ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-41/42/43/44/45/46/ 47–

வருணிக்க இயலாதவையே யாயினும் தமது அவா அடங்காமையின்
பிராட்டி கடாஷங்களின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை வருணித்துக் கொண்டு
அவற்றால் தம்மை ரஷித்து அருள வேணும் என்கிறார் –

ஆநந்தாத்மபி ரசமஜ்ஜந மத ஷீபாலசைர் ஆகல
ப்ரேமார்த்ரைர் அபி கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை
ஐஸ்வர்ய உத்கம கத்கதைர் அசரணம் மாம் பாலய ஆலோகிதை–41–

ஆநந்தாத்மபி ரசமஜ்ஜந மத ஷீபாலசைர் ஆகல –
இன்ப வடிவங்களையும் -இறைவனையும் மூழ்கடிப்பதால் உண்டான மகிழ்ச்சியினால்
மதம் பிடித்து அலசி -சோம்பினவைகளாயும்
ஆகல -கழுத்து வரையிலும் -பிராட்டி கடாஷங்கள் யாவருக்கும் அனுகூலம் ஆனவை யாதலின் ஆனந்தம் விளைப்பன –

அனுகூலமாய்த் தோற்றும் அறிவே ஆனந்தம்
இறைவனை பூரணமாய் விஷயீ கரிக்கின்றன
அபாங்கா பூயாம்சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத் -என்று கீழே அருளிச் செய்தார்

இறைவனை மூழ்கடித்ததனால் என்னாது
இறைவன் மூழ்கியதால் வந்த மதம் என்றுமாம் –
கழுத்து வரை அன்பு  நனைத்ததாக கூறவே
கடாஷங்கள் பரிபூர்ணமாக அன்பை உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு இருத்தல் தெரிகிறது –

ப்ரேமார்த்ரைர் அபி கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை –
அன்பினாலே ஆர்த்ரை -நனைந்தவைகளாயும்-
மேலும் கரை புரண்டு ஓடுகிற அருளினாலே
சம்ப்லாவித-குளிப்பாட்டப் பெற்ற –
அஸ்மாத்ருசை -எம் போன்றாரை யுடையவைகளாயும் -கழுத்து வரை உள்ளடங்கினதாக

அன்பை சொல்லி கிருபை கரை புரண்டு உள் அடங்காமல் அருளிச் செய்தது அருள் பெருக்கின் மிகுதி காட்டியவாறு –
விரிவடைந்த அன்பே அருள் –
தொடர்புடையார் மாட்டே அமைவது அன்பு -இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்லுவது அருள் –
இயல்பான அருளினால் தாம் ஆளானமாய் தோற்ற அஸ்மாத்ருசை -என்கிறார்

கேவல க்ருபா நிர்வாஹ்யவர்கே வயம் -என்றார் கீழே
எம் போன்றார் என்றது
பக்தி முதலிய தொடர்பின்றி இயல்பான  அருளுக்கு இலக்காமாறு ஆகிஞ்சன்யம் உடையோர்களை –

பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை –
திவலை தோறும் செய்யப் பட்ட கலகத்தை உடையவர்களான ப்ரஹ்மாதிகளை உடையவைகளாயும்

ஐஸ்வர்ய உத்கம கத்கதைர் அசரணம் மாம் பாலய ஆலோகிதை–
ஐஸ்வர் யத்தினுடைய உத்பத்தியாலே-கத்கதை – இடறி நடப்பவைகளாயும்
ஆலோகித -உள்ள நோக்கங்களினாலே -அசரணம் மாம் பாலய -சரண் அற்ற என்னைக் காத்து அருள வேணும்-

என்னைக் காப்பதற்கு இறைவன் போலே படை எடுக்க வேண்டாமே —
உனது கடாஷமே போதுமே –

எவ்வாறு வருணிப்பது என்றவர்
அடுத்த ஸ்லோகத்திலே நேராக கடாஷங்களுக்கு ஓர் உருவம் கொடுத்து
அவற்றின் ஸ்வரூபத்தையும்
ஸ்வ பாவங்களையும்
செயல்களையும்
அழகு பட வருணித்து இருப்பது வியக்கத் தக்கது
எவ்வாறு வருணிப்பது எனபது பிறருக்குத் தான் போலும்-

இன்ப வடி வாயிறைவன் தனை முழுக்கும் எக்களிப்பின் திமிர்த்து மடிந்தீரமாகி
அன்பின் மிடறளவாக வளவு மீறும் அருள் வெள்ளம் தனில் எம்மனாரை யாட்டி
முன்பிடம் கொள் அயன் முதலோர் திவலை தோறும் முற்றி நசை கலகமிட மூளும் செல்வா
வன் பொறையினடை யிடறு நோக்கிக் காப்பாய் மறு புகலில் அடியேனை மலரினாளே–41-

மடிந்து -சோம்பி
முன்பிடம் கொள் -அக்ர ஸ்தானத்தை பெறுகின்ற முக்கியரான என்றபடி
எனக்கே இந்நோக்கு  எனக்கே இந்நோக்கு -என்று கலகமிட –
செல்வன் பொறையின்-ஐஸ்வர்யம் என்னும் பெரிய சுமையினால்
இன்ப வடிவாய் -திமிர்த்து மடிந்து ஈரமாகி ஆட்டி
கலகமிடும்படியாக மூளும் –பொறையினால் -நடை இடறும் நோக்கு -என்றபடி –

———————————————————————–

திரு மேனியின் மென்மை பேசும் திறத்தது அன்றி என்கிறார் —

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜஸ் சேடீ ப்ருசா லோகிதை
அங்கம் லாநி ரதாம்ப சாஹச விதௌ லீலாரவிந்த க்ரஹ
டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –42-

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜஸ்-தாமரைத் துகள் உன்னுடைய திருவடித் தலத்தை உறுத்தக் கூடியதாகவே ஆகின்றது –

சேடீ ப்ருசா லோகிதை -பணிப் பெண்களின் உற்றுப் பார்த்தல்களினாலேயே
அங்கம் லாநி -திரு மேனிக்கு வாட்டம் ஆகின்றது -தொட்டால் வாடும் ஒரு பச்சிலை
மோப்பக் குலையும் அனிச்சம் -காணக் குழையும் இந்த திருமேனி -மென்மைக்கு ஈடு எது இவ்வுலகத்தில்

ரதாம்ப சாஹச விதௌ லீலாரவிந்த க்ரஹ -மேலும் உனது விளையாட்டுத் தாமரையை ஏந்துதல்
சாஹாசமான கார்யம் ஆகின்றது –

இறைவன் சோலை சூழ் குன்று எடுத்ததினும் இவள் கையில் தாமரைப் பூ தாங்கி இருப்பது
அரிய செயலாய்த் தோற்றுகிறது  இவருக்கு –

டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-
இறைவனது தோளின் புறத்திலே வைஜயந்தி என்னும் வனமாலை யாலே ஊஞ்சல் ஆடுதல்
ஐயோ கஷ்டம் என்னும் சொற்களுக்கு இடமாக ஆகின்றது –

கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –
மிகவும் மெல்லிய இந்த திரு மேனி எந்தக் காரணத்தினால்
வாக்குகளுக்கு விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் –
காணவும் பொறாத இத் திருமேனி  பேச்சைப் பொறுக்குமோ
இந்த மெல்லிய திரு மேனியை வன் சொற்களால் வலிந்து துதி இடுதல் தகாது
இழிவு படுத்தியதாகும் -கசக்கியது போலே என்கிறார் –

பங்கயத் தூள் படுமேனும் பாதம் துன்பப் படுவதுவே சேடிமாருற்றுப் பார்க்கில்
அங்கமதப் பொழுதன்னாய் வாடிப் போகும் அரும் செயலே விளையாடு மலர் சுமத்தல்
தொங்கு மரி தோளில் வனமாலையால் நீ துயர் அந்தோ எனற்கிடமாம் ஊஞ்சலாடல்
எங்கனமா இம் மிக மெல்லியலுடம்பை இலக்குமியே வாசகத்தால் கசக்க லாகும் –42-

மெல்லியலுடம்பிறகு -நேர் மாறாக வல்லியல் வாசகம்-

————————————————————————–

திரு மேனியின் மென்மையைக் கூறினவர்
பருவம் கூறுகிறார் இந்த ஸ்லோகத்தில் –

ஆமர்யாத மகண்டகம் ஸ்தன யுகம் நாத்யாபி நாலோகித
ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா ஐஹதிவா நைசர்கி கத்வாயச
ஸூதே சைசவ யௌவன வ்யதிரேகரோ காத்ரேஷூ தே சௌரபம்
போகஸ் ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –43–

ஆமர்யாத மகண்டகம் ஸ்தனயுகம் நாத்யாபி -இரு கொங்கைகளும் எவ்வளவு வரை வேணுமோ
அவ்வெல்லை வரையிலும் இப்பொழுதும் தடங்கல் இல்லாதனவாக இல்லை –

நாலோகித  ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா ஐஹதிவா நைசர்கி கத்வாயச -நோக்குதல் –
புருவ நெறிப்புக்கள் – புன் முறுவல்கள் இவற்றின் விலாசங்களும்
இயற்கையால் விளைந்தவை என்னும் தன்மையால் உண்டான பழியை இப்பொழுதும் விட்டுவிட வில்லை

ஸூதே சைசவ யௌவன வ்யதிரேகரோ காத்ரேஷூ தே சௌரபம் போகஸ் ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –
அனுபவ வெள்ளத்தில் காதலனாகிற ஆசிரியனுடைய திருக்கையைப் பிடித்தலினால்
காஹ -இறங்குவதில் -மூழ்குவதில் தகுதி பெற்ற
குழந்தைத் தனம் என்ன
யௌவனம் என்ன
வ்யதிரேகா -சேர்க்கையானது உன்னுடைய திரு அவயவங்களிலே மணத்தை -சௌரபம் -ஸூதே –உண்டு பண்ணுகிறது –

கநகநக த்யுதீ -ஸ்லோகத்தில் சொல்லப் பட்ட தாருண்யம் இங்கே விளக்கப் படுகிறது –
பால்யத்தின் இறுதியிலும் யௌவனத்தின் தொடக்கமும் கூடும் பருவம் -யுவா குமாரா வுக்கு ஒத்த பருவம் –

கொங்கைகள் வளர்ப்பது யௌவனம் –
அது முற்ற வளர்ச்சியும் முடியும் -தொடங்கும் யௌவனத்தால் வளரும்
தொடரும் இளமை முற்றும் வளர ஒட்டவில்லை

ஆமர்யாதம் -எல்லை என்பது வளர்ச்சியின் முடிவு நிலையைக் குறிக்கும்

அகண்டகம் ந -இரண்டு எதிர்மறைகள் ஒரு உடன்பாட்டை வற்புறுத்தும்

அத்யாபி -உம்மை தொகை இன்று போலே நாளைக்கும் வளர்ச்சிக்கு தடங்கல் -உள்ளதே –

இதே போலே நோக்கம் முதலிய விலாசங்கள் –
போகஸ் ரோதஸ்-அனுபவ வெள்ளம் -அளவிறந்த போகம் –

இரண்டு பருவங்களும் கலந்து -பொற்றாமரை மணம் பெறுவது போலே திரு மேனி சிறப்புறுகிறது
சங்கீர்ணே கல்வியம் வயலி வர்த்ததே -என்று
முராரியும் இரு பருவங்களின் கலப்பு நிலையைக் கூறியது –

முழுவதும்   கொங்கை முற்ற முடிந்தில திடைஞ்சலின்னும்
விழி நகை புருவ லீலை விட்டில இயற்ப் பழியை
குழவு யௌவனங்கள் கூடும் வாசமுன் மேனி கூறும்
இழிதி நீ போக வெள்ளத்து ஏந்தலின் கரம் பிடித்தே –43-

——————————————————————-

மணம் குளிர்ச்சி அழகு முதலிய நற்குணங்கள் வாய்ந்த பிராட்டி திரு மேனியை
ஒரு பூ மாலையாக உருவகம் செய்து –
அதனை இறைவன் திரு மார்புக்கு அலங்காரமாக வருணித்து
மெல்லிய திரு மேனியை இங்கனமோ வருணிப்பது -எனத்
தம்மை நிந்தித்துக் கொள்கிறார் —

ஆமோதாத்புதசாலி யௌவன தசா வ்யாகோச மம்லா நிமத்
சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் லாவண்யா ஸூத்ரர்ப்பிதம்
ஸ்ரீ ரங்கேஸ்வரி  கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் தேவி தே
காந்தோர ப்ரதியத்ன மர்ஹதி கவிம் திங்மாம் அகாண்ட ஆகுலம் –44–

ஆமோதாத்புதசாலி -வாசனையால் ஆச்சர்யமாக விளங்குவதும் -ஆச்சர்யமான வாசனை என்றுமாம் –
யௌவன தசா வ்யாகோச -யௌவனப் பருவம் ஆகிற மலர்த்தியை யுடையதும்
மம்லா நிமத் -வாடாததும்
சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் லாவண்யா ஸூத்ரர்ப்பிதம் -சௌந்தர்யம் ஆகிற அம்ருதத்தைக் கொண்டு
நனைத்தலால் குளிர்ந்தும் -லாவண்யம் ஆகிற நூலில் கோக்கப் பட்டதுமான இந்த உன்னுடைய

ஸ்ரீ ரங்கேஸ்வரி  கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் தேவி தே –
மெல்லிய உறுப்புக்கள் ஆகிற பூக்களினுடைய தொடையலானது

காந்தோர ப்ரதியத்ன மர்ஹதி கவிம் திங்மாம் அகாண்ட ஆகுலம் —
காதலனுடைய மார்பிற்கு அலங்காரமாதலை   ஏற்கும்
அகாண்ட -தகாத வழியில் ஆகுலம் கலங்கின கவியான என்னை திக் -நிந்திக்க வேணும்-

திருமேனி முழுவதும் வியாபித்த லாவண்யம் ஆகிற நூலால் தொடுக்கப் பட்ட பூம் தொடையல்
ஆங்காங்கே சௌந்தர்யம் ஆகிற திரு அவயவ அழகு என்னும் அமுத நீரினால் நனைக்கப் பட்டு குளிர்ந்து உள்ளது

வாடாது ஆச்சர்யமாக மணம் கமழ்கிறது -மார்வத்து மாலை நங்கை அன்றோ இவள்-காதலன் திரு மார்புக்கு

இம்மாலை அலங்காரம் -அவனது திரு மார்பு இம்மாலைக்கு அலங்காரம் -என்றுமாம் –

பூக்களின் மகரந்தப் பொடியே திருவடிகளை உறுத்தும் என்றும்

திருக்கையில் மலர் சுமத்து சாஹாச கார்யம் என்றும்
பூவினும் மெல்லியதாக வருணித்த தாமே
திருமேனியை மலர் மாலையாக வருணிப்பது முரண்படாதா –

அதற்கும் மேலே அம்மாலை- அரக்கர் அசுரர்கள் அம்புகளுக்கு இலக்காகி வடுப்பட்ட   இறைவனது
கடினமான மார்புக்கு ஏற்கும் என்றது எவ்வளவு சாஹாசம் –

மதி கலங்கியே செய்தோம்   என்று தம்மை தாமே வெறுத்து கவிம் திங்மாம் அகாண்ட ஆகுலம் -என்கிறார்
தனது மேன்மைக்கு மிகவும் இசையாதே யாயினும் அவன் பால் உள்ள அன்பாலும்
அவன் ஸ்வா தந்த்ர்யத்தையும் சேதனர்களின் அபராதத்தையும்  கண்டு அகல மாட்டாமையாலும்
திருமார்பை விட்டு பிராட்டி சிறிதும் பிரிவது இல்லை —

அங்கம் எனும் மென் மலர்கள் அரிய கந்தம் ஆச்சரியமாய்க் கமழ வாடாதென்றும்
தங்கிய யௌவன மலர்ச்சி யுடனுறுப் பேர் தண்ணமுதால் குளிர்ந்து மிக விலாவணீயம்
என்கின்ற நூல் தன்னில் இயையக் கோத்த இன் தொடையல் என வன்பன் மார்புக்கு ஏற்பத்
தங்கினை சீ ரரங்கத்தின் தலைவி தேவி தகவின்றிக் கலங்கி  யிங்கன் சாற்றினேனே –44-

——————————————————————————–

கூடல் இன்பத்தில் இறைவனைக் களிப்பிக்கின்றாள் பிராட்டி என்கிறார் —

மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி
புஷ்பாவளீவ ரஸிக ப்ரமரோப புக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –45–

மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-
மருமத்தை தொடக் கூடியவைகளான ரச நாடிகளை தாக்கி நடந்தவைகளான

காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி –
காதலனுடைய அனுபவத்தின் விலாசங்களினாலே கசங்கின கொம்பு போன்ற திருமேனி யுள்ளவளாய்-

புஷ்பாவளீவ ரஸிக ப்ரமரோப புக்தா  த்வம் தேவி நித்யம் அபிநந்தயசே முகுந்தம் —
ரசிக்க வல்ல வண்டினாலே அனுபவிக்கப் பட்ட பூ வரிசை மாலை போலே நீ
கணவனான முகுந்தனை எப் பொழுதும் களிப்பிக்கின்றாய்
சுரும்பு துளையில் சென்றூத அரும்பும் -போலே இறைவனும் இலக்குமியின் இன்பம் தரும்
நரம்புகளைத் தாக்கி நலந்துய்க்கின்றனன் —

புஷ்பாவளி -பூ மாலை -முக்தாவளி -முத்து மாலை போலே –
தெய்வ வண்டு துதைக்கும் பூந்தொடையல் பிராட்டி –
இதனால் போகத்தில் இறைவனது திறமையும்
பிராட்டியினது தளர்வின்மையும் தோற்றுகின்றன

புஷ்பாவளி -என்கையாலே இவள் இறைவனுக்கேயாய் இருத்தல் தோற்றுகிறது
தான் களிப்பதாக கூறாமல் அவனை களிப்பிப்பதாக -பதியின் போகத்தையே முக்யமாக கொள்ளுதல் –

புங்க்தே ஸ்வ போக மகிலம் பதி போக சேஷம் -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகர்

பிரகர்ஷியாமி -ஆளவந்தார் -நித்ய கைங்கரயம் செய்து களிப்பிப்பேன் –

ஏற்புடைய மாலையாகி மார்பினை அலங்கரிக்கிறாள் என்பதில் தான் தவறு –
மாலை போலக் களிப்பிப்பதாக கூறுவதில் தவறு இல்லை போலும் –

சுவை தரு நரம்பு மர்மம் தொடுவன தொட்டுத் தாக்கி
நவையற லீலை நாதன் நடத்த நீ துவண்டு மேனி
சுவை யறி சுரும்பு சேர்ந்து துதித்த பூந்தொடையல் போல
உவகையில் முகுந்தனை நீ உய்த்தி எந்நாளும் தேவி –45–

நவை யற -குற்றம் அற்ற
உய்த்தி -செலுத்துகின்றனை

———————————————————————

திரு ஆபரணச் சேர்த்தி அழகை அனுபவிக்கிறார் –

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணி சர துலா கோடி ப்ராயைர் ஜநார்தன ஜிவிகே
பிரகிருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை
வலய சகலைர் துக்தம் புஷ்பைச்ச கல்ப லதா யதா –46-

கநகரசநா -தங்க ஒட்டியாணம் என்ன –
முக்தா தாடங்க -முத்துத் தோடுகள் என்ன
ஹார -முத்து மாலை என்ன
லலாடிகா -நெற்றிச் சுட்டி என்ன
மணிசர -மணி மாலை என்ன
துலா கோடி -கார் சிலம்பு என்ன இவைகளை –

ப்ராயைர் -முக்யமாக யுடைய-பல பலவே திவ்ய ஆபரணங்கள்
ஜநார்தன ஜிவிகே -இறைவனுக்கு பிழைப்பிக்கும் மருந்துக் கொடி யானவளே –

பிரகிருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை –
இயற்கையிலே அழகியதான உனது திருமேனி
அழகிய திவ்ய ஆபரணங்களாலே

வலய சகலைர் துக்தம் புஷ்பைச்ச கல்ப லதா யதா —
சக்கரைத் துண்டுகளால் பால் போலவும்
பூக்களாலே கல்பகக்  கொடி போலவும் விளங்குகிறது –
இயற்கையுடன் செயற்கை அழகும் சேர்ந்து சோபிக்கிறது –

கனகமே கலை முத்தாரம் காதணி சிலம்பு சுட்டி
இன மணிச் சரம் என்றின்ன எழில் இழை யணிந்தி யற்சீர்
உனதுடல் மலரின் கற்ப வொண் கொடி கண்டின் பாலும்
என வொளிர் தரும் சனார்த்தன் இன்னுயிர்க் கேதுவாவாய்–46-

———————————————————

இனி கௌஸ்துபம் வைஜயந்தீ என்னும் திவ்ய அணிகளும்
அவ்வினத்திலே சேர்க்கத் தக்க ஐம்படை முதலியவைகளும்
பிராட்டிக்கே உரியவை யாயினும்
அவைகளை இவனே தாங்குவதற்கு ஹேது கூறுகிறார் –

சாமான்ய போக்யமாபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுதாதி ரமணஸ் ஸ்வயமேவ பிப்ரத்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம
ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி  காஹதே த்வாம் –47-

சாமான்ய போக்யமாபி -பொதுவாக அனுபவிக்கத் தக்கவை யாயினும் –
கௌஸ்துப வைஜயந்தீ -கௌஸ்துப ரத்னம் என்ன -வனமாலை என்ன –
பஞ்சாயுதாதி -ஐம்படை என்ன -இவை முதலியவற்றை

ரமணஸ் ஸ்வயமேவ பிப்ரத் -அன்பனான அரங்கன் தானே சுமந்து கொண்டு -காதல் மகிமையால்
இறைவனுக்கு சுமை தெரிவது இல்லை –

தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம -அவற்றின் சுமையினாலான வருத்தத்தை உனக்கு இல்லாமல்
செய்ய விரும்பினவன் போலே

ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி -ஸ்ரீ ரங்க விமானத்தின் ரத்னக் கொத்துப் போன்றவளே –
ஸ்ரீ ரங்க தாம -ஸ்ரீ ரங்க நாதன் என்னவுமாம் –
அழகு ஒளியுடைமை என்பதால் மணி மஞ்ஜரி -என்கிறார்

காஹதே த்வாம் –உன்னை அனுபவிக்கிறான் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்
சுமை யுடைமையின் அழுந்தினன் போலும் -என் சுமையையும் சேர்த்துச் சுமக்கும்படி
இது என்ன காதலோ என்று நீர்ப் பண்டமாய் பிராட்டி உருக -அதிலே இறைவன் அழுந்துகின்றனன்-

ஏதி யைந்தகல மேந்து மெழில் மணி வைசயந்தி
ஆதி நீ தாங்கின் துன்பமா மெனப் பொது வானாலும்
காதலன் சுமந்து தானே கனம் கருதாத ரங்கம்
போதரு மணிப் பூங்கொத்தே   புகு முனைத் துய்ப்பதற்கே–47–

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading