விளையாட்டிற்கு உபயோகப்படும் இந்த லீலா விபூதி மாத்திரம் அன்று –
நித்ய விபூதியும் பிராட்டிக்காகவே உள்ளது என்கிறார் –
யத் தூரே மனசோ யதேவ தமஸ பாரேய தத் யத்புதம்
யத் காலா தபசேளிமம் ஸூர புரீ யத் கச்சதோ துர் கதி
சாயுஜ் யஸ்ய யதேவ ஸூதிரதவா யத் துர் க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ பரமம் பதம் தவ க்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ–21-
தபசேளிமம் -முதுமை அடையாததோ
மத் கிராம் துர்க்ரஹம் -என் சொற்களுக்கு எட்டாததோ
தவ க்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ -உனக்காக என்றே ஓதினார்கள் –
யத் -வாக்யம் தோறும் தனித் தனியே கூறியது தனித் தனி லஷணம் என்று தோற்ற
யத் தூரே மனசோ -வாக்குக்கும் எட்டாமைக்கும் இது உப லஷணம் -மனத்தோடு வாக்கும் மீளுகின்றன -சுருதி
ஸ்ரீ மத் வ்யோம ந சீமா வாங்மனசயோ-ப்ருஹ்மாதீநாம் வாங்மனசா கோசரே-
அன்யைர தன்ய புருஷைர் மனசாப்ய நாப்யம் –
யதேவ தமஸ பாரேய -தம ரஜ குணச் சொற்களால் பிரக்ருதியை ஸ்ருதி காட்டும் –
யதேவ பரமம் தமஸ பரஸ்தாத் -பிரகிருதி சம்பந்தம் சிறிதும் அற்றது என்றபடி
தத் யத்புதம் -அதி ஸூந்தரம் அத்புதஞ்ச -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –
யத் காலா தபசேளிமம் -ந காலச் தத்ர வை பிரபு -காலாதிகா -காலத்தை அதிக்ரமித்தது –
ஸூர புரீ யத் கச்சதோ துர்கதி -ஆனந்தாவஹம் –
ஏதைவ நிரயாஸ் தாத ஸ்தானச்ய பரமாத்மான்ஸ் -அந்யதா ஸூகோத்திரம் –
சாயுஜ்யஸ்ய யதேவ ஸூதி-
சாயுஜ்யஸ் யாஸூதி -சாயுஜ்யத்துக்கு பிறப்பிடம் -சாயுஜ்யம் உஜ்ஜ்வல முசந்தி யதாபரோஷ்யம்
சாலோக்யம் லீலா விபூதியில் ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பெறலாம் –
சாயுஜ்யத்தை பரம பதத்திலே பெறலாம் என்பதால் யதேவ -என்கிறார் –
ரதவா யத் துர்க்ரஹம் மத் கிராம் -சிறப்பாக பிராட்டியின் மதுரமான கடாஷத்தினால்
சிறந்த கவி வாணனான என்னாலும் பேச முடியாதது –
பேசித் தலைக் கட்டப் போகாது என்னவுமாம் –
வாசோ யதீய விபவஸ்ய திரஸ் க்ரியாயை -பேசப் புகின் பரம பதத்தின் மகிமையைக் குறைத்ததாகும் -கூரத் ஆழ்வான்
தத் விஷ்ணோ பரமம் பதம் தவ க்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ –
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி ஆஸ்தி
இத்தாலும்
முந்தின ஸ்லோகத்தாலும்
பிராட்டியினுடைய உபய விபூதி யோகமும் கூறப்பட்டதாயிற்று –
எது மனதுக்கு எட்டாது தமசுக் கப்பால் எது வியப்புக்கு உரியது எது காலத்தாலே
எது மாறாது எதனை அடைகின்றானுக்கே இமையோரின் எழில் நகரும் நரகாய்த் தோற்றும்
எது சாயுச்சயம் அளிப்பது ஈது நிற்க என் பேச்சுக்கு எது நிலமே யன்றோ மாயோ
னதுவான வப் ப்ரம பதமும் கூட அன்னாய் நின் தனக்கு என்றே ஒதினாரே –21-
———————————————————————
கீழ்க் கூறிய உபய விபூதிகளும்
அவற்றில் உள்ள எல்லாப் பொருள்களும் –
இறைவனும் –
பிராட்டியின் பரிகரங்கள்-என்கிறார் –
ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி பரா
தன்யாஸ்தே பரிசார கர்மணி சதா பஸ்யந்தி யே ஸூரய
ஸ்ரீ ரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே –22-
அகிலம் சராசரம் இதம் ஹேலாயாம் —சமஸ்தமான ஜங்கமும் ஸ்தாவரமுமான இவ்வுலகம்
உனது விளையாட்டில் உபயோகப் படுகின்றது –
கண் எதிரே காட்டுதலால் இதம் -என்று
இதன் விசித்திர தன்மையையும்
அகிலம் என்றதால் அதன் பெருமையையும்
பிராட்டியின் லீலையும் விசித்ரமாய் மஹத்தாய் உள்ளது எனக் காட்டினார் ஆயிற்று
பரா விபூதி போகே –
மேலான நித்ய விபூதியானது போகத்தில் உபயோகப் படுகின்றது -மும்மடங்கு பெரியது
சுத்த சத்வ மயம் பரா விபூதி –
அனுபவிக்கத் தக்க இடமும்- கருவியாகும்- அனுபவிக்கும் பொருள்களாயும் நித்ய விபூதி
தன்யாஸ்தே பரிசார கர்மணி சதா பஸ்யந்தி யே ஸூரய-எப்பொழுதும் சேவித்துக் கொண்டு இருக்கிற
அந்த பாக்யசாலி களான நித்ய ஸூரிகள்
நினது கைங்கர்யச் செயலில் உபயோகப் படுகின்றனர் –
அவனது ப்ரீதிக்கு பாத்ரம் என்பதால் நித்ய ஸூரிகள் தந்யர்-அனுபவத்தால் உண்டான ப்ரீத கார்ய கைங்கர்யம்
ஸ்ரீ ரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்-நாங்கள் நிர்ஹேதுக கிருபையினால் நிர்வஹிக்கத் தக்கவர்களின்
திரளில் உபயோகப் படுகின்றோம் –
பிராட்டியின் ஸ்வாபாவிக கருணை வெளிப்படுத்தும் பரிகரம் நாமே
சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே -பரம புருஷன் சேஷியாய் இருக்கும் தன்மையில் உபயோகப் படுகின்றான் –
சேஷியாய் இருத்தலால் அவனும் பரிகரமே
தனது பெருமையில் இவர்கள் பரிகரங்கள் அல்லவா –
குடை சாமரம் போலே –
இதனால் திருமகளார் தனிக் கேள்வன் என இறைவனது பெருமையும்
அவனுக்கு சேஷப் பட்டிருத்தல் ஆகிய பிராட்டியினது பெண்மையும் தோற்றுகின்றன-
விளையாடச் சராசரம் இவ்வனைத்தும் போகம் விளைத்தற்குமே தக்க விபூதியாகும்
களியாடச் சதா காணும் செல்வரான காமரு ஸூரிகளாவர் பணி விடைக்கே
உள நாங்கள் உனது இயல்பாம் கருணையாலே உறு துணையா நீ தாங்க இறமைக்கு ஈசன்
உளன் அரங்க நாயகனுக்கு உற்ற தேவீ உன் பெருமைக்கு ஏற்ற பரிகரங்கள் அம்மா –22-
——————————————————————————
நித்ய விபூதியில் உள்ள அயோத்தியை என்னும் நகரம்
பெருமாளுக்கும் பிராட்டிக்கும் ராஜ தாநியாகும் -என்கிறார்-
ஆஜ்ஞ அநுக்ரஹ பீம கோமல புரீ பாலா பேஜூஷாம்
யாயோத்த்யே த்யபராஜிதேதி விதிதா நாகம்பரேண ஸ்த்திதா
பாவைர் அத்புத போக பூமகஹநைஸ் ஸாந்தரா ஸூதா ஸ்யந்திபி
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி யுவயோஸ் தாம் ராஜ தாநீம் விது –23–
ஆஜ்ஞ அநுக்ரஹ பீம கோமல புரீ பாலா-ஆணையினாலும் அனுக்ரஹத்தாலும் முறையே
பயங்கரராயும் ஸூமுகராயும் உள்ள நகரப் பாதுகாப்பாளரை யுடையதோ –
பேஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பலனாய் உள்ளதோ –
சாதன சாத்திய பக்தி இரண்டையும் குறிக்கும் பக்தி –
பக்தருக்கும் பிரபன்னருக்கும் இதுவே பயன் –
யாயோத்த்யே த்யபராஜிதேதி விதிதா -யாராலும் தகைய இயலாத அயோத்தியை –
தோற்கடிக்க படாத அபராஜிதை –
விதிதா -வேதத்தினால் அறிந்தமை புலப்படுத்துகின்றது –
நாகம்பரேண ஸ்த்திதா-பரமாகாசத்துக்கு மேலே இருப்பது –
நாகம் -என்பதற்கு பிரகிருதி மண்டலம் என்றும் சொல்வர் –
பாவை ரத்புத போக பூமகஹநைஸ் ஸாந்தரா ஸூதா ஸ்யந்திபி -அம்ருததைப் பெருக்கும் -இனிய -ஆச்சர்யமான
போக பூம -கஹனை -அனுபவத்தின் மிகுதியினால்- நிறைந்த பாவை – -பொருள்களினால் –
சாந்த்ரா -செறிந்ததோ
சர்வதா அநுபூயமா நைரபி அபூர்வவத் ஆச்சர்யம் ஆவஹத்பி -எம்பெருமானார் –
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி யுவயோஸ் தாம் ராஜ தாநீம் விது —
இல்லாள் இன்றேல் வெறியாடும் ஆதலின் கேஹ லஷ்மி -என்று விளித்தார்-
ராஜ தாநீ -பிரதான நகரீ ராஜ்ஞ்ஞாம் ராஜ தாநீதி கத்யதே -அரசரின் முக்ய நகரம்-
அற்புதமா மதியான போகம் துன்னும் அமுது ஒழுகு பொருள் மலிந்து பக்தருக்கு
நற் பயனாய் நாகத்திற் கப்பாற் பட்டு நாமுறுத்து மாணை யுடன் அருளுமேவும்
பொற்புடையோர் காவல் பூண்டு அயோத்தி என்றும் புகல் பராஜிதை என்றும் வேதம் போற்றும்
நற் புரமே தலை நகராம் நாயகற்கும் நளிரரங்கக் கோயில் இலக்குமியே நிற்கும் –23-
——————————————————————–
அந்நகரத்தின் கண் உள்ள திவ்ய ஆஸ்தான மண்டபமும் உங்களதே -என்கிறார் –
தஸ்யாஞ்ச த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம்
சங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை
ஸ்நேஹா தஸ்தா நரஷா வ்யஸநிபிர் அபயம் சார்ங்க சக்ராசி முக்யை
ஆநத்தைக ஆர்ணவம் ஸ்ரீர் பகவதி யுவயோராஹூர் ஆஸ்தாந ரத்னம் –24–
த்ருஷ்ணா -வேட்கையினாலே
கலித-கைக் கொண்ட
பும்பி சங்கீர்ணம் -புருஷர்களால் நெருங்கினதும்
ஆநத்தைக ஆர்ணவம்-ஒரே இன்பக் கடலுமான
யுவயோராஹூ -உங்களுடையது என்று சொல்லுகிறார்கள்-
தஸ்யாஞ்ச த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம் -பரப்புடைத்த திவ்ய ஆஸ்தான மண்டபம்
சர்வாத்ம சாதாரண நாத கோஷ்டி பூரேபி துஷ்பூர மஹாவகாசம்-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –
யாவரும் வந்து ஒதுங்கலாம் படி பிராட்டியுடைய கடாஷம் போலே
இந்த திவ்ய மண்டபமும் -கிருபை போலே என்னாமல் கிருபை யுடைத்தான என்றுமாம் –
சங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை -தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடியார் போல் –
க்ருஹீத தத்தத் பரிசார சாதனை -ஆளவந்தார்
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நம்மாழ்வார் போலே சாமரம் குடைகள் ஏந்தி ஆனந்த பரவசர்களாக அங்கு நெருங்கி உள்ளனர் –
அடிமையில் வேறுபாடு இருந்தாலும் ஆனந்தத்தில் அங்கு வேறுபாடு இல்லையே –
ஸ்நேஹா தஸ்தா நரஷா வ்யஸநிபிர் அபயம் சார்ங்க சக்ராசி முக்யை-திவ்ய ஆயுத புருஷர்கள் பொங்கும் பரிவினால் அஸ்தானே பய சங்கை –
அபயம் -இவ்விடம் பயம் அற்று இருப்பதால் –
ஹேதிபிஸ் சேதனாவத்பி ருதீரித ஜயஸ்வ நம -காளிதாசன் -இவர்களால் பல்லாண்டு பாடப் பெற்றவன் –
ஆநத்தைக ர்ணவம் ஸ்ரீர் பகவதி யுவயோராஹூர் ஆஸ்தாந ரத்னம் -நிரதிசய ஆனந்தம் தருவதாதலின் ஆநத்தைக ஆர்ணவம் –
ஆஸ்தானம் ஆனந்த மயம் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
ஆனந்த மயமான மணி மண்டபம் -மா முனிகள் –
ஆஸ்தான ரத்னம் -ஜாதௌ ஜாதௌ யத் உத்க்ருஷ்டம் தத் ரத்னம் இதி கத்யதே –
ச காரம் -ராஜ தானி மட்டும் அன்று ஆஸ்தான ரத்னமும் உங்களுடையதே –
அவ்வயினின் கருணை யெனச் சனத் திரள்கள் அளவின்றி யிளைப்பாறற்க்கு இடமுடைத்தாய்
அவ்வவ கைக்கொடு கருலி யடிமை பூணும் ஆவலுடன் உவகை மிகுந்து அவர் மிடைந்து
தெவ்விலதா யினும் தெய்வப் படைகள் அன்பிற் சிறந்து முயன்று அளித்திடவே பயம் தீர இன்பப்
பவ்வ மணி யாத்தான மண்டபத்தைப் பகர்வர் திரு பகவதி நும் மிருவீர்க்குமே –24
அவ்வயின்-அந்த இடத்தில்
தெவ் -பகைமை
இன்பப் பவ்வம் -இன்பக் கடல்– ஆத்தான மண்டபத்துக்கு இது அடை மொழி
மணி -சிறந்த –
——————————————————————————
அம் மண்டபத்திலே பிராட்டி பெருமாளுடன் திருவனந்தாழ்வான் மீது வீற்று இருந்து
இன்பம் பயப்பதை அருளிச் செய்கிறார் –
தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விஸ்வ மேகாதபத்ரம்
தைஸ்தை காந்தேன சாந்தோதித குண விபவைர் அர்ஹதா த்வா மசந்க்யை
அந்யோன்ய அத்வைத நிஷ்டா கநரச கஹநரன் தேவி பத்நாசி போகான் –25-
தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்-
பூமாலை -குளிர்ச்சிக்கு-மென்மைக்கு மணத்துக்கு உபமானம் –
மேலே விஸ்தீர்ய-பரப்புடைமை
உபரி -உயர்த்தி
ஸூ தாமருசி ம்ருதிம ஸூகந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
பணங்களின் ரத்ன ஒளியாலே மேல்கட்டி –
சுடர் பாம்பனை நம் பரனைத் திருமாலை -இனத்துத்தி யணி பணம் ஆயிரத்தின் கீழே -இருப்பவன் அன்றோ இறைவன்-
விஸ்தீர்ய அநந்தபோகம் ததுபரி நயதா விஸ்வ மேகாதபத்ரம்-
திருமேனியை விரித்து அதன் மீது அமருகின்றான் –
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேவா நன்தோய முச்யதே -என்றபடி குணங்களுக்கு அந்தம் இல்லாமை பற்றி அனந்தன்
ரஷகத்வாதி குணங்களுக்கு அந்தம் இல்லாமை பற்றி இறைவன் அநந்தன்
கைங்கர்ய குணங்கள் அந்தம் இல்லாமை பற்றி ஆதிசேஷன் அநந்தன்
கால தேச வஸ்து அபரிச்சேத்யனை தன்னிடம் கொண்டமையாலும் அநந்தன் –
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி யரவின் அணைத் துயின்ற மாயோன் -பெரிய திருமொழி -7-8-1-
கொற்றக் குடையின் கீழ் உலகை நடாத்துவதற்கு வீற்று இருந்து அருளுகிறான்
ஏகாத பத்ரம் -அத்விதீயன் என்பதால் குடையும் ஒன்றே யாயிற்று
விஸ்வ மேகாத பத்ரயிது மச்மத ஸூன் நிஷண்ணம்-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –
தைஸ்தை காந்தேன சாந்தோதித குண விபவைர் அர்ஹதா த்வா மசந்க்யை-
காந்தேன -காதலன் -அழகன் என்றுமாம் –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்
அந்யோன்யா த்வைத நிஷ்டா கநரச கஹநரன் தேவி பத்நாசி போகான் -அன்பு விஞ்சி ஒருவரே என்னலாம் படி அன்யோன்யம்
அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய -எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய்-நான் என்னலாம் படியான இறைவன் உடைய
அஹந்தை -நான் என்பதன் தன்மை -வடிவாய் உள்ளவள் பிராட்டி யாதலின்
பிரிக்க ஒண்ணாத படி ஒன்றி இருக்கும் அத்வைத நிஷ்டை –
சம ரசமாய் இருக்கும் நிலையினாலே பேரின்பம் மிக்க போகங்களை விளைக்கின்றாள் பிராட்டி-
உலகை நடாத்துகிற -அடை மொழியால் ரஷகத்வம் இறைவனுக்கே -என்றும்
பிராட்டி துணை புரிபவள் என்றும் விளங்கும்
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேச ரஷக -பிராட்டியின் சஹாயமும் இறைவனது ரஷித்தலும் கூறப்படும் –
சஹாயமாவது புருஷகாரமாக இருத்தல்
ரஷித்தலில் பிரதான்யம் பிராட்டிக்கு இல்லை என்றாலும்
போகத்தில் ப்ரதான்யம் விளக்க –காந்தேன போகான் பத்நாசி-என்றார் –
பூந்தெரியல் போல மண குணம் பொலிந்த பொங்கு மணி யொளி மேலாப் புடைய நந்தப்
பாந்தளுடல் விரித்ததன் மேல் வீற்றிருந்து பல்லுலகு மொரு குடைக் கீழ்ப் பட நடாத்திச்
சாந்தமுடன் தானுகரும் தனதெண் சாந்தோதித குணங்களானிற் கேற்கும்
காந்தனுடன் அங்கு ஒருவருக்கு ஒருத்தர் தேவி கலந்து ஒன்றுதலில் கனிவான் போகம் சேர்த்தி –25-
பாந்தள் -பாம்பு
கனிவான் போகம் -ரசம் கனிந்த சிறந்த அனுபவம் –
—————————————————————————
பிராட்டி போல் இன்னம் பல தேவியர்கள் உளர் எனினும்
சமரசத் தன்மைக்குச் சிறிதும் குறை இல்லை –
மேலும் அது பெருகுவதற்கே உறுப்பாம் -என்கிறார் –
போகயா வாமபி நாந்தரீய கதயா புஷ்பாங்க ராகைஸ் சமம்
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயா சஹ மஹீ தேவ்யஸ் சஹ ஸரன் ததா
யாபி ஸ்தவம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ஸ்லாகசே -26–
போகயா வாமபி நாந்தரீயகதயா புஷ்பாங்க ராகைஸ் சமம் -திவ்ய தம்பதிகள் யாவர்க்கும் போக்ய பூதர்
வாமபி -நும் இருவருக்கும்
புஷ்ப பூவிற்கும்
அங்காரகைஸ் சமம் -பூசும் சாந்திற்கும் சமமமாக
நாந்தரீய கதயா-இன்றியமையாதது -அந்தரா பாவம் அந்தரீயம்
போக்யா -இனியர்களும் -அசேதனம் போலே பாரதந்தர்ய நிலை
அந்த திவ்ய தம்பதிகளுக்கும் போகர் ஏனைய தேவியர்கள் –
போக்யதையில் பிராட்டிக்கே பிரதான்யம் என்றதாயிற்று -போக்யதையில் தரித்து நிற்க இதர தேவியர் –
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்
பிரணய ரசப் பெரு வெள்ளம் இத் தேவியர் வாயிலாக வெளியேறும்
தேவி த்வாம் அநு நீளயா சஹ மஹீ தேவ்யஸ் சஹ ஸரன் ததா –
த்வாம் அநு-என்பதால் பெரிய பிராட்டிக்கு பூமிப் பிராட்டி அடங்கி இருத்தலும்
நீளயா சஹ-என ஒரு உருபு கொடுத்து பேசுவதால் பூமிப் பிராட்டிக்கு நீளா தேவி அடங்கி இருத்தலும் தோற்றும்
குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் பட்ட மகிஷிகள்-
யாபிஸ்தவம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ஸ்லாகசே –
தனது அவயவங்கள் போல்வார் -தழுவினால் பெரும் மகிழ்ச்சி அடைவாள் –
பரஸ்பரம் அஸூயை இடமில்லை-
திருமகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-திருமகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் -பொய்கையார் –
அழைக்கும் கருங்கடல் வெண்டிரைக்கே கொண்டு போயலர் வாய்
மழைக்கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்துப் புலம்பி முலை மலை மேனின்று மாறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடி யான் என்று வார்கின்றதே –திரு விருத்தம் –
அநுப பன்னமாய் இருப்பதொரு அர்த்தத்தை சொல்லவே இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும்
அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு கிற்கும் என்னும் விஸ்ரம்பத்தாலே -நம்பிக்கையாலே –
சொன்னார்களாக அமையும் காண் -என்று பட்டர் அருளிச் செய்தார் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –
இருவீர்க்கும் அனுபவித்தற்கு இனியராகி இன்றியமையாது மலர் சாந்து போலப்
பெருகார்க்கும் பிரேமத்தின் வெள்ளம் கேடு பிறப்பியாவாறு அமைத்த மறு காலாய் நின்
பொருவார்க்கும் புவி மடந்தை யோடு நீளை போன்ற வாயிரம் தேவிமார்கள் உள்ளார்
இருபார்க்கும் விழி கொங்கை கொண்டென்ன ஏந்தலை நீ யவரால் இன்புறுத்தி தேவி -26-
—————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply