமல புரீ பாலா பேஜூஷாம்
யாயோத்த்யே த்யபராஜிதேதி விதிதா நாகம்பரேண ஸ்த்திதா
பாவைர் அத்புத போக பூமகஹநைஸ் ஸாந்தரா ஸூதா ஸ்யந்திபி
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி யுவயோஸ் தாம் ராஜ தாநீம் விது –23–

ஆஜ்ஞ அநுக்ரஹ பீம கோமல புரீ பாலா-ஆணையினாலும் அனுக்ரஹத்தாலும் முறையே
பயங்கரராயும் ஸூமுகராயும் உள்ள  நகரப் பாதுகாப்பாளரை யுடையதோ –

பேஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பலனாய் உள்ளதோ –
சாதன சாத்திய பக்தி இரண்டையும் குறிக்கும் பக்தி –
பக்தருக்கும் பிரபன்னருக்கும் இதுவே பயன் –

யாயோத்த்யே த்யபராஜிதேதி விதிதா -யாராலும் தகைய இயலாத அயோத்தியை –
தோற்கடிக்க படாத அபராஜிதை –
விதிதா -வேதத்தினால் அறிந்தமை புலப்படுத்துகின்றது –

நாகம்பரேண ஸ்த்திதா-பரமாகாசத்துக்கு மேலே இருப்பது –
நாகம் -என்பதற்கு பிரகிருதி மண்டலம் என்றும் சொல்வர் –

பாவை ரத்புத போக பூமகஹநைஸ் ஸாந்தரா ஸூதா ஸ்யந்திபி -அம்ருததைப் பெருக்கும் -இனிய -ஆச்சர்யமான
போக பூம -கஹனை -அனுபவத்தின் மிகுதியினால்- நிறைந்த பாவை – -பொருள்களினால் –
சாந்த்ரா -செறிந்ததோ
சர்வதா அநுபூயமா நைரபி அபூர்வவத் ஆச்சர்யம் ஆவஹத்பி -எம்பெருமானார் –

ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி யுவயோஸ் தாம் ராஜ தாநீம் விது —
இல்லாள் இன்றேல் வெறியாடும் ஆதலின் கேஹ லஷ்மி -என்று விளித்தார்-
ராஜ தாநீ -பிரதான நகரீ ராஜ்ஞ்ஞாம் ராஜ தாநீதி கத்யதே -அரசரின் முக்ய நகரம்-

அற்புதமா மதியான போகம் துன்னும் அமுது ஒழுகு பொருள் மலிந்து பக்தருக்கு
நற் பயனாய் நாகத்திற் கப்பாற் பட்டு நாமுறுத்து மாணை யுடன் அருளுமேவும்
பொற்புடையோர் காவல் பூண்டு அயோத்தி என்றும் புகல் பராஜிதை என்றும் வேதம் போற்றும்
நற் புரமே தலை நகராம் நாயகற்கும் நளிரரங்கக் கோயில் இலக்குமியே நிற்கும் –23-

——————————————————————–

அந்நகரத்தின் கண் உள்ள திவ்ய ஆஸ்தான மண்டபமும் உங்களதே -என்கிறார் –

தஸ்யாஞ்ச த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம்
சங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை
ஸ்நேஹா தஸ்தா நரஷா வ்யஸநிபிர் அபயம் சார்ங்க சக்ராசி  முக்யை
ஆநத்தைக ஆர்ணவம் ஸ்ரீர் பகவதி யுவயோராஹூர் ஆஸ்தாந ரத்னம் –24–

த்ருஷ்ணா -வேட்கையினாலே
கலித-கைக் கொண்ட
பும்பி சங்கீர்ணம் -புருஷர்களால் நெருங்கினதும்
ஆநத்தைக ஆர்ணவம்-ஒரே இன்பக் கடலுமான
யுவயோராஹூ -உங்களுடையது என்று சொல்லுகிறார்கள்-

தஸ்யாஞ்ச த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம் -பரப்புடைத்த திவ்ய ஆஸ்தான மண்டபம்
சர்வாத்ம சாதாரண நாத கோஷ்டி பூரேபி துஷ்பூர மஹாவகாசம்-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –
யாவரும் வந்து  ஒதுங்கலாம் படி பிராட்டியுடைய கடாஷம் போலே
இந்த திவ்ய மண்டபமும் -கிருபை போலே என்னாமல் கிருபை யுடைத்தான என்றுமாம் –

சங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை -தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடியார் போல் –
க்ருஹீத தத்தத் பரிசார சாதனை -ஆளவந்தார்
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நம்மாழ்வார் போலே சாமரம் குடைகள் ஏந்தி ஆனந்த பரவசர்களாக அங்கு நெருங்கி உள்ளனர் –
அடிமையில் வேறுபாடு இருந்தாலும் ஆனந்தத்தில் அங்கு வேறுபாடு இல்லையே –

ஸ்நேஹா தஸ்தா நரஷா வ்யஸநிபிர் அபயம் சார்ங்க சக்ராசி  முக்யை-திவ்ய ஆயுத புருஷர்கள் பொங்கும் பரிவினால் அஸ்தானே பய சங்கை –
அபயம் -இவ்விடம் பயம் அற்று இருப்பதால் –
ஹேதிபிஸ் சேதனாவத்பி ருதீரித ஜயஸ்வ நம -காளிதாசன் -இவர்களால் பல்லாண்டு பாடப் பெற்றவன் –

ஆநத்தைக ர்ணவம் ஸ்ரீர் பகவதி யுவயோராஹூர் ஆஸ்தாந ரத்னம் -நிரதிசய ஆனந்தம் தருவதாதலின் ஆநத்தைக ஆர்ணவம் –
ஆஸ்தானம் ஆனந்த மயம் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
ஆனந்த மயமான மணி மண்டபம் -மா முனிகள் –
ஆஸ்தான ரத்னம் -ஜாதௌ ஜாதௌ யத் உத்க்ருஷ்டம் தத் ரத்னம் இதி கத்யதே –
ச காரம் -ராஜ தானி மட்டும் அன்று ஆஸ்தான ரத்னமும் உங்களுடையதே –

அவ்வயினின் கருணை யெனச் சனத் திரள்கள் அளவின்றி யிளைப்பாறற்க்கு இடமுடைத்தாய்
அவ்வவ கைக்கொடு கருலி யடிமை பூணும் ஆவலுடன் உவகை மிகுந்து அவர் மிடைந்து
தெவ்விலதா யினும் தெய்வப் படைகள் அன்பிற் சிறந்து முயன்று அளித்திடவே பயம் தீர இன்பப்
பவ்வ மணி யாத்தான மண்டபத்தைப் பகர்வர் திரு பகவதி நும் மிருவீர்க்குமே –24

அவ்வயின்-அந்த இடத்தில்
தெவ் -பகைமை
இன்பப் பவ்வம் -இன்பக் கடல்– ஆத்தான மண்டபத்துக்கு இது அடை மொழி
மணி -சிறந்த –

——————————————————————————

அம் மண்டபத்திலே பிராட்டி பெருமாளுடன் திருவனந்தாழ்வான் மீது வீற்று இருந்து
இன்பம் பயப்பதை அருளிச் செய்கிறார் –

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விஸ்வ மேகாதபத்ரம்
தைஸ்தை காந்தேன சாந்தோதித குண விபவைர் அர்ஹதா த்வா மசந்க்யை
அந்யோன்ய அத்வைத நிஷ்டா கநரச கஹநரன் தேவி பத்நாசி போகான் –25-

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்-
பூமாலை -குளிர்ச்சிக்கு-மென்மைக்கு மணத்துக்கு  உபமானம் –
மேலே விஸ்தீர்ய-பரப்புடைமை
உபரி -உயர்த்தி
ஸூ தாமருசி ம்ருதிம ஸூகந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்

பணங்களின் ரத்ன ஒளியாலே   மேல்கட்டி –
சுடர் பாம்பனை நம் பரனைத் திருமாலை -இனத்துத்தி யணி பணம் ஆயிரத்தின் கீழே -இருப்பவன் அன்றோ இறைவன்-

விஸ்தீர்ய அநந்தபோகம் ததுபரி நயதா விஸ்வ மேகாதபத்ரம்-
திருமேனியை விரித்து அதன் மீது அமருகின்றான் –

நாந்தம் குணா நாம் கச்சந்தி தேவா நன்தோய முச்யதே -என்றபடி குணங்களுக்கு அந்தம் இல்லாமை பற்றி அனந்தன்
ரஷகத்வாதி குணங்களுக்கு அந்தம் இல்லாமை பற்றி இறைவன் அநந்தன்
கைங்கர்ய குணங்கள் அந்தம் இல்லாமை பற்றி ஆதிசேஷன் அநந்தன்
கால தேச வஸ்து அபரிச்சேத்யனை தன்னிடம் கொண்டமையாலும் அநந்தன் –
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி யரவின் அணைத் துயின்ற மாயோன் -பெரிய திருமொழி -7-8-1-

கொற்றக் குடையின் கீழ் உலகை நடாத்துவதற்கு வீற்று இருந்து அருளுகிறான்
ஏகாத பத்ரம் -அத்விதீயன் என்பதால் குடையும் ஒன்றே யாயிற்று
விஸ்வ மேகாத பத்ரயிது மச்மத ஸூன் நிஷண்ணம்-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –

தைஸ்தை காந்தேன சாந்தோதித குண விபவைர் அர்ஹதா த்வா மசந்க்யை-
காந்தேன -காதலன் -அழகன் என்றுமாம் –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்

அந்யோன்யா த்வைத நிஷ்டா கநரச கஹநரன் தேவி பத்நாசி போகான் -அன்பு விஞ்சி ஒருவரே என்னலாம் படி அன்யோன்யம்
அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய -எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய்-நான் என்னலாம் படியான இறைவன் உடைய
அஹந்தை -நான் என்பதன் தன்மை -வடிவாய் உள்ளவள் பிராட்டி யாதலின்
பிரிக்க ஒண்ணாத படி ஒன்றி இருக்கும் அத்வைத நிஷ்டை –
சம ரசமாய் இருக்கும் நிலையினாலே பேரின்பம் மிக்க போகங்களை விளைக்கின்றாள்   பிராட்டி-

உலகை நடாத்துகிற -அடை மொழியால் ரஷகத்வம் இறைவனுக்கே -என்றும்
பிராட்டி துணை புரிபவள் என்றும் விளங்கும்

லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேச ரஷக -பிராட்டியின் சஹாயமும் இறைவனது ரஷித்தலும் கூறப்படும் –
சஹாயமாவது புருஷகாரமாக இருத்தல்
ரஷித்தலில் பிரதான்யம் பிராட்டிக்கு இல்லை என்றாலும்
போகத்தில் ப்ரதான்யம் விளக்க –காந்தேன போகான் பத்நாசி-என்றார் –

பூந்தெரியல் போல மண குணம் பொலிந்த பொங்கு மணி யொளி மேலாப் புடைய நந்தப்
பாந்தளுடல் விரித்ததன் மேல் வீற்றிருந்து பல்லுலகு மொரு குடைக் கீழ்ப் பட நடாத்திச்
சாந்தமுடன் தானுகரும் தனதெண் சாந்தோதித குணங்களானிற் கேற்கும்
காந்தனுடன் அங்கு ஒருவருக்கு ஒருத்தர் தேவி கலந்து ஒன்றுதலில் கனிவான் போகம் சேர்த்தி –25-

பாந்தள் -பாம்பு
கனிவான் போகம் -ரசம் கனிந்த சிறந்த அனுபவம் –

—————————————————————————

பிராட்டி போல் இன்னம் பல தேவியர்கள் உளர் எனினும்
சமரசத் தன்மைக்குச் சிறிதும் குறை இல்லை –
மேலும் அது பெருகுவதற்கே உறுப்பாம் -என்கிறார்  –

போகயா வாமபி நாந்தரீய கதயா புஷ்பாங்க ராகைஸ் சமம்
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயா சஹ மஹீ தேவ்யஸ் சஹ ஸரன் ததா
யாபி ஸ்தவம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ஸ்லாகசே -26–

போகயா வாமபி நாந்தரீயகதயா புஷ்பாங்க ராகைஸ் சமம் -திவ்ய தம்பதிகள் யாவர்க்கும் போக்ய பூதர்
வாமபி -நும் இருவருக்கும்
புஷ்ப பூவிற்கும்
அங்காரகைஸ்   சமம் -பூசும் சாந்திற்கும் சமமமாக
நாந்தரீய கதயா-இன்றியமையாதது -அந்தரா பாவம் அந்தரீயம்
போக்யா -இனியர்களும் -அசேதனம் போலே பாரதந்தர்ய நிலை
அந்த திவ்ய தம்பதிகளுக்கும் போகர் ஏனைய தேவியர்கள் –
போக்யதையில் பிராட்டிக்கே பிரதான்யம் என்றதாயிற்று -போக்யதையில் தரித்து நிற்க இதர தேவியர் –

நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்
பிரணய ரசப் பெரு வெள்ளம் இத் தேவியர் வாயிலாக வெளியேறும்

தேவி த்வாம் அநு நீளயா சஹ மஹீ தேவ்யஸ் சஹ ஸரன் ததா –
த்வாம் அநு-என்பதால் பெரிய பிராட்டிக்கு பூமிப் பிராட்டி அடங்கி இருத்தலும்
நீளயா சஹ-என ஒரு உருபு கொடுத்து பேசுவதால் பூமிப் பிராட்டிக்கு நீளா தேவி அடங்கி இருத்தலும் தோற்றும்
குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் பட்ட மகிஷிகள்-

யாபிஸ்தவம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ஸ்லாகசே –
தனது அவயவங்கள் போல்வார் -தழுவினால் பெரும் மகிழ்ச்சி அடைவாள் –
பரஸ்பரம் அஸூயை இடமில்லை-

திருமகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-திருமகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் -பொய்கையார் –

அழைக்கும் கருங்கடல் வெண்டிரைக்கே கொண்டு போயலர் வாய்
மழைக்கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்துப் புலம்பி முலை மலை மேனின்று மாறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடி யான் என்று வார்கின்றதே –திரு விருத்தம் –

அநுப பன்னமாய் இருப்பதொரு அர்த்தத்தை சொல்லவே இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும்
அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு கிற்கும் என்னும் விஸ்ரம்பத்தாலே -நம்பிக்கையாலே –
சொன்னார்களாக அமையும் காண் -என்று பட்டர் அருளிச் செய்தார் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –

இருவீர்க்கும் அனுபவித்தற்கு இனியராகி இன்றியமையாது மலர் சாந்து போலப்
பெருகார்க்கும் பிரேமத்தின் வெள்ளம் கேடு பிறப்பியாவாறு அமைத்த மறு காலாய் நின்
பொருவார்க்கும் புவி மடந்தை  யோடு நீளை போன்ற வாயிரம் தேவிமார்கள் உள்ளார்
இருபார்க்கும் விழி கொங்கை கொண்டென்ன ஏந்தலை நீ யவரால் இன்புறுத்தி  தேவி -26-

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –