பிராட்டியை அனுபவிக்க எல்லாம் வல்ல இறைவன் விஸ்வரூபம் முதலிய என்னென்ன செய்தாலும்
அவை பிராட்டியினது அழகியதொரு லீலைக்கும் போதா -என்கிறார்-
தச சத பாணி பாத வதநாஷி முகைர் அகிலை
அபி நிஜ வைஸ்வரூப்ய விபவைர் அநுரூப குணை
அவதரணை ரதைச்ச ரசயன் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–55-
கமிதா கமலே -இலக்குமியே உன் காதலன்
தச சத பாணி பாத வதநாஷி முகை ரகிலை-
ஆயிரக் கணக்கான கைகள் என்ன -அடிகள் என்ன -முகம் என்ன -கண்கள் என்ன -இவை
முதலியவற்றை உடை யவைகளும்
அகிலை -குறைவற்றவைகளும்
அநுரூப குணை-ஏற்புடைய குணங்கள் உள்ளவைகளுமான -தக்க குணங்களாலும் என்றுமாம் —
தனது விஸ்வரூபத் தன்மையினாலும்
அவதரணை ரதைச்ச -அவற்றைத் தவிர்த்த அவதாரங்களாலும் –
பஹூநிமே வ்யதீதாநி ஜன்மாநி -ஸ்ரீ கீதை -வ்யூஹ மூர்த்திகள் என்னவுமாம்
ரசயன்-அனுபவித்துக் கொண்டு
தவ விப்ரம ப்ரமிமுகே -உனது விலாசச் சுழி வாயிலிலே
க்வசந-ஒரு மூலையிலே
ஹி விநி மஜ்ஜதி -மூழ்கி விடுகிறான் அல்லவா –
இறைவன் பிராட்டிக்காக எதுவும் செய்வதற்கு ஹேது அவளது போக்யதையே –
வாய் புகு நீராய் போக்யதை வெள்ளத்தில் எங்கேயோ ஒரு மூலையில் மூழ்கி விடுகிறான் –
விப்ரமம் -காதலர் மனத்துக்கு இனிய லீலை
இத்தை சுழியாக உருவகம் செய்தலால் பிராட்டியை ஓர் பேரின்ப வெள்ளமாக கொள்க -ஏக தேச உருவாக
விநிமஜ்ஜதி -நி -உபசர்க்கத்தால் ஆழ மூழ்குதலும்
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-
ஆயிரம் ஆயிரமான வடிகள் கைகள் ஆநனம்கள் நயனங்கள் ஏய்ந்து
மாயிருமை வாய்ந்ததன விசுவரூப மகிமையினால் ஏற்புடைய குணங்களாலும்
சேயொரு தாமரை வாழ்வாய் சனித்தலாலும் சிங்கார நலன் துய்ப்பான் நினது நேசன்
போயொரு மூலையில் மூழ்கிப் போகின்றான் இன்புரிலளித லீலை எனும் சுழிவாய்ப் பட்டே –55–
சனித்தல் -அவதாரங்கள்
——————————————————————–
நம் போல்வாரைக் காத்தற்கு ஏற்ற இடமாய் இருத்தலின் ஏனைய இடங்களிலும் ஸ்ரீ ரங்கத்தில்
மிக்க மகிழ்வுடன் எழுந்து அருளி இருப்பதாகக் கூறுகிறார் —
ஜநந பவந ப்ரீத்யா துக்தார்ணவம் பஹூ மன்யஸே
ஜநநி தித ப்ரேம்ணா புஷ்ணாசி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய மாத்ருச ரஷண
ஷமமதி தியா பூயச் ஸ்ரீ ரங்க தாமநி மோத ஸே –56–
ஜநந பவந ப்ரீத்யா -பிறந்தகத்து அன்பினாலே
துக்தார்ணவம் -பாற் கடலை
பஹூ மன்யஸே -மதிக்கின்றாய்-வசிக்கின்றாய் –
ஜநநி தித ப்ரேம்ணா -தாயே -காதலன் பால் கொண்ட பிரேமத்தாலே -புக்ககத் தன்பினாலே
புஷ்ணாசி தத் பரமம் பதம் -பிரசித்தமான பரம பதத்தை போஷிக்கின்றாய் -வளமுற வாழ்கின்றாய் –
உததி பரம வ்யோம்நோர் -அப்படிப் பட்ட பாற் கடலையும் பரம பதத்தையும்
விச்ம்ருத்ய மாத்ருச ரஷண -மறந்து என் போன்ற மக்களை காப்பதற்கு
ஷமமதி தியா பூயச் ஸ்ரீ ரங்க தாமநி மோத ஸே -ஏற்ற இடம் என்ற எண்ணத்தினாலே
மிகவும் ஸ்ரீ ரங்க ஷேத்ரத்திலே மகிழ்கின்றாய் —
பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –
ஜநநி -என்று விளித்து -மாத்ருசர் -என் போல்வாரை -மக்கள் -புத்திர வாத்சல்யமே
கணவன் பால் உள்ள காதலையும் விட மிக்கு இருக்கும்
என் போல்வாரை -என்றது அநந்ய கதித்வம் ஆகிஞ்சன்யமும் உள்ள நிலைமை –
அதனாலே ஸ்ரீ ரங்கமே பிராட்டியை மகிழ்வித்துக் கூத்தாடும் படி செய்யும் இடம்-
அவ்வூரின் பேரும் பெரிய பிராட்டியாருக்கு ந்ருத்த ஸ்தானம் -பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி
நாச்சியார் திருமொழி -11-9- வ்யாக்யானத்தில்
பிறந்தகத்தில் சீராடும் இன்பத்தையும்
குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகத்தையும் மறந்து விடும்படி
பிராட்டியை மகிழ்விக்கிறது ஸ்ரீ ரங்கம் –
அங்கனம் மறந்து மகிழ்வதற்கு ஹேது தாய்மையால் வந்த புத்திர வாத்சல்யமே என்றதாயிற்று –
பிறந்தகத்து அன்பினாலே பீடு பாற் கடல் பெறுத்தி
சிறந்தக முன் தன் செம்மல் அன்பினால் செழிப்பு உறுத்தி
மறந்தக மவை மகிழ்ந்து மக்கள் எம்மனோரைக் காக்கச்
சிறந்தகம் இக்தே என்று சென்னி சீரரங்கில் வாழ்தி–56-
——————————————————————————–
நம் போல்வாரைப் புருஷகாரமாய் இருந்து காப்பதற்குத் தேவையான குணங்கள் யாவும்
திரு வரங்கத்திலேயே சிறப்புறுகின்றன -என்கிறார் —
ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ
பூர்வேஷூ சர்வ மதிசாயிதம் அத்ர மாத
ஸ்ரீ ரங்கதாம்நி யதுத் அன்யத் உதாஹரந்தி
ஸீதாவதார முக மேதத் அமுஷ்ய யோக்யா –57-
ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ சர்வ மதிசாயித மத்ர மாத –
தாயே -வள்ளன்மை கருணை -அடியாரிடம் வாத்சல்யம்
இவற்றை முன்னிட்ட நற் குணங்களுள்
புருஷகாரம் ஆவதற்குத் தேவையான குணங்கள் யாவும் –
ஸ்ரீ ரங்கதாம்நி யது தான்யா துதாஹரந்தி ஸீதாவதார முக மேத தமுஷ்ய யோக்யா —
ஸ்ரீ ரங்க ஷேத்ரத்தில்
அத்ர-ஸ்ரீ ரங்க நாச்சியாராய் இருக்கும் இந்த நிலையில்
அதிசாயிதம் -சிறப்பிறுத்தப் பட்டுள்ளன –
மேலும் -அன்யத் -இவ்வர்ச்சை நிலையின் நின்றும் வேறுபட்ட
யாதொரு சீதாவதாரம் முதலியவற்றை
உதா ஹரந்தி -கீழ்ச் சொன்ன குணங்கள் விளங்கும் இடமாக இதிஹாச புராணம் வல்லோர் எடுத்து இயம்புகின்றனரோ
இந்த சீதாவதாரங்கள் முதலியதும் -அமுஷ்ய -இவ்வர்ச்சை நிலைக்கு -யோக்யா -பயிற்சி செய்வதேயாம் –
ஔதார்யம் -தனது நலப் பற்று இன்றி பிறர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தல் –
சித்த உபாயமான தன்னையே கொடுத்தல் என்றுமாம் –
உலகை உய்விக்கக் கருதி பிராட்டி பல கால் திருவவதரித்து பயின்றனள்-
இறைவனும் அர்ச்ச்சை நிலையில் கோயில் முதலிய ஸ்தலங்களில் பயின்றதாக பூதத் தாழ்வார் –
பயின்றது அரங்கம் -பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –
வண்மையும் கருணையும் வாத்சலம் முதலன
உண்மையில் அரங்குறை யுனக்கொர் ஒப்பிலையனாய்
பெண்மணி சானகி போலுந பிறவிகள்
எண்ணிடல் இந்நிலைக்கு என்ற நற் பயிறலே –57-
அனாய் -தாயே
பாரதந்த்ர்யம் தலை சிறந்து விளங்க நின்றமையின் பெண் மணி சானகி என்று
அடை மொழி கொடுக்கப் பட்டது-
————————————————————————————
அக் குணங்களுள் ஔதார்யம் அளவு கடந்த அதிசயம் உடையது -என்கிறார் —
ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசி தஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சிதுசித்தம் க்ருதமித் யதாம்ப
த்வம் லஜ்ஜஸே கதய கோய முதாரபாவ –58-
ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா கஸ்மைசி தஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய
அஞ்ஜலி பரம் -தொழுகைச் சுமையை -சுமக்கின்ற
கச்மைசித் -யாரானும் ஒருவனுக்கு -அவன் அதிகாரத்திற்கு ஏற்ப
ஐஸ்வர் யத்தை யாவது
கைவல்யம் என்னும் பயனையாவது
மோஷத்தை யாவது
விதீர்ய -கொடுத்து
இன்னமும் –
அஸ்மை ந கிஞ்சிதுசித்தம் க்ருதமித் யதாம்ப த்வம் லஜ்ஜஸே கதய கோய முதாரபாவ —
இவனுக்கு சுமைக்குத் தகுந்தது -உசிதம் –
ஒன்றும் செய்யப்பட வில்லையே என்று வெட்க்கப் படுகின்றாய்
இந்த வண்மைக் குணம் -க கத்ய- எத்தகைத்து சொல்லு-
நேர்வதோர் எளியதோர் அஞ்சலி மாத்ரம்-
பெறுவதோ பெரும் பயன்கள் –
ஸ்ரேயோ ந்ஹ்யரவிந்த லோசந மந காந்தா பிரசா தாத்ருதே சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத்வச
ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஆளவந்தார்
தேஹாத்மாபிமானிக்கு பயன் ஐஸ்வர்யம்
ஸ்வதந்த்ராபிமானிக்கு பயன் கைவல்யம்
அடிமையாய் அநந்ய பிரயோஜனனுக்கு பயன் பரமபதம் –
ஒரு மலையைச் சுமந்தது போலே நாம் அஞ்சலி பண்ணுவதை பிராட்டி கருதுகிறாள் -அதற்க்கு ஏற்ப
சுமையாக அஞ்சலியைக் கூறினார் –
தே பூயிஷ்டாம் நம உக்திம் -என்றும் –
அது சுமந்தார்கட்கே -என்றும் ஸ்ருதிகள் ஓதுமே –
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால்
கச்மைசித் -என்கிறார் –
உன்னடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ என்றபடி
தான் கொடுக்கும் மோஷமும் அற்பமாய்த் தோற்றுவதால் நாணி இருப்பதால்
இது என்ன ஔதார்யமோ என்று வியக்கின்றார் –
ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டாம் உதாராம் -சுருதி உதாரா சப்தம்
உதாரா சப்தத்துக்கு மோஷ ப்ரதத்வ ரூபமான உபாயத்வமும் பிராட்டிக்கு உண்டு
என்பர் ஸ்ரீ வேதாந்த தேசிகர்
பிராட்டி புருஷகாரம் ஆனால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான் ஆதலின்
இறைவன் வாயிலாக மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது என்பர் மற்றைய ஆசார்யர்கள் –
அஞ்சிறப் பக்கர மாக்கமோ அம்மனாய்
அஞ்சலி சுமப்பவர்க்கு அருளியு மேற்ப யான்
எஞ்சற ஈகலன் எனத் தலை குனிதியேல்
கொஞ்சமோ குருதி அம்மா நின் கொடைத் திறன் -58-
அம் சிறப்பு -அழகிய மோஷம்
அக்கரம் -கைவல்யம் -அஷர கதி
ஆக்கம் -ஐஸ்வர்யம்-
——————————————————————————-
மேல் இரண்டு ஸ்லோகங்களினால் தம் நைச்யத்தை யனுசந்திக்கிறார் —
ஞான க்ரியா பஜந சம்பத கிஞ்சந அஹம்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ
ஆகாம்சி தேவி யுவயோரபி துஸ் சஹாநி
பத்தநாமி மூர்க்க சரிதஸ் தவ துர்பரோஸ்மி –59-
ஞான க்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம் இச்சாதிகார சகநாநுசயா நபிஜ்ஞ
பயன் பெற வேண்டும் என்ற ஆசையையும்
அப் பயனுக்காக விதித்த வற்றைச் செய்யுமாறு ஏவப் படுகிற யோக்யதையையும்
சகந -செய்வதற்கு சக்தியையும்
அநு சய -விதித்ததை இது காறும் செய்யாது இருந்தோமே என்ற அனுதாபத்தையும்
அநபிஜ்ஞ -அறியாதவனும் -ஆதலின் –
ஞான யோகம் என்ன
கர்ம யோகம் என்ன
பஜந -பக்தி யோகம் என்ன
இவைகள் ஆகிற செல்வத்தினால்
அகிஞ்சனனான நான்
யுவயோ அபி -இறைவனும் இலக்குமியுமான உங்களுக்கும் கூட
ஆகாம்சி தேவி யுவயோரபி துஸ் சஹாநி பத்தநாமி மூர்க்க சரிதஸ் தவ துர்பரோஸ்மி —
பொறுக்க ஒண்ணாத -ஆகாம்சி -பிழைகளை
பத்த்நாமி -சேர்க்கின்றேன்
கெட்ட நடத்தை யுடைய நான் உனக்கு தாங்க இயலாதவனாக இருக்கின்றேன் –
முற்கூற்றால் ஆநு கூல்யம் இல்லாமையும்
பிற்கூற்றால் ப்ராதிகூல்யம் உடைமையும் கூறப் பட்டன –
இச்சை -மோஷ ருசி -முமுஷூத்வம்
அதிகாரம் -அனலை யோம்பும் அந்தண்மை முதலியன
சகநம் -விதித்தவற்றை அறிந்து அனுஷ்டிக்கும் திறம் –
இவை எனக்கு இல்லை என்பது மட்டும் இல்லை –
இங்கனம் சில உண்டு என்ற அறிவும் இல்லை
மேலும் தீமைகள் எல்லாவற்றையும் சேர்த்த வண்ணமாய் உள்ளேன்
குற்றத்தை நற்றமாக கொள்ளும் இயல்பு கருதி யுவரோபி -என்கிறார் –
ஷாந்தி ஸ்தவா கஸ்மிகீ -எனச் சிறப்பித்துக் கூறப் படும் உனக்கும் நான் பரிகரிக்க முடியாதவன் ஆனேன்
அஹமசம் யபராதா நாமாலய -குற்றங்களுக்கு கொள் கலம்
துர்ப ரோஸ்மி-எங்கனம் ஆயினும் நீ என்னைக் காத்து அருள வேணும் –
சற்றமே யறிவு கன்மம் பத்தி யாம் சம்பத்தில்லை
கற்றிலேன் இச்சை பெற்றி கவுசலம் இரங்கல் தேவி
குற்றமே புரியா நிற்பன் கொதிக்க நும் மிருவீ ருள்ளும்
முற்றுமே மூர்க்கனேனை முடியுமோ தாங்க நீ தான் –59-
பெற்றி -அதிகாரம் –
கவுசலம் -சாமர்த்தியம்
இச்சை -பெற்றி -கவுசலம் -இரங்கல் -கற்றிலேன் -இவற்றைப் படித்தும் அறியேன்
முற்றும் மூர்கனேனை நீ தான் தாங்க முடியுமோ –
————————————————————————
இங்கனம் நைச்ய அநு சந்தானம் செய்வதும் மனப் பூர்வமாய் அன்று –
முன்னோர்களைப் பேச்சளவிலே பின்பற்றின மாத்திரமே –
ஆதலின் நினது இயல்பான கருணையினால் என்னைக் காத்தருள்க -என்கிறார்-
இத் யுக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாநம்ப சத்ய வசச புருஷான் புராணான்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வமேவ சரணம் விதித க்ருதாசி–60-
இத் யுக்தி கைதவ சதேந விடம்பயாமி தாநம்ப சத்ய வசச புருஷான் புராணான்-
அம்பா -தாயே
இதி -கீழ்ச் சொன்ன முறையிலே-
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைச்ய அநு சந்தானங்களால்-
தான் -பிரசித்தர்களும்
சத்ய வசச -உண்மையையே உரைப்பவர்க்களுமான
பழம் காலத்து ஆசார்யர்களை
விடம்பியாமி -அநு கரிக்கின்றேன் –
யத்வா ந மே புஜ பலம் தவபாத பத்ம லாபே த்வமேவ சரணம் விதித க்ருதாசி–
யத்வா -அல்லது
நினது திருவடித் தாமரைகளைப் பெறுவதில் எனக்கு
புஜ பலம் -கைம் முதல் சாதனம் இல்லை
விதித -கருணையால் த்வ மேவ -நீயே
சரணம் க்ருதா அஸி-தஞ்சமாக செய்யப் பட்டு இருக்கிறாய் –
பொய்யே யாயினும் முன்னோர்களை பின் பற்றினமையாலும் இழக்க வேண்டும் படியோ உமது நிலை
நிர்ஹேதுக கிருபை ஒன்றே தஞ்சம் –
விதி -விதி வாய்க்கின்றது காப்பாரார்-கரை புரண்ட கருணையை –
பிராட்டி சரணம் ஆவது தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுவதே –
அதாவது புருஷகாரம் ஆதலே யாம் –
சரணமாகச் செய்யப் பட்டாய் -என்று -சரணம் ஆனாய் என்று சொல்லாமல் –
நிர்ஹேதுக கிருபையை விதி என்றதால் -விதியை யாரால் வெல்ல முடியும் –
தொல்லவர் மெய்யே சொல்லும் தூ நெறி தொடருவேன் போல்
எல்லை யிலாமல் இங்கன் இயம்பினன் சலங்கள் அந்தோ
அல்லது தாயே உன் தன் அடி மலர்ப் பெற என் கையில்
வல்லமை இலையதற்கு வல்லை நீ விதியினானாய் –60-
—————————————————————–
நிகமத்தில் பலன்களை ஆஸாசித்து இவ் வருமந்த ஸ்துதியைத் தலைக் கட்டுகிறார்-
ஸ்ரீ ரங்கே சரத்ச் சதம் சஹ ஸூஹ்ருத் வர்கேண நிஷ் கண்டகம்
நிர் துக்கம் ஸூ ஸூகஞ்ச தாஸ்ய ரசிகாம் புக்த்வா சம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ஸ்யாம த்வம் அம்பா பிதா
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ் மாத க்ருபாம் –61-
ஸ்ரீ ரங்கே சரத்ச் சதம் சஹ ஸூஹ்ருத் வர்கேண நிஷ்கண்டகம்
திருவரங்கத்தில் நூறு வருஷங்கள்
நண்பர்களோடு கூட
இடையூறு இன்றியும்
நிர் துக்கம் ஸூ ஸூகஞ்ச தாஸ்ய ரசிகாம் புக்த்வா சம்ருத்திம் பராம் –
துன்பம் இன்றியும் -மிகவும் ஸூகமாகவும்
அடிமை இன்பம் கொண்ட சிறந்த வளத்தை துய்த்து -ப்ருஷ ஆயுஸ் நூறு -என்பர்
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவுடன் இசைந்து இருந்து நுகர்ந்து –
ஸ்ரீரங்க ஸ்ரியம் அநு பத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய -என்றதாயிற்று
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ஸ்யாம த்வம் அம்பா பிதா –
உங்களுடைய திருவடித் தாமரைகளினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் –
யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும்
ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
நீயே அன்னை அப்பன் -இம்மை பயன் தருவதற்கு ஹேது –
ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் —
நீயே எனது எல்லா தர்மமுமாக வேண்டும் –
மறுமை பயன் தருவதற்கு ஹேது-
கர்ம யோகாதி உபாய அனுஷ்டானம் எம்மிடத்து இல்லை யாயினும்
அவற்றின் ஸ்தானத்தில் புருஷகாரமாக நீயே இருந்து
இறைவனால் எமது விருப்பத்தை நிறைவேற்றி அருள வேணும் –
நிர்ஹேதுக கிருபையை -அங்கனம் அருள்வதும் நிர்ஹேதுக கிருபை அடியாக –
எனது யோக்யதையைப் பார்த்து அருளினால் உன் கிருபைக்கு ஏற்றம் இராதே என்பதால்
ஸ்வீகுர் வகஸ் மாத க்ருபாம் -என்கிறார் –
சர்வஞ்ச த்வமஸி த்வமேவ பவ நஸ் ச்வீகுர் வகஸ் மாத க்ருபாம் -என்றும் பாடம்
எல்லா உறவும் நீயே ஆகிறாய்
எமக்கு நீயே உபாயம் உபேயம் ஆகுக –
முன் ஸ்லோகம் த்வயத்தின் பூர்வ கண்டத்தின் பொருளையும்
இது உத்தர கண்டத்தின் பொருளையும் கூறும் என்பர்
நித்ய முக்தரும் இங்கே வந்து கைங்கர்யம் செய்வதாலும்
இது பிரத்யஷமான பரம பதம் ஆதலாலும்
பரம பதத்தையும் முறித்துக் கொண்டு வருவேன் என்று சொல்லும்படி போக்யமாக தமக்கு இருத்தலாலும்
இம்மையோடு மறுமையும் இங்கேயே வேண்டிக் கொண்டு தலைக் கட்டி அருளுகிறார் –
திருவரங்க நகர் தனிலே நண்பரோடே சேர்ந்து இடையூர் உறு துயரமின்றி நூறு
வருடங்கள் சுகமாக வடிமை இன்பம் வாய்ந்த பெரு வளம் துய்த்து வாழ்ந்த பின்னர்
இரு வருமா முமதுபத மலர்த் தூளாவோம் ஈன்றோயும் எந்தையும் நீ செய்யும் எல்லாத்
தருமும் நீ எம் தமக்குத் தானே யாகிச் சாதனம் அற்று இயல்பான தயை செய்வாயே –61–
————————————————————————
திருவினை நவிலும் பட்டர் தே மொழி தம்மில் காணும்
திருவினை யமைத்து நன்னர்த் திருமலை நல்லான் யாத்த
திருவினை இதனை யோர்ந்தே யின்ற தமிழ் வல்லீர் உள்ளத்
திருவினை நீங்கும் வண்ணம் எண்ணி நீர் இயம்புவீரே —
சீர் பராசர பட்டர் செகத்துக் கீந்த ஸ்ரீ குண ரத்ன கோசம் திறப்பதற்குப்
பார் புகழும் திருமலை நல்லான் உரைத்துப் பண்ணின விப் பொற்றிறவு கோலைப் பாரீர்
சீர் மேவு மரதனங்கள் செழிக்கப் பெற்றுச் சிதறாமல் அணிந்து உய்வீர் செப்புகின்றேன்
கார் மேகக் கண்ணன் அருள் கமலச் செல்வி கண்ணின் அருள் கரை புரளும் காண்மின் நீரே —
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply